எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கலைவாணி மதியழகனின் - பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்.. கதை திரி

Status
Not open for further replies.
பாகம்-1

அந்த பசுமையான புல்வெளி ஒத்தையடி பாதையில் இருபுறமும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகள் மழையும் அல்லாத வெயிலும் அல்லாத உடலை சிலிர்ப்பு ஊற்றும் காலை வேளை பொழுதில்..அந்த மினி பஸ்சின் டிரைவர் பஸ்சை எடுக்க முயலும் நேரம் தூரத்தில் இருந்து ஒரு தேன் குரல் காற்றின் வழியே மிதந்து வந்தது "அண்ணா பஸ்சை கொஞ்சம் நிறுத்துங்கள்"..அந்த குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்ப மின்னலில் மிதந்து வரும் தேவதையாய் ஓடி வந்தாள் நம்ம நாயகி..

இருபக்கமும் இருந்த மரங்கள் காற்றில் சல சலத்து.. பூக்கள் தூவி வரவேற்றன..

மினி பஸ் அருகில் வந்த போது மேக மூட்டத்தில் பதிய வைத்த நட்சத்திர பாதம் இடறி விழ இருந்தவளை பஸ்சில் பயணித்தவர்கள் அனைவரும் கத்த முகத்தில் மூடி இருந்த கலைந்த கார் கூந்தலை விலக்கியபடி..

பிறை நெற்றியில் நீந்திய ஓரிரு கூந்தலை தன் ஒற்றை விரலால் புறம் தள்ளிய பொழுது..

வளைந்த வானவில்லாய் சுருக்கிய புருவங்கள் வீழ்த்த முயல..

ஆயுதமே இன்றி வீழ்த்தி சாய்த்தன பாலில் ஆடிய பன்னீர் திராட்சை கண்கள்..

பொன்மேனியில் பட்டு விட்ட அடியை கன்னக்குழிகள் சிவந்து காட்டின..

தெளிந்த நீரோடையில் நடுவே சொருகிய சங்கு கழுத்தில் தவழந்த பொலிவற்ற பவள மணிகள் படர..

தேனில் குழைத்து எடுத்த கொவ்வை இதழ் விரித்த பொழுது மறைமுக முத்து சிற்பாய்கள் வரிசை கட்டி நிற்க செந்தாமரை நாவினை மடக்கி "அச்" என்ற ஒற்றை சொல்லால் சொர்க்க வாசிகள் ஆயின காற்று குமிழிகள் அமிர்த துளியாக தெளிக்க..

வார்த்தைக்கு வசம் பாடின செக்க சிவந்த ரோஜா இதழின் மடித்து வைத்த செவி மடலில் சின்னஞ்சிறு பால் மணி தோடு வளைந்து ஆட..

கோதுமை மாவினில் காய்ச்சாத பால் ஊற்றிய ஐந்தரை அடி பால்கோவா மேனில்..

தாமரை இலை நீராய் ஒட்டாத இடைக்கு இடைவெளி விட்ட உடைகளை சரி செய்தப்படி ஓடி வந்தவள்..

பஸ்சில் ஏறி அமர்ந்தாள் பெருமூச்சுக்கும் சிறு மூச்சிக்கும் இடையே வரும் சுவாசக் காற்றை மொய்த்தன இளசுகளும் பெருசுகளும்..

அவளின் வடிவத்தில் மயங்கிய பலரில் ஒருவன் கவிதை விடுத்தான் பிரம்மன் பழ ரசம் அருந்திய பொழுது படைத்தானோ இந்த நவரசத்தை என்று அவன் வாய் விட்டு உளறி விட அங்கே கொலேர் என்று அனைவரும் சிரித்தனர்..நடத்துனரும் நகைத்தவாரே விசில் அடித்தார்..டிக்கெட்.. டிக்கெட்.. என அவளை நெருங்கி எங்கமா என்றார்..புது பஸ் நிலையம் அண்ணா..பஸ் நிறுத்தத்தில் இறங்கியவள் அருகில் இருந்த தனியார் பஸ்சில் ஏறி தான் செல்லும் ஊருக்கு டிக்கெட் பெற்றுக்கொண்டு அமர்ந்தாள்..ஊரு சனம்.. தூங்கிடுச்சி..

ஊத காற்றும்.. அடிச்சிடுச்சி..

பாவி மனம் தூங்கலேயே..

அதுவும் ஏனோ.. புரியலேயே.. என இசைஞானியின் இசை தொடர்ந்த வண்ணம் இருக்க..

கண்களை மூடி ரசித்தவளை துயில் ஆழ்க்கொண்டது ..அந்த குழந்தைகளின் அழு குரலும்.. கொய்யா.. கொய்யா.. மல்லி.. மல்லி.. வாட மல்லி.. என அந்த இறச்சல் சத்தமும் சேர நடத்துனர் இறங்குக.. இறங்குக.. என்றவாறே அவளை கடக்க அவசரம்.. அவசரமாக.. இறங்கியவள்.. ஓட்டமும்.. நடையுமாக.. ஓடினாள்..ஓடி நின்றவளின் முன்..மின்விளக்குகளால் ஒளிர் ஓற்றப்பெற்ற அந்த நவநாகரீக MASS இன்டெர் நேஷனல் கல்லூரி பலகை அவளை வரவேற்றது..Mass International College festival function..பயங்கர விமரிசையாக நடைபெறுக்கொண்டு இருந்தன.. எங்கு திரும்பினாலும் மின் விளக்குகளும்.. கலர் கலராய்.. மலர் தோரணங்களும்.. மாலை அணிகலன்களும்.. நட்சத்திர மின் விளக்குகளும்.. அலங்காரங்களை பார்க்கும்போது நாம மாறி ஏதோ சொர்க்க வாசல் வாயில் நுழைந்து விட்டோமோ என ஐயம் தோன்றும் அளவிற்கு அபூர்வமான அலங்காரங்களால் சூழ்ந்து இருந்தது அந்த மாநகர நவநாகரீக கல்லூரி..விழித்துக்கொண்டே வந்தவள் இடறி விழ மெத்தன ஒரு கம்பீரமான கை தாங்கி பிடிக்க இருவரின் மீதும் மஞ்சள் செவ்வந்தி பூ கொட்டி தீர்த்தன அவள் தட்டி எழும்ப மேலிருந்து ஒரு குரல் மச்சான் சாரி பூ கூடை தவறி விட்டது.. ""ஏய்!! வேலையில் கவனத்தை வை"" என்ற அந்த கம்பீரமான காந்த குரலில் மெய்சிலிர்த்து போனவள்.. எழுந்து நடக்க எத்தினைக்கும் போது அந்த ஸ்பரிசம் செய்து சென்றவனின் முக தெரியவில்லை முதுகை மட்டுமே அவளாள் காண முடிந்தது.. ஆனால் அந்த முதல் ஸ்பரிசம் மனதிற்குள் ஏதோ ஒருவித கிளர்ச்சியை செய்ய..ஏய்!! ஜெசி.. ஏன்?? இவ்வளவு லேட் என்றவாறே தோழிகள் படை சூழ.. சக நிலைக்கு வந்தவளாய்..சாரிபா??சரி.. சரி.. வா நமக்கான அறைக்கு போகுவோம் இப்பவே லேட் கமான்.. பேபி என்றவாறே அவளை அழைத்து சென்றனர்..அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த தனி அறையில் ஏ.சி குளிரில் அவளுக்கு மட்டும் முத்து முத்தான.. வியர்வை துளிகள் முத்தமிட நிற்க துணிவின்றவளாய்.. எதிரில் தென்பட்ட மெத்தையின் மீது தோபேர் என விழுந்தாள்..ஜெசி மனதிற்குள் அவன் ஸ்பரிசம் இன்னும் அகலவில்லை எவ்வளவு ஆண்களை கடந்து இருப்பேன்.. ஆனால் அவர்களிடத்தில் ஏற்படாத அனுபவம் ஏனோ?? அவனை பற்றிய ஓடிய நினைவலைகள் எல்லாம் புதியதாக தோன்றியது ஜெசிக்கு..ஏய்!! ஜெசி என்றாயிற்று என அவளை சுற்றி அவர்களின் செய்கை பூலோகத்தில் மிதப்பவளை போல இருந்தது அவளுக்கு..அச்சோ என்னடி இவளை நம்பி தானே வந்தோம் நாம தோல்வி அடைவது நிச்சியம் என்று ஒரு தோழி கூறு மற்றவர்களும் அதை ஆமோதிப்பதை போல மண்டையை வேகமாக ஆட்டினர்..தோழிகளில் ஒருத்தியின் விசும்பல் சத்தம் மேலோங்க சுயநிலைக்கு வந்தவளாய்.. எழுந்தவள் அவளை சுற்றி அனைவரும் விசித்திரமாக கவனிப்பதை உணர்ந்தவள் எதுவும் விளங்காதவளை போல..ஏய்!! புள்ளைங்களா என்ன?? இப்படி பார்க்கிறிங்க..இல்லமா?? இவ்வளவு நாழி நீ எந்த லோகத்தில் இருந்தேனு தெரியுதா?? இப்ப பூலோகத்தில் தானே இருக்க என கேலி செய்து ரசித்தனர்..வெக்கத்தில் முகம் சிவந்தவளாய் வெக்கி சென்றவள்.. ஏய்!! நம்ம நிகழ்ச்சி எத்தனை மணிக்கு நாழி ஆகல போய் என் வாயே பார்க்காமல் கிளம்புகிற வழியே பாருங்கடி என்றவாறே டவளை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் தாழிட்டுக் கொண்டு கதைப்போமா.. கதைப்போமா.. என்ற பாடலை வாய்க்குள்ளேயே முனு முனுத்த படி நீராடினாள்..நிலைமையை பாருடி, ஏன்மா சொல்ல மாட்டே என்று சிரித்து நகைத்தனர் கல்லூரி குயில்கள் எல்லாம். .கலை நிகழ்ச்சிகள் படு விமர்ச்சையாக நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது.. அங்கொன்றும்.. இங்கொன்றுமாக எல்லாப்பக்கமும் ஆறடி உயர ஸ்பீக்கரும் அதில் தலதளபதி பாடல் இடையே நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகளும் ஓலித்த வண்ணம் இருந்தன..மாஸ் நேஷனல் காலேஜ் உலகளாவிய விருது பெற்ற கல்லூரி.. அங்கே நடக்கும் நிகழ்ச்சியில் வின்னர் மட்டுமல்ல அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கே பாக்கியம் பெற்று இருக்க வேண்டும்..கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகளாவிய கல்லூரிகள் நான்.. நீ.. என போட்டி போட்ட வண்ணம் இருக்க அதற்கான நிகழ்வுகள் தான் நம்ம ஹீரோயினின் கல்லூரியும் அழைப்பெற்று வந்து உள்ளனர்..ஜெசி அலங்கரித்து வெளியே வந்தபொழுது அவளின் கூந்தலில் மல்லிகைப் பூவை சொறுகி திருப்பிய பொழுது அந்த தோழி கூட்டத்தில் ஒருத்தி ஏய்!! புள்ளங்களா?? இங்க பாருங்க ஒரு சிகப்பு ரோஜா மஞ்சள் சேலையில் ஆஹா "ஆச்சர்ய" குறி என்றாள்.. இன்னொருவள் ஜெசி இன்னைக்கு இந்த காலேஜ்ல பல இதயங்கள் பறி போக போகிறது இதற்கு நாம பொருப்பல்ல.. அதெல்லாம் சரிடி ஜெசி உன்னை கண்டு மாண்டோர் பலர் இருக்க நீ மட்டும் ஏன்டி யாரையும் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேங்கிற.. இந்த அழகை எங்களிடம் கடவுள் தந்து இருந்தால் நாங்கள் எப்படி தெரியுமா?? என்றவாறே அவள் மேல் நோக்க ஒருத்தி ஓங்கி அவளின் தலையில் குட்டு போட்டவள் அதான் தரல கனா காணாமல் வா என்று இழுத்து சென்றாள்..ஜெசி நகைத்தவாறே அவளின் ஆழ்மனதில் ஆழ்க்கொண்டு ஆர்ப்பரிக்கும் ஆணவனின் அழகினை காண இவர்களுடன் பின் தொடர்ந்தாள்..

இது என்னவாக இருக்கும் இதோ அழகிய பூஞ்சோலைகள் பூத்து குலுங்கும் இந்த அழகிய நந்தவனத்தில் என்னை போல் ஏராளமான அழகிகள் அணிவகுத்து செல்கின்றன இருப்பினும் அனைவரின் பார்வை அம்புகளும் என்னை தாக்க என் எண்ண நெருடல் மட்டும் அவனை நோக்கியே அலைப்பாய்க்கின்றனவே.. இதற்கு பெயர் தான் காதலா?? நான் அவன் வசம் ஈர்க்கப் படுகிறேனா?? அவனும் இப்படி என்னை பற்றி நினைப்பானா?? அட ச்சீ பைத்தியக்காரி இருவரின் முகங்களும் இருவருக்குமே ஸ்பரிசியம் ஆகவில்லை அப்புறம் எப்படி எனக்கு மட்டும் ஏன்?? இப்படி ஆகின்றன.. என மனதிற்குள் புலம்பியபடி நடந்தவள் திடீர் என நின்று தன்னுடன் கூட வரும் சக தோழிகளிடம் திரும்பினாள்..இனியா நாம ஏன் நம்ம நிகழ்ச்சி வரும் வரை இந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க கூடாது..அது கெட்டுது போ.. நம்ம இங்க கலந்துக்கொள்ள வந்து இருக்கிறோம்.. கண்டு மகிழ அல்ல..இல்லமா?? என்றாளே தவிர மனதிற்குள் நடக்கும் போராட்டத்தை எப்படி இவர்களிடம் விளக்குவேன்!! என்று எண்ணி நகைத்துக்கொண்டாள்..ஜெசி உன் விளையாட்டு தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு நட விரு விரு.. என என்றவாறே கை பிடித்து இழுத்து சென்றவளின் பின்னால் செல்ல மன கண் மட்டும் அவளுக்கு பின்னிட்டு ஆடவனை அலையிட்டு தேடியது..இவளின் மனதை அந்த காலேஜ் டேப்ரிக்கார்ட் கேசட் அறிந்து இருக்கும் போல.. சரியான பாடல் ஒன்றை அந்த கணம் ஒலிக்க செய்தது..தேடி.. தேடி.. பார்ப்போமா..

தேடல் தொடங்கியதே...

விடியலை தேடி-2


IMG-20210409-WA0001.jpg
 
பாகம் - 2


தேடிக் கிடைப்பதில்லை என்று

தெரிந்த ஒரு பொருளை,

தேடிப் பார்ப்பதென்றே

மெய் தேடல் தொடங்கியதே.....!ஏன்? காதல் மட்டும் தான் சுகமா ?

ஆயிரம் பேருக்கு மத்தியிலும்

அயராது நம்ம கதாநாயகி

கதாநாயகனை "தேடித்தேடி உருகித் தவிக்கும் "அவளோட தேடலும் சுகமான சுகம்தான்.....ஆயிரத்து ஐந்நூறு பேர்களை தன்னுள் அடக்கிய அந்த கல்லூரியின் மண்டபமானது,

நிகழ்வுகளின் இடையிலும், இறுதியிலும் சந்தோஷ மிகுதியில் மாணவர்களது கரகோஷமும், கூக்குரலும், விசில் சத்தங்களும் என்று பெரும் ஆரவாரமாக அந்த மண்டபத்தினையே பிளந்து விடுவது போல் இருந்தது.இங்கு நம் நாயகியின் காதுகளிலோ எந்த வித கூக்குரலுமே விழவில்லை.

எங்கு, அவள் தான் முகமறியா அந்த ஆடவன் விரல் தீண்டிய பரிஸ்ஷமதில் தன் சிந்தையை தொலைத்து விட்டு,

அவனை இப்போதே கண்டு விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்,

விறைத்து நின்ற தன் உடலையும் மீறி, விழிகளுக்கு மாத்திரம் உயிர் கொடுத்து,

தன் பார்வை வட்டத்துக்குள் அந்த கொள்ளைக்காரன் விழுகிறானா என தன் தேடலை தொடங்கினாள்.பாவம் சித்தம் கலங்கிய பேதை மறந்துவிட்டாள் போல். அவன் முகம் மறைத்த முதுகை தான், தான் கண்டேன் என்பதை.

எவ்வளவு முடிந்தும் அவளாள் அவன் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.ஆண்கள் கூட்டத்தில் கண்களால் வலை விரித்தவளை அவளது தோழியே "ஜெசி வாடி! நம்மளத்தான் கூப்பிடுறாங்க."

என்றவள் பேச்சு நம் நாயகியின் காதில் விழுந்தால் தானே! அவள் பேச்சுக்கு மதிப்பளித்து இவள் போகமுடியும்.இவளை அழைத்து விட்டுமேடையை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த அவள் தோழி அனுபாமா திரும்பி பார்த்தபோது.

அவள் முன்னர் எப்படி சிலைபோல் அசையாது நின்றாளோ, அதே போல் நிற்பதை கண்டவளுக்கு கோபமோ நாசியின் மேற்புறத்தில் வந்து ஒட்டிக்கொள்ள.திரும்பி அவளை நோக்கி வந்தவள். "ஜெசி எரும." என்று அவளை மூன்று முறை உழுக்கி அவள் சித்தம் கலைத்தவள். அவள் தன்னை பார்த்து முழிப்பதை கண்டு."இன்னைக்கு உனக்கு என்னடி ஆச்சு?.. பண்றது எல்லாமே புதுசு புதுசாவே இருக்கே?." என்றவள், அவளை பதில் பேச விடாமலே."முதல்ல வா! இப்போ நம்மளத்தான் கூப்பிடுறாங்க. வந்து உன்னை வைச்சுக்கிறேன். மேடையில வந்து இதே மாதிரி முழிச்சு நம்மள தோக்க விட்டேன்னு வையி.

அப்புறம் இந்த அனுபமாவ வெடிக்கிற பாம்மா தான் பாப்பே. இந்த லெச்ஷனத்தில இந்த பரதேசிய போய் நடுவில விட்டிருக்காங்க."

என்றவாறு அவள் கையை பிடித்திழுத்தவாறு மேடைக்கு வருவதற்குள், இவர்கள் இருவர் பெயரும் நான்கு முறை அழைக்கப்பட்டு விட்டது.ஆடிப்பாடி வரும் இவர்களை மற்றைய கல்லூரியின் சகாக்கள் முறைக்க.

அனுபாமாவோ மேடையில் நின்றவாறே "நானில்லை இவளால் தான்." என ஜெசி புறம் கை காட்டி சைகை செய்து மாட்டிவிட.அவளை பார்த்து முறைத்தவர்களை முதலில் பாவமாக பார்த்தவள்,

அதற்க்கு அவர்கள் மயங்கவில்லை என்றதும்,

சட்டென பாவமான முகத்தினை மாற்றி.

அவர்களை பார்த்து ஒற்றை கண்ணடித்து, உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை அனைவரையும் நோக்கி பறக்கவிட்டாள்.இது இவளது அன்றாட செய்கையில் ஒன்று.

தன்னுடைய செயல்கள் எதுவும் பலிக்கவில்லை என்னும் பட்ஷத்தில் இந்த சேட்டைக்காரி இறுதியில் எடுக்கும் முடிவு இதுவே!இந்த செய்கையின் பின் கோபத்தை யாராவது தேக்கி வைத்திருப்பார்களா என்ன?.

அத்தனை நேரம் இருந்த கோபப் பார்வை அவளது குறும்பினால் உதட்டு வளைவு புன்னகையுடன் பொய் கோபமாக மாறியது.

அந்த செய்கையே அவர்கள் இலகுவாக மாறிவிட்டார்கள் என பறைசாற்ற.இம்முறை மனதார "சாரி கைய்ஸ். ஏதோ சிந்தனையில இருந்திட்டிருந்தேன். மன்னிச்சு" என்று உதட்டசைவில் அனைவரிடமும் மன்னிப்பு வேண்டியவள்.

தன் கட்டை விரலை தூக்கி அனைவரிடமும் காட்டி "அடிச்சு தூள் கிளப்புறோம். ஓகே" என்க.அவள் இலகுவிற்கு வந்துவிட்டாள் என்பதை உணர்ந்தவர்கள். ஒரு பெருமூச்சினை எடுத்து விடும் சமயம்.

அவர்கள் அனைவர் பெயரும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து முடிவுக்கு வந்திருந்தது.ஆம் அவர்கள் மேடையில் குழுநடனம் ஆடுவதற்காகவே தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இதுவரை இதே நடனத்தினால் பல ஊர் மேடைகள் பார்த்து வந்தவர்கள், கடைசியாக இன்று இறுதிச்சுற்றினில் வென்று வெற்றிக்கோப்பையை தம் வசம் பெறுவது என்ற முடிவோடு பல இன்னல்கள் மத்தியில் இந்த கல்லூரியில் வந்து நடனம் ஆடக்காத்திருந்தனர்.அனைவரும் தமக்கான இடத்தினில் அபிநயத்தோடு நிற்க.ஜெசிமாத்திரம் சென்டரில் ஒற்றை காலினை அகட்டி, அதன் பெருவிரலை மாத்திரம் தரையில் ஊன்றி. இடைவளைத்து நின்றவள், இரு கரங்களையும் மார்புக்கு நடுவே வைத்து, அபிநயம் பிடித்தவள் விரல்களாலே மொட்டவிழ்ந்த தாமரையின் இதழ்கள் விரித்ததைப்போல் மலர்ந்திருக்க,முழுவதுமாக நீளமான குடைவெட்டு வெள்ளை சல்வாரில் அடிப்பாகத்தில் கோல்ட் கலர் கரை. சல்வாரின் தாவணியினை ஒரு புற தோளில் இருந்து எடுத்து மறுபக்க இடையினில் இறுக கட்டியிருந்தவள் நிற்கும் பாவனையோ வெண் சிலையொன்று மேடையேறி அபிநயம் பூண்டது போல் இருந்தது.அவள் நிற்கும் அழகிற்கே அவளது நடனத்தை பாராமல் வெற்றி கோப்பையினை கொடுத்திடலாம். என்ன இருந்தாலும் நியதி, நியாயம் ஒன்று வேண்டுமே? என்று அங்கு நடுவர்களாக இருந்தவர்களும் சிந்தித்திருப்பார்கள் போல.

அதனால் தான் அவர்கள் நடனத்தினை காண விழிவிரித்து காத்திருந்தனர்.உன்னை காணாது நான் இன்று நானில்லையே விதை இல்லாமல் வேறில்லையேஎன்ற வரி ஜெசியின் செவி தீண்ட.

சிறிது நேரம் மறந்திருந்த அவன் நினைவு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.ஏன் என்றால் அவர்கள் நடனத்துக்காக தேர்வு செய்த பாடல் கூட அவள் மனதை பிரதிபலிக்க.

அவன் முகத்தினை காணாத தன் ஏக்கம் யாவையும் நடனத்தில் பாவத்துடன் வெளிப்படுத்தினாள் நம் நாயகி.இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாளடி!...உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா?

இனி நீ.... ! இனி நீ!..

கண்ணா தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான் இனி நீ! இனி நீ!... இது நேராமலே நான்

உன்னை பாராமலே நான்

இந்த முழு ஜென்மம் போயிருந்தால்

என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே உன்னை மூச்சாகி வாழ்வேனடா!...

மாயத்திருடன் கண்ணா!..

காமக் கலைஞன் கண்ணா!..அத்தனை வரிகளுமே அவள் மனதினை படம் போட்டு காட்ட,

பாடலின் வரிகளில் அவள் கண்களும் கலங்க. அது அவர்கள் நடனத்திற்கு இன்னும் பலம் சேர்த்தது.பாடல் முடிந்து அபிநயங்களும் முடிய. கண்களில் நீர் நிறைத்திருந்தவள் கன்னங்களால் தன் வரவை கண்ணீர் பிரதிபலிக்க.

அவளை சூழ்ந்து கொண்டது அவள் நடனப்படை.

"என்னடி எதுக்கு அழற?" என அனு கேட்க.

கண்களைதன துடைத்தவறு, இதழில் போலி புன்னகையினை கொண்டு வந்தவள் "எதுவும் இல்லை." என தலையசைத்து விட்டு மேடையை விட்டு இறங்கி கொள்ள, அவள் படையும் அவளை பின்தொடர்ந்தது.நடனம் முடிந்து அங்கு நிற்க முடியாமல் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தினை விட்டு வெளியே வந்தவளை பின்தொடர்ந்து வந்த அனு.

அந்த கல்லூரியின் பரந்து விரிந்திருந்த மரநிழல் போடப்பட்ட கல் பெஞ்சில் ஜெசி அமர்ந்திருப்பதை கண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தவளையும்,. கிளைகள் வீசிய சாமரத்தினால் இதமான காற்று தடவிச்செல்ல.

அது தந்த இதத்திலே சிறுது அமைதிகாத்தவள். பின் தன் கரங்களை அவள் தோள்மீது பதித்து."ஜெசி என்னடி ஆச்சு? வீட்டில உன் சித்தி ஏதாவது பிரச்சினை பண்ணிட்டாங்களா?.. " என்க.

அவள் கரம் பற்றிய தோள்களை பார்த்தவாறே நிமிர்ந்தவள். விரக்தியாக ஒரு புன்னகையினை சிந்தியவாறு."அவங்க எப்போ தான் பிரச்சினை பண்ணல அனு. இன்னைக்கு பண்ண?. என்க.

"அப்போ என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த மாதிரி இருக்கே.

நானும் முன்னாடி ஏதோ சும்மா தான் நம்ம கூட விளையாடுறேன்னு விட்டா, மேடையில அழற அளவுக்கு என்னாகிப்போச்சு உனக்கு? என்றால் வெடுக்கென அனு.உதட்டை பிதுக்கி "தெரியலடி. ஏதோ மனசு ஒரு பாரமா இருக்கு. அந்த பாட்டு வேற மனச என்னமோ பண்ணிச்சா. என்னை அறியாமலே அழுதிட்டேன்." என்று உண்மையை மறைத்து ஜெசி தோழியிடம் கூறியவள்,

தன் கழுத்தில் கறுப்பு நிற கயிற்றில் மாட்டியிருந்த பிள்ளையார் டாளரை எடுத்து உதட்டில் ஒற்றிக்கொள்வதை பார்த்த அனு."ஏய் என்னடி மூட்டை மூட்டையா பொய்ய அவுத்து விடுற?.. இந்த பாட்டை என்ன இன்னைக்கு மட்டுமா கேக்கிற?. மூணு மாசமா இதே பாட்டுக்குத்தானே ஆடிட்டு இருக்கோம்.

நீ சரில்லடி! இன்னைக்கு நீ எனக்கு புது ஜெசியா தெரியுறாடி.

இதுவரைக்கும் நீ கலங்கி நான் பாத்ததே இல்ல. அப்பிடி பட்டவ இத்தனை பேர் மத்தியில அழறேன்னா ஏதோ உன்னை ரொம்ப பாதிச்சிருக்கு.

அதோட நீ என்கிட்ட பொய் சொல்லுறேன்னு நீ டாளருக்கு வைத்த முத்தமே சொல்லிடிச்சு" என்றாள் அனு.ஆம் ஜெசி இதுவரை எதற்க்கும் கலங்கியதே இல்லை. அவள் கலங்கிய காலமெல்லாம் அவளது பத்தாவது வயதுடனே முடிந்து விட்டது.

முடிந்து விட்டது என்றால் அவளுக்கு விடிவு காலம் ஒன்றும் வரவில்லை. அதுவாகவே அவளுக்கு பழகிவிட்டது என்பது தான் உண்மை.ஜெசியின் முதலாவது வயதிலேயே அவள் அன்னை திடீர் காய்ச்சலால் மருத்துவ மனையிலேயே இறந்து விட.

ஜெசியை வளர்க்க முடியாத அவள் தந்தை தணிகாசலம் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் தன் முதலாவது வயதிலேயே சொந்த வீட்டில் வேலைக்காரியாகினாள் ஜெசி.

தணிகாசலமும் புது மனைவி மயக்கத்தில் பெற்ற மகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.குளித்தாலும் சரி, சாப்பிட்டாலும் சரி. உறங்கினாலும் சரி அவளாகவே செய்தால் தான் ஒழிய. அவளை யாருமே கண்டு கொண்டதில்லை.

அவளை விட இரண்டு மூன்று வயது குறைந்த தம்பிமார்களுக்கு கிடைக்கும் சலுகையும், செல்லத்தினையும் பார்த்து அவள் இன்று வரை ஏங்காத நாட்களே இல்லை.அந்த வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரி என்றால் அது அவளே தான்.

பள்ளி படிக்கும் போது ரொம்பவே கஷ்டப்பட்டாள். வீட்டு வேலையும் பார்த்து விட்டு பள்ளிக்கு ஓடுவதும். பள்ளி முடிந்து வந்து வீட்டு வேலை செய்வதும். இதுவே அவள் நாளாந்த வாழ்க்கையாகிப் போனது.வீட்டுப்பாடம் பள்ளியில் தந்தால் கூட அதை செய்ய அவளுக்கு நேரம் அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் புத்தகத்தை விரித்து விட்டால் போதும்.

அவள் சித்தி வந்து அதை சுழட்டி அடித்து இல்லாத வேலையை கொடுப்பது மட்டுமின்றி.

"நீ படித்து ஒன்றும் நாட்டை காப்பாற்ற போவதில்லை. போய் வேலையை செய்.

நாளைக்கு போற இடத்திலயாவது உதவியா இருக்கும்."

என்று அவளை படிக்கவிடாது செய்து விடுவாள்.

மறுநாள் வீட்டுப்பாடம் செய்யாததற்கு வகுப்பின் வெளியே முட்டி போட்டு நின்று பாடத்தை கவணித்துக்கொள்வாள்.இத்தனைக்கும் அவள் தந்தைக்குத் தெரிந்தும் அவரும் அதை தட்டிக்கேட்பதில்லை. அப்படி ஒரு தந்தையை வைத்துக்கொண்டு ஜெசியால் மாத்திரம் எப்படி எதிர்த்து பேசமுடியும்.

வீட்டை விட்டு துரத்திவிட்டால் அவள் தான் எங்கு போவாள்.

இன்று இந்த நடன நிகழ்வுக்கு தாமதமாக வந்தது கூட சித்திக்காரியின் சதியினால் தான்.

இவள் எங்கு கோப்பையை வென்று விடுவாளோ!

தன் மகன்களை விட இவள் சிறந்தவளாகி விடுவாளோ! என்ற பொறமையில் இரவு அவளை தூங்க விடாது படுத்தி எடுத்தது போதாது என்று, காலையிலும் விளக்கிய பாத்திரத்தையும், தேய்த்த துணியையும் கொடுத்தல்லவா அவளை தடுக்க வழி வகுத்தாள்.

ஜெசியும் சலிக்காமல் அவற்றை எல்லாம் செய்து விட்டு வந்து பஸ்ஸில் ஏறியதும் உறங்கியதற்கு காரணமே அது தானே.இதுவரை அன்பு, பாசம், அரவணைப்பு என்பதை அனுபவித்திராத நங்கை தான் நம் நாயகி ஜெசி.

ஆனால் இதற்கெல்லாம் ஏங்கி ஜெசி மனதினை தளரவிடுபவள் அல்ல.

இது எல்லாம் என்றாவது ஒரு நாள் தனக்கு கிடைக்கும். அப்போது அதை அவர்களுக்கு இரட்டிப்பாக கொடுப்பேன் என்று தன் மனதிற்கு கூறி தானே சமாதானம் ஆகிக்கொள்வாள்.

கல்வியில் கூட யாரையும் எதிர்பாராமல் தன் திறமையினால் தான் முதல் மார்க் பெற்று யார் சிபாரிஸும் இன்றி கல்லூரியில் நுளைந்தாள்.தன் பாதையினை தானே வழிவகுத்து, தன் பயணத்தினை கடலை நாடிச்செல்லும் நதிபோல் சலனம் என்பதே இல்லாமல் இத்தனை நாள் அமைதியாகவே கழித்தாள்.ஜெசிக்கு பிடித்த தெய்வம் என்றால் அது பிள்ளையார் தான்.

ஆம் அவள் பெயர் ஜெசி என்பதால் அவள் ஒன்றும் கிறிஸ்டியன் கிடையாது.

அவள் உண்மையான பெயர் ஜஸ்வந்தினி. அவளை அவளது தோழிகள் செல்லமாக அழைப்பது என்னவோ ஜெசி என்று தான்.நம் ஜஸ்வந்தினிக்கு பொய் என்பதே வாயில் வராது. அப்படி அவளே அறியாது பொய் சொல்லும் தருனங்களில் தன் கழுத்தில் இருக்கும் பிள்ளையார் டாளரில் முத்தம் வைத்தாள் என்றால் தான் கூறிய பொய்யிற்கு தன் இஷ்ட தெய்வமான விநாயகரிடம் மன்னிப்பு வேண்டுகிறாள். என்பதை அவளை மட்டும் அறிந்தவர்களால் கண்டு கொண்டிட முடியும்.

அதனால் தான் அனுவும் தன் தோழியின் பொய்யினை இலகுவாக கண்டு கொண்டாள்.அனு தன்னைக்கண்டு கொண்டாள் என்பதை விட,

இப்போது என்ன சொல்லி அவளை சமாளித்திடமுடியும் என்பது தான் அவளது சிந்தனையாக இருந்தது.

பின்னே ஒருவன் என்மீது மோதினான். அவன் முகத்தை நான் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் பரிஸ்ஷம் பட்டதும் இதுவரை நான் அறியா அன்பினை தந்து, அவனால் மட்டுந்தான் என்னை பத்திரமாக பாதுகாக்க முடியும். என என் மனதிற்குத் தோன்றியதனால், அவனின் பின்னால் என்மனதும் சென்று விட்டது என்றா கூற முடியும்?.

அப்படி கூறினால் தான். கண்டதும் காதல் என்பது போய் இப்போது காணாததும் காதல் என்று ஆகிவிட்டதா? என்று தன்னை கேலி செய்ய மாட்டாளா?..

என நினைத்தவளாய்."நீ என்ன சொன்னாலும் உண்மை இதுதான் பேபி. எனக்கு அந்த பாட்டைக் கேட்டதும் தான் கண் உண்மையிலேயே கலங்கிச்சு. " என்றவள் "வா இங்கேயே இருந்திட்டிருந்தால் யாருக்கு பஸ்ட்டு கிடைக்கும்னு தெரியாமல் போயிடும்." என்று மழுப்பியவள் எழுந்து அந்த மண்டபத்தினை நோக்கி நடக்க."ஜெசி நீ பொய் சொல்ல கத்திக்கிட்டியோ இல்லையோ!. ஆனா நல்ல மழுப்புறத்துக்கு கத்துக்கிட்டடி." என்று பின்னால் வந்தவள் கூறிக்கொண்டு வரவும்,

ஜெசியோ இது தனக்கான பேச்சில்லை என்பது போல் அந்த கல்லூரியின் அழகினை பார்த்தவாறு நடந்தாள்.ஆம் இவர்கள் இருவரும் பேசிவிட்டு உள்ளே நுழையும் தருணம் கலை நிகழ்வுகள் எல்லாம் முடிந்து,

சிறப்பு விருந்தினர் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

மேடையின் கீழ் முன்வரிசையில் பதினைந்துக்கு அதிகமான இருக்கைகள் போடப்பட்டு அவர்களை இருத்தியிருந்தனர்.

அவள் உள்ளே செல்லும் தருணம்.

அந்த கல்லூரியின் முதல்வர் தான் பேசிக்கொண்டிருந்தார்.அதாவது அந்த கல்லூரியின் நிர்வாகத்தினரை குளிர்விப்பதற்காய் தன் பேச்சு திறமையினை அவிழ்த்து விட்டவாறு இருந்தவரை கண்ட அனு."ஏய்!.. இந்த சொட்டைத்தலையன் எப்பயடி இந்த பேச்சை முடிப்பான்?. இந்தாள் பேசுறதை பாத்தா மைக்க கீழேயே வைக்காது போலயே!.. உண்மையிலும் பாவம்டி இந்த காலேஜ் பசங்க. ஒரு நாளைக்கே காதால ரத்தம் கக்குதே!. தினமும் இந்தாள் பேச்சை கேட்கணும்னா ஈ.என்.டி கிளினிக்கையே விலைக்கு வாங்கணும் போலயேடி!." என அந்த மாணாக்களுக்காய் அனு பரிதாபப்பட.தன் தோழி பேச்சினில் சிறு நகை பூத்தவள். "இருந்தாலும் அவங்களை விட உனக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்திதான் பேபி. அவங்க காலேஜ்க்கே வந்து அவங்க பிரின்ஸ்ஷிப்பலையே ஓட்டுறேடி!.. யாராச்சும் காதில கேட்டிச்சுனா உனக்கு இங்கேயே சமாதி கட்டிட போறாங்க.

