எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனல் பொழியும் மேகம் 10

Mr D devil

Moderator
அத்தியாயம் 10


தந்தையின் மேல் எழுந்த சந்தேகம் உறுதியானதிலிருந்து விடையறியா வினாக்கள் அவனின் மனதை குடைந்து கொண்டே இருந்தது. தனக்காக மட்டுமே தந்தை இவ்வளவு பெரிய காரியத்தை செய்தாரா? இல்லை இதை சாக்காக வைத்து முகிலையும், தேவியையும் பழி வாங்க நினைத்தாரா? என்ற கேள்விக்கு விடை தேவராஜின் செயலாலயே கிடைத்தது...

இதை இப்படியே விட்டால் நிச்சியம் இருவருக்குமே ஆபத்து என்று நினைத்தவன் அதற்கு தீர்வாய் ஓர் முடிவை எடுக்கலானான்...

தன் முடிவை செயல்படுத்த தேவாவின் துணையை நாடி வீட்டிற்கு வர பிறைக்கும், தேவிக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை காதில் கேட்க நேர்ந்தது... இதற்காக தானே ஆதாரத்தை தேடி சென்றோம் என்று நினைத்தவன் தான் நினைத்ததை புறம் ஒதுக்கி விட்டு உண்மையில் என்ன நடந்தது என்பதை இருவரிடமும் விளக்க ஆரம்பித்தான்...

"இதுல நீ சொல்ற மெசேஜ் இல்லை ஆகாஷ்..." என பிறை சொல்லவும் புன்முறுவலுடன்

"ஏன் மாமா மெசேஜ் வந்தா டெலீட் பண்ண முடியாதளவுக்கு எங்கப்பா தேவராஜ் வானவராயன் முட்டாள் இல்லையே..." என்றதும் இருவரின் முகத்திலும் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது...

தேவியின் முகத்தில் நொடி பொழுதில் தோன்றிய அதிர்ச்சி அதற்கு பின் துளியுமில்லை. அவரின் பார்வையில் 'நீ கூறுவதை நான் நம்ப மாட்டேன்...' என்ற செய்தி இருந்தது. தேவியின் பார்வையை புரிந்துக் கொள்ள முடியாதளவிற்கு முட்டாள் இல்லையே ஆகாஷ் வானவராயன். தேவியின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தவன்

"இந்த விஷயத்துல உன்கிட்ட நான் பொய் சொல்லுவேன் நினைக்கிறீங்களா அத்தை..." அழுத்தமாக கேட்டான்.

ஆகாஷ் கேட்ட விதமே அவன் கூறுவது சரியென்று சொல்லாமல் சொல்லியது. ஆனால் தேவியின் பார்வையில் துளியும் மாற்றமில்லை... ஆயிரம் ஆதாரங்களை காட்டினாலும் என் அண்ணனை நான் சந்தேகப்பட மாட்டேன் என்ற செய்தி அதிலிருந்தது.

' உங்க நம்பிக்கைக்கு தகுந்த ஆள் அவர் இல்லை அத்தை...' என நினைத்தவன் பிறையை பார்த்தான்.

'நான் இருக்கேன்...'என்பதை போல் இமை மூடி திறந்தார். அவர் கொடுத்த தைரியம் அவனுக்கு இதத்தை கொடுக்க அது அவனை மேலும் பேச வைத்தது...

"இப்ப உங்க மனசுல ஆயிரம் கேள்வி ஓடுதுன்னு எனக்கு நல்லாவே புரியுது. உங்களோட எல்லா கேள்விக்கும் விடை நான் தான்..." என்றவனின் கண்களில் அத்தனை வலி.

"என்ன சொல்ற ஆகாஷ் புரியற மாதிரி சொல்லு..." நெற்றியை பெரு விரலால் கீறி கொண்டே கேட்டார்
பிறை.

