அத்தியாயம் - 19
ஒரினச்சேர்க்கை.. (LGBT)
நேர்பாலீர்ப்பு (Homosexuality), ஒருபாலீர்ப்பு, தன்பாலீர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே, அல்லது இரு பாலார்க்கிடையே சம ஈர்ப்பு ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவைக் குறிக்கும்..
தம் பாலினத்தைச் சேர்ந்த ஒரு நபர், சம பாலினத்தவர் மீது காதல், ஈர்ப்பு ஏற்படுவதைத் நேர்பாலீர்ப்பு என அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இது தன்பாலினப் புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும், ஓரினச்சேர்க்கை என்றும் குறிக்கப்படுவதுண்டு.
இது நோயோ, ஹார்மோன் குறைபாடோ அல்ல. இது ஒரு மனவியல் போதை தான்..!
லெஸ்பியன்ஸ் (Lesbians) ஓரினச் சேர்க்கையாளர்கள், இந்த வகையைச் சார்ந்தவர்களில் பெரும்பாலும்.. ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் ஆண்களால பாதிக்கப் பட்டவர்களாக, ஒரு ஆணோடு உறவு வைத்தவர்களாக, ஆண் பெண் உறவில் இருக்கும் அதிகப்படியான வன்முறையை வெறுப்பவர்களாக, மகப்பேறு பற்றிய பயம், மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பவர்கள் தான் அதிகம். இதனால், இவர்கள் ஒரே பாலினத்தவர்களோடு உறவு வைத்துக் கொள்வதை வரவேற்பதும் உண்டு. மேலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மன அழுத்தங்கள், தனிமை, நிராகரிப்பு இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவும், ஏதோ ஒரு வகையில் இந்த பாதிப்புகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும் அதே பாலினத்தின் மீது தோன்றும் ஈர்ப்பும், அன்பும், இந்த ஓரினச்சேர்க்கைக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
இருபால் உறவு கொள்ளும் லெஸ்பியன் வகையைச் சார்ந்தவர்களில்(Bisexual to Lesbian Relationship) ஒருத்தரப்பு தங்களை ஆண்களைப் போல் கற்பனை பண்ணிக் கொண்டு, சிலர் தங்கள் இணையுடன் ஆண் போன்ற பாவனைகளுடன் நடந்து கொள்வதும் உண்டு. இப்படி இருப்பவர்களில் சிலர், உடலுறவின் போது தங்கள் இணையுடன் வன்முறையாக, சிலர் ஆணின் உறவு முறையை கையாள்வது போல் அணுகுவதும் உண்டு. ஆக இது உடல் ரீதியான மாற்றமாக இல்லாது, மனரீதியான மாற்றமாகவே அதிகம் இருக்கின்றது.
(இது கதைக்காக, ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனையின் படி கோர்க்கப்பட்ட சிறு தொகுப்பு. கதைக்கு தேவையான ஒரு பகுதி தகவல் மட்டுமே இதில் உண்டு..)
மூன்று வருடங்களுக்கு முன்..
“சாயா!”
தாயின் அதட்டலில் கண் கலங்கியவள்...
“ஏன்மா இப்படி பண்ணுறீங்க? சின்ன வயசுல இந்தியால இருக்க உங்க தங்கச்சிக்கு குழந்தை இல்லன்னு, என்னைத் தூக்கி வளன்னு அவங்க கைல கொடுத்தீங்க. பத்து வயசுல உங்களைப் பிரிந்து போகும் போது ரொம்ப வலிச்சது. ஆனா.. அப்போ கிடைச்ச லக்சரி லைஃப், என்னோட வயசு ரெண்டுமே சீக்கிரமே அதை ஏத்துக்கிச்சு.
என்னதான் மத்தவங்க இரண்டு பேரை விட, நீங்கள் என் மீது அதிகம் அன்பு வைத்திருந்தாலும், சில பிரிவுகளை ஈடு கட்ட முடியாது. இப்படி நீங்க சொல்றதை தான் செய்யணும், நீங்க சொல்றதை தான் கேட்கணும்னு நினைக்கிற அடிமைத்தனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ விடுங்க. இந்த விஷயத்துல நான் சம்மதிக்க மாட்டேன்.”
