எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாமகன் கதைத்திரி



அத்தியாயம் 1

அந்த வீடு சுற்றிலும் இருந்த வீடுகள் மற்றும் ஊரில் இருந்து பஒதுக்கு புறமாக இருந்தது. வனத்திற்கு அருகில் ஏகாந்தமாய் இருந்தது தன் தனிமையில். வெளி இடையூறு இன்றி நாட்களை கழிக்க நினைப்பவர்களுக்கு வசதியாய்

அந்த வீட்டை வழக்கம் போல் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார் அந்த காவலர். யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

"ஒரு மாசமா நானும் இதே வேலையாத்தான் அலையறேன். இந்த வீட்டுல ஆள் இருக்கற மாதிரியே இல்லை ஆனா இல்லா மாதிரியும் இல்லை."

எனத் தனக்குள் முனுமுனுத்தபடி வந்தவர் . கண்களில் அந்த வீடு பார்வைக்கு ஆள் இல்லாத மாதிரி இருந்தாலும் உணர்வுக்கு ஆள் இருப்பது போல் தான் இருந்தது .
வழக்கம் போல தனது கையில் இருந்த உணவுப் பொட்டலத்தை எதிரில் இருந்த பிள்ளையார் கோவில் மர நிழலில் அமர்ந்து பிரித்து உண்டார். பிறகு அங்கேயே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கினார்.


இவர் தினம் வருவதையும் விசாரிப்பதையும் பார்த்த அருகில் உள்ளவர்களில் மாடு மேய்ப்பவர் இவரைப் பார்த்தததும்
"ஐயா ?"
"ம்…"
"நேத்து இங்க ஒரு ஆள பார்த்தேனுங்க?"
"நேத்திக்கா எப்ப "
"சாயந்திரம்"
" உடனே என்னய வந்து பார்த்து சொல்லியிருக்கலாம்ல." வீட்டுல ஒரு அவசரம்ன்னு போன நேரத்துக்குள்ள வந்துட்டு போயிட்டான் போல என்ற எண்ணம் மேலோங்கியது.
"ஐயா நீங்க சொல்லலியே அப்புறம் நான் வீட்டுக்கு போகயில பார்த்தது ஆனா அவனும் உடனே போயிட்டான் உள்ள போகல."
"ஓ அவன் இந்த வீட்டுகாரன் இல்லையா ."
" தெரியலீங்கய்யா கொஞ்சம் பொச பொசன்னு இருட்டி வேற போச்சு நானும் கறவைக்கு நேரமாச்சுன்னு மேற்கொண்டு எதுவும் கிட்ட போய் கேட்கலீங்க ."

"சரி இனி ஆள் நடமாட்டம் எதாவது பார்த்தா சொல்லு."
"சரிங்க"
என்று போகப் போனவர்

"ஏதாச்சும் ரொம்ப முக்கியமான சாமாச்சாரமங்க "
என்பதையே சற்று தயங்கி தயங்கிதான் கேட்டார்.
"ஆமா யா இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்துட்டு வரச்சொன்னாறு."
என்றவருக்கு
"நான் வேணும்னா இன்னித்தி இருந்து பார்த்து கையோட கூட்டிட்டு வரேனுங்க"
என்றதில் வீட்டு நினைவு வர நன்றாக இருக்கும் என்று நினைத்தாலும் அதை செய்ய கூடாது என்ற அறிவுறுத்தலும் நினைவுக்கு வர
"ஒன்னும் தேவையில்லை நீ போ."
என்று லேசான எரிச்சலிலும் உரைக்க அவன் செல்ல போக.

"ஏ நில்லு"

" சொல்லுங்கய்யா "
"உங்கிட்ட போன் இருக்கா?"
"இருக்குங்க."
" உன் நம்பர சொல்லு "
அவன் சொல்ல
"உன் பெயர் "
அவன் சொல்ல பதிந்தவர் அதிலிருந்து அவருக்கு அழைக்க அதை மாடு மேய்ப்பவர் எடுத்து பார்க்க
"இது என் நம்பர் பதிவு பண்ணி வைச்சிக்க. யாராவது வந்தா சொல்லு "
"சரிங்க " என அவன் சென்று விடஅவர் தனது வேலை பார்க்க துவங்கினார். சற்றைக்கு எல்லாம் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வர எடுத்தவர் எதிர் முனை கூறியதில்
" ஐயர"
"சரிங்கய்யா"
என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.
…..... ……. ……….. …………….

அந்த இருளோடு இருளாக கண்காணித்தபடி இருந்த அவன் இன்னும் கவனம் கொண்டான்.அவன் கண் முன் சென்று கொண்டிருந்தது அந்த கருஞ்சிறுத்தை . அதைப் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்தவனுக்கு இன்று தான் கண்ணுக்கு கிடைத்தது. அதனை புகைப்படங்களாக சேமிக்க துவங்கினான். சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் தான் அவர்களுக்கான நேரம் இதற்க்காக வாரம் நாட்கள் ஏன் மாதம் வருடம் கூட காத்திருக்க வேண்டி வரும். உயிரும் போகலாம்

அரிய தருணங்கள் இவை வாய்க்கவும் செய்யலாம் வாய்காமலும் போகலாம் இருந்தாலும் பொறுமை நிதானம் அனைத்தும் தாண்டிய அர்ப்பணிப்பும் ஆர்வமும் முக்கியம்.

இன்னும் அதே இடத்தில் காத்திருக்க இருள் விலகத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அந்த இருளின் மிச்சமாய் இன்னும் ஒன்று. கடந்த காலங்கள் சில சமயம் உயிர் கொண்டால் இப்படித் தான் இருக்குமோ எனும் வண்ணம் மகிழ்வும் மிரட்சியும் இணைந்து கம்பீரமாய் இப்போது அவன் முன்னம். .
தங்கம் போல மின்னும் விழியும் அந்த தூயகருமையும் மெல்ல நகர்ந்து நிமிர்ந்து சுற்றும் பார்த்த அது மெல்ல தன் உடலை வளைத்து நெரித்து விட்டு அந்த மரத்தில் தன் நகங்களை கூர் தீட்டி பார்த்து விட்டு நகர்ந்தது.அது வரை அனைத்தையும் பதிவு செய்தவன் முகத்தில் மகழ்ச்சி ரேகை.

அங்கிருந்த தனது புகைப்பட கருவி இருளிலும் பார்க்க உதவும் தனது தொலை நோக்கி மற்றும் பொருட்கள் அனைத்தையும் சேகரித்தவன். ஒரு மெல்லிய சீழ்கையுடன் அங்கும் இங்குமாய் பறந்த பறவைகளையும் அதன் ஒலிகளை கேட்டவன் அது போல சீழக்கையடிக்க அதில் சில பறவைகள் பறக்க , ஒன்று கழுத்தை வளைத்து தன் இணையோ என்று தேட அதை கண்டு கொண்டவன் மீண்டுமாய் அதே சீழ்கை ஒலியை எழுப்ப அந்தப் பறவை இப்போது வெகு உண்ணிப்பாக கேட்க அவன் மீண்டும் ஒலி எழுப்ப அது மீண்டும் ஒலி எழுப்ப தற்போது இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பு வந்திருந்தது.

பிறகு மீண்டுமாய் ஒரு சீழ்கை நான் உன்னை பிறகு சந்திக்கிறேன் என்பது அடித்து காட்டியவன் தனது கூடாரத்தை நோக்கி நடந்தான். டென்ட்டுக்குள் நுழைந்த அவன் முன் அவர் அமர்ந்து இருந்தார். அறுபதுகளில் இருந்தாலும் தோற்றம் அப்படி இல்லை. அவரைப் பார்த்த அவன் கண்விழிகளில் சிறு விரிவு அவ்வளவே அவன் அவரை அறிந்து கொண்டதற்கான பிரதிபலிப்பு அவரிடம் அதை எதிபார்த்த அவரும் அப்படியே அமர்ந்திருக்க தனது பொருட்களை அதன் இடத்தில் வைத்தவன். அவரைக் கருத்தில் கொள்ளாமல் அருகில் இருந்த ஒடைக்கு சென்று நீர் எடுத்து வந்தான்.

அங்கிருந்த நெருப்பில் தேனீர் தயாரிக்க துவங்கினான். அவரும் அவனை பார்த்தபடி இருந்தார் ஒரு வார்தை பேசவில்லை. அவருக்கும் தனக்குமாய் இரு கோப்பைகளை எடுத்து வந்தவன் ஒன்றை அவனுக்கு கொடுத்தவன் மற்றொன்றுடன் அவர் எதிரில் அமர்ந்து கொண்டான்.

"தேடுறீங்க போல "
"ம்"
"முதல் அங்க உட்கார்ந்து இருக்குறவன போச் சொல்லுங்க."

"சொல்லியாச்சு."
என்றவரை பார்த்த அவன் பார்வை "என்ன விஷயம்"
எனும் கேள்வியை தாங்கியிருந்தது. அதற்கான பதிலாய்

அவன் முன் ஒரு கோப்பை வைத்தார் . அதை திறந்து தன் பார்வையை அதில் பதித்தான்.
"அதில் ஒருவர் இருந்தார். "
இவன் கண்கள் அதில் பதிய அதைக் கண்டவர்

"நாராயணன் ஆர்கியாலஜிஸ்ட் இவரு இப்ப செண்ணைல இருக்கார் அவர் இமயமலையில் உள்ள சில இடங்களுக்கு ஆராய்ச்சிக்காகப் போறார் நீங்க அவர் கூட ஜாயின் பண்ணனும் "

" எப்ப"

"நாளைக்கு காலைல "

என்ற அவரை நிமிர்ந்து பார்க்க இப்பபோது அவர் தன் முன்பு இருந்த தனக்கான டீயை எடுத்துக் கொண்டவர் வெளியே வந்து நின்று கொண்டார்.அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேல் ஒரு இலங்கு ஊர்தி வட்டமிட்டு கீழே இறங்க துவங்கியிருந்தது .

அவன் தன் கூடாரத்தை பிரித்து கட்டியவன் கையில் இருந்த கோப்பை அருகில் இருந்த நெருப்பிற்குள் வீசியிருந்தான். அதைக் கண்டவர் அவன் விஷயத்தை விளங்கிக் கொண்டுவிட்டான் என்று புரிந்தது கொண்டவர் கண்களில் சிறு நிம்மதியும் மெச்சுதலும் .

அதற்குள் இலங்கு ஊர்தி கீழே வந்திருக்க அதிலிருந்து ஒருவன் இறங்கி வந்து அவர் கையில் ஒரு உறையைக் கொடுத்து விட்டு

"விஷ்யூ ஆல் சக்சஸ். " என அவனைத் தழுவிக் கொண்டவர்
அவனை விடுத்து இலங்கு ஊர்தியில் ஏறிக் கொண்டார்.
…………… ………… …–....
அந்த இன்ஸ்பெக்டர் தன் உயர் அதிகாரிகள் முன் தலை கவிழ்ந்து நின்றார்.
"ஒருத்தன் ஒரே ஒருத்தன் அவன ஒரு மாசாமா வாச் பண்றீங்க இதுவரைக்கும் அவனப் பார்க்கலை அவனப் பத்தி ஒரு தகவல் கிடைக்கலன்னா என்ன அர்த்தம் ."

" ஸார் நானே நேர்ல போய் பார்க்கலாம்ன்னா அதுவும் கூடாதுன்னு சொல்லிட்டீங்க ."
"ஆமா நாங்க சொன்ன எல்லாத்தையும் கேட்ட மாதிரி. யோவ் ஒரு ஆள கண்காணிக்கறது எப்படினு தெரியாதாயா"
"சார் என்ன சார் நீ அனுப்பி வைச்ச ஆள் என்னென்ன பண்ணான்னு அவன் வீடியோ அனுப்பி வைச்சிருக்கான்."

"சார் என்ன சார். போங்க அவர நாங்க பார்த்துக்கறோம்"

"சார் ஸாரி சார். பட் அவர் மேல எந்த கேஸும் இல்லை. ஊர்லயும் அவர எப்பவாது தான் பார்க்க முடியும் இந்த ஊர்காரர்ன்னாலும் அடிக்கடி வெளியூர் போறவறு எப்பவாது தான் வருவாருன்னு சொல்றாங்க போன் எதுவும் இல்லை. பொண்டாட்டி பிள்ளை அண்ணன் தம்பி எதுவும் இல்லை .சொந்தக்காரங்க யாரும் வரப் போக இல்லை அதான் சார்."

"அப்படியா ரொம்ப சந்தோஷம். உங்க தகவலுக்கு போய்ட்டு வாங்க .இப்படியே எல்லா கேஸையும் விசாரிங்க விளங்கிடும். உங்கள எல்லாம். யோவ் அவரப் போ சொல்லு யா நான் ஏதாவது சொல்லிடப் போறேன் ரிட்டயர்ட் ஆகப் போற கேஸ் வேற."
என கத்தவும் அங்கிருந்தவர்களில் ஒருவர்
"நீங்க போங்க ரத்னவேலு "
"வரேங்க ஐயா. "
என்று விட்டு அவர் வெளியேறினார். அவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. என்ன ஏதுன்னு சொல்லாம ஒருத்தன விசாரின்னாங்க இப்ப அது சரியில்லைன்னு திட்டு வேற மொட்டையா என்ன விசாரிக்க எனக் குழம்பியபடி இருப்பிடத்திற்கு திரும்பினார்.

………….

இமய மலையின் லடாக் பகுதிக்குள் நுழைந்து கொண்டு இருந்தது. அவர்கள் வாகனம்.

"தாடாளன் "

"சொல்லுங்க சார் "

"உனக்கு யார் யா தாடாளன்னு பெயர் வைச்சது. ? "

"எங்கப்பா சார்?"

"எங்க இருந்துய்யா இப்படி பெயர் எல்லாம் கண்டு புடிக்கிறீங்க?"

"எங்கப்பாவுக்கு தமிழ் மேல கொஞ்சம் பற்று அதிகம் அதே சமயம் பெருமாள் மேல பக்தியும் அதிகம் அதனால திரிவிக்கிரமன் ங்கற பெருமாள் பெயர ஆண்டாள் பாசுரத்தில் தாடாளன் அதாவது தாள்+ ஆளன் தாடாளன் தாள்- அடி , ஆளன் -அளந்தவன் ஆண்டவன் மூன்று அடிகளில் உலகை அளந்தவன் என்ற பெயர் அவருக்கு பிடிச்சி போய் வைச்சிட்டாரு."

"டெனிசோவன்ஸ்ன்னா என்னன்னு தெரியுமா?"

"தெரியாதுங்கய்யா?"

"என்னது தெரியாதா?"

"ஆமாங்க தெரியாது."

"அப்புறம் எப்படிய்யா இங்க வந்த ?"

"நாங்க எங்க சார் வந்தேன் நான் சிவனேன்னு தமிழ்நாட்டுல இருக்க கோயில் குளம் கல்வெட்டு பார்த்துட்டு இருந்தேன். மேல் அதிகாரிங்க தான் ஏதோ இமய மலைக்கு சீனியர் ஆபிசர் போறோரு நீயும் போன்னு போட்டு விட்டுட்டாங்க வேலைல சேரும் போது கொஞ்சம் மலையேறத் தெரியும் சொன்ன ஒரே காரணத்துக்கு இப்படி செய்வாங்கன்னு யாரு கண்டா."

"ஒரே ஊர்(நாடு) காரங்கன்னு போட்டு இருப்பாங்க யா "

என்றவர்கள் தங்களின் பேச்சை நிறுத்திக் கொண்டு இறங்கினர். ஏனெனில் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது
 



அத்தியாயம் 2

இமயமலையின் லடாக் பகுதி குளிர் பாலைவனம் எனும் அந்த பகுதியில் கோடை காலம் அதனால் தானோ பூச்சியதிற்கு சற்று கீழ் குளிர் நிலவிக் கொண்டிருந்தது. பழமரங்கள் பசுமை பள்ளத்தாக்குகளும் பணிகளாக தோன்ற இறுதியில் மிகத் தெளிவான வானம் என்னை வந்து சேர் என்று அழைத்துக் கொண்டிருந்தது.

வாகனத்தில் இருந்து இறங்கியவர்களுடன் அந்த இடத்தை சார்ந்த ஒருவனும் இருந்தான் அவனுடன் இருவரும் இணைந்து நடக்கத் தொடங்கினார்கள் “ யாங் என் பெயர் ”
தன்னை அறிமுகபடுத்திக் கொண்டான். யாக் எனப்படும் ஒரு வகை காட்டு எருது நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த தாடாளனிடம்

"அதன் பாலில் இருந்து எடுக்கப்படும் சீஸ் போன்ற உணவு எடுப்பார்கள் அதன் முடி தோல் காலணி தயாரித்த பிறகு உணவுக்கு அதன் கொழுப்பு "என்று விவரித்தபடி நாரயணன் , தாடாளன் இருவரையும் அந்த வீட்டிற்குள் அழைத்து வந்தான்.

அந்த வீட்டின் ஒரு புறம் எருது சாணத்தில் வரட்டி செய்துஅடுக்கி வைத்து இருந்தனர். இவர்கள் அதைப் பார்க்க அதைக் கண்டுகொண்ட அவன்
" இது தான் இங்கு எரி பொருள் குளிர் காலத்தில் வேறு எதுவும் கிடையாது ."

இயற்கையோடு இயைந்த வாழ்வு அவர்களுடையது என்பது புரிந்தது. என்றாலும் சில நவீனங்கள் எட்டிப் பார்த்தது. தாடாளன் அவர்கள் உடைமைகளை அந்த சிறு வீட்டின் மற்றோர் அறையில் வைத்து விட்டு வந்தான்.
நாராயணனுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகியிருந்தது போலும். அனைத்திற்கும் ஆச்சர்யப்பட்டது போல இல்லை எனவே அவனுடன் ஏதோ பேசினார் கொஞ்சம் திக்கி திணறித்தான் என்றாலும் பேசினார்.

உணவைப் பற்றி என்பது அவர் சைகையும் அவர் அரைகுறை மொழியிலும் புரிந்தது.அதில் அவன்ரதலையாட்டி ஏதோ கூறியவன் திரும்பி சென்று விட தாடாளனைக் கண்டவர் அவனோ சற்று தள்ளி நின்று அந்த இடம் அதன் சுற்றுப்புறங்களை பார்த்துக் கொண்டிருந்தான்,
அவனிடம் சென்றவர்
.

" இந்த இடம் எல்லாம் புதுசுல மெல்ல பழகிடும் அப்புறம் இப்ப வந்துரும். சோ நீங்க சாப்பிட்டுவிட்டு படுங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றவர் தனது கணியை எடுத்து பார்க்கத் தொடங்கினார்."

அதனை பார்த்தவன் அறைக்குள்பொருட்களுடன் நுழையப் போக

“தாடாளன்” என அழைத்தவர்
“நாம நாளைக்கே சைட்டுக்கு போறோம்” என்றுவிட்டு மீண்டும் கணினியில் ஆழ்ந்தார்.

அவரை சில நொடி பார்த்தவன் அறைக்குள் சென்றான்





……… …………….

பாப்பு நீயூ கினியா

அந்த ஆராய்சி கூடத்தில் பலவகையான மனித உயிர் மாதிரிகள் இருந்தன. அதில் ஒன்று இவ்வளவு நாட்களாக மிகக் கவனமாக கையாளப்பட்டதில் தப்பிப் பிழைத்து பிறந்திருந்தது அந்த குழந்தை. ஆம் குழந்தையே தான் ஆனால் வழக்கமான மனிதக் குழந்தையில் இருந்து வேறுபட்டு மிக உயரமாக செம்பழுப்பு நிற முடி மற்றும் கண்களுடன் இருந்தது. ஆனால் பிரசவ காலத்திற்கு முன்பே அதனால் இன்குபேட்டரில் வைத்து பாதுக்கப்பட்டாலும் இறந்திருந்தது .

என்ன நடந்தது என்பதுபோல் உதவியாளர்களைப் பார்த்தவள் தனது மேஜைக்கு வர.சில நிமிடங்களில் அது இறப்பின் காரணம் மற்றும் வரலாறு எல்லாம் அவள் பார்வைக்கு வந்திருந்தது. அவைகளின் மூல கூறு வாய்ப்பாடு (DNA ) மாதிரிகளை திரையில் விரித்து வைத்து பார்த்தவளுக்கு அவை முழுமையாக கிடைக்காமல் போகக் காரணம் அவற்றைப் பற்றிய ஏதோ ஒன்று தவறவிடப்பட்டுள்ளது. என்பதும் புரிய

அது கிடைக்காமல் தன் ஆய்வு முழுமையடாது . இப்படி மெல்ல மெல்ல டிரையல் அன்ட் எரர் முறையில் இன்னும் பல வருடங்கள் கூட ஆகலாம் என்பதும் புரிய அருகில் இருந்த அந்த பாதுகாக்கப்பட்ட பேழையில் இருந்த அந்த சுண்டு விரலை பார்த்தபடி நின்றாள்.

"ஐ வில் ரிப்டியூஸ் யூ."

என்றவளுக்கு மீண்டுமாய் இதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இப்போது அது முடியாது என்பதும் புரிய தனது தனிப்பட்ட ஆராய்ச்சி மையத்தில் இருந்து மேலே வந்தவள் வெளியே வந்த அவள் “ தன்யா “

xx என்ற அவள் நிறுவனம்
அறிவியல் மற்றும் ஆராய்ச்சி
மருத்துவ பொருட்கள் மருந்துகள் உற்பத்தி
என துறைகளில் உலகம் முழுவதும் விரிந்திருந்து . பரம்பரையாக இவர்கள் தொழில் என்றாலும் அதை இன்னும் சிறப்பாக நடத்துபவள்
ஆராய்ச்சியாளரும்.

