எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேதம் - 19

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 19​

ஒரினச்சேர்க்கை.. (LGBT)

நேர்பாலீர்ப்பு (Homosexuality), ஒருபாலீர்ப்பு, தன்பாலீர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே, அல்லது இரு பாலார்க்கிடையே சம ஈர்ப்பு ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவைக் குறிக்கும்..

தம் பாலினத்தைச் சேர்ந்த ஒரு நபர், சம பாலினத்தவர் மீது காதல், ஈர்ப்பு ஏற்படுவதைத் நேர்பாலீர்ப்பு என அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இது தன்பாலினப் புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும், ஓரினச்சேர்க்கை என்றும் குறிக்கப்படுவதுண்டு.

இது நோயோ, ஹார்மோன் குறைபாடோ அல்ல. இது ஒரு மனவியல் போதை தான்..!

லெஸ்பியன்ஸ் (Lesbians) ஓரினச் சேர்க்கையாளர்கள், இந்த வகையைச் சார்ந்தவர்களில் பெரும்பாலும்.. ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் ஆண்களால பாதிக்கப் பட்டவர்களாக, ஒரு ஆணோடு உறவு வைத்தவர்களாக, ஆண் பெண் உறவில் இருக்கும் அதிகப்படியான வன்முறையை வெறுப்பவர்களாக, மகப்பேறு பற்றிய பயம், மன அழுத்தம் கொண்டவர்களாக இருப்பவர்கள் தான் அதிகம். இதனால், இவர்கள் ஒரே பாலினத்தவர்களோடு உறவு வைத்துக் கொள்வதை வரவேற்பதும் உண்டு. மேலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மன அழுத்தங்கள், தனிமை, நிராகரிப்பு இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவும், ஏதோ ஒரு வகையில் இந்த பாதிப்புகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும் அதே பாலினத்தின் மீது தோன்றும் ஈர்ப்பும், அன்பும், இந்த ஓரினச்சேர்க்கைக்கு காரணமாகவும் அமைந்துள்ளது.

இருபால் உறவு கொள்ளும் லெஸ்பியன் வகையைச் சார்ந்தவர்களில்(Bisexual to Lesbian Relationship) ஒருத்தரப்பு தங்களை ஆண்களைப் போல் கற்பனை பண்ணிக் கொண்டு, சிலர் தங்கள் இணையுடன் ஆண் போன்ற பாவனைகளுடன் நடந்து கொள்வதும் உண்டு. இப்படி இருப்பவர்களில் சிலர், உடலுறவின் போது தங்கள் இணையுடன் வன்முறையாக, சிலர் ஆணின் உறவு முறையை கையாள்வது போல் அணுகுவதும் உண்டு. ஆக இது உடல் ரீதியான மாற்றமாக இல்லாது, மனரீதியான மாற்றமாகவே அதிகம் இருக்கின்றது.

(இது கதைக்காக, ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனையின் படி கோர்க்கப்பட்ட சிறு தொகுப்பு. கதைக்கு தேவையான ஒரு பகுதி தகவல் மட்டுமே இதில் உண்டு..)​

மூன்று வருடங்களுக்கு முன்..​

“சாயா!”​

தாயின் அதட்டலில் கண் கலங்கியவள்...​

“ஏன்மா இப்படி பண்ணுறீங்க? சின்ன வயசுல இந்தியால இருக்க உங்க தங்கச்சிக்கு குழந்தை இல்லன்னு, என்னைத் தூக்கி வளன்னு அவங்க கைல கொடுத்தீங்க. பத்து வயசுல உங்களைப் பிரிந்து போகும் போது ரொம்ப வலிச்சது. ஆனா.. அப்போ கிடைச்ச லக்சரி லைஃப், என்னோட வயசு ரெண்டுமே சீக்கிரமே அதை ஏத்துக்கிச்சு.​

என்னதான் மத்தவங்க இரண்டு பேரை விட, நீங்கள் என் மீது அதிகம் அன்பு வைத்திருந்தாலும், சில பிரிவுகளை ஈடு கட்ட முடியாது. இப்படி நீங்க சொல்றதை தான் செய்யணும், நீங்க சொல்றதை தான் கேட்கணும்னு நினைக்கிற அடிமைத்தனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ விடுங்க. இந்த விஷயத்துல நான் சம்மதிக்க மாட்டேன்.”​

“சாயா அடம் பிடிக்காத! உன் நல்லதுக்காக நான் சொல்றதைக் கேளு. அக்கண்யன் அண்ணா வீட்டுக்குத் தான் நீ மருமகளாப் போகணும்னு, உனக்கு பெயர் வச்ச அன்னைக்கே நான் தீர்மானிச்சி விட்டேன். அதைவிட உன் காதலும் ஒன்னும் அவ்வளவு கௌரவமானதில்ல. நம்மளோட சொந்த, பந்தங்களுக்குத் தெரிஞ்சா மானம் போயிடும், சாயா.”​

“ஏன், ஏன்? அப்படி என்ன மோசமான லவ் பண்ணிட்டேன? எல்லாரையும் போல தான் நானும் எனக்கு பிடிச்சவரை நேசித்தேன். நீங்க கொடுத்த தனிமையை அவர்தான் போக்குனாரு. இது எல்லாத்தையும் விட, நீங்க சர்வேஷை எனக்கு எப்படி மேரேஜ் பண்ணப் பேசலாம். அவரோட லைஃப் அமெரிக்கால இருக்கு. ரொம்ப வருஷத்துக்கு முன்ன எஜுகேஷனுக்காக போனவரு, அங்கே செட்டில் ஆயிட்டாரு. என்னால அமெரிக்காவுக்கு எல்லாம் போக முடியாது.”​

“நீ ஏன் அமெரிக்காவுக்கு போகப் போற, ஒரு பெண் நினைச்சா நடக்காதது எதுவும் இல்லை. நீ சர்வேஷ முழு மனசா மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொல்லு, உனக்காக நீ கொடுக்கப் போற அன்புக்காக, அவன் மாறுவான். நீ போகப் போற குடும்பம், உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும், சாயா. அடம்பிடிக்காத! நீ வாழனும்னு நினைக்கிற வாழ்க்கை, நம் சமூகத்தைப் பொறுத்தவரை அசிங்கம், முரணானது. உனக்கு அது நேசமா, காதலா இருக்கலாம். ஆனா.. பெத்த தாயான என்னாலே அதை ஏத்துக்க முடியல.”​

“முடிவா, என்ன தான் அம்மா சொல்றீங்க?”​

“என் முடிவில எந்த மாற்றமும் இல்லை. நீ சர்வேஷத் தான் மேரேஜ் பண்ணிக்கணும். ஒருவேளை இல்லன்னு சொன்னா, உங்க அப்பா வரை நான் இதைக் கொண்டு போக வேண்டி வரும்.”​

சயத்தா வெகுவாக பயந்து விட்டாள். தந்தையை நினைத்து, தந்தையின் அதிரடியை நினைத்து, தந்தை ஒன்றும் பிற்போக்குவாதி இல்லை தான். ஆனாலுமே இந்தச் சமூகத்தோடு பொருந்தி வாழ நினைப்பவர். தன்னை எந்த அளவு புரிந்து கொள்வார் என்பதில் சந்தேகமே. அதையும் விட, அவர் நண்பன் அக்கண்யனுக்கு முன்பு, அவருக்கு எதுவும் பெரிதில்லை என்பதை மகள் நன்கு அறிவாள்.​

தாய் விட்டு விட்டுப் போன இடத்தில் இருந்தவளின் மனப்போக்கை வந்த தொலைபேசி அழைப்பு கலைக்க, அலைபேசியை ஆன் செய்து காதில் வைக்கவே. “இச்.. இச்..” அப்பக்கம் கொடுக்கப்பட்ட முத்தத்திலும், முத்தச் சத்தத்திலும் திக்கு முக்காடி நாணிச் சிவந்தாள்.​

“பாவா!” என உற்சாகக் கூச்சலிட.​

“பாவா தான்! என்னோட சயத்தா என்ன பண்றாங்க. இலங்கைக்கு போய் ஒரு மாதம் ஆச்சு. இந்த பாபவாவை ஞாபகம் வரலையா?”​

அதில் லேசாக விசும்பியவள்...​

“ஞாபகம் வராமல் எல்லாம் இல்லை. எப்பவுமே உங்க ஞாபகம் தான். எப்போடா அங்க வந்து உங்க கையணைப்பில் இருப்போம்னு தோணுது.”​

அது அப்பக்கம் இருந்தவனின் வேதனை, குரலில் தெரிய..​

“என்னடா பண்றது? கொஞ்ச நாளைக்கு அங்கே இரு. எங்க அப்பாவுக்கு நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சிருச்சு. அவர் சாதாரண ஆளா இருந்தா எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனா.. தெலுங்கானா எம்பியை அவ்வளவு சீக்கிரம் சரி கட்ட முடியாது. ஏதாவது ஒரு வகையில அவரை டைவர்ட் பண்ணிட்டு, உன்னை இங்க கூப்பிடுறேன் சாயா.”​

“பாவா!”​

அவள் அழுகையில் ததும்பிய குரலோடு...​

“ஆனா.. என்னால ரொம்ப நாள் இங்கு இருக்க முடியாதுன்னு தோணுது. அம்மாவும் அப்பாவும் எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. அதுவும் யாரோடு தெரியுமா? அக்கண்யன் மாமாவோட கடைசி பையன் சர்வேஷோட.”​

சன்னமான சிரிப்போடு...​

“எனக்கு தெரியுமே.”​

“எப்படி பாவா?”​

“நீ எங்க இருந்தாலும், என்னோட கண்களும், என்னோட இதயமும் உன்ன நெனச்சுக்கிட்டு தான் இருக்கும்.”​

“என்னை எப்படியாவது இங்க இருந்து கூட்டிட்டு போயிருங்க.”​

“நான் ஒன்னு சொல்றேன் கேட்குறியா? இந்த மேரேஜ்க்கு நீ சம்மதம் சொல்லு.”​

“என்ன?”​

அவள் அதிரவும், அப்பக்கம் இருந்தவன் தீட்டிய ரகசிய திட்டத்திற்கு அடிபணிந்தாள், சயத்தா.​

காதலில் சுயம் தொலைப்பது ஒரு வகை, சுயமரியாதையை இழப்பதும் ஒரு வகை. சுயமே இல்லாமல் சுயநலத்தோடே வாழ்வது மூன்றாவது வகை. இவர்களின் காதல் சுயநலம் மட்டுமே கொண்டது.​

சயத்தா தன் இணையின் திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு இரண்டு நாள் அமைதி காக்க, மூன்றாவது நாள் சயத்தாவை அழைத்த கவிதா.​

“என்ன முடிவு செஞ்சிருக்க?”​

“அம்மா, இப்பவுமே எனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் இல்ல. உங்களுக்கு தெரியுமே, என்னால அவரைத் தவிர வேற யாரையும் நேசிக்க முடியாது.”​

மகளின் குரலில் தெரிந்த உறுதியில், அவள் வழியிலே சென்று அவள் குடுமியைப் பிடிக்க நினைத்த கவிதா, சறுக்கிய முதல் இடம் அது.​

