priya pandees
Moderator
அத்தியாயம் 6
அதிகாலையில் முதலில் விழித்த ஒரு மருத்துவர், யாஷும், வருணியும் கட்டிக்கொண்டு தூங்குவதை கண்டுவிட்டு, "நாட்டி கப்புள்" என சிரித்தவாறு எழுந்து வெளியே சென்று விட்டார்.
அடுத்ததாக எழுந்தவனோ மாணவன், அவன் அவனருகில் படுத்திருந்த இருவரை எழுப்பி இவர்களை காட்டி அதை போனில் படம்பிடித்து என சிரித்துக் கொண்டிருக்க, அவர்கள் சிரிப்பு சத்தத்தில் தான் அசைந்தான் யாஷ். அவன் எழ போவது போல் தெரியவும், மூவரும் எழுந்து தடதடவென்று கீழே வேகமாக ஓட, அந்த மரவீட்டில் அவர்கள் எழுந்து ஓடிய சத்தத்தில் மற்ற எல்லோருக்கும் கூட விழிப்பு வந்திருந்தது.
யாஷ் தன் மேல் வருணியை உணர்ந்தததால் அவர்கள் வீட்டில் இருக்கும் நினைப்பிலேயே, அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு நிமிர்ந்தவனுக்கு, மர கிளைகளும் மேல் கூரையும் தான் வித்தியாசத்தை உணர்த்தின, "அட வருணி கழுதை!" என பட்டென்று அவளை உருட்டிவிட்டு எழ, "மாமா!" என மறுபடியும் அவன் மேலேயே ஏறி படுக்க வந்தாள் அவள்.
சுற்றி அங்கங்கே படுத்திருந்தவர்களும் எழுந்து அமர்ந்து இவர்களை கண்டு சிரிக்க, "வருணி!" என அவளை முதுகில் நான்கு அடிபோட்டு தான் எழுப்ப முயன்றான் யாஷ்.
நான்கைந்து அடிக்கு பின்னரே, "எதுக்குடா அடிக்குற?" என வலியில் முகத்தை சுருக்கியவாறு எழுந்து அமர்ந்தாள்.
"நைட்டு எப்ப டி வந்த? இருட்ல எப்புடி வந்த நீ?"
"நா எப்பவோ வந்துட்டேன். படி வழியா தான் வந்தேன், கண்ண மூடிட்டே ஓடி வந்துட்டேன். இத கேட்கவா எழுப்பி விட்ட? நானே எந்திச்சப்றம் சொல்லிருப்பேன்ல?"
"உன்ன கொள்ள போறேன் எந்துச்சு, லேடிஸ் ஹோம் போடி முதல்ல"
"இங்கேயே தூங்குறேனே மாமா. எழுந்து போனா தூக்கம் போயிடும்"
"எல்லாரும் குளிச்சு ரெடி ஆகுங்க. நாம வந்த வேலைய ஸ்டார்ட் பண்ணணும்" என அங்கேயே அமர்ந்து அவர்களுக்குள் கிசுகிசுத்து இவர்களையும் வேடிக்கை பார்த்திருந்தவர்களை முதலில் விரட்டி விட்டான். அவர்களும் சிரித்தவாறே எழுந்து சென்றனர்.
"எல்லாவனும் சிரிக்கிறான்டி"
"சிரிச்சா சிரிக்கட்டும் விடு மாமா"
"எதுக்குடி வந்த நீ?"
"நீ இல்லாம தூக்கமே வரல மாமா. கண்ணே காந்துது ஆனா தூங்க மட்டும் முடியல. அதான் விறுவிறுன்னு இறங்கி வந்துட்டேன்"
"கீழ இறங்கி இங்க மாறி வரும்போது யாரும் பார்க்கலையா?"
"அந்த க்ளாடியனும் ஜனோமியும் பார்த்தானுங்களே"
"உன்ன வச்சுக்கிட்டு" என பல்லை கடித்தவன், "எந்திரி அடுத்து இங்க இருக்க ஆட்கள வேற சமாளிக்கணும்" என எழுந்தான்,
"ஆமால்ல நாம காட்டுக்குல வந்துருக்கோம்? மறந்தே போயிட்டேன்" என்றவளை அவன் தீயாக முறைக்க, எழுந்து வேகமாக வெளியே சென்று விட்டாள்.
அங்கு முதலிலேயே வெளியே சென்றிருந்தவர்கள் எல்லோருக்கும் அங்கு பார்ப்பதற்கும் வியப்பதற்கும் நிறைய இருந்ததால் யாஷும் வருணியும் பின்னுக்கு சென்றிருந்தனர்.