“சாயா அடம் பிடிக்காத! உன் நல்லதுக்காக நான் சொல்றதைக் கேளு. அக்கண்யன் அண்ணா வீட்டுக்குத் தான் நீ மருமகளாப் போகணும்னு, உனக்கு பெயர் வச்ச அன்னைக்கே நான் தீர்மானிச்சி விட்டேன். அதைவிட உன் காதலும் ஒன்னும் அவ்வளவு கௌரவமானதில்ல. நம்மளோட சொந்த, பந்தங்களுக்குத் தெரிஞ்சா மானம் போயிடும், சாயா.”
“ஏன், ஏன்? அப்படி என்ன மோசமான லவ் பண்ணிட்டேன? எல்லாரையும் போல தான் நானும் எனக்கு பிடிச்சவரை நேசித்தேன். நீங்க கொடுத்த தனிமையை அவர்தான் போக்குனாரு. இது எல்லாத்தையும் விட, நீங்க சர்வேஷை எனக்கு எப்படி மேரேஜ் பண்ணப் பேசலாம். அவரோட லைஃப் அமெரிக்கால இருக்கு. ரொம்ப வருஷத்துக்கு முன்ன எஜுகேஷனுக்காக போனவரு, அங்கே செட்டில் ஆயிட்டாரு. என்னால அமெரிக்காவுக்கு எல்லாம் போக முடியாது.”
“நீ ஏன் அமெரிக்காவுக்கு போகப் போற, ஒரு பெண் நினைச்சா நடக்காதது எதுவும் இல்லை. நீ சர்வேஷ முழு மனசா மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொல்லு, உனக்காக நீ கொடுக்கப் போற அன்புக்காக, அவன் மாறுவான். நீ போகப் போற குடும்பம், உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும், சாயா. அடம்பிடிக்காத! நீ வாழனும்னு நினைக்கிற வாழ்க்கை, நம் சமூகத்தைப் பொறுத்தவரை அசிங்கம், முரணானது. உனக்கு அது நேசமா, காதலா இருக்கலாம். ஆனா.. பெத்த தாயான என்னாலே அதை ஏத்துக்க முடியல.”
“முடிவா, என்ன தான் அம்மா சொல்றீங்க?”
“என் முடிவில எந்த மாற்றமும் இல்லை. நீ சர்வேஷத் தான் மேரேஜ் பண்ணிக்கணும். ஒருவேளை இல்லன்னு சொன்னா, உங்க அப்பா வரை நான் இதைக் கொண்டு போக வேண்டி வரும்.”
சயத்தா வெகுவாக பயந்து விட்டாள். தந்தையை நினைத்து, தந்தையின் அதிரடியை நினைத்து, தந்தை ஒன்றும் பிற்போக்குவாதி இல்லை தான். ஆனாலுமே இந்தச் சமூகத்தோடு பொருந்தி வாழ நினைப்பவர். தன்னை எந்த அளவு புரிந்து கொள்வார் என்பதில் சந்தேகமே. அதையும் விட, அவர் நண்பன் அக்கண்யனுக்கு முன்பு, அவருக்கு எதுவும் பெரிதில்லை என்பதை மகள் நன்கு அறிவாள்.
தாய் விட்டு விட்டுப் போன இடத்தில் இருந்தவளின் மனப்போக்கை வந்த தொலைபேசி அழைப்பு கலைக்க, அலைபேசியை ஆன் செய்து காதில் வைக்கவே. “இச்.. இச்..” அப்பக்கம் கொடுக்கப்பட்ட முத்தத்திலும், முத்தச் சத்தத்திலும் திக்கு முக்காடி நாணிச் சிவந்தாள்.
“பாவா!” என உற்சாகக் கூச்சலிட.
“பாவா தான்! என்னோட சயத்தா என்ன பண்றாங்க. இலங்கைக்கு போய் ஒரு மாதம் ஆச்சு. இந்த பாபவாவை ஞாபகம் வரலையா?”
அதில் லேசாக விசும்பியவள்...
“ஞாபகம் வராமல் எல்லாம் இல்லை. எப்பவுமே உங்க ஞாபகம் தான். எப்போடா அங்க வந்து உங்க கையணைப்பில் இருப்போம்னு தோணுது.”
அது அப்பக்கம் இருந்தவனின் வேதனை, குரலில் தெரிய..
