எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கிருஷ்ண தாணு ரதி - என் தேடலும் நீ.. ஊடலும் நீ.. கதை திரி

Status
Not open for further replies.
வணக்கம் தோழமைகளே, என் தேடலும் நீ... ஊடலும் நீ.. கதை இந்த திரியில் பதிவிடப்படும்.. அனைவரும் படித்து மகிழுங்கள்..

நாயகன் : அர்ஜூன்
நாயகி : சங்கமித்ரா
 
அத்தியாயம் 01

சூரியன் செங்கதிர் பட்டு அந்த ஏழு மாடி கட்டிடம் சூரியனுக்கு நிகராக ஜொலித்தது....

அந்த கட்டிடத்தின் 05வது மாடியில் எஸ் வி குரூப்ஸ் மீட்டிங் ஹாலில்.... அயல் நாட்டவரும், நம் நாட்டவரும் அமர்ந்திருக்க அனைவரையும் தன் ஆளூமையான கர்ஞனையால் தலையாட்ட வைத்துக்கொண்டிருந்தான் எஸ் வி குரூப்ஸ் ன் எம். டி. அர்ஜூன் விஸ்வநாதன்.

ஆறடி இரண்டங்குல உயரம். மாநிறம், வெல் எக்சசைஸ்டு பாடி என்ற உடற்கட்டு. லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை.. அழுத்தமானவன் என்பதை காட்டும் உதடு. அந்த மீட்டிங்கின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிசினஸ் டீலீங்கை தன் வசமாக்கிக் கொண்டான் .

பின்பு அவன் சொகுசு காரில் ஏறி கடற்கரை சாலையில் கார் ஜன்னல்களை திறந்தவாறு அந்தக் கடல் காற்றோடு பயணித்துக் கொண்டிருக்க, அன்று நிகழ்ந்த அலுவலக நிகழ்வுகளை மனதில் மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தான் .

அப்போது அவனுடைய அலைபேசி அடிக்க அதை எடுத்து....

“ஹலோ...”

என்று கூற எதிரில் இருந்தவர் பதட்டத்தோடு...

" தம்பி, ஐயா உங்கள அவசரமாக பாப்பா படிக்கும் காலேஜுக்கு வரச்சொன்னாரு...”

என்று கூறிவிட்டு அழைப்பை அனைத்துவிட்டார். உடனே இவன் தன் தந்தைக்கு கால் செய்ய அவருடைய அலைபேசியோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இவனோ தன் மனதில்....

‘அந்த ராட்சசி இப்போது என்ன செய்து வைத்திருக்ககிறாளோ....’

என்று நினைத்து படி காரை வேகமாக இயக்கினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த காலேஜ் நுழைவாயிலை அடைய அங்கு ஒருவரும் இல்லை.... பின்பு அங்கு வந்து கொண்டிருந்த சிலர் காலேஜ் அண்டர்கிரவுண்ட் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். இவனும் அவர்களைப் பின்தொடர அந்த அண்டர்கிரவுண்டடில் மாணவர்களின் கூச்சலும்.....

“மித்ரா...” “மித்ரா...”

என்ற சத்தமும் அவன் காதில் விழ... அவன் அங்கு கண்டது பாக்ஸிங் ரிங்கில் சண்டைக்கு தயாராக நின்று கொண்டிருந்த அவனுடைய அத்தை மகளை .

அவளை முறைத்து பார்த்தவன்....

“ராட்சசி....”

என்று கூற அவளும் அவனை முறைத்து நோக்கி தன் மனதில்...

'வந்துட்டான்யா கொம்பேரிமூக்கன்....'

என்று நினைத்துக் கொண்டிருக்க அந்நேரத்தில் அந்த ரிங்கில் இருந்த சக வீராங்கனை அவளின் முகத்தில் இரண்டு முறை குத்த.... அவளோ அவனைப் பார்த்தபடியே அந்த சக வீராங்கனையை ஓங்கி குத்தியதில் அவள் நாக் அவுட் ஆனாள்.

உடனே ரெப்ரி....

“சங்கமித்ரா வின்னர்....”

என்று கூற அங்கிருந்த மாணவர் பட்டாளமே....

“ஹே....”

என்று கத்த தன் குடும்ப உறுப்பினர்களை நோக்கி ரிங்கை விட்டு வெளியே வந்தாள் .

சங்கமித்ரா ஐந்தரை அடி உயரம், பால் நிறம், மாசுமருவற்ற முகம், கண்களில் எந்நேரமும் குறும்பு துள்ளிக் கொண்டே இருக்கும். இரு புருவங்களுக்கு நடுவே தொடங்கும் கூர் நாசி.... கோவைப்பழம் போல் சிவந்த ரோஜா இதழ்கள், கொடி இடையால்.... ஆனால் எதிர்ப்பவரை ஒரு கை பார்க்கும் குட்டிப்புலி....

வீண் சண்டைக்கு போவது அவள் குணம் அல்ல ஆனால் தன் முன்னே நடக்கும் அநீதியை தட்டி கேட்க தயங்கியதே இல்லை.... பெண்ணவள் வாய் பேசும் முன்னே அவள் கை பேசி விடும். அழகி ,தைரியசாலி, மொத்தத்தில் பார்ப்பவர் மனதை கொள்ளைகொள்ளும் குறும்பி...

மித்ரா கீழே இறங்கிய உடன் அவளை அள்ளி அனைத்துக் கொண்டவர்கள் அவளுடைய குடும்பத்தவர்களான தாத்தா சீனிவாசன், பாட்டி ஜானகி, மாமா விஸ்வநாதன், அத்தை யமுனா, மாமா மகன் ராகவ் மற்றும் மாமா மகள் ஸீமதி ஆகியோர் அடங்கிய அவளின் இந்த பாசமான கூட்டு குடும்பமே...

அப்போது அவளுடைய மாமா....

“மித்ரா இது உன்னுடைய நாற்பத்து எட்டாவது பதக்கம். இன்னும் இரண்டு ஜெயித்தால் அரை சதம் தான் போ....”

என்று சந்தோஷத்தில் கூற அந்த நேரம் கூட்டத்தை விலக்கி கொண்டு அங்கு வந்த அர்ஜுன்....

“அப்பா என்னாச்சு ??”

என்று கேட்டான் . அதற்கு அவனின் தந்தை,

“அது ஒன்னுமில்லப்பா இங்க எங்க பக்கத்துல இருந்த ஒரு பொண்ண ஒருத்தன் சும்மா இடிச்சுட்டு நின்னுட்டு இருந்தான்... அத பார்த்த நம்ம மித்ரா பாப்பா கோவம் வந்து அவன் முகத்துலயே ஓங்கி குத்து விட்டுட்டா... அதற்கு பிறகு தான் தெரிஞ்சுது அது அவ புருஷன்னு அதான் உனக்கு கால் செய்ய சொல்லி ரகுகிட்ட (விஸ்வநாதனின் பி ஏ) சொன்னேன். ஆனா நீ வர்றத்துக்குள்ள விக்ரம் வந்து எந்த பிரச்சினையும் நட்க்காம சமாளிச்சுட்டான்....”

என்று கூறி முடித்தார் .

விக்ரம் குமார் அறிமுகத்தை தொடர்ந்து :

விக்ரம் குமார் வி கே குரூப்ஸ் ஆப் காலேஜின் நிறுவனர் ஜெகன்நாதனின் இளைய மகன். ஜெகன்நாதனும், விஸ்வநாதனும் நெருங்கிய நண்பர்கள். அதே போல் தான் விக்ரமும் மித்ராவும்... ஆனால் விக்ரமுக்கோ மித்ரா மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்புண்டு. அது அவள் செய்யும் குறும்பு தனத்தால் உண்டானது என்பதை அறியாதவன் இது நட்பா இல்லை காதலா என்ற கேள்விக்கு நடுவில் விடையை தேடிக் கொண்டிருக்கிறான்....

மறுகணம் அர்ஜூன் முகம் கோபத்தில் சிவக்க மித்ராவை பார்த்தவன்

“உனக்கு கை நீளம்டி... யார் எப்படி போனா உனக்கு என்ன...”

என்று கேட்க அதற்கு மித்ரா....

“அது எப்டி??? பொண்டாட்டி அனுமதிக்கலனா புருஷன் கூட தொடக்கூடாதுன்னு நேர்க்கொண்ட பார்வை படத்துல எங்க தல சொல்லிருக்காருல்ல...”

என்று அவள் அர்ஜுனைப் பார்த்து கூற அர்ஜூன் முகம் இன்னும் கோபத்தில் சிவக்க, அதை கவனித்த பாட்டி அவள் கையை அழுத்தி பிடித்து பேசாதே என்பது போல் உணர்த்த அவளும் அதை புரிந்து கொண்டு....

“ஆ . . . ஆ . . . வலிக்குதே..”

என்று முகத்தில் கையை வைத்து கொண்டு கத்தினாள். உடனே அதை புரிந்து கொண்ட சொந்தங்கள் ...

“அச்சோ என் பேத்தி முகத்துல காயம் பட்டுருச்சே... இனி அவ முகத்துல அந்த வடு போகாதே இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் இந்த பாக்ஸிங் எல்லாம் உனக்கு வேண்டாம்டி சிலம்பம் கத்துக்கோடி உன் தாத்தாவே சொல்லிக் கொடுப்பாருன்னு சொன்னனே கேட்டியா...”

என்று ஓ... என்று ஒப்பாரி வைக்க தாத்தா சீனிவாசனோ...

“அட ஜானு பேபி... நீ இன்னும் எந்த காலத்துல இருக்குற இது இரண்டு நாள்ல மறையுற அளவிற்கு நம்ம ஹாஸ்ப்பிட்டல்லேயே டெக்னாலஜி இருக்குதே...”

என்று இவர் கூறி முடிப்பதற்குள் அவர் மகன் விஸ்வநாதன் இங்கிருந்தபடி ஆப்ரேஷனுக்கு ரெடி செய்து விட்டு அதை தன் தந்தையிடம்

“அப்பா எல்லாம் ரெடி. ஆப்பரேஷன் தியேட்டரில் பாப்பாவுக்கு வலிக்காமல் இருக்க லேசர் மிஷின் மூலம் ஆப்பரேஷன் செய்ய நான்கு பேர் கொண்ட டாக்டர்கள் குழு தயாராக உள்ளனர்...”
என்று கூற இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த அர்ஜூன்...

“எல்லோரும் கொஞ்ச நேரம் வாயை மூடுகிறீங்களா...”

என்று கத்தியவன் பின்பு அனைவரையும் பார்த்து

“இது ஒரு சின்ன காயம். இதை அப்படியே விட்டா ஐந்து நாளுக்கெல்லாம் அந்த வடு கூட தெரியாது... இதற்கு போய் லேசர் ஆப்பரேஷனா... இவள் அடிச்சாளே அந்த பொண்ணுக்கு தான் லேசர் ஆப்பரேஷன் செய்யனும். உங்களோட இந்த கண்மூடித்தனமான அன்பால தான் இவ ஓவராக ஆடுறா...”

என்று கூறி விட்டு காரை நோக்கி சென்றான். அனைவரும் அவர்கள் குடும்பமாக செல்லும் சொகுசு கேரவனில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.

அவன் வீடு ஆறு அடுக்குகளைக் கொண்டது. அதில் மூன்றாவது அடுக்கில் ஒரு ஜிம், கீழ் தளத்தில் ஒரு நீச்சல் குளமும், அண்டர் கிரவுண்டில் ஒரு நீளமான கார் பார்க் மற்றும் வீட்டின் இருபுறத்திலும் புல் தரை கொண்ட தோட்டங்கள் என ஒரு மாளிகை போல் தோற்றமுடையது.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த வீட்டு வேலைக்காரி இல்லை இல்லை அந்த வீட்டில் ஒருவராக பார்க்கப்படும் லட்சுமி அம்மா ....

"எல்லாரும் கை, கால் அலம்பிட்டு டைனிங் டேபிள் வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...”

என்று கூற அனைவரும் தங்கள் அறைகளுக்குச் சென்று தங்களை சுத்தம் செய்துகொண்டு இரவு உடையை மாற்றிக் கொண்டு டைனிங் ஹாலில் வந்து அமர்ந்ததும் லட்சுமி அம்மா ஒவ்வொருவரும் கேட்டதை பரிமாரிவிட்டு மித்ராவிடம் வந்தவர்....

“பாப்பா இன்னிக்கு உனக்கு பிடித்த நாட்டுக்கோழி குழம்பு, வஞ்சிர மீன் வருவல் அப்புறம் நீ லேசா காய்ச்சல் அடிக்குறாப் போல இருக்குன்னு சொன்னல அதுக்காகவே ஸ்பெஷலா நண்டு ரசம் வச்சிருக்கேன்....”

என்று கூற லிப்டில் இருந்து கீழே இறங்கியவன் அனைத்தையும் கேட்க...

“ஏன் லட்சுமி அம்மா நீங்களுமா ???”

என்று கேட்டபடி டைனிங் டேபிள் நோக்கி உணவருந்த வந்தவன் அவள் இட கையால் உணவு உண்ணுவதை கண்டு...

'ராட்சசி...ராட்சசி போல சாப்பிடுகிறா பாரு... கேட்டா என் அம்மா எனக்கு இப்படி தான் கத்து கொடுத்தாங்கன்னு வியாக்கியானம் பேசுவா.. அது சரி இவ அம்மாவே சரியில்லாதப்போது இவளையா சரியா வளர்த்திருக்கப் போறாங்க....'

என்று மனதில் நினைத்துக்கொண்டு உணவருந்தாமல் அவ்விடத்தை விட்டு நீங்க அதை கவனித்த லட்சுமி அம்மா அவனை பார்த்து....

“அர்ஜுன் தம்பி சாப்ட்டு போங்க...”

என்று கூற, அதற்கு

"இல்லை நான் வெளியே சாப்பிட்டுக்குறேன்"

என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். இவளோ அவன் வாசலை தாண்டி விட்டானா என்று எட்டிப் பார்த்துவிட்டு...

“விடுங்க லட்சுமி அம்மா அவனுக்கு இது சாப்ட கொடுத்து வைக்கல...”

என்று கூற இதை பார்த்த அனைவரும் வாய்விட்டு சத்தமாக சிரித்தனர். அவள் பாட்டியோ...

“அவன் மேல இவ்வளவு பயம் இருக்குல அப்புறம் ஏன்டி அவன் முன்னால இப்படி நடந்துகுற...”

என்று கேட்க, அதற்கு மித்ரா

“நான் என்ன செய்ய பாட்டி அந்த கொம்பேரிமூக்கனை பார்த்தாலே இப்படி ஏதாவது நடக்குது...”

என்று அவள் கூறியதை கேட்டு மீண்டும் ஒரு முறை அவ்விடமே சிரிப்பலையால் நிரம்பியது. அதன் பிறகு அனைவரும் இரவு உணவருந்தியதும் தங்கள் அறைகளுக்குச் சென்று நித்திரையில் ஆழ்ந்தார்கள்.... அவனும் இரவு பதினோரு மணி அளவில் தன் அறைக்குள் நுழைந்தான் .

மறுநாள் காலை 06 மணியளவில் அர்ஜூன் எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். இவளோ காலை 7 மணிக்கு எழுந்து டிவியை ஆன் செய்து ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடிக்கொண்டிருக்க ராகவும் வந்து சேர்ந்து கொண்டான்.

அப்போது சிறிது நிமிடங்களில் தொலைக்காட்சியில் விளம்பரம் போட அதில் வந்த க்லோசப் டூத் பேஸ்ட் விளம்பரத்தைப் பார்த்து ராகவ்...

“நானும் தான் க்ளோசப் யூஸ் பண்றேன் ஆனா காலேஜ்ல ஒரு பொண்ணு கூட மயங்க மாட்டென்ரா...”

என்று சொல்ல, அதற்கு மித்ரா...

“நீ பல் துலக்கமா போய் பேசு அங்கேயே அப்பவே மயங்கிடுவா..”

என்று கூறி அவனை கலாய்த்தபடி சிரித்தவளை, ராகவ் பார்க்க....

“என்னடா லுக்கு காலேஜிக்கு டைம் ஆச்சு போய் கெளம்புடா....”

என்று சொல்ல உடனே ராகவ்...

“லட்சுமி அம்மா அண்ணா எப்போ வெளிய போனான்...”

என்று கேட்க, அதற்கு அவரோ...

“பெரிய தம்பி ஜாக்கிங்ல இருந்து வந்து மேல ஜிம் செஞ்சுட்டு இருக்காரு தம்பி...”

என்று கூறினார். இதை கேட்ட மித்ரா ஜாட்டியில் இருந்து விடுபட்ட பம்பரம் போல வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட இதை பார்த்த ராகவ் விழுந்து விழுந்து சிரித்தான். கீழே நடந்த கூத்துகளை மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்காது பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்...

அவன் கண்களில் தெரிந்த பாவனை தேடலா, ஊடலா அல்ல காதலா அதை அவனே அறியான்...

என் காதலும் ஊடலும்
நீ அன்பே...

ஆனால் என்னமோ என் மனம்
உனக்கான என்
தேடலை உணரவில்லை...

எண்ணில் இருக்கும்
இனியவளே
உணர்த்துவாயா என் மனதினை...

என் தேடல்.

1610645173526.jpg
 
அத்தியாயம் 02

அங்கிருந்து சென்றவள் விருவிருவென அவள் அறைக்கு சென்று காலேஜிக்கு செல்ல தயாராகி அரை மணி நேரத்திற்கு பிறகு ரூமை விட்டு வெளியே வந்தவள்

"லக்ஷ்மி அம்மா, இன்று என்ன ஸ்பெஷல் ???"

என்று கேட்க அவரும் பராத்தா பன்னீர் பட்டர் மசாலா என்று கூற ராகவும் அதைக்கேட்டு

"ம்ம்ம்... யம்மி"

என்று கூறினான். இதை கேட்ட லட்சுமி அம்மா ராகவ், மித்ரா அருகில் சென்று

"ஏன் பாப்பா அடிக்கடி நம்ம ராகவ் தம்பி யமி, யமி ன்னு சொல்கிறாரே காலேஜில் யமின்னு ஏதாவது பெண்ணை லவ் கிவ் செய்றாரா??"

என்று கேட்க இதை கேட்ட ராகவும் மித்ராவும் குபீரென வாய்விட்டு சிரித்தனர். இதைப் பார்த்த அவர்களுடைய தாத்தா பாட்டி அவர்களிடம்

"என்னபா சிரிச்சிட்டு இருக்கீங்க, என்னன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல"

என்று கேட்க அதற்கு இருவரும் நடந்ததை விளக்கினர். இதைக்கேட்டு தாத்தாவும் சிரிக்க அப்போது அவர்களுடைய பாட்டி ராகவை பார்த்து

"டேய் ராகவு, அந்த யமி பொண்ணு எப்படி இருப்பா?? என் கலர் ஆவது இருப்பாளா?? முக்கியமா நம்ம வகையறா தானே"

என்று கேட்க அங்கே மீண்டும் ஒருமுறை சிரிப்பலை எழும்பியது.

உடனே தாத்தா சீனிவாசன்

"அட ஜானு பேபி யம்மி அப்டினா சுவையானதுன்னு அர்த்தம்"

என்று கூறிக்கொண்டிருக்க அர்ஜுன் அலுவலகத்திற்கு தயாராகி உணவு உண்ண கீழே வந்தான் அவனை பார்த்தவுடன் டைனிங் டேபிளில் சிரித்து கொண்டிருந்த அனைவரும் அமைதியாய் அவர்களின் காலை உணவு மீது கவனம் செலுத்தினர். சிறிது நாழிகைகளில் மித்ரா, ராகவ் மற்றும் ஸ்மிதி மூவரும் விரைவாக தங்கள் காலை உணவை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்ப ராகவின் அப்பா விஸ்வநாதன் மித்ராவை பார்த்து

"பாப்பா இரும்மா நானும் வரேன் நேத்து பாக்சிங் காம்பெடிஷன் ல நடந்த விடயங்கள் பூராவும் இந்நேத்திக்கு அந்த முட்டாள் ஜெகன்நாதனுக்கு தெரிந்திருக்கும் நான் வந்தால் தான் அவனை சமாதானப்படுத்த முடியும்"

என்று கூறிக்கொண்டிருக்க இதை கேட்ட அர்ஜுன்

"அப்பா.., இப்படியே இவ தப்பு செய்யும் போதெல்லாம் நீங்க அங்கிள் முன்னாடி போய் ஜாமீனுக்கு நின்னு நீங்க அவமானப்பட்டது தான் மிச்சம். இப்படியே நீங்க செஞ்சிட்டு இருந்தீங்க அவள் கடைசிவரை திருந்தவேமாட்டா"

என்று கூறியதைக் கேட்ட மித்ராவுக்கு ரோஷம் பிறப்பெடுக்க உடனே தன் மாமாவை பார்த்து

"மாமா இன்றைக்கு என்ன நடந்தாலும் சரி அதை நானே பார்த்துக்குறேன் நீங்க வர தேவையில்லை"

என்று கூற, அதற்கு அவர்

"இல்லம்மா ஜெகன்.."

என்று கூறி முடிக்கும் முன்பே

"மாமா நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டேன்ல"

என்று கூறிவிட்டு மூவரும் காரை எடுத்துக்கொண்டு காலேஜுக்கு சென்றனர். அப்போது விஸ்வநாதன்

"இன்னைக்கு அந்த ஜெகன்நாதன் என் மித்ரா பாப்பாவை என்ன செய்யப் போறானோ"

என்று கூறிக்கொண்டே சோபாவில் அமர அதை பார்த்த அர்ஜூன்

"விடுங்கப்பா இன்னைக்கு ஒரு நாள் திட்டு வாங்கினா தான் அவள் திருந்துவா"

என்று கூற, உடனே விஸ்வநாதன் தன் மகனிடம்

"ஏன்பா நான் வேணும்னா ஜெகனுக்கு போன் செய்து பேசவா??"

என்று கேட்க அதற்கு அர்ஜுனோ

"அப்பா..."

என்று அழுந்த கூற உடனே விஸ்வநாதன்

"சரிப்பா வேண்டாம்"

என்று கூறினார். அதன் பிறகு அர்ஜுன் அவ்விடத்தை விட்டு அகன்று கம்பெனிக்கு செல்ல வெளியே வந்து தன் காரை எடுத்து கொண்டு சென்று விட்டான். அங்கு மித்ராவின் காரை காலேஜுக்குள் பார்த்த மாணவர்கள்

"தல...வா தல, வா தல, வா தல”

என்று சத்தம் போட அவளோ ஒரு அரசியல்வாதி தொண்டர்களை பார்த்து கையை ஆட்டி கொண்டு வருவது போல் அவர்களைப் பார்த்து காரினுள் அமர்ந்துகொண்டு கையை வெளியே ஆட்டிக்கொண்டு சென்றவள் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவர்களை நோக்கி வந்தவளுக்கு அங்கு இருந்தவர்களில் ஒருவன் எழுந்து

"இங்க உட்காரு தல"

என்று தன் இடத்தை அவளுக்கு கொடுக்க இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த மித்ரா

“என்னங்கடா இன்னிக்கி கவனிப்பு எல்லாம் பயங்கரமா இருக்கு"

என்று கேட்டதும் அக்கூட்டத்தில் ஒருவன்

"என்ன தல உனக்கு தெரியாததா, நேத்து மேட்ச் எல்லாம் ஜெயிச்சிருக்க"

என்று கூறும்போதே

“ஆ.. ஆ.. புரியுது புரியுது ட்ரீட்டு தானே"

என்று கேட்க உடனே மற்றொருவன்

"இதான் தல நீ, கற்புரம் மாதிரி கப்புனு புடிச்சிக்கிறப் பத்தியா"

என்று சொல்ல

"இன்னைக்குன்னு பாத்து நான் காசு எடுத்துட்டு வரலையே டா"

என்று கூறினாள் இதை கேட்ட நட்புக்கள்

"அதற்கு என்ன தல, உனக்கா தெரியாது எவன் தலையில மிளகாய் அறைக்கனும்னு"

என்று சொல்ல

"அப்படிங்கிற சரி பாக்கலாம் இன்னிக்கு எந்த ஆடு மாட்டுதுன்னு"

என்று கூறி விட்டு தன் மொபைல் எடுத்து விக்ரமுக்கு கால் செய்து

"ஹலோ விக்ரம், இன்னிக்கு நான் காலைல சாப்பிடாம வந்துட்டேன்டா கேன்டீனுக்கு காசு கூட எடுத்துட்டு வரல" என்று கூறும்போதே மறுமுனையில் இதைக் கேட்ட விக்ரம் பதறி போய்

"நீ போய் நம்ம கேண்டீன்ல என் பேரை சொல்லி எவ்வளவு வேணாலும் சாப்பிடு நான் போன் பண்ணி சொல்லிடுறேன்"

என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான். இவள் தன் நண்பர்களை பார்த்து சிரித்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு கேண்டீனுக்கு சென்று

“அண்ணா, விக்ரம் போன் செஞ்சானா”

என்று கேட்க

"ஆ.. ஆமாம்மா விக்ரம் சார் சொன்னாரு"

என்று சொல்ல, இவளோ தன் நண்பர்களை பார்த்து

"டேய் மச்சி எல்லாருக்கும் என்ன வேணும்னு சொல்லுங்கடா"

என்று கேட்க அவர்களும் ஆர்டர்களை சொல்ல இதை கேட்ட கேன்டீன் அண்ணாவுக்கு தலையே சுற்றியது சிறிது நாழிகைகளில் அவர்கள் கேட்ட அனைத்தையும் கொண்டுபோய் அவர்களுடைய டேபிலில் வைத்துவிட்டு சமையலறையை மூடினார். இதைப்பார்த்த மித்ரா ராகவ் மற்றும் அவர்களுடைய நண்பர்களும்

"என்னண்ணே பத்து மணி கூட ஆகல அதுக்குள்ள கிச்சனை மூடுரிங்க"

என்று கேட்க அதற்கு அவரோ

"தம்பிகளா நீங்க இருக்கீங்க அதனாலதான் கேன்டீன மூடுல நீங்க சாப்டீங்கனா கேன்டீனயும் மூடிட்டு கிளம்பிடுவேன்"

என்றுசொல்ல அவர்களோ

"பாத்தீங்களா அண்ணே நாங்க வந்த நேரம் இன்னைக்கு சீக்கிரமா போனி ஆயிடுச்சு"

என்று கூறிய அவர்களை பார்த்து

"தம்பிகளா மனசுல கைவைச்சு சொல்லுங்க இன்னிக்கி போனி ஆச்சுன்னு"

என்று கேட்க அவர்களோ ஒன்றும் தெரியாதவர்கள் போல

"என்னென்ன சொல்றீங்க"

என்று கேட்க அவரோ

"நீங்க சாப்பிட்டதெல்லாம் அக்கவுண்ட்ல அப்புறம் எங்க இருந்து போனி ஆகிறது"

என்று கூறிவிட்டு செல்லும்போது அவர்களோ

"அண்ணே கான்டீன் க்ளோஸ் பண்ணாம போறீங்க"

என்று சொல்ல அதற்கு அவர்

"இங்க எடுத்துட்டு போக என்னப்பா இருக்கு க்ளோஸ் பண்ணிட்டு போக, நீங்களே போகும்போது அந்த ஷட்டரை இழுத்து விட்டுப் போங்க"

என்று கூறிக் கொண்டே போனார். அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்துக் கொண்டிருக்க திடீரென்று அங்கு வந்த பியூன் மித்ராவை பார்த்து

"உங்களை சேர்மன் ஐயா அழைச்சிட்டு வர சொன்னாரு"

என்று கூற உடனே ராகவ்

“நானும் கூட வரட்டுமா என்று கேட்டான்”

அதற்கு மித்ரா இல்லை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பியூன் உடன் சென்றாள். ராகவும் அவளை பின்தொடர அவள் சேர்மன் அறையின் உள்ளே சென்றவுடன் இவன் வெளியில் காத்திருந்தான் உள்ளே சென்றவுடன் அறைக்கதவு சாத்தப்பட்டது. உள்ளே நுழைந்தவள்

"அங்கிள் கூப்பிட்டீங்களா ?"

என்று கேட்க, ஏற்கனவே அவள் செய்த விடயம் அறிந்து அவள் மீது கோபம் கொண்டிருந்தவர்

"நோ அங்கிள் கால் மீ சார்"

என்று சொல்ல, உடனே அவள்

"சாரி சார் என்னை கூப்பிட்டீங்களா??"

என்று கேட்க முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு மித்ராவை பார்த்து

"எஸ், நேத்து நீ பாக்சிங் காம்படீஷன்ல செஞ்சது மொத்தம் எனக்கு தெரியும் அது மட்டும் கம்ப்ளைன்ட்டா வந்திருந்தா இந்நேத்திக்கு உன்னை சஸ்பெண்ட் பண்ணிருப்பேன் பட் யுவர் குட்னஸ் அப்படி எதுவும் வரலை. அதுக்காக உன்ன அப்படியே விடுவேன்னு நினைக்காத நாளைக்கு வரும்போது நீ உன் மாமா கூட தான் வரணும் இல்லைனா கேம்பஸ் குள்ள விடமாட்டேன்")

என்று கூற அதற்கு அவளோ

"அவ்வளவுதானே கூட்டிட்டு வந்துட்டா போச்சு"

என்று கூறியவள் மீண்டும் அவரை பார்த்து

"அப்ப நான் வரேன் அங்கிள்.. ஓ.. சாரி சாரி சார்.."

என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு துள்ளி குதித்தப்படி நகர உடனே ஜெகன்நாதன் அவளைப் பார்த்து

"ஸ்டாப்! நான் மாமான்னு சொன்னது உன் மாமா விஸ்வநாதனை இல்ல அர்ஜுனை"

என்று கூறியதும் இதை கேட்டவள் ஒன்றை காலை தரையிலும் மற்றொரு காலை காற்றிலும் நிறுத்தியபடி நிற்க அவளது முகமும் உடலும் வேர்த்து விறுவிறுத்து போக மெல்லமாக அவர் புறம் திரும்பியவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு மெல்லிய குரலில்

"சார்.."

என்றாள். ஆனால் அவரோ அவளை கண்டு கொள்ளாது ஒற்றை வரியில்

“யு கேன் கோ நவ்”

என்று கூற உடனே அவள்

"சரிங்க சார் நான் கூட்டிட்டு வரேன்.."

என்று சொல்லிவிட்டு மீண்டும் ஜெகன்நாதனை பார்த்து

"ஜான்சி டீச்சர் எப்படி இருக்காங்க சார்..??"

என்று நக்கலாய் கேட்டாள். ஆனால் அவரோ அலுவலக பணியில் அவள் கேள்வியின் அர்த்தம் புரியாதவராய்

"எந்த ஜான்சி டீச்சர்"

என்று கேட்க

"அதான் நீங்க இதே காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது லவ் பண்ணிங்களே அந்த ஜான்சி டீச்சர், அதற்கு பிறகு உங்களுக்கு சொந்தமான ஒரு ஸ்கூல்ல கூட அவங்களுக்கு டீச்சர் வேலை கூட போட்டு கொடுத்தீங்களே அந்த ஜான்சி டீச்சர், இப்பவும் ஞாபகம் வரலையா.. என்று யோசித்தவள் வேற ஏதோ மாமா முக்கியமா சொன்னாரே என்று சத்தமாக பேசியவள் ஏதோ ஞாபகம் வந்தவள் போல "ஆ.. ஒரு வாரத்திற்கு முன்னாடி கூட ஒரு பார்ட்டியில நீங்க ரெண்டு பேரும் தனிமையில உட்கார்ந்து பேசுனீங்கலாமே அதுக்குள்ள மறந்துட்டீங்களா சார்..?" என்று கேட்டபடி

"ஆமா, சுசிலா ஆண்டிக்கு (ஜெகன்நாதனின் மனைவி) நம்ம ஜான்சி டீச்சரை பற்றி தெரியுமா சார்"

என்று கேட்டவளை தவறு செய்த குழந்தை திருதிருவென முழிப்பது போல் பார்த்து

"என்னம்மா மித்ரா என்னை போய் வார்த்தைக்கு வார்த்தை சார் கீருனு கூப்பிடுற விஸ்வநாதன் உனக்கு மாமா னா நானும் உனக்கு மாமா தான மா என்ன மாமான்னே கூப்பிடு மா"

என்று கூற இதைக் கேட்ட மித்ராவும் அவரை நக்கலான தோரனையில்

“ஆஹான்... அப்ப அர்ஜூன் மாமா..”

என்று கேட்க உடனே அவர்

"வேண்டாம் நீ நாளைக்கு யாரையும் கூட்டிக்கொண்டு வர வேண்டாம். நீ போய் கிளாஸ் அட்டன் பண்ணுமா"

என்று கூறிவிட்டு அவள் வெளியே சென்றதும்

"டேய் விஸ்வநாதா..."

என்று கத்தியவர் அவர் மேஜையில் இருந்த டெலிபோனை எடுத்து விஸ்வநாதனின் அலைபேசி எண்ணெய் டயல் செய்தார் அப்போது

ட்ரிங். ட்ரிங்..

என்று ஒலிக்க மறுமுனையில் விஸ்வநாதன் யார் அழைப்பது என்பதை மொபைல் டிஸ்பிளே இல் பார்க்க அது அவருடைய பால்ய சிநேகிதன் ஜெகன்நாதன் என்று தெரிய உடனே தன் மனதில்

"பாவம் என் பாப்பா.. என் பாப்பாவை என்ன செஞ்சான்னு தெரியலையே அவன் மட்டும் ஏதாவது செய்து இருக்கட்டும் அப்பறம் இன்னைக்கு இருக்கு அவனுக்கு"

என்று நினைத்துக்கொண்டே மொபைலை ஆன் செய்து

"ஹலோ..."

என்றதும் மறுமுனையில் இருந்த ஜெகநாதன்

"யாரு விஸ்வநாதன் தானே பேசுறது"

என்று கேட்டு உறுதி செய்துக் கொள்ள அதற்கு விஸ்வநாதன்

"இல்ல விஸ்வநாதனுக்கு பக்கத்து வீட்டுக்காரன்"

என்று கூற உடனே ஜெகன்நாதன்

"ஓ.. சாரி சார்.. ஏதோ டென்ஷனில் நம்பர் மாறிடுச்சு"

என்று சொல்ல

"டேய் முட்டாள் நான் தாண்டா பேசுறேன்"

என்று விஸ்வநாதன் பதிலளித்ததும்

"டேய் விஸ்வநாதா உன் மருமக என்ன செய்தான்னு உனக்கு தெரியுமா"

என்று கேட்க உடனே விஸ்வநாதன்

"ஏன் தெரியாது நல்லா தெரியுமே.. யார் அவ என் மருமகளாச்சே"

என்று விஸ்வநாதன் பெருமைப்பட்டு கொள்ள

"என்ன உனக்கு தெரியுமா!"

என்று கேட்டதும்

"தெரியும்டா நான் தானே சொல்லிக் கொடுத்ததே"

என்று கூற அவ்வளவுதான் இதை கேட்ட ஜெகன்நாதன் மறுமுனையில் இருந்த வவிஸ்வநாதனை செவிகள் இரண்டும் கூசும் அளவுக்கு திட்டி தீர்த்துவிட்டு மீண்டும் அவரிடம்

“அவ ஜான்சி ல ஆரம்பிச்சு சுசிலா ல முடிச்சாடா"

என்று கூற அப்போதுதான் விஸ்வநாதனுக்கு விளங்கியது தன் வீட்டு குட்டி ராட்சசி புதிதாக வேறு ஏதோ ஒன்றில் அவரை இழுத்துவிட்டு இருக்கிறாள் என்று ஆனால் அது அவருக்கு புரிவதற்க்குள் மறுமுனையில் இருந்த ஜெகன்நாதன்

"என் கண்ணுல மட்டும் பட்டுவிடாதே"

என்று கூறி அழைப்பை துண்டிக்க இங்கு விஸ்வநாதன்

"டேய்.. டேய்.. எனக்கு எதுவும் தெரியாதுடா"

என்று கூற அழைப்பு துண்டிக்கப்பட்டது. அலைபேசியை தன் பாக்கெட்டில் வைத்தபடி

"இவ இப்ப என்ன செய்து வச்சிருக்கான்னு தெரியலையே.. பாவம் அவன்.."

என்று முழங்கியவர்

“இல்லை.. இல்லை.. இவங்க ரெண்டு பேரும் பாவம் கிடையாது இவங்க கிட்ட மாட்டிட்டு முழிக்குற நான் தான் பாவம்"

என்று தனக்கு தானே புலம்பி கொண்டார். அங்கு வெளியே வந்த மித்ராவை பார்த்த ராகவ்

"என்னாச்சு மித்ரா, ஏன் உம்முன்னு இருக்க?? அங்கிள் ரொம்ப திட்டிட்டாரா"

என்று வினவ அவளோ முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு

"அது.. அங்கிள் என்ன பார்த்து போய் கிளாஸ் அட்டென் பண்ணுமா ன்னு சொல்லிட்டாரு"

என்று கூறி கத்த, இதைக்கேட்ட ராகவ்

"மித்ரா அங்கிள எப்படி மேனேஜ் பண்ண"

என்று கேட்க அதற்கு அவள் உள்ளே நடந்தவை அனைத்தையும் கூற இதைக்கேட்ட ராகவ்

"அடிப்பாவி கடைசியில அங்கிள் குடிமிலயே கை வெச்சிட்டியா??"

என்று அதிர்ச்சியில் கேட்க இருவரும் சிரித்துக்கொண்டு அவரவர்களுடைய வகுப்புகளுக்கு சென்றனர்.

1610645173526.jpg
 
அத்தியாயம் 03

அன்று காலை கிளாஸ்குள் சென்ற மித்ராவை அங்கிருந்தப் ப்ரொபசர் நிறுத்தி…

“மித்ரா, கம் அண்ட் ஸ்டாண்ட் இன் ப்பிரண்ட் ஆப் தி கிளாஸ்…”

என்று கூறினார். மித்ராவும் அனைவருக்கும் முன்னாள் வந்து நிற்க உடனே அந்த ப்ரொபசர்…


“ஸ்டுடென்ட்ஸ் நேத்து நடந்த மாவட்ட அளவிலான பாக்ஸிங் போட்டியில் மித்ரா முதலாவது இடத்தைப் பெற்றதற்காக அனைவரும் அவளுக்கு கை தட்டுங்கள்…”

என்று கூறினார் இது கேட்டு மாணவர்களும் ஒரு பலத்த கைதட்டல் கொடுக்க மீண்டும் ப்ரொபசர் மித்ராவுக்கு கை குலுக்கி வாழ்த்தி…

“மித்ரா நீ போய் உட்காருமா…”

என்று கூறினார். இறுதியாக கல்லூரி நேரம் முடிந்த பிறகு ஸ்ரீமதியும், மித்ராவும் கார் பார்க்கிங்கில் வந்து சேர்ந்தனர்... ஆனால் ராகவ் வரவில்லை. என்ன விஷயம் என்று தெரியாத இருவரும் ஒருவர் மற்றொருவருக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டுக்கொள்ள ஆனால் இருவருக்குமே எதுவும் தெரியவில்லை உடனே மித்ரா ஸ்ரீமதியிடம்…

“நீ இங்கேயே இருடி நான் போய் அவனை தேடிப் பார்த்துவிட்டு வர்றேன்.”

என்று கூறிவிட்டு ராகவை தேடிச் செல்ல அப்போது அவளுக்கு எதிரில் வந்த சக மாணவன் ஒருவனை நிறுத்தி…

“டேய் மச்சான் ராகவ்வ பாத்தியா..”

என்று கேட்க…

“அவனை...” என்று யோசித்தவாறு…

“ஆ.. மித்ரா நான் அவனை பைக் பார்க்கிங்கில்ல பார்த்தேன்…”

என்று கூற அதை கேட்டவள் தன் மனதில்

“கார் எடுத்துட்டு வந்துட்டு பைக் பார்க்கிங்ல என்ன பண்றான்…”

என்று நினைத்தபடி…

“சரி மச்சான் நீ போ நான் பாத்துக்குறேன்…”

என்று கூறிவிட்டு நகர்ந்தாள். சிறிது நேரத்தில் அவள் பைக் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்தவள் சுற்றி முற்றி பார்க்க அங்கே ஒரு பைக் மீது அமர்ந்திருந்த ராகவ் அங்கு பைக் எடுக்க வரும் ஜூனியர் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தான்... இதை கண்ட மித்ரா அவனிடம் சென்று…

“டேய் ராகவ் இங்க என்னடா பண்ற.”

என்று கேட்க

“பார்த்தா தெரியல சைட் அடிச்சிட்டுருக்கேன்…”

என்று கூற அதற்கு மித்ரா…

“டேய் மாமா பையா என்னையும் சேத்துக்கோடா…”

என்று கெஞ்சி கேட்க

“ஏண்டி ஒரு பொம்பள புள்ள மாதிரியா பேசுற…”

என்று கேட்டுக்கொண்டே தன் மனதில்

‘இவள மட்டும் இப்போ சேர்த்துக்கலனா இவ நம்மள அப்பாகிட்ட போட்டுகொடுத்துடுவா… சோ இப்போதைக்கு இவள சேர்த்துக்குறது தான் நமக்கு நல்லது’

என்று நினைத்தபடி கணக்கு போட்டுக் கொண்டிருந்தவனை மித்ரா பிடித்து உலுக்க சுயத்திற்கு வந்தவன் அவளை பார்த்து

“வெல்கம் டூ சைட் சீயிங்.”

என்க அவளும் அங்கேயே அவனோடு அமர்ந்துக்கொண்டு சைட் அடித்துக்கொண்டு இருந்தாள். அங்கு காத்துக்கொண்டிருந்த ஸ்ரீமதி

‘என்ன இவங்க ரெண்டு பேரையுமே காணோம்’

என்று நினைத்தவள் அருகில் இருந்த காரை லாக் செய்துவிட்டு இருவரையும் தேடிக்கொண்டு வந்தவள் அவர்கள் இருவரும் பைக் பார்க்கிங்கில் அமர்ந்து சைட் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவள்

“ம்ஹூம்... இவங்கள..”

என்று முனங்கியபடி வேகமாக அவர்களை நோக்கி சென்று, இருவரின் கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு காரின் அருகில் வர அவர்களோ

“ஏய்.. ஸ்ரீ கொஞ்ச நேரம்டி… இப்ப தான் டி நல்ல நல்ல பிகரா வந்துட்டு இருக்கு”

என்று கெஞ்ச அதற்கு ஸ்ரீமதியோ…

“நானும் அதான் சொல்றேன் இன்னும் கொஞ்ச நேரம் தான் நாம கிளம்பலனா அப்பாவே இங்க வந்துடுவார் அதன் பிறகு நாளை முதல் நாம மூணு பேரா காலேஜுக்கு வர மாட்டோம் அப்பாவோடு சேர்த்து நாளு பேரா தான் வருவோம், போவோம்… எங்க கொஞ்சம் நினைச்சு பாருங்க இப்போ நாம அடிக்கிற லூட்டி நாளையில இருந்து அப்பாவோடு வந்தா அடிக்க முடியுமான்னு…”

என்று அவள் கூறியதைக் கேட்ட இருவரும்

“ஆமாடி நீ சொல்றதும் சரி தான்”

என்று கூறி காரில் ஏறினர். ராகவ் காரை இயக்க அங்கிருந்து கிளம்பிய கார் வீட்டிற்கு வரும் வழியில் எப்போதும் போலவே சாலை மிகவும் அமைதியாக இருந்தது. கணிசமான மக்கள் தான் நடமாடிக் கொண்டிருந்தனர்....

பார்ப்பதற்கு எப்போதும்போல எந்த வித்தியாசமும் இல்லாததுபோல் தான் தெரிந்தது வழமை போல ரோட்டோர கடை , டிராபிக் சிக்னல் மற்றும் எப்போதும் போல சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் என்று இருந்தது. ஆனால் அமைதியாக இருந்த சாலையின் டிராபிக் சிக்னலில் சிவப்பு வண்ண விளக்கு எரிய அனைத்து வாகனங்களும் அங்கேயே நிற்க மித்ராவின் காரும் அங்கு நின்றது அப்போது திடீரென்று ஒரு பத்து பேர் கொண்ட நடனக் குழு சாலையின் நடுவில் தல அஜித்தின் விசுவாசம் படத்தில் வரும்

“அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு...” பாடலுக்கு நடனமாடினர் அங்கு நின்று கொண்டிருந்த அனைவருக்கும் இங்கு என்ன நடக்கிறது என்று சற்று நேரம் ஒன்றும் விளங்கவில்லை....

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி, ராகவ் மற்றும் மித்ராவிடம்...

“என்னப்பா இவங்க என்ன லூசா நடுரோட்டில் வந்து ஆடிட்டு இருக்காங்க என்று கேட்க...”

அதற்கு மித்ரா...

“அவங்க இல்லடி லூசு நீதான் லூசு. இதுக்கு பேர்தான் ஃபிளாஷ் மாப்...”

என்று கூறிவிட்டு காரை விட்டு கீழே இறங்கி அங்கே நடனமாடிக் கொண்டிருந்தவர்களுள் இவளும் சேர்ந்து கொண்டு நடனம் ஆட இந்த நடனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அவர்கள் மொபைலில் வீடியோ எடுத்து அதை ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தனர்.

அதே சமயம் அர்ஜுன் தன் அலுவலத்தில் உள்ள மீட்டிங் ரூமில் தன் எஸ் வி குரூப்ஸ் கம்பெனியின் விரிவாக்கத்தை பற்றி மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரை பேசிக்கொண்டிருந்தான். சிறிதுநேரம் வரை மரண அமைதியாக இருந்த மீட்டிங் ரூமில் இப்போது சிறு சலசலப்பு ஏற்பட தான் பேசுவதை சில விநாடிகள் நிறுத்திய அர்ஜுன் அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் யாரும் அவனை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன் வேறு எதை அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க அவர்கள் அனைவரும் அவரவர் மொபைலில் சற்றுமுன் வந்திருக்கும் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தவன் உடனே தன் அருகில் இருந்த மேஜையை இரு முறை பலமாக தட்ட அவர்கள் அனைவரும் அவனை பார்க்க அவர்கள் அனைவரையும் அழுத்தமாக பார்த்து

"நான் பேசும்போது என் வார்த்தையை மட்டும் தான் நீங்க கவனிக்கணும்.... கவனிக்க விருப்பமில்லாதவங்க அவங்க ரெசிக்னேஷன் லெட்டரை மெயில் செஞ்சிட்டு தே கேன் வாக் அவுட்..."

என்று கூறியவனை அங்கே இருந்தவர்கள் எங்கே தங்களது உத்யோகம் பறி போய்விடுமோ என்ற லேசான அச்சத்தோடு அவனை கவனிக்க அவனும் அடுத்த அரை மணி நேரத்தில் மீட்டிங்கை முடித்தான். மீட்டிங் முடிந்தவுடன் தன் கேபினுக்கு சென்றவனை அவனது பி.ஏ பின்தொடர கேபினுக்குள் சென்று தன் இருக்கையில் அமர்ந்து அங்கிருந்த ஒரு பைலை தரையில் விசிறி எறிந்தான். அவன் எறிந்த பைலை அவனது பி.ஏ எடுத்து அவனது டேபிலில் வைத்துவிட்டு செல்ல, கடைசியில் அந்த வீடியோ அவன் மொபைலுக்கும் வந்தது. அவனும் அதை திறந்து பார்க்க அதில் முகம் தெரியாத யாரோ பத்து பேருடன் சேர்ந்து அவனுடைய அத்தை மகள் மித்ரா நடனமாடிக் கொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு கோபம் இன்னும் தலைக்கேற பிறகு அவள் எப்டி போனால் எனக்கென்ன என்பதுபோல் அந்த வீடியோவை நிறுத்தும்போது அவன் கவனித்தது அந்த வீடியோவின் ஒரு கமெண்டை அதில் ஒரு பெண்ணின் உடையை தெளிவாக சுட்டிக்காட்டி

" இது எஸ் வி குரூப்ஸ் இன் வாரிசு மித்ரா…"

என்று எழுதப்பட்டிருக்க இதை பார்த்தவனுக்கு தனிந்த கோபம் மீண்டும் தலைக்கு ஏற விறுவிறுவென லிப்டை நோக்கி நடந்தான். லிப் டோ பொறுமையாக மேலே வர இவன் அதற்காக காத்திருக்காமல் படி வழியாக சரசரவென கீழே இறங்கி பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த தன் காரை எடுத்துக்கொண்டு காற்றை கிழிக்கும் வேகத்தில் தன் வீட்டிற்கு வந்தடைந்தவன் விறுவிறுவென்று வீட்டுக்குள் வந்து அங்கு இருந்தவர்களிடம்...

“எங்கே அவ....எங்கே அவ...”

என்று கேட்க அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவன் தாத்தா அவனிடம்...

“யாரப்பா கேட்குற...”

என்று கேட்டதற்கு...

“உங்கள் அருமைப் மகள் பெற்ற பேத்தியை தான்..”

என்று சொல்ல...

“ஓ மித்ராவையா...”

என்று அவர் கேட்க...

“அவளேதான் எங்கே அவ...”

என்று மீண்டும் சீற்றத்தோடு கேட்க அவனின் சீற்றத்தை கண்டவர் தன் மனதில்

‘இன்னைக்கு என்ன செய்து வச்சிருக்காளோ??’

என்ற அச்சத்தில்...

“அவ காலேஜ் விட்டு இன்னும் வீட்டுக்கு வரலப்பா "

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் வந்து நின்றாள் மித்ரா. அவளைப் பார்த்தவன் விறுவிறுவென அவள் அருகில் சென்று

“உனக்கு நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன் அடக்கமாக இரு... அடக்கமாக இருன்னு.. கேட்டியா நீ.. நீ எப்படி கேட்ப...

உனக்குதான் உடம்பு பூறா திமிராச்சே.. தானென்ற தலக்கணம் வேற.. ம்ஹூம் அம்மாவைப் போல தான பொண்ணும் இருப்பா... அப்ப நீ மட்டும் எப்படி இருப்ப...”

என்று திட்டிக் கொண்டிருக்க அப்போது அவனுடைய வார்த்தைகள் எல்லை மீறுவதை கவனித்த ஜானகி பாட்டி...

“அர்ஜுன் அவ என்ன செஞ்சாலோ அத மட்டும் சொல்லு ”

என்று கூற உடனே அருகில் நின்று கொண்டிருந்த ராகவை அழைத்து தன் கையில் இருந்த அலைபேசியை அவன் கைகளில் திணித்து

“இதை அவங்களுக்கு போட்டு காட்டு...”

என்று தன்னுடைய மொபைலில் இருந்த பேஸ்புக் அக்கௌன்டை ஓபன் செய்து அவனிடம் தந்தான். அவன் அதை அங்கிருந்த அனைவருக்கும் போட்டுக்காட்ட பிறகு அவன் ராகவை பார்த்து...

“கமெண்ட்ல என்ன எழுதி இருக்குன்னு படிடா...”

என்க உடனே ராகவும்

“இது எஸ் வி குரூப்ஸ் இன் வாரிசு மித்ரா..”

என்று படிக்க இதைக் கேட்டவன்...

“பார்த்தீர்களா இவளும் இவள் அம்மாவைப் போலவே நம்ம குடும்ப பேரை தெருவில் இழுத்து விடுறா”

என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மித்ரா அழுதுகொண்டே தன் அறையை நோக்கி ஓடினாள். அவள் பின்னாலேயே ராகவும் ஸ்ரீமதியும் செல்ல சில விநாடிகளில் அர்ஜுனும் தன் அறைக்கு சென்று கதவை பெரும் சத்தத்துடன் சாற்றினான். சிறிது நேரத்தில் வீடு களை இழந்து காணப்பட்டது.

அவளும் சிறு பெண்தானே அவன் கூறிய வார்த்தை மிக வெகுவாக அவளை தாக்கியது. அவளை மட்டுமல்ல அந்த முதியவர்களையும் தாக்கியது... ஆயிரம் தான் இருந்தாலும் அவர்கள் பெற்ற பிள்ளை ஆயிற்றே...

கோபம் கொண்ட அந்த மூர்க்கனோ சிறிதும் எண்ணவில்லை வார்த்தை எனும் சவுக்கினால் பிறர் மனதை அடிக்கிறோம் என்று... ஆனால் பின்னொரு நாளில் பெண்ணவளை பார்த்து உதிர்த்த வார்த்தைகளை எண்ணி நித்தமும் கலங்கப்போவது அவன்தான்...


நீ மதலையா, மங்கையா
சில சமயம் குழந்தை ஆகிறாய்
சிலசமயம் குமரியாகி....

சீண்டுகிறாய், சிரிக்கிறாய்,
சினுங்குகிறாய்
என் குறும்பு பெண்ணே...

உன்னில் நான் கண்ட
புன்னகையை என் வார்த்தை
கண்ணீராய் மாற்றியதே அன்பே...

உன் கண்ணீர் உன்னை அல்ல
என் இதயத்தை சுட்டது பெண்ணே...

என் தேடல்.

1610645173526.jpg
 
அத்தியாயம் 04

வீட்டிற்குள் வந்த விஸ்வநாதன் வீடு அமைதியாக இருப்பதை கண்டு தன் தந்தையின் அருகில் அமர்ந்து கால்களில் இருக்கும் ஷூ வை அகழ்ற்றிய படி

“என்னப்பா குழந்தைகள் இன்னும் வரலையா?”

என்று கேட்க,

அதற்கு சீனிவாசன் ஒன்றும் பேசாது அமைதியாக இருக்க, பிறகு அவருக்கு சற்று அருகில் நின்றிருந்த தன் மனைவி யமுனாவிடம்

“என்னம்மா, என்னாச்சு? குழந்தைகள் எங்க? இன்னும் வீட்டுக்கு வரலையா ?”

என்று கேட்க அதற்கு யமுனா நடந்தவை அனைத்தையும் கூற, இவை அனைத்தையும் அமைதியாய் கேட்ட விஸ்வநாதன் தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்தப்படி தன் மனையாளை பார்த்து

“சரி பசங்க இப்ப எங்க இருக்காங்க”

என்று கேட்க அதற்கு யமுனா மேலே உள்ள மித்ராவின் அறையை பார்க்க அதை புரிந்து கொண்ட விஸ்வநாதன் லிப்டில் ஏறி மித்ராவின் அறையை நெருங்கும்போது அங்கு ராகவும் ஸ்ரீமதியும் மித்ராவிடம்

“ஏன்பா அழற இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா??”

என்று கேட்க அதற்கு மித்ரா

“ச்சே.. நான் ஏன் டா அழறேன்...”

என்று கூறியவள் மீண்டும் அவர்களை பார்த்து

“எனக்கு என்னன்னா என்னோட இந்த விளையாட்டு தனத்தால மாமாவுக்கு அசிங்கமா ஆயிடுச்சே.. அத நெனச்சு தான் நான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்... அதுக்குள்ள நான் அழுதுட்டேன்னு முடிவே பண்ணிட்டீங்களா?? போங்கடா.. போங்கடா.. போக்கெத்த பயலுகளா..”

என்று சொல்ல, இதை கேட்ட ராகவும் ஸ்ரீமதியும்

“யாரை பாத்து டி போக்கெத்த பயலுகளானு சொன்ன?? இன்னிக்கு பாரு உன்ன என்ன செய்றோம்ன்னு..”

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அறையின் கதவை வெளிப்புறத்தில் இருந்து

“டக் டக் டக்”

என யாரோ தட்டும் சத்தம் கேட்க அப்போது விளையாட்டு ஆர்வத்தில் இருந்த ராகவ்

“யாருயா அது சும்மா டொக்கு.. டொக்குன்னு..”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன் மெதுவாக தன் தொண்டையை சரி செய்தபடி இருமுறை இரும்ப, அது தன் மாமா விசுவநாதன் என்பதை உணர்ந்த மித்ரா அருகில் இருந்த ராகவிடம்

"டேய் மாமா டா”

என்று கூற இதை கேட்ட ராகவ்

“எனக்கு ஏதுடி மாமா”

என்று கேட்க

“டேய் எனக்கு மாமா டா உனக்கு அப்பா” என்றாள்.

இவர்கள் பேசியவை அனைத்தையும் கேட்டுவிட்டு உள்ளே வந்த விஸ்வநாதன் மித்ராவை பார்த்து

“என்னமா டான்ஸ் ஆடுனியாமே”

என்று சிறு மென் புன்னகையுடன் கேட்க, அதற்கு மித்ரா

“சாரி மாமா, நான் இப்படி நடக்கும்னு நினைக்கல நம்ம ஃபேமிலி பேரு இப்படி வரும்னு எனக்கு தெரியாது.”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன்

“ச்ச.. ச்ச.. நான் தான் மா உனக்கு தேங்க்ஸ் சொல்லனும் நீ எதுக்கு எனக்கு சாரி சொல்ற”

என்று கேட்டவரை மூவரும் கருவிழி பிதுங்க முழிக்க

“என்னப்பா.., என்ன மாமா.. சொல்றீங்க??”

என்று ஒரே நேரத்தில் மூவரும் ஆச்சரியமாக கேட்க, அதற்கு விஸ்வநாதன்

“ஆமா மா இதுவரைக்கும் பெய்டு அட்வெர்டைஸ்மென்ட்ல மட்டும்தான் நம்ம கம்பெனி பெயர் விளம்பரத்துக்காக வந்துச்சு அது கூட நாம நம்ம கன்ஸ்ட்ரக்ஷன், ஹெல்த் கேர், ஆட்டோ மொபைல்ஸ் என இப்படி நம்ம கம்பெனி எல்லாத்துக்கும் தனித்தனியா நியூஸ் பேப்பர் மற்றும் மேக்சீன்ஸ்லனு காசு கொடுத்து அட்வெடஸ்மெண்ட் கொடுப்போம். ஆனா இன்னிக்கு நீ ஆடின அந்த டான்ஸ் வைரலாகி எங்க பாத்தாலும் யாரை பார்த்தாலும் எஸ் வி குரூப்ஸ்.. எஸ் வி குரூப்ஸ்ன்னு தான் சொல்றாங்க இதனால நம்ம கம்பெனிக்கு ஃப்ரீ அட்வெடேஸ்மெண்ட் தானே.. அது மட்டும் இல்ல இப்ப எல்லாரும் அதிகமா யூஸ் பண்ற சோசியல் மீடியாகளான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர்ன்னு இது மாதிரியான சோசியல் மீடியா ஆப்ல மட்டும் இதுவரைக்கும் 1 லட்சம் பேர் பாத்துட்டு நம்ம கம்பெனி பேற கூகுள்ல சர்ச் பண்ணி இருக்காங்களாம் சோ இப்ப சொல்லு நான் ஏன் உனக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது??”

