எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதை மயக்கும் காதல் நிலவே - 01

NNK03

Moderator
01


மாலை மயங்கும் நேரம். மனதை வருடி செல்லும் தென்றல் காற்று! பலவித வர்ணங்களாலான பூக்கள், பூக்களைச் சுற்றி பறக்கும் தேனீக்களென அந்த இடமே காண்பவர் அனைவரின் மனதில் கண்கொள்ளாத காட்சியாக அமைந்திருக்க,

அந்த தெருவில் செல்வோர் அனைவரும் திரும்பி ஒரு தடவை என்றாலும் பார்க்க வைக்க கூடிய அளவில், அழகாக அமைந்திருந்தது பங்களா வீடு.

அந்த பங்களா வீட்டில், தன் தாய் கயல்விழி , சகோதரன் நவிலனுடனும் குடும்பமாக வசித்து வருகிறாள் நிஹா எனப்படும் நிஹாஷினி.

ஆசிரியர்களுக்கான படிப்பை திறம்பட முடித்திருந்தவள், கடந்த சில வருடங்களாக அருகிலிருந்த பாடசாலையில் ஆரம்ப பிரிவு ஆசிரியையாக திறம்பட பணி புரிகிறாள்.

என்றும் போல் அன்றைய தினமும் பாடசாலைக்கு கிளம்ப தயாராகி வந்தவளின் அருகில் வந்த அவளின் அன்னை கயல்விழி,

"அம்மாடி நிஹா!. சாயந்தரம்
ஏதும் முக்கிய வேலை ஸ்கூல இருக்குதா? " என நயவுடன்
தன்னிடம் கேட்ட அன்னையை
ஆச்சர்யமாக பார்த்தவள்,

" இல்லயே…மா ! எதுக்காக கேட்குறீங்க. ஏதும் திங்க்ஸ் வாங்கனுமா?.." என்றவளிடம்

" இல்லை டி .அதுக்கு எதுக்கு
உன்கிட்ட வந்து கேட்கனும். உன்னோட அண்ணனே நான் சொல்ல முன்னமே வீட்டுக்கு என்ன தேவை னு பார்த்து நம்ம கேட்காமலே வாங்கிட்டு வந்திடுவானே!. அதுவந்து இது வேற விஷயம். "

" வேற னா.. அதுவும்.. என்ன னு.. இழுக்காம சொல்லுமா.. என்ன தான் இருந்தாலும்.. ..செல்ல மகனுக்கு பாராட்டு பத்திரம் படிக்கலனா.. உனக்கு சாப்பாடு செமிக்காதே? "என சிரித்தவாறே கேலியாக கேட்டாள்.


" உனக்கு ஏன்டி. பொறாமை.
அவன் இல்லைனா.. நம்ம இப்படி மான மரியாதையோட இருக்க முடியுமா.. சொல்லு?"

" சரி சரி! யார் இப்போ.. அதை
இல்லைனு மறுத்தா? நீ ..நசநச னு பேசாமா விஷயத்துக்கு ..வா மா. ஸ்கூலுக்கு லேட்டாக போகுது."

" ஆமா.. பெரிய லேட்டு. உதுல நடந்து போனால் பத்து நிமிஷத்துல போக கூடிய ஸ்கூலுக்கு நான் லேட் ஆக்குற..னு..சினுங்கல் வேற உனக்கு."

தன்னுடைய தாயாரை பற்றி நன்கு அறிந்தவள், எதுவும் பேசாது கிளம்ப தயாராக,

" ஏய்..நில்லுடி.வேற ஒன்னும்
இல்ல. சாயங்காலம் உன்னை
பொண்ணு பார்க்க வர்றாங்க.
அதுதான் சீக்கிரம் ஸ்கூலில்
இருந்து வர சொல்லலாம்.. னு என்றவரை,

அடிபட்ட பார்வை பார்த்தவள்.. ஏதும் பதில் சொல்லாமலயே செல்ல, மகள் தன்னை பார்த்த பார்வையின் அர்த்தத்தை புரிந்த தாய்க்கு மகளின் இந்த பிடிவாதம் உவப்பாக இல்லை.

