எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ரீரன் கதைகள்

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
திங்கள் , புதன், சனி கிழமைகளில் பதிவுகள் இருக்கும். ஒவ்வொரு அத்தியாயமாக மட்டும் பதிவிடப்படும் . மறு அத்தியாயம் பதிவிடப்படும் போது முந்தைய அத்தியாயம் ரிமூவ் செய்யப்படும் டியர்ஸ். என்னுடைய இரண்டாவது கதை. எப்படி எழுதியிருக்கேன்னு மீண்டும் படித்து பார்த்தால் தான் எனக்கும் தெரியும். பிழை இருந்தால் மன்னிச்சு டியர்ஸ்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 36
ஆர்னி கண்விழித்து பார்த்த பொழுது நல்ல சொகுசான மெத்தையில் படுத்திருந்தாள். சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க மெல்ல எழுந்தாள். சற்று நேரம் அவளுக்கு எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை .

அறையை விட்டு வெளியே வர, நேராக தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தில் மணி மாலை 7 என காட்டியது. சூழ்நிலை உறைக்க! அமிர்தனை தேட அவன் அங்கே இல்லை. "ஆதூ" என்று அழைத்தபடி வர,

"ஆனி.. கிச்சனுக்கு வா" என்ற அமிர்தனின் குரல் கேட்க ! அங்கே சென்றாள். இலகுவான டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

"ஆனி.. ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வா. சாப்பிடலாம் " என்று கூற,

"ஆதர்ஷ் எங்கே?" என்றாள்.

"திவி வந்து அழைத்து போய் விட்டாள். நீ நல்லா தூங்கின! எழுப்பி பார்த்தாள். நீ எழுந்திருக்கவில்லை. சரி, நான் அழைத்து வருகிறேன் " என்று ஆதர்ஷ் திவியோடு அனுப்பி வைத்தேன்" என்றான் .

"ஓஓ! நல்லா தூங்கிட்டேன் போலிருக்கு, எழுப்பியதே தெரியவில்லை . நான் ரெப்ஃபிரஸ் செய்து விட்டு வருகிறேன் " என்று சென்றாள்.

அமிர்தன் இருவருக்கும் உணவு எடுத்து வைத்திருந்தான். எதுவும் பேசாமல் , உணவை உண்டு முடித்தனர். சாப்பிட்ட பாத்திரங்களை ஆர்னியே எடுத்துச் சென்று சுத்தம் செய்து வைத்தவள். "போகலாமா?" என்று கேட்க ,

"உட்கார். உன்னிடம் சில விசயங்கள் பேச வேண்டும்" என்றான்.

எதற்கு பயந்து ஓடிக் கொண்டிருந்தாளோ! . அதை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமிர்தன் அவளை நிறுத்தி விட்டான். ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது" என்ற நிலை!.அமிர்தன் எதிரில் பயம், தயக்கம், சங்கடம், தவிப்பு என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்தாள்.

என்ன விசயம் கேட்கப்போகிறார்? என்று அமிர்தனது கேள்வியை எதிர்நோக்கி காத்திருக்க! அமிர்தன் சொல்ல ஆரம்பித்தான்.

"நீ டெலிவரி முடிந்து , என்னை ம்ஹூம் என்று அந்த வார்த்தையை நிறுத்தியவன். குழந்தையை விட்டுவிட்டு போன பிறகு, ஆதர்ஷை இரண்டு மாதத்தில் லண்டன் அழைத்துச் சென்று விட்டேன்.

அப்புறம் நீ ரிட்டர்ன் செய்த பணம் வந்தது. அசோக் கூட கேட்டான். ஆர்னியை தேட முயற்சி செய்யலாம் அண்ணா? என்று!

நம்மை வேண்டாம் என்று போனவர்களை தேடி போறது ! நம்ம தன்மானத்திற்கு இழுக்கு.. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றுவிட்டு, ஆர்னியின் முகத்தை பார்க்க! உதட்டை கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள். எதுவும் பேசவில்லை . அமிர்தனே மேலும் தொடர்ந்தான்.

அப்புறம், ஒரு சிக்ஸ் மன்த் கழித்து தாரா எனக்கு போன் செய்தாள். நீ, தாராவுடைய அப்பா, விக்ரம், மூன்று பேரும் ஹாஸ்பிட்டலில் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டாளாம்" என்றதும்!

ஆர்னி வெடுக்கென்று தலையை நிமிர்த்தி பார்த்தாள் . அமிர்தன் இப்போது ஷோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, தனது பேச்சை தொடர்ந்தான்.

"என் அப்பா தான், உங்களை கொல்வதற்கு ஆள் அனுப்பியது. அப்புறம் நீ என்னிடம் பணம் வாங்கி, அவங்க அக்கௌண்டில் டிரான்ஸ்பர் பண்ணது . புருஷோத்தமனை பற்றி சொன்னால்! தாராவுடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நீங்க சொல்லாமல் மறைத்தது. இப்படி பல விசயங்களை சொன்னாள்.

என்னுடைய வாழ்க்கைக்காகத்தான் ஆர்னி, ஆதி உங்களிடம் உண்மையை சொல்லவில்லைனும், அவங்க அப்பா, நீ பாய்சன் சாப்பிட்டு கஷ்டப்பட்டதை பார்த்து திருந்தி விட்டாதாகவும், அவங்க அப்பாவை மன்னித்து விடும்படியும் கேட்டாள்" என்றான் .

ஆர்னி மூச்சு விடக் கூட மறந்து அமிர்தன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அருகிலிருந்த லேப் டாப்பை இயக்கியவன். அதில் வீடியோ ஒன்றை ஓட விட்டு அவள் புறம் வீடியோவை திருப்பி வைத்தான்.

ஆர்னி அந்த விஷம் கலந்த கூல்டிரிங்க்ஸ் குடிப்பது தற்செயலாக பதிவாகியிருந்தது. ஒன்றும் புரியாதது போல் அமிர்தனை பார்க்க! ஆர்னி அந்த ஜூஸ் குடிப்பதை சுலோமோசனில் காண்பிக்க!

ஆர்னி முதலில் ஒரு கிளாஸில் உள்ள ஜூஸை குடிக்கிறாள். பிறகு மற்றொரு கிளாசை எடுக்கும்போது அவளது கைகள் நடுங்குவதும், முகத்தில் உயிர் பயம் இருப்பதும். அதை குடிக்கும்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது கூட சூம் (zoom) பண்ணி பார்த்ததில் நன்றாகவே தெரிந்தது.

திகைத்து அமிர்தனை நிமிர்ந்து பார்க்க! "சோ! அந்த ஜூஸை தெரிந்தே தான் குடித்திருக்காய்? தவறுதலாக மாற்றி குடித்து விட்டேன் என்று சொன்னது பொய்! அப்படித்தானே? "என்று கேட்கும் போது அமிர்தனது தொண்டை அடைத்தது. அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாகவே பேசுவது போல் பேசினான்.

ஆர்னி, அமிர்தனையே பார்க்க! அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்த விசயம் மட்டும் எங்க பேமிலிக்கு கிட்டதட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்பே தெரியும். அவங்க அந்த கார் ஆக்ஸிடெண்ட், அப்புறம் இந்த விஷம் கலந்த ஜூஸ் குடிக்காமல் என் உயிரை காப்பாற்றியது நீதான் என்று தெரிந்ததால்! அவங்க தான் இத்தனை நாட்களாக தேடி உன்னை கண்டுபிடித்தது" என்றான் .

"ஓ!" என்று சுரத்தில்லாமல் கேட்டுக் கொண்டாள். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால்! "பணத்திற்காக கொலை செய்கிறேன் என்று வந்தாலும், அதை செய்யாமல் என் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றியிருக்கிறாய்" என்று அமிர்தன் கூற!

' நான் மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றவில்லை. உங்க மேல் உள்ள அளவு கடந்த காதலால் தான் காப்பாற்றினேன்' என்று உள்ளம் கதற! அதை வெளிக்காட்டாமல் அப்படியே சிலையென அமர்ந்திருந்தாள்.

"நீ எதற்காக வந்தாய்? என்று தெரியாமல் நான் தான் உன்னை கல்யாணம் செய்து உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டேனோ? என்று குற்றவுணர்வு " என்றான் தலையை கோதியபடி.

"அவசரமாக இல்லை " என்று மறுத்தவள். " நீங்க தாலியென்று தெரியாமல் தான் கட்டினீங்க. நான் அப்போவே விருப்பமில்லை" என்று மறுத்திருக்கனும் " என்றாள் ஆர்னி .

'ஆஹா! இவன் எதற்கு இப்படி பேசிகிறான் என்று தெரியாமல்,இவ வேறு தானாக வந்து மாட்டிக்கிறாளே' என்று பரிதாபப்பட்டது அமிர்தனின் மனசாட்சி .

"நம் இருவர் மேலும் தப்பு இருக்கு ஆனி" என்றவன். "அதை சரி செய்ய ஒரு வழியிருக்கு" என்றான் ஆர்னியை ஓரக்கண்ணால் பார்த்தபடி ,

"என்ன அது? " என்றாள் புரியாமல் .

"இப்போ, நமக்கு டைவர்ஸ் ஆகிவிட்டதென்றால்! என்னுடனான இந்த திருமண வாழ்க்கையிலிருந்து உனக்கு விடுதலை. எதற்கு உனக்கு விருப்பமில்லாமல் , சேர்ந்தும் வாழாமல் இதை தொடரனும்" என்று அவள் முன் டைவர்ஸ் பத்திரத்தை வைக்க,

அதிர்ந்து எழுந்து விட்டாள். "இல்லை. நான் இதில் கையெழுத்து போட மாட்டேன் " என்று பின்னால் நடந்த படியே சொல்ல,

"ஏன் ஆனி? என் கூட வாழ விரும்பாமல் தானே?. நீ விலகி போனது?" என்று கேட்க,

இதுவரை அமிர்தனுக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை . டைவர்ஸ் பேப்பரை பார்த்தவுடன் தவிடு பொடியாக! ஆர்னி, வெடிக்க ஆரம்பித்தாள்.

