எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெருப்பாகும் உன் தீண்டல்கள்-கதை திரி

Status
Not open for further replies.
லோ ப்ரண்ட்ச் நான் யாருன்னு ஞாபகம் இருக்கா நான் தாங்க மெல்லினம் ரைட்டர் ஆள் அட்ரஸ் இல்லாமா காணமா போன அதே ஆள் தான்.
இப்ப திரும்பவும் வந்துருக்கேன் ஒரு கதையோட யாரும் பயப்படாதீங்க இந்த கதையை பாதியிலயோ இல்லை எபி கொடுக்காமலோ விட மாட்டேன். ஏன்னா இது அல்ரெடி ரைட் பண்ணி வச்சுருந்த கதை தான் அதனால் தங்கு தடையில்லாமல் தினமும் எபி வந்துடும் சனி ஞாயிறு தவிர்த்து.

கதிர் முல்லை மாதிரி இவுங்களும் உங்க மனசை கவர்வாங்கன்னு நம்புறேன். பாப்போம்.....

இதோ முதல் எபி படிச்சுட்டு உங்க கமெனட்ஸ் மறக்காம சேர் பண்ணங்க
😜


நெருப்பாகும் உன் தீண்டல்கள்

தீண்டல் 1:

"அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்து கொண்டாள்.விழித்துக் கொண்டவள் தன் கண்களை சுற்றிலும் ஓட விட்டதில் இருளடைந்த அறையினுள் அடைத்து கிடப்பது அவளிற்கு விளங்கிற்று."

மூச்சு முட்டும் அளவிற்கு வாயில் எதுவோ இருக்க...முயன்று கடினப்பட்டு அதனை துப்பியவள் பார்க்க ஒரு சுருள் வெள்ளை நிற துணி பந்து அது. கைகள் கட்டிய நிலையில் இருந்ததால் எழுந்தே அமர முடியாமல் தடுமாறியவள் பரிதாபமாக முழித்து கொண்டிருந்த வேளை அவளின் கைகட்டு அவிழ்ந்தது.

சட்டென பரபரப்பானவள் தன் கால் கட்டினை பார்த்தவள் அருகில் கிடந்த கத்தியினை எடுத்து அதனை அறுக்க ஆரம்பித்திருந்தாள்.

எழுந்து கதவினை நோக்கி செல்ல முற்பட்டவள் நெஞ்சை அடைக்கும் உணர்வில் திரும்பி பார்க்க அருகில் இவளைப் போலவே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு சிறுமி!!!!!!!...

பதறியடித்து கொண்டு அச் சிறுமியின் அருகில் சென்றவள் அவளின் கட்டுகளை பிரித்து விட்டு எழுப்ப முயல ம்ஹீம் முடியவில்லை!!..அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து தெளிக்க????அப்போதும் பயனில்லை..!!!!!!

பட்டென அவளை கைகளில் ஏந்தி கொண்டவள் அறையினை வாயிலை நோக்கி நகர்ந்து அதனை திறக்க முற்ப்பட முடியவில்லை…..

கண்களை சுழல விட்டவளிற்கு சிறிது தூரம் தள்ளியிருந்த பூ ஜாடியின் பின்புறம் இருந்த சாவி புலப்பட அதனை எடுத்தவள் சாவி தூவாரத்தினூள் நுழைத்து கதவினை மெதுவாக திறந்து முடிப்பதற்குள் முழுவதுமாக வியர்வையில் குளித்திருந்தாள்.

சிறுமியுடன் வெளியே வந்தவள் சுற்றிலும் யாரும் இல்லாததை உறுதிப்படுத்தி கொண்டு நகர நினைத்த நொடி அவள் முன் தன் ராட்சச பற்களை காட்டி கொண்டு வந்து நின்றது ஒரு நாய். திகைத்து நின்று விட்டவளிற்கு இனி தப்பி செல்ல முடியாது என உறுதியாக நினைத்தவளிற்கு கண்களில் கண்ணீர் உற்பத்தியாகியது. தன் தோளில் சுமந்திருந்த குழந்தையின் முகத்தை நீர் நிறைந்த கண்களுடன் ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் அவளை அடைத்து வைத்திருந்த அறையினுள் நுழைய முற்பட்ட நொடி "பொத்" என்று அங்கிருந்த நாய் கீழே விழுந்து உயிரை விட்டிருந்தது.

என்ன ஏதேன்று நின்று யோசிக்கும் நிலையில் அவள் இல்லாத காரணத்தால் தங்களின் உயிரை காக்கும் பொருட்டு மின்னலென வேகமாக ஓடியிருந்தாள்.

"ஏய்….ஏய்….கிழவி எதுக்காக அவள நீ தப்பிக்க விட்ட……"

"அடேய் பாவம் டா அந்த பொண்ணு அந்த குழந்தை என்ன பண்ணுச்சு அந்தப் போய் அடிச்சி வச்சிருக்கியே டா பாவி..???"

"இந்தா...கிழவி உனக்கு எல்லாம் ஒண்ணும் புரியாது போச்சு போ அவளால கிடைக்க வேண்டிய பணம் எல்லாம் போச்சு எல்லாம் உன்னால தான் மறுபடியும் அவளைப் புடிக்கனும் நீ விலகு!!!!!...."

இரவில் இந்த சம்பாஷனைகளை கேட்ட கோபாலிற்கு உடம்பு வியர்த்து வெடவெடத்து போயிற்று.

'யாரப் பத்தி இப்புடி ஆத்தாவும் பேரனும் பேசிட்டு இருக்காங்க' என நினைத்தவன் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கி மெல்ல எட்டிப் பார்த்ததில் இருவரும் போனில் என்னவோ பார்ப்பதும் தீவிரமாக சண்டை இடுவதும் மாக இருந்தனர்.

பேரனிடம் சண்டை இட்டு கொண்டிருந்த முனியம்மாள் வெளிப்பக்கம் பார்க்க கோபல்சாமி அவர் கண்ணில் அகப்பட்டு கொண்டான்.

"எலேய் கோபாலு என்னடா அங்க நின்னுட்டு களவாணிப் பயலாட்டம் ராத்திரி நேரத்துல நோட்டம் விட்டுட்டு இருக்க வாடா இங்கன" என அவர் சத்தமிட்டதில் நடுங்கி கொண்டே அவனருகே வந்தான்.

"என்னடா இப்புடி வேர்த்துக் போய் வர்றவன் காத்து கருப்பு ஏதும் அடிச்சிடுச்சா இப்புடி நடுங்குறவன்???" என்க,

"ஆத்தா….யாரை கடத்தி வச்சிருக்கீங்காங்க உங்க சின்ன பேரன் இப்புடி சண்டை போட்டுட்டு இருக்கீங்க ஆனாலும் நீங்க நியாயவதி ஆத்தா அந்த பொண்னையும் குழந்தையும் தப்பிக்க விட்டுட்டீங்க நீங்க ரொம்ப நல்லவங்க ஆத்தா…...ஆமா அது யாரு நம்ம சின்னவரோட எதிரிய இல்ல ஏதும் காதல் விவகாரமாக?????" என அவன் கேட்டதில் பாட்டியும் பேரனும் சில நொடிகள் புரியாமல் விழித்தவர்கள் புரிந்த நொடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள் "பக்கென" சிரித்து விட்டனர்.

அவர்களின் சிரிப்பை விநோதமாக பார்த்து கொண்டிருந்த கோபால் சாமியிடம்,
"என்றா கோபாலு அது கேமுடா(Game)உண்மையினு நெனச்சுட்டியா நீயி!!!!" என அவர் மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க…..

"கேம்மா…!!!!!" என புரியாமல் தலையை சொறித்தவனை கண்ட காளிதாசன்,
"கோபாலண்ணே இங்க வா" என அருகில் அழைத்து தனது மொபைலை காட்டியவன் " இங்க பாரு இது ஒரு விளையாட்டு" என தற்போது புதிதாக களம் இறங்கியிருந்த அந்த அனிமேஷன் கேம்மை(Save the girl) அவனிற்கு போட்டு காட்டி விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்.

"அது சரி நீங்க ஏதோ பணம் போச்சுன்னு ஆத்தா கிட்ட சொல்லிட்டிருந்தீங்க அது என்ன???" என் அவன் கேட்க,

"அதுவா அந்த பொண்ண அடிச்சி வச்சிருந்தா எனக்கு காயின்ஸ் கிடைக்கும் அது சேர்த்து வச்சு நம்ம ஏதாவது பொருள் வாங்கலாம் இப்ப இந்த பொண்ணு தப்பிச்சதால அந்த காயின்ஸ் எல்லாம் போயிடுச்சு அதான் அப்புடி சொன்னேன்" என கூறினான் காளிதாஸ்.

"ஓஹோ…..ஏன் ஆத்தா உனக்கு இது எல்லாம் வெளையாட தெரியுமா எப்புடி அந்த பிள்ளைய தப்பிக்க விட்ட நீ" என,

"இங்க கொண்டாட காளி அந்த போன" என அதனை வாங்கியவர் "கோபாலு இந்தப் பாரு இந்த கத்திரிக்கோல கொண்டாந்து அந்த புள்ளௌயோட கை கட்ட அறுக்கணும் அப்பறம் கால் கட்டுக்கு இந்த கத்தி அப்பறம் சாவி இங்க இருக்கு பாரு இது தொட்டு எடுத்து கதவு கிட்ட கொண்டுப் போன கதவு தெறந்துக்கும் இந்தா இந்த துப்பாக்கிய தொட்ட நாயி செத்து போயிடும்"
என போனில் திறையில் தெரிந்த இமேஜ்ஜுகளை காட்டி அவனிற்கு எப்படி விளையாடுவது என விளையாடி காட்டினார் முனியம்மாள்.

"பார்றா நல்லா இருக்கே ஆத்தா இந்த வெளையாட்டு ஆமா இதுல ஜெயிச்சுட்டிங்களா???" என்றான் கோபால்.

"ஜெயிச்சுட்டேனா!!!!இங்கன பாருடா ஜெயிச்ச பணத்துல வீடு, ஸ்வீம்மீங் பூல்லு, காரு எல்லாம் வாங்கியிருக்கேன்" என நிஜத்தில் அனைத்தையும் வாங்கியது போல் பெருமை பீற்றி கொண்டிருந்தார்.

'கெழவிக்கு குசும்ப பாத்தியா என்னமோ உழைச்சு எல்லாத்தையும் நிலத்துல வாங்குன மாதிரி ரொம்ப தான் பில்டப்பு' என நினைத்த காளி உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

"சரிடா கோவாலு இந்த நேரத்துல என்ன ஜோலியா நீ இங்கன வந்துருக்குறவே??"

"அதுவா ஆத்தா நாளைக்கு விடியக்காத்தல கோமியம் வேணும் அதுக்கு தான் சொல்லிட்டு இந்த டபராவையும் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" என்றவன் சிறிய பித்தளை டபாரா ஒன்றை நீட்டினான்.

"அங்கன மாடு கிட்ட கொண்டு போய் வச்சுட்டு போடா காத்தால பிடிச்சி வச்சிருக்கேன் வெரசா வந்து வாங்கிக்கோ அந்த பரிமாளா வேற கேட்டுருக்கு அவ வந்துட்டானா உனக்கு மிச்சம் வைக்க மாட்டா!!!"

"சரித்தா என் வீட்டம்மாள அனுப்பிச்சு விட்டுடுறேன்"

"ஏண்டா அந்த மூக்கையன் பொண்ணு மருந்து குடிச்சுட்டாலாமே என்ன வெவகாரமாம்??"

"அட ஆமா ஆத்தா……" என இவர்கள் பேசி கொண்டிருந்த நொடி,

ஒரு பெரிய லாரியும் அதன் பின் ஒரு குட்டி மினி டேம்போவும் புழுதி பறக்க வந்து இவர்களுக்கு எதிரே ஒரு அடி தள்ளி இருந்த வீட்டின் முன் நின்றது.

அதில் இருந்து குதித்து இறங்கிய டிரைவர் அருகில் இருந்த கீளினரிடம்,
"இந்த அட்ரஸ் தான்டா நல்லா விசாரிச்சுட்டல??" என்

"ஆமாண்ணே இது தான் நல்லா தெரியும் இருங்க எதுக்கும் யாருக்கிட்டயாவது விசாரிச்சுகிறேன்" என்றவன் அருகே இருந்த கோபாலிடம் வந்து,

"ஏண்ணே இது கணக்கு வாத்தியார் சண்முகம் வீடு தானே??" என்க,

முனியம்மாளை ஒரு பார்வை பார்த்தவன் "ஆமாங்க ஆனா அவுக இந்த வீட்டுல இப்ப இல்லிங்களே எல்லாம் திருச்சிக்கு போயிட்டாகளே"

"திருச்சில இருந்து தானே வரும் நாங்க அவுங்க தான் இந்த சாமானை எல்லாம் இங்க கொண்டாந்து எறக்க சொன்னாங்க அவுங்க எல்லாம் பின்னாடி வந்துட்டு இருக்காங்க" என பதிலளித்தான் கீளினர்.

"ஏண்டா பரதேசி கேட்டுட்டு வாடான்னா அங்கன என்னடா கதை பேசிட்டு இருக்கவன்" என டிரைவர் ஒரு அதட்டலிட்டதில் விரைந்து அங்கே சென்றான் கீளினர்.

பின் இருவருமாக அங்கிருந்த சாமான்களை இறக்கி வீட்டினுள் கொண்டு சென்றனர்.

"ஆத்தா" என கோபால் பேச வந்தவனை கண்களால் அடக்கிய முனியம்மாள் "காளி" என அழைத்து சைகை செய்ய அதனை புரிந்து கொண்டவன்,

"அண்ணே நீ வா நம்ம அங்க போலாம் ஒத்தையா கஷ்டப்படுறாங்க பாரு" என கோபாலை அழைத்து கொண்டு அங்கே சென்றவன் அங்கிருந்த டிரைவரிடம்,

"எண்ணண்னே இப்புடி ரெண்டு பேரும் மட்டும் தூக்கி என்னைக்கு முடிக்கிறது வாங்க நாங்களும் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கோம்" என பேசியபடி அனைத்து பொருட்களையும் எடுத்து அடுக்க தொடங்கினர்.

இன்னும் சில பொருட்களே இருந்த நிலையில் "போதும் தம்பி இனி தாங்க பாத்துக்கிறோம் ரொம்ப நன்றி‌ நீங்க வந்தனால கொஞ்சம் சீக்கிரம் ஆச்சு" என டிரைவர் விடைபெறும் பொருட்டு கூற,

"சரிங்கண்ணே" என்ற காளி கோபாலை வீட்டிற்கு கிளம்புமாறு கூறி விட்டு தனது வரவை எதிர்நோக்கி காத்திருந்த பாட்டியிடம் சென்றான்.

"எல காளி…..!!!!!!" அதற்கு மேல் பேச முடியாது அவரின் தொண்டை அடைத்து விட,

"ஆமா அப்புச்சி நீ நினைக்கிறது சரி தான் அவுக எல்லாம் திரும்ப இங்கனவே வர போறாங்களாம் சாமானு மட்டும் முன்னுக்க அனுப்பிட்டு அவுக எல்லாம் பின்னுக்கு வாராக போல!!!"

"ஓஹோ….."

"அப்புச்சி….!!!!!!"

"என்னல"

"அங்க சாமானு எல்லாம் இறக்கும் போது குழந்தைங்க தொட்டிலும்…..இன்னும் விளையாட்டு சாமான்களும் இருந்துச்சு அப்புச்சி….!!!!! அப்போ அத்தா……" அதற்கு மேல் கூற முடியாது அவனின் தொண்டை அடைத்து குரல் உடைய தொடங்கியது!!!!!!!

"உண்மையாவே காளி நீ பாத்தது நெசதானா????

"ஆமா அப்புச்சி…!!"

"அப்போ முடிச்சி போச்சாவே எல்லாம் நா கண்ட கனா எல்லாம்".... என முனியம்மாள் கூறி கொண்டிருக்கையில் வந்து நின்றது அந்த வாடகை கார்.

அதில் இருந்து இறங்கிய சண்முகம் உள்ளே தன் மனைவி மேகலை வைத்திருந்த குழந்தையை தனது தோளில் வாங்கி கொண்டவர் கவனமாக இவர்கள் இருக்கும் திசை பக்கம் திரும்பாது வீட்டினுள் செல்ல,

அவரை பின்பற்றி அவரின் மனைவியும் வீட்டினுள் சென்றிருந்தார்.

குளிருக்காக குழந்தையின் மேல் சிறிய டவலை கொண்டு முழுவதுமாக போர்த்தி இருந்ததால் குழந்தையின் முகம் தெரியாது போயிற்று இங்கிருந்தவர்களுக்கு.

சண்முகம் அவரின் மனைவியும் உள்ளே சென்றிருக்க அதற்குள் வண்டியின் சத்தம் கேட்டு முனியம்மாளின் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வந்திருந்தனர்.

வந்தவர்கள் கண்டது அங்கிருந்த டிரைவரிடம் அவர்கள் வேலைக்கான பணத்தை கொடுத்து கொண்டிருந்த சண்முகத்தை தான்.

பார்த்தது பார்த்தப் படி நின்றிருந்தவர்களின் முகத்தில் வேதனையின் சாயலும் குற்ற உணர்ச்சியுமே….யாருக்கும் அவரிடம் சென்று பேசும் தைரியம் சுத்தமாக இல்லை…….

மூன்று வருடம் முன்பு அவர் பேச வந்த போது தாங்கள் அலட்சியப்படுத்தி கேவலப்படுத்தி விட்டு இப்போது எந்த முகத்தை வைத்து கொண்டு அவரிடம் செல்லுவது மனம் கூசியது அங்கு நின்றிருந்தவர்களுக்கு…..

அதிலும் மனிதர் எதிரே அப்படி ஒரு வீடோ மனிதர்களோ இல்லை தாங்கள் மட்டும் தான் அங்கே இருக்கின்றோம் என்று நினைப்பு போல் அவரின் மூச்சு காற்று கூட இங்கிற்று வராது நடந்து கொண்டார்.

"இவர்கள் செய்ததற்கு மானமுள்ள‌ எந்த மனிதனும் அப்படி தானே நடந்து கொள்வான் அதில் சந்தேகமில்லை".

பணத்தை கொடுத்து செட்டில் செய்த சண்முகம் மீண்டும் வீட்டினுள் நுழைந்து கதவை அறைந்து சாத்திய நொடி அவர் கண்களின் அவர்களீ மீதான அதீத வெறுப்பும் கோபமுமே வெளிப்பட்டது.

அவர் கதவை அறைந்து சாற்றிய வேகத்திலே முனியம்மாளிற்கு தெரிந்துற்றே அவரின் மனதிலும் குடும்பத்திலும் தங்கள் குடும்பத்திற்கான இடமும் மரியாதையும்……!!!!!!!!!

கருத்து திரி


 
வணக்கம் மக்களே,

இதோ தீண்டல்கள் 2 வது எபி. படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்கய்ய சைட்ல கமென்ட் செக்ஷன் ஈ ஆடுது,.😐😐😐

தீண்டல் 2


"அம்மீ………" என்ற அழுகுரலில் காலையில் கண்விழித்தான் சங்கமேஸ்வரன். எழுந்தவன் தனது காலை கடன்களை முடித்து விட்டு கீழிறிங்கியவன் அன்னை அமுதா தந்த காபியை வாங்கி கொள்ள,

அவனின் முகத்தையே உற்று உற்று பார்த்தார் அமுதா.

அன்னையின் பார்வையின் அர்த்தத்தை அறிந்து கொண்டவன் தெரியாதது போல்,"என்னத்துக்கு இப்புடி மூஞ்சிய பாக்குற ஏதும் சொல்லனுமா??"

'இவனுக்கு நெசமாலும் எதுவும் தெரியலையோ' என எண்ணியவர்,"ஒண்ணும் இல்ல நீ போ" என்றிட,

தலையாட்டியவன் வெளி திண்ணையில் வந்தமர்ந்து கொள்ள மறந்தும் அவனின் பார்வை எதிர் வீட்டை நோக்கவில்லை.

"அம்மீ…..அம்மம்மா…...தாத்தா……." என்ற அழுகுரல் இன்னமும் எதிர் வீட்டில் இருந்து கேட்டு கொண்டு நான் இருந்தது.

அவனின் செவிகள் அச் சத்தத்தை உள்வாங்கினாலும் கண்கள் தனக்கு முன்னிருந்த முல்லை செடியை தான் வெறித்திருந்தது.

நேற்று இரவு கம்பெனியில் இருந்து வீடு வந்து போது கவனித்து விட்டான் எதிர் வீட்டில் மீண்டும் குடிவந்து விட்டதை.

இவன் வந்த நேரம் சண்முகமும் மேகலையும் அவர்கள் வீட்டு வெளி திண்னையில் தான் அமர்ந்து கொண்டிருந்தனர்.இருவரும் அடுத்தவரின் வருகையை இருப்பை உணர்ந்தாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர்கள் வேலையை பார்த்து கொண்டனரே தவிர இம்மியளவும் கூட பார்வை அடுத்தவர்களிடம் பாயவில்லை.

வீட்டினுள் நுழைந்த போது அவனின் அன்னை உறங்காமல் கொட்ட கொட்ட விழித்திருந்தார். எப்பொழுதும் தான் வரும் முன்னரே உறங்கி விடுபவர் இன்று உறக்கம் தொலைத்து அமர்ந்திருப்பதற்கான் காரணத்தையும் ஊகித்தவன்,

"என்னம்மா இன்னும் தூங்கலையா??"என்றான் எப்போதும் போலான குரலில்.

"தூங்கனும் நீ சாப்பிடுறியா சாப்பாடு எடுத்து வைக்கவா??" என்க,

"என்ன புதுசா கேக்குறீங்க நான் கம்பெனிலயே சாப்பிட்டு வந்துட்டேன் நீங்க போய் தூங்குங்க" என்றவன் நில்லாமல் மாடியேற….,

வேகமாக வாயிற் கதவருகில் வந்தவர் எதிரே அமர்ந்திருந்த சண்முகத்தையும் மேகலையையும் முறைத்து பார்த்தவர் பட்டென கதவினை அறைத்து சாத்தியிருந்தார்.

அன்னையின் செய்கைகளை கவனித்தவன் விரக்தி சிரிப்பை ஒன்று உதிர விட்டு சென்று விட்டான்.

எத்தனை மணி நேரம் வெளி திண்ணையில் அமர்ந்திருந்தானே அவனின் அன்னை வந்து "சங்கரு வேலைக்கு நேரமாகலையா??" என் கேட்ட பிறகே உள் எழுந்து சென்றான்.

"அப்புச்சி எங்கம்மா??"

