எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -13

Padma rahavi

Moderator
இருவரின் எண்ண அலைகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே இருந்தது. இருவருமே மற்றவரை ஏமாற்றி விட்டார்கள் என்ற எண்ணமே மிகுந்து இருந்தது.

தன் தம்பியின் மரணத்திற்கு அவள் தான் காரணம் என்று சிவனந்தன் மனதில் பதிந்து விட்டது. இதற்காகத் தான் நேற்று அத்தனை வாதம் செய்திருக்கிறாள் என்று தப்பு தப்பாக யோசித்தான்.

மேற்கொண்டு சிவா வேறு, அந்த பொண்ணு கொஞ்சம் தன்மையா பேசிருந்தா கூட விஷ்வா அவளோ மனசு உடைஞ்சு போயிருக்க மாட்டான். எவளோ சொல்லியும் கேட்காம முதல் தடவையா அப்ப தான் குடிச்சான். வண்டி அவன் கட்டுப்பாட்டை இழந்தப்ப எதிர்ல ஒரு பொண்ணு வர்றது தெரிஞ்சது அவ்ளோ தான் ஞாபகம் இருக்கு அண்ணா. விஷ்வா இல்லைங்கிற விஷயமே காலையில தான் எனக்கே தெரியும்.

எனக்கு நினைவு வந்த பிறகு எப்ப விஷ்வா பத்தி கேட்டாலும் அம்மா சரியா பதில் சொல்லல. இன்னிக்கு ரொம்ப அழுத்தி கேட்கவும் தான் விஷ்வா பத்தி சொன்னாங்க. அதான் உடனே உங்களை பார்க்க வந்தேன் என்றான்.

இதெயெல்லாம் கேட்கக் கேட்க அவனுக்கு ரத்தம் கொதித்தது. கண்டிப்பாக சிவகர்ணிகாவிற்கு விஷ்வா படத்தைப் பார்த்ததும் தெரிந்திருக்கும். இதைக் கூறாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறாள் என்ற எண்ணமே மிகுந்து இருந்ததே தவிர, தானும் அவளை ஏமாற்றி உள்ளோம் என்பது அவன் மனதிற்கு அப்போது தோன்றவே இல்லை.

இறுகிய முகத்துடன் வீட்டிற்கு வந்தவன் நேராக தன் அறைக்குச் சென்றான்.

அழுது அழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள் சிவகர்ணிகா. அவனைப் பார்க்கும் பார்வையியோ அனல் தெரித்தது.

மேஜையின் மேல் இருந்த விஷ்வாவின் இறப்புச் சான்றிதழைப் பார்த்தவனுக்கு விஷயம் புரிந்தது. அழுது வீங்கிய அவள் முகத்தைக் காணவே அவனுக்கு தைரியம் இல்லை. எப்படியெல்லான் அவளை வைத்திருக்க வேண்டும் என்று கனவு கண்டு திருமணம் செய்தான். அவன் உள்ளம் வலித்தது.

காதல் கைக்கூடியதில் உலகயே வென்ற உற்சாகத்தில் இருந்த சிவகர்ணிகா இப்போது அனலில் இட்ட புழு போல் துடித்துக் கொண்டிருந்தாள். திருமணமாகி முழுதாக 6 மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் அது நிலைக்குமா நிலக்காதா என்று கேள்விக் குறி ஆகி விட்டது.

இன்னும் வேதிகாவை நினைத்து கவலைப்படும் தன் பெற்றோரை நினைத்துப் பார்த்தாள். இவனை மன்னித்தால் அது அவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா!யாரை மாப்பிள்ளை என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றார்களோ அவர் தம்பி தன் தங்கள் மகளை கொன்றவன் எந்த உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்?

இரண்டு பேரும் அவரவர் நியாயத்தை நினைத்துக் கொண்டு இருக்க, சிவகர்ணிக்கவே தொடங்கினாள்.

எப்ப தெரியும்! அவளோ தான் கேள்வி.

அதற்குள் என்ன அடங்கியிருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.

அது வந்து, கோவமாக வந்த அவனே சற்று திணறினான்.

பொய் சொல்லும் போது இந்த தயக்கம் வரலையே. உண்மையை கேட்டா மட்டும் ஏன் தயங்குறீங்க!