என்று கேட்க, அதற்கு மித்ரா,

“ஆனா மாமா உங்க பிரெண்ட்ஸ் அப்புறம் பிஸ்னஸ் கிளைன்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு கால் செஞ்சு கேப்பாங்களே அப்போ உங்களுக்கு அசிங்கம் இல்லையா”

என்று கேட்க, அதற்கு விஸ்வநாதன் தன் நெஞ்சில் கை வைத்து

“அப்படி எவனாவது கேட்டா நான் பெருமையா சொல்வேன் எஸ், அவ என் மருமக தான் ன்னு ”

என்று அவர் கூறி முடித்ததும் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டாள் மித்ரா. இவள் கட்டி அணைத்ததும் அவருக்கு தன் சிறுவயதில் அவருடைய தங்கை காயத்ரி அவரை கட்டி அணைப்பது போல உணர்ந்தவர் கண்களிலிருந்து இரு சொட்டு விழிநீர் வெளியேறியது.

பிறகு மித்ரா அவரை பார்த்து

“மாமா இந்த சண்டே வெறும் பிரியாணி மட்டும் கிடையாது அதோடு சேர்த்து உங்களோட பாட்டும் வேண்டும்”

என்று சொல்ல

“சரிம்மா என்ன பாட்டு சொல்லு பாடிடுவோம்”

என்று கேட்டுவிட்டு அருகில் இருந்த ராகவ் ஸ்ரீமதி இருவரையும் பார்த்து

“என்னங்கடா.. ஓகே தானே??”

என்று கேட்க, அதற்கு இருவரும்

“ம்ம்ம்”

என்று தலையாட்டினர். அப்போது மித்ரா விஸ்வநாதனை பார்த்து

“இப்ப மட்டும் அந்த ஒரு பாட்டை பாடுங்களேன் மாமா”

என்று கேட்க

“ம்.. எந்த பாட்டுமா”

என்று யோசித்தப்படி கேட்க, அதற்கு அவள்

“அது தான் மாமா...” என்றவள் அந்த பாடலில் இருந்து சில வரிகளை பாட

“உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா,
நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா,
உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா,
நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா,"

என்று மித்ரா பாடியதைக் கேட்டதும் அவரின் முகம் குறும்பு செய்த சிறுகுழந்தை முழிப்பது போல முழிக்க, இதைப் பார்த்த மித்ராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை உடனே அவர் சுதாரித்துக் கொண்டு

“ராகவ், ஸ்ரீமதி இரண்டு பேரையும் அம்மா கூப்புடுறாங்க என்னன்னு கேட்டு வாங்க”

என்று கூறி அனுப்பி வைக்க, அவர்கள் சென்றவுடன் மித்ராவை பார்த்து

“ஏம்மா இந்த பாட்டு எப்படி உனக்கு தெரியும்”

என்று கேட்க, அவளோ

“அதுவா மாமா.. நேத்து நான் ரூம்ல தண்ணி இல்லன்னு கிச்சனுக்கு வந்தனா அப்போ அத்தை கூட சேர்ந்து நீங்க டூயட் பாடிட்டு இருந்தத நான் கேட்டுட்டேன்.. சும்மா சொல்லக்கூடாது மாமா உங்க ரெண்டு பேர் குரலும் அபாரம் அதைவிட உங்க ரெண்டு பேரோட ரொமான்ஸ் சூப்பரோ சூப்பர்”

என்று அவள் கூறியதை கேட்ட விஸ்வநாதன் வெட்கத்தில்

“அட போம்மா..”

என்று சொல்லிவிட்டு அறையின் கதவை தாண்டியவர் மீண்டும் திரும்பி மித்ராவை பார்த்து

“சரி வாமா கீழ போலாம்” என்று அழைக்க மித்ராவும் அவருடன் வந்தாள். கீழே வந்தவுடன்

“அம்மா லட்சுமி..., லட்சுமி..”

என்று அழைக்க லட்சுமி அம்மாவும்

“இதோ வரேன்யா..”

என்று கூறிக் கொண்டே வந்து விஸ்வநாதன் முன்னால் நின்று

“சொல்லுங்க ஐயா..” என்று கூற

“இதோ பாரு லட்சுமி, இனிமே யார் ரூம்ல வேணும்னாலும் நைட்ல குடிக்க தண்ணி இல்லாம போகலாம் ஆனா என் பாப்பா மித்ரா ரூம்ல மட்டும் தண்ணி இல்லாம இருக்கவே கூடாது”

என்று கூற அதற்கு லட்சுமி ஏதும் பேசாது இருவரையும் மாறி மாறி பார்த்தபடி நிற்பதை பார்த்தவர் மீண்டும் ஒரு முறை

“ம்.. புரிஞ்சுதா??”

என்று அழுத்தி கேட்க ஒன்றும் புரியாது அவரை பார்த்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர, பக்கத்தில் நின்று கொண்டிருந்த மித்ராவுக்கு சிரிப்பு தாங்கவில்லை அவள் சிரிப்பதைப் பார்த்து அவளின் அத்தையும், தாத்தா பாட்டியும் மகிழ்ந்தனர்.

தன் பேத்தியின் முகத்தில் சிரிப்பை கண்ட சீனிவாசன் மித்ராவிடம்

“என்னம்மா ஆச்சு??”

என்று கேட்க மித்ரா பதில் சொல்வதற்குள் அவளுடைய மாமா விஸ்வநாதன்

“அது ஒன்னும் இல்லப்பா ஒரு சின்ன ஜோக் ஞாபகம் வந்துச்சு அதான் சிரிச்சா”

என்று கூற தன் மகனை பற்றி அறிந்த தந்தையோ

“நான் உன்கிட்ட கேட்டனா?”

என்று கேட்க வாயை மூடிக் கொண்டார் விஸ்வநாதன்


சீனிவாசன் தன் பேத்தி மித்ராவை அருகில் அழைத்து அமரவைத்து

“நீ சொல்லுமா” என்று சொல்ல அப்போது மித்ரா விஸ்வநாதனை பார்க்க விஸ்வநாதன் மித்ராவை பார்த்து சொல்லாதே என்றவாறு தலையை ஆட்டினார் அதை பார்த்த மித்ராவுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. இதை கவனித்த சீனிவாசன்

“டேய் என்ன கழுத்து சுலுக்கா??”

என்று அவர் தன் மகனை பார்த்து கேட்க அதற்கு பதில் தெரியாத விஸ்வநாதனும் ஆம் என்றார். இதை கேட்ட சீனிவாசன்

“ம்.. சரி உன் பொண்டாட்டி கிட்ட போய் தைலம் தேச்சு கோ.. இப்ப இந்த இடத்த விட்டு கெளம்பு”

என்று கூறியவுடன் இதற்குமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் விஸ்வநாதன்.

அவர் சென்றதும் சீனிவாசன் மித்ராவை பார்த்து

“இப்ப சொல்லுமா.. அந்த ஜோக் என்னன்னு”

என்று கேட்க மித்ரா நடந்ததை கூற இதை கேட்ட சீனிவாசனும் சிரித்துக்கொண்டே பக்கத்தில் அமர்ந்திருந்த அவருடைய மனைவி ஜானகியை பார்த்து

“பார்த்தியா ஜானு பேபி உன் புள்ள இந்த வயசில என்ன காரியம் பண்ணி இருக்கான்”

என்று சொல்ல அதற்கு ஜானகி பாட்டி

“என் புள்ளையா.. நம்ம புள்ள.. அதுவும் குறிப்பா இந்த விஷயத்துல அவன் உங்க புள்ள”

என்று கூறியவர் தன் கணவனை தலை குனிந்து வெட்கி பார்த்தப்படி

“அந்த காலத்துல நீங்க என்கிட்ட பண்ணாத ரொமான்ஸ்சா இப்போ நம்ம புள்ள பண்ணிட்டான்”

என்று கூற இதை கேட்ட சீனிவாசன் தன் சரிபாதியை பார்த்து

“ஏண்டி, அப்ப மட்டும் தான் நான் ரொமான்ஸ் பண்ணுனா..? ஏன் இப்போ பண்றது இல்லையா.. நேற்று கூட மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கி குடுத்தனே அதுக்குள்ள மறந்துட்டியா..??”

என்று தன் பேரன் பேத்திகள் அருகில் இருப்பதை கூட மறந்து காதல் ஜோடிகளை போல் பேசியவர்களை பார்த்த மித்ரா
“ஹலோ..”

என்று அழைக்க இருவரும் மித்ராவை பார்க்க

“என்னது இது இல்ல இங்க என்ன நடக்குதுன்னு கேக்குறேன்.., இங்க மூனு வயசு பசங்க இருக்காங்கன்றது கூட மறந்துட்டு எங்க முன்னாடியே ரொமான்சா??”

என்று கேட்டதும் பாட்டி உடனே வெட்கப்பட்டு முகத்தை கைகளால் மறைத்து கொள்ள அப்போது மித்ரா அருகில் இருந்த சீனிவாசனிடம்

“தாத்தா நீ இப்பவே இப்படி இருக்கிறியே, அந்த காலத்துல எப்டி எல்லாம் இருந்திருப்பியோ??”

என்று கேட்க அதற்கு சீனிவாசன்

“நான் அந்த காலத்துலயே காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஃபேன் டா.. பின்ன எப்படி இருப்பேன்..” என்று கூறியவரை பார்த்து மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதே சமயம் அர்ஜுன் வீட்டின் உள்ளே நுழைய அப்போது அங்கு மித்ரா சிரித்துக் கொண்டிருப்பதை கண்டவன் கண்கள் சிவக்க அவளை முறைத்து பார்த்தபடி தன் அறையை நோக்கி சென்றான்.

சிறிது நேரத்தில் அனைவரையும் லஷ்மி அம்மாவும் யமுனாவும் இரவு உணவு உண்ண அழைக்க அனைவரும் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்ததும் யமுனா அனைவருக்கும் உணவு பரிமாறினார். அப்போது இங்கு அமர்ந்து இருந்தவர்களை கவனித்த லட்சுமி அம்மா அங்கு அர்ஜுன் இன்னும் வரவில்லை என்று யமுனாவின் காதில் கூற உடனே யமுனா, லட்சுமி அம்மாவிடம்

"நீங்க போய் பாத்துட்டு வாங்க லக்ஷ்மி"

என்று சொல்ல லஷ்மி அம்மாவும் அர்ஜுனின் அறைக்கு வெளியே நின்று அவனது அறை கதவை இருமுறை தட்டியபடி உள்ளே நுழைந்து அங்கு குளித்து முடித்து தலை துவட்டி கொண்டிருந்த அர்ஜூனிடம்

“அர்ஜூன் தம்பி அம்மா உங்கள கீழ சாப்பிட கூப்பிடுறாங்க..”

என்று சொல்ல, அதற்கு அர்ஜுன்

“அம்மா கிட்ட சொல்லுங்க எனக்கு பசி இல்லன்னு”

என்று கூற மீண்டும் லக்ஷ்மி அம்மா

“ராத்திரியில வெறும் வயித்துல படுக்க கூடாது தம்பி நான் வேணும்னா தட்டுல இரண்டு இட்லி வச்சு எடுத்துட்டு வரட்டுமா”

என்று கேட்க அதற்கு

“இல்ல லட்சுமி அம்மா, எனக்கு இப்ப பசி இல்ல... வேணும்னா நானே கேட்கிறேன்”

என்று சொல்ல

இதைக் கேட்ட லட்சுமி அம்மா அங்கிருந்து வந்து யமுனாவிடம் கூற

“சரி நீங்க கிச்சனுக்கு போய் இந்த பவுல்ல இன்னும் கொஞ்சம் சாம்பார் எடுத்துட்டு வாங்க லட்சுமி..”

என்று கூறியபடி அனைவருக்கும் அவரவர் தேவை அறிந்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

சில நாழிகைகளுக்கு பிறகு அனைவரும் உணவு உண்டு முடித்ததும் அவரவர் அறைக்கு சென்றவுடன் யமுனா ஒரு தட்டில் இரண்டு இட்லியும் ஒரு தோசையும் வைத்து அதற்கு பக்கத்தில் இரண்டு சிறு கின்னத்தில் சாம்பார் மற்றும் வெங்காய சட்னியும் வைத்து கையில் ஒரு நீளமான டம்ளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அர்ஜூன் அறைக்கு வெளியே நின்றபடி

“அர்ஜூன்.. அர்ஜூன்.. ”

என்று சத்தம் போட, உள்ளே தன் அறையில் உள்ள படுக்கையில் சாய்ந்தபடி நீயே என் ஜனனம் - ப்ரஷா புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தவன் செவிகளில் அவன் அன்னையின் குரல் கேட்க புத்தகத்தை மடித்து மெத்தையின் இட பக்கத்தில் இருந்த டேபிள் மேலே வைத்துவிட்டு தன் அறை கதவை திறந்ததும் எதிரில் உணவு தட்டுடன் நின்று கொண்டிருந்த யமுனாவை பார்த்து

“ஏன்மா.. நான் தான் எனக்கு எதுவும் வேணாம்னு லட்சுமி அம்மா கிட்ட சொன்னேன்ல”

என்று அவன் கூறியதை கேட்ட யமுனா அவனை மென் சிரிப்புடன் பார்த்து

“டேய் கண்ணா.. நீ சாப்பிடலனா தூங்க மாட்டேன்னு எனக்கு தெரியும் அதான் கொஞ்சமா வெச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்”

என்று கூறிக்கொண்டே தன் மகனுக்கு அந்த தாய் உணவை ஊட்டி விட அவனும் ஒரு சிறு பிள்ளை போல் அவ்வுணவை உண்டு உறங்கினான். பிறகு யமுனாவும் உணவு உண்ண அமர ஆனால் ஏனோ எடுத்து வைத்த உணவை புசிக்காது தன் அறைக்கு சென்றார்.

அறைக்கு வந்த யமுனாவின் முகம் வாட்டமாக இருக்க அதை கவனித்த விஸ்வநாதன்

“என்ன பார்பி டால்.. ஒரு மாதிரி இருக்க, உடம்பு சரி இல்லயா? ஹாஸ்பிடல் போலாமா?”

என்று கேட்க அதற்கு யமுனா

“உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு.., மனசு தான் சரியில்லை”

என்று மனம் முழுதும் சோகம் சூழ்ந்து சொல்ல,

“ஏம்மா, என்ன ஆச்சு??”

என்று கேட்டார் விஸ்வநாதன் அதற்கு யமுனா

“எல்லாம் நம்ம அர்ஜுன் பற்றிய கவலை தான் என்று சொல்ல, உடனே விஸ்வநாதன்

“அவனுக்கு என்னம்மா.., ராஜா..”

என்று சொல்ல, அதற்கு யமுனா

“ராஜாவுக்கு ஒரு ராணி வேணும்ல” என்று அர்ஜுனின் திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க அதற்கு விஸ்வநாதனும்

“வேண்டும் தான்.. ஆனா அவன் தான் எந்த பதிலும் சொல்ல மாட்டேன்கிறானே”

என்று சொல்ல, உடனே யமுனா

“அதற்கு அவன அப்படியே விட்டுவிடலாமா??”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“சரி அதற்கும் இப்போ நீ உன் அழகான முகத்தை இப்படி அசிங்கமாக வச்சுட்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்??”

என்று கேட்க, சற்று முன் நடந்தவைகளை அவரிடம் சொல்லிவிட்டு

“இதற்கு தான் நான் சொல்றேன் அவனுக்கு ஒரு கல்யாணம் செய்துட்டா அவன பார்த்துக்க ஒருத்தி வந்துடுவான்னு”

என்று கூற யமுனாவை பார்த்தபடி யோசித்த விஸ்வநாதன்

“சரி மா நாளைக்கு காலைல இதை பற்றி நானே அவன்கிட்ட பேசுறேன்.. போதுமா..”
என்று கேட்க, உடனே யமுனா
ம்.. போதும்..
என்று அதே வாடிய முகத்துடன் கூற இதை கவனித்த விஸ்வநாதன்

“இப்போவாவது கொஞ்சம் சிரியேன் இப்படியே இருந்தா பாக்க சகிக்கல..”

என்று சொல்ல உடனே யமுனாவும்

ஹா... ஹா... ஹா...

என்று பெரும் சத்தத்துடன் சினிமாவில் வரும் கடோத்கஜன் போல் சிரித்து வைக்க அருகில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டார் விஸ்வநாதன் இதை பார்த்த யமுனா சிரித்தப்படி

“என்னங்க.. என்னங்க..”

என்று அழைக்க அதற்கு விஸ்வநாதன்

“இனிமே ஜென்மத்துக்கும் உன்ன சிரிக்க சொல்லவே மாட்டேன்”

என்று கூற இதை கேட்ட யமுனா தன்னுடைய மென்மையான குரலில் ஹா.. ஹா.. ஹா.. என்று சிரிக்க இருவரும் மகிழ்ச்சியாக உறங்கினர்.



உன் பார்வை எனக்கு பகையோ..
உன் கோபம் எனக்கு வலியோ..
நானறியேன்...
ஆனால்
நீ என் தேடலில்
முளைத்த
ஊடல்..


1610645173526.jpg
 
அத்தியாயம் 05


மறுநாள் காலை விஸ்வநாதன் தன் தந்தை சீனிவாசனின் அருகில் வந்து அமர்ந்து


“அப்பா உங்ககிட்ட நான் முக்கியமான விடயம் ஒன்னு பேசணும்”


என்று கூற அப்போது காலை செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்த சீனிவாசன் அதை மடித்து தன் பக்கவாட்டில் வைத்த படி தன் மகனை பார்த்து


“சொல்லுப்பா”


என்று கூற உடனே விஸ்வநாதன் தன் தந்தையைப் பார்த்து


“அப்பா அர்ஜுனுக்கு நான் ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்”


என்று சற்று தயங்கியபடி சொல்ல, தன் மகனின் முடிவை சற்றும் எதிர்பார்க்காத சீனிவாசன்


“என்னப்பா சொல்ற”


என்று கேட்க, உடனே விஸ்வநாதன்


“ஆமாப்பா அவனுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு.. அவனும் படிப்பை முடிச்சு சுயமா அவனுக்கு னு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு இன்னைக்கு இருக்குற தொழிற் வட்டாரத்துல தனக்குன்னு சுயமா ஒரு முத்திரையை பதித்தது மட்டும் இல்லாம என்னால நம்ம பிசினஸ பார்த்துக்க முடியலன்னு அதையும் சேர்த்து கவனிச்சிக்கிறான்.


என்று கூறியவர் சிறிது நேர மௌனத்திற்க்கு பிறகு மீண்டும் தன் தந்தையை பார்த்து


எனக்கு நீங்க என்ன நினைக்குறீங்கன்னு புரியுதுப்பா ஆனா அது நடக்குமா னு நீங்களே யோசித்து பாருங்க.. அதுமட்டுமில்லாம அர்ஜூனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு பார்க்கணும்ன்னு யமுனாவும் ஆசை படுறா..”


என்று கூற உடனே ஜானகி அருகில் மௌனியாக நின்று கொண்டிருந்த தன் மருமகளை ஏறிட்டு கேள்வியாய் பார்க்க அப்போது சீனிவாசன் தன் மகனிடம்


“சரி.. யார் அந்த பொண்ணு...”


என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன்


“அது.. நம்ம இண்டஸ்ட்ரியலிஸ்ட் கேசவமூர்த்தி பொண்ணு யாழினி தான்பா”


என்று கூறி முடிக்க அதேசமயம் சீனிவாசனும் ஜானகியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி மௌனமாக இருக்க உடனே சீனிவாசன் தன் மகனை பார்த்து


“சரிப்பா, நீ எதை செய்தாலும் சரியாதான் இருக்கும்”


என்று கூற அதேசமயம் தன்னுடைய பாக்ஸிங் பிரக்டீசை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்த மித்ரா


“லட்சுமி அம்மா என்னோட சத்துமாவு கஞ்சி”


என்று குரல் கொடுத்தாள்

உடனே லட்சுமி அம்மா


“இதோ எடுத்துட்டு வரேன் பாப்பா”


என்று குரல் கொடுக்க, அப்போது தனக்கு எதிரே உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த தன்னுடைய தாத்தா பாட்டியைப் பார்த்து தன் மனதுக்குள்


‘என்னடா இது! இந்த பெருசுங்க இரண்டும் எப்பவுமே ரொமான்ஸ் மூடுல இருக்குங்க ஆனா இன்னிக்கு என்னடானா ரெண்டுபேரும் உம்முனு இருக்குங்க’


என்று மனதில் நினைத்தவாறு சீனிவாசனிடம்


“என்ன தாத்தா ரெண்டு பேரும் சைலண்டா இருக்கீங்க ஏதாவது உடம்புக்கு முடியலயா”


என்று கேட்க, அதற்கு சீனிவாசன்


“ஒன்னும் இல்லடாம்மா”


என்று சொல்ல இதை ஏனோ மித்ராவின் மனம் ஏற்க மறுத்தது. அங்கு அமர்ந்தபடி அவளது விளையாட்டு காலனிகளை அகற்றி முடித்தவள் மீண்டும்


“லட்சுமி அம்மா, சீக்கிரம் வாங்க எனக்கு பசிக்குது”


என்று சொல்ல, அவளுடைய அத்தை யமுனா கையில் அவள் கேட்ட சத்துமாவு கஞ்சியை கொண்டு வந்து அவளிடம் கொடுத்துவிட்டு


“எங்கம்மா நான் பெற்ற வானரங்கள் இரண்டும்”


என்று கேட்க


“அவங்க ரெண்டு பேரும் இன்னும் எழுந்திருக்கலை அத்த”


என்று கூற இதை கேட்ட யமுனா


“என்ன இன்னும் தூங்குறாங்களா.. மணி 7 ஆச்சு.. இன்னும் என்ன தூக்கம்...”

என்று கேட்டபடி மித்ராவிடம் அந்த சத்துமாவு கஞ்சியை கொடுத்துவிட்டு அவர்களை எழுப்ப அவர்களின் அறையை நோக்கி செல்ல, கையில் சத்துமாவு கஞ்சியை எடுத்து கொண்டு யமுனாவின் பின்னாலேயே வந்தவள்


“ஆமா அத்தை இவங்க ரெண்டு பேரும் எப்படி தான் இவ்வளவு நேரம் தூங்குறாங்களோ எனக்கே தெரியல”


என்று கூற உடனே யமுனா மித்ராவை பார்த்து நெட்டி முறித்து



“நீ தாண்டா என் ராணி, காலைல எழுந்து உன்னுடைய எல்லா வேலைகளையும் நீயே முடிச்சிட்ட.. சமத்து..”


என்று தன் மருமகளை மெச்சிக் கொண்டு மீண்டும் மித்ராவை பார்த்து



“சரி நான் போய் அவங்க ரெண்டு பேரையும் எழுப்பி ரெண்டு போடு போட்டுட்டு வரேன்.. நீ போய் குளிச்சு காலேஜூக்கு ரெடி ஆகு..”


என்று சொல்லிவிட்டு விறுவிறுவென படிகள் ஏற சென்றவரின் கைகளை பிடித்து இழுத்து


“அத்தை.. அத்தை.. நில்லுங்க.. ஒரு நிமிஷம் நில்லுங்க”


என்று கூறி நிறுத்தியவளை பார்த்து


“என்னடா ஏதாவது வேணுமா ?”


என்று யமுனா கேட்க, அதேசமயம் மேலே ராகவும் ஸ்ரீமதியும் அவர்களின் அறையின் வெளியே வந்து நின்று கொண்டிருக்க இதை சற்றும் கவனிக்காத மித்ரா யமுனாவை அழைத்து கொண்டு இங்க ஒரு நிமிஷம் வாங்க என்று சொல்லிக்கொண்டு கிச்சனுக்குள் சென்று அங்கிருந்த ஒரு சில்வர் கரண்டியை எடுத்து அடுப்பில் வைத்தாள்.


இவை அனைத்தையும் பார்த்த யமுனா ஒன்றும் புரியாது மித்ராவை பார்த்து

“என்னமா பண்ற”


என்று கேட்க அதற்கு மித்ரா


“இருங்க ஒரு நிமிஷம்”


என்று சொல்லிக்கொண்டிருக்க மேலே நின்று கொண்டிருந்த இருவரும் ஏதும் விளங்காதவர்களாய் காலையிலேயே அவள் செய்யும் குறும்பை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது மித்ரா தன் அத்தையிடம் கொதிக்கும் கரண்டியை எடுத்து


“அத்தை இதை தொட்டு பாருங்க”


என்று சொல்ல யமுனாவும் அவள் என்ன செய்கிறாள் என்பதை புரியாதவராய் அதை தொட்டுப்பார்த்து


“ஸ்... கொதிக்குதடா”


என்று சொல்ல உடனே மித்ரா


“அப்ப இந்தாங்க”


என்று அந்த கரண்டியை அவள் அத்தையிடம் கொடுத்து


“இப்ப இதை கொண்டுபோய் அவங்க ரெண்டு பேர் தொடையிலும் வைத்து ஒரு இழு இழுத்து விடுங்க”


என்ற கூற மேலே நின்று கொண்டிருந்த இருவரும் அவள் கூறியதை கேட்டுவிட்டு


“என்னடி சொன்ன...”


என்று குரல் கொடுக்க உடனே மித்ரா அவர்களைப் பார்த்தவுடன் அச் சுடு கரண்டியை கீழே தவற விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு ஓட இவர்கள் இருவரும் அவளை துரத்திக் கொண்டு செல்ல இறுதியில் அவள் தன் தாத்தா பாட்டியின் பின்னால் சென்று மறைந்து கொண்டாள்.



அப்போது ராகவ் தன் தாத்தாவை பார்த்து


“தாத்தா அவள பிடிங்க”


என்று சொல்ல உடனே மித்ரா தன் தாத்தாவை பார்த்து


“வேணாம் சீனு”


என்று எச்சரிக்கை செய்தாள். அப்போது இதை கேட்ட அவளுடைய பாட்டி ஜானகி மித்ராவை பார்த்து


“என்னடி சொன்ன..! எவ்வளவு தைரியம் இருந்தா என் புருஷன என் முன்னாடியே பேர் சொல்லி கூப்பிடுவ”


என்று கேட்க உடனே மித்ரா பாட்டியை பார்த்து


“உன் புருஷன் சீனிவாசனை சீனுன்னு கூப்பிடாம பின்ன பக்கத்து வீட்டுக்காரி புருஷனயா கூப்பிட முடியும் ஜானகி”


என்று சொல்லிக்கொண்டே இங்குமங்கும் துள்ளி குதித்து தாவி கொண்டிருக்க உடனே சீனிவாசன்



“பிடிங்க டா அவள”



என்று கூற அனைவரும் சேர்ந்து அவளை துரத்த உடனே அவள் அங்கும் இங்கும் தாவி குதித்து வீட்டையே சுற்றி வந்து வீட்டின் ஹாலில் இருந்த படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டு அனைவரையும் பார்த்து



“ஹா.. ஹா.. ஹா... என்னையா பிடிக்கணும்னு பாக்குறீங்க... சிறு வண்டு சிக்கும்.. சிறுத்த சிக்காதுலே..!”



என்று அங்கிருந்த அனைவரையும் பார்த்து சினிமா பட டயலாக்கை கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் கால் தடுமாறி படியிலிருந்து தவறி


“ஆ…”


என்று கத்திக்கொண்டே கண்களை மூடிய படி ஜாகிங் முடித்து உள்ளே நுழைந்த அர்ஜுன் மீது விழ அச்சமயம் அதை சுதாரித்த அர்ஜூன் அவளை தாங்கிப் பிடித்தான். கீழே விழுந்த அதிர்ச்சியில் அவன் கழுத்தையும் அவன் போட்டுக்கொண்டிருந்த ஜெர்கின் காலரையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டு தன் முழு பலத்தையும் அவன் மீது கிடத்தி இருக்க சில வினாடிகளுக்கு பிறகே தான் இன்னும் கீழே விழவில்லை என்பதை உணர்ந்தவள் மனதுக்குள்

‘நல்ல வேலை சிறுத்த சிக்கல’


என்று நினைக்கும் போது


க்கும்…”


என்ற உறுமல் சத்தம் ஏனோ அவளின் செவிகளில் கர்ஜனைப் போல் கேட்க மெல்லமாக அவளுடைய ஒரு கண்ணை மட்டும் லேசாக திறந்து


“நான் இப்போ எங்க இருக்கிறேன்”



என்று நோட்டம் விட்டவள் அப்போதுதான் அறிந்தாள் அவள் இப்போது சிங்கத்தின் மேல் சாய்ந்து அதன் பிடரியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை உணர, உடனே சட்டென்று அவளுடைய இரு கண்களையும் திறந்து அவன் தோள்களில் இருந்து இறங்கி தரையில் நின்றாள். அக்கணம் அங்கு இருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் ஒரு லேசான படபடப்பு அதுவும் குறிப்பாக மித்ராவின் முகத்தில் சற்று அதிகமாகவே தெரிய அப்போது அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராகவ்


“சிறுத்த சிக்கலனு தனக்குத் தானே நெனச்சுக்கிட்டு இப்ப சிங்கத்து கிட்ட மாட்டிகிச்சு”


என்று மித்ராவின் செவிகளில் லேசாக முனுமுனுக்க அவளோ பிடித்து வைத்த பிள்ளையார் போல ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அர்ஜுன் அங்குள்ள அனைவர் மீதும் ஒரு அழுத்தமான பார்வையை பதிக்க அங்குள்ள அனைவரும் மௌனமாக நின்றனர். அப்போது அர்ஜுன் அனைவரையும் பார்த்து



“இங்க என்ன நடக்குது..? இது என்ன வீடா இல்ல ப்ளே கிரவுண்ட்டா..?”


என்று கேட்டுவிட்டு தன் தாத்தா பாட்டி பக்கம் பார்வையை திருப்பியவன் அவர்களை பார்த்து


“இவங்கள வழிநடத்த வேண்டிய நீங்களே இப்படி இவங்க கூட சேர்ந்து சின்ன குழந்தைங்க மாதிரி விளையாடிட்டு இருந்தா அப்புறம் எப்படி இவங்க ஒழுங்கா வளர் வாங்க”


என்று கேட்டுவிட்டு அங்கிருந்து அவனுடைய பார்வையை ராகவ் மீது திருப்பியவன் ராகவை பார்த்து


“ராகவ் உனக்கு எப்போ செமஸ்டர் ஆரம்பிக்குது”


என்று கேட்க உடனே ராகவ் தன் மனதுக்குள்


‘இவரு ஏன் இப்போ இதை கேக்குறாரு’


என்று நினைத்துக் கொண்டிருக்க மீண்டும் அர்ஜூன்


“உன்னை தான்டா கேட்குறேன்.. உனக்கு எப்ப செமஸ்டர் ஆரம்பிக்குது..?”


என்று கேட்க உடனே சுயத்திற்கு வந்த ராகவ் சற்றுத் திக்கி கொண்டே


“அ..அது.. அண்ணா அதுக்கு இன்னும் 4 மாசம் இருக்குனா”


என்று கூற உடனே அர்ஜூன்


“சரி.. சரி.. எப்படியும் ஃபைனல் செமஸ்டர் தானே சப்ஜெக்ட் எல்லாம் முடிஞ்சிருக்கும் சோ நாளையிலிருந்து நீ ஆபீஸ் வந்து எல்லா வேலையும் கத்துக்க”


என்று சொல்ல உடனே ராகவ் அர்ஜுனை பார்த்து


“அது.. அது.. இது..” என்று திக்கி திணற


இதை கவனித்த அர்ஜுன்


“என்னடா..?”


என்று கேட்க, அதற்கு ராகவ்


“அண்ணா லாஸ்ட் செமஸ்டர்க்கு படிக்க எதுவும் இல்லை தான் பட் ப்ராஜெக்ட் கொடுத்திருக்காங்க.. அதனால நான் காலேஜ் முடிஞ்சதும் ஆபீஸ் வர்றேன்னா”


என்று கூற அதற்கு அர்ஜுன்


“ப்ராஜெக்ட் வொர்க் தானே அது எல்லாம் பார்த்துக்கலாம் நீ நாளைல இருந்து ஆபீஸ் வா”


என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல, உடனே ராகவும்


“சரி ணா.. நான் வரேன்..”


என்று வாடிய முகத்துடன் கூற அடுத்ததாக அர்ஜூன்

“ஸ்ரீ”


என்று அழைக்க உடனே ஸ்ரீ


“அண்ணா.. நான் காலேஜ்க்கு கிளம்பிட்டேன்”


என்று கூறிவிட்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள். அத்துடன் அர்ஜூனும் அவன் அறைக்குச் சென்று விட்டான். சில நாழிகைகளுக்கு பிறகு சீனிவாசன்

“எங்க இந்த மித்ராவை காணோம்”


என்று கேட்க அதற்கு ராகவ்


“அண்ணன் என் பக்கம் திரும்பும் போதே அவ அந்தப் பக்கம் அவளோட கஞ்சியோட எஸ்கேப் ஆகிட்டா”


என்று சொல்ல, அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் சத்தமாக சிரிக்க உடனே சீனிவாசன் அனைவரையும் பார்த்து தன் உதட்டின் மீது ஆட்காட்டி விரலை வைத்து


“ஷூ.. ஷூ.. மெல்லமா மெல்லமா..”


என்று சொல்ல அனைவரும் சிரிப்பை அடக்கியபடி அவரவர் பணிகளை பார்க்க சென்றனர். சிறிது நேரம் கழித்து அர்ஜுன் அலுவலகத்திற்கு கிளம்ப தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்து லட்சுமி அம்மா


“டிபன் எடுத்து வைங்க”


என்று கூற அப்போது விஸ்வநாதன் தன் மகனை பார்த்து


“அர்ஜுன் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா”


என்று கூற உடனே அர்ஜுன்


“ஏதாவது முக்கியமான விடயமா பா”


என்று கேட்க, அதற்கு விஸ்வநாதன்


“ஆமாம்பா கொஞ்சம் முக்கியமான விடயம் தான்”


என்று சொன்னார். அப்போது தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்த அர்ஜூன் தன் தந்தையிடம்


“அப்பா அப்போ நாம இதை பத்தி ஈவினிங் பேசலாமா ஏன்னா எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. சோ நான் ஆபீஸ் போயிட்டு ஈவினிங் வந்ததும் இத பத்தி ரிலாக்சா பேசலாம்”


என்று கூற, அது விஸ்வநாதனுக்கும் சரி என்று பட


“சரிப்பா நீ சொல்றது சரிதான் நாம ஈவ்னிங்கே இதை பற்றி பேசலாம்”


என்று சொல்ல, அவனும் காலை உணவை முடித்துவிட்டு வெளியே வந்து தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றான். சிறிது நேரம் கழித்து மித்ராவும் தன் அறையை விட்டு வெளியே வந்து காலை உணவை முடித்துவிட்டு காலேஜுக்கு சென்றவள் காலை இரண்டு வகுப்புகளை கட் அடித்து விட்டு நண்பர்களோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருக்க அப்போது அங்கு அமர்ந்திருந்த அவளது தோழன் ரவி என்பவன்


“சரி சரி இப்ப எழுதின எக்ஸாம்ல எல்லோரும் எவ்வளவு மார்க் எடுப்பீங்க”


என்று கேட்டுவிட்டு மித்ராவை பார்த்து


“முதலில் மித்ரா நீ சொல்லு”


என்று சொல்ல அதற்கு மித்ரா


“டேய் என் மூஞ்ச பார்த்தா பாஸ் மார்க் வாங்குற மூஞ்சி மாதிரியா தெரியுது நானெல்லாம் அடுத்தவனுக்கு மார்க் போட்டு தாண்டா பழக்கம்”


என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய இடக் கையை உயர்த்தி அதன் விரல்களை மூடி


“என்ன போடவா..?”


என்று ரவியைப் பார்த்து கிண்டலாக கேட்க தப்பித்தால் போதும் என்று நினைத்த ரவி


“இந்த டாபிக் இப்போ வேண்டாம், இல்ல.. இல்ல.. எப்பவுமே வேணாம்”


என்று கூற அருகில் இருந்த அனைவரும் சிரித்தனர். அடுத்ததாக மித்ராவின் தோழி நிஷா


“நாம ஏன் நம்மோட ப்யூச்சர் பிளான்ஸ் பத்தி பேசக்கூடாது”


என்று கேட்க அப்போது அங்கேயே அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த ராகவ்


“இங்க இருக்க எல்லாருக்கும் அவங்களோட எதிர்காலத்தைப் பத்தி தெரியுமான்னு எனக்கு தெரியாது ஆனா என்னோட எதிர்காலம் நாளையில இருந்து செம்மையா இருக்க போகுது..”


என்று கூற அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க மீண்டும் அவர்களை பார்த்து


“என்ன புரியலையா நாளையிலிருந்து ஐயா எங்க கம்பெனில எம்.டி யா சார்ஜ் எடுத்துக்க போறேன்... எங்க அண்ணா கூட சேர்ந்து பிசினஸ் டெவலப் பண்ண போறேன்... ம்...உங்களுக்கு புரியுறா மாதிரி சொல்லனும்னா செம்மையா சீன் போட போறேன், அங்க இருக்கிற பொண்ணுங்கள எல்லாம் சைட் அடிக்கப் போறேன்..”


என்று கூற அங்கிருந்த அனைவரும் அவன் கூறியதை கேட்டு அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து அவரவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள அமைதியாக அமர்ந்திருந்த மித்ராவை பார்த்து நிஷா


“சரி நீ சொல்லு மித்ரா உன்னோட ஃபியூச்சர் பிளான் என்ன”


என்று கேட்க அப்போது அங்கு அமர்ந்து இருந்த அனைவரும் அவளையே கூர்ந்து கவனித்தனர். ஏனென்றால் மித்ரா படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, முதல் மாணவி அப்படியிருக்க அவளுடைய பதில் எப்படி இருக்கும் என்று அனைவரும் ஒரு ஆர்வத்துடன் அவளையே பார்க்க

அதற்கு மித்ரா


“என்னடி தெரியாத மாதிரி கேட்குற என்னோட கனவே ஒலிம்ப்பிக்ஸ்ல கலந்து பாக்ஸிங் ல கோல்டு மெடல் வாங்குறதுதான்னு உங்களுக்கு தெரியாதா..?”


என்று கூற இதை கேட்ட அங்கிருந்தவர்களில் ஒருவன் மித்ராவை பார்த்து

“அது தான் எங்களுக்கு தெரியுமே.. நாங்க கேட்டது உன் கல்யாணத்தை பற்றி சரி சொல்லு உனக்கு என்ன மாதிரி கல்யாணம் செஞ்சிக்க ஆசை லவ் மேரேஜா இல்ல அரேஞ்ச் மேரேஜா”


என்று கேட்க சிறிது நேரம் யோசித்தவள்


“எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் வேணும் அதுவும் எனக்கு வர்ற ஹஸ்பன்ட் என்ன ரொம்ப லவ் பண்ணனும் அதுமட்டும் இல்ல எனக்கு வர்ற ஹஸ்பன்ட் என்ன புரிஞ்சவரா, என் ஆசைக்கும் லட்சியத்துக்கும் எனக்கு துணையா இருக்குறவரா இருந்தா மட்டும் போதாது


என்று கூறிக் கொண்டிருக்கும் போதே


“என் அப்பா என் அம்மாவை பார்த்து கொண்டதை போல அவங்க ரெண்டு பேரும் காதலோட வாழ்ந்தது போல நாங்க ரெண்டு பேரும் வாழனும்”


என்று பெண்ணவள் தன்னை மறந்து கூற அதை கவனித்த ராகவ் அவளின் கையை பிடித்து,



“ஏ.. என்ன..?”


என்று கேட்க, அதற்கு


“ம்ச்.. ம்ச்.. ஒன்னும் இல்லியே”


என்று கூற இவை அனைத்தையும் அந்த மரத்தின் பின்னால் தன் இரு கைகளையும் மார்ப்புக்கு நடுவே கட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் அவளின் தோளில் தன் கையை வைத்து அழுத்தியபடி


‘நீ நெனச்சது சீக்கிரமே நடக்கும்.. உன்னை நான் என் குழந்தை மாதிரி பார்த்துப்பேன் மை டியர் ஸ்வீட் ஹார்ட்…’


என்று தன் மனதில் விக்ரம் நினைத்து கொண்டிருக்க அப்போது விக்ரமை கண்ட ராகவ்



“ஹே.. விக்ரம் நீ எப்ப வந்த..?”



என்று கேட்க, உடனே விக்ரம்



“ஜஸ்ட் இப்ப தான்..”



என்று கூறிவிட்டு தனக்கு அருகில் ஒரு அழகு பதுமைப் போல் அமர்ந்திருந்த மித்ராவை பார்த்து

மித்ரா உன் கிட்ட நான் ஒன்னு காண்பிக்கனும் என் கூட கொஞ்சம் வா..

என்று அழைக்க அவளும் எழுந்து அவன் பின்னாலேயே சென்றாள்..


1610645173526.jpg
 
அத்தியாயம் 6


மித்ரா என் கூட வா நான் உனக்கு ஒன்று காண்பிக்கனும் என்று அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்ற விக்ரம் நேராக கல்லூரி கேண்டீனுக்கு அவளை அழைத்து சென்று சூடாக இரண்டு கப் காபி (Cappuccino) ஆர்டர் செய்துவிட்டு தன் எதிரில் அமர்ந்து இருந்த மித்ராவிடம்

“நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா??”

என்று கேட்க அதற்கு அவள்

“ஏ.. சீ.. என்ன பண்ணனும்னு சொல்லுடா..”

என்று கூற உடனே விக்ரம் அதுவரை தன் கோட் பாக்கெட்டில் வைத்திருந்த தலைநகரின் ஒரு பிரமாண்ட நகை கடையின் கேட்டலாக்கை மித்ராவிடம் கொடுக்க அதை வாங்கிப் பிரித்துப் பார்த்த மித்ராவின் கண்களில் அழகழகான விதவிதமான கேரள ஸ்டைல் தங்க வளையல்கள் தென்பட உடனே தன் எதிரில் அமர்ந்திருந்த விக்ரமிடம்

“டேய்.. விக்ரம் என்னடா இது..”

என்று கேட்க, அதற்கு விக்ரம்

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 30வது வெட்டிங் டே வருதுல.. சோ அத கொஞ்சம் க்ராண்டா செலப்ரேட் பண்ண ப்ளான் போட்ருந்தோம் பட் செலப்ரேட் பண்ணா மட்டும் போதுமா அதுல சர்ப்ரைஸ் கிப்டும் இருக்கனும் ல, அதுக்கு தான் இது”

என்று கூற

“அப்ப அங்கிளுக்கு கிப்ட்”

என்று மித்ரா கேட்க, அதற்கு

“அப்பாவுக்கு அண்ணனும் அண்ணியும் வாங்குறாங்க அம்மாவுக்கு நான் வாங்குறேன்..”

என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே

“தம்பி உங்க காப்பிச்சீனோ..”

என்று கூறி அந்த காபி கோப்பையை அவர்கள் முன் அந்த கேன்டீன் ஊழியர் வைத்துவிட்டு சென்றதும் மீண்டும் விக்ரம்

“சோ.. இதுல நீ எனக்கு என்ன ஹெல்ப் பண்ணனும்னா இன்னையில இருந்து 3வது நாள் அம்மா அப்பாவோட வெட்டிங் டே வருது பட் இப்ப நான் ரொம்ப நாளா நம்ம காலேஜ் வேலையா யூனியன் மினிஸ்டர் கிட்ட கேட்டிருந்த அப்பாயின்ட்மென்ட் இப்ப தான் கிடைச்சிருக்கு சோ அதையும் என்னால மிஸ் பண்ண முடியாது இதையும் என்னால மிஸ் பண்ண முடியாது.. அதனால நீ இப்ப எனக்கு பதிலா இங்க இருக்க என்னோட எல்லா வேலையையும் பார்த்துக்கனும் அதுமட்டுமில்ல உனக்கு தான் எங்க அம்மாவோட சாய்ஸ் நல்லா தெரியுமே சோ இந்த கேட்லாக் ல இருந்து ஒரு நல்ல டிசைனா செலக்ட் செய்து அதை கிப்ட் வ்ராப் பண்ணி ரெடியா வை நான் வந்து அதை அவங்க வெட்டிங் டே அன்னைக்கு நானே வாங்குனா மாதிரி எங்க அம்மா கிட்ட குடுத்துடுவேன்..”

என்று கூறி முடித்துவிட்டு அவளை பார்க்க உடனே மித்ரா

“அப்ப ஐயா நோகாம நோம்பு கும்பிடறுன்றீங்க.. அதானே..??”

என்று கேட்க இதை கேட்ட விக்ரம்

“ஈ..”

என்று அவனின் 32 முத்து பற்களும் தெரியும் வண்ணம் இளித்தபடி அவளை பார்த்து

“அத அப்படியும் சொல்லலாம்..”

என்று கூற தன் கையில் இருந்த கேட்லாக்கை மடித்து அவன் கையில் திணித்தவள் அவனை பார்த்து

“இந்தா பிடி, ஆண்டிக்கு கேரளா ஸ்டைல் பிடிக்காது அவங்களுக்கு ஆன்டிக் ஜுவல்ஸ் தான் பிடிக்கும் சோ அத நான் பார்த்துக்குறேன் பட் இதனால எனக்கு என்ன கிடைக்கும்”

என்று விக்ரமை பார்த்து தனது ஒரு நேத்திரத்தை மேல் தூக்கி கேட்க, உடனே விக்ரம்

“அதான் தெரியுமே இப்ப என்ன வேணும்னு சொல்லு”

என்று கேட்க, இதை கேட்ட மித்ரா

“நான் என்ன பெருசா கேட்க போறேன் நீ டெல்லியில இருந்து வரும் போது எனக்கு பிடிச்ச அந்த சர்தார்ஜி கடையில இருந்து குலாப் ஜாமுன், கேசர் ஜிலேபி, ரசமலாய், ரசகுல்லா, பாசுந்தி அப்புறம் அந்த ஊரு பான்கேக் னு சொல்லுவாங்களே..”

என்று யோசித்தவள்

“ஆ.. மல்புவா.. அதையும் மறக்காம வாங்கிட்டு வா”

என்று கூறியவள் மீண்டும் தன் சிந்தனைக்கு உயிர் கொடுக்க

இவை அனைத்தையும் கேட்ட விக்ரம் ஒரு நிமிடம் மலைத்து போய் அவளை பார்த்து

“இல்ல இந்த பாசுந்தி, ரசமலாய் லாம் நம்ம ஊர்ல கிடைக்காததா இதை நான் டெல்லியில இருந்து தான் வாங்கிட்டு வரனுமா??”

என்று கேட்க,

“அதெல்லாம் இங்கேயே கிடைக்கும் ஆனா அந்த சர்தார்ஜி கடை டேஸ்டும் கை பக்குவமும் கிடைக்குமா?? அது தான்டா முக்கியம்.. ஆமா அதெல்லாம் உனக்கு எதுக்கு வாங்கிட்டு வா னு சொன்னா வாங்கிட்டு வாயேன்டா..”

என்று அவள் அனைத்தையும் கூறி முடிக்க வருவதற்குள் இன்னும் சற்று நேரம் அங்கிருந்தால் அவள் அடுத்து என்ன கேட்பாள் என்பதை முன் கூட்டியே அறிந்தவன் போல தன் கை கடிகாரத்தை பார்த்து

“ஓ.. மை காட்.. சரி.. சரி.. எனக்கு ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு நான் இப்ப கெளம்புனா தான் டைமுக்கு அங்க போய் சேர முடியும்”

என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென அவன் நழுவ பார்க்க உடனே அவனை தன் இரு கைகளையும் நீட்டி வழிமறைத்தவள் அவனை பார்த்து

“ஆங்.. ஆ.. ஆ.. எங்க செல்லம் போற.. ப்ளைட்டுக்கு இன்னும் எவ்வளவோ டைம் இருக்கு.. சார் கொஞ்சம் உட்கார்றீங்களா.. இனிமே தானே முக்கியமான ஐட்டமே இருக்கு.. ”

என்று கூற அவனும் வேறு வழியின்றி அமர்ந்ததும்

“விக்கு..

விக்கி செல்லம்..”

என்று அவனை செல்லமாக அழைக்க அதை கேட்டும் கேளாதவன் போல தலைகுனிந்து அமர்ந்திருந்தவனை

“டேய்.. பக்கி..”

என்று அழைக்க

உடனே அவன் அவளை நிமிர்ந்து பார்க்க

“ஈ.. சும்மா..சும்மா..”

என்று இளித்த வண்ணம் கூறியவள்

“அப்படியே அதையும் வாங்கிட்டு வா டா..”

என்று வழிந்த வண்ணம் கூற

அது என்னவென்றே தனக்கு தெரியாதது போல

“எது??”

என்று கேட்க

“அதான்.. தாத்தா குடிப்பாறே டானிக்.. அது தான்”

என்று கூறியவள் சுற்றி முற்றி யாரேனும் உள்ளனரா என பார்த்துவிட்டு தன் இடக்கையை நேராக நிமிர்த்தி சைகையோடு

“சரக்கு..”

என்று மெல்லிய குரலில் கூற

“சரி.. சரி.. எல்லாம் வாங்கிட்டு வரேன்”

என்று கூறியவன்

“இது போதுமா இல்ல வேற ஏதாவது லிஸ்ட் இருக்கா”

என்று சலித்த முகத்தோடு கேட்க உடனே

“ஹலோ! ரெண்டு நாள் உன் சார்பா இங்க எல்லா வேலையையும் செய்ய போறது நான் தான் அதுக்கு இது கூட செய்ய மாட்டியா??”

என்று சொல்ல, இதை கேட்ட விக்ரம்

“சரி.. சரி.. டென்ஷன் ஆகாத நீ சொன்ன எல்லாம் வாங்கி தரேன் பட் காரியத்துல கவுத்துடாதமா உன்னை நம்பி தான் நான் போறேன்..”

என்று அவன் கூற உடனே தன் இருக்கையில் இருந்து எழுந்தவள் தன் இடக்கையை மேல் தூக்கி அவனை ஆசிர்வதிப்பது போல்

“யாம் இருக்க பயமேன்.. தைரியமாக போய் வா மகனே..”

என்று கூற அவனும் தன் இருக்கையில் இருந்து எழுந்து தான் அணிந்திருந்த கோட்டின் உள் பக்க பாக்கெட்டில் இருந்து தன் வாலட்டை எடுத்து அதில் இருந்த நான்கு வெவ்வேறு வங்கி ஏடிஎம் கார்டுகளில் இருந்து ஒரு கார்டை எடுத்து அவளிடம் மென் புன்னகையோடு கொடுத்தவன்

“இந்தா இந்த கார்டை செலவுக்கு வச்சுக்கோ வேற ஏதாச்சும் தேவைனா எனக்கு கால் பண்ணு ஒரு வேளை நான் கால் எடுக்கலனா வாட்ஸ்அப் பண்ணு நான் பார்த்ததும் உனக்கு கால் பண்றேன்”

என்று கூறி அவளிடம் கார்டை கொடுத்துவிட்டு அதன் நான்கு கடவு எண்களை தெரிவிக்க அவள் அதை பெற்றுக் கொண்டதும்

“இங்க பாரு விக்ரம் நீ சொன்னதெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீயும் மறக்காம நான் சொன்ன எல்லாத்தையும் வாங்கிட்டு வா.. என்ன புரியுதா..??”

என்று கேட்டபடி அவன் கொடுத்த ஏடிஎம் கார்டை தன் கல்லூரி பையில் எடுத்து வைத்தாள்..

மாலை 5 மணி..

தன் வீட்டு முன்பக்க தோட்டத்தில் அமர்ந்து கொண்டு தூய்மையான இயற்கை காற்றை சுவாசித்தப்படி தன் மனையாள் யமுனாவின் கையால் போட்டு எடுத்து வந்த தேநீரை தன் நாவினால் சுவை பார்த்து இரண்டு முறை அதை தன் தொண்டை குழியில் அனுப்பிய விஸ்வநாதன்

“ஆஹா.. பேஷ் பேஷ்..”

என்று கூறி அருகில் இருந்த யமுனாவை பார்த்து

“டார்லிங்.. நான் ஒரு உண்மைய சொல்லவா இந்த டீ போடுறதுல உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல தெரியுமா??..”

என்று கூறியபடி தன் மனையாளின் கன்னத்தை கிள்ள அதை சற்றும் எதிர்பாராத யமுனா

“அட.. என்னங்க நீங்க.. பசங்க யாராவது பார்த்துட போறாங்க..”

என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அர்ஜூனின் கார் உள்ளே நுழைய அதை கண்ட விஸ்வநாதன் மெல்லிய குரலில்

“ம்க்கும்.. வந்துட்டானா.. இவன் தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்றானா பண்ணவனையும் நிம்மதியா ரொமான்ஸ் பண்ண விட மாட்றான்..”

என்று அவர் கூற இதை கேட்ட யமுனா அருகில் இருந்த தன் மனாளனின் தொடையில் நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ள

“ஆ..”

என்று விஸ்வநாதன் கத்த

“என் புள்ளய பத்தி பேசலனா உங்களுக்கு நாள் போகாதோ.. இப்ப ஒழுங்கா அவன் வந்ததும் அவன்கிட்ட கல்யாணத்த பத்தி பேசுங்க அப்படி நீங்க மட்டும் இன்னைக்கு பேசல..”

என்ற வார்த்தையை முடிக்காது விட அதன் விளைவை உணர்ந்த விஸ்வநாதன்

“சரி அவன் வரட்டும் நான் பேசுறேன்”

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் வந்த அர்ஜூன் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து தன் தந்தையை பார்த்து

“ம்.. சொல்லுங்கப்பா காலைல எதோ முக்கியமான விடயம் பற்றி பேசனும்னு சொன்னீங்களே”

என்று அவசர அவசரமாக கேட்க அப்போது மகனின் அவசரத்தை கவனித்த யமுனா

“எங்கயாவது அவசரமா போகனுமா அர்ஜூன்”

என்று கேட்க

“ஆமாம்மா ஆக்சுவலா நான் ஆபிஸ் ல இருந்து நேரா ஒரு பிசினஸ் பார்ட்டிக்கு போக வேண்டியது பட் காலைல அப்பா எதோ பேசணும்னு சொன்னதால தான் இங்க வந்தேன்”

என்று கூற உடனே யமுனா

“ஓ.. அப்படியா”

என்று கூறி முடிக்க உடனே விஸ்வநாதன் பேச ஆரம்பிக்க மீண்டும் யமுனா தன் மனாளனை பார்த்து

“இருங்க அவன் மொத ஒரு கப் டீ குடிக்கட்டும் அதுக்கு அப்புறம் நீங்க எது பேசனும்னாலும் பேசுங்க..”

என்று கூறிக் கொண்டே அருகில் இருந்த தேநீர் கோப்பையில் இருந்த தேநீரை ஒரு கப்பில் அவனுக்கு ஊற்றி கொடுக்க 2 நிமிடங்களில் அதை அவசர அவசரமாக பருகி முடித்தவன் அந்த 2 நிமிட இடைவெளி நேரத்தில் அவனின் பெற்றோர்களின் முக பாவனைகளை கவனிக்கவும் தவறவில்லை. பிறகு அந்த தேநீர் கப்பை அருகில் இருந்த டீபாய் மேல் வைக்கும் போது தன் தந்தையை பார்த்து

“அப்பா ஒருவேளை நீங்க என்கிட்ட பேசப்போற அந்த முக்கியமான விடயம் உங்க தங்கச்சி பெற்ற பெண்ணை பற்றியதுனா தயவு செய்து அதை பற்றி என்கிட்ட பேசாதீங்க”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன்

“இல்லப்பா அர்ஜூன் இது உன்னை பற்றிய விடயம் தான்.. உன் கல்யாணம் பற்றிய விடயம்..„

என்று கூற உடனே அர்ஜூன் தன் தந்தையைப் பார்த்து

“ம்ச்.. இப்ப எதற்கு.. நான் தான் இப்ப வேண்டாம் நிதானமா செய்துக்குறேன் னு சொன்னேன்ல மறுபடியும் மறுபடியும் அதை பற்றி பேசுனா என்ன அர்த்தம்.. நான் இன்னும் இந்த ஃபீல்டுல எவ்வளவோ சாதிக்கனும்பா”

என்று முகத்தை இருக்கமாக வைத்து கூறியவனை பார்த்து விஸ்வநாதன்

“இன்னும் எப்பப்பா.. உனக்கு இப்ப வயசு 29 ஆகுது நான் லாம் என் கல்லூரி படிப்பு முடிய அடுத்த வருடமே அதாவது என்னோட 24 வது வயதிலேயே கல்யாணம் செய்துகிட்டேன் அடுத்த வருடமே நீயும் பொறந்த.. அப்ப நானெல்லாம் எதுவுமே சாதிக்கலைனு சொல்றியா..??”

என்று கேட்க அதே சமயம் பாட்டி ஜானகியுடன் அங்கு வந்த தாத்தா சீனிவாசன் இவர்கள் பேசியதை கேட்டுவிட்டு

“உன் அப்பனாவது பரவாயில்ல, நானெல்லாம் என்னோட 18 வயசுலயே உங்க பாட்டிய கல்யாணம் செஞ்சுகிட்டேன் அப்ப நான் எதுவுமே சாதிக்கலனு ஆகிடுமா..??”