இரவு பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அவ்வளவு வித்தியாசங்கள், இரவு பயங்கரமாக தெரிந்ததெல்லாம் இப்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது.
வெளியே வந்த வருணி மரவீட்டின் மேலே நின்று பார்த்ததால் அப்படியே நின்று விட்டாள்.
"மாமா இங்க வாயேன்" என்றவளின் சத்தத்தில் அந்த வீட்டினுள் இருக்கும் அறைகளை சுற்றி பார்த்து கொண்டிருந்தவனும் வெளியே வந்தான்.
"சூப்பர் வியூல?" என்றாள் பின்னால் வந்து நின்றவனிடம்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடும் மலைகளும் தான் காட்சியளித்தன, ஆங்கே ஆங்கே மரவீடுகள், கீழே குடில்கள், ஆடு, மாடு, பன்னி மேய்ப்பர்கள், விவசாயம் செய்பவர்கள் என மலைவாழ் மக்கள் தலைகளும் அதிகம் தெரிந்தன.
முகத்திலும் கை கால்களிலும் கறி பூசிக்கொண்டு, வாயில் மூக்கில் குச்சிகளை குத்தி வைத்துக்கொண்டு, குட்டி குட்டி ஆடைகளுடன் பார்க்கவே வித்தியாசமாக இருந்தனர். இவர்கள் அவர்களை விசித்திரமாக பார்க்க, அவர்கள் இவர்களை விசித்திரமாக பார்த்தனர்.
"எதுக்கு முகத்துல குச்சிய குத்தி வச்சுருக்காங்க? வலிக்காது?" என்றாள் வருணி.
"எவனும் முத்தங்குடுக்குறேன்னு கிட்ட வந்துற கூடாதுன்னு இருக்குமா இருக்கும்" என்றான் அவள் கழுத்தில் லேசாக உரசி தோள் வளைவில் முகத்தை வைத்து நின்று.
"நா கிட்ட வந்தா மட்டும் திட்டு. நீ மட்டும் யாருக்கும் தெரியாம கிடைச்ச இடத்தலாம் யூஸ் பண்ணு?" என முறைத்தாள்.
"நா யாருக்கும் தெரியாம செய்றேன்டி நீ பப்ளிக்கா செய்ற. ரெண்டுக்கும் டிஃப்ரன்ஸ் இருக்குல்ல?" என அவன் சொல்லி கொண்டிருக்கையில், கீழே இரண்டு மருத்துவர்கள் க்ளாடியனிடம் ஏதோ விசாரிப்பது தெரிந்தது.
"சரி நீ போ. குளிக்க என்ன பண்ணலாம்னு கேட்கணும். கீழ இந்த பீப்புள்ஸ கன்வின்ஸ் பண்ணி நம்ம செக்கப்ப ஸ்டார்ட் பண்ணணும்" என அவள் தோளில் தட்டிவிட்டு இவன் மறுபடியும் வீட்டினுள் நுழைந்து கொள்ள,
"இன்னைக்கு பொழுது இத இப்படி வேடிக்கை பார்த்தாலே ஈசியா போயிடும். விவரமே இல்ல இந்த மாமாக்கு" என்றவாறு இறங்கிச் சென்றவள், அடுத்திருந்த பெண்களுக்கு கொடுத்த மரவீடு ஏற, ஜெனிலியா எதிரில் இறங்கி வந்தாள்.
"இட்ஸ் எ வொர்ஸ்ட் பிஹேவியர் வருணி. ப்ரொஃபஸனுக்கு வந்த இடத்துல அத மட்டும் பார்க்கணும். இது உங்க வீடில்ல. இது மாதிரி அன்வான்டட் திங்கஸ் பேச்சா ஆகுறதுல எங்க மத்த டாக்டர்ஸ்கும் சேர்த்து பேட் இம்ப்ரஸன் தான் கிடைக்கும். லாஸ்ட் வார்னிங் கீப் இட் இன் மைண்ட். உங்களுக்கு ப்ரைவேட் ஸ்பேஸ் வேணும்னா கேம்ப் குவிட் பண்ணிட்டு நீங்க கிளம்பிடலாம்" என ஆங்கிலத்தில் கோபமாகவே கூறினாள்.
அவளும் வருணிக்கு பாடம் எடுக்கும் மருத்துவர் என்பதால் வருணி பொறுமையாகவே, "நைன் டூ சிக்ஸ் தானே ப்ரஃபஸ்ஸன் டைம் டாக்டர்?" என்றாள்.
