எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - கதை திரி

Status
Not open for further replies.

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍
"உன் நினைவிலே கரைகிறேன்!" கதையின் அத்தியாயங்கள் இங்கு பதியப்படும் 💖
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இது என்னுடைய இன்னொரு போட்டிக் கதையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கதையின் அத்தியாயங்கள் இங்கு பதியப்படும் 💖🤗
 
Last edited:

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 1

“எனக்கு ஏற்கனவே இன்னைக்குக் கோல்ட். இதில், அந்த தலைக்கனம் பிடிச்ச, ஹீரோவை வேற, நான் இன்டர்வியூ செய்யனுமா?” என்று முணுமுணுத்தவாறே, தன் உதட்டுச் சாயத்தைச் சரிபார்த்துக் கொண்டாள் ஹாரண்யா.

“ஹேய்! என்னோட ஃபேவரைட் ஹீரோவை அப்படி சொல்லாதே!” என அவளைக் கண்டித்தாள் தாமினி.

“க்கும்! ரொம்ப முக்கியம், போ!” என்று கூறியவளை, அந்த நிறுவனத்தின், உரிமையாளர் அழைத்ததாகத், தகவல் வரவும்,”நான் போய், என்னன்னுக் கேட்டுட்டு வரேன்” என்று தோழியிடம் கூறி விட்டு, அவரிடம் சென்றாள்.

“மிஸ்‌ ஹாரண்யா! நம்மளோட சீஃப் கெஸ்ட் வந்தாச்சு. அவரை நீங்க இன்டர்வியூ பண்ண ரெடியாக இருக்கீங்களா?” என்றார் சுதன்.

“எஸ் சார். ஐ யம் ரெடி!” என்று உறுதியாக கூறியவளிடம்,

“அப்போ அவருக்குக், கால் செய்து, நம்ம ஸ்டூடியோவுக்கு, வர சொல்லிடவா?” என்று அவளிடம் கேட்டார்.

“ஷூயர் சார்” என்று தெரிவித்து விட்டு, தன்னைப் போலவே, அங்கே, வேலை பார்க்கும், பெண்கள் இருக்கும், அறைக்குச் சென்றாள் ஹாரண்யா.

“ஹாய்! நீ தான், மோஹித் சாரை, இன்டர்வியூ செய்யப் போறியா?” என்று சக தோழி ஒருத்தி அவளிடம் வினவினாள்.

“ம்ம்”

“ஓஹோ! நல்ல ஃபேமஸான, ஆக்ட்டர்ஸை எல்லாம், இவ தான், இன்டர்வியூ பண்ற சான்ஸ், கிடைக்குது பாரேன்!” என்று அவளை நக்கலடித்தாள் மற்றொருத்தி.

“கல்யாணத்துக்கு முன்னாடி, அவ ஹஸ்பெண்ட்டை, பேட்டி எடுத்தது தான், அவளோட எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ!” என்று கூறி, அங்கிருந்தவர்களோ நமுட்டுச், சிரிப்பை உதிர்த்தார்கள்.

“ஷட் அப்!” என்று கத்தியவளோ, கண்களில் கனலுடன்,“என்னோட பர்சனல் லைஃப், உங்களுக்குத் தேவை இல்லாதது! அதைக் கிண்டிக், கிளறிப் பார்க்கவும், இங்கே யாருக்கும், உரிமை இல்லை” என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தாள் ஹாரண்யா.

உடனே, அந்த அறையிலிருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர்.

அவளது பிரியமான, தோழி தாமினியோ,”நிதானம் ஆக இரு ஹாரா. இவங்க எல்லாம், உன்னை ட்ரிக்கர் பண்ணிட்டே தான் இருப்பாங்க. அதுக்கெல்லாம் எகிறிக்கிட்டு, இருக்கக் கூடாது!” என்று அவளைத் தணிய, வைக்க முயன்றாள்.

ஆனாலும், தனது விழிகள், கலங்குவதை உணர்ந்த, ஹாரண்யாவோ,”நான் போய் டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கேன்” என்று அவளிடம், சொல்லிக் கொண்டு, அங்கே போய் விட்டாள்.

“ஷேம் ஆன் யூ கைஸ்!” என்று அவளைக் கிண்டல் செய்து சிரித்தவர்களைத், திட்டி விட்டுத், தோழியிடம் விரைந்தாள் தாமினி.

அங்கே, அலங்காரம் செய்து கொள்ளும், கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தவளோ, தன் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹாரண்யா,

அவள் அருகில், சத்தம் எழுப்பாமல், உட்கார்ந்தவளிடம்,”மினி! நான் இங்கேயிருந்து, ரிலீவ் ஆகப் போறேன்!” என்றாள்.

தாமினி,“வாட்! அவங்கப் பேசுறதை எல்லாம் மண்டையில் ஏத்திக்கிட்டே இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் இந்த முடிவுக்கு வருவன்னு நினைச்சேன். கரெக்டா இன்னைக்குச் சொல்லிட்ட!” என்று பொருமினாள்.

“ம்ஹூம்! இதுதான் என்னோட முடிவு!” என்றவளுக்கு, அந்த நேரத்தில், தான் நேர்காணல், செய்யப் போகும், திரைத்துறையில் இரண்டாவது பிரபலமாக, வலம் வந்து கொண்டிருக்கும், மோஹித் என்ற நடிகன், அங்கே வந்து விட்டதாக, அவளுக்குத் தகவல் கொடுக்கவும், தன்னுடைய கன்னத்தில் இருந்த, கண்ணீர்க் கறைகளைத், துடைத்துக் கொண்டு, கொஞ்சம் ‘டச் அப்’ செய்து விட்டு, அவனிடம் போனவளை, ஏளனமாக நோக்கினான் அந்த மோஹித்.

அவனுக்கு அவளை நன்றாகத் தெரியும்! பார் எங்கும், புகழ் பெற்றிருக்கும், தொலைக்காட்சி நிறுவனத்தில், சில வருடங்களாக, நடிகர், நடிகைகளை, நேர்காணல் செய்யும், வேலையைத் தான், பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

அப்படியிருக்க, இவளை மோஹித்திற்குத் தெரியாமல் போகுமா? என்ற கேள்வி எழும்பலாம்! ஆனால், அதை விட, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், திரையுலகில் தனது முதலிடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல், தக்க வைத்துக் கொண்டிருக்கும், “பகீரதன்” என்பவனுடைய முன்னாள் மனைவி, தான் இவள்!

அதன் காரணமாகத் தான், அவளை இழிவுபடுத்தும் வகையில், அப்படிச் சிரித்தான் மோஹித்.

சிறிது நேரத்திற்கு, முன்பாகத் தான், தன்னுடன் பணிபுரியும், சகப் பெண்கள், தன்னை இழிவுபடுத்திய போது அழுதவளோ, இப்போது, இவனுடைய ஏளனப் பார்வையையும், சிரிப்பையும், கருத்தில் கொள்ளாமல், அங்கேயிருந்த, அந்த நிகழ்ச்சியை நடத்துபவரிடம்,”சார்! இன்டர்வியூவை எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்?” என்று வினவினாள் ஹாரண்யா.

தன்னை அவமானப்படுத்தி விட்டு, அருகிலிருந்த நபரிடம், அவள் பேசியதைக் கண்டு, மோஹித்தின் முகமோ கருத்துச் சிறுத்துப் போனது.

அதைக் கவனிக்காத, அவளது முதலாளியோ,”ஹீரோ சார், ரெடியாக இருந்தால், உடனே ஆரம்பிச்சிடலாம்” என்றுரைத்து விட்டு அவனைப் பார்த்தார்.

“ஐ யம் ரெடி சார்” என்று அவரிடம் கூறி விட்டு, ஹாரண்யாவை முறைத்துப் பார்த்தான் மோஹித்.

அவளோ,‘நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள். அதை நான் கருத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை!!’ என்று தோள் குலுக்கலுடன், தான் அவனை, நேர்காணல் செய்யப் போகும் இடத்தையும், அங்கேயிருக்கும் பொருட்களையும், ஒரு தடவை ஆராய்ந்து பார்த்துக் கொண்டாள் ஹாரண்யா.

“சார்! நீங்க ரூமில் வெயிட் பண்ணுங்க. நாங்க ஷோவை ஸ்டார்ட் பண்ணிட்டு, உங்களோட என்ட்ரி அப்போ, இன்ஃபார்ம் செய்றோம்” என்று அவனிடம் தெரிவித்து, அனுப்பி வைத்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

“நீங்க சோஃபாவில் உட்கார்ந்து ஷோவை ஆரம்பிங்க” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் சுதன்.

உடனே, தன் முகத்தில் வரவழைத்துக் கொண்டு, சில தேன் தடவிய வார்த்தைகளைச் சொல்லி, நிகழ்ச்சியை ஆரம்பித்து, சிறிது நேரத்திற்கு முன், தன்னை இழிவுபடுத்தியவனைப் பற்றிய, வாழ்த்துரையைக் கூறி முடித்து,”இப்போ அந்த ஃபேமஸ் ஆக்ட்டர் மிஸ்டர். மோஹித், இப்போ அவரைக் கூப்பிடச் போறேன்” என்றவள்,

“வெல்கம் மிஸ்டர். மோஹித் சார்!” என்று உள்ளே நுழைந்தவனை வரவேற்று, அவனுக்கு மரியாதைக்காக ஒரு பூங்கொத்தையும் கொடுத்தாள் ஹாரண்யா.

செயற்கையானப், புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டு,”ஹாய்!” என்று அவளுக்கு வணக்கம் வைத்தான் மோஹித்.

அந்த நேர்காணலில், அவனுடைய சில அபிமானிகளும் வந்திருந்தனர்.

