Krishna Tulsi
Moderator
அழுதுகொண்டே மழையில் நனைந்தவாறு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து இருந்தாள் அவள். பார்பவர் அனைவரும் அவளை பார்த்து தைரியம் சொல்வதற்கு பதில் அவளுடன் சேர்ந்து அழுது விடுவார்கள் போலும், அப்படி ஒரு அழுகை. மழை பெய்ததால் அவள் அழுகிறாள் என்பதை யாராலும் அறிய முடியவில்லை. அழுது அழுது கண்கள் இரண்டும் செவ்வானம் போல் சிவந்து கட்சியளித்தது.
பெருகி வரும் அடை மழை போல இரு கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது. அப்பொழுது “வர்ஷா அக்கா, அழாத. என்ன ஆச்சி? சந்தோஷமா தான வந்த. பக்கதுல என் ப்ஃரெண்ட பார்த்துட்டு வர்றது குள்ள......இப்போ ஏன் இப்டி அழுகுர? தீபன் எதாவது சொன்னாரா?” என்று அவளை விசாரித்தாள் அவள் தங்கை ஹரிணி. அதற்கு “என் வாழ்கையே முடிஞ்சிருச்சி ஹரிணி. நான் யார என்னோட உலகம்னு நினச்சிட்டு இருந்தேனோ அவன் இணைக்கு என்ன வேண்டாம்னு சொல்லீட்டு போய்ட்டான். அவன் இப்படி பண்ணுவானு நெனச்சிகூட பாக்கல” என்று தேம்பிக்கொண்டே கூறினாள்.
அதற்கு அவள் தங்கை, “இங்க நில்லு அந்த ராஸ்கல நறுக்குன்னு நாலு வார்த்த கேக்குறேன் ” என்று கூறி, தன் கைபையில் இருந்து கைபேசியை எடுத்து, “அவன் நம்பர சொல்லுகா” என்று கூறியவளை வர்ஷா தடுத்தாள். “அதுலாம் ஒன்னும் வேண்டாம். அவனுக்கு என்னவிடையும் இன்னொருத்தி பெட்டரா கிடசிடானு எனவிட்டு போய்டவன் கிட்ட இனிமேல் என்ன பேசி என்ன ஆக போகுது? வா வீட்டுக்கு கிளம்பலாம்” என்று கூறி சகோதரிகள் இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்கள்.
வீட்டை இருவரும் அடைந்ததும் வர்ஷா வேகமாக தன் அறைக்குள் நுழைந்தாள். தாய் கேட்ட கேள்விக்கு பதிலழிக்காமல் சென்றதை பார்த்த தாய் ஹரிணியை பார்த்து, “என்ன ஆச்சி அவழுக்கு? ஏன் அவா எந்த பதிலும் சொல்லாம போரா?” என்று கேட்டதற்கு “அம்மா, அவழுகும் அவ ப்ரண்டுகும் ஏதோ சண்டையாம். அதுனால தான் மா” என்று கூறி சமாளித்தாள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டே சோபாவில் அமர்ந்து இருந்தார் வர்ஷாவின் தந்தை ராகவன். தன் மகளுக்கு நல்ல வரன் அமையவில்லையே என்று கவலை. அதனால் தான் அவழும் கவலை படுகிறாள் என்று நினைத்தார்.
ஏனென்றால் வர்ஷாவிற்கு வயது இருபத்திஏழை தாண்ட இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருந்தன. ஆனால் அவருக்கு தெரியாதல்லவா மகள் காதல் தோல்வியில் இருக்கிறாள் என்று. அதனால் வரன் தேடும் படலம் வேகம் காட்டத் துவங்கியது. அதன் விளைவாக விரைவில் அவள் வாழ்வில் ஒரு திருப்பு முனை அமைய காத்துக் கொண்டிருந்தது.
அன்று அவள் தந்தை ராகவன் வேகமாக வீட்டிற்குள் வந்து, “வர்ஷா சீக்கிரமா கிளம்பி சி ஸ்கொயர் கஃபே போமா” என்றார். “எதுக்குங்க அவள அங்க போக சொல்றீங்க? என்ன விஷயம்?” என்றாள் மனைவி சுமித்ரா. “அன்னறைக்கு வர்ஷாக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குனு சொன்னேன்ல அவங்க வீட்ல எல்லாருக்கும் நம்ம வர்ஷுவ ரொம்ப பிடிச்சிருக்காம். வர்ஷு கிட்ட அந்த பையன் தனியா பேசணுமாம். அதுனால தான் இந்த சந்திப்பு. இந்த சம்மந்தம் நல்லபடியா முடிஞ்சா நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன். வர்ஷு, பையனோட போட்டோவும், பெயரும் உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன் பார்த்துக்கோ” என்றார்.