"நாம கேம்ப் வந்துருக்கோம். ட்வன்டி ஃபோர் ஹவர்ஸும் வொர்க்கிங் அவர்ஸ் தான். இங்க எப்படி நடந்துக்கணுமோ அப்படி தான் நடந்துக்கணும். அதும் ஒரு பொதுவான இடத்த நாம ஷேர் பண்ணிக்கும்போது அடுத்தவங்களுக்கு டிஸ்பர்ன்ஸ் இல்லாம பாத்துக்க வேண்டியதும் மேனரிசம்"
"எனக்கு மாமா இல்லாம தூக்கம் வராது மேம் அதான் போனேன்"
"இஸ் இட் எ ரைட் வே டூ ஆன்ஸர்?" என்றாள் அவள் பல்லை கடித்து.
அமைதியாக பார்த்தே நின்ற வருணியை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு, "இங்க நீங்க மட்டும் தான் கப்பிள் மத்த எல்லாரும் சிங்கிளா தான் வந்துருக்கோம். அத புரிஞ்சுட்டு இருக்குற ப்ரஃபஸ்ஸனுக்கு தக்கன நடந்துக்க பாருங்க வருணி" என அவளை கடந்து இறங்கினாள்.
"என் மாமாவோட நா போய் படுத்தா இவங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு தெரியாம போச்சே? இத அந்த மாமாட்ட வேற போய் சொல்லிடுச்சுன்னா, இந்த மாமா நம்மள பேக் பண்ணாலும் பண்ணிடுமே? ஜீஸஸ் காப்பாத்துங்க ப்ளீஸ்" என புலம்பியவாறு வேண்டிக் கொண்டிருக்க, இரண்டு மருத்துவர்கள் பல்லை துலக்கியவாறு கீழே இறங்கலாம் என வெளியே வந்தனர்.
"ஹே வருணி ஒரே ஜாலி தான் போல?" என்றனர் இவளை கண்டதும்.
"ஹி ஹி!" என இவள் சமாளிப்பாக சிரித்து உள்ளே ஓடி வந்துவிட்டாள்.
அந்த வீட்டில் நான்கைந்து குட்டி குட்டி அறைகள் இருந்தன, சமைப்பதற்கு ஏதுவான இடமாக அதில் ஒரு அறை இருந்தது. அதற்கும் பாத்திரங்கள் என எதுவும் இருக்கவில்லை. தண்ணீர் குழாய் என்ற ஒன்றை வீடும் முழுவதும் தேடி வந்துவிட்டாள் அப்படி ஒன்றே அங்கில்லை, "பைப் கனெக்ஷன்லா குடுக்க மாட்டாங்களா இங்க?" என தானும் பெப்ஸோடென்டையும், ப்ரஷையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
மேலிருந்து கீழே பார்க்க, அனைவரும் ஆளுக்கொரு திசையில் கையில் பற்பசையுடன் நிற்பது தெரிந்தது. க்ளாடியனும், ஜனோமியும் ஒரு குவளையில் தண்ணீரை நிரப்பி கொண்டிருந்தனர்.
"மாமா?" என கத்தி அழைத்தாள், அதில் கீழே நின்ற இவளை சார்ந்தவர்களை தாண்டி அந்த மலைவாழ் மக்களும் அவளை அன்னாந்து பார்த்தனர்.
கையில் ப்ரஷுடன் வெளியே வந்தவனும், "என்னடி?" என்றான்.
"இங்க பைப்பும் இல்ல பாத்ரூமும் இல்ல. எங்க ப்ரஷ் பண்ண எங்க குளிக்க?" என்றாள்.
"மேடம் நீங்க ஃபாரஸ்ட்ல இருக்கீங்க ப்ரதமர் மாளிகைல இல்ல" என யாஷ் நக்கலாக சொல்ல,
"ஓ! சரி காட்ல இப்ப நீதான் எனக்கு இதுக்கு இதுக்கு" கையை ஒன்றும், இரண்டுமாக காட்டிவிட்டு "அப்றம் குளிக்குறதுக்கு எல்லாத்துக்கும் கூட்டிட்டு போகணும். வா போலாம். எதுக்கெடுத்தாலும் ப்ரதமர்னு எங்கப்பாட்ட போய் தான் நிக்றது. என்னைய கூட இப்படி நினைச்சுட்டே இருப்பியான்னு தெரில ஆனா ட்வன்டி ஃபோர் அவர்ஸும் எங்கப்பாவ நினைச்சுட்ருக்கன்னு மட்டும் நல்லா தெரியுது" என்றவாறு மாற்றுடை எடுக்க உள்ளே சென்று விட்டாள். இவன் தலையில் அடித்து கொண்டு, கீழே இறங்கி வந்தான்.
