எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாற்கரனில் உருகும் பார்த்தவியே - கருத்து திரி

உறவுகள் சரி இல்லாத இருவர் உறவாகும் கதை!!.. மோதலில் ஆரம்பித்து, இயல்பான நட்பாகி, காதலால் இணைந்தனர்!!...

நந்தனின் நட்பு ரொம்ப ரொம்ப பிடித்தது!!... எதிர்பாரா திருப்பங்கள் கதையின் போக்கை சுவாரஸ்யமாக்கியது!!..

கடைசி வரை மாறாத பாசம் கொண்டிருந்த பெற்றவர்களையும், உடன் பிறவா சகோதரனையும் பிடித்தது!!..

அந்த பாட்டிக்கு மிதிலா கொஞ்சமாவது பதிலடி கொடுத்திருக்கலாம்!!!... சில காட்சிகளில் உணர்வுகளை உணர முடியவில்லை!!... பவித்ரா இறுதியில் மிதிலாவுக்காக பேசியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!..

காட்சியமைப்புகளிலும், உணர்வுகளை எழுத்தாக்குவதிலும் இன்னும் கவனம் செலுத்தினால் அருமையாக இருக்கும்!!...

தலைப்புக்கான அர்த்தம் சொன்னது அருமை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
#நறுமுகைநிலாக்காலம்_02
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
#NNK67
பாற்கரனில் உருகும் பார்த்தவியே
ராகவ்... ஏழு வயதில் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு பெங்களூர் வரும் இவன் தன் சொந்த காலில் முன்னேறி சொந்தமாக கம்பெனி வைத்து தொழிலில் வெற்றியாளனாக இருக்கிறான்.. இவனின் உற்ற நண்பன் நந்தா.. ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்கள்.. ராகவ்வின் வாழ்வில் வருகிறாள் மிதிலா.. தாய் தந்தை இவள் மீது பாசமாக இருந்தாலும் தேள் போல இவளை கொட்டிக் கொண்டே இருக்கிறார் பாட்டி அவருக்கு சின்ன பேத்தியின் மீது மட்டுமே அளவு கடந்த பாசமும் அன்பும்.. பாட்டி தன்னை திட்டுவது ஏன் என்று தெரியாமல் இருந்தவளுக்கு உண்மை தெரிய வருகிறது ஒரு நாள்.. இந்நிலையில் இவளை திருமணம் செய்து கொள்ள வருகிறான் கயவன் ஒருவன்.. ராகவ் மற்றும் மிதிலா தங்களுக்குள் இருக்கும் காதலை மற்றவர்களுக்காக மறைத்து துயரத்தில் மருகி நிற்கும்போது எப்படியோ இருவருக்கும் திருமணம் நடக்கிறது இன்புற்று இருக்கும் சிறிது காலத்திலேயே மற்றும் ஒரு சோதனையாக கடத்தப்படுகிறாள் மிதிலா.. இவளைக் காப்பாற்றி அழைத்து வரும் கணவனோடு வாழ விரும்பாமல் அவனை விட்டு பிரிய முடிவெடுக்கிறாள்,.. மனைவியின் முடிவு அறிந்து அதிர்ந்து நிற்கும் ராகவ்.. என்ன செய்தான் பிரிந்தவர்கள் செய்தார்களா என்பதும் வில்லன் யார் என்பதும் கதையில்..
பாட்டி வேதவல்லி... நாக்கா தேள் கொடுக்கா இவருக்கு 😡
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Good luck 🥰🌹💐
 
Thankyou akka...
 
Nnk67

பாற்கரனில் உருகும் பார்தவியே

மிதிலா பவித்ரா அக்கா தங்கை, ஆனால் மிதிலா வீட்டு பெரிய மனுஷி வேதவல்லியால் ஒதுக்கி சாட படுகிறாள், காரணம் அவள் அந்த வீட்டு பிள்ளை என்பது தாமதமாக தான் தெரிகிறது.

ராகவன் மிதிலா ஒருவருக்கு ஒருவரை பிடித்தாலும், உறவுகளை வெறுக்கும் ராகவ் அவளையும் மறுத்துவிடுகிறான். பின் சிலபல தடைகளுக்கு பிறகு இருவரும் ஒன்று சேர, கடத்த படுகிறாள் மிதிலா, அதிலிருந்து தப்பி வந்தவள் கருத்தரிக்க அதும் கேள்விகுறி‌ ஆக்கப்பட வெறுத்துப்போகிறாள். இறுதியில் கணவனோடு எப்படி சேருகிறாள் என்பது க்ளைமாக்ஸ்.

பவித்ரா லாஸ்ட்ல திடீருனு எப்டி வேதவள்ளிய எதுத்து பேசுனா? அப்பாவும் அம்மாவும் மிதிலாக்கு ஏன் அவ்ளோவா சப்போர்ட் பண்ணல? மிதிலா கேரக்டரும் ஒரே குழப்பம் புடிச்ச‌ கேரக்டரா இருந்தது. இன்னும் தெளிவா சொல்லிருக்கலாம்னு தோனுச்சு.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Top