எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகாய் பூக்குதே.(கதை திரி)

Status
Not open for further replies.

Kavisowmi

Well-known member
அழகாய் பூக்குதே.

1
சில மாதங்களுக்கு முன்பு..

மதுரையில் மத்திய பகுதி நேரம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. பேங்கில் வழக்கத்திற்கு மாறாக அன்று கூட்டம் அலைமோதியது.

ஒவ்வொருவரிடமும் கேட்டு அவர்களுக்கான உதவிகளை வேகமாக செய்து கொண்டிருந்தால் ஷர்மிளா.

"மேடம் உங்களை பார்க்க ஒருத்தர் வந்து இருக்காங்க "என்று கூற நிமிர்ந்து பார்த்தால்.. இங்கே இவளுக்கு பெரியதாக உறவினர் என்று யாரும் கிடையாது.

*என்னன்னு சொன்னாங்க" என்று கேட்டபடியே எழுந்தால் ஷர்மிளா..

"உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கன்னு சொன்னாங்க பத்து நிமிஷம் பேசணும்னு சார் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறாங்க.

சார் தான் பேச சொல்லுங்கன்னு அனுப்பி வச்சாங்க."

" எங்க வெயிட் பண்றாங்க" "கேட்டவள் பேங்கை சுற்றி நோட்டமிட "இங்கே இல்லை மேம்..முன்னாடி இருக்கிற அந்த கோயில்ல வெயிட் பண்றதா சொல்லி இருக்காங்க".

"ஓகே ஓகே இதோ வந்துட என்னறேன்" என்றவள் அருகில் இருந்தவரிடம் தான் செய்த வேலையை கொடுத்துவிட்டு நகர்ந்தாள். யோசனை முழுக்க யாராய் இருக்கும் என்ற மனநிலையில் புறப்பட்டாள்.

வேலை கிடைத்து வந்து இங்கே 5 வருடம் முடியப்போகிறது. இதுவரையிலும் யாரும் இவளை தேடி வந்தது இல்லை..
குழப்பத்தோடு எதிரில் இருந்து கோயிலை நோக்கி சென்றாள் ஷர்மிளா.

வயதான தம்பதி ஒருவர் அமர்ந்திருந்தனர். இவளை பார்க்கவும் அறிமுகப் புன்னகையோடு நெருங்கி வர இவளுக்குள் ஆயிரம் குழப்பம்..

" யார் நீங்க ? நீங்க தான் என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களா?"

" ஆமாம் மா நான் தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னேன். உன்னை ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கிறேன் .

இப்பதான் என்னால நீ இருக்கிற இடத்தை தெரிஞ்சுக்க முடிஞ்சது தெரிஞ்ச உடனேயே காத்திருக்காமல் நேரா இங்க வந்துட்டேன் ".

"சரி ஆனா நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே.. என்ன விஷயம் நேரடியா சொல்லுங்க .சுத்தி வளைச்சு பேச வேண்டாம்".

" என்னம்மா இப்படி சொல்லிட்ட நான் பரணியோட அம்மா ..இவர் என்னோட கணவர் ".பெயரை கேட்கவும் முகம் மெல்ல மாற ஆரம்பித்தது ஷர்மிளாவிற்கு..

" எதுக்காக என்ன தேடி வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ".

"ஷர்மிளா உனக்கு தெரியாதது எதுவும் இல்லை .உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல .இன்றைக்கு பரணி உயிரோட இல்ல .பரணியோட ஞாபகமா எதுவுமே எங்க கிட்ட இல்ல ஒன்னே ஒன்னு தவிர.."

" நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல .நீங்க கிளம்புறீங்களா எனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்குது".

" தெரியும் நீ இப்படித்தான் சொல்லுவேன்னு.. உனக்கும் பரணிக்கும் நடுவுல இருந்த உறவு எப்படிப்பட்டது என்று எனக்கும் இவருக்கும் நல்லாவே தெரியும்.

அவன் கடைசி நிமிஷம் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் போனான். பரணியோட பேரை சொல்ற மாதிரி அவனுக்கு ஒரு குழந்தை இருக்குது அப்படிங்கிறது இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெரிஞ்சது .

முதல்ல சாதாரணமா விட்டுட்டோம் இப்ப தெரிஞ்சதுக்கு பிறகு தனியா விட எங்களுக்கு மனசு இல்ல .என்ன இருந்தாலும் அந்த குழந்தை எங்களோட ரத்தம் இல்லையா..

பரணியோட ரத்தம் இல்லையா எங்களோட வாரிசு தானே அந்த குழந்தை .."

"அதனால நீங்க என்ன சொல்ல வரீங்க . நேரடியா விஷயத்தை சொல்லுங்க.. நானும் ரெண்டு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிட்டு இப்போ கிளம்பனும் "என்று திரும்பி நகர போனாள்.

" நில்லுமா அவசரப்படாத நான் என்ன சொல்ல வர்றேன்னு முதல்ல பொறுமையா கேளு .".

"நான் பொறுமையா கேட்க எதுவுமே இல்லை பரணி என்கிற ஒரு கேரக்டரை எனக்கு ஞாபகம் கூட இல்லை .

எதுக்காக இதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியலை. ".

"போதும் ஷர்மிளா ஒன்னும் தெரியாத மாதிரி பேச வேண்டாம் நாங்க எல்லாத்தையும் விசாரிச்சிட்டு தான் இங்க வந்திருக்கிறோம்.

குழந்தை கவி யாருடையது ஞாபகம் இருக்குதா ..அது என் பையனோடது" இப்போது பரணியின் தந்தை குரல் கொடுக்க,

"ஐயோ என்னங்க நீங்க கொஞ்சம் கோபத்தை காட்டாமல் பொறுமையா இருங்க .நான் தான் உங்ககிட்ட சொன்னேன்ல.. நான் பொறுமையா பேசி புரிய வைக்கிறேன் அப்படின்னு தானே உங்களை அழைச்சிட்டு வந்தேன் .

நீங்க என்ன சட்டுனு கோவப்பட்டா என்ன அர்த்தம் ."

"இதோ பாருமா ஷர்மிளா எங்களுக்கு குழந்தை வேணும் கூடவே .."

"போதும் நிறுத்துறீங்களா இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம் .

இங்கே எனக்கு எந்த பரணியையும் தெரியாது. அப்புறமா என்கிட்ட இருக்கிற குழந்தை என்னோடது தான் .

அதை யார்கிட்டயும் கொடுக்க தயாராக இல்லை நீங்க தப்பான ஒரு இடத்துக்கு வந்து விசாரிச்சுக்கிட்டு இருக்கீங்க .அத முதல்ல புரிந்துகொள்ளுங்கள் .

எனக்கு உறவு என்று சொல்லிக்க யாரும் இல்ல புதுசா எந்த உறவையும் ஏத்துக்கவும் நான் தயாரில்லை .

நானும் என் குழந்தையும் மட்டும் தான் .இப்படி தான் கடைசி வரைக்கும் இருப்போம் .

இன்னொரு முறை எந்த பேரையும் சொல்லிட்டு என்னை பார்க்க வராதீங்க "சொல்லியவள் சற்று கோபத்தோடு நகர்ந்தாள்.

பிரச்சனை அத்தோடு முடிந்திருக்கவில்லை .அடுத்த நாளே ஷர்மிளா தன்னுடைய குழந்தை கவியை எந்த பிளே ஸ்கூலில் விடுவாலோ அங்கே இவர்கள் இருவரையும் பார்க்க நேரிட்டது .

குழந்தையை வேகமாக அழைத்துக் கொண்டு வந்தவள் அதற்கு மேல் தாமதிக்கவே இல்லை .

அடுத்த ஒரு மாத காலத்திற்கு விடுமுறை எடுத்தவள் வேகமாக அந்த ஊரிலிருந்து புறப்பட தயாரானாள்.

இன்று..

"ஏற்கனவே பேசிட்ட தானே.. கட்டாயமாக ஸ்கூல்ல இடம் கிடைக்கும் தானே.. எல்கேஜி, யுகேஜினா தெரியாது .நாம ரெண்டாங்கிளாஸ்க்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்.."

"அதெல்லாம் பேசியாச்சு ஷர்மி கட்டாயமாக சீட் தருவாங்க.. இல்லாட்டி கூட பிரச்சனை இல்ல கட்டாயமா சீட் வாங்கிடலாம் .

யாரை பிடிச்சா வேலை நடக்குமோ அவங்களை பிடிச்சு வாங்கிடலாம்".

" என்னவோ தைரியமாக நீ சொல்ற.. உன்னை நம்பி தான் இங்கே அழைச்சிட்டு வந்துட்டேன் .

இதுக்கு மேல ஊர் ஊரா என்னால சுத்த முடியாது.. இனி இங்கதான் தங்கறதா இருக்கிறேன்". சொன்ன ஷர்மிளாவிற்கு தற்போது 28 வயது துவங்கி இருந்தது.

ஐந்தரை அடி உயரத்தில் அழகாக இருந்தால். அவளுக்கு, தவறு என்று தோன்றினால் உடனே தட்டிக் கேட்கும் பாங்கு ..பார்ப்பவர்களை இவளிடத்தில் மரியாதையை தானாகவே கொண்டு சேர்க்கும் .

பாரதி கண்ட புதுமைப்பெண் நான் என்பது போன்ற தோற்றம் ..

எப்போதுமே நிமிர்ந்த நடை ,நேர் கொண்ட பார்வை ,மனதில் என்ன தோன்றுகிறதோ.. நேருக்கு நேராக பேசக்கூடியவள்..

ஒரே பெண் குழந்தை…இவளுடைய உயிர்..கவி.. ஏழு வயது சிறுமி.. அழகான இரண்டு குதிரைவால் போட்டு இவளை உரித்து வைத்தாற்போல் தோற்றம்.. தற்போது இவளுக்கு அருகே அமர்ந்து இருந்தாள்.

"ஷர்மி பொள்ளாச்சியில் இதைவிட பெஸ்டான ஸ்கூல் தேடவே முடியாது உன்னோட பொண்ணுக்கு இதை விட பெஸ்ட்டா ஒரு ஸ்கூல் கிடைக்கவே கிடைக்காது .

இன்டர்நேஷனல் ஸ்கூல்.. இங்க கோச்சிங் சூப்பரா இருக்கும். என்னோட ரிலேஷன்ல நிறைய குழந்தைங்க இங்கு தான் படிக்கிறாங்க.."

"தேங்க்ஸ் ஆனந்தி நீ மட்டும் இல்லன்னா நான் ரொம்ப சிரமப்பட்டு போய் இருப்பேன்".

" ஏன் அப்படி சொல்ற அதெல்லாம் கிடையாது .நீ வேலை செய்யறது பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா..

நான் உனக்கு ஹெல்ப் பண்ணாட்டி கூட ஆட்டோமேட்டிக்கா பேங்க்ல இருந்து உனக்காக தங்க இடம் ரெடி பண்ணி கொடுத்து இருப்பாங்க.

எப்படியும் ரெண்டோரு நாள்ல நீயே இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு இருப்ப.."

"அப்படி சொல்லக்கூடாது ஆனந்தி இவ்வளவு தூரம் வர முக்கிய காரணமே நீதான் .

நீ இங்க இருக்கிற தைரியத்துல தான் என்னால் அவ்வளவு தூரத்தில் இருந்து கிளம்பி வர முடிஞ்சது.

இனி எங்கேயும் போகற ஐடியா இல்ல இனி இங்கேதான் தொடர்ந்து வேலை செய்யணும்."

ம்..

"உண்மைய சொல்லனும்னா நான் இதை எதிர்பார்க்கல ஷர்மி. ஐ ஆம் சாரி ஒரு வகையில் இன்றைக்கு உன்னோட இந்த நிலைமைக்கு காரணம் நான் தானே.."

" பைத்தியம் மாதிரி பேசக்கூடாது தப்பு எல்லாம் என்னோட பேர்ல தான்.

உன் பேர்ல எதுவும் இல்ல.. யார் என்ன சொன்னா என்ன? எப்படி பேசினா என்ன ?எனக்கு எங்க அறிவு போச்சு!!

பைத்தியக்காரி மாதிரி சொல்றது எல்லாத்தையும் நம்பினதற்கான பனிஷ்மென்ட் தான் இதெல்லாம்.."

" நீயேன் ஷர்மி உன்னோட அப்பா கிட்ட போகலை .."

"எப்படி போக சொல்ற ..இந்த மாதிரி கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்..வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமா ஒரு குழந்தையை பெற்றெடுத்து வெச்சி இருக்குறேன்..

என்னை பாருங்கன்னு போய் நிற்க சொல்றியா ..அவங்க என் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சு அனுப்பி வச்சாங்க..

உனக்கு தான் தெரியுமே அந்த நம்பிக்கை எல்லாத்தையும் நான் கெடுத்துட்டேன் .

டெல்லியில் இல்லாத யுனிவர்சிட்டியா.. இல்ல காலேஜா.. அதையெல்லாம் விட்டுட்டு நான் எதுக்காக இந்த சென்னைக்கு படிக்க வரணும் .

நாலு தடவை ஒருத்தன் திரும்பத் திரும்ப தொடர்ந்து வந்து பேசினா நான் எதுக்காக பேச்சு கொடுக்கணும் .

பேசின ஒவ்வொன்றையும் நம்பி என்னவோ புனிதமான காதல்னு நினைத்து என்னை நானே இழக்கனும் .

அதற்கான தண்டனை தான் இதெல்லாம்.. என்னோட தண்டனையை நான் மட்டும் தான் அனுபவிக்கணும் ஆனந்தி . மத்தவங்க யாரையும் கஷ்டப்பட வைக்க கூடாது ."

"இல்ல ..நான் வந்து.."

" போதும் ஆனந்தி.. இப்போதைக்கு வேறு எதையும் பேசாத.. இங்க யாரை பாக்கணும்.."

"ஸ்கூலோட தலைமை பொறுப்பில் இருக்கிறவர் எனக்கு வேண்டியவங்க ஷர்மிளா .அதனால பெருசா எந்த ஃபார்மாலிட்டியும் இருக்காது.

உன்னோட பொண்ணு அப்படியே உன்னோட ஜாடை ஷர்மி.. கண்ணு , வாய் எல்லாமே ‌‌ உன்னோட ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறா.‌ அவ்வளவு அழகு.."

" அப்படித்தான் சொல்லுவாங்க ஆனந்தி. இப்போதைக்கு நான் வாழ்வதற்கான அர்த்தம் கூட அவ தான் ".

"ஏன் இப்படி பேசுற.. நீ இப்படி பேசறது எனக்கு துளி கூட பிடிக்கல ஷர்மி .உனக்கு என்ன குறைச்சல் நல்ல வேலை இருக்குது.

கண்ணுக்கு நிறைவா ஒரு குழந்தை இருக்கு.. இதுக்குமேல என்ன வேணுமாம் .

என்னை எல்லாம் எடுத்துக்கோ எனக்குன்னு யார் இருக்காங்க.. பொறுப்பில்லாத அப்பா நான் ஏன் இருக்கேன்னு கூட எனக்கு புரியறது இல்லை.*

"உன்னோட ஒர்க் எப்படி போய்கிட்டு இருக்கு ஆனந்தி ".

"எப்படி போகுது நல்லா தான் போய்கிட்டு இருக்குது .உனக்கு தான் தெரியுமே ..

சென்னையில் டிகிரி முடிச்சு வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கே லா காலேஜ்ல சேர்ந்தேன். இன்றைக்கு நானும் ஒரு வக்கீல்னு பெருமையா சொல்லிக்கலாம் .

சின்ன சின்னதா வேலை வருது. செஞ்சிகிட்டு இருக்குறேன். அப்புறமா ஒரு பெரிய வக்கில்கிட்ட ஜூனியரா இருக்கிறேன்.

நம்ம கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டோம் பத்து மணிக்கு தான் ஆபீஸ் குள்ள விடுவாங்க .கொஞ்ச நேரம் இங்க தான் வெயிட் பண்ணனும்." அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த கவியை பார்த்தவள்..

"பொண்ணு ரொம்ப க்யூட்ல.. ரொம்ப அழகா இருக்கறா..*

"ரொம்ப புத்திசாலியும் கூட ஆனந்தி ..ஒரு நாள் கூட அவளால எனக்கு சிரமம் இருந்தது இல்லை."

"இன்னும் நேரம் ஆகும் போல இருக்கு நான் இவள வெளியே அழைச்சிட்டு போயிட்டு வரட்டுமா.. இவளுக்கு சாப்பிட பிஸ்கட் மாதிரி ஏதாவது வாங்கி தரணும்னு ஆசைப்படறேன் ஷர்மி".

" காலையில் ஆல்ரெடி சாப்பிட்டா.."

" நீ இப்ப என்ன சொல்ல வர்ற.. அவளுக்கு நான் எதுவும் வாங்கி கொடுக்க கூடாதுன்னா .."

"நான் அப்படியெல்லாம் சொல்வேனா தாராளமா நீ அவளை அழைச்சிட்டு போ..

நான் அப்படியே இந்த ஸ்கூல சின்னதா ஒரு ரவுண்டு சுத்தி பார்த்துட்டு வரட்டுமா.."

" இதென்ன கேள்வி நீ தாராளமா போய் சுத்தி பாரு ..உன் பொண்ண இங்க சேர்க்க போற.. இதெல்லாம் பார்த்து வைக்கிறது நல்லது தானே.."

" சரி கவி குட்டி ஆன்ட்டி கூட கடைக்கு போயிட்டு வாங்க.. அம்மா இப்ப வந்துடறேன் சரியா *என்றபடி நகர்ந்தால் ஷர்மிளா .

இப்போது தான் காலை 9 மணியை தொட்டுக் கொண்டிருந்தது .நிறைய மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வந்து கொண்டிருந்தனர்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்தபடி ஸ்கூல் காம்பவுண்டுக்குள் விட்டுவிட்டு நகர ,எல்லாவற்றையுமே ஒரு பார்வையாக பார்த்தபடி நகர்ந்தால் ஷர்மிளா.

ஸ்கூல் பார்க்கிங் அத்தனை நீளத்திற்கு பறந்து விரிந்து கிடந்தது வேடிக்கை பார்த்தபடியே நகர.. அப்போதுதான் அந்த பார்க்கிங்கை நோக்கி அந்த கார் வேகமாக வந்து கீரீச்சிட்டு நின்றது .

காரின் கதவை திறந்து கொண்டு இறங்கி நின்றான் அவன். நெடுநெடு உயரம் ஆறடி இருப்பானோ.. கண்ணை மறைத்திருந்த கூலிங் கிளாஸ் கண்ணாடி..

ஜீன்ஸ் பேண்ட் ,சட்டை சகிதமாக இறங்க, முன்னிருக்கையில் இருந்து அந்த சிறுவன் குதித்து இறங்கினான்.கூடவே இன்னொரு வயதானவர் பின் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கினார்.

" ராமண்ணா கொண்டு போய் இவனை இவனோட கிளாஸ்ல விட்டுட்டு வாங்க."என்று சொல்ல, இறங்கிய சிறுவன் வேகமாக அவனின் கன்னத்தில் முத்தமிட்டான்.

" பை டாடி போயிட்டு வரேன்.. தாத்தா போகலாம் "என மழலை குரலில் சொன்னபடி நடக்க இவளையும் அறியாமல் ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டது.

இருந்தால் இவளுடைய பெண்ணின் வயது தான் இருக்கும்..அந்த சிறுவனுக்கு.. நடப்பதில் அத்தனை பெரிய மனித தோரணை.. இவளையும் அறியாமல் அந்த குழந்தையின் பின்னால் கண்கள் சென்றது.

"ராம் அண்ணா..அப்படியே அந்த வாட்ச்மேன் இன்னைக்கு வந்திருக்கிறானாண்ணு பார்த்து சொல்லுங்க ".

"அதெல்லாம் வந்து இருக்கறான் தம்பி .காலையிலேயே தகவல் வந்துடுச்சு ."

"அப்புறம் என்ன? நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்* என்று சொல்லிவிட்டு இறங்கி வலப்புறமாக நகர ,சுற்றிலும் வேடிக்கை பார்த்தவள் பார்வை அவளையும் அறியாமல் அவனின் பின்னால் சென்றது .

சற்று தூரத்தில் நிற்கின்ற ஒருவனை கைகாட்டி அழைப்பது தெரிந்தது .

பெரிய ராஜான்னு நினைப்பு..பெரிய தோறணை தான்.. அந்தப் பையனின் நடவடிக்கை யாரிடம் இருந்து வந்திருக்கும் என்பது பார்க்கவும் புரிந்தது..

பார்த்துக் கொண்டிருந்த போதே அருகே வந்திருந்தவனை பளார் என கன்னத்தில் அடித்திருந்தான்.

அடி வாங்கியவன் ஏதோ சொல்வது புரிந்தது ஆனால் இவன் நிறுத்துவதாக இல்லை அடி ஒவ்வொன்றும் இடி என விழுவது போல அடுத்தடுத்து விழுந்துக் கொண்டிருக்க சற்றே அதிர்ச்சியோடு கவனிக்க ஆரம்பித்தாள்.

விட்டால் அடித்தே கொன்று விடுவான் போல இருந்தது அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றுமே..

ஓரளவுக்கு மேல் இவளால் பார்த்து சகிக்க முடியாமல் வேகமாக அவர்கள் நின்றிருந்த பகுதிக்கு சென்றாள் .

அவர்கள் நின்றிருந்தது சற்றே ஒதுக்குப்புறமான பகுதி.. நிச்சயமாக மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு கிடையாது.

இப்போதும் அடி வாங்கிக் கொண்டிருந்தவன் கெஞ்சிக் கொண்டிருந்தானே தவிர திரும்ப தடுப்பது போல் எல்லாம் இல்லை.

என்னவோ அடி வாங்குவதற்காகவே பிறந்தவன் போல கெஞ்சிக் கொண்டிருந்தான் ."அடிக்காதீங்க சார் வலிக்குது.. இனி இப்படி செய்ய மாட்டேன்"என்று கெஞ்சிக் கொண்டிருக்க..

"ஏன்டா எத்தனை தைரியம் இருந்தா இது மாதிரி காரியம் செய்வ…கேக்குறதுக்கு ஆள் இல்லை என்று நினைச்சியா..

ஏற்கனவே ஆபீஸ்ல பேசியாச்சு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு இருக்கிற இடம் தெரியாம ஓடி போயிடணும் .

அப்புறம் எதுக்காக அடிக்கறான்னு பாக்கறியா.. இன்னொரு பக்கம் வேலைக்கு போனா இது மாதிரி கை நீட்டாம இருக்கணும் அதுக்காக தான் இந்த அடி புரிஞ்சுதா.."சொன்னவன் இப்போதும் நிறுத்தவில்லை மறுபடியும் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.

வேகமாக அவர்களுக்கு அருகில் சென்று நின்றாள் ஷர்மிளா.

" நிருந்துங்கள்..என்ன சார் நடக்குது இங்க ..என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க யார் நீங்க எதுக்காக இவரை பிடித்து அடிக்கிறீங்க .

இவரை பார்த்தால் இங்கே இருக்கிற வாட்ச்மேன் போல இருக்குது. இவரை எதுக்காக நீங்க அடிக்கறீங்க". என்று வரிசையாக கேள்வியை கேட்டிருந்தாள்.

எதற்குமே அவனிடத்தில் இருந்து பதில் இல்லை .இப்போதுமே அவனைத்தான் அடித்துக் கொண்டிருந்தான்.

"எவ்வளவு தைரியம் இருந்தால் இதுபோல ஒரு காரியத்தை செய்வீங்க.

கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நினைக்கறீங்களா.. மிஸ்டர் உங்களை தான் கேட்டுகிட்டு இருக்கிறேன்."

இவள் கேட்டது எதுவுமே அவனது காதுக்கு சுத்தமாகவே விழவில்லை என்பது போல இருந்தது அவனுடைய நடவடிக்கை ஒவ்வொன்றுமே.. இப்போதும் கோபமாக அவனை அடித்தபடி தான் பேசிக் கொண்டிருந்தான்.

"இங்கே என்ன தப்பு நடந்தாலுமே என்னோட காதுக்கு வந்துடும்" என்ற படியே மறுபடியும் அடிக்க.. ஒரு கட்டத்திற்கு மேல் சகிக்க முடியாமல் வேகமாக அவனுடைய கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தால்.

"நீ என்ன பெரிய ரவுடியா.. அவர் தப்பு பண்ணி இருந்தாருன்னா சட்டப்படி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க .

அதை விட்டுட்டு தண்டிக்கிற உரிமை யாரு உங்களுக்கு கொடுத்தது.. இதுக்கு மேல இன்னொரு அடி அவர் மேல விழுந்ததுன்னா என்ன செய்வேன்னு தெரியாது "கோபமாக இவள் சத்தமிட அடிப்பதை நிறுத்திவிட்டு முதல் முறையாக திரும்பி இவளை பார்த்தான்.

சற்றே கண்களில் ஆச்சரியம் தோன்ற.. வேகமாக கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி விட்டு இவளை இன்னமும் ஆர்வமாக கவனிக்க ,

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தவன் தப்பித்தால் போதும் என்கின்ற நோக்கத்தோடு இவளையும் சேர்த்து தள்ளி விட்டுவிட்டு ஓடி இருந்தான்.

அதே நேரத்தில் இவளை தேடியபடி இவளுடைய தோழியும் அங்கே வந்திருந்தாள்.

" ஷர்மி என்ன செஞ்சுகிட்டு இருக்கிற "என கேட்டுப்படியே வந்தவள் வேகமாக நின்றிருந்தவனை பார்த்து.." மதி சார்.. வணக்கம் நல்லா இருக்கீங்களா "என்று இவனிடம் பேசியவள்.. வேகமாக ஷர்மியை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

"எதற்காக மரியாதை கொடுக்கிற.. ரவுடி மாதிரி இருக்கிறான். கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஒருத்தனை போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கிறான் .

அவனுக்கு நீ மரியாதை கொடுத்துக்கிட்டு இருக்குற.."

" இது மாதிரி எல்லாம் பேசாத ஷர்மிளா.. உனக்கு புரியாது சார் இங்கே ரொம்ப பிரபலமானவரு..

நிறைய பேருக்கு தெரிஞ்சவங்க கூட . அவர் ஏதாவது செஞ்சா காரணம் இல்லாம இருக்காது.. நீ எதுக்காக அவர் கிட்ட பேசிகிட்டு இருக்கற".

"என்ன பெரிய மண்ணாங்கட்டி நியாயவாதி.. எனக்கு புரியல ஆனந்தி .ஒருத்தனை பிடித்து வைத்து அவ்வளவு அடி அடித்துக்கிட்டு இருக்கிறான்.

அவனுக்கு நீ மரியாதை கொடுத்து பேசிக்கிட்டு இருக்கிற .."

"இத பாரு.. இது மாதிரி எல்லாம் யார்கிட்டயும் உளறிட்டு இருக்காத புரிஞ்சுதா.. இந்த ஏரியாவில் அவர் ரொம்ப பெரியவரு..

அவர் வைச்சது தான் சட்டம் இதுவரைக்கும் அவர் மேல எந்த குற்றச்சாட்டும் வந்தது இல்லை. முதல் முதலில் நீ தான் அவரை தப்பா சொல்லிக்கிட்டு இருக்குற.."

"இப்ப நீதான் உளர்ற ஆனந்தி.. ரவுடி மாதிரி ஒருத்தன பிடிச்சு அடிச்சுகிட்டு இருக்கிறான். அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்குது நீ பேசுறது.

முகத்தைப் பார்த்தால் தெரியலையா அவனோட முகத்தை பார்த்தா நல்ல விதமாவா யோசிக்க முடியுது உண்மையிலேயே ரவுடிதான்*.

" இப்ப யார் இல்லைன்னு சொன்னாங்க .மதி சார் பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும் .அவர் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவருக்கு கெட்டவன் .

ஏதாவது பிரச்சனைன்னு யாராவது சொல்லி இருப்பாங்க அதனால இன்னைக்கு இங்கே வந்திருக்கிறார் மத்தபடி ஸ்கூல் கிட்ட வர்ற பழக்கம் எல்லாம் அவருக்கு கிடையவே கிடையாது .

கொஞ்ச நேரம் பொறுமையா இரு என்னன்னு விசாரிச்சு சொல்றேன். மதி சார் காரணமில்லாமல் யாரையும் கை நீட்ட மாட்டாரு."

"அதெல்லாம் வேண்டாம். இவளை ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டு கிளம்பிடலாம்".

"நீ தப்பா புரிஞ்சு இருக்கிற.. ஷர்மி.. அவர் கிரேட் தெரியுமா .அவரை யாருமே கைநீட்டி குறை சொல்லிட முடியாது.."

"ஆனந்தி..எனக்கு அது தேவையில்லாத விஷயம்".

"நீ கோவமா இருக்கறேன்னு தெரியுது .நான் எதுவும் பேசல.. இப்பதானே இங்க வந்திருக்கிற…போக போக புரிஞ்சுக்குவ.. நீயே உன்னோட வாயால கிரேட் அப்படின்னு சொல்ற நாள் ரொம்ப தூரத்துல இல்லை.."

"ப்ளீஸ் நீ எந்த சமாதானமும் சொல்ல வேண்டாம் ஆனந்தி.. தடுக்க போய் ஒருத்தி நிக்கறேன். முகத்தை கூட பார்க்கலை.. அந்த அடி அடிக்கறான்."

"ஷர்மி நீயும் நானும் பேசுறத பார்த்து குழந்தை பயந்துட போறா.. நம்ம நேரா ஆஃபீஸ் ரூமுக்கு போகலாம். குழந்தையை சேர்த்து விட்ட பிறகு இத பத்தி பொறுமையா இன்னொரு நாள் பேசிக்கலாம்."

அடுத்த அரை மணி நேரத்தில் பேசி பள்ளியில் சேர்த்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

"உன்னோட திங்ஸ் எல்லாம் எப்ப இங்க வர போகுது ஷர்மி".

"ஆல்ரெடி பேக் பண்ணியாச்சு இன்னைக்கு வந்திடும்னு சொல்லி இருக்காங்க ..நீ எங்க வீடு பார்த்து இருக்கிற.. வீடு எப்படி இருக்குது வசதியா இருக்குமா ..எந்த பிரச்சனையும் இருக்காது தானே ".

"நீ என்கிட்ட எப்ப பொறுப்ப கொடுத்தையோ அப்பவே தெளிவா பண்ணிட்டேன். உனக்கு பாதுகாப்பா இருக்கக்கூடிய ஒரு இடத்துல தான் வீடு பார்த்து வைத்திருக்கிறேன்.

எப்பவும் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ நிம்மதியா குழந்தையோட என்ஜாய் பண்ணலாம்.

அங்க.. அந்த ஏரியாவுல வாட்ச்மேன் கூட இருக்கிறாங்க ரொம்ப ஷேப்பான இடம்.."இவளிடம் பேசியபடியே ஆட்டோக்காரரிடம் அட்ரஸ் சொன்னவள் அப்போதுதான் ஞாபகம் வர, வேகமாக தன்னுடைய பேக்கை எடுத்து தேடினாள்.

" என்ன ஆச்சு? என்ன தேடுற.."

"ஓ மை காட் முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். வீட்டோட சாவி இன்னும் என் கைக்கு வரல இரு ஒரு நிமிஷம்" என்றவள் வேகமாக போனில் அழைத்து பேசினாள்.

"அங்கிள் நான் ஏற்கனவே உங்க கிட்ட சொன்னேன் இல்லையா ..என்னோட பிரண்டு ஊர்ல இருந்து வந்திருக்கிறான்னு..

அவளுக்கு தங்குவதற்கு இடம் கொடுக்கணும்னு கேட்டேன்.. நீங்க கூட தரேன்னு சொல்லி இருந்தீங்க.. உங்க கிட்ட வீட்டு சாவியை நான் இன்னும் வாங்கலை.. நான் இப்ப அங்க வந்து வாங்கிக்கவா.."

"ஆனந்தி பொண்ணு தானே நீ.. இப்ப நான் அந்த ஏரியாவுக்கு தான் வந்திருக்கிறேன்.. வீட்டு சாவி கைல தான் இருக்குது. நேரா வீட்டுக்கு வந்துடு.‌அங்க வச்சு தந்துடறேன் நீ அலைய வேண்டாம் ".

"சரி அங்கிள் ரொம்ப தேங்க்ஸ்.."

"ஆனந்தி வாடகை பேசிட்டதானே அட்வான்ஸ் கொடுக்கணுமா .."

"அதெல்லாம் நிதானமா பேசிக்கலாம் ஒன்னும் அவசரம் இல்ல.."

"என்ன நீ கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இப்படி பேசுற.. இத்தனை நாள் நான் இருந்த பக்கம் எல்லாம் முதல்ல அட்வான்ஸ் கொடுத்துட்டு வாடகை பேசிட்டு தான் வீட்டுக்கு வருவோம். இங்க எல்லாமே அப்படியே தலைகீழா இருக்குது.."

"ஏன்னா இது என்னோட ஊரு.. என்னோட கிராமம் இங்கே இப்படித்தான்.."

"இதோ இந்த பக்கமாக உள்ள போகணும் ".

"ஏய் என்ன ஆனந்தி இது ஏதோ குவாட்டர்ஸ் மாதிரி இருக்குது..".

"உண்மையிலேயே இது குவாட்டர்ஸ் தான் .வேலை செய்றவங்களுக்காக கட்டி கொடுத்தது. இங்க தான் உனக்கு வீடு பார்த்திருக்கிறேன் பயப்படாத.‌.. நீ இங்க நிம்மதியா இருக்கலாம்".

ம்..

"அதோ அங்கிள் கூட வாசல்ல தான் நிக்கிறாங்க வா" என்றபடி வேகமாக இவளை அழைத்து சென்றவள் காலை தொட்டு வணங்கினாள்..

" நல்லாயிருமா.. நல்லா இரு இதுதான் உன்னுடைய பிரண்டா ..நீ பேசும்போதே உன்கிட்ட வீட்டு சாவியை கொடுத்து இருக்கணும்.

வயசாகுதில்லையா மறந்துட்டேன். இந்தா மா இந்த வீட்டோட சாவி.. வீட்ல ஏற்கனவே தேவையான எல்லா பொருட்களுமே இருக்குது அதை எல்லாமே அப்படியே யூஸ் பண்ணிக்கலாம் .நான் எதுவும் சொல்ல மாட்டேன் ".

"தேங்க்யூ அங்கிள்.. தேங்க்யூ வெரி மச்.."

"இவங்க ரெண்டு பேரும் தான் தங்க போறாங்களா .."

"ஆமாம் அங்கிள்.. இவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இங்க தங்க போறாங்க.. இவங்களுக்கு பாதுகாப்பான ஒரு இடம் தேவை இருந்தது அதனாலதான் இங்க கூப்பிட்டுட்டு வந்தேன்."

"ஏன் அப்படி சொல்ற.. இந்த பொண்ணோட ஹஸ்பண்ட் எப்போ வருவாங்க.."

" அங்கிள் வந்து.."

"எனக்கு கணவர் இல்ல.. நானும் குழந்தையும் மட்டும்தான்.. இன்னும் சொல்ல போனா எனக்கு யாரும் இல்லை.இப்போதைக்கு.."

"அப்படி எல்லாம் சொல்லக்கூடாது மா இனிமே இந்த அங்கிளும் உங்களுக்கு துணையாய் இருப்பேன் கவலைப்படாத.. தனியா இருக்கிறதா என்னைக்கும் நீ யோசிக்க வேண்டாம்..

உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அந்த நிமிஷம் நான் உனக்கு வந்து செஞ்சு தருவேன் என்ன நம்பலாம்".

" இதை நீங்க சொல்லவே தேவையில்லை . இன்னமும் கொஞ்ச நாள்ல ஷரிமியே புரிஞ்சுக்குவா..

ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைக்கிறதுக்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சிட்டீங்க..

இவதான் என்னோட பிரண்டு ஷர்மிளா.. இவ அவளோட குழந்தை கவி.

இவங்க ரெண்டு பேருக்கு தான் உங்ககிட்ட வீடு வேணும்னு கேட்டேன் இங்கனா அவளுக்கு பாதுகாப்பா இருக்கும்னு தோணுச்சு அதனாலதான் உங்ககிட்ட இந்த உதவியை கேட்டேன்".

"இனி உன்னோட பிரண்டை பத்தி கவலைப்பட வேண்டாம் ஆனந்தி.. "

"நன்றி அங்கிள் "சாவியை கொடுத்தவர் புறப்பட்டு இருந்தார்.

அதன் பிறகு இவர்களுடைய நேரம் சுவாரசியமாகவே கழிந்தது .மாலை வரையிலுமே ஷர்மிளாவோடு கூடவே இருந்த பிறகு தான் புறப்பட்டு போனாள் ஆனந்தி.

காலை முதலே நடந்தது ஒவ்வொன்றையும் யோசிக்க ஆரம்பித்திருந்தால் ஷர்மிளா.

அன்றைய நாள் காலையில் நடந்த சண்டையை தவிர்த்து பார்த்தால் மிகவும் இனிமையாகவே கழிந்ததாக தோன்றியது ஷர்மிளாவிற்கு.. கூடவே இவளிடம் அன்பாக பேசிவிட்டு சென்ற அங்கிளை பார்க்கையில் எங்கோ பார்த்தது போல தோற்றமும் இவளுக்குள் வந்து சென்றது.

இனி என்றுமே பார்க்கக் கூடாது என நினைத்தது காலையில் சண்டையிட்டவனை தான். ஆனால் இனிமேல் அவனை அடிக்கடி சந்திக்க போவது அப்போது அவளுக்கு தெரியவில்லை.
 

Kavisowmi

Well-known member
2

"துரை கிட்ட தான் கேட்கிறேன்.வீட்டுக்கு வர இப்பதான் நேரம் கிடைத்ததோ ..

இன்னைக்கு என்ன செஞ்சு வச்சிருக்கிற.. நீ எதுக்காக இன்னைக்கு சூர்யாவை அழைச்சிட்டு ஸ்கூல் பக்கம் போனயா.."

". ஏன் நான் போகக்கூடாதா ..அவன் என்னோட பையன் தானே ..அவன் என்ன பண்றான் எங்க போறான் இதெல்லாம் எனக்கு தெரிஞ்சுகிற உரிமை இல்லையா ".

"பையனா..உனக்கு இதெல்லாம் கூட ஞாபகம் இருக்குதா.. சொல்லு.."

" இப்ப எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க.. ராமண்ணா என்ன ஆச்சு சூர்யாவை சாயங்காலம் அழைச்சிட்டு வந்தாச்சு இல்லையா.."

" அதாண்டா நானும் கேட்கிறேன் காலையில் மட்டும் கொண்டு போய் விட்ட இல்ல ..

சாயங்காலம் அதே மாதிரி கூப்பிட்டு வரணும்னு ஏன் உனக்கு தோணலை.. என்னைக்காவது ஒரு நாள் இவ்வளவு அக்கறையை அவன் மேல காட்டணுங்கற அவசியம் கிடையாது .

எப்போதும் போல நீ அவனை அப்படியே விட்டுவிடலாம் .."

"இப்ப எதுக்குப்பா தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க .இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை நான் ஸ்கூலுக்கு போனது தப்பா!!

இல்ல தினமும் கூட்டிட்டு போகலைன்னு இப்படி பேசிட்டு இருக்கீங்களா.."

போறது ..போகாம இருக்கிறது அதெல்லாம் பிரச்சனை கிடையாது. எதுக்காக ஸ்கூல்ல போய் பிரச்சனை பண்ணினே..

எதுக்காக அந்த வாட்ச்மேன்னை அப்படி அடிச்சு போட்டுட்டு வந்து இருக்கிற..

அவன் சம்பளம் கூட வாங்கலை.. இனி அந்த ஸ்கூல்லையே வேலை செய்ய மாட்டேன்னு பயந்து ஓடிட்டான் இப்போ உனக்கு சந்தோஷம் தான.."

" நல்ல விஷயம் தானே ஓடினா ஓடிட்டு போகட்டுமே ..செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுத்தாச்சு.

சம்பளம் வாங்காததும் வாங்கறதும் அவனுடைய இஷ்டம் தானே.. நான் வந்து எதுவும் சொல்லலையே.."

" எதுக்காக நீ முதல்ல அடிச்ச அதுக்கு பதில் சொல்லு .."

"அப்பா சும்மா தொண தொணன்னு பேசிட்டு இருக்க வேண்டாம் .நான் சொன்னா மட்டும் உங்களுக்கு காரணம் புரிஞ்சுற போகுதா.. அப்பவும் நீங்க என்னதான் தப்பா பேசுவீங்க.

நான் அவனுக்கு கொடுத்தது சரியான தண்டனை தான் .இனி அத பத்தி பேச வேண்டாம்.

ராமண்ணா எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கிறேன் .ஒரு டம்ளர் காபி கொண்டு வர மாட்டீங்களா .."

"போதும் போதும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.எத்தனை அதிகாரம்.. இதை வைச்சுகிட்டு தானே அத்தனை பேரையும் மிரட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்குற..

என்னைக்காவது உருப்படியாகற எண்ணம் இருக்குதா ..எங்க போனாலும் அடிதடி, சண்டை நீ எங்க போனாலும் யாரையாவது அடிக்காம திரும்பி வர்றீயா ..இது என்ன பழக்கம்னு எனக்கு புரியல".

" அப்பா தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் சரி.. நான் பாத்துட்டு சும்மா எல்லாம் வரமாட்டேன். நிச்சயமா நான் தட்டி கேட்பேன்.

இன்றைக்கு ஸ்கூல்ல நடந்தது அது போல தான் ஒரு பிரச்சனை.. அங்க மட்டும் இல்ல எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் சரி என் கண்ணுக்கு முன்னாடி நடந்தா கேக்காம வரமாட்டேன்".

" போதும்டா இப்படியே எத்தனை நாள் சொல்லிக்கிட்டு இருப்ப.. உனக்கு ஒரு பையன் இருக்கிறான் ஞாபகம் இருக்குதா .

புண்ணியவதி பெத்து போட்டுட்டு போய் சேர்ந்துட்டா.. இந்த நிமிஷம் வரைக்கும் நான் தான் பதறிக்கிட்டு இருக்கிறேன் .

ஒருவேளை அவ இருந்து இருந்தா நீ இப்படி எல்லாம் மாறி இருக்க மாட்டியோ என்னவோ .."

"நான் என்றைக்கு மாறினேன் கல்யாணம் பண்ணின போதும் இப்படித்தான் இருந்தேன் இப்போவும் அப்படித்தான் இருக்கிறேன் .

நான் எப்பவுமே அப்படித்தான் இருப்பேன் .என்கிட்ட எந்த மாற்றத்தையும் நீங்க எதிர்பாக்காதீங்க..

தேவையில்லாம என்கிட்ட இப்படி பேசுற வேலையும் வேண்டாம் பா புரிஞ்சுதா.."

" போதும்டா போதும் ..கடைசி வரைக்கும் உன்னை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே தான் சாகனும் போல இருக்கு .

இது நான் வாங்கி வந்த சாபம் என்று நினைக்கிறேன் ."

"இது மாதிரி எல்லாம் பேசாதீங்கப்பா என்னால உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துருச்சு .

இந்த நிமிஷம் வரைக்கும் நான் நல்லா தானே இருக்கிறேன்".

" நிமிஷத்துக்கு நிமிஷம் இப்படிதாண்டா சொல்ற.. எந்த நிமிஷம் உனக்கு என்ன ஆகும்னு என்னால பயந்துகிட்டு இருக்க முடியாது .

இன்றைக்கு அங்க போய் சம்பந்தமே இல்லாம ஒருத்தனை அடித்து போட்டு இருக்கற..

நாளைக்கு இத எல்லாத்தையும் மனசுல பகையா வச்சுக்கிட்டு உன்னை ஏதாவது செஞ்சுட்டா .."

"என் மேல கைய வைக்க இந்த ஊர்ல யாருக்காவது தைரியம் இருக்குதாப்பா ..அப்படி இருந்தா சொல்லுங்க பாத்துக்கலாம்".

" போதும்டா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பேசிக்கிட்டு சுத்துறேன்னு எனக்கு தெரியலை .

இப்ப சொல்றது தான் கடைசி இனி யார்கிட்டயாவது சண்டை போட்டேன்னு வச்சுக்கோ நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது".

" சரி சரி சும்மா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டாம் ..ராமண்ணா நான் உங்ககிட்ட எவ்வளவு நேரமா கேட்டுகிட்டு இருக்கேன் .

ஒரு காபி கொண்டு வர இவ்வளவு நேரமா.. சரி நீங்க எதுவும் கொண்டு வர வேண்டாம் நான் வெளியே போய் எப்பவும் போல குடிச்சிக்கிறேன்."

" டேய் நில்லுடா போதும் இந்நேரத்துக்கு எங்க போக போற.. வந்ததே பத்து மணிக்கு இதுல காபி குடிக்க வெளியே போவானாமாம் உள்ளேயே இரு" கோபமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் தேவன் .

"ராமண்ணா சூரியா தூங்கிட்டானா.."

" அதெல்லாம் அப்பவே தூங்கியாச்சு தம்பி.. ரொம்ப நேரமா உங்கள தான் கேட்டுக்கிட்டு இருந்தான்".

" என்ன கேட்டுகிட்டு இருந்தான்".

" என்னவோ உங்க கிட்ட நிறைய பேசணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான் .."

"ஓ அப்படியா சரி நான் ரூமுக்கு போய் அவனை பார்த்துக்கறேன்". தன் மகனை சென்று பார்க்க.. அறை தூக்கத்தில் இருந்தவன் சத்தம் கேட்கவுமே எழுந்து அமர்ந்திருந்தான்.

" அப்பா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் .."மழலைமில் அழகாக கொஞ்சி பேச.." சொல்லுங்க என்ன விஷயம் .."

"வந்து அப்பா எனக்கு.. என் ஸ்கூல்ல புதுசா ஒரு பிரண்டு கிடைச்சிருக்கிறா தெரியுமா.."

" அப்படியா ..புது பிரண்டா.. பேர் என்ன?"

" பேரு வந்து.."

" என்ன ஆச்சு.. பேரை மறந்துட்டியா நீ ".

"இல்லப்பா ஞாபகம் இருக்குது இருங்க" என்று வேகமாக யோசித்தவன்.." கவிப்பா.. கவி.. ரொம்ப அழகா டால் மாதிரி இருந்தா தெரியுமா ".

"அப்படியா நீ பேசினாயா? "

"நான் பேசினேனே என்னுடைய சாப்பாட்டை கூட அவளுக்கு கொடுத்தேன். அப்புறமா அவளோட சாப்பாடு எனக்கு கொடுத்தா.. நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டோம் தெரியுமா ".

"குட் குட் வெரி குட் இப்படித்தான் இருக்கணும். இப்போ நீ சாப்பிட்டியா இல்லையா".

"சாப்பிட்டேன் பா..ராமண்ணா சாப்பாடு தந்தாங்க .."

"உனக்கும் அண்ணாவா..சரி தான்.."

"நான் சாப்பிட்டேன் எனக்கு தூக்கம் வருது.. தூங்குறேன் பா "என்று சொல்லிவிட்டு ஒரு பக்கமாக சரிய சின்ன புன்னகையோடு அருகே சென்று படுத்துக் கொண்டான்.

குழந்தையின் கையை எடுத்து தன்னுடைய கைக்குள் வைத்தவன் குழந்தையை மெல்ல தடவி கொடுத்தபடியே கண் அயர்ந்து இருந்தான் மதியழகன் .

அடுத்த நாள் காலையிலேயே வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தான்.

" என்னடா காலையிலே கிளம்புற மாதிரி இருக்குது ".

"ஆமாம் முக்கியமான வேலை இருக்குதுப்பா ..நம்ம மாரியை வர சொல்லி இருக்கிறேன் ."

"சொல்ல மறந்துட்டேன் நீ உன்னோட மாரிக்கு கொடுத்த வீட்டை வேற ஒருத்தவங்களுக்கு வாடகைக்கு கொடுத்துட்டேன் ".

"என்னது எதுக்காக அப்படி கொடுத்தீங்க.. எதையும் என்கிட்ட சொல்றது இல்லையா".

" இத பாருடா புதுசா நம்ம ஊரு பேங்குக்கு ஒரு பொண்ணு வேலைக்கு வந்து இருக்கிறா.. அவளுக்கும் அவளோட குழந்தைக்கும் தங்கறதுக்கு இடம் வேணும்னு நம்ம ஆனந்தி தான் சொன்னா ..

பாதுகாப்பான இடமா வேணும்னு கேட்டதால அந்த வீட்டை அவங்கள தங்கிக்க சொல்லிட்டேன்.

நீ மாரிக்கு வேற ஏதாவது இடம் பார்த்து கொடு.. இல்லையா நம்மளோட கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்கிக்க சொல்லு.

பாதி நேரம் உன் பின்னாடி தானே சுத்திகிட்டு இருக்கிறான். அவனுக்கு எதுக்கு தனியா வீடு ..நீ எங்க இருக்கிறாயோ உன் பக்கத்துலயே அவனுக்கும் ஏதாவது ஒரு ரூம் ரெடி பண்ணி கொடுத்து பார்த்துக்கோ..புரிஞ்சுதா .."

"அப்பா தேவையில்லாத வேலை எல்லாம் நீங்க செய்றீங்க பா .ஒரு விஷயம் செய்றீங்கன்னா அதை என்கிட்ட சொல்ல மாட்டீங்களா..
இவ்வளவு லேட்டா சொன்னா..

நான் எப்பவும் போல அவனோட வீட்ல போய் தங்கிக்க சொல்லி இருந்தேன். இப்ப அவன் அங்க போய் என்ன கூத்து பண்ணி வச்சிருக்கான்னு தெரியல "..

"சும்மா எதுவும் சொல்லிக்கிட்டு இருக்காத புரிஞ்சுதா.. நேத்து வரும்போது வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கிறேன்.

அவன் உள்ளே போகும்போதே சொல்லி வெளியே நகர்த்தி கூப்பிட்டு வந்து இருப்பான் அதனால் பயப்படாம வேலையை பார்."

"எல்லாம் உங்க அதிகாரம் தான் இல்லையா" என்ற படியே புறப்பட்டு வெளியேற.." எங்கடா இவ்வளவு காலையில் கிளம்பி போற.."

" எங்க போவாங்க நம்மளோட மாலுக்கு தான் போறேன். அங்க கொஞ்சம் வேலை இருக்குது .

இன்றைக்கு எக்ஸலெட்டர் எல்லாம் சரியா ஒர்க் ஆகவில்லை என்று கம்ப்ளைன்டா சொல்லிக்கிட்டு இருக்காங்க .

அதுக்கு சர்வீஸுக்கு ஆள் வர சொல்லி இருக்காங்க .இன்னைக்கு மதியம் வரைக்கும் அங்க தான் இருப்பேன் .ஏம்பா..
நீங்க ஏதாவது சொல்லனுமா. "

" உன்கிட்ட என்ன சொல்ல போறேன்.. சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை .ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா போன் பண்ணுறேன் சரியா வந்து சேரு ..புரிஞ்சுதா..
ராம் சூர்யாவை சீக்கிரமா எப்பவும் போல ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுடு புரிஞ்சுதா.."

" சரி அண்ணா.."

அதே நேரம் இங்கே ஷர்மிளாவை அழைத்துக் கொண்டு ஆனந்தி புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

"எங்கடி கூப்பிட்டுட்டு போற.. பக்கத்துல எதாவது கடையை காட்டுனா மாலுக்கு கூப்பிட்டு வந்து நிப்பாட்டி வைத்திருக்கிற.."

" ஷர்மிளா உனக்கு சொல்லி எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல. இது நமக்கு தெரிஞ்சவங்களோட கடை தான் .

இங்க எல்லாமே நியாயமான விலையில் கிடைக்கும் .காய்கறி மட்டுமல்ல வீட்டுக்கு தேவையான என்ன பொருள் வேணும்னாலும் இங்க வாங்கிக்கலாம் .

உனக்கு இதெல்லாம் தெரியனும் தானே ..அதனால தான் இங்கே அழைச்சிட்டு வந்தேன் ."

"நாங்க இருக்கிறது இரண்டு பேரு எங்களுக்குன்னு பெருசா எதுவும் தேவை இருக்காது ".

" கடை கடையா சுத்தி வாங்குற அளவுக்கு எல்லாம் நிறைய லிஸ்ட் போட தேவை இருக்காது ."

"சரி ஷர்மி.. தேவை இருக்காது எனக்கும் புரியுது .ஆனா இந்த இடத்தை எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கலாம் இல்லையா.. அதுக்காக தான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன்.
நீ எப்ப பேங்க்ல டூட்டில சேரனும்".

" இன்னும் ரெண்டு நாள் லீவு சொல்லி இருக்கிறேன் .பிறகு போய் சேர்ந்தாகணும் .அதுக்குள்ள கவியும் அவளோட ஸ்கூல்ல செட்டில் ஆயிடுவான்னு நம்புறேன்".

" அதெல்லாம் ஆகிடுவா.. நீ அவளை பத்தின கவலையே உனக்கு தேவையில்லை .ஸ்கூல் ரொம்ப பாதுகாப்பான ஸ்கூல் ..

சாயங்கால நேரம் போய் அழைத்தால் மட்டும் போதும். அது கூட முடியாட்டி பிரச்சினை இல்லை ஆட்டோவோ இல்ல வேனுக்கு சொல்லிக்கலாம் கரெக்ட்டா கொண்டு வந்து வீட்டு வாசல்லயே இறக்கிடுவாங்க.."

"தேங்க்ஸ் ஆனந்தி நீ இல்லன்னா நிஜமாகவே நிறைய சிரமப்பட்டு போயிருப்பேன் .இங்கே நான் தனியா இருக்கிற பீல் ஒரு நிமிஷம் கூட வரல.. அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒரு பீல் கொடுத்து இருக்கிற.."

" போது..ம் போதும்.. நீ உடனே ஆரம்பிக்காத புரிஞ்சுதா .."

"எனக்கு வேண்டியது எல்லாம் இந்த லைன்ல இருக்கு போய் வாங்கிட்டு வரேன். நீ வேணும்னா அந்த பக்கம் என்ன இருக்குன்னு பார்த்து ஏதாவது வேணும்னா வாங்கிட்டு வா".

" ஓகே இன்னும் பத்து நிமிஷத்துல இங்க ரிட்டன் வந்துடுவேன் ".

காலை 11 மணியை நெருங்கி கொண்டிருந்தது . வாங்க வேண்டும் என்கின்ற பொருள்களை ஏற்கனவே பட்டியலிட்டு இருக்க வேக வேகமாக ஒவ்வொன்றாக எடுத்து நகர்ந்து கொண்டிருந்தால் ஷர்மிளா.

ஆனந்தி வாங்க சென்றது சில உடைகளை மட்டும் ..அதனால துணி கடைக்குள் நுழைந்து இருந்தாள்.

ஷர்மி வாக்கியபடி நகர்ந்து கொண்டிருக்க அப்போதுதான் அந்த சத்தம் இவளது காதிற்கு தெளிவாக கேட்டது .

யாரோ ஒருவன் பளாரென்று யாரையோ அடிக்கின்ற சத்தம்.. ஒரு நிமிஷம் நின்றவளுக்கு நேற்றைய ஞாபகம் தான் முதலில் வந்தது.

நேற்றைக்கும் கூட அப்படித்தானே..யாரோ ஒருவனை பிடித்து அடித்துக் கொண்டிருந்தான். சட்டென்று ஞாபகம் வர நெத்தியை தன் கையால் தேய்த்து விட்டவள் சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தாள்.

சத்தம் வந்த திசையை பார்த்தவள் அந்த பக்கமாக சென்று பார்க்க அங்கே இவள் கண்ட காட்சி திகைக்க வைத்தது.

யாரோ சிலரை பிடித்து அடித்துக் கொண்டிருந்தான் அவன்.. நேற்றைக்கு பார்த்தவன்.

பார்க்கவே சுறுசுறு என கோபம் வந்தது இவளுக்கு..' இவனுக்கு வேற வேலையே இல்லையா ..எங்க போனாலும் யாரையாவது அடிக்கிறது தான் இவனுக்கு வேலையா..' என்று மனதில் நினைத்தபடி வேகமாக அந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

ஆண், பெண் இருவர் இவனது முதுகிற்கு பின்னால் நின்று இருக்க நால்வரை பளார் பளார் என அடித்து கொண்டிருந்தான் அவன் .

"என்னடா.. என்ன எத்தனை தூரம் சொன்னாலும் நீங்க எல்லாம் புரிஞ்சிக்கவே மாட்டீங்க இல்லையா..

ஏன்டா இப்படி இருக்கறீங்க.. ஏற்கனவே நான் உங்ககிட்ட சொன்னேன்ல.. அந்த பொண்ணு மேலேயும் பையன் மேலேயும் கை வைக்க கூடாது அப்படின்னு.. திரும்பவும் அவங்களே துரத்திட்டு வந்தா என்ன அர்த்தம் .

அப்ப நான் சொன்னதுக்கான மரியாதை என்ன ?"என்று கேட்டபடி ஒருவனை பளார் என்று அடிக்க அவன் அடிப்பதை வாங்கினார்களே தவிர திரும்ப எதிர்த்து பேச எல்லாம் இல்லை .

இதை பார்க்கவும் இவளுக்கு இன்னும் எரிச்சல் அதிகமாக தான் வந்தது.

என்ன இவங்க.. என்ன மனுஷங்க இவன் ஒருத்தன் அடிக்கிறான் என்னவோ வாங்குவதற்கு தான் பிறந்த மாதிரி இப்படி கன்னத்தை காட்டிட்டு நிக்கறாங்க "என்று நினைத்தபடியே வேகமாக அவனுக்கு எதிரில் வந்து நின்றாள்.

" என்ன.. நேத்துதான் ஸ்கூல்ல தகராறு பண்ணுனீங்க. இன்னைக்கு மால்லயா ..உங்களுக்கு இதுதான் வேலையா.. வேற வேலையே கிடையாதா..

எதற்காக இப்ப இவங்களை சம்பந்தமில்லாமல் அடிக்கிறீங்க "என்று கோபமாக கேட்க.. ஏற்கனவே அடி வாங்கிக் கொண்டிருந்தவனில் ஒருவன் திரும்ப அடிப்பதற்காக கை ஓங்க.. சட்டென்று அவனது கையை பிடித்து நிறுத்தியவன். பளார் என அடித்திருந்தான்.

அடி அவனுக்கு மட்டும் விழவில்லை ஏதோ கேட்பதற்காக வந்து நின்ற இவளுக்கும் கூட ஒரு அடி கன்னத்தில் விழுந்து இருந்தது.

இவளை வேண்டுமென்று அடிக்கவில்லை ஆனால் அதே நேரத்தில் எதிராளியை அடிக்கும்போது தவறுதலாக இவள் மேலும் பட்டிருந்தது.

அந்த ஒரு அடிக்கே சட்டென கண்களில் பொரி பறக்க ஒரு இடத்தில் அப்படியே அமர்ந்து விட்டால் ஷர்மிளா.

இவனுக்கு பின்னால் நின்றிருந்த இருவரையும் பார்த்து .."ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் இல்ல .அப்பா அம்மா கிட்ட பேசுறதுக்கு முன்னாடி இப்படி அங்கங்க சுத்தாதீங்கன்னு முறையா பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறது என்னோட பொறுப்பு ..

இன்னொரு முறை இது மாதிரி சுத்திக்கிட்டு இருக்காதீங்க புரிஞ்சுதா ..இத பாரு உன்னோட அப்பா பெரிய அரசியல்வாதி தான் இல்லன்னு சொல்லலை உன்னை பார்க்கிறதுக்காகவே நாலு பேரை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி சுத்த வைக்கிறார்னா நீ தானே ஜாக்கிரதையா இருக்கணும் .

எல்லா நேரமும் ஒரே மாதிரியா இருக்காது. அந்த பையனுக்கு ஏதாவது ஒன்னுனா யார் பதில் சொல்றது கிளம்புங்க" என்று சொன்னவன் எதிரில் நின்ற நால்வரையும் பார்த்து..

" இப்ப சொல்றது தான் கேட்டுக்கோ.. நாலு பேருமே எனக்கு தெரிஞ்சவங்க அப்படிங்கறதால தான் இந்த அட்வைஸ் இல்லன்னா நடக்கிறது வேற ..

இன்னொரு தடவை இந்த மாதிரி அந்த பையனை அடிக்க முயற்சி பண்ணினா நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் புரிஞ்சுதா.. முதல்ல நகர்ந்து போங்க "என்று அவர்களை நகர்த்தி விட்டவனுக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது அடிக்கையில் வேறு யாரோ ஒருவரை அடித்தது போல் இருந்ததே.. என நினைத்தபடியே சுற்றிலும் பார்க்க.. சற்றே ஓரத்தில் கன்னத்தை பிடித்தபடி அமர்ந்திருந்தால் ஷர்மிளா.

ஷர்மிளாவை பார்த்தபடி அருகே நெருங்கப் போக.. எழுந்தவள் அவனை முறைத்தபடியே வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள்.

வேகமாக ஆனந்தியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றிருந்தாள். அவளது முகத்தை நன்றாகவே பார்த்திருந்தான் மதியழகன்..

வீட்டிற்கு செல்லும் வரைக்கும் அமைதியாக இருந்தவள் உள்ளே சென்ற உடனேயே ஆனந்தியிடம் கத்த ஆரம்பித்து இருந்தால் .

"நேத்து பார்த்தோம் இல்ல.. அந்த.. அந்த ஆளு தான் .இங்கே ஏதோ பிரச்சனை போல இருக்கு. அந்த மால்ல நிறைய பேரை பிடிச்சு அடிச்சுக்கிட்டு இருந்தான்..

என்னன்னு போய் கேட்க போனேன் யோசிக்கவே இல்ல பளார்னு என் கன்னத்துல அடிச்சிட்டான் .".

"ஏன்.. என்ன நடந்தது ஷர்மி.. ஏன் அங்கே வச்சு சொல்லல ..முன்னமே சொல்லி இருந்தா என்ன எதுன்னு கேட்டுட்டு வந்து இருக்கலாம் இல்லையா".

" என்னன்னு கேப்ப.."

" நான் தான் நேத்து சொன்னேன்ல.. அவன் இந்த ஏரியாவுக்கு ரொம்ப பெரிய ஆளு அப்படின்னு.."

" அதுதான் அந்த திமிர்ல தான் எல்லாத்தையும் கை நீட்டிக்கிட்டு இருக்கிறான். நல்லவேளை அந்த நேரத்துல கவி பக்கத்துல இல்ல இருந்திருந்தால் ரொம்ப பயந்திருப்பா தெரியுமா.."

" வந்து ஷர்மிளா ஏதோ மிஸ் அன்டர்டேண்டிங் நினைக்கிறேன். நீ நினைக்கிற மாதிரியான ஆளு அவர் கிடையாது .

அவர் கொஞ்சம் நியாயவாதி அவ்வளவு சீக்கிரம் சட்டுனு கை நீட்டறவர் கிடையாது ."

"சும்மா அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணாத ஆனந்தி .நான் தான் நேர்ல பார்த்தேனே.. கை நீட்டறது ஒன்னு தான் அந்த ஆளோட வேலை போல இருக்கு .சரியான பொறுக்கி".

" ஏன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லற ஷர்மிளா. அவர் கொஞ்சம் கோபக்காரர் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன் .

ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசம் கிடையாது."

" எத்தனை தடவை சொன்னாலும் நீ உன்னோட கருத்துல இருந்து மாறப்போறதில்லை .நானும் என்னோட பக்கத்து நியாயத்திலிருந்து மாறப்போறது கிடையாது.

அதனால இனிமே அந்த ஆளை பத்தி பேச வேண்டாம்.. விட்டுடு இரிடேடிங்கா இருக்குது .திரும்பத் திரும்ப ஒருத்தரோட முகத்தையே பார்க்கற மாதிரி இருக்குது."

"நான் தான் சொன்னேனே ஷர்மிளா இது ரொம்ப சின்ன ஊரு ..பார்த்த மனுஷங்களை தான் திரும்ப திரும்ப பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும்*.

" உண்மைய சொல்லட்டுமா ஆனந்தி எனக்கு அந்த ஆளை பார்த்தாலே அவ்வளவு கோவம் வருது .அவனை பார்க்கவே பிடிக்கல."

"விடு ஷர்மி.. இனி பார்க்க வேண்டிய சூழ்நிலை வராது.. சரி சாயங்காலம் கவி ஸ்கூல்ல இருந்து வந்துருவா.. நீ பார்த்துக்கவே தானே.."

"ம்.. நீ கிளம்பிக்கோ ஆனந்தி. நான் ஆட்டோவுக்கு சொல்லி இருக்கிறேன்.. அவங்க கரெக்டா கொண்டு வந்து இங்க விட்டுடுவாங்க..

வீட்டை கவனிக்க எனக்கு ஒரு வயசான ஆள் வேணும் கூடவே கவியையும் பார்த்துக்க யாராவது கிடைப்பாங்களா? கொஞ்சம் பார்த்து சொல்லணும்.."

"நேத்தே சொல்லி இருக்கலாம்ல.. அந்த அங்கிள் கிட்ட சொல்லி இருந்தா அவர் கரெக்டான ஆளை அனுப்பி வச்சிருப்பாரு ..

இப்போதும் ஒன்னும் பிரச்சனை இல்ல .நான் இன்னைக்கு போன் பண்ணி சொல்றேன் .நிச்சயமா நல்ல ஆமா நாளைக்குள்ள கிடைப்பாங்க.."

"ரொம்ப அவங்களை தொந்தரவு பண்ணாத ..சிரமமா இருக்க போகுது".

" அதெல்லாம் ஒன்னும் இல்ல ஷர்மி அவங்க கிட்ட எந்த உதவி வேணும்னாலும் கேட்கலாம் இன்னைக்கெல்லாம் நான் இந்த நிலைமையில் இருக்கிறேன்னா அதுக்கு காரணம் அவங்க தான்..

படிச்ச பிடிப்புக்கு இங்க வேலை சரியா கிடைக்கல.. அந்த நேரத்துல இதை செய்யனு சொல்லி என்னை லா காலேஜ்ல செலவு பண்ணி படிக்க வைத்தது அவங்கதான் .

ஒரு வகையில எனக்கு அவங்க தூரத்து சொந்தம்.. அங்கிள் முறையாகணும்..

சரி நீ ரெஸ்ட் எடு நாளைக்கு காலையில வந்து பார்க்கிறேன். முடிஞ்சா வேலைக்கு ஆளோட வந்துடுறேன்.."

அதே நேரத்தில் மதியழகன் வீட்டிற்கு சென்றிருந்தான். ஞாபகம் முழுக்க ஷர்மிளாவை சுத்தியபடியே இருந்தது..

யோசனையோடு ராமண்ணா வை அழைத்து இருந்தான்..

"ராமண்ணா நேத்து ஸ்கூல்ல ஒரு பிரச்சனை நடந்துச்சு இல்லையா அங்க ஒரு பொண்ண பார்த்தேன்.

சேம் அதே பொண்ணை இன்னைக்கு நம்ம மால்லேயும் பார்த்தேன். ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு ‌தவறுதலா அந்த பொண்ணு மேல என் கை பட்டுடுச்சு.."

"நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல தம்பி.. பட்டுடுச்சுண்ணு மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்.."

"அது வந்து.. வேற ஒருத்தனை அடிக்கும் போது தவறுதலா அந்த பொண்ணு மேல அடிபட்டுடுச்சு.. "

"சுத்தம்..ஏன் தம்பி வெளியே சுத்துற உங்களுக்கே தெரியல நான் வீட்ல இருக்கிறவன் எனக்கு எப்படி தெரியும்.."

"ம்.. அதுவும் சரி தான்.. பார்க்கலாம் நேர்ல பார்க்கும் போது சாரி சொல்லிக்கலாம் ஒன்னும் அவசரம் இல்லை.."

"சரி தம்பி நான் போகவா.. பெரியவருக்கு கொஞ்சம் முடியலைன்னு சொன்னாங்க.."

"அப்பாவுக்காக.. ஏன் என்ன ஆச்சு.."

"வழக்கம் போல மூட்டு வலி தான்.. கொஞ்சம் தைலம் போட்டு விட்டு சுடு தண்ணில ஒத்தடம் கொடுக்கணும்.."

"சரி ணா நீங்க போங்க.. நான் காலையில் அப்பாவை பார்த்து பேசிக்கறேன்."

காலையிலேயே தந்தைக்கு எதிரில் வந்து அமர்ந்து இருந்தான் மதி.

"அப்பா நைட்டு ராமண்ணா சொன்னாங்க .கால் வலிக்குது அப்பாவுக்கு.. படுத்து இருக்கிறதா சொன்னாங்க .இப்ப எப்படி இருக்கு".

" வயசானா எல்லாம் தானே வரும். இப்ப நான் நல்லா தான் இருக்கிறேன் .ஏன் ..

என்றைக்கும் இல்லாம இன்னைக்கு எதுக்காக இப்படி வந்து கேக்குற .."

"ஏன் எனக்கு உங்க பேர்ல அக்கறை இல்லன்னு நினைக்கிறீங்களா? "

"அப்படி சொல்ல முடியாது ஆனா அதே நேரத்துல அக்கறையா என்னை பாத்துக்கறேன்னும் சொல்ல முடியாதே..

நீ கொஞ்சம் சரியா இருந்தா நான் தேவையில்லாததை பத்தி எல்லாம் கவலைப்பட தேவையில்லையே.."

"அப்பா இப்போ எதுக்காக சுத்தி வளைச்சு பேசணும்.. நேரடியாக என்ன சொல்லணுமோ சொல்லுங்க ."

"நீ இப்படி தொட்டதுக்கும் கை நீட்டறது துளி கூட பிடிக்கல மதி. எனக்கு இப்பல்லாம் ரொம்ப பயம் வருது . இன்னமும் எத்தனை நாள் உயிரோட வாழ்ந்திட போறேன்னு நினைக்கற ".

"என்னப்பா ஏன் இப்படி பேசுறீங்க உங்களுக்கு அப்படி என்ன வயசு ஆயிடுச்சு. 65 வயசு ஆகி இருக்குமா இப்பவே இப்படி பேசினா என்ன அர்த்தம் .

உண்மையிலேயே ரொம்ப கால் வலியா இருக்குதா.. இப்பவே என் பின்னாடி கிளம்பி வாங்க. நான் உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு.. கொண்டு வந்து விடுகிறேன்".

" அதெல்லாம் வேண்டாம் டா.. அதெல்லாம் எதுவும் தேவையில்லை நேத்து நைட்டு தைலம் போட்ட பிறகு ஒரு அளவுக்கு வலி குறைந்து இருக்கு.. "

"அப்புறம் ஏன் பா முகம் இவ்வளவு டல்லா இருக்குது ".

"உனக்கு சொன்னா புரியாது மதி எனக்கு சூர்யாவை பத்தின கவலை நிறைய இருக்குது."

" நீங்க சொல்றது எனக்கு எதுவுமே புரியல.. இப்ப சூர்யாவுக்கு என்ன பிரச்சனை . அவன் இப்ப தான் இரண்டாம் கிளாஸ் போறான். ரொம்ப சின்ன பையன்..

அவனால உங்களுக்கு என்ன பிரச்சனை.. குறும்பு கூட பண்றது இல்லையே.. சொன்ன பேச்சை கேட்டுக்கிட்டு அவ்வளவு நல்லவிதமா நடந்துக்கிறான் .அவனை பத்தி நீங்க ஏன் கவலைப்படணும்".

" நீயேன் பேச மாட்ட மதி ..உனக்கு என்ன காலையில கிளம்பி போனா கொஞ்ச நேரம் மால்.. பிறகு மத்த வேலையை பார்த்திட்டு, நேரத்தை போக்கிட்டு நைட் வீட்டுக்கு வர்ற..அவன் சின்ன குழந்தை.

அவனோட சின்ன சின்ன ஆசை கனவு இப்படி எதையுமே நீ கண்டுக்கிற மாதிரி இல்லையே.".

"என்னப்பா.. நீங்க சொல்ற எதுவும் எனக்கு புரியல .அவன் ஆசைப்படற எல்லாமே நான் வாங்கி தரேன் .

இன்னமும் சொல்லப்போனால் கூட தான் இருக்கிறேன் .
இதுக்கு மேல என்ன வேணும்".

" நான் உனக்கு சொல்ல வர்றது சுத்தமா புரியலையா மதி .உனக்கு என்ன வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கற.. "

"இது என்ன கேள்வி 30 வயசாக போகுது .ஏன் அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ".

"நான் சங்கரி இறந்த போதே நினைச்சேன் மதி .அடுத்த ஒன்னு ரெண்டு வருஷத்துல உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ கல்யாணத்துக்கு சம்பாதிக்கல..

இன்றைக்கு வரைக்கும் இப்படியே தான் சுத்திக்கிட்டு இருக்குற.. பையன்.. அவனுக்கு ஒரு அம்மா வேணும்னு எப்பவாவது யோசித்து இருக்கிறாயா?

அவனோட தேவைகள் என்ன? அவனோட ஆசை என்ன ?இது எல்லாம் பத்தி யோசித்து இருக்கிறாயா?

அம்மா பாசத்துக்கு ரொம்ப ஏங்குறான் அது உனக்கு புரியுதா.."

" இப்ப தேவை இல்லாம எதுக்காக இதையெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க ..சம்மந்தா சம்பந்தம் இல்லாம பேச வேண்டாம் புரிஞ்சுதா..

நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியாச்சு .என்கிட்ட எந்த மாற்றத்தையும் எதிர்பாக்காதீங்க நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்.

என்னோட மனைவிங்கற இடம் சங்கரிக்கு மட்டும் தான் இருக்குது வேற யாருக்கும் கிடையாது .மிச்சம் இருக்கற அவளோட நினைவுகளோடையே போயிடனும்னு ஆசைப்படுறேன்."

"மதி நான் சொல்ல வர்றது உனக்கு சுத்தமா புரியல . உன்னோட அம்மா இறக்கும் போது உனக்கு ஏழு வயசு..

நானும் உன்னை மாதிரி தான் கிட்டத்தட்ட சுத்தினேன். எனக்கு என்னை யாரும் அதிகாரம் பண்ண கூடாது.

நான் தான் மத்தவங்கள அதிகாரம் பண்ணனும் இந்த மாதிரி நிறைய யோசனையோட தான் சுத்திக்கிட்டு இருந்தேன்.

கல்யாணத்த பத்தி ஒரு நிமிஷம் கூட யோசிக்கலை.. இன்னமும் சொல்லப்போனால் எனக்காக யோசிக்க யாருமே இல்ல .

நான் தனியா தான் இருந்தேன் எனக்கு உன் துணையே போதும் என்கிற மாதிரி நினைச்சேன். உன்னை வளர்த்தினேன்.

அதே மாதிரியே நீயும் தனிமரமா நிற்கறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது."

"அப்பா..நான் உங்க பையன் ப்பா நீங்க எப்படி இருந்திங்களோ அது மாதிரி தான் நானும் இருப்பேன் என்கிட்ட எப்படி நீங்க மாற்றத்தை எதிர்பார்க்கலாம் .

என்னோட வாழ்க்கையில இனி ஒரு பொண்ணுக்கு இடமே கிடையாது.உங்கழுக்கு 65 வயசு தான் ஆகுது .

பையனுக்கு இப்பவே ஏழு வயசு ஆச்சு.. இன்னமும் ஒரு 15 வருஷம் தாராளமா நீங்க உயிரோட இருப்பிங்க .

உங்களோட பேரனுக்கு கல்யாணம் பண்ணி அந்த பொண்ண பார்த்துட்டு போகலாம்."

"பைத்தியம் மாதிரி உளறாதுடா.. நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்குற.."

" அப்ப ப்ளீஸ் இந்த பேச்சை இத்தோட விடுங்க ஏற்கனவே நிறைய முறை பேசிட்டீங்க .

நானும் என்னோட பதிலை சொல்லியாச்சு .மறுபடியும் மறுபடியும் இதை பத்தி பேசாதீங்க என் லைஃப்ல என்னை பொறுத்த வரைக்கும் எல்லாமே முடிஞ்சு போச்சு.

இனி இப்படித்தான் இருப்பேன் கடைசி வரைக்கும் உங்களுக்கு ஏதாவது வேலை செய்யணும்னா சொல்லுங்க நான் செஞ்சுட்டு போறேன்."

"உன்கிட்ட பேசறதும் ஒன்னு கருங்கல் பாறையில் முட்டறதும் ஒன்றுதான். இந்த மாசத்தோட வாடகை பணம் இது..இதை போய் பேங்க்ல போட்டுட்டு வந்துடு.‌"

" கொடுங்க "என்று வாங்கியவன் புறப்பட்டான்.

"ஹலோ ஷர்மிளா வேலைக்கு புறப்பட்டாச்சா.. இன்னைக்கு தான வேலையில ஜாயின் பண்றதா சொன்ன ..

குழந்தை ஸ்கூலுக்கு கிளம்பிட்டாளா.."

" அதெல்லாம் காலையிலேயே கிளம்பிட்டா ..அவளுக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு கொடுத்து அனுப்பியாச்சு .

இனி சாயங்காலமா கொண்டு வந்து விட்டுடுவாங்க. ரொம்ப தேங்க்ஸ் ஆனந்தி சரியான நேரத்தில் வீட்டில் ஆள் அரேஞ்ச் பண்ணி கொடுத்ததற்கு ..

பார்க்கவும் ரொம்ப நம்பிக்கையானவர்களா இருக்கிறாங்க ..இனி நான் தைரியமா வேலைக்கு போயிட்டு வரலாம் .

குழந்தையை பத்தின பயம் இல்லாமல் நிம்மதியா வேலையை பார்க்கலாம்..அவளை பத்தின பயம் நிறைய இருந்தது. "

"நான் தான் சொன்னேன்ல தேவன் அங்கிள் கிட்ட சொன்னா போதும் சரியான நேரத்தில் எல்லாம் செஞ்சு தந்துவிடுவார்கன்னு.. சரி ஆல் த பெஸ்ட் போயிட்டு வா ..

பேங்க் எப்படி இருக்கு அங்க வேலை செய்றவங்க எப்படி இருக்காங்க எல்லாத்தையும் சாயங்காலமா வந்து சொல்லு ..

எனக்கு இன்னைக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு.."

"ஒகே ஆனந்தி பை.." என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் ஷர்மிளா.

யாரை இனி பார்க்க கூடாது என நினைத்து புறப்பட்டாளோ இனி தினமும் அவனை ஏதாவது ஒரு வகையில் பார்க்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே…
 

Kavisowmi

Well-known member
3

காலையிலேயே மேனேஜரை பார்த்துவிட்டு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஷர்மிளா.

ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலை என்பதினால் பெரியதாக சிரமம் எதுவும் தெரியவில்லை .

அடுத்த சில நிமிடங்களிலேயே வேலை பிடிபட வேகமாக தன்னுடைய வேலையை ஆரம்பித்து இருந்தாள்.

இடையிடையே வரும் கஷ்டமர்கள் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லி, என்ன செய்ய வேண்டும் என கூறி முகத்தில் புன்னகையை வாட விடாமல் அமர்ந்திருக்க, அப்போது மேனேஜர் இவளை அழைத்தார்.

"ஷர்மிளா மேடம் சின்ன ஹெல்ப்.. இங்கே கேஷ் கவுண்டர்ல இருக்கிறவங்களுக்கு வெளியே ஏதோ வேலை இருக்குதா ரெண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டு இருக்காங்க .

அவங்க வர்றவரைக்கும் உங்களால ஹாண்டில் பண்ண முடியுமா ஷர்மிளா மேடம் "என்று கேட்க சரி என்பது போல தலையாட்டிவிட்டு கேஷ் கவுண்டரில் வந்து அமர்ந்தாள்.

அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டிருக்க நேரம் வேகமாக நகர்ந்தது.

வேகமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது தான் மதியழகன் அங்கே வந்தது .

வழக்கம் போல வரிசையில் வந்தவன் தன்னுடைய பணத்தை எடுத்து நீட்ட வாங்கியவள் அப்படியே நிமிர்ந்து பார்த்தால் ஷர்மிளா.

முகத்தை பார்க்கவும் முதலில் முகத்தில் வந்தது என்னவோ எரிச்சல் தான். அதன் பின்னால் வந்தது கோபம் ஆனால் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எரிச்சலை காட்டிவிட முடியாதே..

கையை நீட்டினாள் சற்று எரிச்சலோடு தான் பணத்தையும் கூடவே எழுதிய சலாணையும் வாங்கினாள்.

சரியாக எழுதி இருக்கிறதா என செக் செய்ய ,மேலே தேதியை அவன் போட்டிருக்கவில்லை .

"என்ன இது" என்றபடி எரிச்சலோடு திரும்ப நீட்டினாள்.

" மேல டேட் போடணும் போட்டு திரும்ப கொண்டு வாங்க "என்றபடி பணத்தையும் இவன் புறமாக நகர்ந்த அவளது முகத்தை பார்த்தவன் பதில் எதுவும் சொல்லாமல் வாங்கியபடி நகர்ந்தான் .

மீண்டும் சில வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி இருக்க," மறுபடியும் முதலில் இருந்தா" என நினைத்தபடி வரிசையில் வர ஆரம்பித்தான்.

வழக்கம் போல மறுபடியும் பணத்தை நீட்ட .. இப்போதும் வாங்கி பார்த்தவள்.." கீழே கையெழுத்து இல்லை "திரும்பவும் அதே எரிச்சலோடு திரும்பி முன்னால் வைத்தவள்.." கீழ உங்களோட சைன் போடணும் .தெரியாதா..

எனக்கு இங்க வேற வேலையே இல்லையா.. உங்க ஒருத்தருக்கு சொல்லித்தர்றது தான் வேலையா", சற்று எரிச்சலாக, கோபத்தோடு சொல்ல ,அதே நேரத்தில் அங்கே மேனேஜர் இவனை பார்த்து வேகமாக வந்து இருந்தான் .

"ஹலோ சார் வாங்க ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து.. இன்னைக்கு தான் வரிங்களா" என்று பேசிக்கொண்டு வர,

"அப்பா இன்றைக்கு வரல..அதனால நான் வந்துட்டு போலாம்னு வந்தேன்".

" என்ன ஆச்சு.. ஏன் வரிசையில் நிற்கிறீங்க .நீங்க நேரா என்னோட ரூமுக்கு வந்து இருக்கலாம் இல்லையா ..

நீங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஆள்". அவனிடம் பேசியபடியே ஷர்மிளாவை பார்த்தவர் "இவர் நம்மளோட ரெகுலர் கஸ்டமர் கொஞ்சம் பெரிய ஆளும் கூட.. இனி எப்பவுமே இவங்க வந்தாங்கன்னா காத்திருக்க வைக்காதீங்க .."

"சாரி மதி சார் நான் கொஞ்சம் பக்கத்துல வெளியே போயிட்டேன். அதனாலதான் உங்களை கவனிக்கலை..

ஒருவேளை வாசலிலேயே பார்த்து இருந்தால் அப்பவே வேலையை முடிச்சு கொடுத்திருப்பேன் "என்று பேசிய படியே இவனை அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.

மனதிற்குள் பொறுமி கொண்டிருந்தால் ஷர்மிளா ."கையில காசு ,பணம் இருந்தா போதும் போல இருக்கு .எல்லா இடத்திலேயுமே அதிகாரம் தூள் பறக்கும் போல..

இது ஒரு கவர்மெண்ட் பேங்க் தானே .இங்க கூடவா இதையெல்லாம் பாக்குறாங்க "என்று நினைத்த படியே அடுத்து நின்ற ஆளிடம் பணத்தை வாங்கினாள்..

"யார் இவங்க புதுசா இருக்காங்க.." எதுவும் தெரியாதவன் போல கேட்க அங்கே மேனேஜர்.."புதுசா மாற்றல் ஆகி வந்து இருக்கறாங்க.. இனி இங்கதான் வேலை செய்வாங்க..

நான் உங்களை பற்றி சொல்லி வைக்கிறேன் மதி சார் ..புதுசு இல்லையா.. அதனால் தான் உங்களை தெரியலை.."

"அவங்க கிட்ட பேசணுமே எப்ப பேசலாம்.."

" என்ன சார் என்ன விஷயம் சொல்லுங்க ..இப்பவே வேணும்னாலும் பேசலாம். ஒரு நிமிஷம் இருங்க ..நான் அவங்களை இங்கே வர சொல்லுறேன் "என்று எழுந்து நிற்க.." இல்லை இல்லை இப்ப வேண்டாம். இப்போ நிறைய பேர் ஏற்கனவே பேங்க்ல வந்து காத்துக்கிட்டு இருக்காங்க .இந்த நேரம் வேண்டாம் இன்னொரு டைம் வரேன்" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

ஷர்மிளாவை பற்றி பெரியதாக எந்த அபிப்ராயமும் அவனிடத்தில் இல்லை .

"சரியாக திமிர் பிடித்த பெண்ணா இருப்பா போல இருக்கு" இப்படித்தான் மனதில் தோன்றியது முதல் நாள் பள்ளியில் பார்த்த போது சம்பந்தமே இல்லாமல் தன்னிடம் வந்து பேசியதாக தோன்றியது.

அப்போது அவனுக்கு பெரியதாக தெரியவில்லை .அடுத்ததாக மாலில் நடந்தது ..

எதிர் பாராமல் அவளை அடித்தது.. அதற்கு தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் மதியழகன் அதனாலேயே தற்போது கேட்டுவிட்டு நகர்ந்தான்.

அவனை பார்த்த நொடியிலிருந்தே எரிச்சலாக சற்றே கோபமாக காணப்பட்டவளுக்கு வீட்டிற்கு வந்தபோது மனநிலை சுத்தமாக மாறி இருந்தது.

இவளுடைய மகள் கவி அன்றைக்கு மிகவும் ஆர்வமாக வந்திருந்தால் வந்தவள் விடாது பேசிக் கொண்டிருந்தாள்.

" உனக்கு தெரியுமா மம்மி.. எங்க ஸ்கூல்ல எனக்கு ஒரு பிரெண்ட் கிடைச்சிருக்கான்" என்று ஆரம்பிக்க..

" அப்படியா குட் குட்..வெரி குட் ..பெயர் என்ன? என்ன செய்றாங்க சொல்லுங்க கேட்போம்".

" பேரு சூர்யா அம்மா எனக்கு பக்கத்தில் தான் உட்கார்ந்து இருக்கிறான் .

பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது இன்றைக்கு..சப்பாத்தி தான் கொண்டு வந்தான் .

அது அவனுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.. சாப்பிடவே இல்ல.. டிபனை பிரித்து வைத்து அப்படியே பாத்துக்கிட்டு இருந்தானா..
எனக்கு பாவமா போச்சு .."

"அப்படியா அதுக்கு நீங்க என்ன செஞ்சீங்களாம்.. சொல்லுங்க கேட்போம் ".

"மம்மி நீங்க எப்பவுமே சாப்பாடு கொஞ்சம் அதிகமா தானே கொடுத்து விடுவீங்க .

அதனால என்னோட சாப்பாடை சாப்பிடறையா..நம்ம ஷேர் பண்ணிக்கலாமான்னு கேட்டேனா.. அவனுக்கு அத்தனை சந்தோஷம் உடனே வாங்கிட்டான் தெரியுமா..

அப்புறமா பேசினான் பேசினான் அவ்வளவு பேசுறான் மா..

அவங்க வீட்ல கார்டன் பெருசா இருக்குமாம்.. நிறைய பால் எல்லாம் வைத்திருக்கிறானாம்.. பேட் வெச்சிருக்கிறானாம்..

எனக்கு கிரிக்கெட் பிடிக்குமான்னு கேட்டான்".

"ம்.. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க.."

" எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் .எங்க வீட்டிலேயே நிறைய பால் நான் வச்சிருக்கேன் அப்படின்னு நானும் சொன்னேன்.."

"அப்படியா அப்புறம் வேற என்ன எல்லாம் பேசினீங்க ".

"நிறைய பேசிணோம் மா ..மிஸ் அடிக்கவே இல்ல.. ஏன்னா அவன் ரொம்ப நல்லா படிக்கிற பையனாம்..

பார்த்தா அப்படி எல்லாம் தெரியலம்மா ஆனா மிஸ் அவனை எதுவுமே சொல்லல..

அப்புறமா எப்பவுமே ஸ்கூல்ல அவன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பானாம்.. அப்படின்னு அவன் பெருமையா சொன்னான்..

அப்ப அவன்கிட்ட நான் சொன்னேன் நானும் கூட அப்படித்தான்.. நானும் எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க் தான் எடுப்பேன்னு சொன்னேன் அப்படியான்னு ரொம்ப ஆச்சரியமா கேட்டான்".

"..."

"அப்புறம்.. அப்புறமா.."

" என்னடா அப்புறம்.. என்ன ஆச்சு.."

" அப்புறமா இன்னொரு விஷயமும் சொன்னான் மா.. அது கொஞ்சம் சோகமா இருந்தது .அவனுக்கு அம்மாவே இல்லையாம்.

அப்பா மட்டும்தான் இருக்கறாங்களாம்.. முதல்ல நான் கேட்கலை.. பேசிக்கிட்டு இருக்கும்போது சொன்னான்.

உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கிறீங்க அப்படின்னு கேட்டேன். நான் என்னோட தாத்தா எங்க அப்பா ராமண்ணா நாங்க நாலு பேரு இருக்கிறோம் அப்படின்னு சொன்னான்.

அப்போ நான் தான் கேட்டேன் உனக்கு உங்க வீட்ல அம்மா இல்லையா அப்படின்னு கேட்டதுக்கு அவன் சொன்னான். அம்மா சாமிகிட்ட போயிட்டாங்கன்னு தாத்தா சொல்லுவாங்க. எனக்கு அம்மா கிடையாது .

அப்பா தான் என்னை பாத்துக்குவாங்க அப்படின்னு சொன்னான்.எனக்கு கஷ்டமா போச்சுமா ..

நம்மள மாதிரியே அந்தப் பையனும் பாவம் தானே.. எனக்கு அப்பா இல்லை அவனுக்கு அம்மா இல்லை கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்குது இல்லையா.."

"இது என்ன கவி பெரிய மனுசி மாதிரி பேசிக்கிட்டு இருக்கிற.. அதுக்கெல்லாம் நாம எதுவும் செய்ய முடியாது இல்லையா.."

"நாளைக்கு காலைல ஸ்கூலுக்கு போனதும் நான் அவன்கிட்ட பேசுவேன்.. நான் சொல்ல போறேன் ம்மா ..

நாளைக்கு அவன் கிட்ட பேசும் போது எங்க மம்மியை வேணும்னா நீ மம்மின்னு கூப்பிட்டுக்கோ அப்படின்னு சொல்லலாம்னு இருக்குறேன். நீ என்னம்மா சொல்ற.."

"கவி நீ கேட்டு நான் ஏதாவது வேண்டாம்னு சொல்லி இருக்கிறேனா.. இல்ல தானே உன்னோட விருப்பம் தாராளமா சொல்லிக்கோ.."

"அப்படியா நெஜமாவா.. அப்படின்னா இப்பவே நான் போன் பண்ணி சொல்லிடவா . "

"என்ன கவி செஞ்சுகிட்டு இருக்கிற போன இரண்டு நாள்ளயே போன் நம்பர் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கியா ..

இதெல்லாம் தப்பு இல்லையா .. இப்ப கூப்பிட்டா அவங்க என்ன நினைப்பாங்க ".

"அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டாங்க அவங்களோட தாத்தாவும் அவனும் மட்டும் தான் இப்போ இருப்பாங்களாம்."

"சரிதான் இந்த சின்ன வயசுலயே அவனுக்கு போன் எல்லாம் வாங்கி கொடுக்குறாங்களா.. இது நல்ல பழக்கமே இல்லையே ".

"அம்மா இது அவனோட போன் இல்லை.. இது அவங்க தாத்தாவோட போன் நம்பர்.. தாத்தாக்கு கூப்பிட்டா அவனும் பேசுவேன்னு சொன்னான் நான் இப்பவே கூப்பிட்டு பேசட்டுமா..

ப்ளீஸ்மா.. ப்ளீஸ் ப்ளீஸ். சரின்னு சொல்லுங்க நான் இப்பவே கூப்பிட்டு பேசணும் "என்று கேட்டு கொண்டிருக்க ,லேசாக புன்னகைத்தவள் ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

" தேவையில்லாம எதுவும் பேசக்கூடாது ..அஞ்சு நிமிஷம் தான் சரியா.. நான் சமையலை போய் கவனிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். போனில் சூர்யாவிற்கு அழைத்து இருந்தால் கவி..

"சூர்யா நா சொன்னேன்ல அம்மா வந்ததும் உனக்கு போன் பண்ணறேன்னு போன் பண்ணிட்டேன் "என்று ஆரவாரமாக கவியின் குரல் கேட்க.. எதிரில் எதிர்முனையில் சிறுவன் என்ன சொன்னானோ இங்கே குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து இருந்தாள். எட்டிப் பார்த்தவளுக்கு புது நிம்மதி தோன்றியது.

புது இடம், புது மனிதர்கள் எப்படி இணைவாளோ என்று சற்று பயந்து கொண்டு இருக்க ,எந்த கவலையும் இல்லாமல் கவி அனைவரிடமும் கலகலப்பாக பேச ஆரம்பித்து இருந்தது நிறைய நிம்மதியை தந்தது ஷர்மிளாவிற்கு..

ஐந்து நிமிடம் என்று சொல்லிவிட்டு அரை மணி நேரம் கழித்து இவள் புறத்தில் வந்திருந்தால் கவி .

"அம்மா பேசிட்டேன் அம்மா..அவன் கிட்ட சொல்லிட்டேன் எங்க மம்மியை நீ மம்மின்னு கூப்பிடலாம்னு சொல்லிட்டேன் .அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா.."

" என்ன சொன்னான் அந்த பெரிய மனுஷன் .."

"சரின்னு சொன்னான் கூடவே இன்னொன்னு சொன்னான். எங்க டாடியை நீ கூட டாடின்னு கூப்பிடலாம்..

நான் எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னான்".

" என்னடி சொல்ற.. அவன் தானே அம்மா இல்லைன்னு சொன்னான்.. நீயும் சொல்லிட்டியா. எனக்கு அப்பா கிடையாதுன்னு.."

"ஆமாம் மா அவன் சொல்லும்போது நானும் சொல்லணும் தானே.. காலையில பேசும் போது இதெல்லாம் தான் பேசிட்டு இருந்தேன் .

நான் இப்ப சொல்லவும் அவனும் எங்க அப்பாவை வேணும்னா நீயும் டாடின்னு கூப்பிடலாம். நானும் ஒன்னும் சொல்ல மாட்டேன் நாளைக்கு காலைல பாக்கலாம்னு சந்தோஷமா சொன்னான் தெரியுமா".

" சரி சரி ஓகே சண்டை இல்லாம இருந்தா சரி.."

"நாளைக்கு நீங்க ஸ்கூலுக்கு என்னை கொண்டு வந்து விடும்போது நான் உங்களுக்கு சூரியாவை காட்டறேன் சரியா ..

மம்மி அவன் ரொம்ப ஸ்வீட்டு தெரியுமா.. பார்க்க ரொம்ப அழகா இருப்பான்.. பொதுக்கு பொதுக்குனு.. பேசறது கூட அவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா.."

"அப்படியா சரி நாளைக்கு காலையில நான் கொண்டு வந்து விடுவேன் கவி..

சாயங்காலம் வழக்கமாக ஆட்டோக்கார அண்ணா வருவாங்க.. அவங்க கூட கரெக்டா வீட்டுக்கு வந்துடு .

வீட்ல வேலை செய்ற ஆண்டி இருப்பாங்க .சாயங்காலம் நீ வந்ததும் உனக்கு ஸ்னாக்ஸ் காபி எல்லாம் செஞ்சு தருவாங்க சாப்பிட்டுட்டு சமத்தா இருக்கணும்.

அம்மா ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன் சரியா .எந்த ரகலையும் பண்ண கூடாது.

நான் வந்த பிறகுதான் ஆன்ட்டி வெளியே போவாங்க .ஏதாவது டிஸ்டர்பன்ஸ் இருந்தா எனக்கு நீ உடனே போன் பண்ணி சொல்லலாம் புரிஞ்சுதா.."

"புரிஞ்சது மம்மி இப்ப நீங்க எனக்கு என்ன சாப்பாடு செய்றீங்க".

" உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் சமைச்சு தரேன் இன்னைக்கு நாம சப்பாத்தி செஞ்சுக்கலாமா..

உனக்கு புடிச்ச பட்டாணி குருமா வைத்து தரேன் நாம இன்னைக்கு சாப்பிட்டுக்கலாம். நாளைக்கு காலையில என்ன வேணும்னு சொல்லு. உனக்கு சமைச்சு தரேன்".

" அம்மா எனக்கு தயிர் சாதம் செஞ்சு தரீங்களா .."

"என்னடி இது அதிசயமா இருக்குது தயிர் சாதம் எல்லாம் கேட்க மாட்டியே.. பொதுவா தயிர் செஞ்சு கொடுத்தா எனக்கு பிடிக்காதுன்னு நல்லா கதை சொல்லுவ.."

"ம்மா சூரியாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.. இன்றைக்கு சொல்லி அனுப்பினான். நாளைக்கு எனக்கு தயிர்சாதம் கொண்டு வருவியான்னு கேட்டான்.

நானும் சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.."

" சரி தயிர் சாதம் கொஞ்சம் தரேன் கூடவே வேற ஏதாவது சமைச்சு தரேன்.. சரியா ரெண்டு பேரு ஷேர் பண்ணி சாப்பிடுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல.."

"சரிமா எனக்கு ஹோம் வொர்க் இருக்கு நான் பண்ண போறேன்..

அம்மா.. வந்து அம்மா இல்லாட்டி அவன் ரொம்ப பாவம் இல்ல .. நான் உங்க கிட்ட பேசற மாதிரி அவங்க அம்மா கிட்ட ஜாலியா பேசி பார்த்து இருக்க மாட்டான்ல.."

" அதுக்கு என்ன செய்ய முடியும் கவி அது அவங்க தலையெழுத்து.. நீயேன் அதையெல்லாம் யோசிக்கிற.‌"

"நாளைக்கு அவனை பார்த்து பேசணும் சரியா.."

"நாளைக்கு காலைல ஸ்கூலுக்கு வந்தா கட்டாயமாக பார்க்கிறேன் சரியா.. பார்த்து பேசிக்கலாம்.."

"அம்மா பிராமிஸ் பண்ணனும் .."

"என்னடா".

" என்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுற மாதிரி நீங்க சூர்யா கிட்டயும் பேசணும்.. "

"பாட்டி மாதிரி பேசாத புரிஞ்சுதா.. நான் நல்லாவே பேசறேன் போதுமா".. அடுத்த நாள் ஸ்கூலுக்கு போகும் போது கிடைக்கப்போகும் அதிர்ச்சியை தெரியாமலேயே சிரித்தபடி நகர்ந்தால் ஷர்மிளா.
 

Kavisowmi

Well-known member
4

"நைட்டெல்லாம் யாரோ ஒரு ஃபிரண்டு புதுசா கிடைத்திருக்கிறதா சொல்லி உளறிக்கிட்டு இருந்தான் ப்பா.. அத கொஞ்சம் என்னன்னு இன்னைக்கு பாத்துடுங்க.. "

"ஏண்டா பயப்படறியா.."

" பின்ன பயம் இருக்காதா.. எந்த அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறோமோ அதே அளவுக்கு பிரச்சனைகளையும் தினம் தினம் இழுத்து வைக்கிறோமே ..

அதனால கொஞ்சம் கவனமா இருக்கணும் தானே .."

"சரிடா சரி நான் என்னன்னு இன்றைக்கு பாக்குறேன் ."

"ராமண்ணாவை அனுப்ப வேண்டாம் நீங்க கூட போயிட்டு வாங்க..

பழகுற ஆள் எப்படி?இத கொஞ்சம் கவனிச்சுட்டு வாங்க . பிறகு அவனை பழக விடலாமா.. வேண்டாமாண்ணு முடிவு பண்ணிக்கலாம் .சொல்றது புரிஞ்சுதா பா".

"சரிடா எனக்கே விட்டால் டியூஷன் எடுப்ப போல இருக்குது .எனக்கு எல்லாம் புரியுது இப்ப என்ன நான் அவன் கூட போகணும் .அவ்வளவு தானே ..

நான் இன்றைக்கு பார்த்திருக்கிறேன். நீ புறப்படு.. காலைல எங்க வேலை இருக்குது."

" வழக்கம்போல மால்ல கொஞ்ச நேரம் அப்படியே பிரண்டுகளை பார்க்க வேண்டியதா இருக்குது அதையெல்லாம் முடிச்சிட்டு மதியம் வீட்டுக்கு வந்துடுவேன் ."

"சரிடா சூர்யா எழுந்தாச்சா இல்லையா.. போய் எழுப்பி விடு.
நைட்டு வீட்டுக்கு நீ எத்தனை மணிக்கு வர்ற.."

" அப்பா மேக்ஸிமம் வெளி வேலை எல்லாம் கம்மி பண்ண ஆரம்பிச்சாச்சு ..எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் இப்ப எல்லாம் ".

"ம்ம்.. எல்லாத்துக்கும் உன்கிட்ட ஏதாவது பதில் இருக்குமே.."

"அப்பா பேங்குக்கு போக சொன்னீங்கல்ல.. அதோட ரிசிப்ட் டேபிளில் வைத்திருக்கிறேன் .

பேங்க் புக் அங்க தான் இருக்குது கரெக்டா பார்த்து எடுத்து வச்சுக்கோங்க ".

"அதுதான் எனக்கு தெரியுமே எப்போதுமே நீ எந்த இடத்தில வைப்பியோ அந்த இடத்துல கரெக்டா வச்சுடுவ.. நான் பார்த்து எடுத்து வைத்துக்கொள்கிறேன்."

"சரிப்பா நான் புறப்படறேன் இன்னைக்கு நான் சூர்யா கூட போகணும்னு தான் நினைச்சேன் அதுக்குள்ள வேற ஒரு வேலை வந்துருச்சு ."

"சூர்யாவை விடவுமா உனக்கு முக்கியமான வேலை.. "

"அப்பா ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசி பழகாதீங்க .நான் சூர்யா மேல எந்த அளவுக்கு பிரியமா இருக்கிறேன்னு உங்களுக்கு தெரியும் அப்புறம் எதுக்காக அப்பப்போ என்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறீங்க.."

"நான் எதுவும் கேக்கலைடா.. இவனவன் வீட்டு பஞ்சாயத்துக்கு உன்னை கூட வாண்ணு கூப்பிட்டு இருப்பான்.

அதுக்கு தானே காலையில விழுந்துடுச்சு கிளம்பி போற.. அந்த ஆதங்கத்தில் தான் கேட்கிறேன்.. சரி நீ கிளம்பி போ நான் சூர்யாவா பாத்துக்குறேன்."

"சரி பா வீட்டுக்கு வந்ததும் யார் என்னன்னு டீடைல் சொல்லுங்கப்பா தொடர்ந்து அந்த பிரண்டு கிட்ட வந்து பேசலாமா வேண்டாமான்னு பின்னாடி சிரமப்படக்கூடாது இல்லையா."

"ஏழு வயசு பையனுக்கு என்னடா தெரியும் ..இவங்க கூட பேசலாம்மா.. இல்ல இவங்க கூட பேச கூடாதுன்னு..

நம்ம பெரியவங்க தான் சொல்லி புரிய வைக்கணும் அதையும் கேட்கிற நிலைமையில் அவன் இருக்கிறானா இல்லையான்னு முதல்ல பாக்கணும் ".

"என்ன சொன்னாலும் ஒரு பதில் வச்சிக்கோங்க.. நான் கிளம்பறேன்."

இங்கே கவி ஆரவாரமாக காலையிலேயே புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு முறை சமையல் அறையை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருந்தாள். "என்னடி சமையல்கட்டுக்கும் ஹாலுக்கும் நடந்துகிட்டு இருக்கிற..

சீக்கிரம் போய் குளிச்சிட்டு புறப்படற வழியை பாரு .."

"அம்மா நிஜமாவே நான் கேட்ட சாப்பாடு தானே செய்றீங்க ..அந்த ஆலு பரோட்டா தானே நீங்க இன்னைக்கு செய்றீங்க .."

"ம்.. நேத்து நைட்டு ஒன்னு கேட்ட.. இன்னைக்கு காலைல அதுக்குள்ள வேற ஒன்னு கேட்கற.. உன்னை வைச்சுகிட்டு என்ன செய்யறதுன்னு தெரியல ..நீ கேட்டது தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறேன்.

போறதுக்குள்ள ரெடி பண்ணி தந்துடுவேன்.."

" நீங்க என் பிரண்டு கிட்ட நல்லா பேசுவீங்க தானே .."

"அதுதான் நேத்து சொல்லிட்டேன்ல கட்டாயமா அவன்கிட்ட நல்ல விதமா பேசுவேன் போதுமா.."

"தேங்க்யூ மம்மி ஐ லவ் யூ மம்மி" என்று சொல்லிவிட்டு ஓடினால் கவி.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளை அழைத்துக்கொண்டு ஸ்கூலை நோக்கி புறப்பட்டு இருந்தனர் .

காலையிலேயே இவளது ஸ்கூட்டியில் பின்னால் அமர்ந்தவள் அணைத்தபடியே பேச்சு கொடுத்துக்கொண்டு வந்தாள்.

வழக்கம்போல அதே பரபரப்புடன் காணப்பட்டது இவள் படிக்கும் பள்ளி.. வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தியவள் இவளை கரம் பற்றி அழைத்துக் கொண்டு நடந்தாள்.

"இன்றைக்கு சீக்கிரமா வந்துடறதா சொல்லி இருக்கிறான் மா இங்க தான் பக்கத்தில் எங்கேயாவது இருப்பான்" என்று தேடியப்படியே வர, சூர்யாவை அழைத்துக் கொண்டு அவனுடைய தாத்தா வந்து கொண்டிருந்தார் .

தாத்தா ஏற்கனவே தெரியும் என்பதினால் வேகமாக அவருக்கு அருகே சென்று… "அங்கிள் நல்லா இருக்கீங்களா "என்று சொல்ல சற்று ஆச்சரியமாக இவளை திரும்பிப் பார்த்தார் .

அதே நேரத்தில் சூரியா" நான் சொன்னேன்ல தாத்தா என்னோட ஃப்ரெண்ட் இவ தான்"என்று சூர்யாவும் தாத்தாவிடம் அறிமுகம் செய்திருந்தான்.

" நீதானா ம்மா அந்த புது பிரண்டு..இவன் சொல்லவும் என்ன ஏதுன்னு பார்த்துட்டு போலாம்னு நான் இன்னைக்கு வந்தேன். நீ இந்த பிரண்டு கூட தாராளமா பேசிக்கலாம் சூர்யா "என்று சொல்ல இவளும் நின்று பேச ஆரம்பித்திருந்தாள்..

"என்னமா வீடு எல்லாம் சௌரியமா இருக்குதா.. இந்த ஊரு உனக்கு செட் ஆகிடுச்சா .."

"நானே உங்களை நேர்ல பாத்துட்டு பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன். நல்ல வேலை நீங்களே இன்னைக்கு எதிர்பாரா விதமா வந்துட்டீங்க .

ரொம்ப ரொம்ப நன்றி அங்கிள்.. வீடு மட்டும் இல்ல நீங்க ஏற்பாடு பண்ணி கொடுத்த வேலை ஆள் கூட ரொம்ப நல்லா நடந்துக்குறாங்க .

இவளுக்கு ஏற்பாடு பண்ணி தந்த ஆட்டோ டிரைவர் முதற்கண்டு.. நீங்க எனக்கு அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்கீங்க ..

இப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்குது. ரொம்ப பாதுகாப்பா இருக்கிற மாதிரி தோணுது .

முன்னாடி எல்லாம் எனக்கு கவியை பத்தின பயம் நிறைய இருக்கும் .இப்ப அந்த பயம் என் மனசுக்குள்ள துளி கூட இல்லை. அவ பாதுகாப்பா இருக்கிற அந்த நிம்மதியே எனக்கு நிறைய நிம்மதியை தருகிறது."

"என்னம்மா இவ்ளோ பெரிய வார்த்தை எல்லாம் பேசுற ஆனந்தியோட பிரண்டு.. ஆனந்தி என்னோட நண்பனோட பொண்ணு தான் .

எத்தனையோ சிரமப்பட்டாலும் ரொம்ப கௌரவமா சீக்கிரம் யார்கிட்டயும் உதவி கேட்க மாட்டா..

முதல் முதலில் கேட்டது உனக்காக தான் இது கூட செய்யாட்டி எப்படி? நாமெல்லாம் ஒரு ஊருக்குள்ள இருக்கிறோம்.

அப்புறமா உன்னோட வேலை எப்படி மா போகுது ".

"ரொம்ப நல்லா போகுது அங்கிள்.. இங்க இருக்கிறவங்களும் ரொம்ப பிரண்ட்லியா பழகறாங்க .

நான் இங்கே வரும்போது கூட நிறைய குழப்பத்தோடு தான் வந்தேன் .இந்த இடம் நமக்கு செட் ஆகுமா ..நம்ம எப்படி இங்க தங்கறது..

நாம எப்படி மத்தவங்க கூட பழகப் போறோம்.. இது மாதிரி நிறைய குழப்பம் இருந்துச்சு .ஆனா இப்போ எனக்கு துளி கூட இல்லை .

ஏதோ நம்மளோட சொந்த வீட்டிற்கு வந்த மாதிரியான ஒரு எண்ணம் இருக்கு .அந்த அளவுக்கு ரொம்ப பிரண்ட்லியா இருக்கிறாங்க".

" அதுதான் இந்த ஊரோட மகிமை சரி மா சரி நான் புறப்படறேன் ."

"சரி அங்கிள் நானும் கிளம்ப வேண்டியதுதான் கவி ஒரு நிமிஷம் இங்க வரியா.. இருந்தா இந்த லஞ்ச் பேக் எடுத்துட்டு ஸ்கூலுக்கு கிளம்பு நான் இப்படியே புறப்படுறேன்."

"ம்மா நான் கேட்ட மாதிரி சூர்யாவுக்கும் சேர்ந்துதானே கொண்டு வந்திருக்கிறீங்க.."

" அவனுக்கு சேர்த்துதாண்டா இருக்குது."

அதே நேரம் சூர்யா" நானும் கூட கவிக்கும் சேர்த்து தான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் ஆன்ட்டி"என்று சூர்யா சொல்ல மெலிதாக புன்னகைத்தாள்.

" டேய் நான் தான் உன்கிட்ட நேத்தே சொன்னேன்ல ..நீ எங்க மம்மியை மம்மின்னு கூப்பிடலாம் ..எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு . நீ ஆன்டின்னு கூப்பிடற.. அம்மான்னே கூப்பிடு.."

"அப்படி கூப்பிடவா ம்மா "சற்று தயக்கத்தோடு கேட்க ..சட்டென உருகி விட்டால் ஷர்மிளா .

"தாராளமா நீ கூப்பிடலாம்.நான் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கு நீயும் ஒரு குழந்தை மாதிரி தான்" என்று சொல்ல சந்தோஷமாக மம்மி என்று இவளை இருக கட்டிக்கொண்டான்.

போனவர் பேரனை ஒருமுறை எட்டிப் பார்க்க இங்கே சூர்யா ஷர்மிளாவை அணைத்துக் கொண்டு நின்றதை பார்த்தவருக்கு அத்தனை வருத்தம் ஒரு பெருமூச்சோடு பார்த்துவிட்டு புறப்பட்டார்.

தாயோடு மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்க வேண்டியவன் இன்றைக்கு யாரோ ஒருவரிடடம் அணைத்து கொண்டு நிற்பதை பார்க்கையில் மனம் வலிக்கத்தான் செய்தது.

எல்லாமே அந்த நிமிடம் மட்டும் தான்.அதற்கு மேல் எதையும் யோசிக்க தோன்றவில்லை. வேகமாக அங்கிருந்து விலகி புறப்பட்டு சென்று இருந்தார்.

காலையில் புறப்பட்டு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி இப்போது இருக்கிறதா என்று கேட்டால் ஷர்மிளாவிற்கு சொல்ல தெரியவில்லை.

காலையில் மிகவும் ஆசையாக தான் கவியை அழைத்துச் சென்றது. தன்னுடைய நண்பனை காட்டப் போகிறேன் அவன் உன்னை அம்மா என்று அழைப்பான் என்று எல்லாம் சொல்லும் போது முதலில் சிரிப்பு தான் வந்தது .ஆனால் அங்கே சென்று பார்த்த பிறகு தான் ஒரு உண்மை அவளுக்கு புரிந்தது.

சூர்யா யாருடைய குழந்தை என்பது அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது .

சில நாட்களுக்கு முன் பார்த்த அந்த பெரியவரை எங்கேயோ பார்த்தது போல தோன்றி இருக்க அது எதனால் என்பதும் இப்போது நன்றாகவே புரிந்தது.

இரண்டு முறை பார்த்து சண்டையிட்டவனின் குழந்தையும் அவனுடைய தந்தையும் என்பது தெள்ளத்தெளிவாக இவளுக்கு புரிந்தது .

இப்போதும் அந்த சிறுவனின் மேல் பரிதாபம் மட்டுமே வந்தது எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த குழந்தை இருக்கிறது என்று நினைக்கும் போது சற்றே வருத்தமாகவும் இருந்தது .ஆனால் எல்லாமே சில நிமிடங்கள் மட்டும்தான் .

குழந்தை ஆசைக்காக அப்படி அழைத்தாலுமே அதை தாண்டி அவர்களின் குடும்பத்தின் மேல் எந்த ஒரு பற்றுதலும் தற்போது இவளிடத்தில் இல்லை .

இன்னமும் சொல்லப்போனால் சூர்யாவின் தந்தையின் மேல் இன்னும் கூட கோபம் மனதிற்குள் சுழன்று கொண்டு தான் இருந்தது
ஷர்மிளாவிற்கு..

அருகில் யார் இருக்கிறார் என்று கூட தெரியாமல் கைநீட்டுபவனை மனிதனாகவே இவள் மதிப்பது இல்லை .

அன்று நடந்தது இன்னும் கூட கண்ணெதிரே வந்து சென்று விட்டு சென்றது .

எல்லாமே சில நிமிடங்கள் தான் .யார் எப்படி போனால் என்ன? தனக்கு இதைப் பற்றிய கவலை இல்லை .

தான் உண்டு தன்னுடைய குழந்தை உண்டு என வாழ்க்கையை தெளிந்த நீரலை போல வாழ நினைத்தால் இப்போது மட்டுமில்லை எப்போதுமே.. என்று நினைத்தபடி அன்றைக்கு பேங்கிற்கு சென்றாள்.

இரவு வீட்டிற்கு வந்தவன் தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

" காலையில ஸ்கூலுக்கு போனீங்களே ..பார்த்தீங்களா அப்பா".

" அதெல்லாம் பார்த்தேன் டா எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான் .நீ தேவையில்லாமல் பயப்பட வேண்டாம்.

சூர்யாவை தைரியமா அந்த குடும்பத்து கூட பழகலாம் ஒன்னும் தப்பு இல்ல .

நான் சொன்னேன் இல்ல.. நம்மளோட வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு கொடுத்து இருக்கிறேன் என்று ..அந்த ஃபேமிலி கூட தான் உன் பையன் அட்டாச்சிடா இருக்கிறான்.

அந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி அதனால நீ தேவையில்லாம பயப்பட வேண்டாம்.
நீ போன வேலை என்ன ஆச்சு ".

"அதெல்லாம் சுமுகமா நடந்து முடிஞ்சிடுச்சு பா .இனி அத பத்தி யோசிக்க வேண்டிய வேலை இல்லை."

அதே நேரத்தில் சூர்யா தந்தையை பார்த்தவன் ஓடி வந்திருந்தான் "அப்பா.. நீங்க ஏன் இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல இன்னைக்கு வந்து இருந்தா நான் உங்களுக்கு என்னோட பிரண்டை காட்டி இருப்பேன்ல..

புது மம்மியையும் காட்டி இருப்பேன்ல" என்று சொல்லவும் யோசனையோடு தன்னுடைய தந்தையை பார்த்தான்.

" என்ன பா சொல்றான்.. எனக்கு புரியல ".

"அதுதான் சொன்னேன்ல..சூர்யாவுக்கு புது பிரண்டு கிடைச்சிருக்குறா..அந்த பிரண்டை இவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .

அந்த பொண்ணு என்னோட மம்மியை நீ வேணும்னாலும் மம்மின்னு கூப்பிட்டுக்கலாம்னு சொன்னாளாம் .

அத வச்சு உன் பையன் அந்த பொண்ண மம்மின்னு கூப்பிட்டு இருக்கிறான். அதைத்தான் சொல்றான்".

" அப்படியா யாருப்பா அது..நான் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கிறேனா .."

"பார்த்து இருக்க வாய்ப்பு இருக்குதுடா .புதுசா பேங்குக்கு வந்திருக்கிறாங்க. நீ நேத்து போன இல்லையா.. பேங்க்ல பார்த்திருப்பியே.. "தந்தை சொல்லவும் புரிந்து விட்டது யாராக இருக்கும் என்று ..

"இப்ப ஞாபகம் வந்துடுச்சு ஆனா அந்த பொண்ணு நல்ல பொண்ணு தானே .."

"என்ன கேள்வி இது‌‌..ரொம்ப நல்ல பொண்ணுடா .நான் அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்கிறேன்.

நம்ம ஆனந்தியோட பிரண்டு தான்.."

" அப்படின்னா சரிப்பா.. எந்த பிரச்சனையும் வராதுனா.. எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல .

சரி சூர்யா நீ போய் விளையாடு உன்னை நான் அப்புறமா வந்து உன் கிட்ட பேசுறேன் ".

"அப்பா நான் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும் நீங்க கேட்டுட்டு தான் போகணும்".

" சொல்லு கேட்கிறேன்" என்று அங்கிருந்து சோபாவில் அமர சலுகையாக அவனுக்கு அருகே அமர்ந்தவள் அவளின் மேல் சாய்ந்தபடியே .."வந்து அப்பா நான் சொன்னேன் இல்லையா .என் பிரண்டோட அம்மாவை நான் மம்மின்னு கூப்பிட்டேன்னு…அப்படின்னா.. அப்படின்னா..

அந்த பொண்ணு உங்களை டாடின்னு கூப்பிடலாம் தானே.."

" என்னடா சொல்ற எனக்கு சுத்தமா புரியல .."

"அந்த பொண்ணுக்கு அப்பா கிடையாது .அந்த பொண்ணுக்கும் ஆசையா இருந்திருக்கும் தானே..

நான் எப்படி மம்மின்னு கூப்பிட ஆசைப்பட்டேனோ ..அதுபோல தானே அந்த பொண்ணும் டாடி என்று கூப்பிட ஆசைப்பட்டு இருக்கும் .

அவளை நான் …என் டாடியை டாடின்னு என்று கூப்பிட்டுகோன்னு சொல்லிட்டேன்பா..

உங்களுக்கு உன்னை கோபம் இல்லையே. உங்களை பார்க்கும் போது அவ டாடின்னு கூப்பிடலாம் தானே ..

அவ பேரு கவிப்பா பார்க்க அழகா க்யூட்டா இருப்பா ..புட்டு புட்டுன்னு எவ்வளவு அழகா பேசுவா தெரியுமா.."

" இத கேக்குறதுக்கு தான் இவ்வளவு ஐஸ் வைக்கிறயா நீ .."

"ப்ளீஸ் ப்ளீஸ் பா நான் எங்க அப்பாவ டாடின்னு கூப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

நீங்க அவ முன்னாடி கோபத்தை காட்டிட கூடாது.. அவ அப்படி கூப்பிட்டால் சரின்னு தலையாட்டணும்.. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக.."

" என்னப்பா இதெல்லாம் "என்று மறுபடியும் தந்தையை பார்க்க.." அவன் அப்படித்தான் சின்ன குழந்தை இல்லையா.. ஏதோ சொல்றான் நீ அப்படி எல்லாம் பயந்துக்க வேண்டாம் .

நீ எல்லாம் அந்த பொண்ண பார்த்து பேசுவியா என்ன? சந்தேகம் தான் அதிகபட்சம் ஸ்கூல் வாசலில்ல வைத்து பார்க்கலாம் .

மத்தபடி எங்கேயும் போகற டைப் எல்லாம் இல்ல .சரின்னு தலையாட்டி வை எதுவும் ஆகிடாது".

" சரிப்பா "என்றவன் மகனிடம் திரும்பி .."சூரியா இதை பாரு சட்டுன்னு ஒருத்தரை பார்த்து யாரும் மம்மி, டாடி என்று கூப்பிட எல்லாம் மாட்டாங்க .

ஏதோ நீ ஆசைப்படுற உன்னோட ஆசைக்கு நான் நடுவுல நிக்கல அந்த பொண்ணு எப்ப வேணும்னாலும் என்னை பார்த்து டாடின்னு கூப்பிடலாம்.

அப்பா கோபம் எல்லாம் பட மாட்டேன் சரியா .

சரி.. இப்போ போய் சமத்தா விளையாடுவீங்களாம்.."

" அப்பா வந்து ..நான் கவிகிட்ட போன்ல இந்த விஷயத்தை சொல்லணும் ப்ளீஸ் .எனக்கு உங்களோட ஃபோன் குடுங்க" என்று கேட்க சிரித்தபடியே எடுத்து நீட்டினான்.

" அஞ்சு நிமிஷம் தான் ரொம்ப நேரம் பேசக்கூடாது எனக்கு முக்கியமான கால்ஸ் வந்தாலும் வரலாம்" என்றபடி நகர்ந்து செல்ல வேகமாக கவிக்கு போனில் அழைத்தபடி நகர்ந்தான்.
 

Kavisowmi

Well-known member
5

"கவி உனக்கு தெரியுமா எங்க அப்பா கிட்ட நான் பேசிட்டேன் .அவரை நீ தாராளமா டாடின்னு கூப்பிடலாம்".

" அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. எனக்கும் கூட உங்க அப்பாவை பார்க்க ஆசையா இருக்குது எப்ப பார்க்கலாம் .எப்ப வருவாங்க. "

" அது வந்து அப்பா கொஞ்சம் பிஸியா சுத்துறவரு அவ்வளவு சீக்கிரம் பார்க்க எல்லாம் முடியாது நானே சாயங்காலம் வரும்போது ஒவ்வொரு நாள்தான் பார்ப்பேன்.

ஒவ்வொரு நாள் அப்பாவை பார்க்கவே மாட்டேன். நான் தாத்தா கூட இங்க வீட்லதான் இருப்பேன் நான் உன்னை பத்தி சொல்லி இருக்கிறேன்.

சரின்னு சொல்லி இருக்கிறாங்க எப்படியாவது இந்த வாரத்துக்குள்ள டாடியை ஸ்கூலுக்கு கூப்பிட்டு வரேன் .
அப்ப நீ பார்த்து பேசு சரியா".

" சரிடா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம் .எங்க மம்மி நாளைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது சமைச்சு தரேன்னு சொல்லி இருக்காங்க .

உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வர்றேன் சரியா .."

"அதே மாதிரி தான் நானும்.. எனக்கு வீட்ல செஞ்சு தருவதை நீயும் வாங்கிக்கணும் சரியா .இந்த டீலுக்கு ஒத்துக்கிட்டா நான் உன்னோட சாப்பாட்ட வாங்கி சாப்பிடுவேன் .இல்லாட்டி நான் வாங்கி சாப்பிட மாட்டேன் ".

'ரொம்ப தான் பிகு பண்ற.. அதெல்லாம் வாங்கி சாப்பிடுவேன் ஃபோனை வை "என்று சொல்லிவிட்டு போனை வைக்க சிரித்தபடியே நகர்ந்தான் சூர்யா.

வாழ்க்கை அழகாக நந்தவனத்தில் மகிழ்ச்சியாக சுற்றுவது போல நகர ஆரம்பித்தது .
கவியின் வாழ்க்கையும் ..சூர்யாவின் வாழ்க்கையும் ..

அவ்வப்போது சூர்யா கவியின் தாய் ஷர்மிளாவை பார்க்க மகிழ்ச்சியோடு மம்மி என்று கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்து இருந்தான்.

ஷர்மிளாவிற்கும் அவனுடைய ஏக்கம் புரிந்தே இருந்தது .அதனால் இன்று வரையிலுமே எந்த ஒரு பேச்சும் சொன்னது கிடையாது.

அவன் சொல்வதற்கு மறுப்பும் தெரிவித்தது கிடையாது. நாட்கள் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது.

அழகான ஞாயிற்றுக்கிழமை காலையில் சுறுசுறுப்பாக புறப்பட்டு கொண்டிருந்தால் ஷர்மிளா .

அருகே கவியும் ஆரவாரமாக புறப்பட்டு கொண்டிருந்தாள்" மம்மி நிஜமாகவே இன்னைக்கு மாலுக்கு போறோம் தானே..

எனக்கு பிடிச்ச கேக் வாங்கித் தருவீங்க தானே" என்று ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.

" எத்தனை தடவை சொல்றது இன்னைக்கு லீவு தானே இன்னைக்கு முழுக்க முழுக்க உன் கூட தான் இருக்க போறேன்.

நம்ம புதுசா ரிலீஸ் ஆகி இருக்கிற கார்ட்டூன் படம் பாக்க போறோம் உனக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன்.

பிறகு சாயங்காலம் தான் வீட்டுக்கு வருவோம் சரியா ..நான் ஒரு தடவை ப்ராமிஸ் பண்ணா என்னைக்காவது மீறி இருக்கிறனா.."

" அது எனக்கு தெரியும் மம்மி ஆனா திடீர்னு ஏதாவது வேலை வந்துடுச்சுன்னா ..திரும்பி வந்துடுவீங்களே .."

"ஞாயிற்றுக்கிழமை எனக்கு எப்பவுமே லீவுதான். யாரும் என்னை கூப்பிட மாட்டாங்க டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க சரியா. என் கூட கிளம்பி வா.."

" அம்மா நீயும் நானும் மேட்சிங் மேட்சிங் டிரஸ் போடலாமா .. உனக்கும் சேர்த்து டிரஸ் எடுத்து வைக்கட்டுமா .."

"மாட்டேன்னு சொன்னா நீ விடவா போற ..உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு கலர்ல எடுத்து வை இப்ப வந்துடறேன் ..

பாரு காலையில் சீக்கிரம் சமைச்சா தான் ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு புறப்பட்டு போக முடியும் .

மதியம் வெளியே சாப்பிட்டுக்கலாம். நைட்டு வீட்டுக்கு வந்து பாத்துக்கலாம் சரியா "குரல் கொடுத்தபடியே பேசிக் கொண்டிருக்க ஆரவாரமாக அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு பேரும் புறப்பட்டனர் .

நேராக சென்றது அங்கிருந்த மாலுக்கு ..அங்கே இல்லாத பொருட்களை கிடையாது முதலில் உள்ளே சென்றவர்கள் ஒவ்வொரு கடையாக விண்டோ ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தனர் .

வேடிக்கை பார்க்க மிகவும் பிடிக்கும் கவிக்கு.. ஒவ்வொன்றையும் பார்த்து அது என்ன இது என்ன என்று கேட்டுக்கொண்டே நகர்ந்து கொண்டிருந்தாள்.

அவளது கையைப் பிடித்தவள் நகராதபடி பேசிக் கொண்டிருக்க எதிரில் சூர்யா அவனுடைய தந்தையோடு வந்து கொண்டிருந்தான்.

மதியழகனை ஏற்கனவே இவள் பார்த்திருக்கிறாள் இரண்டு முறை.. இரண்டு முறையுமே சண்டையிட்டு இருக்க, எதிரில் வரவும் பேசுவதா வேண்டாமா என்கின்ற தயக்கத்தோடு நிற்க,சிறியவர்களுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை .

"மம்மி" என்று சொன்னபடியே சூர்யா தந்தையின் கையை தட்டி விட்டு விட்டு ஓடி இவளுக்கு அருகே வந்திருந்தான்.

" மம்மி நீங்களா சொல்லவே இல்ல ஏற்கனவே சொல்லியிருந்தீங்கன்னா நானும் உங்க கூடவே வந்து இருப்பேன்ல "என்று பேச ஆரம்பிக்க மதியழகன் எதுவுமே சொல்லாமல் கையை கட்டியபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அவனுக்கு எதிரிலேயே மகன் இவளை அம்மா என்று அழைப்பது இவளுக்கு சற்று பயத்தை தான் தந்தது .

கோபத்தில் ஏதாவது சொல்லி விட்டால் என்ன செய்வது என்கின்ற பதட்டம் இருக்க சூர்யாவின் உயரத்திற்கு குனிந்தவள்" திடீர்னு புறப்பட்டு வந்துட்டோம் சூர்யா அதனால தான் உங்ககிட்ட சொல்லல சரியா.

நீங்க ஏதாவது முக்கியமா வாங்க வந்திருந்தா நீ உங்க டாடி கூட போய் வாங்கிட்டு வா .நாங்க இங்கதான் சுத்தி பார்த்துகிட்டு இருப்போம்" என்று மெல்ல நகர்த்த நினைத்தாள். அதற்கெல்லாம் அசைவது போல தெரியவில்லை சூர்யா. இவர்களோடு வர தயாராக நின்று இருந்தான்.

சற்று நேரம் வரை பார்த்தவன் இவர்களுக்கு அருகே வர யோசிக்காமல் கவியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சூரியா மதியழகனுக்கு எதிரே வந்து நின்றான்.

" அப்பா நான் சொன்னேன்ல ..கவி இவ தான் ..என்னோட ஃப்ரெண்ட்.. நான் அன்னைக்கே என்னோட அப்பா கிட்ட பேசிட்டேன்.

நீ கூட டாடின்னு எங்க அப்பாவை கூப்பிட்டுக்கலாம் .அப்பா எதுவும் சொல்ல மாட்டாங்க "என்று சொல்ல கவியின் கண்களோ ஆர்வத்தில் விரிந்தது .

யாருக்கு தான் பிடிக்காது ஆறடி உயரத்தில் அத்தனை கம்பீரத்தோடு நின்றிருக்கும் போது.. சற்று தயக்கத்தோடும் மெல்ல சென்று கையை பிடித்தாள்.

குழந்தையின் தொடுகை இவனுக்கு கூட வேறு ஒரு ஏதோ ஒரு உணர்வை தந்தது .

மெல்ல சற்றே குழந்தையின் உயரத்திற்கு குனிந்து மண்டியிட்டவன்" என்ன அப்படி கைப்பிடித்து பார்க்கிறீங்க .என்னை தெரியுதா"என்று சிரித்தபடியே கேட்க இப்போது மௌனமாக வேடிக்கை பார்ப்பது ஷர்மிளாவின் முறையானது .

"நீங்கதான் சூரியாவோட டாடியா நான் உங்களை டாடின்னு கூப்பிடலாமா "என்று தயங்கி தயங்கி கேட்க ஒரு நிமிடம் ஷர்மிளாவை பார்த்தவன் பிறகு குழந்தையிடம் திரும்பி "தாராளமா உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடலாம் நான் கோபம் எல்லாம் படமாட்டேன் சூரியா ஏற்கனவே சொல்லி இருக்கிறான் .

உனக்கு அப்படித்தான் கூப்பிட பிடிக்கும்னா தாராளமா கூப்பிட்டுக்கலாம். சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் "என்று கேட்டபடியே குழந்தையை கையில் தூக்க ,ஷர்மிளாவுக்கு தான் சற்று பதட்டம் கூடியது.

வேகமாக அருகே வர "ரெண்டு நிமிஷம் குழந்தை ஆசையா என்கிட்ட பேச வர்றா..

பேசிட்டு வரலாமா ..அவன் கூட நீங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருங்க.. அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்ல சூர்யா ஷர்மிளாவின் கையை பற்றியவன் ."வாங்க மம்மி இங்க உட்கார்ந்து இருக்கலாம். அப்பா இப்ப வந்துடுவாங்க "என்று சொன்னபடி சலுகையாக இவளுக்கு அருகே அங்கிருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஒரு நிமிடம் மகளை பார்த்தவள் பிறகு எதுவும் சொல்லவில்லை ஓரமாக அமர்ந்து சூர்யாவிடம் பேச ஆரம்பித்தால்.

அங்கே குழந்தையை அழைத்துக் கொண்டு சென்ற மதியழகன் குழந்தைக்கு பிடித்த சாக்லேட் சிலவற்றை வாங்கி கையில் கொடுக்க கலகலப்பாக பேச ஆரம்பித்து இருந்தால் கவி.

கவிமின் இயல்பு அது.. பார்த்த சில நிமிடத்திலேயே கலகலப்பாக பேசுவது.. அப்படி பேச ஆரம்பிக்க மதியழகன் உண்மையிலேயே மயங்கி விட்டான்.

ஒரு நிமிடம் தனக்கு இப்படி ஒரு குழந்தை இல்லையே என யோசிக்கும் அளவிற்கு …அவனுடைய கரம் பற்றிய படி கவி பேச பேசுவதையெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.

ஐந்து நிமிடம் என்று சொன்னவன் அரை மணி நேரம் தாண்டியும் வந்திருக்கவில்லை .

சற்று நேரம் அமர்ந்து பார்த்தவளுக்கு அதற்கு மேல் அங்கே அமர பிடிக்கவில்லை .

"சூர்யா கவியும் உங்க அப்பாவும் எங்கே இருக்கிறார்கள் என்று போய் பார்த்துட்டு வந்துடலாமா ..ரொம்ப நேரம் ஆச்சு இல்லையா" என்று சொல்ல ,"அப்பா ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க மா.. உங்களுக்கு தெரியாது "என்று சொன்னபடியே இவளோடு கவி இருக்கும் இடத்தை நோக்கி கூட வர ஆரம்பித்தான்.