"ம்கும் இன்னும் உங்க அப்புச்சிக்கு விடியல போலிருக்கு இன்னும் எழுந்துச்சு வரல ஒத்த ஆளா எத்தனை வேலைய பாக்குறது கூடமாட ஒத்தாசைக்கு கூட ஆளு இல்ல இந்த வீட்டுல??"

"ஏன் இத்தனை நாள் நீங்க மட்டுமா சமைச்சீங்க சொல்லப் போனா அப்புச்சி தான் சமைச்சாங்க நீங்க தான் ஒத்தாசைக்கு நின்னீங்க இன்னைக்கு ஒரு நாள் செத்த நேரம் கண்ணசந்துட்டாங்க…..அவுங்களுக்கு இன்னும் இளமை திரும்புதுன்னே நெனப்பா உங்களுக்கு" என்றான் சுள்ளென,

"சரிப்பா உன் அப்புச்சி பத்தி நான் ஏதும் பேசல போதுமா போய் முதல்ல குளிச்சுட்டு வா" என அவனை விரட்டியவர் "அவுங்க அப்புச்சி பத்தி ஒத்த வார்த்தை ஆத்தமாட்டாம சொல்லிட கூடாது அப்புடி பொங்கிடுவானுங்க நல்லா கொம்பு சீவி விட்டுருங்காங்க" என முணுமுணுத்தவாறே வேலையை தொடர்ந்தார்.

குளித்து முடித்து வந்தவன் உணவு உண்ண வர அங்கே முனியம்மாள் அமர்ந்திருப்பதை கண்டு விட்டு,
"என்ன அப்புச்சி நல்ல உறக்கமோ உடம்பு ஏதும் முடியலையா??" என் விசாரிக்க….

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஈஸ்வரு செத்த நேரம் கூட தூக்கிட்டேன்" என்க,

அவரின் கலங்கி சிவந்து வீங்கி போய் இருந்த கண்களை கண்டவனிற்கு இரவு முழுதும் தூக்கமின்றி அழுதிருப்பது புரிந்தது.

"ம்மா டிபன் எடுத்துவைங்க வா அப்புச்சி போய் சாப்பிடலாம்" என அவரையும் அழைத்து கொண்டு உணவுண்ணும் இடத்திற்கு சென்றான்.


உண்டு முடித்து வெளியே வந்தவன் திண்னையில் அமர்ந்து எதிர் வீட்டையே இமைக்காமல் வெறித்திருந்த தந்தை ஆறுமுகத்தை கண்டவன்,
"ப்பா கம்பெனிக்கு போயிட்டு வரேன்" என,

வழக்கம் போல் அவரிடம் இருந்து எந்த வித எதிர்வினையும் இல்லை.பெரூமூச்செறிந்தவன் எதுவும் பேசாது வெளியேறி விட்டான்.

வீட்டை விட்டு வெளியே வந்தவனின் மனமும் கண்களும் எதிர் வீட்டை நிமிர்ந்து பார்க்குமாறு சண்டித்தனம் செய்ததில் தடுமாறி கொண்டிருந்தவனின் அறிவு,

"ச்சீ…..உனக்கு வெட்கமாக இல்லை உன்ன வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டு போனவள திரும்பவும் பாக்க நெனைக்குறியே ரோஷமுள்ளவனாடா நீ..!!!!!!"என இடித்து வைத்ததில் நிகழ்கால நினைவுகள் பொட்டில் அடித்து அவனின் நிலையை உணர்த்தியதில் அதுவரை தடுமாறிய உள்ளத்தினை இறுக்கி பிடித்தவனின் முகம் இறுகி போயிற்று.

பைக்கில் ஏறி அமர்ந்தவன் அதனை கிளப்ப "அம்மீ….." என்ற அழுகுரலில் கல்லுக்குள் சிறு ஈரம் பூத்தது போல் அவனின் இறுகிய மனதில் சிறு நெகிழ்வு உண்டாக அதற்கு மேல் முடியாமல் பட்டென திரும்பி பார்த்திருந்தான்.

சிறிய அணுகுண்டு சைஸில் பாவடை சட்டை போட்டு கொண்டு நின்றிருந்தவளை கண்டவன் சட்டென தந்தையை திரும்பி பார்த்திட,

அவரின் முகமோ உணர்ச்சி குவியலாக மாறி அவளை இமைக்காது பார்த்தவரின் கண்களில் சிறு ஈரம்.

தந்தையின் முகத்தை பார்த்தவனின் மனம் இளகிட பார்வை அந்த அணுகுண்டை வாஞ்சையுடன் தடவியது.

அழுது கொண்டிருந்தவள் புதியவனின் பார்வையில் சட்டென தனது அழுகையை நிறுத்தி விட்டு கண்களை சுருக்கி அவனை உற்று நோக்க அப்பொழுதும் சங்கமேஸ்வரர் தனது பார்வையை மாற்றி கொள்ளாததை கண்டு அவனை முறைத்து பார்த்தது அந்த வாத்து குஞ்சு.

அவளின் முறைப்பில் "பெத்து விட்டுருக்கா பாரு எருமை மாடு அவளமாட்டம் ரவுடியாட்டம் முறைக்கிறத பாரு வாத்து குஞ்சு" என பொருமியவன் பதிலுக்கு தானும் அவளை முறைத்து பார்த்திட,

எப்பொழுதும் தான் முறைத்து பார்த்தாள் பயப்படும் (போலியாக பயப்படும்) குடும்பத்தினரை போல் அவன் பயப்படாது பதிலுக்கு முறைத்து பார்த்ததில் வெகுண்ட அக்குட்டி வாத்து குஞ்சு,

"கொன்னுதுவேன் போ..!!!!!" என தனது ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டி அவனை பயப்பட வைக்க நினைக்க..,

அதில் ஏகாத்திற்கும் கடுப்பான சங்கமேஸ்வரன், " அடிங்க…..வாத்து குஞ்சு!!!" என்றவாறே பைக்கில் இருந்து கீழிறங்கிட,

இதனை எதிர்பாராத வாத்து குஞ்சு மிரண்டு வீட்டினுள் ஓடி விட்டிருந்தாள்.

உணர்வு உந்த தனது தந்தையை திரும்பி பார்க்க குழந்தையை உள்ளே அனுப்பி விட்டு கடுப்பில்'அடேய் கிராதகா' என்ற ரீதியில் அப்பட்டமாக அவனை முறைத்து கொண்டிருந்தார் ஆறுமுகம்.

கடந்த சில வருடங்களாக தான் பேசியும் எந்த வித எதிர் வினையும் ஆற்றாமல் இருந்தவர் இன்று அந்த குட்டி அணுகுண்டிற்காக தன்னை முறைத்து பார்த்ததை அவனால் ஏற்று கொள்ள முடியாமல் பதிலுக்கு நானும் அவனை முறைத்து பார்க்க….

அதற்குள் வீட்டினுள் சென்றிருந்த அந்த வாத்து குஞ்சு சப்போட்டிற்கு சண்முகத்தை இழுத்து கொண்டு வந்தவள்,
"தாத்தா….ம்ம்ம்…..பாப்பா….கொன்னு சொல்லு…" என கண்களை விரித்து காட்டி சங்கமேஸ்வரன் அவளை முறைத்து பார்த்ததாக கூறியவள் சண்முகத்தை "கொன்னுடுவேன்" என சங்கமேஸ்வரனை பார்த்து சொல்ல சொல்ல,

அதில் மேலும் வெகுண்டவன் இரண்டே எட்டில் அவளை அடைத்து,
"ஏய்…..அணுகுண்டு என்ன சப்போர்ட்டுக்கு ஆள் சேக்குறியா கொன்னுடுவேன் போடி…." என அவளை போல் ஒற்றை கையுயர்த்தி அவளை மிரட்டிட,

அவன் சட்டென இப்படி வருவான் என எதிர்பாராத சண்முகம் ஒரு நொடி அதிர்ந்தாலும் நிமிடத்தில் முகத்தை இயல்பாக்கியவர் அவனை நிமிர்ந்து பாராது குழந்தையை உள்ளே தூக்கி செல்ல தாத்தாவின் தோள்களில் தொத்தி கொண்டிருந்தவள் " டி சொவ்வாத பாப்பா கொன்னு" என மிரட்ட,

அருகில் வந்தும் தன்னை பார்க்காத சண்முகத்தை கண்டு கடுப்பானவன் அப்போதும் அடங்குவேன என்பது போல் " ஏய் போடி வாத்து குஞ்சு ரெளடி" என கத்த…,

அதில் கோபமானவள் சண்முகத்தின் கைகளில் இருந்து திமிறி இறங்கி அவனை நோக்கி ஓடி வந்தவள் அவன் முன் நின்று அருகே இருந்த சிறு குஞ்சியை வைத்து அவனின் முட்டியில் இரண்டு அடி அடித்தாள் "டீ சொவ்வாத,.பாப்பா தா சொவ்வேன் போதா" என கூறி அவனின் கால்களில் தனது பிஞ்சு கரங்களை வைத்து தள்ளி விட்டவள் குடுகுடுவென ஓடி வந்து சண்முகத்தின் தோள்களில் தொத்தி கொண்டவள், " தாத்தா போ….உள்ள போ….அம்மம்மா…."என கூறி அவரை உள்ளே இழுத்து சென்றிருந்தாள்.


மூடிய கதவினையே வெறித்து பார்த்தவன் திரும்ப….

மகனின் கத்தலில் வெளியே வந்த அமுதா அவன் செய்கைகளில் அதிர்ந்து அவனை பார்த்திருக்க அருகே இருந்த ஆறுமுகமோ முகத்திற்கு எட்டாத கண்களில் சிறு சிரிப்புடன் நின்றிருக்க….

எமகாதகன் கண்ணிற்கு அவனின் தந்தையின் சிரிப்பு சிக்கி விட மேலும் அவனை முறைத்து பார்த்தவன் அருகில் இருந்த அமுதாவை திரும்பி கூட பார்க்காது பைக்கை கிளம்பி கொண்டு சென்று விட்டான்.

மகனின் அலட்சியத்தில் மேலும் அதிர்ந்தவர் வேகவேகமாக வீட்டினுள் நுழைய அதனை கண்ட ஆறுமுகம்,
"கழுதை கெட்ட குட்டி சுவரு" என முணுமுணுத்தவர் மீண்டும் அங்கேயே அமர்ந்து விட்டிருந்தார்.

வீட்டிலிருந்து கிளப்பியவன் நேரே வந்து நின்றது அவர்கள் கம்பெனிற்கு தான்.
அது உணவு பொடிகளான சாம்பார் பொடி , சிக்கன் பொடி, மல்லி பொடி, என மசாலா பொடிகளை தயாரிக்கும் சிறு நிறுவனம். அதன் பெயர் "வானவில் மாசாலா" மொத்தம் முப்பது ஆட்களை கொண்டு இயங்க கூடிய மிக சிறிய நிறுவனம்.

அவர்களின் ஊர் மதுரைக்கும் திண்டுக்கல்லில்கும் இடைப்பட்ட நடுவில் இருப்பது சின்னாளப்பட்டி. மதுரையும் திண்டுக்கல்லும் அருகருகே இருப்பதால் மதுரை மொழியையும் திண்டுக்கல் மொழியையும் கலந்து கட்டி பேசுவர் அவ்வூர் மக்கள்.

இவர்களின் நிறுவனம் மசாலா பொடிகளை அருகே இருக்கும் மாவட்டங்களுக்கும் சப்ளை செய்ய தொடங்கியிருந்தனர். பங்கு சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக தனது இடத்தை பிடித்து கொண்டிருந்தது " வானவில் மசாலா".

உள்ளே நுழைந்தவர் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு நேரே மசாலா பொடிகளை அரைக்கும் மிஷின்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவன்,

அரைத்து வைத்திருந்த மசாலா பொடிகளை எடுத்து சோதனை செய்ய மிளகாய் பொடி நன்கு அரைப்படாமல் இருக்க….

"எலேய் மாரி இங்க வாவே" என மசாலா பொடிகளை அரைத்து கொண்டிருந்தவனை அருகே அழைத்தவன்,

"என்னவே அரைச்சிருக்க மிளகா பொடிய திப்பு திப்பா இருக்கு இன்னொருக்க மிஷின்ல போட்டு அரைவே…. பொடி அரைக்கும் மொகரையில துணிய கட்டுல எத்தனை தடவை சொல்லுறது கேட்கவே கூடாதுன்னு முடிவுல இருக்குதியா???"

"அய்யோ அண்ணே இந்த கொரோனாக்கு மாஸ்க்க போட்டு போட்டு மூக்கு வாய் எல்லாம் அரிப்பெடுத்திடுச்சு அதான் துணி கட்டை"

"தடிமாட்டு பயலே போய் துணிய கட்டுல போவே துணி கட்டாமா மிஷினி கிட்ட போனா காலை உடைச்சிடுவேன் போடா" என விரட்டியவன் அடுத்த இடத்திற்கு வந்தான்.

அங்கே தான் பொடிகளை ஐம்பது கிராம் நூறு கிராம் என பொடிகளை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

எடை கல்லில் நிலுவை செய்து பாக்கெட் இட்டு கொண்டிருப்பவர்களில் பெரும்பாலும் பெண்களே.

அவனின் கம்பெனி இருக்கும் இடத்தை நான்கு பிரிவுகளாக பிரித்திருந்தான். முதலில் ரிஷப்சன் அதனை அடுத்து ஸ்டாக் ரூம்(மசால் பாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்வதற்காக அட்டை பெட்டிகளில் அடைத்தை வைத்திருப்பர்) அதனை கடந்தால் இவனுக்கென சிறிய அறை அதற்கடுத்து பொடிகளை பாக்கெட்டுகளில் அடைக்கும் இடம் கடைசியில் மிஷின்கள் இயங்கும் இடம் என பிரித்திருந்தனர்.

வேலை செய்பவர்களுக்கு காலை பதினொரு மணிக்கு டீ டைம் மதியம் இரண்டு மணிக்கு உணவு உண்ணும் நேரம் மீண்டும் நான்கு மணிக்கு தொடங்கும் வேலை இடையில் ஐந்தே மணிக்கு ஒரு டீ நேரம் என் மாலை ஆறு மணிக்குள் அவர்களுக்கான வேலை நேரம் முடிவடைந்து விடும்.

என்றாவது ஆர்டர்கள் அதிகம் டெலிவரி சீக்கிரம் செய்ய வேண்டும் என்றால் இரவு ஒன்பது மணி வரை நீளும்.அதற்கான கூலியையும் வழங்கி விடுவான். அதற்கு மேல் ஒரு மணி நேரம் கூட கூடுதலாக இருக்காது.

அன்று மதுரைக்கு லோட் அனுப்ப வேண்டியிருந்ததால் இரவு ஒன்பது மணி வரை வேலை நீடித்தது.

ஒரு வழியாக வேலையாட்களை அனுப்பி விட்டு லாரியில் லோடுகளை ஏற்றி இரண்டு டிரைவர்களை போட்டு எல்லாம் சரியாக இருக்கின்றதா என பார்த்து விட்டு கடையை அடைக்க இரவு பத்துக்கு மேல் ஆகிற்று சங்கமேஸ்வரனுக்கு.

இரவு உணவினை உண்டு விட்டதால் பிரச்சனை இல்லை. வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

மெயின் ரோட்டில் இருந்து அந்த குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்தவனின் பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருக்க சில நொடிகளில் விடாது ஹாரன் அடித்தவாறே வந்து கொண்டிருந்தது.

அதுவோ குறுகலான பாதை இவன் வண்டியை ஓவர்டேக் செய்து கார் செல்வது கடினமே. அது புரியாமல் விட்டது ஹாரன் அடித்த கார்காரனை கண்டு எரிச்சலுற்றவன் திரும்பி பார்த்து முறைக்கு,

அதனை எல்லாம் கண்டு கொள்ளாது போல் விடாது ஹாரனை அழுத்தி கொண்டிருந்தனர்.

'இதேதடா தலைவலி' என நினைத்தவன் சற்று தூரம் தள்ளி பாதையில் இடப்புறம் இருந்த புதர் செடிகளில் கடினப்பட்டு வண்டியை ஓரம் கட்டியவன் கார் கடந்து செல்வதற்கு வழி விட்டு நிற்க,

அதுவரையிலும் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனம் இவனை கடந்ததும் மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்திருந்தது‌.

முன்னே கார் ஊர்ந்து செல்ல இவன் பின் செல்ல வேண்டிய கொடுமை...சரி சற்று அகலமான இடத்தில் ஓவர்டேக் செய்து விடலாம் என நினைத்து இவன் வட்டியை முறுக்கினால் அதற்கும் இடம் தொடாது வழியை அடைந்து சென்று கொண்டிருந்தது அந்த கார்.

அதில் மேலும் எரிச்சலுற்றவன் ஒரு திருப்பத்தில் வண்டியை மிக வேகத்தை குறைவாக்கி காரின் அருகில் சென்று நொடி நேரத்தில் வேகத்தை கூட்டி அதனை முந்தி செல்ல முயல,

அதனை அறிந்தார் போல் கார்காரனும் வேகத்தை கூட்டிட இதனை எதிர்பாராதவனின் வண்டி தடுமாறி காரின் இடது இன்டிகேட்டரில் "டாமால்" என்ற சத்தத்துடன் மோதி நிற்க அதில் இவனின் முற்பக்க கண்ணாடி உடைந்து விட்டிருந்தது.

இருந்த ஆத்திரத்தில் "எலேய் எழவெடுத்தவனே என்னவே வண்டிய ஓட்டுற உனக்கு எல்லாம் எந்த மாங்க் மடையன்ல லைசென்ஸ் கொடுத்தது இதேன்ன உங்கொப்பன் வீட்டு சொத்தா???" என பைக்கில் அமர்ந்தவரே எகிறினான்.

"ஆங்….உனக்கு லைசன்ஸ் கொடுத்த அதே மாங்க மடையன் தான் எனக்கும் கொடுத்தான் இந்த ரோடு என் அப்பன் போட்டதில்லை அதே மாதிரி உன் அப்பனும் போட்டதில்லை" என கூறியவாறே நிதானமாக நடந்து வந்து காரின் பின்பக்கத்தை ஆராய்ந்தாள் அவள் மதிவதனா.

கருத்து திரி


 
தீண்டல் 3🔥🔥🔥🔥


மதிவதனாவை கண்ட சங்கமேஸ்வரின் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை.

அவள் பேசியதற்கு எந்த வித பதிலும் கூறாதவன் தனது பைக்கினை ரிவர்ஸ் எடுத்து அவளை கடந்து செல்ல முற்பட,

"ஹலோ" என அவனை சொடக்கிட்டு அவள் அழைக்க அதில் சுர்ரென்று ஏறியது அவனிற்கு.

சங்கமேஸ்வரனுக்கு பிடிக்காத செயல்களில் ஒன்று உண்டு என்றால் அது சொடக்கிடுவது தான் ஏனென்று தெரியவில்லை அப்படி யாராவது வேற்று ஆளை அழைப்பதை கூட ஒழுங்கினமான செயல் என கருதுபவன் அவன் அது தான் உண்மையும் கூட…,

தெரியாதவர்கள் யாரேனும் நம்மை ஹலோ என்று சொல்லி அழைப்பதற்கும் சொடக்கிட்டு அழைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா..!!!!!? தெரியாதவர்கள் அழைத்தாலே நம்ம முகம் கண்டிப்பாக சுருங்கி நிச்சயம் ஒரு கோப பார்வையை வீசுவோம்…"நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா" என்பது போல்….அப்பொழுது வேலை செய்பவர்களை கூப்பிட்டால் தவறில்லை என்று கேட்டால் நிச்சயம் தவறு தான் கீழ்த்தட்டு மனிதனோ மேல் தட்டு மனிதனோ நிச்சயம் சக மனிதனுக்கு அவனிற்குரிய மரியாதையை நாம் கொடுத்தே ஆக வேண்டும் அது தான் ஒரு மனிதனின் ஒழுக்கமான பண்பினை காட்டும்…. " என்பவை தான் சங்கமேஸ்வரனின் அழுத்தமான எண்ணமும் கொள்கையும் கூட.

இதோ இங்கு நிற்பவளே எத்தனை தடவை சொடக்கிட்டு அவனிடம் மாட்டி கொண்டு விரலில் அடி வாங்கி இருப்பாள். அப்படி இருக்கையில் மீண்டும் அதே செயலை செய்து அதுவும் தன்னையே அழைத்தவளை கண்டவனிற்கு அவளின் விரல்களை பிடித்து ஒடிக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்ததில் அவளை திரும்பி பார்த்து முறைக்க,

அதன் காரணம் தெரிந்தும் மதிவதனா மீண்டும் அவனின் முகத்திற்கு முன் சொடக்கிட்டு "ஹலோ உன்ன தான் மேன்" என்றதில் ஆத்திரம் மேலோங்க பைக்கில் அமர்ந்தவாறே அவள் சொடக்கிடும் விரல்களை சட்டென எட்டி அழுத்தி பிடித்தவன் அதனை அப்படியே அவளின் முதுகிற்கு பின் கொண்டு சென்று விரல்களை வளைத்தவன்,

"என்ன!!!!அவ்ளோ தைரியம் வந்துடுச்சா???? என்னையே சொடக்கு போட்டு கூப்பிடுற????ஏன்??இதுக்கு முன்னாடி வாங்குனது எல்லாம் ஞாபகம் இல்லையோ" என நக்கலாக கேட்டவாறே இன்னும் இன்னும் இரு விரல்களை அவன் வளைக்க……

அவனை விட படு நக்கலாக அவனை பார்த்தவள் அவன் என்ன ஏதேன்று உணரும் முன்னே வலக்கையை அவன் வளைத்து இருந்ததில் தன் இடது கையில் வைத்திருந்த சிறு கத்தி போன்ற கூர்மையான பொருளை கொண்டு அவனின் கைகளில் நாடி நரம்பிற்கு சிறிதே இடைவெளி விட்டு ஒரு கீறல் போட‌ "ஸ்...ஆ..ஆ" என்றவாறே அவளின் விரல்களை விட்டவன் தனது கைகளை ஆராய…..

அந்த இடைவெளியில் அவனிடம் இருந்து தள்ளி நின்று கொண்டவள்,

"இன்னமும் என்ன அதே பழைய மதிவதனாவா நெனச்சியின்னு அதுக்கான தண்டனையும் பதிலடியும் இது தான்…...நான் இப்ப வெறும் மதிவதனா இல்லை மிசஸ்.மதிவதனாகுமரவேந்தன் ஞாபகமிருக்கட்டும் என்னை ஈசியா தொடுற வேலை எல்லாம் வச்சிக்காதா அப்பிடி மீறியும் என்ன நீ தொட்டா...ம்ஹீம் தொட முயற்சி செஞ்சாவே விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் மைன்ட் இட்" என அவனை எச்சரித்தவள் தனது கைப்பையினை திறந்து அதிலேருந்து சிறு பணத்தை எடுத்தவள் அவன் பைக்கின் மீது வைத்து விட்டு……..

