priya pandees
Moderator
அத்தியாயம் 7
காலையில் பறவைகளின் கீச்கீச் ஒலியில் தான் யாஷ் வருணி இருவரும் விழித்தனர். மிகமிக அழகான காலையாக இருந்தது இருவருக்கும். குளிருக்கு இதமாக மூடியிருந்த கம்பிளியையும் ஊடுருவி நடுக்கத்தை தந்தது அந்த காலை குளிர். அதில் அவள் அவனிடம் இன்னும் ஒன்ற அவனும் அவளை தனக்குள் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
"செம மார்னிங்ல மாமா?" என்றாள் அவன் கழுத்திலிருந்த தலையை நிமிர்த்தி மரங்களால் சூழ்ந்த இளங்காலை வானத்தை ரதித்தவாறு.
"ம்ம் குளிருக்கு ஏத்தமாதிரி கதகதப்பா அப்படியே ஒரு ஹாட் ப்ரீத் எடுத்தா கூட நல்லாதான் இருக்கும்" என்றான் இரு கைகளையும் நெட்டி முறித்து தலைக்கு அடியில் வைத்து சாவகாசமாக படுத்த யாஷ்.
"ஹாட் ப்ரீத்? உனக்கு இப்படி வெட்டவெளில தான் எல்லா மூடும் வருமா மாமா?" என்றாள் நிமிர்ந்து.
"ஆமா இயற்கையோடு இயற்கையா இருக்கும் போது தான நாமளும் இயற்கையா இருக்கணும்னு தோணும்?" என்றவன் கிசுகிசுப்பான குரலோடு கைகள் மீண்டுமாக அவளை தழுவிக்கொண்டது.
"அடடா! அடடா! ரொம்ப ஃப்ராங்கா பேசிட்டீங்களே டாக்டர்"
"உன்ட்ட பேசுறதுக்கு என்னடி? இதவிட ஃப்ராங்கா கூட பேசுவேன். ஆனா அப்றம் அது எனக்கு நானே ஆப்பெடுத்துக்கிட்ட மாதிரி ஆகிடும். அதனால் இத்தோட முடிச்சுட்டு, மத்தவங்க வர்றதுக்குள்ள நாம ஜாலி குளியல முடிச்சுடுவோம் வா"
"இந்த குளிர்ல இந்த தண்ணிக்குள்ள இறங்கி ஃப்ரீஸ் ஆக சொல்றியா நீ?"
"ஓடுற தண்ணிடி குளிறாது" என்றவன் அவளையும் இறக்கிவிட்டு தானும் இறங்கி கொண்டு, ஊஞ்சலை மறுபடியும் எடுத்து மடித்து வைத்தான்.
"மாமா!" என அவள் நெளிவதில், "நேத்து போன இடம் தானே போய்ட்டு வா நா இதெல்லாம் அங்க மரவீட்ல வச்சுட்டு டவல் எடுத்துட்டு வரேன். போகும் போது ப்ரஷ் எடுத்துட்டு போடி"
"தனியாலாம் போ முடியாது நீயும் வா"
"ஆமா பாத்ரூமுக்குலாம் தனியா போ மாட்ட, ஆனா?" என அவன் முறைக்க, அவன் முடிக்காமல் விட்டதில் புரிந்தவள், சுருட்டை முடியை சுருட்டி பிடித்து சிலிப்பிக் கொண்டு நடந்துவிட, தானும் முறைத்தவாறே மெல்ல அவளை பின் தொடர்ந்தான். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சொல்லி காண்பித்து கொண்டே தான் இருக்கிறான் அவனும், பரிசோத்து எதுவும் இல்லை என தெரியும் வரை அவனுக்கும் அது தேவையில்லாத தலைவலி தானே!
அவனோடு வந்தவர்கள் யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை, ஆனால் அங்கு வாழும் மக்கள் எழுந்து அவரவர் அன்றாட வேலையில் இறங்கியிருந்தனர். அதை பார்ப்பதற்கே புத்துணர்ச்சியாக இருந்தது.
