எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ வருவாயென நானிருந்தேன் - கதைத் திரி

Status
Not open for further replies.

NNK-73

Moderator
வணக்கம்,

நான் NNK - 73

நீ வருவாயென நானிருந்தேன்! கதைக்கு உங்களை எல்லாரையும் வரவேற்கிறேன்!

படிச்சுப் பார்த்துட்டு நிறை குறைகளை தயங்காமல் சொல்லுங்க...

உங்களுடைய கருத்துகள் ஒவ்வொண்ணும் என்னை மேலும் மேலும் மேம்படுத்திக்க பேருதவியாக இருக்கும்

Happy reading!
 

NNK-73

Moderator
நீ வருவாயென நானிருந்தேன்!
ஏன் மறந்தாயென நானறியேன்...

அத்தியாயம் 01

அயோத்யா காண்டம்


ஹாய்! நான் ஐஸ்வர்யா!

“இன்னிக்கு காலேஜ் ஃபர்ஸ்ட் டே. எங்க ஊர்லையே பெரிய்ய காலேஜ்ல பி.ஆர்க் சேர்ந்திருக்கேன். ரொம்ப கஷ்டமான கோர்ஸ்னு எல்லாரும் சொன்னாங்க, ஆனா எனக்கு ஆர்கிடெக்ச்சர் படிக்கணும்னு ரொம்ப ஆசை, அதனால கஷ்டப்பட்டு படிச்சு நெறைய்ய மார்க் வாங்கி, எனக்கு பிடிச்ச காலேஜ்ல, பிடிச்ச கோர்ஸ்ல சேர்ந்துட்டேன். ஐஷுகுட்டி இன்னிக்கு ரொம்ப ஹாப்பி!”

“என்ன ஆத்தரக்கா பேசாம, நான் பேசறேனேன்னு பாக்குறீங்களா? என்னைப் பத்தி நான் சொன்னதான் சரியா இருக்கும், அதான் நானே பேசிக்குறேன், நீ கொஞ்சம் ஓரமா நில்லுன்னு சொல்லிட்டேன்”

“ஆத்தருக்கும் எப்பயாவது பேச சான்ஸ் குடுப்பேன், ஆனா நானும் அப்பப்போ உங்களோட பேச வருவேன், ஓகேதானே?”

“சரி, இப்போ என்னைப் பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன்.”

“எங்க அப்பா பேரு விஸ்வநாதன், சயின்டிஸ்ட். அம்மா, மீனாக்ஷி. இல்லத்தரசி. எனக்கு ஒரு அண்ணா இருக்கான் அக்கி பக்கி அகிலேஷ். என்னை விட அஞ்சு வருஷம் பெரியவன். அவன் தனியா இருந்துடக் கூடாதேன்னு, போனா போகுதுன்னு ஆஃப்டர்தாட்ல என்னைப் பெத்தாங்களாம். இப்பிடியே சொல்லி சொல்லி என்னைக் கடுப்பேத்திக்கிட்டே இருப்பான். அதான், சீக்கிரமா கல்யாணம் பண்ணி அவனை மாமியார் வீட்டுக்கு அனுப்ப பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன். ஒரு பயங்கர கேடி பக்கர் பொண்ணா பார்த்து இவனை மாட்டி விட்டுட்டா போதும். தேடுவோம், கண்டுபிடிப்போம், மாட்டிவிடுவோம்! அதைப் பார்த்து நாம சந்தோஷப்படுவோம்!”

