எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அமிர்தவர்ஷினி - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
அத்தியாயம் - 01

தன் கைப்பையினுள் கிரிடிட் கார்டை வைத்தவாறே நடந்து வந்தாள் வினயா.

பேபி பிங்க் நிற ஃப்ளைன் ஷார்ட் குர்தாவும், அதற்கு மேட்சாக வெள்ளை நிற பலாசோ பாட்டமும், ப்ளோரல் டிசைன் துப்பட்டாவும் அணிந்திருந்தாள் வருணிகா. அது அவளது நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. பல

தன் கைப்பையை நோண்டிக் கொண்டே வந்தவள், எதிரே வந்த நபரை பார்க்காது. அவரின் மீது மோதி விட்டாள்.

"சாரி…" என்று நிமிர்ந்து கூட பார்க்காது, தன் கைப்பையிலேயே ஆராய்ச்சியாக இருந்தவள், நகர்ந்து முன்னேற ஆரம்பிக்க, மீண்டும் அந்த உருவம் அவள் முன்னாள் வந்து நின்றது.

இப்பொழுது தலையையை உயர்த்தி அது யாரென பார்த்தாள்.

"விக்ரம்..." என அவள் உதடுகள் மெல்லமாய் முணுமுணுத்தது, அவன் காதுகளிலும் விழுந்திருக்கும் போல; இதழ்களை விரிந்தது அவனுக்கு.

"இங்க என்ன பண்ணுற நீ?" என கேட்டவளுக்கு, சற்று தாமதமாகவே மண்டையின் மீதிருந்த பல்பு ஒளிர்ந்தது.

"ஓ… நோ…" என்று அவள் சொல்ல, அதரங்கள் அடக்கிய சில்மிச புன்னகையுடன் அவன் பின்னோக்கி சென்றான்.

எப்பொழுதும் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் தீர்ந்து போய்விட்டதாலும், மேலும் சின்ன சின்ன பொருட்களின் தேவை இருந்ததாலும், அவற்றை வாங்குவதெற்கென மாலிற்கு வந்திருந்தாள் வினயா.

தேவையான பொருட்களை வாங்கி விட்டு வரும் பொழுகு தான், அவன் மீது வினயா மோதியது.

திடீரென மாலில் இருந்த அத்தனை ஸ்பீக்கர்களிலும் மெல்லிதான பாடல் ஒலிக்கத் துவங்கியது. மாலில் இருந்த செக்யூரிட்டி டீம், வினயாவை சுற்றி இருந்த மக்களை, சற்று தள்ளி வட்டமாக நிறுத்தினர்.

"காதல் நல்லவனா இல்லை கெட்டவனா..." என்ற பாடல் இசைக்க, கூட்டத்தில் இருந்த சிலர், வட்டத்தை தாண்டி உள்ளே வந்து நடனமாட ஆரம்பித்தனர். அவர்களுடன் இணைந்து விக்ரமும் நடனமாட ஆரம்பித்தான்.

"ஓ மை காட்! இட்ஸ் எம்பாரசிங்!" என்று இரண்டு கைகளாலும் முகத்தை பொத்திக் கொண்டாள் வினயா.

அழகாக ஆட்காட்டி விரலை மட்டும் நீக்கி, விக்ரம் என்ன தான் செய்கிறான் என அவள் பார்க்க, கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி, அவள் கையை இழுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் மத்தியில் விட, ஆண்களும் பெண்களுமாய் அவளை சுற்றி ஆட ஆரம்பித்தனர். அதுவும் ஆடிக் கொண்டே ஒவ்வொரு பரிசாய் கொண்டு வந்து அவள் கையில் திணித்தனர். பரிசுகளால் அவள் கைகள் நிரம்பி வழிந்தது. கிட்டத்தட்ட அவள் முகத்தையே மறைக்கும் அளவிற்கு அவளிடம் கிஃப்ட் களை தந்தனர்.

பாடல் முடியும் தருவாயில், மாலில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, வினயா நின்ற இடத்தில் மட்டும் ஃபோகஸ் லைட் போடப்பட்டது.