“சரி, நான் ஒன்னு சொல்றேன் கேளு, நீ சர்வேஷ கல்யாணம் பண்ணிக்கோ. மே பி உனக்கு இந்த வெட்டிங் லைஃப் பிடிக்கலைன்னா, உன்னால வாழ முடியலன்னா, உன் விருப்பப் படி.. நீ டிவோஸ் எடுத்துக்கோ.”​

கவிதாவுக்கு சர்வேஷ் தோற்றத்தில், அவன் புத்திசாலித்தனத்தில், அவன் வெற்றியில், அவன் நேர்த்தியில் என்றுமே பெருமிதம் உண்டு.​

சர்வேஷ் போன்ற ஆண்மகனோடு வாழ்பவள், அந்த வாழ்க்கையை அத்தனை எளிதில் இழந்து விடமாட்டாள் என்று ஒரு பக்க சுயநலமாக யோசித்த கவிதாவின் முடிவில், ஒரு குடும்பமே சுயமிழந்து போகப் போவதை, அன்று அவள் அறியவில்லை.​

தாயின் யோசனையையும், தன்னவனின் யோசனையையும் மனதுக்குள் கொண்டு மௌனமாகச் சிந்தித்தவள், இறுதியில்...​

“இந்த மேரேஜுக்கு நான் சம்மதிக்கிறேன். ஆனா... என்னால் அவங்க வீட்டுக்குள்ள ஒண்ணா வாழ முடியாது. கொஞ்ச நாள் நாங்க தனியா இருந்து பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் மேல விருப்பம் வந்தா, நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்.”​

அவள் தன் திட்டத்திற்கு பிள்ளையார் சுழியிட, கவிதாவும் மித மிஞ்சிய மகிழ்ச்சியோடு மகள் கன்னத்தை வழித்து முத்தமிட்டவள்...​

“இப்பதான் என்னோட மனசுல பாலை வார்த்த. உன் வாழ்க்கை என்னாயிருமோன்னு செத்துகிட்டு இருந்தேன். நல்ல முடிவா எடுத்து இருக்கமா. அதை பற்றி எல்லாம் நீ கவலைப்படாத. ஜனனி அண்ணி பக்குவமானவங்க. நான் சொல்லிப் புரிய வச்சிக்கிறேன்.”​

கவிதா அந்தச் செய்தியை உடனே ஜனனிக்கு தெரிவிக்க, அதே உற்சாகத்தோடு ஜனனியோ சர்வேஷிடம் போராடிக் கொண்டிருந்தாள்.​

டக்கின் செய்யப்பட்டிருந்த ஃபார்மல் ட்ரெஸ்ஸில், அன்டர் கட் சிகையும்(under cut), மலித்த தாடையும், நெறித்து தடித்த புருவங்களும், ஒற்றைக் காதில் கருப்பு ஸ்டன்ஸ், கையில் வைர காப்பு, கழுத்தில் ஒரு செயின் இதைத் தவிர, அவனையோ அவன் மேனியையோ எந்த அலங்காரமும் அலங்கரிக்கவில்லை. அதுதான் சர்வேஷ் அக்கண்யன்.​

என்றும் நேர்த்தியை விரும்புபவன். உடுத்தும் உடையிலிருந்து பேசும் வார்த்தை வரை கண்ணியம் வேண்டும் என்று நினைப்பவன். ஜனனியின் பிள்ளைகளிலேயே நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டவன், சர்வேஷ் மட்டுமே.​

ஆதவ் மருத்துவனாக இருந்தாலும், அவனை விட அணியும் ஆடையில் இருந்து பழக்கவழக்கம் வரை ஒரு ஹை கிளாஸ் தோரணையும், சீரான ஒழுக்கமும், சர்வேஷிடம் அதிகமே காணப்படும். புடமிட்ட தங்கமென இருக்கும் மகனின் அழகை கண்களுக்குள் இனிமையாக உள் வாங்கிய ஜனனி.​

“இப்போ என்னதான் சொல்ற சர்வா.”​

“இப்ப இல்லம்மா, எப்பவுமே என் பதில் நோ தான். அண்ணா ராகவி அண்ணிய மேரேஜ் பண்ணும் போது, நான் கேட்ட ஒரே கேள்வி நம்மளோட வளர்ந்தவங்கள நீ மேரேஜ் பண்ணிக்கிற. உனக்கு இதுல சம்மதமானு தான். அப்போ அண்ணா அண்ணிய லவ் பண்ணாரு. எனக்கு அது பிழையாகத் தோனல. ஆனால் எனக்கு இதுல எந்த ஒரு ஈடுபாடும் இல்லையே.”​

அவனை ஆழமாகப் பார்த்த ஜனனி.​

“அவளை மனைவியா நினைச்சுப் பார்க்க முடியாதுன்னு தயங்குறியா?”​

“அந்தப் பொண்ண நான் இதுவரைக்கும் எப்படியுமே நினைக்கலம்மா. அவளைப் பார்த்த நாட்களைக் கூட, இத்தனை வருஷத்தில் எண்ணி விடலாம். அமெரிக்கால படிக்கணும்னு நினைச்சேன், படிச்சேன். அங்கேயே சிட்டிசன் எடுத்தேன். தொழிலும் பண்றேன். நான் இங்கு இருந்த நாட்கள் ரொம்ப கம்மி. அப்படி இருக்கும் போது, இந்த மாதிரி எந்த எண்ணமும் யாருமேலயும் அங்கயோ, இங்கயோ வந்ததில்லையே.​

ஆனால், இந்தத் திருமணம் உறவுகளுக்குள் சரியா வருமான்னு தோணுது.”​

“ஏன் ராகவிக்கும், ஆத்விக்கும் சரியா அமையலையா? ஆதவ்வும் கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ண மேரேஜ் பண்ணிக்கிட்டான். கவிதா ரொம்ப கவலைப்படுறா, கண்ணா. சயத்தா ரொம்ப வருஷமா தனியா இருந்துட்டாள். இப்போ எங்கேயும் அனுப்பாம பக்கத்திலேயே வச்சுக்கணும்னு நினைக்கிறா. கொஞ்சம் அம்மா பேச்சைக் கேளேன். அம்மா உனக்கு எது செஞ்சாலும் நல்லதா தான் இருக்கும்.​

என்ன அத்தான் பார்த்துக்கிட்டே இருக்கீங்க நீங்க சொல்லக் கூடாதா?”​

“பேபி அவன் வாழ்க்கை அவன் தான் முடிவெடுக்கணும். என்னோட நாலு பிள்ளைகளோட வாழ்க்கை விஷயத்துல, நான் இது வரைக்கும் தலையிட்டதில்லை. அந்த சுதந்திரத்தை சர்வாவுக்கும் கொடுப்பேன்.”​

பெருமிதமாக தந்தையைப் பார்த்து இதழ் பிரியாத மென்னகை பூத்தவன், வாடி இருக்கும் தாயின் வதனத்தில் படிந்த கவலையை பொறுக்காது, தாயின் கன்னத்தை இரு கைகளில் தாங்கியவன்,​

“இப்போ என்ன? நான் மேரேஜ் செய்துக்கணும். அதுதானே?”​

சிறிது மௌனம் காத்தவன்...​

“இதுவரை எனக்கு எந்தப் பெண் மீதும் ஈடுபாடு வந்தது இல்லை, யாரையும் லவ் பண்ணவில்லை. எனக்கு கரஷ்னு சொல்லவும் யாரும் இல்ல. சோ எனக்காக எங்க அம்மா முதன் முதலில் பார்க்கும் பெண்ணை இப்ப நேசிக்கல, உடனே நேசிக்கவும் முடியாது தான். ஆனால், நேசிக்க கண்டிப்பா முயற்சி செய்வேன்.”​

“நிஜம் தானா கண்ணா, நிஜமாகத்தான் சொல்றியா?”​

“நிஜமாத்தான். நான் அக்கண்யனோட புள்ள. அவரு ஜனனிய எப்படி ஏங்க விடுவேன். என்னோட அம்மாவுக்காக.” என்றவன் தாயின் நெற்றியில் முத்தமிட.​

அதை விட என்ன வேண்டும் அந்த அன்னைக்கு. மகன் கூறக் கேட்ட அக்கண்யனோ கர்வத்தில் மீசையை முறுக்கிக் கொண்டான்.​

இப்படி சர்வேஷின் சம்மதம் கிடைத்ததும், தடபுடலாக அமர்க்களப்பட்ட திருமணம் மிகப் பிரம்மாண்டமாக இனிதே நடைபெற, திருமணத்தன்று இரவு, கல்கிசையில் இருக்கும் அவர்களின் கெஸ்ட் ஹவுஸில் மணமக்கள் கொண்டு விடப்படவும், இதோ முதலிரவுக்கு அலங்கரிக்கப்பட்ட அறையில், பதுமை போல் அமர்ந்திருந்தாள், சயத்தா.​

அந்த நேரம், அறைக்குள் நுழைந்த சர்வேஷைக் கண்டவள் உள்ளம் கிடுக்கிடுத்தது. அவள் உள்ளத்து நடுக்கத்தை உடலில் காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள், கையை ஒன்றோடு ஒன்று இறுக்கமாய் பிணைத்துக் கொண்டு, மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அதில் அவன் மென்னகை புரிந்து, அவள் அருகில் வந்து அமர்ந்தான்.​

“நெவர்ஸா இருக்கா. ரொம்ப பயப்படுறியா சயத்தா.”​

“இஈஈ.. இல்லங்க. அப்படி ஒன்னும் இல்ல.”​

“நிஜமாவே, நீ என்னை பிடிச்சு தான் மேரேஜுக்கு சம்மதம் சொன்னியா?”​

அவன் கேள்வியில் தூக்கி வாரிப் போடவும், அதிர்ந்து சர்வேஷ் முகம் காண, தவறான கேள்வியைக் கேட்டு அவளை பதட்டப்படுத்தி விட்டோமோ என்று எண்ணியவன்.​

“ஓகே, ஓகே ரிலாக்ஸ். நான் நார்மலா தான் கேட்டேன். எதுக்கு இப்படி டென்ஷன் ஆகிற.”​

அதில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவளின் இரு விழிகளில் ஒரு தேடல். ஆணின் பார்வை தன் இணையின் பார்வையை, அதன் தேடலை இலகுவில் கண்டு கொள்ளும் சர்வேஷும், சயத்தாவின் கண்களில் உள்ள தேடலைக் கண்டு கொண்டான்.​

அவனுக்கு இது முதல் பெண், முதல் இரவு, முதல் உறவு. ஒரு சாதாரண ஆணாக தன் இணையை நினைத்து அவனுக்குள் எதிர்பார்ப்புகள் உண்டு, ஆசைகள் உண்டு, கிளர்ச்சி உண்டு, பரவசமும் உண்டு.​

தேடல் என்ற ஆணின் பல கேள்விகளுக்கு பதிலறியும் ஆவலும் உண்டு.​

இந்த அத்தனையையும் அவள் ஒருத்தியை தன் இணையாகக் கொண்டு, அறிந்து கொள்ளத் துடித்தான்.​