“இதோ, காலேஜுக்கு கிளம்பியாச்சு, அப்பாதான் கொண்டுபோய் விடப்போறாரு. உண்மையைச் சொல்லணும்னா குடும்பமே வண்டி கட்டிக்கிட்டு என்னை காலேஜ்ல கொண்டுபோய் விடணும்னு பிளான் போட்டிருக்கு, இதுக்காக எங்கம்மா பார்சல் சாப்படுல்லாம் ரெடி பண்ணிட்டாங்க...விட்டா பேண்டு, ஊர்வலம் எல்லாம் வைப்பாங்க போலயே! அப்பறம் நான்தான் எல்லார் கையில கால்லயும் விழுந்து இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்திட்டேன். எல்லாம் அந்த பக்கி வேலைதான், என்னை கலாய்க்குறதுதான் அவனோட வாழ்க்கையோட எய்மே, ஒரு சான்ஸ் கூட மிஸ் பண்ண மாட்டான், குரங்கு. விட்டிருந்தா ஊர்ல இருந்து பாட்டி, தாத்தா, சித்தப்பா, மாமான்னு எல்லாரையும் கூட்டிருப்பான். செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு ஓரத்துல நின்னு நான் படுற பாட்டைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு இருக்கான், மூஞ்சைப் பாரு மொகரக்கட்டை.”

“சரி, அதெல்லாம் விடுங்க. இப்போ நாம நல்லபடியா காலேஜ் போவோம். முதல்ல பிள்ளையார் கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டுட்டு நானும் அப்பாவும் கிளம்பிட்டோம்.”

“உங்களுக்குத் தெரியுமா? நான் புதுசா காலேஜ் போகப்போறேன்னு, அப்பா நெறைய்ய புது டிரெஸ் வாங்கிக் குடுத்திருக்காரு, புது வெஸ்பா புக் பண்ணியிருக்காரு, மின்ட் கிரீன் கலர். நாளன்னைக்கு டெலிவரி வந்துடும். அப்பறம் ஐஸு குட்டிக்கு டூ விங்ஸ் முளைச்சிடும்."

"அம்மா, இத்தனை நாள் ரெட்டை ஜடை போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி விட்டாங்க, இன்னிக்கு ஒத்தை ஜடை போட்டு காலேஜுக்கு அனுப்பி விட்டிருக்காங்க, லூஸ் ஹேர் விட்டுக்குறேன்னா, தலையில நறுக்குன்னு ஒரு குட்டும் வைச்சாங்க, காலேஜுக்கு போறான்னா உனக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு, ஒழுங்கா பின்னிக்கிட்டு போ, அப்படின்னு திட்டும் விழுந்துது. சரியான ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்."

"காலையில அதே இட்லி சட்னி, டிஃபன் பாக்ஸ்ல அதே லெமன் ரைஸ், பொட்டட்டோ ஃப்ரை, ஒன்னும் மாறலை."

"அதிசயமா அண்ணா புது பேக், பென், பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச் பென், நோட்புக் எல்லாம் வாங்கிக் குடுத்தான், காலையில கிளம்பும்போது கூட ஒரு பெரிய்ய சாக்லேட் குடுத்தான், கூடவே உன்னோட சைஸுக்கும் வாய்க்கும் நல்லாவே உன்னை ராகிங் பண்ணப்போறாங்க, நல்லா அனுபவின்னு வாழ்த்தி வேற அனுப்பியிருக்கான்."

"கப் ஐஸ், பால் ஐஸ், குச்சி ஐஸ், குல்ஃபி ஐஸ்னு விதவிதமா பட்டப் பேரு வைச்சு கூப்பிடப் போறாங்கன்னு வேற கிண்டல் பண்றான்.”

“ராகிங்கா! நெனைச்சாலே பயம்மா இருக்கு, லேசா படபடன்னு வருது, ஆரம்பத்துல கொஞ்ச நாள் வாலைச் சுருட்டி வெச்சுக்கிட்டு குட் கேர்ளா இருக்கணும், யாருகிட்டயாவது எக்குத்தப்பா மாட்டிகிட்டா அப்பறம் ஐயோ அம்மான்னா காப்பாத்த கூட யாருமில்ல. என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ் யாருமே இந்த கோர்ஸ்ல சேரலை, இனிமே தான் புது ஃபிரெண்ட்ஸ் பிடிக்கணும். அதுவரைக்கும் தனியாதான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணணும்.”

“அப்பாடி, ஒரு குட்டி பொண்ணுக்கு வாழ்க்கையில எவ்ளோ பிரச்சினை, பார்த்தீங்களா? ஐஸு குட்டி பாவம்தானே!”

