எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளின் நிழல்-அத்தியாயம்-3

Priya pandu

Moderator

அத்தியாயம்-3

“மா அம்ருதா….. இவங்களாம் என்னடா சொல்றாங்க….. நீ இந்தியா போகனுமா…...”என்று விஷால் அதிர்வுடன் அம்ருதாவை பார்க்க…….​

அவளோ….. நேர்பார்வையாக தன் மாமாவை பார்த்தவள்…….. “ஆமா மாமா இந்த கோஸ்டோலஜி படிச்சி முடிச்சிட்டா….. 6மந்த் ஒரு ரிசர்ச் பேப்பர் சமிட் பண்ணனும்…. அதுக்கான எல்லா ஸ்கோப்பும் இந்தியாவுல தான் இருக்கு……. அதுனால……..”என்று அவள் சொல்ல தயங்க……​

யுகா அவளையே தான் முறைத்துக்கொண்டிருந்தான்……… அம்ருதாவிற்கு என்னவோ இந்த ஸ்பிரிட் மீதான மோகம் அவனை கோவமடைய செய்யும்……. அவன் பல தடவை……. “இதுலா சரி வரும்னு நினைக்கிறீயா ருது…….”என்று அவன் கேட்க…….​

“எனக்கு படிக்கனும்னு ஆசையா இருக்கு பயில்வான்…….. படிக்க விடுங்களேன்……. இதுவே வேற எதாவது படிக்கனும்னு நினைச்சா உடனே சேர்த்துவிட்டுடுவீங்க…… ஆனால் இதுல மட்டும் ஏன் இப்டி பயப்படுறீங்க…...”என்று அவள் கடுப்பாக கேட்க……​

“அதே தான் நானும் சொல்றேன் ருது…… உலகத்துல இத்தன படிப்பு இருக்கும் போது இதமட்டும் ஏன் இப்டி பிடிச்சிட்டு தொங்குற…….”என்று யுகா கிண்டலாக கேட்க…….​

“ம்ச்….. எனக்கு அது மேலே ஒரு க்ரஸ்னு வச்சிக்கோயேன்……..”என்றாள் ஈசியாக​

“ம்ச்….. கமான் ருது…. உனக்கே தெரியும்……. பெரிய மாமாஸ்……. பெரிய அத்தைஸ்…..அத்தை, மாமா, மச்சானுங்க, அப்புறம் என் அப்பா, அம்மா எல்லாம் உன் மேலே உயிரே வச்சிருக்காங்க…… இந்த படிப்புல உனக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்துச்சினா…...”என்று அவன் உருக்கமாக பேச…….​

ஆனால் அவளோ………. “உங்களுக்குனு என் மேலே இருக்குற பாசம் தான் முக்கியம்…… என்னோட ஆசையிலாம் முக்கியம் இல்ல அப்டிதானே……..”என்று கொஞ்சம் கோவமாக பேசிவிட…….​

அதில் யுகா அதன் பின் இதை பற்றி பேசுவதே இல்லை………​

இப்போது வீட்டினர் அனைவரும் அவளை எவ்வளவோ தடுக்கப்பார்க்க…. ஆனால் அவள் தன் முடிவில் உறுதியாக இருக்க……. அவர்களும் அவள் மனம் கோணாமல் பல வாறு சொல்லி பார்த்துவிட்டனர்…….. ஆனால் அதற்கு எல்லாம் அவளிடம் எந்த பலனும் கிடைக்கவில்லை……..​

அதில் தான் காயத்ரி கோவமாக முடியவே முடியாது என்று விட……… அதையே அனைவரும் இப்போது காரணமாக வைத்துக்கொண்டு நிற்க…….. தனக்கு சப்போர்ட்டுக்காக தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தாய்மாமனை அழைத்து வந்துவிட்டாள்…….​

ஆனால் அவரும் அவள் இந்தியா செல்வது விரும்பவில்லை என்பது போல் அமைதியாக நிற்க…… அதில் அம்ருதாவின் முகம் சோர்ந்து போனது……..​

