எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 34

Privi

Moderator

ஞாயிற்றுக்கிழமை, மாலை நேரம் போல் வீட்டிற்கு வந்தான் ருத்ரன். வந்தவன் மகிழை அழைத்து கொண்டு வெளியே சென்றான். அவர்களுடன் உமையாளும் சென்றாள். மகிழ் அவனிடம்​

"ருத்து எப்போதும் நீங்களும் மாமாவும் தானே என்னை வெளியே அழைத்து செல்வீர்கள்? இன்று என்ன அம்மா வந்துள்ளார்கள்?" என ருத்ரனிடம் ரகசியமாக கேட்டாள் மகிழ்.​

ஆனால் அவள் என்னத்தான் மெதுவாய் கேட்டாலும் அவள் கேட்டது உமையாளுக்கு கேட்டு விட்டது. அதற்கு உமையாளோ​

"ஏன்டி இப்போ நான் வந்த என்ன?" என பதிலுக்கு கேட்டாள். உடனே மகிழ் அமைதியாகி விட்டாள். பின் உமையாள் தொடர்ந்து "ஒ... நான் வந்ததாள் உன்னால் திருட்டு தனமாக ஐஸ் கிரீம் உன்ன முடியாதே, அதனால் நான் ஏன் உங்களுடன் வருகிறேன் என கேட்கிறாயா? என்று கேட்டாள்.​

ஐஸ் கிரீம் என்றதும் மகிழ் கண்கள் அகல விரிந்தது. பின் ஏதும் கூறாமல் ருத்ரனுடன் அமைதியாக நடந்து வந்தாள். திருட்டு பூனை மாட்டிக் கொள்வது போல் மகிழ் முகம் இருக்க ருத்ரனுக்கோ அவள் முகத்தை பார்த்ததும் சிரிப்பு வந்தது, வந்த புன்னகையை அடக்கி கொண்டான்.​

மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குதான் சென்றார்கள். மகிழ் கண்கள் உமையாளை நோக்க, உமையாளோ "இன்று மட்டும் தான் என கண்களை பெரிதாய் விரித்து வைத்துக்கொண்டு கூறினாள்.​

அதற்கு மகிழும் உடனே சம்மதமாக தலை அசைத்து கொண்டாள். மகிழ் உமையாளை கட்டி தழுவவும் மறக்கவில்லை. மூவரும் ஒரு இடத்தில் அமர ருத்ரன் சென்று அவர் அவருக்கு பிடித்த ஐஸ் கிரீம் வகையை தேர்வு செய்து வாங்கி வந்தான்.​

உமையாள் வெனிலா ஐஸ் கிரீமும், மகிழ் சாக்லேட் ஐஸ் கிரீமும், ருத்ரன் மின்ட் ஐஸ் கிரீமும் உண்டனர். உண்டு முடிந்தவுடன், எப்படி பேச்சை ஆரம்பிப்பது என இருவரும் யோசனை செய்து கொண்டு இருந்தனர்.​

பின் ருத்ரனே "மகிழ் உனக்கு அப்பா என்றாள் என்ன என்று தெரியுமா?" என கேட்டான். அப்பா என்றவுடன் மகிழின் கண்கள் அவள் தாயை நோக்கி சென்றது. பின் மெதுவாக ருத்ரனிடம் "ருந்து அப்பானு சொல்லாதீங்க அம்மாக்கு பிடிக்காது." என்றாள்.​

அதனை கேட்டவுடன் உமையாள் கண்கள் கலங்கி விட்டன. ருத்ரன் உமையாளை பார்த்தான். பின் அமைதியாகிவிட்டான். மகிழ் ருத்ரன் அருகில் தான் அமர்ந்திருந்தாள்.​

உமையாள் ருத்ரனின் வலதுபுறம் அமர்ந்திருந்தாள். உமையாள் எழுந்து சென்று மகிழ் பக்கம் அமர்ந்து கொண்டாள். பின் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு "மகிழ்மா உன்னிடம் அம்மா ஒன்று சொல்ல வேண்டும்." என்றாள்.​

