Nnk101
நினைவுகளை நே(யா)சிக்கின்றேன்.
கதைக்கு பொருத்தமான தலைப்பு தான். மறதியை உடன்பிறப்பாக கொண்ட நாயகி, அவளுக்கு அதீத சொத்துக்கள் அதை தட்டி பறிக்க கொலைகள் செய்யும் தாய்மாமன், அதிலிருந்து அவளை காப்பாற்ற திருமணம் முடிக்கிறான் நாயகன். ஒரு கட்டத்தில் அவனையே மறந்து விடுகிறாள் முழுதாக மறக்க முடியாமல் அவன் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் கோமாவிற்கு சென்று பிழைக்கும் நிலை வர அவனே அவள் உடல் தேறிவர பிரிகிறான். அவளின் பிரச்சினைகளை சரிசெய்து எப்படி கைபற்றுகிறான் என்பது க்ளைமாக்ஸ்.
ஹீரோ மேனரிஸிம், குள்ளன் சத்யா காமெடி எல்லாம் நல்லார்ந்தது.
எனக்கு ஆரம்பத்துல கதை புரியவே இல்ல ரொம்ப குழப்பமா இருந்தது ரெண்டு மூணு தடவ ரீட் பண்ண வேண்டி இருந்தது. அப்படி குழப்ப தான் எழுதினீங்களான்னு தெரியல, ஏன் கேக்றேன்னா பாதிக்கு அப்றம், ஹீரோயினோட பதினாலு வயசுல அவங்க தாத்தா பேசுறதுல ஸ்டார்ட் ஆனப்றம் தான் கதையே புரிஞ்சது, அதுவரை குழப்பம் தான்.
குழப்பத்துக்கு முக்கிய காரணம், ஹீரோயின் நேம் ப்ரணவநந்தினி (ப்ரணான்னு கூப்பிட்டுருக்கீங்க) ஹீரோ ருத்ரபிரணவன், அவளுக்கு ஹெல்ப் பண்ற ஃப்ரண்ட் நேம் பிரணவன், அவள கிட்நாப் பண்ணி கொல்ல வர்ற கில்லர் பேர் பிரணவன். சோ யாரு யார்ட்ட பேசுறான்றதுல அவ்வளவு குழப்பம், ஃப்ளோ மிஸ்ஸாச்சு.
நல்ல கான்செப்ட், பாதிக்கு மேல தெளிவா சொன்னவங்க முதல்ல வேணும்னே சுத்தல்ல விட்டீங்களான்னு தெரியல. நன்றி.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.