எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உள்ளமுதாய் உன் உணர்வுகள் - கதை திரி

ஹாய் பட்டூஸ்,

இதோ என் மூன்றாவது கதையின் முதல் அத்தியாயம். படிச்சுட்டு உங்க கருத்தை பகிருங்கள் 👨‍👧👨‍👧👨‍👧

உள்ளமுதாய் உன் உணர்வுகள்‌ 1:👨‍👧👨‍👧

முழுமையாக நித்திரை அரசன் ஆகாயத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த நேரம்‌ அந்த அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்ட்டில் தவிப்பும் பதட்டமாய் நடந்து கொண்டிருந்தான் இருளரசன்.

பெயருக்கேற்றாற் போல் தோற்றமுடையவன் தான்.

"நர்ஸம்மா நர்ஸம்மா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்….எம் பொஞ்சாதி எப்புடி இருக்கா" என வார்டில் இருந்து வந்த செவிலியரை நிறுத்தி அவன் கேட்க,

ஏற்கனவே, நைட் டியூட்டி என்பதாலும் இன்றைக்கு என்று பாரத்து நோயாளிகள் குவிந்ததில் சிறிது நேரம் கூட ஓய்வின்றி சுத்தி கொண்டிருந்தவருக்கு இருளரசினின் கேள்வி எரிச்சலை தர,

"என்ன கேட்டா எனக்கு எப்புடி தெரியும்...நார்மல் டெலிவரினா உடனே‌ பிள்ளை வந்திடுமா?? நேரம்‌ ஆக தான் செய்யும்!!!"உசுர‌ குறைக்காமா போயா அந்த பக்கம் என அவர் வள்ளென்று விழுக,

முகம் தொங்கிப் போயிற்று இருளரசனுக்கு. உள்ளிருக்கும் மனைவியின் நிலை‌யை அறிய முடியாத வருத்தத்திலும் கலக்கத்திலும் அவன் முகம் சோகை இழந்து போக அங்கிருந்து அகன்றான்.

குனிந்த தலையும் வருத்தம் தொங்கிய முகமுமாய் செல்பவனை பார்த்த செவிலியர்க்கு என்னவோ போல் ஆகி விட்டது.
நேற்றில் இருந்து அவரும் பார்த்து கொண்டு தானே‌ இருக்கிறார்.

உள்ளிருக்கும் அவனின் மனைவிக்கு நேற்று இரவில் இருந்து வலி விட்டு விட்டு எடுக்க இங்கே இவன் துடித்து போய் தவிப்பாய் நடைபயின்று கொண்டிருப்பதை.உடன் யாரும் இருப்பதை போல் தோன்றவில்லை இவன் மட்டுமே நேற்றிலிருந்து தேற்றுவாற் யாருமின்றி கலங்கி போய் நிற்கிறான்.

"இந்தாப்பா…ஏய்...நில்லுப்பா என்னத்துக்கு இப்ப மொகம் தொங்கிப் போச்சு"?? என்க,

"இல்லை நர்ஸம்மா நேத்து ராத்திரி உள்ள கூட்டிட்டு போனாங்க இன்னும் ஒரு தகவலும் வரலை பாக்கவும் விட மாட்டிகிறீக ஒரு வாய் தண்ணியாச்சும் குடிச்சாளான்னு தெரியலை ரொம்ப பதட்டமா இருக்கு நர்ஸம்மா" என அவன் கவலையை சொல்ல,

"அட பிள்ளை பொறக்குறதுன்னா சும்மாவா உள்ள இருக்குற டாக்டருக்கு தெரியாதா என்ன???எத்தனை சுகப்பிரசவம் பாத்திருப்பாங்க அதெல்லாம் வருத்தப்படாதா நல்லபடியா பிள்ளைய பெத்தெடுப்பா உன் பொஞ்சாதி!!!அது சரி நீ மட்டும் தான் நேத்துல இருந்து இருக்க கூட வேற யாரும் வரலியா??"

"அது வந்துங்க….." என அவன் பேசி கொண்டிருக்கும் போதே உள்ளிருந்த அவனின் மனைவியின் குரல் அலறலாக ஒலிக்க!!!

"உம் பொஞ்சாதி பிள்ளைய பெத்துட்டாயா!!!" என்றவறே உள்ளே விரைந்தார் நர்ஸ்.

********************************************

தன் முன்னிருந்த தபால் கடிதத்தை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பாரிஜாதமுல்லை.

அவளின் மருத்துவபடிப்புக்கான வந்த கல்லூரியை பற்றிய கடிதம் அது. தற்போது நடந்த நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்த தேர்ச்சி பெற்ற மாணவிகளில் ஒருத்தி இவள்.

பணிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு இரண்டு வருடமாக நீட் தேர்விற்கான சிறப்பு வகுப்பில் இருந்து தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள்.

ஆனால் அதற்கான சிறு மகிழ்ச்சியும் இன்றி அமர்ந்திருந்தாள் பெண்ணவள். கடிதம் வந்த போது இருந்த மகிழ்ச்சி அதனை படித்ததும் துணி கொண்டு துடைத்தாள் போல் ஆகிற்று‌.

வேறு ஒன்றும் இல்லை அவளிற்கான இடம் தேனியில்‌ உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் கிடைத்திருக்கிறது.‌

அது தான்‌ அது ஒன்று தான் இவளின் மகிழ்ச்சியை அழிக்க காரணம்.