முகம் தந்தையை நினைத்து கோபத்தில் இறுகியது. தன் முக இறுக்கத்தை வெளிக் காட்டாது மறைத்தவன் தான் அறிந்ததை கூற ஆரம்பித்தான்.

"அப்பா மேல சந்தேகம் வந்ததும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மகேஸ் வைச்சு டாடிக்கு வந்த போன் கால்ஸ் எல்லாமே ட்ராக் பண்ண சொன்னேன்.

அதே சமயம் கிளப்பில இருக்கற எல்லா சி.சி.டிவி புட்டேஜையும் செக் பண்ணோம். பட் மாமா அந்த புட்டேஜ் எல்லாத்தையும் கிளியர் பண்ணதுனால எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல. தென் ஃபைனலா ஸ்ட்ரீட் கேமரால ஏதாவது கிடைக்குதான்னு செக் பண்ணும் போது தான் அவுட்டர் கேட் வழியா டாடி உள்ள போனது தெரிஞ்சுது..." என்றவன் காணொளியை ஓட விட்டான்.

அவன் கூறியது போலவே தேவராஜ் கிளப்பிற்கு உள்ளே செல்லும் காணொளி தான் பதிவாகி இருந்தது. "இது மட்டும் இல்லை அத்தை. இன்னும் ஒன்னு இருக்கு..." என்றவன் அலைபேசியிலிருந்த ஆடியோவை ஆன் செய்தான்.

"எல்லாமே ரெடி தானே?..." என அதிகாரமாக ஒலித்தது தேவராஜின் குரல்.

"ரெடி சார்...நீங்க சொன்னது போல அந்த பொண்ணோட பிரெண்ட் போனை தூக்கிட்டோம் சார்.
அந்த பையன் பேசறது போலவே பேசி அவளை இங்க வர வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். அந்த பொண்ணு வந்ததும் நம்ம பிளேன் பண்ணது போல பண்ணிடலாம் சார்..." என்றான் தேவராஜ் ஏற்பாடு செய்த ஆட்களின் தலைவன்.

"குட், அவ உள்ள வந்ததும் கொஞ்சம் கூட லேட் பண்ண வேண்டாம். உடனே ட்ரக் இஞ்செக்சன் போட்டு விட்டுருங்க. ஃபைவ் ஆர் டென் மினிட்ஸ்ல போதை நல்லா ஏறிடும். அதுக்கு அப்பறம் நான் சொன்னது போல அவளோட நியூ* போட்டோவை சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிட்டு அப்பறம் உங்க இஷ்டம் போல அவளை யூஸ் பண்ணி தூக்கிப் போட்ருங்க..." ஓர் கொடூர அரக்கனை போல் கூறினார் தேவராஜ்.

"ஒகே சார். நீங்க சொன்னது போல பண்ணிடறோம்..." என்றதும்

"அப்பறம் மறக்காம நம்ம பி.ஆர் டீமுக்கு இன்பார்ம் பண்ணிடுங்க. அதுக்கு மேல நடக்கற எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க..." என்றப்படி அழைப்பைத் துண்டித்திருந்தார்.

பாவம் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை ருத்ர நாச்சியார் (முகில்) என்ற ஒருவளால் அவர் போட்டு வைத்த அனைத்து திட்டங்களும் சுக்குநூறாக உடைய போகின்றதென்று...

****

"எல்லா ஆதாரமும் எப்படி அத்தைக்கு எதிரா இருந்ததுன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சு இருக்குன்னு நினைக்கிறேன் மாமா. அத்தையோட போனை ஹேக் பண்ணி அத்தை பேசற மாதிரி ஆள் செட் பண்ணிட்டாரு. சப்போஸ் அப்பாவோட ஆளுங்க மாட்டினாலும் அவங்க போனை வைச்சு ட்ராக் பண்ணா அத்தை பேசன மாதிரி இருக்கற ஆடியோ தான் வெளிவரும். சோ தன்னாலேயே அத்தை சொல்லி தான் முகிலை கொலை பண்ண முயற்சி பண்ணாங்கன்னு வெளிய தெரிய வரும். சோ அப்பா என்ன பண்ணிருந்தாலும் அவர் மேல துளியும் சந்தேகம் யாருக்கும் வாராதுன்னு நினைச்சு தான் இவ்வளவும் பண்ணிருக்கார். முகில் அங்க போகற வரைக்கும் கிட்டத்தட்ட அவர் நினைச்சது போல தான் எல்லாமே நடந்து இருக்கு..." என்றவன் கண்களில் எவ்வித பிரதிலிப்பையும் காட்டாமல் தேவியை பார்த்தப்படி

