kani suresh
Moderator
அத்தியாயம் 4
ஆபீசுக்குச் சென்ற வினோத், ராகினி அந்தக் கண்மணி பற்றிப் பேசுவதை எண்ணி எரிச்சலுடன் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன், அடுத்தடுத்து வேலை வர அதில் கவனத்தைச் செலுத்தினான். மதியம் 12 போல் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து "சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டிங்களா?" என்று விசாரித்தான்.
அவரும், "சாப்பிட்டேன் டா" என்றார்.
"சரிம்மா கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க" என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
"வினோ, ஏன்டா உன் குரல் ஒரு மாதிரி இருக்கு? என்ன ஆச்சு, ஏதாச்சும் பிரச்சனையா ஆபீஸ்ல" என்றார் பத்மா.
"யாருமா அந்தப் பொண்ணு" என்றான் மொட்டையாக.
"எந்தப் பொண்ணுடா" என்றார், அவருக்கும் தன் மகன் யாரைச் சொல்கிறான் என்று புரியாமல்.
"கண்மணி கண்மணினு ராகிமா அவ புராணமே பாடிகிட்டு, புலம்பிட்டு இருக்கா நேற்றிலிருந்து. சரி நேத்து தான் சொன்னா என்று பார்த்தா, இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்துட்டு இருக்கும்போதும் அவளப் பத்தியே பேசுறா" என்றான் ஆதங்கமாக.
"சின்னக் குழந்தைடா அவ… நான் தான் நீ சொன்னா கேட்பேன், அவளும் கேட்பா என்று நினைக்காத" என்றார்.
"அம்மா, ப்ளீஸ் வேண்டாம். அந்தப் பொண்ணப் பத்தின பேச்சு நமக்கு வேண்டாம், இதோட விட்ருங்க பாட்டியும் பேத்தியும்.
"டேய்" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது "சரி பாருங்க, எனக்கு வேலை இருக்கு." என்று விட்டுத் என் தாயிடம் கோபப்பட விருப்பம் இல்லாமல் வைத்து விட்டான்.
'அவ என் மனசை மட்டும் பாதிக்கல, என் பேத்தியோட மனசையும் பாதிச்சி இருக்கா. கண்மணி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்குமே' என்று மனதிற்குள் எண்ணி விட்டு அமைதியாகி விட்டார்.
வினோத் தான், 'யார்? இந்தப் பொண்ணுனு தெரியல. அந்தப் பொண்ணைப் பார்த்துப் பேசி, ராகிமாகிட்ட இருந்து ஒதுங்கி இருக்கச் சொல்லணும்.' என்று மனதிற்குள் எண்ணிவிட்டுத் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
அங்கு ராகினி ஸ்கூலுக்கு வந்தவுடன் கவின் இடம் சென்று, "டேய் கண்மணி ஆன்ட்டி போன் நம்பர் தரேன்னு சொன்ன…" என்று கேட்டாள். அவனும் அவளுடைய புக் வாங்கி அதில் எழுதிக் கொடுத்தான்.
"ரொம்பத் தேங்க்ஸ்டா கவி" என்றாள்.
"இதுக்கு எதுக்கு தேங்க்ஸ், அத்தையும் அவங்க நம்பர் கொடுக்கச் சொல்லி தான் சொன்னாங்க" என்றான்.
"அத்தை கூட என்னைக் காலைல விட வரும்போது தேடினாங்க ராகி" என்றான்.
"நீ டெய்லியும் கண்மணி ஆன்ட்டி கூட தான் வருவியா? அப்போ நீ எத்தனை மணிக்கு வருவன்னு சொல்லு. நான் அப்பாகிட்டச் சொல்லி அந்த டைமுக்கு வரேன்." என்று சிரித்தாள்.
"சரி ராகி" என்று பல்வரிசை தெரியும் அளவிற்குச் சிரித்தான் கவின்.
இருவரும் பல கதைகள் பேசிவிட்டுத் தங்கள் பாடத்திலும், விளையாட்டிலும் கவனத்தைச் செலுத்தினார்கள்.
காலையில் வேலைக்கு வந்ததிலிருந்து கண்மணி ராகினியின் நினைவோடு இருக்க, 'இது நல்லதுக்கு இல்ல. நம்ப ஏன் அந்தப் பொண்ணப் பத்தி யோசிக்கிறோம்' என்று எண்ணித் தன் தலையில் தட்டிக் கொண்டு, அடுத்தடுத்து வேலைகளில் கவனத்தைச் செலுத்தினாள்.