அந்த ஊரை நினைத்த நொடி அவள் மனதில் வெறுப்பு மூள ஏதும் செய்ய இயலா திக்கற்ற நிலை.

தபால் வந்த விஷயம் இன்னேரம் அவளின் தாய்மாமா சந்திரனிற்கு தெரிந்திருக்கும்….ஆக அவளால் வந்த கடிதத்தை வீட்டினரிடம் இருந்து மறைக்க கூட முடியாதே….


"பாரி…..ஆத்தா பாரிஜாதம்" என்ற ஆறுமுகத்தின் குரல் கேட்க,

தனது யோசனையை சற்று நேரம் தள்ளி வைத்தவள் "என்ன தாத்தா" என்றவாறு வெளியில் வர,

"மணி இரண்டாச்சு இன்னும் சாப்பிடாம என்னத்தா பண்ணுற வா வந்து ஒரு வாய் உண்டுட்டு போ"

"ம்ம்ம் தாத்தா நீங்க உண்டுட்டிங்களா??"

"இன்னும் இல்லத்தா"

சமையலறையினுள் சென்றவள் அவள் அத்தை செய்து வைத்திருந்த உணவினை இரு தட்டுகளில் போட்டு எடுத்து கொண்டு வந்தவள் ஆறுமுகத்திற்கு ஒன்றினை கொடுத்து விட்டு தானும் உண்ண ஆரம்பித்திருந்தாள்.

அவளிற்கு வீட்டில் சமையல் செய்யும் வேலை கூட இல்லை அவளின் அத்தையும் தாய்மாமனின் மனைவியுமான சரளாவே வேலைக்கு செல்லும் போது சமைத்து விட்டு தான் சென்றிடுவார்.

அவர்கள் இருவரும் உண்டு முடித்த நேரம் சரியாக சந்திரன் உள்ளே வந்தார்.மதுரை மீனாட்சி அம்மன் கடைதெருவில் நகை கடை ஒன்றை வைத்திருப்பவர் எப்போதாவது மதிய உணவிற்கு வீட்டிற்கு வருபவர் இன்று மருமகளிடம் பேசும் பொருட்டு வந்திருந்தார்.

"என்னையா சந்திரா சாப்பாடு கொண்டு போலயா??"

"இல்லைப்பா கொஞ்சம் வேலை இருந்துச்சு அதான் வந்தேன்"

"சரியா சரிய்யா பாரித்தா மாமாக்கு சாப்பாடு எடுத்து வையித்தா"

சந்திரனிற்கு உணவினை‌ எடுத்து வந்து வைத்தவள் அருகில் அமர்ந்து பரிமாற…
மாமனின் பார்வை அவளை துளைத்தது.

"என்ன முடிவு பண்ணிருக்க பாரிஜாதம்??"

எதை பத்தி கேட்கிறார் என‌ தெரிந்தும் வாய் மூடி அமைதியானாள் பாரிஜாதம்.

மருமகளின் அமைதியை உணர்ந்த சந்திரன் அடுத்து பேசும் முன் "சாப்பிட்டு முடிங்க மாமா" என ஒற்றை வார்த்தையில் அவரை அடக்க அமைதியாகி விட்டார்.

உண்டு முடிந்தவர் அங்கிருந்த சேரில் அமர,

'இன்றைக்கு எப்படியும் தன்னிடம் இருந்து பதிலை வாங்காமல் அவர் கிளம்பு போவது இல்லை' என தெளிவாக தெரிந்தது பாரிஜாதத்திற்கு.

"பாரிஜாதம்????" அவரின் அழைப்பில் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள்,

"எனக்கு எனக்கு என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியல மாமா ஆனா ஒண்ணு எனக்கு அங்க அந்த ஊருக்கு போக பிடிக்கல"

இவர்களின் உரையாடலை கவனித்த ஆறுமுகம் "என்னாச்சு சந்திரா"

"ப்பா உங்க பேத்திக்கு தேனில இருக்குற மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு பத்து நாளுல கவுன்சிலிங் வர சொல்லி தபால் வந்துருக்கு"

"அப்பிடியாத்தா என் தங்கமே நீ படிச்சதும் வீண் போகலைத்தா உன் அப்பன் கண்ட கனவு நிறைவேற‌ போகுதா" என மகிழ்ச்சியில் பேசி கொண்டே போனவரை தடுத்த சந்திரா,

"ப்பா சீட்டு தேனில கிடைச்சிருக்கு" என அழுத்தி சொல்ல,

"அதனால என்ன !!!" என்றவருக்கு உண்மை நிலை உரைக்க சட்டென பாரிஜாதத்தை திரும்பி பார்த்தார்.

எந்த வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாது கல்லென இறுகி நின்றவளை கண்டவருக்கு துக்கம் நெஞ்சில் ஏறி கொண்டது.

"இப்போ என்ன முடிவுல இருக்க பாரி" சந்திரன் கேட்க,

"நா...நா இங்கேயே ஏதாவது ஒரு டிகிரி படிக்கிறேன் மாமா"

" அன்னைக்கு நடந்த பிரச்சனையில் நீ சொன்னதும் உன்னை கூட்டிட்டு வந்திருக்க கூடாதோன்னு நான் இதுநாள் வரைக்கும் நினைச்சதில்லை...ஆனா இன்னைக்கு என்ன அப்படி நினைக்க வச்சிட்ட நீ என்ன சொன்னாலும் உன்னை நான் கூட்டிட்டு வந்துருக்கு கூடாதோ அதான் உனக்கு இவ்வளவு பிடிவாதமும் வீம்பும் ஒண்ணு மட்டும் சொல்றேன் இது உன் அப்பனோட கனவு" என்றவர் எதுவும் பேசாமல் வெளியேறி விட,

"ஆத்தா பாரி இன்னும் எத்தனை வருஷத்துக்கு டா நீ இந்த கோபத்தையே பிடிச்சிட்டு இருப்ப??"