பாடல் முடிந்தவுடன், யாரோ ஒருவர், பெரிய ரோஜா பூங்கொத்தை, விக்ரம் கையில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு ஸ்டைலாக வந்தவன், வினயாவின் முன் வந்து நின்று மண்டியிட்டு, "உப்" என்று பெருமூச்சொன்றை விட்டவன்,

"இந்த உலகத்துல காதல் இருக்கறதால தான் மனுஷன் இன்னும் மிருகம் ஆகாய இருக்கறான்னு சொல்லுவாங்க… அந்த காதலை நீ எனக்கு தந்தா, வாழ்க்கை முழுக்க நானும் ஒரு நல்ல மனுஷன் இருப்பேன். வாட் டூ யூ சே?" என்று கண்களில் ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டான் விக்ரம்.

"கிரிஞ்ச் க்யூட்டி..." என்று தன்னிச்சைப் போல் சொன்னாள் வினயா. அதன் அர்த்தம் புரிந்தவன், "ஏய் நாம பப்ளிக்ல இருக்கோம் டி!" என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு, உதடுகளை அசைக்காமல், சிரித்துக் கொண்டே கூறினான்.

விக்ரமின் வார்னிங்கில் சுதாரித்தவள், அவன் கையில் இருந்த மலர்கொத்தை வாங்கிக் கொண்டு, "ஐ லவ் யூ சோ மச் விக்ரம்!" என்று சொன்னாள். ஆனால் வாய் சொன்னதற்கு நேர்மாறாக கண்களோ, அவனை கொன்று போட்டுவிடுவேன் என்று சொன்னது. அதற்கெல்லாம் அசருபவனா விக்ரம்!

வினயாவின் பதிலிற்கு காத்திருந்தாற் போலே, அவர்கள் இருவர் மீது, ரோஜா இதழ்கள் சட்டென்று மேலே விழுந்தது, அந்த இடத்தையே ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது. அத்தனையையும் அங்கிருந்த மக்கள் தங்கள் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர், என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும்.

"தேங்க் யூ… தேங்க் யூ சோ மச்…" என்று வெட்கம் போன்ற ஏதோ ஒன்றுடன், தன்னை சுற்றி நடனமாடியவர்களைப் பார்த்துச் சொன்னாள் வினயா. அதைப் பார்த்த விக்ரமிற்கே குமட்டிக் கொண்டு வந்தது.

"அப்பறம் பாஸ்…" என்று நடனம் ஆடிய கூட்டத்தின் தலைவன் போல் இருந்த ஒருவன், விக்ரமிடம் வந்து கேட்க,

"இந்த கிஃப்ட்ஸ் எல்லாம் எடுத்துப்போங்க… நாங்க வந்து பாத்துக்கறோம்." என்றான் விக்ரம்.

"அப்ப நாங்க கிளம்பறோம்…"

"ம்ம்ம்...ஓகே.."

"அப்போ நாமளும் கிளம்பலாமா ஸ்வீட் ஹார்ட்?" என்று ஹஸ்கி வாய்சில் வினயா கேட்க, ஜெர்க் ஆனது விக்ரமிற்கு.

திரும்பி அவள் முகத்தை பார்த்தான். கண்டிப்பாக ஏதோ ப்ளான் போட்டுவிட்டாள் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விக்ரமின் முகத்தில் வெளிப்படையாகவே பீதி தெரிந்தது. அவன் முகத்தை பார்த்த நடனம் ஆடியவர்கள், தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

"ஓ… போலாமே…" என்றவன், மாலில் இருந்து வெளியே செல்லும் பகுதியை நோக்கி திரும்ப,

"டார்லிங்…" என்று தேன் தடவிய குரலில் அழைத்தாள் வினயா.

'என்ன கருமத்தை வேணாலும் சகிச்சிக்கலாம் போல… இவ இப்படி கூப்பிடறதை மட்டும் சகிச்சிக்கவே முடியல ஆண்டவா!' என்று மனதிற்குள் புலம்பியவன்,

"என்ன மா எதாச்சும் வேணுமா?" என்று கேட்க,

"கார் பார்க்கிங்க்கு வழி இந்தப்பக்கம்…" என்று சொல்ல, அசடு வழிய சிரித்தான் விக்ரம்.

