எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ இல்லா இடமும் எனக்கேது? - கதை திரி

Status
Not open for further replies.

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 1

தன் வீட்டில், அப்போது தான், மாலை வேளைக்கான சாமிப் பூஜையை, முடித்து, நெற்றியில் திருநீறு பூசி இருந்தார் பவதாரிணி.

“அம்மா! நான் டீ போட்டுக்கவா?” என்று அங்கே வந்தாள் அவருடைய மகள் தன்மயா.

“ம்ம். ஃப்ரிட்ஜில் இருந்து, பாலை எப்போவோ வெளியே எடுத்து வச்சுட்டேன் டி. ஸ்டவ் பக்கத்திலேயே இஞ்சியும் இருக்கு” என்று அவளிடம் தெரிவித்தார் பவதாரிணி.

“தாங்க்ஸ் மா” என்று கூறிச் சமையலறைக்குள் சென்றாள்.

அவர்களது வீட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால், குடும்பத்தின் உறுப்பினர் யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பிடித்த விதமாக, தேநீரையோ, கொட்டை வடிநீரையோ, அடுக்களைக்குள் சென்று தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். மற்றவருடைய உதவியை எதிர்பார்த்து நிற்கத் தேவையில்லை என்றும்,

அதுவும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான சுவைப் பிடிக்கும் என்பதால், இது நல்ல யோசனையென, அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இப்போது தனது விருப்பமான இஞ்சி சுவையுடைய தேநீரைத் தயாரிக்கச் சென்றிருந்தாள் தன்மயா.

அவளது அன்னையான பவதாரிணியும், செல்பேசியில் இன்ஸ்டாகிராம் செயலியைப் பார்வையிட ஆரம்பித்து விட்டார்.

அவர் எப்போதும் செல்பேசியையே பார்த்துக் கொண்டு இருப்பவர் கிடையாது. ஆனால், அதிலுள்ள விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். பத்தாவது படித்து முடித்தப் பின், பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து அங்கே பயின்று பட்டம் பெற்ற பிறகு, அவருக்கான வரனைத் தேடி வெற்றி கண்டிருந்தனர் அவரது பெற்றோர்.

அந்த வரன் தான் யுதிர்ஷ்டன். சிவில் இன்ஜினியராக இருந்தவருக்கு, பவதாரிணியும், அவரது படிப்பும், வேலையும் பிடித்துப் போக, மனமுவந்து, அவரைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

திருமணத்திற்கு முன்னும், பின்னும் தடையின்றி, வேலைக்குச் சென்று கொண்டிருந்தார் பவதாரிணி. அவரது கணவனின் வீட்டாரும், அதற்குத் தடை சொல்லவில்லை.

அவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.

வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும், கடிகாரத்தைப் பார்த்தார் பவதாரிணி.

அதில், ஆறரை எனக் காட்டியது.

அவரது கணவருக்கு, காலை ஆறு மணியிலிருந்து, மாலை ஆறு மணி வரை தான், வேலை நேரம். எனவே, அலுவலகத்திலிருந்து அரைமணி நேரப் பயணம் செய்து வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார் யுதிர்ஷ்டன்.

உள்ளே வந்ததும், அக்கடாவென நீள்சாய்வு இருக்கையில் அமர்ந்து,

“கிச்சன்ல யாரிருக்கா பவா?” என்று மனைவியிடம் கேட்டார்.

“நம்மக் கடைக்குட்டி தான் ங்க! டீ போட்டுட்டு இருக்கிறா” என்றார் பவதாரிணி.

“ஓஹ்! சரிம்மா” என்றவர், குளியலறைக்குச் சென்று கை,கால்களைச் சுத்தம் செய்து விட்டு வந்தார் யுதிர்ஷ்டன்.

“நீங்க காஃபி போட்டுக்கலையா?” என்று தன்னருகே உட்கார்ந்த கணவனிடம் வினவினார்.

“இல்லை பவா. கொஞ்ச நேரம் ஆகட்டும். இன்னும், தனு கிச்சனில் இருந்து வரலைல” என்று கூறியவர்,

சிறிது நேரம் கழித்து, பனியன் மற்றும் ஷார்ட்ஸூடன் வந்த யுதிர்ஷ்டனோ,”தனும்மா, டீ போட்டு முடிச்சிட்டா, நானும் எனக்குக் காஃபி போட்டுக்குவேன்” எனக் குரல் கொடுத்தார்.

“சீக்கிரம் டீ போட்டுட்டு வா” என மகளுக்கு அறிவுறுத்தி விட்டு வந்த பவதாரிணி,“பார்க்க ரெஸ்ட்லெஸ் ஆகத் தெரியுறீங்க! நானே உங்களுக்குக் காஃபி போட்டுக் கொடுக்கிறேன்” என்று கணவனிடம் கூறி விட்டார்.

அவர் வேண்டாமென மறுத்தாலும், அது மனைவியிடத்தில் செல்லுபடியாகாது.

எனவே,“மூத்தவன், இன்னும் ஆஃபிஸிலிருந்து வந்திருக்க மாட்டான். இளையவன் எங்கே?” என்று வினவினார் யுதிர்ஷ்டன்.

“அவனுக்குக் கண்ணு ரொம்ப எரியுதாம் ங்க! தூங்கிட்டு இருக்கான்” என்றார் பவதாரிணி.

“சிஸ்டம் வொர்க், அதுவும், எப்பவும் ஏதாவது வேலை இருந்துட்டே இருக்கு. அதான். பாவம், சாமி கும்பிடறதுக்காக கூட எழும்பலையா?” என்று கேட்டார் கணவர்.

“இல்லைங்க. அவ்வளவு அசதி!” எனப் பதிலளித்தவர், அடுக்களையில் இருந்து, இளைய மகள் வெளியேறுவதைக் கண்டதும், அவருக்காக காபி கலக்கப் போனார் மனைவி.

தொலைக்காட்சிப் பெட்டியில் லயித்திருந்த தந்தையைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன்னறைக்குப் போக முயன்ற தன்மயாவை வழிமறித்தது ஒரு உருவம்.

தன்னை விழியுயர்த்திப் பார்த்தவளின் கரத்திலிருந்த, தேநீரின் வாசனையை முகர்ந்து ரசித்தவாறே, “இதை அண்ணாவுக்குக் கொடும்மா!” என்று அவளிடம் யாசித்து நின்றான் தன்மயாவின் இரண்டாவது அண்ணன்.

அவனுக்குத் தன்னுடைய தேநீரை கொடுக்கவா, வேண்டாமா? என்ற எண்ணத்தில் மூழ்கியவளை அப்படியே நிற்கச் செய்து விட்டு, அவளிடம் இருந்தக் கோப்பையைக் கண நேரத்தில் பறித்துக் கொண்டான் அவன்.

“டேய்!” என்று தன்மயா அலறுவதற்குள், அவளுக்கு உதவிக்கரம் நீட்டி, மகனைக் கடிந்தார் யுதிர்ஷ்டன்.

“ப்பா! ப்ளீஸ்! டயர்ட் அண்ட் கண்ணெல்லாம் எரியுது!” என்று அவரருகே அமர்ந்தான் மகன்.

“அதுக்கு? என்னோட டீ - யைத் தான் பிடுங்கிக் குடிப்பியா?” எனக் கத்தினாள் தன்மயா.

அந்த சமயம், தன்னிரண்டு கரங்களிலும், கோப்பைகளைத் தாங்கிக் கொண்டு, சமையலறையில் இருந்து வெளிப்பட்டு,”அதை அவகிட்டேயே கொடுத்துரு” என்று மகனிடம் சொன்னார் பவதாரிணி.

“தாங்க்யூ மா” என்றவாறு தனக்கான கோப்பையைப் பெற்றுக் கொண்டான்.

கணவருக்கும் காபியைத் தந்து விட்டு மகனுடன் உட்கார்ந்தார் அன்னை.

“ம்ஹூம்!” எனத் தந்தையின் பக்கம் சென்று அமர்ந்து கொண்டு, தேநீரைப் பருகினாள் தன்மயா.


இப்போதே, யுதிர்ஷ்டன் மற்றும் பவதாரிணியின் இரண்டாவது மகனைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

தேநீர்க் கோப்பையைத் தங்கையிடமிருந்து, சாதூரியமாகப் பறித்தவனுடைய பெயரும் கூட, சாதுரியன் தான்!

மென்பொருள் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றிருந்தவனோ, ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாமல், ஒரு இணையதளம் வடிவமைப்பு மற்றும் அதை மேம்படுத்திக் கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நண்பர்களுடன் சேர்ந்து, நடத்தி வருகிறான். பல பிரபலமான அலுவலகங்கள் மற்றும் கதைகளைப் பதிவிடும் பதிப்பகங்களுக்காகவும் தளங்களை உருவாக்கிக் கொடுத்து, அவற்றைக் கண்காணிக்கிறான் சாதுரியன்.

அதன் மூலம், அவனுக்கான அங்கீகாரமும், பணமும் நிறையவே கிடைக்கிறது.

மூத்த மகனுக்குத் திருமணம் முடித்தவுடன், இருபத்தி ஐந்து வயதான அவனுக்கும் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க நினைத்தனர் யுதிர்ஷ்டன் மற்றும் பவதாரிணி.

அவர்களுடைய மூத்த மகன், பணி முடிந்து வந்த பிறகு, அவனைப் பற்றிய அறிமுகத்தைப் பார்ப்போம்.

“போடா!” என்று நிறுத்தாமல் திட்டிய தங்கையை நாக்கைத் துருத்தி அடக்கியவனை முறைத்தாள் தன்மயா.

கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்தாலும், வீட்டில் கடைக்குட்டி என்றால், குடும்பத்தாரால், செல்லம் கொடுத்து வளர்க்கப்படும், ஒரு சிலரில், இவளும் ஒருத்தி!

இரண்டு அண்ணன்களுக்கு அடுத்து பிறந்தவள் என்பதால், அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழியாகவும் இருக்கிறாள் தன்மயா.

இப்போது கூட, அதனாலேயே தான், அவளை வம்பிலுத்துப் பார்த்தான் சாதுரியன்.

இளையவர்களைப் பற்றி அறிந்து கொண்டிருந்த வேளையில், வீட்டின் மூத்தப் பிள்ளை வந்து சேர்ந்தான்.

தன்னுடைய இளவல், ஐடி நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றாலும், அங்கே வேலைக்குச் சேர்ந்திருந்தான் முதலாமவன்.

மற்ற இருவருக்கும், மூத்தவன் என்பதால், எப்போதும், பொறுப்பைச் சுமந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினையாமல், அவர்களுடன் சரி சமமாகப் பேசிச் சிரிப்பான் பதுமன்.

“வாடா. உன்னைத் தான், கேட்டு விசாரிச்சுட்டு இருந்தேன்” என்றார் யுதிர்ஷ்டன்.

“வேலை முடிஞ்சு வர்றதுக்குள்ளே அவ்ளோ டிராஃபிக் ப்பா”

அவருக்குப் பதிலுரைத்து விட்டு, கைப்பையை வைத்து விட்டு, தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வந்தவனோ, எப்போதுமே காஃபி, டீ குடிக்க மாட்டான். எப்போதாவது தனக்குத் தோன்றினால், பழச்சாறு தயாரித்துக் குடித்துக் கொள்வான்.

“டேய்! நீயும், தனுவும் சண்டையே போடாமல் இருக்கீங்களே?” என்று சாதுரியனிடம் ஆச்சரியத்துடன் கேட்டான் பதுமன்.

“அது எப்பவோ நடந்து முடிஞ்சிருச்சு. நீ லேட்டாக வந்துட்ட!” என்றபடி, காலை நீட்டி அமர்ந்தான் அவனது இளவல்.

“ஓஹோ! தனு ரூமில் இருக்காளா?” என்றான்.

“ஆமாம் டா” என்று அவனிடம் சொன்னவன், “நான் சிஸ்டமில் வொர்க் பார்க்கப் போறேன் ம்மா. டின்னர் டைமில் கூப்பிடுங்க” என்று பவதாரிணியிடம் தெரிவித்து விட்டுச் சென்றான் சாதுரியன்.

வேலை விஷயமாக செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்து விட்டுத், தங்கையின் அறைக்குச் சென்று,

“ஹாய் டா!” என தன்மயாவிடம் பேச்சுக் கொடுத்தான் பதுமன்.

“பது அண்ணா!” என்று ஆரவாரமாக அவனை அழைத்தாள் தன்மயா.

“அவன் கூட சண்டையா?” என்று தங்கையிடம் விசாரித்தான்.

“ஆமாம் ண்ணா, என்னப் பண்ணான் தெரியுமா?” எனத் தனக்கும், சாதுரியனுக்கும் நிகழ்ந்தப் போரைப் பற்றி பதுமனிடம் கூறி முறையிட்டாள் தன்மயா.

“ஹாஹா! உங்களுக்கு வேற வேலையே இல்லை” என்று கூறிச் சிரித்தான்.

“அண்ணா! அவனுக்குத் தான் என்னை வம்பிலுக்கிறதே வேலையாகப் போச்சு!” என்று கோபத்தில் சினுங்கினாள் தங்கை.

“ம்ஹ்ம்..‌. உங்க காலேஜில் செமஸ்டர் முடிஞ்சிருச்சுல்ல! பேப்பர் கரெக்ஷனுக்குப் போகலையா?” என்றான் பதுமன்.

“இன்னும் இன்ஃபார்ம் பண்ணலை அண்ணா! நானும் அதுக்காகத் தான் வெயிட்டிங்” என்று விடையளித்தாள் தன்மயா.

“சரி.எப்போ லீவ் முடியுது?”

“நெக்ஸ்ட் வீக், ண்ணா”

“அது வரைக்கும், உன்னையும், அவனையும் சமாளிக்கிறது கஷ்டம் தான்!” என்றான் பதுமன்.

“போங்க ண்ணா!” என்று ஒழுங்கு காட்டினாள் தன்மயா.

“அவன் கம்ப்யூட்டர் ரூமில் அடைஞ்சுட்டான். நீயும் இங்கே வந்துட்ட! நான் வீட்டுக்குள்ளே வந்த அப்போவே, உங்களோட அமைதியைப் பத்தி தான் கேட்டுட்டு இருந்தேன்” என்று அவளிடம் கூறினான் அவளது தமையன்.

“சரி ண்ணா” என்றவள், இரவு உணவின் போது, சாதுரியனிடம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள் இருவரும்.

“நீங்க என்னங்க, இவ்ளோ நேரம் கால் பேசுறீங்க?” எனக் கணவனிடம் குறைபட்டார் பவதாரிணி.

அப்போது தானே, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்தார் அல்லவா? அதன் பிறகும், வேலையைப் பற்றிக் கணவன், செல்பேசியில் உரையாடுவது, அவருக்கு அதிருப்தியைத் தந்தது.

“சாரிம்மா, முக்கியமான ஃபோன் கால். இன்னும் கொஞ்ச நேரத்தில், டின்னருக்குப் பசங்களும் வந்துருவாங்க. அதுக்கப்புறம், வேலை விஷயமாக, எதுவும் பண்ண மாட்டேன்!” என்று மனைவியிடம் உறுதியாக கூறினார் யுதிர்ஷ்டன்.

கணவருடன் அளவளாவி முடித்து விட்டு,“பது, தனு! சாப்பிட வாங்க” என்று மகனையும், மகளையும் அழைத்தார் அன்னை.

அவர்களும் தத்தமது அறையிலிருந்து வெளிப்பட்டனர்.

“சாது, எங்கே ம்மா?” என மனைவியிடம் கேட்டார் யுதிர்ஷ்டன்.

“இதோ, கூட்டிட்டு வர்றேன் ங்க” என்றவாறு, சாதுரியனின் அலுவலக அறைக்குள் சென்றார் பவதாரிணி.

“அவன் சாதுவாம், ண்ணா!” என்று பதுமனிடம் கிசுகிசுத்தாள் தன்மயா.

“அம்மா சொன்னால், சரியாகத் தான் இருக்கும்மா”என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

அலுவலக அறையில், மடிக்கணினியிலும், செல்பேசியிலும் மாறி மாறி வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் சாதுரியன்.

“சாது” என அவனது நாற்காலியின் பின்னாலிருந்து குரல் கொடுத்தார் பவதாரிணி.

“ம்மா” என்றவனிடம், இரவு உணவைப் பற்றிக் கேட்டார்.

“வரேன் ம்மா” என்று கூறியவன்,
நான் வொர்க் முடிச்சிட்டேன். இங்கே பாருங்க. இது புது வெப்சைட்! நான் டிசைன் அண்ட் டெவலப் பண்ணேன்” என்று தனது வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்காக, அவருக்கென்று, இணையதளம் ஒன்றைப் பிரத்தியேகமாக உருவாக்கி, அதில் சில மாற்றங்களைச் செய்திருந்தான் சாதுரியன்.

அவனது சிகையைக் கோதி விட்டுக் கொண்டே, அதைப் பார்வையுற்ற தாயோ,“சூப்பர் டா” என மகனைப் பாராட்டினார்.

“இதை முடிக்கத் தான், லேட் ஆகிடுச்சு ம்மா” என்றவனிடம்,

“ம்ஹ்ம்…! அதனால் தான், இதை உன்னால், பெஸ்ட் ஆக ரெடி பண்ண முடிஞ்சது. ஆனால், உடம்பை மட்டும் கெடுத்துக்காதே! அம்மா சொல்றதைக் கேளு” என அவனுக்கு அறிவுரை வழங்கினார் பவதாரிணி.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 2

தான் தயாரித்த வலைதளத்தைப் பார்வையிட்டு, அதைப் பற்றிய மதிப்பாய்வு உரையைப் புலனத்தில் தெரிவிக்குமாறு, நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு, சாப்பாட்டு மேஜைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தான் சாதுரியன்.

“சாது! ரொம்ப சாது தான்!” என்று அவனைக் கிண்டல் செய்து முறைத்தாள் தன்மயா.

அவளுக்கு அருகிலிருந்தப் பதுமனோ, நகைப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“வெவ்வெவ்வே!” என்றவாறு அவளுக்கு வக்கனை காண்பித்தான் சாதுரியன்.

சுடச்சுட ஊற்றி எடுத்து வந்த ஊத்தாப்பங்களைக் காலி செய்து கொண்டே, பேசிக் கொண்டு இருந்தனர் அனைவரும்.

அப்போது, கிண்டலை எல்லாம் விட்டு விட்டு, சாதுரியனுக்குப் புதிதாக வந்த தள வேலைகளைப் பற்றிக் கலந்துரையாடினர் அவனுடைய அண்ணனும், தங்கையும்.

“அது எதுக்கான வெப்சைட் சாது?” என்றான் பதுமன்.

“ஒரு ஐடி கம்பெனியோட வெப்சைட் ண்ணா” என்று தமையனுக்குப் பதிலளித்தான் சாதுரியன்.

“புதுசாக ஓபன் பண்ணக் கம்பெனியா?” என்று வினவினாள் தன்மயா.

“இல்லைடா. ஆல்ரெடி ஒரு வெப்சைட் வச்சிருந்து இருக்காங்க. அதை செஞ்சுக் கொடுத்தவங்களோட வொர்க் பிடிக்கலை. சோ, நம்மகிட்டப் புதுசு கேட்டு இருக்காங்க” என்றான் அவளது அண்ணன்.

“சூப்பர் டா. அதை எங்களுக்கும் மெயில் பண்ணி விடு” என்று மகனிடம் தெரிவித்தனர் யுதிர்ஷ்டன் மற்றும் பவதாரிணி.

“கண்டிப்பாக அனுப்புறேன்” என்று உணவுண்டு முடித்தான் சாதுரியன்.

அடுத்த நாள் காலையில் விரைவில் எழ வேண்டும் என்பதால், உறங்கச் சென்று விட்டார் யுதிர்ஷ்டன்.

“ண்ணா! நீ எங்கூட வா” எனப் பதுமனோடு அழைத்துக் கொண்டு, அலுவலக அறைக்குள் நுழைந்தான் சாதுரியன்.

“நானும் வருவேன்” என அழையா விருந்தாளியாக, அவர்களுடன் சென்றாள் தன்மயா.

“வா, வா” என்று அவளையும் உள்ளே அனுமதித்தவன்,”இதைப் பாருங்க” என்று தாய்க்குக் காண்பித்ததை, உடன் பிறந்தவர்களுக்கும் காட்டினான்.

அந்த வலைதளத்தைப் பார்த்து,”நான் இந்தக் கம்பெனிக்குத் தான், என்னோட ரெஸ்யூமை அனுப்பலாம்னு இருக்கேன் டா”என்றான் பதுமன்.

“ஏன் ண்ணா? இப்போ பார்க்கிற, வேலையை விடப் போறியா?” என்று அவனிடம் கேட்டாள் தன்மயா.

“ஆமாம் மா. செட் ஆக மாட்டேங்குது, அதான்”

“அப்போ இந்த ஆஃபீஸோட ஃபீச்சர்ஸ் எல்லாம், இதில் இருக்குப் பாத்துக்கோ. ஓகேன்னா, ரெஸ்யூம் அனுப்பு” என்று தன் அண்ணனுக்கு அறிவுறுத்தினான் சாதுரியன்.

“ஒரு மெயில் வந்திருக்குப் பாரு” எனக் கணிணியின் திரையில், கீழே இடப்புறத்தில், வந்திருந்தக் குறுந்தகவலுக்கான அறிவிப்பைச் அவனுக்குச் சுட்டிக் காட்டினாள் தன்மயா.

“ஹாங், இந்த வெப்சைட்டைக் கதையெல்லாம், பப்ளிஷ் பண்றவங்க கேட்டாங்க” என்று கூறியவனோ, தங்கைக்கும், தமையனுக்கும் அதையும் திறந்து காண்பித்தான்.

பதுமனுக்குக் கதை வாசிக்கும் பழக்கம் இல்லை என்பதால், தம்பியின் திறமைகளை மட்டுமே, அந்த வலைதளத்தில் பார்த்தான்.

ஆனால், அதிலுள்ள, பதிப்பகத்தின் பெயரிலிருந்து, கதைகளின் பெயர்கள் வரை, கண்ணெடுக்காமல், பார்வையிட்டாள் தன்மயா.

ஏனென்றால், அவளுக்குக் கதைகள் வாசிக்க அலாதி பிரியம். கல்லூரியில் இருந்து வந்து அது சம்பந்தமான வேலைகளை முடித்ததும், புத்தகத்தில் கதைப் படிக்கத் தொடங்கி விடுவாள்.

அனைத்துப் பிரிவு கதைகளும் அவளுக்கு வாசிக்கப் பிடிக்கும். தேடித்தேடி படித்தாலும், அவளது வாசிப்புத் தாகம் எப்பொழுதும் குறையவில்லை.

அதனால் தான், இந்தப் பதிப்பகத்துடைய புத்தகங்களையும் கவனித்தவள்,“இன்ட்ரெஸ்ட்டிங் கலெக்ஷன்ஸ்!” என அனைத்து புத்தகங்கள் மற்றும் அவை இருந்தப் பிரிவுகளையும் கண்டு விழி விரித்துக் கூறினாள் தன்மயா.

“நான் பார்த்துட்டேன். நல்லா இருக்குடா. இதில் ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னைத் தாராளமாக கூப்பிடு” என்று தம்பியிடம் கூறி, வெளியேறி விட்டான் பதுமன்.

ஆனால், அவர்களது தங்கையோ, அந்தக் கணிணியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இன்னும் என்னப் பார்த்துட்டு இருக்கிற தனு?” என அவளிடம் கேட்டான் சாதுரியன்.

“இதில் நிறைய ஸ்டோரி த்ரெட்ஸ் இருக்கு ண்ணா, ஆனால், எந்தக் கதையும், இன்னும் அப்டேட் ஆகலை. எல்லாமே ப்ளாங்க் ஆக இருக்கே! அதான், டைட்டிலை வச்சு மட்டும், எப்படி கதையை செலக்ட் பண்ணன்னு
யோசிச்சிட்டு இருக்கேன்” என்று ஆர்வமாக உரைத்தாள் தன்மயா.

அதைக் கேட்டவனோ,”இந்த வெப்சைட் ரெடி ஆகிட்டே இருக்குடா, ஏற்கனவே இருந்த கதையெல்லாம் ரிமூவ் செய்துட்டு, புது டைட்டில்ஸ் வச்சுத், திரெட் கிரியேட் பண்ண சொல்லி இருந்தாங்க. அந்த லிஸ்ட்டைத் தான், மெயில் செய்து இருக்காங்கப் போல, டைட்டில்ஸ் வர, வர, எனக்குக் கொஞ்சம், கொஞ்சமாக மெயில் அனுப்பிட்டு இருக்காங்க இன்னும் லிஸ்ட் போகும் போல, சோ, இந்த வேலை முடிஞ்சதும், அவங்களுக்கு அனுப்பிட்டு, டிரையல் பார்த்துட்டு, யூஸ் பண்ண சொல்லுவேன். திருப்தியாக இருந்தால், அவங்க யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. இதிலேயே நீ கதைப் படிக்கலாம். இல்லைன்னா, அவங்களோடது, பெரிய பப்ளிகேஷன் போல, நான் அஃபிஷியல் நம்பர் பாத்து சொல்றேன், அங்கே இருந்து புக் ஆர்டர் செய்து வாங்கிக்கோ” என்று தங்கையிடம் கனிவுடன் கூறினான்.

அதைக் கேட்டவளுக்கோ, உற்சாகம் பொங்கி வழிந்தது. அதை இதழ் வழியே கடத்தி,”தாங்க்யூ சோ மச் ண்ணா!” என்று தமையனுக்கு நன்றி தெரிவித்தாள்.

“பப்ளிகேஷனோட பேரைப் பாத்துக்கோ” என்றான் சாதுரியன்.


“JHA NOVELS & PUBLICATIONS” என்ற பெயரைப் பார்த்து விட்டு, அங்கிருந்து அகன்றாள் தன்மயா.

“உங்க அண்ணனோட கம்ப்யூட்டரில் இருந்து, புதுசா ஒரு பப்ளிகேஷனைக் கண்டுபிடிச்சு இருப்பியே?” என்று தன் மகளை முழுவதும் அறிந்தவராக அவளிடம் வினவினார் பவதாரிணி.

“ஹிஹி, ஆமாம் மா” என அசடு வழிந்து போனாள் மகள்.

“காலேஜ் போகனும்ல தூங்கு, போ” என்று அவளை அனுப்பியவர், தனது அறைக்குள் சென்றார்.

அஸ்தமனம், சூரிய உதயத்திற்கு ஆரம்பம் தானே? அந்த அதிகாலை வேளையைக், கண்ணுற்றவாறே, இருசக்கர வாகனத்தில் பயணமாகிக் கொண்டிருந்தார்கள் இரண்டு பெண்கள்.

“ஹேண்ட்பேக் மிஸ் ஆகிடுச்சா? ஸ்ஸோ!” எனப் பின்னாலிருந்த தோழி, தன் தலையில் தட்டிக் கொள்வதை மிர்ரரில் பார்த்தாள் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தப் பெண்,

“அப்போ மொபைலையும் எடுத்துட்டு வரலையா நீ?” என்று வினவினாள்.

“அதிலேயே தானே வச்சிருந்தேன். மொபைலும் ஹோகயா!” எனப் புலம்பினாள் ஜெய்சிகா.

“சரி. இந்தா என்னோடது, அவனுக்குக் கால் பண்ணி வந்துட்டானான்னுக் கேளு” என வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டுத், தன்னுடைய செல்பேசியை அவளிடத்தில் நீட்டினாள்.

அதை வாங்கி எண்களைத் தட்டி அவர்களுடைய இன்னொரு தோழனுக்கு அழைத்தாள் ஜெய்சிகா.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு,”ஹலோ, தியா!” என்ற ஆண் குரல் கேட்டது.

“நான் ஜெய் பேசறேன் டா”

“ஓஹோ, நீயும், தியாவும் டிராவலிங் - கில் இருப்பீங்களே?” என்று சரியாக கணித்துக் கூறினான்.

“ஆமாம் டா. நீ எங்கே இருக்கிற? ஆஃபீஸை ஓபன் பண்ணி வைக்கச் சொன்னோம்ல?” என்றாள் ஜெய்சிகா.

“நீங்க வந்துட்டு தானே இருக்கீங்க? வந்து பாரு”

“டேய் ஹரி! சொல்லுடா, ஆஃபீஸூக்கு வந்துட்டாரு?”

“தியா கிட்ட ஃபோனைக் கொடுடி!” எனவும்,

“ம்ஹூம்! போடா” என்று கூறி விட்டு, முன்னாலிருப்பவளிடம் செல்பேசியைத் தந்தாள் ஜெய்சிகா.

இவளது முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, அதில் பேசத் தொடங்கினாள்.

“ஹரி!” என்றவளிடம்,

“தியா, நான் எப்போவோ வந்து, ஆஃபீஸை ஓபன் பண்ணி வச்சிட்டேன். ஜெய்யை வெறுப்பேத்துனேன்! அவகிட்ட சொல்லிடாதே!” எனக் குறுஞ்சிரிப்புடன் உரைத்தான் அவர்களது நண்பன் ஹரித்.

“சரிடா. அங்கேயும் அவளை இப்படி வம்பிலுக்காதே. ஏற்கனவே, ஹேண்ட்பேகை வச்சிட்டு வந்துட்டோம்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கிறா!” என அவனை எச்சரித்தாள்.

“அச்சோ! சரி தியா. நீங்க வந்ததும், நான் போய் அதை அவங்க வீட்டில் இருந்து வாங்கிட்டு வர்றேன்” என்று கூறி, அழைப்பை வைத்தான்.

“வர்றானாமா?” என்று வாயைக் கோணிக் கொண்டு கேட்டாள் ஜெய்சிகா.

“ஆமாம்” என மீண்டும் வாகனத்தை இயக்கிக் கொண்டு தங்களது அலுவலகத்திற்குச் சென்றார்கள் இரு தோழிகளும்.

“ஆஃபீஸூக்கு வந்தாச்சு. இறங்கு ஜெய்”

வண்டியை விட்டு இறங்கியதும், அவன் பார்த்தது, அவர்களது திறந்து கிடந்த அலுவலகத்தைத் தான்.

“அடேய்! ஹரி!” என்று காதில் புகை வரக் கத்திக் கொண்டே உள்ளே சென்றாள் ஜெய்சிகா.

அவளது அட்டகாசத்தைப் பார்த்துச் சிரித்தவாறு, வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அலுவலகத்தினுள் நுழைந்தாள் அவர்களது தோழி, இந்தக் கதையின் நாயகி அகஸ்தியா.

ஜெய்சிகாவோ, ஹரித்தை ஓட, ஓட விரட்டியடித்துக் கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து தப்பி இவளிடம் வந்தவனோ,”தியா, கொஞ்ச நேரம் உன் பின்னாடி நின்னுக்கிறேன்” என்று கூறி விட்டு, துரத்தி வந்தவளிடமிருந்து, தன்னைத் தற்காத்துக் கொண்டான் ஹரித்.

“வாடா இங்கே!” என்று அவனை அழைத்தாள் ஜெய்சிகா.

“நான் போய் உன்னோட ஹேண்ட்பேகை எடுத்துட்டு வரலாம்னு இருந்தேன், தெரியுமா?” என்று அவளிடம் கூறினான்.

அதைக் கேட்டவுடனேயே, வாயெல்லாம் பல்லாக,”சோ ஸ்வீட் ஆஃப் யூ ஹரி, வீட்டுக்குப் போய் அம்மா கிட்டக் கேட்டு வாங்கிட்டு வாடா” என்று செல்லம் கொஞ்சிக் கூறினாள் கோபம் குறைந்த மங்கை.

“ம்ஹூம், அவளைப் பாரு அகி. இப்போ சாந்தமாகப் பேசுறா!” என இவளிடம் கோள் மூட்டினான் ஹரித்.

“சரிடா. நீ போய் பேகை கொண்டு வா. வெப்சைட் என்னாச்சுன்னுக் கேட்கனும்” என்று அவனைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

“ம்ம். போயிட்டு வந்துட்றேன்” என இருவரிடமும் உரைத்து விட்டு, ஜெய்சிகாவின் வீட்டிற்குச் சென்றான்.

“நீ ரிலாக்ஸாக இரு” என அவளிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள் அகஸ்தியா.

அதைக் குடித்ததும் தான் சாந்தமானாள் ஜெய்சிகா.

அவர்களது நண்பன் வருவதற்குள், பதிப்பக விஷயத்தைப் பார்க்கப் போனார்கள். தங்கள் மூவருக்கும் சேர்த்து, ஹரித் தான், வெளியாட்களிடமும், இப்படியான நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்துவான்.

அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித் மூவரும் கல்லூரித் தோழர்கள். எம்.ஃபில் ஆங்கில இலக்கியம் படித்தவர்கள்.

ஆனாலும், தங்கள் தாய்மொழியாகிய தமிழிலும் பற்றுதல் அதிகம் இருந்ததால், முதலில் ஒரு வலைதளத்தை உருவாக்கி, அதில், தங்களது கதைகளை மட்டும் பதிவிட்டுச் சிறிது, சிறிதாக மேம்பட்டுப் பிறகு, பெருவாரியான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றப் பின்னர், கதைகளைப் புத்தகங்களின் வாயிலாகவும் மக்களிடையே கொண்டு செல்ல விரும்பினர்.

அதனால், அலுவலகம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதில், புத்தகங்கள் அச்சடிக்கும் இயந்திரத்தை, வாங்கி வைத்துப், பதிப்பகம் ஒன்றை நிறுவினார்கள்.

அவர்களுடைய, கதைகளைப் பதிப்பித்து விற்ற போது, நிறைய மக்கள் வாங்கிச் சென்று வாசித்தனர்.

அதுவே, மூவருக்கும் மிகவும் உத்வேகத்தைக் கொடுக்க, இன்னும் சிலவற்றை மேம்படுத்த எண்ணினர். அதனால், தங்களது வலைதளத்தை மேலும் விரிவுபடுத்த எண்ணியவர்கள் எழுத்தாளர்களுக்குப் போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்தனர்.

அதற்கான அறிவிப்பைக் கொடுத்தவர்களுக்கு, போதிய அளவிலான வரவேற்பு மற்றும் எழுத்தாளர்களின் ஆர்வமான பங்கீடும் கிடைக்க, அவர்கள் தங்களுக்கு அனுப்பிய தலைப்புகளைக் குறித்துக் கொண்டு, அவற்றை வலைதளத்தில் பதிவிட்டுத் திரி அமைத்துத் தர வேண்டும்.

எனவே, அதற்கான முன்னேற்பாடாகத் தான், தங்களது வலைதளத்தை மேம்படுத்த நினைத்து,
“SN designs and development” - என்றப் பிரபலமான நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 3

அந்த வலைதள வேலை தவிர, பதிப்பகத்திற்காகவும், சிலவற்றைச் செய்ய வேண்டுமல்லவா? அதனால் தான், இப்போது அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

தற்சமயம், தோழியின் வீட்டிற்குச் சென்று,”ம்மா” என்று அவளுடைய அன்னையை அழைத்தான் ஹரித்.

“வரேன் ப்பா” என வெளியே வந்தார் ஜெய்சிகாவின் அன்னை.

“அவளோட ஹேண்ட்பேகை எடுத்துட்டுப் போக வந்தேன் ம்மா”

“நினைச்சேன். இரு” என்று மகளுடைய கைப்பையைக் கொண்டு வந்து அவனிடம் தந்தார் சீதாதேவி.

“தாங்க்ஸ் ம்மா. போயிட்டு வரேன்”

அவரிடம் விடைபெற்றுக் கிளம்பி, அலுவலகத்திற்குச் சென்றான் ஹரித்.

“ஒரு ரீடர் மொத்தமாக ஆர்டர் செய்திருக்காங்க, ஜெய்”

அந்த வாசகியின் விபரத்தை அவளிடம் கூறினாள்.

“வாவ்! எத்தனை தியா?” என்று கேட்டவளுக்கோ, ஒரு பெரிய இலக்கம் பதிலாக கிடைத்தது.

ஜெய்சிகா,“செம்ம! ஹரியும் வரட்டும். எல்லாத்தையும் எடுத்து அடுக்கிக் கொரியரில் அனுப்பி வைக்கச் சொல்வோம்”

“அதுவும் சரி தான்” என்று மீண்டும் அக்குறிப்புகளைப், பழைய இடத்திலேயே, வைத்து விட்டாள் அகஸ்தியா.

அந்தச் சமயத்தில், அலுவலகத்திற்கு வந்தான் ஹரித்.

“டேய்! இங்கே வாயேன்” என அவனை அழைத்து, விஷயத்தைச் சொன்னாள் ஜெய்சிகா.

“ஹேய் திஸ் இஸ் ஆவ்சம்! (This is Awesome!)”

“ஆமாம். எல்லாத்தையும் பேக் பண்ணலாம். வா” என்று அவனுடன் இணைந்து, புத்தகங்களை கட்டி வைத்தனர். பிறகு, அதற்கான விலாசத்தையும் கொடுத்து அவற்றைக் கொரியர் அனுப்புமாறு கூறி விட்டு,

“வெப்சைட் என்ன நிலைமையில் இருக்குன்னுப் பார்ப்போம்” என்றவாறு, கணிணித் திரையைத் திறந்து, மின்னஞ்சலைப் பார்வையிட்டனர்.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, அந்த நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

அதைப் பார்த்தவுடன்,”ம்ம்…! நல்லா டெவலப் செய்து இருக்காங்க. மச் பெட்டர்” என்று பாராட்டினாள் அகஸ்தியா.

“திரெட்ஸ் எல்லாம் சொன்ன இடத்தில் அரேன்ட்ஜ் பண்ணி இருக்காங்களா பாரு?” என்றாள் ஜெய்சிகா.

“யெஸ். அதில் நாம் சொன்னால் மாதிரி, ஸ்டோரிஸ் அண்ட் கமெண்ட்ஸ் திரெட்ஸ்ஸைக் கரெக்ட் ஆகப் போட்டிருக்காங்க” என்று வலைதளத்தை முழுமையாக ஆராய்ந்தார்கள் மூவரும்.

ஹரித்,“மத்ததெல்லாம்?”

“நம்ம சைட் பேர் மட்டும் வேற எழுத்து வடிவத்தில் இருந்திருக்கலாம்!” என்று குறைபட்டாள் ஜெய்சிகா.

“எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சி, அனுப்பி விடுவோம். அவங்க மாத்தி தரட்டும்” என்று அவர்களிடம் கூறினாள் அகஸ்தியா.

“அப்போ இந்தப் பேரோட ஃபாண்ட், பழைய டெவலப்பர்ஸ் ஃபிக்ஸ் செய்தது. இதையும், கலரையும் மாத்தனும், ரீடர்ஸூக்கான ரிவ்யூ திரெட்ஸ் நிறைய வேணும்” என ஒவ்வொன்றாக கவனித்துச் சொன்னான் ஹரித்.

“நோட் பண்ணிட்டேன்” என்று அதை தட்டச்சு செய்து, ஹரித்தின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து, அந்த வலைதள நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தவள்

“வேலை முடிஞ்சது‌. அவங்க தான், இனி, நமக்கு அப்டேட் செய்யனும்” என்று விரல்களில் சொடுக்கு எடுத்துக் கொண்டாள் அகஸ்தியா.

அப்படியே, ஜெய்சிகா மற்றும் ஹரித்தைப் பற்றிப் பார்த்து விடலாம்.

ஜெய்சிகாவின் தந்தை இறந்து விட்டார், தாய் சீதாதேவி, ஒரு பள்ளி ஆசிரியை, அவர் தான், மகளுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

அவளைப் பேணிக் காப்பவர், அவளுடைய நட்புகளை நம்பி மட்டும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்து விடுவார். அந்தளவிற்கு, அவருக்கு, அகஸ்தியா மீதும், ஹரித் மீதும் நம்பிக்கை உள்ளது.

எனவே தான், இந்தப் பதிப்பக விஷயத்திலும் மகள் அவர்களுடன் இணைந்து கொள்ளக் கேட்கவும் சம்மதம் கூறி விட்டார்.

ஹரித்தையும், அகஸ்தியாவையும் வீட்டிற்கு அழைத்து அவ்வப்போது உணவுண்ண வைத்து அனுப்புவார் சீதாதேவி.

அதேபோல, அகஸ்தியா மற்றும் ஜெய்சிகாவின் ஆண் நண்பரான ஹரித்தின் தந்தையோ, போலீஸ் அதிகாரி மற்றும் தாயோ, பேங்க் மேனேஜராக இருக்கிறார்.அவர்கள் இருவருமே, மிகவும் கலகலப்பானவர்கள்.

அதனால், ஆண் நண்பன் என்றாலும், அவனுடைய வீட்டிற்குப் போய் அளவளாவும் உரிமையை, ஹரித்தின் பெற்றோர், அகஸ்தியாவிற்கும், ஜெய்சிகாவிற்கும் கொடுத்திருந்தனர்.

அகஸ்தியா,“ஸ்டோரி டைட்டில்ஸ், கொடுத்த ரைட்டர்ஸோட டீடெயில்ஸ், கரெக்ட் ஆக இருக்கான்னுச் செக் பண்ணு ஜெய்”

மொத்தம் முப்பது எழுத்தாளர்கள் போட்டிக்குப் பெயர் கொடுத்திருந்தார்கள். இன்னும் எவரேனும் பெயர் கொடுக்கலாம் என்றாலும் அதற்கும் நாள் இருக்கிறது.

அவர்களது புனைப்பெயர் மற்றும் இதர தகவல்களை நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு,”எல்லாம் சரியாக தந்திருக்காங்க. ஸ்பெல்லிங் ஓகேவான்னு மட்டும் ஒரு தடவை பார்த்து, சொல்லச் சொல்லு” என்றாள் ஜெய்சிகா.

உடனே புலனத்தில், போட்டிக்கானக் குழுவிற்குச் சென்று, அவர்களது பெயர் சரியான முறையில் உள்ளதா? என்பதை மறுமுறை உறுதிப்படுத்திக் கூறுமாறு கேட்டுக் கொண்டாள் அகஸ்தியா.

அந்தக் குழுவில், ஹரித்தின் எண் மட்டும் இணைந்து இருக்காது. ஏனெனில், குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்க, அவனே, தன் எண்ணைச் சேர்க்க வேண்டாமென கூறி விட்டான்.

இதே நேரத்தில், தன் அலுவலகத்தில்,“ரெண்டு எருமைகளும் எங்கே போச்சுங்கன்னே தெரியலை!” என்று கருவிக் கொண்டே, அகஸ்தியாவின் வலைதள வேலையைத் தனியாளாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் சாதுரியன்.

முந்தைய நாள், புலனத்தில் அனுப்பி வைத்த செய்தியும் அப்படியே இருந்தது, அவர்களையும் காணவில்லை எனும் போது இவனுக்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது.

அவர்களைக் கரித்துக் கொட்டிக் கொண்டு இருந்தவனோ, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு வாசலைப் பார்த்தான்.

அப்போது தான், அவன் திட்டிய இரு ஜீவன்களும், கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தனர்.

மூக்கின் நுனியில் சிவப்பேறி, கோபத்துடன், அவர்களை வரவேற்றுக், கவனிக்கத் தயாரானான் சாதுரியன்.

உள்ளே வந்தவர்களோ, சினம் பூண்டு நின்றிருந்தவனை, குளிர்விக்கும் விதமாக,”சாது ம்மா!” என்று குழைந்து பேசினர் இருவரும்.

“என்ன?” என்ற ஒற்றை கேள்வியில் அவர்களை நடுங்க வைத்தான்.

“உனக்குச் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கோம் டா! கூடவே, உன்னோட ஃபேவரைட் சாக்லேட் கேக்கும் இருக்கே!” என்று பார்சலை எடுத்து மேஜையில் வைத்தாள் கனிஷா.

அவள் வீட்டாருக்குச் சொந்தமாக ஒரு உணவகம் இருந்தது. அங்கேயிருந்து தான், தோழனுக்காக உணவு கொண்டு வந்திருந்தார்கள்.

அதைப் பார்த்து நக்கலாக,”ஓஹ்ஹோ! அப்போ, உங்க ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, சாவகாசமாக வர்றீங்க! அப்படித் தானே?” எனத் தன் கையால் பார்சலைச் சுழற்றிக் கொண்டே அவர்களிடம் வினவினான் சாதுரியன்.

“க்கும்..‌ ஆமா டா” என்று எச்சில் விழுங்கினாள் கனிஷா.

தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லாததைப் போலப் பாவமாக நின்றிருந்தான் வராகன்.

“சரி, உங்களுக்கு நேத்து வாட்சப்பில் அனுப்புனதுக்கு, எப்போ ரிப்ளை பண்றதாக இருக்கீங்க?” என்று உறுமியவுடன்,

“என்னது மெசேஜ் பண்ணியிருந்தியா?” என்று தன் மொபைலை எடுத்தக் கனிஷாவைக், கடித்துக் குதறத் தயாரானான் சாதுரியன்.

“பார்த்தோம் டா. ரிவியூஸ் எழுதி வச்சிட்டோம். நேரில் வந்து டிஸ்கஸ் பண்ணலாம்னு இருந்தோம்” எனவும்,

“அப்படியா? அப்போ, என்னென்ன நிறை, குறைன்னு இப்போவே சொல்லுங்க” என அவர்களைக் கணினியின் திரைக்கு முன் நிற்க வைத்தான்.

அவன் உருவாக்கிய வலைதளத்தைப் பற்றிய மதிப்பாய்வைத், திக்கித் திணறித், தட்டுத் தடுமாறி, கூறி விட்டார்கள் கனிஷா மற்றும் வராகன்.

“ம்ஹூம்! ஏன் நீங்க மட்டும் சாப்பிடப் போனீங்க?” என்று தோழன், தோழியரிடம் வினவினான் சாதுரியன்.

“அங்கே, நாங்க உன்னோட வெப்சைட்டைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம் டா. அப்போ தான், இவளோட அப்பா எங்களை ஹோட்டலுக்கு வரச் சொல்லி சாப்பாடு போட்டார். உனக்கும் கொடுத்து விட்டார்” என விளக்கினான் வராகன்.

தோழியின் தந்தை அழைத்தார் என்று கூறியதால், அவர்களை மன்னித்து விட்டவன்,”பொழைச்சுப் போங்க” என்று அகஸ்தியாவின் வலைதளத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

“இந்தக் கதையை எல்லாம், தனு படிக்கிறேன்னு இருக்கா! அதுக்காகவே, சீக்கிரம் அப்டேட் பண்ணனும்” என்றான் சாதுரியன்.

“ம்ஹ்ம். இதென்னடா பேரு?” என்று அதன் பெயரைப் பார்த்துக் கேட்டாள் கனிஷா.

“JHA NOVELS & PUBLICATIONS” என்பது தான், அந்தப் பெயராகும்.

இதை எந்த அடிப்படையில் வைத்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள விழைந்தனர்.

“அவங்ககிட்ட கேட்போமா?” என்றாள் கனிஷா.

“வேணாம். நாம் புரொஃபஷனலாக மட்டும் பேசுவோம். இதெல்லாம் கேட்டால், பர்சனலை இழுக்கிறா மாதிரி இருக்கும்” என்று மறுத்தான் வராகன்.

அந்தப் பெயரின் முழு விளக்கத்தைக் கேட்க, தனக்கும் ஆர்வம் இருந்தாலும், நண்பனின் கூற்று ஏற்புடையதாக இருக்கவும், அதை ஆமோதித்து, அமைதியாகி விட்டான் சாதுரியன்.

அந்த வலைதளத்தின் பெயர், ஜெய்சிகா, அகஸ்தியா மற்றும் ஹரித்தின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்தில் உருவானதேயாகும்.

ஜெய்சிகா - J, ஹரித் - H, அகஸ்தியா - A. அந்தப் பதிப்பகத்தில் இம்மூவருக்கும் சரி சமமான உரிமை உள்ளது என்பதற்கும், அவர்கள் ஒன்றாக இணைந்து தொடங்கியதாலும், இந்தப் பெயரைச் சூட்டுமாறு, அகஸ்தியா தான், யோசனை கூறினாள்.

எதுவாக இருந்தாலும், மூவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமென்பது அவளது எண்ணமாக இருந்தது.

அலுவலகத்திலிருந்து தன் வீட்டிற்குச் சென்ற அகஸ்தியாவோ, தாயைத் தேட,

“உங்கம்மா இன்னும் வரலை டா”
என்றார் அவளது தந்தை.

அப்படியானால், அவர் தனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பார் என்று நம்பிக்கையுடன் செல்பேசியில் பார்த்தாள் அகஸ்தியா.

அவ்வாறே, அவளது அன்னையின் குறுந்தகவல்,’இன்னைக்கு வர நேரமாகும், தியா’ எனக் காணக் கிடைத்தது.

“மெசேஜ் செய்திருக்காங்க ப்பா”

அகஸ்தியாவின் அன்னை, குணசுந்தரியோ, விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அதனால், அந்தப் பிரிவில், ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

அகஸ்தியாவின் தந்தையும், ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் தான். ஆனால், வேலையை விட மனமில்லாத மனைவியைத் தடுக்க நினையாமல், ஒத்துழைப்பு கொடுத்து, தொடர வைத்துள்ளார் கணவர். சில சமயங்களில், கல்லூரியில் இருந்து, குணசுந்தரி வர நேரமாகும் போதெல்லாம், அவரது இடத்தை நிரப்புவார் உலகேசன்.

“காம்படிஷன் வொர்க் எப்படி போகுதுடா?” என்ற தந்தையிடம்,

“செம்மயா போகுது ப்பா. இங்கே பாருங்க. ரைட்டர்ஸோட ஆர்வத்தைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருக்கு” என எழுத்தாளர்களின் பட்டியலையும், அவர்கள் அனுப்பிய சில குறுஞ்செய்திகளையும் அவரிடம் காண்பித்தாள் அகஸ்தியா.

“அட! இதெல்லாம் உங்களோட ஹார்ட் வொர்க்குக் கிடைச்ச வெகுமதி டா! இதில், நீயும் கதை எழுதுறியா?” என்று கேட்டார் உலகேசன்.

“ஆமாம் ப்பா. பேர் சொல்லாமல் எழுதுற போட்டி. சோ, நானும் என் பேரை மறைச்சு எழுதப் போறேன்” என்றாள் மகள்.

“கெஸ்ட் ரோல் ஆ? ஆல் தி பெஸ்ட்!” என்று அவளுக்கு வாழ்த்து தெரிவித்தார் தந்தை.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 4

“அம்மா வந்ததும், அவங்களுக்கும் இதைக் காட்டனும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் அகஸ்தியா.

மகள் தனக்குப் பிடித்ததைச் செய்வதே, குணசுந்தரிக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். அதுவும், அவருக்கும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் மிகுதி என்பதால், ஆங்கிலம் படித்தாலும், தமிழில் கதை எழுத தொடங்கியவளை, ஊக்குவிக்கவே அவருக்குத் தோன்றியது.

அதனால், மகளது முயற்சிகளுக்குக், தன்னாலான பல உதவிகளைச் செய்து தருகிறார் குணசுந்தரி.

தனது வரவிற்காக காத்திருந்த மகளை, ஏமாற்றாமல், அரை மணி நேரத்தில், வீட்டிற்கு வந்தார்.

“ஹாய் மை டியர்ஸ்!” என்று கணவனிடமும், அகஸ்தியாவிடமும் சென்றவர், தனக்காக தேநீர் தயாரித்துக் கொடுத்தக் கணவனுக்கு, மகள் அறியாமல், ஒரு பறக்கும் முத்தம் தந்தார் குணசுந்தரி.

அதை நாணத்துடன் பெற்றுக் கொண்ட உலகேசனோ, மகளின் தளத்தில் நடைபெறவுள்ளப் போட்டியைப் பற்றி, அவரிடம் கூறினார்.

“ஹேய் தியா! நானும், இதைத் தான், எதிர்பார்த்தேன். காட்டு டா!” என்று ஆர்வத்துடன் அவளிடம் செல்ல, அவரிடம், தன்னுடைய ஜகதலப் பிரதாபங்களைக் கணினி வாயிலாக காட்டி, அத்தோடு, தானும் ஒரு கதை எழுதுவதையும் கூறினாள் அகஸ்தியா.

“சூப்பர்! வெப்சைட் டெவலப்மெண்ட்க்கு, ஏதாவது பணம் தேவைப்படுதா?” என்று மகளிடம் கனிவுடன் கேட்டவரிடம்,“நோ, ம்மா. நானும் சம்பாதிக்கிறேனே? அதிலேயே பாத்துக்குவேன்” என்று தீர்க்கமாக உரைத்த மகளைப் பெருமையாகப் பார்த்தார் குணசுந்தரி.