இரண்டு கடைகள் தாண்டி நிறைய பொம்மைகள் இருக்கும் ஒரு ஷோரூமிற்குள் இரண்டு பேருமே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

ஆர்வமாக சிரித்தபடி கவி கண்களை விரித்து விரித்து கையை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்ல அதற்கு ஏற்றார் போல முக பாவங்களை காட்டிக் கொண்டிருந்தான் மதியழகன்.

இரண்டு நிமிடம் தயங்கி நின்றவள் வேகமாக அவர்களுக்கு அருகே சென்றாள்.

" கவி நம்ம மூவிக்கு போகிறதா சொல்லிட்டு வந்திருக்கிறோம் இன்னும் லேட் ஆச்சுன்னா படத்துக்கு போக முடியாது. இப்ப கிளம்பலாமா" என்று கவியிடம் கேட்க ,கவிக்கு மதியழகனை விட்டு வர மனமே இல்லை .

சற்று தயங்கியவள் மதியழகனை பார்த்து" டாடி நீங்களும் எங்க கூட வரீங்களா. நாங்க இப்ப படம் பார்க்க போறோம் "என்று சொல்ல ஷர்மிளாவிற்கு எங்கே சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை .

"அது எப்படி கவி..அவங்களுக்கு வேற ஏதாவது வேலை இருக்கும். கவி இப்படி எல்லாம் கேட்கக்கூடாது. சூர்யா நீ உன்னோட அப்பா கூட புறப்பட்டு போ .நாங்க கிளம்புறோம்" என்று சொல்ல," இல்ல மம்மி நாங்களும் இன்னைக்கு மூவிக்காக தான் வந்தோம் .

அப்பா கூப்பிட்டுட்டு போறேன்னு சொல்லி அழைச்சிட்டு வந்தாங்க. அப்புறம் என்ன மம்மி.. நாம சேர்ந்து போகலாம் தானே "என்று குரல் கொடுத்தால் கவி .

வேறு வழியே இல்லாமல் அவர்களின் பின்னே நடக்க ஆரம்பித்தால் ஷர்மிளா.

கிடைத்த சிறு இடைவெளியில் ஷர்மிளா வேகமாக அவனிடம் பேசி இருந்தால் .

"இதோ பாருங்க மதி சார். அவங்க குழந்தைங்க அவங்களுக்கு தெரியாம இது மாதிரி பண்ணிட்டு இருக்காங்க.

சாரி சூர்யா உங்க பையன்னு எனக்கு தெரியாது."

" தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க .. என் கிட்ட பேசி இருக்க மாட்டீங்க அப்படித்தானே".

" அப்படி இல்ல வந்து.."

" இதோ பாருங்க நானும் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன் .அன்றைக்கு நடந்தது ஒரு ஆக்சிடென்ட்..

முன்ன பின்ன தெரியாதவங்களை சட்டுனு கை நீட்டற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது.

அன்னைக்கு எதிர்பார விதமா அது மாதிரியான ஒரு சம்பவம் நடந்துச்சு. அதை அன்னைக்கே மறந்து இருக்கணும் ..

நியாயமா நான் உங்களை பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன் ஆனா அடுத்தடுத்து நடந்தது வேற மாதிரி தான் இருந்தது.

பேங்க்ல கூட நீங்க என் மேல இருந்த கோபத்தில் தான் அது மாதிரி நடந்துகிட்டிங்க..எனக்கு நல்லா தெரியும்.

என் மேல தப்பு இருந்தது அதனாலதான் எதுவும் சொல்லாம அன்னைக்கு புறப்பட்டு வந்தேன். இன்றைக்கு நான் சாரி கேட்டுக்கறேன்"என்று சொல்ல அதற்கு மேல் அவள் என்ன சொல்வது என்று தெரியவில்லை சரி என்பது போல தலையாட்டினாள்.

அன்றைக்கு மாலை வரையிலுமே சூரியா இவர்களோடு தான் இருந்தான் . படம் முடியவும் மதியழகன் சூர்யாவை இவளிடம் விட்டுவிட்டு நகர்ந்து சென்றிருந்தான் .

"எனக்கு மால்ல கொஞ்சம் வேலை இருக்கு இன்னமும் சிலர் எல்லாம் பார்த்து பேச வேண்டியது இருக்கு..அதனால நான் கிளம்புறேன் .

சூர்யாவை பார்த்துக்கோங்க வீட்டுக்கு போகும்போது சொல்லுங்க நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தான்.

அதற்கு பிறகு தான் இவளுக்கு இயல்பாக மூச்சு விடவே முடிந்தது .அதன் பிறகு நேரம் மிகவும் மகிழ்ச்சியாகவே நகர்ந்தது இவர்கள் மூவருக்கும்…

சூர்யா அம்மா அம்மா என்று இவளிடம் நன்றாகவே ஒன்றி இருந்தான். கவியும் கூட நிறைய பேசிக் கொண்டுதான் வந்து கொண்டிருந்தாள்.

நன்றாகவே விளையாடி ஓரளவுக்கு களைத்து போன பிறகு வீட்டுக்கு புறப்பட்டனர்.

மதியழகனின் நம்பருக்கு அழைத்தவள் சூர்யாவை அவனிடம் ஒப்படைத்து விட்டு தன் மகளோடு புறப்பட்டாள்.

சூர்யா அத்தோடு விட்டிருக்கவில்லை .அடுத்ததாக "எப்போது வெளியே சுற்ற போகலாம்" என்று கேள்வி கேட்க இவளிடம் தான் பதில் இல்லை..

" அடுத்ததா எனக்கு எப்போ லீவ் கிடைக்கும்னு தெரியாது அடுத்த வாரம் எனக்கு வீட்டில் வேலை இருக்கும் "என்று சொல்லிவிட்டு நகர,

"அப்படின்னா அம்மா நான் அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வரட்டுமா" என்று கேட்க, என்ன சொல்வது என்று திகைத்தவள் பிறகு "சரி வா" என்று விட்டு நகர்ந்தான்..

வீட்டுக்கு வந்ததும் மதியழகனுக்கு அத்தனை கவலை ..மகனை நினைத்து ..

நேராக தான் தந்தையிடம் சென்றவன் புலம்பி தள்ளினான். "என்னப்பா இந்த சூர்யா இப்படி இருக்கிறான் .அம்மா அம்மான்னு அந்த பொண்ணு பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்குறான் .

என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. இதுல பத்தாததுக்கு அந்த குழந்தை வேற என்கிட்ட வந்து அப்பான்னு கூப்பிடுது..

இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல".

" விடுடா சின்ன குழந்தைகள் தானே அவங்களோட இழப்பு பெருசு தானே.. சூர்யாவுக்கு அம்மா இல்லாத குறை நிறைய மனசுக்குள்ள இருக்குது .

அதனால தான் இப்படி ரியாக்ட் ஆகறான்".

' உண்மைதான் அந்த பொண்ணுக்கு கூட அப்படித்தான் போல இருக்கு அப்பான்னு சொல்லிட்டு அவ்வளவு ஆர்வமா கைய பிடிச்சா ..

எப்படி இருந்தது தெரியுமா ஏதோ ஒரு பூக்கொத்து என் கையில் வந்து கிடைச்சது மாதிரி இருந்தது. அவ்வளவு ஒரு அன்பு அந்த குழந்தையோட முகத்தில், கண்கள்ல உண்மையிலேயே பாவம்தான் அந்த குழந்தை.."

"சரிதான் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்குற ..

நான் உன் பையன பத்தி பேசிகிட்டு இருக்கேன் .நீ ஏதோ ஒரு குழந்தையை பத்தி சொல்லிக்கிட்டு இருக்கிற.."

" உண்மையிலேயே இரண்டு பேரும் பாவம்தான் .சரி நான் போய் தூங்க போறேன் "..

"சரி சூர்யா..இன்னைக்கு எப்படி நாள் போச்சு "சூர்யாவிடம் தாத்தா கேட்க அவன் கதை கதையாக அமர்ந்து பேச ஆரம்பித்திருந்தான் .

"இன்றைக்கு எல்லாம் உங்களுக்கு கதை சொல்லுவான் நிதானமா பேசி முடித்துவிட்டு அவனை அனுப்பி வைங்க எ.னக்கு உண்மையிலேயே ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்க போறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

"எனக்கு எப்படி இருந்தது தெரியுமா தாத்தா ..எனக்கு அவங்க அம்மாவா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுச்சு .

அவங்கள கையோடு நம்ம வீட்டுக்கே கூப்பிட்டு வந்துடலாம் என்று கூட தோணுச்சு .

அந்த அளவுக்கு எனக்கு அவங்கள பிடிச்சது தெரியுமா" என்று சொல்ல தாத்தாவின் முகத்தில் யோசனை கொடுங்கள் மெல்ல வளம் வந்து சென்றது.

"என்ன தாத்தா யோசிக்கிறீங்க நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா.."

" நீ சரியா தான்டா சொல்ற நான் தான் உங்க அப்பா பத்தி யோசிக்காம விட்டுட்டேன்னு தோணுது .

சரி யோசிக்கிறேன் சீக்கிரமாவே உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு அம்மாவை கொண்டு வர முயற்சி பண்ணுகிறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் தேவன்.

அடுத்த நாள் காலையிலேயே ஷர்மிளாவை பார்க்க அவர் அவளுடைய வீட்டிற்கு சென்றிருந்தார் தேவன்.

இவரைப் பார்க்கவுமே வேகமாக வந்து வரவேற்றவள்..வாங்க அங்கிள்.. எப்படி இருக்கிறீங்க இவ்வளவு காலையில் வந்து இருக்கீங்க.
ஏதாவது முக்கியமான விஷயமா.."

"அதெல்லாம் இல்லமா இந்த ஏரியாவில் இருக்கிற முக்காவாசி வீடு எங்களது தான் .

நிறைய பேர் வீட்டு வாடகை கொடுக்காமல் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் .

சிலர் வாடகை பணத்தை எடுத்து வைச்சுட்டு என்னை அழைச்சுக்கிட்டு இருந்தாங்க .

அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். குழந்தை என்னமா பண்ணறா".

" இப்பதான் குளிச்சிட்டு யூனிஃபார்ம் மாட்டிகிட்டு இருக்கறா.. இருங்க வர சொல்றேன்..

கவி இங்க பாரு யார் வந்திருக்கான்னு பாரு.. சூர்யாவோட தாத்தா வந்துருக்காங்க ".

"இதோமா இதோ வந்துட்டேன்" என்று உள்ளிருந்து குரல் கொடுக்க.. "என்னம்மா நேத்து ரொம்ப படுத்தி எடுத்துட்டானா சூர்யா. வீட்டுக்கு வந்து உன்ன பத்தின புராணம் தீரவே இல்ல .

அவ்ளோ நிறைய பேசிகிட்டு இருந்தான் ."

"குழந்தைங்கனா அப்படித்தான் இருப்பாங்க அங்கிள்.. அவங்களுக்கு இதெல்லாம் புதுசு இல்லையா அவனுக்கு பிடிச்சிருக்கு நிறைய பேசினான்.. கேட்கும் போது அவ்வளவு நல்லா இருக்குது."

"அப்படியாமா சரி உன்னோட அம்மா அப்பா எங்க இருக்கிறாங்க .உன்ன பத்தி எதுவுமே எனக்கு தெரியாது இல்லையா..

சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்கிறேன்".

" வந்து அங்கிள் என்னோட அம்மா அப்பா இப்ப டெல்லியில் இருக்கிறார்கள் .

எனக்கு வேலை இங்க இருந்தது அதனால நேரா கவியை கூப்பிட்டுட்டு இங்க வந்துட்டேன்".

" இப்படி மட்டும் சொன்னா என்ன அர்த்தம் ..உன் வீட்டுக்காரர் எங்கே இருக்காரு .."

"வந்து அங்கிள் கவியோட அப்பா இப்போ உயிரோட இல்ல அவரு ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு.."

"ஓ ..சாரி மா..எப்படி.."

"வந்து உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல எனக்கும் அவருக்கும் சட்டப்படி கல்யாணம் ஆகல .

ஆனா ஒரு கோயில்ல வச்சு எனக்கு தாலியை கட்டினார் அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சோம் .

இதெல்லாம் நான் கடைசி வருஷம் படிக்கும்போது.. காலேஜ் முடிய கரெக்டா மூணு மாசம் இருக்கும்போது தான் கல்யாணம் முடிஞ்சது .

அடுத்த கொஞ்ச நாளிலேயே கவி வயித்துல தங்கிட்டா..அந்த நேரத்துல தான் படிப்பு முடிஞ்சு போனவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு

அதுக்கு பிறகு நானும் கவி மட்டும்தான்.. எனக்கு என்னோட அம்மா அப்பா கிட்ட போயி நிற்க அன்னைக்கு மனசு வரல .

ஏற்கனவே கேம்பஸ்ல பேங்க் ஜாப்புக்கு தேர்வாகி இருந்தேன். நேரா இப்படி வந்து சேர்ந்தாச்சு..

அப்பா அம்மாக்கு தெரியும் அவங்க நிறைய முறை என்னை வீட்டுக்கு கூப்பிட்டாங்க .

எனக்கு தான் போக இஷ்டம் இல்லை நான் வரமாட்டேன். நான் இப்படியே இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன்.

நானும் என் குழந்தையும் மட்டும் தான் .ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா உயிராய் இருக்கிறோம்.

என்ன அங்கிள் எதுவுமே பேசாம அமைதியா இருக்கிறீங்க .எனக்கு தெரிஞ்சு இது மூணாவது ட்ரான்ஸ்பர்..

ரொம்ப சந்தோஷமா தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனந்தியை ஏற்கனவே எனக்கு தெரியும் .இங்க வந்ததுக்கப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறேன்."

"அந்த நிம்மதி எப்பவுமே உனக்கு கிடைக்கும் மா ..அதுக்கு நான் கேரண்டி ".

"என்ன அங்கிள் சூர்யா ரொம்ப கிளோஸ்சா என்கிட்ட பழகறதால பயந்துட்டு என்னை பத்தி விசாரிக்க வந்தீங்களா .."

"அப்படி எல்லாம் இல்லம்மா.. தப்பான பொண்ணுன்னு தோணுச்சுன்னா அவனை உன் பக்கமே நெருங்க விட்டிருக்க மாட்டோம்.

அவனுக்குள்ளையும் நிறைய ஏக்கம் இருக்குது சட்டுனு ஒரு பொண்ண பார்த்து அம்மானு கூப்பிடறான்னா அந்த அளவுக்கு உன்னை பிடிச்சிருக்கு தானே அர்த்தம்.

அவனோட உலகத்துக்குள்ள நான் நிச்சயமா எப்பவுமே வரமாட்டேன் அவன் உன்னை எப்படி அழைத்தாலும் சரி .அதை தடுக்கவும் மாட்டேன். நீயாச்சு அவனாச்சு நான் அத பத்தி எல்லாம் கவலைப்படற ஆள் கிடையாது .

உண்மையிலேயே இன்றைக்கு வாடகை வாங்க தான் வந்தேன்.

சரிமா நீங்க பாருங்க நான் புறப்படறேன் ".

"என்ன தாத்தா வந்ததும் உடனே போறேன்னு சொல்றீங்க .நீங்க சூர்யாவோட தாத்தா வேற.." என்று சொன்னபடியே கையில் காபியோடு வந்து நின்றால் கவி .

"என்னமா இது.. உனக்கு காபி எல்லாம் போட தெரியுமா ".

"இல்ல தாத்தா அம்மா காலையிலேயே பிளாஸ்கில காபி ஊத்தி வச்சிடுவாங்க .

அதைத்தான் நான் எடுத்துட்டு வந்தேன்" என்று சொன்னபடியே நீட்ட "குழந்தையை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கிற" என்று சொன்னபடியே வாங்கிக் கொண்டார்.

அடுத்து பத்து நிமிடம் அவர்களோடு பேசிவிட்டு புறப்பட்டார் தேவன். வரும்போது என்ன நினைத்து வந்தாரோ தெரியாது ஆனால் போகும்போது வேறு ஒரு முடிவோடு அங்கிருந்து நகர்ந்தார்.
 

NNK22

Moderator
6

"அம்மா ஸ்கூலுக்கு நேரமாச்சுதுமா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் இப்படியே எவ்வளவு நேரம் தள்ளிட்டு போறது. போங்க இன்னைக்கு ஸ்கூலுக்கே போக முடியாதுன்னு நினைக்கிறேன்.

எனக்காக அங்க சூர்யா காத்துகிட்டு இருப்பான் "பாதி வழியில் நின்றபடி புலம்பி கொண்டிருந்தால் கவி.

" ஏண்டி நீ வேற ..எனக்கு என்ன ஆசையா.. இந்த நடுரோட்டில் வண்டிய தள்ளிட்டு வரணும்னு..

காலையில கிளம்பும்போதெல்லாம் நல்லாதான் இருந்தது.இப்ப ஏனோ ஏனோ இப்படி மக்கர் பண்ணுது.

இரு பக்கத்துல எதாவது ஒரு ஆட்டோ கிடைக்குதான்னு பார்க்கலாம் வண்டியை ஓரமா போட்டுட்டு உன்னை அழைச்சிட்டு போறேன்".

" அம்மா இதையே தான் பத்து நிமிஷமா சொல்லிக்கிட்டு இருக்கற.. என்னால நடக்கவே முடியல காலெல்லாம் வலிக்குது" .

"நானே லண்டியை தள்ளிக்கிட்டு கஷ்டப்பட்டு உன் கூட நடந்து வரேன்.. நீ இத்தனை வாய் பேசுறியா..

பேசாம வண்டியில் ஏறி உட்காரு.. உன்னையும் உட்கார வைத்து தள்ளிட்டு போறேன்".

" அம்மா ஸ்கூலுக்கு நேரம் ஆகுதுமா உனக்கு சொல்றது புரியுதா இல்லையா".

" மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத கவி .இரு பக்கத்துல எதாவது ஒர்க் ஷாப் இருக்குதான்னு பார்க்கலாம் "என்றபடி அருகில் இருந்த கடையில் விசாரித்தாள்.

"அண்ணா இங்க பக்கத்துல வண்டி ரிப்பேர் பண்ற கடை ஏதாவது இருக்குதா ..

திடீர்னு வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.."

" பக்கத்துல இல்லம்மா இன்னமும் கொஞ்சம் தூரம் போகணும். இந்த தெரு தாண்டி திரும்பினா அங்கே மெயின் ரோட்ல ஒன்னு இருக்குது.

இந்நேரம் திறந்திருக்கும்னு நினைக்கிறேன்".

" தேங்க்ஸ் அண்ணா இன்னும் கொஞ்சம் தூரம் தான் அந்த பக்கம் வண்டியை விட்டதும் ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு உன்னை கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுடறேன் சரியா சத்தம் இல்லாம வரணும்..

இப்படி எல்லாம் தொண தொணன்னு பேசிகிட்டு வரக்கூடாது.. நீ சரியான பாட்டி கவி உன்கிட்ட என்னால பேச முடியல.."

*ஏதாவது கேட்டா இப்படி பதில் சொல்லு சரியா" என்றபடி நடந்து கொண்டிருக்க அங்கே சூர்யாவை அழைத்துக் கொண்டு மதியழகன் தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தான்.

இவர்களை பார்த்தவன் வண்டியை நிறுத்துவதா ,வேணாமா என சின்ன தயக்கத்தோடு வண்டியை ஸ்லோ செய்ய சூர்யா இவர்களை பார்த்து விட்டான்.

" மம்மி…மம்மி அங்க போய்கிட்டு இருக்காங்க .. வண்டியை நிறுத்துங்க டாடி..நாம அவங்கள கூப்பிட்டுக்கலாம்".

" இதோ பாரு சூர்யா இப்படியெல்லாம் பேசக்கூடாது அவங்க நம்ம வண்டில வர விருப்பப்படுவார்களோ இல்லையோ தெரியாது.சும்மா இப்படி அடம் பிடிக்கக்கூடாது".

" ஒரு தடவை வண்டியை நிறுத்தி கேட்கலாம் இல்ல.. அவங்க ரெண்டு பேரும் வண்டியை தள்ளிட்டு நடந்துகிட்டு இருக்காங்க .
அது உங்களுக்கு தெரியுதா".

" சரிடா இரு நீ வேற.. உங்க தாத்தா தான் வழக்கமா உன்னை அழிச்சிட்டு வருவாங்க.

இன்னைக்கு என்னவோ அவருக்கு ஆயிடுச்சு. என் தலையில உன்னை கட்டி விட்டுட்டு வீட்டில் உட்கார்ந்தாச்சு.

கால் வலிக்குது தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு.. நீயா எவ்ளோ பேசுற .."

"ஏன் டாடி நான் உங்ககிட்ட பேசறது உங்களுக்கு பிடிக்கலையா.."

" கொஞ்சம் அமைதியா வா ".

"நீங்க முதல்ல வண்டிய நிறுத்துங்க டாடி .நான் மம்மி கிட்ட என்னன்னு கேட்டுட்டு வரேன்".

" சரிடா இரு வண்டியை ஓரமா பாத்து நிறுத்தறேன்". என்று வண்டியை நிறுத்தவும் இறங்கி வேகமாக ஷர்மிளாவிடம் ஓடி இருந்தான்.

" மம்மி.. மம்மி "என்று கத்த "யாருடா இது" என திரும்பி பார்த்தவள் சூர்யாவை பார்க்கவும் முகம் புன்னகையை பூசிக் கொண்டது.

" என்னடா இந்த பக்கம்.. என்ன செஞ்சுகிட்டு இருக்கிற.."

" நானும் டாடியும் ஸ்கூலுக்கு போறதுக்காக வந்தோம். வழியில உங்களை பார்க்கவும் வண்டியை நிறுத்த சொல்லிட்டேன் .

ஏன் மம்மி வண்டிக்கு என்ன ஆச்சு ஏன் தள்ளிக்கிட்டு இருக்கீங்க.. பெட்ரோல் காலி ஆயிடுச்சா.."

" பேசுறதெல்லாம் ரொம்ப அறிவா பேசுற டா ..பெட்ரோல் எல்லாம் ஃபுல்லா இருக்கு .

அது பிரச்சனை இல்லை வண்டியில் வேற ஏதோ பிரச்சினை போல இருக்கு .

என்னவோ தெரியல வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொஞ்சம் தூரத்திலேயே இப்படி ஆயிடுச்சு..

திரும்ப வீட்டுக்கு போக முடியல பக்கத்துல எதாவது மெக்கானிக் செட்டில் விடலாம்னு பாத்துட்டு வரேன் ".

"அப்படின்னா கவி இன்னைக்கு ஸ்கூலுக்கு வரலையா.."

" இல்லடா ஏதாவது ஆட்டோ புடிச்சு வந்துடுவோம் .ஏன் இப்படி பெரிய மனுஷன் மாதிரி பேசிக்கிட்டு இருக்குற ..கவி தான் பேசி கொல்றான்னா நீயும் அப்படியே பேசுற .."

"அதனால தான் எனக்கு கவி ஃபிரண்டா இருக்கிறா..". இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மதியழகன் வண்டியை நிறுத்தி விட்டு இவர்களுக்கு அருகில் வந்திருந்தான் .

"வண்டியில என்ன பிரச்சனை நான் ஏதாவது உதவணுமா ".

" அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நானே பாத்துக்கிறேன்."

" ஓ சரி" என்றவன் தயங்கி நிற்க.. "என்ன சொல்லுங்க "

"இல்ல வண்டியை ரொம்ப நேரமா தள்ளறீங்கன்னு நினைக்கிறேன்.."

"ஆமாம் டாடி ரொம்ப நேரம் ஆயிடுச்சு .இந்த மம்மி கொஞ்ச தூரம் கொஞ்ச தூரம் சொல்லி என்னை ரொம்ப தூரமா நடக்க வச்சுட்டாங்க தெரியுமா."

கவி சொல்லவும் சட்டென்று சிரித்து விட்டான் மதியழகன்.

" உங்களுக்கு ஆட்சேபனை இல்லனா நான் வேணும்னா உங்களை டிராப் பண்ணலாமா.."

" வேண்டாம் சார் நானே என்னோட வேலையை பார்த்துக்கறேன். பக்கத்துல தான் மெக்கானிக் செட் இருக்குதுன்னு சொன்னாங்க வண்டியை விட்டுட்டு பிறகு என்ன செய்யணும்னு யோசிக்கிறேன்"..

"ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் இந்த ஏரியாவில் அவ்வளவு சீக்கிரம் ஆட்டோ கிடைக்காது.."

ஓ அப்படியா..

"கவியை ஸ்கூல்லையாவது கொண்டு போய் நான் விடலாம் தானே" மதியழகன் கேட்க இவளுக்குள் சிறு தயக்கம் வந்தது.

"இதுவரைக்கும் வெளி ஆளுங்க யார்கிட்டயும் கவியை விட்டது கிடையாது. அதனாலதான் யோசிக்கிறேன்" தயங்கியபடி கூறினாள்..

"தெரியும் இது மாதிரி ஒரு பதிலை சொல்லுவீங்கன்னு தான் நானும் நினைச்சேன் .அதே மாதிரியே நீங்களும் பேசுறீங்க..

நான் ஏதாவது உதவி செய்யறேன்னு சொன்னா நிச்சயமா நீங்க இது மாதிரி தான் ரியாக் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும்".

" இல்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை".

" அப்புறம் எதுக்காக யோசிக்கிறீங்க நானும் நல்லவன் தான் யார்கிட்டயும் இதுவரைக்கும் தப்பா பேசினது கூட கிடையாது."

"அதுக்காக சொல்ல வரல ".

"அப்புறம் என்ன யோசிக்கிறீங்க.. வண்டியை இப்படி ஓரமா நிறுத்துங்க நான் இன்னைக்கு உங்களை டிராப் பண்ணறேன் .

என்ன கவி என் பின்னாடி வண்டியில வருவ தானே .."

"இதோ டாடி நான் வரேன்" என்று வேகமாக டூவிலரில் இருந்த தன்னுடைய ஸ்கூல் பேக்கை எடுத்துக்கொண்டு வேகமாக மதியழகன் காரில் ஏறினாள்.

இதற்கு மேல் மறுக்க முடியாது என்கின்ற நிலையில் வண்டியை ஓரமாக நிறுத்தியவள் சாவியை இவனிடம் நீட்டினாள்.

"தேங்க்யூ என்னை நம்பினதுக்கு.. இருங்க ஒரு நிமிஷம்" என்றவன் யாருக்கோ அழைத்து பேச சில நிமிடங்களிலேயே எதிரில் இருந்த கடைக்காரர் வேகமாக இவனிடம் ஓடி வந்தார் .

"மெக்கானிக் அண்ணா சொன்னாங்க உங்ககிட்ட இருக்கிற சாவியை வாங்கி வைக்க சொல்லி" என்று சொல்ல.." இந்தாங்க" என்று கொடுத்தவன் .."வண்டியை சரி பண்ணி எங்க தரணும் "என்று ஷர்மிளாவை பார்த்து கேட்டான்.

" கவியை ஸ்கூல்ல விட்டுட்டு நேரா பேங்குக்கு புறப்படணும் . பேங்க்ல வந்து தந்தா நல்லா இருக்கும் ".

"ஓகே அங்கேயே கொண்டு வந்து தர சொல்லிடறேன் "என்று விட்டு வண்டியில் சென்று அமர, கவி வேகமாக சூர்யாவை அழைத்துக்கொண்டு பின்னிருக்கைக்கு சென்றிருந்தாள்..

"என்ன யோசிக்கிறீங்க உட்காருங்க" என்று முன்னிருக்கை கதவை திறந்து விட அமைதியாக அமர்ந்து கொண்டால் ஷர்மிளா.

"அவங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க இல்லையா .. விளையாண்டுக்கிட்டு பேசிகிட்டு வருவாங்க என்னாச்சு வண்டியில் என்ன பிரச்சனை..*

"தெரியலையே.. காலையில நல்லா தான் இருந்தது .எப்பவுமே வண்டி விஷயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பேன் .

இது மாதிரி எப்பவுமே பிரச்சனை வந்தது கிடையாது. இதுதான் முதல் முறை என்ன பிராப்ளம் என்று தெரியவில்லை. ."

"சில நேரம் இது மாதிரி தான் ஆகும் சரி பண்ணிடலாம்.. சூர்யாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு வீட்டுக்கு வந்த நேரத்தில் இருந்து உங்க புராணத்தை நிறுத்துறதே இல்லை..

எனக்கு தெரிஞ்சு அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் பழகுற வழக்கம் எல்லாம் கிடையாது .

உங்க கிட்ட இப்படி குளோஸ்ட் ஆகுறான்னா எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ".

"குழந்தைங்க கிட்ட பழகுறது ஒன்னும் கஷ்டம் இல்ல .அவங்களை மாதிரி நம்மளும் குழந்தையா இருந்தா போதும்.

சின்ன சின்ன பேச்சு.. சிரிப்பு நம்மளோட சந்தோஷம் கூடவே அவங்களோட சந்தோசத்தை நாம ரசிச்சாலே போதும் .

சூரியா விஷயத்தில் எல்லாம் அப்படித்தான் நடந்திருக்குதுன்னு நினைக்கிறேன்.

என்னமோ ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு ..ஈஸியா பிரண்டாகிட்டாங்க.

கவி அப்பான்னு சொல்றத நினைச்சு நீங்க வருத்தப்பட வேண்டாம் .அவளுக்கு அதெல்லாம் புரியல சின்ன குழந்தை இல்லையா..

கொஞ்ச நாள் ஆனால் புரிஞ்சுக்குவா..".

"இதையேதான் நானும் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைப்பட்டேன் சூர்யாவும் அதே மாதிரிதான்..

அம்மா பாசத்துக்கு இவ்வளவு ஏங்கி இருக்கிறான்னு உங்ககிட்ட பேச ஆரம்பித்த பிறகு தான் எனக்கு புரியுது .

கொஞ்ச நாள் ஆச்சுனா எல்லாத்தையும் மறந்துடுவான் நார்மலா பேச ஆரம்பிச்சிடுவான் சீக்கிரமாவே ஆன்ட்டின்னு சொல்லி தரேன் .. நேற்றைக்கு எல்லாம் இத பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் ."

"இந்த அளவுக்கு யோசிக்க எதுவுமே இல்லை ஃபீரி யா விடுங்க.. அப்புறமா .. ஏதோ சொல்ல வந்தவள் பாதையில் நிறுத்திவிட்டு..
"இல்ல வேண்டாம் சார் ..இதை இப்படியே விட்டுடுங்க .சீக்கிரமா ஸ்கூலுக்கு போகணும்.இவளை விட்டுட்டு நான் புறப்படறேன்."

ம்.. வண்டியை வேக்கமாக ஓட்ட ஆரம்பித்தான் .அடுத்த பத்தாவது நிமிடம் வண்டி ஸ்கூலின் வாசலில் நின்றது.

"சரி ஷர்மிளா நான் வண்டியிலேயே வெயிட் பண்றேன் .நீங்க ரெண்டு பேரையும் ஸ்கூல்ல விட்டுட்டு திரும்பி வாங்க .

மறுபடியும் நான் உங்களை கொண்டு போய் உங்க பேங்க்ல விட்டுடறேன்".

" இல்ல வேண்டாம் சார் .எதுக்கு உங்களுக்கு சிரமம் ..அந்த இடத்தில் தான் ஆட்டோ கிடைக்காது.

.ஆனா இந்த ஸ்கூல் வாசலில் ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்திருக்கிறேன்.
அதுல நான் போய்க்கிறேன் ".

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..பேங்க் பக்கத்துல தான் போறேன் அதனால போற வழியில இறக்கி விடறதில் ஒன்னும் சிரமம் இல்ல ..வரமாட்டேன்னு பிடிவாதமா சொன்னீங்கன்னா தாராளமா நீங்க போய்க்கலாம்.*

வேறு வழியில்லாமல்" சரி நான் இவங்களை விட்டுட்டு வரேன்.. வெயிட் பண்ணுங்க "என்று விட்டு நகர்ந்தாள்.

முதல் முறையாக நிறைய சங்கோஜமாக இருந்தது ஷர்மிளாவிற்கு..

இப்போதுதான் காரில் வருவது.. என்னவோ பெரிய தப்பு செய்துவிட்டது போல.. எல்லாருமே தன்னை கவனிப்பது போல தோன்ற ஆரம்பித்தது .

வேகமாக மகளையும் சூர்யாவையும் ஸ்கூலுக்குள் அனுப்பி வைத்தவள் அதே வேகத்தோடு வந்திருந்தாள்..

வேகமாக பின் கதவை திறக்க போக அதற்கு முன்பாகவே முன்புறக் கதவை திறந்து வைத்திருந்தான் மதியழகன் எதுவும் பேசத் தோன்றாமல் .ஏறி அமர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு பேங்க் வாசலில் விடும் வரையிலும் இருவருக்கும் நடுவே அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.

பேங்கின் வாசலில் சரியாக இறக்கி விட்டவன் .."பார்த்துக்கோங்க வரேன்.." என்று நகர போக, வேகமாக கேட்டிருந்தாள்."வண்டி எப்போது சரி ஆகும்."

" ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் நீங்க சாயங்காலம் புறப்படுவதற்கு முன்னாடி பேங்க் வாசல்ல வண்டி நிற்கும்" என்று விட்டு நகர பேங்க் ஊழியர்கள் மட்டுமல்ல அங்கிருந்தவர்கள் எல்லோருமே இவளை பார்ப்பது போல தோன்றியது .

ஏற்கனவே கண்டு விட்ட பேங்க் ஊழியர் ஒருவர் வேகமாக இவளுக்கு அருகே வந்து பேச்சு கொடுத்தார் .

"மதியழகன் சார் ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா" என்று கேட்க, இவளுக்குத்தான் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

" தெரியும்.. ஏதோ ஓரளவுக்கு தெரியும்."

"மதி சார் கிரேட் தெரியுமா அவரை இந்த ஏரியால உங்களுக்கு தெரியும்னா வேற எந்த பிரச்சனையுமே உங்களுக்கு வராது".

" நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல .."

"இந்த ஏரியாவை பொறுத்த வரைக்கும் அவர் கொஞ்சம் பெரிய ஆளு ..அவருக்கு தெரியாம இங்க எதுவுமே நடக்காது .அவர் சொன்னால்.. அந்த பேச்சுக்கு இங்க மறுப்பு எதுவும் கிடையாது."

"நீங்க சொல்ற எதுவுமே எனக்கு புரியல . "

"உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது எனக்கு தெரியல ஷர்மிளா மேடம் ..

அவர் நிறைய உதவிகள் இங்கே இந்த பக்கத்து மக்களுக்கு செஞ்சிக்கிட்டு இருக்கிறார் .

எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட ஐம்பது குழந்தைகளுக்கு மேல படிப்பு செலவு ஏத்துக்கிட்டு இருக்கிறார் .

படிப்பு சம்பந்தமாக யார் வேண்டுமானாலும் எப்ப வேணும்னாலும் அவர் வீட்டு கதவ தட்டலாம் உதவி கேட்டு..

மறுப்பு தெரிவித்ததே கிடையாது அவர் மட்டுமல்ல அவரோட அப்பாவும் கூட அப்படித்தான்."

" எனக்கு இதெல்லாம் தெரியாது".

' அப்படியா ஆச்சரியமா இருக்குது கார்ல டிராப் பண்ற அளவுக்கு தெரியும்னா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேன்".

" ஏன் இப்படி சொல்றீங்க நீங்க சொல்ற அர்த்தம் புரியலை . என்னோட வண்டி ப்ராப்ளம் ஆயிடுச்சு.. வழியில பார்த்து அழைச்சிட்டு வந்தாரு..

மத்தபடி எனக்கு அவரை பற்றி எதுவும் தெரியாது.அவ்வளவா பேசிட்டது கூட கிடையாது ".பேசியபடியே உள்ளே செல்ல ..

"இல்ல மதி சார் அவ்வளவு சீக்கிரம் தன்னோட கார்ல யாரையும் உட்கார அனுமதித்தது இல்ல .

இத்தனை வருஷமா இப்படித்தான்.. இப்ப தான் முதல் முறையா அவரோட வண்டியில வந்திருக்கிறீங்க. அதனாலதான் ஆச்சரியமா கேட்டுட்டேன் சாரி".

" எனக்கு தெரியாது. பேங்க்ல வேலை செய்றதால லிப்ட் கொடுத்தார் என்று நினைத்தேன் இத இதோட விட்டுடுங்க.. தேவையில்லாம எந்த ரூமரிலும் சிக்கிக்க எனக்கு விருப்பம் இல்லை."

"வித்தியாசமா இருக்கிறீங்க ஷர்மிளா ..இங்க மது சார் கூட பேசறதுக்காக ஒரு கூட்டமே ஆர்வமா இருக்குது.

ஒரு செகண்ட் அவர் பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்தா கூட அதை பெருமையா பேசுகிறவர்கள் ஜாஸ்தி.

இன்னமும் சொல்லப்போனா இவர் எனக்கு தெரிஞ்சவர்னு சொல்லிக்கிறதில் நிறைய பேர் பெருமை படுவாங்க.

நீங்க கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறீங்க மேம்."

" நான் என்ன சொல்ல வரேன்னா இன்றைக்கு ஏதோ அவசரத்துல பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துச்சு பார்த்தோம்.

இனி அவரை பார்ப்பேனா இல்லையாங்கிறது கூட எனக்கு தெரியாது அதனால இந்த பேச்சை இத்தோட விட்டுருங்க .

நாம வேலையை பார்க்கலாமா நேத்து பெண்டிங் ஒர்க் எக்கச்சக்கமாக இருக்கிற மாதிரி ஞாபகம்" சொல்லிய படியே தன்னுடைய டேபிளில் அமர்ந்து வேலையை தொடங்க, இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த பெண்ணும் கூட சிரிக்கப்படியே அடுத்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

சரியாக மாலை 3 மணிக்கு இவளுடைய வண்டி சரியாகி பேங்க் வாசலுக்கு கொண்டு வந்து விட்டிருந்தார் மெக்கானிக்..

இவளை அழைத்து சாவியை கொடுக்க.. "தேங்க்ஸ் அண்ணா மொத்தமா எவ்வளவு செலவாச்சு சொல்லுங்க நான் இப்பவே பணத்தை தந்திடுவேன் *என்று சொல்ல ,அதற்கு அவரும் "இல்லை மேம்..மதி சார் ஏற்கனவே பணம் கொடுத்துட்டாரு.

அதனால எனக்கு பணம் தேவையில்லை வண்டி ரொம்ப நல்லாவே இருக்கும்.

ஏதாவது பிரச்சனைனா எப்ப வேணும்னாலும் என்னை நீங்க அழைக்கலாம் .

அந்த நிமிஷமே வந்து உங்களுக்கு சரி பண்ணி தருவேன் . இது என்னோட விசிட்டிங் கார்டு வச்சுக்கோங்க.."

"ஏற்கனவே பணம் கொடுத்துட்டாரா மை காட் "என்று நெத்தியை தேய்த்து விட்ட படி," சரி பணம் எவ்வளவு சொல்லுங்க. அவரை எப்போதாவது பார்த்தா திருப்பி கொடுத்துடனும் இல்லையா" என்று கேட்க..

" சாரி மேம் சார் பணத்தை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு போனாரு

அதனால என்னால சொல்ல முடியாது ஏதா இருந்தாலும் சாரை பார்க்கும் போது நீங்க நேரடியா பேசிக்கோங்க நான் வரேன்" என்று சொல்லிவிட்டு நகர, இப்போது கடன்காரி ஆகிவிட்டோமோ என்கின்ற மன நிலைக்கு வந்திருந்தால் ஷர்மிளா.

எல்லாமே சில நொடிகள் தான் ஏற்கனவே பேங்கில் காலையில் அருகில் இருந்த பெண்மணி சொன்னதை கேட்கும் போது பிறருக்கு உதவி செய்பவன் என்பது புரிய இப்போது மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

இனி அடுத்த முறை பார்க்கும் போது அவனுடைய பணத்தை திருப்பி கொடுத்து விடலாம் என்று..

ஆனால் பார்க்கும் சந்தர்ப்பம் தான் அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு கிடைக்கவில்லை .

கிட்டத்தட்ட பத்து நாட்கள் தாண்டி இருந்தது வண்டிக்காக என தனியாக எடுத்து வைத்த 2000 பணம் அப்படியே பேக்கில் தூங்கிக் கொண்டிருந்தது .

இடையில் எங்கேயுமே பார்க்க நேரவில்லை .இப்போது இன்னொரு மாற்றம் வீட்டில் நடந்திருந்தது .

கவி எப்போதுமே சூரியாவிற்கும் சேர்த்து காலை, மதிய உணவை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கி இருந்தால்.

இவளுக்கும் பெரியதாக எந்த சிரமமும் இருக்கவில்லை . கவிக்கு என்ன செய்கிறாளோ அதையே இன்னமும் ஒரு டிபனில் போட்டுக் கொடுப்பதில் இவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.

பத்து நாட்கள் தாண்டிய நிலையில் ஒருமுறை ரோட்டில் தன்னுடைய வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது மதியழகனை பார்க்க நேர்ந்தது .

இவளை தாண்டி வண்டி செல்லவுமே வண்டி நம்பரை பார்த்தவள் டிரைவிங் சீட்டில் மதியழகன் இருப்பதை பார்த்துவிட்டு சற்றே வண்டியின் வேகத்தை கூட்டினால்.

இடையே இவள் வண்டியில் தொடர்வதை கவனித்தவன் சற்றே ஒரமாக வண்டியை நிறுத்தினான்.

வேகமாக காருக்கு அருகே வண்டியை நிறுத்தியவள் அவனுக்கு அருகே வந்திருந்தாள்.

இவளை பார்க்கவும் கார் கதவைத் திறந்தபடி வெளியே வந்திருந்தான் மதியழகன் .

"என்னாச்சு ஏதாவது ரேஸ்ல கலந்துக்க போறீங்களா .. வண்டியை இத்தனை வேகமா ஓட்டிட்டு வரீங்க" என்று சிரித்தபடியே கேட்க ,ஒரு நிமிடம் அவனுடைய சிரிப்பு மனதின் ஆழம் வரைக்கும் சென்று பதிவானது .

இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா என மனம் நினைக்க, அதை இவளுடைய முகமும் பிரதிபலித்தது.

அவளுடைய முகத்தை பார்த்து அவளுடைய எண்ணம் புரிய.." சாரி வேற ஏதோ ஒரு யோசனையில் போய்க்கிட்டு இருந்தேன். அதனால சரியா கவனிக்கல..

கவனிச்சிருந்தா முன்னாடியே வண்டியை நிறுத்தி இருப்பேன் சொல்லுங்க என்ன விஷயம் ஏதாவது உதவி வேணுமா "என்று கேட்க.. "அதேதான் மதி சார்.. அதுக்காக தான் உங்கள பார்க்க வந்தேன்.

அன்றைக்கு சரியான நேரத்தில் உதவி செஞ்சீங்க .அன்றைக்கு வண்டி சர்வீஸுக்கு எவ்வளவு பணம் ஆச்சு .

அதை சொன்னா திருப்பி தந்துவிடுவேன் கிட்டத்தட்ட 15 நாளா என் பேக்ல தூங்கிக்கிட்டு இருக்குது உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் " என்றபடி வேகமாக ஃபேக்கை திறக்க ..

"அதெல்லாம் வேண்டாம் ஷர்மிளா கொடுத்தப் பணத்தை திருப்பி கேட்கிற பழக்கம் எனக்கு கிடையாது".

" எனக்கு கூட யார் கிட்டயும் கடன் வாங்க பிடிக்காது ப்ளீஸ் நீங்க இந்த பணத்தை வாங்கி தான் ஆகணும்.

எவ்வளவு என்று சொல்லுங்கள் அன்னைக்கே நீங்க பணம் கொடுத்து இருக்க வேண்டாம் மெக்கானிக் கிட்ட நானே பணத்தை கொடுத்து இருப்பேன்."சொல்லும்போது பிடிவாதம் இருந்தது அவளுடைய குரலில்..

"அப்பா விடமாட்டீங்க போல இருக்கு ஒவ்வொன்னுக்கும் கணக்கு பார்த்து வாழ முடியாது ஷர்மிளா. "

"நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல .."

"இல்ல தினமுமே இப்ப சூர்யாவுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுத்து விடுறீங்களாம்..

அதுக்கெல்லாம் கணக்கு பார்த்தா நான் எவ்வளவு உங்களுக்கு திருப்பி தருவது .."

"குழந்தைக்கு கொடுக்கறதும் இதுவும் ஒண்ணா.. என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க .இது மாதிரி பேசாதீங்க ..

புரிஞ்சுதுங்களா இந்தாங்க பணத்தை பிடிங்க "என்று எடுத்து நீட்ட .."ஆல்ரெடி அந்த வண்டியில் பெருசா எந்த பிரச்சனையும் இல்ல ஏதோ டஸ்ட் பெட்ரோல் டேங்க்ல அடைச்சிருந்ததா சொல்லி கிளீன் பண்ணி கொடுத்தார்.

பெருசா பணம் கூட வாங்கல அதனால எனக்கு இந்த பணம் தேவையில்லை "என்று சொல்ல ஷர்மிளா விடுவதாக இல்லை..

"நிறுத்துன இடத்திலிருந்து மெக்கானிக் செட்டுக்கு வண்டியை எடுத்துட்டு போனால் எவ்வளவு வாங்குவாங்கன்னு எனக்கு தெரியும்

ப்ளீஸ் மறுப்பு தெரிவிக்க வேண்டாம் நீங்க இந்த முறை பணத்தை வாங்கினால் தான் ஒரு வேலை நாளைக்கு எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்ததுன்னா தைரியமா உங்களை கூப்பிட முடியும்.

இல்லன்னா என்னால கூப்பிட முடியாது. நான் சொல்ல வர்றது புரியுதா..

எனக்கு எந்த வேலையும் யார்கிட்டயும் சும்மா வாங்கி பழக்கம் இல்லை .என்னை சங்கடப்பட வைக்காதீங்க மதி சார் ப்ளீஸ் "என்று மறுபடியும் பணத்தை நீட்ட,

இந்த முறை மறுப்பு எதுவும் சொல்லவில்லை கையில் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

"பிடிவாதமா சொல்றதால வேற வழியே இல்லாம வாங்கிக்கிறேன் தேங்க்யூ .

இனிமேல் ஏதாவது பிரச்சனை வந்தா தைரியமா கூப்பிடுவேன்னு சொன்னதுக்காக தேங்க்ஸ் சொல்லணும்."

"புரியவில்லை நீங்க பேசறது.."

"இருங்க சொல்லறேன்..ஏற்கனவே என்ன பார்த்து முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தீங்க

இன்றைக்கு உங்க வாயாலயே சொல்றீங்கன்னா என்ன அர்த்தம்..

என் மேல ஒரு அளவுக்கு நம்பிக்கை வந்து விட்டது அது தானே அர்த்தம்".

" அப்படின்னு சொல்லிட முடியாது.. நீங்க சூர்யாவோட அப்பா என்கிறதால மட்டும் தான் இந்த கிரெடிட் .."

*எப்படியோ அவனால உங்க நம்பிக்கையே பெற்றிருக்கிறேன் போல இருக்கு தேங்க்யூ "என்றபடி வண்டியை நகர்த்தி புறப்பட்டான்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து..வாரங்களாக மாறியது.

வாரங்கள் மாதங்களாக மாறியது.இந்த ஊர் மிகவும் பிடித்து விட்டது ஷர்மிளாவிற்கு..

இங்கு எந்த பிரச்சனையும் இவளுக்கு இல்லை .எல்லாமே ஒரு நேர்கோட்டில் நிதானமாக நல்ல முறையில் நடப்பது போல தோன்றியது .

எல்லோரிடமும் பழகினாள்.. ஆனால் ஒரு கோடு போட்டது போல வாழ்ந்து வந்தால் ஷர்மிளா .

யாராக இருந்தாலும் சரி அந்த கோட்டிற்கு அந்தப்புரம் மட்டுமே நிற்க வேண்டும் இந்த பக்கம் வரக்கூடாது .

தனக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்தவள் அதுபோலவே பாலோ செய்ய ஆரம்பித்திருந்தால் .

இது எல்லாமே பழகிய சில வாரங்களிலேயே புரிந்து விட்டது மதியழகனுக்கு..

ஒருமுறை தந்தையிடம் கூட எதார்த்தமாக சொல்லியிருந்தான்.

" அந்த பொண்ணு வித்தியாசமான பொண்ணு பா .தனக்கென்று ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அந்த வட்டத்துக்குள்ள மட்டும்தான் வாழறா..

அந்த வட்டத்துக்குள்ள அந்த பொண்ணும்,அவளோட மகளும் மட்டும்தான் இத்தனை நாள் வாழ்ந்திருக்காங்க .

இப்ப சமீபமா சூர்யாவும் அவங்க கூட போய் சேர்ந்து இருக்கிறான் .மற்றபடி அவங்க வட்டத்துக்குள்ள யாருக்கும் அனுமதி இல்லை.

ஆனால் அந்த குழந்தைக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குது எப்போ என்னை பார்த்தாலும் அப்பான்னு சொல்லும் போது அது கண்ணுல தெரியுற அந்த மின்னல் அதுக்காகவே எத்தனை முறை வேணும்னாலும் கூப்பிட்டுக்க சொல்லலாம் போல இருக்குது".

" என்னடா செய்றது இல்லாதவங்களுக்கு தானே தெரியும் அதோட அருமை..

உன்னோட மகன் சூரியா அந்த பொண்ண பார்க்கும்போது.. அம்மான்னு சொல்லும் போது அவனும் அத்தனை சந்தோஷப்படறானே..

என்னவோ சொல்லுவாங்களே இக்கரைக்கு அக்கரை பச்சை அது மாதிரி தான் உங்க விஷயத்துல நடந்துகிட்டு இருக்கு .

சரி நீ அன்றைக்கு வண்டிக்கு பணம் கொடுத்ததா சொன்ன அதுக்கு பிறகு அந்த பொண்ணு நீ பார்த்தியா இல்லையா .."

"அதுக்கு அப்புறமா ரெண்டு தடவை பேங்குக்கு போனேன்பா .ஆனா அந்த பொண்ணு பார்க்கறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கல .

அந்த பொண்ணு அதோட சீட்ல இருந்து வேலை செஞ்சுகிட்டு இருந்தா..

இன்னமும் சொல்லப்போனா என்னை தெரியும் என்கிற மாதிரி கூட ஒரு சிரிப்பு சிரிக்கலை..

முகத்தை அப்படி ஒரு இறுக்கமா வச்சுக்கிட்டு தான் என்னை பாத்தா.. எனக்கு தான் சிரிப்பு வந்தது .

அந்த பொண்ண பார்த்து.. எதுக்காக இப்படி இறுகி போய் இருக்கனும்னு நெனச்சுக்கிட்டு வந்தேன்."

" டேய் அது பேங்க் இல்லையா? மத்தவங்க தன்னை பத்தி எதுவும் குறையா சொல்லிட கூடாதுன்னு கூட அந்த பொண்ணு யோசிச்சு இருக்கலாம் ."

"ஆமாப்பா அது தான் நானும் நெனச்சேன் . ஆமாம் இப்ப எதுக்காக நம்ம தேவை இல்லாம அந்த பொண்ண பத்தி பேசணும் பேசுறதுக்கு எதுவும் இல்லையே."

"அதுவும் சரிதான் டா .."

"ஆனா அப்பா நான் இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேனே அதை பத்தி நீங்க இதுவரைக்கும் வாயை திறக்கல".

" என்னடா கேள்விப்பட்ட.. சொல்லு கேட்கிறேன் ".

"நீங்க அடிக்கடி அந்த பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வர்றதா சொன்னாங்க ."

"ஆமா வாடகை வாங்க போனா போயிட்டு தானே வரணும். அப்புறமாக அந்த ஏரியா ஃபுல்லா நம்ம தான் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருக்கோம் .

அங்கே ஏதாவது பிரச்சனை ஆனாலும் என்னைதான கூப்பிடறாங்க .

எப்படியும் வாரத்துக்கு ரெண்டு முறை போய் பார்த்துட்டு வரவேண்டியதா இருக்குது.

அப்ப வழியில் பார்த்தா ரெண்டு ஒரு வார்த்தை பேசுவேன் .இது கூட நம்ம சூர்யாவுக்காக தான் ".

"அப்படியா ஆனா கடைசி இரண்டு தடவை போகும்போது சூர்யாவையும் அழைச்சிட்டு போனதாக கேள்விப்பட்டேன் உண்மையா .."

"அதுல என்னடா இருக்குது வீட்டுக்குள்ளேயே பையனை போட்டு அடைச்சு வைக்க முடியுமா?

வெளியூலகமும் தெரியனும் தானே என் பின்னாடி கூட்டிட்டு போனதுல என்ன தப்பு இருக்கு ".

"சரி சரி எந்த தப்பும் இல்லை நான் எதுவும் கேட்கலை சரியா..

அடிக்கடி அந்த பொண்ணு வீட்டுக்கு போயி தொந்தரவு கொடுத்துட்டு இருக்காதீங்க .

அதை தான் சொல்ல நினைச்சேன்".

" இதுல என்னடா தொந்தரவா இருக்குது. நான் என்ன அந்த பொண்ணு வீட்டில் உட்கார்ந்து மூன்று வேலை மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டா வரேன். கிடையாது..

போறது 10 நிமிஷம்.. பார்த்தால் எப்படி இருக்கிற.. நல்லா இருக்கிறியா..

வேலை எப்படி போகுது இதைத்தாண்டி நான் பெருசா என்ன பேசிட போறேன்.. ".

"நம்பிட்டேன் ப்பா நம்பிட்டேன் நீங்க சொல்ற எல்லாத்தையுமே நம்பிட்டேன்".

" மதி நான் சொல்ல மறந்துட்டேன்.."

"என்னப்பா என்ன சொல்ல மறந்தீங்க .."

"அந்த கவி பொண்ணு இருக்கா இல்லையா அந்த பொண்ணுக்கு இந்த வாரத்தில் பிறந்தநாள் வருதாம்.."

"சரி அதுக்கு."

" என்னடா இப்படி கேட்டா என்ன அர்த்தம் ..சூர்யாவையும் என்னையும் அந்த பொண்ணு வர சொல்லி இருக்கிறா..

என்னை கொண்டு போய் பிறந்தநாள் அன்னைக்கு அவங்க வீட்ல கொண்டு போய் விடனும்".

" ஓ என்றைக்காம்.."

"வெள்ளிக்கிழமை சாயங்காலம் டா நானும் கட்டாயமா வர்றேன்னு சொல்லி இருக்கிறேன்.

சூர்யா சொன்ன நேரத்தில் இருந்து ஒரு கொண்டாட்டமா ஆட்டம் கட்டிக்கிட்டு இருக்கிறான்.

ஏன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா.."

" அப்பா நான் அந்த பொண்ணுக்கு என்ன கிளோஸ்சா..இல்ல வேற ஏதாவது உறவு முறை இருக்கா .

அந்த பொண்ணு எதுக்காக என்கிட்ட சொல்லணும் .சூர்யா மம்மி மம்மின்னு சுத்திக்கிட்டு இருக்கிறதால இத சொல்லி இருக்கலாம்.

நீங்களும் அந்த பக்கம் அடிக்கடி போறீங்க ..அப்புறமா எப்படியும் உங்ககிட்ட வாடகை கொடுத்து ஆகணும் இல்லையா ..

அந்த உறவு முறையில் சொல்லி இருக்கலாம் மத்தபடி என்கிட்ட சொல்ல என்ன இருக்கு."

"சொல்றதெல்லாம் சரிதான் மதி.. ஆனா ஏதோ கொஞ்சம் வருத்தத்தோட சொல்ற மாதிரி எனக்கு தோணுது ."

"நான் எதுக்காகப்பா வருத்தப்பட போறேன். முதல்ல இந்த மாதிரி யோசிக்கிறத நிப்பாட்டுங்க.

எனக்கு எத்தனையோ வேலை இருக்கு இதுல யாரை பத்தியும் யோசிக்கிறதுக்கு எல்லாம் எனக்கு நேரமே கிடையாது ."

"அதுவும் சரிதான் வீணா போன 10 பிரண்டுகளை வைத்திருக்கிற.. எவன் எப்போ எங்க இருந்து கூப்பிடுவானு தெரியாது.

ஊருக்குள்ள இருக்குற அத்தனை கட்டப்பஞ்சாயத்தும் உன் தலையில தான் வந்து முடியுது .

இதெல்லாம் எதனால் நடக்குதுன்னு கூட எனக்கு புரியல. நானும் தான்டா இத்தனை வருஷமா இருந்தேன்.

என்கிட்ட யாருமே இது மாதிரி எந்த பிரச்சனையையும் கொண்டு வந்தது கிடையாது .

நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன் .ஆனா நீ அப்படியே ஆப்போசிட்டா இருக்கற..

நீ யாரு மாதிரின்னு எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தோணல.. ஏன்னா எங்க பரம்பரையில் இப்படி பிரச்சனையை சரி பண்றதுக்கு போற ஒரே ஆள் நீயா தான் இருக்குற இதுக்கான காரணமும் எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் புரியல.."

"என்னப்பா இத சந்தோஷமா சொல்றீங்களா ..வருத்தமா சொல்றீங்களா ..

உங்கள் முகத்தை பார்த்தால் ரொம்ப சந்தோசமா சொல்ற மாதிரி என் மனசுக்கு தோணுது ".

"என்னடா செய்றது.. என் பையன் மத்தவங்க மதிக்கிற அளவுல இருக்கிறான் என்று நினைக்கும் போது சந்தோஷம் வர்றது சகஜம் தானே ..

அதுலயும் என்கிட்ட இல்லாத அந்த தைரியம் அதை பார்க்கும்போது பிரம்மிப்பா இருக்காது இல்லையா".

" சும்மா கதை சொல்லாதீங்கப்பா உங்களோட சின்ன வயசுல நடந்த எல்லாமே எனக்கு தெரியும் .

நீங்க எந்த அளவுல மத்தவங்க கிட்ட நடந்துக்கிட்டீங்க. எப்படி எல்லார்கிட்டயும் வேலை வாங்குனீங்க .

இது எல்லாமே கேள்விப்பட்டிருக்கிறேன் .அதனால இது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை உங்ககிட்ட இருந்து தான் எல்லாமே என்கிட்ட வந்து இருக்கு புரிஞ்சுதா.

சரி பிறந்தநாள் அன்னைக்கு அந்த குழந்தைக்கு ஏதாவது கிப்ட் வேணும்னா வாங்கிட்டு போங்க..

சூரியாவை கூப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வந்துடுங்க சரியா அந்த நேரம் எனக்கு எந்த மாதிரி வேலை இருக்குன்னு தெரியாது நானே கொண்டு போய் விடனும்னு எதிர்பார்க்காதீங்க.."

" ஏண்டா இப்படி சொல்ற.."

" வேற எப்படிப்பா சொல்லணும்னு நினைக்கிறீங்க நான் தான் சொன்னேன் இல்லையா அந்த பொண்ணு நா அங்க வர்றதை விரும்ப மாட்டா முக்கியமா.."

"நீ சொல்றது எனக்கு புரியல சூர்யா."

" அப்பா நான் கவனிச்ச வரைக்கும் அந்த பொண்ணு.. அதாவது கவியோட அம்மா மத்தவங்க கிட்ட பேசுறது கூட ஒரு கோடு போட்ட மாதிரி தான் பேசுறாங்க.

ரொம்ப குளோஸ் ஆகற மாதிரியோ வழியற மாதிரி பேசுற ரகம் கிடையாது .கட்டன் ரைட்டா ரெண்டு வார்த்தையில் பேச முடிச்சுக்குற டைப் அப்புறமா.."

அப்புறமா என்னடா..

"என் கிட்ட அவ்வளவா பேசின மாதிரி தெரியல.."

" டேய் இது எல்லாமே உன்னோட பிரமை டா அந்த பொண்ணு என்கிட்ட நல்லா தானே பேசுறா..

நாங்க வாரத்துக்கு ரெண்டு முறை எப்படியும் வழியில் பாக்குறேனே.."

" அப்பா நீங்களும் நானும் ஒன்னு கிடையாது. நீங்க வயசானவரு அந்த வகையில நின்னு பேசலாம் .மத்தபடி மத்திம வயசு ஆண்கள் கிட்ட பேசுறது கிடையாது.

தன்னை யாரும் குறையா சொல்ல கூடாது. அந்த பொண்ணு அத்தனை தெளிவாக இருக்கிறா.."

" அதெல்லாம் நல்ல விஷயம் தானடா .அந்த பொண்ணு வேலைக்காக வந்து இருக்கிறா..தேவை இல்லாத விமர்சனம் வர்றதை விரும்ப மாட்டாளா இருக்கும்.."

"அதையேதான் நானும் சொல்றேன் பா அதனால் எக்காரணத்தை கொண்டும் பிறந்தநாளுக்கு என்னை கூப்பிடாதீங்க .

நிஜமா நான் கூட வர மாட்டேன் சரியா .."

'ஒருவேளை கவியோட அம்மா கூப்பிட்டா வருவியா.."

" அதுக்கு கூட வாய்ப்பே இல்லப்பா நீங்க பாத்துக்கோங்க.."

"சரிடா இதுக்கு மேல இதை பத்தி நாம பேச வேண்டாம். நீ ஒரு முடிவு எடுத்துட்டா எப்பவுமே மாற்ற போறது கிடையாது .

அதனால நானும் சூர்யாவும் மட்டும் போய்கிட்டு வந்துடறோம்.நீ உன்னோட வேலையை மட்டும் பார்த்தால் போதும். "என்று மதியழகனிடம் சொன்னாலுமே மனம் வேறு ஒரு கணக்கு போட ஆரம்பித்தது இவருக்கு..
 

NNK22

Moderator
7

"அம்மா ஐஸ்கிரீம் வேணும் எனக்கு.. அதுவும் இப்பவே.."

" பிடிவாதம் பிடிக்க கூடாது கவி இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கிறேன் நான் இன்னைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்டேன்.

எனக்கு நிறைய வேலை இருக்குது நாளைக்கு பேங்க்ல இருந்து வரும்போது கட்டாயமா வாங்கிட்டு வரேன் ".

"நாளைக்கு வரைக்கும் எனக்கு வெயிட் பண்ண முடியாது மம்மி எனக்கு இப்போ வேணும் .

நீங்க தானே பிராமிஸ் பண்ணி இருந்தீங்க இனி எப்பவுமே உனக்கு பிரிட்ஜ்ல ஐஸ்கிரீம் வாங்கி வைப்பேன் அப்படின்னு ..

சொல்றது மட்டும்தான் சொல்றீங்க எதையுமே செய்யறதில்லை. எனக்கு எத்தனை நாளா ஆசையா இருந்தது தெரியுமா ..

நீங்க எனக்கு ஐஸ்கிரீம் கட்டாயமா வாங்கி தரணும். சூர்யா வீட்டுல அவன் கேட்டா உடனே வாங்கித் தருவார்களாம்.. "என்று கேட்டு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.

"இந்த அடம் தான் ஆகாதுன்னு உன்கிட்ட பல டைம் சொல்லி இருக்கிறேன் .

நான் எத வேணும்னாலும் மன்னிப்பேன். இப்படி பிடிவாதம் பிடிப்பத என்னால ஏத்துக்க முடியாது.

உன்னோட பிழைவாதத்துக்கு எல்லாம் நான் ஆள் கிடையாது .நான் இன்னைக்கு எதுவும் வாங்கித் தர மாட்டேன் ."ஷர்மிளாவும் சரிக்கு சரியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மகளிடம்..

இதை எல்லாவற்றையும் அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அங்கே வேலை செய்யும் பெண்மணி ..

சிறிது நேரம் கவனித்தவர் பின் மெல்ல குரல் கொடுத்தார் ."என்ன மா பாப்பாதான் சின்ன குழந்தை.. ஆசைப்பட்டு கேட்டுகிட்டு இருக்கிறா..

நீங்களும் சரிக்கு சரியா இருந்தா என்ன அர்த்தம் சொல்லுங்க ..பணம் வேணும்னா குடுங்கம்மா நான் போய் வாங்கிட்டு வரேன் ".

"நீங்க சும்மா இருங்க ம்மா. இங்கே பக்கத்துல எதாவது கடை இருக்குதா.. எங்க போறதா இருந்தாலும் அரை மணி நேரம் போகணும்.

நடந்து போனா கூட நீங்க போயிட்டு வர ஒரு மணி நேரம் ஆகும். அது என்ன இந்த வயசுல இத்தனை பிடிவாதம் இவளுக்கு..
அதெல்லாம் கிடையாது" இவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஓ என கத்தி அழ ஆரம்பித்தால் கவி.

" கவி இப்படி அழுதேன்னா சும்மா இருக்க மாட்டேன். முதுகுல ரெண்டு வெச்சிடுவேன்.

இன்னைக்கு நீ அடி வாங்க போற பார்த்துக்கோ .. இன்றைக்கு அடிக்கிற அடியில இனி எப்பவுமே இது மாதிரி அடம்பிடிக்க மாட்ட" கோபமாக பேசிக் கொண்டிருக்க ,இவள் சொல்ல சொல்லவே இன்னும் அதிகமாக தான் அழுதாலே தவிர குறைவது போல தெரியவில்லை .

"என்னம்மா நீங்க.. சின்ன குழந்தை அவகிட்ட போயி பிடிவாதமா நீங்களும் இப்படி பேசினா என்ன அர்த்தம் ..

முதல்ல நீங்க காசு கொடுங்க நான் போயிட்டு வரேன். எனக்கு நடக்கிறது என்றால் ரொம்ப பிடிக்கும் .

நீங்க சொன்ன மாதிரி ஒரு மணி நேரம் எல்லாம் ஆகாது அரை மணி நேரத்துல போயிட்டு உடனே வந்துடுவேன்.

பணத்தை குடுங்கம்மா கவி குட்டி நீ அழக்கூடாது நான் இப்போ உனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்" சமாதானம் செய்து கொண்டிருக்க ,பிறகு வேறு வழி இல்லாமல் இவளே பணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் .

"சரி நான் போய் வாங்கிட்டு வந்துடறேன். வீட்லயே இரு. என் பின்னாடி வர வேண்டாம் புரிஞ்சுதா.."

" மம்மி நானும் கூட வரேனே.."

" பேசாம இருக்கணும் நீ இன்னைக்கு பண்ற வேலையை பார்க்கும் போது எனக்கு அத்தனை கோபம் வருது .

இப்ப எல்லாம் வரவர நீ சரியில்ல.. ஸ்கூல்ல பிரண்டுங்க கூட சேர்ந்து நல்ல பழக்கத்தை பழகுவேன்னு பார்த்தா ..அடம் பிடிக்கிறது பிடிவாதமா பேசுறது இப்படித்தான் கத்துக்கிட்டு வர்ற..நீங்க பாத்துக்கோங்க "ஏன்றபடி வெளியேறினால் கவி.

காலையிலிருந்து இனம் புரியாது கோபம் சுழன்று கொண்டிருந்தது.

அதற்கேற்றார் போல கவி இங்கே அடம் பிடித்தது இன்னும் கோபத்தை தூண்டி இருந்தது .

அதே கோபத்தில் நேராக வண்டியை ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி விட்டாள்..

