எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வன்மையில் மென்மை ஈட்டவா! கதை திரி

Status
Not open for further replies.
டீசர்

"ஓய் பேப்ஸ்.. நான் எதுக்கு உனக்கு அதிரடியா தாலி கட்டி என் கூட இழுத்துட்டு வந்தேன் தெரியுமா.. " என்று எள்ளல் புன்னகையுடன் அவன் வினவ அவளோ இல்லை என்னும் விதமாய் தலையை இருபுறமும் ஆட்டி வைத்தாள்.

"தாலி கட்டி சந்தோசமா குடும்பம் நடத்தி குழந்த பெத்துகிட்டு நாம் இருவர் நமக்கிருவர்ன்னு வாழன்னு நீ நெனச்சிருந்தா சுத்தமா அப்படி எதுவும் கிடையவே கிடையாது" ஒற்றை புருவம் தூக்கி திமிராய் கூறியவன் மேலும் "அப்புறம் எதுக்குன்னு பாக்குறியா.." என்று வினவியவன் விழிகளில் தகித்த அக்னிச் சுவாலையை அவளால் தூரத்திலிருந்தே அறிய முடிந்தது..

"உன் அப்பன் இருக்கான்ல ரொம்ப என்ன டார்ச்சர் பண்றான். சரியா நைட்டு தூங்க கூட முடியல ரொம்ப டார்ச்சரா இருக்கு.. டூ யூ னோ வாட் ரொம்ப ரொம்ப அன்கம்ஃபடபலா பீல் ஆவுது அதான் பழைய கணக்கெல்லாம் ஒரே அடியா தீர்த்துடலாம்னு முடிவெடுத்துட்டேன் அதோட முதல் கட்டம் தான் இது.." என பெண்ணவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை சுட்டிக் காட்டிக் கூறினான்.

"இங்க அடிக்கும் போது அங்க வலிக்கனும்.." என்று பல்லை கடித்தவாறு கூற, அவன் கூற்றில் அவள் இதழ்களோ விரக்தியாய் விரிந்தது‌.

அவள் புன்னகையை கண்டவனுக்கு இருந்த கோபம் பன்மடங்காக எழுந்து ஒரே எட்டில் அவளின் கூந்தலை கொத்தாக பிடிக்க அவன் கொடுத்தவலியில் "ஸ்ஆ" என்று மதி கத்தியே விட்டாள்.

அதை கதறலை கணக்கில் கொள்ளாது "என்னடி திமிரா.." என்று பல்லை கடித்தவன் "பின்ன இருக்காம இருக்குமா.. போர்த் வித் கோல்டன் ஸ்பூன் ஆச்சே" என்றான் நக்கல் தொனியில்..

அவன் பிடி இறுகிக் கொண்டே செல்லச் அவன் பிடியை விளக்கும் அளவு பலசாலி அல்லவே பேதையவள். வலியை தாங்க முடியாது கண்ணீர் தாரை தாரையாக கன்னத்தில் தவழ்ந்து உருண்டோட தேக்கி வைத்த வலியுடன் அவனை ஏறிட்டு பார்த்தவளின் வதனத்தைக் கண்டவன் என்ன நினைத்தானோ சட்டென அவளின் கூந்தலை விடுவித்தவன் தன் பிடரியை அழுத்த நீவி தன்னை சமப்படுத்திக் கொள்ள முயன்றான்.

"இனி இந்த வீட்டுல எல்லா வேலையும் நீதான் பண்ணனும்.. நான் சொல்றத மட்டும் தான் கேட்கனும்.. என் பேச்ச மீறனும்னு நெனச்ச.." ஆள் காட்டி விரலை நீட்டி எச்சரித்தவன் மேலும் எல்லளாக "இவ்வளவு காலம் உங்க வீட்டுல சொகுசா வாழ்ந்த உனக்கு இதெல்லாம் கஷ்டமா தான் இருக்கும், என்ன பண்றது அதான் எனக்கு பொண்டாட்டி ஆகிட்டல்ல இனி எல்லாம் பழகிக்க.. " என்று கூறியவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மதி.
 
