எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ வருவாயென நானிருந்தேன் - முன்னோட்டத் திரி (டீசர்)

NNK-73

Moderator
இந்தக் கதைக்கான முன்னோட்டங்களையும் பிற தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
 

NNK-73

Moderator
நீ வருவாயென நானிருந்தேன்

கதைமாந்தர் அறிமுகம் – 1



ae0f2b14747013528433cf1460ce206e.jpg

நாயகன் : சித்தார்த் கவுடா

குடகு மலைக்காட்டின் முடிசூடா மன்னன்.

It is always lonely at the top என்ற சொற்றொடரின் வாழும் உதாரணம்.

அனைவருக்கும் நண்பன், ஆனால் இவனுக்கு நண்பர்கள் யாருமில்லை. அதாவது மனித நண்பர்கள் யாருமில்லை.

காட்டின் காவலன், காட்டின் காதலன்...

தனிமை இவனை விரும்பித் தழுவிக்கொண்ட தனிக்காட்டு ராஜா! தனியாகக் காட்டை ஆளும் ராஜா!

அரசன் என்றாலே கம்பீரமும், ஆளுமையும், வீரமும் கூடவே விவேகமும் இருக்குமல்லவா ?

அனைத்தும் நிரம்பிய ஆல்ஃபா ஆண்மகன்!

ஆனால், ஹார்ட் டிபார்ட்மென்ட்...

முற்றிலும் காலி...காற்று வாங்குகிறது

யாருக்காகவும் எதையும் உணராத ஜீரோ ஃபீலிங் பார்ட்டி

அடர்ந்த காட்டில் மரம் செடி கொடிகளுடனும் விலங்குகளுடனும் வாழும் இவன் வாழ்வில், மனதில் அவளுக்கு இடம் கிடைக்குமா?

இவனைச் சூழ்ந்திருக்கும் அனைத்து மர்மங்களையும் மீறி, ஒருத்தியால் இவனை நெருங்க முடியமா?

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா...

சித்தார்த் என்னும் தீயைத் தீண்டும் அவள் விரலுக்குக் கிட்டப்போவது இன்பமா ? காயமா?

விடைதேடும் பயணத்தில்...

உங்களுடன்


NNK – 73

கருத்துகளை இங்கே சொல்லுங்கள்

 
Last edited:

NNK-73

Moderator


கதை மாந்தர் அறிமுகம் – 2



b5fe5d400064b937f198822b59590a78.jpg


So, I’m gonna hate you


I’m gonna hate you

Paint you like the villain that you never were

I am gonna blame you

For things that you don’t do

Hating you is the only way it doesn’t hurt…

நாயகி – மனஸ்வினி


குடகு மலைக்காட்டில் அடைக்கலம் தேடி வந்திருக்கும் புள்ளிமான்? பெண் சிறுத்தை?

எதிலிருந்து ஓடுகிறாள்...

தப்பித்துவிட்டதாக நினைத்து எங்கு வந்து சிக்கிக்கொண்டாள்?

தெரியாமல் சிக்கிகொண்டாளா?

தானாகவே வலிய வந்து சிக்கிக்கொண்டாளா?

ஆத்தருக்கே (மீ) வெளிச்சம்...

அமைதியே உருவானவள்...

ஆர்ப்பரிக்கும் கடலினுள் காணப்படும் அமைதியோ?

உள்ளுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும், சிறு தூண்டுதலினாலும் வெடித்துச் சிதறிவிடக் காத்துக்கொண்டிருக்கும் எரிமலையின் அமைதியோ?

ஆக்ரோஷமாக வீசும், வழியில் வருவதையெல்லாம் வாரிச்சுருட்டி தூக்கியெறிந்து கோர தாண்டவமாடும் புயலின் கண்ணில் இருக்கும் அமைதியோ?

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா...

தீ யார்? விரல் யார்?

விடை தேடுங்கள் என்னுடன்...