"முகில் செத்து நீங்க ஜெயிலுக்கு போயிட்டா அங்க வைச்சு உங்களை கொல்ல பிளேன் பண்ணி இருக்காரு. நீங்க செத்துட்டா ஆட்டோமேட்டிக்கா உங்க பேருல இருக்கற சொத்து எல்லாமே செகண்ட் பார்ட்னரா இருக்கற என் அப்பா பேருக்கு வந்துரும். மொத்த சொத்தும் என் அப்பா பேருக்கு வந்துட்டா இந்தியாவிலயே முதல் பத்து பணக்கார பட்டியலில அப்பா பேர் இடம் பிடிக்கும். அந்த பிளடி நேமுக்காக இவ்வளவு பிளேன் பண்ணிருக்கார். இது முதல் தடவை இல்லை அத்தை..." என்றதும் சட்டென நிமிர்ந்து ஆகாஸை பார்த்தார் தேவி..

"எஸ் இதுக்கு முன்னாடியே கார் ஆக்சிடென்ட் பண்ணி உங்களை கொல்ல ட்ரை பண்ணிருக்காரு (but unfortunately)ஆனா எதிர்பாராத விதமா அகிலன் அதுல மாட்டிகிட்டான்..." என ஆகாஷ் கூற கூற தேவிக்கு பேச்சே வரவில்லை... அவரின் மனம் தேவராஜ் செய்த செயல்களையும், கூறிய வார்த்தைகளையும் நம்ப மறுத்தது. ஆகாஷ் காட்டிய ஆதாரங்கள் பொய்யாக இருக்க கூடாதா? என மனம் ஒருபுறம் கதறியது.

தான் ஒருவர் மீது வைத்த நம்பிக்கையைப் பொய்யாகும் போது அதனைப் பகுத்துப் பார்க்கும் பக்குவத்தை பலர் இழந்து விடுகின்றனர் அதில் தேவி மட்டும் விதி விளக்கா என்ன? எது பிழை எது சரியென்று புரியாமல் குழம்பி போனார்.

அந்த குழப்பம் தேவிக்கு மன உலைச்சலைக் கொடுத்தது. அதன் பாரம் தாங்க முடியாமல் தலையை அழுத்தி பிடித்தப்படி படுக்கையில் அமர்ந்து விட்டார்.

"அவளோட நியூ* போட்டோவை சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிட்டு அப்பறம் உங்க இஷ்டம் போல அவளை யூஸ் பண்ணி தூக்கி போட்ருங்க..." என்ற தேவராஜின் வார்த்தைகள் காதில் ரீங்காரமாய் கேட்டது...

அந்த வார்த்தைகள் தேவியின் மனதை குத்தி கிழித்தது. இந்தியவின் மிகப்பெரிய தொழிலதிபர் தான் இதை விட பெரிய பெரிய அடிகளை தன் வாழ்க்கையிலும், தொழிலும் சந்தித்து இருக்கிறார் தான். ஆனால் மனம் இதை ஏற்க மறுத்தது. தொழில் முறையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அத்தனையும் சுலபமாக தகர்த்து எறிந்துவிட்டு வந்தவருக்கு உடன் பிறந்தவனின் துரோகத்தை ஏற்க முடியவில்லை.