Last edited:
அத்தியாயம் : 01

நிலமகள் பூமாதேவியை தன்வசம் தோழமையோடு இணைத்து கொஞ்சி உறவாடிக் கொண்டிருக்கும் நேரமது.

மதிலால் சூழப்பட்டிருந்த அந்த பிரமாண்ட வீட்டை சுற்றியும்‌‌ அமைதியே முழுவுருவாய் தனது சர்வாதிகாரத்தை நிலை நாட்டிக் கொண்டிருந்தது.

காரணம் நடுநிசி என்பதால் அனைவரையும் நித்ராதேவி தன்வசம் தஞ்சம் புகுத்துக்கொண்டிருந்தாள்.

அந்த வீட்டை சுற்றி காவலர்கள்‌‌ கடமையே கண்ணாய் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியது போல் தங்களது இடத்தை விட்டு அசராது நின்ற இடத்தில் இருந்தபடியே சுற்றி‌‌லும் நோட்டமிட்டு கொண்டிருக்க அவர்களில் கண்ணில் மண்ணை தூவி விட்டு திருட்டுப் பூனை போல் பதுங்கி பதுங்கி மெல்ல வீட்டுனுள்ளிருந்து வெளியே வந்தாள் அந்த வீட்டின் இளம் பிறை.

முற்றத்தில்‌ அழகுக்காய் வளர்க்கப்பட்டிருந்த மரம் செடிகளின் பின்னால் மறைந்துப் பதுங்கியவாறு ஒருவழியாய் உயரமாய் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவரை அடைந்து விட்டாள்.

மெல்ல தலையை சுவரின் உயரத்தை தன் வேல் விழிகளால் அளவிட்டவளிடமிருந்தோ பெரு மூச்சு..

அவள் ஐந்தடி உயரத்திற்கு மேலாய் நிமிர்ந்திருக்க முன்னிருந்த மதில் எழும்பப்பட்டிருந்தது என்னவோ அவளை பெரிதும் மிரள வைக்கவில்லை.

ஓர் நொடி சுற்றிலும் பார்வையை அலைய விட்டு நோட்டமிட்டுக் கொண்டவள் பின் ஒரு மூளையில் புதருக்கு பின்னே மறைத்து வைக்கப்பட்டிருந்த கலனை இழுத்து வந்தவள், அதை தாங்கலாய் வைத்து,அதன் மீது ஏறி மதிலை தாவிப் பிடித்து அதில் ஏறியமர்ந்தாள்.

அமர்ந்தபடியே மறுபுறம் திரும்பியவள் பாவாடையை இரு கரங்களாலும் உயர்த்திப் பிடித்தவாறு ஒரே பாய்ச்சலில் காலை அழுத்தி வைத்துக் குதித்ததில் பெண்ணவளின் பாதங்களை உரசிக் கொண்டிருந்த வெள்ளிக் கொலுசு கிளுகிளுத்துச் சிலிர்த்தடங்கியது.

வெள்ளை நிற ரவிக்கை, பாவாடை, தாவணி என அவ்விரவு நேரத்திலும் அவளணிந்திருந்த எளிமையான ஆடை அவளழகை மேலும் மெருகூட்டிக் காட்டியது.

முகம் தெரியாதபடியாய் துப்பட்டாவால் அவள் தன் முகத்தை மறைத்திருந்ததால் அவளின் மை தீட்டப்படா படபடக்கும் வேல் விழிகள் நிலவொளியில் தனித்துவமாய் பளிச்சிட்டு மின்னிக் கொண்டிருந்தது.

அவள் ரிஸிமதி..

சுற்றும் முற்றும் விழிகளை அலைபாய விட்டவள் அறிவால் அந்த பக்கமாய் காவலாளர்களின் நடமாட்டம் குறைவு என்பதை..