'என்ன செய்ய வேண்டும்' என மனதில் யோசித்தவர், உடனே மகனிடம் தெரிவிக்கும் பொருட்டு தொலை பேசியை எடுக்க செல்ல, மறுபுறம்..

தாய் கூறியவற்றை மனதில்
நினைத்தவாறே வந்தவள்,
முன்னே வந்த மகிழுந்து ஒலி எழுப்பியதை கவனியாது, அதில் மோத சென்றாள்.

" ஹே, இடியட்! பார்த்து.." என்ற குரலில் கவனம் கலைந்தவள், யாரென்று நிமிர்ந்து நோக்க,

எதிரில், மகிழுந்தில் வந்தவனை கண்டு ஒரு நொடி இமைக்க மறந்தாள்.

நிஜத்தில் யாருடன் தன்னை சேர்த்து எப்போதும் தனக்கே உரித்தான தனியுலகில் கூடி சஞ்சரிப்பாளோ!,

அவன் நீண்ட நாள் கழித்து
கண்முன்னே நிஜத்தில் வரவும்,

பெண்ணவள் மனம் துள்ளிக்
குதித்திருக்க வேண்டும். ஆனால் கவலையில் குளித்தது. கடந்த கால நிகழ்வுகளை எண்ணி மனம்
சோர, " ஸாரி! கவனிக்கல ".
என்று கூறிவிட்டு எட்டி நடை
போட எஎத்தனித்தாள்.

" என்கிட்ட ஸாரி! சொல்லுறத மேடம் எப்பயும் வாடிக்கையாக வைத்திருக்கீங்க.. போலயே?"

என்று நக்கல் குரலில் கேட்ட நிகரனை, கண்களில் நீர் முட்ட
பார்த்தவள்.

" தெரியாமல் நடந்ததுக்கு நான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் ஸாரி..னு சொல்லுறது தான் பேஸிக் கேட்டர்சி"

" அது தெரியாமல் நடக்குற
விஷயங்களுக்கு? சிலர் தெரிஞ்சே செய்றதுக்கு…."

" எனக்கு ஸ்கூலுக்கு லேட்டாகுது. "

"..ஓ. என்கிட்ட பேச கூட ரொம்ப கஷ்டமாக இருக்கா?"

" அப்படியே நினைச்சுக்கங்க.
இப்போ போகனும் வழியை விடுங்க"

" இப்போது கூட உனக்கு திமிர் குறையல..ல"

இதழ்களை சுழித்தவாறே வழி விட்டவன்,

அப்பறம்"ரீச்சர் மேடம்!. எனக்கு ஒன்னு தேவைனா..பிடித்ததை எப்படினாலும் எந்த வழியில் என்றாலும் அடைஞ்சுட்டு தான் மறு வேலை.. "

என்றவனை அழுத்தமாக முறைத்து பார்த்தவள்.

"என்னிக்கும் எதையும் வெருட்டியோ மிரட்டியோ.. அடைய முடியாது மிஸ்டர். அப்படியே அடைந்தாலும் அது தற்காலிக சந்தோசம் தான்"

என்றவாறே..விருட்டென அவ் இடத்தை விட்டு அகன்றாள்.

செல்லும் அவளையே பார்த்தவாறு இருந்தவன்.

'அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி உனக்கு உன்னோட தேவை என்னனு.. என்னை தவிர யாருக்குத் தெரியாதுடி. பைத்தியக்காரி..'

என்றவனின் கண்களில் இழப்பின் வலியில் அவனை மீறி கண்ணீர் சொரிந்தது.




இது எனது முதல் முயற்சி நிறை குறை எதும் இருந்தால் தயங்காது தெரிவியுங்கள்..
நண்பர்களே!
 
Last edited:
Top