சிறுவயதில் இருந்து தங்கள் சொந்த ஊரை பற்றி அவள் கேட்க…… ஆனால் அனைவரும் அதனை பற்றி எந்த விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை…….​

அவளின் இந்த சோர்வான முகம் அனைவரையும் கவலை கொள்ள தான் செய்தது…… முக்கியமாக யுகனை…….. 2நாள் அமைதியாக யாரிடமும் பேசாமல் இருந்தவள்…… ஒரு வாரமும் அப்படியே தொடர…… யுகா களத்தில் குதித்துவிட்டான்…….​

“யுகா அவளுக்கு நீயும் சப்போர்ட் பண்ணாத…… இதுவர அவ இந்தியா போனதே இல்ல….. அதும் அவளுக்கு இருக்குற ஆபத்து புரியாம……..”என்று தங்கப்பாண்டு கத்த…..​

“மாமா….. ருது இதுவர எதுக்கும் நம்ம கிட்ட இவ்வளவு பிடிவாதம் பிடிச்சது இல்ல……"என்று யுகா ஆரம்பிக்க…….​

“அவள அப்டி பிடிவாதம் பிடிக்காத அளவுக்கு நம்ம அவளுக்கான எல்லாத்தையும் வாங்கிக்கொடுத்தோம் யுகா…….. ஆனா அவ இப்போ கேட்குறது நியாயமா……...”என்று காயத்ரி வேதனையுடன் கேட்க………​

அதில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தாலும் தன் உயிர் தோழி ஆசையை அவன் நிறைவேற்ற விரும்பினான்……..​

“இல்ல மாமா இந்த ஒரு விசியத்துல அவளுக்கு நாம விட்டுக்கொடுப்போமே…..” என்று யுகா கூற……..​

“ஆமா மச்சான்……. நம்ம அம்ரு சின்ன பிள்ளையில இருந்து இந்த மாறி கோவிச்சிட்டு பேசாம இருந்து நான் பார்த்ததே இல்ல…….. எந்த ஒரு பொருள் வேணும்னாலும் அவ சொல்லி நாம வேண்டாம்னு மறுத்துட்டா சரினு போய்டுவா….. ஆனா இந்த விசியத்துல மட்டும் தான் அவ இப்டி இருக்கா…… நாமளும் அவ ஆசைக்கு கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே…...”என்று விஷால் கூற……..​

அது என்னமோ உண்மைதான்……… அம்ரு இதுவரை எந்த பொருளுக்கும் பெரிதாக ஆசைப்பட்டது எல்லாம் இல்லை…….. அவள் கேட்கிற ஒன்று இரண்டு பொருள் அவளுக்கு நன்மையாக இருந்தால் மட்டுமே அவர்கள் வீட்டினர் வாங்கிக்கொடுப்பார்கள்….. அப்படி இல்லாத பட்சத்தில் அந்த பொருளுக்கான பிடிவாதம் அவளிடம் இருந்து வராது……..​

அப்படிப்பட்டவள் இன்று அடம்பிடிப்பதை பார்த்து அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது…….​

அமிர்தலிங்கம் தன் பேத்தியை பிடித்து கனிவாக அவளிடம் விசாரிக்க……… அவளோ…….. “தாத்தா…… இந்த உலகத்துல ஒரு தெய்வ சக்தி இருக்குனா…… அதுக்கு ஆப்போசிட்டா ஒரு கெட்ட சக்தி இருக்கும்னு சின்ன வயசுல நீங்கதானே சொல்லிக்கொடுத்தீங்க…… அத நான் தெரிஞ்சிக்கதான் இந்த கோர்ஸ் படிக்கனும்னு ஆசப்பட்டேன்…… அதும் இத கோர்ஸா மட்டும் இல்லாம அத பத்தி ஒரு ரிசர்ச் படிக்கலாம்னு தான் நான் இந்தியா போறேனு சொன்னேன்……. ஆனா நீங்க அதுக்கு கூட என்னை அனுமதிக்க மாட்டீரீங்க…...”என்று முகத்தை சுருக்கிக்கொண்டு கூற………​