க்ளாடியன் இவனை கண்டதும் வேகமாக வர, "இன்னும் யாரும் எழும்பல போல க்ளாடியன். நீங்க நேத்து மாதிரி பத்து மணிக்கு எல்லாரும் செக்கப் வந்துடுற மாதிரி பாத்துக்கோங்க. நேத்து எடுத்த ப்ளட் சேம்பிள்ஸ் இன்னைக்கு சிட்டிக்குள்ள உள்ள ஹாஸ்பிடல் போயிடணும். அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க, ரெண்டு நாள்ல ரிப்போர்ட் வேணும்னு டாக்டர் பிஸ்மத்தோட லெட்டர் ஒன்னு வாங்கி அதோட அனுப்பிடுங்க. அப்பத்தான் சீக்கிரம் ரிப்போர்ட் நம்ம கைக்கு வரும். இங்க யாராவது உடம்பு முடியாம எழுந்து வர முடியாம இருக்குறவங்க இருக்குறாங்கனா அவங்களலாம் அவங்க இடத்துக்கே போய் செக் பண்ற மாதிரி பாக்கணும். அதையும் எத்தனபேருன்னு பார்த்து சொல்லுங்க" என அவன் பேசி முடிக்க, க்ளாடியன் அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.
"வேறெதுவும்?" என மேலே ஏறச் சென்றவன் நின்று திரும்பி கேட்க,
யோசித்த கிளாடியன், ஏதோ சொல்ல வந்துவிட்டு, "இல்ல டாக்டர்" என்றான்.
"என்ன கிளாடியன்? எதும் பிராப்ளமா?"
"இல்ல டாக்டர். நீங்க ரெடி ஆகுங்க. நா சாப்பாடு ரெடியான்னு பாக்றேன்" என நகர்ந்து விட்டான். செல்பவனை பார்த்தவாறே தானும் மேலேறி விட்டான் யாஷ்.
சற்று நேரத்தில் அவளுக்கும் அவனுக்கும்மான மாற்றுடையுடன், பல்துலக்கியவாறு யாஷ் கீழ் இறங்கிவர, வருணி ஒரு சிறு பெண்ணுடன் சைகை மொழியில் பேசியவாறு வந்து கொண்டிருந்தாள்.
அவள் தோளில் உடையை போட்டவன், "இன்னும் டென் மினிட்ஸ் பேசிட்டே நில்லு, நானும் இப்படி போய் அப்படி வந்துடுறேன்" என சென்று விட, அவள் அந்த பெண்ணிடம், "என் ஹஸ்பண்ட்" என கழுத்தில் தாலி கட்டுவது போல செய்து காட்ட, அந்த குட்டி பெண் க்ளாடியனை காட்டி குலுங்கி சிரித்தாள், முகத்தில் வெக்கம் வேறு. சரியாக வாரபடாத தலை, விரித்து கிடந்தது, ஆனால் ப்ளீச்சென்ற முகத்துடன் சிரித்து நின்ற அந்த பெண் அவ்வளவு அழகாக இருந்தாள். அவள் கூறிய விஷயம் தான் வருணிக்கு புரியவில்லை.
ஆங்காங்கே இருந்த மற்ற பெண்களை காண்பித்து, எதற்காக முகத்தில் கறி பூச்சு மற்றும் குச்சி என கேட்டாள். அந்த பெண்ணுக்கு அது புரிந்தது போலும், 'கச்சா மோச்சா' என அந்த பெண் சொன்ன பதிலும் இவளுக்கு புரியவில்லை.
சுற்றி பார்த்தவள், அங்கு ஜனோமி இருப்பதை கண்டு, அவனை அழைத்து இவள் சொல்வதை சொல்லச் சொல்லி கேட்க, "இங்க உள்ள பெண்கள் வயதுக்கு வந்ததும் இதுமாதிரி வேஷம் போட்டுக் கொள்ளணும் அது தான் எங்க வழக்கம், ஆண்களுக்கும் அது தான் வழக்கம்"
"அப்ப நீங்க போட்டுக்கல?"
