எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலாகாலம் 02 குறுநாவல் போட்டி (NNK) - 2024

admin

Administrator
Staff member
நறுமுகை நாவல்கள் தளம் மற்றும் ப்ரஷா பதிப்பகம் இணைந்து நடத்தும் நறுமுகையின் நிலாகாலம் 02 குறுநாவல் போட்டி - 2024


IMG-20231216-WA0023.jpg
நறுமுகை நாவல்கள் தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!


போட்டிக்கான விதிமுறைகள்

  1. போட்டி அறிவிப்பு இன்று (15.12.2023) தொடங்குகிறது. ஆக இன்றிலிருந்து (30.12.2023) டிசம்பர் 30 வரை போட்டியாளர்கள் தங்களை பதிவு செய்யலாம்.

  1. கதைக்கான முன்னோட்டங்களை (Teaser) 2023 டிசம்பர் 30ம் திகதி முதல் வெளியிட ஆரம்பிக்கலாம்.

  1. புதினம் ஒவ்வொன்றும் 25000 வார்த்தைகளுக்கு மிகாமல் 20000 வார்த்தைக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.

  1. போட்டியில் கலந்து கொள்ளும் புதினங்கள் தங்களின் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.

  1. பங்கு பெறும் கதைகள் மற்றும் தலைப்புகள் இதற்கு முன் எந்த தளத்திலோ அல்லது புத்தகமாகவோ வந்திருக்கக்கூடாது. அதாவது, இப்போட்டிக்கென எழுதப்பட்ட புதிய கதையாக, உங்கள் சொந்த கற்பனையாக இக்கதை இருத்தல் அவசியம்.

  1. அடுத்தவர்களின் படைப்பைத் தழுவிய கதைகள் ஆதாரங்களோடு நிரூபிக்கபட்டால் போட்டியில் இருந்து நீக்கப்படும்.

  1. போட்டிக்கான குறிப்பிட்ட கால எல்லையிலும், வார்த்தை மட்டத்திலும் கதைகளை நிறைவு செய்யக் கூடிய எழுத்தாளர்கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றனர்.

  1. இது அடையாளம் மறைத்து எழுதும் போட்டியாதலால், போட்டியாளர்கள் தங்களின் சுய விபரங்களையும் அடையாளங்களையும் வாசகர்கள் முதல் சக போட்டியாளர்கள் வரை யாரிடமேனும் வெளிப்படுத்தினாலோ, வெளிப்படுத்த முனைந்தாலோ, அல்லது அவர்களால் போட்டியில் ஏதாவது குளறுபடி நடந்தாலோ அவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

  1. ஒருவர் மூன்று கதைகள் வரை எழுதலாம்.

  1. நீங்கள் சமூகக் கருத்து சார்ந்த கதை, முழுக்க முழுக்க காதல் சார்ந்த கதை, ஆன்டி ஹீரோ அல்லது ஆன்டி ஹீரோயின் கதை, குடும்பம், அமானுஷ்யம், சரித்திரம், இலக்கியம், நகைச்சுவை என்று எப்படி, எந்த வடிவம் கொண்ட கதைக் களத்தை வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம் அது எழுத்தாளர்கள் சார்ந்தது. அதற்கு முழு சுதந்திரமும் உங்களுக்கு உண்டு.

  1. கலந்து கொண்டு கதைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்யும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இலத்திரனியல் சான்றிதழ் வழங்கப்படும்.

  1. வார்த்தை வரம்புகள் மீறி, முகம் சுளிக்கும் காதல் காட்சிகள் (open romance) இல்லாமல் இருத்தல் வேண்டும்.

  1. இந்தப் போட்டி, களம் தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி புது முக எழுத்தாளர்கள், முதல் முறை முயற்சி செய்வோர் என விரும்பும் யாரும் எந்தப் பாகுபாடுமின்றி கலந்துகொள்ளலாம்.

போட்டி முடிவுகள்

  1. 2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரை கதைகளை தளத்தில் (01.01.2024 - 31.03 .2024) பதிவேற்றலாம் (கண்டிப்பாக நேர நீட்டிப்பு செய்யப்படாது)

  1. ஜூன் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை வாக்கெடுப்பு நடைபெற்று, ஜூன் மாதம் 24ம் திகதி போட்டி முடிவுகள் வெளியிடப்படும்.