"இல்லை. உங்களுக்கு தான் என்னை பிடிக்கவில்லை. ஆரம்பத்தலிருந்து என்னிடம் கோபமாக தான் பேசுவீங்க. தாலின்னு தெரியாமல் போட்டதால் என் கூட வாழ்ந்தீங்க. குழந்தை உருவானதால் என்னிடம் பாசமாக இருக்கிற மாதிரி நடித்திருக்கீங்க. இப்போ குழந்தை பிறந்தவுடன் ,டைவர்ஸ் கேட்கிறீங்க?" என்று அழுது கொண்டே கூற..

"கொஞ்சம் முன்னாடி தான். என் மேல் எந்த தப்பும் இல்லை னு சொன்ன? இப்போ இவ்வளவு தப்பை அடுக்கிற?" என்றான்.

பதில் சொல்ல முடியாமல், முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள். அவள் அழுவது பொறுக்காது. அவள் கைகளை முகத்திலிருந்து விலக்கியவன்.

"எதுக்குடி இப்போ அழற?. அப்போ விட்டுவிட்டு போகும் போது தெரியலையா?" என்று குத்திக்காட்டியவன். "உனக்கு எங்கே தெரியப் போகுது? " என்றான் விரக்தியாக .

"உன்னை பார்த்ததிலிருந்தே பிடிச்சிருந்தது டி. ஆனால் அது காதல் என்றெல்லாம் எனக்கு தோணல! உங்கிட்ட சின்ன சின்ன வம்பு பண்ண தோணும். அது சும்மா ஃபன் தான்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த கார் ஆக்ஸிடெண்ட் ஆனபோது! உன்னை முதலில் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போகனும் என்று தான், நினைத்து வந்து கொண்டிருந்தேன். கார் உங்க பிளான் படி ஆக்ஸிடெண்ட் ஆக, அந்த டிரைவருக்கு ஹெல்ப் பண்ண போய் எனக்கும் கையில் பிளட் வந்தது.

நீ என்னை கவனிக்காமல்! அந்த டிரைவரை போய் பார்த்து கவலைப்பட்டு கொண்டிருந்ததாய்! எனக்கு கோபம் வந்தது. அதனால் தான் உன்னிடம் கோபமாக பேசினேன்.

பிறகு, அந்த ஜூஸை குடித்துவிட்டு நீ உயிருக்கு போராடிய போது! என் உயிரே எங்கிட்ட இல்லடி. இதற்கு மேல் உன்னை விட்டு இருக்க முடியாது என்ற நிலையில், உனக்கும் என்னை பிடிக்கும் என்று உணர்ந்ததால் தாலியென்று தெரிந்து தான் உன் கழுத்தில் போட்டேன்" என்றான் .

ஆர்னி, " என்ன!" என்று அதிர்ச்சியாகி விட்டாள்.

" பின்னே! வெளிநாட்டில் பிறந்தாலும், எனக்கும் தாலியென்றால் என்னென்னு தெரியும். எல்லோரையும் சமாளிக்கத்தான். எனக்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்து கொண்டேன். பிரச்சனையாகாமல் பெரியவர்களே சேர்த்து வைத்து விட்டார்கள்" என்றான்.

" ஆனால் நீயென்ன செய்த ஆனி, உனக்கு ஒரு இடத்தில் கூட, நான் முக்கியமாக தெரியவில்லையா?.
உனக்கு நட்பு பெரிதாக இருந்ததால்! விக்ரமிற்காக இடுப்பு வலியிலும் போராடினாய். புருஷோத்தமனை காட்டிக் கொடுத்தால் எங்கே தாரா வாழ்க்கை பாதிக்கப்படுமோன்னு அந்த உண்மையை சொல்லாமல் மறைத்தாய்.

ஆனால் ஒரு இடத்தில் கூட, என்னை பற்றி நினைக்கவில்லையே?" என்றான் வேதனையாக..

"ஐயோ! தனு" என்று அவன் வேதனை கண்டு பதறி துடிக்க!

"என்னை விடு. அந்த பச்சை குழந்தை அது என்ன பண்ணுச்சு. அதையும் தானடி அப்படியே விட்டுட்டு போன" என்று சாட்டையடியாக கேள்வி கேட்க,

அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவள். "என் மேல் தான் எல்லா தப்பும் . நான் ஒத்துக்கிறேன்" என்று துடித்தவள். "சின்ன சின்ன தவறுகளை செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு! உங்களை கொலை செய்ய வேண்டும்" என்ற புது வேலை வந்தது.

உங்க போட்டோ காண்பித்தார்கள். அதில் ஒரு குழந்தையை நீங்க கொஞ்சுவது போல் இருக்கும். உங்க முகத்தில் தெரிந்த கனிவை பார்த்து! அந்த குழந்தை நானாக இருக்கக் கூடாதா? என்று ஏக்கமாக இருந்தது.

பிறகு தான். உங்களை காப்பாற்ற நாங்க வந்தது. உங்களை அருகிலிருந்த பார்க்க பார்க்க! உங்களை ரொம்ப பிடித்திருந்தது. உங்களை காதலிக்க ஆரம்பிதேன்" என்று தலையை குனிந்து கொண்டு மெதுவாக கூற, அமிர்தன் அவளருகில் நெருக்கமாக வந்து நின்று கொண்டான்.

அமிர்தனின் இந்த திடீர் நெருக்கம். அவளுள் ஒரு இனம்புரியா அவஸ்தையை ஏற்படுத்த,

"ம்ம்ம். சொல்லு" என்று ஆர்னியை மேலும் ஊக்க!

' நீ கொஞ்சம் தள்ளி நில்லு அமிரு. அதான் அந்த புள்ள விசயத்தை சொல்ல வருதில்ல. இப்படி கிட்ட போய் நின்னா? . நீயே ஜெர்க்காகிற! அந்த பெண்ணிற்கும் அப்படித்தானே இருக்கும். முதலில் விசயத்தை சொல்ல விடு' என்று மனசாட்சி எடுத்துரைக்க,

அதே நிலையில் நெருங்கி சொல் என்பது போல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்றைக்கு நான் சொல்லி இவன் கேட்டிருக்கிறான்' என அவன் மனசாட்சி தான் தலையில் அடித்துக் கொண்டது.

ஆர்னி மேலும் தொடர்ந்தாள். "புருஷோத்தமன் உயிருக்கு போராடிய என்னை பார்த்து விட்டு மனம்திருந்தி , உங்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறி திட்டத்தை கைவிடச் சொன்னார்.
உங்களை எனக்கு பிடித்திருந்தாலும், நான் கிளம்பிப் போக வேண்டிய சூழல் வந்துவிட்டதால்! அங்கிருந்த கிளம்பும் நேரத்தில் நம் திருமணம் நடந்தது.

எல்லோரும் வந்து இந்த திருமணத்தை ஒற்றுக் கொள் என சொன்ன பொழுது! நான் விரும்பிய உங்களுடன் வாழ வாய்ப்பு கிடைக்க, அதை ஏன் விட வேண்டும்? கொஞ்ச நாட்களாவது உங்க மனைவியாக வாழனும் என்ற பேராசை!
உங்க மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்தேன். பிறகு நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.

புருஷோத்தமனை நான் ஏன் காட்டிக் கொடுக்கவில்லையென்றால்! தாரா ஒரு காரணமாக இருந்தாலும், உங்களை நான் சந்தித்தது அவரால் தான். என்னுடைய காதலை விட, உங்களுடைய அன்பு மிகப்பெரிய விசயம் தனு! காதலித்து கல்யாணம் செய்து கொள்வதோ, இல்லை கல்யாணத்திற்கு பிறகு கணவன் மனைவி காதலிப்பதோ பெரிய விஷயமில்லை.

ஆனால் தன்னை கொலை செய்ய வந்தவள் என்று தெரிந்தும்! அன்பா, பாசமா நடந்திக்கிறது என்பது சாத்தியமே இல்லை. அப்படிபட்ட பொக்கிஷமான நீங்க எனக்கு கணவனாக கிடைத்தது அவரால் தான். அதனால் தான் காட்டிக் கொடுக்கவில்லை.
இன்னொன்று ஆதி, "எனக்கு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையால் ஏகப்பட்ட காரணங்களை சொல்லி சமாளித்து இங்கே வந்த போது, எனக்கு துணையாக ஒவ்வொரு விசயத்திலும் நின்றது ஆதி.

அப்படிப்பட்டவனை என்னோட சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு, அவனை அப்படியே விட்டுச் செல்வது! எப்படி சரியாகும்?" என்று கேட்க ! அமிர்தன் எதுவும் பேசவில்லை .ஆர்னி பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" அப்புறம் பேராசைபட்டு உங்க கூட மனைவியாக வாழ்ந்தேன். உங்க கூட இருக்கும் பொழுது எதுவும் தோணாது. ஆனால் நீங்க இல்லாதபொழுது! நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னோட சுயநலத்திற்காக உங்க வாழ்க்கையில் நான் கரும்புள்ளியாய் இருக்கேன் னு குற்றவுணர்ச்சி!

உங்ககூட முதலில் இருந்த இரண்டு நாளிலியே குற்றவுணர்ச்சியை தாங்க முடியாமல் தான்! உங்க அப்பா நல்லாயிருக்காங்கன்னு திரும்பவும் வந்த போனை மறைத்தேன்.

ஆனால் திரும்பவும் உங்களிடம் மாட்டிக் கொண்ட பொழுது என்னை பற்றி எல்லாம் தெரிந்து விட்டதில், எனக்கு நிம்மதி தான். நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

ஆதர்ஷ் ! ஒரு குழந்தைக்கு தாய் முக்கியம்தான். ஆனால் என்னைவிட உங்க கூட இருந்தால் ஆதுவிற்கு எல்லாமே கிடைக்கும். என்னைவிட நன்றாக பார்த்துக் கொள்வீங்க, அந்த நம்பிக்கையில் தான்" என்று கூறி அமிர்தனை பார்க்க!

இரும்புச் சிலையென அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தவன். "புருஷோத்தமன், ஆதியை நீ காப்பாற்றியதற்கு ஒரு காரணம். ஆதர்ஷை நான் பார்த்துக் கொள்வேன்" என்றாய்? அது கூட ஒரு வகையில் ஒற்றுக் கொள்ளலாம்!