"இது உன்னோட உடைஞ்சு கண்ணாடிய சரி பண்ணுறதுக்கு" என்க,

"பணம் இருக்குன்னு ரொம்ப ஆடாதா….மரியாதையா இதை எடு…??" என அவன் சீற,

"பாருடா நீயும் உன் குடும்பமும் ஆடுனத விடவ நான் ஆடிட்டேன் அப்புடியே ஆடுனாலும் அதுல ஒரு தப்பும் இல்ல...ஏன்னா இப்ப இது என்னோட டேர்ன்"

"ம்ஹீம் நீ உடைச்ச பைக்கு கண்ணாடிக்கு காசு கொடுத்து சரி பண்ணுற அப்ப நீ உடைச்சுட்டு போன என்னோட மனசுக்கு இதயத்துக்கு எதை வச்சு சரி பண்ணுவ ம்ம்ம்…???" என் கைகளை கட்டி கொண்டு இறுக்கமாக அவன் கேட்டதில்,

இகழ்ச்சியாக அவனை ஒரு பார்வை பார்த்து சிரித்தவள்….."அப்புடி ஒண்ணு இன்னமும் உனக்கு இருக்கா என்ன???ஏன் எவளும் வரலையா என்ன??சரி எவ்வளவுக்கு சொல்லு அதுக்கான பணத்தையும் சேர்த்து மொத்தமா செட்டில் பண்ணிடுறேன் பண விஷயத்துல எல்லாம் என் புருஷன் எனக்கு எந்த குறையும் வைக்கல அப்பறம் நீ இப்புடி பினாத்த மாட்ட பாரு…." என,

அவள் வார்த்தைகளில் மிகவும் காயமடைந்தவன் எதுவும் பேசாது பைக்கினை கிளம்பி கொண்டு சென்று விட்டான்.

அவன் வீடு வந்து பைக்கினை நிறுத்திய நொடி ஒரு நொடி இடைவெளியில் தனது காரினை வீட்டின் முன் நிறுத்தினாள் மதிவதனா.

"அம்மீ……" என்ற அலறலுடன் உள்ளிருந்து பாய்ந்து வந்து அவளை கட்டி கொண்டது அக் குட்டி அணுகுண்டு.

"பிரத்யூ செல்லம்" என்றவாறு தனது இரண்டரை வயது மகளை அள்ளி அணைத்து கொண்டாள் மதிவதனா.

"இன்னமுமா இந்த வாத்துகுஞ்சு தூங்காம இருக்கா???அவ்வளவு பாசம் ஆத்தக்காரி மேல ரெளடி" என திட்டியவாறே பைக்கை உள்ளே நிறுத்தியவனுக்கு பெரிய ரவுடியையும் குட்டி அணுகுட்டையும் பார்க்க ஆவல் மேலிட,
"ச்சே சும்மா இரு இப்பதான கையில கோடு போட்டா அதுக்குள்ள சொரணை கெட்டு அவள பாக்கணும்னு துடிக்கிற….பெரிய புருஷனாம் புருஷன் அப்போ நான்……யாராம்?????? நான் குடுக்காத பணத்தையா இவ புருஷன் கொடுத்திட்டான் ரொம்ப தான் புருஷன் பெருமைய பேசுறா" என திட்டியவாறே நிமிர்ந்தவன் கண்டது வீட்டு வாயிலில் நின்றிருந்த தாயையும் தங்கை விசாலாட்ஷியையும் தான்.

அவர்களின் பார்வை இவனை தொட்டதோ இல்லையோ எதிர் வீட்டை நன்றாக வட்டமடித்தது.

'சென்னையில் வாழும் தங்கை இந்நேரத்தில் வந்து நிற்கிறாள் என்றால் அநேகமாக காலையிலேயே தான் கிளம்பியதும் அவளிற்கு தகவல் பறந்திருக்க வேண்டும்' என நினைத்தவன் முகத்தில் ஏதும் காட்டாது
"வா விசாலா எப்ப வந்த??" என,

"இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்...ஆமா நீயேன் இவ்வளவு லேட்டா வரண்ணா??" என,

"மதுரைக்கு லோடு ஒன்னு அனுப்ப வேண்டிய இருந்திச்சு அதான்…."

"எப்பவும் தான் லோடு அனுப்புவ அப்ப எல்லாம் இவ்வளவு லேட் ஆனது இல்லையே" என எதிர்வீட்டை ஒரு பார்வை பார்த்தவாறே இவனிடம் விசாரணையை துவக்க…….

"நீ எதுக்காக இப்ப சொல்லாமா கொள்ளாம திடீர்ன்னு கெளம்பி வந்துருக்க இப்புடி எல்லாம் நீ வந்ததே இல்லையே" என பதில் கேள்வி கேட்க,

"ஏன் நான் வரக் கூடாதா என்ன???எனக்கும் இது வீடு தான அம்மா வீட்டுக்கு இன்னைக்கு தான் இந்த நேரத்துக்கு தான் வரணும்னு ஏதும் நீ சட்டம் போட்டு இருக்ககியா என்ன??" என் அவள் மிடுக்காக கேட்க,

"அதே மாதிரி தான் என் கம்பெனி என் வீடு நான் எப்ப வேணும்னாலும் வருவேன் ஏன் இத்தனை மணிக்கு தான் வரணும்னு நீ ஏதும் சட்டம் போட்டுருக்கியா என்ன??" என அவன் திருப்பி கொடுத்தவன் அவளை கண்டு கொள்ளாது உள்ளே விரைந்து விட விசாலாட்சி யின் முகம் சுருங்கி போயிற்று.

"பாத்தியாம்மா உன் புள்ளைய எப்புடி பேசிட்டு போறான்னு….."

"ம்ப்ச் நீயும் ஏண்டி அவன் கிட்ட வாயை கொடுக்குற பதமா விசாரிக்கிறது விட்டுட்டு இப்புடி அவன கோபப்பட வச்ச காரியத்தை கெடுத்துட்டியேடி…" என அமுதா மகளை குட்ட…..

"இவ்வளவு லேட்டா வரும் போதே தெரியல பத்தாதுக்கு அவ காரும் பின்னாடியோ வருது இது போதாது சாட்சிக்கு" என அவள் எகிறிட,

அந்நேரம் சரியாக மதிவதனா இவர்கள் பக்கம் திரும்பிட அவளை முறைத்து பார்த்தாள் விசாலாட்சி.

அவளின் முறைப்பை தட்டி விட்டவள் கண்களில் அருவெருப்பை தேக்கி மிகவும் மட்டமான பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசிவிட்டு உள்ளே சென்று கதவடைக்க சென்றவள் அப்போது தான் ஓரத்தில் மறைவாக நின்றிருந்த ஆறுமுகத்தை கண்டதும் சட்டென தனது பார்வையை மாற்றி கொண்டவள் கண்களில் தேங்கிய சிறிய நீர்ப்படலம் மூலம் அவரை கண்டவளின் விழிகளில் முழுவதும் அவர் மீதான பாசம் வழிந்தோடியது.

"ம்மா ம்மா பாரு அவ பார்வைய எப்புடி கேவலமா பாத்துட்டு போறான்னு இதுக்கு தான் என்ன காலங்காத்தாலயே போன போட்டு வர சொன்னியா நீ சரியான கொழுப்பெடுத்தவ" என அவளிற்கு திட்டி கொண்டிருந்தவள் ஆறுமுகம் உள்ளே நுழைந்ததை கண்டதும் வாயினை இறுக மூடி கொண்டாள்.

பின்னே மனிதர் பெண் பிள்ளை என்றும் பாராது பொசுக்கென கை நீட்டி விடுபவர் ஆயிற்றே….அவள் கல்யாண நாளிலே வாங்கியிருந்தாலே அனைவரின் முன்னும்….அதனால் அவர் முன் அடக்கியே வாசித்தால்……..


உள்ளே நுழைந்த சங்கமேஸ்வரன் அங்கே ஷோபாவில் அமர்ந்திருந்த மீனாட்சியை கண்டதும் "மீனுக்குட்டி" என்றவாறு வேகமாக அவளருகில் விரைந்தான் அவன்.

"அண்ணா….!!!!" என்றவாறே எழுந்தவள் அவன் கைகளில் லேசாக வழிந்த ரத்தத்தை கண்டு,
"என்ன அண்ணா இது கைல ரத்தம் எப்புடி ஆச்சு!!!!" என் பதறி துடித்தவள் அவன் அருகே வர முயல அதற்கு அவசியம் கொடாது தானே இன்னும் அவளருகில் சென்றான்.

இத்தனை பெரிய கீறல் வெளியே நின்று தன்னிடம் பேசி கொண்டிருந்த தனது அன்னை கவனியாததை நினைத்து சற்று வேதனையாக தான் இருந்தது அவனிற்கு. என்று தான் அவர்களுக்கு அவன் முக்கியமாக இருந்திருக்கின்றான். அவனால் வரும் வருமானமும் பலனும் மட்டுமே அவர்களுக்கு தேவையாக இருந்திருக்கிறது.

"அது ஒண்ணும் இல்லடா லேசான கீறல் தான் ஒரு எலி பிறாண்டி விட்டுடுச்சு" என்றான் அவளின் நினைவில்.

"எண்ணண்ணா இவ்வளவு ரத்தம் வருது லேசான கீறல்னு சொல்லுறா எந்த ஊருல எலி இப்புடி கத்தில கிழிச்ச மாதிரி பிறாண்டிருக்கு…..வர வர பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட நீ வா மஞ்சள் வைக்கலாம்" என அவனை அழைத்து கொண்டு சமையலறை சென்றாள் மீனாட்சி.

அப்படி ஒரு பிரியம் மீனாட்சிக்கு சங்கமேஸ்வரன் மேல். இத்தனைக்கும் மீனாட்சியும் விசாலாட்சியும் இரட்டையர்கள். எப்போழுதும் இரட்டையர்களாக பிறந்நவர்களிடம் ஒரு நட்பும் பாசமும் இருவருக்குள்ளும் அதிகமாக இருக்கும். மூன்றாம் நபரை‌ கூட தங்களுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் இங்கே எல்லாம் தலைகீழ் மீனாட்சியும் சங்கமேஸ்வரனும் தான் இரட்டையர்களை போல் ஒட்டி கொண்டு திரிவர். விசாலாட்சி அன்னை அமுதாவை போல் தேவைக்கு தமையனிடம் வருபவள் அவள் வந்த வேலை முடிந்ததும் நடையை கட்டி விடுபவள்.

முழுக்க முழுக்க தான் என்ற அகம்பாவமும் சுயநலமும் மட்டுமே கொண்டு பிறந்திருந்தாள் விசாலாட்சி.

"சொல்லுங்கண்ணே எப்ப இருந்து பொய் எல்லாம் சொல்ல ஆரம்பிச்ச…."

"அது நம்ம ஊரு எலி தான்டா கொஞ்ச நாளு திருச்சி பக்கம் போயிருந்துச்சு இன்னைக்கு தான் வந்துச்சு வந்ததும் பாசத்துல மேல விழுந்து பிறாண்டிடுச்சு….." என சலிப்பாக அவன் கூற,

"அண்ணே நீ பாத்தியா அவுகள???" என இன்ப அதிர்ச்சியில் கேட்டாள் மீனாட்சி.

"ம்ஹீம் பாத்தியாவா பாத்துட்டு கத்தி குத்து எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கேன்!!!"

"அவுக இருக்குற நெலமையில இதோட விட்டாகளேன்னு சந்தோஷப்படுண்ணே‌ வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்புடுவியாம்" என

"இல்ல மீனு நான் அங்கே கம்பெனிலயே சாப்பிட்டுடேன்"

"பரவாயில்ல நீ வருவன்னு நான் சாப்பிடாம இருந்தேன் எனக்காக கொஞ்சம் சாப்பிடு" என்றவாறே அவனை அழைத்து கொண்டு டைனிங் டேபிளிற்கு சென்றவள் அவனிற்கு உணவை வைத்து விட்டு தனக்கும் வைத்து கொண்டு அவள் அமர முனியம்மாளும் காளிதாசனும் வந்து விட்டனர்.

"என்னடி உங்கொண்ணனுக்கு மட்டும் விருந்து வைக்கிறவ வயசானவ ஒருத்தி வீட்டுல இருக்காளே பசிக்குமே சாப்பிட கூப்பிடுவோம்னு உனக்கு தோணுச்சா" என்றவாறே அவரும் அமர,

"ஓய் அப்புச்சி பொய் சொல்லாத இப்ப தான என்ற அம்மைய இடுப்பு ஒடிய இடியாப்பம் செஞ்சு தர சொல்லி வயிறு முட்ட சாப்பிட்டு போன அதுக்குள்ள உனக்கு பசிக்குதா என்ன???" என் காளிதாசன் வாய் விட,

"ஆமாடா உன்ற ஆத்தக்காரிய அப்புடியே நான் வேலை வாங்கிட்டாலும் அதுல அவ இடுப்பு எலும்பு உடச்சுட்டாலும்….நல்லா அடுப்பு மாரி தான் இருக்கா கொஞ்சமாச்சும் உடம்பு வளையட்டும் அப்ப தான் இருக்குற கொழுப்பு எல்லாம் குறையும் பத்தாதுக்கு உன் அக்காகாரி அந்த விசாலாட்சி வேற வந்துருக்கா நல்லா சலங்கை கட்டுவா உன் அம்மாக்கு பேருல இருக்குதாட்டாம் விஷமாதான் வந்து பிறந்திருக்கு….

"சரி சரி விடு அப்புச்சி சாப்பிடு நீ" என சங்கமேஸ்வரன் கூறியதும் அனைவரும் அதனை விடுத்து உண்ண ஆரம்பித்திருந்தனர்.

அப்போது உள்ளே நுழைந்த அமுதாவும் விசாலாட்சியும் கண்டது சிரித்து பேசியபடி அமர்ந்து உண்டு கொண்டிருந்தவர்களை தான்.

ஏனோ இருவரும் தனிமை பட்டது போல் தோன்றிட அடுத்த நொடி அங்கே விரைந்திருந்தனர்.

"என்ன சங்கரு எப்பவும் நான் சாப்பிட சொன்னா கடையிலயே சாப்பிட்டுடேன்னு சொல்லுவ இன்னைக்கு என்ன அதிசயமா உக்காந்து சாப்பிடுற" என அமுதா கேட்டிட,

அதில் எரிச்சலடைந்தவன் எடுத்த உணவை தட்டில் போட்டவன் எழுந்து செல்ல முயல,

"ம்மா என்ன இப்ப நான் தான் அண்ணன சாப்பிட கூப்பிட்டேன் எனக்காக தான் வந்திச்சு நீ சும்மாவே இருக்க மாட்டியாம்மா??" அண்ணே நீ உட்காரு மொத என அவனையும் அதட்டி அமர வைத்தாள் மீனாட்சி.

"ஏட்டி கடையில சாப்பிட்டேன்னு சொன்னா அவன் இங்க சாப்பிட கூடாதா என்ன?? சாப்பிடுற புள்ளைய இப்புடி சொல்றியே கொஞ்சமாச்சும் கூறு இருக்கா டி உனக்கு" என முனியம்மாள் கேட்க,

"இப்ப நான் என்னத்த கேட்டுப்புட்டேன்னு இப்புடி ஆளாளுக்கு எகிறிட்டு வரிங்க என் புள்ளைகிட்ட ஒத்த வார்த்தை கூட நான் பேச கூடாதா என்ன"?? என அவர் விடாமல் வம்பிழுக்க…..

"போதும் டி ஆத்தா நீ இதுவரைக்கும் அவன் கிட்ட பேசினதும் போதும் அவன் உயிர எடுத்ததும் போதும்" என பட்டென முகத்திலடித்தாற் போல் முனியம்மாள் கூறி விட,

பதிலுக்கு ஏதோ பேச வந்த அமுதாவை தடுத்த விசாலாட்சி, " ம்மா போதும் போ உன் புள்ளைய கவனிக்க நெறைய பேரு இருக்காங்க இப்ப புதுசா ஆளுங்கெல்லாம் வந்துருக்காங்க கல்யாணமாகி இத்தனை நாள் கழிச்சு அம்மா வீட்டுக்கு வந்திருக்குற என்ன தான் கவனிக்க ஒத்த நாதி இல்ல" என அவள் கண்களை கசக்க…..,

அதில் யாரும் அவளை கண்டு கொண்டது போல் தெரியவில்லை. அவரவர் வேலைகளை பார்க்க அதில் ஆத்திரம் அடைந்தவள்,
"ம்மா இதுக்கு தான் என்ன வர சொன்னியா நீ ??வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு சாப்பிட்டியான்னு கேட்க கூட ஆளு இல்ல அவள மட்டும் உன் புள்ளைங்க ரெண்டு பேரும் உட்கார வச்சு ஊட்டி விட்டுட்டு இருக்கானுங்க" என அழுகையில் அவர்கள் மடியாததால்
கோபத்தை கையில் எடுத்து அவள் எகிற அதற்கும் மசிவென என்பது போல் அவர்கள் இவள் இருந்த பக்கம் கூட திரும்பவில்லை.

அதில் இன்னும் ஆத்திரம் அடைந்தவள் "எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் நான் என் வீட்டுக்கே போறேன் போங்க" என ஆத்திரத்தில் அங்கிருந்த தட்டை கீழே வீசி விட்டு வேகமாக அவள் அறைக்குள் செல்ல,

"இத்தா விசாலா நில்லு…...எதுக்கு இப்புடி கோச்சுகிட்டு போறவ" என்றவாறே அமுதாவும் அவள் விரைந்திட,

அங்கே அம்மா மகள் நடத்திய நாடகத்தை பார்ப்பதற்கு தான் ஆளில்லை.

கருத்து திரி

 
தீண்டல் 4 🔥🔥🔥

எதிர்வீட்டையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சங்கமேஸ்வரன்.
நேற்றைய நிலைக்கு முற்றிலும் தலைகீழாக மாறியிருந்ததது இன்றைய அவனின் மனம்.

இத்தனை வருட கோபத்தையும் ஏன் நேற்று வரை இருந்த வீம்பையும் ஆத்திரத்தையும் நொடி நேர பேச்சில் பார்வையில் ஒன்றும் இல்லாது தவிடு பொடியாக்கி இருந்தாள் அவள் மதிவதனா.

வருடங்கள் கடந்த போதும் அவள் மீதிருந்த ஆத்திரமும் கோபமும் நேற்று அவளை கண்ட நொடியில் இருந்து எங்கோ ஓடி சென்று மறைந்து கொண்டது.

அவளை கண்ட நொடியில் இருந்து தடுமாறி அலைபாயும் மனதினை தடுக்கும் வழி அறியாது அதன் போக்கிலே விட்டு விட்டான்.இருந்தும் அவள் விட்டு சென்ற கோபம் நீரு பூத்த நெருப்பாக அவன் மனதின் அடியினில் தங்கி விட்டிருந்தது.

'ரவுடி…...சரியான வசியக்காரி…...பாத்த நிமிஷத்துல இருந்து அப்புடியே கட்டி இழுக்கிற அவ பக்கம்!!! ஆத்தாளும் மகளும் சரியான மாயக்காரிக….நேத்து காலையில அந்த அணுகுண்டு பேச்சுலயே இழுத்தா ஆத்தக்காரி ஒத்த பார்வையிலயே மனச சுண்டி இழுத்துட்டா….அப்புடியே மனச ஐஸ்ஸா உருக வச்சிட்டா கேடி…!!!!' என நினைத்து ரகசிய புன்னகை பூத்தவனை தனது செருமலில் அவர் பக்கம் திருப்பினார் ஆறுமுகம்.

அதில் அவன் முகம் கடுவான் பூனையாக மாறி விட்டது. பின்னே விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் துயில் கலைந்தவன் நேராக வந்து நின்றது என்னவோ வீட்டு வெளி திண்ணைக்கு தான். ஆனால் அங்கே அவனுக்கு முன்பே அமர்ந்திருந்து அவனை வரவேற்ற ஆறுமுகத்தை கண்டதும் "இவரோட….!!" என பல்லை கடித்தவன் அவரிடம் ஒரு முறைப்பை செலுத்தி விட்டு இன்னொரு திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

வேறு என்ன செய்ய முடியும் அவனால் ஆன மட்டும் அவரை முறைத்து பார்த்தவன் பின் தனக்குரிய நினைவுகளில் மூழ்க அவ்வப்போது இப்படி தொண்டையை கனைத்து அவனை திசை திருப்பி கொண்டிருந்தார் அவர்.

''அதான கொஞ்சம் சந்தோஷமா நான் இருந்திட கூடாதே பொறுக்காதே இவருக்கு.." என முனங்கியவாறே அவன் அமர்ந்திருக்க….. அதனை எல்லாம் கண்டும் காணமலும் அமர்ந்திருந்தார் ஆறுமுகம்.

அப்போது தான் மருமகள் அமுதா தந்த காபியை சுவைத்தவாறே வெளியே வந்த முனியம்மாள் இவர்களை கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்தவர் தன் கண்களை கசக்கி தான் காண்பது கனவா என அவர்கள் பார்க்க அப்போதும் அவர்கள் உருவம் மறையாததில் உண்மையை அறிந்து கொண்டவர்,

"எலே….காளி….இங்கன வாவே….இங்கன பாரு இந்த அதிசயத்தை அப்பனும் மகனும் பிள்ளையாரு கோவில்ல உண்ட கட்டி வாங்குற மாதிரியே எம்மட பொண்ணு வீட்டு வாசல்ல தவம் கெடக்குறனுவா விடிஞ்சும் விடியாம….!" என காளிதாசனை அழைத்தவாறே அவர் கத்தி குரல் கொடுக்க…..

அதில் தந்தையும் மகனும் ஒரு சேர திரும்பி வீட்டினுள் முறைக்க….

"ஹான் போங்கடா போங்கடா" என அலட்சிய பார்வையை அவர்களை நோக்கி வீசி விட்டு சென்று விட்டார்.

ஒருவழியாக இவர்களை காக்க வைத்து விட்டு எதிர் வீட்டு கதவு திறந்திட விரைந்து தங்களது பார்வைகளை திரும்பி கொண்டனர் இருவரும்.

ஆனால் வந்தது சண்முகம் அவரை கண்டதும் சங்கமேஸ்வரரின் முகம் அஷ்டகோணலாகி விட முகத்தை திருப்பி கொண்டான்.

ஆனால் அதற்கு நேர்மாறாக ஆறுமுகத்தின் முகம் சுடர் விட்டு எரிந்தது.