அவர்களது கூச்சலைக் கேட்டதும்,”ஹலோ மை டியர் ஃபேன்ஸ்!” என்று அவர்களுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பினான்.

அதில், மேலும் கத்தி விட்டு அடங்கினர்.

“சார். நீங்க முதல்ல ஃபிலிம் இண்டஸ்ட்ரீயில், கத்துக்கிட்ட விஷயங்களை எங்களுக்கு ஷேர் பண்ணுங்க” என்றாள் ஹாரண்யா.

“ஷூயர்” என்றவனோ, சினிமாத்துறையில், தான் கடந்து வந்தப் பாதையில், கிடைத்த அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டான் மோஹித்.

“வாவ்! சூப்பர் சார்!” என்று அவனைப் பாராட்டி, அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டாள்.

அதற்குரிய பதில்களைக் கொடுத்தவன், அந்த நிகழ்ச்சி, முடியும் தருவாயில் இருக்கவும், "உங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்! இந்த ஷோவை, சூப்பராக ஹோஸ்ட் செய்தீங்க!” என்று அவளுக்குப் பொய்யாக வாழ்த்துக் கூறினான் மோஹித்.

“தாங்க்யூ சோ மச் சார்” என்றவள், நேர்காணல் முடிந்து விட்டதை அனைவருக்கும் அறிவித்தாள் ஹாரண்யா.

“இந்த ஷோ, நல்லபடியாக முடிஞ்சுது” என்று நிம்மதியடைந்த ஒருங்கிணைப்பாளர் சுதனோ,

முதலில் மோஹித்திடம் சென்று,”உங்கப் பிஸி ஷெட்யூலிலும், எங்களுக்காக வந்து இன்டர்வியூ கொடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்!” என அவனிடம் நன்றி தெரிவித்தார்.

“ம்ம்…என்னோட பேமெண்ட்டை, டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க” என்று கூறி விட்டு, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து, தன் காரில் ஏறிப் பயணம், செய்து கொண்டிருந்தவனுக்கோ, தன்னை ஹாரண்யா, ஒரு பொருட்டாகவே, மதியாமல் இருந்ததை எண்ணி,’டேய் பகீரதன்! நீ என்னடான்னா, சினி ஃபீல்டில், முதல் இடத்தில் இருந்துட்டு, என்னை டென்ஷன் பண்ற! உன்னோட பொண்டாட்டி என்னடான்னா, என்னை இன்னைக்கு, இன்சல்ட் செஞ்சிட்டா! உங்க ரெண்டு பேருக்கும் இருக்குடா!’ என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே, தனது வீட்டை அடைந்தான் மோஹித்.


“எந்த ஸ்ட்ரெஸ்ஸூம் இல்லாமல், நீ இந்த ஷோவை சூப்பராக நடத்தி, முடிச்சிட்ட ஹாரா! கங்கிராட்ஸ்!” என்று உடை மாற்றும் அறைக்குள் வந்தவளை, அணைத்து ஆறுதல் கூறிய தோழியிடம்,”யெஸ் மினி” எனக் குழந்தையாக மாறி, அவளிடம் தஞ்சம் புகுந்தவள், தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, அன்றைய நேர்காணலை, வெற்றிகரமாக நடத்திக் கொடுத்ததற்காகத், தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, தாமினியை அனுப்பி விட்டுத், தனது வீட்டிற்குச் சென்றாள் ஹாரண்யா.

இன்று அவள் எடுத்த நேர்காணலைத், தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு, இரண்டு நாட்கள் ஆகலாம். எனவே, அதுவரை வேறெதாவது சினிமா பிரபலத்தை, அவர்கள் நேர்காணல் செய்ய அழைக்க வேண்டும். எனவே, அதற்குரிய வேலைகளை ஆரம்பித்தார்கள் அந்த தொலைக்காட்சி நிறுவனம்.

சோர்வடைந்து போய் வந்திருந்த மகளைப் பார்த்து,”இப்படி வந்து உட்காரு ஹாரா” என்று மகளை அமர வைத்தவர், குளிரலமாரியில் இருந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவளுக்குப் பருகத் தந்தார் அவளது தாய்.

அதை வாங்கிப் பருகியவரது மகளோ,”அந்த மோஹித், என்னை ரொம்பவே, ஹர்ட் பண்ணிட்டான் மா!” என்று அவரிடம் பலவீனமான குரலில் மொழிந்தாள் ஹாரண்யா.

மதுராஹினி,“ப்ச்! அவன் நம்ம மாப்பிள்ளை மேலே, இருக்கிற கோபத்தை உன்கிட்ட காமிச்சிட்டு இருக்கான்டி!” என்றார்.

“மாப்பிள்ளையா?” என்று வெறுப்புடன் கேட்டாள் மகள்.

“ஆமாம். உன்னோட புருஷன், எங்களுக்கு மாப்பிள்ளை, தானே ம்மா?” என்று கூறிக் கொண்டே, அங்கு வந்தார் அவளது தந்தை இயமானன்.

“இப்போ அவரை, நான் என் புருஷனாகவே, நினைக்கலை ப்பா!” என அவரிடம் அழுத்திச் சொன்னாள் ஹாரண்யா.

“நீ இப்போ, தானே நினைக்கலை! அதுக்கு முன்னாடி இருந்தே, அவர் எங்களோட மாப்பிள்ளை தான்டி! அதுவுமில்லாமல், உங்களோட ஈகோவால் தான், நீங்கப் பிரிஞ்சு இருக்கீங்க” என்று மகளுக்கு நினைவுபடுத்தினார் மதுராஹினி.

“ஓகேமா. எனக்குக் கோல்ட் இருக்கு அண்ட் ஃபீவர் வரப் போகுதுன்னு நினைக்கிறேன். கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சாப்பிட்டுட்டு, டேப்லெட் போட்டுக்கிறேன்” என்றவாறு, தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் மகள்.

அவளை நினைத்து கவலைப்பட்ட மனைவியிடம், “எல்லாம் சரி ஆகிடும் மது” என்று கூறி, அவரை அமைதிப்படுத்தினார் இயமானன்.

ஆம்! ஹாரண்யாவிற்கும், சினிமா உலகத்தில், முதல் நட்சத்திர நடிகனாக, ஜொலித்துக் கொண்டிருக்கும், பகீரதன் என்பவனுக்கும், எப்போதோ, காதல் திருமணம் நடந்திருந்தது.

ஆனால், அவர்களிருவருக்கும் இடையே இருந்தக், குறைவானப் புரிதல் காரணமாக, இப்போது தனித்த
னியாக, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது பிரிவின் காரணத்தைப், போகப் போகத், தெரிந்து கொள்வோம்.

- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தக் கதையின் முதல் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 2

அவள் தன்னை, மெல்ல மெல்ல, சரி செய்து கொண்டு தான் ஆக வேண்டும்!

ஏனெனில், இந்த வேலையில் இருக்கும் வரை, சம்பளம் தரும் முதலாளிக்கும், நிறுவனத்திற்கும், தனது மனக்கஷ்டங்கள் யாவும் கண்ணுக்குப் புலப்படும் போவதில்லை.

தான் செய்யும், வேலையைப் பார்த்து, அவர்கள் சம்பளம் தருவார்கள் அவ்வளவே தான்!

அதை தவிர, அவர்களிடம் வேறெந்த அனுதாபத்தையும் இவளால் எதிர்பார்க்கவே முடியாது.

அதுவுமில்லாமல், அவள் பார்க்கும் வேலையில், சிரித்த முகமாகப் புத்துணர்வுடன் தான், அனைவருக்கும் காட்சியளிக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறதே!

அதனால், முந்தைய தினம், தனக்கு நிகழ்ந்தக் கசப்பான அனுபவத்தை, மனதிலிருந்து துடைத்தெறிந்து விட்டுக் கொண்டவள், காலையுணவை உட்கொண்டு இருந்த போது,”சாரி ஹாரா!” என்று இறுதியாகத், தான் பேசிய வார்த்தைகளுக்காக மகளிடம் மன்னிப்புக், கேட்டார் மதுராஹினி.

“இட்ஸ் ஓகே, ம்மா” என்று அவரிடம் பெருந்தன்மையுடன் உரைத்து விட்டு, உணவுண்டு முடித்து எழுந்தாள் ஹாரண்யா.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு படத்தை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவளது தந்தையோ,”எதையும் நினைக்காமல், வேலைக்குப் போயிட்டு வா, ம்மா” என்று அவளிடம் கனிவுடன் கூறி, அனுப்பி வைத்தார் தந்தை இயமானன்.

அங்கே செல்லும் போதே, அனைவரும் மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் எல்லாரும், தன்னை ஒருவிதமாக முறைத்துப் பார்ப்பதைக் கவனித்துக் கொண்டே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் அறையின் வாயிலிற்குச் சென்றவளுக்கு,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சுதனோ,”ச்சே! இப்படி சொல்லுவாருன்னு, நினைச்சுக் கூடப் பார்க்கலை!” என்று சத்தமாகப் புலம்புவது, வெளியே இருந்தவளுக்கு நன்றாகவே கேட்க, அதைப் புருவம் சுழித்து யோசித்துக் கொண்டே மெல்ல கதவைத் தட்டினாள் ஹாரண்யா.

“யாரு?” என்று எரிச்சலுடன் வினவினார் சுதன்.

“ஹாரண்யா வந்திருக்கேன் சார்” என்று வெளியே நின்று கொண்டு குரல் கொடுத்தாள்.

அதைக் கேட்டதும், சில கணங்களுக்கு உள்ளிருந்து எந்த சத்தமும் அவளுக்குக் கேட்கவில்லை.

அதனால், அங்கேயே நின்றிருந்தாள் பெண்ணவள்.