ஐஸ்கிரீம் பார்லர் முன்னாள் வண்டியை நிறுத்தியவள் நேராக உள்ளே செல்ல ,அங்கே வேறு ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது.

"ஐஸ்கிரீம் பார்லரை எடுத்து நடத்துபவர் ஒரு பெண் 25 வயது இருக்கும் . இரண்டு முறை பார்த்திருக்கிறாள் .சாதாரணமாக பேசி இருக்கிறாள்.

இன்றைக்கும் அவள் இருக்க அவளிடம் தனக்கு வேண்டியதை கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது சற்று கோபமாக உள்ளே நுழைந்தான் மதியழகன் .அவனை அந்த இடத்தில் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஷர்மிளா.

"உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது.. ஒரு தடவை கூட சொன்ன பேச்சைக் கேட்க மாட்ட அப்படித்தானே .

அப்பா, அம்மாவை இப்படித்தான் மனசு வெறுத்துப் போக வைப்பியா உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா" இவள் நிற்பதை கூட கவனிக்காமல் வந்த உடனேயே அந்த பெண்ணிடம் திட்ட ஆரம்பித்தான்.

அந்த பெண்ணோ இவன் பேச பேச கண்களில் நீர் கட்டி வழிய ஆரம்பித்து இருந்தாள்.

" தயவு செய்து அழாத பவித்ரா உன்கிட்ட பல டைம் சொல்லியாச்சு..

நான் சொல்றது உனக்கு புரியவே புரியாதா.. என்னைக்கு தான் சொன்ன பேச்சை கேட்கலாம் என்று இருக்கிற..

இன்னும் எத்தனை பேரை கஷ்டப்படுத்த போற ..உன்னை என்ன உயிரையா கொடுக்க சொன்னாங்க ..

கேட்டது ஒரு சின்ன விஷயம் அதுக்கு சம்மதம் சொல்ல உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்குதா.." கோபமாக அந்த பெண்ணை பார்த்து கத்த இவளுக்கு சுறுசுறு என கோபம் வந்தது .

எப்போதும் போல இப்போதும் மதியழகனை முறைக்க ஆரம்பித்தால் ஷர்மிளா.

இவள் இருப்பதை ஒரு பொருட்டாகவே கவனிக்கவில்லை அவன்.

இன்னமும் சொல்ல போனால் நீ யாரோ எனக்கு என்பது போல இருந்தது அவன் நடவடிக்கை ஒவ்வொன்றும் ..

ஏற்கனவே இரண்டு மூன்று முறை பேசி இருக்கிறாள் தான் .

ஏன் சென்ற முறை வலிய வந்து அவன் தானே உதவி செய்தான் ஆனால் அது எதுவுமே நடக்காதது போல இவன் நடந்து கொண்டது இன்னமும் கோபத்தை தர..

சட்டென மதியழகனிடம்" ஹலோ மதி சார் ஏன் இப்போ இந்த பொண்ண வந்து இங்கே மிரட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்..

அதுவும் கடையில் கஷ்டமர் இருக்கும் போது இப்படி வந்து திட்டினால் அந்த பொண்ணு தான் என்ன செய்வா"என்று கோபமாக கேட்க ,அப்போதுதான் இவளுடைய முகத்தையே கவனித்தான் .

"நீங்களா மேடம் வாங்க ..அது எப்படி கரெக்டா எப்போ எங்கெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறேனோ அந்த இடத்துக்கு கரெக்ட்டா என்ட்ரி ஆகுறீங்க .எனக்கு புரியவே இல்லை" இன்று அவனும் கூட சற்று கோபத்தில் தான் இருந்தான் போலும்..

இவள் சொன்னதுக்கு பதிலடியாக அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வேகமாக விழுந்தது .

அது இன்னமும் கோபத்தை அதிகமாக கூட்டியதே தவிர குறைக்கவில்லை ஷர்மிளாவிற்கு..

இடையே அந்தப் பெண் இடை மறித்தால் .."அக்கா ப்ளீஸ் நீங்க எதுவும் சொல்லாதீங்க . அவர் என்ன சொன்னாலும் அதைக் கேட்பதற்கு கடமை பட்டவள் நான்..

ப்ளீஸ் அவர்கிட்ட சண்டை போட வேண்டாம் "என்று இடை மறிக்க.." நீ சும்மா இரும்மா இவருக்கு இதே பொழப்பா போயிடுச்சு.

எங்க போனாலும் யாரையாவது மிரட்டணும் இல்லாட்டி அடிச்சுக்கிட்டு இருக்கணும் .

நானும் தான் பலமுறை இவரை பார்த்திருக்கிறேனே ..நான் ஒன்னும் புதுசா அவரை பார்க்கலையே..

இதுவரைக்கும் பார்த்த இடத்துல எல்லாமே சண்டை மட்டும் தான் போட்டுக்கிட்டு இருக்கிறார்.

இங்க வந்து உன்னை மிரட்டிக்கொண்டு இருக்கிறார்".

" என்ன.. என்ன தெரியும் உனக்கு.."

"இப்போ எதுக்காக அந்த பொண்ண அப்படி போட்டு மிரட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் "என்று இவளும் எகிற..

"இங்க என்ன பேசிக்கிட்டு இருக்கறோம் உனக்கு தெரியுமா எதுக்காக இப்ப நடுவுல வந்து இப்படி கத்துக்கிட்டு இருக்கற.." கோபமாக மதியழகன் கூற..

" மதி சார் போதும் அந்த பொண்ணுக்கு ஏதோ ஒரு விஷயம் பிடிக்கலை ..

ஆனா நீங்க அத செஞ்சே ஆகணும் அப்படிங்கற மாதிரி வந்து மிரட்டிக்கிட்டு இருக்கிறீர்கள்.
இதுதான் நான் புரிஞ்சுகிட்டது".

" சந்தோஷம் ரொம்ப தெளிவா புரிஞ்சு இருக்கீங்க .

சரி புரிஞ்சது வரைக்கும் போதும் நீங்க இப்போ உங்க வேலைய பாத்துட்டு போகலாம்..

முதலில் இவங்களுக்கு வேணுங்கறத கொடுத்து அனுப்பு பிறகு நாம பேசிக்கலாம் "என்று சட்டமாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் மதியழகன் .

அவனை பார்த்தால் அங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் நகர்வதாக தெரியவில்லை ஷர்மிளாவிற்கு..

"அப்படியெல்லாம் விட்டுட்டு போக மாட்டேன் சார் .இன்னைக்கு நான் ரொம்ப தெளிவா இருக்கிறேன்.

இதுக்கு மேல அந்த பொண்ணு கிட்ட நீங்க ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.

நான் இங்கிருந்து நகர்வதா இல்ல நீங்க எப்ப கிளம்புறீங்களோ அப்பதான் நானும் கிளம்புவேன்" என்று அருகில் இருந்த இன்னொரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

என்ன காரணத்திற்காக இரண்டு பேரும் மாறி மாறி வாக்குவாதம் செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரிய வில்லை.

"ஓகே இனி நான் எதுவும் பேசலை.. உன்கிட்ட அப்புறமா வந்து பேசுறேன் போகலாமா" என்று எழுந்து நிற்க வேகமாக ஐஸ்கிரீம்கு பணத்தைக் கொடுத்தவள் இவன் பின்னோடு ஓடி வந்தாள்.

" அந்த பொண்ணை உங்களுக்கு பிடித்திருந்தால் தாராளமா நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம்.

அதுக்காக வற்புறுத்துவீங்களா இது கொஞ்சம் கூட சரி கிடையாது புரிஞ்சுதா" என்று கோபமாக கூற.. இப்போதுதான் அவள் சொல்ல வருவது இவனுக்கு புரிந்தது.

" பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காத புரிஞ்சதா ..இன்னொரு முறை இது மாதிரி சம்மந்தா சம்மந்தம் இல்லாம உளறினால் மூஞ்சிலேயே அப்பிடுவேன்.

யாரு என்ன ஏதுன்னு எல்லாம் கவனிக்க மாட்டேன்.. உனக்கு என்ன தெரியும் என்னை பத்தி" என்று கோபமாக கேட்க ..

"அப்புறம் அந்த பொண்ணு கிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. அம்மா சொன்ன பேச்சை கேளு அம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கோ இதுதானே சொல்லிட்டு இருந்தீங்க.."

"டேமிட் அறிவு இல்ல.. என்ன பேசுறேன்னு உனக்கு புரியலையா அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி முறையாகணும் .

அந்த பொண்ணோட லைஃப்ல நடந்தது உனக்கு தெரியுமா ..

காலேஜ் படிக்கும் போது ஏதோ ஒரு பையனை உயிர்க்குயிரா நேசித்திருக்கிறாள்..

லவ் சக்சஸ் ஆகல அந்த பையன் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான் .

இன்னமும் சொல்லப்போனா இவகிட்ட இருக்குற பணத்துக்காக தான் அந்த பையன் நெருங்கி பழகி இருக்கிறான் .

இவகிட்ட இருந்து எவ்வளவு பணம் கரக்க முடியுமோ அவ்வளவு பணம் கரந்திட்டு ஒரு நாள் விட்டுட்டு போயிட்டான்.

அந்த பையனோட நினைப்பாவே கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்னு பிடிவாதமா கல்யாணம் பண்ணிக்காம இருக்குறா..

அந்த பொண்ணோட அம்மா அப்பா எந்த அளவுக்கு வருத்தப்படுகிறார்கள் தெரியுமா..

நான் சொன்னா கேட்பா அப்படின்னு சொல்லி என்கிட்ட இந்த பிரச்சனையை கொண்டு வந்து சொன்னாங்க .

அதுக்காக தான் இன்னைக்கு நான் பேச வந்தேன் ஆனா பேச விடாம இழுத்துட்டு வந்தாச்சு இப்ப சந்தோஷமா..

இதுல பத்தாததுக்கு நானே குற்றவாளி அப்படிங்கிற மாதிரி குற்றச்சாட்டு வேற ..

முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க ஷர்மிளா யார் கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்தாலும் அவங்க கிட்ட சண்டை மட்டும் தான் போடுவேன்னு தேவை இல்லாம எதையாவது பேசுவேன் அப்படின்னு நினைக்கிற இந்த தாட் இதை முதல்ல மாத்திக்கோங்க .

நான் சரியா பண்றேனா இல்லையாங்கறது எனக்கு தெரியும். இன்னொருத்தர் வந்து சொல்லி என்னை நான் மாத்திக் கொள்கிற விஷயம் கிடையாது.

நானும் நியாய தர்மம் படிதான் வளர்ந்தவன்.அப்படி யாரையும் சட்டுன்னு பிடிச்சு அடிக்கறது வேற மாதிரி மிரட்டுவது என்னோட குணம் கிடையாது .
அத முதலில் புரிஞ்சுக்கோங்க" சொல்லிவிட்டு வேகமாக வண்டியில் புறப்பட்டு சென்று இருந்தான்.

சற்று அதிர்ச்சியாக இருந்தது ஷர்மிளாவிற்கு.. என்ன விவரம் என்று தெரியாமல் வந்து நடுவில் பேசி மனகசப்பை ஏற்படுத்திக் கொண்டோமா என்று தோன்றுகிறது.
ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய தவறை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்க கூட அவகாசம் தராமல் கோபத்தோடு கத்திவிட்டு சென்றிருந்தான் மதியழகன்.

அவன் சென்ற உடனேயே அந்த ஐஸ்கிரீம் பார்லர் பெண் வேகமாக இவளிடம் ஓடி வந்திருந்தாள் .

"அவர் என்னோட அண்ணா முறை ஆகணும்.. அவரை குறை எதுவும் சொல்ல முடியாது .

தப்பெல்லாம் என் பெயரில் தான் எனக்கு நல்லா புரியுது .அவர் எனக்கு நல்லது தான் சொல்றாருன்னு தெரியும் .

ஆனா என்னால ஏத்துக்க தான் முடியல.. நடுவுல நீங்க வேற பேசி தேவையில்லாம திட்டு வாங்கிட்டீங்க.

அவரோட சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அண்ணா ரொம்ப நல்லவரு.. அவர் நியாயமா தான் எது சொன்னாலும் இருக்கும்.."

"சாரி இங்க நடக்கிறது எதுவும் எனக்கு தெரியாது .ஐ அம் சோ சாரி.. நீங்க கூட கொஞ்சம் சொல்றத கேட்க முயற்சி பண்ணுங்க.

பெரியவங்க நல்லது தானே சொல்லுவாங்க "என்றபடி வண்டியில் புறப்பட்டாள் ஷர்மிளா.

இந்த பிரச்சனை முடிந்த சில நாட்களிலேயே கவி பிறந்த நாள் இருந்தது .இந்த நிலையில்தான் தேவனுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகி இருந்தது.

"என்னப்பா ஆச்சு ஏன் இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்கீங்க உடம்புக்கு ஒத்துக்கலைன்னா வாயை கட்டலாம்ல..

எல்லாத்தையும் சாப்பிட வேண்டியது.. இப்ப பாருங்க யாரு கஷ்டப்படறா"உண்மையிலேயே சாப்பிட்டது ஒத்துக்காமல் லூஸ் மோஷன் போய்க்கொண்டிருந்தது தேவனுக்கு ..

"நான் என்னடா செய்யறது எப்பவும் சாப்பிடுறதுதான் சாப்பிட்டேன். புதுசா என்ன சாப்பிட போறேன்..

எதோ சாப்பிட்டது ஒத்துக்கலை போல இருக்கு ."

"சும்மா எதையாவது சொல்லாதீங்கப்பா. இந்த ராமண்ணா என்ன தான் செய்றாங்கன்னு தெரியல ..

என்ன கேட்டாலும் எடுத்து கொடுத்துட்டு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க .

நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்ப எல்லாம் அடிக்கடி உங்களுக்கு உடம்பு சரி இல்லாம போகுது .
அதுவும் சாப்பிட்டது ஒத்துக்காம..

இத பாருங்க ராமண்ணா இனிமே அப்பாவுக்கு சேராத ஐட்டம் எதையுமே அவர் கண்ல காட்டக்கூடாது.

அவர் பிடிவாதமா கேட்டாருண்ணு நீங்க எதையாவது கொடுத்தீங்கன்னா ..நான் சும்மா இருக்க மாட்டேன் ".

"இல்ல தம்பி அப்படி எல்லாம் எதுவும் கொடுக்கறது இல்ல."

" அப்புறம் இந்த மாதிரி ஏன் ஆகுது.. ஒருவேளை வீட்டுக்கு தெரியாம வெளிய எங்கயாவது போய் ஏதாவது வாங்கி சாப்பிடுறாரா என்ன?".

" ஐயோ அப்படியெல்லாம் இல்ல ஏன்டா நீ வேற.. வீட்டு சாப்பாடு மட்டும் தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறேன். ஏன் இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்க.."

"இன்னும் கொஞ்சம் கவனமா இருங்கப்பா.. வயசாயிட்டு இருக்கு இல்லையா .

ஒவ்வொரு நிமிஷமும் உங்களை நினைச்சு நான் பயந்துகிட்டு இருக்கனுமா .."

"இல்லாட்டி ரொம்பத்தான் நீ போ..* என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள.. இப்போது மறுபடிக்கும் அருகே அமர்ந்தவன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

" உங்க நல்லதுக்காக தான் அப்பா சொல்றது. ஏன் நீங்க இப்படி எல்லாம் செய்றீங்க .

இன்னொரு முறை இது மாதிரி எல்லாம் பண்ணாதீங்க .உங்களுக்கு முடியலன்னா யார் பார்த்துபாங்க".

" சரிடா சரி இனிமே எனக்கு ஒத்துக்காத எந்த ஐட்டமும் சாப்பிட மாட்டேன் சரியா .

இப்போ நீ என்ன செய்ற.. சூர்யாவை அழைச்சிட்டு போயி அவன் பிரண்டு வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்துடு..

நான் சொல்றது உனக்கு புரியுதா அவன் ரொம்ப ஆசையா இருக்கறான்டா..

நான் இன்னும் கவிக்கு கிஃப்ட் வாங்கல ..அவனை கூப்பிட்டுட்டு போயி அந்த புள்ளைக்கு புடிச்ச மாதிரி ஏதாவது கிப்ட் வாங்கி கொடுத்துடு..

அந்த பர்த்டே பார்ட்டியை ஆட்டென் பண்ணிட்டு வந்துடு ".

"அப்பா என்ன விளையாடுறீங்களா நான் எங்கேயும் போறதா இல்ல.. நான் அங்க போனா என்னை வான்னு சொல்றதுக்கு கூட ஆள் இருக்காது ".

"ஏன்டா அப்படி சொல்ற அந்த பொண்ணு உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணுடா .

அப்படி எல்லாம் மூஞ்ச திருப்பிக்கிட்டு போற பொண்ணு இல்லை ".

"கடவுளே உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல.

இப்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் மறுபடியும் அந்த பொண்ண பார்த்து சண்டை போட்டு இருக்கிறேன் .

நிச்சயமா நான் போனா என்னை வான்னு கூட கூப்பிட மாட்டா".

" சரிடா சும்மா திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்காத.. சூர்யாவை கொண்டு போய் விட்டுட்டு வா .

திரும்ப போய் அவனை அழைச்சிட்டு வந்துடு புரிஞ்சுதா .."

"சரி சரி நான் பாத்துக்கிறேன் ".

ஏற்கனவே சூர்யா புறப்பட்டு தயாராக நின்று இருந்தான்.

"அப்பா இந்த டிரஸ் நல்லா இருக்குதா ..நீங்களும் இந்த டிரஸ் கலர்ல சட்டை மாத்திக்கோங்க .

நாம் இரண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்டுட்டு போகலாம்."
ஆசையாக கேட்கையில் மறுக்கவே தோன்றவில்லை .

சூர்யா போட்டிருந்த உடைக்கு ஏற்ற கலரில் சட்டையை எடுத்து அணிந்தவன் ."இப்போ ஓகேவா"..

" இது சூப்பர் பா" என்று சொன்னபடியே புறப்பட்டனர் செல்லும் வழியில் கவிக்கு பிடித்தது போல சில டாய்ஸ்களை வாங்கியவன்.. இவனை அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு புறப்பட்டான்.

சரியாக வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த முதலில் பார்த்தது கவிதான். மாடியில் நின்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவள் வேகமாக தாயாரை அழைத்து.." அம்மா சூர்யாவும் ,டாடியும் வந்திருக்காங்க

நீங்க போய் வீட்டுக்குள்ள வர சொல்லுங்கம்மா. நான் சீக்கிரமா புது டிரஸ் போட்டுட்டு ஓடி வரேன்" என்று சொல்ல..

" ஏன் கவி.. விளையாடுறியா அவர் நம்ம வீட்டுக்கு வர மாட்டாரு "என்று கவியிடம் சொல்ல .. அவள் கேட்பதாக இல்லை .

"அதெல்லாம் கிடையாது சூரியா ஏற்கனவே சொன்னானே.. நானும் அப்பாவும் வருவோம்னு.. பாருங்க ரெண்டு பேரும் ஒரே கலர்ல சட்டை கூட போட்டு இருக்காங்க .

ப்ளீஸ் ப்ளீஸ் மம்மி நீங்க போய் சீக்கிரமா அவர்களை வர சொல்லுங்க "என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே காலிங் பெல் சத்தம் கேட்டது.

" இவ வேற ஏண்டி என்னை போட்டு படுத்துற .."என்று சொன்னபடி வேகமாக வெளியே சென்று கதவை திறக்க ..சூர்யா கையில் வாங்கி வந்திருந்த டாய்ஸ்களோடு நின்றிருந்தான்.

" மம்மி வந்துட்டேன் மம்மி.. கவி எங்க இருக்கிறா.. மாடியிலயா" என்று கேட்க ,"ஆமாண்டா டிரஸ் மாத்த போய் இருக்கிறா.. உள்ளே வா" என்று அழைக்க தயங்கி நின்றவன்.

" அப்பா வண்டியில வெயிட் பண்றாங்க .அப்பாவையும் உள்ளே கூப்பிடுங்கம்மா .கவி பிறந்தநாளுக்கு அப்பாவும் இருந்தா நல்லா இருக்கும் இல்லையா..
கவியும் ரொம்ப சந்தோஷப்படுவா" என்று சொல்ல ,வேறு வழியில்லாமல் வாசலை நோக்கி நகர்ந்தாள்.

காருக்குள் அமர்ந்திருந்தவனுக்குள் 100 குழப்பம் இருந்தது .இப்படியே வண்டியை எடுத்துக்கொண்டு செல்வதாக ..அல்லது வீட்டுக்குள் போவதா என்கின்ற யோசனையோடு அமர்ந்திருந்தான்.

அழைக்காத வீட்டிற்குள் எப்படி செல்வது ..அதுவும் நிச்சயமாக ஷர்மிளா வீட்டிற்குள் அழைப்பாள் என்கின்ற நம்பிக்கை துளி கூட இவனுக்கு கிடையாது .

ஏன்டா வந்தோம் என்கின்ற நிலையில் அமர்ந்திருக்க ,இவனுக்கு அருகே வந்தவள் .."ஹலோ வாங்க மதி சார். வீட்டுக்குள்ள வாங்க கவி உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா "என்று சொல்ல, யோசனையோடு ஷர்மிளாவின் முகத்தை பார்த்தவன் சரி என்பது போல தலையாட்டினான்.

" நான் வீட்டுக்கு வருவது உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் .ஆனா இன்னைக்கு வேற வழி தெரியல.. அப்பாவாள வர முடியல ..அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை ".

"என்ன ஆச்சு" என்று சற்று பதட்டமாக கேட்க .."வழக்கம்போல தான் ஏதோ வயிற்றுக்கு ஒத்துக்காதததை சாப்பிட்டாங்க

அதனால சின்ன பிரச்சனை மத்தபடி ஒன்னும் இல்ல சரியாகிவிடும் .அப்பாவுக்கு ஒன்னுனா சட்டுனு பதட்டமாகறீங்க..
அப்பாவை அவ்வளவு பிடிக்குமா என்ன?"

" அடிக்கடி அவரை பார்க்கிறோம் இல்லையா ..ரொம்ப நல்லா பேசுவாரு. "

" அதனால தான் அவரை ரொம்ப பிடிக்குமா ".

"இங்கேயே பேசிட்டு இருக்கணுமா..உள்ளே வாங்க" என்று சொன்னபடியே உள்ளே அழைத்து செல்ல அதற்குள் கவியும் புது உடையை அணிந்தபடி வந்திருந்தாள்.

" டாடி "என்று வேகமாக ஓடி வந்து கட்டி அணைக்க இப்போது பதட்டமானது என்னவோ ஷர்மிளாதான்.

அவளுக்கு மதியழகனை அப்பா என்று அழைப்பது துளி கூட பிடிக்கவில்லை .

ஆரம்பத்தில் இருந்தே சூர்யா இவளை அம்மா என்று அழைக்கையில் பெரியதாக எதுவும் தவறாக தெரியவில்லை.

உண்மையில் மனதிற்குள் அன்பு பெருக்கெடுத்தது ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய மகள் அவனை அப்பா என்று அழைப்பது
துளி கூட பிடிக்கவில்லை .

இது என்ன மாதிரியான பிரச்சனைகளை கொண்டு போய் விடுமோ என்கின்ற பயம் அவ்வப்போது மனதில் அலையடித்துக் கொண்டுதான் இருந்தது .

கவி சொல்வது பிடிக்கவில்லை என்பது ஷர்மிளாவின் முகத்தை பார்த்து புரிந்து கொண்டான் மதியழகன் .

" என்ன கவி நான் மட்டும் தான் முதலில் வந்திருக்கிறேன் போல இருக்கு.

வேற யாருமே வரலையா உன்னோட பிரண்டுகளுக்கு எல்லோருக்கும் சொன்னதா சூர்யா சொல்லிக்கிட்டு இருந்தான்."

"ஆமாம் டாடி இனி தான் எல்லாரும் வருவாங்க .ஆறு மணிக்கு மேலன்னு சொல்லி இருக்கு ஆனா நான் சூர்யாவை அஞ்சு மணிக்கு வந்துரனும்னு சொன்னேன் அதனாலதான் அவன் சீக்கிரம் வந்துட்டான் ".

"அப்படியா இவ்வளவு சீக்கிரம் வந்து என்ன செய்வானாம்".

" வந்து ..ஹால்ல தான் கேக் வெட்ட போறோம். இதையெல்லாம் டெகரேட் பண்ணனும் இல்ல .

நிறைய பலூன் உதி கட்டணும் கலர் பேப்பரெல்லாம் நிறைய அம்மா வாங்கி வச்சிருக்காங்க .

அதெல்லாம் அழகா ஒட்டனும்... நிறைய வேலை இருக்கு அதுக்காக தான் சூர்யாவை நான் சீக்கிரம் வர சொன்னேன்."

" நிஜமாகவே அவன் உனக்கு வேலை செய்வான்னு நினைக்கிறியா? "

"ஓ செய்வானே ..இல்லாட்டி கூட ஒன்னும் பிரச்சனை இல்ல .நான் அவன் கூட இருக்கும் போது ஜாலியா விளையாண்டுக்கிட்டு இருப்பேனே ..

அதுக்காக தான் சீக்கிரமா வர சொன்னேன்.."

" சரி சரி" என்று சொன்னபடியே ஷர்மிளாவை பார்க்க அவள் அமைதியாக ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து பலூன்களை ஊத ஆரம்பித்திருந்தால்.

அவளுக்கு அருகில் வந்தவன் "நான் ஏதாவது வேலை செய்யலாமா " என்று கேட்க ..என்ன என்பது போல பார்த்தாலே தவிர எதுவும் பதில் சொல்லவில்லை.

அங்கிருந்த கலர் காகிதங்களை எடுத்தவன் சூர்யாவையும் கவியையும் பார்த்து .."சரி ரெண்டு பேரும் வாங்க .எந்த இடத்துல ஒட்டணும் அதை சொன்னீங்கன்னா நானும் உதவுவேன் .

அம்மா ஒரு ஓரமாக உட்கார்ந்து பலூன் ஊதட்டும் "என்று சொன்னபடியே நகர அதன் பிறகு எல்லாமே வேக வேகமாக நடந்தது.

ஆறு மணிக்கு கவியின் நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கையில் அந்த ஹாலை எவ்வளவு அழகாக டெகரேஷன் செய்து முடித்திருந்தனர் நான்கு பேரும் சேர்ந்து..

ஆறு மணிக்கு மதியழகன் புறப்பட்டிருந்தான்." எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்குது .

நான் போயிட்டு ஒரு.. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து சூர்யாவை பிக்கப் பண்ணிக்கிறேன் "என்று சொல்ல ஷர்மிளாவுக்கும் இவன் சென்றால் பரவாயில்லை என்கின்ற நிலையில் தான் இருந்தாள்.

ஏற்கனவே இவன் இந்த ஏரியாவில் பிரபலமானவன். இவன் இங்கே வந்திருக்கிறான் என்றால் அது நிச்சயமாக கண்,காது, மூக்கு வைத்து வேறு விதமாக பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று சற்று பயம் இருந்தது மனதிற்குள்.. அதனால் சரி என வேகமாக தலையாட்டினாள்.

"எப்ப டா கிளம்புவான்னு இருக்கிறீர்கள் போல இருக்கு. தப்பெல்லாம் ஒன்னும் இல்ல "என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தான்.

அவன் அங்கிருந்து சென்ற பிறகுதான் ஓரளவுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது ஷர்மிளாவிற்கு..

இது என்ன மாதிரியான உணர்வு என்று இந்த நிமிடம் வரையிலுமே அவளுக்கு புரியவில்லை .

அவ்வப்போது சண்டை இடுகிறார்கள் ஆனாலும் ஏதோ ஒரு விதத்தில் அவன் தன்னை பாதிக்கிறான் என்று தோன்ற தான் செய்தது..

அது எதனால் என்பது இவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

சொன்னது போலவே ஒரு மணி நேரம் கழித்து இங்கே வருகையில் கவி கேக் வெட்டி ஓரளவிற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருமே புறப்பட்டு சென்று இருந்தனர்.

மதியழகன் வரும்போது கவிக்கு மட்டும் கிப்ட் வாங்கி வந்திருக்கவில்லை .

எத்தனை பேர் வருவார்கள் என புரிந்து அவர்களுக்கும் கூட சிறு கிஃப்ட் ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

அதை எல்லாமே நண்பர்களிடம் கொடுக்க அத்தனை ஆரவாரமாக மகிழ்ச்சியாக அனைவரும் புறப்பட்டு சென்று இருந்தனர் .

இவன் வரமுமே வேகமாக தன் தாயாரிடம்" அம்மா டாடி கேக் கொடுக்கணும்ல.. எனக்கு ஒரு பிளைட்ல எடுத்து குடுங்க .நான் அவங்களை உள்ளே அழைச்சிட்டு வரேன் "என்று சொன்னபடி வேகமாக வெளியே ஓடி இருந்தாள்.

சூர்யாவோ அம்மா.. அம்மா என்று சொன்னபடி இவள் பின்னால் சுத்திக் கொண்டிருந்தான்.

மதியழகனை உள்ளே அழைத்து அமர வைத்தவள்.. தாயாரிடம் இருந்து கேக்கை வாங்கி கொண்டு வந்து நீட்ட மறுப்பு எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு புறப்பட தயாரானான்.

" சூரியா புறப்படலாமா நேராகிடுச்சு இப்பவே மணி எட்டாக போகுது "என்று சொல்ல.." இதோ வந்துட்டேன்பா "என்று சொன்னபடியே புறப்பட்டான்.

வண்டியில் செல்ல செல்ல சூர்யா நிறைய பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தான் .

"அப்பா இந்த முறை என்னோட பிறந்த நாளைக்கு கவிக்கு பர்த்டே பார்ட்டி கொண்டாடின மாதிரியே எனக்கும் கொண்டாடணும்.

வீட்ல கேக் வெட்டணும். எல்லா பிரண்டுகளையும் வர சொல்லணும் நிறைய கிப்ட் எல்லாம் கொடுக்கணும்."என்று சொல்லிக் கொண்டு வர ,அப்போதுதான் இவனுக்குமே புரிந்தது .

சூரியா பிறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இதுவரையிலும் ஒரு பிறந்தநாளை கூட இவன் கேக் வெட்டி கொண்டாடியது கிடையாது.

எல்லா நாட்களை போல அன்றைய நாளும் கடந்து கொண்டிருந்தது .ஒரு வேலை சங்கரி இருந்திருந்தால் இதுபோல விட்டிருப்பாளா..

தாய் ஒருத்தி இல்லை எனும் போது அங்கே சிறு சிறு ஆசைகளும் கூட நடை பெறாமல் தானே போகிறது..

"சாரி சாரி டா.. இத்தனை நாள் நான் கவனிக்காம விட்டுட்டேன் .இனி வரப்போற ஒவ்வொரு பிறந்தநாளையுமே நீ ஆசைப்படற மாதிரி பெருசா கிராண்டா கொண்டாடலாம் சரியா.

உன்னோட பிரண்டுகள் எல்லாத்தையுமே வர சொல்லலாம் கவியை கூட வீட்டுக்கு வர சொல்லலாம் "என்று சொல்ல.. "தேங்க்யூ பா" என்று வேகமாக மதியழகன் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தான்.

இவனுக்கும் அத்தனை மகிழ்ச்சி அந்த நிமிடத்தில் தோன்ற..சிறு சிறு சந்தோஷங்களைக் கூட தன்னுடைய மகனுக்கு கொடுக்காமல் இருக்கிறோமோ என்கின்ற குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது .

அப்போதே முடிவெடுத்துக் கொண்டான் இனி அடிக்கடி தன்னுடைய மகனை எங்காவது அருகில் வெளியே அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் .

அவனுடைய சந்தோசத்தை சற்று கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அன்றைய தினத்திற்கு பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஷர்மிளாவே சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது மதியழகனிற்கு..

ஏற்கனவே அன்றைக்கு ஐஸ்கிரீம் பார்லர் பெண்ணிடம் இவன் பேசிவிட்டு வந்திருக்க மறுப்பு சொல்லிக் கொண்டிருந்தவள் அன்றைக்கு காலையிலேயே இவனை அழைத்து சம்மதம் சொல்லியிருந்தாள்.

" அண்ணா நீங்க சொல்றது கரெக்ட்.. நானும் நிறைய யோசிச்சேன் எதுக்காக அம்மா அப்பாவை வருத்தப்பட வைக்கணும்..

அவங்க சந்தோஷத்தையும் பார்க்கணும் இல்லையா.. அதனால நான் முடிவு எடுத்துட்டேன் அண்ணா.

நீங்க அப்பா அம்மா கிட்ட கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்னு சொல்லிடுங்க "என்று சொல்ல இவனுக்குள் அத்தனை ஆச்சரியம்..

சொன்ன சில நிமிடங்களிலேயே நேராக ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று இருந்தான்.

" என்னால நம்பவே முடியல தங்கச்சி நான் சொன்னதுக்காகவா இப்படி ஒரு முடிவை எடுத்த "என்று கேட்க..

" இல்லனா அன்னைக்கு நீங்க பேசிட்டு போன பிறகு ஷர்மிளா அக்கா பேசினாங்க .

நிறைய பேசினாங்க அவங்க சொன்னதெல்லாம் நியாயம் என்று தோணுச்சு அதனாலதான்..

சரி என்னோட முடிவை கொஞ்சம் யோசிச்சு சொல்லறேன்னு சொல்லி இருந்தேன் .

இன்னைக்கு உங்க கிட்ட சொல்லிட்டேன். ஷர்மிளா அக்கா கிட்ட கூட என்னோட முடிவை சொல்லிட்டேன்.

அவங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க "என்று சொல்லவும் ஷர்மிளாவை பார்த்து நன்றி சொல்லி விட வேண்டும் என்று நினைத்து நேராக பேங்கிற்கு சென்று இருந்தான்.

அன்றைக்கு கேஷ் கவுண்டரில் ஷர்மிளா தான் அமர்ந்திருந்தாள்..

வழக்கம் போல பணத்தை பேங்கில் போடுபவன் போல செல்ல பாக்கெட்டில் இருந்ததோ வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே..

யோசனையோடு ஆயிரம் ரூபாய்க்கு வவுச்சர் எழுதியவன் எடுத்து நீட்ட ஆச்சரியமாக தான் இருந்தது ஷர்மியாவிற்கும் ..

ஏனென்றால் ஆயிரம் ரூபாய் பெரிய தொகையே கிடையாது .அதை எடுத்துவிட்டு வருபவனும் இவன் இல்லையே என யோசித்துப்படியே பணத்தை வாங்கிக் கொள்ளவும் ,லேசாக தயங்கி நின்றவன் .

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் .எப்ப பேசலாம்னு சொல்ல முடியுமா" என்று கேட்க .. ஒரு நிமிடம் யோசித்தவள்..

" நாளைக்கு காலையில ஸ்கூல்ல வச்சு பார்க்கலாம்" என்று பதில் கூறினால்.. சரி என்பது போல தலையாட்டி விட்டு நகர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் சூர்யாவை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல இவள் தன்னுடைய மகளோடு ஸ்கூலின் வாசலில் இவனுக்காக காத்திருந்தாள்.

" சொல்லுங்க என்ன விஷயம் என்ன பேசணும்னு நினைச்சீங்க "என்று கேட்க..

" அன்னைக்கு என்னை திட்டினதுக்கு பிறகு அந்த பொண்ணு கிட்ட நிறைய பேசி இருப்பீங்க போல இருக்கு .

நீங்க பேசுனதுல அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா தெரியுமா ".

"ஆமா நேற்று எனக்கு போன் பண்ணி சொன்னா .."

"அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்றதுக்காக உங்களை இங்க வர சொன்னேன் . நீ செஞ்சிருக்கிற உதவி ரொம்ப பெருசு ரெண்டு வயதானவங்களோட சந்தோஷத்துக்கு இன்னைக்கு காரணமாக இருக்கிற.. அதனாலதான் நேரடியா பாத்து நன்றி சொல்லணும்னு தோணுச்சு.."

" சாரி நான் அன்னைக்கு தெரியாம பேசிட்டேன் உங்ககிட்ட சாரி கேட்கிறதுக்கு முன்னாடியே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு போயிட்டீங்க ..

பர்த்டே பார்ட்டிக்கு வந்தப்ப கூட நான் சாரி கேட்கல.. இருந்த பரபரப்புல மறந்துட்டேன் ."

"அதனால என்ன நான் அதை எல்லாம் யோசிக்கவே இல்லையே.."

" ஆனா அன்னைக்கு பேசிட்டு போனதுக்கு அப்புறமே முடிவு பண்ணிட்டேன். அந்த பொண்ணு கிட்ட பேசி இந்த பிரச்சனையை சரி பண்ணனும் அப்படின்னு..

பேசும்போது புரிஞ்சுகிட்டா .. அவளும் ரொம்ப நல்ல பொண்ணு தான் ".

"அது தான் எனக்கு நல்லா தெரியுமே சரி தேங்க்யூ இது சொல்றதுக்காக தான் வந்தேன்.

அன்னைக்கு பார்ட்டி ரொம்ப நல்லா போச்சு சூர்யாவுக்கு ஒரே ஆசை அவனுக்கும் இதே மாதிரி பர்த்டே பார்ட்டி கொண்டாடணுமாம்.

இன்னும் மூணு மாசம் இருக்குது அவனுக்கு பிறந்தநாள் வருவதற்கு.. பிறந்தநாள் அப்போ நீங்க அவன் கூட இருக்கணும் .
முன்னாடியே சொல்லிடறேன் "

"சூர்யாவுக்கு இது கூட பண்ண மாட்டேனா.."

" பண்ணுவேன்னு தெரியும் ஆனா பார்ட்டி என் வீட்ல நடக்கும்..
என் வீட்டுக்கு வருவதற்கு நீங்க யோசிக்க கூடாது இல்லையா அதனால சொன்னேன்".

" ஏன் வராம எங்க போக போறேன்..சூர்யாவுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் ."

"கரெக்ட் தான்.. ஆனா.. நேற்று வீட்டுக்குள்ள கூப்பிடவே அவ்வளவு யோசிச்சீங்களே ..

அந்த மாதிரி இருக்கிறப்ப.. என் வீட்டுக்கு நீங்க வருவீங்களா என்ன? அதுதான் யோசிச்சேன் .

சில விஷயங்கள் எனக்கும் புரியுது ரெண்டு பேரும் ஒருவருக்கு ஒருத்தர் ரொம்ப அட்டாச்டா இருக்காங்க..

ரொம்ப பிரெண்ட்லியா இருக்குறாங்க .அவங்க கிட்ட ஒருத்தருக்கு ஒருத்தர் பேசக்கூடாது பழகக் கூடாது. பார்க்க கூடாதுன்னு சொல்ல முடியாது.

சின்ன பசங்க இல்லையா சிலதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போக வேண்டியதா இருக்கு.

கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க எல்லாமே மாறிடும் ."அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியவும் சற்று திகைத்து இவனுடைய முகத்தை பார்த்தாள்.

" புரியுது கவி அப்பான்னு கூப்பிடறது உங்களுக்கு துளி கூட பிடிக்கல.

உங்க முகத்தை பார்க்கும் போதெல்லாம் நல்லாவே தெரியுது ஆனா என்ன செய்ய முடியும் .

சின்ன குழந்தைங்க ஆசையா கூப்பிடுறாங்க .அவங்களோட இழப்பு பெருசு தானே.. அதனால தான் நானே எதுவும் சொல்லாமல் இருக்கிறேன் .

எல்லாமே ஒரு நாள் மாறிடும் அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. அப்புறமா நீங்களும் சரி நானும் சரி அடிக்கடி சந்திக்கிற ஆள் கிடையாது.

என்னைக்காவது ஒரு நாள் பார்த்தால் ..ஹலோ ,ஹாய் ,பாய் சொல்லிட்டு போறவங்க தானே அதனால புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் "என்று விட்டு நகர்ந்தான். போகும் அவனை பார்த்தபடி நின்று இருந்தால் ஷர்மிளா.
 

NNK22

Moderator
8

மதியழகன் அப்படி சொல்லிவிட்டு சென்றிருந்தாலுமே அவன் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை .

அன்றைக்கு பர்த்டே பார்ட்டி முடிந்து விட்டு வந்த அடுத்த சில நாட்களில் சூரியாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போயிருந்தது .

கிட்டத்தட்ட 102 டிகிரி காய்ச்சல் எனும் நிலையில் அருகில் இருந்த மருத்துவமனையில் அவனை அட்மிட் செய்திருந்தனர்.

முதல் நாள் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை. ஸ்கூலுக்கு மட்டும் லீவு என்று சொல்லி இருக்க பெரிதாக கவி கண்டு கொள்ளவில்லை .

ஒரு நாள் தானே.. நாளைக்கு வந்து விடுவான் என்று இருக்க ,அடுத்த நாளும் வரவில்லை எனவும் பிடிவாதமாக தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

" ரெண்டு நாளா சூர்யா ஸ்கூலுக்கு வரவே இல்ல மா .என்ன ஆச்சுன்னு கொஞ்சம் கேளுங்களேன் .

உங்ககிட்ட போன் நம்பர் இருக்குது தானே தாத்தாவோட போன் நம்பருக்கு அடிச்சு கேளுங்கம்மா.".
என்று கேட்க இவளும் தயங்கியபடியே போனில் அழைப்பு விடுத்து இருந்தாள்.

போனை எடுத்தது என்னவோ மதியழகன் தான் .முதலில் யார் என்று புரியாமல் பெயரைக் கேட்ட பிறகு ஒருவாராக புரிந்து கொண்டு நடந்ததை கூறினான்.

" அவனுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கிறான் .

நாளைக்கு தான் வீட்டுக்கு வருவான். ஸ்கூலுக்கு வந்து லீவு சொல்லிட்டேனே "என்று சொல்ல அதற்கு மேல் இவள் தாமதிக்கவில்லை நேராக புறப்பட்டு இருந்தால் ஹாஸ்பிடலை நோக்கி..

அங்கே தேவன் குழந்தை அருகே அமர்ந்திருந்தார் .இவளை பார்க்கவுமே வேகமாக வந்தார்...

" பார்க்க வந்தியா மா..நான் நேற்றே எதிர் பார்த்தேன் தெரியுமா ."

"அங்கிள் எனக்கு தெரியாது இன்றைக்கு தான் கவி வந்து சொன்னா..இரண்டு நாளா சூர்யா ஸ்கூலுக்கு வரல. என்னன்னு கேளு மா அப்படின்னு ..

அதுக்கு பிறகு தான் வேகமாக போன் பண்ணினேன் .இப்ப சூர்யாவுக்கு எப்படி இருக்குது.. டாக்டர் என்ன சொன்னாங்க ."

"ஏதோ வைரல் ஃபீவர் போல இருக்குதுன்னு சொன்னாங்க .102 டிகிரி காச்சல்.. இன்னமும் கூட சரியா குறையலை .

நிறைய வாமிட் பத்தாததுக்கு வயித்தால போகவும் ரொம்ப பயந்துட்டோம் .

நேரா கூப்பிட்டுட்டு வந்து இங்க அட்மிட் பண்ணியாச்சு.. இன்னமும் கூட சரியா அவனால கண் முழிச்சு பார்க்க முடியல ."

"நம்ம எப்போ சூர்யாவை பார்க்கலாம் ..இப்ப பார்க்க முடியுமா".

" பார்க்கலாம் மா.. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு.. இப்பதான் டாக்டர் ரவுண்ட்ஸ்க்கு போனவங்க அவனை பாக்கறதுக்காக உள்ளே போயிருக்கிறார்கள்.

இன்னும் சில நிமிஷத்துல வந்துடுவாங்க வந்ததுக்கு பிறகு நம்ம அவன் பக்கத்துல போகலாம்.."

" ஏன் மது சார் இங்கே இல்லை நீங்கள் தான் சூரியா கூட இருக்கிறீர்களா? "

"நைட் எல்லாம் அவன் தான் கூட இருந்தான் மா இப்பதான் வீட்டுக்கு போனான்."

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே டாக்டர் வெளியே வந்திருந்தார் .

"டாக்டர் அவனுக்கு எப்படி இருக்குது" என்று வேகமாக தேவன் கேட்க .."ஓகே இப்ப கொஞ்சம் நார்மல் தான் கொஞ்சம் ஃபீவர் குறைஞ்சு இருக்குது .

சீக்கிரமா தேறிருவான்.. அம்மா அம்மா என்று உளரிட்டு இருக்கிறான் அவனோட அம்மா இங்கே இருந்தாங்கன்னா வர சொல்ல வேண்டியது தானே" என்று கேட்க இருவரிடத்திலும் பதில் இல்லை.

அப்போதுதான் இவளை பார்த்தவர் "நீங்க யாரு நீங்க சூர்யாவுக்கு அம்மாவா "என்று கேட்க சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் "அம்மா மாதிரி தான் .நான் போய் பார்க்கலாமா "என்று கேட்க "சரி போய் பாருங்க "என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் .

வேகமாக சூர்யா இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தால் ஷர்மிளா. உண்மையிலேயே கண்களை மூடி அரை மயக்கத்தில் இருந்தவன் அம்மா அம்மா என அனத்திக் கொண்டிருந்தான்.

"அம்மா ,ஷர்மி மா.. வாங்க என் பக்கத்துல இருங்க .எனக்கு பயமா இருக்குது" ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க ,அவனின் நிலையை பார்த்தவளுக்கு கண்களில் கரகரவென கண்ணீர் வடிந்தது.

கையில் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருக்க வாடியக்கொடி போல கட்டிலில் படுக்க படுத்திருந்தான்.

வேகமாக அருகே சென்றவள் அவனது கரம் பற்றி "சூர்யா.. சூர்யா இங்க பாரு நான் அம்மா வந்துட்டேன் இனி உன் பக்கத்துல தான் இருப்பேன் "என்று குரல் தர, அரை மயக்க நிலையில் என்ன புரிந்ததோ "என்ன விட்டுட்டு போகாதீங்க மா எனக்கு ரொம்ப பயமா இருக்குது" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்றைக்கு பேங்கிற்கு விடுமுறை சொன்னவள் மாலை வரையிலுமே இவனோடு தான் கூட இருந்தாள்.

அவ்வப்போது மெல்ல தட்டிக் கொடுத்து.." நான் இங்கதான் இருக்கிறேன் .அம்மா உன்னை விட்டு போக மாட்டேன் "என்று பேச்சு கொடுத்துக் கொண்டிருக்க மாலையில் கண்விழித்து இவளை பார்த்தான் .

டாக்டருக்கு கூட அத்தனை ஆச்சரியம்.."இவ்வளவு சீக்கிரம் தேறுவேண்ணு தெரியாம போயிடுச்சு. அப்படி தெரிஞ்சிருந்தா நேத்தே உங்கள வர சொல்லி இருப்பேன் ."

"டாக்டர் எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா நேத்து நான் வந்திருப்பேன் .அவனை விடவும் மத்ததெல்லாம் பெருசு கிடையாது அவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா."

" யார் இல்லைன்னு சொன்னாங்க சரி நீங்க குழந்தை பக்கத்துலயே இருங்க .இன்றைக்கெல்லாம் எங்கேயும் நகர்ந்து போயிடாதீங்க".

" இல்ல டாக்டர் வந்து நான் இப்ப போயாகணும் .எனக்கு பொண்ணு ஒருத்தி இருக்கிறா.. அவளையும் நான் பாக்கணும் இல்லையா ".

"என்ன தேவன் இவங்க இப்படி சொல்றாங்க .இவங்க பக்கத்துல இருந்தா அவன் கொஞ்சம் சீக்கிரம் சரி ஆகிடுவான்னு தோணுது ."

"நீங்க சொல்றது புரியுது டாக்டர் நான் அவங்ககிட்ட பேசி புரிய வைக்கிறேன் "என்று சொன்னவர் வேகமாக தன்னுடைய மகனுக்கு போனில் அழைத்து இருந்தார்.

"மதி.. ஷர்மிளா பக்கத்துல இருந்தா அவனுக்கு சீக்கிரம் சரியாகிவிடும்..கூட இருந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்னு டாக்டர் பீல் பண்றாரு.

நீ அந்த கவி பொண்ண ஸ்கூலுக்கு போய் அழைச்சிட்டு வந்துட முடியுமா நேரா ஹாஸ்பிடல் வந்திடு..

சாயங்காலம் வரைக்கும் இங்கே இருக்கட்டும் .நைட் வீட்டில் கொண்டு போய் விட்டா போதும் என்ன டா "என்று கேட்க சரியேன போனை வைத்து இருந்தான்.

அடுத்து அரை மணி நேரத்தில் கவியை அழைத்துக்கொண்டு நேரடியாக ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தான்.

கவி வேகமாக மம்மி என்று கட்டி அணைத்துக் கொண்டால். பிறகு சூர்யாவை பார்த்தவள் ."அம்மா சூர்யாவுக்கு எப்ப தான் சரியாகும். எப்படி படுக்க வைத்திருக்கிறார்கள்..

கையில எதுக்காக இப்படி ஊசி போட்டு இருக்கு "என்று 100 கேள்விகளை கேட்டாள் .

"இதோ பாரு கவி.. அவனுக்கு உடம்பு சரியில்ல அதனால அப்படி படுக்க வைத்திருக்கிறார்கள் இதையெல்லாம் கேட்கக் கூடாது அவன் சீக்கிரமா சரியாயிடுவான்.

நாளைக்கு இதெல்லாம் எடுத்துடுவாங்க சரியா .இப்படி எல்லாம் கேட்கக் கூடாது "என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மதியழகன் மகனின் அருகே வந்து மெல்ல தலையை கோதிக் கொடுத்தான்.

" அப்பா.. அப்பா.. அம்மாவை போக வேண்டாம்னு சொல்லுங்கப்பா என் கூடவே இருக்க சொல்லுங்கப்பா" என்று கேட்டப்படியே சலுகையாக தந்தையின் கையைப் பிடித்துக் கொள்ள "சரிடா சொல்றேன்" என்று மட்டும் கூறினான்.

சூர்யாவின் நிலை அறிந்த பிறகு இவளுக்கும் கூட வீட்டிற்கு செல்ல வேண்டுமா ..அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டால் என்ன என்று தோன்ற ஆரம்பித்து இருந்தது.

அதற்கேற்றார் போல தேவன் வந்து மெல்ல கூறினார் ஷர்மிளாவிடம்.. "இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவன் கூட இருக்க முடியுமா .இது தனி ரூம் தான் .இங்கே நீயும் கவியும் தாராளமா தங்கிக்கலாம் .

நானும் வேணும்னா கூட இருக்கிறேன் என்னம்மா சொல்ற" என்று கேட்க ..இவள் மறுக்க எல்லாம் வேண்டாம் இல்லை .

"பரவாயில்ல அங்கிள் நான் தங்கிக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல .

இங்கதான் டாக்டர் ,நர்ஸ் எல்லாரும் இருக்காங்களே ..நீங்க கூட இங்க தங்கனும்னு அவசியமில்லை.

நைட் மட்டும் தான.. நான் கூட இருந்துக்கறேன் .நீங்க வீட்டுக்கு புறப்பட்டு போங்க "என்று சொல்ல மதியழகனும் தந்தையை பார்த்து அதையே கூறினான்.

" ஆமா ப்பா..நீங்க வீட்ல போயி மாத்திரை போட்டு படுத்து தூங்குங்க அவங்கதான் தங்கிக்கிறேன்னு சொல்கிறார்கள் இல்லையா .

அவங்க பையனோட பக்கத்துல இருக்கட்டும். நான் வெளியில இருக்கிறேன். ஏதாவது அவசரம்னா பார்த்துக்கலாம் "என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .

இவள் இருந்ததாலோ என்னவோ இரவு ஆன போது நன்றாகவே விழித்திருந்தான் .ஓரளவிற்கு உடல் தேறி இருந்தவன் எழுந்து அமர்ந்து பேச ஆரம்பித்து இருந்தான்.

கையில் ட்ரிப்ஸ் ஒரு புறம் ஏறிக் கொண்டிருக்க என்ன கொடுக்கலாம் என கேட்டு ஊட்டி விட ஆரம்பித்து இருந்தால். எதற்காகவோ உள்ளே வந்த மதியழகன் இந்த காட்சி பார்த்துவிட்டு அமைதியாக வெளியேறி இருந்தான்..

சின்ன சின்னதாய் தனக்கும் அவளுக்கும் தான் மோதல் வருகிறது போலிருக்கிறது .

ஒரு தாய் எனும் இடத்தில் வைத்துப் பார்க்கையில் தன்னுடைய கடமையை சரியாக செய்கிறாள் என நினைத்தபடி வெளியேறினான் மதியழகன்.

அடுத்த இரண்டு நாட்கள் கூட ஹாஸ்பிட்டலில் தங்கி விட்டு பிறகு தான் வீட்டிற்கு அனுப்பி இருந்தனர் .

சூர்யாவை டிஸ்சார்ஜ் ஆகும் வரையிலுமே மாலை வந்தவள் அவனோடு தங்கி விட்டு அடுத்த நாள் பேங்க் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தாள்..

இதற்குப் பிறகு சூர்யாவின் வீட்டில் ஒரு அங்கம் போல மாறி இருந்தால் ஷர்மிளா..

சூர்யா காலையில் எழுந்த உடனேயே முதலில் ஷர்மிளாவிற்கு போனில் அழைத்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தான் சூர்யா.

அதே போல கவியும் கூட மதியழகனடம் அவ்வப்போது அதேபோல பேசிக் கொண்டிருந்தால்.

சிறுவர்களுக்குள் பேச தடை எதுவும் இல்லை தங்களுக்கு தோன்றியதை தாங்கள் நினைத்ததை இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர் .

ஆனால் இது போல பேச தயங்கியது என்னவோ ஷர்மிளாவும் மதியழகனும் தான் .

முன்பு நடந்தது எல்லாமே ஷர்மிளாவுக்கு ஞாபகம் இருக்க, ஒரு சிறு விலகல் தன்மையோடு பழகிக் கொண்டிருந்தாள் அதையேதான் மதியழகனும் செய்தது.

ஆனால் தேவனின் மனநிலை வேறாக இருந்தது .தன்னுடைய மகனுக்கு எப்படியாவது இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தார்.

அதிலும் ஷர்மிளாவை பற்றி தெரிந்த பிறகு அவளை தனக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என முடிவுக்கு வந்திருந்தார்.

மறுமணம் ஒன்றும் தவறு கிடையாது அவரை பொறுத்தவரையிலும் ..ஏற்கனவே வாழ்ந்து முடித்தவர் அல்லவா.. வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நிறைவே தெரிந்திருந்தார்.

தன்னுடைய மகன் ஒரு குழந்தையோடு இருக்கும்போது வரும் மருமகள் கூட ஒரு குழந்தையோடு வந்தால் தவறு ஏதுமில்லை என்கின்ற மனப்பான்மை அவரிடம் இருந்தது.

தான் நினைத்தது நடக்குமா என்கின்ற கேள்வி மட்டும் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது .ஏனென்றால் குழந்தைகள் இருவரும் ஒன்றாக இணைந்து இருந்தார்களே தவிர பெரியவர்கள் இன்னும் அவ்வளவாக முகம் கொடுத்து பேசுவது இல்லை .அதன் காரணமும் கூட ஓரளவுக்கு தேவனுக்கு புரிந்து இருந்தது .

மதியழகன் கோபத்தால் இடையே நடந்த குளறுபடிகள் எல்லாமே ஓரளவிற்கு தேவனுக்கு தெரிந்தே இருந்தது .ஆனால் அதெல்லாம் நியாயமானது எனும் நிலையில் ஷர்மிளாவின் மனம் மாறும் என நிறையவே நம்பினார்.

அந்த நம்பிக்கையுடன் மெல்ல மெல்ல இருவரையும் இணைக்கும் வேலையை தன்னுடைய பாணியில் நடத்திக் கொண்டிருந்தார்.

அதன் பயனாக இப்போது சூர்யாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார் .

"உனக்கு ஷர்மிளா அம்மாவை ரொம்ப பிடிக்குமா சூர்யா.."

" என்ன கேள்வி தாத்தா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .நான் தான் ஏற்கனவே முன்னாடியே சொல்லி இருக்கிறேன்ல ..

எனக்கு ஷர்மிளா அம்மான்னா அத்தனை உயிர் தெரியுமா.."

" அப்புறமா ஏன் அவங்க தனியாக இருக்கணும் நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்துடலாமா ".

"என்ன தாத்தா சொல்றீங்க அது எப்படி முடியும் அப்பா ஒத்துக்க மாட்டாங்க இல்லையா.

நான் ஏற்கனவே அப்பா கிட்ட ஒரு தடவை கேட்டேன் ஷர்மிளா அம்மா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம கூட கூப்பிட்டு வச்சுக்கலாம்ணு கேட்டேன் .அதுக்கு அப்பா சம்மதிக்க மாட்டேன் சொல்லிட்டாங்க .

கோபமா என்ன திட்டிட்டாங்க தெரியுமா .அவங்க உனக்கு அம்மா கிடையாது .இந்த மாதிரி பேசக்கூடாதுன்னு சத்தம் போட்டாங்க .

அன்னைக்கு எல்லாம் அழுதுகிட்டே தூங்கினேன் தெரியுமா ".

"சரிடா அது அன்னைக்கு இப்போ ஷர்மிளா அம்மா கிட்ட அப்பா நல்லா தானே பேசுறாங்க .."

"பேசுறாங்க தான் தாத்தா..ஆனா வீட்டுக்கு கூப்பிட்டு வரலாம் என்று கேட்டால் சம்மதிக்க மாட்டாங்களே..

தாத்தா நானும் இத பத்தி எல்லாம் யோசிச்சி இருக்கேன் தெரியுமா ".

"அட பெரிய மனுஷா ..எனக்கு இது தெரியாம போச்சே .இதை பத்தி நீ யோசிப்பியா.."

" ஆமாம் தாத்தா நான் கவி கிட்ட கூட சொன்னேனே.. "

"என்ன சொன்ன.."

" எனக்கு மம்மி ரொம்ப பிடிச்சிருக்கு உனக்கு டாடி ரொம்ப பிடிச்சிருக்குனா பேசாம நீயும் மம்மியும் எங்க வீட்டுக்கு வந்துரியான்னு கேட்டேன் .

அவ அதெல்லாம் தப்பு நாங்க வரமாட்டோம்.. அம்மா திட்டுவாங்க அப்படின்னு சொன்னா ..

அப்படின்னா நானும் டாடியும் உங்க வீட்டுக்கு வந்துரட்டுமான்னு கேட்டேன் .அப்ப அதுக்கும் சம்மதிக்கலை தாத்தா .

அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது என்னை அடிச்சிடுவாங்க அதனால வேண்டாம் அப்படின்னு சொன்னா.."

" அப்படியா அந்த பொண்ணு சொன்னா .."

"ஆமா தாத்தா என்னை மாதிரி தானே அவங்க அம்மாவும் அவளை அடிப்பாங்க. அப்ப பயம் இருக்கும் தானே .."

"ஓ ..நீ அப்படி வரியா ஒன்னு பண்ணலாமா.. நான் சொல்றதை நீ கேட்பியா."

" சொல்லுங்க தாத்தா கேட்பேன் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன் எனக்கு மம்மி இங்க வந்தாங்கன்னா போதும் ..

உங்களுக்கு தெரியுமா அன்னைக்கு உடம்பு சரியில்லாதப்போ எவ்ளோ நல்லா இருக்குது தெரியுமா .

என் பக்கத்திலேயே இருந்தாங்க நிறைய பெட் ஸ்டோரி எல்லாம் சொன்னாங்க . கேட்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது".

" சரிடா அப்படின்னா ஒன்னு பண்ணலாம். நீ அப்பாகிட்ட மெதுவா பேச்சு கொடு .

எனக்கு மம்மியை பிடிச்சிருக்கு நம்ம இங்க கூப்பிட்டு வந்துடலாம்னு கேளு.. திரும்பத் திரும்ப கேட்டேனா நிச்சயமா ஒரு நாள் சரின்னு சொல்லுவான்".

" அப்படியா தாத்தா என்ன அடிச்சிட மாட்டாங்களே ".

"அதெல்லாம் அடிக்க மாட்டான்டா நான் இருக்கிறேன்ல .. அப்படியா அடிக்க விட்டு பாத்துக்கிட்டே இருக்க போறேன் ".

"அதுவும் சரி தாத்தா அப்பா வரட்டும் நான் இன்னைக்கு கேட்டுட்டு சொல்லுறேன்" என்று நகர்ந்தான்.

ஆனால் சூர்யா என்ன கேட்டானோ தெரியாது .அன்றைக்கு வீட்டிற்கு வந்தவன் தந்தையிடம் ருத்ரதாண்டவம் ஆடி இருந்தான்.

" உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ..என்னவோ சொல்லுவாங்களே ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா இங்க சுத்தி அங்க சுத்தி கடைசில பையனோட மனசை களைக்கிறீங்களா?

எதுக்காக அவன் தேவை இல்லாம என்கிட்ட இப்படி வந்து பேசிகிட்டு இருக்கிறான் .

முன்னாடி ஒரு தடவை சொன்னான். அப்பவே திட்டவும் அதோட மறந்துட்டான் இப்ப புதுசா மறுபடியும் வந்து பேசிக்கிட்டு இருக்கிறான்.

கேட்டால் தாத்தா சொன்னாங்கன்னு வேற உளர்றான்.. என்னப்பா செஞ்சுகிட்டு இருக்கீங்க ".

"என்னடா நீ வேற நான் என்ன செஞ்சேன் ..நான் எதுவும் செய்யல ..உன் பையன் கேட்டான்னா அது அவனோட ஆசையா இருக்கும் அவனுக்கு பதில் சொல்ல வேண்டியது உன் பொறுப்பு .

அங்க விட்டுட்டு இங்க வந்து கத்துக்கிட்டு இருக்குற.."

" வேண்டாம்ப்பா இதெல்லாம் சரியில்ல. இன்னொரு தடவை இது மாதிரி எதுவும் செய்யாதீங்க..

உங்களுக்கு ஏற்கனவே தெரியும் நடந்தது எல்லாமே.. நான் எதையும் மறக்கலை..

என்னோட மனைவி இந்த ஜென்மத்துல சங்கரி மட்டும்தான் அவளைத் தவிர யாருக்கும் என் மனசுல இடம் கிடையாது ."

"ஆமா ரொம்பத்தான் சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்காதடா ..

எனக்கு கடுப்பாகுது அந்த பொண்ண நீ ஒழுங்கா பார்த்து இருந்தா அந்த பொண்ணு இறந்து போயிருக்காது .

நீ இன்னும் கொஞ்சம் கவனமா பார்த்து இருக்கலாம் .அதை விட்டுட்டு செய்யற தப்பு எல்லாம் செஞ்சிட்டு இன்னமும் என் மனசுல அவதான் இருக்கிறான்னு கதை சொல்லிகிட்டு இருக்குற ..

நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்த லட்சணத்தை நான் தான் பார்த்தேனே..

எதுக்குடா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்னு ஒவ்வொரு நிமிஷமும் என்ன சங்கடப்பட தான வச்ச ..

எத்தனை நாள் வருத்தப்பட்டு தூங்காமல் இருந்தேன் தெரியுமா அந்த மகராசி ஒரு பையனை பெத்து கையில கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டா .

உனக்கு ரொம்ப சௌரியமா போச்சு இப்ப கேக்குறதுக்கு யாரும் இல்ல. நான் என்ன சொன்னாலும் எப்பவும் கேட்கப்போவதில்லை .

அவன் குழந்தை அவன் பேச்செல்லாம் உன் கிட்ட எடுபடுமா..

உன் இஷ்டம் போல சுத்தலாம் என்று முடிவு பண்ணி இந்த மாதிரி பண்ணிக்கிட்டு இருக்குற .."

"சும்மா எதையோ பேசி என் மனச குழப்பாதீங்கப்பா ..இப்ப சொல்றதுதான் இன்னொரு தடவை அவனும் சரி நீங்களும் சரி தேவையில்லாம எதையும் உளறிக்கிட்டு இருக்க கூடாது .

அந்த பொண்ணு யாரு .. எந்த சம்பந்தமும் இல்லாம அவளை எதுக்காக இங்க கூப்பிட்டு வரணும்னு பேசிகிட்டு இருக்கீங்க.

ஏதோ இவன் ஆசைப்பட்டான் மம்மினு கூப்பிடறேன்னு சொன்னான். கூப்பிட்டுட்டு போகட்டும்ணு விட்டேன்.

அதை தாண்டி எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க .."

"சரிடா மம்மின்னு உன் பையன் தான் ஆசைப்பட்டான் சரி கூப்பிட்டுட்டு போகட்டும்ணு விட்ட.. ஆனால் அந்த கவி பொண்ணு வந்து டாடின்னு சொல்லுதே ..

அத நீயும் கேட்டுட்டு தான இருக்கிற இதுக்கு என்ன அர்த்தம் ".

"அப்பா போதும் பா என் பையனுக்கு இருக்கிற ஏக்கம் அந்த குழந்தைக்கு இருக்கும்னு நினைச்சேன் அதனால கூப்பிட்டா கூப்பிட்டு போகுதுன்னு விட்டேன் அதுக்காக நீங்களா புதுசா ஒரு கதை கட்டுவிங்களா..

இந்த பேச்சை இத்தோட விட்டுடுங்க இன்னொரு முறை இது மாதிரி பேசுற வேலை வேண்டாம் புரிஞ்சுதா..

நீங்க சூர்யா கிட்டயும் பொறுமையா சொல்லுங்க .இதெல்லாம் எந்த காலத்திலையும் நடக்காது .

நம்ம வீட்டுக்கு யாரும் மம்மிங்ற பேரை சொல்லிட்டு உள்ளே வர மாட்டாங்க .தெளிவா புரியவைங்க புரிஞ்சுதா .

இன்னொரு தடவை என்கிட்ட கேட்டா நான் என்ன செய்வேன்னு தெரியாது இன்னைக்கு ஏதோ நல்ல மூடுல இருந்ததால் தன்மையா அவன்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கிறேன் .

அதே இன்னொரு தடவை இதே வார்த்தையை என்கிட்ட கேட்டான்னு வைங்க.. முதுகுல நாலு வெச்சிடுவேன் அப்புறமா அவன் அழுகை தான் காதுல விழும் புரிஞ்சுதா.."

"புரியுதுடா ரொம்ப நல்லா புரியுது அப்படியே இன்னும் ஒன்று சொல்லிடு .

அந்த குழந்தைகிட்ட இனிமே அப்பானு என்ன கூப்பிடாதன்னு சொல்லிடு.. மூஞ்சில அடிச்ச மாதிரி உன் பையன் கிட்ட சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்னு வச்சுக்கோயேன் .

அந்த புள்ளை அவங்க வேலையை பார்த்துட்டு அவங்க வீட்ல இருப்பாங்க இல்லையா.. இப்படி மம்மி ,டாடி என்று ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் சுத்தமாட்டாங்க இல்ல புரிஞ்சுதா.."

" எதுக்காக இப்ப தேவையில்லாம இப்படி பேசுறீங்க பா.."

"என்னடா தேவை இல்லாம பேசிட்டேன்.. இப்ப எல்லாம் தினமும் அந்த குழந்தை உன் கிட்ட பேசிகிட்டு இருக்குது அது எனக்கு நல்லாவே தெரியும்.