துப்பட்டாவால் மறைத்திருந்த அவள் செவ்விதழ்களிலோ புன்னகை அரும்பாய் மலர்ந்தது..

அது வீட்டிருற்கு ஒதுக்குப்புறம் காணப்படும் ஒற்றையடிப் பாதை ஆகையால் அவ்விடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாது போனது பெண்ணவளுக்கு ஏதுவாய் போய்விட்டது.

பாவாடையை ஓடுவதற்கு வாகாய் உயர்த்திப் பிடித்துக் கொண்டவள் அப்பாதை வழியே தான் தினமும் நாடிச் செல்லும் இடத்தை நோக்கி ஓட்டமெடுத்தாள்.

இப்படியான நிகழ்வு ரிஸிமதியின் கடந்து வந்த பக்கங்களில் அதிக இடத்தை பிடித்திருக்கிறது.

படிப்பில் பீ எஷ் டீ முடித்திருக்கிறாளோ இல்லையோ மதில் ஏறிக் குதிப்பதில் முடித்து விட்டாள் என்றே சொல்லலாம். அதற்காய் தைரியசாலி என்ற நாமத்தை பொருத்தி விடமுடியாது..

பளிங்காய் மின்னிக் கொண்டிருக்கும் முழு நிலவின் பிம்பம் உவர் நீரில் விழுந்து காற்றின் இசைவாக்கத்தால் அசைந்து பிசைந்து காட்சியளித்தது.

மதி நடையின் வேகம் குறைய, முகத்திலிருந்த துப்பட்டாவை நீக்கியவள் அக்காட்சியை உள் வாங்கிக் கொண்டாள்.

கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அதிக உயரமுமின்றி அதிகத்தாழ்வுமின்றி நடுத்தரமான அளவில் நிமிர்ந்துக் காணப்பட்ட குன்று அது..

அக்குன்றிலிருந்து பார்த்தால் கீழே பரந்து விரிந்திருக்கும் ஆழி அழகாய் தோற்றமளிக்கும். அதுவும் இரவு நேரங்களில் அவ்விடமே வார்த்தையால் வடிக்க முடியாதளவு ரம்மியமாய் காட்சியளிக்கும்.

பெண்ணவளின் விழிகளில் குடியிருந்த ஏதோ ஓர் கலக்கம் நொடிப்பொழுதில் மறைந்த உணர்வு.

அருகே தனது கரங்களை விரித்து பரந்து விரிந்து விசாலமாய் தோற்றமளித்த மரத்தில் கீழ் கால்களை குறுக்கி அமர்ந்து வானில் ஜொலித்துக் கொண்டிருந்த நிலவை இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் வருகையை எதிர்பார்த்து வரவேற்கும் வகையில் சில்லென்ற குளிர் காற்று உடலை தீண்டிச் செல்ல கைகளை சேர்த்து அணைத்துபடி கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுடன் அத் தருணத்தையும் உள்வாங்கிக் கொண்டாள்.

இந்நொடி வரை நான்கு சுவரிற்கு மத்தியில் மூச்சு முட்டுவதாய் உணரந்தவளுக்கு இச்சூழல் சீரான உணர்வையும் மனநிறைவையும் சேர்த்து வழங்கியது.

நினைவு தெரிந்து இவவிடத்தை அடையாளம் கண்ட நாளிலிருந்து இங்கு நாடி வருகிறாள்.

தொலைவிலிருந்து தன்னையே நோக்குவதாய் மாயை புரியும் நிலமகள், உடலை சிலிர்க்கச் செய்யும் குளிர்காற்று, செவிக்கு இனிமையை சேர்க்கும் எப்பொழுதும் இரைச்சலை உண்டு செய்யும் கடலலைகள், கண்கள் சிமிட்டி படபடக்கும் நட்சத்திரங்கள் என இயற்கை தாய் தன் மடியில் அவளை அரவணைத்து கவிபாடுவதாய் உள்ளுக்குள் ஓர் புத்துணர்வு..