அப்படியே நேரம் ஓடி மாலைப்பொழுது வர, அதுவரை கஷ்டப்பட்டு ராகினியின் நினைவை ஒதுக்கி வைத்த கண்மணி, ஸ்கூல் காம்பவுண்டுக்குள் வந்தவுடன் அமைதியாக இருக்க முடியாமல், திரும்பவும் கண்ணைச் சுழல விட்டுக் கொண்டு கவினை அழைக்க வந்தாள்.
'இப்போ அந்தப் பொண்ணு இருக்குமா?' என்று நினைத்துக் கொண்டே வர, வேகமாக அவளது அருகில் ஓடி வந்த ராகினி, கண்மணியின் காலைக் கட்டிக்கொண்டு "ஆன்ட்டி" என்று கொஞ்ச, ராகினி பற்றிய யோசனையில் நடந்து வந்து கொண்டிருந்த கண்மணி கவினையும், ராகினியையும் கவனிக்கவில்லை.
சத்தம் கேட்டுத் தன் காலை ஒரு குழந்தை கட்டிக் கொள்கிறது என்று உணர்ந்து, யாரென்று புரியாமல் குனிந்து பார்த்தவுடன், அங்கு ராகினியைப் பார்த்த சந்தோஷத்தில் கீழே முட்டி போட்டு உக்கார்ந்து, "டேய் தங்கம் நல்லா இருக்கியா?" என்று ஏதோ பல நாள் கழித்துப் பார்த்தது போல் கொஞ்ச,
"நேத்து தானே ஆன்ட்டி பார்த்தோம். நல்லா இருக்கேன், நீங்க…" என்று அழகாகத் தலையைச் சாய்த்துச் சிரித்தாள்.
அவளது நெற்றியில் இதழ் பதித்து, "ஆன்ட்டியும் நல்லா தாண்டா இருக்கேன் தங்கம்" என்று சிரித்தாள்.
"அத்தை எனக்கு நீ முத்தம் தரல" என்று கவின் முகத்தைத் தூக்க,
"உனக்கு இல்லாததா கவிக் குட்டி" என்று அவனது கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள். இரு குழந்தைகளும் சிரித்தது. இரு குழந்தைகளையும் கொஞ்சிக் கொண்டு, ராகினியிடம் சில பல கதைகள் பேசிக்கொண்டு, இன்று ஸ்கூலில் எடுக்கப்பட்ட பாடத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தாள்.
அப்போது கவின் தான் "அத்தை வீட்டுக்குப் போலாமா?" என்று கேட்டான்.
"ராகினி, உங்க வீட்டிலிருந்து உன்னைக் கூப்பிட்டுப் போக ஆள் வரலையா?" என்று கண்மணி கேட்டாள்.
"அப்பாதான் ஆன்ட்டி வருவாங்க. அப்பா வர கொஞ்ச நேரம் ஆகும். நான் அதுவரை ஆயாம்மா கூட உட்கார்ந்து இருப்பேன்" என்றாள்.
"ஏன்டா" என்று கேட்க, "அத்தை, அவங்க அப்பா ஆபீஸ் முடிஞ்சு தான் வந்து கூட்டிட்டுப் போவாங்க, உன்ன மாதிரி சீக்கிரம் முடியாது. உங்க ஆபீஸ் போல சீக்கிரம் எல்லாம் விட மாட்டாங்க" என்று சிரித்தான்.
"இப்ப என்னடா சொல்ற, நான் சீக்கிரம் வரேன்னு சொல்றியா?" என்று சிரித்தாள்.
அப்பொழுது ஒரு ஆயாம்மா வந்து "ராகினி பாப்பா, வாங்க போகலாம். நம்ம போய் உட்கார்ந்து இருக்கலாம். அப்பா வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாம்" என்று கூப்பிட்டார்.
"சரி ஆன்ட்டி, ஆயாம்மா கூப்பிடறாங்க. நான் போறேன். நாளைக்குப் பாக்கலாம்" என்று சிரித்தாள்.
"உங்க அம்மா எங்க மா?" என்று கேட்கும் பொழுது "ராகினிப் பாப்பா, சீக்கிரம் வாங்க" என்று ஆயாம்மா கூப்பிட்டதால், "சரி ஆன்ட்டி பாய்" என்று கண்மணியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ராகினி ஆயாம்மா உடன் ஓடிவிட்டாள்.