"என் உசுரு இருக்குற வரைக்கும்" பட்டென வந்தது பதில்.

"ஆத்தா அவ பாவம்டா இன்னும் எத்தனை வருஷம் டா தண்டனையை அனுபவிப்பா நீ கொஞ்சம் இறங்கி போக கூடாதா??"

"ஹ்ம்ம் என்னதான் இருந்தாலும் உங்க பொண்ணு பாசம் போகலையில உங்க பொண்ணு பாவம்னா அப்போ நான்….அவுங்க செஞ்ச தப்புக்கு தான் தண்டனை அனுபவிக்கிறாங்க...நான் எதுவும் பண்ணலை என்னை விட்டுடுங்கன்னு தான் நான் சொல்றேன்….என்ன தான் இருந்தாலும் உங்களுக்கு உங்க பொண்ணு தான் முக்கியம்னு சொல்லாம சொல்லிட்டீங்க….

என்னை பத்தியே என் அப்பாவ பத்தியே கவலைப்பட இங்கே யாருமே இல்லையில" என கலங்கிய குரலில் குரலில் கூறியவளை கண்ட ஆறுமுகத்திற்கு கண்கள் கலங்க…,

"ஆத்தா பாரி நான் அப்பிடி எல்லாம் நெனைக்கலடா??" என்றவரின் விழிகளில் இருந்து நீர் வழிய,

ஆறுமுகத்தின் கண்ணீரில் தன்னையே நொந்து கொண்டவள் "இந்த பேச்சு வேண்டாம் விட்டுடுங்க தாத்தா வாங்க செத்த நேரம் கண்ணசுருங்க" என்றபடி அவரை கொண்டு சென்று படுக்க வைத்தவள் மீண்டும் தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பேத்தியின் வார்த்தைகளில் சொல்லெண்ணா துயரம் ஆறுமுகத்திற்கு…. அழகாய் அன்பாய் இருந்த குருவி கூட்டை விதி தன் செயலால் உடைத்து விட திசைக்கொன்றாய் பிரிந்து விட்டது உறவுகள் எனும் பறவைகள்.

தானும் சில நேரம் கண்ணயர்ந்து விட்ட பாரிஜாதம் மாலை அவளின் அத்தை போட்ட சத்தத்தில் தான் விழித்தாள்.

'மாமா விஷயத்தை சொல்லிட்டாரு போலயே இனி இவுங்கள வேற சமாளிக்கணுமா' என நினைத்தவளிற்கு மதியம் பேசிய மாமனின் பேச்சுக்களே மனதை தைத்திருந்தன.

முகம் கழுவி வெளியே வந்தவளின்‌ கையில் காப்பி கப்பை திணித்த சரளா

"எங்கேயாவது இந்த கூத்து நடக்குமா படிப்புக்கிறது உனக்கு அவ்வளவு இளப்பமா போச்சுல

போ போய் வெளியே பாரு கவர்மென்ட் ஸ்கூல்ல கூட சேக்க முடியாமா பெத்தவங்க அந்த குழந்தைகள வேலைக்கு அனுப்பிட்டு இருக்காங்க……..

ஆனா ராப்பகலா நீயும் கஷ்டப்பட்டு உனக்காக நாங்களும் கஷ்டப்பட்டுதுக்கு பலான உனக்கு சீட் கிடைச்சிருக்கு ஆனா உனக்கு எவ்வளவு ஏத்தம் கிடைச்சத எட்டி உதைக்கிற நீ…..

அப்புடி என்னடி உனக்கு பிடிவாதம்….பெத்தவ இல்லையினாலும் உன்ன நல்லா தான் வளந்திருக்கேன்னு இதுநாள் வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன்.

ஆனா அப்புடி இல்லை என்னதான் இருந்தாலும் நீங்க என் அப்பா அம்மா ஆகிட முடியுமான்னு உன் செயல்ல காட்டிட்டல….

உன்னை இங்க கூட்டிட்டு வந்து நாளைக்கே நான் சண்டை போட்டுருக்கனும்….இருக்குற சூழ்நிலையில நீ வேற எதுக்கு சுமையின்னு உங்க மாமா தாத்தா கிட்ட சண்டை போட்டு உன்னை வீட்டுல சேர்க்காமா சண்டை பிடிச்சிருக்கணும்….

என் பிள்ளைகளுக்கு உன்னை வேலைக்காரியா மாத்தி ஒரு வேளை சாப்பாடு மட்டும் போட்டு உன்னை கொடுமை படுத்தியிருந்தா நீ கிடைச்ச படிப்ப கொண்டாடியிருப்ப…

அதை விட்டுட்டு உன்னை ராணி மாதிரி உங்க மாமாவும் நானும் வளத்துவிட்டு இருக்கோம்ல அதான் இப்புடி திமிரெடுத்து இருக்க….