ஆங்கிலப் புலமையும் பெற்றிருப்பதால், இணையதளத்தில், மாணவர்களுக்குப் பாடமும், எடுத்துக் கொண்டிருக்கிறாள் அகஸ்தியா. அதில் வரும், சம்பளத்தைத் தான், பதிப்பகத்திற்கும், வலைதளத்திற்கும், தன்னுடைய பங்குப் பணமாக உபயோகிக்கிறாள். அதனால், ஒரு பைசா கூடப், பெற்றோரிடமிருந்து வாங்கி, இவற்றிற்குப் பயன்படுத்துவதில்லை.

தங்கள் பதிப்பகத்தின் மூலம், புதுப்புது, அறிமுக எழுத்தாளர்களை, இப்போட்டியின் மூலம் வெளியுலகுக்குக் காட்ட நினைத்தவள், இதில், வெல்பவர்களுக்குத் தரப் போகும் பரிசுகளையும், தேர்ந்தெடுத்து வாங்கி வைத்தார்கள் அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.

***************************************
அனைவரும் வீட்டில் குழுமியிருக்கும் போது,“சாது ண்ணா! அவங்க காம்படிஷனுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு?” என்றாள் தன்மயா.

“திரெட்ஸ் கிரியேட் செஞ்சாச்சுடா, இன்னும் சேஞ்சஸ் சொல்லி இருக்காங்க. அதை முடிச்சுக் கொடுத்துட்டா ஆரம்பிச்சுருவாங்க”

“ப்ச்…” எனச் சலித்துக் கொண்டு,”ஆனால் கொடுத்த நாளில் காம்படிஷன் ஸ்டார்ட் பண்ணனும் தான ண்ணா? அவங்களுக்கு அதை இன்ஸிஸ்ட் பண்றீங்களா?” என்றாள்.

“அதெல்லாம் நான் சொல்லக் கூடாது. சிலதைப் புதுசாக மாத்த சொல்லி இருக்காங்க. அதுக்கு டைம் எடுக்கும்ல?” எனத் தங்கையிடம் விளக்கினான்.

“சரி ண்ணா”

அதைக் கேட்டப் பதுமனோ,“நீயும் பேசாமல், அந்தப் போட்டியில், ஒரு கதை எழுது, அப்படியே அங்கேயிருக்கிறதையும் படி. இவ்வளவு நாளாக, கதைப் படிக்கிற உனக்கும், எழுதவும் வரும்” என்று அவளுக்கு யோசனை கூறினான்.

“நீங்க வேற, ஏன் ண்ணா? திடுதிப்புன்னு வராதே!”

அங்கு கதைப் படிக்கவும், புத்தகம் வாங்கவும், நான் எழுத வேண்டும் என்ற அவசியமா? என யோசித்தாள் தன்மயா.

பதுமன்,“இதுக்காகப் போட்டியில் சேருன்னு சொல்லலை. ஒரு கதையைப் படிக்கும் போதும், அதைப் பத்தி எங்ககிட்ட நீ டிஸ்கஸ் பண்ணும் போதும், அதை விவரிச்சு நிறைய சொல்ற! அதை வச்சுத் தான், நீயும் கலந்துக்கன்னு சொல்றேன்”

கதைகளின் மேலிருந்த, தங்கையின் ஆர்வமும், ஈடுபாடும் அவள் ஒரு நல்ல எழுத்தாளராக வருவாள் என்று எண்ணியதால் தான், அவளிடம் இந்த யோசனையைக் கூறினான்‌ சாதுரியன்.

“அது காம்படிஷன் ண்ணா, கொடுத்த தேதிக்குள்ளே, கதையை முடிக்கனும். எனக்குக் காலேஜ் வேலை இருக்கே?”

அவர்களது தந்தை யுதிர்ஷ்டனோ,“ரெண்டுக்கும் டைம் ஒதுக்கிப் பாருடா” என்று மகளுக்கு ‌உணர்த்தினார்.

“ஆமாம் தனு. உன் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. நீ சீக்கிரம் எழுதி முடிச்சுடுவ” என்று தாய் பவதாரிணியும் கூறி விட,

“டிரை‌ பண்றேன். கதையோட ஒரு வரி, தலைப்பு, இதெல்லாம், ஃபிக்ஸ் பண்ணிட்டு, பேரைக் கொடுக்கப் பார்க்கிறேன்” என்று முடிவெடுத்தாள் மகள்.

குறித்த நேரத்தில் வேலையை முடிப்பது என்ற தொழில் தர்மத்திற்காகவும், தங்கைக்காகவும், நண்பர்களின் உதவியுடன், வலைதளத்தின் மீதி வேலைகளையும் பார்த்து முடித்து,“மச்சீஸ்! அவங்களுக்கு மெயில் பண்ணிட்டு, வாட்சப்பிலும் அனுப்பிடுவோம்” என்று நண்பர்களிடம் உரைத்தான் சாதுரியன்.

அதன் பிறகொரு நாளில், விடைத்தாள்களைத் திருத்தும் பணி இருந்ததால்,”பது ண்ணா, என்னைக் காலேஜில் டிராப் பண்ணுங்க” என்று அவனது வாகனத்தில் ஏறினாள் தன்மயா.

அந்தப் பயணத்தின் போதோ,”சீக்கிரம் பேப்பர் கரெக்ஷனை முடி, அப்போ தான், கதையை எழுத ஆரம்பிக்க நேரம் கிடைக்கும்” என்று அவளுக்கு அறிவுறுத்தினான் பதுமன்.

“சரி ண்ணா” என்றவளுக்குத் தனது குடும்பம், தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் போது, இதை ஒரு கைப் பார்த்து விடலாம் என எண்ணியவள்,

தனது கதை மற்றும் அதன் தலைப்பை முடிவு செய்து கொண்டு, அவற்றுடன், தனது மற்ற விபரங்களைச் சேர்த்து, அதை, JHA NOVELS பதிப்பகத்தின் உரிமையாளருக்கு, மின்னஞ்சலாக அனுப்பி வைத்து விட்டாள் தன்மயா.

எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள், மின்னஞ்சல் மூலமாகவோ, புலனத்திலோ, தங்களைத் தொடர்பு கொண்டு, சந்தேகங்களைக் கேட்க வசதியாக, அதைக் கணினியில் உயிர்ப்பித்து வைத்திருப்பாள் அகஸ்தியா. ஹரித்தின் மின்னஞ்சல் ஐடி என்றாலும், அதைப் பெரும்பாலும் உபயோகிப்பது அவள் தான்.

எனவே, ஒரு புதிய மின்னஞ்சலில் இருந்து,‘தான் ஒரு புதிய எழுத்தாளர் எனவும், இது தனது முதல் கதை, அதனால், அதை இந்தப் போட்டிக்காக எழுத விரும்பி, பெயர் கொடுத்திருக்கிறேன், என்ற முன்னுரையுடன், அந்தப் புதுமுக எழுத்தாளர் அனுப்பியிருந்த, விபரங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டவள்,

‘எங்களுடைய தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். முதல் கதையைப் போட்டிக் கதையாக எழுதப் போகும் உங்களது தன்னம்பிக்கையையும், ஆசையையும் பாராட்டுகிறோம். இப்போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற வாழ்த்துகள் சகி 💐’ என்று தட்டச்சு செய்து, அவருக்கு அனுப்பி விட்டுத், தன்னுடைய நண்பர்களிடம்,”ஃப்ரண்ட்ஸ்! காம்படிஷனுக்குக் கடைசியாக ஒரு ரைட்டர் பேர் கொடுத்திருக்காங்க” என்று மற்றதையும் அவர்களிடம் கூறினாள் அகஸ்தியா.

“இவங்க தானே லாஸ்ட் மெம்பர்? கன்ஃபார்மா?” என்று வினவினாள் ஜெய்சிகா.

“ஆமாம். இவங்க கொடுத்த டைட்டிலுக்கு மட்டும் திரி கிரியேட் பண்ணிக் கொடுத்துட்டா போதும். அடுத்து, போட்டியை நடத்த வேண்டியது தான்!” என்றவள், கதைத் திரியை, உருவாக்கும் பணியை, உற்சாகமாக,மேற்கொண்டாள் அகஸ்தியா.

கல்லூரியில் விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் இருந்ததால், அந்தப் பதிப்பகத்தில் இருந்து வந்தக் குறுந்தகவலைத், தன்மயாவால் வாசிக்க இயலவில்லை. ஆகவே, வீட்டிற்குப் போனப் பிறகு, அதை வாசித்துப் பார்த்துப் பதில் அனுப்ப வேண்டுமென எண்ணிக் கொண்டு, வேலையைத் தொடர்ந்தாள்.

தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து, தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு, ஞாபகத்தில் இருந்த, மின்னஞ்சலைத் திறந்தவளுக்கு, அதிலிருந்த செய்தியைப் படித்தவுடன், அதிலிருந்த வார்த்தைகள், அவளுக்குக் கூடுதலாக, தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

அதற்குப் பின், தனது முடிவு, அதை மின்னஞ்சலாக அனுப்பியது மற்றும் அதற்குக் கிடைத்தப் பதிலையும், அவளது வீட்டாரிடம் ஒப்புவித்தாள் தன்மயா.

“அதான் சொன்னோம்ல? நீ எழுதுடா, நாங்க சப்போர்ட் பண்றோம்” என்றார் யுதிர்ஷ்டன்.

அவரைத் தொடர்ந்து,”அம்மா தான், உன்னோட முதல் ரீடராக இருப்பேன்!” என்று அவளுக்கு உறுதி அளித்தார் பவதாரிணி.

தங்கை வாய் திறக்கும் முன்,”அது பேர் சொல்லாமல் எழுதுற போட்டி ம்மா! நாம யாருக்கும் கூட, அவ கதையைப் பத்தி தெரியாமல் இருக்கிறது நல்லது!” என்று போட்டியிலிருந்த முக்கியமான விதியைப் பற்றிக் கூறினான் சாதுரியன்.

“அப்படின்னா, நீ எங்ககிட்ட எதுவும் ஷேர் செய்ய வேணாம். கதையை எழுதி முடிச்சிட்டு, ரிசல்ட் வந்ததுக்கு அப்பறம் சொல்லு” என்றான் பதுமன்.

“ஓகே ண்ணா” என்று அவர்களிடம் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டாள் தன்மயா.

சாதாரணமாகத் தன்னிடம் வந்த வேலையாக இருந்திருந்தால், இந்நேரம், அதை மீண்டும், ஏறெடுத்துப் பார்த்திருக்க மாட்டான். தங்கைப் போட்டியில் பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அதில், எந்தவித, நியாயமற்ற செயலையும் மேற்கொள்ளாமல், அந்தப் பதிப்பக வலைதளத்திற்குத் தன்னாலான உதவிகளைச் செய்து கொடுக்க முடிவெடுத்தவன், அந்தப் பதிப்பகத்தின் புலனத்திற்குத் தங்களுடைய உதவி வேண்டுமெனில், தயங்காமல் தெரிவிக்குமாறு ஒரு செய்தி அனுப்பினான்.

இது ஒரு சுயநலமான வேலை தான், என்றாலும், தங்கையின், நியாயத் தன்மைக்கும், அவளுடைய போட்டிக் கதைக்கும் எந்த இழுக்கும் வர விடாமல், ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்தான் தன்மயாவின் இரண்டாவது அண்ணன் சாதுரியன்.

தன் தளத்தின் போட்டியில் பங்கேற்கும், தன்மயாவின் சகோதரன் தான், இந்த சாதுரியன் என்பது அவளுக்குத் தெரியாதல்லவா? வலைதள வேலைகளைச் செய்து கொடுத்தப் பிறகு, இதென்ன கேட்காமல் செய்யும் உதவி? என்று அவனது இந்த ஆர்வத்தைக் கண்டு, புருவத்தை உயர்த்திச் சிந்தித்தாள் அகஸ்தியா.

ஹரித்தின் எண்ணிலிருந்தப் புலனத்திற்குத் தான், அந்தச் செய்தி வந்திருந்தது. ஆனால், அதை வாசித்தது என்னவோ, இவள் தான்!

அம்மூவருமே, சொந்த உபயோகம் மற்றும் பதிப்பகத்திற்கு என இரண்டு கைப்பேசிகளை வைத்திருக்கிறார்கள். அதனால் தான், தன்னுடைய கைப்பேசியை, அகஸ்தியாவிடம் கொடுத்திருந்தான் ஹரித்.


“நமக்கு உதவி பண்றதுல, இவங்க ஏன், இவ்ளோ ஆர்வமாக இருக்காங்க?” என்று “SN டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ்” - நிறுவனத்திலிருந்து வந்தக் குறுந்தகவலைத், தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாள் அகஸ்தியா.

ஹரித்,“அவங்களுக்குப் பேமெண்ட் எல்லாமே செட்டில் பண்ணியாச்சு, இன்னமும் எதுக்கு, இப்படி ஹெல்ப், அது, இதுன்னு வர்றாங்க?” என்று குழம்பினான்.

“ம்ஹூம். இதெல்லாம் வேணாம்னுத், தெளிவாக மெசேஜ் அனுப்பிரு தியா” என ஜெய்சிகாவும் கூறவே, இவளும் அதையே செய்தாள்.

அதைப் பார்த்ததுமே,”ப்ச்!” என்று தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினான் சாதுரியன்.

கனிஷா,“என்னாச்சு டா?” என்றவளிடம் அனைத்தையும் கூறி விட,”நீயே போய், ஹெல்ப் பண்றதாக சொல்லுவியா டா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?” எனப் பொரிந்து தள்ளினாள்.

“தனு விஷயம்ன்றதால் தான்…” என்று தயங்கினான் சாதுரியன்.

“அதுக்குன்னு, இப்படியா பண்ணுவ? அவங்க உதவி வேணும்னுப் போஸ்ட் போட்டிருந்தால் கூட, நாம செஞ்சுத் தரலாம்! இப்படி நீயே தொக்கா போய் கேட்டு வச்சிருக்கிற!” என்று அவனைக் கடிந்து கொண்டான் வராகன்.

“ஏதோ ஒரு அவசரத்தில்…” என்று தொடங்கவும்,”அவசரக் குடுக்கை! போடா!” என இருவருமே அவனைக் கழுவி ஊற்றினர்.

அதைக் கேட்டு முடித்தவனோ, அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் தொனியில், குறுஞ்செய்தி அனுப்பலாமா? என்று நினைத்தான் சாதுரியன்.

அதை, மற்ற இரு நண்பர்களும், உணர்ந்தார்கள் போலும்!

எனவே,”சாரி நோட் எல்லாம் எழுதி அனுப்புறேன்னு, மறுபடியும் அசிங்கப்படாதே டா!” என்று எச்சரித்தனர் கனிஷா மற்றும் வராகன்.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நட்பூக்களே!!! இந்த நான்கு அத்தியாயங்களைப் படித்துப் பார்த்துக் கருத்துக்களை வழங்குங்கள்...🤗

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 5

தன்னுடைய நண்பர்கள் இருவரும், அப்படி கூறிய பிற்பாடு, அந்தப் பதிப்பகத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் போல சுற்றித் திரிந்தவன், மற்ற வலைத்தளங்களின் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான் சாதுரியன்.

அவர்களுக்கு ஏதாவது உதவி என்று முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்களா என்றும், இடையிடையே, பார்வையிட்டுக் கொண்டான்.

“கடைசி திரெட் ஆக என்னோடதைக் கிரியேட் பண்ணிட்டேன்” என்று தன் நண்பர்களிடம் அறிவித்தாள் அகஸ்தியா.

“ஓகே. நீ உன்னோட தகவல்களையும் மெயில் பண்ணிடு” என்று அவளது கதை, வாக்கெடுப்பிற்குச் செல்லாது என்ற போதிலும், அனைத்தையும், அனைவருக்கும் பொதுவாகவே, செய்ய எண்ணி, அவளிடம் இவ்வாறு கூறினான் ஹரித்.

அதை ஆமோதித்தவாறே, தன்னுடைய, புனைப்பெயர் மற்றும் விலாசத்தைத் தங்களது போட்டிக்கான, அதிகாரப் பூர்வமான மின்னஞ்சலுக்குச் செய்தியாக அனுப்பி வைத்தவள்,

“ஃப்ரண்ட்ஸ்! நம்மப் பதிப்பகத்தோட முதல் போட்டி இது! நாம மூனு பேரும் ஒன்னா சேர்ந்து, யாருக்கும் மனக்கஷ்டம் வராமல், எல்லாருக்கும் சமமான உரிமை கொடுத்து, வெற்றிகரமாக இந்தப் போட்டியை நடத்தி முடிக்கனும்!” என்று நம்பிக்கையுடன் மற்ற இருவரிடமும் கூறினாள் அகஸ்தியா.

“அது தானே, நம்மளோட ஆசை, கடமை, எல்லாம்! இந்தப் போட்டியோட இறுதிக் கட்டம் வரைக்கும், நாம நடுநிலையாக இருந்தாலே, ரைட்டர்ஸூக்கும், ரீடர்ஸூக்கும் நம்ம மேலேயும், நம்மளோட தளத்தின் மேலேயும் நம்பிக்கை வரும். அது தான் நமக்கு முக்கியம். அதே மாதிரி, அவங்களுக்கும் இன்னுமின்னும் எழுதனும்ன்ற விருப்பம் வரும்!” என்று அவளைப் போலவே, யோசித்துப் பேசினாள் ஜெய்சிகா.

“அப்போ, ஆரம்பிக்கலாமா?” என்று அவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் வினவினான் ஹரித்.

“ஆரம்பிக்கலாமே!!!” என மற்ற இருவரும், ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர்.

அதற்குப் பிறகு, அகஸ்தியாவும், அவளது நண்பர்களும் சேர்ந்து, ஒரு எழுத்துப் போட்டியை நடத்தத் தயாராகி விட்டனர்.

அதனால், அவர்களது பதிப்பக அலுவலகத்தில் இருந்து, வீட்டிற்குச் செல்ல, மிகவும் தாமதமாகி விடுகிறது. அதையும், அவர்களைப் பெற்றவர்கள் புரிந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்குப் பக்கப் பலமாக இருக்கிறார்கள்.

“என்னம்மா, கதைக்கு எல்லாம் தயார் பண்ணிட்டியா?” என்று தங்கையிடம் விசாரித்தான் சாதுரியன்.

“ம்ம்..‌.! ஆமாம் ண்ணா‌. இன்னும் போட்டி ஆரம்பமாகலை, அதுக்குத் தான் காத்திருக்கேன்!” என்று குதூகலத்துடன் அவனிடம் உரைத்தாள் தன்மயா.

“ஆல் தி பெஸ்ட் தனு!” என அவளது இளைய அண்ணன் மட்டுமின்றி, குடும்பத்தினர் அனைவரும், அவளுக்கு வாழ்த்துக் கூறினர்.

“தாங்க்யூ!” என்று அதைப் புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

அதன் பிறகு, அவளைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை எனலாம்! ஏனெனில், தான் விரும்பி வாசிப்பது மட்டுமில்லாமல், இப்போது, தன்னுடைய கற்பனைகளைப் பயன்படுத்திக், கதைகளை வடிக்கப் போவதை எண்ணி உவகையும், உற்சாகமும் அடைந்து, கல்லூரியில் பாடம் எடுக்கும், நேரம் தவிர, தனது கதைக்கான விவரங்களைச் சேகரித்து, தொகுத்து வைத்துக் கொண்டவள், அவற்றுடன் சேர்த்து, கதையின் கரு, கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்களையும், பார்த்துப், பார்த்து வடிவமைத்து, தன் நாட்குறிப்பில், குறித்து வைத்துக் கொண்டாள் தன்மயா.

அதிலேயே, அவள் அதிக நேரம் செலவிடுவதால், உடலை வருத்திக் கொள்ளாமல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று மகளுக்கு அறிவுறுத்தினார் பவதாரிணி.

ஒருநாள், தனது வேலை மாற்ற முடிவைப் பற்றிக் குடும்பத்துடன் கலந்துரையாடிக் கொண்டு இருந்தப் பதுமன்,“அந்த ஆஃபீஸ் எனக்குச் சரியாகவே வர மாட்டேங்குது ப்பா!” என்று தந்தையிடம் சொன்னான்.

“அங்கே அப்படி என்னப் பண்றாங்க?” என்று அவனிடம் கேட்டார் யுதிர்ஷ்டன்.

“கொடுக்கிற சம்பளத்தை விட, அதிகமாகவே வேலை வாங்குறாங்க ப்பா. நானும், ஐ.டி கம்பெனின்னு தான், எப்பவும் போல, வேலைக்குப் போவோம், டைமுக்கு வீட்டுக்கு வந்துருவோம்னு பார்த்தால், அங்கே எல்லாம் வேற மாதிரி இருக்கு! முடியலை!” எனச் சலித்துக் கொண்டான் பதுமன்.

“அப்போ என்கிட்ட ஒரு கம்பெனி சொன்னியே? அவங்களுக்கு ரெஸ்யூம் அனுப்புனியா?” என்று தமையனிடம் வினவினான் சாதுரியன்.

“ஆமாம் டா. மெயில் செய்துட்டேன். அந்த இன்டர்வியூவுக்காகத் தான், என்னைத் தயார்படுத்திக்கிட்டு இருக்கேன்”

“வெரிகுட்! நீயும், தனுவும், இப்படி ஒரு லிஷயத்துக்காக, முயற்சி பண்றது எங்க எல்லாருக்கும், சந்தோஷமாக இருக்கு” என்றுரைத்தார் பவதாரிணி.

“வெற்றியோ, தோல்வியோ நம்மளோட முழு உழைப்பைப் போடனும்!” என்று தன் பிள்ளைகளுக்குப் போதித்தார் யுதிர்ஷ்டன்.

“கரெக்ட் ப்பா!” என்று அதை ஆமோதித்தான் சாதுரியன்.

அவனது தோளில் தட்டிக் கொடுத்தவரோ,”நீ மட்டும் என்னவாம்? கம்மியாகவா பண்ணிட்டு இருக்கிற? இப்போ, உங்களோட கம்பெனி நல்ல நிலைமையில் இருக்குன்னா, அதுக்கு உன்னோட பங்களிப்பு தான் அதிகம்!” என்று பெருமையுடன் கூறினார் தந்தை.

“ஆமா சாது, நீங்க மூனு பேருமே, உங்களை நினைச்சு, எங்களைப் பெருமைப்பட, வைக்கிற மாதிரி, மட்டும் தான் நடந்துக்கிறீங்க!” என்றுரைத்து விட்டு,

பிறகு,”இந்த வேலை மட்டும் உனக்குக் கிடைச்சிட்டா, பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சிடலாம்” எனப் பதுமனிடம் கூறினார் பவதாரிணி.

“அண்ணா கண்டிப்பாக செலக்ட் ஆகிடுவார் ம்மா” என்றாள் தன்மயா.

இப்படியாக, அவர்களது அருமை, பெருமைகளைப் பற்றிப், பேசிக் கொண்டே, அன்றைய நாளை இனிமையாக கழித்தனர் சாதுரியனின் வீட்டார்.

*******************************

உணவகம் ஒன்றில், மூவரும் அமர்ந்திருந்த ஹரித்,”நம்ம வேலை எல்லாத்தையும் மறந்துட்டு, இப்படி பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்றது எவ்வளவு நிம்மதியாக இருக்கு?” என மற்ற இருவரையும் பார்த்துக் கூறினாள் அகஸ்தியா.

“ஆமாம். நம்ம வீட்டுக்கும் லேட் ஆகத் தான், போயிட்டு இருக்கோம். ஏதோ நம்ம அப்பா, அம்மாவா, இருக்கப் போய், இப்படியெல்லாம் ஃப்ரீயா விட்டுட்டு இருக்காங்க!” என்றாள் ஜெய்சிகா.

ஹரித்,“நாம நல்ல விஷயம் தானே பண்றோம். அதைச் சப்போர்ட் பண்றாங்க. அவ்ளோ தான்!”

அம்மூவருக்கும், எழுத்துப் போட்டி, பதிப்பக வேலை என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இப்படி பொறுமையாக அமர்ந்து, உண்டு கொண்டே, மனம் நிறையப் பேசுவது, அவர்களுக்கு ஆசுவாசமாக இருந்தது.

“சைட்டில் இன்னும் வேலை இருக்கும். அதுக்கு, அந்த டெவலப்பர்ஸையே, நிரந்தரமாக பாத்துக்க சொல்லலாமா?” என்று அந்த நிறுவனத்தின், முந்திரிக் கொட்டைத் தனமான, செயலையும் ஞாபகம் வைத்துத் தான், தன் இரு தோழிகளிடமும் வினவினான் ஹரித்.

“அவங்க வேற ஏதாவது தப்பான மெசேஜோ, ஃபோன் காலோ பண்ணலை தான?” என்று மற்றவளிடம் கேட்டாள் ஜெய்சிகா.

“அப்படி எதுவும் வரலை. அவங்க கிட்டயே வேலையைத் தருவோம். அதுக்கப்புறம், ஏதாவது ஏடாகூடமாக செஞ்சா பாத்துக்கலாம்” எனத் தீர்வு கூறினாள் அகஸ்தியா.

“ஓகே!” என்று இருவரும் ஆமோதித்தனர்.

அதன் பிறகும் கூட, தங்களது தளத்தில், எந்த வேலையாக இருந்தாலும், அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள்.

அதேபோல, சாதுரியனும் கூட, அவர்கள் கேட்ட வேலையை மட்டும், செய்து கொடுத்து, ஒதுங்கி நின்று விட்டான்.

**********************************

தாங்கள் அறிவித்தபடியே, போட்டியை நடத்தும் நாளும் அருகே வந்து விட, அதற்கு முந்தைய தினத்தில், அதில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்குப் புலனத்தில்,‘உங்களுடைய கதைக்கானத் திரிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு விட்டது. அதை தளத்திற்குச் சென்று, சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, கதைக்காக முகநூல் கணக்கு ஒன்றை இப்போதே தொடங்கி விடுங்கள். அதிலிருந்து தான், கதைத் திரிகளை, முகநூலில் உள்ளக் கதைக் குழுக்களில் பதிவு செய்து, உங்களது கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும். எனவே, நான் கூறியதையெல்லாம் செய்து முடித்து விட்டு, எனக்கு ஒரு குறுந்தகவலை மறக்காமல் அனுப்பி விடுங்கள்’ என்ற செய்தியைத் தனது குரலில் பேசி, போட்டி எழுத்தாளர்கள், உள்ளக் குழுவிற்கு, அனுப்பி வைத்தாள் அகஸ்தியா.

அந்தக் குரலைத் தான், ஹாலில் அமர்ந்து, கேட்டுக் கொண்டு இருந்தாள் தன்மயா.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்து, தன்னுடைய அறைக்குச் சென்று கொண்டிருந்த சாதுரியனுக்கும், அந்தக் குரல் நன்றாகவே ஒலித்தது.

அதைத் தன் தங்கை, கேட்டு முடிக்கும் வரை, ஏனோ அவ்விடத்தை விட்டு நீங்க மனமில்லை அவனுக்கு. அந்தக் குறுந்தகவல் முடியும் வரை, அங்கேயே நின்று விட்டான்.

அந்தக் குரல், தன் தங்கைக்குத் தான், அறிவுரைகளைக் கூறிக் கொண்டு இருந்தது, ஆனால், அதிலிருந்த செய்தியைத் தவிர்த்து, அது கொடுத்த மெல்லிய, இனிய உணர்வுகளின், பிடியில் இருந்தவனிடம்,”அண்ணா!” என்று அவனைக் கூவி அழைத்தாள் அவனது தங்கை.

“ஹாங்! தனு, கதைப் போட்டி தொடங்கிடுச்சுப் போலயே?” என்று அவளிடம் இயல்பாக வினவினான் சாதுரியன்.

“ஆமாம் ண்ணா. அதுக்கு, அந்த சைட் ஓனர் அனுப்பின, வாய்ஸ் மெசேஜைத் தான், கேட்டுட்டு இருந்தேன்” என்று பதிலளித்தாள் தன்மயா.

“சூப்பர்! உனக்கு மொபைலில் கதை டைப் செய்யக் கஷ்டமாக இருந்தால், என்னோட சிஸ்டமைப் பயன்படுத்திக்கோ” என்று அவளுக்கு அனுமதி அளித்தான் தமையன்.

“சரி‌ ண்ணா” என்றவள், தன் உரிமையாளர் கூறியவற்றைச் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

அதனால், அவளைத் தொந்தரவு செய்யாமல், தன் அறைக்குப் போய் விட்டான் சாதுரியன்.

ஒரு முறை, அந்தக் குரலைக் கேட்டதும், அவனுக்குள், சிறிய மாற்றம் ஏற்பட்டது உண்மை தான்! அதற்காக, அப்போதே சுற்றம் மறந்து, மனதை தொலைத்து, வானில் பறப்பது போன்ற, எந்தவித உணர்வுகளும் அவனுக்குள் ஏற்பட்டு விடவில்லை. அந்தளவிற்கு, தன் மனதைக், கட்டுக்குள் அடங்காமல், அவன் வைத்திருக்கவில்லை.

அது மட்டுமில்லாமல், தங்கையின் முதல் முயற்சியான, கதை எழுதும் கனவில், தானே உள்ளே நுழைந்து, கலைத்து விடுவது போலாகி விடும். எனவே, இதை ஒரு சாதாரண, இயல்பான விஷயமாக கடந்து செல்ல முடிவெடுத்து விட்டான் சாதுரியன்.

ஆனால், அதற்கடுத்த நாளில், அனைத்து எழுத்தாளர்களும் தாங்கள் சொன்னபடியே, செய்து முடித்து, தங்களது கதைகளின் முன்னோட்டங்களைத் திரிகளில், பதிவு செய்ய, ஆரம்பித்து விட்டனர்.

அதனால், வலைதளத்தில் சிற்சில மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது. அதற்கு, எஸ். என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்போது, அந்த உதவியைக் கேட்டுப் பெறும் நிலையில் இருந்தவள், அகஸ்தியா தான்!

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஐந்தாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 
Last edited:

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 6

எழுத்துப் போட்டி எனும் போது, அதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்திலோ, அல்லது அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்திலோ, தங்களது கதைகளின் அத்தியாயங்களைப் பதிந்து கொண்டே இருப்பார்கள் அல்லவா? அதற்கு ஏதுவாகவும், தளத்திலிருந்து அவர்களது கதைகளைத் திரைப்பிடிப்பின் (screenshot) மூலமாகத் திருடுவதை தடுக்க வேண்டும், எனவே தான், அவர்களின் வலைதளத்தில், அதற்கான சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டார்கள்.

“இதை, ஹரி கிட்டே சொல்லிட்டா, அவன் அவங்களுக்கு, மெசேஜ் பண்ணிருவான்” என்றாள் ஜெய்சிகா.

அகஸ்தியா,”எப்பவும் நமக்கு முன்னாடியே வந்து ஆஃபீஸை ஓபன் செய்றவன், இன்னைக்கு இவ்ளோ நேரமாகியும், ஆளைக் காணோம்” என்று அவளிடம் கூறினாள்.

“நேத்து நைட், நாம வீட்டுக்குப் போகிறப்போ, ரொம்பவே ஓய்வில்லாமல் தான் இருந்தோம்! அதனால் கூட, அவன் வர்றதுக்கு லேட் ஆகலாம்” என்று, தனக்குத் தெரிந்த, காரணத்தைக் கூறினாள் ஜெய்சிகா.

அகஸ்தியா,“ம்ஹ்ம். பத்து மணிக்கு மேலே ஆச்சு. ஏதோ நம்ம இன்னொரு சாவி செஞ்சு வாங்கி வச்சிருக்கப் போய் சரியாகப் போச்சு, இல்லைன்னா, இன்னைக்கு எல்லாமே, கோவிந்தா தான்!”

கணினியில் வேலையாக இருந்தவர்களுக்கு, அவர்களின் நண்பனிடமிருந்து அலைபேசி வழியாக அழைப்பு வந்தது.

ஜெய்சிகா,”டேய்! எங்கடா இருக்கிற? யாராவது ஒருத்தருக்குக், கால் பண்ணி இருக்கலாமல?” என்று எடுத்தவுடனேயே அவனிடம் பொரிந்து தள்ளினாள்.

“ஷ்ஷ், அவனைப் பதிலைச் சொல்ல விடு” என்று தோழியை அடக்கினாள் அகஸ்தியா.

“ஃப்ரண்ட்ஸ்! என்னோட அப்பாவுக்குப் பிபி அதிகமாகிடுச்சு. இப்போ ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கோம். இப்போ, என்னால் எதுவுமே பண்ண முடியாது! இன்னைக்குத் தான், காம்படிஷனோட முதல் நாள்! அதனால், நான் இல்லைன்னாலும், அதை நல்லபடியாக ஆரம்பிச்சு வச்சிடுங்க! இந்த ஒரு தடவை மட்டும் எனக்காக இதைச் செய்ங்க ப்ளீஸ்!” என்று பதட்டத்துடனும், குற்ற உணர்வுடனும் தோழிகளிடம் கெஞ்சிக் கேட்டான் ஹரித்.

அவன் கூறியதைக் கேட்ட இருவருமே ஒருசேர,”அச்சோ! நீ அங்கே அம்மா கூட சேர்ந்து, அப்பாவைப் பார்த்துக்கோ‌. நாங்க இதைக் கவனிச்சுக்கிறோம்‌. டேக் கேர் ஹரி!” என்று அவனுக்கு வலியுறுத்தி விட்டு அழைப்பை வைத்தனர்.

“நாம சாயந்தரம் போய், அவங்க அப்பாவைப், பார்த்துட்டு வந்துடலாம் ஜெய்” என்றாள் அகஸ்தியா.

“கண்டிப்பாக போவோம்” என்றவள்,

பின்பு,”அவன் இருந்திருந்தால், அவங்க கிட்டத், தெளிவாக, ஃபோன் காலிலேயே, எல்லாத்தையும் சொல்லிடுவான். நாம ரெண்டு பேருமே, அந்தக் கம்பெனி, ஆளுங்க கிட்டப் பேசினது இல்லை. இப்போ என்னப் பண்றது?” என்று அவளிடம் வினவினாள் ஜெய்சிகா.

“மெயில், மெசேஜ் எல்லாம் வேலைக்கு ஆகாது ஜெய், வேற வழியில்லை. நானே அவங்களுக்குக் கால் செய்து பேசிடறேன்” என்று முடிவாக கூறியவளிடம்,“ப்ச்! ஓகே. பேசு” என்கவும், எஸ்.என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ், நிறுவனத்தின், அதிகாரப் பூர்வமான, அலைபேசி எண்ணைத் தேடி எடுத்தாள் அகஸ்தியா.

அவளது எண்ணிலிருந்து தான், அவர்களுக்கு அழைத்ததால், அந்த நபர், ஆணா? பெண்ணா? எனத் தெரியாமலும், அந்த எண்ணும்,‘ஜா நாவல்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ்’ வலைதளத்தின் உடையது எனவும், சாதுரியனுக்குத் தெரியாதே!

ஆகவே, தங்களது புதிய வாடிக்கையாளர் என்ற கண்ணோட்டத்தில், எப்போதும் போல, அந்த அழைப்பை ஏற்று,“ஹலோ” என்றான்.

”ஹலோ சார்” எனப் பேசியவளின், குரல் அவனுக்குப் பரிச்சயமாக, இருப்பது போல், தோன்றியதால்,”சொல்லுங்க மிஸ்…?” என்று வினவினான் சாதுரியன்.

“அகஸ்தியா, ‘ஜா - நாவல்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ்’, சைட் ஓனர்” என்று அவனிடம், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்,

“ஓஹ்!” என முதலில், ஆச்சரியம் அடைந்து,

அந்த அலுவலகத்தில் இருந்து பேசுவது, எப்போதுமே, ஆணாகத் தான் இருப்பான். இப்போதோ, இந்தப் பெண் பேசுகிறார், அதுவும் இல்லாமல், தங்கை கேட்டுக் கொண்டிருந்தக் குரலிற்குச், சொந்தக்காரி இவள் தான்! என்பதை அறிந்து கொண்டான் சாதுரியன்.

அவன் எதுவும் பேசாமல் இருந்ததால்,”ஹலோ சார்!” என்றாள் அகஸ்தியா.

“யெஸ் மேம், நாங்க உங்களுக்கு என்ன உதவி பண்ணனும்?”

தாங்கள் குறித்து வைத்திருந்தவற்றை, அவனிடம் தெளிவாக கூறினாள்.

சாதுரியன்,“ஷூயர் மேம். நாங்க செஞ்சுக் கொடுக்கிறோம். வேலை முடியிற வரைக்கும், சைட் வொர்க் ஆகாது. அதனால், உங்களுக்குச் சரியா இருக்கிற, நேரம் பார்த்து, எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க”

“ஓகே சார். அதை நான் பார்த்துட்டு, உங்களுக்குச் சொல்றேன். தாங்க்ஸ்” என்று அழைப்பை வைத்தவள், இதை தோழியிடம் பகிர்ந்தாள் அகஸ்தியா.

“அப்போ, ஈவ்னிங் டூ நைட் வரைக்கும், சைட் வேலை நடக்கும், அதுவரை, வொர்க் ஆகாதுன்னுக், குரூப்பில் மெசேஜ்ஜைப், போட்டு விட்றேன்” என்று அதைச் செய்தாள் ஜெய்சிகா.

‘எப்போது முன்னோட்டங்கள் மற்றும் முதல் அத்தியாயத்தைப், பதிவு செய்ய வேண்டும்?’ என்ற கேள்விகளை எழுப்பி இருந்தனர் எழுத்தாளர்கள்.

‘காலையிலிருந்து, சாயந்தரம் வரை, தளம் வேலை செய்யும். ஆதலால், அந்த நேரத்திற்குள்ளாகப் பதிவு செய்து கொள்ளலாம்’ எனப் பதில் அனுப்பினாள்.

அதை, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இன்னும் சிறிது நேரத்தில், போட்டி ஆரம்பமாகப் போகிறது! அதற்கு எழுத்தாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், ஆதரவு தருமாறு வாசகர்களுக்கும் சேர்த்து, அறிவிப்பைத் தயார் செய்து, முகநூலில் பதிவிட்டார்கள் இருவரும்.

அதற்கு வரவேற்புகள், அதிகமாக இருக்கவும், குதூகலமாகி, அந்த நேரத்திலிருந்து, தளத்திலும், முகநூலிலும், எழுத்தாளர்கள் முன்னோட்டம் மற்றும் அத்தியாயங்களைப் பதியலாம் என்றும், ஏதேனும் ஐயங்கள் இருந்தால், தங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி, விவரம் கேட்டுக் கொள்ளலாம் எனவும் கூறினர்.

அதன் பிறகு, தங்களது கதையின் பதிவுகளும், திரிகளின் பகிர்வுகளையும், மின்னல் வேகத்தில், போட்டனர் போட்டி எழுத்தாளர்கள்.

அதை உற்சாகத்துடன் பார்வையிட்டனர் அகஸ்தியா மற்றும் ஜெய்சிகா.

தன் நண்பர்களிடம்,”அந்தப் பப்ளிகேஷனோட சைட் வொர்க் வந்திருக்கு. அதை யார் பாக்குறீங்க?” எனக் கேட்டான் சாதுரியன்.

வராகனும், கனிஷாவும்,”அதை நீ தான் முதலில் இருந்து பார்க்கிற. நீயே பண்ணிடு” என்றான்.

“ஓகே” என்றவன்,

அந்தப் போட்டி, தொடங்கி விட்டதால், தனது தங்கைக்குக் கால் செய்து,”ஹலோ தனு. காம்படிஷன் ஆரம்பிச்சிடுச்சு. நீயும், கதையைப் போஸ்ட் பண்ற தான?” என்று வினவினான்.

தன்மயா,“ஆமா ண்ணா. முதல் நாள்ன்றதால், காலேஜுக்கு லீவ் போட்டுட்டு, அதைத் தான், செஞ்சிட்டு இருக்கேன்” என்றாள் உற்சாகமாக.

“சரிடா. நல்லா பண்ணு” என்று கூறி வைத்தான் சாதுரியன்.

எப்போதடா கதையைப் பதிவிடப் போகிறோம் என்று துறுதுறுவென இருந்ததால், அன்றைய நாள், கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, சிறு அறிமுகத்துடன், கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட்ட தன்மயா,“ஃபர்ஸ்ட் அப்டேட் போட்டுட்டேன் மா!” என்று தாயிடம் கூறி மகிழ்ந்தாள்.

“சூப்பர் தனு” என மகளை வாழ்த்தியவர், அவளுக்கு இனிப்பையும், ஊட்டி விட்டார் பவதாரிணி.

“தாங்க்ஸ் மா” என்று, அந்த வலைதள உரிமையாளர், வரிசையாக அனுப்பும், வாய்ஸ் மெசேஜைக் கேட்க ஆரம்பித்தாள் தன்மயா.

இனி, போட்டி முடிவுத், தேதி வரை, எழுத்தாளர்களுக்கு ஊக்கமும், வாசகர்களுக்கு கதைகளை வாசிக்கும் ஆர்வமும் ஏற்பட, என்னென்ன செய்ய வேண்டுமோ? அவற்றையெல்லாம், பட்டியலிட்டு விட்டு, மாலையில், வீடு திரும்ப தாமதம் ஆகும் என்று தத்தமது வீட்டிற்குச் செய்தி அனுப்பி விட்டு, ஹரித்தின் தந்தையைப் பார்க்க, மருத்துவமனைக்குச் சென்றனர் அவனது தோழிகள்.

“ஹரி” என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்தனர்.

அங்கே, சிகிச்சைகள் முடிந்து, மெத்தையில் படுத்திருந்த, தந்தையின் கையைப் பற்றி இருந்தான் ஹரித். அவனது தாயோ, அவருக்காகப், பழச்சாறு பிழிந்து கொண்டிருந்தார்.

“வாங்க” என இருவரையும், உள்ளே அனுமதித்தான் அவர்களது நண்பன்.

அகஸ்தியா,“ப்பா, இப்போ எப்படி இருக்கீங்க?” என்று தியாகராஜிடம் வினவினாள்.

“எனக்கு ஒன்னும் இல்லைம்மா. பிரஷர் கொஞ்சம் அதிகமாகிடுச்சு.‌ அதுக்குப் போய், அம்மாவும், பையனும் சேர்ந்துக்கிட்டு, இங்கே கொண்டு வந்து சேர்த்தாச்சு” எனப் புன்னகையுடன் கூறினார்.

“ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க நிலைமையைக், கூட வேலை பார்க்கிற, ஒருத்தர் கால் செய்து சொல்லாமல் விட்டிருந்தால், நீங்களும் அப்படியே எங்ககிட்ட இருந்து மறைச்சு இருப்பீங்க!” என்று அவரைக் கடிந்து கொண்டார் ஜமுனா.

“ஹாஹா…” என அந்த நிலையிலும் வாய் விட்டுச் சிரித்தார்.

ஹரித், “போட்டி எப்படி போகுது?” என்று தோழிகளிடம் கேட்கவும்,

ஜெய்சிகா,”அதெல்லாம் பயங்கரமாகப் போயிட்டு இருக்குடா. நம்ம ரைட்டர்ஸ் கலக்கிட்டு இருக்காங்க! நீ ஃப்ரீயாகிட்டுப் பாரு”

“சரி. இப்படியே நல்லா போகட்டும்!”

ஜமுனா,“நீங்களும் ஜூஸ் குடிங்க” என்று தன் கணவனுக்குப் பழச்சாறு கொடுத்து விட்டு, அவர்களிருவருக்கும் தந்து உபசரித்தார்.

அதை மறுக்காமல், வாங்கிப் பருகி விட்டு, அவர்களிடம் சிறிது நேரம், பேசி முடித்து, இப்போது, பதிப்பக வேலையாக, அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பேசியதைப் பற்றி, ஹரித்திடம் உரைக்க வேண்டாம் என்ற முடிவுடன் வீடு போய்ச் சேர்ந்தனர் அகஸ்தியா மற்றும் ஜெய்சிகா.

“நீ கதையை ஆரம்பிச்சுட்டேன்னு, பவா சொன்னா ம்மா” எனக் கூறி, அவளுக்கு வாழ்த்து கூறினார் யுதிர்ஷ்டன்.

அப்போது, பதுமனும் எப்போதோ வந்திருக்க, அவனுமே தங்கையை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசினான்.

இதே நேரத்தில், அகஸ்தியாவின் குரல் தந்த சுகந்தத்தை உணர்ந்தவாறே, அலுவலகத்திலிருந்து, வீடு திரும்பினான் சாதுரியன்.

அவன் உள்ளே நுழைந்ததுமே,”சாது ண்ணா! அந்த சைட் வொர்க்கை நீங்களே தான், பார்க்கப் போறீங்களா?” என்றாள் தன்மயா.

“ஆமா டா. எங்ககிட்ட தான் கொடுத்திருக்காங்க”

“சூப்பர்! ஆனால், நீங்க தான், என்னோட அண்ணான்னுப், போட்டி முடியிற வரைக்கும், அவங்களுக்குத் தெரியக் கூடாது! சரியா!” என அவனிடம் தீர்க்கமாக கூறினாள் தங்கை.

“நிச்சயம் சொல்ல மாட்டேன். ப்ராமிஸ்!” என்று அவளுக்கு உறுதி அளித்தான் சாதுரியன்.

அவன் அவ்வாறு கூறியிருந்தாலும், அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் யாவும், அந்த அண்ணன், தங்கைக்கு, மனதிற்கு உவப்பானதாக இருக்காது மற்றும் தன்மயாவின் நேர்மை, சோதிக்கப்படும் அபாயமும் இருந்தது.

அவளது போட்டிக் கதையைத் தொடர அனுமதிக்கலாமா? என்று வலைதளத்தின் உரிமையாளரான அகஸ்தியா முடிவு எடுக்கும் படியான, நிர்பந்தத்தில் தள்ளப்படப் போகிறாளே? அவளும், சரியான முடிவெடுப்பாளா? தன்மயாவின் நேர்
மையும், அவளது பெயரும் கெடாமல், போட்டியில் கதையை வெற்றிகரமாக எழுதி முடிப்பாளா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஆறாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 7

“அவங்க அப்பா போலீஸ்காரராச்சே! வேலையில் இருக்கிற, டென்ஷன், ஸ்ட்ரெஸ்ஸால், பிபி அதிகமாகிடுச்சு போல!” என்றார் குணசுந்தரி.

உலகேசன்,“ஆமாம் மா. அவர் பெரியப் பொறுப்பில் வேற இருக்காரே!”

“யெஸ் ப்பா. ரிடையர்ட் ஆகிற வரை, வேலை பார்ப்பேன்னு, அவங்க கிட்ட சொல்லிட்டாராம்” என்றாள் அகஸ்தியா.

ஹரித்தின் தந்தையின், உடல்நிலையைப் பற்றித் தான், அகஸ்தியாவும், அவளது பெற்றோரும், பேசிக் கொண்டிருந்தனர்.

“அவர் தன்னோட, உடம்பையும் பாத்துக்கனும்” என்றவர்களிடம், தங்கள் வலைத்தளத்தில், போட்டி ஆரம்பித்து, வெற்றிகரமாக, நடந்து கொண்டிருப்பதைப் பகிர்ந்தாள் அகஸ்தியா.

“ஃபர்ஸ்ட் டே காம்படிஷன் எப்படி போச்சு?” என்று கேட்டுக் கொண்டே, மகளுடைய அனுமதியுடன், அவளது கணினியை இயக்கிப் பார்த்தார் குணசுந்தரி.

“எல்லாருமே போஸ்ட் போட்டாச்சு போலவே?” என்று அவரருகே இருந்த, உலகேசனும் வினவினார்.

அகஸ்தியா,“ஆமாம் ப்பா. சைட் ட்ராஃபிக் அதிகமாகி, வேலைப் பார்க்கச் சொல்லிருக்கோம்”

“சூப்பர் ம்மா” என்றனர் இருவரும்.

“இன்னைக்குத் தான், நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கேன். நானே நமக்கு, டீ போட்றேன்” என்று அடுக்களைக்குள் போய், தங்கள் மூவருக்குமாகத், தேநீர் போட்டுக், கொண்டு வந்தார் குணசுந்தரி.

மூவரும் தேநீர் அருந்தியபடியே, தங்களது சம்பாஷணைகளை, முடித்துக் கொண்டனர்.

மாலையில் இருந்து, தளத்தின் வேலைகள், ஆரம்பமாகி விட்டதை, அகஸ்தியாவின் செல்பேசிக்குக், குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்திருந்தான் சாதுரியன்.

அதற்கு நன்றி தெரிவித்து விட்டு, அந்த வேலையை முடித்ததும், தனக்குத் தெரிவிக்குமாறு, கேட்டுக் கொண்டு, அவனது பெயரை, ட்ரூ காலரில், பார்த்து அறிந்தவள், அவனது எண்ணைத், தனது அலைபேசியில், சேமித்துக் கொண்டாள் அகஸ்தியா.

இது தான், வரும் காலத்தில், நடக்கும் நிகழ்வால், அவளும், சாதுரியனும், சந்தித்துக் கொள்வதற்கு, முதல் அஸ்திவாரமாக, இருக்கப் போகிறதோ?

ஹரித்தின் தந்தை, தியாகராஜைப் பற்றிய விசாரிப்புகளை, முடித்து விட்டு, அவர்கள் உடலை வருத்திக் கொள்வதைக் கண்டு,”நீங்க மூனு பேரும், சரியாகச் சாப்பிட்றதே இல்லை போல!” என மகளுக்கு, அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தார் ஜெய்சிகாவின் தாய்.

“அப்படி எல்லாம், இல்லை ம்மா” என்று பதிலளித்தாள் மகள்.

சீதாதேவி,“அப்பறம் ஏன், இளைச்சுப் போயிருக்கீங்க? ஒழுங்காக சாப்பிட்டு, சீக்கிரம் தூங்கனும்!”என்றார்.

தாயின் அறிவுரைகளை எல்லாம், பொறுமையாக கேட்டுக் கொண்டு, உறங்கச் சென்றாள் ஜெய்சிகா.

மறுநாள், காலை முதல் வேளையாக, வலைதளத்தில், அனைத்து வேலைகளும், முடிந்து விட்டது என்று அகஸ்தியாவிற்குக், கைப்பேசி வழியாகச், செய்தி அனுப்பி வைத்தவன்,

“அந்த ‘ஜா பப்ளிகேஷனோட ஒரு ஓனர் பேர் அகஸ்தியா, அவங்க தான், இப்போ சைட் வொர்க்கைப் பார்க்கச் சொல்லி இருக்காங்க” என்று நண்பர்களிடம் தெரிவித்தான் சாதுரியன்.

“அப்படியா? ஆனால், ஹரித் - ன்னு ஒருத்தர் தானே, எப்பவும் நம்மளைக் கான்டாக்ட் பண்ணிப் பேசுவார்?” என்றான் வராகன்.

“நானும், அவர் தான், ஓனர்ன்னு நினைச்சேன் டா. இன்னும் எத்தனை பேர் சேர்ந்து, அந்த வெப்சைட்டையும், பப்ளிகேஷனையும் நடத்துறாங்கன்னுத் தெரியலை”

கனிஷா,“அது கதை எழுதிப் போஸ்ட் பண்ற வெப்சைட். எத்தனைப் பேர் வேணும்னாலும், ஜாயின் பண்ணி நடத்தலாம். அவ்வளவு வேலை இருக்கும். அதுவுமில்லாமல், அங்கே, புதுப்புது ரைட்டர்ஸ், வர, வரத் தான், சைட்டும் பிரபலமாகும்!” என்று விவரித்தாள்.

“ம்ஹ்ம்! இதில், இவளோ இருக்குல்ல? உண்மையிலேயே ரொம்ப பிஸியான வேலை தான்!” என ஒப்புக் கொண்டார்கள் மற்ற இருவரும்.

“நாளைக்கு ஹரி வந்துருவான் ஜெய். அது வரை, நாம சமாளிச்சுக்கலாம் தானே?” என்று தோழியிடம் கேட்டாள் அகஸ்தியா.

“ஷூயர். அவன் அப்பாவை, டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, அவருக்குத் தேவையானதை, செஞ்சிட்டு வரட்டும்” என்றாள் ஜெய்சிகா.

“ஓகே. சைட் வொர்க் முடிஞ்சது. எல்லா ரைட்டர்ஸ் கிட்டேயும், சொல்லிட்டு, இனிமேல் அப்டேட்ஸ் போடலாம்னு இன்ஃபார்ம் பண்ணிடலாம்” என்று அதை முதலில், செய்து முடித்தாள் அகஸ்தியா.