என்று கூறியபடி அங்கு வந்து அமர்ந்ததும் விஸ்வநாதன் தன் மகனிடம்

“உன் அம்மா உனக்கு இன்டஸ்ட்ரியலிஸ்ட் கேசவமூர்த்தி பொண்ணு யாழினி ய பார்த்து இருக்கா நீ சரின்னு சொன்னா நாம போய் பார்த்துட்டு வரலாம் நீ என்ன சொல்ற...”

என்று கேட்க உடனே ஜானகி பாட்டியும்

“சரின்னு சொல்லுடா கண்ணா..”

என்று கூற மற்றவரும் ஒவ்வொருவராக அதையே மீண்டும் கூறி அவனை சம்மதிக்க வைக்க பார்க்க, இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கூறியதை கேட்டவன் கடைசியில் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று சத்தமாக

“சரி.. சரி.. சரி.. நான் பொண்ணு பார்க்க ஒத்துக்குறேன்.. ஆனா முதல்ல நானும் அவளும் மட்டும் ஒரு ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணி பேசுவோம். எனக்கு செட் ஆனா நீங்க மேல ப்ரொசீட் பண்ணுங்க பட் எனக்கு பிடிக்கலைனா நான் சொல்ற வரைக்கும் நீங்க இந்த விடயத்தை பற்றி என்கிட்ட பேசவே கூடாது.. என்ன ஓகேவா..”

என்று கேட்க நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துவிட்டு

“சரி.. எங்களுக்கு ஓகே..”

என்று கூற அங்கிருந்து விருவிருவென தன் காரை எடுத்துக் கொண்டு அவன் செல்ல வேண்டிய பிசினஸ் பார்ட்டிக்கு சென்றான் அர்ஜூன்..

அர்ஜூன் சென்றதும் உடனே யமுனா தன் மனாளனை பார்த்து

“என்னங்க இந்த விடயத்தை மொதல்ல அவங்க வீட்டுக்கு சொல்லனும் கேசவமூர்த்தி அண்ணனுக்கு ஒரு போன் போடுங்க..”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன் தன் முன்னே இருந்த கார்ட்லெஸ் போனை எடுத்து கேசவமூர்த்திக்கு தொடர்பு கொண்டு விடயத்தை கூற அதை கேட்டு மகிழ்ந்தவர் உடனே அவ்விடயத்தை தன் மனைவியிடமும் மகள் யாழினியிடமும் கூற இதை கேட்ட யாழினிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

பின்னே இருக்காதா என்ன.. சவுத் இந்தியாவின் பிசினஸ் சர்க்கிளில் இவள் வயதில் உள்ள பெண்கள் அனைவரும் அர்ஜூன் விஸ்வநாதன் என்ற பெயரை கேட்டாலே மயக்கம் கொள்ளும் அளவிற்க்கு அழகு, அறிவு, திறமை என்ற அனைத்திற்கும் உரித்தானவனாயிற்றே.. அதற்கு இவள் மட்டும் என்ன விதிவிலக்கா??

அதே சமயம் கல்லூரி முடிந்து ராகவ், மித்ரா மற்றும் ஸ்ரீமதி மூவரும் வீட்டுக்கு வர தன் மாமன் மகன் ராகவ்விடம்

“சீக்கிரமா போய் ரெடி ஆகிட்டு வா டா..”

என்று கூற அதற்கு ராகவ்

“இப்ப என்னால எங்கயும் வர முடியாது ஐயா ரொம்ப பிசி”

என்று கூறி தன் அறையை நோக்கி நடக்க உடனே மித்ரா

“அப்ப உனக்கு ஜிகிர்தண்டா வேண்டாம் அப்படிதானே..”

என்று கேட்க, ஜிகிர்தண்டா என்ற வார்த்தையை கேட்டதும் புதிதாய் உயிர்பித்தவன் போல் அவளின் அருகில் வந்து

“நிஜமா ஜிகிர்தண்டா வாங்கி தருவல..”

என்று கேட்க அதற்கு மித்ரா

“சத்தியமா நீ என் கூட வந்தா நான் வாங்கி தரேன்..”

என்று கூற உடனே ராகவ்

“சரி.. உன்ன நான் நம்புறேன் நீ ஒரு சத்தியவதி னு நான் நம்புறேன்.. போ போய் ரெடி ஆகிட்டு வா போகலாம்.”

என்று கூற விருவிருவென தன் அறைக்குள் புகுந்த மித்ரா வெளியே செல்ல தயாராகி தன் அறையை விட்டு வெளியே வர அவளுக்கு முன்பு ராகவ் அவளின் ஸ்கூட்டியை தயாராக வைத்து நின்றிருக்க இருவரும் அவளின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு சுசிலா ஆண்டிக்கு பட்டு புடவை வாங்க ஒரு பிரம்மாண்ட ஜவுளி கடலுக்கு சென்று ஒரு புடவை எடுத்தவர்கள் பின்னர் அடுத்தடுத்து செல்ல வேண்டிய கடைகளுக்கு சென்று வாங்க வேண்டிய அனைத்தையும் வாங்கிவிட்டு கடைசி கடையின் வாசலில் வந்து மூச்சு இறைக்க அமர அப்போது ராகவ்

“அய்யய்யோ.. இதுக்கு மேல என்னால நடக்க முடியாது…”

என்று கூற அதற்கு மித்ரா

“டேய்.. இதுதான்டா கடைசி கடை இதுல மட்டும் வாங்கிட்டோம்னா இன்னியோட ஷாப்பிங் முடிஞ்சுடும்.. வாடா..”

என்று கெஞ்சி அழைக்க உடனே அவளை முறைத்த ராகவ்

“உனக்கென்னமா மஹாராணி மாதிரி கைய வீசிட்டு நடந்து வர நான் தான எல்லா பையையும் தூக்கிட்டு உன் பின்னாடியே நடந்து வரேன்.. எனக்கு தான் தெரியும் கஷ்டம்.. ம்ஹூம்.. எனக்கு நீ ஜிகிர்தண்டா வாங்கி தரேன்னு சொல்லும் போதே நான் யோசிச்சு இருக்கனும் இப்படி எதாவது வில்லங்கம் இருக்கும்னு..”

என்று அவன் கூறிக் கொண்டிருக்க

“சரி விடுடா வேணும்னா 2 வாங்கி தரேன் பட் இதை மட்டும் தூக்கிட்டு வந்துடு டா..”

என்று கூற இதை கேட்டவன்

‘ம்ஹூம்.. இனைக்கு தான் புரியுது ஏன் என் அண்ணன் உன்ன ராட்சசி னு கூப்பிடுறான்னு..’

என்று தன் மனதில் நினைத்து கொண்டே அவளை பார்த்தபடி எழுந்தவன்

“நிஜமா 2 வாங்கி தருவல..”

என்று கேட்க அதற்கு அவள்

“உங்க ஆயா மேல சத்தியமா வாங்கி தரேன் போதுமா..”

என்று கூற

“அப்ப சரி.. வா போகலாம்..”

என்று கூறி 2 ஜிகிர்தண்டாவின் மகிழ்ச்சியில் பைகளை அங்கேயே விட்டுவிட்டு செல்ல அதை கவனித்த மித்ரா

“இத யாரு உங்க ஆயாவா வந்து தூக்குவாங்க..”

என்று கேட்க மீண்டும் 2 படிகள் கீழிறங்கி வந்து அவளை முறைத்தபடி அதை எடுத்துக் கொண்டு அவள் பின்னாலேயே அந்த நகை கடைக்குள் வந்தவன் அங்கே வெளி பொருட்கள் வைக்கும் இடத்தில் அவன் கொண்டு வந்த அனைத்தையும் வைத்துவிட்டு உள்ளே செல்ல அங்கு அவள் கால் மேல் கால் போட்டு கொண்டு கூல்டிரிங்க்ஸ் குடித்தபடி கடைக்காரரிடம் பேரம் பேசி கொண்டிருப்பதை கண்டவன் தன் மனதில்

‘சன்டாலி..’

என்று நினைத்தபடி அங்கு போடப்பட்டிருந்த காத்திருப்போர் இருக்கையில் சென்று அமர 1 மணிநேரம் கழித்து ஷாப்பிங் முடிய மீண்டும் அனைத்து பைகளையும் தூக்கி கொண்டு ஸ்கூட்டியில் வைத்து அதை இயக்க இருவரும் போகும் வழியில் ஜிகிர்தண்டாவை சுவைத்துவிட்டு ஒருவழியாக தங்கள் வீட்டிற்கு வந்தடைந்தனர்.


மறுநாள் காலை...

அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருந்த அர்ஜூனிடம் வந்த யமுனா

அங்க பொண்ணு வீட்ல எப்ப வர்றீங்க னு கேட்குறாங்கப்பா

என்று கேட்க அதற்கு அர்ஜூன்

இன்னைக்கு நைட்டு ஷார்ப் 7 ஓ க்ளாக் ஹோட்டல் லீ மெரிடியன்

என்று நேரமும் இடமும் குறிப்பிட்டு விட்டு நிற்காமல் விருவிருவென தன் காரை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு செல்ல அவன் கூறியதை யமுனா பெண் வீட்டாற்க்கு கூறினார்.

மாலை ஒரு 4 மணியளவில் மித்ராவை விக்ரம் அழைக்க அவன் அழைப்பை ஏற்றவள்

ஹலோ.. விக்ரம், நீ சொன்ன எல்லாத்தையும் நான் வாங்கி வச்சுட்டேன் நான் கேட்ட எல்லாத்தையும் நீ வாங்கிட்டியா

என்று கேட்க அதற்கு விக்ரம்

ஆ.. நான் நீ கேட்ட எல்லாத்தையும் வாங்கிட்டு இங்க ப்ளைட் ஏற போறேன் சரியா 6 மணிக்கு நான் சென்னை ரீச் ஆகிடுவேன் நீயும் மறக்காம எல்லாத்தையும் எடுத்துகிட்டு நாம வழக்கமா சந்திக்குற ஹோட்டலுக்கு வந்துடு

என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
 

Attachments

  • 1610645173526.jpg
    1610645173526.jpg
    84.7 KB · Views: 2
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்னும் ஊரில் இருந்து சுமார் 25கி.மீ‌ தொலைவில் கழுகுமலைக்கு அருகே அமைந்துள்ளது லட்சுமிபுரம் என்னும் கிராமம். இங்கு இருப்பவர்களில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து‌ பேர் விவசாயம் செய்பவர்களே.. லட்சுமிபுரம், எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று தென்படும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்.

முன்மாலை‌ பொழுது மதியம் 03:00 மணி,

“என்னங்க ஒரு மொனறு கஞ்சிய குடிச்சிட்டு வேல செய்றது.. காலைல களத்துமேட்டுக்கு‌ போனவக இப்ப தான் வந்தீக வந்ததும் வராததுமா அந்த அடுப்பாங்கறைக்குள்ள புகுந்து அப்படி என்னத்த செய்றீக.. எனக்கு வேற பசி வயத்த கிள்ளுது..”

என்று கூறியபடி சோமசுந்தரத்தின் மனைவி அன்னகிளி அடுப்பாங்கறைக்கு உள்ளே செல்ல முற்பட

“இருபுள்ள நானே வரேன்.. நீ உள்ள வரவேண்டாம் இங்கிட்டு ஒரே அனலா கெடக்கு”

என்று கூறி கையில் காபி டம்ளருடன் வெளியே வந்தவர்

“உனக்கு பசிக்கும் னு எனக்கு தெரியும் புள்ள அதனால தான் சூடா காபி போட்டு கொண்டாந்துருக்கேன்.”

என்று கூற அதற்கு அன்னகிளி

“காபி சரிதான் உள்ள வேற என்னமோ வாசம் வீசுதே..”

என்று தன் கணவனை பார்க்க

“அதுவும் உனக்கு தான் புள்ள, வெறும் காப்பிய குடிச்சா நல்லா இருக்குமா சொல்லு அதான் கொஞ்சமா பக்கோடா போட்டுட்டு இருக்கேன் சுட சுட ரெண்டையும் தரலாம்னு பார்த்தா நீ பசியில குதிக்குறவ..”

என்று கூறி கொண்டிருக்கும் போதே விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவரது மூத்த மகள் பவித்ரா ஊர் சுற்றிவிட்டு கையில் இரண்டு பெரிய கெஜிராவையும் வாயில் ஒரு கெஜிராவையும் வைத்து கொண்டு தன் தங்கை சித்ராவுடன் உள்ளே வர அவர்களை கண்ட அன்னகிளி

“ஏ..புள்ள எங்குட்டு போய்‌ ஊர் சுத்திட்டு வர்ரவ நானும் அப்பாவும் இன்னைக்கு ஒரு முக்கியமான சோலியா பக்கத்து ஊரு வரைக்கும் போறோம்னு தெரியும்ல..”

என்று கண்டிக்க உடனே சோமசுந்தரம் தன் மனைவியை பார்த்து

“சரி விடு புள்ள அவுகளே ரொம்ப நாளைக்கு அப்புறம் ஊருக்கு வந்துருக்காக‌ அவுகள போய் அதட்டிகிட்டு”

என்று கூற உடனே

“தோ..பாருங்க.. அவளுக்கு நீங்க அளவுக்கு அதிகமா செல்லம் கொடுக்குறீங்க..”

என்று கூற ஆரம்பிக்கும் போதே

“எம்மா பவித்ரா உள்ள அப்பா பகோடா போட்டுட்டு வந்திருக்கேன் அது என்ன ஆச்சுனு கொஞ்சம் போய் பாருடாம்மா”

என்று கூறி தன் மகளை தந்திரமாக உள்ளே அனுப்ப இவை அனைத்தையும் அன்னகிளி கவனித்தபடி தன் கணவரை முறைக்க உடனே சோமசுந்தரம்

“அட நீ என்னமா என்னையே பார்த்துட்டு இருக்கவ அந்த கஞ்சிய எடு குடிச்சுட்டு சாமிய பார்க்க போகனும் ல அப்புறம் நேரம் 6 தாண்டிடுச்சுனா சாமி கெளம்பிடுவாரு..‌”

என்று கூற உடனே சுயத்திற்கு வந்த அன்னகிளியும் தன் கணவருக்கு அவர் கேட்ட கஞ்சியை எடுத்து கொடுக்க அதை ஒரே மொனராக குடித்துவிட்டு

“அம்மாடி பவித்ரா அந்த பகோடாவ ஒரு டப்பால போட்டு எடுத்துட்டு வந்து அம்மாட்ட குடு ஆத்தா நான் சாப்பிடலனு அவளும் காலைல இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்கா”

என்று கூற அடுப்பாங்கறையில் இருந்து வெறும் கையுடன் பவித்ரா வெளியே வந்து நின்று

“அப்பா…”

என்றழைக்க உடனே சோமசுந்தரம்

“என்னம்மா வெறும் கையோட வந்து நிக்குறீக பகோடா எங்க”

என்று கேட்க

“பக்கோடா.. எல்லாம் காலி ஆகிடுச்சு பா”

என்று தலை குனிந்த படி மெல்லிய குரலில் சொல்ல அதை ‌கேட்ட சோமசுந்தரம்

“எதே..‌ என்னம்மா சொல்ற..”

என்று கேட்டபடி உள்ளே சென்று பார்க்க அங்கு அவர் செய்து வைத்திருந்த ‌பக்கோடா அனைத்தும் காலி ஆகி வெறும் தட்டு மட்டுமே மிஞ்சி இருந்தது அப்போது அவருக்கு பின்னால் வந்த அவரின் இரண்டாம் மகள் சித்ரா

“அடிப்பாவி.. மொத்த பக்கோடாவையும் நீ ஒருத்தியே‌ திண்ணுட்டியா??”

என்று கேட்க ஒன்றும் பேசாது நின்றிருந்தவள் திடீரென

“ஏவ்வ்வ்….”

என்று ஏப்பம் விட அவளுக்கு பின்னால் வந்த அன்னகிளி அவளது தலையிலேயே ஓங்கி ஒரு கொட்டு வைக்க

“ஆ.. அப்பா ‌பாருங்கப்பா அம்மாவ”

என்று கூற உடனே அன்னகிளி

“ம்.. நொப்பா.. ஏன்டி எங்குட்டாவது கூறு இருக்காடி உனக்கு நாலு பேர் சாப்பிட வேண்டிய ஒரு பொருளை நீ ஒருத்தியே திண்ணுட்டு ஏப்பம் வேற விடுறவ”

என்று அதட்ட உடனே சோமசுந்தரம்

“சரி விடு புள்ள இப்படி எதாவது நடக்கும் னு எனக்கு முன்னவே தெரியும் அதனால தான் முன்னாடியே கொஞ்ச பக்கோடாவ எடுத்து டப்பாவுல போட்டு வச்சுருக்கேன்”

என்று கூறவிட்டு

“அம்மாடி சித்ரா அந்த டப்பாவுல இருக்க பக்கோடாவ எடுத்து அம்மாட்ட கொஞ்சம் கொடுத்துட்டு மிச்சத்த தம்பி பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நீயும் தம்பியும் சேர்ந்து சாப்பிடுங்க..”

என்று கூற அதன்படி அந்த டப்பாவில் இருந்த பக்கோடாவில் கொஞ்சமாக தன் அன்னையிடம் கொடுத்து விட்டு மீதத்தை எடுத்து வைக்க, அன்னகிளி சோமசுந்தரம் இருவரும் தங்கள் மகள்கள் இருவரையும் பார்த்து

“சரி புள்ளைங்களா நானும் அம்மாவும் சாமி ய பார்த்துவிட்டு வரோம் அதுவரைக்கும் பார்த்து சூதானமா இருந்துக்கோங்க ஏதாவது வேணும்னா பக்கத்துவீட்டு அலமேலு அத்தைய கேளுங்க.. என்ன புரிஞ்சிதா..”

என்று கேட்க உடனே இருவரும்

“ம்.. சரிப்பா நாங்க ஜாக்கிரதயா இருந்துக்குறோம் நீங்க வெரசா வீடு வந்து சேருங்க”

என்று கூறி தன் தாய் தந்தை சென்றதும் சித்ரா அதுவரை பக்கத்தில் நின்றிருந்த தன் அக்காளை தேட அவளோ அங்கு இல்லை உள்ளே சென்று பார்க்க அவளோ அங்கே மீதம் எடுத்து வைத்திருந்த ‌பக்கோடா டப்பாவை திறந்து உண்ண ஆரம்பித்திருந்தாள் அப்போது அங்கு வந்து அதை கண்ட சித்ரா அவளிடம் இருந்த டப்பாவை வெடுக்கென பிடுங்க உடனே பவித்ரா

“ஏ.. ஏ.. நல்லா இருக்குடி எனக்கு கொஞ்சம் குடுடி..”

என்று கேட்க அதற்கு சித்ரா பவித்ராவை பார்த்து

“மூசிஉண்ட.. மூசிஉண்ட.. எல்லாத்தையும் நீயே திண்ணா நானும் தம்பியும் எதை டி சாப்பிடுறது”

என்று கேட்க அதற்கு உடனே பவித்ரா

“ஏ..ஏய்..என்ன என்ன வேணும்னாலும் சொல்லு ஆனா மூசிஉண்டனு‌ மட்டும் சொன்ன எனக்கு செம கோபம் வரும் சொல்லிட்டேன்..”

என்று கூற

“அப்படி தான்டி சொல்லுவேன் மூசிஉண்ட... மூசிஉண்ட…”

என்று மீண்டும் மீண்டும் கூற வெடுக்கென ஓங்கி சித்ராவின் தலையில் கொட்டினாள் பவித்ரா.

சோமசுந்தரம், இவரும் மித்ராவின் தந்தை நரேந்திரனும்‌ உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் சிறு வயதிலேயே தாயை இழந்தவர்கள். இருவரும் பள்ளி பருவம் வரை தந்தையின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். அதன் பிறகு தன் படிப்பை நிறுத்தி கொண்டு பகலில் தினகூலி வேலைக்கு சென்ற சோமசுந்தரம் தன் தம்பியை கவனித்து கொண்டார். இவருக்கு தம்பி நரேந்திரன் மீது பாசம் அதிகம். தன் தம்பியை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டதோடு மட்டுமல்லாது அதை செய்தும் காட்டினார். தாய் இல்லாததால் என்னமோ வீட்டில் பெரும்பாலும் இவரது சமையல் தான். சோமசுந்தரம் தன் 28வது வயதில் தன் சொந்த அத்தை மகள் அன்னகிளியை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு 2 பெண்பிள்ளைகள் 1 ஆண் பிள்ளை என மொத்தம் 3 பிள்ளைகள். இதில் முதல் மகள் பவித்ரா கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் கடைசி ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கிறாள். இப்போது விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளாள். இரண்டாவது மகள் சித்ரா 12ம் வகுப்பும் கடைசி மகன் கதிரவன் 10ம் வகுப்பும் ‌படித்து கொண்டிருக்கின்றனர்.

கணவனும் மனைவியும் அருகில் உள்ள பேருந்து நிழற்குடைக்கு சென்று நிற்க, அவர்களை காக்க வைக்காது அங்கு வந்த பேருந்தில் இருவரும் ஏற, அங்கிருந்து 45 நிமிடங்களில் கழுகுமலையில் உள்ள நரசிம்ம ஐயர் என்னும் ஜோசியர் வீட்டிற்கு வந்தடைந்தனர். வாசலில் நின்றபடி ஜோசியர் மனைவியிடம்

“அம்மா சாமிய பார்க்க நானும் என் பொஞ்சாதியும் வந்துருக்கோமுங்க..”

என்று கூற அதற்கு

“உள்ள வாங்க சோமசுந்தரம், ஐயா‌ பூஜையில இருக்காரு நான் போய் சொல்லி விடுறேன்”

என்று கூறி உள்ளே சென்றவர் தன் கணவரிடம் சென்று இவர்கள் வருகையை தெரிவிக்க அவர் பூஜையை முடித்துவிட்டு இவர்களை காண வந்தவர்

“என்ன சோமசுந்தரம், தீடீர் விஜயம்..”

என்று கேட்க அதற்கு

“இல்லிங்க சாமி என்னமோ தெரியலைங்க ஒரு ஒருவாரமா மனசு எது மேலயும் கவனம் செலுத்த முடியாம அலைபாஞ்சிட்டே கெடக்கு எதோ தப்பு நடந்துடுமோன்னு பயமா இருந்துச்சு அதான்‌ உங்கட்ட புள்ளைங்க ஜாதகத்தை காட்டிட்டு போலாம்னு வந்திருக்கேனுங்க..”

என்று கூற உடனே நரசிம்ம ஐயர் அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு

“சரி உட்காருங்க ‌என்னனு பார்த்துடுவோம்”

என்று கூற உடனே சோமசுந்தரம்

“ஏ..புள்ள புள்ளைங்களோட ஜாதகத்தை எல்லாம் எடுத்து ‌சாமி‌கிட்ட குடு”

என்று தன் மனைவியிடம் கூற அவரும் தான் கையில் வைத்திருந்த மஞ்ச பையிலிருந்து நான்கு ஜாதகத்தையும்‌ எடுத்து அவரிடம் கொடுத்தார். அதை வாங்கி பார்த்த நரசிம்ம ஐயர்‌ அதில் மித்ராவின் ஜாதகமும் இருப்பதை கவனித்து

“ஏன்பா சோமசுந்தரம்.. மித்ராவோட ஜாதகம் தொலைஞ்சிட்டதா தானே விஸ்வநாதன் என்ட்ட சொன்னாரு”

என்று கேட்க அதற்கு

“இல்லைங்க சாமி... ஐயா, கவனிக்காம சொல்லிருப்பாரு மித்ரா பாப்பா ஜாதகம் என் கிட்ட தானுங்க இருந்துச்சு‌..”

என்று பதிலளிக்க அதற்கு மேல் 1 மணி நேரத்திற்கு அங்கு எந்த ஒரு சத்தமும் வரவில்லை. ஆருடம் கணிப்பதில் மூழ்கியிருந்த நரசிம்ம ஐயர் ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் எடுத்து கணித்து கொண்டிருக்க அவரது முகத்தையே கணவனும் மனைவியும் உற்று கவனித்தனர். அவரும் ஒவ்வொருவரின் ஜாதக பலன்களாக ‌மூவரின் ஜாதகத்தையும் ‌பார்த்து கூறியபடி கடைசியாக மித்ராவின் ஜாதகத்தை எடுத்து கணிக்க ஆரம்பிக்க அவரின் நெற்றியில் முடிச்சு விழ அவர்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சோழியை போட்டு பார்த்தார் இதை அவ்விருவரும் கவனித்தபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அப்போது அவர்களை பார்த்து

“ம்… நீங்க நினைத்தது சரிதான் சோமசுந்தரம். மித்ரா ஜாதகத்துல ஒரு பிரச்சனை இருக்கு”

என்று கூற இதை கேட்ட இருவரும் அதிர்ந்து போக உடனே சோமசுந்தரம்

“என்ன சாமி சொல்றீங்க மித்ரா பாப்பா ஜாதகத்துல பிரச்சனையா??”

என்று கேட்க அதற்கு நரசிம்ம ஐயர்

“ஆமா.. ஆனா கவலைப்பட தேவையில்லை அதற்கான பரிகாரத்தை செய்துட்டா வரப்போகும் பிரச்சினையோட வீரியம் குறையும்”

என்று கூற உடனே சோமசுந்தரம்

“அது என்ன பரிகாரம் னு சொல்லுங்கய்யா என் தலைய அடகு வச்சாவது நான் செஞ்சிபுடுறேன்”

என்று கூற உடனே நரசிம்ம ஐயர்

“நீங்க பதட்டபடாம விஸ்வநாதனுக்கு ஒரு போன் போடுங்க”

என்று கூற உடனே தன் வேட்டியின் இடுப்பு மடிப்பில் இருந்து தன் கைபேசியை எடுத்து விஸ்வநாதனுக்கு அழைக்க

“நாட் ரீச்சபிள்”

என்று கூறியது. இதை நரசிம்ம ஐயரிடம் கூற

உடனே அவர் தன் இடத்தில் இருந்து எழுந்துக்கொள்ள அவரை தொடர்ந்து இவர்களும் எழ அவர் நேராக தன் வீட்டில் உள்ள பூஜை அறைக்கு சென்று ஒரு கருப்பு நிற கயிற்றை எடுத்து தன் மார்போடு வைத்து கண்களை மூடியப்படி

“ஓம் நமச்சிவாய..”

என்ற சர்வேஸ்வரனின் துதியை உச்சரித்து ‌அவ்வறையில் உள்ள சிவலிங்கத்தின் தலையில் அக்கயிற்றை வைத்து சில வினாடிகளில் எடுக்க அவர் மனதில் ஏனோ இதை விஸ்வநாதனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்ற உடனே விஸ்வநாதனுக்கு அழைத்தார் ஆனால் அவரது அழைப்பும் இனணக்கப்படவில்லை. சரி எல்லாம் சர்வேஸ்வரனின் கட்டளை என்று எடுத்துக்கொண்டு நேராக அவ்விருவரின் முன்பு வந்து அக்கயிற்றை சோமசுந்தரம் கையில் கொடுத்து

“நாளைக்கு உனக்கு என்ன வேலை இருந்தாலும் அதை அப்படியே விட்டுட்டு நேரா விஸ்வநாதன் வீட்டிற்கு போய் ஜானகி அம்மா கையில இந்த கயிறை கொடுத்து பூஜை அறையில வைத்து மித்ரா கையில் நான் சொன்னதா சொல்லி கட்டி விட சொல்லு அப்படியே மறக்காம விஸ்வநாதனை எனக்கு போன் பண்ண சொல்லு.”

என்று கூற உடனே சோமசுந்தரம்

“சரிங்க சாமி”

என்றவர் மறுவார்த்தை பேசாது அங்கிருந்து புறப்பட்டார்.

அதே சமயம் மாலை 06:30 மணி..

மித்ரா விக்ரமை சந்திக்க ஹோட்டலுக்கு செல்ல தயாராகி ஹாலுக்கு வர அங்கு சோபாவில் அமர்ந்திருந்த ராகவ் அவன் கண்களில் வி ஆர் க்ளாஸ் சை மாட்டிக்கொண்டு மொபைலில் 3டி கேம் ஆடிக்கொண்டிருக்க அதை கவனித்த மித்ரா நேராக அவன் அருகில் வந்து அவன் கண்களில் மாட்டியிருந்த வி ஆர் க்ளாஸ் சை பிடுங்கி

“டேய் என்னடா இன்னும் கிளம்பாம விளையாடிட்டு இருக்க??”

என்று கேட்க அதற்கு ராகவ்

“மறுபடியுமா.. நான் எங்கயும் வரலப்பா.. நேத்து பட்டதே போதும்..”

என்று கூற இதை கேட்ட மித்ரா

“டேய் என் செல்லம் ல வாடா, இத கொண்டு போய் விக்ரம் கிட்ட கொடுத்துட்டு நாம உடனே திரும்பி வந்துடலாம். அதுமட்டுமில்ல இன்னைக்கு தரமான டின்னர் இருக்குடா மிஸ்..”

என்ற கூறிக் கொண்டிருக்கும்போதே ராகவ்

“அம்மா தாயே! ஆளை விடு, நான் நேற்று பட்டதே போதும்..”

என்று தன் தலைக்கு மேல் கை கூப்பி சொல்ல,

“சரி போய் தொல.. உனக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான்”

என்று தன் மொபைலை எடுத்து தான் வழக்கமாக அழைக்கும் ஆட்டோ அண்ணாவுக்கு கால் செய்ய அவர் வந்ததும் நேற்று வாங்கிய அனைத்து பொருட்களையும் ஆட்டோவில் ஏற்றி கொண்டு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள

“லீ மெரிடியன்”

என்னும் ரெஸ்டாரன்ட்டில் விக்ரமை சந்திக்க காத்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் விக்ரமின் கார் அந்த ரெஸ்டாரன்ட் வாசலில் வந்து நிற்க அவனோடு ஒரு நவநாகரீக மங்கை ஒருத்தி 50-50 ஆடையுடன் வந்து இறங்கி அவனிடம் நெலிந்து கொண்டே பேச அப்போது உள்ளே இருந்தபடி கண்ணாடி கதவு வழியாக விக்ரமை கண்ட மித்ரா அவனுக்கு கை காண்பிக்க அவன் அருகில் ஒரு அழகிய பெண் ஒருத்தி அவனிடம் வழிந்தபடி பேசுவதை கண்டு தன் மனதில்

‘யார் இவ இந்த நெலி நெலியுறா.. போன இடத்துல இவள கரெக்ட் பண்ணிட்டானா?? ச்சே..ச்சே.. இவனுக்கு அவ்வளவு வர்த் இல்ல. வரட்டும் கேட்போம்..’

என்றபடி நினைக்க அங்கே விக்ரம்

“ஓகே மிஸ்.பரி உங்க வர்க் டைம் முடிஞ்சுது நீங்க போகலாம்.”

என்று கூற உடனே பரி

“இல்ல சார் இப்ப உங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே அது முடியும் வரை நான் உங்க கூடவே இருக்கேன் சார்”

என்று கூற அதற்கு விக்ரம்

“இல்ல மிஸ்.பரி இது என் பர்சனல் மீட்டிங் சோ இதுக்கு நீங்க இருக்கனும்னு அவசியம் இல்ல, சோ யு கேன் கோ நவ்”

என்று கூறி அவனது கார் ஓட்டுனரிடம் அவளை அவளது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வர சொன்னான். அவரும் அவன் கட்டளையை ஏற்று அவளை அழைத்து செல்ல விக்ரம் கதவை திறந்து கொண்டு மித்ரா அமர்ந்திருக்கும் டேபிளின் எதிர்புறத்தில் அமர உடனே மித்ரா

“யாருடா அவ..”

என்று கேட்க உடனே விக்ரம்

“எப்படி செம க்யூட் ல.. என்னோட புது செக்ரட்டரி.”

என்று கூற

“ம்.. ம்.. அப்படி ஒன்னும் தெரியல. சரி இந்தா நீ கேட்ட எல்லா பொருளும் இதுல இருக்கு, நான் கேட்டது எல்லாம் எங்க??”

என்று கேட்க

“அதெல்லாம் வாங்கிட்டேன் நாளைக்கு காலைல வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். இப்ப நீ என்ன சாப்பிடுற??”

என்று கேட்க

“நான் வந்ததும் ரெண்டு பேருக்கும் சேர்த்தே ஆர்டர் செஞ்சுட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணு வந்துடும்”

என்று கூற சரியாக 2 சர்வர்கள் ஒரு தங்க நிற ட்ராலியை தள்ளி கொண்டுவர அதில் ஒரு சர்வர் அவர்களுக்கான ப்ளைட்களை எடுத்து வைத்துவிட்டு

“மேம் உங்க ஆர்டர்..”

என்று கூறி அனைத்தையும் ஒவ்வொன்றாக அந்த ட்ராலியில் இருந்து எடுத்து அவர்களது டேபிளில் வைக்க விக்ரமின் கண்கள் விரிந்தன மகாபாரதத்தில் சூரியதேவர் திரௌபதிக்கு கொடுத்த அக்ஷய பாத்திரம் போல அந்த ட்ராலியில் இருந்து உணவு வகைகள் வந்து கொண்டே இருந்தன. பின்பு அனைத்தையும் எடுத்து வைத்தவர்கள்

“மேம் வேற ஏதாவது வேணுமா??”

என்று கேட்க அதற்கு விக்ரம் தன் மனதில்

“எதே.. இன்னுமா??”

என்று நினைக்க உடனே மித்ரா

“இப்ப இது போதும் வேற ஏதாவது வேணும்னா கூப்பிடுறேன்.”

என்று கூறி அனுப்பினாள். அதன் பிறகு இரு சர்வர்களும் அங்கிருந்து செல்ல, விக்ரம் டேபிளை பார்க்க அதில் மட்டன் ரேன், பாம்ப்ளேட் என்றழைக்கபடும் வவ்வால் வகை மீன், மட்டன் சுக்கா, இரண்டு ப்ளேட் நான் அதற்கு சைடிஷாக பட்டர் சிக்கன், ஒரு முழு நாட்டு கோழி தந்தூரி, ப்ரான் டிக்கா இன்னும் பல என்று அனைத்தும் அங்கு வரிசையாக அடுக்கப்பட்டிருந்ததை கண்டவன்

“வேற யாராவது வராங்களா மித்து”

என்று கேட்க அதற்கு

“இல்லையே.. இது மொத்தம் நம்ம ரெண்டு பேருக்கு தான்”

என்று கூற அவளை பற்றி அறிந்தவன் மறுவார்த்தை பேசாது உணவு உண்ண உணவில் கை வைக்க

“ஏ.. விக்ரம்.. அப்படி என்ன அவசரம் ‌கொஞ்சம் வெயிட் பண்ணு..”

என்று கூறி தன் மொபைலை எடுத்தவள்

“இன்னைக்கு ராத்திரி எத்தனை பேரு வயிறு எரியப்போகுது பாரு..”

என்று கூறி அங்கிருந்த அனைத்து உணவையும் போட்டோ பிடித்தவள் அதை தன் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் பக்கத்தில் பதிவிட்டாள். அதன் பிறகு இருவரும் பேசியபடியே உணவுகளை சுவைக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் அதே ரெஸ்டாரண்ட் வாசலில் அர்ஜூனின் கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கி யாரிடமோ பேசியபடியே உள்ளே நுழைந்தவன் உள்ளே வந்ததும் அழைப்பை துண்டித்துவிட்டு தன் இடதுபுற டேபிளை பார்க்க அங்கு முகத்தில் புன்னகையுடனும் மனதில் ஆசையுடனும் அவனை கண்களாலேயே கொள்ளையடித்து கொண்டிருந்தாள் யாழினி. அர்ஜூன் அவளை பார்த்தபடி அவளின் அருகில் வந்து ஒரு பார்மாலிட்டிக்காக

“ஹலோ..”

என்று கூறியபடி அவளுக்கு எதிரில் அமர அவளும் சாதாரணமாக

“ஹலோ..”

என்று கூற அப்போது அர்ஜூன் தன் கை கடிகாரத்தில் நேரம் பார்க்க அதில் சரியாக ஏழு மணி காண்பிக்க உடனே யாழினி

“இல்ல நீங்க கரெக்டா தான் வந்துருக்கீங்க நான் தான் சீக்கிரமா வந்துட்டேன்.”

என்று கூற அதை கேட்டவன்

“அது தான் எனக்கு தெரியுதே பிகாஸ் ஐயம் ஆள்வேஸ் பர்ப்பெக்ட்”

என்று திமிராக கூற அதே திமிருடன் அவளும்

“எஸ் ஐ நியூ இட், அப்கோர்ஸ் நானும் தான். நம்ம மீட்டிங்க்கு முன்னாடி இதே ரெஸ்டாரன்ட் ல வேற ஒருத்தரோட எனக்கு மீட்டிங் இருந்துச்சு சோ இப்ப தான் அந்த மீட்டிங் முடிஞ்சுது”

என்று கூற ஏனோ அவனுக்கு அவளின் இந்த திமிர் மிகவும் பிடித்திருக்க அவர்களது உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றான்.

“இட்ஸ் ஓகே.. என் பேர் அர்ஜூன், நான்..”

என்று அவனுடைய அறிமுகத்தை கூறி முடிப்பதற்குள்

“உங்க பேர் அர்ஜூன். நீங்க எஸ்.வி. க்ரூப்ஸ் ஆப் கம்பெனிஸ் ஓட எம்.டி….”

என்று அவனை பற்றிய தகவல்களை அவனிடமே சொல்லிக் கொண்டிருந்தாள். அதை கேட்டவன் அவளையே பார்க்க அவனது பார்வையை கவனித்தவள்

“கமான் அர்ஜூன், உங்கள பத்தி தெரியாதவங்க இந்த சென்னையில இருக்காங்களா என்ன?? தமிழ்நாட்டோட பிசினஸ் யூத் ஐகான் நீங்க, உங்க மேல எத்தனை பொண்ணுங்களுக்கு க்ரஷ் இருக்குனு உங்களுக்கு தெரியுமா?? அப்கோர்ஸ் அதுல நானும் ஒருத்தி”

என்று கூறிக்கொண்டே இருக்க அப்போது அவர்கள் டேபிளுக்கு வந்த பேரர்

“மேடம், ஆர்டர் ப்ளீஸ்??”

என்று கேட்க உடனே யாழினி அர்ஜூனை பார்த்து ‌

“ஓ..சாரி.. நீங்க என்ன சாப்பிடறீங்கனு கேட்க மறந்துட்டேன்.”

என்று கேட்க அதற்கு அர்ஜூன் ஏதோ சொல்ல வர அந்த சமயம் பார்த்து அவனது மொபைல் அடித்தது அதை எடுத்தவன்

“ஜஸ்ட் எ மினிட்..”

என்று கூறி தன் இருக்கையில் இருந்து எழுந்து செல்ல, யாழினி அவனுக்கும் சேர்த்து இரண்டு ஆரஞ்ச் ஜூஸ் ஆர்டர் கொடுத்தாள். அங்கிருந்து எழுந்து வெளியே சென்று அழைப்பை ஏற்று பேசி முடித்தவன் அங்கிருந்து திரும்ப தன் டேபிளுக்கு வரும் வழியில் அங்கு ஒரு ஜோடி

“டேய்.. அங்க பாருடா அவங்க ரெண்டு பேரும் என்னமா ரொமான்ஸ் பண்றாங்க அவரு ஊட்டி விடுறதும் அவ சாப்பிடுறதும் னு.. லவ் கப்புல்ஸ் னா இப்படி இருக்கனும் நீயும் இருக்கியே..”

என்று பேசி கொண்டிருக்க அதை கேட்ட அர்ஜூன் தன் மனதில்

‘யாரு அது..’

என்று நினைத்தபடியே திரும்பி பார்க்க அங்கு விக்ரம் மித்ராவுக்கும் மித்ரா விக்ரமுக்கும் மாறி மாறி ஊட்டி விட்டு கொண்டிருந்தனர் இதை கண்டவன் கண்கள் சிவக்க நிரம்புகள் புடைக்க அவர்களை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க பின்பு அவன் இருக்கும் இடம் உணர்ந்து அங்கிருந்து தன் டேபிளுக்கு சென்று அமர அவன் வந்ததும் யாழினி மீண்டும் பேச ஆரம்பிக்க அவள் பேசுவது எதுவும் அவன் செவிகளில் விழவில்லை அவன் கவனம் முழுதும் மித்ராவின் மீதே இருந்தது.

அதே வேளை அங்கு விக்ரம் மித்ராவிடம்

“மித்து இதை டேஸ்ட் செய்து பாரேன்”

என்று மித்ராவிற்கு ஊட்டி விட அதற்கு மித்ராவும் அதை டேஸ்ட் செய்து விட்டு

“விக்கு அதைவிட இது செமயா இருக்கு டா”

என்று அவள் அவனுக்கு ஊட்டிவிட அப்போது மித்ராவிற்கு ராகவிடம் இருந்து அழைப்பு வர உடனே அவள் விக்குவை பார்த்து

“இதோ வயித்தெரிச்சல் நம்பர் 1 கூப்ட்டுடுச்சு ??”

என்று கூறியபடி அவனது அழைப்பை எற்றவள்

“ஹலோ..” என்று கூறுவதற்குள்

“எரும.. எரும.. நேத்து எனக்கு வெறும் ஜிகர்தண்டா வாங்கி கொடுத்துட்டு இன்னைக்கு நீ மட்டும் புல்‌ மீல்ஸ் கட்டுறீயா.. உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாடி..”

என்று அவளை திட்டி தீர்க்க அதற்கு மித்ரா

“டேய்.. நான் தான் உன்கிட்ட சொன்னேன் ல இன்னைக்கு தரமான டின்னர் இருக்கு டா நீ வரலனா மிஸ் பண்ணிடுவன்னு, நீ தான் ஓவரா பண்ண அதான் நான் வந்துட்டேன்”

என்று கூற

“அத நீ இவ்வளவு டீடெய்லா சொல்ல லயே..”

என்று ஒப்பாரி வைக்க

“சரி சரி புலம்பாத நான் உனக்கு ஆர்டர் செஞ்சி விடுறேன் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கே வந்துடும்”

என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.


சில நிமிடங்கள் உருண்டோட மித்ராவும் விக்ரமும் ஹோட்டல் வாசலில் அவர்களது காருக்காக காத்து கொண்டிருந்தனர் அதேசமயம் அர்ஜூனும் யாழினியும் வெளியே வர ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உடனே விக்ரம்

“ஹாய் அண்ணா..! எப்படி இருக்கீங்க??”

என்று கேட்க அதற்கு அர்ஜூன்

“ம்.. நான் நல்லா இருக்கேன் விக்ரம் நீ டெல்லில இருந்து எப்ப வந்த??”

என்று கேட்க

“இன்னைக்கு ஈவ்னிங் தான்னா..”

என்று கூற உடனே அர்ஜூன் யாழினியை பார்த்து

“மிஸ். யாழினி திஸ் இஸ் விக்ரம் எங்க பேமிலி ப்ரெண்ட் ஜெகன்நாதன் அங்கிளோட பையன் அன்ட் விக்ரம் திஸ் இஸ் யாழினி..”

என்று கூறும்போதே

“இவங்கள எனக்கு தெரியும்னா இன்டஸ்ட்ரியலிஸ்ட் கேசவமூர்த்தி அங்கிளோட ஒன் அன்ட் ஒன்லி டாட்டர் மிஸ். யாழினி தானே..”

என்று கேட்க அதற்கு யாழினி

“எஸ்.. எஸ்..”

என்று கூற யாழினி மித்ராவையே பார்க்க உடனே விக்ரம்

“திஸ் இஸ் மை க்ளோஸ் ப்ரெண்ட் சங்கமித்ரா”

என்று கூற உடனே யாழினிக்கு எங்கோ இப்பெயரை கேட்டதாக தோன்ற உடனே விக்ரமை பார்த்து

“சங்கமித்ரா னா... விஸ்வநாதன் அங்கிளோட தங்கச்சி பொண்ணு தானே இவங்க”

என்று கேட்க அதற்கு விக்ரம்

“எஸ்.. எஸ்.. யு ஆர் அப்சலூட்லீ கரெக்ட்”

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே யாழினி மற்றும் விக்ரமின் கார்கள் வந்துவிட

“ஓகே மிஸ் யாழினி ஹாப்பி டு சீ யூ..”

என்று கூற அதற்கு அவளும்

“மீ டூ மிஸ்டர். விக்ரம்.”

என்று கூற இருவரும் அவரவர் கார்களில் ஏறி செல்ல மித்ராவும் அங்கிருந்து பக்கத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாடிற்கு செல்வதற்காக அங்கிருந்து இரண்டடி எடுத்து வைக்க உடனே அர்ஜூன் மித்ராவை பார்த்து

“ஏய் நில்லு…”

என்று கூற உடனே மித்ராவும் அங்கேயே நின்றாள். அப்போது அருகில் வந்த அர்ஜூன் மித்ராவை எறிக்கும் பார்வையில்

“உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லியா?? ஒரு பப்ளிக் ஹோட்டல்னு கூட பார்க்காம அவனுக்கு நீ ஊட்டி விடுறதும் அவன் உனக்கு ஊட்டி விடுறதும் ச்ச.. ச்சே.. ஏற்கனவே ரோட்டுல டேன்ஸ் ஆடி நம்ம குடும்ப மானத்தை வாங்கினது பத்தலையா.. இப்ப விக்ரம் குடும்பத்தோட மானத்தையும் வாங்க பாக்குறீயா.. உன் அம்மா‌ அப்பாவுக்கும் தான் குடும்பம், மானம், ‌மரியாதை, கௌரவம் பத்தி எதுவும் தெரியாது ஆனா உனக்கு அதெல்லாம் சொல்லி கொடுத்து தானே வளர்த்தோம்.. ம்ஹூம்.. அதானே அவங்க அதுபடி நடந்திருந்தா நாங்க கௌரவமா வாழ்ந்த ஊரை விட்டுட்டு வந்துருக்க மாட்டோமே.. அவங்க ரத்தம் தானே உன் உடம்புலயும் ஓடுது நீ மட்டும் எப்படி இருப்ப.. இல்ல நீயும் உங்க அம்மா அப்பா மாதிரி எங்கள இந்த ஊருலயும் தலைகுனிய வைக்க போறியா..??

என்று அவன் அவளை சிறுபெண் என்றும் பாராது திட்டி தீர்த்து கொண்டிருக்க, அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மனதை வலிக்க, அவள் கண்களில் கண்ணீர் முட்ட அதை அவன் முன் வெளிக்காட்டிவிட கூடாது என்பதற்காக அழுகையை அடக்கி கொண்டு நின்றிருந்தாள் மித்ரா. அவளை திட்டி தீர்த்தவன் அவளை பார்த்து

“வந்து வண்டியில ஏறு”

என்று கூறிவிட்டு அவன் காரில் ஏறி அமர அவளோ அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடற்கரை பக்கமாக சென்றாள். அதை பார்த்தவன்

“திமிரு திமிரு.. உடம்பு முழுக்க திமிரு..”

என்று கூறி தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான்.
 

Attachments

  • 1610645173526.jpg
    1610645173526.jpg
    84.7 KB · Views: 0
அத்தியாயம் 01

சூரியன் செங்கதிர் பட்டு அந்த ஏழு மாடி கட்டிடம் சூரியனுக்கு நிகராக ஜொலித்தது....

அந்த கட்டிடத்தின் 05வது மாடியில் எஸ் வி குரூப்ஸ் மீட்டிங் ஹாலில்.... அயல் நாட்டவரும், நம் நாட்டவரும் அமர்ந்திருக்க அனைவரையும் தன் ஆளூமையான கர்ஞனையால் தலையாட்ட வைத்துக்கொண்டிருந்தான் எஸ் வி குரூப்ஸ் ன் எம். டி. அர்ஜூன் விஸ்வநாதன்.

ஆறடி இரண்டங்குல உயரம். மாநிறம், வெல் எக்சசைஸ்டு பாடி என்ற உடற்கட்டு. லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை.. அழுத்தமானவன் என்பதை காட்டும் உதடு. அந்த மீட்டிங்கின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிசினஸ் டீலீங்கை தன் வசமாக்கிக் கொண்டான் .

பின்பு அவன் சொகுசு காரில் ஏறி கடற்கரை சாலையில் கார் ஜன்னல்களை திறந்தவாறு அந்தக் கடல் காற்றோடு பயணித்துக் கொண்டிருக்க, அன்று நிகழ்ந்த அலுவலக நிகழ்வுகளை மனதில் மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தான் .

அப்போது அவனுடைய அலைபேசி அடிக்க அதை எடுத்து....

“ஹலோ...”

என்று கூற எதிரில் இருந்தவர் பதட்டத்தோடு...

" தம்பி, ஐயா உங்கள அவசரமாக பாப்பா படிக்கும் காலேஜுக்கு வரச்சொன்னாரு...”

என்று கூறிவிட்டு அழைப்பை அனைத்துவிட்டார். உடனே இவன் தன் தந்தைக்கு கால் செய்ய அவருடைய அலைபேசியோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இவனோ தன் மனதில்....

‘அந்த ராட்சசி இப்போது என்ன செய்து வைத்திருக்ககிறாளோ....’

என்று நினைத்து படி காரை வேகமாக இயக்கினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த காலேஜ் நுழைவாயிலை அடைய அங்கு ஒருவரும் இல்லை.... பின்பு அங்கு வந்து கொண்டிருந்த சிலர் காலேஜ் அண்டர்கிரவுண்ட் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். இவனும் அவர்களைப் பின்தொடர அந்த அண்டர்கிரவுண்டடில் மாணவர்களின் கூச்சலும்.....

“மித்ரா...” “மித்ரா...”

என்ற சத்தமும் அவன் காதில் விழ... அவன் அங்கு கண்டது பாக்ஸிங் ரிங்கில் சண்டைக்கு தயாராக நின்று கொண்டிருந்த அவனுடைய அத்தை மகளை .

அவளை முறைத்து பார்த்தவன்....

“ராட்சசி....”

என்று கூற அவளும் அவனை முறைத்து நோக்கி தன் மனதில்...

'வந்துட்டான்யா கொம்பேரிமூக்கன்....'

என்று நினைத்துக் கொண்டிருக்க அந்நேரத்தில் அந்த ரிங்கில் இருந்த சக வீராங்கனை அவளின் முகத்தில் இரண்டு முறை குத்த.... அவளோ அவனைப் பார்த்தபடியே அந்த சக வீராங்கனையை ஓங்கி குத்தியதில் அவள் நாக் அவுட் ஆனாள்.

உடனே ரெப்ரி....

“சங்கமித்ரா வின்னர்....”

என்று கூற அங்கிருந்த மாணவர் பட்டாளமே....

“ஹே....”

என்று கத்த தன் குடும்ப உறுப்பினர்களை நோக்கி ரிங்கை விட்டு வெளியே வந்தாள் .

சங்கமித்ரா ஐந்தரை அடி உயரம், பால் நிறம், மாசுமருவற்ற முகம், கண்களில் எந்நேரமும் குறும்பு துள்ளிக் கொண்டே இருக்கும். இரு புருவங்களுக்கு நடுவே தொடங்கும் கூர் நாசி.... கோவைப்பழம் போல் சிவந்த ரோஜா இதழ்கள், கொடி இடையால்.... ஆனால் எதிர்ப்பவரை ஒரு கை பார்க்கும் குட்டிப்புலி....

வீண் சண்டைக்கு போவது அவள் குணம் அல்ல ஆனால் தன் முன்னே நடக்கும் அநீதியை தட்டி கேட்க தயங்கியதே இல்லை.... பெண்ணவள் வாய் பேசும் முன்னே அவள் கை பேசி விடும். அழகி ,தைரியசாலி, மொத்தத்தில் பார்ப்பவர் மனதை கொள்ளைகொள்ளும் குறும்பி...

மித்ரா கீழே இறங்கிய உடன் அவளை அள்ளி அனைத்துக் கொண்டவர்கள் அவளுடைய குடும்பத்தவர்களான தாத்தா சீனிவாசன், பாட்டி ஜானகி, மாமா விஸ்வநாதன், அத்தை யமுனா, மாமா மகன் ராகவ் மற்றும் மாமா மகள் ஸீமதி ஆகியோர் அடங்கிய அவளின் இந்த பாசமான கூட்டு குடும்பமே...

அப்போது அவளுடைய மாமா....

“மித்ரா இது உன்னுடைய நாற்பத்து எட்டாவது பதக்கம். இன்னும் இரண்டு ஜெயித்தால் அரை சதம் தான் போ....”

என்று சந்தோஷத்தில் கூற அந்த நேரம் கூட்டத்தை விலக்கி கொண்டு அங்கு வந்த அர்ஜுன்....

“அப்பா என்னாச்சு ??”

என்று கேட்டான் . அதற்கு அவனின் தந்தை,

“அது ஒன்னுமில்லப்பா இங்க எங்க பக்கத்துல இருந்த ஒரு பொண்ண ஒருத்தன் சும்மா இடிச்சுட்டு நின்னுட்டு இருந்தான்... அத பார்த்த நம்ம மித்ரா பாப்பா கோவம் வந்து அவன் முகத்துலயே ஓங்கி குத்து விட்டுட்டா... அதற்கு பிறகு தான் தெரிஞ்சுது அது அவ புருஷன்னு அதான் உனக்கு கால் செய்ய சொல்லி ரகுகிட்ட (விஸ்வநாதனின் பி ஏ) சொன்னேன். ஆனா நீ வர்றத்துக்குள்ள விக்ரம் வந்து எந்த பிரச்சினையும் நட்க்காம சமாளிச்சுட்டான்....”

என்று கூறி முடித்தார் .

விக்ரம் குமார் அறிமுகத்தை தொடர்ந்து :

விக்ரம் குமார் வி கே குரூப்ஸ் ஆப் காலேஜின் நிறுவனர் ஜெகன்நாதனின் இளைய மகன். ஜெகன்நாதனும், விஸ்வநாதனும் நெருங்கிய நண்பர்கள். அதே போல் தான் விக்ரமும் மித்ராவும்... ஆனால் விக்ரமுக்கோ மித்ரா மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்புண்டு. அது அவள் செய்யும் குறும்பு தனத்தால் உண்டானது என்பதை அறியாதவன் இது நட்பா இல்லை காதலா என்ற கேள்விக்கு நடுவில் விடையை தேடிக் கொண்டிருக்கிறான்....

மறுகணம் அர்ஜூன் முகம் கோபத்தில் சிவக்க மித்ராவை பார்த்தவன்

“உனக்கு கை நீளம்டி... யார் எப்படி போனா உனக்கு என்ன...”

என்று கேட்க அதற்கு மித்ரா....

“அது எப்டி??? பொண்டாட்டி அனுமதிக்கலனா புருஷன் கூட தொடக்கூடாதுன்னு நேர்க்கொண்ட பார்வை படத்துல எங்க தல சொல்லிருக்காருல்ல...”

என்று அவள் அர்ஜுனைப் பார்த்து கூற அர்ஜூன் முகம் இன்னும் கோபத்தில் சிவக்க, அதை கவனித்த பாட்டி அவள் கையை அழுத்தி பிடித்து பேசாதே என்பது போல் உணர்த்த அவளும் அதை புரிந்து கொண்டு....

“ஆ . . . ஆ . . . வலிக்குதே..”

என்று முகத்தில் கையை வைத்து கொண்டு கத்தினாள். உடனே அதை புரிந்து கொண்ட சொந்தங்கள் ...

“அச்சோ என் பேத்தி முகத்துல காயம் பட்டுருச்சே... இனி அவ முகத்துல அந்த வடு போகாதே இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன் இந்த பாக்ஸிங் எல்லாம் உனக்கு வேண்டாம்டி சிலம்பம் கத்துக்கோடி உன் தாத்தாவே சொல்லிக் கொடுப்பாருன்னு சொன்னனே கேட்டியா...”

என்று ஓ... என்று ஒப்பாரி வைக்க தாத்தா சீனிவாசனோ...

“அட ஜானு பேபி... நீ இன்னும் எந்த காலத்துல இருக்குற இது இரண்டு நாள்ல மறையுற அளவிற்கு நம்ம ஹாஸ்ப்பிட்டல்லேயே டெக்னாலஜி இருக்குதே...”

என்று இவர் கூறி முடிப்பதற்குள் அவர் மகன் விஸ்வநாதன் இங்கிருந்தபடி ஆப்ரேஷனுக்கு ரெடி செய்து விட்டு அதை தன் தந்தையிடம்

“அப்பா எல்லாம் ரெடி. ஆப்பரேஷன் தியேட்டரில் பாப்பாவுக்கு வலிக்காமல் இருக்க லேசர் மிஷின் மூலம் ஆப்பரேஷன் செய்ய நான்கு பேர் கொண்ட டாக்டர்கள் குழு தயாராக உள்ளனர்...”
என்று கூற இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த அர்ஜூன்...

“எல்லோரும் கொஞ்ச நேரம் வாயை மூடுகிறீங்களா...”

என்று கத்தியவன் பின்பு அனைவரையும் பார்த்து

“இது ஒரு சின்ன காயம். இதை அப்படியே விட்டா ஐந்து நாளுக்கெல்லாம் அந்த வடு கூட தெரியாது... இதற்கு போய் லேசர் ஆப்பரேஷனா... இவள் அடிச்சாளே அந்த பொண்ணுக்கு தான் லேசர் ஆப்பரேஷன் செய்யனும். உங்களோட இந்த கண்மூடித்தனமான அன்பால தான் இவ ஓவராக ஆடுறா...”

என்று கூறி விட்டு காரை நோக்கி சென்றான். அனைவரும் அவர்கள் குடும்பமாக செல்லும் சொகுசு கேரவனில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.

அவன் வீடு ஆறு அடுக்குகளைக் கொண்டது. அதில் மூன்றாவது அடுக்கில் ஒரு ஜிம், கீழ் தளத்தில் ஒரு நீச்சல் குளமும், அண்டர் கிரவுண்டில் ஒரு நீளமான கார் பார்க் மற்றும் வீட்டின் இருபுறத்திலும் புல் தரை கொண்ட தோட்டங்கள் என ஒரு மாளிகை போல் தோற்றமுடையது.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த வீட்டு வேலைக்காரி இல்லை இல்லை அந்த வீட்டில் ஒருவராக பார்க்கப்படும் லட்சுமி அம்மா ....