சற்று சோர்வும் கோபமும் வர அங்கிருந்து வெளியேறியவள் தனது வாகனத்தில் ஏறி அதை கிளப்பியவள் முழு வேகத்தில் வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினாள். பணியாளர் யாரும் அற்ற வீட்டிக்குள் கதவை திறந்து நுழைந்தவளுக்கு ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றவும் குளிர் பதனப் பெட்டியை திறந்து பார்த்தாள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் இருக்க அதில் ஒன்றை எடுத்து சூடு படுத்துவதற்காக ஒவனில் வைத்தவளுக்கு
உதவியாளரிடம் இருந்து அழைப்பு வரவும் அதை ஏற்றவள்
அவன் கூறியதை செவி மடுத்தாள். பின்

"எதையும் மாற்ற தேவையில்லை. நான் நாளைக்கு இந்தியா வரேன்."

"ம் ஏற்பாடு பண்ணுங்க."

என்றவிட்டு தனது அலைபேசியை மின் இணைப்பில் வைத்துவிட்டு. பயணத்திற்கு தயாராக போனாள்.

********

தன் முன் இருக்கும் மாதிரிகள் சொன்ன தகவல்களில் ஆச்சர்யம் தாளவில்லை அவருக்கு . தன் முன் இருக்கும் அந்த விஷயம் உண்மையா என்று பல முறை சோதிக்க அதுவும் உண்மை எனத் தெரிய வந்தவர்.
அதை ரகசியமாய் தனது சிறிய பென்ட்ரைவில் தரவிறக்கம் செய்தார்..

******

தன்யா அவருக்கு எதிராக உட்கார்ந்து இருந்தாள் .
இருவர் மட்டுமே எதிர் எதிராக அமர்ந்திருந்தனர்.

"நாராயணன் ஆர்க்கியாலஜிஸ்ட் ரைட் ."
என்றவளுக்கு

"தன்யா "

எனவும்

" எஸ் "

வந்த விஷயம்? என்ற கேள்வியுடன் பார்த்திருந்தாள். விஷயம் என்ன என்பதனை அறிந்திருந்தும்

"கடல் மட்டத்தில் இருந்து 3000 மீ மேல போறவங்களுக்கு அங்க ஆக்ஸிஜன் குறைய இருக்கும் அதனால் அங்க இரத்த அணுக்கள் அதாவது ஹீமோகுளோபின் அதற்கு ஏற்ற மாதிரி தன்ன மாற்றிக் முடியாம அவங்களுக்கு பல பிரச்சினை வரும் மூச்சு திணறல் மனச்சோர்வு இப்படி ஆனா லாடக்கில் இருக்க கூடிய ட்ரைபல் கம்யூனிட்டிய சேர்ந்தவங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை."

"ஏன் தெரியுமா?"

" அவங்க அங்கயே வாழ்றவங்க அதனால் அவங்க உடம்பு அதுக்கு அடாப்ட் ஆகி இருக்கும் சிம்பில்."

"ம் ஆனா அது பரம்பரை பரம்பரையா இருக்கு ?"

"தட் மீன்ஸ்"

"அவங்க ஜீன்ஸ் ல இருக்கு.."

அதுக்கும் நீங்க என்ன பார்க்க வந்ததுக்கும் என்ன சம்மந்தம்.

" நான் ஆந்ரோ பயாலஜிஸ்ட்டும் ( மானுடத் தொன்மவியல்) கூட "
என கூற
"ம் "
என்றவள் வந்த விஷயம் என்ன என்பது போல் அவரைப் பார்க்க.

தனது கணினியை உயிர்பித்தவர் அதை அவர் புறம் திருப்பி


"டேக்க அ கிளான்ஸ்."

என்று தனது கணிணியை அவளை நோக்கி திருப்ப அதைப் பார்த்தவள் பிறகு அமிழ்ந்து போனாள் .

"இட்ஸ் ரியல்."

" ம், அவங்க டி.என்.ஏ ல டென்னிசோவன்ஸ் டி.என்.ஏ இருக்கு.?"


"எஸ் "

'இத்தனை நாளாக பாப்பு நியூ கினியா இந்தோனேசியா மலேசியா அங்க உள்ள மக்கள் கிட்ட மட்டும் தான் அந்த டென்னி சோவன் டி.என் . ஏ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு இது மிக மகிழ்ச்சியான செய்தி '

"வாட் இஸ் த டீல் "

"இந்த சைட்ல வேலை பார்க்க எனக்கு நீங்க உதவி பண்ணனும்."

" எப்படி பினான்சியலா வா இல்லை இன்புளுயன்ஸா "

- இரண்டும் தான் பதிலுக்கு இதில ஆர்ட்டி பேக்கட் அப்புறம் எதுவா இருந்தாலும் நீங்க உங்க ஆராய்ச்சிக்கு முழுசா படுத்திக் கலாம்"

" அத கண்டுபிடிச்சது நான் தான் அப்படின்னு நிறுவ சில பொருட்கள் மட்டும் நீங்க தந்தா போதும்."

"இத நான் ஏன் ஏத்தக்கனும் ."

"நீங்க சட்டவிரதமா டென்னிசோவன் வகை மனுஷங்களை உருவாக்க முயற்சி பண்றீங்க ."

"ஏய் என்ன சொல்ற"

"அதுக்கான ஆதாரம் எங்கிட்ட இருக்கு எனக்கு ஏதாவது ஆனா அது மீடியா கோர்ட் போலீஸ்ன்னு போயிடும்."

"என்ன பயம் காட்டுற யா?"

"நம்ப மாட்டீங்களே என்றவன் தனது கணியை திருப்ப அதில் நேற்று இறந்த அந்த குழந்தை மற்றும் இறந்த விதம் பற்றி அனைத்து தகவல்களும் இருந்தது."


- ஒகே அக்செப்ட்"

என்றவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. என்பதை விட அவரிடம் தேவை இருந்தது. என்பதால் தற்போதைக்கு அவனை விட்டு வைத்து ஆட்டத்தை தொடர முடிவு செய்தவள்.

"உங்களுக்கான அனுமதி பணம் இரண்டும் இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். நீங்க எப்ப கிளம்பறீங்க "
"நாளைக்கு …"
"வெல்.."
என்றவள் அங்கிருந்து வெளியேற அவளைத் தொடர்ந்து வெளியே வந்த நாராயணனுக்கு அதை நம்ப முடியவில்லை.

.

……. ……..
இமயத்தில்


தாடாளனக்குள் ஏதோ நினைவுகள்.
இங்கு வந்தது முதலே அவனை அலைப்புறுதலுக்கு உள்ளாக்க புரண்டன. சற்று அயராத அந்த அறிவியில் நிலையில்,ஏதோ நிழல் உருவங்கள் சிறுதும் பெரிதுமாய் அவனை சுற்றி சூழலஅவற்றில் ஒன்று அவனைத் தொட வர தனது கையை வைத்து தடுக்க பார்த்தான், ஆனால் இயலவில்லை.அந்த விரல் அந்தக் காப்பில் பட அந்த பச்சை காப்பு ஒளிர்ந்து அடங்கியது . இப்போது பெரிய நிழலலோ நீட்டிய தன் விரலைக் கொண்டு அவன் முன் நெற்றிப் பொட்டை தொட வர நகர முயன்றான் முடியவில்லை. அந்த விரல் நுனி பட்டதும் மூளையின் நினைவடுக்கில் மின்னல் வெட்ட ஆழ்மனதில் ஏதோ செய்ய அதை தன் கட்டுக்குள் கொண்டு வர முயன்றவனுக்கு இயலாமல் மூச்சு திணற ஆரம்பித்தது.
 
அத்தியாயம் 3

தாடாளன் மூச்சுத்திணறலில் தத்தளித்து கொண்டிருந்தான் . தனது கணினியை அனைத்து விட்டு வந்த நாராயணன்.

அவன் திணறுவதைக் கண்டவர் அவனை சாய்வாக உட்கார வைத்து விட்டு மெல்ல நீவி விட்டவர்
"ஓகே ஓகே தாடாளன் உயரத்திற்கு வந்ததால் ஹீமோகுளோபின் அளவில் ஏற்படும் மாற்றங்கள்தான். இருங்க வரேன்"

என்றவர் தனது பையில் இருந்து சில மாத்திரைகளையும் நீரையும் கொண்டுவந்தவர் அதை அவனுக்கு புகட்டிவிட்டார். அதன் வீரியத்தில் சில நிமிடங்களில் மூச்சுத் திணறல் குறைய உறங்கியும் போனான் ஆனாலும் அவனுள் நிகழத் துவங்கியிருந்த மாற்றங்கள் நிற்கவில்லை.

சற்று தாமதமாக கண் விழித்த அவன் எழுந்து வெளியே வர அவன் கண்டது கள ஆய்வுக்கு ஆயத்தமாகி உணவு உண்டு கொண்டிருந்த நாராயணனைத் தான்

" இப்ப ஒகே வா சைட்டுக்கு வர முடியும் தான."
என்றதும்.

"ஒகே சார் ஐந்து நிமிடம்"

என்று விட்டு சென்றவன் அதே போல் ஆயத்தமாகி வந்துவிட
"சாப்பிட்டுட்டு வா "
எனவும் அவன் உணவை முடிக்கவும்
இருவருமாய் நடக்க ஆரம்பித்தார்கள். அவருக்கு
ஏற்கனவே பழக்கம் இந்த இடம் ஆனால் அவனுக்கு நீண்ட நாள் கழித்து அங்கு வந்தாய் ஒரு எண்ணம், கூடவே ஏதோ காட்சிகளும்.

'நேற்று அவர் சொன்னது போல ஹீமோ குளோபின் பிரச்சனை தான் போல என்று நினைத்தவன் '

"நாராயணன் சார் ஒரு ட்டு மினிட்ஸ் நீங்க முன்னாடி போய்ட்டு இருங்க நான் வரேன். "

"ஓகே பட் கம் குயிக். "

என்று அவர் முன்னேற சற்று ஆசுவாசம் கொள்ள என நின்றவன் அந்தப் பாறையில் அமர்ந்து கொண்டான். மனதிலும் மூடிய இமைக்குள் ஏதே தேதோ நினைவுகள் விரிய தலையை உதறி கண்களை திறந்தவன் முன்


சில பில்லியன் ஆண்டுகள் ஆகும் நான் அனைவதற்கு என்று அறிவித்த படி சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அதன் ஒளி பட்டு மின்னும் தன் கைகாப்பு இன்னும் அதிகமாய் ஒளிர்வது போல் இருந்தது. அதை தனது குளிர் ஆடைக்குள் மறைத்தவாறு நடக்கத் தொடங்கினான்.


………..... ………. …….

தொல் பொருள் ஆய்வு என்பது பல படிநிலைகளைக் கொண்டது. முதலில் இந்த இடத்தில் இருக்கலாம் என்பதான ஊகம் . பிறகு அதுகுறித்த சில தடயங்கள் அதை சமர்பித்து கள ஆய்வு செய்ய அனுமதி பெற வேண்டும். பிறகு களவு ஆய்வு செய்து கிடைத்த ஆதாரங்களின் கால ஆய்வுக்கு அறிவியல் பரிசோதனைக்கு உடப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய அந்த இடத்தை கையகப்படுத்த வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் சுற்று சூழல் அறநிலையத் துறை என அந்த கள ஆய்வு செய்யபடும் இடத்தை பொறுத்து பல துறைகளில் அனுமதி வாங்க வேண்டும்.

தொல்லியல் ஆய்வுகளை தனியாரும் மேற்கொள்ள முடியும் என்றாலும் எல்லோராலும் செய்துவிட முடியாது. அதற்கான அரசின் அனுமதி முதலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.பல வருடங்களாய் தொல்லியல் துறையில் இருக்கும் நாராயணனுக்கு இந்த நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தும் தெரியும் .


அவரது இலட்சியம் இது போன்ற மானுடவியலில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் வரலாற்றில் தனது பெயரையும் இணைத்து கொள்ள வேண்டும் என்பதே. அதற்காக பல வருடமாய் முயல்கிறார் . என்றாலும் நிதியுதவி அதிக அளவில் நிதியுதவி தேவைப்படும் இதற்கு அரசு அளிக்கும் என இனியும் காத்திருக்க இயலாது என புரிய. பல வருடங்களாக ஆராய்சிக்கென்று தனது வாழ்நாளையும் பணத்தையும் செலவழித்த களைத்த அவருக்கு இனியும் காலம் கனியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே மாற்று வழிகளை ஆலோசிக்க துவங்கினார்.

அவருக்கு பணம் பிரதானம் இல்லை எனவே முதற்கட்ட நடவடிக்கைகளில் அவர் தனது சொந்த செலவில் செய்து முடித்தார். ஆனால் இமயமலையில் குகைகள் அதுவும் லடாக் பகுதியில் என்னும் போது மூன்று நாடுகள் மற்றும்
அரசியல் மற்றும் பாதுகாப்பு என்று வரும்போது மிக எளிதாக தட்டி கழித்து விடுவார்கள் என்பதும்
தனது மொத்தத்தையும் ஏற்கனவே இந்த ஆராய்ச்சி விழுங்கியிருக்க இனி தனக்கு நிதி மற்றும் செல்வாக்கு இரண்டும் தேவை என்று புரிந்து போயிற்று. என்ன செய்ய என்றிருந்தவர் முன் புலப்பட்டது. தன்யாவின் நிறுவனம்.

தன்யாவின் நிறுவனத்தின் கிளைகள் உலக அளவில் இருந்தாலும் அவளது ஆராய்ச்சி மையம் மற்றும் தொண்டு நிறுவனம் பாப்பு நீயுகினியா இந்தோனேஷியா போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதையும் கவனித்தார். அந்த மக்களுக்கும் தனது ஆராய்சிக்கும் தொடர்பு இருப்பதை அவர் அறிவார். நேரில் சென்று அந்த பழங்குடி மக்களில் ஒருவராக இருந்து ஆய்வு செய்தும் இருக்கிறார். இப்போது அதையே தான் அவளும் செய்கிறாள். ஆனால் ஏன் என்று தெரியவில்லை.

எனவே மெல்ல அவளை தொடரத் துவங்கினார். அவர் அறிந்து கொண்டது….. உறையச் செய்தது.

அதைக் கொண்டுதான் அவர் தன்யாவை சந்தித்து காரியம் சாதித்து கொண்டது . ஆனாலும் அவள் இவ்வளவு எளிதாக ஒப்புக் கொண்டு விடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அது ஒரு புறம் ஏனோ அரித்துக் கொண்டு இருக்க தற்போது அது எதையும் நினைவுக்குள் கொண்டு வராமல் தள்ளி விட்டவர் பின்னால் திரும்பி பார்க்க தாடாளன் வந்து கொண்டிருப்பது தெரிய நின்று அவனுடன் நடந்தார்.
.

…. ……...... …............ ……........

அந்த தீவின் ஓடு தளத்தில் விமானம் வந்து இறங்கியதும். அதில் இருந்து பல நாடுகளைச் சார்ந்த சிலர் இறங்கினர். அவர்கள் அனைவருக்கும் தனித் தனியே வாகனங்கள் வந்து நிற்க அதில் ஏறிக்கொண்டனர் அதில் ஒருவனாய் தாடாளனும்.

அது அவர்களை அந்த வீட்டின் முன் நிறுத்தியது. வாகனத்தில் இறங்கிக் கொண்ட அவர்கள் அந்த தானியங்கி கதவினைத் தாண்டி வரவேற்ப்பாய் விரிந்திருந்த அந்த அறையையும் அதன் இருக்கைகளையும் புறக்கணித்தவர்கள் நேராக சென்று எதிரில் இருந்த அந்த தொடுதிரையின் முன் நின்று தங்கள் கண் கரு விழியையும் கைரேகைகளையும் வைத்ததும்
அது அவர்களுடையது தன் தரவுடன் ஒப்பீடு செய்து
ஏற்றுக் கொண்ட பின் அந்த அறை திறந்து அவர்கள் உள்ளே நுழைய அவர்களை அனுமதித்தது.


அதில் ஒருவன் தொடு திரையை மதிக்காமல் வரிசையை மரித்து வேகமாக உள்ளே நுழைய முயன்றான். அந்த வாசலில் அவன் கால் வைக்கவும் மேலிருந்து கீழே இறங்கிய லேசர் ஒளி அவனை இரண்டாக பிளந்திருந்தது . கூடவே

"கதிர்கள் அனைத்து இடங்களிலும் குறிவைத்தது விழ துவங்கி விட்டது. கொஞ்சம் நகர்த்தாலும் அனைவரும் இறந்து விடுவீர்கள்."

என்று ஒரு குரல் எச்சரித்துஒலித்து அடங்க அதில் மற்றவர்கள் அரண்டுபோய் நின்று விட்டனர். அதில் ஒருவன் கையை லேசாக நகர்த்த கண்ணுக்கு புலப்படாத அந்த கதிர் அவன் கையின் ஒரு பாகத்தில் கோடு கிழித்து விட யாரும் நகரவில்லை. பிறகு தாடாளன் நகர எத்தனிக்கும் முன் முகமூடி அணிந்த இருவர அவன் அசையவில்லை. வந்தவர்கள் அந்த இரு கூறுகளையும் அள்ளிச் சென்றனர்.

பிறகு மீதம் இருந்தவர்கள் கண்களையும் கைகளையும் அடையாளப்படுத்திவிட்டு உள்ளே செல்ல இறுதியில் தாடாளன் தொடு திரை முன் நிற்க அது அவன் கண் கருவிழி மற்றும் கை ரேகைகளை உள்ளெடுத்து கொண்டது. பின் சில நொடிகள் தாமதித்து அவன் வசமாகியிருந்தது.

அந்த பெரிய அறை முழுக்க பல்வேறு உயிரிணங்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில் பல வரலாற்றில் அழிந்து போனவை பல எலும்பு கூடுகளாய் பல உருவ மாதிரிகளாய் நின்றிருக்க அதற்கும் அடுத்ததான அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டான். அந்த அறையில் அந்த மாதிரிகள் உயிருடன் உலவிக் கொண்டு இருந்தன.

அவனுக்கு உள்ளுக்குள் லேசாக பயம் வர கண்கள் சுழன்றன.அவருடன் இணைந்து நடந்து கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அதை இரசித்தபடி என்பதை விட கடையில் வாங்கும் பொருட்களை நுகர்பவர் அதனைப் பார்பது போல் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.இங்கு வருவது ஒன்றும் எளிதில்லை. அதுவும் குறிப்பாக இது போன்ற இடத்திற்கு எனவே எதையும் காட்டாமல் இருப்பது தான் நல்லது என உணர்ந்து அப்படியே நடந்தும் கொண்டான்..

மீண்டுமாய் அறைக்குள் சென்று அமர ஏலம் துவங்கியது.
நாய் பூனை குதிரையை தாண்டி இது போன்ற பிராணிகளை உருவாக்கி அதை வளர்ப்பது என்பதை பொழுது போக்காக கொண்டிருந்த பெரும் பணக்காரர்களின் பிரதிநிதிகள் அங்கு வந்திருந்தனர். அந்த விலங்குள் ஒவ்வொன்றாக வர அதற்கான ஏலம் தொடங்கி முடிவடைந்தது.

இறுதியாக மேலே வந்த அவள் தன்யா . தன் பின் இருந்த பெரிய திரையை இயக்க அதில் ஒரு பழங்கால மனிதன் படத்தை காட்டியவள்.

"டென்னி சோவன்ஸ் அதாவது நவீன மனித இனமான நமது முந்தைய இனமான நியான்டர் தால் மனிதர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு மனித இனம். ஆனா இப்ப அந்த இனம் இல்லை. ஆனா அவங்க நவீன மனிதர்கள் காலம் வரை இருந்திருக்கலாம்னு சொல்லறாங்க அதுவும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா இங்க இருக்கும் மக்கள் அதுவும் பூர்வீக மக்கள் கிட்ட இந்த DNA இப்பவும் இருக்கு"

என்றவள் அடுத்தாக அந்த சுண்டு விரலை திரையில் கொண்டு வந்தாள்.

"அந்த நமக்கு கிடைச்சிருக்கற இரண்டாவது ஆதாரம் இந்த சுண்டு விரல் இது மனித பெண் மற்றும் டென்னிசோவன் ஆண் இருவருக்கும் பிறந்த குழந்தை இந்த குழந்தைக்கு பன்னிரண்டு வயது இருக்கலாம் "

என்று மேல எதுவோ சொல்லும் முன்

"ஜஸ்ட் கம் டு த பாயிண்ட்"

என்றான் ஒருவன் பொறுமை இழந்து அவனைப் பார்த்து சிரித்தவள் மீண்டும் அந்த்திரையை நகர்த்த அதில் வந்து நின்றது ஒரு உருவம் ஆனால் அதன் உயரம். அது தாடாளனை மட்டும் அல்ல அனைவரையும் வியப்படையச் செய்தது.

"வீ ஆர் ரீ ப்ரடியூஸ் தெம். (we are Reproduce them,)
என்றவள் அங்கு நிறுத்தி விட்டு.
" first price …."
என ஒரு பெருந்தொகையுடன் மீண்டுமாய் ஒரு ஏலத்தை துவங்கினாள்.

ஆனால் அங்கிருந்த அவனுக்குள் ஏதோ கிளைவிட்டு பரவ ஆரம்பித்தது.

 


அத்தியாயம் 4

பாலியின் சர்வதேச விமான நிலையத்தில் அமர்ந்திருந்தான் தாடாளன். அவன் மற்றும் அனைவரையும் அழைத்துச் சென்றது போல் மீண்டும் திருப்பி கொண்டு வந்து விட்டிருந்தனர் தன்யாவின் ஆட்கள். ஆனால் அதன் பின்னர் அவன் அங்கு தங்க பிரியம் கொள்ளவில்லை.
உடனேயே கிளம்பியிருந்தான்.