“ஹை! காலேஜ் வந்திடுச்சு, எவ்ளோ பெருசா இருக்கு இந்த இடம், எங்க ஸ்கூலை விட பத்து மடங்கு பெருசா இருக்கும் போலருக்கே! எவ்ளோ மரம் இருக்கு, பாக்கவே ஒரு கார்டன் மாதிரி இருக்கு, ரொம்ப ஜாலியா இருக்கு.”

“அப்பாவை உள்ளே விடலை, என்னை மட்டும்தான் விட்டாங்க, அப்பா, தலையை வருடிவிட்டு, ஆல் த பெஸ்ட் குட்டின்னு சொல்லி காலேஜுக்குள்ள அனுப்பி விட்டாரு.”

“இப்படியாக, ஐஸு குட்டி வாழ்க்கையோட இரண்டாம் பாகம் இன்னிக்கு ஆரம்பம், காலேஜுக்குள்ள வலது காலை எடுத்து வெச்சு முதல் அத்தியாயத்துக்கு பிள்ளையார் சுழியும் போட்டாச்சு...யூ ஆல்வேஸ் ராக் ஐஸ் பேபி...என்ஜாய்!”

ஓரமா நிக்கவைக்கப்பட்ட ஆத்தரோட மைன்ட் வாய்ஸ்:

“ஐஸு குட்டியோட காலேஜ் காலம் ஆரம்பம்...காதல் காலம் இனிதே ஆரம்பம்!




ஆரண்ய காண்டம்

தரையில் குற்றுயிரும் குலையுயிருமாய் விழுந்து கிடந்தவனை அவன் பார்த்த கனல் கங்குப் பார்வை சுற்றிருந்த அனைவரையும் பெரும் திகிலில் ஆழ்த்தியது.

“இது என் காடு, என்னோட அனுமதி இல்லாம இங்க இருக்குற புல் நுனியைப் பிடுங்கினாலும் அவன் உடம்புல உயிர் இருக்கும், உயிர் மட்டும்தான் இருக்கும்...”

விழுந்த அடியில் ஏற்கனவே நொறுங்கியிருந்த அவன் விரல்கள், ஷூ காலடியில் இன்னும் நசுங்கின, வலியில் துடித்தவனைப் பார்த்து, “உனக்கு என்ன தைரியம் இருந்தா, என் காட்டுக்குள்ளயே வந்து என் கடம்பன் மேலேயே கை வச்சிருப்ப? இந்தக் கை இனி இருக்கலாமா? இருக்கலாமா?” என்றவனின் ஆக்ரோஷம் அவன் கால் அழுத்தத்தில் தெரிந்திருக்க வேண்டும், அடி வாங்கியவனின் அலறல் அந்தக் கானகத்தையே நடுங்க வைத்தது.

அவன் கோபத்தைக் கண்டு நடுக்கத்தில் நின்றிருந்த காட்டிலாக்கா அதிகாரிகளையும் மற்றவர்களையும் எரித்துவிடும் பார்வை பார்த்தவன், “இன்னும் அரை மணிநேரத்துல எல்லாரும் ஆலமரத்தடிக்கு வந்திருக்கணும்,” என்று கூறிவிட்டு புயல்போல் அந்த காட்டிலாக்கா அலுவலகத்தை விட்டு வெளியேறினான். கடம்பன் என்ற அந்தக் காட்டு யானையும் ஆடி அசைந்து அவனைப் பின்தொடர்ந்து சென்றது.

அனைவரும் ஆலமரத்தடியில் சேரும் அரை மணிநேரத்திற்குள் பார்வையாலேயே அனைவருக்கும் கிலியூட்டிய இந்த ஆங்க்ரி பேர்டு யாரென்று பார்ப்போமா?

