எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இருளின் நிழல்.........

Priya pandu

Moderator

இருளின் நிழல்……….

அத்தியாயம்-1

சென்னையின் ஓஎம்ஆர் பகுதி அது……… இரவின் நடுநிசி அது…… எங்கு பாத்தாலும் இருட்டான இடங்களாக அந்த ஓஎம்ஆர் பகுதியையே மிரட்டிக்கொண்டு இருந்தது….. பத்தாதற்கு கடல்களின் கொந்தளிப்பு வேறு அதிகமாக இருந்தது……. அந்த கடலின் இறச்சலிலே நாம் பாதி மிரண்டு போவது உறுதி………. அந்த பகுதியில் பல வீடுகள் அநாமத்தாக பூட்டிக்கிடந்தது…….. அனைவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தாலும்….. ஓஎம்ஆரில் ஒரு வீடு வாங்கி போடுவதை மட்டும் அவர்கள் விடமாட்டார்கள்………​

அப்படி வாங்கப்பட்ட வீடு யாரும் இல்லை என்றாலும்……. தினமும் கூட்டி சுத்தம் செய்து…….. துடைத்து வளவளவென வைத்திருக்க செய்வார்கள் முதலாளிகள்…….. தன் வேலைக்காரர்களை வைத்து……… வீட்டின் உள் உள்ள பொருட்களை பாதுகாக்கவென மாதம் மாதம் சம்பளம் கொடுத்து வீட்டின் வாசலில் வாட்ஸ்மேன் என்ற பெயரில் ஒருவரை உட்கார வைத்து விடுவார்கள்……… வீட்டின் கண்காணிப்பை பலப்படுத்த அந்த வீட்டினை சுற்றி எங்கும் சிசிடிவி கேமிராவை பிக்ஸ் செய்துவிடுவார்கள்……….​

அந்த பகுதியில் தான் முக்கால் வாசி தப்பு நடப்பது தான் உண்மை…….. பல பணக்கார முதலாளிகளின் தப்பின் கூடாரமே அந்து போன்ற பக்களா தான்………​

அப்படிபட்ட இடத்தின் இன்னொரு பக்கம்.………. ஒரு பகுதில்…...எங்கு சுற்றினாலும் புகழ் பெற்ற பல அப்பார்ட்மென்ட்கள் அந்த இரவு நேரத்திலும் ஜொலி ஜொலித்துக்கொண்டு இருந்தது……. பல கோடிக்கணக்கில் செலவு செய்து அப்பார்ட்மென்டை கட்டி அதனை பல லட்சங்களுக்கு விற்கும் பில்டர்ஸ்களால் கட்டப்பட்டது தான் அந்த ஆரஞ்ச் அவன்யூ அப்பாட்மென்ட்………​

பல ஏக்கர் கணக்கில் உள்வாங்கிய அப்பாட்மென்ட் அது…….. கிட்டதட்ட 2000 வீடுகளை உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பு……… சுற்றி வீடுகள்…….. நடுவில் குழந்தைகள் விளையாட……. வயதானவர்கள் நடை பழக……. இளவட்டங்கள் ஜாகிங் ஓட…….. வசதியாக அமைக்கப்பட்ட பார்க்……… அதன் அடுத்த பக்கம் நீளமான ஸ்விம்மிங் பூல்……… அங்கு உள்ள அனைவரும் அதனை பயன்ப்படுத்தும் அளவிற்கு அழகாக அமைக்கப்படு இருந்தது……..​

அதன் அடுத்தபக்கம் சுற்றி மரங்கள்……… செடிகள்……… அனைத்தும் அழகாக வளர்க்கப்பட்டு மட்டும் இல்லாமல் அதனை அழகாக வெட்டி சீராக அமைத்திருந்தனர்….. அங்கு உள்ளே ஒரு குப்பை கூட பார்க்க முடியாது…….​

கிட்டதட்ட 18மாடிகள் கொண்ட அப்பாட்மென்ட்……. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக ஒரு மென்பொறியாளர் இருப்பார்……. ஏன் என்றால் அந்த ஓஎம்ஆர்க்கு அருகில் தானே புகழ்பெற்ற ஐடி கம்பெனிகள் எல்லாம் உள்ளது……… அதனால் தான் தங்கள் குடும்பத்துடன் அங்கையே லோன் போட்டாவது வீட்டினை வாங்கி வைத்திருக்கின்றனர்………​