வெளியே வந்தவர் இவர்களை கண்டு கொள்ளாது தன் போக்கில் நடக்க ஆரம்பிக்க அவருக்கு சிறிது இடைவெளி விட்டு ஆறுமுகமும் அவரின் பின்னே எழுந்து சென்று விட்டார்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கதவு திறக்கப்பட ஆர்வமாக திரும்பியவனின் முகம் மீண்டும் வாடிவிட்டது. ஏனெனில் இம்முறை வந்தது மேகலா.

"ச்சே…..ஆத்தாளும் மகளும் சரியான கும்பகர்னியா இருப்பாளுக போல இன்னும் எழுந்து வர காணோம் சோம்பேறி கழுதைக…." என அவர்களுக்கு திட்டியவன் மீண்டும் அவர்களை எதிர்பார்த்து அமர்ந்து கொள்ள நேரம் தான் சென்றதே தவிர அவர்கள் இருவரும் வெளிவரவில்லை.

பின் கடைக்கு செல்லுவதற்கு நேரமாகி விட மனமே இல்லாமல் எழுந்து உள்ளே சென்று விட்டான்.

வாடிய முகத்துடன் வந்தவனை கண்ட முனியம்மாள் மீனாட்சியிடம்,
"என்னவாம் தரிசனம் கிடைக்கல போலிருக்கு போல மொகம் தொங்கிருச்சு" என்க,

அவரை கண்டு முறைத்தவன் அறைக்குள் சென்று விட்டான்.

"ம்ப்ச் பாவம் அப்புச்சி அண்ணா மொகமே வாடி போச்சு" என மீனாட்சி அண்ணனிற்காக வருத்தப்பட,

"ம்ஹீம் உப்பு தின்னவே தண்ணி குடிச்சு தான் ஆகணும் அது மாதிரி தப்பு பண்ணா தண்டனை அனுபவிச்சா தான் ஆகனும் நடந்தத பேரன்ற பாசத்துல நான் மறந்து மன்னிருச்சுருக்கலாம் அதுக்காக எம் பொண்ணும் அவ குடும்பமும் மன்னிக்கனும்னு எதிர்பார்க்கா முடியுமா???"

" ஆண்டவன் விட்ட வழி அப்புச்சி இந்த ஊரே வேண்டாமுன்னுட்டு போனவக திரும்பவும் மூணு வருஷம் கழிச்சு வந்துருகாக….. போக வச்சதும் அந்த கடவுள் தான் இப்ப திரும்பவும் வர வச்சதும் கடவுள் தான் இனியாச்சும் நல்லது நடந்தா சரித்தே அப்புச்சி..!!!"

"ம்ஹீம்…..போக வச்சது கடவுள் இல்ல மீனா உன் அம்மாவும் அக்காகாரியும் அதுக்கு துணை போனது உன் அண்ணன் இதுல கடவுள் மேல பழிய போடாத..!!!!" என்றார் வெடுக்கென்று…..

அதில் அதிர்ந்தவள்,
"ஆனா அப்புச்சி அண்ணா பாவம் சூழ்நிலை அப்புடி தெரிஞ்சுமா நீங்க இப்புடி பேசுறீக????"

"ம்பச் விடு மீனா இத பேசுனா வீணா மனசு தான் சங்கடப்படும்….நீ இந்த கீரையை பாரு நான் போய் காலை பலகாரத்தை பாக்குறேன்" என பேச்சை வளர்க்காமல் அவர் சென்று விட,

'இன்னும் அப்புச்சிக்கு அண்ணே மேல முழுசா கோபம் போகலை போல மனசுல இன்னும் வருத்தம் இருக்கு போலிருக்கு' என நினைத்து அவள் வருந்தினாள்.

**************

மிஷின்களின் நடுவே நின்று கொண்டிருந்தவனின் மனம் முழுவதும் மதிவதனாவையும் அந்த குட்டி அணுகுண்டுவையுமே சுற்றியே வந்தது.

காலையில் அவன் கிளம்பி வரும் வரையிலுமே இருவரும் அவனிற்கே தரிசனம் அளிக்கவில்லை. இவனின் மனதை மொத்தமாக சுருட்டி கொண்டாள் அந்த குட்டி ரவுடி.

"அண்ணே…..மசாலா வாளி நிறச்சிருச்சு மாத்தி வைக்கலியாண்ணே பாருங்க கீழே எல்லாம் கொஞ்சம் சிந்திடுச்சு" என்றவாறே வந்த மாரி மசாலா நிறைந்த வாளியினை மாற்றி வைக்க,

"த்ச்சு….கவனிக்கலடா நீ பாத்துக்கோ இங்க" என்று விட்டு அவனிற்கென இருந்த அறையினுள் வந்தமர்ந்து கொண்டான் சங்கமேஸ்வரன்.

'எதிலும் பிடிபற்ற நிலையாகவே இருந்தது அவனின் நிலைமை'.

அலைபாயும் கடல் அலைகளை போல கடந்த கால அவளின்‌ சில நினைவுகள் எச்சங்களை அவன் மனதில்.

***********

"ஹேய் ரவுடி ரங்கம்மா….. கல்லை கீழ போடுடி…." என் கத்தியவாறு விரைந்து வந்து அவளின் கைகளில் அவளை விட சைஸில் பெரிதாக எதிரே இருப்பவரின் மீது விட்டெறிய வைத்திருந்த கற்களை பிடிங்கி தூர எறிந்தான் பத்து வயது சங்கமேஸ்வரன்.

"எதுக்குடி அவன் மேல இல்லை எறிய போற அவுங்கம்மாக்கு தெரிஞ்சது அவ்வளவு தான் உன் தோலை உறிஞ்சு உப்பு கண்டம் போட்டுடுவாங்க மரியாதையா வீட்டுக்கு வா" என அவளிற்கு திட்டியவன் அவளை இழுத்து கொண்டு செல்ல முயல…..

கால்களை இன்னும் ஸ்திரமாக ஊன்றி அடமாக நின்றிருந்தாள் ஆறு வயது மதிவதனா.

"ம்ப்ச் என்ன வதி குட்டி எதுக்கு இந்த கோவம்" என கோபமாக கேட்டாள் இன்னும் அடம் பிடிப்பாள் என்பதை உணர்ந்து அவளிடம் இறங்கி வந்தான்‌ சங்கமேஸ்வரன்.

"சொல்ல மாட்டேன் போ..!!" என்றவளின் உதடுகள் பிதுங்கி அழுகைக்கு தயாராகின.

"அச்சோ...என் வதி குட்டிக்கு என்னாச்சு ஏன் இந்த அழுகை யாரு என்ன சொன்ன உன்ன சொல்லு அடிச்சிடலாம்" என அவளின் அழுகையை தாங்காது சங்கமேஸ்வரன் அவளின் கன்னங்களை பிடித்து கொஞ்சி கேட்க,

"ஈஷ் அத்தான் இவன் மீனாட்சிய நொண்டிக் குதிரைன்னு சொல்றான்‌ அதான் அடிக்க போனேன்" என சங்கமேஸ்வரனின் தங்கையும் அவளின் உயிர்‌ தோழியுமான மீனாட்சியை கிண்டல் பேசியதை பற்றி கூற,

அதில் கோபமுற்றவன் மீண்டும் கீழே கிடந்த கற்களை பொறுக்கி எடுத்து அவளிடம் தந்தவன்,
"ம்மம்...இப்ப அடி வதனா!!!!" என்க,

அதனை கேட்டு அதிர்ந்த அந்த சிறுவன் ஓடுவதற்குள் அவனின் கால் முட்டிகளை பெயர்த்திருந்தாள் மதிவதனா.

வலியில் அழுதவனை கண்டு கொள்ளாது மதிவதனாவை அழைத்து கொண்டு வீடு சென்றான் சங்கமேஸ்வரன் அவளின் ஈஷ் அத்தான்.

மீனாட்சிக்கு பிறந்த போதெல்லாம் எந்த குறைபாடும் இல்லை இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த டெங்கு காய்ச்சலால் அவளின் இடது கால் வீங்கி போக அப்போதைக்கு மருத்துவமனையில் காட்டி சரி செய்து விட்டனர்.

ஆனால் அவள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது தான் அவளின் இடது காலில் அந்த வித்தியாசத்தை கண்டனர் சற்றே மிக மிக குறைவாகவே காலை வளைத்து வைத்து நடந்தாள். மருத்தவமனைக்கு சென்ற பொழுது இது டெங்கு காய்ச்சலால் ஏற்ப்பட்ட பக்க விளைவு என்றும் மிக மிக குறுகிய அளவே காலை வளைத்து வைப்பதால் இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை என்றும் வேண்டுமானால் பிசியோஃத்தரபியிடம் செல்லுமாறும் கூறினர்.

அவர் சொல்லியது போல் செய்து வந்ததில் முன்னை விட மீனாட்சி நன்றாகவே நடக்கிறாள். இருந்தும் சிறு அபஸ்வரம் போல் அந்த கால்களை ஒரு சென்டி மீட்டர் வளைத்து தான் வைக்கிறாள்.

அதனை கிண்டல் செய்தவனை தான் அம்மிணி கல்லை விட்டு எறிந்தது.

நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளிவந்தவனின் உதடுகள் புன்னகையை சுமந்திருந்தது.

"ரவுடி அந்த வயசிலேயே கல்லை எடுத்து அடிக்கிறா அவ்வளவு பாசம் மீனு மேலே செல்ல ரவுடி…." என அவளை கொஞ்ச….

'அந்த பாசத்தை வச்சி தான குடும்பமா நீங்க அவளுக்கு துரோகம் பண்ணீங்க' என மனசாட்சி ஆங்கரமாக கேள்வி கேட்டதில் அதிர்ந்தவன் பதில் சொல்ல முடியாது வாய் மூடி மொளியானான்.

"உண்மை தானே….அவளின் பாசத்தை வைத்து தானே அவளை இக்கட்டான சூழ்நிலையில் நிற்க வைத்தனர்". என நினைத்தவனின் மனம் வேதனையில் வெதும்பியது.

அதற்கு மேலும் அந்த வேதனையை தாங்க இயலாது மாரியிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு புறப்பட்டு விட்டான்.

"ப்ரத்யூ செல்லம் தங்கமில்லை ஒரே ஒரு வாய் வாங்கிகடா அம்மீ பாவம் ல" என தனது மகளிடம் மதிய உணவிற்காக மல்லு கட்டி கொண்டிருந்தாள் மதிவதனா.

"நோ அம்மீ இன்னும் ஒரு தடவ புஸ் பண்ணுங்க அப்ப தான் வாங்கிப்பேன்" என வீட்டிற்கு வெளியே இருந்த மரத்தில் ஊஞ்சல் கட்டியிருக்க அதில் அமர்ந்து ஆடியவாறே தனது அன்னையிடம் டீல் பேசி கொண்டிருந்தாள் ப்ரத்யூக்ஷா.

"அப்ப இருந்து இப்புடியே தான் சொல்லுறியே தவிர வாயை திறக்க மாட்டுற நீ ஒரு வாய் வாங்கு நா அப்பறம் ஆட்டுறேன்" என்க,

"அம்மீ…." என்று சிணுங்கினாள் குட்டி.

"நோ….நீ ஆ..வாங்கு அப்பறம் நான் புஸ் பண்ணுறேன்" என மதிவதனாவும் அடமாக நிற்க…..

"சித்தி???" என அருகில் இருந்த ஷன்மதியை துணைக்கு அழைத்தாள் சின்ன வாண்டு.

"அக்கா ப்ளீஸ் ஒரு தடவ நானே ஆட்டுறேன் அப்பறம் அவ சாப்பிடுவா அப்பிடி தான ப்ரத்யூ" என ஷன்மதி கேட்க….

"யெஜ்...யெஜ்….ப்ராமிஸ் அம்மீ" என்க,

"சரி ஆனா ஒன் டைம் தான்" என்க,

ஷன்மதி ஊஞ்சல் ஆட்ட ஒரு தடவை என்றவள் கணக்கு வழக்கு இல்லாமல் ஆடி விட்டு தான் சாப்பாட்டை வாங்கினாள்.

"ஷன்மதி இத பிடி கடைசி வாய் தான் இருக்கு" என பாத்திரத்தை அவளை பிடிக்க சொன்னவள் கையில் இருந்த உணவினால் குழந்தையை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்தவள் காக்காய்க்கு வைத்து விட்டு திரும்ப இவர்களை பார்த்தவாறு நின்றிருந்தான் சங்கமேஸ்வரன்.

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தவன் இவர்களை கண்டதும் அப்படியே நின்று விட்டவன் முகத்தில் அழகிய புன்முறுவலுடன் அங்கே நடப்பவைகளை வேடிக்கை பார்க்க துவங்கினான்.

அழகிய கோழிகுஞ்சாய் கைக்குள் அடக்கி கொள்ளும் அளவிற்கு குட்டி அணுகுண்டையாய் இருந்தவளை வாரி அணைத்து கொள்ள அவனின் கைகள் பரபரத்த போதிலும் அமைதியாக நின்று கொண்டான். நேற்று போல் அவளை நெருங்கும் தைரியம் இன்று வரவில்லை அவனிற்கு காரணம் மதிவதனா.

இவனை கண்டதும் அலட்சிய பாவனைக்கு மாறியவள் குழந்தையை ஊஞ்சலில் இருந்து தூக்க முயல…,

"அம்மீ இன்னும் கொஞ்சம் நேரம்" என சலுகை கேட்டாள் பெண்.

அவனின் பார்வை கூட தன் குழந்தையின் மீது விழ கூடாது என எண்ணியவள் குழந்தை மறுக்க மறுக்க அவளை தூக்கி கொண்டு ஷன்மதியையும் அழைத்து கொண்டு சென்று விட்டாள்.

"எருமை மாடு கொஞ்ச நேரம் இருந்தா என்னவாம்?? வாத்து குஞ்சு அழுக அழுக தூக்கிட்டு போற வீம்பு புடிச்சவ" என திட்டியவன் உள்ளே நுழைய…..

மதிய உணவு நேரம் நெருங்கும் முன்னே வீட்டிற்கு வந்த மகனை கண்ட அமுதா எதுவும் பேசாது அமைதியாகி கொண்டார். நேற்று போல் பேசி வம்பை வளர்க்க அவர் விரும்பவில்லை.

ஆனால் விசாலாட்சி அடங்காது,
"என்னண்ணே சாப்பாட்டு நேரம் கூட இன்னும் வரல அதுக்குள்ள யார பாக்க இப்புடி ஓடியாற???" என்க,

அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஏதும் பேசாது தன்னறைக்குள் சென்று முடங்கி கொண்டான்.

"ம்மா என்ன உன் புள்ளைக்கு பதில் கூட சொல்ல முடியாதா அவ்வளவா நான் வேண்டாதவளா போயிட்டேன்!!!"என அவள் கத்த….

"ம்க்கும் சில ஜென்மங்களுக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் உரைக்கிறது இல்ல‌ என்னத்த சொல்ல???வீணா வாய் பேசி அசிங்கப்படுதுக" என முனியம்மாள் ஜாடையாக இவளை தாக்க….

அதில் கோபம் வந்தாலும் அமைதியாக இருந்து கொண்டாள் விசாலா.பின்னே அவரிடம் சென்று "யாரை ஜாடை பேசுறீங்க??" என கேட்கவா முடியும்????அப்படியே கேட்டாலும் "உன்னைதான் பேசுறேன்"‌என சொல்லி விடுபவர் ஆயிற்றே…..

மதிய உணவிற்கு பின் கம்பெனிற்கு செல்லவில்லை சங்கமேஸ்வரன். ஏனோ பிடிக்கவில்லை மனமும் உடலும் சற்று சோர்வாக இருக்க உறங்கி விட்டான்.

மீனாட்சி வந்து எழுப்பும் வரையிலும் உறங்கி கொண்டு தான் இருந்தான்.

"அண்ணே ….என்னாச்சு…மேலுக்கு ஏதும் சொகமில்லையா??"

"இல்ல மீனுகுட்டி கொஞ்சம் அசதியா இருந்துச்சு அதான் கண்ணசந்துட்டேன்" என,

"சரி கீழ வாண்ணே டீ போட்டு தரேன் இல்லன்னா இங்க எடுத்துட்டு வரவ குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும்" என்க,

"நீ ஏண்டா அலையிற நான் கீழோ வரேன் நீ போ" என அவளை அனுப்பி வைத்தவன் முகம் கழுவி கீழே சென்றான்.

கீழே இறங்கி வந்தவனை ஆவி பறக்கும் டீயுடன் வரவேற்றாள் மீனாட்சி.

"திரும்பவும் கம்பெனிக்கு போகணுமாணே??"

"ம்ம்ம் கொஞ்சம் வேலை இருக்கு மீனு போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்" என்றவன் டீயை குடித்து விட்டு கிளம்பி விட்டான். 
தீண்டல் 5🔥🔥🔥

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று லோடு ஏற்ற வேண்டி விரைவாக கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தான் சங்கமேஸ்வரன்.

போகும் வழியில் டீக்கடையில் சண்முகம் அமர்ந்திருக்க அவருக்கு எதிரே பேப்பர் படிக்கும் பாவனையில் அமர்ந்து அவரை பார்த்திருந்தார் ஆறுமுகம்.

அவரை கண்டவன் வண்டியை ஓரம் கட்டி விட்டு அவர் அருகினில் சென்றமர்ந்தவன், குறுஞ்சிரிப்புடன்
"அப்பறம் மாமா எப்புடி இருக்கீங்க...அயித்தை நல்லா இருக்கா….டீ குடிக்கிறீங்களா???.....பேப்பர் படிச்சிட்டு இருக்கீங்களா???" என விடாது பேசியவனை காலாணாவிற்கு கூட மதிக்கவில்லை அவர்.

இருந்தும் வாய் மூடாது பேசி கொண்டிருந்தவனை கண்ட சில பெருசுகள்,
"அட...என்னப்பா….நீயி….அந்த தம்பி தான் விடாம பேசுதுல ஒத்த வார்த்தை பேசுனா தான் என்னையா…..ஆயிரம் தான் இருந்தாலும் அவன் உன் பொண்டாட்டியோட அண்ணன் மகன் என்ன தான் சண்டையினாலும் உறவு முறை இல்லன்னு ஆகிடுமா சண்முகம்" என தீடிரென அவர்கள் நாட்டாமை பதவிக்கு தாவ,

அதற்கு மேலும் அங்கே அமர இயலாது எழுந்த சண்முகம் குடித்த டீ க்கு காசு கொடுக்க,

"எண்ணே….என்ற மாமன் கிட்ட காசு வாங்காதீங்க நான் தரேன் நீங்க போங்க மாமா நான் குடுத்துக்கிறேன்" என விடாது அவன் பேச்சில் இழுக்க….

அவனை திரும்பி முறைத்தவர் காசை வைத்து விட்டு நகர்ந்து விட்டார்.

அவர் சென்றதும் அவனை முறைத்த ஆறுமுகம் தானும் எழுந்து சண்முகத்தின் பின்னே சென்று விட,

அதனை கண்டவன் ' இருபத்தி நாலு மணி நேரமும் லவ் பண்ற பொண்ணு பின்னாடி சுத்துற மாதிரி சுத்திக்கிட்டு இருக்குறதப் பாரு இதுல மாமாவ துரத்திட்டேன்னு மொறப்பு வேற' என நினைத்தவனின் உதடுகள் மலர்ந்து சிரிக்க

"அப்பறம் தம்பி எப்ப கல்யாணச் சாப்பாடு போடுறதா எண்ணம்" என அங்கிருப்பவர்கள் பேச்சை திசை மாற்ற,

இதற்கு மேல் இங்கு இருந்தால் வம்பு என நினைத்தவன்,
"அதுக்கென்ன சித்தப்பா சீக்கிரமே போட்டுடலாம்" என்றவன் அங்கிருந்து நழுவி கம்பெனிக்கு சென்று விட்டான்.

ஒரு வாரமாக தன் பின்னே விடாது சுற்றி கொண்டு தன் முகத்தைய ஏக்கமாக பார்த்து கொண்டிருந்த ஆறுமுகத்தை கண்டும் காணாமல் நடந்து சென்று கொண்டிருந்தார் சண்முகம்.

சிறிது தூரம் நடந்தவர் தன் பின்னே காலடி சத்தம் கேட்காததை உணர்ந்து மெல்ல திரும்பி பார்க்க….

உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி நின்றிருந்தார் ஆறுமுகம்.

அதனை கண்டவர் பின் எதுவும் பேசாது திரும்பி நடக்க ஆரம்பிக்க….

ஆறுமுகமும் அவரின் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க முயல எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் நிலை தடுமாறி இவரை இடித்து விட்டான்.

அவன் என்னவோ லேசாக தான் இடித்திருந்தான். ஆனால் ஏற்கனவே நடக்க இயலாது தள்ளாடி கொண்டிருந்தவர் பிடிப்பு இல்லாது நிலை தடுமாறி "யம்மா" என்றவாறு கீழே விழுந்திருந்தார் ஆறுமுகம்.

அவரின் சத்தத்தில் திரும்பி பார்த்த சண்முகம் பதறி அதற்கு மேலும் நடக்க மனம் இல்லாது "யேய் அறிவு கெட்டவனே பார்த்து வர மாட்டியாடே??" என அச் சிறுவனை அதட்டிய படி அருகே வர,

அதில் பயந்த அச்சிறுவன் இவர் நெருங்கும் முன் சைக்கிளில் பறந்திருந்தான்.

ஆறுமுகத்தை கைத்தாங்கலாக தூக்கி அங்கிருந்த கல்லில் அமர வைத்தவர்,
"பார்த்து வர கூடாதாடா….என்ன இன்னும் சின்ன பிள்ளையின்னு நெனப்பா உமக்கு...என்னத்துக்குவே சமஞ்ச பிள்ளை பின்னாடி சுத்துற மாதிரி எம் பின்னாடி சுத்துறவன் பாரு இரத்த வருது" என அவரை திட்டியவாறே தனது வேஷ்ட்டியில் ரத்தத்தை துடைக்க,

"எலேய் சண்முகம் என் கிட்ட பேசிட்டியாலே...உன் கோபம் எல்லாம் போச்சாவே…???" என‌ அவர் தழுதழுத்த குரலில் கேட்க,

அப்போது தான் தன் செய்கையை உணர்ந்த சண்முகம் மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டவர்,
"நீங்கன்னு இல்லை யாரா இருந்தாலும் உதவி பண்ணிருப்பேன் இரத்தம் நின்னுருச்சு" என்றவர் எழுந்து கொள்ள,

ஆறுமுகமும் படக்கென எழுந்து கொண்டார். அவர் எழுந்த வேகத்தில் மீண்டும் இரத்தம் பீச்சிக் கொண்டு வெளியேற அதற்கு மேல் பொறுக்க முடியாது,
"எலேய் ஆங்ககெட்ட கூவ‌ என்னத்துக்குவே இப்ப எந்திரிச்சவன் பாரு திரும்பவும் இரத்தம் வருது??" என சராமாரியாக அவர் திட்ட,

"சரிவே சரிவே எந்திரிக்கல நீ என்ன மன்னிச்சிட்டியான்னு மட்டும் சொல்லுல"

"வேண்டாம் ஆறுமுகம் முடிஞ்ச உறவு முடிஞ்சதாவே இருக்கட்டும் வீட்டுக்கு போற வழிய பாரு" என்ற சண்முகம் திரும்பி நடக்க,

"நீ என்ன மன்னிச்சுட்டேன் சொல்ற வரைக்கும் இந்த இடத்த விட்டு நகர மாட்டேவே சண்முகம்" என ஆறுமுகம் உறுதியாக கூற அதனை புறம் தள்ளி விட்டு சென்று விட்டார் சண்முகம்.