“சயத்தா, உன்னோட கண்கள் பேசிய பாஷையை நான் புரிந்து கொண்டது சரிதானானு தெரியல. ஆனா.. எனக்கான தேடலை உன் கிட்ட என்னால இந்த நிமிஷம் தொடர முடியும். ஆனால் அந்தத் தேடலுக்குப் பின் கணவன் மனைவி உறவுக்கான நேசம் இருக்கு. வாழ்க்கை முழுக்க உன் கரங்களைப் பற்றிக் கொண்டு உன்னை பாதுகாப்பேன்கிற உறுதி இருக்கு. திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட இந்த உறவு மேல பாசம் இருக்கு. ஆனா.. காதல், அது மலர இன்னும் நாளாகும்.​

அந்த காதல் மலரும் வரைக்கும் காத்திருக்கணும்னு நீ நினைச்சாலும், எனக்கு சரி. இல்ல.. நம்ம வாழ்க்கையை இப்பவே தொடங்குவோம்னு நீ சொன்னாலும் எனக்கு சரி.”​

சயத்தா வாய் மொழியில் சொல்லாத சம்மதத்தை, கணவன் கையை இறுகப் பிடித்து உணர்த்தியவள், விழி மூடித் திறந்து, அவனுக்கு அனுமதி தந்தாள். அதன் பின் சர்வேஷ் தயங்கவில்லை. ஒரு கணவனாக தன் மனைவியிடம் தனக்கான நேசத்தைத் தேடினான். தனக்கான ஏக்கங்களை விதைக்க எண்ணினான்.​

அவன் முதல் பெண்ணில், தவமிருந்து காத்த அவன் ஆண்மையின் விரதத்தை, அவளில் முடித்தான். அவன் தேடலில் ஒரு நேசம் இருந்தது. ஆனால், சயத்தாவின் அணைப்பில் வேகத்தில், அசைவில், உடல் மொழியில், அவள் தேடலில் ஒரு ஆராய்ச்சி இருந்தது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி இருந்தது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அவள் தேடல் நேசத்தை சார்ந்திருக்கவில்லை ஒரு நோக்கத்தை சார்ந்திருந்தது. முதல் உறவே தோல்வியைத் தழுவியதை சர்வேஷ் அறியவில்லை. ஆண் கொடுத்த வலியைத் தாங்கி, சுகம் தந்த தன் மனைவியின் மீது பாசம் பெறுக, அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.​

“தேங்க்யூ சயத்தா. ஒரு பெண் ஆணிடம் தன்னை இழப்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. இந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்.”​

அவன் கூறிய ஒற்றை வார்த்தையை வாழும் வரை காப்பாற்றுவான் என்பதை, அன்று அவன் அறியவில்லை. ஆனால் அவள் உள்ளமோ..​

‘ஆமாம். நான் என்னை இழந்தேன் தான், உங்களை என் மேல் அனுமதிச்சேன் தான். ஆனா.. உங்களுக்காக இல்ல, என் காதலுக்காக. என்னை காதலிப்பவர்க்காக. எவ்ரி திங் ஸ் ஃபேர் இன் லவ்.’​

வஞ்சகத்தோடு முழங்க, காதலின் தெய்வீகம் பொய்த்துப் போன தருணமது!​

 
Last edited:

admin

Administrator
Staff member

அதன் பின் வந்த நாட்களில், சர்வேஷ் அன்பாக நடந்து கொள்வான். அனுசரணையாக அவளை வழி நடத்துவான். அவளை அன்பால் அணைத்துக் கொண்டான். நேசம் கொள்ளை, கொள்ளையாக இருந்தது. காதல் மட்டும் இன்னும் தொலைதூரத்தில் நின்று, அருகில் வரேன் என்றது.​

மனைவியிடம் மனம் திறக்க, அவ்வளவு ஆசை. ஆனால், அவளோ அவனிடம் மௌனம் சாதித்தாள். அவளிடம் அடிக்கடி தனக்கான இணக்கத்தைத் தேடி ஓய்ந்து போவான்.​

சயத்தா அமைதியானவள். பக்குவமானவள். திறமையானவள். ஆனால், சர்வேஷ் என்று வரும்போதோ, மௌனப் பதுமையைப் போல் நடந்து கொள்பவள், படுக்கை அறையில் மட்டும் விட்டில் பூச்சியை போல், அத்தனை சுறுசுறுப்பாக இயங்குவாள். அவன் சலித்து, துவளும் சமயத்தில் கூட, அவளுக்கு அவனில் தேவை இருக்கும். அதைக் காண்கையில், கணவனாக அவளை ஏங்க விடுவதில்லை.​

தினமும் ஜனனியை காணச் சென்று வருவான். அவளையும் மாதம் ஒருமுறை அழைத்துச் செல்வான்.​

ஆனால், அங்கிருக்க அவள் விரும்பவில்லை என்பதைக் கண்டு கொண்டவன், மென்மையான புன்னகையோடு மனைவியின் செயலுக்கு உறுதுணையாக இருந்தான்.​

இதில் அக்கண்யன் மட்டுமே, ஏதோ ஒரு நெருடலோடு சுற்றிக் கொண்டிருந்தது.​

இப்படி இருக்கையில், யுஎஸ்க்கு சர்வேஷ் செல்ல வேண்டிய தேவை ஏற்பட, மனைவியிடம்..​

“சயத்தா, உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கு தானே.”​

அவள் புருவம் சுருக்க...​

“நான் அவசரமா அமெரிக்கா போகணும். நான் போகாம அந்த வேலை முடியாது. நான் அமெரிக்கன் சிட்டிசன். எனக்கு விசா தேவை இல்ல. பட் உனக்கு விசாவுக்கு அப்ளை பண்ணனும்.”​

பதறி போனவள்.​

“இ.. இல்லைங்க, நான் வரல.”​

“ம்ச்.. உன்ன விட்டுட்டு நான் எப்படி தனியாப் போவேன்.”​

“நீயும் வா! டுவன்டி டேஸ் ஒர்க், டென் டேஸ் ஹாலி டேனு இருந்துட்டு வரலாம்.”​

வகுத்த காரியம் கெட்டு விடுமோ என்று அஞ்சியவள்...​

“இல்லங்க, நீங்க போங்களேன். எனக்கு லாங் ட்ராவல் பண்ணும் அளவுக்கு உடம்பு அவ்வளவு நல்லா இல்லை. அண்ட் என்னோட பெஸ்ட் ப்ரண்டு என்னைப் பார்க்க வரதா சொல்லி இருக்கா. சோ.. நான் இங்கேயே இருக்கேன்..”​

சிறிது யோசனைக்குப் பின்...​

“எப்படியோ? நான் திரும்பி வர டுவன்டி டேஸ் ஆகும். நீயும் தனியா இங்க இருக்கணும். சோ அம்மா வீட்ல போய் இரு.”​

உடனே மறுத்தவள்.​

“இல்லைங்க. இந்த மாதிரி அங்க எனக்கு பிரைவசி கிடைக்காது. சோ.. நான் இங்கேயே நிம்மதியாக இருப்பேன்.”​

அதில் தோன்றிய மென் புன்னகையோடு அவளை ஆதூரமாகப் பார்த்தவன் விழிகளில், என் மனைவி என்னிடம் சௌகரியமாக இருக்கிறாள் என்ற பெருமிதம். அதுவரையிலும் அவன் மனைவி முதுகில் குத்துவாள் என்றோ, தீரா வேதனையைத் தருவாள் என்றோ, எள்ளளவும் எண்ணவில்லை.​

அடுத்து வந்த இரண்டே நாளில் சர்வேஷ் அமெரிக்காவுக்குப் பறக்க, சயத்தா அந்த தனிமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டாள். அவன் வரம் கொடுக்கும் அக்ஷய பாத்திரம் என்பதை மறந்து போனவள், சாபத்தைத் தேடியே வாங்கிக் கொண்டாள்.​

இப்படியே இருபது நாளில் பயணத்தை முடித்து கொண்டு வர வேண்டியவன், மனைவியின் தனிமையை மனதில் வைத்துக் கொண்டு பதினைந்தே நாளில் இலங்கை வந்திறங்க, அதை மனைவிக்கோ குடும்பத்துக்கோ தெரிவிக்காது சர்ப்ரைஸாக அவளைக் காண வேண்டும் என்று எதிர்பார்ப்போடு இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான், சர்வேஷ் அக்கண்யன்.​

அவன் அறியப் போவதில்லை. தன் வாழ்வின் மிகப்பெரிய கருப்புப் பக்கத்தை இன்று காணப் போகிறான். அந்தப் பக்கங்கள் அவனை கொல்லாமல் கொன்று புதைக்கப் போகிறது. வாழ்க்கையில் மரணத்தின் எல்லை வரை இன்றைய நாள் அவனைக் கொண்டு நிறுத்தும் என்று அறியாதவன், வீட்டுக்கு வந்து காரை நிறுத்த, அங்கு இருந்த பென்ஸ் காரைக் கண்டு புருவம் சுருக்கியவன்..​

‘சயத்தாவோட ப்ரண்டோட காரோ...?’​

அப்போதும் மனைவியை சந்தேகிக்காது, மனம் நிறைந்து எதிர்பார்ப்போடும், முதல் திருமண பிரிவு தந்த ஏக்கத்தோடும், அவள் மீது கொள்ளை நேசத்தை சுமந்து கொண்டு திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்து, சுற்றி வர பார்த்தான். ஒரு வேலையாளும் இருக்கவில்லை.​

‘என்ன ஆச்சு? சேர்வன்ட் எல்லாருக்கும் லீவ் கொடுத்துட்டாளா? எங்க போனா?’ வாய் விட்டுப் புலம்பியவன், கொண்டு வந்த லக்கேஜை ஹாலில் வைத்துவிட்டு,​

படிகளில் தாவி ஏறியவன், பூட்டாது மெதுவாக சாற்றி வைத்திருந்த அறையை எதிர்பார்ப்போடு திறந்தவன், அதில் கண்ட காட்சியில்... அந்த ஆறடி ஆண்மகனின் ஓங்குதாங்கான தேகமே ஒரு நொடி நடுங்கி ஆட்டம் கண்டது.​

மனைவி மீதான அவன் ஆள் மனது நேசம் எரிதணலில் வெந்து போக, உள்ளம் நொறுங்க, உடல் நடுங்க, கண்ணெல்லாம் கலங்கி குளமாக, நிற்கவும் பலம் இன்றி, அவன் வந்த சுவடே தெரியாமல், அந்த அறையோடு இருக்கும் ஹாலின் நீள் இருக்கையில் அமர்ந்து, தலையை இருக்கைகள் தாங்கிக் கொண்டவன்..​

உள்ளே கண்ட காட்சியை ஜீரணிக்க முடியாமல்... அந்தக் காட்சியை கண்டதினால் தோன்றிய அருவருப்பில், அவன் கை முடிகள் கூட சிலிர்த்து நின்றது. உணர் குவியலாக இருந்தவனுக்கு, எங்கே வாந்தி வந்து விடுமோ என்று ஒரு பக்கம் அச்சமே தொடங்கி விட்டது.​

