அன்று காலையில் ஏனோ உமையாள் மனம் முழுக்க கமலம் அம்மாவை எப்படி சமாளிப்பது என்றே இருந்தது. அவளுக்கு தெரியும் எந்த வித சமாதான பேச்சும் அவரிடம் செல்லுபடியாகாது என்று.
அவள் இப்படி யோசித்து கொண்டிருக்கையில் அவள் யோசனையின் நாயகியே அவள் வீட்டின் அழைப்பு மணியை தட்டினார். உமையாள் கதவை திறந்ததும் சற்று அதிர்ந்து போனாள்.
உடனே சுதாரித்து கமலம் அம்மாவை வரவேற்றாள் உமையாள். இதுதான் முதல் முறை கமலம் அம்மா அவள் வீட்டிற்கு வருவது. கமலம் அம்மாவோ வீட்டினுள் வந்து அவர் வரவேற்பறையில் அமர்ந்தார்.
அவர் வீட்டை கண்களால் அளந்தார். 'ஹ்ம்ம் கொஞ்சம் பெரிய வீடுதான். பரவாயில்லை மாப்பிள்ளை பெரிய வீட்டில் தான் இருக்கிறார். மருத்துவர் ஆயிற்றே ஆனால் இவளும் இவள் குழந்தையும் தான் ஒட்டுண்ணி போல் மாப்பிள்ளை கூட இருக்கிறார்கள்.
இவள் கல்யாணம் கட்டி போனாள் ஒருவகையில் நன்மைதான். நம் மகள் எந்த ஒரு பிக்கள் பிடுங்கள் இல்லாமல் இருப்பாள். ஆனாலும் விதவை இவளுக்கு மாரு கல்யாணமா? அப்படி என்ன தேவை.' என கொஞ்சம் கூட லஜ்ஜையே இல்லாமல் உமையாளை பார்த்துக்கொண்டே மனதில் கரித்து கொண்டிருந்தார்.
எப்போதும் ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் எதிரியே.... ஒரு பெண்ணை அதுவும் தன் மகளை விட சில வயதுகள் மூப்பாய் இருக்கும் பெண்ணை இவ்வாறு நினைக்கிறோமோ என்று அவருக்கு தோன்றவே இல்லை.
வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் அவளையே குறு குறுவென பார்த்து கொண்டிருக்கும் கமலம் அம்மாவிடம் எவ்வாறு பேசுவதென்று தெரியாமல், ஒருவாறு வார்த்தைகளை கோர்த்து
"அத்தை"
என ஆரம்பிக்கும் போது மீண்டும் அவளின் வீட்டின் அழைப்பு மணி மறுபடியும் ஓசை எழுப்பியது. உமையாள் கதவை திறக்க எழுத்து சென்றாள்.
கமலம் அம்மாவோ கடவுளிடம் மனதில் 'கடவுளே இது என் மாப்பிள்ளையாகவோ இல்லை என் மகளாகவும் இருக்க கூடாது' என வேண்டிக்கொண்டார்.
அப்போது அங்கு வந்த மகிழோ "வணக்கம் பாட்டி, எப்படி இருக்கீங்க? என அவள் மழழை மொழியில் கமலத்தை நலம் விசாரித்தாள். என்னத்தான் சிடு சிடுத்தாலும் அந்த சிறுபிள்ளை முகத்தை கண்டவுடன் அவருக்கும் கூட முகத்தில் லேசான சிரிப்பு வந்தது.
அவள் பால் முகத்தை ஆசையாக தடவி கொடுத்தார். இங்கோ உமையாள் கதவை திறக்க அவள் எதிரில் ருத்ரன் நின்று கொண்டிருந்தான். அவள் கேள்வியாய் அவனை பார்க்க,
அவனோ "நீட் டு டிஸ்க்ஸ் உமையாள். ராமன் சில ஐடியா கொடுத்திருக்கிறார்" என கூறினான்.
வேலை என்றதால் உமையாளும் ஒன்றும் கூறாமல் அவனை வீட்டினுள் அனுமதித்தாள். அவன் வரவேற்பறைக்கு வந்தவுடன் அங்கே அமர்ந்திருக்கும் கமலம் அம்மாவை பார்த்தான்.
கேள்வியாக உமையாளையும் பார்த்தான். உமையாள் அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு "கமலம் அத்தை, கயல் அம்மா" என்று கூறினாள்.