அங்கிருந்த மலைவாழ் மக்கள் இவர்கள் யாரோ எவரோ எதற்காக இவ்வளவு கூட்டமாக வந்திருக்கின்றனர் என புரியாமல் குழம்பி பயந்து பாவமாக சுற்றி வந்தனர். க்ளாடியனும் ஜனோமியும் இன்னும் அவர்களிடம் எதையும் விளக்கி கூறவில்லை. மருத்துவர்களின் வருகையை கேள்விப்பட்டு இந்த கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் ஆறு கீலோமீட்டர் தொலைவில் இருந்த மற்ற கிராம மலைவாசிகளும் இங்கு வந்து கொண்டிருந்தனர். அதனால் மொத்தமாக வரட்டும் பேசிக் கொள்ளலாம் என க்ளாடியனும் ஜனோமியும் அமைதியாகவே இவர்களுக்கு தேவையானதை மட்டும் செய்து கொண்டிருந்தனர்.
"க்ளாடியன்!" என யாஷ் அழைத்ததும் வேகமாக வந்துவிட்டான் அவன்.
"குளிக்க பக்கத்துல ஃபால்ஸ் ஆறு ரெண்டுமே இருக்கு. இங்க பக்கத்துல இயற்கை உபாதைகளுக்கு ஒரு தடுப்பு மாதிரி கட்டிருக்கும் அந்தபக்கம் தான் போகணும். அங்க ஓடை இருக்கு" என அவனே அனைத்தையும் கூறிவிடவும், சுற்றி எல்லோரையும் பார்த்தான். அவர்கள் கட்டை விரலை உயர்த்தி காட்டிவிட, முதலில் பெண்கள் குழு சென்றுவர கிளம்பினர்.
பாவமாக திரும்பி பார்த்த வருணியை, யாஷ் "கொன்றுவேன் கூட போய்ட்டு வந்திடு" என விரல் நீட்டியே மிரட்டிவிட, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.
"குடில் என்னாச்சு க்ளாடியன்?" என்றான் அவர்கள் சென்றதும்.
"இங்க முதல்ல ட்ரீட்மெண்ட்கு ஒத்துக்குறாங்களான்னு தெரியணும். அப்படி தெரிஞ்சா தானே குடில் தேவையா இல்லையான்னு தெரியும் டாக்டர்?" என்றான் அவன் மெதுவாக.
"அதுக்கா அவ்வளவு தூரத்துல இருந்து கிளம்பி வந்தோம் நாங்க? கவர்ன்மென்ட்ட நாங்க போனோம் அவங்க பார்க்க விடலன்னுலாம் நாங்க ரீசன் சொல்லிட்டிருக்க முடியாது க்ளாடியன். ஒருவேளை உங்களுக்கு நாங்க வேணாம்னா நீங்க ஃபர்ஸ்ட்டே அவங்க உங்களுக்கு தகவல் கொடுத்ததும் அத அப்போஸ் பண்ணி கம்ப்ளைண்ட் குடுத்துருக்கணும். அப்போ எங்களுக்கும் அவங்க இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துருக்க மாட்டாங்க. இப்ப வேற வழியே இல்ல, நாங்க வந்த வேலைய பார்த்தே ஆகணும்"
"புரியுது டாக்டர். நாங்க வேணாம்னு சொன்னா கிடைக்குற கொஞ்ச நஞ்ச சலுகைகளும் கிடைக்காம போயிடுமோன்னு தான் நாங்க அவங்க சொல்ற எதையும் எதிர்த்து பேசுறதில்ல"
"அத சொல்லியே இப்பவும் ஒத்துக்க வைங்க. குடிலுக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஃபிஃப்டீன் டேஸ்கு வேணும். ரெண்டு ரெண்டு பேர் ஒரு டென்ட்ட ஷேர் பண்ணிக்குவோம்" என்றதும் தலையசைத்து நகர்ந்தான் க்ளாடியன்.
பெண்கள் குழு சென்று வந்ததும் அடுத்ததாக ஆண்கள் குழு சென்று வந்தது. ஆனால் அடுத்ததாக குளிப்பதற்கு மொத்தமாகவே ஆற்றில் இறங்கி விட்டனர். நீண்ட அகலமான ஆறு இருபக்கமும் செடிகளும் மரங்களும். ஆற்றின் நடுவே செல்ல செல்ல ஆழமும் அதிகம் இருப்பது தெரிந்தது.
தேங்கிய நீரிலேயே நீச்சலிடத்து பழகியவர்களுக்கு ஓடும் நீரில் நீச்சல் அடிப்பதில் அவ்வளவு சுவாரஸ்யம். மருத்துவர்கள் அவர்களின் பணி சுமையிலிருக்கும் அழுத்தத்திலிருந்து வெளிவந்த நிமிடங்கள் அவை.