இப்போது,”கமின்” என அவளிடம் தெரிவிக்கவும், கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனவளை எரித்து விடுவதைப் போலப் பார்த்தார் சுதன்.

‘என்ன ஆளாளுக்கு இப்படி முறைக்கிறாங்களே?’ என்று இவர் ஏன் தன்னை இப்படி பார்க்கிறார்? என்ற யோசனையுடன் மௌனித்து இருந்தாள்.

“மிஸ் ஹாரண்யா! நீங்க வர்றதுக்கு, ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி, நம்ம ஆஃபீஸூக்கு ஒரு கால் வந்துச்சு” என்றார்.

‘அந்த அழைப்பினால் தான் இப்படி இருக்கிறார் போலும்’ என்பதைப் புரிந்து கொண்டவள்,

அவரை ஏறிட்டுப் பார்க்க,”அந்த ஃபோன் காலை, மிஸ்டர். பகீரதனோட ஆஃபீஸில் இருந்து பண்ணாங்க” என்றவரை கேள்வியாகப் பார்த்தாள்.

“நாம மிஸ்டர். மோஹித்தை இன்டர்வியூவை, செஞ்சதைப் பத்தின, விஷயம் தான்!” என்றதும், துணுக்குற்றுப் போனவளோ,

“அதனால் ஏதாவது பிராப்ளம் ஆகிடுச்சா சார்?” என்று கேட்டாள் ஹாரண்யா.

“ம்ம்… யெஸ்” என்று மெதுவான குரலில் கூறினார் சுதன்.

“என்னாச்சு சார்?”

“சினி ஃபீல்டில், முதல் இடத்தில் இருப்பது பகீரதன் சார் தானே? அப்பறம், அவரை விட்டுட்டு, செகண்ட் இடத்தைப் பிடிச்சு இருக்கிற ஹீரோவை எப்படி நீங்க இன்டர்வியூ எடுக்கலாம்னுக் கேட்டாங்க!” என்று அவளிடம் உரைக்கும் போதே அதனால் தனக்கு ஏற்பட்ட அவமானப் பாவனையை முகத்தில் காட்டினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

அதில் திடுக்கிட்ட ஹாரண்யாவோ,”நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க சார்?” என்றாள்.

அந்தப் பகீரதன் வேண்டுமென்றே தான் இவருக்குக் கால் செய்து இப்படி கூறச் சொல்லி இருக்கிறான் என்பது அவ்விருவருக்கும் புரிந்து தான் போனது.

சுதன்,“இன்டர்வியூ முடிஞ்சு இன்னும் சில நாளில் பப்ளிக் ஆக டெலிகாஸ்ட் ஆகப் போகுது. இப்போ என்னப் பண்ண முடியும் சார்? அப்படின்னுக் கேட்டேன்” என்று சுருங்கிப் போன முகத்துடன் கூறினார்.

“அதுக்கு என்ன சொன்னாங்க சார்?” என்று முணுமுணுப்பாக கேட்டாள் ஹாரண்யா.

“பகீரதன் சாரை ஒரு இன்டர்வியூ எடுத்துட்டு அதை முதலில் டெலிகாஸ்ட் பண்ணிட்டு, அப்பறம் இதைப் போடுங்கன்னு சொல்றாங்க” என்றுரைத்து விட்டு அவளது முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

அவர் எண்ணியதைப் போலவே, உணர்ச்சிகளற்று, இறுகிப் போயிருந்தது அவளது முகம்.

அதனால், மேலும் தொடராமல், தயக்கத்துடன் காணப்பட்டார் சுதன்.

தன்னுடைய அமைதியைக், கலைத்து விட்டு,”நீங்க என்னப் பதில் கொடுத்தீங்க சார்?” என்று நேரடியாக அவரிடம் விஷயத்தைக் கேட்டாள் ஹாரண்யா.

“நான் சரின்னு சொல்லிட்டோம்” என்று அவர் பதிலளிக்கவும்,

“என்ன? அதுக்கு மோஹித் எப்படி ஒத்துப்பார்?” என்று அதிர்ந்து வினவியவளிடம்,

“அவர் ஓகே சொல்லிட்டார் மா” என்று கூறி, அவளுக்கு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார் சுதன்.

“வாட்! இது எப்படி சாத்தியம் ஆச்சு?” என்றாள் ஹாரண்யா.

“சிம்பிள்! பகீரதன் தான் இப்போ நம்பர் ஒன் பொஸிஷனில் இருக்கார். அவர் சொல்றது தான், எல்லா இடத்திலும் எடுபடும்! அதே மாதிரி, அவர் எதையோ சொல்லி மோஹித்தைக் கன்வின்ஸ் பண்ணிட்டார் போல. விஷயம் ஈசியாக முடிஞ்சிருச்சு!”

“இதில் என்னோட வேலை என்ன சார்?” என்று இறுகிய குரலில் கேட்டாள் ஹாரண்யா.

அந்தக் கேள்விக்கு அவர் சொல்லப் போகும் பதில் அவளுக்கு ஏற்கனவே தெரிந்தது தான்!

ஆனாலும்,”அந்த இன்டர்வியூவையும் நீ தான் எடுத்தாகனும்!” என்று ஒரே போடாகப் போட்டு விட்டார் சுதன்.

அதில் அடிபட்டுப் போன முகத்துடன்,”வேற எந்த ஆங்க்கர் - உம் ஃப்ரீயாக இல்லையா சார்?” என்று நப்பாசையுடன் வினவினாள் ஹாரண்யா.

“இருக்காங்க. ஆனால், பகீரதன் சார், உன்னைத் தான்…” என்று அவர் கூறி முடிக்க வரும் சமயத்தில்,

குறுக்கிட்டு,”ஓகே சார். நான் இதைச் செய்றேன்!” என்று அவரிடம் வாக்களித்து விட்டு,”நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு, மத்ததைக் கேட்டுக்கிறேன் சார். ப்ளீஸ்” என்றவாறு அவர் அறையிலிருந்து வேகமாக வெளியேறி விட்டாள் ஹாரண்யா.


அதன் பிறகான நிமிடங்கள், அவளுக்கு மிகுந்த மன உளைச்சல் மற்றும் அவஸ்தையை வாரி வழங்கிக் கொண்டு இருந்தது.

எவன் ஒருவனைத், தான் மறுபடியும் நேரில் சந்திக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தாளோ!

அவனையே நேர்காணல் செய்யும் நிலைக்குத் தான் தள்ளப்பட்டதை எண்ணி நொந்து போய் விட்டாள் ஹாரண்யா.

ஆனால், அவள் பார்க்கும் வேலையிலும், அவன் இருக்கும் இடத்திலும், அது சாத்தியமே இல்லை என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்து விட்டது.

திரையில் கூட அவனைப் பார்க்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவளுக்கு, இப்போது நேரிலேயே பல மணி நேரங்கள் அவனை நேர்காணல் பண்ணப் போவதை நினைத்தாலே குமைந்து போனாள் ஹாரண்யா.

“ப்ச்! ஷிட்!” என்று பெரிய மூச்சுக்களை வெளியிட்டவளோ மீண்டும் சுதனிடம் திரும்பிப் போய்,”மிஸ்டர். பகீரதன் கிட்ட டேட் அண்ட் டைம் கேட்டு சொல்லுங்க சார்” என்று கூறி விட்டு, வெளியேறியவள்,

தன் தோழிக்கு அழைத்து,”மினி, எங்கே இருக்க? இன்னைக்கு ஸ்டூடியோ வருவ தானே?” என்று சஞ்சலத்துடன் கேட்டாள்.

“ஆன் தி வே, ஹாரா ம்மா” என்கவும்,

“சீக்கிரம் வா” என்று சொல்லி வைத்து விட்டு அவளுக்காக காத்திருந்தாள் ஹாரண்யா.

இதே நேரத்தில், மிகுந்த நிம்மதியுடன், பகீரதனின் அலுவலகத்திற்குக் கால் செய்து, அவனைத் தங்களது நிறுவனத்திற்கு அழைத்து நேர்காணல் செய்யத் தயார் எனவும் நாள் மற்றும் நேரத்தைக் குறித்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார் சுதன்.

ஆனால், அங்கேயிருக்கும் வன்ம கோஷ்டிக்கு, இன்னும் புகைச்சல் உண்டாகி அவர்களைப் படுத்தி எடுத்தது.

அதனால், தனக்காக காஃபியை ஆர்டர் செய்து குடித்துக் கொண்டு இருந்தவளிடம் வந்து எதையோ பேச யத்தனித்தவர்களை,”உஷ்! எனக்கு இப்போ உங்ககிட்ட ஆர்க்யூ பண்ண டைம் இல்லை. கிளம்புங்க!” என்று எச்சரித்து அனுப்பி வைத்தாள் ஹாரண்யா.

அதைக் கேட்டு ஆத்திரத்துடன் திரும்பிச் சென்று விட்டார்கள் அந்தப் பெண்கள்.

தனது செல்பேசி ஒலிக்கவும், அதை எடுத்து அட்டெண்ட் செய்து,”ஹலோ, சொல்லு மினி?” என்றாள்.

“நான் ஸ்டுடியோவுக்கு வந்துட்டேன் ஹாரா. நீ எங்கே இருக்கிற?” என அவளிடம் வினவினாள் தோழி.

“டிரெஸ்ஸிங் ரூமில், தான் இருக்கேன். வெளியே யாராவது நிக்கிறாங்களான்னுப் பார்த்துட்டு உள்ளே வா மினி” என்று அறிவுறுத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் ஹாரண்யா.

தான் குடித்து முடித்தக், காப்பிக் கோப்பையை, வெறித்துக் கொண்டிருந்தவளுக்குத், தன்னுடைய மன பலத்தை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

‘எஸ்! நான் அந்தப் பகீரதனைப் பார்த்துப் பயப்படக் கூடாது!’ என்று மந்திரம் போலத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போது அந்த அறையின் கதவைத் திறக்கும் ஒலி கேட்டது.


