NNK-103
Moderator
#நறுமுகை #நிலாக்காலம்-2
உயிரில் புது சுவாசம் தருதே
வணக்கம் மக்களே கதையின் சில துளிகள் உங்களின் பார்வைக்கு
********************
டீசர்...
அன்று அந்த நீதிமன்ற வளாகம் வழக்கத்தை விட பெரும் பரபரப்பை தொற்றிக் கொண்டு இருந்தது.
வழமைப் போல நீதிமன்றத்திற்கு வரும் வக்கீல்கள் அன்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்கள் குழுமியிருந்த பொதுமக்கள் முகத்தில் அதிர்ச்சி நிரம்பி வழிந்தது என்றால் அதற்கு காரணமும் இருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்தை நிரப்பியிருந்தனர். அதில் பெண்களுமே அடக்கம். அங்கே வந்திருந்த பெண்மணிகளோ வழக்கத்திற்கு மாறாக பட்டுச்சேலையிலும் நகை நட்டுக்களுடன் காட்சியளிக்க ஆண்களோ பட்டு வேட்டி சட்டையில் நின்றிருந்தனர்.
ஒரு பக்கம் நாதஸ்வரத்தையும் மிருதங்கத்தையும் வைத்துக் கொண்டு கலவரமான முகத்துடன் நின்றிருக்க, அவர்களின் அருகே, ஈஸ்வராஆஆஆஆ! இன்னும் நான் என்னல்லாம் பாக்கணும்னு தலையில எழுதியிருக்கோ தெரியலையே, என உள்ளுக்குள் குமுறிபடி நின்றிருந்தார் ஐயர்.
அதே கூட்டத்தில், உடலில் உண்டான நடுக்கத்தை மறைத்து, தன்னிரு கையை இறுக்கமாக பற்றியபடி நின்றிருந்தவரின் தோளில் யாரோ கையை வைப்பது போல இருக்க, திடுக்கிட்டு திரும்பியவர் நொடியில் தன் முகத்தை சாதாரணயாக வைத்துக் கொண்டு, சம்பந்தி என்றவரின் குரலில் நடுக்கம் இழையோடியது.
அதை கண்டவரோ, சம்பந்தி எதுக்கு வெசனப்படுதீக, நாம நெனச்ச மாறியே, என் புள்ள வெளியே வந்துடுவான், அடுத்த முகூர்த்தத்திலேயே இதோ இந்த கோர்ட் வாசலிலேயே எம்புள்ளைக்கும் உங்க ரெண்டாவது பொண்ணுக்கும் கல்யாணம் என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டிருந்த வைகுண்டநாதன், என்னய்யா வக்கீலு உம்முன்னு நிக்கிற, வாயை தொறந்து சொல்லுய்யா" என்று கண்ணை காட்டினார்.
ஐயா நீங்களே சொல்லிப்புட்டீக இதுல நான் புதுசா சொல்ல என்ன இருக்கு? உங்க புள்ளை இன்னைக்கு ரிலீஸ் ஆகிடுவார் பார்த்துக்கிடுங்க"
ம்ம் நீ சொன்ன மாதிரி மட்டும் நடக்கட்டும், நீ கேட்டதுக்கும் மேல கொடுப்பேன் என்றார் வைகுண்டநாதன்.
“அய்யாவை, பத்தி தெரியாததா என பல்லை இளித்தார் வக்கீல்.”
“இன்று, வைகுண்டநாதனின் மகனுக்கு இறுதி தீர்ப்பு வழங்கும் நாள், என்பது கூடியிருந்த கூட்டத்தினரின் சலசலப்பிலும், அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பை நீதிபதி வழங்கும் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
அதே நேரம் அந்த நீதிமன்ற வளாகத்திற்குள், துப்புறவு பணியில் இருக்கும் கடைநிலை ஊழியரோ, மனம் பொறுக்க முடியாமல், ஏம்மா எங்காச்சும் இப்படி ஒரு கூத்து நடக்குமா? என்று ஆற்றாமையில் பொங்க"
நீ ஏன் இம்புட்டு வெசனப்படுத? “பொண்ண, பெத்த அப்பன் ஆத்தாளுமே வாயை மூடிக்கிட்டு பேசாம நிக்கிதுக’ நமக்கு ஏன் ஊர்வம்பு? நீ செத்த வாயை மூடிக்கிட்டு வேடிக்கையை மட்டும் பாரு, என்றவரின் வார்த்தையில் உண்மை இருந்தாலும் அவரால் அமைதிக் கொள்ள முடியவில்லை.”
“ஏய், நீ எம்புட்டு சொன்னாலும், என் மனசு ஆற மாட்டேங்குதே அந்த பச்சை மண்ணை பாரு அது மொகத்துல எம்புட்டு வேதனை, அது கண்ணுல எம்புட்டு வலி இருக்கு அத எவனாவது கண்டுக்கிட்டாங்களா?
“அடி, கூறு கெட்டவளே” உனக்கு தெரிஞ்சது இதானா? மூத்தவளை கொன்னவனுக்கே ரெண்டாவது பொண்ணை கட்டிக் கொடுக்க போறானுக அது தெரியுமா?
ஏய் என்னடி சொல்லுற? என் ஈரக்குலையே நடுங்குது.
ஷ்ஷ் வாடி அந்த பக்கம் நீ இப்படிலாம் பேசுறது அவனுங்க காதுல உழுந்துச்சி என முணுமுணுத்துக் கொண்டே கையை பிடித்து இழுத்துக் கொண்டு மறைவான இடத்தை நோக்கி சென்றார்.
Thread 'உயிரில் புது சுவாசம் தருதே- கருத்து திரி' https://www.narumugainovels.com/index.php?threads/உயிரில்-புது-சுவாசம்-தருதே-கருத்து-திரி.10732/