“அங்க வேண்டாம்பா வேறெங்காவது போய் பார்க்குறேன்” என்று கூறவும் அவள் தந்தை அவளை ஒரு பார்வை பார்த்தார். உடனே “சரிப்பா” என்று கிளம்பினாள். ஆட்டோவில் போகும்போதே அந்த இடத்திற்கு சம்பந்தமான கசப்பான நினைவுகளை உருபோட்டுக் கொண்டே சென்றாள்.
அன்றும் சரியான மழை. வர்ஷா மழையில் பாதி நனைந்தும் நனையாமலும் அந்த கஃபேகுள் நுழைந்தாள். “சை இந்த மழ வேற இப்போ தான் பெய்யணுமா?” என்று முணுமுணுக்கும் போதே “மழைனா உங்களுக்கு பிடிக்காதா?” என்று ஒரு குரல் கேட்டது. குரலுக்கு சொந்தக்காரன் யார் என்று தேடும்போது அங்கு அழகான தோற்றத்துடன் அமர்ந்திருந்தான் ஓர் வாலிபன்.
கேள்வியாக அவனை பார்த்தவளை “ஹாய், நான் தான் முகில்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அவனை அடையாளம் கண்டுகொண்டவளாக, “ஹாய்” என்று கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் தன் முகத்தை கைக்குட்டையில் சுத்தம் செய்துகொண்டு இருக்கும்போது “இன்னும் கேட்டதற்கு பதில் வரவில்லையே” என்றான். அதற்கு “எனக்கு பிடிக்காது” என்று சுருக்கமாக பதிலளித்தாள்.
“வர்ஷானா மழைன்னு அர்த்தம். இப்படி ஒரு அழகான பெயர வச்சிக்கிட்டு மழைய பிடிக்காதுன்னு சொல்றீங்க?” என்று கேட்டான். “பிடிக்கலேனா விட்ருங்களேன்“ என்றவுடன் அந்த பேச்சை நிறுத்தி வேறுவிஷயங்களை பேசலானான்.
“சரி, இந்த விஷயம் உங்களுக்கு பிடிகல போல. வேற எதாச்சும் பேசுவோம். உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்று கேட்டான். அதற்கு “எனக்கு ஜூஸ் மட்டும் போதும்” என்றாள். “வேறு எதாவது சாப்பிடலாமே?” என்றவனின் கேள்விக்கு, “எனக்கு பசி இல்லை அதான் ஜூஸ் போதும்னு சொன்னேன்” என்றாள். ஜூஸ் வருவதற்குள் எதாவது பேசவேண்டும் என்று அவன் தன் பேச்சை ஆரம்பித்தான்.
“நான் முதல்ல என்ன பத்தி சொல்றேன் அப்புறம் நீங்க உங்கள பத்தி சொல்லுங்க. என் பேரு முகில். நான் முகில் டைல்ஸ் கம்பெனில இப்போ தான் சி.இ.ஓ பொறுப்பேற்று இருக்கேன். இப்போ கம்பெனியோட எல்லா பொறுப்பையும் நான் தான் பாத்துக்குறேன். எனக்கு ஸ்விம்மிங்னா ரொம்ப புடிக்கும். அப்புறம்.....” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும்போது “ஆமா பெரிய சி.இ.ஓ. ‘தன்ன தானே மெச்சிக்குமாம் தவுட்டுக் கோழி’. ரொம்ப தான் அலப்பர பன்றான்” என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள். “......நீங்க கல்யாணம் ஆனதுக்கு பிறகும் உங்க லைப்ல எந்த ஒரு வித்யாசமும் இருகாது. உங்க கெரியற்கு என்னோட சப்போர்ட் எப்பவும் உண்டு. உங்களுக்கு எங்க வீட்ல புல் ப்ரீடம் உண்டு...” என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே அவள் ‘நீங்க என் ப்ரீடம பறிக்காம இருந்தா மட்டும் போதும்’ என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்டாள். அவன் அனைத்தையும் பேசிமுடித்து விட்டு “இப்போ நீங்க உங்கள பத்தி சொல்றீங்களா?” என்று கேட்டான். அதற்குள் பழசாறு வந்து சேர்ந்தது. பழசாறை இருவரும் வாங்கிக் கொண்டு பேச்சை தொடர்ந்தனர்.
பழச்சாறை மிடறுகளாக அருந்தியவாறே, “ என்ன பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. நான் என்ன, உணர்சிகளுக்கு கட்டுப்பட்ட ஒரு சாதாரண பொண்ணு” என்று கூறிவிட்டு தன் கை கடிகாரத்தை பார்த்து “நேரமாகிவிட்டது செல்கிறேன்” என்று கூறி அங்கிருந்து சென்றாள்.