"நாங்க அங்க உள்ள மக்களோட மக்களா இருக்கும் போது இத போட்டுகிட்டு நின்னா, அவசர உதவிக்கு கூட எங்கள நெருங்கவிடமாட்டாங்க அதான் நாங்க போடுறதில்ல"
இவர்கள் பேச ஆரம்பிக்கவும் அந்த பெண் ஓடிவிட்டாள், "இவங்களுக்கு படிப்புலாம்?"
"பெண்களுக்கு கிடையாது. ஆண் பிள்ளைகள் சிலர் படிக்கிறார்கள். அதுக்கு ஒருத்தர் மாசத்துக்கு பதினஞ்சு நாள் மட்டும் வந்து தங்கிருந்து சொல்லி குடுத்துட்டு போவார். அரசாங்க ஏற்பாடு தான் அதுவும்"
"ஏன் கேர்ள்ஸ்கு கிடையாது? அவங்களுக்கும் ஸ்டடீஸ் முக்கியம்" இவள் ஆரோன் மகளாக பொங்கி கொண்டு வர,
"எங்க தலைவர் சொல்றது தான் இங்க சட்டம். பெண்களுக்கு பதிமூன்று வயசுலயிருந்தே வேற பொறுப்புகள் வந்திடும் அதனால அவங்களுக்கு படிப்பு தேவையில்லைன்னு இங்க உள்ள பெரியவங்க முடிவு"
"அதெப்படி முடிவு பண்ணலாம். அவங்க பாவமில்லையா? அப்படி என்ன பதிமூணு வயசுல வேலை வந்திடுது? வீட்டு வேலை பார்க்க விட்ருவீங்களோ? அதும் சைல்ட் லேபர் தான் தெரியுமா? நாட்டுக்குள்ள உள்ள சட்டங்கள் உங்களுக்கும் பொருந்தும்ல?"
"வருணி!" என அதட்டிக் கொண்டே அந்த இடத்திற்கு வந்தான் யாஷ்.
"இங்க பாரு கேர்ள்ஸ்கு எதுவும் முக்கியமில்லையாம். வளர்ந்து வர்றாங்க தானே அப்ப பொண்ணுங்களையும் சேர்த்து தானே வளரவிடணும்?"
"நீங்க போங்க ஜனோமி" என்றதும் அவன் சென்று விட்டான். ஜனோமிக்கு அது பழகிய ஒன்று, அங்கு சொல்லி கொடுக்க வருபவரே வரும் போதெல்லாம் இதை பேசிவிட்டு தான் செல்கிறார். அவனை போன்றவர்கள் ஏற்கனவே நாட்டுக்குள் உள்ளவர்களையும் இங்கு தங்கள் மக்களையும் பார்த்து இருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை கண்டு மலைத்திருக்கின்றனர். ஆனால் அதெல்லாம் சொல்லி இங்கு மாற்றம் கொண்டு வந்துவிட முடியாது என தானே அமைதியாக இருக்கின்றனர்.
"மாமா!"
"வாடி குளிப்போம்" என அவளை தள்ளிக்கொண்டு வந்து, ஆற்றில் இறங்கி விட்டான்.
"வந்த இடத்திலலாம் புரட்சி பண்ண கூடாது. அதும் நீலாம் பண்ணவே கூடாது. நாம வந்த வேலைய சரியா பண்ணிட்டு கிளம்பிடணும் புரியுதா?"
"ஏன் நா பேச கூடாது? நா பேசுவேன்"
"இவ்வளவு படிச்சும் அறிவிருந்தும் உன் உடம்புன்னு வரும்போது பயந்து, நீ இருக்க ப்ரஃபஸ்ஸனையே நம்ப மாட்டேங்குறல்ல? அதுமாதிரி தான் அவங்களுக்கும் அவங்க பகுத்தறிவு தாண்டி வர பயப்படுறாங்க"
"அதுமிதும் ஒன்னா?"