எதுக்கும் ரண்டடி தள்ளியே நில்லு பேபி. யாராச்சும் உன்னை என் ஃபிரண்டுனு நினைச்சுக்க போறாங்க." என்க."அடி பாவி!.. இது வரைக்கும் நட்புக்காக உயிரே குடுப்பாங்கனு தான்டி கேள்வி பட்டிருக்கேன். ஆனா நீ உன் அற்ப உயிருக்காக என்னையே நட்பில்லையேனு சொல்லிட்டியேடி!" என்று குறை பட்டவளிடம்."பேபிம்மா!.. நட்பு போனால் இன்னொரு நட்பு வரும் பேபிம்மா. ஆனா உயிர் போனால் இன்னொரு உயிர் வருமா?.." என கேட்டுவிட்டு உதட்டினுள் வாய் மூடி சிரித்தவள் செய்கை புரிந்தவள்,"ஓ.. இது உன் கோட்டாவா!.. நடத்துடி நடத்து. எனக்கும் காலம் வராமலா போயிடும்?" என்று பேச்சினூடே மேடையினை பார்த்தவள் சட்டென பேச்சினை நிறுத்திவிட்டு,"ஜெசி அங்க பாருடி!.. இத்தனை நேரமும் அந்த சொட்டை மண்டையன் புகழ்ந்து தள்ளினது இந்த ஆளத்தானா?.." என்று வாய்பிளந்து நிற்க."எதுக்கு நாயே இப்போ இந்த அலாவுதீன் குகையை ஓபன் பண்ணினா?. மூடு!.." என்று தாடையில் அடித்து அவள் வாயை மூட செய்தவள், இன்னும் அவள் மேடையையே பார்த்திருக்க,

"என்னத்தை அப்படி பார்க்கிறா?" என மேடையில் பார்வையை பதித்தவள் கண்களுக்குள் அவன் பதிந்தான்.ஆறடி உயரத்து ஆணவன். ஆண்களுக்கு உரிய அளவான உடலமைப்பு. காற்றோடு கலைந்து விளையாடும் கார் குழல். பற்றைக்காடு போல் அடர்ந்த புருவங்களும் அதன் இடையில் சிறிதான முடிச்சும், சிவப்புமல்லாத, கருமையும் அல்லாத தடித்த உதடுகள், கூரிய நாசி, கண்களுக்கு அகலமான கறுப்பு கண்ணாடியினை அணிந்து அதன் அழகினை மறைத்தானோ, இல்லை நாகரிகம் என நினைத்து அணிந்தானோ, அல்லது தான் எவரை பார்க்கிறேன் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக அதை அணிந்தானோ அதை அவனே அறிவான்.தடித்து விறைத்த மார்பகங்களையும், விரிந்த புஜங்களையும் எடுத்தியம்பியது அவன் அணிந்திருந்த வெள்ளை நிற சர்ட்டில் சிறு சிறு கருமை நிற இலைகள் பதித்த இறுக்கமான சட்டை.

அதன்கீழ் கறுப்பு நிறத்தில் பேன்ட். அனிந்திருந்தவன், அதே நிற கனங்கூடிய ஷூவும் அணிந்திருப்பான் போல. அதன் தோற்றத்தினிலே அதன் கனம் பார்பவர்களால் எளிதில் எடை போட்டு விடமுடியும்.அவன் தோற்றத்தையே தன்னை மறந்து பார்த்தவள். பின் என்ன நினைத்தாளோ தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.சிறிது நேரம் தன் கல்லூரியின் வளர்ச்சியை பற்றி பேசியவன்.

பின் இன்று நடந்த இறுதிப்போட்டி தன் கல்லூரியில் நிகழ்ந்ததில் தனக்கு அளப்பெரும் மகிழ்சி.

நடந்து முடிந்த அத்தனை கலை நிகழ்வுகளும் தன்னை கவர்ந்ததாகவும் பேசியவன், சிறு நிமிட மௌனத்தின் பின்.

நானே தொடர்ந்து பேச விரும்பவில்லை. மாணவர்களாகிய நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நேரம் நெருங்குவதனால் இத்துடன் என் உரையினை முடித்துக்கொள்கிறேன். பேசவாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெற இருந்தவனை அங்கு வந்த தலைமை ஆசிரியர் வழிமறித்து,"சார் நீங்க தான் இன்றைய நிகழ்வின் வின்னரையும் அறிவித்து, உங்க கையால் பரிசு வழங்கணும்னு ஆசைபடுறோம் சார்." என்க.

திரும்பி கூட்டத்தை பார்த்தவன் விழிகள் யாரை பார்த்தது என்பதை அந்த குளிர் கண்ணாடி மாத்திரமே அறியும்.பின் "சரி" என உதடுகள் மறுக்க மறுக்க புன்னகையினை அவரை நோக்கி உதிர்த்தவன் கைகளுக்கு வந்தது அன்றைய நிகழ்வின் வின்னர் பட்டியல்.அதை ஒவ்வொன்றாக பார்த்தவன் புருவம் ஏறி இறங்குவதை அந்த குளிர் கண்ணாடியினால் கூட மறைக்க முடியவில்லை.முதலில் மூன்றாவது இடம்பிடித்த கல்லூரியின் பெயரை கூறியவன், அவர்கள் மேடை ஏறியதும் கைகுழுக்கி வாழ்த்து கூறி பரிசினை வழங்க. அந்த மாணவகூட்டம் மூன்றாவத இடம் என்ற கவலையும் இல்லாது சந்தோஷத்துடனே கோப்பையினை பெற்று சென்றனர்.

அவர்களுக்கு அவன் கையினால் பரிசு பெற்றாலே சந்தோஷம் எனும்போது இதெல்லாம் அவர்கள் கண்டு கொள்வார்களா?.இரண்டாம் பரிசு சோலோவாக பாடிய பெண்ணுக்கு கிடைக்க. சந்தோஷமாக அவனை நெருங்கியவள், கைகுழுக்கி தன் கோப்பையினை வாங்கிச்செல்ல.

முதலாவது பரிசு என்று அறிவித்தவனோ சற்று இடை வெளி கொடுத்து போட்டியாளர்கள் இதயங்களை இருமடங்கு துடிக்க விட்டபின்னரே,சுவாமி விவேகானந்தர் கலைக்கல்லூரி மாணவிகள் குழுநடனம் என்க.

அனு நின்ற இடத்தினிலே துள்ளிக்குதித்தவள், ஜெசியினை இடித்து "ஏய்!!. என்னடி அமைதியா இருக்கே எழுந்து வா போகலாம்!" என்க."ஹூம்.." என்றவாறு மேடையை நோக்கி நகர்ந்தவள் இதயமோ இதோ வாய்வழியே வந்து விழுகிறேன். என்றதுபோல் துடித்தது. இந்த பதட்டம் இவள் மேடை ஏறி நடனம் ஆடும் போது கூட இல்லை அவளுக்கு. இப்போது எதற்கு இந்த பதட்டம் என்பது கூட அவள் அறியாள்.மேடை ஏறிவருபவளைக் கண்டவன், தன் கூலிங்க் கிளாசினை கழட்டி தன் சட்டை பட்டன் இடைவெளியில் மாட்டிவிட்டு,."இந்த குழுவோட லீடர் யாரு?" என்க.

அனுவோ முந்திரிக்கொட்டையாட்டம் முந்திக்கொண்டு

"இவ தான் சார்." என்று ஜெசியை தள்ளி விட்டவள்.

"ஜெசி செம்ம ஹேன்ஷம்டி!.. எப்பிடியாச்சும் உன் கண்வித்தையை வைச்சு இந்தாளை மயக்கிடுடி." என்க.

பின்புறம் நின்ற தன் தோழியின் உரசலுடன் கூடிய பேச்சில் சினம் கொண்டவள், தன் சோல்டரால் இடித்து.

"அலைஞ்சான். கொஞ்சம் வாய மூடிட்டிரு. உன்னைப்போலயே என்னையும் நெனைச்சியா?." என உச்சுக்கொட்டியவள். முன்புறம் திரும்ப

அவர்கள் பேச்சு காதில் விழுந்ததுவோ என்னவோ, முன்னால் நின்றவன் இருவரையும் பார்த்து முறைத்தவாறு,"கூட்டமாக ஆடினால் யார் வேண்டும் என்றாலும் முதலிடத்தில் வரலாம். தனித்து ஆடியிருந்தால் நிச்சயம் உங்கள் கல்லூரி மண்ணை தான் கௌவ்வியிருக்கும். ஜெயிப்பதற்காகவே குறுக்கு வழி தேடிப்பிடித்து குழுநடனம் அடியிருக்கிறீர்கள். நீங்கள் இந்த மாதிரி குழு நடனம் ஆடவில்லையெனில், இப்போது இரண்டாம் பரிசு பெற்றவள் தான் இந்த பரிசுக்கு சொந்தக்காரி." என்று மைக்கில் பேசாது மேடையில் நின்றவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் கோபம் கலந்து கூறியவன்,

"இருந்தாலும் இப்படி குறுக்கு வழியில் சிந்திப்பதற்கே கோப்பையை தங்களுக்கு தரவேண்டுமே." என கேலி செய்தவன், வாழ்த்துக்கள் என்று கையினை குழுக்குவதற்கு தன் கரம் நீட்ட,ஜெசியோ தன் கைகளை அவனிடம் நீட்டாது. "சாரி சார். இந்த கோப்பை எங்களுக்கு வேண்டாம். தகுதி இல்லாத இடத்தினில் இருக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு சில நாட்கள் மாத்திரமே!. அது யாருக்கு உரியதோ அவர்களிடமே கொடுத்து விடுங்கள்." என்றவள் மேடையில் இருந்து இறங்குவதற்காக திரும்பி நடக்க."மன்னிக்கணும் மிஸ் ஜஸ்வந்தினி. இது நான் எடுத்த முடிவல்ல. நடுவர்கள் எடுத்த முடிவு. அவர்கள் முடிவில் தலையிடும் உரிமை எனக்கல்ல." என்றவன்.

"உனக்கு இந்தக்கோப்பையினை வாங்கிடும் தகுதியில்லை என்று தானே இதை வாங்க மறுக்கிறாய். எனக்கும் இதை தகுதியில்லாதவர்களுக்கு கொடுக்க இஷ்டமில்லை." என்றவன்"ஒன்று செய்யலாமா?.. உன் கூட்டத்தார் ஒருவர் சோலோவாக ஒரு நிகழ்வை செய்து காட்டட்டும். அவர்கள் தகுதியை பார்த்து இதை நான் சந்தோஷமாக உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்." என்க.ஜெசிக்கு இதில் சம்மதம் என்றாலும், யாரை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைப்பது. என தெரியவில்லை. இவனது கூற்றுக்கு சம்மதிக்கா விட்டாலும் தனியாக நின்று வெற்றிபெற மாட்டோம் என நினைத்து பயந்து ஓடுகிறோம் என்பானே! என சிந்தித்தவாறு இருக்க."என்ன ஜஸ்வந்தினி தயாரா?" என்க.

யோசனையை கைவிட்டு "ஹூம்" என்றவள் தன் கூட்டத்தார் நின்ற இடத்தினை திரும்பி பார்க்க. அங்கு யாருமே இல்லை.

கண்களால் வலைவீசியவள், கீழே பார்க்க மேடையின் ஓரத்தில் நின்று "ஜெசி நீயே அவர் சவாலை ஏத்துக்கோடி. நம்ம எதுக்கும் சளைச்சவங்க இல்லனு நிரூபிச்சிட்டு வா பேபி." என்க."ஹூம்" என தலையசத்தவள், முன்னைய பாட்டிற்கு அபிநயம் பிடிக்க.

"இதை தான் பட்டி மாடாகப் பார்த்து விட்டோமே! வேறு ஏதாவது திறமையிருந்தால் காட்டு." என்றான் அந்த ஆணவம் பிடித்தவன்.அவனைப்பார்த்து முறைத்தவாறு, "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் அதையும் கூறினால் நல்லா இருக்கும்." என்றாள் அவன் பேச்சில் வந்த கோபத்தை வெளிக்காட்டி.இதழ்களில் இளநகையை படரவிட்டவன். உதட்டை பிதுக்கி காட்டி,

"ரொம்ப நம்பிக்கை போல. பொறுப்பை என்கிட்டுயே ஒப்படைக்கிற" என்றவாறு.

"ஒரு பாட்டு பாடு. இல்லனா ஒரு கவிதை சொல்லு. இப்பிடி உனக்கு என்ன தோணுதோ செய்!" என்றவன் மைக்கினை அவள் முன்பு நகர்த்தி வைக்க.சட்டென எப்படி இவன் கூறுவதை செய்ய முடியும்?.. கவிதை எனில் தலைப்பு வேண்டும், பாடல் பாடுவோமா? என நினைத்தவளுக்கு,

யாரோ வரைந்த ஓவியத்தின் மேல் மீண்டும் வர்ணம்பூசி அதன் அழகினை கெடுக்க அவன் மனம் ஒப்பவில்லை.

கவிதையே சொல்வோம். ஆனால் தலைப்பு எதைப்பற்றியது என்று தெரியாமல் எப்படி என தடுமாறியவள்.

பின் கண்களை மூடி மௌனமாக நின்றவள் சிந்தையில் உதிர்த்தான் முகமறியா திருடனவன்."ஏனடா என்னை கொல்கிறாய்?

என் இதழ் மீது,

ஏன்? இந்த மௌனங்கள்...

அமைதியாய் இருந்த என் மனதை பறித்து விட்டு,

என் நினைவுகள் முழுவதிலும்

உன் நினைவுகளை ....

உணர்வுகளாக்கி சுமக்க விட்டாயே.....

இது தகுமோ?

இது முறையோ?உன்னை காண துடிக்கும்

எனது விழிகளுக்கு

வரும் தவிர்ப்பு தான் ஏராளம்......

எப்படி சொல்வேன்?என் கண்களின் ஏக்கத்தில் தொடங்கி

ஊன் முழுவதும் உணர்வுகளால் தவிக்கின்றேன்......

எப்போது உன்னை பார்ப்பேன்

மீட்டாத வீணையை மீட்டுவேன்???

என்ற ஏக்கத்தோடு உலாவுகிறேன்......அது என்னவோ தெரியவில்லை....

மாயமோ புரியவில்லை......

உன்னை நினைத்தால் மட்டும்

என் கண்கள் கனலாகிறது,

ஆனாலும் ....,

உன்னை காணவில்லை..,

ஏன் இந்த நிலை?

புரியவில்லை....

என்றோ,

எங்கோ புதைக்கப்பட்ட உன் நினைவுகளையும்

ஆராய்ந்து தேடி எடுக்கின்றேன் ...

நீ மீட்டும் பார்வைக்காகவும்

அதில் வரும் நின் காதலுக்காகவும்....இருண்ட மேகங்களுக்கு இடையில்

இருளில் இருந்து தவிக்கும் என்னை எப்போது?

" உன் கைகோர்த்து"

அழைத்துச் செல்வாய் என்ற ஏக்கத்திலேயே நானும் மூழ்கி கிடக்கின்றேன்.....!!என தன் சிந்தையில் உதிர்த்தவனுக்காய் கவிதை வடித்தவள் அமைதிகாக்க.

அவள் கவிதையின் சிறப்பினை எடுத்தியம்பியது அந்த மண்டபத்தினில் நிறைத்திருந்த கரகோஷம்.

விடியலை தேடி -3
 
பாகம்-3

அரங்கத்தில் அனைவரையும் தன் கவிதையால் கலக்கிய ஜெசிக்கு மாணவர்களின் கர ஒலிகள் விண்ணை பிளந்தன.. அவள் கவிதையில் தன்னை ஆழ்க்கொண்டவனை எண்ணி தன்னிலை மறந்து நின்றவளின் அருகில் தனியாக கேட்ட ஒற்றை கை தட்டலில்..சுதாரித்தவளாய் பெண்மைக்கே உரிய கர்வத்துடன் நிமிர்ந்து நின்றவளை..ஒரே அலட்சிய பார்வையாள் வீழ்த்தி நின்றான் நிலவன்..அவனின் அந்த ஒற்றை நக்கல் கை தட்டலும்.. ஒர கண்ணின் அலட்சிய பார்வையும் பார்க்கும் பொழுது ஜெசியின் கோப நிலை 90'C செல்சியதை தாண்டியது..இவ்வளவு கர்வமும்,, திமிரும்,, பிடித்தவன் கையால் தான் பரிசை வாங்கும் நிலைக்கு தள்ளி விட்டு ஓரமாக நின்று ""கக்கபிக்க"" என்று இளிக்கும் அவள்ஸதோழிகளை ஒரே முறப்பு தான் முறைத்தாள் ஜெசி,,அனைவரும் "கப்சிப்" என இவளிடம் வந்து நின்றனர்..அவனின் அந்த அலட்சிய தன்மையை எல்லாம் பணம் செய்யும் வேளை என்று மனதிற்குள் குறை சொல்லிக் கொண்டாள் ஜெசி..அவர்களுக்கு உரிய பரிசு கோப்பையை அவளிடம் தர நிலவன் எத்தனைக்கும் பொழுது..ஜெசி குறுக்கிட்டாள்.. மன்னிக்கவும் இப்பொழுது இந்த கோப்பை வாங்கும் விருப்பம் எங்களுக்கு இல்லை.. என்றவளை விசித்திரமாக பார்த்தான் நிலவன்..நிராகரிக்கப்படும் எந்தவொரு திறமைக்கும், மீண்டும் ஒருமுறை வழங்கப்படும் எந்த ஒரு சன்மானமும் நிகர் ஆகாது.. எனவே இதை எங்களின் நிராகரிப்பாக நீங்களே உங்கள் கல்லூரியில் வைத்து கொள்ளுங்கள்.. இதை பார்க்கும் பொழுது எல்லாம் மற்றவர்களுக்கு மதிப்பளிப்பது எப்படி என உணர முடியும என்றவள்..விறு விறுவென.. மேடையில் இருந்து இறங்கி அவள் அறை நோக்கி நடக்கலானாள் ஜெசி..அங்கு நடப்பது என்ன?? அங்கு நடந்தேறியது என்ன என்பதை விளங்காதவர்களாய் அவள் தோழிகள் மேடையில் கற்சிலையாக நின்றனர்.. அவர்கள் மட்டுமல்ல.. அவர்களுடன், இவை அனைத்தும் தனக்கும் ஒரு புது விதமான தாழ்ப்பு உணர்ச்சியை உள் அடக்கிக் கொண்டு விக்கித்து நின்றான்.. நிலவன்..எத்தனையோ நாடுகள் பயணித்து இருக்கின்றேன்.. என் கையால் பரிசை வாங்க நான்.. நீ.. என அலைவோர்கள் மத்தியில் என்னை அசிங்கப்படுத்தி சென்றவளின் திமிரை நினைத்தவனுக்கு மண்டை மீது இரண்டு கொம்பு முளைத்தது.. கோப கனல் வெளியே தெளிக்க படுவதை அருகில் இருந்த அவன் நண்பன் உணர அவன் கை பற்றி அங்கிருந்து நகர்த்தி சென்றான்..கல்லூரி, புயலுக்கு பின்பு வரும் அமைதியாக இருந்தது..அங்கு அறையில் தன் பேக்கில் தனக்கான துணிகளை திணித்து கொண்டு இருந்தாள்.. ஜெசி..என்ன ஒரு ஆணவம்?? எவ்வளவு திமிர் பிடித்தவன்.. தான் என்ற கர்வம் படைத்தவன்.. இவன் பணம் யாருக்கு வேண்டும்.. எதிரில் இருப்போரின் திறமை உணராதவன்.. மற்றவர்களின் உணர்வை மதிக்க தெரியாதவன்,, என்று அவள் புலம்பிக்கொண்டு இருக்கும்அதே வேளையில்..அங்க நிலவன்.. தன் தோழனிடம் மடை திறந்த அருவியாக கொட்டிக்கொண்டு இருந்தான்..என்ன?? அகந்தை பிடித்தவள்.. தான் என்ற திமிர் பிடித்தவள்.. தான் அழகாக இருக்கிறாள் என்கிற மமதை..ஆனால் பார்த்தாயா கோபி என்னிடம் முதன்முதலாய் நேர்க்கு நேர் நின்று அவள் பேசிய விதத்தினை பார்த்தாயா??.. கோபி,,அவள் அழகிற்கு அந்த ஆணவம் இருப்பது ஒன்றும் தவறு இல்லை..அவளின் திறமைக்கு ஏற்ப நளினம் அதற்கு ஏற்ப நயம் அதற்கான வெளிப்பாடே அந்த செர்ரி பழ உதட்டில் இருந்து தெறித்து விழுந்த சினம் கூட எவ்வளவு அழகானதாக ரசிக்க கூடியது ஆக இருக்கிறது..என்றவாறே அவன் உதட்டை மடித்து உட்குவித்து தன் விரல்களால் பிடித்து கொண்டு பேசியதை பார்க்கும் போது நம்ம தளபதி அனுஷ்காவின் உதட்டை பிடித்து பேசுவதை போல இருந்தது.. நிலவன் பேசியது,,அந்த துள்ளி விளையாடிய மீனின் கண்களில் தான் எவ்வளவு சினத்தின் வெளிப்பாடு,,கொற்றையவனின் கூர் வாளினை போன்ற கூர் முனை நாசியில் தான் எவ்வளவு கோப நீர் திவளைகள்,,பிறந்த குழந்தையின் மேனியாக சிவந்த கன்னகுழியினை காணும் போது அதில் பல்லாங்குழி விளையாடலாம் போல அல்லவா தோன்றுகிறது,,செம்பருத்தி மலரின் சிவந்த மகரந்தத்தை தீட்டிய மேனியில் தான் எப்பேர் பட்ட அனல் துளிகளின் வெளிப்பாடு,என்னுடைய ஆணவத்தினை வீழ்த்தாமல், , வீழ்த்தி சென்று விட்டாளே என் மனம் கவர்ந்த கள்ளி ஊகூம் அல்லி.. என,,

கற்பனை கடலில் படகில் பயணித்து துடுப்பு ஓட்டியவனை.. ஒரே குலுக்கல்.. ஒரே குலுக்கலில் கோபி சோலியை முடித்து விட்டான்..ஹாலோ நிலவன் சார்.. இப்ப எங்க பயணிக்கிறிங்க.. அவ இப்படி பேசி இதுவரை யாரும் நடந்துக்கொள்ளாத விதமாக நம்ம காலேஜ்க்கே வந்து உன்னையை ஒருத்தி பேசி விட்டு போய் இருக்கிறாள் அவளை என்ன செய்யலாம் என்ற?.. கோபத்தில் இருக்கிறேன்,, நீ என்னவென்றால் அவளை வர்ணித்துக் கொண்டு இருக்கிறாய்.. இது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை இப்ப நான் அவளை என்ன செய்கிறேன் பார் என்று கூறி நகர்ந்தவனை இழுத்து தன் அருகில் நிறுத்தினான் ,, நிலவன்..கோபி உன் கோபம் சரியானது தான் ,, ஆனால் அவளின் கோபத்தை உற்று கவனித்தாயா அதில் ஒர் நியாயம் தெரியும்.. ""பெண்ணும்.. ஆணும்.. சரிபாதி அல்லவா அவள் என் பதி அல்லவா"".. நீ சின்ன பையன் டா உனக்கு இது எல்லாம் புரியாது..அது சரி சாருக்கு என்னாயிற்று இது புதிய நோயாக இருக்கே உலகம் சுற்றிய வாலிபனுக்கு வராத நோவு வந்துடுச்சி... போல என்று கேலி பேசி நகையாடினான் கோபி..டேய்.. டேய்.. மச்சான்.. அது என்ன நோய் டா சொல்லு டா.. சொல்லு டா.. என்று முகத்தை பாவமாக பாவித்துக்கொண்டு கெஞ்சினான் நிலவன்..நான் சின்ன பையன் பா.. போ.. போ.. என்று பொய் கோபம் காண்பித்தான் கோபி..நிலவன் தன் கைகளால் காதை பிடித்து சாரி சொன்னபடி கோபியை பார்த்து கெஞ்சுவதை போல கொஞ்சினான் முகத்தினை அழகாக குழந்தை போல சுருக்கி..கோபிக்கு அவனின் செய்கையை பார்க்கும் போது ஒரே சிரிப்பாக வந்தது.. இதுவரை தனக்காக மட்டுமல்லது தன்னை சுற்றி உள்ளோர்க்கும் சேர்த்து இந்த இளம் வயதில் தன் சுய முன்னேற்றத்தால் பாதாள குழியில் இருந்த தனது bussiness- யை தனது கம்பெனியை உலகளாவிய இடத்தில் ஐந்தாம் இடத்திற்கு கொண்டு வர தன்னையே அர்ப்பணித்தவன்.. இதுவரை எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பாராதவன் இவன் வாழ்க்கையில் ஒரு பெண் மையம் கொண்டாள் என்றால் அவள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என கோபி மனதிற்குள் எண்ணிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில்..ஜெசியின் இச்செயல்பாடால் மேடையில் இருந்த சக தோழிகள் தன்னிலை மறந்து கற்சிலையாக உறைந்து நின்றவர்கள் அரங்கத்தில் கூடி இருந்த மாணவர்களின் சர்ச்சைகள் நிலை தடுமாற செய்தது.. இனியும் அங்கு நிற்பது தவறு என உணர்ந்தவர்கள் மேடையில் இருந்து இறங்கி ஓட்டமும்.. நடையுமாக.. அறையை நோக்கி பாய்ந்தனர்..அறையினுள் சென்றவுடன் திவ்யா தாழிட்டாள்.. கொஞ்சம் நேரம் அனைத்து தோழிகளும் ஒன்றாக ஜெசி மீது ஒரே பாச்சலாக பாய்ந்தனர்.. பிறகு அதில் ஒருத்தியான அனுபாமா அவர்கள் பக்கம் திரும்பினாள்..ஏய்!! விடுங்கப்பா நமக்காகவும் சேர்த்து தானே பேசினாள்.. அவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருக்கட்டும்,, அவர் எவ்வளவு பெரிய டானாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.. அதற்காக எதிரில் உள்ளோர் திறமையை குறைத்து மதிப்பிடுதல் தவறு தானேபா.. என்றவுடன் அவள் பக்கம் பாதியும் எதிர் பக்கம் மீதியுமாக இரு துருவங்களாயின..திவ்யா இடையே குறுக்கிட்டாள் நீ சொல்வதை நாம ஏற்றுக்கொள்வதும்.. மறுப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும்.. இப்ப நம்ம வெறும் கையை வீசிக்கொண்டு நம்ம காலேஜ் போவதை பற்றி கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா??

தமது கல்லூரியின் முதல்வரை நினைத்த பொழுது பகீர் என்றது மனது .. அவரை பற்றிய சிந்தனையும்.. மற்ற டிப்பார்ட்மெண்ட் மாணவிகள் கேலி அடிப்பதும் ஒரு நிமிடம் கண் முன் தோன்றி மறைந்தது "ஆ" என அலறி சரிந்தாள் வினோதினி..
ஏய்!! வினோ.. வினோ.. என படை சூழ.. ஏய்.. கொஞ்சம் விலகுங்கபா அவளுக்கு காற்று வரட்டும்.. தண்ணீரை முகத்தில் அடித்து குடிக்க கொடுத்தனர்.. லொக்.. லொக்.. என செருமிய படி எழுந்து அமர்ந்தாள்..இதுவரை அமைதி காத்த ஜெசியாள் தன்னுள் அடக்கி வைத்து இருந்த அழுகையை மறைக்க பலமின்றி தோற்று போனாள்.. எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்கபா.. என்னாள் தானே ,, உங்களுக்கும் கஷ்டத்தை தந்ததும் இல்லாமல் நமது கல்லூரிக்கும் தீரா பழி சொல் சேரும்படி செய்து விட்டேன் என்றபடி குலுங்கி குலுங்கி.. அவ அழுவதை பார்க்க இயலவில்லை தோழிகளாள்..என்னபா!! இப்படி பிரித்து பேசுகிற உனக்காக மட்டுமா பேசின நமக்காக தானே பேசின நாங்கள் அனைவரும் உன் கூட இருக்கிறோம் பார்த்து கொள்ளலாம்.. வேணும் என்றால்?? நம்ம வடிவேலு சார் பாணியில் போகும் வழியில் நல்லா, இது என்ன கோப்பை இதை விட பெரிசா வாங்கிட்டு போகலாம் என்ன?? ஓகே தானே என வினோ கூற அனைவரும் "களீர்" என சிரித்தனர் ஜெசி உட்பட..யாருபா இது நம்ம வினோவா பேசுறது!! ஏய்!! என்னை கொஞ்சம் கிள்ளுங்க என கையை நீட்டினாள் காயத்திரி..ஏய்!! உங்க கதை எல்லாம் போகும் வழியில் பார்த்து கொள்ளலாம் இங்கிருந்து சீக்கிரமாக கிளம்புகிற வழியை பாருங்க.. என்ற திவ்யாவை தொடர்ந்தாள்..அனுபாமா அவங்க கல்லூரிக்கு வந்து.. அவங்க நிர்வாகியவே பேசி இருக்கிறோம்.. இதுவரை நம்மளை எல்லாம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாமல் இருப்பதே அவர்களின் பெரும் தன்மையை காட்டுகிறது.. நாம தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கான தவறு.. சீக்கிரமாக இங்கிருந்து கிளம்புங்க கிளம்புங்க.. என அவசரப் படுத்தி கல்லூரியின் பின் கேட்டின் வழியாக அனைவரும் மின்னல் என மறைந்தனர்..பஸ் நிலையம் அந்த மாலைப் பொழுதின் மயக்கத்தில் சூழ இவர்கள் அனைவரும் கலக்கத்தினை சுமந்தபடி நின்றனர்..ஏய்!! ஏய்!! புள்ளைங்களா நம்ம ஊருக்கு போகும் டவுன் பஸ் டி.. கிளம்ப போகுது வாங்க.. வாங்க.. என்றபடி தேவஸ்ரீ ஓட அவளை தொடர்ந்து ஓடினார்கள் மற்றவர்களும்.. இவர்கள் ஓடி வருவதை பார்த்த டிரைவர் வேகத்தை குறைக்க.. அனைவரும் அடித்த பிடித்து ஏறினர்.. பஸ்சில் இருக்கை இல்லாத காரணத்தினால் அவர் அவர்கள் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வதும்.. நின்றுக்கொள்வதுமாக அவர்களின் கனவுகளுடன் வந்த குயில்களின் கனத்த இதயத்துடன் அந்த நகரத்தை விட்டு நகர்ந்து சென்றது புகையை காற்றில் தூவியபடி வானூர்தி..காதல் கொண்ட இதயத்தில்..

கார் இருள் சூழ களங்கிய இதயத்துடன் அவனின் பரிஸ்ஷம் தொட்ட உணர்வுடன் உறைந்த படி பயணித்தாளே தவிர குரங்கு மனது அது மட்டும் அடம்பிடித்து அந்த கல்லூரியின் நுழைவாயிலில் நின்றுக்கொண்டது இவளுடன் வர மறுத்து..அண்ணா பாட்டு போடுங்க என்ற வினோவை வினோதமாக பார்த்தனர் அனைவரும்..இந்த ஒரு சல சலப்பிலும் உனக்கு ஒரு கிளு கிளுப்பு தேவை என்றவாறே முறைத்தனர்..அழகான வரிகள் உடன் ஒலி தட்டுகள் ஒலித்தனர்..பூங்காற்றிலே...

உன்..

சுவாசத்தை..

தனியாக தேடி பார்த்தேன்.. என்ற காந்த வரிகளுடன் கவலை தோய்ந்த இதயத்துடன் பயணித்தனர் அனைவரும்..

மாஸ் கல்லூரியில் அந்த குளு குளு அறையினுள் வியர்த்து நனைந்த படி நின்றவனை கோபியால் பார்க்க முடியவில்லை..மச்சான்.. மச்சான்.. இப்ப என்ன?? செய்யனும் சொல்லு உனக்காக அந்த ஹனுமான் மாதிரி சஞ்சிவி மலையை தூக்கி வரவா.. இப்ப "ம்" என்று சொல்லு.. சொல்லு.. உனக்காக ஏதாவது இப்ப நான் செய்யனும்.. சொல்லு .. என்ற கோபியை பார்த்த நிலவன்..இப்ப நீ வாயே மூடிக்கொண்டு அவளை போய் அழைத்து வா.. என்றான்..அசிங்கப்பட்டான் கோபி என்றவாறே அவர்கள் தங்கி இருந்த அறையை நோக்கி சென்றான்??கலைந்து பறந்து கிடந்த வெற்று அறை அவர்கள் இல்லை என்பதை பறை சாற்றியது..அடக்கடவுளே என ஆச்சர்யத்துடன்!! தன் தாடையில் கை வைத்தான் கோபிஇந்த பிள்ளைங்க எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்ற ஒர் துளி எண்ணம் கூட இல்லாமல்,, அதற்கான ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் போய் விட்டார்கள்.. இவர்களை என்று தனக்குள் வந்த கோபத்தை தனக்குள்ளவே அடக்கிக்கொண்டவன்.. நமக்கு ஏன்?? இந்த பெரிய இடத்து பொல்லாப்பு என்றவாறே தனது தோள் பட்டையை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..கல்லூரி குயில்கள் எல்லாம் நன்றாக சோர்வடைந்து போய் இருந்தனர்.. பஸ் ஒரு ஹோட்டலுக்கு முன் நின்றது சாப்பிடுறவங்க எல்லாம் சாப்பிட்டு வாங்க பஸ் 1/2 மணி நேரம் தான் நிற்கும் என பாடலாக பாடி இறங்கினார் டிரைவர்..எல்லாரும் சாப்பிட வாங்கபா.. என்றபடி வழி நடத்தி அழைத்து சென்றாள் அனுபாமா..பேசியபடியே சாப்பிட்டனர்.. நாம ஒரு மன்னிப்பு கேட்டு வந்து இருக்கலாம் டி.. அதை கூட நாம செய்யவில்லை.. நம்மளையும்.. நம்ம கல்லூரியையும் பற்றி என்ன நினைப்பார்கள் என புலம்பி தீர்த்தாள் கமலி..அதுவரை அமைதி காத்த ஜெசி குறுக்கிட்டாள்.. அப்படி நாம செய்து இருந்தோம் என்றால்?? அவர் சொன்னது தான் சரி என்றாகி இருக்கும்.. நமது மீது பிழையாகி இருக்கும்.. அவர் மீது தான் தவறு நாம ஏன்?? மன்னிப்பு கேட்க வேண்டும் என்றவளை ஆச்சர்யம்!! கலந்த கலவரமாக பார்த்தாள் அனுபாமா..பேசுகிறது ஜெசி தானா?? இல்ல உள்ளே இருந்து ஏதாவது ஆவி பேசுகிறதா??இது உன் குணமே இல்ல.. இது உன் செயலும் அல்ல நீ கல்லூரிக்கு வந்த பொழுதில் இருந்தே கவனிக்கிறேன் நீ சரியில்லை.. என்ன?? நடந்தது.. சொல்லு சொல்லு.. டி..பஸ் " ஹாரனை " அடித்தப்படி இன்னும் ஐந்து நிமிஷம் தான் பஸ் நிற்கும் சாப்பிட்ட கடன்களை கழிப்பவர்கள் கழித்து வாங்க.. பாம்.. பாம்..சிறிது தூர பயணத்திற்கு பின் நெரிசல் குறைந்து இருக்கைகள் கிடைத்தன.. அவர் அவர்கள் கிடைத்த இருக்கையில் அமர்ந்து தம்மை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டனர்..இருள் சூழலில் மெல்லிய தென்றல் காற்று தேகத்தை வருட நமது ஏ.ஆர். ரகுமானின் இசைகள் இதயத்தை தாலாட்ட அனைவரும் குழந்தைகள் ஆயின உறங்கி ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படி பயணிக்க..ஜெசியின் நெஞ்சாங்க் கூட்டில் மட்டும் நீயே நிற்கிறாய் என்ற வண்ணம் கண்களை மூடி இதய கதவை திறந்து தேடலானாள்..

கார் இருளில் காதல் வசம் பட்ட கள்வன் நிலவன் தன் விலைமதிப்பற்ற வசந்த மாளிகையில் விலை உயர்ந்த தண்ணீர் மெத்தையில் தன் கையில் ஒன்றை வைத்து பார்த்து ரசித்த படி உறக்கம் பிடிபடாமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தவன் தனக்கு தானே சிரித்து கொண்டவனை பார்த்த கோபி..அச்சோ!! இவனுக்கு என்னாயிற்று இப்படி தனக்கு தானே சிரித்து கொள்கிறான் என்றபடி அவன் அருகில் சென்றவுடன் தன்னிடம் தான் கோபி வருகிறான் என்பதனை கண்டுக்கொண்ட தன் கையை இறுக்க மூடிக் கொண்டான் நிலவன்..ஏய்!! இப்ப என்னை பார்த்து எதையோ மறைத்தாய்!! அது என்ன?? காட்டு.. இப்பவே காட்டு.. என்பவனிடம் காட்ட மறுத்து மறைக்க முயன்று தோற்று போனான்..நிலவனின் கையில் இருந்ததை லாபக்கரமாக லாபக்கென தட்டி பறித்து பார்த்த கோபி .. என்ன?? இது பெண்களுக்கு உரிய ஒற்றை காதணி இது எப்படி உன்கிட்ட வந்தது இதானா?? அந்த காதல் படுத்தும் பாடு.. என்றவாறு நமட்டு சிரிப்பு சிரித்தவனை பார்க்க இயலாமல் கண்ணை கீழே தாழ்த்திக்கொண்டான்..சொல்லு டா இது எப்படி உன் கிட்ட வந்தது.. இருவரும் பாலிய சினேகிதர்கள் இதுவரை மறைவற்ற வாழ்க்கை வாழ்பவர்கள்.. ஒருவர் மீது ஒருவர் உயிரையை வைத்து இருப்பவர்கள்.. இவர்களின் நட்பினை கண்டு பொறாமை கொண்டோர் அதிகம்..அது வந்து.. அது வந்து..அதான் வந்துட்டே மற்றதை சொல்லு..அவ மேடையில் நடனம் ஆடிய பொழுது அவளிடம் தவறிய ஒற்றை சிமிக்கி என் சட்டை பட்டனில் சிக்கிக்கொண்டது இதிலிருந்தே உனக்கு ஒன்று புரிகிறதா இது கடவுள் தான் எனக்கானவளை அனுப்பி இருக்கிறான் என்று ஆனால் மடையா நீ போய் அவளை அழைத்து வா என்றால்?? வீர வசனம் எல்லாம் பேசி விட்டு வெறுமனே திரும்பி வர ஒன்றுக்கும் துப்பிலாமல் போடா என பொய் கோபத்தால் முகத்தினை திருப்பிக்கொண்டான்..