அவனுக்கு இன்னும் நேரம் இருந்தது விமானத்திற்கு. எனவே சிற்றுண்டி ஒன்றை முடித்தவன் ஒரு காபியுடன் கையில் பத்திரிக்கையுடன் அமர்ந்து கொண்டான். அப்போது அவனுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவர் .

"ஆர் யூ இன்டியன்"

என்றதும் அவன் திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தன் பத்திரிக்கையில் மூழ்கி விட்டான்.அவர் தனது தோள்களை குலுக்கி விட்டு எழுந்து சென்று தனக்கு ஒரு காப்பியும் வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும்போது
அவன் அருகில் வேறு சிலர் இருக்க தள்ளி அமர்ந்து கொண்டார்.

அது ஒரு கணவன் மனைவி இருவரும் அவரது வயதில் இருக்க அவர்களிடம்
"ஆர் யூ இண்டியன் " (Are you Indian?)
என்ற கேள்விக்கு
"எஸ் ?"
என்றான் கணவன்
"நீங்க தமிழ்நாடா?"
என்று அவர்கள் தோற்றத்தில் அவர்கள் உரையாடலை வைத்தும் அவர் கேட்க
"ஆமா நீங்க ?"
என்று அவர்கள் பதிலுக்கு கேட்க
"நானும் தமிழ் நாடு தான். என் பெயர் சிவசங்கரன் இங்க நிறைய இந்துக் கோயில்கள் இருக்கு அதான் பார்க்கலாம்ன்னு வந்தேன்…."
"ஓ அப்படியா நான் தியாகராஜன் இது என் மனைவி லலிதா
நாங்களும் இந்த கோவில்கள் பத்தி கேள்விபட்டு தான் வந்தோம் என் பையன் போன தடவை இங்க வந்துட்டு எங்க இரண்டு பேருக்கும் டிக்கட் போட்டு அனுப்பி வைச்சான்…."

என்று உரையாடி கொண்டிருந்தனர்.

அதில் தாடாளனுக்கு எரிச்சல் தான் . எவ்வளவு நேரம் பேசுவாங்க. எப்போதடா தனக்கான அறிவிப்பு வரும் என்று அமர்ந்திருந்தான் மேலும் அவனை அந்த விரல் படம் வேறு ஏதோ ஒரு வகையில் தூண்டிக் அரித்ததுக் கொண்டிருந்து அதற்காக வேணும் இங்கிருந்து ஓடி விட வேண்டும் என்று தோன்றியது.. பத்திரிகையை விரித்தவாறு இருந்தான் . அவர்களுக்கு இதைப் பற்றி என்ன தெரியும் இவனைச் கண்டு கொள்ளவே இல்லை அவர்கள் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கான அறிவிப்பு வர முதல் ஆளாக எழுந்து கொண்டவன் தனது பத்திரிக்கையை கோபத்தில் இருக்கையில் விசிறி விட்டு சென்று விட்டான். அந்த தம்பதிகள் பேச்சு சுவராசியம் மற்றும் தங்கள் பொருட்களை சேகரித்த அவர்கள் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் சிவசங்கரன் அவனைக் கவனித்துக் கொண்டு தானே இருந்தார். அதில் இருந்த அவருக்கான சமிக்ஞையையும். அவனைத் தொடர்ந்து அந்த தம்பதிகள் பிறகு அவரும் தங்களது பொருட்களுடன் உள்ளே செல்ல தொடர்ந்து அவரும் உள்ளே நுழைந்தார் இப்போது அவன் வீசியிருந்த அந்தப் பத்திரிக்கை அங்கு இல்லை அது அவர் கையில் இல்லை பையில் இருந்தது.

…….

" அது அவ்வளவு எளிது கிடையாது நீங்க கொடுத்த அந்த சுண்டு விரல் மாதிரி அதுமனிதனும் டென்னிசோவன் இரண்டும் கலந்த குழந்தை. அதில் இருந்து டென்னிசோவன் ஜீன்ஸ் மட்டும் பிரித்து எடுத்தோம். அது முழுமையாக இல்லை. எனவே மீதியை இங்க உயிரோட இருக்கற மாதிரிகளிடம் இருந்து எடுத்து அதற்கு பொருத்தமா அதே ஜீன் அளவு அதிகம் இருக்க பெண்களா செலக்ட் பண்ணி அவங்க கர்ப்பைல அந்த கருவை செலுத்தி வளர்க்க வேண்டும். "
என்றவள் மேலும்
"அதோட நுண்ணறிவு மனிதனை விட குறைவாக வேண்டும் அதாவது நீங்க சொல்லறத செய்யனும் தவிர யோசிக்க கூடாது ஆனா நல்ல உயரத்தில் எந்த குறைவும் இல்லாமல் வேணும்ன்னு கேட்கிறீங்க. இது சாதாரண ரோபோவோ மிஷின்கன்னோ இல்லை உயிரியல் ஆயுதம். அப்படி கூட இல்லை .ஆயுதப் படை அப்ப கொஞ்சம் பொறுமை முக்கியம். இப்படி அவசரப்படறது.
நல்லது இல்லை."

என்றது அவர்களுக்கு எச்சரிக்கை போல் இருந்தது அது அவர்களுக்கு ஒருவித எரிச்சல் தர அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை ஆகையால் தான் விளக்கிக் கொண்டு இருக்கிறாள் இல்லையெனில்
எப்போதோ தூக்கி எறிந்து இருப்பாள்.

"இதோட உயரம் அது மனிதப்பெண்களோட கர்ப்பையை விடமிக அதிகம் அதனால அந்த குழந்தையை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் விட்டுவைக்க முடியாது . அதனால் அது முதிர்ச்சி அடையாத குழந்தையா பிறக்குது. அது மாதிரி ஒரு மனித குழந்தையை உயிரோடு கொண்டு பிழைக்க வைக்கறதே கஷ்டம் அப்படி இருக்குறப்ப இது…"
.

என்று தன்யா தன் முன் அமர்ந்திருந்த அந்த அயல் தேசத்தின் ராணுவ அதிகாரிகளுக்கு. இறந்து போன அந்த குழந்தைக்கான காரணத்தை அவள் விளக்கிக்
கொண்டிருந்தாள். அவர்களோ

"வீ டோன் வான்ட் எக்பிளனேஷன்?"

என்ற அவர்களில் அலட்சியம் தெரிய

"எங்களுக்கு இப்பொழுதே வேண்டும். இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும்"

என அச்சுருத்த

"தென் டு அஸ் யூ விஷ்(Then do as you wish)
என்ற இவளில் கோபம்

"இதற்கான விளைவுகள் மோசமாக இருக்கும்." (you have to face the Consequences)
என்றவர்களின் மிரட்டல் தொனியில்
'அது எப்படி நீ சொல்ல முடியும் நாங்கள் பணம் கொடுத்து இருக்கிறோம் எனும் எச்சரிக்கை '

" இஸ் இட்…."

என்றவள் அமர்ந்த வாக்கில் குனிந்து முகத்தை அவர்கள் முன் கொணர்ந்து
" உன்னால என்ன முயுமோ செய்"(do if you dare?)

என்றவளின் துணிவில் அவர்களுக்கு புரிந்தது இது…. இவள் …இரண்டும் எளிதல்ல என்பது. இப்போது அவர்களுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை.
அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வர அதில் அவர்கள் எழுந்து நின்றுவிட்டனர் விரைப்புடன் எதிர் முனை என்ன சொன்னதோ அவர்கள் முகம் வெளுத்து போனது. அலைபேசியை அவளிடம் தர அவர்களை மிக அலட்சியமாக பார்த்துவிட்டு வாங்கியவள்.

விளக்கத்தை அளித்தாள். அதைக் கேட்டுக் கொண்ட மறுமுனை மீண்டும் ஏதோ கேட்க தன்யா
"ஐ சேர்ச் பார் தி புல் ஸ்கெலிட்டன் ஆப் தட் கேர்ல்"
என்றதில் எதிர் முனை மீண்டும் ஏதோ கேட்க
"சிக்கிரமே."
என்றவள் அலைபேசியை அவர்களிடம் தர அவர்களிடம் அங்கிருந்து என்ன கூறப்பட்டதோ அதில் இவளை ஒரு பயப் பார்வை பார்த்தவர்கள்
"மன்னித்துக் கொள்ளுங்கள்"(sorry)
என்றதும்
" யாருகிட்ட… தன்யா டா ……வாங்குறவனோட எடுபுடி உனக்கே இவ்வளவு இருக்கும்போது செய்யற எனக்கு எவ்வளவு இருக்கும்."

என்றவளிடம்
"மன்னித்துக் கொள்ளுங்கள் "(our apologies)
என மீண்டும் உரைத்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். சிறு புன்னகையுடன் தனது குளிர் கண்ணாடியை அணிந்தபடி கையில் அலைபேசியுடன் அறையில் இருந்து வெளியேறியவள் நிச்சயம் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பொற்பாத்திரத்தில் சேகரிக்கப்பட்ட ஆலகாலம் தான் . தனது வாகனத்தில் ஏறியவள் அதை இயக்கியபடி அலைபேசி வழி யாரையோ அழைத்தாள்.

"வாட் இஸ் கோயிங் ஆன் தேர். எனி இம்ப்ரூவ் மென்ட்ஸ்"
என்றவளுக்கு என்ன பதில் வந்ததோ கேட்டுக் கொண்டவள்
"ஐ வில் பி தேர் சூன் (I will be there Soon )"

என்று விட்டு தனது அலை பேசியை வைத்து விட்டு சாலையில் கவனம் கொண்டாள்.
…… ………. ……….


சிவசங்கரன் தனது கணிணி முன் அமர்ந்து இருந்தார். அதில் விரிந்திருந்த காட்சிகளின் தரவுகள் கூறிய செய்தியில் திகைத்து போய் இருந்தார். தாடாளன் கையில் இருந்த பத்திரிக்கை அந்த மேசையில் கிடந்தது. கூடவே கட்டுப்படுத்தப்பட்ட அமைதியுடன் தாடாளானும்
அவர் முன் இருந்தான். அதன் மொழி இருவருக்கும் தெரியும்.


"சார் "

"இத நாம உடனே நிறுத்தனும்."

"எப்படி ?"

"இதோ இந்த ஆதாரம் இருக்கே. அத அந்த நாட்டு எம்பசி ல கொடுத்தா போதும் ல ?"

"ஏன் நாம செய்யனும் ?"

"சார்…"

"அவங்களுக்கு தெரியாதா நாம ஏன் சொல்லனும்.?"

"சார் அப்ப?"

"வேடிக்கை பார்க்கனும் கூப்பிட்டாதான் போகனும் இது அயல் நாட்டு விவகாரம் பல முனை க் கூர் கொண்ட கத்தி எப்படி வேண்டும் என்றாலும் திரும்பும்"

இது போன்ற உரையாடல்கள் நடந்து தான் அது தெரிய வேண்டும் என்று இல்லை . அப்படி நடந்தால் அவர்களில் ஒருவன் புத்திசுவாதீனம் இல்லாதவன் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிடும். ஒற்றறிதல் அதிகாரத்தை இருவரும் தான் படித்து பயிற்சி பெற்றுள்ளார்களே.

தாடாளனுக்கு தன்னை அசைத்து பார்க்கும் அந்த எண்ணத்த சோதிக்க அவனை திடப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. ஓய்வில்லாத தனது மனம் உடல் தான் காரணம் என்றும் தோன்றி விட இதில் தொடர விரும்பவில்லை. எனவே

"சாரி சர் ஐ வான்ட் ப்ரேக். பீளீஸ் "(Sorry Sir I want break pls)

என்றவனை நிறுத்த வில்லை. ஆனால் தன்யாவை கண்காணிப்பில் வைத்திருந்தவர் நாராயணன் அவளைச் சந்திக்க முயலவுமே இவர் அவரையும் வளையத்தில் கொண்டு வந்து விட்டார். ஆனால் அவள் உடனே ஏற்பாடு செய்யவும் தான் மீண்டும் தாடாளனை உடனே அழைக்க வேண்டியதாயிற்று
 
அத்தியாயம் 5

வாலஸ் லைன்



வாலசின் கோடு ஆசுத்திரலேசிய, தென்கிழக்காசிய விலங்கு வளங்களுக்கு இடையில் எல்லையாக அமைகிறது. கடைசிப் பெருமப் பனிப்பாறைக் காலத்தில், கடல் நீர் மட்டம் இன்றிருப்பதைவிட 110மீ தாழ்வாக இருந்தபோது, இருந்திருக்கக்கூடிய நிலப்பகுதியின் விரிவு சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. பாலிக்கும், லோம்போக்குக்கும் இடையில் உள்ள லோம்போக் நீரிணையின் ஆழம் காரணமாக, நீர் மட்டம் குறைந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த தீவுகள் இணைந்திருந்த காலத்திலும் இது ஒரு நீர்த்தடையாகச் செயற்பட்டுள்ளது


"இந்த சுண்டா படுகைகளில் இருந்து தென்கிழக்கு ஆசியா
வழி சைனா திபெத் இங்கு டென்னி சோவன் இனம் வாழ்ந்திருக்கலாம். மிக குறைவான எண்ணிக்கையில் இருந்திருக்க வேண்டும்.அவர்கள் நவீன மனித இனம் மற்றும் அதற்கு முந்தைய நியான்டார்தால் இனங்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என பல கருதுகோள்கள் நிலவுகின்றன."

தாடாளனுக்கு டென்னிசோவன்களை பற்றிய சிலவற்றை விளக்கியபடி அன்றைய அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன்,

"நீங்க சொல்ல சொல்ல நான் டைப் பண்றேன் கொடுங்க சார்."
எனத் தாடாளன் கேட்க தனது கணினியை அவனிடம் கொடுத்து விட்டு குறிப்புகள் வழங்கியவர்.

" முடிச்சிட்டு சொல்லு நான் வந்து செக் பண்றேன். "

என்று விட்டு வெளியேறப் போனவர் . நின்று மீண்டும் திரும்பி

" நாளைக்கு வெர்க்கு ஆட்கள் வரமாட்டாங்க. கல்யாணம் இருக்குன்னு சொன்னாங்க.நீங்களும் நானும் மட்டும் தான்.போகலாம் தான் "

என்றவரின் கூற்றை

"போகலாம் சார்."
என்று தாடாளன் முடித்தான்.

அதில் இளம் புன்னகை ஒன்றை உதிர்த்தவர்.

"முடிச்சிட்டு வாங்க நான் வெளியில் இருக்கின்றேன்."

வெளியே சென்று அமர்ந்து கொண்டார். தாடாளன் தன் வேலையை தொடர்ந்தான்.

அந்த குகைக்கு சற்று தள்ளி தங்கள் கூடாரம் அமைத்து கொண்டு இருந்தனர். உள்ளே அவன் வேலை செய்வது நிழலாய் தெரிய அதைப் பார்த்தவர் கண்கள் தன் முன் எரியும் நெருப்பில் பதிந்தது

தன் மீதான சுய அலசலில் இருந்தவருள்ளும் அதே நெருப்பு

'தன்யா அவள் செய்வது தவறு என்று தெரிந்தும் நான் ஏன் யாரிடமும் கூறவில்லை? '

அவளது உயரத்திற்கு இதைக் கூறினால் முதலில் அது அவருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால் தான் அவர் அமைதியாக இருந்தது. ஆனால் அப்போது அவருக்கு உபயோகப்படும் என்று எண்ணவில்லை அதன் பின் அவரது ஆசை அதன் தேவை அவரை அறத்தின் புறம் இருந்து தள்ளியது. அதுவே அவரை உள்ளே அரிக்கவும் செய்தது.
அது அவருக்கு ஒரு மன அழுத்தத்தை தந்து கொடுத்தது. ஒரு வித இயல்பற்ற மெளணத்தை கைக் கொண்டு இருந்தார்

'கூறியிருக்க வேண்டுமோ?'
எனத் தோன்ற
'பெருந்தவறு அல்லவா இதற்கான விளைவு எப்படி இருக்குமோ?'
என மீண்டும் போராட்டம் ஆனால் தற்போதைய வெற்றி என்னவோ நாராயண் ஆசைக்குத் தான்

மனம் எனும் தறியில் ஆசை எனும் பட்டின் புகழ் ஜரிகைக்காக அறம் எனும் பட்டு புழுவை ஆசை வெந்நீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் கவலையையும் அச்சத்தையும் நூலாய் இழைத்து மனசாட்சி நேராக என ஒர் நீள் இழை மனதினுள் ஓடும் போதே அதற்கு எதிரான குறுக்கு நூலும் சேர்ந்தே இழைந்தது.

தன்யாவை மிரட்ட பயன்படுத்திய அந்த பதிவு அவருக்கு எப்படி வந்தது என்று குறை இழையாக ஒன்று நினைவில். அவர் தனக்கான நிதியுதவிக்காக அலைந்து கொண்டிருக்கையில்
அப்போது. அவருக்கு ஒரு செய்தி வந்தது..தன்யாவின் ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் ஒருவன்தான் அனுப்பி இருந்தான். நாராயணனுக்கு ஏற்கனவே அவரது ஆய்வில் உதவியவன் அவன். அவருக்கு இதை அனுப்பி வைத்திருந்தான்.அவனது இறுதி நிமிடத்தில். அதை பார்த்தவருக்கு இரத்த ஓட்டம் நின்று முகம் வெளுத்து இதயம் துடிப்பை அதிகரிக்க வியர்வை அதிகமாகி பட படத்து அருகில் இருந்த நாற்காலியை பற்றிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

'இல்லை இல்லை இது உண்மையல்ல நான் தான் தவறாக எதையோ பார்க்கிறேன். என்று மீண்டும் மீண்டும் சற்று சத்தமாகவே சொல்லிக் கொண்டவர் மீண்டும் மீண்டும் அதைப் பார்த்த போதுதான் தெளிந்ததார். ஆனாலும் உபயோகிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் அவரது நிதிக்கான தேடல் அவரை இழுத்துச் சென்று கொண்டு தன்யாவிடம் நிறுத்தி இருந்தது. இப்போதும் அதுதான் செலுத்துகிறது.

அறம் அதன் வழி பெற்ற பொருளை மட்டுமே துய்கும்போது நிம்மதி கிடைக்கும் என்பதால் தான் அதைப் பற்றி திருக்குறள் பேசுகிறது. நியாயத்தின் பாதுகாப்பினுள் இருந்த வரை இந்த நிலை இல்லை . இப்போது என
எண்ணங்கள் சேர

இது சரிவராது இனி இங்கிருக்க வேண்டாம் எதுவானாலும் பார்த்து கொள்ளலாம்..இன்னும் சில தினங்கள் வரை தான்
என்று சமாதானம் செய்து கொண்டு எழப்போக
தாடாளன் வந்து அமர்ந்து கொண்டான்.

"வேலைய முடிச்சாச்சி சார்"
என்றவன் அவர் அருகில் அமர்ந்து நட்சத்திரங்களை பார்த்தபடி இருந்தான்
பின்னர் அவரிடம் திரும்பி

"நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை சார்.?"
என்றதும்

"சின்ன வயசுலர்ந்து கதைகள்ன்னா ரொம்ப பிடிக்கும் அது என்ன வரலாறு பற்றி படிக்க வைச்சதுன்னா . அதோட கதைகள் அவைகள் உண்மை தன்மை இது பத்தின ஆர்வம் என்னை தொல்லியல் துறைக்கு நகர்த்தியது . நம்முடைய மூதாதையர்கள் பற்றி அறிய ஆர்வம் அதைப் பற்றி படிக்க ஆராய்ச்சி இன்னும் படிக்கன்னு போய்ட்டேன் கல்யாணம் பத்தி யோசிக்க கூட இல்லை."

மீண்டும் அதே கேள்வியை நாரயணன் தாடாளனிடம் கேட்கும் முன் அந்த ஊரைச் சேர்ந்த வழிகாட்டி மற்றும் உதவியாளன் வந்ததும்.

"நீ படுத்துக்கோ நான் வர நேரம் ஆகும். நாளைக்கு எர்லியா போகனும்."

என்று அவர் எழுந்து சென்று விட்டார்.

அந்த உதவியாளன் கையில் ஒரு கடிதம் இருந்தது. அதைப் பிரித்து படித்தவர் அவனைப் பார்த்து

"நாளைக்கு இங்க கல்யாணம்ன்னு சொன்னீங்களே."

" ஆமா "

"யாருமே வரமாட்டங்களா இரண்டுபேர் வந்தா கூட நல்லா இருக்கும். ஏன்னா நாளைக்கு இந்த இடத்தை பார்க்கனும் உங்களுக்கு மருத்துவ உதவி செய்யற கம்பெனி ஓனர் வர்ராங்க. "

"ரொம்ப சந்தோஷம் சார் ஆனா வர மாட்டார்கள் கேட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்.நான் அவங்கள இந்த கல்யாணத்திற்கு அழைக்கலாமா."

"அவங்க எப்ப வருவாங்கன்னு சொல்ல முடியாது.பார்க்கலாம் அவங்க மனதைப் பொறுத்தது."

"கொஞ்சம் இருங்கள் இந்த வார அறிக்கையை தருகிறேன் நீங்கள் கீழே கொண்டு சேர்த்து விடுங்கள்."
என்றவர் கூடாரத்திற்குள் இருந்து அந்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை எடுத்து வந்தார்.
அதை வாங்கி கொண்டு அந்த வழிகாட்டி
"முதலாளி நேரில் வருகிறார் அவரிடம் கொடுத்து விட விட்டு இது ஏன்?"
என உரையைக் காட்டி கேட்க
"இது அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும்."
என்றதும் அவன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பி சென்று விட
இப்போது அவர் நின்ற இடத்தில் இருந்து தாடாளனைப் பார்த்தவர் அவனிடம் போக மனமில்லாமல் தனது கூடாரத்தில் நுழைந்து கொண்டார்.


