எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள் - கதை திரி (மீண்டும்)

Status
Not open for further replies.
வணக்கம் நட்புக்களே,

தொழில் நுட்ப காரணத்தால் முந்தைய திரி நீங்கி விட்டது. மீண்டும் கதையின் பதிவுகளைப் பதிந்துள்ளேன். தடங்களுக்கு வருந்துகிறேன்.

அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள் கதையின் பதினொரு பதிவுகளையும் பதிந்துள்ளேன். வாசித்து மகிழுங்கள்.

கதையின் பதிவுகளைப் படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.
இதுவரை வாசித்த அன்பர்களுக்கு என் மனமார்ந்த அன்புகளும் நன்றிகளும்.

இது போல் என்றும் உங்களின் ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்.




உங்கள் கருத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி நான்.

Tata... மீண்டும் சந்திப்போம்..😊😊

அன்புடன்

டிவின் முவா
 
Last edited:
அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:01

அந்த நள்ளிரவு வேளையில் அதி வேக சாலையில் இரு சொகுசு மகிழுந்து சீறும் சிறுத்தைகளாய் பறந்து கொண்டிருந்தன.. மகிழுந்து உள்ளே எஸ்பிபியின் இன்னிசை சாரல்கள் அவருக்கே உரிய கம்பீரத்தில் பாடி கொண்டிருக்க..
மகிழுந்தின் வேகமோ இன்னும் காட்டாற்று போல் சீறியது..

"வாவ்.. இட்ஸ் எ பிளசண்ட் கால் ஃபர்ம் யூ பேப்ஸ்.. ஹவ் ஆர் யூ டார்லிங்?"

"ஐயம் குட் பேப்.. வாட்ஸ் யப் தேர்?"

"நத்திங் மச்.. ஸ்விட் ஹார்ட். எ ஹார்ட் கோர் ரேவ்.."

"என்ஜாய்.."

"ஹா..ஹா.. ஓகே பேபி.."

"யூவர் டீல் இஸ் டன்."

"தி அதர் ஃபார்மலிட்டீஸ் வில் பீ கம்பிளடட் பை டூமாரோ."

"ஓகே பேப். தென் அஸ் பர் ஆர் டீல், ஐ வில் மேக் த அரேன்ஜ்மேண்ட்ஸ்."

"ஸூயர்."

என சிரித்து கொண்டே இன்னும் சில மணித்துளிகள் பேசி கொண்டே சென்றவர்கள் சாலையில் வந்த யமனின் ஊர்த்தியை கவனிக்காது வேகமாக மகிழுந்தை செலுத்த அதுவோ தன் கட்டுபாட்டை இழந்து 'டம்' என பெரிய சத்தத்துடன் மோதி எல்லா விதமான அணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட செய்தது.

—---------

'கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்.' என்று எம்எஸ் சுப்புலட்சுமி குரலில் பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதம், அந்த அதிகாலை வேளையில்
அவ்வீட்டின் பூஜை அறை அருகினில் உள்ள சிடி ப்ளேயரின் (CD player) சத்தம் அவ்வீடு முழுவதும் கேட்காது போனாலும் அவ்விடம் எங்கும் பட்டு எதிரொலித்தது கொண்டு இருந்தது.

எழிலான பெண்ணவள் அகம் முழுக்க பிராத்தனைகளுடன் பூஜையறையில் விற்றிருக்கும் சுவாமி படங்களுக்கு ஆர்த்தியை காட்டி, சாம்பிராணி மனத்துடன் வெளியே வந்து அங்கும் இங்கும் சாம்பிராணி வாசனையை கைக்கொண்டு காண்பித்தவள்.. மீண்டும் பூஜை அறைக்குள் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு பிரார்த்தித்து தீர்க்கசுமங்கலியாய் என்றும் இருக்க வேண்டி தன் பொன் சரடில் சந்தனம் குங்குமத்தை வைற்று மீண்டும் ஒரு முறை தெய்வங்களை வணங்கி விட்டு வெளியே வந்தவள் நேரே சென்றது சமையல் அறையினுள்.

வீட்டின் மகாலக்ஷ்மி அவ்வீட்டின் அன்பிற்கு பாத்திரமான அகத்தின் அழகியான ஆராத்யா.

அன்றைய காலை உணவுகளை வேக-வேக வேகமாக அவர் அவர் சாப்பிடும் விதத்திற்கு தயார் செய்து கொண்டு இருந்த சமயம், "இனிய காலை வணக்கம் ஆருமா.. கொஞ்சம் காஃபி கிடைக்குமா இன்னிக்காவது ப்ளீஸ்.." என்று கொண்டே வந்தனர் அவளின் மாமனாரும்; அத்தையும்.

"அத்தை எத்தனை தடவை நீங்க கேட்பீங்க.. நானும் எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு இனி காஃபி கிடையாதுன்னு டாக்டர் சக்கரை ஏறி இருக்கு கொஞ்சம் இனிப்பு, காரம் எல்லாம் குறைச்சு சாப்பிட சொன்னா நீங்க என்னடான்னா காஃபின்ற பேருல திரும்பி காஃபி கேட்குறீங்க..

சக்கரைய குறைக்க நடைபயிற்சி போயிட்டு வந்ததை காஃபி குடிச்சி அதை ஒண்ணும் இல்லாம ஆக்க பாக்குறீங்களே.." என செல்லமாய் கடிந்து கொண்டே அவர்களுக்கான சத்துமாவு கஞ்சியை கொடுத்தாள்.

"அட நீ வேற, ஆரு மா.. உங்க அத்தை கிடக்குறா.. நீ தர சத்துமாவு கஞ்சியே நல்லா தான் இருக்கு.. அதை குடிச்சிட்டு மத்த வேலையை பார்க்க சும்மா சூப்பரா இருக்கு..
ஆமா, என்ன இன்னிக்கு ஸ்பெஷல் எனக்கு கொஞ்சம் பால்கொழுக்கட்டை செஞ்சுதாடா.." என்க,

"மாமா.." என்றவள் அவரை கண்டிப்பாய் பார்க்க,

அவரோ அசடு வழிய சிரித்து வைத்தார்.

"இப்போ நீங்க மட்டும் என்னவாம்.. அத்தையை சொல்லிட்டு பால் கொழுக்கட்டைக்கு என்னை தாஜா பண்றீங்களா.." என்க,

"ஹி..ஹி.. அப்படி இல்ல ஆரு மா.. சும்மா கேட்டேன்.." என்று அவர் ஒன்றுமறியாது போல் கூறிட.. அதை புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

"அதானே.. என்ன டா ஆளு இன்னிக்கு ரொம்ப வழியுறாரேன்னு பார்த்தேன்.. இதோ பால்கொழுக்கட்டைக்கு தானா.. உடம்பு புரா சக்கரையும் கொழுப்பு வச்சிக்கிட்டு பால்கொழுக்கட்டை வேணுமோ.." என அவர் மனைவி முறைக்க..

"அப்படி இல்லடி விசு குட்டி.. சும்மா தான் கேட்டேன்.. எனக்கு கிடைச்சா உனக்கு நான் தரமாட்டேன்னா.." என்று மென்மையாய் கூற,

"ஹான்..தருவீங்க..தருவீங்க.. எல்லாத்தையும் நீங்களே சாப்பிட்டுட்டு எனக்கு எங்க தர போறீங்க.." என இவ்வயதிலும் அவர் விசு குட்டியில் வெட்கம் மின்ன சினுங்க..

அவர்களின் சம்பாஷனையை அருகில் தன் காஃபியை குடித்துக் கொண்டே பார்த்திருந்தவள்,

"இரண்டு பேருக்குமே எந்த இனிப்பும் தர மாட்டேன். நீங்க இரண்டு பேரும் என்ன செஞ்சாலும்.. ஒழுங்கா போய் நல்ல பிள்ளையாய் குளிச்சிட்டு வாங்க.. உங்களுக்கு ராகி தோசையும் கெட்டி சட்னியும் தரேன்." என்று விட்டு அவர்கள் குடித்த கோப்பையும் தன்னோடதையும் எடுத்து கொண்டு உள்ளே செல்ல..

"ஆரு மா.." என அவர்கள் பாவமாய் அழைக்க சமையல் அறை வாசல் வரை சென்றிருந்தவள் கண்டிப்புடன் திரும்பி பார்க்க..

'இனி மீண்டும் கேட்டால் காலையிலையே திட்டி விடுவாள்' என்று "ஒண்ணுமில்லை" என கூறிக் கொண்டு தங்கள் அறை நோக்கி சென்று விட்டனர்.

"இவங்களை.." என செல்லமாய் ஏசி கொண்டு மீண்டும் தன் வேலையில் கவனமானாள்.

காலை ஏழு மணி போல் கண்விழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவ்வீட்டின் செல்ல மகன் ஆர்யதேவ். படுக்கையில் இருந்து கொண்டே தன் அருகே கை வைற்று தடவி பார்க்க அவன் மனதிற்கினியாள் அருகே இல்லாதது தெரிந்தது.

அமைதியாக படுத்திருந்தவன் கண்கள் திறந்து கடிகாரத்தை காண, நேரமோ 7:10 என்று காட்டியது.. அதை கண்டவன், பதறியடித்து எழுந்தான்.

"அச்சோ, இன்னிக்கு முக்கியமான ஒரு ஜியோ பாஸ் (Geo Pass) பண்ணணுமே.. இப்பவே மணி ஏழாகி லேட்டாகிடுச்சே.." என புலம்பி கொண்டே, வேகமாக குளியலறைக்குள் புக..

அதே நேரம் கீழே, "ஆரு காஃபி ப்ளீஸ்.." என வந்தாள் அவ்வீட்டின் மூத்த மருமகள் தான்யா.

"என்ன அக்கா, இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆக்கிட்டீங்க.. காஃபி கேட்க,"

"நீ வேற ஆரு, உங்க அத்தான் வர லேட்டாகிடுச்சு டா.. நம்ம கார்மெண்ட்ஸ் குட்டவுன்ல (Garments Godown) சாமான் வருது கூட இருந்து அதை சரி பார்த்துட்டு வந்துறேன்னு நேத்து நைட் ஃபோன்ல சொன்னாரு.. சரி வழக்கம் போல தான வந்துருவாருன்னு வெயிட் பண்ணா.. மனிஷன் இரண்டே முக்காக்கு வராரு.. நான் என்னத்த செய்ய.. அதான் தூங்க லேட்டாகி காலைலையும் லேட்டாகிடுச்சு.." என கொட்டாவி விட்டு கொண்டே சொன்னவளை இதமாக பார்த்தவள்..

"இன்னும் தூக்கம் முழுமை அடைல போல இருக்கு அக்கா.."

"ஆமான்டா.. இன்னும் கொஞ்சம் தூங்கனும் போல தான் இருக்கு.. ஆனா என்ன தூக்கம் வரது போய் உடம்பு வலி தான் வருது.. அதான் எழுந்திருச்சு வந்துட்டேன்.." என்க,

அவள் கையில் காஃபியை கொடுத்து கொண்டே, "கொஞ்சம் ஹாட் ஷவர் (Hot Shower) எடுங்க அக்கா.. உடம்பு வலி குறையும்.."

"அதான்டா.. காஃபி குடிச்சிட்டு போறேன்.."

"சரி அக்கா."

"இன்னிக்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட்?"(Breakfast)

"மாமா, அத்தை, அப்பதாக்கு எல்லாம் ராகி தோசையும் கெட்டி சட்ணியும். நமக்கு பொங்கல், வடை, சாம்பார் அது கூட சேர்த்து கொஞ்சம் குழி பணியாரமும் கார சட்னியும் அக்கா." என்க,

"சரி டா.. சாரி இவரு லேட்டா வந்ததுல உனக்கு என்னால உதவ முடியலை.."

"இதுல என்னக்கா இருக்கு.. நம்ம வீடு தானே.."

"ஆமா, நம்ம சின்னவ எங்கே?"

"அனிகா அக்கா இன்னும் ஹாஸ்பிட்டல்ல இருந்து வரல போலக்கா.. அவங்க கார் வெளில இல்லை.."

"நேத்து சாய்ங்காலம் போனவ இன்னும் வரலையா.. நைட் சிஃபட் (Night Shift) செய்ய வேணாம் சொன்னா காது கொடுத்து கேட்குறாளா.. தேவையில்லாம உடம்ப கெடுத்துக்குறா.." என தன் இரண்டாவது கொழுந்தியாளுக்காக வருத்தப்பட்டாள் மூத்தவள்.

அதை கண்டு சிறியவள் சிறிதே சத்தமாய் சிரிக்க,

"நீ ஏண்டி இப்படி சிரிக்குற.. நான் வருத்தப்படுறது உனக்கு சிரிப்பா இருக்கா?" என அவள் அதட்ட,

"அது எல்லாம் இல்லக்கா.. நீங்களும் இப்படி புலம்ப தான் செய்யிறீங்க அவங்களும் தன்னால முடிஞ்சளவுக்கு போகாம இருக்க தான் ட்ரை (Try) பண்றாங்க.."

"ஆனா எங்களுக்கு நீங்க தான் வந்து டிரிட்மெண்ட்(Treatment) பண்ணணும் சொல்ற நோயாளிகளை நான் என்ன செய்ய தெரிலன்னு அவங்க ஒரு பக்கம் புலம்புறாங்க.. அதான் உங்க இரண்டு பேர் புலம்பலை பார்த்து சிரிப்பு வந்துடுச்சு.."

"வரும்..வரும்.. ஏன் வராது.. ஆனா அது என்னமோ உண்மை தான்டி, பாவம் அவ.." என்றாள் வருத்தமாய்.

"மருத்துவம் சாதாரணமானதா அக்கா.. உயிரை காப்பத்துறது ஆச்சே.. அதான் ஓடுறாங்க.. இந்த வரம் எல்லோருக்கும் கிடைக்காதே.."

"நீ சொல்றதும் சரி தான். அதனால தான் அவளை கண்டிக்க கூட முடியறது இல்லை.. நம்மளால முடிஞ்சளவுக்கு அவ பேஷண்ட் (Patient)ஆகாம பார்த்துக்க வேண்டியது தான்." என கண்ணடித்து சொல்ல,

"இது வாஸ்த்துவமான பேச்சு.." என அவளும் சேர்ந்து சிரிக்க,

"என்ன இன்னும் உன்னோட சொந்த குயில் கூவல.. ஒரு வேளை காலையிலையே ஓடிட்டாரோ.." என தான்யா கேட்க,

அவள் பதில் கூறும் முன்னே, "தியா" என்றிருந்தான் அவளின் சொந்த குயிலானவன்.

அவன் குரலில், தான்யா அட்டகாசமாய் சிரித்து கொண்டே, "இதோ வந்திருச்சுல கூவல்.. போ..போ.. இனி உன்னை ஒரு, ஒரு மணி நேரத்துக்கு கையில பிடிக்க முடியாது.. நீ போய் அவரை கவனி.. நான் மத்ததை பார்த்துக்குறேன்."

"அக்கா.." என நாண குரலோடு அவனுக்கான பிளாக் காஃபி (Black Coffee) கலந்து கொண்டு மேலே படி ஏறினாள் ஆராத்யா.

பிளாக் காஃபியுடன் உள்ளே நுழைந்தவளை, தான் தயாரகி கொண்டே பார்த்தான்.

கல்யாணமான புதுதில் எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள் அவனவள். என்ன சற்றே வயதிற்குரிய மாற்றங்களுடன்.

"மாமா.. என்ன அவசரம் ஏன் இப்படி ஒரு குரல்.. என்னாச்சு.." என பல கேள்விகளுடன் அவனை நெருங்கி அவனிடம் காஃபி கோப்பையை கொடுத்து, அவன் செய்த வேலையை தான் செய்ய ஆரம்பித்தாள்.

தனக்கு வாசனை திரவியம் அடித்து கொண்டு இருப்பவளையே ஆசையாகவும் கண்டிப்பாகவும் பார்த்திருந்தான் ஆர்யதேவ்.

"ஏண்டி உனக்கு எத்தனை தடவை சொல்றது. நான் எழுந்திருக்கும் போது கூட இருன்னு.. அப்படி என்ன தான்டி உனக்கு வேலை இருக்கு.. என்ன கவனிக்கறதை விட.." என கோவம் கொள்ள,

"ஹப்பா நானும் இருபத்தி ஏழு வருஷமா பார்த்துட்டு தான் இருக்கேன்.. இந்த கேள்வி மட்டும் மாறுறதே இல்லை.."

"அதுக்கு இப்ப என்னடி என்றான்.." காஃபியை உறிஞ்சி கொண்டே,

"அது போல தான் என் பதிலும்.. மாறவே செய்யாதுன்னு சொல்றேன்."

"அது சரி. நீ எனக்கு முதல்ல பொண்டாட்டி டி என் தியா பேபி.. அப்புறம் தான் இந்த வீட்டு மருமக, அம்மா, கொழுந்தியா, அண்ணி, பேத்தி, பாட்டி எல்லாம்.. மருமக, அம்மா, கொழுந்தியா, அண்ணி, பேத்தி, பாட்டி கடமையை எல்லாம் மட்டும் சரியா செய்.. மத்த கடமைல கோட்டை விட்டுட்டு.." என பொறுமினான்.

"நான் என்ன மத்த கடமைல கோட்டைய விட்டுட்டேன்.. நேத்து முழு இராத்திரி கவனிச்சது பத்தாத துரைக்கு.." என அவனுக்கு ஏற்ற மனைவியாய் அவள் கேட்க,

அவனோ மென்னகை புரிந்து கொண்டே, "அது எல்லாம் போதாதுடி.. நீ எவ்வளோ கவனிச்சாலும் பத்தவே மாட்டேங்குது.." என அவள் இடையை இரு கைகளாளல் நெருக்கினான்.

"மாமா.. என்ன இது.. காலையிலையே.." என அவள் முகம் சிவந்து விலக பார்க்க,

அவளின் முக சிவப்பை பார்த்து கொண்டே அவளை விலக விடாது, கண்களை சட்டை நோக்கி காட்ட அவன் விருப்பம் அறிந்து தன் முதற் பிள்ளையை தயாராக்கினாள்.

அவனுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொண்டே, "மாமா இன்னிக்கு உங்க சீமந்த மக வரா.. அவ வரப்ப நீங்க இங்க இல்லைன்னா அவ்வளோ தான்.. அதனால என்ன வேலை இருந்தாலும் சீக்கிரம் முடிச்சிட்டு பத்திரமா வீட்டுக்கு வந்துருங்க.." என்றிட,

"அட ஆமாம்ல என் டார்லிங் வரால.. நான் கண்டிப்பா வந்துருவேன். டோன்ட் வரி தியா.." என்க,

அவளோ தன் மன்னவனின் மகள் மேல் உள்ள பாசம் புரிந்தாலும் தன்னை கொஞ்சல் அழைப்பு சொல்லாது மகளை சொல்வதை கண்டு அவனை அமைதியாக முறைத்து பார்க்க,

அவளின் திடீர் அமைதியில் என்ன என்று பார்த்தவன், அவளின் வதனத்தை கண்டு கம்பீரமாய் சிரித்தான்.

"போங்க மாமா.. நான் கீழ போறேன்.." என முறுக்கி கொண்டு செல்ல எத்தனிக்க,

அவள் கையை பிடித்த ஆர்யன், "அடியேய் அவ என் பொண்ணுடி.. பொண்ணு கூட சண்டைக்கு நிக்கிற.." என சிரிப்புடனே வினவ,

"அது எப்படி நீங்க அவளை டார்லிங் சொல்லலாம்.. நான் தானே உங்களுக்கு எல்லாம்.. நீங்க அவளை கொஞ்சுறீங்க.." என பொய்யாய் முறைக்க,

"சரிடி நான் அவளை கொஞ்சல.. நீ என்னை கவனி நான் அப்புறம் உன்னை கொஞ்சோ கொஞ்சு கொஞ்சுறேன்.." என அவள் காதோரம் மீசைமுடி உரச முத்தமிட்டு கொண்டு விஷமமாக சொல்ல..

"போங்க மாமா.. உங்களுக்கு வேற வேலையில்லை.." என்ற சினுங்கலுடன் கதவோரம் சென்றவள்.

புன்னகை புரிந்து கணவனை திரும்பி பார்க்க, அவனும் அதே புன்னகையுடன் 'என்ன' என்று புருவம் உயர்த்த,

"சாப்பிடலாம் வாங்க.. உங்களுக்கு பிடிச்ச குழி பணியாரமும் கார சட்னியும் தான் இன்னிக்கு செஞ்சேன்.." என்று விட்டு செல்ல..

"ம்ம்" என்றான்.

அவள் செல்வதை மென்மையாக பார்த்தவன் பின் தானும் முழுதாக தயாராகி கீழே உணவறைக்கு சென்றான்.

அவர்கள் வீட்டின் உணவறையோ மிக பெரியது ஒரு கூட்டு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்த கூடியளவு மிக பெரிது.

நேரம் செல்ல செல்ல அனைவரும் உணவருந்த வர தொடங்க; பெண்கள் பரிமாறிட, ஆண்கள் உணவருந்தி கொண்டே தங்கள் வேலைகள் பற்றி பேசி கொண்டு இருக்க, பெண்களோ வீட்டு ஆட்களின் பேச்சையும் அவர்களின் உணவினையும் கவனித்து கொண்டு தாங்களும் உணவருந்தி கொண்டு இருந்தனர்.

அழகிய குடும்பமாய் அழகிய நீரோடையாய் இருக்கும் இக்குடும்பத்தில் சலசலப்பு வருமா?




**********



அலர்:02

உணவு நேரம் பேச்சும் கவனமுமாய் கழிந்து கொண்டிருக்க,"என்ன ஆரி இன்னிக்கு ஜியோ பாஸ் பண்றதுக்கு ரெடியாகிட்டீயா" என தருண் கேட்க,

"ஹான் அண்ணா அது எல்லாம் ரெடி பண்ணியாச்சு.. என்ன ஜியோ பாஸ் பண்ண சட்டமன்றம் போக தான் கொஞ்சம் லேட்டாகிடுமோன்னு இருக்கு.."

"ஏன் டா.. பத்து மணிக்கு தானே.."

"ஆமா அண்ணா அதுக்கு முன்னே இன்னொரு முறை எல்லாம் சரியான்னு பார்க்கனும் அதான்.." என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவன் அலைபேசி அடித்தது,

அழைத்தது அவன் காரியதரிசியான அறிவழகன். அதை எடுத்து காதில் வைத்தவன்,"என்ன அறிவழகன் இப்போ திடீர்ன்னு கால் (call) பண்ணிருக்கீங்க.." என்க,

"சார்! இன்னிக்கு ஜியோ பாஸ் பண்ணும் போது நம்ம சட்டமன்ற உறுபின்னர் மாணிக்கம் உங்ககிட்ட சொன்ன கருத்தை சேர்க்கனுமாம்.. அப்ப தான் உங்களை ஜியோ பாஸ் பண்ண விடுவாங்கன்னு அவரோட பிரதிநிதிகள் சொல்றாங்க சார்." என்க,

அவன் பேச்சை அமைதியாக கேட்டவன், "இது அவரோட பிரதிநிதி தானே சொன்னது. அவர் இல்லைல.." என்றான்.

"ஆமாம் சார்."

"சரி அப்ப அவங்க கிட்ட சொல்லுங்க அவங்க சொல்ற மாதிரி நான் சேர்த்துடுறேன்." என அழுத்தமாய் கூற,

அவன் கூறிய விதத்தில் அந்த புறம் இருந்தவன் மெல்லிதாக புன்னகைத்து, "சரி சார்" என்று உற்சாகமாய் கூறிவிட்டு அலைபேசியை அணைத்திருந்தான்.

பேசி முடித்து மீண்டும் தன் உணவில் கவனமானவனை, "ஆரி" என்ற குரல் அவனை நிமிர வைத்தது.

அக்குரலின் பேதத்தை அறிந்தவன் தன் இளைய அண்ணன் அஜயை நோக்கி மயக்கும் புன்னகையை வீசினான்.

அவன் புன்னகையில் "ம்ஹூம்.." என்ற தலையசைப்புடன் தன் உணவை உண்ணான்.

" ஆரி அண்ணா.." என கத்தி கொண்டே உள்ளே நுழைந்தாள் அவ்வீட்டின் இளவரசி அபிவதனி.

"என்ன அபி.. ஏன் இப்படி அரக்க பறக்க கத்திக்கிட்டே வர.." என அவள் குரலில் என்னானது என்பது போல் பதட்டமாக வினவ,

"அது ஒண்ணுமில்ல அண்ணா என் மருமக அதான் உன் செல்ல பொண்ணு என் கூட பேசமாட்டாளாம். நான் அவ புருஷனை கெடுக்குறேனாம்.." என வருத்தம் மேலோங்க கூற,

அவர்களுக்கு இவ்வளோ தானா என்று இருந்தது."அதுக்கு ஏண்டி இப்படி காட்டு கத்திட்டு வர.. சும்மா இருக்க உங்க அண்ணன்களை பதற வைக்கிறதே வேலையா வச்சு இருக்க.." என தான்யா கடிந்து கொள்ள,

"அப்படி சொல்லுங்க அக்கா, நேத்து கூட இவ பண்ண அழிச்சாட்டியத்துல எனக்கு ஒரு நிமிஷம் பைத்தியமே பிடிச்சிடுச்சு.." என அப்போது தான் வீட்டிற்கு வந்த அனிகா கூற,

"அப்படி என்னடி ஆச்சு.. என்ன பண்ணா இவ.."

"அதை ஏன் கேட்குறீங்க அக்கா.. நேத்து நைட் சிஃபட் ரௌட்ண்ஸ் (Night Shift rounds) போயிட்டு வந்து ரூம்பல உட்கார்ந்து இருக்கும் போது ஃபோன் (phone) பண்ணா.. என்னடா இவ்வளோ லேட் நைட்ல நம்ம அபி ஃபோன் பண்றாளே என்னவோ ஏதோன்னு ஃபோன் எடுத்தா.. இவ எடுத்து ஹலோ கூட சொல்லாம.. அண்ணின்னு ஒரே அழுகை.. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு.."

"இங்கே வீட்டுல தான் யாருக்கோ ஏதோ ஆகிடுச்சுன்னு விஷயத்தை கேட்டா, இவ கதை கதையா சொல்றா எனக்கு முதல்ல ஒண்ணுமே புரில.. அப்புறம் கடைசியா சொன்னா பாருங்க ஒண்ணு அதுல எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும் அவ சொன்ன கதையெல்லாம் சீரியலில் வர ஹீரோவுக்கு விபத்துல வந்த பிரச்சினையாம்.. அதுக்கு என்ன சொல்யூஷன்னு (solution) கேட்குறா.."

"நான் என்ன டைரக்டரா (Director) அதுக்கு சொல்யூஷன் சொல்ல.. நான் ஒரு நியூரீயோலஜிஸ்ட்டு (Neurologist) எனக்கு எப்படி அதை பத்தி தெரியும் இவ என்கிட்ட இதெல்லாம் கேட்குறா.. என்னைய பார்த்தா எப்படி தெரியுதாம் இவளுக்கு.." என அவள் அங்கலாய்க்க,

மற்றவர்கள் அவள் கூறிய விஷயத்தில் சத்தமாக சிரித்து வைத்தனர்.

"அனி அக்கா, நீங்க இதை சும்மாவா விட போறீங்க இப்போ.. இப்படி பேசுனவளை சும்மா விடலாமா?" ஆரு கேட்க,

"அதானே அது எப்படி அத்தையை சும்மா விடலாம் மாம்.."

"ம்ம்..ஆரம்பிங்க.." என அங்கு கூடிய பிள்ளைகள் அனைவரும் ஒரு சேர குரல் கொடுக்க,

"அடேய் பாவிங்களா.. என்ன டா உங்க அத்தையை அடிக்க நீங்களே உங்கம்மாக்கும் சித்திக்கும் ரூட் (route) போட்டு கொடுப்பீங்க போல இருக்கு.." என பிள்ளைகளை பார்த்து அதட்டியவள்,

"தன் சின்ன அண்ணி ஆருவின் சிரிப்பைப் பார்த்தவள்.. இதுக்கு ஐடியா (idea) கொடுத்துட்டு இப்ப சிரிக்கவா செய்றீங்க.. உங்களை" என அவள் பொய்யாய் சண்டைக்கு போக,

அப்போதும் சிரிப்பு மாறாது சிரித்து கொண்டு இருந்தவளை அபி நெருங்க போக, "அங்க என்ன நாத்தனாரே சின்ன அண்ணி கூட சண்டை.. முதல்ல எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு நீங்க அங்க போங்க.." என அவளை விளையாட்டாய் அங்கிருக்கும் கரண்டியை எடுத்து கொண்டு துரத்தினாள் அனிகா.

அவர்களின் விளையாட்டைப் பார்த்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புன்னகைத்து கொண்டே உணவருந்தி முடித்து அனைவரும் சோஃபாவில் ஒன்று கூடினர்.

இவர்களின் விளையாட்டை பார்த்திருந்தவர்கள்.. இப்படியே விட்டால் இவர்கள் விளையாட்டு நீண்டு கொண்டே செல்லும் என நினைத்து அவ்வீட்டின் பெரிய மனிதராய், "போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வா ம்மா அனிகா.. இவ இங்கே தானே இருக்க போறா அப்பறமா விளையாடிக்கலாம் நேரம் ஆகுது பாரு டா.." என தேவேந்திரன் குரல் கொடுக்க,

"அப்பா, அது என்ன.. உங்க மருமகளுக்கு தான் கரிசனையா எனக்கு எல்லாம் கிடையாதா.. நானும் தான் சாப்பிடாம வந்தேன்.." என போலி ஊடலுக்கு தயாராக,

அவளை பார்த்து புன்னகைத்த, தேவேந்திரன் பேச வரும் முன், "யாரு சாப்பிடாம வந்தா.. நீ தானே.. யார்கிட்டடி பொய் சொல்ற அங்க மாப்பிளையை சமைக்க வச்சு காலை பத்து பூரி முழுங்கிட்டு வந்துட்டு.. நீ சாப்பிடலைன்னு சொல்றீயா.. இது உனக்கே ஓவரா தெரில.." என விசாலாட்சி கேட்டுருக்க,

அவள் எதுவும் கூறாது திருத்திருவென்று முழித்தாள். அவள் முழிப்பதை கண்டு அண்ணிகள், பிள்ளைகள் அனைவரும் சிரிக்க..

"வெற்றி" என்று பல்லை கடித்தாள் அவள்.

"ஆமா, இப்ப என்ன அதுக்கு என் புருஷன் தானே சமைச்சி கொடுத்தார்.. அதுல என்ன பிரச்சினை உங்களுக்கு.. இத்தனை நாள் நான் செய்தேன்.. இன்னிக்கு ஏதோ ஒரு நாள் அவர் செஞ்சதை பெருசா சொல்ல வந்துட்டாங்க.." என உதட்டை சுளிக்க,

அவள் உதட்டு சுளிப்பில் இன்னும் பலமான சிரிப்பலைகள் எழுந்தது. இவளை பற்றி தெரிந்ததுனால்,

பின்ன,காலையில் விரைவாய் எழும்ப சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டும் அவள் கணவனின் சமையலின் கை பக்குவத்துக்கு அடிமையாகி அது தான் காலையில் வேண்டும் என்பது போல் அவனை சமைக்க சொல்வது கல்யாணமான புதுதில் இருந்து இன்று வரை அது தொடர்கதையாகி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அவள் கணவனும் மனைவியின் ஆசைக்காக தன் அன்பின் வெளிபாடாய் இன்முகமாவே செய்து கொடுப்பான். அதற்கு இவளுக்கு சமைக்க தெரியாது என்பது எல்லாம் இல்லை மிக நன்றாகவே சமைப்பாள் என்ன காலை வேளை மட்டும் அம்மையார் சோம்பல் கரடியாய் வலம் வருவாள். அது தெரிந்ததால் தான் இந்த சிரிப்பலைகள்.

"சரி..சரி.. இப்ப என்ன சோம்பேறின்னு சொல்லி, நீங்க எல்லாம் என்ன பண்றீங்க.. நீங்க யாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போகலையா.." என்க,

"அது எல்லாம் நாங்க போயிக்கிறோம்.. நீ போய் மத்தியானம் சமையல் வேலையை பாரு.. இப்ப ஆரம்பிச்சா தான் என் நண்பன் மத்தியானம் வந்து சாப்பிட சரியா இருக்கும்.. போ..போ.." என ஆர்யன் கூற,

"ஆமா.. ஆமா.. பெரிய நண்பன் மேலே பாசம் தான்.. போடா.." என்க,

"அபி.." என்ற கண்டனம் விரைவாய் வந்தது ஆருவிடமிருந்து.

அந்த குரலில் திரும்பி பார்த்தவள், அம்முகத்தில் கண்டனத்தை கண்டவள், "ஹப்பா, அண்ணி நான் எதுவும் சொல்லலை உங்க புருஷனை போதுமா.." என்க,

மற்றவர்கள் அதை கேட்டு மென்னகை பூக்க, அவளோ.. 'அது' என்பது போல் பார்த்திருந்தாள்.

"சரி.. நான் கிளம்புறேன், நான் போய் சமைக்குற வேலையை பார்க்குறேன் அவருக்கும், கண்ணாக்கும் கொடுத்து விடனும்.." என்று விட்டு செல்ல முன்,

அவள் சின்ன அண்ணியிடம் வந்து, "ஹப்பா, உங்க புருஷனை சொன்னா எவ்வளோ கோவம் வருது.. வெள்ளையா இருக்குற இந்த மூக்கு அப்படியே சிவப்பா மாறிடுது.. இதனால தான் என் அண்ணன் உங்க கிட்ட விழுந்துட்டாரோ.." என அவள் மூக்கை பிடித்து ஆட்டி விட்டு ஓடி விட..

"அடிங்.." என அவளை துரத்துவது போல் முன் வர..

"அச்சோ, வந்தாங்க நான் அவ்வளோ தான்.. டாட்டா.. " என கத்திக் கொண்டே தன் வீடு நோக்கி ஓடி விட்டாள்.

அது ஒரே மதில் சுவற்றுக்குள் பல ஏக்கர்கள் வருமாறு சென்னையின் மத்தியில் வாங்கிய நிலமது. அவ்வீட்டின் வாரிசுகளின் வசதிக்கும் பிடித்ததிற்கும் ஏற்ப கட்டியமைத்து இருந்தனர். அதில் அபியின் வீடும் அந்த கலவை சுவற்றுக்குள் உள்ளே வரும். அவ்வீட்டை அவளின் பெற்றவர்கள் அவள் பங்கு என கொடுக்க..

அவளை மட்டும் தந்தால் போதும் என்று வெற்றி கூறிட, பெரியவர்கள் மறுக்க.. அதற்கு வெற்றியோ,'என் சொந்த உழைப்பில் உழைத்த பணத்தை வாங்கி கொண்டால் அவ்வீட்டை வாங்குவேன் இல்லையென்றால் தனக்கு வேண்டாம் என கடினமாய் கூறிட.

அவனின் சுயமரியாதையும், உணர்வுகளையும் புரிந்து கொண்ட பெரியவர்கள் அரை மனதாய் ஆமோதிக்க, பின் சந்தோஷமாய் தான் சேர்த்து வைற்ற பணத்தை தந்து அவ்வீட்டை வாங்கி தன் குடும்பத்துடன் குடியேறினான்.

அதன் பின், அவ்வீட்டின் ஆண் வாரிசுகள் அவர்களுக்கென இருந்த வீட்டை பாதி மாடி வீட்டு தோட்டங்களாய் மாற்றி மீதியை தங்கள் அந்தரங்க அலுவலகமாய் மாற்றி கொண்டனர்.

அந்த அளவிற்கு பிரம்மாண்டமும் வியக்கதக்கதாகவும் இருக்கும் அந்த குட்டி கூடியிருப்புகள். ஏனெனில் அனைத்தும் சதுரங்க வடிவில் உள்ளதால் ஒன்றொடு ஒன்று தொடர்பு இல்லாதது போல் வெளியில் இருப்பவர்களுக்கு காட்சியளிக்க, ஆனால் உள்ளிருப்பவர்களுக்கு மட்டும் ஒன்றாய் இருப்பது போல் வித்தியசமான அமைப்புடன் கட்டிட கலைகளை கையாண்டு இருப்பர்.

அவள் ஓடி மறைந்ததை பார்த்தவள் சிரித்துக் கொண்டே திரும்ப, அவள் கணவனோ மீசையை முறுக்கி புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அதில் இத்தனை வயதிலும் சிவந்தாள் அவனவளின் தியா.

"சரிங்கப்பா அப்ப நாங்களும் கிளம்புறோம். மணியாகிடுச்சு.." என அவர் அவர் வேலையை பார்க்க.. ஒவ்வொருவராய் கூறிவிட்டு கிளம்ப எத்தனிக்க,

"பசங்களா இன்னிக்கு என் பேரனும், பேத்திகளும், என்னோட பட்டுகுட்டிஸ்ஸூம் வராங்க.. அவங்களுக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்யனும் ஒரு சின்ன விஷேஷம் மாதிரி நம்ம குடும்பத்துக்குள்ளையே செய்யனும் அதனால நேரம்பற எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்க.." என அவ்வீட்டின் மூத்த முதியவர் அவர்களின் அப்பத்தா அனுராதா கூற,

"சரி.. அப்பத்தா, நாங்க வந்துடுறோம் உங்க பேர, பேத்திங்க வர ஜோர்ல நீங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.." என அவ்வீட்டின் இளம் பேரன் அரவிந்த் கூறினான்.

"சரிங்க சார்.." என்றார் அவரும் விளையாட்டாய்.

அனைவரும் புன்னகைத்து கொண்டே, "சரி..சரி.. அப்ப நாங்க எல்லாம் கிளம்புறோம்.." என்று அவ்வீட்டின் தலைச்சன் பிள்ளை தருண் கூறி விட்டு அனைவருக்கும் தலையசப்பு கொடுத்து சென்று விட, மற்றவர்களும் கிளம்பினர்.

