எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கொழுக்கட்டை ( மோதகம் )

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

புதிதாக தொடங்கும் எந்த செயலையும் விநாயகரை வணங்கி தொடங்குவது வழக்கம். அதனால் நளபாகத்தை அவருக்கு பிடித்த கொழுக்கட்டையிலிருந்து தொடங்கலாம்.

நானும் பெருசா சமைக்க மாட்டேன் ஆனா எங்க ஊரு ஸ்பெஷல் எல்லாம் இங்க பதிவு செய்யறேன் . உங்க கருத்துக்களையும் தாராளமா பதிவு செய்ங்க, புதுசா தொடங்கரவுங்களுக்கு உதவியாக இருக்கும். ???

கொஞ்சம் கதை மாதிரியே தரேன்... நல்லா புரியற மாதிரி இருக்கானு சொல்லுங்க...
 
Last edited:
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினமாக இருக்க, தேவ் தன் தங்கை குடும்பத்தை தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தான்.

தேவ்வும் அர்ஜுனும் பேசிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் சென்றதும் பேச்சில் சுவாரசியம் குறைய என்ன செய்வதென்று புரியாமல், பெண்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க சமையலறைக்கு சென்றனர். சமையலறையில் சாம்பவியும் அமிர்தாவும் தீவிரமாக எதோ செய்துகொண்டிருந்தனர்.

இருவரும் அறை வாயலில் ஆளுக்கு ஒருபுறம் கைகளை கட்டிக்கொண்டு சாம்பவியும் அமிர்தாவும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தக்கொண்டு நின்றனர்.

தேவ், "என்ன நடக்குது இங்க " என்று கேட்கவும் இருவரையும் திரும்பி பார்த்த சாம்பவி, " இங்க என்ன வேலை ரெண்டுபேருக்கும், நாங்க இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு கொழுக்கட்டை செய்யப் போறோம் " என்றாள்.

அர்ஜுனோ, " சாம்பவி செய்ற ஓகே ஆனா என் பொண்டாட்டி என்ன செய்றா " என்று அமிர்தவை கிண்டல் செய்து சிரிக்க... தேவ்வும் அவனுடன் இணைந்து கொண்டான்.

இருவரையும் முறைத்து பார்த்த அமிர்தா, " ஓஹோ அப்போ எனக்கு தான் செய்ய தெரியாது எங்க நீங்க செய்ங்க பாப்போம் " என்று அவர்கள் இருவரையும் முறைத்து பார்தாள்.

அதற்கு அர்ஜுன், " ஓ... அப்போ வா இன்னிக்கு நாங்க தான் கொழுக்கட்டை செய்ய போறோம் நகருங்க ரெண்டுபேரும் " என்றவன். தேவ்வை பார்த்து, " ஓகேவா மச்சான்" என்று கேட்க தேவ், " நான் ரெடி மாப்ள " என்றான்.

இருவரும் உள்ளே நுழைந்து ஒரு வேகத்தில் பெண்கள் கையிலிருந்த பாத்திரத்தை பறித்து எடுத்தவர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க, சாம்பவி, "நான் எப்படினு சொல்லறேன் நீங்க மூணு பேரும் ஆளுக்கு ஒன்னு செய்ங்க " என்றாள்.

அதுவே சரி என்று பட மூவரும் ஒத்துக்கொண்டனர்.

சாம்பவி அவர்களிடம், " அமி நீ கொழுக்கட்டை மாவு ரெடி பண்ணு, அண்ணா நீங்க தேங்காய் பூரணம், மச்சி நீங்க எள்ளு பூரணம் ஓகேயா " என்று கேட்க மூவரும் தலையாட்டினர்.

" அப்போ சரி அமிர்தா பச்சரிசிய தண்ணில நல்லா கழுவி எடுத்து வடிச்சுட்டு ஒரு துணில காய போடு, அரிசி காஞ்ச அப்பறம் கொஞ்சம் லேசான ஈர பதத்தோடவே அரிசிய அரைச்சு, மாவ நல்லா சலிச்சுட்டு அதுல லைட்டா உப்பு ஒரு பின்ச், நல்லெண்ணெய் ரெண்டு ஸ்பூன் சேர்த்து கலந்துட்டு...

ஒரு பாத்திரத்துல சூடு தண்ணி வச்சு மாவுல கொஞ்சம் கொஞ்சமா அதை சேர்த்து கலந்துட்டு, எல்லாம் சேர்த்து உருண்டயாக்கு கைல ஓட்டமா இருக்கனும் மாவு பதம், செஞ்சுட்டு அத தட்டு வச்சு மூடிடு, அவ்ளோ தான் உன் வேலை " என்றவள் அர்ஜுனிடம்,

" அண்ணா நான் தேங்காய் வெல்லம் எல்லாம் துருவி வச்சுட்டேன், ரெண்டு கப் தேங்காய்னா ஒரு கப் வெல்லம் போட்டுக்கலாம்... சுத்தமான வெல்லம் தான் வடிகட்ட வேண்டியது இல்லை, பாத்தரத்த அடுப்பில வச்சு வெல்லத்த போட்டு கொஞ்சமா தண்ணி விடுங்க வெல்லம் கரஞ்சதும் தேங்காய் சேர்த்து தண்ணி வத்தி போற வரைக்கும் விட்டு இறக்கிடுங்க பூரணம் ரெடி " எனவும் அர்ஜுன், " ஓகே டன் தங்கச்சி " என்றான்.

அடுத்து தேவ்விடம், " மச்சி நீங்க எள்ள வறுத்து எடுங்க, எள்ளு பொறியானும், அடுப்பு சிம்ல வச்சு வறுங்க... வறுத்து சூடு ஆரினதும், ஐம்பது கிராம் எள்ளுக்கு இருனூறு கிராம் வெல்லம் போட்டு அரைச்சு எடுங்க... அவ்ளோ தான், எல்லாரும் ஸ்டார்ட் பண்ணுங்க " எனவும் மூவரும் தங்கள் வேலையை செய்ய தொடங்கினர்.

அடுத்த சில நிமிடங்களில் மூவரும் வேலையை முடித்து விட... சாம்பவி, "பரவால்ல சீக்கரம் முடிச்சுட்டீங்க " என்றவாறு சிறிது மாவை எடுத்து உருண்டை ஆக்கியவள், வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து சிறு வட்டமாக தட்டியவள் அதில் சிறிது எள்ளு பூரணம் வைத்து மாவை வட்டமாக பூரணம் வெளிவரதது போல் போர்த்தி எடுத்து வைத்துவிட்டு, அடுத்த உருண்டைக்கு தேங்காய் பூரணம் வைத்தாள்.

பின், இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டவள், இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொழுக்கட்டைகளை அதில் அடுக்கி மூடி வைத்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் கொழுக்கட்டைகள் தயாராகியிருந்தன.

நால்வரும் கொழுக்கட்டைகளை அழகாய் தட்டில் அடுக்கி புஜையாறையில் விநாயகர் முன் வைத்து வணங்கினர்.
 
Last edited:

Fa.Shafana

Moderator
செம்ம மச்சி...
அழகான ஆரம்பம்...
கதை நடைல தந்தது இன்னும் அழகு...
வாழ்த்துகள் மச்சி ????
 
Top