மகிழோ அவள் தாயையே பார்த்துக்கொண்டிருக்க, உனக்கு அப்.... அப்…. என்று திணறியவள் பின் ஒரு முடிவாய் உனக்கு அப்பா இருக்கிறார்.”என கூறியே விட்டாள்.​

மகிழ் கண்கள் விரிந்து கொண்டன. தொடர்ந்து அது... அது வந்து... உன் அப்... உன் அப்பா... அதுவந்து.... மறுபடியும் ஆழ்ந்த ஒரு மூச்சை இழுத்து விட்டாள். பின் ருத்ரனை பார்த்து "இவர்தான் உன் அப்பா." என பட்டென கூறினாள்.​

மகிழ் கலங்கிய விழிகளில் ருத்ரனை பார்த்தாள். அவனிடம் நெருங்கி "நீங்க தான் என்னோட அப்பாவா ருந்து?" என கேட்டாள் குழந்தை. அதற்கு அவனோ அவளை அள்ளி எடுத்து அவன் மடியில் அமர்த்தி, அவள் நெற்றியில் முத்தமிட்டு கண்களை "ஆம்" எனும் ரீதியில் மூடி திறந்து "நான் தான் உன் அப்பா." என கூறினான்.​

மகிழ் திரும்பவும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். பின் பாய்ந்து "அப்பா...." என கூறி அவனை பாய்ந்து அனைத்து கொண்டாள். அவளின் அணைப்பில் ருத்ரன் நெகிழ்ந்து போனான்.​

உமையாளுக்கு கண்கள் கலங்கி விட்டன. மகிழின் தந்தைக்கான ஏக்கம் உமையாளுக்கு இப்போது நன்கு புரிந்தது. அத்துடன் மகிழ் ருத்ரனை விடவில்லை.​

எங்கு சென்றாலும் அவன் கைகோர்த்து கொண்டே நடந்து சென்றாள். உமையாளுக்கு இப்போதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. இப்படியே அந்நாளும் கழிந்தது.​

சில நாட்கள் கழித்து பார்வதி அம்மா உமையாள் வீட்டிற்கு வந்தார். அன்றைய நாள் நீலனும் வீட்டில்தான் நின்றான். இப்போதெல்லாம் நீலன் அவன் வேலை முடிந்தவுடன் நேரே வீட்டிற்கே வந்துவிடுகிறான்.​

பொறுப்பான தம்பியாய் அக்கா கல்யாணத்திற்கு முழு மூச்சாக ஏற்பாடெல்லாம் அவன்தான் செய்கிறான். வரவேற்பறையில் எல்லோரும் அமர்ந்திருக்க அங்கே ருத்ரன் உமையாள் திருமணத்திற்கான கலந்துரையாடல் நடந்துகொண்டு இருந்தது .​

இவர்களின் உரையாடலில் கமலம் அம்மாவும் கலந்து கொண்டார். பார்வதி அம்மாவோ​

"கல்யாணம்தான் எளிமையாக நடக்க வேண்டும் என்று கூறி விடீர்கள். ஆனால் சடங்கு சம்ப்ரதாயம் எல்லாம் முறையே நடக்க வேண்டும். பெண் பார்க்கும் வைபவம், பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வது, நிச்சயதார்த்தம், பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நலுங்கு வைத்தல்." என அவர் அடுக்கி கொண்டே போக அதற்கு ருத்ரனோ​

"அம்மா போதும் நாங்கள் என்னமோ முதல் முறை கல்யாணம் கட்ட போவது போல் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் மற்றும் சடங்கு." என கேட்டான். அதற்கு பார்வதியோ "சும்மா இருடா ஐயா, முடிந்த கதையை பற்றி பேச வேண்டாம். இனி ஆகப்போகும் விசேஷத்தை பார்க்கலாம்." என கூறினார்.​

அதற்கு உமையாளோ " எனக்கும் ருத்ரன் சொல்வதுதான் சரி என படுகிறது." என்றாள். உடனே கமலம் அம்மா "பாருடா இப்பவே மாப்பிள்ளைக்காக பேசுவதை." என கலாய்த்தார்.​