  1. ஜூலை 24 (2024) வரை அனைத்து கதைகளும் தளத்திலேயே வைத்திருக்கப்படும். அதன் பின் நீக்கப்படும்.

  1. போட்டி முடிவுகள் voting மற்றும் views இரண்டையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.

விருதுகள் மற்றும் வெகுமதிகள்:

  • முதல் பரிசு - ₹6000.
  • இரண்டாம் பரிசு -₹4000.
  • மூன்றாம் பரிசு - ₹2000.-
  • கலந்து கொண்ட அனைவருக்குமே எங்கள் தளத்தின் சார்பாக இலத்திரனியல் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்படும்.

  1. போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று கதைகள் எங்கள் ப்ரஷா பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்படும்.(வேறு பதிப்பகத்தில் புத்தகம் வெளியிட்டு வரும் எழுத்தாளர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களின் படைப்புகள் எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளிவரும். அப்படி வேறு பதிப்பகம் சார்ந்தவர் எனின் அதைத் தெரிவிக்கவும். அவர்களுக்கு பணப் பரிசும் சான்றிதழும், நினைவுச் சின்னம் மட்டுமே

  1. இதைத்தவிர பிற தளங்கள், common websites, Pratilipi, Kindle, wattpad உட்பட எந்த ஒரு தளத்திலும் போட்டிக் கதைகளோ, பிற கதைகளோ பதிவிடாத புதுமுக ஆக்கிவியலாளர்களுக்கு, அறிமுக எழுத்தாளர் விருது, ரூ. 500 பரிசுத் தொகை, இலத்திரனியல் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் என்பன வழங்கப்படும்.

  1. நிறைவுற்ற கதைகளில் வாக்கடிப்படையில் வெற்றி இலக்கை அடையாது, வாசகர் பார்வையில் அதிக வரவேற்பைப் பெற்ற (views base) 3 கதைகள் தெரிவு செய்யப்பட்டு தலா 1000 ரூபா பரிசுத் தொகை, இலத்திரனியல் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்படும்.

  1. 'தமிழே செந்தமிழே' விருது சிறந்த தமிழ் தலைப்புகளை தேர்ந்தெடுத்து 3 கதைகளுக்கு தலா ரூ.500 வழங்கப்படும். பரிசுக்குத் தகுதி பெறும் தலைப்பைக் கொண்ட கதைகள் குறைந்த பட்சம் 10,000 வார்த்தைகளை தளத்தில் பதிவிட்டதாக இருக்க வேண்டும்.

  1. வெற்றியாளர்களுக்கான புத்தகங்கள் ப்ரஷா பதிப்பகம் மூலம் 2024ம் ஆண்டின் ஏதாவது ஒரு தவணை வெளியீட்டின் மூலம் வெளியிடப்படும். எந்தத் தவணையென்பது எழுத்தாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.

வாசகர்களுக்கான பரிசு விபரங்கள்

  • வெற்றி பெறும் கதை புதினமாகும் போது அந்தக் கதைக்கு வந்த அதிசிறந்த விமர்சனம் ஒன்று வெற்றி பெற்ற எழுத்தாளரால் தெரிவு செய்யப்பட்டு அது அவர்களின் பெயரோடு புத்தகத்தில் பதிப்பிடப்படுவதோடு அவர்களுக்கு, அந்த எழுத்தாளரின் அந்த நூல் ப்ரஷா பதிப்பகம் சார்பாக பரிசாக வழங்கப்படும்.

  • அதிகமான போட்டிக் கதைகளுக்கு விமர்சனம் வழங்கும் வாசகர்கள் மூவருக்கும் இலத்திரனியல் சான்றிதழ், நினைவுச்சின்னம் மற்றும் வெற்றியாளர்கள் விரும்பும் ப்ரஷா பதிப்பகம் மூலம் வெளிவந்த புதினம் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.

  • நறுமுகை தளத்தினுள் தொடர்ந்து தங்கள் கருத்துகளையும் பின்னூட்டங்களையும் விமர்சனங்களையும் வழங்கி போட்டியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வாசகர்கள் மூவருக்கும் இலத்திரனியல் சான்றிதழ், நினைவுச்சின்னம் மற்றும் வெற்றியாளர்கள் விரும்பும் ப்ரஷா பதிப்பகம் மூலம் வெளிவந்த புதினம் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.