ஆனா ஒண்ணு டி இவ்வளவு கஷ்டப்பட்டு உங்க மாமா நீ சொன்ன ஒத்த வார்த்தைக்காக அங்கிருந்து கூட்டிட்டு வந்து வளர்ந்து படிக்க வச்சதுக்கு அவரு மூஞ்சில நல்லா கரியை பூசிட்டா……

அவுங்க முன்னாடி உங்க மாமா கொடுத்த வாக்குறதிய காப்பாத்த முடியாமா தலைகுனிய வச்சு அசிங்கப்படுத்திட்ட??" என்றவரின் குரல் உடைந்திட…..

சரளாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனதில் முள்ளாய் தைக்க அவரின் வார்த்தைகளில் இருந்து உண்மை சுட,

"இல்லை...என் மாமா யாரும் முன்னாடியும் தலைகுனிய கூடாது….உனக்கு என்னத்தை வேணும் இப்போ நான் படிக்கணும் அதான...சரி நான் படிக்கிறேன்….ஆனா ஒரு கண்டிசன் நான் காலேஜ்ல இருக்குற ஹாஸ்டல்ல தான் தங்கி படிப்பேன் இதுக்கு சரின்னு சொன்னீங்கன்னா நா போறேன்" என்றவளிற்கு அழுகை வந்தாலும் அடக்கி கொண்டாள்.

"நிஜம் தானே உன்னை நம்பி நான் இதை உன் மாமா கிட்ட சொல்லலாமா??"

"நம்புத்தை நெஜம் தான் ஸ்கூல்ல பிள்ளைங்க ஹோம் வொர்க் செய்யலன்ன சொல்லுற‌ பொய்யை நம்பாத மாதிரியே என்னையும் பாக்காத"என கடுப்புடன் கூறியவள்,

"தாரணி எங்க??" என்க,

"அவளுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்" என்றவர் இரவு உணவிற்கு தயார் செய்ய போக தானும் உடன் இணைந்து கொண்டாள்.

பாரி சம்மதம் சொன்ன நொடி அடுத்தடுத்த காரியங்கள் மளமளவென நடைபெற்று இதோ தேனி செல்லும் ரயிலில் அமர்ந்திருக்கிறாள்.

மாமா,அத்தை, தாத்தா, தாரணி என எல்லாரையும் பார்க்க பார்க்க அவர்களை விட்டு செல்வது அழுகையை கொடுக்க அதனை அடக்காது காட்டி விட்டாள்.

அவளின் கண்ணீரில் தாய்மாமனின் உள்ளம் பதற "பாரி மா உனக்கு போக விருப்பம் இல்லையின்னா வேண்டாம் போகாதடா இப்பவே வா நம்ம வீட்டுக்கு போயிடலாம்" என நானும் கலங்கியவரை கண்டு தலையில் அடித்து சரளா,

"இந்தா வாங்க இந்த பக்கம் மொதல்ல அவ தான் சின்ன புள்ளை தனமா பண்ணுறானா நீங்க புத்தி சொல்லாமா கூட சேந்து ஒப்பாரி வைக்கீறீங்க" என்றவர்,

"ஏய்...இத்தாடி இங்கயிருக்குற தேனிக்கு இவ்வளவு அழுகையா உனக்கு நெனச்ச நேரம் டிரெயின் ஏறி வந்துடலாம்..அழுகைய நிப்பாட்டு டி" என‌ கடிய அவரை முறைத்தாவாறே அழுகையை நிறுத்தினாள்.

"ஹப்பாடி இனி வீட்டுல என் ராஜ்ஜியம் தான் இனி லீவுக்கு கூட வந்துடாதா அப்போ தான் எனக்கு நிம்மதி" என்று‌ கலாய்த்த தாரணியை கண்டு கடுப்புற்றவள்,

"ஏய்….கொழுப்பா டி மாமா இனி ஒரு நாள் லீவுன்னா கூட நான் அங்க இருக்க மாட்டேன்….நீங்க வந்து என்னை கூட்டிட்டு வந்துடுறீங்க அவ்வளவு தான்" என்றிட,

"சரிடா சரி இன்னைக்கு மட்டும் டிரொயின்ல போ இனி மாமா நீ சொன்ன நேரம் காரெடுத்துட்டு வந்துடுவேன்" என்றவர் வாஞ்சையாய் கூறிய நொடி ரயில் தன் புகையை கக்கி கிளம்பிய விட,

அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை கண்ணீரை அடக்கியவளிற்கு அதற்கு மேல் முடியாமல் போக கண்ணீர் வழிந்தது.

அவர்கள் பிரிவு வலித்த போதும் தாய்மாமானின் மானம் கெளரவம் காக்க அவளிற்கு சிறிதும் பிடிக்காத அந்த ஊருக்கு பயணமானாள் பாரிஜாதம்.

கருத்து திரி



 
உணர்வுகள் 2:👨‍👧👨‍👧👨‍👧

"வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே...

பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா…."

பஞ்சு பொதியாய் ரோஸ் நிறத்தை விட நல்ல வெள்ளையாக தொட்டியில் தூங்கி கொண்டிருந்த மகளை காண காண இருளரசனிற்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

அவளை தொட்டு தூக்க அவனின் கரங்கள் பரபரக்க மெதுவாக மிக மிக மெதுவாக தன் ஒற்றை விரலை மகனின் மலர் கன்னத்தின் அருகே கொண்டு சென்றவன் தென்றலை விட மென்மையாக தீண்ட,

அதற்கே தனது உதட்டுகளை சுழித்த அந்த இளவம்பஞ்சு மெல்லிய சிவந்த குட்டி இதழ்களை பிரித்து கொட்டாவி விட்டவள் தன் மலர் கண்களை மெதுவாகத் திறந்து எதிரில் இருப்பவனை காண மகளின் செய்கையில் மொத்தமாக வீழ்ந்து விட்டான் அத்தகப்பன்.