உன் பையனும் தினமும் அந்த பொண்ணு கிட்ட அம்மா அம்மானு பேசிக்கிட்டு இருக்கிறான் .

அதுவும் தெரியும் இதெல்லாம் தெரிஞ்சதுனால தான் சரி நடந்தா நல்லா இருக்குமே அப்படின்னு சொல்ல சொன்னேன்.

நீ என்னமோ பெரிய இவனாட்டம் குதிச்சுக்கிட்டு இருக்கிற ..போ போ உனக்கு விருப்பம் இல்லனா இங்க யாரும் ஆசை படலை .

தலைவிதிபடி தானே நடக்கும் நான் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கிறேன் .

உடம்பு சரியில்லை என்றால் கூட யாரும் என்னை பாத்துக்க வேண்டாம் .அனாதை மாதிரி படுத்து கிடக்கிறேன்.

"நான் இல்லையேப்பா நான் உங்க கூட தான இருக்குறேன். நான் பாத்துக்க மாட்டேனா.."

"என்னடா பார்த்த.. நீ எப்படி பார்த்துக்க போற ..காலையில போனால் ராத்திரி வர்ற..

அந்த பையன் கூட கொஞ்ச நேரம் பேசுற.. எப்பவாவது தோணுச்சுன்னா என்கிட்ட வந்து பேசுற ..

இதுதாண்டி வேற எதையாவது நீ கவனிக்கிறியா .எப்போ சங்கரி போனாலோ அதற்கு பிறகு நீ இப்படித்தானே இருக்கிற..

நானே இன்னிக்கி மாறுவே நாளைக்கு மாறுவேன்னு பார்க்கிறேன் உன்கிட்ட எந்த மாற்றமும் வரல .

என்னோட ஆசை உன்னையும் இந்த குடும்பத்தையும் பார்த்துக்க இன்னொரு பெண் இங்க வந்தா நல்லா இருக்கும்னு யோசிக்கிறேன்.
என்ன டா தப்பு ".

"அதுக்கு எனக்கும் விருப்பம் இருக்கணும் பா .எனக்கு விருப்பம் இல்லாத எந்த வேலையும் செய்ய முயற்சி பண்ணாதீங்க புரிஞ்சுதா.

இந்த பேச்சை இத்தோட விடுங்க இன்னொரு முறை இது மாதிரி பேச ஆரம்பிக்காதீங்க ".

"சரிடா இந்த பொண்ணு வேண்டாம் வேற ஏதாவது ஒரு பொண்ணு.."

" போதும் பா ஒரு தடவை தான் சொல்லுவேன் .திரும்பத் திரும்ப சொல்ல மாட்டேன்.

நான் ஏற்கனவே என்னோட முடிவை சொல்லியாச்சு .இந்த ஜென்மத்துல என்னோட மனைவி சங்கரி மட்டும்தான்.

அவளோட நினைவுகளே எனக்கு போதும். இதுக்கு மேல எதை பத்தியும் பேச வேண்டாம் "கோபமாக எழுந்து சென்றான்.

தந்தையிடம் அதட்டி விட்டு வந்தவனால் இங்கே சூர்யாவிடம் அவனுடைய பேச்சு ஜெயிக்கவில்லை .

இரவு நேரத்தில் பாதி ராத்திரியில் எழுந்து அம்மா.. அம்மா என்று கத்த ஆரம்பித்திருந்தான்.

" எனக்கு அம்மா வேணும் .என்னை அம்மா கிட்ட கொண்டு போய் விடுங்க "என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ,சமாளிக்க இவனால் முடியவில்லை .

கோபத்தில் முதுகில் பளார், பளார் என்று வைக்க ,இப்போது இன்னும் அதிகமாகத்தான் அழுதானே தவிர குறையவில்லை .

அப்படியே மதியழகன் ஜெராக்ஸ் போல இருந்தான்.
தேவன் இவனுடைய சத்தம் கேட்டு ஓடி வந்திருந்தார் .

"ஏன்டா குழந்தையை போட்டு இப்படி அடிக்கிற ..உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா" என்று கேட்டபடியே பேரனை தன் கைக்குள் கொண்டு வந்து அணைத்து கொண்டார்.

எந்த ஒரு சமாதானத்திற்கும் சூர்யா நிற்கவில்லை. அழுகை அதிகமானதே தவிர குறைவது போல தெரியவில்லை .

நேரம் இரவு 2 மணியே நெருங்கிக் கொண்டிருந்தது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்து தொண்டை கட்டும் அளவிற்கு அழுது கொண்டிருந்தான்.

" அழக்கூடாதுடா நாளைக்கு காலையில நீ அம்மாவை பார்க்கலாம் .சொன்னா கேக்கணும் சரியா" என்று தாத்தா சமாதானம் செய்ய எந்த சமாதானமும் எடுபடவில்லை அவனிடம் ..

ஒவ்வொரு நிமிஷமும் ஆர்ப்பாட்டம் அதிகமானதை தவிர குறையவில்லை .மேலும் கோபத்தை தூண்டுவது போல இருந்தது மதியழகனுக்கு ..

வேகமாக மறுபடியும் அடிக்க கை ஓங்கி கொண்டு வர ,அவனை அடிக்க விடவில்லை .

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு .இந்த வீட்ல யார் தான் குழந்தை என்று எனக்கு தெரியலை..

அவன் தான் குழந்தை புரிஞ்சுக்காம அழுகறான்னா நீ அதுக்கு ஏத்த மாதிரி இப்படி கையை நீட்டினா என்ன அர்த்தம் .

அவனுக்கு சொல்லி புரிய வைக்கிறேன். நீ முதல்ல இங்கிருந்து போ சூர்யா ."

"இத்தனைக்கும் காரணம் நீங்கதான் பா.. நீங்க ஆரம்பிச்சது தான் இன்னைக்கு இங்க வந்து நிற்கிறது.

சொன்ன பேச்சை கேட்டுட்டு நல்ல விதமா ஸ்கூலுக்கு போயிட்டு வந்துகிட்டு இருந்தான்.

நீங்க தான் தேவை இல்லாம அம்மான்னு சொல்ல ஆசைப்படறான் அப்படி, இப்படின்னு ஆரம்பிச்சு.. இன்னைக்கு இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு .

நான் தான் தப்பு பண்ணிட்டேன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கும்போது அந்த பொண்ணு கிட்ட விட்டுறுக்கக் கூடாது.."

"சும்மா மத்தவங்களையே குறை சொல்லாத ..அந்த பொண்ணு நார்மலா தான் பேசிக்கிட்டு இருக்கிறா.. உன் பையன் அளவுக்கு அதிகமாக அட்டாச் ஆனா அதுக்கு அந்த பொண்ணு என்ன செய்வா..

சூர்யா.. நீ தாத்தா கூட வந்து படுத்துக்கோ ..நாளைக்கு காலையில உன்ன அம்மாகிட்ட அழிச்சிட்டு போய் விட சொல்றேன்."

" அதெல்லாம் முடியாது தாத்தா எனக்கு இப்ப அம்மாவை பாக்கணும் போல இருக்கு . கவியை பாக்கணும் போல இருக்கு .

நான் அவங்க மடியில படுத்து தூங்குவேன் .அவங்க எனக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்வார்கள்.

என் முதுகுல தட்டி கொடுப்பாங்க நான் தூங்காட்டி எனக்கு பாட்டு எல்லாம் கூட பாடி காட்டுவாங்க நான் அம்மாகிட்ட போகணும்.."

"இத பாருடா இது தான் லிமிட் இன்னொரு முறை இது மாதிரி கத்தினா என்ன செய்வேன்னு தெரியாது.

ரூமுக்குள்ள அடைச்சு வச்சுருவேன் புரிஞ்சுதா .என்ன உன்னோட ஆர்பாட்டம் அதிகமாகி கொண்டு வருது ".

"சும்மா குழந்தையை திட்டாத உன்னை மாதிரி தான் உன்னோட பையனும் இருப்பான்.

நீயும் ஒரு காலத்தில் இப்படி எல்லாம் தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணின‌.அவன் குழந்தை டா.. இல
அவனுக்கும் கொஞ்ச நாள் ஆகும்.. புரிஞ்சுக்குவான்."

அழுது தொண்டைக்கட்டி கொஞ்ச நேரத்தில் லேசாக மயங்கி விழுந்திருந்தான்.

இதற்கு மேல் தாமதித்தால் ஆகாது என நினைத்தவர் வேகமாக ஷர்மிளாவிற்கு ஃபோனில் அழைத்து பேசினார் .

"சாரி மா. இந்த நேரம் அழைச்சதுக்கு மன்னிச்சிடு..கொஞ்சம் சூர்யா கிட்ட பேசு.." என்று சொன்னபடியே சூர்யாவுக்கு சற்று தண்ணீர் அருந்த கொடுத்தவர் பேச கொடுக்க, ஷர்மிளா ஃபோனில் பேச சூர்யாவின் அழுகுரல் கேட்டு அவளுக்கு இன்னமும் பதட்டம் அதிகமானது .

"ஹலோ.. ஹலோ" என்று கூப்பிட்ட சில நிமிடங்களிலேயே மறுபடியும் மதியழகனின் போன் நம்பருக்கு அழைத்திருந்தாள் .

"மது சார் அங்கே என்ன நடக்குது எதுக்காக சூர்யா அப்படி அழுதுகிட்டு இருக்கிறான் .

என்ன ஆச்சு அவனுக்கு.. இப்ப நல்லா இருக்கிறான் தானே .இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தீங்க மறுபடியும் எதுவும் உடம்பு சரியில்லையா ..வயிறு ஏதாவது வலிக்குதா ..என்னன்னு கேளுங்க" என்று வரிசையாக கேள்வியை கேட்க ..இங்கே சுர்ரென கோபம் மதியழகனுக்கு வந்தது.

" இதோ பாருங்க அவன் போன் பண்ணினா அவன்கிட்ட என்னன்னு கேட்டு சமாதானம் செய்யுங்க.

அத விட்டுட்டு எதுக்காக என்கிட்ட பேசுறீங்க .இதுக்கு காரணமே நீங்க தான்.

உங்களோட நடவடிக்கையால் தான் இவ்வளவு தூரம் பிரச்சினையாகி இருக்கு "என்று கோபமாக சொல்லிவிட்டு போனை வைக்க இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

நட்ட நடு ராத்திரியில் இவளை அழைத்து அம்மா.. அம்மா அழுகிறான் என்றால் ..இங்கே இவனும் சம்பந்தமில்லாமல் கத்தி விட்டு போனை வைக்க ஒன்றுமே புரியவில்லை இவளுக்கு..

அது ராத்திரி நேரத்தில் மதியழகன் பேசிய வார்த்தைகளின் மேல் கோபம் வர ,போனை வைத்தவள் தன் மகளிடம் சென்று அணைத்தபடி படுத்துக் கொண்டால் .

அதன் பிறகு தூக்கம் காலை வரையிலுமே வரவில்லை. காலை எழுந்த உடனேயே ஏழு மணிக்கு எல்லாம் புறப்பட்டு கவியையும் அழைத்துக் கொண்டு நேராக சூர்யாவின் வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தாள். இரவு சூர்யா அழுததே கண்களுக்குள் நிழலாடிக் கொண்டிருந்தது.

நீண்ட நேரம் வரை அழுத சூர்யா விடியற்காலை நேரத்தில் தான் தூங்க ஆரம்பித்து இருந்தான்.

இப்போது மறுபடியும் காய்ச்சல் அடிக்க துவங்கியிருந்தது.தேவனின் அறையில் தூங்கிக் கொண்டிருக்க, அந்த காலை நேரத்தில் கவியை அழைத்துக்கொண்டு வந்து பார்த்து இருந்தாள்.

"அங்கிள் நைட் அவன் போன் பண்ணி அழுதது என்னால தாங்க முடியல.. எனக்கு தூக்கமே வரல விடியறதுக்காகவே காத்துகிட்டு இருந்தேன் .

விடிஞ்சதும் நேரா இங்கதான் வரேன். அவனுக்கு என்ன ஆச்சு இப்ப நல்லா இருக்கறானா.அவனை நான் பார்க்கலாமா "என்று கேட்க..,

மாடியறைலிருந்து மதியழகன் அப்போதுதான் எழுந்து வெளியே வந்தான்.

இவளை பார்க்கவும் கோபம் ஏறியது ஆனால் அதே நேரத்தில் கவி அவனை பார்க்கவும்.." டாடி எப்படி இருக்கிறீங்க" என்று கேட்டு விட்டு ஓடி வந்தாள்.வந்த கோபத்தை மெல்ல அடக்கியபடி .."நல்லா இருக்கிறேன்.. என்ன உன்னோட ஃபிரண்டை பார்க்க வந்தியா "என்று கேட்டபடியே நகர்ந்தான்.

அவன் நடந்து கொண்டது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது இவளுக்கு..

இவனுக்கு என்ன ஆயிற்று நன்றாகத்தானே இருந்தான். எப்போதும் முகத்தை இப்படி தூக்கி வைத்துக்கொண்டு சுற்றுபவன் இல்லையே..

சமீபத்தில் கூட இருவருக்கும் சண்டை வந்தது இல்லை என்று நினைத்தபடியே சூர்யாவை பார்க்க சென்றாள்.

இவளைப் பார்க்கவுமே சூர்யா வேகமாக ஓடி வந்திருந்தான்." அம்மா அம்மா என்னை விட்டுட்டு போகாதீங்க .

என் கூடவே இருங்கம்மா.. இல்லனா என்னை உங்க கூட கூப்பிட்டுட்டு போயிடுங்க .
எனக்கு இந்த வீட்ல இருக்க பிடிக்கலை" என்று தேம்பி அழ இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மெல்ல சமாதானப்படுத்த ஆரம்பித்தால் ."இப்படி எல்லாம் அழுக கூடாது சூர்யா .முதலில் என்ன நடந்துச்சு .அதை சொல்லு" என்று சமாதானம் செய்ய ,எதற்கும் அடங்குவது போல தெரியவில்லை. இன்னும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.

ஒன்றுமே புரியாமல் தன் தோளோடு லேசாக அணைத்து முதுகில் தேய்த்து தர வலித்தது போல அசைய, வேகமாக அவனுடைய சட்டையை தூக்கி பார்த்தால் ஷர்மிளா .

முதலில் அடித்ததற்கான அடையாளம் நன்றாகவே தெரிந்தது கை பட்ட தடம் தெரிய.. இப்போது கோபம் இவளுக்கு வந்தது.

" என்ன அங்கிள் இது ..என்ன நடக்குது இங்க .குழந்தையை பிடித்து எதுக்காக அடிச்சு வச்சிருக்கீங்க .

முதுகுல எப்படி வீங்கி இருக்குது பாருங்க "என்று கேட்க.. "என்ன என்னம்மா செய்ய சொல்லுற.. அப்பாவுக்கும் பையனுக்கும் பிரச்சனை .

இடையில நான் எப்படி வந்து பேசுறது ".

"அதுக்கு …குழந்தையை பிடிச்சு இப்படிமா அடிச்சு வைப்பாங்க. உங்க பையன் மனுஷன் தானே ..இல்ல மிருகம் ஆகிவிட்டாரா?

பார்க்கிறப்ப எல்லாம் மத்தவங்கள அடிக்கிறார்னா இப்ப சொந்த வீட்டுல குழந்தையை கூடவா அடிப்பாரு.. அவர் எங்க இப்போ.."

" ஷர்மிளா இப்போ போகாதம்மா அவனுக்கு ஏதோ கோபம் போல இருக்குது "என்று சொல்ல ,எதையும் கேட்பது போல தெரியவில்லை .

"நாலு வார்த்தை நருக்கென்று கேட்டா மட்டும்தான் என்னால அமைதியாக முடியும் .

இப்படியா குழந்தையை போட்டு அடிப்பாங்க .அவன் குழந்தைல்ல அவனுக்கு என்ன தெரியும்" என்று கேட்டபடியே மதியழகன் முன்னால் வந்து நின்றாள்.

" இதை பாருங்க நீங்க பெரியவங்க தானே .. அவன் குழந்தை அவனுக்கு என்ன தெரியும் .

ஏதாவது தப்பு பண்ணினா நீங்கதானே பொறுமையாக எடுத்து சொல்லணும் .

அத விட்டுட்டு இப்படித்தான் போட்டு அடித்து வைப்பீங்களா.. நைட் அழும் போது அவ்வளவு பதட்டமாக இருந்தது .

விடிய விடிய நான் தூங்கல இங்க வந்து பார்த்தா அந்த பையனை அப்படி போட்டு அடிச்சு வச்சிருக்கீங்க நீங்களும் மனுஷன் தானே ..
அந்த குழந்தைக்கு என்ன தெரியும்".

" தயவுசெய்து ஷர்மிளா நீங்க இந்த விஷயத்துல தலையிட வேண்டாம் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க போதும் .

சூர்யாவை பார்க்க வந்தீங்களா பாத்துட்டீங்களா சந்தோஷம்.. இப்பவே கிளம்பி நீங்க போகலாம் என்கிட்ட வந்து எதுவும் கேட்கிற வேலை வேண்டாம் "சற்று கோபமாக பேச..

" சும்மா கோபத்தை காட்டினால் சரியா போயிடாது சார். முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க..

மத்தவங்க பேச வர்றது என்னன்னு புரிஞ்சுகிட்டா எல்லாம் சரியா போயிடும் .."

"என்ன சரியா போகும். அவன் என்ன பேசினான்னு உங்களுக்கு தெரியுமா.."

" என்ன வேணும்னாலும் பேசட்டுமே அவன் குழந்தை தானே.. அதையும் நீங்க புரிஞ்சுக்கல .

குழந்தைக்கு ஈக்குவலா நீங்களும் சண்டை போடுவீங்களா.."

" இதை பாருங்க ..அவன் கேட்கிற எல்லாத்துக்குமே என்னால தலையாட்டிக்கிட்டு இருக்க முடியாது.

சிலதெல்லாம் முடியாதுன்னா முடியாது தான் .நட்ட நடு ராத்திரி அம்மாகிட்ட போகணும்.. கொண்டு போய் விடுங்கன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்.

அந்த நேரத்துக்கு நான் அவனை அங்க கூப்பிட்டு வந்தா நல்லாவா இருக்கும் .

நடுராத்திரி ஒரு மணிக்கு உங்க வீட்டு வாசலில் வந்து நிற்க சொல்றீங்களா..

சில விஷயங்கள் ஆரம்பத்திலேயே தட்டி வச்சா தான் சரியா வரும் அதனாலதான் முதுகுல ரெண்டு வச்சேன்.

இதுல எனக்கு தப்பா எதுவும் தெரியல. நீங்களும் அதே மாதிரி வந்து கேட்டுகிட்டு இருக்க வேண்டாம்."

அடம் பிடித்து அழுதான் என்று கேட்கவும் அப்படியே திகைத்து நின்று விட்டால்.

" கேட்கும் போது உங்களுக்கே ஷாக்கா இருக்குது இல்லையா.. எனக்கு மம்மி தான் வேணும் .மம்மி கூட தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறான் .

இதெல்லாம் எப்படி சகிச்சுக்கிட்டு இருக்க முடியும் .அவனுக்கு அம்மா இல்லை அது அவனுக்கு நல்லாவே தெரியும்.
அத புரிஞ்சுகிட்டு இருக்கணும் இல்லையா ..

நெனச்ச நேரத்துல நினைச்சது வேணும்னு அடம் பிடிச்சா எப்படியாம்..

அடம் பண்ணினா இது மாதிரி நடக்க தான் செய்யும். முக்கியமா இன்னொரு விஷயம் உங்ககிட்ட சொல்லிடறேன்..

இப்ப சொல்றதுதான். இனி எப்பவுமே அவன் கிட்ட நெருங்கி வர முயற்சி பண்ண வேண்டாம் .கொஞ்சம் விலகியே இருங்க அதுதான் அவனுடைய எதிர்காலத்துக்கு நல்லது .

தினம் தினம் இது மாதிரி அடம் பிடித்து டெய்லி அவனை அடிச்சுக்கிட்டு என்னால இருக்க முடியாது .நேத்து அடிச்சது தான் ஃபர்ஸ்ட் அன்ட் கடைசியா இருக்கணும்னு ஆசைப்படறேன்.

அதே மாதிரி தான் உங்க பொண்ணை கூட கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி வைங்க .அப்பான்னு சொல்லிட்டு என்கிட்ட வர வேண்டாம் .

ஏன்னா நாளைக்கு உங்க பொண்ணு அடம் பிடிச்சாலும் இதே நிலைமைதான் அந்த குழந்தைக்கும் வரும்" சொன்னவன் விறு விறு என வீட்டை விட்டு வெளியேறி இருந்தான். திகைத்தபடி நின்று இருந்தால் ஷர்மிளா .

ஒன்றுமே புரியவில்லை இவளுக்கு வேகமாக மறுபடியும் சூர்யா இருந்த இடத்தைக்கு வந்தாள்.

இப்போதும் சோர்ந்து படுத்து இருந்தான் சூர்யா .லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்திருக்க ,அதற்கான மருந்துகளை எடுத்து கொடுப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் தாத்தா .அருகே ராமண்ணா நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஏன் சூர்யா இப்படி நட்ட நடு ராத்திரியில அம்மாகிட்ட போகணும்னு அடம் பிடித்து இருக்கிற..

அப்புறம் இப்படி அடம் பிடிச்சா அடிக்காம என்ன செய்வாங்க ..
நீ பண்ணினது தப்பு தானே.."

" நான் என்ன பண்றது. நான் படுத்தேன்மா ..கெட்ட கெட்ட கனவா வந்தது. ஏதேதோ பேய் பூதம் எல்லாம் வந்து என்ன தூக்கிட்டு போற மாதிரி இருந்துச்சு .

அதனால தான் பயத்துல உங்ககிட்ட போகணும்னு சொன்னேன் .அதுக்கு அப்பா அடிச்சுட்டாங்க "என்று மேலும் விசும்ப ஆரம்பிக்க ,கவி சூர்யாவுக்கு அருகே அமர்ந்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"சூர்யா நம்ம எல்லாம் பெரியவங்களா ஆகிட்டோம். இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா" என்று ஆறுதல் சொல்ல தேவன் தாத்தாவிற்கு லேசான புன்னகை வந்தது கவியின் சொற்களைக் கேட்டு..

"என்ன செய்யறதுமா நீ தைரியசாலியா இருக்குற .. அவன் பயந்துக்குறானே.. இவனால விடிய விடிய யாருக்கும் தூக்கம் இல்லாமல் போயிடுச்சு.

பாரு காலையில் காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சாச்சு . முதல்ல இந்த மருந்தை குடி .."

"எனக்கு மருந்து எல்லாம் வேண்டாம் எனக்கு அம்மா தான் வேணும் .நான் அம்மாகிட்ட தான் இருப்பேன்".

" மறுபடியும் இப்படி ஆரம்பிக்காத சூர்யா .மறுபடியும் அப்பா வந்து அடிச்சிட போறாங்க ."

"நீங்களும் இப்படி பேசினா என்ன அர்த்தம் ..நேத்து நைட்டு அவர் அடிக்கிறார் என்றால் நீங்கள் என்ன பார்த்துக்கிட்டா இருந்தீங்க ".

"நீ வேற மா.. தடுத்ததால் தான் அந்த ரெண்டு அடியோட போச்சு.. இல்லாட்டி விளாசி தள்ளி இருப்பான் போல இருக்கு .

அப்படி ஒரு கோபம் ..இவன் அழ அவன் அதுக்கு மேல ஆர்ப்பாட்டம் பண்றான் .

ராத்திரியில ரெண்டு பேர்ல யார் குழந்தை என்று புரியாமல் போயிடுச்சு ‌அந்த அளவுக்கு கஷ்டப்பட்டுட்டேன் ..அப்பா இன்னொரு தடவை எல்லாம் இது மாதிரி எதுவும் நடந்திட கூடாது."

" சூர்யா அடம் பிடிக்கக் கூடாது. நான் இன்னைக்கு பத்து மணி வரைக்கும் உன் கூட இருக்கிறேன் சரியா வேணும்னா கவியை இங்கேயே விட்டுட்டு போறேன்.

இன்றைக்கு ஒரு நாள் அவ ஸ்கூலுக்கு லீவு எடுத்துக்கட்டும் ரெண்டு பேரும் பேசிகிட்டு, சிரிச்சுக்கிட்டு ,விளையாண்டுக்கிட்டு இருங்க .

எக்காரணத்தைக் கொண்டும் இனிமே இப்படி எல்லாம் அடம் பிடிக்க கூடாது ..

இவ்வளவு பெரிய பையனா ஆகிட்டு அடம் பிடித்து அழுது அடிவாங்குவதெல்லாம் நல்லாவா இருக்குது.

நீ கவி கிட்ட கேட்டு பாரு அவளை நான் அடிச்சதே இல்ல".

" நீங்க ஸ்வீட் மம்மி ஆனா அப்பா அப்படி இல்லையே.. எப்படி அடிச்சாரு தெரியுமா .அவ்வளவு வலிச்சது தெரியுமா ."

"சரி சரி அழக்கூடாது நான் தான் வந்துட்டேன் இல்ல .இப்போ காலையில சாப்பிட்டியா இல்லையா".

" இல்ல மம்மி எனக்கு சாப்பாடு வேண்டாம். வாயெல்லாம் கசப்பா இருக்குது ".

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ஏதாவது கொஞ்சமா சாப்டுட்டு மருந்து குடி ..கொஞ்ச நேரம் கவி கூட விளையாடு..

அப்புறம் தூங்கு சரியா என்ன கவி நீ இருக்கிறியா இல்ல ஸ்கூலுக்கு கிளம்புறியா .."

"அம்மா சூர்யாவை பார்க்க பாவமா இருக்குது நான் வேணும்னா இன்னைக்கு அவங்க கூட இருக்கிறேன் ".

"ஆமா ஷர்மிளா கவியை விட்டுட்டு போம்மா.."

மாலை வரும்போது ஓரளவுக்கு தெளிந்து இருந்தான் சூர்யா.

சற்று நேரம் அவனிடம் பேசிவிட்டு புறப்பட்டாள் ஷர்மிளா ".இதோ பாரு சூர்யா. இனிமே இது மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது .

தாத்தா ,அப்பா சொல்ற பேச்சை கேட்டு நடக்கணும் .நடுராத்திரி அம்மாவை பாக்கணும்னு அடம் பிடிக்கக்கூடாது .

அவ்வளவு தூரத்திலிருந்து நானும் ஓடி வர முடியாது அதே மாதிரி தான் உங்க அப்பாவும் ..
அந்த நேரத்துக்கு வர முடியாது"

"ஏம்மா அப்படி சொல்றீங்க அப்பாகிட்ட தான் கார் இருக்குதே..அதுல கொண்டு வந்து விடலாம்ல".

" உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல .இனிமே இப்படி எல்லாம் அடம் பிடிக்கக்கூடாது .சமத்தா சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்கிட்டா மட்டும் தான் நான் உன்கிட்ட பேசுவேன் இல்லாட்டி இந்த அம்மா உன் கிட்ட பேச மாட்டேன் பாத்துக்கோ ".

"அம்மா அப்படி எல்லாம் சொல்லாதீங்க நான் இனிமேல் எந்த பிடிவாதமும் பிடிக்க மாட்டேன்".

" இப்படித்தான் இருக்கணும் நாளைக்கு காலையில வந்து பார்க்கிறேன் சரியா "என்று புறப்பட்டு சென்றாள்.

" நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது இப்போது அடிக்கடி சூர்யா ஷர்மிளாவின் வீட்டிற்கு வந்து விட்டு சென்றான்.

பார்க்க ஆசையாக இருக்கிறது என வாரத்தின் மூன்று நாட்கள் மாலை வேளையில் அவளோடு கழித்தான்.
பிறகு சனி ஞாயிறு நாட்களில் கூடவே இருந்தான். அதிலும் ஷர்மிளாவிற்கு பேங்க் விடுமுறை என்றால் அவளோடு தான் கூடவே சுற்றுவது..

இதை வழக்கமாக மாற்றி இருந்தான். ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்று கூறினாலுமே ஒரு கட்டத்திற்கு மேல் மதியழகன் தன்னுடைய பிடிவாத குணத்தை விட்டுக் கொடுத்திருந்தான்.

சிறுவன் தானே கொஞ்ச நாள் போனால் எல்லாம் மாறிவிடும் என்கின்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

கவியை கூட அடிக்கடி பார்க்க நேரிட்டது .பார்க்கும் போதெல்லாம் அன்பாகவே பேசினான் ஆனால் கவியிடம முன்பை விடவும் ஒரு சிறு வித்தியாசம் தெரிந்தது .

முன்பு போல அடிக்கடி டாடி என்று சொல்லிக்கொண்டு ஓடி வந்து தாவுவது எல்லாம் இல்லை .

ஒரு சிறு ஒதுக்கம் குழந்தையிடம் தென்பட்டது. அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதும் ஓரளவுக்கு இவனுக்கு புரிந்து இருந்தது.

ஷர்பிளா சொல்லிக் கொடுத்திருப்பாள் என்று நினைத்தவன் அதற்கு மேல் எதையும் யோசிக்கவில்லை.

இவர்களை விட்டு சற்று விலகி இருப்பது நல்லது என்று தன்னுடைய மனதிற்கு தோன்றியது .

ஏனென்றால் சமீபத்தில் இவனையும் அறியாமல் ஷர்மிளாவை கவனிக்க ஆரம்பித்தான்.

கவனித்த வரையில் அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் இவனுக்கு மிகவும் பிடித்தது.

மற்றவர்களை விடவும் இவள் வித்யாசமானவளாக மனதிற்குள் தோன்றியது .

ஏதோ ஒரு ஆளுமை குணம் இவனை வசீகரிக்கத்தான் செய்தது.

இதுதான் நான் …இப்படித்தான்… நான் என்பதை சொல்லாமல் சொல்வது போல நிமிர்ந்து நின்ற அவளுடைய அந்த குணம் இவனையும் அறியாமல் சற்றே ரசிக்க வைத்தது.

எப்போது இவனின் மனதிற்குள் ரசிப்புத்தன்மை தோன்றியதோ அதிலிருந்து இவனும் கூட சற்று விலகி இருக்க ஆசைப்பட்டான்.

அப்படி இருந்தாலுமே அவள் தன்னுடைய வீட்டிற்கு வரும்போது இவனையும் அறியாமல் இவனுடைய கண்கள் அவளை தான் நோட்டம் விடும் .

என்ன செய்கிறாள்.. என்ன பேசுகிறாள் என்று…

சில நேரங்களில் மூவரின் உலகத்திற்குள் தானும் சென்று இணைந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது.

அப்படி தோன்றிய சில நொடிகளிலேயே வேகமாக அங்கிருந்து நகர்ந்து வெளியேறி விடுவான். இந்த கண்ணாமூச்சி நாட்கள் செல்ல செல்ல அதிகமானதே தவிர குறையவில்லை.
 

NNK22

Moderator
9

"சார் நீங்களா..வாங்க "என்று பேங்க் மேனேஜர் மதியழகனை பார்த்து அழைக்க ,சிறு புன்னகையோடு அவரிடம் வந்தான்.

" காலையில போன் பண்ணி இருந்திங்க தானே..முக்கியமான விஷயம் இல்லாமே என்னை கூப்பிட மாட்டிங்க அதனாலதான் நேரிலேயே கேட்டுட்டு போலாம்னு வந்துட்டேன்..என்ன சார்.. சொல்லுங்க".

" ஆமாம் சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு நினைச்சேன்".

" என்ன சொல்லுங்க".

" இங்க வச்சு வேண்டாமே எ"ன்று சுற்றிலும் பார்த்து சொல்ல ."சரி அப்படின்னா வாங்க வெளியே போகலாம் "என்று அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

வழக்கம் போல தன்னுடைய இருக்கையில் இருந்தாள் ஷர்மிளா.. இவனை பார்க்கவும் அறிமுகப் புன்னகை லேசாக சிந்தியவள் தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

"என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா.. நான் ஏதாவது உதவி செய்யணுமா" கேட்டுப்படியே வெளியே வர," பிரச்சனையா இல்லையான்னு எனக்கு தெரியல சார். ஆனால் உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு நினைத்தேன் ".

"என்ன ஆச்சு சொல்லுங்க .."

"வந்து சார் இன்னைக்கு பேங்க்ல ஒரு ப்ராப்ளம் ஆகிடுச்சு ".

"அப்படியா என்ன ஆச்சு .இன்றைக்கு பேங்க்குள்ள வரும் போது அப்படி நான் தோணுச்சு.

எல்லா இடத்துலயும் ஆட்கள் அமைதியா இருந்தது போல இருந்தது .என்ன பிரச்சனை.."

" உங்களுக்கு தான் தெரியுமே ..அந்த எம்எல்ஏவுடைய மச்சான். அவர் இந்த பேங்க்ல லோன் வாங்கி இருந்தாரு..

இதுவரைக்குமே கடனை கட்டலை..ஏற்கனவே நிறைய முறை சொல்லிட்டோம் .

எந்த ரெஸ்பான்ஸ்சும் அவ்வளவா இல்ல .இன்னைக்கு பேங்குக்கு காலையிலேயே வர சொல்லி இருந்தோம் ".

"சரி என்ன ஆச்சு.."

" என்ன ஆச்சு ..வழக்கம் போல தான்.. ஷர்மிளா மேடம் தான் இன்னைக்கு அவரை ஹேண்டில் பண்ணினது .

ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கும்போது வாக்குவாதம் ஆரம்பிச்சிடுச்சு. அவர் மேட்டை ரொம்ப திட்ட ஆரம்பிச்சிட்டாரு..

மேடமும் சும்மா விடல எழுதி வச்சுக்கோ ..இன்னும் பத்து நாள்தான் உனக்கு டைம்.

நீ பணத்தை கட்டாட்டி உன்னுடைய வீடு ஜப்திக்கு போய்விடும் .

கோட் நோட்டீஸ் எடுத்துட்டு வந்து வாசல்ல ஒட்ட வச்சு சீல் வச்சிடுவோம் அப்படின்னு திட்டினாங்க .

அதுக்கு அவர் யார் கிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கிற.. ஊரு விட்டு ஊரு வந்து என்கிட்டயே இத்தனை பேசுவியா .

அதே பத்து நாள்ல எழுதி வச்சுக்கோ உன்னை என்ன கதிக்கு ஆளாக்குறேன் பாரு அப்படின்னு மிரட்டிட்டு போயிருக்காரு.."

" ஓ அப்படியா .."யோசனையோடு மேனேஜரை மதியழகன் பார்க்க ,"இது சின்ன விஷயமா பெரிய விஷயமா தெரியல .ஆனா அவரை பத்தின நல்ல அபிப்பிராயம் இங்க பக்கத்துல யாருக்கும் கிடையாது. உங்களுக்கே தெரியுமே சார் .

ஷர்மிளா மேடம் உங்களுக்கு வேண்டியவங்கன்னு நினைக்கிறேன் .

அடிக்கடி உங்க அப்பா கூட பார்த்து இருக்கிறேன். நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு நீங்க கேட்கக்கூடாது இல்லையா .

அதனால தான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை இன்னைக்கே வந்துட்டீங்க ."

"சரி ..ஓகே நான் பாத்துக்கறேன் பெருசா பயப்படற மாதிரி எதுவும் ஆகாதுன்னு நம்பலாம்.

பேங்க்ல நீங்க என்ன பண்ணனுமோ அதை தானே நீங்க பண்ணி இருக்கீங்க .

அவர் கத்திட்டு போனா அதுக்கு நாம என்ன செய்ய முடியும் .".

"அது கரெக்டா தான்.. எதுக்கும் ஒரு கண் வச்சுக்கோங்க அவர் மேல..

ஏன்னா இங்கே உங்கள விட்டா வேற யாரையும் எங்களுக்கு தெரியாது அதனால தான் ".

"என்கிட்ட சொல்லிட்டீங்க இல்லையா .நான் பார்த்துக்குறேன் நீங்க சர்மிளா மேடம் கிட்ட சொல்லிடுங்க .

கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க கவனமா இருங்க அப்படின்னு..

ஏன்னா தனியா தானே வண்டியில போயிட்டு வந்துட்டு இருக்காங்க.."

" புரியுது சார் நானும் சொல்கிறேன்".

" சரி போகலாமா".

" சார் என்ன விஷயம் பேங்க்ல பணம் கட்ட வந்தீங்களா? "

"இல்லை ..இல்லை இன்னைக்கு பணம் எல்லாம் கட்ட வரல ..எடுத்துட்டு போகணும் அதுக்காக தான் வந்தேன் ".

"சரி சரி வாங்க "என்று அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.

அன்றைக்கு மட்டுமல்ல அடுத்த இரண்டு நாட்களுக்கு கூட பெரியதாக எதுவும் நடக்கவில்லை.

நாட்கள் மெல்ல நகர்ந்தது .இடையே ஒருமுறை மதியழகன் ஷர்மிளாவின் போனிற்கு அழைத்திருந்தான்.

இதுவரையிலும் மதியழகன் போன் நம்பர் ஷர்மிளாவிடம் இல்லை .

புதிய நம்பராக இருக்கவும் யோசனையோடு தான் அட்டென்ட் செய்தது.

மதியழகன் குரல் என்பதினால் "சொல்லுங்க என்ன விஷயம்.. நான் உங்கள் நம்பர்ல இருந்து கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கல..

சூர்யா ஏதாவது சொன்னானா இல்ல அங்கிள் பார்க்கணும்னு ஏதாவது சொன்னாரா..

நான் இந்த வாரம் எல்லாம் வர முடியாதுன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேனே ".

"நான் அதுக்காக கூப்பிடலை ஷர்மிளா இது என்னோட பர்சனல் போன் நம்பர்.

ஏதாவது பிராப்ளம்னா எனக்கு நீங்க உடனே கூப்பிடலாம் .எந்த நேரமா இருந்தாலும் சரி அந்த நிமிஷமே புறப்பட்டு வருவேன்".

" என்ன திடீர்னு ..இதுவரைக்கும் இது மாதிரி எல்லாம் நீங்க பேசுனது இல்லையே.."

"ஜஸ்ட் தோணுச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அப்பாவுக்கு போன் பண்ணி இருக்கிறீங்க .

அவர் பத்து மணிக்கு தூங்கிட்டாரு சோ அப்பா சொல்லிகிட்டு இருந்தாங்க .

இந்த மாதிரி எனக்கு கூப்பிட்டு இருக்கிறா.. என்னால அட்டென்ட் பண்ண முடியலை .

மாத்திரை போடறதால எந்த சத்தமும் எனக்கு கேட்க மாட்டேங்குது உன்னோட நம்பரை கொடு ..

எமர்ஜென்சியா இருந்தா கூப்பிட வசதியா இருக்கும் இல்லையா அப்படின்னு சொன்னாரு.

அன்னைக்கே உங்க போன் நம்பர் கொடுத்துட்டாரு.. நான்தான் இதுவரைக்கும் உங்ககிட்ட பேசாம இருந்தேன்".

" அதான் காரணமா சாரி அன்னைக்கு கவி சூர்யா கிட்ட ஏதோ கேட்கணும்னு சொன்னா..

அதனால நம்பர் போட்டு கொடுத்தேன் .அப்பா அட்டென்ட் பண்ணலை அதனால காலைல பேசிக்கோ சொல்லி போனை வாங்கி வச்சிட்டேன் ."

"சரி சேவ் பண்ணி வச்சுக்கோங்க ஏதாவதுன்னா.. எந்த நேரம்னு எல்லாம் கிடையாது. என்னை நீங்கள் கூப்பிடலாம்" என்று போனை வைத்திருந்தான்.

யோசனை எல்லாமே ஷர்மிளாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

ஷர்மிளாவிடம் சொன்ன பிறகு சவால் விட்டவன் மேல் பார்வையை திருப்பி இருந்தான்.

இரண்டு பேரை அவன் என்ன செய்கிறான் எங்கு செல்கிறான் என்பதை பார்த்துக் கொள்வதற்காக தனியாக ஆட்களை நியமித்திருந்தான்.

அதுவும் அவ்வப்போது இவனுக்கு செய்திகளாக வந்து கொண்டிருந்தது கேட்ட வரையிலுமே அவன் ஏதோ ஒரு பிளான் செய்கிறான் என்று புரிந்தது .

ஏனென்றால் அதற்கு முந்தைய நாள் இரவில் ஒரு பாரில் அமர்ந்து உளரியதை இருவருமே தெளிவாக கேட்டு இவனிடம் சொல்லி இருந்தனர்.

ஷர்மிளைவை கேவலமாக திட்டியவன் "எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்ட இப்படி பேசுவா.. எனக்கு நோட்டீஸ் ஒட்டுவாளா..இருக்கட்டும் நான் அவளை ஊரை விட்டு தொரத்தறேனா இல்லையா பாரு..

இதுவரைக்கும் யாருமே கொடுக்காத வலியை அவளுக்கு கொடுக்கப் போறேன் ..

யார்கிட்ட ..என்கிட்டேயேவா..நான் எம்எல்ஏவோட மச்சான் ..என்கிட்டயேவா.." என்று உளரி இருந்தான்.

அதன் பிறகு சற்று இன்னும் கவனமாக கவனிக்க ஆரம்பித்தான் மதியழகன்.

சரியாக மூன்று நாள் கழித்து இங்கே பரபரப்பாக காணப்பட்டால் ஷர்மிளா.

வழக்கம்போல நான்கு மணிக்கு வீட்டுக்கு வரும் தன்னுடைய மகள் இதுவரையிலுமே வந்து இருக்கவில்லை .

வழக்கமாக ஆட்டோவில் கொண்டு வந்து விடுபவர் இவளுக்கு அழைத்து பேசி இருந்தார்.

"ஸ்கூல்ல கவி பொண்ணு இல்ல.. எல்லா பக்கமும் பார்த்திட்டேன். ஒருவேளை நீங்க அழைச்சிட்டு போயிருப்பீங்களோனு உங்ககிட்ட கேட்கிறேன்" என்று சொல்ல பரபரப்பு மொத்தமும் தொற்றிக் கொண்டது ஷர்மிளாவிற்கு ..

அவசர அவசரமாக அங்கிருந்து நேரடியாக ஸ்கூலுக்கு சென்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

யாருக்கும் சரியான தகவல் தெரியவில்லை .எப்போது சென்றால் என்றும் புரியவில்லை .

வேகமாக இங்கே சூர்யாவின் தாத்தாவின் நம்பருக்கு அழைத்து பேச அப்போதுதான் சூர்யா வீட்டிற்குள் வந்திருந்தான்.

" மதியமே நீங்க கூப்பிடுறதா வாட்ச்மன் அங்கிள் வந்து சொன்னாரு ..அவ மதியமே கிளாஸ் ரூம்ல இருந்து வெளியே போனாலே அம்மா ..

அப்படின்னா நீங்க இன்னைக்கு கூப்பிட வரலையா "என்று திரும்ப கேட்க மொத்த உயிரும் போனது போல இருந்தது ஷர்மிளாவிற்கு..

ஃபோனை வாங்கிய தேவன் "என்னமா ஏதாவது பிரச்சினையா.."

இல்ல அங்கிள் நான் பார்த்துக்கறேன்..என்றவளுக்கு
பதட்டம் இன்னமும் அதிகமானது.

ஸ்கூலுக்குள் வந்தவள் வாட்ச்மேனிடம் விசாரித்து விட்டு ஆபீஸ் ரூம் சென்று சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

" எப்படி நீங்க நான் கூப்பிட்டேன்னு சொல்லி.. யாரோ ஒருத்தர் சொன்னா அப்படியே அனுப்பி வைப்பீங்க .

நானே பேங்க் வேலைக்கு போகறவ.. சாயங்காலம் இல்லாமல் இடையில வர முடியாது .

வந்தாலும் நேரா உங்க ஆபீஸ் வந்து உங்ககிட்ட சொன்ன பிறகு தானே விடனும்..
நீங்க எப்படி விட்டு இருப்பீங்க" என்று சத்தமிட்டுக்கொண்டிருக்க அவர்களிடத்தில் சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

"என் குழந்தைக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா உங்க யாரையுமே சும்மா விடமாட்டேன்" கோபமாக கத்தியவள் அழுது கொண்டே அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள் .

பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை .வேகமாக ஆனந்திக்கு தான் அடுத்தது அழைத்தது .

தன்னுடைய சூழ்நிலையை சொன்னவள்.." இப்ப எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல குழந்தையை யாராவது கடத்திட்டு போய் இருப்பாங்களா ..

இல்ல வேற ஏதாவது ஆகி இருக்குமா ..எனக்கு ரொம்ப பயமா இருக்குது ".

"ப்ளீஸ் ஷர்மிளா பதட்டமாகாத.. இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துடுறேன் .வந்த பிறகு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்".

" எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆனந்தி இது மாதிரி எப்பவுமே ஆனதில்லை .எந்த இடத்தில அழுதுட்டு இருக்கிறான்னு தெரியவில்லை .

இங்க ஸ்கூல்ல கேட்டா சரியா ரெஸ்பான்ஸ் இல்ல .நீங்க தான் வந்து கூப்பிட்டீங்கன்னு சாதிக்கிறாங்க .ஏன் எனக்கும் மத்தவங்களுக்கும் இவங்களுக்கு அடையாளம் தெரியாதா.."

"ஓகே ஓகே அழாத.. நான் வந்துடுறேன் .நம்ம நேரா போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடலாம்.."

" என்ன சொல்ற..சரி எதா இருந்தாலும் செய்யலாம் நீ முதல்ல சீக்கிரம் வா .எனக்கு தனியா நிற்கவே பயமா இருக்கு பதட்டமா இருக்குது" அழுது கொண்டிருந்தாள் ஷர்மிளா.

ஆனந்தி நேராக வந்தவள் மறுபடியும் ஆபீஸ்ல அறையில் விசாரிக்க இவளுக்குமே சரியான பதில் எதுவும் கொடுக்கவில்லை .

ஸ்கூல் வாசல்ல சிசிடிவி மாட்டி இருக்கு இல்லையா.. அதையாவது முதல்ல காட்டுங்க. யார் வந்தாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்".

" சாரி மேம் இன்றைக்கு பவர் கட்..உங்களுக்கே தெரியும் இல்லையா .

அதனால சிசிடிவி எதுவுமே ஒர்க் ஆகல .சாயங்காலம் 3 மணிக்கு மேல தான் ஆன் பண்ணனும்".

" என்ன நீங்க! இப்படி பொறுப்பில்லாம இருந்தா என்ன பண்றது .உங்ககிட்ட தான் ஜெனரேட்டர் இருக்குதே சிசிடிவிக்கும் கனெக்ஷன் கொடுக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ."

" மேடம் இதுதான் முதல் முறை.. புதுசா இப்படி நடக்கும் என்று யாருக்கு தெரியும்.."

"இவங்க கிட்ட கேட்டு பிரயோஜனம் இல்ல ஷர்மிளா வா நாம் நேரா ஸ்டேஷனுக்கு போகலாம்.

போலீசோட இங்க வந்து நின்னா அப்போ கரெக்டா பதில் சொல்லுவாங்கல்ல".

"இருங்க மேம் அப்படி எல்லாம் எதுவும் செய்யாதீங்க .ஸ்கூலோட பேர் கெட்டுப் போயிடும்.

அவசரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டாம் .நாங்க ஆல்ரெடி எங்க ஸ்கூல் நடத்தறவர்க்கு தகவல் சொல்லியாச்சு .அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வர்ளதா சொல்லி இருக்கிறார்.."

"யார் கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம் காணாமல் போனது என்னோட பெண் குழந்தை .எனக்கு குழந்தை இப்ப வேணும் அவ்வளவுதான்.. "

அதற்குத்தான் பள்ளி தாளாளர் வந்து இருந்தார்.

"சும்மா யார்கிட்ட சொல்லி எதுவும் ஆகப் போறது இல்ல.. ஷர்மிளா நேரத்தை வீணாக்க வேண்டாம் நாம் போகலாம்"

" புரிஞ்சுக்கோங்க மேம்..ஏற்கனவே போன் பண்ணி சொல்லி இருக்கு.போலீஸ் அது, இதுன்னு வெளியே போக வேண்டாம் .

தாளாளர் ஆனந்தியின் பேசினார்.."எனக்கு இங்க இருக்குற போலீஸ்காரர்கள் எல்லாரையுமே தெரியும். நான் தனியா அலர்ட் பண்ணறேன்..

அவங்க சீக்கிரமா கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள்.. தேவையில்லாம கம்ப்ளைன்ட் பண்ணி ஸ்கூல் பேரை கெடுக்க வேண்டாம் .

உங்க குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைப்பாங்க" என்று சொன்னவர் வேகமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பேசினார்.

இந்த மாதிரி ஒரு குழந்தையை ஸ்கூல்ல இருந்து பொய் சொல்லி அழைச்சிட்டு போய் இருக்காங்க கிட்னேப்பாக இருக்குமோ என்கிற டவுட் இருக்குது .

கொஞ்சம் வேகமா கண்டுபிடிங்க.. போட்டோஸ் அனுப்பி வைக்கிறேன்" என்று கவியின் போட்டோவை அனுப்பு வைத்திருந்தார்.

அதே நேரத்தில் இங்கே மதியழகன் வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தான்.

குழந்தை அழைத்துக்கொண்டு சென்ற ஒரு மணி நேரம் கழித்து தான் இவனுக்கு தகவல் வந்தது.

"குழந்தையை ஏமாற்றி தூக்கிட்டு வந்துட்டதா இங்கே பேசிக்கறாங்க சார்" என்று..

"குழந்தையை எங்க கொண்டு போறாங்க.. அது தெரியுமா.."

" சார் அவர் வீட்டு பக்கத்துல குழந்தையை கொண்டு வந்த மாதிரி தெரியல ..வேற எங்கேயோ அழைச்சிட்டு போயிருக்காங்கன்னு தோணுது "என்று சொல்லவும்.. வேகமாக..

அவனோட மச்சானுக்கு எங்கெங்கே சொத்துக்கள் இருக்கிறது .எங்கே வீடுகள் இருக்கிறது என்பதை அலசி ஆராய ஆரம்பித்து இருந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் சரியான தகவல் கிடைத்திருந்தது குழந்தை எங்கே அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று..

ஈரோட்டில் ஒரு ஃபாம் ஹவுசிற்கு குழந்தையை அழைத்து சென்றிருப்பது தெரிய இவன் வேகமாக புறப்பட்டு இருந்தான்.

இங்கே யாரிடம் சொன்னால் தன்னுடைய குழந்தை கிடைக்கும் என்கின்ற பதட்டத்தில் இருந்தால் ஷர்மிளா.

தனக்கு தெரிந்த ஒவ்வொருவரிடமும் உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஆனால் ஏனோ மதியழகனின் ஞாபகம் வரவே இல்லை.

நீண்ட நேரத்திற்கு பிறகு ஆனந்தி தான் கேட்டது ..மதி சாருக்கு நீ போன் பண்ணி சொன்னியா..

அவருக்கு இங்க ஆள் பழக்கம் ஜாஸ்தி .
நிறைய பேரை தெரியும் எ"ன்று சொல்ல அப்போதுதான் ஞாபகம் வந்தது வேகமாக மதியழகன் நம்பருக்கு அழைத்தாள்.

அதே நேரத்தில் மதியழகன் குழந்தை இருக்கின்ற இடத்திற்கு அருகில் சென்றிருந்தான்.

வாசலில் நின்ற காவல்காரன் வேகமாக ஓடி வந்து இவனுக்கு வணக்கம் செலுத்தியவன்.." வணக்கம் ணா.. என்ன இந்த பக்கம் வந்திருக்கீங்க "என்று கேட்க ..

"எனக்கு ஒரு முக்கியமான தகவல் வேணும் .அதுக்காக தான் இங்க வந்திருக்கிறேன்.

இன்னைக்கு இந்த வீட்டுக்கு ஏதாவது குழந்தையை அழைச்சிட்டு வந்தாங்களா "என்று கேட்க சற்று தயங்கியவர் சட்டென பதில் கூறினான்.

" மதியம் மூணு மணி இருக்கும் ஒரு குழந்தையை கூப்பிட்டு வந்தாங்க உள்ளே உக்காந்து இருக்குது .வந்த நேரத்தில் அந்த குழந்தை ஒரே அழுகையா அழுதுகிட்டே இருக்குது.."

"கன்பார்ம்மா தெரியுமா.. இங்க தான் அந்த குழந்தை இருக்குதா.. இத தாண்டி எங்கேயும் அழைச்சிட்டு போயிடலையே .."

'இல்லை ணா இங்கதான் கூப்பிட்டுட்டு வந்தாங்க .அதுக்கு பிறகு எங்கேயும் அழைச்சிட்டு போகல .

இன்னும் முதலாளி கூட இந்த பக்கம் வரல .ஒரு பொண்ணு கொண்டு வந்து இறக்கி விட்டுட்டு போயிடுச்சு அந்த குழந்தை தனியாகத்தான் உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்குது கதவு பூட்டி இருக்குது".

" சரி நான் போய் பாத்துக்குறேன்".

" அண்ணா வந்து .."

"என்னடா ..என்னை உள்ளே விடமாட்டியா ..எனக்கு இப்ப அந்த குழந்தை வேணும். எனக்கு வேண்டியவங்களோட குழந்தை புரிஞ்சுதா.."

" புரியுதுங்க ணா.. நீங்க போங்க நான் பாத்துக்குறேன்.."

" பயப்படாத உன்னோட முதலாளி வந்த பிறகு தான் குழந்தையை அழைச்சிட்டு போவேன்.

அதுவரைக்கும் இங்க இருந்து போக மாட்டேன் அதனால தைரியமா இங்கேயோ நில்லு .ஏதாவது பிரச்சனை பண்ணனும்னு முடிவு பண்ணினா என்ன நடக்கணும்னு உனக்கு தெரியும் இல்லையா.."

" ஐயோ அண்ணா உங்ககிட்ட யாராவது பிரச்சனை பண்ணுவாங்களா ..

உங்களை பற்றி எனக்கு நல்லாவே தெரியும் .ஏன் முதலாளிக்கு கூட உங்கள பத்தி நல்லா தெரியும் ".

"சரி இங்கேயே இரு வந்துடுறேன்" என்று வேகமாக சென்றான்.

" மறந்துட்டேன் ..பூட்டு போட்டு இருக்குன்னு சொன்னேல்ல ..சாவி எங்க ?"

"இருந்தாங்க ணா" என்று வேலைக்காரன் கொடுத்து அனுப்பினான்.

வேகமாக சென்றவன் கதவை திறக்க சோபாவில் அமர்ந்து இன்னமும் அழுது கொண்டிருந்தால் கவி .

இவனை பார்க்கவும் அப்பா என்று கத்திக்கொண்டு ஓடி வந்து கட்டி அணைத்து கொண்டாள்.

அவளை தன்னுடைய தோளோடு அணைத்துக் கொண்டவன்" ஒன்னும் இல்லடா பயப்படாத.. ஒன்றும் இல்லை நான் தான் வந்துட்டேன் இல்லையா ..பயப்படாத.."

"இவங்க யாருன்னு தெரியாதுப்பா ஒரு ஆன்ட்டி அம்மா வந்திருக்காங்க.. உன்னை கூப்பிட்டுட்டு போக வந்திருக்காங்கன்னு சொன்னாங்க.

நான் அதை நம்பித்தான் வேகமா ஸ்கூல்ல இருந்து வெளியே வந்தேன் ..பார்த்தா வேற ஒரு ஆன்ட்டி. அவங்க யாருன்னே தெரியாதுப்பா .."

"சரிடா சரி..பயப்படாதே.. சும்மா இதெல்லாம் ஒரு விளையாட்டு.."

" என்ன விளையாட்டு.. எனக்கு பயமா இருக்குதுல்ல. அம்மா என்னை தேடி அழுதுகிட்டு இருப்பாங்க தெரியுமா.

ரொம்ப நேரம் ஆயிடுச்சு நான் ஸ்கூல்ல இருந்து வந்து.. நான் மதியம் சாப்பிட கூட இல்ல ".

"சரி சரி அழக்கூடாது .நான் போகும் போது உனக்கு சாப்பாடு வாங்கி தரேன் "என்று தோளில் தட்டிக் கொண்டிருக்கும் போது சரியாக ஷர்மிளா இவனை அழைத்து இருந்தால்.

" மதி சார்.. என்னோட குழந்தை.." என்று கத்தி அழ ஆரம்பித்திருந்தாள்.

"ஷர்மிளா.. பயப்படாதீங்க.. குழந்தையை நான் பார்த்துட்டேன் ஆல்ரெடி ஒரு மணி நேரம் முன்னாடி தான் தெரிஞ்சது .

நேரா குழந்தைகிட்ட வந்துட்டேன் நீங்க தைரியமா இருங்க .இன்னும் கொஞ்ச நேரத்துல அழைச்சுட்டு வந்துருவேன் .

பக்கத்துல யாரு இருக்கிறாங்க..போனை அவங்க கிட்ட குடுங்க .."

"ஆனந்தி தான் என் பக்கத்துல இருக்கறா.."

"ஆனந்தி ஒன்னும் பிரச்சனை இல்ல நீங்க பதற வேண்டாம்.. நேரா இப்போ என்னோட வீட்டுக்கு போங்க.. நான் கவியை அழைச்சிட்டு வந்துடறேன் .

கவி ரொம்ப சேப்டியா பத்திரமா இருக்கிறா.. அதை மட்டும் புரிஞ்சுக்கோங்க..

வேணும்னா அவ கிட்ட பேசுறீங்களா" என்று போனை கவியிடம் தர ,"அம்மா ..அம்மா "என்று வேகமாக அழைக்க பாதி உயிர் இப்போதுதான் வந்தது போல இருந்தது ஷர்மிளாவுக்கு ..

"கவி உனக்கு ஒன்னும் இல்லையே நீ பத்திரமா தானே இருக்கிற.. நீ எங்கம்மா இருக்கிற.. யார் உன்னை அழைச்சிட்டு போனது".

" ஷர்மிளா கூல்.. இதையெல்லாமா குழந்தைகிட்ட கேப்பீங்க ..வந்த பிறகு பேசிக்கலாம் .நான் இப்ப போனை வைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவேன் .அழாம இருங்க .இப்ப எங்க இருக்கீங்க .."

'ஸ்கூலுக்கு வந்து இருக்கிறேன்".

" ஓகே நான் பாத்துக்குறேன்"என்று போனை வைக்க ,அடுத்த பத்து நிமிடத்தில் குழந்தையை கடத்தி சொன்னவன் உள்ளே நுழைந்திருந்தான்.

இவனை பார்க்கவும்" மதி உனக்கு இது தேவையில்லாத விஷயம் .நீ இதில் தலையிடாதே ..

ஒழுங்கா அந்த குழந்தையை கொடுத்துட்டு நீ புறப்பட்டு போயிடு.."

". என்னடா பேசிக்கிட்டு இருக்கிற அந்த பொண்ணு எனக்கு வேண்டியவங்க . இந்த குழந்தை எனக்கு முக்கியம்.

நான் இப்ப இந்த குழந்தையை அழைச்சிட்டு போக போறேன்..உன்னை வார்ன் பண்ணிட்டு போறதுக்காக தான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் புரிஞ்சுதா.."

"மதி மத்தவங்க கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட பேச வேண்டாம் .நான் ரொம்ப தெளிவா முடிவு எடுத்து தான் இந்த குழந்தையை கடத்தி இருக்கிறேன் .

அவ என்ன அவ்ளோ பெரிய இவளா ..என்கிட்ட அப்படி சவால் விடற மாதிரி பேசினா..

அட்லீஸ்ட் ஒரு நாளாவது அழணும். அதுக்காக தான் இந்த குழந்தையை இங்க தூக்கிட்டு வந்தேன் ."

"ஓ ..அப்படியா.. இந்த குழந்தை எனக்கு யார் தெரியுமா.. கவி சொல்லுமா.."

"அப்பா போகலாம் பா.. இவரை பார்க்கவே எனக்கு பயமா இருக்குது" என்று இன்னமும் கவி இவனை நெருங்கி அமர ..

"என்னது அப்பாவா.. இங்கே என்னடா நடக்குது .."

"புரிஞ்சுதா எனக்கும் இந்த குழந்தைக்கும் இருக்கிற உறவுமுறை..

தேவையில்லாம என் குடும்பத்து மேல கை வைக்க முயற்சி பண்ணாத..

அப்புறமா நான் சும்மா இருக்க மாட்டேன்."

"என்ன மதி சார்..இது எப்போ இருந்து.. என்ன இந்த மாதிரி எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சீங்க ..

அப்படின்னா அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு ..இந்த குழந்தை அப்பான்னு கூப்பிடுதுன்னா…

டேய் பாருங்கடா ஊருக்குள்ள பெரிய மனுஷன்னு சொத்துகிட்டு இருக்கிறவங்க எல்லாம் இப்படித்தான் இருக்கிறார்கள் போல இருக்கு .

ஒவ்வொருத்தனோட பேக்ரவுண்ட்டையும் பார்த்தா இந்த ஊரே சிரிப்பா சிரிக்கும் போல இருக்கு ."

"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் என்ன செய்வேன்னு தெரியாது .

எனக்கும் உனக்கும் இதுவரைக்கும் எந்த பகையும் இல்லை.. இனி மேலும் அப்படியே இருந்துக்கலாம் புரிஞ்சுதா .

ஒழுங்கா பேங்குக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிட்டு உன் வீட்டு பத்திரத்தை ரிலீஸ் பண்ற வழிய பாரு..

என் மச்சான் எம்எல்ஏ ..என் மாமா எம்பி ன்னு கதை சொல்லிட்டு வந்தேன்னு வச்சுக்கோ ..

எவனையும் உயிரோடு விடமாட்டேன் புரிஞ்சுதா .."

"என்ன மத்தவங்க கிட்ட பேசுற மாதிரி என்கிட்டயும் மிரட்டி பார்க்கறையா?"

" இப்ப குழந்தையை அழைச்சிட்டு போக போறேன் .இதுக்கு மேல இந்த குழந்தையைக்கும் இதோட அம்மாவுக்கும் ஏதாவது பிரச்சனை வந்ததுன்னு தெரிஞ்சது..

அவ்வளவுதான் இனி உன்னோட உடம்புல உயிர் இருக்காது புரிஞ்சுதா "சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் .

அவனால் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடிந்தது மற்றவர்கள் யார் ஆனாலும் சரி தைரியமாக எதிர்த்து கை வைக்கத் துணிந்திருப்பான் ஆனால் மதியழகனிடம் அப்படி நடக்க முடியவில்லை .

அவனிடம் வம்பு வைத்துக்கொண்டால் எப்படியான பிரச்சனைகள் வரும் என்பது அவனுக்கே தெரியும்.

ஏன் அடுத்த முறை எலக்ஷனில் தன்னுடைய மச்சான் நிற்கவே முடியாத அளவிற்கு ஏதாவது செய்து விடுவான்.

இது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் .அதனால் அமைதியாக அந்த இடத்தில் அமர்ந்து கொண்டான்.

சரியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் நேராக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்..தாயாரை பார்க்கவும் ஓடி சென்று கட்டி அணைத்துக் கொண்டாள் கவி.
 

NNK22

Moderator
10

"குழந்தையை கடத்திட்டு போனது யாரு .. எதுக்காக என்னோட குழந்தையை கடத்திட்டு போனாங்க..

உங்களுக்கு எப்படி தெரியும் இவளை தூக்கிட்டு போனது .. ஏன்னா நான் போன் பண்ணும் போது நீங்க கவிக்கிட்ட போயிட்டீங்க.. முதல்ல நடந்தது என்னன்னு சொல்லுங்க.."

"ஷர்மிளா ரிலாக்ஸ் இப்ப குழந்தை நம்ம கைக்கு வந்துட்டா . இனி பயப்படற மாதிரி எதுவும் நடக்காது நீங்க குழந்தைகள் தூக்கிட்டு வீட்டுக்கு போங்க.."

"இப்படி சொன்னா அர்த்தம் .. இத்தனை மணி நேரம் நான் எந்த அளவுக்கு பதறிக்கிட்டு இருந்தேன் தெரியுமா ..தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை வேண்டாமா ..

நிஜமா போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுக்க தான் போறேன்."

" ப்ளீஸ் சர்மிளா தேவையில்லாம இன்னமும் பிரச்சனையே இழுத்து வச்சுக்காதீங்க ..இனி எந்த பிரச்சனையும் வராது நிம்மதியா வீட்டுக்கு போங்க.."

"நீ பேசறது சரி இல்ல மதி.. குழந்தை கவியை காணோம்னு எந்த அளவுக்கு பதறி இருப்பா ஷர்மிளா..

வந்த நேரத்தில் இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் நிம்மதியா ஒரு இடத்துல உட்காரலை..

அந்த அளவுக்கு பதட்டமாக இருந்தால் நீ சர்வ சாதாரணமா ஒன்னும் இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம் ."

"அப்பா ப்ளீஸ் உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல ."

"உனக்கு எப்படி தெரிஞ்சது குழந்தையை கடத்திட்டு போனவனை அதை நீ முதல்ல சொல்றியா.."

"அப்பா பிறகு நிதானமா சொல்றேன்.."

"எதுக்காக மதி நீங்க குற்றவாளியை காப்பாத்த நினைக்கிறீங்க.. உங்க ஊர்க்காரர் அப்படிங்கிறதாலயா.." கோபமாக ஷர்மிளா கேட்க ,

ஆனந்தி வேகமாக ஷர்மிளாவியை இடை இடைமறித்தால்.." என்ன ஷர்மிளா நீ பாட்டுக்கு வார்த்தையை விடாத..

முதலில் இப்படி பேசி பழகாத.. மதி சாரை பத்தி உனக்கு தெரியாது அவர் சொன்னா அதுல ஏதாவது அர்த்தம் இருக்கும்."

"என்ன அர்த்தம் இருக்க போகுது.. அவன் கூடவே போய் காப்பாற்றி தூக்கிட்டு வந்திருக்கிறார் ஆனால் யார்னு சொல்ல மாட்டாராம்..
இது எந்த வகையில் நியாயம்.."

" உங்களுக்கு புரியுதா ஷர்மிளா.. நீங்க ஸ்டேஷன் போனால் நூறு கேள்வி கேட்பான்.

தேவையில்லாம ஏற்கனவே பயந்து போய் இருக்கிற கவியையும் அங்க கூப்பிடுவாங்க .

இன்னும் அந்த குழந்தையை அங்கே அழைச்சிட்டு போய் பயம் காட்ட போறீங்களா ..

அவளை கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க விடுங்கள்.. அதுக்காக தான் சொல்றேன் .

சம்பந்தப்பட்டவனை நான் நல்லாவே மிரட்டிட்டு வந்தாச்சு .இன்னொரு தடவை உங்ககிட்ட பிரச்சனை பண்ண வர மாட்டான் புரிஞ்சதுங்களா.."

"எனக்கு புரிஞ்சுது மதி சார் ..நீ கிளம்பி வா ஷர்மிளா ..நான் நேரா வீட்டுக்கு போகலாம் உன்னை உங்க வீட்ல விட்டுட்டு நான் புறப்படறேன் அப்புறமா பொறுமையா இன்னொரு நாள் ரெண்டு பேரும் பேசிக்கோங்க.."