தலையை பிடித்திருந்த கைகளில் அழுத்தம் கூடிக் கொண்டே போக மனதில் இறுக்கம் அதிகரித்தது

'நீயும் ஒரு பொண்ணு தான, அவளை கொலை செய்ய ஏற்பாடு பண்ணதுமில்லாம அவளோட கற்பையும் நாசமாக்க சொல்லிருக்க? என் பொண்ணு சுதாரிச்சு ஃபைட் பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் அவளுக்கு என்ன வேணாலும் நடந்து இருக்கும்..."அன்று கோபத்தில் பிறை பேசிய வார்த்தைகள் அனைத்தும் சொல்லாமல் கொள்ளாமல் நினைவிற்கு வந்தது.

கணவன் கூறியது தானே உண்மை.. இந்நேரம் முகில் நிதானிக்காமல் அவர்களிடம் தைரியமாக சண்டையிடாமல் இருந்திருந்தால் அவளின் நிலை? நினைக்கவே பயமாக இருந்தது தேவிக்கு... உடல் மொத்தமும் நடுங்கியது.

தனக்கு ஏற்பட்ட கொடூரத்தை விட பலமடங்கு அதிகம் அல்லவா தன் மகளுக்கு நடக்கயிருந்த கொடுரம். என நினைத்தவருக்கு கடந்த கால நினைவுகள் ஒன்றின் மேல் ஒன்றாக தாக்கியது. கண்களை இறுக மூடி தன்னை சுட்டெரிக்கும் ஈர நினைவுகளில் இருந்து வெளிவர போராடினார்..

அதே சமயம் எத்தனை வலியையும், துரோகத்தையும் தாங்கும் இந்த இதயம் என மனம் கதறியது. மனதின் கதறல் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மனைவியின் மன போராட்டத்தை அறிந்த பிறையோ மனைவியின் அருகில் சென்று "தேவி டா..." என மெல்ல அழைத்தார்.

கலங்கிய கண்களுடன் அன்னார்ந்து பிறையை பார்த்தார். தேவியை ஆறுதலாக அணைத்துக் கொண்டவர் "தேவி டா, என்ன இது சின்ன பொண்ணு மாதிரி. டோண்ட் க்ரை பேபி... இதை விட பெரிய பெரிய விசயத்தை எல்லாம் அசால்ட்டா என் தேவி சமாளிச்சு வந்து இருக்காள்... இது என்ன சாதாரண சின்ன விஷயம். உன்னால இதை தாண்டி வெளிய வர முடியும் டா தேவி..." என மனைவிக்கு ஆறுதல் கூற சத்தமிட்டு அழுது விட்டார் தேவி.

"என்னால முடியலங்க...அவ மட்டும் சண்டைப் போடாம இருந்திருந்தா இந்நேரம் என் நிலைமையை விட மோசமா ஆயிருக்கும் அவளுக்கு. அப்படியொரு எண்ணத்தைக் கூட என்னால நினைச்சு பார்க்க முடியலங்க. என்னை ஒரு..." அதற்கு மேல் பேச முடியாது மூச்சு கிழ் மூச்சு வாங்கியது தேவிக்கு

"தேவி மா போதும் ஸ்டாப் அழுகாத..." என்றவருக்கு மிகுந்த குற்ற உணர்வாகி போனது. 'என் தேவி இப்படியான காரியத்தை செய்வாளா? என துளியும் யோசிக்காது நானும் வார்த்தைகளை விட்டுவிட்டேனே...' என்ற குற்ற குறுகுறுப்பு தேவியின் அழுகையில் நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக் கொண்டே போனது.

"நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஆயிருந்தா அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னு போட்டிருக்கும் டாக்டரே... அண்ணாவை செகண்ட் பார்ட்னரா போட்ட எனக்கு இந்த சொத்த எழுதி தர ஒரு நிமிசம் போதுமேங்க. எனக்கு முழு சொத்து வேணுன்னு என்கிட்டயே கேட்டிருந்தா எழுதி கொடுத்து இருப்பேன். அதையெல்லாம் விட்டுட்டு வெறும் சொத்துக்காக என்னன்ன செஞ்சுருக்காரு பாருங்க. நம்ம பிள்ளையோட வாழ்க்கையே நாசமாக்கப் பார்த்திருக்காரு. அவ மட்டும் சுதாரிக்காம ஃபைட் பண்ணாம இருந்திருந்தா... என்னால அதுக்கு மேல யோசிக்க கூட முடியல டாக்டரே..." என அவரின் இடையை கட்டிக் கொண்டு மேலும் கதறி விட்டார் தேவி...

தேவியின் முதுகை தடவிக் கொண்டே மருமகனை பார்த்தார். அவரின் பார்வை இவனுக்கும் புரிந்ததோ என்னவோ " அப்பா இண்டியால இல்ல மாமா. வந்ததும் அடுத்து என்ன பண்றதுன்னு பார்ப்போம்..." என ஆகாஷ் சொல்ல கண்மூடி திறந்து சரியென தலையாட்டனார் பிறை...

இருவருக்கும் தனிமையை கொடுத்துவிட்டு அறையிலிருந்து வெளிவந்தவன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மகேஷிற்கு அழைத்து அடுத்தடுத்து ஆக வேண்டியதை கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

*****

தேவராஜின் இந்த செயலால் தேவியினுள் ருத்ராவின்(முகில்) மேலிருந்த வெறுப்பு என்ற மாய படலம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கிருந்தது. அதே சமயம் முகிலுக்கு தேவியின் மேலிருந்த வெறுப்பு அதிகமாகி இருந்தது.

மயக்கம் தெளிந்து படுக்கையில் அமர்ந்திருந்தவளின் முகம் பாறை போல் இறுகியிருந்தது. நினைவுகள் முழுவதும் அன்றைய நாளை சுற்றியே வளம் வந்தது. அதுவும் தேவராஜின் பார்வையும், முகம் சுழிக்க வைக்கும் பேச்சும் இப்போது நினைத்தாலும் அருவருப்பை கொடுத்தது. இதற்கெல்லாம் காரணமானா தேவியின் மேல் இன்னும் வெறுப்பு அதிகமானது. எந்த பெண்ணும் செய்ய கூட நினைக்காத ஒன்றல்லவா அவர் செய்த இந்த காரியம். அவரின் மகள் என்று கூட வேண்டாம் சதாரண பெண் என்று கூடவா தன்னை நினைக்கவில்லை. என்ற கேள்விக்கு

'பெயர், புகழ், பணம், என்று வந்துவிட்டால் மகள் என்ன? மருமகள் என்ன?..." என மனம் கேலி செய்தது. மனதில் கேலியில் தேவியை நினைத்து இகழ்ச்சியாக வளைந்தது முகிலின் இதழ்கள்.

மகனை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு முகிலுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைய அவரின் பார்வை இதழ் சிரிப்போடு அமர்ந்திருந்த பேத்தியின் மேல் விழுந்தது.

உடனே "மூணு நாளா எல்லாரையும் அலர விட்டுட்டு நைசா சிரிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்கறதப் பாரேன்..." அவளை வம்பிழுத்தார் தேவா.

சட்டெனக் கேட்ட தேவாவின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் புருவங்கள் சுருங்க அவரைப் பார்த்தாள். "என்னடி இப்படி பார்த்து வைக்கற..." அவளை போலவே புருவம் உயர்த்தி கேட்டார்.

"நீ...ங்க யாரு..." பாவமாக பார்த்தப்படி கேட்டாள்.

"எதே...யார்ரா... அடியே என்னடி சொல்ற..." படபடப்பாக கேட்டார் தேவம்மாள்.

அவரின் படபடப்பான பேச்சு இவளுக்கு சிரிப்பைக் கொடுக்க கன்னக்கதுப்புகளை கடித்து சிரிப்பை அடக்கியவள் மீண்டும் யாரென்று கேட்டாள்.