“என்னடா பண்றது? கொஞ்ச நாளைக்கு அங்கே இரு. எங்க அப்பாவுக்கு நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சிருச்சு. அவர் சாதாரண ஆளா இருந்தா எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனா.. தெலுங்கானா எம்பியை அவ்வளவு சீக்கிரம் சரி கட்ட முடியாது. ஏதாவது ஒரு வகையில அவரை டைவர்ட் பண்ணிட்டு, உன்னை இங்க கூப்பிடுறேன் சாயா.”
“பாவா!”
அவள் அழுகையில் ததும்பிய குரலோடு...
“ஆனா.. என்னால ரொம்ப நாள் இங்கு இருக்க முடியாதுன்னு தோணுது. அம்மாவும் அப்பாவும் எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அதுவும் யாரோடு தெரியுமா? அக்கண்யன் மாமாவோட கடைசி பையன் சர்வேஷோட.”
சன்னமான சிரிப்போடு...
“எனக்கு தெரியுமே.”
“எப்படி பாவா?”
“நீ எங்க இருந்தாலும், என்னோட கண்களும், என்னோட இதயமும் உன்ன நெனச்சுக்கிட்டு தான் இருக்கும்.”
“என்னை எப்படியாவது இங்க இருந்து கூட்டிட்டு போயிருங்க.”
“நான் ஒன்னு சொல்றேன் கேட்குறியா? இந்த மேரேஜ்க்கு நீ சம்மதம் சொல்லு.”
“என்ன?”
அவள் அதிரவும், அப்பக்கம் இருந்தவன் தீட்டிய ரகசிய திட்டத்திற்கு அடிபணிந்தாள், சயத்தா.
காதலில் சுயம் தொலைப்பது ஒரு வகை, சுயமரியாதையை இழப்பதும் ஒரு வகை. சுயமே இல்லாமல் சுயநலத்தோடே வாழ்வது மூன்றாவது வகை. இவர்களின் காதல் சுயநலம் மட்டுமே கொண்டது.
சயத்தா தன் இணையின் திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு இரண்டு நாள் அமைதி காக்க, மூன்றாவது நாள் சயத்தாவை அழைத்த கவிதா.
“என்ன முடிவு செஞ்சிருக்க?”
“அம்மா, இப்பவுமே எனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்ல. உங்களுக்கு தெரியுமே, என்னால அவரைத் தவிர வேற யாரையும் நேசிக்க முடியாது.”
மகளின் குரலில் தெரிந்த உறுதியில், அவள் வழியிலே சென்று அவள் குடுமியைப் பிடிக்க நினைத்த கவிதா, சறுக்கிய முதல் இடம் அது.
“சரி, நான் ஒன்னு சொல்றேன் கேளு, நீ சர்வேஷ கல்யாணம் பண்ணிக்கோ. மே பி உனக்கு இந்த வெட்டிங் லைஃப் பிடிக்கலைன்னா, உன்னால வாழ முடியலன்னா, உன் விருப்பப் படி.. நீ டிவோஸ் எடுத்துக்கோ.”
கவிதாவுக்கு சர்வேஷ் தோற்றத்தில், அவன் புத்திசாலித்தனத்தில், அவன் வெற்றியில், அவன் நேர்த்தியில் என்றுமே பெருமிதம் உண்டு.
சர்வேஷ் போன்ற ஆண்மகனோடு வாழ்பவள், அந்த வாழ்க்கையை அத்தனை எளிதில் இழந்து விடமாட்டாள் என்று ஒரு பக்க சுயநலமாக யோசித்த கவிதாவின் முடிவில், ஒரு குடும்பமே சுயமிழந்து போகப் போவதை, அன்று அவள் அறியவில்லை.
தாயின் யோசனையையும், தன்னவனின் யோசனையையும் மனதுக்குள் கொண்டு மௌனமாகச் சிந்தித்தவள், இறுதியில்...
“இந்த மேரேஜுக்கு நான் சம்மதிக்கிறேன். ஆனா... என்னால் அவங்க வீட்டுக்குள்ள ஒண்ணா வாழ முடியாது. கொஞ்ச நாள் நாங்க தனியா இருந்து பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் மேல விருப்பம் வந்தா, நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்.”