சந்தோஷமும், சிரிப்புமாக அவர்களுக்கு விடை கொடுத்தனர் அவ்வீட்டின் பெண்கள்.

அழகிய கூட்டு குடும்பமாய் இவர்களின் குடும்பம் ராஜேந்திரன் - அனுராதா பெருத்த வாழையாய் நிற்க, அதனில் முளைத்த வாழையாய் அவர் மகன் தேவேந்திரன் - விசாலாட்சி.. அதனில் முளைத்த கன்றுகளாய் அவர்களின் மக்கள், தருண் தேவ் - தான்யா; அஜய் தேவ் - அனிகா; ஆர்ய தேவ் - ஆராத்யா; அபிவதனி - வெற்றிவேந்தன்.. அதனினும் வந்த கிளை கன்றுகளாய் அவர்கள் மக்கள் மற்றும் அவர்களின் மக்களும்.

இவ்வழகிய வாழையடி வாழையாக இருக்கும் வாழைத்தோட்டத்தில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை காலம் நகர நகர காண்போம்.

அலர் முகிழ்க்கும்.

****************












 
அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்
அலர்:03

மத்திய காலை நேரம் கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போல் பரபரப்பாக இயங்கி கொண்டே இருந்தது. பேருந்து வருவதும் செல்வதுமாக அதில் மக்கள் கூட்டம் அடிபிடி போட்டு ஏறுவதுமாக இருக்கும் பேருந்தில் ஒரு சிறிய மாற்றம் அன்றைய நாளில்.

அங்கே ஒரு இடத்தில் மட்டும் மக்கள் கூட்டம் - கூட்டமாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் என்னவென்று பார்த்தால் அங்கு இரு இளம் நபர்களின் சடலம்.

"சார்.. பாடிஸ்ஸை ஆம்புலன்ஸூல ஏத்தியாச்சு.. சம்மந்தபட்டவங்களுக்கும் இன்ஃபார்ம் பண்ணியாச்சு.. அந்த பசங்களோட ஃபோன்ல இருந்து நம்பர் எடுத்து.. இனி அடுத்து என்ன சார்?" என கான்ஸ்டபிள் கேட்க,

"அடுத்து என்ன ஏட்டு ப்ரோசிட் பண்ண வேண்டியது தான் இனி. யார் இவங்களை கொலை பண்ணது எதுக்காகன்னு.." என்று ஆய்வளார் கூற,

"சார், கொலை பண்ணது யாரா இருக்கும்.. இந்த கொலை ஏதோ ப்ளான் போட்டு செஞ்ச மாதிரி இருக்கு.."

"ப்ளான் போட்டு எல்லாம் இல்ல.. ப்ளானே தான். என்ன யாருன்னு தான் தெரில.. எதுக்காக தான்னு தெரில.. சரி அந்த இரண்டு பேரோட ஃபோன்னு, அவங்க கிட்ட இருந்த எல்லா பொருளையும் ஒண்ணு விடாம தேடி எடுக்க சொல்லிடுங்க.. எதுவும் மிஸ்ஸாக கூடாது.."

"சரி சார். நான் எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்து கலக்ட் (collect) பண்ணிடுறேன்.." என்க,

"ம்ம்.. பார்த்துகோங்க மத்தது எல்லாம் முடிச்சிட்டு ஸ்டேஷன் வந்துருங்க.." என கூறி சென்று விட்டான் ஆய்வாளரான பிரகாஷ்.

அவன் சென்ற பிறகு கான்ஸ்டபிள் பழனியும் அனைத்தையும் சரி பார்க்க சென்று விட்டார்.

*************

கோயம்பேடு காவல் நிலையத்தில், "ஐயா என் பையன் எந்த தப்பு செய்யலங்க.. எங்களுக்குன்னு யாரும் எதிரியும் கிடையாதுங்க நாங்களே தினகுலிக்கு மாறடிக்கிற குடும்பங்க.. நீங்க என்ன என்னமோ சொல்றீங்க எனக்கு ஒண்ணும் புரியலையே சாமி.." என இறந்த இளைஞனின் தந்தை கதறிட,

அவரை நிதானப்படுத்த தண்ணீர் கொடுத்த பிரகாஷ்.. அவர் நிதானமான உடன்,"ஐயா உங்க பையன் தப்பு பண்ணலைன்னு நீங்க தான் சொல்றீங்க.. ஆனா உங்க பையனோட ஃபோனை பார்க்கும் போது அது சொல்லலையே ஐயா.."

"உங்க பையன் சண்முகம் ஒரு பொண்ண காதலிச்சிருக்கான்.. அதுக்கான ஆதாரம் அவன் ஃபோன்ல கிடைச்சுது.. அவன் காதலிச்சு அந்த பொண்ண கூட்டிட்டு ஓட பார்த்து இருக்கான், அதை அந்த பொண்ணோட சமூகத்தை சார்ந்தவங்க, தாங்க முடியாம அவனையும் அந்த பொண்ணையும் கொண்ணுட்டு போயிட்டாங்கன்னு தான் எங்களுக்கு விசாரனையில தெரிஞ்சிருக்கு.. அவங்களை கைது செய்ய போனா கொலை பண்ணவங்க தப்பிச்சிட்டாங்க.. அதனால அவங்கள கைது செய்ய தேடிட்டு இருக்கோம்.."

"இப்போ நீங்க உங்க பையனோட பாடியை வாங்கிட்டு போக தான் உங்களை வர சொன்னோம்." என்க,

"ஐயா, இந்த ஜாதி வெறில இருக்குறவங்களை ஒண்ணும் செய்ய முடியாதா.. எனக்கு இருந்த ஒரே மகனை கொண்ணு போட்டுட்டாங்களே.." என அவர் மீண்டும் கண்கலங்கிட,

"இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கே தெரிலைங்க ஐயா.. இது எல்லாம் அவங்க அவங்களா பார்த்து புரிஞ்சிக்க வேண்டியது.."

"ஏன்னா பொண்ணோட பெத்தவங்க போய் இருக்குறது பெரிய இடம்.. நாங்க எல்லாம் அங்க கை வச்சா எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லிடுவாங்க.. அதுக்கு தக்க ஆதாரம் எல்லாம் வேணும்.. அது இல்லாம ஒண்ணும் பண்ண முடியாது.. அப்படி ஏதாவது செஞ்சோம்ன்னா எங்க வேலைக்கு உலை வச்சிடுவாங்க.. ஏன்னா நாங்களும் வயித்து பொழப்பு காரணுங்க தானே.." என அவன் வாழ்வின் நிதர்சனத்தை கூற,

அவர் சொன்னதை கேட்டு யார் என்று புரிந்து கொண்டு எதுவும் கூறாது ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர். பின், "சரிங்க ஐயா.. எங்க தலையெழுத்து அவ்வளவு தான் நினைச்சுக்குறேங்க.. என் மகன கொடுத்துடுங்க, நான் அவனுக்கு கடைசியா செய்றதை செஞ்சிட்டு ஊரப் பார்த்து போறேங்க.." என கூறிட,

பின், வேலைகள் மட மடவென்று நடந்து அந்த இளைஞனின் சடலத்தை அவர் பெற்றவரிடம் ஒப்படைத்து முடித்து விட்டு அடுத்த பணியை பார்க்க சென்றனர் அக்காவலாளிகள்.

*************

"என்ன டா மாரி, இப்ப சந்தோஷமா உனக்கு.. நம்ம ஜாதிகாரன் நீ உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்.." என வெள்ளை வேட்டியில் மிடுக்காக அமர்ந்திருந்த ராஜசேகர் வினவ,

"ரொம்ப நன்றிங்க ஐயா, எனக்கு என் பொண்ணு உசுரோட.. நம்ம ஜாதி தாங்க முக்கியம் அதான் தயங்காம உங்க கிட்ட வந்து விஷயத்தை சொல்லிட்டேங்க.. இப்ப தாங்க ஐயா நிம்மதியா இருக்கு.. நன்றிங்க ஐயா.." என தான் ஒரு எம்மாதிரியான ஜாதி வெறியன் என அவர் பேச்சிலே காட்ட,

"சரிலே..சரி.. போ..போ.. போய் சோலிய பாரு.."

"டேய் செல்வா.. இன்னிக்கு ஏதோ அந்த ஆர்ய தேவ் ஜியோ பாஸ் (Geo Pass) பண்ண போறானாமே சட்டமன்ற கூட்ட தொடருல.. அது என்னன்னு போய் பார்க்கனும் போயி வண்டிய எடுக்க சொல்லு.." என ஏவ,

"சரிங்க ஐயா.." என பவ்யமாக நகர்ந்தான் அவரின் செயலாளன்.

'எனக்கு கிடைக்க வேண்டிய பதவி இது.. அந்த ஆர்ய தேவ் ஏதோ நல்லது செஞ்சிட்டதா அந்த ஆளுக்கு தூக்கி கொடுத்துட்டாங்க இந்த பதவியை.. எல்லா என் நேரம்.. கண்டவங்க முன்னாடி எல்லாம் கைக்கட்டி நிக்க வேண்டியது இருக்கு.. தொகுதில நின்னு எலக்ஷன்ல (Election) ஜெயிச்சு பதவிக்கு வர நினைச்சா.. இந்த முதலைமச்ச நாயி, நம்மள சைடுல தள்ளிட்டு எதுவும் செய்யாமையே சிறப்பு முறைல கௌரவ பதவின்னு பேர்ல வேளாண் துறை அமைச்சர் பதவிய அவனுக்கு கொடுத்துட்டான்.. இதுல அடுத்து வந்த ஒரு எலக்ஷன்ல பேருக்குன்னு ஒரு தொகுதில நின்னு இவனும் தனக்கு தந்த பதவியை தக்க வச்சிக்கிட்டு இன்ன வரைக்கும் நல்லவனா இருந்து எனக்கு ஆட்டம் காட்டிட்டு இருக்கான்..'

'எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமையா போயிடும்.. இவன துடிக்க வைக்க.. கிடைக்கட்டும் நல்லா வகையா செஞ்சு விடுறேன்.' என மனதில் கருவிக் கொண்டே சட்டமன்ற கூட்டத் தொடரை பார்க்க சென்றான் அந்த ஜாதி வெறி பிடித்த நல்மனிதன் பெயரில் நடமாடும் சட்டமன்ற உறுப்பினரான ராஜசேகர்.

************

முன் மாலை நேரமது பெண்கள் அனைவரும் ஓய்வாய் அமர்ந்து, பேசி கொண்டு இருக்க, அந்நேரம், "அம்மா, பாட்டி, அத்தை, பெரியம்மாஸ்.. " என வீடே அலற கத்திக் கொண்டு வந்தார்கள் அவ்வீட்டின் வானரங்களாகிய இளம் பிள்ளைகளும் வளர்ந்த பிள்ளைகளும்.

அவர்களின் கத்தலில் அரண்ட பெண்கள் பின் தலையில் அடிக்காத குறையாக "ஷப்பா இவ்வளோ நேரம் அமைதியா இருந்த வீட்டை வந்த உடனே சந்தை கடையாக்குறாங்களே, சரியான வானரங்கள்.. இவங்களை என்ன தான் செய்றது.." என தான்யா புலம்பிட,

"அப்படி என்ன அவங்க செஞ்சிட்டாங்கடிம்மா.. சந்தோஷத்துல வரவங்களை இப்படியா சொல்லுவ.. என சண்டைக்கு தயாரானார் அனுராதா அப்பத்தா.."

"ஹய்யோ அப்பத்தா நான் எங்க அப்படி சொன்னேன்.. இவங்க வரது ஊருக்கே தெரியனுமாக்கும்.. அமைதியா தான் வந்தா என்ன? கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டே வர வேண்டியது.." என வீட்டின் அமைதி கலைந்த துக்கத்தில் பொறிந்து தள்ளினார் தான்யா..

"ஆமாம்டி.. ஆமாம்.. இருந்தா அமைதிய குலைக்குறன்னு சொல்றது.. அவங்க இல்லைன்னா வீடு வீடாவே இல்லைன்னு சொல்றது.." என நொடித்தார் அப்பத்தா..

அப்பத்தாவின் நொடிப்பில்,"அப்படி சொல்லுங்க அனு செல்லம்.. சும்மா எங்களையே குறை சொல்றது.." என வம்பிழுத்தாள் அவரின் செல்ல பேராண்டியின் செல்ல மகள் ஆதி..

"அதானே.. பார்த்தேன் வந்த உடனேயே உன் வேலையை ஆரம்பிச்சுட்டல.." என தான்யா போலியாய் முறைக்க,

"ஆமாம்..ஆமாம்.. நாங்க வந்த உடனே ஆரம்பிச்சிட்டோம்.. இவங்க ஆரம்பிக்கவே மாட்டங்காளக்கும்.. எங்களை வானரம்ன்னு சொல்லிட்டு முறைப்பை பாரு முறைப்ப.." என அவளும் தன் பங்குக்கு முறைக்க,

அவளின் சிறு பிள்ளைத் தனமான முறைப்பில் வாய்விட்டு சிரித்தவள்.. "சரி டா.. சரி.. நான் உன் தனு பெரியம்மா தானே.. சாரி.." என சமாதானமாக,

அவளோ இது எல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போல் முகத்தை தூக்கி கொள்ள, அவள் முக திருப்புதலில் மெல்ல புன்னகைத்தவள் அவள் அருகே சென்று, முகவாய் பிடித்து.."எப்படி இருக்க ஆதி குட்டி.. பிராயணம் எல்லாம் நல்லா இருந்துச்சா.. " என வாஞ்சையாக கேட்க,

தன் தனும்மா வாஞ்சையில் உருகியவள், தன் போலி ஊடலை கைவிட்டவள்.."அது எல்லாம் சூப்பரா இருந்துச்சு தனு மா.. செம்மைய்யா என்ஜாய் பண்ணோம்.. என்ன நீங்க, அம்மா, அப்பாஸ், பாட்டிஸ், தாத்தா, அத்தை, அண்ணாஸ் தான் மிஸ் பண்ணிட்டீங்க.. நீங்க எல்லாம் வந்துருந்தா இன்னும் செம்ம ஜாலியா இருந்து இருக்கும்." என ஆரவாரமாய் கூறினாள் அவர்கள் அனைவரின் மனம்கவர்ந்த இளவரசி ஆதினி.

"ஆமாம் பெரியம்மா.. நம்ம ஆதி சொல்றது போல நீங்க எல்லாரும் வந்திருந்தா இன்னும் அருமையா இருந்து இருக்கும்.." என அனிகாவின் மூத்த மருமகள் ஆரோஹி கூறிட,

"எங்க டா.. நாங்க வரது, நாங்க வரணும்ன்னு நினைச்சா மட்டும் போதுமா உங்க அப்பாக்களும், உங்க வீட்டுகாரர்களும், அண்ணன், தம்பிகளும், அத்தான்களும் நினைக்க வேண்டாமா.. அவங்க என்னமோ அப்பதான் தலைபோற வேலை இருக்குறது போல எங்காளால எல்லாம் வர முடியாதுன்னு சொல்றாங்க.. இங்க அவங்களை தனியா விட்டுட்டு எங்களுக்கு வர கஷ்ட்டமா இருக்கு.." என இருவரின் வருத்ததிற்கும் ஆதங்கமாய் பதில் கூறிட,

"அது என்னமோ உண்மை தான் அக்கா.." என்றாள் அனிகா.

"அனிம்மா.. இன்னிக்கு நீங்க ஹாஸ்பிட்டல் போகலையா.." என ஆச்சரியமாய் கேட்டாள் அவரின் இளைய மருமகள் அவந்திகா.

"இல்லடா அவி மா.. நீங்க எல்லாரும் டிரிப் (Trip) முடிச்சிட்டு வரிங்களே.. எப்படி போவேன்.." என புருவம் உயர்த்திட,

அவர் பாசத்தில் தன் அனிம்மாவை கட்டிக் கொண்டாள் அவளின் அன்பான மருமகள்.

"பாத்தி.. இதோ பாருங்க நாங்க என்ன எல்லாம் வாங்கி வந்தோம்.." என அவர்களின் கவனத்தை திசை திருப்பினர் அவர்களின் சிறு பேரன்களும் பேத்திகளும்..

அதை கண்டவர்கள், "அச்சோ என் குட்டி.. எனக்காக என்ன வாங்கி வந்தாங்க?" என விசலாட்சி வர்ஷினியையும் மித்ராவையும் அருகிலும் மடியிலும் உட்கார வைத்து கொஞ்சி கேட்க,

அவர்கள் கிளுக்கி சிரித்து கொண்டே தாங்கள் வாங்கி வந்ததை தங்கள் பெரிய பாட்டியிடம் காண்பிக்க ஆரம்பித்தனர்.

இவர்கள் அனைவரின் இனிய சம்பாஷனைகளையும் பேச்சையும் கவனித்து கொண்டு இருந்த ஆராத்யா மணியை பார்த்தவள் இவர்கள் வந்து இரண்டு மணி நேரம் கடந்திருந்ததை உணர்ந்து,

"சரி..சரி.. பேசினது போதும் இப்போ போய் எல்லாரும் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுட்டு அப்புறமா பொறுமையா வந்து பேசுங்க.. யாரும் எங்கேயும் போக மாட்டாங்க.." என அன்னையாய் அனைவருக்கும் கூறிட,

"ம்மா.." என சினுங்கினாள் ஆதி..

அவள் சினுங்க மற்றவர்களும் அதே போல் கோரஸ் பாட..

அதை கண்டவள், கண்டிப்பாய்.."அது எல்லாம் கிடையாது.. மணி என்னாகுது.. நீங்க வந்து இரண்டு மணி நேரமாச்சு.. இன்னும் ஒரு வாய் காஃபி கூட குடிக்கலை.. நீங்க ஃபிரஷாகிட்டு வந்தீங்கன்னா சாப்பிட்டுட்டு சாவதானமா பேசலாம்ல.." என கூறிட,

அவர்கள் பாவமாய் பார்க்க,

"ம்ஹூம்.." என மறுத்தாள் அவள்.

அவள் மறுத்தலில், முகம் சுணங்கியவர்களை கண்ட அப்பத்தா, "அம்மா சொல்றது சரி தானே டா.. குளிச்சிட்டுட்டு, சாப்பிட்டு பேசலாம்.. நீங்க எல்லாம் போங்க.." என பரிவாய் கூறிட..

"சரி.." என்று அனைவரும் எழுந்து தங்கள் அறைக்குள் சென்றார்கள்.

"ஹப்பா..போய் குளிச்சு, சாப்பிட்டுட்டு வந்து பேசுங்கன்னு சொன்னா.. முகத்தை சுணக்குறதை பாரு.." என செல்லமாய் ஏசியவள்..

அவர்கள் சென்றவுடன் தங்கள் வீட்டு வேலையாளை அழைத்து அவர்கள் சாமான்களை அவர் அவர் அறைகளில் கொண்டு போய் வைத்து விட்டு வருமாறு பணித்து விட்டு தங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த பலகாரங்களை தன் அண்ணிகளுடனும், அத்தை, அப்பத்தாவுடனும் செய்ய தொடங்கினாள்.


ஆரவாரம் மிக்க குடும்பத்தின் இனிமையை ஒருவனை வைற்று குலைக்க வேண்டும் எண்ணி ஒருவன் அலைகிறான் என்று தெரிந்தால் இந்த ஆரவாரம் இப்பெண்களிடத்தில் நிலைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.



***************
அலர்:04

"ம்மா, எங்கே இருக்கீங்க? எல்லோரும் ஆளை காணோம்.." என யதுநந்தினி கேட்டு கொண்டே வர..

அபிவதனியோ,"இங்கே தோட்டத்து வராண்டால இருக்கோம் யது. இங்கே வா.." என,

அவர் குரல் வந்த திசை நோக்கி சென்று அவர்கள் அருகில் பொத்தென்று அமர்ந்தாள்.

"ஏன்டி நிதானமா உட்காராம இப்படி பொத்துன்னு உட்கார..அடிகிடி பட்டுற போது." என வருணிகா கூறிட,

"அட போங்க அக்கா, நானே டையர்ட் ஆகி வந்து உட்கார்ந்திருக்கேன்.. நீங்க வேற இப்படி உட்காராத அப்படி உட்காராதன்னு போர் (Bore) பண்ணிக்கிட்டு.."

"அது சரி. சரி இந்தா உனக்கு மாசலா வேர்கடலை." என அவள் கையில் ஒரு கப்பை திணிக்க,

"ஹை.. சூப்பர். அக்கான்னா அக்கா தான்." என்று செல்லம் கொஞ்சினாள்.

அதை மற்றவர்கள் புன்னகையோடு பார்த்திருக்க..

"ஆமா, எங்க மத்தவங்க எல்லோரும் குளிச்சிட்டு வரேன்னு போனாங்க.. தூங்கிட்டாங்களா.." என வைஷாலி வினவ,

"அது எல்லாம் இல்லை அக்கா.. இங்க பசங்களை குளிபாட்டி ரெடி பண்ணிட்டு நாங்களும் ரெடியாகிட்டு வர லேட்டாகிடுச்சு.. அதுக்குள்ள கலாய்க்க ரெடி ஆகிடுவீங்களே.." என ஆரோஹி கூறி கொண்டே தன் பிள்ளைகளோட வர..

"சரி..சரி.. நீ உன் பங்குக்கு ஆரம்பிக்காத.. வந்து ஸ்னாக்ஸ் சாப்பிடு.." என்றாள் அனிகா.

"ம்ம்.. அது அந்த பயம் இருக்கட்டும்." என போலியாக மிரட்ட..

"ஹான்.. சரி தான்." என்றார் அனிகா.

அனைவரும் ஒரு வழியாக தயாராகி கீழே வந்து விட அனைவரும் அவர்கள் விரும்பும் மாலை சிற்றுண்டிகளை எடுத்து கொண்டு மீண்டும் கதை பேச தொடங்கி விட்டனர்.

***********

நேரம் செல்ல செல்ல, வெளியில் சென்ற ஆண்களும் வீட்டுக்கு ஒன்று போல் வர..

"என்ன டா இது வீடு ரொம்ப அமைதியா இருக்கு.." என அமர் தன் தம்பியிடம் கேட்டு கொண்டே வர,

"அதான் எனக்கும் தெரியலை அண்ணா.. எல்லாரும் எங்க போனாங்க.." அவனும் யோசித்து கொண்டே தன் அண்ணணிடம் கூற,

"அட என்ன டா நீ.. நான் உன்கிட்ட கேட்டா நீ என்கிட்டையே திரும்பி கேட்குற.." என அவன் முறைக்க,

"சரி..சரி அண்ணா முறைக்காத.." என சமாதானத்துக்கு வர..

இன்னும் யோசனையாகவே சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே முன் செல்ல, திடீரென்று கீழே எதுவோ ஒன்று விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்ப..

அவர்கள் தந்தை தான், தான் கொண்டு வந்த பையை கீழே தவற விட்டார்.

"அப்பா.. என்னாச்சு? எதுவும் ஆகலைல.." என மகன்கள் பதறிட,

"எனக்கு எதுவும் ஆகலை.. நம்ம ஊர் மாம்பழம் தெருவோரம் வித்துட்டு இருந்தான் அதை பார்த்துட்டு வீட்டுக்கு வாங்கிவிட்டு வந்தேன் அந்த பை தான் கீழே விழுந்துடுச்சு.. ஆமா என்ன டா வீடு இவ்வளோ அமைதியா இருக்கு.. எப்பவும் உங்க அம்மாவோ இல்ல எங்க அம்மாவோ, இல்ல உங்க அத்தையோ அடிபிடி போட்டு சீரியல் பார்த்துட்டு இருப்பாங்க.. சமையல் அறையில ஒரு பக்கம் டொங்கு, டொங்குன்னு ஆராத்யாவும், தான்யா அண்ணியும் எதையோ இடிச்சிட்டே இருப்பாங்க.. இன்னிக்கு என்ன ஒரு சத்தத்தையும் காணோம்.."

"எல்லாரும் தூங்கிட்டாங்களா இல்ல என் பொண்டாட்டி எல்லோருக்கும் ஜூஸ் செஞ்சி தந்து மயக்க மருந்து ஏதும் கொடுத்துட்டாளா.. அவ சமைச்சதை சாப்பிட்டாலே தூக்கம் தூக்கமா வருதுன்னு எங்க அம்மா சொல்வாங்கேள.. அது இப்போ உண்மையாகிடுச்சோ..

"அப்பா, இது மட்டும் அம்மாக்கு தெரியட்டும்.. அப்புறம் தெரியும் மயக்க மருந்து அவங்களுக்கா உங்களுக்கான்னு.." என அரவிந்த் கேலி பேச,

"நீ ஏன் டா சும்மா சொன்னதுக்கு அவகிட்ட என்னைய கோர்த்து விட பாக்குற.. நான் உன் அப்பா டா.." என பாவமாய் கூற,

"அது எல்லாம் அப்படி கிடையாது.. கோர்த்து விடுறதுன்னு முடிவு பண்ணிட்டா அப்பாவாவது, தாத்தாவாவது.." வம்பிழுக்க,

"என்ன டா இது வீடெல்லாம் அமைதியின் மறு இடமா இருக்கு.. நம்ம வீடு தானா இது.." என கேட்டுக் கொண்டே வந்தனர் மற்ற ஆறு பேரும்…

"இது நம்ம வீடு தான் சித்தப்பா.. ஆனா என்ன விஷயம் தான் தெரில.. இன்னிக்கு ஏன் இவ்வளோ அமைதின்னு.." என அமர் கூறிட,

"ம்ம்.. அப்படி எங்க போனாங்க எல்லாம் ஒரு தகவலும் இல்லை.." என வெற்றி வேந்தன் யோசனையாக..

"அப்படி எங்கேயும் போய் இருக்க மாட்டாங்க மாப்பிளை இங்க தான் எங்கேயாவது இருப்பாங்க.." அஜய் கூற,

"அதுவும் சரி தான் மாமா. வெளில போயிருந்தா என் பொண்டாட்டி காலையிலையே என் கார்ட்டை பிடுங்கி இருப்பாளே.."

"சரி நம்ம ஃபிரஷாகிட்டே போய் பார்க்கலாம்.." என தருண் முடித்து விட..

அதை ஆமோதித்தவர்கள், அவரவர் அறைகளுக்கு சென்று ஃபிரஷாகி கீழே வர..

தோட்டத்து வராண்டாவில் இருந்து சிரிபொலி சத்தங்கள் கேட்க, அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு அங்கே சென்றனர்.

இவர்கள் வருகையை கவனியாது பெண்கள் தங்கள் பாட்டுக்கு பேசி கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர்.

"அதில், அட ஆமா அம்மா.. உங்களுக்கு தெரியாது உங்க மகன் ஃபோன் போட்டு - போட்டு டிரிப்லையும் சரியா தொல்லை பண்ணினார்.. கேட்டா உங்க பாதுகாப்பு தெரிஞ்சிக்க தான் ஃபோன் போட்டேன்.. அப்படியே மித்ரா கூடவும் பேச தான் போட்டேன்னு ஒரே ஜவ்வா பேசுறார்."

"பொண்டாட்டி வெளில போயிருக்காளே.. அவகிட்ட கொஞ்சம் பாசமா, காதலா பேசுவோம்ன்னு பேசுறாரா.. அப்படி எதுவும் இல்லாம சரியான மில்லிட்டரி ஆஃபிசர் மாதிரி பேசுறார்.."

"என்ன பண்ற, சாப்பிட்டீயா, எங்க இருக்கீங்க.. மித்ரா என்ன பண்றா.. பாதுகாப்பா இருங்க ஒண்ணா இருங்க தனித்தனியா போகாதீங்க, ஏதாவது பிரச்சினை வந்தது அவ்வளவு தான் பார்த்துக்க.. பெரியவளா பொறுப்பா எல்லாரையும் பார்த்துக்க.. சரி மித்ரா கிட்ட கொடு.."

"இவ்வளோ தான் அவர் பேச்சே.. வேற எதுவும் இருக்காது.. ஏன் எப்படி இருக்கன்னு கூட மனிஷன் கேட்டது இல்ல.. சரியான ரோபோ அம்மா உங்க புள்ள.." என வைஷாலி நோடிக்க,

அதை கேட்டு கொண்டிருந்தவனுக்கு கோவம் பொத்து கொண்டு வர, "ஆமா..ஆமா நான் சரியான மில்லிட்டரி ஆஃபிஸர் தான், ரோபோ தான் அப்புறம் எப்படி மேடம் என்னைய கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்க.." என நக்கலாய் வினவ,

"அட அம்மா, என்ன திடீர்ன்னு உங்க பையன் குரல் மாதிரி இருக்கு.."

"என் பையன் குரல் மாதிரி இல்ல.. என் பையனே தான் பேசுறான். கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருடியம்மா.."

"என்னாது.. அவரா.." என திடுக்கிட்டு திரும்ப,

அங்கே தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நின்று பல்லை கடித்து கொண்டு கைக்கட்டி நின்றிருந்தான் அவள் கணவன் வைபவ்.

"வைஷூ அக்கா.. இன்னிக்கு உங்களுக்கு சங்கு தான் போல.." என வருணிகா அவள் காதை கடிக்க,

அவள் பேந்த பேந்த முழித்து.."கொஞ்சம் சும்மா இருடி.. அந்த ஆளு என்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிருவாரு போல.." என பயம் கொள்ள,

அதற்குள் அவர்களின் செல்ல மகள் மற்றும் பிற பிள்ளைகள் அப்பா, மாமா, பெரியப்பா, தாத்தா.. என ஓடி வந்து அவர்கள் கால்களை ஆசையாய் கட்டிக் கொள்ள, அதில் தன் கவனம் சிதறிய வைபவ் குட்டிஸ் என அவர்கள் உயரத்திற்கு ஏற்ப குணிந்து நின்றவர்களை அணைத்து கொண்டனர்.

"மித்து எப்படி இருக்கீங்க செல்லம்.. அப்பாவ மிஸ் பண்ணீங்களா?" என மகளிடம் பரிவாய் கேட்க,

"ரொம்ப மிஸ் பண்ணேன் ப்பா.. மிஸ் யூ அண்ட் லவ் யூ.."

"மிஸ் யூ அண்டு லவ் யூ டூ மித்து.." என்று தன் பண்ணிரண்டு வயது மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவளை நடத்தி செல்ல..

மற்றவர்களும் தங்கள் கால்களை கட்டி கொண்ட தங்கள் பேரபிள்ளைகளையும் குழந்தைகளையும் அணைத்து கொண்டும் தூக்கி கொண்டும் வந்து அங்கு விரித்திருந்த படுக்கையில் அமர்ந்தனர்.

"அப்பா.. " என ஆதி சந்தோஷத்துடன் ஆர்யனிடம் வர..

அவள் மகள் சம்யுக்தாவோ.. "தாத்தா, ஐ மித் (மிஸ்) யூ சோ மத்(மச்).." என அவர் மடியில் அமர்ந்து தன் தாத்தனின் கண்ணத்தில் முத்தமிட்டு தன் தாயை வெறுபேற்ற,

"மீ டூ.. மை கியூட்டி.." என ஆர்யனும் கூற,

"அப்பா.." என சினுங்கினாள் மகள்.

"குட்டி மா.. உன் மக தானேடா.." என அவர் சிரிக்க,

"அது எல்லாம் கிடையாது.. நீங்க எனக்கு தான் ஃபர்ஸ்ட் அப்புறம் தான் அவளுக்கு.." என உரிமை கோவம் கொள்ள,

"இல்ல.. தாத்தா எனக்கு தான் ஃபர்ஸ்ட்.." என சம்யுக்தாவும் உரிமை கொள்ள,

அவர்கள் உரிமை சண்டையில், சிரித்த ஆர்யதேவ், "நான் இரண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் தான் சரியா.."

"நோ.. கோவம்.."

"அது எல்லாம் முதியாது யாராச்சும் ஒருத்தருக்கு தான் ஃபர்ஸ்ட்.." என சம்யுக்தா மறுக்க,

"போடி.. நீயே ஃபர்ஸ்ட் ஆக இருந்துக்கோ.. நான் என் புருஷன் கிட்ட போறேன்.." என அவள் எழுந்து தன் கணவன் வேந்தன் அருகே சென்று அமர்ந்து அவன் தோள் சாய..

"நா..நா.. அது என் டாடி.." என அதற்கும் அவள் மறுக்க,

"நீ தான சொன்ன தாத்தா ஃபர்ஸ்ட்ன்னு.. இப்ப உன் டாடியா.. நீ தாத்தாகிட்டையே இரு.. நான் உன் டாடி கூட இருக்கேன்.." என அவள் வேண்டுமென்றே வம்பிழுக்க,

"நா..நா.. நானும் வருவேன்.. என் டாடி.. அவரு.." என குடுகுடுவென ஓடி போய் தன் டாடியின் மடியில் அமர்ந்து கொண்டு தாயை தள்ளிவிட பார்க்க அவளோ தள்ள மாட்டேன் என பிடிவாதமாய் அவன் தோள் சாய்ந்திட..

சிறிதும் நேரம் தள்ளி விட்டு தள்ளி விட்டு பார்த்தவள், கோவம் கொண்டு அழ தயாராக.. "சம்யுக்தா.. நோ" என தந்தையின் கண்டிப்பு குரலினால் அழ தயாரனவள் பட்டென்று அமைதியானாள்.

தன்னை பொம்மு, அம்மு, சமி என தான் என்ன செய்தாலும் தன்னை திட்டாது கொஞ்சும் தந்தை.. தன்னிடத்தில் கோவமாய் இருந்தால் மட்டுமே சம்யுக்தா என கண்டன குரல் எழுப்புவதை பல முறை அவரின் குரலிலே கண்டிருப்பவள் இன்றும் அது போல் நடந்தவுடன் தான் செய்வதை நிறுத்திவிட்டு அமைதியாகி போனாள்.

"தட்ஸ் மை பேபி.. அம்மா கிட்ட சாரி கேளுங்க.." என கூற,

தன் அன்னையை கண்டவள், அவள் மடிமீது வந்து அவளின் கண்ணத்தில் மாறி மாறி முத்தம் கொடுக்க, அதுவே அவள் சாரி கேட்கும் முறையாவதால் தானும் தன் குழந்தையை அணைத்து முத்தமிட்டாள் ஆதினி.

"தட்ஸ் மை கேர்ல்ஸ்.." என இருவரையும் சேர்த்தே தன் தோள் சாய்த்து கொண்டான் வேந்தன்.

இவர்களின் உரிமை சம்பாஷனங்களை, பார்த்திருந்தவர்கள் முகத்திலோ புன்னகையின் சாயல்.

***************

அங்கு தன் வீடு போல் நடு ஹாலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் அவன். ராஜசேகர் ஏவும் வேலையை திறன்பட செய்பவன் பெயர் என்னவோ துன்பத்தை நீக்கும் அரசன். ஆனால் அதில் இறுதி வார்த்தை மட்டுமே அவன் குணநலத்துக்கு பொருந்தும். மற்ற முன் வார்த்தைகள் அவன் குணநலத்துக்கு பொருந்தா ஒன்று.

சில நேரங்களில் தன் அடாவடி செயல்களால் ராஜசேரையே அலற விடுபவன். இன்று அவர் கூப்பிட்டு அனுப்பியும் பாதிநாள் வரை வராதவன் இப்போது தான் நேரில் காண வந்திருந்தான்.

"என்ன வேந்தரே காலையிலையே வர சொல்லிருந்தேனே.." என அவர் தயக்கமாய் இழுக்க,

"அதான் இப்போ வந்துட்டேன்ல சொல்லும்.. உனக்கு இப்போ யாரை போடனும்.." என காரியத்துக்கு தாவ,

அவன் அரட்டல் பேச்சில் சினம் எழுந்தாலும் அதை அடக்கி கொண்டு தன் காரியத்தில் கண்ணாக அவர் தனக்கானதை கூற ஆரம்பித்தார்.

"எனக்கு அந்த புதுசா வந்திருக்க எஸ்பிய (SP) போடனும்.. அதுவும் அவன்கிட்ட இருந்து ஆதாரத்தை வாங்கிட்டு.. நான் ஊழல் செய்றேன், நிதி தரமாட்டேன் இப்படி ஏகப்பட்டதை தொண்டி துருவி எடுத்து வச்சிருக்கான்.. கொஞ்ச நாளில் அதை அவன் கோர்ட்ல (Court) சம்பிட்டு (Submit) பண்ண போறானா.."

"எனக்கு அவன்கிட்ட இருந்து ஆதாரமும் அவன் உயிரும் வேணும்.. அதான் உங்களை வர சொன்னேன் வேந்தரே.." என்க,

"சரி போட்டுறலாம்.. ஆளு என்ன ஏதுன்னு டிடைல்ஸ்.. (Details)அப்புறம் எவ்வளோ இந்த வேலைக்கு.." என,

"மொத்தமா இதுக்கு என்பது லட்சம் தரேன்.. இதுல இப்போ முப்பது லட்சம் இருக்கு வேந்தரே,மீதி வேலை முடிஞ்தும் தரேன்.. இது அவனோட டிடைல்ஸ் அடங்கிய ஃபைல்லு.." (File) என்க,

"சரி..சரி.. ஆளை முடிச்சிட்டு ஃபோன் அடிக்கிறேன்." என்று விட்டு பெட்டியை தூக்கி கொண்டு சென்று விட்டான்.

தங்கள் அதீத சுயநலத்துக்காக பிறரை நோக செய்யும் இவர்கள், தன் நலனில் பிறர் நலனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் வாழ்வில் நுழைந்தால் என்னவாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.

அலர் முகிழ்க்கும்.

