எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆல்பா -- 4

இதுவரை ஆல்பா…..





விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் தலைமை விஞ்ஞானி மல்கோத்ராவிடம் ஆல்பா திட்டம் பற்றி முதல்நாள் பேசிவிட்டு மணியும் மேகலாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்……மறுநாள் காலை…




கடவுளா ? விஞ்ஞானமா ? - 4



ஆல்பா திட்டம் பற்றி தலைவர் முந்தைய நாள் பேசியதை அசைபோட்டபடி மேகலாவும் மணியும் தங்கள அறையில் அமர்ந்து இருந்தார்கள். மறுநாள் காலை…





சிறிது நேரம் கழித்து மேகலா ஆரம்பித்தாள்.

“மணி தலைக்கு மேல தொங்கிட்டு இருக்கற கோள்களுக்கு இடையில இருக்கற புதிசா ஒரு கோளை கண்டுபிடிக்கறது பெரிய தலைவலி”



“ அதான் விஞ்ஞானம். இதுக்குதான் நாம இருக்கறோம். பொறுமையா இரு”



”மணி கடவுளை நம்பினா எல்லாம் கைகூடும்”



“ஆரம்பிச்சிட்டயா உன் பிரசங்கத்தை. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. நாம நம்ம அறிவை வச்சு ஆளாளுக்கு கடவுளை உருவாக்கியிருக்கோம்”



“மணி அப்படி சொல்லாத. எங்கோ பல கோடி ஆண்டுகள் தூரம் தாண்டி உள்ள கோள்களை கண்டுபிடிக்கற அறிவை கொடுத்தது கடவுள்தான்”



“மேகலா சரி உன் வாதத்திற்கே வருவோம். கடவுள் இருக்கற இடத்தை ஏன் நாம கண்டுபிடிக்க முடியலை?”



” கண்டு பிடிக்க முடியாத இடத்துல இருக்கிறவர்தான் கடவுள் “



“ கண்டே பிடிக்க முடியாம இருப்பவரை ஏன் கொண்டாடுறிங்க ?”



”மணி நமக்கு தெரியாம எத்தனையோ மர்மங்கள் இருக்கு. உதாரணமா எகிப்திய பிரமீடுகள், ஆழ்கடலில் உள்ள சில விசித்திரமான உயிரனங்கள். இப்படி அடுக்கிகிட்டே போகலாம். உங்க அறிவியல் என்ன செஞ்சது ? இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்னு சொல்ல முடியுதே தவிர வேறு என்ன செய்ய முடியுது உங்களால ?”.



“ மனித அறிவுக்கு உட்பட்டு நாங்க கண்டுபிடிக்க முயற்சி செய்றோம் அவ்வளவுதான் “



“ அப்படி வா வழிக்கு , அப்ப மனித அறிவுக்கு மேற்ப்பட்டு ஒண்ணு இருக்குல்ல “.



“ சரி உன் வழிக்கு வர்றேன். ஆனா, அந்த அறிவை காட்டுங்க, இல்லைன்னா அந்த அறிவுக்கு அப்பாற்பட்டவரை காட்டுங்க “



“மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் கடவுள். உன் கண்ணுக்கெல்லாம் தெரியமாட்டார்.”



“ கண்ணுக்கு தெரியாதவரை ஏன் நம்பிகிட்டு அலையிறீங்க ?”



“ சரி அப்ப தங்களால எதுவும் முடியாத போது ஏன் டாக்டர்க நம்மகிட்ட எங்களால முடியாது, இனி கடவுள்தான் காப்பாத்தனும்னு சொல்றாங்க ?”



“ வேறு வழி இல்லாம அதை சொல்றாங்களே தவிர, வேறு ஒரு அர்த்தமும் கிடையாது. அவர்களும் மனிதர்கள்தானே “.



“ தெளிவா குழப்பற, சரி மனித அறிவு பிறப்புனால வர்றதா இல்ல கற்று கொள்வதானல வர்றதா ?”



“ தொடர்ந்து உலக அறிவு கற்பதனால வருது”.



“ உலக அறிவு எங்கிருந்து வந்தது ?”



மணி முழித்தான். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.



மேகலா தொடர்ந்து பேசினாள்.



“ கடவுள் படைச்ச எல்லாத்தையும் நம்புற நீ, படைச்ச கடவுளையே நம்ப மாட்டேங்குற. நம்பிக்கைதான்யா வாழ்க்கை “.



மணி மனதுக்குள்முணுமுணுத்துக்கொண்டான்

“ஆமா உன் மேல நான் வச்சிருக்கற காதல் உன் கண்ணுக்கு தெரியாது. ஆனா இல்லாத கடவுளை மட்டும் நம்புவா இவ”



“என்னய்யா பேசாம இருக்க ? என்ன அப்படி பார்க்கற?” – என்று மேகலா கேட்டவுடன் மணி சுய உணர்விற்கு வந்தான் .



சமீப காலமாக மேகலா மீது கொண்ட காதலை எப்படி வெளிப்படுத்துவது என திணறிக்கொண்டு இருந்த மணி இப்பொழுது என்ன சொல்வது , எப்படி சொல்வது என தெரியாமல் திருதிருவென முழித்தான்.



ஏதாவது சொல்லி அவள் கோபப்பட்டால் என்ன செய்வது என திகைத்து நின்றான்.





மேகலா அவனை தீர்க்கமாக பார்த்தாள். அவளுக்குள்ளும் ஏதோ ஒன்று மெல்லியதாக ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அவளாலும் என்ன சொல்வதென்று புரியவில்லை.



இருவருக்கும் இடையில் ஒரு மர்மமான அமைதி உட்கார்ந்து இருந்தது.



மணி அவன் வளர்ந்த விதம் மற்றும் மேகலா வளர்ந்த விதத்தை மறுபடி நினைவுக்கு கொண்டு வர முயன்றான். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்ததும் படித்து முன்னேறி இந்த பணியில் சேர்ந்து இந்த நிலைக்கு உயர்ந்தது அனைத்தும் படம் போல மனதில் ஓடியது.



மேகலா அவனை மறுபடி பார்த்து எதுவும் பதில் வராமல் போகவே அவனுக்கு முன்னால் தனது கையை இட வலமாக பாம்பு படம் எடுத்து ஆடுவது போல ஆட்டினாள்.



அவன் சுதாரித்து வெட்கப்பட்டான். மெதுவாய் தலையை உயர்த்தி

ஏதோ மேகலாவிடம் சொல்ல வாயை திறப்பதற்குள் அலைபேசி கதற மீண்டும் மல்கோத்ரா அழைத்தார்.







அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது இன்பம் தருமா அல்லது துன்பம் தருமா ?
 
Top