ஆனால் எல்லோர் பற்றியும் யோசித்த நீ? . ஒரு இடத்தில் கூட என்னை பற்றி யோசிக்கலையே ஆனி" என்று இதயத்தின் வலி முகத்தில் அப்படியே தெரிய அமிர்தன் கேட்டதும் திகைத்தவள்.

"தனு".. என்று கதறி. அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள். "அப்படியெல்லாம் இல்லை தனு. "நீங்க தான் எனக்கு முக்கியம். "உங்களுக்காகத்தான் நான் வந்தேன்" என்று அவன் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டு முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

"ம்ஹூம் " என்று மறுப்பாக தலையசைத்து, அவளை தன்னிடமிருந்து விலக்கியவன். உனக்கு நான் முக்கியமென்று தோன்றியிருந்தால்! என் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்? என்னிடம் எல்லா விசயத்தையும் நான் கேட்ட போதே சொல்லியிருப்பாயே?" என்ற கேள்விக்கு, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .

"முதலிலும் என்னை விட்டுப் போன? உன்னை காணும் னு , நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்? எத்தனை நாள் தூக்கமில்லாமல் என்னாச்சோ? ஏதாச்சோ?. யாராவது ஏதாவது பண்ணிட்டாங்களோன்னு? தவிச்சிருப்பேன்.

அதன் பிறகு, "நீ சொன்னியே? என்னை பற்றி தெரிந்தும் என்னிடம் அன்பாக இருந்தேன்னு. ஏன் தெரியுமா?" என்றான்.

"ம்ஹும் " என மறுப்பாக தலையசைக்க.

"என் கண்ணை நம்பவில்லை. மற்றவர்கள் உன்னை பற்றி சொன்ன விசயம் அத்தனையும் கேட்டு, இவ தப்பென்று சொல்ற அறிவை நம்பவில்லை. ஆனால் ! உன் கண்ணை நம்பினேன் டி.அதில் என் மேல் தெரிந்த காதலை நம்பினேன்! " என்று பெருமூச்சு விட்டவன்.

"இதெல்லாம் இப்போ பேசி பிரயோஜனமில்லை. நீ டைவர்ஸ் பேப்பரில் சைன் போடு என்று அதுதான் முக்கியம் என்பது போல் பேச!

"ம்ஹூம் . நான் கையழுத்து போட மாட்டேன்" என்றாள் இப்பொழுது அழுத்தமாக .

"ஏன்? " என்றவன். "நீனாகத் தானே பிரிந்து சென்றாய்? . இப்போது என்ன?" என்றான் புரியாமல்.

"நான் இனிமேல் உங்களை விட்டு, ஆதுவை விட்டு போக மாட்டேன் தனு" என்றாள் பாவமாக

' அடப்பாவி! உன்னிடமிருந்து எஸ்ஸாக இருந்தவளை, உன்னைவிட்டு போக மாட்டேன்னு சொல்ல வச்சிட்டியே டா!' என்று வாயை பிளந்தது. அமிர்தனின் மனசாட்சி

"அதெல்லாம் நம்ப முடியாது. திரும்பவும் அவனை காப்பாத்தனும். இவனை காப்பாத்தனும்னு, நீ கிளம்பி போய்விடுவாய். இதெல்லாம் சரியா வராது ஆர்னி" என்றான் கெத்தாக.

"ம்ஹூம் . அப்படியெல்லாம் போக மாட்டேன் தனு " என்றாள் அவசரமாக

"நான் எங்க இருந்தாலும். அங்கே தான் நீனும் இருக்கனும். அதற்கெல்லாம் நீ ஒற்றுக் கொள்ள மாட்டாய்" என்றான் . அவள் சிறுபிள்ளை போல் எல்லாவற்றிற்கும் சம்மதம் சொல்வதை கண்டு, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு!

"இல்லையில்லை. நீங்க எங்கே இருக்கிறீர்களோ? அங்கே தான் நானும் இருப்பேன்" என்றாள் உறுதியாக.

"இதில் எந்த மாற்றமும் இல்லையே" என்றான் அழுத்தமாக .

"எந்த மாற்றமும் இல்லை" என்றாள் ஆர்னியும் உறுதியாக.

" சரி. ஓ.கே" என்றுவிட்டு போனில் யாருக்கோ தொடர்பு கொண்டான். எடுக்கவில்லை..

"ம்ம்ச்ச்" என்று சலித்தவன். " கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடலாம்" என்று விட்டு வாஷ் ரூம் சென்றான்.

அமிர்தன் சென்ற சிறிது நேரத்திலேயே அவனது போன் ஒலிக்க, அருகில் சென்று பார்த்த போது, "திவ்யா " என்ற பெயர் டிஸ்பிளேயில் ஒளிர்ந்தது
 

Sirajunisha

Moderator
' திவி பேசுறா! கொஞ்சம் நேரம் கழித்து பேசச் சொல்லலாம்' என்று நினைத்து. அழைப்பை இணைக்க

ஆர்னி , ஹலோ என்பதற்குள், திவி பேச ஆரம்பித்திருந்தாள்.

"ஹலோ அண்ணா. உங்களுக்கும், ஆர்னிக்கும் நாளைக்கு மார்னிங் சென்னைக்கு வருவதற்கான பிளைட் டிக்கெட் உங்களுக்கு அனுப்பிட்டேன்.
இப்போ நாங்க எல்லோரும் சென்னை கிளம்பிட்டோம். ஆதி, ஆர்னியிடம் எங்க மேரேஜ் பற்றி உடனே சொல்லனும்! இல்லையென்றால் தப்பாக நினைத்து கொள்வாள் என்று, இங்கே ஓரே பிடிவாதம் .

பெரியப்பா தான் . நீங்க சொல்லிக் கொள்வீங்கன்னு, சமாதானம் செய்து அழைத்து வந்தாங்க. ஆதர்ஷ் சமத்தா இருக்கிறான். அப்புறம், அந்த பேப்பர்ஸ் ஆர்னி சைன் வாங்கி பெரியப்பா அவங்க மெயிலுக்கு ஒரு காபி அனுப்பச் சொன்னாங்க" என்று படபடவென பேசியவள். "பிளைட்டுக்கு டைம் ஆச்சு வைக்கிறேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

' இவ என்ன சொல்கிறாள்?' என்று ஆர்னி குழம்பிப் போய். ' எதில் கையெழுத்து வாங்கி அனுப்பச் சொல்கிறாள். டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கி அனுப்பச் சொல்கிறாளோ?. இவ சொன்னாலும் சொல்லுவா!. எங்க அந்த பேப்பரு? ' என்று தேட. அது டேபிளின் மேல் அழகாக காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

அருகில் சென்று அதை எடுத்துப் பார்க்க! அது ஆர்னி பெயரில் பங்குகளை வாங்குவதற்கான பங்குபத்திரம்.

இதை வைத்துக் கொண்டு, டைவர்ஸ் பேப்பர்னு மிரட்டி! என்னை இப்படி பயப்பட வைத்து விட்டாரே!. இத்தனை நாள் டிமிக்கி கொடுத்ததற்கு நல்லா வச்சு செய்ஞ்சுட்டார் ஆர்னி . இதில் நீ வேற உணர்ச்சி வசப்பட்டு கட்டிப்பிடிச்சு முத்தமெல்லாம் கொடுத்தியேடி! அப்பவே கட்டிபிடிக்கும் போதே பயபுள்ள ஜெர்க்கானுச்சு . நீதான்டி, கவனிக்கல " என்று தனக்குள்ளேயே அங்கலாய்க்க.

அமிர்தன் , குளித்துவிட்டு வெளியில் வந்தான். எதையும் தெரிந்த மாதிரி காட்டிக்காதே. இன்னும் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்' என்று நினைத்து, எதையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தாள்.

வேறு ஆடை மாற்றி வந்தவன். "போகலாமா? " என்று கேட்க , சம்மதமாக தலையசைத்தாள்.

சற்று நேரம் வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து.. எதையோ தேடினான். "என்ன தேடுறீங்க? "என்று ஆர்னி புரியாமல் கேட்க,

"கார் கீ யை இங்கே தான் வைத்தேன். காணோம்" என்றான்.

ஆர்னியும் சேர்ந்து தேட, எங்கேயும் கிடைக்கவில்லை. "தேடி எடுத்து கொடு ஆர்னி. கீ இல்லையென்றால் இங்கிருந்து நைட் டைம்மில் போக முடியாது" என்று கூற

தேடிக் கொண்டிருந்தவள். டக்கென்று நின்று! உண்மையிலேயே காணோமா? என்று சந்தேகமாக அவன் முகத்தை பார்க்க! தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான்.

' சே.. சே.. நிஜமாகவே காணும் போலிருக்கு ' என்று தேடிக் கொண்டே, ' எப்பொழுதும் அவர் பர்ஸ்ஸோடு தானே சேர்த்து வைப்பார்' என்று குஷனுக்கடியில் மறைத்து வைத்தது போல் இருந்த பர்ஸை எடுக்க, அதன் உள்ளே இருந்த கார் கீ யை பார்த்து விட்டாள்.

"தனு சாவி இதில் இருக்கு" என்று கொடுத்தாள்.

ஐயய்யோ.. கண்டுபிடிச்சிட்டாளே! என்று அதிர்ந்தவன். சாவியை வாங்கி பார்த்து, " இது இல்லடி . அது வேற" என்று பர்ஸ்ஸுக்குள் வைத்து அதை ஷோபாவிலேயே தூக்கி போட்டு விட்டான்.

மீண்டும் அமிர்தன் சாவியை தேட, ஆர்னி, கையை கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னை கண்டுபிடித்து விட்டாள் என்பதை அறிந்தவன்.

ஆர்னியிடம் நெருங்கி, "உனக்கு என் மேல் கொஞ்சம் கூட பீலிங்சே இல்லடி. சாவியை தேடாதீங்க. இராத்திரியில் தேடுனா கிடைக்காது தனு. நாம பகலில் தேடலாம்னு சொல்றியா" என்று கூறியபடி கன்னத்தோடு கன்னம் வைத்து உரச,

"டைவர்ஸ் பேப்பரில் சைன் கேட்டு, கொஞ்ச நேரம் முன்னாடி எப்படி பேசுனீங்க? இப்போ என்ன? கொஞ்சல் வேண்டியிருக்கு" என்று நொடித்தாள்.