****************


























 
அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:05

இரவு உணவு நேரம் நெருங்க வீட்டின் பெரிய பெண்கள் உணவு தயாராக்க சமையல் அறை புகுந்து கொள்ள, சிறியவர்களோ தங்கள் தந்தைகளிடமும் மாமனாரிடமும் பேசி சிரித்து கொண்டு இருந்தனர்.

சுவாரஸ்ய பேச்சின் ஊடே வேந்தனின் அலைபேசி அழைக்க, அழைத்தது அவன் செயலாளன் என அறிந்து, எடுத்து பேச, மீட்டிங் விஷயத்தை அறிந்தவன் பின் அதன் அவசியம் புரிந்து வேகவேகமாய் வெளியே கிளம்ப எத்தனித்தான்.

அவன் கிளம்பும் வேகத்தில், " என்ன அத்தான் என்னாச்சு? திடீர்ன்னு கிளம்புறீங்க.." என்க,

"ஒண்ணுமில்லை தினு கொஞ்சம் இம்பார்ட்னட் மீட்டிங் ஒரு கிளையண்ட்டோட.. அதான் போக வேண்டியதா இருக்கு.. சாரி நீ பேசிட்டு இரு நான் நைட் வந்துடுறேன்.. எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டுரு நான் மீட்டிங்ல பார்த்துக்குறேன்.." என்று விட்டு வேகமாய் வெளியேற,

"மச்சான், பார்த்து போங்க.. வேணும்ன்னா நான் கூட ட்ரைவ் பண்ண வரவா.." என அரவிந்த் முன் வர,

"இல்ல மச்சான் நான் பார்த்துக்குறேன்.. நீங்க எதுக்கு தேவையில்லாம அலையனும்.. நோ பிராப்ளம் சரி பை.." என்று விட்டு நகர,

"சரி. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.."

"ஓகே டா தினு பை." என கூறி விட்டு செல்ல,

"ம்ம்.." என்றாள்.

அவன் செல்வதை பார்த்தவள் பெருமூச்சு விட்டு தந்தையின் அருகே அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்.

சம்யுக்தா தன் விளையாட்டு மும்மரத்தில் இதனை கவனிக்கவில்லை.. இல்லையென்றால் ஒரு வழியாக்கி இருப்பாள்.

"ஆதி.."

"ம்ம்.."

"வருத்தமோ.."

"ப்ச்.. லைட்டா ப்பா.. இப்ப தான் வந்தோமா அதுக்குள்ள இவர் கிளம்பிட்டாருல அதான் கொஞ்சம் ஃபிலிங் வேற ஒண்ணுமில்லை.."

"அவர் வேலை அப்படில்ல.."

"புரியுது.. ஆனாலும் கொஞ்சம் ஃபில், அவ்வளவு தான். சரி.. நீங்க உங்க வேலை எல்லாம் எப்படி போகுது அமைச்சரே.. அதுவும் ஸ்பெஷல்லா உங்க காதல் வாழ்க்கை எப்படி போகுது.." வம்பிழுக்க,

அவளின் மனநிலை புரிந்தவர், "அதுக்கு என்ன சும்மா நச்சுன்னு போகுது இரண்டுமே.. என்ன அப்பப்ப உங்க அம்மா தான் கொஞ்சம் சலிச்சுக்குவா மத்தபடி சும்மா சூப்பரா போக தான் செய்யுது.." என புரிப்புடன் கூற,

"அதான் என் அப்பா முகம் டாலடிக்குது போல.." என விஷமமாய் சிரிக்க,

"அதுக்கு என்ன ஆதி உங்கப்பன் முகம் இன்னிக்கு நேத்தா டாலடிக்குது அவன் கல்யாணம் ஆனா ஒரு வருஷம் கழிச்சதுல இருந்தே டாலடிக்க தான் செய்யுது. இல்ல டா நண்பா.." என வெற்றி வெறுபேற்ற,

"அது என்னமோ உண்மை தான் மச்சான்.. ஆனா என்னைய விட அங்க தான் அதிகம் பளபளப்பு தெரியுது.. கொஞ்சம் கொளுத்தி போட்டு பார்க்கவா.. பளபளப்பு எப்படி இருக்குன்னு தெரிஞ்சிடும்.." என ஆர்யனும் சரிக்கு சரியாய் வம்பிழுக்க,

"ஏன் டா.. நான் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையோ.. சும்மா என்னையே ஏன் டா சீண்டுற.." என வெற்றி முறைக்க,

"அதுவா மச்சான்.. உன்ன பார்த்தா மட்டும் எனக்கு ஏதாவது சீண்டி விட்டுட்டே இருக்கனும் போல இருக்கே டா.. நான் என்ன பண்ண.." என பாவமாய் முகத்தை வைக்க,

"டேய்.. நல்லவனே உன்னைய கையெடுத்து கும்மிடுறேன்.. என்ன விட்டுரு டா பாவம் நானு.." பரிதாபமாக பார்க்க,

"ச்சோ..ச்சோ.. சரி போனா போகுது பொழைச்சு போ இப்போதைக்கு.." என கூறி விட்டு சிரிக்க,

"அது சரி.. நல்லவேளை விட்டானே.. சரியான விவகாரம் பிடிச்ச ஆளு, இல்ல இவன் பண்ற வேலைக்கு எனக்கு ஹால்ல (Hall) படுக்கைய போட ஏற்பாடு பண்ணிடுவான்.." என முனுமுனுத்து கொண்டு அமைதியாகி விட,

"என்ன டா அங்க முனுமுனுக்குற.." என அஜய் கேட்க,

"ஒண்ணுமில்லை மச்சான்.. ஒண்ணுமில்லை.." என பம்ம,

"அதுவா பெரியப்பா, மாமா கொஞ்சம் அப்பாவை பத்தி புகழ்ந்து பேசுறாரு.." என்க,

"என்ன புகழ்ச்சி ஆதவ் கொஞ்சம் சொல்லு.." என அஜய் ஊக்க படுத்த,

"அதுவா.. அது சரியான விவகா…." என அவன் வாயை திறக்கும் முன் தன் மருமகனை தொடையில் அடித்திருந்தான் வெற்றி.

"ஆஆஆ.." என ஆதவ் அலறிட,

"அச்சோ வலிக்குதா ஆதவ்.. அது ஏதோ பூச்சி போல இருந்தது.. அதான் தட்டுனேன்.." என்க,

ஆதவோ முறைக்க,

"ஏன் டா.. அப்பனுக்கு தப்பாமா பிறந்து இருக்கீயா.. என்னைய வச்சி செய்யறதுல இரண்டு பேருக்கும் என்ன டா சந்தோஷம்.. சும்மா இரு இல்ல.. நீ ஒரு பொண்ணை சைட் அடிக்கிறன்னு போட்டு கொடுத்துடுவேன்.." என மிரட்ட,

"அச்சோ, மாமா ஆள விட்டுருய்யா நீயாச்சு உன் மச்சானாச்சு.." என வாயை கப்பென முடி கொள்ள,

அவர்களின் செயல்களை பார்த்தவர்கள் அட்டகாசமாய் சிரித்தனர்.

"அட போங்க ப்பா நீங்களும் உங்க பேச்சும்.. நான் போறேன் என் அம்மாகிட்ட.. பசிக்குது.." என ஆதவ் ஓடிவிட,

"அப்படி என்னத்த டா சொல்லி மிரட்டுன அவனை இப்படி ஓடுறான்.." என தருண் கேட்க,

"ஒண்ணும் சொல்லலையே.. அவன் எதுக்கு ஓடுறான்னு அவனை தான் கேட்கனும்.." என்க,

"மாமா.."

"என்ன அமர்?"

"ஒண்ணுமில்லை.." என தலையாட்டினான் அவன்.

இங்கே ஓடி வந்த ஆதவ், தன் தாயின் பின்புறம் வந்து அவரின் தோளில் கைபோட்டு அனைத்து கொண்டு,

"அம்மா, பசிக்குது மா.. டிஃபன் ரெடியா.." என்க,

"இன்னொரு பத்து நிமிஷம் ஆது டிஃபன் ரெடியாகிடும்.." என ஆராத்யா கூற,

"ம்ம்.."

"சரி.. ஆது கண்ணா உனக்கு இந்த டிரிப் எப்படி இருந்தது பிடிச்சிருந்ததா.." என்க,

"அட போ மா.. நீங்க வேற.. நான் எங்கம்மா டிரிப் போனேன்.. நான் தான் பார்டிகார்ட் வேலைல பார்க்க போனேன்.. டிரிப் போனேன்னா..டிரிப் ஹான்.." என சலிப்பாய் கூறிட,

"என்ன ஆது கண்ணா இப்படி சொல்ற.. நீ டிரிப் தானே போன.."

"அட போங்க மா.. நான் டிரிப் போனேன் ஆனா ஒரு சொட்டு கூட என்ஜாய் பண்ணவே இல்லை.. என் ஃபிரண்ட்ஸ் கோவா(Goa) போகலாம்ன்னு கூப்பிட்டாங்க.. நான் வெர்ல்ட் டூர் (World Tour) போற ஆசையில கோவா வரலைன்னு சொல்லிட்டு போனா.. கடைசில.. கடைசில என்னைய பையும், குழந்தைகளும் தூக்க வச்சுட்டாங்கமா.." என வராத கண்ணீரை ஆரு முந்தானயில் துடைத்து கொண்டே கூற,

"அச்சோ பாவம்.. என் புள்ள" என ஆரு வருத்தமாக,

அவனோ, இது தான் சாக்கென்று தன் தாயிடம் சலுகையாக மீண்டும் ஒரு டிரிப்புக்கு அடித்தளம் போட ஆரம்பித்தான்.

"ம்மா, நான் சரியாவே,சுத்தி பார்க்கல மா.. அதனால.."

"அதனால.."

"அதனால.. எனக்கு அது எல்லாம் வேண்டாம் நான் என் ஃபிரண்ஸ்ஸோட பேங்காக்(Bangkok) போக அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கி கொடு மா.. ப்ளீஸ்.." என்க,

அவன் தில்லாலங்கடி புரிந்து, "பர்மிஷன் தானே வாங்கிட்டா போச்சு.." என்க,

"அப்படியா சூப்பர்.. மா.. ரொம்ப தாங்க்ஸ்.." என கூற,

"ஆனா இந்த தடவை நானு, பாட்டி, தாத்தா, பெரியம்மாஸ், அத்தை எல்லாம் வருவோம்.. அதுக்கு ஓகேன்னா.. நீ பேங்காக் போ.." என்க,

"என்னாது.. அடுத்து ரௌண்ட் (Round) நீங்களா.. இப்பவே பாதி நேரம்,நேநியா (Nanny) தான் சுத்துறேன். இதுல உங்களையும் கூட்டிட்டு போனா நான் முழு நேரமும் கேர் டெக்கரா (Caretaker) தான் சுத்த வேண்டி வரும்.. ஆள விடுங்கடா சாமி.. நான் எங்கேயும் போகல.." என அலறி விட,

"ஹான்.. அது. நான் உன் அம்மா டா.. உன் தில்லாலங்கடி எனக்கு தெரியாது.." என்க,

அதை பார்த்து அனைவரும் சிரிக்க,

அவனோ அசடு வழிய தாயை பார்த்தான்.

"போ..போய்.. எல்லாரையும் சாப்பிட கூப்பிடு டின்னர் ரெடி.." என்க,

அவளின் வாஞ்சையில்,"ம்மா, லவ் யூ.." என அன்னையை அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டான்.

"சேட்டை..சேட்டை.. சரியான சேட்டை.." என்றாள் அனிகா.

"அது என்னவோ உண்மை தான் அக்கா."

"சந்தோஷமா இருந்தா சரி."

"அது எல்லாம் இருப்பான் டா.. கவலை படாத.. வா நாம சாப்பாடை எடுத்து வைக்கலாம்." என்று விட்டு உணவறையை உணவு பாத்திரங்களால் நிரப்ப,

அனைவரும் உணவருந்த வர சரியாக இருந்தது.

அனைவருக்கும் பரிமாறி கொண்டே, வேந்தன் இல்லாததை கண்டு, "ஆமா வேந்தன் எங்க போனான்.. ஆளை காணோம்." என அபி கேட்க,

"அவர் ஏதோ அவசர மீட்டிங்குன்னு வெளில போய் இருக்காரு அபிம்மா.." என ஆதினி கூறிட,

"சாப்பிட்டு போயிருக்கலாம்ல.. அப்படி என்ன அவசரமோ.." என அங்கலாய்க்க,

"வெளில சாப்பிட்டுக்குறேன்னு சொல்லிட்டாரு அபிம்மா.." என்றாள்.

"சரி டா.. நீ சாப்பிடு, நீ ஏன் சாப்பாட்டை அலந்துட்டு இருக்க, உன் புருஷன் அது எல்லாம் சாப்பிட்டு தான் வருவான்." என்க,

"சரி அபி மா."

உணவு நேரமும் பேச்சும் சிரிப்புமாய் கடந்து அனைவரும் தூங்க அவர் அவர் அறைக்கு செல்ல தயாராகினர்.

"சரி டா பசங்களா.. இன்னிக்கு எல்லாரும் ரொம்ப பேசி விளையாண்டு கலைச்சி போயிருப்பீங்க.. ஏற்கனவே பிளேன்ல (Plane) வந்தது வேற கலைப்பா இருக்கும்.. போய் சீக்கிரம் தூங்குங்க.. நான் போய் படுக்குறேன்." என வீட்டின் மூத்தவராய் அனுராதா கூற,

"சரி அப்பத்தா.." என்றனர் அனைவரும் ஒன்று போல் சிரித்து கொண்டே..

"சும்மா சொல்லிகிட்டே நேரத்த கடத்தாதீங்க, போய் உறங்குக.." என்று விட்டு அவர் படுக்க சென்று விட,

"சரி தனு மா.. எனக்கும் ஃபிளைட்ல (Flight) வந்தது ரொம்ப டையர்ட்டா (Tired) இருக்கு.. நாங்களும் போய் படுக்குறோம்.. குட் நைட்" என வருணிகா குழந்தைகளுடன் முதலில் கூறி விட்டு செல்ல..

பின் மற்றவர்வகளும் அவர் அவர் டையர்ட்னஸில் கூறிவிட்டு அவர் அவர் அறைக்குள் முடங்கினர்.

********

அறையில் நுழைந்த வைஷூவை வரவேற்றது என்னவோ கோவமாய் இருக்கும் வைபவின் முகமே..

அதை கண்டவள், "ஆஹா.. நாம அப்ப சொன்னதுக்கு ஆளு இன்னும் மலை இறங்கலை போல.. அதான் நம்மளை பாசமா பாக்குறாரு.. அப்படியே கண்டுக்காத மாதிரியே படுத்துடு வைஷூ,பேசுனோம் இன்னிக்கு நாம கசாப் ஆகுறது உறுதி." என நினைத்து கொண்டு,

"மித்து, அப்பாகிட்ட போய் படுத்து தூங்கு அம்மா சென்ஜ் (Change) பண்ணிட்டு வந்துடுறேன்.." என்க,

"சரிம்மா.." என்று விட்டு அவள் தந்தை அருகே சென்று விட,

மகள் உள்ள காரணத்தால் அமைதியாகவே பார்த்திருந்தான் வைபவ்.

"பேசாம வந்து படுத்துக்கலாம்ன்னு யோசிக்கிறீயா.. நீ வா உனக்கு இருக்கு கச்சேரி.. வாயா பேசுற.. பேசுற வாயை என்ன பண்றேன்னு பாரு.. போடி போ.. போயிட்டு வா உனக்கு இருக்கு.." என மனதிற்குள் பேசி கொண்டவன் வெளியில் அமைதியாகவே இருந்தான்.

அதற்குள் மித்து அருகில் படுக்க, தானும் படுத்து கொண்டு அவளை தூங்க சொல்லி தட்டி கொடுத்தவன்.. சிறிது நேரத்தில் மித்ரா தூங்கி விடவே.. குளியலைறை வாசலை பார்த்து கொண்டிருந்தவன் அது திறக்கும் சத்ததில் தானும் தூங்குவது போல் கண்ணை மூடி கொண்டான்.

குளியலைறை கதவை திறந்தவள் தலை நீட்டி பார்க்க விடிவிளக்கு எரிந்து கொண்டு கணவனும், குழந்தையும் தூங்கி கொண்டிருக்க.. "ஹப்பாடி.." என்று இருந்தது அவளுக்கு.

"ஷப்பா.. என்ன முறை முறைக்குறாரு.." என்று கூறி கொண்டே தானும் வெளி வந்தவள் படுக்கையில் படுத்து கண்களை மூட,

சிறிது நேரம் கழித்து, தான் அந்தரத்தில் பறப்பது போல உணர்ந்தவள் சட்டென்று கண்களை திறக்க, தன் கணவன் முகம் தன் கண்முன் இருக்க தன் முகம் அவன் மார்பு கூட்டில் பட்டும் படாமலும் இருக்க, தான் ஏந்த பட்டிருப்பதை கண்டவள் பதறியடித்து துள்ளி கீழே இறங்க பார்க்க,

"ஷ்ஷ்.. கீழே இறங்க ட்ரை பண்ண பிச்சிருவேன் நியாபகம் வச்சுக்கோ.. குழந்தை வேற தூங்குறா.." என மிரட்ட,

அவன் மிரட்டலில் சற்றே பயந்து, "ம்ம்.. " என்று தலையாட்டினாள்.

"ம்ம்..அது.." என்றவன் அவளை தூக்கி கொண்டு தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கதவை காலால் சாத்தியவன், அவளை படுக்கையில் பொத்தென்று போட்டான்.

அவன் போட்டதில் பஞ்சு மெத்தையில் உள்ளே அமுங்கி வெளியே வந்தவள், திடீரென போட்டதில் சிறிதாக வலியில், "ஆஆ.." என்று சத்தம் கொடுத்து கணவனை நிமிர்ந்து பார்க்க,

அவனோ அவள் என்ன ஏதென்று உணரும் முன்பு அவள் மேல் விழுந்து அவள் இதழ்களை கவ்வி இருந்தான்.

வெகுநேரம் நீடித்த முத்த போராட்டம் சில பல மூச்சு திணறல்களுக்கு பின் முடிவுக்கு வந்த உடன்..

"பவன், ஏன் டா இப்படி பண்ற.." என மூச்சு வாங்க கேட்க,

"நீ தானே சொன்ன ஷாலு டார்லிங் என் புருஷன் என்னையே எப்படி இருக்கேன்னு கூட கேட்கலன்னு.. நான் என் மகளையும் பாதுகாப்பும், பற்றி தான் விசாரிக்கிறேன்னு சொன்ன.. அதான் உன்னைய நான் விசாரிக்க தோனுன்ன விதத்தை காட்டினேன்.. எப்படி இருக்கு?" என புருவம் உயர்த்திட,

"அடபாவி.." என வாயை பிளந்தாள் அவள்.

அவளின் இதழ் பிரிந்த உடன் மீண்டும் தன் இதழை வைற்று அடைத்து மீண்டும் ஒரு முத்த கவிதை படைத்து விட்டு நிமிர..

"டேய்.. சும்மா இரு டா.. சும்மா..சும்மா வாயை அடைக்காத மூச்சு முட்டுது.." என மூச்சு திணற கூற,

"சரி." என்றவன் அடுத்த செயல் அவளை நிலைகுலைய வைத்தது.

"அடேய்.. நான் பொய் தான் சொன்னேன்.. என்னைய விட்டுரு டா.. நீ நல்ல அன்பான புருஷன் தான்.."

அவள் மேனியில் இருந்து முகத்தை தூக்கி அவளை பார்த்தவன், அப்படியா என கண்களால் வினவ,

"அப்படியே தான்." என்றாள் மனைவி.

"இப்போ சொல்லு நான் மில்டரி ஆஃபிசரா இல்ல ரோபோவா?" என்க,

"நீங்க எதுவும் இல்லப்பா நான் தான் தப்பா சொல்லிட்டேன்."

"பின்ன என்னடி என் அம்மாகிட்ட வாயி.." என அவள் மேல் இருந்து கொண்டே கேள்வி கேட்க,

"அது..அது.." என அவள் முழிக்க,

"முழிக்காம சொல்லு.." என அவன் அரட்ட,

"அது..வந்து சும்மா விளையாட்டுக்கு.."

"ஏது புருஷனோட இமேஜை டேமேஜ் பண்றது விளையாட்டுக்கா.. சரி தான். அப்ப நான் இப்போ ஒண்ணு விளையாட்டுக்கு பண்றேன் எங்க நீ அமைதியாரு பார்ப்போம்.." என அவன் விளையாட்டை எதுவென செயலில் காட்ட கழுத்தில் முகம் புதைத்து கூச செய்ய,

"ஐய்யோ! தெரியாம சொல்லிட்டேன் டா பவன் விட்டுருடா.. நான் பாவம்ல உன் செல்ல பொண்டாட்டி கிட்ட இப்படி செய்யலாமா.." என்க,

"அடியே என் சக்கரவல்லி கிழங்கே பொண்டாட்டி கிட்ட மட்டும் தான்டி இப்படி செய்ய முடியும் லூசு பொண்ணே.." என கூறி சிரிக்க,

"அட ஆமாம்ல.. " அசடு வழிந்தாள்.

அவளின் வழிதலில் சிரித்தவன், "சரி தூங்கு.. ஆனா இன்னொரு தடவை என்ன சீண்டி பாரு அப்புறம் இருக்குடி உனக்கு.. இப்போ விட்டேன் அப்ப விட மாட்டேன் நியாபகம் வச்சுக்கோ.." என மிரட்ட..

"ம்ம்ம்.." என பலமாக தலையாட்டிட,

அதில் புன்னகைத்தவன் மித ஒளி விளக்கை அணைத்து விட்டு அவளுடன் நெருங்கி படுத்து இடையில் கை போட்டு கொள்ள,

அவன் வேகத்தில் இவள் தான் உணர்வுகளால் தாக்கப்பட்டு, "அப்போ உண்மையிலையே ஒண்ணும் கிடையாதா பவன் குட்டி.." என முனுமுனுப்பாய் கேட்க,

"என்னடி வேணுமா.." என அவனும் அதே முனுமுனுப்பில் கேட்க,

"இல்ல இல்ல வேணாம்.. வேணாம்.." அலற,

"அப்ப கேள்வி கேட்காம படு.. இல்ல நீ தான் கசங்குவ.. எனக்கு இருக்குற ஆசைக்கு.. ஏதோ இன்னிக்கு ஒரு நாள் பாவம் பார்த்து விடுறேன் டையர்டா இருப்பாளேன்னு.. இல்ல மொத்தமா கசக்கி எடுத்துருப்பேன்.. என்க,

"ம்ம்ம்.." என்றாள்.

"தூங்குமா.. வெளில இருந்து வந்துட்டு ரொம்ப கலைச்சு போயிருப்ப.." என கரிசனையாக அவள் இடையில் போட்ட கையை எடுத்து அவளை தன் வெற்று நெஞ்சில் சுமந்து அவளை தட்டி கொடுக்க,

அவன் கரிசனையில் உருகியவள் அவனுடன் இன்னும் ஒன்றிக் கொண்டு உறங்க ஆரம்பிக்க அவளுடன் தானும் கண்ணயர்ந்தான் அந்த அழகிய காதல் கணவன்.

***********

நடுநிசி இரவு தன் அலுவலகத்தில் தான் எடுத்த வேலையை முடிக்க திட்டம் தீட்டி கொண்டிருந்தான் அவன்.

பணம் வாங்கிவிட்டால் அதற்கு அயராது உழைப்பான் இந்த நல்லவன்.

"அண்ணே, மன்னிச்சுடுங்க அண்ணன்.. உங்க சொந்த நேரத்துல இருக்கும் போது ஃபோன் போட்டு கூப்பிட்டேன்.."

"அவன் நம்ம ஆளுங்க மேலையே கை வைக்க வாரான்.. நாங்களும் சுட்டு தள்ளுனோம் எல்லாம் பண்ணோம், ஆனா இப்படி ஆகும்ன்னு தெரியாம போச்சு, என்ன செய்யறதுன்னும் தெரில அண்ணன்.. அதான் ஃபோன் அடிச்சேன் ஆனா அவன் இருக்குறது நமக்கு ஆபத்துன்னே.. நீங்க முதல் இடத்துல இருக்குறது அவனுக்கு பிடிக்கல அண்ணன்.." என அவன் விசுவாசி கூற,

அவன் இகழ்வாய் சிரித்து கொண்டே, "சரி.அந்த பாப்பா இப்போ எப்படி இருக்கு.." என்க,

"இப்போ அதுக்கு பரவாயில்லைன்னே.. என்ன டாக்டர் தான் கொஞ்சம் எகுறுனான் நீங்க, இரண்டு தட்டு தட்ட சொன்னதுல தட்டுன்ன பிறகு அமைதியாகிட்டான்." என்க,

"ம்ம்.. சரி அந்த பாப்பா யாரு என்னன்னு விசாரிச்சு எந்த தடயமும் இல்லாம அதை வீட்டுக்கு அனுப்பி விடு.. அந்த நேரத்துல குழந்தைய விட்டுட்டு அவள பெத்ததுங்க என்ன பண்ணுச்சுங்கன்னு கேட்டு அதுகளையும் மிரட்டிட்டு சேர்த்துட்டு வா.." என்க,

"ம்ம்..சரிண்ணே." என்றான்.

"சரி, இப்போ வந்த லோட் என்னாச்சுன்னு பார்த்துட்டு ஃபோன் பண்ணு எனக்கு.. நான் வீட்டுக்கு போறேன்." என,

"சரிண்ணே." என்று விட்டு அவன் செல்ல,

இவனும் தான் தீட்டிய திட்டத்தை கண்ணில் கொண்டு வந்தவன் விடியற் காலைக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

அவன் செய்யும் தொழில் யாவும் கலந்தது, ஆனால் அதிலும் பல அறநெறிகள் வகுத்து செய்வான் இந்த வேந்தன்.

இவன் நல்லவனா? கெட்டவனா? இவனை படைத்த பிரம்மன் கூட அறிய முடியாத புதிரவன் இவன்.



*************


அலர்:06

நள்ளிரவு சென்று வீட்டிற்கு வந்தவன் அறையினுள் நுழைந்து, விடிவெள்ளி வெளிசத்தில் தன் மகளையும் மனைவியையும் கண்டவன் சத்தமில்லாமல் உடையை மாற்றி கொண்டு அவர்கள் அருகே படுத்தான்.

அவன் அரவத்தில் அப்போது தான் தூங்க ஆரம்பித்தவள் தன் கண்களை திறந்து, கணவன் பக்கம் திரும்பி படுத்து அவனை பார்க்க, கண் மூடி இருந்தவன் தன் மனைவியின் பார்வை உணர்ந்து,

"என்ன தினு மா தூங்கலையா?"

"…."

அவள் அமைதியாகவே இருக்க,

தன் கேள்விக்கு பதில் வராது போக.. தன் கண்களை திறந்து அவளை காண அப்போதும் எந்த மாற்றமும் இல்லாது அவனையே பார்த்திருந்தாள் அவள்.

அவளின் பார்வையை கண்டவன் அவள் மனநிலை புரிந்து அவளுடன் இன்னும் நெருங்கி படுத்து கொண்டு தன் புருவங்களை ஏற்றி இருக்க,

அவளோ அப்போதும் பேசாது, "ஒண்ணுமில்லை" என்பது போல் தலையாட்டியவள், மீண்டும் கண்களை மூடி கொண்டாள்.

அவள் ஒன்றும் கூறாது வெறுமனே தலை அசைத்தவள் செயல் அவனை ஏதோ செய்ய, அவளிடம் நெருக்கம் இன்னும் குறைத்து அவள் இடையில் கையை போட்டு வளைத்தவன் அவள் காதோரம் சென்று,

"சாரி பேபி.. கொஞ்சம் அர்ஜென்ட் மீடிங் அந்த மிஸ்ட்டர் தர்மராஜோட அதான் திடீர்ன்னு போகுற மாதிரி ஆகிடுச்சு.. உன் அத்தானை மன்னிச்சிடு பேபி.."

"ம்ம்.."

"என்ன ம்ம்.. கண்ணை திறடி முதல்ல.."

"ம்ம்.." மெல்ல விழி மலர்த்த,

அவள் விழி மலர்த்தலில் மயங்கியவன், ஏக்கி அவள் கண்களில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

அப்போதும் மௌனமாகவே அவள் இருக்க,

"என்னடி? ஏதாவது பேசேன்.. அமைதியாவே இருக்க.."

"போன வேலை என்னாச்சு அத்தான். உங்க முகம் ஏன் இவ்வளோ சோர்வா இருக்கு.. எதுவும் நீங்க நினைச்ச மாதிரி முடியலையா.." என அச்சமயமும் அவனின் வாட்டத்தை உணர்ந்து கேள்வி எழுப்பியவளை கண்டு அவன் தான் அதிசயத்து பார்த்தான்.

'தான் எதுவும் கூறாது, தன் வதனத்தை பார்த்தே தன் மன உணர்வுகளை படித்தவள் போல் கேள்வி கேட்டவளை கண்டு அவள் மேல் உள்ள காதல் இன்னும் பெருக தான் செய்தது அவனுக்கு..'

"அது எப்படிடி.. நான் எதுவுமே சொல்லாமலே என் மனநிலையை சரியா கணிக்கிற.." என வாய்விட்டே கேட்க,

அவள் வதனத்திலோ மென்புன்னகை..

"ஏய்! சிரிக்காம பதில் சொல்லுடி.."

அப்போதும் அவள் சிரிக்கவே,

"அடியேய்.."

"அது எப்படின்னா அங்க தான் நான் இருக்கேனே.. அப்புறம் எப்படி தெரியாம போகும்."

"நீங்க எனக்குள்ள இருக்கீங்க, நான் உங்களுக்குள்ள இருக்கேன் அத்தான்.. அப்ப என் அத்தான் என்ன நினைக்குறாரு.. என்ன யோசிக்கிறாரு.. எனக்கு தெரியாதா என்ன?"

அவள் பதிலில் வியந்து சிரித்தவன், "அதுவும் சரி தான்."

"சரி. என்னாச்சு? ஏன் இந்த சோர்வு.." என்க,

"அது ஒண்ணுமில்லைடி இந்த டீல் (Deal) நமக்கு ஒத்து வராது.. அவன் கேட்குறது வேற மாதிரி இருக்கு.." என யோசனையாக கூற,

"என்ன அவன் கடத்தல் பண்ண கேட்டானோ.." என்க,

'அது எப்படி உனக்கு தெரியும்?' என்பது போல் புருவத்தை சுருக்கி பார்த்தான்.

அவன் பார்வையின் கேள்வியை புரிந்தவள், "அவன் ஒரு கெடு கெட்டவன் அத்தான்.. அவன் ஒரு நாள் ஹாஸ்பிட்டல் வந்திருந்தான். வந்தவன் ஒழுங்கா இல்லாம அங்க இருக்க லேடீஸ் கிட்ட வம்பிழுத்து அடி வாங்கிட்டு போனான் பெயர் என்னவோ தர்மராஜ் ஆனா பண்றது அத்தனையும் கீழ்தரமான வேலை.."

"நீங்க அவன் கிட்ட டீல் பேசுறேன்னு சொல்லும் போது எனக்கு சட்டுன்னு ஸ்டைர்க் ஆகலை.. ஆனா உங்க கூட ஒரு ஹேண்ட் ஷேக் ஃபோட்டோ (Hand Shake Photo) எடுத்ததை உங்க சோசியல் இதுல ஷேர் பண்ணிருந்ததை பார்த்தேன். அப்ப கூட எதுவும் தோணலை.. அப்புறம் நியாபகம் வந்தது, சரி அன்னிக்கு ஏதோ நடந்துடுச்சு போல.. பிசினஸ்ல சரியா இருப்போனோன்னு விட்டுட்டேன்.. இப்போ உங்க முகத்தை பார்க்கும் போது தான் தெரியுது.. அவன் அதிலையும் சரியில்லைன்னு.."

அவள் சொன்னதை கேட்டவன் அதிர்ந்து அவளை பார்க்க, "ஏண்டி இந்த ஹாஸ்பிட்டல் பிரச்சினையை பற்றி எதுவும் சொல்லவே இல்லை நீ என்கிட்ட.." என எழுந்து உட்கார்ந்து அவளை பார்த்து கேள்வி கேட்க,

அவனை பார்த்து திருதிருவென முழித்தாள் அவள்.

அவள் முழிப்பை கண்டவன் கோவம் வர, "ஏய்! முழிக்காதடி ஒழுங்கா சொல்லு நீ ஏன் முதல்ல என்கிட்ட சொல்லலை.."

"அது..அது.."

"என்ன அது?" என சீற,

"அது..அது.. இது எல்லாம் ஒரு விஷயமான்னு நினைச்சு எதுக்கு சொல்லி உங்களை டென்ஷன் பண்ணுவானேன்னு விட்டுடேன்.." என கூறி தலை குனிய,

அவள் பதிலில் சினம் எழுந்ததை அடக்கி கொண்டு,"ஏண்டி, நான் உன் புருஷன் தானே!" என அவன் உறும,

"ம்ம்.."

"அப்ப இதை ஏன் என்கிட்ட இருந்து சொல்லாம விட்ட.."

"அதான் சொன்னேன்னே அத்தான் இது ஒரு விஷயமா நினைக்கல.." என அவள் இழுக்க,

"குட். வெரி குட். இப்படி தான் இருக்கனும்.." என நக்கலாய் கூற,

"அத்தான்.."

"என்ன அத்தான் பொத்தான்னுட்டு.. நாளை பின்ன உனக்கு ஒரு பிரச்சினைன்னு வந்தா என்னடி பண்ணுவ.. இந்த மாதிரி நீ இது ஒரு விஷயமா நினைக்கலன்னு சொல்லாம விடுற சில விஷயத்துயால சில சமயம் என்ன மாதிரி பிரச்சினை வரும்ன்னு யோசிச்சி பார்த்து இருக்கீயா நீயி.." என கேட்க,

அவளோ பரிதாபமாய் பார்த்தாள்.

அவள் பார்வையை கண்டு கணிந்தவன், "தினு ம்மா.. நான் நீ என்கிட்ட எதுவும் மறைக்காத எல்லாத்தையும் சொல்லுன்னு சொல்லல.. சில விஷயம் மனசுக்கு நெருடலா நடந்து இருந்தாலோ பட்டாலோ அதை ஒரு சின்ன அறிவிப்பாவாவது எனக்கு சொல்லுன்னு தான் சொல்றேன்.. நீ இது எல்லாம் ஒரு விஷயமான்னு நினைச்சு சொல்லாம விடாதேன்னு சொல்றேன்.."

"சில சமயம் நம்மளே அறியாம நாம சொல்லாத விஷயம் பின்னால ஏதாவது ஒண்ணோட கணக்ட் ஆகி நமக்கே தெரியாம சில பல பிரச்சினைகளை கொண்டு வர சான்ஸ் இருக்கு.. அதுக்கு நாம சில விஷயம் ஒப்பலைன்னா நமக்கு நம்பிக்கையானவங்க கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லி வைக்கனும் இந்த மாதிரி நடந்ததுன்னு.."

"அப்ப அதுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையோ இல்ல வேற மாற்று வழியோ நாம எடுக்க வசதியா இருக்கும்.."

"சில நேரங்களில் நாம சொல்லும் விஷயம் சிலருக்கு பெரும் உதவியா இருக்கும் டா.."

"அதான் சொல்றேன். நான் சொல்றது புரியுதா.."

"ம்ம்.. ஐயம் சாரி அத்து.."

"இட்ஸ் ஓகே.. பட் டோன்ட் ரீபிடிட் அகைன்."

"ம்ம்.."

"என்ன ம்ம்.."

"இனி இந்த மாதிரி சொல்லாம இருக்க மாட்டேன்.." என சிறு குரலில் கூற,

"சரி ஓகே.." என அவனும் இழுக்காது உடனே ஒத்து கொண்டான்.

இன்று அவளின் இம்மாதிரியான எண்ணம் பின்னாளில் அவர்களின் வாழ்க்கைக்கு எம்மாதிரியான ஆபத்தை விளைவிக்கும் என அறியாது போனதை விதியைத் தவிர யாரும் அறியலர்.

"சரி தூங்கு.." என அவன் படுக்க விழைய,

அவளோ அவன் அன்பிலும் அக்கறையிலும் நெகிழ்ந்து காதலாக, தூங்காது உட்கார்ந்து அவனை பார்த்து கொண்டே இருக்க,

அவளின் பார்வையை கண்டவன், "என்ன" என பார்வையால் வினவ,

"ஒண்ணுமில்லை.." என தலையாட்டினாள்.

அவள் கூறிய விதத்தில் சிரித்தவன், அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டு கண்ணயர பார்க்க,

அப்போதும் அவனை கண்ணெடுக்காமல் பார்த்தே இருந்தாள்.

அவளின் பார்வையும் எண்ணமும் புரிந்தவன், "அடியே என் செல்ல பொண்டாட்டி இன்னிக்கு தான் வெர்ல்ட் டிரிப் (World Trip) போயிட்டு வந்து இருக்க.. இப்படி பார்த்து பார்த்து நீ என்னையே டெம்ட் பண்ணா.. அப்புறம் நான் ஏதாவது பண்ணி உன்னைய சேதராமாக்கிடுவேன்.. சோ உனக்கு தான் பிரச்சினை, அதனால நீ அமைதியா கண்ணை மூடி தூங்கிடுடி அம்மு.." என கரகரத்த குரலில் கூற,

அவளோ, இன்னும் வேண்டுமென்றே அவனை பார்வையால் இம்சித்தாள்.

"நீ அடங்கமாட்டடி.."

"அப்ப அடக்குங்க.."

"தாங்க மாட்டடி.."

"தாங்குவேனா..தாங்க மாட்டேனா நான் தான் சொல்லனும் நீங்க இல்லை.."

"ஹான்.. அது சரி."

"அத்து.."

"ம்ம்.."

"அத்து.."

"ம்ம்.."

