அகம் - 8
இனியா, “வர்மன் அண்ணா ரொம்ப பாசக்காரங்க தான் டி.. ஆனா, நான் காதலிக்கிறேன்னு சொன்னா எப்படி ஒத்துப்பாங்க?”.
ஆதவன், “ஏன் ஒத்துக்க மாட்டாங்க.. நம்ம பாட்டியே ஒரு ஃபாரினரை தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதுவும் லவ் மேரேஜ்.. உனக்கு இதெல்லாம் தெரியாதா..”.
“அட்லீஸ்ட், நீ இதை பத்தி என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல.. நான் உனக்கு ஏதாவது ஐடியா சஜஸ்ட் பண்ணி இருப்பேன். தேவையில்லாமல் இப்படி கல்யாணத்தையே முடிச்சுட்டு வந்து நிக்கிறீங்க இரண்டு பேரும்”.
ஆதிரை, “எஸ்.. உனக்கு உன் பெரிய அண்ணா கிட்ட சொல்ல பயமா இருந்தால் என்ன.. அட்லீஸ்ட், இவர்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல.. ஏன் டி இவர்கிட்ட கூட சொல்லாமல் மறைத்த?”.
இனியா, “அதான் சொன்னேன்ல.. பயமா இருந்துச்சுனு..” என்றாள் தயங்கியபடி.
ஆதிரை, “போடி.. உன் பயத்துல தீயை வைக்க.. எதைக் கேட்டாலும் பயமா இருந்துச்சு, பயமா இருந்துச்சு இதையே சொல்லு.. எப்போ தான் நீ எல்லாம் தைரியமா இருக்க போறியோ தெரியல”.
“லவ் பண்றதுக்கு மட்டும் உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்.. லவ் பண்ணும் போது இருந்த தைரியம் வீட்ல சொல்லும்போது இல்லையா..”.
இனியா கண்கள் கலங்கி போய், “இப்போ எதுக்கு நீ என்னை திட்டுற.. நீ தானே கல்யாணம் பண்ணா எல்லா பிரச்சனையும் சரி ஆயிடும்னு சொன்ன”.
ஆதிரை, “ஆமா.. நான் ஒரு முட்டாள்.. எல்லாத்தையும் சரியா விசாரிச்சு இருக்கணும். நீ பெரிய பணக்கார குடும்பத்து பொண்ணு.. உங்க வீட்ல இருக்குறவங்க எல்லாருமே ரொம்ப கோவக்காரங்க..”.
“உன்னுடைய லவ்வை பத்தி சொன்னால் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க.. வீட்ல உனக்கு வேற மாப்பிள்ளை வேற பார்த்துட்டாங்க.. இப்படி சொல்லும் பொழுது நான் என்னடி செய்ய முடியும்”.
“அந்த சுச்சுவேஷன்ல உங்க வீட்ல வந்து பேசுனா ஒத்துக்க மாட்டாங்களோனு தோணுச்சு. இப்போ கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறதை முன்னாடியே வந்து நின்று இருக்கலாம். அவங்களே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க..”.
ஆதவன், “சரி, சரி.. விடுங்க.. அதான் எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சே.. இனிமே அதை பத்தி பேசுறதால் நோ யூஸ்..”.
ஆதிரை, “எப்படி விட முடியும் சார்.. இவளுக்கு கல்யாணம் பண்ண போய் உங்க அண்ணன் கோபத்துல என் கழுத்துல தாலியை கட்டிட்டார். நானும் கோவத்துல அவரோட கிளம்பி வந்துட்டேன். இப்போ எனக்கு என்ன பண்றதுனே தெரியல..” என்றவள்.
தன் தலையை இரு கைகளாலும் தாங்கியபடி அருகில் இருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள்.
ஆதவன், “இனி ஒன்னும் பண்ண முடியாது ஆதிரை.. அதான் கல்யாணம் ஆயிடுச்சே.. இனிமே, இது தான் உங்க வீடு.. இப்படியே இருந்திடுங்க..”.