"போதுங்க உங்க பொண்ண ரசிச்சது வந்து எனக்கு எழுந்து உட்கார உதவி பண்ணுங்க" என்ற மனைவியின் குரலில் வேகமாக திரும்பிய இருளரசன் சோர்வாய் கிடந்த மனைவியின் அருகே சென்று அவளிற்கு உதவினான்.

"ம்ம்ம் பொண்ணு பொறந்ததும் அவ அம்மாவ டீல்ல விட்டாச்சு ஹ்ம்ம்" என அவள் பொய்கோபம் கொள்ள,

அவளை வாஞ்சையாக பார்த்தவன் அவளின் கன்னம் தொட்டு "என் குலசாமிய நான் மறப்பேனா….எம் பொண்ணு அப்புடியே அவ அம்மா மாதிரி ஜொலிக்கிற….ஆனா என்ன நான் தான் உங்க ரெண்டு பேரு பக்கத்துலயும் இருண்ட அமாவாசை உருவம் மாதிரி தெரியுதேன்" என அவன் மெல்ல தனது வருத்தத்தை சிணுங்கலாக தெரிவித்து விட,

"நிலா ஏன் அழகா இருக்குன்னு‌ தெரியுமாங்க??"என அவள் மனைவி கேள்வி எழுப்பிட,

"ஆங்...அது வெள்ளையா அழகா இருக்கு அதனால‌ தான"

"ம்ஹீம் இல்லை….ஆகாயம் தன்னை இருட்டாக்கி நிலாவ வெள்ளைய காட்டுறதுனால அழகா இருக்கு...நிலாவ விட நட்சத்திரத்துக்கு வெளிச்சம் ஜாஸ்தி ஆனா அதை விட நிலா பளிச்சுன்னு தெரிய காரணம் ஆகாயம்…

இதேது நிலா பகல்ல வந்தா நம்ம‌ ரசிப்போமா இல்லையில்லை….அதது எங்க இருக்கணுமே அங்க இருந்தா தான் அழகு….இருட்டான வானத்துல இருந்தாதான் நிலாக்கு அழகு…..

அதே மாதிரி இந்த இருளரசன்‌ கூட பக்கத்துல இருந்தா தான் எங்க ரெண்டு பேருக்கும் அழகு... புரியுதா??" என அவள் மிரட்டலோடு முடிக்க….

எப்போதும் போல் தன் மனைவியின் தெளிவில் வியந்து தான் போனான் இருளரசன்.அவளின் பேச்சும், கம்பீரமும் தான் அவளிற்கு அழகே….எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காது தெளிவான நிலையான மனநிலையில் இருப்பவள்…

பின்னே அந்த தன்னம்பிக்கையும் தெளிவும் தானே வீட்டை எதிர்த்து இவனை‌‌ மணக்கும் தைரியத்தை அவளிற்கு கொடுத்தது.

மனைவியின் பேச்சில் தன் சிணுங்கலை அகற்றியவன் "ம்ம்ம் தமிழ் டீச்சரம்மாக்கு பேச சொல்லிய கொடுக்கணும் சரி நான் போய் உனக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன்" என்றவன் மீண்டும் ஒருமுறை தன் குட்டி பூவை கண்களால் நிரப்பி கொண்டு அங்கிருந்து நகன்றான்.

செல்லும் இருளரசனை பார்த்தவளிற்கு அவனின் மனதில் இருந்த சிறு துயரம் தெரிய தான் செய்தது.

அப்பலுக்கில்லாத மனிதன் அவன்.அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கும் அநாதை.

நிறம் தான் கரிய நிறமே தவிர அவனின்‌ உள்ளம் தூய வெண்மை படைத்தது. அதனை உணர்ந்து தானே அவனை விட முடியாமல் வம்படியாக திருமணம் செய்து கொண்டாள்.

மருத்துவமனையில் தரும் உணவினை வாங்கி வந்த இருளரசன் மனைவிக்கு தன் கைகளாலே ஊட்டி விட என்றும் போல் அவனின்‌ பாசத்தில் கரைந்து தான்‌ போனாள்.

"பாப்பாக்கு பேரு யோசிச்சீங்களாங்க??"

"அது எல்லாம் யோசிக்காமலா எல்லாம் யோசிச்சாச்சு டீச்சரம்மா ஆனா அதை இப்போ சொல்ல மாட்டேன் என் பூக்குட்டிக்கு பேர் வைக்கிற அன்னைக்கு தான் சொல்லுவேன் அதுவரைக்கும் என் செல்லத்தோட பேரு பூக்குட்டி தான்" என்க,

"ரொம்பத்தான் சொல்லாட்டி போங்க" என திருப்பி கொண்டாள் அவள்.

"ஏனுங்க டீச்சர் இன்னும் வீட்டுல இருந்து யாரும் வந்து குழந்தைய பாக்கலையேங்க" என அவன் வருந்த…

"வருவாங்க வருவாங்க வராம எங்க போக போறாங்க உங்க மாமனார் மச்சுனனுக்கு கொஞ்சம் ரோஷம் ஜாஸ்தி சோத்துல உப்போட கொஞ்சம் கெளரவத்தையும் போட்டு சாப்புடுறாங்கள்ள அந்த திமிரு தான்" என அவள் நொடிக்க,

"உனக்கு வருத்தம் இல்லையா லட்சுமி??"