"டேய் எரும.."

"என்னடி.."

"ஏன் டா.. பொண்டாட்டி ஆசையா பார்த்தும் ஒண்ணும் பண்ணாம இருக்க.."

"ஹான்.. ஆசை வரலன்னு அர்த்தம்.."

"ஹான்.. அது என்ன உனக்கு ஆசை வந்தா நான் தேவையோ.." என சிடுசிடுக்க,

"அடியே இம்சை.. மணிய பாரு டி லூசு.."

"என்ன மணி.."

"ஹான் அங்க பாரு.. தெரியும்." என அவள் முகத்தை டிஜிட்டல் கடிகாரம் நோக்கி திருப்ப..

அதுவோ அதிகாலை நான்கு என காட்டியது.

"அச்சோ இவ்வளோ நேரம் ஆகிடுச்சா அப்ப நான் இராத்திரி முழுக்க தூங்கலையா.." என அதிர்ச்சியாக,

"ஆமாம் டி.. லூசு.."

"உன்னால தான் டா நான் தூங்காம போனேன்.. நீ வந்தே என் தூக்கம் போச்சு.. என்னாச்சு கேட்டு, ஒரு லெக்ச்சர் (Lecture) கொடுத்து.. என் தூக்கத்தை கெடுத்துட்டான்.." என புலம்ப,

"ஏது நான் உன் தூக்கத்தை கெடுத்தேன். சரி தான்."

"ஆமா, நீ என் தூக்கத்தை கெடுக்கலை.." என முறைக்க,

அவள் முறைப்பில் சிரிப்பு வர, அதை மறைக்க முகத்தை திருப்பி கொள்ள,

"டேய், இப்ப ஏன் டா முகத்தை திருப்புற.. பதில் சொல்லுடா.." என அவன் முகத்தை தன் பக்கம் திருப்ப,

அவள் இழுத்த வேகத்தில் அவள் முகம் அவன் முகத்துக்கு நேரே வர,

இவளை விட்டால் மிச்ச மீதி உள்ள தூக்கத்தையும் கெடுத்து விடுவாள் அதனுடன் பேசி கொண்டே இருந்து, ஆசையையும் கிளறுவாள் என நினைத்தவன், அவள் இதழை வேகமாய் சிறை செய்தான்.

அவன் திடீர் செயலில் தடுமாறியவள், பின் அவனுக்கு வாகாய் ஒத்துழைப்பு கொடுக்க, சிறிது நேரம் நான்கு இதழ்களும் அழகாய் சங்கமித்தது.

நிறைவான முத்த கவிதை படைத்தாலும் மனமே இல்லாது விலகினர் இருவரும்.

ஒன்றும் பேசாது, அந்த அழகிய உணர்வுகளை இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு உள்வாங்கி ஒரு மோனநிலையில் இருக்க,

நிமிடங்கள் கடந்து, "அம்மு, தூங்கு டா கொஞ்சம் நேரமாவது.. நீ போன டிரிப், ஜெட்லாக், உடம்பு வலி அது இதுன்னு இருக்கும்.. டையர்ட்னஸ் எல்லாம் போய் நார்மல் ஆன பிறகு நம்ம கச்சேரியை வச்சுக்கலாம்.." என கண்ணடிக்க,

அவன் விழி சிமிட்டலில் விழ பார்த்தவள் பின் சுதாரித்து, "நான் ஒண்ணும் இப்பவே வேணும் கேட்கலை.. நான் உங்களை சும்மா சீண்டி பார்த்தேன்.. அதுக்கு ஐயா பண்ண வேலை இருக்கே.. ரொம்ப மோசம் அத்து நீங்க.." என வெட்கம் கொண்டு அவன் வெற்று மார்பில் முகம் புதைக்க,

அவள் வெட்கத்தை ரசித்தவன்,"நான் மோசமா இருக்குறதுனால தான் அம்மு நமக்கு குட்டி அம்மு இருக்கா.." என விஷமமாய் கூற,

"அத்து.." என சினுங்கிட,

அவள் சினுங்கலில் தன்னை தொலைத்தவன்,"அம்மு, சினுங்காம படுடி.." என அவளை தோளில் படுக்க வைத்து மெல்ல தட்ட,

அவன் தட்டலில் சுகம் கண்டவள் கண்ணயர, தானும் கண்ணயர்ந்தான் அந்த விடியலில்.

**********

இங்கு அந்த அதிகாலை நேரத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்தான் அவன் குறி வைற்ற எஸ்பி.

"ஹேலோ.."

"ஹான் சொல்லுங்க வேந்தரே.."

"நீ சொன்ன ஆளை முடிச்சாச்சு மீதி பணத்தை செட்டில் பண்ணும்.. அந்த ஆதாரம் உன்னை தேடி வரும்." என டொக்கென அலைபேசியை வைற்று விட்டான்.

அவன் சொன்ன விதத்தில் கோவம் கொண்டாலும், அவன் செயலில் திருப்தி அடைந்த ராஜசேகர் அவன் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு ஆதாரத்தை வாங்கி கொண்டார்.

"அண்ணே, நீங்க சொன்ன மாதிரி அந்த ஆளுங்களை தூக்கியாச்சு.." என வீரா ஃபோனில் சொல்ல,

"ம்ம்.. அவங்க தோலை உரிச்சு வை.. நான் அப்புறமா வரேன்."

"சரிண்ணே.."

"உயிர் இருக்கனும்.. ஆனா தோல் கழண்டி இருக்கனும் அப்படி உரி.." என்க,

"சரிண்ணே.. அப்படியே செஞ்சிடுறேன்.."

"ம்ம்.." என்று விட்டு வைத்தான்.

'என் கிட்ட மோதுன்னா என்ன நடக்கும்ன்னு தெரியாம மோதிட்டல.. இனி நீ பாரு, நான் என்ன செய்ய போறேன்னு..' என மனதில் நேற்று நடந்த அடிதடி எண்ணி சினம் கொண்டவன், இனி அவனுக்கு நரகத்தை காட்ட வேண்டும் என்று எண்ணி சூழ் உரைத்து கொண்டு தன் வேலையை பார்க்க சென்றான் அவன்.

அமைதியான வாழ்க்கை ஓடத்தில் சில மனிதர்களை பற்றி சில நேரம் நாம் கூறாது விடும் விடயம் பிற்காலத்தில் அது பல சரி செய்ய முடியாத தொந்தரவுகளையும், பிரச்சினைகளையும் நம் வாழ்வில் சந்திக்க நேரிட்டு அது தாங்க முடியாத பல வலியின் பரிசாகவும் மாறி விடுகிறது.

அலர் முகிழ்க்கும்.

************













































 
அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்
அலர்:07

காலையில் வெண்கதிர்கள் வெளியில் சூட்டெரிக்க, மங்கையவளோ நித்திரையில் இருந்து மெல்ல விழி மலர்த்தி, தன்னருகே மஞ்சத்தை பார்க்க, மஞ்சமோ வெறுமையாய் இருந்தது.

மகளும் கணவனும் எழுந்து விட்டது அறிந்து, கடிகாரத்தை காண அதுவோ காலை மணி பதினொன்று என காட்டியது.

அதிர்ந்து எழுந்தவள் பின், நேற்று இரவு உரையாடி முடித்து விடியலில் தூங்கிய தூக்கத்தின் பலனே இது என நினைத்தவள், "இவர் எப்படி தான் எவ்வளோ லேட்டா தூங்குனாலும் சீக்கிரமா எழுந்திருச்சு போயிடுறாரோ, கூடவே இந்த சின்னவளும் ஓடிட்டா.." என தன்னை சமன் செய்து புலம்பிக் கொண்டே குளியலறையில் நுழைந்தாள்.

குளித்து முடித்து தயாராகி கீழே வந்தவள் கண்டது தன் அத்தை அபிவதனியின் சோக வதனத்தையே.."என்ன அபி டார்லிங்.. ரொம்ப சோகமா இருக்குறது போல இருக்கு.." என வம்பிழுக்கும் பொருட்டு கேலியாகவே வினவ,

"போடி.. நான் உன் கிட்ட பேச மாட்டேன்." என அவர் முறுக்கி கொண்டே பதிலளிக்க,

"ஏன் டார்லிங்? நான் என்ன பண்ணேன்.."

"நீ என்ன பண்ணீயா.. நேத்து நீ தானே சொன்ன நான் உன் புருஷனை கெடுக்குறதுனால என்கிட்ட பேச மாட்டேன்னு.." என முகத்தை தூக்கி வைக்க,

"ஓஓஓ.. ஆமா சொன்னேன் இப்போ அதுக்கு என்ன?" என்க,

"அதுக்கு என்னவா?"

"ஏண்டி அப்படி சொன்ன?" என அவர் முறைக்க,

அவர் முறைப்பில் சிரித்தவள், "ஆமா என் புருஷனே சும்மா இருக்காரு நீ எப்ப வருவேன்னு கேட்காம.. நீங்க என்னடான்னா அவரை உசுபேத்தி விடுற மாதிரி எப்ப ஃபோன் போட்டாலும் அவ எப்ப வருவாளாம்ன்னு கேட்க சொல்றீங்க.. அப்ப நீங்க தானே என் புருஷனை கெடுக்குறீங்க.." என

"ஆமாம்டி ஆமாம் நான் தான் உன் புருஷனை கெடுக்குறேன் பாரு.. நான் உன்னையும் என் பேத்தியையும் மிஸ் பண்ணதுனால கேட்க சொன்னா இவ என் கூட பேச மாட்டாளாம்.."

"அதான் போகும் போது கூப்பிட்டேன்ல வரீங்களான்னு.. நீங்க தானே பெருசா நான் எதுக்குமா அந்த டிர்ப்புக்கு எல்லாம்ன்னு சொன்னீங்க.. அப்புறம் என்னவாம்.."

"ஆமாம்டி அந்த டிரிப் இவ்வளோ ஜாலியா இருக்கும்ன்னு தெரியாம சொல்லி தொலைச்சிட்டேன்டி.. உங்க கதையெல்லாம் கேட்டப்போ தான் நான் எவ்வளோ அழகான நினைவுகளை மிஸ் பண்ணிட்டேன் ஃபில்லாகுது.."

"சரி.. அதுக்கும் இப்போ நீங்க சோகமா இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்.." என்க,

"அட போடி இவளே,அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்க போய் தான் நான் சோகமா இருக்கேன்.." என்க,

"அப்படி என்னாச்சுன்னு நீங்க சோகமா இருக்கீங்க.."

"அதுவா, நான் காலையில எழுந்திருச்சேன்னா உங்க மாமா வழக்கம் போல எக்ஸர்ஸைஸ் பண்ணிட்டு இருந்தாரு.. அவர் கிட்ட போய், நானு சும்மா இல்லாம எனக்கும் வெர்லட் டிரிப் போகனும் சொன்னேன்னா.."

"சரி அதுக்கு அவர் என்ன சொன்னாரு.."

"அவரு.. கிழவிக்கு ஆசைய பாரு.. வெர்ல்ட் டிரிப் போக இந்த வயசுல.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. என்னால எல்லாம் உன்ன கூட்டிட்டு போக முடியாதுன்னு சொன்னாரு.."

"எனக்கா சரியான கோவம் வந்துருச்சு.. யாரை பார்த்து கிழவின்னு சொல்றீங்க.. நீங்க தான் கிழவன்.. நான் இன்னும் கிழவி கிடையாதுன்னு வாதாட.. அவரு நீ தான் கிழவின்னு சொல்ல.. எனக்கு கோவம் வந்து, போடா நீ என்னைய எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேங்குற.. இப்ப எல்லாம் நீ என்னைய கண்டுக்கவே மாட்டேங்குறன்னு சொல்லி ரொம்ப பேசிட்டேன்.. நான் பேசுன்ன அத்தனையும் கேட்டுட்டு.."

"போடி, இன்னையிலிருந்து நீயே சமைன்னுட்டு, இனிமே நீ சொன்ன போல நான் உன்னைய கண்டுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு திட்டிட்டு போயிட்டாரு.." என சோகமாக கூற,

அவளோ சத்தம் வர சிரிக்க,

அவளின் சிரிப்பில் அவளை முறைத்தவள், "ஏண்டி நான் எவ்வளோ சோகமா என் பிரச்சினையை சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா சிரிக்கிற," என முகத்தை தூக்க,

அவளின் முறைப்பில் மீண்டும் அவள் சிரித்து கொண்டே, "நீங்க மாமா திட்டுனதுக்கு சோகமா இருக்குற மாதிரி தெரிலையே.. நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா.." என பிடிகை போட,

அவரோ யோசனையாக,"என்ன ரகசியம் டி.." என்க,

"அதுவா, நீங்க சமைக்கனுமேன்னு தானே இவ்வளோ ஃபில் பண்றீங்க.." என புருவம் தூக்க,

அவள் மாமியாரோ திருதிருவென விழித்தார்.

அவரின் விழிப்பினிலே 'அது தான் உண்மை என்று சொல்லாமல் சொல்ல.."

"அத்தை.." என விளிக்க,

அவரோ அசடு வழிய,"ஆமாம்டி சும்மா இருந்த மனிஷனை சொரிஞ்சுவிட்ட கதையாகி போச்சேன்னு ஃபிலிங்கா இருக்குடி.. அவரு எனக்கு பாசமா சமைச்சு தரதுல ஆப்படிச்சிட்டு போவாருன்னு நான் நினைக்கல.." என பாவம் போல கூற,

"அது நீங்களா வாண்டட்டா போய் தலைய கொடுத்துக்குட்டது.." என கேலி பேச,

"ஏண்டி, நீ வேற.. நானே பீதியல இருக்கேன்.. எங்கே இனிமே காலையில சமைக்க வச்சுருவாரோன்னு.."

"அது எல்லாம் செய்ய மாட்டாரு.. என் மாமாப்பா ரொம்ப ஸ்வீட்.. அதனால பயப்படாதீங்க.. அவர் கை பக்குவத்துக்கு அடிமையாகிட்டு இப்போ அவஸ்தை படுறீங்க.."

"அது என்னவோ சரி தான். மனிஷன் என்னம்மா சமைக்குறாரு.." என வெற்றியின் கை பக்குவத்தை சிலாகிக்க,

"சரி, இன்னிக்கு காலைல சமைச்சீங்களா.. நான் எங்கே சமைச்சேன் அவர் கொச்சிக்கிட்டு போயிட்டாரு.. உன் புருஷனும் பிஸ்னஸ் பிரேக்ஃபாஸ்ட்ன்னு (Business Breakfast) சொல்லிட்டு போயிட்டான்.. இந்த சின்ன குட்டியும் நான் அருண்,விது கூட விளையாண்டுட்டு அங்கே சாப்பிட்டுக்குறேன்னு ஓடிட்டா.. அதனால காலையில் சமையல் இல்லை.."

"ஓஓஓ.. அப்ப நீங்க என்ன சாப்பிட்டீங்க காலைல.."

"அதுவா பிரேட் (Bread) இருந்ததா அதை ஜாம் (Jam) தடவி சாப்பிட்டு, கொஞ்சம் பழமும், ஆரஞ்சு ஜூஸ் குடிச்சிட்டு விட்டுட்டேன்." என சிரிக்க,

"அது சரி. அப்ப இன்னிக்கு மத்தியம்."

"மத்தியம் தான் யாருமே வர மாட்டங்களே.. இன்னிக்கு லன்ச்சும் வேணாம்ன்னுட்டு ஃபோன் வந்துடுச்சு.. அதான் இன்னும் சமைக்கல.."

"அப்ப நம்ம வீட்டுல இன்னிக்கு சமையல் கிடையாதா.."

"ம்ம்.. ஆமா.."

"சரி..மணி இப்போவே பண்ணிரண்டரை ஆகிடுச்சு.. நீ ஏதாவது சாப்பிடுறீயா.. செய்யவா.." என்க,

"அது எல்லாம் வேணாம் அபி டார்லிங், எழும் போதே பசியோட தான் எழுந்தேன். நீங்க உங்க பிரேக்பாஸ்ட்டுக்கு சொன்ன அதே மெனுவை தான் மேலே உள்ள ஹால் கிட்சன்ல செஞ்சி சாப்பிட்டேன்.." என்க,

"சரி தான். அத்தைக்கு ஏற்ற மருமகடி நீ.." என கண்ணம் கிள்ளி சிரிக்க,

"சரி இப்போ மத்தியானம் இங்கே யாரும் சாப்பிட வரவோ இல்ல கொடுத்து விடவோ போறது இல்ல.. அப்ப நாம மத்தியானம் என்ன சாப்பிடுறது.." என கேட்க,

அதற்கு அவளின் அத்தையோ, "நாம அங்க போவோம்.." என கண்ணடிக்க,

"எங்கே? அங்கேயா.."

"ம்ம், ஆமா.."

"நமக்கு சோறு கிடைக்குமா.."

"ஏண்டி, நமக்கு சோறு தரமாட்டாங்களோ.."

"அப்படி இல்ல.. அங்க போனா உங்கள பெத்தவங்க உங்களை ஒரு கரைக்கு வச பாடுவாங்க, என்னைய பெத்தவங்க ஒரு கரைக்கு வச பாடுவாங்க.. அதான் யோசிக்கிறேன்."

"ஏண்டி, நாம என்னிக்கு ரோஷ மானம் பார்த்தோம் சாப்பிடன்னு.. நீ இப்படி யோசிக்கிற.." என கேட்க,

"அதானே, நாம என்னக்கி அதை எல்லாம் பார்த்தோம் சாப்பிட.. சரி வாங்க போவோம்." என்க,

"சரி.. அடியேய் ஒரு நிமிஷம் நீ முதல்ல போ உன் பொண்ண தேடுற மாதிரி.. அப்புறமா நான் வரேன்.." என்க,

"ஏன்?"

"இரண்டு பேரும் ஒண்ணா போனா நம்மளை தான் எல்லாம் பாக்குங்க.. நீ சொல்ற மாதிரி தான் நடக்கும்.."

"ஓஓ..சரி நான் போறேன் நீங்க வந்துருங்க.."

"சரி..சரி.. சீக்கிரம் போ.." என்று விட்டு அவளை அனுப்பி வைத்தார்.

மாமியாரும் மருமகளும் ஒன்று போல சோம்பேறித்தனத்தின் வழி வந்தவர்கள் என்று நிரூப்பிப்பது போல் தன் சமையல் சோம்பேறி தனத்தில் தங்கள் பிறந்த வீட்டில் ஒரு கட்டு கட்ட செல்ல ஆயுத்தமாகினர்.

"சம்யு.." என அழைத்து கொண்டே ஆதி உள்ளே வர,

பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்தவள் தாயின் குரலில், "அம்மா.." என ஓடி வர கூடவே "அத்தை.." என்ற கூவலுடன் தானும் வந்தான் அருண்.

"குட்டிஸ்.." என இருவரையும் அனைத்து முத்தமிட்டு, "இந்தாங்க மில்ஷேக்ஸ் அண்ட் சாக்லேட் ஃபட்ஜ்.. (Milkshakes and Chocolate fudge) எல்லோருக்கும் கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க.." என அங்கிருந்து வரும் போதே பிள்ளைகளுக்காக ஒரு அன்னையாய் செய்து கொண்டு வந்திருந்தாள்.

"சோ ஸ்விட்.. லவ் யூ மா.. லவ் யூ அத்த.." என இரு குட்டிஸ்களும் அவளின் கண்ணத்தில் முத்தத்தை பதித்து விட்டு முன்னே ஓடி விட..

அவர்களை ரசித்து கொண்டே இவளும் உள்ளே வந்தாள்.

"என்ன அண்ணியாரே இப்போ தான் எழுந்திருச்சி ரெடியாகி வரீங்களோ.." என அவந்திகா வம்பிழுக்க,

"அப்படி எல்லாம் இல்லையே.. நான் எப்போவோ எழுந்துட்டேன்.. நீங்க ஏன் இப்படி கேட்குறீங்க அண்ணி.." என்க,

"இல்ல..சும்மா கேட்டேன்.." என அவள் கண்சிமிட்ட,

"அண்ணி.." என அவள் விழிக்க,

அவள் விழிப்பு புரிந்து, "சரி வாங்க அண்ணி சாப்பிடலாம்.." என்க,

"ம்ம்.."

இவர்களின் பேச்சை கேட்ட பெரியவர்களும் சிரித்து கொண்டனர்.

அதில் வருணிகாவோ ஒரு படி மேல் போய், "எங்கே இன்னும் என் சோம்பேறி அத்தை வரலை.." என கேட்டு முடிக்கும் முன்,

"ஆதி, சம்யு.. எங்கே இருக்கீங்க.." என கேட்டு கொண்டே வந்தாள் அபிவதனி.

ஆதினியோ, "ஷ்ஷ்.." என கண்ணை காட்ட,

அவள் சமிக்ஞை புரியாது, "என்ன ஆதி.. நீ இங்கே வந்துட்ட.. அங்க உனக்காக சமைச்சு வச்சுட்டு தானே உள்ள போனேன்.." என அமைதியாக இல்லாமல் ஓவர் பெர்ஃபார்மன்ஸ் பண்ண,

அதில் ஆதி கூறும் முன்னே, "யாரு.. நீங்க சமைச்சு வச்சீங்க அங்க.." என ஆராத்யா கேட்க,

"ஆமாம்.. ஆமாம்.. நான் சமைச்சு வச்சேன்.." தான் பொய் கூறுகிறோம் என அறிந்தே இவளும் இவர்கள் என்ன செய்து விடுவார்கள் என கூற,

"சரி போய் எடுத்துட்டு வாடியம்மா.." என விசாலாட்சி கூற,

அவளோ திருதிருவென முழித்தாள்.

அவளின் முழிப்பில் சிரித்தவர்கள், "ஃபார்ட்டு..ஃபார்ட்டு.." என அவள் காதை செல்லமாய் திருகினாள் அருகே அமர்ந்திருந்த தான்யா,

"அண்ணி, விடுங்க வலிக்குது.." என பொய்யாய் அலற,

"எது நான் பண்றது உனக்கு வலிக்குது.."

"ம்ம்.."

"சரியான வாலுடி நீ.."

"சரி.. இப்போ எங்களுக்கு சாப்பாடு கிடைக்குமா.." என வந்த வேலையில் கவனமாக,

அவளின் கேள்வியில் சிரித்தவர்கள், "கூட்டு களவானிகள்டி நீங்க இரண்டு பேரும்.." என விசாலாட்சி கூற,

"விசு குட்டி.." என ஆதி கூப்பிட,

"ஏய்! உன்னைய எத்தனை தடவ சொல்லிருக்கேன்.. என்னைய அப்படி கூப்பிடாதன்னு அது உங்க தாத்தா மட்டும் தான் என்னைய அப்படி கூப்பிடனும்ன்னு.." என அவர் எச்சரிக்க,

அவளோ வேண்டுமென்றே, "விசு குட்டி ஐ லவ் யூ.." என கண்ணம் கிள்ளி வாயில் போட்டு கொண்டு சாப்பிட முன்னே ஓடினாள்.

அவள் செய்கையில் என்றும் போல் சிரித்தவர், "சரியான வாலு.." என செல்லமாக திட்டி கொண்டே தானும் மற்றவர்களுடன் சாப்பிட சென்றார்.

அந்த உணவு நேரமும் சிரிப்பும், கேலியுமாய் நகர்ந்தது.

************

"சுலோ, நாம ஊருக்கு போயிட்டு வருவோம்." என ராஜசேகர் எடுத்த எடுப்பில் கூற,

"ஏன்? என்னாச்சு திடீர்ன்னு ஊருக்கு போலாம் சொல்றீங்க.." என அவரின் மனைவி சுலோச்சனா கேட்க,

"அது எதுக்கு உனக்கு, நீ தான் ஊருக்கு போகனும்ன்னு சொல்லிட்டு இருந்த.. இப்போ கிளம்புன்னு சொன்னா கேள்வி கேட்டுட்டு இருக்க.." என எரிந்து விழ,

அவருடன் இத்தனை வருட வாழ்க்கையில் இதை பார்த்து பழகியவர், வேறு எதுவும் கூறாது ஊருக்கு செல்ல தயாராகினார்.

"சுலோ, ஒரு நிமிஷம். நம்ம பசங்களையும் கிளம்ப சொல்லு.. எந்த வேலை இருந்தாலும் வந்து பார்த்துக்கலாம்.. போ..போய் சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பி வாங்க.." என்க,

அவரை வெறுமனே பார்த்திருந்தார்.

அவரின் பார்வையை கண்டு,"என்னடி" என சீற,

"ஒண்ணுமில்லை.." என வேகமாய் தலையை ஆட்டி அவர் சொன்னதை செய்ய போனார்.

"எல்லாம் அந்த செத்து போன எஸ்பியால வந்தது. நாசமா போறவன் என்னைய சிக்க வச்சிட்டே போயிருக்கான். இப்போ அவன் செத்தது எப்படின்னு போலிஸ் தொண்ட ஆரம்பிச்சிருக்கு.. சாவுறவன் முன்னே என்ன பண்ணிட்டு இருந்தான்னு அவங்க பார்த்தா என்னைய கைக்காட்டுதுன்னு சொல்றாங்க.. அது எல்லாம் உறுதியாகிடுச்சுன்னா நான் உள்ள போய் கழி திங்க வேண்டியது தான்.."

"அந்த வேந்தன் வேற, போட தான் நீ பணம் கொடுத்த மத்ததுக்கு இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டான்.. அவனுக்கு எதிரா ஒரு ஆதாரம் கூட இல்லாம சரியா வச்சுருக்கான்.. அதனால சொன்ன நான் தான் உள்ளே போகனும் போல.. அவன் ஈஸியா கழண்டிடுவான்.." என அவர் புலம்ப,

அதை கேட்டு கொண்டிருந்த அவர் செயலாளனோ, "ஐயா, நீங்க இப்படி புலம்பாதிங்க ஐயா.. உங்க உடம்புக்கு ஆகாது. அதான் வக்கீல் சொல்லிருக்காருல உங்க மேலே ஏதாவது வந்தா பார்த்துக்கலாம்ன்னு வர மாதிரி இருக்குறதுனால தான உங்களை ஊருக்கு போக சொல்றாரு.. நீங்க போயிட்டு வாங்கய்யா.. அதுக்குள்ள இங்க நம்ம பிரச்சினையை முடிச்சிடுறேனய்யா.." என்க,

"சரி டா.. செல்வா. நீ.. இங்க பாரு.. நான் இவங்களோட போயிட்டு வரேன்.." என்று கூறி கொண்டு இருக்கும் போதே மனைவியும் மகள்களும் வந்தனர்.

அவர்களை கண்டவர் பின், எதுவும் கூறாது, "போய் கார்ல உட்காருங்க எல்லாரும்.." என கூற,

"ஏன் ப்பா.. என்னாச்சு திடீர்ன்னு.." என இளைய மகள் கேட்க,

"அது ஒண்ணுமில்லடா மா.. அம்மா தான் ஊருக்கு போகனும், சொந்தங்களை பார்க்கனும், கோவிலுக்கு பொங்கல் வைக்கனும் சொல்லிட்டு இருந்தா.. அதான் சரி.. ஊருக்கு போகலாம்ன்னு கிளம்புன்னு சொன்னேன்.."

"நாம எப்ப கிளம்பனும்ன்னு நினைச்சாலும் தடையா ஏதாவது வருதுல்ல.. அதான் திடீர்ன்னு கிளம்பலாம்ன்னு சொன்னேன்." என்க,

"சரிப்பா.." என்றாள் அவரின் இளைய மகள்.

ராஜசேகர் ஒரு அரசியல்வாதியாய், கணவனாக எப்படியோ.. ஆனால் தன் மகள்களுக்கு இன்று வரை ஒரு நல் தந்தையாகவே உள்ளார். பிற்காலத்தில் அவர் குணநலத்திற்கு இதுவும் மாறினாலும் மாறுவதற்கு ஆச்சரியப்படுவதற்கில்லை.


இயற்கையின் பருவத்தை போலவே தான் இன்பமும் துன்பமும் மனித வாழ்வில்.



**************

அலர்:08

"என்ன அபி டார்லிங் காலையிலையே முகமெல்லாம் டாலடிக்குது.. என்ன விக்ஷேஷம்?" என தன் புருவத்தை உயர்த்தி கேட்டு கொண்டே அவள் அருகே சோஃபாவில் அமர்ந்தாள் ஆதினி.

"அதுவா.. நேத்து நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்னா அதோட எசன்ஸா இருக்கும்.." என பூரிப்புடன் கூற,

"என்ன ஹேப்பினஸ்.. சொன்னா நானும் ஹேப்பியாவேன்ல.." என ஆர்வமாக,

"அதுவா, இரண்டு நாள் முன்னே உன் கிட்ட புலம்புனல.. உங்க மாமாப்பா திட்டிட்டாருன்னு,"

"ம்ம்.."

"நேத்து அவரே வந்து நைட் என்னைய சாமாதானப்படுத்துற விதமா பல வருஷம் கழிச்சு ஒரு லாங் டிரைவ் கூட்டிட்டு போனாரே.. அதுல மீ வேறி ஹேப்பி அன்னாச்சி மோட் யூ நோ.." என சந்தோஷமாக கூற,

"ஹே.. வாவ்.. வாவ்.. சூப்பர்.. அபி டார்லிங்.. ஐயம் வேறி ஹேப்பி ஃபார் யூ…" என அவருக்கு குறையாத ஆனந்தத்துடன் அவரை அணைத்து கொண்டாள்.

"ஹா..ஹா.. இட் வாஸ் அ பிரக்ஷ்யஸ் மொமன்ட் ஆதி மா.."

"இதுக்காகவே இன்னும் நிறைய சண்டை போடலாம்ன்னு தோனுது.."

"ஆஹா.. அது சரி.."

"அபி டார்லிங் இது எல்லாம் என்னைக்காவது தான் கிடைக்கும்.. அதுக்காக தினமும் கிடைக்கனும்ன்னு எதிர்ப்பார்த்தா நமக்கு தான் அடி விழும்.. அதுக்காக இந்த பேராசை எல்லாம் படவே கூடாது.." என நகைத்து கொண்டே கூற,

"ஹம்.. அது என்னவோ உண்மை தான்.. உங்க மாமாப்பா இதையே நான் தொடர்ந்தேன்னா அவ்வளவு தான்.." என அவளை ஆமோதிக்க,

"என்ன அவ்வளோ தான்னு பேச்சு ஓடிட்டு இருக்கு.." என இவர்கள் உரையாடலின் இறுதி பகுதியை மட்டும் கேட்டு கொண்டே எதிரில் வந்து அமர்ந்தான் விஜய வேந்தன்.

"அது ஒண்ணும் இல்லை ராஜா.. சும்மா பேசிட்டு இருந்தோம். "

"ஓஓஓ.." என புன்னகைத்து கொண்டு இருந்த மனைவியைப் பார்க்க,

அவளோ அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்து 'என்ன' என விழியால் வினவ,

அவனோ "ஒண்ணுமில்லை" என மெல்லிதாக தலையாட்டிட,

இவர்களின் சம்பாஷனைகளை பெரியவராய் கண்டும் காணாது,

"சரி. ராஜா இன்னிக்கு நீ ஆஃபிஸ் போகலை மணி ஒன்பதாச்சே.." என தாயாய் வினவ,

அன்னையின் கேள்வியில் அவரை நோக்கியவன், "அது இன்னிக்கு எனக்கு பதினொரு மணிக்கு ஒரு மீட்டிங்.. அதனால தான் கொஞ்சம் லேட்டா போகலாம்ன்னு.."

"ஓஓ..சரி டா ராஜா."

"சரி. நீங்க பேசிட்டு இருங்க, நான் இந்த குட்டிஸ்ஸை போய் பார்த்துட்டு வரேன்.. இரண்டும் விளையாடுறன்னு பேர்ல என்ன செய்துன்னே தெரியலை ரூம்ல.." என பெரியவராய் அவ்விடம் விட்டு நாசுக்காய் சென்று விட,

அவர் சென்றதை உறுதி படுத்தியவன், தன் மனைவியின் அருகே வந்து பொத்தென்று அமர..

அவளோ, அவனை பார்த்து கொண்டே இருந்தவள் அவன் அமர்வதில் சற்று தள்ளி அமர்ந்தாள்.

அவள் தள்ளி அமர்ந்ததில் இவன் நெருங்கி அமர, மீண்டும் தள்ளி அமர, மீண்டும் அவன் நெருங்க என நடந்து கொண்டு இருக்க,

இதற்கு மேல் அங்கு தள்ளி அமர இடமில்லாததால் அவள் தன் செயலை கைவிட்டு அவனை பார்த்து முறைத்தாள்.

அவள் முறைப்பை கண்டுக்காது, "அதான் கிட்ட வரேன்னு தெரிதுல அப்புறம் எதுக்கு தள்ளி போற.." என சிடுசிடுக்க,

"ஆமாம் நாங்க தான் தள்ளி போறோம்.. இவரு தள்ளவே இல்ல பாரு.." என குறைபட..

"என்னடி குறையெல்லாம் பலமா இருக்கு.." என அவன் வம்பிழுக்க,

"ஆமாம்..ஆமாம்.. குறை தான் போயா.."

"இராத்திரி வீட்டுக்கே வரதில்லை.. ஏதோ டிரிப் போயிட்டு வந்தன்னிக்கு வந்தாரு.. எங்க அப்ப கூட ஒழுங்கா ஒரு - ஒரு மணி நேரம் கூட இருக்கலை.. ஏதோ வேலைன்னு போயிட்டு அர்த்த இராத்திரில வந்துட்டு எனக்கு ஒரு லெக்ச்சர் கொடுத்துட்டு தூங்க வச்சிட்டு திரும்ப ஓடி போயாச்சு.. இதுல இவரு கிட்ட வராறாம்.."

"போயா.." என அவனை பார்த்து முகத்தை வெட்ட,

அவளின் முக வெட்டலில் சிரித்தவன்.. "ஆஹா.. என் அம்மு குட்டி என்னைய ரொம்ப தேடி இருக்காங்க போலையே.." என இன்னும் அவளுடன் ஒன்ற,

"வேணாம்.. ஏற்கனவே செம்ம காண்டுல இருக்கேன், உங்க மேலே பேசாம போயிடுங்க.. வாயை பிடுங்காதீங்க.." என்க,

அவளின் பேச்சில் புன்னகைத்தவன் எதுவும் கூறாது அவளையே பார்த்து கொண்டு இருந்தவனை கண்டு அவள் மீண்டும் வாயை திறந்தாள்,

"ஹம்ம்.. இத்தனை வயசுலையும் காதலா, சண்டை போட்டுடோமேன்னு அத்தம்மாவை சமாதானப்படுத்த மாமாப்பா அவங்களை லாங் டிரைவ் எல்லாம் கூட்டிட்டு போறாரு.."

"ஆனா இங்கே ஒரு நேர் பார்வைக்கே பஞ்சமா இருக்கு.." என பொறிய,

அவள் பொறுமலை கேட்டவன், "ஓஹோ.. அதுல அம்மையாருக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு போல, எங்க அம்மா அப்பா ரொமன்ஸ் டிரைவ் கேட்டு.."

"அது எல்லாம் ஒண்ணுமில்லை.. அவங்க ஹேப்பியா இருக்குறதுல எனக்கு என்ன பொறாமை வர போகுது.." என விரைவாய் பதில் வர,

"அப்புறம் ஏண்டி பொறுமற.."

"நான் ஒண்ணும் அவங்களை பார்த்து எல்லாம் பொறுமல.."

"நீங்க தான் என்னைய பொறும வைக்குறீங்க.."

"நான் என்னடி பண்ணேன்.."

"நீ ஒண்ணுமே பண்ணலைன்னு தான் எனக்கு கோவமே.."

"ப்ப்பே.."

அவளை கண்டு சிரித்தவன்,"இரட்டை அர்த்தமா அம்மு.." என அவள் காதோரம் மீசை முடி உரச ஹஸ்கி வாய்ஸில் கேட்க,

அவன் செய்கையிலும், ஹஸ்கி குரலிலும் அதிர்ந்தவள், "ஹான் அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை.. நீ ஏன் தப்பு தப்பா பேசுற.." என அவனிடமிருந்து விலகி எழ பார்க்க,

அவள் விலகலை கண்டவன், அவளை இழுத்து தன் மேல் போட்டு சோஃபாவில் சாய்ந்திருந்தான்.

அவன் இழுவில் அவன் நெஞ்சில் வேகமாய் விழுந்தவள் வலியில், "விஜி.." என கோவமாய் நிமிர,

அவளின் கோவ பார்வையை பார்த்து கொண்டே அவள் இதழை வேகமாய் சிறை செய்திருந்தான்.

முதலில் வேகமாய் சிறை செய்தவன், நேரம் செல்ல செல்ல தன் உணர்வுகளை ஒரே முத்தத்தில் கடத்துபவனாக வன்மையாக்க, அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் அவனின் இதழ்களை தானும் வன்மையாய் கொய்ய,

வன்மையில் நான்கு இதழ்களும் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டு இதழ்களில் இருந்து சிறு சொட்டாய் குருதி வழியவே தங்கள் இதழ்களை விட்டவர்கள் மூச்சு வாங்கிய படி ஒருவரை ஒருவர் கண் மூடாது பார்த்து கொண்டிருக்க,

மீண்டும் ஒரு முத்த யுத்தம் தொடங்கியது இம்முறை அவளே முன் வந்து அவன் இதழ்களை மென்மையாக சிறையெடுக்க, அவளின் இதழமுதில் சொக்கியவன் தன்னை அவள் வசம் கொடுத்து விட்டு தன் உணர்வுகளை அவளின் புடவை மறைத்த இடையில் கைகளால் அழுத்தி காட்ட,

அவன் கைகள் செய்யும் வேலையில் இவள் மேலே முத்தத்தை வன்மையாக்க என அங்கே ஒரு அழகிய காதல் தவிப்பின் போராட்டம் அரேங்கேற்றி கொண்டு இருக்க,

இவர்களை கலைக்கவென வந்து சேருவது போல் வந்திருந்தான் அரவிந்த்.