"டார்லிங்… ஹனி… செல்லம்… மாமா… உனக்கு என் மேல அவ்வளவு லவ்வா?" என்று விதவிதமாக செல்லப்பெயர் சொல்லி, கேள்வி கேட்டாள் வினயா.

"அது வந்து… அது…" என்று அவன் திக்கித் திணறிக் கொண்டிருக்க, அவனை இழுத்துக்கொண்டு கார் பார்க்கிங்கினுள் நுழைந்தாள் வினயா.

இருவரும் கார் பார்க்கிங்கினுள் நுழைந்த சில நிமிடங்களில், வினயாவின் அலறல் சத்தம், அந்த கார் பார்க்கிங் முழுவதும் எதிரொலித்தது.

"என்ன பாத்துக்கிட்டே இருக்க விக்ரம்? ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணு சீக்கிரம்." என்று அதிர்ச்சியில் உறைந்திருந்த விக்ரமை உலுக்கினாள் வினயா.

"இதோ பண்ணறேன்…" என்று ஆம்புலனசிற்கு அழைத்தான் விக்ரம்.

வினாயாவின் கத்தலை கேட்டு, பார்க்கிங் லாட்டில் ஆங்காங்கே இருந்த அனைவரும், வினயா இருந்த ஓடி இடத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி, அனைவரையும் உறையச் செய்தது.

கட்டுமஸ்தான உடலோடு இருந்த நபர் ஒருவர், கீழே விழுந்து கிடந்தார். அதுவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில். அவர் அருகில் அமர்ந்துக் கொண்டு, மேலே என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள் வினயா.

"மேடம் என்னாச்சு?" பார்க்கிங் லாட்டில் வேலை செய்யும் நபர் வந்து கேட்க,

"என்னனு தெரியலை சார். நானும் என் ப்ரெண்டும் பேசிக்கிட்டே வந்தோம். வந்து பார்த்தப்போ இவரு மூச்சி விடவே சிரமபட்டுட்டே எங்களை கையை நீட்டி கூப்பிட்டாரு… நாங்க கிட்ட வந்து பார்த்தப்போ அவருக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆச்சு… அப்படியே மயங்கி விழுந்துட்டாரு…" முழுமையாக அதிர்ச்சியில் இருந்து வெளியே வராது சொன்னாள் வினயா.

"யாராச்சும் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க…" என்று பார்க்கிங் லாட்டில் வேலை செய்யும் நபர் சொல்ல,

"இப்ப தான் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணினேன். அவங்க வர்றதா சொல்லியிருக்காங்க… இங்க காத்தோட்டமா இருக்க மாதிரி தெரியல. ஏற்கனவே அவருக்கு மூச்சு முட்டற மாதிரி தான் இருந்துச்சு. எல்லாரும் சேர்ந்து பிடிங்க. கொஞ்சம் காத்தோட்டமா இருக்க இடத்துக்கு இவரை கொண்டு போலாம்." என்று மடமடவென்று அடுத்த செய்ய வேண்டியதை பற்றி விக்ரம் பேச, அங்கிருந்த யாரும், கீழே கிடந்தவரை தூக்க முன்வரவில்லை.

"சார் அவரை தொடாதீங்க… ஆம்புலன்ஸ்காரங்க வந்தே தூக்கட்டும்." என்று அருகில் நின்ற ஒருவர் சொல்ல,

"என்ன சார் சொல்லுறீங்க… பாவம் சார் ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார் சார்." என்று சொன்னான் விக்ரம்.

"அதில்ல சார் நாளைக்கு போலீஸ் கேஸ்னு ஆச்சுன்னா… நம்ம தலையை தானே சார் உருட்டுவாங்க…" என்று இன்னொரு நபர் சொல்ல, கடுப்பின் உட்சத்திற்கே சென்றான் விக்ரம்.

"ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கார். இப்போ போய் உதவி செய்யலான நீங்களாம் என்ன மனுஷங்க? கொஞ்சமாச்சும் மனசுல ஈரத்தோட நடந்துக்கோங்க சார்‌." என்ற கத்திய விக்ரம்,

"தயவு செஞ்சு வந்து ஹெல்ப் பண்ணுங்க சார்." என்றான்.

விக்ரமின் பேச்சைக் கேட்டு, பார்க்கிங் லாட்டில் பணிபுரியும் நபர் மட்டுமே உதவ முன்வர, விக்ரம், வினயா மற்றும் அந்த பணியாளர் என மூவரும் சிரமப்பட்டு, மயங்கி விழுந்தவரை தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வர, மயங்கி விழுந்தவர், அதில் ஏற்றி செல்லப்பட, உடன் விக்ரமும் சென்றான். போவதற்கு முன்,

"தனியா நீ கார் ஓட்டிட்டு போக வேண்டாம். கேப் புக் பண்ணி போ… காரை அப்பறம் எடுத்துக்கலாம்…" என்று வினயாவிடம் சொல்லி விட்டு தான் சென்றான். வினயாவும் அவன் சொன்னது போலவே தான் செய்தாள்.

இத்தனை அமளிதுமளி நடந்து முடிந்த பிறகு, பொறுமையாக பார்க்கிங் லாட்டிற்குள் வந்த ஒரு உருவம், நிதானமாக குனிந்து, விக்ரம் வினயாவிற்கு கொடுத்த பூச்செண்டை கையில் எடுத்துக் கொண்டது. லேசாக அதை முகர்ந்து பார்த்து விட்டு, சன்னமான அலட்சிய புன்னைகயுடன், பூச்செண்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_

மறு நாள் காலையில் எழுந்ததுமே, தன் மொபைலை தான் கையில் எடுத்தாள் வினயா. அம்மணி காலையில் கண் விழிப்பதே அதில் தான்.

தன் முகநூல் கணக்கிற்குள் நுழைந்தவள், தனக்கு வந்த நோட்டிபிகேஷன்கள் மற்றும் மெசேஜ்களை பார்த்துக் கொண்டே வந்தாள். அதன் பின் பொதுவாக அப்படியே மீம்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தவள் கை, ஒரு வீடியோவை கண்டதும் அப்படியே நின்றுவிட்டது.

"ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர், பிரபல மால் ஒன்றில் மூச்சுத் திணறல் காரணமாக இறந்து கிடந்துள்ளார். மேலும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள், அவர் மரணத்தை பற்றி விசாரிக்க, தீவிரமாக பணிகளை முடிக்கி விட்டுள்ளனர்." என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

அவசர அவசரமாக விக்ரமிற்கு கால் செய்தாள் வினயா. அந்தப்பக்கம் ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர, அழைப்பை எடுக்கும் வழியை காணவில்லை.

மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தாள். ஆனாலும் விக்ரம் போனை எடுக்கவே இல்லை. பதற்றத்துடனே நகம் கடிக்க ஆரம்பித்தாள் வினயா.

வினயாவை சிறிது நேரம் பதறவிட்டு, போனை அட்டென்ட் செய்தான் விக்ரம்.

"குரங்கு, பன்னி, எருமை மாடு… ஏன் டா போனை எடுக்க இவ்வளவு நேரம்? பயந்தே போய்ட்டேன்…" என்று அவள் தன்பாட்டில் புலம்ப,

"கொஞ்ச நேரம் அமைதியா இருடி வெண்ண…" என்று மெதுவாக பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் விக்ரம்.

எதிர்பக்கம் அமைதி நிலவியது.

"இப்ப நான் போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். வெளிய வந்துட்டு கால் பண்ணுறேன். வெயிட் பண்ணு." என்றவன், அழைப்பை துண்டித்து விட்டான்.

கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது வினயாவிற்கு.

அமிர்தமும் விசமாகும்...
 
Status
Not open for further replies.
Top