தான் ஆரம்பித்த நாடகத்தினை தூர இருந்து ரசித்து கொண்டு இருந்தார் கடவுள்..

விடியலை தேடி-4
 
பாகம்-4

மேடையில் தன்னை மறந்து நடனமாடிய ஜெசியின் ஒற்றை கம்மலானது அவளது நடனத்தினால் அதுவும் தன்னிலை மறங்ததினாலோ என்னமோ மேடையின் கீழ் முன் வரிசையில் விருந்தினர் இருக்கையில் இருந்து ரசித்தவனது சட்டை பட்டனில் வந்து ஒட்டிக்கொண்டது.அவளது கம்மல் அவனது கையில் கிடைத்ததனால் அவளே தன்னிடம் வந்து விட்ட சந்தோஷத்தில் கம்மலுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போது தான்

தன் உயிர் தோழனிடம் அகப்பட்டவனை கோபி துருவி துருவி விசாரிக்கும் போதுதான் அவளை விரும்புவதாக ஒப்புக்கொண்டவன்,

அவளை அழைத்துவர அனுப்பி..
அவள் இல்லாது வெறும் கையோடு வந்த கோபி மீது குறை பட்டான்..


தன் நண்பனின் மனக்குமுறல் புரியாமல் இல்லை கோபிக்கு.முதல் முதலில் ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டவன் எதிர்பார்ப்பு இந்த மாதிரி இருப்பதில் தவறில்லையே!

ஆனால் கோபியும் தான் என்ன செய்வான்."என்னடா இந்த மாதிரி சொல்றே!!..

நீ சொல்லுறத பாத்தா ஏதோ நான் தான் அந்த பொண்ணை துரத்தியடிச்சேன் என்கிறது போலல்ல பேசற.""நான் போனப்போ யாருமே இல்லாமல் எப்பிடி வெத்து அறையா இருந்திச்சோ அதைத்தானே என்னால உன்கிட்ட வந்து சொல்ல முடியும்!""நிச்சயமா அவங்க முன் வாசல் பக்கமா போயிருக்க முடியாது நண்பா.

ஏன்னா நான் அந்த வழியாத்தான் அவங்க ரூம் பக்கம் போனேன்.

நீ இப்பிடி அவ மேல காதல் பித்து பிடிச்சலைவேனு அப்பவே தெரிஞ்சிருந்தா நாலு பேரை விட்டு தேட சொல்லியிருந்தாளாவது அவளை கண்டு பிடிச்சிருக்கலாம்.

இப்போ அவளை பத்தி எந்த தகவலும் தெரியாமல் எப்பிடி என பேசிக்கொண்டே போனவன்."விடு நண்பா. இன்னையோட உலகம் விடியாமலே அழிஞ்சிட போறது இல்லையே!

உன் செல்வாக்கிற்கு விடியிறத்துக்கு முன்னாடி அவளை பத்தின தகவல் உன் கையில வந்திடாது!. என்றவனை பார்த்து மர்மமாய் புன்னகைத்தவன் செயலிலேயே அவன் உயிர் தோழன் புரிந்து கொண்டான்.நண்பனின் புன்னகையினை கண்டு பெருமிதமாக தானும் புன்னகை சிந்தியவன்.

"அதானே பாத்தேன். நிலவன்னா கொக்கா!...." என்றவன்,

"ஆனாலும் நண்பா இது ரொம்ப ஓவர் ஸ்பீட்டா!..

பாத்து பதம்மா போடா! இல்லனா ஆக்சிடென்ட் ஆகிடபோகுது." என்க.மனதில் ஓடிய எண்ண ஓட்டத்தை நினைத்து புன்னகை முகத்தினை மாற்றாமலே நண்பன் தோள் மீது கைவைத்து அழுத்தியவன்."ஆனாலும் நண்பா!.. நீ சமயம் பாத்து காலை வாருரேடா!." என்றவன்,

"எனக்கொரு சந்தேகம்டா! இவ எப்பவுமே இதே போல சண்டைக்காரியாத்தான் இருப்பாளாடா?

அவ கோபத்தை பாத்தியா?. யம்மாடி!!.....

பக்கத்தில நிக்க முடியாமல் அனல் காத்து என்னமா என் மேலயே வீசிச்சுனா பாத்துக்கோயன்.""இதைத் தான் பட்டியாவே பாத்திட்டேனே!

வேற எதுவாச்சும் செய்து காட்டு!. என்றப்போ அவ கண்ணில தெறிச்ச கோபமும், அதை அடக்க தெரியாமல் என்னை எதிர்த்து பேசின அந்த தைரியமும் என்னையே ஆட வைச்சிட்டுதுடா!" என்றவன்,"இந்த தைரியம் யாருக்கும் வராதுடா!.. மனசோட எண்ண ஓட்டத்தை யாருக்காகவும், எந்த காரணத்திற்காகவும் மறைக்க தெரியாதவல்ல...

இல்லனா என் முன்னாடி நின்னு தைரியமாக பேசினதும் இல்லாமல்.

என் கையால தரும் அவார்ட்டையும் மறுத்து,

அதை தன்னோட நினைவாக என்னோட காலேஜ்லயே வைச்சுக்கோனு சொன்னதும் போதாதுனு.

மத்தவங்களை எப்பிடி மதிக்கணும்னு எனக்கே பாடம் கத்துத்தறா..இது வரைக்கும் இந்த மாதிரி யாராச்சும் என்முன்னாடி நின்னு பேசியிருக்காங்களா கோபி?.

எனக்கு தெரிஞ்சு இவ ஒருத்தி தான்டா என் முன்னாடி நேருக்குநேர் நின்னு பெண்சிங்கம் மாதிரி தைரியமா சீறியிருக்கா.""செம்மல்ல!... இது கூட ஒரு புது வித அனுபவம் தான்டா!.

ஆனா பியூச்சர்ல ரொம்ப கஷ்டப்படப்போறேன் நண்பா!..

ரண்டு பேருமே கோபக்காரங்களாவே இருக்கோம்.

வாழ்க்கை முழுக்க சண்டையாத்தான் இருக்க போகுது.

பாவம் நம்ம பசங்க.

எங்க ரண்டு பேத்துக்கு நடுவில மாட்டிக்கிட்டு அதுங்க பாடு தான் திண்டாட்டமா இருக்க போகுது. என்றவன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கோபிக்கு உண்மையில் இது தன் நண்பன் தானா என்றிருந்தது.இது வரை தன் நண்பன் தன்னுடன் பேசுவது என்றாலும் அளந்து தான் வார்த்தைகளை பிரயோகப்படுத்துவான்.

ஒரு தடவை ஒன்றை கூறினான் என்றால்,

அதை மூலையில் எதிரில் இருப்பவர் தெள்ளத்தெளிவாக பதித்துவிட வேண்டும்.மீண்டும் யாரும் புரியவில்லை என்று கேட்டதும் இல்லை. கேட்கவும் பயம் கொள்வார்கள்.

எப்பாடு பட்டோ ஃபோனில் ரெகாட் வைத்தாவது தங்கள் மூலையில் பதிவு பண்ணித்தான் ஆகவேண்டும்.

அப்படி இல்லை என்றால், அவன் கூறியதை தக்க சமயம் பார்த்து விசாரிக்கும் போது முழி பிதுங்கி நிற்பதை கண்டான் என்றால் தந்தையாக இருந்தாலும் அவன் வசைமொழிகளை கேட்டே தான் ஆகவேண்டும்.அவனது கூரிய பார்வையினால் எதிரிலிருப்பவர் எப்படியானவர் என்பதை அவருடன் உரையாடமலே தன் கண்ணசைவில் எடை போட்டுக் கொள்வான்.ஆம் ஒருவரை இவர் இப்படித்தான் என்று பிரதிபலிப்பது என்பது அவரவர் கண்தான் என்பதை சிறுவயதிலேயே அறிந்த நிலவன், தன் கண்கலாலேயே மற்றவரை எடைபோடவும் கற்றுக்கொண்டான்.

அதே சமயம் தான் இப்படித்தான் என்பதை அந்த கண்களில் காட்டாது மறைக்கும் வித்தையும் நன்கு அறிந்தவன்.தன்னை எதிர்த்து நிற்பவர்கள் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், அவர் தான் தன் எதிரி என்று அவனால் இனங்காணப்பட்ட மறு நொடி நிச்சயம் அந்த எதிரியானவன் நெஞ்சை நிமிர்ந்து அவன் முன் எப்போதுமே நிற்க முடியாமல் செய்து விடுவான்.

எல்லா வழிகளிலும் செல்வாக்கு அவனிற்கு அதிகம் இருந்ததனால் அது அவனுக்கு ஒன்றும் பெரிதாகவும் இருந்ததில்லை.

ஆனால் இன்றோ பேசிய வார்த்தைகளையே பைத்தியக்காரன் போல் மீண்டும் மீண்டும் கூறி. புலம்பியவனையும்.

தனது கேலியில் எதுவும் தன் உடலில் சேதம் செய்யாது, புன்னகையினை பரிசளித்தவாறே தன் தோள்களை தட்டி சமயம் பார்த்து காலை வருரேடா!. என்ற அவனது பேச்சில்,

இது நிச்சயம் தன் நண்பன் நிலவன் இல்லை என்று தான் அவனால் நினைக்க தோன்றியது.இருக்காத பின்னே!

இதுவே வேற ஒரு சமயமாக இருந்திருந்தால் இன்நேரம் இவனது கேலிக்கு தோள்களில் கைவைத்து அவன் அழுத்தும் அழுத்திற்கு, அவனது கை தனியாக கழண்று வந்துவிடும் என்பதை போலல்லாவா இருந்திருக்கும்.நிலவனது இத்தகைய மாற்றத்தினை கண்டு அதிசயத்தவாறு.

"நண்பா உண்மையிலும் இது நீதானாடா?. சுத்தமா என்னால நம்பவே முடியலையே!.

தனிக்காட்டு ராஜாவா கெத்தா திரிஞ்ச உன்னை.

பைத்தியம் பிடிச்ச குரங்காட்டாம் குதிக்க வைச்சிட்டாளேடா அந்த மாயக்காரி.""ஆனாலும் நண்பா! உன்னோட இந்த செயல்பாடு ஒரு பக்கம் விநோதமா இருந்தாலும். உன்னோட இயந்திரத்தனத்தை விட்டிட்டு,

ஒரு குழந்தை போல மாறி உன்னையையே அறியாமல் பல விதமா நடந்துக்கிறதை பாக்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

உன்மையில அவ தேவதை தான்டா!.

ஒரு இயந்திரத்தை மனுஷனாக்கிறது என்றது சாதாரண விஷயமே இல்லை." என அவன் உரியவனிடமே அவனது குறைகளை கூற.அவனது பேச்சில் முறைத்து பார்த்தவனை,

"நல்லாத்தானே இப்போ இருந்தான். திடீர்னு என்னாச்சு? எதுக்கு மறுபடியும் மலையேறினான்?" என சிந்திக்கும் போது தான் தான் விட்ட வார்த்தைகள் புரிய."சாரிடா நண்பா!." என்று அசடுவழிந்தவன் அருகில் முறைத்தவாறு அடிப்பது போல் வர.

கோபியோ தோள்களைத்தான் பதம் பார்க்க போகிறான்.

தன் கையினை இரண்டு நாட்களுக்கு மறக்க வேண்டியது தான். என நினைத்தவாறு கண்களை இறுக முடிக்கொள்ள,சட்டென அவன் தோள்களில் மாலை போல்

தனது கரங்கள் வளைத்து பிடித்ததில் கண்ணை திறந்தவன்,

நம்பாத பார்வையோடு,

தன் கைகளை தானே ஒரு தடவை கிள்ளிப்பார்த்து.

"இது உண்மை தான் நண்பா!.. ஆனா எனக்கு இது உச்சக்கட்ட அதிர்ச்சிடா!." என்க.அவனது இந்த பேச்சு எதற்காக என்று புரிந்தாலும்,

"அதை விடு நண்பா!." என்றவன்.

"ஆனா செம்ம டேலன்ட்டா அவளுக்கு. நடனம் ஆடும் போது பாத்தியாடா!. என்ன அழகா அபிநயம் புடிச்சிட்டு நின்னா!.. ஒவ்வொரு பாவமும் அழகா செய்தால்ல.

அப்புறம் அவளை கவிதை சொல்ல சொன்னதும், அவ திணறினது என்னமோ ஒரு நிமிஷம் கூட வராதுடா!

சட்டுனு என்னமா ஒரு கவிதை சொன்னா!.""அந்த கவிதை வரிகளும் எத்தகைய ஆழமான மனதோட ஏக்கம் நிறைந்த வரிகள்.

ஒவ்வொரு வரியிலையும் காதல் கொண்ட மனசோட ஏக்கத்தை எப்பிடி கொட்டி கவிதை சொன்னா!.

இந்த கவிதை நிச்சயமா இது வரை அவள் கண்டிராத ஒருத்தருக்காகத்தான் இந்த கவிதை எழுதியிருக்கணும்டா!

அதுவும் அப்பிடியான உணர்வை அவ அனுபவிச்சிருக்கணும்டா!.. இல்லனா இந்த மாதிரி கவிதையை யாராலும் இந்தவுக்கு மனசால உணர்ந்து சொல்லியிருக்க முடியாது" என்று அந்த கவிதைகளின் வரிகளில் மெய்மறந்து பேசியவாறு இருந்தவன் மண்டைமேல் பொறிதட்ட."நண்பா!.". என்று தன் நண்பனை புரியாத பார்வை பார்த்தவன்,

"ஆமா எதுக்குடா இந்த கவிதையை அந்த இடத்தில அவ சொன்னா?." என சந்தேகமாக நிலவன் கேட்க.

"இது என்ன நண்பா கேள்வி?. நீ தானேடா கவிதை சொல்லுனு சொன்ன, அதனால சொன்னா." என்க.

"இல்லடா நண்பா!.

நான் கவிதை கேட்டா இந்த கவிதையை எதுக்கு சொல்லணும்.

அம்மா, இயற்க்கை, குழந்தை, கடல், இரவு, இப்படி நிறைய இருக்கேடா தலைப்பா எடுத்து இன்னும் ரசனையா சொல்லாமே!.

ஆனா அவளுக்கு எதுக்கு இப்பிடி ஒரு கவிதை சொல்லணும்னு தோணிச்சிது?.." என்றவன்."அப்பிடினா அவ யாரையோ விரும்புறாளாடா!.. அவனை மனசில நினைச்சுத்தான் இந்த கவிதை சொன்னாளா?." என்றவன் பார்வையில் கேள்வியுடன் கூடிய தவிப்பை கண்டவன்."ஏய் ச்சீ... உனக்கு ரொம்ப முத்திடிச்சுடா!

அவளை கண்டு முழுசா ஒரு நாள் கூட ஆகல்லை. அதுக்குள்ள கனவு உலகத்தில பிள்ளை வரை போனவன்.

இப்போ அவளுக்கு வேற காதலனை வேற உருவாக்குறியா?.." என்று சலித்துக்கொண்டவன்."இந்த கவிதை உண்மயிலேயே அவளுதா இருக்காதுடா!

எங்கேயாச்சும் ரசிச்சு படிச்சிருப்பா! நீ கவிதைனு சட்டென கேட்டதும், இந்த கவிதை தான் நினைவில வந்திருக்கும். அதனால சொல்லியிருப்பா. நீ கண்டதையும் மனசில போட்டு குழப்பிக்காத. அவ உனக்கு மட்டுமே சொந்தமானவள். யாரும் உன்னவளை தூக்கிட்டு போக மாட்டாங்க சரியா?" என்றவன்."நண்பா போதும்டா! நைட்டு முழுக்க ட்ராவல் பண்ணியே டயேர்டா இருக்குடா!.. நீயும் இந்த மாதிரி பன்னிரண்டு மணிவரை அறுத்திட்டிருந்தா எப்பிடிடா தூங்க முடியும்?." என்றவன்,

தன் படுக்கையை நாடிச்செல்ல."நண்பா அவ மனசில வேறு யாராச்சும் குடி இருக்க மாட்டாங்கல்லடா!" என்க."டேய் ஏன்டா!.... என தன்னை தூங்க விடாது உலறியவன் மேல் சினம் கொண்டவனாய் திட்ட வாய் எடுத்தவன்,

அவனது வாடிய முகத்தை கண்டு இரக்கம் கொண்டு,"நண்பா!.. நீ பட்டா போட்ட இடத்தில வேற யாரையாச்சும் குடி இருக்க விட்டிடுவியா?

கூண்டோட தூக்கிடமாட்டே!." என்றவாறு தன் படுக்கையினை சரி செய்தவன்,"நல்ல வேளை நண்பா!.. சீக்கிரமே நான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.

இந்த காதல் கருமாந்திரம் வந்து எப்பிடி இருந்தவனை இந்த மாதிரி புலம்ப வைச்சிருக்கு பாரு!.

ஒரு சாதாரன காத்துக்கே வேர் வரை ஆட்டம் கண்டுடிச்சு போலயே!. பேசாமல் படுடா!..

காலையில என்ன கிறுக்குத் தனம்னாலும் பண்ணிக்கோ.

வேணும்னா நாளைக்கு பூராவும் இருந்து உன் உலறலை கேக்கிறேன். இப்போ நிம்மதியா தூங்கவிடுடா ராசா!." என்று அவன் தாடையை பிடித்து கெஞ்சிவிட்டு படுத்து கொள்ள.இதற்குமேல் ஏதாவது இவனிடம் கேட்டால் கழுத்தை நெரித்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என எண்ணியவாறு தன் படுக்கையில் விழுந்தவன் தூக்கத்தை பறித்திருந்தாள் அவன் கனவுகளுக்கு சொந்தக்காரியான ஜெசி.இரவு உணவினை முடித்து விட்டு விக்கிரமனும், தமிழரசனும் தம் பாடப்புத்கத்தில் மூழ்கியிருக்க,

ஹாலில் டீவியினை பார்த்தவாறு சாப்பிடுவதற்காக ஆப்பிள் நறுக்கி தட்டில் அழகுபடுத்திக் கொண்டிருந்த பூங்கோதையின் அருகில் இருந்து அன்றைய நாளின் செய்தித் தொகுப்பினை பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தார் தணிகாசலம்.தன் குட்டிகளை எந்த விலங்காவது வந்து தூக்கி சென்று விடுமோ என்ற பயத்தில் தூக்கத்தை தொலைத்து, அதற்கு காவல் காக்கும் பூனையினைப்போல,

வாசல் வரை செல்வதும், டீ.வி முன்னர் இருப்பதும், பின் வாசல் வரை செல்வதும் என்று,

ஏழு மணியளவில் பழக ஆரம்பித்த நடையினை இரவு ஒன்பது மணியாகியும் நிறுத்தாமல் ஒரு வித பதட்டத்தை சுமந்தவளாய், முகம் முழுவதும் துளிர்த்த வியர்வை துளியினை தன் புடவை தலைப்பால் துடைத்தவாறு மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்த அம்பாளம்மாவை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்த பூங்கோதை."எதுக்கத்தை இப்போ இந்த பதறு பதறுறீங்க?. வயசான நேரத்தில ஒரு இடத்திலேயே கொஞ்சம் அமைதியாத்தான் இருக்க பாருங்களேன். அப்புறம் நாங்க தான் ஹாஸ்பிடல் அது இதுன்னு இழுத்திட்டு திரியணும்." என்று வழமைபோல் அத்தை என்றும் பாராமல் எடுத்தெறிந்து பேசியவளை வெறுப்போடு பார்த்தவர்.அவள் அருகில் அமர்ந்திருந்த தன் மகனிடம்,

"ராசா என் பேத்திய இன்னும் காணல்லடா!. காலையில ஒன்பது மணிக்கு கிளம்பியவ இன்னும் வீடு வந்து சேரல.

நீயும் என்ன? ஏதுனு பாக்காமல் டீ.விக்கு முன்னாடி அக்கறையே இல்லாமல் இருக்கிறியே ராசா.

அவளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோனு பயமா இருக்குடா.

வாடா ஒரு எட்டு என்னனு போய் பாத்துட்டு வந்திடலாம்." என்க."ஆக..காகாஆ...ஆ.... அவ பெரிய மகாராணி.

அவளை தேட சீ.ஐ.டி படைய வேணா அனுப்புவோமா?.." என நக்கலாக கேட்டவள்.

"வீட்டில இருக்க முடியாமல் திமிரெடுத்துப்போய் ஊர் சுத்திட்டு திரியிறவளை நாம தேடி போகணுமோ?...

ஏன் போனவளுக்கு வரத்தெரியாதோ?

வேணும்னா ஒரு குதிரை ரதம் அனுப்புவோமா மகாராணி உல்லாசமா வரட்டும்." என்று எரிச்சலோடு கேட்டவள்,"என்னங்க உங்க அம்மாவுக்கு வேற வேலையே இல்ல.

நீங்க பேசாமல் இருங்க." என்றவள்,

பாவம் மனுஷன் பகல் பூராவும் அடியன் அடிச்சிட்டு வராரே,

இரவிலயாவது கொஞ்சம் ஓய்வா இருக்க விடுறீங்களா?. உங்க பேத்தி உங்களுக்கு வேணும்னா நீங்களே போய் தேடுங்க. என் புருஷனை அலைக்கழிக்காதிங்க." என்று முகம் சுழித்து பேசியவளை, அருவருப்பு பார்வை பார்த்தவர்,மகனை இது எல்லாம் அநியாயம்டா!. என்பது போல் பாவமாக பார்க்க."என்னங்க நீங்க அவங்க பேச்சை விட்டிட்டு இந்த ஆப்பிளை சாப்பிடுங்க." என்று தட்டை நீட்ட.

மனைவியின் சொல்லுக்கு எப்போதுமே கட்டுப்பட்டவரால் புதிதாக அதை மீற முடியாது.

ஆப்பிள் துண்டினை எடுத்து வாயில் திணித்தவர்.

"அம்மா அவ வந்திடுவாம்மா. அவ தொலைஞ்சு போக ஒன்னும் சின்னக் கொழந்தை கிடையாது." என்றவர் இன்னும் பேச்சுக்கொடுத்தால் மாமியார், மருமகள் சண்டை நிகழும் என்பதால் டீ.வியின் புறம் திரும்பிக்கொள்ள.அம்பாளம்மாவிற்கு வந்த கோபத்தில் மகனை ஓங்கி ஒரு அறை விட்டால் என்னவென்றிருந்த மனதினை அடக்கியவர்."ராசா இது என்னடா பேச்சு?. அவ தொலைஞ்சு போயிடமாட்டா; சின்ன பொண்ணுமில்லனு எனக்கும் தெரியும்.

ஆனா காலம் ரொம்பவே கெட்டுக்கிடக்குடா!. யாரு என்ன பண்ணுவாங்கனே இந்த காலத்தில கணிக்க முடியாதுடா!..

அவ உன்னோட பொண்ணுடா!.

நீயே இந்த மாதிரி அலட்சியம பதில் சொல்லலாமா?.

பாக்கப்போனா அவளுக்காக நான் துடிக்கிறதை காட்டிலும், நீ தான் அவளை காணல்லனு தவிச்சுப்போய் இருக்கணும்.

நீ என்னடானா ஒரு பொறுப்பே இல்லாமல் பதில் சொல்ற." என குறைபட."இங்க பாருங்க அத்தை!. சும்மா என் புருஷனையே குறை சொல்லாதிங்க.

உங்க பேத்திக்கு அறிவில்லையா என்ன?. காலம் கெட்டுப்போய் கிடக்குனு அவளுக்கும் தெரியும்ல்ல. அப்போ சீக்கிரம் வரவேண்டியது தானே!

அவ கொழுப்பெடுத்துப் போய் திரிவா

நாங்க அவளை காணல்லனனு சாமம் சாமமா அலையணுமோ." என்று மாமியாரை ஏச.அவளது பேச்சில் கடுப்பானவர்.

இவ கூட எல்லாம் மனுஷங்க பேசுவாங்களா? என நினைத்தவாறு,"அம்மா தாயே!.. நான் உன்கூட பேசலம்மா!. என் பையனோட தான் பேசுறேன். கொஞ்சம் என் பையனுக்கு அவன் கடமை என்னனு புரிய வைக்க விடுறியா?. உனக்கு புண்ணியமா போகும்." என ஒரு கும்பிடி போட்டவரை மீறி."பொறுங்க பொறுங்க. இப்போ என்ன சொன்னீங்க?.

கடமையா?. அத நாங்க சரியாத்தான் செய்யிறோம். அவளை படிக்க வைச்சு, மூணுவேளை சாப்பாடும் போட்டு நல்லபடியா வளத்திருக்கோம்ல்ல." என்று குறுக்க புகுந்தவளை."இது தான் உங்க கடமையா?." என சட்டென கேட்டவர்,

"அவளை கட்டி வைச்சு அனுப்பும் வரை அவளை பத்திரமா பாதுகாத்து, அவளோட கணவன் கையில எந்த வித சேதமும் இல்லாமல் பூப்போல ஒப்படைக்கணும். இது தான் கடமை.

ஆனா இங்க அந்த மாதிரியா நடக்குது?

ஏதோ பொதிமாடு கணக்காத்தானே அவளுக்கு சாப்பாடு போட்டு வளக்குறீங்க. கொஞ்சம் அவ சுமையை தாங்கல எண்டதும் பொதி மாட்டை விடமோசமா அவளை கொடுமை படுத்துறீங்க. இதில கடமையை பத்தி பெருமையான பேச்சு வேற." என பொங்கிய மாமியாரை."ஜாடை மாடையா யாரை சொல்லுறீங்கனு எனக்கு நல்லாவே புரியுது.. யாரை எங்க வைக்கணும்னு எனக்கு தெரியும்.

எனக்கு பாடம் எடுக்கிறதை விட்டிட்டு, உங்க பேத்திக்கு எப்பிடி நடந்துக்கணும்னு சொல்லிக்கொடுங்க.

ஏதோ நான் அவமேல அக்கறை இல்லாதது போல பேசுறீங்க.""காலையில எவ்வளவு சொன்னேன்.

இந்தமாதிரி ஊரூரா திரிஞ்சு ஆடாத, இந்த மாதிரி ஆடிட்டு திரிஞ்சா நம்ம குடும்பத்துக்குத்தான் கெட்ட பெயர் வரும், ஊருக்குள்ள உன் பொண்ணு ஊரூரா ஆடிட்டு திரியிறாளே, நீ பெத்த பொண்ணுனா இந்த மாதிரி ஊர் மேய விட்டிருப்பியானு என்னை பிடிச்சு கேட்கிறாங்க போகாதனு சொன்னேன்.

கேட்டாளா அந்த மகாராணி. பெரிய கின்னஸ் கோப்பையை வாங்க போறவ போலல்ல என்பேச்சை மதிக்காமல் போனா.""இப்போ அவளை காணல்லன்னதும் என்னை வந்து குத்தம் சொல்லுறீங்களா நீங்க?." என்று மாமியாரை கேட்டவள்."எல்லாம் இந்த சனியன் புடிச்சவளால வந்த வினை.

பிறந்த மறு வருஷம் அவ ஆத்தா உயிரை எடுத்தாள். இப்போ இந்த மூதேவியினால தினம் தினம் என்னோட உயிர் போகுது.

இன்னையோட சனியன் எங்கேயாச்சும் போய் ஒழிஞ்சுதுன்னாலும் சந்தோஷமா இருக்கும்" என திட்டிக்கொண்டிருந்த சமயம்,நேரம் கடந்ததனால் தன்னை எதிர்பார்த்து பாட்டி பயந்திருப்பார்களே! என அவசர அவசரமாக கேட்டிலிருந்து ஓடிவந்தவள் செருப்பின் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்த அவளின் அன்பான பாட்டியோ பேத்தியை கண்டதும்."வந்திட்டியா கண்ணு!..". என ஏக்கத்தோடு அழைத்தவாறு அவளிடம் ஓடியவர்,

அவள் தலையிலிருந்து உடல்வரை தன் கைகளால் தொட்டு, தொட்டு பார்த்தவாறு,

"உனக்கு எதுவுமில்லையேடா தங்கம்!.. எந்த பிரச்சினையும் இல்லாமல் தானேடா வந்தே?" என வினவ.தன்னை பாசத்தோடு தடவி பார்க்கும் பாட்டியையோ, அவர் கேள்விக்கோ ஜெசி பதில் கூறவில்லை.

அவள் கவனம் முழுவதும் தன் சித்தியிடமே இருந்தது.அவளுக்கு தான் நன்கு தெரியுமே தன்னுடைய சித்தியின் குணம் என்னவென்று.

தான் வரும் முன்னரே தன்னை காணாது பாட்டி பதறியதன் காரணமாக பெரிய போர் நடந்து முடிந்திருக்கும் என்று ஊகித்திருந்தாள்.அதனால் தான் பாட்டியின் அக்கறையினுடனான பேச்சினில் கவனத்தினை வைக்காமல்,

தன்னை கண்டதும் சித்தி என்ன வில்லங்கத்தை எடுக்கப்போகிறார்களோ என்று மிரச்சியோடு அவளை பார்த்திருந்தவள் நன்கு அறிவாள்.தான் தாமதமாக வந்ததற்காக இன்றைய நாள் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருக்க போகிறது என்பதை.இவளது பார்வை தன்னிடம் இருப்பதை கண்ட பூங்கோதை

அவளை பார்த்து முறைத்தவாறு."வாடியம்மா வா!..

உன்னாலத்தான் இங்க பெரிய போரே வெடிச்சிட்டிருக்கு.

உன்னை எத்தனை தடவை சொன்னேன்.

ஊர் மேஞ்ச வரைக்கும் போதும். வீட்டிலயே கிடனு. கேட்டியா நீ?..

பெரிசா ஜெயிச்சிட்டு வரேன்னு கொடுக்கை கட்டிட்டு போனியே எங்க உன்னோட அவார்ட்." என்றவாறு அவள் கைகளில் ஆராய்ந்தவள்.

விருது அவள் கையில் இல்லை என்றதும்."ஓ.... மகாராணி மண்ணைக் கவ்விட்டிங்களா?.." என்று இழக்காரமாக பேசியவள்,

அவள் அருகில் வந்து. அவளின் பின்புற தலை முடியினை கொத்தாகப்பிடித்து இழுத்து,

"யாரைடி ஏமாத்திற? உண்மையை சொல்லுடி!.

போட்டிக்கு போனியா? இல்லை எவன் கூடவாவது ஊர் மேஞ்சிட்டு வரியா?

போட்டிக்கு போனவனா எதுக்குடி இத்தனை மணிநேரமாச்சு?.. காலேஜ்லாம் நாலு மணியோடவே மூடிருப்பாங்களே!.

நீ எவன் கூடவோ ஊர் தானே மேஞ்சிட்டு வரே!.." என்று அவளுக்கு வலிக்கும் அளவிற்கு இழுத்தவாறு கேட்க.அவள் இழுவையில் ஜெசியின் கண்கள் கலங்காமலில்லை.

தன் சித்தியின் கைமேல் தன் கையை பதித்தவள். அவள் கையசைவுக்கு ஆடியவாறே,

"சித்தி விடுங்க சித்தி வலிக்குது." என்றவள்."உண்மையிலயும் நான் போட்டிக்குத்தான் சித்தி போயிட்டு வரேன்.

நாங்க சீக்கிரமாவே காலேஜ்ல இருந்து வெளிக்கிட்டோம் சித்தி.

வர்ற வழியில ஒரு விபத்து ஆச்சு. அதனால ரோட் கூட்டமாகி, ரொம்ப நேரத்துக்கப்புறம் தான் சித்தி நாங்க வந்த பஸ்ஸையே எடுக்க விட்டாங்க." என்க."ஓ... இவ்வளவு நேரம் பொய் சொன்ன, இப்போ மழுப்பவும் கத்துக்கிட்டியா?." என அவளை அசிங்கமாக கேட்டுக்கொண்டிருக்க.

தணிகாசலமோ "பூங்கோதை!" என்று பெரிதாக அழைத்து டீ. வியை பார்க்குமாறு சைகை செய்ய.

அவரது சைகையில் பூங்கோதையும் டீ.வியை பார்க்கும் போது,

ஜெசி கூறியது உண்மை என்பது போல் நியூஸ் ஓடிக்கொண்டிருக்க.ஷெசி மேல் தவறில்லை என்பதும், அவளது நடத்தைகளில் தவறு இருக்காது என்பதும் அறிந்து அவள் மேல் பழி போடுவதற்காக பொய்யாக ஒரு காரணத்தை கூறி அவளை தண்டித்தால் இந்த டீ.வியும் அவளுக்கு சாதகமா நடந்துக்குது. என்ற சினத்தோடு அவள் தலையிலிருந்து கையை அவளை தள்ளிவிட்டவாறு எடுத்தவள்,கோபம் குறையாமலே,

"சரி போட்டிக்கு போய் ஜெயிப்பேன். கோப்பை வாங்குவேன்னு சொன்னில்ல. எங்க அந்த கோப்பை அதை காமி." என்க.ஜெசி முழிப்பதை பார்த்தவள். இப்போ மாட்டிக்கிட்டியா? என்பது போல் மனதுக்குள் சந்தோஷபட்ட பூங்கோதை."என்ன மகாராணி முழிக்கிற?

போட்டியில தோத்துப்போய் அவார்ட் உங்க கைக்கு கிடைக்கலையா என்ன?." என்றவள்.

"அட நான் ஒருத்தி இதை மறந்திட்டு பேசுறேன்.

போட்டியில கலந்துக்கிட்டாத்தானே அவார்ட தருவாங்க.

நீ தான் கலந்துக்காமல் ஊர் மேஞ்சிட்டு வரியே!" என்றவர்"சொல்லுடி எவன் கூட ஊர் மேஞ்ச?" என்று மறுபடியும் தொடங்கியவளுடன் போராட முடியாது.

அப்படி போராடினாளும் அதற்கும் பொய்யான காரணம் கண்டுபிடித்து தண்டிக்கத்தான் போகிறாள் தன் சித்தி. என அறிந்தவள், பதில் கூறாமல் தலை கவிழ்ந்து நிற்க."என்ன பூங்கோதை தேவையில்லாமல் பேசி என் பேத்தி மேல பழியை தூக்கி போடுற? அவ கோப்பையை வாங்காமல் வந்தாள்னா அவ யார் கூடவோ மேஞ்சிட்டு வரானு அர்த்தமா?. அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீ வாயில வரத பேசாத." என பாட்டி பரிந்து பேசி வர."வந்திட்டீங்களா?. எல்லமே நீங்க குடுக்கிற இடம்தான்.

எனக்கு நல்லாத்தெரியும். இவ போட்டியில கலந்துக்கவே இ்ல்லை.

இத்தனை மாதமா எத்தனை காலேஜுக்கு போட்டிக்குனு போய் முதலிடத்தில நின்னவங்க. இன்னைக்கு எப்பிடி கோப்பையை வாங்காமல் தோத்துப்போயிருக்க முடியும்?," என லாஜிக் பேசியவள்."அப்பிடினா இவ நம்மளை ஏமாத்துறனு தானே அர்த்தம்.

இவளுக்கு ரோட்ல விபத்து என்கிற விஷயம் யாரோ சொல்லியிருக்கணும்.

அதை வைச்சு இவளாவே கதை திரிச்சு நம்மள நல்லா ஏமாத்திற.

நிச்சயமா நான் சொல்லுவேன் இவ எவன் கூடுவோ ஊர் உலாத்திட்டு தான் வராள்னு." என கூற.ஆத்திரமடைந்த அம்பாளம்மா.

"பூங்கோதை!"... என்றவாறு அவளை உறுக்கியழைத்தவள் கோபமாக எதுவோ கூற வாயெடுக்க.அவர் கையினை இறுக பற்றிய ஜெசி. வேண்டாம் என்பதாய் தலையசைத்து விட்டு மீண்டும் அமைதியாகி தலை குனிந்து கொண்டாள்.இதன் பிறகு நடக்கும் விபரீதம் என்னவென்று ஜெசியும் அறிவாள், அவள் பாட்டியும் அறிவார்.

அப்படி எதுவும் நடக்க கூடாதெனில் தாம் அமைதியாகி விடுவது தான் சிறந்தது என கருதி இருவரும் அமைதிகாத்தனர்.