தாடாளனும் நட்சத்திரங்களும் மட்டும் தனித்து இருக்க அதைப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அந்த இடமும் இந்த நட்சத்திரங்களும் மிகப் பரிச்சயமானதாய். அதில் அந்த பச்சை நிற காப்பு ஒளிர் அது வீசிய நினைவுகள் ஒரு பெண் அதை அணிவிப்பதுபோல் இன்னும் ஏதோ தொகுக்கப்படாத காட்சிகளாய் அவன் மூளையின் நரம்பின் வழி விரிந்தது. அதில் அவனுக்கு அவனை இந்த உடலில் அழுத்தி அடைத்து வைத்து இருப்பதான உணர்வு.
.

………….
 


………….



அத்தியாயம் 6

தாடாளனும் நாராயணனும் மலை மீது ஏறி வந்திருந்தனர். அதில் நாராயணனுக்கு மூச்சிரைக்க இழுத்து மூச்சு விட்டவர். தனது கையுறை தாண்டி விரைத்த கைகளையும் தேய்த்து சூடேற்றியபடி தலையில் வீழ்ந்திருந்த பணியை தள்ளி விட்ட அவர்கள் முன் இருந்தது அந்த குகை. அதை கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான் தாடாளன்.
அவனுள் சில காட்சிகள் வந்து போயின அது இன்னதான் என்று உறுத்து கவனிக்கும் முன்பு நாராயணன் அவன் தோளை தட்டியவர்.
" இன்னைக்கு கல்யாணம்ன்னு சொன்னாங்கல கொஞ்சம் சீக்கிரமா இறங்கினா முடிஞ்சா போயிட்டு வருவோம் . அவங்க கல்சர் என்னன்னும் தெரிஞ்சக்கலாம்ல"

என்று குளிரில் இருந்து காக்க என அணிந்திருந்த அதிகப்படி ஆடைகளைத் களையத் துவங்கியவர் தாடாளனைப் பார்க்க, அவனோ இன்னும் அந்த குகையை பார்த்தபடி நின்றான் அவனிடம்

"ஏற்கனவே ஒன்னு இரண்டு குகைகளை பார்த்துருக்கோம் தான். ஆனா இது அதை எல்லாம் விட நீளமானது அப்புறம் பெரியதும் ரொம்ப உயரத்திலும் இருக்கு.அதனால் இங்க நமக்கு தேவையானது கிடைக்கும்ன்னு நம்புவோம் முதல்ல
ப்ரீ விசிட் பார்த்துட்டு எதாவது கிடைச்சா எங்க கெங்க எக்சவேட் பண்ணனும் முடிவு பண்ணிட்டா நாளைக்கு ஆட்கள் வரவும் ஈஸியா இருக்கும்


என்றபடி நாராயணன் தனது அதிகப்படி ஆடைகளை களைந்திருந்தார். முதுகில் இருந்து பை மேல் ஜாக்கெட் காலணி சகிதம் அந்த குகையினுள் நுழைந்தவருக்கு

முதலில் வெளிப் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை . கொஞ்சம் உள்ளே தள்ளி நடக்கவும் வெளிச்சம் குறையத் தொடங்கியது இருள் விரியத் தொடங்கியது.

"தாடாளன் உங்க டார்ச் எடுத்துக்கோங்க போக போக வெளிச்சம் கம்மியா இருக்கும் போல."

என்றவர் பின்னே திரும்ப அவனோ ஒளி உமிழ்ந்து கொண்டிருந்த காப்பின் உதவியோடு அவருக்கு முன்னே நடந்து கொண்டிருந்தான்.

அவன் நடக்கும் வேகத்தை கண்டவர் தானும் அவனுடன் சேர்ந்து கொள்ளும் பொருட்டு நடையை விரைவாக்க
ஆனால் அவரால் அது முடியவில்லை.

"பார்த்து வெளவால் அப்புறம் வேற ஏதாவது இருக்க போகுது."

என்றவரின் வார்த்தைகள் அவனை எட்டவே இல்லை.அவன் தான் அவன் வசம் இல்லையே. அந்த இடம் அவனுக்கு மிகப் பழகிய இடம் போலவே இருந்தது. குகையில் கால் வைத்தது முதல் அவன் செல்லவில்லை. செலுத்தப் பட்டுக் கொண்டிருந்தான்.


……. ……….

இவர்கள் அகழும் இடத்தில்

சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு

நிகழ்ந்தவை.



கானகமே. வீடாய் விரிந்திருக்க அதில் தங்களுக்கென கூடு கட்டி சிறு சிறு குழுக்களாக இணைந்து வாழப் பழகிக் கொண்டிருந்தனர்.

மனிதன் எப்படி வீடு கட்டியிருக்க முடியும் கூடுதான் கட்டியிருக்க முடியும் பறவைகளையும் விலங்களையும் பார்த்து தானே அவன் தன் வாழ்கை முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். கூர்ந்து கவனிக்கும் திறமை, எதைக் உற்று கவனிக்கிறானோ அது போல செய்யும் எண்ணம் தோன்றுவது இயற்கை தானே ஆகையால் தான் பறவை போல புற்களை தளைகளையும் வைத்து குடில் அமைத்து அதில் வாழ்ந்தனர்.

அது போன்றதொரு குழு தங்களுக்கென்று சிறு குடில் ஒன்றில் இருந்து வெளியே வந்தாள் அந்த மனித இனப் பெண் அவளை இனி மனிதி என்றழைப்போம். ஏதோ வகை தோல் அவர்களுக்கு தெரிந்த வகையில் பக்குவப்படுத்தப்பட்டு இருந்ததை அணிந்து இருந்தாள்.

அவற்றிற்கோ அன்றி அவற்றால் மறைக்கப்பட வேண்டியவை என்பவை பற்றியோ மிகுந்த மெனக்கிடல்களோ அல்லது எச்சரிக்கையோ இல்லை.
அதை அணிவதால் குளிர் சற்று குறைவாக உணர்வதால் அதை அணிந்து கொண்டு இருந்தாள்.

தன் குடிலில் இருந்து வெளியே வந்தவள் சுற்றிலும் பார்க்க இவளைப் போல சில பெண்கள் , சிலர் கையில் குழந்தையுடன் என எல்லோரும் உணவிற்கு எனத் தேட ஆயத்தமாக இருக்க இவளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். ஆண்கள் ஒரு புறம் ஏற்கனவே உணவினை தேடி ஆயுதங்களுடன் சென்றிருந்தனர்.

எனவே பெண்களில் பலர் இன்னும் சில ஆண்கள் இவர்களுடன் இணைந்து கொள்ளவில்லை. சிலருக்கு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு. சிலருக்கு அருகில் விளைந்திருந்த தானியங்களை யானைகள் மான்கள் போன்றவற்றிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
.
எனவே மனிதியும் இன்னும் ஒன்றிரண்டு பெண்கள் மட்டும்
உணவை தேடி அருகில் உள்ள நதிக்கரை வரை வந்திருந்தனர். மனிதியின் கையில் மர
ஈட்டியாக மாற்றப்பட்டு இருந்த மரக்கிளை இருந்தது. ஈட்டியினால் மீன்களை ... .வைத்துக் எரிய ஆரம்பித்தாள். மற்றவர்களும் அத.களை பிடிக்க என மும்மரமாக இருந்தனர். அதில் சற்று தள்ளி வந்துவிட்டாள் மனிதி.

சிறு தொலைவில் ஏதோ ஓசை கேட்டது. அதில் நிமிர்ந்து பார்த்தவள் தன் காதுகளை கூர் தீட்டி கொண்டவள் மீண்டும்
அதை கேட்க முயல அது தொடரவில்லை ஆகையினால் மீண்டும் ஒரு மீனை குறிவைத்து எரிய அப்போது மீண்டும் அதே குரல். ஏதேனும் விலங்குகளின் குரல் எனில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில நீர் அருந்த வரும் சில அவை வரும் போது வீழ்த்தவென்று காத்து நிற்கும். எனவே குரல் வந்த திசை நோக்கி மெல்ல நகர்ந்தாள். என்னவென்று தெரியாமலே ஓடுவதை விட என்னவென்று தான் பார்த்து விடலாம் என்று ஒரு ஆர்வம் மேலிடத்தான் வந்தாள். மறு கை கூரிய மர ஈட்டியை ஓங்கியிருந்தது ஆபத்து வந்தால் தடுக்க அல்லது எதிர்க்க

இது முட்டாள்தனம் அப்படியே திரும்பி ஓடிவிடுவது தானே என்று நமக்கு தோன்றினாலும் அங்கே அப்படி என்ன தான் இருக்கும் அந்த ஆர்வம் தானே மனிதனை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி மேம்படுத்தி வந்திருக்கிறது . இல்லை எனில் அவனுக்கு முன்னேற்றம் ஏது? நாகரீகம் ஏது ? புதுப்புது கண்டுபிடிப்புகளும் எப்படி? குரல் வந்த திசையில் இருந்த புதரை லேசாக விலக்க உள்ளே இருந்த இவர்களை ஒத்த ஒருவன் அதில் இருந்து அவள் முன் வந்தான்.

அதில் சற்று ஆசுவாசம் கொண்டவள் என்ன என்பது போல கோபமாய் அவனைப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன்பு தான் அவன் மனிதியை அனுகியிருந்தான் தன் இணையாக வாழ . அவள் அவனால் ஈர்க்கப் படாததில் அவனை மறுத்துவிட்டிருந்தாள். இப்போது மீண்டும் அவன் என்றதும் அவனை மறுத்தாகிவிட்டது இனி என்ன என்று தோன்றியது போலும் எனவே .

மனிதி திரும்பி ஆற்றை நோக்கி நடக்க அவளைத் தொடர்ந்து ஓடி வந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.அதில் அவளுக்கு எரிச்சல் வர

"விலகிப் போ."

என்று கைகளை விரித்து சைகையில் கூற அவனோ முடியாது என்று மறுத்து அவள் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு இரு புறங்கைகளிலும் முத்தமிட்டு முன்னேற அவளுக்கு கோபம் வந்தது.

"கையை விடு "

எனக் முழு வார்த்தைகள் தெரியாததால் ஏதோ கத்தியவள் கையை உருவ முயல அவனோ இப்போது அவளை வலுக்கட்டாயமாக அவளை அனைக்க முயல தனது பலத்தை அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள்
அவனை கீழே தள்ளிவிட்டாள்.அவனது பல வந்தத்தில் அவளுக்கு ஆத்திரம் மிக மூக்கில் ஒரு குத்து விட அவன் நிலை குலைந்து போனான்.பின்பும் எத்தனை தைரியம் இருந்தால் முடியாது என்று பின்பும் என்னை கட்டாயப் படுத்துவான். என்று இன்னும் கோபத்தை இறக்கியவள் , அருகில் இருந்த கொடிகளை கொண்டு அவன் கை கால்களை கட்டியவள்,அந்த மரத்தின் மேல் ஏறினாள் . அவள் இறங்குகையில் அவன் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தான்.

பிறகு அவள் மீன்பிடித்துவிட்டு குளித்தவள் வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் தொங்கிக்கொண்டு இருந்தவன் திரும்பவில்லை என்றதில் அவனைத் தேட துவங்கியிருந்தனர் அவன் குழு மக்கள்.அவர்கள் அவனைக் கண்டு பிடிக்கயில் அவன் உயிரோடு இல்லை.
அதற்கு மனிதி குழுதான் காரணம் என்று அறிந்தனர்.
அதன் விளைவுகள். மிகப் பயங்கரமாக மாறிவிட்டிருந்தது.
 
அத்தியாயம் 7

அன்று அந்த மலை முகப்பில் நின்று கொண்டு மறுபக்கம் வெண்பனி படர்ந்திருந்த அந்த மலையை பார்த்துக் கொண்டு இருந்தாள். சற்று தொலைவில் மாமூத் எனப்படும் அந்த பெரிய யானைகள் கூட்டமாக புற்களை தின்று கொண்டிருந்தது. குளிர் துவங்கி விட்டது. ஆனால் உறையத் துவங்கவில்லை உறைந்தால் அந்த பனியை தந்தத்தினால் குத்தி தள்ளிவிட்டு அந்த புற்களை தின்னும்
அவைகளை பார்ப்பது ஒரு இன்பம் அருகில் என்றால் அவளே பறித்து தருவாள் இப்போதும் போக எண்ணிய ஆவல் கொண்டு கீழே வர அப்போது அந்த அமைதியை ஊடுறுவிக் கொண்டு தொலைவில் அரவம் கேட்க இவள் தன் இடத்தை நோக்கி ஓடினாள்.

ஆனால் அது கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அல்ல சூறையாடப்பட்டு இருந்தது. வயல்கள் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வீடுகள் தகர்க்கப்பட்டு போராடிய ஆண்கள் பலர் இறந்துகிடந்தனர். மீதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களை பிணைத்து மொத்தமாக இழுத்துச் சென்றிருந்தனர்.

காட்டின் அரசன் எனக் கொண்டாடப்படும் சிங்கங்களின் வாழ்வியலில் ஒரு ஆண் சிங்கம் வெற்றி பெற்று விட்டால் அது தோற்ற ஆண் சிங்கத்தின் இணையை தனதாக்கி கொள்ளும் ஆனால் அதன் குட்டிகளை கொன்றுவிடுமாம்.

அதைப் படித்து கொண்டார்களோ என்னவோ ?
ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை இழுத்து சென்று தங்கள் வம்சத்தை பெருக்கம் செய்யும் எண்ணம் அவர்களுக்கு . ஏனெனில் தங்களின் இனத்தை பெண்களை விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்த முடியாது ஏனெனில் அது அவர்கள் இனத்து மக்கள். ஆனால் அவர்களுக்கு தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் வாழ வேண்டும் அதற்கு தங்கள் வம்சத்தை பெருக்க வேண்டும். பல தடைகள் விலங்கள்,சூழல் என பல அனனைத்தையும் தாண்டி வாழ அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். என்பது மட்டும் புரிய இப்படி மற்ற குழுவின் பெண்களை பயன்படுத்தி கொள்வது ஆகச் சிறந்த வழி அல்லவோ.!

சூழலின் சூழ்ச்சி அவ்வாறெனில் தங்களில் ஒருவன் இறந்ததற்க்கு ஒரு குழுவையே தாக்கி அழித்துக் விட்டு பெண்களை இழுத்து சென்று அடுத்து என்ன செய்யக் கூடும் என்று நாம் யூகிக்க முடிகிறது தானே. அது சரி? இது தவறு? அது ஏன் அறம் ? இது ஏன் பிழை என்றான கோட்பாடு ஏது? தக்கன மட்டுமே தப்பி பிழைக்கும் என்பதை தவிர .

இதுதான் பெண்களை பாதுகாக்கபட வேண்டியவளாகவும், தன் இனத்தை பாதுகாப்பவளாகவும் செய்கிறது. கூடவே சுயத்தை மறைத்து சுதந்திரத்தை மறுக்கிறது. பெண்களை மதிக்க செய்கிறது அவளை மிதிக்கவும் செலுத்துகிறது. அவளது விருப்பத்தை வேர் அறுக்கிறது , விருப்பங்களும் ஆக்குகிறது . அவளை பொக்கிஷமாக்குகிறது. பொருளுக்கு விற்கிறது. எதன் மூலமும் சிறு துளிபோல் தெளிவு தான் கருத்து ஓடைகளும் , கற்பனை ஓடைகளும் சேர சேர அதன் பெருகி வரும் போது முதல் துளி நமக்கு தெரிவதில்லை ஆனால் அது இல்லை என்று ஆவதில்லையே.

மனிதிதான் கொன்றதா? அவள் எதற்கு செய்தாள்? என்று அவர்கள் கேட்கவில்லை. தாக்கியவர்களுக்கு தங்களில் ஒருவன் இறப்புக்கு இவர்களில் ஒருவர் காரணம் என்பது மட்டும் போதுமானதாக இருக்க தாக்கத் தொடங்கினர். வெற்றி எனில் இவர்கள் அனைவரும் அவர்களின் கீழ் ஒரு காரணம் கிடைத்தால் போதுமே

மனிதியை அவன் வறுபுறுத்தியது பற்றி அவள் தன் மக்களுக்கு கூறவில்லை கூற வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் இறந்ததையும் அவள் அறியவில்லை. ஆனால் அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். மொத்த குழுவையும தண்டிக்கவும் வந்திருந்தனர். என்ன? ஏது ? ஏன்? என்றான கேள்விகளுக்கு விலங்கியல் வாழ்வில் ஏது பதில்?.

ஆனால் அதில் ஒருவன் மனிதியை பார்த்து விட்டு இவள் தான் அவள் என்பது போல் அவளைக் சுட்டி ஏதோ சத்தமிட அதில் அவன் தலைவனுக்கும் மற்றவர்களுக்கு மட்டுமல்ல அவளுக்கும் புரிந்து போனது. இவர்கள் தன்னை தேடுகிறார்கள் என்றும்… ஏன் என்றும்…

அதை அவதானித்த மறு நொடி ஓடிக் கொண்டிருந்தாள். முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் பிறகு தான் எதைப் பற்றியும் என்பது உயிரிணங்களுக்கு பதிய வைக்கப்பட்ட ஒன்று அதைத் தான் செயல்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் தன்னால் தான் இந்த இழப்புகள் துயரங்கள் என்பது புரிய இப்போது அவர்களை அந்த பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று தோன்ற அவள் பின் திரும்பி பார்க்க நால்வர் வந்து கொண்டிருந்தனர். அதில் இருவர் சற்று முன் இருவர் பின் அகலமாக இல்லாமல் நெருங்கி மரங்கள் கொடிகள் இருந்த ஒற்றையடிப் பாதை போன்று இருந்தது அது அவர்கள் நெருங்கியவர காத்திருந்தவள்

சட்டென்று திரும்பி அவர்களை நோக்கி ஓடி வந்தவள் முதலில் வந்தவன் ஈட்டி பற்றியிருந்த கையை பற்றி ஒரு சுழற்று சுழற்றி அந்தஈட்டியை இரண்டாவது வந்தவன் நெஞ்சில் இறக்கியிருந்தாள். இதில் சுதாரித்து அவன் ஆத்திரத்துடன் ஈட்டியை உருவினான் இவளை குத்த ஆனால் மனிதி ஈட்டியோடு சேர்த்து அவனை மேலாக தூக்கி பின்னே நிறுத்த ஒங்கிய அவன் ஈட்டி மட்டும் அல்லாமல் பின் வந்த இருவரும் வீசிய ஈட்டியும் சேர்த்து அவன் மீது பாய்ந்துதிருந்தது. இப்போது மற்ற இருவருக்கும் ஆத்திரம் வர மூன்றாவது வந்தவன் கத்தியபடி அவளைத் தாக்க வர வீழ்ந்தவன் மீதிருந்த ஈட்டியை பிடுங்கியவள் இவன் மீது ஏற்றினாள். இப்போது மிஞ்சிய நான்காமானவன் திரும்பி ஓடத் துவங்க நொடியில் அவன் முன் வந்தவள் கீழ் தாடையில் ஒரு குத்து அதில் அவன் பொறி கலங்கி போக அவன் இடுப்பில் இருந்த கூரிய குச்சியை எடுத்து நெஞ்சில் சொருகியிருந்தாள்.மீண்டும் முன்னேறினாள்

மரத்தின் மீது படுத்தபடி மறைந்து கீழே பார்த்துக் கொண்டு இருந்த மனிதியின் கண்களில் அவள் குழுவை சார்ந்த பெண்கள் விழுந்தனர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பினைக்கப்பட்டு இருந்தனர்.

முதலில் ஒருவன் இடையில் ஒருவன் கடைசியில் ஒருவன் காவல் வர நடந்து கொண்டிருந்தனர்.
அதற்கு முன் ஆண்கள் இதே போல இழுக்கப்பட்டு செல்ல முன் செல்லும் தலைவன் மற்றும் சிலர் திரும்பி அடிக்கடி பார்த்துக் கொண்டனர் பாதுகாப்புக்காக .

இப்போது ஒரு வளைவு ஒன்று குறுக்கிடஅந்த வளைவின் முடிவில் ஆண்கள் திரும்ப மறுபுறம் இப்போது பெண்கள் மட்டும் தனியாக இப்போது இல்லை என்றால் இவர்கள் மட்டும் மீண்டும் இது போனறு அமையாது எனத் புரிய அவர்கள் தங்கள் எல்லைகளை கடக்கும் முன்பே மேலிருந்து ஒரு சுருக்கிட்ட ஒரு கயிறு கடைசியில் வந்தவன் கழுத்தை இறுக்கி மேலே தூக்க மனிதி அதன் மறு முனையுடன் கீழே பாய்ந்தவள் நடுவில் வந்தவன் கழுத்தில் மிதித்த வேகத்தில் அவன் குரல்வளை நெரிய இறந்திருந்தான். முதலில் இருந்தவன் கழுத்து அடுத்தடுத்த இரு பெண்கள் தங்களின் கரங்களை இருபுறம் இழுத்ததில் தொங்கியது.

இதில் நேரம் ஆக பெண்கள் வளைவை தாண்டி காணவில்லை என்றதும் பாதுகாப்புக்கு வந்தவன் மீண்டும் வந்து பார்க்க அங்கு அவர்கள் இல்லை. அவர்கள் காட்டுக்குள் ஒடியிருந்தனர். இப்போது இன்னும் சிலர் அவர்களை பிடிக்க செல்ல ஆண்கள் பகுதியில் பாதுகாப்பு பலவீனம் அடைந்திருந்தது.

அவளது வில் சிலரை கொன்றுவிட்டது. இப்போது அவர்கள் கழுத்து மற்றும் கை களை பின் புறம் பினைத்து ஒரு தடியுடன் கட்டப்பட்டிருந்தது. தனது கற்கோடாரியுடன்
மீண்டுமாய் ஒரு முறை அவர்கள் முன் வந்தவள் ஒரு சில இடங்களில் வெட்டி ஒருவன் கையில் வீசியவள்
காட்டுக்குள் ஓடியிருந்தாள்.