"எனக்கு எதுக்கு வருத்தம் இந்த லட்சுமிக்கு பக்கத்துலயே இந்த அரசர் இருக்காறே" என அவனின் மீசையை பிடித்து இழுத்தவள்,
"நீங்க வேணும்னா பாருங்க அரசரே உங்க பூக்குட்டிக்குய பாத்துட்டா போதும் அவ முன்னால அவுங்க எல்லாம் மண்டியிடுவாங்க" என கூறி அவனின் மனதினை திசை திரும்பியிருந்தாள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் மருத்தவமனையிலயே கழிய,
மூன்றாம் நாள் லட்சுமியும் பூக்குட்டியும் தங்களின் பாதுகாப்பு அரசனுடன் வீடு திரும்பியிருந்தனர்.

***********************************

அன்று காலையில் இருந்து அந்த பெரிய வீட்டினை தன் கட்டளைகளால் இரண்டாக்கி கொண்டிருந்தார் பிரபாகரன்.

மனிதருக்கு கால் தரையில் பாவ வில்லை.

"டேய் முத்து நேத்தே அந்த மாடியில இருக்குற ரூம்ம க்ளீன் பண்ணி சொன்னேனே பண்ணிட்டியா???"என்க,

"அதெல்லாம் ஆச்சுங்க ஐயா"

"என்ன ஆச்சோ ஏதாவது ஒரு தூசி இருந்தது வையி அவ்வளவு தான்"

"பூர்வா…..பூர்வா" என கத்தி தனது மனைவியை அழைத்தவர்,

"சமைச்சது எல்லாம் டேபிள்ல வச்சாச்சா??? பண்ணது எல்லாமே பிடிச்ச ஐயிட்டம் தான?? எல்லாம் பக்கவா இருக்கணும் புரியுதா??" என்க,

வெறும் தலையாட்டல் மட்டுமே அவரிடம்.

"ஆரத்தி எல்லாம் ரெடியா ஏன் இப்புடி மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க கடைசி நேரத்துல என்னை டென்ஷன் பண்ணாம எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க" என அங்கே ஓரமாக அமர்ந்திருந்த தனது நான்கு தங்கைகளையும் சத்தம் போட்டவர்,

"சந்தியா, சந்தோஷ்" என அழைக்க அவரின் இரட்டை புதல்வர்கள் வந்தனர்.

"நீங்க………" என்னவனை தடுத்து,

"மேல் ரூம்மை டெக்கரேட் பண்ணியாச்சு நேத்து வாங்குன டிரஸ் எல்லாம் பீரோவுல வைச்சாச்சு..சொவத்துல போட்டோ மாட்டியாச்சு அவ்வளவு தான போதும் ப்பா ஒரு வாரமும் எல்லாரையும் போட்டு டார்ச்சர் பண்ணுறீங்க…." என சந்தியா அலுத்து கொள்ள….

"பின்ன இருக்காத சந்தியா வர்ற போற விருந்தாளி அப்புடிபட்டவங்களாச்சே" என்றவனின் குரலில் இருந்தது நக்கலா குத்தலா என பிரித்தறிய முடியா வண்ணம் வீட்டினில் நுழைந்தான் கண்ணன்.

"ஆமா மாமா நீங்க சொல்றதும் சரிதான்….வரப்போற விருந்தாளி அப்பவோட முழுபாசத்துக்கும் சொந்தமானவாங்களாச்சே" என்ற சந்தோஷின் பதிலில்,

பிரபாகரனின் முகம் மகிழ்ச்சியில் விகாசித்து ஜொலித்தது.அதன் விளைவாக அவரின்‌ உதடுகள் அழகிய சிறு வெட்கம் பாசம் கலந்த புன்னகையை சிந்தின.

"இல்லையே...அப்பிடி எல்லாம் இல்லையே நானும் தான் அப்பாவோட பாசத்துக்கு சொந்தக்காரி அப்புடி தானப்பா???" என் சந்தியா வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு தயராக,

"ஆமாடா நீயும் என் செல்லம் தான்" என்றவரின் பதிலில் உண்மை இருந்தாலும் சந்தோஷ் சந்தியாவை விட ஏன் அவரின் மனைவி பூர்வாவை விட வருகிற விருந்தாளி தான் அவரின் மனதை கொள்ளை கொண்டு அவரின்முழுப்பாசத்திற்கும், நேசத்திற்கும்‌ முழுசொந்தக்காரர் என்பது அந்த வீடு அறிந்த ரகசியம்.

"அச்சோ ஸ்டேஷன்க்கு வண்டி அனுப்பனுமே கொஞ்ச நேரம் கூட காக்க வைக்க கூடாது….பேசாம நானே வண்டி எடுத்துட்டு போய் பாத்துட்டு வரேன்….இந்த ராஜாவ நம்ப முடியாது….காரை ஒழுங்காவே ஓட்ட மாட்டான்" என படபடப்புடன் கூறியவர் வெளியேற முயல,

"அண்ணா!!!!!போதும் நிப்பாட்டுங்க…..எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுறீங்க அது எல்லாம் ராஜா நல்லாதான் ஓட்டுவான் பேசாம உட்காருங்க மொதல்ல" என அவரின் மூத்த தங்கை செவ்வந்தி அதட்டலிட்டு அமர வைக்க…. அடுத்து இருந்த மூன்று‌ தங்கைகளும் உடன் இணைந்து கொண்டனர்.