"கண்டிப்பா ஒன்னுதான். உனக்குன்னா ஒன்னு மத்தவங்களுக்குனா அது ஈசின்னு பேச கூடாது வருணி" என்றவன் நீரில் மூழ்கிவிட, யோசித்தவளுக்கும் அப்படித்தானோ என்றே தோன்றியது.
"வாடி குளிப்போம்" என்றவன் மெல்ல அவளையும் இழுத்து கொண்டு நீரில் மூழ்க, நீரின் குளிர் அவளை வேறு சிந்தனையிலிருந்து இழுத்து வந்து அவள் மாமனிடமே விட்டது. அடுத்தடுத்து அவன் கைகள் செய்த மாயையில் அவனுடன் ஒன்றி போனாள்.
"வருணி!" என்றவன், நீரில் நனைந்து நடுங்கி கொண்டிருந்த இதழுக்கு ஆதரவளிக்கும் பொறுப்பில் இறங்கிவிட, அது அழகான ஈர்ப்பிற்கு வித்திட்டது. ஈர்ப்புவிசை இருவரின் ரத்தத்தையும் சூடாக்க, அதன் பலனாக அவர்களை கடந்து சென்று நீரும் கூட தகிக்க துவங்கியிருந்தது. நீருக்கடியில் அழகான ஒரு தழுவலை தனது ஆதிக்கத்தால் நடத்திக் கொண்டிருந்தான் யாஷ். வருணியின் வெட்கமும் சிணுங்கலுமாக அடுத்து வந்த நிமிடங்கள் கரைந்திருந்தன.
போட்டிருந்த உடையிலேயே நீருக்குள் இறங்கியிருந்ததால், அதை களைத்து குளிக்கும் உடைக்கு மாற மறைமுகமாக உதவியிருந்தான் யாஷ்.
"இப்பதான் ஃப்ரெஷ் மார்னிங் மாதிரி இருக்குடி வருணி!"
"நீ பாதி வேலைல இருக்கும் போது யாராவது வந்து தண்ணிக்குள்ள இறங்கியிருந்தா தெரிஞ்சுருக்கும் மாமா உன் ரோமியோ முகம்" என்றவள், களைப்பு நீங்க கையையும் காலையும் நீட்டி நீரில் படுத்துவிட்டாள்.
"அப்படியேனாலும் தண்ணிக்குள்ள நா என்ன பண்றேன்னு எவனுக்கும் தெரியாது"
"ஆமா ஆமா தெரியாது தெரியாது இயற்கையோட இயற்கையா நீ இருந்தது யாருக்குமே தெரியாது தான்"
"போடி நல்ல மனசோட எது செஞ்சாலும் இயற்கையே அதுக்கு ஹெல்ப் பண்ணும்" இருவரும் இதுபோன்ற 'ஸ்வீட் நத்திங்ஸுடன்' சில நிமிடங்களை கழித்து விட்டு மெல்ல மேலேறி வந்தனர்.
இருவரும் மரவீடு பக்கம் வந்தபோது தான், அனைவரும் இறங்கி பல்துலக்கி கொண்டிருப்பதைக் கண்டனர். பின் அவர்கள் எல்லோரும் கிளம்பி வரும் முன்பே, யாஷும் வருணியும், க்ளாடியணும், ஜனோமியுமாக இணைந்து அனைத்தையும் தயார் செய்து விட்டனர். அவர்கள் வரவும் உணவை முடித்துக் கொண்டு சிகிச்சை பிரிவில் இறங்கி விட, நேரம் பரபரப்பாக சென்றது.
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் அன்று நிறைய மக்கள் வந்திருந்தனர், அதில் ஒருவருக்கு கால் முழுவதும் புண்ணாகி இருந்தது அதில் இழைகளை பத்துபோல் போட்டிருந்தார். அதனால் அவருக்கு உடல் சூடும் அதிகமிருந்தது. ஆனால் உடற்சோர்வு எதையும் காட்டிக்கொள்ளாமல் பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த கிராமத்தில் இருந்து நடந்தே வந்திருந்தார். ஆச்சரியமாக தான் இருந்தது இவர்களுக்கு.