அதன் பின்னர், வழக்கம் போல, போட்டி தங்கு தடையின்றி, நடைபெற்றுக் கொண்டிருந்தது.

*****************************

கனிஷாவின் பெற்றோர், தங்களது மகளுடன் சேர்த்து, அவளது இரண்டு நண்பர்களான, சாதுரியன் மற்றும் வராகனை, அவ்வப்போது, தங்களுடைய உணவகத்திற்கு அழைத்து, சாப்பிட வைத்து, அனுப்புவர்.

“நம்ம ஹோட்டலுக்கு நீயும், உன் ஃப்ரண்ட்ஸூம், வந்து சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு, கனி ம்மா! எப்போ வர்றீங்க?” என்று தங்கள் மகளிடம் வினவினர்.

கனிஷா,“நானும், வனுவும் வந்தோம். இன்னும் சாதுவைத் தான், கூட்டிட்டு வரலை. அடுத்த வாரம், மூனு பேருமே வர்றோம்”

“ஓகே ம்மா”

****************************

இந்தச் சீரான நிலையை, அசைத்துப் பார்க்கவும், சில நிகழ்வுகள், நடக்கத் தொடங்கியது எனலாம்.

ஒருநாள், இரவு உறங்குவதற்கு முன்பாகத், தன் முகநூல் பக்கத்தை, ஆராய்ந்து பார்த்து, அதில், தங்களது வலைதளப் போட்டியில் பங்கு பெற்றிருக்கும் ‘தன்மயா’ என்ற எழுத்தாளருடன், நட்பில் இருந்ததாலும், அவள் புதுமுகம் என்பதாலும், முகநூலில் எவ்வாறு கதையின் பதிவைப் போட்டிருக்கிறாள்? என்பதை ஆராய்ந்தாள் அகஸ்தியா.


அப்போது, அந்த எழுத்தாளருடைய நட்பில் இருந்த, ஒரு முகநூல் கணக்கின், பதிவைப் பார்க்க நேர்ந்தது.

அதில், தனது தங்கையின் புகைப்படங்களுக்கும், மற்ற பதிவுகளுக்கும், பின்னூட்டம் அளித்திருந்தான் சாதுரியன்.

அண்ணன், தங்கையாக மட்டுமில்லாமல், யாராக இருந்தாலுமே, நட்பில் இருக்கும் போது, இப்படியான செயல்கள், யாவும் சாதாரணமாக, நடக்கக் கூடியவையே!

ஆனால், இவற்றைப் பார்த்த அகஸ்தியாவிற்கோ, முதல் முறையாகப், பொறுமை காணாமல், போய் விட்டது.

பெயர் மறைத்து, எழுதும் போட்டியே என்றாலும், யாருக்கும் அதை தெரிவிக்காமல் இருந்தால், அது சாலச் சிறந்தது என்பதை, போட்டியில் பங்கேற்கும், அனைத்து எழுத்தாளர்களுக்கும், அகஸ்தியாவும், ஜெய்சிகாவும், அழுத்திக் கூறி இருந்தனர்.

இப்போது, இதைக் கண்டதும், ‘கோபம்’, அவளது கண்களையும், கருத்தையும், மறைத்துக் கொண்டது எனலாம்.

ஆனாலும், தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, தான் ஒரு, பொறுப்பான, இடத்தில் இருப்பதை, நினைவில் வைத்துக் கொண்டு, சாதுரியனின் முகநூல் கணக்கைத், தன்மயாவிற்குப் புலனத்தில் அனுப்பி, ‘இவர் உங்களுடைய அண்ணன் தானே?’ என்பதையும் கேட்டு விட்டு, அவளது பதில் குறுஞ்செய்திக்காக, நிதானமாக காத்திருந்தாள் அகஸ்தியா.

இந்தப் போட்டியில், மிக ஆர்வத்துடன், பங்கேற்றுத் தனது கதையைப் பதிவிட்டுக் கொண்டிருந்த தன்மயாவிற்கு, அந்தக் குறுந்தகவல், காணக் கிடைத்ததும், அவள் சில கணங்களுக்கு, ஸ்தம்பித்துப் போய் விட்டாள்.

எது நடக்கக் கூடாது என்று தன்னிடமும், தமையனிடமும், உறுதிமொழி வாங்கிக் கொண்டாளோ? அதுவே நிகழ்ந்து விட்டிருக்க, இதனால், தனது பெயரும், நேர்மையும், ஆட்டம் காணப் போகிறதே! என்று அவளுடைய மனதில் அழுத்தம் உருவாகிப், பூதாகரமாக வளரவும் செய்திருந்தது.

அப்படி இருந்தாலும், தான் எந்த தவறும் செய்திருக்கவில்லை, எனும் போது, இடிந்து போய் அமர்வதற்கு, அவசியமே இல்லை எனத், தன்னைத் தானே, தேற்றிக் கொண்டு,

‘ஆமாம் சகி‌. அவர் என்னுடைய அண்ணன் தான்!’ என்று ‘ஜா’ வலைதளம் மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளரிடம், ஒப்புக் கொண்டாள் தன்மயா.

அதைப் பார்த்ததும், வேறு சில, கேள்விகளைக் கேட்கும் நிலைக்குத், தள்ளப்பட்டவள்,’அப்போ, நீங்க இந்தக் காம்படிஷனில் கலந்துக்கிறது, அவருக்குத் தெரியுமா மிஸ். தன்மயா?’ என்று அவளிடம் வாய்ஸ் மெசேஜ்ஜில் கேட்டாள் அகஸ்தியா.

அதற்கும்,’ஆம்’ என ஒப்புக் கொண்டாள்.

‘அவர்கிட்ட வேறெதுவும் டீடெயில்ஸ் ஷேர் பண்ணி இருக்கீங்களா? உங்க கதை தலைப்பு…’ என்று இவள் கேட்கவும்,

‘நான் உங்களுக்குக், கால் செய்து, விளக்கம் கொடுக்கவா சகி?’ என்று அவளிடம் நிதானமாக கேட்டாள் தன்மயா.

“ஷ்யூர்” என்றதும்,

அகஸ்தியாவின் அலைபேசி எண்ணுக்கு அழைத்து,”ஹாய் சிஸ். நான் தன்மயா” எனத், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ம்ம்! சொல்லுங்க?”

“என்னோட அண்ணன் தான், உங்களோட வெப்சைட்டை, டெவலப் பண்ணிக், கொடுக்கிறார் - ன்னு, எனக்கு எப்போவோ தெரியும் சிஸ். அதுக்கப்புறம் தான், எனக்கு இந்தக் காம்படிஷன் பத்தியே, நியூஸ் தெரியும்” என்று ‘ஜா’ வலைதளத்தைத், தான் எவ்வாறு கண்டுபிடித்தேன் என்பதை, அவளிடம் பொறுமையாக எடுத்துரைத்து முடித்தாள்.

“இந்தப் போட்டியில், நீங்க கலந்துக்கிறது, உங்க அண்ணனுக்குத், தெரிஞ்சதால் தான், எங்க வெப்சைட்டுக்கு, இன்னும் ஏதாவது ஹெல்ப் வேணும்னா, தயங்காமல் கேளுங்கன்னு சொன்னாரா?” என்று கூறியதைக் கேட்ட மாத்திரத்திலேயே, தலைச் சுற்றிப் போய், முகம் கருத்துப் போனவளோ,”இதைப் பத்தி எங்கிட்ட, அண்ணா எதுவும் சொல்லலை சிஸ்!” என்று நொடிந்து போனக் குரலில் கூறினாள் தன்மயா.

“அப்படின்னா சரி சிஸ். நான் இதையெல்லாம் ஏன் உங்ககிட்ட கேட்டேன்னா, இங்கே எல்லாருக்கும், பொதுவான விதி தானே? அதனால் தான், நான் உங்களை, ரொம்ப தோண்டித், துருவிக் கேட்டுட்டேன். என்னைத் தவிர, இந்தச் சைட்டில், இன்னும் ரெண்டு பேர், ஓனராக இருக்காங்க. அவங்களுக்கு இது தெரிய வந்தால், ஏன் முதல்லயே விசாரிக்கலைன்னு, என்கிட்ட கேட்கலாம் இல்லையா? அப்பறம், மத்த ரைட்டர்ஸூக்குத் தெரிஞ்சா, அவங்களும் சங்கடப்படுவாங்க இல்லையா? அதான், உங்ககிட்டயே நேராக வந்து விசாரிச்சுட்டேன் சிஸ்” என்று விளக்கம் அளித்தாள் அகஸ்தியா.

“எனக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை சிஸ். உங்களுக்கு எல்லாம் தெளிவாகிடுச்சு தானே?” என்றாள் தன்மயா.

“ஆமாம் சிஸ்”

“அப்போ நான், இந்தப் போட்டியில், தொடர்ந்து எழுதலாம் தானே?” என வினவினாள்.

“கண்டிப்பாக எழுதலாம் சிஸ்! ஆல் தி பெஸ்ட் 💐” என்று அவளை வாழ்த்தினாள் அகஸ்தியா.

“ஓகே சிஸ். தாங்க்யூ” என அழைப்பை வைத்தவள்,

செல்பேசியில், தன் இரண்டாவது அண்ணனான சாதுரியனின், எண்ணைத் தேடி எடுத்தாள் தன்மயா.

அந்த நேரத்தில், கனிஷாவின் உணவகத்தில் தான், நண்பர்களுடன் சேர்ந்து, உணவருந்திக் கொண்டு, இருந்தான் சாதுரியன்.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஏழாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 8

உணவருந்திக் கொண்டு இருந்தவனுக்குத், தன் தங்கையிடமிருந்து, அழைப்பு வந்ததும், அதை ஏற்று,

“ஹாய் தனு” என்று பேசினான் சாதுரியன்.

“எங்கே இருக்கீங்க ண்ணா?” என்றாள் தன்மயா.

“கனியோட ஹோட்டலில் சாப்பிட்டுட்டு இருக்கேன் டா” என்கவும்,

“சரி. சாப்பிட்டு முடிச்சிட்டு, வீட்டுக்கு வாங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”

“ஓகே ம்மா” என்றவனுக்குப், பிறகு தான் தெரிந்தது, அவள் எப்போதோ அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தாள் என்பது!

‘என்னாச்சு இவளுக்கு!?’ என்று நினைத்தவனோ, தன் நண்பர்களிடம்,”சாப்பிட்டு முடிச்சிட்டேன். நான் உடனே வீட்டுக்குக் கிளம்பனும்” என்றான் சாதுரியன்.

கனிஷா,”ஏன்டா? யார்கிட்டே பேசிட்டு இருந்த?” என்று அவனிடம் வினவினாள்.

“தனு கிட்டே தான். வீட்டுக்கு வர சொல்றா”

“சரிடா. அப்போ கிளம்பு” என்று அவனுக்கு விடைகொடுத்து, அனுப்பினார்கள் வராகன் மற்றும் கனிஷா.

தன்னுடைய இல்லத்தினுள் நுழைந்தவனை, முதலில் வரவேற்றது என்னவோ, அவனது அன்னை தான்.

“வாடா” என்றவரிடம்,

“தனு எங்கே ம்மா?” என்று கேட்டான் சாதுரியன்.

“அவ ரூமில் இருக்கிறா. நீ வந்ததும், உன்னை அங்கே வர சொன்னா” என்றார் பவதாரிணி.

“சரிம்மா. நான் போய்ப் பார்க்கிறேன்” என்று தாயிடம் தெரிவித்து விட்டுத், தங்கையின் அறைக்குச் சென்றான்.

“தனு ம்மா” என்று தன்னைக் கூவி அழைத்தவனிடம்,”உட்காரு ண்ணா. உங்கிட்டே பேசனும்” என்று அவனைத் தன்னருகே அழைத்து அமர வைத்தாள் தன்மயா.

“சொல்லு ம்மா” என அவனும் சாதாரணமாக கேட்க,

“ஜா பப்ளிகேஷனோட ஓனர், எனக்கு மெசேஜ் செய்திருந்தாங்க” என்று கூறியவளோ, தன்னுடைய அலைபேசியில், இருந்தக் குறுஞ்செய்திகளை, அவனிடம் காட்டினாள்.

அவளது உடல்மொழி மற்றும் முக இறுக்கமும், அவனுக்குப் புருவச் சுழிப்பை ஏற்படுத்தியது.

தங்கையின் செல்பேசியை வாங்கி, அந்தச் செய்திகளை எல்லாம், பொறுமையாக வாசித்தான் சாதுரியன்.

அதைப் படிக்கப், படிக்க, அவனுடைய வதனமோ, இருண்டு போய் விட்டது.

“வாட்!” என்ற திடுக்கிடலுடன், தங்கையைப் பார்த்தான்.

“ம்ஹ்ம். அவங்க இதை, எங்கிட்டே கேட்கும் போது, எனக்கு எவ்ளோ அதிர்ச்சியாக இருந்துச்சு தெரியுமா ண்ணா? அப்பறம், எப்படியோ என்னைச் சமாளிச்சுக்கிட்டு, அவங்களுக்கு விளக்கினேன்!” என்று தனக்கும், அந்தப் பதிப்பகத்தின் உரிமையாளருக்கும், இடையே நிகழ்ந்த, அலைபேசி உரையாடலையும், தமையனிடம் விவரித்து முடித்தாள் தன்மயா.

அதைக் கேட்டதும், சாதுரியனுக்குக் குற்ற உணர்வாகிப் போனது. அவனால் தங்கையை, நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“ஏன் ண்ணா, இப்படி பண்ணுன?” என்று கம்மிய குரலில், அவனிடம் வினவினாள் தன்மயா.

அதற்கு,”நான் நல்லது தான் பண்ண நினைச்சேன் டா” என்று தன் பக்கமிருந்த, நியாயத்தை அவளிடம் கூறினான் சாதுரியன்.

“ஸ்ஸோ! நான் இதெல்லாம், கேட்டேனா ண்ணா? எவ்வளவு ஆசை, ஆசையாகப், போட்டியில் சேர்ந்து, கதை எழுதுறேன்னு, உங்க எல்லார்கிட்டயும் சொன்னேன்? நீங்களும் கூட, எனக்கு எவ்ளோ, அறிவுரை சொன்னீங்க! இப்போ, இப்படி செஞ்சு வச்சிருக்கிற! இனிமேல் என்னால், அந்தக் காம்படிஷன்ல, எப்படி கவனம் செலுத்தி, எழுத முடியும்?” என்று அவன் மேலிருந்த மனக்குறையை, வார்த்தைகளில் வடித்து, அவனிடம் கொட்டினாள் தன்மயா.

அவளுடைய சொற்கள் யாவும், தன்னைப் பதம் பார்த்தது தான்! ஆனால், அவனோ ஒரு வார்த்தைப் பேசவில்லை. தவறு முழுவதும், தன்னிடம் இருக்கும் போது, அவனால் எப்படி, தங்கையை மறுத்துப், பேச முடியும்? அமைதியாகவே இருந்தான் சாதுரியன்.

“ஓகே. முதலில், அவங்கப் பப்ளிகேஷனோட வேலையை நீங்க தான் பார்த்தீங்க, அதுக்கப்புறம் தான், அங்கே நடக்கிறப் போட்டியைப் பத்தி, உங்க மூலமாகத் தெரிஞ்சிக்கிட்டு, அதில் நான், கலந்துக்க ஆசைப்பட்டேன்னு ஒத்துக்கிறேன். இருந்தாலும், அவங்க கேட்கிற, வேலையை மட்டும், செஞ்சுத் தர, வேண்டியது தானே? அதை விட்டுட்டு, அதிகப் பிரசங்கித்தனமாக, என்னப் பண்ணி வச்சிருக்கீங்க, ண்ணா?” என்று கூறி முடித்து, தமையனின் முகத்தைப் பார்த்தாள்.

தங்கை கேட்ட, கேள்விகள் அனைத்தும் நியாயமானவையே! அதிலேயும், மிக முக்கியமாக, அவளுடைய நேர்மை, பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், தான் மட்டுமே! என்ற உண்மை, அவனது மனதை, நன்றாகச் சுட்டது.

திக்கித் திணறிப் போய், அவளிடம் என்ன, சொல்வதென்று தெரியாமல், கையறு நிலையை அடைந்தான், அவளுடன் பிறந்தவன்.

“அண்ணா!” என்று விளித்தவளை, குனிந்திருந்த தலையை, உயர்த்திப் பார்த்தான் சாதுரியன்.

“இனிமேல் இப்படி செய்யாதீங்க!” என்று கண்களில் வலியுடன், கூறியவளைத், தேற்றும் திராணியற்று, வெளியேறி விட்டான்.

அவன் சென்ற பிறகு, அப்படியே அமர்ந்து விட்ட, தன்மயாவோ, அடுத்த அத்தியாயத்தை, எழுதி முடிப்பதற்கான, மனநிலை சுத்தமாக இல்லாததால், அதைச் செல்பேசியில், வெறித்துப் பார்த்தவாறே, அமர்ந்து விட்டாள் தன்மயா.

அந்தச் சமயம், யுதிர்ஷ்டனும், பதுமனும், வீடு திரும்பியிருக்க, அவளும், சாதுரியனும், தத்தமது அறையில், அமைதியாக வேலை பார்க்கின்றனர் என்பதை, அவர்களிடம் தெரிவித்தார் பவதாரிணி.

“ஓகோ! இவங்க சைலண்ட் ஆக இருக்காங்கன்னா, ஏதோ பிராப்ளம் இருக்கும் போலவே?” என்று மகனைப் பார்த்தார் யுதிர்ஷ்டன்.

பதுமன்,“ஆமாம் ப்பா. நீங்களும், அம்மாவும், தன்மயா, கிட்டே போய் விசாரிங்க. நான் சாதுவைப் பார்க்கிறேன்” என மூவரும் சென்றார்கள்.

தங்கள் கடைசி மகளிடம் சென்ற, அவளது தந்தையும், தாயும்,”தனு ம்மா! ஏன்டா சைலண்ட், ஆக இருக்கிற?” என்று விசாரிக்கவும்,

அவளும், அவர்களிடம் மறைக்காமல், அனைத்தையும் உரைத்து விட்டாள்.

தன் அறைக்கு, வந்து கேட்ட பதுமனிடம், தான் செய்த, தவறை ஒப்புவித்தான் சாதுரியன்.

மகளிடம்,”அச்சச்சோ! அப்பறம் என்னாச்சு? கதையைப் போஸ்ட் செய்ய, ஓகே சொல்லிட்டாங்க தானே?” என்று கேட்டார் பவதாரிணி.

“ஆமாம் மா” என்றாள் தன்மயா.

“நீ தான், உன்னை நிரூபிச்சுட்டியே? அப்பறம் என்னடா? கதையைத் தொடர்ந்து எழுதி முடி!” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார் யுதிர்ஷ்டன்.

“இல்லை ப்பா. நான் அவங்க கிட்டே, என் கதையைப், போடலாமான்னுக், கேட்டுட்டேன் தான்! ஆனால், இதுக்கு மேல, என்னால் எப்படி, எழுத முடியும்?” என்று தொய்ந்து போய்க் கேட்டாள் மகள்.

“இன்னும் டைம் இருக்கே! நீ அதுக்குள்ளே ரிலாக்ஸாகிட்டு, எழுதி முடிச்சிரு!” என்று ஆறுதல் கூறினார் அவளது தந்தை.

“சரிப்பா” என்றாள் தன்மயா.

“நீ ஏன்டா, இப்படி குண்டக்க, மண்டக்க யோசிச்சு செஞ்சிருக்கிற?” என்று தன் தம்பிக்கு, மண்டகப்படி தந்து கொண்டிருந்தான் பதுமன்.

“ப்ச்…! என்னோட தப்பு தான், ண்ணா” எனத் தலை, குனிந்து கூறியவனிடம்,

“தனுவுக்கு உதவி செய்ய நினைச்சது தப்பில்லை. ஆனால், அதை அவங்க, எப்படி எடுத்துப்பாங்கன்னு, யோசிக்க மாட்டியா? இல்லை, இதனால், நம்ம தங்கச்சிக்கு, எதுவும் பாதிப்பு, ஆகுமான்னு யோசிச்சியா?” என்று அவனிடம் வினவினான் மூத்தவன்.

“நீ கேட்கிறது எல்லாமே, கரெக்ட் தான் ண்ணா! நான் தனுவோட அண்ணான்னு, என்னை இன்ட்ரோ செய்துட்டு, அவங்ககிட்ட அப்படி கேட்கலை. ஒரு உதவி, செய்ற மனப்பான்மையில் தான், அப்படி கேட்டேன். ஆனால் தனுவோட, ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை, எல்லாம் பார்ப்பாங்கன்னு, எனக்கு எப்படி தெரியும்?” என்றான் சாதுரியன்.

“ம்ஹூம். தங்களோட சைட்டில், காம்படிஷன்னு ஒன்னை, நடத்தும் போது, எல்லாத்தையும் தான், செக் பண்ணுவாங்க டா! அது தான், அவங்க வேலையே! ஏன்னா, அத்தனைப் பேரை, வச்சுப் போட்டி, நடத்தும் போது, நாலாபக்கமும், கவனமாக இருக்கனும்ல!” என்று தம்பிக்குத், தெளிவுபடுத்தினான் பதுமன்.

“புரியுது ண்ணா. நான் இதை, எப்படி சரி, பண்ணப் போறேனோ!” என்று வருத்தத்துடன் கூறினான் இளையவன்.

“நீ இனிமேல், எதையும் செய்யாமல், இருந்தாலே போதும் டா!” என்று அவனிடம் வலியுறுத்தினான் தமையன்.

“ஓகே ண்ணா” என்று பதிலளித்தவனுக்குத், தங்கையை எப்படியாவது, சமாதானம் செய்து, விட வேண்டும், என்ற எண்ணம் தோன்றியது.

அதற்கு அவன், எடுக்கப் போகும் முடிவு, மீண்டுமொரு சிக்கலை ஏற்படுத்தி விடுமா? அல்லது அனைத்தையும் சுமூகமாக முடித்து வைக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

*******************************

தன்னுடைய தந்தையின், உடல்நிலை சரியாகி விட்டதால், முதல் ஆளாகத், தங்களுடைய பதிப்பக, அலுவலகத்திற்கு வந்து, சாவி கொண்டு, கதவைத் திறந்து, உள்ளே நுழைந்து, தனது வருகையைப் பற்றி, தோழிகளுக்குத் தெரிவிக்காமல், கணினியை உயிர்ப்பித்து, வேலையைப் பார்த்தான் ஹரித்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, இரு சக்கர, வாகனத்தில் இருந்து, இறங்கிய இருவரும், அலுவலகம் திறந்திருந்த அலுவலகத்தைப் பார்த்து விட்டு,”என்ன ஓபன் ஆகி இருக்கு?” என்றவாறு உள்ளே நுழைய,

அங்கே, அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த நண்பனைக் கண்டதும்,”டேய் ஹரி!” என்று அவனை உற்சாகமாக, அழைத்தார்கள் அகஸ்தியா மற்றும் ஜெய்சிகா.

“ஹாய் ஃப்ரண்ட்ஸ்!” என்று அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனிடம்,

“அப்பா எப்படி இருக்கார்? டிஸ்சார்ஜ் பண்ணியாச்சா?” என விசாரித்தாள் அகஸ்தியா.

“யெஸ். அதான், இங்கே வந்துட்டேன்” என்றான் ஹரித்.

“ஓகே. அப்பாவை நல்லா பாத்துக்கோ” என்று அறிவுறுத்தினாள் ஜெய்சிகா.

“ம்ஹ்ம், நான் இல்லாதப்போ, சைட்டில் ஏதாவது பிரச்சினை இருந்துச்சா?”

“ஒரே ஒரு பிராப்ளம் ஆச்சு. அதை நான் இன்னும், ஜெய் கிட்டே கூட சொல்லலை. உங்க ரெண்டு பேருக்கும், சேர்த்து சொல்றேன்” என்று அவன் இல்லாததால், தானே, எஸ்.என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ் நிறுவனத்திடம், உதவி கேட்டதைப் பற்றி அவனிடம் கூறியவள்,

தாங்கள் நடத்தும் பேட்டியில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் ஒரு புதுமுக எழுத்தாளரான, தன்மயாவிற்கும், தனக்கும் ஏற்பட்ட, சிறிய மனத்தாங்கலைப் பற்றி, அவர்கள் இருவரிடமும், பகிர்ந்து கொண்டாள் அகஸ்தியா.

“ஓஹ்! இவ்ளோ நடந்திருக்கா? அந்த சாதுரியன்ற ஆள், இப்படியெல்லாம் பண்ணி, அவர் தங்கச்சியோட, நம்பிக்கையையே உடைச்சிட்டாரே!” என்று தன்மயாவிற்காகப் பரிதாபப்பட்டான் ஹரித்.

“என்ன தான், இது தெரிஞ்சதும், நீ ஃபர்ஸ்ட் கோபப்பட்டாலும், அதுக்கப்புறம், விஷயத்தைப் பொறுமையாக, ஹேண்டில் செய்த பார்! சூப்பர் தியா!” எனத் தோழியைப், பாராட்டினாள் ஜெய்சிகா.

அதை ஆமோதித்து,“ஆமாம். நீ ரொம்ப பொறுப்பாக நடந்துக்கிட்ட” என்றான் ஹரித்.

“தாங்க்ஸ் ஃப்ரண்ட்ஸ்” என்றாள் அகஸ்தியா.

”அநேகமாக, அந்த தன்மயா, இந்நேரம் தன்னோட அண்ணாகிட்ட, இதைப் பேசி இருப்பாங்க. அதுக்கு அவர் என்னப் பதில் சொன்னாரோ, இதுக்குப்புறம், ரெண்டு பேரும் சகஜமாகப் பேசிப்பாங்களான்றதும், சந்தேகம் தான்!” என்று கூறிய ஜெய்சிகாவிடம்,

“நமக்கு எதுக்கு, அவங்களோட பர்சனல்?” என்று அவளிடம் கூறி விட்டாள் அகஸ்தியா.

ஆனால், அவர்களது சொந்த விஷயத்தில், மூக்கை நுழைக்காமல் இருக்கலாம் என்று நினைத்தவளிடம், அந்தச் சாதுரியனே, நேரில் வந்து, பார்த்துப் பேசப், போகிறான் என்பதை, இவள் அறிந்திருந்தால், எப்போதோ, அவர்களிருவரிடமும் அனைத்தையும் விளக்கிப் பேசி, விஷயத்தை முடித்திருப்பாளோ!?

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த எட்டாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 9

தனக்கு அறிவுரை, வழங்கி விட்டுத், தமையன் பதுமன் சென்றதும், உடனே தனது, செல்பேசியில், ஜா பதிப்பகத்தில் இருந்து, தனக்குக் கடைசியாக, வந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான் சாதுரியன்‌. அதுவே அகஸ்தியாவின் எண்ணாகும்.அவனது அழைப்பை, எதிர்பார்த்திருந்தவள் போல, மடிக்கணினியில் செய்து, கொண்டிருந்த வேலையை, விட்டு விட்டு, அவனது அழைப்பை, ஏற்றாள் அகஸ்தியா.


“ஹலோ” என்றவளது குரலைக் கேட்டதும், தான் பேச வேண்டுமென, நினைத்திருந்தவற்றை எல்லாம், ஒருமுறை ஒத்திகைப் பார்த்துக் கொண்டு,”ஹலோ மேம்‌. நான் சாதுரியன் பேசுறேன்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.


“ஓகே, சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று இவளும், சாதாரணமாக வினவ,


“ஹாங்.‌‌..! அஃது! என் சிஸ்டரைப் பத்திப் பேசக் கால் செஞ்சேன் மேம்” என்று தயக்கத்துடன் உரைத்தவனிடம்,


“உங்க சிஸ்டரா? யாரு? அவங்களைப் பத்தி, எங்கிட்ட என்னப் பேசனும்?” என வினவினாள் அகஸ்தியா.


அதைக் கேட்டதும், விழி பிதுங்கிப், போனவனோ,”உங்க சைட், காம்படிஷனில் தான், அவங்கப் பார்டிசிபேட் பண்றாங்க மேம். பேர். தன்மயா” என்றுரைத்தான் சாதுரியன்.


“ஓஹ்! ஆமாம். எங்க சைட்டில் தான், பேர் மறைச்சு, எழுதுறப் போட்டியில் இருக்காங்க” என அதற்கும்,


இயல்பான பதிலைக், கூறியவளைக் நினைத்து வியப்படைந்தவனோ,”நீங்களும், அவங்களும், பேசியதைப் பத்தி, எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க” என்று சங்கடமாக மொழிந்தான் சாதுரியன்.


“எல்லாமே சொல்லிட்டாங்களா?” என்றாள் அகஸ்தியா.


“யெஸ் மேம்”


“எங்க சைட்டில், போட்டியில் எழுதுறதால் தான், அதையெல்லாம் அவங்ககிட்ட, கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டேன் சார். இல்லைன்னா, உங்கப் பர்சனல் எனக்கு எதுக்கு?” என்று தீர்க்கமாக உரைத்தவளிடம்,


அவளிடம் தன்னுடைய, கோரிக்கையை, எங்கனம், வைக்கத் தோன்றும்?


“ஹலோ சார். வேறெதாவது, எங்களோட சைட் வொர்க் பத்திப் பேசனுமா?” என்று அவனிடம் வினவினாள் அகஸ்தியா.


சாதுரியன்,“இல்லை மேம். என் தங்கச்சிக்காகத் தான், பேச வந்தேன்” என்று கம்மிய குரலில் கூறினான்.


“அதை நாங்களே பேசி கன்வின்ஸ் ஆகிட்டோம். நீங்க ஏன் மறுபடியும் வந்து ஆரம்பிக்கிறீங்க?” எனக் கேட்கவும்,


“இந்த விஷயத்தால், எனக்கும், அவளுக்கும், சின்ன மனஸ்தாபம் ஆகிடுச்சு மேம். அவ மேல, எந்த தப்பும், இல்லைன்னுத் தெளிவாக, உங்ககிட்ட சொல்லி, மன்னிப்புக் கேட்டுட்டா, எனக்கும் கொஞ்சம், நிம்மதியாக இருக்கும்னு தான்!” என்று தன் நிலையை, அவளுக்கு உணர்த்த முயன்றான்.


“ஓஹ் அப்படியா? தப்பு எல்லாம், உங்க மேல தானா?” என்றாள் அகஸ்தியா.


அவள் தன்னைக், கேலி செய்வது, போல் இருக்கப், பேசாமல் இருந்து, விட்டான் சாதுரியன்.


“நான் உங்களைக், கிண்டல் செய்றேன்னுத், தப்பா நினைச்சிடாதீங்க! தன்மயா கிட்டயே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன். உங்களோட குற்ற, உணர்ச்சிக்காக இதை, மறுபடியும் ஆரம்பிக்கனுமான்னு, எனக்குத் தோனுது!” என்றுரைத்தாள்.


அவள் அவ்வாறு, கூறிய பின்னும், மேலும் பேசாமல்,”ஓகே மேம். நடந்த எல்லாத்துக்கும் சாரி!” என்று தெரிவித்து விட்டு, அழைப்பை வைத்து விட்டான்.


“ம்ம். குட்!” என்று கூறி விட்டுப், போட்டிக்காகத் தான், எழுதிக் கொண்டு, இருக்கும் கதையின், அத்தியாயத்தைத் தட்டச்சு, செய்யத் தொடங்கினாள் அகஸ்தியா.


தான் செய்த, தவறால் தங்கையிடமும், பேச முடியாமல், இப்போது, இந்தப் பதிப்பக உரிமையாளரிடம், கெட்டப் பெயர், வாங்கி விட்டதை எண்ணி, மனம் வெதும்பிப், போனான் சாதுரியன்.


இப்போது இளையவளிடம் சென்று,”தனும்மா!” என்று தான், அழைத்திருந்தான்.


அதற்கே,”இப்போ என்ன, செஞ்சிட்டு வந்திருக்கீங்க?” என்று கடுமையான குரலில் கேட்டாள் அவனது தங்கை.


அதைக் கேட்டவுடன், அவளையும் தொந்தரவு செய்யாமல், ஒதுங்கி விட்டான் சாதுரியன்.


இதே சமயம், தன் தாய் குணசுந்தரியிடம், நடந்ததை விவரித்துத், தான் செய்தது சரியா? என்பதைக் கேட்டாள் அகஸ்தியா.


“ம்ஹ்ம்…முதல்ல உனக்குக் கோபம் வந்தாலும், அதை வெளிப்படுத்தாமல், நிதானமாகத் தீர விசாரிச்சியே? அதுக்கு சபாஷ்ன்னு, தான் சொல்லனும்! ஃபர்ஸ்ட் டைம், சைட்டில், எழுதுறவங்களாக இருந்தாலும், ஏற்கனவே, நிறைய கதைகள், எழுதி முடிச்சு இருந்தாலும், அவங்க எல்லாருக்குமே, வேற இடத்தில், எழுதுறோம்ன்றப் பதட்டம், எப்பவுமே இருக்கும். அதை ஒரு வெப்சைட் ஓனராக, நீ தான் அதையெல்லாம் பொறுப்பாகப் பார்த்து அவங்களை வழி நடத்தனும். இது உனக்கும் முதல் தடவையாக இருந்தாலும் கூட, இந்த இஷ்யூவை நீ தெளிவாகவே ஹேண்டில் செய்தன்னு தான், நான் சொல்லுவேன் டா!” என்று அவளுக்குத் தெளிவுபடுத்தினார் குணசுந்தரி.


இதேபோலவே, தனது தந்தை மற்றும் நண்பர்களிடமும், கேட்டுத் தெரிந்து, கொண்டாள் அகஸ்தியா.


நாளாக, நாளாகத், தன்னுடைய கதையைத், திறம்பட எழுதிக், கொண்டு இருந்தாள் தன்மயா. அதை முதலில், வெற்றிகரமாக எழுதி, முடிக்க வேண்டும் மற்றும் போட்டியில் பரிசை வென்று, தன் மேல், விழுந்தக் கரும்புள்ளியை, ஒன்றும் இல்லாமல், செய்ய வேண்டுமென, துடித்துக் கொண்டு இருந்தாள்.


அவர்கள் வீட்டில், யாராவது இருவர், சண்டை போட்டுக் கொண்டால், மற்றவர்கள் தலையிடாமல், அதன் காரணத்தை மட்டும் தெரிந்து கொண்டு, எப்படியாவது, அந்தச் சண்டை முடிந்து சமாதானம் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை வீட்டின் உறுப்பினர்களுக்கு இருப்பதால், அவர்களைத் தொல்லை செய்யாது, அமைதியாக ஒதுங்கி இருப்பர்.


அதைத் தான், சாதுரியன் மற்றும் தன்மயாவின் விஷயத்திலும் செய்கிறார்கள்.


ஆனால், தவறு செய்தவனை ஒதுக்காமல், பாதிக்கப்பட்டவளையும் கவனித்துக், கொண்டு இருக்கிறார்கள்.


தன்னுடைய பிழையை, நண்பர்களிடம் உரைத்து விட்டான் சாதுரியன்.


“ஐயையோ! இப்படி ஆகிடுச்சா? தனு பாவம் டா!” என்று கனிஷாவும், வராகனும் அவனிடம் வினவ,


“ஆமாம். ரொம்பவே மனசு உடைஞ்சுப் போயிட்டா!” என்று வருத்தப்பட்டான்.


“வேற எதுவும் செஞ்சு, சரி பண்றேன்னு, எந்தப் பிளானும் போடாத சாது!” என அவர்களும், அவனுக்குத் தடை, போட்டு விட, தங்கைத் தன்னிடம், பேசினாலே போதும், என்ற மனநிலைக்கு, வந்து விட்டிருந்தான் சாதுரியன்.


அதற்குப் பிறகான நாட்களில், வலைதளப் போட்டி, சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக விரைவில், போட்டியின் இறுதி நாட்களும் வரப் போகிறது. எனவே, அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்தும், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் தேவையறிந்து நடந்து கொண்டனர்.


இந்தப் போட்டி, முடியும் வரை, மூவரையும் எந்த விஷயத்திற்காகவும், கலக்கப்படுத்தக் கூடாது என்பதில், அவர்களுடைய பெற்றோர்கள், உறுதியாக இருந்தனர்.


வலைதளத்தின் பதிவில், சொல்லப்பட்டு இருந்த, போட்டியின் இறுதி, தேதியைக் குறித்து, வைத்துக் கொண்டவனோ, அந்த நாளில் தான், தன்மயாவின் நியாயமான உழைப்புக்கேற்ற பாராட்டுக் கிடைக்கப் போகிறது. அதை வைத்து தான், அவளிடம் சென்று, வாழ்த்து கூறி, மன்னிப்பு வேண்ட முடியும் எனக் காத்திருந்தான் சாதுரியன்.


இதற்கிடையில், தனது நேர்முகத் தேர்விற்காகத், தயார்படுத்திக் கொண்டே, இருந்தான் பதுமன்.


இவ்வாறாக, ஒவ்வொருவரும் தங்களுக்குப், பிடித்ததைப் பெற, அவர்களுடைய முழு, உழைப்பு மற்றும் சக்தியையும், முதலாகப் போட்டு, முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.


இந்த நிலையில், அகஸ்தியா மற்றும் அவளது இரண்டு நண்பர்களுக்கும், போட்டியின் முடிவை, அறிவிக்கும் நிகழ்வு, விமரிசையாக நடைபெற, வேண்டும் என்ற ஆசை தோன்றியது.


“முதல் முதல்லப், போட்டியை நடத்தி, முடிச்சு வின்னர்ஸைக், கௌரவப்படுத்தும் போது, அதை ஸ்பெஷலாக செய்யனும்னுத் தோனுது!” என்று அந்த மூன்று பேரும், திட்டம் போட்டனர்.


“நான் ஒரு ஐடியா சொல்லவா?” என்றான் ஹரித்.


ஜெய்சிகா,“சொல்லுடா” என ஆர்வத்துடன் கூறினாள்.


“அதாவது, இந்தப் போட்டியில், எல்லா ரைட்டர்ஸோட அட்ரஸ், எல்லாம் நம்மகிட்ட, இருக்குத் தானே?” என்று கேட்டவனிடம்,


“ஆமாம். அதுக்கு என்ன, இப்போ?” என்று வினவினாள் அகஸ்தியா.


“வின் பண்ற, ரைட்டர்ஸோட அட்ரஸில், இன்விடேஷன் கார்ட், ரெடி பண்ணி, அதை, அவங்க வீட்டுக்கு, அனுப்பி வைப்போம்” என்றான் ஹரித்.


“சரி! மேலே சொல்லு” என்று அவனை ஊக்கினாள் ஜெய்சிகா.


“அவங்களை நம்மளோட, பப்ளிகேஷனுக்கு, இன்வைட் செஞ்சு, அங்கே ஃபங்க்ஷன், மாதிரி நடத்தி, வின்னர்ஸ் எல்லாருக்கும், பிரைஸ் கொடுத்திடலாம்!” என்று தன் யோசனையை, அவர்களிடம் கூறி, முடித்தான் நண்பன்.


“ஹேய் ஹரி! இது செம்ம, ஐடியா தெரியுமா? எப்புட்றா இப்படியெல்லாம், யோசிச்சு சொல்ற?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள் ‌அவனது இரு தோழிகள்.


“ஹாஹா…! தாங்க்யூ ஃப்ரண்ட்ஸ்!” என்று அவர்களிடம் நன்றி தெரிவித்தான்.


“இதை எப்படி செய்றது?” என்று வினவினாள் ஜெய்சிகா.


அகஸ்தியா,“ஒரு சில, ரைட்டர்ஸ் வீட்டுக்குத், தெரியாமல் கதை எழுதலாம், இன்னும் கொஞ்சம் பேர், தங்களோட குடும்பத்தை, இதில், உட்படுத்தக் கூடாதுன்னு நினைச்சு இருப்பாங்க. இதையெல்லாம் தாண்டி, நாம நடத்தப் போற, ஃபங்க்ஷனில் எப்படி கலந்துக்குவாங்க?” என்று தன் ஐயத்தைக் கேட்டாள்.


“ஃபங்க்ஷனுக்கு வர்றதும், வராததும், அவங்க, அவங்களோட, தனிப்பட்ட விருப்பம். கலந்துக்கிற ரைட்டர்ஸூக்கு நேரில், பிரைஸ் கொடுப்போம். வர முடியாதவங்களுக்குக், கொரியரில் அனுப்பி, வச்சிடலாம் தியா” என்று அவளுக்கு விளக்கினான் ஹரித்.


“இது நமக்கு, ஓகேயாக இருக்கும் ப்பா!” என்று அவனை ஆமோதித்துப், பேசினாள் ஜெய்சிகா.


“சரி. அப்போ நம்ம ஆஃபீஸிலேயே, ஃபங்க்ஷனை நடத்திடலாமா?” என்றாள் அகஸ்தியா.


“அது தான், கரெக்ட் ஆக இருக்கும்” என்று மூவரும், ஒப்புக் கொண்டு,


தங்களது குடும்பங்களிடமும், இதைக் கூறி, அனுமதி வாங்க, யத்தனித்தனர் அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.


 • தொடரும்
கதையோட தலைப்புக்கான ஜஸ்டிஃபிகேஷனுக்கு ஒரு க்ளூ கொடுத்து இருக்கேன்.. அதைக் கண்டுபிடிச்சு, முதல்ல கமெண்ட் பண்ற ரீடருக்குக் கண்டிப்பாக ஒரு கிஃப்ட் இருக்கு டியர்ஸ்... ஆல் தி பெஸ்ட் 💐
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஒன்பதாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 10

தங்களது வலைதளத்தில் நடைபெறும் போட்டி முடிந்ததும் அதில் வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்குப் பரிசு வழங்குதலை ஒரு விழாவாக நடத்த நினைத்திருப்பதை உடனேயே தங்களது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு அவர்களுடைய அபிப்பிராயங்களையும் வினவினர் மூவரும்.

அகஸ்தியாவின் தாயும், தந்தையும்,”சூப்பர்டா! இந்த ஐடியா யாரோடது?” என்று அவளிடம் வினவினார்கள்.

“ஹரித் தான் இப்படியொரு யோசனை தந்தான்!” என்றாள் மகள்.

“அப்படியா? குட்! இதுக்கானப் பணத்தை எப்படி ரெடி பண்ணப் போறீங்க?” என்று கேட்டார் உலகேசன்.

“நான் ஆன்லைன் கிளாஸ் எடுத்ததுக்கு வந்தப் பணம் இருக்கு ப்பா. அதை என் ஷேர் ஆக கொடுத்துடுவேன்!” என்று அவரிடம் கூறி விட்டாள் அகஸ்தியா.

“அவ நம்மகிட்ட என்னைக்குக் காசு வேணும்ன்னு வந்து நின்னு இருக்கா!” எனப் பொய்யாக சலித்துக் கொண்டார் குணசுந்தரி.

“என்னால் முடியிற வரைக்கும் நானே பாத்துக்கிறேன் ம்மா. முடியலைன்னு ஒரு சுவிட்சுவேஷன் வந்தால் உங்ககிட்ட தான் வந்து நிப்பேன்!” என்று தன் அன்னைக்கு உறுதி அளித்தாள் மகள்.

“சரி தியா. அந்த ஃபங்க்ஷனுக்கு, எங்களையும் இன்வைட் செய்வீங்க தானே?” என்று கேட்டார் உலகேசன்.

“நீங்க எல்லாரும் தான், விழாவுக்குச் சீஃப் கெஸ்ட்ஸ்!” என்றுரைத்தாள் அகஸ்தியா.

அவளது பெற்றோர் மட்டுமின்றி, ஜெய்சிகாவின் தாய் சீதாதேவியும்,”அந்த ஃபங்க்ஷனை நடத்துறதுக்கு, நானும் ஏதாவது செய்யனும்ல?” என்று கேட்கவும்,

“அதெல்லாம் வேணாம் மா. நாங்களே முக்கால்வாசி ரெடி செய்துட்டோம். நீங்க வந்து என்ஜாய் பண்ணினால் போதும்” என அவருக்கு வலியுறுத்தி விட்டாள்.

ஹரித்தின் பெற்றோரும் கூட,”உன்னோட ஐடியாவா? ரொம்ப நல்லா இருக்குடா!” என்று அவனைப் பாராட்டினார்கள்.

“யெஸ்! அன்னைக்கு நீங்க கண்டிப்பாக லீவ் போட்டுட்டு வந்துடனும்!” என்று தியாகராஜ் மற்றும் ஜமுனாவிடம், தீர்க்கமாக கூறினான் அவர்களது மகன்.

“லீவ் போட, முடியாதுன்னு நினைக்கிறேன் டா. ஆனால், பர்மிஷன் கேட்டுட்டு, வர டிரை பண்றேன்!” என்று அவனிடம் தெரிவித்தார் தந்தை.

“ஓகே ப்பா” என்றவன்,”ம்மா! நீங்க லீவ் போட்டு வந்துட்டு ஃபங்க்ஷன் முடியிற வரைக்கும் அங்கே என்கூடவே இருக்கனும். சரியா?” என்று தன் தாயிடம் வினவினான் ஹரித்.

“ஷூயர் டா” எனத் தன் மகனுக்கு வாக்கு கொடுத்து விட்டார் ஜமுனா.

இப்படியாக, இம்மூவருடைய குடும்பத்தினரும், தங்களுடைய மகள்கள் மற்றும் மகனுக்கு, அவர்களால் ஆன, அனைத்து உதவிகளையும், செய்வதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையில், தன்னுடைய கதையை, முழுமூச்சாக எழுதிக், கொண்டு இருந்தாள் தன்மயா. போட்டியின் இறுதி தேதி, நெருங்கிக் கொண்டிருப்பதால், தனது ஒட்டுமொத்த உழைப்பையும், நேரத்தையும், ஆற்றலையும், கதை எழுதுவதிலேயே கழித்தாள்.

அவ்வப்போது, தன்னைச் சமாதானம் செய்ய, பின்னாலேயே திரியும், தன் இரண்டாவது அண்ணனை, ஏறிட்டும் பார்க்கவில்லை தன்மயா. அந்தளவிற்கு, அவன் மீது, வருத்தத்தில் இருந்தாள் சாதுரியனின் தங்கையானவள்.

ஒருநாள், தனது கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து விட்டு,”என்னடி! கண்ணைப் போட்டு, இப்படி தேய்ச்சிட்டு இருக்கிற?” என்று அவளிடம் பதற்றத்துடன் வினவினார் பவதாரிணி.

“கண்ணு ரொம்ப, எரியுது ம்மா!” என்று அது தந்த, எரிச்சலுடன் அன்னைக்குப் பதிலளித்தாள் தன்மயா.

நீள்சாய்வு இருக்கையில், அமர்ந்து கொண்டு, அவர்களது சம்பாஷணையைக் கவனித்துக், கொண்டு தான், இருந்தான் சாதுரியன்.

“ஹேய்! போதும் டி. முதல்லக் கண்ணில், இருந்து கையை எடு!” என்று மகளுக்கு உத்தரவிட்டார் தாய்.

“ம்ம்” என முணுமுணுத்தவாறே, தன் விலோசனங்களில் இருந்து, கரத்தை விலக்கிக் கொண்டாள் அவரது மகள்.

“நீ நைட், சரியாகத் தூங்குகிறியா? இல்லையா?” என்றார் பவதாரிணி.

“ம்மா! நான் நல்லா தான், தூங்குறேன்” என்றுரைத்தாள் தன்மயா.

“அப்பறம் ஏன் இப்படி உனக்குக் கண்ணு எரியுது?”

“கதை டைப் பண்றதால், இருக்கும் மா!”

“அதானே பார்த்தேன்! ஏன் இவ்ளோ, ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிற?” என்று மகளிடம் ஆதூரமாக விசாரித்தார் பவதாரிணி.

“இது போட்டிக் கதை, ம்மா. அவங்க கொடுத்திருக்கிற தேதியில், கதையை முடிச்சாகனுமே? அதுக்குத் தான், இப்படி எஃபெர்ட் போட்டு எழுதுறேன்!” என்றாள் தன்மயா.

“போட்டிக் கதையாக இருந்தாலும், இல்லைன்னாலும், எஃபெர்ட் போட்டு எழுதலாம், தான் டா. ஆனால், உன்னோட, உடம்பைப் பாத்துக்காமல், இப்படி எந்த, வேலையைச் செஞ்சாலும், அதோட பலன், உனக்குக் கிடைக்கும் போது, அதை அனுபவிக்கிறதுக்கு, உனக்குத் தெம்பு வேணும்ல?” என்று தன் மகளுக்கு அறிவுரை வழங்கினார் அவளது அன்னை.

அவர்களது உரையாடலுக்கு இடையே, நுழைந்த சாதுரியன்,“அப்படி சொல்லுங்க ம்மா! தனு, நீ ரெஸ்ட்டே எடுக்காமல், தொடர்ந்து கதை, எழுதிட்டு இருக்கன்னு, எனக்குத் தெரியும்! கொஞ்சம் இடைவெளி விட்டு, டைப் பண்ணுடா!” என்று அவனும் தங்கையின் நலன் கருதி இதை உரைக்க,

அதற்கு,”ஓஹ் அப்படியா அண்ணா? ஓகே அண்ட் தாங்க்யூ!” என்று கூறி, அவனை முறைத்துப் பார்த்தாள் தன்மயா.

“சாரி ம்மா” என்று முகம் சுருங்கிப் போய், அங்கிருந்து அகன்று விட்டான் சாதுரியன்.

அதைக் கண்டு வருத்தமுற்ற பவதாரிணியோ,”என்ன தனு, அவன்கிட்ட இப்படி நடந்துக்கிற? உன்னோட நல்லதுக்குத் தானே, அப்படி சொன்னான்?” என்றார்.

“ப்ச்! அம்மா! ப்ளீஸ்! இன்னும் கொஞ்ச நாளைக்கு, நான் நானாகவே, இருக்க மாட்டேன்! இந்தக் காம்படிஷன், முடியிற வரை, என்னை யாரும், டிஸ்டர்ப் பண்ணாதீங்க!” என்று அவரிடம் கடுமையான குரலில் வலியுறுத்தினாள் தன்மயா.

அந்த ஒருத்தியின் மனம், ஒரு நிலையில் இல்லாததால், அந்த வீட்டின் அமைதியும், குலைந்து போய்க், கொண்டிருந்ததைக் கண்டு, இனிமேலும், இதைத் தொடர, விடக் கூடாது, என்று எண்ணித், தன் தங்கையின், அறைக்குப் போன, அவளது தமையனோ,”தனு!” என்று அவளை அழைத்தான்.

அப்போதும் கூட, அவன் தன்னை கூப்பிட்டதைக், காதில் வாங்காமல், கையிலிருந்த செல்பேசியில் விடாமல், கதையைத் தட்டச்சு, செய்து கொண்டிருந்தாள் தன்மயா.

“என்னம்மா இப்படி, பித்துப் பிடிச்சுப், போன மாதிரி, செஞ்சிட்டு இருக்கிற?” என்று அவளிடம் அக்கறையுடன் கேட்டான் சாதுரியன்.

“என்னை வேற, என்னச் செய்ய, சொல்றீங்க அண்ணா?” என்று அவனிடம், தன் விழிகள், இரண்டும் கலங்க, வினவினாள் தங்கை.

அவளது ஆற்றாமையைப், புரிந்து கொண்டவனோ,”இந்தக் கதையை, எழுதி முடிக்கலைன்னா, வேற எங்கேயும், எந்தக் கதையையும், எழுத முடியாத மாதிரி, ஏன் இப்படி, கஷ்டப்பட்ற ம்மா?” என்று தங்கையின், ஒளியிழந்தக் கண்களையும், நலிவடைந்த உடலையும், பார்த்து வேதனையுடன் வினவினான் அவளது அண்ணன்.

“ஆமாம். கஷ்டம் தான் பட்றேன்! எனக்கு அப்படித், தான் இருக்கு, ண்ணா! ஆனால், நான் இதைச், செஞ்சு தான் ஆகனும்! ஏன் தெரியுமா?” என்றாள் தன்மயா.

“சொல்லு ம்மா?”

“நான் இந்தக், கதையை எழுதுறது மூலமாக, இதில், எனக்கு ஒரு, அனுபவம் கிடைக்கும். அதே மாதிரி, நீங்க செய்த, தப்பைச் சரி பண்ணனுமே?” என்று கண் கலங்கினாள் அவனுடைய தங்கை.