  • போட்டிக் கதைகளுக்கு தங்கள் பதிவுகள், போஸ்டர், கதையின் அட்டைப் படங்கள், கதை தொடர்பான பின்னூட்டங்கள் முகநூலில் தொடர்ந்து பதிவு செய்து ஆதரவளித்து ஊக்குவிக்கும் வாசகர்கள் மூவருக்கு இலத்திரனியல் சான்றிதழ், நினைவுச்சின்னம் மற்றும் வெற்றியாளர்கள் விரும்பும் ப்ரஷா பதிப்பகம் மூலம் வெளிவந்த புதினம் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.

  • Meme creators : அதிகளவிலான கதைகளுக்கு தங்கள் ஆக்கங்கள் (memes) மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மூவருக்கு இலத்திரனியல் சான்றிதழ், நினைவுச்சின்னம் மற்றும் ப்ரஷா பதிப்பக புதினம் ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தரவேண்டிய இதர தகவல்கள்..

  • நறுமுகை நாவல்கள் தளத்தை பதிவு செய்திருப்பின் உங்கள் யூசர் நேம்.(user name)
  • ஈமெயில் ஐடி.(email id)
  • உங்கள் எழுத்தாளர் பெயர் (pen name or author name)
  • போட்டி கதையின் தலைப்பு (story title)
  • தொடர்புக்கு தொலைபேசி இலக்கம்(contact number)
  • Certificate Name: (தமிழில்)

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் narumugai.ink@gmail.com or prashapublications@gmail.com


என்ற இரண்டில் ஏதேனும் ஒரு மின் அஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்பங்களை டிசம்பர் மாதம் 25ஆம் திகதிக்குள் தங்கள் ஒப்புதல் பதிலை தருமாறு கேட்டு கொள்கிறேன்..


Incase of any discrepancy Prasha publications & narumugai novels team's decision will be final.


அன்புடன்
ப்ரஷா.





We welcome you to narumugainovels.com website.


Narumugaiye Nila kalam 02 Kuru Novels competition - 2024.


  • The competition will begin on 15.12.2023 hence, all competitors can register themselves commencing today till 30.12. 2023.

  • The story should be original.

  • Any story submitted should not have been published prior in any form and if found will be disqualified.

  • All genres of stories are accepted except for open romances.

  • Open romances are strictly prohibited.

  • Word limit for the story should be between 20000-25000.

  • No time & word extensions.

Awards and Rewards :

  • Winner will be awarded with 6000 cash prize
  • Runner up 4000
  • Second runners up will be awarded with 2000 in cash.

  • The three best written stories will have the opportunity to have their stories published in Prasha Publication if they wish to.

  • All comments and reviews on the website will be appreciated and the top five most active reviewers, meme creators and commenters will be receiving special prizes.

  • If the author does wish so the best reviews would be printed on with the published work.

  • All participants will be issued with a certificate.

  • This offers a platform for emerging writers on any website, including common websites, Prathilipi, Kindle, and Wattpad, to submit unpublished stories or other narratives. Contributors stand a chance to win awards, including a cash prize of INR 500, recognition as an introduction writer, and a digital certificate. Notably successful stories, judged by views, will receive additional rewards, such as a cash prize of INR 1000, an editorial certificate, and a memory token.

  • There is also a special award titled ‘Tamil Senthamizhe Award', offering INR 500 for the best three Tamil headlines. To qualify for the prize, stories must be submitted on the website with a minimum of 10,000 words.

  • A single participant can write up to three stories.

  • Please refrain from using your id a special serial number will be provided for all participants (ex : Narumugai Kalam Kanalam - NKK - 1, 2,3 ect.)

  • Competition will be held 01.01.2024 - 30.03.2024

  • The voting process will take place from June 18th to the 22nd.

  • Results will be announced on 24.06.2024.

  • All stories will be available on the website until July 24, 2024, after which they will be removed.

"All participants should provide with the following details-

  • Username used for the narumugai novels website
  • Email
  • Pen name
  • Story title
  • Contact number
  • Certificate name

All participants if willing email the following details with a letter of approval to the following email



Incase of any discrepancy Prasha Publications & Narumugai Novels team's decision will be final.


Best of luck for the competition


Sincerely
Prasha

(Proprietor of Prasha Publications & admin of narumugainovels.com)
 
Last edited:
Top