"இந்த காலுக்கு இவங்க இவ்வளவு ஸ்டெரெயின் குடுக்கவே கூடாது. இவங்கள மாதிரி இருக்குறவங்கள தான் அவங்க இடத்துலயே இருக்க சொல்லுங்க போய் பாத்துக்குலாம்னு சொன்னேன்" என்றான் க்ளாடியனிடம் யாஷ்.
"இதெல்லாம் வேட்டைக்கு போய்ட்டு வரதால வர்றது தான் டாக்டர். ரொம்ப பழக்கமான விஷயம். மூணு மாசம் இத்தோடவே எல்லா வேலைகளையும் பாத்துக்குவாரு இதோ இந்த பத்து போட்டுட்டே இருந்தா போதும் வலியே தெரியாது" க்ளாடியன் உறுதியாக சொன்னான்.
அவனை பார்த்து தலையை அசைத்து மறுத்தவன், "இவர அங்க படுக்க வைங்க" என மரபெஞ்சை காட்ட, க்ளாடியன் படுக்க வைத்ததும் அவரிடம் அவ்வளவு பயம், அவன் ஏதேதோ சொல்லி படுக்க வைப்பதை பார்த்தவாறு பக்கத்தில் சென்றவன், அவர் காலில் இருந்த அனைத்தையும் சுத்தம் செய்ய துவங்க, எலும்பு சிகிச்சை செய்யும் மருத்துவரும் வந்து அவனுடன் இணைந்து கொண்டார்.
காலில் ஏதோ விஷமுள் தைத்திருக்க, அது கால் முழுவதும் ஊடுருவி முட்டிவரை ஏறியிருந்தது, கால் வெளியே உள்ளே என முழுமையாக புண்ணாகி இருந்தது. அவர்கள் மருந்திற்கு மேலும் மேல் தோள் பிரிந்து வரும் நிலையில் இருந்ததை கண்டு இருவரும் அதிர்ந்தனர்.
"இப்டியே விட்டா காலையே ரிமூவ் தான் பண்ணணும். எலும்பு இப்பதான் அறிக்க தொடங்கியிருக்கு" மற்ற மருத்துவர் சொல்லவும், யாஷ் திரும்பி க்ளாடியனை பார்த்தான்.
"என்னாச்சு டாக்டர்?"
"இப்டி ஆன யாரும் இறந்து போனதே இல்லையா?"
"பத்துல ஒருத்தர் போயிடுவாங்க தான். ஆனா மீதி ஒன்பது பேரும் பொழைச்சுப்பாங்களே?"
"ம்ச் அவ்வளவு ஈசியா சொல்றீங்க? இவருக்கு ரொம்ப இன்ஃபெக்ஷன் ஆகிருக்கு. இப்படியே விட்டா அந்த பத்துல ஒருத்தரா இவர் பேரும் போயிடும்"
"என்ன செய்யணும் டாக்டர்?"
"இவர ஹாஸ்பிடல்ல சேர்க்கணும்"
"இங்க படுக்கவே நடுங்குறவரு செத்தாலும் பரவால்லன்னு வேணா சொல்வாறே தவிர வெளில வரமாட்டாரு"
"ம்ச் உயிர் வேணாமா?"
"இங்கேயே எதாவது பண்ண முடிஞ்சா பண்ணுங்களேன் டாக்டர்"
"ம்ச் என்ன க்ளாடியன் நீங்களும் இப்படி சொல்றீங்க?"
"சார் இன்னும் நிறைய கிராமங்கள் இருக்கு. நீங்க இவர எங்கையாவது அனுப்புனீங்கனா அதுக்கு தனியா தலைவர்ட்ட பேச்சு வார்த்தை நடத்தணும். அவர் ஒத்துக்கலைனா மொத்தமா நிறுத்த வேண்டி வரும். அதுமட்டுமல்ல ஒருவேளை தலைவர் ஒத்துகிட்டா, இவர அனுப்புறத பாத்துட்டு மத்த எல்லாரும் காட்டுக்குள்ள தலைமறைவு ஆகிடுவாங்க. எங்களால கூட அப்றம் எதுவும் செய்ய முடியாது"
"நல்ல இடத்துல வந்து தான் சிக்கிருக்கோம் போல" என சலித்து கொண்டனர் மருத்துவர்கள்.