சாதுரியன்,“நான் என்னத், தப்புப் பண்ணேன்டா?” என்று அவளிடம் திடுக்கிடலுடன் கேட்டான்.

“அதான், நீங்க அவங்களுக்கு, ஹெல்ப் பண்றேன்னுக் கேட்டு, அது ஒரு பெரிய இஷ்யூ ஆச்சே! ஞாபகம் இருக்குல்ல அண்ணா? அதைச் சரி, செய்யப் போறேன்! அதுக்காக தான், இப்படி ஸ்ட்ரெஸ் ஆகிட்டுக், கதை எழுதுறேன் சாதுண்ணா!” என்று தன் தமையனிடம், தெள்ளத் தெளிவாக உரைத்தாள் தன்மயா.

அவற்றையெல்லாம் கேட்டவுடன், தனது குற்ற உணர்வு, மென்மேலும், சாதுரியனுக்கு அதிகமாகியது போலானது!

“என்னை மன்னிச்சிருடா தனு! என்னால் உனக்கு, இவ்ளோ கஷ்டமா?” என்று அவளிடம் கெஞ்சிக், கேட்டுக் கொண்டவனிடம், எதுவும் கூறாமல், இருந்த இடத்திலேயே, பேசாமல் அமர்ந்தவளிடம்,

“தனும்மா!” என்றவன், தங்கையைக் கண்ணீருடன், அணைத்துக் கொள்ள, தன்னுடன் பிறந்தவனுடைய விழிகளில் நீர் கசிவதைக், காணப் பொறுக்காமல், தானும் அவனைக் கட்டிக் கொண்டு,”சாது ண்ணா! நான் உங்களை, ரொம்ப அவமானப்படுத்திட்டேன்ல! வெரி சாரி!” என்று தமையனிடம் மன்னிப்பு வேண்டினாள் தன்மயா.

“இல்லை டா. நான் தான், தப்பு செஞ்சிட்டேன்!” என்று அவனும், இவளும், மாறி மாறி, ஒருவருக்கொருவர், மன்னிப்புக் கேட்டுக், கொண்டிருப்பதைக் கண்டு, பொறுக்க முடியாமல், அவர்களது பெற்றோரும், தமையனும், அறையினுள் நுழைந்தனர்.

“போதும் ப்பா. நீங்க இனிமேல், அழக் கூடாது!” என்று அவர்களைச் சமாதானம் செய்தார் யுதிர்ஷ்டன்.

“ப்பா! ம்மா! அண்ணா!” என்று அவரையும், தாய் பவதாரிணி மற்றும் பதுமனையும், அவ்விடத்தில் கண்டதும், ஆச்சரியத்துடன் கூறினார்கள் இருவரும். ‌

“நீ அம்மாகிட்ட, பேசியது எல்லாம், எனக்குத் தகவலாக வந்துருச்சு டா. அதே மாதிரி, பதுவும் வீட்டுக்கு வந்துட்டானா? சோ, மூனு பேருமாக சேர்ந்து, உன்னைச் சமாதானம், பண்ணலாம்ன்னு நினைச்சு, இங்கே வந்தால், நீங்க என்னடான்னா, ‘நாங்க சண்டை போட்டோமான்ற?’ மாதிரி, ஒருத்தருக்கொருத்தர் சாரி, கேட்டுட்டு இருக்கீங்களே!” என்று அவர்களது மனக்கசப்பு, ஒரு முடிவிற்கு, வந்த திருப்தியில், பேசினார் அவர்களுடைய தந்தை.

“ஹாஹா! ஆமாம் ப்பா‌. என்னோட தம்பியும், தங்கச்சியும், சமத்து ஆச்சே?” என்று இருவரையும் புகழ்ந்தான் அவர்களது அண்ணன் பதுமன்.

“யெஸ் ண்ணா” என்று அவனையும் தங்களுடன், சேர்த்தணைத்துக் கொண்டார்கள் சாதுரியன் மற்றும் தன்மயா.

அவர்களது ஒற்றுமையைப் பார்த்து, யுதிர்ஷ்டனும், பவதாரிணியும், பூரிப்பு அடைந்து நின்றனர்.

“தனு! நான் செஞ்சத், தப்பைத் திருத்த, எனக்கு ஒரு, வாய்ப்பு கொடு ம்மா! அந்த வெப்சைட் ஓனர்கிட்ட, சாரி கேட்டுட்டேன். இன்னும் வேற, ஏதாவது பண்ணனுமா?” என்று கேட்டவனோ, ‘ஜா’ வலைதளத்தின் உரிமையாளரான அகஸ்தியாவிடம், தான் மன்னிப்புக், கேட்ட உரையாடலை, அவளிடம் ஒப்புவித்தான் சாதுரியன்.

“அதெல்லாம் எதுவும், வேண்டாம் ண்ணா! இதை இத்தோட விட்ருவோம். நான் இந்தக் கதையை முடிச்சாலே போதும். வெற்றியோ, தோல்வியோ, கடைசி வரைக்கும், கதையை எழுதி முடிக்கனும்ன்ற, ஒரு முடிவில் இருக்கேன்!” என்று அவனிடம் உறுதியாக உரைத்தாள் தன்மயா.

அவளே அப்படி, கூறிய பிற்பாடு, அவள் கதையை, எழுதி முடிப்பதற்குத், தான் உறுதுணையாக, இருப்பது மட்டுமே, அவனது இப்போதைய, கடமை ஆகும்!

உடலை வருத்திக் கொண்டு, மனதிற்கு அழுத்தத்தைக் கொடுக்காமல், கதை எழுதுமாறு, தன்மயாவிற்கு அறிவுறுத்தினர். அதன் பின், அனைவரும் ஒன்றாக, அமர்ந்து உணவுண்டு முடித்தனர்.

போட்டியின் இறுதி தேதி, நெருங்கப் போகும் தருணத்தில், வலைதளத்தில் ஏற்பட்ட, நெருக்கடியைச் சரி செய்ய, எஸ்.என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸிடம் தான், உதவி கேட்க வேண்டிய, நிலை ஆயிற்று.

அது மட்டுமின்றி, வலைதளப் பிரச்சனை, இரவு நேரத்தில், ஏற்பட்டு இருந்ததால், இந்தச் சமயம், சாதுரியனிடம் எவ்வாறு உதவி கேட்பது? அதற்கு, அவனது மறுமொழி, என்னவாக இருக்கும் என்று ஸ்தம்பித்துப் போய் விட்டாள் அகஸ்தியா.

- தொடரும்


இந்தக் கதையோட தலைப்புக்கான ஒரு ஜஸ்டிஃபிகேஷனை நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க! ஆனால் இன்னும் இருக்கு‌. அதுக்கான அடுத்த க்ளூவை, கதையோட கடைசி யூடிக்கு, முந்தைய யூடியில் தரேன் டியர்ஸ் 😍 இந்தளவுக்கு ஈடுபாட்டோட படிச்சுக் கமெண்ட் செய்ற உங்க எல்லாருக்கும் தாங்க்யூ சோ மச் டியர்ஸ் 💖🤗
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த பத்தாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 11

ஏன் இந்த, நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விடுமா என்ன? இப்போது, நண்பன் ஹரித்திடம், தகவல் தெரிவித்து விட்டு, மறுநாள் காலையில், அவனையே, அந்த நிறுவனத்தைத், தொடர்பு கொண்டு, வேலையைப் பார்க்கச் சொல்லலாமே? என்று கூட அவளுக்குத் தோன்றலாம். அது தவறில்லை!

ஆனால், எழுத்துப் போட்டி முடிய, இன்னும் மூன்று நாட்களே, மீதம் உள்ளதால், இப்போது, விவேகத்தை விட, வேகமாகச் செயல்படுவதே, உசிதம் என்பது, அவளுக்குப் புரிந்து போனது.

எனவே, தன் செல்பேசியில், புலனத்தில் சாதுரியனுக்கு,’ஹாய் சார். இந்த லேட் நைட் - யில், இப்படி யாருக்குமே, மெசேஜ் அனுப்புறது, தப்பு தான்! ஆனால், எனக்கு வேற, வழி தெரியலை. எனக்கு அர்ஜென்ட் ஆக, உங்ககிட்ட இருந்து, ஒரு ஹெல்ப், வேணும் சார்!’ என்று சங்கடத்துடன் ஒரு குறுஞ்செய்தி, அனுப்பி விட்டுக், காத்திருந்தாள் அகஸ்தியா.

அவள் உதவி கேட்ட நேரம், பத்து மணியாகும். எனவே தான், அத்தனை சங்கடம் அடைந்தாள்.

ஆனால், தனது அலுவலக அறையில், வேறொரு வலைதளத்தின், வேலையைச் செய்து, கொண்டிருந்தவனோ, அவளிடமிருந்து வந்த, செய்தியை வாசித்துப், பார்த்து விட்டு,‘ஹாய், மிஸ். அகஸ்தியா. நான் உங்களுக்கு, என்ன ஹெல்ப் செய்யனும்?’ என்று அவளிடம் கேட்டான் சாதுரியன்.

‘அவர் முழிச்சு தான், இருக்கார் போலவே!’ என்று ஆசுவாசமடைந்தவள், அவனிடமிருந்து தனக்குத், தேவையான உதவியைத், தட்டச்சு செய்து, அவனுக்கு அனுப்பினாள் அகஸ்தியா.

‘இன்னும் கொஞ்ச நேரத்தில், செஞ்சு முடிச்சிட்டு, உங்களுக்கு மெசேஜ் செய்றேன் ங்க. டோன்ட் வொர்ரி!’ என்றவன், அவளது வலைதளத்திற்குள் நுழைந்து, அதிலிருந்தப் பிரச்சனையைச், சரி செய்யத், தொடங்கி விட்டான்.

அவனிடம் வேலையைக், கொடுத்து விட்டுத், தான் மட்டும், நிம்மதியாக உறங்குவது, அநியாயமானச் செயலாகும்.

ஆகவே, அந்தப் பிரச்சினை, சரியாகும் வரை, தானும் தூங்காமல், காத்துக் கொண்டிருந்தாள் அகஸ்தியா.

அவள் கேட்டதைச், செய்து முடிக்கச், சாதுரியனுக்கு, ஒரு மணி நேரம் தேவைப்பட்டது.

தொடர்ந்து கணினியில், வேலை பார்ப்பவனுக்கும், கண்கள் தகதகவென, எரியும் தானே?

ஆனாலும், தான் கொடுத்த வாக்கிற்காக, அலுவலக நேரம், முடிந்து விட்டிருந்தாலும் கூட, அவள் கேட்டுக் கொண்டதற்காக, அந்த வேலையைச், செய்து முடித்தவனோ,’ஹலோ மேம்‌. இப்போ வெப்சைட்டைச் செக் பண்ணிப் பாருங்க’ என்றான் சாதுரியன்.

உடனே, வலைதளத்தைப் பரிசோதித்துப், பார்த்து விட்டுப் பெருமூச்செறிந்தவள்,’எல்லாம் ஓகே, ஆயிருச்சு சார். தாங்க்ஸ் அ லாட்!” என்று அவனுக்கு நன்றி, கூறி அனுப்பி வைத்தாள்.

‘இட்ஸ் ஓகே மேம்’ என்று அவன் செய்தி அனுப்பவும்,

’உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு, மறுபடியும் ஒரு சாரி, சார்!’ என்று இரண்டாம் முறையாக, மனமுவந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டாள் அகஸ்தியா.

‘பரவாயில்லை மேம், நான் போய்த் தூங்கனும். சோ, குட் நைட்’ என்று அவளிடம் தெரிவித்து விட்டான் சாதுரியன்.

அவனது தங்கையின் பிரச்சனையில், அவனிடம், தான் விட்டேற்றியாகப், பேசிய போதிலும் கூட, இப்போது, தனக்கு, அவசரமாக உதவி, தேவைப்பட்ட நேரத்தில், மறுப்பு தெரிவிக்காமல், அதைச் செய்து கொடுத்திருக்கிறான் என, அவன் மேல், அகஸ்தியாவிற்கு, நல்ல அபிப்பிராயம் உருவானது.

அதை அறிந்திராதவனோ, அலுவலக அறையிலிருந்து, தன்னுடைய சயன அறைக்குள் சென்று, அதீத களைப்பின் விளைவாக, கட்டிலில் கவிழ்ந்து, படுத்து விட்டான் சாதுரியன்.

வலைதள பிரச்சினைக்குத், தீர்வு கிடைத்து விட்டதால், சஞ்சலமற்ற துயிலில் ஆழ்ந்தாள் அகஸ்தியா.

அதிகாலை எழும்பியதும், முதல் வேளையாகத், தன் நண்பர்களுக்கு அழைத்து, இதைப் பகிர்ந்து கொண்டாள்.

“அப்படியா தியா? எனக்குக் கால் செஞ்சிருக்கலாம்ல? நானே கேட்ருப்பேனே!” என்று அவளிடம் கூறினான் ஹரித்.

“ஏற்கனவே, ஒன்பது மணிக்கு, மேலே ஆயிடுச்சு. இதில், உனக்கு ஃபோன், பண்ணி சொல்லி, நீ அவங்க, கிட்டக் கேட்கனும்னா, கண்டிப்பாக அதிக, நேரம் எடுத்திருக்கும்” என்றாள் அகஸ்தியா.

“அப்போ காலையில், ஆஃபீஸூக்கு வந்தவுடனேயே, இவனைப் பேச வச்சிருக்கலாமே?” என்று கேட்டாள் ஜெய்சிகா.

“போட்டி முடிய, நிறைய நாள் இருக்குன்னு, நீங்க ரெண்டு பேரும், நினைச்சிட்டு இருக்கீங்களா? மூனு நாள், தான் இருக்கு! எல்லா ரைட்டர்ஸூம், இப்போ கதையோட, ஃபைனல் எபிஸோட்ஸை, எழுதிப், போஸ்ட் செய்யனும்ன்றப், பதட்டத்திலேயே இருப்பாங்க. இந்த நேரத்தில், சைட்டில் வொர்க் நடக்குது, லேட் ஆகும்ன்னு, போய்சன் சொன்னோம்ன்னு வைங்க! அவங்க ஸ்ட்ரெஸ், ஆகத் தான், ஃபீல் பண்ணுவாங்க! அதனால், என்னால் முடிஞ்சளவு, இதைச் சீக்கிரம், சரி பண்ணனும்னு, அவரைக் கான்டாக்ட் செஞ்சு, வேலையை முடிக்க வச்சேன்!” என அவர்களிடம், தெளிவாக விளக்கினாள்.

அப்போது தான்,‌ தாங்கள் நடத்தவிருக்கும் விழாவிற்கு, உணவிற்காகப், புக் செய்யாமல் இருப்பது, அவர்களுக்கு நினைவு வந்தது.

போட்டியில் வெற்றி, பெறும் எழுத்தாளர்களுக்கு, உணவும் வழங்கப்படும் என்பதையும், அறிவிக்க முடிவெடுத்தனர்.

அப்படியிருக்க, சைவம் மற்றும் அசைவ, உணவுகளுடன் சேர்த்து, பனிக்கூழ்கள், இனிப்பு வகைகளையும், அவர்களுக்குப் பரிமாறப்பட வேண்டுமே! அதனால், ஒருவரையொருவர் திடுக்கிட்டுப், பார்த்துக் கொண்டார்கள் மூவரும்.

“இப்போ என்னப் பண்றது?” என்று கேட்டுக் கொண்டவர்களுக்குக்,”கனி ஃபுட்ஸ் அண்ட் டெசர்ட்ஸ்” - ஐப், பற்றிய ஞாபகம் உதித்தது.

உடனே அதன், தொடர்பு எண்ணிற்கு, அழைக்கவும், அதை ஏற்றுப், பேசிய கடை உரிமையாளரிடம், எல்லா தகவல்களையும், கூறி விட்டுக், காத்திருந்தான் ஹரித்.

“எத்தனைப் பேருக்குச், சாப்பாடு வேணும் சார்? ஒரு எண்ணிக்கையைத், தோராயமாக சொல்லுங்க? அப்போ தான், எங்களால் முடியுமான்னுப் பார்ப்போம்?” என்றவரிடம்,

ஏற்கனவே, இதைப் பற்றித் தோழிகளிடம், கலந்துரையாடி இருந்ததால், உடனே விடையளித்தவனிடம்,”உங்க ஆர்டரை, நாங்க எடுத்துக்கிறோம்” என்று கூறினார் கேசவன்.

“தாங்க்ஸ் சார்”

“உங்க லிஸ்ட்டை, மட்டும் சீக்கிரம், அனுப்பி வைங்க” என்றவாறு அழைப்பை வைத்தார் கடை உரிமையாளர்.

”சாப்பாட்டுப் பிராப்ளம் ஓவர்!” என்று நண்பர்களிடம் கூறி, ஆசுவாசம் அடைந்தான் ஹரித்.

அதன்பின், தளத்தில் வாசித்துக், கருத்துப் பதிவிடும் வாசகர்களுக்காகவும், பரிசுகளை வழங்கிட, முடிவெடுத்தனர் மூவரும்.

அதற்குரிய ஏற்பாடுகளைச், செய்து முடித்ததில், அவர்களைச் சோர்வு வாட்டி எடுத்தது.

எனவே, போட்டி முடிவுறும் தினத்தை, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு, ஒருமுறை ஞாபகப்படுத்தி விட்டு, பரிசு விவரங்களையும், அவற்றை வழங்கப், போகும் முறைகளையும், தட்டச்சு செய்து, வலைதளம் மற்றும் முகநூலில், பதிவாகப் போட்டு விட்டு, முடிவு தினத்தன்று, வருவதாக கூறி, வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்துக், கொண்டார்கள் அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.

*************************************

“அந்தக் காம்படிஷனில் ஜெயிச்சா, நேரில் கூப்பிட்டுப் பிரைஸ் தருவாங்களாம்” என்று தன் வீட்டாரிடம், உரைத்தாள் தன்மயா.

“பார்றா! நீ வின் பண்ணிட்டால், அங்கே போய், பிரைஸ் வாங்குவ தானே?” என்று அவளிடம் ஆர்வமாக வினவினார் பவதாரிணி.

“ஆமாம் மா. ஆனால் வின் பண்ணுவேனான்னு தெரியலை” என்று கூறியவளின் கண்களில், ஒருவேளை, தான் பரிசு பெற்றால், நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் தெரிந்தது.

“அதெல்லாம் வின்னர் ஆகிடுவ” என்றார் அவளது தாய்.

ஏனெனில், அவள் எழுதும், கதையைப் பற்றி, தங்களுக்கு எதுவும், தெரியவில்லை என்றாலும், எழுத ஆரம்பித்த, முதல் நாளிலிருந்து, இப்போது, இறுதி நாளில், பதிவிடப் போகும், கடைசி அத்தியாயம் வரை, அவள் செய்த, மெனக்கெடல்கள் அபரிமிதமாக இருந்தது. எனவே தான், அவளது குடும்பம், தன்மயாவின் கடின, உழைப்பிற்கு ஏற்ற, ஊதியம் நிச்சயம், கிடைக்கப்பட வேண்டுமென்று எண்ணி, அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனாலும், தன்னுடைய, கதை, மட்டும் தான், வெற்றி பெற வேண்டுமென்று, எப்போதுமே நினைக்காமல், போட்டியில் எழுதும், அனைத்து எழுத்தாளர்களும், வெற்றி வாய்ப்பிற்குத் தகுதியானவர்கள், எனும் போது, யார் வென்றாலும், அதை ஏற்றுக், கொள்ள வேண்டும் என உறுதி பூண்டாள் தன்மயா.

இரண்டு நாட்கள், கடந்திருந்த போது, போட்டி முடியும் தேதியன்று, ‘ஜா’ வலைதளமும், புலனக் குழுவும், குறுஞ்செய்திகளால் நிரம்பி வழிந்தது.

‘எல்லாருமே கதையோட, ஃபைனல் யூடி, போட்டாச்சா ஃப்ரண்ட்ஸ்?’ என்று கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்தாள் அகஸ்தியா.

‘யெஸ் சிஸ்’ என்று அனைவரும் அனுப்பி விட,

கதையைப் படிச்சு, ரிவ்யூ கொடுக்க, ‘ரீடர்ஸூக்கு, ஒரு மாசம், டைம் கொடுப்போம். அதுவரை, உங்க கதையைத் தவிர்த்து, மற்ற கதைகளைப், படிச்சுப் பாருங்க. ரிலாக்ஸ் பண்ணுங்க. ரிசல்ட் அன்னைக்கு, மறுபடியும் பேசுவோம்’ என்று அனைத்து போட்டி எழுத்தாளர்களுக்கும், அறிவுறுத்தினாள் அகஸ்தியா.

கதைகளை வாசிக்க, வாசகர்களுக்கான ஒரு மாத காலம், ஆரம்பித்து விட்டதாகத், தளத்திலும், முகநூலிலும், பதிவு போட்டு வைத்தனர்.

அந்த ஒரு மாதம், முடிந்தவுடன், ஒரு நன்னாளைத் தேர்ந்தெடுத்து, அன்று, பரிசு வழங்கும், விழாவை நடத்தத் தயாராகினர்.

*****************************

“நேரத்துக்குப் போய், இன்டர்வியூவை அட்டெண்ட் பண்ணுடா!” என்று பதுமனிடம் கூறினார் யுதிர்ஷ்டன்.

“சரிப்பா” எனத் தனது பை மற்றும் செல்பேசியை எடுத்துக் கொண்டவனுக்கு,“அண்ணா! ஆல் தி பெஸ்ட்!” என்று வாழ்த்து தெரிவித்தார்கள் சாதுரியன் மற்றும் தன்மயா.

“தாங்க்ஸ் டா” என்று இருவரிடமும் உரைத்து விட்டு, தனக்கு ஆசி வழங்குமாறு, தன் பெற்றவர்களின், பாதங்களில் பணிந்தவனை, “இன்டர்வியூவை நல்லபடியாக, முடிச்சிட்டு வா, ப்பா” என இருவரும், அவனை ஆசீர்வதித்தார்கள்.

அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுத், தன் நேர்காணலை எதிர் கொள்ளச், சென்றான் பதுமன்.

அலுவலகத்தில் வேலையில், மூழ்கி இருந்த சாதுரியனிடம்,”டேய் சாது! எங்க ஹோட்டலில், சாப்பாடு ஆர்டர் கொடுத்திருக்கிறது, யார் தெரியுமா?” என்று அவனிடம் வினவினாள் கனிஷா.

“யாரு?” - சாதுரியன்.

“ஜா - பப்ளிகேஷன்ஸ் தான்!” என்று மேற்கொண்டு விவரத்தைச் சொன்னாள்.

வராகன்,”ஓஹ்! பார்றா! பிரைஸ் டிஸ்ட்ரிபியூஷனுக்காகத் தானே?”

கனிஷா,“அப்படித் தான் இருக்கும்”

“உங்க அப்பா, கூட சேர்ந்து, நீயும் அங்கே, போவ தானே?” என்றான் சாதுரியன்.

“ஆமாம் டா. நீங்களும் வாங்களேன்!”

“அதெப்படி எங்களை, உள்ளே விடுவாங்க?” என்று அவளிடம் வினவினான் வராகன்.

“சாப்பாட்டுக் கேரியரை, எடுத்து வைக்கப், பரிமாறுறதுக்கு வரலாமே!” என்று யோசனை தந்தாள் கனிஷா.

“தனு, வின் பண்ணினால், நான் ஃபங்கஷனை, அட்டெண்ட் செய்ய, வாய்ப்பு இருக்கு” என்று தெரிவித்தான் சாதுரியன்.

“அப்போ மூனு பேருமே போகலாம்” என்று உற்சாகமாக கூறினான் வராகன்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பதினொன்றாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 12

“ஷ்யூர்!” என்று சாதுரியன், வராகன் மற்றும் கனிஷாவும், “ஜா” வலைதளம் மற்றும் பதிப்பகம் நடத்தப் போகும், விழாவிற்குச் செல்வதை, உறுதி செய்து கொண்டனர்.

“இந்தப் போட்டி மூலமாக, நீங்களும் நிறைய விஷயங்களைப், பொறுப்பாக எடுத்துச், செய்றீங்க போலயே?” என்று
மகளிடமும், தங்கள் வீட்டிற்கு, வந்திருந்த அவளின், நண்பர்களிடமும் வினவினார் அகஸ்தியாவின் அன்னை குணசுந்தரி.

ஹரித்,“ஆமாம் மா. எதிலேயும் தப்பு நடந்திடக் கூடாதுல்ல!”

“யெஸ்!” - என்றவரிடம்,”பசிக்குது ம்மா” என அவர்கள் கூறவும்,

அவர்களுக்கான உணவை, எடுத்து வைத்தார் குணசுந்தரி.

“இப்போ தான், எந்த வேலையும், செய்யாமல் ஃப்ரீயா இருக்கீங்க” என்றார் உலகேசன்.

“இனிமேல் தான், முக்கியமான வேலையே, ஆரம்பிக்கப் போகுது ப்பா. இதை விட, நாங்க இரண்டு மடங்காக, வேலைப் பார்க்கனும்!” என்று அவரிடம் கூறினாள் ஜெய்சிகா.

“ம்ஹ்ம்… ஹெல்த்தைப் பாத்துக்கோங்க” என அம்மூன்று பேருக்கும் அறிவுறுத்தினார் அகஸ்தியாவின் தந்தை.

“ஷூயர் ப்பா” என அவர்களும் உறுதி அளித்தனர்.

இப்படியாகத் தங்களது, நேரத்தைப் போக்கிக், கொண்டிருந்தவர்களோ, இந்தப் போட்டியின், வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க, அவர்களால் நடுவர்களை நியமிக்க இயலவில்லை.

எனவே, ஓட்டுப் போட்டு, வெற்றியாளர்களை முடிவு, செய்யப் போவது, வாசகர்கள் தான்! என்பதற்கு அடையாளமாக, போட்டிக் கதைகளின், பெயர்களைப் பதிந்துக், கூகுள் ஃபார்ம்களை உருவாக்கி,’வணக்கம் வாசகத் தோழமைகளே! இந்தப் போட்டியின், நடுவர்கள் நீங்கள் தான்! உங்களது பொன்னான வாக்குகளைப் பதிவு செய்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க உதவுங்கள்!’ என்ற அறிவிப்புடன் அதை தங்களது தளம் மற்றும் முகநூலில் பதிவு செய்து விட்டாள் அகஸ்தியா.

அவர்களது கோரிக்கையை, ஏற்றுக், கொண்ட வாசகர்களும், உடனே வாக்குகளைப், பதிவிடத் தொடங்கி விட்டனர்.

அந்த இடைவெளியில், தாங்கள் நடத்தப், போகும் விழாவிற்கான, வரவேற்பு பத்திரிக்கை, மாதிரியை உருவாக்கியவர்களோ, அதேபோல, மூன்றைச் செய்து, வெற்றி பெறும், எழுத்தாளர்களின் பெயர்களையும், அவர்களுக்குரிய பரிசுகளையும், அச்சடித்து, அவர்களின் விலாசத்திற்கு, அனுப்பி வைப்பதற்காக காத்திருந்தனர்.

********************

அந்த இரவு நேரத்தில், அவ்வீட்டின் ஒரு, அறை மட்டும், விளக்கொளியில் பளிச்சென்று, ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அங்கே இருக்கையில், அமர்ந்து இருந்தவனோ, தன்னுடைய கணினியில், எதையோ மும்முரமாகச், செய்து கொண்டு இருந்தான்.

இந்நேரம், அவன் யாரென, நாம் அனைவரும், கண்டுபிடித்து விட்டோம் தானே?

ஆமாம்! சாதுரியன் தான், அந்த நடுநிசி வேளையில், தனது அலுவலக அறையில், விளக்கைப் போட்டு, ஏதோ ஒரு வேலையைப், பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

தன் முன்னால் இருந்தக், கணினியின் சுட்டியைப், பார்த்துப், பார்த்துப், பதமாகச் சுழற்றியவன், அவ்வப்போது, அதன் திரையையும், கவனமாகப் பார்வையிட்டுக், கொண்டும் இருந்தான்.

“இந்த எழுத்தோட வடிவத்தை, இன்னும் கொஞ்சம், நல்லா கொண்டு வரலாமே?” என்று மெதுவாக முனங்கியவனோ, தான் எண்ணியதைச், செய்து முடித்தவுடன், திரையைப் பார்த்து,”ஹாங்! இப்போ, டபுள் ஓகே!” எனத், திருப்தி அடைந்து, கொண்டான் சாதுரியன்.

அந்தப் போட்டியில், தன் தங்கை, வென்றாலும், அவளுக்குப் பரிசு, கிடைக்கவில்லை என்றாலும், தன்மயாவிற்குக் கொடுக்க, வேண்டுமென முடிவெடுத்து, இப்போதிருந்தே, ஒரு பரிசை, உருவாக்கிக் கொண்டு இருக்கிறான் அவளது இந்தப், பாசமான அண்ணன்.

வித்தியாசமான எழுத்துருக்களைக் கொண்டு,

‘வாழ்த்துகள் தன்மயா ! நாங்கள் எப்பொழுதும், உன்னையும், உன்னுடைய கடின உழைப்பையும் எண்ணிப் பெருமை அடைகிறோம்!’


’Congrats Thanmaya ! We are always Proud of You and Your Hardwork’

எனத் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று மிகவும் அழகான காலிகிராஃபியாக, இரண்டு விதமாகத், தனக்குத் தெரிந்தவாறு உருமாற்றியவன், அதை, ஒரு அட்டையில், பதிவாகி இருக்குமாறு, கணிணிச் சுட்டியின், உதவியைக் கொண்டு, செய்து முடித்து விட்டு, அதைத் தன், பிரிண்டரில் இருந்து, பதிவிறக்கிப் பார்த்தவனோ, ஆனந்தத்தில் இதழ் விரித்துப், புன்னகைத்துக் கொண்டு,“நாம நினைச்சா, மாதிரியே அழகாக, ரெடி ஆகிடுச்சு!” என்று தன்னைத் தானே, பாராட்டிக் கொண்டான்.

இதுவே, தனது தங்கைக்குக், கொடுப்பதற்குச் சரியானப் பரிசு என்று நினைத்தவனோ, மறுநாளே, இதைப் புகைப்படச், சட்டங்கள் செய்யும், கடைக்குச் சென்று, சட்டமிட்டுக், கொண்டு வர, முடிவெடுத்தப் பிறகு, அதை யாருக்கும், தெரியாமல் ஓரிடத்தில், ஒளித்து வைத்து, விட்டுப் படுக்கையில், வீழ்ந்தான் சாதுரியன்.

அடுத்த நாள் காலையில், தன் கணவர் யுதிர்ஷ்டனை, வேலைக்கு அனுப்பி, வைத்து விட்டு, வந்தப் பவதாரிணியோ,

“இன்டர்வியூவைத் தான், சூப்பராக அட்டெண்ட், செய்து முடிச்சிட்டியே டா? அப்பறம் ஏன், நர்வஸாக இருக்கிற?” என்று மகனிடம் கேட்டார்.

பதுமன்,“அதோட ரிசல்ட், எனக்குப் பாஸிட்டிவ், ஆக வருமான்னு, பயமா இருக்கு ம்மா!” என்றான்.

“எனக்கும் தான் ம்மா!” என்று தன்மயாவும் கூற,

“உங்க ரெண்டு பேருக்கும், ஒன்னு சொல்லவா? ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’” எனக் கூறினார் அவர்களது அன்னை.

“ஆமாம். உனக்கும், அண்ணாவுக்கும், நான் எப்பவும், துணையாக இருப்பேன்!” என்று அவர்களைக், கட்டிக் கொண்டான் சாதுரியன்.

பதுமனும், தன்மயாவும், தங்களது முடிவுகளை, எதிர்நோக்கிக் காத்துக், கொண்டிருந்தார்கள் என்றால், போட்டிக் கதைகளுக்கான, வாக்குகள் பதிவாகி முடிந்து, யாருக்கும் எந்தவித, அதிருப்தியும் நேராமல், வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்ற எண்ணத்துடன், அகஸ்தியா மற்றும் அவளது நண்பர்களும், பரபரப்புடன் காணப்பட்டனர்.

அவர்கள் எண்ணியதைப் போலவே, தங்களது வலைதளம், பிரபலமானதாக இல்லையென்ற, போதிலும் கூட, அதில் கதையை வாசித்த, அநேக வாசகர்கள், அவர்களுடைய வாக்குகளைப், பதிவிட்டு இருக்க, அதைக் கண்டு, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப், போனார்கள் மூவரும்.

“அடுத்த தடவை, இன்னும் பெரிய, பட்ஜெட்டில் போட்டியைச், சூப்பராக நடத்தனும் ஃப்ரண்ட்ஸ்!” எனத், தன் ஆசையை, நண்பர்களிடம் பகிர்ந்தாள் அகஸ்தியா.

ஜெய்சிகா,“யெஸ்! அடுத்த தடவை, நாம எல்லா எழுத்தாளர்களையும், நம்மப் பப்ளிகேஷனுக்கு, வரச் சொல்லிக், கூப்பிட்டு அவங்களுக்கு, ஸ்நாக்ஸ் அண்ட் டீ, சேர்வ் செஞ்சு, அவங்களை ஹேப்பியா, வீட்டுக்கு அனுப்பி வைப்போம்” என்ற யோசனையைக் கூறினாள்.

“இதுவும் செம்மயா இருக்கே! நோட் செஞ்சுக்குவோம்” என்றான் ஹரித்.

அதன் பிறகு, போட்டிக் கதைகளுக்கு, வந்த ஓட்டுக்களை, எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

“வாவ்! இவ்ளோ வோட்ஸ்!” என்று, கணிணியின் திரையைப், பார்வையிட்டவாறே கூறினாள் ஜெய்சிகா.

“நமக்கு ரீடர்ஸ், ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க!” என்றபடி, மொத்த வாக்குகளையும், எண்ணி முடித்திருந்தனர்.

“எந்தக் கதைக்கு, அதிக வோட்ஸ் வந்திருக்கு?” என்று பார்த்தவர்களுக்கு, அந்தக் கதையின், எண்ணும், தலைப்பும், காணக் கிடைத்தது.

ஜெய்சிகா,“ஃபர்ஸ்ட் பிரைஸை, வாங்கப் போறது, மிஸஸ். கீர்த்தனா, ஃப்ரம் கோயம்புத்தூர்! குறிச்சுக்கோ!” என்று அகஸ்தியாவிடம் கூறியவளோ, இரண்டாவது பரிசு, பெறும் கதையின், தலைப்பைப் பார்த்து விட்டு,”செகண்ட் பிரைஸ், யார் தெரியுமா தியா?” என்றாள்.

“நீ தானே, பாத்துட்டு இருக்கிற? உனக்குத் தானே தெரியும்!”

“ஓஹ்!” என்ற தோழியோ, அந்தக் கதையின், எண் மற்றும் தலைப்பை, இவளிடம் உரைத்தாள்.

“ரைட்டரோட பேர். தன்மயா! ரைட்?” என்று புன்னகையுடன் கேட்டாள் அகஸ்தியா.

“கரெக்ட்!” என்றுரைத்துச் சிரித்தாள் ஜெய்சிகா.

“ரொம்பவே ஹார்ட், வொர்க் செஞ்சுக், கதையை எழுதி, முடிச்சவங்க லிஸ்ட்டில், இவங்களும் ஒரு ரைட்டர்!” என்று கூறி, தன்மயாவின் பெயரைக், குறித்துக் கொண்டு, மூன்றாவது வெற்றியாளரின், விவரங்களையும் எழுதி வைத்தாள் அகஸ்தியா.

ஹரித்,“இந்த வோட்டிங், புள்ளி விவரத்தை எல்லாம், சேவ் செஞ்சு வச்சிடலாம். ரிசல்ட்டை வெளியிடும் போது, அதோட சேர்த்து, இதையும் போஸ்ட் பண்ணனும்”


இதையெல்லாம், தன்னுடைய பெற்றோரின், செவிகளுக்குக் கொண்டு சென்றாள் அகஸ்தியா.

குணசுந்தரி,“என்னோட வேலை, நேரம் போக, நான் உங்களோட, வெப்சைட்டில் தான், கதை வாசிச்சிட்டு இருந்தேன். எல்லா கதையோட கருவும், அதை எழுதுன விதமும், நல்லா இருந்துச்சு! உன்னோட கதை எதுன்னு, என்னால் சத்தியமாக, கண்டுபிடிக்க முடியலை!” என்று மகளைப் பாராட்டினார்.

உலகேசன்,”கடைசித் தேதிக்குள்ளே, உன் கதையை, எழுதி முடிச்சியா? இல்லையா ம்மா?” என்றார்.

“நான் எப்போவோ, எழுதி முடிச்சுட்டேன் ப்பா! ஆனால், அதை வோட்டிங், லிஸ்ட்டில் சேர்க்கலை” என்று பதிலளித்தாள் அகஸ்தியா.

“அப்போ, எந்தக் கதைன்னு, ஈசியா கண்டுபிடிச்சிடலாம்!” என்று கூறிய குணசுந்தரியோ,”நீங்களும் எல்லா, கதையையும் படிச்சிட்டீங்க போலயே?” எனத், தன் கணவரிடம் வினவினார்.

“ஆமாம் மா. தியா எப்படி, அவ எழுதுற கதையை, நம்மகிட்ட சொல்லலையோ, அதே மாதிரி, நானும் அவ சைட்டில், கதைப் படிக்கிறதை, அவகிட்ட சொல்லலை!” என்று பெருமிதத்துடன் உரைத்தார் உலகேசன்.

“ஹேய் சூப்பர்! நானும் தான் ங்க!” என, இருவரும் ஹைஃபை, கொடுத்துக் கொண்டார்கள்.

அவர்களைப் பார்த்து முறைத்தவளோ,”நீங்க ரெண்டு பேரும், நல்லா வருவீங்க!” என்று அவர்களிடம் செல்லமாக, கோபித்துக் கொண்டாள் அகஸ்தியா.

“ஹாஹா… தாங்க்யூ டா” என்று கூறிச், சிரித்துக் கொண்டார்கள் அவளது பெற்றோர்.


- தொடரும்

Calligraphy - வனப்பெழுத்து, நேர்த்தி தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன்

"வனப்பு - அழகு"

நமக்குப் பிடிச்ச மாதிரியான எழுத்துக்களை அழகாக நாமே வரையிறது தான் இதுக்குப் பொருள்..

பேனா யூஸ் செஞ்சும் வரையலாம், கம்ப்யூட்டரில் ஆப் (App) யூஸ் செஞ்சும் வரையலாம்...

இந்தக் கதையில் சாதுரியன் செஞ்சிருக்கிறது டிஜிட்டல் காலிகிராஃபி. கம்ப்யூட்டரில் உருவாக்கி இருக்கான்.

இந்த ரெண்டுக்குமே சேர்த்து எடுத்துக்காட்டாக சில ஃபோட்டோஸ் போட்ருக்கேன் டியர்
ஸ்!
 

Attachments

 • images (3)_1705779078811.jpeg
  images (3)_1705779078811.jpeg
  52.1 KB · Views: 3
 • images (35).jpeg
  images (35).jpeg
  31.8 KB · Views: 3
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பன்னிரெண்டாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 13

தாங்கள் நினைத்திருந்ததைப் போலவே, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு, பெறப் போகும், எழுத்தாளர்களின் பெயர்கள் கொண்ட, மூன்று வாழ்த்து அட்டைகளைத், தயார் செய்து, வைத்துக் கொண்டு, போட்டியில் கலந்து கொண்ட, அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு, மூன்று வெற்றியாளர்களையும், அவர்களுக்குக் கொடுக்கப் போகும், பரிசு விவரங்களையும், தங்களது முகநூல் பக்கம் மற்றும் புலனக் குழுவிலும் பதிவிட்டனர் மூன்று நண்பர்களும்.


அந்தப் பதிவை, ஆவலுடன் வாசித்துப், பார்த்தாள் தன்மயா.

“அனைவருக்கும் இனிய வணக்கம்! எங்களுடைய “ஜா” வலைதளம் மற்றும் பதிப்பகம் நடத்திய எழுத்துப் போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர் தோழமைகள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 💖🙏


எங்கள் தளத்தில் நடத்தும் முதல் போட்டியாக இருந்த போதிலும் கூட, உங்களது பொன்னான நேரத்தைச் செலவிட்டு போட்டியின் முதல் நாளிலிருந்து, இன்று வரை, எங்களையும், எழுத்தாளர்களையும், ஊக்குவித்துக், அனைத்து கதைகளுக்கும், பின்னூட்டங்களை வழங்கிப், போட்டியின் வெற்றியாளர்களையும் தேர்ந்தெடுக்க, உதவி புரிந்த, அனைத்து வாசகத் தோழமைகளும், எங்களது இதயங், கனிந்த நன்றிகளை, ஏற்றுக் கொள்ளுங்கள் 💖🙏

இப்போது இந்தப், போட்டியின் முடிவுகளைத், தெரிந்து கொள்ளலாம்!

முதல் பரிசைப் பெறுபவர் - எழுத்தாளர், மிசஸ். கீர்த்தனா - வாழ்த்துகள் சிஸ் ❤️

இரண்டாம் பரிசைப் பெறுபவர் - எழுத்தாளர், மிஸ். தன்மயா - வாழ்த்துகள் சிஸ் ❤️

மூன்றாம் பரிசைப் பெறுபவர் - மிசஸ். சந்திரிகா - வாழ்த்துகள் சிஸ் ❤️

வாசகர்களுக்கானப் பரிசுகளைப் பெறுபவர்கள் :

மிஸ். தேன்மொழி - வாழ்த்துக்கள் சிஸ் 💖

மிஸ். சுகன்யா - வாழ்த்துகள் சிஸ் 💖

மிசஸ். பவித்ரா - வாழ்த்துகள் சிஸ் 💖

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, எழுத்தாளர்கள் உங்களுடைய புனைப்பெயர், கதை தலைப்பு மற்றும் விலாசத்தையும், வெற்றி வாகைச் சூடிய, வாசகர்களாகிய நீங்கள், உங்களது பெயர் மற்றும் முகவரியையும், எங்களது புலன எண்ணிற்குத், தனிப்பட்ட முறையில், அனுப்பி வைக்குமாறு, கேட்டுக் கொள்கிறோம்.


வெற்றி, தோல்வியைத் தாண்டி, கதைகளை முழுமையாக, எழுதி முடித்துப், போட்டியைச் சிறப்பித்த, அனைத்து எழுத்தாளர்களுக்குமே எங்களது நன்றிகள் 🤩🙏

இன்னும் அடுத்தடுத்து, நாங்கள் நடத்தவிருக்கும் போட்டிகளிலும், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, அனைவரையும் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறோம்! நன்றி 🙏

என்று முழுமையாகப் படித்து முடித்தவளுக்கோ, தனது கண்களையே, நம்ப முடியவில்லை!

ஏதோ ஒரு ஆர்வத்துடன், போட்டியில் கலந்து கொண்டு, எழுதத் தொடங்கியவளுக்கு, இந்த இரண்டாம் பரிசு என்பது பெருமகிழ்ச்சியையும், உவகையையும், வாரி வழங்கியது.

அந்த ஆனந்தத்துடன்,”அப்பா, அம்மா, பது, சாது அண்ணா!” என்று தனது குடும்பத்தாரைக், குரல் கொடுத்து, அழைத்தாள் தன்மயா.

“என்னாச்சு தனு?” என்று அங்கு வந்தவர்கள், அவளிடம் பதட்டத்துடன் வினவினர்.

“பதறாதீங்க! இதை வாசிச்சுப் பாருங்க!” எனத், தன் கைப்பேசியை, அவர்களிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிப், படித்துப் பார்த்த நால்வருக்கும், முகத்தில் சந்தோஷக் களை, அளவில்லாமல் தென்பட்டது.

“தனும்மா! சூப்பர் டா! செகண்ட் பிரைஸ் வாங்கிட்டியே!” என்று மகளின் நெற்றியில், இதழ் பதித்து, தன் மகிழ்ச்சியை, வெளிப்படுத்தினார் அவளுடைய தாய் பவதாரிணி.

தானும் முன் வந்து, மகளுக்கு வாழ்த்தும், ஆசீர்வாதமும், வழங்கினார் அவளது தந்தை யுதிர்ஷ்டன்.

“கங்கிராட்ஸ் டா!” என்று குதூகலித்தவாறே, அவளுக்குத் தங்களது, வாழ்த்துகளைத் தெரிவித்தனர் பதுமன் மற்றும் சாதுரியன்.

“தாங்க்ஸ் ண்ணா” என்று களிப்புடன் அவர்களிடம் கூறினாள் தன்மயா.

“ஏதாவது ஸ்வீட் செய்யலாமா?” என்று அனைவரிடமும் வினவினார் பவதாரிணி.

“ஆமாம் மா. நாம ரெண்டு பேரும் சேர்ந்து, இவங்களுக்குச் செஞ்சுத் தரலாம்!” என்று அன்னையிடம் உற்சாகத்துடன், உரைத்தாள் அவரது இளைய மகள்.

“சரி வா!” என்று அவளை அழைத்துக், கொண்டு போனார் பவதாரிணி.

“கடைசியில், அப்பா சொன்னா மாதிரி, அவளோட கடின உழைப்புக்கு, ஏத்தப் பலன், கிடைச்சிருச்சுல்ல ண்ணா!” என்று தமையனிடம் கூறினான் சாதுரியன்.

“ஆமா டா. காலேஜில் பாடத்தையும், சொல்லிக், கொடுத்துட்டு வந்துட்டு, இந்தக் கதையையும், எழுதி முடிச்சிருக்கா! அவளுக்கு இந்தப் பிரைஸைக், கண்டிப்பாக கிடைச்சாகனும்!” என்று தம்பியின் பேச்சை, ஆமோதித்தான் அவனது அண்ணன் பதுமன்.

“ஆமாம் ண்ணா” என்று அதை ஒப்புக் கொண்டான் தம்பி.

“சரி, சரி. ஸ்வீட் வந்ததும், அதை டேஸ்ட் பார்க்க, ரெடியாக இருங்க” என்று மகன்களிடம் கூறி, அவர்களை அமைதிப்படுத்தினார் யுதிர்ஷ்டன்.

முக்கால் மணி, நேரம் கழித்து, ஆரஞ்சு நிறத்தில், முந்திரி, உலர் திராட்சைகளைப் போட்டுக், கேசரியைக் கிளறி, எடுத்து வந்தார்கள் அன்னையும், மகளும்.

அவர்களுக்குப் பரிமாறும், வேலையைத் தராமல், அதைத் தாங்கள், மூவரும் செய்தனர்.

நால்வரும் தங்களது, கிண்ணத்தில் இருந்த, இனிப்பைக் கரண்டியில், எடுத்துச் சுவைத்து விட்டு,”செம்ம டேஸ்ட்!” என்று பவதாரிணி மற்றும் தன்மயாவையும், பாராட்டிக் கூறினார்கள்.

அதைச் சுவைப், பார்த்து முடித்ததும்,”அந்தப் பப்ளிகேஷனுக்கு, உன்னோட டீடெயில்ஸை, அனுப்பிட்டியா தனு?” என்று தங்கையிடம் கேட்டான் சாதுரியன்.

“இல்லை ண்ணா.இனிமேல் தான் அனுப்பனும்” என்று பதில் சொன்னாள் தன்மயா.

தன்னுடைய தோழி, கனிஷாவின் தந்தையுடைய, உணவகத்தில் தான், அகஸ்தியாவும், அவளது நண்பர்களும், நடத்தப் போகும், விழாவிற்கான உணவிற்குச் சொல்லி இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியுமே? இப்போது, தங்கையிடமும், அகஸ்தியாவிடமும், அதைக் கூறலாமா? வேண்டாமா? என்று குழப்பமடைந்தவன், தன்மயாவிடம் இதைச் சொன்னால், பதிப்பக உரிமையாளர்கள், விழா நடத்தி, தங்களுக்கு நேரில், பரிசு வழங்கப் போவது, அவளுக்கு மட்டும் முன்னரே தெரிந்து விடும்! எனவே, அது நியாயமான செயல் அல்ல!

அதேபோல், இந்த விஷயத்தை, அகஸ்தியாவிடம் கூறினாலும், தங்கையிடம் பகிர்ந்து, கொள்ளவில்லை என்பதை, அவள் நம்புவதற்கு, வாய்ப்பே இல்லை. எனவே, அவளுக்கும், தன்மயாவிற்கும், இவற்றையெல்லாம் தெரியப்படுத்தாமல், இப்படி எதிர்பாராமல், தனக்கும், தன் தங்கைக்கும் மற்றும் அகஸ்தியாவிற்கும், இடையே நிகழும், இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம், தாங்கள் ஒருவரையொருவர், நேரில் சந்திக்கும் போது, முடிவுக்கு வரட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான் சாதுரியன்.

தான், மேடையில் நின்று, தனக்கானப் பரிசையும், அங்கீகாரத்தையும் பெற்றப், புகைப்படத்தை ஆதாரமாக, வைத்துக் கொண்டு, பிறகு அவற்றையெல்லாம் பொறுமையாக, அனைவரிடமும் பகிர்ந்து, கொள்ளுமாறு, தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம், கேட்டுக் கொண்டாள் தன்மயா.

*************************

“ஹரி, நாம ரெடி, பண்ணி வச்சிருக்கிற இன்விடேஷன்ஷை, ஒரு தடவை, சரி பார்த்துக்கோ!” என்று தோழனிடம் தெரிவித்தாள் அகஸ்தியா.

“ம்ம். ஓகே” என்று மூன்று வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைக்கப் போகும் பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தவன்,”நம்மப் பப்ளிகேஷனோட டீடெயில்ஸ், அவங்களோட நேம்ஸ், டைட்டில்ஸ் அண்ட் அட்ரஸ்ன்னு, எல்லாமே கரெக்ட் ஆக, பிரிண்ட் ஆகியிருக்கு!” என்று அவளிடம் திருப்தியுடன், உரைத்தான் ஹரித்.

“அப்போ, அவங்களோட அட்ரஸூக்கு, இந்த இன்விடேஷன்ஸை அனுப்பி வச்சிடலாமா?” என்று வினவினாள் ஜெய்சிகா.

“ம்ம். நீயே பண்ணிடு” என்றாள் அகஸ்தியா.

“நானே அனுப்பி வைக்கிறேன்” என்று கூறி விட்டான் ஹரித்.

“அவங்களோட கதைகளை, எப்போ புக், போட்டுத் தரப் போறோம்ன்னு, நாம அந்தப், போஸ்ட்டில் சொல்லவே இல்லையே?” என்றாள் ஜெய்சிகா.

“எல்லாத்தையுமே, அந்த ஃபங்க்ஷனில் வச்சு, ரைட்டர்ஸ் கிட்டே சொல்லலாம்னு தோனுச்சு. அதான், ரிசல்ட் போஸ்ட்டில், எதையுமே ரிவீல் செய்யலை” என்று தோழியிடம் உரைத்தாள் அகஸ்தியா.

“சரி. எப்போ புக்ஸைப், பப்ளிஷ் செய்யலாம்?” என்று கேட்டான் ஹரித்.

“அவங்களோட கதையைப், ப்ரூஃப் ரீடிங் பார்க்கவே லேட் ஆகும். சோ, நமக்கு மூனு மாசம், டைம் வேணும்”

“ஓகே. கவர் ஃபோட்டோவை, யார்கிட்ட கொடுத்து, ரெடி பண்ணலாம்?” என்று நண்பர்களிடம் கேட்டாள் ஜெய்சிகா.

“ஏற்கனவே நமக்கு செஞ்சுக், கொடுக்கிறவங்க கிட்டேயே பார்த்துப்போம். புதுசாக ஆள் பிடிக்க, லேட் ஆகிடும்” என்று அவர்களுக்கு விளக்கிக், கூறினாள் அகஸ்தியா.

“ஏன் புது, ஆட்களைத் தேடனும்? அந்த எஸ்‌.என். கம்பெனி கிட்டே, கேட்டுப் பார்ப்போமா?” என்று வினவினாள்.

ஹரித்,“அவங்க, வெப்சைட் டிசைன் அண்ட் டெவலப் பண்றவங்கடா! கவர் ஃபோட்டோ எல்லாம், செஞ்சுத் தர, வாய்ப்பே இல்லை! ஜெய்” என்றான்.

ஜெய்சிகா,“ஓஹோ! எதுக்கும் கேட்டுப், பார்க்கலாம் டா. ஏன்னா, அவங்ககிட்டயே எல்லாத்தையும் செஞ்சு வாக்கிக்கலாமே?”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்! அப்பறம் அட்வான்டேஜ், எடுத்துக்காட்டா மாதிரி ஆயிடும்” என, அவர்களது பேச்சுக்கு, முற்றுப்புள்ளி வைத்து, விட்டாள் அகஸ்தியா.