"வாவ்..வாவ்.. வாட் எ பஷ்க்ஷணேட் கிஸ்.. சூப்பர்ப்.." என சிரித்து கொண்டே கைத்தட்ட,

அங்கே திடீரென கேட்ட கைத்தட்டலில் அதிர்ந்து தங்கள் மோனநிலையில் இருந்து வெடுக்கென நிமிர்ந்து பார்க்க அரவிந்த் நின்றிருந்தான்.

அவனை கண்டவர்கள் வேகமாக தங்கள் நிலையில் இருந்து பதறி எழ பார்க்க, அவன் கால் தடுக்கி மீண்டும் அவன் மீதே விழ,

அதை கண்டவன் பதட்டமாய்,"ஹே..பார்த்து..பார்த்து.. பொறுமையா எழுந்திரிங்க.. என்ன அவசரம்.." என புன்னகைக்க,

அவன் புன்னகையில் ஆதினியோ அவனை முறைப்பாய் பார்த்தாள் என்றால், விஜயனோ, "ஏன் டா" என்பது போல் பார்க்க,

அவன் அப்போதும் புன்னகை முகமாகவே இருக்க, 'அவனை ஒன்றும் செய்ய முடியாது..' இவர்கள் மெதுவாக எழுந்து நின்று, அவனை பார்த்து முறைக்க,

அவர்கள் முறைப்பை கண்டவன், "இப்போ என்ன இரண்டு பேரும் என்னைய பாசமா பார்க்குறீங்க.." என அவன் உஷாராக வினவ,

அவன் கேள்வியில், "பாசமா தானே பாக்குறோம்.. இப்போ அதுக்கு என்ன?" என விஜயன் வினவ,

"அதானே ஒண்ணுமில்லை.." என நழுவ பார்த்தவன்,

அதை கண்டவன் அவனை பிடித்து அவன் முதுகில் இரு குத்துகுளை பரிசாக கொடுத்தான்.

"டேய்..நான் என்ன டா பண்ணேன்.. புருஷனும் பொண்டாட்டியும் பண்ண வேலைக்கு, என்ன ஏண்டா அடிக்கிறீங்க.."

"சும்மா.."

"உன்னைய யார் டா இப்போ வர சொன்னா.."

"நீ தானே டா என்னைய பத்து மணிக்கு வர சொன்ன பதினொரு மணிக்கு மீட்டிங் போகனும்ன்னு.."

"ஓஓஓ.."

"என்ன ஓஓஓ.. நான் நீ சொன்னதுனால வந்தா இவன் என்னைய அடிக்கிறான்."

"நீ ஷோ காட்டுன்னா நான் என்ன டா பண்ணுவேன்.. போயும் போயும் ஒரு சின்ன குழந்தைய போட்டு அடிக்கிறான்.." என பாவமாய் கூறிட,

"டேய்.. நான் ஷோ காட்டுறதுலாம் இருக்கட்டும்.. உன்னைய குழந்தைன்னு மட்டும் சொல்லாத.." என அவன் மீண்டும் ஒரு குத்து வயிற்றில் குத்த,

"டேய்.. நீ ஷோ காட்டிட்டு என்னைய குழந்தைன்னு சொல்லாதன்னு சொல்லி அடிக்கிற.. போடா.."

"இவனுங்க கிஸ் பண்ணுவாங்களாம் அதை நாம எதுவும் சொன்னா நம்மளை குழந்தைன்னு சொல்லாதன்னு சொல்லி அடிப்பானாம்.. இது எந்த ஊர் லாஜிக் டா.."

"ஏன் டா.. நான் கிஸ் பண்ணது என் பொண்டாட்டிய தான டா.. அப்புறம் எதுக்கு உனக்கு காந்துது.."

"அது என்னால இப்படி ஃபிரியா பண்ண முடியலைல்ல.."

"ஹான்.. அதுக்கு.."

"பின்ன என் தங்கச்சி கோபரேட் பண்ணுறா உன் கூட.. என் பொண்டாட்டி அப்படியா என்னைய மன்டையிலையே அடிப்பா.."

இவர்களின் விளையாட்டுக்களை அமைதியாக நின்று ரசித்து கொண்டு இருந்தவளை பார்த்து, "அப்படி தானே ஆதி.." என தன் தங்கையையும் வம்பிழுக்க,

இவ்வளோ நேரம் வராத நானம் அண்ணனின் வம்பிழுக்கும் பேச்சில் வர, "நான் உங்களுக்கு காஃபி கொண்டு வரேன்.." என சமையல் அறை நோக்கி ஓடி விட்டாள்.

அவள் ஓடியதை சிரித்து கொண்டே பார்த்திருந்தவன் மனதில் சந்தோஷமே.

"மாப்பிள, என்ன தான் நீ என் அத்தை பையனா இருந்தாலும் அப்ப அப்போ எனக்கு ஒரு சந்தேகம் வரும் டா.. எப்படி டா கூட இருந்த மாமன் பொண்னையே கல்யாணம் பண்றானே அந்நோன்யமா இருப்பாங்களா இல்ல நீயா நானான்னு சண்டை போடுவாங்களான்னு.. ஏன்னா வெளில இருந்து வர பொண்ணுங்களே சில சமயம் அந்நோன்யமா இருக்கவோ இல்ல சாதாரணமா பழகவோ அப்பப்ப சண்டை போட்டுட்டு ஏதோ வாழ்க்கை ஓட்டுவாங்க.."

"இதுவோ பிறந்ததில் இருந்தே கூடவே இருந்தது போல தான் இருந்தீங்க, நல்ல நட்பு, பாசம், அன்பு, புரிதல் எல்லாம் இருந்தாலும் கணவன் மனைவியா வரும் போது அது வேறாச்சே.. எல்லாம் சரியா போகுமான்னு தோணும்.."

"ஆனா இப்போ உங்க இரண்டு பேரையும் இப்படி பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு டா.. இதுவும் சாத்தியபடும்ன்னு நீங்க வாழ்ற வாழ்க்கையை பார்க்கும் போது உறுதி படுத்திறீங்க டா.." என ஓர் அண்ணனாய் தங்கையின் வாழ்வை கண்டு மகிழ்வாய் கூற,

அவன் மகிழ்வில் புன்னகைத்தவன், "நீ சொல்றதும் உண்மை தான் மச்சான்.. ஆனா காதலும் புரிதலும் இருந்தா எல்லாம் சாத்தியம் தான்." என உள்ளார்ந்து கூற,

அவர்களின் பேச்சை கேட்டு கொண்டே வந்தவள், அவர்களுக்கு காஃபியை கொடுத்தவள் தனக்கும் எடுத்து கொண்டு,

"அர்வி அண்ணா, எப்பவுமே இந்த காதலும் புரிதலும் எங்களுக்குள்ள இருக்குறவரைக்கும் நாங்க சந்தோஷமா தான் இருப்போம். அப்பப்ப சின்ன பசங்க மாதிரி எங்களை மறந்து சண்டை போட்டாலும் அதை நாங்களே அன்னிக்கு ஈவனிங்குள்ள சரி பண்ணிக்குவோம்.. சோ யூ டோன்ட் வோரி.. எங்க காதலும் புரிதலும் எங்க பந்தத்தை மறக்க விடாது." என சந்தோஷமாய் தன் கணவனின் தோள் சாயந்து கூறினாள்.

அந்தோ பரிதாபம், பாவம் அவள் அறியவில்லை போலும் வேறொரு பந்தத்திற்காக இதே காதலையும் புரிதலுமான பந்தத்தை தானே ஒரு நாள் தவிர்த்து மறப்போம் என்று.

அலர் முகிழ்க்கும்.

****************












 
அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்
அலர்:09

"சரி மாப்பிளை, வா நாம கிளம்பலாம் ஏற்கனவே மணி இங்கேயே 10:45 ஆச்சு.. இனி அங்க போய் சேரத்துக்குள்ள மணி 11:30 ஆகிடும். நாம சீக்கிரம் போகல அப்புறம் பார்ட்டிக்காரன் ஃபோன் அடிச்சிட்டே இருப்பான்.. நான் எதுக்கும் மெசேஜ் அனுப்பி விடுறேன்.. நம்மளே மீட்டிங் கண்டக்ட் பண்றோம்ட்டு லேட்டா போனா நல்லா இருக்காது.."

"எஸ்கூயூஸ் கேட்டுட்டு மீட்டிங் முடிச்சிட்டு வந்த பிறகு என் தங்கச்சி கூட இரு நீ.." என கேலி பேச,

அவனும் அவனுக்கு குறையாத கேலியுடன், "அதுவும் சரி தான். இந்த வேலை பரப்பரப்புல என் மனைவியோட கூட இல்ல என் மகளோட கூட என்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடியல.."

"இதை சைன் பண்ணிட்டா நானும் மைண்ட் ஃபிரியாகிடுவேன்.." என அர்விக்கு மட்டுமல்லாது தன் மனைவிக்கும் சேர்த்தே கூற,

அவன் பதில் புரிந்தது என்பது போல் அவளின் முகத்திலோ புன்னகையின் சாயல்.

"சரி..சரி.. கிளம்பலாம்."

"கிளம்புறோம் டா.. பார்த்துகோ.."

"ம்ம்.. சரி அண்ணா.."

"நான் முன்னே போறேன், நீ பின்னாடி சீக்கிரம் வந்து சேரு.." என அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு செல்ல,

"சரி அம்மு பை.. இன்னிக்கு நைட் வந்து வச்சுக்குறேன்.." என அவள் கண்ணத்தில் அழுந்த முத்தமிட்டு செல்ல,

அவளும் புன்னகை வதனமாக வழியனுப்பி வைத்தாள்.

**********

"ஹேலா, நான் தான் பேசுறேன். எப்படி இருக்கீங்க.."

"நான் நல்லா தான் இருக்கேன். எங்கே இருக்க நீ? சொல்லாம கொள்ளாம போயிட்ட.."

"உங்களுக்கு சொல்ல எனக்கு நேரமே அமையலை.. அப்பா உடனே வந்து எல்லாரும் கிளம்புங்க ஊருக்கு போலாம்ன்னு சொல்லிட்டாரு.. அதான் எதுவும் சொல்ல முடியாமையே கிளம்ப வேண்டியதாகிடுச்சு.."

"ம்ம்.."

"கோவமா.."

"இல்ல.."

"அப்புறம் ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க.."

"என்ன சொல்ல சொல்ற ஊருக்கு போகும் போது ஒரு சின்ன மெசஜ் ஆவது போட்டு இருக்கலாம்ல.. நான் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா, ஆளே இல்லை.. உன்னை பார்க்க அவ்வளோ ஆசையா வந்தேன்.." என்க,

"ஐயம் சாரி, சுரேஷ்."

"ம்ம்.. சரி எப்போ வருவீங்க.."

"அது தெரில அப்பா தான் சொல்லனும்.."

"ம்ம்.. சரி என்ன பண்ணிட்டு இருக்க?"

"சும்மா தான் உட்கார்ந்து இருக்கேன்."

"பக்கத்துல யாராவது இருக்காங்களா?"

"யாருமில்லை.. ஏன் கேட்குறீங்க?"

"சரி. நீ தான் சொல்லாம கொள்ளாம போயிட்டல.. எனக்கு காம்பசேன்ட்டா ஒரு முத்தம் கொடு.."

"எது முத்தமா.. அதுவும் ஃபோன்லையா.."

"அது எல்லாம் முடியாது சுரேஷ்.."

"ஏன் முடியாது.. அதான் பக்கத்துல யாருமில்லையே.."

"நான் உன் மேலே இன்னும் கோவமா தான் இருக்கேன்.."

"அச்சோ சொன்னா புரிஞ்சிக்கோங்க சுரேஷ். நான் இருக்குறது கிராமத்துல இந்த மாதிரி முத்த சத்தம் எல்லாம் வந்தா அவ்வளவு தான்.."

"அப்புறம் நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க.."

"நானே நம்ம காதல் விஷயம் அப்பாக்கு தெரிய வந்தா என்ன நடக்கும்ன்னு பயத்துல இருக்கேன்."

"நீங்க வேற.."

"ஏன் நம்ம காதலை உங்கப்பா ஏத்துக்க மாட்டாரா.. அவரு ஏத்துக்கலைன்னா என்னைய விட்டுருவீயா.."

"அது எல்லாம் இல்லை.. எங்க அப்பா எங்களுக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வாரு.. நம்ம காதலை அவர் கட்டாயம் ஏத்துக்குவாரு.. உங்கள கையெல்லாம் விட மாட்டேன்.."

"இந்த ஜென்மத்துக்கு நீங்க தான்.." காதலோடு கூற,

அவள் பதலில் சிரித்தவன்.

"ம்ம்.. அப்புறம்.."

"என்ன அப்புறம்.."

"வேற எதுவும் இல்லையா.."

"வேற என்ன இருக்கு.."

"நீ தான் சொல்லனும்.."

"நான் என்ன சொல்ல.."

"சரி..நீ போய் தூங்கு போ.. என பெருமூச்சு விட,"

அவனின் பெருமூச்சில் சிரித்தவள், உதடுகள் அலைபேசி திரையில் பதிய "இச்.." என சத்தமிட ஒரு முத்தத்தை கொடுத்து விட…

"ஹேய்.." என அவள் முத்தத்தில் கூச்சலிட்டவன்,

"இன்னிக்கு அவ்வளவு தான்." என கூறி சட்டென அலைபேசியை வைற்று விட்டாள்.

அதை நெஞ்சோடு அனைத்து கொண்டு நெடு நெடு மூச்சு சந்தோஷ மிகுதியில் எடுத்தவள் புன்னகை முகமாக திரும்ப,

அங்கே அவள் தங்கை சினம் கொண்டு இடுப்பில் கைவைற்று நின்றிருந்தாள்.

அவளை கண்டவள் திடுக்கிட்டு, "என்ன ஆழி.. இந்நேரத்துல.. நீ தூங்கலை.." என்க,

"அதை தான் நானும் கேட்குறேன், என்ன இந்நேரத்துல நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்க அக்கா, தூங்கலை.. அதுவும் யாரு கூட முத்தம் கொடுக்குறளவுக்கு பேசிட்டு இருக்க.." என புருவம் உயர்த்த,

"அது..அது.." என தினறியவள்,

"ஹம்.. அது..அது.." என அவளை போலவே கூற,

"அவள் இதற்கு தான் பதில் சொல்லாமல் விட மாட்டாள் என புரிந்து, அவர் என் லவ்வர் டி ஆழி.." என தயங்கி கொண்டே கூற,

"என்னது லவ்வரா.. நீ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்ச.." என அதிர்ச்சியாக வினவ,

"ஹேய், ஏண்டி கத்துற யார் காதுலையாவது விழுந்துற போகுது.." என வேகமாக அவளை நெருங்கி வாயைடைக்க,

அவள் கையை தட்டி விட்டவள், "சரி கத்தல சொல்லு.. இது எப்பத்துல இருந்து நடக்குது.. வீட்டுல அப்பா அம்மாக்கு தெரிஞ்சா, என்னாகும் தெரியும்ல.."

"அது ஒரு இரண்டு வருஷமா தான் லவ் பண்றேன். நான் ஒரு ஐடி கம்பெனியில வோர்க் பண்றேன்ல அங்க என்னோட சினீயர்.."

"அப்பாக்கு ஏற்கனவே நீ வேலைக்கு போறதுல எனக்கு இஷ்டமில்லை.. ஏதோ நீ தனியா ஃபில் பண்ற போல இருக்கு சொல்றதுனால அனுப்பி விடுறேன். பார்த்து நடந்துக்கனு.. சொல்லி தானே உன்னைய அனுப்பி விட்டாரு.. இப்போ நீ என்னடான்னா காதல்ன்னு சொல்ற.." என அவள் வருத்தமாக வினவ,

"உனக்கு புரியாதுடி.. என் ஃபில்லிங்க்ஸ் நீ யாரையாவது காதலிக்கும் போது புரியும்."

"என்ன ஃபில்லிங்கஸ்.. நீ அப்பாவை ஏமாத்துற அருந்ததி.. உனக்கு புரியுதா.."

"அப்பா உனக்காக, என் பொண்ணுக்கு பெஸ்ட்டான வாழ்க்கை துணையை கொண்டு வருவேன்னு சொல்லி எத்தனை பேர பார்த்துட்டு இருக்காரு.. இப்ப இது அப்பாக்கு தெரிஞ்சா எவ்வளோ வருத்தபடுவாரு.."

அவள் பேச்சில் சிறிதே கோவம் கொண்டவள், "அது எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பார்த்துட்டு போ.. சும்மா ஏதவாது சொல்லிக்கிட்டே இருக்காத.."

"பெரிய பொண்ணு மாதிரி நடக்காத சின்ன பொண்ணு மாதிரி நட.. வந்துட்டா எனக்கு அட்வைஸ் பண்ண.." என சிடுசிடுக்க,

"ஏய்! என்னமோ நான் உனக்கு விரோதி மாதிரி பேசுற.. நான் உனக்காக தான பேசுறேன்.. அப்பாக்கு தெரிஞ்சா கோவபடுவாரு அக்கா.."

"அது எல்லாம் கோவபட மாட்டாரு.."

"நீ தேவையில்லாம எதுவும் பண்ணாத.. நான் எப்போ அப்பா கிட்ட சொல்லனுமோ அப்ப சொல்லிக்கிறேன்.. உன் வேலையை மட்டும் பார்.."

"என்னவோ போ.. சொன்னா கேட்க மாட்டேங்குற.. இது அப்பாக்கு பிடிக்காம போகவும் வருத்தத்தையும் கொடுக்கும்.. அது மட்டும் புரியுது எனக்கு.."

"ஏய்! சும்மா நொய் நொய்ன்னாம போடி.." என்க,

"ஹே, ஒரு நிமிஷம்.."

"என்ன?"

"இப்போதைக்கு இது பத்தி நீ அப்பா கிட்ட வாயை தொறக்காத.."

"வாயை தொறந்த அவ்வளவு தான்.." என எச்சரிக்கை செய்ய,

"என்னவோ பண்ணு.. நாளை பின்ன என் கிட்ட வந்து உதவி மட்டும் கேட்டுடாத.. நான் அப்பாக்கு அகைன்ஸ்ட்டா போக மாட்டேன் அவ்வளவு தான் சொல்வேன்.." என்க,

"சரி தான் போடி.. நீ என் கூட இருந்தா என்ன இல்லைன்னா என்ன.." என அவள் காதலென்ற மாய கயிறில் தன் தங்கை தனக்கு சாதகமாக எதுவும் கூறாது இருந்தவள் மேல் கோவம் கொண்டு பேசிட,

ஆழினியும் தன் தாய் தந்தையின் அன்பை இவள் தன் சுயநலத்தால் யாரோ ஒருவருக்காக ஏமாற்றுகிறாளே! என வருந்தி கொண்டு கீழே சென்றாள்.


ஆனால் இவர்கள் தந்தையோ மிக பெரும் சுயநலவாதி என இருவரும் அறியவில்லை.

**************

இரவு நேரம் தங்கள் குடும்பத்துடன் உணவருந்தி விட்டு.. உரையாடி கொண்டிருந்தனர் அனைவரும்.

வீட்டின் பெரிய பெரியவர்கள் தூங்க சென்றிருக்க, பெரியவர்களும் சிறியவர்களும் ஒரு சிலர் தங்களுக்குள் உரையாடி கொண்டிருந்தவர்களை திசை திருப்பியது ஆதினியின்,

"அந்த சேனலை வைங்க தருண் ப்பா.." என்ற குரல்,

"என்ன டா.. என்னாச்சு.."

"ஒரு நிமிஷம் தருண் ப்பா.."

"என்ன நியூஸ்ன்னு பார்க்கனும்.."

அங்கு நியூஸ் சேனலில், 'சென்னை காவல் துறையின் முன்னாள் எஸ்பி அவர்கள் தற்கொலை தான் செய்து கொண்டார். அவரை யாரும் கொலை செய்யவில்லை.. அவர் செய்த பல தவறான செயல்களில் எங்கு தன் காவல் துறை பதவி போயிவிடுமோ என்ற அச்சத்தில் தன் தூப்பாக்கியால் தானே சுட்டு கொண்டார். இதற்கும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான ராஜசேகருக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை..' என செய்திகள் ஓட,

"அப்படி இருக்காதே இந்த ஆள் ஒரு ஜாதி வெறி பிடிச்சவன், பணம் கொள்ளை அடிப்பவன்னுல சொல்றாங்க.. கொஞ்ச நாள் முன்னே ஒரு பெரும் புள்ளியை பற்றின சட்டவிரோத செயல்களுக்கான ஆதாரத்தை திரட்டி நானே ஒரு அறிக்கை தயார் செஞ்சிருக்கேன் ஏதோ ஒரு தனிப்பட்ட பேட்டியில் சொன்னாரு.. அப்படி இருக்கும் போது இவரோட திடீர் மரணம், முதல் விசாரனைல ராஜசேகர் பெயர் அடிபட்டது இப்போ இவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை சொல்றாங்க.." என சத்தமாக தனக்குள்ளே கூறிட,

"ஆதி, என்ன டா.." என ஆர்யன் கேட்க,

"அப்பா இது அந்த எம்.எல்.ஏ ராஜசேகர் பத்தி தான சொல்றாங்க.."

"ஆமாம் டா.."

"அப்ப, அப்பா நீங்களே சொல்லிருக்கீங்க தானே.. இந்த ஆள் சரியில்லைன்னு.. அதே போல இவன் தொகுதியை சேர்ந்த பல பேரும் அதை சொல்லிருக்கறதை நானே காதால கேட்டு இருக்கேன்.."

"அந்த ஏரியாவுக்கு பொதுநல சேவை செய்ய போனப்ப.."

"அப்புறம் எப்படி ப்பா இப்படி வாய் கூசாம பொய் சொல்றாங்க.. இந்த நியூஸ்லையும் அதுவே சொல்றான்.."

"ஆதி மா, பணம் பத்தும் செய்யும்ன்னு சொல்வாங்க அது தெரியுமா உனக்கு.."

புரியாது, தந்தையை நிமிர்ந்து பார்த்தவளின் தெளிவில்லாத முகத்தை கண்டு கனிந்தவர், "ஆதி மா, நான் சொல்ல வருவது பணம் இருந்தா என்ன வேணாலும் செய்யலாம்.. இந்த பணத்துக்காக யார் என்னவென்னாலும் பண்ணலாம்.."

"உண்மையை மறைக்கலாம், ஒருத்தர் இருந்த தடத்தை அழிக்கலாம், ஒருத்தரை நம்ம பக்கம் திருப்பலாம், அதே பணத்தால நம்ம ஒருத்தரை எதிரியா பார்க்கலாம்.. இந்த பணத்துக்கு அவ்வளோ விலை.."

"இதுக்கு விலை போறவன் ஏராளம்.. அதில் ஒருத்தனை பிடிச்சி இப்படி பலதும் செய்ய வைக்கலாம்.."

"நீதியும் நேர்மையும் எங்கேன்னு இப்போ உள்ள காலத்துல கேட்டா.. அப்படின்னா என்னன்னு கேட்பாங்க நம்மளையே.."

"அது தான் இந்த பணம் பத்தும் செய்யும் சொல்றேன்.."

தந்தையின் விளக்கத்தில் தெளிந்தவள், "ஆனா இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு எரிச்சலா இருக்கு ப்பா.."

"நம் எரிச்சல் எல்லாம் இங்க வேலைக்கு ஆகாது ஆதி மா.." என்றார் அஜய்.

"அது ஏன் அஜய் ப்பா.. ஒருத்தர் கூடவா நேர்மையா இருக்க மாட்டாங்க.." என ஆதவ் கேட்க,

"அது அப்படி தான் ஆதவ்.. இங்க நம்ம நேர்மையை எதிர்ப்பார்த்தா நாம தான் முட்டாளாக்க படுவோம்.."என்றார்.

"ஒரு மனிதன் மிகவும் நேர்மையானவனாக இருக்கக்கூடாது. நேராக வளரும் மரம்தான் முதலில் வெட்டுப் படும். நேர்மையான மனிதர்கள்தான் முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்." - சாணக்கியர்.

"இது சாணக்கிய சொல் ஆதவ்.. இப்போ உள்ள காலத்துக்கு இந்த சொல் தான் நேர்மையானவர்களுக்கு அதிகமா பொருந்தும்."

"ஏன்னா நம்ம இருக்குற உலகம் அப்படி.. கொஞ்சம் அசந்தாலும் நம்மளை வீழ்த்த அநேக பேர் இருக்காங்க.."

" சோ இந்த ராஜசேகர், இப்போ இறந்த எஸ்பி.ஆனந்த் ராஜ் எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா தெரியாது.. ஆனா அவங்களுக்குள்ள இருக்க பூசலில் ஒருத்தரை ஒருத்தர் வீழ்த்திக்கிறாங்க மட்டும் தெரியுது இந்த நியூஸ் சேனல்ஸ் மூலியமா.."

"ஆனா அது கூட உண்மையா பொய்யான்னு சம்மந்தபட்டவங்களை தவீர வேற யாருக்கும் தெரிய போறது இல்லை.."

"சோ.. நாம கொஞ்சம் ஏதோ உலக நடப்ப தெரிஞ்சிக்க நியூஸ்ஸ பார்த்தோமா, கடந்தோமான்னு போக வேண்டியது தான்.."

"நமக்கு நாம உண்மையா இருக்கோமா தேவைக்கு ஏற்ப நாம நடந்துக்குட்டு போறது தான் நமக்கு நல்லது."

"நம்ம நேர்மை நீதின்னு பேசுன்னோம் அவ்வளவு தான்." என்றாள் ஆராத்யா.

"சித்தி, என்ன இப்படி சொல்றீங்க.." என அமர் கேட்க,

"உண்மை தான் அமர். உங்க சித்தி சொல்றதில் தப்பே இல்லை.." என தருண் கூறினான்.

"மனித இயல்பு இப்போ அப்படி மாறிடுச்சு அமர் வேற எதுவும் இல்லை.. பிஸின்ஸ்ல இருக்க உனக்கு தெரியாததா என்ன?" என்று வெற்றி வினவ..

"ஹம்ம்.. அது என்னவோ உண்மை தான் மாமா." என்றான் அமோதித்து.

"என்ன சொன்னாலும் எனக்கும் எரிச்சலா தான் வருது.." என யதுநந்தினியும் கூறிட,

"நீ இன்னும் வளரல யது குட்டி.. அதான் உனக்கு புரியலை.." என்றான் விக்ஷேஷ்.

"யாரு.. நான் இன்னும் வளரல.."

"ஆமாம்.."

"சரி..சரி.. நான் வளராமையே இருக்கேன் போங்க.."

"ம்ம்.."

"யாரு வளருல அவ தான் வளர்ந்து இருக்காளே அண்ணா சைட்ல.. நல்ல பூசனிக்காய் மாதிரி நல்ல வளர்ச்சியா தானே இருக்கா.." என கேலி பேசிட,

"டேய், ஆதவ் சும்மா இருந்துடு.. என் வளர்ச்சியை பத்தி சொன்ன அவ்வளவு தான்." என கோவம் கொள்ள,

"போடி.. நீ என்ன சொல்றது.."

"நான் அப்படி தான் சொல்வேன்.." என வம்பிழுக்க,

"மாமா பாருங்க உங்க மகன் என்ன சொல்றான்னுட்டு.." என யது நந்தினி ஆர்யனிடம் புகார் வாசிக்க,

"ஆதவ் சும்மா இரு.." ஆர்யன் அதட்ட,

"ஓகே ப்பா.." என தந்தையின் அதட்டலில் அமைதியானாலும் அவளிடம் வக்கலம் காட்டியே விட்டான்.

"ப்பே.." என வக்கலத்தில் இவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

இவர்களின் விளையாட்டை கண்ட தான்யா சிரித்து கொண்டே, "சரி மணியாகிடுச்சு எல்லாரும் போய் படுங்க.. போதும் பேசுனதும், விளையாண்டதும் என வீட்டின் மூத்த மருமகளாய் கூறிட,

அவரின் சொல்லிற்கு சரியென்பது போல் அவரவர் அறையை நோக்கி சென்றனர்.

அனைவரும் செல்ல, ஆதவ் போகும் யதுவை நிறுத்தி,

"யது.." என்க,

"ஹான் அத்தான்." என திரும்பிட,

"சாரி யது ஹர்ட் ஆகிட்டீயா.. நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. ஐ டின்ட் மீன் இட்.." என்க,

"அச்சோ அத்தான் அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. நீங்க விளையாட தான் செய்தீங்கன்னு எனக்கு புரிஞ்சது. அதான் அமைதியா விட்டேன்.. இல்லை உங்களை ஒரு வழி பண்ணிருப்பேன்.." என போலியாக மிரட்ட,

"அது சரி. ஏதோ பாவம் புள்ளைய பயமுறுத்திட்டோம்ன்னு சாரி கேட்டா.. நீ என்னைய மிரட்டுற.."

"அத்தான்.." என அதிர,

"சும்மா.." என அவள் கண்ணம் தட்ட..

"ஊஃப்.." என சிரித்தவள்.

"ஓகே. குட் நைட் அத்தான்."

"குட் நைட் யது மா.."

என அவர்களும் தங்கள் அறைக்கு சென்றனர்.

சுயநலமில்லா அன்பும், பாசமும், அரவனைப்பும், விளையாட்டுகளும், கண்டிப்புகளும், நல் ஆலோசனைகளுமே ஒரு அழகிய குடும்பத்தின் மனநிறைவை தரும். சுயநலமுள்ள யாவுமே ஒரு அழகிய குடும்பத்தின் மனநிறைவை தராது.


************

அலர்:10

அறைக்குள் சம்யுக்தாவுடன் நுழைந்த விஜயனை கண்டு விட்டு.. பின் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தவளை,

"மம்மா.." என அழைத்திருந்தாள் மகள்.

"என்ன சம்யு மா.." அருகே வர,

"ம்மா, சம்யு கத (கதை) சொல்லு.."

"குட்டி மா, அம்மா டிரெஸ் மாத்திட்டு வந்து கதை சொல்லட்டுமா.."

"இல்ல இப்ப.."

"சம்யு.." என விஜயன் கூப்பிட,

"ம்ஹூம்.." என மகள் அடம் பிடித்தாள்.

என்றும் இல்லாத நாளாக இன்று அடம் பிடிக்கவும் விஜயனும் ஆதினியும் புரியாது குழந்தை அருகே அமர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

"ம்மா.." என்று மகள் கலைத்தாள்.

"சரி குட்டி மா.. அம்மா கதை சொல்றேன்.." என மகள் அருகே சாய்ந்து அமர்ந்து அவளை தட்டி கொண்டே கதை கூறிட,

அதற்குள் தன்னை ஃபிரேஷ் செய்து கொண்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான் விஜயன்.

கதை கேட்டு கொண்டே, குழந்தை தூங்கிட.. இவளுக்கும் தூக்கம் சொக்கிட அப்படியே கட்டிலில் மெதுவாக கீழ் இறங்கி படுக்க முயல,

வேலையில் ஒரு கண் இருந்தாலும் மனைவியையும் மகளையும் இன்னொரு கண்ணில் கவனித்து கொண்டிருந்தவன் மனைவியின் செயலில், "தினு மா.. டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு படு.. உன்னால இதுல தூங்க முடியாது.." அக்கறையாக கூற,

"ம்ம்.." என்று விட்டு தூக்க கலக்கத்துனுடே உடை மாற்றி வந்தவள் கணவன் அருகே அமர்ந்து அவன் தோள் சாய்ந்தாள்.

அவள் தோள் சாயவும் அவளுக்கு வாகாக அமர்ந்தவன், "என்ன டா தூக்கம் கலஞ்சிடுச்சா.."

"ம்ம்.."

"சாரி.. நீ கட்டி இருந்த செமி சில்க் சேரில உன்னால கம்ஃபர்ட்டா தூங்க முடியாதுன்னு தான் உன்னைய மாத்த சொன்னேன்.. உன் தூக்கத்தை கெடுக்க இல்ல.."

"இட்ஸ் ஓகே அத்தான். அதுக்கு எதுக்கு சாரி."

"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ரொம்ப டைட் ஷேட்டூயலா.."

"இல்ல டா.. கொஞ்சம் இன்னிக்கு சைன் பண்ண டிலிங்கோட நெக்ஸ்ட் வொர்க்ஸான டிசைன் வொர்க் வோர்க் பார்த்துட்டு இருக்கேன்.. வேற ஒண்ணுமில்லை.."

"ம்ம்.."

"சரி ஆமா, நீ ஏன் அவ்வளோ எமோஷன் ஆன திடீர்ன்னு அந்த நியூஸ் பார்த்து.."

"அது என்னமோ தெரில அத்தான்.. எனக்கு அந்த ஆளை பத்தின எந்த நியூஸ் வந்தாலும் பிடிக்க மாட்டேங்குது.. ரொம்ப கோவமா வருது அந்த ஆளோட பெயரை கேட்கும் போது எல்லாம்.."

"அப்படி என்ன தினு மா செஞ்சான் அவன் உனக்கு.."

"அதான் எனக்கும் தெரியலை.. ஏதோ ஓவ்வாமையாவே இருக்கு.."

"சரி தான்.."

"அப்ப மேடம் நல்லா தெளிவா தான் இருக்கீங்க.."

"ஆமாம்.. அதான் தூக்கம் கலைஞ்சு போச்சே.."

"அதானே, தூக்கம் கலைஞ்சதுல எனக்கு வசதி தானே.."

"என்ன வசதி.." என அவனை நிமிர்ந்து பார்க்க,

"காலையில யாரோ ரொம்ப பொறுஞ்சி தள்ளுனாங்களா.. சரி அவங்க ஆசையை நிறைவேத்துவோம்ன்னு ஒரு இது.."

அவன் கூற வருவது புரிந்தும் புரியாதது போல, "யாரு பொறுஞ்சி தள்ளுனாங்க.. எனக்கு அப்படி யாரையும் தெரியாதே." என நழுவ பார்க்க,

தன் கையோடு அவள் கையை பிணைத்து கொண்டு அவள் நகருவதை தடுத்தவன், "உனக்கு அப்படி யாரையும் தெரியாதுன்னா விடு.. எனக்கு தெரிஞ்சா போதும்.." என அவன் நெருங்க,

"அது எல்லாம் வேணாம்.. நான் சும்மா பொறிஞ்சேன்.. நீங்க தூங்குங்க.. எனக்கு டையர்ட்டா இருக்கு.."

"அப்படி எல்லாம் சொல்ல கூடாது தினு பேபி.. நீ சும்மா சொல்லிருந்தாலும் நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன்.."

"சோ.. இன்னிக்கு எனக்கு வேணும்.."

"அச்சோ அத்தான் நோ.. நோ.. நாம அப்புறம் பார்க்கலாம்.." என அவனை விட்டு துள்ளி எழுந்தவள் மகள் அருகே சென்று படுத்து கொண்டாள்.

அவள் செயலில் சிரித்தவன், தன் மடி கணிணியை மூடி வைத்து விட்டு தானும் அவள் அருகே சென்று அவளை பின் புறம் இருந்து இறுக்கி அனைத்தவாரு படுத்து கொள்ள,

"ச்சோ, என்ன அத்தான் இது.." என அவன் அணைப்பில் அவன் புறம் திரும்பி படுத்தவள் கேட்க,

"நான் தான் சொன்னன்னே ஃபிக்ஸாகிட்டேன்னு.." என கண்ணடிக்க,

அவன் செயலில் இவள் தான் நாணம் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

"என்னடி.. ஆரம்பிக்கலாமா.."

"ம்ஹூம்.." என தலையாட்ட,

தன் வெற்று மார்பில் புதைந்து இருந்தவளின் தலையாட்டலில் உடல் சிலிர்த்தவன், "ஹய்யோ டெம்ட் பண்ணாதடி பொண்டாட்டி.. அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பல.." என கூறிட,

அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்க முயன்று தோற்று சிரித்தவளை கண்டு தானும் சிரித்தான்.

"இன்னிக்கு ஒரு நாள் தான் உனக்கு லீவ்.. நாளைக்கு நாம வெளில போய் நம்ம பர்சனல் ஸ்பேஸை என்ஜாய் பண்ணலாம் நீ
தூங்கு.."

"நான் உன் கூட இருக்கும் போது எந்த எண்ணமும் இல்லாம இருக்க விரும்புறேன். சோ நாளைக்கு சாய்ங்காலம் நாம வெளில போலாம்.." என்க,

"ம்ம்.." என்றாள்.

"சரி இப்போ தூங்கு.. இல்ல லீவ் கேன்சல் பண்ணிடுவேன்.." என செல்லமாக மிரட்ட,

"ஹான்.. ரொம்ப தான்.." என நொடித்து கொண்டு அவன் மார்பில் தலை வைத்தவளை கண்டு சிரித்தவன், அவள் தலை கோதிட அந்த சுகத்தில் அவள் உறங்கிட, தானும் உறங்கினான்.


மனதில் இனிமையும் அமைதியும் இருந்தால் அழகிய உறக்கம் நம் வசமாகும்.

*************

சென்னையின் ஒதுக்கு புறமாக இருக்கும் அந்த பாதிநிலையில் கட்டாமல் பாழடைந்த கட்டிட்டத்தின் சாளரத்தின் வழியாக சுள்ளென வெயில் அங்கு இருந்தவர்களின் முகத்தில் விழுந்து எரிந்தது.

உடலில் உஷ்ண கதிர்கள் விழுந்து எரிய ஆரம்பிக்க அதை தாங்க முடியாது நிழல் நோக்கி நகர பார்க்க அதை அவர்களால் செய்ய முடியாது போனது.