சில நேரங்களில் இவ்விடதிலேயே காலம் பூராய் இருந்து விட்டால் என்ன என்று கூட தோன்றியது முண்டு. யதார்த்தம் இடம் கொடுக்காது என்பதை உணர்ந்தும் மனதில் ஓர் அவா எழச்செய்வதை அவளால் மாற்றியமைக்க முடியவில்லை.

பல மணித்துளிகள் கடந்து சென்ற பின்னும் அவ்வமைதி சூழலில் அந்நிலையிலே கரையை தொட்டு மீழும் கடலலையையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கடந்து தன்னிலையுணர்ந்தவள் இரண்டுபட்ட மனதுடண் அங்கிருந்து புறப்பட்டாள்.

நடுநிஷி என்பதால் சாலை வழி சிறிதும் ஆள் நடமாட்டமின்றி வெறுச்சோடிக் காணப்பட்டது.

உள்ளுக்குள் சிறு உதறலெடுத்தாலும் வீதியோரம் எரிந்த மின் விளக்குகளின் ஒளியுடன் கூடவே நிலமகளும் தனக்கு துணையாய் வருகிறாள் என்ற உறுதிப்பாட்டுடன், நிஷ்சப்தமான இந்த தனிமையும் சிலநேரங்களில் ஓர் இனிமைதான் எனும் விதமாய் இதழோர சிறு புன்னகையுடன் வீட்டை நோக்கி முன்னேறினாள்.

திடீரென எங்கிருந்தோ டமார் என்ற சத்தம் அங்கு நிலவிய அமைதியை கிழித்து செவிப்பறை கிழியும் படியாய் ஒலித்தது.

அச்சத்தத்தில் மதியின் உடல் தூக்கிவாரிப் போட, அவள் கரங்களோ தன்னிச்சையாய் எழுந்து காதுகளை மூடிக் கொண்டது.

அச்சத்தம் ஓய்ந்து அமைதி நிலவ, தன்னை சமப்படுத்திக் கொண்டவள் இமைகள் படபடக்க நெஞ்சில் கையை வைத்தபடி, அச்சத்தம் வந்த திசையை ஆராய்ந்தாள்.

விழிக்கெட்டும் தூரத்தில் சாலை ஓரமாய் மரத்தில் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியிருந்தது. அதனால் எழுந்த சத்தமே அது..

கார் மோதிய வேகத்தில் காரின் முன் பகுதி சிதைந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது..

முதலில் அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள் அடுத்த நொடியே யாருக்காவது எதாவது ஆகிவிட்டதோ என்ற பதைபதைப்பில் அவ்விடத்தை நோக்கி ஓடினாள்.

வண்டியின் அருகே சென்று விழிகளால் ஆராய, வண்டியின் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாய் சிதறியிருக்க ஒட்டுனர் இருக்கையில் ஸ்டியரிங்கில் தலை சாய்ந்தபடியாய் வீழ்ந்தி கிடந்தான் ஒருவன்.

பதற்றம் கலந்த அதிர்ச்சியுடன், "ஹலோ மிஸ்டர்.. மிஸ்டர்.." என்று அழைத்துப் பார்த்தாள்.

அவனிடமிருந்தோ எந்த வித பதிலும் வராது செல்லவும் மேலும் தற்றமடைந்தவள் சிறிதும் யோசிக்காது அவனின் தோள் பட்டையை பிடித்து பின்னோக்கி இழுக்க, பலவீனமாய் இருந்தவன் அவளின் இழுவைக்கு இசைந்து தொப்பென இருக்கையில் வந்து சாய்ந்தான்.

அவன் நிலை கண்டு மதியின் கைகள் நடுக்கம் கண்டது.