அதில் அமிர்தலிங்கம் கொஞ்சம் தன் பேத்தியின் பக்கம் சாய………​

“பாண்டி……… அவ போய்ட்டு வரட்டும் டா……..”என்றார் அமிர்தலிங்கம்……….​

அதில் அதிர்ந்த தங்கப்பாண்டி……… "அச்சா……...”என்றார்​

“ம்ச்….. அவ யாருனு உங்க எல்லாருக்கும் தெரியும்ல……… அவ ஒன்னு ஆசப்பட்டா அதுல நிறைய காரணம் இருக்கும்…… இப்போ என் பேத்தி கேட்குறதுல கூட காலம் நமக்கு எதோ சொல்ல விரும்புதுனு தான் நான் நினைக்கிறேன்……. அதுனால அவ போய்ட்டு வரட்டும்……..”என்று அவர் கூற……​

“மாமா……… அவளுக்கு இதனால ஏதாவது ஆபத்து வந்தா……..”என்று காயத்ரி கலங்கிய குரலில் கூற…….​

“இல்ல…… என்ட குருவாயுறப்பா இருக்குற வர…….. என்ட பேத்திக்கு ஒன்னும் ஆகாது……..”என்றார் மனதில் சஞ்சலத்துடன்……​

அவருக்கும் இதில் சம்மதம் இல்லை தான்……… ஆனால் இது தான் நடக்க வேண்டும் என்று திரொளபதி அம்மன் நினைத்தால் அங்கு வேறு யாரால் மாற்றத்தை கொண்டு வர முடியும்……. என்று அவரின் அம்மன்…. அப்பன் மீது பாரத்தை போட்டு இந்த சொல்லை சொன்னார்…….​

“சரிதான் அச்சா……… ஆனா அவ அங்க தனியாவா இருப்பா……...”என்று தங்கப்பாண்டி கேட்க………​

“நான் அவ கூட போறேன் மாமா………..”என்று முதல் ஆளாக நின்றான் யுகா………​

அவன் அப்போது தான் தன் குடும்ப பிஸ்னஸை கையில் எடுத்து……. அதில் தான் படித்த ஐடி துறையை நுழைத்திருந்த நேரம் அது……​

“வேணாம் யுகா நீ இப்போதான் உன் பிஸ்னஸ ஆரம்பிச்சிருக்க……. இப்போ போய்…….”என்று அவர் இழுக்க​

“மாமா……. எனக்கு என் ருதுவோட வேற எதும் முக்கியம் இல்ல மாமா……. என் பிஸ்னஸ்க்கு தேவையான எல்லாமே நான் ஏற்கனவே பார்த்துட்டேன்…… அப்பாவும் அடிக்கடி போய் பார்த்துப்பாரு…….நானும் மந்த்லி ஒன்ஸ் வந்து பார்த்துட்டு போய்ப்பேன்…….”என்றான் புன்னகையுடன்…….​

அவனின் ருது மீதான அவனின் அன்பை அவர்கள் எத்தனை வருடமாக கண்டுக்கொண்டு இருக்கிறார்கள்……. இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம் போல தான் தெரிந்தது……..​

ஒருமுறை அம்ருவின் ஸ்கூலில் படிக்கும் அவளுக்கு சீனியரான பையன் ஒருவன் அம்ருவிற்கு லவ் லெட்டர் கொடுத்து டேட்டிங் கூப்பிட……. அதனை அவள் டீசன்டாக தவிர்த்துவிட்டாள்…… ஆனால் அவனோ…… அவளை விடாமல் தொல்லை செய்ய…….. அதனை அவள் யாரிடமும் சொல்லாமல் இருந்தவள்…….. ஒருநாள் அவனின் அட்டகாசம் தாங்காமல் அவனை அறைந்துவிட்டாள்……..​