"எல்லாரும் கை, கால் அலம்பிட்டு டைனிங் டேபிள் வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...”

என்று கூற அனைவரும் தங்கள் அறைகளுக்குச் சென்று தங்களை சுத்தம் செய்துகொண்டு இரவு உடையை மாற்றிக் கொண்டு டைனிங் ஹாலில் வந்து அமர்ந்ததும் லட்சுமி அம்மா ஒவ்வொருவரும் கேட்டதை பரிமாரிவிட்டு மித்ராவிடம் வந்தவர்....

“பாப்பா இன்னிக்கு உனக்கு பிடித்த நாட்டுக்கோழி குழம்பு, வஞ்சிர மீன் வருவல் அப்புறம் நீ லேசா காய்ச்சல் அடிக்குறாப் போல இருக்குன்னு சொன்னல அதுக்காகவே ஸ்பெஷலா நண்டு ரசம் வச்சிருக்கேன்....”

என்று கூற லிப்டில் இருந்து கீழே இறங்கியவன் அனைத்தையும் கேட்க...

“ஏன் லட்சுமி அம்மா நீங்களுமா ???”

என்று கேட்டபடி டைனிங் டேபிள் நோக்கி உணவருந்த வந்தவன் அவள் இட கையால் உணவு உண்ணுவதை கண்டு...

'ராட்சசி...ராட்சசி போல சாப்பிடுகிறா பாரு... கேட்டா என் அம்மா எனக்கு இப்படி தான் கத்து கொடுத்தாங்கன்னு வியாக்கியானம் பேசுவா.. அது சரி இவ அம்மாவே சரியில்லாதப்போது இவளையா சரியா வளர்த்திருக்கப் போறாங்க....'

என்று மனதில் நினைத்துக்கொண்டு உணவருந்தாமல் அவ்விடத்தை விட்டு நீங்க அதை கவனித்த லட்சுமி அம்மா அவனை பார்த்து....

“அர்ஜுன் தம்பி சாப்ட்டு போங்க...”

என்று கூற, அதற்கு

"இல்லை நான் வெளியே சாப்பிட்டுக்குறேன்"

என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். இவளோ அவன் வாசலை தாண்டி விட்டானா என்று எட்டிப் பார்த்துவிட்டு...

“விடுங்க லட்சுமி அம்மா அவனுக்கு இது சாப்ட கொடுத்து வைக்கல...”

என்று கூற இதை பார்த்த அனைவரும் வாய்விட்டு சத்தமாக சிரித்தனர். அவள் பாட்டியோ...

“அவன் மேல இவ்வளவு பயம் இருக்குல அப்புறம் ஏன்டி அவன் முன்னால இப்படி நடந்துகுற...”

என்று கேட்க, அதற்கு மித்ரா

“நான் என்ன செய்ய பாட்டி அந்த கொம்பேரிமூக்கனை பார்த்தாலே இப்படி ஏதாவது நடக்குது...”

என்று அவள் கூறியதை கேட்டு மீண்டும் ஒரு முறை அவ்விடமே சிரிப்பலையால் நிரம்பியது. அதன் பிறகு அனைவரும் இரவு உணவருந்தியதும் தங்கள் அறைகளுக்குச் சென்று நித்திரையில் ஆழ்ந்தார்கள்.... அவனும் இரவு பதினோரு மணி அளவில் தன் அறைக்குள் நுழைந்தான் .

மறுநாள் காலை 06 மணியளவில் அர்ஜூன் எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். இவளோ காலை 7 மணிக்கு எழுந்து டிவியை ஆன் செய்து ஒரு குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடிக்கொண்டிருக்க ராகவும் வந்து சேர்ந்து கொண்டான்.

அப்போது சிறிது நிமிடங்களில் தொலைக்காட்சியில் விளம்பரம் போட அதில் வந்த க்லோசப் டூத் பேஸ்ட் விளம்பரத்தைப் பார்த்து ராகவ்...

“நானும் தான் க்ளோசப் யூஸ் பண்றேன் ஆனா காலேஜ்ல ஒரு பொண்ணு கூட மயங்க மாட்டென்ரா...”

என்று சொல்ல, அதற்கு மித்ரா...

“நீ பல் துலக்கமா போய் பேசு அங்கேயே அப்பவே மயங்கிடுவா..”

என்று கூறி அவனை கலாய்த்தபடி சிரித்தவளை, ராகவ் பார்க்க....

“என்னடா லுக்கு காலேஜிக்கு டைம் ஆச்சு போய் கெளம்புடா....”

என்று சொல்ல உடனே ராகவ்...

“லட்சுமி அம்மா அண்ணா எப்போ வெளிய போனான்...”

என்று கேட்க, அதற்கு அவரோ...

“பெரிய தம்பி ஜாக்கிங்ல இருந்து வந்து மேல ஜிம் செஞ்சுட்டு இருக்காரு தம்பி...”

என்று கூறினார். இதை கேட்ட மித்ரா ஜாட்டியில் இருந்து விடுபட்ட பம்பரம் போல வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட இதை பார்த்த ராகவ் விழுந்து விழுந்து சிரித்தான். கீழே நடந்த கூத்துகளை மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு முகத்தில் எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்காது பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்...

அவன் கண்களில் தெரிந்த பாவனை தேடலா, ஊடலா அல்ல காதலா அதை அவனே அறியான்...

என் காதலும் ஊடலும்
நீ அன்பே...

ஆனால் என்னமோ என் மனம்
உனக்கான என்
தேடலை உணரவில்லை...

எண்ணில் இருக்கும்
இனியவளே
உணர்த்துவாயா என் மனதினை...

என் தேடல்.

View attachment 12
செம டா தம்பி
 
அத்தியாயம் 8

கடற்கரையில் அமர்ந்தபடி அந்த பௌர்ணமி நிலவை பார்த்துக் கொண்டிருந்தவள்‌ மனதில் தன் தாய் தந்தை பற்றிய நினைவுகள் உருண்டோட ஆரம்பித்தன..

பத்து வருடங்களுக்கு முன்பு..

காயத்ரியும் நரேந்திரனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அந்த மாவட்டத்திலேயே மதிப்பும் மரியாதையும் மிக்க ஜமின் வம்சத்து குடும்பம் தான் காயத்ரியின் குடும்பம். அதே ஊரில் காலம் காலமாக ஜமின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வாழ்ந்து வரும் குடும்பம் நரேந்திரன் குடும்பம். அண்ணன் சோமசுந்தரத்தின் ஆசைப்படி பட்டப்படிப்பை முடித்த நரேந்திரன் ஒரு கலை கல்லூரியில் லெக்சரராகவும் பணி புரிந்து வருகிறார். அதே போல என்ன தான் காயத்ரி தன் வீட்டில் இளவரசி போல வாழ்ந்தாலும் அதற்கு சற்றும் குறையில்லாது‌ அவளை இங்கு ஒரு ராணி போலவே நடத்துகின்றனர்.

“அருண்.. ப்ரசென்ட் மிஸ்..
தினேஷ்.. ப்ரசென்ட் மிஸ்..
கவிதா.. ப்ரசென்ட் மிஸ்..
மித்ரா.. ப்ரசென்ட் மிஸ்..”

என்று அவ்வகுப்பின் ஆசிரியை அட்டடென்ஸ் எடுத்து கொண்டிருக்க அப்போது அங்கு வந்த ப்யூன்

“மேடம் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறாங்க”

என்று கூற உடனே அந்த ஆசிரியை மித்ராவை அழைத்து

“நான் வரும் வரைக்கும் யாரும் பேசக்கூடாது அப்படி பேசுனா நீ இந்த ப்ளாக் போர்டுல அவங்க பேர எழுதி வை”

என்று கூற உடனே மித்ராவும் தலையசைத்தாள்‌. ஆசிரியை சென்று திரும்பி வரும் போது மித்ரா இருவர் பெயரை எழுதி வைத்திருக்க அவர்களை தண்டிக்கும் விதமாக வகுப்பறைக்கு வெளியே முட்டி போட செய்தார். அன்று எல்லா வகுப்புகளும் முடிய மித்ராவும் வீட்டிற்கு கிளம்ப, முட்டி போட்ட அவ்விருவரும் அவளை வழிமறித்து அடித்து அனுப்பினர். ரத்த காயத்துடன் மித்ரா அதை பார்த்து பார்த்து அழுதுக்கொண்டே வீட்டிற்கு வர அவளது அம்மா காயத்ரி

“என்ன ஆச்சு மித்ரா ?? ஏன் அழுதுட்டே வர ??”

என்று கேட்க அதற்கு மித்ரா நடந்தவை அனைத்தையும் கூற அதேசமயம் வேலையில் இருந்து வீடு திரும்பிய நரேந்திரனும் வாசலில் நின்றபடி அனைத்தையும் கேட்டு கொண்டிருக்க உடனே மித்ராவை அழைத்து அவள் உயரத்துக்கு சரிசமமாக மண்டியிட்டு அமர்ந்தவர் மித்ராவின் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து விட்டு

“இங்க பாரு மித்ரா, வாழ்க்கையில என்னைக்கும் தப்பு செய்றவங்கள தட்டி கேட்குறத்துக்கும் நாம தப்பு செய்தா மன்னிப்பு கேட்குறத்துக்கும் தயங்கவே கூடாது இன்னைக்கு நீ தப்பு செய்யல அப்படி இருக்கப்ப நீ ஏன் தண்டனையை ஏத்துகிட்ட ??”

என்று கேட்க உடனே காயத்ரி

“என்னங்க என்ன பேசுறீங்க…?”

என்று கேட்க அதற்கு நரேன்

“என் பொண்ணு தப்ப தட்டி கேட்பா..”

என்று தன் மகளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி கூற மறுநாள் அச்சிறுவர்களை புரட்டி எடுத்து விட்டு வீடு திரும்பிய மித்ரா தன் தந்தையிடம் நடந்த அனைத்தையும்‌ மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாள். ஆனால் காயத்ரி தான் பாவம் ஏனெனில் இது என்றோ ஒருநாள் என்றால் பரவாயில்லை, ஆனால் தன் தந்தையின் வார்த்தையை மந்திரமாக மனதில் பதித்தவள் தினமும் தன் பள்ளியில் படிப்பவர்களிடம் சண்டை போட்டு வீடு திரும்ப அவர்களின் பெற்றோர் காயத்ரியிடம் வந்து புகார் அளித்தனர். எனவே இதற்கு ஒரு முடிவு எடுத்து விட வேண்டும் என்று நரேனுக்காக காத்துக் கொண்டிருந்த‌ காயத்ரி இரவு நரேன் உணவு உண்டு முடித்ததும்

“நரேன், வர வர இவ சேட்டைக்கு அளவே இல்லாம போச்சு”

என்று மித்ராவை பார்த்தபடி கூற உடனே நரேன் என்ன என்பதைபோல சிறு தலையசைப்போடு கேட்க அதற்கு மித்ரா முகத்தில் சிரிப்புடன் தன் இரு தோள்களையும் தூக்கி தெரியல பா என்பது போல் கூற அப்போது காயத்ரி

“தினமும் ஸ்கூல்ல யாரையாவது அடிச்சிட்டு வரா அவங்க அம்மாங்க எல்லாம் இங்க வந்து இவளை பத்தி கம்ப்ளைன்ட் செய்துட்டு போறாங்க.. அதுமட்டுமா பக்கத்து தெருவுல இவளவிட ரெண்டு வயசு பெரிய பையன் ஏதோ தப்பு செஞ்சான் னு அவன் மூக்குலயே குத்தி அவன் மூக்கை உடச்சு விட்ருக்கா”

என்று குற்ற பட்டியல்களை அடுக்க ஆரம்பிக்க உடனே இவை அனைத்தையும் கேட்ட நரேன் தன் மகளின் கையை பிடித்து தன் முகத்தில் தானே குத்தி கொண்டு இருக்க அதை பார்த்த காயத்ரி

“என்னங்க நான் இங்க இவ்வளவு கத்திட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா அவ கூட விளையாடிட்டு இருக்கீங்க”

என்று கேட்க அதற்கு நரேன்‌

“சரி இனிமே நம்ம பொண்ணு ஸ்கூல்ல யாரையும் அடிக்கமாட்டா…”

என்று கூற வருவதை கூறி முடிப்பதற்குள்

“அப்படி சொல்லுங்க நான் கூட எங்க நீங்க உங்க பொண்ணு கூட சேர்ந்துகிட்டு அவள என்கரேஜ் பண்ணிடுவீங்களோ னு நெனச்சேன். நல்லா அவ மண்டைக்கு ஒறைக்குறா மாதிரி சொல்லுங்க.. ஏய்.. நீயும் நல்லா கேட்டுக்க உங்க அப்பாவே சொல்லிட்டாரு நாளையில இருந்து நீ யாரையும் அடிக்க கூடாதுன்னு”

என்று கூற உடனே நரேன்

“ம்.. ஆமா மித்ரா நாளையில இருந்து நீ உன் ஸ்கூல்ல யாரையும் அடிக்க கூடாது அதுக்கு பதில் பாக்சிங் ரிங்குல இருக்கவங்கள மட்டும் தான் நீ அடிக்கனும். நாளைக்கே அப்பா உனக்கு பாக்சிங் ப்ராக்டீஸ் கொடுக்க ஆரம்பிக்குறேன்”

என்று கூற உடனே மித்ரா

“நிஜமாவா பா..”

என்று கண்கள் விரிய கேட்க அதற்கு

“ஆமா மித்ரா உனக்கு இப்ப போன் (Bone) நல்லா வளர்ந்து இருக்கு இப்ப இருந்து ட்ரைனிங் கொடுக்க ஆரம்பிச்சா தான் கரெக்டா இருக்கும்”

என்று கூற உடனே மித்ரா

“ஹை ‌ஜாலி.. ஜாலி..”

என்று தன் தந்தையை கட்டி அணைத்து கூற இவை அனைத்தையும் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி தன் கடும் பார்வையால் தன்னவனை சுட்டெரித்தப்படி

“என்ன நரேன், என்ன பேசுறீங்க னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா அவ பொம்பள பொண்ணு அவள போய் பாக்சிங் விளையாட வைக்க போறேன்னு சொல்றீங்க”

என்று கேட்க அதற்கு அவன்

“யாரு சொன்னா பொம்பள பொண்ணு பாக்சிங் போடக் கூடாது னு அப்ப மேரி கோம் ம என்ன சொல்லுவ அவங்க அவங்களோட 19வது வயசுல லைட் வெயிட் சாம்பியன்ஷிப் ல பங்கெடுத்து 48கிலோ பிரிவுல வெள்ளி பதக்கம் வாங்குனாங்க ஆனா என் பொண்ணு தங்க பதக்கம் வாங்குவா..”

என்று கூற

“அது இல்லங்க..”

என்று காயத்ரி கூற வர உடனே நரேன் தன் இடக்கையை உயர்த்தி

“ப்ளீஸ் காயு, நான் ஒவ்வொரு முறையும் மேட்ச் முடிந்து காயங்களோட வீட்டுக்கு வரும்போது எல்லாம் ராத்திரி பூரா நீ அழுவதை பார்க்க முடியாம எனக்கு பிடிச்ச பாக்சிங்க விட்டுட்டு வந்துட்டேன் பட் இப்போ அதை என் பொண்ணு மூலமா அடைய ஒரு வழி கெடச்சிருக்கு சோ அதை எந்த காரணத்திற்காகவும் நான் விட்டு தருவதாக இல்லை..”

என்று கூறி முடிக்க உடனே

“என்னங்க பேசுறீங்க உங்களுக்கு ஒன்னுனா மட்டும் தான் எனக்கு வலிக்குமா.? ஏன் அவளுக்கு ஒன்னுனா எனக்கு வலிக்காதா.?”

என்று கேட்க அதற்கு நரேன்

“அவளுக்கு ஒன்னும் ஆகாது ஏன்னா அவ அடி வாங்க பிறந்தவ இல்ல அடி கொடுக்க பிறந்தவ அதனால அவள பத்தி நீ கவலைப்பட தேவையில்லை..”

என்று கூற மீண்டும் காயு முதலில் இருந்து ஆரம்பிக்க அவள் எதிர்பாராத வண்ணம் சடாரென்று அவளது அழகிய தாமரை இதழ் போன்ற கன்னத்தில் முத்தமிட்டான் நரேன் இதை சற்றும் எதிர்பார்க்காதவள் வெட்கத்தில் இரு கைகளை கொண்டு முகத்தினை மறைக்க அதை கண்ட மித்ரா

“ஹி.. ஹி.. ஹி..”

என்று புன்னகைக்க தன் மனையாளையும் மகளையும் அனைத்து கொண்டான் நரேன். தன்னை மறந்து தன்னவன் கைவளைவுகளில் இருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தவளாய்

“சரி சரி விடுங்க நான் போய் பலகாரத்துக்கு மாவு அரைக்கனும்”

என்று கூற உடனே நரேன்

“ம்.. என்ன பலகாரம் டார்லிங்”

என்று அவளை கைகளின் வளைவில் இருந்து விடுவிக்காமல் கேட்க அதற்கு காயத்ரி

“நாளைக்கு நோன்பு ங்க மறந்துட்டீங்களா”

என்று கூற

“அட ஆமால..”

என்றவனை பார்த்து

“சரியா போச்சு நாளை மறுநாள் தீபாவளி அதாவது ஞாபகம் இருக்கா இல்லையா”

என்று கேட்க அதற்கு நரேன்

“அது எப்படி டி மறக்கும். இந்த நோன்பு தான் எனக்கு புதுசு, இது நீ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தானே இப்படி ஒன்னு இருக்குனே எனக்கு தெரியும்.. சரி வேணும்னா நான் மறந்ததுக்கு தண்டனையா அந்த கன்னத்துலயும் ஒன்னு குடுக்கவா”

என்று கேட்க அதற்கு

“ச்சீ.. பொம்பள புள்ளைய பக்கத்துல வச்சுட்டு பேசுறத பாரு”

என்று முனுமுனுத்தபடி நாணம் கொண்ட நங்கையாக எழுந்து செல்ல, நரேன் மித்ராவை தன் மார்பின் மேல் போட்டுக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்..

மறுநாள் காலை அன்னகிளி சமையல் வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க காயத்ரி பலகாரம் செய்வதில் மும்முரமாக இருந்தார் அப்போது பவித்ரா மித்ராவிடம்

“ஏய்.. மித்து, இன்னைக்கு நமக்கு செம வேட்டை டி..”

என்று தன் சிறு உதட்டை நாக்கால் நனைத்தப்படி கூற அதற்கு

“ஆமா கா இவங்க செய்யுறத பார்த்தா நாளு நாளைக்கு நமக்கு பஞ்சமே இருக்காது போல”

என்று இவளும் தன் சிறு உதட்டை நாக்கால் நனைத்தப்படி கூற இருவரும் தங்கள் பலகார வேட்டைக்கு தயாராகினர்.

ஆனால் அதே சமயம் எப் பண்டிகை ஆகினும் அதை தங்கள் பண்ணைகளில் வேலை செய்பவர்களை அழைத்து விமர்சையாக கொண்டாடும் பெரிய குடும்பமான ஜமின் வீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லாது சாதாரண நாளாகவே இருந்தது. இன்னும் சொல்ல போனால் அவர்கள் வந்தது கூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அந்த வீட்டின் மருமகள் யமுனா மட்டும் காலையிலேயே எழுந்து அனைத்தையும் செய்துவிட்டு தன் வீட்டில் இருப்போரை இறை வழிபாட்டிற்கு அழைக்க வர அவர்கள் யார் அகத்திலும் புறத்திலும் ஒரு துளி கூட மகிழ்ச்சி இல்லை ஏன் இவ்வளவு நேரம் இவை அனைத்தையும் செய்த யமுனாவின் முகத்தில் கூட சிறு புன்னகை இல்லை

“அத்தை மாமா சாமி கும்பிட வாங்க”

என்று அழைக்க அதற்கு விஸ்வநாதன்

“ஏன்மா இப்ப இதெல்லாம் தேவையா, இங்க வந்தாலே அதே ஞாபகங்கள் திரும்ப திரும்ப வருது. இந்த நோன்பு, தீபாவளி எல்லாம் சென்னையிலேயே கொண்டாடி இருக்கலாம் ல”

என்று சற்று காட்டமாக கேட்க அதற்கு ஜானகி

“அவ மேல இருக்க கோபத்தை ஏன் பா இவ மேல காட்டுற, உனக்கு தெரியாத மாதிரி அவ மேல பாயுற, ஜோசியர் பேசும் போது நீயும் தானே அங்க இருந்த, ரொம்ப வருடமா ஒரு வீட்டை பூட்டி வைக்க கூடாதுனும் அதுவும் பூர்வீக வீட்டை அப்படியே விட்டுவிட கூடாதுன்னும் அதனால இந்த வருடம் நோன்பு பண்டிகையை உங்க பூர்வீக வீட்டுல கொண்டாடுங்கனு சொன்னதுக்காக தானே நாம எல்லாரும் இங்க வந்துருக்கோம்.”

என்று கூறியவர்

“நீ வாமா, என்னங்க நீங்களும் தான்”

என்று தன் மணாளனையும் சேர்த்து அழைக்க யமுனா விஸ்வநாதனுக்காக காத்து கொண்டு அங்கேயே நிற்க தன் இருக்கையில் இருந்து எழுந்தவர் முகத்தில் சிறு சிரிப்புடன்

“சாரி மா.. வா போகலாம்”

என்று கூற அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டனர்.. அதே வேளையில் வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்த காயத்ரி கடிகாரத்தை பார்த்ததும் தன் மகள் மித்ராவை அழைத்துக் கொண்டு அன்னகிளியிடம்

“அக்கா கொஞ்சம் கவனிச்சிக்கோங்க நான் வெளிய போய்ட்டு வந்துடுறேன்”

என்று கூறிவிட்டு அந்த பெரிய வீட்டு வாசல் முன்பு வந்து நிற்க என்றும் மூடியிருக்கும் வீடு இன்று பார்த்து திறந்திருப்பதை கண்டவளுக்கு மனதில் அளவில்லா மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியுடன் வெகு நேரமாக தெய்வ தரிசனத்திற்கு காத்து கொண்டிருக்கும் பக்தையை போல அங்கேயே நின்று அவ்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இன்றும் இந்த பக்தைக்கு அந்த தெய்வம் காட்சி தராதிருக்க‌ அப்போது மித்ரா

“ஏன்மா எப்ப பாரு (அதாவது எல்லா விஷேச நாட்களிலும்) இங்க வந்து நிக்குறோம்..”

என்று கூறியவள் அப்போது தான் வீடு திறந்திருப்பதை கவனித்து தன் அன்னையிடம்

“அம்மா, வீடு இன்னைக்கு திறந்து இருக்குமா.. வா மா உள்ள போகலாம்..”

என்று அழைக்க அதற்கு காயத்ரி

“இல்ல மித்து, நான் செய்த ஒரு தப்புனால இந்த வீட்டுக்கு உள்ள போகுற உரிமையை நான் இழந்துட்டேன் அதனால என்னால உள்ள போக முடியாது”

என்று கூற இதை கேட்ட மித்ரா

“ம்.. அப்ப நான் போறேன்”

என்று கூறியபடி அங்கிருந்து நகர அவளின் கைகளை பிடித்த காயத்ரி

“எனக்கு அந்த உரிமை இல்லாததால இப்ப உனக்கும் அது மறுக்க பட்டிருக்கு”

என்று ஒரு மாதிரி குரல் தாழ்த்தி பேச தன் தாயின் மனநிலையை புரிந்தவளாய்

“அப்ப நான் நீ ஆசைப்பட்டா மாதிரி நிறைய படிச்சு, அப்பா ஆசைப்பட்டா மாதிரி அந்த மேரி கோம் மாதிரி ஒரு பெரிய பாக்சர் ஆகிட்டு வந்து அந்த உரிமையை வாங்கி நாம உள்ள போகலாம். என்னமா நான் சொல்றது”

என்று கூற அதை கேட்ட காயத்ரிக்கு அகமும் புறமும் மலர்ந்திட தன் மகளை வாரி அணைத்படி அவள் நெற்றியில் முத்தமிட்டு

“அப்படி மட்டும் உனக்கு அந்த உரிமை கிடைச்சுதுனா இந்த ஜென்மத்துல அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவும் இல்ல மித்து..”

என்று கூறி தன் மகளை தூக்கிக் கொண்டு வீடு திரும்ப இவை அனைத்தையும் அவ்வளவு நேரம் அந்த பெரிய வீட்டின் மொட்டை மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

வீடு திரும்பிய காயத்ரியின் முகத்தில் மகிழ்ச்சியை கண்ட அன்னகிளி

‘என்ன சின்னம்மா சிரிச்சுட்டே வாராக எப்பவும் அவுக வீட்டுக்கு போய் கால் கடுக்க நின்னுட்டு சோகமா தானே வருவாக இன்னைக்கு என்ன நடந்துருக்கும்’

என்று தன் மனதில் நினைத்து சரி இதை காயத்ரியிடமே கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து வர

அன்னகிளியை பார்த்த காயத்ரி

“அக்கா எல்லாம் ரெடியா சாமி கும்பிடலாமா”

என்று உற்சாகத்தோடு கேட்க அதற்கு

“எல்லாம் செய்து படையல் கூட போட்டுட்டேன் சாமி மட்டும் தான் கும்பிடனும் சின்னம்மா.. ஆமா சின்னம்மா ஏதாவது சந்தோசமான விசயமுங்களா”

என்று கேட்க அதற்கு காயத்ரி

“என்ன சின்னம்மா னு கூப்டாதீங்க னு எவ்வளவு தான் நானும் சொல்றதோ ஏன் கா இப்படி இருக்கீங்க”

என்று கூற உடனே அன்னகிளி

“அது பொறப்புலயே வந்ததுங்க அத மாத்த முடியாது, சரி நீங்க சொல்லுங்க..”

என்று கேட்க அதற்கு காயத்ரி

“இத்தனை வருசமா பூட்டி இருந்த எங்க வீடு இன்னைக்கு திறந்து இருந்துச்சு கா, அநேகமா எல்லாரும் வந்துருப்பாங்க போல”

என்று கூற இதை கேட்ட அன்னகிளி

“அப்படியா சங்கதி அதான் இந்த சந்தோசமா உங்க மொகத்துல.. சரி நீங்க போய் பார்த்து பேசுனீகளா இல்ல எப்பவும் போல வெளியவே நின்னுட்டு வந்துட்டீகளா ”

என்று கேட்க உடனே காயத்ரியின் முகம் மாற அதை கவனித்த அன்னகிளி

“அப்ப உள்ள போகவே இல்ல.. இல்ல நான் கேக்குறேன் அவுகளுக்கு உங்க மேல இன்னுமா கோபம் இருக்கும்னு நெனைக்குறீக..”

என்று கேட்க அதற்கு காயத்ரி

“எப்படி கா இல்லாம போகும், நான் செய்த காரியத்தால அநியாயமா ஒரு உயிர் போயிடுச்சே..”

என்று கூறியவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவளை சமாதானப்படுத்தி சாமி கும்பிட அழைத்து சென்றார் அன்னகிளி. பூஜை அறைக்கு சென்றவர்கள் அதிர்ச்சியாகி அப்படியே ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க

“இயாவ்..”

என்ற சத்தம் கேட்க வாய்விட்டு சத்தமாக சிரித்தாள் காயத்ரி, மித்ரா வாய் பிளந்து நிற்க, அன்னகிளி கடுகடுவென பவித்ராவை பார்க்க, பவித்ரா மாட்டிக்கொண்ட திருட்டு பூனை போல முழித்து கொண்டிருந்தாள். ஆம் அங்கே படையல் போட்ட இலையில் இருந்த அனைத்து பலகாரமும் ஸ்வாகா.. உடனே அன்னகிளி பவித்ராவை அடிக்க செல்ல அப்போது காயத்ரி அன்னகிளியை தடுத்து நிறுத்தி அடக்க முடியாத சிரிப்புடன் அவரை பார்த்து

“அக்கா விடுங்க.. கா.. குழந்தைங்க சாப்பிட தானே நாம இவ்வளவும் செய்தோம் அப்புறம் ஏன் அவளை அடிக்க போறீங்க..”

என்று கேட்க உடனே அன்னகிளி

“இல்ல சின்னம்மா அவள இன்னைக்கு வெளுக்காம விட மாட்டேன். இதே பொழப்பா போச்சு வீட்ல ஒன்னு வைக்க விட மாட்டேன்றா எல்லாத்தையும் திருடி திண்ணுடுறா”

என்று கூற

“சரி விடுங்க நல்ல நாள் அதுவுமா பிள்ளைய அடிக்க வேண்டாம்”

என்று கூற அவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்ரியின் முகத்தில் சிரிப்பை பார்க்க அதை அப்படியே விட்டுவிட்டார்.


சில நாட்களுக்கு பிறகு..

அம்மா நானும் வரேன் மா.., அப்பா நானும் வரேன் பா..

என்று மித்ரா தன் தாய் தந்தை இருவரிடமும் கேட்க அதற்கு நரேன்

“இல்லடா மா அம்மாவும் அப்பாவும் ரொம்ப தூரம் போறோம் அன்னைக்கு நம்ம வீட்டுக்கு ஒரு ஆண்ட்டி வந்தாங்கல அவங்க அம்மா கூட படிச்சவங்க அவங்களுக்கு நாளைக்கு கல்யாணம் சோ நானும் அம்மாவும் கண்டிப்பா போகனும் நீங்க சமத்தா உங்க பெரியம்மா வீட்ல பவித்ரா அக்கா கூடயும் சித்ரா கூடயும் விளையாடிட்டு இருங்க நாங்க போய்ட்டு நாளைக்கு நைட்டு வந்துடுவோம்..”

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே வெளியே அவர்களுக்கான கார் வந்து நின்றது.

அதற்கு உடனே மித்ரா

“அவங்க அம்மாவோட ப்ரெண்டு தானே அப்ப அம்மா மட்டும் போகட்டும் நீங்க என் கூடவே இருங்கப்பா”

என்று கூற

“அம்மா மட்டும் எப்படி டா போவா நான் இல்லாம உன் அம்மா எங்கயும் போக மாட்டா”

என்று கூற மீண்டும் மித்ரா

“அப்ப நீங்க போங்க அம்மா என் கூட இருக்கட்டும்”

என்று கூற அதற்கு காயத்ரி

“உங்க அப்பாவ விட்டுட்டு நான் எப்படிடா இருப்பேன்”

என்று கேட்க அதற்கு மித்ரா கோபமாக

“நீங்க அப்பாவ விட்டுட்டு இருக்க மாட்டீங்க அப்பா உங்கள விட்டுட்டு இருக்க மாட்டாரு ஆனா நீங்க ரெண்டு பேரும் என்ன மட்டும் விட்டுட்டு இருப்பீங்க அப்படி தானே..?”

என்று சாதூர்யமாக கேட்டவளை அவ்விருவரும் வியந்து பார்க்க உடனே நரேன்

“அப்படி இல்லடா மா இது ரொம்ப தூரம் போறதால உன்னால எங்க கூட வர முடியாது. உனக்கு டயார்டா ஆகிடும் சோ நாங்க மட்டும் போய்ட்டு வந்துடுறோம்”

என்று கூற உடனே மித்ரா

“ஓ.. அப்படியா.. அப்ப சரிப்பா”

என்று கூற

“ஆமா வாயாடி சரி நாங்க வரும் போது உனக்கு என்ன வேணும்னு சொல்லு”

என்று கூற அதற்கு மித்ரா

“ம்…”

என்று யோசித்தவள்

“ம்.. எனக்கு பவித்ரா அக்காக்கு சித்ரா க்கு கதிர் கு எங்க எல்லாருக்கும் பால் பன் வாங்கிட்டு வறீங்களா”

என்று கேட்க அதற்கு காயத்ரி

“ம்.. வாங்கிட்டு வந்துட்டா போச்சு”

என்று கூற வெளியே சென்ற நரேன் காரில் அமர்ந்தபடி காயத்ரியை அழைக்க அவளும் தன் மகளின் கன்னத்தில் முத்தமிட்டு காரில் ஏற மீண்டும் மித்ரா

“அம்மா, பவித்ரா அக்காவுக்கு பால் பன் நிறைய வாங்கிட்டு வாங்க இல்லைனா அவங்க என்னோடதையும் எடுத்துப்பாங்க..”

என்று கூற

“ம்.. சரி”

என்று புன்னகைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றவர்கள் மறுநாள் இரவு குத்துயிரும் குலை உயிருமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தனர். அப்போது இதை தெரிந்து கொண்ட இருவீட்டாரும் அங்கு வர அதற்குள் நரேன் இறைவன் சரணங்களை அடைந்திருந்தான். காயத்ரி மட்டும் தன் வீட்டாரிடம் கடைசியாக ஒருமுறை மன்னிப்பு கேட்பதற்க்காக‌ கையில் உயிரை‌ பிடித்துக் கொண்டு இருக்க, விஸ்வநாதன், யமுனா, ஜானகி, சீனிவாசன் என அனைவரும் உள்ளே வர அருகில் அழுது கொண்டு நின்றிருந்தாள் மித்ரா. அவர்கள் உள்ளே வந்ததும் கண்ணீர் மல்க தன் உறவுகளிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரியவள் தன் மகளை அருகில் அழைத்து விஸ்வநாதனை பார்த்து

“அண்ணா இவ தான்னா என் பொண்ணு சங்கமித்ரா. இனிமேல் இவள நீ பார்த்துப்பியா னா”

என்று கேட்க உடனே விஸ்வநாதன்

“உனக்கு ஒன்னும் ஆகாது டா மா நீ குணமாகி திரும்பி வருவ..அப்புறம் நாம எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருப்போம்‌”

என்று கூற அதற்கு காயத்ரி

“இல்ல னா அதுக்கு இனிமேல் வாய்ப்பில்ல எப்போ அவர் இறந்துட்டார்னு தெரிஞ்சுதோ அப்பவே என் உயிரும் போய்டுச்சு இப்ப இருக்குற கொஞ்ச உயிரை கையில பிடிச்சு வச்சுட்டு இருக்குறதே உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்குறத்துக்காக‌ மட்டும் தான்.”

என்று கூறியவர் தன் மகளிடம்

“மித்ரா இது தான் உன் பாட்டி தாத்தா அப்புறம் இவங்க தான் உன் அத்தையும் மாமாவும் இனிமேல் நீ அவங்க கூட தான் இருக்கனும் இனிமேல் உன் அத்தையும் மாமாவும் தான் உனக்கு எல்லாம் அவங்க சொல்றபடி கேட்டு மரியாதையோடு நடந்துக்கனும். உன் அப்பா ஆசைப்பட்டா மாதிரி நீ ஒரு பெரிய பாக்சர் ஆகனு…”

என்று கூறிக் கொண்டே இருந்தவரின் மூச்சு நின்று விட உடனே சீனிவாசன்

“டேய் விச்சு என் பொண்ணுக்கு என்ன ஆச்சு னு பாருடா”

என்று கூற உடனே விஸ்வநாதன்

“டாக்டர்… டாக்டர்… ”

என்று கத்த அங்கே வந்த மருத்துவர் காயத்ரியை பரிசோதித்து விட்டு அவளின் மரணத்தை அறிவித்தார். அதை கேட்டதும் அவ்வறையே அழுகையால் நிரம்பியது..


இவை அனைத்தையும் கடற்கரையில் அமர்ந்தபடி மித்ரா நினைத்து பார்த்துக் கொண்டிருக்க அங்கே போதையில் கையில் கள் பானையுடன் தடுமாறியபடி நான்கு இளைஞர்கள் வர அதில் ஒருவன்

“டேய் மச்சான் அங்க பாருடா நம்ம இடத்துல ஒரு பொண்ணு உட்கார்ந்துட்டு இருக்கா”

என்று கூற உடனே மற்றொருவன்

“டேய் அதுவாடா முக்கியம் அவ அழகை பாருடா இந்த பௌர்ணமி நிலவு ல சும்மா மின்னுறா பாருடா”

என்று கூறியபடி நால்வரும் அவளுக்கு அருகில் வந்தனர்.
 

Attachments

  • 1610645173526.jpg
    1610645173526.jpg
    84.7 KB · Views: 0
என் தேடலும் நீ.. என் ஊடலும் நீ.. அத்தியாயம் 09

மித்ரா கடற்கரையில் அமர்ந்திருக்க அவளை நெருங்கிய நான்கு இளைஞர்களும் அவள் அருகில் வர அதில் ஒருவன் மித்ராவை பார்த்து

“ஏய்.. பொண்ணு..”

என்று மித்ராவை அழைக்க மித்ரா அவர்களை கண்டு கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அப்போது மற்றொருவன் அவளை உற்று நோக்கி மற்றொருவனிடம்

“டேய் மச்சான் பொண்ணு சோகமா இருக்கு டா பாரு கண்ணு கூட கலங்கி இருக்கு”

என்று கூற அதற்கு

“ஆமா டா மச்சான்”

என்றவன் மித்ராவை பார்த்து

“இன்னா பொண்ணு லவ் பண்ற பையன் உட்டு ஓடிட்டானா இல்ல எக்ஸாம் ல ஏதாவது பெயில் ஆயிட்டியா”

என்று கேட்க உடனே அவர்களை மித்ரா திரும்பி பார்க்காது

“டேய் ஒழுங்கா ஓடிடுங்க.. நானே கொல காண்டுல இருக்கேன்.. அப்புறம் பொளந்து விட்ருவேன்..”

என்று ஆக்ரோஷமாக கூற அந்நால்வரில் ஒருவன்

“என்ன மச்சான், இப்ப எப்படி டா”

என்று மற்றொருவனிடம் கேட்க அவனோ

“தோ பார்டா டமாச, நம்ம ஏரியாவுக்கே வந்து நம்மளயே பெரிய தௌலத்து மாதிரி மெரட்டுறத. இந்தா பாரு பாப்பா இது நாங்க வழக்கமா உட்கார்ர எடம் அதனால நீ இங்க இருந்து வேற எங்கயாவது போய் உட்காரு”

என்று கூற, மித்ரா ஒன்றும் பேசாது அமைதியாக அங்கேயே அமர்ந்திருந்தாள். இதனால் பொருமை இழந்தவன் அவர்களுக்குள்ளாகவே ஏதோ பேசி கொள்ள உடனே அதில் ஒருவன் மித்ராவின் அருகில் வந்து அவள் தோல் மீது கை வைக்க வர உடனே அதை சுதாரித்தவள் அவன் கையை பிடித்து இழுத்து வீச அவளுக்கு அந்த பக்கம் போய் விழுந்தவன் தலை சுற்ற எழுந்து நின்று மீண்டும் கீழே விழுந்தான். அதை பார்த்த மற்ற மூவரும் அச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்க தன் இடத்தில் இருந்து கம்பீரமாக எழுந்த மித்ரா அம்மூவர் முன் சென்று இடைவிடாது அவர்கள் கன்னத்தில் பளார் பளார் என்று அடித்தபடியும் குனிய வைத்து தன் முழங்கை முட்டியை வைத்து குத்தியபடியும்

“என்னடா பொண்ணுங்கள நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா ஒரு பொண்ணு தனியா இருந்தா போதும் உடனே அவ மேல கைய வைக்க வேண்டியது.. வாங்கடா இப்ப வாங்க..”

என்று கூறியபடி ஒவ்வொருவரையும் தன் கைகளால் பதம் பார்க்க உடனே நால்வரும் அவள் கால்களை பிடித்து கொண்டு

“அக்கா.. நாங்க உன்ன ஒன்னும் பண்ண வரல கா.. நீ தான் கா எங்க இடத்துல உட்கார்ந்து இருக்க..”

என்று கூற உடனே மித்ரா

“இது என்ன உங்க இடம் னு எழுதியா டா வச்சு இருக்கு”

என்று கேட்க அதற்கு

“அப்படி இல்ல கா..”

என்று கூற உடனே

“அக்கா வா யாரு யாருக்குடா அக்கா மலைமாடு மாதிரி இருக்க உனக்கு நான் அக்காவா”

என்று கேட்டபடி தன் மனதில் அர்ஜூன் மீது இருந்த கோபத்தை அவர்கள் மீது காட்ட உடனே அடி பொறுக்க முடியாத அவர்கள் நால்வரும் அவளின் கை கால்களை வலுவாக பிடித்து கொண்டு

“இந்தா பாரு தங்கச்சி நாங்க சொல்ல வர்றத மொதல்ல பொருமையா கேளு..”

என்று கூற

பின்பு கோபம் குறைந்தவளாய் அவர்களை பார்த்து

“சரி சொல்லுங்க”

என்று கூற அவர்களும் பொறுமையாக அவளின் கை கால்களை விடுவித்து அவளை பார்த்து

“நீ உட்கார்ந்து இருந்த இடத்துல தான் நாங்க எங்களோட சுண்டகஞ்சி பானையை பொதச்சு வச்சிருக்கோம் தினமும் நாங்க இங்க தான் உட்கார்ந்து சுண்டகஞ்சி குடிச்சுட்டு வீட்டுக்கு போவோம்”

என்று கூற

“எது சுண்டகஞ்சி பானையா ??”

என்று புரியாமல் கேட்க உடனே அதில் ஒருவன் விருவிருவென அவர்கள் புதைத்து வைத்திருந்த இடத்தை தோண்டி அங்கிருந்த பானைகளை எடுத்து அவளிடம் கொண்டுவந்து

“தோ பாரு தங்கச்சி”

என்று கூற உடனே அதை கண்டவள் கண்கள் விரிய

“என்னங்கடா இது??”

என்று அவர்களிடம் இருந்து அதை வாங்க

“இதுக்கு பேரு தான் சுண்ட கஞ்சி இதை குடிச்சா நமக்கு இருக்க கவலை எல்லாம் பறந்து போய்டும்”

என்று கூற உடனே

“என்ன சொன்ன கவலை எல்லாம் பறந்து போய்டுமா”

என்று மித்ரா கேட்க அதற்கு

“ஆமா தங்கச்சி”

என்று ஒருவன் கூற அதை கேட்ட மித்ரா அதை தன் வாயின் அருகே கொண்டு செல்ல அதன் வாடை அவளை ஏதோ செய்ய

“டேய் என்னங்கடா இது இப்படி புளிச்ச வாசனை அடிக்குது”

என்று கேட்க

“அதெல்லாம் பார்க்காத தங்கச்சி ஒரு கையில கப்புனு அடிச்சிட்டு மறு கையால இந்த ஊறுகாய கடிச்சிக்க”

என்று கூறி அவளிடம் ஒரு உப்பு போட்டு காயவைத்த எலுமிச்ச துண்டை கொடுக்க அதை வாங்கியவள் அவர்கள் கூறியபடியே செய்ய ஒருபானை கள்ளை குடித்து முடித்தாள். இதை கண்ட அருகில் இருந்தோர் நால்வரும் கோரசாக

“எப்படி இருக்கு தங்கச்சி”

என்று கேட்க பளார் என்று கேட்டவனை அடிக்க

“ஏன் தங்கச்சி இப்ப என்ன அடிச்ச”

என்று அவன் கேட்டதும் மீண்டும் ஒருமுறை பளார் என்று அடித்தபடி

“பின்ன என்னடா ஒரு 19 வயசு கடைசி வருஷ டீனேஜ் பொண்ண பார்த்து பாப்பா, அக்கா, தங்கச்சினு கூப்ட்டா அடிக்காம கொஞ்சுவாங்களா..”

என்று கூற

“அப்ப உன்ன நாங்க எப்டி கூப்புடுறதாம்”

என்று ஒருவன் கேட்க அதற்கு மித்ரா மணலில் அமர்ந்து யோசிக்க அப்போது அவர்களில் ஒருவன் சுண்ட கஞ்சி குடிக்க போக அதை கண்ட மற்றொருவன்

“டேய் மச்சான் எனக்கு கொஞ்சம் குடுடா”

என்று கேட்க உடனே மித்ரா

“ஆ.. இப்ப நீ அவன என்னனு கூப்ட்ட??”

என்று கேட்க அதற்கு அவன்

“மச்சான்”

என்று கூற உடனே மித்ரா

“ஹான்.. மச்சான் ஆனா இது கூட அவ்வளவா நல்லா இல்ல”

என்று கூறியவள் மனதில்

‘மச்சான் + மச்சான் = மச்சான்’
‘மச்சான் - மச்சான் = மச்சி’

என்று கணக்கு போட்டவள் அவர்களை பார்த்து

“டேய்.. மச்சி, எப்படி இருக்கு”

என்று கேட்க அதற்கு

“ம்.. செம மச்சி..”

என்று கூற ஐவரும் ஒன்றாக அமர்ந்து சுண்ட கஞ்சி பருகினர்.


அதேநேரம் அர்ஜூனின் கார் வீட்டு வாசலில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவன் நேராக உள்ளே நுழைந்தான். அங்கே யமுனா வாசலையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தபடி படப்படப்பாக ஹாலில் அமர்ந்திருக்க அந்நேரம் உள்ளே நுழைந்த அர்ஜூனை கண்டவர் சோபாவில் இருந்து எழுந்து தன் மகனை பார்த்து

“சாப்ட்டியா அர்ஜூன்”

என்று கேட்க அதற்கு அவன்

“நான் சாப்ட்டேன் மா நீங்க போய் தூங்குங்க”

என்று கூற உடனே யமுனா‌

“அப்புறம் யாழினியப் பார்க்க போனியே எப்படி உனக்கு அவள பிடிச்சுருக்கா ??”

என்று கேட்க அதற்கு அர்ஜூன்

“ம்.. எனக்கு ஓகே மா”

என்று அவன் கூறியதை கேட்டு முகம் மலர தன் மகனுக்கு நெட்டி முறித்தவர்

“சரி நீ போய் தூங்கு”

என்று கூற அவனும் தன் அறைக்கு செல்ல படிகளில் ஏற மீண்டும் தன் அன்னை வாசலை நோக்கியப்படி சோபாவில் அமர்வதை கண்டு அவரிடம் வந்தவன்

“என்னம்மா நீங்க தூங்க போகலயா??”

என்று கேட்க அதற்கு யமுனா

“இல்லப்பா அது வந்து நம்ம மித்ரா இன்னும் வீட்டுக்கு வரல, விக்ரமை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனவ மணி 11 ஆகுது இன்னும் வீடு வந்து சேரல எனக்கு ஒரே திக்கு திக்குனு இருக்குது”

என்று கூற அப்போது தான் அர்ஜூனுக்கு அவளின் ஞாபகமே வந்தது

“அச்சச்சோ நான் திட்டுனதுல கோபிச்சுட்டு கிளம்புனாலே அந்த ஏரியாவுல அந்த டைமுக்கு வண்டி கூட கிடைக்காதே என்ன ஆனாளோ தெரியலயே”

என்று அவனுக்கு பதட்டம் ஒட்டிக் கொள்ள உடனே தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்தவன் அவளுக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் அவளது போன் சுவிட்ச் ஆப் என்று கூறியது இதை கேட்டவனின் மனம் ஏனோ என்றும் இல்லாது இன்று என்று பார்த்து அவளுக்காக துடித்தது. முதன் முதலாக அவளை எண்ணி கவலை கொள்ள அது அவன் முகத்தில் அப்பட்டமாய் ப்ரதிப்பலிக்க உடனே யமுனாவை பார்த்து

“சரிம்மா நான் போய் அவளுக்கு என்ன ஆச்சு னு பார்த்துட்டு வரேன்”

என்று கூறி மாட்டிய தன் கார் சாவியை வேக நடையிட்டு இரண்டே எட்டில் எடுத்தவன் அதே வேகத்தோடு வீட்டின் வாசலை தாண்ட, சரியாக அப்போது 3 சக்கர மீன்பாடி வண்டியில் அந்நால்வர் அமர்ந்திருக்க மித்ரா ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு வந்தாள். அவளை அப்படி பார்த்த அர்ஜூன் அப்படியே சிலையாய் நிற்க அப்போது அந்நால்வரில் ஒருவன் மித்ராவை பார்த்து

“எழுந்திரு மச்சி”

என்று கூற உடனே மித்ரா கண்களை திறந்து கீழே இறங்கி இருகைகளையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்தார் போல் நிற்க

உடனே அதில் ஒருவன் மித்ராவை பார்த்து

“இதுதான் உன் வீடா மச்சி, பார்க்கவே கப்பல் மாதிரி இருக்கு எங்கள உள்ள கூப்டமாட்டியா ??”

என்று கேட்க அதற்கு உடனே மித்ரா தன் உதட்டின் மீது தன் ஆட்காட்டி விரலை வைத்து

“உஷ்... அப்படியெல்லாம் வீடு பெருசா இருக்கு னு உள்ள வந்துடாத மச்சி, வீட்டுக்குள்ள ஒரு பெரிய காட்சில்லா இருக்கு அதுகிட்ட மாட்டுனோம் அவ்ளோ தான்..”

என்று கூற அவர்களும் அதை கேட்டு

“அய்யய்யோ அப்ப நாங்க கெளம்புறோம்”

என்று கூறி தங்களின் அந்த மீன் பாடி வண்டியில் செல்ல,

“பார்த்து போங்கடா வழியில ட்ராபிக் போலிஸ் புடிச்சிடப் போறாங்க..”

என்று மித்ரா கத்த இங்கு நடந்த அனைத்தையும்‌ பார்த்த அர்ஜூனின் மனம் அவளுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியடைய அது முகத்தில் புன்னகையாய் வெளிப்பட அதை உணர்ந்தவன் ஏனோ தன் முகத்தை இருக்கமாக்கி கொண்டு யமுனாவை பார்த்து சற்று காட்டமாக

“பார்த்தீங்கள.. இவள போய் காணும்னு பயந்து போனீங்களே.. இதெல்லாம் திருந்தவே திருந்தாது..”

என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றவன் மெல்லமாக படிகள் ஏறியப்படி அவளை பார்த்துக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான். அப்போது மித்ராவை பார்த்து யமுனா அவளருகில் வந்து

“யாருடி அவனுங்க??”

என்று கேட்க அதற்கு மித்ரா

“யம்மு டார்லிங், உனக்கு தெரியாதுல அவங்க எல்லாம் என்னுடைய புது தோஸ்த்து..”

என்று போதையில் கூற இதை கேட்ட யமுனா

“என்னடி உன் மேல இப்படி நாற்றம் அடிக்குது”

என்று கேட்க

அவள் ஒன்றும் பேசாது குறும்பு செய்த குழந்தைப்போல திருதிருவென முழிக்க அப்போது அவளின் நிலை சரியில்லாததை உணர்ந்து

“சரி சாப்ட்டீயா..?”

என்று கேட்க அதற்கு மித்ரா

“ஆ.. நான் சாப்ட்டேன் யம்மு, நீ சாப்டீயா..”

என்று ஒரு குழந்தைப்போல் போதையில் கேட்க அவளை அழைத்துக் கொண்டு அவளின் அறையில் உள்ள படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வீட்டின் கதவுகளை தாளிட்டு தன் அறைக்கு சென்றார்.

மறுநாள் காலை..

விடியற்காலையிலேயே விஸ்வநாதன் வீட்டிற்கு பவித்ராவும் சோமசுந்தரமும் வந்தடைந்தனர். வீட்டின் கிச்சனில் இருந்து பவித்ரா ஒரு ப்ளேட்டில் இருந்த உணவை உண்டு கொண்டே வெளியே வர அப்போது தன் அறையில் இருந்து வெளியே வந்த ராகவ்

“ஏ.. மூசிஉண்ட நீ எப்படீ வந்த??”

என்று கேட்க அதற்கு பவித்ரா வாயில் இட்லியை வைத்து கொண்டு

“அத்..தா.. எறளளீ அப்பபீ..”

என்று ஏதோ கூற அது புரியாத ராகவ்

“என்னடீ சொல்ற??”

என்று கேட்க உடனே பவித்ரா வாயில் வைத்திருந்த உணவை விழுங்கிவிட்டு

“அத்தான், என்னை அப்படி கூப்டாதீங்க னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..”

என்று கூற ராகவ் அவளை வம்பிழுத்து கொண்டிருந்தான். அதே நேரம் மித்ரா தன் அறையில் இருந்து ஆர அமர எழுந்துக் கொண்டு தலையை பிடித்துக் கொண்டு அங்கு பத்ரகாளி போல கடும் கோபத்தில் இரு கைகளையும் இடையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த யமுனாவிடம்

“குட் மார்னிங் அத்தை.. தலை ரொம்ப வலிக்குது கொஞ்சம் காபி கொடுக்கிறீங்களா..??”

என்று கேட்க உடனே யமுனா மித்ராவை ஒரு முறை முறைத்து விட்டு அவசர அவசரமாய் எதையோ தேட கடைசியில் மித்ராவின் படுக்கையில் இருந்த ஒரு தலையனையை எடுத்து அவள் மீது வீசி

“குட் மார்னிங்.. இப்ப அது ஒன்னு தான் கொரச்சல்”

என்று கூற உடனே மித்ரா

“எ..ன்ன ஆச்சு.. அத்தை”

என்று கேட்க அதற்கு யமுனா நேற்று இரவு அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்த நிலையை கூறி அவளை

"#&$£$¢£^€"

திட்டி தீர்த்துவிட்டு அருகில் தயராக வைத்திருந்த எலுமிச்சை சாறு ஜூஸை அவள் கையில் திணித்துவிட்டு

“நல்ல வேளை அவன் உன்னை நேத்து ராத்திரி சரியா கவனிக்காததால தப்பிச்ச.. அவனுக்கு மட்டும் தெரிஞ்சிருந்தது உன் நிலமையை யோசிச்சுப் பார்க்கவே பயமா இருக்கு”

என்று கூறி முடிக்க உடனே மித்ரா

“நான் எதுவும் பண்ணல அத்தை அவனுங்க தான் இதை குடிச்சா நல்லா இருக்கும் கவலை எல்லாம் பறந்து போய்டும் னு என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வச்சுட்டானுங்க..”

என்று கூற உடனே யமுனா

“உனக்கு அப்படி என்னடீ இப்ப கவலை வந்துச்சு..”

என்று கேட்க அதற்கு மித்ரா

‘அய்யயோ அந்த கொம்பேரி மூக்கன் நம்மள திட்டிட்டான்னு சொன்னா யம்மு பீல் ஆகுமே இப்ப என்ன சொல்றது ??’

என்று யோசிக்க

“ஏய் உன்ன தானே கேக்குறேன் அப்படி என்ன கவலை வந்துச்சு உனக்கு”

என்று மீண்டும் கேட்க உடனே மித்ரா

“அது பாக்சிங் காம்படீசனுக்கான டேட் சீக்கிரமா அனொன்ஸ் பண்ணிட்டாங்க அத்தை அதான் அதுக்கு ப்ராக்டீஸ் பண்ண டைம் கம்மியா இருக்கு அதை நெனச்சு தான் பீல் பண்ணிட்டு இருந்தேன் அப்ப தான் அவனுங்க வந்து இந்தா பொண்ணு இந்த எனர்ஜி ட்ரிங்க்க குடி அப்புறம் பாருன்னு சொன்னானுங்க அதான் நானும் நம்பி குடிச்சிட்டேன் அத்த”

என்று இவை அனைத்தையும் ஒரு சிறுபிள்ளை போன்று பவ்வியமாக முகத்தை வைத்து கொண்டு கூற அதை யமுனாவும் நம்பி

“சரி இனிமே ஜாக்கிரதையா இருக்கனும்.. இதை குடிச்சிட்டு கீழே வா”

என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு செல்ல உடனே மித்ரா

“அப்பாடா தப்பிச்சோம்.. சும்மா சொல்ல கூடாது நேத்து குடிச்ச கள்ளு செம.. அவனுங்க நம்பர் வாங்காம விட்டுட்டோமோ”

என்று யோசித்து விட்டு அந்த எலுமிச்சை பழச்சாற்றை பருகிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

அதே சமயம் அவ்வளவு நேரம் கழித்து இப்போது தான் ராகவ் பவித்ராவின் ப்ளைட்டை கவனித்து

“என்னடீ இது..”

என்று கேட்க அதற்கு பவித்ரா

“இதுவா அத்தான், லட்சுமி அம்மா டேஸ்ட் பார்த்து சொல்ல சொன்னாங்க அதான் பார்த்துட்டு இருக்கேன்.”

என்று கூற உடனே ராகவ்

“எதே.. இந்த 6 இட்லியும் 2 மசால் தோசையும் அதை தொட்டுக்க நாலுவகை சட்னி சாம்பாரும் உனக்கு டேஸ்டிங்கா”

என்று கேட்க உடனே பவித்ரா

“ம்ச்.. கண்ணு வைக்காதீங்க அத்தான் அப்புறம் நான் மெலிஞ்சிட போறேன்”

என்று கூற அதற்கு ராகவ்

“ம்ஹூம்.. மெலியறத்துக்கு அங்க என்ன இருக்கு”

என்று கூறினான்.

(பவித்ரா, 5அடி உயரம்‌, மெல்லிய உடல், கருப்பும் அல்லாது சிவப்பும் அல்லாது இரண்டும் ஒருசேர கவர்ந்திழுக்கும் அழகியவள். இடைவரையிலான அடர்த்தியான கருங்கூந்தல் உதட்டின் கீழ் அவள் அழகிற்கு திருஷ்டி கழிப்பது போன்ற ஒரு புள்ளி போன்ற மச்சம்... என அவள் அழகை வர்ணித்து கொண்டே போகலாம்..)

அப்போது அவனுக்கு பின்னால் வந்த லட்சுமி அம்மா ராகவை பார்த்து

“கொஞ்சம் தள்ளுங்க தம்பி”

என்று கூறி அவன் நகர்ந்ததும் ஒரு பவுல் வெண்பொங்கலை பவித்ராவின் ப்ளேட்டில் வைத்துவிட்டு

“கண்ணு இதை சாப்பிட்டுட்டே இரு நான் போய் சுட சுட ஒரு 4 பூரி போட்டு எடுத்துட்டு வரேன்.”