அதற்கடுத்த நாளிலேயே, தாங்கள் தயாரித்தப் பத்திரிக்கைகளை, வெற்றியாளர்களின் முகவரிக்குத், தபாலில் அனுப்பி, விட்டான் ஹரித்.


- தொடரும்

டிஸ்கிளைமர் : இதில் வரும் அனைத்தும் கற்பனையே.

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கதையின் அத்தியாயங்கள் பதியப்படும் டியர்ஸ் 💖🤗
 
Last edited:

39 NNK II

Moderator
இந்தப் பதிமூன்றாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 14

சில நாட்கள் கழித்து, ஒரு மாலை வேளையில், தங்கள் வீட்டிற்கு, வந்த தபாலை வாங்கி, அதன் விலாசத்தைப் பார்த்துக், குஷியாகிப் போனவர், கல்லூரியில் இருந்து வரும், தன் மகளின், வருகையை எதிர்பார்த்துக், கொண்டிருந்தப் பவதாரிணியை, நீண்ட நேரம், காக்க வைக்காமல்,


“ம்மா!” என்று புன்னகையுடன் வீட்டினுள்ளே நுழைந்தாள் தன்மயா.

“சீக்கிரம் போய், ஃப்ரெஷ் ஆகிட்டு, வாடா!” என்று வந்த வேகத்திலேயே, அவளை அறைக்கு, அனுப்பி விட்டு, அவளுக்காக இஞ்சி, கலந்த தேநீரைத், தயாரித்து வைக்க,

அதன் வாசனை, முன் போலவே, இப்போதும், தனது நாசியைத் துளைத்தெடுக்க, அதைப் பறிக்க யத்தனித்த மகனின் கரத்தில் ஓர் அடி போட்டார் பவதாரிணி.

“அம்மா!” என அலறினான் சாதுரியன்.

“டேய்! உனக்கு இதே, வேலையாகப் போச்சு!” என்று அவனைக் கடிந்தவரிடம்,”இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? தனுவுக்கு நீங்க, டீ போட்டுத் தர்றீங்க?”

“ம்ம்… அவளுக்கு ஒரு போஸ்ட் வந்திருக்குடா! அதைப் பிரிச்சுப் பார்க்காமல், மேலே எழுதியிருந்த, அட்ரஸை மட்டும் படிச்சேன்!” என்று கூறிக் கண்டித்தார் பவதாரிணி.

“ஓஹ்! அந்தப் பப்ளிகேஷனில் இருந்து, தானே வந்திருக்கு ம்மா?” என்று கேட்டுக் குதூகலம் அடைந்தான் அவரது மகன்.

“யெஸ்!” என்று தானும் புன்னகைத்தார் அன்னை.

“அப்போ அவளுக்குச், சர்ப்ரைஸ் பண்ணலாம் மா!” என்று கூறிச், சிரித்தான் சாதுரியன்.

அப்போது, தனது அறையிலிருந்து, வெளிப்பட்டாள் தன்மயா.

“உனக்காக டீ போட்ருக்கேன். குடி ம்மா” எனக் கோப்பையை, மகளிடம் திணித்தார் பவதாரிணி.

“ஹைய்யா! தாங்க்ஸ் ம்மா” என்று
அவளருகே நின்று கொண்டு, தன்னைக் குறுகுறுப்புடன், பார்த்த சாதுரியனைச், சந்தேகத்துடன் ஆராய்ந்தவாறே, அதை வாங்கிப், பருகத் தொடங்கினாள்.

“நான் ஒன்னும், உன் கப்பைப், பிடிங்கிக் குடிச்சிட மாட்டேன்!” என்று அவளிடம், ரோஷத்துடன் உரைத்தான் தமையன்.

“நான் உங்களை, நம்ப மாட்டேன், அண்ணா!” என்றபடி, தனக்காகத் தாய்ப், போட்டுக் கொடுத்த, தேநீரைச் சொட்டுச், சொட்டாக ரசித்துக், குடித்து முடித்தாள் தன்மயா.

அந்தக் கோப்பையைச், சமையலறையில் கொண்டு போய், வைத்து விட்டு வந்தவளிடம்,”உனக்கு ஒரு, இன்விடேஷன் வந்துருக்கு, தனு” என்று அவளிடம், மெல்ல விஷயத்தை, ஆரம்பித்தார் பவதாரிணி.

“யார்கிட்ட இருந்து ம்மா? என்னோட ஃப்ரண்ட், யாராவது அவங்க மேரேஜூக்கு, இன்விடேஷன் அனுப்பி வச்சிருக்காங்களா?” என்று இயல்பாக கேட்டாள் அவரது இளைய மகள்.

“இல்லையே! வேற ஒரு இன்விடேஷன்” என்று பொடி வைத்துப் பேசினார் தாய்.

“ம்மா! என்னது - ன்னு சீக்கிரம் காமிங்க ப்ளீஸ்!” என்று அவரிடம் கெஞ்சத் தொடங்கி விட்டாள் தன்மயா.

“ஹலோ சிஸ்டர்! அது எங்கிட்டே இருக்கு!” என்று தன் கையிலிருந்தப் பத்திரிக்கையை அவளிடம் காண்பித்தான் சாதுரியன்.

“வித்தியாசமான மாடலாக இருக்கே! என்ன ஃபங்கஷன்னுப் பார்க்கனும். அதைத் தரச் சொல்லுங்க ம்மா!” என்று அன்னையிடம் முரண்டு பிடித்தாள்.

“அவங்க தான் வாங்கி வச்சாங்க! நான் அபேஸ் பண்ணிட்டேன்!” என்று காலரைத் தூக்கிச் சொன்னான் அவளது அண்ணன்.

“போடா! அது எனக்கு வேண்டாம்” என்று அவனிடம் கூறியவள் அமைதியாக அமர்ந்து விட்டாள் தன்மயா.

“ஹாஹா!” எனச் சிரித்துக் கொண்டே அந்தப் பத்திரிக்கையைத் தங்கையிடம் சேர்ப்பித்தவன்,“ஓபன் பண்ணிப் பாருடா!” எனக் கனிவுடன் உரைத்தான் சாதுரியன்.

அதைப் பிரித்துப் படித்தவளுக்கு, இதயத்தில் மெல்லிய குளிர் பரவி அவளை ஆட்கொண்டு அமைதிப்படுத்தியது. அதன் கூடவே, அவளது விழிகளும் கசிந்து, மனதும் உருகிப் போய் விட, தன்னிடமிருந்தப் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டு இருந்த செய்தியை மீண்டும், மீண்டும் வாசித்து, மகிழ்ச்சி அடைந்தவளை, அணைத்து ஆசுவாசப்படுத்தினான் அவளுடைய தமையன்.

அதில் இருந்தச் செய்தி இது தான்,

உங்களுக்கு வணக்கம் !


"ஜா வலைதளம் மற்றும் பதிப்பகம்" நடத்திய எழுத்துப் போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசு பெற்றமைக்காக செல்வி. யு.தன்மயா, ஆகிய உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். அந்தப் பரிசை நீங்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ள விரும்பினால் இந்த அழைப்பிதழின் கீழ் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்கு, நாங்கள் பதிவிட்டிருக்கும் நாள் மற்றும் நேரத்திற்கு வந்தடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடம் : ஜா வலைதளம் மற்றும் பதிப்பகம்.


நாள் :

அந்த சந்தோஷத்துடனேயே இருந்தவளோ, தனது தந்தை மற்றும் மூத்த அண்ணனான பதுமனும் வந்து விட, அவர்களிடமும் அந்தப் பத்திரிக்கையைக் காட்டியவள்,“எனக்கே, எனக்குன்னு, இந்த இன்விடேஷனை அனுப்பி இருக்காங்க, பாருங்களேன்!” என ஆர்ப்பாட்டம் செய்தாள் தன்மயா.

அவர்களும் அவளுக்கு, வாழ்த்தைக் கூறி விட்டு,”இந்தப் பப்ளிகேஷனோட, லொகேஷன் நமக்குப், பக்கம் தான் போல!” என்றார் யுதிர்ஷ்டன்.

“ஆமாம் ப்பா. இந்த ஏரியாவை, எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவரிடம் சொன்னான் பதுமன்.

“எப்படியும் யாராவது ஒரு ஃபேமிலி மெம்பர் வரலாம்னு சொல்லுவாங்க! அப்படின்னா, என்னை யார் அங்கே கூட்டிட்டுப் போகப் போறீங்க?” என்று அனைவரையும் பார்த்து வினவினாள் தன்மயா.

“நான் உன் கூட வர்றேனே ம்மா!” என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கேட்டான் சாதுரியன்.

அதைக் கேட்டதும், இதற்குச் சம்மதமா? என்று மற்றவர்களைப் பார்த்தாள் அவனுடைய தங்கை.

அவன் ஏன் இவ்வாறு கேட்கிறான் என்பது பவதாரிணிக்குப் புரிந்து விட்டது போலும்!

எனவே,”அவனே உன்னை அங்கே அழைச்சிட்டுப் போகட்டும் தனு” எனத் தன் இரண்டாவது மகனுக்காகப் பரிந்து பேசினார் மூவருடைய அன்னை.

தன்மயாவிற்காகத், தான் செய்து, வைத்திருந்த வாழ்த்து அட்டையைச், சட்டமிட்டு வாங்கி வைத்து விட்டிருந்தவனோ, அந்தப் பரிசு வழங்கும் விழா நடந்து முடிந்தவுடன், வீட்டிற்கு வந்ததும், அதை தங்கையிடம் கொடுத்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தான் சாதுரியன்.

*******************************

“என்ன, மூனு பேரும் ஒனனா சேர்ந்து வந்திருக்கீங்க?” என்றார் சீதாதேவி.

“எங்களோட வெப்சைட்டில் நடந்தப் போட்டிக்கு வந்த ரிசல்ட்டை வெளியிட்றதுக்கு ஃபங்க்ஷன் நடத்துறோம்ல ம்மா? அதுக்கு உங்களை இன்வைட் செய்ய வந்தோம்” என்றார்கள் ஹரித் மற்றும் அகஸ்தியா.

அவர்களுடன் சேர்ந்து, அவரது மகளான ஜெய்சிகாவும் அமர்ந்து இருந்தாள்.

சீதாதேவி, “ஓகோ!” எனப் புன்னகைத்தார்.

“நீங்களும் ஒரு, சீஃப் கெஸ்ட், ம்மா. இந்தாங்க” என்று அவருக்கு ஒரு பத்திரிக்கையைத் தந்தனர் மூவரும்.

“ஓஹ்…” என்றவர், அதைத் திறந்து பார்த்து விட்டு,

“சிறப்பு விருந்தினராக, அங்கே வந்து, நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கனுமா?” என்று வினவியபடி, அவர்களுக்காக குடிக்கப் பானம் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தார் ஜெய்சிகாவின் தாய்.

“ஆமாம் மா. லன்ச்சும் சாப்பிடனும்!” என்று அவருக்கு வலியுறுத்தினாள் மகள்.

“கண்டிப்பாக! மூனு பேரும் வந்து கூப்பிட்டதே சந்தோஷமாக இருக்கு” என்று அவர்களுக்கு உறுதி அளித்தார் சீதாதேவி.

அதன்பின், அவர்கள் ஹரித்தின் இல்லத்திற்குச் சென்றனர்.

அங்கேயும், இந்தக் கோரிக்கையை விடுக்க,”பலே! பலே! இவ்வளவு பொறுப்பாக இருக்கீங்களே!” என்று அவர்களைப் பாராட்டினார்கள் தியாகரஜ் மற்றும் ஜமுனா.

“தாங்க்ஸ் ப்பா”

“ஏற்கனவே நீங்க டியூட்டிக்கு லீவ் போட முடியாதுன்னு சொன்னீங்க ப்பா! இப்போ கொஞ்சம் டிரை செஞ்சுப் பாக்கலாமே?” என்று அவரிடம் ஏக்கத்துடன் வினவினான் ஹரித்.

“கேட்டுப் பாக்கிறேன் டா! சரியா?” என்று கூறவும் தான், அவனது முகம் மலர்ந்தது.

“அம்மா நீங்களும் தான், பர்மிஷன் எல்லாம் வேணாம். அன்னைக்கு ஃபுல்லா நீங்க எங்க கூட இருக்கனும்!” என்று அன்னையிடம் கறாராக உரைத்தான் அவரது மகன்.

ஜமுனா,“சரிடா”

முதலில், தன் இரண்டு நண்பர்களின் வீட்டிற்குச் சென்று விட்டு, பிறகு தன்னுடைய இல்லத்திற்குப் போகலாம் என்று அகஸ்தியா தான், அவர்களிடம் கூறியிருந்தாள்.

ஆகவே, இப்போது அவளுடைய வீட்டில் தான் இருக்கிறார்கள் மூவரும்.

அவர்களை வரவேற்று, காஃபி பருகுமாறு, கேட்ட குணசுந்தரியிடம்,”இப்போ தான் ம்மா, எங்க ரெண்டு பேர் வீட்டிலும் ஜூஸ், காஃபின்னுக் குடிச்சிட்டு வந்திருக்கோம்” என்றாள் ஜெய்சிகா.

“சரிம்மா. வேற ஏதாவது சாப்பிடக் கொண்டு வர்றேன்” என்று சாக்லேட்டுகளை எடுத்து வந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்தார் அகஸ்தியாவின் தந்தை உலகேசன்.

அதை வாங்கிச் சுவைத்தவாறு, அவர்களை விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் மூவரும்.

“ம்ஹ்ம்… இன்னுமின்னும், உங்களோட வெப்சைட் அண்ட் பப்ளிகேஷன் வளர்ச்சி அடைய எங்களோட விஷ்ஷஷ்!” என்று அவர்களிடம் கூறி வழியனுப்பி வைத்தனர் அகஸ்தியாவின் பெற்றோர்.

அவர்கள் நடத்தப் போகும் பரிசு வழங்கும் விழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அதைச் சிறப்பாக நடத்த வேண்டி தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஓய்வை நாடினர் அகஸ்தியா ஜெய்சிகா, மற்றும் ஹரித்.

- தொடரும்

தன்மயாவுக்கு அனுப்பியிருக்கிற இன்விடேஷன் இது தான் டியர்ஸ் 👇


20240124_104848_0000.png
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பதினான்காம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 15

எழுத்துப் போட்டியில் தான் வெற்றி பெற்று பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகத் தான் வேலை செய்யும் கல்லூரியில் முன்னதாகவே விடுப்பு எடுத்துக் கொண்டாள் தன்மயா.

அவளது வெற்றியைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான் சாதுரியன்.

“ஹேய்! சூப்பர் டா. கங்கிராட்ஸ்! தனுவுக்குக் சொன்னேன்னு சொல்லிடு!” என்றான் வராகன்.

கனிஷா,”நான் அப்பறமாக அவளுக்குக் கால் செய்து பண்ணிப் பேசிடறேன். அதான், ஃபங்க்ஷன் அன்னைக்கு நேர்ல மீட் பண்ணுவோமே? அப்போ விஷ் செய்திடலாம்” என்று அவர்களிடம் சந்தோஷத்துடன் கூறினாள்.

“ஆமாம். தனுவை, நான் தான், அந்த ஃபங்க்ஷனுக்குக் கூட்டிட்டு வரப் போறேன்” என்று வீட்டில் நடந்ததைச் சொன்னான் சாதுரியன்.

வராகன்,“ஓஹோ! அப்போ நீ அந்த வெப்சைட் ஓனரைப் பார்த்துப் பேசத் தான் ஃபங்க்ஷனுக்கு வர்றியா?” என்று அவனிடம் ஐயத்துடன் வினவினான்.

சாதுரியன்,“அதுவும் ஒரு காரணம் தான்! ஆனால், தனு பிரைஸ் வாங்குறதைப் பார்க்கிறதுக்குத் தான் மோஸ்ட்லி வரேன்” என்று பதிலளித்தான்.

“ஓகேடா”

**********************************

“நீங்க அந்த ஹாலுக்கு வர வேண்டாம். நானே எல்லாத்தையும் சூப்பர்வைஸ் செய்றேன். ஃபங்க்ஷன் நடத்துற அன்னைக்கு வாங்க” என்று தனது தோழிகளிடம் அறிவுறுத்தி விட்டு,

தாங்கள் நடத்தவிருக்கும் விழாவிற்காகத் தேர்ந்தெடுத்து இருந்த நீண்ட போது அறைக்குப் போய், அதில் செய்திருந்த ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய அங்கு சென்றவன்,

அதன் சொந்தக்காரர்களே, அனைத்தையும் தயார் செய்து கொடுத்திருக்க, மேடையில் எங்கெங்கு என்னென்ன இடம்பெற வேண்டும் என்றும், சாப்பாட்டுக் கூடத்தில், எப்படியான சீரமைப்புகள் இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்குச் சொல்லி அதை முடித்துக் கொடுக்குமாறு கூறி விட்டு வந்தான் ஹரித்.

“எல்லார் வீட்டிலேயும், யாராவது ஒரு ஃபேமிலி மெம்பர் வருவாங்க தானே தியா?” என்றாள் ஜெய்சிகா.

“ஆமாம். ஒருத்தர் மட்டும் அலவ்ட்ன்னு சொல்லி இருக்கோம். நம்மப் பட்ஜெட்டுக்கு, அளவாகத் தான், எல்லாத்தையும் அரேன்ட்ஜ் பண்ணி இருக்கோம்!” என்று அவளுக்கு விடையளித்தாள் அகஸ்தியா.

“சரி. அவங்க எவ்ளோ பேர் வர்றாங்கன்னு குரூப்பில் மெசேஜ் போட்டுக் கேட்போம்” என்றான் ஹரித்.

“ஓகே நான் கேட்கிறேன்” என்று தானும் அதைச் செய்து முடித்து விட்டு, நண்பர்களிடம் தெரிவித்தாள் ஜெய்சிகா.

எப்பொழுதும், செல்பேசிகள் அழைப்புகள் மற்றும் புலனத்தின் குழுவில் வாய்ஸ் மெசேஜ்களில் மட்டுமே வலைதளத்தின் உரிமையாளர்களிடம் சம்பாஷித்துக் கொண்டு இருந்தவளோ, தனக்குக் கிடைத்த வாய்ப்பின் மூலமாக அவர்களை நேரில் சந்திக்கப் போவதை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தாள் தன்மயா.

போட்டி நடைபெற்ற சமயங்களில் எல்லாம் தனக்கு உறுதுணையாக இருந்த அந்த வலைதள உரிமையாளரான அகஸ்தியாவைப் பார்க்கப் போகிறோம் என்பதில், அவளுக்கு ஆனந்தமாக இருந்தது.

தான், தமையன் மற்றும் அகஸ்தியாவிற்கும், நிகழ்ந்த சங்கடம், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான அபாயம் தோன்ற அதைப் புத்திசாலித்தனமாக கையாண்டவளைக் காண்பதற்கு ஆவல் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயம் பார்த்துப், புலனத்தில் ஜெய்சிகா கேட்டிருந்த தகவலைப் படித்ததும், அதில், தன் அண்ணன் மட்டும் தன்னுடன் வருவதாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் தன்மயா.

******************************

பவதாரிணி,“எத்தனை மணின்னுப் போட்டிருக்கு?” என்று முன்னிரவு உணவை உண்டு முடித்து விட்டு உரையாடலில் மூழ்கினர் தன்மயாவின் வீட்டார்.

“காலையில் பத்து மணிக்கு மேல் தான் ம்மா! அவங்க முன்னாடி போய் எல்லாம் சரி பார்க்கனும்ல? அதுக்குத் தான் லேட் டைமிங் கொடுத்திருக்காங்க” என்று அவருக்குப் பதில் சொன்னாள் மகள்.

“டேய்! பத்திரமாக கூட்டிட்டுப் போயிட்டு வா” என்று அவனுக்கு அறிவுறுத்தினான் பதுமன்.

சாதுரியன்,“சரிண்ணா” என்றான்.

“அங்கே நடக்கிறதை முடிஞ்சா வீடியோ காலில் காமிடா” என்று மகனிடம் கூறினார் யுதிர்ஷ்டன்.

“அப்போ உங்களுக்கு ஆஃபீஸ் இருக்குமே ப்பா?” என்று அவரிடம் வினவினான் மகன்.

“வேலை நேரமாகத் தான் இருக்கும். அதுக்காக தனுவோட ஃபங்கஷனை லைவில் பார்க்கனும்னு ஆசை இருக்கே! என்னப் பண்றது?” என்று கூறினார் யுதிர்ஷ்டன்.

“சரிப்பா. உங்க மூனு பேருக்கும் நாளைக்கு நடக்கிற ஃபங்க்ஷனை லைவ் டெலிகாஸ்ட் செய்றேன்!” என்று தன் குடும்ப உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தான் சாதுரியன்.

*************************

“நாங்க முதலில் அங்கே போறோம் ப்பா‌. அதுக்கப்புறம் நீங்க வாங்க” எனத் தன் தந்தையிடம் கூறி விட்டாள் அகஸ்தியா.

அவரிடம் விடைபெற்றப் பின்னர், பரிசு வழங்கும் விழா நடைபெறப் போகும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும்.

ஜெய்சிகா,“கேட்டரிங் - காரங்க எப்போ வர்றாங்களாம்?” என ஹரித்திடம் வினவினாள்.

“நான் வீட்டிலிருந்து கிளம்பும் போது ஒரு தடவை கால் பண்ணி ஞாபகப்படுத்தி விட்ருக்கேன். சீக்கிரம் வந்துருவாங்களாம்” என்று கூறியவன், அவர்களோடு சேர்ந்து, மேடையில் மட்டும் சில மாறுதல்களைச் செய்து முடித்தான்.

***************************

“என்னடி பிரைஸ் வாங்கப் போகிறதால், சேலை கட்டி இருக்கிறியா?” எனத் தன் இளைய மகளிடம் வினவிக் கொண்டே அவளுக்கு உணவை எடுத்து வைத்தார் பவதாரிணி.

“ஆமாம் மா. இந்த அப்பா ஏன் இவ்ளோ சீக்கிரமாக வேலைக்குக் கிளம்பிப் போறாங்க? நான் அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு நினைச்சேன்!” என்று பொருமலுடன் உரைத்தாள் தன்மயா.

“அவருக்குக் கால் செய்து பேசு. நான் சாது கிளம்பிட்டானா - ன்னுப் பார்த்துட்டு வர்றேன்” என்று தனது இரண்டாவது மகனிடம் சென்று,”நீ ரெடி ஆகிட்டியா டா?” என்றார் அவனது அன்னை.

“எஸ் ம்மா. தனு சாப்பிட்டாளா? எனக்குப் பசிக்குது” என்று அவரிடம் வினவினான் மகன்.

“அவ இப்போ தான் சாப்பிட்டுட்டு இருக்கிறா. நீயும் வா” என அவனை அழைத்துக் கொண்டு சென்றார் பவதாரிணி.

“ஹாய் டா” என்று தங்கையிடம் கூறியவனோ, தனக்கான உணவை ருசிக்கத் தொடங்கி விட்டான் சாதுரியன்.

“ம்ஹ்ம்… உங்களோட பைக்கில் தானே போகப் போறோம் ண்ணா?” என அவனிடம் கேட்டாள் தன்மயா.

“இல்லைடா. நம்மளோட காரிலேயே போயிட்டு வந்துடலாம். அது தான், கம்ஃபர்டபிள்” என்றுரைத்தான் அவளது தமையன்.

“ஓகே ண்ணா” என்றவள், தனது உணவை உண்டு விட்டதும், அவனுக்காக காத்திருக்கலானாள்.

“நீங்க சாப்பிட்டீங்களா ம்மா?” என்று தாயிடம் கேட்டான் சாதுரியன்.

“நான் உங்க அப்பா கூடயும், அண்ணா கூடயும் சேர்ந்து சாப்பிட்டாச்சு டா” என்றார் பவதாரிணி.

“பது அண்ணா எங்கே ம்மா?” என்று வினவியபடி, தனது தட்டிலிருந்தச் சாப்பாட்டைக் காலி செய்திருந்தான்.

“அவனோட ஃப்ரண்ட் வீட்டுக்குப் போயிருக்கான் டா” என்று பதில் சொன்னார் அன்னை.

“சரிம்மா” என்றவன்,”அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோடா” என்று தங்கையிடம் உரைத்தான் சாதுரியன்.

அதை ஏற்று, தன் தாயின் பாதங்களில் பணிந்தவளை,”இந்த வெற்றியோட இன்னும் நிறைய வெற்றிகள் உனக்கு வந்துக்கிட்டே இருக்கும்னு மனசார வாழ்த்துறேன் டா!” என்று அவளை ஆசீர்வதித்து, இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார் பவதாரிணி.

மகிழுந்தில் பயணமாகிக் கொண்டிருக்கும் போதே, தன் தந்தைக்கும், தமையனுக்கும், கைப்பேசியில் அழைத்து அவர்களது வாழ்த்தையும் பெற்றுக் கொண்டு, அண்ணனும், தங்கையும், விழா நடைபெறும் இடத்திற்கு விரைந்தார்கள்.

******************************

‘ஜா - வலைதளம் மற்றும் பதிப்பகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!’ என்ற பதாகையைப் பெருமிதத்துடன் பார்த்தபடி,

அகஸ்தியாவின் தந்தை உலகேசன் மற்றும் தாய் குணசுந்தரி, இருவருமே அந்த விழாவிற்கு வந்திருந்தார்கள்.

அதேபோலவே, ஜெய்சிகாவின் அன்னை சீதாதேவியும், அங்கே பிரவேசித்தார்.

நண்பர்கள் மூவரில், ஹரித்தின் தந்தை சற்று தாமதமாக வருவதாக உரைத்து விட்டிருந்ததால், தற்போது அவனது தாயார், ஜமுனா மட்டும் தனது வரவை நிறைவேற்றி வைத்திருந்தார்.

“ஹேய்! நம்ம பேரன்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க!” என்று அவர்களும், தங்களது பெற்றோர்களிடம் சென்று,“வாங்க ப்பா, ம்மா!” என்று அனைவரையும் வரவேற்றனர்.

“அரேன்ட்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் பக்காவாக இருக்கு!” என்று தங்களது மகவுகளைப் பாராட்டினார்கள்.

“தாங்க்யூ சோ மச்!” என்று சந்தோஷமாக கூச்சலிட்டவர்கள்,

“உங்களுக்கு ஸ்டேஜில் தான் சேர்ஸ் போட்டிருக்கோம். இப்போ தான், ரைட்டர்ஸ் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக வந்துட்டு இருக்காங்க. சோ, ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆனதும், உங்களை வரச் சொல்றோம். அதுவரைக்கும் உள்ளே இருக்கிற ரூமில் வெயிட் பண்ணுங்க” என அவர்களிடம் அறிவுறுத்தி, அனுப்பி வைத்தார்கள் பிள்ளைகள் மூவரும்.

“இனிமேல், ரைட்டர்ஸ் அண்ட் அவங்களோட ஃபேமிலி மெம்பரும், இங்கே வர ஆரம்பிச்சுருவாங்க. சோ, நாம மூனு பேரும், வெளியே நின்னு அவங்களை வரவேற்கனும்” என்று மற்ற இருவரிடமும் மொழிந்தாள் அகஸ்தியா.

“சரி. வாங்க” என அவளுடனும், ஜெய்சிகாவும், மஹாலின் வாசலுக்குப் போனான் ஹரித்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 16

தங்கள் மகிழுந்தை, விழா நடக்கும் இடத்தின் வெளியே நிறுத்தி விட்டுத் தன் தங்கையைக் கீழே இறங்குமாறு கூறித் தானும் ஓட்டுநர் இருக்கையில் இருந்து எழுந்து வந்தான் சாதுரியன்.

“அச்சோ! ரொம்ப பதட்டமாக இருக்கு ண்ணா! எல்லாரையும் நேரில் பார்க்கப் போறேன். அதுவும், வெப்சைட் ஓனர்ஸை மீட் பண்ணப் போறதை நினைச்சாலே, சந்தோஷமாக இருக்கு!” என்றபடியே, கண்களால் துழாவினாள் தன்மயா.

அப்போது, மஹாலின் வாயிலில் மூன்று பேர், அவர்களுக்குக் காணக் கிடைத்தார்கள்.

அதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என்பதை அறிந்ததும், அவனிடம் சென்று,”ஹாய் ப்ரோ!” என்று பேச்சுக் கொடுத்தான் சாதுரியன்.

“ஹலோ சார். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று புன்னகையுடன் வினவினான் ஹரித்.

அவனுக்கு அருகிலிருந்த அகஸ்தியா மற்றும் ஜெய்சிகாவும், அந்தப் பெண்ணைப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர்.

“ஹாங்! இவங்க என்னோட சிஸ்டர்.பேர். தன்மயா” என்ற உடனேயே,”உங்கப் பேர் சாதுரியனா?” என்று அவனிடம் வினவினாள் அகஸ்தியா.

“யெஸ் மேம்” எனக் கூறியவனுக்கு அந்தப் பெண்ணின் குரலைக் கேட்டதும், அவளது பெயரைக் கேட்கச் சிறு ஆர்வம் துளிர்த்தது.

அவளுமே, இவனை ஆர்வமாகப் பார்வையிட்ட சமயத்தில்,

“உங்க வாய்ஸைக் கேட்கும் போது, நீங்க தான், அகஸ்தியா மேம் - ன்னு எனக்கு டவுட் வருதே?” என்று ஆரவாரத்துடன் உரைத்தாள் தன்மயா.

அவளைப் புன்னகையுடன் பார்த்த ஜெய்சிகாவோ,”ஆமாம். அந்தப் பேருக்குச் சொந்தக்காரி இவ தான்!” என்று பதிலளித்தாள்.

அதைக் கேட்டதும், ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டதைப் போன்ற பிரகாசமான முகத்துடன் அகஸ்தியாவை ஏறிட்டுப் பார்த்தான்.

அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டி விழாவிற்கு வந்திருந்தவனோ, அதையெல்லாம் மறந்து போய், நிமிர்ந்த பார்வையுடன், வெண்பற்கள் தெரிய, இதமானப் புன்னகை செய்து கொண்டிருந்தவளிடம் எங்கனம் பேச வார்த்தைகளைத் தேடுவான் அவன்? அவளது பரிபூரணத் தோற்றத்தில் சரணாகதி அடைந்து விட்டான் சாதுரியன்.

அவன் பேச யத்தனிக்கும் போது,”ஹாய் மேம்! உங்களைத் தான் நான் பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்! நீங்க இல்லைன்னா, என்னால் இந்தக் கதையை எழுதி முடிச்சுப் போட்டியில் செகண்ட் பிரைஸ்ஸை வின் பண்ணி இருக்க முடியாது! தாங்க்யூ சோ மச் மேம்!” என்று அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் தன்மயா.

அதில், திக்குமுக்காடிப் போய் விட்டாள் அகஸ்தியா.

இங்கோ, தன்னை மறந்து போய் நின்றிருந்தவனைக் கண்டு கொள்ளாமல்,

அவளிடமும், ஜெய்சிகாவிடமும், சந்தோஷக் கூச்சலுடன் பேசினாள் அவனது தங்கை.

“ஹலோ ப்ரோ! அவங்க மூனு பேரும் செட்டாகிட்டாங்க! இனிமேல் நாம தான், ஒன்னா சுத்தனும் போல! நீங்க எங்களுக்கு நிறைய ஹெல்ப் செய்திருக்கீங்க! தாங்க்ஸ்.. அப்பறம் ஐ யம் ஹரித்” என்று அவனிடம் தெரிவித்து நேசக் கரம் நீட்டினான்.

“ஹாய் சார்” என்று அவனது நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கி விடுவித்தான் சாதுரியன்.

“போட்டியில் உங்களோட கதையும் இருந்ததே மேம்! அதோட டைட்டிலைச் சொல்லுங்க?” என்று ஆவலுடன் கேட்டாள் தன்மயா.

அகஸ்தியா,”ஸ்டேஜில் பேசும் போது சொல்றேன் ம்மா. எப்பவும் போல என்னை சிஸ் - ன்னே கூப்பிடுங்க” என நமுட்டுச் சிரிப்புடன் அவளிடம் அறிவுறுத்தினாள்.

அதைக் கேட்ட சாதுரியனுக்கோ தூக்கி வாரிப் போட்டது!

“இட்ஸ் ஓகே. அவ உங்களை மேம்ன்னு ஃபார்மலாகவே கூப்பிடட்டும்” என்று தங்கையை முந்திக் கொண்டு, அவளிடம் உரைத்தான்.

“ஓஹ்ஹோ! சரி. உள்ளே போகலாம். வாங்க” என்று நால்வரும் உள்ளே சென்றனர்.

தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த வழியின்றி விழித்தவனோ, வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டே, ஹரித்திடம் பேச ஆரம்பித்து விட்டான்.

தன்மயா,“மத்தவங்க எல்லாரும் வந்துட்டீங்களா மேம்?” என்று ஜெய்சிகாவிடம் கேட்டாள்.

“வந்துட்டே இருக்காங்க ம்மா. அவங்களை ரிசீவ் பண்ணத் தான் நாங்க வெளியே நின்னோம்” என்றாள்.

“ஓகே மேம்” என அவர்கள் காட்டிய இடத்தில், தன் சகோதரனுடன் அமர்ந்து கொண்டாள் தன்மயா.

அதன்பிறகு, மற்ற எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களையும், அவர்களுடைய குடும்பத்தாரையும் வரவேற்று அவரவர் இடத்தில் உட்கார வைத்தார்கள் அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.

இதையெல்லாம், தன் பெற்றோர்களிடம், தெரிவித்து விட்டு, இன்னும் சிறிது நேரத்தில், விழா தொடங்கவிருப்பதை, அனைவரிடமும் வலியுறுத்தினர் மூவரும்.

தாங்கள் அழைத்திருந்த அனைவரும் மஹாலிற்கு வந்து விட்டதை அறிந்து கொண்டவர்கள், சாப்பாட்டிற்குச் சொல்லி வைத்த உணவகத்திற்கு அழைத்துப் பேசினான் ஹரித்.

“எல்லாமே தயாராக இருக்கு தம்பி” என்று கனி ஃபுட்ஸ் அண்ட் டெசர்ட்ஸின் உரிமையாளரிடம் இருந்து பதில் வந்தது.

“ஒரு மணி நேரம் கழிச்சு வந்திருங்க சார்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு, தங்களது பெற்றோர்களை மேடைக்கு அழைத்து உட்கார வைத்தார்கள்.

“எல்லாத்தையும் வேனுக்குள்ளே எடுத்து வச்சாச்சு. கனி, வரா! நீங்களும் என்கூடவே வந்துருங்க” என்றார் கனிஷாவின் தந்தை கேசவன்.

“சரிங்க ப்பா” என்று கூறி விட்டனர் இருவரும்.

“இவங்க எல்லாரும் தான் சீஃப் கெஸ்ட் போல ண்ணா!” எனத் தன் அண்ணனிடம் சொன்னாள் தன்மயா.

“ம்ம்…” என்றவன், தனது செல்பேசியை எடுத்து, அதில், யுதிர்ஷ்டன், பவதாரிணி மற்றும் பதுமனுக்கு வீடியோ கால் செய்து,“ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சு” என மொபைல் கேமராவை, விழா மேடையின் புறம் திருப்பினான் சாதுரியன்.

“வாவ்!” என அவர்களது ஏற்பாடுகளைப் பார்த்துப் புகழ்ந்து விட்டு, அமைதியாக கவனிக்கத் தொடங்கினர் தன்மயாவின் தாய், தந்தை மற்றும் அவளது மூத்த தமையன்.

“ஆரம்பிக்கலாமா?” என்று மற்றவர்களிடம் கேட்டவர்களோ, ஆளுக்கொரு ஒலி உள்வாங்கியைப் (Mike) பெற்றுக் கொண்டனர்.


“எல்லாருக்கும் வணக்கம்! எங்களோட இன்விடேஷனை ஏற்று இங்கே வந்திருக்கிற சீஃப் கெஸ்ட்ஸ, ரைட்டர்ஸ் அண்ட் ரீடர்ஸ், அவங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ், எல்லாருக்கும் வணக்கம்!” என்று கரம் கூப்பி அனைவரையும் வணங்கி விட்டு,

“எங்களோட ஜா வெப்சைட் அண்ட் பப்ளிகேஷன் ஆரம்பிச்ச குறுகிய டைமிலேயே, போட்டி நடத்த முடிவு செஞ்சு அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சட்டோம்! அப்படி இருக்கும் போது, இந்தப் போட்டியில் பார்டிசிபேட் செய்யனும்னு, எங்களோட வெப்சைட்டில் ரிஜிஸ்டர் பண்ணி, காம்படிஷனில் வின் பண்ணி இருக்கிற, ரைட்டர்ஸூக்கும், முதலில் இருந்து கடைசி வரை, அவங்களை மோட்டிவேட் செஞ்ச, எல்லா ரீடர்ஸூக்கும், அவங்களுக்குப் பிரைஸ் கொடுக்கப் போகிற சீஃப் கெஸ்ட்ஸூக்கும் நாங்க தாங்க்ஸ் சொல்லிக்கிறோம்!” என்று பேசி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தாள் ஜெய்சிகா.

அதன் பின்னர், தன்னிடமிருந்த ஒலி உள்வாங்கியில்,”இந்த ஜா வெப்சைட் அண்ட் பப்ளிகேஷன் எங்க மூனு பேருக்கும் சொந்தமானது தான்! அதை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்த எங்களோட பேரன்ட்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்புறோம்!”
என்று மேடையில் வீற்றிருந்த சிறப்பு விருந்தினர்கள் தான், தங்களது பெற்றோர்கள் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள் அகஸ்தியா.

“சூப்பர்ல!” என்று சாதுரியனிடம் வியப்புடன் கூறினாள் தன்மயா.

“ஆமா டா. அவங்களும் ரொம்ப சப்போர்ட்டிவ் போலவே!” என்றான் அவளுடைய அண்ணன்.

மேலும்,
”இவங்களை மாதிரியே உங்களை மோட்டிவேட் செஞ்சு, நீங்க வாங்கப் போறப் பிரைஸைப் பார்த்து சந்தோஷப்பட்றதுக்கு ஆர்வமாக வெயிட் செய்துட்டு இருப்பாங்க. சோ, அந்தப் பிரைஸ் அனவுன்ஸ்மெண்ட்டை ஆரம்பிச்சிடலாம்!” என்று அவர்களிடம் தெரிவித்து விட்டு, ஒரு அட்டையைத் தன் கையிலெடுத்துக் கொண்டவன்,“ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கப் போகிற ரைட்டர் அண்ட் ரீடரை அடுத்தடுத்து கூப்பிட்றோம். இங்கே வந்து வாங்கிக்கோங்க!” என்று கூறி விட்டு, முதல் பரிசை வென்ற எழுத்தாளரை மேடைக்கு அழைத்து, சிறப்பு விருந்தினரிடம் பரிசைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்தான் ஹரித்.

அதன் பின், வாசகரையும் அழைத்து, அவருக்கும் பரிசு கொடுத்து முடித்து அவர்களது நன்றியுரையைக் கேட்டு முடித்ததும், இரண்டாவது இடத்தைப் பிடித்த எழுத்தாளரின் பெயரை அறிவிக்க முன் வந்த அகஸ்தியா
,”இரண்டாவது பரிசை வாங்க மிஸ். யு. தன்மயாவை மேடைக்கு அழைக்கிறோம்!” என்று அவளை மேலே அழைத்தாள்.

தன் தாய், தந்தை மற்றும் மூத்த அண்ணனும், வீடியோ காலில் பார்த்துக் கொண்டு இருக்க, தன்னுடைய இளைய தமையன் நேரில் அமர்ந்து கைத் தட்டி ஆரவாரம் செய்ய, சுற்றியிருந்த அனைவரும், கரகோஷம் எழுப்ப, தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மேடையை அடைந்தாள் தன்மயா.

“ஹேய் ஹேய்!” என்று கைகளைத் தட்டியவனைப் பார்த்த அகஸ்தியாவோ, தன்னிரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கவும், அவளைப் பார்த்து முகிழ்நகை முகிழ்த்துக் கொண்டான் சாதுரியன்.

அகஸ்தியாவின் பெற்றோர் தான், தன்மயாவிற்குப் பரிசு வழங்கினார்கள்.

அதைப் பெற்றுக் கொண்டவளோ,
“ஹாய்! என் பேர். தன்மயா. நான் ஒரு காலேஜில் புரொஃபசராக வேலை பார்க்கிறேன். எங்க அண்ணாவோட பேர். சாதுரியன்” என்றவளோ, அவனிடமிருந்து தான், ஜா வலைதளம் மற்றும் பதிப்பகம் தனக்கு அறிமுகம் ஆகியதையும், அதிலிருந்து தான், இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டதையும், பிறகு, அதற்குத் தனது குடும்பம் மொத்தமும் உறுதுணையாக இருந்ததைப் பற்றியும், முகத்தில் மகிழ்ச்சி விகசிக்க, அவர்களிடம் பகிர்ந்து கொண்டவளுக்குக், கைகளைத் தட்டி உற்சாகம் செய்தனர் அனைவரும்.

அதைக் கேட்ட, அவளது குடும்பமோ, மகிழ்ச்சியில் கண் கலங்கிப் போயினர்.


“என்னை மோட்டிவேட் செய்த அகஸ்தியா மேமைப் பத்தி இங்கே சொல்லியே ஆகனும்!” என்று தன்னுடைய கதையை எழுதி முடிக்க அவளும் தூண்டுகோலாக இருந்தாள் என்பதை அனைவருக்கும் விவரித்தாள் தன்மயா.

“அச்சோ!” என்று தனது முகத்தில் கையை வைத்து மறைத்துக் கொண்டாள் அகஸ்தியா.

அதைக் கண்டு அனைவரது இதழ்களும் விரிந்தது.

தன் புன்னகையை மறைக்காமல், அவளிடம் காட்டினான் சாதுரியன்.

“சரி. போதும் ங்க” என்று ஒலி வாங்கியில் கூறி அறிவுறுத்தினாள் அகஸ்தியா.


“எல்லாருக்கும் தாங்க்யூ!” என்று நன்றி தெரிவித்து விட்டு, மேடையிலிருந்து இறங்கிச் சென்றாள் தன்மயா.

“சூப்பர்‌டா!” எனத் தங்கையை வாழ்த்தி இருக்கையில் அமர வைத்தான் சாதுரியன்.

அதன் பிறகு, மூன்றாவது இடத்தைப் பிடித்த, எழுத்தாளர் மற்றும் வாசகரை அழைத்து அவர்களுக்கும் பரிசு வழங்கி முடித்தப் பின்னர்,


“எல்லாரும் உங்களோட பரிசை வாங்கியாச்சு! இப்போ, கொஞ்ச நேரத்தில், லன்ச் ரெடி ஆகிடும். வெஜ் அண்ட் நான்வெஜ்ன்னு ரெண்டு வகையான சாப்பாடும் இருக்கும். என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க!” என்று அறிவித்து விட்டு, அனைவரையும் அமைதியாக அமர்ந்திருக்குமாறு அறிவுறுத்தி விட்டுச் சிறப்பு விருந்தினர்களை அறைக்கு அனுப்பி வைத்தாள் அகஸ்தியா.

அதே சமயம், உணவுகளை எடுத்துக் கொண்டு வேனில் பயணம் செய்து வந்திருந்தனர் கனிஷா, அவளது தந்தை மற்றும் வராகன்.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
இந்தப் பதினைந்து மற்றும் பதினாறாம் அத்தியாயங்களுக்கான கருத்துகளை இந்த இணைப்பிற்குள் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 17

கனிஷா,“அப்பா! நானும், இவனும், உள்ளே போய், அவங்க கிட்டப் பேசிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றோம்” என்று தந்தையிடம் கூறி விட்டுத் தன் நண்பனுடன் சேர்ந்து மஹாலிற்குள் சென்றாள்.

“அதுக்கு முன்னாடி சாதுவுக்குக் கால் பண்ணு” என்று அவளுக்கு அறிவுறுத்தினான் வராகன்.

“சரி” எனத் தங்களது நண்பனுக்குச் செல்பேசியில் அழைத்தாள்.

தங்கையுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாதுரியனோ, கைப்பேசி இசைத்ததும், அதை எடுத்து எண்ணைப் பார்த்ததும், அட்டெண்ட் செய்து,”ஹாய் கனி” என்று அவளிடம் பேசினான்.

“ஹலோ, எங்கேடா இருக்கிற?” என்று அவனிடம் வினவினாள் தொழி.

“நான் இங்கே ஃபங்க்ஷனில் இருக்கேன்”

கனிஷா,“நாங்களும் வந்தாச்சுடா. உள்ளே தான் இருக்கோம். நீ எந்த இடத்தில் உட்கார்ந்திருக்க?” என்று கேட்டாள்.

“முதல் வரிசையில் இருக்கோம். உங்களுக்காகத் தான் எல்லாரும் பசியோட வெயிட்டிங்” என்று அவளிடம் தெரிவித்தான் சாதுரியன்.

“அப்பா, வண்டியிலிருந்து பொருட்களை, எடுத்துட்டு இருக்கார்டா. அதை இன்ஃபார்ம் பண்ணனும்” என்று கூறிக் கொண்டே, வராகனுடன் இணைந்து நடந்தவள்,

நண்பனையும், அவனது தங்கையையும், கண்டு கொண்டு,”ஹாய் டா. கங்கிராஜூலேஷன்ஸ் தனு!” என்று வாழ்த்தினாள் கனிஷா.

அவளைத் தொடர்ந்து,“வாழ்த்துகள் ம்மா” எனக் கூறிப் புன்னகை புரிந்தான் வராகன்.

“தாங்க்யூ கனி க்கா! தாங்க்ஸ் வரா ண்ணா!” என அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்த தன்மயாவோ,”ஆமாம், உங்களை யார் இன்வைட் செஞ்சாங்க?” என்று குழப்பத்துடன் வினவினாள்.

“நீ அதைச் சொல்லவே இல்லையாடா?” என்று நண்பனிடம் கேட்டாள் கனிஷா.

“ஊஹூம்” என இட வலமாகத் தலையசைத்தான் சாதுரியன்.

அவனை முறைத்து விட்டுத் தங்களது வருகைக்கானக் காரணத்தை உரைத்தார்கள் இருவரும்.

“என்னது? உங்களோட ஹோட்டலில் தான் சாப்பாடு ஆர்டர் செய்தாங்களா?” என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் தன்மயா.

கனிஷா,“ஆமாம் தனு”

“அண்ணா!” எனக் காதில் புகை வராத குறையாகத் தன்னிடம் கேட்டவளுக்கு,”என்னால் ஏற்கனவே உங்களுக்குள்ளே மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஆகிடுச்சு. இப்போவும் அதே நடந்தா எனக்கு ரொம்ப கஷ்டமாகிடும்டா! அதான் சொல்லலை” எனத் தங்கைக்குப் புரிய வைக்க முயன்றான் சாதுரியன்.

அதை யோசித்துப் பார்த்தவளும் கூட,”கரெக்ட் தான் ண்ணா. இதுக்கப்புறம் தெரிஞ்சாலும் நோ பிராப்ளம்! பாத்துக்கலாம்” என்று அவனிடம் இயல்பாகச் சொன்னாள் தன்மயா.

“ஹப்பாடா!” என ஆசுவாசம் அடைந்தார்கள் மூவரும்.

“அகஸ்தியா யாருன்னு சொல்லுடா!” என்று தோழனிடம் விசாரித்தாள் கனிஷா.

“அங்கே நிக்கிறாங்கப் பாரு. அவங்க தான்!” என்று மேடைக்குக் கீழே நின்று, தன் நண்பர்களுடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தவளைக் கைக் காட்டினான் சாதுரியன்.

“ஓகே. நான் போய்ப் பேசிட்டு வர்றேன்” என அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டவளோ, அகஸ்தியா மற்றும் அவளது இரண்டு நண்பர்களிடம் போய்,

“ஹாய்‌! ஐ யம் கனிஷா. எங்களோட கனி ஃபுட்ஸ் அண்ட் டெசர்ட்ஸில் இருந்து சாப்பாடு கொண்டு வந்திருக்கோம். வண்டி வெளியே நிற்குது. அவங்களைப் பாத்திரங்களை எடுத்துட்டு உள்ளே வரச் சொல்லலாமா?” என்று கூறி விட்டு அவர்களது பதிலுக்காக காத்திருந்தாள்.

“உங்களுக்காகத் தான் காத்திருந்தோம். சீக்கிரம் வரச் சொல்லுங்க. ப்ளீஸ்” என்று அவளிடம் கேட்டுக் கொண்டாள் அகஸ்தியா.

“இப்போவே சொல்றேன்” என்றவள், சற்று தள்ளி நின்று, தன் தந்தைக்கு அழைத்து, உள்ளே வருமாறு தெரிவித்தாள் கனிஷா.

அதன்படி, பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்லுமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார் கேசவன்.

கனிஷா,“இன்ஃபார்ம் செய்துட்டேன் மேம். வந்துட்டு இருக்காங்க” என்று அவர்கள் வரும் திசையைக் காட்டினாள்.

“சூப்பர். அந்த ஹோட்டலுக்கு உங்கப் பேரைத் தான் வச்சிருக்காங்களா?” என அவளிடம் வினவினாள் ஜெய்சிகா.

“ஆமாம் மேம்”

“சரிம்மா. நீங்க அரேன்ட்ஜ் செய்துட்டு சொல்லுங்க. அதுக்கப்புறம் தான், எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடனும்” என்று அவளுக்கு வலியுறுத்தினாள் அகஸ்தியா.

உடனேயே தந்தையிடம் சென்று,”டைனிங் டேபிளில் எல்லாத்தையும் சீக்கிரம் செட் பண்ணிட்டு சொல்லனுமாம் ப்பா” என்றுரைத்தாள் அவரது மகள்.

“ஓகே கனி” என்று அவளிடம் கூறி விட்டு,

“ஃபாஸ்ட் ஆக வேலையைப் பாருங்க ப்பா!” என்று ஆட்களை ஏவிய படியே தானும் வேலை பார்த்தார் கேசவன்.

அதன்பின், தன் தோழமைகளிடம் போய் விட்டாள் கனிஷா.

அந்த மூவரும், நண்பர்கள் என்பது, இன்னும் அகஸ்தியா குழுவினருக்குத் தெரியாது.

அவர்களோ, தங்களது பெற்றோர்களைப் பார்க்கப் போனார்கள்.

உலகேசன்,”எங்களையும் கௌரவப்படுத்திட்டீங்கடா!” என அம்மூவரையும் பாராட்ட,

“ஆமாம் மா. ரொம்பவே மன நிறைவாக இருந்துச்சு” என்று ஜெய்சிகாவின் அன்னை சீதாதேவியும் உரைத்தார்.

குணசுந்தரி,”என்னோட காலேஜில் நடந்த ஃபங்க்ஷனில் சீஃப் கெஸ்ட் ஆக இருந்திருக்கேன். நிறைய பிரைஸஸூம் கொடுத்திருக்கேன். இங்கே உங்களோட வெப்சைட் அண்ட் பப்ளிகேஷனில், கூப்பிட்டுப் பரிசு கொடுக்க வச்சதுக்குத் தாங்க்ஸ் டியர்ஸ்!” என்று அம்மூவரையும் பாராட்டித் தள்ளினார்.

“நீ ஏன்டா சோகமாக இருக்கிற?” எனத் தன் மகனைப் பார்த்துக் கேட்டார் ஜமுனா.

“அப்பா சாப்பிடக் கூட வராமல் இருக்காரு ம்மா!” என்று தன் தந்தையைப் பற்றி அவரிடம் குறை கூறினான் ஹரித்.

“நான் எப்பவோ அவருக்கு மெசேஜ் பண்ணிட்டேன் டா, கண்டிப்பாக வந்துருவாரு. ஃபீல் பண்ணாதே!” என மகனைச் சமாதானப்படுத்தினார்.

“ம்ஹூம்!” என்று தனக்கு நம்பிக்கை இல்லாததால், முகம் சுருங்கிப் போய் விட்டான் அவருடைய மகன்.

அவனைச் சமாதானம் செய்யும் வேலையில் இறங்கினர் அகஸ்தியா மற்றும் ஜெய்சிகா.

அந்த நேரத்தில், கதவு தட்டும் சத்தம் கேட்கவே,”உள்ளே வாங்க!” என்றான் ஹரித்.

