கள்வன் டீஸர் - 01
"உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தாங்க. இந்த நேரத்துல தனியா காட்டுக்குள்ள வர்றீங்க" என்று கேட்டுக் கொண்டே அவளுடன் நடந்த தீரஜை,பக்கவாட்டாக திரும்பி பார்த்த வீணாவோ,
"நான் ஒன்னும் தனியா வரலையே. உங்களோட தானே வர்றேன்" என்றால் இதழ்கடையில் பதுக்கிய புன்னகையோடு.
"என்மேல அவ்வளவு நம்பிக்கையா? ஒருவேளை நீங்க தேடுற அந்த வேற்றுகிரகவாசி நானா இருந்தா என்ன பண்ணுவீங்க?" என்று கேட்டவனை,
அதே பதுக்கிய புன்னகையுடன் திரும்பி பார்த்தவள்,
"அப்படி இருந்தா என் வேலை ரொம்பவே சுலபமா முடிஞ்சிரும்" என்று சொல்லிக் கொண்டே அவனை நெருங்க,
அவள் அருகாமையில் அவன் இதயம் தான் வேகமாக துடித்தது.
அவள் மூச்சு காற்று, அவன் மார்பில் பட்டு உஷ்ணமாக்கும் அளவு நெருங்கி நின்றவள் செயலை அவன் உணரும் முன்னமே, தாடி அடர்ந்த அவன் கன்னத்தில் தன் தளிர் விரல்களை பதித்துக் கொண்டே, அவன் விழிகளை ஏறிட்டு பார்த்தாள்.
"இப்படி உங்க பக்கத்துல வந்து, நீங்க இந்த மாதிரி டெம்ப்ட் ஆகி நிற்கும் போது, இன்ஜெக்சன் குத்தி, தோள்ல தூக்கி போட்டு போய்கிட்டே இருப்பேன்" என்று குறும்பு கண்களுடன் சொன்னவளை, எச்சிலை விழுங்கி கொண்டே பார்த்தவன்,
"நீங்க ரொம்ப டேன்ஜர் ஆன ஆள் தான்" என்றான் எள்ளல் குரலில்.
சத்தமாக அவள் சிரிக்க, அவன் இதழ்களிலும் மெல்லிய புன்னகை.
விழிகள் இரண்டும் அவள் மீது காதலாக பதிய, அவள் மைவிழிகளும் அவன் காந்த விழிகளுக்குள் கண்டுண்டு தான் போனது.
இமைக்க மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் இதழ்களை நோக்கி தீரஜ் தலை சரிய, மங்கையவள் விழிகளும் கள்ளுண்ட போதையில் மயங்க இருந்த சமயம், இருவர் தலைக்கும் மேல் ஏதோ பறந்து சென்ற உணர்வில் சட்டென்று கண்களை திறந்தவள்,
அவன் மார்பில் கைககளை வைத்து தள்ளி விட்டு கொண்டே அவனை விட்டு விலகி நின்றாள்.
"தீரஜ்… இப்போ ஏதோ மிருகம் இப்படி பறந்து போச்சுல?" என்று கேட்க,
அவனோ இல்லை என்று தான் தலையை ஆட்டினான்.
"இல்ல நான் பார்த்தேன். நான் தேடி வந்தது எனக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்குனு தோணுது. சீக்கிரமா வாங்க…" என்று சொல்லிக் கொண்டே அவள் முன்னால் ஓட,
"ஏங்க நில்லுங்க…" என்றவனும் வேறு வழியில்லாமல் அவள் பின்னால் ஓடினான்.