"என்ன பண்ணலாம் டாக்டர்?" என யாஷ் மற்ற மருத்துவர்களோடு கலந்துரையாட, மாணவ மருத்துவர்கள் இவர்களை கவனித்தவாறே அவர்களுக்கு பிரித்து கொடுத்த வேலையில் இருந்தனர்.
"இங்க இருந்து பேஷன்ட்ஸ் நம்ம ஹாஸ்பிடலுக்கு கொஞ்ச பேரையாவது அனுப்பலனா அங்க டீனுக்கு பதில் சொல்ல முடியாதே?"
"கரெக்ட் நம்மள தான் போட்டு கிளிச்செடுப்பாரு"
"அதுக்கு என்ன செய்ய இங்கேயே ட்ரீட்மெண்ட் பண்றது பெரிய விஷயமா இருக்கு. இதுல இவங்கள பத்ரமா அங்கவர கூட்டிட்டு போறதும் பெரிய ரிஸ்க் தான் நமக்கு" என்றாள் ஜெனிலியா.
"கரெக்ட் நாம அதையே ரீசனா சொல்லலாம். இங்க இருந்து அவ்வளவு தூரம் பேஷன்ட்ஸ் ட்ராவல் கண்டிஷன்ல இல்லன்னு" என்றான் யாஷ்.
"சரி இப்ப இவங்களுக்கு எப்டி ட்ரீட்மெண்ட் பண்றது?" என யோசனையாக கேட்டார் பிஸ்மத்.
"அதுக்கு இங்க இருந்து பக்கத்து சிட்டில இருக்க ஹாஸ்பிடல்ல இருந்து தான் பெசிலிட்டி பண்ணி வாங்கணும்"
"அது அவ்வளவு ஈசியா என்ன?"
"ஜஸ்ட் ட்ரை தான். நம்மகிட்ட இருக்குறத வச்சு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுவோம். வேற என்னென்ன தேவைன்னு லிஸ்ட் எடுத்து கொடுத்தணுப்புவோம். ஹெல்ப் பண்ணணும்னு நினைச்சா பண்ணட்டுமே" மருத்துவர்கள் ஒருவாறாக முடிவெடுத்து அவருக்கு சிகிச்சையை துவங்கினர்.
யாஷ் கிளாடியடினிடம் விளக்கி சொல்லி மருத்துவமனையிலிருந்து தேவையானவற்றை பெற அவர்களுள் மூத்த மருத்துவரான பிஸ்மத் பெயரில் அறிக்கை தயாரானது.
முதலில் அவருக்கு சிகிச்சை செய்ய ஏதுவாக படுக்கை தயார் செய்யப்பட்டது, காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருந்து செலுத்தி மொத்தமாக அழுகிய நிலையில் இருந்ததை வெட்டி எடுத்து மருந்திட்டு கட்டினர். புண் ஆறுவதற்கான மருந்துகள் தரப்பட்டது. அங்குள்ள மக்கள் அதையே அதிசயம் போல் சுற்றி சுற்றி வந்து பார்த்து செல்ல, "இன்ஃபெக்ஷன் ஆகும் கிளாடியன்" என அதற்கு தனி போராட்டம் நடத்தி அவர்களோடு மல்லுகட்டியதில் அன்றைய பொழுது கழிந்திருந்தது.