அவன் உடனே கமலம் அம்மாவை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அப்போது அங்கு, பக்கத்து வீட்டு சிறு பெண் ப்ரிங்கு, மகிழுடன் விளையாட வந்திருந்தாள்.
அப்போதுதான் விளையாட்டு பொருள்களை எடுக்க அறைக்கு சென்ற மகிழும் அச்சிறுமியின் குரலை கேட்டு ஆர்வமாக வரவேற்பறைக்கு வந்தாள்.
அங்கு ருத்ரனை கண்ட மகிழோ ஒரே தவலில் ருத்ரனை கட்டி கொண்டாள். அவனும் அவளை அனைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து கீழே இறக்கி விட்டான்.
மகிழிடம் "உன் தோழியா?" என வினவினான். அவளும் "ஆம்" என தலை அசைக்க, அவள் கன்னத்தை தட்டி "சரி அவளுடன் போய் விளையாடு" என கூறினான். மகிழும் சம்மதமாக தலை ஆட்டி அங்கிருந்து சென்றாள்.
உமையாள் கமலம் அம்மாவை பார்த்து "அத்தை ஒரு நிமிடம் இவருக்கு நான் செய்த சில கைவினை பொருட்களை பார்வையிட காண்பித்து விட்டு உங்களிடம் வருகிறேன் என கூறி, ருத்ரனை அலுவல் அறைக்கு அழைத்து சென்றாள்.
அறையினுள் சென்றவள் அமைதியாக அங்கு அவள் செய்து வைத்த பொருட்களை கடைபரப்பினாள். அதில் இரண்டு கைவினை பொருட்களை காணவில்லை.
அவ்விரு பொருட்களையும் அந்த அறையில் தேடிக்கொண்டிடுந்தாள். அச்சமயம் ருத்ரனோ
"நான் பேசி இரு வாரங்கள் கடந்து விட்டன. இன்னும் நீ உன் முடிவை கூறவில்லை. சம்மதம் தானே?” என கேட்டு கொண்டிருந்தான்.
உடனே உமையாள் அவனை நோக்கி
"இரண்டு பொருட்கள் காணவில்லை. இந்த அறையில் தேடிவிட்டேன், கிடைக்கவில்லை. கைவினை பொருட்கள் செய்யும் அறையில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருகிறேன்." என கூறி அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து அகன்றாள்.
ருத்ரனோ மெலிதாக சிரித்து 'சரியான நழுவுற மீன் தாண்டி நீ" என நினைத்துக்கொண்டான்.
அங்கு தன்னிச்சையாய் அமர்ந்திருக்க பிடிக்காமல் 'மகிழை பார்த்து விட்டு வரலாம்' என நினைத்து அங்கிருந்து மகிழ் இருக்கும் இடம் தேடி சென்றான். மகிழோ வேறு எங்கும் செல்லாமல் வரவேற்பறையில் அமர்ந்து தான் தனது தோழியுடன் விளையாடி கொண்டிருந்தாள்.
அவள் அருகினில் சென்ற ருத்ரன் அக்குழந்தைகள் பேசுவதை கேட்க ஆரம்பித்தான் "ப்ரிங்கு பார் நானும் அன்று நீ வரைத்ததை போல் ஹாப்பி பேமிலி படம் வரைந்திருக்கிறேன்." என அவள் வரைந்த படத்தை தன் தோழியிடம் ஆர்வமாக காண்பித்தாள்.
அதற்கு ப்ரிங்குவோ "அழகாக வரைத்துள்ளாய் ஆனால் உனக்குத்தான் அப்பா இல்லையே... நீ ஏன் அப்பா உள்ள படம் வரைந்துள்ளாய்." என கேட்டாள். அச்சிறுமி கேட்ட கேள்வியில் ருத்ரனுக்கு சுருக்கென தைத்தது.
அவன் வாய் திறக்கும் முன்னே மகிழோ கோவமாக "எனக்கு மாமா இருக்கிறார்" என கூறினாள். அதற்கு அச்சிறுமியோ "மாமாதானே… அப்பா இல்லையே.. எனக்கும்தான் மாமா இருக்காங்க.. மூணு மாமா இருக்காங்க. அப்பாவும் இருக்காரு ஆனால் உனக்கு இல்லை நீதான் பாவம்." என சற்றே ஏளனமாக பேசினாள்.