- தொடரும்

நீங்க சொன்னப் பிழைகளைத் திருத்திட்டேன்... இன்னும் ஏதாவது இருந்தால் கண்டிப்பாக எங்கிட்ட சொல்லுங்க... நானும் இன்னும் தெளிவாக ஒரு தடவை யூடியை வாசிச்சுட்டுப் போஸ்ட் பண்றேன் டியர்ஸ் 😍😍😍
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍 😍 😍

இந்த இரண்டாம் அத்தியாயத்தைப் பற்றிய கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 3

“மினி” எனக் குரல் கொடுத்தாள் ஹாரண்யா.

“நான் தான்!” என்றபடி உள்ளே வந்தவளோ, தோழியின் இறுகிய முகத்தைக் கண்டதும்,”ஹூம்! இன்னைக்கு என்னாச்சு?” என அவளிடம் வினவிக் கொண்டே அருகே அமர்ந்தாள் தாமினி.

“அந்தப் பகீரதனுக்கு இருக்கிற திமிருக்கும், கொழுப்புக்கும், அவனை நேரில் பார்க்கும் போது இருக்குடி!” என்று தன் முன்னால் கணவனைப் போட்டு வறுத்து எடுத்தவாறே அவளிடம் அனைத்தையும் ஒப்புவித்தாள் ஹாரண்யா.

“இது வேறயா? சூப்பர்! காலையிலேயே காதுக்குக் குளிர்ச்சியான நியூஸ்!” என்றாள் அவளது தோழி.

“மினி!” என்று அவளை அதட்டவும்,”என்னை வேற என்ன சொல்ல சொல்ற? இதுக்கப்புறம் நீ கன்ஃபார்ம் ஆக வேலையை விட்டுப் போயிடுவ, கரெக்டா?” என்று அவளிடம் கேட்டாள் தாமினி.

“ஆமாம். வேற வேலையைத் தேடிக்கிட்டு இதை விடலாம்னுப் பார்த்தேன்! முடியாது போலிருக்கு!” என்று குறைபட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

“பகீரதன் உன்னை வச்சு செய்யப் போறாருன்னு மட்டும் புரியுது!” என்று கூறி அவளைக் கலங்கடித்தாள்.

இவளை இப்படி கலங்க வைத்துக் கொண்டிருந்தப் பகீரதனோ, தனது அலுவலக அறையில், கூலாக அமர்ந்திருந்தான்.

“சார்! அந்தச் சேனலில் இருந்து கால் செய்தாங்க” என்று தெரிவித்தான் அவனுடைய காரியதரிசி.

“ஓகேன்னு சொல்லி இருப்பாங்களே?” என்று விடையைத் தெரிந்து கொண்டே கேள்வியைக் கேட்டான் பகீரதன்.

“எஸ் சார்”

”அந்த மோஹித்தை இன்டர்வியூ செஞ்ச லேடி தானே என்னையும் இன்டர்வியூ செய்யப் போறது?” எனக் கேட்டான்.

“அஃப்கோர்ஸ் சார்” என்று பதிலளித்தவனை அனுப்பி விட்டுத், தன் முன்னாள் மனைவியை நினைத்துக் கேலியாக இதழை வளைத்துக் கொண்டான் பகீரதன்.

அவர்களுக்கு என்னத் துணிவு இருந்தால், தனக்கு அடுத்த இடத்தில் இருந்தவனை, நேர்காணல் செய்து அதை முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்க முடிவு செய்திருப்பார்கள்? என்று கோப மூச்சுக்களை வெளியிட்டவனோ, அந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப விடாமல் செய்த செயலை ஞாபகப்படுத்திப் பார்த்தான்.

தன்னுடைய நேர்காணல் நடந்து முடிந்து, தனக்கானப் பணத்தையும் பெற்றுக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டான் மோஹித்.

அந்தச் சமயம் பார்த்து, ஹாரண்யா வேலை பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளியே இருந்து கொண்டு தன்னுடைய முதலாளிக்கு அழைப்பு விடுத்தான் பகீரதனின் ரகசிய உளவாளி.

“ஹலோ சார். இப்போ தான், ஆக்ட்டர் மோஹித்தோட கார், இந்த ஆஃபீஸில் இருந்து வெளியே போகுது” என்று தகவல் தெரிவித்தான்.

“ஆமாம். என்ன வேலைக்காகப் போயிருந்தான்?” என்று அவனிடம் கேட்டான் பகீரதன்.

“அவரை இன்டர்வியூ செய்திருக்காங்க சார்” என்று பதிலளித்தான் அந்த உளவாளி.

“அவனோட கார் அந்த ஆஃபீஸூக்கு உள்ளே போகும் போதே எனக்கு இன்ஃபார்ம் பண்ணி இருக்கனும்னு உனக்குத் தெரியாதா?” என்று கணீர்க் குரலில் வினவினான்.

“உங்களை முதல்லயே கூப்பிட்டு இருப்பாங்கன்னு நினைச்சேன் சார்” என்று பயத்துடன் எச்சிலை விழுங்கி விட்டுக் கூறியவனிடம்,

“முட்டாள்! இனிமேல் இப்படி இருக்காதே! அப்பறம் உனக்குப் பதிலாக வேறு ஆளைப் போட வேண்டியதாக இருக்கும்!” என்று கர்ஜித்தான் பகீரதன்.

“சாரி சார்!” என்று கம்மிய குரலில் கூறினான் அவனது ரகசிய உளவாளி.

“அவனோட இன்டர்வியூ எப்போ டிவியில் டெலிகாஸ்ட் செய்யப் போறாங்கன்னு விசாரிச்சு சொல்லு” என அவனுக்கு உத்தரவிட்டவனோ, தன்னுடைய காரியதரிசியை அழைத்து,

“அந்த டிவி சேனலுக்குக் கால் செஞ்சு நான் சொல்றதை இன்ஃபார்ம் பண்ணு” என்று அவனுக்குக் கட்டளையிட்டான் பகீரதன்.

“ஓகே சார்”

அதெப்படி நீங்க மோஹித்தை முதலில் இன்டர்வியூ செய்யலாம்னு எங்க சார் கேட்டார்! அவர் தானே ஃபர்ஸ்ட் பிளேஸில் இருக்கார்! இது பகீரதன் சாரை இன்சல்ட் செஞ்சா மாதிரி இருக்கு!” என்று அவன் கூறியதை எல்லாம், அப்படியே, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரிடம் அழைத்துக் கூறினான் பகீரதனின் காரியதரிசி.

அதில், பதறிப் போன சுதனோ,”ஐயையோ! சாரி சார்” என்று எதையெதையோ சொல்லிச் சமாதானம் செய்யப் பார்த்தார்.

“இதையெல்லாம் எங்க சார் கேட்கப் போறது இல்லை. நீங்கப் பண்ணின தப்பைச் சரி செய்யப் பாருங்க!” என்று அவரை மிரட்டினான்.

“என்னத் தப்பு?” என்று குழம்பிப் போய்க் கேட்டார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

பகீரதனின் காரியதரிசி,“அதான், மோஹித்தை முதலில் இன்டர்வியூ செஞ்சீங்களே?”

‘அதில் என்னத் தவறு உள்ளது?’ என்று நினைத்த சுதனோ,’அதையெல்லாம் இவர்களிடம் கேட்டால் நாம் தான் சிக்கலில் மாட்டிக் கொள்வோம்!’ என்று,

“மன்னிச்சிருங்க சார்! பகீரதன் சாரை நாங்க இன்டர்வியூ பண்ணி அதை முதல்ல டெலிகாஸ்ட் செய்றோம். அதுக்கு மோஹித் சார் ஓகே சொல்லனுமே?” என்றார் சுதன்.

“அது எங்களோட பொறுப்பு! மோஹித் ஓகே சொல்லுவார்!” என்று கூறி வைத்து விட்டுத், தன் முதலாளியிடம் வந்து தங்களது உரையாடல்களை அவனிடம் சொன்னான் காரியதரிசி.

“ஓகே. மோஹித் கிட்ட நான் பேசறேன்” என்றவன், தன் கைப்பேசியில், சில எண்களை அழுத்திக் கொண்டே, அவனை வெளியேறுமாறு சைகை செய்தான்.

மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டு,”ஹலோ” என்ற குரல் கேட்டவுடன்,

“ஹாய் மோஹித்! எப்படி இருக்க?” என்று நக்கலாக வினவினான் பகீரதன்.

அவனது மனைவி தன்னை அவமானப்படுத்தியது ஞாபகம் வரவே,”ம்ம்… ஐ யம் குட்” என்று வேண்டா வெறுப்பாக மொழிந்தான்.

“அப்பறம், இன்டர்வியூ எல்லாம் அட்டெண்ட் பண்ணிட்டுச் சுடச்சுட பேமெண்ட் வாங்கியாச்சு போலயே?” என்று எடக்கு மடக்காக கேட்டவனிடம்,

“அதெல்லாம் உனக்கு எதுக்கு பகீரதன்? ஓஹ்! உன் எக்ஸ் வொய்ஃப் தான், என்னை இன்டர்வியூ செஞ்சான்னுத் தெரிஞ்சதுமே உனக்குப் பொறுக்க முடியலையா?” என்று வார்த்தைகளில் விஷத்தைக் கக்கினான் மோஹித்.

அதைக் கேட்டு வாய் விட்டு நகைத்தவனோ,”உன்னை யார் இன்டர்வியூ செஞ்சா எனக்கென்ன! ஆனால், சினிமா இண்டஸ்ட்ரீயில், உனக்கு முதல்ல இருக்கிறது நான் தான்! என்னை விட்டுட்டு உன்னை எப்படி இன்டர்வியூ பண்ணலாம்? அவங்க செஞ்சது தப்பு தானே மோஹித்? அதைச் சரி செய்ய வைக்கனுமே?” என்றுரைத்தான் பகீரதன்.