மதிய வெயில் உச்சி மண்டையை பிளக்க வீட்டின் உள்ளையும் வெளியையும் நடை பயின்று கொண்டிருந்த சண்முகத்தை கண்ட மேகலா,

"என்னங்க எதுக்கு இப்புடி நடையா நடக்குறவகுக ஏதும் வேணுமா??" என கேட்டிட,

மேகலாவிடம் சொல்லலாமா என ஒரு நொடி யோசித்தவர் பின் மனம் கேளாது,
"மதியும் பாப்பாவும் எங்க மேகலா"?? என,

"பாப்பா தூங்குறா...மதி ஷாலினிய கூட்டிட்டு திண்டுக்கல் வரைக்கும் போயிருக்கா என்ன விஷயம்ங்க"

"அது வந்து உங்கண்ணண பார்த்தே மேகலா காலையில" என்றார் சண்முகம்.

"ஓ...அதுக்கென்னங்க தெனமும் தான் காலையில பாக்குறீங்க"

"ம்ப்ச் இது அது இல்ல" என்றவர் காலையில் ஆறுமுகத்தை சந்தித்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கூற,

"என்னங்க இது இன்னும் அண்ணே வரலையா வீட்டுக்கு அதான் இப்புடி நடந்துட்டு இருக்கீங்களா??"

"அப்புடி தான் போல மேகலா இன்னும் ஆளை காணோம் உச்சி வெயில் மண்டைய பொளுக்குது உங்கண்ணன் எங்கன இருக்காருன்னு தெரியல….மயக்கம் கியக்கம் போட்டுட்டுறான்னு வேற தெரியல..படபடப்பா இருக்கு நா போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்திடவா பிடிவாதக்காரன் அவன்!!" என தன்னிடம் அனுமதி கேட்டு நின்றவரை கண்ட மேகலா தலையை மட்டும் அசைக்க,
விரைந்து வெளியே சென்று விட்டார்.

செல்லும் அவரை பார்த்த மேகலையின் கண்களில் கண்ணீர் துளிகள்.

நியாயமாக பார்த்தால் தன் பெண்ணின் வாழ்வை அழித்த மேகலையின் பிறந்த வீட்டினர் மீது அவருக்கு தீராத கோபம் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக மேகலா கோபமாக இருக்க பெண்ணின் வாழ்க்கைகாக கோபம் கொண்டிருந்தவர் நண்பனிற்கு ஒன்று என்றதும் அந்த கோபத்தை கூட விட்டொழித்து விட்டு இதோ அவரை தேடி ஓடுகிறார்.

ஆம்….ஆறுமுகமும் சண்முகமும் இணைப்பிரியாத நண்பர்கள் வளர்ந்த பின்னும் தங்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டு விட கூடாதென தனது தங்கையையே நண்பனிற்கு மனம் முடித்து வைத்தார் ஆறுமுகம்.

அப்படிப்பட்ட இவர்களின் நட்பில் குடும்பத்தினரின் சதியால் விரிசல் விழந்து விட மனம் நொறுங்கி தான் போயினர். இங்கே இருந்தால் தன்னையும் மீறி நண்பனிடம் சேர்ந்து விடுவோம் என அஞ்சியே சண்முகம் ஊரை விட்டு சென்றது.

வேகவேகமாக நடந்து சென்றவர் காலையில் அவரும் சண்முகமும் பேசிய இடத்திற்கு செல்ல…..

சொன்னது போல் இடத்தை விட்டு அசையாது உச்சி வெயிலில் வியர்வை ஆறாக உடம்பில் ஓட அமர்ந்திருந்தார் சண்முகம்.

"மனுஷனாடா நீயி…. அப்புடி என்ன வீம்பு உனக்கு எந்திரிவே…" என அவரை எழுப்பி கொண்டு அருகில் இருந்த சிறு பூங்கா போன்ற அமைப்பினுள் அழைத்து சென்றார். மதிய நேரமாதாலால் ஆட்கள் இன்றி வெறுச்சொடி இருந்தது.

தன் கையினில் கொண்டு வந்திருந்த துணியினால் அவரின் ரத்தத்தை துடைத்து காயத்தை கழுவி விட உறைந்திருந்த ரத்தம் போயி விட்டிருந்தது.

"சண்முகம் என்ன மன்னிச்சிட்டியாவே..???"


"ம்ப்ச் நீ என்னவே தப்பு செஞ்ச நான் உன்னை மன்னிக்கிறதுக்கு???"என

"சண்முகம்…நெசமாலும் நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்துமும் இல்லையின்னு நம்புறியாலே"என அழுகையில் வெளிவந்தது ஆறுமுகத்தின் குரல்.

"உன்னை நம்பாம வேற யாரவே நான் நம்ப போறேன் நீ என் நண்பன்வே" என பதிலுக்கு சண்முகம் கூறவும் தன் வயதையும் மீறி அவரை அணைத்திருந்தார் ஆறுமுகம்.


"இதுக்குதான்லே நான் திரும்ப இந்த ஊருக்கு வரவே யோசிச்சது வந்தா உன்கிட்ட என்னால பகையாளி மாதிரி இருக்க முடியாது மச்சான். ஆனா என் பிள்ளைக்காக வர வேண்டியதா போச்சு ஆனா நான் பயந்தே மாதிரியே ஆகிப் போச்சுலே உன் குடும்பம் செஞ்ச துரோகத்தையும் மீறி உன்கிட்ட என்ன பேச வச்சிட்டல…."

"அது ஏதோ புத்தி கெட்டு போய் அப்புடி பண்ணிட்டாங்க ரெண்டு பேரும் பெரிய மனசு பண்ணி மன்னிக்க கூடாத மாப்பிள்ளை…!!!!"

"ம்ஹீம்….மன்னிச்சுட்டா என் பொண்ணு வாழ்க்கைய திரும்பி கொடுத்துடுவீங்களா??? எப்புடி தப்பு பண்ணிருந்தாலும் கடைசியில பாழப்போனது எம் பொண்ணு வாழ்க்கை தானே….அத இல்லன்னு சொல்ல முடியுமா….வாழ வேண்டிய வயசுல புருஷன இழுந்துட்டு விதவையா என் கண்ணு முன்னாடி அவ நிக்கும் போது ஒரு அப்பனா துடிச்சு போயிடுறேன்….ஆனா இதுக்கு நானும் ஒரு காரணம்னு நெனைக்கிற போது தான் என்னையே என்னால மன்னிக்க முடியல ஆறுமுகம் நா பாவில பாவி தோ இப்ப கூட நீங்க பண்ணத மறந்துட்டு உன் கிட்ட வந்து பேசிட்டு இருக்கேனே இது எம் பொண்ணுக்கு நா பண்ணுற துரோகம் இல்லையா…..ஆனா முடியலையே என்னால மனசுல இருக்குறது எல்லாம் சொல்லி அழுக இத்தனை வருஷம் நண்பனா என் மனசு உன்னைத்தான தேடுது….." என அவர் கதறியழ,

எப்போதும் போல் அவரை தோள் சாய்த்து ஆறுதல் அளித்தார் ஆறுமுகம்.

"நடந்தத மறக்க முயற்சி பண்ணு சண்முகம்"

"முடியலேயே ஊர் கூடி இருக்குற சபையில் உன் பையன் நிக்க வச்சு வார்த்தையால வலிக்க வலிக்க அடிச்சானே எப்புடி மறக்க" என மேலும் அவர் அழுகையில் கரைய,

அவர் மனதில் உள்ள பாரம் இறங்கட்டும் என அமைதி காத்தார் ஆறுமுகம். சண்முகத்தின் அழுகையில் அவரின் மனம் திடமாகி இறுகி கொண்டே போனது.

ஒரு வழியாக அழுது ஓய்ந்தவரிடம்,

"சண்முகம் இப்பவும் மதி புள்ள என் வீட்டு மருமவ தான் அந்த கருப்பசாமி‌ எனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கு இதை மறுபடியும் நான் தவற விட மாட்டேன்….என்னைக்கா இருந்தாலும் மதி கழுத்துல என் புள்ளை தான் தாலி கட்டுவான் இது அந்த கருப்பசாமி மேல சத்தியம்ல" என தீவிரமாக அவர் பேச…..

அவரை நிராசையாக ஒரு பார்வை பார்த்த சண்முகம்,
"இது எல்லாம் நடக்காதுவே எம் பொண்ணு இதுக்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டா உன் பையன் பேசினது இன்னும் நெருஞ்சி முள்ளாட்டம் மனச குத்துதுல???"

"அவன் நீ தூக்கி வளர்ந்த புள்ளை தான்வே ஏதோ புத்தி சுவாதீனம் இல்லாம பேசிட்டான்னு நெனச்சி மன்னிச்சுடவே...அதெல்லாம் இந்த தடவை எம் மவன் அப்புடி எல்லாம் மருமவள விட்டுட மாட்டான் நீ வேணும்னா பாருவே இந்நேரம் எம் மவன் ஏதாச்சும் திட்டம் போட்டு இருப்பான்" என மீசையை நீவியபடி கூறி சிரித்தார் ஆறுமுகம்.

ஆறுமுகம் சொன்னது உண்மை என்பதை நிருபிக்கும் வழியில்,

"என் செல்ல ரவுடி….இந்த ஈஷ் அத்தான் கிட்ட வசமா சிக்கிட்டடி….இனி நீ எப்புடி என் கிட்ட இருந்து தப்பிக்கிறேன்னு பாக்குறேன்...கூடிய சீக்கிரம் உன்னையும் அந்த குட்டி ரவுடியையும் என் வாழ்க்கைகுள்ள கொண்டு வந்துடுவேன் இந்த முறை அதுக்கு யாரு தடையா வந்தாலும் கொன்று புதைச்சிடுவேன்" என ஆனந்தமாக ஆரம்பித்து ஆக்ரோஷத்தில் முடித்தவன்

"இதுக்கு மொதல்ல என்ற மாமனையும் அயித்தையையும் நான் சம்மதிக்க வைக்கணுமே…..நான் செஞ்ச காரியத்துக்கு இந்த ஜென்மத்துல என்ன மன்னிக்க மாட்டாங்க பேசாம ரெண்டு பேரு காலுலையும் விழுந்திட வேண்டியது தான் வேற வழி இல்லை" என புலம்பியவன்,
மதிவதனாவை தன்னிடம் வர வைக்க தன்னிடம் இருந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கியவனின் இதழ்கள் கர்வ புன்னகையில் மிளிர்ந்தன.

இரவு உணவில் ஆறுமுகம், சங்கமேஸ்வரனை தவிர்த்து அனைவரும் இருந்தனர்.

இன்று அனைவருக்கும் முன்பே விசாலா வந்தமர்ந்து விட்டாள். இல்லை என்றால் அன்று போல் பட்டினி கிடக்க நேரிடுமோ என்ற பயம் தான்.

அமைதியாக உணவில் கவனமாக இருந்தவர்களை கலைக்கும் பொருட்டு தனது வெண்கல தொண்டையை திறந்தாள் விசாலா,

"அப்புறம் அப்புச்சி ஊர விட்டு ஓடி போன உன் பொண்ணு குடும்பம் எல்லாம் திரும்பி வந்துருங்காங்க போல….என்ன விஷயமாம்??" என் தந்தை அண்ணன் இல்லாத தைரியத்தில் முனியம்மாளை அவள் சீண்ட,

பதில் ஏதும் பேசாது அமைதி காத்தார் அவர்.

"என்னவாம் அந்த ஊருல இருந்தும் இவுங்க வளமை தெரிஞ்சு துரத்தி விட்டுடாங்களா என்ன??" என மீண்டும் மீண்டும் அவள் சீண்டியதில் கோபம் வரப் பெற்றவர்,

"யாருடி ஓடி போனது எம் பேத்திக்கு முறையா ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி தான் அனுப்புனாங்க...கண்டதுங்க மாதிரி திருட்டு கல்யாணம் பண்ணல" என திரும்பி கொடுத்ததில் அவள் முகம் சிறுத்து விட அந்த ஆத்திரத்தில்,

"ஆமா ஆமாம் ஊர் மெச்ச கல்யாணம் பண்ணி தான் போன ஒரு வருஷத்துலயே புருஷன தூக்கி கொடுத்துட்டா….என்ன ராசியோ எழவோ….சரியான ராசி கெட்டவ…" என அவள் சொல்லி முடிக்கவில்லை… கீழே தரையில் விழுந்திருந்தாள்.

தீயாய் எறிந்த கன்னத்தை பிடித்தபடி நிமிர்ந்தவள் கண்டது சங்கமேஸ்வரனை தான்.

அவள் பேசும் பொழுதே ஆண்கள் இருவரும் வந்து விட்டனர். அதையறியாது பேசி கொண்டிருந்தவளின் கடைசி வாக்கியத்தில் ஆறுமுகம் கொதித்தெழுத்து அவள் அருகே செல்வதற்குள் அவளை நெருங்கி அறைந்திருந்தான் சங்கமேஸ்வரன்.

"இன்னும் ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சுனா அவ்வளவு தான் தொலைச்சிருவேன்….அவ போட்ட பிச்சையில தான் உன் வாழ்க்கை இருக்குன்னு மறந்திடாத??" என அவளை எச்சரித்தவன் திரும்பி பாராது சென்று விட்டான்.

மகனின் செய்கையில் அதுவரை மனதை இடறி கொண்டிருந்த சிறு பயம் விலகி அவன் இனி மதிவதனாவை விட மாட்டான் என்ற நம்பிக்கை பிறந்தது ஆறுமுகத்திற்கு.

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே👇👇 
தீண்டல் 6🔥🔥🔥

'எதுக்கு வர சொல்லிருப்பான்…..என்ன பிரச்சினை…...விஷயம்…..ஊர் தலைவர் வரைக்கும் போயிருக்குன்னா ஏதும்…. பெரிய பிரச்சனையா இருக்குமோ???இன்னும் எங்க கிட்ட என்ன இருக்குன்னு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டு இருக்கான்' என காலையில் ஊர்தலைவர் வீட்டிற்கு வந்து சென்றதில் இருந்து தலை வெடித்து விடும் அளவிற்கு யோசனையில் மூழ்கி இருந்தாள் மதிவதனா.

"மதிம்மா பாப்பாக்கு சாப்பாடு கொடுத்திட்டியா" என்றபடி மேகலா அங்கே வர,

தாய் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது,
"ம்மா எதுக்கு மா பஞ்சாயத்துக்கு கூப்பிட்டு இருக்காங்க..??" என‌ கேட்டிட,

காலையில் ஊர்தலைவர் வந்து சங்கமேஸ்வரன் இவர்களுடன் பஞ்சாயத்து வைக்க அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லி சென்றதில் இருந்து உண்ணாது நொடிக்கு ஒரு முறை இந்த கேள்வியையே கேட்டு அதனை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த மகளை கண்ட மேகலா,

"மதி….சாப்புடு மொதல்ல அப்பா போனார்னா எதுக்குன்னு தெரிய போகுது..நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஏத்திக்கிற சாப்பிட்டு போய் பாப்பாவ பாரு" என அதட்டலிட
அது நன்றாகவே வேலை செய்தது.

உண்டு முடித்தவள் அறைக்குள் சென்றுவிட,

சிறிது நேரத்தில் சண்முகம் வந்தவர் உண்டு முடித்து விட்டு,

"ம்ம் இப்ப என்ன புதுசான்னு தெரியலையே...சரி நான் போய் என்னன்னு பேசிட்டு வரேன் மேகலா பிள்ளைங்க பத்திரம்" என்றவர் வெளியில் செல்ல….,

"ப்பா இருங்க நானும் வரேன்" என்றவாறு வெளியில் கிளம்ப ஆயுத்தமாகி வந்தாள் மதிவதனா.

"த்சு...என்ன மதி இது?? நீ எதுக்கு இப்ப அங்க போய்கிட்டு அப்பா மட்டும் போகட்டும் நீ உள்ள போ" என மேகலா கூற,

"இல்லம்மா அப்பா போயிட்டு வர வரைக்கும் எனக்கு பொறுமையா இருங்க முடியாது நானும் கூட போயிட்டு வரேன்...அப்புடி எதுக்கு தான் பஞ்சாயத்துன்னு எனக்கு தெரிஞ்சாகணும் நா கட்டாயம் போயே தீருவேன்" என அவள் பிடிவாதமாக நிற்க,

"பாப்பா எங்க மதிம்மா"?? என்ற தந்தையின் கேள்விக்கு,

"ஷாலினி கூட இருக்காப்பா நீங்க வாங்க நம்ம போகலாம்" என்றிட,

மகளின் பிடிவாத்திற்கு முன் ஏதும் பேச இயலாது,"சரி வாம்மா" என அவளையும் அழைத்து கொண்டு ஊர் தலைவர் வீட்டிற்கு சென்றார்.

அங்கே இவர்களுக்கு முன்பே சங்கமேஸ்வரனும் ஆறுமுகமும் வந்து அமர்ந்திருந்தனர்.

இவரை கண்டதும் ஆறுமுகம் எழுந்து வர,
அவரிடம் முகம் திரும்ப இயலாது தந்தையும் மகளும் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு உள்ளே செல்ல,

சங்கமேஸ்வரனோ ஒரு வித அலட்சிய பாவனையுடன் இவர்களை பார்த்தவாறே அமர்ந்திருந்தவனின் விழிகள் அவள் மீதே நிலைத்திருந்தது.

ஆறுமுகமும், சண்முகமும் அன்று பேசியதோடு சரி.அதன் பின் அவர்களுக்கு வாய்ப்பு கிட்டவில்லை.

தன் மீதே விழிகளை உலாவ விட்டிருந்தவனை திரும்பி முறைத்தவள் அவனை விட படு அலட்சியமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள் உடல் மொழியிலும் அவ் பாவனையை கொண்டு வந்து அமர்ந்து கொள்ள…..

"ரவுடி….!!!" என மெல்லியதாக முணுமுணுத்தவனின் இதழ்கள் ரகசிய புன்னகையை உதிர்ந்தன.

ஊர்தலைவர் வரவும் அனைவரும் எழுந்து நின்றிட அவர்களுக்கு வணக்கம் ஒன்றை வைத்தவர் தனது பேச்சினை தொடங்கினார்.

"அப்பறம் சண்முகம் விஷயத்த ஆரம்பிக்கலாமாப்பா???" என,

"என்ன விஷயம்னு இன்னும் எங்களுக்கு யாரும் தெரியப்படுத்தலைங்களே ஐயா??" என‌ மதிவதனா குறுகிட,

"யாப்பா புள்ளை கேக்குறதும் சரி தானே எப்பா சங்கரா நீயே சொல்லிடுய்யா என்ன விஷயம்னு" என்க,

"அதுக்கு என்னங்கய்யா தாரளமாக சொல்லிடலாம்" என்றவன் கற்றை பேப்பரை அவர்கள் முன் வைத்து விட்டு,

"ஐயா உங்களுக்கு தெரியும் "வானவில் மசாலா" எங்க தொழில்னு இதுல ஆரம்பத்துல இதோ இவுங்களுக்கும் பங்கு இருந்தது…" என்றவனை இடைமறித்து….

"இருந்தது என்ன….இப்பவும் இருக்கு நாங்களும் அந்த கம்பெனியில‌ பார்ட்னர்‌ஸ் தான்…" என மதிவதனா எகிறி கொண்டு வந்தாள்.

ஆம் இரு குடும்பங்களிடையை கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு வந்திருந்தாலும் கம்பெனியை பங்கு பிரிக்கும் எண்ணம் இதுவரை வந்ததில்லை அதற்கான அவசியமும் இருந்ததில்லை.

"இப்ப யாரு அத இல்லைன்னு சொன்னது….பாருங்க ஐயா இவுங்களுக்கு அதுல பங்கு இருந்தாலும் உழைப்பு முழுக்க அதுல என்னோடது தான்…." என்க,

"ஆனா அந்த தொழிலோட மூலதனம் நாங்க தானே நான் தானே இந்த தொழில் பண்ணலாம்னு ஐடியா கொடுத்தது முன்பணம் போட்டு எங்கப்பா தானே ஆரம்பிச்சாரு" என விடாது சண்டைக்கு நின்றாள் மதிவதனா.

"இருக்கலாம் வெறும் மூலதனத்தை மட்டும் வச்சு தொழில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திட முடியாது அதுக்கு உழைப்பு வேணும் அது நான் போட்டது…" என இவனும் விடாமல் மல்லுக்கு நிற்க,

"இப்ப என்னதான் சங்கரா உனக்கு வேணும் சுத்தி வளைக்காம உடைச்சு பேசிடு" என ஊர் தலைவர் கட்டளையிட,

"வேற ஒண்ணும் இல்லிங்கய்யா கடைய என் பேருக்கு மாத்தணும் அதுக்கு உண்டான பணத்தை நான் கொடுத்துடுறேன் அவுங்கள தொழிலை எனக்கு முழுசா எழுதி கொடுக்க சொல்லிடுங்க" என்றிட,

வந்ததே...ஆத்திரம் மதிவதானாவிற்கு…!!!!


"தர முடியாதுன்னு…...சொன்னா…..!!!" என்றவளின் குரல் இறுகி வந்தது.

'இது என்ன இவர்கள் வீட்டு சொத்தா…..என் அப்பா அல்லவா முன்பணம் போட்டது இதன் தொடக்கம் விதை நான் போட்டது அல்லவா பணம் கொடுக்கிறேன் என்று சொன்னால் இந்த தொழிலை அப்படியே தூக்கி கொடுத்து விட வேண்டுமோ..??' என்பது தான் அவளின் எண்ணம்.