"என்ன மறுபடியும் மறுபடியும் கேட்கற நான் உன் டார்லி டி... எனக்கு உன்னை தெரிலையா? ச்ச்கை உனக்கு உன்னை தெரியலையா? ஐயோ நிஜமாவே என்னை உனக்கு யாருன்னு தெரியலையா?..." என பதட்டத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க வாக்கியங்கள் கூட தப்பு தப்பாக வந்தது தேவாக்கு.

தேவாவின் படப்படப்பான பேச்சில் சத்தம்போட்டு சிரித்தாள் நறுமுகில். நிமிடமேனும் அவளின் சிரிப்பை புரியாமல் பார்த்தார் தேவா. அதற்கும் அவள் சிரிக்க இப்போது தேவா அவளை முறைத்தார் "ஹாஹா கிழவி... நான் சொன்னதை நம்பிட்டியா..." எனக் கேட்டப்படி மீண்டும் சத்தமிட்டு சிரித்தாள் முகில்.

முகிலின் சிரிப்பில் லயித்து நின்றார் தேவா "அப்படியே தேவியை பார்த்த மாதிரி இருக்க டி தங்கம்..." என கன்னத்தில் கைவைத்து அவளின் சிரிப்பை பார்த்துக் கொண்டே கூற சட்டென முகிலின் முகம் இறுகியது...

"இதோ பாரு கெழவி நான் எவளை மாதிரியும் இல்ல... நான் என் அப்பா மாதிரி என் அப்பா செல்வம் மாதிரி நான் அவரோட அழகும் திறமையும் தான் என்கூட இருக்கு..." என்றவள் விழிகளை இறுக மூடி படுத்துக் கொண்டாள்.

"பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருட்டா இருக்குன்னு நினைச்சுக்குமாம். கழுதை அது அப்படி நினைச்சுட்டா நம்ம என்ன செய்ய முடியும் தேவம்மா விடு..." என தனக்குள் பேசியபடி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார் தேவா.

தேவாவின் முனகல் தவறாது முகிலின் காதுகளை சென்றடைய பட்டென்று கண்களை திறந்து தேவாவை முறைத்தாள் முகில். அவளின் முறைப்பை சட்டே செய்யமால் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டார் தேவா.

 
Last edited:

S. Sivagnanalakshmi

Well-known member
சொத்துக்காக என்னவெல்லாம் பண்ணத்தோன்றுகிறது. சீ இவன் அண்ணாஇல்லை அரக்கன். ஆகாஷ் செம.
 

Advi

Well-known member
அச்சோ இந்த பரதேசி தேவராஜ் தான் காரணமா😠😠😠😠😠😠

எவ்ளோ கேவலமான பிறவி, ச்சைக் அதுவும் சொத்துக்காக🤮🤮🤮🤮🤮🤮🤮

ஆகாஷ் சூப்பர் டா, இதில் தெரியுது நீ எவளோ அன்பு உன் அத்தை மேல வெச்சி இருக்கனு 🤩🤩🤩🤩🤩

அப்ப அன்னைக்கு அவ கிட்ட பேசினது இந்த கேடு கெட்ட பிறவி தானா 🧐🧐🧐🧐🧐🧐

இவ ஷாக் ஆகளையே, முன்னாடியே அது தேவராஜ் அப்படினு தெரியுமா அந்த ரூமில் இருந்தது🤔🤔🤔🤔🤔

இப்ப இவளும் பிறை போலவே தான் தேவினு நினைச்சிட்டா🥺🥺🥺🥺🥺🥺

தேவாம்மா😂😂😂😂😂😂😂
 

Mr D devil

Moderator
அச்சோ இந்த பரதேசி தேவராஜ் தான் காரணமா😠😠😠😠😠😠

எவ்ளோ கேவலமான பிறவி, ச்சைக் அதுவும் சொத்துக்காக🤮🤮🤮🤮🤮🤮🤮

ஆகாஷ் சூப்பர் டா, இதில் தெரியுது நீ எவளோ அன்பு உன் அத்தை மேல வெச்சி இருக்கனு 🤩🤩🤩🤩🤩