அப்படி ஒரு காட்சியை, எந்த ஆண் மகனும், தன் மனைவியில் காணத் துணிய மாட்டான். கற்பனையில் கூட அவன் கண்டிராத காட்சி. அசிங்கத்தை தொட்டால் கூட இவ்வளவு அருவருப்பு தோன்றியிருக்காது. குன்றிக் குறுகி முகம் கருஞ்சாந்தாக மாறி அமர்ந்திருந்தவன் உள்ளமோ..​

‘இன்னுமா உயிரோட இருக்க’ என்று எள்ளி நகையாடியது. தன்னோடு கூடிய கூடலில் கூட அவள் இப்படி ஒரு இணக்கம் காண்பித்ததை உள்ளே பார்த்த சில வினாடிகளில் கண்டான். உள்ளே கேட்ட முனகல் சத்தமும், சிரிப்பொலியும், உணர்ச்சியின் பரவசத்தில் உள்ளிருந்த இருவரும் வெளிப்படுத்திய கூச்சலும், இவனை கூனிக் குறுகச் செய்தது.​

தன் கைகளால் தன் கன்னத்தில் வலிக்க, வலிக்க பலமாக அடித்துக் கொண்டவன், அப்படியே முகத்தை பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

உள்ளே இருவரும் புணர்ந்து காமத்தில் கழித்து, கொண்டாடி மிக நிதானமாக குளித்து விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு வெளியே வரவும், இரு கைகளில் முகம் புதைத்து அமர்ந்திருந்த சர்வேஷைக் காண அப்படியே அதிர்ந்து போயினர்.​

அதிலும் சயத்தாவின் உயிரோ ஒரு நொடி அந்தரத்தில் ஆட்டம் கண்டது. எதை மறைப்பது, எதை காப்பது, எதை ஒழிப்பது? தெரியாது முழித்துக் கொண்டிருந்தாள்.​

அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகரமாக வெடிக்க, மெதுவாக..​

“என்னங்க...” அவள் மெதுவாக அழைக்க.​

சயத்தாவின் அழைப்பில் உணர்ச்சிப் பிழம்பானவன், தன்னருகே இருந்த தொலை பேசியைத் தூக்கி சுவற்றில் அடித்து நொறுக்கி இருந்தான்.​

“கூப்பிடாத. இனி ஒரு வார்த்தை என்னை நீ உரிமையாக் கூப்பிடாத. கூப்பிட்ட, நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”​

சர்வேஷ் உள்ளம் இறுக, உணர்வு தொலைத்த முகத்தோடு, தன் ஆறடிக்கு நிமிர்ந்து நின்று அவளை பார்வையால் குத்திக் கிழிக்க..​

சயத்தாவின் பின்வந்து நின்ற ஒரு ஆறடி உருவம், அவள் இரு தோள்களையும் தன் அணைப்பில் வைத்துக் கொண்டது.​

அந்த ஆறடி உருவத்தைக் கண்ட சர்வேஷ் முகத்தில்.. வியப்பும், ஆச்சரியமும், ஆவேசமும் மாறி, மாறி தோன்றியது.​

தன்னைப்போல் ஹன்டர் கட் முடிவெட்டு, தன்னை போல் நெறித்த புருவம், நீட்டு முகம், அழுத்தமான உதடுகள், கூர் மூக்கு, தன்னை போலவே ட்ரெஸ்ஸிங் சென்ஸ், உடல் பாவனைகள் என ஆறடியில் ஒரு பெண்ணை உன்னிப்பாகக் கண்டவனின் புருவங்கள் சுருங்கி அருவருத்து கூசி விரிந்தது.​

“சயத்தா!” அவள் அதட்டவும்.​

“பாவா!”​

“ம்ச்.. இப்ப எதுக்கு பயப்படுற? என்றைக்கா இருந்தாலும் இது தெரியத்தான் போகுது. என்ன ஏதோ உன் மேரேஜ் முடிஞ்சி, ஆறு மாசம் கழிச்சு தெரியணும்னு இருக்கு. நம்ம உறவை உன்னோட டம்மி புருஷனுக்கு தெரிய வைக்க வேண்டிய நேரம் வந்திருச்சு.”​

அவளோ மிடுக்கோடு சர்வேஷ் முன் வந்து...​

“ஐ அம் வர்ஷா சிரஞ்சீவி ராவ். தெலுங்கானா எம்பியோட ஒரே பொண்ணு.”​

அவனை நக்கலாகப் பார்த்தவள்...​

“உங்க மனைவியோட லவ்வர். அப்புறம் உண்மையான லைஃப் பார்ட்னர்.”​

தன் முன்னே தன் உயரத்துக்கு இணையாக வந்து நின்ற பெண்ணையும், அவள் கூறிய வார்த்தையையும் கேட்டவன், ஆண் மகனாக முதல் முறை தன் பிறப்பை எண்ணிக் கூசிப் போனான்.​

“சும்மா சொல்லக் கூடாது மேன், என் பேபி மேல பாசத்தை பொழியிறியாம். உன் அன்பை பார்த்து குற்ற உணர்ச்சியா இருக்கு பாவானு என் பேபியவே சொல்ல வைச்சு இருக்கனா, நீ செம ஆளு மேன்.​

 

admin

Administrator
Staff member

என்ன செய்ய, என் பேபியோட ஆறு மாசம் வாழும் போது தெரியலையே! அவ மனசு வேற இடத்தில் இருக்குனு.”​

“ச்சீ.. ப்ளடி ***”​

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் சர்வேஷ்.”​

“மூச்.. யாருக்கிட்ட குரலை உயர்த்துர. நான் பொம்பளையை கை நீட்டி அடிக்கிறதில்லை. அதுனால உன்னைச் சும்மா விடுறேன்.”​

“என்ன அடிக்கடி, வாட் ஜொக்கா மேன். பொம்பளையா? அது மத்தவங்க பார்வைக்கு. எங்க ரெண்டு பேரோட உறவப் பொருத்த அளவு, அவள் என் மனைவினா, நான் கணவன்.​

அண்ட்.. நான் பார்க்க லைட்டா உன்னை மாதிரி ஃபீச்சர்ஸோட இருக்கேன்ல.”​

அவள் குறையாத நக்கலோடு, சயத்தாவின் முகத்தை வருடிக்கொண்டே...​

“எஸ்.. அந்த ஒரு காரணத்துக்காகத் தான், என்னோட பேபியை பிராக்டிஸ் எடுக்க, உன்னை மேரேஜ் பண்ண வச்சேன்.”​

வர்ஷா கூறவும், அதுவரை அமைதி காத்தவன் அடக்க முடியாத ஆத்திரத்தோடு அவள் கழுத்தில் கைவத்து நெறித்து, ஒரு அடி உயரத் தூக்கவும்,​

அமைதியான சயத்தாவின் மறுரூபத்தை அந்த க்ஷனம் கண்டான். தன் காதல் உருகுவதை பொறுத்தவள், உருக்குலைவதை கண்டதும் அவளுக்குள் இருக்கும் பேய் தலைவிரித்து ஆடத் தொடங்கவே...​

“விடுங்க!” ஆங்காரமாகக் கத்த, சர்வேஷ் அதிர்ந்து நோக்கினான்.​

“விடுடா! விடுனு சொல்றேன்ல.”​

“ஏய்! மரியாதையாப் பேசு.”​

“என் பாவா மேல இருந்து கையை எடு.”​

சயத்தா ‘பாவா’ என்றதும், சர்வேஷ் முகத்தில் வேதனையோடு கூடிய அருவருப்பில் முகம் கசங்க இதழ்களோ “ச்சி..” என்றிட..​

ஆனால், சயத்தா அவனை விட அதிகமான நக்கலோடும், அருவருப்போடும்.​

“ச்சீ..யா! நாங்க இல்ல. நீ ச்சீ..! யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற. எங்களுடைய காதல் புனிதமானது. அப்ப, ஏன் உன்ன மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு கேட்கிறியா?​

என்னோட அம்மாவுக்கு எங்க லவ் விஷயம் தெரிஞ்சிருச்சு. எங்க லவ்வ அவங்களுக்கு புரிஞ்சிக்க முடியல. பெண்ணும்... பெண்ணுங்கிற எங்களோட பால் தான், அவங்களுக்கு பிரச்சனை. எஸ் நாங்கள் லெஸ்பியன்ஸ் தான். இப்ப அதுக்கு என்ன? எங்களுக்கு இப்படி இருக்கப் புடிச்சிருக்கு. வாழப் புடிச்சிருக்கு. எங்களோட தனிமைக்கு நாங்க ரெண்டு பேரும் தான் மருந்து.​

எனக்கு ஆம்பள மேல இன்ட்ரஸ்ட் வரல. ஏன் உன்னோட ஆறு மாசம் வாழ்ந்தனே, அப்போ கூட உன் மேல இன்டரஸ்ட் வரவே இல்ல. ஒருவேளை நீ ஆம்பள இல்லையோ?”​

“ஏய்! உன்னை...” சர்வேஷ் எகிறிக்கொண்டு கையை ஓங்கவே. அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் தன்னைக் கட்டுப்படுத்தியவன், அவள் மீது கை வைப்பதும் அசிங்கம் என எண்ணான். ஓங்கிய கையை தன் தொடையிலேயே குத்திக் கொள்ள...​

“என்ன அசிங்கமா இருக்கா. கை நீட்டி அடிக்க முடியலையா? எவ்வளவு தைரியம் இருந்தா, என் பாவாவ தாக்க நினைப்ப.”​

என்றவள் இன்னும் இருமிக் கொண்டிருந்த வர்ஷாவின் முதுகைத் தடவி..​

“அவரை பற்றி என்ன தெரியும் உனக்கு. எனக்கு 11 வயசு இருக்கும்போது என்னைக் கொண்டு போய், எங்க அம்மா அவங்க தங்கச்சி வீட்டில் விட்டுட்டாங்க. என்னோட சித்தப்பா வர்ஷாவோட அப்பாவுக்கு தான், பிஏவா வேலை பார்த்தாரு. அப்ப தொடங்குனது எங்களோட நட்பு. படிப்படியா அது காதலா மாறிடுச்சு. காதல் உயிர் நேசமா மாறிடுச்சு. எனக்கு அவரை மறக்க முடியல. ஆனா.. அவங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சு, என்னை ஏதாவது பண்ணிடுவார்னு தான் ஸ்ரீலங்காவுக்கு அனுப்புனாரு. ஆனால், என்னோட அம்மா செஞ்ச சதியால், உன்னை மேரேஜ் பண்ணிக்க வேண்டியதாப் போச்சு.”​

சர்வேஷ் மனமுடைந்தான். ஆறு மாத திருமண வாழ்வு தோற்றுப் போனது. எப்படி, இப்படி ஒரு பெண்ணால் கணவனை ஏமாற்ற முடிந்தது. தாம்பத்திய உறவை களங்கப்படுத்த முடிந்தது. அன்பை கொட்டி காட்டிய தன் அன்பின் ஒரு துளி கூடப் புரியவில்லை. அவள் கண் கேட்டதை செயல்படுத்தி முடித்தான். அன்புக்காக என்றும் ஏங்க வைத்ததில்லையே. அப்படிப்பட்டவனை எப்படி உடைக்கத் துணிந்தாள்.​