NNK
73

கருத்துகளை இங்கே சொல்லுங்கள்

 
Last edited:

NNK-73

Moderator
கதை மாந்தர் அறிமுகம் – 3

ab2c1bd82de302ff3ae72d237c0d0bed.jpg


நாயகி 2 – ஐஸ்வர்யா செல்லமா ஐஸ்

ரொம்ப சமத்து பொண்ணு.

எல்லாருக்கும் செல்லம், ரொம்ப கியூட் காலேஜ் பொண்ணு...

இன்னிக்கு தேதிக்கு இவளுக்கு இருக்குற பெரிய கவலையே ‘அம்மா இன்னிக்கும் டிஃபன் பாக்ஸ்ல லெமன் ரைஸ் வெச்சுருக்கக் கூடாதே’ அப்படிங்குறதுதான்.

யார் வம்புக்கும் போகமாட்டா...இவளை யாராவது வம்புக்கிழுத்தா அவங்க இருக்குற பக்கமே போகமாட்டா...

தெரியாம கூட யாரையும் புண்படுத்த மாட்டா...


இந்த ஐஸ் குட்டியையும் உருக்கிப் பாக்க ஒரு ஃபயர் டிராகன் வருது...

ஆனா நம்ம ஆளு ஈசியா உருகுற ஐஸ்கிரீமா இல்லைன்னா ஐஸ் பிரின்சஸா?

கதையில பார்ப்போம் வாங்க...

இவ என்னதான் பண்றான்னு பாக்க நானும் வெயிட்டிங்...

உங்களுடன்

NNK – 73


கருத்துகளை இங்கே சொல்லுங்கள்

 
Last edited:

NNK-73

Moderator
கதை மாந்தர் அறிமுகம் – 4

82a03de3bc81c8cfeb28d9eb728131be.jpg




நாயகன் 2 – கார்த்திகேயன்

“நீ பாக்க அழகா இருந்துட்டா, உடனே உன்னை லவ் பண்ணிடணுமா? அதெல்லாம் முடியாது, எனக்கு இப்போ லவ் பண்ற மூட் இல்லை...நான் படிக்கணும்”

என்று நம்ம ஐஸ் குட்டி எடுத்த எடுப்பிலேயே ரிஜெக்ட் பண்ணின அழகன்.

நிஜம்மாவே அழகன்தான்...காந்தக் கண்னழகன்

பட்டாம்பூச்சிக் காட்டுக்குச் சொந்தக்காரன்!

இவனோட கடைக்கண் பார்வையினால பல பொண்ணுங்களோட வயித்துல ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்குற பட்டம்பூச்சில்லாம் பறக்குற மாரத்தான் நடத்தும்!

குடும்பம் நண்பர்கள்னு எப்போவும் ஜேஜேன்னு இருக்கும் வாழ்க்கை...சந்தோஷக் கூடாரம்!

ஆனாலும் அவன் கண்ணுல சின்னதா ஒரு சோகம் தெரியுதோ?

இவனுக்குள்ள யாருக்கிட்டயுமே பகிர்ந்துக்காத ஒரு சின்ன ரகசியம் இருக்கு...இல்லைன்னா பெரிய்ய ரகசியமா?

இவன் எடுத்த, எடுக்குற எல்லா முடிவுகளுக்கும் இந்த ரகசியம்தான் காரணமா?

அப்படி என்னத்தைடா மறைச்சு வெச்சிருக்க, கார்த்திகேயா?

கண்டுபிடிப்போம் வாங்க...


உங்களுடன்

NNK – 73


கருத்துகளை இங்கே சொல்லுங்கள்

 
Last edited:

NNK-73

Moderator
முன்னோட்டம் #1

5b8f93d589da93cfd9a1fe0efe04077e.jpg

தரையில் குற்றுயிரும் குலையுயிருமாய் விழுந்து கிடந்தவனை அவன் பார்த்த கனல் கங்குப் பார்வை சுற்றிருந்த அனைவருக்கும் கிலியூட்டியது.

“இது என் காடு, என்னோட அனுமதி இல்லாம இங்க இருக்குற புல் நுனியைப் பிடுங்கினாலும் அவன் உடம்புல உயிர் இருக்கும், உயிர் மட்டும்தான் இருக்கும்...”

