எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மைவிழியில் மயங்கினேன் ! -கதை திரி

Status
Not open for further replies.

NNK40

New member
"உனக்கு என்னவிட உன்னோட வேலை தானே முக்கியமா படுது … உன்னால நான் என் அப்பாவ , அத்தைய இழந்தேன். இப்போ என் … என் குழந்தையும் இழந்துட்டு நிக்கிறேன்டா ... எல்லாமே உன்னோட இந்த வேலையாலையும் அதைவிட மாட்டேனு சொல்ற உன்னோட பிடிவாதத்தாலையும் தான்.. இந்த உலகத்தில நான் அதிகமா நேசிச்ச உன்னைய தான் ஆனால் இப்போ நான் அதிகமா வெறுக்கிற முதல் ஆள் நீதான் தயவுசெஞ்சு இனி என் கண்முன்னாடி வந்துராத என்னோட காதல மட்டுமே உங்கிட்ட காட்டுன என்னால வெறுப்ப காட்டி கஷ்டப்படுத்த முடியாது உம்மேல இருக்க கோவத்தை நீ என் முன்னாடி வந்தாலே நான் விட்டுருவேன் ஏன்னா நான் உன்னை அந்தளவுக்கு விரும்பி தொலைச்சுட்டேன் … உம்மேல இருக்க இந்த கோவமும் வெறுப்பும் என்னைக்கும் குறையக்கூடாதுனு ஆசைப்படுறேன் அதனால நான் உன்னைய விட்டு போறேன் இதுதான் நான் உனக்கு தர தண்டனை இதனால உனக்கு கஷ்டமா இருக்குமானு தெரில ஆனால் எனக்கு இருக்கும் உன்னைய மாதிரி ஒரு சுயநலவாதிய காதலிச்ச பாவதுக்கு எனக்கு நானே தர தண்டனை தான் இது எந்த காலத்துலையும் என்னை தேடி வந்துராத நீ என்னைய கொஞ்சமாச்சும் காதலிச்சுருந்தேனா எனக்காக இதையாவது செய் குட் பாய் மிஸ்டர். கதிர் ." என்று கூறிவிட்டு போனவளின் குரலே காதுகளில் ஒலிக்க தூக்கத்திலிருந்து விழித்தான் கதிர்.

அவள் அவனை விட்டு சென்றதிலிருந்து அவளின் இந்த வார்த்தைகள் மட்டுமே அவனின் நித்திரையில் தோன்றி அவனின் மனதில் ஆறாத வலியாய் இருக்கும் அவளின் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டு செல்கிறது.
அவளின் நினைவுகள் அவனுள் உலைகளனென கொதிக்க அதன் சீற்றத்தை குறைக்க வழிதெரியாது அந்த இருள் விலகாத இளங்காலைப்பொழுதில் கடுங்குளிரில் ஓடிக்கொண்டிருந்தான் அவன்.
கண்கொண்டு காணும் இடமெல்லாம் பாதகத்தி அவளின் முகமே தோன்ற தன்னையே நொந்தபடி வீடுவந்து சேர்ந்தான்.

வீட்டினுள்ளே வந்தவனின் விழிகள் வழக்கம் போல அவனின் விழியாளின் புகைப்படத்தை நோக்க அதனின் அருகே சென்று அதைக் கையிலெடுத்து வருடினான் .

" ஏன்டி எனக்கு இவ்வளவு பெரிய தண்டனைய கொடுத்த . நடந்தது ரொம்ப பெரிய இழப்பு தான் . ஆனால் அதுல என்னோட தவறு எதுவும் இல்லைனு உனக்கு எப்போ புரிய . தேவையில்லாத உன்னோட பயத்துக்காக உன்னோட சேர்த்து எனக்கும் இந்த வேதனையை கொடுத்துட்டு போய்ட்டியேடி. " என்று அவளின் புகைப்படத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்தவனின் குரலில் வேதனையே இருந்தது.

அளவற்ற காதலை ஓராண்டு திருமண வாழ்க்கையில் அமிர்தமாய் வழங்கியவள் தற்போது பிரிவு எனும் ஆலகால விஷத்தை அவனுக்கு அளித்துவிட்டு சென்று விட்டாள்….அதன் தாக்கத்தை அவனை சுற்றி இருப்பவர்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். எப்போதும் புன்னகை முகமாய் இருப்பவன் இன்று அனைவரிடத்திலும் எரிந்துவிழ அவனின் நிலையுணர்ந்தவர்கள் அவனுக்காக வருந்தினர் .
ஆனால் அவனோ அவளை தவிர வேறு யாரும் நினைவில் இல்லை ….