“இதை என்கிட்ட சொல்றதுக்கு என்ன சயத்தா. நாம படிச்சவங்க தானே, அந்த அளவுக்கா நான் உன்னப் புரிஞ்சிருந்திருக்க மாட்டேன்...”​

அவன் வேதனையோடு கேட்க...​

“யாருக்கு வேணும் உங்க புரிதல். மண்ணாங் கட்டி! அந்தப் புரிதலை வச்சுக்கிட்டு, நான் என்ன பண்ணப் போறேன். எனக்கு எங்களோட காதல் முக்கியம். என் பாவாவோட வார்த்தை தான் முக்கியம். உன்னை ஏன் மேரேஜ் பண்ணிக் கிட்டேனு தெரியுமா? உன்னோட முகம், பாடி லாங்குவேஜ், ஹைட் எல்லாம் என்னோட வர்ஷ் பாவா மாதிரி இருக்குனு தான்.”​

அவன் அவளை அதிர்ந்து நோக்க, வர்ஷாவோ..​

“எஸ்! நான் தான் என்னோட பேபியை உன்னை மேரேஜ் பண்ணிக்கச் சொன்னேன். ஏன் சொன்னேன் தெரியுமா? உன்னை கல்யாணம் பண்ணிக்கும் வரைக்கும், அவ வெர்ஜின். அவளோட வர்ஜுனிட்டி ஒரு ஜென் கிட்ட பிரேக் ஆகணும்னு, எனக்கு ஒரு விருப்பம். பிகாஸ் எங்களோட ஃபர்ஸ்ட் செக்ஸ்ல, அவளை நான் வலிக்க வைக்கக் கூடாதுன்னு நினைச்சேன். நான் கொடுக்கப் போறது சுகமா இருக்கணுமே ஒழிய, என் பொண்டாட்டிக்கு வலியா இருக்கணும்னு நினைக்கல. ஏன்னா... ஐ மேட்லி லவ் ஹேர்.​

அதனால தான், என்னை மாதிரியே இருக்க உன்னை கல்யாணம் பண்ணிக்க வச்சேன்.”​

சர்வேஷ் மனதால் செத்தே போனான். எனக்கு இழைக்கப்பட்ட துரோகம் கொடுத்த மித மிஞ்சிய கோபத்தில், பெண்ணென்றும் பாராது வர்ஷாவை “பளார்” என அறைந்து விட்டான்.​

அதில் மேலும் மூர்க்கமான சயத்தா, சர்வேஷை பிடித்துத் தள்ளியவள்.​

“என்ன தைரியம் இருந்தால் அவரு மேல கைய வைப்ப.”​

அதில் வர்ஷாவுக்கு இன்னும் ஒரு அரை விட்டவன்...​

“என் வாழ்க்கை உங்களுக்கு என்ன விளையாட்டா போச்சா. நானும் உயிரும் உணர்வும் உள்ள மனுஷங்கறத மறந்துட்டீங்களா? எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்டேயே இந்த வார்த்தையை சொல்லுவீங்க. நான் உயிரோட விட்டா தானே, ரெண்டு பேரும் உயிரோட போக...”​

அவன் மூர்க்கத்தோடு கத்தவும். வார்த்தைகளை சாட்டையாக்கிய சயத்தா...​

“என்ன? எங்கள நீ உயிரோட விடுறதா? நீ முதல்ல உயிரோடு இருக்கிறியான்னு பார்ப்போம். என்ன, என்ன செஞ்சு கிழித்துவிடுவ. உன்னால என்ன செய்ய முடியும். என்ன நினைச்சுக்கிட்ட? ஆறு மாசமும் உன்னோட படுத்து பொறன்டதும் அதுக்கு பேர் காதல்னா. நேவர், ஒரு ஆணோட செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்கும்னு உன்கிட்ட ஜஸ்ட் தெரிஞ்சிக்கிட்டேன். என் பாவா உன் கிட்ட தெரிஞ்சுக்கச் சொன்னாரு. இது நாங்க வாழப் போற வாழ்க்கைக்கு தேவைப்படும்னு நினைச்சாரு. அதுக்காக மட்டும் தான், உன்ன அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன்.​

நீ யாரு தெரியுமா? இந்த மேரேஜ் கான்செப்ட் மூலம் எனக்குக் கிடைச்ச செக்ஸ் டாய். உன்னை ஒரு செக்ஸ் டாயா தான் யூஸ் பண்ணேன். ஜஸ்ட் யூஸ் அண்ட் த்ரோ நீட்ஸ் மட்டும் தான்!​

என்னமோ சொல்வியே இந்த படுக்கை அறையில், இந்த படுக்கையில் ஒரு புனிதமான உறவிருக்கு, தூய்மையான பந்தம் இருக்குன்னு. பட்.. நீ இந்த படுக்கை அறையில் யார் தெரியுமா? எனக்கான ஒரு நிர்வாண பொம்மை! ஒரு ஆராய்ச்சிப் பிண்டம்! நீ புனிதமா நினைக்கிற இந்த பெட்ல, உன்ன வச்சு நான் ரிசர்ச் பண்ணி இருக்கேன்.”​

சர்வேஷ் முழுதும் உடைந்தான். ஒரு ஆண்மகன் கேட்கக் கூடாத வார்த்தை. பெண்ணை வன்புணர்தல் மட்டுமா வன்கொடுமை. ஒரு ஆணை வார்த்தையால், செயல்களால் வன்புணர்வதும் வன்கொடுமை தானே! உலகம் அறியாத ஒன்று. விளம்பரப் பொருளாக மாறும் பெண், உலகம் அறிய பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் படுகிறாள். அவள் சித்திரவதைகளுக்கும் இதன் மூலம் ஆளாக்கப்படுகிறாள். தினம், தினம் இந்த சமூகத்தை எதிர்த்துப் போராடுகிறாள்.​

சர்வேஷ் போன்ற பணக்காரப் போர்வைக்குள் இருக்கும் திடகாத்திரமான பல ஆண்கள், பாலியல் துஷ்பிரயோகங்களைச் சொல்ல முடியாமல், வெந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாய் திறந்து சொல்லி சமூகத்தின் முன் போரிட, ஆணென்னும் ஈரெழுத்து வார்த்தை பெரும் தடையாக இருக்கிறது.​

தினம் நூறு பேர் கொண்ட சமூகத்தில் அவர்கள் போர் செய்யத் தேவையில்லை. உள்ளுக்குள் இருக்கும் உணர்வுகளோடு போராடி, போராடி செத்துக் கொண்டிருக்கிறார்கள்.​

பெண்ணுக்கு மட்டுமா கற்புண்டு, ஆணுக்கும் கற்பு உண்டு. இங்கு சர்வேஷ் என்பவனின் கற்பு, தாம்பத்தியம் என்னும் போர்வைக்குள், அவனே அறியாது வன்புணரப்பட்டு கலங்கப்படுத்தப்பட்டது.​

சர்வேஷ் எனும் ஆணும் படுக்கையில் வன் புணரப்பட்டிருக்கிறான் ஆனால், அதன் பெயரோ கௌரவ போர்வைக்குள் இருக்கு தாம்பத்தியம்.​

அதேநேரம் சயத்தாவோ குறையாத வெறியோடு...​

“ஆறு மாதமா வாழ்ந்தோமே! ஏன் புள்ள வரலைன்னு உனக்கு சந்தேகமா இல்லையா? உனக்கு வராது? ஏன்னா, நீ ஒரு முட்டாள். நீ ஒரு பைத்தியம். ஏன்னு சொல்லட்டுமா, இந்த உறவுல குழந்தை வராம இருக்க எல்லா பாதுகாப்பையும் செஞ்சிட்டு தான், உன்னோடு இருந்தேன்.​

நீ என்னோடு வாழ்ந்ததுக்குப் பேரு தாம்பத்தியமா? நெவர். அதுக்குப் பேரு விபச்சாரம். உன்னை ஒரு ஆண் விபச்சாரியா யூஸ் பண்ணிக்கிட்டேன். தட்ஸ் ஆல். இதெல்லாம் சொல்லி, உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன் தான்! ஆனா.. எவ்வளவு தைரியம் இருந்தா என் பாவா மேலயே கைய வைப்ப? உன்னை எப்படி சும்மா விட முடியும்.​

உன் நிர்வாணங்கள் எனக்குக் கிளர்ச்சியத் தரல, தேடல் எனக்கு மயக்கத்தை தரல, இது எல்லாமே என் தேவையை அறிந்து கொள்ள மார்க்கமா தான் இருந்துச்சு.​

இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம், இந்தத் திருமண லைப் வச்சுக்கிட்டு ஒன்னும் புடுங்க முடியாது. இன்னையோட இந்த மேரேஜ் டிராமாவுக்கு, ஒரு என்டு கார்ட் போட்ருவோம்.”​

என்றவள், அவன் அக்னி சாட்சியாக அணிவித்த தாலியைக் கழட்டி, அவன் கையிலே கொடுத்து விட்டு, அவன் வாழ்க்கையில் அவமானங்களை மட்டுமே விட்டு விட்டு, சென்று விட்டாள்.​

சென்றவளோ தன் இணையின் உதவியுடன், அவள் குடும்பம் தடுக்க, தடுக்க டிவோர்ஸ்க்கு அப்ளை செய்து, அதை சென்சேஷனல் நியூஸ் ஆகவும் மாற்றினாள்.​

“ஏன் பாவா? இதைக் கண்டிப்பா செஞ்சுதான் ஆகணுமா?” என்றவளுக்கு.​

“ஆமா, சர்வேஷ் ஒன்னும் சாதாரணமானவன் இல்ல. அக்கண்யன் என்கிற பெரும்புள்ளியோட மகன். சோ.. ஏன் எதுக்குன்னு மீடியாக்காரனுக்கு நம்மள தோண்டி எடுக்க வாய்ப்பு கொடுக்கும் முன், முதலில் நாமளே ஒரு கோடு போட்டுட்டோம்னா, அவனுங்க ரோடு போட்டுருவாங்க.” என்றவள்..​

இதன்படி சர்வேஷ் ஆண்மை இல்லாதவன் என்றும், ஓரினச்சேர்க்கையாளன் என்றும் பட்டம் கட்டி, உலகமெல்லாம் அவனை அசிங்கப் படுத்தினார்கள்.​

என்று தன் திருமண வாழ்க்கை உடைந்ததோ, அன்றே அந்த வீட்டை விட்டு வராதவன் அந்த வீட்டுக்குள்ளே அடைந்து கொண்டான். யாரையும் தன்னைக் காணவோ, அணுகவோ எள்ளளவும் அனுமதி கொடுக்கவில்லை. அவன் நெஞ்சமெல்லாம் வலி மட்டுமே.​

அவள் அத்தனை பேசியும் மௌனித்தான். பேச வார்த்தையே இல்லை. ஒரு பெண் உன்னை காமப் பொருளாக உபயோகப்படுத்தினேன், கட்டிலில் நீ ஒரு ஆராய்ச்சிப் பிண்டம் எனும் போது, ஆண் மகனாக, கணவனாக அவளிடம் எதிர்த்து வாதாடவும், சண்டை போடவுமே அவமானமாக இருந்தது. அப்படி போட்டு மீட்க வேண்டிய தன் நிலையை நினைத்து கூசிப் போனான்..!​