"சரி இதுக்கு காரணம் யாருன்னு சொல்லுங்க ..அத தெரிஞ்சுக்கற உரிமையாவது எனக்கு இருக்குதா இல்லையா.."

' இப்போதைக்கு எதை பத்தியும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம் ஷர்மிளா .

இப்போதைக்கு குழந்தையை மட்டும் போய் பாருங்க.. அப்பா சூர்யா எங்கப்பா?"

" இவ்வளவு நேரம் இங்க தாண்டா இருந்தான். இப்ப தான் தூங்குறதுக்கு போய் படுத்தான். இந்த பிரச்சனை எல்லாம் அவனுக்கு தெரிய வேண்டாம்னு நினைச்சேன் அதனாலதான்.."

"நல்லாவே பேச்சை மாத்தறீங்க.. வா போகலாம் ஆனந்தி.. நிச்சயமாக நீங்க எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்‌ அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டேன். "நிமிர்பாகவே பதில் சொல்லிவிட்டு நகர்ந்தாள் ஷர்மிளா.

அடுத்த நாள் ஷர்மிளா தன்னுடைய குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைக்கவில்லை .தன்னோடே வைத்துக்கொண்டாள்.

சூர்யா மட்டும் ஸ்கூலுக்கு சென்று விட்டு வந்தான். வீட்டிற்கு வந்த உடனேயே தந்தையிடம் கூறியிருந்தான்.

" அப்பா இன்றைக்கு கவி ஸ்கூலுக்கு வரலப்பா .."

" லீவு எடுத்து இருப்பாடா ..நாளைக்கு வருவா.."

"நாளைக்கு.. நாளைக்கு ஸ்கூல் லீவு தான்பா இனி திங்கட்கிழமை தான் போகணும் .

என்னை ஷர்மிளா அம்மா வீட்ல கொண்டு போய் விடுறீங்களா .."

நேற்றைய நிகழ்வுக்கு பிறகு இரவு இரண்டு முறை போனில் அழைத்து பார்த்தான்..போனை எடுக்க வில்லை..பிடிவாதகாரி என் மனதில் நினைத்து கொண்டான் .

ஏற்கனவே பேச வில்லை..அதனால் சூர்யாவிடம் "வாரா வாரம் அங்க போகணும்னு அடம் பிடிக்கக்கூடாது சூர்யா .

இந்த வாரம் எங்கேயும் போகலை வீட்லதான் இருக்க போற". சற்று அதட்டலாக கூற ,தேவன் இடையே வந்து பதில் கூறினார் .

"ஏற்கனவே நடந்த பிரச்சனை எல்லாம் நம்ம எல்லாருக்கும் தெரியும் தானே ..குழந்தை ஏற்கனவே பயந்து போய் இருப்பா நாம ஏன் இந்த வாரம் பக்கத்துல எங்கேயாவது சுத்தி பாக்குறதுக்கு போக கூடாது .

எனக்கு தெரிஞ்சு அந்த ஷர்மிளா பொண்ணும் வேலைக்கு சேர்ந்த பிறகு எங்கேயும் போன மாதிரி தெரியல..

நம்ம ஆழியார் டேம் சுத்தி பாத்துட்டு வரலாமா.. நீ என்ன சொல்ற.."

" அப்பா என்கிட்ட நோ ஐடியா.. ரெண்டு நாள் லீவு தான் ..எங்கேயும் போகிற ஐடியாவுல இல்ல.."

"அப்புறம் என்னடா நான் அந்த பொண்ணுக்கு போன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன் .

அந்த பொண்ணுக்கு ஓகேனா இந்த வாரம் பக்கத்துல எங்கேயாவது போயிட்டு வரலாம் .
ஒரு மாறுதலா இருக்கும் இல்லையா".

" சரிப்பா உங்க இஷ்டம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.வருவாள் என்கிற நம்பிக்கை துளி கூட இல்லை.

"ஷர்மிளா இந்த வாரம் பக்கத்துல ஆழியார் டேம் இருக்கு.. போய் பாத்துட்டு வரலாம்னு முடிவு பண்ணி இருக்கிறோம்.

நீ வருகிறாயா ம்மா.. கவியை கூப்பிட்டு வரியா.. கொஞ்சம் மாறுதலா இருக்கும் நடந்ததுல இன்னுமுமே பயந்து இருப்பா.. வெளியே சுத்திட்டு வரும்போது அந்த பயம் போகும்ல மா .."

" சரி போயிட்டு வரலாம் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல . ஆனந்தியை கூட கூப்பிடலாம்ல.. என்ன சொல்றீங்க அங்கில்".

" தாராளமா கூப்பிடலாம் இரு நான் மதி கிட்ட சொல்றேன்.."

"எனக்கு மது சார்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்குது அங்க போகும் போது பார்த்து பேசிக்கலாம் போறதுக்கான வேலையை பாருங்க அங்கிள்.."

சரிமா என்றவர் இவனிடம் கூறியிருந்தார்.. "போகலாம்னு சொல்லிச்சு..ஆனந்தியும் கூட அழைச்சுக்கணும் அப்படின்னு சொன்னா ..உனக்கு ஓகே தானே.."

" எனக்கு எந்த பிரச்சனையும் இல்லப்பா .நீங்க சூர்யா கிட்ட சொல்லிடுங்க .நாளைக்கு காலைல புறப்பட்டுடலாம் .

நேரா அங்க போய் அவங்கள பிக்கப் பண்ணிக்கிட்டு போகலாம்.. சாப்பிட ஏதாவது வாங்கணும்னா போற வழியில வாங்கிக்கலாம்.."

அடுத்த நாள் சொன்னது போலவே காலையில் புறப்பட்டு ஆழியார் டேமை நோக்கி புறப்பட்டனர்.

இவனுடைய இன்னோவா காரை எடுத்துக்கொண்டு செல்ல.. பின் இருக்கையில் அமர்ந்தவள் யோசனையோடு வந்து கொண்டிருந்தாள்.

மதியழகனிடம் கேட்பதற்கு நூறு கேள்விகள் இருந்தது. நடந்தது என்ன ?யாரை காப்பாற்ற இப்படி நடந்து கொள்கிறான் என்று நிறைய கேள்விகள் அவளை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.

தண்ணீரை பார்க்கவும் குழந்தைகள் இரண்டு பேரும் ஆர்ப்பாட்டமாக கத்திக்கொண்டு தண்ணீரை நோக்கி பாய்ந்து ஓடினர்.

வேகமாக ஓடிய இருவரையுமே தன் கைகளுக்குள் பிடித்து நிறுத்தி இருந்தான் மதி.

" இத பாருங்க பெரியவங்க கூட வந்தா மட்டும் தான் தண்ணிர்குல்ல போகணும் இல்லாட்டி அங்க எல்லாம் போக விடமாட்டேன் புரிஞ்சுதா....

கொஞ்ச நேரம் தான் நாம பக்கத்துல திருமூர்த்தி மலை போலாம் .அங்க போயி குளிக்கலாம். தண்ணியில விளையாடலாம்.

இங்க எதுவும் செய்யக்கூடாது .சும்மா சுத்தி மட்டும் தான் பாக்கணும் புரிஞ்சுதா "என்று சூர்யாவிடம் சொல்ல," சரி டாடி" என்று கூறினான் .

"ஒழுங்கா கையைப் பிடித்துக்கிட்டு நடந்து வரணும் தனியா கையை விட்டுட்டு ஓடக்கூடாது புரிஞ்சுதா "என்ற படியே அழைத்துச் செல்ல இப்போதும் ஷர்மிளா யாரிடமும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே கூட நடந்தாள்.

அருகில் இருந்த இடத்தை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு ஒரு இடத்தில் உணவிற்காக அமர கொண்டு வந்திருந்த உணவை எடுத்து வைத்து பரிமாற ஆரம்பித்தாள்.

"சமையல் அமிர்தமா இருக்குது மா.. அவ்வளவு டேஸ்டியா இருக்குது. உன் கைல சாப்பிட கூட கொடுத்து வைக்கணும் போல இருக்கு".

" அப்படியெல்லாம் எதுவும் இல்ல அங்கிள்..காலேஜ் படிக்கும் போது பேயிங் கெஸ்டா ஒரு ரூம் எடுத்து பிரண்டுங்க கூட தங்கினோம் அப்போ ஆளுக்கு ஒரு நாள் சமைக்கணும் அதுதான் ரூல்ஸ் அப்படி கத்துக்கிட்டதுதான்.."

ம்..

"சாப்பிடுங்க..*

சாப்பிட்ட உடனேயே மறுபடியும் விளையாட ஆரம்பித்தனர் குழந்தைகள் இருவரும் ..தேவன் தாத்தா குழந்தைகளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க ,அவருக்கு அருகில் ஆனந்தி பேசிக் கொண்டிருந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் திருமூர்த்தி மலையை நோக்கி சென்றிருந்தனர். அருவி வரைக்கும் அழைத்துச் சென்றவர்கள் இருவரையும் நன்றாகவே விளையாட அனுமதித்தனர் .

அதன் பிறகு கீழே படகுகள் செல்லும் பகுதிக்கு வந்தனர் .குழந்தைகள் இருவரையும் தேவன் அழைத்துக்கொண்டு படகு சவாரி சொல்ல இவன் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான்.

நேரம் மாலை ஆகி இருந்தது கொண்டு வந்திருந்த காபியை அனைவருக்கும் ஒவ்வொரு டம்ளரில் ஊற்றி கொடுக்க ஆரம்பித்தால் ஷர்மிளா .

ஆனந்தி குழந்தைகளோடு அமர்ந்து கொள்ள தேவன் ஷர்மிளாவிடம் "ஒரு டம்ளர் காபி அப்படியே மதி கிட்ட கொடுத்துட்டு வந்துடுமா "என்று சொல்ல" சரி" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அப்போதுதான் ஆனந்திக்கு ஒரு விஷயம் புரிந்தது.

சற்று நேரம் தேவனின் முகத்தை பார்த்தவள் "அங்கிள் என்னோட மனசுக்குள்ள ஒன்று தோணுது நிஜமாகவே நீங்களும் அதைத்தான் யோசிக்கிறீங்களா "என்று கேட்க தூரமாக சென்று கொண்டிருந்த ஷர்மிளாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.

"இப்ப எதுவும் சொல்லாத..நடந்தா நல்லா இருக்கும்..இது என்னோட ஆசை.."

அங்கே மதிடம் காபியை கொடுக்க அருகே இருந்த இருக்கையிலிருந்து சற்று நகர்ந்து அமர்ந்தான்.

"உட்காருங்க.. ஷர்மிலா என்கிட்ட நிறைய கேட்கணும் என்கிற எண்ணத்தோடு தானே இந்த ட்ரிப்புக்கு ஒத்துக்கிட்டீங்க . சொல்லுங்க" என்று கேட்க, கேட்பதற்கு காத்திருந்தாள் போல வேகமாக" ஏற்கனவே இந்த மாதிரி பிரச்சனை வரும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியும் அப்படித்தானே ..

நான் கவியை கடத்திட்டு போனது பற்றி சொல்ல வரேன்."

" உண்மையை சொல்லனும்னா ஆமாம் எனக்கு முன்னாடியே தெரியும் ஆனா கவி கிட்ட போவாங்கன்னு நினைக்கலை உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு நெனச்சேன் .ஆனா இப்படி வேற மாதிரி ஆயிடுச்சு ".

"எதுக்காக நீங்க அந்த சம்பந்தப்பட்ட ஆளை காப்பாற்றி விட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.."

ம்..கவியை ஏதாவது செய்யணும்னு அவங்க மோட்டிவேஷன் இல்லை.. அவங்க உங்களை கொஞ்சம் மிரட்டி வைக்கணும் .

அப்படித்தான் யோசிச்சி இருக்கிறான் .நிச்சயமாக கவி திரும்ப வந்திருப்பா…

நான் போய் சரியா கூட்டிட்டு வராட்டி கூட .."

"அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க. இன்றைக்கு குழந்தையை கடத்தனும்னு முடிவு பண்ணினவங்க.. அடுத்தது என்ன வேணும்னாலும் செய்யலாம் இல்லையா."

" மே பி இருக்கலாம் ஆனா அதுக்கு முன்னாடி காப்பாத்தியாச்சு தானே பிறகு என்ன திரும்பவும் அதையே பேசணுமா என்ன? இந்த பேச்சை இத்தோட விட்டுடலாம்.."

"அவன் யாரு என்ன எதுன்னு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டீங்க அப்படித்தானே .."

"தெரிஞ்சாலும் எதுவும் செய்ய முடியாது ஷர்மிளா .இத்தோட விட்டுடுங்க பெருசா எந்த பிரச்சனையும் இனி வராது .

நான் தெளிவா மிரட்டி விட்டாச்சு இனிமே எந்த காலத்திலும் உங்க பக்கத்துல வர மாட்டாங்க சரியா".

" எனக்கு அப்படியெல்லாம் தோணல".

' ஏன் இப்படி சொல்றீங்க எனக்கு புரியல .."

"ஏன்னா மனுஷங்களோட மனநிலை பற்றி உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

" நான் பலதரப்பட்டவர்களை பார்த்து வந்திருக்கிறேன்.ஒரு மனுஷன் எந்த நேரம் எந்த மாதிரி யோசிப்பான்னு கூட என்னால கெஸ் பண்ண முடியும் நிச்சயமா நீங்க சொன்ன மாதிரி இந்த பிரச்சனை இத்தோட முடியாது இதைவிடவும் பெருசா ஏதோ ஒரு பிரச்சனை வரப் போகுது".

"எது வந்தாலும் நாம பார்த்துக் கொள்ளலாமே.. ஐ மீன் என்னால பாத்துக்க முடியும் சரியா .அதனால இதை இத்தோட விட்டுடுங்க ."

"சரி போகலாமா ஏற்கனவே சாயங்காலம் ஆயிடுச்சு .இனி புறப்பட்டா தான் நேரா வீட்டுக்கு போக சரியா இருக்கும் .

நீங்க உங்க குழந்தை கூட ஹேப்பியா இருங்க.. யாராலயும் இனி எந்த பிரச்சனையும் வராது. அது மட்டும் மைண்ட்ல வச்சுக்கிட்டா போதும் .

அப்புறமா வழக்கம் போல தான்.. ஏதாவது பிராப்ளம்னு தோணுச்சுன்னா நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவையில்லை போனமுறை மாதிரி அவ்வளவு லேட்டா கூட கூப்பிடனும் என்கிற அவசியமில்லை முதல்ல போன் பண்ணி சொல்லலாம்.."

"..."

"என்ன பதில் பேசாம போனா என்ன அர்த்தம்".

" நீங்க சொல்லாட்டி கூட சம்பந்தப்பட்ட ஆள் நிச்சயமாக தன்னுடைய முகத்தை காட்டுவான்னு தான் எனக்கு தோணுது .

அதனால யார் என்ன பண்ணி இருப்பான்னு என்னால ஈஸியா கெஸ் பண்ண முடியும் .

சொல்ல தேவையில்லை ஆனா அதே நேரத்துல இன்னொரு முறை இது மாதிரி ஏதாவது பிரச்சனை வரும்னு தோணுச்சுன்னா முன்னாடியே கொஞ்சம் எச்சரிச்சா கூட நல்லா இருக்கும் .நான் அதுக்கு ஏத்த மாதிரி கவனமா இருப்பேன். என்ன நான் கேட்கிறது நியாயம் தானே .."

"கட்டாயமா நானும் அத தான் யோசிச்சேன் .முன்னாடியே சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் கவனமா இருந்து இருப்பே அப்படின்னு .."

"எனக்கு என்ன பிரச்சனை வரும்னு நினைச்சீங்க தெரிஞ்சுக்கலாமா..

காலையில சாயங்காலம் ரெண்டு வேலை டூவீலர்ல தான் பேங்குக்கு போயிட்டு வந்துகிட்டு இருக்கீங்க.‌

ஜஸ்ட் மிரட்டுவதற்காக லேசா தட்டி விடலாம் அந்த மாதிரி தான் ஏதாவது நடக்கும்னு நெனச்சேன் ஆனா நடந்தது வேற ..

இன்றைக்கு எல்லாமே சரியாயிடுச்சு அது மட்டும் யோசிச்சா போதும்.."

"எதுக்காக என் மேல இவ்வளவு தூரம் ..இந்த அக்கறைன்னு தெரிஞ்சுக்கலாமா ".

"ஒருவேளை சூரியா உன்னை அம்மான்னு கூப்பிடறதுனாலே கூட இருக்கலாம் .

இல்லாட்டி கவி என்னை அப்பான்னு கூப்பிடுறதுனால கூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா பாத்துக்கிட்டா இருப்போம் ."

"சொல்றதற்கான அர்த்தம் புரியல ".

"என்ன பொறுத்த வரைக்கும் இனி என் பக்கத்தில் இருந்து எந்த ஒரு இழப்பும் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

இதற்கான அர்த்தம் என்னன்னு கேட்கறீங்களா.. நேரம் இருக்குன்னா உக்காருங்க ..சொல்றேன் .

ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது ரொம்ப சின்ன விஷயம் தான் .சில நிமிஷத்துல சொல்லி முடிச்சிடுவேன்".

" சரி சொல்லுங்க கேட்கலாம் . ஏன்னா இத்தனை நாளா பார்த்துக்கிட்டு இருக்கிறேன். பெரும்பாலும் சண்டைதான் போடறோம்.

உங்க பக்கத்து நியாயம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் இல்லையா..

தெரிஞ்சுகிட்டா மேபி இனிமேல் நமக்குள்ள சண்டை வராதோ என்னவோ .."

"அதுக்கெல்லாம் சான்சே இல்ல ஏன்னா இயல்பான ஒரு குணத்தை யாரும் எப்பவும் மாற்ற முடியாது. என்னுடைய இயல்பை இது தான்..

உங்களுடைய இயல்பு உனக்கானது சோ அதனால சண்டை வராதுன்னு பேசுறது சரி கிடையாது .ஆனால் ஜஸ்ட் தவிர்க்கலாம் ".

"சரி சொல்லுங்க .. சொல்லப்போறது என்னோட மனைவியை பத்தி.. அவளோட பேரு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் சங்கரி.

அப்பா பார்த்து முடிவு பண்ணின பொண்ணு தான். என்ன பார்க்கவும் உடனே சரின்னு சம்மதம் சொல்லிட்டா..

மிடில் கிளாஸ் பொண்ணு கிடையாது. எங்களுக்கு ஈக்குவலான ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு..

அப்ப எல்லாம் எனக்கு அந்த பொண்ணை பற்றி பெருசா எந்த புரிதலும் கிடையாது.

அப்பா கூப்பிட்டு போய் காட்டினாங்க எனக்கு பெருசா எந்த ஆசையோ ,கனவோ கிடையாது.

ரெண்டு நிமிஷம் பொண்ணு கிட்ட போய் பேசணும்னு அனுப்பி வச்சாங்க .

என்னை பார்த்து நான் சொல்றதுக்கு முன்னாடியே அவள் சொல்லிட்டாள்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் ..

நீங்க தான் பதில் சொல்லணும் அப்படின்னு ..எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது அந்த நேரம்..

இதெல்லாம் எனக்கு புதுசு இல்லையா என்ன பார்த்து கூட ஒரு பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்றாலே அப்படின்னு அவ்வளவு பிரம்மிப்பா கூட இருந்துச்சு.

என்னமோ வானத்துல பறந்த மாதிரி.. அது ஒரு மாதிரியான உணர்வு சிரிச்சிட்டு எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்துட்டேன் .

அடுத்து மூணு மாசத்துல கல்யாணம்.. கல்யாணத்துக்கு பிறகு எனக்குள்ள ஒரு மாதிரியான மனநிலை .

யார் வந்தாலும் சரி என்னை நான் மாத்திக்க மாட்டேன் அப்படிங்குற மாதிரி..

இப்ப மாதிரி தான் யார் என்னை கூப்பிட்டாலும் அப்படியே ஓடிப் போயிடுவேன்.

யார்கிட்டயும் சொல்ற பழக்கம் கிடையாது .அப்பா நிறைய திட்டி பார்த்தாரு ..

என்னோட பழக்கத்தை அவரால் மாத்த முடியல .ஒரு கட்டத்துக்கு மேல சங்கரி கிட்டயே பொறுப்பை ஒப்படைச்சிட்டாரு..

சங்கரிக்கு நான்னா அவ்வளவு பிடிக்கும். ஏன் அவளுக்கு அவ்ளோ பிடிச்சதுன்னு எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது .

காதல்னா காதல் அப்படி ஒரு காதல்.. நான் நின்றால், நடந்தால் எல்லாத்தையும் ரசிப்பா..

நான் தான் சொன்னேனே ..அப்ப யார் கூப்பிட்டாலும் உடனே போய் விடுவேன் .

ராத்திரி போனா நிறைய நாள் காலைல அஞ்சு மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன்.

என்ன பண்ணுவான்னா.. தூங்க மாட்டா. எனக்காக காத்திருப்பா.. காலையில் வீட்டுக்கு வரும் போது தொண்டை எல்லாம் கட்டி மூஞ்சி வீங்கி கண்ணெல்லாம் டயர்டா அப்பலாம் அவளை பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும்னா ..

உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு .எதுக்காக இப்படி ஒரு காரியம் பண்ணிக்கிட்டு இருக்குற.. வெளியே போனவணுக்கு வர தெரியாதா .

இது மாதிரி நிறைய தடவை கத்தி இருக்கேன் ஆனா அவ மாறவே இல்லை கடைசி வரைக்குமே..

பிறகு அவளுக்காக நான் தான் கொஞ்சம் கொஞ்சமா மாறினேன் நிச்சயமாக வெளியே எங்க போனாலும் சரி 12 மணிக்குள்ள வீட்டுக்கு வர்றது வாடிக்கையா வச்சுக்கிட்டேன்.

இது அவளை பொறுத்த வரைக்கும் வெற்றி தான் ஆனால் நான் அவ கிட்ட தோத்துக்கிட்டு இருக்கிறேன்.

அவளோட அன்புக்கு முன்னாடி இதெல்லாம் பெரிய விஷயமாவே தெரியல .

நாட்கள் வேகமா போயிட்டு இருந்தது ஒரு வருஷத்துல சூர்யா அவனோட வயித்துல தங்கிட்டான்.

அதுக்கப்புறம் அவளை மாத்திக்கவே இல்ல. எனக்காகவே காத்திருக்கிறது நான் லேட்டா வந்தா லேட்டா சாப்பிடறது..

இந்த மாதிரி நிறைய ..இது கூட எனக்கு எப்ப தெரிஞ்சதுன்னா குழந்தைக்கு அஞ்சாவது மாசம் இருக்கும்போது ஒரு நாள் அப்பா என்னை பிடிச்சு ரொம்ப திட்டினாரு..

உனக்கெல்லாம் அறிவே கிடையாதடா ஒரு பொண்ணு உன்னை நம்பி வந்திருக்கிறாள்.

மாசமா இருக்கிற பொண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிடணும்னு அறிவு கூட உனக்கு இல்லை .

உன் இஷ்டத்துக்கு நினைத்த நேரம் வர்ற.. இப்ப பாரு அவ ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை .

நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன் அவ்வளவு கேட்கிற மாதிரி இல்ல .

அவளுக்கு ஏத்த மாதிரி நீயும் உன்னை மாத்திக்கிற மாதிரி இல்ல இன்னைக்கு அவ்வளவு வீக்கா இருக்கிறா..

டாக்டர்கிட்ட போனால் திட்டுகிறார்.. உனக்கு முன்னாடியே சொன்னேன்ல.. அவ கூட செக்கப்புக்கு ஒரு தடவை போய் பார்த்துட்டு வான்னு..

உனக்கு அதுக்கு கூட நேரமில்லை அப்படித்தானே .. மத்தவங்க பிரச்சனையை உன் தலையில் போட்டுக்கிட்டு ஓட வேண்டியது..

உனக்கு குடும்பம் இருக்கிறது ஞாபகம் இருக்குதா ..இல்லையா பயங்கரமான திட்டு அன்னைக்கு..

அதுக்கு பிறகு.. அதற்கு பிறகு தான் அவளை நான் கவனிக்க ஆரம்பிச்சேன் .

அப்பதான் தெரிஞ்சுது அவ என் மேல எந்த அளவுக்கு பைத்தியமா இருக்கான்னு புரிஞ்சுது.

எனக்கே ஒரு மாதிரியா..கில்டியா பீல் ஆச்சு.. அதனால அவ மேல அன்பா இருக்க ஆரம்பிச்சேன். நிறைய நேரம் அவளை கூடவே இருந்து கவனிக்க ஆரம்பிச்சேன்..

அந்த நேரத்துல கடவுள் வேற மாதிரி முடிவு பண்ணிட்டாரு போல இருக்கு யாருமே எதிர்பார்க்கலை..

சூர்யா எட்டாவது மாசம் வயித்துல இருக்கும்போது சுடு தண்ணியை எடுத்துட்டு வரேன்னு போனவள் கால் வலுக்கி விழுந்து பெரிய அளவுல அடி ..அவளுக்கும் குழந்தைக்கும்..

அவசர அவசரமா கொண்டு போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினோம் ..

எங்க போதாத நேரம் சூர்யாவை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது அவ எங்களை விட்டு போயிட்டா..

உயிரே போன் மாதிரி இருந்தது.என்னவோ ..என் கூட வெறுமனே ரெண்டு வருஷம் தான் வாழ்ந்தால்.. ஆனால் நான் அவளை தவற விட்டுட்டேன்.

கையில கிடைச்ச பொக்கிசத்தை நான் தான் சரியா கவனிக்காம விட்டுட்டேன் போல இருக்கு.

இன்னைக்கு எந்த நிமிஷம் வரைக்குமே அந்த உறுத்தல் என்னை விட்டு போகவே இல்ல .

சூர்யா மட்டும் தான் என்னோட உலகம் .என்னை நானே மாத்திகிட்டேன் .

அதற்குப் பிறகு நான் அப்பா சூர்யா அவ்வளவு தான் ..எங்களோட வட்டம் ரொம்ப சுருங்கிடுச்சு.

இப்பவும் நான் என்னை மாத்திக்கலை.. ஆனா ராத்திரி நேரங்களில் வெளிய சுத்துறது இல்ல .

இப்பவும் அப்பா சொல்ற ஒரே விஷயம் நீ தான்டா அவளை கொன்னுட்ட அப்படின்னு ..

யோசிச்சு பார்த்தா அப்படித்தான்னு சமயத்தில் தோன்றும் .அவ என் மேல காட்டுன காதலை பாதி கூட நான் அவ மேல காட்டலை..

அந்த உறுத்தல் நிறையவே இருக்குது.. அப்ப முடிவு பண்ணின விஷயம் தான் .

நான் மட்டுமில்லை என்னை சார்ந்த யாருக்குமே இனி எதுவும் ஆக விடக்கூடாது .

இன்றைக்கு நிறைய உதவிகள் செய்து எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறேன் .

ரத்ததானம் பண்றதாகட்டும் இன்னமும் ஆபரேஷனுக்கு பணம் செலவு பண்றதாகட்டும்.. இப்படி எவ்வளவோ செய்யறேன்.

எத்தனையோ பேரை அதுக்கு பிறகு காப்பாற்றி இருக்கிறேன் ஆனால் என்னோட மனைவியை நான் விட்டுட்டேன் அப்படிங்கிற ஒரு நினைப்பு இப்பவும் மனசுக்குள்ள இருந்து கொண்டே இருக்கிறது.

உங்க பொண்ண காப்பாத்துனதுக்கு கூட அதுதான் ரீசனா இருக்கலாம் .

ஏதோ ஒரு வகையில சூர்யாவுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிறீங்க..

தப்பா இருந்தா கூட அம்மானு சொல்ல அனுமதிச்சி இருக்கற.. அதனால நீயும் சரி கவியும் சரி எனக்கு முக்கியமானவங்க தான் .

நிச்சயமா எந்தவிதமான பிரச்சனையும் உங்களை அண்ட விடமாட்டேன்.. "

"ஐ அம் சாரி பார்க்க முரட்டுத்தனமா இருக்கிற உங்களுக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்குன்னு எனக்கு தெரியல..

இன்னும் ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு.மனைவி இறந்து இவ்வளவு நாளாச்சு .. உங்களுக்கு வசதி இருக்குது. எல்லா விதமான மரியாதையும் இருக்குது .

அப்புறமா ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை.."

" ஏன்னா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.

என் மனைவி என் மனசு ஃபுல்லா இருக்கிறா.. அப்புறமா இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி அவளுக்கும் இது மாதிரி ஒரு சூழ்நிலையை கொடுத்துடுவேன்னு பயம் நிறையவே இருக்குது.

என்னுடைய இயல்பு இதுதான் இது மாறுமா என்பது சந்தேகம் தான்.. ஒரு வேளை கல்யாணம் பண்ணினா வரப்போற பொண்ணு இது மாதிரி ஆன்செக்யூர்டா இருக்க கூடாது இல்லையா..

அதனால இப்படித்தான் கடைசி வரைக்கும் இருக்கணும்னு சங்கரி போனப்பவே முடிவு பண்ணிட்டேன்.

இப்ப எதுக்கு அந்த கதை எல்லாம் நீங்க இனி நிம்மதியா இருக்கலாம் இனி எந்த பிரச்சனையும் வராது. என்னை நம்புங்க" என்று எழுந்து நடந்தான் மதியழகன்.
 

NNK22

Moderator
11

மேலும் இரண்டு நாட்கள் கூட விடுமுறை எடுத்த பிறகு வழக்கம் போல அன்றைக்கு பேங்கிற்கு சென்றாள்.

பேங்கிற்கு உள்ளே சென்ற போது முதலில் மகிழ்ச்சியான செய்தியை தான் மேனேஜர் கூறினார் .

"லாஸ்ட் டைம் பணம் கட்டாம வம்பு பண்ணிக்கிட்டு இருந்தாரு இல்லையா ..அவரு மொத்த பணத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு போயிட்டாரு .

இன்றைக்கு எல்லா வேலையும் முடிஞ்சுது. அவங்களோட டாக்குமென்ட்ட கையில கொடுக்கணும் ".

"அப்படியா இது நல்ல விஷயமாச்சே".

" ஆமா இத்தனை வருஷமா கட்ட மாட்டேன்னு வம்பு பண்ணிக்கிட்டு இருந்தவரு.. ஒவ்வொரு தடவையும் எதையாவது சொல்லி தப்பிச்சுட்டு இருந்தாரு..வட்டி கட்ட வைக்கவே போராடற நிலையில் இருந்தோம்.

அந்த ஆள் கிட்ட இருந்து பணத்தை மொத்தத்தையும் நம்ம வசூல் பண்ணிட்டோம் அதுவே ரொம்ப ஹேப்பியா இருக்குது..

உன்ன நினைச்சு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். அந்த ஆளால உனக்கு ஏதாவது பிராப்ளம் வந்துடுமா அப்படின்னு ..

அதனாலதான் மதி கிட்ட இது சம்பந்தமாக பேசினேன்".

" என்ன சொன்னீங்க நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல.. யாரால எனக்கு என்ன பிரச்சனை வரும்.."

" இப்ப பணத்தை கொடுத்தார் இல்லையா அவரால் தான் பிரச்சனை வரும்னு நெனச்சேன்.

அந்த ஆள் கொஞ்சம் மோசமான ஆளு ..நீங்க வேற அன்னைக்கு சத்தம் போட்டிங்களா.. பதிலுக்கு அந்த ஆளும் பேசினார் இல்லையா..

அதனால ஏதாவது பிரச்சனை பண்ணுவான்னு பயந்துகிட்டு இருந்தேன். நல்ல வேலை அப்படி எதுவும் ஆகல எல்லா பிரச்சனையும் சுமூகமா முடிஞ்சிடுச்சு".

" இப்ப புரியுது "என்று விட்டு நகர்ந்தால் ஷர்மிளா.

அன்றைய நாளுக்குப் பிறகு சரியாக ஒரு வாரம் கழித்து வேறு ஒரு செய்தி காட்டு தீ போல பரவியது.

முதலில் இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை பிறகு தான் புரிந்தது அருகில் அமர்ந்திருந்த பெண் வேகமாக தன்னுடைய மொபைலில் அந்த வீடியோவை எடுத்துக்காட்டினாள்.

" அப்பா எனக்கு பயமா இருக்குது என்ன கூப்பிட்டு போயிடுங்கப்பா.." என்று வேகமாக கவி மதியழகனை கட்டி அணைக்கின்ற வீடியோ கூடவே கீழே இன்னொரு செய்தியும் வந்து கொண்டிருந்தது .

ஊரிலேயே பெரிய பணக்காரன்.. அத்தனை பேரையுமே அடக்கி ஆளக்கூடிய திரு மதியழகன் அவர்கள் தற்போது பேங்க் பெண்ணிடம் சரண்டர் ஆகி இருப்பது தெரிய வந்து இருக்கிறது .

அந்த பெண்ணின் குழந்தை மதியழகனை அப்பா என்று அழைப்பதும் அவன் குழந்தையை பாசமாக கொஞ்சுவதையும் தான் பார்க்கிறீர்கள் என்ற செய்தியோடு இன்னமும் நிறைய போட்டோக்கள் வரிசையாக வந்தது .

அன்றைக்கு கோவை குற்றாலம் சென்றது .ஷர்மிளாவும் மதியழகனும் அருகருகே அமர்ந்து பேசியது..

மொத்தமாக உணவு அருந்துவது என நிறைய போட்டோக்கள் வரிசையாக வந்து கொண்டு இருந்தது .

"இதுதான் தற்சமயம் வைரலா போய்கிட்டு இருக்குது சத்தியமா எங்களால நம்பவே முடியல ..

உங்க ரெண்டு பேருக்கு நடுவுல இப்படி ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கிறது இப்பதான் தெரியும் .

சாரி இனிமே உன்கிட்ட கொஞ்சம் மரியாதையா தான் பேசணும் "என்று சொல்ல அத்தனை கோபம் இவளுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.

மாலை வரையிலுமே அமைதி காத்தவள் தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு நேராக மதியழகன் வீட்டிற்கு தான் சென்றிருந்தாள்.

மதியழகனுக்கு மட்டுமல்ல தேவனுக்கும் கூட அந்த செய்தி அப்போதுதான் கிடைத்து இருந்தது.

யோசனையோடு தேவன் அமர்ந்திருக்க ,மதி கூட அருகே தான் அமர்ந்திருந்தான்.

" என்னப்பா இது இப்படி ஆயிடுச்சு யார் இத பண்ணி இருப்பாங்க.."

"யார் செஞ்சான்னு எனக்கு நல்லா தெரியும் பா .இனி அந்த பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ண கூடாதுனு மிரட்டிட்டு வந்தேன்.

அவன் அவனோட வேலையை காட்டிட்டான் .இந்த சிசிடிவி புட்டேஜ்.. இது அவனோட அந்த ஈரோடு வீட்ல எடுத்தது .

கரெக்டா அத மட்டும் கட் காப்பி பண்ணி இது மாதிரியான ஒரு நியூஸ் பரப்பி விட்டிருக்கிறான்.."

"என்ன செய்யலாம்னு இருக்கிற.."

" எனக்கு ஒன்னும் தோனல்ப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல உறவுக்காரங்க தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா ..

வரிசையா போன் பண்ணி என்ன எதுன்னு கேட்பார்களே ..என்ன பதில் சொல்றது.."

' அப்பா இப்போ அதெல்லாம் பிரச்சினை இல்லை .ஷர்மிளாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் அவங்களோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு தெரியலையே.."

"அந்த பொண்ணு படிச்ச பொண்ணு டா ..சொன்னா புரிஞ்சுக்கவா .."

"எனக்கென்னமோ அப்படி தோணலப்பா.. ஏற்கனவே அவங்களுக்கு என் மேல பயங்கர கோவத்துல இருக்குறா..

நம்ம நல்லது செஞ்சா கூட அது தப்பா தான் முடியுது. நான் இப்படியாகும்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல.

நிஜமா இந்த காரியத்தை பண்ணின அவனை சும்மா விட போறதில்லை.."

" போய் சண்டை போட்டால் மட்டும் எல்லாம் சரியாயிடுமா.."

"ஏம்பா அப்படி கேக்குறீங்க.."

" பின்ன என்னடா ஏற்கனவே பேசுனது மாத்தியா பேச போறாங்க நடந்தது நடந்துருச்சு இனி அடுத்தது என்னன்னு தான் யோசிக்கணும்.."

அந்த நேரத்தில் தான் ஷர்மிளா கோபத்தோடு தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது .

இருவருமே சற்று வாட்டமாக அமர்ந்திருக்க சட்டென எப்படி பேச்சை துவங்குவது என சிறு தயக்கம் வந்தது .

" நான் உண்டு வேலை உண்டுன்னு அமைதியா இருந்தேன். இப்ப தேவையில்லாமல் தலையிட்டு இவ்வளவு பெரிய பிரச்சனையில என்னை சிக்க வைத்திருக்கிறீர்கள்?"

"சாரிமா இதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கலையே ..இப்படியாகும்னு நினைக்கலை .."

"நீங்க எதுக்காக இந்த விஷயத்துல தலையிட்டீங்க.."

"நீங்க பேசறது சரியில்ல ஷர்மிளா குழந்தையை காணோம்னு தெரியும் எங்க இருக்கிறான்னு தெரிஞ்ச பிறகு பேசாம அமைதியா இருக்க முடியுமா .அதனால தான் அங்க போனேன்".

" டைரக்ட்டா போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி அவங்களை அழைச்சிட்டு போயிருந்தா ..

இப்ப இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காதுல்ல .என் பேரு தேவை இல்லாம இப்படி வந்து இருக்காது இல்லையா.."

"நடந்தது நடந்துடுச்சு.. முடிஞ்சத பத்தி மாத்தி மாத்தி பேசினா இதற்கு தீர்வு கிடைக்காது ஷர்மிளா .

முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க.. என் மனசுக்கு நான் எந்த தப்பும் செய்யல..

எனக்கு நியாயமா பட்டதை பண்ணினேன் .அது இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது இல்லையா..

இன்னமும் சொல்லப்போனால் தேவையில்லாம உங்க பிரச்சனையில நான் தான் வந்து தலையிட்டு சிக்கிகிட்டேணோன்னு.
தோணுது என்ன பாக்கறீங்க ..

இன்றைக்கு மத்தவங்க பேசு பொருளாக மாறி இருக்கிறது நானும் கூட சேர்ந்து தான் . இத்தனைக்கும் உங்ககிட்ட பெருசா பேசிக்கிட்டது கூட கிடையாது.."

"குழந்தையை காப்பாத்தும் போது எடுத்த விடியோவை போட்டு விட்டு இருக்காங்க... அதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல ஆனா அதுக்கு பிறகு அன்னைக்கு நாம சுத்தி பார்க்க போன அந்த போட்டோஸ் எல்லாம் எப்படி அவங்களுக்கு கிடைத்தது.."

"என்னம்மா இப்படி எல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிற ..இன்னைக்கு போட்டோ எடுக்குறது என்ன பெரிய விஷயமா..

உனக்கு பிரச்சனை வரும்னு சொல்லி உங்க ரெண்டு பேர்த்தையும் கொஞ்சம் கவனமா பார்த்துக்கறதுக்காக மதி எப்படி பின்தொடர ஆள் போட்டனோ ..

அது மாதிரி அவனும் செஞ்சிருக்கலாம் இல்லையா அவன் பயன் படுத்திகிட்டான்.."

"இதுக்கு தீர்வு தான் என்ன? நேத்து வரைக்கும் என்ன கவுரவமா பார்த்த எல்லோரும் இன்றைக்கு வேற மாதிரி பாக்கறாங்க ..

என்கிட்ட பேசறதுக்கு பயந்த மாதிரி பேசுறாங்க இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ எனக்கு தெரியல..

மொத்தத்துல இந்த ஊருக்கு வந்த பிறகு நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன்.

அந்த நிம்மதி மொத்தமும் பறிபோயிடும் போல இருக்கு இதுக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு எனக்கு புரியல பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குது" சொல்லிக் கொண்டு அமர ,சூர்யா வேகமாக.." அம்மா இந்தாங்க காபி குடிங்க "என்று கொண்டு வந்து டம்ளரில் நீட்ட அவனது முகத்தையே பார்த்தபடி வாங்கிக் கொண்டாள்.

"இத பாருங்க ஷர்மிளா பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க.. அதை நாம கேட்கணும் என்கிற அவசியம் கிடையாது .

நம்ம மனசாட்சிக்கு நம்ம எப்படி இருக்கிறோம் என்று தெரியும் இல்லையா ..

பிறகு ஏன் நீங்க அதை இவ்வளவு பெருசு படுத்துறீங்க .."

"மதி சார் உங்களுக்கு இது சாதாரணமான விஷயமா இருக்கலாம் .எனக்கு அப்படி கிடையாது .

நான் ஒரு குழந்தைக்கு அம்மா நாளைக்கு கவி வளர்ந்து நிற்கும் போது என்னை ஒரு குறையா கைநீட்டி காட்டக் கூடாது அதுல நான் ரொம்ப தெளிவா இருக்கிறேன்.."

"மாத்தி மாத்தி ரெண்டு பேரும் பேசுறதால இந்த பிரச்சனை இத்தோட முடிஞ்சுரும்னு நினைக்கறீங்களா.."

" அங்கிள் நீங்க என்னதான் சொல்ல வரீங்க.."

' இந்த பிரச்சனைக்கு எளிமையான ஒரு சொல்யூஷன் நான் சொல்லட்டுமா ..

ரெண்டு பேரும் கேட்பீங்கன்னா சொல்லுங்க.. இப்ப சொல்றேன்".

" அப்பா வேண்டாம் பா நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எதையும் கேட்க நான் தயாரா இல்லை "எழுந்து வேகமாக மதியழகன் நகர்ந்து சென்றிருந்தான்.

" நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு தெரியல அங்கிள் .முதல்ல என்னன்னு சொல்லுங்க சரியா வருமா இல்லையான்னு நான் சொல்றேன்."

"மத்தவங்க பேச்சுக்கு எதுக்காக ஆள் ஆகணும் ..அதையே உண்மையாக்கிட்டா.. "

" எனக்கு புரியல.. நீங்க சொல்ல வர்றது.."

" வந்து.. எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை ஷர்மிளா .சூர்யாவும் உன்னை அம்மானு தான் சொல்றான்.

அதே மாதிரி கவி கூட மதியை அப்பான்னு சொல்றாள். ஏன் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க கூடாது ."

"நீங்க சுயநினைவோட தான் பேசுறீங்களா.. என்ன பேசிட்டு இருக்கீங்கன்னு புரியுதா .

எப்படி நீங்க இந்த மாதிரியான ஒரு வார்த்தையை என்னை பார்த்து கேட்கலாம் ."

"நான் கேட்டதுல ஒன்னும் தப்பு இல்லைன்னு தோணுது ஷர்மிளா. நான் நிறைய யோசிச்ச பிறகுதான் இந்த முடிவு எடுத்தேன்.

இந்த முடிவை இப்போ எடுத்தது கிடையாது .சூர்யா எப்ப அம்மான்னு உன்னை கூப்பிட்டானோ அப்பவே முடிவு பண்ணினது தான்.

ஒவ்வொரு தடவையும் உன்னை பார்த்து தெரிஞ்சுக்கிட்டதால தான் இந்த முடிவு எடுத்தேன். மறுமணம் ஒன்னும் தப்பில்லையே.."

" மறுமணம் தப்பில்ல அங்கிள் .அதை நான் குறைவா சொல்ல மாட்டேன் ஆனால் எனக்கு இஷ்டம் கிடையாது .

இந்த மாதிரி ஒரு எண்ணத்தோடு தான் நீங்க என்கிட்ட பேசி இருக்கீங்கன்னு என்னால யோசிக்கக்கூட முடியல.

இதுக்கு மேல இத பத்தி எதுவும் பேச வேண்டாம் . நான் இப்பவே புறப்படறேன் .

சூர்யா அம்மான்னு கூப்பிடறது தான் உங்க பிரச்சனைன்னா இனிமேல் கூப்பிட வேண்டாம்னு சொல்லிடுங்க .

நானும் அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிறேன் ."

"அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவா சொல்லு.. "

"இதுல யோசிக்கன்னு எதுவும் இல்ல அங்கிள் .உங்களுக்கு ஏன் இது மாதிரி எல்லாம் தோணுச்சுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்குது.

என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் .நான் எங்க இருந்து வந்தேன்.

என்னோட பேக்ரவுண்ட் என்ன என்னோட குடும்பம் எப்படி பட்டது..

எதுவுமே தெரியாம நீங்களே ஒரு முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்.."

" முன்னாடி தெரியாம இருந்து இருக்கலாம்.. ஆனா இந்த பேச்சுவார்த்தைக்கு அப்புறம் நிச்சயமா தெரிஞ்சுக்குவோம் தானே.."

"முதல்ல ஒரு விஷயத்தை கிளியர் பண்ணுங்க அங்கிள்..அப்படின்னா உங்க பையனுக்கு ஏற்கனவே தெரியும் தானே ..

இது சம்பந்தமா ஏற்கனவே உங்க பையன் கிட்ட பேசி இருக்கிறீங்க அப்படித்தானே ..

அதனாலதானே நீங்க ஆரம்பிக்கவும் அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலகிப் போனார் ."

"நீ புத்திசாலி ம்மா ஈஸியா எல்லாத்தையுமே கண்டு பிடிச்சுடற ..

உண்மைதான் இப்ப இல்லை கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவன்கிட்ட பேசிணேன்.

அவனுக்கும் இதுல துளி கூட விருப்பம் கிடையாது.."

" அதனாலதான் அவரோட சொந்த கதையை என்கிட்ட வந்து சொல்லிக்கிட்டு இருந்தாரா ..

அவர் வாழ்ந்தது இனிமே வாழ போறதுன்னு ஒரு பெரிய கதையை சொன்னார்.."

"அவனை பத்தி நீ தெரிஞ்சுக்கணும்னு இந்த விஷயத்தை சொல்லி இருப்பான் மா ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்ச பிறகும் முடிவெடுத்தா கூட போதுமே.."

" முதல்ல என்னை பத்தி என்ன அங்கிள் உங்க பையனுக்கு தெரியும்".

" எதுவுமே தெரியாது ஆனா ஒரு தடவை பார்த்து பேசலாம் இல்லையா.."

"ஒரு தடவை பேசுறதுனால எந்த பிரச்சனையும் வந்துடாது எனக்கு தெரியும் ஆனா நிச்சயமா நீங்க நினைக்கிறது என்னைக்குமே நடக்காது ."

'ஏன் அப்படி சொல்ற ஏன் நடக்காது ரெண்டு குழந்தைகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு அன்பா இருக்கிறாங்க .

அம்மா அப்பா என்று உயிரையே கொடுக்குறாங்க .நீங்க சேர்ந்து இருந்து அவங்கள பார்த்துக்கலாமே..

எதுக்காக தனித்தனியா இப்படி இருக்கணும். தனி தனியா இருக்கிறதால தானே வாய்க்கு மெல்ல அவில் கிடைத்த மாதிரி ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசுறாங்க ..நீங்க சேர்ந்து இருந்தா அந்த மாதிரி பேச வேண்டிய அவசியம் வராது இல்லையா.."

"உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல அங்கிள்.. நாம இந்த பேச்சை இத்தோட விட்டுடலாம் .

உங்க பையன் இப்ப எங்க போயிருக்கிறார் .நான் அவர் கிட்டயும் ரெண்டு ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புறேன் .

இதுக்கு அப்புறமா இந்த ஊர்ல என்னால இருக்க முடியுமாங்கறது தெரியல ..முடிஞ்ச மட்டும் இந்த பிரச்சனையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியே வரணுமோ அவ்வளவு சீக்கிரம் வரணும்னு ஆசைப்படறேன் "என்றபடி மதியழகன் சென்ற திசை நோக்கி நடந்தால்.

இங்கே சூர்யாவும் கவியும் சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். "சூர்யா இங்க என்னடா நடக்குது இங்கு நடக்கிற எதுவுமே பிடிக்கல அம்மாவும் தாத்தாவும் பேசறது பார்த்தா நம்ம இனிமே ஒருத்தருக்கு ஒருத்தர் பாக்கவே முடியாதா .."

"ஏன் கவி அப்படி சொல்ற ..எங்க அப்பாவை பத்தி எனக்கு நல்லா தெரியும் .அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு .எதுவும் ஆகாது.

நாம இப்ப இருக்கிற மாதிரியே எப்பவும் இருக்கலாம்.."

" அதேத்தான் தாத்தா சொன்ன மாதிரி அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்ல ..
நீயும் நானும் சேர்ந்தே இருக்கலாம் ".

"ஆமாம் கவி எனக்கும் ஆசையா இருக்குது ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னா நம்ம இந்த வீட்டிலேயே இருக்கலாம் .

ஜாலியா இருக்கலாம் இல்ல .ஆனா இந்த அம்மா, அப்பா சம்மதிக்கணுமே ரெண்டு பேருமே இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருந்தா எப்படி சம்மதிப்பாங்க.."

இவர்களின் பேச்சைக் கேட்டபடி வந்த தேவன் .."அதுக்கு நான் உங்களுக்கு ஐடியா தரட்டுமா..

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசினால் நிச்சயமாக இரண்டு பேருமே சம்மதிப்பாங்க .

எனக்கு நம்பிக்கை இருக்குது. பிள்ளைகளை விட பெத்தவங்களுக்கு அவங்களோட பிடிவாதம் பெருசாவா இருக்கும். நிச்சயம் மாறுவாங்க " .

"எப்படி தாத்தா என்ன பண்ணனும் சொல்லுங்க ..நாங்க அது மாதிரி செய்யறோம்".

" இப்போதைக்கு நீங்க ரெண்டு பேரும் எதுவும் செய்ய வேண்டாம் நடக்கறதை வேடிக்கை மட்டும் பாருங்க ஆனால் நான் சொல்லும்போது அதை அப்படியே செய்யுங்க புரிஞ்சுதா.

இப்ப கொஞ்ச நேரம் ஏதாவது வேலை இருந்தா பாருங்க.. இரண்டு பேரும் பேசுறதுக்காக போயிருக்கிறார்கள் பேசி முடிச்சுட்டு வரட்டும்."

"ரெண்டு பேரும் பேசினா கல்யாணத்துக்கு சம்மதித்து விடுவார்களா தாத்தா "ஆர்வமாக சூர்யா கேட்க," நீ ஏண்டா இத்தனை ஆர்வமா இருக்குற ..பேசிட்டு வரட்டும். என்ன முடிவு செய்றாங்கன்னு பார்க்கலாம் இப்போதைக்கு நம்ம அமைதியா இங்கே உட்கார்ந்து இருக்கலாம்". என்று அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தார் தேவன்.

தோட்டத்தில் நின்றிருந்த மதியழகன் தூரத்தில் தெரிந்து மலைத்தொடரை பார்த்தபடி நின்று இருந்தான்.

பார்வை இழக்கில்லாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது .இந்த ஒரு வாரத்தில் நடந்ததை அசைபோட்டவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

தன்னுடைய வாழ்க்கை எதை நோக்கி நகர்கிறது என்கின்ற நிலையில் நிற்க அவனுக்கு அருகே வந்து நின்றால் ஷர்மிளா.

"இப்படி எல்லாம் பிரச்சனை வரும்னு தெரியாது ஷர்மிளா தெரிஞ்சிருந்தா நிச்சயமா நீங்க சொன்ன மாதிரியே போலீஸ்கிட்ட போய் இருப்பேன்.

கவி அங்க இருக்கிறான்னு தெரிஞ்ச அந்த நிமிஷமே உடனே கையோடு கூப்பிட்டுட்டு வந்துடனும்ணு மட்டும் தான் தோணுச்சு.

அதை நினைச்சு கிட்ட தான் இவ்வளவு வேகமா புறப்பட்டு போனேன் .

இப்போ இவ்வளவு பிரச்சனை வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை .ஆல்ரெடி வரிசையா போன் பண்ணி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..

யார்கிட்டயும் சொல்றதுக்கு எங்ககிட்ட பதில் இல்ல .என்னோட மனநிலையில் தான் நீங்களும் இருப்பீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் .

நானாவது பரவாயில்லை இங்க இருக்குற எல்லாருக்குமே என்னை ஓரளவுக்கு தெரியும் .

நூற்றில் பத்து பேர் வேணும்னா சந்தேகத்தோட கேள்வி எழுப்பலாம் ஆனால் நீங்க அப்படி இல்ல..

ஒரு பெண்ணா இந்த மாதிரி பிரச்சனைகளை ஸ்பேஸ் பண்ணும் போது அவங்களோட மனநிலை என்னவா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.'

"இதுக்கு என்னதான் முடிவு ".

'எனக்கு தெரியல ஷர்மிளா ".

"நான் நிச்சயமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவில் எப்பவுமே இல்லை .

இந்த ஊருக்கு வந்தது நிம்மதியை தேடி .. நிம்மதியா கடைசி வரைக்கும் இங்கே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் வந்தேன் .

ஆனா எதுவும் நடக்காது போல இருக்கு .."

"சரி இப்போ அடுத்ததா என்ன யோசிச்சு வச்சிருக்கீங்க .."

"எனக்கு பதில் தெரியல.. ஏன்னா இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது .அடுத்து நான் டிரான்ஸ்ஃபர் கேட்கணும்னா கூட இன்னமும் அஞ்சு வருஷம் வெயிட் பண்ணித்தான் ஆகணும் .

அடுத்த அஞ்சு வருஷத்துல என்ன என்ன நடக்கும்னு என்னால யோசிச்சு கூட பாக்க முடியலை..

இப்போதைக்கு இந்த பிரச்சனையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது ".

"சரி அதுக்கு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? "

" ஒரு மாசம் வரைக்குமே லீவு எடுக்கலாம்.

இதுவரைக்கும் நான் லீவு எடுத்ததில்லை அதனால நல்லா யோசனை பண்ணி பார்த்துட்டேன் பேசாம டெல்லிக்கு போய் ஒரு மாசம் தங்கிட்டு வரலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்".

' உங்களுக்கு இது நல்ல யோசனையா இருந்ததுன்னா தாராளமா போயிட்டு வாங்க ஷர்மிளா .

வரும்போது ஓரளவுக்கு நிலைமை மாறி இருக்கலாம் ..நான் உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் செஞ்சு தரேன்".

" போதும் மதி சார் செஞ்ச வரைக்கும் போதும் ..அதையே தாங்க முடியாமல் இருக்கிறேன்..

இதுக்கு மேல உதவின்னு சொல்லி என்கிட்ட நீங்க வர வேண்டாம்".

' நீங்க ரொம்ப குழப்பத்தில் இருக்கிறீர்கள் ஷர்மிளா . நான் தப்பான எண்ணத்தோடு எதுவும் செய்யல..

நீங்க புரிஞ்சுக்கவீங்கன்னு நம்பறேன்."

"..."

"ஒகே ஷர்மிளா…நான் ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும்..கேட்கலாமா வேண்டாமா என்று எனக்கு தெரியலை.."

" அன்னைக்கு என்னை பத்தின எல்லாம் விவரமும் உங்ககிட்ட சொன்னேன் இல்லையா.. உங்களை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது உங்கள பத்தி நீங்க சொல்றீங்களா..

தெரிஞ்சுக்கறதுக்காக தான் ..ஏன்னா இத்தனை தூரம் பிரச்சனை ஆன பிறகும் உங்கள பத்தி எதுவுமே தெரியாது .

ஏன்னா மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கே சிரிப்பு வருது . ஜஸ்ட் ஒரு நட்பு ரீதியா இதை கேட்கிறேன்.."

'உங்க அளவுக்கு பெரிய கதை எல்லாம் இல்ல ..ரொம்ப ரொம்ப சின்ன கதை தான்..

காலேஜ்ல படிச்சது எல்லாமே சென்னையில தான் .தனியா மேன்ஷன்ல தான் தங்கி காலேஜுக்கு போயிட்டு இருந்தேன்.

நான் உண்டு என்னோட படிப்பு உண்டுன்னு ..என்னோட வேலைய பார்த்துகிட்டு இருந்தேன் .

அந்த நேரத்துல தான் பரணி அறிமுகமானார் .என்னோட கிளாஸ்மேட் தான் .ஆனா பெருசா அறிமுகம் எல்லாம் கிடையாது.

எப்பவாவது ஒரு தடவை பார்க்கிறதோட சரி.. அப்படியே போயிட்டு இருந்தது ..

காலேஜ்ல சேர்ந்த நேரத்துல இருந்து மூன்றாவது வருஷம் வர்ற வரைக்குமே நான் தான் காலேஜிலேயே டாப்பர் ..

எல்லாருமே கொஞ்சம் வியப்பாக தான் பார்ப்பாங்க.. எப்படி உன்னால முடியுது அப்படிங்கிற மாதிரி..

எனக்கும் படிப்பு தவிர வேறு எதிலுமே கவனம் போனது இல்ல அப்படித்தான் நாள் போய்க்கிட்டு இருந்தது .

அந்த நேரத்தில் தான் பரணி அறிமுகமானது மட்டும் இல்லாம கொஞ்சம் நெருக்கமாக பழக ஆரம்பிச்சான்.

ஆரம்பத்துல சாதாரணமான நட்புன்னு நினைச்சு பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தேன்.

எப்போ என்ன மேஜிக் நடந்ததோ தெரியாது ஒரு கட்டத்தில் என்ன விரும்புறதா சொன்னான்..

அந்த நேரம் எனக்கு எதுவும் தப்பா தெரியல ..ஒருவேளை சின்ன வயசுங்கறதால யோசிக்கலையோ என்னவோ..

நானும் சந்தோஷமா சம்மதிச்சு அவன்கூட பேசி சிரிக்க ஆரம்பிச்சேன்.

கடைசி வருஷம் படிச்சுக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் நானும் அவனும் பக்கத்திலிருந்து ஒரு கோயிலுக்கு போய் இருந்தோம்.

என்னோட பிறந்த நாள் அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா ரெண்டு பேரும் சாமி கும்பிட்டுட்டு வர கோவிலுக்கு போனோம்.

கண்ணை மூடி சாமி கும்பிட்டுட்டு இருக்கும்போது யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தை பரணி செய்தான்.

யோசிக்காமல் என் கழுத்துல தாலியை கட்டிட்டான். அப்ப அது எனக்கு ஆச்சரியமா தான் இருந்தது பிரமிப்பா இருந்தது .

அவன் மேல நான் கோபமே படலை.. நான் பண்ணின பெரிய தப்பு அதுதான் நினைக்கிறேன் ..

நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு அதோட உரிமைய ஈசியா எடுத்துகிட்டான் பரணி.

அன்னைக்கு அந்த நிமிஷம் எனக்கு எதுவுமே தப்பா தெரியல .நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு .அவன் என்னோட கணவன் .

அந்த மாதிரியான ஒரு எண்ணத்தோடு தான் இருந்தேன். ஒரு பத்து நாள் போயிருக்குமா..

பிறகு தான் தெரிந்தது அவனுடைய சுய ரூபமே தெரிஞ்சுது..

யாருகிட்டயும் பேசாம நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்த என்னை அவனோட காலடியில் விழ வைக்கிறேன் என்று சொல்லி அவனோட பிரண்டுங்க கிட்ட சவால் விட்டு தான் அவன் என்கிட்டவே பழக ஆரம்பிச்சிருக்கிறான்.

இதையெல்லாம் எப்ப சொன்னான் தெரியுமா ..கல்யாணம் முடிஞ்சு..நெருக்கமாக இருக்கும் போது என்கிட்ட சொன்னான்.

இனிமே நான் உன்னை பார்க்க வர மாட்டேன் அப்படின்னு சொல்லி ஈஸியா தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டான்.

அவனை எந்த அளவுக்கு நம்பினேனோ அதுக்கு கிடைச்ச பரிசு தான் கவி ..

படிப்பு முடிஞ்ச அந்த நேரத்துல தான் தெரிஞ்சது .நான் மாசமா இருக்கிற விஷயம் ..கடைசி நாள் அவன்கிட்ட பார்த்து பேச போறேன்.. அவன் பிடிவாதமா சொல்லிட்டான்..

நான் உன்ன பிரண்டுங்க கிட்ட சவால் விட்டதால் தான் உன்கிட்ட அப்படி பழகினேன்.

மத்தபடி உன் மேல எனக்கு எந்த ஆசையோ காதலோ கிடையாது .

அது எப்படி ஒருத்தி தொடர்ந்து மூணு வருஷமா டாப்பராக இருக்க முடியும் .அப்படி இருக்கக் கூடாதுல்ல அந்த காரணத்துக்காகவும் தான் உன்கிட்ட வந்தேன் .

ஆனா நீ ரொம்ப தெளிவு.. என்னதான் என் கூட பேசி சிரிச்சாலும் படிப்பு விஷயத்துல நீ கோட்டை விடல.

நீ ஜெயிச்சுட்ட ஆனா என்கிட்ட நீ தோத்துட்ட ..எந்த காலத்திலும் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்லை .

முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் .இத பாரு என்று தன்னுடைய ஃபோனில் இருந்த சில போட்டோக்களை அவளிடம் எடுத்துக் காட்டினான்.

இந்த பொண்ண தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. எனக்காக என்னோட அம்மா அப்பா பார்த்து வைத்திருக்கிற பொண்ணு இவ தான்.

அடுத்த ரெண்டு மாசத்துல எனக்கு கல்யாணம் ..ஆல்ரெடி பேச்சுவார்த்தை எல்லாமே முடிஞ்சது.

பத்து நாளைக்கு முன்னாடி உன்கிட்ட ஊருக்கு போயிட்டு வரேன்னு அவசரமா கிளம்பி போனேன் இல்லையா ..

பாட்டிக்கு உடம்பு சரியில்லை சீரியஸா இருக்காங்க அப்படின்னு.. உண்மை என்னன்னா எங்களோட நிச்சயம் அன்றைக்கு ..

அதுக்காக தான் அங்கே போனேன். அப்புறம் எனக்கு பாட்டி எல்லாம் கிடையாது .

பாட்டியை கண்ணால கூட நான் பார்த்ததே இல்லை .நான் பொறக்கறதுக்கு முன்னாடியே இறந்து விட்டதா அப்பா சொல்லுவாரு .."

"அப்படின்னா என்னிடம் பொய் சொன்னியா.. இது மட்டும் தான் பொய்யா இன்னமும் எத்தனை பொய் சொல்லி இருக்கிற.."

" உன்கிட்ட பேசுனது பார்த்தது சிரிச்சது எல்லாமே பொய் தான் எல்லாமே நாடகம் .

இதில் எதுவுமே உண்மை கிடையாது. நீ தேவை இல்லாம வந்து பிரச்சனை பண்ணனும்னு நினைக்காத ..

உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும் .

உன் கழுத்துல அன்னைக்கு அந்த கோயில்ல தாலி கட்டாட்டி நீ என்கிட்ட வந்து இருக்க மாட்ட
.
ஏன்னா நீ அந்த மாதிரியான மைண்ட் செட்டில் இருந்த.. அதுக்காக தான் அந்த தாலி கட்டுனது ..

இனி எப்பவுமே என் முன்னாடி வந்து நிக்காத குட்பை ..அப்புறமா நீ சொன்ன பார்த்தியா மாசமா இருக்கிறேன்.

இந்த குழந்தை உனக்கு உன்னோட குழந்தை அப்படின்னு அதையெல்லாம் வெளியே யார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காத ..

யாரும் நம்ப மாட்டாங்க.. உன்னை தான் அசிங்கமா பேசுவாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பொண்ணு கர்ப்பம் ஆகிறது நல்ல விஷயம் எல்லாம் கிடையாது.

புரிஞ்சுதா இனியாவது கொஞ்சம் புத்திசாலித்தனமா பொழைச்சுக்க பாரு .

என்னை மாதிரி தான் ஆயிரம் ஆண்கள் வெளியில சுத்துறாங்க தனக்கு தேவைன்னா எந்த அளவுக்கு வேணும்னாலும் போவாங்க.

இதோ உன்கிட்ட பேசி பழகி முழுசா மூணு மாசத்துல உன்னை நான் எடுத்துக்கலையா .."அது மாதிரின்னு சொல்லிட்டு அன்னைக்கு புறப்பட்டான்.

என்ன செய்யறது அவனோட விதி.. நேரம் சரியில்ல போல இருக்கு புறப்பட்டு போன அன்றைக்கு போன ட்ரெயின் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.

அதுல பரணியும் இறந்துட்டான்.. அவன் என்னை ஏமாத்தணும்னு நினைச்சான். கடவுள் மொத்தமா அவனை ஏமாத்திட்டாரு..

அதுக்கு பிறகு நிறைய யோசனை நிறைய குழப்பம் ஆனால் எப்பவுமே ஒரு உயிரை கொல்ற அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது .

கவியை பெத்து வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.அப்போ கல்யாணத்தை பத்தின யோசனை எல்லாம் இல்ல .

அம்மா ,அப்பா கிட்ட நடந்ததை சொன்னேன் பிடிவாதமா என்னோட முடிவு இதுதான் என்னோட வாழ்க்கை அப்படின்னு சொல்லி முடிச்சிட்டேன் .

அவங்களும் என் மனசை மாத்த எவ்வளவோ ட்ரை பண்ணிணாங்க.. சரி கல்யாணம் பண்ண வேண்டாம் உன் குழந்தையோட எங்க கூட வந்து இரு.

நடந்தது நடந்து போச்சு உறவுக்காரங்க கேட்டா காதல் கல்யாணம் பண்ணிணாங்க கணவர் இறந்துட்டாருன்னு சொல்லிக்கலாம் .

நீ எங்க கூட இருன்னு எவ்வளவோ சொன்னாங்க .எனக்கு கேக்குறதுக்கு மனசு வரல .

அவங்களை தலைக்குனிய வைக்கவும் விருப்பம் இல்லை எங்கேயோ ஒரு பக்கம் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா.. வாழ்ந்துகிட்டு இருக்கிறான்னு சொல்லிக்கங்க என்று சொல்லிட்டு சென்னையிலேயே தங்கிட்டேன்.

படிப்பு முடியவும் வேலை கிடைச்சுடுச்சு.. திருச்சியில் அஞ்சு வருஷம் இதோ அடுத்ததா இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். இதுதான் என்னோட கதை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல.."

"பரணி உங்களுக்கு பண்ணுனது துரோகம் ஷர்மிளா .உங்களை இந்த நிமிஷம் வரைக்கும் நான் தப்பா நினைச்சதெல்லாம் இல்ல .

ரொம்ப பொறுப்பான பொண்ணு தைரியமான பொண்ண்ணு பிரமிச்சு போய் பார்த்திருக்கிறேன்.

இப்போ உங்க கதையை கேட்ட பிறகு இன்னமுமே ஆச்சரியப்படதான் வைக்கிறீங்க. சீக்கிரமா இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்னு நம்பறேன் ஷர்மிளா."

"வரும் போது கோபத்தோடு தான் வந்தேன். ஆனா இப்போ அந்த கோபம் என் கிட்ட இல்ல .