இது தினமும் நடை பெறுவதால் ஜெசி இதை தான் பல ஆண்டுகளாக கடைப்பிடிப்பாள்.ஆம் திரும்ப திரும்ப பேசுவதால் சண்டை தான் அதிகமாகுமே தவிர ஓயாது. இதை பலமுறை தன் அனுபவத்தினால் தெரிந்து கொண்டவள்,

முடிந்தவரை சித்தியின் பேச்சுக்களை தலைகுனிந்து ஏற்றுக்கொள்வாள்.

பூங்கோதையும் தன்னால் ஆனவரை ஏசிவிட்டு, முடியாத கட்டத்தில் தானாகவே எல்லாவற்றையும் நிறுத்தி சென்று விடுவாள்.

பூங்கோதை வாயில் வந்த வசைமொழிகள் எல்லாம் கொட்டி ஜெசியை ஏசியவள்.

தன் பேச்சுக்களுக்கு அவளிடமிருந்து எந்த வித உணர்வும் இல்லை என்றதும்,

வழமையாக விலகிச்செல்பவளால் இன்று அப்படி போகமுடியாமல்,மௌனமாக நிற்பவள் மேல் ஆத்திரம் தான் அதிகரித்தது."என்னடி நான் பாட்டுக்கு கத்திட்டிருக்கேன். நீ பேசாமல் நின்னின்னா என்ன அர்த்தம்?.. நான் என்ன பைத்தியாமா?" என்றவாறு அவளை நெருங்கியவள்.அவள் நீளமாக பின்னலிட்ட கூந்தலை இறுகப்பற்றி.

"நீ ரொம்ப அழகா இருக்கிறதனால தானேடி உன் பின்னாடி பசங்கல்லாம் அலையிறாங்க." என்றவாறு பற்றியிருந்த கூந்தலை ஆப்பிள் வெட்டிய கத்தியினால் கற கறவென கோழியின் கழுத்தை அரிவது போலா வேகமாக அரிய,

ஜெசி அதை தடுக்கும் போது அவள் உள்ளங்கையும் சேர்ந்தே கத்தியின் கூரிய பகுதியில் பட்டு கிழித்துவிட,"அம்மா....." என்றவாறு கையை இழுத்தவளை கூட பெரிது படுத்தாமல் அவள் முடியினை அருத்துது முடிந்ததுமே அவளை விடுவித்தவள்,

தன் கையிலிருந்த அவளது நீள கூந்தலை தூக்கி ஹாலின் நடுவில் எறிந்து,"இதுக்கப்புறம் எவன் உன் பின்னாடி வரான்னு பாக்கிறேன்." என்றவாறு தன் அறைக்குள் நுழைய.

தணிகாசலமும் எதுவுமே பேசாது மனைவியின் பின்னாடியே சென்றார்.பாட்டியோ ஜெசியை நெருங்கிய பூங்கோதை என்ன செய்யப்போகிறாள் என்பதை அனுமானிக்க முடியாமல் நின்றவர்,

அவள் கூந்தலை வெட்டுவதை கண்டு அதிர்ச்சியாகி அதை தடுக்க வருவதற்குள் இத்தனையும் நடந்து விட,பூங்கோதை போனதும் தன் வெட்டுண்ட கையினால் வழிந்த ரத்தத்தையும் பொருட்படுத்தாது. நடந்த சம்பவத்தில் பயந்தவள், பாட்டியை கட்டிக்கொண்டு அழுதவளை தேற்ற அவருக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.

ஜெசிக்கு தன் முடியில் எத்தனை கவனம் என்பதை கூட இருந்து கவனிப்பவரால் அவளுக்கு ஆறுதலே கூற முடியவில்லை..

முடிவில்லா தொடரில் விடியலை தேடும் விட்டில் பூச்சி - 5
 
பாகம்-5

தனது வசந்த மாளிகையில் காதல் வசப்பட்ட நிலவனின் கண்களில் காதல் ரசம் சொட்டசொட்டஉறக்கம் பிடிப்படாமல் தவித்துக்கொண்டு இருக்க..நம்ம ஜெசியோ சித்தி கிட்ட மாட்டிக்கிட்டு பாடதப்பாடு பட்டு.. காதுகளால் கேட்க முடியாத வசைச் சொல்லும் கேட்பதோடு மட்டுமன்றி .."" பெண் என்றாலே கூந்தலை பற்றி வர்ணிக்காத கவிதை தான் உண்டோ அல்லது கவிஞர் தான் உண்டோ"" அப்பேர் பட்ட கூந்தலை தன்னுடைய சித்தியின் கையால் அறுத்து எறிந்து போய் விட்டதை எண்ணியவளின் கண்களில் கண்ணீர் மல்க நரக இரவினை உறக்கம் இன்றி கடக்க முயன்றாள்...

ஜெசிக்கு அறுப்பட்ட தன் கை வலி கூட நினைவுக்கு வரவில்லை.. ஆனால் அறு பட்ட தன்னுடைய கூந்தலை எடுத்து கையில் வைத்த படி தேம்பி தேம்பி அழுதவளை கட்டியணைத்து பாட்டியும் கூட சேர்ந்து அழுதாள்..அழுது அழுது சோர்ந்து போன ஜெசிக்கு குடிக்க தண்ணீர் தந்த பாட்டிமா.. குடிமா குடிமானு ஜெசியே கெஞ்சி குடிக்க வைத்த பிறகு..ஜெசியை தன் தோளில் சாய்த்தபடி .. தன் அறைக்கு அழைத்துச் சென்றார் பாட்டி..ஜெசியை நாற்காலியில் உக்கார வைத்து.. அவளை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு அன்பாக முதுகை வருடிய பாட்டி.. மெல்ல தன் பேத்தியின் கை பற்றினார்..தன் பேத்தியின் நிலையை எண்ணி கண்களில் இருந்து வந்த கண்ணீரை பேத்தி அறியாபடி முந்தானையால் துடைத்து கொண்டபடியே..பேத்தியின் வெட்டுண்ட கையில் பசுமஞ்சளை தேங்காய் எண்ணெயில் குழப்பி கையில் போட்டு விட்டார்.ஜெசியின் அழுகை முடிந்தாலும் விசும்பல் நின்றப்பாடு இல்ல..இந்த கொடுமை எல்லாம் இந்த வயசான காலத்தில் என்னை பாக்க வச்சுட்டு நீ கண்ண மூடிட்டியே என் மகாலட்சுமி.. என்று இறந்துபோன மருமகளை நினைத்து புலம்பிக்கொண்டே மூக்கை ஊறிஞ்சி போட்டார் பாட்டிமா..அம்மா என் ராசாத்தி.. உன்னை போட்டு அந்த பாவி சிறுக்கி இந்த பாடுப்படுத்துறாளே!.. இதை எல்லாம் மேலிருந்து சாமியா உங்க அம்மா பாத்துக்கிட்டு தான் இருப்பா?? அவளிடம் வேண்டிக்கமா.. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அவ உனக்காக ஒரு ராஜகுமாரனை குதிரையில் அனுப்பி உன்ன தூக்கிக்கிட்டு போவ செய்வா.. என்றபடியே,

ஜெசியை தன் மடியில் சாய்த்து தலையை கோதி விட்டு கொண்டே தன் முந்தானையால் ஜெசியின் கடைக்கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்த படி .. தட்டிக்கொடுத்த படியே பாட்டிமா உறங்கி போனார்..ஆனால் ஜெசியை உறங்க விடாமல் தன்வலியும்.. மன கவலையும்.. போட்டு வதைக்க..

தன்னிலையை எண்ணி பார்த்தவளுக்கு அழுகை தான் பீறிட்டு வந்தது.. தன்னை சமாதானம் படுத்த தனக்காக தன் கூட சேர்ந்து பாடுபடும் தனது பாட்டிமாவை நினைக்கும் போது மனசு இன்னும் வலிக்க செய்தது..தன்னை தூங்க வைக்க செய்த முயற்சியில் உறங்கி போன பாட்டியை மெல்ல நகர்த்தி தலையணையில் படுக்க வைத்து விட்டு எழுந்து சென்றவள்..கண்ணாடியின் முன் அமர்ந்தவள், வெட்டுண்டது போக, மீதமுள்ள முடியினை வருடி அழும்போது தான் கவணித்தாள். தன் காதில் இருந்த ஒற்றை சிமிக்கியை..பதற்றத்துடன் தான் போட்டு இருந்த உடுப்பை உதறி பார்த்தவள்.. தன்னையும் ஒரு தடவு தடவி பார்த்தாள்.. அந்த ஒற்றை சிமிக்கி காணவில்லை. "அச்சோ எங்கே தொலைத்தேன்?....""எங்க விழுந்து இருக்கும்?..

சித்தி அடிச்ச போது தவறி இருக்குமோ!.. எங்க தவற விட்டேன்னே தெரியலையே!" என அழுதபடி வீட்டின் மூலைமுடுக்கு விடாமல் சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து பார்த்தாள் ஊகூம்... எங்கே தேடியும் காணவில்லை.."அம்மா ப்பிளீஸ்மா எப்பிடியாவது கண்டு பிடிச்சு தந்துடும்மா!. இது சாதாரண ஜமிக்கியில்லம்மா.

இது உன்னோடது எங்கிறதனால அதை நீயாவே பாக்கிறேன்.

இது என்கூட இருக்கும் போது நீ என்கூடவே இருக்கிறதா உணருவேனேம்மா.

இப்போ அதையே என்னோட கவனக்குறைவினால தொலைச்சிட்டேனேம்மா.

நான் ஜமிக்கிய தொலைக்கலம்மா உன்னையே தொலைச்சிட்டேனேம்மா." இப்போ என்னம்மா செய்ய போறேன்"
அம்மா.. அம்மா.." என்று முன்நூறு முறை தன் தாயை அழைத்தவாறு தேடியவள் மறுபடியும் அழ செய்தாள்.."அம்மா!! இது நீம்மா.. எப்படி மா தொலைத்தேன்?. எனது வெற்றி,, தோல்வி,, எனது இன்பம்,, துன்பம்,, எல்லா நேரத்திலும் என் கூட நீ இருக்கிற என்கிற நம்பிக்கைல வாழ்ந்தேனேமா. ஆனா இப்போ?.. எப்படி தொலைத்தேன்."""உன்னோட அடையாளமாக உன் சிமிக்கியை தவிர என்கிட்ட வேறு ஒன்னுமே இல்லையே மா"" இப்ப எனது அலட்சியத்தால் உனது நினைவாக இருந்ததையும் தொலைச்சிடேனே மா இந்த பாவி!..எனக்கு மன்னிப்பே கிடையாது.." என்று தனது தலையில் அடித்துக்கொண்டு கண்ணீரே வற்றும் அளவிற்கு அழுதவள் அப்படியே பாட்டியின் கால் மாட்டில் தலை வைத்து உறங்கி போனாள்..மறுநாள்;

காலை ஜெசியால் சீக்கிரமாக எழும்ப முடியவில்லை.. உடம்பை விட்டு உயிர் போனதை போன்ற உணர்வு மனவலி.. உடல்வலி எல்லாம் ஒன்று சேர்ந்து அடித்து போட்டதை போல கொஞ்சம் உறங்கி விட்டாள்..குழந்தை போல் தூங்கும் ஜெசியின் முகத்தில் செம்பில் மோந்து வந்த நீரினால் பொலிச்சென அவள் முகத்தில் ஒரே அடி அடித்தாள் சிறிதும் இரக்கமே இல்லாமல் அவள் சித்தி பூங்கோதை.

தூக்கிவாரி போட்டு சுருட்டி பிடித்து எழுந்து நின்ற ஜெசிக்கு எதிரில் காட்டேரி மாதிரி சித்தி நிற்பதை கண்டதும் வயிற்றில் ஒரு கலக்கல் கலக்கி ஒரு புரட்டு.. புரட்டியது..சுப்ரபாதம் கேட்டு விழிக்கும் மக்கள் மத்தியில் நம்ம ஜெசிக்கோ தினமும்..

காலையிலேயே பூங்கோதை வாயிலாக வசை பாட்டு கேட்டபடி விழிப்பதே சுப்ரபாதமாகிப் போனது..

உடலில் நடுக்கத்துடன் தான் பாட்டி ரூம்பில் இருக்கிறோம் என்பதை மறந்து நின்றவளின் முன் ..கையில் கட்டை விளக்குமாத்துடன் நின்ற பூங்கோதை.. "ஏன்?? மகாராணி அம்மாவிற்கு எழும்ப முடியலேயோ?.. நான் வேணும் என்றால் மகாராணிக்கு பஞ்சாமிர்தம் வீசவா ராணியம்மா?.. என்றவளின் முகத்தை ஏற்றெடுத்து பார்க்க முடியமல முகத்தில் இருந்து கடுகு வெடித்தது..சித்தியை இப்படி பார்க்கையில வார்த்தை வெளி வர பலனின்றி காற்று மட்டுமே வந்தது ஜெசி வாயிலாக..

" இல்ல சித்தி கை,, கால் வலி அதான்.... கொஞ்சம் தூங்கிடேன்." என்றபடி சித்தியை ஏறெடுத்து கூட பார்க்க பயந்து நின்றாள் ஜெசி..அப்படி ஒரு கள்ள சிரிப்பு ஒன்று சிரித்த பூங்கோதை..

தன் கைகளை கட்டிக்கொண்டு தலையை கீழே குனிந்த படி "நான் வேணும் என்றால் உங்களுக்கு கால் பிடித்து விடுவா?.." என்றவாறே "டான்டா" என்ற ரஜினிக்கு வரும் மியூசிக் போல ஸ்டைல் உடன் நிமிர்ந்தவள் ..

"அடச்சீ நாயே .. கட்டை விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கேட்குதோ?.. பேனு, மெத்தை எல்லாம் இருக்கவும் எழும்ப மனசு வரலயோ?.. நீ எப்படி டி இந்த ரூம்ல படுத்த? உனக்கு எவ்வளவு நெஞ்ச அழுத்தம் இருந்தால் இப்படி செய்யவ?.. எவன் குடுத்த தைரியத்துல இப்படி எல்லாம் செய்ய துணிகிற யார் டி நாயே அவன்?.

நான் இவ்வளவு செய்தும் உன் கொட்டம் அடங்க மாட்டேங்கிறதே கழுத.

உன்ன என்ன செய்கிறேன் பார்!.." என ஆவேசமாக கிளம்பியவளை வாசலில் இருந்து பக்கத்து வீட்டு பங்குஜம் அவசரமான குரலில் அழைத்தாள் .."பூங்கோதை அக்கோ.. கொஞ்சம் சீக்கிரமாக வாயேன்." என்ற அவளின் குரலில் ஒரு விதமான பதற்றம் தெரியவே.. "இதோ வரேன் பங்குஜம்." என்றபடி ஜெசியை பார்த்து.."இரு டி இப்ப உனக்கு நேரம் நன்றாக இருக்கு.. போய்ட்டு வந்து வச்சிக்கிறேன் கச்சேரியை." என்றபடி வெளியே நடையை கட்டினாள் பூங்கோதை..இப்படி சில சமயம் சித்தி இடமிருந்து தன்னை யாராவது காப்பாற்றி விடுவது உண்டு.

இதற்கு எல்லாம் காரணம் தன் அம்மாவின் ஆன்மா என்பதை முழுமையாக நம்புபவள் தான் ஜெசி..வீட்டு வேலைகளை முடித்து, சாப்பாடு செய்து தனக்கும் சாப்பாடு கட்டிக்கொண்டு கிளம்ப நேரமாகி போனது..அதே அவசர ஓட்டமும் நடையுமாக கல்லூரி சென்று அடைந்தவள்,இன்றும் வழக்கம் போல் முன் கேட் சாத்தி இருக்க..பின் கேட்டின் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்றவளை வகுப்பினர் அனைவருமே புதுமையாக பார்க்க..அனுபாமா ஜெசி கை பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தியவள், "என்னடி ஆளே பயங்கர சேஞ்ச்ல வந்து இருக்க?. கலக்குற போ!.. என்றவளை நிமிர்ந்தே பார்க்காமல் பார்வையை கீழ தாழ்த்தியபடியே அமர்ந்து இருந்தவளின் தாவக்கட்டையே மேலே தூக்கிய அனுபாமா அதிர்வுற்றாள்.." ஜெசி என்னபா கண் எல்லாம் சிவந்து போய் இருக்கு.. கன்னத்தில் எல்லாம் கை பதிந்து இருக்கு.. உங்க சித்தியின் வேலையா இது எல்லாம்?" என கேட்ட பொழுது அவள் தோளில் தன் முகத்தினை புதைத்து அழ தொடங்கினாள் ஜெசி..ஜெசியை சுற்றி கொண்டனர் மற்றவர்களும்.. நிர்மலா ஜெசியின் கூந்தலை தொட்டு விட்டு,

"இவ சித்தி மட்டும் எனக்கு சித்தியாக வந்து இருக்கனும்.. அவ கையை உடைத்து அடுப்புக்கு விறகாகி இருப்பேன்.. ஏன்பா!! நீ எவ்வளவு போல்டானா ஆளு. நீ போய் இப்படி இருக்க.. உன் கோபம்.. தாபம்.. எல்லாம் வெளியில் தானா.. "வெளியில புலி.. வீட்டில எலியா? அவ்வளவு தானா உன்னோட வீரம். . எங்களுக்கு தான் வீர வசனம் எல்லாம் அது உனக்கு இல்லையா??" என்றவளை நிமிர்ந்து பார்த்தாள் ஜெசி.."நிர்மலா உன் வீட்டில் யார் யாரு எல்லாம் இருக்கிறாங்க சொல்லேன்?.."" என்ன ஜெசி நான் என்ன பேசிட்டிருக்கேன் நீ பைத்தயம் புடிச்சவ போல சம்மந்தமே இல்லாமல் கேட்கிற.""காரணத்தோட தான் கேட்கிறேன் சொல்லுபா." என்றாள் ஒரே பிடியாக ஜெசி.."எங்க வீட்டில் அப்பாச்சி.. தாத்தா.. அப்பா.. அம்மா.. நான் எனது இரண்டு தங்கை கடைசியாக தம்பி.. ஏன் ஜெசி இப்போ இது?..""சொல்லுறேன் நிர்மல். அப்புறம் இவர்களை தவிர உனக்கான உறவினர் என்று சொல்ல இருப்பவர்களையும் சொல்லுபா." என்ற ஜெசியை புரியாமல் பார்த்த நிர்மலாவை பார்த்த ஜெசி "சொல்லுபா" என்றாள் மீண்டும்.." இவளுக்கு என்னாச்சி? என்று மனதிற்குள் நினைத்தபடியே கூறினாள் நிர்மலா.."எங்க அம்மாச்சி.. தாத்தா.. மாமாக்கள்.. அத்தைகள்.. சித்தி.. பெரியம்மா.. இப்படி நிறைய சொந்தக்காரர்கள் இருக்காங்க ஜெசி அதை எல்லாம் தெரிந்து நீ என்ன செய்ய போற?" என்க."இப்ப உன் கேள்விக்கான பதிலை சொல்லுறேன் கேட்டுக்கோ நிர்மலா." என்றவள்,

"உனக்காக உன்னை சுற்றி இத்தனை உறவுகள் இருக்காங்க..

உனக்கு ஒன்னு என்றால்?? ஓடி வர இத்தனை பந்தங்கள் இருக்கு.. ஆனால் எனக்கு அப்படி இல்ல..

எனக்காக என்னை சுற்றி என்னை பற்றி கவலைப்பட எனக்கு என்று யாரும் இல்ல.. என்னை அடித்து வீட்டை விட்டு விரட்டினாள் கூட கேட்க ஒரு நாதி கிடையாது.. இதில் நான் செய்த பாக்கியம் எனக்காக என் மீதும் அன்பு காட்ட என் கூட சேர்ந்து அழ எனக்காக உள்ள ஒரே ஜீவன் என் பாட்டிமா மட்டும் தான்..

நான் கொஞ்சம் என் சித்தி இடம் வீராப்பு காட்டினாள் அதில் அதிகமாக பாதிக்கப்படுவது என் பாட்டிமாவாக தான் இருக்கும்.

இந்த வயசான காலத்தில் அவங்களுக்காகவும் எனது குடும்ப ஒற்றுமைக்காகவும் தான் அமைதியாக போகிறேன் நிர்மலா.

அதுவுமில்லாமல் குடும்பத்துக்கிட்ட தோத்துப்போகும் போது மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிக்கவும் முடியும். சந்தோஷமும் நிலைச்சிருக்கும். நீ சொல்லுறது போல நான் என் சித்திக்கு பயப்படுறேன் தான் நிம்மி. ஆனா கோழை கிடையாது. கோளைதனம் வேற, சகிப்புத்தன்மை வேற அதை புரிஞ்சுக்கோ.

இப்போ என் சித்திக்கு நான் அடங்கி போறேன்னா அது என்னை சுத்தி இருக்கிறவங்க என்னால கஷ்டப்படக்கூடாது என்கிறத்துக்காகவே தவிர, அது என்னோட இயலாமை கிடையாது.

நாளைக்கு என்னோட பேச்சினால என்னை வெளிய போனு அனுப்பிச்சிட்டாங்கனா, பாட்டியும் என்கூட வந்து கஷ்டப்படுவாங்க.

இந்த வயசில திக்கு திசை தெரியாமல் எனக்காக துடிக்கிற ஜீவனை நான் கஷ்டபடுத்தனுமா சொல்லு?" என்கஜெசியை ஆர தழுவிக்கொண்டு நிர்மலா "சாரிடி உன் நிலமை தெரியாமல் நான் தான் தப்பா பேசிட்டேன். உனக்காக பாட்டி மாத்திரமில்லபா இனி நாங்களும் இருக்கோம்பா." என அவளுடன் சேர்ந்து கண் கலங்கினார்கள்.அடுத்த வகுப்பிற்காக தொடக்க பெல் அடிக்கவும்.. வகுப்பிற்குள் பியூன் பாய் வரவும் சரியாக இருந்தது..

கையில் கொண்டு வந்த அழைப்பு நோட் யார் என்ற ஆவலுடன் அனைவரும் பார்க்க.. "ஜஸ்வந்தினி உங்களை பிரின்ஸ்ஷிப்பால் அறைக்கு வர சொல்லி இருக்காங்க அதற்கான பேப்பர் தான் இது. கொஞ்சம் இதுல உங்க சைனை போடுங்க" என அவளிடம் நோட்டை காட்டி கையெழுத்து வாங்கி கொண்டு வெளியேறினார் பியூன் பாய்..ஜெசிக்கு பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது..

"ஏய்!! என்னபா என்னை மட்டும் வர சொல்லி இருக்காரு.. வசமா மாட்டிக்கிட்டேனா?. ஒரே பயமா இருக்குபா. என் கூட நீங்க யாராவது வாங்கலேன்." என்று கெஞ்சினாள்.. கடைசி பெஞ்சில் இருந்து மறைந்தபடி பேசியது யார் என்று தெரியவில்லை.."இம் இதை இப்ப யோசிக்க கூடாது வாயை வைத்துக்கொண்டு போன இடத்தில் சும்மா இருந்து இருக்கனும்.. பேசினது நீ வாங்கி கட்ட எல்லாருமா??" என்ற போது தான் புரிந்தது..நாம் செய்த தவறுக்காக ஏன் எல்லாரையும் கஷ்டம் படுத்தனும்..

வீட்டில் பார்த்த பேயை தாண்டியா இங்கு பார்த்து விட போகுகிறோம்.. எல்லாம் நன்மைக்கே என்று மனதிற்குள் நினைத்தபடியே விறு விறு.. என வகுப்பில் இருந்து வெளியேறினாள் ஜெசி..பிரின்ஸ்ஷிப்பால் அறையை நெருங்க நெருங்க.. ஜெசிக்கு இதயம் துள்ளி கீழே குதித்து விடுவதை போல " லப்டப்.. லப்டப்.. " என வேகமாக துடிக்க தொடங்கியது..மனதிற்குள் வந்து வந்து போகும் விடையறியா ஆயிரம் கேள்விக்கு இதோ பிரின்ஸ்ஷிப்பால் பதிலை காட்டு காட்டுனு காட்டுவார் என்ற பதற்றத்துடன் அவர் அறையின் வெளியே நின்றபடி ஜெசி.." எஸ் கியூஸ் மீ சார்....." என குரலை உள்ளே அனுப்பியவள்..உள்ளே வர அவர் அனுமதி அளித்ததும் .."குட் மார்னிங் சார்." என்றவளுக்கு.."குட் மார்னிங் ஜஸ்வந்தினி." என்றார் சிரித்தபடி பிரின்ஸ்ஷிப்பால்..அந்த சிரிப்பிற்கான அர்த்தம் என்னவாக இருக்கும்???

விடியலை தேடி -6
 
பாகம் -6

அதிகாலையோடே எழுந்து தன் காலை கடன்களை முடித்த நிலவன்,

இன்று எந்த உடையை அணிவதென்ற குழப்பத்தில்

தன் பீரோவில் இருந்த அத்தனை உடைகளையும் கண்ணாடி முன் நின்று தன் உடலோடு பிடித்துப்பிடித்து பார்த்தவனுக்கு இன்று ஏனோ எந்த உடையுமே தன்னை அழகாக காட்டுவது போல் இல்லை என்றதும்,"ச்சே..... எத்தனை சர்ட் இருந்தும் என்ன பிரியோசனம்?. எனக்கு எதுவுமே ஷூட் ஆகல்ல." என சினந்தவாறு தன் கட்டிலில் தூக்கி வீசி அலங்கார கட்டிலையே அலங்கோல கட்டிலாக மாற்றினான்.

இத்தனைக்கும் அனைத்து உடையுமே அவன் ஆசைப்பட்ட டிசைன்களில் பார்த்துப் பார்த்து வாங்கிக் குவித்த உடை என்பதை பாவம் இன்று ஏனோ மறந்து விட்டான்."இப்போ என்ன செய்றது?. இப்போ எந்த ட்ரெஸ்ஸ போட்டிட்டு போறது." என பரப்பியிருந்த உடைகளை ஓரமாக தள்ளிவிட்டு,

குளித்து வந்து உடை கூட மாற்றாமல் டவலுடனே கட்டில் மேல் அமர்ந்து சிந்தித்தவன்,

எதுவோ அவன் மூளைக்குள் மணியடிக்க,

தன் மொபைலை தேடி எடுத்து புது மாடல் சர்ட்டை சர்ச் செய்து அதில் தனக்கு பிடித்ததை தெரிவு செய்தவன், யாருக்கோ அனுப்பி விட்டு.

ஃபோன் எண்ணிற்கு அழைப்பு தொடுத்தவன்," இப்போ ஆள் அனுப்புறேன் கொடுத்து விடும்படி கூற, மறு புறம் ஏதோ கூறப்பட்டது போல.

அது எனக்கு தெரியாது. என்ன செய்வீங்களோ ஐந்தே நிமிடத்தில் நான் அனுப்புபவர் வந்து விடுவார் எவ்விதமோ கொடுத்தனுப்புங்கள். என கறாராக கூறி அழைப்பை ஆப் செய்தவன்,

இன்னொரு நம்பருக்கு அழைப்பை தொடுத்து, குறிப்பிட்ட இடத்தை கூறி அங்கு செல்லுமாறு அனுப்பி வைத்தான்.சரியாக இருபது நிமிடங்களில் அவன் அனுப்பிய நாற்பது வயது மதிக்கத்தக்கவரும் வந்து அவன் அறை கதவினை தட்ட,

அது யாரென உணர்ந்தவனாய் கதவினை திறந்தவன், அவர் கையிலிருந்த பொதிப் பையினை பெற்றுக்கொண்டு,

"எதுக்கு இவ்வளவு நேரம்?." என்க."இத்தனை காலையில கடை ஓபன் பண்ணல தம்பி.

நீங்க ஃபோன் பண்ணி சொன்னதனால, உங்க பேச்சை மறுக்க முடியாமல் எழுந்த கையோடு முகம் கூட அலசாமல் அந்த தம்பி வந்து கடை திறந்தாரு.

நீங்க கேட்ட சட்டை வேற ஆடர் நேத்துத்தான் வந்திச்சு போல.

பார்சல் கூட இப்போ தான் அவசர அவசரமா பிரிச்சு எடுத்து தந்தாரு தம்பி. அதனால தான் லேட்." என்க."ஓ..." என்றவன், "சரி நீங்க போய் உங்க வேலையை பாருங்க." என்று அனுப்பிவிட்டு தயாராகியவன் அறையினை தள்ளிக்கொண்டு வந்தான் கோபி."என்ன நண்பா இத்தனை காலையில எங்க கிளம்பிட்ட?" என்றவனும் தயாராகி நிற்பதை கண்ட நிலவன்.

"என்ன கேட்கிறது இருக்கட்டும், சார் எங்கே கிளம்பிட்டிங்க?." என புருவம் சுருங்க கேட்டான் அவன் நண்பன் நிலவன்."சாரிடா நண்பா!. எப்பிடி இதை மறந்தேன்னு தெரியல்லடா!.

நாளைக்கு முக்கியமான ஒரு மீட்டிங்க்கை நானே அரேஞ் பண்ணிட்டு,

நீ கூப்பிட்ட என்றதும், இதை பத்தி எந்தவித யோசனையும் இல்லாமல் உன் பின்னாடியே வந்திட்டேன்.

நைட் என் பீ.ஏ கால் பண்ணி சொன்னதும் தான் அந்த நினைவே வந்திச்சு.

அதனால காலையில எந்த பிளைட் போகுதோ அந்த பிளைட்டுக்கு டிக்கட் ஆன்லைன்ல புக் பண்ணிட்டேன்டா!. இப்போ கிளம்பினால் தான் நம்ம நாட்டுக்கு போய் கொஞ்சம் ஆரஅமர இருந்து மீட்டிங்க்கை டென்ஷன் இல்லாமல் அட்டன் பண்ண முடியும்." என்க."என்னடா நீ!... உன்னை நம்பி அழைச்சிட்டு வந்தா. பாதியில விட்டிட்டு போற?

நாளைக்கு தானே ரிட்டன் டிக்கட் போட்டிருக்கோம்.

நாளைக்கே சேர்ந்து போய்க்கலாம் பேசாமல் மீட்டிங்க்க ரண்டு நாள் தள்ளி வைக்கச் சொல்லி உன் பீ.ஏக்கு போன் போட்டு சொல்லிடு" என்க."சாரிடா நண்பா! ஏற்கனவே ரண்டு தடவை இதே மீட்டிங்க்கை பிற்போட்டாச்சுடா!. அப்புறம் என் கம்பனியில நம்பிக்கையில்ல பிரேரணை அமல் படுத்தினாலும் ஆச்சரிய படுறதுக்கில்லடா!" என்க."என்னடா அரசியல் போல நம்பிக்கையில்ல பிரேரணை எண்டு எல்லாம் பேசுற?" என்ற நிலவனிடம்,

"பிஸினஸ்சும் அரசியல் போல தானேடா! நான் இல்லனா இன்னொரு கம்பனினு போட்டிக்கு ஆயிரம் கம்பனிங்க இருக்குதே. எல்லாமே ஒரு வித சதியோட தானேடா இயங்குது, எப்படா கேப் கிடைக்கும் உள்ள புகுந்திடலாம்னு நினைப்பாங்க." என்ற நீண்ட விளக்கம் அளித்தவனை முறைத்தவன்."எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ இப்போ என்கூட முக்கியமான ஒரு இடத்துக்கு வந்தே ஆகணும்." என அடம்பிடித்தவனை,

என்ன கூறி சமாதானம் செய்வதென தெரியாது கோபி முழித்தவன்."நண்பா புரிஞ்சுக்கோடா!... நீ கேட்டதும் உனக்காக அத்தனை வேலைகளையும் ஒதிக்கிட்டு மறுத்து பேசாமல் வந்தவன்டா நான்.

இந்த மாதிரி வேணும்னு பண்ணுவேனா?.

ஒரே ஒரு நாள் தானேடா! நீ இருந்து அந்த ஒரு நாளையும் என்ஜாய் பண்ணிட்டு வாடா! பிளீஸ்...." என்று கெஞ்ச.

அவனது இக்கட்டான நிலை புரிந்தவனாய்,"சரிடா!.. இப்போ ஒரு முக்கியமான இடத்துக்கு ஒருதங்கள பாக்க கிளம்பினேன்.

நீயும் வந்தா நல்லா இருந்திருக்கும். சரி விடு!. நீயும் என்ன பண்ணுவே? எத்தனை மணிக்கு பிளைட்?" என்க."ஒன்பது முப்பதுக்குடா!. இப்போ கிளம்பினாத்தான் சரிய இருக்கும்." என்க.

"சரிடா நண்பா வா!... நானே உன்னை ஏர்ப்போர்ட் வரைக்கும் கொண்டு வந்து விடுறேன்." என்றவாறு அழைத்து சென்றான்.???????????????இங்கு நம் ஜெசியோ தயங்கியவாறு பிரின்ஷிப்பல் ரூம் கதவை தட்டி,

"எஸ் கியூஸ் மீ சார்." என்றவளை,"உள்ள வா ஜஸ்வந்தினி!." என்றவர் உதடுகளோ அவளை கண்டு சினேகமாய் புன்னகையில் விரிய,

ஏற்கனவே என்னாகுமோ என்ற பதட்டத்தில் வந்த ஜெசிக்கோ பிரின்ஸியின் புன்னகையின் அர்த்தம் நல்லதுக்கா? இல்லை கெட்டதுக்கா?, என்பது மட்டும் தான் புரியவில்லை.இருந்தும் நேற்று அத்தனை பேர் முன்பும் அந்த நிலவனோடு தான் நடந்து கொண்ட முறைக்கும், இந்த புன்னகைக்கு பின்னால் நிச்சயம் எதுவோ பெரிதாக இருக்கின்றது என்பது தான் அவளுக்கு தெரியுமே!.ஆம் அந்த கல்லூரியின் அதிபரிடம் இது ஒரு பழக்கம்.

அதிக கோபம் என்றால் அதை கட்டுப்படுத்த இப்படி ஒரு யுத்தியை கையாளுவார்.

அவர் டென்ஷனாக இருக்கும் சமயங்களில் சின்னதாக ஒரு புன்னகையில் அவர் உதடுகளில் விரிகின்றது என்றால் பின்னாடி பெரிதாக ஒன்று நடக்கப்போகிறது என்பது தான் அதன் பொருள் என்று.அவரது புன்னகையினை கண்டவளுக்கு இன்னும் பதட்டம் அதிகமா,

ஒவ்வொரு அடிகளையும் நிதானமாகவும், கவனமாகவும் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவளை,"என்ன ஜஸ்வந்தினி மேடம். நேத்து போட்டிக்கு போய் வென்று வந்திங்களோ இல்லையோ! ஆனா கல்லூரி பெயரை மட்டும் கொடி கட்டி காத்தில பறக்கவிட்டு வந்திருக்கிறீங்க போல?." என்றவரது பேச்சில் கேலியுடன் கண்டிப்பும் தெரிய."சார் அது வந்து....". என தடுமாறியவளின் பேச்சினை குழப்புவது போல்."என்ன சார்!.. உங்௧ ரூம்ல ஏ.சி ஒர்க் ஆகலையா?. ஒரே சூடா இருக்கு." என்று அவர் மேஜைக்கு எதிரில் இருந்த இருக்கை மீது அமர்ந்திருந்தவன் கூற.அதிபரோ தனது பேச்சினை முன்னால் இருந்தவன் இடை புகுந்து குழப்புகிறான் என்பதை கூட அலட்டிக்கொள்ளாமலே "இல்லையே சார் ஏ.சி ஒர்க்கில தானே இருக்கு." என்றவர்,

"ஓ.. இந்த கூலிங்க் போதலையா?." என கேட்டவாறு,

தன் மேஜை மீதிருந்த ரிமோட் கண்ட்ரோலினை இயக்கி இலக்கத்தினை குறைத்தவர்,

"இன்னும் கொஞ்ச நேரத்தில் கூலாகிடும் சார். நீங்க குளிர் நாட்டில இருந்து பழக்கப்பட்டதனால இந்த கூலிங்க் உங்களுக்கு போதாதுல்ல.

எனக்கு இதுவே ரொம்ப அதிகம் சார். அதனால தான் கம்மி பண்ணியிருந்தேன்." என அசடு வழிவதைப்போல் கூறியவர்,மீண்டும் ஜெசியின் புறம் திரும்பி.

"என்ன ஜஸ்வந்தினி. கேட்ட கேள்விக்கு பதிலை காணோம்?." என்க."சார் அது வந்து..... நாங்க நல்லாத்தான் சார் என்க டான்ஸ குடுத்தோம்.

ஆனா அவரு தான் தேவையில்லாமல் என்களை கோபப்படுத்துறது போல பேசி தூண்டி விட்டாரு." என்று ஏதோ கொஞ்சமாக இருந்த தைரியத்தை வரவழைத்தவாறு பேசியவளுக்கோ,தன் புறம் முதுகு காட்டியவாறு இருந்தவன் முன்னாடி பிரின்ஸி இதை கேட்டிருக்க தேவையில்லை என்றே தோண்றியது.

அதுவும் அவன் ஏ.சி அறையிலேயே வந்திருந்து கொண்டு,

உங்௧ அறையில் ஏ.சி இல்லையா சார்? என்று கேட்டதெல்லாம் ஏனோ ஜெசிக்கு ஓவர் சீன் போடுகிறானோ? எனத்தான் நினைத்தாள்.அவன் எந்த பாரின் ஹன்றியாகவே இருக்கட்டுமேன். இங்குள்ள நிலை இதுவென தெரியாமலா வந்தான்?.