இன்டர்நேஷனல் காஃபி கிங், குடகு மலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காஃபி எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரன், லட்சக்கணக்கான ஏக்கர் காட்டை ஆளும் முடிசூடா மன்னன். மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் இவன் பார்வைக்கு அடிபணியும் ஆளுமைக்காரன். அதிநாகரீகமான காட்டுவாசி, நகரத்தை விட காட்டில் மகிழ்ச்சியாக வாழும் ஆதிவாசி, வசீகரன், ஆல்ஃபா ஆண்...சித்தார்த் கவுடா!

இன்று இவனது கோபத்திற்குக் காரணம், இவனது காவலில் இருக்கும் காட்டிற்குள் யாரோ அத்துமீறி நுழைந்து கடம்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவனுடைய தந்தத்தைக் கொய்யப் பார்த்ததுதான். கடைசி நிமிடத்தில் கடம்பனே சுதாரித்து, தாக்க வந்தவனை துவம்சம் செய்துவிட்டிருந்தது, கூடுதலாக சித்தார்த்தும் அவனை நையப் புடைத்து விட்டிருந்தான். இனி அவன் உயிருடன் இருந்தாலும் முழு மனிதனாய் நடமாடுவது கஷ்டமே...

வாங்க இப்போ ஆலமரத்தடில என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...

சித்தார்த்துக்குள் இன்னும் கோபம் கனன்று கொண்டுதான் இருந்தது, உட்கார முடியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான். பின்னிருந்து தன் துதிக்கையால் அவனுடைய கையைப் பிடித்து இழுப்பதும், தலையை வருடுவதுமாக, இடும்பன் அவனைச் சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருந்தது, எதுவும் அவனது ஆக்கிரோஷத்தைக் குறைக்கவில்லை...அரைமணிநேரம் அவகாசம் கொடுத்தும் அச்சத்தில் அவன் அழைத்தவர்கள் அனைவரும் பத்து நிமிடத்திலேயே கூடிவிட்டனர். காட்டுவாசிச் சமூகத்தினரின் தலைவர்கள், வனச் சரக அதிகாரிகள், இன்னும் சில முக்கியமானவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

“சிக்கெஜமானரே... (சின்ன முதலாளி)” என்று ஒருவர் மெதுவாக ஆரம்பிக்க,

“பேசாதீங்க...யாரும் எதுவும் பேசாதீங்க...ரெண்டு நாளா ஒருத்தன் காட்டுக்குள்ள திரிஞ்சிருக்கான், துப்பாக்கியெல்லாம் கொண்டு வந்திருக்கான், எல்லைல காவல் இருந்தவங்கல்லாம் தூங்கிகிட்டா இருந்தீங்க...” அவனது கர்ஜனையில் பேசத் தொடங்கியவரின் சப்தநாடியும் ஒடுங்கிப் போனது.

வனச்சரக அதிகாரியின் எதிரில் சென்று நின்றவன், “என்ன, தாசப்பா? செக்போஸ்ட்ல லஞ்சம் வாங்கிட்டு உள்ள விட்டுட்டீங்களா? சாப்பாடு, ஆயுதம் எல்லா சப்ளையும் உங்க டிபார்ட்மென்ட் தானா?” என்று நக்கலாகக் கேட்க,

“ஐயோ சித்தார்த் சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, இவன் செக்போஸ்ட் வழியாவே வரலை, வந்திருந்தா எங்களை மீறி அவன் உள்ள வந்திருக்கவே மாட்டான். எல்லைக் காவல்ல தான் எங்கயோ ஒரு காப் விழுந்திருக்கு, நான் என்னன்னு உடனே பார்க்குறேன் சார். இனிமேல் இப்படி நடக்கவே நடக்காது,” கிட்டத்தட்ட காலில் விழாத குறையாகக் கெஞ்சினான் வனச்சரகக் கமிஷனர் தாசப்பா.

லட்சக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள காடாக இருந்தாலும், சரியான திட்டமிடலுடன், நல்லபடியாகவே காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்தான், சித்தார்த். இதனால் சட்ட விரோதமாக மரம் வெட்டுதல், மிருகங்களை வேட்டையாடுதல் போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பெருமளவில் குறைந்திருந்தன,, ஆனாலும் சில சமயங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துவிடுகின்றன. அதுவும் இம்முறை அவனுடைய உயிருக்கு உயிரான கடம்பனையே குறி வைத்துவிட்டது, அவனை அடியோடு உலுக்கிவிட்டது.