என்று கூறிவிட்டு திரும்ப உடனே ராகவ்

“லட்சுமி அம்மா இது உங்களுக்கே நியாயமா இருக்கா?? இதுவே அதிகம் னு சொல்லிட்டு இருக்கேன் இதுல சுட சுட 4 பூரி வேற எடுத்துட்டு வர்றீங்களா நீங்க”

என்று கேட்க அதற்கு லட்சுமி அம்மா

“என்ன தம்பி இப்படி சொல்றீங்க பவித்ரா பாப்பா விடியற்காலைல வந்ததும் வராததுமா வாசல் தெளிச்சு கோலம் போட்டு எல்லாருக்கும் காபி டீ போட்டு குடுத்து கொஞ்ச நேரத்துல டீபனுக்கு தேவையான எல்லாம் செய்து வச்சு நான் வீடு சுத்தம் செய்துட்டு வர்றத்துக்குள்ள டிபனே செய்து வச்சிடுச்சு.. இவ்ளோ சீக்கிரம் எவ்ளோ அழகா வேலை பார்த்துருக்கு‌ இந்த புள்ளைய போயி கேலி செய்துட்டு”

என்று கூறியவர் திரும்பி கிச்சனுக்கு போகும் போது

“இந்த புள்ளைய கட்டிக்குற யோகம் எந்த மகராசனுக்கு குடுத்து வச்சுருக்கோ..”

என்று தனக்கு தானே புலம்பியபடி அங்கிருந்து செல்ல இதை கேட்ட ராகவ்

“ஆண்டவா இந்த வருசமாவது என் லவ்வ இவக்கிட்ட சொல்லிடனும்”

என்று மனதில் நினைக்க அப்போது அங்கு இவை அனைத்தையும் கேட்டு கொண்டே வந்த மித்ரா பவித்ரா தோல் மீது தன் முழங்கையை வைத்தபடி ராகவை பார்த்து

“ம்.. இப்ப சொல்லு என் அக்காவை பார்த்து”

என்று கூறியபடி ஒரு பார்வை பார்க்க அந்நேரம் அர்ஜூன் அங்கு வர அவ்விடமே அமைதியாக மூவரும் மித்ராவின் அறைக்கு சென்றார்கள். அதேபோல் அர்ஜூன் வருவதை கவனித்த சோமசுந்தரம் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று அர்ஜூனை பார்த்து மரியாதையுடன்

“வணக்கம் தம்பி”

என்று கூற அதை சற்றும் கண்டு கொள்ளாது அர்ஜூன் டைனிங் டேபிளில் அமர்ந்து கையில் தேனீருடன் அன்றைய பிசினஸ் ஆர்ட்டிகலை புரட்ட ஆரம்பித்தான்.

அப்போது அங்கு விஸ்வநாதன் வர அவரை பார்த்து மீண்டும் சோமசுந்தரம் எழுந்து நிற்க உடனே விஸ்வநாதன் அவரை அமர சொல்ல

“நான் எப்படிங்க‌ அய்யா உங்க முன்னால”

என்று கூற உடனே விஸ்வநாதன்

“அட சும்மா உட்காருங்க சுந்தரம் அதான் எப்பவோ நாம எல்லாம் சம்மந்தகாரங்களா ஆகிட்டோமே அப்புறம் எதுக்கு இந்த மரியாதை எல்லாம்”

என்று கூற இவை அனைத்தும் அருகில் அமர்ந்திருந்த அர்ஜூன் காதுகளில் விழ ஏதும் பேசாது அங்கிருந்து விறுவிறுவென எழுந்து தன் அறையை நோக்கி சென்றான். இதை கவனித்த விஸ்வநாதன் ஏதும் பேசாது சுந்தரத்தை பார்த்து மீண்டும் அமர சொல்ல அதே நேரம் சீனிவாசனும் வந்து அவரை அமர சொல்லி அவரும் அமர்ந்தார். அதற்கு பின் தான் சுந்தரம் அமர்ந்தார் ஆனாலும் அவர்களின் மேல் இருந்த மரியாதையால் அந்த இருக்கையின் முனையில் தான் அமர்ந்தார். உடனே விஸ்வநாதன்

“ம்.. சொல்லுங்க சுந்தரம் முக்கியமான விடயம் இல்லாம நீங்க இவ்வளவு தூரம் வரமாட்டீங்களே என்ன விடயமா வந்துருக்கீங்க..?”

என்று கேட்க அதற்கு சுந்தரம்

“ஒன்னும் இல்லைங்க அய்யா இந்த மாசத்தோட குத்தகை தேதி முடியுது அதான் எப்பவும் போல இந்த வருசமும் எனக்கே குத்தகைக்கு கொடுக்கணும்னு கேட்டுக்குறேன்…”

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே யமுனா அவருக்கு தேனீர் கொண்டுவர அதை எழுந்து பெற்று கொண்டு அமர்ந்தவரை பார்த்து விஸ்வநாதன்

“என்ன சுந்தரம் நானும் பல தடவை சொல்லிட்டேன் இந்த குத்தகை கித்தகை எல்லாம் வேணாம் மொத்த நிலத்தையும் நீங்களே எடுத்துக்கிட்டு உங்களாள முடிஞ்சதை கொடுங்கனு ஆனா நீங்க தான் ஒவ்வொரு வருடமும் குத்தகைக்கு கேட்டு நிக்குறீங்க இந்த தடவையாவது நான் சொல்றது போல கேளுங்க”

என்று கூற அதற்கு சுந்தரம்

“அவ்வளவு பணம் என்கிட்ட ஏதுங்கய்யா..”

என்று கூற

“அட மறுபடியும் பாருங்க நியாயமா பார்த்தா உங்க கிட்ட நான் பணமே வாங்க கூடாது ஏன்னா இத்தனை வருடமா எங்கள விட எங்க நிலத்தை நீங்க தான் பராமரிச்சுட்டு வர்றீங்க அதுக்கு வருடா வருடம் குத்தகை பணம்ன்னு கொடுத்துட்டு வர்றீங்க ஆனா விளைச்சல் நிலத்தை சும்மா குடுக்க கூடாதுன்னு பெரியவங்க சொல்லு ஒன்னு இருக்குறதால சும்மா உங்களால முடிஞ்சத குடுங்கன்னு சொல்றேன்”

என்று கூறி முடிக்க அதற்கு

“இல்லிங்கய்யா அது சரிப்பட்டு வராதுங்க”

என்று கூற விஸ்வநாதன் மீண்டும் பேச ஆரம்பிக்க உடனே யமுனா அவரின் தோல் மீது கை வைத்து வாங்கி கொண்டு குத்தகை விடும் படி தலையசைத்து கூற அவரும் மனையாள் சொல்லே மந்திரம் என்று அதை வாங்கி கொண்டு இம்முரையும் அவருக்கே குத்தகைக்கு கொடுத்துவிட்டார்.

அப்போது மீண்டும் சுந்தரம்

“அப்புறம் அய்யா மித்ரா பாப்பா நிலத்துல வந்த பணத்தை எப்பவும் போல உங்க பேர்லயே பேங்க்ல போட்டுட்டேன். பவித்ரா கிட்ட சொல்லி பாப்பாவோட இந்த வருசம் காலேஜ் பீஸையும் கட்டிட்டேன். அப்புறம் பாப்பா ஏதோ புக் வேணும்னு கேட்டுச்சாம் அதையும் பவித்ரா கிட்ட சொல்லி வாங்கியாந்துட்டேன்”

என்று கூறி கையில் வைத்திருந்த கட்டை பையில் இருந்து ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்து விஸ்வநாதனிடம் கொடுக்க அதையும் விஸ்வநாதன் பெற்று கொண்டார். அப்போது விஸ்வநாதன்

“சரி வாங்க போய் சாப்பிடலாம்”

என்று சுந்தரத்தை அழைத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள மறுபடியும் சுந்தரம் விஸ்வநாதனை பார்த்து

“அய்யா உங்க கிட்ட இன்னொரு முக்கியமான விடயம் சொல்லனும் இன்னும் சொல்ல போனா அதை சொல்ல தான் நான் வந்தேன்”

என்று கூற உடனே விஸ்வநாதன் சுந்தரத்தின் முகத்தை பார்க்க அவரது முகம் வாட்டமாக இருக்க

“சரி சொல்லுங்க”

என்று கூற

“இல்லிங்க அய்யா ஒரு ஒருவாரமா எனக்கும் என் பொஞ்சாதிக்கும் மனசுக்குள்ள ஏதோ தப்பு நடக்கப் போகுறா போல உருத்தலாவே இருந்துச்சு..”

“அதான் நம்ம சாமிகிட்ட புள்ளைங்க ஜாதகம் குடுத்து பார்க்கலாம்னு என் பொஞ்சாதி சொன்னா நானும் சரின்னு அவள கூட்டிட்டு போனேன் ஆனா சாமி மித்ரா பாப்பா ஜாதகம் பார்க்கும் போது அவர் முகத்துல ஏதோ ஒரு தயக்கம் தெரிஞ்சு என்ன ஆச்சு சாமின்னு கேட்டேன் அதுக்கு அவரு ஒன்னும் இல்லனு சொல்லி உங்களுக்கு போன் போட சொன்னாரு ஆனா அப்பனு பார்த்து போன் போகல. அதனால சாமி என்ன உடனே உங்கள போய் நேர்ல பார்த்து இதை சொல்லி அவருக்கு போன் போட சொல்ல சொன்னாருங்கய்யா”

என்று கூற அதற்கு விஸ்வநாதன்

“ஏன் என்ன ஆச்சு..??”

என்று கேட்க அதற்கு சுந்தரம்

“எனக்கு எதுவும் தெரியலங்கய்யா சாமி என்கிட்ட எதுவும் சொல்லல”

என்று கூற சரியென்று தன் மொபைலை எடுத்தவர் சுந்தரத்தை பார்த்து

“சரி சுந்தரம் நான் ஜோசியர் கிட்ட பேசிக்குறேன் நீங்க போய் சாப்பிடுங்க”

என்று கூற அவரும் அவ்விடம் விட்டு நகர்ந்தார். சிறிது வினாடிகளில் ஜோசியருக்கு அழைப்பு இணைக்கப்பட அவரிடம்

“வணக்கம் ஜோசியரே நான் விஸ்வநாதன் பேசுறேன்”

என்று கூற அதற்கு ஜோசியர்

“நல்லா தெரியுது சின்னையா, பெரிய அய்யா எப்படி இருக்காங்க”

என்று கேட்க அதற்கு

“அப்பா நல்லா இருக்கார் ஜோசியரே அப்புறம் நீங்க மித்ராம்மா ஜாதகம் பார்த்துவிட்டு என்னை போன் பண்ண சொன்னதா சுந்தரம் சொன்னாரு என்ன விடயம் ஜோசியரே”

என்று கேட்க அதற்கு நரசிம்ம ஜோசியர்

“நான் சொல்றதை பதட்டப்படாம பொறுமையா கேளுங்க சின்னையா”

என்று கூறி ஏதோ சொல்லி முடிக்க, அதை கேட்ட விஸ்வநாதன் அப்படியே தனக்கு பின் இருந்த சோபாவில் சரிந்தார்.

தொடரும்..

1610645173526.jpg
 
என் தேடலும் நீ.. ஊடலும் நீ.. அத்தியாயம் 10

விஸ்வநாதன் சோபாவில் சரிந்து விழுந்த சில நிமிடங்களில் யமுனா அவரை உணவு உண்ண அழைக்க அவரோ ஏதும் பேசாது மௌனமாய் அமர்ந்திருந்தார். இதை கண்ட யமுனா

“என்னாச்சு இவருக்கு..”

என்று மனதில் நினைத்து கொண்டே வந்து அவரை பார்க்க அவர் உறைந்து போய் அமர்ந்திருப்பதை கண்டு அவர் தோலின் மீது கை வைத்து அவரை உலுக்க சுயத்திற்கு வந்தவர்

“ஹான்..”

என்று கூற உடனே யமுனா

“என்னங்க ஆச்சு ஏன் ஒருமாதிரி இருக்கீங்க..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“ஒன்னும் இல்ல.. நீ சொல்லு”

என்று கூற அதற்கு யமுனா

“சுந்தரம் பவித்ராவ ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு அப்படியே ஊருக்கு போராறாம் அதான் உங்க கிட்ட சொல்ல சொன்னார்.”

என்று கூற அதற்கு மீண்டும் விஸ்வநாதன் ஒன்றும் பேசாது அமைதியாக இருக்க அப்போது சரியாக ஜெகன்நாதன், அவரது மனைவி சுசிலா, அவரின் பெரிய மகன் அஜய் மற்றும் அஜய்யின் மனைவி தாரா ஆகியோர் உள்ளே நுழைந்தனர். அவர்களை பார்த்த யமுனா வாசலுக்கு சென்று அவர்களை

“வாங்கன்னே.. வாங்கன்னி.. அஜய், தாரா.. எல்லாரும் எப்படி இருக்கீங்க..??”

எனறு கேட்க அதற்கு அவர்களும் முகத்தில் புன்னகையுடன்

“நாங்க சூப்பரா இருக்கோம்..”

என்று கூற உடனே ஜெகன்நாதன் யமுனாவை பார்த்து

“நீ எப்படிமா இருக்க..??”

என்று கேட்க அதற்கு யமுனா

“எனக்கு என்னன்னா உங்க ப்ரெண்ட் என்னை சூப்பரா பார்த்துக்கறாரு..”

என்று கூற அப்போது விஸ்வநாதனை பார்த்த ஜெகன்நாதன் யமுனாவிடம்

“ம்ஹூம்.. அடிக்கடி சொல்லு மா நான் இங்க வந்தது கூட தெரியாம உட்கார்ந்துட்டு இருக்குறத பாரு..”

என்று கூற அதற்கு யமுனா

“அதான்னே எனக்கும் புரில காலைல இருந்து நல்லா தான் இருந்தாரு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் என்னாச்சு னு தெரியல”

என்று கூறிவிட்டு

“அச்சச்சோ.. வந்தவங்கள வாசல்லயே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் பாருங்க உள்ள வாங்கன்னேன் வாங்கன்னி எல்லோரும் வாங்க..”

என்று அவர்களை அழைத்து சென்று சோபாவில் அமர கூறி தன் மணாளனின் தோலில் மீண்டும் தட்ட சுயத்திற்கு வந்தவர் எதிரில் ஜெகன் நாதனும் அவரது குடும்பமும் அங்கே நின்றிருக்க அதை பார்த்து தன் இருக்கையில் இருந்து எழுந்தவர்

“நீ எப்ப வந்த ஜெகன்??”

என்று கேட்க அதற்கு அவர்

“நான் வந்தது கூட தெரியாம அய்யாவுக்கு அப்படி என்ன யோசனையோ..”

என்று சொல்ல உடனே விஸ்வநாதன்

“ச்ச ச்சே அப்படி ஒன்னும் இல்ல”

என்று கூறும்போதே யமுனா

“நீங்க பேசிட்டே இருங்க நான் போய் உங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வர்றேன்”

என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல உடனே தாரா

“ஆண்ட்டி இருங்க நானும் வரேன்”

என்று கூறி எழ முடியாத தன் ஆறு மாத வயிற்றை பிடித்தப்படி எழுந்தவள் யமுனாவுடன் சமையலறைக்கு சென்றாள். அவளை பார்த்த யமுனா

“இது எத்தனாவது மாசம் தாரா, ஆறா?? ஏழா??”

என்று கேட்க அதற்கு தாரா

“ஆறாம் மாசம் ஆண்ட்டி”

என்று கூற உடனே யமுனா தாராவிற்கு மகப்பேறு கால அறிவுரைகளை வழங்க உடனே தாரா

“ஏன் ஆண்ட்டி.. நீங்களுமா??”

என்று சலித்து கொண்டே கேட்க யமுனா

“சரி சரி இந்தா இந்த ஜூஸை குடி”

என்று கூறி ஜூஸ் டம்ளரை கொடுத்தார்.

அதே நேரம் கீழே ஏதோ சத்தம் கேட்டு பவித்ரா மித்ராவின் அறையிலிருந்து வெளியே வர அறைக்கு வெளியே சிந்தி இருந்த தண்ணீரில் கால் பட்டு வழுக்கி விட அப்போது அவளுக்கு பின்னால் வந்த ராகவ் அவளை தாங்கி பிடித்தான்.

அந்நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் மிக அருகில் பார்த்துக்கொள்ள இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் கொள்ளையடித்தது.

அவன் விடும் மூச்சு காற்று அவளின் பிறை போன்ற நெற்றியில் பட்டு அது அவளை கூசச் செய்ய, அவனின் ஒரு கை அவளின் இடையை வளைத்து பிடித்திருக்க மற்றொரு கை அவளின் பின்தலையை தாங்கி இருக்க அப்போது அவளை பார்த்து மெல்லிய குரலில்

“உன் கிட்ட ரொம்ப நாளா நான் ஒன்னு சொல்லனும் னு வெயிட் பண்றேன் பவி அதை இப்ப சொல்லட்டுமா??”

என்று கேட்க உடனே பவித்ராவும்

“நானும் தான் அத்தான். உண்மைய சொல்லனும்னா இன்னைக்கு நான் அப்பா கூட இங்க வந்ததே உங்க கிட்ட அத கேட்க தான்”

என்று கூற அதற்கு ராகவ் யோசித்தபடி

“சரி மொத நான் சொல்றேன்”

என்று கூற உடனே பவித்ரா

“இல்ல அத்தான் நான் தான் பர்ஸ்ட் சொல்லுவேன்”

என்று இருவரும் மாறி மாறி கூறிக் கொண்டிருக்க அப்போது சரியாக மித்ராவும்

‘என்ன வெளிய போனவங்கள இன்னும் காணும்..’

என்று மனதில் நினைத்தப்படி எழுந்து வர, அங்கே ராகவ் பவித்ராவை தாங்கி பிடித்தபடி பேசிக் கொண்டிருக்க அங்கு அவள் வந்ததை கூட கவனிக்காது இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து அவளும் என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்க

உடனே ராகவ்

‘என்ன நாம சொல்லலாம் னு வந்தா இப்ப இவளே இத சொல்லதான் ஊருல இருந்து வந்திருக்கேன் னு சொல்றா அது சரி யார் லவ்வ சொன்னா என்ன’

என்று மனதில் நினைத்து கொண்டே

“சரி நீயே சொல்லு பவி”

என்று கூற அதற்கு பவித்ரா முகத்தில் வெட்கத்துடன் ராகவை பார்த்து

“அத்தான்..”

“அது வந்து..”

என்று கூற உடனே ராகவ்

“சீக்கிரம் சொல்லு பவி..”

என்று கூற மித்ராவோ‌ இமை விலகாது அவர்களை பார்த்து கொண்டே

‘ஒருவேளை சொல்லிடுவாளோ..’

என்று மீண்டும் மனதில் நினைக்க உடனே பவித்ரா

“போனமுறை ஊருக்கு வந்தப்ப வாங்கி தந்த காரப்பொறி மாதிரி இந்த தடவையும் வாங்கி தரீங்களா அத்தான்..”

என்று கேட்க தலையில் இடி இறங்கியவன் போல் சிலையாகி நின்றான் ராகவ். சிலையாகி நின்ற ராகவிடம் இருந்து இரண்டடி எடுத்து வைத்தவள் மீண்டும் அவனை திரும்பி பார்த்து

“மறந்துடமாட்டீங்களே அத்தான்”

என்று சொல்ல இவை அனைத்தையும் அருகில் இருந்து கேட்ட மித்ரா அடக்க முடியாத சிரிப்புடன் ராகவை பார்த்து

“சட்டை கிழிஞ்சுருந்தா..
தச்சு உடுத்திடலாம்..
நெஞ்சு கிழிஞ்சுடுச்சே..
எங்கு முறையிடலாம்..”

என்று தூள் படத்தில் வரும் மயில்சாமி போல் பாடி அவனை பார்த்து மீண்டும் மீண்டும் நகைக்க உடனே ராகவ்

“ஏய்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து என்னை கலாய்க்கறீங்களா..??”

என்று கோபத்துடன் கேட்டவன் உடனே மீண்டும் மித்ராவின் அறைக்குள் புகுந்து அவனது மொபைலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விறுவிறுவென கிளம்ப மித்ரா சிரித்தபடி அவனை பார்த்து

“டேய் எங்கடா போற..”

என்று கேட்க அதற்கு ராகவ்

“ம்.. வேற எங்க, எல்லாம் உன் அக்காளுக்கு காரபொறி வாங்கி கொடுக்கதான்..”

என்று கூறியபடியே அங்கிருந்து சென்றான். அதை கேட்ட மித்ரா சிரித்தபடியே அவளது அறைக்குள் புகுந்தாள்.

அதேநேரம் கிச்சனில் இருந்து ஜூஸுடன் ஹாலுக்கு வந்த யமுனா சோபாவில் சுசிலாவும் அஜய்யும் மட்டுமே அமர்ந்திருக்க அவரை பார்த்து

“எங்கன்னி அவங்க ரெண்டு பேரும்??”

என்று கேட்க அதற்கு சுசிலா

“அவங்கள பத்தி தான் உனக்கு தெரியுமே.. வழக்கம்போல கழன்டிக்குட்டாங்க நீ வந்து உட்காரு, வந்துடுவாங்க..”

என்று கூற உடனே யமுனா சுசிலாவின் அருகில் சென்று இவருக்கும் ஜூஸ் கொடுத்துவிட்டு அவர்கள் அருகில் அமர்ந்தபடி

“விக்ரமை கூட்டிட்டு வரலியா அண்ணி”

என்று கேட்க அதற்கு சுசிலா

“இல்ல யமுனா அவன் நேத்து ராத்திரி தான் டெல்லில இருந்து வந்தான் ஏதோ கம்பெனில முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்குனு காலைலயே கிளம்பிட்டான்”

என்று கூறி விட்டு யமுனாவின் குடும்பத்தை பற்றி நலம் விசாரிக்க ஆரம்பிக்க இவர்களின் உரையாடல்கள் இப்படியே சென்றுக் கொண்டிருந்தது.

வீட்டின் முன்பக்க தோட்டத்தில் விஸ்வநாதனும் ஜெகன்நாதனும் ஒன்றாக அமர்ந்திருக்க அப்போது ஜெகன்நாதன்

“டேய் விச்சு என்னடா ஆச்சு, ஏன்டா இப்படி இருக்க??”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“இன்னு..ம் 2 மாசத்துல.. மித்ரா நம்மள விட்டு போ.. போய்டுவாளாம் டா……”

என்று மனம் குமறியபடி கூற இதை கேட்ட ஜெகன்நாதன்

“வாட் ரப்பிஷ்.. என்னடா ஒளருற..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“ஆமா டா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க குடும்ப ஜோசியர் என்கிட்ட பேசுனாரு டா”

என்று கூற உடனே ஜெகன்நாதன்

“சரி அதுக்கு..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“டேய் உனக்கு தெரியும் தானே எங்க குடும்ப ஜோசியர் எது சொன்னாலும் அது அப்படியே பளிக்கும்னு”

என்று கேட்க அதற்கு ஜெகன்நாதன்

“ஆமா நீயே நிறைய தடவை அவரை பத்தி சொல்லிருக்க அதுக்கு னு அவர் எது சொன்னாலும் அது அப்படியே நடக்க அவர் என்ன கடவுளா..”

என்று கேட்க உடனே விஸ்வநாதன்

“அப்படி இல்ல டா.. இது..”

என்று ஏதோ கூற வர உடனே ஜெகன்நாதன்

“நீ மொதல்ல நிதானமா என்ன நடந்துச்சுனு சொல்லு”

என்று கூற உடனே விஸ்வநாதனும்

“காலைல சுந்தரம் ஜோசியர் உங்கள போன் பண்ண சொன்னாருனு சொல்ல நானும் அவருக்கு போன் போட்டேன். அப்ப அவரு மித்ரா பாப்பா ஜாதகத்துல எதோ பெரிய கண்டம் இருக்கு, இந்த கண்டத்தால அவ நம்ம எல்லாரையும் விட்டுட்டு போய்டுவானும் ஆனா இந்த 2 மாசத்துக்குள்ள அவளோட ஜாதகத்துக்கு பொருத்தமான ஒரு ஜாதககாரன அவளுக்கு கட்டி வச்சா அவ உயிர் சேதாரம் இல்லாம பொழச்சுப்பா..”

என்று கூறியவர் மீண்டும் அவரை பார்த்து

“அப்படினு சொன்னாரு டா..”

என்று கூற இதை கேட்ட ஜெகன்நாதன்

“சரி இப்ப நீ என்ன பண்ண போற..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“அதுதான்டா எனக்கும் தெரியல இவ்வளவு சீக்கிரத்துல நான் யாரை எங்கனு போய் தேடுவேன்..??”

என்று கூற உடனே ஜெகன்நாதன் விஸ்வநாதனை பார்த்து

“விச்சு, நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டியே..??”

என்று கேட்க அதற்கு ஒன்றும் புரியாது விஸ்வநாதன் அவரை பார்த்து

“என்னடா சொல்லு..”

என்று கூற

“இப்ப இவ்வளவு சீக்கிரத்துல‌ மித்ராவ யார் என்னனு தெரியாதவங்களுக்கு எப்படி கல்யாணம் செய்து கொடுக்குறது, அது தானே உன் கவலை”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன் ஆம் என்பது போல் தலையசைக்க மீண்டும் ஜெகன்நாதன் தன் நாற்காலியில் இருந்து எழுந்து

“அதற்கு நீ ஏன் மித்ராவ என் பையன் விக்ரமுக்கு கல்யாணம் செய்து கொடுக்க கூடாது..??”

என்று கேட்டார். இதை கேட்ட விஸ்வநாதன் ஜெகன்நாதனை பார்த்து

“என்னடா சொல்ற நெஜமா தான் சொல்றீயா??”

என்று கேட்க அதற்கு ஜெகன்நாதன்

“ஆமா டா இத்தனை நாளா நான் மித்ராவோட படிப்பு முடியட்டும் னு தான் காத்திருந்தேன். ஆனா இன்னைக்கு நீயே இதை பத்தி பேசுனதால நான் கேட்டுட்டேன். சரி சொல்லு விக்ரமுக்கு மித்ராவ கொடுக்க உனக்கு சம்மதமா??”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“என்னடா அப்படி கேட்கிற விக்ரம் மாதிரி ஒரு நல்ல பையன் என் மித்ராவுக்கு தேடி பார்த்தாலும் கிடைப்பானா னு தெரியல ஆனா..”

என்று இழுக்க உடனே ஜெகநாதனின் முகம் லேசாக மாறியபடி விஸ்வநாதனை பார்த்து

“ஆனா என்னடா??”

என்று கேட்க அதற்கு அவர்

“அது.. இவங்க ரெண்டு பேருக்கும் முதல்ல ஜாதக பொருத்தம் இருக்கானு பார்க்கனுமே டா..”

என்று கூற இதை கேட்ட ஜெகன்நாதன்

“அவ்வளவு தானே நான் வீட்டுக்கு போனதும் விக்ரமோட ஜாதகத்தை உனக்கு வாட்ஸ் ஆப்ல அனுப்புறேன் நீ அதை உங்க ஜோசியர் கிட்ட காட்டி பொருத்தம் இருக்கானு பாரு”

என்று கூற உடனே விஸ்வநாதன்

“சரி டா நீ வீட்டுக்கு போனதும் எனக்கு அனுப்பிவிடு நான் ஜோசியர் கிட்ட கேட்டு சொல்றேன்.”

என்று கூற அதற்கு ஜெகன்நாதன்

“இதுக்கு போயா இவ்வளவு டென்ஷன் ஆன..”

என்று கூறிவிட்டு

“சரி சீக்கிரம் வாடா உள்ள போகலாம். இந்நேத்திக்கு நம்ம ரெண்டு பேரோட மணவாளினிகள் எவன் எவன் தலை எல்லாம் உருட்டிட்டு இருங்காங்கனு தெரியல..”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன்

“ஹா.. ஹா.. ஹா.. அதுவும் சரி தான்”

என்று கூற இருவரும் உள்ளே நுழைய அப்போது விஸ்வநாதன் ஜெகன்நாதனை நிறுத்தி

“டேய் ஜெகன் இப்போதைக்கு மித்ராவோட இந்த விடயம் நம்ம ரெண்டு பேர் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.”

என்று கூற உடனே ஜெகன்நாதன்

“எனக்கு தெரியாதாடா எல்லாம் நான் பார்த்துக்குறேன் நீ கவலைப்படாம வா”

என்று கூறி உள்ளே வந்தவர்கள் செவிகளில் மாடியில் மித்ரா சிரிக்கும் சத்தம் கேட்க அதை 10 வினாடிகள் தன்னை மறந்து கேட்டவர் மீண்டும் ஜெகன்நாதனை பார்த்து

“டேய் ஜெகன், எனக்கு ஒரு சத்தியம் பண்ணுடா இதே போல என்னைக்கும் என் மித்ராவ சந்தோசம் குறையாம பார்த்துப்பேன்னு”

என்று கேட்க அதற்கு ஜெகன்நாதன்

“டேய் விச்சு அவ எங்க வீட்டுக்கு வந்தா அதை விட பெரிய சந்தோசம் எங்களுக்கு இல்லடா. அதுவும் இல்லாம அவ தான்டா எங்க சந்தோசமே. நீ ஒன்னும் கவலை படாதே இதுவரைக்கும் என் மருமக தாராவை சேர்த்து எனக்கு ரெண்டு மகன் ஒரு மகள் ஆனா இனி எனக்கு 2 மகன் 2 மகள் போதுமா..”

என்று கூறிக் கொண்டிருக்க சுசிலா ஜெகன்நாதனை பார்த்து

“என்னங்க இங்க வாங்க”

என்று அழைக்க அவரும் மணாளினியின் சொல்லை தட்டாது அவரருகே சென்று நிற்க விஸ்வநாதன் யமுனாவின் அருகில் வர சுசிலா ஜெகன்நாதனிடம்

“என்னங்க நாம எதுக்கு வந்தோம்னு சொல்லிட்டீங்களா..??”

என்று கேட்க அதற்கு அவர்

“இன்னும் இல்ல மா எப்பவும்போல மறந்துட்டேன்..”

என்று கூற உடனே சுசிலா

“என்னத்தான் ஞாபகமோ உங்களுக்கு”

என்று கூறி விஸ்வநாதனையும் யமுனாவையும் பார்த்து

“சரி நானே சொல்லிடுறேன் அண்ணா”

என்று கூறிவிட்டு

“நாளைக்கு எங்க ரெண்டு பேருக்கும் 30வது திருமண நாள் வருதுணா. அதுக்காக சின்னதா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருக்கோம் நீங்களும் யமுனாவும் குடும்பத்தோட வந்துடனும் முக்கியமா பசங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுங்க..”

என்று கூற அதற்கு விஸ்வநாதன்

“என்னமா இதுக்காகவா நீங்க இவ்வளவு தூரம் வரனும் ஒரு செய்து சொல்லிருக்கலாமே”

என்று கூற இதை கேட்ட சுசிலா

“அது மரியாதையா இருக்காதே னா.. அதான் நாங்க எல்லாரும் வந்துட்டோம். அதுவுமில்லாம இதுவும் நம்ம வீடு தானே”

என்று கூற விஸ்வநாதனும்

“சரி மா நாங்க எல்லாரும் கண்டிப்பா வந்துடுறோம்.”

என்று கூறினார். உடனே சுசிலா

“அப்ப நாங்க கிளம்பறோம் னா இன்னும் நிறைய பேருக்கு சொல்லனும்”

என்று கூற அதற்கு யமுனா

“இருங்க அண்ணி சாப்பிட்டு போகலாம்..”

என்று கூற அதற்கு சுசிலா

“இருக்கட்டும் யமுனா இன்னொரு நாள் நாங்க எல்லாரும் வரோம், இப்ப கிளம்பனும்..”

என்று கூற விஸ்வநாதனும் யமுனாவும் ஜெகன்நாதன் குடும்பத்தை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தனர்.

சில மணி நேரங்களுக்கு பிறகு..

ஜெகன்நாதன் மொபைலில் இருந்து விக்ரமின் ஜாதகம் விஸ்வநாதனுக்கு ஒரு பி.டி.எப் பைலாக வாட்சாப்பில் வர அதை திறந்து பார்த்தவர் அதை ஜோசியர் எண்ணிற்கு ஷேர் செய்தார். பின்பு அவருக்கு போன் போட்டு சொல்ல, அவர் அதற்குள் அதை திறந்து பார்த்திருந்தார். விஸ்வநாதனின் அழைப்பை ஏற்றவர்

“ஹலோ.. சொல்லுங்க சின்னையா..”

என்று கூற அதற்கு விஸ்வநாதன்

“உங்க போனுக்கு ஒரு ஜாதகம் அனுப்பி இருக்கேன் அது நம்ம மித்ரா பாப்பா ஜாதகத்தோட பொருந்துதானு பார்த்து சொல்லுங்க ஜோசியரே”

என்று கூற அதற்கு ஜோசியர்

“சின்னையா அது வந்து..”

என்று இழுக்க உடனே விஸ்வநாதன்

“என்ன ஆச்சு ஜோசியரே..”

என்று கேட்க அதற்கு ஜோசியர்

“இல்ல நான் இதை கேட்குறேன்னு சின்னையா என்னை தப்பா நினைக்க கூடாது”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன்

“என்ன ஜோசியரே உங்கள நான் எப்ப தப்பா நினைச்சிருக்கேன். உங்க குடும்பம் என் தாத்தா காலத்துல இருந்து பரம்பரை பரம்பரையா எங்களுக்கு ஆருடம் சொல்லிட்டு வர்றவங்க, அப்படி இருக்க உங்கள போய் நான் தப்பா நினைப்பேனா..?? நீங்க எங்க குடும்பத்துக்கு எப்பவும் நல்லதுதானே நினைப்பீங்க.. அதனால எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க..”

என்று கூற இதை கேட்ட ஜோசியர்

“ரொம்ப நன்றி சின்னையா, இல்ல இந்த ஜாதகத்துல பேரு விக்ரம் னு போட்டுருக்கே ஏன் நம்ம அர்ஜூன் தம்பி ஜாதகம் அனுப்பாம வேற ஒருத்தரோட ஜாதகம் அனுப்பி விட்ருக்கீங்க”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“ஏன் அப்படி கேட்குறீங்க ஜோசியரே”

என்று கேட்க அதற்கு

“ஏன்னா இந்த விடயத்தை நான் சுந்தரம் கிட்ட சொல்லி விட்டுட்டு நம்ப மித்ரா பாப்பா ஜாதகத்தையும் அர்ஜூன் தம்பி ஜாதகத்தையும் ஒன்னா வச்சு பொருத்தம் பார்த்தேன். அப்ப அவங்க ரெண்டு பேர் ஜாதகமும் ஒருத்தர் இன்னொருத்தருக்காகவே பொறந்து இருக்கா மாதிரி அவ்வளவு பொருத்தமா இருந்துச்சு. அதான் நம்ம வீட்டுலயே மித்ரா பாப்பா ஜாதகத்துக்கு வரன் இருக்கும் போது வெளியே ஏன்னு..”

என்று மீண்டும் இழுக்க அதை கேட்ட விஸ்வநாதன்

‘ஜாதகம் பொருந்தி இருந்தா மட்டும் போதுமா மனப் பொருத்தம் இல்லையே..’

என்று மனதில் நினைத்து வருந்தி கொண்டிருக்க மறுமுனையில் ஜோசியர்

“ஹலோ.. சின்னையா இருக்கீங்களா..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“ஹான்.. அது இருக்கட்டும் ஜோசியரே நீங்க இப்ப நான் அனுப்பன ஜாதகத்தை பார்த்து பொருத்தம் இருக்கானு சொல்லுங்க. நான் உங்க போனுக்காக காத்துட்டு இருப்பேன்.”

என்று கூறி அழைப்பை அனைத்தவர் ஜோசியரின் போனுக்காக காத்திருந்தார்.

அதேநேரம் காலேஜ் விட்டு வந்த ஸ்ரீமதியிடம் மித்ரா காலையில் ராகவ் பவித்ரா இடையே நடந்த அனைத்தையும் கூற ஸ்ரீமதி விழுந்து விழுந்து சிரிக்க ‍மித்ராவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள் அப்போது அங்கே சோகமாக இருந்த ராகவை பார்த்து ஸ்ரீமதி

“ஏன்டா அண்ணா பவித்ரா அண்ணிய கரெக்ட் பண்ண இவ்வளவு ரொமான்ஸ் தேவையா ஒரு பாக்கெட் பொறி உருண்டை வாங்கி கொடுத்தா போதாது இதுல அய்யாவுக்கு பீலீங்கு வேற..”

என்று கூற இதை கேட்ட ராகவ்

“சரி அதை விடு இன்னைக்கு காலேஜ்ல டே எப்படி போச்சு..”

என்று கேட்க

“க்கும்.. அதை ஏன்டா கேட்குற நீங்க ரெண்டு பேர் இல்லாம ஒரே போர் அடிக்குது..”

என்று கூற அதற்கு ராகவ்

“சரி கவலைப்படாத‌ ப்ராஜக்ட் வர்க் முடிச்சுட்டு நாங்க சீக்கிரமா வந்துடுறோம்.”

என்று கூறினான்.

சோபாவில் அமர்ந்திருந்த விஸ்வநாதனுக்கு ஜோசியரிடம் இருந்து அழைப்பு வர அதை ஏற்று பேசியவர் நேராக தன் தாய் தந்தையின் அறையை நோக்கி சென்றார்.

அறைக்கு வெளியே நின்றபடி அறை கதவை தட்ட உடனே சீனிவாசன்

“கதவு திறந்து தான் இருக்கு உள்ள வாங்க..”

என்று கூற கதவை திறந்து கொண்டு விஸ்வநாதன் உள்ளே சென்று தன் தாய் தந்தை இருவரிடமும்

“அம்மா அப்பா நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விடயம் பத்தி தனியா பேசனும்..”

என்று கூற சீனிவாசனும் ஜானகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உடனே ஜானகி

“என்ன விடயம் விஸ்வா..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன் அவர்களின் அறை கதவை தாளிட்டு அவர்கள் அருகில் வந்து அமர்ந்தபடி ஜோசியர் கூறியதிலிருந்து ஜெகன்நாதன் விக்ரமுக்கு மித்ராவை பெண் கேட்டது வரை அனைத்தையும் கூறி முடிக்க இருவரின் கண்களும் கலங்கி முகம் முழுதும் சோகம் குடிக்கொண்டது. அப்போது மீண்டும் விஸ்வநாதன்

“அதனால நானும் விக்ரம் ஜாதகத்தை ஜோசியருக்கு அனுப்பி பொருத்தம் பார்க்க சொன்னேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் அவர் போன் செய்து விக்ரமோட ஜாதகம் மித்ரா ஜாதகத்தோட பொருந்தி இருக்குறதா சொன்னாரு.. அதான் உங்க கிட்ட என்ன செய்யலாம்?? ஜெகன்நாதனுக்கு என்ன பதில் சொல்லலாம்னு கேட்க வந்தேன் பா”

என்று கேட்க அதற்கு சீனிவாசன் ஜானகியை பார்த்து

“நீ என்ன சொல்ற ஜானகி”

என்று கேட்க அதற்கு அவரோ

“உங்க முடிவு தான்ங்க என் முடிவும்”

என்று கூற உடனே சீனிவாசன் விஸ்வநாதனை பார்த்து

“யாரோ தெரியாத பையனுக்கு ஒன்னும் நாம நம்ம மித்ராவை கொடுக்க போறதில்லையே.. நாம இந்த ஊருக்கு வந்ததுல இருந்து ஜெகன்நாதன் குடும்பத்தை நமக்கு நல்லா தெரியும் அதுவும் விக்ரம் மாதிரி ஒரு நல்ல பையனுக்கு நம்ம மித்ராவ கொடுக்குறதுல எனக்கு சம்மதம் தான் பா.. நீ ஜெகன்நாதன் கிட்ட சம்மதம் சொல்லிடு…”

என்று கூறியதும்

“சரிப்பா அப்ப நான் இதை அவங்களுக்கு சொல்லிடுறேன்”

என்று கூறி அங்கிருந்து எழுந்துக் கொள்ள, உடனே ஜானகி

“விஸ்வா, கொஞ்சம் நில்லுப்பா.. நீ இதை ஜெகன்நாதனுக்கு சொல்றதுக்கு முன்னாடி நம்ம அர்ஜூன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு ஏன்னா இந்த வீட்டுக்கு அவன் தான் மூத்த பையன். அப்படி இருக்கும்போது அவனுக்கு முன்னாடி மித்ராவுக்கு கல்யாணம் பண்றதுல அவனுக்கு ஏதாச்சும் ஆட்சேபனை இருக்கானு கேட்டு அவங்களுக்கு முடிவ சொல்லு..”

என்று கூற விஸ்வநாதனுக்கும் அது சரி என்று பட

“சரி மா நான் இதை பத்தி எல்லார்கிட்டயும் இன்னைக்கு ராத்திரி பேசுறேன்..”

என்று கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே செல்ல அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

1610645173526.jpg
 
என் தேடலும் நீ.. ஊடலும் நீ.. அத்தியாயம் 11

அறையில் இருந்து வெளியே வந்த விஸ்வநாதன் நேராக யமுனாவிடம் சென்று

“இன்னைக்கு நைட்டு நம்ம வீட்டுல இருக்க எல்லார்கிட்டயும் நான் ஒரு முக்கியமான விடயம் பேசனும்..”

என்று கூற உடனே யமுனா

“என்ன விடயம்ங்க..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன் மெல்லிய சிரிப்புடன்

“எல்லாம் நல்ல விடயம் தான், சரி அர்ஜூன் வீட்டுக்கு வந்துட்டானா??”

என்று கேட்க அதற்கு யமுனா

“இல்லைங்க ஆனா அவன் டின்னர் கு வந்துடுவேன் னு சொன்னான்.”

என்று கூற உடனே விஸ்வநாதனும்

“சரி அவன் வந்ததும் அவன் கிட்டயும் சொல்லிடு..”

என்று கூறிவிட்டு நேராக சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார். நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை போல கடிகார முள் 8 டை தொட்டுவிட இரவு உணவு உண்ண லட்சுமி அம்மா அனைவரையும் அழைத்தார். அனைவரும் வந்து அவரவர் இருக்கைகளில் அமர, வெளியே அர்ஜூனின் கார் சத்தமும் கேட்டது. காரில் இருந்து இறங்கிய அர்ஜூன் நேராக தன் அறையை நோக்கி சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு இரவு உணவு உண்ண கீழே வர, யமுனா விஸ்வநாதன் கூறியதை அவனிடம் கூற அதை கேட்டபடி ஒரு இரண்டு வினாடி தன் தந்தையை பார்த்தவன்

“ஓகே மா..”

என்று கூறி தன் இருக்கையில் சென்று அமர்ந்தான். யாருக்கு என்னனென்ன வேண்டும் என்பதை கேட்டு அவரவர்களுக்கு‌ அதை பரிமாறினார் லட்சுமி அம்மா. யமுனாவின் மனமோ

‘அப்படி என்ன முக்கியமான விடயமா இருக்கும். கேட்டா எல்லாம் நல்ல விடயம்னு சொல்லாரு’

என்று தன் மனதில் யோசித்தபடி நின்றிருந்தார். அப்போது மித்ரா

“ஏய் ஸ்ரீ.. உனக்கு ஏதாவது தெரியுமா அது என்ன விடயம்னு”

என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தபடி கேட்க அதற்கு ஸ்ரீ

“நானே உன்கிட்ட கேட்கலாம்னு இருந்தேன்”

என்று அதே மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள். உடனே மித்ரா ராகவை கேட்க அவனும் தனக்கு தெரியாது என்று கூறினான்.

அனைவரும் உணவு உண்டு முடிக்க அவர்கள் வழக்கமாக அமர்ந்து பேசும் சோபாவில் சென்று அமர்ந்ததும் அர்ஜூனும் வந்து அமர்ந்தான். அர்ஜூனை பார்த்து விஸ்வநாதன்

“அர்ஜூன், யாழினிய பார்த்து பேச போனியே என்னாச்சுபா?? உனக்கு அவளை பிடிச்சு இருந்துச்சா??”

என்று கேட்க அதற்கு அர்ஜூன்

“ம்.. ஷீ இஸ் குவைட் குட் பா.. எனக்கு ஓகே..”

என்று கூற உடனே விஸ்வநாதன்

“ம்.. சரிப்பா அப்ப அவங்க வீட்ல மேரேஜ் எப்ப வச்சுக்கலாம்னு கேட்குறாங்க நீ என்ன சொல்ற”

என்று மீண்டும் கேட்க அதற்கு அர்ஜூன்

“நோ பா.., இப்ப எனக்கு மேரேஜ் கமிட் பண்ணாதீங்க.. எனக்கு இப்ப ஒரு 3 பெரிய ப்ராஜெக்ட் வந்திருக்கு. அதுல ஒன்னு கவர்மென்ட் ப்ராஜெக்ட், சோ இப்ப என்னால இது தவிர வேற எதுலயும் டைவர்ட் ஆக முடியாது அதனால ஒரு 3 - 4 மன்த்ஸ் போகட்டும்”

என்று கூற அதற்கு விஸ்வநாதனும்

“சரிப்பா அப்ப நான் உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா??”

என்று கேட்க அதற்கு அர்ஜூன்

“ம்..”

என்று கூற ஆரம்பத்தில் இருந்து அனைவரின் பார்வையும் இவர்கள் இருவரின் மீதே இருக்க உடனே விஸ்வநாதன்

“அப்ப உனக்கு முன்னாடி மித்ராவுக்கு கல்யாணம் பண்ணா உனக்கு ஓகே வா..”

என்று கேட்டதும் உடனே சட்டென தன் இருக்கையில் இருந்து எழுந்தவன்

“எத்தனை தடவை பா நான் சொல்லிருக்கேன் அவளோட எந்த விடயத்தையும் என்கிட்ட பேசாதீங்கனு..”

என்று கூறியபடி அங்கிருந்து நேராக தன் அறைக்குள் நுழைந்தான் அர்ஜூன். அதேநேரம் விஸ்வநாதன் கூறியதை கேட்ட மித்ரா அதிர்ச்சியில் தன் இரு கண்களை உருத்து விழித்தபடியும் வாயை பிளந்தபடியும் அமர்ந்திருக்க ராகவும் ஸ்ரீமதியும் அவளை அதிர்ச்சியாக பார்க்க, உடனே யமுனா தன் மணாளனை பார்த்து

“என்னங்க, என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா..?? இவ சின்ன பொண்ணுங்க, இவளுக்கு போய் இப்ப கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றீங்க..”

என்று கேட்க அதற்கு ஜானகி

“நீ என்ன பேசுற யமுனா.. இவ வயசுல எல்லாம் எனக்கு கல்யாணமாகி உன் புருசன் பொறந்து அவனுக்கு 3 இல்ல 4 வயசு இருக்கும்”

என்று கூற உடனே யமுனா

“அப்படி இல்ல அத்தை, இன்னும் இவளுக்கு படிப்பு கூட முடியல அதுக்குள்ள யார் என்னனு தெரியாதவங்க வீட்டுக்கு எப்படி அனுப்புறது..”

என்று கேட்க அதற்கு மீண்டும் ஜானகி

“ஏன் நீ உன் கல்யாணத்துக்கு அப்புறம் தானே உன் காலேஜ் படிப்பை முடிச்ச அதுமாதிரி அவளும் கல்யாணத்துக்கு அப்புறம் படிப்பா”

என்று கூற உடனே யமுனா

“அது அன்னைக்கு என்னோட சூழ்நிலை அத்தை.. ஆனா இவளுக்கு அப்படி ஒன்னும் இல்லயே.. ”

என்று மித்ராவுக்காக பேச உடனே விஸ்வநாதன் தன் மணாளினியை பார்த்து

“யமுனா.. அதான் அம்மா சொல்றாங்கல..”

என்று கூறியவரை யமுனா பார்க்க உடனே மீண்டும்

“எனக்கு உன்னோட கவலை புரியுது ஆனா நம்ம மித்ரா ஒன்னும் முகம் தெரியாதவங்க வீட்டுக்கு போக போறதில்ல எல்லாம் அவளுக்கு பழக்கமானவங்கதான் ”

என்று கூற அது யமுனாவுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவர் மனதிலும் (யார் அவன்..?) என்ற கேள்வி உதித்தது. அந்த ஒரு நிமிட நாழிகையில் அங்கிருந்தோர் அனைவர் முகத்தையும் பார்த்த விஸ்வநாதன் அனைவரையும் பார்த்து

“மாப்பிள்ளை வேற யாரும் இல்லை நம்ம ஜெகன்நாதன் பையன் விக்ரம் தான்”

என்று கூறியதும், ராகவ் மற்றும் ஸ்ரீமதிக்கு விக்ரம் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க அப்போது ஸ்ரீமதி ராகவ்வின் காதருகில் சென்று

“செத்தான் சேகரு”

என்று கிசுகிசுக்க அதை கேட்ட ராகவுக்கு குப் என்று சிரிப்பு வர அதை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான். அதே நேரம் யமுனாவுக்கு தன் மணாளனின் பதில் திருப்தி அளித்தாலும் ஆனால் ஏன் எல்லாம் இவ்வளவு விரைவாக நடக்க வேண்டும் என்ற சந்தேகமும் கேள்வியும் அவர் மனதில் எழ அதை கேட்க அவர் வாய் திறப்பதற்குள் ஆரம்பத்தில் இருந்தே மித்ராவின் முகம் வாட்டமாக இருப்பதை கவனித்து கொண்டிருந்த விஸ்வநாதன் தன் இருக்கையில் இருந்து எழுந்து

“மித்ரா நீ என் கூட வாமா”

என்று அழைக்க, அவளும் தன் மாமாவுடன் சென்றாள். இருவரும் பின் பக்க தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருக்க, முதலில் விஸ்வநாதன்

“நீயும் உன் அத்தை மாதிரி உன் மாமா அவசர படுறேன்னு நினைக்குறியாமா”

என்று கேட்க அதற்கு மித்ரா ஒன்றும் பேசாமல் நிற்க மீண்டும் விஸ்வநாதன்

“ஒருவேளை உன்னை கேட்காம விக்ரமை செலக்ட் பண்ணிட்டேன்னு கோபமா”

என்று கேட்க உடனே மித்ரா

“அய்யய்யோ... அப்படி எல்லாம் இல்ல மாமா என் வாழ்க்கையோட எல்லா முடிவையும் எடுக்குற உரிமை உங்களுக்கு இருக்கு.. ஆனா எக்ஸாம், காம்பெட்டிசன்..”

என்று இழுத்தபடி கூற அதற்கு விஸ்வநாதன்

“அதெல்லாம் நீ என்ன படிக்கனும்னு ஆசைப்படுறியோ நீ படிம்மா அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க அதே போல எந்த காம்பட்டீசன்ல வேணும்னுலும் கலந்துக்க எல்லாம் நான் பார்த்துக்குறேன். ஆனா.. கல்யாணம் மட்டும்.. 2 மாசத்துல பண்ணிடுவோம்டா..”

என்று கூற, ஆரம்பத்தில் இருந்து விஸ்வநாதன் தொடர்ந்து 2 மாதத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்ததை கவனித்த மித்ரா இப்போதும் அவர் அதையே சொல்ல இது மித்ராவின் மனதில் ஏதோ குழப்பமாக இருந்தாலும் தன் தாய்மாமன் தனக்கு மனதாலும் தீங்கு நினைக்காதவர் என்பதை உணர்ந்தவள் கண்டிப்பாக இப்போது அவர் எடுத்திருக்கும் இந்த முடிவில் ‌ ஏதோ ஒரு முக்கியமான விடயம்‌ அடங்கி இருக்கும் என்றுணர்ந்து

“சரி மாமா உங்க இஷ்டம்”

என்று கூற அதை கேட்ட விஸ்வநாதன் முகத்தில் புன்னகை பூக்க மித்ராவை பார்த்து

“தேங்க்ஸ் மா.. எனக்கு தெரியும்டா நீ உன் மாமாவை புரிஞ்சுப்பனு..”

என்று கூறிவிட்டு

“நீ வேணும்னா பாரு உன் கல்யாணத்த நான் எப்படி பண்றேன்னு.. லட்சுமிபுரம் ஜமின் வம்சத்துலயே எவனும் இப்படி ஒரு கல்யாணம் பண்ணிருக்க மாட்டான்..”

என்று தன் மருமகளிடம் கூறிவிட்டு அங்கிருந்து மகிழ்ச்சியாக உள்ளே சென்று மித்ரா திருமணத்திற்கு சம்மதித்ததை அனைவருக்கும் தெரிவித்தார். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க, யமுனா மட்டும் ஒன்றும் பேசாது நேராக தன் அறைக்குள் நுழைந்தார்.

அப்போது விஸ்வநாதன் இந்த நற்செய்தியை ஜெகன்நாதனுக்கு‌ தெரிவிக்க தன் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்தவர் அவருக்கு அழைப்பு விடுக்க, மறுமுனையில் விஸ்வநாதனின் அழைப்புக்காக காத்திருந்த ஜெகன்நாதனோ அதை இரண்டே ரிங்கில் ஏற்று

“ஹலோ சொல்லுடா..”

என்று கூற உடனே விஸ்வநாதன்

“டேய் ஜெகன்..ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்திடுச்சு மித்ராவும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா..”

என்று மகிழ்ச்சியோடு கூற இதை‌ மறுமுனையில் இருந்து கேட்ட ஜெகன்நாதன் எல்லையில்லா ஆனந்தத்துடன்

“உண்மையாவா டா சொல்ற.. ரொம்ப நேரமா நான் பயந்துட்டே இருந்தேன் எங்கே ஜாதகம் சரியில்லைனு சொல்லிடுவியோனு.. இப்ப இதை கேட்கும் போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..”

என்று கூறியவர் மீண்டும்

“சரி நான் இதை வீட்டுல இருக்கவங்ககிட்ட சொல்லிட்டு உனக்கு கால் பண்றேன்”

என்று அவர் கூற உடனே விஸ்வநாதன்

“சரிங்க அண்ணா அப்ப நான் காலைல கால் பண்றேன்”

என்று என்றுமில்லாத திருநாளாய் ஜெகன்நாதனை அண்ணா என்று அழைத்து கிண்டல் செய்ய இதை கேட்ட ஜெகன்நாதனும் அவர் கூறியதை புரிந்துக்கொண்டு அவரும்

“சரிங்க தம்பி”

என்று கூற இருவரும் ஒன்றாக சிரித்துக் கொண்டனர். அதேசமயம் கிச்சனில் இருந்து ஜெகன்நாதனுக்கு பால் எடுத்துக் கொண்டு வந்த அவரது மணாளினியின் காதில் தம்பி என்ற வார்த்தை விழ

“யாருங்க போன்ல”

என்று கேட்க அதற்கு ஜெகன்நாதன்

“ஆ.. வந்துட்டியா வா.. வா.. வந்து இப்படி என் பக்கத்துல உட்காரு..”

என்று முதலில் தன் மணாளினியை அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு

“உனக்கு நம்ம மித்ராவ எவ்வளவு பிடிக்கும்”

என்று கேட்க அதற்கு சுசிலா

“என்னங்க நான் என்ன கேட்டேன் நீங்க என்ன கேட்குறீங்க..”

என்று கூற உடனே ஜெகன்நாதன்

“மொத நீ சொல்லு உனக்கு மித்ராவ எவ்வளவு பிடிக்கும்??”

என்று மீண்டும் கேட்க அதற்கு சுசிலா

“ம்.. ”

என்று சுசிலா முறைக்க உடனே ஜெகன்நாதன்

“சொல்லுடீ..”

என்று கூற

“எனக்கு அவள ரொம்ப பிடிக்கும் ஏன் இன்னும் சொல்ல போனா நம்ம விக்ரமுக்கு அவள கேட்கலாம்னு கூட தான் இருக்கேன்.”

என்று கூற உடனே இதை கேட்ட ஜெகன்நாதன்

“அப்ப சீக்கிரமா காலைல எழுந்து கல்யாண வேலையை பாரு இன்னும் ரெண்டு மாசம் கூட இல்லை கல்யாணத்துக்கு”

என்று அறைகுறையாக ‌‌கூற இதை கேட்ட சுசிலா ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்க உடனே

“மை மக்கு பொண்டாட்டி நம்ம விக்ரமுக்கு நான் மித்ராவை பொண்ணு கேட்டு அதற்கு விஸ்வநாதன் குடும்பமும் சரின்னு சொல்லிட்டாங்க..”

என்று கூற இதை கேட்ட சுசிலாவிற்கும் எல்லையில்லா ஆனந்தம் வந்து ஒட்டிக் கொள்ள உடனே தன் மணாளனிடம் முகத்தில் புன்னகையுடன்

“என்னங்க சொல்றீங்க நிஜமா தான் சொல்றீங்களா.. ”

என்று கேட்க அதற்கு அவர்

“ஆமா மா.. இப்ப விஸ்வநாதன் தான் போன்ல பேசுனான் நான் காலைல அவங்க வீட்டுக்கு போனப்ப மித்ராவ விக்ரமுக்கு கேட்டுருந்தேன் அதை வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தான். அதை சொல்ல தான் இப்ப கால் செய்தான். இனி மித்ரா நம்ம வீட்டு மருமக..”

என்று கூற இதை கேட்ட சுசிலாவுக்கும் எல்லையில்லா ஆனந்தம் வந்து ஒட்டிக் கொண்டது. உடனே ஜெகன்நாதன்

“சரி நான் போய் இதை விக்ரமுக்கு சொல்லிட்டு வரேன்”

என்று கூறி விக்ரமின் அறைக்கு செல்ல அறையின் வாசல் வரை வந்தவருக்கு ஏனோ ஒருவேளை தன் மகன் மித்ராவை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தோடு சிறிது பயம் வந்து ஒட்டிக் கொள்ள அறையின் கதவை மெல்ல திறந்து உள்ளே வந்தார். அங்கே விக்ரம் காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு

“காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்

என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி திதிதாய்..”