அப்ப அன்னைக்கு அவ கிட்ட பேசினது இந்த கேடு கெட்ட பிறவி தானா 🧐🧐🧐🧐🧐🧐

இவ ஷாக் ஆகளையே, முன்னாடியே அது தேவராஜ் அப்படினு தெரியுமா அந்த ரூமில் இருந்தது🤔🤔🤔🤔🤔

இப்ப இவளும் பிறை போலவே தான் தேவினு நினைச்சிட்டா🥺🥺🥺🥺🥺🥺

தேவாம்மா😂😂😂😂😂😂😂
 

Mr D devil

Moderator
அச்சோ இந்த பரதேசி தேவராஜ் தான் காரணமா😠😠😠😠😠😠

எவ்ளோ கேவலமான பிறவி, ச்சைக் அதுவும் சொத்துக்காக🤮🤮🤮🤮🤮🤮🤮

ஆகாஷ் சூப்பர் டா, இதில் தெரியுது நீ எவளோ அன்பு உன் அத்தை மேல வெச்சி இருக்கனு 🤩🤩🤩🤩🤩

அப்ப அன்னைக்கு அவ கிட்ட பேசினது இந்த கேடு கெட்ட பிறவி தானா 🧐🧐🧐🧐🧐🧐

இவ ஷாக் ஆகளையே, முன்னாடியே அது தேவராஜ் அப்படினு தெரியுமா அந்த ரூமில் இருந்தது🤔🤔🤔🤔🤔

இப்ப இவளும் பிறை போலவே தான் தேவினு நினைச்சிட்டா🥺🥺🥺🥺🥺🥺

தேவாம்மா😂😂😂😂😂😂😂
அது குரல் கேட்டதும் யாரோ போவா உள்ள போனதும் தேவராஜ் இருப்பார்... சோ காலையில தேவி சொன்னதும் அவரை இங்க பார்த்தது அவங்க பிளேன் தான் முடிவு பண்ணிட்டா🤷🤷
 

Mr D devil

Moderator
அச்சோ இந்த பரதேசி தேவராஜ் தான் காரணமா😠😠😠😠😠😠

எவ்ளோ கேவலமான பிறவி, ச்சைக் அதுவும் சொத்துக்காக🤮🤮🤮🤮🤮🤮🤮

ஆகாஷ் சூப்பர் டா, இதில் தெரியுது நீ எவளோ அன்பு உன் அத்தை மேல வெச்சி இருக்கனு 🤩🤩🤩🤩🤩

அப்ப அன்னைக்கு அவ கிட்ட பேசினது இந்த கேடு கெட்ட பிறவி தானா 🧐🧐🧐🧐🧐🧐

இவ ஷாக் ஆகளையே, முன்னாடியே அது தேவராஜ் அப்படினு தெரியுமா அந்த ரூமில் இருந்தது🤔🤔🤔🤔🤔

இப்ப இவளும் பிறை போலவே தான் தேவினு நினைச்சிட்டா🥺🥺🥺🥺🥺🥺

தேவாம்மா😂😂😂😂😂😂😂
ஆகாஷ்😍😍😍😍 அவன் அவங்க மேல வைச்சிருக்கர அன்பு இனிமே இன்னும் அதிகம் ஆகும்💖💖
 

Mr D devil

Moderator
அச்சோ இந்த பரதேசி தேவராஜ் தான் காரணமா😠😠😠😠😠😠

எவ்ளோ கேவலமான பிறவி, ச்சைக் அதுவும் சொத்துக்காக🤮🤮🤮🤮🤮🤮🤮

ஆகாஷ் சூப்பர் டா, இதில் தெரியுது நீ எவளோ அன்பு உன் அத்தை மேல வெச்சி இருக்கனு 🤩🤩🤩🤩🤩