ருத்ரனுக்கோ இதழில் புன்னகை. அவர்கள் பேசுவதை கேட்டு அமைதியாக சிரித்துக்கொண்டே கேட்டு கொண்டிருந்தான். உமையாளுக்கோ அவன் முன்பு கமலம் இப்படி பேசியவுடன் ஐயோ என்றாகியது. உடனே அவள் " அத்தை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை" என வெக்கத்தை மறைக்க முயன்ற படி கூறினாள்.​

நீலனும் "மற்றது வேண்டாம் என்றாலும் பரவாயில்லை ஆனால் அக்கவுக்கு கண்டிப்பாக நலுங்கு வைக்க வேண்டும்." என கூறினான். மறுப்பு கூற வந்த உமையாளை இடைமறித்து ருத்ரன் "நீலன் சொன்னதே நடக்கட்டும். இந்த முடிவில் மாற்றம் இல்லை. " என திட்ட வட்டமாக கூறி விட்டான்.​

உடனே கமலம் அம்மாவோ சரி அப்போ தாய் வீட்டு நலுங்கு நான் வைக்கிறேன்" என கூற, உடனே பார்வதி அம்மா " அப்படி என்றால் சரி நான் என் மருமகளுக்கு அத்தை வீட்டு நலுங்கு வைக்கிறேன்" என கூறினார்.​

இரு பெரியவர்களின் முடிவும் ஏற்றுக்கொள்ள பட்டது. அதன் பின் இன்னும் சில திருமண ஏற்பாடுகளை பற்றி கலந்துரையாடி, பார்வதி அம்மா அவருக்கு தெரிந்த ஐயருக்கு தொடர்பு கொண்டு மூன்று அருமையான முகூர்த்த நாளை தெரிவு செய்தார்.​

அதை சபையில் சொல்ல அதில் சிறந்த ஒரு நாளை அலசி கொண்டு இருந்தனர். பின் எல்லோரும் ஒரு மனதாய் வரும் கார்த்திகை பதினாறாம் தேதியை முடிவு செய்தனர்.​

இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருந்தன. உடனே வேக வேகமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர். எளிமையான டிசைனில் கல்யாண பத்திரிக்கையும் அடிக்க பட்டது.​

நெருங்கிய உறவுகளையும் நண்பர்களையும் மட்டும் திருமணத்திற்கு அழைத்தனர். ருத்ரன் எவ்வளவு சொல்லியும் பார்வதி கேளாமல் சில உறவுகளுக்கு பத்திரிக்கை வைத்து அழைக்க போனார், அதில் ருத்ரனின் அத்தை சாரதாவும் அடக்கம்.​

சாரதாவின் வீட்டிற்கு அழைக்க சென்றவர், சாரதாவின் குத்தல் பேச்சில் மனம் வருந்தினார் ஆயினும் சாராத பார்வதியிடம் நல்ல முறையில் நடந்து கொண்டாள். ஏன் என்றால் இப்போது பார்வதியிடம் இருக்கும் பணம். பணம் தான் பத்தும் செய்யுமே.​

"கண்டிப்பா கல்யாணத்திற்கு வந்துருவேன் பார்வதி. நான் வராமல் கல்யாணம் தான் நடந்திடுமா?" என்று உரிமையாய் பேசினார் சாரதா. இவை யாவும் நடிப்பு என்று பார்வதிக்கு தெரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் "வந்துடுங்க அண்ணி, நான் முதலில் புறப்படுகிறேன்." என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.​

இப்படியே நாட்கள் கடக்க இரு குடும்பமும் பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் புடவை மற்றும் வெட்டி சட்டை எடுக்க சென்றனர். பெண்ணிற்கு காஞ்சிபுர பட்டில், குங்கும வண்ண புடவையும் மாப்பிள்ளைக்கு தங்க நிற பட்டு வேட்டி சட்டையும் வாங்கினார்கள்.​