என்ற பாடலை கேட்டு கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த தன் தந்தையை பார்த்து காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை கழற்றிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்துக் கொள்ள உடனே ஜெகன்நாதன்

“பரவாயில்ல படு பா”

என்று கூற உடனே விக்ரமும் கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்தான். அப்போது ஜெகன்நாதன் விக்ரம் அருகில் அமர

“என்னப்பா இந்த டைம்ல வந்து இருக்கீங்க”

என்று கேட்க அதற்கு ஜெகன்நாதன்

“அது ஒன்னும் இல்லபா உன்கிட்ட கேட்காம நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்.”

என்று தயங்கியவாறு கூற அதற்கு விக்ரம்

“என்னப்பா அது”

என்று கேட்டான். உடனே ஜெகன்நாதன்

“உன் கல்யாணத்தை பத்தி….”

என்று கூறி முடிப்பதற்குள்

“என்னப்பா சொல்றீங்க..”

என்று விக்ரம் அதிர்ச்சியாய் கேட்க உடனே ஜெகன்நாதன்

“ஏன்பா நீ யாரையாவது லவ் பண்றியா”

என்று கேட்க அதற்கு விக்ரம்

“ஆமா பா நான் நம்ம காலேஜ்ல படிக்குற ஒரு பொண்ண லவ் பண்றேன்”

என்று கூற இதை கேட்ட ஜெகன்நாதனுக்கு முகம் வாட்டமாக மாறியது. எனினும் அதை தன் மகன் முன்பு காட்டாமல்

“சரி பா அப்ப நான் இந்த சம்மந்தம் வேணாம்னு விஸ்வநாதன் கிட்ட சொல்லிடுறேன்”

என்று கூறிவிட்டு திரும்ப உடனே அவர் கூறியதை கேட்ட விக்ரம்

“அப்பா ஒரு நிமிடம்..”

என்று கூற உடனே ஜெகன்நாதன்

“என்னப்பா..”

என்று கேட்க அதற்கு விக்ரம்

“விஸ்வநாதன் அங்கிள் கிட்ட ஏன் வேணாம்னு சொல்லனும்”

என்று கேட்டான் அதற்கு அவர்

“ஆமா பா அவன் தானே பொண்ணு வீட்டுக்காரன் அப்ப அவன்கிட்ட தான் சொல்லனும்”

என்று கூற மீண்டும் விக்ரம்

“அப்ப பொண்ணு…”

என்று கேட்க

“நம்ம மித்ரா தான்.. ஆனா நீ தான் யாரையோ லவ் பண்றேன் னு சொல்றியே..”

என்று வருத்தமாய் கூறிவிட்டு அங்கிருந்து நகர பின்னால் இருந்து தன் தந்தையை கட்டி அணைத்த விக்ரம்

“அப்பா எப்படிப்பா… ஒவ்வொரு தடவையும் எனக்கு பிடித்த மாதிரியே செய்றீங்க..??”

என்று கேட்க அப்போது ஜெகன்நாதன்

“அப்படினா நீ லவ் பண்ண பொண்ணு..?”

என்று சந்தேகமாக கேட்க அதற்கு விக்ரம்

“ம்.. ஆமாப்பா நான் மித்துவ தான் லவ் பண்றேன். ”

என்று கூற உடனே ஜெகன்நாதன்

“நல்லவேளை பா நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன் எங்க நீ வேண்டாம்னு சொல்லிடுவியோ னு..”

என்று கூறிவிட்டு

“சரிப்பா அப்ப நான் விஸ்வநாதனுக்கு போன் செய்து சம்மதம் சொல்லிடுறேன்”

என்று கூறி அங்கிருந்து நகர

“அப்பா ஒரு நிமிடம்..”

என்றான் விக்ரம்.

“என்னப்பா ஏதாவது சொல்லனுமா..??”

என்று ஜெகன்நாதன் கேட்க அதற்கு விக்ரம்

“அது.. நான் மித்ராகிட்ட அவளோட விருப்பத்தை கேட்டுட்டு சொல்றேன். அதற்கு அப்புறம் நீங்க விஸ்வநாதன் அங்கிள் கிட்ட பேசுங்க..”

என்று கூற, உடனே ஜெகன்நாதன்

“டேய்.. இதெல்லாம் டூ மச் டா.. அதெல்லாம் கேட்காமலேயா நாங்க பேசுவோம்”

என்று கூற அதற்கு விக்ரம்

“ஆனா நானும் அவகிட்ட கேட்கனும் ல பா சோ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க”

என்று கூறிவிட்டு தன் மொபைலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விருவிருவென தன் அறையின் பால்கனிக்கு சென்றவன் அவளுக்கு அழைப்பு விடுக்க அதை மறுமுனையில் எடுத்தவள்

“ஹலோ..”

என்றதும் என்றும் இல்லாது இன்று என பார்த்து இங்கு இவன் மீது சில்லென்ற தென்றல் வந்து அவனை தழுவி சென்ற ஓர் உணர்வு ஏற்பட அதில் தன்னை மறந்து நிற்க மறுமுனையில் இருந்து மித்ரா

“ஹலோ.. ஹலோ..”

என்று கூற உடனே சுயதிற்கு வந்த விக்ரம்

“ஹலோ.. நான் தான் மித்து விக்ரம் பேசுறேன்”

என்று கூற அதற்கு மித்ரா

“ம்.. சொல்லுடா..”

என்று சொல்ல அதற்கு விக்ரம்

“இப்ப தான் எங்க வீட்ல நமக்கு மேரேஜ் பண்றத பத்தி சொன்னாங்க அதான் உன் விருப்பம் கேட்க கால் பண்ணேன்”

என்று கேட்டவன் ஆவலோடு அவள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க, அப்போது மித்ரா

“ம்.. ஆமா விக்ரம் என் கிட்டயும் மாமா பேசுனாரு டா.. ”

என்றவள் மேலும்

“சின்ன வயசுல இருந்தே ‌என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும். நாம ரெண்டு பேரும் இத்தனை வருடமா ப்ரெண்ட்ஸா இருந்துருக்கோம் அன்ட் என்னோட ட்ரீம் என்னனும் உனக்கு நல்லா தெரியும் சோ என்னை பத்தி புரிஞ்ச ஒரு நல்ல ப்ரெண்ட் எனக்கு லைப் பார்ட்னரா வந்தா நல்லது தானே அதான் நான் இந்த மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டேன்..”

என்று கூறிவிட்டு

“உனக்கு..??”

என்று கேட்க அவனோ

“எனக்கும் ஓகே தான் மித்து..”

என்று கூற இருவரும் அப்படியே பேசி கொண்டிருந்தனர்.

அதேநேரம் உறங்குவதற்காக விஸ்வநாதன் தன் அறைக்கு செல்ல அங்கே யமுனா உறங்காமல் அவருக்காக காத்திருந்தார். உள்ளே சென்றவரை வச்ச கண் வாங்காமல் முறைக்க உடனே விஸ்வநாதன்

“ஏய் ஏன்டீ இப்ப அப்படி பாக்குற..”

என்று கேட்க அதற்கு யமுனா

“ஏன் உங்களுக்கு தெரியாதா??”

என்று கேட்க விஸ்வநாதன் மௌனமாக இருக்க மீண்டும் யமுனா

“ஏன் இப்ப இவ்வளவு அவசரமா மித்ராவுக்கு கல்யாணம் பண்றீங்க”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“அது..”

என்று இழுத்த விஸ்வநாதன் தன் மணாளினியின் கண்களை பார்க்க முடியாது தன் தலையை சொரிந்தபடி

“அவளுக்கு இன்னும் 2 மாசத்துல கல்யாணம் பண்ணலனா திருமண பாக்கியம் இல்லைனு காலைல போன் பண்ணப்ப ஜோசியர் சொன்னாரு அதான்”

என்று கூற உடனே யமுனா

“எங்க அதை என் கண்ணை பார்த்து சொல்லுங்க”

என்று கூற உடனே விஸ்வநாதன் வாயில் கை வைத்து

“ஹ்ஆஆ..”

என்றபடி கொட்டாவி விட்டுவிட்டு

“எனக்கு தூக்கம் வருது”

என்று கூறியபடி அவருக்கு எதிர்பக்கமாக திரும்பி படுத்து கொண்டார். அதற்கு மேல் எதுவும் கேட்காத யமுனா தன் மணாளன் தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்பதை உணர்ந்து படுத்துக் கொண்டார்.


மறுநாள் காலை.. ஜெகன்நாதன் இல்லம்..

காலை தன் பெரிய மகன் மற்றும் மருமகளை அழைத்த ஜெகன்நாதனும் சுசிலாவும் அவர்களிடத்தில் விக்ரமின் திருமண விடயத்தை கூற இதை கேட்ட இருவரும் மகிழ்ந்தனர். அப்போது தாரா

“மாமா, அத்தை, நாம ஏன் இன்னைக்கு ஈவ்னிங் நடக்கபோற உங்க அனிவர்சரி பங்க்சன்ன விக்ரம் மித்ரா எங்கேஞ்மென்ட் பங்சனாவும் ஏற்பாடு பண்ண கூடாது.”

என்று சொல்லிவிட்டு அருகில் நின்ற தன் கொழுந்தனை பார்க்க அவனோ

“சூப்பர் அண்ணி.. செம ஐடியா..”

என்று சொல்ல அது ஜெகன்நாதனுக்கும் சரி என்றுபட தன் மருமகளை பார்த்து

“நீ சொல்றதும் நல்ல ஐடியா தான் தாரா ஆனா எதுக்கும் விஸ்வநாதனை ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு செய்யலாம்”

என்று கூறிவிட்டு விஸ்வநாதனை அழைக்க அவர் காலண்டரை எடுத்து நாள் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு

“இன்னைக்கு முகூர்த்த நாள் தான் ஜெகன் நீ சொன்ன மாதிரியே இன்னைக்கே நிச்சயம் செய்துக்கலாம் நானும் ஜோசியருக்கு போன் செய்து கல்யாண நாளை குறித்து தர சொல்லி எடுத்துட்டு வரேன்”

என்று கூறினார். அதன்பிறகு ஜெகன்நாதன் அதை அனைவரிடமும் கூறிவிட்டு

“சரி.. சரி.. டைம் ரொம்ப கம்மியா இருக்கு அதனால எல்லாரும் ஒவ்வொரு வேலையை பாருங்க அப்ப தான் சீக்கிரமா முடியும் அப்புறம் அஜய் அன்ட் தாரா உங்களுக்கு ஹெல்புக்காக நம்ம ஆபிசுக்கு போன் செய்து ஒரு 3, இல்ல ஒரு 6 அசிஸ்டன்ட்ட அனுப்ப சொல்லுங்க.. அப்புறம் விக்ரம் நீ…”

என்று திரும்ப அங்கு விக்ரம் இல்லை உடனே அங்கிருந்தவர்களை பார்க்க அப்போது தாரா

“மாமா என் கொழுந்தன் எப்பயோ ரெடி ஆக போய்ட்டாரு..”

என்று கூற உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

இதுவரை நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து வீட்டிலேயே சிம்பிளாக செய்ய ப்ளான் செய்திருக்க, இப்போது அனைவருக்கும் மொபைலில் அவசர அவசரமாக திருமண விழா நடக்கும் இடம் மாற்றப்பட்டதை கூறி மீண்டும் அழைப்பு விடுத்தனர். அதுமட்டுமல்லாது ஆபிஸ் மேனேஜர் முதல் பார்ளிமென்ட் மெம்பர் வரை பட்டியல் நீண்டது. அதேபோல இரு மணமகன் இரு மணமகளுக்கான மேக்கப்பும் மறவாமல் தாரா ஏற்பாடு செய்திருக்க அனைத்தும் விறுவிறுவென நடந்தேறியது.

அதேசமயம் அங்கே மித்ரா பங்சனுக்கு கிளம்ப தயாராக அவளுக்கு கால் செய்த தாரா

“ஹலோ மித்து.. என்ன பண்ற..??”

என்று கேட்க அதற்கு மித்ரா

“உங்க பங்சனுக்கு தான் கிளம்புறேன் அக்கா”

என்று கூற உடனே தாரா

“என்ன மித்து விஸ்வநாதன் மாமா சொல்லலயா இன்னைக்கு உனக்கும் விக்ரமுக்கும் என்கேஞ்மென்ட் னு”

என்று கேட்க உடனே மித்ராவும்

“ஆ.. ஆமா கா சொல்லிருந்தாரு அதுக்கு தான் ட்ரெஸ் செலக்ட் செஞ்சுட்டு இருக்கேன் ”

என்று கூற அதற்கு தாரா

“நல்லவேளை அப்ப நான் கரெக்ட் டைமுக்கு தான் கால் பண்ணிருக்கேன்”

என்று கூறிவிட்டு

“ஆக்சுவலா உனக்கு ட்ரெஸ் நானே சூஸ் பண்ணிட்டேன் மித்து, அது இன்னும் கொஞ்ச நேரத்துல உன் கைக்கு வந்துடும் அதையே பங்சனுக்கு போட்டுட்டு வா.. அப்புறம் உனக்கு மேக்அப் பண்ண ஒரு மேக்அப் உமனை அனுப்பி இருக்கேன் அவளும் வந்துடுவா”

என்று கூற மித்ராவும் மறுவார்த்தை பேசாது

“சரி கா..”

என்று கூற இருவரின் உரையாடலும் முடிந்தது. அதேபோல் தாரா கூறியபடி அனைவரும் வர அப்போது அங்கு வந்த மேக்அப் உமன் மித்ராவை பார்த்து

“மேடம், தாரா மேடம் உங்க ரிங் சைஸ் மெஷர் செய்து அனுப்ப சொன்னாங்க..”

என்று கூறி அதை எடுத்து அனுப்ப வேலைகள் அனைத்தும் பரப்பரப்பாக நடந்தன.

நேரமும் கடந்து செல்ல மாலை 5 மணியாக முதலில் ஜெகன்நாதன் குடும்பம் சென்னையில் அமைந்துள்ள ஐ.டி.சி க்ராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திரா ஹாலின் வாசலில் காரில் வந்து இறங்க அங்கே நின்றிருந்த செக்யூரிட்டி அவர்களின் கார் கதவை திறந்ததும் அந்த பார்ட்டி ஹாலின் மேனேஜர் அவர்கள் முன் வந்து

“வெல்கம் சார்.., வெல்கம் மேம்..”

என்று கூறி அவர்களை அழைக்க அப்போது தாரா

“நாங்க சொன்ன மாதிரி க்ராண்ட் டெக்கரேசன் தானே செய்து இருக்கீங்க”

என்று மேனேஜரை பார்த்து கேட்க அவரும் ஆம் என்று கூறியதும் கம்பெனியில் இருந்து வந்த அந்த 6 அசிஸ்டன்ட்களை அனுப்பி அனைத்தையும் சரி பார்த்து கொள்ளும்படி கூற அங்கே அவர்கள் மென்ஷன் செய்திருந்தது போலவே அந்த வெட்டிங் ஹால் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.


ஐடிசி க்ராண்ட் சோழா, சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலாகும்.

இதில் ரூம்ஸ், ரெஸ்டாரன்ட், பிசினஸ் கான்பரென்ஸ் ஹால், வெட்டிங் ஹால் என அனைத்து வசதிகளும் உள்ளன.

கிட்டத்தட்ட 2000 பேர் வரை அமர கூடிய வெட்டிங் ஹால் உள்ளது. அலங்காரம் கேட்டரிங் என அனைத்தும் அங்கேயே உள்ளது.

அதிலும் தாரா சொன்ன அலங்காரங்களை வர்ணிக்க வார்த்தையே இல்லை என கூறலாம். சதுரமான அந்த கட்டிடத்தின் நீண்ட ஹாலில் ஒரு சின்ன மேடை அமைத்திருந்தனர். அதிலும் அந்த ஹாலின் நடுவே ஒரு நீண்ட 30 பேர் வரை அமர்ந்து உணவருந்த கூடிய ப்ரீமியம் டைனிங் டேபிளை போட்டிருக்க அதை சுற்றியும் 3 பேர் அமர கூடிய சுமார் 200 சின்ன சின்ன ரவுண்ட் டேபிள்களை அமைத்து அதை சிம்பிளாக நடுவில் ஒரு ப்ளவர்வாஸ் வைத்து அலங்கரித்து இருக்க, அதில் விருந்தினர் பெயர்களும் ஒட்டப்பட்டிருந்தது. விருந்தினர்கள் அவரவருக்கு பிடித்த உணவு வகைகளை அவர்களே எடுத்து உண்ணும் பஃபே உணவுமுறையை அமைத்திருந்தனர்.

அந்த பார்ட்டி ஹாலின் மேல்புறம் முழுவதும் பால்ஸ் சீலிங் அமைந்திருக்க அதிலேயே விளக்குகளும் இணைக்கப்பட்டு இருந்தது. எனினும் இவர்கள் இருவர் குடும்பம் அமரும் ப்ரீமியம் டைனிங் டேபிளின் மேல் மட்டும் ஒரு தொங்கும் விளக்கு தங்க நிறத்தில் மிளர விடப்பட்டிருந்தது.

சில நிமிடங்களில் அவர்கள் அழைப்பு விடுத்த கெஸ்ட்டுகள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். விக்ரமும் அஜய்யும் வரும் விருந்தினர்களை வரவேற்க வந்தவர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதேபோல் விஸ்வநாதன் குடும்பமும் அங்கு வந்து சேர விக்ரம் அவர்களை அழைத்து கொண்டு உள்ளே வந்தான். அப்போது ஜெகன்நாதன் சொந்தத்தில் ஒருவர் விக்ரமை அழைத்து

“என்ன விக்ரம், அன்னைக்கு அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்து இன்வைட் பண்ண போது சிம்பிளா வீட்ல பண்றாதா சொன்னாங்க ஆனா திடீர்னு காலைல போன் செய்து இவ்வளவு க்ராண்டா பண்றீங்களே என்ன விடயம்..??”

என்று கேட்க அதற்கு விக்ரம் லேசான புன்னகையுடன்

“இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாவே சொல்லுவாங்க அங்கிள்”

என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவன் மீண்டும் விஸ்வநாதனிடத்தில் வந்து அவரிடம்

“அங்கிள் பங்கசன் ஸ்டார்ட் பண்ணிடலாமா..??”

என்று கேட்க அவரும் சரி என்றார். உடனே அங்கே அமைத்திருந்த மேடையில் ஏறிய அஜய் மைக்கை கையில் எடுத்து

“ஹலோ.. ஹலோ..”

என்று கூற இதுவரை கூச்சலாக இருந்த அந்த ஹால் அமைதியானது. உடனே அஜய் அனைவரையும் பார்த்து

“இங்க வந்திருக்க எல்லாருக்கும் ஏன் இந்த பார்ட்டி இவ்வளவு க்ராண்டா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு னு ஒரு கேள்வி இருக்கும் அதுக்கு என் மாம் அன்ட் டேட் டே உங்களுக்கு பதில் சொல்லுவாங்க”

என்று கூறி

“டேட், மாம் ரெண்டு பேரும் ஸ்டேஜ் கு வாங்க”

என்று கூறியதும் அவர்கள் இருவரும் மேடைக்கு வந்தனர். மேடைக்கு வந்தவர்கள் அங்குள்ள அனைவரையும் பார்த்து

“நீங்க எல்லாரும் உங்களோட ப்ரீசியஸான டைம்ம ஒதுக்கி எங்களோட இந்த பார்ட்டிக்கு வந்ததற்கு பர்ஸ்ட் நாங்க நன்றி சொல்லிக்குறோம்.”

“அப்புறம் இன்னைக்கு நடக்கப்போகும் இந்த பார்ட்டி வெறும் எங்களோட 30வது திருமண விழாவாக மட்டும் இல்லாம இது எங்க செல்ல பையன் விக்ரமோட எங்கேஞ்மென்ட் பார்ட்டின்னும் தெரிவித்துக்கிறோம்”

என்று கூற உடனே அங்கிருந்தோர் அனைவரும் கை தட்டி தங்களுக்குள்ளேயே ஏதோ கிசுகிசுத்து‌ கொண்டிருக்க ஜெகன்நாதனின் சொந்தங்கள் சிலர் முகத்தில் மட்டும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அலை வந்து சென்றது.

அதேவேளை யமுனா விஸ்வநாதனை பார்த்து

“என்னங்க, இன்னும் நம்ம அர்ஜூன் வரலைங்க”

என்று கூற இதை கேட்ட விஸ்வநாதனுக்கு அப்போது தான் தன் மகன் இன்னும் வரவில்லை என்று தெரிய உடனே

“சரி இரு நான் அவனுக்கு கால் செய்றேன்.”

என்று கூறி தன் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுக்க சரியாக அந்த ஹாலின் கதவுகள் திறக்கப்பட்டு அர்ஜூன் உள்ளே நுழைந்தான். அவனின் வருகையை கண்ட அங்கிருந்த பெண்களில் சிலர் விழாவை மறந்து அவனையே பார்க்க ஆனால் அவனோ யாரையும் கண்டு கொள்ளாது தன் குடும்பத்தோடு வந்து அமர்ந்தான்.

அதேநேரம் மேடையில் நின்றிருந்த ஜெகன்நாதனும் சுசிலாவும் விஸ்வநாதன் குடும்பத்தை பார்த்தபடி

“மித்ரா மேடைக்கு வா மா”

என்று அழைக்க உடனே விஸ்வநாதனும் யமுனாவும் மித்ராவை மேடைக்கு போக சொல்ல உடனே தன் இருக்கையில் இருந்து மித்ரா எழ ஒரு தேவலோக அப்சரஸ் போன்று காட்சியளித்தாள்.

அனைவரும் அவளது அழகை கண்டு வாய் பிளக்க அதற்கு அர்ஜூன் மட்டும் என்ன விதிவிலக்கா..?? ஆம் அவனும் அவளது அழகில் தன்னை மறந்து அவளை பார்த்தான். ஏனோ அவளை பார்க்கும் போதெல்லாம் அவன் மனதில் ஏதோ புதிதாக ஊடுருவல் ஏற்பட அது என்னவென்று அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை..

மித்ரா தன் நிறத்திற்கு எடுப்பாக அவள் அணிந்திருந்த சந்தன நிற ஆடையும், சங்கு போன்ற கழுத்தை ஒட்டினார்போல் அவள் அணிந்திருந்த நெக்லசும் அதற்கு மேட்சிங்கான நெத்தி சுட்டியும் என்று என்னதான் தன்னை சிம்பிளாக அழகு செய்திருந்தாலும். அதற்கும் மேல் அவள் அழகிற்கு அழகு சேர்ப்பார்போல காதின் அருகில் இருந்த அவளது சுருள் முடி இன்னும் ஒருமடங்கு அவளது அழகை தூக்கி காட்டியது என்றே கூறவேண்டும்.

மித்ரா மேடைக்கு வந்ததும் மீண்டும் ஜெகன்நாதன் அனைவரையும் பார்த்து

“ப்ரெண்ட்ஸ் இவங்க தான் என் வீட்டிற்கு வரப்போகும் மருமகள் மித்ரா. இவங்கள இங்க இருக்குற சில பேருக்கு தெரியும் பட் பலருக்கு இவங்கள தெரியாது. இவங்க வேற யாரும் இல்ல எஸ்.வி. க்ரூப்ஸ் சேர்மேனும் என் குடும்ப நண்பருமான மிஸ்டர். விஸ்வநாதனின் தங்கை மகள் தான் இந்த மித்ரா.”

என்று கூற கூற அங்கு இவ்வளவு நேரம் தன்னை மறந்து மித்ராவை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனின் முகம் சிவக்க ஆரம்பித்தது.

இப்போது ஜெகன்நாதனிடம் இருந்து மைக்கை வாங்கிய அவரது மணாளினி அனைவரையும் பார்த்து

“இப்ப எங்க பையன் விக்ரமும் மருமகள் மித்ராவும் நம் எல்லோர் முன்பும் மோதிரம் மாற்றி கொள்வார்கள்..”

என்று கூற இதை கேட்ட அனைவரும் கைதட்ட அதை தொடர்ந்து விக்ரமும் மித்ராவும் மோதிரம் மாற்றி கொண்டனர். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அர்ஜூன் மனதில் ஏதோ பழைய நினைவுகள் அலை அலையாய் தோன்ற மித்ராவை கண்கள் சிவக்க அவளை எரிக்கும் பார்வை கொண்டு பார்த்து கொண்டிருந்தான்.

தொடரும்..

InShot_20210610_224842847__01.jpg
 
அத்தியாயம் 12

யமுனா விஸ்வநாதனிடம் அர்ஜூன் இன்னும் வரவில்லை என்று கூற உடனே விஸ்வநாதன்

“இரும்மா நான் போன் போடுறேன்”

என்று கூறி தன் மொபைலில் அர்ஜூனின் நம்பரை டயல் செய்ய அந்த பிரமாண்ட ராஜேந்திரா ஹாலின் நுழைவாயில் கதவுகள் திறக்கப்பட்டு அர்ஜூன் உள்ளே நுழைந்தான்.

அர்ஜூனின் வருகையை கண்ட சில தொழில் அதிபர்கள் அவனிடம் வந்து கை குலுக்க அழகிய பெண்களின் கண்கள் அவனையே வலம் வந்தன..

எனினும் அவன் எப்பெண்ணையும் கண்டு கொள்ளாது நேராக தன் குடும்பத்தோடு வந்து அமர்ந்தான். சரியாக அப்போது ஜெகன்நாதனும் சுசிலாவும் தங்களுக்கு வரப்போகும் மருமகளை வந்திருக்கும் விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்த மேடையின் கீழ் அமர்ந்திருந்த விஸ்வநாதன் குடும்பத்தை பார்த்துவிட்டு, மேடையில் நின்ற ஜெகன்நாதன் அனைவரையும் பார்த்து மைக்கில்

“எங்களுக்கு வரப்போகும் மருமகள் வேறு யாரும் இல்ல என் நண்பனும் எஸ்.வி. க்ரூப்ஸ் கம்பெனியின் சேர்மனுமான மிஸ்டர். விஸ்வநாதனின் தங்கை மகள் மிஸ். சங்கமித்ரா தான்”

என்று கூறியவரிடம் இருந்து மைக்கை வாங்கிய சுசிலா மித்ராவை பார்த்து

“மித்ரா இங்க வா மா”

என்று அழைக்க அவளது விழிகள் தன் மாமா அத்தையின் அனுமதியை நாட அவர்களும் அவள் செல்வதற்கான அனுமதியை கொடுத்தனர். அதன்பின் தன் இருக்கையில் இருந்து மித்ரா எழுந்துக் கொள்ள, அழகில் சாட்சாத் அந்த தேவலோக கன்னிகைக்கு ஈடாக இருந்தாள். அந்த ஹாலில் இருந்த அனைவரும் இமை விலகாது அவளை பார்க்க அர்ஜூன் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா??

ஆம், அவனும் அவளை தன்னை மறந்து ஒரு நிமிடம் பார்க்க அவளோ தன் நீளமான சந்தன கலர் லெஹங்காவை இரு கைகளாளும் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு அந்த மேடையின் படிகளில் ஏற அப்போது சுயத்திற்கு வந்த அர்ஜூன்

“ச்சே.. என்ன இது இவளையா நாம இவ்வளவு நேரம் பார்த்தோம்”

என்று மனதில் நினைத்தப்படி அவன் மீதே அவனுக்கு கோபம் வர மேடையில் நின்றிருந்தவளை சுட்டெரிக்கும் தீப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அதேநேரம் சுசிலா மீண்டும் அனைவரையும் பார்த்து

“இப்ப என் பையன் விக்ரமும் மித்ராவும் உங்க எல்லோர் முன்னிலையிலும் மோதிரம் மாற்றி கொள்வார்கள்”

என்று அறிவிக்க உடனே இருவரும் அனைவர் முன்னிலையிலும் மோதிரம் மாற்றி கொண்டனர்..

அதை தொடர்ந்து தன் ஆறுமாத வயிற்றை வைத்து கொண்டு வெகு நேரம் மேடையில் நிற்க முடியாத தாரா கீழே வந்து அமர்ந்திருக்க தன் கையில் இருந்த மற்றொரு மைக்கில் அனைவருக்கும் கேட்கும்படி

“ஹலோ லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்.. அடுத்ததாக என் மாமா ஜெகன்நாதனும் அத்தை சுசிலாவும் அவர்களது அனிவர்சரி கேக்கை கட் செய்ய இந்த ஈவன்ட் ட்ரெடிஷன் மோட்டிலிருந்து பார்ட்டி மோடிற்கு மாறிவிடும் அப்புறம் டேன்ஸ் பண்றவங்க அதோ”

என்று கூறி தன் ஆட்காட்டி விரலை ஒரு ஸ்டேஜ்ஜை நோக்கி காட்டி

“அங்கே இருக்குற மேடையில் ஏறி டேன்ஸ் பண்ணலாம்…”

என்று கூற உடனே இரு பேரர்கள் ஒரு ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்து அதில் இருந்த கிங் சைஸ் கேக்கையும் அதை கட் செய்ய ஒரு சில்வர் கத்தியையும் எடுத்து ஒரு அலங்கரிக்கப்பட்ட டேபிள் மீது வைத்துவிட்டு குனிந்த தலை நிமிராத வண்ணம் அப்படியே மேடையில் இருந்து கீழ் இறங்கி சென்றனர்.

அப்போது மேடையில் நின்றிருந்த ஜெகன்நாதனும் சுசிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இருவர் முகத்திலும் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. மேடையில் அவர்களுக்கு அருகில் நின்றிருந்த அஜய் தன் அன்னையிடம் இருந்து மைக்கை வாங்கி கொண்டு சில்வர் கத்தியை தன் தாய் தந்தை இருவர் கைகளிலும் கொடுத்துவிட்டு விக்ரம் மித்ராவுடன் நின்றுக் கொண்டான். ஜெகன்நாதனும் சுசிலாவும் தங்கள் அனிவர்சரி கேக்கை கட் செய்து மேடையில் நின்றிருந்த தங்கள் இரு மகன்களுக்கும் அவர்களது வருங்கால மருமகள் மித்ராவுக்கும் ஊட்ட அப்போது தன் கையில் ஒரு கேக் துண்டை எடுத்து கொண்டு கீழே இறங்கிய சுசிலா நேராக தன் மருமகள் தாரா விடம் சென்று அவளுக்கும் ஊட்டி விட அதை அன்போடு பெற்று கொண்டவள் மைக்கை எடுத்து

“லெட்ஸ் செலப்ரேட் தி பார்ட்டி”

என்று கூற வந்திருந்த இளைஞர்களில் சிலர் அந்த நடன மேடையை நோக்கி செல்ல அங்கே அவர்களுக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட டிஜே

Cocktail taagina kothi nenu
Neck tie kattukunna kaki nenu
Koncham loose koncham tight nenu
Daaram tenchukunnna kite nenu
Seni vaaram racchagunna night nenu
Koncham wrong koncham right nenu
Vesey tequila, main hoon akela
Raave o pilla, main majnu tu laila
Hum tum ivala, something anela
Rum panchukola, prapancham vinnela
Come to the party, Subbalaxmi
Well come to the party, abba touch me

என்ற பாடல் ஒலிக்க விட இதை கேட்ட இளைஞர்கள் அனைவரும் அங்கு சென்று குத்தாட்டம் போட மித்ரா சிரித்தபடி விக்ரமை பார்க்க உடனே மித்ராவின் கையை பிடித்த விக்ரம் அவளை இழுத்து கொண்டு அந்த நடன மேடையில் ஏறி இருவரும் நடனமாட ஏனோ சிறிது நேரத்தில் அவளுக்கு தன்னை யாரோ கவனிப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து விக்ரமுடன் நடனமாடியபடியே தன்னை சுற்றி நோட்டம் விட கீழே அமர்ந்திருந்த அர்ஜூனின் விழிகள் இரண்டும் எரிகுழம்பை கக்கும் எரிமலை போல அவளையே உறுத்து விழித்து பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள். அப்போது அர்ஜூனின் பார்வை மித்ராவுக்கு ஈரக்குலை நடுங்கும் அளவிற்கு அச்சம் தர

‘இந்த கொம்பேரி மூக்கன் ஏன் நம்மள இப்படி கொலைப் பண்றா மாதிரி பார்க்குறான்..?? இவனுக்கு என்ன தான் பிரச்சனை..??’

என்று நினைத்து கொண்டு வேறு பக்கமாக திரும்பி ஆட மீண்டும் மித்ரா எங்கே இப்போதும் நம்மை அவன் பார்க்கிறானா என்று அவன் அமர்ந்திருந்த திசையில் எட்டி பார்க்க அவனோ இன்னும் அவள் இருக்கும் திசையில் இருந்து தன் விழியை மாற்றாது அவளையே பார்க்க அவளும் சில வினாடிகளுக்கு ஒரு முறை அவனையே எட்டி பார்த்தாள். இதை கவனித்த விக்ரம்

“ஏய் மித்து என்ன ஆச்சு யாரை தேடுற..?”

என்று கேட்க அதற்கு மித்ரா

“ஒன்னும் இல்ல விக்கு சும்மா தான்”

என்றவள் மீண்டும் மனதில்

“ஆமா நான் ஏன் இப்ப அவனை பத்தி யோசிக்குறேன் அவன் பார்த்தா பார்த்துட்டு போகட்டும் அவன் என்னமோ இன்னைக்கு தான் இப்படி பார்க்குறா மாதிரி.. தினமும் இப்படி தானே பார்க்குறான்.. இப்ப நாம விக்கு கூட டான்ஸ் ஆடுறதுல கான்ஸன்ட்ரேட் பண்ணுவோம். அவன் கிடக்குறான் கொம்பேறி மூக்கன்..”

என்று அவள் நினைத்தாலும் அவளது பார்வை ஏனோ அவளையும் மீறி மீண்டும் மீண்டும் அவன் மீது பட்டு பட்டு விலகியது.

அதேசமயம் இங்கு அமர்ந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஜெகன்நாதனுக்கும் சுசிலாவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த பின்னர் கையில் உணவு ப்ளேட்டோடு ஒருவர் மற்றொருவர் முன் நின்று வெகுநாட்கள் கழித்து பேசுவது போல் பேசிக் கொண்டிருக்க ஜெகன்நாதனும் விஸ்வநாதனும் எல்லையில்லா ஆனந்ததித்தில் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அங்கு நடனமாடி முடித்த மித்ரா, ராகவ் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அந்த நடன மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து தங்கள் குடும்பத்தோடு அமர விக்ரம் மட்டும் நேராக தன் அண்ணி தாராவிடம் வந்து ரகசியமாக

“அண்ணி எல்லாம் ஓகே தானே”

என்று கேட்க அதற்கு தாரா

“எல்லாம் ரெடி தான் ஆனா என் பேர் வெளிய வராம பார்த்துக்கோங்க கொழுந்தனாரே..”

என்று கூற உடனே விக்ரம்

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணி நீங்க தேவையில்லாம டென்சன் ஆகாதீங்க”

என்று கூற உடனே தாரா சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு இதுவரை யாருக்கும் தெரியாது மறைத்து வைத்திருந்த ஒரு கீ கார்ட்டை எடுத்து விக்ரமிடத்தில் கொடுக்க அதை பெற்றுக் கொண்டவன் அங்கிருந்து மறைந்தான்.

அப்போது விஸ்வநாதன் குடும்பத்திடம் வந்த சுசிலா விஸ்வநாதனை பார்த்து

“அண்ணா கொஞ்ச நேரம் மித்ராவ அனுப்பறீங்களா எங்க சொந்தகாரங்க எல்லாம் பார்க்கனும் னு ஆசை படுறாங்க”

என்று கூற அதற்கு விஸ்வநாதன்

“அட என்னமா நீ.. அதெல்லாம் நீ தாராலமா கூட்டிட்டு போகலாம்”

என்று கூறியதும் மித்ரா தன் இருக்கையில் இருந்து எழுந்து செல்ல, அதே நேரம் ராகவ் மற்றும் ஸ்ரீமதியும் எழ அவர்களை நிறுத்திய யமுனா

“நீங்க எங்க போறீங்க”

என்று கேட்டார் அதற்கு இருவரும்

“மித்ரா கூட…”

என்று கூற உடனே விஸ்வநாதன் இருவரையும் அமர சொல்லி

“இனிமேல் மித்ரா அவங்க வீட்டு பொண்ணு இன்னும் சின்ன புள்ளைங்க மாதிரி அவ கூட சுத்தி திரிய கூடாது”

என்று அறிவுரை கூற அவர்கள் மனமோ

‘அப்ப இனிமே நாம மித்ரா கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதா..?? அவளுக்கு கல்யாணம் ஆகிட்டா நம்மள மறக்கமாட்டா இல்ல..’

என்று கவலையுடன் நினைத்து கொண்டிருக்க அங்கே மித்ராவை அழைத்து கொண்டு சென்ற சுசிலா அங்கிருந்த அவரது சொந்தங்களுக்கு அவளை அறிமுகப்படுத்த அதில் பெரும்பாலானோர்

“பொண்ணு பார்க்க லட்சனமா இருக்கா ஆனா எங்ககிட்ட சொல்லாம மறச்சிட்ட பாத்தியா”

என்று சலித்துக் கொண்டு சுசிலாவை கேட்க இன்னும் சிலர்

“என்ன இருந்தாலும் நம்ம விக்ரம் கலருக்கு இவ கம்மி தான்”

என்று மித்ராவை கிண்டல் செய்ய அதை புரிந்து மித்ராவும் சிரித்தாள். சரியாக அப்போது சுசிலாவின் அண்ணி அமுதவல்லி அங்கே வர அவரிடம் மித்ராவை பெருமையாக அறிமுகப்படுத்தினார் சுசிலா. ஆனால் அவரோ அதை துளியும் காதில் வாங்கவில்லை. ஏனெனில் அவரது மகள் ரிஷிவந்திக்கு விக்ரமை பேசலாம் என்று காத்திருக்க தீடீரென யாரிடமும் கூறாது இந்த சம்மந்தத்தை நிச்சயம் செய்து விட்டார் ஜெகன்நாதன். இதில் அவருக்கு என்னதான் கடுப்பாக இருந்தாலும் அதை வெளிகாட்ட முடியவில்லை ஏனென்றால் சுசிலா தான் இவரது மணாளனின் செல்ல தங்கச்சி ஆயிற்றே.. ஆனால் அவரால் இப்போது மித்ராவை காயப்படுத்த முடியும் என்பதால் சுசிலாவிடம் மித்ரா முன்பே மித்ராவின் தாய் தந்தை பற்றி வினவ அதற்கு சுசிலா

“அது மித்ராவுக்கு சின்ன வயசா இருக்கும்போதே அவங்க ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடென்ட் ல தவறிட்டாங்க அண்ணி அதுல இருந்து மித்ரா அவங்க மாமா வீட்ல தான் வளர்ந்து வறா”

என்று கூற உடனே அமுதவல்லி

“என்ன சொல்ற சுசிலா, மாமா வீட்ல வளர்ந்து வராளா.. அப்ப‌டினா இவளுக்கு சொத்து பத்தாவது ஏதாச்சும் இருக்கா இல்ல அதுவும் இல்லியா..??”

என்று கேட்க அதற்கு சுசிலா மித்ராவின் அழகிய வதனத்தை பார்த்தபடி அமுதவல்லியிடம்

“இவளே எங்களுக்கு கிடைத்த பெரிய சொத்து தான் அண்ணி”

என்று கூறினார். இவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் பேசிய உரையாடல்கள் அனைத்தையும் கேட்ட விஸ்வநாதனோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

இதை கவனித்த தாரா மித்ராவிடம் வந்து

“ஹே.. மித்து என் கூட வா..”

என்று கூறி அழைத்து செல்ல அங்கு நின்றிருந்த அவளது பிறந்த வீட்டாரிடம் மித்ராவை அறிமுகம் செய்ய அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

சரியாக அப்போது மித்ரா ராகவ் மற்றும் அங்கிருந்த சிலருக்கு விக்ரமிடம் இருந்து ஏதோ குறுஞ்செய்தி வர அதை பார்த்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி ஏகபோகமாக வந்து குடிக் கொண்டது. அங்கிருந்த அனைவரும் விக்ரமிடம் செல்ல ராகவ் மட்டும் தாத்தா சீனிவாசனிடம் மாட்டி கொண்டான். உடனே ராகவ் தாத்தாவை பார்த்து

“என்ன தாத்தா ஏன் இப்ப என் கையை பிடிச்சீங்க”

என்று கேட்க அவனை இழுத்து மீண்டும் இருக்கையில் அமர வைத்த சீனிவாசன்

“என்னங்கடா சொல்லிவச்சா மாதிரி எல்லாரும் ஒரே நேரத்துல கிளம்புறீங்க”

என்று கேட்க அதை கேட்ட ராகவ் வோ

“அய்யய்யோ இதை எப்ப இவரு நோட் பண்ணாரு..??”

என்று மைண்ட் வாய்ஸ் என்றென்னி சத்தமாக பேச இதை கேட்ட சீனிவாசன்

“டேய்..”

என்றவர் தன்னை தானே சுட்டி காட்டியபடி

“நான் 1950's டா..”

என்று கூற இதை‌ கேட்ட ராகவ் ஷாக் ஆக பின்பு தான் தான் சத்தமாக பேசினோம் என்பதை உணர்ந்து மீண்டும் சீனிவாசனை பார்த்து

“தாத்தா நீங்க எல்லாம் அங்க வரக் கூடாது அது சரக்கு பார்ட்டி”

என்று கூற உடனே சீனிவாசன் முகம் அண்ணாமலையார் ஜோதி ஏற்றினால் எவ்வளவு பிரகாசமாக இருக்குமோ அதே போன்று பிரகாசமாக உடனே தன் பேரன் ராகவ் வை பார்த்து

“டேய் டேய் நானும் வரேன்டா.. எத்தனை மாசம் ஆச்சு தெரியுமா..”

என்று கூற இதை கேட்ட ராகவ்

“ம்ஹூம் முடியவே முடியாது”

என்று கூற மீண்டும் சீனிவாசன்

“கடைசியா கேட்குறேன் டா என்னைய இப்ப கூட்டிட்டு போக முடியுமா முடியாதா”

என்று கேட்க அதற்கு ராகவ் முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூற உடனே சீனிவாசன்

“மை சன்”

என்று விஸ்வநாதனை அழைத்தபடி திரும்ப உடனே பதட்டமான ராகவ்

“சரி சரி கூட்டிட்டு போறேன் வாங்க”

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே விஸ்வநாதன் தன் தந்தையை பார்த்து

“என்னப்பா கூப்டீங்களா”

என்று கேட்க அதற்கு சீனிவாசன்

“ஒன்னும் இல்ல பா இங்க ரெஸ்ட் ரூம் எந்த பக்கம் னு கேட்க கூப்டேன் ஆனா ராகவ் அவனே கூட்டிட்டு போறேன் னு சொல்லிட்டான்.”

என்று கூறிவிட்டு ராகவ் வை பார்த்து கண் அடிக்க அவனும் அதற்கு ஆமாம் போட்டான். உடனே விஸ்வநாதன் ராகவ் வை பார்த்து

“தாத்தா வை பார்த்து ஜாக்கிரதையா கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வா”

என்று கூற ராகவும் தாத்தாவும் அங்கிருந்து கிளம்பி அந்த ஹாலை விட்டு வெளியே வர நேராக அதற்கு பக்கத்து வளாகத்தில் அமைந்திருக்கும் பார் லான்ஜ் க்கு சென்றனர். அங்கே வாசலில் நின்றிருந்த பவுன்சர்ஸ் இருவரிடம் தன் மொபைலுக்கு வந்த மெசேஜை காட்ட அந்த பவுன்சர்கள் இருவரும் அதை பார்த்துவிட்டு அவர்கள் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.

பார் லாஞ்ச் கதவை திறந்து உள்ளே வந்த சீனிவாசன் அங்கிருந்த விதவிதமான சரக்குகளை கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருக்க அப்போது தன் தாத்தா உள்ளே நுழைவதை கண்ட மித்ரா ராகவின் அருகில் வந்து

“டேய் ஏன்டா தாத்தாவ இங்க கூட்டிட்டு வந்த”

என்று கேட்க அதற்கு ராகவ்

“எங்க மித்து நான் எவ்வளவோ சொன்னேன் அவர் தான் கேட்கல”

என்று கூற ‌மீண்டும் மித்ரா ஏதோ கூற அதற்கு ராகவ்

“சரி விடு மித்து நான் பார்த்துக்குறேன்”

என்று கூற அதற்கு மித்ரா

“யாரு.. நீயு.. அப்படியே பார்த்துக் கிட்டாலும்.. நீ தான் அவருக்கு முன்னாடியே மட்டை ஆகிடுவியே..”

என்று கூறியவள் ஏதோ யோசித்துவிட்டு

“வேற வழியே இல்ல எப்பவும் போல இன்னைக்கும் நான் தான் உங்கள அள்ளிட்டு போகனும்.. போங்க போய் ஆரம்பிங்க..”

என்று கூறி அனுமதி அளித்த அடுத்த வினாடியே ராகவும் சீனிவாசனும் சிட்டாய் பறந்து சென்று மேஜையில் அமர்ந்தபடி பார் அட்டென்டரிடம் இருவருக்கும் இரண்டு ஷாட் டக்கீலா வை ஆர்டர் செய்ய அவர்களிடம் வந்த மித்ரா

“தாத்தா லிமிட்டா குடிங்க ஓவராச்சு அப்புறம் தெரியும் ல மாமாவை பத்தி”

என்று கூற அதற்குள் ஒரு ஷாட்டை எடுத்தவர் லேசாக பயந்தவாறு மித்ராவை பார்த்து

“அவன ஏன்மா இப்ப ஞாபகம் படுத்துற”

என்று கேட்க அதற்கு மித்ரா

“ஆ.. அந்த பயம் இருக்கட்டும்”

என்று கூறினாள். இங்கு இவர்கள் இருவரும் இரண்டு மூன்று ஷாட் எடுக்க மித்ரா மட்டும் எதுவும் அருந்தாது அமர்ந்திருப்பதை கண்ட ராகவ்

“ஏன் மித்து நீ மட்டும் சும்மா இருக்க வேணும்னா ஒன்னு போடேன் நான் எதுவும் சொல்ல மாட்டேன்”

என்று கூற உடனே மித்ரா

“இல்ல.. எனக்கு இப்ப வேண்டாம் டா”

என்று கூற மீண்டும் ராகவ்

“ஓ.. கமான் மித்து ஜஸ்ட் இந்த ரெட் ஒயினாவது கொஞ்சம் குடி அப்ப தான் கல்யாணத்தப்ப உன் மூஞ்சு பார்க்க நல்லா இருக்கும் இல்லாட்டி அந்த விக்ரம் பய பயந்து ஓடிடப் போறான்”

என்று கூற உடனே மித்ரா

“டேய்..”

என்று கூற ராகவ்

“சரி.. சரி.. டென்சன் ஆகாதே..”

என்றதும் இப்போது அவளுக்கு சரக்கடிக்க விருப்பமில்லாததால் கோக் ஆர்டர் செய்து அதை அருந்தி கொண்டிருந்தாள். அப்போது ராகவ்

“தாத்தா எனக்கு ஒரு டவுட்டு”

என்று கூற அதற்கு சீனிவாசன்

“என்னடா..??”

என்று கேட்க உடனே ராகவ்

“நாங்க எல்லாரும் எங்க அப்பாவ பார்த்தா பயப்படுவோம் அப்ப எங்க அப்பா உங்கள பார்த்து தானே பயப்படனும் ஆனா‌ இங்க என்னடா னா நீங்க உங்க பையன பார்த்து பயப்படுறீங்க அது ஏன்..??”

என்று கேட்க அதற்கு சீனிவாசன்

“நான் ஏன்டா அவன பார்த்து பயப்படனும் அவன் தான் என்னை பார்த்து பயப்படுவான்”

என்று கூற உடனே ராகவ்

“அப்படியா.. சரி அப்ப நீங்க சரக்கடிக்குறதை நான் போய் என் அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன்”

என்று கூறிவிட்டு எழுந்து கொள்ள உடனே சீனிவாசன்

“டேய்.. டேய்.. இருடா..”

என்று கூற உடனே ராகவ்

“ம்.. அப்ப பயம் இருக்குல”

என்று கேட்க அப்போது சீனிவாசன் முழிக்க மித்ராவும் ராகவுடன் சேர்ந்து

“அது கூட பரவாயில்ல டா ஆனா இந்த பெருசு அந்த கொம்பேரி மூக்கனுக்கும் சேர்த்து ல பயப்படுது அதான் கொடுமையே..”

என்று கூற இதை கேட்ட ராகவ்

“ம்.. ஆமா.. நான் கூட நிறைய தடவை பார்த்து இருக்கேன் அர்ஜூன் அண்ணா அவன் ரூம்ல இருந்து கீழே வந்தா போதும் வீடே சைலன்ட் ஆகிடும்”

என்று இவர்கள் மாறி மாறி பேசி கொண்டிருக்கும் சமயத்தில் ஐந்து ஷாட் அடித்து போதையானவர் இவர்கள் பேசிய பேச்சில் போதை இறங்கிய உணர்வு ஏற்பட மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தார். ஆனால் அப்படியே மயங்கி பார் டேபிளில் விழுந்துவிட உடனே ராகவ்

“மித்து இங்க பாரு தாத்தா மட்டை ஆகிட்டாரு..”

என்று கூற அதற்கு மித்ரா

“டேய் இது என்ன புதுசா.. அப்படியே விடு கெளம்பும் போது தூக்கிட்டு போகலாம்”

என்று கூறிவிட்டு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க நேரம் கடந்து கொண்டே சென்றது. சில மணி நேரங்களுக்கு பிறகு அனைவரும் கிளம்ப இவர்கள் இருவரும் தாத்தா சீனிவாசனை அழைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஹோட்டல் டாக்சியில் வீட்டிற்கு வர அப்போது இவர்களுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்த யமுனா இவர்கள் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று உணர்ந்து அவர்களுக்காக கதவை திறந்து வைத்து ஹாலில் அமர்ந்திருந்தார்.

அதே நேரம் வீட்டின் வாசலில் வந்து நின்ற கால் டாக்சியில் இருந்து இறங்கிய மித்ராவும் ராகவும் வீட்டின் முன் பக்க கதவு திறந்திருப்பதை கண்டவர்கள் அந்நேரத்தில் வீதியில் நின்று கொண்டு பேய் முழி முழிக்க என்ன செய்வதென்று தெரியாமல் ராகவ் மித்ராவை பார்த்து

“ஏய் மித்து என்னடீ இது இவங்க யாரும் இன்னும் தூங்கல போலயே.”

என்றவன் மீண்டும்

“இப்ப மட்டும் நாம தாத்தாவை கூட்டிட்டு உள்ள போனோம் செமயா சிக்கிடுவோம்”

என்று கூற உடனே மித்ரா

“அட ச்சை கொஞ்ச நேரம் சும்மா இருடா”

என்று கூறியவள் சிறிது நேரம் யோசிக்க அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது அவர்கள் வீட்டின் பின்பக்க கதவின் டூப்ளிகேட் சாவி ஒன்று இவளிடம் இருப்பது உடனே ராகவை பார்த்து

“டேய் தாத்தாவை இறக்கு”

என்று கூறிவிட்டு கால்டாக்சியை கட் செய்து அனுப்ப அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அதே சமயம் ராகவ் தோல் மீது அரை போதையில் சாய்ந்து கிடந்த தாத்தா சீனிவாசன் போதையில் ஏதேதோ உளற ஆரம்பிக்க உடனே மித்ரா

“தாத்தா நாம வீட்டுக்கு வந்துட்டோம் சத்தம் போடாம வாங்க ”

என்று கூறி பின்பக்க வாசலுக்கு அழைத்துச் செல்ல உடனே ராகவ்

“ஏய்.. அங்க பூட்டி இருக்கும் டி”

என்று கத்தினான். உடனே மித்ரா

“ஏன்டா கத்துற எரும.. எரும..”

என்று திட்டியவள்

“எல்லாம் எனக்கு தெரியும் பின்னாடியே வாடா வெண்ண”

என்று கூறி இருவரையும் பின்பக்க கதவு வரை அழைத்து வந்தவள் மீண்டும் தன் தாத்தாவை பார்த்து

“தாத்தா கதவ திறந்து உள்ள போனதும் நேரா உங்க ரூமுக்கு போயி கப்சுப் னு படுத்துக்கனும்”

என்று கூற அதற்கு சீனிவாசன்

“நான் எப்படி போய் படுக்குறேன்னு மட்டும் பாரு டா தங்கம்”

என்று ராகவ் வை மித்ரா என்று நினைத்து பேச உடனே ராகவ்

“ம்க்கும்.. கிழிஞ்சுது.. யோவ் பெர்சு மித்ரா அங்க இருக்கா”

என்று கூறி அவர் தலையை மித்ராவின் பக்கம் திருப்ப உடனே சீனிவாசன் மித்ராவை பார்த்து

“எனக்கு தெரியாதாடா ராகவா”

என்று கூற

“ம்ஹூம்.. சுத்தம்..”

என்று கூறி மித்ரா தன் ஹான்ட் பேகில் வைத்திருந்த வீட்டின் பின்பக்க கதவின் கள்ள சாவியை எடுத்து அதை திறந்து உள்ளே நுழைய அப்போது சீனிவாசன் போதையில்

“நான் எதையோ மறந்துட்டேனே”

என்று ராகவ் மற்றும் மித்ராவை பார்த்து கூற உடனே அவர்கள் இருவரும்

“என்னத்த மறந்தீங்க..”

என்று கேட்க அதற்கு சீனிவாசன்

“அதான் தெரியல..”

என்று கூற உடனே மித்ரா

“ம்ஹூம் சுத்தம்.. சரி எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல பேசிக்கலாம் இப்ப போய் உள்ள படுங்க மாமாவுக்கு தெரிஞ்சுது அப்புறம் அவ்வளவு தான் தெரியும்ல”

என்று கூற இதை கேட்ட சீனிவாசன் உடனே

“ஆ.. ஞாபகம் வந்துடுச்சு”

என்றதும் உடனே ராகவ்

“என்ன அது”

என்று கேட்க அதற்கு ராகவிடம்

“என்னை கொஞ்சம் நிமிர்த்தி பிடி”

என்று கூற அவனும் அப்படியே செய்ய
முன் பக்கமாக சாய்ந்திருந்த தன் உடலை நிமிர்த்தி தலலயை உயர்த்தி இடுப்பின் இருப் பக்கத்திலும் கை வைத்து பின்பக்கமாக வளைந்த படி நின்றவர்

“டேய் விஸ்வநாதா… இங்க வாடா..”

என்று எல்லோருக்கும் கேட்கும் படி கத்த இவ்வளவு நேரம் அருகில் நின்றிருந்த மித்ராவும் ராகவும் இவர் கத்தியதை கேட்டு காற்றோடு காற்றாக பறந்து யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் பதுங்கி கொள்ள உடனே மித்ரா

“என்னடா இது இவரு இன்னைக்கு ஏழரைய கூட்டிடுவாரோ..??”

என்று கேட்க உடனே ராகவ்

“ஆமா இன்னைக்கு அவர் எத்தனை ரவுண்டு குடிச்சாரு”

என்று கேட்க அதற்கு மித்ரா

“மொத ரெண்டு ரவுண்டு தான் டா நான் ஊத்தி குடுத்தேன் அதுக்கு அப்புறம் தான் நாம அந்த கொம்பேரி மூக்கன் டாபிக் பேச ஆரம்பிச்சுட்டோமே அதுல நான் கவனிக்கல டா”

என்று கூற உடனே ராகவ்

“அடிப்பாவி..”

என்று கூறவும் யமுனா அங்கு வரவும் சரியாக இருந்தது.

1610645173526.jpg
 
Last edited:
அத்தியாயம் 13

கால் டாக்சியில் இருந்து இறங்கிய மித்ரா ராகவ் விடம் தாத்தாவை கீழ் இறக்க சொல்ல, அவன் அவரை‌ இறக்கி கொண்டிருந்த சமயம் இன்னும் வீட்டு வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருப்பதை பார்த்த மித்ரா வாசலை பார்த்தபடி ராகவ் வின் தோளில்


“டேய்.. டேய்..”


என்று தட்ட அப்போது தாத்தாவை இறக்கி கொண்டிருந்த ராகவ்


“ஏய்.. இருடீ நீ வேற.. இந்த தாத்தாவை மொத இறக்கிட்டு வரேன்..”


என்று கூறி சீனிவாசனை கீழ் இறக்கியவன் அவரை தாங்கி பிடித்தபடி மித்ராவை பார்த்து மூச்சிரைக்க


“ம்ஹூம் என்னா கெனம் கெனக்குது இந்த பெருசு உஷ்… ம்.. இப்ப சொல்லு மித்து எதுக்கு தட்டுன..??”


என்று கேட்க அதற்கு மித்ரா


“ஆ.. இன்னும் பொருமையா கேட்ருந்தா நேரா அத்தைகிட்டயே சொல்லிருக்கலாமே..”


என்று கூற உடனே ராகவ்


“எதே.. அம்மாவா எங்க.. எங்க..”


என்று தேட உடனே மித்ரா


“அங்க பாரு பக்கி”


என்று அவன் பின்னந்தலையில் அடித்துவிட்டு


“எப்படி வாசல்ல லைட்ட போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கன்னு”


என்று கூற அவள்‌ சொன்ன திசையை பார்த்த ராகவ்


“ஆமா மித்து.. அப்ப இன்னைக்கு நாம வசமா மாட்டுனோமா..”


என்று பயத்தில் கூற அப்போதென்று பார்த்து தாத்தா சீனிவாசன்


“என்ன..டா சொன்..னீங்க.. எனக்கு பயமா.. இ..ப்ப வர சொ..ல்லுடா.. உன் அ..ப்பன..”


என்று அரை போதையில் உளற இதை கேட்ட மித்ரா


“இந்த சீனு ஒன்னு போதும் நாம மாட்ட.. மொத இவரோட வாயை மூடுடா..”


என்று ராகவ்வை பார்த்து கூற அதற்கு ராகவ்


“அதை விடு மித்து.. இப்ப எப்படி உள்ள போகுறது”


என்று கேட்க அதற்கு மித்ரா


“அதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. ஃபாலோ மீ..”