இதை கேட்ட மகிழோ சட்டென அவளை கிள்ளி அடித்து விட்டாள். உடனே ப்ரிங்கு அழுது கொண்டே "ஐ அம் நோட் பிரென்ட் வித் யூ.. இரு என் அப்பாவிடம் கூறுகிறேன் என கூறி அங்கிருந்து ஓடினாள்.
காரணமே தெரியாமல் மகிழ் கண்களிலும் கண்ணீர். மகிழ் அழுவதை தாங்க முடியாமல் அவளை தூக்க குனிந்த ருத்ரனுக்கு முன் உமையாள் அவளை தூக்கிருந்தாள்.
அவள் கண்களும் கலங்கிருந்தது. அவள் கண்களே அச்சிறுவர்கள் பேசியதை அவளும் கேட்டிருக்கிறாள் என உறுதி படுத்தியது. ருத்ரன் அவளைத்தான் அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கு ப்ரிங்கு தனது தாயுடன் வந்திருந்தாள் . ப்ரிங்குவின் தாயோ "மகிழம்மா ஏன் என் மகளை மகிழ் அடித்தாள்? இதெல்லாம் சரி இல்லை" என கோவமாக பேசினார்.
அதற்கு உமையாள் அவர்களுக்குள் நடந்த உரையாடலை ப்ரிங்கு அம்மாவிடம் கூறினார். அதற்கு ப்ரிங்கு அம்மாவோ நக்கலாக சிரித்து கொண்டு
"உண்மையை தானே கூறினாள். அன்று கூட நான் மகிழிடம் கேட்டேன் உன் டாடி எங்கே என்று? அதற்கு அவளோ டாடி ஆஹ் அப்படி என்றால்?" என்று கேட்கிறாள்.
அப்பா என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு வளர்க்குறீர்கள் என்றால்" என கூறிக்கொண்டே, அவளை ஒரு முறை கீழிருந்து மேல் பார்த்து கொண்ட, அப்பா இல்லையா? இல்லை அப்பா யார் என்றே தெரிய வில்லையா?” என்று கேட்டாள்.
உமையாளோ இக்கேள்வியில் கதன் கண்களை மூடி நின்றாள். கண்களை அவள் திறக்கும் போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எப்போதுமே இது போன்ற கேள்விகளுக்கு பட்டென பதில் குடுப்பவளோ தற்போதை அவள் மனா அழுத்தத்தின் காரணமாக பதில் கூற முடியாமல் நின்றாள். ஆனால் அவளே எதிர் பார்க்காதது அவளுக்காக ருத்ரன் பேசியது தான்.
"ஹேய்" என ஒரு அதட்டல் போட்டு உமையாள் அருகினில் வந்தான்.
அவன் பேச ஆரம்பிக்கும் போது ஒரு கணம் நிறுத்தி உமையாள் கையில் இருந்த மகிழை வாங்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டு
"ஹனி பீ உள்ளே சென்று விளையாடுவீங்களாம் நான் இந்த ஆண்டியிடம் பேசிவிட்டு வருவேனாம்.” என கூறினான்.
அவளும் சம்மதமாக தலையை ஆட்டி விட்டு அவனிடம் இருந்து கீழே இறங்கி அறையினுள் சென்று விட்டாள். அவள் சென்றதை உறுதி செய்து விட்டு கோவமாக ப்ரிங்கு அம்மாவின் புறம் திரும்பிய ருத்ரன்
"நீ பெண் என்பதால் உன்னை அறையாமல் விடுறேன். இனி நீயும் சரி உன் மகளும் சரி இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது.” என கர்ஜித்தான்.
அதற்கு ப்ரிங்கு அம்மாவோ "அதை சொல்ல நீங்க யார்?" என கேட்டாள்.
உடனே ருத்ரன் உமையாளளை பார்த்து, அவள் அருகினில் நெருங்கி வந்து, அவள் தோள்களை சுற்றி வளைத்து, அவள் கண்களோடு கண்கள் கலக்க விட்டு, பின் எதிரில் இருக்கும் அந்த பெண்ணை பார்த்து, நான் மகிழ் அப்பா, உமையாள் புருஷன்." என கூறினான்.