ஏணையர்களும் திருமணத்திற்கு அவர்களுக்கு பொருத்தமான உடைகளை தெரிவு செய்து வாங்கினார்கள். பின் பார்வதி அம்மாவும் கமலம் அம்மாவும் கயலை அழைத்து கொண்டு பத்தரிடம் தாலி செய்ய கொடுக்க சென்றார்கள்.​

பார்வதி அம்மா அவர் கணவர் வம்சா வழியில் உள்ள டிசைனை தாலி செய்ய கொடுத்தார். ருத்ரனும் அவன் பங்கிற்கு மகிழுக்கு தங்க சங்கிலி ஒன்று வாங்கி வந்தான்.​

கூடவே உமையாளுக்கும் ஒரு கழுத்தணி வாங்கி வந்தான். மகிழின் சங்கிலி மெலிதாய், சங்கிலியின் நடுவே மூன்று குண்டு மணி இடது வலது சமமாக வைத்து மிகவும் அழகான டிசைனாக இருந்தது அதன் பென்டென்ட் தமிழ் எழுத்துக்களில் "மகிழிணி" என எழுதி கடைசியில் வரும் "ணி"யில் மயில் இறகு இருப்பதை போல் வடிவமைத்து இருந்தனர்.​

உமையாளுக்கும் தமிழ் பாரம்பரிய முறையில் சங்கை மையமாக கொண்டு கழுத்தணி ஒன்றை வாங்கியிருந்தான். முதலில் அந்த இரு பரிசுகளையும் கொண்டு வந்து, முதலில் மகிழிடம் அவள் தங்க சங்கிலியை கொடுத்தான். உமையாலும் அருகேதான் இருந்தாள்.​

உமையாள் "எதற்கிதெல்லாம்?" என கேட்டு முடிப்பதற்குள், ருத்ரனோ "உனக்கென்ன என் மகளுக்கு நான் வாங்கி கொடுக்கிறேன்." என அவள் வாயை அடைத்து விட்டான்.​

அதன் பின் அவளால் என்னதான் பேசிவிட முடியும். மகிழுக்கு அணிவித்து அழகு பார்த்தான். அவளும் தனக்கு பரிசு கிடைத்த ஆனந்தத்தில் ருத்ரனை கட்டி அனைத்து "நன்றி அப்பா" என கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டு விளையாட சென்று விட்டாள்.​

பின் அடுத்த நகை பெட்டியை எடுத்து உமையாளிடம் கொடுத்தான். அவளோ தனது புருவற்றை ஏற்றி இறக்கி "என்ன" என்பது போல் பார்வையாலையே கேட்டாள்.​

அதற்கு ருத்ரனோ திறந்துதான் பாரேன் என அவள் கைகளில் திணித்தான். அவளும் திறந்து பார்க்க, "எதற்கிது? நான் கேட்கவில்லையே. எனக்கிது வேண்டாம்.” என்று கூறினாள்.​

ருத்ரனோ "ஹலோ என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி கொடுப்பேன் வேண்டாம் என சொல்ல உனக்கு உரிமை இல்லை." என்றான். அதற்கு அவளோ சிரிப்பினுடனே "பொண்டாட்டியா? யாரு யாருக்கு பொண்டாட்டி? நான் எப்போது உங்களுக்கு அந்த உரிமையெல்லாம் குடுத்தேன்." என கேட்டாள்.​

உடனே அவனும் புறப்படுவதற்கு வாசல் புறம் திரும்பி இரண்டடி எடுத்து வைத்திருப்பான். மீண்டும் அவள் புறம் திரும்பி அவளிடம் நெருங்கி வந்து அவள் கண்களோடு தனது கைகளை கலக்க விட்டு, ”சில உரிமை நம்மளே எடுத்துக்கணும் இல்லை என்றால் கிடைக்க பெறாது.” என கூறி,​

அவள் செவ்விதழ்களில் இவன் இதழ்களை வைத்து அடைத்திருந்தான். அவனின் அதிரடியில் உமையாளின் கண்கள் தான் விரித்து கொண்டது. இதழ் தீண்டிய வேகத்தில் அவளை விட்டு பிரிந்தவன். "எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது." என கூறி மெளனமாக சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டான்.​