வருணி அவள் வட்டத்துடன் விளையாட்டிலிருந்தாள். யாஷுக்கு அவள் அவனையே சுற்றிவரும் போது விரட்டுவதும், கவனிக்காமல் அவள் வேலையை பார்க்கும் போது குறுகுறுப்பதும் தானே வழக்கம்? அதனால் நீந்திக் கொண்டிருந்தவனுக்கு ஒரு நிலைக்கு மேல் பொறுமை இருக்கவில்லை.
"எதுவுமே இல்லனா தான் நம்மள தேடுறது. ஜாலியா இருந்தானா நம்மள திரும்பி கூட பாக்க மாட்டா. இவள?" என யோசித்தவனுக்கு நீரில் தொப்பலாக நனைந்து கொண்டே வாயை மூடாமல் பேசிக் கொண்டிப்பவளை பார்த்து விட்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. சுற்றி பார்த்தான் அனைவருமே குளியல் சுவாரஸ்யத்தில் இருப்பது தெரிந்தது, "பொண்டாட்டிய கேம்ப் கூட்டிட்டு வந்தது உன் மடத்தனம் தான் யாஷ்" என அவனுக்கு அவனே சொல்லி கொண்டு, கரை ஏறிவிட்டான்.
அங்கிருந்த பெண்கள் அனைவருமே நீந்துவதற்கு ஏதுவான ஆடையில் தான் இருந்தனர். அவனுக்கு மட்டும் அவன் மனைவி தான் பெரிய உறுத்தலாக இருந்தாள். அதனாலேயே பொறுமை இழந்து மேலேறிவிட்டான்.
அவன் கிளம்பவும், "சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க கைஸ்" என மேலும் இரண்டு மருத்துவர்களும் மற்றவர்களுக்கு சொல்லிவிட்டு அவனோடே கிளம்பி விட்டனர்.
அதன்பிறகு, ஒவ்வொருவராக வந்துவிட, காலைக்கான உணவாக ரொட்டியும் இறைச்சியும் தயாராக இருந்தது. அதில் உப்பும் உறைப்பும் குறைவான அளவில் இருந்தது.
"எப்பவும் இப்படி உப்பு கம்மியா தான் சாப்பிடுவீங்களா?" என்றாள் வருணி ஜனோமியிடம்.
"சரியா இருந்ததே?" என்றான் அவன்.
"ம்கூம் ரொம்ப கம்மி இது. ஆனா இப்படி தான் சாப்பிடுவீங்கனா, பிபி, யூரியா, யூரினேஷன், கொலஸ்டிரால் (உப்பு சத்து, ரத்த அழுத்தம், கொழுப்பு) இதெல்லாம் உங்களுக்கு செக் பண்ணவே வேணாம். பண்ணாமலே சொல்லலாம் எல்லாமே ஃபிட் கன்ட்ரோல்ல இருக்கும்" என்றவள், "சாப்பாடு நல்லா இருந்தது. இது என்ன சிக்கன்?" என்க,
"முயல் கறி. உங்களுக்காகவே அதிகாலைல போய் வேட்டை ஆடிட்டு வந்ததுங்க" என்றான் ஜனோமி.
அதில், "மாமா!" என்றாள் அவனிடம் திரும்பி அழுவது போல்.
"சாப்பிட்ட ஏப்பமு விட்டுட்ட இனி ஒன்னும் செய்ய முடியாது. இங்க கிரில்டு சிக்கன்லாம் கிடைக்காது அவங்க சாப்பிடறத தான் தருவாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்" என்றான் யாஷ்.
"எனக்கு ஏற்கனவே என்ன நோய்னு தெரியல இதுல கண்டதையும் சாப்பிட்டு இங்கேயே காணாம ஆக்கிடணும்னு இருக்க தான நீ?" என்றாள் விளையாட்டு போல்.
"போடி உன்ட்லாம் மனுஷன் பேசுவானா?" என காட்டமாக கேட்டு, கடைசி வாய் உணவை அவளுக்கு நீட்டச் சென்றவன், அவள் வாயை திறக்கவும், "நீ செத்து போனப்றம் இப்டி குடுக்க உன்ன தோன்டியா எடுக்க முடியும்? போ இனி இதையும் சேர்த்து பழகிக்குறேன்" என அந்த கடைசி வாய் உணவோடு சென்று கையை கழுவி விட்டான். அழுகை வரும் போலிருந்தது வருணிக்கு அடக்கியவாறு வேடிக்கை பார்த்து நின்று கொண்டாள்.