இப்படி சீன் போடுவதென்றால் தன் முதுகு மேலே ஏ.சியை கட்டிக்கொண்டு திரியவேண்டியது தானே!. என நினைத்தவளுக்கு ஏன் என்றே தெரியாமல் அந்த முகம் தெரியாதவன் மீது எரிச்சலும் சேர்ந்தே ஒட்டிக்கொண்டது.அவளது பதிலை கேட்ட அதிபரோ,

"என்ன ஜஸ்வந்தினி இது பேச்சு?. எங்க போய் என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கிங்கனு தெரியுமா?.. அவனவன் அந்த காலேஜ் மண்மேல தானும் தன்னோட கால் தடத்தினை பதிச்சிட மாட்டோமானு ஏங்கிட்டிருக்கும் போது.

நீங்க என்னன்னா அந்த காலேஜ்க்கே போய், அந்த காலேஜ்க்கு சொந்தமானவரையே எதிர்த்திட்டு வந்து நிக்கிறீங்களா?..

அது என்ன நம்ம காலேஜ் போல கிராமபுறத்தில இருக்கிற பட்டிக்காட்டான் காலேஜா?. இன்டர்நேஷனல் காலேஜ்.

அங்க போய் நீங்க என்ன செய்தாலும் சட்டென்று உலகம் முழுக்க நம்ம பேரு தான் அடி படும்." என்று கண்டிப்பு கலந்த கோபத்தோடு பேசியவரிடம்,"சாரி சார்!" என்று மறு வார்த்தை பேச முடியாது தலை குனிந்து கொண்டாள் ஜெசி."என்ன.. என்ன சாரி!.. சாரி கேட்டுட்டா நடந்தது இல்லையென்னு ஆகிடுமா?.. இதுக்குததான் கும்பலா கிளம்பி டான்ஸ் புரோகிராம் அது இதுன்னு போனிங்களா?.

நீங்க பண்ணிட்டு வந்த வேலையினால யாருக்கு கெட்ட பேரு. உங்களை யாருக்கும் அடையாளம் தெரிய போறது கிடையாது. இந்த காலேஜ் பொண்ணுங்க தான்னு இந்த காலேஜ்க்கு தான் கெட்ட பேயரே.

சாரி கேட்டுட்டா எல்லாம் முடிஞ்சு போயிடும் என்ற ஒரு அலட்சியத்தினால தானே இத்தனையும்?

இப்போ இந்த கெட்ட பேருக்கு யாரு பதில் சொல்லுறது?. யாரு பொறுப்பேற்கிறது.""நிங்க அந்த சாம்பியனை வாங்கிக்காமல் அவரை அசிங்கப்படுத்திட்டு வந்திங்களே அவரு யாரு தெரியுமா?.

அவரு எந்த ரேஞ்ஜ்ல இருக்கிறவரு தெரியுமா?..

நம்மெல்லாம் அவரை ஒரு தடவை பார்த்திடமாட்டோமானு எத்தனை தடவை ஏங்கி தவமிருந்திருக்கோம்.

நீங்க என்னடானா சட்டென அவர் முகத்தில அடிச்சது போல அந்த அவார்டை மறுத்திட்டு வந்திருக்கிங்க."

என்று மூச்சுக்கு கூட இடம் கொடுக்காமல் பேசிக்கொண்டு போனவரை."சார் போதும் சார்! விடுங்க அவங்களை" என்க.

ஜெசிக்கோ பிரின்ஸி தன்னை திட்டுவதில் கூட கோபம் வரவில்லை. ஆனால் அவர் முன்னால் இருந்து தனக்காக பரிந்து பேசி வருபவன் மீதே கடுப்பானது."யாரிவன்?. இவனுக்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?.

இல்லை அங்கு நடந்தது என்னவென்று தான் இவனுக்கு தெரியுமா? வந்தால் வந்த வேலையை பார்த்து விட்டு நாகரிகமாக எழுந்து போகத்தெரியாதா இந்த பெரிய மனுஷனுக்கு?

அடுத்தவர் பேச்சினில் மூக்கை நுழைப்பதே அநாகரிகம். இதில் பரிந்து பேசல் வேறு. அதிகபிரசிங்கி. நான் இவனை எனக்காக ஒத்து ஊத அழைத்தேனா?.." என உள்ளே கருகியவளின் மனநிலை புரியாதவர்."பாரு ஜஸ்வந்தினி!. நீ அவர் இடத்துக்கே போய் அத்தனை பேர் மத்தியில அவரை அசிங்கப்டுத்திட்டு வந்திருந்தாலும், உனக்காக பரிஞ்சு பேசுறாரு பாரு.

இது தான் பெரிய மனுஷ தன்மை என்கிறது.

முதல்ல நீ செய்த தப்புக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேளு!!.." என்று கோபமாக பேசியவரை ஜெசி புரியாது பார்க்க."என்ன ஜஸ்வந்தினி. நான் சொன்னது புரியலையா?. மிஸ்டர் நிலவன் கிட்ட மன்னிப்பு கேளுனு சொன்னேன்." என்றதும் தான் தன் முன் முதுகு காட்டி அமர்ந்திருப்பவன் யாரென அவளுக்கு புரிந்தது.

அதனுடனே சேர்ந்து முகமே பாராது அவன் மீது எழுந்த கோபத்தின் காரணமும் தான்.அவரின் நிலவன் என்ற சொல்லின் பின்னரே அவனும் ஜெசியை திரும்பி பார்க்க,

காலங்காத்தால இதுக்காகவே மெனக்கெட்டு தன் காலேஜ்க்கே வந்து, தன்னுடைய பிரின்ஸியையே ஏத்தி விட்டு ஏச்சு வாங்கி தந்தவனை மூடிய உதட்டினுள் பற்களை கடித்து முறைத்துக் கொண்டிருந்தவளை,"ஜஸ்வந்தினி நான் சார்கிட்ட சாரி கேட்க சொன்னேன். நீ எந்த கனவு உலகத்தில இருக்கே?" என்ற பிரின்ஸியின் அழுத்தமான வார்த்தைகளில் தன் முறைப்பினை விடுத்தவள்,"சாரி சார்! என்று எந்தவித குற்றவுணர்வுமில்லாமல் நிமிர்ந்து நின்று திமிராகவே அவள் கேட்க.அவளது செயலினை கண்ட பிரின்ஸியோ "என்ன இது ஜஸ்வந்தினி. இது தான் நீ சாரி கேட்கும் லட்சணமா?. ஒழுங்காக மன்னிப்பு கேள்!!" என்றவரை,"வேணாம் சார்!.. அப்பிடி எதுவும் வேணாம்." என மறுத்த நிலவன்.

"இவங்க இத்தனை தூரம் இறங்கி வந்ததே பெரிய விஷயம்.

நான் இங்க வந்தது இவங்களை மன்னிப்பு கேக்க சொல்லுறத்துக்காக இல்லை." என்றவனை,

பிரின்ஸியோ அப்புறம் எதுக்கு என்றது போல் பார்க்க,

அவனோ எதுவும் அலட்டிக்காது

"நான் என் ஜாஸூவை மட்டும் தான் பாக்க வந்தேன்." என்றவன் கண்களில் டன் கணக்கில் காதல் ரசம் கொட்டிப் பார்த்தவனை ஜெசி முறைக்க.பிரின்ஸியோ அவனது வார்த்தைகள் புரியாது குழம்பி போனவர்,

" என்ன மிஸ்டர் நிலவன். யாரு ஜாஸூ?. அவங்களும் இந்த காலேஜ்ல தான் படிக்கிறாங்களா?." என கேட்டவர்,

பின் "இருக்காதே மிஸ்டர் நிலவன். உங்களுக்கு வேண்டப்பட்டவங்க எதுக்கு இந்த கிராமப்புற காலேஜ்ல படிக்கணும்?. எனக்கு நீங்க என்ன சொல்லுறீங்கனு புரியலையே!" என்றதும் தான் தன் தவறை உணர்ந்தவன்,தன் தலையை சிலுப்பி தன் காதல் மூடிலிருந்து வெளியே வந்து.

"ஓ... சாரி. புரியாதது போல பேசிட்டேனோ?. நான் இங்க வந்தது மிஸ் ஜஸ்வந்தினியை பாத்திட்டு போகலாம்னு தான் சார்.

பட் அவங்களுக்கு பணிஸ் பண்ணுங்கனு சொல்லுறதுக்காக இல்லை." என்றவன்,"சும்மா சொல்லக்கூடாது சார்!. உங்க மாணவி ரொம்ப டேலன்டான கேர்ள்.

எதை கொடுத்தாலும் சட்டென யோசிக்காமல் இருந்த இடத்தில இருந்தே தன்னோட திறமையை நிருபிக்கிற பொண்ணும் கூட.

என்ன கொஞ்சம் ஹார்ஸா நடந்துக்கிறா,

சட்டு புட்டுனு கோபம் மூக்கு நுணியில ஒட்டிக்கிடுது.

டேலன்ட்டான பொண்ணுங்கன்னா இந்த திமிரும் அவங்ககூட ஒட்டியிருக்கிறது ஒன்னும் புதுசில்லையே சார்.

அது கூட இந்தக்காலப் பொண்ணுங்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்னு தான். ஏன்னா காலம் அந்தளவுக்கு கெட்டுப்போய் கிடக்கே. இல்லையா ஜஸ்வந்தினி." என்று அவளை சீண்டுவதைப்போல் முகத்தினை அவள் முகத்தருகில் கொண்டு சென்று அவன் கேட்கவும்.அவனது கேலி பேச்சில் வந்த கோபத்தினில் வாயாட வந்த வார்த்தைகளை பிரின்ஸி நிற்பதை உணர்ந்து அடக்கியவள் தலை குனிந்து நிற்க."சார் உங்களை அவமான படுத்தியவளையே பெருமையா பேசுறது உங்களோட பெரும் தன்மை சார்.

பட் செய்த தப்புக்கு மன்னிப்பு வேண்டுறதில தப்பில்லையே மிஸ்டர் நிலவன்.

நீங்க எவ்வளவு பெரிய மனிதர்.

நீங்க என்க காலேஜ்க்கு வந்ததில எவ்வளவு பெருமை எங்களுக்கு தெரியுமா சார்?..

உங்களுக்கு தரவேண்டிய மரியாதை தருவது என்னோட கடமை சார். என்றவர்,"ஜஸ்வந்தினி ஹூம்.." என்று கண்களால் அவளை மன்னிப்பு வேண்டுமாறு ஜாடை காட்ட,

அதற்கு பின்பும் எதுவும் செய்ய முடியாதவளாக,

அவனை நெருங்கியவள், குனிந்த தலை நிமிராமலே "சாரி சார்." என்க."பரவாயில்லை ஜஸ்வந்தினி." என்றவன் இதழ்களிலோ இளநகையினை உதிர்க்க,

அதே சமயம் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது சிரிப்பினை கண்டு அதிகாரம் புடித்தவன். எதற்கு வந்தானோ சாதித்து விட்டான். என நினைத்தவள்,

"சார் நான் கிளாஸ்க்கு போகலாமா?" என்றவளை "ஒரு நிமிஷம் ஜஸ்வந்தினி." என தடுத்தது நிலவனது குரல்.அது தான் நீ நினைச்சதை சாதிச்சிட்டியே இன்னும் என்ன? என்று ஜெசி திரும்பி அவனை முறைக்க,"உங்க திறமைக்கு உரியதை யாருக்காகவும் எதுக்காவும் விட்டு குடுக்காதிங்க ஜஸ்வந்தினி.

என்றவன்,

மேஜை மீதிருந்த,

நேற்றைய தினம் அவள் நிராகரித்த அதே சாம்பியனை எடுத்தவன்,

"இது எனக்கு வேணாம். அடுத்தவர் பொருளுக்கு நான் எப்போதுமே ஆசை படமாட்டேன். அதே சமயம் இது என்னுடைய பொருள் தான்னு என் மனசுக்கு உறுதியானால் அதை யாருக்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன்." என்று ஒரு மார்க்௧மாக அவளை பார்த்து கூறியவன்,"இது உனக்குரியது. எனக்கு இது தேவைப்படாது." என்றவன், "உங்களோடத நீங்களே வச்சுக்கங்க." என்க,ஜெசிக்கோ என்ன செய்வதென்பதே தெரியாமல் முழிக்க.

"என்ன ஜஸ்வந்தினி. அது தான் சாரே இது உனக்கானது என்றாரே வாங்கிக்கோ" என்றவர் மேலும் இப்போது ஏனோ கோபம் எட்டிப்பார்த்தது.அவளுக்கு அவன் கையால் அவார்ட் வாங்குவதை விட,

அப்படி ஒரு அவார்ட்டே வேண்டாம் என்றிருந்தது.

ஆனால் இவனோ துரத்திக்கொண்டு இங்கேயும் வந்து தொல்லை செய்வான் என்று அவள் என்ன கனவா கண்டாள்.இப்போ இதை வாங்கவில்லை என்றால் இந்த காட்டேரி பிரின்ஸி மறுபடியும் லெக்க்ஷர் வைக்க ஆரம்பித்து விடுவாரே என்ற பயத்தினால் அவனிடமிருந்து அதை வாங்க கையினை நீட்ட,"என்ன ஜாஸூ?..

என் கையால தர அவார்ட் வேணாம்னு தானே நேத்து என்னை அத்தனை பேர் முன்னாட அசிங்கப்படுத்துறது போல போன?. இப்போ என்கையாலயே இதை வாங்க வைச்சிட்டேன் பாத்தியா?.. இதை பார்க்கும் போதெல்லாம் நீ வென்று வாங்கின அவார்ட்டா இது உனக்கு தெரியாது.

என்னோட வெற்றியை நினைவு படுத்திறது போல தான் உனக்கு இருக்கும்." என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி மர்மமாய் புன்னகைத்தவனிடமிருந்து, சாம்பியன் கப்பினை இழுத்து பறித்தவள், "சார் நான் இப்போ போகலாமா?" என்க.

"தாராளமா போகலாம். பட் இதை போல இனி நடந்துக்காத" என்று எச்சரித்தே அனுப்பியவரை விட்டு நிலவனையே முறைத்தவாறு வெளியேறனாள் ஜெசி.

?????????????????

தெருவோர டீக்கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மீது கைகள் இரண்டையும் தலைக்கடியில் விட்டு, ஒற்றை காலினை பெட்ரோல் டேங்க்கின் மீது ஊண்றியவன் மற்றைய காலினை ஊன்றிய மறுகாலின் முளங்கால் மீது வைத்து படுத்திருந்தவன் சிந்தையிலோ நேற்றைய தினம் தன் கைவளைவில் பூக்குவியலாய் விழுந்தவளிடமே சென்று வர மறுத்திருக்க,

அவள் சிந்தையிலேயே உதடுகளும் மெல்லிய சிரிப்பினை சிந்தியவாறு வானத்தினையே வெறித்திருந்தவன் அருகில் வந்த கிரிஷ்.உச்சம் தொட்டிருந்த சூரியனை நிமிர்ந்து பார்த்து, தன் நண்பனையும் பார்த்தவன்,

"மச்சான்!.." என்றழைக்க,

அவன் தான் நேற்யை நாளை கடந்து இன்றைய நாளுக்குள் வர மறுக்கிறானே!. அப்படி இருப்பவனிடம் இப்படி மென்மையாக மச்சான் என அழைத்தால் அவனுக்கு இன்னும் தாலாட்டாகவல்லவா போகும்?.இரண்டு முறை "மச்சான்" என அழைத்து பார்த்தவன்,

அவன் ஏன் என்றும் கேட்காத பட்ஷத்தில்.

"டேய் கண்ணா!" என்று அவன் கால்மேல் கால் போட்டு படுத்திருந்த காலினை தட்டிவிட,

அத்தனை நேரமும் அவளை தாங்கி பிடித்த ஸ்பரிஷத்தில் திளைத்திருந்தவனுக்கு,

தான் எங்கோ பள்ள தாக்கில் விழுவது போல் ஒரு பிரம்மை தோண்ற,

துடித்து பதைத்து எழுந்து சுதாரித்தவன் முன் நின்ற தன் தோழன் கிரிஷ்சை கண்டவன்."ஏய்!.. நீ தான் என்னை தள்ளி விட்டியா?" என்க.

அவனது கேள்வியில் சிரித்த கிரிஷ்.

"பின்னே உன்னை எத்தனை தடவை தான் கூப்பிடுறது கண்ணா. நானும் மச்சா மச்சான்னு கூப்பிட்டா நீ திரும்பி கூட பாக்க மாட்டே என்கிறியே! அதனால தான்." என்றவன்."ஆமா என்ன நீ. நடு வெயில்ல பைக்க விட்டிட்டு மல்லாக்கா படுத்திருந்து உச்சி வெயில் சூரியனை ரசிக்கிற?.

உண்மையாலும் கண்ணா நீ ரொம்ப வித்தியாசமானவன் தான்டா!. உன் ரசனை கூட ரொம்பவே வித்தியாசமா இருக்கு." என கேலி செய்தவனை வெறுப்பு கலந்த பார்வை பார்த்தவன்."உனக்கென்னடா தெரியும்?. என்னால அவ நினைவில இருந்து வெளிய வர முடியல்லடா!. அவளை பாத்த அந்த நொடியில இருந்து அவ நினைவாவே இருக்கு." என்றவனை வினோதமாக பார்த்த கிரிஷ்."யாரை எப்போ பாத்த? யாரை சொல்லுற? தெளிவா சொல்லூடா!" என்க.

"அது வந்து கிரிஷ் உனக்கு நினைவில்லையாடா!.

நேத்து காலேஜ்ல நீ மேல நின்னு பூ அலங்காரம் பண்ணும் போது, நான் கூட அந்த பூ சரத்தை மாடிக்கும், மரத்துக்கும் தொடுத்திடுடானு சொல்லிட்டு வரும்போது காக்கா என் சட்டையில எச்சம் போட்டிட்டுதுனு சட்டை மாத்த வேகமா போகும் போது ஒருத்தி மேல மோதினனேடா!.

அப்போ நீ கூட எங்க ரண்டு பேத்துமேல பூ கூடைய தவற விட்டியே!. அவ தான்டா!" என்க."யாருடா ஸ்டேஜ்ல உனைக்கானாது

நானும் பாட்டுக்கு சென்டர்ல நின்னு டான்ஸ் ஆடினாளே அவளா கண்ணா!" என்க."ஹூம் அவளே தான்டா!.." என்றவன் மீண்டும் அவளை தான் கைகளில் தாங்கி பிடித்த நினைவு வர.

"அவ கொஞ்சம் கூட கனமே இல்லடா!

அவளை இந்த கையிரண்டிலும் தாங்கும் போது காத்தை கையில தாங்கி பிடிக்கிற ப்பீல் தான்டா ஆச்சு,

அவளோட உடல் கூட ரொம்ப சாப்ட்டா தான் இருந்திச்சு...

நான் கூட எங்க அவளை அழுத்தி பிடிச்சா அவளுக்கு வலிச்சிடுமோனு ரொம்ப மென்மையாத்தான் தாங்கியே பிடிச்சேன்.அவளும் எங்க தான் விழுந்திட போறேன்னு என்கூட எவ்வளவு நெருக்கமா நின்னு என்னை இறுக பிடிச்சவ தவிப்பு அவ மூடின கண்ணு உருள்றதிலேயே தெரிஞ்சுதுடா!

அந்த நிமிஷம் எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா?..

திருவிழாவில கூட்டத்தை பாத்து பயந்து. அந்த கூட்டத்தில தான் தொலைஞ்சு போயிடக்கூடாதுனு தன்னோட அம்மாவை இறுக பிடிச்சுக்குமே குழந்தை. அந்த குழந்தையோட ப்பீல் தான்டா வந்திச்சு கிருஷ்.

"ஸ்டேஜ்ல அவளை கவிதை சொல்ல சொன்னதும்,

கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு கவிதை சொன்னா பாரு அப்பிடியே மயங்கிட்டேன்டா!.

என்ன ஒரு கவிதை.

ஒரு கவிதையே கவிதை சொல்லிட்டு இருக்கும் போது எதையடா நான் ரசிக்க முடியும்?.. ப்பா!... சான்சே இல்ல கிருஷ் அந்த கவிதையோட லைன்ஸ்.

என்ன ஒரு ஏக்கம்!.. அவ மனசை படம் போட்டு காட்டிச்சேடா!.

ஆனா கிருஷ் எனக்கென்னமோ அவ சொன்ன அந்த கவிதைக்கு சொந்த காரனே நான் தானோனு தோணுதுடா!...""அவ அந்த மண்டபத்துக்கு வந்த நிமிஷத்தில இருந்து அவளை ரொம்ப டீப்ப கவணிச்சிட்டுதான் இருந்தேன்டா!..

அவ கண்ணு அங்கும் இங்கும்னு யாரையோ தேடி அலை பாஞ்சிட்டு தான் இருந்திச்சு.

என்னைத்தான் தேடியிருப்பாளோ!... நான் ட்ரெஸ் மாத்திக்கிட்டதனால ஒரு வேளை அடையாளம் தெரியாமல் போயிருக்குமோ!." என தன் நண்பன் கிருஷ்ணனை பேசவிடாது அவளது நினைவில் பேசிக்கொண்டே போனவனை ஆச்சரியமாக பார்த்த கிரிஷ்."கண்ணா!.. இது நீதானாடா!.. சுத்தமா நம்ப முடியலடா!" என வாய்பிளந்து கேட்டவன்,

"ஆனாலும் இது ஓவர்டா!.. ஒரே நாள்ல ஒரு மோதல்ல லவ் வர்றது என்கிறது இதுவரை சினிமாவில தான் நான் பாத்திருக்கேன்.

இன்னைக்கு நேரா பாக்கும் போது தான் புரியுது.""நிஜத்தை தான் சினிமாவிலயும் நிழலா புடிக்கிறாங்களோனு.

பட் இத்தனை வருஷமா இந்த கண்ணனை கோபியர் கூட்டம் தான் சுத்திக்கிட்டிருந்ததை பாத்திருக்கேன்.

ஆனா இன்னைக்கு தான். இந்த கண்ணனே தன்னோட ராதை நினைப்பில சுத்துறதை பாக்கிறேன்.

சும்மா சொல்லக்கூடாதுடா!.. உனக்கு ஏத்தது போலதான் உன்னோட அம்மா உனக்கு கண்ணானு பெயர் வைச்சிருக்காங்க." என்க.அவனது பேச்சில் உண்டான கோபத்தில் அவனது மண்டை மீது ஓங்கி ஒரு கொட்டு வைத்தவன்,

"உனக்கு எத்தனை தடவை சொல்லறது?..

கண்ணானு என்னை கூப்பிடாதனு. எனக்கு அந்த பெயர் பிடிக்கலை." என சினந்தவனிடம்."இது என்னடா வம்பா போச்சு?.

நீ என்மேல கோபப்படுறத விட்டிட்டு,

உனக்கு கண்ணானு யாரு பேரு வச்சாங்களோ அவங்க மேல தான் கோபப்படணும்." என்றவனை முறைத்தவன்,

"உன்னை யாரும் அந்த பெயர் சொல்லி தான் கூப்பிடணும்னு ஒத்தை காலில நிக்கல." என்றவனது கோபம் எதற்கென்று புரிந்தவனாய்,"சாரிடா!.. என்ன செய்ய பழக்கதோஷம் மாத்திக்க முடியல்ல. இந்த மச்சான், மாப்பிள்ளை எல்லாம் உன்னோட ரியல் கேரேக்டருக்கு செட்டும் ஆகாது.

எனக்கும் அது சட்டுனு வாயில வர்ரதும் இல்லை. என்னை என்ன செய்ய சொல்லுற?." என்றவனுக்கு தெரியாமல் இல்லை. அவனுக்கு ஏனோ சிறுவயதில் இருந்து கண்ணா என்ற பெயரை கேட்டாலே அலர்ஜி என்று.ஆம் அவனது கேரேக்டர் இது தான். பெண்கள் என்றாலே அவர்களை ஒரு எல்லையோடே வைத்துக்கொள்வான். தனக்கு வரப்போகும் மனைவியை தவிர எந்த பெண் மீதும் அதிக உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவனது விபரம் அறிந்த வயதிலிருந்து அது ஒரு தவமாகவே கடைப்பிடித்து வருபவனும் கூட,ஆனால் அவன் அன்னை ஆசையாக அவனுக்கு வைத்த கண்ணா என்ற பெயரினாலோ! இல்லை அவனது அழகின் ஈர்ப்பினாலோ தெரியவில்லை கோபியர்கள் கொஞ்சி விளையாடும் கண்ணணாகிப்போனான். அதனால் உண்டான வெறுப்பினால் தான் வேறு பெயர் சொல்லி அழைக்குமாறு தன்னுடன் நெருக்கமானவர்களிடம் கண்டிப்போடு கூறுவான்.கிரிஷ்ஸூம் அவனும் சந்தித்தது ஒரு விபத்து என்றே கூறலாம்.

ஏழு வருடங்களின் முன்புதான் இவர்கள் சந்திப்பும் நேர்ந்தது.

ஆம் கிரிஷ் அவன் இந்த ஊரில் வசித்துவரும் பெரிய புள்ளியின் மகன் என்றாலும்,

அவன் குடும்பத்தில் அவனுக்கென்றொரு மரியாதையே இருந்ததில்லை.

வழக்கம் போல் ஆண்கள் என்றாலே படிப்பை முடித்துக்கொண்டு ஊர் சுற்றுவதை தானே முழு நேர தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

அப்படித்தான் கிரிஷ்ம்.அன்று தன் வீட்டின் பால்கனியில் நின்று உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருந்த கண்ணாவிற்கு எதிர் வீட்டில் இருந்து வந்த சத்தமே சொன்னது பெரிய கலவரம் அந்த வீட்டில் நடப்பதாக.அவனும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஊரிலிருந்து குடும்பத்தாரோடு தமது பங்களாவிற்கு குடி வந்திருந்தான்."யாருடா இது காலங்காத்தால இந்த கத்து கத்துறது.? ஆமா அப்பிடி என்ன தகராரு? ஊருக்கே கேட்கிறது போலவா சத்தமிடும் அளவிற்கு?" என நினைத்தவனாய் எதிர் வீட்டை நின்ற இடத்திலிருந்தே எட்டிப்பார்த்தான்.

அந்த வீட்டின் உற்புறத்திலிருந்து ஒரு பையொன்று வேகமாக வெளியே வந்து ஊரார் காட்சிப்பொருளாய் நின்றவன் காலடியில் வந்து விழுந்தது."இனிமே இந்த வீட்டில உனக்கிடமில்லடா!. உன்னை பெத்த கடமைக்காக படிக்க வைச்சு ஆளாக்கியாச்சு.

இனி நீ நினைக்கிறது போலயே எவன் கூடயாவது ஊர் மேஞ்சுக்கோ இல்லை, எவளோட கைய வேணாலும் பிடிச்சு செருப்படிகூட வாங்கிக்கோ!. இந்த மாதிரி அசிங்கமெல்லாம் இனி எங்களால பாத்திட்டிருக்க முடியாது. உன்னோட பொறுக்கித்தனத்தால உனக்கப்புறம் இருக்கிற என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துக்க நான் விரும்பல்ல போ!.." என்று நாயை விரட்டுவது போல விரட்டியவர் குரல் மட்டும் கண்ணா கேட்டானே தவிர,

உள்ளிருந்து பேசியவர் முகத்தினை அவன் காணவில்லை.ஏனோ கேட்க நாதியற்று குற்றவாளியாக நின்றவன் முகத்தினை பார்த்த கண்ணாவிற்கு கருணை வந்தது.

ஆனால் எதிர் வீட்டில் இருப்பவர்கள் யார் என்று கூட அவனுக்கு தெரியாத போது எப்படி அவனுக்காக வாதாட போக முடியும்?.

அது அவன் குணமும் அல்ல. தேவையில்லாத விஷயங்களில் மூக்கினை நுழைக்க அவன் விரும்புவதுமில்லை.நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை "கண்ணா!.." என்று அழைத்த அன்னையின் குரலுக்கினங்க "இதோ வரேம்மா!" என்றவாறு உள்ளே சென்றான் அவன்.பின் தயாராகி காரில் ஏறியவன் தன் வீட்டு கேட்டினை தாண்டும் போது தான் தன் வீட்டு வாசலில் இருந்த மைல் கல்மீது அமர்ந்திருந்தவனைக் கண்டவனுக்கு காலையில் நடந்தது நினைவு வர,காரை நிறுத்தியவன்,

சினேகமாக அவனை பார்த்து "ஹாய்!.." என்க.

அவனும் அந்த காரினையே பார்த்திருந்ததனால் தன் முறைக்கும் வாடிய முகத்துடனே "ஹாய்!.." என்றான்.

"என்ன என் வீட்டு வாசல்ல காலையிலேயே வாட்ச்மேன் வேலை போட்டு தந்திட்டாங்களா?.. இப்போல்லாம் பையோடையே வேலைக்கு கிளம்பிடுறங்களா என்ன.?" என எதுவும் அறியாதவன் போல காமடியாக கேட்டவனை,"போங்க பாஸ்... நானே நொந்து போய் இருக்கேன். நீங்க வேற." என்று சலித்தவனை தன் கையினை காட்டி வருமாறு அழைத்தவன்,

அவன் தன்னை நோக்கி வருவதை கண்டு

தன் கார் கதவினை திறந்து விட்டான்.

"கொஞ்சம் உங்க கூட பேசணும் ஏறுங்க ப்ரோ" என்க.

கிரிஷ் ம் என்ன நினைத்தானோ சட்டென அதில் ஏறி அமர்ந்தவன். கார் புறப்பட தொடங்கியதும்."பாஸ் செம்ம பாஸ்!. இந்த மாதிரி காரை எல்லாம் தூரத்தில நின்னு தான் நான் ரசிப்பேன். பட் இன்னைக்கு இது மேல ஏறி இருந்து வரதே செம்ம பீல் ஆகுது." என்றவனை விசித்திரமாக பார்த்தான் கண்ணா.

அவனது பார்வையின் அர்த்தம் புரியாத கிரிஷ்.

"என்ன பாஸ்? எதுக்கு இந்த பார்வை?" என வினவ.

"இல்லை காலையில உங்க வீட்டில நடந்ததை நினைச்சுப்பாத்தேன். இப்போ புரியுது எதுக்கு உன் அப்பா அந்த மாதிரி திட்டியிருக்காருனு.

கொஞ்சம் கூட சொரணையே இல்லையா ப்ரோ?" என்ற கண்ணாவின் கேள்வியில்."என்ன பாஸ் அப்போ காலையில நடந்ததை நீங்களும் பாத்திட்டிங்களா?.. விடுங்க பாஸ். என் அப்பாவுக்கில்லாத உரிமையா? இது தினமும் நடக்கிறது தானே பாஸ். என்ன இன்னைக்கு வீட்டை விட்டு வெளிய போணு சொல்லுற அளவுக்கு ஆகி போச்சு அவ்வளவு தான் பாஸ்." என்றவனை."என்னது தினமுமா?" என்று ஆச்சரியம் காட்டியவன்,

"ஏன் இப்படி?" இவர் ஆச்சர்யம் படுகிறார் என்பது போல நகைத்து திரும்பினான் கிரிஷ்..


விடியலை தேடி - 7
 
பாகம் -7

கோபியரின்

உடமைகளை

மட்டுமல்ல

கோதையின்

உள்ளத்ததையும்

அபகரித்து!!

உறங்க விடாமல்

செய்திடும்

மாயவனே..!!

மங்கையின்

மனதினை

திருடிய கள்வனே

கார்மேகனே..

கன்னியவளின்

கவனத்தை

களவாடிய

கண்ணனே

மடந்தையினை

கவ்விருக்கும்

கார் இருளை

குடித்திடும்

கயவன் - எவனோ..??இனிதே உனது லீலைகள் தொடரட்டும்!!


கண்ணா காரினை ஓட்டிய படியே கண்ணாடியில் கிரிஷினை ஆராய்ந்தவன்..


ஏன் ப்ரோ தினம் அப்பாகிட்ட திட்டு வாங்கிற அளவிற்கு அப்படி என்ன தான் செய்வீங்க?.. என ஆச்சர்யம் கலந்த தோரணையில் நம் கண்ணா வினவியதற்கு அவன் இடத்தில் இருந்து பார்த்தால் ஆச்சர்யப் பட ஒன்றுமில்லை..


"" கண்ணா பல வருட வேண்டுதலின் பலனாக அவன் பெற்றோருக்கு கிடைத்த பொக்கிஷம்.. அவன் பிறந்த பின்னரே அவன் அப்பாவின் பிசினஸ் கொடி கட்டிப் பறக்க தொடங்கியது.. அம்மாவிற்கு கண்ணனாகவும்.. அப்பாவிற்கோ மன்னனாகவும் வாழ்கிறான்""அப்பாவிடம் திட்டு வாங்குவதை ஆச்சர்யத்துடன் கேட்கும் கண்ணாவை பார்த்த கிரிஷ்க்கு

"உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக என விளபரம் ஞாபகத்திற்கு வர".. வெகுளியாக சிரித்தவனை பார்த்த கண்ணா அவனின் இத்தகைய சிரிப்பிற்கான அர்த்தத்தை புரிந்தவனாய்,

"மவனே என்னையே கலாக்கிறியா?.. இரு.. இரு.. உன்னைய கலாய்க்கிர நேரம் வரும் இருடி!" என்றவாறே.. தொடர்ந்தான் கண்ணா.. ப்ரோ நான் கேட்டதற்கு இன்னும் பதிலே காணோம் ஆனால் சிரிப்பு மட்டும் நல்லா வருது என்றவனை பார்த்த கிரிஷ் நாக்கை வெளியே நீட்டி..

அது ஒரு பெரிய கதை பாஸ்.. என்றவனிடம்

அய்யோ!! எனக்கு பெரிய கதை கேட்கும் அளவிற்கு எல்லாம் பொறுமை கிடையாது ப்ரோ.

நீங்க சுருக்கமாவே சொல்லுங்க. என்றவன்,

உங்க கதை சுருக்கம் சொல்றதுக்கு முன்னாடி உங்களை பத்தி சின்னதா அறிமுகபடலம் நடத்திடலாமா?. என்க.

அதுக்கென்ன பாஸ் தாராளமாவே நடத்திடலாம். என்று தன்னை அறிமுகபடலத்துக்குள் நுழைத்துக்கொண்டான் கிரிஷ்.என்னோட பேரு கோவிந்தசாமி கிரிஷ்ணா. அம்மா வீட்டில கிரிஷ்னு தான் கூப்பிடிவாங்க . அப்பா எனக்குனு ஸ்பெஷல்லா வைச்ச பேரு நிறைய இருக்கு. அதில குறிப்பா ரெண்டு பெயரு சொல்லுறேன்.வெட்டிப்பயல். உதவாக்கரை. இதை அடிக்கடி யூஸ் பண்ணுவாரு. இப்போ வரைக்கும் இது தான் பாஸ் என்னோட அடையாளம்.

எனக்கொரு தங்கை. பேரு விநோதினி. அம்மா பூமாணிதேவி. நான் செல்லமா அவங்களை புளவர்னு தான் கூப்பிடுவேன். அப்பா கோவிந்தசாமி. ரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் என்னோட படிப்பை முடிச்சிட்டு,

அப்பா தன்கூட தொழிலை பாத்துக்கோனு சொல்லியும். எனக்கு அதில கொஞ்சம் கூட இஷ்டமில்லை என்கிறதனால மாட்டேன்னு முடிவா சொல்லிட்டேன்.

ஆனா எனக்கு பிடிச்ச வேலை வந்திச்சுனா நிச்சயம் முழு ஈடுபாட்டோட அதை செய்வேன்.

பொழுது போக்குனா என்னோட ப்பிரண்ட்ஸ் கூட ஊரு சுத்துறது தான். என்றவனை, கேவலமாக ஒரு லுக்கு விட்ட கண்ணாவை அலட்ச்சியமாக பார்த்தவன்.

போதும் பாஸ் என்னை சைட் அடிச்சது. இந்த பார்வை எல்லாம் நான் மிஸ்டர் கோவிந்த சாமிக்கிட்டையே பாத்திட்டேன்.

அதை விட்டிட்டு உங்களை பத்தி சொல்லுங்க என்க.என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு கிரிஷ். என்றவன் தன்னுடைய பெயரை அவனிடம் கூறிவிட்டு, அம்மாக்கு எப்பவுமே நான் செல்லமான கண்ணாதான். அப்பா பெரிய பிஸினஸ் மேன்.

லாஸ்ட் இயர் தான் என்னோட படிப்பை முடிச்சேன். மூணு நாளைக்கு முன்னாடி தான் இந்த ஊருக்கே வந்தேன். ஆனா அப்பாக்கு இங்க நிறைய கம்பணிங்க இருக்கு.இன்னும் நான் அதுங்களுக்குள்ள இன்வால் ஆகலை.

எல்லாத்தையும் நல்லா தெரிஞ்சுகிட்டு அப்புறம் நானும் அப்பாக்கூட சேர்ந்தே பிஸினஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.

இவ்வளவு தான் என்னோட எஸ்.டி. டீ ப்ரோ.