அது அவளது குழுவின் ஆண்களுக்கு போதுமானதாக இருந்தது . ஆனால் அவளோ எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ஓடிப் பழகிய கால்கள் அவை மிக லாவகமாக பெரிய கற்கள் மரத்துண்டுகளை தாண்ட தாவ ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்தன. ஆனாலும் அவள் இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என்று எச்சரித்தது அவள் உள் உணர்வு. அதைப் மெய் என்பது போல் அவள் தோள் உரசி சென்றது ஒரு அம்பு அதில் ஒரு கணம் திரும்பி பின் முன்புறம் திரும்பியவள் இன்னும் வேகம் எடுத்தாள். அதில் தன்னை எத்தனை பேர் தொடர்கின்றனர். என்று அறிந்து கொண்டாள்.

அவளைப் பின் தொடர்ந்தவர்கள் மீண்டும் அவளுக்கு குறி வைத்து அம்புகளை எய்தனர். அம்புகளின் குறிக்கு தப்பி மரத்தின் புறம் மறைய. அவர்களில் ஒரிருவர் அவள் ஓட்டத்திற்கு ஏற்ப முன்னேறி ஓடி வந்தவர்கள் அவளைக் காணாமல் மரத்தில் தைத்திருந்த தங்களின் அம்புகளை கண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அதன் அருகே வந்தனர். அந்த கனம் மேலிருந்து தலைகீழாக இறங்கியவள் கையில் இருந்த கூரிய முனைகள் கொண்ட குச்சிகளை அவர்களின் தொண்டையில் இறக்கியிருந்தாள். அதில் அவர்கள் கத்த கூட இயலாது சரிய தன் கைகளை கிளைகளை நோக்கி நீட்டி ஒரு உந்து உந்தினாள் . அதில் அந்த கிளையை பற்றிக் கொண்டவள் கால்களை கிளையில் இருந்து விடுத்ததும் நேராக தொங்கியவள் கீழே குதித்தாள்.

அவர்களிடம் இருந்து வில் அம்புகளை எடுத்துக் கொண்டவள் காதுகளை கூர் தீட்ட இன்னும் சிலர் ஓடி வருவதை உணர்ந்து கொண்டாள். சத்தம் வரும் திசையையும் அதன் தெளிவில் தனக்கும் அவர்களுக்கும் குறுக்கே பெரிய தடை இல்லை என்பதையும் புரிந்து கொண்டவள்.

அடுத்தடுத்து சில அம்புகளை அவர்கள் காலடி ஒலியை கணித்து ஏவ மிகச் சரியாக அவர்களை தைத்தன.
அதில் தலைவனுடன் வந்த மேலும் சிலர் இறந்து விழுந்தனர். தன் ஆட்களின் இறப்பை கண்ட அவனுக்கு இன்னும் ஆத்திரம் கூடியது அவளை பிடித்து விட வேண்டும் என்று வெறி கூடியது. அதில் அவனும் இன்னும் சிலரும் வேகமெடுத்து ஓடி வர அந்த சத்ததிலேயே அவர்களின் வேட்கையை புரிந்து கொண்ட மனதி ஓடத்துவங்கினாள்.

அருகில் நீர் ஓடை ஒன்று வர அதைக் கவனித்தவள் அதை
ஒரு தாவவில் தாண்டி மறுபுறம் சென்றவள் கால் ஒரு சரளைக் கல்லில் வழுக்கி விட ஓடைக்குள் விழும் முன் ஒரு கொடியை பிடித்து கொண்டாள் மேலே ஏற முயன்றாள்
இப்போது அரவம் அருகில் கேட்டது. இனி எழுந்து ஓடி தப்ப
இயலாது என்று புரிந்து கொண்டவள்.

அருகில் இருந்த புதரின் உள் நுழைந்தாள். அவளைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் அவளது காலடி ஒலி கேளாததில் ஆற்றின் மறுபுறம் தேடினார்கள். அவள் அந்தப்புறம் இல்லையே மறுபுறம் அன்றோ இருக்கிறாள்.

இல்லை என்றதும் அவளைத் தேடி கீழே இறங்கியவர்கள் மேலே ஏற ஆனால் தலைவனுக்கு அவள் இன்னும் இங்கே தான் இருக்கிறாள் என்று உணர்வு இருக்க கண்களை இன்னும் கூர்படுத்திக் கொண்டு பார்க்க அவள் மறைந்து கொண்டாள் கையில் மற்றோர் அம்பை தயார் நிலையில் வைத்தபடி…

அப்போது அவன் கண்ணில் பட்டது அந்த இரத்தம் அதைக் கண்டவன்.அவர்களை அழைத்து அதைச் சுட்டிக் காட்ட
இப்போது சிரித்தபடி அதன் அருகில் சென்று பார்க்க
புத்தம் புதிய இரத்தம் அது. அதைத் உற்று பார்த்தவர்கள் இப்போது தான் இது சிந்தியிருக்கிறது என்று புரிந்து கொண்டவர்கள். திரும்பி தலைவனை பார்த்துவிட்டு தொட்டு நாவில் வைத்து அதை ருசித்தபடி மீண்டும் கண்களை சுழல விட மனிதி தன் தோளில் இருந்த காயத்தையும் தன் காலில் இருந்த காயத்தையும் தொட்டுப் பார்த்தாள்.ஆனால் அவை இரண்டும் இரத்தத்தை வெளியேற்ற விடமால் களிமண் சகதியை கொண்டு பூசி அதன் மீது ஒரு இலையையும் வைத்து ஒட்டப்பட்டு இருந்தன.

எனில் அந்த குருதி என்று என்று அவள் இன்னும் ஒட்டிக்கொண்டு யோசித்தபடி மேலே பார்க்கும் போதே அவளைத் தாண்டி ஓடையின் மத்தியில் பாய்ந்து அவர்கள் முன் நின்றிருந்தது அது.

அது கொடுவாள் பூனை எனும் அது 6 அடி நீளம் 8 அடி உயரத்தில் அவர்கள் முன் பிரம்மாண்டமாக நின்று கொண்டு இருந்தது. முன் கோரை பற்கள் இரண்டும் குறுவாள் என நீட்டிக் கொண்டிருந்தன. அது மாமூத் எனும் பெரிய வகை யானைகளையே வேட்டையாடி விடும் எனும் போது இவர்கள் அதன் முன் சிறுமுயல்
 


அத்தியாயம் 7

அன்று அந்த மலை முகப்பில் நின்று கொண்டு மறுபக்கம் வெண்பனி படர்ந்திருந்த அந்த மலையை பார்த்துக் கொண்டு இருந்தாள். சற்று தொலைவில் மாமூத் எனப்படும் அந்த பெரிய யானைகள் கூட்டமாக புற்களை தின்று கொண்டிருந்தது. குளிர் துவங்கி விட்டது. ஆனால் உறையத் துவங்கவில்லை உறைந்தால் அந்த பனியை தந்தத்தினால் குத்தி தள்ளிவிட்டு அந்த புற்களை தின்னும்
அவைகளை பார்ப்பது ஒரு இன்பம் அருகில் என்றால் அவளே பறித்து தருவாள் இப்போதும் போக எண்ணிய ஆவல் கொண்டு கீழே வர அப்போது அந்த அமைதியை ஊடுறுவிக் கொண்டு தொலைவில் அரவம் கேட்க இவள் தன் இடத்தை நோக்கி ஓடினாள்.

ஆனால் அது கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அல்ல சூறையாடப்பட்டு இருந்தது. வயல்கள் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வீடுகள் தகர்க்கப்பட்டு போராடிய ஆண்கள் பலர் இறந்துகிடந்தனர். மீதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களை பிணைத்து மொத்தமாக இழுத்துச் சென்றிருந்தனர்.

காட்டின் அரசன் எனக் கொண்டாடப்படும் சிங்கங்களின் வாழ்வியலில் ஒரு ஆண் சிங்கம் வெற்றி பெற்று விட்டால் அது தோற்ற ஆண் சிங்கத்தின் இணையை தனதாக்கி கொள்ளும் ஆனால் அதன் குட்டிகளை கொன்றுவிடுமாம்.

அதைப் படித்து கொண்டார்களோ என்னவோ ?
ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை இழுத்து சென்று தங்கள் வம்சத்தை பெருக்கம் செய்யும் எண்ணம் அவர்களுக்கு . ஏனெனில் தங்களின் இனத்தை பெண்களை விருப்பம் இல்லை என்றால் வற்புறுத்த முடியாது ஏனெனில் அது அவர்கள் இனத்து மக்கள். ஆனால் அவர்களுக்கு தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் வாழ வேண்டும் அதற்கு தங்கள் வம்சத்தை பெருக்க வேண்டும். பல தடைகள் விலங்கள்,சூழல் என பல அனனைத்தையும் தாண்டி வாழ அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். என்பது மட்டும் புரிய இப்படி மற்ற குழுவின் பெண்களை பயன்படுத்தி கொள்வது ஆகச் சிறந்த வழி அல்லவோ.!

சூழலின் சூழ்ச்சி அவ்வாறெனில் தங்களில் ஒருவன் இறந்ததற்க்கு ஒரு குழுவையே தாக்கி அழித்துக் விட்டு பெண்களை இழுத்து சென்று அடுத்து என்ன செய்யக் கூடும் என்று நாம் யூகிக்க முடிகிறது தானே. அது சரி? இது தவறு? அது ஏன் அறம் ? இது ஏன் பிழை என்றான கோட்பாடு ஏது? தக்கன மட்டுமே தப்பி பிழைக்கும் என்பதை தவிர .

இதுதான் பெண்களை பாதுகாக்கபட வேண்டியவளாகவும், தன் இனத்தை பாதுகாப்பவளாகவும் செய்கிறது. கூடவே சுயத்தை மறைத்து சுதந்திரத்தை மறுக்கிறது. பெண்களை மதிக்க செய்கிறது அவளை மிதிக்கவும் செலுத்துகிறது. அவளது விருப்பத்தை வேர் அறுக்கிறது , விருப்பங்களும் ஆக்குகிறது . அவளை பொக்கிஷமாக்குகிறது. பொருளுக்கு விற்கிறது. எதன் மூலமும் சிறு துளிபோல் தெளிவு தான் கருத்து ஓடைகளும் , கற்பனை ஓடைகளும் சேர சேர அதன் பெருகி வரும் போது முதல் துளி நமக்கு தெரிவதில்லை ஆனால் அது இல்லை என்று ஆவதில்லையே.

மனிதிதான் கொன்றதா? அவள் எதற்கு செய்தாள்? என்று அவர்கள் கேட்கவில்லை. தாக்கியவர்களுக்கு தங்களில் ஒருவன் இறப்புக்கு இவர்களில் ஒருவர் காரணம் என்பது மட்டும் போதுமானதாக இருக்க தாக்கத் தொடங்கினர். வெற்றி எனில் இவர்கள் அனைவரும் அவர்களின் கீழ் ஒரு காரணம் கிடைத்தால் போதுமே

மனிதியை அவன் வறுபுறுத்தியது பற்றி அவள் தன் மக்களுக்கு கூறவில்லை கூற வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் இறந்ததையும் அவள் அறியவில்லை. ஆனால் அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். மொத்த குழுவையும தண்டிக்கவும் வந்திருந்தனர். என்ன? ஏது ? ஏன்? என்றான கேள்விகளுக்கு விலங்கியல் வாழ்வில் ஏது பதில்?.

ஆனால் அதில் ஒருவன் மனிதியை பார்த்து விட்டு இவள் தான் அவள் என்பது போல் அவளைக் சுட்டி ஏதோ சத்தமிட அதில் அவன் தலைவனுக்கும் மற்றவர்களுக்கு மட்டுமல்ல அவளுக்கும் புரிந்து போனது. இவர்கள் தன்னை தேடுகிறார்கள் என்றும்… ஏன் என்றும்…

அதை அவதானித்த மறு நொடி ஓடிக் கொண்டிருந்தாள். முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் பிறகு தான் எதைப் பற்றியும் என்பது உயிரிணங்களுக்கு பதிய வைக்கப்பட்ட ஒன்று அதைத் தான் செயல்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் தன்னால் தான் இந்த இழப்புகள் துயரங்கள் என்பது புரிய இப்போது அவர்களை அந்த பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று தோன்ற அவள் பின் திரும்பி பார்க்க நால்வர் வந்து கொண்டிருந்தனர். அதில் இருவர் சற்று முன் இருவர் பின் அகலமாக இல்லாமல் நெருங்கி மரங்கள் கொடிகள் இருந்த ஒற்றையடிப் பாதை போன்று இருந்தது அது அவர்கள் நெருங்கியவர காத்திருந்தவள்

சட்டென்று திரும்பி அவர்களை நோக்கி ஓடி வந்தவள் முதலில் வந்தவன் ஈட்டி பற்றியிருந்த கையை பற்றி ஒரு சுழற்று சுழற்றி அந்தஈட்டியை இரண்டாவது வந்தவன் நெஞ்சில் இறக்கியிருந்தாள். இதில் சுதாரித்து அவன் ஆத்திரத்துடன் ஈட்டியை உருவினான் இவளை குத்த ஆனால் மனிதி ஈட்டியோடு சேர்த்து அவனை மேலாக தூக்கி பின்னே நிறுத்த ஒங்கிய அவன் ஈட்டி மட்டும் அல்லாமல் பின் வந்த இருவரும் வீசிய ஈட்டியும் சேர்த்து அவன் மீது பாய்ந்துதிருந்தது. இப்போது மற்ற இருவருக்கும் ஆத்திரம் வர மூன்றாவது வந்தவன் கத்தியபடி அவளைத் தாக்க வர வீழ்ந்தவன் மீதிருந்த ஈட்டியை பிடுங்கியவள் இவன் மீது ஏற்றினாள். இப்போது மிஞ்சிய நான்காமானவன் திரும்பி ஓடத் துவங்க நொடியில் அவன் முன் வந்தவள் கீழ் தாடையில் ஒரு குத்து அதில் அவன் பொறி கலங்கி போக அவன் இடுப்பில் இருந்த கூரிய குச்சியை எடுத்து நெஞ்சில் சொருகியிருந்தாள்.மீண்டும் முன்னேறினாள்

மரத்தின் மீது படுத்தபடி மறைந்து கீழே பார்த்துக் கொண்டு இருந்த மனிதியின் கண்களில் அவள் குழுவை சார்ந்த பெண்கள் விழுந்தனர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பினைக்கப்பட்டு இருந்தனர்.

முதலில் ஒருவன் இடையில் ஒருவன் கடைசியில் ஒருவன் காவல் வர நடந்து கொண்டிருந்தனர்.
அதற்கு முன் ஆண்கள் இதே போல இழுக்கப்பட்டு செல்ல முன் செல்லும் தலைவன் மற்றும் சிலர் திரும்பி அடிக்கடி பார்த்துக் கொண்டனர் பாதுகாப்புக்காக .

இப்போது ஒரு வளைவு ஒன்று குறுக்கிடஅந்த வளைவின் முடிவில் ஆண்கள் திரும்ப மறுபுறம் இப்போது பெண்கள் மட்டும் தனியாக இப்போது இல்லை என்றால் இவர்கள் மட்டும் மீண்டும் இது போனறு அமையாது எனத் புரிய அவர்கள் தங்கள் எல்லைகளை கடக்கும் முன்பே மேலிருந்து ஒரு சுருக்கிட்ட ஒரு கயிறு கடைசியில் வந்தவன் கழுத்தை இறுக்கி மேலே தூக்க மனிதி அதன் மறு முனையுடன் கீழே பாய்ந்தவள் நடுவில் வந்தவன் கழுத்தில் மிதித்த வேகத்தில் அவன் குரல்வளை நெரிய இறந்திருந்தான். முதலில் இருந்தவன் கழுத்து அடுத்தடுத்த இரு பெண்கள் தங்களின் கரங்களை இருபுறம் இழுத்ததில் தொங்கியது.

இதில் நேரம் ஆக பெண்கள் வளைவை தாண்டி காணவில்லை என்றதும் பாதுகாப்புக்கு வந்தவன் மீண்டும் வந்து பார்க்க அங்கு அவர்கள் இல்லை. அவர்கள் காட்டுக்குள் ஒடியிருந்தனர். இப்போது இன்னும் சிலர் அவர்களை பிடிக்க செல்ல ஆண்கள் பகுதியில் பாதுகாப்பு பலவீனம் அடைந்திருந்தது.

அவளது வில் சிலரை கொன்றுவிட்டது. இப்போது அவர்கள் கழுத்து மற்றும் கை களை பின் புறம் பினைத்து ஒரு தடியுடன் கட்டப்பட்டிருந்தது. தனது கற்கோடாரியுடன்
மீண்டுமாய் ஒரு முறை அவர்கள் முன் வந்தவள் ஒரு சில இடங்களில் வெட்டி ஒருவன் கையில் வீசியவள்
காட்டுக்குள் ஓடியிருந்தாள்.

அது அவளது குழுவின் ஆண்களுக்கு போதுமானதாக இருந்தது . ஆனால் அவளோ எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ஓடிப் பழகிய கால்கள் அவை மிக லாவகமாக பெரிய கற்கள் மரத்துண்டுகளை தாண்ட தாவ ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்தன. ஆனாலும் அவள் இன்னும் வேகம் எடுக்க வேண்டும் என்று எச்சரித்தது அவள் உள் உணர்வு. அதைப் மெய் என்பது போல் அவள் தோள் உரசி சென்றது ஒரு அம்பு அதில் ஒரு கணம் திரும்பி பின் முன்புறம் திரும்பியவள் இன்னும் வேகம் எடுத்தாள். அதில் தன்னை எத்தனை பேர் தொடர்கின்றனர். என்று அறிந்து கொண்டாள்.

அவளைப் பின் தொடர்ந்தவர்கள் மீண்டும் அவளுக்கு குறி வைத்து அம்புகளை எய்தனர். அம்புகளின் குறிக்கு தப்பி மரத்தின் புறம் மறைய. அவர்களில் ஒரிருவர் அவள் ஓட்டத்திற்கு ஏற்ப முன்னேறி ஓடி வந்தவர்கள் அவளைக் காணாமல் மரத்தில் தைத்திருந்த தங்களின் அம்புகளை கண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அதன் அருகே வந்தனர். அந்த கனம் மேலிருந்து தலைகீழாக இறங்கியவள் கையில் இருந்த கூரிய முனைகள் கொண்ட குச்சிகளை அவர்களின் தொண்டையில் இறக்கியிருந்தாள். அதில் அவர்கள் கத்த கூட இயலாது சரிய தன் கைகளை கிளைகளை நோக்கி நீட்டி ஒரு உந்து உந்தினாள் . அதில் அந்த கிளையை பற்றிக் கொண்டவள் கால்களை கிளையில் இருந்து விடுத்ததும் நேராக தொங்கியவள் கீழே குதித்தாள்.

அவர்களிடம் இருந்து வில் அம்புகளை எடுத்துக் கொண்டவள் காதுகளை கூர் தீட்ட இன்னும் சிலர் ஓடி வருவதை உணர்ந்து கொண்டாள். சத்தம் வரும் திசையையும் அதன் தெளிவில் தனக்கும் அவர்களுக்கும் குறுக்கே பெரிய தடை இல்லை என்பதையும் புரிந்து கொண்டவள்.

அடுத்தடுத்து சில அம்புகளை அவர்கள் காலடி ஒலியை கணித்து ஏவ மிகச் சரியாக அவர்களை தைத்தன.
அதில் தலைவனுடன் வந்த மேலும் சிலர் இறந்து விழுந்தனர். தன் ஆட்களின் இறப்பை கண்ட அவனுக்கு இன்னும் ஆத்திரம் கூடியது அவளை பிடித்து விட வேண்டும் என்று வெறி கூடியது. அதில் அவனும் இன்னும் சிலரும் வேகமெடுத்து ஓடி வர அந்த சத்ததிலேயே அவர்களின் வேட்கையை புரிந்து கொண்ட மனதி ஓடத்துவங்கினாள்.

அருகில் நீர் ஓடை ஒன்று வர அதைக் கவனித்தவள் அதை
ஒரு தாவவில் தாண்டி மறுபுறம் சென்றவள் கால் ஒரு சரளைக் கல்லில் வழுக்கி விட ஓடைக்குள் விழும் முன் ஒரு கொடியை பிடித்து கொண்டாள் மேலே ஏற முயன்றாள்
இப்போது அரவம் அருகில் கேட்டது. இனி எழுந்து ஓடி தப்ப
இயலாது என்று புரிந்து கொண்டவள்.

அருகில் இருந்த புதரின் உள் நுழைந்தாள். அவளைப் பின்தொடர்ந்து வந்தவர்களும் அவளது காலடி ஒலி கேளாததில் ஆற்றின் மறுபுறம் தேடினார்கள். அவள் அந்தப்புறம் இல்லையே மறுபுறம் அன்றோ இருக்கிறாள்.

இல்லை என்றதும் அவளைத் தேடி கீழே இறங்கியவர்கள் மேலே ஏற ஆனால் தலைவனுக்கு அவள் இன்னும் இங்கே தான் இருக்கிறாள் என்று உணர்வு இருக்க கண்களை இன்னும் கூர்படுத்திக் கொண்டு பார்க்க அவள் மறைந்து கொண்டாள் கையில் மற்றோர் அம்பை தயார் நிலையில் வைத்தபடி…

அப்போது அவன் கண்ணில் பட்டது அந்த இரத்தம் அதைக் கண்டவன்.அவர்களை அழைத்து அதைச் சுட்டிக் காட்ட
இப்போது சிரித்தபடி அதன் அருகில் சென்று பார்க்க
புத்தம் புதிய இரத்தம் அது. அதைத் உற்று பார்த்தவர்கள் இப்போது தான் இது சிந்தியிருக்கிறது என்று புரிந்து கொண்டவர்கள். திரும்பி தலைவனை பார்த்துவிட்டு தொட்டு நாவில் வைத்து அதை ருசித்தபடி மீண்டும் கண்களை சுழல விட மனிதி தன் தோளில் இருந்த காயத்தையும் தன் காலில் இருந்த காயத்தையும் தொட்டுப் பார்த்தாள்.ஆனால் அவை இரண்டும் இரத்தத்தை வெளியேற்ற விடமால் களிமண் சகதியை கொண்டு பூசி அதன் மீது ஒரு இலையையும் வைத்து ஒட்டப்பட்டு இருந்தன.