விழுந்த அடியில் ஏற்கனவே நொறுங்கியிருந்த அவன் விரல்கள், ஷூ காலடியில் இன்னும் நசுங்கியது, வலியில் துடித்தவனைப் பார்த்து, “உனக்கு என்ன தைரியம் இருந்தா, என் காட்டுக்குள்ளயே வந்து என் கடம்பன் மேலேயே கை வச்சிருப்ப? இந்தக் கை இனி இருக்கலாமா? இருக்கலாமா?” என்றவனின் ஆக்ரோஷம் அவன் கால் அழுத்தத்தில் தெரிந்திருக்க வேண்டும், அடி வாங்கியவனின் அலறல் அந்தக் கானகத்தையே நடுங்க வைத்தது.

அவன் கோபத்தைக் கண்டு நடுக்கத்தில் நின்றிருந்த காட்டிலாக்கா அதிகாரிகளையும் மற்றவர்களையும் எரித்துவிடும் பார்வை பார்த்தவன், “இன்னும் அரை மணிநேரத்துல எல்லாரும் ஆலமரத்தடிக்கு வந்திருக்கணும்,” என்று கூறிவிட்டு புயலென அங்கிருந்து வெளியேறினான். கடம்பன் என்ற அந்தக் காட்டு யானையும் ஆடி அசைந்து அவனைப் பின்தொடர்ந்து சென்றது.

கருத்துகளை இங்கே சொல்லுங்கள்

 
Last edited:

NNK-73

Moderator
முன்னோட்டம் #2

aa3ab8d1d5596d36f6d2014138c7731d.jpg

விக்டோரியா பொது மருத்துவமனை, பெங்களூரு.

இரவு மணி 11:30.

ஜெனரல் வார்டு.

ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிப் போயிருந்த அந்த இருட்டான காரிடாரில் இரு உருவங்கள் மறைந்து நின்று கதவிடுக்கு வழியாக உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த இருளிலும் ஒருவன் கையில் இருந்த அந்த ஒரு அடி நீளக் கத்தி பளபளத்தது வரவிருக்கும் ஆபத்திற்குக் கட்டியம் கூறியது.

“அண்ணே, அந்தப் பொண்ணு இங்கதான் இருக்கு, இன்னும் பத்து நிமிஷத்துல ஜோலி முடிஞ்சுடும், முடிச்சுட்டு கூப்பிடுறேன், மீதி பேமெண்ட்டை போட்டு விடு” மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.

அருகிலிருந்தவன் கிசுகிசுத்தான், “என்ன அண்ணே, அந்தப் பொண்ணை பெட்டுல காணோம், நீ பத்து நிமிஷத்துல ஜோலியை முடிச்சுடுவேன்னு சொல்ற?”

“நிறைமாசம்டா அந்தப் பொண்ணு...இங்கதான் அட்மிட் ஆயிருக்கா... இப்போதான் எழுந்திரிச்சு அந்தப் பக்கமா போனா...பின்னாலையே போனா ஒரே போடு, அவளும் காலி, வயித்துல இருக்குற புள்ளயும் காலி...செட்டில்மென்ட் வாங்கிட்டு போயிக்கிட்டே இருப்போம்” என்றபடி அந்தப் பெண் சென்ற திசை நோக்கி நடந்தான்.


கருத்துகளை இங்கே சொல்லுங்கள்

 

Advi

Well-known member
ஃபாரஸ்ட் ஆபீசர்க்கே ஃபயர் விடரான் பா சித்து🤩🤩🤩🤩🤩

அடேய் பாவிகளா😳😳😳😳😳, அந்த பொண்ணு தான் ஹீரோயினா?????

Interesting🤩🤩🤩🤩
 

NNK-73

Moderator
ஃபாரஸ்ட் ஆபீசர்க்கே ஃபயர் விடரான் பா சித்து🤩🤩🤩🤩🤩

அடேய் பாவிகளா😳😳😳😳😳, அந்த பொண்ணு தான் ஹீரோயினா?????

Interesting🤩🤩🤩🤩
Hi da, First epi post pannitten. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
 
Top