காஃபி எஸ்டேட் அவனுடைய தொழில் என்றால், இந்தக் காடு அவனுடைய உயிர், பரம்பரை பரம்பரையாய் அவனுடைய குடும்பத்தினர் பாதுகாத்து வரும் இயற்கை வரம். இங்கிருக்கும் மரம் செடி கொடிகள், உயிரினங்கள் அனைத்தும் அவனது பிரஜைகள். அவற்றிற்கு ஒரு சிறு கேடு வந்தாலும், அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. கொந்தளித்து விடுவான். காட்டின் சர்வாதிகாரி அவனே. காட்டிலாக்கா அதிகாரிகளும் இவனுக்கு அடங்கியவர்களே.

சித்தார்த்தனின் இந்த நீங்காத முயற்சியாலேயே, இந்தக் காடு நாட்டிலேயே மிகவும் செழிப்பான பல்லுயிர் பெருக்க மண்டலமாக உள்ளது. இந்தியாவின் அமேசான் காடுகள் என்ற பெயர் பெற்றுள்ளது.

தனது காவல் அமைப்பில் எங்கோ ஒரு சிறிய விரிசல் விழுந்துள்ளதை உணர்ந்தவன், அதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று தனக்குத் தானே முடிவெடுத்துக் கொண்டான். தனக்குச் சந்தேகம் வந்துள்ளதை வெளிப்படுத்தாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பியவன்,

“செங்கோடா, மத்த எல்லாரும் போகட்டும், நீயும் பசங்களும் இருங்க” என்றான் அங்கு அனைவருக்கும் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு காட்டுவாசி இளைஞனிடம்.

அனைவரும் கலைந்து சென்றதும், ஒன்றும் பேசாமல் யோசனையாகவே நின்றுகொண்டிருந்த சித்தார்த்திடம், “அண்ணா, யர் மேலயாவது சந்தேகப்படுறீங்களா?” என்றான் செங்கோடன். பார்ப்பதற்குக் குட்டி ராக்ஷஷன் போல ஆஜானுபாஹுவாக இருந்தான். அவனுடன் இருந்த மற்றவர்களுமே யம கிங்கரர்கள் போலத்தான் தோற்றமளித்தார்கள்.

“சரியா சொல்லத் தெரியல, செங்கோடா, ஆனா இது சின்ன விஷயம் இல்லை, ரெண்டு நாளெல்லாம் நம்ம கண்ல படாம காட்டுக்குள்ள யாரும் இருக்கவே முடியாது. எப்படியாவது தெரிஞ்சுடும். இதுல வேற ஏதோ இருக்கு. கவனமா இருங்க, ரொம்ப கவனமா இருங்க. நம்ம கண்ணு முன்னாடியே ஏதோ நடக்குது, நாம மிஸ் பண்றோம்னு தோணுது.” என்றான் சித்தார்த்.

“சரிண்ணா, நாங்க கவனமா இருக்கோம், நீங்க கவலைப்படாதீங்க.” என்று உறுதியளித்த செங்கோடன்,

“நீங்க வீட்டுக்குப் போங்கண்ணா, ஊர்லருந்து நேரா இங்க வந்துட்டீங்க, பாட்டி உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க.” என்றான்.

பாட்டியின் பெயரைக் கெட்டதும், கோபத்தில் சிவந்திருந்த சித்தார்த்தனின் முகத்தில் கனிவு வந்து குடிகொண்டது.

அதே சமயத்தில், சித்தார்த்தின் வாழ்க்கையையே புரட்டிப் போடப்போகும் செய்தியைத் தாங்கியபடி அவனது கைபேசி ஒலித்தது...

கருத்துகளை இங்கே சொல்லுங்க

 
Status
Not open for further replies.
Top