உன்களை போல ஊருக்கே தெரியிற அளவுக்கு நான் இன்னும் பேமஸ் ஆகல்ல. என

கண்களை சிமிட்டி குறும்போடு கூறியவனை விநோதமாகவே பார்த்தவன்.

யம்மாடி!... கண்ணா என்ற பெயருக்கு உரிய குறும்பு நிறையவே இருக்கும் போலயே பாஸ். என்று நக்கலாக கூறிய கிரிஷ்சின் மீது ஒரு முறப்பை வீசி விட்டு.. காரின் வேகத்தை குறைத்தவன்..

"காரை அந்த குளிரூட்டப்பட்ட கண்ணாடி காஃபி பார்க் முன் காரை நிறுத்தி விட்டு வாங்க கிரிஷ் என்று அழைத்தவனை கூட பார்க்காமல் இந்த மாதிரி இடத்தை எல்லாம் சினிமாவில் தான் பார்த்து இருக்கிறோம் ப்ரோ. நமக்கே தெரியாமல் நம்ம ஊருல இப்பிடில்லாமா கட்டி இருக்கிறாங்க? என மனதிற்குள் நினைத்தவனை பார்த்த கண்ணா அடுத்த முறை கட்டும் போது உங்ககிட்ட கேட்டு கட்ட சொல்லுறேன். என்பவனிடம்."" அய்யோ மையென்ட் வாய்ஸ் என நினச்சி சத்தமாவா பேசிட்டேனோ.."" ரொம்ப சத்தமா தான் நீங்கள் பேசிருக்கிங்க ப்ரோ. அங்க பாருங்க அந்த வாட்ச்மெனுக்கு நீங்க பேசினது கேட்டுட்டுது போல. அடிக்கவே வராரு என கூறியபடியே வந்த வாட்ச்மென் இடம் கார் சாவியை தந்து விட்டு..சந்தையில் குச்சி மிட்டாய் பார்க்கும் குழந்தை போல தன் அருகில் நின்றவனை பார்த்த கண்ணா..

வாங்க கிரிஷ் என்று அவன் தோளில் கைப்போட்டு இழுத்து அமுக்கியபடி பார்க் உள் அழைத்து சென்றவன் தனி கேபினுக்குள் சென்றான் வெளியே காலை என்று கூட இரக்கம் பாராது சூரியன் சுள் என்று சுட்டு எரிக்க,

இங்கு உள்ளேவோ அதற்கு எல்லாம் சம்மந்தமே இல்லாத சூழலாக இருந்தது அந்த காஃபி பார்க்.சூரியனை கவ்வி இருக்கும் மேக மூட்டத்தின் கார் இருளாய் ஒருவருக்கு ஒருவர் தெரிவார்களா?? அழகிய கேண்டில் விளக்குடன் அந்த பனிபடர்ந்த தேகத்தில் இந்த மெல்லிய ஒளியுடன் கூடிய மேலை நாட்டு வாசிப்புகள் மனதினை என்னவோ செய்ய எவ்வளவு ரசனை மிக்கவன் இந்த கட்டிடத்தை கட்டியவன் ஆனால் இவ்வளவு செலவு செய்தவன் கரண்ட் பில் கட்ட பயந்து போய் இப்படி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருக்கிறான்.

அவன் கஷ்டம் என்னவோ? என கூறியவனின் பேச்சில்.தான் இருக்கும் இடத்தின் சூழலை மறந்து விட்டு குபீர் என பியர் போல பொங்கிய சிரிப்பை தன் கட்டுக்கொள் கொண்டு வர எவ்வளவு முயற்ச்சித்தும் தோல்வி உற்றவனாய் போனான் கண்ணன்..அவனின் இத்தகைய அடக்க முடியாமல் தவிக்கும் சிரிப்பினை கண்டு கிரிஷினையும் சிரிப்பு தொற்றிக்கொள்ள. தானும் அவனுடன் இனைந்து சிரித்தபடியே ஒன்றும் அறியா குழந்தை போல ஏன் இப்படி சிரிக்கிறிங்க ப்ரோ? என கண்ணனை பார்த்து கிரிஷ் கேட்ட போது தான் சுதாரித்தவனாய் அது எல்லாம் ஒன்னுமில்லை கிரிஷ் ..நீங்க நினைக்கிறது போல இது உண்மையான மெழுகு வத்தி கிடையாது. நல்லா உத்து பாருங்க மெழுகு உருகுதா?.. என்றவனை புரியாது கிரிஷ் பார்க்க.ஆமா ப்ரோ அது செயற்கை மெழுகுவத்தி. அதாவது நீங்க சொன்னீங்களே அந்த கஷ்டப்பட்ட கடைக்குரியவன் மெழுகுவத்தி போல லைட்டைத்தான் மாட்டியிருக்கான். என்று தமது கேபினில் இருந்த மெழுகுதிரி வடிவில் அலங்கரிக்கப்படிடிருந்த மின்குமிழை தொட்டுக்காட்ட.ஆமா பாஸ். நானும் முன்னாடி இதை மெழுகுவத்தினே நம்பிட்டேன்.

ஒன்னு சொல்லவா பாஸ்.

உண்மைக்கும் இந்த கடையை நிர்வாகிக்கிறவன் ரொம்ப ரசனையானவன் தான் பாஸ். ஆனா கொஞ்சம் மாற்றங்கள் சொய்தான்னா இன்னும் சிறப்பா இருக்கும் என்றவனை ஊடுருவி கண்ணா பார்க்க.என்ன பாஸ் அப்பிடி பாக்கிறீங்க. நிஜமாத்தான் சொல்லுறேன் பாஸ். என்றவன்.

இந்த லைட் நல்லாத்தான் இருக்கு பாஸ. பட் இந்த செயற்கையை விட இயற்கை இன்னும் அழகா இருக்கும். இத்தனை ரூபா செலவு பண்ணி இந்த லைட்டை மாட்டிவிட்டதுக்கு பதிலா பேசாமல் ஒரு கான்டிலையே ஏத்தி வைச்சிருக்கலாம். ஆனா அதை சிவப்பு, பச்சைனு கண்ணாடி கிளாஸ்னால கவர் பண்ணிருந்த அந்த வெளிச்சம் தனி உலகத்துக்கே இங்க வரவங்களை அழைச்சிட்டு போயிருக்கும்,

அப்புறம் வரும்போது வெளிய கறுப்பு நிறத்தில கண்ணாடி கதவை பாத்தேன் பாஸ். அதை ஒய்ட்லையே போட்டிருக்கலாம். உள்ள இருக்கிற அழகை அந்த கறுப்பு நிற கண்ணாடி மறைச்சிடுது,

இந்த கேபினையும் பாருங்க பாஸ். பிளாஸ்டிக் பூ ஜாடி வைச்சிருக்காங்க. என்று அதை தூக்கி காட்டியவன்,இங்க வரவங்க ஒவ்வொருதரும் ஒவ்வொரு மனநிலையில் வருவாங்க பாஸ்.

என்ஜாய் பண்ண வருவாங்க, பார்டி வைக்க வருவாங்க, லவ் ப்ரப்போஸ் பண்ண வருவாங்க. அத்தனையும் ஏன்? நிறைய பிரச்சினையோட, அதாவது பிஸினஸ் டென்ஷன். காதல் தோல்வி. இப்பிடி பலவித மான மூடோட வருவாங்க பாஸ்!..இந்த பிளாஸ்டிக் பூவுக்கு பதிலா இயற்க்கை பூவை வைச்சு பாருங்க. அந்த சுகந்தமான வாசனையிலேயே மனசு ஒரு நிலையாகி சந்தோஷத்தோட டென்ஷன் குறைஞ்சு இங்க எதுக்கு வந்தாங்களோ அதோட திருப்தியோட போவாங்கல்ல.

வெளில இருந்து உள்ள என்ட்ரி ஆகும் போது கூட கவுண்டர்ல கவனிச்சேன் பாஸ்.

பழக்கூடை நிறைய பழங்கள் அடுக்கியிருக்காங்க. அதுவும் ஒவ்வொனுக்கும் தனித்தனி கூடைனு.

சுத்தமா அது பாக்க நல்லாவே இல்ல. பழங்கள்னாலே கூட்டமா சேந்திருந்தாத்தானே பாஸ் அதோட அழகே.

தனித்தனியா அடிக்கி அதனோட அழகை கெடுத்து வைச்சிருக்காங்க.

இவ்வளவு செலவழிச்சு கடையை அழகு படுத்தினவங்க. சின்ன சின்ன விஷயத்தை கவனிக்காமல் விட்டுட்டாங்களே பாஸ். என்று தன்னை மறந்து அடிக்கிக்கொண்டு போனவன் பேச்சினையும் அவனது ரசனையையும் மிக உண்ணிப்பாக கவனித்தவனை,என்ன பாஸ் அப்பிடி பாக்கிறீங்க. என கேட்க.

ஒன்னுமில்ல இத்தனையையும் வந்த கொஞ்ச நேரத்தில நோட் பண்ணியிருக்க அது தான் உன்னோட திறமையை பாத்தேன் என்றவனிடம்.

ஆமா பாஸ். எனக்கு இந்த மாதிரி விஷயங்கள்ல ரொம்பவே நாட்டம் அதிகம். அது என்னோட பாஷன் எண்டு கூட சொல்லலாம்.ஆனா எதுக்கு பாஸ் இந்த இடத்தில இந்த கூல் பார் ஓபனாகியிருக்கு?.. பெரிய லெவல்ல கடை போட்டிருக்காங்களே அந்தளவுக்கு பிஸினஸ் ஆகுமா பாஸ். என்றவன்,

பாருங்க நேத்து இந்த ஊருக்கு வந்த உங்களுக்கு இது தெரியுது எனக்கு எதுவுமே தெரியல்ல.

என்னை எல்லாம் எங்கப்பா ஊர் சுத்தினு சும்மா தான் பேரு வைச்சுருக்காரு போல பாஸ். உண்மைய சொல்ல போனா இந்த சைட் நான் வந்ததே இல்ல. என வருத்தம் போல் கூறியவனிடவனிடம்.


என்ன ப்ரோ அந்த மாதிரி கேட்டுடிங்க?.

இந்த காஃபி பார்க் பக்கத்தில் தான் இண்டெர் நேசனல் காலேஜ்ஜே இருக்கு. என்று அவன் மீதி சொல்லி முடிப்பதற்குள் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்ட கிரிஷ்.என்னது இன்டர்நேஷனல் காலேஜா?.. செம்ம பாஸ்.

ரொம்ப பாரின் ரேஞ்ல கடை இருக்கும் போதே நினைச்சேன் பாஸ். ரொம்ப மண்டைக்காரன் தான் பாஸ் இந்த கடையோட ஓனர்.

இன்டர்நேஷனல் காலேஜ்னா வேற லெவல் ஸ்டுடன்ஸ் தானே இங்க படிப்பாங்க. அவங்களை கவர் பண்றதுக்காகவும்,

அவங்க புது.. புது.. பிகரா கவர் பண்றத்துக்காகவும் தான் இந்த ஏற்பாடா?..

ஓகே ஓகே.. இப்ப புரியுது.. இப்ப புரியுது.. வீட்டில் உள்ளவங்க ஏதேட்சையா இங்க வந்தால் கூட கண்டுப்பிடிக்க முடியாது. பயப்புள்ளைங்க எப்படி யோசிச்சி அழைத்து வருதுங்க. நாம ஒரு மடையன், இது தெரியாமல் மாட்டிக்கிட்டு என அவன் பின் தலையில் தனக்கு.. தானே அடித்து கொண்டவன்,அதெல்லாம் சரி ஜோடி போட்டு உள்ள வந்ததுங்கஎதிர் எதிரே இருந்தாலும் இந்த மங்கல் வெளிச்சத்தில இதுங்களுக்கே தெரியாது போலயே என கேலி கலந்து அப்பாவியாக பேசும் கிரிஷ்ஷின் பேச்சில் ஈர்க்கப்பட்டவன். மனமோ அவன் நட்பினை விரும்பாமல் இல்லை..காஃபி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தவனிடம் பாஸ் சீக்கிரமாக காரை எடுங்க.. எடுங்க.. என்றபடி கப்சிப் என அந்த கட்டிடத்தை கடக்கும் வரை அமைதி காத்த கிரிஷ், சிறிது தூரம் சென்ற பிறகு அப்பாடா!... என நெஞ்சின் மேல் கைவைத்து பெருமூச்சு விட்டபடி.. பாஸ் தப்பிடோம் என்றவனை குழப்பத்துடன் பார்த்தான் கண்ணா..கண்ணாவின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய்..பாஸ் இந்த காஃப்பி ஷாப்ல ஒரு காப்பிக்கே ரொம்ப ரேட் கேப்பாங்கல்ல?.. என சம்மந்தம் இல்லாமல் விசாரித்தவன் பேச்சு புரியாது என்ன ப்ரோ சொல்றீங்க என்க.பாஸ் இன்னுமா புரியல?.. நீங்க பலே கில்லாடி பாஸ்.

என்கிட்ட பேசிட்டே வரதை போல சீன் போட்டு, அங்க நாம்ம சாப்பிட்ட காஃப்பிக்கு காசு தரமா நைசா நழுவிட்டிங்களே பாஸ். என அவன் சொல்லி சிரிப்பதை ரசித்தவாறே காரை செலுத்தியவன்,அது எல்லாம் சரி!.. காஃபி பார்க்ல நீங்க மாட்டிட்டோம்னு சொன்னிங்களே!.. அது என்ன சொல்லு கிரிஷ்?.. என சொன்ன கண்ணனிடம் அதை அப்புறம் நான் சொல்கிறேன்.

ஆனால் எனக்கு தங்குறத்துக்கு ஏதாவது இடம் வசதி செய்ய முடியுமா?.. என்னால என் வீட்டுக்கெல்லாம் போகமுடியாது பாஸ்.

என்னை அடிச்சு துரத்தியவர் முகத்தில் நான் முழிக்க மாட்டேன். என கூறிய கிரிஷ் முகத்தில் இப்பொழுது அன்பிற்கு ஏங்கிடும் பாவனையில் முகம் தொங்கி போய் இருந்தது. தன் கைகளை கண்ணாவிடம் நீட்டி இருந்தவனின் கைகளை அன்புடன் பற்றிய கண்ணன் தன் வீட்டின் முக தோரணைக்குள் காரை செலுத்த,பாஸ் உங்க வீடு எங்க இருக்கு பாஸ்?. கேட்டில் இருந்து அரை கிலோ மீட்டருக்குமேல வந்துட்டீங்களே!... என கேட்டவனிடம்.

இதோ என காரை ஒரு சிமெட் மேட்டின் மேல் ஏற்றி, காரை பார்க் செய்யும் அறைக்குள் சென்றவன், தன் காரில் நம்பர் லாக் செய்து விட்டு கீழே இறங்கி வாங்க ப்ரோ!..

இது தான் என்னோட குடில். கேலியாக கூறி அவனின் தோளில் கைப்போட்டு வீட்டினுள் அழைத்து சென்றவனை வியப்பூட்டும் வகையில் பார்த்தாள் கண்ணாவின் அன்னை தன் மகன் இதுவரை இப்படி யாரையும் உரிமையோடு அழைத்து வந்ததே இல்லை என்ற வியப்பே அது..கிரிஷை தன் பெற்றோர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவன், அவனை தன்னுடனே தன் அறைக்கு அழைத்துச் சென்றான்..ஏனோ இன்று அவனால் வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் கட்டிலில் படுத்தவன் தான் அப்படியே உறக்கம் தழுவிக்கொள்ள கண்களை மூடியதும் நன்கு உறங்கியும் விட்டான்.மாலை வேளை கண் விழித்த கண்ணனுக்கு நாம் உறங்கியது நமது அறையினுள் தானா? என்ற சந்தேகம் எழும்பும் வகையில் அவனது அறையே முற்றிலுமாக மாறி இருந்தது..அறையினுள் இருந்த பொருட்களை கொண்டே அறையை வேறுபட்ட கோணத்தில் மாற்றி அமைத்தது மட்டுமன்றி, ஓர் பூத்து குலுங்கும் நந்தவனத்திற்குள் கண்ணன் துயில் கொண்ட உணர்வை கொண்டு வந்து இருந்தது அந்த அறையின் சூழல்..

அதிகாலையிலேயே இப்படி ஒரு காட்சியை காண்பது இந்த பரபரப்பான உலகில் அரிது.

ஆனால் மாலை வேளையிலும்?... பாராட்ட வார்த்தைகள் இன்றி மௌனமானான் அவன்.

இப்படி ஒரு அலங்காரம் மனதில் புத்துணர்ச்சி தந்தது மட்டுமல்லாமல், உடம்பும், மூளையும் நல்ல கிளர்ச்சியுடன் தெம்பாக வெளியிட்டது சுவாசத்தை அங்கு நிறம்பிய நறுமணம் மனதிற்குள் மஜாஜ் செய்தது..

இது என் அறையா கிரிஷ்?.

உன்னிடம் இவ்வளவு பெரிய திறமை ஒளிந்து கிடக்கிறது.

காலையில் நீ காஃப்பி ஷாப்பில் ரசனையோடு சொல்லும் போது கூட என்னால புரிந்து கொள்ள முடியல. ஆனா அதை அனுபவிக்கும் போது தான் மனசு புத்துணர்சியா இருக்குது. என்று அவனின் செய்கையை பாராட்டியபடியே அவனின் கைப்பட்டையை பற்றி அமுக்கிய படி சூப்பர்டா!.

உன்னோட ரசனைக்கு நான் ரசிகன் ஆகிட்டேன். அதனால இன்னையில இருந்து நீ என் தோழன்டா!!.. என்று சிரித்தபடியே அவனை ஒரு இடி இடித்துவிட்டு பாத்ரூம்க்குள் சென்றான் பயங்கர குஷி மூடில் கண்ணன்..குளித்து முடித்த கண்ணா வெளி வந்து தனக்கான ஆடை அணிவதற்கே அரை நாழிகை செலவிட்டான்..

அவன் ஆடை பிரியர் மட்டுமல்ல திரவிய பிரியனும் கூட.. உடையை மாற்றிக்கொண்டு கிரிஷ் இடம் வந்து "வாடா கிரிஷ்" என்று அழைத்து வந்தான்.. மேல் மாடி அறையில் இருந்து இறங்கி கீழே உள்ள டைனிங் டேபிளிலுக்கு இருவரும் சேர்ந்தே வந்தனர்..கிரிஷ்க்கு தன் கண் முன் இருப்பதில் பல பெயர்கள் கூட விளங்கவில்லை போல பேந்தப் பேந்த விழித்துக்கொண்டே நின்றவன் முதுகில் ஓங்கி ஒரு தட்டு.. தட்டிய கண்ணா பார்த்தே வையித்தை ரொப்பிடுவ போல?.

உட்காந்து சாப்பிடு!. என தன் அருகில் உட்கார வைத்து சாப்பிட வைத்தான்.சாப்பிட்ட பின் கண்ணன் சிறிது நேரம் கூட சும்மா இருக்காமல் போனில் தந்தையின் பிஸினஸ் பற்றிய யார் யாருடனோ கலந்து உரையாடலில் ஈடுபட்டிருப்பதை கவனித்த கிரிஷ் கண்ணுக்கு கண்ணன் செய்கைகள் எல்லாமே எறும்பு போல அவன் சுறுசுறுப்பாக தெரிய கண்களை வியந்து பார்த்த படி நின்றிருந்த கிரிஷ் அருகில் வந்த கண்ணா..கிரிஷ் நாம வெளியே போகலாம் வரியா?. என்ற கண்ணனிடம் மறு பேச்சு எதுவும் பேசாமல் கன்று குட்டி போல தலையை ஆட்டியபடியே கண்ணனை பின் தொடர்ந்த கிரிஷ் அழைத்து கொண்டு தன் காரில் ஏறியவன்,

சீட் பெல்ட் போட்டுக்கொண்டு அருகில் அமர்ந்து இருந்த கிரிஷையும் போட சொன்னவன்,

காரின் வேகத்தை மாற்றி, அந்த குறுகிய சாலையில் இருந்து அந்த பிரதான சாலையில் செலுத்தினான்.." இது நம்ம ஊர் சாலை தானா ஒரு குண்டுகுழி அடிப்படல கண்டிப்பாக ரோட்டை நம்ம ஆளுங்க சரி செய்து இருக்க மாட்டான்க.. அப்பிடினா இந்த காருக்குள்ள இருக்கிறதால தெரியலேயோ!" என்று தனக்குதானே புலம்பியவனை பார்த்த கண்ணா சிரிப்பை மட்டுமே சிந்தி விட்டு காரின் வேகத்தை நிதானமாக்ஞகி தார் ரோட்டை ஓட்டி இருந்த ""நைன்டிக்கும் சேராமல் டூக்கே கிட்ஸ்க்கும்"" சம்மந்தமே இல்லாத கம்பெனிக்கு முன் காரை நிறுத்திய கண்ணன், கிரிஷை தன்னுடன் அழைத்து உள்ளே சென்று வரவேற்பு அறையில் தன்னுடைய விசிடிங் கார்ட்டை காண்பித்து விட்டு வெயிடிங் ஹாலில் சென்று அமர்ந்தவனை சிறிய இதழ் விரித்த புன்னகையுடன் "" சார் உங்களை உள்ளே வர சொன்னாங்க"" என்று கூறி மீண்டும் வரவேற்பு அறையில் போய் நின்றுக்கொண்டாள் அந்த கம்பெனி நங்கை..கண்ணனுடன் உள்ளே சென்ற கிரிஷை பார்த்த மேனேஜர் " இவங்களுக்காளா சார்?..

நீங்க சொல்லி அனுப்பினால் போதாதா சார்? இவ்வளவு தூரம் நீங்களே மெனக்கெட்டு வரணுமா? என்றபடி கிரிஷ் இடம் அவர் அந்த காக்கி கலர் கவரை நீட்டி,

கிரிஷ் உங்க அப்பாய்மெண்ட் ஆர்டர். நீங்க நாளையில் இருந்தே வேலையில் ஜாயிண்ட் பண்ணிக்கலாம். மத்ததை வெளியே சொல்வாங்க." என்க..

அந்த கவரை பிரித்து பார்த்தவன் விழிகள் சந்தோஷத்தில் விரிய,தன் காலுக்கு கீழே பூமி நழுவி செல்வதை போல உணர்ந்த கிரிஷ்க்கு இப்பொழுதும் நம்ப முடியவில்லை. காலை வரைக்கும் ஒன்னுத்துக்கும் "ஓதவாகரை" என்று அப்பாவிடம் ஏச்சி வாங்கியவன் தானா தான்? என்று வாயடைத்து நின்றவனை பார்த்த கண்ணா..என்ன க்ரிஷ் இப்படி வாயடைத்து நின்னுட்டே?. ஒரு நிமிடத்தில் நூறு வார்த்தை லொட.. லொடனு.. பொறிந்து தள்ளி இருப்பியே! இப்ப என்னடானா இப்படி ஆவேனு தெரிந்து இருந்தா நான் இந்த வேலையை வாங்கி தந்து இருக்க மாட்டேனே!... என்ற கண்ணனின் கைகளை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்ட கிரிஷ்.

இந்த உதவியை நான் என் வாழ் நாள் முழுவதும் மறக்க மாட்டேன். உனக்கு நான் ரெம்பவே நன்றி கடன் பட்டு இருக்கேன். "சார்" என்ற கிரிஷை பார்த்து முறைத்த கண்ணன் நான் உன் தோழனா இருக்க ஆசைப்படுறேன் கிரிஷ். என்னமோ தெரியலை உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அது உன் பொய்யில்லாத பேச்சா?. இல்லை கேலியுடனான உன்னோட குழந்தை தனமானு கேட்டா சத்தியமா தெரியல. ஆனா நீ இனி யார்கிட்டையும் எதுக்காகவும் அசிங்கப்பட்டு நிக்க கூடாதுனு என்னோட மனசு சொல்லிச்சு. அதான் இந்த சின்ன உதவி.

இனி நீயும் நானும் ப்பிரண்ட்ஸ். ஷோ இனி நோ போங்க, வாங்க, சார். முக்கியமா இந்த கண்ணா வேணாம். ஓகே.

அப்புறம் நட்புக்குள் " கடமை, கடன் எல்லாம் வராது தான் என சிரிக்க,

அவனை ஆரத்தழுவிக்கொண்டான் கிரிஷ்சிரித்தபடி இந்த கட்டிப்பிடிச்சு சமாளிக்கிற வேலை எல்லாம் வேணாம். முத மாச சம்பளத்தில் பார்ட்டி வைக்கனும். என்ன ஓகே வா நண்பா? என்ற கண்ணாவை மீண்டும் ஆர தழுவிக்கொண்டான்.கண்ணா மேனேஜர் இடமிருந்து விடை பெற்றுக்கொண்டு கிரிஷ் உடன் அருகில் இருந்த மைதானத்திற்கு சென்றவன் அங்க போட பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்து கிரிஷையும் அவன் அருகில் அமர வைத்துக்கொண்டவன் சிறிது அமைதிக்கு பின் கேட்க தொடங்கினான்..ஏம்பா இப்ப சொல்லு உன் கதையை என்ற கண்ணனை பார்த்த கிரிஷ் காலையில் நடந்த சண்டைக்கான காரணத்தை சொல்ல ஆரம்பித்தான்..


இனிதே கிரிஷின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ரசிப்போம்...

விடியலை தேடி-8
 
பாகம் -8

அடி வான் பரப்பினில், மஞ்சளும் அல்லாது சிவப்பும் அல்லாது இரண்டும் ஒன்றாக கலந்த கலர் பொடியினை ஒரு நேர்த்தியே இல்லாது வென்முகில் மேல் வானமகள் அவள் ஹோலி பண்டிகை கொண்டாடியிருப்பாள் போல. பல இடங்களில் அவள் சிந்தி விளையாடிய அந்த கலவை கலந்த கலர் பொடிகள் கண்டமேனிக்கு பரப்பியிருக்க,மலை மேடானது பகல் பொழுதில் இருந்து கடும்பசியினில் இருந்திருக்குமோ என்னமோ!.

பகல் முழுவதும் உழைத்து களைத்துப்போய் கதிர்களை தன்னுள் முடக்கி தன்னவளுடன் ஊடல்கொள்ளும் வேளையினை நினைத்து வெட்க்கமதை தன் முகச்சிவப்பினில் பிரதிபலித்தவாறு வீடு செல்ல துடித்த சூரியனையே தன் பசியினை போக்கிக்கொள்ள,

உலகையே ஆழும் அந்த செய்யோனையே இரையாக்கி கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கிக்கொண்டிருந்தது அந்த வானைத்தொடும் உயரமான மலையின் உச்சிப்பரப்பு.கண்ணா கேட்ட கேள்விக்கு பதிலுரைக்காமல் அந்த இயற்க்கையின் அழகினை இரும்பு வலை எனும் தடுப்பினைத் தான்டி ரசித்தவாறு இருந்தான் கிரிஷ்.மத்தளத்திற்கு இரண்டு பக்கங்கள் தான் அடி என்றால்.

இங்கு வீரர்களுக்கு மத்தியில் அகப்பட்ட அந்த பந்திற்கு உருலும் திசை பூராவும் உதைதான்.

பாவம் மாறி மாறி விளையாட்டு வீரர்கள் காலினால் உதை வாங்கிக்கொண்டிருந்த அந்த பந்தினையே உன்னிப்பாக கவனித்தவாறு இருந்த கண்ணா.

தன் கேள்விக்கு கிரிஷ்டமிருந்து பதிலில்லாமல் போகவே,

அவனை திரும்பிப்பார்த்தான்.அவனோ தான் கேட்ட கேள்வியில் கவனமில்லாது தூரத்தே வெறித்திருப்பதை கண்டு,

"என்ன ப்ரோ?.. நான் கேட்ட கேள்வி என்ன பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு கஷ்டமான கேள்வியா என்ன?.. ரொம்ப நேரமா பதிலை யோசிச்சிட்டிருக்க போல இருக்கே!" என கேலியுடன் தான் கேட்ட கேள்வியினையும் கண்ணா நினைவு படுத்த,அவனது கேள்வியில் ரசனை கலைந்த கிரிஷ்.

"பாஸ் நீங்க கேட்ட கேள்வி கஷ்டமானது இல்ல பாஸ்.

பட் எந்த இடத்தில இருந்து ஆரம்பிக்கிரதுனு தான் தெரியல்ல." என்று பெருமூச்சை எடுத்து விட்டவன்."பாஸ் நான் மூனு வருஷமா ஒரு பொண்ணை லவ் பண்றேன் பாஸ்." என்று தன் பேச்சை முற்று புள்ளியோடு கிரிஷ் நிறுத்தி கண்ணாவை பார்க்க."என்னது லவ்வா?.." என ஆர்ச்சரியத்தோடு கண்ணா வாய் பிளந்து கேட்பதை பார்த்த கிரிஷிற்கு தன்னை அறியாது சின்னதாக புன்னைகை அரும்பாமல் இல்லை.

குட்டியாக இதழ் மறைவில் சின்னதாகவே புன்னகைத்தவன்,"ஏன் பாஸ் எதுக்கு இந்தளவுக்கு அதிர்ச்சி?.. ஏன் நான்லாம் லவ் பண்ண கூடாதா?.." என மறு கேள்வி கேட்டுவிட்டு கண்ணாவின் பதிலுக்கா காத்திருக்க."அ.... அப்.. அப்பிடி எல்லாம் இல்ல ப்ரோ. நான் அந்த மாதிரி சொல்ல வரல்ல. அந்த லவ் உன் வீட்டுக்கு தெரிய வந்து தான் உன்னை அடிச்சு தொரத்தினாரா உன் அப்பா." என பேச்சை மாற்றியவன்.

"சரி சரி மீதி கதையை சொல்லு ப்ரோ" என்று அவனை ஊக்கப்படுத்தினான் கண்ணா"எனக்கு தெரியும் பாஸ். நீங்க எதுக்கு ஆச்சரியமா கேட்டிங்கனு.

வேலை வெட்டிக்கு போகாத உனக்கெல்லாம் லவ் ஒரு கேடானு தானே பாஸ் கேட்க வரிங்க.

வேலை வெட்டிக்கு போனால் தான் லவ் வரும்னா ஊரில பாதிப்பேதுக்கு லவ்வே செட்டாகது பாஸ்.

அதுவுமில்லாம இப்பல்லாம் வேலைக்கு போறவன் எங்க பாஸ் லவ் பண்றான்?. தன் படிப்புக்கு செலவு பண்ண காசை எல்லாம் திரும்ப கறக்கிற மிஷினே பொண்ணுங்கள பெத்த அப்பாக்கள் தானே பாஸ்.""லவ் பண்ணா வரதட்சணை குடுக்க மாட்டாங்கல்ல. அதனால அவங்க இதை எல்லாம் விரும்ப மாட்டாங்க. வசதியான குடும்பத்து பொண்ணுங்க கரை ஒதுங்குங்க. மீதி தொன்நூறு சத வீதம் எங்களை நம்பித்தான் பாஸ் வாழ்றாங்க."

என தன்னை போன்றோரை பெருமையாக பேசியவன். "லவ் எல்லாம் ஒரு ஆக்க்ஷிடன்ட் பாஸ். எப்போ யாருக்கு வரும்னு தெரியாது.அது போல தான் பாஸ் எனக்கும் வந்திச்சு.

தினமும் என் ப்பிரண்ட்ஸ் கூட ஊர் சுத்துறது வழக்கம்.

அப்பிடி சுத்தும் போது தான் எனக்கும் ஒரு பொண்ணு செட்டாச்சு பாஸ்.""பக்கத்து தெருவில என் ப்பிரண்ட் வீடு இருக்கு.

தினமும் சாயந்தரமான அவன் வீட்டு முக்கில இருக்கிற டீ கடையில, டீ சாப்பிட்டுடே சும்மா வம்பு வளத்திட்டுருப்போம்.

அப்போ அந்த பக்கத்தால காலேஜ் முடிச்சிட்டு கொஞ்ச பொண்ணுங்க செட் கிராஸ் ஆகும்.

ஒருத்தி மட்டும் அவ ப்பிரண்ட்ஸுங்க கூட பேசிட்டே வருவா, ஆனா முகம் பூராவும் வெக்கத்தை தேக்கி வைச்சு என்னையும் சைட்ல ஒரு லுக்கு விட்டுட்டு போவா.

தினமும் இது நடக்கிறதனால என் ப்பிரண்ஸ் என்னையும் அவ கூட சேத்து வைச்சு கேலி பண்ணுவாங்க.""முதல்ல அவ பாக்கும் போது வராத ஒரு ப்பீலிங்க்ஸ். என் ப்பிரண்ஸ் என்னை கேலி பண்ணும் போது வர ஆரம்பிச்சிது.

அது வரை வெட்டியா பொழுதை கழிக்க அங்க வர நானும்,

அவளை பாக்கிறதுக்காகவே விதம் விதமா என்னை அழகு படுத்தி

அவ வரவையும் எதிர்பாக்க ஆரம்பிச்சேன் பாஸ்.""தினமும் தோழமை படை சூழ வர்றவளை அன்னைக்கு காணவே இல்லை.

இன்னைக்கு காலேஜ்கு அவ போகலையா?. எதுக்கு அவ வரல்ல?. என்று ஆயிரம் கேள்விகள் மனசில எழுந்து அப்பிடியே அது தவிப்பா மாறிடிச்சு.

மனசு வேற கேக்குதில்லை.

ஒரு தடவை காலேஜ் பக்கம் போய் பாத்திட்டு வந்திடலாமானு கூட நினைச்சு,

என் ப்பிரண்ட்ஸ் கிட்ட அம்மாக்கு உடம்பு சரியில்லை.

ஈவ்னிங்க் டாக்டர்கிட்ட காட்ட அப்பாய்மன்ட் வாங்கியிருக்கிறதை மறந்து உங்ககூட அரட்டை அடிச்சிட்டு இருக்கேன்னு பொய் சொல்லிட்டு,

அவ காலேஜ் பக்கமா வண்டிய விட்டேன்.

இடையில அவ நடந்து வந்திட்டிருந்தா.அவளை கண்டதுக்கப்புறம் தான் உயிரே வந்தது போல இருக்க. அவ பக்கமா போய் வண்டியை ஸ்லோ பண்ணினேன்.

முதல்ல யாருனு தெரியாமல் திடுக்கிட்டு பயந்தவ. என்னை பாத்ததும் சட்டென வெக்கத்தில வீதியோரமா இருந்த மதிலோட ஒதுங்கினா.எதுக்கு லேட் அப்பிடினு தான் கேட்டேன் பாஸ்?.

தன்னோட நோட் புக்ல இருந்த ஒரு பேப்பர தேடி எடுத்து என்கிட்ட நீட்டினா.

எனக்கு இவ பண்றதோட அர்த்தம் புரியல்ல.

நான் என்ன கேக்கிறேன். இவ என்ன பண்றானு குழப்பாமாவே அவ தந்த பேப்பரை வாங்கினா.

நைட் ஏழு மணிக்கப்புறம் கால் பண்ணுங்க.

என்ன காரணம் எண்டு சொல்லுறேன்னு சொல்லிட்டு பழையா காலத்து ஹீரோயின் கணக்கா சிரிச்சிட்டே ஓடிட்ட பாஸ்.""அப்புறம் தான் அந்த பேப்பர பிரிச்சு பாத்தா அதில ஒரு நம்பர் இருந்திச்சு.

அதை பாத்ததும் செம்ம ஹாப்பியாகிட்டேன். அப்புறமென்ன?. அவ சொன்ன நேரத்துக்கு கால் பண்ணி விசாரிச்சா.

என் கூட தனிமையில பேசத்தான் தன்னோட ப்பிரண்ட்ஸ் கிட்ட கிளாஸ்னு பொய் சொல்லி லேட்டா வந்தாளாம். ஆனா என்னோட ப்பிரண்ட்ஸ் நிப்பாங்களே என்னனு பேச முடியும்னு தான் யோசனையா வந்தாளாம். நான் தன்னை தேடி வந்ததில அவளுக்கு ரொம்ப வசதியா பேச்சாம். என்கிறா பாஸ்.""அப்புறம் என்ன? போன்லயே பேசி பேசி நம்ம காதல் கோட்டையை மூனு வருஷமா வளத்துக்கிட்டோம்."இப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னை தன்னோட பேரன்ஸ் கிட்ட பேச வரச்சொன்னா பாஸ்.

நான் எவ்வளவோ சொன்னேன். எனக்கு ஒரு வேலை அமையட்டும் அப்புறம் வந்து பேசிக்கிரேன்னு.

வெட்டியா இருக்கிற எவனுக்கும் உங்க பேரன்ஸ பொண்ணு குடுக்க மாட்டாங்கனு.

அவ கேக்கல்ல. போன புதன்கிழமை கட்டாயம் உன்னை எதிர்பாத்து காத்திட்டிருப்பேன் வந்து பேசு. அப்பா அம்மாவும் உன்னை எதிர்பாத்திட்டு இருப்பாங்க வானு கூப்பிட்டா. நான் சொன்னதை அவ கேக்கல்ல எண்ட கோபத்தில நான் போகல்ல பாஸ்.""நீங்களே சொல்லுங்க பாஸ். அங்க போய் எனக்கு வேலை இல்லை எண்ட காரணத்தை காட்டி என் பொண்ணை உனக்கு தரமுடியாது. வெளிய போடானா என்ன பாஸ் நான் பண்ண முடியும்?.