நான் இப்ப புறப்படுகிறேன். இன்னும் இரண்டு நாள்ல கவியை கூப்பிட்டு டெல்லி கிளம்பிடுவேன். பிறகு ஒரு மாதம் கழித்து வந்த பிறகு சூழ்நிலையை பார்த்து அதுக்கேத்த மாதிரி முடிவு செய்துகறேன்.."
 

NNK22

Moderator
12

"என்ன மதி புயல் அடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்குதா ..அமைதியா உட்கார்ந்து இருக்கிற.."

" உண்மையிலேயே அப்படித்தான் இருக்குதுப்பா ."

"அந்த பொண்ணு ரொம்ப பேசிட்டாலோ .."

"அந்த பொண்ணு பேச என்ன இருக்குது அதெல்லாம் பெருசா எனக்கு தெரியல ".

"அப்புறம் என்னடா யோசனையா இருக்கிற .."

"டெல்லிக்கு போக போறேன்னு சொல்லிட்டு போயிருக்கறாப்பா..அதுதான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்".

" ஏன்டா இதுல யோசிக்க என்ன இருக்கு .கொஞ்ச நாள் எங்கேயாவது நகர்ந்து போயிட்டு வரலாம்னு தோணி இருக்கலாம் ."

"எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லப்பா ..வேணும்னா பாருங்க டெல்லிக்கு எல்லாம் போக மாட்டாங்க ".

"எப்படி சொல்ற .."

"தோணுதுப்பா சிலரை பார்த்து பழகும் போது இவங்க என்ன முடிவு எடுப்பாங்கன்னு நம்ம மனசுக்கு தோணுமில்லையா..

அதை வச்சு தான் சொல்றேன் ஷர்மிளா பொறுத்த வரைக்கும் அப்படி எல்லாம் பயந்துட்டு ஓடற ரகம் இல்லை .

அவங்க தாண்டி வந்து பிரச்சனை எல்லாமே ரொம்ப பெருசு ..அதை வச்சு பார்க்கும்போது இதெல்லாம் ஒன்னும் இல்லன்னு நினைக்கிறேன்."

" சரிடா என்ன முடிவு எடுக்கிறான்னு பொறுத்து இருந்து பார்க்கலாம் ."

"நீ என்ன செய்யப் போறேனா.. நான் ஏற்கனவே முடிவு செஞ்சுட்டேன்பா ஏற்கனவே வந்த போட்டோவுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு நியூஸ் போடணும் .

அது மட்டும் தான் இப்போதைக்கு யோசித்து வைத்திருக்கிறேன். அதை போட்டுட்டோம்னா பிரச்சனை முடிஞ்சது."

"பிரச்சனையை முடிக்கிறேன்னு புதுசா எந்த பிரச்சனையையும் இழுத்து வச்சுக்காத மதி ."

"என்னப்பா ரொம்ப பயந்துட்டீங்களோ.. "

"பிரச்சனையில நீ மட்டும் இருக்கிறேன்னா எனக்கு பயம் எதுவும் கிடையாது .ரெண்டுல ஒன்னு பார்த்துக்கலாம் என்று சொல்லுவேன் .ஆனா இன்னொரு பொண்ணு சம்பந்தப்பட்டிருக்கிறான்னா கொஞ்சம் பதட்டமாக வேண்டியதா இருக்குது ".

"கவலைப்படாதீங்க எந்த பிரச்சனையும் வராது எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்குது..

சரி நீங்க சொல்லுங்க நீங்க என்ன பேசினீங்க .."

"ரொம்ப ஆர்வமா இருக்குற போல இருக்கு.. பயப்படாத என்கிட்ட அந்த பொண்ணு முகத்தை எல்லாம் காட்டலை..

எதுவும் சரியா வராதுன்னு சொல்லிட்டு உன்கிட்ட பேச போறேன்னு எழுத்து வந்துட்டா.. அதனால தான் வந்ததும் கேட்டேன் ரொம்ப பேசிட்டாலோன்னு…"

"பேசினாலும் யார் கவலைப்பட போறா.. மொத்தத்துல இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுப்பா" என்று நகர்ந்தான்.

அதனாலதாண்டா உன்கூட சேர்த்து வைக்க முயற்சி பண்ணறேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்.

வீட்டுக்கு வந்த உடனேயே ஃபேக் பண்ண ஆரம்பித்திருந்தால் ஷர்மிளா.."அம்மா நம்ம எங்கம்மா போறோம் .எதுக்காக துணியெல்லாம் பேக் பண்றீங்க.."

' கொஞ்ச நாளைக்கு ஊருக்கு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன் .ஒரு மாசம் அங்க இருந்துட்டு பிறகு இங்க வந்துக்கலாம் ".

"அப்படின்னா ஒரு மாசம் வரைக்கும் நான் சூர்யாவை பார்க்க முடியாதா..

அப்படின்னா ஒன்னு செய்யலாமா நம்ம சூர்யாவையும் கூப்பிட்டுட்டு போயிடலாம்".

" பைத்தியம் மாதிரி உளரக்கூடாது சூர்யா எப்படி நம்ம பின்னாடி வர முடியும்."

"ஏன் முடியாதும்மா அவன் உங்களை மம்மின்னு தான கூப்பிடுறான். அப்போ அவங்க அப்பா விடுவாங்க தானே ".

" பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க கூடாது .உனக்கே ஒரு மாசம் லீவு போட போறேன்னு வருத்தமா இருக்கு .

இதுல அவனையும் ஸ்கூலுக்கு லீவு எடுக்க சொல்லுவியா.. நாம மட்டும் தான் போறோம் ".

"அம்மா அவ்வளவு நாள் ஸ்கூலுக்கு போகாம எப்படி இருக்கிறது? என்னால சூர்யாவை பார்க்காமல் இருக்க முடியாது .

அப்பாவையும் பார்த்தாகணும் நான் இங்க இருந்து வரமாட்டேன் .நீங்க என்னை பேசாம சூரியா வீட்டுல விட்டுட்டு நீங்க மட்டும் புறப்பட்டு போங்க ."

"கவி வர வர உன் பேச்சு எதுவுமே சரியில்ல. என்ன இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற ..

நான் எங்க இருக்கறேன்னோ அங்க தான் நீயும் இருக்கணும் புரிஞ்சுதா இப்படி எல்லாம் எதிர்த்து பேசக்கூடாது ."

"அம்மா நிஜமாவே நம்ம போகணுமா போக வேண்டாம் மா இங்கேயே இருக்கலாம்..

எனக்கு எங்கேயும் வர பிடிக்கல பாட்டி தாத்தா யாருமே வேண்டாம்.."

"அடி வாங்க போற கவி.. சொன்னா பேச்சை கேட்டு பழகணும் இந்த மாதிரி கூட கூட பேசாத..

யாரு உனக்கு இதையெல்லாம் பேச சொல்லி தந்தது ..அம்மா எங்கே இருக்கறேனோ அங்க தான் நீயும் இருக்கணும் புரிஞ்சுதா.."

" அப்படி எல்லாம் முடியாது மா.. எனக்கு சூர்யா வேணும் .அப்பா வேணும் அந்த தாத்தா வேணும் ".

"இத பாரு இப்ப சொல்றது தான் தெளிவா கேட்டுக்கோ.. உனக்கு எல்லாமே நான் தான் அம்மா அப்பா தாத்தா இன்னமும் எல்லா உறவுமே நான் மட்டும்தான் .

சும்மா சும்மா இது மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண கூடாது. நம்ம இன்னும் கொஞ்ச நேரத்துல புறப்படுகிறோம் புரிஞ்சுதா ஏற்கனவே ரயில் டிக்கெட் போட்டாச்சு."

"நான் நான் அப்பாகிட்ட ஒரு தடவை பேசிட்டு தான் வருவேன் ".

"போன் வேணும்னா பண்ணி தரேன். எதா இருந்தாலும் போன்லயே பேசிக்கோ புரிஞ்சுதா தேவையில்லாத எதையும் பேசக்கூடாது .

நம்ம ஊருக்கு போறது உண்மைதான்." ஷர்மிளா பேசி முடிக்கவும் அழ ஆரம்பித்திருந்தால் கவி .

"இத பாரு இந்த மாதிரி அழுகை எல்லாம் வேலைக்காகாது .உனக்கு தான் என்ன பத்தி நல்லா தெரியும் இல்ல..

நீ சாதாரணமா கேட்டா கூட கொஞ்சம் யோசிப்பேன். இப்படி அடம் பிடித்து அழுதா நிச்சயமா நீ என்ன கேட்டாலும் உனக்கு கிடைக்காது புரிஞ்சுதா.."

"இந்தா.. பேசிக்கோ ..அஞ்சு நிமிஷம் தான் டைம் சும்மா அப்பா அப்பான்னு சொல்லி அழுதுகிட்டு இருந்தா என்ன செய்வேன்னு தெரியாது." கொடுத்துவிட்டு நகர்ந்து அமர,

"அப்பா அம்மா என்னை ஊருக்கு கூப்பிட்டு போவேன்னு பிடிவாதமா இருக்குறாங்கப்பா ".அழுதபடியே கூற எதிர்முனையில் கேட்டவனுக்கு ஒரு நிமிடம் சட்டென கோபம் தான் வந்தது.

அந்த கோபத்தை மறைத்தபடியே சமாதானமாக "கவி இத பாருடா உங்க அம்மா ரொம்ப பயந்துட்டா..

ஊர்ல உலகத்துல எத்தனையோ விஷயம் நடக்குது .ஒண்ணுமில்லாத ஒரு விஷயத்தை பார்த்து உங்க அம்மா ரொம்பவே பயந்துட்டா..

அந்த பயம் இப்படி உங்க அம்மாவை ஓட வைக்குது அதனால நீ அழாதே..

அம்மா கூட ஒரு மாசம் தானே போயிட்டு வா. அங்க டெல்லியில் சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்கு நீ கூட இதுவரைக்கும் பாட்டியை பார்த்ததில்லை இல்லையா..

பாட்டிய பார்த்துட்டு வா.. சுற்றுலா மாதிரி நினைச்சுக்கோ".

" அப்படின்னா நீங்களும் சூரியாவும் வரணும் தானே.. நீங்க ஏன் வரல.."

" நாங்க எப்படிடா வர முடியும் எனக்கு இங்க நிறைய வேலை இருக்குது".

"அப்படின்னா சூர்யாவை எங்க கூட அனுப்பி வையுங்க ."

"கவி உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்று தெரியவில்லை.. இந்த முறை அம்மா சொல்றது கேளு..

இது ஒரு முறை ஊருக்கு போயிட்டு வந்தேன்னா வந்த பிறகு நீ என் கூடவே இருக்கலாம் .

அதுக்கு நான் ஏற்பாடு பண்ணி தரேன் சரியா .."

"உண்மையா சொல்றீங்களாப்பா போயிட்டு வந்த பிறகு நான் உங்க கூடவே இருக்கலாமா.

நான் சூர்யா எல்லாம் சேர்ந்து இருக்கலாமா .."வேகமாக கண்ணீரை துடைத்தபடி கேட்க..

" நிஜமாகத்தான் சொல்றேன் நான் சொன்னா சொன்னதை எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து இருக்கேன்ல" என்று சொல்ல ..அதே வேகத்தில் போனை வாங்கியவள் "என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க குழந்தைகிட்ட ..

ஊருக்கு போயிட்டு வந்த பிறகு அங்க வருவேன்னு மறுபடியும் அடம் பிடிக்கவா ..

நடக்காத ஒரு விஷயத்துக்கு நீங்க இப்படி ப்ராமிஸ் பண்ணாதீங்க புரிஞ்சுதா" என்று சொன்னவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு வேகமாக கவியையும் அழைத்துக் கொண்டு புறப்பட இன்னமும் ஒரு மணி நேரம் இருந்தது.

ரயிலுக்காக அங்கே காத்திருக்க ஆரம்பித்தால். மனதிற்குள் ஏதேதோ குழப்பம் ..

பேங்கில் மற்றவர்கள் பார்த்தது இரண்டு நாட்களாக நடந்தது என ஒவ்வொன்றாக மனதிற்குள் வலம் வந்து கொண்டிருந்தது .

கடைசியாக மதியழகன் சொன்னதும் ஞாபகம் வந்தது .அவன் சொன்னது சரிதானே ..

எத்தனை நாட்களுக்கு இப்படி ஓடிக் கொண்டிருக்க முடியும் .பார்க்க போனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லையே ..

இதை விட மோசமாக எத்தனையோ பேருக்கு நடந்திருக்கிறது .தனக்கு நடந்தது மிக மிக சிறிய ஒரு விஷயம் .

சில போட்டோக்களுக்கு பயந்து ஓடுவதா ..என்று தோன்றவும் ரயில் பிளாட்பாரத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ஏறும் எண்ணம் துளி கூட இவளுக்கு இல்லை அப்படியே அமர்ந்திருந்தால் கவி தாயையும் ரயிலையுமே மாறி மாறி பார்த்தாள்.

" அம்மா இந்த ட்ரெயின்லதான போகணும்னு சொன்னீங்க ..அதுல டெல்லின்னு கூட போட்டு இருக்கே நம்ம போகலையா "என்று கேட்க..

" இல்ல இப்ப போகல இன்னொரு நாள் போகலாம் "என்று இவளை அழைத்துக்கொண்டு மறுபடியும் கால் டாக்ஸி பிடித்தவள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

வீட்டுக்கு வந்த உடனே தன் தாயாரை அழைத்தவள் "இப்போதைக்கு அங்கே வர்ற ஐடியாவில் இல்லமா ..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் .

இந்த வருஷம் ஸ்கூல் லீவுக்கு கட்டாயமா நான் கவியை அழைச்சிட்டு வருவேன்.

ஒரு மாசம் உங்க கூடத்தான் இருப்பேன் இப்ப அவசர அவசரமா வந்துட்டு அவளோட படிப்பை கேள்விக்குறி ஆக்க எனக்கு இஷ்டம் இல்லை .".

"என்ன ஷர்மிளா இப்படி பேசுற இரண்டாம் கிளாஸ் படிக்கிற பொண்ணுக்கு இத்தனை கண்டிஷன் தேவையா? "

"இல்லம்மா அடிக்கடி லீவ் போட்டா அதுவே பழகிடும். இதுவரைக்கும் அவளை லீவு போட விட்டது இல்ல இந்த முறை தான் கிளம்பலாம் என்று நினைத்தேன் இப்போ மனசு மாறிடுச்சு.."

"நீ பேசுற எதுவுமே புரியல ஷர்மிளா".

" இல்லம்மா இப்பதான் நான் தெளிவாகி இருக்கிறேன் .நான் ஃபோனை வைக்கிறேன் "என்று சொன்னவள் அடுத்ததாக மதியழகன் நம்பருக்கு அழைத்தால்.

ரயில் புறப்பட்டு இருக்கும் என்று நினைத்தபடியே போனை அட்டென் செய்தவனுக்கு இவளுடைய குரல் கேட்கவும் சற்றே ஆச்சரியம்..

" நாங்க டெல்லிக்கு போகலை சூர்யா கிட்ட சொல்லிடுங்க.. அதுக்காக தான் போன் பண்ணினேன்".

'பாருடா' என்று மனதிற்குள் தோன்ற வெளியே "அப்படியா என்ன ஆச்சு பிடிவாதமா போவேன்னு சொல்லிட்டு கிளம்புறீங்க .

இடம் மாறினால் எல்லாம் சரியாயிடும் வேற சொன்ன மாதிரி ஞாபகம்.."

" இப்ப எதுக்காக தேவை இல்லாம பேசுறீங்க ..நீங்க கவி கிட்ட பேசினது எல்லாத்தையும் நான் கேட்டேன்..

போயிட்டு வந்த பிறகு நிரந்தரமா அங்க கூப்பிட்டு போய் வைப்பீங்கன்னு அநியாயத்துக்கு பொய் சொல்றீங்க .

அதனாலதான் போயிட்டு வந்தா தானே உங்க வீட்டுக்கு வர்றத பத்தி யோசிக்கணும்.

போகாட்டி அத பத்தி யோசிக்க வேண்டாம் இல்லையா அதனாலதான் திரும்பி வந்துட்டேன்.

என்னோட பிரச்சனையே என்னால பேஸ் பண்ணிக்க முடியும் நீங்க சொன்னது கரெக்ட் தான் .

உலகத்துல எத்தனையோ விஷயங்கள் நடக்குது அப்படி இருக்கும்போது எனக்கு நடந்தது எதுவுமே இல்ல தான்."

" ஹப்பா இப்பவாவது தோணுச்சே.. சரி வழக்கம்போல நாளைக்கு காலைல ஸ்கூல் பக்கத்துல பார்க்கலாமா.."

" இப்போதைக்கு உங்களை நான் எங்கேயும் பார்க்கிற ஐடியாவுல இல்ல.

கொஞ்ச நாளைக்கு நீங்களும் என்னை பார்க்க முயற்சி செய்ய வேண்டாம் .

இந்த பிரச்சினை எல்லாம் கொஞ்சம் முடியட்டும் அப்புறமா யோசிக்கலாம்.."

" எப்படிங்க எப்படி இவ்வளவு அறிவா யோசிக்கிறீங்க ஒருவேளை நீங்களும் நானும் பாக்காம இருந்தா இந்த பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லாமல் போயிடுமா..

பேசுறவங்க காலத்துக்கும் பேசிகிட்டு தான் இருப்பாங்க அதை எல்லாம் காதுல வாங்கினோம்னா வாழவே முடியாது."

" உங்களுக்கு என்ன நீங்க ஈஸியா அது மாதிரி தான் சொல்லுவீங்க ஆனால் நான் அப்படி சொல்லிட முடியாது இல்லையா .."

"ஆமா அதுவும் உண்மைதான் நீங்க ஒரு குழந்தையோட தாய் நாளைக்கு உங்களை யாரும் கை நீட்டி பேசிட கூடாது இது மாதிரி தானே சொல்வீங்க.."

"நான் பேசினது எல்லாமே தப்பு தான் அதுக்காக அதையே சொல்லி காட்ட வேண்டாம் .

நான் இருந்த குழப்பத்துல அந்த மாதிரி சொன்னேன்.."

" அடடா இப்ப மேடம் ரொம்ப தெளிவா இருக்கீங்களா அப்படி தெளிவா இருந்தா ரொம்ப சந்தோஷம் தான் இனிமே இதே மாதிரி இருங்க" என்று போனை வைத்தான்.
 

NNK22

Moderator
13

நாட்கள் வேகமாக நகர்ந்தது . அடுத்த சில நாட்களிலேயே நடந்த குழப்பம் எல்லாம் தெளிவுக்கு வந்திருந்தது.

எளிதாக ஒரு பிரபல சானலை அழைத்தவன் தன்னுடைய தரப்பு நியாயத்தை தெளிவாக எடுத்துரைத்தான்.

ஏதோ சில போட்டோக்கள் பார்த்து அப்படி நம்பற அளவுக்கு இந்த உலகம் சுத்திக்கிட்டு இருக்கா என்ன?

ஆச்சரியமா இருக்கு . என்னை ஏற்கனவே நிறைய பேருக்கு தெரியும்.

என்னோட குணம் என்னோட நடவடிக்கைன்னு எல்லாமே.. அந்த குழந்தை அப்பான்னு ஓடி வந்துச்சுன்னா அதுக்கான காரணம் ஏதாவது இருக்கலாம் இல்லையா..

சின்ன குழந்தை பதட்டத்துல கூட ஓடி வந்து அப்படி கூப்பிட்டு இருக்கலாம் .

அதுக்காக உடனே நீங்களே கற்பனை பண்ணிடுவீங்களா கொஞ்சம் யோசிக்க மாட்டீங்களா..

சில நிமிடம் பேச்சில் நடந்த குழப்பம் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்திருந்தான். பிறகு இவளுக்கும் கூட அழைத்து பேசியிருந்தான்.

" என் பக்கத்துல நான் என்ன செய்யணுமோ அதை செஞ்சிட்டேன். இனி தேவை இல்லாம நீங்க பயப்பட வேண்டாம் .

வழக்கம் போல நீங்க பேங்குக்கு போகலாம் .எங்க வேணும்னாலும் போகலாம் .இனிமே உங்களை யாரும் தப்பா பேச மாட்டாங்க .

இது சம்பந்தமாக யாருமே எதுவும் கேட்க மாட்டாங்க .இனி நீங்க நிம்மதியா இருக்கலாம் .

சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் ஓடி ஒளிய ஆரம்பிச்சா அப்புறமா இருக்குறதுக்கு இடம் இருக்காது வருஷம் ஃபுல்லா ஓடிட்டு மட்டும் தான் இருக்கும் ."என்று போனை வைத்திருந்தான்.

ஆனந்தி கூட அடுத்த முறை பார்க்கும் போது ஆச்சரியமாக கேட்டால். "ஷர்மிளா நெஜமா நான் என்ன நெனச்சேன் தெரியுமா .

இந்த பிரச்சனைக்கு பிறகு நீ மதி சாரை கல்யாணம் பண்ணிக்குவேண்ணு நினைத்தேன். ஏன்னா அங்கிளுக்கு அவ்வளவு பிடிச்சது.."

" என்ன நீ உளறிட்டு இருக்குற.. நீ சொல்றதுக்கான அர்த்தம் என்ன எனக்கு சுத்தமா புரியல ".

"வந்து என்ன சொல்றது அங்கிளுக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு .அவர் அவரோட பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்பட்டாரு .."

"நீ விளையாடுறியா ஆனந்தி இந்த மாதிரி எல்லாம் உளறிக்கிட்டு இருக்காத..

நான் எப்ப சொன்னேன் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறதா..

நடந்தது எல்லாமே உனக்கு தெரியும் இல்லையா.."

" அதனாலதான் நான் ஆசைப்பட்டேன் ஷர்மிளா .நீ இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழனும்ணு".

"நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப பேச வேண்டாம். ஆனந்தி இந்த விஷயத்தை இத்தோட விட்டுடு.. இது அந்த பெரியவரோட ஆசை மட்டும் தான்.

மதி சாருக்கு மட்டுமல்ல எனக்குமே கல்யாணம் பண்ணிக்கிறதுல துளி கூட விருப்பம் கிடையாது .

அவர் என்ன யோசிக்கிறாருன்னு என்னால சொல்ல முடியும் .அதே மாதிரி தான் நானும் நினைக்கிறதை அவரால் புரிஞ்சுக்க முடியும்".

" அதனாலதான் தோணுச்சு ஷர்மிளா ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடின்னு".

"இதுக்கு மேல இதை பத்தி நம்ம பேச வேண்டாம். இத இதோட விட்டுடலாம் குழந்தைங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரண்ட்லியா இருக்குறாங்க .

அந்த உறவு கடைசி வரைக்கும் தொடர்ந்தா போதும் இப்போதைக்கு..

அப்புறமா முக்கியமான விஷயம் இங்கேயே தொடர்ந்து இருப்பேனாங்கிறதே சந்தேகம் தான்.

ஒரு வேலை நிறைய பிரச்சனை வந்துச்சுன்னா இங்க இருந்து அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடுவேன்.

நேரா அப்பா அம்மா கூட டெல்லியில் போய் செட்டில் ஆகலாம் அந்த ஐடியா கூட அப்பப்போ தோணுது."

"நீ முடிவெடுத்துட்டேனா சொல்றதுக்கு எதுவுமே இல்ல .ஐ யாம் சாரி தப்பா ஏதாவது சொல்லி இருந்தா இத்தோட மறந்துவிடு..
இனிமே இது மாதிரி எதுவும் சொல்ல மாட்டேன்."

நாட்கள் வேகமாக நகர்ந்தது அடுத்த ஒரு மாதம் கூட வேகமாக சென்றிருந்தது .

அன்றைக்கு மாலையில் சூர்யா தன்னுடைய வீட்டிற்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தான் ஸ்கூலில் இருந்து..

தன்னுடைய பேக்கை தூக்கிக்கொண்டு நகர்ந்தவன் கவியை பார்க்க ..கவியின் ஆட்டோ இன்னமும் வந்திருக்கவில்லை.

" உன்னோட ஆட்டோ இன்னும் வரலையா.. ரொம்ப நேரம் ஆகுமா வர்றதுக்கு" என்று பேச்சு கொடுத்தான்.

'தெரியலடா எப்பவும் சரியா வந்துடுவாங்க ..இன்னைக்கு என்னமோ ஆளை காணோம் வந்துருவாங்க ..

வந்த பிறகு நான் போகிறேன் ..ஓகே நீ புறப்படு பை ..உங்க ராம்மண்ணா வேற காத்துகிட்டு இருக்காங்க.."

"இன்னமும் ஒரு அஞ்சு நிமிஷம் உன்கூட இருக்குறேனே ..நீ ஆட்டோவில் ஏறின பிறகு போகிறேன்."என்று கூடவே நின்றான்.

அடுத்த பத்து நிமிடம் கடந்த போதும் கூட ஆட்டோக்காரர் அன்றைக்கு ஏனோ வந்திருக்கவில்லை.

"ஆட்டோக்காரர் வருவாரா தெரியல இனி மேம் கிட்ட சொல்லி அம்மாவுக்கு தான் போன் பண்ணி என்னன்னு கேட்க சொல்லணும்" என்று சொல்லும் போது சூர்யா வேகமாக .."கவிநீ என்னோட எங்க வீட்டுக்கு வந்துடேன்.

என்கூட வந்து வீட்ல இரு .அப்புறமாக வீட்டுக்கு போனதும் அம்மா கிட்ட போன் பண்ணி சொல்லிக்கலாம் என்ன சொல்ற.."

" அப்படியா .."

"ஆமா இந்த ஐடியா நல்லா தானே இருக்கு .நான் ராம்மண்ணா கிட்ட சொல்லிடறேன் இரு" என்று வேகமாக ஓடிப் போய் சொல்ல..

அவருக்கும் தவறாக எதுவும் தெரியவில்லை .வழக்கமாக நடப்பது தானே ..

அடிக்கடி கவி அவர்களின் வீட்டுக்கு செல்வதும் சூர்யா கவியின் வீட்டுக்கு செல்வதும் வாடிக்கையாக தானே நடந்து கொண்டிருக்கிறது.

' இவ்வளவுதானா ..வாங்க நம்ம கூப்பிட்டுட்டு போகலாம். வீட்டுக்கு போய் போன் பண்ணி சொல்லிக்கலாம் "என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

இவர்கள் சென்ற சற்று நேரம் கழித்து தான் ஆட்டோக்காரன் வந்தது.

இவளை காணவில்லை எனவும் ஏற்கனவே முன்பு ஒரு முறை இதுபோல நடந்ததை யோசித்தவர் ஷர்மிளாவிற்கு ஃபோனில் அழைத்து பேசினார் .

"இங்க நம்ம கவியை காணோம் மா நீங்க முன்னாடி எதுவும் வந்து அழைச்சிட்டு போயிட்டீங்களா" என்று கேட்க இங்கே பேங்கில் அமர்ந்து இருந்தவளுக்கு பகீர் என்றது.

"இன்றைக்கு ஆட்டோவில் தான் வர சொல்லி இருந்தேன் .அங்க இல்லனா பக்கத்துல எங்கேயாவது போயிருப்பா ..

ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. நான் அவங்க மேம்க்கு போன் பண்ணி என்னன்னு கேட்கிறேன் "என்று வேகமாக மறுபடியும் பள்ளியின் ஆசிரியருக்கு அழைத்துப் பேசினாள்.

ஆசிரியருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை .வழக்கம்போல பேக் எல்லாம் எடுத்துட்டு கிளம்பிட்டாலே..

ஆட்டோ வந்திருந்தா புறப்பட்டு போய் இருக்கணுமே ..எனக்கு தெரியல "என்று சொல்ல இவளுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது .

இந்த முறை முன்பு போல நேரத்தை கடத்த வில்லை .முதலில் வேகமாக மதியழகனுக்கு தான் அழைப்பு விடுத்தாள்.

" கவி ஸ்கூல்ல இருந்து காணோம்னு ஆட்டோக்காரர் போன் பண்ணி இருக்காரு.. என்னனு தெரியல கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா" என்று பதட்டத்தோடு கேட்க அந்த பதட்டம் மதிக்கும் தொற்றி கொண்டது .

"எப்ப இருந்து காணோம் எங்கே போனாண்ணு விசாரிச்சிங்களா.." என்று அடுக்கடுக்காக கேள்வியை கேட்டான்.

இங்கே சூர்யாவோடு விளையாடிக் கொண்டிருந்தால் கவி வழக்கம்போல தாத்தாவிடம் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்க ,அங்கே இவர்கள் செய்து விட்டு வந்த கலவரம் எதுவும் இவர்களுக்கு தெரியவில்லை.

வழக்கம் போல ஹோம் ஒர்க் முடித்து விளையாடி பேசி சிரித்துக்கொண்டு நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தனர் .

மதியழகன் வேகமாக ஸ்கூலிற்கு சென்றான்.

ஸ்கூலுக்கு சென்று விசாரித்துக்க யாருக்குமே சரியான தகவல் தெரியவில்லை .

ஒருவேளை வாட்ச்மேன் யாராவது பார்த்து இருக்கலாம் என்று வாட்ச்மேனை அழைத்து விசாரிக்க, அங்கே வேலை செய்து கொண்டிருந்த வாட்ச்மேன் ஒருவர் கவனித்திருந்தார் .

"சூர்யாவோட தான் கவி பேசிக்கிட்டு இருந்ததை பார்த்தோம் கடைசியா அவங்க ரெண்டு பேரும் தான் சேர்ந்து கையை பிடிச்சிட்டு போனதை பார்த்தேன். "என்று சொல்ல ,வேகமாக மதியழகன் வீட்டிற்கு அழைத்தான்.

போனை எடுத்த உடனே வேகமாக "சூரியா வந்துட்டானா ..இங்க கவியை காணோம்னு அங்க அம்மா தேடிகிட்டு இருக்காங்க.
கடைசியா எப்போ பார்த்தான்" என்று வேகமாக கேட்க .தேவனோ "என்னடா உளரிக்கிட்டு இருக்கிற.. கவியும் சூர்யாவும் இங்கதான் இருக்காங்க. ரெண்டு பேரும் நேரா வீட்டுக்கு தான் வந்தாங்க .ஏன் உனக்கு தெரியாதா" என்று திரும்ப கேட்டார்.

சொன்ன தகவலை கேட்டதும் சற்றே நிம்மதியாக மூச்சு விட்டவன்.. "இல்லப்பா ஒன்னும் இல்ல நான் அங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன் "என்று போனை கட் செய்தவன்.

"ரெண்டு பேரும் என் வீட்ல தான் இருக்காங்க .இங்க இருந்து நேரா அங்கே புறப்பட்டு போயிட்டாங்க போல இருக்கு .

வீட்டுக்கு வந்து கவியை அழைச்சுக்கோங்க "என்று சொல்ல இங்கே ஷர்மிளாவிற்கு உச்சபட்சமாக கோபம் தலைக்கேறி இருந்தது .

இத்தனை நேரம் இருந்த பதட்டம் கோபம் எல்லாமே கவியின் மேல் திரும்பி இருக்க ,விறுவிறு என தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக மதியழகனின் வீட்டிற்கு சென்றாள்.

மதியும் தன்னுடைய காரில் பின் தொடர அவளுடைய வேகமே அவளுடைய கோபத்தை சொல்ல, அவளுக்கும் முன்பாகவே வீட்டிற்குள் வேகமாக சென்று இருவரும் இருந்த இடத்தை நெருங்க ,அதே வேகத்தில் ஷர்மிளாவும் புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்தாள் கவியின் முதுகில் படார் படார் என சில அடிகளை கொடுக்க, ஏன் எதற்கு என்று கூட புரியாமல் கவி கத்தி அழ ஆரம்பித்தாள்.

அடுத்த அடி அடிக்க கை ஓங்குவதற்கு முன்பாகவே கவியை தன் கைக்குள் கொண்டு வந்திருந்தான் மதியழகன்.

" என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க ஷர்மிளா .உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு .

சின்ன குழந்தையை போட்டு இப்படி அடிக்கிறீங்க" என்று வேகமாக நகர்த்திக் கொண்டு வர சூர்யாவிற்கு எதுவுமே புரியவில்லை பயந்து அங்கேயே நடப்பதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

" கொஞ்ச நேரத்துல எவ்வளவு பயந்துட்டேன்.. இவளுக்கு ஏதாவது ஆயிடுச்சோ போன முறை மாதிரி யாராவது கடத்திட்டாங்களோன்னு பயந்திட்டு இருந்தா இந்த மகராணி யார்கிட்டயும் எதுவும் சொல்லாம இங்க வந்து ஜாலியா விளையாண்டுக்கிட்டு இருக்கா ..

யாரு இவளுக்கு இத்தனை தைரியம் கொடுத்தது.. சொல்லாம எங்கேயும் போகக்கூடாது என்கிற அறிவு கூட இல்லையா" என்று கோபமாக திட்ட, இப்போது சூர்யா "அம்மா அவளை திட்டாதீங்கம்மா. நான் தான் இங்க அழைச்சிட்டு வந்தேன் ஆட்டோக்கார அண்ணா வரவே இல்ல ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே இருந்தா.. பிறகு நான் தான் வீட்டுக்கு போனதும் அம்மாவுக்கு போன் பண்ணலான்னு கூப்பிட்டு வந்தேன்.

இங்கே வந்ததும் விளையாடவும் மறந்துட்டேன் "என்று கூற, "இப்ப கேட்டாச்சா.. நடந்தது எல்லாத்தையும்..

அதுக்காக இவ்வளவு பெரிய அடி அடிப்பீங்களா "என்று மதி கேட்க,இன்னமுமே கவியை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

தேவனுக்கு இங்கே நடந்த கலவரங்கள் எதுவும் புரியவில்லை. வேலையாக உள்ளே சென்றவர் இங்கே சத்தம் கேட்டு வேகமாக இவர்கள் இருந்த இடத்திற்கு வந்திருந்தார் .

'என்னம்மா ஆச்சு என்ன நடக்குது இங்க ..எதுக்காக இப்படி மாத்தி மாத்தி சத்தம் போட்டுட்டு நிக்கறீங்க "என்று கேட்டு வர..
"இங்கே யார் குழந்தை என்று தெரியவில்லை அப்பா.. குழந்தையை எப்படி ஹாண்டில் பண்ணனும்னும் தெரியல .

ஏன் இப்படி நடந்துக்கிறார்களோ ஒண்ணுமே புரியல .."

"அவளை காணோம்னு எந்த அளவுக்கு பயந்தேன் தெரியுமா.."

"இப்ப அடிச்சதால அவளுக்கு தெரிஞ்சிடுச்சா.. நான் காணாமல் போனதாக அம்மா நினைச்சிட்டாங்க..அதனால என்னோட அம்மா வந்து அடிச்சிட்டாங்க அப்படின்னு..

ஷர்மிளா முதல்ல வயசுக்கு ஏத்த மெச்சூரிட்டி வேணும் அது இல்லன்னா எவ்வளவு வயசானாலும் அந்த வயசுக்கு மரியாதையே இல்லை புரிஞ்சதுங்களா..‌"

அதே நேரத்தில் ராமண்ணா வேகமாக ஜூஸ் டம்ளரோடு வந்திருந்தார்.

" முதல்ல இதை வாங்கி குடிங்க ஷர்மிளா பிறகு பொறுமையா பேசலாம் "என்று அங்கிருந்து சோபாவில் அமர எதிர் இருக்கையில் அமரும்படி கை காட்ட சற்றும் முறைத்த படியே சென்று அமர்ந்து கொண்டாள்.

இப்போதும் கூட கவி மதியழகனை அணைத்த படி தான் நின்றிருந்தாள். மெல்ல முதுகை தட்டி சமாதானம் செய்து கொண்டிருந்தான் மதியழகன்.

"இனி ஆட்டோ எல்லாம் வேண்டாம் ஷர்மிளா சரியான நேரத்துக்கு வரலைன்னு குழந்தை பயந்து…ஏன் இப்படி மாத்தி மாத்தி கன்பியூஸ் ஆகிக்கணும். இன்றையிலிருந்து சூரியா கூட இங்க வந்துடட்டும். நீங்க வேலைமை முடிச்சுட்டு இந்த வழியா வந்து இவளை அழைச்சிட்டு போய்க்கலாம்."

"அதெல்லாம் சரி வராது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ."

"போதும் ஷர்மிளா வீம்புக்கு பேசுறதுக்கும் ஒரு அளவு இருக்கு .
நான் முடிவெடுத்தது தான் கரெக்ட் இனி இத மாத்த வேண்டாம் .என்ன ராமண்ணா புரிஞ்சுதா.. இனிமே கவியையும் அழைச்சிட்டு வந்துருங்க.

ரெண்டு பேரும் ஹோம் ஒர்க் முடிக்கட்டும் .கொஞ்ச நேரம் விளையாண்டுக்கிட்டு இருக்கட்டும் பிறகு அவங்க அம்மா எப்ப வராங்களோ வந்து அழைச்சிட்டு போகட்டும் .

நீங்களும் கேட்டுக்கோங்க ஷர்மிளா பேங்க் வேலை முடிஞ்சு நேரா இங்க வந்து அழைச்சிட்டு போனாலும் சரி, இல்லாட்டி உங்க வீட்ல போய் உங்க வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வந்து ராத்திரி எட்டு மணிக்கு வந்து கூப்பிட்டு போனாலும் சரி.

அது உங்க இஷ்டம் ஆனால் இனிமேல் இதை ரொட்டீனா பழகிக்கோங்க. காணோம்னு பதறவும் வேண்டாம்.. இப்படி முதுகுல மத்தளம் வாசிக்கவும் வேண்டாம் .என்ன பா நான் சொல்றது சரிதானே."

பேச்சு முடிந்தது என்பது போல எழுந்து வெளியேறி இருந்தான் மதியழகன்.

அதிலிருந்து தினமுமே கவி சூர்யாவோடு வீட்டிற்கு வந்து விட எப்போதும் போல ஆறு மணிக்கு வந்து குழந்தையை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.

இது வாடிக்கையாக தொடர்ந்து கொண்டிருந்தது. மாலை இங்கே வருகையில் சற்று நேரம் தேவனிடம் பேசிக் கொண்டிப்பது.. பிறகு குழந்தைகளோடு சற்று நேரம் விளையாடி.. இப்படி நாட்கள் மெல்ல நகர்ந்தது.

இடையிடையே மதியழகனை பார்க்கும் போது முன்பு போல முறைத்துக் கொள்ளவோ சண்டையிடவோ இல்லை .

இப்போது சமாதானமாக பேச முடிந்தது இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தனர் இரண்டு பேருமே..

சில நேரங்களில் மொத்தமாக அவனது டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட கூட ஆரம்பித்தனர்.

அருகே வந்து கவனிக்கையில் தான் புரிந்தது மதியழகனின் மொத்த குணமும் ..

எதிலும் குறை சொல்லி விட முடியாது அவ்வளவு நேர்த்தியாக வீட்டில் இருப்பவர்களை கவனித்துக் கொண்டான். பார்க்க பார்க்க சற்று பிரமிப்பாக இருந்தது ஷர்மிளாவிற்கு.

இப்போது இயல்பாக அவனிடம் பேச முடிந்தது .சிரிக்க முடிந்தது. அன்றாடம் நடக்கும் சில நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அதற்குடைய பதிலை கூட கேட்டு வாங்க முடிந்தது.

ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டு இருக்கையில் இரண்டு பேரில் முகமும் புன்னகையோடு வசீகரமாக காணப்பட்டது.

இது எல்லாவற்றையும் கவனித்த தேவனுக்கு அத்தனை மகிழ்ச்சி அவர் நினைத்தது போல சீக்கிரமாகவே இருவருக்கும் திருமணம் நடக்கும் என முடிவு செய்துவிட்டார் .

ஏனென்றால் இருவரின் இருவரை பார்க்கும் போது அவரின் மனதிற்கு அப்படித்தான் தோன்றியது.

வீட்டில் தினமும் இயல்பாக சந்திக்க எதிர் பாராத வகையில் அன்றைக்கு மாலில் சந்திக்க நேர்ந்தது.

"ஹேய் ஷர்மிளா.. என்ன சர்பிரைஸ்..
அதிசயமா இந்த பக்கம் வந்திருக்கிறீங்க ".

"மாலுக்கு எதுக்கு வருவாங்க .. அதுவும் துணிக்கடைக்கு..துணி எடுக்க தான் வந்து இருக்கிறேன்.

பேக்ங்ல எல்லாரும் மகளீர் தினம் கொண்டாடறோம் ‌அதனால எல்லாருக்கும் புது டிரஸ் வாங்குற ஐடியா ..சோ வாங்குற பொறுப்பு என்கிட்ட வந்தது.
அதனால் தான் வந்தேன்".

" நல்ல விஷயம் தானே போய் வாங்குங்க.. நிறைய புது கலெக்ஷன் வந்து இருக்கு ".

"அப்படியா சரி" என்று நகர .."நானும் கூட வரலாமா" என்று தயங்கி கேட்டான்.

" இதென்ன கேள்வி தாராளமா வாங்க.. யாருக்கு டிரஸ் எடுக்க போறீங்க உங்களுக்கா.."

"சூர்யாவுக்கு வீட்டுக்கு போடற மாதிரி சில டிரஸ் எடுக்கணும்னு அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் வாங்கிட்டு வரேன்னு சொன்னேன் ".

"சைஸ் எல்லாம் தெரியுமா .."

"சரிதான் 24 மணி நேரம் அவன் கூட தானே இருக்கிறேன். அவனோட சைஸ் தெரியாதா.. "பேசியபடியே உள்ளே நுழைந்தனர்.

பொதுவாக சில உடைகளை தேர்வு செய்த பிறகு வாட்ஸ் அப்பில் அனுப்ப ஆரம்பித்தால்.." என்ன இது நீங்க செலக்ட் பண்றது தான்னு சொல்லிட்டு.. ஒவ்வொன்னையும் அனுப்பிக்கிட்டு இருக்கீங்க ."

"எல்லாருக்கும் பிடிக்கணும் இல்லையா ..அதனால தான் அனுப்பி வைக்கிறேன் .அவங்க ஏத ஓகே சொல்கிறார்களோ அதை நான் எடுத்துட்டு போயிடுவேன். "

"என்ன ஷர்மிளா ஏதோ புடவை எடுக்க வந்திருக்கிறீங்க ..புடவை கடையையே புரட்டிப்போட்டு எப்படியும் சாயங்காலம் வரைக்கும் பண்ணுவீங்கன்னு பார்த்தா..

வந்த அரை மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள எல்லாத்தையும் எடுத்து முடிச்சாச்சா.."

" ஆல்ரெடி நான் ரொம்ப வேகமா செலக்ட் பண்றேன் அப்படின்னு தான் என்னை அனுப்பி வெச்சாங்க" என்றவள் அங்கிருந்த ஒரு வெள்ளை நிற சுடிதார் அழகாக இருக்க அதன் சைஸை பார்த்தவள் அதையும் எடுத்து வைத்தாள்.

" இது யாருக்கு" என்று கேட்க.." இது எனக்கு தான் கலர் அழகா இருக்கு இல்லையா ".

"அழகா இருக்கா ஷர்மிளா.. நான் ஒன்னு சொன்னா கேட்பீர்களான்னு தெரியவில்லை. எத்தனையோ அழககழகான கலர் இருக்கும்போது எதுக்காக வெள்ளை கலரில் செலக்ட் பண்ணனும்."

" ஏன் உங்களுக்கு வெள்ளை கலர் பிடிக்காதா ".

"அப்படி கிடையாது வெள்ளை கலர் பிடிக்கும் தான் .ஆனால் நீங்கள் எல்லாம் பெண்கள்.. விதவிதமான கலரில் போடலாமே..எதுக்காக இதை எடுக்கணும்".

" என்ன மதி சார் உங்களுக்கு இந்த கலர் பிடிக்கலையா.. வேணும்னா.. வேண்டாம்னு சொல்லிடுறேன் ".

"அப்படி எல்லாம் நீங்க வேண்டாம்னு சொல்ல வேண்டாம் .உங்களுக்கு பிடிச்சா நீங்க தாராளமா எடுக்கலாம் ஜஸ்ட் இது என்னோட ஒப்பீனியன்..".

"ஓகே அப்படின்னா இந்த டிரஸ் ரிஜெக்டர்ட்.. நான் வேற ஒரு செட் சுடிதார் பார்த்து எடுத்துக்கிறேன்" என்று நகர்ந்தாள்.

"உலக அதிசயம் ஷர்மிளா நான் சொல்லி நீங்க உடனே ஓகேன்னு சொல்லிட்டு தனியா நகர்த்தி வச்சிட்டு போறீங்க ..

எனக்கு தெரிஞ்சு இது உங்க குணமே கிடையாதுன்னு நினைக்கிறேன்.

யாராவது இத செய்யக்கூடாதுனா கட்டாயமா அதை செய்வீங்க அப்படின்னு தான் இத்தனை நாளா நெனச்சுக்கிட்டு இருந்தேன்".

" உண்மையிலேயே நீங்க கெஸ் பண்ணது கரெக்ட் தான் .நிச்சயமா இத செய்யாதன்னு சொன்னா கட்டாயம் அதை செஞ்சு முடிப்பேன்.

அதுதான் என்னுடைய இயல்பும் கூட.. ஆனால் அதே நேரம் ஒருத்தர் சொன்னது கரெக்ட்டுன்னு தோணுச்சுன்னா யோசிக்காம ஓகே பண்ணிடுவேன் இதுவும் என்னோட குணம் தான்..

சூர்யாக்கு துணி எடுக்கணும்னு சொன்னிங்களே.. எடுத்து முடிச்சாச்சா ".

"சிலதெல்லாம் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். வந்து பார்த்து உங்க அபிப்பிராயத்தை எனக்கு தாராளமா சொல்லலாம் "என்று எடுத்த துணையை காட்ட.. ஒவ்வொன்றையும் பார்த்தவள்.
" சூப்பர் ரொம்ப அழகா இருக்குது உங்களுடைய செலக்சன் எல்லாமே." என்று சொல்ல,"இன்னும் சில துணிகளை எடுத்து நீடினான்.

" இது என்ன?"என்று கேட்க .."இது கவிக்காக நான் செலக்ட் பண்ணினது. சூர்யாவையும் கவியையும் தனித்தனியா பிரிச்சு பார்க்க எனக்கு விருப்பம் இல்ல.

ரெண்டு பேருமே என்னோட பசங்க தான் அப்படித்தான் எனக்கு தோணுது மறுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்..

அதுக்காக உடனே சூர்யாவுக்கு சில டிரஸ் எடுத்து தரேன்னு எடுத்து நீட்டிடாத.. அப்படி நீட்டினா நான் வருத்தப்படுவேன்."

" அப்படியா சரி நான் அப்படி எல்லாம் எடுக்க மாட்டேன் ஆனால் உங்களுக்கு எடுத்து தரலாம் இல்லையா ..அப்போ நீங்க வருத்தப்படுவீங்களா ".

"என்னது திடீரென்று இப்படி எல்லாம் கேட்டுட்டு.."

" சும்மாதான் நம்மளும் ரொம்ப நாளா பார்க்கிறோமே ..இப்ப நாம நல்ல ஃப்ரண்டா கூட ஆகிட்டோம். அதனால என்னோட சின்ன கிப்ட்.. மறுக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்" என்றபடி இவனுடைய சைஸ்க்கு ஒரு சட்டையை எடுத்து நீட்டினாள்.

" இந்த கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது மதி சார்..
ப்ளீஸ் மறுக்க கூடாது" என்று எடுத்து கொடுத்தால் மகிழ்ச்சியாகவே வாங்கிக் கொண்டான்..
 

NNK22

Moderator
14

"அப்பா இன்னைக்கு ஸ்கூல் லீவு தானே நான் கவியையும் அம்மாவையும் வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறேன் .

நாங்க தோட்டத்துல புதுசா ரெண்டு மூணு பூஞ்செடி வைக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம்.

அம்மா சரின்னு சொல்லி இருக்காங்க வந்ததும் தோட்டத்துக்கு போயிடுவோம்."

' ஏன்டா உன் வீட்டு தோட்டத்தை பார்க்கிறது தான் அவங்க வேலையா அவங்கள வீட்டுக்கு கூப்பிட்டு வேலை வாங்குறியா நீ .."

"ஐயோ இல்லப்பா கவி தான் நேத்து சொன்னா முன்னாடி தோட்டத்துல நிறைய ஃப்ளவர் வச்சா நல்லா இருக்கும்னு..

அம்மாவும் சரி புதுசு வாங்கிட்டு வந்து நட்டு வைக்கலாம்னு சொன்னாங்க.

நாங்க நைட்டே ராம் அண்ணா கிட்ட சொல்லிட்டோமே தாத்தா கூட சரின்னு சொன்னாங்களே.."

"அப்படின்னா சரி உங்க அம்மா எப்ப வர்றாலாம் ".

"அநேகமா இந்நேரம் புறப்பட்டு இருப்பாங்கப்பா "என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஹாலில் ஷர்மிளா ,கவியின் குரல் கேட்டது.

" இதோ வந்தாச்சு போல இருக்கு. நீ போய் உங்க வேலைய பாருங்க*.

" நீங்க எங்க புறப்பட்டுக்கிட்டு இருக்கீங்க ..எங்க கூட நீங்க இன்னைக்கு இருக்க மாட்டீங்களா.."

" எனக்கு இங்க முக்கியமான வேலை இருக்குதுடா.. ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் வெளியே போலாம்னு பிளான் பண்ணி இருக்கிறேன் .அது கூட உனக்கு பொறுக்கலையா வீட்ல இருக்க சொல்லற "கேட்டபடியே புறப்பட்டான்.

அன்றைக்கு ஷர்மிளா எடுத்து கொடுத்த சட்டையை தான் அணிந்திருந்தான்.

அவனின் நிறத்திற்கு எடுப்பாக தெரிந்தது அந்த சட்டை சிறு புன்னகையோடு புறப்பட்டுக் கொண்டிருந்தான். வெளியே வரவும் ஷர்மிளா கூட இவனை பார்த்தால்..

" எப்படி டிரஸ் நல்லா இருக்கா.. இது ஓகே தானே "என்று கேட்க ,
பார்த்தவள்" நல்லா இருக்கீங்க எங்க இன்னைக்கு வெளிய புறப்பட்டாச்சா.."

"ப்ரெண்டுங்க கூட ரொம்ப நாள் கழிச்சு வெளியே போலாம்னு பிளான் பண்ணி இருக்கிறோம் கொடிவேரி டேமுக்கு போக போறோம்.."

"பார்ரா இந்த ஆண்களுக்கு மட்டும் சௌரியம் இல்லையா ..நினைத்த நேரத்துக்கு நெனச்ச இடத்துக்கு புறப்பட்டு போயிடுறீங்க ".

"அப்படியா அப்படின்னு யார் சொன்னார்கள் .அப்படி எல்லாம் கிடையாது‌ எங்களுக்கும் நிறைய வேலை இருக்கு. அதை எல்லாம் தாண்டி கொஞ்ச நேரம் வெளிய போகிறோம் என்றால் அதுவே அதிசயம் தான். ஏன் உங்களுக்கு போன ஆசை இருந்தால் சொல்லுங்க சேர்ந்து போயிடலாம்.."

"அது எப்படி பிரண்டுங்க கூடன்னு சொல்லிட்டு எங்களை எப்படி கூப்பிட்டு போவீங்க.."

' அது ஒன்னும் பிரச்சனை இல்லையே ஃப்ரெண்டுங்களுக்கு போன் பண்ணி வீட்ல வைஃப் குழந்தைகளுக்கு கூப்பிட்டு வாங்கன்னு சொன்னா போதும். அது பேமிலி ட்ரிப்பா மாறிட போகுது இதுல சொல்ல என்ன இருக்கு.."

" அப்படியா அவங்க எல்லாம் கூப்பிட்டு வருவாங்க அது அவங்க ஃபேமிலி.. நான் எந்த காரணத்தை வச்சு வர்றதாம்..

"ஏன் சர்மிளா நீங்க என் பேமிலி கிடையாதா "என்று கேட்க ஏதோ ஒரு மனநிலையில் சரிக்கு சரியாக வாய் அடித்தாலும் அதற்கு மேல் அவளிடம் சொல்ல பதில் இல்லை .

"எதுக்கு நம்ம இப்போ இந்த டாபிக்கை பேசணும் .போயிட்டு வாங்க நாங்களும் இன்னைக்கு இங்க வேலை தான் செய்யப் போறோம் ஜாலியா நேரம் போயிடும்" என்று நகர்ந்து இருந்தாள்.

"ஹலோ என்னோட ஃப்ரெண்ட்னு சொல்லுவேன் சத்தமாக கூறினான்.

ஓரளவுக்கு மதியழகன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்தது ஆனால் இவள் இடத்தில் தான் பதில் இல்லை.

நடக்காத ஒரு விஷயத்தை பத்தி யோசிக்கவே கூடாது என்று சொல்லியபடியே நகர்த்திருந்தால்.

மாலை வரையிலுமே இங்கு தான் இருந்தாள். நேரம் வேகமாக சென்றது மதியம் வரையிலும் மண்ணில் ஆட்டம் போட்டு சில செடிகளை நட்ட வைத்து தண்ணீர் விட்டு என சிரிப்போடு நேரம் சென்றது .

தேவனும் இவர்களோடு அருகே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் .

மூவரும் இணைந்து விளையாடியதை பார்க்கும் போது.. ஒரு வேலை மதியழகனை திருமணம் செய்து இருந்தால் இது நிரந்தரமாக காண கிடைக்கு காட்சி அல்லவா . என்று நினைத்தபடி அமர்ந்திருந்தார் .

மதியத்திற்கு மேலாக கேக் செய்யலாம் என ஆரம்பித்து சமையலறையை அதகலம் செய்து கொண்டிருந்தனர் மூவரும்.. ராமண்ணா ஒரு ஓரமாக அமர்ந்திருந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தார் .

ஓரளவிற்கு கேக்கும் கூட நன்றாகவே வந்திருந்தது .அதை டெகரேஷன் செய்து இன்னமும் அழகுபடுத்திக் கொண்டிருந்தனர் .

மூவரும் சேர்ந்து இத்தனை கலவரங்கள் நடந்தி முடிக்க மாலை 6:00 மணி நெருங்கியிருந்தது.

அப்போதுதான் காலையில் வெளியே சென்ற மதியழகன் திரும்ப வந்தது..

"ஹாய் டாடி வந்துட்டாங்க" என்று ஆர்வமாக கவி ஓட அவளை கையில் தூக்கியபடி உள்ளே நுழைந்தான்.

காலையில் சென்ற பொழுது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது .

மிகவும் சோர்வாக தெரிந்தான். "என்ன இவ்வளவு டல்லா தெரியுறீங்க காபி ஏதாவது குடிக்கிறீர்களா" என்று கேட்டபடியே கலக்க ஆரம்பிக்க .."கொடுங்க ஷர்மிளா.."

"என்ன இவ்வளவு சோர்வா தெரியுறீங்க.."

' தண்ணியில பயங்கர ஆட்டம் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் டேம் தண்ணியில இறங்கி விளையாண்டு இருக்கு.. பக்கத்திலேயே மீன் சமைச்சு சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வந்தாச்சு. நாள் ரொம்ப ஹேப்பியா போச்சு .. சீக்கிரமா டயர்ட் ஆகிடறேன்.. வயசாகுதோ.." கேட்டப்படியே அமர..

"அதெல்லாம் இல்லப்பா உங்களுக்கெல்லாம் வயசு ஆகல" என்று சூர்யா தந்தையிடம் கூறினான்.

"ஏன்டா.. ஏன் சொல்ல மாட்ட.. உனக்கு என் மேல அதிகமான பாசம் அதனால சொல்ற நீங்க சொல்லுங்க ஷர்மிளா..வயசு ஆயிடுச்சு தானே.."

"வயசுங்கறது வெறும் நம்பர் தான் எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்".

" அப்படின்னு யார் சொன்னாங்க ".

"இங்க ஒரு கூட்டமே அப்படித்தான் சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு ."

"சரி மத்தவங்க சொல்றதெல்லாம் வேண்டாம் நீங்க சொல்லுங்க நீங்க என்ன நினைக்கிறீங்க".

" 80 வயது நடிகர்கள் கூட தனக்கு சின்ன வயசுன்னு நினைச்சுக்கிட்டு நடிக்கிறாங்க அதுவும் சுறுசுறுப்பாக அப்படி இருக்கும் போது உங்களுக்கு எல்லாம் பெருசா வயசு ஆனதா எனக்கு தோணல .அதனால வெளியே இது மாதிரி சொல்லிக்கிட்டு சுத்தாதீங்க.. என்ன கவி நம்ம புறப்படலாமா ".

"அம்மா இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்துட்டு போகலாம்".

" காலைல கிளம்பும்போது உனக்கு என்ன சொன்னேன்.. 6 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு போயிடலாம்னு சொன்ன இல்ல ..

இங்க இருந்து லேட்டா போனா மறுபடியும் தூங்க ரகளை பண்ணுவ நைட் 11 மணிக்கு தூங்கினா காலையில உன்னை எழுப்பி புறப்பட வைக்க முடியாது.."

"குழந்தைகிட்ட ஏன் இத்தனை கண்டிஷன் போடறீங்க ஷர்மிளா கொஞ்சம் ஃப்ரீயா விடுங்களேன் நாளைக்கு லீவு என்கிறப்போ கொஞ்ச நேரம் இருக்கட்டுமே.."

"இங்க வந்த பிறகு கவிக்கு நிறையவே பிடிவாதம் ஆயிடுச்சு உங்களுக்கு இதெல்லாம் தெரியலை.. சொன்ன பேச்சு கேக்குறது இல்ல .நிறைய அடம் பிடிக்கிறா.."

"போதும் போதும் உடனே கம்லைண்ட் வாசிக்காதீங்க.. என்னை பொருத்தவரைக்கும் இரண்டு குழந்தைகிட்டையும் சரியா நடந்துக்கறீங்க..அதே மாதிரி இரண்டு பேரும் பொறுப்பா நடந்துக்கிறதா எனக்கு தோணுது".

' அப்படியே மனசுக்குள்ள நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் .

உண்மையிலேயே இரண்டு பேருமே இப்ப எல்லாம் சரி கிடையாது. சரியான நேரத்துக்கு ஹோம் ஒர்க் பண்றது இல்ல.

எப்பவுமே விளையாட ஆரம்பிக்கிறாங்க ".

"குழந்தைங்க தானே ஷர்மிளா இன்னும் கொஞ்ச நாள் இப்படித்தான் இருப்பாங்க .

என்ன கொஞ்சம் பெருசாகும்போது அவங்களுக்கே தெரியுமே ..இதை இந்த நேரத்துல செய்யணும் அப்படின்னு அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க".

" என்னவோ நீங்க சொல்றீங்க நான் நம்புறேன் கவி இன்னும் ஒரு அரை மணி நேரம் தான்.."

"உண்மையிலேயே நான் இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்குறேன் ஷர்மிளா .

நீங்க எல்லாம் பாத்துக்கோங்க. நான் கொஞ்ச நேரம் போய் படுத்தா நல்லா இருக்குன்னு தோணுது".

" என்ன ஆச்சு வழக்கமா இந்த மாதிரி சொல்ல மாட்டீங்களே.. உடம்புக்கு ஏதாவது செய்யுதா என்ன.."

" அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் நார்மலா தான் இருக்கிறேன் ஹெல்த்தியா தான் இருக்கிறேன்". சொல்லிவிட்டு நகர்ந்தான்.

இது பேச்சு எல்லாமே இரவு வரை தான் இருந்தது .இரவில் நன்றாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்திருந்தது. மதியழகனிற்கு கிட்டத்தட்ட 103 டிகிரி காச்சல் எனும் நிலையில் அவனை அறியாமல் அனத்த ஆரம்பித்து இருந்தான்.

அருகே படுத்திருந்த சூர்யா பயந்து முதலில் அழைத்து பேசியது ஷர்மிளாவுக்கு தான் .

"அம்மா அப்பாவுக்கு என்னவோ ஆயிடுச்சு .என்ன என்னமோ உளர்றாங்க நினைக்கிறேன்".

' என்னடா சொல்ற சாயங்காலம் நல்லாதான இருந்தார்."

" நல்லா தான் இருந்தாங்க மம்மி ஆனா இப்போ அவருக்கு என்னமோ ஆயிடுச்சு .நிறைய பேசிக்கொண்டே இருக்கிறார் ."

"நீ என்ன செய்ற சூர்யா முதல்ல தாத்தா கிட்ட போய் சொல்லி தாத்தாவை அழைச்சிட்டு வந்து என்னன்னு பாரு ".

"அம்மா நீங்க இப்போ இங்க வர மாட்டீங்களா ..அன்னைக்கு எனக்கு உடம்பு முடியாத அப்ப நீங்க தானே பார்த்துக்கிட்டீங்க ".

"சரிதான் உன்னை வச்சு என்ன செய்யறதுன்னு தெரியல .முதல்ல தாத்தா கிட்ட போய் சொல்லு. இந்த ராத்திரி நேரத்துல ஓடி வர முடியாது புரிஞ்சுதா .. தாத்தா கிட்ட சொல்லி என்னன்னு பாக்க சொல்லு."

"அப்படின்னா நீங்க இப்போ வர மாட்டீங்களா .."

"சூர்யா உண்மையை சொல்லு என்னை அங்க வர வைக்கிறதுக்கு தான் இந்த மாதிரி பொய் சொல்றியா.."

" ஐயோ இல்லம்மா நெஜமாவே அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. நான் வேணும்னா போனை பக்கத்துல கொண்டு போறேன் கேக்குறீங்களா".

" இல்ல அதெல்லாம் வேண்டாம் நீ முதலில் தாத்தா கிட்ட கூப்பிட்டு சொல்லு. மாத்திரை ஏதாவது இருந்தா பார்த்து கொடுக்க சொல்லு.

காலையிலகுள்ள சரியாகிவிடும் பெரியவங்க தானே.. நான் மறுபடியும் உனக்கு கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணுறேன் சரியா" என்று போனை வைத்தாள் .பிறகு அரை மணி நேரம் வரைக்கும் காத்திருந்தவள் மறுபடியும் அழைத்து பேச இம்முறை தேவன் பேசினார் .

"ஆமாம்மா இன்னைக்கு தண்ணியில ரொம்ப நேரம் விளையாண்டோம்னு சொன்னான் இல்லையா அவனுக்கு உடம்புக்கு ஒத்துக்கலை போல இருக்குது காய்ச்சல் அடிக்குது.."

"கவனிச்சுக்கோங்க அங்கிள்.. காலையில் வந்து பார்க்கிறேன்".

" சரிமா சரி நீ படுத்து தூங்கு பயப்படுவதற்கு எதுவும் இல்லை.

அவன் பார்க்க தான் கொஞ்சம் முரட்டுத்தனமா தெரிவான்..உடம்பு சரியில்லன்னா அப்படியே குழந்தையாக மாறிவிடுவான்.

அடிக்கடி உடம்பு சரி இல்லாம படுக்கற ஆளும் இல்லை ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி உடம்பு சரியில்லாமல் போய் இருக்கு .நான் பாத்துக்குறேன்" என்று போனை வைத்தார்.

அடுத்த நாள் காலையில எழுந்து புறப்பட்டு இருந்தால் .வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரம் முன்னதாகவே மகளை அழைத்துக் கொண்டு அங்கே புறப்பட்டாள்.

"உங்க டாடிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி சூர்யா நைட்டு கால் பண்ணினான். நம்ம போய் பார்த்துட்டு அப்படியே ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுடறேன் சரியா" என்று சொல்லி அழைத்துச் செல்ல அங்கே சென்று பார்த்து பிறகு ஐயோடா என்று இருந்தது .

அந்த அளவிற்கு மதியழகன் ரகளை செய்து கொண்டிருந்தான்.டாக்டரிடம் அழைத்துக் கொண்டு பார்க்கவும் விடவில்லை .

அதே நேரத்தில் மாத்திரை எதுவும் போடவும் இல்லை .உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் கலைத்து காய்ச்சல் அதிகமாக இருக்க, தன் போக்கில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான்.

வெளியே என்ன செய்வது என்று தெரியாமல் தேவன் அமர்ந்து இருக்க ,அவருக்கு அருகே சென்றவள்." என்ன அங்கிள் இப்படி பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் .அவருக்கு சுத்தமா முடியல டாக்டருக்கிட்ட அழைத்துக்கொண்டு போகலாம்.. இல்லாட்டி டாக்டர்யாவது வீட்டுக்கு வர சொல்லலாம்."

" அவன் எதுக்குமே சம்மதிக்க மாட்டேங்குறான் ம்மா.. மாத்திரையும் போடல..

சரியாகிவிடும் சரியாயிடும்னு நைட்ல இருந்து இப்படித்தான் சொல்லிகிட்டு இருக்கிறான் ."

"என்ன அங்கிள் டாக்டரை பார்த்தா உங்க பையனுக்கு இந்தனை பயமா.. ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறார் உடம்பு சரி இல்லைனா டாக்டர் கிட்ட போய் தான ஆகணும்.

வீட்ல இப்படியே படுத்து இருந்தா சரியாயிடுமா என்ன?"

" இதையே தான் நானும் அவனிடம் சொன்னேன். கேட்டால் தானே.. என்னால முடியல மா.. "

"அங்கிள் நான் வேணும்னா போய் பேசி பார்க்கட்டுமா.."

" தாராளமா போ மா அப்படியே இருந்தா.. இந்த கஞ்சியை கொஞ்சம் எடுத்துட்டு போயி அவனை குடிக்க சொல்லு .

என்னால சுத்தமா முடியல நைட்டும் சாப்பிடலை..இப்பவும் இதுவரைக்கும் சாப்பிடலை..

தலை வலிக்குது உடம்பு வலிக்குது கிட்ட வராதீங்கன்னு தான் கத்தறான். என்னை ரூம் பக்கத்துலயே போக விடவில்லை ."

"சரி கொடுங்க அங்கிள் .."

"நீ போய் பாருமா..நான் சூர்யாவையும் கவியையும் ராம்கூட ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறேன்". என்று அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.

இங்கே மதியழகனை வந்து பார்த்தால்.. தலைவலி அதிகமாக இருக்கும் போல.‌ ஏதோ ஒரு கைக்குட்டையை எடுத்து தலையோடு இருக்கி கட்டியபடி கமிழ்ந்து படுத்து கிடந்தான் .
முதலில் சிரிப்புதான் முகத்தில் தோன்றியது இவளுக்கு..

என்ன இது சின்ன புள்ளத்தனம் என்பது போல இருந்தது அவனுடைய செய்கை.. அருகில் சென்றவள் குரல் கொடுத்தாள்.

"கொஞ்சம் கண்ணை திறந்து பாக்கறீங்களா .."எதுற்கும் அசைவமாக தெரியவில்லை .

லேசாக நெற்றியைத் தொட்டு பார்க்க காய்ச்சல் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

இவள் கேட்டதற்கு ..ம்..என்ற பதில் மட்டுமே திரும்ப வந்தது.

"இப்படி எதுவுமே சாப்பிடாம மாத்திரையும் போடாம படுத்திருந்தா சரி ஆகிடும்னு யாராவது சொன்னாங்களா..