அவள் தன் திட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட, கவிதாவும் மித மிஞ்சிய மகிழ்ச்சியோடு மகள் கன்னத்தை வழித்து முத்தமிட்டவள்...
“இப்பதான் என்னோட மனசுல பாலை வார்த்த. உன் வாழ்க்கை என்னாயிருமோன்னு செத்துகிட்டு இருந்தேன். நல்ல முடிவா எடுத்து இருக்கமா. அதை பற்றி எல்லாம் நீ கவலைப்படாத. ஜனனி அண்ணி பக்குவமானவங்க. நான் சொல்லிப் புரிய வச்சிக்கிறேன்.”
கவிதா அந்தச் செய்தியை உடனே ஜனனிக்கு தெரிவிக்க, அதே உற்சாகத்தோடு ஜனனியோ சர்வேஷிடம் போராடிக் கொண்டிருந்தாள்.
டக்கின் செய்யப்பட்டிருந்த ஃபார்மல் ட்ரெஸ்ஸில், அன்டர் கட் சிகையும்(under cut), மலித்த தாடையும், நெறித்து தடித்த புருவங்களும், ஒற்றைக் காதில் கருப்பு ஸ்டன்ஸ், கையில் வைர காப்பு, கழுத்தில் ஒரு செயின் இதைத் தவிர, அவனையோ அவன் மேனியையோ எந்த அலங்காரமும் அலங்கரிக்கவில்லை. அதுதான் சர்வேஷ் அக்கண்யன்.
என்றும் நேர்த்தியை விரும்புபவன். உடுத்தும் உடையிலிருந்து பேசும் வார்த்தை வரை கண்ணியம் வேண்டும் என்று நினைப்பவன். ஜனனியின் பிள்ளைகளிலேயே நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டவன், சர்வேஷ் மட்டுமே.
ஆதவ் மருத்துவனாக இருந்தாலும், அவனை விட அணியும் ஆடையில் இருந்து பழக்கவழக்கம் வரை ஒரு ஹை கிளாஸ் தோரணையும், சீரான ஒழுக்கமும், சர்வேஷிடம் அதிகமே காணப்படும். புடமிட்ட தங்கமென இருக்கும் மகனின் அழகை கண்களுக்குள் இனிமையாக உள் வாங்கிய ஜனனி.
“இப்போ என்னதான் சொல்ற சர்வா.”
“இப்ப இல்லம்மா, எப்பவுமே என் பதில் நோ தான். அண்ணா ராகவி அண்ணிய மேரேஜ் பண்ணும் போது, நான் கேட்ட ஒரே கேள்வி நம்மளோட வளர்ந்தவங்கள நீ மேரேஜ் பண்ணிக்கிற. உனக்கு இதுல சம்மதமானு தான். அப்போ அண்ணா அண்ணிய லவ் பண்ணாரு. எனக்கு அது பிழையாகத் தோனல. ஆனால் எனக்கு இதுல எந்த ஒரு ஈடுபாடும் இல்லையே.”
அவனை ஆழமாகப் பார்த்த ஜனனி.
“அவளை மனைவியா நினைச்சுப் பார்க்க முடியாதுன்னு தயங்குறியா?”
“அந்தப் பொண்ண நான் இதுவரைக்கும் எப்படியுமே நினைக்கலம்மா. அவளைப் பார்த்த நாட்களைக் கூட, இத்தனை வருஷத்தில் எண்ணி விடலாம். அமெரிக்கால படிக்கணும்னு நினைச்சேன், படிச்சேன். அங்கேயே சிட்டிசன் எடுத்தேன். தொழிலும் பண்றேன். நான் இங்கு இருந்த நாட்கள் ரொம்ப கம்மி. அப்படி இருக்கும் போது, இந்த மாதிரி எந்த எண்ணமும் யாருமேலயும் அங்கயோ, இங்கயோ வந்ததில்லையே.
ஆனால், இந்தத் திருமணம் உறவுகளுக்குள் சரியா வருமான்னு தோணுது.”