கடந்த ஐந்து நாட்களாக தங்களை கட்டி உயிரை மட்டும் மிச்சம் வைத்து அடித்து நொறுக்கியது கண்டு, "எப்போதடா எனக்கு மரணம் தருவீர்கள்" என்று நினைக்க வைத்து விட்டான் அவன்.

அவனை எதிர்த்த ஒரே காரணத்தினால் வந்த நிலைமையே இது என அடி வாங்கியவர்கள் நன்கு அறிந்து கொண்டனர்.

"அவன எதிர்க்கும் போதே சொன்னேன் கேட்டாங்களா.. அவனை எதிர்க்குறது சுலபம் இல்லை எதிர்த்தா உயிர் மிச்சம் இருக்காதுன்னு சொன்னேன்.. எதுவும் கேட்காம பிடுங்கி மாதிரி வந்து எதிர்க்க போறோம்ன்னு போயிட்டு இப்படி அடி வாங்க வச்சுட்டானுங்க.."

"நார பையலுங்க.. எவன் நாம சொன்னா கேட்குறான்."

"இதுல நான் தான் ஐடியா கொடுத்தேன்னு வேற போட்டு கொடுத்துட்டானுங்க கருங்கு குரங்குங்க.." என ஒருவன் எருமை மாடு வண்ணத்தில் இருந்தவன் புலம்ப,

"அங்க என்ன டா முனுமுனுக்குற.." அந்த அடி உதையிலையும் தன் அடியாளை பார்த்து குரலை உயர்த்தினான் வேல்ராஜ்.

'ஆமா, என்னைய கத்த தான் இந்த ஆளு லாயிக்கு.. மத்தபடி அவனை அசைக்க முடியாத அளவுக்கு இந்த ஆளு ஒரு வெத்து பீஸ்ஸூ..' என நினைத்து கொண்டே, "ஒண்ணுமில்லைன்ன வலி உயிர் போகுது அதான் கொஞ்சம் சினிமா பாட்டு முனுமுனுத்துட்டு இருந்தேன்.." என,

"ஏண்டா, நாயே அவன என்ன பண்ணலாம்ன்னு வழி சொல்லுவ பார்த்தா.. நீ என்னடான்னா சினிமா பாட்டு முனுமுனுக்குறேன்னு சொல்ற.."

"அண்ணே, நாம என்ன செஞ்சாலும் அவனை ஒண்ணும் பண்ண முடியாது.. இப்போதைக்கு நாம அவர் தயவு இல்லைன்னா வெளில கூட போக முடியாது.."

"நாம அவர் கிட்ட சமாதானமா பேசலாம் முதல்ல.. அப்புறம் சமயம் வரும் போது அடிக்கலாம்.." என்க,

அவன் கூறியதை கேட்டவன், "இதுக்கு நான் சாகலாம் டா.. நான் அவன் கிட்ட சமாதானமா எல்லாம் போக முடியாது.." என கோவம் கொண்டு கத்த,

"அண்ணே, கோவ படாதீங்க.. நாம என்ன ஓரேடியா சமாதானமா போக போறோம் இல்லையே, இங்க இருந்து தப்பிக்க ஒரு வழியா தானே செய்ய போறோம்.. அதுல ஒண்ணும் ஆகிடாதுன்ன.."

"நம்ம வெளில போனா தானே இவனை அடிக்க திட்டம் தீட்டலாம்.." என்க,

அவன் கூறுவதை கேட்ட மற்ற அடியாட்களும், "ஆமா, ண்ணே.. பாண்டி சொல்றதும் சரியா தான் தோனுது.. எத்தனை நாளைக்கு தான் நாம அவன்கிட்ட அடி வாங்கி இங்கே கிடக்குறது.. " என கோவிந்த் என்பவனும் கூற,

சிறிது யோசித்தவன், "சரிடே, நீங்க சொல்றீங்கன்னு நான் அவன் கிட்ட சமாதானம் பேசி பாக்குறேன்.."

"சரிண்ணே.." என சந்தோஷமாக கூற,

"ஒரு நிமிஷம் டே, நான் சமாதானம் பேசியும் அவன் சமாதானம் ஆகலைன்னா.." என நிறுத்த,

"இல்லண்ணே, அவன் சமாதானத்துக்கு வருவான்.." என உறுதியாக கூற,

"இவ்வளோ உறுதியா எப்படிடே சொல்ற,"

"அது என்னமோ எனக்கு தோனுச்சே ண்ணே.." என்க,

"ஹான்.." அவனை கூர்மையாக பார்த்த வேல்ராஜ்.

"உன் போக்கும் பேச்சும்.. எனக்கு சரியா படலைடே.."

"எனக்கு தெரியாம ஏதாதவது சதி பண்றீயாடே.." என்க,

"அச்சோ அண்ணே! நான் அப்படி செய்வேன்னா.. நான் உங்க நாயிண்ணே.. என்ன நம்புங்கண்ணே.." என்க,

"சரிடே ஏதோ சொல்ற உன்ன நம்புறேன்.. ஏதாச்சும் மாறுச்சு.. அவன போடுறேன்னோ இல்லையோ முதல்ல உன்ன தான் போடுவேன்டா.. நியாபகம் வச்சுகோ.."

"ம்ம்.." என்றான்.

இவர்கள் உரையாடி முடித்த சமயம் கதவை படாரென்று திறந்து உள்ளே வந்தான் வேந்தன்.

"என்ன மாநாடு எல்லாம் முடிஞ்சிடுச்சோ.." என நக்கலாக வினவியவாறே அங்கிருந்த இறுக்கையை திருப்பி கால் மேல் கால் போட்டு அமர,

அது வரை தைரியசாலி என காட்டி கொண்டிருந்தவன் அவனை கண்டவுடன் பம்மினான்.

"அது எல்லாம்.. ஒண்ணுமில்லை வேந்தா.."

அவன் கூர் பார்வையில், எதிரில் இருப்பவன் எச்சில் விழுங்க, "அது.. வே..ந்த..ரே.."

"ம்ம்..அது."

"சரி சொல்லு.." என்க,

"என்ன சொல்ல என தெரியாது 'பே' என விழித்தான் அவன்."

"என்ன? என்ன சொல்லன்னு தெரியலையோ.." என நக்கலாக வினவ,

அவன் நக்கலில், "அது வேந்தரே, நான் செஞ்சது தப்பு தான். ஒரே தொழில்ல ஒரு பொறாமைனால உன் கூட மோத வந்துட்டேன்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சு விட்டுறேன்.." என்க,

"உன்ன மன்னிச்சு விட, நான் என்ன இயேசுவா இல்ல புத்தரா.." என காட்டமாக,

"அச்சோ, வேந்தரே நான் அப்படி சொல்லல.. இனி உங்க திசை பக்கம் நான் வரவே மாட்டேன்.. நீங்க எதுன்னாலும் செய்ங்க.. நான் குறுக்க வர மாட்டேன்.."

"எங்கள விட்டுருங்களேன்.." என,

"ம்ம்.. உன்ன விடலாம் தான். ஆனா நீ திரும்பி கர்ணம் வச்சு என்னைய அடிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்.." என்க,

"ஹய்யோ! வேந்தரே, நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன்.. நம்புங்களேன்.."

"டேய் சொல்லுங்கடா.." அடியாட்களை ஏவ,

"ஆமா, வேந்தரே நாங்க உங்க வழிக்கே வர மாட்டோம்.. எங்கள விட்டுறுங்களேன்.." என கெஞ்சிட,

அவர்கள் கெஞ்சலை ரசித்தவன், "சரி. பொழைச்சு போங்க.." என்றிட,

"ஹப்பாடா.." என மூச்சு விடுவதற்குள்,

"ஆனா தினமும் நீங்க வாங்குற கலக்சென்ல எனக்கு பாதி வரணும், ஒரு மாசத்துக்கு அப்படின்னா போங்க.. நான் விட்டுடுறேன்."

"வேந்தரே.." என வேல்ராஜ் அலற,

"என்ன அலறல் ஜாஸ்தியா இருக்கு.." என முன்னே வர,

அதில் பயந்தவன், "இல்ல.. அது எப்படி கலக்சென் காசு கொடுக்க.."

"என்ன கொடுக்க முடியாதா.." என சினம் கொள்ள,

"இல்ல..இல்ல.. கொடுக்குறேன்.."

"ம்ம்.. அது, உயிர் வேணும்ன்னா கொடுத்துடு.. இல்ல என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியும்.."

"நான் உன்ன ஒண்ணும் சும்மா அனுப்ப இங்கே ஒண்ணும் விருந்தாட தூக்கிட்டு வரல புரியுதா.." என சீற,

"நல்லாவே புரியுது வேந்தரே." என்றான் வேல்ராஜ்.

"வீரா.."

"அண்ணே.."

"ம்ம்.." என்று விட்டு செல்ல..

அவன் சொல்லிற்கு அர்த்தம் புரிந்தவன் இன்னொரு முறை அவர்களை நைய புடைத்து விட்டே அனுப்பி வைற்றான் அவனின் விசுவாசி.


அங்கிருந்து வீடு வந்தவன் மனமோ சீற்றத்தின் வசமே தன்னை எதிர்த்தவனுக்கு தண்டனையை கொடுத்த போதும் அவன் சீறும் வேங்கையாகவே இருந்தான். 'என்ன தான் அவனுக்கு தண்டனை கொடுத்து விட்ட போதும் அது போதாது போல் என்றே தோன்றியது வேந்தனுக்கு இருந்தும் தன் மேல் உள்ள தன்னம்பிக்கையால் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.'

ஆனால் பகை என்று ஒன்று வந்தால் அதில் மிச்சம் வைக்க கூடாது என்பது இவ்வேந்தனும் இன்று அறியவில்லையோ? அப்படி அறிந்திருந்தால் பிற்காலத்தில் அவன் மரண வலியை அனுபவிக்காது இருந்திருப்பானோ?

அலர் முகிழ்க்கும்.

**************















 
அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:11


காலை கூறி சென்றது போல், மாலை முன்னெவே வந்தான் விஜயன். தன் மனைவியுடனும் மகளுடனும் நேரம் செலவழிக்க, இத்தனை நாள் அவர்கள் சுற்றுலா முடிந்து வந்து விட்டாலும் தன் வேலையில் அவர்களுடன் ஒன்ற முடியாது இருந்தவன் இன்று கால அமர மாலையே வந்து விட்டான்.

வந்தவன் மகளுடன் ஐயக்கியமாகிட, அவன் மகளோ வெகு நாள் கழித்து தன் தந்தையுடன் இருப்பதை குதூகலத்துடனும் சந்தோஷத்துடனும் மிகவும் கொண்டாடி, இருவரும் விளையாடி கொண்டிருந்தனர்.

"ப்பா, பித்தி (பிடி) சம்யு காணோம்.. சம்யு காணோம்.." என தந்தையும் மகளும் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருக்க,

"சம்யு குட்டி எங்கே.. காணோம்.. ப்ச். அப்பா பாவம் குட்டி.. வந்துடுங்க.." என கத்தி கொண்டே தன் மகளுடன் அவள் வயதுக்கு ஏற்றது போல் விளையாட,

மகளுடன் தானும் சிறு பிள்ளையாய் மாறி ஆடி கொண்டிருந்த கணவனையும் மகளையும் அருகில் உள்ள தோட்ட ஊஞ்சலில் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தாள் ஆதினி.

அவர்கள் ஆர்ப்பரிப்போடு ஆடி கொண்டிருந்து விட்டு ஒருத்தரை ஒருத்தர் அனைத்து முத்தமிட்டு கொண்டவர்கள் அங்கிருந்தே ஆதினியை பார்க்க,

"குட்டி மா.. மம்மாவை கூப்பிடு.. நாம மட்டும் விளையாடுறோம்.. மம்மா சும்மா உட்கார்ந்து இருக்காங்க பாரு.." என,

"ஆமா ப்பா," என தந்தையை ஆமோதித்து தாயை அழைக்க,

"ம்மா.. வா.."

"நான் வரலை.. நீங்க விளையாடுங்க.."

"நா..நா.. ம்மா.. வா.." என்க,

அவள் அடம் அறிந்தவள், "சரி வரேன். ஆனா ஒரு தடவை தான்."

"ம்ம்.." என அவள் மன்டையை ஆட்டினாள்.

"செல்லம்.." என செல்லம் கொஞ்ச,

மகளோ கிளுக்கி சிரித்தாள்.

அவள் சிரிப்பில் லயித்தவளை கலைத்தது கணவனின் குரல், "குட்டி மா.. நாம இரண்டு பேரும் ஒளிஞ்சிக்கலாம்.. அம்மா நம்மளை கண்டு பிடிக்கட்டும்." என ஒரு மாதிரி குரலில் கூற,

"ஹே..ஜாலி..ஜாலி.." என மகள் குதிக்க,

ஆதினியோ கணவனை சந்தேகமாய் பார்க்க, அதை தவிர்த்தவன்..

"நீ ஒண், டூ, த்ரி, எண்ணு ஆதி மா.. நாங்க போய் ஒளிஞ்சிக்கிறோம்."

"குட்டி மா.. வா..வா.. நாம போய் ஒளிஞ்சிக்கலாம்.." என கூறி ஒளிய இடம் தேடி ஓடிட..

அவர்களை கண்டு சிரித்து கொண்டே, "ஒண், டூ, த்ரி.." எண்ணி கணவனையும் குழந்தையும் தேடி செல்ல..

"சம்யு, அத்தான்.. எங்கே இருக்கீங்க.. " என தேடி கொண்டே தோட்டத்தை வளம் வர,

அவளின் தேடுதலை கண்ட மகள் கிளுக்கி சிரித்து காட்டி கொடுத்து விட, அச்சத்ததில் மரம் பக்கம் திரும்பியவள், "சம்யு, கேட்ச்.." என கத்தினாள்.

"ம்மா.." என மகள் சிணுங்க,

"குட்டி மா.. உம்மா.." அவள் கண்ணத்தில் முத்தமிட,

"சரி.. இப்போ அப்பா எங்கே கண்டு பிடிப்போமா.."

"ம்ம்.." என தாயும் மகளும் விஜயனை தேடிட,

அவன் எங்கும் தென்படவில்லை, " என்ன குட்டி அப்பா காணோம்.. " சோகமாக நிற்க,

"ம்மா, அங்க பாரு.." என மகள் கூற,

"அங்கேயா.."

"ம்ம்.."

"சரி. நீ போய் பாட்டி கிட்ட கேக் சாப்பிடு நான் அப்பாவ கண்டு பிடிச்சு கூட்டிட்டு வரேன்.." என்க,

"ம்ம்..சரி..சரி.." என வேகமாக தலையாட்டி விட்டு கேக் சாப்பிடும் குஷியில் ஓடிய மகளை கண்டு விட்டு, பின் தன் கணவனின் பிரேத்தியேக வாசனையை வைற்று அவன் இருந்த மரம் பக்கம் வந்தவள், "விஜி அத்தான் கேச்.." என்க,

அவளை கண்டு, "அச்சோ!" என போலியாக முகம் சுருக்கியவன் மனைவியை இழுத்து அனைத்திருந்தான்.

"அச்சோ! அத்தான் என்ன பண்றீங்க.."

"என்ன பண்றேன்.. ஒண்ணும் பண்ணலையே.." என போலி வியப்பு காட்ட,

"ஹான்.. விடுங்க அத்தான் குட்டி வந்துற போறா.."

"நீ தான் குட்டியை அனுப்பிட்டு என் இடம் தெரிஞ்சு தானே இங்கே வந்த.." என புருவம் உயர்த்த,

"ஹான்.. அது.." என திணற,

"கள்ளிடி நீ.."

"யாரு.. நானு.."

"ம்ம்.."

"ம்க்கும்.. நீங்க தான் கள்ளன்.."

"பரவாயில்லை இருந்துட்டு போறேன்.."

"ஆனா எனக்கு இன்னிக்கு விருந்து வேணும்."

"ஹான். என்ன விருந்து வேணும்.." என புரியாதது போல் வினவ,

"புரியாத மாதிரியே பேசுற.. பார்த்தீயா.."

"எனக்கு உண்மையிலையே புரியலை.." என பாவம் போல் கூற,

"உனக்கு புரியவே வேண்டாம்டி தங்கம். நானே புரிய வைக்குறேன்." என கண் சிமிட்டி சிரிக்க,

அவன் சிரிப்பில் மயங்கியவள், அவனை ரசித்து கொண்டே நின்றாள்.

அவளின் ரசனையில் உள்ளம் சிலிர்த்தவன், அவள் இதழை சிறை செய்ய போக, "அச்சோ அத்தான், என்ன இது? வெட்ட வெளில.." என பதறி விலக பார்க்க,

அவளை தன் அனைப்பில் இறுக்கியவன், "அது நீ என்ன பார்க்குறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்."

"ஹான்.."

"இப்போ எனக்கு முத்தம் வேணும் கொடு.."

"அது எல்லாம் முடியாது.. போயா.."

"என்னது போயாவா.. அது எப்படி நீ போறன்னு பாக்குறேன்.." என சில நிமிடங்கள் கழித்து வாயை துடைத்து கொண்டே, "மோசமான அத்தான் ப்பா நீங்க.." என மர பின்னால் இருந்து வெளியில் வந்தவளை,

"ம்மா.." என மகளின் குரல் அவளை திசை திருப்பியது.

மகள் ஓடி வந்து "அப்பா, கண்டு பிச்சியா.." என கேட்க,

"நான் அப்பாவை கண்டு பிடிச்சிட்டேன் சம்யு குட்டி.." என மகளை தூக்கி கொண்டே கணவன் இருந்த இடத்தை கைக்காட்ட,

அவனும் வெளி வர,"நீங்க இரண்டு பேரும் தப்பு தப்பா விளையாடுறீங்க.. அப்பா பாவம்ல.." என முகம் சுருக்க,

"ந..ந.. நாங்க சதியாத்தான் விளையாடுத்தோம்.. (சரியா தான் விளையாடுறோம்..) என தாயை பார்த்து கண் சிமிட்டினாள் அவள்.

"ஆமாம்..ஆமாம்.." என தாயும் ஒத்து ஊதினாள்.

"சரி..சரி.. எப்படியோ அவுட் பண்ணிட்டீங்க போங்க.." என சலித்து கொள்ள,

"ப்பா.." என தாயின் கையிலிருந்தே மகள் எக்கி அவன் கண்ணத்தில் முத்தமிட,

"என் செல்ல குட்டி மா.." என தந்தையும் அழகாய் முத்தமிட்டு கொஞ்சினான் அம்மலர் செண்டை.

"சரி டா குட்டி, உனக்கு மட்டும் கேக்.. அப்பாக்கு எங்கே?" என கேட்க,

"ப்பா உள்ள வா தரேன்.." என்று தாயையும் தந்தையையும் அழைத்து கொண்டு உள்ளே ஓட,

அவர்களும் புன்னகைத்து கொண்டே அவள் பின்னால் சென்றனர்.

"பாத்தி, அப்பாக்கு அம்மாக்கு கேக்.." என சமையல் அறை சென்று கேட்க,

"இரு குட்டி மா.. பாத்தி எடுத்துட்டு வரேன்.. நீ கீழே போட்டுற போற.."

"இல்ல.. நா போத மாத்தேன்.."

"சரி இந்தா இதை எடுத்துட்டு போ.. நான் இதை கொண்டு வரேன்.."

"ம்ம்.." என்று விட்டு அவருடன் வர,

பாத்தியும் பேத்தியும் வருவதை ரசித்தவர்கள், தங்களிடம் நீட்டிய தட்டை எடுத்து கொண்டு அதிலிருந்த கேக் துண்டை சிறிது மகளுக்கும் ஊட்டி விட்டனர்.

"ப்பா, ம்மா.. நானும் ஆதியும் இன்னிக்கு நைட் கொஞ்சம் வெளில போலாம்ன்னு இருக்கோம்.." என்க,

"ம்ம்.. தாராளமா போயிட்டு வாங்க டா.. இவ வெர்லட் டிரிப் முடிஞ்சி வந்த பிறகு, நீங்க எங்கேயும் போகலைல.." என அபிவதனி கூறிட,

"ஆமா, அம்மா.. கொஞ்சம் வேலை இருந்ததுனால என்னால கூட்டிட்டு போக முடியலை.. அதான் இப்போ கொஞ்சம் ஃபிரி சரி இவ கூட வெளில போலாம்னுட்டு.." என நிறுத்த,

"அதுல என்ன இருக்கு.. உன் பொண்டாட்டி நீ கூட்டிட்டு போற.. போயிட்டு வா டா மகனே.. " என வெற்றி கூறிட,

விஜயன் சிரித்து கொண்டே, "சரிப்பா.. ஆனா குட்டி மா.." என தயங்க,

"அவளுக்கு என்ன.. நாங்க பார்த்துக்குறோம்.. நீங்க போயிட்டு வாங்க.." என அபி கூறிட,

"ம்ம்.. சரி மா.." என அப்போதும் தயங்கிட,

"டேய்.. ரொம்ப நடிக்காத டா.. உன்னையும் உன் தங்கச்சியையும் பார்த்துக்க தெரிஞ்ச எங்களுக்கு இந்த சின்னவளை சமாளிக்க முடியாதா.. ஒழுங்கா அவளை கூட்டிட்டு வெளில போயிட்டு வா.." என வெற்றி கேலியாக கூற,

அதே நேரம், "என்ன என் பெயர் அடிபடுது.." என அப்போது தான் தன் ஒன்லைன் டியுஷன் கிலாஸ்ஸை முடித்து விட்டு படிகளில் இறங்கி வந்த யதுநந்தினி கேட்க,

"அது ஒண்ணுமில்லை யது மா.. உங்க அண்ணன் அவன் பொண்டாட்டியோட வெளில போகனுமா.. சம்யுக்தாவை விட்டுட்டு எப்படின்னு பேசிக்கிட்டு இருக்கான்.."

"அதுக்கென்ன டாட்.. நான் பார்த்துக்குறேன்.. இவங்க என்ஜாய் பண்ணட்டும்.." என்க,

"அதான் உன் தங்கச்சியே சொல்லிட்டாளே.. அவ பார்த்துப்பா.. நீங்க போயிட்டு வாங்க.." என அபியும் சொல்ல,

"சரி மாம்.. சரி டி வாயாடி.." என விஜயன் கூற,

"ஹேலோ.. என்ன சந்தடி சாக்குல.. என்ன வாயாடி சொல்ற போல இருக்கு.." என சண்டைக்கு வர,

"அச்சோ! நான் அப்படி எல்லாம் சொல்வேன்னா.. நான் சரிங்க மேடம்ன்னு தான் சொன்னேன்.. அப்படி தானே ஆதி மா.." என்க,

"ஆமாம்.. ஆமாம்.. அப்படி தான்." என ஆதியும் கூற,

"அண்ணி போதும் உங்க புருஷனுக்கு ஜால்ரா அடிச்சது.." என கிண்டல் செய்ய,

அவள் கிண்டலில் சிரித்தவர்கள், "அதானே ரொம்ப தான்.." என வெற்றியும் விளையாட,

"மாமாப்பா.." என சினுங்க,

"சும்மா டா.. போயிட்டு வாங்க.. குட்டி மாவை நாங்க பார்த்துக்குறோம்.."

"ம்ம்.. சரி மாமாப்பா.."

"சரி டா.. எப்படி டா டின்னர் முடிச்சிட்டு கிளம்புறீங்களா.. இல்ல அதுவும் வெளில தானா.."

"இல்ல மா.. வெளில தான்."

"போகும் போது உங்க மக கண்ணுல படாம போங்க.. இல்ல அவ்வளவு தான் ஒரு வழியாக்கிடு வா.."

"சரி மா.."

"ம்ம்.. அப்புறம் என்ன அண்ணியாரே, போகும் போது இந்த நாத்தனாரை கவனிச்சிட்டு போறது.. உங்க மகளை பார்த்துக்க போற மிக பெரிய பொறுப்பை ஏத்துக்க போறேன்ல.." என கண்ணடிக்க,

"கவனிக்க தானே கவனிச்சிட்டா போச்சு.. நல்லா கையால கவனிக்கவா.. என் அருமை நாத்தனாரே.." என வினவ,

"ஐய்யோ அண்ணி மீ பாவம்.. நான் கவனிக்க சொன்னது என்ன இவங்க கவனிக்குறது என்ன.. நான் போறேன் ப்பா.."

விளையாடி கொண்டே கார்டூன் பார்த்து கொண்டு இருந்த சம்யுக்தாவை நோக்கி, "குட்டி மா.. இன்னிக்கு அத்தை கூட வரீங்களா நாம பீச் போகலாம்.. நீங்க, அருண், ஆருஷ், விதார்த், ஆருஷி, மித்ரா, வர்ஷிணி, ஆதவ் மாமா எல்லாரும் சேர்ந்து போலாமா…" என கேட்க,

"ஓஓ.. போலாம்..போலாம்.. எப்போ போத்தோம் (போறோம்..)"

"இன்னிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல போலாம்.."

"ஐஐஐ.. சாலி..சாலி..(ஜாலி)"

"ம்ம்.. சரி நீங்க போய் எல்லார் கிட்டையும் சொல்லிட்டு வாங்க நாம போகலாம்.."

"சரி த்த.."

"சரி டா குட்டி.. ஓடு.."

"ம்ம்.. எப்படி?" என தன் அண்ணனை பார்த்து புருவம் உயர்த்த,

"தன்னியன் ஆனேன் தங்கையாரே.." என அவன் தலைவணங்க..

"ம்ம்.. நன்றாக இரு குழந்தாய்.."

"அடிங்.. " என போலியாக அடிக்க வர, பின், "சரியான வாலுடி நீ.." என தங்கையின் தலையை ஆட்டினான்.

"டேய்..அண்ணா ஆட்டாத வலிக்குது." என போலியாக கூற,

"எது நான் ஆட்டுறது வலிக்குது.. சரி தான்." என அவன் தலையில் தட்ட…

"இப்ப வலிக்குதா.." என புருவங்கள் ஏறி இறங்க கேட்க,

அவன் தட்டலில் முகம் சுருக்கியவள், "போடா.." என்று விட்டு ஆதவை காண சென்றாள்.

"சரி டா.. இனி பசங்களை அவளும் ஆதவ்வும் பார்த்துப்பாங்க.. நீங்க எப்போ கிளம்பனுமோ அப்ப கிளம்புங்க.. பை என்ஜாய் யூவர் நைட்.." என வெற்றி கூறி நகர்ந்துவிட,

"பை டா கண்ணாஸ்.. கண்டிப்பா சாப்பிடுறுங்க.."

"ஊர் சுத்துறேன்ற பேர்ல சாப்பிடாம மட்டும் இருந்துறாதீங்க.." என அன்னையாய் கூறி விட்டு அவரும் சென்று விட,

"ஹூம்.. வாங்க பொண்டாட்டி நாம கிளம்பலாம்.. வீட்டு பெரியவங்களே நமக்கு பச்சை கொடி காட்டின பிறகு.. நாம இங்க இருக்குறதுல என்ன பயன்.. இன்னிக்கு எனக்கு விருந்து கன்ஃபார்ம் தான்." என மனைவியை ரசித்து கொண்டே கூற,

எதுவும் கூறாது "ம்ஹூம்.." என தலையாட்டி விட்டு அவனுடன் செல்ல தயாராக மாடி ஏறினாள்.

அவளின் வெட்கம் புரிந்தவன் தானும் தங்கள் தனிமை நேரத்தை செலவு செய்ய தயாராக அவளுடன் மாடி ஏறினான்.

கணவன் மனைவியின் அழகிய தருணங்களை கூட ரசிக்க செய்ய அழகான புரிதலான குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது எல்லாம் வரமே.

அலர் முகிழ்க்கும்.

**************
















 
வணக்கம் நட்புக்களே,

மீண்டும் புதிய கதை திரியை இன்று புதுப்பித்ததால் அதன் மகிழ்வை கொண்டாடும் விதமாகவும் அநேகே வாசக அன்பர்களின் ஆசையுடன் கூடிய எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க விரும்பாத காரணத்தாலும் இன்று போனஸ் பதிவாக பண்ணிரெண்டாம் அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.😊😊

இனி அடுத்த பதிவு வியாழன் அன்று.. 😁


இதுவரை பதினொரு அத்தியாயங்களுக்கும் கருத்து, விருப்பம், இதயம் தெரிவித்து போட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த அன்புகளும் நன்றிகளும். 🙏🙏🙏🌹🌹🌹

அடுத்தது முக்கியமாக அமைதி வாசகர்களுக்கு என் மனமார்ந்த அன்புகளும் நன்றிகளும்.🙏🙏🙏🌹🌹🌹

இது போல் என்றும் உங்களது ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்.💖💖

அலர் தழலில் முகிழ்த்த இதமவன்(ள்) பண்ணிரெண்டாம் அத்தியாயம் தளத்தில் பதிந்து விட்டேன்.

குறிப்பு: This is a Love and Romantic Episode. Viewers Discretion Advised.💘💘


அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:12

சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் கருப்பு நிற கம்பளம் விரிந்த தரையில் மிதமான வேகத்தில் ஓடி கொண்டிருந்ததது அந்த கருப்பு நிற பென்ஸ் மகிழுந்து.

காற்றின் விசைக்கு அவளின் கருங்கூந்தல் அவ்வப்போது முகம் மறைக்க அதை ஒதுக்கி கொண்டே மகிழுந்தினுள் ஓடும் காதல் பாட்டுக்களை ரசித்து கொண்டே அவன் அருகே அமர்ந்து வந்தாள் அவனின் இனியாள்.

இனியவளுக்கு ஏற்ற இனியவனாய் தன் பேரின்ப இனிமையை காணும் சந்தோஷத்தில் அவளை அவ்வபோது ரசித்து கொண்டும், ஓடும் பாடல்களை கூடவே பாடி கொண்டும் மகிழுந்தை ஓட்டி கொண்டிருந்தான் அந்த காதல் இனியவன்.

மெல்லிய சந்தன நிற சிஃபோன் புடவையில் அழகின் அழகாய் இருந்த தன்னவளை வம்பிழுக்கும் பொருட்டு,

"என்ன எப்பவும் வாய் ஓயாம பேசும் ஒருத்தர்.. இன்னிக்கு ரொம்ப அமைதியா வராங்க என்ன விஷயம்.." என வினவ,

அவன் தன்னை தான் வினவுகிறான் என அறிந்தும் அமைதியாக இருக்க,

"என்னடி இன்னிக்கு ரொம்ப அமைதி.." என அவளை பார்த்து புருவம் உயர்த்த,

ஏற்கனவே தனக்கு ஒற்ற நிறத்தில் சட்டை அனிந்திருந்தவன் அழகில் மயங்கி அவன் அறியாது ரசித்து கொண்டு வந்தவளை அவன் வம்பிழுக்க, அதில் நாணம் வந்து வார்த்தைகள் தடுமாறி.. "அது எல்லாம் ஒ..ண்ணுமில்லை.. சும்மா தான்." என கூறிட,

"நீ சும்மா இருக்குற மாதிரி தெரியலையே.." என விஷமமாக பார்க்க,

"சும்மா தான் ஒண்ணுமில்லை.." என மீண்டும் கூற..

"ம்ம்.. நம்பிட்டேன்.."

"என்ன நம்பிட்டீங்க.."

"நீ சொன்னதை தான்…"

"அத்தான்.." என சினுங்கிட,

"எதுக்குடி இந்த சினுங்கல்.. நான் தானே.." என கண்ணடிக்க,

"போங்க அத்தான்…" என மீண்டும் சினுங்கி அவன் தோளில் முகத்தை புதைத்து கொள்ள,

"ஹா..ஹா.. என் பொண்டாட்டிக்கு வெட்கம் எல்லாம் வருதுடோய்.." என சத்தமாக சிரித்து கொண்டே கூற,

"அத்தான்.."

"ம்ம்.."

"சும்மா இருங்க.."

"சும்மா இருக்கவாடி உன்னைய தள்ளிட்டு போறேன்.." என மீண்டும் நக்கல் பண்ண,

"அத்தான்.."

"என்ன?" என குணிந்து கேட்க,

அவன் உதடு அவள் நெற்றி உரச, "ஒண்ணுமில்லை.." என தலையாட்டிட..

"ம்ம்.." என அவனும் அதே போல தலையாட்ட,

அவன் செயலில் புன்னகைத்தவள் கீழ் இறங்கி இன்னும் ஆழமாய் அவன் மார்பில் புதைந்தாள்.

அதில் வெடித்து சிரித்தவன், "ஏண்டி இன்னும் கல்யாணமான புது பொண்டாட்டி போல வெட்கப்படுற.. நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது.. இன்னும் உன்கிட்ட அந்த வெட்கம் மாறலேயே.."

"ஏன் மாறனுமாக்கும்.." என புருவம் உயர்த்திட,

"அது மாறாம இருக்குறது தாண்டி அழகு.."

"இன்னும் நீ புது மனைவி போல சினுங்குறதும், வெட்கப்படுறதும் என் மேலே காதல் வயப்படுறதும் பார்க்க பார்க்க எனக்கு இன்னும் ஆசை கூடுதுடி.."

"அப்படியே உன்னைய ரசிச்சு - ரசிச்சு ருசி பார்த்திடனும் போல வேகம் கூடுது.." என அவளை விழுங்கும் பார்வை பார்க்க,

அதில் சிவந்தவள், "போதும் போதும்.. உங்க பேச்சு, அமைதியா காரை ஓட்டுங்க.." என அவன் பேச்சிற்கு முற்று புள்ளி வைக்க கூற,

'அவனா கேட்பான்..'

அவளை இன்னும் சிவக்க செய்ய, "அதெல்லாம் முடியாதுடி.. நான் உன்னை எப்படி ரசிச்சு ருசி பார்க்க போறேன்னு சொல்ல தான் செய்வேன்.."

அவன் பதிலில் அதிர்ந்தவள், "அச்சோ! என்ன வம்பு இது.."

"வம்பா..வம்பு இல்லடி, இது என் ஆசை.."

"என்னது ஆசையா.. ஆளை விடுங்க அத்தான்."

"ரொம்ப தப்பான ஆசையா இருக்கு. நான் காதை பொத்திக்குறேன்."

"நீ காதை பொத்தினாலும் நான் சொல்வேனே.." என கண் சிமிட்ட,

"அச்சோ! அத்தான். அமைதியா வண்டியை ஓட்டுங்க இல்ல நான் கூட வர மாட்டேன்.." என மிரட்ட,

"நீ என்னடி வர மாட்டேன்னு சொல்றது.. உன்னைய தூக்கிட்டு போக உரிமை என்கிட்ட ஸ்ட்ராங்கா இருக்கு.." என அவள் கழுத்தில் இருந்த பொன் சரடை லேசாக தூக்கி காட்ட,

அவன் கையை தட்டி விட்டவள், "ஹான்.. அது என்ன என்னைய தூக்கிட்டு போறது.. நாங்க 'நோ' சொன்னா சொன்னது தான் தெரியும்ல.."

"அதையும் மீறி கைவச்சா சட்டம் தன் கடமையை செய்யும். பார்த்துகோங்க.." என ஒற்றை விரல் கொண்டு மிரட்ட,

"ஆஹான்.. ஆமா பெரிய சட்டம் தான்." என தன்னை நோக்கி நீட்டிய அவள் விரலை வலிக்க கடித்தான்.

"அத்தான்.." என உதறி கொண்டு சிறு வலியில் முகம் சுருங்கிட,

"இப்படியா கடிச்சு வைப்பீங்க.."

"ஆமா, தப்பா பேசினா இன்னும் கடிப்பேன்."

இப்போது கடித்த விரலை பிடித்து முத்தமிட..

"அத்தான்.." அவள் நெளிய,

"நெளியாம சும்மா சாஞ்சி உட்காருடி.." என்க,

"அது சரி. ஆமா அது என்ன தப்பா பேசினா கடிப்பேன்னு சொல்றீங்க.."

"ஆமாம் பொண்டாட்டியே புருஷனை உள்ள தள்ளுன்னா பின்ன கடிக்காம என்ன செய்ய சொல்ற.."

"ஆமா.. நீங்க அப்படியே உள்ள போயிட்டாலும்.. நாங்க கொடுக்குற கம்பிளைன்ட்ல.."

"ஏண்டி.. இப்ப தான் என்ன என்னவோ சட்டம் வந்துருக்கே.. உங்களுக்கு ஆதரவா.."

"ஆமா வந்துருக்கு.. ஆனா எங்க அந்த சட்டத்தை கடைபிடிக்கிறாங்க எல்லாரும்.."

"அது என்னவோ உண்மை தான்.. கடைபிடிச்சா எல்லாமே நல்லா இருக்கும். ஆனா நம்ம இதுல யாரும் செய்ய மாட்டாங்க ஒரு சிலரை தவீர.."

"ம்ம்.."

"பல நியாத்துக்கு சட்டம் கொண்டு வந்தா, இங்கே எப்பவும் அநியாயத்துக்கே சட்டம் குரல் கொடுக்கும்.." என பெருமூச்சு விட,

திடீரென ஞான உதயம் வந்தவனாக, "சரி.. நாம எதுக்கு இதை பத்தி பேசி பொங்குறோம்.. நாம எதுக்கு போறோமோ அதை பத்தி பேசலாம்ன்னு பார்த்தா.."

"நீ பேச்ச மாத்தி மூடை (Mood) மாத்துற.. பிச்சு..பிச்சு.." என அவளை கண்கள் உருட்டி மிரட்ட,

"ஹா..ஹா.." என கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பில் முறைத்தவன், "என்னடி நக்கலா.."

"ச்சே..ச்சே.. அப்படி எல்லாம் இல்லை என் அத்தான் உஷாராகிடுச்சேன்னு ஃபில்ங்.."

"என்ன ஃபிலிங்.. வந்த ஃபிலிங்கை கெடுத்துட்டு நக்கல் வேற.. உன்னைய.."

"என்னைய.."

"ம்ஹூம்.. இப்போ வேணாம்.. நான் சொல்றதோட செஞ்சே காட்டுறேன்."

