Nnk22
இடம்பகனின் இதி
இன்பா இறந்து ஆத்மா ஆகுறதுல ஸ்டார்ட் ஆகுது ஸ்டோரி. குடிச்சு ஊதாரி இருந்து உயிர் போக்கிட்டு பொண்டாட்டியையும் ரெண்டு பிள்ளைகளையும் அனாதை ஆக்கிட்டு போயிடுறான். ஆனா அவன் ஆத்மா சாந்தி அடையும் முன்ன அவன் பெருசா நம்பின குடும்பத்தோட சுயரூபம் தெரியவர எம தூதர்ட்ட ரெண்டு மாசம் கெடு வாங்கி, பொண்டாட்டி பிள்ளைகளுக்கு நல்லது செய்ய நினைக்கிறான்.
இன்ஷித் இன்பாவோட நண்பன், அவந்தான் இன்பாக்கு அப்றம் அவன் இடத்துல இருந்து எல்லாம் பாத்துக்குறான். ஒரு சூழ்நிலையில இளஞ்சிதாவ கல்யாணமு பண்ணிக்றான். ரொம்ப நல்ல கதை கரு. படிக்க வித்தியாசமா இருந்தது. குடிச்சு அழிஞ்சு போறவங்களுக்கு இப்படி தான் தண்டனை கிடைக்கும்னு சொன்னதும் சரி, அவ மறு கல்யாணம் பண்ணிட்டதும் சரி, தைரியமா இல்லனா புருஷன இழந்து கூட்டு குடும்பமாவே இருந்தாலும் பாதுகாப்பு கிடைக்காதுன்றதும் சரி ஏத்துக்குற மாதிரி இருந்தது.
Spelling mistakes கதையை படிக்க விடாம ரொம்ப தொந்தரவு பண்ணிய ஒரு விஷயம். சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் ஆத்மான்னு வந்தப்றம் எல்லாம் சகஜம்னு ஏத்துக்கலாம்னு தோணுச்சு. மொத்தத்தில் ரொம்ப நல்ல கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.