நேரத்தை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாகிய இருந்தவரை கண்டு அங்கிருந்த அனைவருக்கும் உருகிற்று.

ஒரு வாரமாக சரியாக ஒருவாரமாக பிரபாகரனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...வானத்தை வசப்படுத்தி விட்ட மகிழ்ச்சி அவரிடம்…..

இத்தனை‌ ஆண்டுகளில் இப்படி ஒரு சந்தோஷத்தினை அவரிடம் கண்டதில்லை வீட்டினர். ஒரு வாரமாக சிறு பிள்ளை போல் கடை கடையாக ஏறி இறங்கி பொருட்களை வாங்கி குவித்திருந்தார்.

மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததன் விளைவாக அவரின் முகம் மின்னி‌ பிரகாஷித்து தேஜஸீடன் காணப்பட்டார்.

கண்ணனுக்கு தன் தாய்மாமனை காண காண வாஞ்சையாக இருந்தது.என்ன தான் அவரின் பக்கத்தில் தாங்கள் இருந்தாலும் அவர் உள்ளம் தேடுவது எல்லாம் வருகின்ற‌ விருந்தாளியை தானே…….

"அம்மாடி பூர்வா!!!!" என்றவரை,

"அண்ணா மூச் அமைதியா இருங்க எல்லாமே நல்லபடியா நடககும்" என இரண்டாவது தங்கை வித்யா மிரட்ட…

"சரி டா சரி டா " என குழந்தையென தலையாட்டியவரின் முகத்தில் இருந்த உயிர்ப்பு அனைவரையும் கட்டி தான் போட்டுவிட்டது.

"கண்ணா மணி நாலாச்சு இன்னேரம் டிரெயின் வந்துருக்கும் ராஜாக்கு ஒரு போனை போடேன்" என ஆவலாக வினவியவரை ஏமாற்ற மனமில்லாது டிரைவர் ராஜாவிற்கு அழைத்தான் கண்ணன்.

பேசி முடித்தவனின் புருவங்கள் நெளிந்திருந்தன.

"என்ன கண்ணா???"

"அது மாமா டிரெயின் வந்துடுச்சாம் ஆனா நம்ம எதிர்பார்த்த ஆளை காணோமாம்…." என்க,

"என்ன….என்ன சொல்ற கண்ணா இதுக்கு தான் நானே‌ போறேன்னு சொன்னேன் விட்டிங்களா??இந்த ராஜா பையன் எனக்கென்னன்னு தேமேன்னு இருப்பான்…..அவனை நம்புனது என் தப்பு தான் தள்ளுங்க தானே போய்ட்டு வரேன்"

"மாமா ராஜா எல்லா பெட்டிலயும் தேடிட்டானாம்" என்னறவனை முடிக்க விடாது,

"என்ன..என்ன தேடியிருப்பான் அவன் ஒரு கூமுட்டை‌ கண்ணா அவனை நான் அனுப்பியிருக்கவே கூடாது தப்பே பண்ணிட்டேன் நான்‌ தப்பு பண்ணிட்டேன்…" என்றவருக்கு ஏகத்திற்கும் டென்ஷனில் பி.பி ஏறி உடல் எல்லாம் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

"அய்யோ அண்ணாக்கு வேர்க்குது" என மூன்றாவது தங்கை பரணி கத்திட,

அப்போது தான் அவரின் முகத்தினை கவனித்தனர் அனைவரும்.

"மாமா மாமா நீங்க டென்ஷன் ஆகாதீங்க மாமா உட்காருங்க...டேய்‌ சந்தோஷ் அந்த பேனை ஸ்பீட வை, ம்மா போய் தண்ணி எடுத்துட்டு வாங்க" என தன் தாய் செவ்வந்தியை நோக்கி கத்திய கண்ணன்,

நான்காவது தங்கை விஜயா கொடுத்த துண்டால் கண்ணன் மாமனின்‌ உடலை துடைத்து விட,

கண்ணன் குரலில் அடுத்த நிமிடம் தண்ணீரை எடுத்து வந்திருந்தார் பூர்வா.

அப்போது பூர்வாவின் அலைப்பேசி அழைக்க திரையை பார்த்தவள்‌ எதுவும் பேசாது எடுத்து சந்தியாவிடம் நீட்ட,

"தாத்தா…." என‌ பேச ஆரம்பித்தவளின் முகம் அந்த பக்கம் சொன்ன செய்தியில் கலையிழந்து சோர்ந்து போய் விட்டது.

அனைவரும் அவளினையே பார்க்க அவள் தாத்தா என்றதிலயே அனைவருக்கும் யார் என்று தெரிந்து விட்டிருந்தது.

தன் முகத்தினையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த தந்தையை‌‌ கண்டு கலங்கியவள் தொண்டை அடைக்க நிற்க,

"சந்தியா என்னன்னு சொல்லு" என சந்தோஷ் அவளை உலுக்க…..

தன் தந்தையின் முகத்தையே பார்த்தவள் "அது...அது….வந்து அவுங்க….ம்க்கும்..மதியமே வந்துட்டாங்களாம் ஆனா.. நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்களாம்….காலேஜ்ல இருக்குற ஹாஸ்டல்ல தான் தங்க போறாங்களாம் தாத்தா சொன்னாரு" என பட்டென்று கூறிட,

அவள் சொன்ன செய்தியில் பிரபாகரனின் உடல் முற்றிலும் சட்டென தொய்ந்து விட்டது.