அவனின் வார்த்தையில் அதிர்ந்து அந்த சோபாவில் இருந்து வெடுக்கென்று எழுந்த ஆதிரை, “என்ன சொல்றீங்க சார்? நான் எப்படி இங்க இருக்க முடியும்.. அதுவும் எனக்கும் உங்க அண்ணனுக்கும் எல்லாம் சுத்தமா செட்டாகாது”.
“ஏற்கனவே, ரெண்டு பேரும் கோவத்துல மாத்தி மாத்தி பேச போய் தான் இங்க வந்து நிக்குது. அவர் கூட நான் இருந்தேன்னா திரும்பவும் ஏதாவது பிரச்சனை தான் நடக்கும்”.
ஆதவன், “டோன்ட் கால் மி சார்.. ஆதவன்னு பேர் சொல்லியே கூப்பிடலாம். என் வர்மன் அண்ணா உடைய பொண்டாட்டிக்கு என்னை பெயர் சொல்லி கூப்பிட எல்லா உரிமையும் இருக்கு அண்ணி” என்றான் கிண்டல் குரலில்.
அவனின் ‘அண்ணி’ என்ற விளிம்பில் ஆதிரைக்கு சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது.
முதல் முறை இப்படி ஒருவர் தன்னை அழைத்து கேட்கிறாள். முதல் உறவு.. அதுவும் உரிமையோடு.. அவளின் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
என்ன தான் கோபத்தில் வர்மன் அவளுக்கு தாலியை அணிவித்தாலும் அது கோபத்தில் நடந்த ஒரு விஷயம் தானே.. அவன் பொண்டாட்டி என்று அழைத்தான் தான்.
ஆனால், அதில் சற்றும் அன்போ, பாசமோ, காதலோ இல்லை. ஆனால், ஆதவன் ‘அண்ணி’ என்று அழைக்கும் பொழுது ஏதோ ஒரு உரிமை உணர்வு இருந்தது.
அது தன் அண்ணனின் மனைவியாக ஆதிரையை முழு மனதாக அவன் ஏற்றுக் கொண்டதால் இவளுக்கு அப்படி தோன்றுகிறதோ.. என்னவோ..
முழு மனதுடன் முதல் முறை உறவு முறை வைத்து ஒருவர் தன்னை அழைக்கவும் ஆதிரைக்கு தொண்டையை எதுவோ அடைப்பது போல் இருந்தது.
கண்கள் கலங்கியது.. ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம் மனம் முழுவதும் பரவியது. சட்டென்று அவளின் கண்கள் கலங்கி விடவும்..
ஆதவன், “என்ன ஆதிரை நான் சும்மா உங்களை கிண்டல் பண்றதுக்காக தான் அப்படி சொன்னேன். உங்களுக்கு என்னை எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிட்டுக்கோங்க நோ ப்ராப்ளம்.. இதுக்கு ஏன் கண் கலங்குறிங்க..”.
ஆதிரை, “ச்ச.. ச்ச.. அதுக்காக எல்லாம் இல்ல.. இதுவரைக்கும் நான் தங்கி இருக்க அனாதை ஆசிரமத்துக்கு வந்து நிறைய பேர் அவங்களுடைய பர்த்டே, ஆனிவர்சரி இந்த மாதிரி செலிப்ரேஷன்சை கொண்டாடுவதற்கு வருவாங்க..”.
“அப்போ நிறைய பேரை நான் சந்திச்சிருக்கேன். எல்லாருமே என்கிட்ட உன்னை நான் என் பொண்ணு மாதிரி நினைக்கிறேன்.. உன்னை என் தங்கச்சி மாதிரி நினைக்கிறேன்..”.
“அக்கா மாதிரி நினைக்கிறேன்.. இப்படி தான் சொல்லி இருக்காங்க.. எல்லாமே மாதிரியோட நின்றுவிடும். ஏன்னா, எதுவுமே உண்மை கிடையாது இல்ல..”.
