எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன?

bhuvana_madhesh

Moderator
பார்வை_டீஸர்_1

#புவனா_மாதேஷ்_நாவல்
#புரிதலின்_பிழையோ_
காதல்
#சிவா_ஆதி
#ஒரே_ஒரு_பார்வை_தந்தாலென்ன..
#டீஸர்_1


ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் ஆகாத மேகம் ஏது கண்ணே


என பாடியவனின் கண்கள் எதிரில் அமர்ந்திருந்தவளின் மேல் தான் இருந்தது.. அவனின் பாட்டு தனக்கானது என்று உணர்ந்தும் அதை துளியும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தாள் மதங்கி(பெண்).

பாவையின் பார்வை தன் மீது விழாதோ என்ற ஏக்கத்தில் முழு பாட்டையும் பாடி முடித்தான்.
ஆனால் அவனின் ஏக்கத்திற்கு காரணமவளோ காதை குடைந்து கொண்டே எழுந்து நின்று "தாத்தா நான் ரூமுக்கு போறேன்..." என்றவள் பெரியவரின் பதிலைக் கூட கேட்காது அங்கிருந்து நகர்ந்தாள். மாயோள் செல்வதை தடுக்க முடியாது இயலாமையுடன் பார்த்தது அவனின் விழிகள்...

"ரஞ்சி, நம்மலும் ரூமுக்கு போகலாமா?..."என இரண்டு கைகளையும் மேலே தூக்கி உடம்பை வளைத்தப்படி தன் மனைவியிடம் கேட்ட பெரியவரை சட்டென திரும்பி முறைத்தான் ஆடவன்.

சின்னவனின் முறைப்பை நமட்டு சிரிப்புடன் பார்த்த பெரியவரோ
"அம்முணி, நீங்க போயி எனக்கு பாதம் பால் ரெடி பண்ணுங்க, நான் சத்தநேரம் இருந்துட்டு வந்துடறேன்..." என்று மனைவிடம் கொஞ்சலாக கூறிட, இன்னும் இன்னும் கடுப்பானது அருகில் அமர்ந்திருந்தவனுக்கு.

ரஞ்சிதம் பாட்டி உள்ளே சென்றதும் பக்கவாட்டில் அமர்ந்திருந்த கிழவனின் கழுத்தில் கையை மாலையாக போட்டவன்

"யோவ் நல்லசிவம், நீயெல்லாம் பெரிய மனுஷன்னு வெளிய சொல்லிடாதயா, இந்த வயசுல பாதம் பால் கேட்குதா உனக்கு...அதுவும் சூடா.. மவனே உன்னை..." என்றவன் அவரின் கழுத்தை நெறுக்கினான்.

"பொசக்கெட்ட பயலே... விடு டா என்னை,.." அவனிலிருந்து திமிறியப்படி வெளியில் வந்தவர்

"பல்லு இருக்குது பக்கோட சாப்படறன், உனக்கு எங்க டா வலிக்குது..." என்றவர் எதிரில் அமர்ந்திருந்தவனின் விழி விரிப்பை கூட கண்டுகொள்ளாமல்

நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

என பாடியபடி பெரியவர் செல்ல, மடியிலிருந்த தலையணையை நல்லசிவத்தின் மீது வீசியவன்

"யோவ் நல்லசிவம் எழுந்து வந்தன்னு வையேன் கட்டிலும், மெத்தையும் இருக்கும் ஆனால் அதுல படுக்க நீ இருக்க மாட்ட பார்த்துக்க..." பல்லைக் கடித்தபடி கூறியவனின் குரல் காற்றில் தான் கலந்தது.

******

**அப்பனே வினாயாகா... உன்னோட பிறந்த நாள்ல இந்த கதையை ஆரம்பிக்கிறேன்.. அடுத்து உன் பிறந்த நாள் வரதுகுள்ள இதை நான் முடிச்சரணும்😌😌 அது மட்டுமில்ல இருக்கற எல்லா ongoing கதையையு முடிக்கணும்... அப்படி மட்டும் முடிச்சிட்டேன் எட்டு வருசமா உனக்கு உடைக்க வேண்டிய எட்டு தேங்காய்
உடைச்சரேன்... என்னை நம்பு🙏🙏🙏

ஓம் முருகா சரண முருகா.... 🙏🙏

நன்றி நமக்கம்😁😁😁🙏

இந்த கதை நான் சொன்னது போல என்னோ
ட on-going கதைகள் முடிஞ்சதும் தான் வரும்🤗🤗
 
Top