வண்டி மரத்தில் மோதிய வேகத்தில் அவன் தலை பலமாக ஸ்டியரிங்கில் மோதியதால் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் பீறிட்டு அவன் தாடை வழியாய் வலிந்து அவன் அணிந்திருந்த வெள்ளை நிற சர்ட்டை கரை படியச் செய்துக் கொண்டிருந்தது.

"ஐயோ" எனக் கத்தியே விட்டாள் அவள்.

அரை மயக்கத்திலிருந்தான் போலும்,, பாவையவளின் முகம் மறைக்கப்பட்டிருந்ததால் அவளை இனம் கண்டு கொள்ள முடியாதனிலையில் அவளின் படபடக்கும் விழிகள் மாத்திரம் மெல்ல திறந்த அவன் விழிகளில் பதிந்து போக, அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியபடியே விழிகள் சொருக ஆழ்மயக்கத்திற்குச் சென்று விட்டான்.

மதி அவனின் நெற்றியில் வலிந்த இரத்தத்தைக் கண்டு பதறிப்போய் தயங்கிவாறே அவனின் வன்கன்னத்தில் கை வைத்துத் தட்டினாள்.

"கண்ண திறந்து பாருங்க, நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா?.." என்ற கேள்வியுடன் அவனின் கன்னத்தை தட்டி உலுக்கி அவனை சுயநினைவிற்கு கொண்டு வர முற்சித்த அவளின் முயற்சிகள் பயனற்றுப் போய் விட்டது.

அவனிடமிருந்தோ பதிலை தவிர்ந்து எந்தவித அசைவுமே வெளிப்படவில்லை.

என்ன செய்வதென்று புரியாது சுற்றுப்புறச் சூழலை நோட்டமிட்டப்படியே, "யாரும் இருக்கீங்களா.. ஹெல்ப் ப்ளீஸ்??, இங்க ஒரருத்தருக்கு அடி பட்டிருக்கு.. ஹெல்ப்.." என உதவி வேண்டி சத்தமாக கத்திய போதிலும் அவள் குரல் மாத்திரமே அமைதியை கிழித்துக் கொண்டு திரும்பி ஒலித்ததே தவிர்த்து யாரும் அத்திசையில் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

அந்த சாலை ஓர் ஒதுக்குப்புறமாய் காணப்பட்டதால் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டமின்றி அவ்விடமே வெறுச்சோடிக் காணப்பட்டது.

மேலும் உதவிக்கு அழைத்து பயனில்லை என்று உணர்ந்தவள் அவன் புறம் திரும்ப அவன் நெற்றியிலிருந்து இரத்தம் விடாது அதிகமாக வெளியேறிக் கொண்டிருப்பதை அவதானித்து, தான் முகத்தை மறைத்திருந்த துப்பட்டாவை கழட்டி அவன் தலையை மெல்ல இருக்கையிலிருந்து தூக்கி காயம் இரத்தப்போக்கை சிறிது கட்டுப் படுத்தும் விதமாய் காயம்பட்ட இடத்தை சுற்றி இறுக்கமாக கட்டு போட்டு விட்டாள்.

'என்ன பண்றது? இவருக்க வேற ரொம்ப அடி பட்டிருக்கே.. ப்ளீடிங் வேற ஆகுதே!" அடுத்து என்ன செய்வது என்று புரியாது சம்பந்தமின்றி முன் பின் அறியாத ஒருவனுக்காய் வருந்தினாள்.

திடீரென ஏதோ துனுக்குற்றவளாய் ஆபத்திற்கு பாவமில்லை என எண்ணி வண்டியை ஆராயத் துவங்கினாள்.

அவள் தேடியது என்னவோ அவன் தொலைபேசியை தான்.. அதுவும் அவளை ஏமாற்றாது அவள் கண்ணில் தென்பட அவசரமாய் அவன் தொலைபேசியை எடுத்து உயிர்பித்தாள்.