ஒரு வாரத்துக்குள் இவ்வளவும் நடந்து முடிய, துடித்துப் போன அக்கண்யன் இனியும் தாமதிக்காது வீட்டில் மற்றவர்களை தடுத்து விட்டு, மகனைக் காணச் செல்லவே, எங்கும் தேடி மகனை அடைய முடியாதவன், லேசாக சாற்றி இருந்த குளியல் அறைக்குள் நுழைய..​

கூரான கத்தியை எடுத்து தன் ஆண்மையை வெட்ட முனைந்து கொண்டிருந்தான், சர்வேஷ். அதில் அதிர்ந்த அக்கணயன், மகனின் செயலில் துடித்து விட்டான். ஒரு தந்தைக்கு மகனின் நிர்வாணம் ஒன்றும் புதிதில்லை. முதல் முறை ஒரு தந்தை நிர்வாணத்தோடு மகனைக் கையில் ஏந்தும் போது, அவன் முகத்தில் மகிழ்விருக்கும். ஒரு தந்தையின் முதுமைக்கு பின் மகனின் நிர்வாணத்தை கையில் ஏந்தி விட்டால், அதில் மித மிஞ்சிய புத்திர சோகமும் வேதனையும் இருக்கும்.​

இங்கு அக்கண்யன் கண்ட மகனின் நிர்வாணத்தில், சர்வேஷை தாங்கித் தடவி வளர்த்த அவன் நெஞ்சம் வலித்தது. வலித்த நெஞ்சை விட மரணத்துக்கு துடித்துக் கொண்டிருக்கும் மகனே பெரிதாகத் தெரிய, சர்வேஷை கட்டாயப்படுத்தி, கட்டுப்படுத்த நினைக்க, அவன் கட்டுப்படவில்லை. ஓங்கி ஒரு அறை விட்டவன், அவனின் நிதானத்திற்கு மீட்டு வந்தான்.​

தந்தையைப் பார்த்ததும் கூட துளி கண்ணீர் விடவில்லை, கதறவில்லை வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான்.​

“என்ன நடந்துச்சு சர்வா? இந்த அப்பா மேல அன்பு இருக்கிறது உண்மைதான்னா, எல்லாத்தையும் மறைக்காமல் சொல்லு.”​

அவன் கூறியதோ கொஞ்சம், சொச்சத்தையும் கூற, ஆண் மகனாக அவனுக்கு நாவக்கூசியது. உடல் வெந்து தணிந்தது. இந்த உடலை ஒரு ஆய்வுக் கூடமாகப் பயன்படுத்தினேன் என்று அவள் கூறிய வார்த்தைகளில், அவன் உடலையே தீயிட்டுக் கொளுத்தும் வெறியை உண்டு பண்ணியது.​

மகனை மீட்க நினைக்கும் தந்தையின் போராட்டமும், ஒரு எல்லைக்கு மேல் கை கொடுக்கவில்லை. அக்கண்யனோ ஒரு பெரும் கூட்டத்தை நிழல் கொடுத்து காக்கும் ஆலமரமாக, அன்று அவன் அனைவரையும் தாங்கிக் கொண்டான்.​

சர்வேஷோ ஒரு பைத்தியக்காரனைப் போல் அடைந்த அறையை விட்டு வெளியே வராது, கூனிக் குறுகிப் போயிருந்தான். பத்திரிக்கைக்காரர்கள் ஒருபுறம் டிவி நியூஸ் ஒரு புறம், அவனைக் கொத்திப் பிடுங்கக் காத்திருக்க, அவமானம் தாங்காது இரு முறை தன் கையையும் அறுத்துக் கொள்ள முனைந்தான்.​

 

admin

Administrator
Staff member

இதில் மகனை இப்படியே விட்டு விட்டால், அவன் இல்லாமல் போய்விடுவான் என்று அஞ்சிய அக்கண்யன், உடனடியாக அவனை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, அவன் மன நோய்க்கு டிரீட்மென்ட் செய்தவன், ஓரளவு அவனைக் கட்டுப்படுத்தி விட்டு, இலங்கைக்கு வந்து அங்கிருந்த குளறுபடிகளையும் சரி செய்தான்.​

ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் சர்வேஷ் கூற விரும்பாத சில உண்மைகளை தந்தையிடம் கூறவில்லை. அக்கண்யனும் வற்புறுத்தவில்லை. ஒன்று, இது மகனின் அந்தரங்கம். இன்னொன்று அரவிந்தன். இந்த இருவருக்காக அமைதி காத்தான். ஆனால், அவன் திரும்பி அமெரிக்கா சென்ற போது, அவன் தொலைத்த மகன், தொலைந்தே போயிருந்தான்..​

அங்கிருந்தவனோ... ஆறே மாதத்தில் ஆறடி உருவத்தில் அரக்கனாக மாறிப் போயிருந்தவன். மகனின் மாற்றங்களை புருவம் சுருக்கிப் பார்த்த அக்கண்யன்...​

“சர்வா!” அவனை நெருங்கவே. டோன்ட் டச். என்னோட லைஃப்ப நான் பார்த்துக்குவேன். இனி உங்க யாரோட இன்டர்யியரும் எனக்கு தேவையில்லை.​

நீங்க இங்கே வரத் தேவையில்லை. என்னை பார்க்கத் தேவையில்லை. என்னை நான் பார்த்துக்குவேன். உங்க பொண்டாட்டிக்கு சொல்லுங்க, எதுக்காகவும் என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு. அப்படி பண்ணுனா, இதுவரை நீங்கள் பார்க்காத சர்வேஷை பார்க்க வேண்டி வரும்.”​

என்றவன் தந்தையை முகத்தில் அடித்தது போல் பேசி, சொல்லால் அடித்து விரட்ட, அன்றிலிருந்து மூர்க்கனாகிப் போனான். முரடானாகினான்! தொட்டதற்கெல்லாம் கோபம். தன்னை எதிர்த்தவர்களின் உயிரையும் துச்சமென எண்ணினான். எந்த உடலை அவள் ஆய்வுக்கூடம் ஆக்கி ஆராய்ச்சி நடத்தினாளோ, எந்த அவன் ஆண்மையை கேலிக் கூத்தாக்கினாளோ அந்த உடலை தினமும் வருத்திக் கொள்ள நினைத்தான்.​

ஓயாத உடற்பயிற்சி, குத்துச்சண்டை பிராக்டீஸ், யூஎஃப் சாம்பியன்ஷிப் என அவன் பாதை மாறியது. ஒவ்வொரு குத்துச்சண்டையிலும், ஒவ்வொரு மாசிலாஸ் இவன்டிலும் அவன் வாங்கும் அடிகளை ஒரு சைக்கோவைப் போல் வெகுவாக ரசித்தான். அவன் உடலில் தோன்றும் காயங்களை தினமும் கண்ணாடியில் பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்தான். குருதியை நேசித்தான். அவன் உடல் வெளிப்படுத்திய காயங்களை வரவேற்றான்.​

எந்த அவனின் தோற்றம் தனக்கான இணையின் தோற்றம் என்று அவள் கூறினாளோ, அந்த தோற்றத்தை வெறுத்தான். தாடி, மீசை, பிடரி முடியென சர்வேஷ் என்பவன் முழுதாக மாறினான்.​

“நீ எனக்கு செக்ஸ் டாய்.” என்ற அவளின் விகாரங்கள் ஒவ்வொரு இரவும் அவனைக் கொள்ளாமல் கொன்றது.​

அவளோடு கூடிய இரவுகள் சர்வேஷ் என்பவனின் உயிரைப் பிடுங்கி எடுத்தது. செத்து விடுவோமா என்று எத்தனையோ முறை யோசிக்கவே வைத்தாள். அந்த நயவஞ்சகியின் வார்த்தையின் கனம், அவள் கொடுத்த உடல் சுகம், எங்கோ ஒர் மூலையில் ஒட்டிக்கொண்டு அவனை வதம் செய்ய, அதை அடியோடு ஒழிக்க நினைத்தவன், தினம் ஒரு பெண்ணை நாடினான். அவன் ஒவ்வொரு பெண்ணையும் நாடும் போது, அவன் உடம்பில் ஒட்டி இருந்த அவளின் வாசனையை, அந்த வாசனை தந்த அருவருப்பை தொலைக்க நினைத்தான்.​

இங்கே சயத்தாவோ, டிவோர்ஸ்க்கு பின் வர்ஷாவுடன் பெங்களூரில் செட்டிலாக, இருவரும் ஒரு அபார்ட்மெண்டில் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். பெண்ணோடு பெண் உறவா? என்பது நம்மைப் போன்ற கலாச்சார நாடுகளில் மிக பாரதூரமான விஷயம். அதை பெரும்பாலும் ஆதரிப்பதில்லை. பெண்ணோடு பெண் பேசுவதையோ, தங்கி இருப்பதையும் நட்பு ரீதியால் கடந்து விடுவார்கள். அதை இப்படி ஒரு கோணத்தில் யோசிப்பது மிகக் குறைவு என்பதால், அதையே இவர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.​

இதனால் அரவிந்தனுக்கோ, வருணுக்கோ, ராகவிக்கோ, ஏன் ஆத்விக்குக்கோ, ஜனனிக்கோ கூட இது தெரியாமல் போனது. அரவிந்தனைப் பொறுத்தவரை திருமணத்தில் பிடிப்பில்லாதவள் சர்வேஷின் முகத்தில் கரியைப் பூசி விட்டு, தன் ஆருயிர் தோழியோடு தனித்து வாழ்கிறாள் என்பதுதான். ஆனால், அது தோழி இல்லை அவள் இணை என்பதை அவன் அறியாதது அரவிந்தனின் துரதிஷ்டம்.​

இலக்கை குறி வைத்த அர்ஜுனன் தான், சர்வேஷ். ஆனால், அவன் குறியோ தடம் மாறிப் போனது. கர்ணன் தர்ம நெறியாளனே! சேர்ந்த இடமோ, அவனை அதர்மத்தின் கணக்கில் சேர்த்து விட்டது. அது போல, சர்வேஷ் என்பவனின் நெஞ்சில் விதைக்கப்பட்ட அருவருப்பும், அசிங்கமும் அவனை வீரியமுள்ள விஷமாக்கியது.​

இப்படி தன் கடந்த கால அசிங்கங்களை மூச்சு விடாது கூறி முடித்தவன்,​

கூறி முடித்த நொடி அவள் முகத்தில் இருந்து பார்வையை எடுத்து கீழே குனிந்து கொண்டு, “ஓஓஓ..” என்ற கூவலோடு கதறி அழத் தொடங்கினான்.​

இரண்டாம் முறை சர்வேஷ் என்பவன் மனைவியின் கால்களில் விழுந்து கண்ணீர் விடத் தடையாக இருக்கும் ஆணவம் எனும் தீண்டாமையை ஒழித்து, அவளை பிரமிப்பில் ஆழ்த்தினான்.​