விஷ்வா ஸ்பாட்லேயே இறந்ததும் எனக்கு தகவல் வந்துச்சு. அங்க போன பிறகு தான் அதுல உங்க அக்காவும் இறந்தங்கனு எனக்குத் தெரியும். இரண்டு உடலையும் ஒன்னா தான் குடுத்தாங்க. உங்க அம்மா அப்பா வர்றதுக்குள்ள விஷ்வா உடம்பை மட்டும் நான் தனியா எடுத்துட்டு போய்ட்டேன்.

அவங்க கிட்ட மன்னிப்பு கேக்க தான் நினைச்சேன். நான் மறைஞ்சு இருந்து பார்த்தப்ப உங்க அக்கா உடம்பு மேல அவங்க விழுந்து விழுந்து அழுததைப் பார்த்திட்டு எனக்கு அவங்க கிட்ட போகவே தைரியம் வரல. அங்க இருந்து அப்படியே கிளம்பிட்டேன். அனல் அதை நினைச்சு நான் குற்ற உணர்ச்சி அடையாத நாளே இல்லை. அன்னிக்கு உன்னை விட உங்க வீட்டுக்கு வந்தப்ப தான் நீ யாருங்கிற விஷயமே எனக்குத் தெரியும்.

அன்று அவன் வேகமாக வெளியேறியது, மறுநாள் அவன் முகத்தில் தெரிந்த குழப்பம் இதற்கெல்லம் இப்போது விடை கிடைத்தது அவளுக்கு.

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ண எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு?

உண்மையை மறைக்குறது பத்தி நீ பேசாத. விஷ்வா பத்தி நான் அவ்ளோ சொன்னப்ப கூட அந்த பொண்ணு நீ தான்னு சொல்லலைல நீ?

இதற்கு மேல் அதிர்ச்சி என்ற வார்த்தையே அவளுக்கு சாதாரணமாக தோன்றும் அளவுக்கு அதிர்ச்சிகள் அவளை தாக்கின!

இதுல என் தப்பு என்ன இருக்கு? காதல் வந்தா தானே காதலிக்க முடியும். ப்ரோபோஸ் பண்ற எல்லாருக்கும் ஓகே சொன்னா எத்தனை பேரை கல்யாணம் பண்றது? உங்க தம்பி அதுக்கு குடிச்சிட்டு வண்டி ஓட்டி எங்க அக்காவை கொன்னிருக்கார். அதை மறைச்சு நீங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கீங்க!

அன்னிக்கு உண்மை தெரிஞ்சதும் எப்படி துடிச்சு போனேன்னு எனக்குத் தான் தெரியும் டி. என் தம்பி பண்ணா தப்புக்கு பிராயச்சித்தமா தான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுக்கணும்னு முடிவு பண்ணேன் என்றான் சிவனந்தன்.

சில சமயம் மூளை செயலற்று போய்விடும் போல அவனுக்கு.

அடச் ச்சீ! உன் மேல உள்ள காதலை மறக்க முடியாம கல்யாணம் பண்ணேன், இல்லை என் தம்பி பண்ணா தப்புக்கு நான் என்ன பண்ணுவேன் இப்படி எதாவது ஒரு காரணம் சொல்லிருந்தா கூட நான் ஏத்துகிட்டு இருப்பேன். எனக்கு நல்ல வாழ்க்கை குடுக்க கல்யாணம் பண்ணீங்களா? எது நல்ல வாழ்க்கை. வாரா வாரம் நகை வாங்கித் தர்றதும், 5 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுறதுமா! அவ்ளோ மட்டமா தெரியுதா என்னைப் பார்த்தா! உங்க அனுதாப கல்யாணதுல காதல் இல்லையா? அவளுக்கு கண்ணீர் பெருகியது.

உண்மையாகவே அவர் தம்பி செய்த செயலுகுக்கு இவர் என்ன செய்வார் என்று சற்று மனம் பிரண்டவள் தான். ஆனால் திருமணமமும் அதற்கு இவன் கூறிய காரணமும் அவளை வெகுண்டு எழச் செய்தது.