அவன் சென்றபின்னும் அவன் வாசனை அவளுடனே இருப்பதை போல் உணர்ந்தாள் உமையாள். அவன் குடுத்த முத்த அதிர்ச்சியில் இருந்து அவளால் மீளவே முடியவில்லை.​

அவளுக்கு என்ன உணர்வென்றே புரியவில்லை. அவளின் இதழ்கள் இன்னும் குறு குறுத்துக்கொண்டு இருந்தது. எனோ அவன் மீது கோபம் வரவில்லை அந்த முத்தம் அருவெறுக்கவும் இல்லை.​

அவளும் இப்போது கொஞ்சமே கொஞ்சம் இதழ் பிரித்து சிரித்து கொண்டாள். அவன் வாங்கி கொடுத்த நகை அங்கேதான் ஒரு மேசையின் மீது இருந்தது. அதை எடுத்து பார்த்தவள் அதனை அவள் கை கொண்டு வருட ஆரம்பித்தாள்.​

அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று இப்போது அவளுக்கு உறுதியாய் தெரிந்து விட்டது.​

அவளுக்கே அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் அவளுக்குள் காதல் மலரும் என அவள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பார்வதி அம்மா கேட்ட போது அவளை யாரும் புரிந்துகொள்ள வில்லை என்று வேதனை பட்டாள்.​

ஏன் ருத்ரனே கல்யாணத்தை பற்றி பேசும் போது அவ்வளவு கோப பட்டாள். ஆனால் இப்போது எல்லாமே தலை கீழாக மாறியதை நினைத்து அதிசயித்து தான் போனாள்.​

இங்கு ருத்ரனின் இதழ்களோ தாராளமாக விரிந்திருந்தது. அவனும் ஏதோ ஒரு வேகத்தில் தான் முத்தமிட்டு விட்டான். ஆனால் இப்போது மீண்டும் அவளை முத்தமிட வேண்டும் என தோன்றியது.​

ருத்ரனோ வாய் விட்டே புலம்ப ஆரம்பித்து விட்டான். "ஒரு முத்தம் தான், ஆளையே சாய்த்துட்டாலே." என தனக்குள்ளே வெக்கப்பட்டு கொண்டான். யாருக்கும் காட்டாத ஆண்களின் வெக்கம் கூட அழகுதானே.​

யாருக்கும் காத்திராமல் காலங்கள் ஓடி கல்யாணத்திற்கு இரு நாட்கள் முன் வந்து நின்றது. உமையாள் வீட்டில், உமையளுக்கு முதல் நாள் நலுங்கு வைக்க தொடங்கினர்.​

கமலம் அம்மா தாய் நழுங்கை அழகாக வைத்து முடித்தார். நலுங்கு வைத்து முகமே சாந்தனமாக நிறைந்திருந்தாள் உமையாள். அப்போது அங்கு வந்த நீலன். உமையாளை கண்டு கண் கலங்கி போனான்.​

அவன் பலநாள் கண்டா கனவு இன்றுதான் நிறைவேறி இருக்கிறது. மறுநாள் அத்தை நழுங்கை நல்ல படியாக வைத்து முடித்தார் பார்வதி அம்மா. உமையாளுக்குமே இதெல்லாம் கனவு போல் தான் இருந்தது.​

இப்படியே அந்த இரு நாட்களும் நகர்ந்து மறுநாள் திருமண நாளாக விடிந்தது.​

விண்மீன்கள் புன்னகையால்​

புது கவிதைகள் பாடிடுமே.​

பூங்காற்றும் தென்றலும் சேர​

இசை சாரல் தூவிடுமே.​

மஞ்சள் வேர் தனிலே​

பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.​

குங்குமமும் கன்னங்களில்​

அழகா சிவந்திடுமே.​

சூரியனும்,சந்திரனும்​

தன் ஒளிகளால் வாழ்த்திடுமே..​

கெட்டி மெளத்துடன்.. நாதமும்​

சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.​

நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!​

 
Top