இதில் கோவப்பட்ட அந்த பையன்…….. அம்ருவின் யுகாவை தங்கள் பிடிக்குள் வைத்துக்கொண்டு……. எனக்கு இல்லாத நீ வேற யாருக்கும் இல்ல……. அதுனால இப்போவே நீ மாடில இருந்து குதிச்சிடு….. இல்ல உன் யுகாவ நான் தள்ளிவிட்டுடுவேன்……. என்று அவளை பயமுறுத்த…….. அவளும் யுகாவின் மீது உயிரே வைத்திருந்ததால் குதிக்க எத்தனிக்க…… உடனே யுகாவோ அவன் பிடியில் இருந்து தப்பியவன்……​

“எனக்காக அவ குதிக்கறதுக்குள்ள நானே குதிச்சிடுறேன்….. “என்று மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டான்…….​

இதில் அம்ரு…… ஆஆஆ….. என்று கத்தியவள் யுகா விழுந்த இடத்தை அதிர்வுடன் காண…… அந்த பையனோ உச்சகட்ட அதிர்ச்சியில் பயந்தவாறே அங்கிருந்து ஓடிவிட்டான்…….​

அம்ரு மாடியில் இருந்து யுகா யுகா என்று அலற்றியவாறே எட்டிப்பார்க்க…….. அவளின் யுகாவோ மாடியில் இருக்கும் ஒரு ஜன்னலின் கதவை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தான்…….. இதில் கொஞ்சம் தெளிந்தவள்……… உடனே அவனுக்கு கைகொடுத்து மேலே இழுத்தவள் விட்டாள் ஒரு அறை……..​

அதை வாங்கிக்கொண்டு அப்படியே நின்றவன் மறுநிமிடமே அவளுக்கு விட்டான் ஒரு அறை……. அதில் அதிர்ந்தவள்……. “லூசு பயில்வான்…….. எதுக்குடா குதிச்ச…….. குதிச்சதும் இல்லாம என்னை அறைய வேற செய்ற…….. என்னை விட்டுட்டு போக உனக்கு அவ்வளவு ஆசையாடா……...”என்று அவள் கத்த………​

“அதே தாண்டி நானும் கேட்கிறேன்…….. உனக்கு என்னைவிட்டுட்டு போக எப்டிடி மனசு வந்துது…….. அவனும் சொல்றானு உடனே குதிக்க தயாரா நிக்கிற,…… அறிவில்லை……. அதான் அறைஞ்சேன்…….”என்று அவன் கத்த………​

இப்போது அமைதியாவது அவள் முறையானது………. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நின்றவர்கள்……… திடீர் என்று இருவரும் ஒரு சேர அணைத்துக்கொண்டு ஒரே போலவே………..​

“பயந்துட்டேன் டா……….”என்று அவளும்……….​

“பயந்துட்டேன்டி"என்று அவனும் ஒரு சேர கூற………. இருவரும் ஒரு சேர புன்னகைத்துக்கொண்டனர்………​

அன்று நடந்ததை தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மறைக்காமல் இருவரும் கூற……. அவர்கள் முதலில் அதிர்ந்தாலும்……. பின் இருவரையும் கண்டித்துவிட்டு…….. எந்த பிரச்சனையாக இருந்தாலும் தங்களிடம் கூறுமாறு திட்டியவர்கள் அந்த பையனின் குடும்பத்திடம் அவன் செயலை கூறி கண்டித்தனர்…….​

பின் இருவரின் இந்த அன்பினையும்….. ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பினை கண்டவர்கள் பூரித்து போனார்கள்……….​

அதனாலே இன்று யுகாவின் மேல் நம்பிக்கை வைத்து இருவரையும் இந்தியாவிற்கு அனுப்ப ஒத்துக்கொண்டனர்……..​

அதனை கேட்டு அம்ருதா கால் தரையில் படவில்லை………. தாம் தூம் என்று வீடே அதிர துள்ளி குதித்தவள்……. யுகாவை அணைத்துக்கொண்டு பல அன்பு கொட்டுகளை அவனுக்கு வாரி வழங்கியவள்……. கடைசியில் அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு தன் கோஸ்டோலஜி படிப்பிற்கான அப்ளிக்கேஷனை ஆன்லைனில் பில் பண்ணி அனுப்ப ஓடிவிட்டாள்………...​