என்று கூறி முன்னே செல்ல இருவரும் பின்பக்க வாசலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே வந்ததும் ராகவ்


“ஏய் மித்து.. பின்பக்க கதவு இந்த டைம்க்கு லாக் ஆகிருக்கும்ன்னு உனக்கு தெரியாதா..”


என்று கேட்க உடனே மித்ரா கதவின் அருகில் மேலும் கீழும் பார்த்துவிட்டு திரும்பி ராகவ் வை பார்க்க உடனே ராகவ்


“அய்யோ.. இவரை தூக்கிட்டு என்னால மேல எல்லாம் ஏறமுடியாது தாயே.. அதுக்கு நான் என் ஆத்தாக்காரி கிட்ட நாலு உதயையே வாங்கிக்குவேன்”


என்று கூறி தாத்தாவுடன் திரும்ப இதை பார்த்த மித்ரா


“அடச்சைக்.. உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்ல, கொஞ்சம் நில்லு வரேன்”


என்று கூறி கொஞ்சம் எட்டினார் போல் வாசலுக்கு இருப் புறங்களிலும் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பூந்தொட்டியில் இருந்து சாவியை எடுக்க அதை பார்த்து எதையோ புரிந்துக் கொண்ட ராகவ்


“ஏய்.. மித்து.. இது அந்த சாவி தானே..”


என்று கேட்க அதற்கு மித்ரா


“எஸ்.. இது தான் என் ரகசிய சாவி”


என்று ஏதோ பழங்கால அரண்மனையின் உள்ளே செல்லும் ரகசிய பாதையை கண்டு பிடித்தது போன்று பெருமைப்பட்டு கொண்டிருக்க மீண்டும் தாத்தா சீனிவாசன் அரை போதையில் ஏதோ உளற உடனே மித்ரா


“அய்யோ.. இந்த கெழத்த..”


என்று கூறி தலையில் கை வைத்தவள் சீனிவாசனின் முகத்தில் தட்டியபடி


“தாத்தா.. தாத்தா..”


என்று அழைக்க கண் திறந்த சீனிவாசனை பார்த்து


“தாத்தா நாம வீட்டுக்கு வந்துட்டோம் நான் சொன்ன மாதிரியே உள்ள போய் சத்தம் போடாம சைலன்ட்டா படுத்துடனும்.. என்ன புரியுதா..”


என்று கிளிப் பிள்ளையை கேட்பது போன்று கேட்க அதற்கு அவரும்


“ஆ.. சரிடா ராகவா”


என்று மித்ராவை பார்த்து கூற உடனே ராகவ்


“அய்யோ தாத்தா அது மித்ரா நான் தான் ராகவ்”


என்று கூறிய ராகவ் மித்ராவை பார்த்து


“ஆமா இவரு ஒழுங்கா போய் படுத்துடுவாரா, எனக்கு என்னமோ திக் திக்கு னு இருக்குது மித்து”


என்று கூற அதற்கு மித்ரா


“டேய் அதெல்லாம் தாத்தா கிங்குடா..”


என்று இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்க எப்போதோ உள்ளே சென்ற சீனிவாசன்


“டேய் விஸ்வநாதா வெளிய வாடா..”


என்று சத்தமாக குரல் கொடுக்க முன் பக்கத்தில் இருந்த யமுனா தன் மாமனார் சீனிவாசன் போட்ட சத்தத்தை கேட்டு குரல் வந்த திசைக்கு வர‌ அங்கே இருந்த சீனிவாசன் மீண்டும்


“டேய் விஸ்வநாதா இப்ப நீ வரியா இல்ல நான் வரட்டா.. உன்ன பார்த்தா நான் பயப்படுவேனா.. ஆமாடா.. இன்னைக்கு நான் புல்லா குடிச்சிருக்கேன் டா.. என்னடா பண்ணுவ..”


என்று போதையில் கத்திக் கொண்டிருக்க அங்கே வந்த யமுனா தன் மாமனாரிடம் சென்று


“மாமா, என்ன பண்றீங்க..??”


என்று மெல்லமாக கேட்க அதற்கு சீனிவாசன்


“என்னம்மா நீ கூட பயப்படுற.. நீ பயப்படாத மா.. நீ பயப்படாத.. நான் இருக்கேன்..”


என்று கூற அதே நேரம் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்த விஸ்வநாதன் பக்கத்தில் தன்‌ மணாளினியை தேட அவர் அங்கு இல்லை. உடனே சத்தம் வந்த திசையை நோக்கி கீழே வர, அதேசமயம் தன் மணாளன் கீழே வரும் சத்தத்தை உணர்ந்த யமுனா மீண்டும் சீனிவாசனிடம் சென்று


“மாமா.. என்ன பண்றீங்க.. அவர் வந்துடப்போறாரு..”


என்று கூற அதற்குள் அங்கு வந்த விஸ்வநாதன்


“என்ன இங்க சத்தம்..??”


என்று கேட்டார். அதற்கு சீனிவாசன்


“என்னடா கத்துற.. அப்பா என்கிற மரியாதை இல்லாம கத்துற.. இல்ல இங்க நான் உனக்கு அப்பனா இல்ல எனக்கு நீ அப்பனா..”


என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்


“நீங்க தான் பா எனக்கு அப்பா.. ஆனா இந்த நேரத்துல எதுக்கு நீங்க சத்தம் போட்டுட்டு இருக்கீங்கன்னு தான் கேட்டேன்.”


என்று மரியாதையுடன் மெல்லிய குரலில் கேட்க, இதை கேட்ட சீனிவாசன்


“ஆ.. அது.. இப்படி மரியாதையா குரலை தாழ்த்தி பேசனும். என்னமோ நீ எனக்கு அப்பன் மாதிரி குரலை உயர்த்தி உயர்த்தி பேசற.. என்ன சென்னைக்கு வந்ததும் எல்லாம் மறந்துப் போயிடுச்சா நான் யாருன்னு தெரியும்ல.. லட்சுமிபுரம் ஜமின் டா..”


என்றவர் அதை கூறியபடியே தோளில் இருந்த அங்கவஸ்த்திரத்தை எடுத்து தலையில் கட்டியபடி மீண்டும்


“என்னை பார்த்தாலே அவன் அவன் ஊருக்குள்ள அலருவானுங்க, ஆனா நீ என்னடான்னா என் முன்னாடியே குரல உயர்த்தி பேசுற..”


என்று இவர் இங்கு கூறிக் கொண்டிருக்க அங்கே மித்ரா ராகவ் வின் முதுகில் சுளீர் என ஒன்று வைத்து


“தாத்தா கெத்து டா.. பாரேன் எப்படி கலக்குறாரு..”


என்று கூற அதற்கு ராகவ்


“ம்ஹூம்.. காலைல மட்டும் பெருசுக்கு போதை தெளியட்டும் அப்புறம் பாரு வேடிக்கைய”


என்று கூற உடனே மித்ரா


“டேய் அது அப்போ பார்த்துக்கலாம் இப்ப என்ஜாய் பண்றா”


என்று கூலாக கூற இதை கேட்ட ராகவ்


“என்ன டீ இவ்ளோ கூலா சொல்ற நாம தான் அவருக்கு ஊத்தி கொடுத்தோம் னு மட்டும் தெரிஞ்சுது அப்புறம் நம்ம சோலி... காலி...”


என்று கூற அதற்கு மித்ரா


“ம்ச்..அ.. அதெல்லாம் அவங்களுக்கு தெரியாது நீ ப்ரீயா விடு மச்சி”


என்று கூறிவிட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டு சண்டையை வேடிக்கை பார்க்க, விஸ்வநாதன் தன் தந்தையை பார்த்து


“அப்பா… என்ன பண்ணி வச்சுருக்கீங்க.. போய் உங்க ரூம்ல படுங்க..”


என்று கொஞ்சம் காட்டமாக கூற இதை கேட்ட சீனிவாசன்


“ம்.. என்னடா பண்ணேன்.. என்ன பண்ணேன்.. லைட்டா…. ஒரு நாலு பெக் சரக்கை உள்ள விட்டேன். அது குத்தமா..”


என்று கேட்க இதை கவனித்த மித்ரா அருகில் நின்றிருந்த ராகவ்வை பார்த்து


“டேய்.. தாத்தா ஒரு பெக் தான் குடிச்சாருன்னு சொன்ன.. இப்ப அவரு என்னடான்னா நாலுன்னு சொல்றாரு..”


என்று கேட்க அதற்கு ராகவ்


“அய்யோ.. நான் ஒரு பெக் முடிக்குறத்துக்குள்ள அவரு நாலு பெக் முடிப்பாருன்னு நான் என்ன கனவா கண்டேன்..”


என்று கூற இதை கேட்ட மித்ரா


“ம்.. உன்னை…”


என்று கூறி முறைத்துவிட்டு மீண்டும் தன் கவனத்தை தாத்தாவிடம் செலுத்தினால். அங்கே சீனிவாசன் தன் மகனை பார்த்து


“ஏன்டா.. உனக்கு எங்கயாவது பெத்த அப்பன்‌ மேல கொஞ்சமாவது பாசம் இருக்காடா..???”


என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்


“என்னப்பா பேசுறீங்க.. என் பாசத்துல நீங்க என்ன குறைய கண்டீங்க..”


என்று கேட்க உடனே சீனிவாசன்


“என்ன குறைய கண்டேனா.. ம்ஹூம்.. உனக்கு கல்யாணம் ஆனதும் உன் ஹனிமூனுக்கு நீ ஆஸ்திரேலியா போறியா பிரிட்டன் போறியான்னு கேட்டுக் கேட்டு டிக்கெட் போட்டு ஹனிமூன் அனுப்பி வச்சேன்.. ஆனா நீ என்னோட கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூனுக்கு எங்கடா டிக்கெட் போட்ட..?? சொல்லு..”


என்றவர் மேலும் தன் மகனை பார்த்து


“ஒரு அப்பன் மேல பாசம் இருக்குற பிள்ளையா இருந்தா நீ என்ன எங்க அனுப்பி வச்சுருக்கனும் இல்ல நீ எங்க அனுப்பி வச்சிருக்கனும்ன்னு கேட்குறேன்.. ஒரு டார்ஜிலிங்குக்கோ இல்ல குல்மார்க்குக்கோ அனுப்பிருக்கனும்.. ம்ஹூம்.. ஆனா நீ எங்க அனுப்புன காசி.. ராமேஸ்வரம் ன்னு அனுப்பி வச்சிருக்க..”


என்றவரை பார்த்து விஸ்வநாதன்


“அப்பா.. அது உங்க அறுபதாம் கல்யாணம்ப்பா..”


என்று கூற இதை கேட்ட சீனிவாசன்


“ஆ.. அறுபதாம் கல்யாணம் னா அதுவும் கல்யாணம் தானே.. இல்ல இதுக்கு இங்க தான் போகனும்ன்னு எதாவது ரூல்ஸ் இருக்கா என்ன..?? அந்த காலத்துல எங்களோட ஒரு ஒரு கல்யாண நாளுக்கும் உன்னையும் உன் தங்கச்சியையும் வீட்ல விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் கோவிலுக்கு போறோம் கொளத்துக்கு போறோம்ன்னு சொல்லிட்டு எங்க ஹனிமூன ஸ்டேட்டு ஸ்டேட்டா போய் லைப்ப என்ஜாய் பண்ணோம்டா.. அப்படியா பட்ட என்ன இப்படி காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் அலைய விட்டுட்டியேடா.. படுபாவி.. படுபாவி..”


என்று கூற இதை கேட்ட விஸ்வநாதன் மார்பில் கை வைத்தபடி


‘அடப்பாவி மனுசா.. அப்ப கோவிலுக்கு போறேன் யாத்திரைக்கு போறேன்னு சொல்லிட்டு போனதெல்லாம் இதுக்கு தானா..’


என்று மனதில் நினைக்க அதே நேரம் தன் மருமகளை பார்த்த சீனிவாசன்


“இந்த மாதிரி ஒரு ரசனை இல்லாத ஒருத்தன உன் தலையில கட்டி வச்சு உன் வாழ்க்கையையே வீணாக்குனதுக்கு என்ன மன்னிச்சிடும்மா”


என்று கூற இதை கேட்டதும் தன் வாழ்க்கையை பின்நோக்கி நினைத்து பார்த்த யமுனாவின் தலைக்கு மேல் கொசுவத்தி சுருள் வட்டமிட்டது


ஒரு நாள் காலை யமுனா தன் மணாளனை பார்த்து


“என்னங்க தலைவர் படம் பாபா ரிலிஸ் ஆகிருக்காமுங்க ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாம் வர்றீங்களா”


என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்


“என்னம்மா பேசுற.. இப்ப படத்துக்கு போனா எப்படியும் வர சாயந்திரம் ஆகிடும் ஸ்கூலுக்கு போன பசங்க வந்து அம்மா எங்கன்னு தேடுனா என்ன பண்றது. அதெல்லாம் வேண்டாம் இன்னொரு நாள் போகலாம்..”


என்று கூறிவிட்டு விறுவிறுவென கிளம்பி அலுவலகத்திற்கு சென்றார்.. இது போன்று எதை எப்போது கேட்டாலும் ஏதாவது சாக்கு கூறி இத்தனை வருடங்களாக ஹனிமூனிற்கு பிறகு இருவர் மட்டும் ஒன்றாக சேர்ந்து வெளியில் சென்ற நாட்கள் என்று யோசித்து பார்த்தால் ஒன்று கிடைப்பது கூட அரிது என்றே கூறவேண்டும். இவைகளை நினைத்து பார்த்து முடித்த யமுனாவின் தலைக்கு மேல் தெரிந்த கொசுவத்தி சுருள் மறைய ஏகப்போக உரிமையுடன் தன் மணாளனை பார்த்து முறைத்தார் யமுனா.. உடனே இதை கவனித்த விஸ்வநாதன்


‘அய்யோ என்ன நினைச்சாலோ தெரியலையே இப்படி முறைக்கிறாளே.. இன்னைக்கு ராத்திரி நிம்மதியா தூங்குனா மாதிரி தான்..’


என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க அப்போது யமுனா தன் மணாளனை முறைத்து பார்த்தப்படி


“எத்தனை தடவை நான் வெளியே போகலாம்ன்னு கேட்டிருப்பேன் ஆனா நீங்க ஒரு தடவையாவது கூட்டிட்டுப் போகியிருக்கீங்களா ஆனா மாமாவை பாருங்க அத்தையை எங்கலாம் கூட்டிட்டு போகிருக்காருன்னு”


என்று கூற சரியாக மீண்டும் சீனிவாசன் யமுனாவை பார்த்து


“அதை விடும்மா இவன் இன்னைக்கு பண்ண காரியம் உனக்கு தெரிஞ்சுதா?”


என்று கேட்க உடனே யமுனா


“என்ன மாமா பண்ணாரு”


என்று கேட்க அதற்கு சீனிவாசன்


“ம்ஹூம்.. இவனை விட ரெண்டு வயசு பெரியவன் அந்த ஜெகன்நாதன் அவனே கூச்சப்படாம அவன் பொண்டாட்டி கூட ஸ்டேஜ் ஏறி சல்சா டான்ஸ் ஆடுறான் ஆனா இவன்..”


என்று கூற மீண்டும் யமுனா தன் மணாளனை பார்த்து முறைக்க இவர்கள் போடும் சத்தம் கேட்டு இம்முறை அர்ஜூன் கீழே வந்து


“என்ன இங்க இவ்வளவு சத்தம்..??”


என்று கேட்க உடனே சீனிவாசன்


“என்னடா என்ன..?? ஆளாளுக்கு என் முன்னாடி குரலை உயர்த்தி பேசுறீங்க இனிமேல் இந்த வீட்ல என் குரல் மட்டும் தான் கேட்கனும் வேற யாராவது குரல உயர்த்தி பேசுனீங்க..”


என்று இவர் இங்கு அர்ஜூனிடம் பேசிக் கொண்டிருக்க அங்கு மறைந்து நின்றுக் கொண்டிருந்த மித்ரா அர்ஜூனை முறைத்து பார்த்தப்படி


“வந்துட்டான்டா கொம்பேரி மூக்கன்..”


என்று மனதில் நினைக்க ராகவ் மித்ராவை பார்த்து


“ஏன் மித்து இங்க இவ்வளவு நடந்துட்டு இருக்கு ஆனா இன்னும் இந்த ராஜமாதா ஜானகிதேவியை ஆள காணோம் பாத்தியா..”


என்று கூற அதற்கு மித்ரா


“ஆமாடா.. ஒருவேளை வந்ததும் பிரசர் மாத்திரையை போட்டுட்டு படுத்துருக்குமோ.. எப்படியோ அது வராததும் நல்லது தான்”


என்று கூற உடனே ராகவ்


“ஏன் மித்து அப்படி சொல்ற..”


என்று கேட்க அதற்கு மித்ரா


“டேய்.. கொஞ்சமாவது மண்டையில இருக்க மசாலாவை யூஸ் பண்ணுடா.. அந்த ராஜமாதா மட்டும் இங்க இருந்திருந்தா இந்த தாத்தா இப்படியெல்லாம் பேசிருப்பாரா சொல்லு..”


என்று கேட்க அதற்கு ராகவ்வும்


“ஆமா நீ சொல்றதும் சரி தான். இந்த பெருசு மட்டும் அவங்கள பார்த்து இருந்துது பார்த்த அடுத்த செக்கண்டே ஏறுன போதை எல்லாம் இறங்கி இருக்கும்..”


என்று கூற இருவரும் அதை நினைத்து சிரித்தனர். அதே சமயம் சீனிவாசன் அர்ஜூனை பார்த்து


“நீ எல்லாம் எனக்கு ஒரு பேரனாடா..?? அங்க நிக்குறான் பாரு என் சிங்க குட்டி ராகவ்”


என்று அங்கு மறைந்து நின்றிருந்த ராகவை கை காட்டி


“என்னை பாருக்கு கூட்டிட்டு போயி ஊத்தி குடுத்து நான் தனியா குடிச்சா பீல் பண்ணுவேன்னு எனக்கு கம்பெனியும் குடுத்து எப்படி என்னை பார்த்துக்கிட்டான் தெரியுமா..?? நீயும் இருக்கீயே..??”


என்று கூற இதை கேட்ட யமுனா, அர்ஜூன், விஸ்வநாதன் என மூவரும் ராகவ் இருக்கும் திசையை பார்க்க


“அய்யய்யோ... நான் இல்ல...”


“என்று தாவி குதித்து அங்கிருந்து முன் பக்கமாக வீட்டினுள் புகுந்தவன் தன் அறைக்குள் சென்று தாளிட்டு படுத்தான்.. ராகவ் தாவி குதித்து ஓடியதை பார்த்த மித்ரா சிரித்துக் கொண்டே


“ஹா.. ஹா.. ஹா.. சில்லி பாய்..”


என்று கூற மீண்டும் சீனிவாசன்


“என் பேத்தி மட்டும் என்ன குறைச்சளா அவளும் தான் எனக்கு..”


என்று கூறி முடிப்பதற்குள் யமுனா


“எதே.. அவளும் குடிச்சாளா.. எடு அந்த தொடப்பக்கட்டைய”


என்று கூற உடனே மித்ராவும்


“அய்யய்யோ… நானும் இல்ல…”


என்று கூறிவிட்டு ராகவ்வை போலவே தாவி குதித்து தன் அறையை நோக்கி ஓட உடனே சீனிவாசன்


“ச்ச.. ச்ச.. என் பேத்தி தங்கம். அவ ஒரு சொட்டு கூட குடிக்கல மருமகளே.. அவ தான் என்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான்னு சொல்ல வந்தேன்.. அவங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு தூண் மாதிரி இருக்கும் போது இவனும் இருக்கானே..”


என்று கூறியவர் இப்போது தன் மகனை பார்த்து


“அப்புறம் நீ..


என்றவர் விஸ்வநாதனை பார்த்து


“அந்த பார்ட்டில நானும் ஆடட்டுமான்னு கேட்டதுக்கு நீ என்னடா சொன்ன..”


என்று ஆட்காட்டி விரலை தாடையில் வைத்து யோசித்தவர்


“ஆ.. ஞாபகம் வந்துடுச்சு.. அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஆடுறேன்னு சொல்லி தடுக்கி விழப்போறீங்க நீங்க சும்மா உட்காருங்கன்னு தானே சொன்ன..


என்றவர் மீண்டும்


“ஆனா இப்ப பாருடா நான் எப்படி ஆடுறேன்னு”


என்று கூறியவர் தன் மொபைலை எடுத்து அதை ஏதோ க்ளிக் செய்ய தீடீரென


“ஹே.. ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட ஊ..

ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட ஊ..

ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட ஊ..

ரக்கிட்ட ரக்கிட்ட ரக்கிட்ட…


ஹே என்ன வேணா நடக்கட்டும்

நான் சந்தோசமா இருப்பேன்

உசுரு இருக்கு வேறென்ன வேணும்

உல்லாசமா இருப்பேன்..”


என்ற பாடல் ஒலிக்க அதை கேட்டு நடனமாடியவர் ரக்கிட்ட ரக்கிட்ட ஊ.. என்ற வார்த்தை வரும்போது ஒரு சுற்று சுற்ற அங்கேயே தலை சுற்றி கீழே விழுந்தார். இதை பார்த்த அர்ஜூன்


“அப்பா இவரை கூட்டிட்டு போய் கெஸ்ட் ரூம்ல படுக்க வைங்க விடுஞ்சதும் இவரை நான் கவனிச்சுக்குறேன்.”


என்று கூறி தன் அறையை நோக்கி சென்றான். அதேபோல் விஸ்வநாதனும் தன் தந்தையை எழுப்பி கெஸ்ட் ரூமுக்குள் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டு திரும்ப, விஸ்வநாதனின் கையை பிடித்த சீனிவாசன்


“டேய்.. விஸ்வா.. எனக்கு எல்லாம் தெரியும் டா.. உனக்கு போன் பண்ணதுக்கு அப்புறம் ஜோசியர் எனக்கும் போன் பண்ணாரு.. அர்ஜூன் மித்ரா ஜாதகம் பொருந்துனது பத்தியும் சொன்னாரு.. ஆனா நீ அதற்கு பதிலா விக்ரம் ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னதையும் சொன்னாரு.. எனக்கு தெரியும் டா.. எங்க நம்ம ஆசைக்காக மனப் பொருத்தம் இல்லாம கல்யாணம் செய்து வச்சா தன் மகனோட வாழ்க்கை வீணாகிடுமோன்னு உன் பொண்டாட்டியோட பயத்தால தானே நீ அர்ஜூன் மித்ரா கல்யாணத்தை விரும்பள.. ஆனா என்னைப் போலவே அவங்க ரெண்டு பேரோட கல்யாணம் நடக்கனும்ன்னு நீ எவ்வளவு ஆசைப்பட்ட ன்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கறியா..??


என்று இந்த திருமண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து தன் மகன் முன்பு பேச நினைத்த அனைத்தையும் இன்று குடித்துவிட்டு போதையில் உளறியபடி கேட்க தன் மனதில் உள்ளதை கண்ணாடி பிம்பம் போல கூறிய தன் தந்தையின் வார்த்தைகளை கேட்ட விஸ்வநாதனின் கண்கள் இரண்டும் ஒரு நிமிடம் கலங்க தன் தந்தையை பார்த்து


“அப்பா.. அது வந்து..”


என்று ஏதோ கூற வர மீண்டும் சீனிவாசன் தன் மகனிடம்


“நீ எதுவும் பேசாத டா இப்ப நான் நினைச்சா கூட அர்ஜூன் மித்ரா கல்யாணத்தை நடத்திக் காட்டுவேன் அது உனக்கும் தெரியும் தானே.. இல்ல ஒருவேளை இவனுக்கு தான் வயசாகிடுச்சே இவனால என்ன பண்ண முடியும்ன்னு நெனச்சிட்டியா..??”


என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்


“ம்.. ஆமாப்பா உங்களால முடியும்ன்னு எனக்கு தெரியும்.. ஆனா..”


என்று ஆரம்பிக்க அதற்குள் சீனிவாசன்


“சரி டைம் ஆச்சு நீ போய் படு.. உன் பொண்டாட்டி காத்துட்டு இருப்பா..”


என்று கூற அவரும் மறுவார்த்தை எதுவும் பேசாது தன் அறைக்கு சென்று படுக்க ஏனோ தன் தந்தை பேசியதைக் கேட்ட பிறகு அன்றிரவு முழுவதும் அவருக்கு உறக்கம் வரவில்லை.


மறுநாள் காலை..


நேற்று செய்த செயல்களுக்கு அப்படியே மாறாக விபூதி பட்டையும் காதில் ஒரு சாமந்தி பூவுமாக ஒன்றும் தெரியாதவர் போல தன் மணாளினியுடன் சோபாவில் வந்து அமர்ந்திருந்தார் சீனிவாசன் அவர்களுக்கு அருகிலேயே ராகவ்வும் நியூஸ் பேப்பரை படிப்பதை போல சீனிவாசனை பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் ஜாக்கிங் முடித்துவிட்டு உள்ளே நுழைந்த மித்ராவையும் அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட ராகவ்


“மித்து, அங்க பாரு..”


என்று கூற அவளும் அங்கு அமர்ந்திருந்த சீனிவாசனை பார்க்க குப்பென சிரிப்பு வந்தது அவளுக்கு உடனே ராகவ்வை பார்த்து


“என்னடா இது வேஷம்..”


என்று கேட்க அதற்கு ராகவ்


“ஆமா மித்து, காலையில போதை தெளிஞ்சதும் நேத்து ராத்திரி நடந்தது எல்லாம் ஞாபகம் வர அதுல இருந்து தப்பிக்க போட்ட வேஷம் தான் இந்த சாமியார் வேஷம்..”


என்று இப்படி அவன் கூறிக் கொண்டு இருக்கையில் மேலிருந்து படிகளில் இறங்கிய விஸ்வநாதனை பார்த்த ராகவ் தொண்டையை லேசாக செருமியபடி தன் தந்தை வருவதை மித்ராவிற்கு உணர்த்த, அவளும் வேடிக்கை பார்க்க தயாரானாள். காலை டிபன் உண்ண டைனிங் டேபிளுக்கு வந்த விஸ்வநாதனை பார்த்து


“குட் மார்னிங் மை சன்..”


என்று சீனிவாசன் கூற இதை கேட்ட விஸ்வநாதன் அவர் முன்னே வந்து தன் குரலை சற்று தாழ்த்தி


“குட் மார்னிங் பா..”


என்று கூற இதை சற்று வினோதமாக பார்த்த ஜானகி


“என்னடா ஆச்சு உனக்கு, இன்னைக்குன்னு பார்த்து இவருக்கு இவ்வளவு மரியாதை தர..”


என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்


“என்னம்மா அப்படி கேட்குறீங்க அப்பா முன்னாடி புள்ள குரலை உயர்த்தி பேச கூடாது, உங்களுக்கு தெரியாதா..?? அதுவும் லட்சுமிபுரம் ஜமின்ந்தார் அய்யாவுக்கு மரியாதை தராம எப்படி..??”


என்று கேட்டுவிட்டு தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தபடி


“என்னப்பா நான் சொல்றது சரி தானே..??”


என்று கேட்க அவரோ தலையை வெவ்வேறு திசைகளில் ஆட்டி ஆட்டி உம் கொட்டியபடி தன் மணாளினிக்கு தெரியாதவாறு எப்படியோ சமாளிக்க, நேராக சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தார் விஸ்வநாதன். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ராகவும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சைலன்டாக சிரித்துக் கொண்டனர். அதே வேளை விஸ்வநாதன் கொடுத்த விளக்கத்தில் குழம்பிப்போன ஜானகி


‘என்ன பேசிட்டு போறான் இவன்..??’


என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க மீண்டும் ஜானகி விஸ்வநாதனை பார்த்து


“விஸ்வா, என் பிரண்ட் துர்காவை உனக்கு தெரியும்ல, அதான்பா அந்த ஜட்ஜ் பொண்டாட்டி”


என்று கூற அதற்கு விஸ்வநாதன்


“அவங்களுக்கு என்னம்மா..”


என்று கேட்க உடனே ஜானகி


“அது ஒன்னும் இல்லப்பா அவளுக்கு இந்த மாசம் அறுபதாம் கல்யாணம் வருது அதான் ஒரு சர்ப்ரைஸ்சா நீ எங்க அறுபதாம் கல்யாணத்துக்கு ஆன்மீக சுற்றுலா புக் செய்து கொடுத்தா மாதிரி அவளுக்கும் புக் செய்து தர முடியுமான்னு கேட்கனும்ன்னு இருந்தேன்”


என்று கேட்க இதை கேட்ட விஸ்வநாதன்


“ஏன்மா அறுபதாம் கல்யாணத்துக்கு ஆன்மீக சுற்றுலா தான் போகனுமா என்ன..?? நான் வேணும்னா டார்ஜிலிங் இல்ல குளுமானாளிக்கு டிக்கெட் போட்டு தரேனே..”


என்று கூற இதை கேட்ட ஜானகி


“ச்சீ.. ச்சீ.. என்னடா பேசுற.. இந்த வயசுல போய் யாராவது அங்க எல்லாம் போவாங்களா..”


என்று கேட்க அப்போது அங்கு சாம்பார் கிண்ணத்தோடு வந்த யமுனா தன் மணாளனை முறைத்தபடி சாம்பார் கிண்ணத்தை சடாரென அங்கு வைத்துவிட்டு கிச்சனுக்குள் புகுந்தார். இதை பார்த்த விஸ்வநாதன்


‘இவ வேற.. நேத்து ராத்திரியில இருந்து முறைச்சிட்டே இருக்கா’


என்று மனதில் நினைத்தபடி உணவு உண்ண ஆரம்பித்தார். இவை அனைத்தையும் பார்த்த இருவரும் இடைவிடாது சிரித்துக் கொண்டிருக்க இவர்களை பார்த்த ஜானகி


“என்னடா நானும் அப்போதிலிருந்து பார்த்துட்டு இருக்கேன் இப்படி சிரிச்சுட்டு இருக்கீங்க.. சொன்னா நாங்களும் சிரிப்போம்ல”


என்று கேட்க அதற்கு ராகவ் சிரித்துக் கொண்டே


“சொல்றேன் பாட்டி ஆனா அதுக்கு முன்னாடி நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்றியா..??”


என்று கேட்க அதற்கு பாட்டியும் சரியென்று கூற உடனே ராகவ்


“ஆமா பாட்டி நீயும் தாத்தாவும் உங்க ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் ஒவ்வொரு கோவிலுக்கா போவிங்களாமே இதுவரைக்கும் அப்படி எந்தெந்த கோவிலுக்கு போய் இருக்கீங்க..??”


என்று கேட்க இதை கேட்டு ஜானகி ஒரு நிமிடம் லேசாக தடுமாற அப்போது மித்ரா


“என்ன ஆச்சு பேபி மா..”


என்று கிண்டலாக கேட்க உடனே ஜானகி சில வினாடிகளில் யோசித்து சில கோவில்களின் பெயர்களை கூற மீண்டும் ராகவ்


“அப்ப நீங்க ரெண்டு பேரும் இங்க எல்லாம் போய் இருக்கீங்க அப்படிதானே”


என்று அழுத்தி கேட்க ஜானகிக்கு பின்னாலிருந்து சீனிவாசன் வேண்டாம்டா என்றவாறு கையை ஆட்டி ஆட்டி கூற அதை பார்த்த இருவரும் சிரித்தனர். இதற்கிடையில் இதை கேட்ட ஜானகி


“என்னடா நான் என்னமோ பொய் சொல்றா மாதிரி கேட்குற ம்.. இந்தா வேணும்னா உன் தாத்தா பக்கத்துல தானே இருக்காரு அவரையே கேட்டுக்கோ..”


என்று தன் கணவனை பார்த்து


“என்னங்க நீங்களே சொல்லுங்க..”


என்று கூற உடனே ராகவ்


“அவரு தான் எப்பயோ சொல்லிட்டாரே..”


என்று கூறி நேற்று சீனிவாசன் பேசிய அனைத்தையும் தன் மொபைலில் படம் பிடித்து வைத்திருக்க அதை ஜானகியிடம் காண்பித்து பார்க்க சொன்னான். அதில் தன் கணவன் போதையில் போட்ட ஆட்டம் வரை அனைத்தையும் பார்த்த ஜானகி அருகில் அமர்ந்திருந்த தன் மணாளனை முறைத்தபடி சடாரென எழுந்தவர் அவரை முறைத்தபடி


“உள்ள வாங்க உங்களுக்கு இருக்கு..”


என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, இதை பார்த்த ராகவும் மித்ராவும் சிரிக்க உடனே ராகவ் தாத்தாவை பார்த்து


“தாத்தா இன்னைக்கு உன் நிலமை என்ன ஆகப் போகுதோ யாருக்கு தெரியும்..”


என்று கூற இதை கேட்ட சீனிவாசன்


“டேய்.. நான் ஒன்னும் உன் அப்பன் மாதிரி இல்ல பொண்டாட்டிகிட்ட மாட்டிட்டு முழிக்க, நான் லட்சுமிபுரம் சீனு டா.. அந்த காலத்துல நான் பார்த்தாலே பத்து பொண்ணுங்க என் பின்னாடி வரும் அப்படியாபட்டவனுக்கு இந்த கிழவியை சமாளிக்குறதா கஷ்டம்.. ஜஸ்ட் வெயிட் அன்ட் வாட்…”


என்று கூறி முடிப்பதற்குள் உள்ளிருந்து


“இன்னும் உள்ள வராம என்ன பண்றீங்க”


என்று ஜானகி குரல் கொடுக்க உடனே சீனிவாசன்


“இதோ வந்துட்டேன்ம்மா..”


என்று கூறி அவசர அவசரமாக சென்றார். இங்கு அவர் சொன்ன‌ அனைத்தையும் கேட்டு வாய் பிளந்த இருவரும் சிறிது வினாடிகளில் வாய்விட்டு சிரித்தனர். அதேவேளை மித்ரா ராகவை பார்த்து


“டேய் மாமா அடுத்து நம்மள நோண்ட ஆரம்பிக்குறத்துக்குள்ள அப்படியே கழண்டிப்போம்”


என்று கூறியதும் ராகவ் தன் அறைக்கு செல்ல மித்ராவின் மொபைல் ஒலித்தது. அதை எடுத்தவள் காலர் ஐடியில் பெயரை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்று சிரித்தபடியே அதை எடுத்துக் கொண்டு பின்பக்க தோட்டத்திற்கு சென்று அமர்ந்தவள் சிரித்துக் கொண்ட


“ஹலோ.. சொல்லு விக்கு”


என்று கூற இவளது சிரிப்பு சத்தத்தை கேட்டவன் பேச வந்ததை மறந்து அவளது சிரிப்பை ரசித்து கொண்டிருக்க மறுமுனையில் இருந்து பதில் ஏதும் வராததால் மீண்டும் மித்ரா


“ஹலோ.. விக்கு.. லைன்ல இருக்கீயா..”


என்று கேட்க உடனே விக்ரம்


“ஹான்.. இருக்கேன் மித்து.. என்ன ஆச்சு காலையிலயே இவ்வளவு சந்தோசமா இருக்க..”


என்று கேட்க மித்ராவும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தன் தாத்தா செய்த அனைத்தையும் கூற மறுமுனையில் இதை கேட்ட விக்ரமும் சிரித்தான். அதே நேரம் அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்த அர்ஜூன் சிரிப்பு சத்தம் கேட்டு பின்பக்கம் வந்து பார்க்க அங்கு மித்ரா போனில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் தன் அனல் தெறிக்கும் பார்வையால் அவளை பார்த்தபடி அவளுக்கு முன் வந்து நிற்க அவனை கண்டதும்


“நான் அப்புறம் கூப்பிடுறேன்..”


என்று கூறி அழைப்பை‌ துண்டித்தாள் மித்ரா. அதை கவனித்தவன் மித்ராவை பார்த்து


“யார் கிட்ட பேசிட்டு இருக்க..??”


என்று கேட்க அதற்கு அவள்


“விக்ரம் கிட்ட.., ஏன் என்னாச்சு..??


என்று கேட்க உடனே அர்ஜூன்


“விக்ரம் கிட்டயா..”


என்றவன் மீண்டும் அவளை பார்த்து


“கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பேசி பேசி அவன் மனசுல ஆசைய வளர்த்துடாத அப்புறம் கடைசி நேரத்துல உன் அம்மா ஒருத்தரை நம்பவச்சு ஏமாத்தி ஒரு உயிர் போன மாதிரி..”


என்று கூறும்போதே அவன் கூறியதை கேட்ட மித்ராவிற்கு கோபம் வர


“மைன்ட் யுவர் வேர்ட்ஸ்.. எங்க அம்மா யாரையும் நம்ப வச்சு ஏமாத்தல.. அதேபோல என்னை பத்தியோ இல்ல எங்க அம்மாவ பத்தியோ பேசுற உரிமை உங்களுக்கு கிடையாது..”


என்று அர்ஜூனை நேருக்கு நேர் பார்த்து கூற இதை கேட்ட அர்ஜூனின் முகம் இன்னும் சிவக்க


“என்னடி சொன்ன..”


என்று கூறி கை ஓங்க, அதற்குள் அதை சுதாரித்துக் கொண்ட மித்ரா ஓங்கிய அர்ஜூனின் கையை பிடித்து மடக்கியவள்


“மேல கை வைக்குற வேலை வச்சுக்காதீங்க அப்புறம் அவ்வளவுதான்”


என்று கூறி அவன் கையை விட்டுவிட்டு நேராக ஹாலுக்குள் நுழைய அங்கே அலுவலகத்திற்கு கிளம்பிய விஸ்வநாதன் மித்ராவை பார்த்து


“அம்மா மித்ரா, இன்னைக்கு மதியம் ஒரு 02:00 மணிக்கு ஆபிசுக்கு வந்துடுறியாம்மா உன்கிட்ட ஒரு முக்கியமான விடயத்தை பத்தி பேசனும்”


என்று கூற அவளும்


“ஹான்.. சரி மாமா நான் வந்துடுறேன்”


என்று கூறிவிட்டு ஒன்றும் நடக்காதது போல தன் அறையை நோக்கி சென்றாள். ஆனால் அங்கே குமுறும் எரிமலை ஒன்று வெடிக்க தயாராகும் நிலையில் அர்ஜூனின் மனம் இருக்க அவள் சென்ற திசையை பார்த்தவன்


“எனக்கு உரிமை இல்லைனா சொன்ன..?? இருடி நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்..”


என்று கூறியவன் அங்கிருந்து நகர்ந்து அலுவலகத்திற்கு சென்றான்.


1610645173526 (1).jpg
 
அத்தியாயம் 14

மதியம் 12 மணி..

விஸ்வநாதன் மித்ராவை அழைத்து வர கார் அனுப்பி இருந்தார். அதில் ஏறி புறப்பட்டவள் சில நிமிடங்களில் ஏழு மாடி கட்டிடம் கொண்ட அந்த பிரம்மாண்ட அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.

உள்ளே நுழையும் போதே அவ்வலுவலகத்தின் மேலே எஸ்.வி.மோட்டார்ஸ் என்றும் அதற்கு பக்கவாட்டில் உள்ள ஒரு பதாகையில் எஸ்.வி. காட்டன் & பர்னிச்சர்ஸ், எஸ்.வி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் & இன்ட்டீரியர்ஸ், எஸ்.வி. எலக்ட்ரானிக்ஸ், எஸ்.வி. கிராபிக்ஸ் டிசைனர்ஸ், எஸ்.வி. சாப்ட்வேர்ஸ் மற்றும் எஸ்.வி. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர்

என அவர்களுடைய அனைத்து கம்பெனி பெயர்களும் அதில் இடம் பெற்றிருக்க அதை கடந்து உள்ளே சென்றவளுக்கு வலது புறத்தில் ஒரு ப்ரீமியம் லுக்கில் ரிசப்ஷன் அமைந்திருக்க அதனுள் இரு அழகிய பெண்கள் வரும் அழைப்புகளை ஏற்று அதற்கு பதில் கூறுவதுமாக இருந்ததை பார்த்தபடியே முன்னே சென்றாள் மித்ரா அதேசமயம் அங்கு அவளுக்காக காத்துக் கொண்டிருந்த கம்பெனி மேனேஜர் அவளை கண்டதும் ஒரு சிறு புன்னகையுடன்

“குட் மார்னிங் மேம், சார் உங்களுக்காக அவர் கேபின்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார். நீங்க இந்த லிஃப்ட் ல ஏறி போங்க மேம்”

என்று கூறி இவ்வளவு நேரம் லாக் செய்து வைத்திருந்த லிப்டை ஓபன் செய்து அவள் உள்ளே சென்றதும் அவள் செல்ல வேண்டிய ஏழாவது தளத்தின் பொத்தானை அழுத்திவிட்டு வெளியே வந்தான். உடனே கதவுகள் மூட அங்கிருந்த ஒரு மைக்கிலிருந்து

“வெல்கம் டூ எஸ்.வி. க்ரூப்ஸ் ஆப் கம்பெனிஸ்”

என்று ஒரு பெண் குரல் கொண்ட ஆட்டோமேடட் வாய்ஸ் கூறவும் லிப்ட் மேலே சென்றது. லிஃப்ட் ஏழாவது தளத்தை வந்தடைந்ததும் அதிலிருந்து இறங்கியவள் நேராக தன் மாமாவின் அறை வாசலுக்கு சென்று கதவை மெல்ல திறக்க அப்போது

“என்னப்பா சொல்றீங்க.. மித்ராவுக்கு மட்டும் 25% சேர் தரப்போறீங்களா..??”

என்று தன்னை பற்றிய பேச்சு அடிப்படவே அப்படியே லேசாக திறந்த கதவின் வாசலில் நின்றாள் மித்ரா. அதேசமயம் உள்ளிருந்து மீண்டும்

“எஸ் அர்ஜூன், அவளுக்கும் இந்த கம்பெனில உரிமை இருக்கு, சோ அவளோட பங்கை இப்ப நாம அவளுக்கு கொடுத்தாகனும்”

என்று விஸ்வநாதன் கூற அதற்கு அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த அர்ஜூன்

“ஆனா.. அப்பா, நம்ம வீட்டு பெண்களை பிசினஸ்ல ஈடுப்படுத்த கூடாதுன்னும் அதற்கு பதிலா அவங்களுக்கு இடமாகவும் பொருளாகவும் பணமாகவும் அவங்க பங்கை நாம கொடுக்கனும் ன்னு இந்த தொழிலை ஆரம்பிக்கும் போதே தாத்தா போட்ட ரூல்ஸ் க்கு என்ன வேல்யூ”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“எஸ் அர்ஜூன், யு ஆர் கரெக்ட் பட் அது உன் தாத்தா அதாவது என் அப்பா அவருடைய சொந்த பணத்தை மட்டும் போட்டு தொழில் ஆரம்பித்தபோது போட்ட சட்ட திட்டங்கள் பட் இது நானும் என் தங்கையும் வளர்ந்த பின்பு இதில் என் பணத்தை மட்டும் போட்டிருந்தா நீ சொல்றது சரி ஆனா இதுல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருபத்தி ஐந்து சதவீதம் இருபத்தி ஐந்து சதவீதம் ன்னு போட்டு இந்த கம்பெனியை இன்னும் விரிவுபடுத்தினோம் அதனால இப்ப சட்டபடி அவளுக்கு சேர வேண்டிய பங்கை நான் அவள் சார்பா அவளோட மகள் மித்ராவுக்கு கொடுக்கனும் அது தான் சரி..”

என்று கூற இதை கேட்ட அர்ஜூன்

“இதற்கு தான் பா நான் அப்பவே சொன்னேன் என் பிசினஸ நான் தனியா செய்துக்குறேன்னு ஆனா நீங்களும் தாத்தாவும் தான் நம்ம குடும்ப தொழில்லயே சேர்ந்து செய்ன்னு சொன்னீங்க ஆனா இப்ப பாருங்க யார் முகத்துல நான் முழிக்க கூடாதுன்னு இருந்தனோ அவளே இன்னைக்கு இந்த கம்பெனில ஒன் ஆப் த பார்ட்னர்…”

என்று கோபமாக பேசியவன் மீண்டும் அதே கோபத்துடன்

“இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் ஒருவேளை நாளைக்கே அவ வந்து இந்த கம்பெனியோட ஓனர்ஷிப் கேட்டா தூக்கி கொடுத்துடுவீங்க போல”

என்று கேட்க அதற்கு அவரோ

“நீ பயப்படாத அர்ஜூன் என் மித்ரா அப்படி எல்லாம் கேட்க மாட்டா.. இப்பவும் நீ தான் இந்த கம்பெனிக்கு சேர்மேன்”

என்று கூற ஆனால் மீண்டும் அர்ஜூன்

“ஒருவேளை கேட்டா என்ன செய்வீங்க‌..??”

என்று அவரை பார்த்து அழுத்தமாக கேட்க மெல்ல தன் இருக்கையில் இருந்து எழுந்த விஸ்வநாதன் தன் மகனின் முகத்தை பார்த்து

“அப்படி மட்டும் என் மித்ரா என் கிட்ட வந்து கேட்டானா யோசிக்கவே மாட்டேன்..”

என்று கூறியவர் அவ்விடத்தை விட்டு நகர இதை கேட்ட அர்ஜூன் அதிர்ந்து போனான் என்றே கூறவேண்டும். இவை அனைத்தையும் வாசலில் நின்று கேட்ட மித்ரா தன் மாமா வருவதை உணர்ந்து கதவருகில் இருந்து நகர்ந்து சென்றாள். வெளியே வந்த விஸ்வநாதன் அந்த பக்கமாக நின்று கொண்டிருந்த தன் மருமகளை கவனிக்காது வெறியேறி அதே தளத்தில் அமைந்துள்ள கான்பரன்ஸ் அறையை நோக்கி புறப்பட்டார்.

சில நிமிடங்களில் கான்பரன்ஸ் அறைக்குள் நுழைந்த மித்ராவை அவளது மாமா அழைத்து விக்ரம் அருகில் அமர சொல்ல, அவள் அமர்ந்ததும் அங்கே விஸ்வநாதன், விக்ரம், மித்ரா, ராகவ், கம்பெனி ஆடிட்டர் மற்றும் கம்பெனி வக்கீல் ஆகியோர் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தான் அர்ஜூன். அவன் வந்து அமர்ந்ததும் விஸ்வநாதன் கம்பெனியின் வக்கீலை பார்த்து

“எல்லாரும் வந்தாச்சு வக்கீல் சார். நீங்க இப்ப படிக்கலாம்..”

என்று கூற உடனே வக்கீலும்

“சரிங்க சார்”

என்றபடி தன் பையில் இருந்த பத்திரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்

“அதாவது..”

என்று ஆரம்பித்தவர் குறிப்பிட்ட சிலரின் பெயர், வயது மற்றும் விலாசம் ஆகியவற்றை கூறிவிட்டு

“எஸ்.வி. க்ரூப்ஸ் கம்பெனிகளில் திரு. சீனிவாசன் ராஜலிங்கம் அவர்களுக்கு சொந்தமான அவரது மொத்த பங்கான 50% பங்கினை தன் ஒரே புத்திரன் திரு. விஸ்வநாதன் சீனிவாசனுக்கு எழுதி கொடுத்து அவரை இக் கம்பெனியின் ஏகபோக உரிமையாளராய் ஆக செய்தார். அதை தொடர்ந்து தற்போது திரு. விஸ்வநாதன் தன்னிடம் உள்ள எஸ்.வி. க்ரூப்ஸ் கம்பெனிகளின் 75% பங்குகள் கொண்டவராய் அதை திறம்பட நிர்வகித்து வருகிறார். அதை தொடர்ந்து இப்போது அவரும் தன் பங்குகளை தன் மகன்களுக்கும் இச் ஸ்தாபனத்தில் உரிமை உள்ளவர்கள் என்று அவர் முழுமனதாக கருதுபவர்களுக்கும் தன் பெயரில் உள்ள பங்குகளை பிரித்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். அதில் முதலாவதாக அவரது மூத்த மகனான திரு. அர்ஜூன் விஸ்வநாதன் அவர்களுக்கு 30% பங்கினை எழுதி கொடுத்து அவரை இக் கம்பெனியின் சேர்மேனாக அறிவிக்கிறார்.”

என்றவர் அங்கிருந்தவர்களை பார்த்து

“உங்கள்ல யாருக்காவது இதுல உடன்பாடு இல்லன்னா இப்பவே சொல்லலாம்”

என்று கூற அனைவரும் சில நிமிடத்திற்கு மவுனமாக அமர்ந்திருக்க அர்ஜூன் மட்டும் மித்ராவை எரிக்கும் பார்வை பார்க்க விஸ்வநாதனும் அங்கிருந்தோர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எவரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காததையொட்டி வக்கீலை பார்த்தவர்

“நீங்க மேல படிங்க வக்கீல் சார்”

என்றதும்

“மேலும் தன் இரண்டாவது மகனான திரு. ராகவேந்திரன் விஸ்வநாதன் அவர்களுக்கு 25% பங்கினை எழுதி கொடுத்துவிட்டு மீதமுள்ள 20% பங்கினை தன் பெயரிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.”

என்று படித்து முடித்து அப் பத்திரத்தை மூடி வைத்த வக்கீல் மீண்டும் அனைவரையும் பார்த்து ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்க அப்போது அவ்வறையில் ஒரு கை மட்டும் மேலெழும்பியது அதை பார்த்த விஸ்வநாதன்

“கேளு ராகவ் உனக்கு என்ன டவுட்..”

என்று கேட்க உடனே ராகவ்

“அப்பா அப்ப மித்ராவுக்கு எந்த ஷேர்ஸூம் இல்லையா..??”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“வெயிட் பண்ணு ராகவ்”

என்று கூறிவிட்டு வக்கீலை பார்க்க அவர் மீண்டும் தான் கொண்டு வந்த பையில் இருந்து மற்றொரு பத்திரத்தை எடுக்க அதை அனைவர் முன்பும் படிக்க ஆரம்பித்தார்

“அதாவது..”

என்று ஆரம்பித்தவர்

“எஸ்.வி. க்ரூப்ஸ் கம்பெனியின் மற்றொரு உரிமையாளரான காலம் சென்ற திருமதி. காயத்ரி நரேந்திரன்..”

என்று வக்கீல் மித்ராவின் தாய் தந்தை‌ பெயரை ஒருசேர கூறும்போதே அர்ஜூனின் கண் முன்னே ஏதோ சில காட்சிகள் வந்து செல்ல அவனை அறியாமலேயே கண்கள் கலங்க சுயநினைவை இழந்த அர்ஜூன் தன் கரத்தை இறுக்க, அதை பக்கத்தில் இருந்து பார்த்த விஸ்வநாதன் அர்ஜூனின் கரத்தை பற்றியபடி

“அர்ஜூன்.. ஸ்டே காம் அர்ஜூன்..”

என்று கூற இதை அங்கு அமர்ந்திருந்த மித்ராவும் கவனிக்க தவறவில்லை. அதை தொடர்ந்து அர்ஜூன் வக்கீலை கவனிக்க

“திருமதி. காயத்ரி நரேந்திரன் அவர்களுக்கு சொந்தமான 25% பங்கினை அவரது ஒரே மகளான செல்வி. சங்கமித்ரா அவர்களின் கார்டியனும் தற்போதைய எஸ்.வி. க்ரூப்ஸ் கம்பெனிகளின் தலைவருமான திரு. விஸ்வநாதன் அவர்களின் ஒப்புதலுடன் செல்வி. சங்கமித்ரா அவர்களின் பெயருக்கு பறிமாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் அவரை எஸ்.வி. குழுமத்தின் போர்ட் மெம்பராகவும் அறிவிக்கபடுகிறார்.”

என்று வக்கீல் பத்திரத்தை படிக்க படிக்க அர்ஜூனின் கண்கள் சிவந்து கொண்டே இருந்தன..

இப்படி வக்கீல் பத்திரத்தை முழுமையாக படித்து முடிக்க மித்ராவின் அருகிலிருந்த ராகவ்

“ஹே.. ஹைபை நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பர்சன்டேஜ்”

என்று கூற உடனே மித்ரா அவனருகில் வந்து

“டேய் லூசு.. அங்க பாருடா..”

என்று அர்ஜூனை கண் காட்ட கப் என்று வாயை மூடிக் கொண்டான் ராகவ். அப்போது விஸ்வநாதன் அங்கு அமர்ந்திருந்த மித்ராவை பார்த்து

“மித்தும்மா இந்த ஷேர்ஸ் உன் பேர்லயே இருக்கட்டும்மா இல்ல விக்ரம் பேருக்கு மாற்றி தரட்டும்மா..??”

என்று கேட்க உடனே மித்ராவின் அருகில் அமர்ந்திருந்த விக்ரம்

“இல்ல அங்கிள் அது மித்ரா பேர்லயே இருக்கட்டும்”

என்று கூற அங்கிருந்தோர் அனைவரும் வக்கீல் குறிப்பிட்ட இடங்களில் கையொம்பமிட்டு தங்களுக்குரிய பங்குகளை அவரவருடையதாக்கி கொண்டனர்.

மாலை சீக்கிரமாக அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்த அர்ஜூன் நேராக தன் அறையை நோக்கி செல்ல உடனே ஜானகி

“அர்ஜூன் ஒரு நிமிடம் இங்க வாப்பா..”

என்று கூற உடனே அர்ஜூன் அவரருகில் சென்று

“சொல்லுங்க பாட்டி..”

என்று கேட்க அதற்கு ஜானகி

“அர்ஜூன், மித்ரா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு அதனால நாளைக்கு நாங்க எல்லோரும் கிளம்பி கிராமத்துக்கு போகலாம்ன்னு இருக்கோம் நீயும் எங்க கூடவே வந்துடுறீயா இல்ல வேலை எல்லாம் முடிச்சுட்டு வர்றீயா பா..”

என்று கேட்க அதற்கு அர்ஜூனோ தன் பாட்டியை பார்த்து

“அந்த கல்யாணத்துக்கு நான் வரனுமா பாட்டி..”

என்று கேட்க இதை கேட்ட ஜானகியும் அங்கே அமர்ந்திருந்த சீனிவாசன் மற்றும் விஸ்வநாதனும் ஒரு சில வினாடிகள் அதிர்ந்து போய் அர்ஜூனை பார்க்க உடனே ஜானகி

“என்னப்பா கேட்குற முதல் முதல்ல நம்ம வீட்டுல நடக்குற கல்யாணத்துல இந்த வீட்டோட வாரிசு நீ கலந்துக்காட்டி எப்படிப்பா.. ”

என்று கேட்க சற்று யோசித்தவன் ஜானகியை பார்த்து

“சரிங்க பாட்டி அப்ப கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி நான் வந்துடுறேன்”

என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி புறப்பட்டான்.

மறுநாள் காலை..

விஸ்வநாதன் வீடே பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

“லட்சுமி டிபன் ரெடியா..??”

“ஸ்ரீ, என்னம்மா இன்னும் போன் பார்த்துட்டு இருக்க டைம் ஆகுதுல போய் குளி..”

“என்னங்க நாம அங்க வர்றோம்ன்னு போன் போட்டு சொல்லிட்டீங்களா..??”

“மாமா, அத்தை, நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் முன் போடும் மாத்திரை போட்டீங்களா..”

என்று யமுனா தன் வீட்டில் உள்ளோரை கிளப்பி கொண்டிருந்தார். அனைவரும் தயாராகி கீழே வர ஒன்றாக அமர்ந்து காலை உணவை எடுத்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே நின்றுக் கொண்டிருந்த அவர்களின் டெம்போ டிராவலரில் ஏறி அமர சிறிது நேரத்திற்கெல்லாம் வண்டி புறப்பட்டது.

நேற்று இரவே விஸ்வநாதன் சுந்தரத்தை அழைத்து அவர்கள் வரும் விடயத்தை தெரிவிக்க அங்கே சுந்தரம் காலையிலேயே அவர்கள் வீட்டை சுத்தம் செய்து தயாராக வைத்திருந்தார்.

அவர்கள் வரும் வண்டியில் ஆடலும் பாடலும் கலைகட்ட இரவு எட்டு மணியளவில் தங்கள் கிராமத்தை வந்தடைந்தனர். அனைவரும் ஒவ்வொருவருராக கீழே இறங்கி அவர்களின் பரம்பரை ஜமின் அரண்மனைக்குள் பிரவேசிக்க அங்கே அவர்களை வரவேற்க‌ காத்துக் கொண்டிருந்த சுந்தரம் அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து செல்ல அப்போது அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு விஸ்வநாதனை பார்த்தவர்

“பெரிய தம்பி வர்லீங்கலாயா..??”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“இல்ல சுந்தரம் அவன் அங்க இருக்கும் வேலை எல்லாம் முடிச்சுட்டு கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்துடுவான்..”

என்று கூறிக் கொண்டிருக்கும்போதே சரியாக மூடிருந்த கேட் முன்பு ஒரு ஔடி கார் ஒலி எழுப்ப வாட்ச்மென் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த காரில் இருந்து வெளியே வந்தான் அர்ஜூன்.

இதை பார்த்த விஸ்வநாதன் அர்ஜூனை பார்த்து

“என்னப்பா வேலை எல்லாம் முடிச்சுட்டு வரேன்னு சொல்லிருந்த இப்ப எங்க பின்னாலயே வந்துட்ட..”

என்று கேட்க உடனே யமுனா

“அட.. அது தான் அவன் வந்துட்டான் ல விடுங்க..”

என்று கூறி தன் மகனை உள்ளே அழைத்து சென்றார். அனைவரும் அவன் பின்னே ஒவ்வொருவராக உள்ளே சென்று அவரவர் அறைகளில் தஞ்சம் புகுந்தனர். இதில் மித்ராவை மட்டும் அவளது பெரியப்பா சுந்தரம் அவருடன் அழைத்து சென்றார். சில மணி நேரங்களில் சமையல்காரன் சுப்பு இரவு உணவை தயார் செய்ய அங்கே வந்த யமுனா, சீனிவாசன் மற்றும் ஜானகி க்கு மட்டும் அவர்கள் அறைகளிலேயே இரவு உணவை கொடுத்துவிட்டு மற்ற அனைவரையும் உணவு உண்ண கீழே அழைக்க அர்ஜூனை தவிர அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு தங்கள் அறைகளுக்கு சென்றனர்.