கொஞ்சம் கண்ணு முழிச்சு பாக்குறீங்களா "என்று அசைக்க.." விடு சங்கரி தொந்தரவு பண்ணாத .."என்று கூறினான்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை இவளுக்கு.. நன்றாக கவனிக்கையில் தான் தெரிந்தது அவனுடைய மனைவியின் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டு இருக்கிறான் என்று ..

"இத பாருங்க நான் சங்கரி இல்ல ஷர்மிளா ..கொஞ்சம் கண்ணை முழிச்சு பாருங்க "என்று மறுபடியும் லேசாக அசைக்க..

"சங்கரி..ரொம்ப தலை வலிக்குது என்னால கண் திறந்து பார்க்க முடியல .நீ முதல்ல இங்கிருந்து போ.."

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது சட்டென்று இப்படி கத்தும் போது.. "இத பாருங்க இதெல்லாம் வேலைக்காகாது.. முதல்ல கண்ணை திறந்து பாக்கறீங்களா ".லேசாக தட்டி கொடுக்க சட்டென்று கையை தட்டி விட்டான்.

"மதி என்ன இது ..என்ன சின்ன குழந்தை மாதிரி அடப்பிடிச்சி கிட்டு" என்று மறுபடியும் மெல்ல அசைக்க.. "சொன்னா கேக்க மாட்டியா "என்று கத்திய படியே திரும்பி இப்போதுதான் நன்றாக பார்த்தான்.

இவன் கத்திய கத்தலில் பயத்தில் இரண்டடி பின்னால் சென்றவள் திரு திருவென விழித்துக் கொண்டிருக்க.. சிரமப்பட்டு பார்த்தவனுக்கு இப்போதுதான் முகம் நன்றாக அடையாளம் தெரிந்தது .

"ஷர்மி.. ஷர்மிளா நீங்க எப்ப வந்தீங்க "என்று கேட்டுப்படியே மெல்ல எழுந்து அமர்ந்தான்.

" அப்பா இப்படித்தான் பயங்காட்டுவீங்களா ..உடம்பு சரியில்லன்னா குரல் இவ்வளவு அதிகமா எல்லாம் வருமா என்ன ?ஒரு நிமிஷத்துல ஹார்ட் அட்டாக் வந்துரும் போல இருக்கு .அந்த கத்து கத்துறீங்க "என்று படியே அருகில் இருந்த கஞ்சியை இவன் புறமாக நீட்டினாள்.

'இதை குடிச்சிட்டு மாத்திரை ஏதாவது இருந்தா போடுங்க."

" மாத்திரை எல்லாம் வேண்டாம் ஷர்மிளா எல்லாம் சரியாகிவிடும்.."

" எப்படி சரியாகும் நல்லா காய்ச்சல் அடிக்குது .குறையற மாதிரியே தெரியல.. என்னையவே இப்படி பயம் காட்டுறீங்க ..

அப்போ வீட்ல அங்கிளை என்ன பாடு படுத்து இருப்பீங்க .."

"ஐயோ நான் அவங்களை பார்த்து எதுவும் பேசலையே .."

"ஆமாமாம் வந்ததும் சொன்னாங்க.. என்ன செய்யறதுன்னு தெரியாம ஹால்ல பயந்து போய் உட்கார்ந்துட்டு இருக்காங்க .

முதல்ல இந்த கஞ்சியை குடிங்க அதுக்கு பிறகு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன் அதை மட்டும் செஞ்சா போதும்.."

"டாக்டர்லாம் வேண்டாம் ஷர்மிளா வேணும்னா டேப்லட் போட்டுகிறேன்.."

" டேப்லெட் தானே தாராளமா போடலாம் .முதல்ல அங்கிளை அழைத்து கேக்கறேன்.

என்ன சொல்றாரோ அதன் படி தான் செய்யணும்.. டாக்டர்கிட்ட போகணும்னா கட்டாயமா போய் தான் ஆகணும் .நான் விட எல்லாம் மாட்டேன்".

" ஐயோ ஏன் இப்படி அடப்பிடிக்கிறீங்க .."

"அடமா.. சரிதான் உங்களை விடவா பிடிச்சிட்டேன் ..இப்பதான் தெரியுது உங்கள பத்தி.."

"என்ன தெரிஞ்சுக்கிட்டிங்க.."

"டாக்டருக்கு பயந்தவரு…அப்புறம் ஊசிக்கு பயந்தவர்ணு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் சரியா.. "

"எனக்கு சின்ன வயசுல இருந்தே ஊசின்னா பயம்தான்.. நான் என்ன செய்யறது.

எங்க அப்பா எப்பவுமே ஊசியை காட்டி மிரட்டி மிரட்டி தான் வேலையே வாங்கினார்.."

"அது சின்னவங்களா இருக்கும்போது பயந்தது.. அதுக்கு இப்பவும் அப்படியே பயப்படனுமா.."

" அப்படின்னு யார் சொன்னாங்க.."

"உங்க கிட்ட இப்ப வாய் பேசுற ஐடியாவுல இல்ல .நீங்க குடிச்சு முடித்தால் இதை எடுத்துட்டு போய் கீழ வச்சுட்டு அங்கிள் கிட்ட கேட்டுட்டு வரேன்.

அவர் என்ன சொல்றாரோ அதுதான் பைனல் .. டாக்டர் கிட்ட போகணும்னா வந்து தான் ஆகணும்..

தனியா எங்கேயும் போக வேண்டாம் நான் அழைச்சிட்டு போறேன்.. இப்ப என் பின்னாடி கிளம்பி வரீங்க .."

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் சங்கரி .."

"என்னது சங்கரியா.. அது என்ன திடீர்னு உடம்பு சரியில்லாமல் போனால் ஓய்ப் ஞாபகம் வந்துடும் போல இருக்கு .நான் ஷர்மிளா.."

" ஓகே ஷர்மிளா அதெல்லாம் வேண்டாம்.."

"சரி அப்புறம் என்னதான் பண்ணலாம்னு இருக்கீங்க டாக்டர் கிட்ட வர மாட்டீங்க .

சார் மாத்திரையும் போட மாட்டீங்க உடம்பு எப்படி சரியாகும் ..இப்படியே தலையில் கர்ச்சிப் கட்டிட்டு இருந்தால் கம்மி ஆயிடுமா.. இல்ல படுத்திருந்தா எல்லாம் சரி ஆயிடுமா..

ஒரே ஒரு ஊசி போட்டா வேலை முடிஞ்சிட போகுது இல்லையா.. ஊசிக்கு பயம்னா அட்லீஸ்ட் டேப்லெட் வாங்கி போடலாம்ல .."

"ஓகே ஷர்மிளா நான் வேணும்னா ஒன்னு செய்யறேன்".

"என்ன செய்வீங்க சொல்லுங்க கேக்குறேன் ".

"வந்து நான் வேணும்னா டாக்டர்கிட்ட கேட்டு மெடிசன் ஏதாவது எடுத்துக்கறேனே.."

" எதா இருந்தாலும் சீக்கிரம் செய்யணும் மதி .இப்படி படுத்து இருந்தா நல்லாவா இருக்குது .

அப்பா ரொம்ப பயந்து போய் இருக்கிறார் .உங்களை நம்பி வீட்ல ரெண்டு பேர் இருக்காங்க ஞாபகம் இருக்குதா ..

ஒன்னு சின்ன பையன் இன்னொருத்தர் வயசானவரு.. அவங்களை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உங்க கிட்ட தானே இருக்குது .

நீங்களும் சின்ன பிள்ளை மாதிரி இந்த மாதிரி பண்ணினா என்ன அர்த்தம் ..பார்க்கற எனக்கே இத்தனை பயமா இருக்கு கூட இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும் ."

"சும்மா சும்மா என்னையவே குறை சொல்லாதீங்க .என்னை பத்தி தான் அவருக்கு தெரியுமே .."

"சரி உங்களை பத்தி தெரியும் . உடம்பு சரியில்லாமல் முடியாமல் படுத்திருக்காங்கன்னா பயம் வரத்தானே செய்யும் .

இப்ப வர்ற காய்ச்சல் எல்லாமே வித்தியாசமா இருக்குது .திடீர்னு வைரல் ஃபீவர் சொல்றாங்க டைபாய்டு ,மலேரியா என்று விதவிதமா.. பத்தாததுக்கு இந்த கொரோனா வேற ..

என்னவாக இருக்கும் ஏதாவது ஆகிடுமோ இப்படின்னு பயப்படுறது நியாயம் தானே .."

"ஓகே ஓகே போதும் இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம். நான் டாக்டர் கிட்டயே வரேன் சரியா .

போன் பண்ணி இப்பவே டைம் கேட்டு வைக்கிறேன் . அந்த நேரத்துக்கு போனா போதும் ."

"சரி அதையாவது செய்யுங்க இங்கே நான் வெயிட் பண்ணுறேன் "என்று நகந்தால் .

"ஆமாம் ஷர்மிளா என்னை எதுக்காக இப்படி விரட்டிகிட்டு இருக்கீங்க .நீங்க பேங்குக்கு போகலையா .."

"நீங்க பண்ணற கலவரத்துல எங்கேயும் போகிற ஐடியா எனக்கு இல்ல.

நான் இன்னைக்கு லீவ் தான் எடுக்க போறேன்.."

" அடிக்கடி லீவ் எடுத்தீங்கன்னா பேங்க்காரனே உங்களை வேலையை விட்டு துறத்த போறான்."

" ஹலோ எங்களுக்கு தெரியும் நாங்களும் பொறுப்பானவங்க தான் புரிஞ்சுதா .

எனக்கு ஏற்கனவே நிறைய லீவ் எடுக்க பர்மிஷன் இருக்குது .இந்த அஞ்சு வருஷத்துல ஒரு நாள் கூட லீவு எடுத்ததில்லை .

ஒரு மாதம் லீவ் எடுத்தா கூட ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டாங்க .."

"சரி சரி நம்பிட்டேன் நான் எதுவும் சொல்லலை நானே பாவம் இல்லையா .. ஒரு காய்ச்சக்காரன் கிட்ட இப்படி சரிக்கு சரியா பேசினா எப்படியாம்.."

"இனி பேசலை.. சீக்கிரம் புறப்படுங்க சரியா" என்றபடி நகர்ந்தால்.

மேலும் இரண்டு நாள் கழித்த பிறகு அவனுக்கு ஒரு அளவிற்கு சரியாகி இருந்தது .

அந்த இரண்டு நாளுமே அவ்வப்போது வந்து பார்த்து விட்டு நகர்ந்தாள்.

முக்கியமாக மாத்திரை போடுகிறானா என்பதை கவனிக்கும் பொறுப்பு இவளிடம் இருந்தது.
.
உடல்நிலை சரியான பிறகு மதியழகன் இடம் ஒரு மாற்றம் தென்பட்டது .

ஆரம்பத்தில் ஷர்மிளாவிற்கு எதுவுமே புரியவில்லை .ஆனால் எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு இறுக்கம் ,அமைதி அவனிடம் தெரிவதாக தோன்ற ,ஆரம்பத்தில் இதைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பத்து நாட்களுக்கு மேலாக இதே நிலையில் இருந்த போது மெல்ல பேச்சு கொடுத்தாள்.

" என்ன மதி சார் ஏதாவது பிரச்சனையா ..நானும் சமீபகாலமா உங்களை கவனிச்சுக்கிட்டு இருக்கிறேன்.

என்னவோ உங்ககிட்ட சரியில்ல பழைய மாதிரி இல்லையொன்ணு தோணுது.. "

"அப்படியா தோணுது உங்களுக்கு.. உண்மைதான் ஷர்மிளா என் மனசுக்குள்ள சின்ன குழப்பம் ஒன்னு என்ன சுத்திக்கிட்டு இருக்கு.

நான் யோசிக்கிறது சரியா இல்லையா என்று கூட எனக்கு தெரியல .ஆனா…"

" சொல்லுங்க ஆனா என்ன? உங்க குழப்பத்துக்கு என்கிட்ட பதில் இருக்குன்னா தாராளமா கேளுங்க..

எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன்‌ உங்க மனசுக்குள்ளேயே குழம்பி கொண்டு இருக்க வேண்டாம் இல்லையா .

ஏன்னா நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நம்மள விடவும் பக்கத்துல இருக்கிறவங்க அதற்கான சொல்யூஷன ரொம்ப அழகா சொல்லுவாங்க.

நான் இதை நிறைய முறை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன்.

நமக்குன்னு வரும் போது நம்மகிட்ட நிறைய குழப்பம் இருக்கும் அதே மத்தவங்க கிட்ட கேட்கும் போது அவங்க அவங்க நிலையிலிருந்து பதில் சொல்லுவாங்க .

பெரும்பாலும் அது சரியா இருக்கும் அதனால தான் கேட்கிறேன்." இவனின் பதிலுக்காக முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க ..

இவனோ மனதில்' பிரச்சனைக்கு காரணமே நீதானே.. உன்கிட்டையே நான் எப்படி கேட்க முடியும் .நான் கேட்டா நீ என்ன மாதிரி பதில் சொல்வேண்ணு புரியலையே 'என்று நினைத்தபடியே கையால் நெற்றியே மெல்ல தேய்த்து கொடுத்தான்.

" என்ன ஆச்சு மறுபடியும் தலைவலி ஏதாவது இருக்குதா ..டாக்டர் வேற சொன்னாங்களே ..

டைபாய்டு மாதிரி இருக்குது விட்டு விட்டு பீவர் வர வாய்ப்பு இருக்கு அப்படின்னு "என்று திரும்ப கேட்க..

"இத்தனை அக்கறை வேண்டாம் ஷர்மிளா. மத்த எல்லாத்தையும் தாங்குற என்னால இந்த மாதிரி அக்கறையா பொறுப்பா கவனிக்கும்போது தாங்க முடிகிறது இல்ல "கோபமாக சொல்லிவிட்டு வெளியேறினான்.

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை "என்ன ஆச்சு இவருக்கு நம்ம நார்மலா தான பேசினோம். எதுக்காக இப்ப கோபத்தோட வெளியே போறாரு "என்று நினைத்தபடி நகர்ந்தாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது .இரண்டு மாதம் தாண்டி இருந்தது .ஆனாலுமே ஏதோ ஒரு ஒதுக்கம் அவனிடம் காணப்பட்டது.

இரண்டு முறை கேட்டுப் பார்த்தால் பிறகு இவளுமே விட்டுவிட்டால்.. "அவரோட பிரச்சினை அவருக்கு நம்ம கேட்டு தெரிஞ்சிக்கிறதால நாம என்ன செய்ய முடியும் .

ஊருக்குள்ள பெரிய ஆள் ஏற்கனவே ரெண்டு பேரோட போட்டோவையும் போட்டு பப்ளிசிட்டி பண்ணினாங்க..

இப்ப வேற மாதிரி ஏதாவது பிரச்சனை வந்துடும்னு கூட யோசிக்கிறார் போல இருக்கு .

நாம நம்ம வேலையை பார்த்துட்டு நாமளும் ஒதுங்கிக்கிறது நல்லது" என்று மனதில் நினைக்க அதன் பிறகு அவளால் இயல்பாக நாட்களை நகர்த்த முடிந்தது.

ஷர்மிளைவை பார்க்கும் போது எல்லாமே ஏதோ ஒரு வித யோசனையோடு அவளது முகத்தை பார்ப்பதும் பிறகு தலையாட்டி விட்டு நகர்வதுமாக நகர்ந்தது .

இவனை ஷர்மிளா கண்டுகொண்டாலோ இல்லையோ தேவன் அழகாகவே கண்டு கொண்டிருந்தார் .

ஒருநாள் தன்னுடைய மகனை அழைத்து கேட்டும் விட்டார் .

"சொல்லுடா என்ன பிரச்சனை உனக்கு ..முன்ன மாதிரி இல்ல மதி.. உன்னோட பழக்க வழக்கத்துல அத்தனை மாற்றம் தெரியுது. உனக்கு இது புரியுதா".

" என்னப்பா பெரிய மாற்றம் நான் எப்பவும் போல தான் இருக்கிறேன் ஏன் திடீர்னு இந்த மாதிரி எல்லாம் கேக்குறீங்க ".

"எனக்கு உன்னை நல்லா தெரியும்டா என்ன உன் மனசுக்குள்ள தோனி கிட்டு இருக்கு .என்ன பிரச்சனை..

ஏன் அதுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரி முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருக்கிற..

பிரச்சனை என்னன்னு சொன்னாதான் அதற்கான பதில் கிடைக்கும்.

அத விட்டுட்டு உன் மனசுக்குள்ள போட்டு புலுங்கிகிட்டு இருந்தா கடைசி வரைக்கும் பதில் கிடைக்காது ".

அப்பா வந்து ..என்று தயங்கியவன் "நான் யோசிக்கிறது சரியா வருமா இல்லையான்னு எனக்கு தெரியலப்பா .

முன்ன ஒரு தடவை நீங்க சொன்ன விஷயம் தான் .ஆனால் இப்போ அது நடந்தால் நல்லா இருக்கும்னு தோணுது ".

"புரியலடா இப்படி சுத்தி வளைச்சி பேசினா எனக்கு எப்படி புரியும் நேரடியா சொல்லு. என்ன பிரச்சனை".

" வந்து பா ஷர்மிளா கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கலாமாண்ணு தோனி கிட்டு இருக்கு ".

"என்னடா சொல்லற..நீ சொல்றது உண்மையா …கேட்கவே இவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா.. இது நடந்தால் எத்தனை பேர் சந்தோஷப்படுவாங்க தெரியுமா?

கவியும் சரி சூர்யாவும் சரி அத்தனை சந்தோஷப்படுவாங்க .இவ்வளவு லேட்டா சொல்ற ..

இதுதான் உன்னோட குழப்பத்துக்கு காரணமா.. நானும் நிறைய முறை கவனிச்சிருக்கிறேன்.

இப்ப எல்லாம் அடிக்கடி ஷர்மிளா முகத்தை பார்க்கிறதும் பிறகு பேசாம போறதும்.. பேசாமல் நானே அந்த பொண்ணு கிட்ட பேசட்டுமா.. "

"வேண்டாம்பா அவசரப்பட வேண்டாம். நானே பார்த்து பேசுகிறேன் .

இத்தனை நாளா நம்ம வீட்டுக்கு வந்து போய்கிட்டு தான் இருக்கிறா.. அது சூர்யாவுக்காகன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க..

நல்ல பிரண்ட்லியா இருக்குற அந்த பொண்ணு இப்படி கேட்ட பிறகு சுத்தமாவே வராமல் போயிட்டா சூர்யா ரொம்ப வருத்தப்படுவானே.."

"அப்படி எல்லாம் நடக்காது மதி எதுக்கு நம்பிக்கை இருக்குது.. முன்னாடி எப்படியோ இப்போ இந்த விஷயத்தை கேட்டால் கட்டாயமா சரின்னு தான் சொல்லுவா ".

"அப்படிங்கறீர்களா சரிப்பா நான் கேட்கறேன்".

" எப்படா கேட்ப.."

" ஹய்யோ அவசரப்பட்டால் என்ன அர்த்தம். உடனே எல்லாம் என்னால கேட்க முடியாது.அதற்கு நேரம் காலம் பார்க்கணும்ல.."

நீ எதையோ பாரு.. நான் நல்ல நாள் பார்க்க ஆரம்பிஞ்சுடறேன்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கோ..

நீங்க நிம்மதியா குடும்பம் நடத்துறத பார்த்தாலே போதும் என்னோட கடைசி காலம் நிம்மதியா கழியும்."

அடுத்த நாள் காலையில் இவன் புறப்பட்டு வரும் போது காலண்டரில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

" என்னப்பா காலையிலேயே காலண்டரை எடுத்து பாத்துக்கிட்டு இருக்கீங்க".

" வேற என்னடா பார்க்க போறேன். எல்லாம் உன்னோட கல்யாணத்தை பத்தி தான் .

நீ சொன்னதுக்கு அப்புறம் என்னால இருக்கவே முடியல. எல்லாமே உடனே நடந்திடும் அப்படிங்கிற மாதிரியான ஒரு நம்பிக்கை வந்துடுச்சு .

அதனாலதான் காலைல காலண்டர் எடுத்துட்டு உட்கார்ந்தாச்சு "என்றவர் அப்போது தான் இவனை நன்றாக கவனித்தார்.

வழக்கத்திற்கு மாறாக உடை அணிந்து இருந்தான். பேண்ட் சட்டை அணிந்தவன் அதற்கு மேல் ஒரு கோர்ட் அணிந்து ஏதோ ஒரு உயர் அதிகாரி தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வது போல காணப்பட்டான்.

"கோர்ட் எல்லாம் போட்டுட்டு எங்க புறப்பட்டுட்ட .."

"அப்பா ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டா அதை லேட் பண்ண கூடாது .உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே ..

முடிவு பண்ணினதுக்கு பிறகு எதுக்காக காத்திருக்கணும் அதனாலதான் இன்னைக்கே கேட்கலாம்ணு முடிவோட புறப்பட்டாச்சு ".

"அப்புறம் என்னடா.. நான் நினைச்சதும் சரியாத்தான் போச்சு. பாரு நான் நல்ல நேரம் பார்த்துகிட்டு இருக்கேன் .

நீ அந்த பொண்ணு கிட்ட கேட்க புறப்பட்டுட்ட.. இதைவிட பொருத்தமா என்ன வேணும் "இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே சூர்யா அங்கே வந்தவன் ."சூப்பரா இருக்கீங்க "என்று ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான் .

"உங்க அப்பா என்ன சொல்றாங்க தெரியுமா சூர்யா.ஷர்மிமாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு கேட்டான். நீ என்ன சொல்ற.."

"நிஜமாவே கூப்பிட்டு வர போறீங்களா.. இன்னைக்கு வந்துடுவாங்களா".

' அப்படி எல்லாம் உடனே வர முடியாதுடா ..அதுக்கு உங்க அப்பா ஷர்மிளாவை கல்யாணம் பண்ணிக்கணும் .

இப்பதான் உங்க அப்பாவே ஒரு மாதிரி சரின்னு சொல்லி இருக்கிறான் .

இனி உங்க அம்மா என்ன பதில் சொல்லுவாங்களோ அதையும் பாக்கணும் இல்ல.."

" அதெல்லாம் சரின்னு சொல்லுவாங்க பா .ப்ளீஸ் பா நீங்க போய் பேசி முடிஞ்சா இன்னைக்கு கூப்பிட்டு வந்துருங்க ."

"என்னடா இவ்வளவு அவசரப்படற.. அப்படி எல்லாம் உடனே கூப்பிட்டுட்டு வர முடியாது. உங்க அப்பா பேச போறேன்னு இப்பதான் சொல்லி இருக்காங்க சரியா.."

"அப்பா போதுமே.. ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டு என்னை கிண்டல் பண்ணறது போதும் .நான் போய் நேரா பேசிட்டு அப்புறமா உங்ககிட்ட வந்து சொல்லுறேன் சரியா "என்று நகர்ந்தான்.

காரை எடுத்துக்கொண்டு நேராக ஷர்மிளாவின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த ,அங்கே ஷர்மிளாவிற்கு பதிலாக வேறு ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தார்

" யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும். இங்க எதுக்காக வந்திருக்கிறீங்க "என்ற கேள்வியோடு ..கொஞ்சம் யோசனையோடு வண்டியை நிறுத்தியவன் ."இங்க ஷர்மிளா இருக்காங்க தானே".

" என்னோட மருமகளை பார்க்க வந்தியா ..ஒரு நிமிஷம் இரு" என்றவர் வேகமாக உள்ளே குரல் கொடுத்தார் .

"இங்க பார் ஷர்மி.. உன்னை பார்க்க யாரோ வந்திருக்கிறாங்க" என்று சொல்ல அடுத்ததாக கதவை திறந்து கொண்டு இன்னொரு இளைஞன் வெளியே வந்தான்.

"என்னங்க பேசணும் அவங்க முக்கியமான வேலையாக இருக்கிறாங்க..சமையல் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்னன்னு சொல்லுங்க .நான் உள்ளே சொல்லிடுறேன் ."இப்போது இன்னமுமே முகம் சுருக்கியவன் "நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க" என்று கேட்டான்.

" நான் உங்ககிட்ட கேட்டா நீங்க என்கிட்ட கேப்பீங்களா ..

நான் சொல்றது உங்களுக்கு புரியலையா. ஏதாவது விஷயம்னா சொல்லுங்க அப்படியே அங்க சொல்லிடுறேன் ".

'நீ என்ன நடுவுல போஸ்ட்மேன் வேலை செய்றியா ..நான் ஷர்மிளாவை பார்க்க வந்திருக்கிறேன் .அவங்களை வெளிய வர சொல்லு .இல்லன்னா நான் இறங்கி உள்ள வரணுமா" என்று இறங்க அதற்குள் கவி ஓடி வந்திருந்தால்.

" உள்ளே வாங்க டாடி"என்று அழைக்க.." டாடியா.. இங்க வரும் போது விசாரிச்சோமே.. அவர் இவர் தானா ..சரி சரி எதா இருந்தாலும் இங்கேயே நின்னு பேசிட்டு கிளம்புங்க .

ஷர்மிளா.. ஷர்மிளா இங்கே பாரு யாரோ வந்திருக்கிறார். இவர்கிட்ட பேசிட்டு அனுப்பி வை "என்று சொன்னபடியே அந்த பெண் உள்ளே நுழைய ,அதற்கு மேல் அவன் இறங்கி வீட்டுக்குள் எல்லாம் செல்லவில்லை நின்ற இடத்திலேயே நின்று கொண்டான்.

" கவி நீ போய் உங்க அம்மாவை வரச் சொல்லு "என்று சொல்ல அதே நேரத்தில் ஷர்மிளா வீட்டிற்குள் இருந்து வந்து விட்டாள்.

" என்ன மதி.."என்ற கேள்வி மட்டுமே இவளிடத்திலிருந்து வந்தது .

"ஆமாம் நீ யாரு எதுக்காக வந்திருக்கீங்கன்னு இன்னும் சொல்லலை" என்று அந்த இளைஞன் கேட்டுக் கொண்டிருக்க...

" ப்ளீஸ் நீங்க உள்ளே போங்க. நான் பேசி அனுப்பிட்டு வரேன்" என்று சொன்னவள் இவனிடம் வந்து.. "சொல்லுங்க என்ன விஷயம் காலையிலேயே வந்திருக்கிறீங்க..

பொதுவா இந்த நேரத்துக்கு நீங்க வர்ற வழக்கம் கிடையாது".

" முக்கியமான விஷயம் பேசலாம்னு புறப்பட்டு வந்தேன். ஆனா இப்ப இருக்கிற சூழ்நிலையை பார்த்தால் எதுவும் பேச முடியாது போல தோணுது .பிறகு மெதுவா பேசுகிறேன்" என்றவன் உள்ளிருந்த ஸ்வீட்டை எடுத்து நீட்டினான்.

" அப்பா கொடுக்க சொன்னாங்க" என்று சொல்ல ஸ்வீட் பாக்கெட்டை நீட்ட கையில் வாங்காமல் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

" என் முகத்தை பார்த்தால் என்ன அர்த்தம் .."

"உண்மையிலேயே அப்பா இதை கொடுத்து விட்டாங்களா…எனக்கு நல்லா தெரியும் மதி சார் உங்களோட வழக்கம் என்னன்னு..

என்ன விஷயத்துக்காக வந்தீங்களாம்.. அதை இப்ப நீங்க சொல்லல.. அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது .

ஓகே எப்ப தோணுதோ வந்து சொல்லுங்க "என்று நகர போக.." ஒரு நிமிஷம் ஷர்மிளா இவங்கெல்லாம் யாரு? உன்னோட சொந்தக்காரங்களா ..

எப்ப வந்தாங்க இத பத்தி எதுவுமே நீ என்கிட்ட சொல்லல .."

'நேத்து நைட்டு வந்தாங்க இவங்க பரணியோட அப்பா அம்மா பரணியோட தம்பி மூணு பேரும் இங்க வந்து இருக்காங்க".

" என்ன விஷயமா வந்திருக்கிறார்கள்.. "

"எதுக்காக வருவாங்க .கவி அவங்களுக்கு வேணுமாம். அவளை கேட்டுட்டு தான் வந்திருக்கிறாங்க.."

" நீங்க ..நீங்க என்ன சொன்னீங்க கவி .உங்களோட குழந்தை அவளுக்காக தான நீங்க இத்தனை நாள் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க..

அவங்க கேட்டா நீங்க தூக்கி கொடுத்துடுவீங்களா .."

"அப்படி கிடையாது..அவங்க வேற ஒரு ஆப்ஷனும் சொல்றாங்க".

" புரியல".

" அவரோட பையனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம்.. ஒன்னு குழந்தையே கொடுக்கணும்..

இல்லாட்டி என்னோட மகனை கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொல்றாங்க ".

"இது எந்த வகையில் நியாயமாம்.. கேட்கிறதுக்கு கொஞ்சம் கூட நல்லா இல்லை ".

"அது எனக்கும் புரியுது உங்களுக்கும் புரியுது ஆனா அவங்களுக்கு புரியலையே ..

அவங்க பெரிய பையன் பண்ணின தப்புக்கு சின்ன பையனை கல்யாணம் பண்ணி கொடுத்து சரி பண்ண பார்க்கிறாங்க."

" அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க.. ஒருவேளை நீங்கள் சம்மதிச்சிட்டீங்களோ.."

" இப்ப நான் அப்படி சொன்னேனா எதுக்காக என்கிட்ட வர்றீங்க".

" ஓகே ஓகே நான் எதுவும் கேட்கலை.. போதுமா.."

" நானும் அத தான் சொல்றேன் நீங்க எதுவும் கேட்க வேண்டாம் .நீங்க கிளம்புங்க".

" ஷர்மிளா நான் வேணா உள்ளே அவங்க கிட்ட வந்து பேசி பார்க்கட்டுமா.. நீங்க நினைக்கிற மாதிரி ஷர்மிளா இல்ல தேவையில்லாம அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் அப்படின்னு .."

"ப்ளீஸ் வேண்டாம் மதி..அது என் பிரச்சனை ..என்னால சமாளிக்க முடியும் .

நானே பார்த்து பேசி அனுப்பி வெச்சிடுவேன் .நேத்து நைட்டு வந்தாங்க ..

வந்தவங்களை உடனே வெளியே போன்னு என்னால சொல்ல முடியலை.. ஆனா சொல்லி அனுப்பி வச்சிடுவேன் நீங்க புறப்படுங்கள்".

" ஆக என்னோட குடும்ப விஷயத்துல நீ தலையிடாதே அப்படின்னு தெளிவா சொல்ற அப்படித்தானே.."

" அப்படி இல்ல நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க தேவையில்லாம இங்க பிரச்சனை வேண்டாம் .

எத்தனை நாள் கழிச்சு வந்திருக்காங்க பொறுமையா என் பக்கத்து நியாயத்தை சொல்லி நான் அனுப்பி வெச்சிடறேன்."

" ஏதோ செய்யுங்க ஷர்மிளா இதுக்கு மேல நான் எதுவும் கேட்கல" என்றபடி நகர போக, அதே நேரத்தில் கவி உள்ளிருந்து ஓடி வந்தாள்.

" அப்பா வீட்டுக்குள்ள வாங்கப்பா ஏன் அப்படியே வெளியே போறீங்க.. எனக்கு இங்க வந்திருக்கிற யாரையுமே பிடிக்கலைப்பா.

அவங்க என்னை கூப்பிட்டுட்டு போயிடுவாங்கன்னு சொல்றாங்க நேத்து அம்மா கிட்ட கூட அதை தான் சொன்னாங்க ."

"அப்படியெல்லாம் யாராலயும் உடனே கூப்பிட்டு போக முடியாது கவி .சும்மா சொல்லுவாங்க அவ்வளவுதான்..

ரெண்டு நாள் இருந்துட்டு கிளம்பிடுவாங்க பயப்படாத .."

"அப்படி இல்ல தெளிவா அவங்க பேசினதை கேட்டேனே ..அம்மாவையும் கல்யாணம் பண்ணி மொத்தமா நம்ம புறப்பட்டு விடலாம் அப்படிங்கற மாதிரி சொன்னாங்க. அம்மா நைட்டெல்லாம் அழுதுகிட்டு இருந்தாங்க தெரியுமா ".

"சரிடா சரி ஏதாவது பிரச்சனைனா நானே வரேன் புரிஞ்சுதா இப்போ நீ உள்ளே போ நான் வரேன்" என்று புறப்பட்டான்.
 

NNK22

Moderator
15

மதியழகன் வந்து சொல்லப் போகும் செய்திக்காக காத்திருந்தார் தேவன்.

மதியழகன் வீட்டிற்கு வந்ததோ இரவு 10 மணிக்கு ."மதி காலையில் இருந்து நான் உனக்காக காத்துகிட்டு இருக்கேன் தெரியுமா .

ஆனால் நீ இப்பதான் வீட்டுக்கு வர்ற.. ரெண்டு முறை போன் பண்ணினேன். நீ எடுக்கவே இல்ல."

" அப்பா.. என்னப்பா தெரியணும் என்ன உங்களுக்கு தெரியணும்.. சூர்யா எங்க தூங்கிட்டானா.." சற்று குழரலோடு வார்த்தைகள் வர தேவனுக்கு கோபம் வந்தது .

"என்ன மதி செஞ்சுட்டு வந்து இருக்கிற .. இத்தனை நாள் இந்த பழக்கம் இல்லை என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்.

மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா. சங்கரி இருக்கும்போது ஒருமுறை இப்படி வந்த..

அதுக்கு பிறகு இத்தனை நாளா நீ நல்லவிதமாக நடந்துக்கறன்னு நினைச்சுட்டு இருந்தால் இன்றைக்கு மறுபடியும் குடிச்சிட்டு வந்திருக்கிற அப்படித்தானே "கோபமாக கேட்டார் ..

"ஆமா குடிச்சேன் இப்ப என்னங்கறீங்க ..என்ன தப்பு இருக்கு. எனக்கு மனசு சரியில்ல..
அதனாலதான் குடிச்சேன் ".

"என்னடா உளரிக்கிட்டு இருக்கிற.. காலையில் கேட்க போறேன்னு போனியே என்ன ஆச்சு .

அந்த ஷர்மி பொண்ணு உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா அதுக்காக தான் இப்படி எல்லாம் செய்யறியா.."

" பிடிக்கலைன்னு சொன்னா நான் என்ன காரணம்னு அவ கிட்ட கேட்டு இருப்பேன் பா..ஆனால் இங்க நடந்தது வேற ..உங்களுக்கு தெரியாது ".

"என்னடா தெரியாது நீ சொன்னா தெரிஞ்சுக்க போறேன்".

"அப்பா இந்த கல்யாணம் நடக்காது பா. திரும்பத் திரும்ப இதை பத்தி பேச வேண்டாம் .அந்த ஷர்மிளா பொண்ணு எல்லாம் எனக்கு ஏத்த பொண்ணே கிடையாது.

நிமிஷத்துக்கு நிமிஷம் மனசை மாத்திக்கிற பொண்ணுங்களை நம்பி கல்யாணம் வரைக்கும் பேச்சுவார்த்தையை கொண்டு போனது என்னோட தப்புதான்..

ஆனா காதல்.. அந்த காதல் அந்த பொண்ணு மேல தானே எனக்கு வந்துச்சு .நான் என்ன செய்யறது.."

" என்னடா உளறிக்கிட்டு இருக்குற.. நீ சொல்ற எதுவுமே எனக்கு புரியல என்ன தான் நடந்துச்சு ."

"ஷர்மி வீட்டுக்கு அவளோட மாமனார் மாமியார் வந்திருக்கிறார்கள். கூடவே இன்ஸ்டன்ட்டா ஒரு மாப்பிள்ளையை கூப்பிட்டுகிட்டு வந்திருக்கிறார்கள்..

மாப்பிள்ளை எவ்ளோ அழகு தெரியுமா குதிரை வால் போடுற அளவுக்கு முடி வெச்சிருக்கிறான்.

என்ன.. என்ன விட கொஞ்சம் நிறமாக இருக்கிறான் .மற்றபடி அவன் கிட்ட எந்த ஒரு குவாலிட்டியும் இருக்கிற மாதிரி தெரியல .

பேசுறது கூட திமிரா தெனாவெட்டா வந்து பேசுறான் .இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் சரி கிடையாதுப்பா.

அவங்களுக்கு இந்த மாதிரி ஆண்களை மட்டும் தான் பிடிக்கும் நம்மள மாதிரி ஆண்கள் எல்லாம் பிடிக்காது.."

"நீயே முடிவு பண்ணிடுவியா மதி அங்க என்னதான் நடந்துச்சு. நான் இப்பவே போய் என்னன்னு கேட்கிறேன் ".

"காலையில போன என்னையவே வீட்டுக்குள்ள விடல பா .அந்த அளவுக்கு அவங்க பெரிய ஆள் ஆயிட்டாங்க .
உங்களுக்கு சொன்னா புரியாது ".

"என்னடா புரியாது..நீ சொல்லு புரிஞ்சுக்குவேன்".

"குடிச்சேன் பா.. மனசு சரியில்லப்பா மனசு திரும்பத் திரும்ப ஏதோ ஒன்னு வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்கு எனக்கு தான் அதுக்கு பதில் சொல்ல தெரியல .

அதுதான் இன்னைக்கு இப்படி குடிச்சிட்டு வந்தேன்."

' உனக்கு அந்த பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்குதா மதி அதனால தான் இந்த மாதிரி செஞ்சுகிட்டு இருக்கியா .."

"ஐயோ எனக்கு அவளை சுத்தமா பிடிக்கலப்பா .இனிமே அவளே வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னா கூட நான் சம்மதிக்க மாட்டேன் .

நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் ..இப்படியே தனிமாகவே இருக்க போறேன்.

எனக்கு என் பையன் இருக்கிறான் இன்னும் கொஞ்ச நாள் போனா போதும் .

அவன் வளர்ந்து அவனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி பாத்துக்குவேன் .

நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் பா.."

" எதுக்காக டா இன்னைக்கு குடிச்சிட்டு வந்த.. அதுக்கு முதல்ல காரணம் சொல்லு .

சங்கரி கிட்ட நீ என்ன சொன்ன.. இனி எப்பவும் குடிக்க மாட்டேன்னு சொல்லி..

அந்த பொண்ணு மேல சத்தியம் பண்ணுன.. அதெல்லாம் பொய்யா.. அவ மேல உயிரையே வைத்திருக்கிறேன்னு கதை சொன்னியே ..அதை எல்லாம் என்ன ஆச்சு ".

"அவளே உயிரோட இல்லப்பா ..அவள் மேல பண்ணின சத்தியம் மட்டும் உயிரோட இருக்கணுமா என்ன ?

அதனாலதான் இன்னைக்கு அந்த சத்தியத்தையும் குழிதோணடி புதைத்துவிட்டேன் ".

"போதும் மதி நீ என் கோபத்தை தூண்டிக்கிட்டு இருக்காதே ..நான் எத வேணும்னாலும் மன்னிப்பேன் இப்படி குடிச்சிட்டு வர்றதை என்னால ஏத்துக்க முடியாது .

உனக்கு ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங் இதுதான்..இப்ப சொல்றதுதான் இன்னொரு தடவை இது மாதிரி வந்தேன்னு வச்சுக்கோயேன்…

என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது".

" என்னப்பா செய்வீங்க.. உங்களுக்கும் என்னை பிடிக்காமல் போயிடுச்சுல்ல அதனால தான் இப்படி எல்லாம் பேசுறீங்க" சொல்லிவிட்டு அமர்ந்து அழ ஆரம்பித்தான் மதியழகன்.

" டேய் என்னடா இது குழந்தை மாதிரி எதுக்காக இப்ப அழற ..முதல்ல கண்ணை தொடை ..

குடிச்சிட்டு வந்தா இப்படித்தான் நீ ரியாக் பண்ணுவ.. உன்னை எனக்கு நல்லாவே தெரியும் .

முதல்ல வீட்டுக்குள்ள போ உன்னோட ரூமுக்கு போய் குளிச்சிட்டு பிரஷ் ஆகிட்டு வெளியே வா .நிதானமா நாம பேசிக்கலாம்.."

" வேணாம் பா நான் எங்கேயும் போக மாட்டேன் .இங்கதான் இருப்பேன்.. இங்க வீட்ல தான் இருப்பேன். நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.."

" நான் உயிரோட இருக்கிற வரைக்கும் இதுமாதிரி செய்யறத நான் ஏத்துக்க மாட்டேன் .

உனக்கு உன்னோட பையன் இருக்கிறான் அந்த பொண்ணு வேண்டாம்னா போகட்டுமே ..

இப்ப என்ன ஊர்ல உலகத்துல பொண்ணுங்களா இல்ல. நானும் தாண்டா ஆசைப்பட்டேன் .

அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு ..

அதுக்கு காரணம் சூர்யாதான்.. நீ ஒரு பையனுக்கு அப்பாவா இருக்கற.. அந்த பொண்ணும் அதே மாதிரியான ஒரு நிலைமையில் தான் இருந்தால். அதனால கல்யாணம் பண்ணினா நல்லா இருக்கும் என்று நினைத்தேன் .

என் பையனுக்கு ஊர்ல உலகத்துல பொண்ணா கிடைக்காது .இந்த நிமிஷம் நான் சொன்னா போதும் .

நான் நீன்னு எல்லாரும் வருவாங்க ஆனா நான் அப்படி செய்யலையே இன்னொரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி இருக்கட்டும்னு யோசிச்சேன் .

ஆனா இங்க நடக்கிறது எல்லாம் வேற மாதிரி தான் இருக்குது விடுடா பாத்துக்கலாம்.."

"அப்பா எனக்கு அவளை ரொம்ப பிடிச்சி இருந்தது பா ஆரம்பத்துல சண்டை போட்டாலுமே அதுக்கு பிறகு நம்ம வீட்டுக்கு வந்த பிறகு சூர்யா கிட்ட நடந்துக்கிட்டது..

ஒவ்வொரு விஷயத்திலும் தைரியமா மூவ் பண்ணினது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது பா .

அதனால எனக்கே தெரியாம நான் அவளை விரும்ப ஆரம்பிச்சுட்டேன் அதுதான் உண்மை .ஆனால் அது இவ்வளவு பெரிய ஏமாற்றத்தில் முடியும்னு நான் நினைக்கவே இல்ல பா.. திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி அழ ஆரம்பித்தான் .

அடுத்த சில நொடிகளிலேயே வாந்தி எடுக்க ஆரம்பித்து இருந்தான்.

" இதோ அடுத்த அலப்பறையை ஆரம்பிச்சிட்டியா? ஏன்டா இப்படி போட்டு உயிரை எடுக்கிற ..

உனக்கு தான் குடிச்சா சேராதுன்னு தெரியுமே .. திரும்ப ஆரம்பிச்சாச்சா?

இனி இத வேற கிளீன் பண்ணனுமா முதல்ல எந்திரி மதி "என்று கைத்தாங்களாக அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றார்.

நேராக பாத்ரூமிற்கு உள்ளே சென்றவர் ஹீட்டரை ஆன் செய்து பைப் தண்ணியை திறந்து விட்டார்.

சில நிமிடங்களிலேயே தண்ணீரை மோந்து தலையில் வேக வேகமாக ஊற்ற சிலிர்த்து தலையை உதறியவன் .பிறகு அமைதியாக அமர்ந்திருந்தான் .

குளித்து முடிக்கவும் வேரு உடையை கொண்டு வந்து கொடுத்து "சீக்கிரமா மாத்திட்டு வெளியே வா .தலையை துவற்றி விடுகிறேன்" என்று சொன்னபடி சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார் .

சில நிமிடம் கழித்து வெளியே வந்தான் மதியழகன் .இப்போது ஓரளவிற்கு தெளிவாக இருந்தான்.

குடித்தது என்னவோ கொஞ்சமாகத்தான் ஆனால் அவனுடைய உடலுக்கு எப்போதுமே சேராது..

"சாரிப்பா இனிமே இது மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் ச"ற்று குளறலாக தான் இப்போதும் பேச்சு வந்தது .

கண்கள் இரண்டும் ரத்தமென சிவந்து இருக்க.. முகமே சற்று வீங்கியது போல இருந்தது .

"யார் சொன்னாங்க அந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னால் குடிச்சிட்டு வரச்சொல்லி..

"உன்னை வேண்டாம்னு சொன்னா போகட்டுமே.. யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போகட்டும் நமக்கு என்ன?

நமக்கு அந்த பொண்ணு என்ன உறவா இல்ல தானே.. கொஞ்ச நல்ல விதமா பழகினால் ..

ரொம்ப நல்ல பொண்ணா இருக்கிறாள் என்று நானும் ஆசைப்பட்டேன் .

நீயும் உன் மனசுக்குள்ள இப்படி ஒரு ஆசை வெச்சிருப்பேன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு.."

"விடுங்கப்பா நடந்ததுக்கு என்ன மன்னிச்சிடுங்க.. இனிமே இது மாதிரியான காரியம் செய்ய மாட்டேன் .

சூர்யா எங்கப்பா நான் வாந்தி எடுத்ததை அவன் கவனிக்கலையே.."

ராமண்ணா வேகமாக அந்த இடத்தையே சுத்தம் செய்து துடைத்து விட்டிருந்தார்.

" இப்ப கேளு வரும்போது இந்த அறிவு எல்லாம் எங்க போச்சு . போதும்டா நம்ம நமக்கு கீழே இருக்கிறவங்களுக்கு உதாரணமாக இருக்கணும் .

உன்னை பார்த்து தானே உன்னோட பையனும் வளருவான். நாளைக்கு உங்க அப்பா மாதிரியே நீயும் பண்றியா என்று யாராவது கேட்டால் நல்லாவா இருக்கும் .

இதை இத்தோட முடிச்சுக்கோ புரிஞ்சுதா ..இதுக்கு மேல நம்ம எதுவும் பேச வேண்டாம் .நிம்மதியா போய் தூங்கு .

என்ன நடக்கணும்னு இருக்குதோ அது கட்டாயமாக நடந்து தான் தீரும். யாரும் எதையும் மாற்றிட முடியாது.

நாளைக்கு காலையில ஷர்மிளாவை பார்த்து நான் என்னன்னு பேசிட்டு வரேன் புரிஞ்சுதா.."

" இல்லப்பா நீங்க இனிமே அவங்க வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம்".

" சும்மா இதையே சொல்லாத மதி மாசாமாசம் வாடகை வாங்குவதற்கு போய்தான ஆகணும் .

நாளைக்கு அப்படியே போய் பார்த்துட்டு என்ன எதுன்னு விசாரிச்சுட்டு வரேன் சரியா .நீ தேவையில்லாமல் எந்த டென்ஷனும் ஆகாத.."

சொன்னது போலவே அடுத்த நாள் தேவன் குடியிருப்பு பகுதிக்கு செல்ல கவியை காலையிலேயே பள்ளிக்கு அழைப்பி இருந்தால். இவளும் கூட வேகமாக புறப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் தான் தேவன் உள்ளே சென்றது .

"நானே வாடகை கொடுக்கணும்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.. நீங்களே சரியா வந்துட்டீங்க இந்தாங்க "என்று பணத்தை நீட்ட அமைதியாக வாங்கிக் கொண்டார்.

வீட்டில் யாரும் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை." என்னம்மா வீடு ரொம்ப அமைதியா இருக்கு நிறைய உறவினர் எல்லாம் வந்திருக்கிறதா மதி சொல்லிகிட்டு இருந்தான்".

" ஆமாம் நேத்து நைட்டு அவங்க புறப்பட்டு போயிட்டாங்க ."

"அப்படியா புறப்பட்டு போயாச்சா நம்பவே முடியலையே ..மதி ஏதேதோ சொல்லிக்கிட்டு இருந்தான்.."

"என்ன சொன்னாங்க .."

"அது எதுக்கு மா ..இப்போ ஊருக்கு போய்ட்டாங்களா என்ன ?"

"ஆமாம் ..குழந்தையை பார்க்க வந்தாங்களாம்.. ஏன் அங்கிள்".

" அங்கிள் மதி வந்து இருந்தாங்க..என்ன சொன்னாங்க உங்க கிட்ட.."

"என்னென்னமோ சொன்னான் மா அதை விடு நான் கேட்டதுக்கு பதில் சொல்லு .
இப்ப அவங்க எங்க?"

" அதுதான் சொன்னேனே..அவங்க ஊருக்கு போயிட்டாங்க ."

"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறதா சொன்னான்.

எனக்கு புரியலை மா ..என்ன நடந்துச்சு.."

" இங்க தரணியோட அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்து இருந்தாங்க அங்கிள் அவங்களுக்கு கவி அவங்க கூட வச்சுக்கணும்னு ஆசை போல இருக்கு .ஆனா நா அதுக்கு ஒத்துக்க மாட்டேன் இல்லையா அதனால அவங்க.."

"சொல்லுமா ஏன் தயங்குற..அதனால அவங்க என்ன முடிவு எடுத்தாங்களாம்".

" பரணியோட தம்பி ஒருத்தர் இருக்கிறார் ..தம்பின்னா சொந்த தம்பி இல்ல அவங்களோட சித்தி பையன்.

இவங்க பரணி விஷயத்தை சொல்லி இருப்பாங்க போல இருக்கு நம்ம வாரிசு எதுக்காக அங்கே இருக்கணும் அப்படின்னு கேட்டு இருக்கிறான் .

கூடவே ஏதோ ஒரு வகையில அவனுக்கு என்ன பிடிச்சது போல இருக்கு .

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்போ குழந்தையும் அவளும் என் கூட வந்துருவான்னு கேட்டு இருக்கார்.

இந்த ஐடியா தரணியோட அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கும் போல இருக்கு.

அவங்க அத சொல்றதுக்காக அழைச்சிட்டு வந்தாங்க ."

"சரி அப்புறம் என்ன ஆச்சு .."

" என்ன அங்கிள் ஆகணும் எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஆசை எதுவும் கிடையாது .

எனக்கு என் பொண்ணு மட்டும் போதும் தேவையில்லாம நீங்க இது மாதிரி எதுவும் செய்ய வேண்டாம் அப்படின்னு சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன்.

கவி உங்களோட பேத்தி தான் அதுல எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது எப்ப வேணும்னாலும் நீங்க வந்து பார்த்துட்டு போங்க .

அதுக்கு நான் அனுமதிக்கிறேன் ஆனா அதே நேரத்துல எக்காரணத்தை கொண்டும் குழந்தையை கூட்டிட்டு போலாம் என்கிற எண்ணத்தோடு என்னை பார்க்க வராதீங்க அப்படின்னு சொல்லிட்டேன்.."

"அவ்வளவுதானா வேற எதுவும் இல்லையா.."

" சொல்ல வர்றது எதுவுமே எனக்கு புரியல ..நேரடியா கேளுங்க நான் வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க.."

"மதி உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு தான் இங்க வந்தது ஆனால் பேச முடியலன்னு திரும்பி வந்துட்டான்".

" ஆமா அங்கிள் நானும் கவனிச்சேன் என்னவோ சொல்ல வந்தாரு போல இருக்கு .ஆனா ஏதோ ஒரு கோவத்துல முகத்தை திருப்பிக்கிட்டு போயிட்டாரு .

நானும் இவ்வளவு நேரம் யோசித்துப் பார்க்கிறேன் எதுவும் எனக்கு தோணல ..என்னவா இருக்கும் என்கிற யோசனை மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.."

"உனக்கு நேரம் இருந்தால் நீ எனக்கு ஒரு உதவி செய்வியா.. இப்ப நேரா வீட்டுக்கு போய் மதி கிட்ட உன்னால பேச முடியுமா .."

"இப்பவா அங்கிள்".

" அவன் உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு தானே வந்தான் என்ன சொல்ல வந்தாங்கறது அவன்கிட்ட நேரடியா கேளு .
நிச்சயமா பதில் சொல்லுவான்".

" அங்கிள் வந்து .."

"ரெண்டு பேருமே நட்பு ரீதியா ரொம்ப நெருக்கமா இருக்குறீங்க எனக்கு நல்லா தெரியும் .

அவன் கிட்ட உனக்கு பேச ஏதாவது பயம் இருக்கா என்ன ".

"எனக்கென்ன அங்கிள் பயம் ".

"அப்புறம் என்ன ..இப்பவே புறப்பட்டு நேரா வீட்டுக்கு போ. மதி வீட்ல தான் இருக்கிறான் .

காலையிலேயே தலை வலிக்குதுன்னு அவனோட ரூம்ல படுத்து இருந்தான்".

" ஏன் மறுபடி காய்ச்சல் ஏதாவது அடிக்குதா ..இன்னுமும் ஆறு மாதம் வரைக்கும் கொஞ்சம் கவனமா இருங்கன்னு தானே டாக்டர் சொல்லிவிட்டார் ..

திரும்ப மறுபடியும் ஃபீவர் வர வாய்ப்பு இருக்குன்னு சொன்னாரே.."

" அதெல்லாம் இல்லமா இது வேற விஷயம் நீ அவன நேரடியா பார்த்து ஒரு முறை பேசு .

நானும் இங்க இருக்கிற மத்தவங்க கிட்ட வாடகை வசூல் பண்ணிட்டு நேரா வீட்டுக்கு வரேன் .

அதுக்கு பிறகு நம்ம பேசிக்கலாம் பேங்குக்கு கூட முடிஞ்சா ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கிக்கோ.."

"சரி அங்கிள் நேரா பார்த்துட்டே கிளம்பி போறேன் .தலைவலின்னு வேற சொல்றீங்க இல்லையா" என்றபடி நகர்ந்தால் .

நேராக வண்டியை எடுத்துக்கொண்டு மதியழகனின் வீட்டிற்கு செல்ல ‌‌ராமண்ணா காய்கறி வாங்க அப்போதுதான் வாசலுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

"வாம்மா மதி ஹால்ல உட்கார்ந்து இருக்கிறான். பார்த்து பேசிக்கிட்டு இரு வந்துடுறேன்" என்று விட்டு நகர்ந்தார்.

என்னவோ தன்னிடம் பேசுவதற்காக எல்லோரும் நகந்து போவதாக தோன்றியது ஷர்மிளாவிற்கு..

நேரடியாக என்ன ?என்று கேட்டு விடலாம் என்று வேகமாக சென்றாள். மதி இப்போதும் கூட ஹாலில் சோபாவில் கண்களை மூடி சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்.

உள்ளே வந்தவள் பார்த்தது முதலில் அவனுடைய முகத்தைத்தான் ..ஏதோ ஒரு சோர்வு முகத்தில் தெரிய தலை முடி கலைந்திருக்க சற்று நேரம் பார்த்தவள் பிறகு மெல்ல அவனுக்கு அருகே சென்றாள் .

மதி மதி என்று அவனின் தோலை தட்ட சட்டென கண் திறந்தவன் முகத்தில் இருந்த பாவனை இவளுக்கு துளி கூட புரியவில்லை.

" என்ன ஆச்சு எதுக்காக இப்படி ஷாக் ஆகி பாக்கறீங்க.."

" நீ என்னை விட்டு போயிட மாட்ட இல்லையா ."சட்டென இப்படி கேட்க ஒன்றும் புரியவில்லை.." என்ன சொல்ல வர்றீங்க .நான் எங்க போக போறேன். நான் இங்கதான் இருக்கிறேன்."

"நேத்து யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு பேசினாங்க ".

"அது அவங்களோட முடிவு அதுக்கெல்லாம் நான் சம்மதிக்கணுங்கற கட்டாயம் இல்லையே .."

"அப்படின்னா என்ன ஆச்சு.."

" அவங்கள நேத்து நைட்டு வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன் இனி எப்பவும் வர மாட்டாங்க.

நீங்க ஏன் இப்படி இருக்கிறீங்க உங்க முகம் ஏன் இவ்வளவு டல்லா இருக்குது .

தலைவலின்னு வேற சொன்னாங்க" என்ற படியே தன்னுடைய தளிர்க்கரம் கொண்டு நெற்றியை தொட்டுப் பார்க்க ..தன்னுடைய கை கொண்டு அந்த விரல்களை அப்படியே பற்றி கொண்டான் .

முதலில் ஒன்றுமே புரியவில்லை இவளுக்கு.." என்ன ஆச்சு மதி .. ஏன் இப்படி நடந்துக்கறீங்க "என்று கேட்க.." உனக்கு புரியலையா நான் என்னோட மனசுக்குள்ள என்ன நினைக்கிறேன்னு உனக்கு புரியும் தானே.."

"சூர்யாவுக்கு அம்மாவா இருக்கிற நீ எனக்கும் துணையாக இருக்கலாம் இல்ல .."

"எனக்கு புரியல மதி".

" நீ இங்க என்னோட வீட்டுக்கு வந்துடேன்..கவியையும் கூப்பிட்டுட்டு.. இன்னும் உனக்கு புரியலையா ..

நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா.. பெருசா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை ஆனால் என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.

சங்கரி இறந்து இத்தனை வருஷம் ஆகிடுச்சு .இந்த நிமிஷம் வரைக்கும் தனியா தான் நான் சுத்திக்கிட்டு இருந்தேன் .

என் மனசுல சின்ன சலனம் கூட வந்தது கிடையாது யாரையுமே பார்க்கும்போது ..ஆனா உன்னை பார்க்கும் போது சலனம் மட்டும் இல்ல பிரம்மிப்பும் கூடவே வந்துச்சு.."

"நான் இன்னொரு கல்யாணத்தை பத்தி எப்பவும் யோசிச்சது இல்லையே .."

"ஆனா இனி கொஞ்சம் யோசிங்க ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும் போது பயந்து பயந்து எத்தனை நாள் ஓடிக்கிட்டு இருப்ப..

உனக்கு இளைப்பாற ஒரு இடம் வேணும்தானே.. இங்க சூர்யாவுக்கு.. நீ அம்மாவா வந்தா நல்லா இருக்கணும் ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சுகிட்டு இருக்கிறான்.

அப்பாவோட ஆசையும் அதுதான் என் மனசுல ஆசை இல்லைன்னு சொல்ல மாட்டேன்.

எந்த நிமிஷம் என் மனசுக்குள்ள வந்தேன்னு தெரியல. இத்தனை நாளா பெருசா தெரியாம இருந்த ஒரு விஷயம் நேத்து தான் புரிஞ்சுது.

உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லவும் அவ்வளவு கோவம் வந்துச்சு அந்த கோபத்தோடு தான் வீட்டுக்கு வந்தேன்.."

"அதனாலதான் குடிச்சிட்டு வந்தீங்களா" சற்று கோபம் போல கேட்க.." இல்லை எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல..

என்னால சங்கரிக்கு அப்புறம் இன்னொரு இழப்பை தாங்க முடியும் என்று எனக்கு தோணல .

நீ இல்லன்னு தோணவும் அது ஒரு மாதிரியா இருந்தது அதனாலதான்.." சற்று தலை குனிந்தபடி சொன்னவன்.. "உனக்கு யார் சொன்னாங்க ."

"நிச்சயமா உங்க அப்பா எதுவும் சொல்லல.. இப்ப தான் ராமண்ணா சொல்லிட்டு போனாங்க. உங்க கிட்ட சண்டை போடணும்னு தான் கோவமா வந்தேன் ஆனா இப்போ நான் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு தெரியல.."

"அதுக்காக தான் சொல்றேன் இனிமேல் நான் எந்த தப்பும் பண்ண கூடாதுனா என் கூடவே இரு ".

"மதி நீங்க பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை .."

"நான் உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு உன்கிட்ட கெஞ்சனும்னு எதிர்பார்க்கிறயா ஷர்மிளா.."

"அப்படின்னு யார் சொன்னாங்க அப்படி எல்லாம் நான் கேட்கவே இல்லையே ஆனா நேற்று தான் எனக்கும் ஒரு விஷயம் புரிஞ்சது.."

என்ன..

"இத்தனை நாள் கூடவே இருக்கும் போது எனக்கு எதுவுமே தோணல ஆனால் நேத்து பரணியோட அப்பா அம்மா அந்த பையனை கூப்பிட்டு வந்த பிறகு..

இந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்கும்போது தான் எனக்கு சட்டுனு உங்க முகமே ஞாபகம் வந்தது.

அந்த முகம் ,அந்த சிரிப்பு ,அந்த பேச்சுல எல்லாமே ஏதோ ஒரு வகையில மனசுக்குள்ள ஆணி அடிச்ச மாதிரி நீங்க இருந்திருக்கிறீங்க அப்படிங்கிற விஷயமே நேற்றுதான் தெரிந்தது.

அதுக்கு ஏத்த மாதிரி காலையில உங்களை பார்த்தேனா மொத்தமாவே ஒடஞ்சு போயிட்டேன்.

அதுக்கு பிறகு நிறைய யோசிச்சு சாயங்காலமா என்னோட முடிவை அவங்க கிட்ட சொல்லிட்டேன் .

உங்க பையன் ஏமாத்திட்டு போனதால கடைசி வரைக்கும் நான் இப்படியே இருந்து விடுவேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் .

நான் இன்னொரு கல்யாணத்துக்கு தயாராகிட்டேன் ஏற்கனவே நான் மாப்பிள்ளை பாத்தாச்சு .

இன்னும் கொஞ்ச நாளில் நான் கல்யாணம் பண்ணிக்குவேன் .கவி உங்களோட பேத்தி தான் இல்லன்னு சொல்லல ..

உங்க பேத்தியை நீங்க பாக்கணும்னு ஆசை தோணும் போது ..எப்ப வேணும்னாலும் வந்து பார்க்கலாம் .

நான் அதுக்கு தடை எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் கவி கடைசி வரைக்கும் என் கூட தான் இருப்பா..

நான் எப்பவும் உங்ககிட்ட விடமாட்டேன் அப்படின்னு பிடிவாதமா சொல்லிட்டேன் .

நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதே அவங்களுக்கு ஓரளவுக்கு திருப்தியை சந்தோஷத்தை தந்திருச்சு போல இருக்கு .

மகனோட தப்புக்கு ஏதோ ஒரு வகையில பிராய்சித்தம் செய்தாச்சுன்னு நினைச்சுட்டு சந்தோஷமா தான் புறப்பட்டு போனாங்க.

ஒருவேளை நீங்க இன்னைக்கு சொல்லாட்டி கூட இன்னும் கொஞ்ச நாளையில நிச்சயமா நானே ஒரு நாள் உங்ககிட்ட கேட்டிருப்பேன்.

என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கறீங்களா .நான் இந்த வீட்டுக்கு நிரந்தரமா வந்திடட்டுமா அப்படின்னு..

ஏன்னா கவி உங்க மேல அந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறா.. அதே மாதிரி தான் சூரியாவுக்கும் நான்னா உயிர் ..

அந்த ரெண்டு குழந்தைங்களுக்காக நம்ம மனசை மாத்திக்கிட்டா என்ன அப்படின்னு நானே கேட்கணும்னு நினைச்சேன் .

பெருசா வாழனுங்கற ஆசை எல்லாம் கிடையாது. யாருக்கு தெரியும் இன்னைக்கு போலவே இந்த நற்போட கடைசி வரைக்கும் கூட நம்ம சேர்ந்து இருக்கலாம் என்ன சொல்றீங்கன்னு கேட்கணும்னு நினைச்சேன் .
அதுக்கு முன்னாடியே நீங்க கேட்டுட்டீங்க..

உங்கள மாதிரி எனக்கு பயம் எதுவும் கிடையாது .மனசுக்குள்ள என்ன தோணுதோ அந்த நிமிஷமே கேட்டு விடுவேன்.

ஒரு வேளை உங்களுக்கு என்னை பிடிக்காதுனா தாராளமா நீங்க சொல்லலாம்.

இந்த நட்பு இப்படியே தொடரனும் என்றாலும் தொடரட்டும் .இல்ல உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல எப்பவுமே உன்னை பாக்க விருப்பம் இல்லன்னு சொன்னா கூட நான் இங்க வருவதை நிறுத்திக்குவேன் என்ன சொல்றீங்க .."சற்று தலை சாய்த்து கேட்க சட்டென எழுந்து நின்றவன் யோசிக்காமல் அவளது கரம் பற்றி அருகே இழுத்து இருக அணைத்துக் கொண்டான் .

"மதி ப்ளீஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ..முதல்ல நகருங்க .இது மாதிரி எல்லாம் செய்யாதீங்க" என்று சொல்ல.." இல்லை நீ எதுவும் பேசாத நேத்துல இருந்து நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் .

கைக்கிட்ட இருக்கிற ஒரு பொக்கிஷம் நம்மை விட்டு போகுது அப்படிங்கும் போது வர்ற வலி உனக்கு சொன்னா புரியாது.

நேத்து காலையில இருந்து நான் நானாவே இல்ல ..எப்ப அவங்களை உன் வீட்டில் வைத்து பார்த்துட்டு வந்தேனோ..அந்த நிமிஷத்திலிருந்து என் உயிர் என்னிடம் இல்லை .

எனக்குள்ள ஆயிரம் மதி.. மாத்தி மாதிரி பேசி இருப்பான் .இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமா இது சரியா வருமா ..அப்படின்னு நிறைய …

ஒரு வேலை அவங்க கிளம்பலைன்னு வச்சுக்கோயேன் நானே அவங்களை கிளம்ப வைக்க ஏதாவது வழியை யோசித்து இருப்பேன். அந்த அளவுக்கு கூட போயிட்டேன் தெரியுமா.."

"மதி புரியுது நீங்க இப்போ விடுங்க.."

"இல்ல ஷர்மிளா இனி எப்பவுமே உன்னை விடுறதா இல்ல . அப்பா ஏற்கனவே நல்ல நாள் பார்த்தாச்சு.

உன்னோட அம்மா அப்பாவோட அட்ரஸ் கொடு .இந்த வாரமே டெல்லிக்கு போய் பார்த்து பேசிட்டு வரலாம்னு இருக்கிறேன்."

"அப்படியா"

" ஆமா நானும் அப்பாவும் மட்டும் தனியா போக மாட்டோம் .நம்ம குடும்பமாவே போகலாம்.

உன்னுடைய அப்பா அம்மாவை பார்த்து பேசி உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு முறைப்படி என்ன செய்யணுமோ எல்லாமே செய்யலாம்."

"கேட்க நல்லா இருக்குது மதி ஆனா நான் ஒரு குழந்தைக்கு அம்மா அது கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கிட்டு இந்த கல்யாணத்துக்கு முடிவு பண்ணுங்க ".

"ஏன் உனக்குள்ள குழப்பம் இத்தனை வருது ஷர்மி ..அப்படி பார்க்க போனா நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான் .

எனக்கு ஓகே.. நான் உனக்கு நல்ல நண்பனா இருப்பேன். நீ நம்பலாம்" என்றபடியே அவளது நெற்றியில் லேசாக முத்தமிட மகிழ்ச்சியோடு மெல்ல அவனது தோளில் சாய்ந்தால் ஷர்மிளா..

இதனை நாட்களாக இருந்த தனிமை மெல்ல விலக ஆரம்பித்தது வீசுகின்ற தென்றல் காற்றை போலவே இவர்களது வாழ்விலும் தெண்றல் வீச ஆரம்பித்தது.

இனி எல்லாம் சுகமே..



 
Status
Not open for further replies.
Top