அவள் கால் மூட்டை கட்டிக் கொண்டு “ஆஆஆ..” என்ற அவன் கதறல் சத்தம், அந்த ஏசி போடப்பட்ட அறையையே ஆட்டம் காண வைத்தது. காற்றும், பூமியும், வானமும், நீரும், நிலமும், அந்த இரவும் நிலவுமே அவன் கதறலில் மௌனக் கண்ணீர் வடித்தது.​

ஊண் உருக, உயிர் உருக அழுத ஆண் மகனின் கண்ணீரில், அந்தப் பெண் அகலிகை அசையாது அமர்ந்திருந்தாள்.​

‘இப்படியும் நடக்குமா? இது எல்லாம் இந்த உலகில் நடக்கிறதா?’ என்பதை அவள் மனம் அதிர நினைத்துக் கொண்டாள்.​

ஏதோ ஒன்றை எதிர்பார்க்க, கணவனின் மூலம் அறிந்ததோ வேறு ஒன்று. அவள் அமைதியை கலைத்த சர்வேஷ்...​

“என்னோட முதல் நிர்வாணம் என் அம்மா கையில். ஆனால், என் வாழ்க்கையில முக்கியமான நிர்வாணம் என் படுக்கையில் ஒரு செக்ஸ் டாயா. அவ சொன்னா, என்னோட உடம்பு அவளுக்கு ஒரு ஆய்வுக் கூடமாம். பொண்ணுக்கு மட்டும் தான் கற்பு இருக்கா? ஆணுக்கு இல்லையா? தவமிருந்து பாதுகாத்த என் கற்பை, நான் சாகும் வரைக்கும் என்னை நேசிக்கப் போகும் ஒருத்திக்காக மட்டும் தான் கட்டவிழ்க்கனும்னு நினைச்சேன். ஆனா, என் உடலை விபச்சாரம் பன்னதாச் சொன்ன நொடி, ஆம்பளையா நான் செத்துப் போனேன்.​

ஆம்பளைக்கு அழுகத் தெரியாது, ஆம்பளைக்கு கண்ணீர் சொந்தமில்லை, ஆம்பளைக்கு வன்புணர்வு சொந்தமில்லை, ஆம்பளைக்கு பாலியல் தொல்லை சொந்தம் இல்லைனு இந்தச் சமூகமாக ஒரு கட்டுக்கதை கட்டிருச்சு. என்ன ஒன்னு? இதெல்லாம் நடந்தாலும் ஆம்பளைங்கிற ஈகோ வாய் திறக்க விடுவதில்லை. அதுதான் உண்மை.​

ஒரு திருமணம் என்ன செஞ்சுச்சு தெரியுமா? ஆறு மாதங்களா ஒரு படுக்கையறையில் என்னை மூடனாக்கி வன்புணர்வு செஞ்சிச்சு, அதுவும் எனக்கே தெரியாம. ஒரு திருமணம் என்னுடைய நிர்வாணத்தை நானே கண்ணாடியில் பார்க்க பயந்து, கூசி குறுகி நிற்கிற நிலையைத் தந்துச்சு. ஒரு நிர்வாணம் என்னைப் பார்த்து நீயெல்லாம் ஆம்பளையானு காரித் துப்பியது. ஒரு நிர்வாணம் என் ஆண்மையை அறுத்தெறியத் தூண்டிருச்சு.​

யார் சொன்னது? ஆணுறுப்பு ஒரு ஆண்மகனோட கர்வம்னு. ஹு..ஹூம்.. இல்லை! ஆணுறுப்பு பல ஆண் மகனோட அசிங்கங்களை சுமக்கப் போற சின்னம். அது காயங்களை கொடுக்கும். ரணங்களை கொடுக்கும். மீளாத அருவருப்பை கொடுக்கும். எனக்கு கொடுத்துச்சு. வலிக்க வலிக்க கொடுத்துச்சு.”​

கதறியவனின் கதறலுக்கு, அவளிடம் பதில் இல்லை. அவன் பிடரி முடிக்குள் விரலை நுழைத்து, வலிக்க அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.​

“முடியலடி! என்னால முடியல. அன்னைக்கு கேட்டியே யூஎஃப் சாம்பியன், சேர்மன், மில்லினர்னு இது எல்லாம் வெறும் தோற்ற மயக்கம். உண்மையிலேயே இந்த சர்வேஷ் எப்படி இருந்தான் தெரியுமா? ஆண் விபச்சாரியா இருந்தான்.​

என்னை நான் மறக்க நினைத்தேன். என் உடம்புல இருந்த, அவள் கொடுத்த காயங்களை தொலைக்க நினைத்தேன். மிச்சம் மீதி ஒட்டி இருந்தா. அவ வாசனையைக் களைய நினைத்தேன். என்னை வலிக்க வைக்கத் தெரியல. ஒவ்வொரு பொண்ணு பின்னாலயாப் போனேன். என் ராத்திரியைக் கொடுத்தேன். ஆனால், அந்த அசிங்கத்தின் சுவடு, ஒவ்வொரு ராத்திரியும் என்னை ஆழமா காயப்படுத்துனுச்சு.​

ஓயாம வொர்க் அவுட் செய்து, மாடு மாதிரி வளர்த்திருக்க இந்த உடம்பை, ஒருநாள் கூட நான் ரசிச்சது இல்லை. ஏன்னா என் உடம்பு, எனக்கு அருவருப்பை கொடுத்து இருக்கு. தனிப்பட்ட மனிதர்களோட வெறுப்பு விருப்பை பிழைன்னு சொல்ற மூடன் இல்லை நான்.​

ஆனால் என்னோட உணர்வுகளக் கொலை செய்தது என்ன நியாயம்? என்னோட உள்ளம் அணு, அணுவா சித்திரவதை செய்யப்பட்டு இருக்கு. மூனு வருஷம், மூனு வருஷமா நான் தூக்கத்தை தொலைச்சு, பிசாசா சுத்தி இருக்கேன். கண்ண மூடுனா ‘இந்தப் படுக்கை அறையில் அவரை நினைச்சு தான் உன்னோட படுத்தேன்னு’ அவ சொன்ன வார்த்தைகள், என்னைப் பயமுறுத்தி கண்ணை மூடவிடாமல் பண்ணி இருக்கு.​

என்னால முடியலடி! செத்துகிட்டு இருக்கேன். நான் ஏன் உன்னை வலிக்க வைக்கணும்னு சொன்னேன் தெரியுமா? உன்னோட வலி என் மனசுல ஆழமா பதியனும். அதை தவிர எனக்கு வேறு எதுவுமே தோனக் கூடாதுன்னு நினைச்சேன். உன்னோட வாசன மட்டுமே என் இதயத்தை சாந்தப் படுத்தணும்னு நினைச்சேன். ஏன்னா? அந்த அளவுக்கு காயப்பட்டு இருக்கேன். உனக்குத் தெரியுமா திருமணம் என்ற பெயரில், ஒரு ஆணா என்னை அறியாமல் விபச்சாரம் செய்து இருக்கிறேன். இதப் போய் நான் வெளியே சொன்னா, என்னைப் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. பேடின்னு சொல்லுவாங்க. ஏன்னா, அவங்களப் பொறுத்தவரை ஆணுக்கும், பெண்ணுக்கும் விளக்கமே வேறு.​

பெண்ணைத் தீண்டி வதம் செய்யும் தீண்டாமை, என்னை, என்னையே வெறுக்க வைத்திருக்கு.”​

என்ற,வன் அவள் மடியில் முகம் புதைத்து மேலும், மேலும் கதறியழ, சாத்வி அவன் கதறல் அதிகரிக்க, அதிகரிக்க, அவன் பிடரி முடியை வலிக்க பிடித்துக் கொண்டாள்.​

அந்தப் பிடரி முடி கொடுத்த வலி கூட அவனுக்குச் சுகமாக இருந்தது. கதறியவன் முதுகில் கை வைத்து வருடியவள், அவன் பிடரி முடியை அழுந்தப்பற்றி நிமிர்த்தி, தன் முகத்தை பார்க்கச் செய்து...​

“புருஷ், என்னைப் பாருங்க. என்னைப் பாருங்கன்னு சொல்றேன்ல.”​

அவள் கண்களைப் பார்த்தவன்...​

“என்னை நினைச்சு அசிங்கமா இருக்காடி. அருவருப்பா இருக்கா.”​

அவனை ஆழமாகப் பார்த்தவள்...​

“ஒருவேளை திருமணத்துக்கு முதல் என்னை யாராவது ரேப் பண்ணி இருந்தா.. இதே அன்போடும், காதலோடும் என்னோடு இருப்பீங்களா? இல்லை, அருவருப்பா அசிங்கமா பார்ப்பீங்களா...?”​

“சாத்வி!” அவன் ஆக்ரோஷமாகக் கத்தவே...​

“பதில் சொல்லுங்க புருஷ்.”​

அவள் கண்களில் அவள் கண்களில் மீண்டிருந்த திமிரில் சற்றே தெளிந்தவன்....​

“திருப்பிக் குத்துறியா மண்டோதரி...”​

“குத்துறது என் ராவணனா இருந்தா, திருப்பித் தர்றதுல எனக்கென்ன கஷ்டம்?”​

அதில் தோன்றிய மென்புன்னகையோடு..​

“கற்புங்கிறது மனசு சம்பந்தப்பட்டதுடி. உடம்பு சம்பந்தப்பட்டது இல்ல.”​

“அப்ப ஏன் நீங்க கூனி குறுகி நிற்கிறீங்க? அவ தொட்டது உங்க மனசையா? இல்ல, உங்க உடம்பையா? பதில் சொல்லுங்க புருஷ்!”​

அவன் மௌனம் சாதிக்க, அவனை இன்னும் ஆழமாகப் பார்த்துக் கொண்டு,​

“என்னைக்காவது என் தொடுகை அருவருப்பை கொடுத்திருக்கா? என்னோட சுவாசம் அசிங்கத்தை உள்ளத்தில் விதைச்சி இருக்கா.​

என்னோட அருகாமை ஒவ்வாமையை கொடுத்திருக்கா.”​

“ஹூ..ஹூம்..” பலமாக மறுத்தவன்.​

“உன்னோட வாசம், உறங்கும் என் உணர்வுகளை மீட்டுக் கொடுத்த உயிர் வாசம். உன்னுடைய அருகாமை, வெறும் கூடா இருந்த உடம்புக்கு, உயிர் கொடுத்த ஜீவ ஸ்பரிசம். இந்த உயிர் உன்னுடையது. நீ மட்டுமே நான் வாழக் காரணம். எல்லாமா நீயே இருக்கனும்னு தோணுதுடி.”​

அவனை அழுத்தமாகப் பார்த்த அவளின் இதழ்கள்...​

“ராட்சச ராவணா!” ஆசையாக அசைய. அவனும்.​

“மண்டோதரி!” என்று விழி மூடித் திறந்தான்.​

“உங்க மேல கோவம் இருக்கு, புருஷ்.”​

அதில் அவன் விழிகளில் பரிதவிப்பு தோன்ற...​

“அந்தக் கண்ணுல ஒரு நொடி பதட்டமோ, பயத்தையோ நான் பார்த்தேன், அவ்வளவுதான், தொலைஞ்சுங்க!”​