அவள் கழுத்தில் உதடுகளை பதித்தவன். " என் மேல் வைத்த காதலுக்காக நான் குடிக்க வேண்டிய விஷத்தை நீ குடித்தியேடி. எனக்காக உயிரை பணயம் வைக்கும் உன்னை டைவர்ஸ் பண்ண, எனக்கு என்ன பைத்தியமா? " என்றவன்.

ஆர்னி, "ஆஆஆ.. " என்று வாயை பிளக்க! .தன் இதழால் அவள் இதழை கவ்விக் கொண்டான். ஆர்னி தன் வசமிழந்தாள். அமிர்தனின் முரட்டுத்தனம் அதன் வலிகளும் இத்தனை நாள் பிரிவில் அவளுக்கும் தேவையாகத்தான் இருந்தது.

எத்தனை நாள் பிரிவின் ஏக்கம்! ஊடல் முடிந்து, கூடலில் திளைத்திருக்க! நாம் ஆதி- திவி, வருண்- மோனி திருமணத்தில் சந்திப்போம்.



அத்தியாயம் :37
காலையில் அமிர்தன், ஆர்னியை எழுப்பிக் கொண்டிருந்தான்.

"ஆனி . வேக்கப் அப். டைம் ஆச்சு" என்றபடி நேற்று வாங்கிய பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். மெதுவாக கண்விழித்து பார்க்க, அமிர்தன் மெரூன் கலர் பிராண்டட் சர்ட் மற்றும் சந்தன நிற பேண்ட், அதற்கேற்ற பிராண்ட் ஷூ எல்லாம் அணிந்து கிளம்பி தயாராக இருந்தான்.

ஆர்னி நன்றாக கண்விழித்து எழுந்து அமர்ந்தவள் . "தனு" என்றாள் மெல்ல,

"கம் ஆன் ஆனி. சீக்கிரம் குளித்து விட்டு வாடா. டைம் ஆச்சு. ஹாஃப் அன் அவர்ல இங்கிருந்து கிளம்பனும். அப்போது தான் கரெக்ட் டைம்க்கு ஏர்போர்ட் போக முடியும்" என்றான் .

"நான் குளித்துவிட்டு எந்த டிரஸ் போடுறது. நான் டிரஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு வரவில்லை " என்றாள்.

"நீ குளித்து விட்டு வா ஆனி. உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன்" என்றவன். "சீக்கிரம்" என்று அவசரப்படுத்த, ஆர்னி குளிக்கச் சென்றாள். அவள் குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து தலையை மட்டும் எட்டிப்பார்க்க, அவர்களது பெட்டில் நேற்று ஷோகேஸ் பொம்மை அணிந்திருத்தத அதே அழகான சிவப்பு நிற புடவையும், அதற்கேற்ற ஜாக்கெட்டும் இருந்தது.

அமிர்தன் அங்கு இல்லை. டவளை சுற்றிக் கொண்டு வந்தவள். துணிமாற்றும் அறைக்குள் ஆடைகளை எடுத்துச் சென்றுவிட்டாள்.

அமிர்தன் அவளுக்கான நகைகளை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு, மற்ற பொருள்கள் அடங்கிய சூட்கேசை டிக்கியில் வைத்துவிட்டு, ஆர்னி கிளம்பிவிட்டாளா? என உள்ளே வர,

ஆர்னி புடவையை உடுத்திக் கொண்டு தேவதை போல் வந்தாள். சிவப்பு நிறம் மேலும் அவளது நிறத்தை எடுத்துக் காட்ட! எந்த ஒப்பனையும் இல்லாத அவளது முகத்திற்கு அவனை பார்த்த போது வந்த வெட்கப் சிவப்பே ஒப்பனையாக அமைந்து அவளது அழகை மெருகூட்ட.! . தன் மனையாளின் அழகில் இலயித்து நின்று விட்டான்.

அமிர்தன் அருகில் வந்தவள். "கிளம்பிட்டேன் தனு. போகலாமா?" என்றாள்.

ஆமோதிப்பதாக தலையை மட்டும் அசைத்தவன். அவள் கையில் நகைபெட்டியை கொடுத்து, அவனே திறந்து அடுக்கான தங்கமாலையை எடுத்து அவனே அனுவித்தான்.

வேண்டுமென்றே அவளை உரசிக்கொண்டு நின்று, நகையின் கொக்கியை மாட்டுகிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு, ஆர்னியின் கழுத்தில் அவன் மூச்சுகாற்று படும்நெருக்கத்தில் நின்று உதடுகளை உரசிக் கொண்டிருந்தான்.

ஆர்னி கணவனின் அருகாமையில் தன்னை மறந்து நின்றிருந்தாள்.
இங்கே விழித்திருந்தது, அமிர்தனின் மனசாட்சி தான். ' டேய் ஏன்டா?. கொக்கியை மாட்டி எவ்வளவு நேரம் ஆகுது. இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? . டைம் ஆயிடுச்சுன்னு! இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டு இருந்தியேடா? உன் பொண்டாட்டி தான்டா. மீதியை சென்னையில் பார்த்துக்க டா' என்று புலம்ப.

"ஜாக்கெட் அளவெல்லாம் கரெக்டா இருக்கா? ரெடிமேட்ல தான் வாங்கினேன்" என்று அவள் காதோரத்தில் கிசுகிசுத்து கொண்டிருந்தான் அமிர்தன்.

வெட்கப்பட்டு ,தலையை குனிந்து கொண்டு "ம்ம்" என்று மெல்ல முணுமுணுத்தாள் ஆர்னி.

' நான் என்ன சொல்லிட்டிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க? என்றுவிட்டு. ' என்னை ஒரு மனசாட்சின்னு கூட மதிக்க மாட்டேங்கிறானே? ' என்று புலம்பியது.

அவளது இதழில் அழுந்த முத்தமிட்டு விட்டு, "வா போகலாம்" என்று அவள் கையை கோர்த்துக் கொண்டு அழைத்துச் சென்றான் அமிர்தன் .

சென்னை..
அமிர்தன், ஆர்னி இருவரும் வீட்டுவாயிலில் காரில் வந்து இறங்க, வீட்டுக்குள்ளிருந்த ஆதர்ஷ், ஓடி வந்து தனது தாயிடம் தாவிக் கொண்டான்..

பாட்டிதான் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தார். உள்ளே வந்தவளுக்கு, ஆதி, வருண், ரவி, கவி மற்றும் அவர்களது மகன் விஷ்வா என அனைவரையும் பார்த்து இன்ப அதிர்ச்சி

சந்தோஷமாக வந்து, "ஏய்! என்ன எல்லோரும் சர்ப்ர்ஸ் கொடுக்குறீங்க? என்னிடம் யாரும் சொல்லவில்லை" என்றவள். அவர்களை அமிர்தனுக்கு அறிமுகப்படுத்த முனைய, "ஹலோ கவி. ஹாய் ரவி. ஹலோ வருண்" என்றவன். "வாங்க மாப்பிள்ளை " என்று ஆதியை மட்டும் தோளோடு அணைத்து விடுவித்தான்.

ஆர்னி, ஆஆஆ என பார்த்தபடி, உங்களுக்கு ரவி, கவி யையும் தெரியுமா? என்றாள்.

அவர்களை மட்டுமில்லை. "இந்த விஷ்ஷா குட்டியையும் தெரியுமே" என விஷ்வாவை தூக்கிக் கொண்டான் அமிர்தன் .

"உனக்கு பொய்யாக ஜூரம் வந்து, அப்புறம் ஆதி திட்டி, நீ வேலைக்கு போனியே.! அன்றைக்கு வீட்டிற்கு வந்து, எங்களையெல்லாம் பார்த்து பேசிவிட்டு போனார்" என்றாள் கவி அவசரமாக

"மானத்தை வாங்குறாளே" என பல்லைக்கடித்தாள் ஆர்னி.

" எப்ப பேபி ஜூரம் வந்தது" என்று கவலையாக ஆர்னி கன்னத்தை தடவி நெற்றியில் தொட்டு பார்த்தான் அமிர்தன்.

' இங்க பாரு அமிரு. அந்த பொண்ணு தான் பொய்யான ஜூரம் னு சொன்னிச்சில்ல. அப்புறம் என்ன? எப்போ பேபி ஜூரம் வந்துச்சுன்னு கன்னத்தை தடவுற? எல்லோரும் சுற்றி இருக்காங்க. நீ பெட்ரூம்ல காண்பிக்க வேண்டிய பாசத்தை ஹாலில் காண்பிக்காதே! கல்யாணம் ஆக வேண்டிய பசங்களும் நிற்கிறாங்க' என்று கடுப்படிக்க

அதற்குள் ஆர்னி, "இப்போ சரியாகிவிட்டது" என்று கணவனிடம் சமாளித்தாள்.

வருணிடம் திரும்பியவன். "எங்கே மோனி வீட்டிலிருந்து வந்துவிட்டார்களா?" என்றான்.

"மாமாவிற்கு போன் பேசிவிட்டேன். இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்து விடுவார்கள்" என்றான் .

அமிர்தனுக்கு போன் வர ஆன் செய்து விட்டு பேசியபடி ஆர்னியிடம் தலையசைத்து அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அமிர்தன் நகர்ந்ததும். "என்னடா நடக்குது இங்கே?. மோனி அவங்க அப்பாவோடு வராளா? உன்னோட லவ்வை அக்சப்ட் பண்ணிட்டாளா?" என்று சந்தோஷமாக கேட்க

"இல்லை நிஹா" என்று வருத்தமாக சொன்னவன். " ஐ.பி.எஸ் போஸ்டிங் ல எனக்கு சி.பி. ஐ கிரைம் ல போஸ்டிங் கிடைச்சிருக்குன்னு சொன்னேல்ல"

"ஆமா".

"என் ஹையர் ஆபிஸரோட வீட்டு பங்சனுக்கு போன போது தான், மோனியையும் அவங்க அப்பாவையும் பார்த்தேன். மோனியோட அப்பாவும், என் சீனியரும் பிரண்ட்டு".