பக்கத்திலே புகழ்பெற்ற பள்ளிகள் இருக்கிறது குழந்தைகளுக்கு……… வேறு என்ன வேண்டும்…… என்ன வாழ்க்கை முழுதும் அந்த வீட்டிற்கான இஎம்ஐ மட்டும் கட்டிக்கொண்டே வாழ்க்கையை ஓட்ட வேண்டும்……….. அவ்வளவே……..​

இந்த ப்ளாட்டிலும் ஒரு ஒரு ப்ளாக்கிற்கும் தனியாக லிப்ட் இருக்கிறது……. அதே போல் கீழே சூப்பர்மார்கெட் வசதி அனைத்துமே இருக்கிறது……… ஒவ்வொரு ப்ளாக்கிற்கும் ஒவ்வொரு வாட்ஸ்மேன் இருக்கின்றனர்………​

அந்த நடுநிசி இரவில்……. காவல் காக்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொருத்தரும் தங்களுக்காக கொடுக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்…… திடிர் என்று நடுவில் முழிப்பு வந்தால் கையில் ஸ்டிகை வைத்துக்கொண்டு தட்டிக்கொண்டே நடப்பார்கள்…………​

இப்படியாக இருக்கும் அந்த அப்பார்ட்மென்டில் தான் நம் கதை ஆரம்பிக்கிறது……..​

இதே அந்த அப்பார்ட்மென்டின் ஒரு ப்ளாட்டில் தான் நம் கதையின் நாயகி இருக்கிறாள்………. நாம் இப்போது இருப்பது b ப்ளாக்…….. பி ப்ளாக்கில் 202 வீட்டில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருட்டில் மிதந்துக்கொண்டு இருந்தது…… தங்கள் அருகில் யார் இருந்தாலும் அதனை காண முடியாத அளவிற்கு இருட்டு……..​

அந்த வீட்டின் கதவை தான் யாரோ திறப்பது போல சத்த கேட்டது…….. “சதக்………..”என்று கதவு திறக்கப்பட……. பின் திரும்ப கதவு மூடும் சத்தமும் தெளிவாக கேட்டது………​

ஆனால் உள்ளே வந்தவர்கள் யாரோ……. ஹாலின் லைட்டை கூட போடாமல் அடி மேல் அடி வைத்து கொஞ்ச கொஞ்சமாக வீட்டின் ஹாலை நோட்டம் விட்டது இரண்டு கூர்மையான கண்கள்…… அந்த உருவத்தின் தலை முதலில் இடப்பக்கமும்….. பின் வலப்பக்கமும் சுழல…… ஆனால் அந்த கண்களுக்கு எதும் தென்படவில்லை போல……​

அதனால் மெதுவாக மிக மெதுவாக ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்தவாறே ஹாலை கடந்து வலப்பக்கம் இருந்த அறைக்கு அருகில் சென்றது அந்த உருவம்………​

பின் மெதுவாக ஓசை எழுப்பாதவாறே அந்த அறையின் கதவை திறக்க முயல…….. நல்ல வேளையாக அதன் கதவு பூட்டப்படவில்லை……… ஒரு பெருமூச்சினை வெளியேற்றிவிட்டு…….. கதவை முழுதாக திறந்த அந்த உருவம்…… அறையின் உள்ளே ஒவ்வொரு இடத்தையும் மிக உன்னிப்பாக பார்த்தது……….. அந்த அறையுமே இருட்டில் தான் மிதந்துக்கொண்டிருந்தது……….​

அந்த இருட்டிலும்……. அந்த அறையில் ஒரு ஸ்டடி டேபிளும்……… அதன் மீது ஒரு லைட்டும்….. பின் அதன் மீது ஒரு லேட்டஸ்ட் வகையான லேப்டாப் ஒன்று திறந்து வைக்கப்பட்டு அதில் இருந்து வெளிச்சம் கசிந்துக்கொண்டு இருந்தது…….. இது மட்டுமே அந்த இருட்டிலும் அந்த உருவத்தின் கண்களுக்கு தெளிவாக தெரிந்தது…….​

பின் ஏதோ யோசித்தவாறே அந்த உருவம்…….அந்த அறையை சுற்றிப்பார்த்தால்………. ஒரு மர சேல்ஃப்…….. அதில் அழகாக புத்தகங்கள் அடுக்கப்பட்டு இருந்தது……..பாதி தமிழ் புகழ்பெற்ற ஆசிரியர்களின் புத்தகமும்……… பாதி இங்கிலீஸ் ஆசிரியர்கள் புத்தகமும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தது…….​

