நாம வாழ்ற இந்த பூமி மட்டுமல்ல, இந்த பிரபஞ்சமே பல ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் தனக்குள்ளே இன்னும் மறைச்சி வச்சிருக்கு.
பால்வழி அண்டத்துல சூரிய குடும்பம் போல இன்னும் பல குடும்பங்கள் இருக்குனு விஞ்ஞானிகள் சொல்றாங்க.
அதெல்லாம் தாண்டி இப்பவும் மிஸ்டெரியஸ்ஸ இருக்கது கருந்துளைனு நம்ம மக்கள் பெயர் வச்ச பிளாக் ஹோல் தான்.
பிளாக் ஹோல் அது வழியா கடக்கிற ஒளியை கூட தனக்குள்ள இழுத்துக்கதாகவும், கால மாற்றத்தில நாம வாழ்ற பூமி முதற்கொண்டு மொத்த சூரிய குடும்பத்தையும் அது தனக்குள்ள ஈர்த்துக்கும் அப்படினு பல ஆராய்ச்சியாளர்கள் தங்களோட கருத்துகளை பதிவு செஞ்சிட்டு வர்றாங்க.
நிரூபிக்க படாத ஒரு வியசத்துல நிறைய கற்பனைகளும், கட்டுக்கதைகளும் அதிகமாவே இருக்கும்.
அந்த பிளாக் ஹோல் அப்படி உள்ளே இழுக்கிறதை எல்லாம் மறுபக்கம் கண்டிப்பா வெளியேற்ற தானே செய்யும். அப்படி அந்த பிளாக் ஹோல்க்கு மறுபக்கம் இன்னும் நிறைய கிரகங்கள் இருக்கலாம்.
அங்கே நிறைய உயிரினங்களும் வாழலாம்.
இந்தியனுக்கு அமெரிக்கன் வெளிநாட்டுக்காரன், அமெரிக்கனுக்கு இந்தியன் வெளிநாட்டுகாரன்.
அப்படி தான் பூமி தாண்டி வேற கிரகத்தில வசிக்கிறவங்களை நாம வேற்றுக்கிரகவாசி சொல்ற போல, அந்த கிரகத்தில இருக்கிறவங்களுக்கு மனிதர்கள் ஆகிய நாமும் வேற்றுக்கிரகவாசிகள் தான்.
அப்படி இருக்கிற வேற்று கிரகவாசிகள் நம்மை விட தொழில் நுட்பத்தில பல அடி முன்னாடி இருந்து, ஒளியையே கடக்கிறது ஸ்பேஸ் சிப் கண்டு பிடிச்சு, கருந்துளை வழியா நாம வாழ்ற பூமிக்கே வந்து ஆராய்ச்சியும் பண்ணிட்டு இருக்க கள்வனோடு பயணிக்க நீங்க எல்லாம் தயாரா?