பெரியப்பா சுந்தரத்துடன் வந்த மித்ரா எப்போதும் தான் தங்கும் அவளது பெற்றோரான காயத்ரி, நரேந்திரன் வாழ்ந்த வீட்டிற்கே இன்றும் தங்க வந்திருந்தாள். உள்ளே சென்ற மித்ராவிற்கு தன் சிறு வயதில் அவளது பெற்றோர்களுடன் இவ்வீட்டில் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் வர அங்கிருந்த சுவற்றில் மாற்றப்பட்டிருந்த அவர்களின் புகைப்படத்தை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே இரவு உணவை எடுத்து வந்த அன்னகிளி அவள் கவலையுடன் அப்புகைப்படத்தை பார்த்துக் கொண்டு நின்றிருப்பதை பார்த்துவிட்டு

“மித்ராம்மா.. மித்ராம்மா..”

என்று கூக்குரலிட்டபடியே உள்ளே நுழைய அவருடன் அவரது இளைய மகள் சித்ராவும் உடன் வர கலங்கிய கண்களை துடைத்த மித்ரா

“ஏன் பெரியம்மா என்னையும் பவித்ரா, சித்ரா போலவே மித்ரான்னு கூப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்”

என்று கேட்க அதற்கு அன்னகிளி

“அது எப்படி இந்த தருதலையும் நீங்களும் ஒன்னா நீங்க எங்க சின்னம்மாவோட பொண்ணு.. நான் பேர் சொல்லி கூப்பிடமாட்டேன்ப்பா..”

என்று கூற உடனே பக்கத்தில் நின்ற சித்ராவிற்கு ஏகப்போகமாக கோபம் வர தன் அன்னையை பார்த்து

“அம்மா நான் உன்ன ஒன்னு கேட்கவா”

என்று கேட்க அவரும் சரி என்று கூற மித்ராவும் அவள் கேட்கப்போவதை ஆர்வமாக கவனிக்க உடனே சித்ரா

“சரி சொல்லும்மா, நம்ம லட்சுமிக்கு குழந்தை பிறந்தா அது என்னவா பிறக்கும்..??”

என்று கேட்க அதற்கு அன்னகிளி

“இதென்னடி கேள்வி கன்றுக்குட்டியா பிறக்கும்..”

என்றதும் உடனே சித்ரா

“கரெக்ட், அப்ப ஒரு புத்திசாலிக்கு பொறக்குற குழைந்தை??”

என்று கேட்க உடனே அன்னகிளி

“புத்திசாலி குழந்தையா பிறக்கும்”

என்று கூற தன் தங்கையின் அடுத்த கேள்வியை கணித்த மித்ராவிற்கு சிரிப்பு வர உடனே சித்ரா மீண்டும் தன் அன்னையை பார்த்து

“இது தான் மா கடைசி”

என்றவள்

“ஒரு தருதலைக்கு பிறக்குற குழந்தை என்னவா பிறக்கும்.??”

என்று கேட்க உடனே அன்னகிளியும் சிறிதும் யோசிக்காது

“தருதலையா பிறக்கும்”

என்று கூறிவிட இதை கேட்ட சித்ராவும் மித்ராவும் இடைவிடாது சிரிக்க அவர்களை பார்த்த அன்னகிளி

“இவங்க ஏன் இப்ப இப்படி சிரிக்குறாங்க..”

என்று யோசிக்க அதேசமயம் இவை அனைத்தையும் பின்னால் இருந்து கேட்ட அன்னகிளியின் செல்ல மகன் கதிரவன் தன் அன்னையை பார்த்து

“எம்மா இவ உன்ன தருதலைன்னு சொல்றாம்மா..”

என்று கூற இதை கேட்ட அன்னகிளி

“அப்படியா சொன்னா..”

என்றபடி சித்ராவை பார்த்தவர் சுற்றி முற்றி எதையோ தேட கடைசியில் அங்கிருந்த ஒரு மர ஸ்கேலை கையில் எடுத்து அவளை அடிக்க வர அதற்குள் அங்கிருந்து சிட்டாய் பறந்து சென்றாள் சித்ரா. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா குலுங்கி குலுங்கி சிரிக்க அவளையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த அன்னகிளி

“சரி வாங்கம்மா சீக்கிரமா சாப்பிட்டு படுக்கனும் நாளைக்கு காலையில நிறைய வேலை இருக்கு”

என்று கூற உடனே மித்ரா

“என்ன வேலை பெரியம்மா”

என்று கேட்க உடனே அன்னகிளி

“என்னம்மா தெரியாத மாதிரி கேட்குறீக நாளைக்கு உங்களுக்கு சுமங்கலி பூஜை செய்யனுமே யாரும் உங்கட்ட சொல்லலையா..”

என்று கேட்க உடனே மித்ரா

“ம்.. ஆமா பெரியம்மா, அத்தை சொன்னாங்க நான் தான் மறந்துட்டேன்”

என்று கூறியவள் அன்னகிளி கொண்டு வந்த இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றாள்.

மித்ரா ஊருக்கு சென்றதில் இருந்து விக்ரமிற்கு எப்போதும் அவள் நினைப்பாகவே இருக்க தன் தந்தையிடம் அனுமதி பெற்றவன் அவளை பார்க்க அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் மித்ராவின் ஊருக்கு கிளம்பி இருந்தான்.

மறுநாள் காலை விடிந்ததும் வீடே பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்க யாரோ போன்று அங்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த யமுனாவை தன் அறைக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். அதன்பின் அதற்கு மேலும் அங்கு நடப்பதை பார்த்த யமுனாவிற்கு பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர அங்கிருந்து எழுந்தவர் நேராக தன் அறைக்குள் சென்று ஒரு மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து பார்க்க அவரை அறியாமலேயே அவரது விழிகளில் இருந்து வெளியேறிய விழிநீர் அந்த புகைப்படத்தின் மீது விழ அதை துடைத்துவிட்டு அப்படியே தன் பின்னால் இருந்த கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டார். சரியாக அப்போது யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்க தன் கையில் இருந்த புகைப்படத்தை திருப்பி வைத்துவிட்டு தன் கண்களை துடைக்க அவர் பின்னால் நின்ற அர்ஜூன் தன் அன்னையின் அருகில் வந்தமர்ந்து அவனும் அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க உடனே யமுனா

“நான் மட்டும் அன்னைக்கு சம்மதிக்காம இருந்திருந்தா அது அவ்வளவு தூரம் போய் இருக்காது.. எல்லாம் என் தப்பு தான்.. எல்லாம் என் தப்பு தான்..”

என்று கூற தன் அன்னை கண் கலங்குவதை கண்ட அர்ஜூனின் நரம்புகள் புடைக்க கண்கள் சிவக்க

‘ஆமாம்மா.. அன்னைக்கு மட்டும் அப்பா கேட்கும் போதே முடியாதுன்னு சொல்லி அவளை வெளியே துரத்தி விட்ருந்தீங்கன்னா இன்னைக்கு இந்தளவுக்கு இது வந்திருக்காது.’

என்று தன் மனதில் நினைத்தவன் உடனே யமுனாவை பார்த்து

“நீங்க அழாதீங்கம்மா எல்லாம் நான் பார்த்துக்குறேன்”

என்று கூறி தன் அன்னையை அங்கிருந்து கிளப்பியவன் தன் பாக்கெட்டில் இருந்து தன் அலைபேசியை எடுத்து சில பொத்தான்களை தட்டி யாரையோ அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்துவிட்டு வஞ்சக சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.

அதே சமயம் மித்ராவின் வீடு அவளது பெரியம்மா அன்னகிளியின் கைவண்ணத்தால் விசேட வீட்டின் கலை பெற்றிருக்க சுமங்கலி பூஜைக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தனர் அன்னகிளியும் அவளது அக்கம் பக்கத்து வீட்டு பெண்களும். இவர்கள் இங்கு தங்களது பங்கினை ஆற்ற அங்கு சுந்தரமும் விஸ்வநாதனும் சேர்ந்து திருமண மண்டபம், மேளம், அய்யர் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்துக் கொண்டிருக்க விஸ்வநாதனின் அலைபேசி ஒலித்தது. அதை எற்றவர்

“ஹலோ சொல்லும்மா..”

என்று கூற மறுமுனையில் இருந்த யமுனா

“என்னங்க நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம் நீங்க எங்க இருக்கீங்க”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“நான் மண்டபம் புக்கிங் முடிச்சுட்டு கேட்ரிங் புக்கிங்காக ரெண்டு ஊர் தள்ளி போய்ட்டு இருக்கேன்ம்மா நீங்க எல்லாரும் போய் என்ன செய்யனுமோ செய்ங்க நாங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறோம்”

என்று கூற உடனே யமுனா

“என்னங்க விளையாடுறீங்களா.. நீங்க இல்லாம எப்படி தாய் மாமன் சீறு செய்றது”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“அட ஆமால இதை நான் எப்படி மறந்தேன்.. சரிம்மா நீங்க முதல்ல சுமங்கலி பூஜைய ஆரம்பிங்க நான் எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன்.”

என்று கூற உடனே யமுனாவும்

“ம்.. சரிங்க சீக்கிரம் வந்துடுங்க நல்ல நேரத்துக்குள்ள செய்யனும்”

என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு அனைவரும் கிளம்பினர். சில நிமிடங்களில் அனைவரும் மித்ராவின் வீட்டிற்கு வந்து சேர வாசலில் நின்று கொண்டிருந்த சித்ரா ஓடி சென்று மித்ராவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த தன் அன்னையிடம் அவர்கள் வரவை தெரிவிக்க ஒரு ஸ்லைடு பின்னை குத்தி அலங்காரத்தை முடித்து வெளியே ஓடி வந்து பார்க்க ஊரின் பெரிய குடும்பத்தார் மொத்த பேரும் அங்கு வந்து நிற்பதை பார்த்தவர் அனைவரையும் மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று அமர வைத்துவிட்டு தன் மகள் சித்ராவையும் மகன் கதிரவனையும் அழைத்து

“வெரசா ஓடி போய் அண்ணாச்சி கடையில கலர் வாங்கிட்டு வாங்க”

என்று கூற உடனே யமுனா

“ஏய் அன்னம் சும்மா இரு.. அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை எல்லாருக்கும் குடிக்க தண்ணி மட்டும் குடு”

என்று கூற உடனே அன்னகிளியும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க அதை‌ வாங்கி பருகியவர்கள் எடுத்து வந்த பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு நேராக மித்ராவை பார்க்க செல்ல அங்கே அலங்காரம் செய்யப்பட்டு அமர்ந்திருந்த மித்ராவை பார்த்த ஜானகியும் யமுனாவும் அவளை நெட்டி முறித்தபடி

“இப்ப நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா..?? என் ராசாத்தி.. என் கண்ணே பட்டுடும்போல..”

என்று ஜானகி கூற இதை கேட்ட மித்ரா சிறு புன்னகை புரிய, உள்ளே வந்த சித்ரா தன் அம்மாவிடம்

“அம்மா, தெய்வானை பாட்டி நல்ல நேரம் முடியறத்துக்குள்ள அக்காவை கூட்டிட்டு வர சொல்றாங்க..”

என்று கூற அதை தொடர்ந்து மித்ராவை அழைத்து வர, நீல நிற பட்டுபுடவையில் வெள்ளை நிற அன்னப்பறவைகள் பார்டரும் என அவளது சிவப்பு நிறத்திற்கு பொருத்தமாக இருக்க அழகாக பிண்ணப்பட்ட ஜடையும் அலங்காரமும் என அலங்கரித்து சபை முன்பு அமர வைக்க அனைத்து சடங்குகளும் ஒவ்வொன்றாக இனிதே ஆரம்பித்தது.

முதலில் ஜானகியும் யமுனாவும் சென்று மித்ராவின் கன்னத்தில் சந்தனம் பூசி நெற்றியில் குங்குமம் வைக்க, அவளும் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற, பூ தூவி அவளை வாழ்த்தி ஆசிர்வதித்தனர். அதன்பின் ஒவ்வொரு சுமங்கலி பெண்களும் ஒவ்வொருவராக அதை செய்ய அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருந்தது. அப்போது யமுனா தன் மணாளனை அலைபேசியில் அழைக்க முயற்சித்த வண்ணம் இருக்க அவருக்கு அழைப்பு இணைக்கப்படவில்லை எனினும் யமுனா முயற்ச்சித்துக் கொண்டே இருந்தார். அதேசமயம் அங்கு வந்த சீனிவாசன் தன் மருமகளை அழைத்து

“எங்கம்மா உன் புருசனை இன்னும் ஆள காணும்.. நல்ல நேரம் முடியறத்துக்குள்ள சீறு செய்ய‌ வேணாமா??”

என்று கேட்க உடனே யமுனா

“கிளம்பும்போதே அவருக்கு கால் செய்தேன் மாமா நீங்க போங்க நான் டைமுக்கு வந்துடுறேன் னு தான் சொன்னாரு ஆனா இப்ப போன் போட்டா போக மாட்டிங்குது.”

என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவர்களின் தூரத்து சொந்தமான ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து

“என்னாச்சு அண்ணி”

என்று யமுனாவை பார்த்து கேட்க அதற்கு யமுனா பதில் கூற உடனே அவரோ

“இதுக்காகவா முகம் வாடி இருக்கு அண்ணா இல்லைனா என்ன அதான் அர்ஜூன் இருக்கானே அவன வச்சு சீறு கொடுக்க சொல்லுங்க”

என்று கூற அவர்களுக்கும் அப்பெண்மணி கூறியது சரியென்று பட்டாலும் அர்ஜூனிடம் எப்படி இதை கேட்பது என்ற தயக்கம் எழ தான் செய்தது. ஆனால் என்ன செய்ய முடியும் நல்ல நேரம் முடிய இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் உடனே யமுனா

“நான் அவன்கிட்ட பேசுறேன் மாமா”

என்று கூறி அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருந்த அர்ஜூனிடம் சென்று விடயத்தை கூற முதலில் அவன் மறுத்தாலும் எப்படியோ யமுனா சுற்றி உள்ள சொந்தபந்தத்தை காரணம் காட்டி அவனை சம்மதிக்க வைத்துவிட்டார். இதனால் அவனும் மித்ராவிற்கு சீர் செய்ய அவளருகில் வந்து பக்கத்தில் நிற்க அவனை பார்த்த மித்ரா தன் மனதில்

“அய்யய்யோ இந்த கொம்பேறி மூக்கன் எதுக்காக இப்ப நம்ம பக்கத்துல வந்து நிக்குறான்னு தெரியலியே”

என்று நினைத்தபடி இருக்க உடனே யமுனா அர்ஜூனை பார்த்து

“அர்ஜூன் முதல்ல இந்த சந்தனத்தை எடுத்து மித்ரா கன்னத்துல பூசிட்டு இந்த குங்குமத்தை அவ நெற்றியில வை”

என்று கூற உடனே இதை கேட்ட மித்ரா அதிர்ந்த முகத்துடன் தன் அத்தையை பார்த்தவள் அப்படியே அர்ஜூனை பார்க்க அவனோ அவளை பார்த்தபடி சில வினாடிகள் நின்றவன் யமுனா சொன்னது போல அந்த சந்தனத்தை எடுத்து பூச திடீரென அவளது மென்மையான ஸ்பரிசத்தை அவன் உணர அதேசமயம் அவனது ஸ்பரிசத்தை அவள் உணர ஒரு நிமிடம் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்க உடனே யமுனா

“அர்ஜூன் குங்குமம் எடுத்து வை”

என்று கூற சுயத்திற்கு வந்தவன் அதையும் எடுத்து மித்ராவின் நெற்றியில் வைக்க மீண்டும் யமுனா

“இப்ப இந்த மாலையை எடுத்து அவ கழுத்துல போடுப்பா”

என்று யமுனா கூற கூற தட்டாது செய்தவனை மித்ரா வியப்பாக பார்க்க உடனே யமுனா மித்ராவை பார்த்து

“ம்.. இப்ப மித்ரா நீ அர்ஜூன் கால் ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கடா..”

என்று கூற இதை கேட்ட மித்ரா அதிர்ச்சியுடன் தன் அத்தையை பார்த்துவிட்டு அர்ஜூனை பார்க்க அவனோ ஒரு நக்கல் புன்னகையுடன் மித்ராவை பார்த்துவிட்டு தன் கால்களை பார்த்து

‘விழுடி விழு எனக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்டல இது தான் ஆரம்பம் இனி இருக்குடி உனக்கு..’

என்று மனதில் நினைத்தபடி நிற்க அனைவர் முன்பும் அர்ஜூனின் கால்களில் விழுந்தாள் மித்ரா. உடனே யமுனா சிறு மலர்களை கொடுத்து அவளை ஆசிர்வதிக்க சொல்ல, மலர்களை வாங்கியவனோ அதை அவள் மீது தூவாமல் தன் காலுக்கு கீழ் குனிந்து நின்றவளை ஒரு வஞ்சக புன்னகையுடன் வேடிக்கை பார்த்து ரசித்தபடி நின்றான். அதை பார்த்த சித்ரா அருகில் நின்றிருந்த ராகவை பார்த்து

“சின்னத்தான் பெரிய அத்தான் ஏன் அப்படியே நிக்குறாரு??”

என்று கேட்க அதற்கு ராகவ்வோ

‘நேரம் பார்த்து பழிவாங்குறாரே’

என்று தன் மனதில் நினைத்துக் கொண்டான். அதேசமயம் இவை அனைத்தையும் பார்த்த யமுனா

“அர்ஜூன்.. பூவை தூவி மித்ராவை ஆசிர்வாதம் பண்ணுடா”

என்று அவன் அருகில் வந்து மெல்லிய குரலில் கூற அவனும் வேண்டா வெறுப்பாக மித்ராவின் மீது மலர்களை தூவ மேலெழுந்த மித்ரா அர்ஜூனின் சிரிப்பை கண்டு முறைக்க அதோடு அன்றைய நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

அனைத்தும் முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு மித்ராவின் வீட்டிற்கு வந்த விஸ்வநாதனும் சுந்தரமும் அவளை ஆசிர்வதித்தனர்.

மாலை 4 மணி..

லட்சுமிபுரத்து எல்லைக்குள் நுழைந்த விக்ரமின் BMW Z4 கார் வழி தெரியாது மாந்தோப்பில் நிற்க அதிலிருந்தபடியே அங்கு மாங்காய் பறித்துக் கொண்டிருந்த சித்ராவிடம்

“ஏ.. பொண்ணு இங்க மித்ரா வீட்டுக்கு எப்படி போகனும்??”

என்று கேட்டான். ஆனால் மாங்காய் பறிப்பதில் மும்முரமாக இருந்த சித்ரா அவனை கவனிக்காது மாங்காய் பறித்துக் கொண்டிருக்க இம்முறை சற்று சத்தமாக விக்ரம் அதையே கேட்க உடனே விக்ரமின் அருகில் வந்த சித்ரா அவன் அழகில் மெய்மறந்து விழிவிரித்து அவனையே பார்க்க உடனே விக்ரம்

“ஏய்.. பொண்ணு..”

என்று அழைக்க உடனே சுயத்திற்கு வந்த சித்ரா

“ஆஹ்.. என்ன கேட்டீங்க??”

என்று கேட்க இதை கேட்ட விக்ரம்

‘சரியா போச்சுப்போ..’

என்றபடி தன் மனதில் நினைத்துவிட்டு மீண்டும் அவளை பார்த்து

“இங்க சென்னையில இருந்து வந்த மித்ராங்குறவங்க வீடு எங்க இருக்கு”

என்று கேட்க அதற்கு சித்ரா

“அது இங்க இருந்து நாளு அஞ்சு தோப்பு தள்ளி ஊருக்கு உள்ள போகனும்”

என்றவள்

“ஆமா.. நீங்க யாரு அவங்க ப்ரண்டா??”

என்று கேட்க அதற்கு அவன்

“ம்.. ஆமா..”

என்றதும் உடனே சித்ரா

“அப்ப சரி.. அக்காவோட ப்ரண்டா போயிட்டீங்க அதனால நானே கூட்டிட்டு போறேன் ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்.”

என்று கூற அவளை மேலும் கீழும் பார்த்தவன்

“சரி சொல்லு என்ன ஹெல்ப் பண்ணணும்”

என்று கேட்க உடனே சித்ரா

“கீழே இறங்கி வாங்க”

என்று விக்ரமை அந்த மாந்தோப்பிற்கு உள்ளே அழைத்து சென்று அவன் கையில் மாங்காய் பறிக்கும் நீட்டு மூங்கில் குச்சியை கொடுத்து

“அந்தா கொல கொலையா தெரியுது பாருங்க மாங்கா அதை எல்லாம் பறிச்சு போடுங்க”

என்று கூற இதை கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றவன் பின்பு தன் முழு கை சட்டையின் கை பக்கத்தை பாதியாக மடித்துவிட்டு அவளிடம் இருந்த மூங்கில் குச்சியை பெற்று அவள் கூறியதை போலவே ஒவ்வொன்றாக பறித்து போட்டான் அப்போது

“ஆமா பொண்ணு இதை எல்லாம் பறிச்சு போட இங்க ஆள் வைக்க மாட்டீங்களா??”

என்று கேட்க உடனே சித்ரா

“மொதல்ல எல்லாம் என் தோழி செண்பகத்தை தான் கூட்டி வந்துட்டு இருந்தேன் ஆனா ஒரு தடவை தோட்டக்கார மாமா புடிச்சதும் பயப்புள்ள என்னைய போட்டுக்குடுத்துடுச்சு அன்னைக்கு வீட்டுக்கு போனதும் எங்கம்மாவுக்கு விடயம் தெரிஞ்சு பழுக்க காசுன கம்பிய கால்லயே வச்சு விட்டுடாங்க அதுல இருந்து யாரையும் சேர்க்குறது இல்ல”

என்று கூற இதை கேட்ட விக்ரம்

“எதே.. அப்ப நீ திருடியா??”

என்று கத்த உடனே விக்ரமின் வாயை மூடிய சித்ரா ஒரு சில வினாடி அவனது கண்களை பார்க்க அப்போது விக்ரம் தலை அசைத்ததில் சுயத்திற்கு வந்தவள் கையை எடுத்துவிட்டு

“ஏன்யா கத்துற.. நீயே காட்டி குடுத்துடுவ போல”

என்று கூற அதற்கு விக்ரம்

“இது தப்பு இல்லையா??”

என்று கேட்க அதற்கு சித்ரா

“இது எங்க மாமாவோட தோப்பு தான்யா கேட்டா அவரே கொண்டாந்து கொடுப்பாரு ஆனா அது என்னவோ திருட்டு மாங்கா தான் ருசிக்குது அதுவும் இப்ப பறிச்சுட்டு போறதே உன் ப்ரெண்டுக்கு தான்”

என்று கூற உடனே இதை கேட்ட விக்ரம்

“என்ன.. அப்ப இது எல்லாம் மித்ராவுக்காகவா பறிக்குற..??”

என்று கேட்க அதற்கு சித்ரா

“ம்.. ஆமா யா”

என்றதும் முன்பை விட அதிவேகமாக அனைத்தையும் பறித்துப் போட அனைத்தையும் எடுத்து சித்ரா வைத்திருந்த கூடையில் போட்டு கொண்டு இருவரும் அங்கிருந்து நகர விக்ரம் அவளை தன்னோடு அவனது காரில் ஏற அழைத்தான். அதற்கு சித்ராவோ

“நான் அதுல வந்துட்டா எங்க அப்பாரு வண்டிய யாரு எடுத்துட்டு வருவாக அதனால நீங்க என்னை பாலோ பண்ணுங்க”

என்று கூற அவனும் அவளை அந்த டிவிஎஸ் 50 வண்டியின் பின்னாலேயே பின் தொடர்ந்து வர இருவரும் ஒரு சில நிமிடங்களில் மித்ராவின் வீட்டை வந்து சேர்ந்தனர். அங்கு விக்ரமின் திடீர் வருகையை எதிர்ப்பாராத மித்ராவிற்கு அது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சித்ரா தன் அக்காவிடம்

“இவரு யாரு கா..”

என்று கேட்க அதற்கு மித்ரா

“இவர் பேரு விக்ரம் இவர தான் நான்..”

என்று மித்ரா கூறி முடிப்பதற்குள் வாசலில் இருந்து

“கல்யாணம் பண்ணிக்க போறீங்க”

என்று யாரோ கூறுவது கேட்க, குரல் வந்த திசையை மூவரும் பார்க்க அங்கே நின்றிருந்தது வேறு யாருமல்ல நம் சாப்பாட்டு ராமி பவித்ரா வே தான்..

அவளை பார்த்ததும் மித்ரா

“ஹே பவி..”

என்றழைத்தபடி ஓடி சென்று கட்டிக் கொள்ள இருவரையும் ஒருவொருக்கொருவரை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு சித்ராவை அழைக்க, இவ்வளவு நேரம் கலகல வென்று பேசி திறிந்தவளோ இப்போது பேச்சு மூச்சு இல்லாது தலையில் இடி விழுந்தாற்போல் சிலையாகி அங்கேயே நின்றாள் என்றே கூறவேண்டும். மித்ரா இருமுறை அவளை அழைத்தும் அப்படியே நின்றுக் கொண்டிருக்க அருகில் வந்து அவளை மித்ரா உலுக்கியதும் சுயத்திற்கு வந்தவள்

“ஆ..”

என்று கூற உடனே மித்ரா

“எவ்வளவு நேரம் கூப்பிடுறது..? என்னடி ஆச்சு உனக்கு..??”

என்று கேட்க வாடிய முகத்துடன்

“ஒன்னும் இல்ல கா லேசா தலை வலிக்குது..”

என்று கூறி, தான் பறித்து வந்த மாங்காய்களை மித்ராவிடம் கொடுத்துவிட்டு தன் வீட்டிற்கு புறப்பட

“ஏய்.. நில்லுடி நானும் வரேன்”

என்று கத்திய பவித்ரா மித்ராவை பார்த்து

“நான் போய் குளிச்சுட்டு வரேன் கா..”

என்று கூறிவிட்டு அங்கிருந்த மாங்காய்களில் ஒன்றை எடுத்து கடித்தவள் தன் தங்கையுடன் வீட்டிற்கு சென்றாள்.

அன்றிலிருந்து 5வது நாள்..

திங்கட்கிழமை காலை ஏழு மணி தூத்துக்குடியிலேயே பிரம்மாண்ட திருமண மண்டபமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் சபையே பெரிய மனிதர்களாலும் மணமகன் மணப்பெண் வீட்டாராலும் சூழ்ந்திருக்க மணமேடையில் மணமகனாக அர்ஜூனும் மணமகளாக மித்ராவும் அருகருகே அமர்ந்திருக்க

“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..”

என்றபடி தவில் நாதஸ்வர காரர்களுக்கு தெரியும் வண்ணம் ஐயர் கையசைக்க அதை தொடர்ந்து மேடையில் நின்றிருந்த விஸ்வநாதனும் அவர்களை நோக்கி சமிங்கை புரிய திருமண மங்கள வாத்தியம் முழங்க சபையில் அதுவரை அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து அட்சதை தூவி மணமக்களை ஆசிர்வதிக்க தயாராக அங்கே இருந்த வீடியோ மற்றும் போட்டோ கிராப்பர்களும் மேடை பக்கமாக திரும்பி இந்நிகழ்வை படம்பிடிக்க தயாராக

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

என்று அந்த புனிதமான மங்கள வாத்தியத்தை ஐயர் இசைக்க மித்ராவின் கழுத்தில் அர்ஜூன் திருமாங்கல்யத்தை அணிவிக்க அதை தலை குனிந்து ஏற்றுக் கொண்டாள் மித்ரா..
 

Attachments

  • 1610645173526 (2).jpg
    1610645173526 (2).jpg
    84.7 KB · Views: 0
அத்தியாயம் 15

மித்ராவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டியவன் அடுத்தடுத்து ஐயர் சொன்ன சடங்குகளை செய்ய அப்போது ஐயர்

“இப்ப மாப்பிள்ளை.. மணப்பொண்ணு கால் ல மெட்டி போடனும்”

என்று கூற அருகில் நின்றிருந்த யமுனா அர்ஜூனிடத்தில் மெட்டியை கொடுக்க யமுனாவை முறைத்தபடி அதை பெற்றுக் கொண்டவன் தனக்கு எதிரில் நின்றிருந்த மித்ராவை தீப்பார்வை பார்த்துவிட்டு

“நான் அன்னைக்கு உன்ன என் கால்ல விழ வச்சு வேடிக்கை பார்த்தேன்னு இன்னைக்கு பழி வாங்குறீயா.. கவனிச்சுக்குறேன்டீ.. உன்ன கவனிச்சுக்குறேன்..”

என்று மனதில் நினைத்தபடி குனிந்து மித்ராவின் இரு கால்களின் பாதங்களையும் ஒவ்வொன்றாக பற்றி அம்மிக்கல் மீது வைத்து மெட்டி அணிவித்துவிட்டவன் மேலெழ, அடுத்து மீண்டும் ஐயர்

“எல்லா சம்ப்ரதாயமும் முடிஞ்சது.. இப்ப ரெண்டு பேரும் சேர்ந்தா போல ரெண்டு வீட்டு பெரியவா கால்லையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ..”

என்று கூற மேடையிலிருந்து கீழிறங்கி அங்கு மௌனமாக நின்றிருந்த தனது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என நால்வரையும் உற்று அனல் தெரிக்கும் பார்வை பார்த்தவன் அவர்களை பார்த்து

“இப்ப உங்களுக்கு சந்தோசமா..”

என்று கேட்டுவிட்டு தன் கழுத்தில் இருந்த மணமாலையை கழற்றி அங்கேயே போட்டுவிட்டு விறுவிறுவென அங்கிருந்த மணமகன் அறைக்குள் புகுந்து சில வினாடிகளில் தன் உடைகளை மாற்றிக்கொண்டு தன் காரில் ஏறி சென்றான். அதை தொடர்ந்து அங்கிருந்தோர் அனைவரின் முகமும் வாடிப் போக உடனே மித்ரா

“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி..”

என்று கூறியபடி ஜானகியின் கால்களில் விழப்போக உடனே மித்ராவை தடுத்த ஜானகி

“கல்யாணத்தன்னைக்கு ஒருத்தர் மட்டும் கால்ல விழ கூடாதுடாம்மா..” ‌

என்று கூற அவ்விடம் மீண்டும் அமைதி பெற்றது. இம்முறை விஸ்வநாதன்

“சுந்தரம், நீ கல்யாணத்துக்கு வந்த எல்லாரையும் டைனிங் ஹாலுக்கு அழைச்சுட்டு போய் சாப்பிட வச்சு அனுப்பு.. யாரும் சாப்பிடாமா போக கூடாது..”

என்று கூற உடனே சுந்தரமும்

“சரிங்க அய்யா..”

என்று கூறி தன் மனையாளையும் உடன் அழைத்துக் சென்றார். மீண்டும் விஸ்வநாதன் தன் குடும்பத்தாரை பார்த்து

“நீங்க எல்லாரும் கிளம்பி நம்ம வீட்டுக்கு போங்க.. நான் ஸ்டேஷன் வரைக்கும் போய் விக்ரமுக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்.”

என்று கூறி அங்கிருந்து நகர உடனே மித்ரா

“நானும் உங்க கூட வரேன் மாமா..”

என்றதும் அவளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். மற்ற அனைவரும் அவர் கூறியபடியே அவர்களின் ஜமீன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்து புறப்பட்ட விஸ்வநாதனும் மித்ராவும் தூத்துக்குடி கமிஷனர் அலுவலகத்திற்கு போகும் வழியில்

ஒரு மணிநேரத்திற்கு முன்பு..

தூத்துக்குடி ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் முழுவதும் இரு வீட்டார் உறவினர்களாலும், சுற்றியுள்ள பண்ணை ஆட்களாளும், நம் மாநிலத்தின் இன்னாள் முன்னாள் அமைச்சர்களாலும், பெரிய மனிதர்களாலும், தொழிலதிபர்களாலும் என சபையே நிறைந்து இருக்க மண்டபத்தின் வெளியே திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் உள்ளே நுழைய ஒரு வழியும் வெளியே செல்ல மற்றொரு வழியும் என இருவழிப் பாதை இருக்க மண்டபத்தின் வாசல் வரை கார்களிலேயே வந்து இறங்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தின் நுழைவாயிலில் மலர்களாலேயே தத்ரூபமாக விக்ரம் வெட்ஸ் சங்கமித்ரா என்று எழுதப்பட்டிருக்க அதை கடந்து உள்ளே சென்றவர்கள் அங்கே செய்யப்பட்டிருந்த அலங்காரத்தை கண்டு வாய் பிளந்தனர் என்றே கூறவேண்டும்.

அனைவர் மனதிலும் மகிழ்ச்சி, முகம் முழுவதும் புன்னகை, எங்கு பார்த்தாலும் சிரிப்பு சத்தம் என அந்த மண்டபமே குதுகலமாக காணப்பட்டது அப்போது மணமேடையில் அமர்ந்திருந்த ஐயர்

“மாப்பிள்ளைய அழச்சுட்டு வாங்கோ..”

என்று குரல் கொடுக்க, விக்ரம் அறையில் இருந்த அவனது தந்தை ஜெகன்நாதனும் அண்ணன் அஜய்யும் அவனை தயார் செய்து மணவறைக்கு அழைத்து சென்றனர். மணவறையில் அமர்ந்தவன் ஐயர் சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக செய்ய மீண்டும் ஐயர்

“பொண்ண அழச்சுட்டு வாங்கோ..”

என்று குரல் கொடுக்க உடனே யமுனாவும் அன்னகிளியும் மித்ராவை அழைத்துக் கொண்டு வந்து மணவறையில் விக்ரமின் அருகில் அமர வைக்க அவளை பார்த்தவன் அவளது அழகில் சிலையாகி விட அந்நேரம் ஐயர் ஏதோ சொல்ல அதை காதில் வாங்காது விரைவில் தன்னவளாக போகும் மித்ராவையே விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது விக்ரம் பின்னால் இருந்த அவனது அண்ணி தாரா அவனது தலையிலேயே நறுக்கென்று ஒரு கொட்டு வைக்க

“ஆ..”

என்றபடி சுயத்திற்கு வந்தவன்

“ஈ..”

என்று இளித்த வண்ணம் தன் அண்ணியையும் சுற்றி உள்ளோரையும் பார்க்க அனைவரும் சிரிக்க அப்போது அங்கு நின்றிருந்த ராகவ்வும் ஸ்ரீமதியும் அவனை பார்த்து

“த்தூ..”

என்று துப்ப உடனே தலையை திருப்பியவன் ஐயர் சொன்ன அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். உடனே அய்யர்

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா..

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்..”


என்று ஐயர் மங்கள மந்திரத்தை இசைத்தபடி தன் ஆட்காட்டி விரலை உயர்த்தி தவில் மற்றும் நாதஸ்வரகாரர்களுக்கு சைகை செய்ய உடனே அவர்களும் மங்கள வாத்தியத்தை இசைக்க விக்ரம் ஐயர் கையில் இருந்த திருமாங்கல்யத்தை பெற்றுக் கொண்டு மித்ராவின் கழுத்திற்கு அருகில் செல்ல அங்கிருந்தோர் அனைவரும் அட்சதை தூவி மணமக்களை ஆசிர்வதிக்க தயாராக

“நிறுத்துங்க..”

என்றவாறு ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அங்கிருந்த அனைவரும் திரும்பி பார்க்க அங்கே சில பெண் போலிசார் நின்றுக் கொண்டிருந்தனர். அங்கு உள்ளவர்கள் அனைவரும் அவர்களையே பார்க்க, உள்ளே வந்த போலீசார் மணவறையில் அமர்ந்திருந்த விக்ரமிற்கு நேர் எதிரே நின்றபடி அவனை பார்த்து

“மிஸ்டர்.விக்ரம், உங்கள நான் அரஸ்ட் பண்றேன்..”

என்று காவல் ஆய்வாளர் கூற இதை கேட்டு மண்டபத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஜெகன்நாதன் அந்த பெண் காவல் ஆய்வாளரை பார்த்து

“என்ன மேடம் பேசுறீங்க.. நீங்க எதுக்காக என் பையன அரஸ்ட் பண்ணணும்..??”

என்று கேட்க, அப்போது அங்கே திருமணத்திற்காக வந்திருந்த ஜெகன்நாதனின் வக்கீலும் விஸ்வநாதனின் வக்கீலும் அந்த காவல் ஆய்வாளரிடம் சென்று

“மேடம்.. நாங்க அவங்க குடும்ப வக்கீல் என்ன விடயம்ன்னு கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா..”

என்று கேட்க உடனே அந்த ஆய்வாளர்

“இந்தாங்க சார் நீங்களே படித்து தெரிஞ்சுக்கங்க..”

என்று வாரண்டை நீட்ட அதை பிரித்து படித்த இருவரும் சற்று அதிர்ந்தே போனார்கள். ஆம் ஏனென்றால் அதில் விக்ரம் மீது ஐபிசி செக்சன் 354A வின் விதிப்படி அவன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் இருவரின் முக மாற்றத்தை கண்ட விஸ்வநாதனும் ஜெகன்நாதனும் அவர்களை பார்த்து என்ன என்று வினவ உடனே அவர்கள் ஆய்வாளரை பார்த்து

“எக்ஸ் க்யூஸ் மீ.. மேடம்”

என்று கூறிவிட்டு விஸ்வநாதனையும் ஜெகன்நாதனையும் தனியே அழைத்து செல்ல அப்போது விக்ரமும் மணவறையில் இருந்து எழுந்து அவர்களுடன் சென்றான். அவர்கள் இருவரும் விபரத்தை கூற இதை கேட்ட மூவரும் ஆடி தான் போனார்கள். உடனே விக்ரம் வக்கீல்களை பார்த்து

“அங்கிள், இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா..??”

என்று கேட்க அப்போது அங்கு நடக்கும் விடயங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுப்போல மண்டபத்தின் ஒரு மூளையில் அமர்ந்தபடி அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே தன் கையில் வைத்திருந்த குலாப் ஜாமுனை ருசித்து கொண்டு மணவறையில் அமர்ந்திருந்த மித்ராவை ஒரு வஞ்சக புன்னகையுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

விக்ரம் கூறியதை கேட்டவர்களுக்கு அவனை பற்றி நன்றாக தெரியும் அதனால் அவர்கள் விக்ரமை நிதானப்படுத்திவிட்டு ஆய்வாளரிடம் சென்று

“மேடம் இதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஆதாரம் இருக்கா.. இல்ல நார்மல் ப்ரொசீடீங்ஸ் ஃபாலோ பண்றீங்களா..”

என்று கேட்க அதற்கு அந்த ஆய்வாளர்

“வீடியோ ஆதாரமே இருக்கு சார்.”

என்றவர் மீண்டும்

அதுமட்டுமில்ல சார் இந்த கேஸ் சென்னை கமிஷனர் ஆபிஸ்ல கொடுத்தது அங்க இருந்து தூத்துக்குடி கமிஷனர் ஆபிசுக்கு பார்வேட் ஆகி உடனே அரஸ்ட் செய்ய சொல்லி எங்களுக்கு ஸ்டீரிக்ட் ஆர்டர். உங்களுக்கே தெரியும் இதுமாதிரி கேஸ்ல எங்க நடவடிக்கை எப்படி இருக்கும்ன்னு ஆனா இவங்க பெரிய இடம்ங்குறதால நான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன்.

என்று கூற உடனே அவ்விரு வக்கீல்களில் ஒருவர்

“மேடம், ஒரு அரைமணிநேரம் கொடுக்க முடியுமா அதுக்குள்ள நான் இதை பேசி முடிச்சுடுறேன்..”

என்று கூற உடனே அந்த ஆய்வாளர்

“சாரி சார், இதுவே லேட்.. நீங்க எதுவாக இருந்தாலும் கமிஷனர் ஆபிஸ் வந்து பேசிக்கோங்க..”

என்று கூறி விக்ரமை கைது செய்ய அங்கிருந்த கான்ஸ்டேபிள்களுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர்கள் விக்ரமை அரஸ்ட் செய்து கமிஷனர் ஆபிசுக்கு அழைத்து சென்றனர். அப்போது விஸ்வநாதன் ஜெகன்நாதனை பார்த்து

“நீ தைரியமா இரு ஜெகன்நாத்.. நான் லாயரை அழச்சுட்டு போய் பெயில் எடுத்துட்டு வரேன்.”

என்று கூறி ஜெகன்நாதனை அனுப்பிவிட்டு தானும் தனது வக்கீலை அழைத்துக் கொண்டு கோர்ட்டுக்கு கிளம்ப

“நில்லுங்க சின்னைய்யா..”

என்று அவரை தடுத்து நிறுத்தினார் ஜோதிடர் நரசிம்மன். உடனே விஸ்வநாதன் ஜோதிடரை பார்க்க அவரோ

“என்ன சின்னையா நான் சொன்னதை மறந்துட்டீங்களா..??”

என்று கேட்க, அதற்கு விஸ்வநாதன் புரியாமல் முழிக்க, உடனே ஜோதிடர்

“இந்த மாசத்துல இந்த முகூர்த்தம் தான் மித்ராவுக்கு கடைசி முகூர்த்தம் இதுல மட்டும் அவளுக்கு கல்யாணம் நடக்கலன்னா என்ன நடக்கும்ன்னு தெரியும்ல..”

என்று கூறி அவருக்கு ஞாபகப்படுத்த ஒன்றும் பேசாது நின்றார் விஸ்வநாதன். அப்போது அவருக்கு அருகில் நின்றபடி ஜோதிடர் கூறியதை கேட்டு நின்றிருந்த யமுனா தன் மணாளனை பார்த்து

“என்னங்க, ஜோசியர் என்ன சொல்றாரு..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன் எதுவும் பேசாது மௌனமாக நிற்க உடனே யமுனா ஜோதிடரை பார்த்து

“என்ன ஜோசியரே.. என்ன சொல்றீங்க.. இது தான்‌ மித்ராவுக்கு கடைசி முகூர்த்தம்ன்னு ஏதேதோ சொல்றீங்களே.. எனக்கு ஒன்னும் புரியலை..”

என்று கேட்க, அதற்கு ஜோசியர் விஸ்வநாதனை பார்க்க அதை கவனித்த யமுனா உடனே தன் மணாளனை பார்த்து

“என்னங்க, என்னனு சொல்லுங்க..”

என்று கேட்க விஸ்வநாதனும் நடந்த அனைத்தையும் கூற இதை கேட்ட யமுனா நின்ற இடத்திலேயே லேசாக தடுமாற அவரை தாங்கி பிடித்து அருகில் இருந்த ஒரு நாற்காலியில் விஸ்வநாதன் அமர வைத்தார். இதை பார்த்த மித்ரா மணவறையில் இருந்து

“அத்தை..”

என்றபடி எழுந்துக் கொள்ள அங்கே அவளருகில் நின்றுக் கொண்டிருந்த ஜானகி மித்ராவை பார்த்து

“மித்ரா, மணவறையில இருந்து எழுந்துக்காத..”

என்று கூற அதற்கு மித்ரா

“ஆனா பாட்டி..”

என்று கூற அதற்கு ஜானகி

“எல்லாத்தையும் உன் தாத்தாவும் மாமாவும் பார்த்துப்பாங்க நீ மட்டும் நல்ல நேரம் முடிவுறும் வரைக்கும் மணவறையை விட்டு கீழே இறங்காதே இது என் மேல சத்தியம்..”

என்று கூறி அவர் கீழே வர உடனே அங்கு நின்றிருந்த ராகவ்

“வாட் ரப்பிஷ் இந்த 21ஸ்ட் சென்சுரி ல இன்னுமா இதை எல்லாம் நம்பிட்டு இருக்கீங்க..”

என்று கேட்க, அதை கேட்ட ஜானகி

“உனக்கு இதெல்லாம் அவ்வளவா புரியாது ராகவ்.. இவர் நம்ம ஜமினோட குடும்ப ஜோசியர் இதுவரைக்கும் இவர் சொன்னதுல ஒன்னு கூட தவறுனதே கிடையாது. அதுவுமில்லாம இது எங்களுடைய நம்பிக்கை.”

என்று கூற அப்போது தன் மணாளனை பார்த்த யமுனா

“இதுக்கு தான் இவ்வளவு அவசர அவசரமா இந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்தீங்களா..??”

என்று கண்கள் கலங்க கேட்க, அதற்கு விஸ்வநாதன்

“ஆமா யமுனா, இதை சொன்னா நீ தாங்கமாட்டன்னு தான் உன்கிட்ட சொல்லல..”

என்று கூற உடனே தன் கண்களை துடைத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்த யமுனா தன் மணாளனை பார்த்து

“கிளம்புங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விக்ரமை கூட்டிட்டு வருவோம்..”

என்று கூறி அங்கிருந்து நகர அப்போது அங்கிருந்த ஜோதிடர் அவர்களை பார்த்து

“ஒரு நிமிடம் சின்னம்மா.. நீங்க மாப்பிள்ளையோட வர்ற வரைக்கும் பொண்ணு காத்துட்டு இருக்கும் ஆனா நல்ல நேரம் காத்துட்டு இருக்குமா?? இன்னும் 20 நிமிசத்துல மித்ரா கழுத்துல தாலி ஏறனும் இல்லைனா..”

என்று அவ்வாக்கியத்தை முடிக்காது அவர்களை பார்க்க உடனே யமுனா

“இவ்வளவு சீக்கிரத்துல எப்படி ஜோசியரே கல்யாணம் பண்றது இதுக்கு வேற பரிகாரமே இல்லையா..”

என்று கேட்க அதற்கு ஜோதிடர்

“பண்ணலாம் சின்னம்மா ஆனா..”

என்று கூறியபடி விஸ்வநாதனை பார்க்க அதை கவனித்த யமுனா

“என்னாச்சு ஜோசியரே என்னன்னு சொல்லுங்க எதுவாக இருந்தாலும் நான் செய்றேன்..”

என்று கூற ஆனால் இன்னமும் அவர் விஸ்வநாதனை பார்த்தபடியே தயங்க இதை கவனித்த விஸ்வநாதன் தன் மனயாளை பார்த்து

“அது வந்து யமுனா..”

என்று இழுக்க, இதை பார்த்த சீனிவாசனுக்கு கோபம் பீறிட்டு வர உடனே தன் மகனை பார்த்து

“டேய்... என்னடா தயங்குற.. இப்ப அதை நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா..”

என்று கேட்டார். அதை கேட்ட யமுனா உடனே அருகிலிருந்த விஸ்வநாதனை பார்க்க அவரோ அங்கு ஒன்றும் பேசாது நின்றார். உடனே யமுனா

“என்னங்க மாமா என்ன சொல்றார்?? அப்போ இதற்கு வேற ஏதாவது வழி இருக்கா?? சொல்லுங்க..”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“ம்.. ஆமா அன்னைக்கு மித்ராவோட கண்டத்த பற்றி ஜோசியர் சொல்லும்போதே அவளுக்கு இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் செய்தா மட்டும் தான் இதுல இருந்து அவ உயிர் தப்பிக்க முடியும்ன்னு சொல்லிட்டு அவர்கிட்ட இருந்த நம்ம அர்ஜூன் ஜாதகத்தை மித்ராவோட ஜாதகத்தோட வச்சு பொருத்தமும் பார்த்து எனக்கு போன் செய்தவர் இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் ஒருத்தர் இன்னொருத்தருக்காகவே பிறப்பெடுத்தா மாதிரியே இருக்கு சின்னையான்னு சொன்னார்.. ஆனா நான் தான் இது உனக்கு பிடிக்காதுன்னு விக்ரம் ஜாதகத்தை வச்சு பார்க்க சொன்னேன்..”

என்று அவர் கூற இதை கேட்ட யமுனா

“அப்ப விக்ரம் ஜாதகம்??”

என்று கேட்க அதற்கு விஸ்வநாதன்

“அதுவும் பொருந்துச்சு ஆனா அர்ஜுன் ஜாதகம் பொருந்துன அளவுக்கு இல்ல.. அதனால இப்ப நமக்கு இருக்க ஒரே வழி அர்ஜுன் தான்..”

என்று இவர் கூறி முடிக்க இதையெல்லாம் கேட்ட யமுனா என்ன செய்வதென்று புரியாமல் மணமேடையில் அமர்ந்திருந்த மித்ராவையும் பின்பு தனக்கு அருகில் நின்றிருந்த தன் மகன் அர்ஜுனையும் பார்க்க அப்போது அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் தன் அன்னையை பார்த்து வலபுறமும் இடபுறமுமாக தலை அசைக்க இப்போது யமுனா என்ன செய்வதென்று புலப்படாமல் நின்றார். அதேசமயம் இதை கவனித்த சீனிவாசன் யமுனாவிடம் சென்று

“எனக்கு தெரியும் மருமகளே.. அர்ஜுனுக்கு மித்ராவை கட்டிக்க இஷ்டம் இல்லன்னு.. ஆனா இப்ப அதை தவிர வேற வழி கிடையாது அதனால நீ தான் அர்ஜுன்ட்ட பேசி இந்த கல்யாணத்த நடத்தனும்..”

என்று கூற இதை கேட்ட யமுனா ஒன்றும் பேசாது அப்படியே நிற்க இதை பார்த்த ஜானகி

“என்ன யமுனா அப்படியே நிக்குற.. ஒருவேளை உனக்கும் மித்ரா மருமகளா வர்றது பிடிக்கலையா..”

என்று கேட்டுக் கொண்டிருக்க உடனே சீனிவாசன்

“இப்படி என் பேத்தியோட வாழ்க்கை கேள்விகுறியா நிக்குதே.. இதை பார்க்கவா என்னை இன்னும் உயிரோட வச்சுருக்க ஆண்டவா..”

என்று கத்தியவர் சட்டென்று தன் மார்பை பிடித்துக் கொண்டு

“ஆ..”

என்று அருகில் நின்றிருந்த ராகவ் மீது நிலை தடுமாறி விழ

“தாத்தா…”

என்று ராகவ் அலறி பிடிக்க பக்கத்தில் நின்றிருந்த அனைவரும் பதறிப்போக அவரோ மணமேடையில் அமர்ந்திருந்த தன் பேத்தியை பார்த்தபடி

“மன்னிச்சுடும்மா மித்ரா.. மித்ரா..”

என்று கூற உடனே இதை பார்த்த மித்ரா மணவறையிலிருந்து எழுந்து ஓடி வர அங்கு வந்த அர்ஜுன்

“ராகவ் சீக்கிரம் போய் கார் எடு.. நான் தாத்தாவை தூக்கிட்டு வரேன்..”

என்று கூறி சீனிவாசனை தூக்க முயற்ச்சிக்க ஆனால் அவரோ

“இல்ல நான் வரமாட்டேன் என் பேத்தி கல்யாணத்த பார்க்காமலேயே போய்டுவேனோன்னு எனக்கு பயமாயிருக்கு அப்டி நான் போயிட்டா என் கட்டை வேகாது..”

என்று கூற அதை கேட்ட ஜானகி

“என்னங்க என்ன பேசுறீங்க.. அவன் தான் தாலி கட்ட மாட்டேன்னு சொல்றானே அப்புறம் எப்படிங்க கல்யாணம்..”

என்று அவர் பேசும்போதே தன் மனையாளை பார்த்து சீனிவாசன் தன் இடக்கண்ணை சிமிட்ட இதை புரிந்து கொண்ட ஜானகி உடனே தன் மருமகளை பார்த்து

“அம்மா யமுனா.. இப்ப என் தாலி பாக்கியம் உன் கையில தான்மா இருக்கு தயவ செய்து அர்ஜுனை மித்ரா கழுத்துல தாலி கட்ட சொல்லும்மா..”

என்று கூற இதை கேட்ட அம்மண்டபத்தில் இருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொள்ள யமுனாவும் விஸ்வநாதனும் அர்ஜுனை பார்த்து

“உன் கோபத்தை காட்ட இது நேரமில்ல அர்ஜுன்.. சீக்கிரம் மித்ரா கழுத்துல தாலி கட்டு அர்ஜுன்”

என்று கூற அர்ஜுன் அசைந்தபாடில்லை உடனே விஸ்வநாதன்

“என்னை பெற்று வளர்த்தவர் சாக கிடக்குறார் அர்ஜுன் அவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் என்னையும் யாரும் உயிரோட பார்க்க முடியாது சொல்லிட்டேன்..”

என்று காட்டமாக கூற உடனே யமுனா

“அவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நானும் உயிரோட இருக்கமாட்டேன்..”

என்று கூற இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்ட அர்ஜுன்

“போதும் நிறுத்துங்க…”

என்று அந்த மண்டபமே அதிரும் அளவுக்கு கத்தியவன்

“இப்ப என்ன நான் அவ கழுத்துல தாலி கட்டனும் அதானே..”

என்றவன் சில வினாடிகள் தன் அன்னையை பார்த்துவிட்டு அதன்பின் மித்ராவை எரிக்கும் பார்வை பார்த்தவன் தன்னுடைய இச்சூழ்நிலையை எண்ணி மனதில் எரிமலைபோல குமுறியவாறு கைகளை இருக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன்

“கட்டுறேன்..”

என்று கூற அவன் கூறிய பதிலை கேட்ட அவன் சொந்தங்கள் யாவரும் நிம்மதியடைய உடனே ஜானகி

“டேய் ராகவா.. நீ தானே மாப்பிள்ளை தோழன் சீக்கிரம் உன் அண்ணனை கூட்டிட்டு போய் மணவறையில உட்கார வை..”

என்று கூறிய ஜானகியை முறைத்து பார்த்தப்படியே அர்ஜுன் அங்கிருந்து தானாகவே சென்று கடுப்புடன் மணவறையில் அமர மீண்டும் ஜானகி

“மருமகளே உன் மாமாவுக்கு ஏதாவது ஆகுறத்துக்குள்ள என் பேத்திய கொண்டுப்போய் மணவறையில உட்காரவைம்மா..”

என்று கூற அதற்கேற்றார்ப் போல் சீனிவாசனும் மூச்சுவிட சிறமப்படுவதைப் போல செய்ய உடனே யமுனா மித்ராவை அழைத்துக் கொண்டு மணவறையில் தன் மகனிற்கு அருகில் அமர்த்த மீண்டும் மித்ராவை முறைத்துவிட்டு தன் தாயை பார்க்க சரியாக அதே சமயம் அய்யர் மாங்கல்யத்தை எடுத்து நீட்டியப்படி

“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..”

என்று கூற அர்ஜுனும் மித்ராவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினான். இப்போது இவர்கள் இருவரும் கணவன் மனைவியானார்கள்..

சிறிது நேரத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முடிய மணமக்கள் இருவரையும் ஐயர் பெரியவர்களிடம் ஆசி பெற கூற அனைவரையும் முறைத்துவிட்டு

“இப்ப சந்தோசமா..”

என்று காட்டமாக கேட்ட அர்ஜுன் வேக நடையிட்டு மணமகன் அறையினுள் புகுந்து சில வினாடிகளில் வெளியேறி தன் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். இப்போது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரருகில் வந்த ராகவ்

“வாங்க தாத்தா ஆஸ்பத்திரிக்கு போகலாம்..”

என்று கூறி அவரை தூக்க முற்பட அப்போதென்று பார்த்து சீனிவாசன்

“கொஞ்சம் இருடா ராகவ்..”

என்று கூறிவிட்டு தன் மார்பை பிடித்தவாறு

“யாஆஆவ்…”

என்று ஏப்பம் விட்டுவிட்டு

“அடடே... இப்ப பரவாயில்லையே அப்ப எனக்கு வந்தது ஹார்ட் அட்டாக் இல்லையா கேஸ் ட்ரபிளா..”

என்று கூற இதை கேட்டு ஆடிப் போன அனைவரும் சீனிவாசனை புரியாமல் பார்க்க, பின்பு காலம் தாழ்ந்த பின்னரே அவர்களுக்கு புரிந்த்து இவை அனைத்துமே அவர் தன் பேரன் பேத்தி திருமணத்தை நடத்த செய்த நாடகமென்று இப்போது அது அவர்களுக்கு புரிந்துவிட்டது என்பதை அவரும் அறிந்து கொண்டார். உடனே தன் தந்தையிடம் வந்த விஸ்வநாதன்

“என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க..”

என்று கேட்க அதற்கு சீனிவாசன்

“மன்னிச்சிடுடா விஸ்வா.. எனக்கு என்ன செய்றதுன்னே புரியல டா அதான் இப்படி ஏதாவது நடந்தாவாவது அவன் தாலி கட்டுவான்னு செய்தேன் அவனும் நான் நினைச்ச மாதிரியே தாலிய கட்டிட்டான்…”

என்று கூற யாருக்கும் என்ன பேசுவதென்றே புரியவில்லை..

அப்போது அங்கு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாது இவர்கள் இன்று செய்த இக்காரியத்தால் வருங்காலத்தில் தன் மகனின் வாழ்க்கை எத்திசையில் பயணிக்குமோ..?? என்ற மனவோட்டத்துடன் முகத்தில் பயத்துடனும் கவலையுடனும் யமுனா நின்றுக் கொண்டிருக்க அப்போது அவரின் மனதை படித்த ஜானகி தன் மருமகள் அருகில் சென்று

“உன் பயமும் கவலையும் எனக்கு புரியுது யமுனா.. ஆனா நீ வேணும்ன்னா பாரு வருங்காலத்துல இவங்க ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோசமா வாழப் போறாங்கனு..”

என்று கூற ஒன்றும் பேசாது நின்றிருந்த யமுனாவின் கைகளை பற்றிய விஸ்வநாதன் தன் மணாளினியை சமாதானப்படுத்த முயற்சிக்க ஆனால் அவரோ தான் சமாதானமடைந்ததைப் போல முகத்தில் சிறு புன்னகையை மட்டும் காட்டிவிட்டு இன்னமும் மனதில் அதே கவலை கலந்த பயத்துடனே நின்றுக் கொண்டிருந்தார்.

அதை தொடர்ந்து மித்ராவும் விஸ்வநாதனும் விக்ரமை பார்க்க தூத்துக்குடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர்.

1610645173526.jpg
 
Status
Not open for further replies.
Top