அவன் தொலைபேசியிற்கு பாஸ்வேர்ட் இட்டிருக்காதது அவசர நிலையில் பெண்ணவளுக்கு சாதகமாய் அமைய,, நேரத்தை வீண் செய்யாது அவசரமாக அவன் இறுதியாக அழைத்திருந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

உடனே அழைப்பு ஏற்கப்பட்டு "ஹலோ சொல்லுங்க சார்?" என்ற குரல் மறுபக்கத்திலிருந்து மிரட்சியுடன் ஒலிக்க, அதை எதையும் ஆராயும் நோக்கில் அவளில்லை,,

"ஹலோ, நீங்க இவருக்கு யாருன்னு எனக்கு தெரியல, ஆனா யாராச்சும் தெரிஞ்சவங்களா தான் இருப்பீங்கன்னு நினைக்குறேன்.. சீக்கிரம் ***ஸ்ட்ரீட்க்கு வரீங்களா? இவர சீக்கிரமா ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போகணும். இவருக்கு அக்சிடன்ட் ஆகிடிச்சு, தலைல வேற பலமா அடி பட்ட்டு ப்ளீடிங் ஆகுது.. சீக்கிரமா வந்திடுங்க" விடயத்தை மூச்சு விடாது கூறி மேலும் அவசரபடுத்தும் விதமாய் "சீக்கிரம் வந்துடுங்க ப்ளீஸ்" என்று முடித்தவள் அதன் பின்னே இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளிவிட்டாள்.

அவரோ அவள் பேச்சில் முதலில் யார் என புரியாது முழித்தவர் பின் அவள் கூறியதில் அதிர்ந்து, "சரிம்மா நான் இப்பவே ஆம்லன்ஸ்சோட அந்த இடத்துக்கு வந்திடுறேன்" எனக்கூறி அழைப்பை துண்டித்தார்.

ஐந்து நிமிடங்கள் கடப்பதற்கு முன்பே, அந்நபரின் பரிந்துரை படி அங்கு ஆம்லென்ஸ் வரவழைக்கபட்டிருந்தது. ஆம்லென்ஸ்சில அவன் ஏற்றப்பட்டு ஆம்லென்ஸ் அங்கிருந்து நகர முற்பட மதியும் சட்டென அவனுடன் சேந்து ஆம்லன்ஸ்சில் ஏறிக் கொண்டாள்.

ஏனோ அவனுக்காய் அவள் இதயம் வேகமாய் துடிக்கச் செய்தது..

உள்ளுக்குள் ஏதோ இது வரையுணரா ஓர் புது வித உணர்வு. என்ன உணர்கிறாள் என அவளாலே உணர்ந்து கொள்ள முடியவில்லை..

வைத்தியாலையில் நுழைந்தவுனே அவனுக்கான சிகிச்சை வழங்கப்பட, அறைக்கு வெளியிலோ மதி தாவணியின் நுனியை கசக்கியபடி இடம் வலமாய் நடை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

அறை வாசலில் நின்றிருந்த அவனின் பி.ஏ ராமோ அவளை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்னே இருக்காதா?? முன் பின் அறியாத பெண்ணவள்.. யார் என்றே தெரியாத ஒருவனுக்காய் அதுவும் இந்த இரவு நேரத்தில் மெனக்கெடுகிறாள் என்றால் அது வியக்கத்தக்க விடயமல்லவா!

ராம் அவளை செல்லும்படியாய் கூறியும் இல்லை வைத்தியர் வந்ததும் அவன் உடல் நிலை பற்றி அறிந்து விட்டே செல்வதாய் கூறி மறுத்து விட்டாள்.

சிறிது நேரம் கழித்து வைத்தியர் வந்து அவனிற்கு எதுவுமில்லை என்று கூறியதுமேயே மதியின் கால்கள் ஓரிடத்தில் நிலை பெற்றது..

நேரம் நள்ளிரவை தாண்டி விட்டதை அறிந்தவள், ராம் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாய் கூறியும் மறுப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டிற்குத் திரும்பினாள்.
 
Status
Not open for further replies.
Top