"மதிம்மா எதுக்கு பிரச்சனை விடு சுமுகமா பேசி முடிச்சிக்கலாம்…" என்ற தந்தையின் வார்த்தைகளை காதில் வாங்காமல்,

"ம்ப்ச்...நீங்க சும்மா இருங்கப்பா இவுங்க பணம் தரேன்னு சொன்னதும் உடனே தொழில தூக்கி கொடுத்திட முடியுமா வேணும்னா அந்த பணத்தை நம்ம கொடுப்போம் இந்த தொழில நம்மளுக்கு எழுதி கொடுத்திட சொல்லுங்க!!!" என்க,

"ஓஹோ…..இத்தனை வருஷம் நாயா உழைச்சா நான் இந்த தொழில விட்டு கொடுக்கணும் மாச மாச சொகுசா ஏதும் வேலையே பாக்காம கம்பெனில லாபம் வந்த பணத்தை வாங்குன நீங்க இந்த கம்பெனிய கேட்பீங்களோ...எவ்வளவு தைரியம்…"??? என சட்டென மூண்ட கோவத்தில் கத்தினான் சங்கமேஸ்வரன்.

மதிவதனாவை தன்னிடம் கொண்டு வர தான் அவன் இந்த தொழில் விசயத்தை இழுத்தது. தான் தொழிலை எழுதி கொடுக்குமாறு கூறினால் மதிவதனா ஆத்திரபட்டு ஏதாவது பேசுவாள் அதை வைத்து அவளையும் கம்பெனிற்கு வருமாறு செய்து விடலாம். என நினைத்து தான் அவன் தொழில் விசயத்தை இழுத்தது ஆனால் மதிவதனா‌ பணம் தருவதாக கூறி தொழிலை விட்டு போகுமாறு கூறுவாள் என அவன் நினைத்து கூட பாத்திராத ஒன்று. அதில் கோபம் அலையாய் அவன் உடல் முழுதும் பரவிட நொடியில் தன்னை மீறி கத்தி விட்டிருந்தான்.

"என்ன சொகுசா பணத்தை வாங்கிட்டோம் நாங்க உழைக்கவே இல்லாத மாதிரியில்ல பேச்சு வருது…" என்றாள் மதி.

"அட...என்னய்யா இது சின்னப்பிள்ளை மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க உங்க சண்டைய நிறுத்துங்க மொதல" என அதட்டிய ஊர் தலைவர்,
"கடைசியா இதுல உன் முடிவு என்ன தான் மதி??" என்க,

"எங்களால தொழில எழுதி தர முடியாதுங்கய்யா எங்களுக்கும் அதுல பங்கு இருக்கு" என்றிட,

"அப்போ என்னாலையும் ஓசியா பணத்தை தர முடியாது" என்றான் சங்கமேஸ்வரனும் பட்டென்று.

அதில் ரோசம் வர பெற்றவள்,
"யாரும் ஒன்ணும் எங்களுக்கு ஓசியில தூக்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை கம்பெனில நாங்களும் ஒரு பர்ட்னர்‌ தான் எங்களுக்கான‌ உழைப்பை நாங்க போட்டுட்டே வேலை செஞ்சுட்டே பணத்தை வாங்கிகிறோம்…..இன்னும் இரண்டு நாள்ல நான் கம்பெனில வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் தொழிலாளியா இல்லை…..முதலாளியாக!!!" என்றவள் தந்தையை அழைத்து கொண்டு சென்று விட,

போகும் முன் சண்முகமும் ஆறுமுகமும் தங்களின் பார்வைகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

போகும் அவளையே பார்த்தவனிற்கு தனது திட்டம் நிறைவேறியதில் மகிழ்ந்தாலும் வீணாக வார்த்தைகளை விட்டதற்கு சங்கடமும் கொண்டான்.

"எப்பவும் இந்த ரவுடி விஷயத்துல மட்டும் நான் நெனைக்கிறதுக்கு எதிராக தான் எல்லாம் நடக்குது….நீ ...வாடி….கேடி...ரவுடி...கம்பெனிக்கு உன்ன கவனிச்சுக்கிறேன்" என பல்லை கடித்தவன் ஊர்தலைவரிடம் விடை பெற்று சென்று விட்டான்.

*********************


சென்ற வார லோடுக்கான வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்த மதிவதனாவிற்கே தலை விண் விண் என்று தெறிக்க ஆரம்பிக்க நோட்டை மூடி வைத்தவள் எழுந்து வெளியே வந்தாள்.

ஆம்...அவனிடம் சொன்னது போல் இரண்டு நாட்களில் கம்பெனிக்கு வர ஆரம்பித்து விட்டாள்.

இதற்கு சங்கமேஸ்வரனின் வீட்டில் விசாலாட்சி பெரும் பிரளாயத்தை நடத்த ஆயுத்தமாக அதனை முன் கூட்டியே அடக்கி புஸ்வானம் ஆக்கியிருந்தார் ஆறுமுகம்.

இங்கு வந்த இந்த இரண்டு நாட்களில் சங்கமேஸ்வரன் இவளிடம் எதுவும் பேசி கொள்ளவில்லை சேலத்திற்கு பெரிய மிளகாய் பொடி ஆர்டர் கிடைத்திருந்ததில் அவன் படு பிசி அதில்.

ஆட்கள் யாரும் இல்லாததை கண்டவள் மணியை பார்க்க மாலை நான்கு,
"ஓ….டீ டைம் போல" என நினைத்து கொண்டவள் மிஷின்கள் ஓடும் சத்தம் கேட்கவும் அங்கே செல்ல…..

இரவு அனுப்ப வேண்டிய லோடிற்காக சங்கமேஸ்வரன் மிளகாய் பொடிகளை அரைத்து கொண்டிருந்தான்.

அவனை கண்டவள் யூ டேர்ன் அடித்து திரும்ப முயல அதற்குள் கார நெடி அவளின் மூக்கில் ஏறிட,
"ஹச்...ஹச்.." என தும்மி விட்டிருந்தாள்.

அவளது தும்மலில் நிமிர்ந்தவன் அவளை கண்டு முறைத்து "போ" எனுமாறு சைகை செய்ய,

இவன் சொல்லி தான் செல்வதா என்ற கடுப்பில் வீம்பாக அங்கேயே நின்றவாள் தொடர்ச்சியாக மூன்று தும்மல்களை போட்டிருந்தாள்.

அவளை மேலும் முறைத்தவன் தான் கட்டியிருந்த துணியினை கீழே இறக்கி விட்டு,

"அறிவில்லை மொளகா பொடி அரைச்சிட்டு இருக்கேன்ல போ அந்த பக்கம் இல்லையின்னா மொகரைக்கு துணிய கட்டு போ…..!!!" என அவளை அதட்டுவதற்குள் விடாமல் தும்மியிருந்தான் அவன்.

அப்போதும் அடங்காது அவள் நின்று தும்பி கொண்டே இருக்க பொறுமை இழந்தவன் "ஏய்….எருமை மாடே போடி அந்த பக்கம் மசாலா கிட்ட வந்து தும்மிட்டு இருக்க..உன் மூளை உருகி கரைச்சி மூக்கு வழிய வந்து எல்லாம் அதுல கலந்துட போகுது…??" என் கோபமாக ஆரம்பித்தவன் நக்கலாக உரைக்க….

அதில் கடுப்புற்றவள் வேண்டும் என்றே அரைத்து வைத்திருந்த மசாலா பொடிகளின் அருகே வந்து தும்மல் போட,

இரண்டு முறை சொல்லி பார்த்தவன் அவள் அடங்காது திரும்பவும் செய்யவும் சட்டென்று தனது முகத்தில் கட்டி இருந்த துணியை கழட்டியவன் நிமிடங்களில் அவளை எட்டிட,

திகைத்து விழித்தவள் ஓட பார்க்க அவனை வளைத்து பிடித்தவன் தன்புறம் திருப்பி தன் கையில் இருந்த துணியினை அவளின் முகத்தில் கட்டிட முயல திமிறி வெளியேற முயன்றாள் மதிவதனா.

அதனை பொருட்படுத்தாது துணியினை அவளின் முகத்தில் கட்டி முடித்தவன் தன் இதழ்களுக்கு வெகு அருகில் இருந்த அவளின் இதழ்களை கண்டவனிற்கு தாறுமாறாக எண்ணங்கள் சுழன்று ஓடியதில் தாங்க மாட்டாதவனாக அவளின் இரு கன்ன கதுப்புக்களையும் காதோடு சேர்த்து பிடித்திருந்தவன்
துணியின்‌ உள் இருந்த அவளது இதழ்களில் தனது இதழ்களை அழுந்த பதித்திருந்தான் சங்கமேஸ்வரன்.

அதிர்வில் அவள் திகைத்து நிற்க அவளின் நிலையை உபயோகப்படுத்தி கொண்டவன் மேலும் மேலும் சிறு குழந்தைகள் ரசித்து உண்ணும் மிட்டாயை போல அவளது இதழ்களை விடும் எண்ணம் இன்றி இன்னும் இன்னும் முத்தமிட்டு கொண்டே இருந்தவன்,

ஒரு கட்டத்தில் அவளின் இதழ்களின் மென்மைகளை உணர விடாது தடையாக இருந்த துணியினை அவன் தனது உதடுகளின் மூலம் கவ்வி இழுக்க அதில் அவளது உதட்டின் மேலிருந்த சிறு சிறு பூனை முடிகளும் சேர்ந்து இழுப்பட்டதில் வலி எடுக்க அதில் சுரணை வர பெற்றவள் கண்களை திறக்க,

அதற்குள் அந்த துணியினை இழுத்து கீழே விட்டிருந்தவன் நேரடியாக அவளது இதழ்களை நெருங்கியிருக்க விரைந்து அவனை தடுத்தவள் தன்னிலிருந்து பிரித்தெடுத்து ஓங்கி ஒரு அறை விட்டிருந்தாள் சங்கமேஸ்வரனிற்கு.

"ச்சீ….பொறுக்கி இன்னொருத்தன் மனைவிடா நான்!!!" என்றவள் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தாள்.

அவள் சென்றதும் தன்னை தானே தலையில் அடித்து கொண்டவன்,
"ச்சு...என்னடா சங்கரா இப்புடி அவசரப்பட்டுட்டியே…ரவுடி இது தான் சாக்குன்னு அறைச்சிட்டு போயிட்டா…." என்றவனின் நினைவுகள் தங்களின் முதல் முத்தத்திற்கு சென்றிட

இங்கே அலுவலக அறையினுள் வந்தமர்ந்து தண்ணீர் பருகி கோபத்தினை கட்டுப்படுத்தியவளின் மனமும் அவர்களின் முதல் முத்தத்திறகு அவளை இழுத்து செல்ல,

இருவரின் நினைவுகளும் இதே இடத்தில் நிகழ்ந்த அவர்களின் முதல் முத்த நிகழ்விற்கு சென்றிருந்தது.

கருத்து திரி

 
தீண்டல் 7 🔥🔥🔥🔥

'இதோ இதே இடத்தில் தானே நடந்தது அவர்கள் இருவருக்குமான முதல் முத்த பரிமாற்றம். அன்று அவனது முத்தத்தில் உரைந்து வெட்கி சிவந்து தேனாய் இனித்த முத்தம் இன்று நஞ்சாய் கசந்ததே….இதற்கு முழு முதற் காரணம் அவன் அல்லவா????"

கடந்த கால நினைவுகள் வலிகள் தந்த பரிசாக கண்களில் கண்ணீர் வழிய மேஜை மீது தலை வைத்து படுத்திருந்தாள் மதிவதனா.

"அக்கா….அக்கா…." என்ற குரலுக்கு எழும்பியவள் நிமிர்ந்து பார்க்க மாரி தான் நின்றிருந்தான்.

"என்ன???"

"லேட் ஆச்சாம் உங்கள அண்ணா கிளம்ப சொன்னாங்க" என்றிட,

நேரம் பார்த்தவள் மணி 7.30. மதிவதனாவிற்குமே வீட்டிற்கு செல்ல வேண்டும் என எண்ணம் வந்திட மறுப்பு ஏதும் சொல்லாமல் "ம்ம்" என்றவள் தன் கைபையினை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

லோட் ஏந்தி கொண்டிருந்தவன் இவளது வருகையை உணர்ந்து முகம் பார்க்க அழுத விழிகள் அவளது துக்கத்தை பறைசாற்றின.

இவன் பார்ப்பது உணர்த்தும் திரும்பியும் பாராது வண்டியை எடுத்தவள் அவனின் மீதிருந்த கோபம் முழுவதையும் வண்டி ஆக்ஸிலேட்டரில் காட்ட வண்டி வேகம் எடுத்தது.

பாதி லோட் ஏற்றி கொண்டிருந்தவனின் கண் முன் அவள் அழுத விழிகளே வந்து செல்ல வேலையில் கவனம் சிதறியவன்,

"மாரி இங்க வா சரக்க பாத்துக்கோ நான் இப்ப வந்திடுறேன்" என்றவன்,
"ச்சே….ரவுடி வண்டியை வேற பறக்க விட்டுட்டு போன இம்சை" என அவளிற்கு திட்டியவன் தானும் புறப்பட்டு இருந்தான்.

சிறிது நேரம் சென்றவன் கண்டது நடுவழியில் ஆள் அரவமற்ற சாலையில் வண்டியின் பிரேக் கட்டாகி நின்றிருந்தவளை தான்.

"என்னாச்சு??"

" ***************** "

"வதனா உன்னைத்தான் கேக்குறேன் வண்டிக்கு என்னாச்சு" என அவன் பொறுமையாக கேட்ட போதும் வாய் திறக்காது தனது கைப்பேசியினை நோண்டி கொண்டிருந்தாள்.

"இவளை" என பல்லை கடித்தவன் தனது வண்டியினை நிறுத்தி விட்டு அவளிதனை ஆராய பிரேக் கட்டாகி இருப்பது தெரிந்தது.

'பின்ன அவ்வளவு வேகமா வந்த பிரேக் கட்டாகாம என்ன செய்யும்' என நினைத்தவன்,

"பிரேக் கட்டாகியிருக்கு வா நான் உன்னை டிராப் பண்ணுறேன்" என,

அவனை தீயாய் முறைத்தவள் மீண்டும் மீண்டும் தொலைப்பேசியில் யாருக்கோ அழைப்பது தெரிந்தது.

"சொன்னா கேளு...இந்த நேரத்துல தனியா இருக்குறது சேப் கிடையாது அட்லீஸ்ட் மாரியையாவது வர சொல்லுறேன் அவன் கூடயாச்சும் போ" என,

அவன் பேசியதை காதில் வாங்காது அலட்சிய பாவனையுடன் நின்றிருந்தவளை கண்டவனிற்கு கோபம் எழ,

"உன்னை தான டி கேக்குறேன் அப்புடி என்ன அலட்சியம்" என மறுபடியும் அவன் இரைய,

அப்போதும் தனது நிலையில் இருந்து மாறதவளை கண்டவனிற்கு நேரம் கெட்ட நேரத்தில் சற்று முன் நடந்த இதழ்களின் தாக்குதல் வேறு நினைவு வந்திட உடல் முழுதும் மின்சாரம்‌ பாய்ந்திட, மெல்லிய குரலில்

"வதினி மா இங்க பாரேன் டி " என்றவாறு அவளின் கைகளை பிடித்திட,

ஏற்கனவே, அவனின் முத்தத்தில் பலவீனமடைந்திருந்தவளிற்கு அவன் தொட்ட இடம் நெருப்பாய் தகித்திட,


"ச்சீ...தொடாத நீ….!!!!!!!!! உன்னோட ஒவ்வொரு தீண்டல்களும் என் உடம்புல நெருப்பா மாறி என்னை எரிக்குது…….!!!!!!" என சீறினாள் அவள்.

அதில் அதிர்ந்தவன்
"ம்ஹீம்…...ஒரு காலத்துல என்னோட தொடுகைய எல்லாம் கரும்பா இனிக்குதுன்னு சொன்னவ நீ????" என்றான் விரக்தியாக…

"ஹா...அப்புடி கரும்பா இனிச்சவளாதான் நீயும் உன் குடும்பமும் சேர்த்து அடியோட வெட்டி சாஞ்சீங்களே மறந்துட்டியா என்ன????"

"அது சந்தர்ப்ப சூழ்நிலையினு உனக்கு தெரியாதா??வதினி மா நான் சொல்றதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணேண்டி….."

"ம்ஹீம் நீ சொல்றது எப்புடி இருக்கு தெரியுமா வாழுனும்ன்ற ஆசைய நெஞ்சு முழுக்க சுமந்துகிட்டு இருக்கவன் கிட்ட போய் உன் கழுத்த கொஞ்சம் அறுத்துக்கிறேன் என்னோட சூழ்நிலை அப்புடி அதுக்காக நீ என்ன தப்பா நெனைக்காதன்ற மாதிரி இருக்கு உன்னோட நியாயம்"

அவளின் வார்த்தைகளில் கோபமடைந்தவன்"அப்புடி என்ன உன் கழுத்தை நாங்க அறுத்துட்டோம்???" என் பதிலுக்கு சீறிட

"ஏன் உயிரோட இருக்குறவங்க கழுத்த அறுத்தாதான் வலிக்கும்னு நெனைக்கிறியா….நீ இருந்த மனச தங்கச்சிக்காக துடிக்க துடிக்க வார்த்தையால கொன்னியே…!!!!! இல்லை உன்ன சுமந்துட்டு இருந்த இதயத்த பிடிங்கி எரியிற மாதிரி சொன்னியே ஒரு வார்த்தை!!!!!! அதுக்கு பேர் என்ன??? உன் வாழ்க்கையில இருந்து என்ன கழுத்தைச் பிடிச்சு வெளியே தள்ளுன நீ இப்ப மறுபடியும் என் வாழ்க்கைகுள்ள வர பாக்குற அது இந்த ஜென்மத்துல நடக்காது போயிடு…..

கேட்டியே "நா இல்லன்னா என்ன உங்க பொண்ணு செத்தா போயிடுவான்னு" நா எதுக்குடா சாகணும் என் புருஷன் சாகுறதுக்கு முன்னாடி வரைக்கும் என்னை தங்கமா பாத்துகிட்டான் அவன் போயும் இந்த உலகத்துல வாழுறதுக்கான தைரியத்தையும் சேத்து தான் தந்துட்டு போயிருக்கான் அது போதும் என் வாழ்க்கைக்கு இனி நீ எப்பவும் என் வாழ்க்கைக்கு தேவையே இல்ல போடா..!!!!" என்றவள் கோபத்தில் ஆரம்பித்து அலட்சியத்தில் முடித்து திரும்பி நின்றிட,

அவளின் வார்த்தைகளில் பெரிதும் காயமடைந்தவன் அடுத்த வார்த்தை பேச தெம்பின்றி தொய்ந்து நின்றான்.

'அவள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயம் தானே….தன்னிடம் அதற்கான பதில் இல்லாததை உணர்ந்தவனிற்கு முகம் அவமானத்தில் கன்றி விட்டிருந்தது.'

தன் தாய் மற்றும் தங்கையின் நாடகம் அறியாது தான்‌ பேசிய வார்த்தைகள் அவள் உயிரை கருக்கியது நிஜம் தானே…!!!!!

முகத்தை அழுந்த துடைத்தவன்‌ மாரிக்கு அழைத்து அவன் வண்டியை எடுத்து வருமாறு‌ கூறி வைத்தவன்,

"நடந்த எல்லாத்துக்கும் நான் தான் நான் மட்டும் தான் காரணம் வதினி மா ஆனா அத பேசுறதுக்கான நேரம் இது இல்லை…. மாரி வண்டி எடுத்துட்டு வந்துடுவான் அவன் கூட நீ போற…!!போகணும்!!!! இல்லையின்னா என் வண்டியில தூக்கி போட்டுட்டு போயிடுவேன் நீயே முடிவு பண்ணிக்கோ அந்த குட்டி அணுகுண்டு வேற உன்ன தேடிட்டு இருப்பா…" என கடைசி வாக்கியத்தை சிரிப்புடன் கூறி முடித்தான்.

அவன் பேசியவற்றில் கடைசி வாக்கியத்தை மட்டும் காதில் வாங்கியவள் அவனை முறைக்க,

அதற்குள் மாரி வண்டியுடன் வந்து விட அதற்கு மேல் அடம் பிடிக்காமல் ஏறி கொண்டாள்.

ஏனெனில் சற்று முன் அவள் வண்டி நின்றவுடன் தந்தைக்கு அழைக்க அவரோ ஷாலினி வேலை விசயமாக அவளுடன் திண்டுக்கலில் இருப்பதாக கூறி விட என்ன செய்வது??யாரை அழைப்பது???‌என அவள் யோசித்த வேளையில் தான் சங்கமேஸ்வரன் வந்தது. எனவே, ஏதும் வம்பு வளர்காது வண்டியில் ஏறி விட்டாள்.

அவள் செல்லும் வரை சிரிப்புடன் இருத்தவனின் முகம் அவள் கண்களுக்கு மறைந்ததும் நொடியில் முகம் வேதனையில் கசங்கிட,

நடுரோடு என்றும் பாராது தொய்ந்து அமர்ந்தவன்,

'எப்படி சரி செய்ய போகிறேன் நான் இவளை…..இத்தனை வீம்புடனும் கோபத்துடனும் இருப்பவளை‌ எப்படி சமாளிப்பது…..அன்று அவன் செய்த சிறு தவறு இன்று பூதகரமாய் எழுந்து அவனையே விழுங்க தயாராகி நின்றிருப்பதை கண்டவனிற்கு என்ன செய்து இதனை சரி செய்வது என புரியவில்லை.'

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ…..அலைப்பேசி அழைக்க எடுத்தான் மாரி தான்.

"என்னடா மாரி இறக்கி விட்டுட்டியா??" என்க,

"அதெல்லாம் ஆச்சுன்னே நான் கம்பெனிக்கு வந்துட்டேன் நீங்க எங்கன இருக்கவுக...லோட் எல்லாம் ஏத்தி முடிச்சி ரெடியா இருக்கு நீங்க வந்தா அனுப்பிடலாம்...அப்பறம் அக்கா வண்டிய எடுக்க ராசுவ அனுப்பிருக்குன்ணே"

"சரி தோ வரேன்டா" என போனை அணைந்தவன் சிறிது நேரம் கழித்து ராசு வரும் அரவம் கேட்டதும் எழுந்து முகத்தை அழுந்த துடைத்து விட்டு நின்றவன் அவன் வந்ததும் புறப்பட்டு சென்று விட்டான்.

மாரியுடன் வந்து இறங்கியவளை குழந்தையுடன் வாசலிலே எதிர்நோக்கி காத்திருந்தார் மேகலா.

"ம்மா…" என்றவாறே இவள் மேகலாவை நோக்கி செல்ல…

"அம்மீ" என்றவாறே ப்ரத்யூ இவளை நோக்கி ஓட வர தூக்கி அணைத்து கொண்டாள்.

"செல்லம்...அம்மு….சாப்டீங்களா??"

"ம்ம்ம்...பாட்டி...புவ்வா கொடுத்தா!!" என்றாள் குட்டி.

"அப்புடியா!!!" என்றவாறே குழந்தையை தூக்கி கொண்டு மேகலையின் அருகே அமர்ந்து விட்டாள்.