“ஏய் எரும…… ஏழு கழுத வயசாகுது கன்னத்தை எச்ச பண்ணிட்டு ஓடுது பாரு……… கொஞ்சம் கூட பொண்ணுனே உனக்கு தோணாதா……...”என்று அவன் வாய் அவளை திட்டினாலும் அவன் மனம் அவ்வளவு நிம்மதியாக இருந்தது……. தன் ருதுவின் ஆசையை நிறைவேற்ற தான் உதவியதை நினைத்து……..​

இப்படியாக 6மாதம் கோஸ்டோலஜி படிப்பை படித்தவள்……… பின் 6மாதம் அதற்கான ரிசர்ச் பேப்பரை சமிட் செய்வதற்கான ஆராய்ச்சியை ஆரம்பிக்க இந்தியாவிற்கு கிளம்பினாள்………..​

“இங்க பாருடி……. உனக்கு ரிசர்ச் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணிருக்கறது சென்னையில…….. அதவிட்டுட்டு அங்க இங்க சுத்துன பிச்சிடுவேன்……. தமிழ்நாட்ட விட்டு நீ வெளில போகக்கூடாது……...”என்று காயத்ரி கத்த………​

அதை சிறு தலை ஆட்டலுடன் வாங்கிக்கொண்டாள் அம்ருதா……..​

“ஆமாடா கண்ணா……. உனக்கு ஆசைனு தான் நாங்க எல்லாம் உன்ன இந்த 6மாசம் பிரிச்சிருக்க ஒத்துக்குறோம்…….. போய் வேலைய முடிச்சிட்டு கிளம்பி வந்துட்டே இருக்கனும்……. தாத்தா உனக்காக வைட் பண்ணிட்டே இருப்பேன்……..”என்றார் அமிர்தலிங்கம்……..​

“தாத்தா உனக்கு பாக்கனும்னா சொல்லு உடனே ஓடிவந்துடுறேன்……...”என்று அம்ருதா கூற………​

“அப்போ அவருக்கு உன்ன அனுப்ப பிடிக்கல இங்கையே இருந்துடுறீயா…...”என்று காயத்ரி வம்பு வளர்க்க……..​

அதில் கடுப்பானவள் தன் அன்னையை முறைத்தாள்………. அவரும் தான்…….​

“ப்ச் காயு…… அவகிட்ட போய் வம்பு பண்ணிட்டு………. மா அம்ரு டைலி வீடியோ கால் பேசனும்…… ஒழுங்கா சாப்டனும்…….. சீக்கரம் வேலைய முடிச்சிட்டு அப்பாட்ட ஓடிவந்துடனும்…….”என்று தங்கப்பாண்டி கூற……..​

அதில் அவரை அணைத்துக்கொண்ட அம்ரு………. “மிஸ்டர் கோல்ட்பாண்டி…….. நா பத்திரமா போய்ட்டு ஓடி வந்துடுவேன்…….. பயப்படாதீங்கப்பா…….”என்று அம்ரு அவரை கட்டிக்கொண்டு கொஞ்ச……..​

“ஆமா தூக்கி இடுப்புல வச்சிட்டு பூவா ஊட்டுங்க மாமா…….. பச்ச குழந்தை இவ….”என்று யுகா கடுப்படிக்க………​

“உனக்கு பொறாமைடா என்னை மாறி உன்ன உங்க அப்பா கொஞ்சலனு…….” என்று அவள் காலை வார……..​

“ஆமா….. ஆமா……… அப்டியே பொறாமை வழிது இவ வந்து பார்த்தா…….. ஒழுங்கா பேசாம வா……. இல்ல பூசணிக்கா உன்ன இங்கையே விட்டுட்டு போய்டுவேன்……….”என்று யுகா கிண்டல் செய்ய……..​