இதிலே அந்த வீட்டில் உள்ளவள் அனைத்து புத்தகத்தையும் ஆர்வமுடன் படிப்பவள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடிந்தது………​

அடுத்து அந்த அறையின் மூளையில் ஏதோ கறுப்பு நிறத்தில் ஒரு உருவம் நிற்பது அந்த மங்கலான ஒளியில் நமக்கு தெரிய…….. அது அந்த உருவத்தின் கண்களுக்கும் தெளிவாக தெரிந்தது……..​

அந்த இருளின் உருவத்தை பார்த்த அந்த உருவத்தின் கண்கள் பெரிதாக விரிய……. உடக் முழுதும் வேர்க்க ஆரம்பித்தது…….. உடல் நடுங்க….. தன் அருகில் உள்ள சுவற்றை ஆதரவாக பற்றிக்கொண்டு…… திரும்ப அந்த உருவம் தெரிந்த இடத்தையே அந்த உருவம் காண………. அந்த கரிய உருவத்தின் கண்களோ….. அந்த இருட்டிலும் சிவப்பு நிறத்தில் பளீச் என்று பயமுறுத்தியது……..​

அந்த உருவம் தந்த பயத்தில் தொண்டை வற்ற…….. எச்சை விழுங்கிக்கொண்டு……… மெதுவாக தட்டுதடுமாறி……. பயந்தவாறே அந்த உருவத்தின் அருகில் செல்ல…...அவள் தலை விரித்து நின்ற கோலமே நமக்கு திகிலை கிளப்ப…….. அந்த முதலில் உள்ளே வந்த உருவத்திற்கு அது இன்னும் திகிலை கிளப்பியது…….. பயத்தில் நெஞ்சை அடைத்துக்கொண்டது அந்த உருவத்தின் காதிற்கே நன்றாக கேட்டிருக்கும்…….. அப்படி ஒரு சத்தம்……….​

அது போதாதென்று……. அந்த நேரத்தில் எங்கோ ஒரு நாய் வேறு ஊளையிட…….. பகீர் என்று இருந்தது அந்த உருவத்திற்கு……. அமானுசியமான இரவுக்கு அத்தனை சாத்தியமும் அங்கு நிறைந்து நின்றது போல அந்த உருவத்திற்கு தோன்றியது……….​

இருந்தாலும் தன் மனதை தேற்றிக்கொண்டு…….. இன்னும் தன் நடையை தொடர……..​

அந்த உருவமோ………. தன் கோர பற்கள் அனைத்தையும் திறந்துக்காட்டி………. அந்த உருவத்தை பார்த்து சிரித்தது…….. அதில் இன்னும் நடுங்க வைக்க………. அது போதாதென்று……….​

“வா…….. கண்டா…… உன்னதான் தேடிட்டு இருந்தேன்…… பல ஆண்டுகாலமா உனக்கு தான் காத்துக்கொண்டிருந்தேன்…….. வந்துட்டியா……. இனி என் செயல் ஒவ்வொன்றும் உன்னை அனுஅனுவாக கொல்ல போகிறது……….”என்று கீச்கீச் குரலில்…. பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு குரல் அகோரமாக கேட்க……….​

“அய்யோ……. ம்மா…… பேய்…. காப்பாத்துங்க……..”என்று இன்னொரு உருவம் இருட்டில் கத்த……..​

அதை கேட்ட அந்த இருளின் உருவமோ……….. ஹாஹாஹா…….. என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தி சிரித்த அந்த உருவம்……….​

“ஏன் என்னை பார்த்து பயப்ப்படுற……. உனக்காக தான் நான் ஜென்ம ஜென்மமா காத்துட்டு இருக்கேன்…….. என் அழகே…….. வா என் அருகில்………..”என்று அந்த இருளின் உருவம் அந்த உருவத்தை நெருங்க……...​

இன்னும் அந்த எதிரில் நின்ற உருவம் அலறிவிட்டது…………… "ஆஆஆஆ……… அய்யோ காப்பாத்துங்க……….."என்று அந்த உருவம் கத்த………. அதில் சிரிப்பு தாங்காமல்…………...ஹாஹாஹா…… என்று தன் சொந்த குரலில் சிரித்தாள் ஒருத்தி………..அது யார் என்று அருகில் நெருங்கி பார்த்தால்……… அவள் தான் நம் கதையின் நாயகி…….. அம்ருதா தங்கபாண்டி……