அவள் மிரட்டலில் பூத்த குறு நகையோடு..​

“அவ்வளவுதானா!”​

“இன்னும் இருக்கு. நிறைய கோவம் இருக்கு. அந்தக் கோபத்தை இன்னைக்கே வெளிபடுத்தக் கூடாதுன்னு வைராக்கியம் இருக்கு. நிறைய கண்ணீர் இருக்கு.​

அந்தக் கண்ணீர் எங்கே நீங்க கடந்து வந்த பாதைகளை உங்களுக்கு கருப்புப் புள்ளியாகக் காட்டிருமோன்னு பயமா இருக்கு. கத்தி ஆளுனு சொல்லுற மனசு பேச்சைக் கேட்கனும்னு, நிறைய வெறியா இருக்கு. ஆனா.. அந்த வெறியே! உங்களை நிலைகுலைய வச்சிருமோன்னு ரொம்ப பயமா இருக்கு.​

அழ மாட்டேன். கண்ணீரைக் காட்ட மாட்டேன். கதற மாட்டேன். ஆனா.. உங்களை வலிக்க வைப்பேன். வலிக்க, வலிக்க வைப்பேன்.”​

சர்வேஷ் அவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ள....​

“ஒரு ஆணோட நிர்வாணம், ஒரு தாயோட தாய்மையின் முதல் உறவு. ஒரு ஆணோடு நிர்வாணம் தன் இணையோட காதல். ஒரு ஆணோடு நிர்வாணம், தன் இணையோட நேசம். ஒரு ஆணோடு நிர்வாணம், புது உயிரவோட ஆரம்பம்.​

ஒரு ஆணோட நிர்வாணம், ஒரு வம்சத்தின் தொடக்கம். ஒரு ஆணோட நிர்வாணம் இந்த உலகத்தின் இறுதி முடிவு. இந்த நிர்வாணம் மட்டும் தான் நிஜமான நியதி. நீங்க அருவருத்து கூசிய நிர்வாணத்தின் பெயர், நம்பிக்கை துரோகம். நம்பிக்கை இல்லாத உறவு, நேர்மையே இல்லாத உறவு. ஒழுக்கமே இல்லாத உறவு, உறவே இல்லை.​

இப்ப சொல்லுங்க! சயத்தா அரவிந்தன் உங்களுக்கு யாரு? அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? அவள் கொடுத்த நிர்வாணத்துல உயிர்ப்பு இருக்கா? இல்லை, நான் உங்களுக்கு கொடுத்த உணர்வுக்குப் பெயர் நிர்வாணமா?​

அவ காமத்தின் ஆய்வுக்கூடம்னு உங்க உடம்பைச் சொன்னா இல்லையா? அந்த உடம்பில் இருக்க ஒத்த முடி கூட, இந்த சாத்வியோட ஒத்த பார்வையில் அடிமையாகும்னா, இந்த உடம்பு இன்னுமே எப்படி அவளுக்கு ஆய்வுக்கூடமா மாறும்.​

நீங்க வெட்டிப் போடுற நகமே உங்க பொண்டாட்டி பேச்சு தான் கேட்கும். அப்படி இருக்கும் போது, இந்த அசிங்கத்திற்கும், அவமானத்துக்கும் என்ன மதிப்பு. இன்னைக்கும் சொல்றேன், காதல் சுத்த பத்தம் பார்ப்பதில்லை. எனக்கு பர்ஃபெக்ட்டான லவ் வேணாம். குறையோடு இருக்க இந்த காதல் தான் வேணும்.​

பிழைகளை கடந்து வர்ற இந்தக் காதல் தான் வேணும். தவறுகளை செய்து தடுமாறி நிற்கும், இந்தக் காதலனோட காதல் தான் வேணும். தன் கடந்த காலத்தை கதறலோடு தன் மனைவி காலடியில் கொட்டி முடித்து, கணவன் மனைவிக்குள் தீண்டாமை எனும் கொள்கையை உடைத்த, இந்தக் காதலனோட காதல் தான் வேணும். சொல்லுங்க அப்படிப்பட்ட காதலனா, அப்படிப்பட்ட காதலை உங்களுக்குத் தர முடியுமா?”​

“மண்டோதரி!” என்றவன் குரல் நெகழ்ந்து, குழைந்து வர,​

இந்த உடம்பும், இந்த உடம்பில் இருக்க ஒவ்வொரு செல்லும், எனக்கு மட்டும் தான் சொந்தம். இனி உங்க அருவருப்புக்கும் அசிங்கத்துக்கும் அவசியமில்லை. இனியும் இதை என்னை மீறி வெளிப்படுத்தினால், உங்க மனைவி உங்களை விட்டு கானாப் போயிட்டானு அர்த்தம்.”​

“ஏய் மண்டோதரி!”​

சாத்வியில் இன்னும் ஆழமாகப் புதைந்து கொண்டான்.​

“ரணங்கள் வலிக்கும்னு நினைச்சேன்! ஆனா கொடுக்கிறது நீயா இருந்தா, சுகமா இருக்கு. இப்ப தோணுது அவமானங்கள் எனக்கு நிமிர்வை தராதுனு நினைத்தேன். அந்த அவமானங்களையும் கூட, உன் மூலமாகக் கடந்தா, வரமாத் தெரியுது. ரொம்ப ஆசையா இருக்கு.​

உன்னோடு ஒரு வாழ்வு, உன் இமை துடிப்பை பார்த்துக்கிட்டே வாழ்ந்திடனும்னு ஆசையா இருக்கு. கண்ணுல தேங்கி நிற்கிற அந்த திமிரு, இந்த சர்வேஷை ஆட்டிப் படைக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. உன்னோட உதட்டு சுழிப்புல, என் இதயம் உடைந்து போகணும்னு ஆசையா இருக்கு. வாழ்ந்து பார்க்கட்டுமா? உன்னோடு ஒரு வாழ்க்கை வலிக்க, வலிக்க வாழ்ந்து பார்க்கட்டுமா?”​

கண்ணீரில் ததும்பிய விழிகளோடு, உணர்ச்சியின் குளமாக மாறிய முகத்தோடும், அவள் அவனை காதல் பெருகப் பார்க்க.​

“வலிக்க, வலிக்க வாழ்ந்து பாருங்க.”​

அவனை அணைத்துக் கொண்டாள். அவள் மடியில் தலை வைத்து ஆறுதல் தேடியவன், அந்த மடியில் சொர்க்கம் இருக்கு என்று கண்டு கொண்டான் போலும். அவளில் துஞ்சியவனின் உணர்வுகளும் ஆர்ப்பரிப்பின்றி அடங்கித் துயில் கொண்டது.​

கணவன் கத்தி விட்டான். கதறி விட்டான். புலம்பி விட்டான். கோபப்பட்டு விட்டான். உணர்ச்சிக் குவியலாக துடித்து விட்டான். அவனுக்காக சாத்விகா கதறவில்லை. துடிக்கவில்லை. ஆனால் உள்ளம் மட்டும், அவன் ஒவ்வொரு அசைவிலும் செத்துக் கொண்டிருந்தது.​

அவள் உள்ளமோ ஓங்காரமாய்...​

‘மரணித்து விடாதே! கத்தி விடாதே! கதறி விடாதே! உன்னவன் செத்தே விடுவான்!’ என்று அச்சுறுத்தியது. அவள் மனதின் கூக்குரலுக்கு கட்டுப்பட்டு இதயத்தை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தாள்.​

‘நோ சாத்வி. உன்னோட சரிவு உன் கணவனோட சரிவு, உன்னோட கோழைத்தனம் அவனோட கோழைத்தனம்.’​

வாய்விட்டே கூறியவள், தன் மடியிலே துயில் கொள்பவனை ஆதுரமாகப் பார்த்தாள்.​

அவள் இன்று அறிந்து கொண்டாள். என்றுமே அவன் கடந்த காலத்தின் அசிங்கத்தை யாரிடமும் சொல்லப் போவதில்லை. தன்னைத் தவிர யாரிடமும் ஆறுதல் தேடப் போவதில்லை. தன்னை நிரூபிக்கப் போவதில்லை. ஆனால் அவள் மனதில் ஆற்றாமை வெடிக்கத் தொடங்கியது.​

இப்படியே விட்டு விட்டால் தவறு செய்தவன் அதைத் தவறு என்று உணர்வது எப்போது?​

இதற்கு நாளையே ஒரு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தவள், தன் மடியில் மழலையாக மாறிப் போயிருந்தவனின் சிதையை வருடிக் கொண்டே, அப்படியே சாய்ந்து தானும் கண்ணை மூடி ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றாள்.​

அழகான விடியல், புது சகாப்தம் படைக்கக் காத்திருந்தது.​

 

admin

Administrator
Staff member
இந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிட நினைத்தது எந்த உறவோ, உணர்வோ, புரிந்தளோ பிழையில்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அது ஆணோ பெண்ணோ, திருநம்பியோ, திருநங்கையோ அவர்களுக்கான விருப்பு, வெறுப்புகள் உண்டு அவர்களுக்கான தேவைகள் உண்டு, அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு, கடமை, உரிமை யாவும் உண்டு. ஆனால் அது பிறரை காயப்படுத்தி, கட்டாயப்படுத்தாத வகையிலும் நேர்மை தவறாத வழியிலும் இருந்தால் மட்டுமே அது வலி இல்லாத உணர்வாக, வலி இல்லாத உறவாக, வலி இல்லாத புரித்தலாக, வலி இல்லாத தேவையாக, வலி இல்லாத வெறுப்பாக இருக்கும்.. உங்கள் உணர்வுகளை நேசியுங்கள் உங்கள் உரிமைகளை நேசியுங்கள் அதை நேசித்து செயற்படுத்தும் உங்கள் இதயத்திடம் கேளுங்கள் உங்கள் இதயம் சொல்லும் பதில் நேர்மையானதாக அமையட்டும்..
நன்றி
 

santhinagaraj

Well-known member
சயத்தாவோட காதலும் உணர்வுகளும் தப்பில்லை ஆனா அதுக்கு சர்வேஷ பயன்படுத்திக்கிட்டு அவனை வார்த்தையால வதைத்து சிதைத்தது ரொம்ப ரொம்ப தப்பு.

சாத்வியோட புரிதலும் ஆழமான காதலும் அருமை.
 

admin

Administrator
Staff member
சயத்தாவோட காதலும் உணர்வுகளும் தப்பில்லை ஆனா அதுக்கு சர்வேஷ பயன்படுத்திக்கிட்டு அவனை வார்த்தையால வதைத்து சிதைத்தது ரொம்ப ரொம்ப தப்பு.

சாத்வியோட புரிதலும் ஆழமான காதலும் அருமை.
அழகான புரிதலுடன் கூடிய கமெண்ட் அக்கா மிக்க நன்றி..
 

shasri

Member
Sayatha and varunika thangaloda suyanalathukaga ippadi oru thanoda unarvugal la vilayandurkaga 😡😡😡 ivangalukana thandanai nichayama sathvi tharuvaanu namburay
 

Shamugasree

Well-known member
This story will always be ur forever milestone novel dear. Ethana time book la padichalum rerun pannalaum thigattala enaku
 
Top