அவன் கூறிய அந்த நொடியில் உமையாள் கண்கள் கண்ணீர் வழிந்தோட தனிச்சயாய் அவள் தலை ருத்ரன் தோள்களில் சாய்ந்தது. காடு மேடெல்லாம் அலைந்து வீடு வந்து சேர்த்த உணர்வு உமையாளுக்கு.
ருத்ரன் தன் ஆள்காட்டி விரலை நீட்டி அந்த பெண்ணை நோக்கி "ஐ வார்ன் யூ, பெட்டெர் ஸ்டே இன் யூர் லிமிட்" என கண்டிப்புடன் கூறினான்.
அவன் வார்த்தையில் முகம் கருத்து ப்ரிங்குவை தர தரவென இழுத்து கொண்டு சென்றாள் அவள் தாய். அப்போது அங்கு மகிழ் ஓடி வர அந்த சத்தத்தில் சுதாரித்த தான் நிற்கும் நிலையை உணர்ந்து சட்டென ருத்ரனை விட்டு விலகி நின்றாள் உமையாள்.
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு நொடியில் சறுக்கி விட்டாலே. உமையாளை பார்த்து கண் அடித்து விட்டு "சரி நான் சென்று வருகிறேன்." என கூறி சிரித்து கொண்டே சென்று விட்டான்.
உமையாள் அவன் மேல் சாய்ந்ததில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நடந்த இந்த கலவரத்தில் அவ்விருவரும் கமலம் அம்மாவை மறந்தே போயினர். அவரோ அங்கு அமர்ந்து நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தார்.
பின் எழுந்து வந்து உமையாள் முன் நின்று "நான் நாளை வருகிறேன்." என கூறி சென்று விட்டார். உமையாளுக்கோ அப்போதுதான் அவர் அங்கிருப்பதே நெற்றி பொட்டில் அறைந்தது.
"ஐயோ இவரை மறந்தே போனேனே. இவர் முன்பா இது அனைத்தும் நடக்கணும்." என நொந்து கொண்டாள். வீட்டிற்கு செல்ல முற்பட்டவரை உமையாள் குரல் தடுத்தத.
"அத்தை பேசத்தான் வந்தீர்கள்... இருங்கள் பேசிட்டே போகலாம்." என கூறினாள். ஏனோ வந்ததற்கும், இங்கு நடந்த அனைத்தையும் பார்த்த பின்னும் அவர் முகம் சற்று மாறியிருந்தது.
கமலம் அம்மாவோ அவள் கன்னத்தை தட்டி "உனக்கு இப்போது தனிமை வேண்டும். இரவு நம் வீட்டிற்கு வா, பேசலாம்." என கூறினார்.
"நான் வருகிறேன்." என கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.
அவளும் எதோ சொல்ல வந்து பின் "சரி" என தலை அசைத்து கொண்டாள்.
கமலம் அம்மா உமையாள் வீட்டிலிருந்து வந்த பின் பலத்த யோசனையில் மூழ்கி இருந்தார். சிறிது நேரத்தில் கயல் அவர் கூறிய மருந்துகளை வாங்கி கொண்டு அவர்கள் வீட்டினுள் நுழைந்தாள்.
கயல் இவரின் முகத்தை பார்த்து "அம்மா என்ன பலத்த யோசனையில் உள்ளீர்கள்?" என கேட்டாள்.
அதற்கு கமலம் அம்மாவோ காயலிடம் "கயலு எனக்கு உமையாள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று சொல்லு." என கேட்டார்.
தன் அம்மாவை பற்றி நன்கு தெரிந்த கயலோ "ஏன்?" என புருவத்தை மேலே தூக்கி கேட்டாள்.
எனக்கு தெரிந்துகொள்ள வேண்டும் சொல் என்றால் சொல்." என்று கூறினார்.
கயல் அவரை சந்தேகமாக பார்க்க, அதற்கு மேல் மறைக்காமல் அவள் மருத்துவமனைக்கு சென்றவுடன் இவர் உமையாள் வீட்டிற்கு சென்றது முதல் அங்கிருந்து வந்தது வரை அனைத்தையும் கூறி முடித்தார்.
தன் தாய் அங்கு அவர்களின் திருமணத்தை பற்றி பேசத்தான் சென்றிருப்பார் என சரியாக கணித்த கயல் "என் கல்யாணத்தை பற்றி தானே பேச போனீங்க..