“என்னப் பண்ணப் போற?” என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டான் மறுமுனையில் இருப்பவன்.

“ஒன்னும் இல்லை. சிம்பிள் தான்! எப்பவும் போல உன்னை இரண்டாவது இடத்தில் தள்ளிட்டு, இதிலேயும் நான் முதல் இடத்துக்கு வரப் போறேன்!” என்று குரூரமான குரலில் கூறினான்.

அதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்குச் சென்ற மோஹித்தோ,”வேணாம் பகீரதன்! நீ எப்போ பாத்தாலும் என்னை இப்படி சொல்லி சொல்லியே அவமானப்படுத்துற! ஒருநாள் இல்லை ஒருநாள் இதுக்காக ரொம்ப வருத்தப்படுவ!” என்று கூறி அவனைப் பயமுறுத்தப் பார்த்தான்.

அதற்கு எல்லாம் அசைந்து கொடுக்காமல்,”ஹாஹா! அதை அப்போ பாத்துக்கலாம். இப்போ நீ என்னப் பண்ற, என்னோட இன்டர்வியூவை முதலில் டெலிகாஸ்ட் செய்றதுக்கு ஓகேன்னு சொல்ற! சரியா?” என்றான்.

“முடியாது!” என்று ஒற்றைச் சொல்லில் மறுத்து விட்டான் மோஹித்.

“அப்போ நீ கமிட் ஆகி இருக்கிற எல்லா படங்களில் இருந்தும் உன்னைத் தூக்கச் சொல்லிட்டா போச்சு!” என்று அவனிடம் அசட்டையாக கூறினான்.

“டேய்!!!” என்று சத்தமாக இரைந்தவனைக் கையமர்த்தி விட்டு,”எனக்கு வேற ஆப்ஷன் இல்லையே டா!!!” என்று போலிப் பரிதாபம் காட்டினான் பகீரதன்.

இதற்கு மேலும் தான் பிடிவாதம் பிடித்தால், அவன் சொன்னதை நிச்சயமாக செய்து விடுவான் என்று எண்ணிய மோஹித்திற்கோ, அவனைக் கூறு போடும் ஆத்திரம் வந்தாலும், அதைச் செய்ய முடியாமல் கையைக் கட்டிப் போட்டதைப் போல உணர்ந்தான்.

தன்னுடைய படங்களின் ஷூட்டிங் முடிந்து அவற்றைத் திரையிடப்படும் வரை அடக்கி வாசிக்க முடிவெடுத்தான் மோஹித்.

அதனால் வேறு வழியில்லாமல்,”சரி. நான் ஓகே சொல்றேன்” என்று வழிக்கு வந்து விட்டான்.

“இது தான் நல்லப் பையனுக்கு அழகு! பை மோஹித்” என்று கேலியாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டு, கால் ரெக்கார்டரில் இருந்த, மோஹித்தின் சம்மதத்தை, தன் காரியதரிசியின் மூலம், சுதனுக்குப் புலனத்தில், வாய்ஸ் மெசேஜ்ஜாக, அனுப்பி வைத்தவனோ,

தன் முன்னால் மனைவியுடன் நேருக்கு நேராக அமர்ந்து உரையாடப் போகும் அந்த தருணத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கலானான் பகீரதன்.

யார் இவன்? என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம் வாருங்கள்…

பகீரதன் என்பவன், திரைத்துறையில் முதலாம் இடத்தை வகிக்கும் பிரபலமான கதாநாயகன் என்பதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஹாரண்யாவின் முன்னால் கணவன் என்பதும் அவனைப் பற்றிய பரவலான தகவல்கள் ஆகும்!

அவற்றைத் தவிர்த்து, அவனுடைய குடும்பத்தைப் பற்றிக் காண்போம். பகீரதனின் தந்தை பாலேந்திரன் மற்றும் தாய் மனோரமாவும், தங்கள் மகனுடைய படிப்பு முடிந்ததும், நடிப்பின் மீதான ஆர்வத்தை முழு மனதாக ஏற்றுக் கொண்டு, அவனை மேலும் நடிப்பில் மெருகேற்றித் திரைத்துறையில் சாதிக்கத் தூண்டுகோலாக இருந்தார்கள்.

அவனும், தன்னுடைய அபார நடிப்பின் மூலம், முதல் படத்திலிருந்து இப்போது வரை, சினிமாத்துறையில் ஒரு அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறான்.

பற்பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் அந்த நடிகனை நேர்காணல் செய்ய அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் எப்போதுமே போட்டிப் போட்டுக் கொண்டு தானே இருக்கும்?

அதேபோலவே, ஹாரண்யா வேலை செய்யும் நிறுவனமும், அவனை நேர்காணல் செய்ய அனுமதி கேட்டு அணுகியது.

அதில் தொடங்கிய அவர்களது கதை, காதல் கதையாக உருவாகி, இருவரும் திருமணத்தில் இணைந்து, இப்போது விவாகரத்து பெறப் போகும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்!

அது எதற்காக? இவர்களது காதல் கதை மற்றும் கல்யாணத்திற்குப் பிறகான வாழ்வில் நிகழ்ந்த குளறுபடிகள் என்னென்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த மூன்றாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 4

அன்றைய மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பகீரதனை நேர்காணல் செய்யப் போவதை தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டாள் ஹாரண்யா.

“ஹேய் சூப்பர்! நாங்களும் அந்த ஷோவைப் பார்க்கனுமே? என்னைக்கு இன்டர்வியூ பண்ணப் போற? எப்போ டெலிகாஸ்ட் செய்வாங்க?” என்று மகளிடம் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டுத் துளைத்தார் மதுராஹினி.

அவளோ,“ம்மா!” என அவரிடம் கடிந்து கொள்ள,

“என்னடி?”

“மது! இரும்மா” என்று மனைவியை அமைதியாக்கி விட்டு,”உனக்கு இதில் விருப்பம் தானே ஹாரா?” என்று மகளிடம் விசாரித்தார் இயமானன்.

“இல்லை ப்பா! ஆனால் வேற வழியில்லை. அதுவுமில்லாமல், நான் வேற வேலையைத் தேடிப் போற வரைக்கும் இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுத் தான் ஆகனும்!” என்று சோர்ந்து போய் உரைத்தாள் ஹாரண்யா.

“நம்மகிட்டேயும் கௌரவமாக சொல்லிக்கிற அளவுக்குப் பணம் இருக்கு டா! நீ இப்படி மனசுக் கஷ்டப்பட்டு வேலைக்குப் போகனும்னு அவசியமே இல்லை” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் தந்தை.

“எனக்கும் புரியுது ப்பா. ஆனால், அந்த சேவிங்ஸ் எல்லாம் உங்க ரெண்டு பேருக்குமானது. அதோட சேர்த்து நானும் சம்பாதிச்சுக் கொடுக்கனும்னு ஆசைப்பட்றேன். அதுக்காகத் தான், இப்படி வேலை பார்த்துட்டு இருக்கேன்” என அவரிடம் உறுதியாக கூறவும்,

“உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியும் ஹாரா. உடம்பையும், மனசையும், வருத்திக்காமல் எதுவாக இருந்தாலும் ஃபேஸ் பண்ணு” என்று சொல்லி தைரியம் அளித்தார் அவளது அன்னை மதுராஹினி.

என்ன தான், அவருக்குத் தன் மகளும், மாப்பிள்ளையும், ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதில் ஹாரண்யா மனதளவில் கஷ்டப்படுவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, மகளுக்குச் சில வார்த்தைகளைக் கூறி ஆறுதல் அளித்தார்கள் அவளது பெற்றோர்.

“ஓகே ம்மா, ப்பா. நான் பாத்துக்கிறேன்”

அதன் பின், பகீரதனை நேர்காணல் செய்வதற்காக குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தவளோ, அவனிடம் கேட்கப் போகும் கேள்விகளைத் தயாரித்து முடித்தப் பின், பகீரதனுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய எந்த தகவலையும் மறந்தும் கேட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

தான் அவனை நேர்காணல் செய்யத் தயாராகி விட்டதாக அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சுதனுக்குக் கால் செய்து கூறி விட்டாள் ஹாரண்யா.

அதை அவர் பகீரதனுடைய காரியதரிசியிடம் அழைத்துச் சொல்லி விட்டார்.

அவனோ நேரம் பார்த்து இந்த விஷயத்தை அவனது காதில் போட,”நாளைக்கே அவங்க ஸ்டுடியோவுக்குப் போய் இன்டர்வியூவை அட்டெண்ட் பண்ணிடலாமே!” என்று அவனிடம் கூறிப் புன்னகைத்தான் பகீரதன்.

அவனது மனதில் இருக்கும் எண்ணங்களை அறிவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அந்த நேர்காணலில் தன்னுடைய முன்னால் மனைவியைக் கதற வைக்கப் போகிறானா? அல்லது அடாவடித்தனம் செய்யாமல் அமைதியாக உரையாடப் போகிறானா? என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்!

முந்தைய நாள் இரவில், தன் மனப் போராட்டத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஹாரண்யாவோ, இதையெல்லாம் நாளைய தினம் யாருக்கும் காட்சிப் பொருளாக அமைந்து விடக் கூடாது என்று கவனத்துடன் செயல்பட்டாள்.

அதனாலேயே, தன்னுடைய அனைத்து மனக்கிலேசங்களையும், அந்த இரவிலேயே துடைத்து எறிந்து விட்டு, ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொண்டாள் ஹாரண்யா.