வீட்டிற்கு வந்தவள் விரைந்து தன் அறைக்குள் சென்றாள். பின்னோடு வந்த அவள் தங்கை ஹரிணி அவளை பார்த்து, “என்ன நடந்தது?” என்று கேட்டாள். விவரிப்பதற்குள் அவள் அம்மா அங்கே இனிப்புடன் வந்து “என் தங்கம் உனக்கு இவ்வளவு பெரிய இடம் அமையும்னு நினச்சிகூட பாக்கல” என்றாள். வர்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘நான் ஒன்னுமே பேசவே இல்ல. யாரா இருந்தாலும் என்ன வேண்டாம்னு தான் சொல்லுவாங்க. ஆனாலும் கல்யாணத்துக்கு அவன் சரின்னு சொலிருகான். ஏன்?...’ என்று எண்ணினாள்.
விரைவில் அவர்களது திருமணம் முடிந்தது. ஆனால் அவளால்தான் அவனை கணவனாக ஏற்கவில்லை. காலங்கள் செல்லச் செல்ல அவள் அவனையும் அவன் அன்பையும் புரிந்துகொண்டு அவன் மீது காதல் கொண்டாள். அவனுடன் தன் வாழ்வை துவங்குவதற்கு முன் எந்த ரகசியமும் இருக்ககூடாது என்று நினைத்து அவளுடைய திருமணத்திற்கு முன் உள்ள காதல் தோல்வியை சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.
அன்றும் நல்ல மழை. வர்ஷா, முகிலுக்கு தொலைபேசியில் அழைத்து, “முகில், நாம முதல்ல சந்திச்ச கஃபேக்கு வாங்களேன். உங்ககூட பேசணும்” என்றாள். அவர்கள் இருவரும் கஃபேயில் முதலில் சந்தித்த அதே இடத்தில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் வழக்கமாக சாப்பிடுவதை முகில் ஆர்டர் செய்தான். அவன் ஆர்டர் செய்து முடித்ததும், “முகில் உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும். எனக்கு...” என்று தயங்கினாள்.
ஆனால் அவள் முடிக்கும் முன்பு “என்ன கல்யாணத்துக்கு முன்னாடி பிரேக் அப்பா?” என்று கேட்டவுடன் அவளுக்கு தூக்கிவாரிபோட்டது. “எப்படி உங்களுக்கு...” என்றவளின் கேள்விக்கு அவன், “நேத்து உன்னோட டைரில மழை பத்தின ஒரு கவிதைய பார்த்தேன். அது எனக்கு ஒரு பொண்ண ஞாபகம் படுத்துச்சு. அந்த கவிதைய அவ தன்னோட காதலனுக்காக சொல்லிக்கிட்டு இருந்தா. பாவம் அவளுக்கு அன்னைக்கு பிரேக் அப் ஆக போகுதுன்னு தெரியாது. அந்த கவிதைய கூட ரசிக்காம அந்த காதலன் அவள விட்டுட்டு போய்ட்டான். அப்ப நான் யோசிச்சேன் ‘அந்த பொண்ணோட அருமை மற்றும் மழையோட அழக ரசிக்க தெரியாதவன்’ என்று. அன்றைக்கு உன்ன நான் பாக்கல ஆனா நேத்து உன்னோட டைரிய பார்த்ததும் தான் தெரிஞ்சது அது நீதான்னு” என்று அவன் கூறும்போதே அவள் கண்களில் நீர் பெருகியது.
அவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டே “ஆமா, அன்றைக்கு நீங்க எதுக்கு வந்தீங்க?” என்றவளுக்கு “எனக்கும் அங்க தான் பிரேக் அப் ஆச்சு. அன்று என்னோட காதல் தோல்வியின் முதலாம் ஆண்டு நிறைவு நாள். அன்றுவரை மழைய வெறுத்த நான் உன்னால் மீண்டும் ரசிக்க துவங்கினேன்“ என்று அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டான். அன்றுதான் வர்ஷா, கசப்பு, மழையில் அல்ல இறந்தகால நினைவில், என்பதை உணர்ந்தாள். பின்பு அவள், ‘இந்த மழை(வர்ஷா) எப்போதும் மேகத்தை(முகில்) காதலித்துக் கொண்டே இருக்கும்’ என்று முகிலைப் பார்த்தவாறே தன் மனதிற்குள் நினைத்துகொண்டாள். பின்பு மழையை ரசிக்கத் துவங்கினாள் தன் காதல் கணவனுடன்.
காதலில் பிரிவு வருவதற்கு காரணம் தவறான நபரை காதலிப்பதால் தானே தவிர காதலில் எந்த தவறும் இல்லை. காதல் என்றும் புனிதமானது. இனி நாம் 'காதல் தோல்வி' என்று சொல்லக்கூடாது ஏனென்றால் காதல் எவரையும் தோற்கடிப்பதில்லை அது வாழவைப்பது.
**************