அதற்குள் அவன் கோபமாகி,

இது எல்லாத்துக்கும் யார் காரணம்னு யோசிச்சு பாரு. அன்னிக்கு என் தம்பியை நீ பேசுனதுதால தான் அவன் மனசு உடைஞ்சு குடிச்சது, உங்க அக்கா இறந்தது எல்லாம். அவனை காதலிக்க என்ன பிரச்சனைனு எனக்குப் புரில. எல்லா ஓரு பெண்களும் எதிர் பாக்கிற நல்ல வாழ்க்கை தானே அது.

ஐயோ இவனுக்கு மண்டை குழம்பி விட்டதா என்று அவளுக்கு சந்தேகமாகி விட்டது.

உங்க பொண்டாட்டியா இருக்கிறவ கிட்ட போய் அன்னிக்கே உங்க தம்பி காதலை ஏன் ஏத்துக்கலைனு கேக்கறீங்க! என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அவளுக்கு கத்தக் கூட இப்போது தெம்பு இல்லை. சோர்ந்து விட்டாள்.

சரி. ஒரு வேளை உங்க தம்பி இப்ப உயிரோட இருந்து, இப்ப நமக்கு நடந்த மாதிரியே திருமணம் வரைக்கும் வந்திருந்தா, அவர் காதலிச்ச பெண் நான் தான்னு தெரிஞ்சிருக்கும். அப்ப என்ன பன்னிருப்பீங்க?

இந்த முறையாவது அவள் நம் காதல் தான் எனக்கு முக்கியம். உன்னை யாருக்காகவும் விட்டுத் தர மாட்டேன் என்பது போன்ற பதிலை எதிர்ப் பார்த்தாள்.

சற்று யோசித்த சிவனந்தன்,

அது எனக்கு எப்படினு தெரில. என் தம்பியும் ரொம்ப நல்லவன். அவனும் என்னை மாதிரியே நல்ல வாழ்க்கை வாழ வச்சிருப்பான்.

இப்படியும் ஒரு மனிதனா! இவனையா காதலித்தோம் என்று வெறுப்பாக ஆனது அவளுக்கு.

போதும். உங்க நல்ல வாழ்க்கை. வாழ்க்கைனா என்னென்னே தெரியாம நீங்க குடுக்கிறது தான் நல்ல வாழ்க்கைன்னு உளறிட்டு இருக்கீங்க.இந்த மாதிரி வாழுறதுக்கு பிச்சைக்காரனை கல்யாணம் பண்ணிருந்தா கூட சந்தோசமா இருந்திருப்பேன்.

அடி மனதில் எழுந்த வெறுப்பில் வெளி வந்து விழுந்தது வார்த்தைகள்.

ச்சை இவ எல்லா ஒரு பொண்ணா! இவளை எந்த இடத்தில் வச்சிருக்கோம். என்னைக் காட்டிலும் பிச்சைக்காரன் கூட சந்தோசமா வாழ்வேன்னு சொல்றா என்று கொதித்தது அவனுக்கு.

சில சமயம் நாம் கூறும் வார்த்தைகள் அடுத்தவர் மனதில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரிவது இல்லை. எப்போதும் நல்லவனாக இருக்க சிவனந்தன் என்ன சீரியல் ஹீரோவா.
அவன் வாயிலும் வந்தன அவர்கள் திருமண வாழ்வை முடித்து வைக்கும் சொற்கள்.

இவளோ பிரச்சனைக்கும் காரணம் நீ மட்டும் தான் சிவகர்ணிகா. உன்னால தான் என் தம்பி செத்தான். அதுனால உங்க அக்கா இறந்தாங்க. சொல்லப் போனா இவங்க ரெண்டு பேர் சாவுக்கும் காரணம் நீ தான். உன்னால இறந்து போனவங்க வாழ்க்கை மட்டும் இல்லாம, என் வாழ்க்கையும் சேர்ந்து நாசமா போச்சு. நீ இல்லனா இந்நேரம் மூணு பேர் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்.