ஏன் அம்மா இப்படி இருக்கீங்க? உமையாள் அண்ணி பாவம் அம்மா. ரொம்ப குழப்பத்தில இருக்காங்க. நீங்க வேற இன்னும் அவுங்களுக்கு தொல்லை கொடுக்க போயிருக்கிங்க. என தனது தாயை திட்டியவள் தொடர்ந்து
"வீட்டில் யாரும் இல்லை என்றதும் அந்த வத்சலா வாய் பேசியிருக்காள். நான் இருந்துருக்கணும, பேசிய அவள் வாயை கிழித்திருப்பேன். நல்ல வேலை ருத்ரன் அண்ணா இருந்தார். நல்ல பதிலடி கொடுத்தார்.” என கூறினாள்.
உடனே கமலம் அம்மாவும் "யாரடி அவர்?" என கேட்டார்.
கயல் அதன் பின் கமலம் அம்மாவிடம் எதையும் மறைக்க வில்லை. அவர்கள் ஆரம்ப கால வாழ்க்கையில் இருந்து இப்போது ருத்ரன் அவளை திருமணம் செய்ய கேட்டது வரை அனைத்தையும் கூறி முடித்தாள்.
கயல் கூறிய அனைத்தையும் கேட்ட கமலம் அம்மா "சரி நான் அவளை இரவு இங்கு வர சொல்லிருக்கேன். அவள் வரட்டும் நான் பேசிக்கொள்கிறேன்." என கூறினார்.
"என்ன பேச போகிறீர்கள்?" என பதட்டதுடன் கேட்டாள் கயல் "இங்கே தானே இருக்க போகிறாய் நீயே கேட்டுக்கொள்" என கூறி அவர் பேச்சை முடித்து கொண்டார் கமலம் அம்மா.
கொஞ்ச நேரத்தில் நீலனுக்கு அழைத்து கமலம் அம்மா கூறிய அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டாள் கயல். நீலனோ அமைதியாக அனைத்தையும் கேட்டு விட்டு,
"சரி விடு அத்தை என்ன பேசுகிறார்கள் என கேளு, அவர் தவறாக ஏதேனும் பேசினால் அதன் பின் பாப்போம்."என கூறி வைத்து விட்டான். கயலுக்கு அவன் அமைதி வித்தியாசமாக இருந்தது.
அவன் மனதோ 'இனி எல்லாம் நல்லதாவே நடக்கும்' என கூறியது. ஏன் என்றால் உமையாள் எப்போதுமே தன்னையும் தனது மகளையும் யாரும் ஏதேனும் இழிவாய் பேசினால் தனக்காக பேச யாரையும் எதிர் பார்க்க மாட்டாள்.
அவளே அவர்களை ஒரு வழி பண்ணிவிடுவாள். ஆனால் இன்று அவள் அமைதியாய் இருந்திருக்கிறாள். ருத்ரன் அந்த பெண்மணியிடம் அவரை அவள் கணவர் என்றும், அவள் குழந்தைக்கு தகப்பன் என்றும் கூறியதை மறுப்பேதும் கூறாமல் இருந்திருக்கிறாள் என்றால், அவள் மனம் மறுமணத்தை பற்றி யோசித்து கொண்டிருக்கிறது, என அவள் மன நிலையை சரியாக கணித்து கொண்டான்.
உமையாளோ நடந்த கலவரைத்தையே நினைத்து கொண்டு அமர்ந்திருந்தாள். அப்படியே கண்களை மூடியவள் சற்று நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டாள்.
அப்போது ஒரு கனவு, கழுகு ஒரு புறாவை தூக்கிக்கொண்டு பறக்கிறது.. அந்த புறாவால் கழுகிடம் இருந்து விடுபட முடியவில்லை... ஆனால் எதோ ஒரு இடத்தில கழுகு புறாவை விட்டு விட்டு பறந்து சென்று விட்டது.
கழுகு விட்டதும் புறாவுக்கு கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியவில்லை, தடுமாறிய புறா கொஞ்ச நேரத்தில் தனது சுதந்திரத்தை புரிந்து கொண்டு நிலை தடுமாறாமல் சுதந்திரமாக வானில் பறந்தது.
சட்டென கனவிலிருந்து எழுந்தாள் உமையாள். அவள் கண்களில் ஏனோ அருணின் பிம்பம் தான் மின்னி மறைந்தது.