எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Teaser 1

Status
Not open for further replies.

NNK-71

Moderator
அவனும் அவளும் - நாயகனும் நாயகியும்
ஆகும் தருணம் திருமணம்!


“டேய் கண்ணா உனக்கு 33 வயசு ஆச்சு! நீ கல்யாணத்துக்கு ஒகே சொன்னா மட்டும் போதும் மத்தது எல்லா அம்மா பாத்துக்குறேன்”

“அம்மா அந்த நாய்க்கு சாப்பாடு போட்டீங்களா இல்லையா?” - அம்மா கேட்கும் கேள்வி காதில் விழுந்தும் அதற்கு பதில் சொல்ல மனமின்றி மகன்

“சாப்பாடு போட்டேன் பா - சாப்பிட்டு போய் படுத்துருச்சு பாரு” -இவன கல்யாணத்த பத்தி கேட்டா இவன் நாய பத்தி கேக்குறான் !!!

“சாப்பிட்ட மாறி தெரியல பாருங்க வயிறு காஞ்சு கிடக்கு” - வெளியில் படுத்து இருக்கும் அந்த ராஜபாளையம் நாயை பார்த்து கொண்டே மகனின் பதில்

“தம்பி நீ எந்த நாய கேக்குற?” - சோபாவில் படுத்து உறங்கும் தன் இரண்டாவது மகனை பார்த்து தாயின் அடுத்த கேள்வி

“அம்மா அவன் ஒரு டாக்டர் அவனை போய்” - தானே சென்று நாயை எழுப்பி வாக்கிங் செல்ல ஆயத்தமானான் கார்த்திக் நம் கதையின் அவன் நாயகன்.
“அம்மா அவன் நல்லா தூங்கட்டும் - ஹவுஸ் சர்ஜென் பீரியட்ல அதுவும் நைட் ஷிபிட் வேற, நான் வாக்கிங் போயிட்டு வரேன், நாளைக்கு வந்து நாயை கூட்டிகிட்டு போயிடுவாங்க” - சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியில் சென்ற பெரிய மகனை பெருமையும் கர்வமும் கொண்டு பார்த்து விட்டு சென்றார் பிரபா

பிரபா ஒரு மேத்ஸ் ப்ரோபெசர், அவர்கள் வீட்டில் அனைவரும் டாக்டர்கள்
மகன் கார்த்திக் வெட்டினரி டாக்டர்க்கு படித்து பின் (Zoonotic Diseases) - விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவும் நோய்கள் குறித்து பிஹெச்டி பட்டம் பெற்று இருபத்தி ஆறு வயதில் வேலைக்கு சேர்ந்து இப்போது ஒரு துரையின் துணை தலைவனாக இருக்கிறான.

கார்த்திக்கின் தம்பி ரகு ஒரு டாக்டர் இருவருக்கும் பத்து வருட இடைவெளி, தந்தையை இழந்து இருந்தாலும் கல்வியின் கரம் அரவணைத்த காரணத்தால் அதிக கஷ்டம் இன்றி இருவரையும் வளர்த்தார் பிரபா.

இவர்களின் வாழ்வில் வரவிருக்கும் சக்தி பின் அவர்களின் வாழ்வை கதையில் காண்போம்….
 
Status
Not open for further replies.
Top