"பார்ப்போம்..பார்ப்போம்.." என நகைக்க,

"பார்க்க தானடி போற.. பாரு..பாரு.." என அவர்கள் நேரம் போகாது பேசி கொண்டே தாங்கள் வர வேண்டிய இடம் வந்து சேர்ந்தனர்.

மாலை மறைந்தும் மறையாது மெல்ல மெல்ல இருள் வான் ஏறும் நேரம் அந்த இடத்தை அடைய, மெல்ல காரினுள் இருந்து இறங்கியவள் அந்த இடத்தை கண்டு சொக்கி தான் போனாள்.

"வாவ்.. அத்தான் சென்னையில இவ்வளோ அழகான இடமா.." என கூச்சலிட,

இயற்கையின் கொள்ளை அழகை தனக்கே தனக்கு என்று எடுத்தது போல் மிக அழகாக இருந்தது அவ்விடம். சுற்றிலும் வாசனை மலர்களான மல்லிகை, இரவு மல்லிகை, அல்லி, காந்தராஜ், ட்யூபரோஸ், ரோஜா, செம்பருத்தி என, அதை காக்கும் வண்ணம் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், பனை மரங்களும் பரந்து வளர்ந்த மாமரங்களும், வேப்ப மரங்களும், வில்வ மரங்களும் என அடுக்கடுக்காய் ஒன்றோடு ஒன்று பினையாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாய் வளர்க்கப்பட்டிருக்க.. அதன் இடையில் சிறு சிறு பாதைகளாக மரங்களுக்கும், பூ செடிகளுக்கும் அங்கிருக்கும் பெரிய கிணற்றடியின் பம்செட்டில் இருந்து தண்ணீர் செல்லும் வழியும் அமைந்திருக்க பார்க்கவே மிகவும் அழகாய் இருந்தது.

மாலை நேரம் இருள் ஏற சிறு நேரமே இருக்கும் பட்சத்தில் இப்போது தான் தண்ணீர் பாசனம் முடிந்ததற்கான தடயங்களாக மணல் ஈரபதமாக இருக்க காற்றில் அதன் வாசனையை நுகர்ந்து கொண்டே கண்ணை மூடி அழ மூச்சிழுத்தாள் ஆதினி.

"ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.." என ஆழ்ந்து சுவாசிக்க, அவள் தோளில் விஜயனின் கரம் விழுந்தது.

அவளை பின்னிருந்து தோளோடு அனைத்தார் போல் நின்றிருந்து அவள் காதருகே குனிந்து "பிடிச்சிருக்கா தினு மா…" என கிசுகிசுக்க,

திடீரென அவன் கிசுகிசு குரலில் முதலில் அதிர்ந்து பின் மயங்கி, "ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அத்தான். ஐ லவ் இட்.." என திரும்பி நின்று அவனை பார்த்து கூற,

"எப்படி இதை பிளான் பண்ணீங்க.. அமேசிங்.. பார்க்கவே ரம்மியமா இருக்கு.." என கண்களில் ரசனை மிக்க கேட்க,

"சின்ன வயசுல இருந்தே உனக்கு தான் அக்ரி ரொம்ப பிடிக்குமே.. அதுக்கு ஏதாவது செய்யனும்ன்னு தோனுச்சு.. நம்ம கல்யாணத்துக்கு முன்னே ஒரு பிஸ்னஸ் டிரிப் போயிட்டு வந்தேன்ல அங்க இந்த மாதிரி சின்ன இடத்தை கூட விணாக்காம விவசாயம் பண்ணிருந்ததை பார்த்தேன்.. அப்ப தான் தோனுச்சு நம்ம கிட்டேயும் இதே போல இடம் இருக்கேன்னு நியாபகம் வந்தது.. சரி நாமளும் இதே போல பண்ணி தான் பார்ப்போமேன்னு பண்ணது தான் இது.." என அவள் கண்களை பார்த்து கூற,

அவன் காதலில் மெய்சிலிர்க்க நின்றவள், "அத்தான்.." என சந்தோஷ கூவலுடன் கண்கள் கலங்க அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.

அவள் வேக செயலில் தடுமாறியவன் பின் தானும் அவளை இறுக்கி அணைத்து கொண்டே, "ஹேய்.. தினு மா, உனக்கு பிடிக்கும்ன்னு பார்த்தா நீ என்னடான்னா கண்கலங்குற.." என வினவ,

"இது சந்தோஷ மிகுதியில் கலங்குறது, எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லவ் இட்.." என அவனை,நிமிர்ந்து பார்த்து கூற,

"ஐ லவ் இட்.. வெறும் இந்த தோட்டத்துக்கு மட்டும் தானா? இதை செஞ்ச இந்த அத்தானுக்கு கிடையாதா.. நீ ரொம்ப கஞ்சம்டி பொண்டாட்டி.." என குறும்பாக கூற,

"யாரு நானு கஞ்சம்.."

"ம்ம்.."

"சரி தான். இவ்வளோ அழகான இடத்துக்கு கூட்டிட்டு வந்த உங்களுக்கும் நீங்க சொன்ன தகவலுக்கும் கஞ்சம் தனம் இல்லாம தாராளமா.. பரிசு கொடுக்க நினைச்சேன்.. ஆனா அது வேணாம் போல இருக்கு என் விஜிக்கு.." என பரிதாபமாக இழுத்து கூறி கண்ணடிக்க,

அவள் பேச்சில் விழுந்தவன், "என்னது தாராளமான பரிசா? அச்சோ! அது தெரியாம பேசி டைம் வெஸ்ட் பண்ணிட்டேன்னே.. வா..வா.. போவோம்.."

"நாம பரிசு பொருளை திறந்த மனதுடன் பிரிப்போம்.." என கூறி கொண்டே அவளை தன் கைகளில் அள்ளி கொள்ள,

"அச்சோ! அத்தான்.. இறக்கி விடுங்க நான் நடந்து வரேன்."

"அது எல்லாம் முடியாது.. நீ எப்போ நடந்து நான் எப்போ அந்த பரிசு பொருளை திறக்குறது.." என விஷமத்துடன் கூறி கொண்டே வேக எட்டு எடுத்து வைக்க,

"அத்தான்.." என சினுங்கி அவன் மார்பில் முகம் புதைக்க,

அதை கண்டு சிரித்தவன், அந்த மலர்வன தோட்டத்தின் இன்னொரு பகுதியின் நடுவே அழகாய் விற்றிருக்கும் குடில் வீட்டிற்குள் நுழைந்தான்.

வெளியில் தூரத்தில் இருந்து பார்க்க சிறிதாய் தெரிந்த வீடு நெருங்க நெருங்க அதனின் அழகு கண்ணை பறித்தது.

தென்னிந்திய கிராம புற பாணியில் மிக அழகாய் அமைந்திருந்தது அந்த அழகிய ஓட்டு வீடு.

இவர்கள் இனிமையின் இந்திரபுரி. உள்ளே வந்த பிறகே அவளை இறக்கி விட்டான்.

அவன் இறக்கி விட்டதும் வீட்டை சுற்றி பார்க்க கணவன் மனைவி இனிமைக்கே என அமைக்கப் பெற்றது போல் இருந்தது அவ்வழகிய மேற் கூரை மூடியும் மூடாதது போல் இருந்த ஒற்றை முற்றம், சமையல் அறை, குளியல் அறை கொண்ட வீடு. அதற்கு ஏற்றது போல் தேவைக்கே இருக்கும் பொருட்களும். ஒற்றை முற்றத்தில் மிருதுவான மெத்தை விரிப்பு இரு தலையனைகளுடன், அதன் ஓட்டியே சிறு அடி தொலைவில் அழகிய வேலைபாடு கொண்ட கண்ணாடி அமைப்புடன் மர அலமாரி, இருவர் உட்காரும் அளவிற்கு மர நாற்காலியும் மேசையும், வெளிச்சத்திற்காக விடிவெள்ளி மின்விளக்குகளும் என நேர்த்தியாக யாவும் இருந்ததை ஆழ்ந்து ரசித்தவளை பின்னிருந்து அணைத்து கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தான் விஜயன்.

அவன் அணைப்பிலும் செயலிலும் ரசனையிலிருந்து மீண்டவள் வெட்கம் கொண்டு அவனிடமிருந்து விலக பார்க்க,

அவள் விலகலை தன் அனைப்பின் மூலமே தடுத்தவன் அவளை தன்னோடு நெருக்க,

அவன் நெருக்கத்தில் மயங்க நினைத்தவள் தன்னை இழுத்து பிடித்து,

"அத்தான்.."

அப்போதும் அவள் கழுத்தில் இருந்து முகம் எடுக்காமலே, "ம்ம்.." என்றான்.

அவன் உதட்டசைவில் கூசி சிலிர்த்தவள்.

"அத்தான்.. நாம முதல்ல சாப்பிடுவோமே.." என்க,

"சாப்பிட தானே பாக்குறேன் எங்க விடுற நீ.." என கழுத்தில் இருந்தே கூற,

அவன் செயலிலும், பதிலிலும் நாணி சிவந்தவள், "அச்சோ! அத்தான். நான் அதை சொல்லலை.. நிஜ சாப்பாட்டை சொன்னேன்.."

"ப்ளீஸ் அத்தான் பசிக்குது." என பாவமாக கூற,

அவள் குரலின் பேதம் உணர்ந்தவன் மனமே இல்லாது அவளை விட்டு நகர்ந்து, "சரி வா சாப்பிடுவோம்.." என அழைத்து சென்று அங்கிருந்த நாற்காலியில் அவளை அமர வைற்று..

வெளியில் வீட்டின் முன்புற ஓரத்தில் அவர்களுக்காகவென பிரத்யேகமாக தோட்டகாரணிடம் சாப்பாட்டை தயாரித்து கொண்டு வந்து வைக்க சொன்னதை எடுத்து கொண்டு வந்தான்.

சுட சுட சாதமும், கோழி குழம்பும், முட்டையும், ரசமும் என வாசனை ஆளை தூக்க அதன் மனத்தில் உண்டான பசியை ரசித்து ருசித்து சாப்பிட்டனர்.

உணவை முடிந்தவர்கள் அதை ஒதுக்கி வைத்து விட்டு, சற்று இளைபாற வெளியில் செல்ல, பௌர்ணமி இரவு வெளிச்சம் பரவி இருக்க அந்த இடம் இன்னமும் காண ரம்மியமாய் இருந்தது.

அந்த ரம்மியமான மனநிலையில் வெகு நேரம் மௌனமாக அந்த தனிமையின் இரவை ஆழ்ந்து ரசித்து கொண்டே நடந்தனர்.

நேரம் செல்ல செல்ல தென்றல் காற்று பலமாக அடிக்க.. இருவர் இனிய தனிமைக்கு காற்றுடன் உணர்வுகள் சாமரம் வீச.. அழகிய சுக ஆசைகள் வெளி வர..

இனிய ஆசைகளுடன் மீண்டும் வீட்டின் உள்ளே நுழைந்து கதவை சாத்தியதும் தான் தாமதம்.

'இதற்கு மேல் என்னால் பொறுக்காது இயலாது' என அவளை நொடி நேரத்தில் நெருங்கி இதழை சிறை செய்திருந்தான்.

தன் உணர்வுகளின் போராட்டத்தை அதன் வெம்மையை அவளுக்கும் கடத்தும் விதமாய் அமைந்தது அவனின் இதழொற்றல்.

தானும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் அவனின் வேகத்திற்கு தானும் இனை சேர,

இதழொற்றிலின் வேகம் நேரமாக ஆக இருவருக்கும் மென்மை கடந்து வன்மை கடந்து மூச்சு பரிமாறல் கடந்து குருதி கசிய அதன் உவர்ப்பு சுவை அம்முத்த யுத்தத்தை முடிவுக்கு வர வைற்று இருவரும் ஒருவர் முகம் மேல் ஒருவர் முகம் புதைத்து மூச்சு வாங்க நின்றனர்.

தங்கள் வேக மூச்சில் மெல்ல பிரிந்தவர்கள் தன் இனையை கண்டு புன்னகைக்க அப்புன்னகையில் ரோஜா பூவாய் சிவந்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க, அதை ரசனையுடன் ரசித்து.. அவளை கையில் ஏந்தி மெத்தையில் அவளுடன் சரிய,

"கண்கள் நான்கும் கவி பாட..
இதழ்கள் நான்கும் துதி பாட..
விரல்கள் இருபதும் பிண்ணிட..
தேகங்கள் இரண்டும் உரசிட..
கால்கள் நான்கும் அழுத்திட.
இருவர் உஷ்ண மூச்சும் முகத்தில் வீசிட..

மெல்ல மெல்ல அவன் பாரம் போட..
முழுக்க முழுக்க அவள் தாங்கிட..
கழுத்தோர நெளிவில் புதைந்திட..
புதைந்த உதடுகள் உரசிட..
உரசிய இதழ்கள் தேகம் சிலிர்த்திட..
சிலிர்த்த தேகம் உணர்வுகளை எழுப்பிட..

எழுந்த உணர்வுகள் தொடர்ந்திட..
தொடர்ந்த உணர்வுகள் அனைப்பாகிட..
அனைப்புகள் சுக முத்தமாகிட..
முத்தங்கள் நுன்னிய நெருக்கமாகிட..
நெருக்கங்கள் உணர்ச்சி குவியலாய் மாறிட..
உணர்ச்சி குவியல் இனிய ராகமாய் மெட்டிசைத்திட..

இனிய ராகங்கள் அழகிய வில்லு பாட்டாய் அரேங்கேறிட..
அரேங்கேற்ற வேளை முடிவுக்கு வந்திட..
முடிவுகள் வியர்வை துளிகளாய் விழுந்திட..
விழுந்த துளிகள் நிறைவை தந்திட..
தந்த நிறைவு தலைவி தலைவன் நெஞ்சம் சாய்ந்திட..
நெஞ்சத்தின் ஆழ்மன உணர்ச்சிகள் அடங்கிட..

காதலோடு நுதலில் முத்தமிட..
நுதல் முத்தத்தோடு முற்று பெற தோனாது
மனமின்றி முற்று பெற்றது
சிற்றின்பத்தின் பேரின்பமான மோக ஆலாபனை.."


ஆனந்த களியாட்டத்தில் அயர்ந்திருந்தவளை கலைத்தது, "ஹேப்பி எங்கேஜ்மென்ட் டே என் இனியவளே.." என்ற குரல்.

அலர் முகிழ்க்கும்.

**************

கதையின் பதிவை படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.

அதற்கான கருத்து திரி இதோ, 👇👇



உங்கள் கருத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி நான்.

Tata.. மீண்டும் சந்திப்போம்..😊😊

அன்புடன்
டிவின் முவா


Photo Collage.jpg


















 
வணக்கம் நட்புக்களே,

அலர் தழலில் முகிழ்த்த இதமவன்(ள்) பதிமூண்றாம் அத்தியாயம் தளத்தில் பதிந்து விட்டேன்.



அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:13

ஆனந்த களியாட்டத்தில் அயர்ந்திருந்தவளை கலைத்தது, "ஹேப்பி எங்கேஜ்மென்ட் டே என் இனியவளே.." என்ற அவனின் குரல்,

அவன் மாரில் சாய்ந்திருந்தவள் வேகமாய் வியப்பில் நிமிர்ந்து பார்க்க, விஜயனோ கண்களில் காதல் மின்ன, "ஆமாம்டி என் பொண்டாட்டி.. நீ எனக்கு பாதி பொண்டாட்டியா மாறிய நாள். அது வரைக்கும் என் மாமன் மகளா, முறை பொண்ணா, காதலியா, கற்பனை மனைவியா, உன்னை ரசிச்ச நான் என் உரிமையுள்ள மனைவியா ஆழ்ந்து ரசிக்க தொடங்கிய நாள் தான் இன்னிக்கு."

"ஐயம் ப்ளேஸ்ட் டூ ஹேவ் யூ அஸ் மை வைஃப். ஐ லவ் யூ சோ மச் பேபி. லவ் யூ தினு மா.." என காதலாக இதயத்தின் ஆழத்தில் இருந்து கூறியவனை கண்வெட்டாமல் பார்த்திருந்தாள் அவனின் சகதர்மினி.

அவளின் சிலையான பார்வையில், "என்னடி அப்படி பாக்குற.." என கண்சிமிட்டி கேட்க,

அதில் கலைந்தவள், "விஜி அத்து.." என கூவி அவன் இதழை அடைத்திருந்தாள்.

முத்தம் என்றால் முத்தம் அப்படி ஒரு முத்தம் அவன் சொன்ன காதலில் வியந்தவள், நெகிழ்ந்து அவளே தன் வெட்கம் தயக்கம் யாவும் துறந்து தரும் தன் சந்தோஷ உணர்வுகள் மிக்க முத்தம்.

அவளின் உணர்வுகளை வார்த்தையால் கூறாது தன் செயலால் கூறினாள்.

மனைவியின் மகிழ்ச்சியை கணவனும் புரிந்து கொண்டானோ தன்னை அவளுக்கு ஒப்புவித்து அவனவளின் இதழ் கவிதையை ஆழ்ந்து ரசிக்கவே செய்தான் அந்த காதல் கள்ளன்.

மனதின் சந்தோஷ ஆர்ப்பரிப்பு சிறிதே தணிய அந்த அழகிய இதழ் போராட்டமும் இனிதே முடிவுக்கு வந்திருந்தது.

மூச்சு திணற முத்தமிட்டவளை ஆசையாக பார்க்க, அவனின் பார்வையில் நாணியவள் தலை கவிழ, அதை கண்டு அட்டகாசமாய் சிரித்தான் அவன்.

"அது எப்படிடி கொஞ்ச நேரம் முன்னாடி நீ செஞ்ச வேலைல வராத வெட்கம் நான் பார்க்கும் போதும் மட்டுமே வருது.. நான் அப்படி என்ன பார்த்தேனு நீ இப்போ தலை குணியர ஹான்.." என செல்லமாக மிரட்ட,

அப்போதும் தலை நிமிராமலே, "ஹான்.. அது.." என பதில் கூற முடியாது இன்னும் தலை குணிய பார்க்க,

அவளின் செயலை தடுத்தவன் ஒற்றை விரலில் அவள் நாடியில் கைவற்று அவளை நிமிர்த்தியவன், "ஹான்.. அது.." என புருவம் உயர்த்தி ஊக்க,

"அது வந்து.."

"ம்ம்.. வந்து.."

"ம்ம்.. ஒரு ஆர்வ கோளாறுல என்னையும் மீறி இப்படி பண்ணிட்டேன்.." என வெட்கம் கொண்டு திக்கி திணற,

அவளின் சுக திணறலை ரசித்தவன், "ம்ம்.. பட் ஐ லவ் இட்.. எப்பவும் இப்படியே கிடைச்சா எனக்கு டபுள் ஓகே தான்." என வலகண்ணை சிமிட்ட,

"ஹான்.." என வாயை பிளக்க,

அவள் பிளந்த வாயை விரல் வைற்று முடியவன் சிரித்து கொண்டே, "அது என் ஆசைடி பொண்டாட்டி.."

"ஹான்.. அது எல்லாம் கிடையாது.. இந்த மாதிரி எப்பையாவது கிடைச்சா வாங்கிக்கனும்.. சும்மா சும்மா கேட்க கூடாது.. அதுல கிக்கே இருக்காது.."

"அது என்னவோ உண்மை தான்டி பொண்டாட்டி.. பம்பர் ப்ரைஸ் கிடைக்கும் போது வர கிக் தானா கேட்டு வாங்குறதுல வராது தான்." என புன்னகைக்க,

"ஆமா விஜி அத்தான், நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்னு என் மேலே இவ்வளோ காதல். நம்மளோட ஒவ்வொரு விஷயத்தையும் மறக்காம இருக்கீங்க.."

"ஏன் எனக்கு எல்லாம் சில சமயம் மறந்தே போகும் சில விஷயங்கள், அதுல என் பிறந்த நாளே கூட எனக்கு சரியா நியாபகம் இருக்காது, ஆனா நீங்க நம்மை சார்ந்த ஒவ்வொரு விஷயத்தை இவ்வளோ அக்கூயூரேட்டா நியாபகம் வச்சிருக்கீங்க.." என வியந்து கேட்க,

"நம்மளை சார்ந்த ஒவ்வொரு விஷயமும் எனக்கு என் மனதில் கல்வெட்டு போல இருக்கும் தினு மா.. முதன் முதலா உன்னைய கொண்டு வந்து காட்டும் போது நான் அவ்வளோ சந்தோஷப்பட்டேன்.. இன்னும் சொல்ல போனா நான் உன்னை கூட்டிட்டு போகவா கூட கேட்டு இருக்கேன்.."

"அப்பத்தா தான் அவ பெரிய பொண்ணு ஆன பிறகு உனக்கே உனக்கு தான்னு சொல்வாங்க.. உன் கூடவே இருக்க அவ்வளோ பிடிக்கும், உன் சேட்டை, உன் குறும்பு, உன் சிரிப்பு எல்லாம் சின்ன பையான இருக்கும் போது ரசிச்ச நான். வாலிப வயசு வரும் போது நம்மளை தூர நிறுத்தினாங்க அப்ப எனக்கு புரியாம போனது.."

"ஆனா உன்ன விட்டு தூரமா போன பிறகும் உன் நினைவுகளோடவே இருப்பேன்.. உன்னை என்னால மறக்க முடியாமையே இருந்தது. முதல்ல கண்டுக்கல, சரி இத்தனை வருஷம் கூட இருந்ததுனால இருக்குமா இருக்கும்.. என நினைச்சு விட்டுறுவேன்."

"ஆனா இன்னும் வருஷங்கள் கடந்தும் உன் முகம் மட்டும் மறையவே இல்லை.. இந்த முகத்தோட நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா தவிப்பா மாற ஆரம்பிச்சது."

"என்னடா இதுன்னு நான் எனக்குள்ளே தவிச்சப்ப தான் திரும்பியும் உன்ன பார்க்க வாய்ப்பு கிடைச்சது. நம்ம ஊர்ல ஒன்னு விட்ட பெரியப்பா மகன் கல்யாணத்திற்கு நீ வந்திருந்த அழகான பாவடை தாவணில பத்தொன்பது வயசு பொண்ணா.." என அந்நாளின் இனிமையை இன்றும் ரசிப்பவனாய் கூற,

"அன்னிக்கு உன்னைய அந்த இடத்தில் அப்படி ஒரு அழகு சிற்பமா பார்க்கும் போது அப்படி ஒரு ஹேப்பி ஃபில்.. இது வரைக்கும் இருந்த தவிப்பு எல்லாம் எங்க போச்சுன்னு தெரியாத அளவுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. ஐ வாஸ் ஃபிளையிங் தான் சொல்லனும் அப்படி ஒரு ஃபில்.."

"அதே சமயம், நீயும் என்கிட்ட வந்து விஜி மாமான்னு பேசும் போது இன்னும் குதூகலமா இருந்துச்சு.. நான் உன் கூட பேச.. இப்படி நேரம் போயிக்கிட்டு இருக்கும் போது தான் உன்னோட இன்னொரு உறவுல முறை மாமா முறைல கார்த்திக் வந்து, ஹாய் ஆதி குட்டின்னா பாரு.. அவ்வளவு தான் எனக்கு இருந்த இதம் எல்லாம் காணாம போயி அவ்வளோ கோவம் வந்தது."

"அப்படியும் நீ பேச மாட்டன்னு பார்த்தா, நீயோ அவன் கிட்ட சாதாரணமா கார்த்தி மாமான்னு பேச ஆரம்பிச்ச.. அப்ப அந்த சமயம் எனக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லை.."

"அப்படி ஒரு கோவம்.. அவனை அடிச்சு பல்லை கழட்டி கொடுத்துடுற அளவுக்கு கோவம் வந்தது.. அது ஏன்? என்ன? எதுக்கு? இப்படி எந்த ஒரு ஆராய்ச்சியும் பண்ணாம அன்னிக்கு முழுக்க கொதி நிலைல தான் இருந்தேன்."

"அப்புறம் கல்யாணம் எல்லாம் முடிஞ்சு.. நீயும் எனக்கு படிக்கனும்ன்னு சொல்லிட்டு உங்க அப்பா அம்மா கூட கிளம்பிட்ட, நாங்களும் கோயம்பத்துர் போயிட்டோம். ஆனா எனக்கு தான் அன்னிக்கு முழுக்க மனகொதிப்பு அடங்கவே இல்லை.."

"அதுக்கு நான் யோசிக்க, எனக்குள்ளையே பல கேள்விகள், ஏன்? எப்படி? எதுக்கு? இந்த மாதிரி கேள்விகள் என்னையே நானே கேட்டுட்டே என்னோட தினசரி வேலை எல்லாம் பார்த்துட்டு சுத்திட்டு இருந்தப்ப தான், பைக்ல போகும் போது உனக்கு அக்ஸிடண்ட் ஆகிடுச்சுன்னு நியூஸ் எனக்கு தெரிய வந்தது."

"என்ன டா நம்ம அம்முக்கா அக்ஸிடண்ட் அப்படி இருக்க கூடாதுன்னு நான் திரும்பி அம்மா கிட்ட கேட்க, அது உண்மை தான் அம்மா திரும்பியும் சொன்னாங்க.. எனக்கு உன்னைய பார்க்கனும் உன் கூட பேசனும்ன்னு இருந்தது."

"ஆனா அந்த சமயம் என்னால எங்கேயும் நகர முடியாம அப்ப தான் நான் ஆரம்பிச்ச என்னோட புது கம்பெனி வேலை என்னை கழுத்த நெறிச்சுச்சு.. நாளாக நாளாக என் தவிப்பு கூடுச்சே தவிர.. அமைதி மட்டும் கிடைக்கலை.."

"சரி.. ஒரு நாள் ஃபிளைட் பிடிச்சு போயிட்டு வந்துடுறதுல ஒண்ணுமாகிடாதுன்னு நினைச்சு முடிவெடுத்து தான் நான் அம்மா அப்பா, தங்கை எல்லாரையும் கூட்டிட்டு உன்ன பார்க்க ஆசையா வந்தா.."

"அங்க திரும்பியும் கார்த்திக்கையும் அவன் குடும்பத்தையும் பார்த்தேன்.. அவன பார்த்த உடனே எனக்கு திரும்பி கோவம், வெறுப்பு என அந்த கல்யாண விழால என்ன உணர்வுகள் என்னை தாக்குச்சோ.. அதே உணர்வுகள் மீண்டும்.."

"நல்வேளை அவங்க எல்லாரும் உடனே கிளம்பிட்டாங்க.. இல்லைன்னா அங்க இன்னொரு களபரம் நடந்து இருக்கும்.."

"ஆனா அவங்க போன பிறகு ஐ ஃபல்ட் (felt) வெறி கூல்.. அந்த கூல்னஸ்ஸோட உன்னோட ஹேல்த், செக் எப்ஸ் எல்லாம் கேட்டு தெரிஞ்சு தெளிவான பிறகு தான்.. எனக்கு நிம்மதியே.."

"ரொம்ப வருஷம் கழிச்சு, அன்னிக்கு நைட் திரும்பியும் என்னோட ஸ்ட்டே நம்ம வீட்டுல.. அப்ப அந்த சமயம் தான் கொஞ்சம் நிதானமா யோசிச்சு ரீவைன் பண்ணி பார்த்தேன் என்னோட ஃபிலிங்க்ஸ் ஏன் இப்படின்னு.."

"அதுக்கு எனக்கு கிடைச்ச பதில் தான், அட லூசே நீ அவளை காதலிக்கிறடா.. அது தான் அவளுக்கு ஒன்னுன்னா பதறது, யாராவது ஒத்த வயசுல உள்ள பையன் அவகிட்ட பேசுன்னா கோவம் வருதுன்னு.. எனக்கு பதில் கிடைச்சது.."

"அந்த பதில் கிடைச்சதும் எனக்கு அளவில்லாத சந்தோஷம் தெரியுமா.." இன்றும் அந்நாளின் சந்தோஷத்தை அனுபவிக்கும் பொருட்டு கண்கள் மின்ன கூற,

"அந்த சமயமே வந்து அப்படியே உன்னை அள்ளி அணைச்சு முத்தம் கொடுத்து, நான் உன்ன லவ் பண்றடி அம்முன்னு கத்தி சொல்லனும் போல இருந்தது.."

"ஆனா அப்ப என்னால சொல்ல முடியல, ஏன்னா உனக்கு பத்தொன்பது வயசு தான் அப்ப என்ன தான் கல்யாண வயசு வந்தாலும் மனதளவுல நீ மேட்ச்சூரா இருப்பீயா மாட்டீயான்னு தெரில.. என் லவ் உனக்கு புரியுமான்னும் தெரில.. ஏன்னா நீ அந்த சமயம் தான் மெடிக்கல் என்டரியான ஃபர்ஸ்ட் இயர்.. சோ உன்னைய எனக்கு டிஸ்டர்ப் பண்ண மனசு வரல..

"பட் நீ தான் என் வாழ்க்கை துணைன்னு நான் முடிவு எடுத்துட்ட பிறகு தான், என்னையே நானே சமாதானப்படுத்துற விதமா..
சரி அவபடிப்பு முடியட்டும்.. அது வரைக்கும் காத்திருப்போம்ன்னு நினைச்சு அமைதியா இருந்துட்டேன்."

"ஆனா அது வரைக்கும் உன்கிட்ட என் லவ்வை சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. அதுல வேற உன்ன பாதுகாக்குறது தான் எனக்கு பெரிய டாஸ்க்கே.. உன்னோட பேச்சும், விளையாட்டும், புத்திசாலித்தனமும், குணமும் இப்படி எல்லாம் கூட படிக்கிற பசங்களை கவர்ந்து அவன்ல எவனாவது ப்ரோப்பஸ் பண்ணி தொலைச்சி அது உனக்கு பிடிச்சு தொலைச்சிடுச்சுன்னா.. என்ன பண்றது அப்படின்னு ஒரு யோசனை.."

"அந்த சமயம் எல்லாம் நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கும். உனக்கோ இல்ல மத்தவங்களுக்கோ தெரியாம உன்னை எஸ்கார்ட் வேலை பார்த்து.. நீ கடைசி செமஸ்ட்டர்ல இருக்கும் போது உன்ன ப்ரோப்பஸ் பண்ணி அதை நீ அக்ஸப்ட் பண்ற வரைக்கும் என் ஜீவன் என்கிட்ட இல்லன்னு தான் சொல்லனும்.."

"அந்த அளவுக்கு பயந்திருந்தேன் தெரியுமா.." என்க,

அவன் கேள்வியில் அடக்கமாட்டாது சிரித்தாள் அவள்.

அவள் சிரிப்பை கண்டவன், "என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கு.. ஆனா உன்னையும் சும்மா சொல்ல கூடாது எத்தனை பேர் வந்தும் நீ உன்னோட படிப்புல மட்டும் தான் ஃபோக்கஸ்டா இருந்த.. அதுல எனக்கு பயங்கர ஆச்சரியம் தான். தடுமாறுற வயசுலையும் எவ்வளோ மன கட்டுபாடுடி உனக்கு.." என செல்லமாக அவள் மூக்கை பிடித்து ஆட்ட..

"ம்ஹூம்.. அப்படி இல்ல அத்தான். நீங்க மேலே சொல்லுங்க.." என்க,

"அப்புறம் என்ன ப்ரோப்பஸ் பண்ணி நீ அக்ஸப்ட் பண்ண பிறகு தான் எல்லாம் உனக்கே தெரியுமே, எவ்வளோ சீக்கிரம் இந்த அழகியை என்னவளா மாத்த முடியுமோ அவ்வளோ சீக்கிரம் இந்த அழகியை என்னவளா மாத்தி.. குழந்தையும் பெத்து.. இப்போ அவளுடைய குளிரும் தேகத்தில் குளிர் காஞ்சிக்கிட்டு இருக்கேன்.." என கூறி கண்ணடிக்க,

"அத்தான்.." என சினுங்கி அவனுடனே ஒன்ற,

அவள் ஒன்றலில் அட்டகாசமாய் சிரித்தான் அவளின் விஜி அத்தான்.


அலர் முகிழ்க்கும்.

************


கதையின் பதிவை படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.

அதற்கான கருத்து திரி இதோ, 👇👇

https://www.narumugainovels.com/ind...ழலில்-முகிழ்த்த-இதமவ-ன்-ள்-கருத்து-திரி.2875/


உங்கள் கருத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி நான்.

Tata.. மீண்டும் சந்திப்போம்..😊😊

அன்புடன்
டிவின் முவா








 
வணக்கம் நட்புக்களே,

அலர் தழலில் முகிழ்த்த இதமவன்(ள்) பதிநான்காம் அத்தியாயம் தளத்தில் பதிந்து விட்டேன்.

அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:14

இத்தனை வருட வாழ்வில் அவளிடம் கூறாத தன் காதல் கதையை இன்று ஏதோ ஒரு உந்தலில் அவளிடம் கூறியவன் மனமோ சிறகு இல்லாது பறக்க..

அவனின் நெகிழ்வை உணர்ந்தவள், தானும் அந்நிமிடங்களில் களிப்புற்று மௌனம் காத்தவள், சிறிது நேரம் கழித்து,

"அத்தான்.." என ஹஸ்கி குரலில் அழைக்க,

அவளின் ஹஸ்கி குரலில் மோனநிலை கலைந்தவன், "என்ன" என்பது போல் புருவம் உயர்த்த,

அவன் உயர்த்தலில் மயங்கி கொண்டே, "நானும் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா.." என புருவம் உயர்த்த,

அவள் செயலில் என்னவென்பது போல் பார்த்து கொண்டே, "ம்ம்.. சொல்லு.." என ஊக்க,

"நீங்க சொன்னீங்கல தடுமாறுற வயசுலையும் எவ்வளோ மன கட்டுபாடுன்னு.. அந்த மன கட்டுபாடு வந்ததே உங்களால தான்." என்க,

"என்ன? என்னாலையா.." அவள் கூறுவது புரியாது கேட்க,

"ம்ம்.. ஆமாம்.." என தலையாட்டிட,

"அது எப்படி?" அவன் புருவம் சுருக்கி பார்க்க,

"ஆமா.. அன்னிக்கு உங்களை கல்யாணத்துல பார்த்தேன்ல.. அப்பவே நான் உங்க மேலே காதலுல்ல விழுந்தாச்சு.. ஏன்னா நீங்க எப்படி அத்தனை வருஷம் என்னன்னு புரியாம தவிச்சிங்களோ.. அது போல தான் நானும் தவிச்சேன்.."

"ஆனா, எனக்கு அந்த சமயம் அது என்னன்னு புரில.. படிப்பு வேற இருந்ததுனால அந்த ஃபில்ங்கஸை ஒதுக்கிட்டு அதுல ஃபோக்கஸ்ட் ஆனேன்.. அதுவும் நான் விரும்பிய மெடிக்கல் படிக்கனும்ன்னு நினைச்சு அதுல என் முழு கவனத்தை போட.."

"நான் நினைச்ச மாதிரியே எனக்கு மெடிக்கல் படிப்பு கிடைச்சது. அது கிடைச்சு காலேஜ் திறக்குற சமயம் தான் அந்த கல்யாணத்துக்கு வந்தேன்.. அதுவும் இத்தனை வருஷமா பார்க்காத உங்களை இந்த கல்யாணம் மூலமா பார்க்கலாம்ன்னு ஆசையில தான் வந்தேன்."

"ஏன்னா, அப்பத்தா பாட்டிக்கிட்ட சொன்னதை கேட்டேன், வெற்றியும் அபியும் கூட நீங்களும் யதுவும் வருவாங்கன்னு சொல்லி உங்க எல்லாருக்கும் கொடுக்க பரிசு தயார் பண்ணிட்டு இருந்தாங்க.. அப்ப தான் முடிவு பண்ணேன் நாமளும் போவோம்ன்னுட்டு.. அப்பா கிட்ட கேட்க, அப்பாவும் சரின்னு சொல்லி அப்பா, அம்மா கூட எல்லாருமா வந்தாச்சு.."

"வந்த உடனே என் கண்கள் உங்களை தான் தேடிச்சு.. நீங்களும் என்னைய தேடிட்டு தான் வந்தீங்கன்னு தெரிஞ்சு தான் நானே உங்க கிட்ட பேச வந்தேன்.."

"ஹப்பா.. நான் பேசின உடனே உங்க கண்ணுல தெரிஞ்ச சந்தோஷம் பார்க்கனுமே அவ்வளோ அழகா இருந்தீங்க அத்தான். அதே நேரம் கார்த்திக் மாமா வரவும் உங்க கோவத்தையும் பார்த்தேன் அதை நீங்க அடக்குறதையும் கவனிச்சேன்.."

"ஆனா அப்ப எனக்கு ஜஸ்ட் உங்க மேலே ஒரு கிரஷ்ஷோன்னு தான் தோனுச்சு.. இத்தனை நாள் பார்க்காத மாமாவை பார்த்ததுனால வர ஆசையோன்னு எனக்கு ஏகப்பட்ட குழப்பம்.."

"இந்த குழப்பத்தோடையே தான், நான் என்னோட காலேஜ் லைஃப் உள்ள என்ட்ரி.. அந்த சமயம் என் முன்னாடி இருந்த லைஃப் புதுசுங்குறதுனால இந்த எண்ணத்தை திரும்ப ஒதுக்கி வச்சிட்டு புது படிப்பு, புது என்விரோன்மெண்ட்டுன்னு ஃபோக்கஸ் பண்ண ஆரம்பிச்சேன். காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஒண்ணுமே தெரில புரிஞ்சும் புரியாத மனநிலை தான்.. ஆனா படிப்புல கவனமா இருந்தேன்..

"அப்படியே அடுத்த வருஷங்களும்.. அந்த வருஷங்கள் தான் என்னை சுத்தி இருக்குற ஃபர்ண்ட்ஸ்ஸோட பேச்சு, ஃப்ரோஃபஸர்ஸோட லைஃப் அட்வைஸஸ் எல்லாம் கேட்க, கேட்க லைஃப்போட ரியலிட்டி கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது."