சூரிய உதயத்திற்குப் பிறகு எழுந்த பகீரதனோ, தன் அன்னையிடம் வந்து,”ம்மா!” என்று அவரை அழைத்தான்.

“வா ப்பா” எனக் குரலில் சுரத்தே இல்லாமல் மகனிடம் பேசினார் அவனது தாய் மனோரமா.

“என்னாச்சு ம்மா?” என்று அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

“வீட்டுக்கு விளக்கேத்த வந்த மருமக தான், எப்பவோ வெளியே போயிட்டாளே! அப்பறம் எனக்குப் பேச என்ன இருக்கு?” எனச் சத்தமாகவே மொழிந்தார் அவனுடைய அன்னை.

“காலையிலேயே ஆரம்பிச்சாச்சா? போங்க” என அங்கேயிருந்து செல்ல முற்பட்ட மகனின் கரத்தில் கோப்பையைத் திணித்தார் மனோரமா.

“தாங்க்ஸ் ம்மா” என அதைக் குடிக்க ஆரம்பித்தவனோ,“நான் இன்னைக்கு ஒரு இன்டர்வியூ கொடுக்கப் போறேன்” என்றான் பகீரதன்.

உடனே தனது புருவத்தை உயர்த்தி,”எந்த ஸ்டூடியோ?” என்று வினவினார்.

அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும்,”ஓஹ்! சரிப்பா” என்று கூறி விட்டார் மனோரமா.

“என்னம்மா இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறீங்க?” எனக் கூறிச் சினுங்கினான் பகீரதன்.

“அது என்னோட மருமக வேலைப் பார்க்கிற ஸ்டூடியோ தான்னு எனக்குத் தெரியும். நீ அங்கே எதுக்காகப் போறன்னும் தெரியும்! அதுக்கப்புறமும் நான் வேற என்னச் சொல்றது?” என்று பெருமூச்சுடன் கேட்டார் அன்னை.

“பார்றா! நான் ஒன்னும் அவளைக் கடிச்சுத் தின்னப் போறது இல்லை ம்மா. இன்டர்வியூ கொடுக்கப் போறேன். அவ்வளவு தான்!” என்று தீர்க்கமாக கூறிய மகனை மேலிருந்து கீழாக ஆராய்ந்தவாறே,”அவ்வளவு தானே? நான் இதை நம்புறேன் ப்பா! போய் ரெடியாகு” என அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்திற்குப் பின், தயாராகி வந்த மகனுக்கு உணவைப் பரிமாறியவர், அவன் உண்டு முடிக்கும் வரை காத்திருந்து விட்டு,”அவளை எதுவும் மனசுக் கஷ்டப்பட்றா மாதிரி சொல்லிடாதே டா!” என்று அவனுக்கு அறிவுறுத்தினார் மனோரமா.

“ம்மா!” என அவரைக் கண்டனப் பார்வைப் பார்த்தவனோ, தனது உடல்நிலை சரியில்லாத தந்தையை அவரது அறைக்குச் சென்று பார்த்து விட்டுக், காரில் ஏறித் தன் அலுவலகத்திற்குச் சென்று அறைக்குள் போய்த் தனது நேர்காணலுக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கலானான் பகீரதன்.

*************************

தெளிவான முகத்துடன், தயாராகி வந்த மகளுக்கு நல்லாசி மற்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்கள் ‌அவளது பெற்றோரான இயமானன் மற்றும் மதுராஹினி.

“ஹாய் ஹாரா” எனத் தோழியை வரவேற்றாள் தாமினி.

ஹாரண்யா,“ம்ஹ்ம்”

”சியர் அப் டியர்! இது உன்னோட பெஸ்ட் இன்டர்வியூ ஆக அமையும் பாரு!” என அவளைத் தேற்றினாள்.

“ஓகே மினி. என்ன வருதோ பாத்துக்கலாம்!” என்று அவளிடம் நம்பிக்கையுடன் உரைத்தவளைச் சுதன் அழைக்கவும் அவரிடம் சென்றாள்.

“மிஸ். ஹாரண்யா. ஆர் யூ ரெடி?” என்று அவளிடம் கேட்கவும்,

“யெஸ் சார்” என உறுதியாக கூறினாள்.

அதனால், பகீரதனுடைய அலுவலகத்திற்குச் செல்பேசி அழைப்பு விடுத்து, அவனை நேர்காணல் எடுக்கப் போகிறவர் வந்தாயிற்று என்பதை அறிவித்தார் சுதன்.

“சரி. நான் ஸ்டூடியோவுக்குக் கிளம்பி வர்றேன்” என அங்கே புறப்பட்டுச் சென்றான் பகீரதன்.

“சார் வந்தாச்சு! என்று அறிவித்தவுடன்,”யூ கேன் டூ இட் ஹாரா!” எனத் தன் நண்பிக்கு தைரியம் அளித்து அனுப்பினாள் தாமினி.

சுதன்,“ஸ்டார்ட் தி ஷோ மிஸ். ஹாரண்யா” என்கவும்,

“நம்ம சினிமா இண்டஸ்ட்ரீயில் தொடர்ந்து தன்னோட முதலிடத்தைப் பிடிச்சி இருக்கிற ஹேன்ட்சம் ஆக்ட்டர் மிஸ்டர். பகீரதன் சாரை இங்கே வருமாறு கேட்டுக்கிறேன்!” என்று மிகவும் பிரயத்தனம் செய்து வரவழைக்கப்பட்ட உற்சாகத்துடன் அவனை வரவேற்றாள்.

சினிமாத்துறையில் முதலிடம் வகிக்கும் பிரபலமான கதாநாயகனாக வலம் வரும் அந்தப் பகீரதன் என்பவன், அங்கேயிருந்த அவனது அபிமானிகளுக்கு ஏக குஷியாகிப் போய்,”பகீ சார்!!!!” என்று கூவினர்.

அதைக் கேட்டுக் கொண்டே, விலையுயர்ந்த கோட் சூட் அணிந்திருந்த ஆடவனோ, மிதமான நடையுடன், தன் அபிமானிகளுக்குக் கையை அசைத்து, சிறிதளவு புன்னகை புரிந்து விட்டு,

“ஹாய் சார்! வெல்கம் டூ மை ஷோ!” எனத் தன் முன்னால் பூங்கொத்தை நீட்டிக் கொண்டிருந்த ஹாரண்யாவைப் பார்த்து,”ஹாய்!” என்று கூறி மர்மப் புன்னகை புரிந்தவாறே அதைப் பெற்றுக் கொண்டான் பகீரதன்.

அதில் ஒரு சில கணங்கள் திகைத்துப் போனவளோ,”டேக் யுவர் சீட் சார்” என்றாள் ஹாரண்யா.

“தாங்க்யூ” எனப் பதிலளித்து விட்டு அமர்ந்தவனோ,”எப்படி இருக்கீங்க?” என்றான் அவளது முன்னால் கணவன்.

“ரொம்ப சூப்பராக இருக்கேன் சார்” என்றவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்து விட்டு,”ரியலி?” என்றான் பகீரதன்.

அவனது பார்வையின் கூர்மை தாளாமல்,”ஆமாம் சார்” என்று அவனிடம் சொன்னவளோ,“சினிமா ஃபீல்டில் உங்களோட ஜர்னியை நாங்க ஒரு வீடியோவாக எடிட் செய்து வச்சிருக்கோம். முதலில் அதைப் பார்த்துட்டு அப்பறமாக இன்டர்வியூவை ஸ்டார்ட் பண்ணலாமா சார்?” என வினவவும்,”ஷ்யூர்” என்று அவனும் சம்மதம் அளித்து விட்டான்.

அவனது வாழ்க்கைப் பயணத்தைப் பத்து நிமிட வீடியோவாக மாற்றி அனைவருக்கும் போட்டுக் காண்பித்து விட்டு,”இப்போ கேள்விகளுக்கான நேரம்!” என்று அனைத்தையும் கேட்டு முடித்தாள் ஹாரண்யா.

“வேறெந்த கேள்வியும் இல்லையா?” என்று புருவச் சுருக்கத்துடன் கேட்டான் பகீரதன்.

“எல்லாமே கேட்டாச்சு சார்” என்று கூறி சங்கடத்துடன் நெளிந்தாள் அவனது முன்னால் மனைவி.

“அப்போ சரி. நீங்க கேட்கலைன்னாலும், எனக்குச் சொல்றதுக்கு இருக்கே!” என்றவன்,”இதே மாதிரி முன்னே ஒரு தடவை என்னை இன்டர்வியூ செஞ்சீங்க, ஞாபகம் இருக்கா மிஸ். ஹாரண்யா?” என்று அழுத்திக் கேட்டான்.

அவளைத் திடுக்கிட வைத்து விட்டு அவன் நிதானமாக இருக்க, அவளோ தொண்டையைச் செருமிக் கொண்டு,”எஸ் சார்” என்று விடையளித்தாள்.

“அப்போ நீங்க எனக்கு யாருன்னே தெரியாதவங்களாக இருந்தீங்க! இப்போவும் அப்படித்தான் இருக்கீங்க! இது சூப்பர் ஃபீலாக இருக்கு!” என்றுரைத்தான் பகீரதன்.

‘அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இப்போ இப்படி இவன் முன்னாடி நான் சங்கடப்பட்டு உட்கார்ந்து இருக்க மாட்டேன்!’ என்று தன்னையே நொந்து கொண்டாள் ஹாரண்யா.

“ஹலோ எக்ஸ்கியூஸ்மீ?”

“ஹாங், எஸ் சார்”

“இன்டர்வியூ முடிஞ்சிதா? நான் போகலாமா மிஸ்?” என்று அவளிடம் கேட்டான் பகீரதன்.