அவமானத்தோட சேர்த்து, என் காதலும் என்னை விட்டு போயிடுமேன்னு பயத்தில தான் பாஸ் நான் போகல்ல.அவளும் என்னை ரொம்ப எதிர்பாத்திட்டிருந்தா போல. நான் வரல்லை எண்டதும்,

அவங்க பேரன்ஸ் இது தான் உன்னோட உண்மை காதலா?. இப்போ உள்ள பசங்க எல்லாம் இந்த மாதிரித்தான். நல்லா லவ் பண்றது போல நடிப்பாங்க. கல்யாணம் எண்டதும் கழண்டுடுவாங்க. எண்டு ஏதேதோ பேசியிருக்காங்க. அவளுக்கு என்மேல இருந்த காதலே வேண்டாம் என்கிற அளவுக்கு அவளை குழப்பி விட்டுட்டாங்க பாஸ்.அதுக்கப்புறம் அவ என்கூட பேசுறது இல்ல.

போன் பண்ணா போன் ஆப்ல இருக்கு.

சரி காலேஜ்ல பாக்க போகலாம்னு போன,

அங்க அவளோட அண்ணன் அவளை கூட்டிட்டு வரதும், போரதுமா இருக்கான். அவளை எந்த வழியிலயும் நெருங்க முடியல்ல.

ஒரு வாரமா அவளை பாக்காமலும், பேசாமலும் தவிச்சு போயிட்டேன் பாஸ்.சரி எப்பிடியாவது அவளை தனிமையில கண்டு சமாதானப்படுத்துவோம்னு வழி தேடி அவளை பின் தொடர்ந்திட்டே அந்த நாளுக்காக காத்திட்டிருந்தேன் பாஸ்." என்றவன்"முந்தாநேத்து செம்ம மழை பெய்துச்சில்ல பாஸ். அந்த மழையினால ரோட் பூராவும் ஒரே தண்ணி. வாகனங்கள் போய் வரதே ரொம்ப கஷ்டமாகிடிச்சு.காலேஜ் விட்டுடிச்சு. மழையினால அவளோட அண்ணனை காணல்ல எங்கிறதனால காலேஜ் முன்னாடி இருந்த பாஸ் ஸ்டாப்பில்ல ஒதுங்கி நின்னுட்டிருந்தா.

இது தான் நல்ல சந்தர்ப்பம்னு பேசி சமாதானம் செய்யலாம்னு நினைச்சு அவ நின்னுட்டிருந்த பஸ் ஸ்டாப் பக்கம் நெருங்கி போனேன்.

நான் வரத தூரத்திலையே கண்டுட்டா போல.

சட்டுனு மழை எண்டும் பாக்காமல் மழையிலை நனைஞ்சிட்டே நடக்க ஆரம்பிச்சிட்டா பாஸ்.""நானும் எவ்வளவோ கெஞ்சி பாத்திட்டேன் பாஸ். வா ஓரமா நின்னு பேசுவோம். உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்னு கால்ல விழுந்து கதறாக கொற தான்.

க்ஹூம் அசையவே இல்லையே. பிடிவாதமா என் பேச்சை கூட கேக்காமல் போய்டே இருந்தா பாஸ்.""எனக்கு வேற வழி தெரியல. சட்டுனு கையை பிடிச்சு.

நான் பாட்டுக்கு சொல்லிட்டிருங்கேன். ரொம்ப தான் ஓவரா போயிட்டிருக்கேனு மட்டும் தான் கேட்டேன் பாஸ்.

பாவிமக என்ன காண்டில இருந்தாளோ!.. அத்தனை பேத்துக்கும் முன்னாடி சப்புன்னு கன்னத்தில அறைஞ்சிட்டா பாஸ்." என்றவன் ஏதோ இப்போது அவள் அறைந்ததை போலவே அந்த நினைவில் கன்னத்தில் கைவைத்து கூறியவனை பார்த்து கண்களால் சிரித்தவனை,"என்ன பாஸ்?. எவ்வளவு பெரிய சோகக்கதை சொல்லிட்டிருக்கேன். நீங்க என்னடானா சிரிக்கிறீங்க?." என பாவமாக உதட்டை பிதுக்கிக் கேட்டவனுக்காகவே தன் சிரிப்பை கடினப்பட்டு அடக்கியவன்."ஹூம்.... அது எல்லாம் சரி ப்ரோ!.. அவ அறைஞ்சதுக்கும்,

உன்னை உன் அப்பா வீட்ட விட்டு தொரத்தினதுக்கும் என்ன சம்மந்தம் ப்ரோ. இதில அந்த சீன் எப்பிடி லிங்க் ஆச்சு?.." என கண்ணா தனக்கு வந்த சந்தேகத்தை கிரிஷிடம் கேட்க."அங்க தான் ப்ரோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.

என் லவ்வர் படிக்கிற காலேஜ்ல தான் என் தங்கையும் படிக்கிறாள் என்கிறதை சுத்தமா மறந்திட்டேன் ப்ரோ.

அவ அங்க படிக்கிறது மட்டுமில்ல.

என் லவ்வர் அவ ப்பிரண்டு வேற.மழையினால அவளும் வீட்டுக்கு போகாமல் அந்த பஸ்டாப்பில ஒதுங்கி நின்னிருக்கா.

இவளை கண்ட சந்தோஷத்தில அங்க நிக்கிற யாரையுமே அவ கூட பேசிடனும் என்கிற ஆர்வக்கோளாரினால நான் சுத்தமா கவனிக்கல்ல.""அவ என்னை கண்டு ஒதுங்கி போனதும், நான் அவ கையை பிடிச்சதும், அவ என்னை அறைஞ்சதுனு அங்க நின்னவங்களுக்கு நான் அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டேன் என்கிறது போல தான் தெரிஞ்சிருக்கு.""அதில ஒருத்தி என்க வீட்டுக்கு தினமும் வந்து போறவ வேற.

என்னை அந்தமாதிரி ஒரு நிலையில பாத்திட்டு.

"ஏய்!.. இது உன்னோட அண்ணன்ல்ல. பாரு என்னமா ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்குராருனு.

நான் எத்தனை தடவை உங்களை எல்லாம் நம்பி உங்க வீட்டுக்கு வந்திருப்பேன். நல்ல வேளை என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கல.

சுத்த பொறுக்கி பயலா இருக்கானே. எப்பிடியடி இவனை வீட்டுக்க சேத்துக்கிறீங்கனு நல்லா ஏத்தி விட்டிருக்கா.""அத்தனை பேரு முன்னாடி அந்த மாதிரி அவ பேசினது அசிங்கமாகிடிச்சுனு வீட்டில வந்து வினோ தாண்டவமாட.

அப்புறம் என்ன பாஸ். எல்லாம் முடிஞ்சிடிச்சு." என்று தன் கதையினை சுருக்கமாக சொல்லி முடித்தவனை பார்த்து பெரிதாக புன்னகைத்தவன்."ரொம்ப காமடியா இருக்கு ப்ரோ!.. அப்புறம்?...." என்று சிரிப்பினூடே கேட்ட. கண்ணாவின் மேல் கொஞ்சமாக வந்த கோபத்தில்."என்ன பாஸ்!.. நான் என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்.

எத்தனை துன்பத்தை தான் பாஸ் இந்த பிஞ்சு இதையம் தாங்கும்?.. நீங்க என்னடானா அப்புறம் என்குறீங்க?." என்றவனை, "சரி விடு ப்ரோ.

எல்லாம் நான் சரி பண்றேன். சரியா!.." என வாக்கு கொடுத்ததைப்போலவே.

அவனது பிரச்சினைகள் அத்தனையையும் இரண்டே வாரத்தில் முடித்தும் வைத்தான்.

அதனாலேயே அவர்களது உறவும், நட்ப்பும் ஆழமாகி ப்ரோ வாடா போடாவில் வந்து நிற்க.பாஸ் மச்சான், மாப்பிள்ளைக்கு மாறியது. ஆனால் கிரிஷ் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை அதை பெரிதாக விரும்பவில்லை. அவன் அன்னையிட்ட பெயரே பிடித்து போக, கண்ணா என்றே அதிகமாகவும் அழைக்கத்தொடங்கினான்.அன்று தொடர்ந்த நட்பு தான் அவர்களது.???????????????

"கிரிஷ்!. இன்னைக்கு சாயந்தரம் அவ காலேஜ் விடுற நேரமா அவளை போய் பாக்கலாமாடா?." என கண்ணா கேட்க."என்னடா மந்திரிச்சு விட்டவன் போல ஆகிட்ட?. இது நல்லதில்லைடா!.. யாராச்சும் பாத்தாங்கன்னா இத்தனை நாள் ராமனா வாழ்ந்த உன் பெயர் கெட்டுப்போயிடும்டா!." என்க."பரவாயில்ல கிரிஷ்.

நான் என்னோட சீதையை தான்டா தேடி போறேன். இதில கெட்டுப்போக என்ன இருக்கு?. இன்னைக்கு எப்பிடியாவது அவளை சந்திச்சே தான் ஆவேன்." என்று அடம் பிடித்தவனை அதன் பிறகு தடுக்க யாரால் முடியும்?."சரி விடு!... இப்போ இந்த ராமனுக்கு நான் அணிலா வரணுமா, இல்லனா அனுமனா வரணுமா?." என துடுக்காக கேட்டவனை முறைத்தவன்."நீ எதுவாயும் வரவேணாம். எனக்கு சின்னதா தைரியம் சொல்ல வந்தா போதும்." என்றவன்,"உள்ளுக்குள்ள எனக்கு ஒரு மாதிரி....." என்று அந்த உணர்வினை சொல்ல தெரியாது தடுமாறியவன்."இதெல்லாம் என்ன மாதிரியான ப்பீல்னு வெளிய சொல்ல தெரியலடா! உள்ளுக்குள்ள ஒரு வித பட படப்பாயும், சொல்ல முடியாத சந்தோஷமாவும் இருக்குடா!.

கிட்டத்தட்ட புறாக்கூட்டம் ஒன்னா கூடியிருந்திட்டு கலைஞ்சு பறந்து போகும் போது அதனோட இறகோட சத்தமும் உல்லாசமா அது வானத்தில பறக்கிறதையும் பாப்போமே!. அதேஉணர்வு தாண்டா!..இது வரைக்கும் நான் இதை மாதிரி யார் கிட்டையும் நடந்துகிட்டது இல்லைடா?..

இப்படி உணர்வை கூட உணர்ந்தது இல்லை.

இதே பதட்டத்தோட அவ முன்னாடி நின்னு என் லவ்வை சொல்ல போய். அதை அவ சரியா புரிஞ்சுக்காமல்,

வேற மாதிரி என்னை நினைக்கிறது போல சொதப்பிடுவேனோனும் பயமா இருக்குடா!," என்று மனதில் பட்டதை எல்லாம் பதட்டத்தோடே நண்பனையும் எதிர் பேச்சு பேச விடாது உலறிக்கொண்டிருந்தவன்."டேய் கிரிஷ்!... அவ முன்னாடி போய், நான் தான் நீ நேத்து தேடினவன்னு சொன்னா அவளோட ரியாக்ஷன் எப்பிடி இருக்கும்டா?.." என உள்ளிருந்து வந்த சிலுசிலுப்போடு ஒரு வித எதிர்பார்ப்போடும் கிரிஷினை கேட்கவும்."செருப்பு!...." என்று சட்டென கூறியவன்.

தனது செருப்பு என்ற பதிலில் கண்ணா தன்னை பார்த்து முறைப்பதை கண்டு."என்னமோ தெரியல மச்சான். நேத்துத்தான் இந்த செருப்பே வாங்கினேன்டா!.

சரியான அளவில்லை போல.

காலை கடிச்சிட்டே இருக்கு." என்று தன் காலிலிருந்த செருப்பினை சொல்வது போல் காலினை ஆராய்ந்தவாறே கண்ணா கண்டு பிடிக்க மாட்டான் என்ற பைத்தியகாரனாட்டம் நினைத்து பேச்சை மாத்தியவனை இன்னும் கோபமாக கண்ணா முறைக்க."என்னடா!.. அந்த மாதிரி பாக்கிறா?." என கேட்டவாறு.

"ஓ.. நான் செருப்பெண்டதும் உன் பேச்சுக்கு தான் செருப்புனு சொல்லுறேன்னு தப்பா எடுத்துகிட்டியா?.. என்னை நீ இந்த மாதிரில்லாம் சந்தேகப்பட்டிருக்க கூடாது மச்சா.

இது வரை நட்புக்கு இலக்கணம்னா அது கர்ணன்னு தான் இலக்கியங்கள் சொல்லி கேள்வி பட்டிருப்பே.

இனி வரும் சந்ததி நட்புக்கு இலக்கணம்னா அது கிரிஷ் எண்டு தான்டா சொல்லும். அந்தளவுக்கு உன் நண்பன் உண்மையானவன்டா!." என்றவனை மேலும் கண்ணா முறைக்க."என்னடா!.. திரும்ப திரும்ப முறைக்கிற?. நீ கொடூரம முறைக்கிறதை பாத்தா என் பேச்சை நீ நம்பல போலயே!...

இங்க பாரு கண்ணா!.. நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ. ஆனா நான் அரிச்சந்திரனை விட ஒரு படி மேலடா!..

பொய் என்ற வார்த்தைக்கு பொருள் கூட சொல்ல பிடிக்காதவன்.

ஏன்னா அதில பொய் இருக்கிறதனாலயே அதை நான் சொல்ல விரும்பலன்னா பாத்துக்கோ!." என்று பொய்யாக நண்பன் மேல் கோபப்படுவதுபோல் நடித்தவன் பிடரியில் ஒரு சாத்து விட்டவன்,"ரொம்ப ஓவரா நடிக்காதடா!. உன்னை பத்தி எனக்கு தெரியாது?.

நட முதல்ல. எனக்கு நிறைய வேலையிருக்கு.

அதை முடிச்சிட்டு சாயந்தரமா என்னோட ஆளை பாத்து இன்னைக்கே என் மனசில இருக்கிறதை சொல்லியாகணும்." என அவனை தனது பைக்கில் ஏத்திக்கொண்டு வீடு சென்றான்.

கல்லூரி முடிவடைந்து அரைமணி நேரமாகியும் ஜெசி செல்லும் பஸ்ஸையே காணாததனால்.

அவளது பஸ்ஸில் ஏற்றிவிட்ட பின்னர் தான் தன் பைக்கில் செல்லும் அனுபாமாவோ,"என்னடி ஜெசி!.. இன்னும் உன்னோட பஸ்ஸை கணல்ல?.

ஒருவேளை நம்ம வரக்கு முன்னாடி போயிருக்குமோ?." என ஜெசியின் இல்லாத பயத்தினை தூண்டிவிட்டவள்.

"என்னடி செய்ய போற?. என் வீடு உன் வீட்டுக்கு பக்கம்னாலும் உன்னை என் வண்டியிலயே கொண்டு போய் விட்டிருப்பேன். ஏற்கனவே லேட். உன்னையும் கொண்டுவந்து விட்டதுக்கப்புறம் திரும்புறதுனா ரொம்ப லேட்டாகப்போகுதேடி!.

உன் சித்தி வேற கண்டதையும் பேசி கதை கட்டப்போறாங்களே!.. " என்றவள் ஜெசியின் பயந்த முகத்தினைக்கண்டு."சரி வா!. எனக்கு லேட்டானா எங்க வீட்டில இது தான் பிரச்சினை. அப்பிடினு சொன்னா புரிஞ்சுப்பாங்க.

உன் வீட்டல அப்பிடியா?. சீக்கிரம் ஏறு ஜெசி போகலாம்." என்று அவளை அவசரப்படுத்தும் நேரம்.தூரத்தே ஹாரன் சத்தம் பெரிதாக கேட்க.

ஜெசியும் ஹாரன் வந்த சத்தத்தில் அந்த திசையில் திரும்பி பார்த்தவள்.

"ஏய்!. அது என்னோட பஸ் தான் வருதுப்பா! நீ போய்க்கோ. நான் பஸ்லையே போய்க்கிறேன்." என்றவாறு தன்னருகில் சடேன் பிரேக் போட்டு நின்ற பஸ்ஸில் ஏறியவள், ஜன்னல் வழியாக அனுவிற்க்கு கை காட்டும் போது பஸ்ஸும் கிழம்பத்தொடங்கியது.பஸ்ஸின் குழுங்கலில் தன்னை நிலைப்படுத்த ஒவ்வொரு கம்பியாக பிடித்து பின்னால் இருந்த வெற்றுச் சீட்டில் வந்து அமர்ந்தவள்,

வீட்டில் இனி என்னத்த வைச்சிட்டு சித்தி காத்திட்டிருக்க போறாங்களோ!... என்ற பயம் அவளை தினமும் ஆட்கொள்வதைப்போல் இன்றும் ஆட்கொள்ளாது இல்லை.தினமும் அந்த நேரம் அவள் பஸ்ஸில் அமர்ந்தால் எதற்கும் தயாராகுபவளைப்போல் கண்களை மூடி சித்தி என்ற மந்திரத்தால் மனதினை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு, வர இருக்கும் இன்னல்களை சந்திக்க தயாராகுவாள்.அப்படி கண்மூடிய மறு கணம், "மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தால் ஆழக் கண்டேன்......

மங்கைக்குள் காதல் வெள்ளம்

கங்கை போல் ஓடக் கண்டேன்.......

இன்பத்தின் எல்லையே!..

இல்லையே... இல்லையே.....

அந்தியும் வந்தால்

தொல்லையே.... தொல்லையே.....

காலம் தோறும்..........

கேட்க வேண்டும்...........

காலம் தோறும்.

கேட்க வேண்டும்..

பருமென்னும் கீர்த்தனம்.

பாடப்பாட

பாடப் பாட .....ஜானகியின் காந்தக்குரலில் ஒலித்தப்பாடலில்,

இன்று முழுவதும் பாடம் நடத்தும் போது தன்னை தாங்கியவன் ஸ்பரிஷத்தில் இன்று எப்படி பாடத்தினில் கவனம் இல்லாமல் அவன் நினைவில் தன்னை தொலைத்தவள்,

அந்த வினாடிகளிலேயே மீண்டும் மீண்டும் தொலைத்த தன்னைத் தேடிக்கொண்டிருந்தாள்.இப்போது கூட பஸ் தாமதத்தினால் அவன் நினைவகளுக்கு விட்ட விடுமுறையானது அரைமணி கூட தாக்கு பிடிக்காமல் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது."யாருடா நீ?... எங்க தான் நீ இருக்க?.. உன்னோட ஸ்பரிஷத்தை அனுபவிச்ச என்னால, உன்னோட பாசத்தை அனுபவிக்க முடியுமா? முடியாதா?..

எதுக்குடா என்னை தாங்கி பிடிச்சே?. பேசாமல் விழுந்தா விழுந்திட்டு போனு விட்டிருந்தா இப்பிடியான அவஸ்த்தை எனக்கிருந்திருக்காதுல்ல.

இப்போ பாரு!.

உன் முகத்தையும் பார்க்காமல், நீ யாரு எண்டு கூட தெரியாமல் உன் தொடுகையை மட்டும் வச்சிட்டு எப்பிடிடா உன்னை என்னால கண்டு பிடிக்க முடியும்?.

பாக்கிறவனை பூர என்னை தாங்கி பிடி என் மனதை கொள்ளையிட்டவனை கண்டு பிடிக்கணும் எண்டு கேக்கவா முடியும்?.

இப்போ என்னடா நான் செய்வேன்?. என மனதிற்குள்ளே வருந்தியவளினை,"அம்மாடி!.. என்ன இறங்கலையைா?. நீ இறங்கிற இடம்தான் வந்திடிச்சே!." என்ற கண்டக்டர் குரல் கேட்டு திடுக்கிட்டவள்.

தன் முன்னால் நின்றவரை கண்டு.

சுற்றுமுற்றுய் பார்த்தவள் கவனம் நிலை திரும்பியிருக்க."சாரிண்ணா!.. ஏதோ யோசனையில இருந்திட்டேன்." என்றவாறு,

தன் பையினை தடவி ஒரு அட்டையை எடுத்து அவரிடம் நீட்ட. அதில் சின்னதாக சிவப்பு நிற பேனாவினால் கோடு கீறியவர். அதை அவளிடமே கொடுத்து விட்டு,

"நல்ல பொண்ணுமா நீ.... உன்னால ரண்டு நிமிஷம் லேட்." என்றவாறு அவள் இறங்கும் வரை பொறுத்திருந்தவள் விசிலை ஊத.

பஸ்ஸும் புறப்பட்டது.ஜெசி பஸ்ஸில் இருந்து இறங்கினாலும் உள் பகுதியில் தான் வீடு என்பதால் கொஞ்ச தூரம் நடந்து தான் வீடு சென்றாகவேண்டும்.வீட்டில் ஒரு கார், இரண்டு பைக்குகள் இருந்தும்,

ஒரு சைக்கிள் கூட அவளுக்கு கொடுக்கப்படாமல் அவளை நடராச காரில் தான் அனுப்பி வைப்பார்கள்.

உள்புறம் எழுநூறு மீட்டராவது நடந்து செல்வவேண்டும்.இதுவரை பஸ்ஸால் இறங்கினால் அவளுக்கும் நடப்பதற்கு சலிப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் என்ன செய்வது வீடு சென்று ஆகவேண்டுமே என்ற எண்ணத்தோடு தான் நடந்திருக்கிறாள்.இன்று என்னமோ தெரியவில்லை. தன்னவன் நினைவினில் மனம் மட்டும் காற்றில் மிதக்காமல், அவள் கால்களும் காற்றில் மிதந்தன போல.

சிந்தையை அவனிடம் விட்டு விட்டு பார்வையை பாதையில் பதித்தவள் நடக்கத்தொடங்கினாள்.

இங்கு அவள் வரவை எதிர்பாத்து காத்திருந்த தோழர்கள்.

"டேய் கண்ணா உன் ஆளு வந்திட்டிருக்கா.

சொதப்பாமல் உன் லவ்வ சொல்லிடு ஓகே!." என்று தன் இரு கை கட்டை விரலையும் உயத்திக்காட்ட.

அதுவரை தைரியமாக நின்ற கண்ணாவோ நண்பனின் உயர்த்திய கட்டை விரல்களை தன் கைகளுக்குள் இறுக பொத்தி கொண்டவன்."டேய் ரொம்ப பதட்டமா இருக்குடா!.." என்று முதல் முறை தன் பயத்தினை நண்பனிடம் வெளிப்படையாக காட்டுவதை கண்ட கிரிஷ்.

"என்னடா இந்த மாதிரி பண்ற?.. எப்பிடி பட்டவன்டா நீ?. ஒரு லவ்வை சொல்லவா இந்த மாதிரி பயப்பிடுற. உன்னை பாக்க எனக்கே பயம் வருதேடா!.

கண்ணா செதப்பிடாதடா! இது உன்னோட வாழ்க்கையை நியமிக்க போற ஒரு கட்டம்டா!.

எதை பத்தியும் யோசிக்காமல்,

என்னை மனசில நினைச்சிட்டு போ மச்சான். தைரியம் தானா வரும்." என்றவனை தன் பற்கள் கடியுண்டு நொருங்குவதை போல முறைத்து பார்த்தவன்,

தன் கைகளுக்குள் இருந்த அவனது கட்டை விரல்களை வலிக்கும் அளவிற்கு வளைத்து விட்டே திரும்பியவன்,

தன்னவளை நோக்கி நடக்க தொடங்கினான்.

"மச்சா! என்னை நினைச்சுக்கடா!.." என்று தன் வலி எடுத்த கைகளை உதறியவாறு நண்பனின் பயத்தினை போக்குவது போல் கேலியில் இறங்கியவன் அதே இடத்தில் நின்று கொள்ள,தயங்கியவாறு முன் வருபவளை நோக்கி அடிகளை எடுத்து வைத்தான்."ஹாய் ஜாஷூ பேபி!.." என்று திடீரென யாரோ உரக்க அழைத்ததில் இத்தனை நேரம் தன்னவன் நினைவினில் நடந்து வந்தவள், சித்தம் தெளிந்து திடுக்கிட்டு எதிரே அசையாது நின்றவளை,"என்ன ஜாஷூ பேபி?.. அந்த மாதிரி பாக்குறே?." என்று கண்ணாவினை முந்திக்கொண்டு வந்து நின்ற நிலவனை இமைகள் சுருங்க பார்த்தவள்,

அவன் பின்னால் நின்றவனையும் நிலவனைக் கடந்து எட்டி ஒரு தடவை பார்த்து விட்டு,அலட்டிக்கொள்ளாது நிலவனை கடந்து நடக்க தொடங்க.

"ஏய்!.. நான் உன்கூட பேச தான் என் வேலை எல்லாத்தையும் விட்டிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கேன். நீ என்னடானா என்னை அலட்சியம் செய்திட்டு போறே!." என்றவாறு அவள் முன் போய் நின்று கைகளை விரித்து பாதை விடாது தடுத்து நின்றவனை கண்ட கிரிஷ்.தலை மீது கை வைத்து,

"இவன் இங்கேயும் வந்திட்டானா?.. சுத்தம்.

இனி கண்ணா காதல் உருப்பட்டது போலத்தான்.

இந்த நாதாரி தான் அவன் எந்த காரியத்தை செய்ய போனாலும் முன்னாடி சனியன் போல வந்து நிக்குறான். அவனோட எல்லா விஷயத்திலையும் தன்னோட மூக்க நுளைச்சி அவன் வாழ்க்கையையே நாசம் பண்றதே இந்த நிலவனோட வேலையா போச்சு.!.

முதல்ல இவனை போட்டு தள்ளணும். என்று தனக்குள் புலம்பியவாறு அங்கு நடப்பதை கவனிக்கத்தொடங்கினான்.இனி அங்கே என்ன நடக்கும் ஆவலுடன் பார்க்க தொடங்கினான் கிரிஷ்..

விடியலை தேடி-9
 
பாகம்-9

வான தேவதை பருவம் அடைந்து விட்டதற்கு அடையாளமாக ஆங்காங்கே கரு மேகமாக பருக்கள் வீங்கி வெடிக்கும் தருவாயில் இருந்தன..

காற்று காதலனோ வேகமாக கையசைத்து சைட் அடித்த வண்ணம் இருக்க..

வெக்கத்தில் உருண்டு.. திரண்ட.. மேகம் நாணத்தால் நகைத்து தன் காதலனின் கை அசைவிற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் அதுவும் அதன் பங்கிற்கு தன் காதல் ஈர்ப்பில் அதனின் "ஜொல்லை" மழையாக பொழிய தயார் நிலையில் இருக்க..இருபுறமும் வளர்ந்த நெல் முதிர்கன்னி வளைந்து வயலில் காற்றின் அசைவிற்கு இடைவளைத்து ஆட..காற்றின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க இயலாமையில் ஜெசியின் பாதரச மேனியில் படர்ந்து இருந்த பாவடை தாவணி சற்றே விலகி "" இடையின் இடையே ஒளிந்து இருந்த சிவந்த மச்சத்தை"" காட்டி நகைக்க அதை ஓர கண்ணால் கண்ட கண்ணனின் மனம் மட்டுமல்ல நிலவனின் குணமும் பேதலிக்க செய்தது..சர்க்கரை பாகில் மிதந்த ரசக்குல்லா மேனியின் மீது யார் ஃபியரை ஊற்றினார்களோ செக்க.. சிவர் என்று கோபத்தில் சிவந்து நின்றாள் ஜெசி... அதற்கு தகுந்தார் போல அவளின் சொல் பேச்சு கேளாத ஆடையை சரி செய்ய முடியாமல் தவித்து நிற்க.. அப்பொழுது அந்த தேன் கிண்ண குலோப்ஜான் கண்களில் இருந்து வந்த குர்க்கோரை பார்வையில் மிரள வைத்தாள்..அந்த ஒத்தையடி பாதையில் முறைத்தபடி ஒர் அலட்சிய பார்வை வீசி விட்டு நிலவனை கடக்க எத்தனிச்சவளுக்கு அப்படியே அபேக்கா அவள் முன் போய் நின்ற நிலவன் தன் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு வழி விடாமல் மரித்தபடி கூறினான்..ஜாஷூ பேபி உனக்காக உன்னை தேடி நான் இங்கு வந்து செலவிடும் நொடிக்கு என் பிசினஸ் எவ்வளவு லாஸ் ஆகுமுனு உனக்கு தெரியுமா.. என்ற நிலவனின் இந்த சொல்லிற்கு ஜெசி மட்டுமல்ல கண்ணனுக்கும் அருவருப்பை தந்தது..ஹாலோ மிஸ்டர் உங்கள் கோடியை இழந்து விட்டு என் முன் கை கட்டி நிக்க சொல்லி யார் அழுதா?? ப்ளீஸ் கொஞ்சம் வழி விடுங்க என சொல்லியபடியே நிலவனின் கையை தட்டி விட்டு நடக்க முயன்ற ஜெசியின் ""கையை இறுக்க பற்றினான் நிலவன்""அந்த பிடியில் இறுக்கம் அதிகமாக இருக்க ஒரு பெண்ணின் அதுவும் பூ போன்றவளின் கை பற்றி உள்ளோம் என்ற ஒர் எண்ண உணர்வை மறக்க செய்து இருந்தது ஜெசியின் அலட்சிய பார்வையும் எங்கு தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற பயமும் அவனின் செயலிலும் சொல்லிலும் அதி வேகத்தை கூட்டி இருந்தது. .

ஜெசியின் கையை பற்றி ஒரு சுற்று.. சுற்றி.. தன் அருகில் நிறுத்திய போது அந்த நொடியில் அவன் முகத்திற்கு மிக அருகில் அவளின் முகத்தினை கண்ட நிலவன் அவளின் மதுரச விழி ஒருநிலையில் இல்லாமல் அங்கும்.. இங்குமாய் அலைப்பாய.. ஈட்டி அம்பாய் நெஞ்சை கிழித்து ஓட்டை போட அதற்கு தேன் கனியாக மாதுளை உதடுகள் ஒத்தடம் கொடுக்க நிலவன் அவ்வளவு அருகில் அந்த மோக தீ முகத்தினை கண்ட பின்பு நிலை தடுமாற செய்து தான் போனான்... அவனின் பிடியில் சிக்கியவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள்..

ஜாஷூ மா நான் சொல்ல வந்ததையும்.. வருவதையும் ஏன் பேபி தப்பாவே புரிந்து கொள்கிறே எனக்காக நேரம் ஓதுக்கு என் நிலமையை புரிஞ்ச்சிக்கோ.. மீ பாவம் என்ற போது அப்படியே ஒரு குழந்தையை போல முகத்தை பாவித்தபடி கெஞ்ச தொடங்கினான்..

மரியாதையாக என் கையை விடுங்க நிலவன் .. ( அவ்வளவு எளிதில் மறக்க கூடிய பெயரா?? அது)கையை விட்டா என்னிடம் பேசுவாயா?? என்ற நிலவனின் கையை ஒரு இரும்பு பிடி வந்து பிடித்த படி..ஏய்?? தம்பி யாரு நீ?? அந்த புள்ள கையை விடு என்ற போது பிடி இன்னும் அழுத்தம் கொடுக்க வலியை மறைத்தபடி எதிரில் நின்ற ஆசாமியை பார்த்தான் நிலவன் நல்ல கவுடு.. வஞ்சம் இல்லாத தேகம் கட்டுமஸ்தான உடம்பு சூர்யவம்சம் சரத்குமார் போல வயதும் கிட்டத்தட்ட அதை ஓற்றியே நாப்பத்தி ஐந்து இருக்கும் யார் டா இவன் யாராக இருந்தால் நமக்கு என்ன ஆனா கை பிடி தான் பயங்கரமாக இருக்க செய்ய..