திரும்பிப் பார்த்துக் கொண்டே, கண்மணி யோசனையுடனே கவினை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். நேற்றுப்போல், இன்று யாரிடமும் தன்னுடைய யோசனையைச் சொல்லவில்லை, கண்மணி.
நேற்றே தன் வீட்டில் இருப்பவர்கள் தன்னை நினைத்து வருந்தியதால், எதுவும் பேசாமல் எப்போதும் போல் இருக்க முயற்சி செய்தாள்.
இங்கு அரை மணி நேரம் கழித்து ஸ்கூலுக்குள் வந்த வினோத், தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். தன் அப்பா காலையில் கண்மணி பற்றிப் பேச வேண்டாம் என்று சொன்னதால், போகும் வழியில் அமைதியாக இருந்தாள் ராகினி.
வீட்டிற்குச் சென்றவுடன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு ஹாலுக்கு வர, தன் பாட்டி அருகில் சென்று அவர் மடியில் படுத்துக்கொண்டு, கண்மணியைப் பார்த்ததைப் பற்றி மெதுவாக குசு குசு என்று சொன்னாள். பத்மாவும் சிரித்துக் கொண்டே அவளது தலையைக் கோதிக் கொண்டு ராகினி சொல்லும் கதையைக் கேட்டார்.
"பாட்டியும், பேத்தியும் என்ன குசுகுசு என்று பேசுறீங்க?" என்று கேட்டுக் கொண்டே வினோத் சமையலறையில் இருந்து இருவருக்கும் பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
"ஒன்னும் இல்லையே, சும்மா ஸ்கூல்ல நடந்ததைதான் பாட்டிகிட்டச் சொல்றேன்" என்று சிரித்தாள் ராகினி. திரும்பி பத்மாவிடம், “சொல்லாதீங்க பாட்டி” என்று கண்ணைக் காண்பித்துக் கொண்டே. பத்மாவிற்குச் சிரிப்புதான். தன் பேத்தி முதல் முறையாகத் தந்தையிடம் எதையோ மறைக்க முயற்சி செய்கிறாள்.
'தன் மகன் பேத்தியைத் திட்டி விட்டானோ?' என்று எண்ணினார். வினோத்தும், "ஏன்? என் ராகிமா அப்பாகிட்ட எல்லாம் சொல்ல மாட்டாளா?" என்று கொஞ்சினான்.
"சொல்வேனே" என்று விட்டுக் கண்மணியைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
"சரிடா தங்கம், என்னென்ன ஹோம் ஒர்க் இருக்கு, பண்ணலாமா? இல்லைனா கொஞ்ச நேரம் விளையாடுறீங்களா? அப்பாக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. பாட்டி கூட இருக்கீங்களா?" என்றான்.
“சரிப்பா நான் கொஞ்ச நேரம் பாட்டி கூட விளையாடுறேன். அப்புறமா படிக்கிறேன் "என்றாள்.
“சரி” என்று விட்டு வினோத்தும் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றான். பத்மா தான் "ஏண்டா ராகிமா, அப்பாகிட்ட மறைக்கிற?" என்று கேட்டார். காலையில் நடந்ததை ராகினியும் சொல்ல, மனதிற்குள் 'சின்னப் புள்ள, இதையும் மிரட்டி வச்சிருக்கானே, இவனை என்ன பண்ணலாம்?' என்று யோசித்தார்.
"என்ன பாட்டி யோசிக்கிறீங்க? அப்பாவுக்கு ஏன் கண்மணி ஆன்ட்டியைப் புடிக்கல. நான் அவங்களைப் பத்திப் பேசினா, ஏன் அப்பா அப்படி முகத்தக் கோவமா வச்சுக்கிறாரு." என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, குழந்தைக் குரலில் கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா தங்கம், உன் அப்பா ஏதோ வேலை டென்ஷன்ல இருந்து இருப்பான் போல. சரியாயிடுவான்" என்று தன் பேத்தியைச் சமாதானம் செய்தார்.
"சரி பாட்டி" என்று விட்டுக் கொஞ்ச நேரம் கதை பேசி, சிறிது நேரம் விளையாடி விட்டு, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ராகிமா, போதும். வாங்க படிக்கலாம்" என்று வினோத் அவளை அழைத்துச் சென்று படிக்க வைத்துக் கொண்டிருந்தான்.