அவளின் நினைவுகளில் அவன் வருந்தியது அந்த காக்கி உடையை அணியும் வரை அதன்பின் அவனது கடமை அவனுள் தனக்கான வேலையை செய்ய கம்பீரமாக தயாராகி வந்தான் ….
அவன் வீட்டை விட்டு வெளியே வரவும் அவனிற்கான ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. இது தினமும் நடக்கும் ஒன்று தான் . அதனால் அதை பெரிதாக என்னாது ஏறி அமர்ந்தான் … ஆனால் அவன் அமரும் வரை அந்த டிரைவரோ எதுவும் திட்டிவிடுவானோ என்று பதற்றத்தில் இருந்தான் . இருக்காதா பின்னே ஒரு நொடி தாமதமாக வந்தாலும் அவனின் ஒற்றை அனல் பார்வையே போதும் எதிரே இருப்பவரை நடுங்க வைக்க அதை நினைத்தபடியே டிரைவர் வண்டியை எடுக்க முத்துவோ தலையை சீட்டில் சாய்த்து விழிமூடி இருந்தான்.
ஆனால் அவன் உறங்கவில்லை என்பது மூடியிருக்கும் அவனின் விழிகள் அலைபாய்ந்தபடி உரைத்து கொண்டிருந்தது . அவனின் சிந்தனை படிந்த முகத்தை பார்த்த டிரைவரோ " யாருக்கோ இன்னைக்கு ஹெவி ஆப்பு இருக்கும் போலயே ஈஸ்வரா . " என்று மனதில் நினைத்து கொண்டான் …

விழி மூடி இருந்தவனின் நினைவுகள் அவளை முதன்முதலாக சந்தித்த நாளுக்கு அவனை இழுத்து சென்றது ….
கதிர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தான். அன்று கல்லூரியே களைகட்டி இருந்தது . ஏனென்றால் அன்று அவர்கள் கல்லூரியில் இன்டர்காலேஜ் காம்படிசன் நடந்து கொண்டிருந்தது. பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் அங்கே வந்திருந்தனர். ஒரு பக்கம் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்க தேவ் முத்து இன்னும் சில மாணவர்களுடன் அங்கே எந்தவித பிரச்சினையும் வராது இருக்குமாறு பார்த்து கொண்டிருந்தனர்.

" கதிர் என்ன இன்னைக்கு உன் முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு . " என்று கேட்ட தன் நண்பன் சத்யாவிடம் " நம்ம காலேஜ்ல இருக்க பொண்ணுங்களவிட மத்த காலேஜ் பொண்ணுங்க செமயா இருக்காங்கள அவுங்களுக்காக தான் "என்றான் கதிர்.

" அடப்பாவி பயலே நல்லா வருவடா. "

" ஏன் மச்சா நான் சொன்னதுல எதுவும் தப்பு இருக்கா என்ன . "

" ச்சீ ச்சீ நான் எப்போடா அப்படி சொன்னேன் . என்னையவிட்டுட்டு நீ மட்டும் தனியா ஸ்பெஷலா ரெடியாகி வந்துருக்கியே முன்னாடியே சொல்லிருந்தா நானும் ."

" என்ன நீயும் அதெல்லாம் நீ சும்மாவே சூப்பரா இருக்க போதும் டா உனக்கு இது . அதுவும் இல்லாம என் தங்கச்சிக்கு நீ இந்த நினைப்புல சுத்துறது தெரிஞ்சுது செத்தடா. "

" சத்தியசோதனைடா சத்யா உனக்கு . அவசரப்பட்டு கமிட்டாகி சைட்டடிக்க கூட வழி இல்லாம போச்சே. சோ சேட் . "

" நீங்க ரொம்ப பீல் பண்ணவேணா நாம ப்ரேக்கப் பண்ணிகலாம் மாமா . இப்பதான் எனக்கு ஒரு பையன் வேற அழகா ப்ரபோஸ் பண்ணான் . போங்க நீங்க போய் சைட்டடிங்க . இதோ அந்த பையன் அங்கே தான் போறான் . " என்று அவனின் பின்னே நின்று கூறியபடி வந்தாள் இயல் சத்யாவின் காதலி முத்துவின் உடன்பிறவா சகோதரி. அவள் குரலில் திரும்பியவன் அவள் கூறிய ப்ரேக்கப் எனும் வார்த்தையில் அதிர்ச்சி ஆகி நின்றான் சத்யா.