"அப்புறம்" என்றாள் ஆர்வமாக

"ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன். தெரியாத ஆளை பார்க்கிற மாதிரி பார்க்கிறாடா " என்றான் வருண் கடுப்பாக.

"அப்படித்தான்டா பார்ப்பாளுக" என்றான் ஆதியும் தன் அனுபவத்தை வைத்து.

"நீ மேட்டருக்கு வாடா. அப்புறம் என்னாச்சு " என்று ரவி அவசரப்படுத்த.

"யோசித்தேன். இவளை கரெக்ட் பண்றதை விட, இவ அப்பனை கரெக்ட் பண்றது பெட்டர்னு இவ அப்பனை கரெக்ட் பண்ணிட்டேன்" என்று கண்ணடிக்க,

அனைவருமே சிரித்து ஹை பை அடித்து கொண்டனர். "என்னடா பண்ண?" என சிரித்துக் கொண்டே ஆர்னி கேட்க

"தனியா நின்றுகொண்டிருந்தாரா. அவரிடம் போய், என்னை பற்றி விவரமெல்லாம் சொல்லி, மோனியை காண்பித்து, சார். அந்த பெண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! எனக்கு பிரெண்ட்ஸ் மட்டும் தான். அப்பா அம்மா கிடையாது . எனக்கு தாய்மாமனா இருந்து அவங்க வீட்டில் எனக்காக பொண்ணு கேட்கனும் சார். வர்றீங்களா" என்றேன்.

"அதுக்கு அவர் என்ன சொன்னார்?" என்றாள் கவி ஆர்வமாக ..

"அப்படியே என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் எப்படின்னு சரியாக தெரியாமல் எப்படி கேட்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? சார்னு என்னோட சீனியரை காண்பித்து, அவரிடம் என்னை பற்றி விசாரித்து விட்டு. அப்புறமாக பெண் கேளுங்கள் சார்" என்றேன். அவரும் விசாரித்திருக்கிறார். என் சீனியரும் நம்ம பெருமையை சொல்ல என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டவன் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி போய்விட்டார்.

இரண்டு நாள் கழித்து போன் வந்தது. நான் அந்த பெண் வீட்டில் பேசிவிட்டேன். திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள் னு மோனி அப்பா பேசினார். இவர் தான் மோனியோட அப்பானு எனக்கு தெரியாதென்று நினைத்துக் கொண்டு பில்டப் கொடுத்தார்.

"ஹா ஹா ஹா " என அனைவரும் சிரிக்க ,

"நானும், சார் அந்த பெண்ணிற்கு என்னை பிடித்திருக்கா சார்?" னு கேட்டேன்.

"பிடித்திருக்கு" என்றார் சிரித்துக் கொண்டே,

"அப்படியே அந்த பொண்ணு பெயர் என்னென்னு கேட்டு சொல்லுங்க சார்னு சொன்னவுடனே அந்தப் பக்கம் பேச்சே காணும்!" என்று சிரிக்க,

"உங்கிட்ட போய் மாட்டினாரே " என்று கவி வாரினாள்.

அப்புறம் அட்ரஸ் கொடுத்து நேரில் போய் பார்த்து பேசி முடிந்தது. இப்போ வரைக்கும். அவங்க அப்பா பார்த்த மாப்பிள்ளை மாதிரியே டிஸ்டென்ஸ் மெயிண்ட்டைன் பண்றா" என்று சலித்துக் கொண்டான்.

அப்போது பாட்டியும், மீனாட்சியும் வர இவர்கள் பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டனர். "வாம்மா ஆர்னி. உன்னை நாங்க ரொம்ப தப்பாக நினைத்து விட்டோம்" என்று வருத்தப்பட்டார் மீனாட்சி.
 

Sirajunisha

Moderator
"விடுங்க அத்தை. முடிந்த விசயத்தையே பேசி வருத்தப்படாதீங்க" என்றான் ஆதி ஆறுதலாக.

"உங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டோம் தம்பி " என்றார் பாட்டி வருத்தமாக

"ஐயோ பாட்டி விடுங்க. இப்போ நடக்க போகிற நல்ல காரியத்தை கவனிங்க" என்று கவி தேற்றி அனுப்பி வைத்தாள்.

அப்போது வருண், "வந்துவிட்டான் வில்லன்" என்று உள்ளே வந்த அசோக்கை பார்த்து மெல்ல முணுமுணுத்தான்.

வருண் அசோக்கை தான் சொல்கிறான் என்பதை கவனித்த ஆர்னி. "ஏன்டா அப்படி சொல்ற?" என்றாள் மனத்தாங்கலாக.

"பின்ன என்ன?. மோனியிடம் என்னை பற்றி போட்டுக் கொடுத்ததே உன் கொழுந்தன் தான்! இவனுக்கு அசோக் கென்று பெயர் வைப்பதற்கு பதிலாக ரகுவரன் என்று பெயர் வைத்திருக்கனும் " என்றான் அசோக்கை முறைத்துக் கொண்டே

அதற்குள் அசோக் அருகில் வர, தனது முகபாவனையை மாற்றியவன். "வாங்க சார் .எப்படி இருக்கீங்க?" என்றான் வருண் 32பற்களும் தெரிய ஈஈஈ என இளித்திக் கொண்டே

"ரொம்ப நன்றாக இருக்கிறேன் வருண்" என்றவன். "நீங்க எப்படி இருக்கீங்க ஆர்னி " என்று விசாரித்தான் அசோக்

"நன்றாக இருக்கேன் சார்" என்றாள் ஆர்னியும்..

"இன்னும் என்ன சார்னு சொல்ற?" என்றாள் கவி இடைபுகுந்து.

"அப்படியே பழகிடுச்சு" என்றாள் சிரித்துக் கொண்டே. அதுவரை ஆர்னி கையில் இருந்த ஆதர்ஷ் தனது சித்தப்பாவிடம் தாவினான்.

"வாங்க.. வாங்க" என்று தூக்கிக் கொண்டவன். "மோனி இன்னுமா வரவில்லை?" என்றான் பொதுவாக

"வந்து கொண்டு இருக்காங்க . இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்கள்" என்றான் வருண்.

"நாங்க அவங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும்! முதலில் உங்களை தேடிக்கொண்டிருக்கும் போது. ஏதாவது தகவல் கிடைத்ததான்னு அடிக்கடி போன் பண்ணி விசாரித்துக் கொண்டே இருப்பாங்க. அவங்க வருணை ரொம்ப மிஸ் பண்றாங்கன்னு.. அவங்க பேசும் பொழுதே தெரியும்

பிறகு ஒரு பங்சன்ல உங்களை பார்த்து விட்டு, ஆர்னி, விக்ரம்வோட டீட்டெய்ல்ஸை அவங்க அப்பா மூலமாக கலெக்ட் பண்ணி கொடுத்ததே மோனி தான்.
இல்லையென்றால் உங்களையெல்லாம் இன்றும் தேடிக் கொண்டு தான் இருப்போம்" என்றான் அசோக்

வருணிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தது. மோனி அவனை தேடியிருக்கிறாளே!. அசோக் கூறியதை கேட்டு, மோனியை பார்க்கும் ஆவல் அதிகமாக வாசலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

அசோக் சென்று விட, "இதில் ஒரு விசயத்தை கவனித்தீர்களா?. திவ்யா வர்ற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாமென்று சொல்லி, ஆதியை அவளும் விரும்புயதை வீட்டில் புரியவைத்து சம்மதம் வாங்கி, திவி ஆதியை தேடி வந்தாச்சு. மோனியும் வருணை தேடியிருக்காங்க. அமிர்தனும் நிஹாவை தேடி வந்துட்டார்.

எல்லோருமே உங்க மேல் வைத்த காதலால் உங்களை தேடி வந்திருக்கிறார்கள் " என்ற தகவலை சொன்ன ரவி. " ஆனால் என்னை மட்டும் இவ தேடி வரல நான் தான் இவ பின்னாடி அலைந்தேன்" என்று நொடித்துக் கொண்டான் ரவி.

" பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிற கவியையே இப்போது உன்னை சுற்ற வைத்திருக்க என்றால்? நீ எவ்வளவோ பெரிய ஆளு" என்று ஆதி கூற,

ஆதியின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள் கவி. "இரு நீங்க பேசினதை உங்க ஆளுங்க கிட்ட போட்டு கொடுக்கிறேன்" என்று மிரட்ட,

"ஐயோ! என்று பதறி கவியை அனைவரும் சமாதானப்படுத்தினர்.

சிறிது நேரத்தில் மோனியும் அவள் அப்பா ராஜேந்திரன் வந்துவிட்டார்கள். மோனி, ஆர்னியை கட்டிக் கொண்டு," சாரி ஆர்னி உன்னை தப்பாக நினைத்து விட்டேன்" என மன்னிப்பு கேட்டாள்.

"விடு மோனி. எவ்வளவு பெரிய காரியம் செய்ய போகிறாய்! அதை பார்க்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமே இல்லை" என பீடிகை செய்ய!

"என்ன அது?" என்றாள் மோனி புரியாமல்

"வருணை கல்யாணம் செய்து கொள்ளப் போவதை சொன்னேன் மோனி. நீ தான் அவனை நன்றாக பார்த்துக்கனும். எந்த விருப்பத்தையும், கஷ்டத்தையும், வேதனையும் வெளிப்படையாக சொல்ல மாட்டான். அவனாக விரும்பி கேட்டது உன்னை மட்டும் தான்" என்றாள் அவள் கையை பிடித்துக் கொண்டு

'என்ன?. என்னிடம் சொல்ல வேண்டிய டையலாக்கை எல்லாம் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்' என்று வருண் கடுப்பாக பார்த்து கொண்டிருந்தான்.

வருணின் முகபாவனையை பார்த்த மோனிக்கு சிரிப்பு வந்தது. ஆர்னியிடம் சம்மதமாக தலையசைத்தாள்.

திவியை, தாரா அழைத்து வர, இரு ஜோடிகளும் அமர வைக்கப்பட்டு பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமண தேதியும் விரைவிலேயே வைக்கப்பட்டது.