“நிறைய பேர் ஃபேமிலியோட வந்து எங்க ஆசிரமத்துல செலிப்ரேட் பண்றதை பார்க்கும் பொழுது எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கும். இந்த மாதிரி ஒரு ஃபேமிலி எனக்கும் இருந்திருக்கலாமேனு தோணும்”.
“ஆனா, இப்போ நீங்க அண்ணி என்று சொன்னதும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை. என் லைஃப்லையே ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஒரு ஃபீலிங்ஸை நான் எக்ஸ்பிரியன்ஸ் பண்றேன்”.
ஆதவன், “டோன்ட் வொரி ஆதிரை.. உங்களை இதுவரைக்கும் எல்லாரும் வேணும்னா அக்கா மாதிரி, தங்கச்சி மாதிரி, பொண்ணு மாதிரினு சொல்லி இருக்கலாம்”.
“ஆனா, இனிமே அப்படி இருக்காது. உங்களுக்குனு ஒரு சர்க்கிள் ஆஃப் ரிலேஷன்ஸ் கிடைச்சிருக்காங்க.. எங்க அண்ணனுக்கும் உங்களுக்கும் எப்படி கல்யாணம் நடந்திருந்தாலும் சரி.. நடந்தது நடந்தது தான்..”.
“இப்போ உங்களுக்கு உரிமையான உறவு நிறைய பேர் இருக்காங்க.. அத்தை, மாமா, நாத்தனார், கொழுந்தனார், சின்னத்த, சின்ன மாமா, பாட்டி எல்லாருமே கிடைச்சிருக்காங்க. அது மட்டும் இல்ல.. எங்களுக்கு ரிலேட்டிவ்ஸ் வேற ரொம்ப அதிகம்”.
அவனின் வார்த்தையில் ஆதிரையின் இதழில் மென் புன்னகை ஒன்று படர்ந்தது.
இனியா, “பாத்தியா.. என் அண்ணா உன் கழுத்துல தாலி கட்டிட்டார்னு அவரை திட்டுனல.. இப்போ பாரு அவரால் தான் உனக்கு இவ்வளவு ரிலேட்டிவ்ஸ் கிடைச்சிருக்காங்க”.
ஆதிரை அவளை விளையாட்டாக முறைத்து பார்த்தவள், “அதுக்காக உன் அண்ணன் பண்ணது சரினு ஆகிடாது. உனக்கு நான் மேரேஜ் பண்ணி வச்சேன்னா..”.
“நீங்க ரெண்டு பேருமே மியூச்வலா லவ் பண்ணீங்க.. அதனால் நான் செஞ்சு வச்சேன். ஆனா, உன் அண்ணன் செஞ்சது எல்லாம் ரொம்ப அநியாயம்..”.
“என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல.. அவரை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. அவர் பாட்டுக்கு தாலி கட்டிட்டார்”.
இனியா மெதுவான குரலில், “இருந்தாலும், நீயும் கொஞ்சம் அண்ணா கிட்ட பார்த்து பேசி இருந்திருக்கலாம்.. நீயும் கொஞ்சம் ஓவரா தான் நடந்துகிட்ட ஆது”.
ஆதவன் இனியாவிடம், “அப்படியா! என்ன நடந்துச்சு இனியா கொஞ்சம் கிளியரா சொல்லேன்”.
பிறகு, ரிஜிஸ்டர் ஆபீஸில் நடந்த மொத்த கதையையும் இனியா ஆதவனிடம் கூற.
ஆதவன் பிரம்மிப்பாக ஆதிரையை பார்த்துக் கொண்டு, “வாவ்! ஏதோ படத்துல வர சீன் பார்த்த மாதிரியே இருக்கு.. ரெண்டு பேருக்குமே வாய் ரொம்ப அதிகம் போல இருக்கே..” என்று கூறி நகைக்க.