“முடிஞ்சது சார்” என்றவள், நிகழ்ச்சியை முறையாக நிறைவு செய்து விட்டு, கேமராக்கள் யாவும் அணைந்ததும், பெருமூச்சு விட்டுக் கொண்டாள் ஹாரண்யா.

அதை அவதானித்தவனோ,”இனிமேல் நீ இப்படி பெருமூச்சு விட்டுக்கிட்டே தான் இருக்கப் போற!” எனக் கூறி விட்டுச் சுதனிடம்,”இந்த இன்டர்வியூ தான் முதல்ல டெலிகாஸ்ட் ஆகனும். சொன்னதைச் செய்யுங்க!” எனக் கறாராக உரைத்து விட்டுச் சென்றான் பகீரதன்.

புயல் அடித்து ஓய்ந்தது போல இவ்வளவு நேரமாக மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்தவளோ, இப்போது ஆசுவாசம் அடைந்து,”சம்பந்தமே இல்லாமல் உளறிட்டுப் போறான்!” என அவனைத் திட்டவும் மறக்கவில்லை அவள்.

அந்த முன்னால் கணவன் மற்றும் மனைவியிடத்தில், இந்த நேர்காணல் சிறிதளவேனும் மாற்றத்தைத் தருவிக்குமா? என்று பார்ப்பதற்கு முன், அவர்களது கடந்த காலத்தைப் பார்ப்போம்…

- தொடரும்

 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த நான்காம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 5

இயமானன் மற்றும் மதுராஹினியின் செல்வப் புதல்வியான ஹாரண்யா தனது படிப்பு முடிந்ததும், தன் பெற்றோருக்குச் செலவு வைக்காமல், பண வரவிற்காக ஏதாவதொரு வேலைக்குப் போக முடிவு எடுத்தவளோ,

தனக்குள் இருக்கும் பேச்சுத் திறமை மற்றும் தன்னை அழகாகவும், பாந்தமாகவும், தாயார்ப்படுத்திக் கொள்ளும் பாங்கின் உதவியுடன் பணம் சம்பாதிக்க நினைத்தவள், அந்த நகரத்திலேயே மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்து விட்டுக் காத்திருந்தாள் ஹாரண்யா.

அதற்குத் தேவையான தகுதிகள் இவளிடம் இருந்ததால், அந்த வேலை எளிதாக அவளுக்குக் கிடைத்து விட்டது.

தன்னுடைய முதலிரண்டு நேர்கணல்களையும் நல்லவிதமாக எடுத்துக் கொடுத்து விட்டதும் இல்லாமல், தமிழ் அல்லாது வேறு சில மொழிகளையும் தெரிந்து வைத்திருந்ததால், அவ்வேலையில் மென்மேலும் உயரத் தெடங்கி விட்டாள் ஹாரண்யா.

அந்தச் சமயத்தில் தான், சினிமாத்துறையில் முதலிடம் வகிக்கும் பகீரதன் என்பவரைத், தான் முதன் முதலாக நேர்காணல் செய்யப் போவதை எண்ணிப் பதட்டத்துடன் காணப்பட்டாள்.

தாமினியின் பரிவான வார்த்தைகளைக் கேட்டு விட்டுத் தனது குறிப்புகளையும் ஒருமுறை வாசித்துப் பார்த்துக் கொண்டாள்.

ஹாரண்யாவும், தாமினியும், ஒரே கால கட்டத்தில் தான், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இருந்தார்கள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டதும் அந்தச் சமயத்தில் தான்!

அதனால் தான், இந்த நேர்காணலின் போது தோன்றிய படபடப்பைக் குறைக்கத் தோழியைக் கேட்டுக் கொண்டவளோ,

ஹாரண்யா,“நீயும், நானும் ஒரே நேரத்தில் தான் வேலைக்குச் சேர்ந்தோம். உன்னையே அவரை இன்டர்வியூ செய்யச் சொல்லலாமே? ஏன் என்னை இழுத்து விட்டாங்க?” என்று புலம்பியவளிடம்,

“ஹாஹா! உன்னோட டேலண்ட் - ஐப் பத்தி உனக்கே தெரியலை! அது அவங்களுக்குத் தெரிஞ்சதால் தான், இந்த ஷோவை ஹோஸ்ட் செய்ய உன்கிட்ட கொடுத்து இருக்காங்க” என்று அவளுக்கு நம்பிக்கை கொடுத்தாள் தாமினி.

“அடப் போ ம்மா!” என்றவாறே தன்னுடைய பதட்டத்தை மறைத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

****************************

“இன்னைக்கு எந்த டிவி ஷோவுக்கு இன்டர்வியூ கொடுக்கப் போறீங்க ஹீரோ சார்?” என்று தங்களது மகனிடம் கேட்டார் பாலேந்திரன்.

அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரைத் தந்தையிடம் சொன்னான் பகீரதன்.

“அங்கே மோஹித்தும் வருவான் தானே?” என்று அவனிடம் வினவினார் மனோரமா.

“இல்லை ம்மா. நான் இருக்கும் போது வேற யாரும் வரக் கூடாதுன்னு முன்னாடியே கன்டிஷன் போட்டுட்டேன்!” என்று அவரிடம் பதிலளித்தான் மகன்.

“சூப்பர்” எனத் தன் மகனைப் பாராட்டினார் பாலேந்திரன்.

“அவனைப் பாராட்டக் கூடாது ங்க! கண்டிச்சு வைக்கனும்” என்று கணவனிடம் கூறினார் மனோரமா.

“ஏன் ம்மா?” என்றான் பகீரதன்.

“ஆமாம். அது ஒரு டிவி சேனல்! அங்கே போய் இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டால், நீ சினிமா இண்டஸ்ட்ரீயில் நிலைச்சு இருக்க முடியுமா?” என்று மகனைக் கண்டித்தார் அவனுடைய அன்னை.

“நான் நம்பர் ஒன் பொசிஷனில் இருக்கேன் ம்மா. என்னை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் சீண்டிப் பார்க்க முடியாது!” என்று தன்னை நினைத்து மார் தட்டிக் கொண்டவனைப் பார்த்து முறைத்து விட்டு,”உனக்கு டைம் ஆச்சுக் கிளம்புடா” என்று மனோரமாவும், பாலேந்திரனும் மகனை வழியனுப்பி வைத்தார்கள்.

அவனுடைய ஒரு சில குணாதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.

அதாவது, தான் இருக்கும் இடத்தில் தனக்குத் தொந்தரவாக எதுவும், யாரும் இருக்கக் கூடாது என்பதை எல்லா இடங்களிலும், சமயங்களிலும் வலியுறுத்திக் கொண்டே இருப்பான்.

அதே போல் தான், இப்போது நேர்காணல் அளிக்கப் போகும் நிறுவனத்திற்கும் நிபந்தனை விதித்து விட்டப் பிறகு தான், அதற்கு ஒப்புக் கொண்டு இப்போது அங்கே சென்றிருந்தான் பகீரதன்.

“ஹேய் ஹாரா! நீ இன்டர்வியூ செய்யப் போற அந்த நம்பர் ஒன் ஹீரோ வந்தாச்சு!” என்று அவளிடம் அறிவித்தாள் தாமினி.

“அச்சச்சோ!” என்றவளோ, சிறிதளவு தண்ணீர் பருகி விட்டுக் காத்திருந்தாள் ஹாரண்யா.

“என்னை இன்டர்வியூ பண்ணப் போறது யாரு?” என்று கேட்டுக் கொண்டே தனது கூலிங் கிளாஸைக் கழட்டினான் பகீரதன்.

அதற்கு சுதனோ,”இதோ அந்தப் பொண்ணைக் கூப்பிட்றேன் சார்” என்று அவளை அழைத்து இவனது முன்னால் நிறுத்தினார்.

தன் முன்னால் வந்த ஹாரண்யாவை நேருக்கு நேராக நின்று அவளது கண்களைக் கூர்மையாகப் பார்த்தான்.

தனக்குள் என்ன தான், பதட்டம் இருந்தாலும், அவன் போலீஸும் இல்லை, தான் குற்றவாளியும் இல்லை என்று எண்ணி சளைக்காமல் அவனது அவனது விழிகளை ஏறிடும் தைரியம் அவளுக்கு இருந்தது.

சிறிதளவேனும் தன்னிடம் பயம் கொள்கிறாளா? அல்லது தன்னைப் பார்த்து மையல் கொண்டு புன்னகைக்கிறாளா? என்றெல்லாம் ஆராய்ந்தவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அதைப் பொறுத்துக் கொண்டு,”ஹலோ” என்றான் பகீரதன்.

அதைக் கேட்டதும், தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டவளோ,”ஹலோ சார்” எனப் புன்னகைத்தாள் ஹாரண்யா.

அவளது குறுநகையில், தான் தொலைந்து விடுவோமோ! என்ற யோசனையில்,”ஷோவை ஆரம்பிக்கலாம்” என்று பொதுவாக கூறி விடவும்,

துரிதமாகச் செயல்பட்டு, அவனை நேர்காணல் சேய்யும இடத்தில் அமர வைத்தார்கள்.

அதன்பின், அவனை நேர்காணல் செய்ய ஆரம்பித்து விட்டாள் ஹாரண்யா.

அவளிடமிருந்த கேள்விகள் யாவும், அவளே தனிப்பட்ட முறையில் தயார் செய்ததாகும். எனவே, அவையும் தன்னை ஈர்த்ததை அவனால் மறுக்க இயலவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில், அந்த நேர்காணல் நன்முறையில் எடுத்து முடிக்கப்பட்டது.

அவளது நேர்த்தியான, தன்னிடம் வழிந்து பேசாமல் இருந்த ஹாரண்யாவின் குணாதிசயம் இவனை அசைத்துப் பார்த்தது உண்மை தான்.