முதலில் வருண் - மோனி திருமணம். ஒரு வாரம் கழித்து ஆதித்ய விக்ரமன் - திவ்யா திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

ராஜேந்திரனிற்கு கிராமத்திலிருந்து அவர்களது உறவுகள் வந்துவிட, அமிர்தன் ஆர்னி குடும்பத்தினர் முழுதுவதுமாக நின்று வருணின் சார்பாக திருமணத்தை நடத்திக் கொடுத்தனர்.

,......,.........

அலங்கரிக்கப்பட்ட அறையில் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மோனிக்காக எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருக்க! ஒரு கையில் பால் சொம்புடனும் இன்னொரு கையில் செல்போனியில் பேசியபடியே மோனி வர, வருண் அதிர்ச்சியாகிவிட்டான்.

' இவ என்ன? பர்ஸ் நைட் ரூமுக்குள்ள வர பீலீங்கே இல்லாமல் வருகிறாள்' என்று கடுப்பானவன்.

மோனியின் முன்னால் போய் நின்று முறைக்க! அவனது முறைப்பை கண்டு, ஒரு நிமிடம் என்று சைகையால் அவனிடம் கெஞ்சிவிட்டு, " சொல்லு ஆர்னி, பச்சைக்கலர் டிசைனையா சொல்ற?" என்று போனில் பேசியபடியே நகர.

' என்னங்கடா நடக்குது இங்க? டிசைன் கேட்க வேண்டிய நேரமா இது? என்று கோபம் உச்சிக்கு ஏற! "மோனி" என்று பல்லைக்கடித்துக் கொண்டு அவள் பின்னாலேயே செல்ல!

இப்போது, "இல்லை திவி. மெரூன் கலரிலேயே வாங்கி விடு" என்று பேசிக் கொண்டிருந்தாள்.

' கொஞ்சம் முன்னாடி ஆர்னினா. இப்போ திவி என்கிறாள்?' என்று யோசித்தவனுக்கு மண்டையில் பல்ப் எரிய, "ஐயோ!. கான்பிரன்ஸ் போட்டு பேசுறாளுங்களே! " என்று அலறியவன்.

அவன் செல்ப்போனை தேட ஆரம்பித்தான். "என்னாச்சு மோனி? வருண் என்ன பண்றான்? முறைக்கிறானா? என்றாள் ஆர்னி சிரித்துக் கொண்டே

"எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்" என்றாள் மோனி தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து விட்டு

"ச்ச்சுசு.. பாவம்பா" என்று திவி , வருணிற்காக வருதப்பட்டாள்.

"பாவம்மா. எத்தனை நாள் என்னை அலையவிட்டிருப்பார். கொஞ்ச நேரம் எனக்காக வெயிட் பண்ணட்டும்" என்றாள் சிரித்தபடி

போனை தேடி எடுத்தவன். அமிர்தனுக்கு அழைத்து விட்டான். வருணிடமிருந்து அழைப்பு வர, ' இந்த நேரத்தில் ஏன் போன் செய்கிறார்?' என யோசித்தபடியே எடுத்தவன்.

"சார். உங்க பொண்டாட்டியும், உங்க தங்கச்சியும் மோனியிடம் ரொம்ப நேரமாக போன் பேசிறாங்க சார். என் வாழ்க்கையில் இப்போ இருக்கிற இடைஞ்சல நீங்க தான் நீக்கனும்" என்று கெஞ்ச..

"ஆனினினி.. " என்று பல்லைக்கடித்தவன். ' இவளுக்காக நான் இங்கே வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். இவளை! " என்று விட்டு போனிலேயே அழைக்க,

அமிர்தனது அழைப்பை பார்த்து! "மோனிலைன்லியே இரு. தனு போன் பண்றார்" என்றவள் அழைப்பை இணைக்க

திவியும், மோனியும் அமைதியாக இருந்தனர். ' ஹலோ தனு ' என்பதற்குள்!

"ஆனி, திவி " இரண்டு பேரும் போனை கட் பண்ணுங்க! . ஆனி, ஆதர்ஷ் அம்மாவென்று சிணுங்கறான். சீக்கிரம் வா" என்று கண்டித்தான்.

அமிர்தன், திவி என்றதுமே பயந்துவிட்டாள். அமிர்தன் குரலை கேட்டு மூன்று பேருமே இணைப்பை துண்டித்து விட்டனர். மோனி இங்கு நகத்தை கடித்தபடி நின்றாள்.

பின்னாலிருந்து அவள் இடையை கட்டிக் கொண்ட வருண். "என்ன லைன் கட்டாயிடுச்சா?" என்று அவள் காதில் கிசுகிசுக்க!

திகைத்து திரும்பியவள். ஏதோ சொல்ல வர, அதற்கு மேல் அவளை பேச விடவில்லை வருண். அவர்களின் தாம்பத்திய பயணம் இனிதே ஆரம்பித்தது.

"ஆதர்ஷ் " என்றதும். அவசரமாக மாடிக்கு செல்ல, ஆதர்ஷ் உண்மையாகவே எழுந்து அமர்ந்து கொண்டு சிணுங்கிக் கொண்டிருந்தான். ஆர்னி, ஆதர்ஷை சமாதானப்படுத்தி தூங்க வைக்க முயன்றாள்.

' உங்க அம்மாவை வர வைக்க.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா! . இப்படி நிஜமாகவே முழித்துக் கொண்டாயே?' என்று அமிர்தன் மகனை பார்த்து மனதிற்குள்ளேயே புலம்ப. அவனின் நிலை கண்டு, அமிர்தனின் மனசாட்சி தான் விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தது.

அடுத்து ஒரு வாரம் எப்படி போனதே என்றே தெரியவில்லை. இதோ விக்ரம் திவ்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆர்னியை இலண்டன் அழைத்து செல்வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதற்கான வேலைகளில் அலைந்து கொண்டிருந்ததால் அவனால் தனது மனைவி மகனுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை
 

Sirajunisha

Moderator
இன்று தான் ஆர்னியுடன் சந்தோஷமாக தனது தங்கையின் திருமணத்தில் சேர்ந்து நிற்கவாவது முடிந்தது. பட்டுப்புடவையில் அவளது அழகை அடிக்கடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு புருஷோத்தமன் பார்வதி தம்பதியர் வந்திருந்தனர். ஆர்னி அவர்களை தாராவின் பெற்றோர்களாகவே மதித்து பேசினாளே தவிர பழையவற்றை எதையும் பேச விடவில்லை.

ஆர்னி ஆதர்ஷை தூக்கி வைத்துக் கொண்டு விருந்தினர்களிம் பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கே வந்த புருஷோத்தமனை கண்டு புன்னகைத்தவளின் தலையில் கைவைத்து நீ தீர்க்கசுமங்கலியாக நிறைவான வாழ்க்கை வாழனுமா" என்று உளமாற ஆசிர்வதித்தார்.

திவி பெற்றோர்கள் ஜெயராமன் மீனாட்சிக்கு பாதபூஜை செய்ய.. ஆதிக்கு புருஷோத்தமன் -பார்வதி தம்பதியினரை நிற்க வைத்து சடங்குகளை செய்ய வைத்தாள்.

இதோ எல்லோருடைய ஆசிர்வாதத்திலும் நண்பர்களின் படைசூழ ஆதி திவியின் கழுத்தில் மங்கல நாணை பூட்டி தனது மனைவியாக்கிக் கொண்டான்.

ஆதர்ஷயும் விஷ்வாவையும் ராஜாராமன் மெர்லின் பாட்டி நாகேந்திரன் பொறுப்பில் விட்டுவிட்டு, திருமணத்திற்கு வந்த உறவினர்களை கவனித்து விருந்து உபசரித்தனர்.

மாலைப்பொழுதில் நண்பர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க! மந்திரித்த விட்ட கோழி போல் ஆதி , திவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு, கவியும் ஆர்னியும் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். இதை கண்டு மோனியும் என்னவென்று கேட்க, அவளையும் இணைத்துக் கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர்.

இதனை கவனித்த வருண் அருகிலிருந்த ரவியிடம். "ஏதோ பிளான் பண்ணுறாளுங்க. அனேகமா ஆதிக்கென்று நினைக்கிறேன்" என்று முணுமுணுத்தான்.

"அவனுக்கே தான்" என்றான் ரவியும்.

ஏதோ கனவுலகத்தில் மிதந்தபடி அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவனின் காதில் "ஸ்ஸ் ஸ்ஸ்" என்று ஒலி கேட்க, என்னவென்று சுற்றிலும் பார்த்தான்.

கதவிடுக்கில் கவி நின்று கொண்டிருந்தாள். அதிர்ச்சியானவன். "ஏய் இங்கே என்ன பண்ற?"

"ஷ்ஷ்ஷ் என்று ஒரு விரலை உதட்டில் வைத்து சத்தம்போடாதே " என்றவள். "சீக்கிரம் ! நீனும் போய் ஒளிந்துக்கொள்" என்றவளிடம்.

"என்னது! ஒளிந்து கொள்ளனுமா"? என்றான் கோபமாக

அதற்குள் ரவி ,தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்து , " ஆதி சீக்கிரம் போடா" என்று அவசரப்படுத்த!

திரும்பிப் பார்த்தவன்.. கட்டிலுக்கடியில் இருந்த ரவியை கண்டு, "டேய் நீ அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? " என்று வேகமாக அங்கே செல்ல.

கப்போர்ட் உள்ளே இருந்து எட்டிப்பார்த்த வருண். "டேய் ஆதி. சீக்கிரம் போடா. மோனி வந்துவிடப் போகிறாள்" என்று பல்லைக்கடிக்க!

கடுப்பானவன். "என்னங்கடா விளையாடுறீங்களா?" என்றான்..

"ஆமாண்டா. கண்ணாமூச்சி" என்றான் ரவி கூலாக.

"டேய்.. வேணாம் " என்று பல்லைக்கடித்தவன். இப்போது கோபப்பட்டால் வேலைக்காகாது என்று உணர்ந்து!

"டேய். திவி வந்துவிடுவா டா" என்றான் பரிதாபமாக.

"எனக்கும் மோனிக்கும் தானேடா இன்றைக்கு கல்யாணம் நடந்தது. எங்களுக்கு தான் இந்த ஏற்பாடெல்லாம் "என்று வருண் அலங்கரிக்கப்பட்ட அறையை காண்பிக்க!

