எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆல்பா --- 3

இதுவரை



விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் மணிசேகரனும் மேகலாவும் கோள்களை ஆராயும் விஞ்ஞானிகள். மேகலாவிடம் கடவுள் நம்பிக்கை அதிகம்,ஆனால் மணியிடம் இல்லை. அவர்களது தலைவர் மல்ஹோத்ரா அவரது அறைக்கு அழைக்க.. அங்கே….



புதிய திட்டம் --3





குளிரூட்டப்பட்ட அந்த அறையினுள் நடுநாயகமான மேசைக்கு பின்னால் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.



கதவு மெலிதாய் தட்டப்படும் சத்தம் கேட்க தலை நிமிர்ந்து “உள்ளே வாங்க இரண்டு பேரும்” என குரல் கொடுத்தார்.



மணியும் மேகலாவும் உள்ளே நுழைந்து ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்தனர்.



” எந்த அளவுக்கு ஆராய்ச்சி வேலை போய்கிட்டு இருக்கு ?”



“” கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. முயற்சி பண்ணிகிட்டு இருக்கோம்”

“ஆமா சார் , மேகலா சொல்றது சரி, நாமளும் கடந்த 2 வருசமா போராடிகிட்டுதான் இருக்கோம்”



”சரி மணி நம்ம திட்டத்தை கொஞ்சம் சொல்லு” – மல்ஹோத்ரா புதிதாய் கேட்பது போல நாற்காலியில் பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.



மணி உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தான்.



“ சார் நம்ம விண்வெளியில முன்பு ஒன்பது கோள்கள் இருந்துச்சு. அப்புறம் புளுட்டோ கோள் கிடையாதுன்னு அதை துணைக்கோள்னு அறிவிச்சாங்க”



மேகலா தொடர்ந்தாள்.



“புளுட்டோக்கு பதிலாக இன்னொரு கோள் இருக்கலாம்னு அதை பிளானட் எக்ஸ் அப்படினு பெயர் வச்சு தேடுறோம் தேடுறோம் தேடிகிட்டு இருக்கோம் பல வருசமா…”

மணி ஆரம்பித்தான்.. “ ஒரு சிலர் பிளானட் எக்ஸ் புதன் கோள் அருகிலோ வேறு சிலரோ மிக சிறிய கோளான புளுட்டோ பக்கத்திலோ இருக்கலாம்னு சொல்றாங்க”



மேகலா மணியை தொடர்ந்தாள்.



“நாம ஏற்கனவே விண்வெளி மண்டலத்தில இருக்கிற ஒரு குறிப்பிட்ட வான்வெளி பகுதிக்கு உள்ள பெயரான ஆல்பாவை நம்ம ஆராய்ச்சிக்கு வச்சிருக்கோம்”



மல்கோத்ரா நிமிர்ந்து உட்கார்ந்தார். கண்களை திறந்து இருவரையும் தீர்க்கமாக உற்றுப் பார்த்தார்.



”நம்ம திட்டம் சரியா போயிட்டு இருக்கா இல்லையா எனக்கு தெரியாது. ஆனாலும் விடாமுயற்சி பண்ணி எனக்கு உடனே பதில் வரணும். கிளம்பலாம்”



இருவரும் அவரைப் பார்த்தார்கள். அவர் அமைதியாக இருந்தார்.



மணி மேகலாவை பார்த்தான். மேகலா உதட்டை பிதுக்கினாள்.

மல்கோத்ரா அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார். அவர்கள் போகாமல் தயக்கத்துடன் நிற்பதைக் கண்டு என்ன வேண்டும் என பார்க்க அவர்கள் பேசாமல் இருந்தார்கள்.



“ மேகலா , மணி பல வருசங்களாகவே தேடி அலுத்துப் போன விசயம்தான். ஆனா இன்னைக்கு நமது அரசாங்கம் நம்மகிட்ட ஒப்படைச்ச வேலை இது. தினமும் கேள்வி கேட்டு தொலைச்சு எடுக்கிறாங்க. பிளானட் எக்ஸ் கண்டுபிடிக்க நிறைய பணம் தண்ணீயா செலவழிக்கறவங்களுக்கு நாம பதில் சொல்லியாகனும்”.



“ இல்ல சார் , மிக கடினமான பணி இது. எங்களால முடியாதுன்னு சொல்லலை . முடியாத ஒண்ணை கொடுத்தா எப்படி சார் ?”.



“ மேகலா 2020 ல கொரோனோ வந்து எத்தனை பேர் இறந்தாலும் மருந்து கண்டுபிடிச்சு பலரை காப்பத்தலையா ? 2022 ல ஓமைக்ரான் வந்தப்ப மருந்து கண்டுபிடிக்கலையா ? அதெல்லாம் எப்படி முடிஞ்சது ? நாம இந்த 3050ஆம் வருசம் பலமடங்கு முன்னேறியிருக்கோம். ஏன் இப்ப முடியாது ?”.



மணி இப்போது பேச ஆரம்பித்தான்.



“ உண்மைதான் சார் , கொசுக்களே இல்லாத உலகம், கழிவுகள் தானாக காற்றில் கரையும் பூமி, மரங்கள் இல்லாத இடமே இல்லை என சொல்லுமளவு பூமி எங்கும் பசுஞ் செடி , கொடி மற்றும் மரங்கள், கண் அசைவில் இயங்கும் இயந்திர கருவிகள், செயற்கை இரத்த வகைகள் … இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்”.



மேகலா இப்பொழுது ஆரம்பித்தாள்.

“ மணி சொல்றதை நான் ஏத்துக்றேன். ஆனா இவைகள் எல்லாம் நம்மோடு இருப்பவை, நாம் பழகியவை , நம்மை பழக்கியவை. ஆனால் நீங்கள் கண்டுபிடிக்க சொல்வது பல வருடங்களாக பல ஆயிரம் , லட்சம் கோடிகள் என செலவழித்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் அந்த மாய கிரகத்தை. இதற்கு செலவழிப்பதற்கு பதிலாக நாம் நிலாவில் வீடு கட்டி விடலாம் போல”.



” இரண்டு பேருடைய நிலை புரியுது. உங்களால மட்டுமே முடியும்னு இங்கு 110 பேர் வேலை பார்த்தாலும் உங்ககிட்ட பொறுப்பை கொடுத்திருக்கேன். கடந்த வருசம் யாருமே பார்க்காத எஸ்ரா விண்கலத்தை நீங்க சில வினாடிகள் மட்டுமே பார்க்கலையா ? எனவே நீங்க கண்டுபிடிக்கறீங்க”.



மல்கோத்ரா பேசி முடித்து விட்டு மேசை மேல் இருந்த ஒரு ராக்கெட் சிறிய மாதிரியை ஊஞ்சல் ஆட்டுவது போல ஆட்டினார். அப்படி செய்தார் என்றால் இனி பேச்சுக்கு இடமில்லை என்று பொருள்.





இருவரும் வெளியே வந்தார்கள்.



“ ஆனாலும் அழுத்தமான மனுஷன். நல்லா பேசுற மாதிரி பேசி கடைசியில விசயத்துக்கு வந்துட்டாரு”



மறுநாள் காலை….





’ஆல்பா’ திட்டம் வெற்றி பெறுமா ?
 
Top