"என்னம்மா அப்பா இன்னும் வரலையா??"

"இல்லை மதி இப்ப தான் கூப்பிட்டாங்க வந்துட்டு இருக்காங்களாம்...என்னாச்சு உன் வண்டிக்கு??"

"பிரேக் கட்டாகிடுச்சும்மா!!!"

"அச்சோ...பாத்து வர கூடாதா மதி??"

"இனி கவனமா இருக்கேன் மா"


"ம்ம்மா...பாரு எப்புடி தெனாவட்டா உட்கார்ந்து இருக்கான்னு….எவ்வளவு திமிரு...கம்பெனிக்குள்ள திரும்பவும் போயிட்டா??" என அவர்கள் வீட்டு திண்னையில் அமர்ந்து மதியை கண்ட எரிச்சலில் பேசி கொண்டிருந்தாள் விசாலா.

"ப்ச் எல்லாம் உங்கப்பாவையும் உங்க அண்ணனையும் சொல்லனும் சும்மா இருந்தவள பஞ்சாயத்துன்ற பேருல கம்பெனிக்கு இழுத்து விட்டுட்டாங்க…"

"அதை சொல்லு மொதல்ல உன் புருஷனும் மகனும் அவளை திரும்ப இந்த வீட்டுக்கு வர வைக்க பாக்குறாங்க. சூதானமா இருந்துக்கம்மா நா அம்புட்டுதேன் சொல்லுவேன்…"

"என்னடி நீ இப்புடி சொல்லுறே என் வயித்துல புளிய கரைக்காதடி…" என அமுதா சொல்லிக் கொண்டிருக்கும் வேளையிலே,

அங்கே எதிரே சண்முகமும் ஷாலினியும் வந்து விட அனைவரும் வீட்டினுள் சென்று விட்டனர்.

"எம்மா….இது யாரும்மா புதுசா இருக்கு...இந்த பிள்ளை" என ஷாலினியை குறித்து அவள் கேட்க,

"தெரியலடி ஏதும் அவன் புருஷன் வழி சொந்தமா இருக்குமோ...ஏன்னா அவ புருஷனுக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்லை...இந்த பிள்ளை ஏதும் சொந்தமா இருக்கும் போல" என்றார் அமுதா.

"ஏண்டி யம்மா….ஆத்தாளும் மகளும் சேர்ந்துகிட்டு என்ன திட்டம் போடுறவுக ராத்திரிக்கு சோறாக்கனும்ன்ற எண்ணம் இருக்கா….இல்லையா??" என முனியம்மாள் உள்ளிருந்து குரல் கொடுக்க….

"இந்த கிழவியோட...இம்சையா இருக்கும்மா எங்கனயாச்சும் பத்தி விட வேண்டியது தான??"

"வாயை மூடு விசாலம் இது மட்டும் கேட்டுச்சு நம்மள தூரத்தி விட்டுடும் உங்க அப்புச்சி எந்திரிச்சு வா உள்ள" என்ற அவளை அதட்டிய அமுதா எழுந்து உள் சென்று விட,

விசாலாட்சிக்கு எதிர் வீட்டை பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது.
"சனியன்ங்க ஊரு விட்டு போனதுக அப்புடியே போயிருக்க வேண்டியது தான திரும்பவும் வந்து என் உசுர எடுக்குதுக" என வார்த்தைகளை விட்டாள்.

ஏனோ விசாலாட்சிக்கு சிறு வயதில் இருந்து தான் என்ற எண்ணம் தலை ஓங்கியிருந்தது. மதிவதனா, சங்கமேஸ்வரன்,மீனாட்சி, ஒரு கூட்டு என்றால் இவள் எப்போதும் தனியே…

விளையாட்டு விஷயத்தில் கூட இவளை இரண்டு மூன்று முறை அழைத்த பிறகே பிகு செய்து கொண்டு வருபவள்.

அதிலும் சங்கமேஸ்வரனும் மீனாட்சியும் இவள் எது செய்தாலும் விட்டு கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் விடுவதால் அவர்களுடன் பெரிதாக ஏதும் வைத்து கொள்ள மாட்டாள்.

ஆனால் மதிக்கும் இவளிற்குமே அடிக்கடி முட்டி கொள்ளும்.

"விசாலா???" என்ற அன்னையின் அழைப்பிற்கு எழுந்தவள் எதிர் வீட்டின் மீது வெறுப்பு பார்வை ஒன்றை வீசி விட்டே சென்றாள்.

இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது சங்கமேஸ்வரன் வேலைகளை முடித்து வீடு வர,

வந்தவனின் பார்வை எதிர் வீட்டையே வட்டமடிக்க சிறுது நேரம் யாரும் வெளி வருவார்களா என பார்த்தவாறே நின்று விட்டான்.

நேரம் தான் சென்றதே ஒழியே யாரும் வர காணோம்.

பெருமூச்செறிந்தவன் முகம் தொங்கி விட வண்டியை உள்ளே ஏற்றி விட்டு வீட்டினுள் சென்று விட்டான்.

அதுவரை அவனின் செய்கைகளை ஜன்னல் வழி பார்த்து கொண்டிருந்த மதிக்கு அவனின் தொங்கிய முகம் கண்ணில் பட இவளது முகமும் வேதனையில் கசங்கிற்று…

அவன் அறையில் இருந்த அந்த சிறு ரேடியோ பெட்டியை ஆன் செய்து விட்டு படுக்கையில் விழுந்தவனிற்கு மதிவதனா பேசிய பேச்சுக்களே காதில் ஓலமிட கத்தியால் யாரோ இதயத்தில் சொருகிய உணர்வு…..அது நேரம் சரியாக ரேடியோவில்………

"உனக்கேனவே காத்திருந்தாலே……!!
காலடியில் வேர்கள் முளைக்கும்…!!
காதலில் வலியும்……………..!!!!!!
இன்பம் தானே………!!!!!"

என்ற வரிகள் ஒலித்திட,

"வதி குட்டி…!!" என குரல் அழுகையில் கரகரக்க கண்ணில் நீர் நிரம்பிட கடந்த கால நினைவுகளில் மிதக்க ஆரம்பித்தான் கன்னங்களில் வழிந்த கண்ணீருடன்.

ப்ரத்யூவை இறுக கட்டி கொண்டு படுக்கையில் இருந்த மதிக்கு அவன் முத்தமிட்ட நொடியும்...சற்று முன் கசங்கிய அவனது முகமும் மனதில் அலையாய் மாறி மாறி மோதி தாக்கி கடந்த கால இனிமைகளை தட்டி எழுப்பிட,

"ஈஷ் அத்தான்…" என்ற விசும்பலோடு
நினைவுகளின் பின்னே...சென்றாள் மதிவதனா.

உங்களது கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே


 
தீண்டல் 8🔥🔥🔥

அந்த மருத்தவமனையின் பிரசவ வார்டில் ஓரத்தில் போட்டிருந்த இரும்பு நாற்காலியில் சோகமே உருவமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தால் நான்கு வயது மதிவதனா.

தங்கைகள் பிறந்த சந்தோஷத்தில் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி விட்டு வந்த சங்கமேஸ்வரன் இவளை கண்டதும் அருகில் வந்து,

"வதிக்குட்டி இங்க என்ன பண்ணுறீங்க??" என்க,

அவளிடம் பதில் இல்லை.

"வா வதி மா பாப்பாங்கள பாக்க போகலாம்" என அவள் கைகளை பிடித்து எழுப்ப….

ம்ஹீம்...எழுவேனா என‌ அடம் பிடித்து அமர்ந்திருந்தாள் மதிவதனா.

"என்னாச்சு வதனி குட்டிக்கு யாரும் ஏதும் திட்டிடாங்களா" என்றவாறு அவளது முகத்தை தன் பக்கம் அவன் திரும்ப….

வைரங்களை இரு துளி கண்ணீர் அவள் கண்களில்.

பதறியவன் "என்னாச்சு வதி ஏன் அழுகுற மாமா திட்டுனாரா யாரு என்ன சொன்னாங்க உன்னை சொல்லு அத்தான் கிட்ட சொல்லு டா" என்க,

அவனின் கேள்வியில் தேம்பி தேம்பி அழுதவள்,
"ஈஷ்ஷத்தான் இனி நீ என்ன பாப்பா கூப்பிட மாட்டியா??என் கூட விளையாட மாட்டியா???ஆறுமுகம் மாமா மிட்டாயி வாங்கி தர கடைக்கு எல்லாம் கூட்டிட்டு போக மாட்டாரா???" என கேள்விகளை கேட்டு அவள் தேம்ப…..

"ம்ப்ச் என்ன பேசுற மதி யாரும் இப்புடி எல்லாம் உன் கிட்ட சொன்னது??"

"சீதா பாட்டி தான் சொன்னாங்க உனக்கு ரெண்டு பாப்பாங்க வந்துடுச்சாம் அதனால இனி நீ அவுங்கள தான் கொஞ்சுவியாம் அவுங்க கூட தான் விளையாடுவியாம்..!!!!மாமா இனி அந்த பாப்பாங்களுக்கு தான் மிட்டாய் எல்லாம் வாங்கி தருவாங்களாம் அப்புடின்னு சொன்னாங்க சீதா பாட்டி" என்றவாறே அவள் இன்னும் இன்னும் தேம்பியபடியே இருக்க….


"ச்சு சீதா அம்மாச்சிக்கு வேற வேலையே இல்லை….ம்ப்ச் இங்க பாரு வதி குட்டி அப்புடி எல்லாம் நடக்காது...பாப்பாங்க வந்தாலும் நீதான் எனக்கு முதல் பாப்பு குட்டி என்னோட வதினி குட்டி நீ தான்" என அவளை செல்லம் கொஞ்சியவன்,

"நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பாப்பாங்களுக்கு நடக்க விளையாட எல்லாம் சொல்லி தரலாம் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகலாம்… நீ சொல்லுறது எல்லாம் ரெண்டு பேரும் கேட்பாங்க." என அவனிற்கு அந்த எட்டு வயதில் தெரிந்தவற்றை சொல்லி அவளை சமாதானப்படுத்த….

"அப்புடியா நிஜமா ஈஷ்ஷத்தான் அப்ப நான் பாப்பாங்களுக்கு பாண்டி விளையாட எல்லாம் சொல்லி தருவேன்….அப்பறம் ஓடி பிடிச்சு எல்லாம் விளையாட சொல்லி தருவேன் அவுங்களுக்கு ஏ,பி,சி, டி கூட நான் சொல்லி தரேன் சரியா நீ கவலைப்படாத" என பெரிய மனுஷியாக அவள் சொல்ல,

அதில் சிரித்தவன் "இந்த உனக்கு பிடிச்ச மிட்டாயி தான் வாங்கிருக்கேன் வா போய் குட்டீஸ பாப்போம்!!" என் அவளை அழைத்து கொண்டு சொன்றான்.

இரு தொட்டில்களிலும் அழகிய வெண்பஞ்சு மேகமாய் சற்றே தனது ரோஜா உதடுகளை பிளந்து துயில் கொண்டிருந்த குழந்தைகளை கண்டவளிற்கே உற்சாகம் அலையாய் பீறிட்டது.

"ஈஷ்ஷத்தான் இங்க பாரு….குட்டிங்க எப்புடி தூங்குறாங்கன்னு அச்சோ...எவ்வளவு அழகா தூக்குறாங்க" என அவர்களை கொஞ்சியவறே கன்னத்தை கிள்ள போக,

"ம்ப்ச் தூங்குற பிள்ளைகள‌ கொஞ்சாத??என பட்டென அவளின் கைகளை தட்டி விட்டார்" அப்போது உள் நுழைந்த சீதா.

அதில் அவளின் முகம் சுருங்கி விட பொறுக்க முடியாத சங்கமேஸ்வரன்,
"அம்மாச்சி எதுக்கு அவ கைய கட்டி விட்டீங்க...இவளும் பாப்பா தான கொஞ்சுனா என்னவாம்….நீ கொஞ்சு வதனி மா நான் பாத்துக்கிறேன்" என,

"க்கூம்...அவளை சொன்ன உனக்கு பொறுக்காதே சரியான வசியக்காரியா இருக்கா" என நொடித்து கொண்டார் சீதா.

அமுதாவின் தாய் தான் சீதா. சீதாவிற்கு ஆரம்பித்ததில் இருந்தே மேகலாவிடம் பிடித்தம் இல்லை. ஆறுமுகத்திற்கு ஒரு வகையில் சொந்தம் தான் இந்த சீதா. சீதாவிற்கு அமுதாவை சேர்த்து‌ மொத்தம் ஐந்து பெண்கள். கணவரின் சொற்ப வருமானத்தில் ஐந்து பெண்களையும் கரை சேர்ப்பது என்பது மலையை கோடரி கொண்டு வெட்டும் செயலுக்கு சமம்.

சற்றே வசதியான ஆறுமுகம் குடும்பத்தில் தனது மகள்களின் யாரையாவது மணம் முடித்து கொடுத்து விட்டால் மீதி இருப்பவர்களையும் அவர்களின் தயவிலேயே திருமணம் செய்து கொடுத்து விடலாம் என கணக்கு போட்டவர் தனது மூத்த மகளை ஆறுமுகத்திற்கு கட்டி வைக்க அவரின் பெரியப்பாவான(ஆறுமுகத்தின் தந்தை) நாஞ்சியப்பனிடம் பேச ஆரம்பிக்க….

முதலில் சரி என்றவர் சிறிது காலம் செல்லட்டும் என்று விட, இடைப்பட்ட காலத்தில் மேகலா பெரியவள் ஆகி விட,
மேகலா பள்ளி படிப்பை முடிக்கட்டும் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என ஆறுமுகம் உறுதியாக கூறி விட்டதில் வேறு வழி இன்றி சீதாவின் மூத்த மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி ஆயிற்று.

அதிலே சற்று வருத்தத்தில் இருந்தவர் சிறிது காலம் சென்று இரண்டாவது பெண்ணை பேச அதற்கும் மேகலா கல்லூரி செல்லட்டும் பின் கல்லூரி படிப்பை முடிக்கப்படும், வேலைக்கு செல்லட்டும், பிறகு திருமணம் முடியட்டும் என வரிசையாக மேகலாவை முன்னிட்டு ஆறுமுகம் திருமண பேச்சை தட்டி கழிக்க அதற்குள் சீதா தனது நான்கு பெண்களையும் திருமணம் முடித்து கொடுத்திருந்தார்.

கடைசியாக இருந்தது அமுதா மட்டும் தான்.அவரையே ஆறுமுகம் திருமணம் செய்து கொண்டார். அதுவும் மேகலாவை தனது ஆருயிர் நண்பன் சணமுகத்திற்கு மணம் முடித்து அவர்களை எதிர் வீட்டில் குடி வைத்த பின்பு தான் செய்து கொண்டார்.

அதில் ஏகப்பட்ட வருத்தம் சீதாவிற்கு. நான்கு பெண்களுக்கும் தாங்களே கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்த கடுப்பு. மேலும் மேகலையினால் தான் தன் பெண்களின் திருமணம் தடை பெற்றது என்ற ஆதங்கம் எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மேகாலவின் மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதனால் அவளிடம் அவ்வளவாக பேச்சு வைத்து கொள்ள மாட்டார். இதையறிந்த மேகலாவும் நீ எல்லாம் எனக்கு பொருட்டே இல்லை என்பது போல் நடந்து கொள்ள மேலும் ஆத்திரமானவர் அவ்வப்போது மதிவதனாவை ஏதாவது சொல்வதன் மூலம் தன்னை சமன் செய்து கொண்டார்.

மேலும் திருமணம் ஆன புதிதில் சீதா தனது அதிகாரத்தை அந்த வீட்டில் நிலை நிறுத்த விரும்பி அனைத்து விஷயங்களில் மூக்கை நுழைக்க ஆரம்பிக்க அதனை யாரும் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்ற தைரியத்தில் தனது மற்ற மக்களுக்கு சீர் செய்ய பணம் கொடுக்க என்று அமுதாவிடம் நச்சரிக்க ஆரம்பித்ததில் அவளும் இரண்டு முறை பணம் கொடுத்தவள் மூன்றாவது முறையாக அவர் கேட்ட சற்று பெரிய தொகையில் கையில் பணம் இல்லாது சங்கமேஸ்வரனுக்கு அத்தையின் சார்பில் மேகலா போட்ட செயினை அடகு வைத்து பணம் தந்து விட்டிருந்தார்.

மகளின் பிறந்த நாளிற்காக நகை வாங்க சென்ற சண்முகம் மேகலை தம்பதியினரிடம் கடைக்காரர் எதோச்சையாக அமுதா அடகு வைத்த விஷயத்தை கூறிவிட,

அதனை கேட்டு கோபமடைந்த மேகலா விஷயத்தை முனியம்மாளிடம் சொல்லி விட வீட்டில் ஒரு பிரளயமே நடந்திருந்தது.

அதிலும் முனியம்மாள் சீதாவை நேரடியாகவே தாக்கி பேசி விட பதிலுக்கு சீதாவும் "என் பெண்ணிடம் தானே வாங்கினேன் அவளிற்கு பிறந்து வீட்டிற்கு செய்ய உரிமையில்லையா??" என வார்த்தைகளை விட்டதில் ஆத்திரமடைந்த முனியம்மாள்,

"வாடியம்மா யாரு வீட்டு பணத்தை யாருக்கு தாரை வாக்குறது… என் புருஷனும் மகனும் கஷ்டப்பட்டு வேர்வைய சிந்தி சம்பாதிக்கிற பணம் எல்லாம் எவளோ சொகுசா வாழுறதுக்கு இல்லை வந்துட்டாங்க உரிமைய பத்தி பேசிக்கிட்டு…" என்றிட

இந்த வார்த்தைகளில் கோபமடைந்த அமுதா,
"ஏன் அத்தை உங்களுக்கு மகன்னா எனக்கு புருஷன் தான அவரு என் புருஷன் சம்பாதிக்கிற பணத்துல தான நான் என் வீட்டுக்கு செஞ்சேன்...நீங்க மட்டும் மேகலா அண்ணிக்கு செய்யும் போது நான் என் அம்மா வீட்டுக்கு செய்ய கூடாதா??" என்க,

"அண்ணி தேவையில்லாம பேசாதீங்க...கல்யாணம் ஆன நாளுல இருந்து இதுவரைக்கும் இந்த வீட்டுல இருந்து பணம்னு ஏதும் நான் வாங்கியதில்லை அண்ணனா தாய்மாமனா அவரு கடமையதான் செஞ்சுட்டு வராரு பதிலுக்கு நான் அத்தையா இந்த வீட்டுக்கு ஏதும் செஞ்சதில்லையா சொல்லுங்க பாப்போம்…??? என் கேள்வி எல்லாம் நான் சங்கமேஸ்வரனுக்கு ஆசையா போட்ட செயினை எதுக்கு அடகு வச்சீங்க பணம் கேட்டா அண்ணன் கொடுக்கப் போறாரு எதுக்கு அடகு வைக்கணும்??
என பதிலுக்கு மேகலா கேட்க,

பதில் பேச முடியாது அமைதி காத்தார் அமுதா. எப்படி பேசுவார் சங்கமேஸ்வரர் பிறந்த தினத்தில் இருந்து வருடா வருடம் பிறந்த நாளிற்கு அவனுக்கென நகையை சீராய் மேகலா செய்து வந்து கொண்டிருக்கிறாள். ஏன் சில சமயம் அமுதாவிற்கு கூட சண்முகம் அண்ணனாய் சீர் செய்திருக்கிறாரே..அப்படி இருக்கையில் மேகலா போட்ட நகையை வீட்டுக்கு தெரியாமல் அடகு வைத்தது தவறு தானே.. என எண்ணம் தோன்றிட,

"தப்பு தான் அண்ணி….நகையை அடகு வச்சது என் தப்பு தான் மன்னிச்சிடுங்க" என தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிட,

அதில் மகள் தனக்கு ஆதரவாக இல்லாமல் சட்டென மன்னிப்பு கேட்டதும் அதற்கு முனியம்மாளின் எள்ளலான பார்வையும் சீதாவிற்கு அவமானமாய் போய் விட முகம் கருந்தவர் அங்கிருந்து சென்று விட்டிருந்தார்.

அதன் பிறகு மகளிடம் தொடர்பில் இல்லாமல் இருந்தவர் மகள் மீண்டும் கருவுற்றதும் தான் அமுதாவே அழைத்து பேசியதில் இருந்து தான் போக்குவரத்து வைத்து கொண்டார்.

அவர் வருவது யாருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் கர்ப்பிணியான அமுதாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதி காத்தனர் அனைவரும்.

சீதா இன்னும் தன் தவறை உணராது இன்னமும் மகளின் புகுந்த வீடு தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்தவர் அதற்கு முழுமுதல் காரணம் முனியம்மாளும் மேகலாவும் தான் என நினைத்து கொண்டவருக்கு அந்த கோபம் இன்னும் அடி மனதில் இருக்க தான் செய்தது. ஆனால் அவர்களிடம் அதனை காட்ட முடியாதே அதன் பொருட்டே மதிவதனாவை அவளின் சிறு செய்கைகளை திட்டுவதன் மூலம் தனது கோபத்தினை வெளிப்படுத்தி கொள்வார்.

இன்றும் அதோ போல் அவர் செய்திட நினைக்கும் பொழுது தான் சங்கமேஸ்வரன் அதனை தடுத்திருந்தது.

ஒரு வாரம் மருத்தவமனையில் இருந்தவர்கள் அன்று வீடு திரும்ப ஆயுத்தமாக அமுதாவை சீதா அழைத்து கொண்டு போக முனியம்மாள் மறுப்பு தெரிவித்து விட முகம் கடுத்தவர் மருத்துவமனையில் இருந்தே தங்களின் வீட்டுக்கு செல்ல இருந்தவரை,

"ம்மா நீ கொஞ்ச நாள் அங்க வந்து இரும்மா வர்றதே இல்லை நீ?? அத்தை நீங்க சொல்லுங்க அம்மா அங்க நம்ம வீட்டுல வந்து கொஞ்ச நாளு இருக்கட்டும்" என முனியம்மாளிடம் கேட்டிட,

மறுக்க முடியாத முனியம்மாள் சரி என கூறி சம்மதம் தெரிவிக்க மகளுடன் புகுந்த வீடு வந்து விட்டார் சீதா.

வந்த இரண்டு நாட்களில் அமைதியாக இருந்தவர் மதிவதனா இங்க வந்து செல்லவும் மீண்டும் அவளை குழந்தைகளிடம் நெருங்க விடாமல் முயற்சிக்க அதனை கண்ட முனியம்மாள் இவரை விரைவாக ஊருக்கு அனுப்பி விட வேண்டும் என நினைத்து கொண்டார்.