அவர் உயிருக்காக தங்களுடன் வந்த மருத்துவர்கள் போராடியதை கண்ட வருணிக்கு உள்ளுக்குள் உறுத்தியது. அந்நொடியிலிருந்து அவளே அறியாமல் யோசிக்க துவங்கியிருந்தாள் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அன்றும் மர ஊஞ்சலில் தான் இருவருக்குமான உறக்கம் அமைந்தது. ஜெனிலியா தான் மூத்த மருத்துவரிடம் சொல்லிவிட்டிருந்தாள், "இங்க பாதி கிராமம் முடிச்சு ஒரு வாரத்துல நாம அடுத்த செட் ஆஃப் கிராமம் பார்க்க போணும். இங்க தங்க வீடு தான் இருக்கே எதுக்கு குடில் செய்ய சொல்லி அப்றம் நாம அத டிஸ்போஸ் பண்ணிட்டு?" என அவள் கேட்டதும் நியாயமாக பட்டதால் குடில் ஏற்பாடு அப்படியே நின்றிருந்தது.
யாஷ் அதற்கு தான் மர ஊஞ்சல், ஜலகிரிடை என இறங்கி விட்டிருந்தான் போலும். அவனும் அவன் மனைவியும் என அவர்கள் மாலையையும் இரவையும் அவர்களுக்கானதாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
அடுத்த மூன்று நாட்கள் இவ்வாறு கழிய, அடுத்த நாள் காலை விடியும்போதே வித்தியாசமான ஓசையில் தான் எழுந்தனர் அனைவரும்.
"என்ன ம்யூசிக் இது?" என கேட்டவாறு முதலில் க்ளாடியனை தான் தேடினர்,
க்ளாடியன் அங்கு எங்குமே கண்ணுக்கு தென்படவில்லை, இவர்கள் எழுந்து குளித்து வரவும் சாப்பாடு ஜனோமியும் வேறு இருவரும் கொண்டு வந்து தர, "க்ளாடியன் எங்க? என்ன பங்ஷன் செலிப்ரேட் பண்றீங்க?" என விசாரித்தனர்.
"அது நாங்க இப்பவே சொல்ல கூடாது, மூன்றாவது நாள் நீங்களும் அந்த விழால கலந்துக்கலாம் அப்ப தெரிஞ்சுக்கோங்க" என்றுவிட்டான்.
இவர்களுக்கு நகரத்திற்குள் இருந்து மருந்துகள் மற்றும் சில பல கூடுதல் வசதிகளும் கிடைத்தன, முதல் இரண்டு நாட்கள் எடுத்த ரத்த பரிசோதனை தீர்வுகளும் அன்று தான் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. அதனால் அதில் தான் அவர்கள் கவனம் முழுவதும் இருந்தது.
ரத்த பரிசோதனையில் எல்லாம் சரியாக இருப்பவர்களை பிரித்துவிட்டனர். ரத்த பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்றுகளை கொண்டவர்களை பிரித்தெடுத்தனர்.
'இரத்த சோகை, லுகேமியா, நாள்பட்ட கல்லீரல் நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு, செயலற்ற தைராய்டு ( ஹைப்போ தைராய்டிசம் ), இதயம் மற்றும் சுற்றோட்ட நோய்கள், நீரிழிவு நோய்' என அதில் அந்தந்த மருத்துவர்கள் சிகிச்சையளிக்க என அடுத்த இரண்டு நாட்களும் கழிந்தது.
அந்த கால் புண்ணால் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தவர் தான் அந்த பழங்குடியினரின் நம்பிக்கையே, மூன்று மாதங்கள் ஆகும் அந்த புண் குணமாக, அதை மூன்று தினங்களில் ஆற வைத்திருந்தனர் இந்த மருத்துவர்கள், அதை அதிசயமாக பார்த்தவர்கள் தான் மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை கண்ணை மூடி கொண்டு விழுங்க துவங்கினர்.
மூன்று நாட்களாக க்ளாடியணும் அவர்கள் கண்ணில் படவில்லை, நகரத்திற்குள் சென்றிருக்கலாம் என இவர்களாக முடிவெடுத்துக் கொண்டனர்.
அன்றும் தங்களது அன்றாடங்களை முடித்து மருத்துவ பரிசோதனைக்கு அமர்ந்தவர்களை சற்று நேரத்தில் அந்த தலைவரும் வேறு சிலரும் தேடிக் கொண்டு வந்தனர்.