பட்டென தண்ணீரை அவரின் கையில் கொடுத்த பூர்வா எதுவாம் நடக்காதது போல் மீண்டும் சமையலறையினுள் நுழைந்து கொண்டார்.

அதுவரை பிராபாகரனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி துணி கொண்டு‌ துடைத்திட மனிதர் முற்று முழுதாக உடைந்து போய் விட்டார்.

அதுவரை மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அவரின்‌ உள்ளம் இப்போது துயரத்தில் துடிக்க அதன் வலி தாங்க இயலாது,

"கண்ணா!!!!!" என்றவாறு‌ அவர் உடல் மெல்ல சரிய,

"அண்ணா!!!!!ப்பா!!!! " என்ற குரல்களுக்கிடைய "மாமா!!!!" என்றவாறு கண்ணன் அவரை தாங்கி பிடிக்க…..
அவனின் கைகளில் இரு சொட்டு தண்ணீர் பட்டு தெறித்தது.

"மாமா!!!!" என அதிர்ந்து கூவியவன் அவர் முகத்தினை நிமிர்த்த வலியில் கண்கள் கலங்கி கண்ணீரை சிந்திவிட்டிருந்தார்.

"கண்ணா!!!!!எனக்கு மன்னிப்பே இல்லையா???" என்று விசும்பியவரை கண்ட அனைவருக்கும் கண்கள் கலங்கிற்று.

சற்று முன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவர் இவர் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் அப்படி உடைந்து போய் கண்ணீர் சிந்தினார்.

அண்ணனின் கண்ணீரில் தங்கைகள் நால்வருக்கும் உள்ளம் பதறி இதயம் துடித்திட "தங்களால் தானே அவருக்கு இத் துயரம்" என்ற உண்மை எப்போதும் போல் அவர்களை துடிக்க செய்தது.

தாய்மாமனின் கண்ணீரை கண்டவனிற்கு‌ அதற்கு காரணமானவர்களின் மேல் துவேசம் பொங்கியது.

அவர் மனதறிந்து செய்யாத தப்பிற்கு பல வருடங்களாக சிலுவை சுமக்கிறாரே என்ற துயரம் கண்ணனிடத்தில்.

"ப்பா…." என்றவாறு வந்து இரட்டை குழந்தைகளும் அவரின் கைகளை‌ பற்ற அதில் சற்றே தெளிந்தவருக்கு அப்போது தான் சுற்றுப்புறம் உரைக்க இருந்தும் அவரால் சட்டென ஏமாற்றத்தை தாங்கி கொள்ளா நிலை.

"ஒண்ணும் இல்ல டா அப்பாக்கு ஒண்ணும் இல்லை கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சா சரியாயிடுவேன்..நான் போய் என் ரூம்ல படுக்குறேன்" என்றவாறு அவர்களிடம் இருந்து தன்னை பிரிந்து கொண்டு சற்று முன் வரை உயிர்ப்புடன் இருந்தவர் இப்போது உடலில் உயிர் இல்லாதது போல் சென்றவர் மாடிப்படி அருகே சற்றே தடுமாறி கீழே விழுந்திட போக….

அடுத்த நொடி கண்ணன் தாங்கியிருந்தான்.

"வாங்க நா கூட வரேன்" என்றபடி அவரை கைத்தாங்கலாக மாடியேறி அவன்‌ அழைத்து செல்ல….

அவருக்கும் கண்ணனின் ஆறுதல் தேவைப்பட அமைதியாக மாடியேறியவர் சற்ற திருப்பி அங்கே டைனிங்க டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுகளை கண்டு துயருற்றவர் ஏதும் பேசாது சென்று விட்டார்.

அவரின் பார்வை உணர்ந்து குடும்பத்தினர் அனைவருக்கும் சொல்லெண்ணா துயரம் ஏனென்றால் இது எல்லாம் அவர் கைப்பட செய்தவையாயிற்றே………

மாடியேறி சென்றவர் கண்களில் அவர் அலங்கரிக்க சொல்லியிருந்த அறை கண்ணில் பட்டு அவரை கேலி செய்வது போல் இருக்க இறுக கண்களை முடி திறந்தவருக்கு ஒரு துளி கண்ணீர் கோடாய் கீழிறங்கியது.

மாமனை தொடர்ந்து பார்த்த கண்ணனிற்கும் அவ்வறையை கண்டு துயர் எழ அவரை வேகமாக அங்கிருந்து அகற்றினான்.

சமையலறையில் இருந்த பூர்வாவின் பார்வை பிரபாகரன் இரவு உணவிற்கென வாங்கி வைத்திருந்த பொருட்களின் மீது விழ அடைத்த தொண்டையை முயன்று சரி செய்தவர்,

அடுத்த நிமிடம் பரபரவென அதனை பிரித்து அடுக்க ஆரம்பித்திருந்தார்.

அவரின் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளும் இல்லை…..

அவருக்கு தான் முன்னரே தெரியுமே இது நடக்காது என்று….அவ்வளவு சீக்கிரம் அவர்கள் இருவருக்கும் விடுதலை கிடைத்திடுமா என்ன????

அணுஅணுவாய் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் வலியில் துடிக்க வேண்டும் என்பது தானே அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை….

அத்தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்றுவாற் யாருமில்லை ஒருவரை தவிர!!!!!!

ஆனால் அந்த ஒருவர் தானே தண்டனையை கொடுத்ததே!!!!!!!!.....

உணர்வுகள் உறையும்..........💔💔💔

கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிருங்கள் பட்டூஸ்👇👇

 
Top