"உங்களுக்கு கல்யாணம் தான் போன வாரமே முடிந்துவிட்டதே. இன்றைக்கு எனக்கு கல்யாணம் நடந்தது" என்றான் ஆதி எரிச்சலாக

"டேய் . உனக்கு அடுத்தவாரம் தான்டா கல்யாணம் " என்று ரவியும் சொல்ல.

"கடுப்பாக்காதீங்கடா" என்று ஆதி ஒரு விரல் நீட்டி எச்சரித்தான்.

' ஐயோ.. அடிச்சிடுவானோ?' என்று பயந்த ரவி . " நீ வேண்டுமென்றால் நிஹவிற்கே போன் பண்ணி கேளு. அவ சொன்னாலாவது நம்புவியா?" என்று பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக பேசினான்.

ஆதி உடனே, ஆர்னிக்கு செல்லில் அழைத்தான். திவிக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்க! சுற்றிலும் மோனி, தாரா, பாட்டி என அனைவரும் இருக்க, செல்போனை ஆன் செய்த போது தவறுதலாக ஸ்பீக்கரையும் ஆன் செய்து விட்டாள் ஆர்னி.

"ஹலோ.. நிஹா. இன்றைக்கு எனக்கு தானே கல்யாணம் ஆனுச்சு. எனக்கும் திவிக்கும் தானே பர்ஸ்ட் நைட்டு. இங்க வருண், அவனுக்கும் மோனிக்கும் தான் கல்யாணம்.
அவனுக்கும் மோனிக்கு தான் பர்ஸ்ட் நைட்டுன்னு சொல்கிறான். நீ வந்து என்னென்னு கேளு" என்றான் ஆதி அழுவாத குறையாக ..

போன் ஸ்பீக்கரில் உள்ளதால் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை . ஆதியை கலாய்க்கச் சொன்னவளே அவள் தானே! ஆதியின் பேச்சை கேட்டு, அங்கிருந்த அனைவருமே சிரித்து விட்டனர். திவிக்கு சொல்வே வேண்டாம்.. தலையை நிமிர்த்தக் கூட முடியவில்லை.

"சீக்கிரம் திவியை அனுப்பி வைங்க " என்று சிரித்தபடி சொல்லிவிட்டு பாட்டி சென்று விட. பிளான் பிளாப் ஆனதை நொடியில் உணர்ந்தவர்கள்! அடுத்த நொடி ஆதியின் முன்னாலிருந்து ஓடி விட்டனர். பின்னே! யார் அவனிடம் அடி வாங்குவது?

ரவி,கவி, வருண் அனைவரும் ஓடிவிட்டாலும்! மறுமுறை சென்று விட்டார்களா? என்று அறையை அலசி ஆராய்ந்த பிறகே நிம்மதியாய் உட்கார்ந்தான்.

மேலும் சிறிது நேரம் கழிய, திவி அழகு பதுமையாக உள்ளே வந்தாள். அருகில் வர, தனது மனைவியை இப்போது கணவனுக்கான முழு உரிமையுடன் பார்த்தான். தன்னை பற்றி எதுவும் தெரியாமல்! எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், தன்னை விரும்பியவள்" என்று நினைத்த போது! அவளை உயிரில் வைத்து தாங்க தோன்றியது.

ஆதி அவளையே பார்த்து நின்று கொண்டிருக்க! ."என்னவென்று?" புருவத்தை உயர்த்தி வினவினாள்.

"நான் இதுவரைக்கும் உன்னை கட்டிப்பிடித்ததே இல்லை தெரியுமா?" என்று சோகமாக சொல்ல. முதலில் திகைத்து... பின்பு அவனது குறும்புத்தனத்தை கண்டு வியந்து, "உங்களுக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா?" என்றாள் ஆச்சரியமாக

"இது மட்டுமா? எனக்கு என்னென்னமோ தெரியும்னு சொல்லித் தரவா?" என்று அவள் காதில் கிசுகிசுக்க , "திவி" வெட்கப்பட்டு தலை குனிய, அதற்கு மேல் அங்கு பேச்சிற்கு வேலை ஏது!"

ஏர்போர்ட்.
ஆர்னி அழுதபடி அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள். நாகேந்திரன் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். "அழாத நிஹா. இப்போ எதற்கு அழற?. நீ ரொம்ப தூரம் இருந்தாலும் அடிக்கடி போன் பேசப் போகிறோம். வீடியோ காலில் பார்த்துக் கொள்ளலாம். அழாதே" என்று அனைவரும் தேற்றிக் கொண்டிருந்தனர்.

ஆர்னி அழுது கொண்டே, "நான் அதற்கெல்லாம் ஃபீல் பண்ணல. அவங்க பேசுற மொழி எனக்கு புரியவே மாட்டேங்குது. அங்கே போய் எப்படி சமாளிக்க போறேன்னு கவலையாக இருக்கு" என்றவுடன்.
வருண், ரவி, மோனி அனைவரும் அவளை பார்த்து முறைத்தனர்.

"நீ ஆதர்ஷ்யிடம் பேசி பழகினாலே போதும். ஈஸியா வந்துவிடும்" என ஆதிதான் அவளை தேற்றி அனுப்பினான்.

அமிர்தனும் அவர்களிடமிருந்து விடைபெற்று தனது மனைவி, மகன், தாய் மற்றும் தந்தையுடன் தனது பயணத்தை தொடங்கினான்.

"நம்மை பிரியறதை பற்றி கொஞ்சமாவது ஃபீல் பண்றாளா?" என்று ரவி அங்கலாய்க்க.

"நமக்கு இருக்கும் வருத்தத்தை விட அவளுக்கு தான் அதிகம் ரவி. அதை வெளிப்படுத்தினால் நாமளும் சோகமாக நிற்போம். அதனால் தான் அப்படி பேசிவிட்டு போகிறாள்" என்றாள் கவி எப்போதும் போல் ஆர்னிகாவை உணர்ந்தவளாக.
ஆதியும் ஆமோதிப்பதாக தலையசைத்தான்.

ஆர்னி பிளைட்டில் அமர்ந்த பின்பும் வருத்தமாக இருந்தாள். இதை கவனித்த அமிர்தன், அவளை திசைதிருப்பும் பொருட்டு,

"ஆனி" என்று அழைத்தான்.

"என்ன தனு" என்றாள் சோர்வாக.

"நீ என்னை இங்க ஏமாற்றிய மாதிரி அங்கே ஏமாற்ற முடியாது.. 24 மணி நேரமும் நீ என்னை பார்த்துக்கனும்" என்றவன். " முக்கியமாக இராத்திரியில்" என்று அவளிடம் கிசுகிசுக்க.

ஆர்னி சோகத்தை மறந்து , அமிர்தனது பேச்சின் அர்த்தத்தை புரிந்து வெட்கப்பட்டு முகம் சிவந்தாள்.

"ஐயோ.! ஆரம்பிச்சுட்டானே!. இங்கேயிருந்து இலண்டன் போய் சேர்வதற்குள். என்ன என்ன பேசப் போறானோ?. மடியில் அவன் பிள்ளையை வைத்துக் கொண்டு பேசுற பேச்சா இது? " என வழக்கம் அலற தொடங்கிய அவனின் மனசாட்சி.

"கடவுளேளேளேளேளே.. தயவுசெய்து என்னை வேறு யாருக்காவது மனசாட்சியா மாற்றிவிடு. என்னால் இதற்கு மேல் இவனோட மனசாட்சியா இருக்க முடியாது" என்று கதற! ஒரு பலனும் இல்லை.

அமிர்தன் தனது குடும்பத்துடன் சந்தோஷமான எதிர்கால வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான்.
Next epilogue sunday morning dears
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 38
இலண்டன்.
ஆர்னி அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த ஆதர்ஷ். தாயின் பட்டுப் புடவை முந்தானையை, குழந்தைகள் விளையாடும் இரயில் வண்டியை போல் பின்னால் பிடித்தபடி, வாயில் விரலை வைத்துக் கொண்டு அவள் போகும் இடமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்போது கையில் இரண்டு வயது ஆன, தனது மகளை தூக்கிக் கொண்டு, "என்ன ஆனி கிடைத்ததா? "என்றபடி வந்தான் அமிர்தன்.

தயாராக இருந்த ஆடைகளை தேடி எடுத்தவள். அவனை பார்த்து முறைத்து விட்டு விறுவிறுவென சென்று விட்டாள்.

ஆதர்ஷ், அமிர்தனை பார்த்து வாயிலிருந்து கட்டை விரலை எடுக்காமலேயே மீதமுள்ள நான்கு விரல்களால் , பின்னால் வருமாறு செய்கை செய்துவிட்டு சென்றான். ஒன்றும் சொல்ல முடியாமல் பெருமூச்சு விட்டபடி மகளுடன் சென்று காரில் ஏறினான்.

அமிர்தன் காரினை ஓட்ட, அருகில் ராஜூ பட்டுப்பாவாடை அணிந்து கொள்ளை அழகுடன் இருக்கும் தனது பேத்தியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். பின்னிருக்கையில் மெர்லின், ஆதர்ஷ், ஆர்னி அமர்ந்திருந்தனர். இந்திய முறைப்படி நடக்கும் நண்பனின் திருமணத்திற்காகத்தான் நமது பாரம்பரிய உடைகளில் செல்கின்றனர்.

"ஏன் அமிர். நீ பட்டுவேஷ்டி கட்டவில்லையா?" என்றார் ராஜூ..

"நோ டேட். எடுத்து வைத்திருக்கிறேன். அங்கே போய் கட்டிக் கொள்வேன். இப்போதே கட்டிக் கொண்டால் கசங்கி விடும்" என்றான்.

'இவன் எதுக்கு கட்டிக்குவேன் கட்டிக்குவேன் அப்படிங்கிறான். இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ?' என்று அமிர்தனின் மனசாட்சி தான் சந்தேகத்தோடு வந்து கொண்டிருந்தது.

திருமண விழாவில், சத்தியம் செய்தாலும் இது இலண்டன் என்று சொல்ல முடியாத அளவிற்கு பெண்கள் பட்டுப்புடவையிலும், ஆண்கள் பட்டுவேஷ்டி சட்டையும் அணிந்திருந்தது தாய் நாட்டில் இருப்பது போல் தோன்றியது.