அப்ப அன்னைக்கு அவ கிட்ட பேசினது இந்த கேடு கெட்ட பிறவி தானா 🧐🧐🧐🧐🧐🧐

இவ ஷாக் ஆகளையே, முன்னாடியே அது தேவராஜ் அப்படினு தெரியுமா அந்த ரூமில் இருந்தது🤔🤔🤔🤔🤔

இப்ப இவளும் பிறை போலவே தான் தேவினு நினைச்சிட்டா🥺🥺🥺🥺🥺🥺

தேவாம்மா😂😂😂😂😂😂😂
எஸ் அவரு தான் நேரிலேயே போயிருப்பார்
 

Advi

Well-known member
அது குரல் கேட்டதும் யாரோ போவா உள்ள போனதும் தேவராஜ் இருப்பார்... சோ காலையில தேவி சொன்னதும் அவரை இங்க பார்த்தது அவங்க பிளேன் தான் முடிவு பண்ணிட்டா🤷🤷
தேவராஜ்🤮🤮🤮🤮
 

Advi

Well-known member
அந்தளவுக்கா மணுசன் பண்ணது இருக்கு... அப்ப தேவிக்கு அவர் பண்ணது🚶🚶🚶🚶
எதே, அப்ப செல்வம்?????அதுக்கு காரணம் இவரா😳😳😳😳😳
 

Mr D devil

Moderator
எதே, அப்ப செல்வம்?????அதுக்கு காரணம் இவரா😳😳😳😳😳
அடேய் உன் நினைப்புல தீயை வைக்க🤣🤣🤣🤣 அப்ப முகில் ஆகாஷிக்கு தங்கையா🤣🤣🤣🤣🤣
 

Advi

Well-known member
அடேய் அப்படி சொல்லல டா, அவன் சொல்லி தான் செல்வம் செய்தானா🤣🤣🤣🤣🤣
 

Mr D devil

Moderator
அடேய் அப்படி சொல்லல டா, அவன் சொல்லி தான் செல்வம் செய்தானா🤣🤣🤣🤣🤣
இல்லை தேவியை கொலை பண்ண நினைச்சது sonen😂😂😂😂
 

Advi

Well-known member
அடேய் ரைட்டர் எங்க டா போனின்க, நெம்ப நாலா காணோம்🥺🥺🥺🥺
 

Mr D devil

Moderator
அடேய் ரைட்டர் எங்க டா போனின்க, நெம்ப நாலா காணோம்🥺🥺🥺🥺
இங்க தானே இருக்கேன்😯😯😯😯 முகிலை போட்டு தள்ள முடியல அதான் ஆகாஸை கொலை பண்ணிட்டு இருக்கேன்🤭🤭🤭
 

Mr D devil

Moderator
அடேய் ரைட்டர் எங்க டா போனின்க, நெம்ப நாலா காணோம்🥺🥺🥺🥺
என்னையும் நீங்க தேடறது ரொம்ப பெருமையா இருக்கு🤧🤧🤧யாருமே கண்டுக்கரது இல்லை அப்பறம் எப்படி போடுவதாம்... உங்களுக்காக எழுதியதை பதிவு செய்கிறேன்💖💖💖💖
 

Advi

Well-known member
இங்க தானே இருக்கேன்😯😯😯😯 முகிலை போட்டு தள்ள முடியல அதான் ஆகாஸை கொலை பண்ணிட்டு இருக்கேன்🤭🤭🤭
இது ஒரு பெரிய மனுஷன் செய்யர செயல் இல்ல டா 🙄🙄🙄🙄🙄
 

Advi

Well-known member
என்னையும் நீங்க தேடறது ரொம்ப பெருமையா இருக்கு🤧🤧🤧யாருமே கண்டுக்கரது இல்லை அப்பறம் எப்படி போடுவதாம்... உங்களுக்காக எழுதியதை பதிவு செய்கிறேன்💖💖💖💖
Wow waiting 🥰
 
Top