ஒரு மாதத்திலேயே குழந்தைகளை தொட்டிலில் போடும் நிகழ்ச்சியை வைத்து விட்டிருந்தனர்.

குழந்தைகளுக்கு பெயர்களான விசாலாட்சி மீனாட்சி என்ற பெயரை மதிவதனாவும் சங்கமேஸ்வரனுமே தேர்வு செய்து வைத்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சண்முகம் அமுதாவின் அண்ணனாக நின்று குழந்தைகளுக்கு சீர் செய்ய நினைக்க அதற்கு தடையாக இருந்தார் சீதா.

"அமுதாவுக்கு அவுங்க பெரியப்பா பையன் அண்ணனா இருக்கும் போது எதுக்கு இவரு பண்ணனும் அதெல்லாம் முடியாது இதோட எங்க சொந்தத்தை அத்து விடலாம்னு பாக்குறீங்களா??" என அவர் குதித்ததில் சண்முகம் அவர்களே செய்யட்டும் என விலகி கொண்டார்.

பின் அவர் சொன்ன அமுதாவின் தந்தை வழி பெரியப்பா மகனை சென்று தாய்மாமனாக அழைப்பு வைத்து விட்டு வந்தனர் ஆறுமுகம் குடும்பத்தினர்.

அவரோ அன்று தன் மனைவி வழி சொந்தத்தில் ஒரு விஷேசம் இருப்பதால் தன்னால் வர இயலாது வேறு யாரையேனும் வைத்து செய்து கொள்ளுமாறு கூறிவிட அமைதியாக வீடு திரும்பி விட்டனர்.

ஆனால் முனியம்மாள் இதனை விடாது மீண்டும் வீட்டிற்கு வந்து அமுதாவின் அண்ணன் சொல்லியதை அனைவரிடமும் கூறி விட மிகுந்த அவமானமாக போய்விட்டது சீதாவிற்கு.

அதன் பிறகு வாயே திறக்கவில்லை அவர். சண்முகம் முன்னின்று சீர் செய்ய தொட்டில் வைபோகம் நல்லபடியாக முடிய அன்று இரவு தனது வீட்டிற்கு கிளம்பி விட்டார் சீதா.

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க மீனாட்சிக்கு இரண்டு வயதாக இருக்கும் போது கடுமையான டெங்கு காய்ச்சால் ஏற்பட்டு விட விசாலவையும் மீனாட்சியையும் ஒருங்கே பார்க்க முடியாமல் திணறி கொண்டிருந்தார் அமுதா.

இதற்கிடையில் மேகலாவிற்கும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்ததில் மதிவதனாவை தன்னிடம் அண்ட விடாது தனது அம்மா வீட்டில் அவர் விட்டுவிட,

மூன்று குழந்தைகளையும் பார்க்க மிகவும் சிரமமாக இருக்க வேறு வழியின்றி விசாலாட்சியை சீதாவிடம் சிறிது காலம் பார்த்து கொள்ளுமாறு விட்டிருந்தனர்.

எல்லாம் சரியான நிலையில் மீண்டும் விசாலாட்சியை அழைத்து கொண்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் மீனா மதிவதனாவிடம் நன்கு ஒட்டி கொண்டாள்.

மதிவதனாவிற்கு ஆறு வயது ஆகும் போது தான் பக்கத்து வீட்டு பையன் மீனாவை கிண்டல் பேசி கல்லால் அடி வாங்கிய நிகழ்வு நடந்தது.

அதன் பிறகு அந்த பையனின் அம்மா சண்டைக்கு வந்து விட என சற்று பிரச்சனை ஆகிற்று.

அதில் சண்முகம் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தவர் மதிவதனாவை அதட்டவும் தவறவில்லை.

ஆனால் வளர வளர அதனை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாது மீனாவை அடைகாக்கும் தோழியாய் தன்னுடனே வைத்து கொண்டவள் அவளிற்காக நிறைய பையன்களின் காலை உடைத்து விட்டு வர அதனை எல்லாம் வீட்டு பெரியவர்கள் வரை கொண்டு சொல்லாது பார்த்து கொள்ளவே சங்கமேஸ்வரன் போராட வேண்டியிருந்தது.

உங்களது கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே.


 
தீண்டல் 9

"மதி மா எந்திரி ஸ்கூலுக்கு டைம் ஆச்சு…" என மேகலா சமையலறையில் இருந்து கத்தி கொண்டிருக்க அவளோ சுகமான நித்திரையில்.

வேகவேகமாக சமையலை முடித்து விட்டு அவர் வர இன்னும் துயிலில் தான் இருந்தாள் மதிவதனா.

"இவளை என்ன செய்யுறது மணி இப்பவே ஏழரை ஆச்சு" என திட்டி கொண்டு ஜன்னல்களை திறந்து வெளிச்சம் வர செய்தவர் பின் ஓடி கொண்டிருந்த மின் விசிறியை அணைத்து விட்டு அவள் போர்த்தியிருந்த போர்வையை ஒரே இழுவையில் இழுத்து விட்டு அவளை பார்த்தவர் அவள் இருந்த நிலை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவர் பின் மகிழ்ச்சி மத்தாப்பாய் பூரித்து முகத்துடன் அவளை எழுப்பினார்,

"மதி….மதி செல்லம் எந்திரிடா..அம்மு…" என அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி பாத்ரூமில் தள்ளியவர் "பிரஸ் பண்ணிட்டு இங்கயே நில்லு அம்மா வந்துடுறேன்" என்று விட்டு வேகமாக வெளியில் வந்தவர் நேரத்தை பார்த்து விட்டு காலண்டரை எடுத்து ஆராய,

"என்னாச்சு மேகலா என்ன பாக்குற காலண்டர்ல" என்றபடி வந்தார் சண்முகம்.

"ஹப்பா...நல்ல நேரம் தான்" என மகிழ்ச்சி அடைந்தவர் கணவரிடம் திரும்பி,
"ஏங்க..நம்ம மதி பெரிய பொண்ணாயிட்டாங்க" என குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிய கூற,

"என்ன…???எப்போ ...மேகலா இப்ப மதி எங்க இருக்கா??" என பதறியவர் அவளை தேடி கொண்டு செல்ல முயல,

"இந்த மனுஷனோட….இப்ப எதுக்கு நீங்க பதறுறீங்க...பிள்ளை வயசுக்கு வந்துட்டானு எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயத்தை சொல்லுறேன் கொஞ்சமாச்சும் மொகத்துல சந்தோஷம் இருக்கா??" என் அவர் சத்தமிட,

"ஹி..ஹி...அது திடீர்னு சொன்னதும் பதட்டமாயிடுச்சு மேகலை சரி பொண்ணு எங்க இருக்கா??"

"உள்ள பாத்ரூம்ல இருக்க சொல்லிருக்கேன் இருங்க ஆர்வ கோளாறுல நீங்க போய் பாத்துடாதீங்க தாய்மாமன் பொண்டாட்டி தான் மொதல்ல பாக்கணும் நான் அண்ணன் வீட்டுக்கு போய் சொல்லி அண்ணிய கையோட கூட்டிட்டு வர்றேன்" என்றவர் நில்லாது ஒரே ஓட்டமாக ஓடினார்.

வேகவேகமாக உள்ளே நுழைந்த மகளை கண்ட முனியம்மாள்,
"இந்தாடி இவளே என்னத்துக்கு இப்ப தலை தெறிக்க ஓடி வர்றவ மெதுவா வரக் கூடாதா??"என்க,

"ம்மா மதினி எங்கம்மா??" என அவர் அவசரப்படுத்த…..

"என்னடி விசயம்?? வந்ததும் வாரததுமா மதினிய தேடுறவ" என அவர் கூறும் பொழுதே உள்ளிருந்து அமுதா வர,

"மதினி…!!!!" என்றவாறு அவர் அருகில் சென்றவள் முனியம்மாளிடம்,

"ம்மா உங்க பேத்தி பெரிய மனுஷியாகிட்டா!!!" என்

"என்ன...எப்போ???" என் மற்ற இருவரும் ஒருமித்த குரலில் கேட்க,

"இப்பதான் மதினி பாத்தேன் அதான் விஷயத்தை உங்க கிட்ட சொல்லி கூட்டிட்டு போக வந்தேன்" என்க,

"யே...யப்பா கருப்பா நல்ல சேதிய சொல்லிட்ட…" என கும்பிட்ட முனியம்மாள், "வெரசா போய் அவளை பாரு அமுதா நீ தான் மொதல்ல பாக்கணும் அடுத்து தான் மத்தவங்களுக்கு சொல்லணும் வாங்க போலாம்" என்றபடி மேகலையின் வீடு நோக்கி சென்றனர் மூவரும்.

"மதி…" என அழைத்தவாறே அமுதா அவளை பார்க்க….

அதற்குள் மதிக்கு விஷயம் தெரிந்து விட்டது போலும் அத்தையை பார்க்க முடியாதவாறு சிறு சங்கடம் வர தலை தாழ்த்தி கொண்டாள்.

மதிக்கு உடை மாற்றி விட்டு வெளியே அழைத்து வந்தவர்கள் அவளை ஒரிடத்தில் அமர்த்தி விட்டு அடுத்து ஆக வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தனர்.

மேகலாவும் சண்முகமும் அடுத்து நடக்க வேண்டியவற்றை திட்டமிட ஆரம்பித்திருந்திருந்தனர்.

"ம்மா டிபன் எடுத்து வைங்க லேட் ஆயிடுச்சு" என்றவாறே வந்தான் சங்கமேஸ்வரன். இப்போது கல்லூரி முதல் வருடத்தில் இருக்கிறான்.

"மீனுக் குட்டி இன்னும் ஸ்கூலுக்கு கெளம்பலையாடா எங்கே வதனி வாயாடிய ஆளைக் காணோம்" என்றவாறே சாப்பிட அமர,

"அண்ணே இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம்னு அப்புச்சி சொல்லிடுச்சு" என்றாள் குதுகலமாக பத்து வயது மீனாட்சி.

"ஏன்...லீவு??"

"தெரிலண்ணே….மதியும் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல அதனால என்னை போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்றவள் "நான் அத்தை வீட்டுக்கு போறேன்" என்றவள் நில்லாமல் ஓடி விட்டாள்.

"இவ என்னத்துக்கு இப்ப லீவு போட்டுருக்கா ஸ்கூல்ல ஏதும் டெஸ்ட் சொல்லிருப்பாங்களோ?? அதான் ரவுடி லீவு போட்டுட்டாளோ" என்றவன் அப்போது வீட்டினுள் நுழைந்த ஆறுமுகத்திடம்,

"ப்பா எதுக்கு உங்க மருமவ இன்னைக்கே ஸ்கூலுக்கு போகமா இருக்கா வர வர ரொம்ப சேட்டையாகிப் போச்சு அவளுக்கு…." என அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே,

"ஏய் யப்பா ஆறுமுகம்….நீ வந்துட்டியாயா??" என புன்னகை முகத்துடன் உள் நுழைந்தார் முனியம்மாள்.

"ஏன் ஆத்தா...தேடுனீங்களா என்னை..என்ன விஷயம்??" என்றார்‌ ஆறுமுகம்.

"எல்லாம் சந்தோஷமான விஷயம் தான் ராசா உன் மருமவ நம்ம மதி புள்ளை பெரிய மனுஷியாகிட்டா!!" என்க,

"நெசமாலுமா ஆத்தா…..ரொம்ப சந்தோஷம்… நா போய் புள்ளைய பாத்துட்டு வரவா??"என,

"அட இருடா உன் தங்கச்சி அதெல்லாம் முறையா வந்து சொல்லுவா...இப்ப உன் மாமியாருக்கு போன் பண்ணி விசாலாட்சிய அனுப்ப சொல்லுவே...அப்பறம் தாய்மாமன் சீர் எல்லாம் என்ன என்ன செய்யணும்னு பாக்கணும் ஆறுமுகம் உன் மகளை தாட்டி விட சொல்லு...வர வர இந்த கழுதை ரொம்ப பண்ணுறா?? லீவுக்கு போனவ இன்னும் இங்க வராம அங்கிருந்தே பள்ளியோடம்(ஸ்கூல்) போயிட்டு இருக்கா!!!" என்றிட,

"சரி ஆத்தா போன் போட்டுடலாம் நீங்க வாங்க" என அவரை அழைத்து கொண்டு சென்று விட்டார் ஆறுமுகம்.

"என்ன ரவுடி பெரிய மனுஷியாகிட்டாளா??" என திகைத்து நின்றிருந்தவனை கவனிப்பார் யாரும் இல்லை.

நேரம் ஆக ஆக அந்த விஷயத்தை ஜீரணித்தவனின் மனதில் குறுகுறுப்பு எழ அதன் விளைவாக அவன் இதழ்கள் அழகிய புன்சிரிப்பை சிந்தின.

எதற்கு என்று தெரியாமல் அவன் மனம் படபடப்பாக அதன் விளைவாக அடிக்கடி தனது தலையை கோதி கொண்டவனின் இதழ்கள் மட்டும் புன்னகை சிந்துவதை நிறுத்தவில்லை.

இது வேலைக்காகாது என நினைத்தவன் தட்டை சிங்கில் போட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டான்.

வெளியே வந்தவனின் பார்வை எதிர் வீட்டையே வட்டமடிக்க,
""ஈஸ்வரா கிளம்பிடுடா" என தனக்கு தானே கூறி கொண்டவன் கிளம்ப முயல அந்தோ பரிதாபம் அவனால் மதிவதனாவை பார்க்காமல் கிளம்பி செல்ல முடியவில்லை.

ஆனது ஆகட்டும் என நினைத்தவன் நேராக மேகலையின் வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.

அங்கே மூலையில் அமர்ந்திருந்தவளை பார்த்தவன்,
"ஏய் ரவுடி என்ன ஸ்கூலுக்கு போகாம இங்க உட்காந்திருக்க…" என ஏதும் அறியாதவன் போல் குரல் எழுப்ப….

அத்தையை கண்டே சங்கடம் கொண்டவளிற்கு அத்தை மகனை காண இயலாது வெட்கம் வந்து தடுத்திட
"ம்மா தான் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க ஈஷ்ஷத்தான்" என வெட்க புன்னகையை சித்தியவளை கண்டு மனம் தாறுமாறாக அடித்து கொண்டது அவனிற்கு.

அந்நேரம் சமையலறையில் இருந்து வெளி வந்தார் மேகலா அவருக்கு பின்னே தொடுப்பாக "அத்தை எனக்கு??" என்றபடியே வெளி வந்தாள் மீனாட்சி.

"இருடி மொதல்ல அவளுக்கு கொடுத்துட்டு உனக்கு கொடுக்கிறேன்" என தட்டு நிறைய சுட சுட உளுந்தங்களியை போட்டு அதன் நடுவில் குழி பறித்து நல்லெண்ணையை ஊற்றி எடுத்து வந்தவர் மதியிடம் தந்து விட்டு திரும்பியவர் இவன் நிற்பதை கண்டு,

"அட...வா வா சங்கரு எப்ப வந்த...காலேஜ்ஜீக்கு போகலையா??" என்க,

"இல்லத்தை கெளம்பிட்டேன்...இப்ப தான் வந்தேன்...மீனா மதி ஸ்கூலுக்கு போகலை அதனால் நானும் போகலையின்னு சொல்லிட்டு இங்க ஓடி வந்துட்டா அதான் என்னன்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்!!" என சமாளிக்க…


"அதுவா சங்கரா எல்லா நல்ல விஷயம் தான்….." எனும் போதே முனியம்மாள் உள் நுழைந்திட,

"ஏம்மா சங்கர் கிட்ட விஷயத்தை சொல்லலையா நீயி??" என அவர் கேட்க,

அவனை ஒரு பார்வை பாரத்த முனியம்மாள்,
"ஏன்டாப்பா உங்கப்பன் கிட்ட விஷயத்தை சொல்லும் போது நீயும் தான பக்கத்துல இருந்த..என்னமோ தெரியாதது மாதிரியே வந்து நிக்குறீயே.."?? என்றிட,

"அது….அது...வந்து நா கவனிக்கலை அப்புச்சி...அத்தை நான் வரேன் த்தை நேரமாச்சு காலேஜ்ஜீக்கு" என உளறி கொட்டியவன் வேகமாக வெளியேற வாசல் படியை தாண்டும் முன் திரும்பி இவளை ஒரு பார்வை பார்க்க….

அதை அறிந்தவளும் மெல்ல தலையை நிமிர்த்தி ஓரப் பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசிட,

புன்னகைத்தவன் கிளம்பி சென்று விட்டான்.


கல்லூரியில் இருத்தவனின் நினைவுகள் முழுவதும் அவளை சுற்றியே….


**********

ஆறுமுகத்தின் வீட்டினரும் மேகலையின் வீட்டினரும் பம்பரமாய் சுற்றி கொண்டிருந்தன. இன்று தான் மதிக்கு சடங்கு சுத்தும் நிகழ்ச்சியை வைத்திருந்தனர்.

அதற்கு தேவையான ஏற்பாடுகளை தான் இரு குடும்பமுமு பார்த்து கொண்டிருந்தது.

"ஏண்டி அமுதா தாய்மாமன் சீரா என்ன செய்ய போறீங்க" என வந்ததும் வாராததுமாக வரிசை தட்டுகளை எடுத்து வைத்து கொண்டிருந்த அமுதாவை இழுத்து பிடித்து கேள்வியால் குடைந்தார் சீதா.

"அது...நகை போடுறோம் ம்மா"

"எத்தனை பவுனு??"

"இருபது பவுன்னு நெனைக்கிறேன்னு"

"என்னது??நெனைக்கிறியா அப்ப அதை விட கூட தான் கண்டிப்பா இருக்கும்...ஏன் அமுதா ஊரு உலகத்துல நடக்காதது உன் புருஷன் தங்கச்சி வீட்டுல நடந்துடுச்சு...அதுக்கு போயி இருந்து பவுனா?? உனக்கும் ரெண்டு பொட்டை புள்ளை இருக்குடி...தங்கச்சி மவளுக்கே செஞ்சிட்டு இருந்தா என்னைக்கு உன் புள்ளைகளுக்கு சேக்குறது??"

"ம்ப்ச் அதெல்லாம் ஏற்கனவே நான் கேட்டுட்டேன் மா??

"என்ன சொன்னாரு உன் புருஷன்??"

நகை எடுக்கும் போதே அமுதா இதே கேள்வியை கேட்டார் தான்,
"ஏன் அமுதா என்னை பார்த்த பெத்த பெண்ணுங்களுக்கு நகை கூட போட முடியாத அளவுக்கு வக்கில்லாதவனாட்டம் தெரியுதா??" என்றிட,

"அய்யோ அப்புடி சொல்லைலீங்களே.." என்ற அமுதாவை இடைமறித்தவர்,
"இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் இப்புடி நீ பேசுறது...யார் யாருக்கு என்னன்னு போடனும் எப்ப போடனும்னு எல்லாம் எனக்கு தெரியும் அமுதா அப்புடி ஒன்னும் உன் புருஷன் முட்டாள் இல்லை" என கூறி அவரை அடக்கியிருந்தார்.

"ம்ஹீம்….உன் புருஷன் சொல்லுறத எல்லாம் நீ தான் மெச்சிக்கணும் அமுதா!!"

"ச்சு இந்த பேச்சை விடும்மா யாராலும் என் புருஷனும் மாமியாரும் அவுங்க பொண்ணுக்கு செய்யுறத தடுக்க முடியாது...யார் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டாங்க" என்றவரின் குரலில் தன் பேச்சை கேட்கவில்லையே என்ற ஆதிக்கமே நிரம்பி வழிந்தது.


"வாம்மா லேட்டா போனா அதுக்கும் என் மாமியார் ஏதாச்சும் பேசுவாங்க" என அவரையும் அழைத்து கொண்டு மேகலையின் வீட்டிற்கு சென்று விட்டார்

இதனை எல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த விசாலாட்சிக்கு என்ன விஷயம் என்று புரியவில்லை என்றாலும் மதிவதனாவால் தான் ஏதோ பிரச்சினை என அனுமானித்து கொண்டவளிற்கு அவளை பிடிக்காமல் போனது.

அதே மட்டுமன்றி பெரும்பான்மை நேரம் சீதா மேகலையின் குடும்பத்தையும் மதியையும் பற்றி கரித்து கொட்டுவதும் அவளிடம் அவர்களை பற்றி திட்டுவதும் தவறாக கூறுவதும் என இருக்க…

அதனை கேட்டு கேட்டு வளந்தவளிற்கு மேகலையின் குடும்பத்தினர் மீது கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தம் இல்லாமல் போய் கொண்டிருந்தது.

அழகிய கரும்பச்சை நிற தாவணி பாவடையில் அமர்ந்திருந்தவளை கண்ட சங்கமேஸ்வரனின் இதயம் நழுவி அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது.

இந்த ஒரு வாரத்தில் நன்றாக உடம்பு வைத்து இருந்தாள். பெண்களுக்கு அந்த நேரத்திற்குரிய அழகும் மினுமினுப்பும் சேர்ந்து கொண்டதில் பேரழகியாக தெரிந்தாள் அவன் கண்ணிற்கு.

இரண்டு கன்னங்களில் சந்தனம் அப்பியிருக்க அது கூட அழகாக தான் இருந்தது.


இதுவரை அவளை குழந்தை என நினைத்து இருத்தவனின் மனம் இன்று அவள் குமரி ஆனதை கண்டு அவனின் மனதில் சிறு சிறு மாற்றங்கள்.

அதுவும் மை இட்ட விழிகளோட அடிக்கடி இவனை ஓரக்கண்ணால் ஏறிட்டு பார்த்தவளை கண்டவனின் பார்வை அடியோடு மாறிற்று.

தாய்மாமன் முறை முடிந்து இவனை சந்தனம் பூச அழைக்க...பிகு எதுவும் செய்யாமல் சட்டென அவளருகில் சென்றிருந்தான்.

இவனை கண்டதும் வெட்கம் வந்து தடுத்திட நிமிர்ந்து பாராது தலை குனிந்து அமர்ந்திருந்தவளை பார்த்தவாறே தனது இரு கைகளிலும் சந்தனத்தை அள்ளியவன் அவள் கன்னங்களில் அழுந்த தடவ மணல் குழியென அவளது கன்னங்களில் புதைந்தன அவனது விரல்கள்.

சந்தனம் வாசமும் அதனுடனான அவள் வைத்திருந்த மல்லிகை பூ வின் மனமும் அவனை கிறங்கடிக்க இப்போதே அவளை தூக்கி சென்று விடும் வேகம் அவனின் மனதில் எழுவதை கண்டு அதிர்ந்தவன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு வேகவேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.

உங்களது கருத்துக்களை கீழே உள்ள திரியில் பதிவிடவும் நட்பூக்களே. 
Status
Not open for further replies.
Top