“ஏன் ராகவிக்கும், ஆத்விக்கும் சரியா அமையலையா? ஆதவ்வும் கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ண மேரேஜ் பண்ணிக்கிட்டான். கவிதா ரொம்ப கவலைப்படுறா, கண்ணா. சயத்தா ரொம்ப வருஷமா தனியா இருந்துட்டாள். இப்போ எங்கேயும் அனுப்பாம பக்கத்திலேயே வச்சுக்கணும்னு நினைக்கிறா. கொஞ்சம் அம்மா பேச்சைக் கேளேன். அம்மா உனக்கு எது செஞ்சாலும் நல்லதா தான் இருக்கும்.
என்ன அத்தான் பார்த்துக்கிட்டே இருக்கீங்க நீங்க சொல்லக் கூடாதா?”
“பேபி அவன் வாழ்க்கை அவன் தான் முடிவெடுக்கணும். என்னோட நாலு பிள்ளைகளோட வாழ்க்கை விஷயத்துல, நான் இது வரைக்கும் தலையிட்டதில்லை. அந்த சுதந்திரத்தை சர்வாவுக்கும் கொடுப்பேன்.”
பெருமிதமாக தந்தையைப் பார்த்து இதழ் பிரியாத மென்னகை பூத்தவன், வாடி இருக்கும் தாயின் வதனத்தில் படிந்த கவலையை பொறுக்காது, தாயின் கன்னத்தை இரு கைகளில் தாங்கியவன்,
“இப்போ என்ன? நான் மேரேஜ் செய்துக்கணும். அதுதானே?”
சிறிது மௌனம் காத்தவன்...
“இதுவரை எனக்கு எந்தப் பெண் மீதும் ஈடுபாடு வந்தது இல்லை, யாரையும் லவ் பண்ணவில்லை. எனக்கு கரஷ்னு சொல்லவும் யாரும் இல்ல. சோ எனக்காக எங்க அம்மா முதன் முதலில் பார்க்கும் பெண்ணை இப்ப நேசிக்கல, உடனே நேசிக்கவும் முடியாது தான். ஆனால், நேசிக்க கண்டிப்பா முயற்சி செய்வேன்.”
“நிஜம் தானா கண்ணா, நிஜமாகத்தான் சொல்றியா?”
“நிஜமாத்தான். நான் அக்கண்யனோட புள்ள. அவரு ஜனனிய எப்படி ஏங்க விடுவேன். என்னோட அம்மாவுக்காக.” என்றவன் தாயின் நெற்றியில் முத்தமிட.
அதை விட என்ன வேண்டும் அந்த அன்னைக்கு. மகன் கூறக் கேட்ட அக்கண்யனோ கர்வத்தில் மீசையை முறுக்கிக் கொண்டான்.
இப்படி சர்வேஷின் சம்மதம் கிடைத்ததும், தடபுடலாக அமர்க்களப்பட்ட திருமணம் மிகப் பிரம்மாண்டமாக இனிதே நடைபெற, திருமணத்தன்று இரவு, கல்கிசையில் இருக்கும் அவர்களின் கெஸ்ட் ஹவுஸில் மணமக்கள் கொண்டு விடப்படவும், இதோ முதலிரவுக்கு அலங்கரிக்கப்பட்ட அறையில், பதுமை போல் அமர்ந்திருந்தாள், சயத்தா.
அந்த நேரம், அறைக்குள் நுழைந்த சர்வேஷைக் கண்டவள் உள்ளம் கிடுக்கிடுத்தது. அவள் உள்ளத்து நடுக்கத்தை உடலில் காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள், கையை ஒன்றோடு ஒன்று இறுக்கமாய் பிணைத்துக் கொண்டு, மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அதில் அவன் மென்னகை புரிந்து, அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
“நெவர்ஸா இருக்கா. ரொம்ப பயப்படுறியா சயத்தா.”
“இஈஈ.. இல்லங்க. அப்படி ஒன்னும் இல்ல.”
“நிஜமாவே, நீ என்னை பிடிச்சு தான் மேரேஜுக்கு சம்மதம் சொன்னியா?”
அவன் கேள்வியில் தூக்கி வாரிப் போடவும், அதிர்ந்து சர்வேஷ் முகம் காண, தவறான கேள்வியைக் கேட்டு அவளை பதட்டப்படுத்தி விட்டோமோ என்று எண்ணியவன்.
“ஓகே, ஓகே ரிலாக்ஸ். நான் நார்மலா தான் கேட்டேன். எதுக்கு இப்படி டென்ஷன் ஆகிற.”