மருத்துவ மாணவர்கள் ஒருபக்கம் அமைதியாக ஒதுங்கி நின்றுவிட, மருத்துவர்கள் குழு க்ளாடியன் ஜனோமி இருவருடனும் மறுபடியும் ஊர் தலைவரிடம் சென்று நின்றனர்.
அவர் முகத்தை இன்னமும் உர்ரென்று தான் வைத்திருந்தார், மற்றவர்களும் தலைவரின் பின் ஒதுங்கி கொண்டனர்.
"நாங்க உங்களுக்கு நல்லது பண்ண தான் வந்துருக்கோம். உங்களையே அறியாம உங்களுக்குள்ள இருக்க நோய்கள கண்டுபிடிச்சு குணப்படுத்தி நீங்க அதிக நாட்கள் வாழ உதவ தான் வந்துருக்கோம்" என மருத்துவர்கள் சொல்ல, அதை ஜனோமி அவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்தான்.
"உங்களுக்கு நோய் எதுவும் இல்லனா ரொம்ப சீக்கிரம் நாங்க வந்த வேலை சீக்கிரம் முடிஞ்சுடும் நாங்களும் கிளம்பிடுவோம். இது ஒருவகை சுய பரிசோதனை தான். நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நாங்க செய்ய போறதில்ல. ஜஸ்ட் செக்கப் தான்" இன்னொரு மருத்துவர் பேச, ஜனோமி அவர்களுக்கு எடுத்து சொன்னான்.
"இங்க இல்லாத மூலிகையா? உங்க ஆங்கில மருந்தே இங்கிருந்து கொண்டு போற மூலிகைகள்ல இருந்து தான் தயாராகுது. அத மறுபடியும் எடுத்துட்டு வந்து நீங்க எங்களுக்கு வைத்தியம் பார்க்க போறீங்களா? இங்க இருக்க மூலிகைய மிஞ்சுன மருத்துவம் உங்கள்ட்ட இருக்கா?" என்றார் தலைவராக இருந்தவர்.
க்ளாடியன் எடுத்து சொல்லவும், மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். உண்மை தானே அங்கு குவிந்து கிடக்கும் மூலிகைகள் தாண்டி இவர்கள் என்ன மருத்துவம் கொடுத்துவிட முடியும்? என அவர்களுக்குள் அவர்களே பார்த்து கொண்டனர்.
"கரெக்ட் தான். ஆனாலும் சில மருத்துவத்த மருத்துவர்கள் நாங்க தான் பண்ண முடியும். வெட்டு காயங்களுக்கும், நரம்பு பிரச்சினைகளையும், தோல் பிரச்சனைகளையும் நீங்க சரி பண்ணலாம். ஆனா அதுக்குள்ள இருக்குற ஹார்ட், லங்க்ஸ், லிவர், கிட்னி, பெண்களுக்கான யுட்ரஸ் பிரச்சினைகள் இதெல்லாம் நாங்க செக் பண்ணி சொன்னாதான் உங்களுக்கு பிரச்சினை இருக்கா இல்லையான்னு தெரியும். அது தெரிஞ்சுகிட்டாலும் உங்களால உடம்புக்குள்ள இருக்குற பார்ட்ஸ்கு வைத்தியம் பார்த்துக்க முடியாது, ஆனா நாங்க பார்ப்போம்" என யாஷ் சொல்லவும், அவர் யோசனையாக பார்த்தார்.
அவர்கள் உடம்பினுள் எந்த சிகிச்சையும் செய்து கொள்வதில்லை தான், கடந்த வருடத்தில் அவர் மகனையே அவரால் காப்பாற்ற முடியாமல் தான் போய்விட்டது. என்ன நோய் என்றே அறியாமல் நாற்பது வயதிலேயே இறந்திருந்தார் அவர் மகன். அவர்கள் சிற்றுலகில் யார் இறந்தாலும் அது அவர்களின் ஆயுள் முடிவாகவே எடுத்துக் கொள்வது தான் வழக்கம். அப்பத்தான் அவர் மகன் இழப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.
இப்போது யாஷின் கூற்றில் அவர் அவனை விளங்கா பார்வை பார்த்தார். அவரின் அமைதியை பயன்படுத்த முயன்றனர் மருத்துவர்கள். மாற்றி மாற்றி நிறைய எடுத்து கூறினர். அரசாங்கத்தின் சலுகைகள், இவர்கள் இதற்கு முன் சென்றுவந்த மலைகிராமங்கள், அங்கு வாழ்ந்த மக்கள் ஒத்துழைப்பு கொடுத்த விதம் என அனைத்தையும் ஒப்பித்தனர்.