அறையினுள் நுழைந்தவரைக் கண்ட ஜமுனாவோ,”வந்துட்டீங்களா? இவன் உங்களைத் தான் கேட்டுட்டே இருந்தான்!” எனத் தன் கணவரிடம் உரைத்ததைக் கேட்டதும், உடனே வாசலைப் பார்த்து,

“அப்பா!” என்று கூறியவாறு தந்தையிடம் சென்றான் ஹரித்.

“ஏன்டா நான் வர டிரை பண்றேன்னு சொன்னேன் தானே!” என்றவர், அவனது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார் தியாகராஜ்.

அவரது அரவணைப்பில் இருந்தவனைத் தொந்தரவு செய்யாமல், மற்ற இருவரும் வெளியேறி விட்டார்கள்.

தன் மகளிடம்,”எல்லாம் தயார் ம்மா. அவங்ககிட்ட சொல்லிடு” எனக் கேசவன் சொல்லி விட, உடனே அதை அகஸ்தியாவிடம் தெரிவித்து விட்டாள் கனிஷா.

அவர்களும் உணவுண்ணும் இடத்திற்கு அனைவரையும் அழைத்து விட்டுத் தங்களது பெற்றோர்களையும் வரச் சொன்னார்கள்.

முதலில், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சாப்பிட அமரச் செய்து விட்டுப் பிறகு, தாங்கள் மூவரும், தங்களுடைய பெற்றோர்களுடன், உணவருந்த உட்கார்ந்தனர் அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.

அப்போது தான், உணவுகளைக் கொண்டு வந்தவருடைய மகளான கனிஷாவும், அவளது தோழன் வராகனும், தன்மயா மற்றும் சாதுரியனுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார்கள்.

“ஜெய்! அவங்க எல்லாரும் ஒரே கேங் போலவே?” என்று தோழியிடம் சந்தேகத்துடன் கூறினாள் அகஸ்தியா.

“எங்களுக்கும் அதே டவுட் தான் தியா!” என்றாள் ஜெய்சிகா.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, தன் மகளுக்கும், மற்ற மூவருக்கும், உணவு பரிமாறிக் கொண்டே,”இந்த மூனு பேரும் நம்ம ஹோட்டலுக்கு வந்து தான் எப்பவுமே சாப்பிடுவாங்க. இப்போ நீ பிரைஸ் வாங்கி இருக்கிற ஃபங்க்ஷனில் சாப்பிட்றாங்க!” எனக் கூறியபடியே, அவர்களுக்குப் பரிமாறினார் கனிஷாவின் தந்தை கேசவன்.

அதைக் கேட்டுத் திகைப்புடன், அகஸ்தியா மற்றும் அவளது தோழமைகளைப் பார்த்தனர் சாதுரியன், தன்மயா, கனிஷா மற்றும் வராகன்.

“அப்போ நாம சந்தேகப்பட்டது சரி தானா? இவங்க எல்லாரும் ஒரே கேங் தான்!” என்று அவர்களைப் பார்த்துச் சொன்னாள் ஜெய்சிகா.

சாதுரியனின் விழிகளோ, தெறித்து விழுவதைப் போல் அகஸ்தியாவை ஏறிட்டது.

அவளோ, முறைப்பு பாதி, கடுகடுப்பு மீதி என்று பத்ரகாளி போல அவனை முறைத்துப் பார்த்தாள்.

ஏனெனில், இந்த விஷயத்தை தன்னிடமிருந்து அண்ணனும், தங்கையும் மறைத்து விட்டார்கள் என்ற கோபம் தான் அவளுக்கு!

‘ம்ஹூம்!’ எனச் சிலிர்த்துக் கொண்டு திரும்பி விட்டாள் அகஸ்தியா.

“சாப்பிடு பிரமாதம்!” என்று அனைவரும் பாராட்டிக் கொண்டே உணவு உட்கொள்ளவும், அதில் கவனம் செலுத்தினார்கள் அவளும், மற்றவர்களும்.

“போச்சா!” என்று சாதுரியனைக் கேலி செய்து கொண்டே உணவருந்தினர் கனிஷா மற்றும் வராகன்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்தார்கள்.

“எங்களால் முடிஞ்ச அளவுக்குச் சாப்பாட்டில் எந்தக் குறையும் வைக்கக் கூடாதுன்னு நினைச்சோம். இவ்வளவு ருசியான சாப்பாட்டைக் கொடுத்தக் கனி ஃபுட்ஸ் அண்ட் டெசர்ட்ஸ் ஹோட்டலைச் சேர்ந்த எல்லாருக்கும் தாங்க்யூ சோ மச்!” என்று நன்றி கூறியவளோ,

“அப்பறம், நான் எழுதுன கதையோட பேரைச் சொல்றேன்” எனப் போட்டியில் தான் எழுதிய கதையின் பெயரைச் சொன்னாள் அகஸ்தியா.

“எங்கப் பப்ளிகேஷனுக்கு இந்தப் பேர் ஏன் வச்சோம்னு இப்போ உங்க எல்லாருக்கும் சொல்றேன்” என்று தங்களது வலைதளம் மற்றும் பதிப்பகத்திற்கு வைத்திருக்கும் பெயரின் உட்பொருள் என்னவென்பதை அனைவருக்கும் விளக்கிக் கூறினாள் ஜெய்சிகா.

“ஹேய்! நாம இதைத் தானே யோசிச்சிட்டே இருந்தோம்?” என்றாள் கனிஷா.

“எஸ். இப்போ தெரிஞ்சிருச்சு” என்றார்கள்.

“நாங்க உங்களோட புக்ஸ்ஸைப் பப்ளிஷ் செய்றதுக்கு அட்லீஸ்ட் எங்களுக்கு மூனு மாசம் தேவைப்படும். சோ, அந்த டைமில் உங்களுக்குக் கண்டிப்பாக இன்ஃபார்ம் பண்ணுவோம். அது வரைக்கும் நீங்க வெயிட் செய்யனும்னுக் கேட்டுக்கிறோம். அப்போவே, அதுக்கான ராயல்டி அமவுண்ட்டையும் அனுப்பிடுவோம். அதே புக்ஸை ரீடர்ஸான உங்களுக்குக் கிஃப்ட் ஆக அனுப்பி வைக்கனும், சோ, நீங்களும் காத்திருக்கனும்” என்று கோரிக்கை விடுத்து விட்டு,

“இந்த ஃபங்கனுக்கு வந்து பிரைஸ் வாங்குனதும் இல்லாமல், இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து சிறப்பிச்சதுக்கும், இந்த நாளை எங்களுக்கு மறக்க முடியாததாக மாத்திக் கொடுத்த, உங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் டியர்ஸ்!” என்று நன்றி தெரிவித்தான் ஹரித்.

அந்த விழா நிறைவு பெற்று விட்டதற்கு அடையாளமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன்பின், மிகத் தொலைவில் இருந்து வந்தவர்கள் எல்லாரும், அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்திடம் மட்டும் பேசி விட்டு விரைவாகச் சென்றனர்.

ஆனால், அந்த ஊரிலேயே தங்கி இருக்கும் தன்மயாவும், சாதுரியனும் மட்டும் அங்கேயே இருந்தனர்.

அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, பாத்திரங்களை வண்டியில் ஏற்ற உதவி புரிந்து, கேசவனுடனேயே உணவகத்திற்குப் பயணமாகி விட்டார்கள் கனிஷா மற்றும் வராகன்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பதினேழாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 18

அனைவரும் கிளம்பிச் சென்று விட்ட நிலையில், அகஸ்தியாவிடம் வந்து,“மேம்! நாம எல்லாரும் க்ரூப் செல்ஃபி எடுத்துப்போமா?” என்று அவளிடம் தயக்கமாக வினவினாள் தன்மயா.

ஏனெனில், விழா நிறைவு பெற்றப் பின்னர், அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து, அப்போதே மேடையில் நின்று குழுப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

அதன் பிறகும், அவர்களிடம் இப்படி கேட்பதற்குத் தன்மயாவிற்குச் சங்கடமாக இருந்தது தான்! ஆனால் அதையெல்லாம் பார்த்தால் முடியுமா?

தனக்குப் பிடித்தமானவர்களுடன், தானும் ஒரு சுயமி (selfie) எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டுத் தான், இவ்வாறு கேட்டுத் தயங்கி நிற்கிறாள்.

“சீக்கிரம் எடுத்துக்கலாம் டா. நாமளும் வீட்டுக்குப் போகனும்ல” என்று அவளிடம் தங்களுடைய சம்மதத்தைக் கூறினாள்.

அவர்கள் மூவருடைய பெற்றோர்களைத் தவிர, அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்துடன் சேர்ந்து சாதுரியனும் அவர்களுடன் அந்தப் புகைப்படத்திற்கு நின்றான்.

அனைவரும் முகிழ்நகையுடன் சேர்ந்து சுயமி எடுத்துக் கொண்ட பின்னர், ஜா வலைதளத்தின் அந்த மூன்று உரிமையாளர்களிடமும், தான் விடைபெறும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த தன்மயாவோ,”உங்க மூனு பேரையும், மீட் பண்ணின, இந்த நாளை, நான் மறக்கவே போறது இல்லை மேம்! எனக்கு அவ்ளோ ஹேப்பியா இருக்கு! இனிமேலும் உங்களோட வெப்சைட்டில் தான் தொடர்ந்து கதை எழுதுவேன்! தாங்க்யூ சோ மச்!” என்று அவர்களிடம் உணர்ச்சிப் பூர்வமாக கூறினாள்.

அதன் பின்னர், தன்னுடைய தயக்கத்தை தள்ளி வைத்து விட்டு,”அகஸ்தியா மேம்!” என்று அவளை அழைத்து தன்னைப் பார்க்கச் செய்தான் சாதுரியன்.

“எஸ்?” எனத் தனது விழிகளைச் சந்தித்தவளிடம், எந்தவித, காழ்ப்புணர்ச்சியும் இன்றி,”நான் செஞ்ச ஒரு சில விஷயங்கள் என் சிஸ்டரையும், உங்களையும் ரொம்பவே பாதிச்சு இருக்கு. எப்பவோ தனு கிட்ட சாரி கேட்டுட்டேன். இப்போ உங்ககிட்ட கேட்கலாம்னு இருக்கேன்!” என்று தீர்க்கமாக உரைத்தான்.

“அதெல்லாம் வேண்டாம் ங்க. பிரச்சினை தான் எப்போவோ முடிஞ்சதே?” என்று அவனைத் தடுத்துப் பார்த்தாள் அகஸ்தியா.

“ப்ளீஸ்…!” என்று அவளிடம் கெஞ்சியவனோ,”வெரி சாரி மேம்!” எனத் தன்னாலான சங்கடங்களுக்கு எல்லாம் அவளிடமும், தன் தங்கையிடமும், மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் சாதுரியன்.

“ப்ச்! அண்ணா!” என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டாள் தன்மயா.

“ஹேய் சில் டா!” என்று அவளைச் சமாதானப்படுத்தினான் அவளுடைய தமையன்.

ஜெய்சிகா மற்றும் ஹரித்தோ,’இங்கே என்ன நடக்கிறது?’ என்ற ரீதியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால், இங்கோ அவன் மன்னிப்புக் கேட்ட பிறகு, சில மணித்துளிகள், தன்னை மறந்து போய் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த அகஸ்தியாவிடம்,

“நாங்க கிளம்பவா மேம்?” என்று கேட்டு நின்றாள் தன்மயா.

“ஓஹ்! ஓகே. போயிட்டு வாங்க” என்று அவளிடம் கூறி விட்டுச், சாதுரியனை ஏறிட்டாள்.

“அப்போ நானும் வர்றேன் மேம்!” என அவளிடம் சொன்னவனோ, ஜெய்சிகாவிடமும், ஹரித்திடமும், அவ்வாறே கூறி விடைபெற்றுக் கொண்டான் சாதுரியன்.

“பை!” எனப் புன் சிரிப்புடன் அங்கேயிருந்து கிளம்பிச் செல்லும் அந்த அண்ணன், தங்கையைக் கண் இமைக்காமல் பார்த்தவாறே நின்றிருந்த தோழியை, ஜெய்சிகாவும், ஹரித்தும் சேர்ந்து உலுக்கி நிகழ்காலத்திற்கு அழைத்து வரப் பிரயத்தனப்பட்டார்கள்.

“என்னாச்சு தியா?” என்றவர்களிடம்,

“அவர் ஏன் எங்கிட்ட சாரி கேட்கனும்?” என்று குழப்பமாகவும், வியப்பாகவும் வினவினாள் அவர்களது நண்பி.

“அதானே!” என்றாள் ஜெய்சிகா.

அப்போதாவது “அவரோட கில்ட்டி ஃபீல் குறையும்னு தான்!” என்று பதிலளித்தான் ஹரித்.

“அது தான் அன்னைக்கே நாங்கப் பேசி சரி செய்துக்கிட்டோமே?” என்று வினவினாள் அகஸ்தியா.

“நீயும், அவரும் பேசிட்டீங்க! ஆனால், அந்தப் பொண்ணு தன்மயாவும், அவரும் என்னப் பேசிக்கிட்டாங்கன்னு உனக்குத் தெரியுமா என்ன?” என்று அவளிடம் கேட்டான் அவர்களது நண்பன்.

“ஆமால்ல! ஹேய் தியா! அவங்களுக்குள்ளே ஏதோ மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஆகிடுச்சு போல! அதான், உங்க ரெண்டு பேர் கிட்டேயும் பொதுவில் வச்சு மன்னிப்புக் கேட்டு இருக்கார்” என்று தனக்குப் புரிந்ததை தோழியிடம் உரைத்தாள் ஜெய்சிகா.

“அப்படியும் இருக்கலாம்” என்றாள்.

சாதுரியனுடைய இந்தப் பண்பு, தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக, ஈர்ப்பதை தடுத்து நிறுத்த முடிவெடுத்தவள்,“எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சல்ல? இப்போ நாம வீட்டுக்குப் போகலாமா?” என்று அனைவரிடமும் ஒருமுறை கேட்டுக் கொண்டாள் அகஸ்தியா.

“ஆமாம். இருட்டுறதுக்குள்ளே போகலாம்” என்று கூறியவர்கள்,
எழுத்துப் போட்டியை, நன்றாக நடத்தி முடித்து, அதற்கானப் பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக முடித்து வைத்தப் பெருமிதத்துடன் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.
____________________

தங்களது வீட்டின் வாயிலில் மகிழுந்தை நிறுத்திய சாதுரியனோ,”நீ இறங்கிப் போய் அம்மாகிட்ட இதைக் காமி தனு. நான் காரைப் பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று தங்கையை முதலில் அனுப்பி வைத்தான் சாதுரியன்.

எனவே, தானும் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருக்க, அதன் ஒலியைக் கேட்டதும்,”யாரு?” என்று உள்ளிருந்து கேட்டார் பவதாரிணி.

“நான் தான் ம்மா!” என்று உற்சாகம் பொங்க பதில் சொன்னாள் தன்மயா.

“இரு வரேன்” என்றவர், கதவைத் திறந்து அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார் அவளது அன்னை.

அவரைக் கண்டதும்,“அம்மா!” என்று ஆனந்தக் கூச்சலிட்டவாறே, தனது கரத்தில் இருந்தவற்றைத் தாயிடம் கொடுத்தாள் அவருடைய மகள்.

“ஹேய் தனு ம்மா!” என்று அதை வாங்கிப் பார்த்தப் பவதாரிணியும், மகளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டார்.

தன் காரை நிறுத்தி விட்டு வந்த சாதுரியன், அன்னை மற்றும் தங்கையின் குதூகலத்தைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான்.

“டேய்! நம்ம குட்டிம்மா சாதிச்சுட்டா!” என்று அவனிடம் உரைத்தார் பவதாரிணி.

“ஆமாம் மா” எனக் குறுநகை புரிந்தான் அவரது மகன்.

“நீங்க லைவ் டெலிகாஸ்ட் பார்த்தீங்க தானே?” என்று அவரிடம் கேட்டாள் தன்மயா.

“பார்த்தேன் டா! நீ பேசியதை எல்லாம் கேட்டேன்” என அவளை நெட்டி முறித்தார் பவதாரிணி.

“அப்பாவும், பது அண்ணாவும் கூடப் பார்த்தாங்க ம்மா!” என்று அபரிமிதமான உற்சாகத்துடன் பேசிய தங்கையிடம்,”ஹேய்! கேப் விடாமல் பேசிக்கிட்டே இருக்கிற! இந்தா குடி” என அவளுக்காக கொண்டு வந்த நீரைத் தன்மயாவிடம் தந்தான் சாதுரியன்.

அவள் அதை வாங்கிப் பருகி முடித்தவுடன், பதுமனும், யுதிர்ஷ்டனும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

“ஹாய் தனு!” என்று கூறி, அவளிடமிருந்தப் பரிசுகளை வாங்கிப் பார்த்தார்கள் இருவரும்.

“செம்ம!” என்றான் பதுமன்.

தந்தை மற்றும் தாயின் கால்களில் விழுந்து வணங்கிக் கொண்டாள் தன்மயா.

அன்றிரவு, தங்கையையும், மற்ற குடும்ப உறுப்பினர்களையும், ஹாலில் வந்து காத்திருக்கச் சொல்லி விட்டுத் தன் அறைக்குச் சென்று எதையோ எடுத்து வந்து கைகளைப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு, தங்கையை அழைத்தான் சாதுரியன்.

“நீங்கப் பின்னாடி ஏதோ மறைச்சு வச்சிருக்கீங்களே!” என்று அவ்விடத்தை எட்டிப் பார்த்தாள் தன்மயா.

“நானே காட்டுறேன்!” என்றவனோ, தான் மறைத்து வைத்திருந்தப் பொருளை, அனைவரது முன்னிலையிலும், எடுத்துக் காண்பித்தான் அவளது தமையன்.

அந்த வாழ்த்து அட்டையைக் கையில் பெற்றுக் கொண்ட தன்மயாவிற்கோ, உலகையே வென்ற உணர்வு!

ஏனென்றால், காலிகிராஃபி எழுத்துக்களை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான வேலையாகும்.

அதிலிருந்த ஒவ்வொரு வார்த்தைகளும் தன்னை மகிழ்வித்ததை அப்பட்டமாகத் தன்னுடைய முகத்தில் காட்டியவளோ, தனக்காக தமையன் செய்த முயற்சியை உள்ளார்ந்த அன்புடன் பெற்றுக் கொண்டவள்,“நீங்க எல்லாரும் என்னோட பெஸ்ட் பர்சன்ஸ்!” என்று உற்சாக மிகுதியில் தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினாள் தன்மயா.

“எங்கே காட்டு!” என்று அந்த அட்டையை வாங்கிப் பார்த்தார்கள் மற்ற மூவரும்.

அவளுக்காகவே பார்த்துப் பார்த்து அதைச் செய்திருக்கிறான் என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

ஆனந்தம் மற்றும் ஆரவாரம் மட்டுமே அந்த வீட்டை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.

மறுநாள், தான் கதை எழுதி வாங்கிய பரிசுகளைத் தன்னுடைய கல்லூரி தோழமைகளுக்குக் காட்ட வேண்டும் என்று அவற்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள் தன்மயா.

அவளுக்கு முன்பாகவே, அலுவலகத்திற்குச் சென்றிருந்தார் யுதிர்ஷ்டன்.

பதுமனோ, தனது நேர்காணலுக்கான முடிவை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

நண்பர்களுடன் சேர்ந்து தங்களது அலுவலகத்தில் மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான் சாதுரியன்.

அவர்கள் அனைவரையும் தூணாகத் தாங்கும் பவதாரிணியோ, மகன்கள், மகள் மற்றும் கணவருக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொடுத்துக் கொண்டும், தானும் கதை எழுத ஆரம்பித்து விடலாமா? என்ற யோசனையிலும் இருந்தார் பவதாரிணி.

- தொடரும்

இந்தக் கதையை இதுவரைக்கும் படிச்ச உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இதில் அவ்வளவாக ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்காது. நேர்மறையான கதையாக இருக்கனும்னு நினைச்சு எழுதுறேன்... அதே மாதிரி ஃபைனல் யூடியை வாசிச்சு முடிச்சதும், உங்களுக்கு நல்ல பாசிட்டிவ் ஃபீல் கொடுத்து இருந்தால் அதுதான் என்னோட வெற்றி 💖🤗
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍 😍 😍

இந்தப் பதினெட்டாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 
Last edited:

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 19

“கதைகளைப் ப்ரூஃப் ரீடிங் - க்கு அனுப்பி வச்சிடலாமா?” என்று தோழமைகளிடம் வினவினாள் அகஸ்தியா.

ஹரித்,“ஷூயர். உன்னோடதையும் அனுப்பி வைக்கலாமா?”

“நீங்க யாரும் ஸ்டோரி எழுதலை. நான் மட்டும் கொடுத்தால் நல்லா இருக்காது. உங்களோட கதையையும் முடிச்சு வைங்க. முடிஞ்சா நெக்ஸ்ட் டைம் நம்மளோடதை புக் பப்ளிஷ் பண்ண அனுப்பி வச்சிடலாம்” என்று அவ்விருவரிடமும் வலியுறுத்தினாள் தோழி.

அதற்குப் பிறகு, அன்றைய தினமே, போட்டியில் வெற்றி பெற்ற கதைகளை மூன்று முறைகள் திருத்தம் செய்வதற்காக அதற்குரிய ஆட்களிடம் அனுப்பி வைத்து விட்டார்கள் மூவரும்.

இதற்கிடையில், நேர்காணலில், தான் வெற்றி பெற்று விட்டதாகவும், உடனடியாக வந்து வேலையில் சேர வேண்டும் என்றும் பதுமனுக்கு அழைப்பு வந்திருக்க, அதையும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக கருதிக் கொண்டாடினார்கள் அவனுடைய குடும்பம்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்களே, அதைப் போல அனைத்து குடும்பங்களும் தங்களுடைய பிள்ளைகளின் வாழ்வில் நிகழும் வளர்ச்சிகளைப் பார்த்துப் பெருமை அடைவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர்.

அதற்குப் பிறகான நாட்களில் எல்லாம் காதல் புறாக்கள் இரண்டும் தங்களுடைய நேசத்தைப் புரிந்து கொண்டு, அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் தயாராகி விட்டனர்.

அந்த சுவாரசியமான நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்!
__________________________

இதுநாள் வரையில் போட்டியின் காரணமாக, வலைதளம் மிகவும் பிஸியாக இருந்ததால், அதில் அடிக்கடி வேலைகள் நடந்து கொண்டே இருக்கவும், அதற்கான உதவிகளை அவ்வப்போது சாதுரியனிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள் அகஸ்தியா.

இப்போதோ, ஒரு மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு முறைகளுக்கு மட்டுமே தளத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டால் போதும்!

எனவே, அவளும், சாதுரியனும், பேசிக் கொள்வதற்காக அவர்கள் இருவருக்கும் எந்தக் காரணங்களும் கிடைக்கவில்லை.

அவர்களுடைய நாட்கள் யாவும், உப்புச் சப்பில்லாமல் சென்று கொண்டிருந்தது.

மற்றவர்களது வாழ்வில் அனைத்தும் முன்னோக்கிச் செல்ல, தாங்கள் மட்டும் அந்த விழாவில் நடந்த சம்பவங்களை எண்ணிப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டார்கள் சாதுரியன் மற்றும் அகஸ்தியா.

அப்படியிருக்கையில், ஒருநாள்,”நாம கவர் ஃபோட்டோ ரெடி செய்ற ஆள் அவைலபிள் ஆக இல்லையாம் ஃப்ரண்ட்ஸ்!” என்று தன் இரு தோழிகளிடம் கூறினான் ஹரித்.

அவர்களோ,“என்னது!” என்று அதிர்ந்து போய் விட்டார்கள்.

“ம்ஹ்ம். இப்போ தான் மெசேஜ் வந்துச்சு” என்றான் அவர்களது நண்பன்.

ஜெய்சிகா,“இன்னும் கதைகளைப் ப்ரூஃப் ரீடிங் பார்த்து முடிக்கலை தானே? அப்பறம் என்ன? மூனு மாசம் டைம் இருக்கு. அவங்ககிட்ட சொல்லிடு”

“இப்போ அது தான் பிரச்சினையே! அதுக்கப்புறமும் அவங்க அந்த வேலையைப் பார்க்கிறது சந்தேகம் தானாம்!” என்றுரைத்தான் ஹரித்.

“உஃப்! எல்லாமே இப்படியே நடந்தால், நாமளும் என்ன தான் பண்றது!” என்று ஆயாசமாக கூறினாள் அகஸ்தியா.

ஹரித்,“இதுக்கு வேற என்ன சொல்யூஷன் தேடுறது?”

“அந்த எஸ்.என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ் கம்பெனி ஆளுங்க கிட்ட காட்டுப் பார்ப்போமா?” என்று யோசனை தந்தான் ஹரித்.

எவ்வளவு தான், அவனை விட்டுத் தள்ளி இருந்தாலும், சாதுரியனிடமே தன்னை இழுக்கும் தன் விதியை எண்ணி நொந்து போன அகஸ்தியாவோ,”என்னமோ பண்ணுங்க!” என்று அவனிடம் விட்டேற்றியாக கூறினாள்.

“அது உனக்குப் பிடிக்கலைன்னா, வேண்டாம் தியா. கவர் ஃபோட்டோ ரெடி செய்ய வேற யாரையாவது பிடிப்போம்” என்று உறுதியாக உரைத்தாள் ஜெய்சிகா.

தனக்காக நண்பர்களும், எழுத்தாளர்களும் பாதிப்படைவதை விரும்பவில்லை அகஸ்தியா.

ஆதலால்,”அவங்களையே கான்டாக்ட் பண்ணிக் கேளுங்க. எனக்கு நோ பிராப்ளம் ஜெய்” என்று அவர்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டாள்.

ஜெய்சிகா,“ஆர் யூ ஷூயர்?” என்று அவளிடம் சந்தேகத்துடன் வினவினாள்.

“ம்ம்… எஸ். ஹரித்தே அவங்களுக்குக் கால் செஞ்சுப் பேசிக்கட்டும்” என்றாள் அகஸ்தியா.

உடனே தன்னுடைய அலைபேசியில், சாதுரியனுக்குக் கூப்பிட்டு விட்டான் அவளது நண்பன்.

அவனது எண்ணைக் கண்டதும்,’என்ன இவர் கால் பண்றாரு? ஓஹ்! ஃபர்ஸ்ட் எல்லாம் இவர் தானே பேசுவார்!’ என்று எண்ணியவாறு, அழைப்பை ஏற்று,”ஹலோ சார்” என்று பேசினான் சாதுரியன்.

“ஹாய் ப்ரோ! உங்ககிட்ட இருந்து எங்களுக்கு ஒரு ஹெல்ப் வேணுமே” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ஹரித்.

“ஹாங்! இட்ஸ் மை பிளஷர், என்னன்னு சொல்லுங்க?”

அதைக் கேட்டவனும், கதைகளுக்கான அட்டைப் படங்களைத் தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று அவனிடம் கேட்டுப் பார்க்க,

“யாஹ் ஷூயர்! டீடெயில்ஸ்ஸை அனுப்பி விடுங்க. நான் செஞ்சுத் தர்றேன் ப்ரோ” என்று உறுதி அளித்தான் சாதுரியன்.

“தாங்க்ஸ் ப்ரோ” என்றவன், அந்த தகவல்களை அவனுக்கு அனுப்பி வைத்து விட்டு,

“அவ்வளவு தான் முடிஞ்சது” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான் ஹரித்.

“ம்ஹூம்” என்று அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் அகஸ்தியா.

அதன்பிறகு தான், ஜா பதிப்பகத்தில் இருந்து தன்னிடம் உதவி கேட்கும் வேலையை முதலிலிருந்தே செய்பவன் ஹரித் என்பதும், அவன் இல்லாத நேரங்களில், மட்டும் தான், தன்னிடம் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறாள் அகஸ்தியா என்பதை புரிந்து கொண்டவன், இதற்குப் பிறகும், ஹரித் தான், அந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்யப் போகிறான் என்பதையும் உணர்ந்து கொண்டான் சாதுரியன்.

அவனிடம் எந்த உதவியையும் கேட்க வேண்டாம், பேச்சு வார்த்தையே வைத்துக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் எண்ணியவளுக்கோ, அன்று விழாவின் போது, சாதுரியனுடைய குறுஞ்சிரிப்பு மற்றும் மன்னிப்புக் கேட்டப் பாங்கும், இன்னும் மனக்கிடங்கில் இருந்து கொண்டு அவளைப் புன்னகைக்கச் செய்தது.

அந்த உணர்வைத் தான், அகஸ்தியாவால் தள்ளி வைக்க முடியவில்லை.

ஒரு நாளைய சந்திப்பு, தனக்குள் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை.

அதன் பிறகு, அவர்களுடைய வலைதளத்தில் தொடர்ந்து கதைகளை எழுதிக் கொண்டு இருந்தார்கள் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள்.

அதில் தன்மயாவும் தன்னுடைய இரண்டாவது கதையை ஜா வலைதளத்தில் எழுதிக் கொண்டு இருந்தாள்.

அந்தச் சமயத்தில், நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தன்னை வேலையில் வந்து சேரலாம் என்று தனக்கு வந்திருந்த வாழ்த்து அட்டையைத் தன் குடும்பத்தாரிடம் காண்பித்தான் பதுமன்.

“இதுக்காக தான் வெயிட் செஞ்சோம்” என்று நால்வரும் சேர்ந்து அவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

அவர்களுக்கு நன்றி கூறி விட்டுத் தன்னுடைய வேலை நேரத்தைப் பற்றித் தன் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டவனிடம்,”அப்போ இந்த வேலை உறுதி தானே ப்பா?” என்று மகனிடம் வினவினார் பவதாரிணி.

“ஆமாம்‌ மா. என்னோட தகுதிக்கு ஏத்த வேலை, சம்பளம்” என்று பதிலளித்தான் பதுமன்.

“நீ இதை எதுக்குக் கேட்கிறன்னு எனக்குத் தெரியும் பவா” என மனைவியிடம் சொன்னார் யுதிர்ஷ்டன்.

“எதுக்காக கேட்கிறாங்க ப்பா?” என்று அவரிடம் ஆர்வமாக கேட்டான் சாதுரியன்.

“அண்ணாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பொண்ணைப் பாக்க வேணாமா? அதுக்குத் தான் சாதுண்ணா” என்றுரைத்தாள் தன்மயா.

“ஓஹோ! உங்களுக்கு விருப்பம் தானே ண்ணா?” என்று அந்த தம்பியும் தங்கையும் வினவினார்கள்.

பதுமன்,”எஸ் டா” என்றதும்,

“இவனோட ஃபோட்டோவைத் தரகருக்கு அனுப்பி வைக்கப் போறேன்” எனக் கணவனிடம் கூறினார் பவதாரிணி.

“அப்படியே சாது அண்ணாவுக்கும் சேர்த்து பொண்ணுப் பாருங்க ம்மா! என்னோட ரெண்டு பிரதர்ஸோட மேரேஜ்ஜையும் ஒரே நேரத்தில் பார்க்கனும்னு எனக்கு ஆசையாக இருக்கு!” என்று தாயிடம் கூறி விட்டுத் தமையனைப் பார்த்துக் கண்ணடித்தாள் தன்மயா.

“நீ எங்கிட்ட உதை வாங்கப் போற!” என்று அவளது தலையில் செல்லமாக தட்டினான் சாதுரியன்.

“ஆமால்ல. இதுவும் நல்ல யோசனை தான்! உனக்கும் பார்த்துருவோம் டா” என்று அவனிடம் சொன்னார் யுதிர்ஷ்டன்.

“ப்பா! அதெல்லாம் இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேண்டாம்! பது அண்ணாவுக்கு மட்டும் பாருங்க!” என்று அலறினான் அவரது இரண்டாவது மகன்.

பவதாரிணி,“நீ ஏன் இப்போ அலறிட்டு இருக்கிற?” என்று விழிகள் இடுங்க கேட்டார்.

“ஹிஹி.. கொஞ்ச நாளைக்கு லைஃபை என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்பட்றேன் ம்மா! அதான்!” எனச் சொல்லி சமாளிக்கப் பார்த்தான் சாதுரியன்.

“ஆமாம் மா” என்று அவனுக்கு ஒத்து ஊதினாள் தன்மயா.

“இவங்க ரெண்டு பேரும் மட்டும் ஏதோ சீக்ரெட்டை மெயின்டெய்ன் செஞ்சிட்டு இருக்காங்க” என்று தன் பெற்றோரிடம் தெரிவித்தான் பதுமன்.

“அது கூடிய சீக்கிரமாகவே வெளியே வந்துரும் பாரு!” என்றார் யுதிர்ஷ்டன்.

“அப்படியெல்லாம் இல்லை ப்பா. நீங்க வேற!” என்று அவரிடம் கூறியவனை, தன்மயாவைத் தவிர மற்றவர்கள் சந்தேகமாகப் பார்த்து விட்டுப் போனார்கள்.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பத்தொன்பதாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...
 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 20

அதன் பிறகு, தான் சொன்னது போலவே, தங்களது மூத்த மகனானப் பதுமனுக்குப் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்து வைக்கும் விதமாக, அவனுடைய தற்போதைய புகைப்படத்தை தரகரிடம் அனுப்பி வைத்தவரோ, தனக்கு வரப் போகும் மனைவிக்கு இருக்க வேண்டிய பொதுவான குணாதிசயங்கள் மற்றும் கல்வித் தகுதியைப் பற்றி தன்னிடம் மகன் கூறியிருந்ததையும் அவருக்கு அனுப்பி விட்டு,

அதை மகனிடமும் சொல்லி வைத்து விட்டுத், தன்மயாவை தனியாக அழைத்து,”ஹேய் நீயும், சாதுவும், என்ன ரகசியத்தை மறைச்சு வச்சிருக்கீங்க?” என்று விசாரித்தார் பவதாரிணி.

அவர் அப்படி கேட்டதும், அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அதான் அப்போவே, அண்ணா சொன்னாரே ம்மா? எதுவுமே இல்லை!” என்று கூறிச் சமாளித்தவளுக்கோ, இந்த நேரம் பார்த்து தமையன் இங்கே இல்லையே என்று எண்ணிக் கொண்டே தாயிடம் ஏறுக்கு மாறாகப் பதில் சொல்லி முழித்துக் கொண்டு இருக்கிறாள் தன்மயா.

“பொய் சொல்லாதேடி! பொண்ணுப் பாருங்கன்னு சொன்னவுடனேயே ஏன் ஜெர்க் ஆனான்?” என்று அவளிடம் அதட்டிக் கேட்டார் பவதாரிணி.

அவருடன் இணைந்து கொண்ட யுதிர்ஷ்டனும்,”சொல்லுடா தனு! ஏதாவது லவ்வா?” என்று துருவிக் கேட்கவும்,

அவர்களிடம் உண்மையை மறுக்க முடியாமல் திணறிப் போனவளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்தில்,

“நேரம் வர்றப்போ அவனே சொல்லுவான் ம்மா, ப்பா! அதுவரைக்கும் பொறுமையாக இருப்போம்” என்றான் பதுமன்.

“ஆமாம் மா. இதைப் பத்தி உங்ககிட்ட அண்ணாவே பேச வேண்டிய சுவிட்சுவேஷன் வரும். அப்போ எல்லாமே சொல்லுவார்” என்று அவர்களுக்கு உறுதி அளித்தாள் தன்மயா.

அவள் அவ்வாறு கூறியதைக் கூர்ந்து கேட்டப் பெற்றோருக்கோ, தங்களுடைய இளைய மகனுக்கு ஏதோ காதல் உணர்வு வந்து விட்டது என்பது தெளிவாகப் புரிந்தது.

அதைச் சாதுரியனே சொல்லும் வரை காத்திருக்கவும், அதற்குள்ளாக, மூத்தவனுக்குத் திருமணம் செய்து வைத்து விடவும் முடிவு செய்தார்கள் இருவரும்.

அவர்களது உரையாடல்களைத் தன் தமையனுக்குக் குறுந்தகவலாக அனுப்பி வைத்து விட்டாள் தன்மயா.

இதையெல்லாம் அறியாதவனோ, தனது செல்பேசியை எப்போதோ சைலண்ட்டில் போட்டு விட்டு, ‘ஜா’ பதிப்பகம் தனக்களித்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

“பார்த்துப் பார்த்துப் பண்ற போலயே?” என்று அவனைக் கிண்டல் செய்தான் வராகன்.

“ஆமாம் டா. கஸ்டமரோட சேடிஸ்ஃபேக்ஷன் தானே நமக்கு ரொம்ப முக்கியம்!” என்று அவனுக்குப் பதில் கொடுத்தான் சாதுரியன்.

“ஓஹ் அப்படி! சரிப்பா” என்று கூறிச் சிரித்தான் நண்பன்.

“அவனே அகஸ்தியா பேசலைன்னு வருத்தத்தில் இருக்கான். நீ வேற ஏன்டா அவனைக் கிண்டல் பண்ணிட்டு இருக்கிற?” என்று அவனிடம் குறும்புடன் வினவினாள் கனிஷா.

“நான் ஏன் அப்படி இருக்கனும்? ஜாலியாகத் தானே வேலை பார்க்கிறேன்?” என்று தோழியிடம் கேட்டான் சாதுரியன்.

“உன்னைப் பார்த்தால் உள்ளே அழுதுட்டு வெளியே சிரிக்கிற மாதிரி இருக்கே!” என்றவளிடம்,

“அதெல்லாம் இல்லை கனி. அவங்களை டிஸ்டர்ப் செய்யாமல் என் வேலையைப் பாத்துட்டு இருப்பேன். அவங்களுக்கு என் நினைப்பு வரும் போது அகஸ்தியாவே என்னைக் கான்டாக்ட் பண்ணுவாங்கன்ற நம்பிக்கை இருக்கு!” என்று அவர்களிர் இருவரிடமும் தீர்க்கமாக உரைத்தான்.

“அவ்ளோ கான்ஃபிடென்ஸா? ம்ம்…! அதையும் பாக்கலாம் டா!” என்று கூறி விட்டார்கள் வராகன் மற்றும் கனிஷா.

சில நாட்களாக அவனது நடவடிக்கைகளை அவதானித்து விட்டுத் தான் நண்பனிடம் இவ்வாறு சம்பாஷித்தார்கள் இருவரும்.

அவர்களுக்கு உரிய பதிலைக் கொடுத்து விட்டுத், தானும் புன்னகையுடன் வேலையைத் தொடர்ந்தான் சாதுரியன்.

******************************

இதே சமயம், தன்னுடைய பெற்றோரிடம் சென்று நின்ற அகஸ்தியாவோ,

“என்னடா?” என்று அவளது தாயும், தந்தையும் வினவவும்,

“உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி ஷேர் செய்யனும்னு வந்திருக்கேன் ப்பா, ம்மா” என்று குணசுந்தரியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“என்னடா?” என்று அவர்களிருவரும் மகளிடம் கேட்டார்கள்.

தன் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டவளோ,”நம்ம சைட்டில் காம்படிஷன் நடத்துனோம்ல?” என்றாள் அகஸ்தியா.

“ஆமாம். அதுக்கென்ன?” என்று அவளிடம் வினவினார் உலகேசன்.

“அந்தப் போட்டியால் சைட்டில் நிறைய வேலை இருக்கும்னு எஸ். என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ் கம்பெனிக்காரவங்க கிட்ட கொடுத்தோம் ப்பா” என்று கூறியவள், தனக்கும், சாதுரியன் மற்றும் தன்மயாவிற்கும் இடையே நிகழ்ந்தவற்றைத் தன் பெற்றோரிடம் விளக்கிக் கூறினாள் அவர்களுடைய மகள்.

அதைப் பொறுமையாக கேட்டுக் கொண்ட குணசுந்தரியும், அவரது கணவரும்,”சோ, இப்போ அந்தப் பையன் உனக்கு ஏதாவது பிரச்சினை கொடுக்கிறாரா?” என்று அவளிடம் நிதானமாக கேட்டனர்.

“ஊஹூம்” எனத் தெளிவாக மறுத்து தலையசைத்தாள் அகஸ்தியா.

“அப்பறம் என்னம்மா?” என்று அவளிடம் விசாரிக்க,

“ஃபங்க்ஷனில் அவர் எங்கிட்ட சாரி கேட்டாரே? அதுவே மனசுக்குள்ளே அப்பப்போ வந்துட்டுப் போயிட்டே இருக்கு! இந்த ஃபீல் நல்லதா, கெட்டதான்னுக் கூடத் தெரியலை. இப்படி படிச்சு, வேலை பார்த்துட்டுக், கதை எழுதி, ஒரு பப்ளிகேஷனுக்கு ஓனராக இருந்துட்டு, நான் இதையெல்லாம் நினைச்சுக் குழம்பிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால், இதில் என்னால் எந்த முடிவையும் எடுக்கவே முடியலை!” எனத் தவித்துப் போய்க் கூறிய மகளுடைய கையைப் பாசத்துடன் வருடிக் கொடுத்துக் கொண்டே,

“உன்னைப் பொறுத்தவரைக்கும் இந்த ஃபீல் அடுத்தக் கட்டத்துக்குப் போகனும்னுத் தோனுதா தியா?” என்று கேட்டார் குணசுந்தரி.

“அடுத்தக் கட்டம்னா? புரியலை ம்மா?” என்று அன்னையிடம் பாவமாக வினவினாள் அகஸ்தியா.

“அந்தப் பையன் மேல உனக்கு லவ் வர்ற மாதிரி இருக்கா?” என்று மகளிடம் நேரடியாகவே விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிவெடுத்தார்கள் அவளது பெற்றோர்.

அதைக் கேட்டதும், சில கணங்கள் பேசாமடந்தையாகி விட்டவள்,”லவ் வந்தால் தப்பா?” என்று அவர்களிடம் கேட்கவும்,

“நமக்கு ஒருத்தர் மேல லவ் வர்றதும், வராததும் எதிர்பாராமல் நடக்கிறது டா. அதே மாதிரி, நாம லவ் பண்ற பர்சன் எந்த மாதிரியான ஆளாக இருக்கனும்ன்றதுல தான் நீ தெளிவாக முடிவெடுக்கனும்! அந்த சாதுரியன் உங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை எல்லாம் யோசிச்சுப் பாரு. அதில் ஒரு விஷயம் முரணாக உனக்குப் பிடிக்காமல், கம்ஃபர்டபிள் ஆக இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக அந்த உணர்வை அப்படியே மறக்கடிச்சிரு!” என்று தங்கள் புத்திரிக்கு அறிவுரை வழங்கினர் குணசுந்தரி மற்றும் உலகேசன்.

“சரி ப்பா, ம்மா. தாங்க்யூ” என அவர்களுக்கு நன்றி தெரிவித்தவளுக்கு, இப்போது ஒரு தெளிவான யோசனை கிடைத்து விட்டது. அதனால் சற்று அமைதி அடைந்தாள் அகஸ்தியா.

*****************************

தனது வேலையை முடித்து விட்டு, செல்பேசியை எடுத்துப் பார்த்த சாதுரியனுக்குத் தங்கையிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி சிறிய நெஞ்சு வலியைக் கொடுத்தது போலானது.

“அடேய்! இங்கே பாருங்க!” என்று தன் நண்பர்களிடமும் அதைக் காட்டவும்,

அந்தக் குறுந்தகவலைப் பார்த்த இருவரும்,“ஹாஹா! சூப்பர்! உங்க அப்பாவும், அம்மாவும் ரொம்ப ஷார்ப் டா!” என்று கூறிச் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

“என்ன சிரிக்கிறீங்க! ஏதாவது ஐடியா கொடுங்க டா!” என அவ்விருவரிடமும் கேட்டான் சாதுரியன்.

“என்னன்னு ஐடியா கொடுக்கிறது? அவ்ளோ தான் நீ அவங்ககிட்ட சிக்கிட்ட!” என்றான் வராகன்.

“ஹைய்யோ! தனு தான் போட்டுக் கொடுத்துட்டா!” என்று அவர்களிடம் நடந்ததை விவரித்தான் சாதுரியன்.

அதைக் கேட்டு மேலும் விழுந்து விழுந்து சிரித்தனர் அவனது நண்பர்கள்.

“அமைதியாக இருங்க!” என அவர்களை அடக்கியவனிடம்,

“நீ இன்னும் அகஸ்தியா கிட்டயே ஒழுங்காக பேசலை! அதுக்குள்ளே உன் லவ்வுக்கு ஆப்பு வச்சாச்சா?” எனக் கேட்டாள் கனிஷா.

சாதுரியன்,“ஹூம்! எல்லாருமே சூனியமாக வச்சா, நான் என்ன தான் பண்றது?” என்று கூறிச் சலித்துக் கொண்டான்.

“நாங்க இல்லை ப்பா. உன் தங்கச்சி மட்டும் தான் சூனியம் வச்சது!” என்றான் வராகன்.

“சரி விடு. பது அண்ணாவோட கல்யாண வேலையில் தான் இப்போ எல்லாரும் கவனமாக இருப்பாங்க. சோ, அதெல்லாம் முடிச்சிட்டு, ஃப்ரீ ஆனதுக்கு அப்பறமா அவங்ககிட்ட பொறுமையாக எடுத்துச் சொல்லிடு” என்று அவனுக்கு நல்லதொரு அறிவுரை கூறினாள் கனிஷா.

“ஓகே ஃப்ரண்ட்ஸ். லெட்ஸ் சீ! (Let's see)” என்று கூறி விட்டு வீட்டிற்குப் போய்த் தன்மயா மற்றும் பதுமனிடம் உரையாடிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டு ‘ஜா’ பதிப்பகத்தின் கதைப் புத்தகங்களுக்கான அட்டைப் படங்கள் அனைத்தையும் செய்து முடித்தான் சாதுரியன்.

இவ்வாறாக, இவனது வீட்டிலோ, தங்கையின் மூலமாக விஷயம் கசிந்தாலும், அதை இப்போதைக்கு ஆறப் போட்டு விட்டிருந்தான். ஆனால், தன் பெற்றோரிடம் எல்லா விஷயங்களையும் ஒப்புவித்து அதற்கான தீர்வுகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாள் அகஸ்தியா.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"நீ இல்லா இடமும் எனக்கேது?" கதையோட இருபதாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 21

“என்ன தனு இப்படி ஆகிடுச்சு?” என்று தங்கையிடம் கூறினான் சாதுரியன்

அவன், தன்மயா மற்றும் பதுமனும் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு தீவிரமாக உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

“ஆமா ண்ணா. நான் தான் அவசரக் குடுக்கையாக நடந்துக்கிட்டேன்! சாரி” என்று குறுகிப் போய் அவனிடம் மன்னிப்பு வேண்டினாள் அவனது தங்கை.

“இட்ஸ் ஓகே டா” என்று அவளைச் சமாதானப்படுத்தியனோ, தனது நண்பர்களிடம் உரையாடிய விஷயங்களைத் தன்மயா மற்றும் பதுமனிடம் கூறினான் சாதுரியன்.

“அப்போ என் கல்யாணம் எப்போ நடக்கப் போகுதுன்னு நீங்க ரொம்ப ஆர்வமாக இருக்கீங்க! அப்படித் தான?” என்று அவர்களிடம் பொய்க் கோபத்துடன் வினவினான் அவர்களது தமையன்.

“இதுக்காகத் தான், நாங்க உங்களோட கல்யாணத்தை எதிர்பார்த்துட்டு இருக்கோம்ன்னு இல்லை அண்ணா. நம்ம வீட்டில் நடக்கப் போகிற முதல் விசேஷம்! அதுவும், உங்களோட கல்யாணம் தான் எங்களுக்கு முதல்ல சந்தோஷம் கொடுக்கிற விஷயம். அதுக்கப்புறம் தான், அகஸ்தியாவோட விஷயத்தைப் பார்ப்போம்!” என அவனிடம் தெளிவாக விளக்கிக் கூறினர் இளையவர்கள் இருவரும்.

“ஹேய்! நான் சும்மா கேட்டேன் டா. எனக்கு உங்களைப் பத்தி தெரியாதா என்ன?” என்று கூறி விட்டு,“என்னோட கல்யாணம் முடிஞ்சதும் உன்னோடதை ஆரம்பிச்சுரு. ரொம்ப நாளைக்கு இழுத்தடிச்சுடாதே!” எனத் தன் தம்பிக்கு வலியுறுத்தவும் செய்தான் பதுமன்.

“கண்டிப்பாக அண்ணா!” என்று அவனுக்கு வாக்கு கொடுத்தான் சாதுரியன்.

“ஹலோ பிரதர்ஸ்! இன்னும் கொஞ்ச நேரம் நாம் இப்படியே பேசிட்டு இருந்தால், என்ன ரகசியம்ன்னுக் கேட்டு இங்கே நம்ம அம்மாவும், அப்பாவும் வந்துருவாங்க! வாங்க போகலாம்” என்று தன்னிரண்டு தமையன்களையும் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் தன்மயா.

தங்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஹரித்தும், ஜெய்சிகாவும், தோழியிடம் ஒரு நல்ல செய்தியைக் கூற விழைந்தார்கள்.

“இன்னைக்கு என்ன ஆட்டம் பாம்மை (Atom bomb) எடுத்துட்டு வந்திருக்கீங்க?” என்று அவர்களிடம் வினவிய தோழியிடம்,”எப்படியும் கதைகளைப் புக்ஸ் ஆகப் போட மூனு மாசம் ஆகும் தான? அதனால், நாம ஒரு பிளான் வச்சிருந்தோம். ஞாபகம் இருக்கா?” என்றார்கள்.

அகஸ்தியா,“நாம நிறைய பிளான் போட்டு இருந்தோமே! அதில் இப்போ நீங்க சொல்ல வர்றது எதைப் பத்தி?”

“எல்லா ரைட்டர்ஸ் அண்ட் ரீடர்ஸை நம்மப் பப்ளிகேஷனுக்கு வர வச்சு, சுத்திக் காட்டுறது!” என்றுரைத்தான் ஹரித்.

“ஓகோ! அதுக்கு இப்போ என்ன அவசரம் டா? நாம இன்னும் ஃபேமஸே ஆகலை! புக்ஸ் எல்லாம் பப்ளிஷ் ஆனதுக்கு அப்பறம் கூட அதைச் செய்யலாமே?” என்றாள் அகஸ்தியா.

“அது தான் விஷயமே! நம்மளோட பப்ளிகேஷனுக்குப் புரமோஷன் செஞ்சா தான், அது ஃபேமஸே ஆகும்! அப்போ தான், நம்மளோட பப்ளிகேஷனைப் பத்தி நிறைய ரைட்டர்ஸ் அண்ட் ரீடர்ஸூக்குத் தெரியும். அதுக்கு இதைத் தான் செஞ்சாகனும் தியா” என்று அவளிடம் விஷயத்தைச் சொன்னாள் ஜெய்சிகா.

“நீங்க ரெண்டு பேரும் மட்டும் இதையெல்லாம் பேசி வச்சிட்டு எங்கிட்ட கடைசியாக வந்து சொல்றீங்கள்ல?” என்று தன் தோழமைகளிடம் குறைபட்டுக் கொண்டாள் அவர்களது நண்பி.

“அதுக்கு எங்களை மன்னிச்சுக்கோமா!” எனத் தங்களது இரண்டு காதுகளையும் கைகளால் பற்றிக் கொண்டு அவளிடம் மன்றாடினர் இருவரும்.

அகஸ்தியா,“ஓகே! போதும், போதும்!” என்று பிகு செய்தவளோ,”அப்படியே எல்லா அரேன்ட்ஜ்மெண்ட்ஸையும் நீங்களே செஞ்சுட்டா நல்லா இருக்கும்” என்று கூறினாள்.

ஜெய்சிகா,“நாங்க அதைப் பண்ணினால் தான், உனக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துருமே!” என்று கூறி விட்டு அவளது மறுமொழிக்காகப் பயத்துடன் காத்திருந்தனர் அவளுடைய நண்பர்கள்.

“அப்போ ஏதோ கோக்கு மாக்கு வேலைப் பார்க்கப் போறீங்களா?” என்று பெருத்த ஐயத்துடன் வினவினாள் அவர்களது தோழி.

ஹரித்,“என்னப் பெருசாகப் பண்ணிடப் போறோம்? எப்படியும் ரைட்டர்ஸ் லிஸ்ட்டில் தன்மயா இருப்பாங்க. அதனால் அவங்களோட பிரதர் கண்டிப்பாக வருவார். அதே மாதிரி, சாப்பாடு போட முடியாது. அதனால், டீ, காஃபி அண்ட் ஸ்நாக்ஸ் மட்டும் கொடுக்கப் போகிறதால், அதுக்கு அந்தக் கனிஷா பொண்ணோட ஹோட்டலில் தான் ஆர்டர் தரப் போறோம்! சோ, நீ தான் எல்லா இடத்திலேயும் லாக் ஆகப் போற!” என்று அவளிடம் சொன்னான்.