"ஐயோ செல்லக்குட்டி எனதருமை பொண்டாட்டி நான் சும்மா சொன்னேன்டா உங்கண்ணன் என்னைய வெறுப்பேத்துனானா அதனால தான் நான் அப்படி பேசிட்டு இருந்தேன்டா … மாமா உன்னைய தவிர வேற யாராவது பாப்பேனா . "

" நீ பாப்படா ப்ராடு . "

" நோடா தங்கம் மாமாவ இப்படி நம்பாம பேசப்படாது . என் அழகுராணி இந்த இயலிசைய தவிர இந்த சத்யதேவ் வேற யாரையும் பாக்க மாட்டான் . " என அவளின் முகத்தை இரு கையிலேந்தி தேவ் கூறினான் .

" அடேய் மனசாட்சி இல்லாதவனுகளா ஒரு சின்ன பையன் முன்னாடி இப்படி ரொமான்ஸ் பண்றிங்களேடா . அதுவும் இத்தனை பேர் இருக்க இடத்துல " என்று கதிர் கூறியதை இருவரின் செவிகளிலும் எட்டவே இல்லை இவர்களின் நிலையை கண்டவன் தலையிழடித்தபடியே செல்ல அப்போது அவனின் நண்பன் ஒருவன் அங்கே வர அவனின் தோளில் கைப்போட்டபடியே " மச்சா இந்த லவ் பண்றவனுகளோட நாம சேரவே கூடாதுடா எப்போவேணா நம்மள கலட்டி விட்டுருவானுக" என கதிர் ஆரம்பிக்க அவனின் நண்பன் " எப்பா டேய் நீ கொஞ்ச நேரம் கழிச்சு அவுங்களோட சேர்ந்து இப்போ பேசுறத வச்சு என்னைய ஓட்டுவ ஆளவிடுடா சாமி "என்று அவனின் கையை எடுத்து விட்டு பின்னே செல்ல கதிர் பின்னே திரும்பாமல் அவனின் கழுத்தில் மறுபடியும் கையை போட்டு " நீ இப்படி எல்லாம் சொல்லி எஸ்ஸாகபடாது மச்சி என்ன ஓகேவா " என்று அவனின் முகம் பார்க்க அங்கே முகத்தை தனது துப்பட்டாவில் மறைத்து கண் மட்டும் தெரியும்படி இவனை மிரண்டு பார்த்து கொண்டிருந்தாள் அவனின் விழியாள் .

" அச்சோ சாரிங்க … என் …. ப்ரண்டுனு நினைச்சு தான் சாரிங்க சாரி …. " என்று திக்கிதிணறி தவறுசெய்த குழந்தையை போல் முகத்தை வைத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பவனை பார்த்தவளுக்கு ஏனோ அவனை ரசிக்கவே தோன்றியது.

கதிரோ அதை உணராது அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க அவளும் பரவாயில்லை என்று கூறியதும் அங்கிருந்து நகன்றான் கதிர்.
கொஞ்சம் தூரம் சென்றதும் திரும்பியவன் " ஏங்க உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு …. அப்போ நீங்களும் அழகா தான் இருப்பிங்க அப்புறம் ஏன் முகத்தை ஃபுல்லா கவர் பண்ணி வச்சுருக்கிங்க " என்று கேட்க அந்த பெண்ணோ " உங்களுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம் தான் சார் " என்றபடியே தன் முகத்தை மறைந்திருக்கும் துணியை எடுத்தாள் ….

" சார் ஸ்டேஷன் வந்துருச்சு … " என டிரைவர் கூறியதில் தன் நினைவுகளில் இருந்து வெளிவந்தவன் அவருக்கு சின்ன தலையசைப்பை கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.

உள்ளே சென்றதும் அவன் கண்டது ஒரு பெண் அழுதுகொண்டிருக்க அவளிடம் அருகே இருந்த ஆணும் கவலைபடிந்த முகத்துடன் நின்றிருந்தான் .

அவர்களிருவரையும் சிந்தனை படிந்த முகத்துடன் பார்த்தவன் எஸ்.ஐயிடம் அவர்கள் பற்றிய விவரம் கேட்க " அவுங்க பொண்ணை காணோமாம் சார் அதான் உங்கள பாத்து கம்ப்ளெயின் பண்ண வந்துருக்காங்க சார் " என்று கூற அவுங்கள வரச்சொல்லுங்க என்று கூறியவன் அமர அவர்களிருவரும் வந்தனர்…
 

NNK40

New member
https://www.narumugainovels.com/index.php?threads/மைவிழியில்-மயங்கினேன்-கருத்து-திரி.678/
 
Status
Not open for further replies.
Top