அதில் அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டவள் தன் நான்கு அண்ணன்களிடம் அவனை மாட்டிவிட……. அந்த ஜிம் பாடிகளோ இவன் இரண்டு கையை இருவரும்……. இவனின் இரு கால்களை இருவரும் பிடித்துக்கொண்டு இங்கையும் அங்கையும் சுற்றிக்கொண்டு இருந்தனர்……….​

“அய்யயோ…….. அடேய்……. பாண்டவர்களுல ஒருத்தன் கம்மிங்களா……… என்னை விடுங்கடா……"என்று அவன் கத்த…….​

“ஏய் யார பார்த்துடா டானு சொன்ன……..”என்று அதில் ஒருவன் இவன் சங்கை பிடிக்க………​

“அய்யோயோ……. தெரியாம சொல்லிட்டேன் மச்சான்ஸ்…… ப்ளீஸ் விட்டுடுங்க…….. உங்க தங்கச்சிய நான் தான் இந்தியா அழைச்சிட்டு போய்ட்டு அழைச்சிட்டு வரனும்…...”என்று யுகா கத்த……..​

“டேய் லேபுல வைக்கிற எலும்பு கூடே உன்னை விட்டு அரைமணி நேரம் ஆகுதுடா…….. நொன்ன…….”என்று ஒரு அண்ணன் கத்த……..​

அதில் அசிங்கமாக ஒரு இழிப்பை இழித்த யுகாவை பார்த்த ஒரு அண்ணன்…… "ஆமா இந்த உடம்ப வச்சிட்டு எப்டிடா என் தங்கைய காப்பாத்துவ ஏதாவது ஆபத்து வந்தா………"என்று ஒரு கேள்வியை கேட்க…….​

அதில் அதிர்ச்சியாக தன் நெஞ்சில் கை வைத்தபடி………. “என்னது ஆபத்து வந்தா நான் காப்பாத்தனுமா……… அது எப்டிடா அடுத்தவன் வீட்டு புள்ள உயிர்னா மட்டும் உங்களுக்கு கறும்பு சாப்டுறது மாறி இவ்வளவு ரசிச்சி சாப்டுறீங்க……….”என்று யுகா அழுதவாறே கூற………​

அதில் அனைவரும் சிரித்துவிட்டனர்………..​

பின் ஒருவழியாக இருவரும் சென்னை வந்து சேர…… வாடகைக்கு ஒரு வீட்டை பார்க்க சொன்ன அம்ருவை திட்டி சொந்தமாக ஒரு ப்ளாட்டினை வாங்கி கொடுத்தனர் அவர்களின் பெற்றொர்கள்……..​

இப்போது அம்ரு இந்தியா வந்து 1வருடம் கடந்துவிட்டது……… ஆனால் இன்னும் அவளின் ரிசர்ச் பேப்பரை அவள் முடிக்காமல் வைத்திருக்க…….. அதில் கடுப்பான அவளின் பெற்றோர் அவளை வர சொல்லி வற்புறுத்த…….. “இன்னும் 3மாசம் அச்சா…….. இன்னும் 2மாசம் அச்சா……. இன்னும் 3மாசம் அச்சா என்று மாதத்தினை குறைப்பதும் பின் ஏற்றுவதுமாக அம்ரு அவர்களை ஏமாற்றிவர…….​

யுகா அவர்களை சமாளித்துக்கொண்டிருந்தான் இவ்வளவு நாட்களாக……..​

“ஏன்டி இப்டி பண்ற……...”என்று அவன் கேட்க…….​

“எனக்கு ஹாரர் ஸ்டோரி எழுதனும்……. அதுக்கு இங்கதான் வசதியா இருக்கு…… எதாவது ஹாரரான ப்ளேஷுக்கு போய் எழுதுனாதான் சரியா இருக்கும்……..”என்று அவன் தலையில் குண்டினை தூக்கி போடுவாள்………​

அவள் சொன்னது போல் இதுவரை 30கதைகள் எழுதிருக்கிறாள்……. அனைத்தும் பல்வேறு பப்ளிகேஷனில் பிரின்ட் செய்யப்பட்டு வெற்றிகரமாக விற்றுக்கொண்டிருப்பவை…….. பின் அதில் 10 தமிழ் படத்திற்காக வாங்கப்பட்டு இருந்தது……. அதில் 3படம் எடுத்து வெற்றிகரமாக பல நாட்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது………​

