கோலம் ரத்த ரங்கோலியாய் காட்சியளித்தது. அதைக் கண்டு அதிர்ந்தவள் கோலத்தை அழித்துவிட்டு விறுவிறுவென வேறு சின்னதாகக் கோலம் போட்டாள்.
*******
“ஆதி அப்பா இறந்துட்டார் டா” தேங்காய் உடைப்பது போல விஷயத்தை உடைத்தான் கூடவே “வாட்சப்ல பார்” என்றான்.
அவசரமாக வாட்சப்பை திறந்து பார்க்க இரவு இரண்டு மணி முதல் நிறைய போன் கால்களும் மெசேஜ்களும் குவிந்து கிடந்தன.
மனதை ஏதோ சொல்ல முடியாத ஒன்று அழுத்தக் கண்களில் நீர் திரையிட்டது. மறுபுறம் அமைதியானதால் பவன் “கைலாஷ்” எனக் குரல் கொடுக்க
“எப்படிடா?” எனக் கரகரத்த குரலில் கண்களை மெச்சுக்குக் கொடுத்தபடி கைலாஷ் வினவினான்.
******************
மணிவண்ணன் உடல் ஃப்ரீசர் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. அதன் மேல் புத்தம் புதிய வாடாத ரோஜா மாலைகள் பல இருந்தன.