"அவருக்கு சொல்லுங்க க்ளாடியன். உடம்பு உள்ள இருக்குற பிரச்சினை கடவுளுக்கு அப்றம் கண்டுபிடிக்க எங்கள மாதிரி டாக்டர்ஸால மட்டுந்தான் முடியும். நம்புங்க, உங்களுக்கு கெடுதல் பண்றதால எங்களுக்கு எந்த லாபமு இல்ல. இப்டி கஷ்டப்பட்டு இங்க காட்டுல வந்து பேசிட்ருக்கோம்னா உங்களுக்காக மட்டுந்தான்." என்றதில் கொஞ்சம் இறங்கியும் வந்தார்.
யோசனையாகவே தலைவர் மையமாக தலையசைத்து எழுந்து கொள்ளவும், "நாங்க கூடவே தான் இருப்போம் டுக்சுவா(தலைவர்) எதுவும் தப்பாகாம பாத்துக்குறோம்" என கிளாடியனும் அவரிடம் சொல்லவும்,
"நாட்டுக்குள்ள இருக்குறவங்கள நம்புறதே தப்பு தான். ஆனாலும் சரின்னு சொல்றேன்னா உங்க ரெண்டு பேரையும் நம்பித்தான். ஜாக்ரதை" என முடித்தார்.
அதன்பிறகு வேலைகள் வேகமெடுத்தென, மருத்துவர்கள் சிகிச்சை செய்ய முதலில் இடம் ஒதுக்கினர். மருத்துவர்கள் மாணவர்கள் என எல்லோருமாக சேர்ந்து அவர்களுக்கு தோதுவாக மருத்துவ சாதனங்களை எடுத்து வைத்தனர். அதற்குள் மூங்கிலாள் ஆன மேசைகளையும் பென்ச்சுகலையும் கொண்டு வந்து போட்டனர் அங்குள்ள மக்கள்.
அடுத்த இரண்டு மணிநேரத்தில், அனைத்தும் தயாரானது. வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர், மருத்துவர்களின் அருகிலேயே க்ளாடியணும் ஜனோமியும் நின்று கொண்டனர். மருத்துவ மாணவர்களும் இருவர் இருவராக பிரிந்து மருத்துவர்கள் அருகில் நின்று கொண்டனர்.
வரிசையாக நிற்க வைத்து, 'ரத்த அழுத்த பரிசோதனை (ப்ரஷர்), சர்க்கரை அளவீடு (சுகர்), உடற் சூடு(ஃபீவர்), ஆக்ஸிஜன் அளவு' என முதலில் பரிசோதித்தனர், அதில் அனைத்தும் சாதாரண அளவில் இருப்பவர்களை அடுத்த கட்டத்திற்கு ரத்தம் எடுப்பதற்கும், சிறுநீர் பரிசோதனைக்கும் அனுப்பி மாதிரிகள் பெறப்பட்டன.
புலி, சிறுத்தை, கரடி என வேட்டையாடும் மக்கள் ஊசியை கண்டு அலறியதில் மருத்துவர்களே நடுங்கிதான் போயினர். பின்னர் மறுபடியும் அவர்களை சமாதானம் செய்து ரத்தம் எடுப்பதற்குள் இருட்டியே விட்டது.
உண்மையில் அவர்களோடு போராடி களைத்து தான் விட்டனர் மருத்துவர்கள். அதனாலேயே அவர்களே போதும் என்ற முடிவிற்கு வந்திருந்தனர். நன்கு இருட்டவும் துவங்கியிருக்க, எல்லாம் எடுத்து வைத்த பின்னரே, அந்த மருத்துவ முகாமிட்டிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தனர்.
"குடில் இன்னும் ரெடி ஆகல. நாங்களும் இங்கேயே இருந்துட்டதால எதுவும் பண்ண முடியல" என்றான் க்ளாடியன் பாவமாக.
"இட்ஸ் ஓகே" என்ற யாஷ் முதலில் திரும்பி பார்த்தது வருணியை தான். காலையில் திட்டிவிட்டு சென்றதோடு, அவளை கவனித்து பேசவே அவனுக்கு நேரம் வாய்க்கவில்லை. அவளும் பரபரப்பாக இருந்ததால் வம்பு வளர்க்க வரவில்லை, இப்போது கண்ணை உருட்டி அவனை பார்த்தாள்.
"போ ப்ராப்ளம் வீ கேன் அட்ஜஸ்ட்" என்றனர் மற்றவர்கள்.