என்ன தான் கோவத்தில் சண்டை இட்டாலும் உள்ளுற அவனைப் பிரியும் அளவிற்கு அவள் யோசிக்கவில்லை. ஆனால் அவனின் இந்தா வார்த்தைகள் இடியாய் அவளுள் இறங்கி அந்த இடி வெறுப்பு மழை பொழிந்து, அந்த மழை அவன் மேல் இருந்த காதல், அன்பு, பாசம், உறவு என அனைத்தையும் அடித்துச் சென்று அவள் மனதை வெட்ட வெளி ஆக்கியது. இப்போது அந்த மனதில் மழை பொழிந்ததிற்கான சுவடுகள் கூட இல்லாமல் வெறுமையாக இருந்தது.

அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள்,

நீங்க பேசுனது தப்புனு ஒரு காலத்துல உணருவீங்க மிஸ்டர். சிவனந்தன். காலம் உங்களுக்கு உணர்த்தும்.

திருக்குறள் போல் இரட்டை வரியில் கூறியவள் கண்ணீர் வழியும் கண்களோடு நடை பிணமாக அவன் வீட்டிலிருந்து வெளியேறினாள்.

தன் உயிரே வாசல் வழி செல்வது போல் அவனுக்குத் தோன்றினாலும், கோபம் அவன் கண்களை மறைத்து மூளையை மழுங்கச் செய்திருந்தது.

மறைமதியாய்(அமாவாசை ) இருந்த அவன் வாழ்வில் நிறைமதியாய் (பௌர்ணமி) வந்த அவளை தன் வாழ்க்கை மேகத்தில் தொலைத்து விட்டான். மீண்டும் கிடைக்குமா நிறைமதி!

ஆசை ஆசையை தொடங்கிய வாழ்க்கை இல்லாத இருவரால் முடிந்து விட்டது விதியா!

இவர்கள் சேர வேண்டும் என்ற விதி இருந்தால் எத்தனை வருடம் ஆனாலும் சேருவார்கள்.

சிவனந்தன் -சிவகர்ணிகா வாழ்க்கை இனி எதை நோக்கி பயணிக்கும். வாழ்க்கைப் பாதையில் அவர்கள் சேர்வார்களா? அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதல் உண்மை எனில் அந்தக் காதலே அவர்களை சேர்க்கும். இணைந்திருங்கள்
பாகம் -2 இல்.

மீண்டும் மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் பாகம் -2 இல் உங்களை சந்திக்கிறேன்.

இது வரை கொடுத்த ஆதரவிற்கு நன்றி வாசகர்களே!
 

Kalijana

Member
🥺🥺🥺❤️❤️💔💔
 

Attachments

  • MEME-20221017-061422.jpg
    MEME-20221017-061422.jpg
    242.3 KB · Views: 0
  • MEME-20221017-094306.jpg
    MEME-20221017-094306.jpg
    264.6 KB · Views: 0
  • MEME-20221017-094813.jpg
    MEME-20221017-094813.jpg
    287 KB · Views: 0
  • MEME-20221017-095750.jpg
    MEME-20221017-095750.jpg
    218.1 KB · Views: 0
  • MEME-20221017-065555.jpg
    MEME-20221017-065555.jpg
    259.1 KB · Views: 0
  • MEME-20221017-070025.jpg
    MEME-20221017-070025.jpg
    238.8 KB · Views: 0
  • MEME-20221017-063341.jpg
    MEME-20221017-063341.jpg
    178.3 KB · Views: 0
  • MEME-20221017-064110.jpg
    MEME-20221017-064110.jpg
    231.4 KB · Views: 0
  • MEME-20221017-064901.jpg
    MEME-20221017-064901.jpg
    203.2 KB · Views: 0
  • MEME-20221017-065320.jpg
    MEME-20221017-065320.jpg
    183.7 KB · Views: 0

Mathykarthy

Well-known member
Romba azhaga avangalukkulla cute ana love vanthuchu.. atha kalyanatha panni ippadi pirichu vittutinga sis..😭 rendu perume oruthara oruthar kayapaduthikittanga..💔 nandhan too much.. 😡😈
 

Padma rahavi

Moderator
Romba azhaga avangalukkulla cute ana love vanthuchu.. atha kalyanatha panni ippadi pirichu vittutinga sis..😭 rendu perume oruthara oruthar kayapaduthikittanga..💔 nandhan too much.. 😡😈
பார்ட் 2 ல அவனை வச்சி செஞ்சிரலாம் sis. உங்க ஆதரவு அதற்கும் தேவை
 
Top