"அந்த சமயம் தான் எனக்கு பைக்லையும் அக்ஸிடேன்ட் ஆகி.. நான் வீட்டுல இருந்தது. எல்லாரும் என்னை பார்த்துக்கிட்ட அப்ப கூட உங்களுக்கு தெரிஞ்சும் வராத உங்க மேலே வந்த கோவம் இப்படி இருந்தப்ப தான் இங்க சென்னைக்கு ஒரு கல்யாண்ததை அட்டெண்ட் பண்ண வந்தப்ப தான் கார்த்திக் மாமா குடும்பமும் விஷயம் கேள்விபட்டு பார்க்க வர.. நீங்களும் இத்தனை நாள் வராதவர் அன்னைக்கு வந்திருந்தீங்க.."

"அது வரைக்கும் உங்க மேலே கோவமா இருந்த நான் உங்களை பார்த்த பிறகு என் கோவம் எல்லாம் காணாம போயிடுச்சு.."

"என்ன டா இதுன்னு நான் யோசிக்கும் போது உங்க கோவம், பார்வை, யாரும் பார்க்காம இருந்த உங்க தவிப்பு, துடிப்பு எல்லாம் நான் பார்த்தேன்.."

"நீங்க எனக்கு ஒன்னுமில்லைன்னு எத்தனை தடவை ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு விதத்துல விசாரிச்சது எல்லாம் நான் கேட்டுட்டு கவனிச்சிட்டு தான் இருந்தேன்.."

"நீங்க விசாரிச்சு விசாரிச்சு தெளிவு பெறதுல எனக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம் வந்தது.. அப்புறம் கொஞ்சம் நேரம், தனியா உட்கார்ந்து யோசிச்சு பார்க்கும் போது தான் உணர்ந்தேன். இந்த சந்தோஷம், கோவத்துக்கு பெயர் என்னோட கிரஷ் இல்லை என்னோட காதல் அதுவும் நான் ஆழமா சின்ன வயதிலிருந்தே அதிகமா அன்பு வச்சிருந்த என் விஜி மாமா மேலே வந்த காதல்ன்னு.. புரிஞ்ச நொடி வேகமாக உங்க கிட்ட வந்து சொல்லனும்ன்னு தோனுச்சு.."

"ஆனா, எனக்கு பயம்.. எங்கே நான் என் காதலை சொல்லி நீ சின்ன பொண்ணு.. இது என்ன காதல் பண்ற வயசா.. போய் படி உன் மேலே எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னு அப்படி இப்படி சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டே என் காதலை நான் ஆழ்மனசுல மறைச்சிட்டேன்."

"அப்புறம் நீங்க தெளிவாகி என் நலம் தெரிஞ்ச பிறகு இரண்டு நாளில் கிளம்பிட்டீங்க.. கிளம்பும் போது என்னை ஒரு நிமிஷம்ன்னாலும் பார்த்துட்டு போனீங்க பாருங்க.. அந்த பார்வை சொல்லுச்சு.. நீங்களும் என் மேலே அன்பா இருக்கீங்கன்னு.."

"என்னால இன்னைய வரைக்கும் அந்த பார்வையை மறக்க முடியாது.. அந்த அளவுக்கு உங்க பார்வை என்னை ஆழமா தொட்டது."

"அதுக்கப்புறம் உங்க நினைவுகளை என் மனசுக்குள்ளே வச்சிட்டு.. நீங்க சொல்றதுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன்.. சில சமயம் உங்க பொறுமை என்னைய ரொம்ப குழப்புத்துல ஆழ்த்தும்.. இவரு நம்மள விரும்புறாரா இல்லையான்னு.. ஆனா திரும்பியும் நம்ம ஊர் திருவிழாவுக்கு வந்திருந்தீங்க.."


"அந்த சமயம் வயசு பசங்க, முறை மாமா முறைக்கு இருக்குற பசங்க ஆர்வ பார்வையெல்லாம் பார்த்து நீங்க கொதிச்சது, என்னையும் சத்தம் போட முடியாம நீங்க தவிச்சது.. அப்புறம் ரொம்ப கஷ்ட்டப்பட்டு நீங்க தனியா போய் கிணத்தடியில உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருந்தது எல்லாம் உங்கள கவனிக்காத மாதிரியே கவனிச்சப்புறம் தான் தெரிஞ்சது.. ஆளு நம்மளை விரும்புதுன்னு.. ஆனா நம்ம படிப்புக்காக தக்க நேரம் வரத்துக்கு வெயிட் பண்ணுதுன்னு.."

"முதல்ல கோவம் வந்துச்சு, ஏன் வந்து சொன்னா என்னன்னு என் படிப்பு இதுல எப்படி பாதிக்கப்படும்ன்னு.. அப்புறம் தான் சட்டுன்னு காலேஜ்ல ஃபிரண்ட்ஸ் சிலர் காதல் வயப்பட்டு அதை அவங்க கொண்டு போற விதத்தை பார்த்து.. உங்க மேலே பெருமை தான் வந்துச்சு.. என் படிப்பையும், ஆசையும், கனவையும், கவனத்தையும் கலைச்சிட கூடாதுன்னு நீங்க யோசிச்சு யோசிச்சு செயல்படுறது உங்க பேச்சிலும் நடத்தையிலும் தெரிஞ்சிக்கிட்டேன்.. அது புரிஞ்சவுடனே அப்படியே கட்டி பிடிச்சு முகமுழுக்க கிஸ் பண்ண தான் தோனுச்சு.."

"எனக்கான வாழ்க்கை துணையா உங்களை நினைச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருந்துச்சு.."

"தட் இஸ் த டைம் ஐ ஃபிலட் மேட்லி இன் லவ் வித் யூ விஜி அத்தான்." என கூறிய அடுத்த நொடி அவன் முகமெங்கும் முத்தம் பதித்தாள்.

அவள் முத்தத்தில் திலைத்தவன், "ம்ம்.." என்றான்.


மீண்டும் கூற ஆரம்பித்தாள், "எஸ்.. ஒரு பொண்ணு தன் கணவன் எப்படி இருக்கனும் நினைப்பாளோ அப்படி இருந்தீங்க.. என்னோட கனவுகள், ஆசைகள், அன்புகள், உணர்வுகள், கோவங்கள், பேச்சுக்கள் எல்லாமே உங்களோடதா நினைச்சு நீங்க விலகி இருந்தீங்க.."

"அப்ப உங்க காதலியா மனைவியா வர எனக்கும் அந்த கடமை இருக்குல. அதனால.." என நிறுத்தி அவனை காண,

"அதனால.." அவளை சிரித்து கொண்டே ஊக்க,

"அதனால என்னவர் எப்படியோ அப்படியே நானும். என் ஆசை அவர் ஆசையா மாத்தி அமைதி காக்கும் போது நானும் அதற்கு இணையா செய்யனும்ல.."

"அவ்வளவு தான் சரின்னு என் படிப்பு, என் மெடிக்கல் வொர்க் ,அப்படின்னு கவனம் பதிக்க ஆரம்பிச்சிட்டேன்.. "

"எத்தனையோ ப்ரோப்சல்ஸ் வந்தது அது அத்தனையும் என் காதல் கனவு நாயகனுக்காக மட்டுமேன்னு நினைச்சு அவங்களை ரிஜெக்ட் பண்ணிட்டே வந்தேன்.."

"உங்களுக்கு இது எல்லாம் எப்படியும் தெரியும்.. ஏன்னா நான் என்ன பண்றேன், எது பண்றேன்னு கவனிக்காம இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.. அப்ப எல்லாம் எனக்கு வியப்பாவும், ஆச்சரியமாவும் இருக்கும்.. எப்படி அத்தானால மட்டும் இப்படி இருக்க முடியுது.. அதே சமயம் என் மனசும் தெரியாம எந்த நம்பிக்கையில இவரு இருக்காருன்னு தோனும்.."

"உங்களோட பயம், தவிப்பு, தகிப்பு எல்லாம் ஒரு நிமிஷத்துல காணாம போகும் உங்களோட ஒரு ஸ்டெப்பால ஆனாலும் நீங்க அசருவேன்னான்னு இருந்தது தான்.. என்னைய இன்னும் இன்னும் இழுத்துச்சு உங்க பக்கம்.."

"கடைசி செமஸ்ட்ர் அப்ப நீங்க வந்து, 'இதுக்கும் மேலே என்னால முடியாதுப்பா.. அப்படிங்குற ஒரு மனநிலைல என்னைய வந்து ப்ரோப்பஸ் பண்ண..' ஹப்பாடா.. நம்ம ஆளு வந்தாச்சு நம்மகிட்டன்னு தான் முதல்ல தோனுச்சு.. அப்புறம் நிதானமாகி உங்களோட ப்ரோப்பஸல் அக்ஸ்ப்ட் பண்ணியாச்சு.."

"வீட்டுல பொறுத்தவரைக்கும் ஒரு வயசு வரைக்கும் சேர்ந்து இருந்தவங்க.. நம்ம பேசுனதுலையும் அவங்களுக்கு பிடிச்சத்துலையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. ஆனா நம்ம இரண்டும் பேரும் தனித்தனியா ரகசியமா அறிஞ்சது தான் நம்மளோட காதல்ன்னு தெரியாது.."

"அதை அப்படியே நானும் மெயிட்டைன் பண்ணிட்டேன்.. உங்களோடதாவது எனக்கு தெரிஞ்சது.. ஆனா என்னோடது தெரியவே தெரியாதே அத்தான்.. அப்புறம் எப்படி என் மேலே அவ்வளோ நம்பிக்கை.." என்க,

அவளின் கேள்வியில் புன்னகைத்தவன்.

"அத்தான்.."

"யார் சொன்னா.. எனக்கு தெரியாதுன்னு நீ எந்த கண்களையும், புலம்பலையும் பார்த்து என் உணர்வுகளை படிச்சியோ அதே கண்களை பார்த்து நானும் உன் உணர்வுகளை படிச்சேன்.. நான் கிளம்பும் போது நான் உன் கண்ணில் தெரிஞ்ச உணர்வை கவனிச்சிட்டு தான் போனேன்.. ஆனாலும் எனக்குள்ள ஒரு தயக்கம்.. சரி வர அப்போ பார்க்கலாம்னுட்டு.. ஆனா நாளாக நாளாக அந்த கண் சொன்ன உணர்வு என்னை தொந்தரவு பண்ணிட்டே இருந்தது ஒரு பக்கம்.. அப்புறமா அது எப்படின்னு எல்லாம் தெரியாம இருந்த எனக்கு.. அடிக்கடி என் ஆழ்மனசுல ஒரு குரல் அசரீரி மாதிரி சொல்லிட்டே இருந்தது, நீ எனக்கு தான்னு அதான் தைரியமா இருந்துட்டேன்."

"அது எப்படி அத்தான் அவ்வளோ உறுதியா சொல்றீங்க.. ஒருவேளை நான் உங்க மேலே காதல்ல விழாம.. நீங்க ப்ரோப்போஸ் பண்ணியும் அக்ஸ்ப்ட் பண்ணாம இருந்திருந்தேன்னா என்ன செஞ்சிரூப்பீங்க.." என வியப்பாய் கேட்க,

"அதை பத்தி நான் யோசிக்கவே இல்லைடி.. என் உள்மனசு இவ உனக்கு தான் சொல்லிட்டே இருந்தது.. ஒருவேளை நீ சொல்ற மாதிரி இருந்திருந்தா ஒன்னு நான் என்னைய உனக்கு புரிய வச்சிருப்பேன்.. அப்படி இல்லைன்னா உன் விருப்பம் எதுவோ அதை பண்ணட்டும்ன்னு ஒதுங்கி போய் இருப்பேன்.. என்ன நான் மனசார நேசிச்ச காதல் வலியோட இன்னொரு திருமண வாழ்க்கை இல்லாம வாழ்ந்திருப்பேன். ஆனா அதுவும் எந்த காலம் வரைக்கும் தெரியாது.. எல்லா காதலும் கல்யாண வாழ்க்கையிலா முடியுது.. காலம் மாற என் அம்மா அப்பாக்காக அவங்க மனநிம்மதிக்காக வேற வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் இல்லை என்னைய அப்படியே விட்டுருங்கன்னு சொல்லியும் இருந்திருக்கலாம்.."

"அது அந்த சமயத்துல இருக்குற என்னோட மனநிலையை பொறுத்து முடிவு இருந்திருக்கும்."

"அப்ப அத்தான் உங்க காதலுக்காக நீங்க போராடி இருக்க மாட்டீங்களா.." என சோகமாய் வினவ,

"அதான் உனக்கு புரிய வச்சிருப்பேன்னு சொன்னனேன்னே.. அந்த புரிய வைக்குறது தான் நான் என் காதலுக்காக போராடுறது.. விருப்பம் இல்லாத பொண்ணு கழுத்துல தாலி கட்டி கட்டாய மனைவியாக்கி ஸ்ட்ன்ட் வேலை எல்லாம் பண்ண மாட்டேன் ம்மா நானு.. உன் அத்தான் அந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப அரோக்கண்ட் கிடையாது.."

"இந்த சினிமாலையும் கதையிலையும் வர மாதிரி.. எனக்கு பிடிச்சிருந்தா போதும்.. அவளுக்கு பிடிச்சா என்ன பிடிக்கலைன்னா என்ன.. அவ என்னோட மனைவி அப்படிங்குற பிடிவாதம் எல்லாம் கிடையாது.. பி பிராக்டிக்கல் கல்யாணம்ன்னா இரு மனங்களின் சங்கமம்.. அந்த இரு மனங்கள் ஒத்து போச்சுன்னா போதும்.. அதுவும் இல்லையா.. சிங்கில் இஸ் பெட்டர் தேன் மிங்கிலிங்குன்னு போயிருப்பேன்.." என சிரிக்க,

" அடப்பாவி அத்தான்.." என சிரித்தவள்,

"என்ன?" என புருவம் உயர்த்த,


"அத்தான், யூ ஆர் சோ லவ்லி.. இந்த காதல் கிடைக்க, நான் ரொம்ப கொடுத்து வச்சு இருக்கனும்.. அதனால தான் என்னவோ எனக்கே எனக்கா நீங்க கிடைச்சிருங்கீங்க.." என அவன் வெற்று மார்பில் முத்தம் பதிக்க,

அதில் சிலிர்த்தவன், "நீ எனக்கானவ நான் உனக்கானவான்னு இருந்தா அது எப்படி வேணாலும் நடக்கும் தினுமா.." என மென் நகையுடன் கூற,

"ஆனா, பயங்கர கேடி டி நீ.. என்னமா என்னைய வாட்ச் பண்ணி காதலிச்சிருக்க.. ஆனா அதை ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன் அதுவும் கல்யாணமாகி இத்தனை வருஷமும்.."

"ஹான்.. நீங்க மட்டும் என்னவாம்.. நீங்க சொன்னீங்களா உங்க காதலை.." என முறுக்க,

"அது என்னமோ தெரிலடி எனக்கு சொல்றதை விட, நாம வாழ்ற வாழ்க்கையில் காட்ட தான் தோனுச்சு.."

"ஆனா பாரு நானாவது உன்னை ப்ரோப்போஸ் பண்ணேன்.. ஆனா நீ இருக்கீயே கமுக்கமா எனக்கும் பிடிச்சிருக்குறதோட முடிச்சிட்ட போடி.."

"இதை தான் பெண்கள் மனசு கடலை போல ஆழமானதுன்னு சொல்றாங்களோ என்னவோ?"

"ஆனாலும் எனக்கு இந்த விஷயத்துல உன் மேலே கோவம் கோவமா வருது.." என முகம் தூக்க,

"அச்சோ! என் விஜிக்கு கோவமா வருதா.. அப்ப கோவத்தை தனிப்போமா.." என அவன் முக திருப்பலில் சிரித்து கொண்டே வினவ,

"ஹான்.. அது எப்படி.." சிறிதே கோவத்தில் இருந்தவன் அவள் பேச்சின் பேதத்தை புரியாது கேட்க,

"அது எப்படின்னு நான் சொல்றதை விட செஞ்சே காட்டுறேன்." என கூறியவள்,

கணவன் அதிகாரத்தை தனதாக்கி அவன் மேல் பரவி படர்ந்தாள்.


"மீண்டும் ஒரு முத்த போராட்டம்
முழுக்க முழுக்க காதல் ராகத்தில்..
ஆழ் மன ரகசியங்கள் வெளி வந்த களிப்பில்,
நடந்தேறியது சுகமான கட்டில் மற்போர்..
வென்றது கணவனா? மனைவியா?
தோற்றது கணவனா? மனைவியா?
என்ற வினாகளுக்கு பதிலே இல்லாது அங்கு வென்றது காதல்..காதல்..காதல்.. இருவரின் காதல் மட்டுமே..
இன்னிசை கச்சேரி அழகாய் நிறைவுக்கு வந்திட..
சுக உணர்வில் அயர்ந்தன காதல் கிளிகள்..
இரு உள்ளங்களின் சங்கமத்தில் பிண்ணி பிணைந்திருந்தனர் காதல் மாடப்புறாக்கள்..
மனதின் இன்ப களிப்பில் அவளவன் சேயாய் குடிபெயர்ந்தான் அவனவளிடம்.."



சந்தோஷ சாரலில் நனைந்திருந்தவனை கலைப்பது போல் அவளின் கேள்வி,

"இப்போ சொல்லுங்க இந்த காதல் சொல்லி தெரியனுமா இல்ல அழுத்தமா உணர்ந்து வாழ்வோமா?" என புருவம் தூக்க,

அவளின் கேள்வியில் அவளின் முகம் பார்த்தவன்.. அவள் புருவ தூக்கலிலும், விழியின் வீழ்ச்சியிலும் மயங்கியவன், "இந்த காதல் சொல்லி தெரியவே வேணாம்டி என் இனியவளே.. நாம் அழுத்தி வாழ்ந்தே காலம் முழுக்க உணர்வோம்." என கூற,

அவனின் பதிலில் மகிழ்ந்தவள் அடுத்த நொடி அவன் இதழ்களை தன் வசப்படுத்த அதற்கு ஒற்ற விசை போல் தானும் தன் காதலை அழுத்தமாக உணர்த்த, நீண்ட நெடிய நேர இதழ் போராட்டத்தின் முடிவில் அவன் கண்ணை பார்த்து கூறினாள்,


"ஐ லவ் யூ டூ த மூன் அண்ட் சன்..
ஐ லவ் யூ டூ த ஹார்ட் அண்ட் பீட்..
ஐ லவ் யூ டூ த ஷேட்ஸ் ஆஃப் கலர்ஸ்..
ஐ லவ் யூ டூ த இன்ஃபைனட் செல் ஆஃப் பாடி..
வித் ஆல் திஸ் இம்மார்ட்டலிட்டி,
லவ் யூ சோ மச் மிஸ்டர் விஜயவேந்தன்.."


அவளின் காதல் வார்த்தையில் தன்னை இழந்தவன் தன் மனதின் மகிழ்ச்சியை, "லவ் யூ டூ த ப்ரேஸியஸ் ஆஃப் செகண்ட்ஸ் மை டியர் வைஃபி மிஸஸ் ஆதினி விஜயவேந்தன் என வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாது தன் இறுகிய அணைப்பிலும் இதழோடு இதழ் இணைந்த அச்சாரத்திலும் கூற,

அவன் காதலிலும் செயல்களிலும் கரைந்தவள் அவனிடமே தஞ்சமடைய..

இனிய காதல் சம்பாஷனைகளில் ஒருவரை ஒருவரை மௌனமாய் பார்த்து கொண்டே இருக்க,

"என்ன.." என அவன் புருவம் உயர்த்த,

அவளும் அதே போல் உயர்த்த,

அதை கண்டவன், "ம்ஹூம்.." என தலையாட்டி அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, "தூங்கலாமா.." என்க,

"ம்ஹூம்.. வேணாம்.." என அவள் மறுப்பாய் அசைக்க,

"வேணாமா? அப்ப என்ன பண்ணலாம்.." என புருவம் உயர்த்த,

அவனை நாண கண்களோடு பார்க்க, அவளின் விழியிர்ப்பில் உருகியவன் மீண்டும் ஒரு காதல் போரை தொடங்கி அந்த பௌர்ணமி நிலவின் குளிர்ச்சிக்கு துணையாய் தங்கள் காதல் தழலில் குளிர் காய்ந்தனர் அவ்வழகிய மனம் படைத்த மாடப்புறாக்கள்.


இன்று இவர்களின் உரையாடல் பிற்காலத்திலும் தொடருமா? இன்று இவர்களின் மனம் இணையின் அவரவர் அவர்களின் உணர்வுக்கும், பிடித்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மனமது பிற்காலத்திலும் அதை கடைப்பிடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


அலர் முகிழ்க்கும்.

"I love you to the moon and sun,
I love you to the heart and beat,
I love you to the shades of colours,
I love you to the infinite cell of body,
With all this Immortality,
Love you so much Mr.Vijaya Vendhan."

-Devine Moi(Guess Me)



***************



கதையின் பதிவை படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.

அதற்கான கருத்து திரி இதோ, 👇👇



உங்கள் கருத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி நான்.

Tata.. மீண்டும் சந்திப்போம்..😊😊

அன்புடன்
டிவின் முவா
 
Last edited:
வணக்கம் நட்புக்களே,

அலர் தழலில் முகிழ்த்த இதமவன்(ள்) பதினைந்தாம் அத்தியாயம் தளத்தில் பதிந்து விட்டேன்.


அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள்

அலர்:15

“மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!’ 'கெட்டிமேளம்! கெட்டிமேளம்!' என்ற ஐயரின் குரலிலும் மந்திரத்திலும் மனம் நிறைந்த ஆசையுடன் மங்கல நான் அணிவிக்க இருந்தவன் இன்று மனம் கொதிக்க மங்கல நானை அணிவித்தான்.

இருந்தும் ஏனோ மனதின் ஓரத்தில் நிம்மதி பரவியதை அவனால் தடுக்க இயலவில்லை.

அவன் மனதிற்கு நேர்மாறான மனநிலையா அல்ல நடுநிலையா ஏதோ ஒரு மனநிலையில் மருண்ட விழிகளுடனும், மனதில் சிறு அச்சத்துடனும், ஒரு வகையான அமைதியுடனும் அவன் அணிவித்த மங்கல நானை அவன் கண்ணை சந்தித்து சிரம் தாழ்த்தி ஏற்று கொண்டாள் அச்சுந்தரி.

இங்கு மனமக்கள் மனநிலையோ இவ்வாறு இருக்க, மண்டப்பத்தில் கூடியிருந்தவர்களின் மனநிலையோ 'என்ன டா இப்படி ஆகி போச்சே! நமக்கு எதுக்கு வம்பு.. நாம அமைதியா இருந்துருவோம் இல்லை எவன் அடிவாங்குறது..ஏதோ ஒண்ணு நல்லா இருந்தா சரி." என மனநிலையோடு கையில் இருந்த அட்சத்தையை தூவினர்.

அதற்கு நேர்பதமாய் இருந்தது அந்த திருமணத்தை நடத்த தீர்மானித்தவர் மனநிலை, எரியும் அணலாய் கொதித்து கொண்டிருக்க,

அவர் மனைவியோ, இனி தன் மகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்குமோ? என அச்சத்துடன்..

தமக்கையோ, "ம்ம்.. இனி தான் ஆட்டம் சூடுபிடிக்க போகுது.. நான் ஆசை பட்ட வாழ்க்கையை கெடுத்தால, இப்போ பாரு அவ ஆசைப்பட்ட வாழ்க்கை இல்லாமலே தொங்கல்ல நிற்குது.. நல்லா அனுபவிக்கட்டும்.." என வஞ்ச எண்ணத்துடன் தன் கணவன் அருகே நின்று பார்த்து கொண்டிருந்தாள்.

ஆக மொத்தம் ஒவ்வொருவரின் மனநிலையும் வெவ்வேறு ரீதியில் பயணித்தது.

"கந்தா.."

"பாஸ்!"

"வந்தவங்களை சாப்பிட அழைச்சுட்டு போய் நல்ல கவணிச்சு அனுப்பி விடு.. என் மாமனார் சாப்பாட்டு ஏற்பாட்டை ரொம்ப பிரமாதமா பண்ணிருக்காரு.." என நக்கலாக கூற,

அவன் நக்கலில் அவனால் மாமனாராக்கப்பட்டவரால் பல்லை மட்டும் தான் கடிக்க முடிந்தது.

கந்தனிடம் கூறியவன் மாமனாரை பார்த்து நக்கலாக நகைத்தவன், தன் மனைவியிடம் திரும்பி, "போவோமா இனியா.." என எழுந்து, குனிந்து அவள் முன் தன் வலக்கையை நீட்ட,

அவளோ எதுவும் கூறாது அவனை நேருக்கு நேர் பார்வையை பார்த்து கொண்டே நீட்டிய கைமேல் தன் கையை வைக்க, அவள் கையை அழுந்த பிடித்தவன் அவள் எழ உதவிட, எழுந்து நின்றவள் கையை அப்போதும் விடாது அழுத்தி பிடித்தவன் தன் முன்னால் நின்றிருக்கும் தன் உடன் பிறவா தம்பிகளை கண்டு,

"என்ன டா இன்னும் இங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க.. உங்க அண்ணி இனி நம்ம கூட தான். போங்க போய் மத்த வேலை எல்லாம் பாருங்க.." என குரல் கொடுக்க,

தன் அண்ணனின் கட்டளைக்காக காத்திருந்தவர்கள் அவன் கட்டளை கிடைத்ததும் சிலர் வேலையை செய்ய திசைக்கு ஒன்றாய் செல்ல, சிலர் தன் அண்ணனின் பாதுகாப்புக்கு அங்கே நின்றிருந்தனர்.

"என்ன மாமனாரே, அப்ப நான் வரட்டா.." என அவரை நேருக்கு நேர் பார்த்து கேட்க,

"உன்னைய.." என அவர் முன்னே வர,

"ஏய்!" என அவன் தம்பிகள் சிலர் அவனுக்கு முன் நின்றனர்.

"பாண்டி.." என குரல் கொடுக்க,

"அண்ணே!"

"ம்ஹூம்.." என கண் காட்ட,

"சரிண்ணே!" என்று ஒதுங்கி நின்றான்.

பாண்டியின் செயலில் பயத்தில் பின்வாங்கிய மாமனாரை பார்த்தவன்.. நக்கலாய் சிரித்து பின் அவர் அருகே நின்றிருந்த தன் மாமியாரை பார்த்தவன், "வரேன் அத்தை.." என மிகவும் மரியாதையாய் கூறியவன் தன் மனைவியின் கையை பற்றி கொண்டு அம்மண்டப்பத்தை விட்டு வெளியேர போகையில் அதன் ஓரத்தில் நின்றிருந்த தன் மனைவியின் தமக்கையை பார்த்தவன் "வரேன் அண்ணியாரே!" என்று புன்னகையுடன் கூற,

அவளோ கடுப்பில் முகத்தை திருப்பி கொண்டாள் அதை பார்த்து சிரித்தவன் தன் அண்ணியின் கணவனை கண்டு தலையாட்டி விட்டு மனைவியின் கையை அழுந்த பற்றி கொண்டு வெளியே வந்து மகிழுந்தில் ஏறினான்.

அவர்கள் அமர்ந்ததும் மகிழுந்து நகர, உள்ளே அமர்ந்திருந்தவள் குனிந்த தலை நிமிராது தன் கை விரல்களையே பார்த்திருந்தாள்.

அதுவோ அவன் அழுந்த பிடித்ததில் அழகிய வெண்ணிற கைகள் சிவப்பாய் மாறிருந்தது. சிறிது நேரம் அதை பார்த்திருந்தவள் பின் ஏதோ உள்ளுணர்வு தோன்ற, சட்டென்று நிமிர்ந்து பக்கவாட்டில் பார்க்க,

அவளையே கண்ணிமைக்காது பார்த்திருந்தான் அவளின் கணவன்.

அவனை கண்டவள் அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது விழிக்க, அவனோ எதுவும் கூறாது மகிழுந்து இறுக்கையில் பின்னால் தலை சாய்த்து கண் மூடினான்.

அவனை பார்த்திருந்தவள் அவன் செயலில் குழம்பி தான் போனாள்.

பின், எதுவும் பேசாது தன் தலையை திருப்பி ஜன்னலோரம் பார்க்க ஆரம்பித்தவள் சிறிது நேரத்திலே உறங்கி அவன் தோளில் தலை சாய்க்க,

திடீரென்று வந்து விழுந்த பாரத்தில் பட்டென்று கண்ணை திறந்தவன் கண்டது தன் மனையாள் தன் தோளில் தலை சாய்த்து உறங்குவதே.

கோவத்தில் மனம் கொதித்து கொண்டிருந்தவன், அவளை தள்ளி விட பார்க்க, அவளோ அவனை விடாது தன் முகத்தை அவன் தோளில் ஆழமாக புதைத்து தன் வலது கையை அவன் இடது கைசந்துடன் நுழைத்து தன் இடது கையால் அவன் பட்டு சட்டையை பற்றி கொண்டு தூங்க,

அவள் செயலை கண்டவன் எதுவும் செய்யாது அப்படியே சாய்ந்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனின் மனமும் அவள் செயலால் சற்றே அமைதியுர ஆரம்பித்தது.

அம் அமைதியில் தானும் கொஞ்சமே கொஞ்சம் உறங்கி தான் போனான்.

இருவர் உள்ளமும் எந்த வித பேச்சு வார்த்தைகளுமின்றி ஒருவர் செயலில் ஒருவர் அறியாது தன்னை அமைதிப் படுத்தி கொண்டனர்.

அவனிடம் வந்துவிட்டோம் என்ற ஆழ்மன அமைதியிலும் பாதுகாப்புணர்விலும் அவள் கண்ணயர்ந்தாள் என்றால்; அவள் தன்னை மறந்த நிலையிலும் தன்னையும் தன் பாதுகாப்பையும் தான் தேடுகிறாள் என்ற நிம்மதியில் அவனும் கண்ணயர்ந்தான்.

*********

இங்கு மண்டப்பத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய பின்னரும் மனம் எரிமலையாய் கொதித்து கொண்டிருந்தது அவருக்கு.

அதற்கு சற்றும் சம்மந்தமே இல்லாத மனநிலையில் தன் மகளை நினைத்து கவலை கொண்டது தாயின் மனம்.

இதற்கு, இரண்டும் கெட்டான் மனநிலையில் இருந்தது அவளின் மனம்.

"ச்ச்சே, அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? அவன் கொஞ்ச நாள் கோவப்பட்டாலும் அப்புறம் கோவம் தணிஞ்சா அவ நல்லா வாழ்ந்துருவாளே.. என்ன செய்யலாம்? எப்படி அவன் கோவத்தை தணிக்காமவும் அவள் வாழ்க்கையை நிம்மதியில்லாமையும் பண்ண.. அதுவும் என் வாழ்க்கையை கெடுத்தவ நல்லா வாழணுமா.." என வஞ்ச எண்ணத்துடன் என்ன செய்தால் தகும் என யோசித்து கொண்டிருந்தாள் அவள்.

இத்தனைக்கும் அவளின் வாழ்க்கை நன்றாக எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாமல் தான் இருந்தது. இருந்தும் அவளுக்கு இப்படியொரு வஞ்சினம்.

அவளின் யோசனையை கலைக்கும் விதமாக அவள் கணவனின் கேள்வி, "என்ன உன் தங்கையோட வாழ்க்கையை எப்படி நிம்மதியில்லாம ஆக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கீயா.." என்க,

சிந்தனையில் இருந்தவளோ சற்றும் உணராது, "ஆமா. என் வாழ்க்கையை கெடுத்தால அப்ப அவளோட வாழ்க்கையை நானும் கெடுக்கனும்.. அது எப்படி நிம்மதியா இருக்கான்னு பார்த்திடுறேன்.." என கூற,

பின் ஏதோ ஒரு உணர்வு வந்தது போல் நிதானித்தவள் தான் என்ன கூறுகிறோம் என உணர்ந்து அமைதி காக்க..

"ஹா..ஹா.." என சத்தமாக சிரித்தான்.

அவன் சிரிப்பை எரிச்சலாக பார்த்தவளை கண்டு கொள்ளாது,

"என்ன அமைதியாகிட்ட.. உன் பிளான் தெரிஞ்சிடுச்சேன்னா.."

"அது எல்லாம் இல்லை. நான் ஒண்ணும் அப்படி பிளான் பண்ணலை.."

"எப்படி பிளான் பண்ணலை.. அதான் உன் வாயலையே சொல்லிட்டியே.. 'அது எப்படி அவள் வாழ்க்கையை நிம்மதியில்லாம பண்ணன்னு.' இது பத்தாது.."

"ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன், உன் வாழ்க்கையில அஸ் ய ஹஸ்பண்ட் ரோல் பண்றதுனால.. நீ என்ன குட்டி கரணம் அடிச்சாலும் சரி.. அவங்க இரண்டு பேரையும் பிரிக்கவும் முடியாது, நிம்மதியில்லாமையும் பண்ணவும் முடியாது.. இப்ப வேணும்னா அவர் அவங்க மேலே கோவமா இருக்கலாம்.. ஆனா அது கொஞ்ச நாளே தவீர ரொம்ப நாள் எல்லாம் இருக்காது.."

"அது போல, நீ அவங்க வாழ்க்கையை நிம்மதியில்லாம பண்ண நினைச்சா.. உன் வாழ்க்கை நிம்மதியில்லாம போயிடும்.. இது நான் உன் புருஷனா சொல்லலை.. ஒரு வழி போக்கன்னா சொல்றேன் புரிஞ்சு நடந்துக்கோ.."

"அவர் மேலே கையை வச்சா என்ன? அவரை ஏதாவது பண்ண நினைச்சாலே உனக்கு தான் பயங்கர அடி விழும் பார்த்து இருந்துக்கோ.."

"சரி வா.. இனி இங்க நின்னு என்ன பண்ண போற.. கூட்டி பெறுக்க போறீயா என்ன? வா வீட்டுக்கு போகலாம்.." என நக்கலாக மொழிந்து விட்டு அவன் முன்னே சென்று விட,

"நல்லா வந்து வாச்சு இருக்கு பாரு எனக்குன்னு.. ச்சை.. தன்னோட பொண்டாட்டிய தான் நாம இப்படி சொல்றோம்ன்னு கொஞ்சம் கூட உறுத்தாம எப்படி போகுது பாரு.. எப்ப பார்த்தாலும் நல்லா யோசி, நல்ல எண்ணம் வளர்த்துகோ, புரிஞ்சு நடந்துகோன்னு போதனை பண்ணிக்கிட்டு.." என மனதில் சென்ற கணவனை தாளித்து கொண்டே அவன் பின்னால் சென்றாள்.

இவள் கூறவது போல் அவள் கணவன் ஒழுங்கற்றவன் இல்லை என்பதற்கு இவளே ஒரு சாட்சி.

தன் வீட்டின் அலங்காரத்தை பார்த்தவர் அங்கிருக்கும் அலங்காரத்தை ஆவேசமாக பிய்த்து எரிந்தார்.

"ச்சே, என் கிட்ட பணம் வாங்கிட்டு நான் சொல்ற வேலையை செஞ்சிட்டு இருந்தவன் இன்னிக்கு என்னையே எதிர்த்து பேசுறளவுக்கு தைரியமா நிக்கிறான். அதுவும் நான் சொன்ன வேலையை மட்டும் செய்றவன்னு பெரிசா சொல்லிட்டு இன்னிக்கு எனக்கே துரோகம் செய்யுறான். அதுவும் என் கண்ணு முன்னாடியே அவ கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு போறான்."

"இந்த பொட்ட கழுதையும் அவன் செய்றதுக்கு எதிர்த்து நிக்காம அவனுக்கு ஒத்து ஊதுற மாதிரி அவன் கட்டுற தாலியை வாங்கிட்டு அவன் கூடவே எழுந்திருச்சு போயிடுச்சு.."

"என் மானம், மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் கெடுத்துட்டு போனவளை விட மாட்டேன்.. முக்கியமா அவனை விடவே மாட்டேன்.." என அடி பட்ட சிங்கம் போல் கர்ஜித்தார்.

இவை அனைத்தையும் கண்ட அவரின் மனைவிக்கு அடிவயிற்றில் பயபந்து தான் எழுந்தது.

அதை மறைக்க எண்ணி பூஜை அறையில் தஞ்சமடைந்து கொண்டார்.


காதலித்தோ அல்ல பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் கரம் பிடித்தவர்கள் வாழ்வே சில பல நேரங்களில் அறுந்து விடும். இங்கோ அவைகள் இருந்தும் இல்லாமல் கரம் பிடித்தவர்கள் வாழ்வு எந்நிலையாகுமோ?

அலர் முகிழ்க்கும்.


***********

கதையின் பதிவை படித்து விட்டு கருத்தை கூறுங்கள்.

அதற்கான கருத்து திரி இதோ, 👇👇



உங்கள் கருத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி நான்.


பி.கு. நான் ஒரு முக்கிய வேலைக்காகச் சில வாரங்களுக்கு வெளியூர் செல்ல இருப்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் என் கதையின் அத்தியாயங்கள் இருக்காது
இனி என் அடுத்த அத்தியாயம் ஜூன் மாதம் 29 2023 வியாழன் அன்று..

தடங்கலுக்கு என்னை மன்னிக்க வேண்டும்.😔

Since I am leaving the station for an Important Work for a few weeks.. On these days My stories updates will not be there. The next following episode will be on June 29 2023 (Thursday).

Sorry for this inconvenience.. 😔



Tata.. மீண்டும் சந்திப்போம்..😊😊

அன்புடன்
டிவின் முவா
 
Status
Not open for further replies.
Top