மீண்டும் அதே ஆற்றில் குளியல், உணவு, மரவீடு தங்கல் என நேரம் பறந்தது. எல்லாரும் அலுப்பில் கண்ணசந்தனர்.
வருணி இன்றும் உருண்டு கொண்டு தான் வந்தாள், காலையில் ஜெனிலியா திட்டினது ஒருபக்கம் என்றால், யாஷும் முறைத்து கொண்டு திரிந்தது மறுபக்கம் என எழுந்து செல்ல மனமில்லாமல் படுத்திருந்தாள்.
அங்கு கைபேசிக்கான டவர் வசதிகள் இல்லாததால், அவனுக்கோ அல்லது இந்தியாவில் உள்ள அவள் வீட்டினருக்கோ கைபேசியிலும் அழைத்து பேச முடியாமல், சுனங்கி கொண்டிருந்தாள்.
மெல்ல எழுந்து வெளியே வந்து மரவீட்டின் கிளை பகுதியில் வாகாக நின்று கொண்டாள். உடல்நிலை பற்றிய குழப்பம் பயம் வண்டாக மூளையையும் மனதையும் குடைந்தது. இதற்காகவே அவனொடு ஒன்டிக் கொள்ள முயல்வாள். பகலெல்லாம் சமாளிக்க முடிந்தவளால் இரவுகளில் வரும் மன பயத்தை தடுக்கவே முடிந்ததில்லை. அதையெல்லாம் யோசித்து இருட்டை வெறித்துக் கொண்டு நின்றாள்.
யாஷ், உள்ளுணர்வு உந்த ஒரு சின்ன பையை எடுத்து மாட்டிக் கொண்டு எழுந்து வெளியே வந்தான், பெண்களாக படுத்திருக்கும் வீட்டிற்கு சென்று அவளை எப்படி அழைப்பது என்ற யோசனையில் அவன் வெளியே வர, அவளே அங்கு நிற்பதும், அவள் நின்ற கோலமும் அவ்வளவு கவலையை கொடுத்தது அவனுக்கு.
கூடவே கோபமும் வர, ஒரு குச்சியை எடுத்து அவளை நோக்கி வீசினான், திடீரென வந்து விழுந்ததில் கொஞ்சம் பதறி திரும்பியவள், இவனை இருள் வடிவத்தில் கண்டே, "மாமா!" என முகமெல்லாம் பிரகாசமாக கையசைத்து குதித்தாள்.
"கீழ இறங்கி வா" என கையை காட்டிவிட்டு அவனும் இறங்கி வந்தான்.
இருவரையும் பார்த்த க்ளாடியணும், ஜனோமியும் அவர்கள் இருந்த இடத்தில் இருந்தே பார்த்திருக்க, "தூங்குங்க கொஞ்சம். தொடர்ந்து முழிச்சுருக்கீங்க?" என இவனே கேட்டான்.
"இன்னைக்கு படுத்திடுவோம் டாக்டர். நீங்க இந்நேரம் எங்க கிளம்பிட்டீங்க?"
"சும்மா அப்படியே இங்கன தான் வாக்கிங் மாதிரி. இந்த ஏரியா தாண்டி எங்கயும் போக மாட்டோம்" என அருகில் ஓடி வந்து நின்றவள் தோளில் கை போட்டு சொல்லவும், தலையை அசைத்து விட்டனர்.
"தூங்காம என்னடி பண்ற?" என்றவாறு அவளை கூட்டிக்கொண்டு நடந்தான் யாஷ்.
"உனக்கும் தூக்கம் வரல தான?" என்றவளுக்கு சற்றுமுன் இருந்த மனநிலை மாறி குதூகலம் பொங்கியது.
ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த ஒரு மரக்கிளைக்கும் இன்னொரு மரக்கிளைக்கும், கொண்டு வந்த பையிலிருந்து எடுத்து படுக்கும் ஊஞ்சலை இழுத்து கட்டினான் யாஷ்.
"சூப்பர் ஐடியா மாமா" என எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட, அவளோடு அந்த ஊஞ்சலில் சரிந்தவன், வாகாக தூக்கி மேல் போட்டு உதட்டு சஞ்சாரத்தில் இறங்கி விட, குளிருக்கு இதமாக அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு சாய்ந்து விட்டாள் வருணியும்.
மெல்ல விடுவித்தவன், "லூசு மாதிரி பேசி என்னையும் சேர்த்து டென்ஷன் பண்ணாதடி ப்ளீஸ்" என்றவாறு கண்ணை மூடிக் கொள்ள, முத்தமிட்ட மயக்கத்திலேயே அமைதியாக தானும் அவன்மீது படுத்து விட்டாள் வருணியும்.