ருதா என்ற பெயரில் ப்ளாக்ஸ் ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்ருதா………​

இப்போது யுகா அவளை திட்டிக்கொண்டிருக்க………. அவளோ…… அவனை பயில்வான் என்று வெறுப்பேற்றிக்கொண்டு இருக்கிறாள்………….ஏனென்றால்……. அவன் முகம் முழுதும் தாடியுடன்…….. நல்ல பணமரம் உயரம்……. நல்ல வெள்ளை நிறம்…… கையில் விரல்கள் எல்லாம் குச்சி குச்சியாக நீண்டு போய் இருக்கும்…….. வயிறு என்ற ஒன்றே அவனிடம் நாம் பார்க்க முடியாது……. அதனால் சாப்பிட மாட்டான் என்றேல்லாம் இல்லை………. நான்வெஜ் என்றால் அவ்வளவு தான் ஒரு வெட்டு வெட்டிவிடுவான்…….. எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு போடாத ரகம் அவன்………​

ஆனால் அம்ருதா அப்படி இல்லை……. நல்ல கொழுக் மொழுக்காக இருப்பாள்…… அதனால் டயட் அது இதுவென்று ஒரு 4நாட்கள் செய்துவிட்டு……. “அப்பாடி குந்தானி ஆனாலும் பரவால….. இந்த டயட்டலா நம்மளால இருக்க முடியாதுப்பா……… நான்லாம் நல்ல சாப்ட்டு செத்து போனும்னு நினைக்கிறவ…….. என்னை போய் இப்டி டயட் இருக்க சொன்னா…….. இந்த நாட்ட விட்டு போறத தவிர வேற வழி இல்ல……..”என்று புலம்புவாள்…..​

இதை கேட்ட யுவனோ……. வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிப்பான்…….. “உனக்கு தான் இதுலா வரலனு தெரிதுல…… பின்ன ஏன் இதலாம் ட்ரை பண்ற……. ருது……. “என்பான் அவள் மேல் உள்ள அன்பில்………​

ஆனால் இவன் தான் முதல் நாள் சொல்லிருப்பான் இவளிடம்………. “இப்டியே சாப்டு சாப்டு குண்டு தக்காளி ஆகிடாதடி குண்டச்சி…….. அப்றம் உன்ன திரும்ப துபாய் கூட்டிட்டு போகனும்னா…… உன்ன இங்க இருந்து ஏர்போர்ட் வர உருட்டிட்டு தான் போனும்…….. ஏர்போர்ட்ல இருந்து உன்ன கார்கோல தான் பார்சல் பண்ணி கொண்டு போனும்……..”என்று கிண்டல் செய்வான்………​

ஆனால் அடுத்த நிமிடமே…… அவனே கேஃப்சி…… பர்கர்…. கோக்கென்று வாங்கி வந்து குவித்துவிடுவான்……. அதை எல்லாம் பார்த்ததும் அம்ருதாவின் முகம் பளிச் என்று ஆகிவிடும்……… இதிலே அவள் ஒரு ஃபுட்டி என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்…..​

ஆம் அம்ருதாவிற்கு கதைகள்………. அதும் ஹாரர் கதைகள் எழுத எவ்வளவு பிடிக்குமோ…….. அதே அளவிற்கு உண்பதும்……..பிடிக்கும்………​

இங்கே இப்படி இருக்க அங்கோ……. அந்த பயங்கரமான உருவம் தன் வேட்டையை ஆரம்பித்திருந்தது……….​

“உன்னை விடமாட்டேன்…….. கம்சா…..……..”என்று கர்ஜித்தது……. உயரமான அந்த பில்டிங்கின் உச்சியில் நின்றுக்கொண்டு…………….​

இதை உணராதவளோ…….. நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள்………..​

(நிழல்கள் தொடரும்………..)

 
Last edited by a moderator:
Top