“ஸ்ஸோ! ஏன்டா இப்படி பண்றீங்க?” என அவர்களை முறைத்துப் பார்த்தாள் அகஸ்தியா.

“எங்களுக்கு வேற வழியே தெரியலையே ஆத்தா!” என்று தோழியிடம் உரைக்கவும்,

“ஊஃப்! என்னமோ செய்யுங்க! ஆனால், அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் ஆகிடக் கூடாது!” என்று அவர்களிடம் அறிவுறுத்தினாள்.

அதன் பிறகு, அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த தடவை, வலைதள அலுவல் விஷயமாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தைப் பேசித் தெளிவு செய்வதற்காகச் சாதுரியனுக்கு அலைபேசியில் அழைத்து விட்டு,”ஹலோ” எனவும்,

“ஹாய் மேம்!” என்று அவள் அழைத்ததால் வந்த உற்சாகத்தை மறைத்துக் கொண்டு பேசினான்.

“நான் எதுக்கு உங்களுக்குக் கால் செஞ்சேன்னா…” எனத் தொடங்கியவளை இடைமறித்து,”எனக்குத் தெரியும் மேம். புக்ஸூக்குக் கவர் ஃபோட்டோஸ் எல்லாம் ரெடியாக இருக்கு. அனுப்பி விடவா?” என்று அவளிடம் வினவினான் சாதுரியன்.

அகஸ்தியா,“உங்களோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சார்? நான் அதைப் பத்திப் பேச வரலை” என்று கூறிக் குறுநகை புரிந்தாள்.

“ஓஹோ! பார்றா! என்ன விஷயம் மேம்?” என்றவனிடம்,

“நாங்க எங்களோட பப்ளிகேஷன் ஃபேமஸ் ஆகுறதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கோம். அதை உங்ககிட்ட சொல்றேன். அதில் நீங்க என்னப் பண்ணனும்னு நான் சொல்லலாமா?” என்று அவனிடம் அனுமதி கேட்டாள் பெண்ணவள்.

“முதல்ல உங்களுக்கு ஆல் தி பெஸ்ட்! இப்போ என்ன விஷயம்னு சொல்லுங்க” என்று அவளுக்கு ஒப்புதல் அளித்தான் சாதுரியன்.

“நாங்க ஒரு மீட் - அப் வைக்கப் போறோம்!” என்று ஆரம்பித்து, தங்களது யோசனையை அவனிடம் கூறி முடித்தாள் அகஸ்தியா.

“இது நிஜமாகவே நல்ல விஷயம்! எல்லாத்தையும் நேர்மையான முறையில் பண்றீங்க! அதுக்கே உங்களைப் பாராட்டனும்!” என்று அவளையும், அவளது தோழமைகளையும் புகழ்ந்தான்.

“எஸ் தாங்க்யூ! இதில், நீங்க உங்களோட தங்கச்சி தன்மயா கூட சேர்ந்து இங்கே வரலாம். அதுக்கு நோ அப்ஜெக்ஷன்! உங்க ஃப்ரண்ட் கனிஷாவோட ஹோட்டலில் தான் ரெஃப்ரெஷ்மெண்ட்டுக்குப் பிளான் செஞ்சிருக்கோம்! சோ, அதுவும் எனக்குப் பிராப்ளம் இல்லை! ஆனால்…” என்று கூறி நிறுத்தினாள்.

சாதுரியன்,“ம்ம்… மேலே சொல்லுங்க!” என்று அவளை ஊக்கினான்.

“அங்கே வந்ததுக்கு அப்பறம், நீங்களும் கனிஷாவும் சேர்ந்துக்கிட்டு, எங்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் தெரியாது! அதுவுமில்லாமல், தன்மயாவைக் காட்டி, நானும், இவளும், அண்ணன், தங்கச்சி தான்! ஆனால், நீங்க இன்வைட் செஞ்சது கடைசி நிமிஷத்தில் தான் எங்களுக்கே தெரியும்ன்னுக் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கக் கூடாது! டீலா?” என்று அவள் கேட்டதும்,

உடனேயே அவனுக்குச் சிரிப்பு குபுக்கென்று பொத்துக் கொண்டு வந்து விட்டது.

அந்த சத்தத்தை அவளுக்குக் கேட்காமல் பார்த்துக் கொண்டான் சாதுரியன்.

“ஹலோ எக்ஸ்கியூஸ்மீ!” என அவனை அழைத்தாள் அகஸ்தியா.

“க்கும்! ஷூயர் மேம். நாங்க அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்! ஒரு ரைட்டர் வீட்டில் இருந்து எத்தனைப் பேர் வரலாம்?” என்ற கேள்வியைக் கேட்டான்.

“இரண்டு பேர் அலவ்ட் சார்” என்று அவனிடம் தெரிவிக்கவும்,

“சூப்பர். தாங்க்ஸ் மேம்” என அவளுக்கு நன்றி கூறினான் சாதுரியன்.

“சரி. நான் சொன்னதெல்லாம் ஞாபகத்தில் இருக்கட்டும்” என்றவளிடம்,

“உங்கப் பேரன்ட்ஸூம் வருவாங்களா?” என்று வினவினான்.

“ஜெய்யோட அம்மா, அப்பறம் என்னோட அப்பா, அம்மாவும் மட்டும் தான் வருவாங்க சார்” எனப் பதில் சொன்னாள் அகஸ்தியா.

“செம்ம! அப்போ நானும், தங்கச்சியும், கண்டிப்பாக வந்துட்றோம் மேம்”

“நிச்சயமாக வாங்க!” என்று கூறி விட்டு, அழைப்பைத் துண்டித்தவளைப் பற்றி, எண்ணியவனுடைய இதழ்களோ, தாமாக விரிந்து கொண்டது.

இங்கே தனது அதட்டல், உருட்டலுக்கு, குரலை உயர்த்தாமல், புன்னகை செய்தவாறே பதில் சொன்ன சாதுரியனை மீண்டும் சந்திக்க ஆவல் கொண்டாள் அகஸ்தியா.

தங்கள் இருவருடைய உரையாடலையும் மனதில் ஓட்டிப் பார்த்தவளுக்குத் தன் பெற்றோர் கொடுத்த அறிவுரை தான் ஞாபகத்தில் வந்தது.

தன்னிடம் போலியில்லா தன்மை மற்றும் நேர்மையான வார்த்தைகளைப், பிரயோகித்துப் பேசியவனை, மற்றுமொரு முறை பார்க்கத் தான், தோன்றியதே தவிர, அவனது பேச்சைக் கேட்டு எங்காவது ஓட வேண்டும் என்றோ, அடுத்து அவன் அழைத்தால் அதை எடுக்கவே கூடாது என்ற எண்ணங்கள் அவளுக்குச் சத்தியமாக ஏற்படவில்லை.

எனவே, அடுத்த முறை அவனைச் சந்திக்கும் போது, சாதுரியனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள முடிவெடுத்தவள்,

அந்த ஏகாந்த நினைவுகளுடன் உழன்று கொண்டே, தங்களது பதிப்பகத்திற்கு வருமாறு தங்கள் வலைதளத்தில் கதைகளை எழுதிக் கொண்டு இருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் அவற்றை வாசிக்கும் வாசகர்களை வரவேற்கும் விதமாக அதிகாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றிருக்கும் அறிக்கையை அனுப்பி வைத்து விட்டாள் அகஸ்தியா.

அதைக் கண்டவுடன், தான் குதித்துக் கொண்டிருக்க, அதைக் குறுஞ்சிரிப்புடன் நோக்கிய தமையனைச் சந்தேகத்துடன் பார்த்தாள் தன்மயா.

“என்னம்மா?” என்று தங்கையிடம் கேட்டான் சாதுரியன்.

“நீ என்ன ண்ணா இவ்வளவு சாதாரணமாக நிற்கிற? இந்நேரம் நீயும் எனக்குச் சரிக்குச் சமமாக குதிச்சிருக்கனுமே?” என்றாள் இளையவள்.

“இப்போ அவன் எதுக்குக் குதிக்கனும்?” என்று மகளிடம் வினவினார் பவதாரிணி.

“அம்மா!” என்று அண்ணனும், தங்கையும் திருட்டு முழி முழித்தார்கள்.

“சொல்லுங்க டா!” என்று தன் பிள்ளைகள் இருவரையும் அதட்டிக் கேட்கவும்,

“எனக்கு இன்னொரு இன்விடேஷன் வந்திருக்கு ம்மா” என்று அவரிடம் உற்சாகமாக கூறினாள் தன்மயா.

“அதெப்படி வந்திருக்கும்? நான் ஹாலில் தானே உட்கார்ந்து இருந்தேன். எந்தப் போஸ்ட்டும் வரலையே?” என்றார் பவதாரிணி.

“மெசேஜ்ஜில் அனுப்பி இருக்காங்க ம்மா” என்று தாயிடம் தன் செல்பேசியைக் காட்டிச் சொன்னாள் அவரது மகள்.

அதை வாங்கி வாசித்துப் பார்த்தவரோ,”ஹேய் சூப்பர்! அங்கே வந்து நானும் நிறைய புக்ஸ்ஸை வாங்கப் போறேன். அதனால், இந்த தடவை நாம போயிட்டு வரலாம்” என்று குதூகலித்தவாறே அவளிடம் உரைத்தார் தன்மயாவின் அன்னை.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍
இந்த இருபத்தி ஒன்றாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 22

அவர் கூறியதைக் கேட்டதும், தன் அண்ணனைத் தான் பார்த்தாள் தன்மயா.

ஆனால், அவனோ எந்தவித முகச்சுணக்கமும் இன்றி,”சரிம்மா” என்கவும்,

‘இதெப்படி சாத்தியம்?’ என அவனுடைய சுபாவத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவளோ,”அண்ணா! அப்போ நீங்க வரலையா?” என்று அவனிடம் வினவினாள் தங்கை.

“நானும் தான் வர்றேன் ம்மா” என்று புன்னகைத்தபடியே உரைத்தான் சாதுரியன்.

“அது எப்படி முடியும் டா?” என்றான் பதுமன்.

“அங்கே நானும் இவங்க கூட போகலாம் ண்ணா. ரைட்டரோட ஃபேமிலி மெம்பர்ஸில் இரண்டு பேர் கூட வரலாம்னு அவங்க இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க ண்ணா” என்று தமையனிடம் உரைத்தான்.

அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தன்மயாவோ,”இதை உங்ககிட்ட எப்போ சொன்னாங்க ண்ணா? இன்விடேஷனே இப்போ தானே வந்திருக்கு?” என்று அவனிடம் வியப்புடன் கேட்டாள் தங்கை.

இவர்களது சம்பாஷணைகளை அமைதியாக கேட்டு கிரகித்துக் கொண்டிருந்தார் அவர்களுடைய அன்னை பவதாரிணி.

“ஆமாம் தனு. ஆனால், அவங்க டீ, காஃபி அண்ட் ஸ்நாக்ஸூக்கு, கனியோட ஹோட்டலில் தான் ஆர்டர் செய்யப் போறாங்களாம். அதுக்காக கால் செஞ்சுப் பேசின அப்போ இதெல்லாம் சொன்னாங்க” என்று அவளிடம் விளக்கினான் சாதுரியன்.

“ஓகோ! அப்போ சரி ண்ணா” என்று தனது சந்தேகத்தை அன்னையின் முன்னால் பேசாமல், கேட்காமல் மறைத்துக் கொண்டாள் தன்மயா.

ஆனால், பவதாரிணியோ, அம்மூவரையும் தான், அழுத்தமானப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

உடனே சுதாரித்துக் கொண்டனர் அவரது மூன்று பிள்ளைகளும்.

தன்மயா,”டேட் அண்ட் டைம் சொல்றேன் ம்மா‌. அங்கே என்னோட புக்ஸ் இப்போ வந்திருக்காது. மத்தவங்களோடதை வாங்கிக்கோங்க” என்று தாயிடம் சொன்னாள்.

“ம்ம். வாங்கிடலாமே!” என்று குறுநகை புரிந்தார் பவதாரிணி.

“அப்போ நாம மூனு பேரும் போயிட்டு வந்துடலாம் மா” என்று கூறி அந்தப் பேச்சு வார்த்தையை முடித்து வைத்தான் சாதுரியன்.

“ஏங்க! நம்ம மூனு பிள்ளைங்களும் எதையோ மறைக்கிறாங்கன்னு பேசிக்கிட்டோம்ல?” என்று தன் கணவனிடம் வினவினார் பவதாரிணி.

“ஆமாம் மா. அது என்னன்னு தான் அவங்க சொல்ல மாட்டேங்குறாங்களே!” என்றார் யுதிர்ஷ்டன்.

“அது என்னன்னு எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ங்க” என அவர்களுடனான உரையாடலைப் பற்றி அவரிடம் கூறினார் மனைவி.

“ஓஹோ! அப்போ, நீ அந்தப் பப்ளிகேஷனுக்குப் போனால், எல்லாமே தெரிஞ்சிரும்! அப்படித் தானே ம்மா?” என்று அவரிடம் கேட்டார் கணவன்.

“ம்ஹ்ம்… சரி வாங்க‌. சாப்பிடப் போகலாம்” என்று அவரை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளிற்குச் சென்றார்கள் இருவரும்.

அங்கே மூவரும் தங்களுடன் பேசிக் கொண்டு இருக்க, இவர்களைப் பார்த்ததும் வரவேற்கும் விதமாகப் புன்னகை புரிய, தங்களது இருக்கையில் அமர்ந்தனர் யுதிர்ஷ்டன் மற்றும் பவதாரிணி.

“மூனு பேரும் இப்படி ஒத்துமையாக இருக்கிறதைப் பார்த்தால் சந்தோஷமாகத் தான் இருக்கு” என்று கூறி விட்டு உணவை உட்கொண்டார்கள் அவர்களது பெற்றோர்.

“தாங்க்ஸ் ம்மா” என்று சொல்லிச் சிரித்தார்கள் மூவரும்.

இந்நேரத்தில், தந்தையிடம் அனைத்தையும் கூறி இருப்பார் தங்களது அன்னை என்பதை சாதுரியன், தன்மயா மற்றும் பதுமனுக்குப் புரிந்து விட்டிருந்தது.

அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், உணவுண்டு முடித்திருந்தார்கள்.

************************************

“ம்மா, ப்பா! இது தான், போட்டிக் கதைப் புக்ஸ்ஸோட கவர் ஃபோட்டோஸ்!” என்று தன் தந்தை மற்றும் அன்னையிடம் அவற்றைச் செல்பேசியில் காண்பித்தாள் அகஸ்தியா.

அவளுடனான சம்பாஷணை முடிந்ததுமே, அந்த அட்டைப் படங்களின் புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி வைத்திருந்தான் சாதுரியன்.

அதைத் தான், தன் பெற்றோரிடம் காட்டிக் கூறிக் கொண்டு இருந்தாள் அவர்களுடைய மகள்.

“சூப்பர் டா” என்று அவளைப் பாராட்டினர் உலகேசன் மற்றும் குணசுந்தரி.

“நீங்க ஏன் பப்ளிகேஷனுக்கு வர மாட்டேங்குறீங்க?” என்றாள்.

“அன்னைக்குத் தான், நம்ம சொந்தத்தில் ஒரு கல்யாணம் இருக்குடா ம்மா. இல்லைன்னா நான் அங்கே வராமல் இருப்பேனா?” என்று மகளிடம் சொன்னார் உலகேசன்.

“சரிப்பா. நீங்கப் பத்திரமாகப் போயிட்டு வாங்க” என்று அவரிடம் கூறியவள், தன் நண்பர்கள் இருவருக்கும் அந்த அட்டைப் படங்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து விட்டாள் அகஸ்தியா.

அவர்களும் அவற்றைப் பார்த்து திருப்தி அடைந்து விட்டு, அந்தப் புகைப்படங்களையே புத்தகங்களின் இரண்டு பக்கங்களிலும் அச்சடிக்க ஒப்புக் கொண்டார்கள் ஜெய்சிகா மற்றும் ஹரித்.

அத்தோடு, கனிஷாவின் தந்தையான கேசவனுக்கு அழைத்து, தங்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள் மற்றும் பானங்களின் வகைகளைச் சொல்லி வைத்து விட்டார்கள்.

“எல்லாமே இருக்கு ப்பா. கண்டிப்பாகச் சரியான நேரத்துக்குக் கொண்டு வந்துருவோம்” என அவனுக்கு உறுதி அளித்தார்.

எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும், தாங்கள் சொன்ன நேரத்திற்கு வருமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.

அதேபோலவே, தங்களுடைய குடும்ப உறுப்பினர்களையும், வரச் சொல்லி விட்டனர் அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்.

இதற்கிடையில், பதுமனுடைய புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தப் பெண் வீட்டாரிடம் இருந்து சாதகமான பதில் வந்திருக்கவும், அந்தப் பெண்ணின் புகைப்படமும், தங்களிடம் இருந்ததால்,

‘ஜா’ பதிப்பகத்திற்குச் சென்று வந்தப் பிறகு, அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் போய்ப் பார்த்து விட்டு வர முடிவு செய்தார்கள் அனைவரும்.

“ஏன் ம்மா, நம்மப் பப்ளிகேஷனுக்கு அந்த ரைட்டர் தன்மயாவோட வீட்டில் இருந்தும் வருவாங்க தானே?” என்று மகளிடம் விசாரித்தார் குணசுந்தரி.

“ஆமாம் மா” என்றாள் அகஸ்தியா.

“அப்போ அந்தப் பையனும் வருவானா?” என்று வினவினார் அவளது அன்னை.

“யாரு சாதுரியனா ம்மா? கண்டிப்பாக வருவார்!” என்று அவருக்குப் பதிலளித்தாள் மகள்.

“அப்படியே அந்த வீட்டுப் பெரியவங்க யாராவது வந்தால் நல்லா இருக்கும்” என்று குறிப்பாக அவளிடம் உணர்த்தினார் குணசுந்தரி.

அதைக் கேட்டு வியப்புடன் அங்கிருந்து அகன்றாள் அகஸ்தியா.

தன் நண்பர்களான கனிஷா மற்றும் வராகனிடம், எல்லாவற்றையும் ஒப்புவித்து முடித்தவனிடம்,”அப்பறம் என்னடா? அவங்க தான், உன் மேல இருக்கிற, கோபத்தை எல்லாம் விட்டுட்டுப் பேசியாச்சே! நல்லபடியாகப் போயிட்டு, என்ஜாய் செய்துட்டு வாங்க” என்று அவனுக்கு அறிவுறுத்தினார்கள் இருவரும்.

“ஷூயர்! அப்பா கூட நீயும் வருவ தானே கனி?” எனத் தோழியிடம் கேட்டான் சாதுரியன்.

“இல்லை டா. அவரும், மத்த ஆளுங்களும் தான் அங்கே வர்றதாக இருக்காங்க. நான் நம்ம ஆஃபீஸில் தான் வேலை பார்க்கப் போறேன்” என்று அவனிடம் விவரித்தாள் கனிஷா.

“இந்த தடவை நாங்க யாருமே வரப் போறது இல்லைடா. நீயும், அம்மாவும் அங்கே போய் அகஸ்தியாவையும், அவங்களோட அம்மாவையும் பார்த்துப் பேசிட்டு வாங்க” என்று அவனிடம் உறுதியாக உரைத்தான் வராகன்.

“ஓகேடா” என்று அவர்களிடம் கூறி விட்டான் சாதுரியன்.

*******************************

காலை வேளையில்,

“நீங்க மூனு பேரும் எப்போ கிளம்புறீங்க ம்மா?” என மனைவியிடம் கேட்டார் யுதிர்ஷ்டன்.

“உங்களையும், பதுவையும் ஆஃபீஸூக்கு அனுப்பி வச்சிட்டுக் கிளம்பிடுவோம் ங்க” என்றவாறு கணவனுடைய உடையை இஸ்திரி போட்டார் பவதாரிணி.

“சரி பவா. பார்த்துக் கவனமாகப் போயிட்டு வாங்க. இந்த எல்லா விஷயத்துக்கும் நானும் உங்க கூட வரனும்னு நினைக்கிறது. ஆனால் முடியவே மாட்டேங்குது. நம்மப் பையனுக்குப் பொண்ணுப் பார்க்கிற அன்னைக்குக் கண்டிப்பாக வர்றேன்” என்று மனைவியிடம் தீர்க்கமாக கூறினார் அவரது கணவர்.

“பரவாயில்லை ங்க. உங்க வேலையைப் பத்தி எங்களுக்கும் தெரியும். அதெல்லாம் தனு எதுவும் நினைச்சுக்க மாட்டா” என்று அவருக்குப் புரிய வைக்கவும், மனைவிக்கு நன்றி கூறி விட்டு, அவர் இஸ்திரி பண்ணிக் கொடுத்த உடையை வாங்கி அணிந்து கொண்டுத் தன் வேலைக்குக் கிளம்பிப் போய் விட்டார் யுதிர்ஷ்டன்.

அவர் சென்ற பின்பு, தன்னுடைய காலை உணவையும் முடித்துக் கொண்டு, அலுவலகத்திற்குச் சென்றான் பதுமன்.

அதன்பிறகு, தன் மகள் தன்மயா மற்றும் சாதுரியனுடன், ‘ஜா’ பதிப்பகத்திற்குச் செல்லத் தயாரானார் பவதாரிணி.

எப்போதும் போலவே, ‘ஜா’ பதிப்பகத்திற்குத், தன் மகளுடன் செல்வதற்காகத், தயாராகிக் கொண்டு இருந்தார் சீதாதேவி.

“ம்மா! ரெடியா?” என்று அவரிடம் கேட்டாள் ஜெய்சிகா.

“ஆங்! ஆமா ஜெய்! நீ கிளம்பிட்டியா?” என்று அவளிடம் வினவினார் அன்னை.

“எஸ் ம்மா. போகலாம்” என்று அவருடன் கிளம்பிச் சென்றாள் ஜெய்சிகா.

ஹரித்தின் வீட்டிலோ, வழக்கம் போல, தன் அன்னை ஜமுனாவுடன் தான், பதிப்பகத்திற்குப் போனான் ஹரித்.

காரிலிருந்து இறங்கிய சாதுரியன், தன்மயா மற்றும் அவர்கள் இருவருடைய அன்னை பவதாரிணியும், ‘ஜா’ பதிப்பகத்திற்குள் நுழைந்தார்கள்.

அவர்களுக்கு முன்னரே, அவ்விடத்திற்கு விரைந்து வந்து, அங்கு இருப்பவர்களுக்குத் தங்கள் ஆட்களின் உதவியோடு தேநீரை விநியோகம் செய்து கொண்டிருந்த கனிஷாவின் தந்தை கேசவன், இவர்களைப் பார்த்ததுமே,”வாங்க! நானும் கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தேன்” என்று அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

“வணக்கம் ப்பா” என்று சாதுரியன் மற்றும் தன்மயாவும் அவரிடம் கூறி விட்டு, அவர் தந்தப் பானத்தை வாங்கிப் பருகினர் இருவரும்.

அப்போது, அகஸ்தியாவும், அவளது தாயார் குணசுந்தரியும், அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த இருபத்தி இரண்டாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 23

அவர்களை முதலில் பார்த்த தன்மயாவோ,”ம்மா! அவங்க தான் அகஸ்தியா மேம்!” என்று அவளைத் தன் அன்னையிடம் காட்டிக் கூறினாள்.

பவதாரிணியுடன் சேர்ந்து, அங்கே இருந்த சாதுரியனும், அவர்களைப் பார்த்தான்.

அந்த நேரத்தில், சிற்றுண்டிகளைப் பரிமாறும் வேலையில் கவனம் செலுத்தப் போய் விட்டார் கேசவன்.

தன் தாய் குணசுந்தரியிடம் அவர்களைப் பற்றிய விவரத்தைக் கூறினாள் அகஸ்தியா.

“ஓகோ!” என்றவரோ, அவர்களிடம் விரைந்து சென்று,”வணக்கம்!” என்று மூவரிடமும் உரைத்தார் அவளது அன்னை.

பவதாரிணி,“ம்ஹ்ம். வணக்கம் மா” என அவர்களிடம் கூறியவர், சாதுரியனைத் தான் ஏறிட்டார்.

அவனோ, அகஸ்தியாவைக் கண்டு புன்னகைத்து விட்டு, அவளுடைய தாய் குணசுந்தரியைத் தான் நேருக்கு நேராகப் பார்த்தவன், அவருக்கு வணக்கம் வைத்தான் சாதுரியன்.

அவரும் பதில் கூறி விட்டுப், பவதாரிணியிடம்,”உங்கப் பொண்ணோட கதையை வாசிச்சுப் பாத்தேன். ரொம்பவே நல்லா இருக்கு ங்க. முதல் கதை மாதிரியே இல்லை. அவ்வளவு அழகாக எழுதி இருக்கா பொண்ணு!” என்று தன்மயாவைப் பாராட்டிப் பேசினார்.

அதைக் கேட்டதும் அகம் குளிர, முகம் மலர, அவரிடம் போய்,”தாங்க்யூ சோ மச் ஆன்ட்டி!” என்று நன்றி தெரிவித்தாள் தன்மயா.

“இருக்கட்டும் டா” என அவளுக்கு ஆசி வழங்கினார் குணசுந்தரி.

இப்படியாகப் பெரியவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருக்கச், சத்தமில்லாமல், அகஸ்தியாவின் பிம்பத்தைத் தன் விழிகளில் நிரப்பிக் கொண்டு இருந்தான் சாதுரியன்.

ஆனால், அவனிடம் எந்தவித தவறான கண்ணோட்டமும் இல்லை என்பதை அவனைப் பார்த்தவுடனேயே அகஸ்தியாவும், அவளது தாய் குணசுந்தரியும், தெரிந்து கொண்டார்கள்.

அப்போது,”தன்மயாவைப் பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். இது என்னோட பையன் சாதுரியன். எஸ்.என். டிசைன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட்ஸ் கம்பெனியில் ஒரு பார்ட்னராக இருக்கான்!” எனத் தனது மகன் மற்றும் மகளைப் பற்றிய தகவல்களை அவர்களிடம் பரிமாறத் தொடங்கினார் பவதாரிணி.

இப்போதைய நேரத்தில், அவர் தன்னுடன் இருந்த தன் இரண்டு பிள்ளைகளைப் பற்றி மட்டுமே அவ்விருவரிடமும் பகிர்ந்து கொண்டார் பதுமனைப் பற்றிய எந்த விஷயங்களையும் சொல்லவில்லை.

அதனால், தன்மயாவிற்கு ஒரே ஒரு அண்ணன் சாதுரியன் மட்டும் தான் இருக்கிறான் என்று புரிந்து வைத்துக் கொண்டாள்.

குணசுந்தரி,“இவ தான், என்னோட ஒரே மக அகஸ்தியா. உங்கப் பையன் மாதிரியே தன்னோட இரண்டு ஃப்ரண்ட்ஸ்ஸோட சேர்ந்து ‘ஜா’ பப்ளிகேஷனை நடத்திட்டு வர்றா! கதையும் எழுதிக்கிட்டு இருக்கிறா. அது மட்டுமில்லை, இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சி இருக்கிறதால் ஆன்லைன் கிளாஸூம் எடுக்கிறா” என்று தன் மகளின் அறிவுக் கூர்மையைப் பற்றி அவர்களிடம் பெருமையாகப் பேசினார்.

“ரொம்ப டேலண்ட் ஆனப் பொண்ணு! கங்கிராட்ஸ் ம்மா” என்றார் பவதாரிணி.

“தாங்க்ஸ் ம்மா” எனப் பதில் சொன்னாள் அகஸ்தியா.

“உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாம் எங்கே மேம்?” என்று அவளிடம் வினவினாள் தன்மயா.

“அவங்க பேரன்ட்ஸோட வந்துட்டு இருக்காங்க ம்மா” எனவும்,

“அவங்களையும் என்னோட அம்மாகிட்ட இன்ட்ரொடியூஸ் செஞ்சு வைக்கனும்னு ஆசைப்பட்டேன் மேம். அதான்!” என்று அவளிடம் தெரிவித்தாள்.

“அதோ வந்துட்டாங்க ம்மா” எனத் தன் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை வரவேற்று இங்கே அழைத்து வந்தாள் அகஸ்தியா.

தன்மயா,“ஹைய் சூப்பர்!” என்றவளோ, ஜெய்சிகா மற்றும் ஹரித்தையும், அவர்களது அன்னையையும், தன் தாய்க்கு அறிமுகப்படுத்தி வைத்து விட்டாள்.

“உங்க மூனு பேருக்கும் வாழ்த்துகள்!” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் பவதாரிணி.

இடையிடைய, அவர்களுக்கான சிற்றுண்டி மையும், பானத்தையும் கொடுத்து உபசரித்தவாறே, பேச்சுக் கொடுத்தார் கேசவன்.

அதன்பிறகு, பெரியவர்கள் நால்வரும் தங்களுக்கான நாற்காலிகளைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டு விடவும்,

இளையவர்கள் ஐவரும், அந்தப் பதிப்பகத்தின் வாயிலில் நின்று கொண்டு இனிமேல் வரப் போகும் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் வரவேற்று உள்ளே அனுமதித்தார்கள்.

பவதாரிணி,“நீங்க வேலைக்குப் போறீங்களா?” எனக் குணசுந்தரியிடம் விசாரித்தார்.

“ஆமாம் ங்க. நான் பி. ஹெச். டி ஸ்டூடண்ட்ஸூக்குக் கைட் ஆக இருக்கேன்” என்றார் அகஸ்தியாவின் அன்னை.

“ஓஹ்! சரிங்க” என்று கூறினார் தன்மயாவின் தாய்.

“நானும் என் மக மாதிரி கதை எழுதலாமான்னு யோசிக்கிறேன் ங்க” என்றவரிடம்,

“கண்டிப்பாக எழுதுங்க. அதுக்கான ஹெல்ப் எல்லாத்தையும் என் பொண்ணே செஞ்சுக் கொடுத்திடுவா” என்று அவரிடம் கூறிப் புன்னகைத்தார் குணசுந்தரி.

*************************

“அகஸ்தியா மேம்! எங்க அண்ணனோட இருந்த மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் எல்லாம் சரி ஆகிடுச்சா?” என்று அவளிடம் கேட்டாள் தன்மயா.

உடனே சாதுரியனிடம் அவளது பார்வை பாய்ந்து மீண்டு கொண்டே,”எப்பவோ சரி ஆகிடுச்சு ம்மா. இனிமேலும் எங்களுக்குள்ளே எந்தப் பிரச்சினையும் வராது!” என்று அவளுக்கு உறுதி அளிக்கவும்,

அதைக் கேட்டு அவளை மெச்சும் பார்வை பார்த்தான் சாதுரியன்.

“இப்படியே உட்கார்ந்துட்டே இருந்தால் எப்படி? எங்களோட பப்ளிகேஷனைச் சுத்திப் பாக்கத் தான் உங்களை இன்வைட் செஞ்சிருக்கோம். சோ, எல்லாரும் வாங்க. புக்ஸ் அண்ட் மத்ததை எல்லாம் பார்த்துட்டு வருவோம்” என அவர்களைக் கூட்டிச் சென்றான் ஹரித்.

அந்த ஐவரும், மற்றவர்களோடு இணைந்து கொண்டு, ‘ஜா’ பதிப்பகத்தை நன்றாக அலசிப் பார்த்து விட்டார்கள்.

அகஸ்தியா மற்றும் ஜெய்சிகாவின் மீது கவனத்தைப் பதித்துக் கொண்டிருந்தார் பவதாரிணி.

அவ்விருவரில் தன் மகனுடைய மனதைக் கொள்ளையடித்தப் பெண் யாராக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத் தான் ஆவலாக இருக்கிறார் சாதுரியனின் தாய்.

ஆனால், தங்களுடைய குடும்பங்கள் அங்கே இருந்ததால், இங்கிதம் அறிந்து நடந்து கொள்ள விழைந்த அவரது இரண்டாவது மகனோ, அனைவரிடமும் இயல்பாகவே பேசிச் சிரிக்க, அதனாலேயே, அவனது அன்னைக்கு, அந்தப் பெண் யாரென்று கண்டறிய மிகவும் கடினமாக இருந்தது.

அதுவும் இல்லாமல், ஜெய்சிகா மற்றும் ஹரித்தின் தாய்மார்களும் அவ்வப்போது தங்களது பேச்சில் இவரையும் இழுத்துக் கொண்டதால், அவரால் எங்கேயும் தன் பார்வையைக் கொண்டு செல்லவும் முடியவில்லை.

அதனால், தன்மயாவிடம் கேட்டுக் கொள்ள முடிவெடுத்து விட்டு, சீதாதேவி, ஜமுனா மற்றும் குணசுந்தரியுடன் அளவளாவத் தொடங்கி விட்டார் பவதாரிணி.

அந்தப் பதிப்பகத்தில் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் சந்திப்பு மதியம் ஒரு மணி வரைக்கும் தான் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், அதுவரைக்கும் அகஸ்தியாவுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி நிம்மதி அடைந்தான் சாதுரியன்.

அவளது செய்கைகளும அவனுக்கு நல்லவிதமாகத் தான் இருந்தது. முன்பை போல கோபக் கனலாக இல்லாமல், தன்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தவளைக் காண்பதில் லயித்துப் போயிருந்தான்.

“உங்கப் பையனோட பேர் சாதுரியன் தானே ங்க? அவரோட வேலையைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்! தெரிஞ்சிக்கலாம்!” என்று தன்னிடம் வினவிய குணசுந்தரியை ஆச்சரியத்துடன் பார்த்தார் பவதாரிணி.

அவர் அகஸ்தியாவின் அன்னை‌ மற்றும் தன்னுடைய மகனைப் பற்றித் திடுமென விசாரிக்கிறார் என்றால் அவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய விருப்பம் இருக்கிறதே! என்று எண்ணிக் கொண்டவரோ,

“ம்ம். சாதுரியனைப் பத்திச் சொல்றேன் ங்க!” என்றவாறே, தனது மகனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அவரிடம் விவரித்து முடித்தார் சாதுரியனின் அன்னை.

அவர்கள் பேசியதைக் குழப்பத்துடனும், வியப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் சீதாதேவி மற்றும் ஜமுனா.

ஆனால், அதைக் கவனிக்காத குணசுந்தரியோ,”என் பொண்ணு அகஸ்தியாவைப் பத்தி உங்ககிட்ட ஷேர் செய்றேன்” என்று தன்னுடைய மகளைப் பற்றிய குறிப்புகளை அவரிடம் மொழிந்தார்.

அதைக் கண்டு,”நீங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்படி மாத்தி மாத்தி அவங்க அவங்களோட பிள்ளைகளைப் பத்தி டீடெயில்ஸ் ஷேர் செஞ்சுட்டு இருக்கீங்க?” என்று அவ்விருவரிடமும் வினவினார் ஜமுனா.

“ஹிஹி! அது எங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச சீக்ரெட் ம்மா!” என்று அசடு வழிந்தார் பவதாரிணி.

“சொல்லுங்க!” என்று ஆர்வத்துடன் வினவினார் ஜமுனா.

“அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருக்குப் போல ங்க. அதான், அவங்களைப் பத்தி விசாரிக்கிறோம்!” என்று அவர்களிடம் விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டார் குணசுந்தரி.

“ஓஹ்ஹோ! அப்போ நீங்க ரெண்டு பேரும் அவங்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணியாச்சா?” என்று ஆவலுடன் கேட்டார் சீதாதேவி.

“உடனே இல்லை. ஆனால் விருப்பம் இருந்தால் பண்ணி வைக்கலாமேன்னு தான் டீடெயில்ஸ்ஸைக் கேட்டுட்டு இருக்கோம்” என்றார் பவதாரிணி.

“அப்போ சரி. நீங்கப் பேசுங்க. நாங்களும் சொல்றோம்!” என்று அகஸ்தியாவைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்தவற்றையும் அவரிடம் கூறினார்கள் ஜெய்சிகா மற்றும் ஹரித்தின் தாய்மார்கள்.

“நம்ம அம்மா புக் வாங்க தானே இவ்வளவு தூரம் வந்தாங்க? இப்போ அங்கே பாருங்க. அவங்க கூட உட்கார்ந்து கதைப் பேசிட்டு இருக்காங்க!” எனத் தன் தமையனிடம் கூறினாள் தன்மயா.

“நாம கிளம்புற டைம் வந்துருச்சுடா. நீ போய் அம்மாவைக் கூட்டிட்டு வர்றியா?” எனத் தங்கையிடம் கேட்டான் சாதுரியன்.

“ஓகே ண்ணா” என்று தாயிடம் சென்றவளோ,”ம்மா! இங்கே வந்து எவ்வளவு நேரமாச்சு? நாம இன்னும் ஒரு புக் கூட வாங்கலை!” என்று அவரைக் குறை பேசினாள் இளையவள்.

“அட! ஆமாம்! சரிடி. கோச்சுக்காதே! புக்ஸைப் பார்த்து வாங்குவோம், வா” என்று மற்றவர்களிடம் அனுமதி கேட்டுக் கொண்டு மகளுடன் சென்று விட்டார் பவதாரிணி.

அவர்கள் சென்றதும்,“நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டதை அகஸ்தியா கிட்டே சொல்லுவீங்களா சுந்தரிம்மா?” என்று அவரிடம் வினவினார் சீதாதேவி.

“சொல்ல மாட்டேன் ங்க. அவளோட விருப்பம் மாறிட்டா என்னப் பண்றது? அதனால், பொறுமையாக இருப்போம்” என்று கூறினார் குணசுந்தரி.

“ஆமாம். அந்தப் பையனோட அம்மாவும், அவசரத்தில் முடிவு எடுக்கிறவங்க மாதிரி தெரியலை. என்னமோ, உங்கப் பொண்ணு வாழ்க்கையில் உங்களுக்குத் தான் அதிக அக்கறை இருக்கும். பார்த்துப் பண்ணுங்க. நாங்களும் எங்கப் பிள்ளைங்க கிட்ட இதைச் சொல்லிட மாட்டோம்” என்று அவருக்கு உறுதி அளித்தார்கள் இருவரும்.

பவதாரிணியும், அவரது மகள் தன்மயாவும், அந்தப் பதிப்பகத்தில் இருந்தப் புத்தகங்களைப் பார்வையிட்டு முடித்து தங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கியும் வைத்துக் கொண்டனர்.

“ம்ஹ்ம். சொல்ல மறந்துட்டோம். நீங்க ரெடி செஞ்சுக் கொடுத்தக் கவர் ஃபோட்டோஸ் எல்லாமே பார்க்கவே சூப்பரா இருந்துச்சு!” என்று சாதுரியனிடம் மனதார உரைத்தான் ஹரித்.

“ஓஹ்! தாங்க்ஸ் ங்க. ஏதாவது சஜஷன்ஸ் இருந்தாலும் சொல்லுங்க, அதைப் பண்ணிடலாம்” என்றுரைத்தான்.

அகஸ்தியா,“அப்படி எதுவும் இருந்தால் கண்டிப்பாக சொல்லிடறோம்” எனவும்,

“என்னோட கதைகளை உங்களோட வெப்சைட்டில் மட்டும் தான் நான் போஸ்ட் செய்துட்டு இருக்கேன் மேம். போட்டிக் கதைப் புக்ஸ் ரிலீஸ் ஆகிறதை தவிர, இனிமேல் எழுதுற கதைகளும் புத்தகமாக வெளியாக வாய்ப்பு இருக்கா மேம்?” என்று அம்மூவரிடம் வினவினாள் தன்மயா.

ஜெய்சிகா,”ஆமாம் மா. எங்க சைட்டில் மட்டும் எழுதுறதாக இருந்தால், உங்க கதைகளைக் கண்டிப்பாக புக்ஸ் ஆகப் போட்டுத் தருவோம்” என்று அவளுக்கு விளக்கிச் சொன்னாள்.

அதற்கு நன்றி தெரிவித்து விட்டவள், தன் தாய் மற்றும் தமையனிடம்,”விசிட்டிங் டைம் முடிச்சிருச்சு. நாம கிளம்பலாமா?” என்றாள் தன்மயா.

“ம்ம். ஓகே” என்று அவளிடம் கூறி விட்டு, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள் மூவரும்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த இருபத்தி மூன்றாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 24

எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சென்ற பின்னர், கனிஷாவின் தந்தை கேசவனும் கூட சிற்றுண்டிகள் மற்றும் பானங்களுக்கானப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்.

ஜெய்சிகா மற்றும் ஹரித்தின் தாய்மார்கள் இருவரும் இணைந்து அகஸ்தியாவைப் பார்த்துக் கமுக்கமாகப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

தனது அன்னை குணசுந்தரியின் முகத்தை நுட்பமாகப் பார்த்தாள் அகஸ்தியா.

ஏனென்றால், அவரும் தானே, இவ்வளவு நேரமாகச் சாதுரியன் மற்றும் தன்மயாவின் தாயிடம் பேசிக் கொண்டு இருந்தாரே?

அதனால், அவர்களிருவருக்கும் இடையே ஏதாவது சம்பாஷணை நடந்து இருக்குமோ, அதில் தங்களைப் பற்றிய பேச்சுக்கள் வந்திருக்குமோ? என்ற ஆராய்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் அகஸ்தியா.

அதைக் கண்டு கொண்டு,“என்னடா?” என அவளிடம் வினவினார் குணசுந்தரி.

உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டவளோ,”ஊஹூம்! ஒன்னும் இல்லை ம்மா” என உரைத்து விட்டாள் அவருடைய மகள்.

“எங்களை விட்டுட்டு ஏதாவது ரகசியம் பேசிட்டீங்களா ம்மா?” என்று தன் அன்னையிடம் கேட்டான் ஹரித்.

ஜமுனா,”இல்லைடா” என்று அவனைச் சமாளித்து விட்டார்.

“என்னமோ! எவ்வளவு புத்தகம் வித்திருக்கோம்? பணத்தை எல்லாம் எண்ணி வாங்கியாச்சு தானே? அதையெல்லாம் எண்ணிப் பார்த்துருவோமா?” என அவர்களிடம் வினவினாள் ஜெய்சிகா.

“இப்போ வேணாம். பணத்தை மட்டும் பத்திரமாக கொண்டு போகலாம். இவங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு, நாமளும் ரெஸ்ட் எடுத்துக்கலாம். அப்பறமாக ஆஃபீஸூக்கு வந்து அதைப் பார்ப்போமா?” என்றான் ஹரித்.

“ம்ம். ஓகேடா. ஏதாவது ஹோட்டலுக்குப் போய் லன்ச் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகலாமா?” என்று அனைவரிடமும் வினவினார் சீதாதேவி.

அவருக்கு மட்டுமில்லை, மற்றவர்களுக்கும் பசி காதை அடைத்தது.

ஆகையால்,”சரிம்மா. நாங்க முதல்ல எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு வந்துட்றோம்” என அவர்களுடைய பிள்ளைகள் மூவரும் அந்தப் பதிப்பகத்தில் இருந்தப் பொருட்களை எல்லாம் ஒதுங்க வைத்து விட்டு வந்தார்கள்.

அதன் பின்னர், அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்துடன் சேர்ந்து, அவர்களது பெற்றோரும் உணவகத்திற்குப் போய் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டனர்.

*******************************

தங்கள் மகிழுந்தில் பயணத்திற்குக் கொண்டிருந்த அன்னையின் முகத்தில் தெரிந்த தேஜஸையும், எதையோ சாதித்த உணர்வையும் கண்டு சாதுரியனும், தன்மயாவும் குழம்பிப் போனார்கள்.

“என்ன ண்ணா, அம்மாகிட்ட ஒரு தெளிவு தெரியுதே! அது எதனால் இருக்கும்?” என்று தமையனின் காதைக் கடித்தாள் தங்கை.

“அது தான், எனக்கும் புரியலை தனு. அவங்ககிட்ட கேட்டா, நாம என்ன சீக்ரெட்டை மெயின்டெய்ன் செஞ்சிட்டு இருக்கோம்ன்னு நம்மகிட்ட அவங்க திருப்பிக் கேட்பாங்களே!” என்று அவளிடம் கூறினான் சாதுரியன்.

அவன் தான், வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்க, அவனருகே தன்மயா அமர்ந்திருந்தாள் மற்றும் அந்த வண்டியின் பின் இருக்கையில் அவர்களது தாய் பவதாரிணி உட்கார்ந்து இருந்தார்.

அதனால் அவர்களிருவரும் குரலைத் தாழ்த்திக் கொண்டு தான் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

“அடேய்! அடியேய்! உங்களுக்குள்ளே என்ன டிஸ்கஸ் செய்துட்டு இருக்கீங்க?” என்று அவ்விருவரையும் அதட்டினார் பவதாரிணி.

“அஃது ம்மா! அங்கே எல்லாரோடயும் ரொம்ப நாள் பழக்கமாக இருந்தா மாதிரி, சகஜமாகப் பேசிப் பழகிட்டு வந்திருக்கீங்களே! அது எப்படின்னு தான் பேசிட்டு இருந்தோம்” என்றுரைத்தான் சாதுரியன்.

“ஓகோ! ஏன் நீங்க ரெண்டு பேரும் கூடத் தான், அந்த அகஸ்தியா, ஜெய்சிகா, அப்பறம் ஹரித் கூட சேர்ந்து பேசி சிரிச்சீங்க! அதை நானும் தான் பார்த்தேனே!” என்று அவனிடம் மொழிந்தார் அவனது தாய்.

“சூப்பர் மா!” என்றான் அவருடைய மகன்.

“தனு! நீ சொன்னா மாதிரியே, நம்மப் பதுவுக்குப் பொண்ணுப் பார்க்கிற சமயத்திலேயே இவனுக்கும் ஒரு வரனைப் பார்த்துடுவோம்!” என்று மகளிடம் உறுதியாக கூறினார் பவதாரிணி.

அதைக் கேட்டவனுடைய விழிகளோ பெரிதாக விரிந்து போயிற்று. அந்த நேரத்திலும் கூடத், தான் ஓட்டிக் கொண்டிருக்கும் வாகனத்தை எந்தவித கவனச் சிதறலும் இன்றி லாவகமாக இயக்கித் தனது தாயையும், தங்கையையும், பத்திரமாக வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான் சாதுரியன்.

“ம்ம்! வீட்டுக்கு வந்தாச்சா? இறங்குங்க” என்று தானும் மகிழுந்தில் இருந்து கீழே இறங்கி வீட்டிற்குள் நுழைந்தார் பவதாரிணி.

“இவங்க என்ன இப்படி சொல்லிட்டுப் போறாங்க?” எனத் தவித்தவாறே தங்கையிடம் கேட்டான் சாதுரியன்.

“இரு ண்ணா. நான் அம்மாகிட்டே போய்ப் பேசுறேன்” என்று அவனிடம் சொல்லி விட்டுத் தன் தாயைத் தேடிப் போனாள் தன்மயா.

ஆனால், அங்கே, தான் வாங்கிய புத்தகங்களைக் கணவரிடம் காட்டி உரையாடிக் கொண்டு இருந்தார் பவதாரிணி.

“ப்பா!” என்று அவரிடம் சென்றார்கள் தன்மயா மற்றும் சாதுரியன்.

“வாங்க, வாங்க” என அவர்களைத் தன்னருகே அழைத்தார் யுதிர்ஷ்டன்.

“அங்கே நானும் புக்ஸ் வாங்கி இருக்கேன்” எனத் தந்தையிடம் காண்பித்தாள் அவரது மகள்.

“ம்ம். சூப்பர் டா. உன்னோட புக்ஸ் வரும் போது சொல்லு. நான் வாங்கிப் படிக்கிறேன்” என அவளுக்கு உறுதி அளித்தார் தன்மயாவின் தந்தை.

“ஷூயர் ப்பா”

“நீ ஏதுவாக புக்ஸ் வாங்கினியா டா?” என்று தன் மகனிடம் கேட்டார் யுதிர்ஷ்டன்.

“இல்லை ப்பா. நான் சும்மா வேடிக்கைப் பார்க்கத் தான் போனேன்” என்றான் சாதுரியன்.

“நாம எல்லாருமே இன்னொரு நாள் அங்கே போகலாம்” என்று அவனிடம் சொன்னார் அவனது தந்தை.

“கண்டிப்பாக போயிட்டு வரலாம் ப்பா. இப்போ எங்களுக்குப் பசிக்குது. சாப்பிடலாமா?” என்று மற்றவர்களிடம் வினவவும்,

“இனிமேல் தான் சமைக்கனும் டா!” என்று அவனிடம் தெரிவித்தார் பவதாரிணி.

“ஓஹ் காட்! ம்மா! பேசாமல் கடையில் ஆர்டர் செய்துக்கலாமா?” என்று அவரிடம் கேட்டான் சாதுரியன்.

“சரி. எப்படியும் பது வர்றதுக்கு சாயந்தரம் ஆகிடும். அதனால், அவனுக்கு நைட் தான் சாப்பாடு செய்றா மாதிரி இருக்கும். நாம முதல்ல காஃபி போட்டுக் குடிப்போம்” என நால்வரும் தங்களுக்கான சூடான பானத்தை தயாரித்துக் குடித்துக் கொண்டனர்.

உணவு வந்ததும், அதை நால்வரும் உண்டு முடித்து விட்டுச், சாதுரியனும் தத்தமது அறைகளுக்குள் சென்று விட்டார்கள்.

தங்களது இரு பிள்ளைகளும், உள்ளே போனதைப் பார்த்தப் பவதாரிணியோ,”பதுவும் வரட்டும் ங்க. உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்திச் சொல்றேன்” என்று அவரிடம் சொன்னார்.

“சரிம்மா” என்றவரோ, சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக கூறி விட்டுப் போய் விட்டார் யுதிர்ஷ்டன்.

அதே போலவே, அவர்களது மூத்த மகனும் வீட்டிற்கு வந்து விட்டான்.

“முதல்ல ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று அவனை அனுப்பி வைத்தவரோ,

“சது, தனு! உங்க அண்ணன் வந்துட்டான்” என அறைக்குள் இருந்த தங்களுடைய மகன் மற்றும் மகளை அழைத்தார் பவதாரிணி.

பதுமனும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்து விட்டதும்,

அவனிடம், “ஹாய் ண்ணா!” என்றார்கள் இருவரும்.

“ஹலோ டா!” என்று அவர்களிடம் சொல்லி விட்டுச் சோஃபாவில் உட்கார்ந்தான் பதுமன்.

“இன்னைக்கு என்னவெல்லாம் நடந்துச்சு தெரியுமா?” என்று இளையவர்கள் இருவரும் அன்றைய தினம் நடந்ததை எல்லாம் மூத்தவனிடம் பகிர்ந்து கொண்டனர்.

“ஆமாம் பது! இந்த அண்ணனுக்கும், தங்கச்சிக்கும், அங்கே செம்ம என்ஜாய்மெண்ட் தான்!” என்று மகனிடம் குறிப்பாக உணர்த்தினார் பவதாரிணி.

“ஹிஹி! ம்மா!” எனத் தங்களது தலையைச் சொரிந்து கொண்டார்கள் சாதுரியன் மற்றும் தன்மயா.

“என்ன? நான் சொன்னது கரெக்ட் தானே?” என்று அவர்களிடம் வினவினார் அன்னை.

“ஆமாம் மா. அதுக்குத் தானே அங்கே போனதே!” என்றான் அவரது இரண்டாவது மகன்.

“ஓஹ்ஹோ!” என்று புருவத்தைச் சுழித்துக் கூறினான் பதுமன்.

அதன் பின்னர்,”உனக்குப் பொண்ணுப் பார்க்கப் போகனும் டா. நாம அங்கே எப்போ வருவோம்ன்னு டைமிங் சொல்லச் சொன்னாங்க. ஏதாவதொரு லீவ் நாளில் போயிட்டு வரலாமா?” என்று அவனிடம் வினவினார் பவதாரிணி.

“ஓகே ம்மா‌. அப்போ தானே, நாம எல்லாருமே போய்ப் பார்த்துட்டு வர முடியும்” என்று கூறி விட்டான் மூத்தவன்.

சாதுரியனும், தன்மயாவும், வேலையைப் பார்க்கச் சென்று விட்டதும், தன் கணவர் யுதிர்ஷ்டன் மற்றும் மகன் பதுமனிடம், அகஸ்தியாவின் தாயிடம் பேசியவற்றை எல்லாம், சொல்லி விட்டார் பவதாரிணி.