இத கேட்க நீங்க யார்?? என்ற நிலவனுக்கு கோபம் தலையில் ஏறி இருந்தது..நான் யாரா?? அம்மனி யார் இவன் சொல்லு இங்கனவே இவன் உசுர உடம்பில் இருந்து உருவி புடுறேன் என்றவரை ஏறெடுத்து கூட பாக்கம வெடுக்குனு பேசினால் ஜெசி.. அது எல்லாம் ஒன்னும் வேணாம் இது என் பிரச்சினை நான் பார்த்து கொள்கிறேன் நீங்கள் உங்க வேலையை போய் பாருங்க ""சார்ர்ர்ர்???"".. அடுத்தவங்க பிரச்சினைகளில் மூக்கை நுழச்சி நீங்க அசிங்கம் பட்டுக்க வேணாம்.. தெருவில யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் இப்படி தான் முன்ன போய் நிற்பிங்களா?? தெருவில் போறவங்க.. வரவங்க எல்லாம் என் மீது அக்கறை காட்டுறத நான் கொஞ்சமும் விரும்பல உங்க ஜோலியே நீங்க பாருங்க என்னைய எனக்கு பார்த்துக்க தெரியும் என்ற அவளின் சொல்லில் சூடுப்பட்ட பூனை போல நிலவனின் பிடியை விடுவித்தார் முனியாண்டி..அம்மனி நானும் ஊராரும் ஒன்னா??என்றவறை பார்த்து தலைக்கு மீது ஒரு கும்பிடு போட்டா.. உங்களை விட இந்த ஊரார் உயர்ந்தவங்க தான் என்றாள் சுடும் சொல்லாக அவளின் வாயின் வழியாக வலியுடன் வந்து விழுந்த வார்த்தைகளில் கொஞ்சம் நிலை தடுமாறி தான் போனான் அவளை காப்பாற்ற வந்து அசிங்கப் படும் அந்த முரட்டு ஆசாமி முனியாண்டி..வலியை மறைத்து வைத்து இருந்த நிலவன் அவனின் பிடியில் இருந்து வாங்கிய கையை ஒதரியபடியே கையை பார்த்து "உப்.. உப்" என ஊத ஆரம்பித்தால்.. இந்த நொடி பொழுதை லாபகரமாக தனக்கு சாதகமாக அமைத்து கொண்டு அங்கிருந்து நைசாக நடையை கட்டினாள் நம்ம ஜெசி.. அவளின் நடையில் பயம் கலக்க வேகமாக நடைப்போட..இங்குஅந்த முரட்டு ஆசாமி முனியாண்டி நிலவனிடம் திரும்பி தம்பி ஒழுங்கு மறுவாதையாக சீக்கிரமாக இங்கிருந்து கிளம்புங்க.. உங்களுக்கு நேரம் நல்லா இருக்கு அந்த புள்ளையால் உசுரு தப்பிச்சிங்க இனிமேல் சூதானமாக நடந்துங்க இது உங்க பட்டணம் கிடயாது கிராமம் சரி.. சரி கிளம்பு என நிலவனின் தோளை ஒரு தட்டு தட்டி விட்டு "புல்லோட்டை" டொட்.. டொட்.. என்ற பயங்கர சத்தத்துடன் ஓட்டி சென்றான்.. இவை எல்லாம் தூர இருந்து கவனித்த கிரிஷ்க்கு அப்பாடா அங்க நாம இல்ல அவன் உடம்பிற்கு தகுந்த பைக் பா..ஏலே மட சாம்பிராணி பயலே?? வாய்க்குள்ள கொசு போவது போல நின்னுக்கிட்டு எந்த வேலைக்காக வந்தோம் என்பது கூட தெரியுமா அவ ஓடுறாடா.. அட தண்ட தீவிட்டி?? அந்த பொண்ணு சத்தியமாக இவனுக்கு இல்ல.. எவனுக்கோ தான் என புலம்பி தீர்த்துக்கொண்டு இருந்தான் கிரிஷ்..கை வலியில் ஜெசியை மறந்து போனதை நினைக்கும் போது தான் செய்த தவறும் நினைவிக்கு வர என்ன மனுசன் நான் எப்படி அவளின் கையை அப்படி பற்றி இருப்பேன் அதுவும் அவ ஊரில் வந்து எல்லாரும் என்ன நினைப்பார்கள்.. என்ன நினைத்தால் என்ன என்னவளின் கையை என்னை விட பிடிக்க யாருக்கு உரிமையை இருக்கு என்ற நிலவனின்..செய்கையில் கொஞ்சம் கோபமாக போனான் கண்ணன்..என்ன ஒரு ஆணவம் கொஞ்சம் கூட பெண் பிள்ளை என்கிற அறிவே இல்லாமல்.. உன் பிசினஸ் மென்டாலிட்டியே போய் குப்பையிலே போட வேண்டியது தானே அதை வந்து இங்க கொட்டுற இந்த வார்த்தை உன்னிடத்தில் இருந்து வரும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல.. உன்னை யார் இங்க கூப்பிட்டது நான் என்ன நினைத்து வந்தேனோ அவை அனைத்தும் உன் செய்கையால் பாழகி விட்டது என்றவாறே நெற்றியில் கை வைத்து தலை கவிழ்ந்தான் கண்ணன்..என்னை யாரும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்ல எப்ப வருனும்.. எப்படி வரனும்.. என்பது எனக்கு நல்லா தெரியும் ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரேட்டா வருவேன் .. என்ற நிலவன் கண் சிமிட்டி ..என் ஆள பார்க்க நான் வருவேன் அதை தடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு.. உனக்கு இங்கே என்ன வேலை இருக்கு என்க நிலவனின் எண்ணத்திற்கு கொஞ்சமும் இடம் தராமல்..அதற்கு அசராத கண்ணனின் மன நிலையும் எதற்கும் சலித்து போகவில்லை என்ன இது என்ன?? தகுதி இருக்காவா எனக்கு அவளின் அன்பை அடைய எல்லாம் தகுதியும் இருக்கு?? உனக்கு தான் இங்க தேவையில்லாத வேலை.. என்கநிலவன் சற்றென தன் பேண்ட் பின் பாக்கெடில் இடது கையை விட்டு துழவியவன் அப்படி ஒர் ஆணவ சிரிப்புடன் ஒற்றை "சிமிக்கி" ஒன்றை எடுத்தபடி இதை விட வேறு என்ன வேணும் அவளை தொட்ட சிமிக்கி என்ன தொட்டுக்கொண்டே இருக்கிறது..கண்ணனும் விடுவதாக இல்லை.. அவ "சிமிக்கி " இதை நீ திருடி இருப்ப அதுக்கே இந்த பீத்தல்.. ஆனால் "சார்" அவளை தொட்ட சிமிக்கி மட்டுமல்ல அவளை தொட்டு ஒரு ஆணின் ஸ்பரிசத்தை முதன்முதலில் உணர்த்தியவன் அந்த பொன் வண்டு தேகத்தை அப்படியே தரையில் பட்டு விடாமல் பட்டு மேனியில் பட்டும் படாமலும் தொட்டவன் இன்னும் சுருக்கமாக சொல்ல வேணும் என்றா அவள் என் மனைவி ஆக போகிற காதலி புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் இனிமேல் எங்க லைப்பில் குறுக்க வர மாட்டேனு நினைக்கிறேன் காலேஜ் பங்ஷனில் அவள் சொன்ன கவிதைக்கு சொந்தக்காரனே நான் தான்.. அவ விரும்புவதே அன்பும்.. அரவணைப்பும் தான்.. பொன்னும்.. பொருளும் இல்ல இடத்தை காலி செய் என சொல்ல கண்ணனும்.. நிலவனுமாக மாறி.. மாறி போராடிக்கொள்ள இதை மரத்துக்கு பின் ஒளிந்து நின்ற கிரிஷ் வேகமாக வந்து மச்சான் வா.. வா.. போன அந்த முரட்டு ஆசாமி திரும்பி வந்துட போறான் வா கிளம்பு அப்புறம் வரலாம் உன் ஆளை பாக்க போனவன் வந்தான் நம்மளை எலும்பை முறித்து மாவு கட்டு கட்டாமல் விட மாட்டான் போல என இழுத்து கொண்டு அந்த இடத்தை காலி செய்தான்..மழைக்கு முன்பு முந்திக்கொண்டு வீட்டிற்கு செல்ல நினைச்சவளை இவன் வேற வந்து என் நிலைமையை புரியாமல் வழிபறிக்காரன் போல.. அய்யோ இவ்வளவு நாளி ஆகிடே இன்னைக்கு சித்தி இருக்கிற கொஞ்ச முடியையும் அருக்காமல் விட மாட்டா என மனதிற்குள் அழுதபடி ஓடிய ஜெசியை முந்திக்கொண்டு வந்த மழை தொப்பன அவளை நனைக்க செல்ல தயங்கிய படி உள்ளே சென்றவளை பதறியடித்து ஓடி வந்து தன் முந்தானையால் தலையை துவட்டி விட்டாள் பாட்டிமா மழை வந்தா கொஞ்சம் பொறுத்து வர கூடாதாமா என்ற பாட்டியின் காதில் மட்டும் கேட்கும் படி கிசுகிசுத்தா ஜெசி சித்தி எங்க அப்பாச்சி..அவ பக்கத்து வீட்டு ஆறுமுகம் குழந்தை காதுக்குத்து திருவிழாவிற்கு போய் இருக்க வருகிற நேரம் போ.. போ.. போய் தலையை துவட்டிடு .. ஈர துணியை மாத்து.. என்க அப்பாடா இப்ப தான் ஜெசிக்கு உசுரே வந்தது பெருமூச்சு விட்டபடி இடத்தில் இருந்து நகர்ந்து கொல்லைப்புறத்தில் உள்ள அவளுக்கான அறைக்கு போனாள் ஒரே.. ஒரு குண்டு பல்பை தவிர அங்கு சொல்லும் படி எந்த வசதியும் அற்ற சின்ன அறை இயற்கை காற்றை சுவாசித்த படி நசுங்கி நாராக நைந்து போன ஒர் ஓலை பாயும் கை தலையணையும் இரண்டு மூன்று பாத்திரங்களும் மட்டுமே அவளுக்கானது..பசி வயிற்றை கிள்ள ஈர துணியை மாற்றிக்கொண்டு வெளியில் போட்டு போன சுள்ளி எல்லாம் மழை நனைந்த போய் இருக்க கேணியில் நீர் இறச்சி காய்ந்த சுள்ளி.. மட்டை பொறுக்கி அடுப்பை பற்ற வைத்தவள் தண்ணீர் கொதிக்க அடி வயிறும் பசியால் குதித்தது.. அவசரம்.. அவசரமாக ஒலையில் அரிசியை கலைந்து போட்டு வடித்து சுட.. சுட எடுத்து மண் சட்டியில் போட்டு அருகில் இருந்த கிணற்று தண்ணியை மொண்டு ஊத்தி பிசைந்து ஒரு பிடி வாயில் வைக்க போகும் நேரம் கையில் இருந்த சோற்றை தட்டி விட்டு பானை சாதம் பறக்க அப்படியே லாபக்கரமாக லாவி ஜெசியின் முடியை பற்றினாள் சித்தி பூங்கோதை..ஏன்டி எச்சக்கல நாயே உடம்புல எம்புட்டு திமிர் இருந்தால் இப்படி செய்வ கொழுப்பு எடுத்த குந்தானி இருடி உனக்கு மயிறை அறுத்தும் உன் கொட்டம் அடங்கல நான் அம்புட்டு சொல்லியும் யாரும் நம்பல உன்னயை என்ன செய்றேன் பார் என்றபடி பக்கத்தில் இருந்த கொல்லிக்கட்டையை எடுத்து ஜெசியின் பாதத்தில் பதம் பாத்தா இனிமேல் எப்படி நீ காலேஜ் போறேனு பார்ப்போம்.. "ஆஆஆஆ" என ஜெசியின் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வர சூடு போட்டதை கூட ஞாபகம் வைக்காமல் ஜெசியின் முடியின் கற்றை பிடித்து தர.. தர என இழுத்து வருவதை கண்ட அம்பாளம்மா பாட்டி தன் வாயிலும்.. தலையிலும் மாரி.. மாரி அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார்..பூங்கோதை ஏன் வந்ததும் வராதுமா அந்த குழந்தையை போட்டு அடிச்சி இப்படி கொலைவெறி புடிச்சி அலையிற அந்த குழந்தை என்ன பாவம் பண்ணினா உனக்கு அவ முடியை அறுத்துமா வெறி அடங்கல என்க அம்பாளம்மா பேச்சில் இன்னும் சினமானவள்..இந்தா.. இந்தா.. இந்தாங்க உங்க பேத்திய நீங்களே தாலாட்டி சீராட்டி உங்க பேத்தியை பார்த்துங்க என்ற போது தான் ".. அம்பாளம்மா பாட்டி தான் செய்த தவற்றை உணர்ந்தார் அய்யோ இவ கொடுமை தாங்காமல் தான் குழந்தையாக இருக்கும் போது இவ மாமன்காரன் வீட்டில் போய் விட்டேன் அங்க இருந்த மாமிக்கார ராட்ஷசி இவ மேலே பொய்யான திருட்டு பட்டத்தை கட்டி .. அனுப்பிட்டா புள்ளை போக்கிடம் இல்லாமல் தவித்து நிற்க இது நாள் வரை பூங்கோதை செய்யும் கொடுமையில மூக்கை விடாத நான் இப்ப அவசரம் பட்டு விட்டு.. விட்டேனே வயசு பொண்ணு கூட்டிக்கொண்டு வெளியே போனு சொன்னான எங்க போவேன் இந்த ஒரு கருமத்துக்காக தானே இத்தனை வருசம் பொருத்து இருந்தேன் அவளை ஒருவரின் கையில் பிடித்து கொடுத்து விட்டா நான் நிம்மதியாக கண்ணை மூடுவேன் இப்படி பால் பொங்கி வரும் நேரத்துல பானை உடைச்சிட்டேனே என்ற அம்பாளம்மா பாட்டியின் மன ஓட்டத்தை கண்டுக்கொண்டவளாய் தொடர்ந்தாள் பூங்கோதை நான் இது எல்லாம் என் நல்லதுக்கா செய்கிறேன் வயசு பொண்ணு கண்டிக்காம விட்டா உன் பொண்ணா இருந்தா இப்படி தறிக்கெட்டு போக விட்டு இருப்பீயா என ஒருத்தி பல்லு மேலே நாக்கை போட்டு பேசிட கூடாது என்னும் நல்ல எண்ணத்திலே தான் இப்படி செய்தேன் எனக்காகவா செய்தேன் என மூக்கை ஊறிஞ்சி எதிரில் இருந்த தூண் மீது எறிந்தவ இந்தா புடிங்க உங்க பேத்தியே அவ செய்த காரியத்தை கேளுங்க என்க..அம்பாளம்மா பாட்டி செய்வதறியாது நிற்க.. சித்தியின் பிடியில் இருந்து தப்பிய மானாக பாட்டியிடம் தஞ்சம் தேடி ஓடின ஜெசி.. தன் அருகில் வந்த பேத்தியை வஞ்சவுடன் தடவியபடி என்னமா?? செய்த நீ... என்றபடி அவளின் கண்ணீரை துடைத்தபடி கேட்கும் பாட்டிக்கு பதில் உரைக்க வழியின்றி விழி பிதுங்கி நின்றவளை .. பார்த்த பூங்கோதை அதான் உன் பாட்டி கேக்குறாங்களே வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சி இருக்க.. சொல்ல வேண்டியது தானே..அது.. வந்து.. அது.. சித்தி என ஜெசி இழுவையை பலமாக இழுக்க..அட கூருக்கெட்ட கழுத.. கொழுப்பெடுத்த நாயே.. என்ன வந்து.. போய்னுட்டு.. நீ ஊர் மேஞ்ச்சிட்டு உன்ன இப்ப என்ன செய்தா அடங்குவ இப்பவே மருவாதையா நீ சொல்றியா இல்ல நான் விலாவரியா விலக்கவா.. என தன் பல்லை நற.. நற.. என கடிக்கும் சித்தியை பார்த்த ஜெசிக்கு அடி வயிற்றில் புளி கரைத்தது.. அய்யோ இந்த நிலவனால இப்படி என் சித்தி இடம் சிக்கி.. சின்னாபின்னமாக பேறேனே "" விநாயக "" இதிலிருந்து காப்பாற்றி விடுபா என கண்களை மூடி மனதிற்குள் மண்டியிட்டு வேண்டியவளை.. பதில் ஏதும் சொல்லாமல் அசைவின்றி நிற்கும் தன் பேத்தியை பார்த்த அம்பாளம்மாக்கு அவளின் கண்களை மூடி இருந்ததில் மேலும் பயம் கவ்வி கிடப்பது அவ்வளவு அப்பாண்டமாக தெரிய மௌனமாக பூங்கோதை பக்கம் திரும்பிய அம்பாளம்மா பார்த்தார்..என்ன உம்மல பேத்தி இடமிருந்து எப்படி பதில் வரும்.. அதை நான் சொல்லட்டா என்ற சித்தி இடம் இருந்து உதிர்த்த வார்த்தையில்..அப்படியே உயிர் கொலைந்து போனவளாய்.. சித்திக்கு தெரிந்து விட்டாதா நிலவன் தன்னிடம் வம்பு பேசியது என நினைத்த ஜெசியின் காலிற்கு கீழே பூமி மெல்ல நழுவி செல்வதை போல உணர்ந்தவளுக்கு கண் எல்லாம் இருட்டிக்கொண்டு வர நிலை தடுமாறியவளுக்கு பசி மயக்கத்துடன் பயம் சேர்ந்து கொள்ள தட்டு.. தடுமாறி தூணில் கை வைத்தவள் அப்படியே சரிய தொடங்கினாள்.. பாட்டியின் அலறல் சத்தம் கொஞ்சம்.. கொஞ்சமாக குறைந்த படி இருக்க..அந்த சமயத்தில் வாசலில் செருப்பை கழற்றிய படி வந்த தன் கணவனிடம் முந்திக்கொண்டு ஓடினாள் பூங்கோதை..அப்படி அவள் ஜெசி பற்றி என்ன கட்டுக்கதை கட்ட போகிறாளோ?? என்ற பயத்தில் மூழ்க்கினாள் அம்பளம்மாள்???

விடியலை தேடி -10
 
பாகம்-10

காலையில் இருந்து பசிமயக்கத்தில் இருந்தவள் இப்போது பூங்கோதையின் திட்டல்களும், காலில் பட்ட சூடும், நிலவனால் புதிதாக சித்தியின் வாயிலிருந்து கட்டுக்கதையாக வர இருக்கும் வசைமொழிகளையும் நினைத்து பதறியதனாலோ என்னமோ!..

கண்கள் இமைகளுக்குள் சொருக, அருகிலிருந்த தூணினை பற்றியவள் அதனோடே ஒட்டிக்கொண்டு மயங்கி சரிவதை கண்ட அம்பாளம்மா!."ஐய்யோ என் பேத்தி!." என்று பதறியவராய் தரை தொடும் முன் அவளது தலையினை தாங்கிப்பிடித்தவள்,"பாவம் என் புள்ள காலையில இருந்து சாப்பிடாமல் இருந்து இப்போதான் கையில அகப்பட்டதை எல்லாம் கொண்டு சமைச்சு சாப்பிடப்போனவளை இப்பிடி இரக்கமே இல்லாமல் அடிச்சே சாகடிக்கிறியே!... நீ எல்லாம் பொண்ணு தானா?.. உன்னக்கும் ரண்டு புள்ளைங்க இருக்கிறாங்களேடி!. அதுங்கள ஒரு நாளாவத இந்த மாதிரி அடிச்சு கொடுமை படுத்தியிருப்பியா?.. தினமும் இதே போல கொடுமை படுத்தினால் புள்ளை தாங்குவாளாடி!... அவளும் நம்மள போல தோளும் தசையுமா இருக்கிற சாதாரண மனுஷி தானே?.

ஏதோ அவ உடம்பு மட்டும் இரும்பால செய்து வைச்ச மிஷின் மாதிரி தொட்டதுக்கெல்லாம் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சா பிஞ்சு தேகம் தாங்குமா?.." என கத்தி ஆரவாரம் செய்ய அம்பாளம்மாவையே உள்ளுக்குள் சிறு பயம் படர உத்து பார்த்தவாறு இருந்தவளும் ஜெசி சட்டென மயங்கி சரிவாள் என்று எதிர்பாக்கவில்லை.இந்த மாதிரி ஒரு போதுமே ஜெசி மயக்கம் கொண்டதில்லை எனும் போது அவளுக்கும் சிறு பயம் தொற்றிக்கொள்ளத்தான் செய்தது.அதே நேரம் தூரத்தே வரும்போதே திறந்திருந்த கதவு வழியே நடப்பவை என்னவென்று புரியவில்லை என்றாலும் ஜெசி மயக்கம் கொண்டு சாய்வதை கண்ட தணிகாசலம். வாசலில் அவசரமாக செருப்பை கழட்டுவிட்டு ஜெசியை நோக்கி உள்ளே வருபவரை கண்டு கொண்ட பூங்கோதை.எங்கு தன்மேல் பழி திரும்பி விடப்பாகிறதோ என்று பயந்தவளாய்,அம்பாளம்மா அம்மாவை முந்திக்கொண்டு தன்மேல் தவறில்லை என்பதைப்போல் பேச்சினை திசை திருப்புவதற்காய் தன் கணவன் முன் ஓடி வந்து நந்தி போல் நின்றவளை பொருட்படுத்தாமல் தன் இடது கரத்தினால் அவளை ஓரங்கட்டியவர், ஜெசியை நோக்கி ஓடிவந்து."ஜெசி...!.. ஜெசிம்மா!." என பதட்டமாகவே கன்னம் வருடியவர் அன்பான அழைப்பை கேட்கத்தான் ஜெசி சுயநினைவில் இல்லை.தான் அழைத்தும் அவள் கண் விழிக்கவில்லை என்றதும் பதறியவராய்,

பூங்கோதை புறம் திரும்பியவர்,"தண்ணி கொஞ்சம் எடுத்திட்டு வா பூங்கோதை." என்க.பூங்கோதையோ "நானா?.." என கேட்க.

ஏன் உனக்கு வேற ஏதாச்சும் பெயர் வைச்சாச்சா என்ன?. உன்னைத்தான் சொன்னேன். எதுக்கு நானா எண்ட இந்த கேள்வி? ஏன் நீ எடுத்துவர மாட்டியோ!." என தணிகாசலத்தின் ஒற்றை புருவம் ஏறி இறங்கியவன் கேள்வியில்,

இவளுக்கு நான் பணிவிடை செய்யணுமா?. என்றது போல் பூங்கோதை கைகட்டி அசையாது நிற்பதை கண்ட தணிகாசலம்."என்ன பூங்கோதை?. காது கேக்கலையா? உன்னை தண்ணி எடுத்திட்டு வர சொன்னேன்." என்று கோபமாகவும் அழுத்தமாகவும் கூறியவன் பேச்சினில்,

அவனை ஒரு முறை முறைத்து பார்த்தவாறே தன் முந்தானையை கையில் பிடித்து வேண்டாவெறுப்பாக உதறி தன் கோபத்தினை பறைசாற்றியவாறு உள்ளே சென்றவள் மறு நொடியே செம்பு நீரோடு அவன் எதிரே நின்று ஓங்கி செம்பை அவன் கைகளில் திணிப்பதைப்போல் நீர் குழுங்கி தரையில் சிதறும் அளவிற்கு அவனிடம் கொடுத்து விட்டு ஓரமாக நின்றவள் பார்வையெல்லாம்.என்னையே உனக்கு வேலைக்காரியாக்கிட்டல்ல. இருக்குடி இதுக்கெல்லாம் சேத்து உன்னை நான் தொம்சம் பண்ணல. நான் பூங்கோதை இல்லடி. என மனதுக்குள் கருகியவள் மயங்கியிருந்த ஜெசியை வஞ்சமாக பார்த்தவாறு ஓரம் கட்டினாள்.தணிகாசலமோ மயங்கி கிடந்த மகள் முகத்தினில் தண்ணிரை தெளித்தவர்,

"ஜெசி!.. ஜெசிம்மா!." என அவளை தட்டி எழுப்பி பார்க்க. அவளோ மயக்கத்திலிருந்து மீளாமல் இருக்கவும், தாயை பதற்றத்துடன் பார்த்தவன்.

"என்னாச்சும்மா?. ஏன்ம்மா இவ தண்ணி தெளிச்சும் எழும்பல?." என கவலையாக கேட்டவனிடம்."தெரியல தணிகா.

இப்போ கொஞ்சம் முன்னாடி தான் காலேஜ் முடிஞ்சு புள்ள வந்து அடுப்பு மூட்டி ஏதோ செய்து சாப்பிட போன புள்ளையை உன் சம்சாரம் தான்ய்யா இவ ஏதோ தப்பு பண்ணிட்டாள்னு இழுத்துட்டு வந்து அடிச்சா.

என்னனு கேட்டா அதை சொல்லாமல், இவளையே கேளுன்னு சொல்லி புதிர் போடுற.

அவளுக்கும் தான் என்ன தப்பு பண்ணேன்னு தெரிஞ்சாத்தானேய்யா அவளாலையும் சொல்ல முடியும்.என் பேத்தி எதுவுமே செய்திருக்க மாட்டாடா!.உன் சம்சாரம் தான் தப்பா புரிஞ்சுகிட்டு வயசு பொண்ணென்னு கூட பாக்காமல் தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை அடிக்கிறாடா!." என மகனிடம் குறைபடவும்.சிறிது நேரம் நடப்பவற்றை பார்த்தவாறு ஓரமாக ஒதுங்கி நின்ன பூங்கோதையோ,

"ஆ..., ஆனா ஊனா என்மேல குத்தம் கண்டு பிடிச்சு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில எப்பிடிடா சண்டை மூட்டி விட்டு குளிர்காயலாம்னு எதிர்பாத்திட்டிருப்பிங்களாத்தை?." என கேட்டவாறு வந்தவள்."எப்பிடி? எப்பிடி?.. நான் தான் இந்த மகாராணி அம்மாவை தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசுறேனோ?..

ஆமா பாருங்க. உங்க பேத்தி சீரும் சிறப்புமா சும்மா ஜெகஜோதியா வாழுற.

அவ அந்த மாதிரி வாழுறதில எனக்கு பொறாம பொங்கிட்டு வந்து இல்லாத பழி எல்லாம் அவமேல நான் தான் தூக்கி போடுறேன்." என்று வழமையாக பேசும் தொரணையில் பூங்கோதை எடுத்தெறிந்து அம்பாளம்மாவை பேசியதை கேட்ட தணிகாசலமோ,"பூங்கோதை உன் வாயை கொஞ்சம் மூடுறியா?. இங்க என்ன நடந்திட்டிருக்கு நீ என்ன பேச்சு பேசுற?..

நானே என் பொண்ணு மயக்கமாகி பேச்சு மூச்சு இல்லாம கிடக்கிறாளே என்னாச்சோன்னு தெரியாமல் பதறிட்டிருக்கேன்.

நீ என்னடானா எந்த வித உறுத்தலும் இல்லாமல் அம்மாகூட வாக்குவாதம் பண்ணிட்டிருக்க." என முதல் முறையாக மனைவிமேல் எரிந்து விழுந்தவர் பேச்சை நம்பமுடியாது வாயடைத்துப்போய் கணவரையே அதிசயத்தோடு பார்த்தவள் எதுவும் பேசாது சுவற்றோடு ஒன்றிக்கொள்ள. அவளை ஒரு பொருட்டாகவே நினையாது.கையில் இருந்த செம்பு நீரை

"அம்மா இதை பிடிங்க."

என்று கொடுத்து விட்டு,

தரையில் கிடந்தவளை தன் கையில் ஏந்தியவர்,

தன் தாயின் அறையை நாடிச்செல்வதை கண்ட அம்பாளம்மாவும் அவன் முன்னால் ஓடிவந்து கதவினை திருகி திறந்து விட,

உள்ளே சென்ற தணிகாசலமும் அங்கு பஞ்சினால் ஆன மெத்தைமேல் ஜெசியை படுக்க வைத்தவன்,

ஜெசியையே ஆராய்ந்தவாறு வந்த தாயிடம்."அம்மா கூடவே இருந்து பாத்துக்கோங்க. என்னனு தெரியல எதுக்கு இவ எந்திரிக்கலனு குழப்பமா இருக்கு.

எனக்கென்னமோ இவளுக்கு பயத்தினால வந்த சாதாரண மயக்கம் போல தான் இருக்குமோனு தோணுது.

ஒரு பதினைந்து நிமிஷம் பாக்கலாம்மா. அப்பிடியும் எழுந்துக்கலன்னா டாக்டரை கூப்பிடுவோம்." என்றவர் ஜெசியின் அருகில் வந்து அவளது தலை முடியினை வருடி விட்டவர்,

அவள் நெற்றிமேல் வியர்வை முத்துக்களாய் துளிர்த்திருப்பதை கண்டுவிட்டு. அந்த அறையினில் மாட்டப்பட்ட மின் விசிறியை ஆன் செய்தவர்,

மறுபடியும் ஜெசி அருகில் வந்து அவளை வருடிக்கொடுத்தவனை பார்த்துக்கொண்டிருந்த அவன் தாயிற்கு தான் சற்றும் இதை நம்பமுடியவில்லை.

ஜெசியின் முதலாவது வயதிற்கு பிறகு இன்று தான் அவளை இந்த மாதிரி அன்போடு வருடியிருக்கிறான்.

அதுவும் சாதாரணமாக அல்ல.

முகத்தில் அவளது அன்பு தனக்கு கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்துடன் கூடிய மென்மையான வருடல் தான் அது.சிறு நிமிடம் அவளையே பார்த்திருந்தவன் மனம் என்ன நினைத்ததோ தாயிடம் கண்ணசைவில் உத்தரவிட்டு விட்டு வெளியே சென்றவன்.தன் வரவையே எதிர்பார்த்திருந்த பூங்கோதையின் முன் மார்புக்கு குறுக்காக கைகட்டி நின்று."சொல்லு பூங்கோதை?.. என் பொண்ணு நீ அடிக்கிற அளவுக்கு என்ன தப்பு பண்ணா?" என்று ஒரு மாதிரியாகவே கேட்க.இதுவரை தன் மகள் மேலான இந்த உரிமையான பேச்சைுயோ, எதிர் கேள்வியையோ அலட்ச்சிய பார்வையையோ பூங்கோதையும் கண்டிராததனால்,

இன்று அவன் தடாலடியாக தன்னை எதிர்த்து முன்னின்றவனை கண்டு

எங்கே கணவன் கட்சி மாறிவிடுவானோ என சற்று தடுமாறியவள்.பின் "நான் என்னங்க செய்தேன்?.. எல்லாமே உங்க பொண்ணு தான்." என்க.

அவளை ஓரக்கண்ணால் பார்த்த தணிகாசலம்.

"எனக்கு ஒன்னு மட்டும் புரியல பூங்கோதை. அது என்ன உங்க பொண்ணு?. நீயும் அவளுக்கு அம்மா தானே!. என் பொண்ணுன்னு பிறிச்சு பேசுற!..

உன்னை நான் கட்டிக்கிட்டதே அவளை நீ அம்மா ஸ்தானத்தில இருந்து பாக்கணும் எண்டு தானே. ஆனா நீ அவளுக்கு சித்தி மாதிரி நடந்துக்கிட்டதுமில்லாமல், என்னையும் அவளை இத்தனை நாளா வேற ஒருத்தி மாதிரி பாக்க வைச்சிட்டில்ல." என்று கேட்டவன் பேச்சு மொத்தமும் இதுவரை இல்லாது தன்னை குறை கூறுவதை போலிருக்க.எதுவும் பேசாது தரையையே பார்த்தவள் தன் குறுகிய மனப்பாண்மையை தூர போட்டு விட்டு. தன்மேல் பிழையே இல்லாதவளைப்போல்.

"ஆமாங்க என் பொண்ணுதான் யார் இல்லனா.

ஆனா நம்ம பொண்ணு பண்ணிட்டு வந்த காரியம் என்னனு கேட்டிங்களா?.

அதை மட்டும் கேட்டீங்க இவ நம்ம பொண்ணே இல்லனு நீங்களும் சேர்ந்து பேசுவீங்க." என சீறியவளிடம்."அப்பிடியா பூங்கோதை?. அப்பிடி அவ என்ன பண்ணி வைச்சா?" என்றவன் பேச்சினில் மீண்டும் அலட்சியம் கண்டவள். அதை தனது முகத்தில் பிரதிபலிக்காமல்."என்ன பண்ணாளானா கேக்கிறீங்க?.. இந்த மகாராணி இன்னைக்கு அந்த முரட்டு பயகூட பேசிருக்கா தெரியுமா உங்களுக்கு?.

அவ எல்லாம் ஒரு மனுஷனாங்க?. அவன் கூட எல்லாம் இவ எதுக்கு பேச்சு வச்சுக்குறா?

அவங்க பண்ண வேலைக்கு அவன் முகத்தில இவ முழிக்கலாமா?.

என்ன புதுசா அவன் கூட உறவு கொண்டாட பாக்கிறாளா உங்க பொண்ணு?

இவ இந்தமாதிரி தெரிவில நின்னு பேசினத யாராச்சும் கண்டிருந்தாங்கனா யாரை இந்த உலகம் குத்தம் சொல்லும்.இவளையா?.. இல்லையே நம்மள தானே!..நம்ம தான் இவளை ஏதோ கொடுமை படுத்தினாதாவும், அதனால போக்கிடம் இல்லாமல் இவன் கூட உறவு வச்சுக்கிட்டதாவும் நம்மளை அசிங்கமா பேசாது?.

ஏன் ஒரு தடவை பட்ட அனுபவம் போதாதா உங்களுக்கும் சரி, அவளுக்கும் சரி. உங்களோட சேர்ந்து நானும் தானே அசிங்கப்பட்டேன்.

பெரிய மாவிரனோ அந்த முனியாண்டி பயல்?.

ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கண்ணில இதுங்க ரண்டும் அகப்படணும் அப்போ ரண்டு பேத்தையும் சேத்து வைச்சு நடு தெருவுனு பாக்காமல் நாக்க புடுங்கிறது போல கேக்கிற கேள்வியில கட்டியிருக்கிற வேட்டியையும் கழட்டிட்டு கோமணத்தோட போக வைக்கல்ல நான் பூங்கோதை இல்லங்க." என சாதாரணமான பேச்சில் தொடங்கி,கோபமா கர்சித்தவளை கேள்வியோடு பார்த்தவன்."என்ன சொல்லுற பூங்கோதை?. முனியாண்டி நம்ம ஊருக்கு வந்தானா?. அவ எதுக்கு வந்தா?.." என தணிகாசலம் மறு கேள்வி கேட்க."ஆ.... இப்போ என்கிட்ட கேளுங்க.துரை எதுக்கு இந்த ஊரு பக்கம் வர போராரு.எல்லாம் உங்க பொண்ணை உறவு கொண்டாட தான்.ஏற்கனவே அவமேல உரிமை கொண்டாடி ஊர் முன்னாடி நம்மளை அசிங்கப்படுத்தினது பத்தாதாமா துரைக்கு.

இன்னும் என்னத்துக்கு இவளை தேடுறாராம்?." என உதடு வளைத்து பேசியவள் பேச்சினை கேட்டவன்."உனக்கு எப்பிடி தெரியும் பூங்கோதை?. நீ ஏற்கனவே சொன்னதை வைச்சு பாக்கும் போது இவ கூட அவன் பேசி நீ நேரில கண்டது போல தெரியல்ல.

உனக்கு யாரு சொன்னது இவ அவன்கூட பேசினாள்னு?. என கேட்டவனிடம்."ஆ... நான் பாக்கலத்தான்க. ஆனா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவனை ஊர் எல்லையில பாத்ததா அண்ணா போன் பண்ணி சொன்னாரு.

இவளும் இப்போ தான் மழையில நனைஞ்சிட்டு வந்ததா தெரு முனையில இருக்க கமலா, ஏன் பூங்கோதை உன் பொண்ணுக்கு ஒரு குடை வாங்கி தரமாட்டியா?.. பாவம் பொண்ணு மழையில நனைஞ்சிட்டு போறாளே!. அவளையும் கொஞ்சம் கவனியேன்னு கூப்பிட்டு சொல்லுறா. ""இவளுக்கு காலேஜ் விட்டு ரொம்ப நேரத்துக்கப்புறம் தான் மழையே வந்திருக்கு.அது வரையிலும் இவ எங்க ஊர் மேஞ்சிட்டு வந்தா.

அந்த தடியன் முனியாண்டி கூட ஊர் மேஞ்சாளா?.." என கணவனை கேட்டவள்."இங்க பாருங்க. அந்த கமலா இவ மழையில நனைஞ்சதையே தப்பு போல என்கிட்ட கேக்குறா.

இவ அந்த தடியன்கூட நின்னு பேசினதை பாத்திருந்தாள்னா ஊர் ஊரா வேற மாதிரி சொல்லியே என் மானத்தை வாங்கிருப்பா." என கூறியவளிடம்."பூங்கோதை!.. என உரக்க அழைத்தவன்,அவளை கோபமாக முறைத்தவாறே "என்ன பேசுறீனு தெரிஞ்சு தான் பேசுறீயா?. நீ ஜெசியை யார் கூட வைச்சு தப்பா பேசுற தெரிஞ்சு தான் பேசுறியா?.. வார்த்தைக்கும் ஒரு வரம்பு வேணும் பூங்கோதை. நாக்குக்கு நரம்பு வேண்டாம் ஆனா வார்த்தைக்கு கண்டிப்பா வரம்பு வேணும்.

அடுத்தவன் என்ன நினைப்பான் என்கிறத விட நம்ம சரியா நினைக்கிறோமா?. நம்ம பொண்ணை நாம நம்புறோமா? என்கிறது தான் முக்கியம்.

என் பொண்ணு ஒன்னும் தரம் கெட்டவ கிடையாது.

அவ எல்லா விஷயத்திலும் அவ அம்மா மாதிரி.

நீ அவளை பத்தி என்கிட்ட புதுசா சொல்லாத. அப்புறம் இனி அவளை ரொம்ப மேசமா நடத்துற வேலை எல்லாம் வேண்டாம்.

உன்னை நான் கல்யாணம் செய்து கிட்டதுக்கு காரணமே அவளுக்கு நீ அம்மாவா இருப்பேனுதானே தவிர சித்தியா இல்லை.இனிமேல் அதுவும் உன் மனசில பதிச்சுக்கோ.அவ இந்த வீட்டில இனி இருக்க போறது கொஞ்ச நாள் தான். அப்புறம் அவளுக்கெண்டு ஒரு வாழ்க்கையை அமைச்சு அனுப்பிடப் போறோம். இனியாவது அவ இந்த வீட்டில சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்.

அண்ணா சொன்னார். கமலா சொன்னானு, உன் கண்ணால எதையும் பாக்காமல் ஜெசிய தொல்லை பண்ணேன்னு வைச்சுக்கோ அப்புறம் நான் பொல்லாதவனாகிடுவேன்." என கூறியவன்

முன்னால் இருந்த ஷோபாமீது கோபமாகவே அமர.கணவனது இன்றைய பேச்சினை பூங்கோதையால் நம்பவே முடியவில்லை.

இப்படி பேசுவது தன் கணவன் தானா?. இத்தனை நாள் மகள் மேல் இல்லாத பாசம் இன்று எப்படி தீடீர் என்று என நினைத்தவள்,

நிலமை கைமீறி போவதை உணர்ந்து.கண்களிலோ இதுவரை கணவன் கண்டிராத கண்ணீர் உற்பத்தியாக்கி.

தன் கண்களை கசக்கியவள்."புரியுதுங்க...... நீங்க சொல்ல வரத புரியுது.நான் என்ன வேணும்னா இவ மேல பழியை தூக்கி போடுறேன்.

நாளைக்கு இன்னொரு இடத்துக்கு வாழப்போறவ.

ஊரோட அசிங்க பேச்சுக்களுக்கு ஆளாக வேணானேனு நினைச்சது தப்பா!..

எப்பிடி இருந்தாலும் இவ என் பொண்ணு இல்லத்தானே.

இவளை அடிக்கவோ, தட்டிக்கேட்கவோ எனக்கு எந்த உரிமையும் இல்லை. அதனால தானே நான் உரிமையா அவளை அடிச்சதை நீங்களும் உங்க அம்மாவும் பெரிய குத்தம் செய்ததை போல கத்திபேசுறீங்க." என போலி நீரை கண்களில் கரைத்து விட்டவள். கணவனை நிமிர்ந்து பார்க்க.அவனுக்கோ அவளது நாடகம் புரிந்ததனால் அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்.

"மனுஷன் நிம்மதியா வேலை பாத்திட்டு வீட்டுக்கு வர முடியுதா?. தினமும் சீரியல்ல வர மாதிரி

எப்போ பாரு ஒரு செத்தவீடு காத்திட்டிருக்கும். ச்சைய்!....." என எழுந்து தனதறைக்கு ஓட.கன்னங்களில் போழியாக வடித்த கண்ணீரை போகும் கணவனையே ஆராய்ச்சியாய் பார்த்தவாறு புறங்கையினால் அழுத்தி துடைத்தவள்.

"என்னாச்சு இவருக்கு?. இந்த மாற்றம் எனக்கு நல்லதில்லையே!..

ஆனா ஒன்னு இனி எல்லாத்திலயும் கொஞ்சம் கவனமா தான் இருக்கணும் போல." என நினைத்தவள்,"எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த மூதேவிய எவன் தலையிலயாவது கட்டிக்குடுத்தால் தான் எனக்கு நிம்மதி." என வாய்விட்டே புலம்பியவாறு அந்த இடத்தை காலி செய்ய.இங்கு மகனும்கும் மருமகளுக்கும் நடந்த அத்தனை வாதபிரதிவாதங்களையும் மடி மீது படுத்திருந்த ஜெசி தலையினை வருடிவிட்டவாறு திறந்திருந்த தன் அறைக்கதவு வழியாக கேட்ட அன்னம்மாளோ,மெதுவாக அவள் தலையினை பற்றி மெத்தைமேல் வைத்து விட்டு, எழுந்து சென்று அறை கதவினை அடைத்து விட்டு வந்தவர்."அடியேய் நாடகக்காரி!... மயக்கம் போட்டது போல நடிச்சது போதும் எழுந்திருடி!.." என எழுப்ப.

ஜெசியோ மயக்கத்தில் அசையாது படுத்திருந்ததை பார்த்தவர்.

"அடியேய் சிரிக்கி!... என்கிட்டவே உன் நாடகத்திறமையை காட்டுறியா?. எடு அந்த விளக்குமாத்தை." என போலியாக மருட்டத்தொடங்கினாள் அம்பளம்மாள்....


விடியலை தேடி -11
 
Status
Not open for further replies.
Top