எனில் அந்த குருதி என்று என்று அவள் இன்னும் ஒட்டிக்கொண்டு யோசித்தபடி மேலே பார்க்கும் போதே அவளைத் தாண்டி ஓடையின் மத்தியில் பாய்ந்து அவர்கள் முன் நின்றிருந்தது அது.

அது கொடுவாள் பூனை எனும் அது 6 அடி நீளம் 8 அடி உயரத்தில் அவர்கள் முன் பிரம்மாண்டமாக நின்று கொண்டு இருந்தது. முன் கோரை பற்கள் இரண்டும் குறுவாள் என நீட்டிக் கொண்டிருந்தன. அது மாமூத் எனும் பெரிய வகை யானைகளையே வேட்டையாடி விடும் எனும் போது இவர்கள் அதன் முன் சிறுமுயல்
 

அத்தியாயம் 8

கொடுவாள் பூனை தங்கள் முன் நிற்பதை கண்டதும் அவர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. இத்தனைக்கும் அங்கேயே பிறந்து வளர்ந்து இது போல பல மிருகங்கள் பயங்கரங்கள் தாண்டியது தான் வாழ்கை ஒவ்வோரு நொடியும் போராட்டம் தான் தவறான ஒரு அடி தங்கள் உயிரைக் குடித்துவிடும் என்பதை அவர்கள் நிகழ்வில் பார்த்து கொண்டு இருப்பவர்கள். வீரத்திற்கு குறைவில்லை.

தலைவன் தன் கையில் இருந்த ஈட்டியை உயர்த்தி அதை நோக்கி எறிய அதில் தன் கவனம் கலைந்த அது மேலே நின்ற அவர்களையும் தன் நீலக் கண்களால் உறுத்து பார்த்து விட்டு தன் தலையை ஒரு முறை ஆட்டி சிலிர்த்து சுழற்றி கர்ஜித்தது. அதன் குரலில் முன்னிருந்த இருவருக்கும் பயத்தில் இதயம் வாயக்கு வந்திருந்தது. ஏனெனில் இதை கேட்டிருக்கிறார்களே அன்றி பார்த்து இல்லை. ஆகையால் தானே இந்த பகுதிக்குள் அவர்கள் யாரும் நுழைவது இல்லை.

ஆனால் பொதுவாக இது போன்ற திசைதிருப்பலில் அவர்கள் பாயந்து ஓடி தப்பிவிடுவர். ஆனால் இப்படி பிரம்மாண்டமான பயங்கரத்தை பார்த்து ஓடியும் பயன் இல்லை என்று புரிந்திருந்ததோ.அப்படியே நின்றிருக்க அது ஒரு தாவலில் மேலே ஏறி தலைவன் முன் நின்றிருந்தது. அதன் வாயில் அதன் முன் நின்ற இருவரும் தொங்கிக் கொண்டிருந்தனர்சிறு முயல்களாக.

தலைவனும் அவன் கூட்டாளிகளும் பேதலித்து போய் இருந்தனர் தங்கள் முன் நின்ற கொடுவாள் பூனையை பார்த்து. முன் கோரைப் பற்கள் இரண்டும் கத்தி போல் கூராக பளபளக்க குத்திட்டு நின்று விட்டது பார்வையும் அசைவும். அதுவும் வாயில் இருந்த இரையை கடித்து சுவைத்தது கீழே போட்டது இவர்களின் மீது தன் பார்வையை வைத்தபடி

அடுத்தாக மெதுவாக இவர்களை ஓர் அடி முன் வைக்க அவர்களில் ஒருவன் ஆ… என்ற அலறலுடன் ஒட இப்போது அதில் கலைந்த மற்றவர்களும் வேறு வழியின்றி திசைக்கு ஒருவராக திரும்பி ஓட அது துரத்தியது . அது தன் பார்வையில் இருந்து முற்றிலும் மறைந்து விட்டது என்பதை உணர்ந்தவள் தனது மறைவிடத்தை விட்டு வெளிய வந்தாள் .

அது அவர்களை துரத்தி சென்ற திசையில் செல்வது உசிதம் அல்ல என்பதும் தனக்கு நேரம் அதிகம் இல்லை என்பதும் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்பதும் புரிய வேகமாக இயங்கினாள். சற்று தூரம் இன்னும் உள்ளே வந்தவள் பாதுகாப்பான இடம் தேடியவள் அந்த மரத்தின் மீது ஏறினாள்.அங்கிருந்து பார்க்க எதுவும் தெரியவில்லை அது சமவெளிகாடு எனவே இன்னும் உயரமான இடத்தின் மீது ஏறி பார்த்தால் மட்டுமே அவள் இருக்கும் இடம் தெரிந்த பிறகு தான் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள முடியும். மேலும் இப்போதைக்கு நிலையில் குகை போன்ற ஒன்றை தேட முடியாது நேரம் ஆகிவிட்டது ஒரு புறம் மறுபுறம் இருள் கவியத் தொடங்கி இருந்தது. கீழே தரையில் பாதுகாப்பு குறைவு என மரத்தின் கிளையில் ஏறத் துவங்கியவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது. விஷத்தின் வீரியம் மற்றும் இது வரையிலான ஓட்டம் இரண்டிலும் களைத்து போய் இருந்தாள்.

அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டாள். சிறு கொடிகளை கொண்டு கால்களை கிளையுடன் பிணைத்து கட்டியவள் அப்படியே கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். முதலில் விழிப்புடன் நேரம் செல்ல செல்ல அவளை அறியாமலேயே லேசாக கண் அயர்ந்து விட்டாள்.

தீடீரென்று சூடாக காற்று அவள் மீது பட அதுவும் அந்த குளிருக்கு இதமாக தான் இருந்தது. அது இன்னும் கண்களை சொருக வைத்தது.அப்போது தான் ,தன் நிலை நினைவுக்க வர இங்கு நெருப்பு ஏது ? எப்படி ?கிடையாதே ?
என எண்ணம் முளை விடும் போதே தற்போதைய நிலை என எல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படியானால இது ?

என்ற யோசித்தவளின் புலன்கள் கூர்மையுற மீண்டும் கொடுவாள் பூனையோ என்று தோன்ற கண்களை திறந்தவள் அதிர்ந்து போனாள். கரடி அதுவும் பெரியதாக இவளுக்கு தான் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதன் உயரத்தை விட இவள் இருந்த கிளை கொஞ்சம் மேலே இருந்தது ஆகையால் தான் தன் பெரிய முன்கைகள் இரண்டையும் மேலே தூக்கி அவள் இருந்த கிளையை ஒடித்து அவளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தது. இனியும் காலம் தாழ்த்த முடியாது என்று தோன்றிவிட வேகமாக

மனிதி தன்னை பிணைத்து இறுக்கிக் இருந்ததால் இன்னும் உதிரவில்லை. அந்த கிளையை இறுக்கி பிடித்து கொண்டாள். ஆனால் அது அவளைக் கண்டு கொண்டது போலும் இப்போது இன்னும் தீவிரமாக முயற்சி செய்தது. அதன் அதன் உயரத்திலும் எடையிலும் மரமே சரியும் போல் இருந்தது. எழுந்து தன்னை பிணைத்த கொடியை அறுத்தவள் மேலே இருந்து கீழே குதித்திருந்தாள்.

அந்த கரடியின் மீது குதித்த வேகத்தில் ஏற்கனவே இடுப்பில் இருந்த கூரிய குச்சியை கண் மூக்கு பகுதிகளில் வேகமாக ஆழமாக குத்தி இறக்கியவள் அதன் முதுகு வழி வழுக்கி கீழே இறங்கி சற்று தள்ளி வந்து நின்று பார்க்க அது வலியில் துடித்துக் கொண்டு பார்வை பறிபோனதில் மரங்களிலும் பாறையிலும் முட்டி மோதியதில் காயங்கள் இன்னும் வெறி கொண்டு அலறி அலைந்த அது அருகில் இருந்த பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் அதன் அலறல் தேய்ந்து அடங்கியது.

அருகே வந்து அந்த பள்ளத்தை எட்டிப் பார்த்தவளுக்கு அதன் ஆழத்தின் எல்லை தெரியவில்லை .சற்று நேரம் அதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தவள் அதில் பயன் இல்லை என்று தெரிந்து கொண்டாளோ என்னவோ முனையில் இருந்து சற்று உள்ளே தள்ளி வந்தவள் சுற்றி பார்க்க மெல்ல காயமில்லாத கையால் காயம்பட்ட தோள் பகுதியை தொட்டு பார்த்தாள்.அந்த இலை விழுந்து மண் மட்டும் லேசாக ஒட்டிக் கொண்டு இருப்பது புரிந்தது.
முன் பின்னாக என தோளை ஆட்டிப்பார்க்க வலி நன்றாக குறைந்து விட்டிருந்தது. மீண்டுமாக இரு கரங்களையும் சுழற்ற முதல் சில சுழற்றலுக்கு லேசாக வலித்தது பின் இலகுவாகி விட்டிருந்தது.

மீண்டும் அந்த பள்ளத் தாக்கின் மறுபுறம் பார்க்க கீழே தொலைவில் புகை வருவது தெரிந்தது. ஆனால் அது இவளது இடம் தான் என்பதை அவளால் உணர முடியவில்லை ஏனெனில் தான் வந்த பாதையை யோசித்து பார்த்தவளுக்கு தான் திரும்பிச் சென்றாலும் மீண்டும் எதிரிகள் குழுவினை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

அன்று அவர்கள் எண்ணிக்கை குறைவு மேலும் அவர்கள் மனிதியின் குழு மக்களை அவர்கள் இடத்திற்குள் அழைத்து செல்லும் முன்னம் மேலும் அவர்களுக்கு உதவ என்று இன்னும் ஆட்கள் வருவதற்குள் தங்கள் இன மக்களை காப்பற்றி விட வேண்டும் என்று தான் அவள் மிக தீவிரமாக செயல்பட்டதும்.அது போல காப்பாற்றியும் விட்டாள்.

இனி அவள் தன் இடத்திற்கு திரும்புவது எப்படி ? என தனக்குள்ளாக ஆலோசித்தவள் அவளுக்குள் அவள் இடம் விரிந்தது.

நாடோடிகளாய் வாழ்ந்த அவள் இன மக்கள் சில தலைமுறைகள் தாண்டி வாழ்ந்து வரும் இடம் அது அங்கே சுற்றிலும் சிறுசெடி மரம் முதல் அவர்களுடன் உயிர்களபற்றிய அறிவு அவர்களுக்குள் பதிந்து விட்டிருந்தது.

இப்போது அவர்கள் ஒரே வகை தானியத்தை பயரிட்டு அறுவடை செய்து சேகரித்து வைத்துக் கொள்ள சில கால்நடை அவற்றை காக்க நாய்கள் என வேளாண்மையின் முதல் நிலையில் வளமாக இருக்கின்றனர்.

அந்த கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை பற்றிய அறிவு எப்படி அவர்களை வளப்படுத்தி இருந்ததோ அதே போல் சிலரை பொறாமை கொள்ள வைத்திருந்தது.

அதன் விளைவுதான் இந்த தாக்குதல். தேனீகளின் குணம் தேனை சேகரிப்பது அவற்றிலும் கொலைகார தேனீக்கள் என்று ஒரு வகையுண்டு அவற்றிக்கு சேகரிக்க வராது ஆதலால் மற்ற தேனடைகளை ஆக்கிரமித்து அவற்றை தனதாக்கி கொள்ளும் எதிர்ப்பவர்களை கொன்றுவிடும்.

இதைப் பார்த்து கற்று தெளிந்த குழுவோ.. அது? அமைதியான நதி போன்ற அவர்களது வாழ்கையில் உள் புகுந்து அனைத்தையும் ஆட்கொள்ள நினைத்தனர். மனிதியின் மக்களோ இவர்களை போல் போர் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் அல்ல ஆனாலும் எதிர்க்கத்தான் செய்தனர். புலிகளின் முன் மான்கள் கூட்டம் இரை தானே அன்றி வேறில்லை அப்படித்தான் இவர்கள் எதிர்ப்பும். இன்றும் கூட உண்மை அது தானே

போர் தொழில் அவர்களுடையது. மனிதியின் மக்கள் தொழில் பயிர் செய்வது. எனவே தங்கள் இடத்திற்கு வந்திருவர்கள் மீண்டுமாய் தங்களை கட்டி எழுப்ப ஆரம்பித்து இருந்தனர். அவர்கள் தாய் பூமி அன்றோ அரவனைத்து கொள்வாள்.

மனிதி மேல் நோக்கி ஏற ஆரம்பித்து இருந்தாள். உச்சியில் இருந்து தன் இடத்தை கணித்து அதற்கு அருகில் செல்லும் நதிவழி தன் இடத்திற்கு செல்ல முடியும் என்று அவள் கணிப்பு. அந்த பெருங்கரடி வீழ்ந்த பள்ளத்தாக்கின் எதிர்புறம் எல்லை அவளுக்கு தெரியவில்லை. மேலும் பனி பொழிய ஆரம்பித்து விட்டது. எங்குள்ளது எனத் தெரியாத மறு எல்லையை விட மலைஉச்சி அவளுக்கு கடினம் இல்லை.

இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வாரு நாளும் தான் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆர்வம் கொண்ட அந்த இடத்தில் இருக்கும் அவளின் உள்ளம் அவளை மேல் நோக்கி உந்தி தள்ளியது. மதி ஒரு புறம் என்றால் மதியோடு கைகோர்த்து மறுபுறம் விதி நின்றிருந்தது அவனை நோக்கி அவளை வரவேற்றவாறு
 


அத்தியாயம் 9

கண்விழித்து பார்த்த தாடாளனுக்கு தான் தனது கூடாரத்தில் இருப்பது புரிய மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு தலைவலிப்பது போல் இருந்தது. கண்களை மூடியபடி இரு விரல்களால் முன் நெற்றி பொருத்தை லேசாக அழுத்தியபடி அமர்ந்திருவன் நினைவு நடந்தவற்றை நினைவு கூற முயல அந்த குகையில் இருந்த சித்திரங்கள் அவனுக்கு எதை எதையோ மூளையின் உள் அடுக்கில் இருந்து மறைந்து நிற்கும் வேரை மேலிருந்து அடி ஆழம் வரை பிடுங்கும் போது படும் சிரமம் போல் இருந்தது. ஏனோ முதலில் நெகிழா மண் போல் அவன் மனம் இருக்க விலகி இருந்தவனை இப்போது விதி வேலை எனும் சூழல் நீர் ஊற்றி இளக்கி இருக்க அவன் ஆர்வக் கை கொண்டு பிடிங்கினாலும் மன மண்ணை இறுகப் பற்றியிருக்கும் அவன் மூலத்தின் வேர்கள் எளிதில் வருவதாய் இல்லை. எளிதில் பிடிங்கிவிட அது சல்லி வேர்கள் அன்றே . நேராக அடிவரை இறங்கி கிளைத்து பரவி இறுதி வரை இருக்கும் ஆணி வேர் தொகுதியாகிற்றே.

சிந்தித்த படி இருந்தவன் கை அனிச்சையாக தன் கைகாப்பை மேல் இழுக்க தேடி அந்த இடம் வெறுமையாக இருந்தது. பதறி எழுந்தவன் அதைத் தேட
உள்ளே நுழைந்த நாராயணன் தனது உடை பை என எல்லா இடமும் தேடியவனிடம். வெளியில் எங்காவது விழுந்திருக்குமோ அது அப்படி விழக்கூடிய பொருள் இல்லையே என்ற அவன் எண்ணங்களின் குறுக்கீடாக

"என்ன தாடாளன் எப்படி இருக்கீங்க?"
என்ற கேள்வியில் திரும்பியவன் நாராயணன் வாசலில் நின்றிருப்பதை கண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

"ஆ இப்ப நல்லா இருக்கேன் " என்றவன் கண்கள் இன்னும் தேட அதை கண்டு கொண்டவர்
"என்ன எதையாவது தேடறீங்களா?"
என்றவருக்கு என்ன சொல்ல என்று தெரியாமல்
" இல்லை"
என்றுவிட்டவன் பிறகு தயக்கமாக ஒரு வேளை அவர் பார்த்திருந்தால் என எண்ணி ஜி

"ஆமா என்னோட காப்பு? "

"அது ?" என்று நாராயணன் துவங்க

"என்கிட்ட தான் இருக்கு" என்று வந்து நின்றாள் தன்யா"

"இது யார்?" புருவம் சுருக்கியவன் அந்த அரை நொடியில் அவளையும் அவளது பிண்னியும் நினைவடுக்கில் எடுத்து விட்டான். ஆனாலும் அதை மறைத்து வெளிப்பட்ட அவன் கேள்விக்கு பதில் சொல்ல நாராயணனப் பார்க்க

"இவங்க தன்யா நம்ம ப்ரொஜெட்க்கு லீடர்"
அவனுக்கு அவளின் நோக்கும் நோக்கமும் தெரியும் ஆதலால்
" என்ன இது கவர்மென்ட் புராஜெட் தான? அப்புறம் இவங்க என்ன பண்றாங்க"

"ஆமா தாடா பட் இவங்க பைனான்ஷியலா சப்போர்ட் பண்றாங்க."

"அதுக்காக இப்படியா.?"
என்றான் .அவள் முறையற்று அவன் கூடாரத்திற்குள் நுழைந்தது மட்டும் இல்லாமல் அவன் நினைவில்லாத நிலையில் அனுமதியின்றி காப்பை அவிழ்த்தது மட்டுமல்லாமல் இப்போது நான் தான் எடுத்தேன் என்று வந்து நின்ற அவளில் கோபம் வந்தது.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு அதை புரிந்து கொள்ள முடியாதா என்ன? அதில் திரும்பி தன்யாவை பார்த்தார். பிறகு அவர் தான் தன்யாவை இப்போது வர வேண்டாம் என்றாரே தான் மட்டும் போய் பார்த்துவிட்டு வருவதாக கூற, அவள் அவர் கூறியதை செவிமடுக்க வேண்டுமே? நீ கூறி நான் என்ன கேட்பது என்பதுபோல் அவருக்கு முன் நடக்க அவருக்கு வேறு வழியின்றி அவளுடன் இணைந்து கொள்ள வேண்டியதாயிற்று. இப்போது அவன் கோபத்தில் முறைக்க
என்ன செய்ய போகிறானோ என்று பயம் வேறு ஒருபுறத்தில் என்ன செய்ய ? என்ன செய்ய ? தான் என்று புரியாமல் போக சங்கடமாக சிரித்து வைத்தார். அவனோ எப்படியோ போ …என்பதாய்

"வாட் எவர் என்றவன்"

ஒற்றை தோள் குலுக்கலுடன் அவளிடம் தனது காப்பிற்காக கையை நீட்டினான்.அந்த காப்பு இயற்கையாக குளோரைட் எனும் தனிமத்தின் சேர்கையினால் பச்சைநிறத்தில் இருந்த பாறையில் இருந்து எடுக்கப்பட்டு செதுக்கப்பட்டு பளபளப்பாக்கப்பட்டு இருந்தது. இரவின் மெல்லிய ஒளியில் அவள் கையில் அது பளபளத்தது.

" இது ரொம்ப அழகா இருக்கு? எங்க வாங்கினீங்க?"
என்று அவனை கூர்மையாக அளவிட்டபடி அவனிடம் அதை நீட்ட வாங்கிக் கொண்டான். கோபத்தை அடக்கிக் கொண்டு. ஆனால் அவளோ தன் கேள்விக்கு என்ன பதில் வருமோ அதைப் பொறுத்து அவனுடான உரையாடலை வளர்க்க நினைத்தாள். அவளுக்கும் அதற்கும் நெடுந்தொலைவு என்றாலும். அவளது உள்ளுணர்வு அவளை நச்சரித்து கொண்டிருந்தது.அது தான் அவள் இங்கே வரவும் காரணம்.
இன்று நிகழ்ந்தது அவளை இன்னும் உறுதி கொள்ள வைத்தது. அதனாலேயே கொஞ்சம் இறங்கி மீண்டும் முயற்சிக்க எண்ணி தாடாளனை நோக்க ஆனால்

தாடாளன் பார்வையின் இலக்கோ பொருளோ தன்யாவை எட்டவும் இல்லை. அதற்கு அவன் அனுமதிக்வும் இல்லை. அவள் நீட்டியிருந்த காப்பை வெடுக்கென்று பறித்து முன்பின்னும் பார்த்தவன் படார் என்று ஒன்று அவளது கன்னத்தில் ஒரு அறை விட்டான்.

"டோன்ட் டச் மை திங்க்ஸ்"
என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் மீண்டும் தன்கையில் அந்த காப்பை அணிய அது ஒரு முறை ஒளிர்ந்து அடங்கியது.. அங்கிருந்து வெளியே நடந்தவன் நாராயணினிடம் நின்றான் .இதை எதிர்பார்க்கவில்லை தன்யாவும் நாராயணனும். பொறி கலங்கி போயிருந்தாள் தன்யா.