புக்கில் அடுத்த பக்கம் திருப்பும் பொழுது, கண்மணியின் போன் நம்பர் அவனது கண்ணில் தென் பட, ராகினி நாக்கைக் கடித்தாள்.
"இது யாருதுடா, டீச்சர் போன் நம்பரா?" என்றான். என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்தாள்.
"உன்னதான் ராகிமா கேட்கிறேன்” என்று விட்டு அவளைப் பார்க்க, அவள் திருதிருவென முழித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன், "ராகிமா" என்று லேசாகக் குரல் உயர்த்தினான்.
"அ..அப்பா, தப்பா எடுத்துக்காதீங்க" என்று விட்டுத் திக்கித் திணறி "கண்மணி ஆன்ட்டி நம்பர்" என்றாள்.
எங்கிருந்துதான் வினோத்துக்கு கோபம் வந்ததோ, வேகமாக புக்கைத் தூக்கி எறிந்தவன், "உன்னை நான் அவங்களைப் பத்திப் பேசவே கூடாதுன்னு சொன்னேன், நீங்க அவங்களோட போன் நம்பரை வாங்கிட்டு வந்து இருக்கீங்க. அப்போ அப்பா பேச்சுக்கு என்னடா மரியாதை? அப்போ ராகிமாக்கு அப்பா வேணாமா? உனக்கு அந்தக் கண்மணி ஆன்ட்டி தான் வேணுமா?" என்று கோபத்தில் தன் ஆசை மகளிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தையை விட்டு விட,
ராகினி வேகமாகத் தன் அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
"அப்பா, நீ தான்பா எனக்கு வேணும். நீதான் அப்பா வேணும்.” என்று தேம்பினாள். சத்தம் கேட்டு உள்ளே வந்த பத்மா, தன் மகனை முறைத்துவிட்டுத் தன் பேத்தியைத் தன் தோளில் சாய்த்துத் தட்டிக் கொடுத்தார். அழுகையுடனே குழந்தை தூங்கி இருந்தது. தூக்கிக்கொண்டு வெளியில் செல்ல, "அம்மா பாப்பாவை இங்க படுக்க வைங்க" என்றான்.
"போதும்டா நிறுத்து, நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு தெரியல. அந்தப் பொண்ணு யாருன்னு தெரியாம, எதுக்கு அந்தப் பொண்ணு மேல உனக்கு இவ்ளோ கோவம் வருது?" என்றார்.
"கோபம் இல்லம்மா, இவ்வளவு நாள் இல்லாம நீயும், பாப்பாவும் ஒரு பொண்ணப் பத்தி இவ்ளோ அதிகமா பேசவும் எனக்கு…"
"போதும் நிறுத்து, என் மனசுல இந்தப் பொண்ணு நம்ப வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு தான். அந்தப் பொண்ணு குழந்தையைப் பார்த்துக்குற விதமும் சரி, நம்ப ராகிமாவைப் பாத்துகிட்ட விதமும் சரி, எனக்குப் புடிச்சது. அதுக்காக மட்டும்தான் யோசித்தேன். ஆனா ராகினிகிட்ட அவ பழகின விதத்தில், ராகினி அவகிட்டப் பேசணும்னு ஆசைப்படுறா… இன்னிக்கு அவளைப் பார்த்துப் பேசினதைக் கூட உன்கிட்ட மறைச்சிருக்கா. அதுக்கு முழுக்க முழுக்கக் காரணம் நீ மட்டும் தான்… உன்னோட நடவடிக்கை மட்டும் தான்.
உன் பொண்ணு இதுவரைக்கும், விவரம் தெரிந்ததுல இருந்து உன்கிட்ட ஏதாச்சும் மறைச்சிருக்களா? முதல் முறையா நீ காலைல அவகிட்ட எரிச்சலோடு கத்தினதால அவ பயந்து போய் உன் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சு இருக்கா. இதுக்கு காரணம் நீ மட்டும்தான். இப்போ உன்னைப் பார்த்து பயப்படவும் செய்றா. புள்ளகிட்ட எதைக் கேக்குறதுன்னு இல்லாம கேட்டுட்டு இருக்கடா. இது அவளுக்கும் நல்லது இல்ல, உனக்கும் நல்லது இல்லை" என்று விட்டுத் தன் பேத்தியை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டார் பத்மா.