அவளை குரல் வைத்தே கண்டுக்கொண்ட அந்த உருவம்………….. அம்ருதாவை பார்த்து முறைக்க……… அதில் இன்னும் சிரித்தவள் லைட்டினை ஆன் செய்தாள்……… அப்போது தான் நம்மளால் அவளை ஒழுங்காக பார்க்க முடிந்தது………​

இடை வரையான கூந்தல்……… நெற்றியில் ஒரு கொத்து முடி அழகாக வெட்டப்பட்டு படரவிட்டப்பட்டு இருந்தது……. நல்ல அடர்த்தியான புருவங்கள்……… அதன் நடுவில் அழகாக ஒரு சின்ன பொட்டு வைத்திருந்தாள்…….. அதற்கு கீழ் அழகான மையிட்ட கண்கள்…….. அதன் கூர்மை யாரையும் மயக்கத்தில் ஆழ்த்திவிடும்……. கூர்மையான நாசி….. அதில் தங்கத்தில் வளையம் குத்தியிருந்தாள்….. அது அவளின் மூக்கிற்கே அழகு சேர்த்தது போல இருந்தது….. நல்ல கொழுக் மொழுக் கன்னங்கள்……. இரு கன்னங்களும் அழகாக இயற்கையிலே சிவந்து போய் இருந்தது……..அதன் அழகு ஆப்பிளை நமக்கு நியாபகப்படுத்தியது……… அதன் கீழ் அழகாக வரிவரியாக செதுக்கப்பட்டது போன்ற உதடுகள்…….. நல்ல செர்ரி போல சிவந்து இருந்தது……….​

அவளின் முடியினை விரித்துவிட்டு…….. வெள்ளை நிற நைட் ட்ரேஸ் ஒன்றை போட்டுக்கொண்டு……. அதன் மீது வெள்ளை நிற ஹாலினால் மூடிக்கொண்டு……. கண்களில் சிவப்பு நிற லைட்டை கண்கள் போல மாட்டிக்கொண்டு……….. நின்றிருந்தாள்….. அவளை வெளிச்சத்தில் பார்ப்பவர்களுக்கே அவள் மோகினி போல தெரிய……… பின் இருட்டில் எப்படி தெரிவாளாம்……..​

அதனால் தான் பயந்து போய் நின்றான் ஒருவன் அவள் எதிரில்……… அவனின் தோற்றத்தை பார்த்த அம்ருதா…… கொஞ்சம் அதிர்ந்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்ட அம்ருதா……….. “அய்யோ பேயா…….. எங்க…. எங்க…… பேய் எங்க……..”என்று ஆர்வமாக சுற்றி முற்றி தேட……..​

அதில் கடுப்பானவன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அம்ருதாவை முறைத்துக்கொண்டு நின்றது……..​

“அறிவில்லையாடி உனக்கு…….. இப்டிதான் நான் உள்ள வரும்போது தலையை விரிச்சி போட்டுக்கிட்டு ஜன்னல் பக்கத்துல நிப்பியா……… அதும் வெள்ளைகலர்ல உன்ன யாருடி ட்ரேஸ் போட்டுட்டு நிக்க சொன்னது……. அறிவுகெட்டவளே……….”என்று அவன் கத்த………​

அதில் அவளோ தன் காதினை ஒரு விரல் கொண்டு தடவியவாறே……….​

“ஸ்ஸ்ஸ்…….. கத்தாத யுகா………..”என்றாள் காதினை வருடிக்கொண்டு………..​

அதில் இன்னும் கடுப்பானவன்……….. “உன்ன என்ன செய்றேனு பாருடி இப்போ……….”என்று அங்கிருந்த தலைகாணி ஒன்றை தூக்கிக்கொண்டு ஓடிவர………. அதில் அம்ருதா………….​

“ஆஆஆ……… ஜண்டா……….என்னை காப்பாத்து………….”என்று அந்த அறையை சுற்றிமுற்றி ஓட ஆரம்பித்தாள்………….​

அவனோ துரத்த…….. இவளோ ஓட…….. இதனை ஜன்னலின் வெளியில் நின்ற ஒரு கறுப்பு உருவம் கண்களில் வெறியுடன்…… முகத்தில் வஞ்சம் தீர்க்க வந்த வன்மத்துடன் வெறித்துக்கொண்டிருந்தது………….​

(நிழல்கள் வரும்……...)

 
Last edited by a moderator:

Krishna Tulsi

Moderator
Epi sooper ah iruku Sis 😍 First konjam bayam next sirippu and next thigil ah irundhuchu 😱😱 Andha karupu uruvam yaara irukum 🤔🤔
 
Top