அதில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவளின் இரு விழிகளில் ஒரு தேடல். ஆணின் பார்வை தன் இணையின் பார்வையை, அதன் தேடலை இலகுவில் கண்டு கொள்ளும் சர்வேஷும், சயத்தாவின் கண்களில் உள்ள தேடலைக் கண்டு கொண்டான்.
அவனுக்கு இது முதல் பெண், முதல் இரவு, முதல் உறவு. ஒரு சாதாரண ஆணாக தன் இணையை நினைத்து அவனுக்குள் எதிர்பார்ப்புகள் உண்டு, ஆசைகள் உண்டு, கிளர்ச்சி உண்டு, பரவசமும் உண்டு.
தேடல் என்ற ஆணின் பல கேள்விகளுக்கு பதிலறியும் ஆவலும் உண்டு.
இந்த அத்தனையையும் அவள் ஒருத்தியை தன் இணையாகக் கொண்டு, அறிந்து கொள்ளத் துடித்தான்.
“சயத்தா, உன்னோட கண்கள் பேசிய பாஷையை நான் புரிந்து கொண்டது சரிதானானு தெரியல. ஆனா.. எனக்கான தேடலை உன் கிட்ட என்னால இந்த நிமிஷம் தொடர முடியும். ஆனால் அந்தத் தேடலுக்குப் பின் கணவன் மனைவி உறவுக்கான நேசம் இருக்கு. வாழ்க்கை முழுக்க உன் கரங்களைப் பற்றிக் கொண்டு உன்னை பாதுகாப்பேன்கிற உறுதி இருக்கு. திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட இந்த உறவு மேல பாசம் இருக்கு. ஆனா.. காதல், அது மலர இன்னும் நாளாகும்.
அந்த காதல் மலரும் வரைக்கும் காத்திருக்கணும்னு நீ நினைச்சாலும், எனக்கு சரி. இல்ல.. நம்ம வாழ்க்கையை இப்பவே தொடங்குவோம்னு நீ சொன்னாலும் எனக்கு சரி.”
சயத்தா வாய் மொழியில் சொல்லாத சம்மதத்தை, கணவன் கையை இறுகப் பிடித்து உணர்த்தியவள், விழி மூடித் திறந்து, அவனுக்கு அனுமதி தந்தாள். அதன் பின் சர்வேஷ் தயங்கவில்லை. ஒரு கணவனாக தன் மனைவியிடம் தனக்கான நேசத்தைத் தேடினான். தனக்கான ஏக்கங்களை விதைக்க எண்ணினான்.
அவன் முதல் பெண்ணில், தவமிருந்து காத்த அவன் ஆண்மையின் விரதத்தை, அவளில் முடித்தான். அவன் தேடலில் ஒரு நேசம் இருந்தது. ஆனால், சயத்தாவின் அணைப்பில் வேகத்தில், அசைவில், உடல் மொழியில், அவள் தேடலில் ஒரு ஆராய்ச்சி இருந்தது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி இருந்தது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அவள் தேடல் நேசத்தை சார்ந்திருக்கவில்லை ஒரு நோக்கத்தை சார்ந்திருந்தது. முதல் உறவே தோல்வியைத் தழுவியதை சர்வேஷ் அறியவில்லை. ஆண் கொடுத்த வலியைத் தாங்கி, சுகம் தந்த தன் மனைவியின் மீது பாசம் பெறுக, அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.
“தேங்க்யூ சயத்தா. ஒரு பெண் ஆணிடம் தன்னை இழப்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. இந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.”
அவன் கூறிய ஒற்றை வார்த்தையை வாழும் வரை காப்பாற்றுவான் என்பதை, அன்று அவன் அறியவில்லை. ஆனால் அவள் உள்ளமோ..
‘ஆமாம். நான் என்னை இழந்தேன் தான், உங்களை என் மேல் அனுமதிச்சேன் தான். ஆனா.. உங்களுக்காக இல்ல, என் காதலுக்காக. என்னை காதலிப்பவர்க்காக. எவ்ரி திங் ஸ் ஃபேர் இன் லவ்.’
வஞ்சகத்தோடு முழங்க, காதலின் தெய்வீகம் பொய்த்துப் போன தருணமது!
Last edited: