எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கற்பின் கனலி - கருத்து திரி

Sriraj

Moderator
இனிய சமிக்கு,

முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சமி… அமேசான் போட்டியில் உன் பங்களிப்பை கொடுத்தமைக்கு நல்வாழ்த்துக்கள் டா…??

மகாசமுத்ராவின் கற்பின் கனலி ?


தாயின் கருவரையில் பாதுகாப்பாய்
இருப்பவள் அவள்…

பின் இரு ஐந்து திங்களில் உலகத்துக்குள் ஜனிப்பவள் அவள்…

ஜனித்தவளை அன்பாய் - பாசமாய் - அரவணைப்பாய் - பாதுகாப்பாய் - பனிவாய் - மென்மையாய் - கண்டிப்பாய் என அனைத்துமாய் சேர்த்து வளர்க்கபட்டவள் அவள்…


வளர்ந்தவளின் சிறு சிறு ஆசைகளையும் கூட நிறைவு செய்யாது நிராகரிப்பட்டவள் அவள்…

நிராகரிப்பட்டவளின் ஆசைகள் நிதர்சனத்தை உணர்ந்து அமைதியாகிவிட்டன…

அமைதியாய் இருந்த வாழ்வில் உற்றார் முலியமாய் வரும் பிரச்சனையால் அவளின் மனதினை சிந்திக்காமல் முடிவுகள் எடுக்க... உற்றார்க்காக எதார்த்ததை ஏற்றவள் அவள்…

எதார்த்ததின் பிடியில் அவள் வாழ
எதார்த்ததின் பதார்த்தமாய் அவள் வாழ்க்கை…

பினதின்னி கழுகளினால் சூழ பட்ட வாழ்க்கையில் வேற்றுமை உணர்ந்தாள்…

வேற்றுமை உணர்ந்தவள் வெறுமையின் உச்சியில் நின்றாள்…

வெறுமையின் உச்சி அவளை புது யுகம் படைத்திட வழி வகுக்க…

புதிய பாதையை சிரமாய் ஏற்றாள்…?

ஊர்மேய் ஏற்றவள் எரிக்கும் சூரியானாய் வளம் வந்தாள்…

சூரியனின் பிரகாசமாய் அவள் இருக்க…
பல உயிர்கள் பயம் கொண்ட காவலனாய் மாறிட…

புது யுகம் படைத்தவள்
உன்னததின் சிகரமாய் கற்பின் கனலாய் ஜொலிக்கிறாள்…❣

அழகிய அழுத்தமான கதை படைத்த உனக்கு என் அன்புமும் - வாழ்த்தும் சமி. ??

ஓர் அழகிய வேகமான நகரும் ஒரு குறும்படம் வாசித்த திருப்தி என்னுள் அதை கொடுத்த உனக்கு என் நன்றிகள் பல…??

மென்மேலும் பல கதைகள் படைக்க என் அன்பான வாழ்த்துக்கள் சமி…??


அன்புடன்
ஸ்ரீராஜ்








 
Top