அவனை முறைத்து பார்த்த ஆதிரை, “இருந்துட்டு போகட்டுமே.. எதுவாயிருந்தாலும் பேச்சு பேச்சா தானே இருந்திருக்கணும். உங்க அண்ணா இப்படி பொசுக்குனு தாலி கட்டுவார் என்று நான் என்ன கனவா கண்டேன்”.
இனியா, “ஆமா அண்ணா.. இருந்தாலும், இவளுக்கு கொஞ்சம் வாய் அதிகம் தான். காலேஜ்ல கூட யாருக்குமே பயப்பட மாட்டாள். ஸ்டாப் யாராவது கிளாசுக்கு லேட்டா வந்தாங்கனா அவங்களையே கொஸ்டின் பண்ணுவா.. ரொம்ப தைரியமான பொண்ணு இவ”.
ஆதவன், “ஓ! உங்க ஹிஸ்டரி ரொம்ப பயங்கரமா இருக்கும் போலயே” என்றான் ஆதிரையை பார்த்து கிண்டலாக.
ஆதிரை, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஆதவ்.. தப்பு பண்றவங்ககிட்ட கேள்வி கேக்குறது ஒன்னும் தப்பில்லையே.. நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் தேவையில்லாமல் கோபப்பட்டது கிடையாது. நான் கோபப்பட்டு பேசி இருக்கேன்னா அதுக்கு ரீசன் கரெக்ட்டா தான் இருக்கும். வேணும்னா உங்க தங்கச்சிகிட்டயே கேட்டு பாருங்க..”.
இனியா, “ஆமா அண்ணா.. தேவையில்லாமல் கோபப்பட மாட்டாள். கொஞ்சம் நல்லவள் தான்”.
ஆதிரை, “அதே மாதிரி தான் உங்க அண்ணா கிட்டயும் பேசினேன். அவரும் ரொம்ப ஓவரா பேசிட்டார்.. அதான் கோபத்துல நானும் ரெண்டு வார்த்தை பேசிட்டேன். அதுக்காக இப்படியா தாலி கட்டுவாங்க..” என்றாள் சிடுசிடுப்பாக.
ஆதவன் இப்பொழுது சத்தமாக நகைக்க தொடங்கி விட்டான். ஏதோ ஆதிரையிடம் அவனால் மிகவும் இலகுவாக பழக முடிந்தது. வேற்று ஆளாக அவளை பார்க்க தோன்றவில்லை.
ஆதிரையுமே ஆதவனிடம் எளிதில் பழகிவிட்டாள் என்று தான் கூற வேண்டும்.
ஆதவன் சிரிப்பினோடு, “இனியா இனிமே நம்ம வீட்ல நிறைய ஃபன் இருக்கும். நமக்கு நல்லா டைம் பாஸ் ஆகிடும் பாரு..”.
ஆதிரை, “என்னுடைய லைஃபை பார்த்தால் உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கு இல்ல..”.
அப்பொழுது வெளியே செல்வதற்காக தயாராகி ஃபார்மல்ஸில் வந்து நின்ற ஆருத்ர வர்மனை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தாள் ஆதிரை.
ஆருத்ரவர்மனுக்கு அங்கே சிரித்து பேசியபடி நின்றிருக்கும் ஆதவனை பார்க்க கோபம் தலைக்கேறியது.
கோபத்தோடு, “ஆதவ் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? கிளைன்ட் மீட்டிங்கிற்கு டிலே ஆகுது” என்றான் சீறும் குரலில்.
ஆதவன் சட்டென்று தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன், “நான் ரெடி தான் அண்ணா” என்றான் நல்ல பிள்ளையாக.
ஆருத்ர வர்மன் இனியாவையும், ஆதிரையையும் முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
ஆதிரை, ‘எப்
படி முறைச்சிட்டு போறார் பாரு.. இவர் கூட எல்லாம் யாரு வாழ முடியும்.. சரியான சைக்கோ..’ என்று கோபமாக முணுமுணுத்தாள்.