#Nnk41
#அகத்திரை_திறவாயோ
நல்ல உணர்ச்சிபூர்வமான கதை. எழுத்தாளர் உணர்வுகளை பந்தாடியிருக்காங்க இந்த கதையில.
மலரினியாழ் குடும்பத்தில அண்ணனை தவிர்த்து அனைவராலும் வெறுக்கப்படுற ஒரு ஜீவன்.
ஏன்?? எதற்கு?? விடை அவளோட டையிரியில!!!!
மலரோட அக்கா பூமிகா இவ காதலிச்சவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக தங்கச்சிய பணயம் வைக்குது மொத்த குடும்பமும்.
ஆரம்பத்துல மலரை வெறுத்த அவளோட அண்ணன் அதுக்குபிறகு மனசு மாறிடுறாரு ஷோ தான் செய்த தப்புக்கு பிரயாசித்தமா மலரை அந்த கல்யாணத்துல இருந்து காப்பாத்தி கொடைக்கானலுக்கு வேலைக்கு அனுப்புறான்.
அங்கே மலர் ஆதித்யா நெடுமாறனை சந்திக்கிற. ஆதித்தயாவோட காதல் அளப்பரியாதது.
ஆதித்யாக்கு மலரை முன்னாடியே தெரியுமா?? இரண்டு பேருக்கும் உள்ள உறவு என்ன?? எல்லாத்துக்கு விடை கதையில நல்ல விறுவிறுப்பு சுவாரஸ்யம் குறையாம இருந்தது கதை.
மலர்!!! இவளை என்ன சொல்றது இவக்கிட்ட ஒரு குறை இருக்கு அந்த குறையால பெத்த அம்மா அப்பாவே அவளை அவமானப்படுத்துறாங்க.
சாவித்ரி பூமிகா எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை பெத்த பொண்ணு கூடப் பொறந்த தங்கச்சின்ற நெனைப்பு அவுங்க மனசுல சுத்தமா இல்லை நிதமும் அவளுக்கு நரகம் தான்.
இதுல ஆதித்யாவோட காதல் அவளுக்கு தேவாமிர்தமா கிடைக்க அதுவும் ஒரு கட்டத்துல விஷமா மாறிடுது??
அதுக்கப்பறம் என்ற ஆச்சு?? மலருக்கு என்ன குறை?? ஏன் அவ வீட்டாளுக்கலாலேயே ஒதுக்கப்படுறா???
எல்லாத்துக்கும் விடை கதையில படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
எனக்கு இந்த கதைல பிடிச்சதோ மலரோட டைரி தான் அப்பப்பா!!! எத்தனை உணர்வுகள் உணர்ச்சிகள்!!!!
ரொம்ப சென்சிடிவ்வான கதை!!!
மஞ்சரி, இலக்கியா, வாசு, மல்லிகா டீச்சர் எல்லாம் மலருக்கு கிடைத்த வரங்கள்!!!
பி.கு: இதுல மலர் போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் குடும்ப கவுரவத்தை கெடுத்துட்டான்னு சாவித்திரி சொல்லுவாங்க ஆனா அப்புடி ஒரு சீனே வரலையே இல்லை வந்து நான் கவனிக்கலையா ரைட்டர் தெளிவிப்படுத்தவும்!!!!