"சர் அந்த கல்யாணத்துக்கு போகனும் சொன்னீங்களே அங்க பாருங்க அவங்க ஆட்கள் உங்கள கூட்டிட்டு போக வந்துருக்காங்க" என்று வெளியே சென்று நின்று அவர்களுடன் பேசியபடி நின்று கொண்டான் அதுவரையில் செயல்பட மறந்த புலன்களுடன் தான் நின்றிருந்தாள்.அவளை இது போல் யாரும் நடத்தியதில்லை. அவள் முன் யாரும் இதுவரை விரல் நீட்டியே பேசியதில்லை எனும் போது கை நீட்டி அடிப்பது என்பது பற்றி கூற என்ன இருக்கிறது? ஆகையால் தான் அவன் செயல் அவளை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது.

தாடாளன் வெளியே வரவும் தன் நிலை நினைவுக்கு வர
தன்யா நாராயணனை கோபமாக பார்க்க. அவரோ

"இதுக்கு நான் ஒன்னும் சொல்ல முடியாது மேடம். நான் தான் சொன்னேனே பொறுமையா இருங்கன்னு நீங்க தான் நீ சொன்னா நான் கேட்டகனுமான்னு அவன் கையில் இருந்த காப்பை கழட்டினீங்க இப்ப அடிவாங்கினீங்க."

"நாராயணன்.."
"நான் தான் . நீங்க ரெஸ்ட் எடுங்க நாங்க கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வரோம்.நாளைக்கு மறுபடியும் நாம் வொர்க் கண்ட்னீயூ பண்ணலாம்.நீங்க காட்டேஜ்க்கு போங்க அங்க தங்கறதுக்கு சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு."

என்றாவரது இடைவிடாத பொழிவில் அவள் கிளம்பி இருந்தாள்.வெளியே வந்தவள்

"நல்லா என்ஜாய் பண்ணு.நாளைக்கு நீ இங்க வேலை பார்க்க போற கடைசி நாள்"
என்றவள் தனது நாளை எப்படி இருக்கும் என்பது பற்றி அறியாள்.
தாடாளனோ
"சரிங்க ரொம்ப சந்தோஷம் செய்ங்க"
என்று விட்டு சென்று விட்டான்..

******************************************************************************
அன்று….

மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டு இருந்த ஆதவன் தன் கிரணங்களை அந்த பனிமலைக்கு மகுடமாக சூட்டி இருந்தான். பொன்னன மின்னிய அது கண்களில் ஒரு குளிர்ச்சியையும் உள்ளத்தில் மகிழ்வையும் தர அதை அனுபவித்தபடி மேலும் ஏறினாள்.

அப்போது தான் அந்த மாமூத் வகை யானைக் கூட்டம் விழுந்தது. மாமூத் வகை யானைகள் உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருந்து நன்றாக வளர்ந்த வளைந்த தந்தங்களுடன் அற்புதமாக இருந்தன. அவை கூட்டமாக நின்று கொண்டு இருப்பதைக் கண்டவள் அங்கேயே நின்று கொண்டாள்.

ஏதேனும் ஒரு யானை ஈனும் நேரத்தில் மற்ற யானைகள் அதற்கு பாதுகாப்பாகவும் உதவியாகவும் நின்று கொண்டு மற்ற விலங்கள் அருகில் வந்தால் துரத்தியடிக்கும். மேலும் அந்நேரத்தில் தாய் யானை இன்னும் ஆக்ரோஷமாக தாக்கும். அதை அவள் ஏற்கனவே பார்த்திருக்கிறாள். எனவே ஒதுங்கி போக முடிவு செய்து சற்று தள்ளி போய்விட எண்ணி இரண்டு மூன்று அடி வைத்தவள் அப்போது தான் கவனித்தாள் அவை அமைதியாக எதைச் சுற்றியோ நிற்பதை கண்டவள் இது வேறு என்று என்ன என்று கூர்ந்து கவனித்தாள். அது ஒரு யானையின் எலும்பு கூடு

மற்ற யானைகள் இறந்த யானையின் எலும்பு கூடைச் சுற்றி அமைதியாக அஞ்சலி செலுத்தும் வகையில் நின்று கொண்டு இருந்தன. சில கண்களில் கண்ணீரோடு சற்று நேரம் அமைதியாக நின்ற அவை பின்னர் மரியாதை செய்யும் விதமாக பிளிறின. பின்னர்
அந்த எலும்புகளை அவை ஒவ்வொன்றும் தும்பிக்கையில் எடுத்துக் கொண்டு அதை பக்கத்திற்கு ஒன்றாக வீசி விட்டு பிறகு அங்கிருந்து முன்னேறின.

அதைப் பார்த்தபடி தன் பயணத்தை தொடர்ந்தாள். கூடவே அவனும் . அவளின் எண்ணங்களின் வேர்கள் தன் சொந்த இடத்தை சுற்றியே நின்றது. இப்போது அவள் அறியாமலே அவள் தாய் தந்தை பற்றி நினைவுகள் சுழல ஆரம்பித்தது.

ஏற்கனவே அவள் தாயை இழந்திருக்க அவள் தந்தை தான் அவளுக்கு எல்லாமும் அவள் தாயின் ஞாபகமாக அவளிடம் அந்த மாலை மட்டுமே . அதை கையில் எடுத்து பார்த்தவள் மீண்டும் ஏறத்துவங்கினாள்.அந்த உற்சாகம் இன்னும் அவளை விரைவு கொள்ள வைத்தது.

எங்கும் பனிபடர்ந்த மரங்களும் புற்கள் என்று வெளி அனைத்தும் பனி மூடி தவம் செய்து கொண்டிருந்தன வசந்தம் வரும் என. இப்போது குளிர் இன்னும் அதிகரித்தது.அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்து இருந்தது. மேலும் பனிப்புயல் துவங்கியது இந்த சூழ் நிலையில் இனி நடக்க முடியாது எங்காவது தங்கிக் கொள்ள வேண்டும்.

எங்கு என்று தெரியவில்லை ஏதேனும் குகை போன்ற எதுவும் இருந்தால் இன்னும் நன்றாக பாதுகாப்பாக இருக்கும் என்று தேடியவள் கண்களில் இறந்து போன ஒரு மான் விழ அதில் கவனம் வைத்தவள் காலின் கீழ் உள்ள நிலப்பரப்பில் கவனம் செலுத்த மறந்தாள்.
 
அத்தியாயம் 10

இன்று

தாடாளன் வெளியே வரவும் அவனைத் தொடர்ந்து அவளிடம் பேசிவிட்டு நாராயணன் தானும் வெளியே வந்து விட உள்ளே தனித்து நின்று கொண்டிருந்தாள் தன்யா. முழுகொதிநிலையில் நின்று இருந்தாள் ஏதாவது செய்ய வேண்டும் அவனை என்றிருக்க. சூழல் அவனுக்கு சார்பில் இருக்க

"ச்ச இவனை …”என எரிந்தவள்

"இந்த நாராயணன் வேற இடைல அட்வைஸ்."

என்று அவரையும் அரைத்தவள்

"உன்னய…என்ன பண்றேன்னு பாரு…"

என்று கைவிரல்களை அழுந்த மூடி பல்லைக் கடித்து கோபத்தை கட்டுப்படுத்த எண்ணி கண்களை மூடிக் கொண்டாள் அதில் அவள் சினம் கட்டுப்பட்டதோ இல்லையோ . அவன் கைப்படவும் ஒளிர்ந்த அந்த காப்பு கண்முன் வந்துஅவளை இன்னும் அவனிடம் ஈர்த்தது..

"இந்த இடத்துக்கும் இவனுக்கும் ஏதோசம்மந்தம் இருக்கு. என்னனு தெரியாம போய்டுமா என்ன?"

என்று முனுமுனுத்தவள் மனதில்’ பேசாம இவன லவ் பண்ணுவமா ஈஸியா காப்ப பத்தி தெரிஞ்சிரும்? ‘என்று யோசிக்க
‘ ஆனா அதுக்கு நிறைய பேசணும் அது இது அப்படி இப்படி இந்த லூசுப் பய ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவான் அதை வேற கேட்கனும் இல்லை கேட்க மாதிரி நடிக்கனும்.’
என்று யோசித்தளுக்கு அதிலேயே

" ச்சை கண்றாவி எவ்வளவு . இவ்வளவும் தாண்டி எப்படித் தான் லவ் பண்றாங்களோ ? யோசிக்கறதுக்குள்ளயே மூச்சு முட்டுது.. நமக்கு செட்டாவது ப்பா அதுவும் இவன்
வேண்டவே வேண்டாம்"

என்று சற்று சத்தமாகவே சொல்லியவள் தண்ணுர்வு பெற்று வெளியே வந்தவள்

" நீங்க போங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."

என்று விட்டு தன் கூடாரத்திற்குள் செல்லப் போனவள் முன் வந்து நின்ற யாங்கும் அந்த இடத்தை சார்ந்த மக்கள் சிலர்.
"எங்களுக்காக எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க .நீங்க கட்டாயம் வரனும்."
என்று வற்புறுத்த மற்ற இருவரும் பதில் எதுவும் சொல்லாமல்
"நீ யாரோ எவரோ ? "
என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க அவளுக்கு உள்ளே குமைந்தது. இருந்தாலும் தான் நிலை அறிந்து தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள் ஏதோ ஆலோசித்தவளாய்
"சரி வருகிறேன். "
என்றதும் மகிழ்ந்து போனவர்கள் அவளுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை தந்தார்கள்.
" இது என்ன?"
என்பதாய் யாங்கை பார்க்க
" இது எங்கள் பாரம்பரிய ஆடை தங்களுக்காக எங்களின் சிறு பரிசு."
" ஓ தாங்க்யூ" என்று புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள்.

"இதை அணிந்து கொண்டு வருகிறேன்."

என தன் கூடாரத்திற்குள் சென்றவள் அந்த ஆடையை வைத்து விட்டு தனது தொலைபேசியில் இருந்து அழைப்பு விடுக்க அது அலைவரிசை இல்லாததால் போகவில்லை. என்ன செய்ய என்று சில நொடிகள் அங்கும் இங்கும் நடந்தவள் தனது மின் அஞ்சல் மூலம் தகவலை அனுப்பியவள் அவசரமாக அவர்கள் தந்த ஆடைகளை அணிந்து கொண்டு தன்னைப் பார்க்க சற்று வித்தியாசமாக ஏன் கொஞ்சம் சிரிப்பாக கூட இருந்தது என்றாலும் பிடித்திருந்தது. அதன் மீது குளிரை தாங்கும் ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டவள் வெளியே வர ஊர் மக்கள் சிலர் காத்திருக்க தாடாளன் நாராயணன் இருவரையும் காணவில்லை. அவர்கள் இருவரும் எங்கே என்று தேட அவர்களில் ஒருவன்

"யாங் அவர்களை அழைத்து சென்று விட்டான்.நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்."

என்றதில் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களுடன் நடந்தாள்.அவள் கைப்பேசி இப்போது அலைவரிசையை பெற்று மின்னஞ்சலை சேர்ப்பித்து விட்டு அமைதியானது.

மாலையில் மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு செல்வதில் இருந்து திருமண தொடங்கியது.சுற்றியுள்ள அனைவரும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வர அதை அனைவரும் பகிர்ந்து கூடவே மதுவும் உண்டு ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என நடந்து கொண்டிருந்தது.

இதைக் கண்ட தாடாளனுக்குள் இது போல் ஒரு பெண்ணுடன் இணைந்து ஆடியது போல நினைவலைகள் அவனை அலைக்கழிக்க அங்கு இருக்க முடியாது எழுந்து வெளியே வரவும் யாங் உள்ளே போவதற்கு எதோ பொருட்களுடன் வர அவனிடம்

"யாங் உங்கள் திருமணச் சடங்குகள் எப்போது முடியும்?"
"இந்த சடங்கு இரவு முழுவதும் நீளும் நாளைக்கு மணப்பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்து செல்லபடுவதுன் முடியும்."
என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே எட்டிப் பார்க்க
நாராயணன் ஒருபுறம் மது ஆட்டம் என மகிழ்ந்து கொண்டு இருந்தார் என்றால் தன்யா மறுபுறம் தன்னை மறந்து களித்து கொண்டு இருந்தாள்.அவர்களை கலைக்க விருப்பம் இல்லை எனவே
மீண்டும் யாங்கிடம் திரும்பி
"யாங் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் குடிலுக்கு திரும்பி செல்கிறேன். நீ இவர்களை கவனித்துக் கொள்."

என்றவன் அவன் பதிலுக்கு கூட காத்திருக்கவில்லை. குடிலை நோக்கி நடந்தவன் வழியில் அந்த இராணுவ முகாமிற்குள் சென்றான். நாராயணன் அவர்களிடம் தான் ஆராயச்சி பற்றிய தகவல்கள் தருவதும் .

நேராக அவரிடம் வந்தவன் " உங்களுக்கான தகவல்கள் எடுத்து வைத்து விட்டேன் வாங்கிக் கொள்ளுங்கள். "
என அலுவலகத்தில் கொடுப்பதற்காக எனத் தன் வசம் வைத்திருந்த அந்த உறையைக் கொடுக்க

"ஒ தாங்யு மிஸ்டர்.??" அதை வாங்கிய படி அந்த அலுவலர் சிரிக்க.

"தாடாளன்."
"நைஸ் நேம்"
"நீங்க "
"ஆர்கியாலஜிஸிட் நாராயணன் அஸிஸ்டன்ட்"
"எப்பவும் யாங் கொண்டு வந்து கொடுப்பார்.இன்னிக்கு இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தோம் அதான் நானே கொண்டு வந்துட்டேன்."
"ஓ வெரிகுட் எப்படி இருக்கு உங்க வொர்க்"
"என்ன சார் அதைத் தான ரிப்போர்ட்டா.வே தந்து இருக்கேன்."
என்றதில் திகைத்து பின் சிரித்த அந்த அதிகாரி
"ஓ மிஸ்டர் தாடாளன் நான் "
"அன்டர் ஸ்டான்ட் சார் ஜஸ்ட் பார் பன் நல்லா போகுது. இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. நாம இன்னொரு தடவை நிதானாமா பேசலாம் பிளிஸ் எக்ஸ்கியூஸ் பீ"

என்றவன் அவருக்கு கைகொடுத்து விட்டு எழுந்து கொண்டான். விடைபெறும் விதமாக. பதிலுக்கு கை குலுக்கிய அதிகாரி
"ஒ எஸ் ."
என்று விட்டு மீண்டும் தன் வேலைக்குள் ஆழ்ந்து போனார்.

ஆனால் நள்ளிரவில் அங்கே தன்யாவின் அலை பேசி பல முறை அடித்தும் எடுக்கப்படவில்லை.

அன்று

பனிமலைப் பகுதிகள் கண்களுக்கு எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்தும் நிறைந்தவை. முழுவதும் பனி மூடிக் கொள்வதால் சிறிய மலையிடுக்குகள் எளிதாக உள்ளே மறைந்து விடும். சற்று கவனம்பிசகிடின் அதில் வீழ வேண்டும். இடுக்குகள் என்பதால் எவ்வளவு ஆழம் என்று தெரியாது அதே போல் அகலமும் குறைவு . அதுவும் மிககுறுகியதாய் இருந்தால் உடல் அசைய முடியாமல் மாட்டிக் கொண்டால் எங்கே வெளிவருவது. பள்ளம் எங்கே மறைக்கப்பட்டிறிக்கிறது என்று அறிய முடியாது அன்றும் அப்படி முதல் நாள் பனிமூடியிருந்தது.

அவளுக்கு குளிர் பழக்கம் தான் என்றாலும் இது இந்த பனி சூழல் புதிது. எனவே மிகக்கவனமாகத் தான்இருந்தாள்.கால்கள் புதைய தனது அடியை பதித்து நடக்கும் போது முதலில் நன்றாகத்தான் இருந்தது ஆனால் உறையவைக்கும் குளிர் தன் வெப்பத்தை உறிஞ்சி மகிழ்விக்கும் மாய உலகம் என்று புரிய ஒரு கம்பு ஒன்றை எடுத்து கொண்டு ஊற்றி அவள் நடக்கும் போது மனிதிக்கு தன்னை குளிரில் இருந்து பாதுகாக்க எதாவது வேண்டும் என்று தேடியவளுக்கு அந்த யானையின் தோல் கண்ணில்பட்டது. முழுவதும் உரோமத்துடன் அதை எடுத்து திருப்பி பார்த்தவள் இது எப்படி ? என்ற யோசனையை குளிர் தடுத்து நிறுத்த அதை அணிந்து கொண்டாள்.இப்போது கொஞ்சம் குளிரில் விரைத்த தேகம் தன் நிலைக்கு வந்தாள்.அவளுக்கு அதை அங்கு வைத்து அதை அவள் அணிந்து கொள்ள பார்த்து கொண்டு இருந்தான் அவன்

இதற்கு முன்னான நாட்கள் அவள் தேடாமலே நினைவு வந்தது. அவள் இடத்தில் மிருகங்கள் பறவைகள் பச்சை என எல்லாம் நடக்கிறாள் என்று உணரவிடாது பசியில் வாடவும்விடாது ஆனால் இப்போது எதையாவது செய்து உடல் எனக்கு வெப்பத்தை கொண்டு வா என்றது.பசி வேறு ஒரு புறம் தொடர்ந்து ஓடியது குளிர் பசி என எல்லாம் சேர்ந்து வேண்டும் என்று போரிட அயராத கண்கள் மட்டும் தீவிரமாக தேடியதில் அந்த இறைச்சி கண்ணில் பட்டது.

அவள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக பயிர்த்தொழிலில் பயிற்சி பெற்றதால் வேட்டையை உணவு கிடைக்காத மிகச் சில நேரங்களில் அல்லது அதை மறந்து விடக்கூடாது என்பதற்காக பொழுதுபோக்காக என்றளவில் வந்து விட்டிருந்தது.ஆனால் மனிதிக்கு வேட்டை பிடித்தமான தொழிலாகவே இருந்தது.மேலும் மீன் பிடித்தல் சங்கு சேகரிப்பு இவர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியான வாழ்க்கை மனிதியினுடையது. இதற்கு மேல் நடக்க முடியாது என்று புரிய தங்க இடம் தேடினாள் அதற்கு முன் உணவும் தேடியாக வேண்டும் என்று எண்ணத்தில் சுழன்றவளின் தென்பட்டது இந்த மான்

அதைக் கண்டதும் ஏற்பட்ட ஆர்வத்தின் பேரில் எதையும் ஆலோசிக்காமல் எட்டுகளை வேகமாக வைத்து விட்டாள். மறுநொடி அந்த பள்ளம் அவளை உள்ளே இழுத்துக் கொண்டது . இவன் பதறி துடித்து விட்டான்.இத்தனை காலமும் மறைந்திருந்த அவன் தன்னை மறந்து .மறைவில் இருந்து வெளியே வந்து மனிதியை உள்ளே எட்டிப் பார்க்க அவள் உள்ளே கிடந்தாள். .
"ஏய்… ஏய்… "
என்ற அவன் குரலுக்கு பதில் இல்லை. அவன் குரல் அந்த இடத்தில் எதிரொலித்து அடங்கும்படி மீண்டும் ஒரு முறை "ஏய்…ஏய்…."

என்று கத்த இப்போதும் அவளிடம் அசைவும் இல்லை பதிலும் இல்லை.அவள் நினைவில் இல்லை என்றுஉணர்ந்து கொண்டவன் தானும் உள்ளே குதித்திருந்தான்.
 


இன்று

அலைபேசியின் அழைப்பு தன்யாவை எழுந்து கொள்ள சொல்லியதில் மனம் விழித்தாலும் உடல் இன்னும் கொஞ்சம் என கண்ணை இழுத்துக் கொள்ளப் பார்க்க.மீண்டும்அந்த ஒலி எங்கோ பூமியில் இல்லாத அவளது நினைவுகளில் இரவு முழுவதும் மதுவிருந்து நீண்டதும் அதில் ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என மூழ்கியிந்தவளுக்கு முழுப்போதையில் மீண்டும் தாடாளன் மீது சினம் பெருகியதில் இன்னும் அதிகம் மதுவை அருந்தியவள்.
"டேய் வாடா என்னைய அடிச்சிட்டல்ல?"
"எவ்வளவு தைரியம் இருந்தா என்மேல் கைவைப்ப?"
"யூ ராஸ்கல் இப்ப வந்து வைச்சு பார்ரா"
என்று அவனை மீண்டும் அறைந்து விட தேட நாராயணன் தான் அவளை பிடித்து நிறுத்தினார்.

"மேடம் என்ன பண்றீங்க"
"அவன் அந்த தாடாளன் என்ன அடிச்சிட்டான். நாராயணன் அவனை பதிலுக்கு ஒரு அறையாவது அவனை அடிக்கனும் அதான்."
"ஏய் இப்ப நீ இருக்கிற நிலையில் வா வீட்டுக்கு போகலாம்."
"வீடு இல்லை மேன் டென்ட் ."
"ரொம்ப முக்கியம் வா போகலாம்."
என்று இழுக்க
"ஏய் ஸ்டாப் ஸ்டாப் நில்லு நில்லு."
என்று தடுமாறி முயன்று நின்றவள்
"என்ன மேன் நீ என்ன மரியாதை இல்லாம நீ வா போன்று பேசற."
"நான் பேசறது மட்டும் கவனிச்சு கேள்வி கேட்க தெரியுது.அவன் கிட்ட பேச முடியாது இப்படி இல்லாத நேரம் தண்ணியடிச்சிட்டு புலம்பத்தான் முடியும் வேற என்ன செய்ய முடியும்.அவன் அடிச்சிட்டு தான் பேசவே செய்யறான். "
என்று அவளைத் தாங்கி அழைத்து வந்தபடி முனுமுனுக்க "என்ன சொல்றீங்க நாராயணன்."
"ஒன்னும் இல்லை தடா இங்க இல்லை அப்பவே போய்ட்டான்."
"யாரு சொன்னா"
"யாங் சொன்னான்"
"நீங்க வாங்க நாம ரெண்டு பேரும் போவோம். " என்றதில் சிறிது தூரம் வந்தவள் நடு ரோட்டில் அமர்ந்து கொண்டு
" அவன இப்ப இங்க வரசொல்லுங்க என்ன அடிச்ச அவனை பதிலுக்கு அடிக்கனும் அப்பத்தான் இங்க இருந்து வருவேன் இல்ல வரமாட்டேன்.எவ்வளவுதிமிர் இருந்தா இந்த தன்யா மேல கைவைப்பான்."
என்று அவள் புலம்ப இப்போது நாராயணன் வேறு வழியின்றி
"இங்க பார் தன்யா"
என்று ஏதோ கூறும் முன்
"மரியாதை மரியாதை"
"மண்ணாங்கட்டி இப்ப இதுதான் குறைச்சல்."
"வேற எது குறைச்சல்?"
"ச்ச இவ நம்மளயும் குடிக்க வைச்சுருவா போல"
என இவளுடன் பேசி சோர்வடைந்து போனவர்.
அவன் இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டா உனக்கு தான் அவமானம் இதுக்கு நீங்க நேர்ல போய் பார்த்துக்கலாம்."
என்றவர் இழுத்து வைத்திருக்கும் பொறுமையுடன் "நாளைக்கு காலைல அவன் பார்த்துக்கலாம்.இப்ப வீட்டுக்கு போகலாம் ."என்றதும்
முடியாது இப்பவே அவன் நான் பதிலுக்கு அடிக்கனும் அப்பத்தான் வருவேன்
என்று அங்கேயே உட்கார்ந்து கொண்டவள் இப்போது நிலை மாறி கீழே கிடந்து உருளப் போக அவள் கையை பிடித்து மேலே தூக்கி நிறுத்திய நாராயணன்.
இனி இவளிடம் பேசி பயன்இல்லை என்று புரிந்து கொண்டவராக
"சரி மேடம் தன்யா நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க நான் போய் அவன் கூட்டிட்டு வரேன்"
என.நான்கு அடி வைக்க அதற்குள்
" இரு மேன் நானும் வரேன். "
என்றவள் அவருடன் இணைந்து தள்ளாடிய படி நடக்க துவங்கியது வரை நினைவில் வர
"......"
தன்னை தானே திட்டிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டவள். எழுந்து கழிவறை சென்று விட்டு வந்தவளுக்கு இன்னும் மயக்கம் மீதம் இருந்தது போல் இருக்க ஒரு தேனீர் ஒன்றை அருந்தினால் சரியாகும் என்று தோன்றியது தேனீரை தயாரிக்க வெந்நீரில் தூளை சேர்த்தவளை அலைபேசி அழைத்தது.

அதன் அழைப்பில் தான்.அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.
"ஓ காட்"
எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லியிருந்தோம்
என்பதும் புரிய
"எல்லாம் இந்த கல்யாணத்துக்கு போனதால ச்சை அங்க போகாட்டி அவன திருப்பி பார்த்திருக்க மாட்டேன் தேவையில்லாம டிரிங்கஸ் எடுத்து இருக்க மாட்டேன்"
என புலம்பியவள் அலைபேசி வைத்த இடத்தை மறந்து விட்டு இருக்க இப்போது அதன் ஒலியில் கண்டுபிடித்து அதை எடுப்பதற்குள் அது ஓய்ந்திருந்தது.

அதை திறந்து பார்க்க பல அழைப்புகள் அதை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் அலைபேசி அழைக்க ஏற்றவள்
" சொல்லு .சாரு…."
"மேடம் நீங்க அனுப்புன ப்ளட் சாம்பிள் டெஸ்ட் பார்த்தாச்சு."
"ரிசல்ட் "என்ற வார்த்தையை அவள் உச்சரிக்கும் முன்
எதிர் தரப்பில் சொல்லப்பட்ட விஷயத்தில் அதிர்ச்சி கூடவே ஆனந்தம் சேர
"இட்ஸ் அமேசிங்"
"என்ன வந்தது."
என்றவளுக்கு எதிர் தரப்பில் சொல்லப்பட்ட பதிலை கேட்டுக்கொண்டவள்
"ஓ மெயில் நான் செக் பண்ணிக்கறேன்"
என்றவளுக்குள் பரபரப்பு வந்திருந்தது.வேகமாக தனது கணிணியை எடுத்து அதில் அவளுக்கு வந்திருந்த மின்னஞ்சலை திறந்து படிக்கத் துவங்கினாள்.

ஆம் நேற்று அவள் குகைக்குள் நுழையும் போது தாடாளன் கைகாப்பு ஒளிர்ந்ததையும் தாடாளன் தன்னை மறந்து ஒவ்வொரு இடத்திலும் நின்று எதையோ தொட்டு தடவி மகிழ்ந்து கொண்டு இருந்தான். அதை கண்ட நாராயணன் அவனை நிலைப்படுத்த முயல அவருக்கு அது மிகவும் கடினமாக இருந்தது.ஏனெனில் அவரால் அவனை நெருங்கி முடியவில்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு தான் அவனை நெருங்கிக் கொண்டிருந்தார்.அப்போது உள்ளே நுழைந்த தன்யா இதை பார்த்துவிட்டு அவர்களிடம் விரைந்து சென்றாள்.

"என்ன ஆச்சு நாராயணன்?"
என்றதில் தாடாளன் மீது குவிந்து அவர் கவனம் இவள் மீது திரும்பியது. வேறு ஆட்கள் யாரும் இல்லை என்பதால்

"முதலில் இவன முதல்ல வெளியே கொண்டு போகனும்."
என நாராயணன் கூறியதில் சூழல் புரிந்தவளாக
"ஓகே"
என்றவள் அவனின் அருகில் செல்ல முயல அவளாலுமே நெருங்கி வர முடியவில்லை . இந்த தடுப்பு விசைக்கு என்ன காரணம் என்று சுற்றி பார்க்க தாடாளன் கைகாப்பு ஒளிர்ந்ததையும் அது வெளிப்படுத்தும் விசை அவன் மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவற்றின் மீதும் தனது தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தவள்

"நாராயணன் அவன் கைகாப்ப முதல்ல கவர் பண்ணுங்க அப்புறம் தான் நாம அவன் பக்கத்தில் போகலாம்."
என்றதும் நாராயணன் தன் மேற்சட்டையை கழற்றி அதன் மீது வீச அது அந்த தடுப்பு விசையை தாண்டி போய் அந்த காம்பின் மீது விழுந்த அந்த கணம் இவர்களுக்கு போதுமாயிருக்க அவனை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தவர்கள் அறியவில்லை அவன் மீளாக்கம் துவங்கி விட்டது என்பதையும் இனி யார் தடுத்தும் பயன் இல்லை என்றும் அறியாமல் அவனை இழுத்து வர அவனோ முடியாது என்பதும் திமிறி இவன் கைகாப்பை கழற்றி விட்டாள் தன்யா.
அது அவனிடம் இருந்து கழற்றவும் அதில் ஒளிர்வு நின்றுவிட்டது. ஆனால் தாடாளன் அதில் அதிர்ந்து திமிறத் தொடங்க இப்போது தன்யா தன் கையில் இருந்த மருத்துவ உபகரண பெட்டியை திறந்து அதில் இருந்த ஊசியில் இருந்த மருந்தைஅவனுக்குள் செலுத்த சற்றுக்கெல்லாம் அவன் மயங்கிஅடங்கினான். குகை வாசலில் யாரைத் தேட என்று யோசித்த நாராயணன்.
"இவன் தெளியற வரை இங்கதான் இருக்கனும் போல இவன ரூம்க்கு தூக்கிட்டு போறது எப்படி?"
அதைக் கேட்ட தன்யா
"ஒன் செகன்ட் வெயிட் பண்ணுங்க."
என்று விட்டு வெளியே வந்து சற்று தள்ளி ஒடி வந்து பார்த்தாள் . அவள் வந்த இலங்குஊர்தி (ஹெலிகாப்டர்)
அங்கே நின்று கொண்டு இருந்தது.

அதில் இருந்த அவளது உதவியாளர் இவள் அரக்கபரக்க ஓடிவரக் கண்டதும்.

இயக்க ஆயத்தமான ஓட்டுநரிடம்
"ஸ்டாப் ஸ்டாப்."
என்று விட்டு இறங்கி வந்து
"மேடம் என்றான்."
"கம் வித் மீ "
என்று விட்டு முன்னே செல்ல ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் என்பதை விட கேட்க முடியாது என்றுவிடல் தான் சரி ஏனெனில் இவன் கேள்வி கேட்டு அதற்கு அவள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் முதலில் செவிமடுக்க வேண்டுமே. அதற்கே அவள் அங்கு இல்லை.

அவளைத் பின் தொடர்ந்து வந்த அவள் உதவியாளர் இருவரும் நாராயணன் எல்லாரும் சேர்ந்து தாடாளனை
முகாமிற்கு கொண்டு வந்து சேர்ந்தனர்.

நாராயணன் தனது முகாமிற்கு சென்று விட்டார். அப்போது உதவியாளர்
"மேடம் வீ கேன் லீவ்"
என் தனக்கு அனுமதியை வேண்ட
"ஒன் செகன்ட்"என்றவள்
அவன் இரத்ததை சேகரித்தாள்.தன்யாவிற்கு அவன்நடத்தையில் தெரிந்த மாற்றத்தில் அவள் அவனின் இரத்த மாதிரியை எடுத்தவள்.

தனது உதவியாளனிடம் கொடுத்து
"தேவ் இந்த சாம்பிள நம்ம லேப் டெஸ்ட் பண்ணி எனக்கு உடனே ரிசல்ட் வேணும். ஐம் வெயிட்டிங்."
என்றவள் கூறியவிதத்தில் என்ன சோதனைகள் எங்கே எவ்வளவு துரிதமாக செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டவராக
"ஓகே மேடம்."
அவள் வந்த அந்த ஊர்தியில் கிளம்பி சென்று விட தன்யா தாடாளனையும் தன் கையில் இருந்த அந்த அவனுடைய காப்பபையும் யோசனையாக பார்த்தபடி அமர்ந்திருந்தவள்
அசாத்தியமான உயரத்தில் அமைதியாக துயில் கொண்டிருந்த அவன் அருகில் வந்தவள்
"யாரு மேன் நீ என்னோட ஆராய்ச்சியோட ஆன்சர் நீயோன்னு தோனுது பார்க்கலாம் அதுவரைக்கும் இது என் கிட்ட இருக்கட்டும் என்று திரும்ப .
நாராயணன் அவருடைய உடைகளுடன் இங்கு வந்தவர் "நீங்கள் அங்கே தங்கி கொள்ளுங்கள் .நாங்கள் இங்கே இருந்து கொள்கிறோம்."
"ஓ கே"
என ஒற்றை தோள்களின் குலுக்கலுடன் வெளியேறப் போக
"ஒரு நிமிஷம் அந்த காப்பு"
"அது என் கிட்ட இருக்கட்டும் அதான் அவனுக்கு நல்லது."
"இல்லை நீங்க சொல்றது சரிதான் ஆனா அந்த இடத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது."
"ஓ அப்ப அது க்ளோவானது (glowing)?"
"அது ஒரு கோஇன்சிடன்ஸா கூட இருக்கலாம்.இல்ல அந்த இடத்தில் அதுல மட்டும் அதிக ஒளிபட்டு இருக்கலாம். எல்லாத்துக்கும் மேல இது அவனோடது ."
"அதுக்கு "
என்றவளை அறைந்து விட ஆசை வந்தது.இருந்தாலும்
"அடுத்தவங்க பொருள் அவங்க அனுமதி இல்லாமல் எடுக்கறது தவறு."
என்றவரை அலட்சியமாக பார்த்தவள்
"அதுஎன் பிரச்சினை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. இன்னும் இன்னிக்கு ரிப்போர்ட் வரல கோ அன்ட் ப்ரிபர் இட் "
என்று விட்டு சென்று விட்டாள்.
அதில் வாடிப் போனவர் தனது வேலையை செய்ய போனார்.

பிறகு தான் அவன் கண் விழித்ததது எல்லாம். இப்போது எல்லாம் நினைவுக்கு வந்தது. மின் அஞ்சல் கூறிய செய்தியில் விழுந்தடித்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க முற்பகல் பொழுது துவங்கியிருந்தது தாடாளன் நாராயணன் இருவரும் அங்கு இல்லை என்பதும் அவர்கள் குகைக்குள் சென்று நேரம் ஆகியிருக்கும் என்று புரிய

குகையை நோக்கி விரைந்தாள்.காலம் கடந்திருந்தது அவளுக்கு.

ஆனால் அங்கு காலம் நிலைத்து விட்டது தாடாளனுக்கு .

தாடாளனுக்கு உறக்கம் வரவில்லை அன்று காலை நடந்த நடந்த நிகழ்ச்சிகள் அவனை கிளர்ச்சி நிலையில் வைத்திருக்க திருமண விருந்தில் இருந்து சீக்கிரமாகவே கிளம்பியவன் வரும் வழியில் தனது தகவலை சேர்ப்பித்துவிட்டு தனது முகாமிற்கு வந்தவன் தனது இடத்தில் படுத்து கொண்டான்.
ஆனால் தூக்கம் தான் வருவதாக இல்லை. சற்று நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதில் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவன் கதவை திறந்து வெளியே வந்து பார்க்க முழுநிலவு தன் கதிர்களை வீச வீசிய கதிர்களை படிய வைத்தது போல பனி பொழிந்து இருக்க பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்கள்
தன்யாவின் கூடாரத்தை பார்க்க அந்த முறை தனது நடையை அவள் முகாம் வரை நீட்டிப்பு செய்தவன் அவள்
முகாமிற்கு முன் வந்து நின்று ஒரு முறை அவன் விழிகள் சுற்றுப்புறத்தை அலசி விட்டு மீண்டும் அந்த கதவில் வந்து நின்றது.

தன் கையில் இருந்த திறப்பை வைத்து அதை திறந்து உள்ளே நுழைந்தான். இது ஏற்கனவே நாராயணன் உபயோகித்த முகாம் என்பதால் அதன் திறப்பில் ஒன்று அவன் வசம் இருந்தது.

உள்ளே நுழைந்தவுடன் கதவை பூட்டியவன் அந்த இடத்தை சோதிக்க துவங்கினான். ஆனால் அங்கு அவன கண்களுக்கு எதுவும் வித்தியாசமாக புலப்படவில்லை ஆனால் அவள் அப்படியில்லை என்று அவனுக்கு தெரியுமே இந்த ஆராய்ச்சி அதை அவள் இங்கு நடத்துவது எல்லாம் தெரிந்த ரகசியம் ஆனால் அவளது இன்றைய தீடீர் விஜயம் அது அவனை உறுத்த அதிலும் இன்றைய அவன் நிலை அவனுக்கும் இதற்கும் ஏதோ என்பதை விட தன் இடம் என்பதாகத்தான் உணர்ந்தான்.
அது அவனுக்கு நீண்ட காலம் கழித்து தான் வீட்டிற்கு வந்ததும் வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நின்று பார்த்துக் அதன் சார் நிகழ்வை நினைவுபடுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்.

கிராம போனில் வைக்க இசைத் தட்டு போல நினைவு தட்டுகள் சுழன்று இசைக்க காத்திருக்க பட் என்று இணைக்கும் முள்ளை உடைத்து தட்டை பிரித்து எடுத்ததுபோல் அவனை பிடுங்கி எறிந்து காப்பை பறித்து அனைத்தையும் கலைத்து விட்டிருந்தனர்.

அத்தனையும் செய்துவிட்டு அவன் காப்பை தேடும் போது அவள் நட்பை நாடியது நினைவில் வர இப்போதும்கூட
ஆத்திரம் வந்தது.அதில்

"ஒன்றுமே அறியாதவள் போல் என் நலம் மட்டும் நாடுபவள் போன்று என்ன ஒரு நடிப்பு.அவளை ஒற்றை அறையுடன் விட்டது தவறு. பெண் …
இல்லை என்றால்…"

என்று தூய தமிழில் பேசியபடி தேடியவனுக்கு அது தெரியவில்லை தனக்குள் நிகழத் தொடங்கியிருந்தது என்னவென்று.அப்போது அவளுடைய அலைபேசியின் ஒளிர்வு அதன் இருப்பை தெரிவிக்க

அதை எடுத்து பார்த்தவன் அதை என்னவென உடனே பார்க்க ஆவல் கொண்டு சில நொடிகளில் அதைச் செய்தும் இருந்தான். அது எப்படி முடியும் என்று ஒருபோதும் அவன் ஆலோசனை செய்தது இல்லை அது அவனுக்கு கைவரப்பெற்ற கலை .மிககடினமான கடவுச்சொல்லாக இருந்தாலும் அதனை மிகவும் எளிதாக உடைத்து உள்ளே தகவல்களை எடுப்பது அதனை உளவு பார்ப்பது அவனுக்கு கடினம் அல்ல ஆனால் இப்போது அதனை மிகச் சில நொடிகளில் செய்ததிருந்தான் அதனை எப்படி என்று கவனிக்கவில்லை.
.
அதில் இருந்த அவனுடைய இரத்த மாதிரி குறித்த அறிக்கை என்பது புரிய அவள் இரத்தம் எடுத்த அந்த புள்ளியை அழுத்தி கொடுத்தவனுக்கு தன் அனுமதி இன்றி தன் குருதியை எடுத்தவள் மீது இன்னும் சினம் பெருகியது.

ஆனால் இவள் இந்த சோதனையை தன் மீது செய்தது ஏன் இத்தனை அவசரம் மற்றும் அவசியம் ஏன் அதன் முடிவிற்கு என்று எண்ணியவன்.

மேலும் தனது அறிக்கையை படிக்கும் முன் ஏதோ அரவம் கேட்க என்னவென்று இராணுவ வீரர்கள் சிலர் நடமாடுவது
தெரிய
ஒற்றுக்கு ஒற்றுவைத்து உண்மையை அறிந்து கொள்ள முயலும் சிவசங்கரனை நினைத்து சிரிப்பு வந்தது. இருந்தாலும் அந்த அறிக்கையை படித்தவன் அதன் முடிவுகள் கூறுவதை அறிந்து திகைத்து போனான்.

சில நொடிகள் தான் பிறகு அந்த அறிக்கையை தனது சாதனத்திற்கு மாற்றிக் கொண்டவன் அதனை மற்றவர்கள் எளிதில் பார்க்க முடியாது செய்து விட்டு வெளியே வர வீரர்கள் அவனிடம் விசாரிக்க வந்து நின்றனர்.

"நீங்கள்"
"தாடாளன் அஸிஸ்டன்ட் ஆர்கியாலஜிஸ்ட்"
"இது தற்போது தன்யா அவர்கள் இங்கு தங்கி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "
என்றதில் இவர்கள் பாதுகாப்பு கருதி வந்துள்ளனர் என்பது புரிய நின்றவனிடம்
"அவர்கள் அறையில் உங்களுக்கு என்ன வேலை?"
என மேலும் தகவல் கேட்க
"நான் இப்ப தான் கீழ இன்னிக்கு புராஜெக்ட் சமிட் பண்ணிட்டு வந்தேன். அதோட ஒரு காப்பி தன்யாவுக்கு தரனும் அத கொண்டு வந்து வைக்க வந்தேன்.அதுவும் அவங்க அனுமதியோட"
"இது அவங்க ரூம் கீ அவங்க கல்யாண பங்ஷன்ல இருக்காங்க அதனால் தான் என்ன சொன்னாங்க.உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவங்கள கேளுங்க இல்ல உங்க ஆபீஸ் க்கு போன் பண்ணி கேளுங்க"
என்று அசராமல் கூறியவனிடம் இன்னும் ஏதோ கேட்க வாய் திறக்கும் முன் வழக்கமாக அங்கு காவலுக்கு வரும் ஒருவர் வந்து
“சார் அவர் சொல்லவது உண்மை தான் சார்”
தாடாளன் பற்றி கூற அவனைச் செல்ல அனுமதித்தனர்.

அவர்களிடம் இருந்து தன் அறைக்கு வந்தவன் மீண்டும் மீண்டும் அந்த அறிக்கையை படித்தவன் மனதில் பல்வேறு எண்ணங்கள்
'நான் மனித இனம் இல்லையா எனில் நான் உண்மையில் டென்னிசோவனா?'
'இது உண்மையா இல்லை ஏதேனும் கனவா'
ஆனால் நான் என் உணர்வுகள் எனக்குள் வந்து போன காட்சிள் பொய்யில்லை
என யோசிக்க யோசிக்க பித்தம் பிடிக்கும் போல இருந்தது இதற்கு விடை அங்கு தான் கிடைக்கும் என்று புரிய பின்னர் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை எழுந்தவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக குகைக்குள் சென்று விட்டான்.

உள்ளே நுழைந்தவுடன் மெல்ல அவனை அவன் திருப்பி மீட்டுக் கொள்ள ஆரம்பித்தான் குகையின் முன் பகுதியை தாண்டி உள்ளே போக போக ஒரு கட்டத்துக்கு மேல் அவன் ஏதோ நினைவுகளினால் இழுத்து செல்லப் பட்டான். குகை அந்த ஒரு பாறை முன் நின்றவன் கையைபபார்க்க அந்த காப்பு ஒளிர்ந்து கொண்டிருந்தது சந்திரனின் ஒளியை ஈர்த்து ஒளிர்ந்த அதனைக் கண்ட தன் கையை அங்கு வெளியே நீட்டிக் கொண்டு இருந்த பாறையின் மீது வைக்க மறுகணம் அந்த பாறை மறைந்து வழியாக சென்றது அவன் ஊடுருவ ஏதுவாக நின்றது.தண்ணீர் திரையொத்து மாறியிருந்த பாறை திரையின் உள் தாடாளன் நுழையவும் பின் புறம் மீண்டும் பாறையென மாறியிருக்க உள்ளே அவன் முன்னேவேறு உலகம் இருந்தது
 
Top