“இதைத் தான், அந்த ரெண்டு பேரும் நம்மகிட்ட இருந்து மறைச்சிட்டு இருந்தாங்களா?” என்றனர் இருவரும்.

“ஆமா பது. அவங்களுக்கு எவ்வளவு தைரியம்ன்னுப் பாரு!” என்றுரைத்தார் யுதிர்ஷ்டன்.

“நீங்க சொல்லுங்க. இப்போ என்னப் பண்ணலாம்?” என அவ்விருவரிடமும் வினவினார் பவதாரிணி.

“நாம அவங்களைக் கலாய்ச்சு விடலாமா?” என்று தன் தாயிடம் கேட்டான் பதுமன்.

“அதெப்படி டா?” என்றார் அவனது தந்தை.

“நான் உங்களுக்குச் சொல்றேன்” என்று அம்மூவரும் இணைந்து ஒரு திட்டத்தை வெற்றிகரமாக வகுத்து முடித்தனர்.

***************************

இங்கோ, ‘ஜா’ பதிப்பகத்திற்கு வந்திருந்த தன்மயாவின் குடும்பத்தைப் பற்றித், தன் கணவர் உலகேசனிடம் விவரித்துக் கூறினார் குணசுந்தரி.

அவர்களது உரையாடலின் போது, அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்தும், தங்களது பதிப்பகப் புத்தகங்களை விற்று வந்தப் பணத்தை எண்ணும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அதனால் தான், அகஸ்தியாவின் தாயும், தந்தையும், சாதுரியனைப் பற்றி வெளிப்படையாகவே பேசி முடிவெடுக்க முடிந்தது.

“நாம உடனே, எதையும் டிஸைட், செய்ய வேணாம் மா” என்றார் அவரது கணவர்.

“சரிங்க” என்று அவர் கூறியதை ஏற்றுக் கொண்டார் குணசுந்தரி.

“அந்தப் பையனோட கம்பெனியைப் பத்தி நம்ம தியா சொன்ன அப்போவே அதைப் பத்தி விசாரிச்சு வச்சுட்டேன் ம்மா‌. இப்போ அவனைப் பத்தின டீடெயில்ஸைக் கேட்கனும்” என்றவரோ, அதற்கான வேலையைச் செய்து முடித்து விட்டார் உலகேசன்.

தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்கள் விற்றப் பணத்தை, அகஸ்தியா, ஜெய்சிகா மற்றும் ஹரித்தும், தங்களுக்குள்ளாகவே சரி சமமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

********************************

அதற்குப் பிறகான நாட்களில், பதுமனுக்குப் பெண் பார்க்கச் செல்லும் நாளும் வந்து விட்டிருந்தது.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த இருபத்தி நான்காவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 25

தன் தமையனுக்குப் பெண் பார்க்கும் படலத்திற்குச் செல்லப் போவதற்கு முன், அகஸ்தியாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள் தன்மயா.

‘ஹாய்‌ மேம். நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்?’

‘எதுவாக இருந்தாலும் சொல்லுங்கடா’ என்ற பதில் வரவும்,

‘இன்னைக்கு எங்க அண்ணனுக்குப் பொண்ணுப் பார்க்கக் குடும்பத்தோட போறோம். அதனால், என்னோட கதையோட யூடியை அனுப்புறேன். அதை ஈவ்னிங் ஆறு மணிக்கு போஸ்ட் பண்றீங்களா?’ என அனுப்பியதைப் பார்த்ததுமே, அகஸ்தியாவின் நெஞ்சம் பதறிப் போனது.

சாதுரியனுக்குத் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறார்களா? என்ற அதிர்ச்சி தன் இதயத்தைப் பலமாகத் தாக்கியதைப் போலானது அவளுக்கு.

அவள் அனுப்பிய செய்தி உண்மை தானா? என்று கூட ஒரு தடவைக்கு இரண்டு முறைகள் அதை வாசித்துப் பார்த்துக் கொண்டாள் அகஸ்தியா.

அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால்,’ஹலோ மேம்!’ என்று அனுப்பியிருந்தாள் தன்மயா.

அதைக் கண்டவுடனேயே,’ஹாங்! கண்டிப்பாகப் போஸ்ட் பண்ணிடறேன் டா. அந்த யூடியோட டாக்யூமெண்ட்டை மறக்காமல் எனக்கு அனுப்பி விட்ருங்க!’ என அவளிடம் அறிவுறுத்தி விட,

‘ஓகே மேம். இதோ இப்போவே அனுப்பிடறேன். தாங்க்யூ சோ மச்’ என்று நன்றி தெரிவித்து விட்டு அவள் போய் விட, இவளுக்குத் தான், சுற்றியிருக்கும் அனைத்தும் அப்படி அப்படியே நின்று விட்ட உணர்வாகிப் போயிற்று!

தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவனுடைய பெண் பார்க்கும் படலத்திற்குச் செய்தியைக் கேட்டதும் தான் ஏன் இப்படி திடுக்கிட்டுப் போகிறோம்? அப்படியென்றால், அவன் தன்னுடைய மனதின் உரிமைக்காரனாகி விட்டானோ? என்ற பரிசோதனைக்கு ஆட்கொண்டவளோ,

தன்னுடையது அவசரக் காதலாகி விடக் கூடாது என்று எண்ணி, அன்றைய நாள் முழுவதும், தனக்கும், சாதுரியனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களையும் மற்றும் சந்திப்புகளையும் தன் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அகஸ்தியா.

அதில் தவறாக எதுவும் நடக்கவில்லை, சாதுரியனும் நடந்து கொள்ளவில்லை மற்றும் அவனுடைய அணுகுமுறையும் தன்னைக் காயப்படுத்துவதைப் போலவும், முகம் சுளிக்க வைப்பதைப் போன்றும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

ஆனால், இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டு இருப்பது வீண் வேலை என்பதை உணர்ந்தவளுக்கு மனதின் ஓரத்தில் முனுக்கென்ற வலி பிறந்து அவளை வாட்டி எடுத்தது.

அவனிடம் அதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாமா? என்று கூட நினைத்தாள் அகஸ்தியா.

ஆனால், இந்நேரம் அந்தப் பெண்ணின் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டு இருப்பார்கள் எனவும், தன்மயா பொய் சொல்ல மாட்டாள் எனவும் யோசித்தவள், அடுத்த நாள் அவனுக்குக் கால் செய்து விவரங்களைக் கேட்டுக் கொள்ள முடிவெடுத்து விட்டாள்.

அதுவரை, அகஸ்தியாவிற்கு இதயம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டு தான் இருக்கப் போகிறது!

***********************

இதே சமயத்தில், அகஸ்தியாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி முடித்ததும், தனது கதையின் அத்தியாயத்தை தொகுத்து அமைத்துக் கொண்டு இருந்தாள் தன்மயா.

“என்னடி பண்ற?” என்று மகளிடம் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் பவதாரிணி.

“இன்னைக்குப் போஸ்ட் செய்யப் போற அப்டேட்டைச் சரிபார்த்துட்டு இருக்கேன் ம்மா” என்று அவரிடம் பதிலளித்தாள் அவரது மகள்.

“சரி. நான் ஒரு முக்கியமான விஷயத்தை உனக்குச் சொல்லவா?” என்று புதிர் போட்டார் அவளது அன்னை.

“சொல்லுங்க ம்மா” என அவரிடம் ஆவலாக வினவினாள்.

“பதுவுக்கு மட்டும் இல்லாமல், நம்மச் சாதுரியனுக்கும் சேர்த்து தான், பொண்ணுப் பார்க்கப் போகப் போறோம்! நீ எப்படியாவது அவனைக் கன்வின்ஸ் பண்ணிக் கூட்டிட்டு வா தனு!” என்று தன்னிடம் கூறியவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றவளோ,

“ம்மா! உண்மையாகவா சொல்றீங்க?” என்று மீண்டுமொரு முறை தாயிடம் வினவினாள் தன்மயா.

“ஆமாம். பொண்ணுக்குத் தங்கச்சி இருக்காங்களாம். அதனால், அந்தப் பொண்ணையே சதுவுக்குப் பாத்துடலாம்னு நானும், உங்கப்பாவும் டிஸைட் பண்ணிட்டோம். நான் சொன்னதை செஞ்சிரு” என்று இயல்பாக உரைத்து விட்டுப் போய் விட்டார் பவதாரிணி.

தனது அண்ணன் சாதுரியனும், அகஸ்தியாவும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று மேலோட்டமாக அறிந்திருந்தவளுக்குத், தன் தாயின் கூற்றில், தலை சுற்றிப் போய் விட்டது அவளுக்கு.

இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் விழித்தவளோ, தன் குடும்பம் தயாராகி வருவதற்குள், தமையனிடம் பேசி இதற்கான தீர்வைக் கண்டறியும் முடிவிற்கு வந்தாள் தன்மயா.

அதனால், அவள் சாதுரியனின் அறைக்குள் நுழைந்த போது, அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்த யுதிர்ஷ்டன் மற்றும் பவதாரிணியும்,”உன்னோட பிளான் வொர்க் அவுட் ஆகுது!” என்று பதுமனிடம் சொல்லிச் சிரித்தார்கள்.

“சாது அண்ணா!” என்ற தங்கையின் பதட்டமான குரலில், அவள் புறம் திரும்பினான் அவளுடைய தமையன்.

“என்னடா ஆச்சு?” என்று அவளை அமர வைத்தான் சாதுரியன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அம்மா வந்து எங்கிட்டே என்ன சொன்னாங்க தெரியுமா?” என அவனிடம் விஷயத்தைப் பகிர்ந்தாள் தன்மயா.

“என்னது! எனக்கும் பொண்ணுப் பார்க்கப் போறோமா? அதுவும் இப்போ சொல்றாங்க!” என்று அறையை விட்டு வெளியேறியவன்,

தன் பெற்றோரிடம் சென்று,”ம்மா! தனுகிட்டே சொல்லி அனுப்பின விஷயம் உண்மையா?” என்று அன்னையிடம் கேட்டான் சாதுரியன்.

“ஓஹ், சொல்லியாச்சா? அப்பறம் என்ன? சீக்கிரம் கிளம்புடா!” என்றார் பவதாரிணி.

“என்னப்பா இப்படி பண்றீங்க?” என்று தன் தந்தையிடம் வினவினான்.

“ஆமாடா. நீ தான் லவ் எதுவும் பண்ணலையே! அதான், இந்த ஐடியா நல்லா இருந்ததேன்னு உனக்கும் சேர்த்து பொண்ணுப் பார்க்கப் போறோம்” என்றுரைத்தார் யுதிர்ஷ்டன்.

இதை தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தப் பதுமனிடம்,”நீ மட்டும் ஏன் அமைதியாக இருக்கிற? உன் பங்குக்கு எதையாவது சொல்லேன்!” என்று எரிச்சலுடன் சொன்னான் சாதுரியன்.

“ஏன்டா டென்ஷன் ஆகுற? பொண்ணு தானே பார்க்கப் போறோம். கல்யாணத்தையே ஃபிக்ஸ் பண்ணப் போறது இல்லையே?” என்று அவனைச் சமாதானம் செய்தான் பதுமன்.

“அதானே ண்ணா! நாம போய்ப் பார்த்துட்டு தான் வருவோமே!” என்று தானும் அவனிடம் உரைத்தாள் தன்மயா.

“சரி” என்று அரை மனதுடன் கூட அவனால் கிளம்ப முடியவில்லை.

ஆனால், தமையனுக்குப் பெண் பார்க்கப் போக வேண்டுமே என்று தயாராகி வந்தான் சாதுரியன்.

அதன் பிறகு, பெண்ணின் வீட்டிற்கு அழைத்து விவரத்தை தெரிவித்து விட்டு அங்கே செல்லப் பயணமானார்கள் ஐவரும்.

யுதிர்ஷ்டன், பவதாரிணி மற்றும் பதுமனும் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, காரோட்டும் தன் இரண்டாவது தமையனை மெதுவாக அழைத்து,

“அங்கே போய்ப் பொண்ணுப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க!” என்றாள் தன்மயா.

“பதுவுக்குப் பொண்ணைப் பிடிச்சிருச்சுன்னா என்னப் பண்றதுடா?” என்று அவளிடம் கலக்கத்துடன் வினவினான் சாதுரியன்.

“அக்காவை மட்டும் கல்யாணம் செஞ்சுக் கொடுங்கன்னு எடுத்துச் சொல்லிக் கேட்போம் ண்ணா!” என்று கூறினாள் அவனது தங்கை.

“சரிம்மா. டிரை பண்ணலாம்”என்று துவண்ட குரலில் கூறி விட்டு வண்டியை ஓட்டினான்.

“இப்போவும் ரெண்டு பேரும் மட்டும் சீக்ரெட் பேசுறதும் பாருங்களேன்! இதனால் தான், அப்படி ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து இருக்கோம்!” என்று கூறினார் பவதாரிணி.

அதைக் கேட்ட மற்ற இருவரும் அவருடன் சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள்.

பெண்ணின் வீட்டை அடைந்ததும், காரை நிறுத்தி விட்டுத் வீட்டு ஆட்களுடன் உள்ளே சென்றான் சாதுரியன்.

“வாங்க!” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தனர் பெண் வீட்டார்.

இரு குடும்பத்தாரும் தங்களைப் பற்றிய பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டதும்,”எங்கப் பொண்ணுப் பேர் ரிதிமா, அவளைப் பத்தி தரகர் கிட்டே சொல்லி விட்ருந்தோம்” என்றார் பெண்ணின் தந்தை விஜயன்.

“ஆமாம். அவங்களும் எங்கப் பையன் மாதிரியே சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பார்க்கிறாங்கன்னு சொன்னதுமே பாதி ஓகே சொல்லிட்டோம். இங்கே வந்து பாத்துட்டு முழு சம்மதம் சொல்லிடுவோம்ன்னு கிளம்பி வந்தாச்சு!” என்று கூறினார் யுதிர்ஷ்டன்.

“பொண்ணை வரச் சொல்லலாமா ங்க?” என்று பொதுவாக வினவினார் வத்சலா.

“ஓகே ங்க” எனவும், அவர் உள்ளே சென்று பெண்ணை அழைத்து வரும் வேளையில்,”என்ன ஒரு பொண்ணைப் பத்தி மட்டும் தான் பேசுறாங்க! அவங்க தங்கச்சியைப் சத்தி எதுவுமே வரலையே!” என்று முணுமுணுத்தவாறே தன் பெற்றோரையும், தமையனையும் பார்த்தார்கள் சாதுரியன் மற்றும் தன்மயா.

அவர்களோ, தாங்கள் இருந்த இடத்தைக் கருத்தில் கொண்டு வாய் விட்டுச் சிரிக்க முடியாமல் திணறிப் போயினர்.

“அப்போ நம்மளை ஜோக்கர் ஆக்கிட்டாங்களா ண்ணா?” என்றாள் தன்மயா.

“அதே தான் ம்மா!” என்று கூறியவனோ, மற்ற மூவரையும் பார்த்து முறைத்தான் சாதுரியன்.

அதற்குள்ளாக, அங்கே தனது வருகையை நிகழ்த்தி அனைவருக்கும் தேநீரை விநியோகம் செய்தாள் ரிதிமா.

இப்போது நிம்மதிப் பெருமூச்சுடன், தங்களது மூத்த தமையனுக்குப் பார்த்தப் பெண்ணைக் கண்டனர் இளையவர்கள்.

அவளிடமிருந்து கோப்பையைப் பெற்றுக் கொண்டு, பெண்ணவளின் முகத்தையும் ஏறிட்டுப் புன்னகையை உதிர்த்தான் பதுமன்.

மங்கையவளும் ஆடவனை நோக்கிக் குறுநகை புரிந்து விட்டு உள்ளே சென்றாள்.

அதிலேயே, அவர்களிருவருக்கும் பிடித்துப் போயிற்று என்பதை அனைவரும் அறிந்து கொண்டாலும், தங்களது மகனிடம் அவனது விருப்பத்தைப் பற்றி வினவ, அவனும் சம்மதித்து விட்டான்.

“எங்களுக்கும் அண்ணியைப் பிடிச்சிருக்கே!” என்றனர் பதுமனின் தம்பி மற்றும் தங்கை.

”எங்களுக்குப் பொண்ணைப் பிடிச்சுப் போச்சு! ரிதிமா கிட்டேயும் கேட்டுக்கோங்க சம்பந்தி” என்றார் யுதிர்ஷ்டன்.

உள்ளே போய்த் தன் மகளிடம் அவளது சம்மதத்தைக் கேட்ட வத்சலாவிடம்,”எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு ம்மா” என்றுரைத்தாள் அவரது மகள்.

அதை அனைவரிடமும் தெரிவித்து விட்டதும்,”இப்போவே பூ வச்சிடலாமா சம்பந்தி?” என்று பெண்ணின் பெற்றோரிடம் கேட்டார் பவதாரிணி.

“சரிங்க” என அவருக்கு ஒப்புதல் அளிக்கவும்,

தாங்கள் கொண்டு வந்திருந்த பூவை ரிதிமாவின் தலையில் சூடி விட்டார் பதுமனின் தாய்.

வந்த வேலை முடிந்ததால், அனைவரும் கிளம்பும் நேரம் வந்து விடவே,”நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க. பதுமனோட மொபைல் நம்பரை நான் அனுப்பி வைக்கிறேன். அப்போ நாங்கப் போயிட்டு வர்றோம் சம்பந்தி!” என்று அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பி விட்டார்கள்.

காரை இயக்கிக் கொண்டிருந்த சாதுரியனோ,”உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” எனத் தன் பெற்றோர் மற்றும் தமையனைக் கரித்துக் கொட்டினான்.

“ஆமாம் ண்ணா! எனக்கும் செம்ம பல்பு கொடுத்துட்டாங்க!” என்று திரும்பிப் பார்த்து மூவரையும் முறைத்தாள் தன்மயா.

“ஹாஹா! அப்படித் தான் பண்ணுவோம்! முதல்ல உங்களோட சீக்ரெட்டைச் சொல்லுங்க!” என்றார்கள் மற்ற மூவரும்.

தங்கள் வீட்டை அடைந்ததுமே,“யப்பா சாமிகளா! வீட்டுக்குப் போனதும் முதல் வேளையாக உங்ககிட்ட அதைச் சொல்றோம்! போதுமா!” என்று கூறி அவர்களை அமைதியாக்கினான் சாதுரியன்.

- தொடரும்


முக்கியக் குறிப்பு :

யூடியோட நம்பர் தான் இருபத்தி அஞ்சு. ஆனால், இன்னும் வேர்ட் கவுண்ட் முடியலை. அதுக்காகன்னு இல்லை, கதையோட ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் எல்லாத்தையும் பொறுமையாகத் தெளிவாக எழுதனும்னு நினைக்கிறேன். அதைக் கண்டிப்பாக செஞ்சு முடிக்கிறதுக்கு உங்களோட வாழ்த்தையும், ஆதரவையும் எனக்குக் கொடுங்கன்னுக் கேட்டுக்கிறேன் டியர்ஸ் 😍
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த இருபத்து ஐந்தாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 26

வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேளையாக, ‘ஜா’ பதிப்பகம், அதன் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடனான சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை எல்லாம் தன் தந்தை, தாய் மற்றும் தமையனிடம் ஒப்புவித்து முடித்தான் சாதுரியன்.

“ஹைய்யோ! இவ்வளவு நடந்திருக்கா டா? நீங்க இதை ரொம்ப நாளாகவே எங்ககிட்ட இருந்து மறைச்சு இருக்கீங்க!” என அவனையும், இளையவளையும் பார்த்து ஒரு சேர முறைத்தார்கள் மூவரும்.

“உங்க மூனு பேருக் கிட்டேயும் சாரி கேட்டுக்கிறோம்!” என்று மன்னிப்புக் கேட்டாள் தன்மயா.

“அவங்க இன்னும் எந்தப் பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸூம் கொடுக்கவே இல்லை! அதான், இதை எங்களால் உங்ககிட்ட சொல்ல முடியலை” என்று அவர்களிடம் பதிலளித்தான் சாதுரியன்.

“ம்ஹ்ம். அதனால் உங்களை மன்னிச்சிடறோம்” என்றார் பவதாரிணி.

“சரிம்மா. அந்தப் பப்ளிகேஷனுக்குப் போன அன்னைக்கு, அகஸ்தியாவோட அம்மாவும், நீங்களும் என்னப் பேசிட்டு இருந்தீங்க?” என்று அவரிடம் வினவினான் அவரது இரண்டாவது மகன்.

“நான் அதை இப்போ சொல்ல மாட்டேன் போடா! நீங்க மட்டும் இவ்வளவு லேட் ஆக சொல்லுவீங்க! நான் மட்டும் உடனே விஷயத்தை ஷேர் செய்யனுமா?” என்று பிகு செய்தார் அவர்களது அன்னை.

“ஹூம்!” என்று இருவரும் அவரிடம் கோபித்துக் கொண்டார்கள்.

“ஆமாம். நீங்க செஞ்சு வச்சிருக்கிறது அப்படி இருக்கு!” என்றார் யுதிர்ஷ்டன்.

“அதுக்காக இப்படியெல்லாமா பழி வாங்குவீங்க? நீங்களாவது எங்களுக்குச் சப்போர்ட் செஞ்சுப் பேசலாம்ல அண்ணா?” என்று மூத்தவனைப் பார்த்துக் கேட்டாள் தன்மயா.

“நீங்க எப்படி ஒன்னா சேர்ந்து சீக்ரெட் மெயின்டெய்ன் செஞ்சீங்களோ! அதே மாதிரி நாங்களும் அப்படி நடந்துக்கப் போறோம்!” என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்தான் பதுமன்.

“சரி. ஏதோ ஒரு முடிவு எடுத்துட்டீங்க! அப்படியே இருங்க!” என்று அவர்களிடம் கூறி விட்டார்கள் சாதுரியன் மற்றும் தன்மயா.

அதன் பின்னர்,”முதல்ல பதுவோட எங்கேட்ஜ்மெண்ட்டுக்கான வேலையை ஆரம்பிப்போம். அப்பறம் உங்கப் பஞ்சாயத்தை வச்சுப்போம்!” என்று கூறி விட்டார் யுதிர்ஷ்டன்.

“அதுக்கு முன்னாடி அண்ணாவோட நம்பரை அவங்களுக்கு அனுப்பி வச்சீங்களா?” என்று தாயிடம் கேட்டாள் தன்மயா.

“இல்லையே! அதை முதல்ல செய்றேன்” என்றவரோ, பதுமனின் செல்பேசி எண்ணைத் தங்களது சம்பந்தி வீட்டாருக்கு அனுப்பி வைத்தார் பவதாரிணி.

அதைப் பார்த்த வத்சலாவும், தன் மகளிடம் விஷயத்தைச் சொல்லி கைப்பேசி எண்ணைக் கொடுத்து விட்டதாக அவரிடம் தெரிவித்தார்.

ஒரு வழியாக அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி அடைந்து விட்டதாக எண்ணி நிம்மதி அடைந்தார்கள் சாதுரியன் மற்றும் தன்மயா.

ஆனால், இப்போது தான், இன்னொரு மாபெரும் சிக்கல் அல்லது சங்கடம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.

அலுவலகத்திற்குச் சென்றவளின் மனதின் நிலைப்பாடு வெகுவாக பாதித்து விட்டது.

அதைப் பொறுத்துக் கொண்டு தான், தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அகஸ்தியா.

தன்னுடைய முக வாட்டத்தை மற்ற இருவரிடமும் காட்டிக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதால், ஜெய்சிகாவும், ஹரித்தும், அவளிடம் அதைப் பற்றிய எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

வலைதளம் மற்றும் பதிப்பகம் பற்றிய, சம்பாஷணைகள் தான், அங்கே ஓடிக் கொண்டிருந்தது.

“காம்படிஷன் கதைகளில் ஒரு சிலது புக்ஸ் ஆகப் பப்ளிஷ் ஆகிடுச்சு தியா. அதை அந்த ரைட்டர்ஸ் கிட்டே சொல்லிடலாமா?” என்றான் ஹரித்.

“ஹாங்! வேண்டாம் டா. எல்லா புக்ஸூம் பப்ளிஷ் ஆகட்டும். அதுக்கப்புறம் இன்ஃபார்ம் செய்யலாம்” என்று அவனிடம் கூறி விட்டாள் அகஸ்தியா.

“அதை முதல்ல நாம வாங்கி ஏதாவது பிரிண்டிங் மிஸ்டேக்ஸ் இருக்கான்னுப் பார்க்கனும் டா! அப்பறம் தான், எல்லார்கிட்டயும் சொல்ல முடியும்” என்று நண்பனுக்கு விளக்கினாள் ஜெய்சிகா.

“ஓஹ்! ஓகே” என்று அதை ஆமோதித்துக் கொண்டான் ஹரித்.

மதிய உணவை முடித்தப் பின்னரும் கூட, அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

எப்படியோ மாலை வரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அலுவலக வேலை நேரம் முடித்ததும்,”ஓகே ஃப்ரண்ட்ஸ். டைம் ஆகிடுச்சு. நாம வீட்டுக்குக் கிளம்பலாம்” எனவும்,

“சரி தியா. பை!” என்று கூறினர் ஜெய்சிகா மற்றும் ஹரித்.

“பை” என்று அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வேக வேகமாகத் தன் இல்லத்திற்குச் சென்றவள்,

அங்கே தன் அறையில் இருந்தவளோ, தன்மயாவின் குறுந்தகவலைத் தான் பல தடவைகள் படித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள் அகஸ்தியா.

தனது கன்னத்தின் ஓரமோ, கண்ணீரால் நனைவதை அவளால் தடுக்க இயலவில்லை.

‘ப்ச்! ரொம்ப லேட் செய்துட்டேன்ல!’ என்று தன்னைக் குறைபட்டுக் கொண்டவளோ, சாதுரியனுக்குப் பெண் பார்க்கச் சென்ற நிகழ்வு வெற்றிகரமாக முடிந்து விட்டதா? என்பதை எவ்வாறு கேட்டறிந்து கொள்வது? என்று தவித்துப் போனாள் அகஸ்தியா.

அந்த நேரத்தில், தான் வெளியே சென்றிருந்த சமயம், தனக்குப் பதிலாக தனது கதையின் அத்தியாயம் பதிவு செய்யப்பட்டு இருக்கவும், அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவள், அந்த தளத்தின் உரிமையாளருக்குக் குறுஞ்செய்தியில் நன்றி தெரிவித்தாள் தன்மயா.

அதைக் கண்ணுற்றவளோ,’இட்ஸ் ஓகே ம்மா. இது என்னோட பொறுப்பு தான்!’ என்று அவளுக்கு அனுப்பினாள் அகஸ்தியா.

‘தாங்க்யூ மேம். உங்ககிட்ட இன்னொரு எக்ஸ்கியூஸ் கேட்கனும்’ என்று அவளிடம் வினவியவளிடம்,

‘சொல்லு டா’

‘என் அண்ணாவுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு மேம். அது வரைக்கும் என்னால் அடிக்கடி சைட்டில் வர முடியாது. அதனால், என்னோட கதையோட அப்டேட்ஸ்ஸை எனக்குப் பதிலாக நீங்கப் போஸ்ட் செஞ்சு லிங்க்கை ஷேர் செய்றீங்களா? ப்ளீஸ்!’ என்று அவளிடம் இறைஞ்சிக் கேட்டாள் தன்மயா.

அதிலேயே, அகஸ்தியாவிற்கு மனமுடைந்து போனது.

அவ்வளவு தான் எல்லாம் முடிந்து போனது! என்ற முடிவிற்கு வந்தவளோ,’ஷ்யூர் ம்மா. நீங்க அங்கே பாருங்க. உங்கப் பிரதருக்கு என்னோட விஷ்ஷைக் கன்வே செய்திருங்க’ என்ற வார்த்தைகளைத் தட்டச்சு செய்து அனுப்புவதற்குள் அவளுடைய கன்னங்களில் கண்ணீர்க் கறைகள் அழுத்தம் திருத்தமாகப் படிந்து விட்டது.

‘கண்டிப்பாக சொல்லிட்றேன் மேம். உங்களோட சப்போர்ட்டுக்குத் தாங்க்யூ சோ மச்!’ என்று கூறியவளோ, தனது இரண்டாவது தமையனின் திருமணத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டதை எண்ணி நொந்து, துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல்,

தன் மூத்த அண்ணனுக்கு நடக்கப் போகும் நல்லதை நினைத்து ஆனந்தத்துடன் அவளுடன் குறுஞ்செய்தி வழியாக உரையாடிக் கொண்டு இருந்தாள் தன்மயா.

‘பரவாயில்லை ம்மா’ எனக் கூறி அந்த உரையாடலை முடித்துக் கொண்டாள் அகஸ்தியா.

இத்தோடு அனைத்தும் கை விட்டுப் போய் விட்டதை அவளால் நம்பவே முடியவில்லை.

அதுவும், தான் நேசிக்கத் தொடங்கிய சமயத்திலேயே, சாதுரியனுக்கு வேறொரு வாழ்க்கைத் துணை அமையப் போகிறார் என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை.

ஆனால், இதை இப்படியே விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்துடன் வலைதளை வேலை என்ற சாயத்தைப் பூசிக் கொண்டு அவனுக்கு அழைத்தாள் அகஸ்தியா.

தன்னுடைய பெற்றோரும், தமையனும், செய்த கலாட்டாக்களால் சோர்வாக இருந்தவனுடைய செல்பேசி ஒலிக்கவே, அதை எடுத்துப் பார்த்து விட்டு,

‘வாட் எ சர்ப்ரைஸ்!’ என்றவாறு அழைப்பை ஏற்று,”ஹலோ மேம்!” என்று உற்சாகத்துடன் பேசினான் சாதுரியன்.

அவனது குரலைக் கேட்டதும், அவளுக்குச் சற்று தெம்பு கிடைத்தது போலும்!

எனவே,”ஹாய் சார். வெப்சைட்டில் ஒரு பிராப்ளம் ஆயிருச்சு” என்று அவனிடம் இயல்பான குரலில் சொன்னாள் அகஸ்தியா.

“அப்படியா மேம்? அது என்னன்னு விளக்கமாகச் சொன்னீங்கன்னா, சீக்கிரம் முடிச்சுக் கொடுத்துருவேன்” என்று அவனும் சாதாரணமாகப் பதில் கூறினான் சாதுரியன்.

‘அப்போ தானே, ஜாலியாக கல்யாணத்துக்குத் தயாராக முடியும்?’ என்று தன் மனதிற்குள் அவனைத் திட்டி விட்டு,

“நான் மெசேஜ்ஜில் அனுப்பி வைக்கிறேன் ங்க” என்றாள்.

“ஓகே மேம்” என்றவுடன்,

தனது பொருமலை அடக்க முடியாமல்,”அப்பறம், உங்களோட கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துகள் சார்!” என்று அவனிடம் அழுத்தமாக கூறினாள் அகஸ்தியா.

அதைக் கேட்டவுடன்,”என்னோட கல்யாணமா?” என்று அவளிடம் குழப்பத்துடன் வினவினான் சாதுரியன்.

“ஆமாம் சார். இது எனக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்கிறீங்களா? உங்க தங்கச்சி தன்மயா சொல்லிட்டாங்க!” என்று கூறிக் குமைந்தாள் அகஸ்தியா.

“தனு சொன்னாளா?” என்று நிதானமாக எண்ணியவனுக்கு விஷயம் பிடிபட வெகு நேரம் எடுக்கவில்லை.

உடனே தன்னை மீறி உதடுகள் துடித்துச் சத்தமாகச் சிரித்து விட்டான் சாதுரியன்.

அந்த ஒலியில், தனது ஆற்றாமை மேலும் எழும்புவதை அறிந்ததும், அதைக் கட்டுப்படுத்த முடியாமல்,”ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ?” என்று அவனை அடிக்குரலில் அழைத்தாள் அகஸ்தியா.

“ஹ்ம்! என்னங்க மேம்?” என்று நல்ல பிள்ளையைப் போலக் கேட்டவனிடம்,

“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?” என்று கம்மிய குரலில் வினவினாள்.

“சாரிங்க. எனக்குக் கல்யாணம்ன்னா உங்களுக்கு ஏன் கவலையாக இருக்கு?” என்று அவளிடம் குறும்புடன் கேட்டான் சாதுரியன்.

“அஃது…! நான் ஏன் ங்க கவலைப்படப் போறேன்? சும்மா உங்களுக்கு விஷ் தான் பண்ணேன்!” என்று தடுமாறிக் கூறினாள் அகஸ்தியா.

“ஓஹோ! தாங்க்யூ மேம். அப்படியே என் தனு கிட்டே என்னோட எங்கேட்ஜ்மெண்ட் டேட் வந்ததும் சொல்லி விட்றேன். நீங்க கண்டிப்பாக வந்துட்டுப் போகனும்” என்றான்.

“இல்லை! நான் அங்கே வரவே மாட்டேன்!” என்று விடாப்பிடியாக மறுத்தவளிடம்,

“என்னங்க இப்படி சொல்றீங்க? நான் உங்களை எவ்ளோ ஆசையாக கூப்பிட்றேன்?” என்று போலியான வருத்தத்துடன் அவளிடம் வினவினான் சாதுரியன்.

“நான் வர மாட்டேன் ங்க. சாரி!” என்று தன்னிடம் அழாத குறையாக கூறியவளைச் சமாதானம் செய்யும் நோக்கத்தில்,”ஹேய்! ரிலாக்ஸ் ம்மா! நாங்கப் பொண்ணுப் பார்க்கப் போறது எனக்கு இல்லை! எனக்கும், தனுவுக்கும், ஒரு அண்ணா இருக்கார். அவரோட பேர் பதுமன்” என்று கூறித் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அவளிடம் தெளிவாக விளக்கிச் சொல்லவும்,

அதில், தான் உணர்ச்சி வசப்பட்டு, அவனிடம் கூறியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து அசடு வழிந்தவளோ,

“சாரிங்க!” என்றுரைத்தாள்.

“ஐ லவ் யூ ங்க!” என்று நொடிப்பொழுதில் அவளிடம் தன் காதலைத் தெரிவித்து இருந்தான் சாதுரியன்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே உறைந்து போய் விட்டாள் அகஸ்தியா.

தான் கூறிய விஷயம் அவளுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டவனோ, அவளது உணர்வுகள் சீராகும் வரை காத்திருந்தான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்ததும்,”நீங்க என்ன சொன்னீங்க?” என்று மீண்டுமொரு முறை அவனிடம் கேட்டாள் பெண்ணவள்.

“நான் உங்களைக் காதலிக்கிறேன்னு சொன்னதாக எனக்கு ஞாபகம் ங்க!” என்று குறுஞ்சிரிப்புடன் உரைத்தான் சாதுரியன்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍 😍 😍

இந்த இருபத்தி ஆறாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
நீ இல்லா இடமும் எனக்கேது? - 27

(ப்ரீ ஃபைனல் யூடி)


அகஸ்தியா,“நான் இப்போ தான் நிகழ்காலத்துக்கு வந்திருக்கேன் ங்க!” என்று அவனிடம் கூறியவளுடைய முகமோ வெட்கத்தில் விகசித்தது.

“நான் உங்களை லவ் பண்றதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டு அவளை மேலும் சிவக்க வைத்தான்.

“அஃது! எனக்கும் உங்களை மனசார பிடிச்சிருக்குங்க” என்று தன் மனதைப் படுத்தி எடுத்த விஷயத்தை அவனிடம் கூறி விட்டாள் பெண்ணவள்.

அதைக் கேட்டதும் தான், அவளுக்குத் தன் மேல் விருப்பம், அதை விட, நம்பிக்கை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டவனோ, அதை எண்ணி உண்மையிலேயே மகிழ்ந்து போனவனோ,

சாதுரியன்,“ரொம்ப தாங்க்ஸ் ங்க!”

“எதுக்கு?” எனக் கேட்டாள் அகஸ்தியா.

“என் மேல் நம்பிக்கை வச்சதுக்கும், உங்க காதலை மறைக்காமல் சொன்னதுக்கும் தான்!” என்று அவளுக்கு விளக்கினான் சாதுரியன்.

“அப்படியா? என் மேல் உங்களுக்கு எப்படி நம்பிக்கை வந்துச்சு?” என்று ஆர்வத்துடன் கேட்கவும்,

“நான் உங்களோட வெப்சைட்டுக்கு முதல்ல வொர்க் செஞ்சுக் கொடுத்தேன்ல? அப்போதிருந்தே உங்க ஃப்ரண்ட் ஹரித் தான், எப்பவும் எங்கிட்டே பேசுவார். அவர் மட்டும் தான், ‘ஜா’ பப்ளிகேஷனோட ஓனர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். அந்த டைமில் தான், நீங்க நடத்துற போட்டியில் என்னோட தங்கச்சியும் கலந்துக்க ஆசைப்பட்டுப் பேர் கொடுத்திருந்தாள்! அதனால், நானும் உங்களுக்கு எங்கிட்டே இருந்து எந்த உதவி வேணும்னாலும் கேளுங்கன்னு சொல்லி பல்பு வாங்கினேன்!” என்று கூறி இடைவெளி விட்டவனிடம்,

“ஆமாம் ங்க” என்று சொல்லிச் சிரித்தாள் அகஸ்தியா.

“நான் அப்போவும் உங்களோட பேசினது இல்லை. ஆனால், ஒரு தடவை ஹரித்துக்குப் பதிலாக நீங்க எனக்குக் கால் செஞ்சு ஹெல்ப் கேட்டீங்க! அந்த நேரத்தில் தான், நீங்களும் அதோட ஓனர்ன்னு எனக்குத் தெரிஞ்சது! அப்பறம், போட்டிக் குரூப்பில் நீங்க அனுப்புற வாய்ஸ் மெசேஜ்ஜைக் நான் கேட்கிற சுவிட்சுவேஷன் வந்துச்சு. அதிலிருந்து எனக்கு ஒரு ஸ்பார்க் ஆச்சு! ஆனால், உடனே அதை, வளர விடாமல் தடுத்துட்டேன். அப்பறம் தான், ஒரு பிரளயமே வெடிச்சது!” என்றவன், தானும், தன்மயாவும், உடன்பிறந்தவர்கள் என்பதை அவள் அறிந்து கொண்ட பின், தங்களுக்குள் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை அவளிடம் மறைக்காமல் உரைத்தான் சாதுரியன்.

“ஐயையோ! இவ்வளவு நடந்திருச்சா? இப்படி உடம்பை வருத்திக்கிட்டுக் கதை எழுதனுமா? சாரிங்க” என்று தன்னால் தான் இப்படி ஆகி விட்டது என்று அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

“ஹேய்! பரவாயில்லை ம்மா. அதுக்கப்புறம் நானும், அவளும் பழைய மாதிரி மாறிட்டோம்! ஆனால், நான் உங்ககிட்ட சாரி கேட்கனும்னுத் துடிச்சிட்டே இருந்தேன்! ஃபோனில் சொன்னா உங்ககிட்ட இருந்து அவ்வளவு நல்ல ரெஸ்பான்ஸ் வரலை. சோ, நேரில் மன்னிப்புக் கேட்டா பெட்டராக இருக்கும்னு நினைச்சேன்! அப்போ தான், காம்படிஷனில் வின் செஞ்ச எல்லாருக்கும் ஃபங்க்ஷன் வச்சு அதில் பிரைஸ் கொடுக்கிறதாக நீங்க இன்ஃபார்ம் பண்ணீங்க! அதுக்குத் தன்மயா கூட வர்றதுக்கு நான் பட்டப் பாடு இருக்கே!” என அந்த நிகழ்வையும் அவளிடம் சொன்னான்.

அகஸ்தியா,“ஹாஹா! செம்ம!”

“அப்பறம் தான், நேரில் மீட் பண்ணோம். அதிலிருந்து உங்களைப் பத்தி யோசிக்காமல் இருக்கவே முடியலை. ஆனால், தப்பான எண்ணம் எதுவும் சத்தியமாக கிடையாது!” என்று அவளிடம் உறுதி அளித்தான் சாதுரியன்.

“தெரியும் ங்க” என்று கூறிப் புன்னகைத்தாள்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட, நீங்கப் பேசினதைக் கேட்டதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு தெரியுமா?”

“ஓஹ்ஹோ! நான் ஃபீல் செஞ்சு, அழுது பேசியது உங்களுக்கு ஹேப்பியா இருந்ததா?” என்று அவனிடம் கோபித்துக் கொண்டாள் அகஸ்தியா.

“ஐயோ! அப்படி இல்லை ம்மா! அப்படி நீ பேசப் போய்த் தானே, நம்ம ரெண்டு பேரோட லவ்வும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்க முடிஞ்சது!” என்று கூறி அவளுக்குப் புரிய வைத்தான் சாதுரியன்.

“எனக்கு முதல்ல இருந்தே போட்டியை நல்லபடியாக நடத்தி முடிக்கனும்ன்றது தான் மைன்ட்ல இருந்தது. அதனால், வேறெந்த விஷயத்திலும் கவனம் போகலை. நீங்க ஹெல்ப் கேட்ட அப்போவும், எதுவும் தோனலை. ஹரித்துக்குப் பதிலாக நான் உங்ககிட்ட சைட் வொர்க் செஞ்சுக் கொடுக்க சொல்லிக் கேட்டேன்ல? அப்போவும் எங்கிட்ட எந்தச் சேஞ்சும் இல்லை. அந்த ஃபேஸ்புக் ஃப்ரண்ட் லிஸ்ட்டைப் பார்த்துட்டு தன்மயாகிட்டே கேட்டேனே? அந்த டைமில் எனக்கு உங்க ரெண்டு பேர் மேலேயுமே கோபம் வந்துச்சு. ஏன்னா, ஃபர்ஸ்ட் டைம் சைட்டில் காம்படிஷன் நடத்துறோம். அதில் எந்த தப்பும், சங்கடமும் வந்துடக் கூடாதுன்னு நினைச்சா இப்படி ஆயிருச்சேன்னு தான் ஃபீல் செஞ்சேன்!”

“ஆமாம். அந்தப் பொறுப்பில் நீங்களும் இருந்தீங்களே? அப்படி யோசிச்சது சரி தான்” என்று ஆமோதித்தான்.

“அதுக்கு நீங்க சாரி கேட்டப்போ, விஷயத்தைப் பெருசு வேணாம்னு தான் அப்படி பேசினேன். ஆனால், அந்த ஃபங்க்ஷனுக்கு நீங்களும் தன்மயா கூட வர வாய்ப்பு இருக்குன்னு எனக்குத் தோனுச்சு. அதே மாதிரி நீங்களே வந்தீங்க! அங்கே எங்கிட்ட சாரி கேட்கவும், இவ்வளவு நாளாக இதை நினைச்சு ஃபீல் செஞ்சிருக்கீங்களேன்னு இருந்தாலும், அதை நீங்க ஞாபகம் வச்சு இருந்ததை நினைச்சு நான் ஹேப்பி ஆகிட்டேன்” என்று கூறியதைக் கேட்டதும், அவனுக்கும் ஆசுவாசமாக இருந்தது.

“அதுக்கப்புறம், உங்க மேல எந்தவித பிடிப்பும் வந்துடக் கூடாதுன்னுக் கவர் ஃபோட்டோஸ் செய்ய உங்க கம்பெனியிலேயே கொடுக்கனும்னு என்னோட ஃப்ரண்ட்ஸ் சொன்னப்போ, முதல்ல வேணாம்னு மறுத்துட்டேன். எனக்கு அவங்க நிலைமையைப் புரிய வச்சதுக்கு அப்பறம் ஓகே சொன்னேன். இதுக்கெல்லாம் முக்கியமாக ஒன்னு செஞ்சேன்! என் அப்பா, அம்மாகிட்டே அட்வைஸ் கேட்டேன்” என்று சொல்லி விட்டு, இதைக் கேட்டவுடன் அவனது மனம் காயமுற்று விட்டதோ என்று மௌனமாகி விட்டாள் அகஸ்தியா.

சாதுரியன்,“என்னாச்சு?”

“இதனால், நீங்க எதுவும் ஹர்ட் ஆகிட்டீங்களா?”

“நிச்சயமாக இல்லை. எனக்குமே என்னோட பேரன்ட்ஸ் இப்படியான அட்வைஸ் எல்லாம் செய்வாங்க!”

“அவங்ககிட்ட பேசினதுக்கு அப்பறம் தான் அதுக்கு முன்னாடி எங்கிட்டே இருந்த தயக்கம் எல்லாம் மறைஞ்சு, உங்க மேல லவ் வர ஆரம்பிச்சது. அப்போ தான், உங்கத் தங்கச்சி அவங்களோட அண்ணாவுக்குப் பொண்ணுப் பார்க்கப் போறதா சொன்னாங்க! அதில் தான் எனக்கு ட்ரிக்கர் ஆகி என்னோட காதல் வெளியே வந்து உங்ககிட்ட அதைப் பத்திக் கேட்டு நானும் ஒரு பல்பு வாங்கிட்டேன்!” என்று கூறி வெட்கப்பட்டாள் அகஸ்தியா.

“எஸ்! எல்லாமே ஓகே ஆகிடுச்சு! நாம இப்போ நம்மளோட பேரன்ட்ஸ் அண்ட் ஃப்ரண்ட்ஸ் கிட்டே இதையெல்லாம் ஷேர் செய்வோமா?”

“ஷூயர் ங்க. ரெண்டு ஃபேமிலியையும், நேரில் மீட் பண்ண வச்சு இன்னும் எல்லாத்தையும் பேசி முடிப்போமா?”

சாதுரியன்,“குட் ஐடியா! அதை இப்போவே செயல்படுத்தலாம்! பை ம்மா!” என்றவனுக்கு,

”ஓகே ங்க. பை!” என அவளும் விடை கொடுத்து விட்டு அழைப்பை வைத்து விட்டுத் தன் பெற்றோரிடம் சென்றாள் அகஸ்தியா.

*************************

அவளது தாயும், தந்தையும், அன்றைய தினம், வீட்டில் தான் இருந்தார்கள்.

“ம்மா! ப்பா! நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்!” என்று சாதுரியனுடனான தன் உரையாடலை அவர்களிடம் முழுமையாக சொல்லி விட்டாள் அவர்களது மகள்.

அதைக் கேட்டு இருவரது முகங்களிலும் யோசனை படர்ந்தது.

குணசுந்தரி,”இது அவசரத்தில் எடுத்த முடிவு இல்லையே?”

“ம்ஹூம்! நான் நல்லா யோசிச்சிட்டுத் தான், இதை உங்ககிட்டே சொல்றேன்” என்றாள் அகஸ்தியா.

உலகேசன்,“அப்போ சரி. அவங்களோட பேரன்ட்ஸை நாங்கப் பார்த்துப் பேசனுமே?”

“அவர்கிட்ட மெசேஜ் பண்ணிக் கேட்கிறேன் ப்பா” என அதைச் செய்தாள்.

****************************

அதேபோலவே, தன்னுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை அழைத்து விஷயத்தைச் சொன்னான் சாதுரியன்.

தன்மயா,“ஹேய்! நான் உங்களைச் சும்மா தான் கேலி செஞ்சிட்டு இருந்தேன். அப்பறம் அது தப்புன்னு தெரிஞ்சதும் ஸ்டாப் பண்ணிட்டேன்! ஆனால், இதைக் கேட்டதும் செம்ம ஷாக் அண்ட் ஹேப்பியா இருக்கு!” என்று கூறி வாழ்த்தும் தெரிவித்தாள்.

“நன்றி டா” என்றவனோ, தனது மற்றவர்களைப் பார்க்கவும்,

யுதிர்ஷ்டன்,”என்ன தான் நான் காலையில் வேலைக்குப் போயிட்டு ஈவ்னிங் வந்துட்டு ரெஸ்ட் எடுத்தாலும், எதையுமே கண்டுக்காமல் இருக்கேன்னு நினைச்சிடாதீங்க! உங்க ஒவ்வொருத்தரோட எல்லா விஷயமும் எனக்கு உங்க அம்மா மூலமாக உடனே தெரிஞ்சிரும். நீ உண்மையிலேயே அந்தப் பொண்ணை லவ் பண்ற தானே?”

“ஆமாம் ப்பா. நான் இதையெல்லாம் விளையாட்டுத் தனமாகப் பண்ணலை. என்னோடது தெளிவான முடிவு தான்!” என்று அவரிடம் உறுதியாக கூறினான் சாதுரியன்.

“அந்தப் பெண்ணோட நம்பிக்கையைக் காப்பாத்து!” என்று கூற மறைமுகமாகத் தன்னுடைய சம்மதத்தை அவனுக்குத் தெரிவித்தார் பவதாரிணி.

“உனக்கும் சேர்த்துப் பொண்ணுப் பார்க்கலாம்னு சொன்ன அப்போ, நீ ஷாக் ஆகி வேண்டாம்னு மறுத்தியே? அப்போவே, இப்படித் தான், ஏதோ ஒரு விஷயம் இருக்கும்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டோம்! அதை உன் வாயிலிருந்து வரட்டும்னு தான் வெயிட் செஞ்சோம் டா!” என்று அவனைக் கட்டிக் கொண்டான் பதுமன்.

“நம்ம அண்ணா எப்பவுமே ஷார்ப் தான்!” என்று அவனைப் பாராட்டி விட்டு, அவர்களுடன் தானும் இணைந்து கொண்டாள் தன்மயா.

இதைப் பார்க்கவே, அவர்களது பெற்றோருக்கு மனம் நிறைந்து போயிற்று.

அதன் பிறகு, அகஸ்தியாவின் குறுஞ்செய்தி காணக் கிடைத்ததும், அதைத் தன் குடும்பத்திடம் காண்பிக்க,

அவர்களோ,“நாங்களும் அவங்களைப் பார்க்கனும் டா! ஓகே சொல்லிரு” என்று ஒப்புதல் அளித்தார்கள் நால்வரும்.

உடனே, இரு வீட்டாரும் ஒன்றாக அமர்ந்து சம்பாஷணை செய்து கொள்வதற்கு ஏற்ப ஒரு இடத்தை தெரிவு செய்து சொல்லுமாறு அகஸ்தியாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.

***********************

சாதுரியன் மற்றும் அகஸ்தியாவும் காதலிப்பதை தெரிந்து கொண்ட அவர்களது நண்பர்களில்,

அவனுடைய தோழமைகளான, கனிஷா மற்றும் வராகனோ,”இப்படித் தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமே!” என்று நண்பனுக்கு வாழ்த்துக் கூறினார்கள்.

ஆனால், அகஸ்தியாவின் தோழன், தோழியின் நிலைமை தான் மிகவும் மோசமாகி விட்டது.

“கவர் ஃபோட்டோஸைக் கூட அவங்ககிட்ட கொடுத்து செய்ய வேண்டாம்னு சொன்னியே! அப்புறமும் இதெப்படி நடந்துச்சு?” என்று தங்கள் காதில் புகை வராத குறையாக ஜெய்சிகாவும், ஹரித்தும் அவளிடம் கேட்டு ஒரு வழி செய்து விட்டனர்.

அவர்களுக்கு முதலில் இருந்து இறுதி வரை நிகழ்ந்தவற்றைத் தெளிவாக விளக்கிச் சொல்லி முடித்தாள் அகஸ்தியா.

அதன் பின் தான், அவர்களே மலையிறங்கி வந்து அவளுக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தார்கள்.

- தொடரும்

இந்தக் கதையில் சாதுரியன் அண்ட் அகஸ்தியாவைத் தவிர, ஒரு சில கேரக்டர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பேன். ஹீரோ, ஹீரோயினோட சேர்த்து அவங்களும் தங்களுக்குப் பிடிச்ச விஷயத்தைத் தேடி அதுக்கான எஃபெர்ட் போட்டு அதை அடைஞ்சு இருப்பாங்க. ஒவ்வொருத்தரும் ஒரு தேடல் இருந்திருக்கும். அவங்க எல்லாம் யார்? அவங்களோட தேடல் எல்லாம் என்ன? அதைக் கண்டுபிடிச்சிட்டால் அது தான்,"நீ இல்லா இடமும் எனக்கேது?" தலைப்புக்கான ஜஸ்டிஃபிகேஷனாக இருக்கும்! முந்தைய யூடிக்களில் நீங்கப் போட்ட கமெண்ட்ஸையும் பார்த்துக்கோங்க! முதலில் சரியாக கண்டுபிடிக்கிறவங்களுக்கு நிச்சயமாக ஒரு பரிசு இருக்கு! ஆல் தி பெஸ்ட் டியர்ஸ் 😍😍😍
 
Status
Not open for further replies.
Top