திருமண வீட்டினர் இருவருமே தமிழர்கள் என்பதால்! "எங்கும் தமிழ் எதிலும் தமிழாகவே! இருந்தது. ஆர்னி மிகுந்த உற்சாகமாகவே அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் போன் ஒலிக்க.. அழைப்பை எடுத்தாள்.

"ஹலோ ஆனி. சீக்கிரம் வா. எனக்கு வேஷ்டி கட்டி விடு" என்றான் அமிர் .

"கொஞ்சம் முன்னாடி மாப்பிள்ளைக்கே நீங்க தான் கட்டிவிட்டீங்கன்னு கேள்விபட்டேன்" என்றவளிடம்.

"அதுவா! மற்றவர்களுக்கு கட்டிவிட தெரியும். எனக்கு தானாக கட்டிக்க தெரியாது" என்றான் கூலாக.

'அண்டப்புழுகன்' என்று அவனின் மனசாட்சி திட்டிவிட்டு "ஹூம்" என்று முகத்தை திருப்பிக் கொண்டது.

அமிர்தன் இருந்த அறைக்கு வந்தவள். அவனுக்கு வேஷ்டியை அவனை சுற்றி கட்டுவதற்காக நெருங்கி நின்றாள்.

அமிர்தன் கையை தொங்க விட்டுக் கொண்டிருக்க, "கையை மேலே தூக்குங்க" என்றாள்.

அவளை இன்னும் நெருங்கி நின்றவன். கைகளை அவளது வெற்றிடையில் வைத்தான். அமிர்தனது கைப்பட்டதும் ஜெர்க் ஆனவள். கோபமுகமுடியிட்டு, "உங்களை மேலே கையை தூக்கச் சொன்னேன்" என்றாள்.

"கையை எவ்வளவு நேரம் போலீஸ் முன்னாடி நிற்கிற குற்றவாளி மாதிரி தூக்கிக் கொண்டே இருக்கிறது. கை வலிக்குது. அதனால் தான்" என்றவன்.. ஏன்? ஏதாவது டிஸ்டர்ப் ஆகிவிட்டாயா?" என்று கண்ணடித்து கேட்க!

ஆர்னிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை .அவனுக்கு சுறுசுறுப்பாக வேஷ்டி கட்டிவிட முனைந்தாள்.

"ம்க்கும். ஆமான்னு சொன்னாலும் இல்லைன்னு சொன்னாலும் கையை எடுக்க போறதில்லை. அப்புறம் எதுக்கு இந்த கேள்வி" என்று மனசாட்சி நொடித்துக் கொண்டது.

வேஷ்டியை கட்டி விட்டவள். கட்டிவிட்டாச்சு. சீக்கிரம் வெளியில் போங்க, அப்போ தான் "ஹாய் அமிர். ஹலோ ஹேண்ட்சம்னு வருவாளுங்க. போங்க" என்று சிடுசிடுத்தாள்.

"அதற்கு நான் பண்றது. எனக்கு பிள்ளைகள் இருக்கு. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லாமல் சொல்லத்தான். ஆதர்ஷை தூக்கி வைத்துக் கொண்டு போன பங்சனில் நின்றேன். அதற்கும் என்னிடம் கோவித்துக் கொண்டாய்" என்று குற்றப்பத்திரிகை வாசித்தான்.

"டேய் அமிரு. தேவையில்லாமல் அதை நியாபகப்படுத்தி மாட்டிக்கிட்டியேடா அங்க உன் பையனை கொஞ்சுகிறேன்னு உன்னைதானே கொஞ்சுனாளுக. அதில் ஆதர்ஷ்க்கு முத்தம் கொடுக்கறேன்னு. உனக்கு முத்தம் கொடுக்க பார்த்தாலே ஒருத்தி! அதனால் தானே உன்னிடம் ஒரு வாரம் சரியாக பேசாமல் இருக்கிறா. ஹாஹாஹா" நியாபகத்தி விட்டுட்டியேடா" என்று கெக்கபக்க என சிரித்தது.

இதெல்லாம் ஓரு மேட்டரா! என்பது போல் ஆர்னியின் பின்னாலேயே சென்றவன். ஆர்னியை விட்டு நகரவேயில்லை. அவளை கைவளையிலேயே நிறுத்திக் கொண்டான்.

இம்முறையும் அமிர்தனிடம் இளம்பெண்கள் வந்து பேசினார்கள் தான். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருந்தது. மரியாதை தெரிந்தது. அவனை அழகனாக பார்க்காமல்! குடும்பத் தலைவனாக பார்த்தனர்.

திருமணத்தில் கலந்து கொண்டு மாலையில் வீட்டிற்கு வர, அமிர்தன் மட்டும் உடனே வெளியில் சென்று விட்டான்.

இரவு உணவை முடித்து விட்டு, ஆதர்ஷ், ஆதிரா இருவரும் தூங்கிவிட தனித்தனி கட்டிலில் படுக்க வைத்தாளும்! அவர்களது அறையிலேயே கண்ணாடிகளால் தடுப்பு அமைத்து தன் பார்வையில் படும்படி வைத்துக் கொண்டாள்.

மனம் இன்று இலேசாக, ஒரு வாரப்பிரிவு ஏக்கத்தை ஏற்படுத்த! கணவனுக்காக காத்திருந்தாள். மேலும் அரைமணி நேரம் செல்ல! அமிர்தன் வந்துவிட்டான்.

ஆர்னி, சிரித்தபடி அவனிடம் நெருங்க, . குளித்துவிட்டு வருகிறேன் என்று பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான். ஆர்னிக்கு வருத்தமாக இருந்தது. 'என் மேல் கோபமாக இருக்காங்களோ!' என்று கையை பிசைந்தபடி நின்றிருந்தாள்.

குளித்து விட்டு வெளியில் வந்தவன். உடை மாற்றிக் கொண்டு வர, "தனு" என்று மெல்ல அழைத்தாள்.

"என்ன?" என்பது போல் பார்த்தவனிடம்.

"என் மேல் கோபமா இருக்கீங்க. நான் நடந்துக் கொள்வது உங்களுக்கு பிடிக்கல. எனக்கு தெரியும். நான் என்னை மாற்றிக்கனும் தான் நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை .

எனக்கே தெரியுது. நான் உங்களிடம் ரொம்ப பொசசிவ்வா இருக்கேன்னு. ஆனால் என்னால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை!" என்றவளை.

காதலோடு பார்த்தவன். அவளிடம் சென்று, இடுப்பில் கைவைத்து தன்னோடு இழுத்துக் கொண்டு, "யாருடி சொன்னா? நான் உன் மேல் கோபமா இருக்குன்னு? அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ இப்படி இருக்கிறது தான் டி" எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

என்னை யாரும் நெருங்க கூடாதுன்னு நினைக்கிறது தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நான் உனக்கு மட்டும் தான் நினைக்கிற பாரு. அதான்டி எனக்கு ரொம்ப பிடித்ததே!"

காதல்க்காக எதுவேனா விட்டுக் கொடுக்கலாம். ஆனால் காதலிச்சவங்களை விட்டுக்கொடுக்க கூடாது. நீ முதலில் என்னை விட்டு பிரிந்தாலும்! டைவர்ஸ் பேப்பரில் சைன் போடாமல் போனது தான்டி.என் மேல் உள்ள கோபத்தை எல்லாம் போக வைத்தது.

நீ சைன் போடமாட்டேன்னு தெரிந்து தான். நானும் டைவர்ஸ் கேட்டேன். உன்னை என் கூட தக்க வைத்துக் கொள்ள எனக்கு தெரிந்த ஒரே வழி. உன்னோட இந்த காதல் தான்" என்றவன். அவள் கன்னத்தோடு கன்னம் உரச.

"உங்களுக்கு என்னை ஏன் பிடித்தது தனு? "என்றவளிடம்...

"அதுவா! யாருக்கும் கிடைக்காத மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மனைவியாய் கிடைத்திருக்காளே! அதனால் தான்" என்றான்.

"என்ன மாதிரி?" என்றாள் புரியாமல்.

"வாயில் விரலை வைத்துக்கொண்டு தூங்கிற பொண்ணு" என்றவுடன்.

ஆஆஆ என்று விழிவிரித்தவள். அவனுக்கு தெரிந்து விட்டதை அறிந்து! வெட்கப்பட்டு அவனிடம் விலக முயல, எங்கே அவன் விட்டாள் தானே?. விடுங்க தனு. விடுங்க" என்று அவன் முகம் பார்க்காமல் கெஞ்ச.

"அன்றைக்கு டேட் இடம் என்ன கேட்ட? 'ஆதர்ஷ்" இப்படி கைசப்புகிறானே.! தனு விற்கு இப்படி பழக்கம் இருந்துச்சான்னு கேட்டியேடி ஒரு கேள்வி.

நீ வாயில் விரலை வைத்துக் கொண்டு தூங்குவதை செல்லில் போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். அதை எல்லோரிடமும் காண்பிக்கிறேன்" என்று சொல்ல..

"ப்ளீஸ் .ப்ளீஸ் . தனு யாரிடமும் காண்பித்து விடாதீங்க" என்றபடி அவன் செல்போனை எடுக்க ஒட

நொடியில் யூகித்தவன். அவள் கையை பிடித்து இழுத்தபடி கட்டிலில் சரிந்தான். ஆர்னிக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை . சிரித்துக் கொண்டே இருந்தவள்.. அமிர்தனை நிமிர்ந்து பார்க்க!

அவனது பார்வை மாற்றத்தை உணர்ந்து தலைகுனிய... அவளது இதழை தன்வசமாக்கிக் கொண்டவன்.. மனைவியிடத்தில் தனது தேடலை தொடர்ந்தான்.

காதலுக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம்! ஆனால் காதலை அல்ல. அமிர்தன் ஆர்னியின் உண்மையான காதல்தான் அவர்களை சேர்த்து வைத்தது. அவர்களை வாழவும் வைத்திருக்கிறது.

இன்று போல் என்றும் வாழ நாம் வாழ்த்தி விடைபெறுவோம்.
சுபம்
 
Status
Not open for further replies.
Top