அதையும், தோள்களைக் குலுக்கிக் கொண்டு, அலட்சியப்படுத்தி விட்டுச் சென்றான் பகீரதன்.

அடுத்து வந்த சில நாட்களிலேயே, அந்த நேர்காணல் ஒளிபரப்பாகியது.

அதனால், ஹாரண்யாவிற்கும் புகழ் மற்றும் பெருமை வந்து சேர, அவளுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து அவளும் பிரபலமாகி விட்டிருந்தாள்.

அப்போதெல்லாம் அவளுடன் வேலை செய்யும் சகப் பெண்கள் யாவரும் ஹாரண்யாவின் மீது துவேஷத்தை வளர்த்துக் கொண்டார்கள். அதுவும், பகீரதனை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனால் தான், அன்றிலிருந்து இன்று வரை, அவளிடம் குதர்க்கமாகப் பேசி அழ வைப்பார்கள். அதனையும் சில நேரங்களில் மிதித்து விட்டுப் போய் விடுவாள் ஹாரண்யா.

இப்படியாக நாட்கள், வேகமாக கழிந்த போது, தன்னுடன் பணியாற்றிய கதாநாயகிகள் மற்றும் இதர பெண்களையும் ஒற்றை அலட்சியப் பார்வையில் கடந்து செல்லும் பகீரதனுக்குத் தன்னை அசராமல் எதிர்கொண்ட ஹாரண்யாவுடனான அடுத்த சந்திப்பிற்குக் காத்திருக்கும் நிலையில் இருந்தான் பகீரதன்.

அதே போலவே, அவனது புறத்தோற்றம், நடிப்பு மற்றும் ஸ்டைல் இவற்றைப் பற்றியெல்லாம் மற்றவர்கள் பெருமைப் பேசிக் கொண்டு இருப்பதை அவ்வப்போது கேட்க நேர்ந்த அவளுக்குள்ளும் சிறு குறுகுறுப்பு தோன்றியது.

அப்படிப்பட்டவன் தன்னைக் கூரிய பார்வையால் துளைத்தது எதற்காக? எனப் புரியாமல் குழம்பிப் போனாள் ஹாரண்யா.

அதற்குப் பிறகு, அவனது படம் ஒன்று ஹிட்டாகி இருந்ததால், அந்தக் குழுவினரையும், பகீரதனுடன் சேர்த்து நேர்காணல் செய்ய அவளைத் தான் அறிவுறுத்தி இருந்தார் சுதன்.

அதுவுமே சிறப்பாக நடைபெற்று முடிய, இம்முறை ஹாரண்யாவின் பிம்பம் அவனுக்குள் அழுத்தமாகப் பதிந்து போயிருந்தது.

ஆனால், அவளது வேலை பகீரதனை மேற்கொண்டு முன்னேற விடாமல் தயக்கத்தைக் கொடுத்தது.

அதில் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவள் மேலிருந்த பிடித்தம் அதையெல்லாம் மறைக்க முயன்றது.

இதற்கிடையில், தன்னுடைய பெற்றோர்களிடம் சென்று,”இப்போ நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டா நீங்க என்ன சொல்வீங்க?” என்றான் பகீரதன்.

அந்த வார்த்தைகளைக் கிரகிக்க இயலாமல் அவனை வியப்புடன் பார்த்தனர் இருவரும்.

“ஏன் இப்படி பார்க்கிறீங்க?” என்று அவர்களிடம் வினவினான் மகன்.

“நாங்க இதெல்லாம் உங்கிட்ட இருந்து கேட்போம்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை ப்பா!” என்றார் பாலேந்திரன்.

“ஏன்?”

“உன்னைப் பத்தி உனக்கே தெரியும் தான? அதான்” என்று பதிலளித்தார் மனோரமா.

“ஓஹோ! சரி. இப்போ சொல்றேன். நான் ஒரு பொண்ணைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணப் போறேன்” என்று தன் பெற்றோரிடம் தெரிவித்தான்.

“யாரந்த பொண்ணு? எப்படி லவ் வந்துச்சு?” என்று விசாரித்தவர்களிடம்,

தன் மனம் கவர்ந்தவளைப் பற்றிக் கூறினான் அவர்களது மகன்.

“அதுக்குள்ளே லவ், இப்போ கல்யாணம்! ரொம்ப ஃபாஸ்ட் ஆக இருக்கிற பகீ!” என்று மகனுக்கு அறிவுறுத்தினர் அவனது பெற்றோர்.

“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அதனால் கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன். அவ்வளவு தான்! இதில் ஃபாஸ்ட், ஸ்லோன்னு எதுவும் இல்லை” என்று உறுதியாக கூறினான் பகீரதன்.

“அந்தப் பொண்ணும் உன்னை லவ் பண்றாளா? அவளுக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இருக்கா?” என்று அவனிடம் வினவினார் பாலேந்திரன்.

“நான் இன்னும் அவகிட்ட இதைப் பத்திப் பேசவே இல்லை ப்பா” என்றான் அவரது மகன்.

“என்னடா சொல்ற? எங்களுக்குத் தலையே சுத்துது!” என்று அவனை அதட்டினார் மனோரமா.

“ம்மா! நீங்க தான் இந்தக் கல்யாணத்தை அரேன்ட்ஜ் மேரேஜ்ஜாக நடத்தி வைக்கனும்” என்று தங்களிடம் கேட்டு நின்றவனை ஆயாசமாகப் பார்த்தனர் அவனுடைய பெற்றோர்.

இவ்வளவு அவசரமாக அனைத்தையும் செய்து திருமணத்தையும் முடித்ததால் தான், விரைவாகவே பிரிந்து போய், விவாகரத்தும் வாங்க அவ்விருவரும் காத்திருக்கிறார்களோ?

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஐந்தாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 6

“பொண்ணுப் பார்க்கப் போகலாமா?” என அவர்களிடம் கேட்கவும்,


“இப்படி திடுதிப்புன்னு வந்து சொன்னா எப்படி? அதுவும் அந்தப் பொண்ணுக்கும் இதைப் பத்தி தெரியாது, அப்படியிருக்கும் போது அவளோட பேரன்ட்ஸ் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு எல்லாத்தையும் யோசிச்சுப் பாரு பகீ! நீ நினைச்சதை எல்லாம் நடத்திக்கனும்னு ஆசைப்படாதே!” என்று மகனைக் கண்டித்தார் மனோரமா.


“ஹூம். நான் நடத்திக் காட்டுறேன் ம்மா” என்றான் பகீரதன்.


“டேய்! எங்களோட பொறுமையை ரொம்ப சோதிக்காதே!” என்று அவனை அதட்டினார் பாலேந்திரன்.


தன் மகன் பார் போற்றும் நடிகனாக இருந்தாலும், அவனால் தான் உலகமே சுழல்கிறது என்ற மாயையில் திரிகிறான்! என்று கடுங்கோபம் கொண்டார்கள் அவனது பெற்றோர்.


“ப்ச்! அந்தப் பொண்ணுக்கும் விருப்பமிருந்தால் நீங்க சம்மதிப்பீங்க தானே?” என்று அவர்களிடம் வினவ,


அவனைக் கூர்ந்து நோக்கியவாறு,”ம்ம். ஆனால் நீ அவளைப் பிளாக்மெயில் செய்து கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கக் கூடாது!” என்று அவனுக்கு வலியுறுத்தினார் மனோரமா.


“ஊஃப்! ஓகே ம்மா. நீங்க சம்மதிச்சதே போதும்” என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டுத் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்றான்.


அங்கே கிடைத்த இடைவேளை நேரத்தில், தனது கேரவனில் இருந்து கொண்டு ஹாரண்யாவைத் திருமணம் செய்து கொள்வது எப்படி? என்று சிந்தனை செய்து கொண்டிருந்தான் பகீரதன்.


அந்தச் சமயத்தில், தனது ஸ்டுடியோவிற்கு வந்திருந்த நடிகன் மோஹித்தை நேர்காணல் செய்து கொண்டிருந்தாள் ஹாரண்யா.


அனைத்து கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுத்து விட்டு, அவளது நேர்த்தியான அணுகுமுறையைப் பாராட்டி விட்டுச் சென்றான் மோஹித்.


இப்படியே நாட்கள் கழிய, அடிக்கடி ஹாரண்யாவும், தானும் சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு,


அதன்படி, அவளுடன் நன்றாகப் பேசி சிரித்தான். அதுவும், மற்றவர்களுக்குத் தன் மேல் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டான் பகீரதன்.


சிறிது சிறிதாக அவனது செயல்களைக் கவனிக்கத் தொடங்கி இருந்தாள் ஹாரண்யா.


அந்த நேரத்தில் தான், அவள் மோஹித்தை நேர்காணல் செய்து கொண்டிருந்த வீடியோவைப் பார்த்தவனுக்கு, ஏனோ அவள் மீதான உரிமைக் குணம் தலையெடுத்து விட, உடனே அவளைப் பார்க்க வேண்டுமென்ற கோரிக்கையை அவளிடம் விடுத்தான் பகீரதன்.


அதில் திடுக்கிட்டவளோ,”வாட்! நாம எதுக்கு மீட் பண்ணனும் சார்?” என்று குழப்பத்துடன் வினவினாள் ஹாரண்யா.


“ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசனும்” என்று தீர்க்கமாக கூறியவனை எண்ணி அவளுக்குப் பிரம்மிப்பாக இருந்தது.


“சார்!” என்றவளிடம்,”ப்ளீஸ் ரணு!” எனவும், அவனது குரல் தந்த இதத்தில், அவளுடைய மனம் இறுகிப் போய் விட்டது.


எனவே,”ஓகே சார்” என்று ஒப்புக் கொண்டு, அவனிடம் இடம் மற்றும் நேரத்தைக் கேட்டுக் கொண்டு அங்கே விரைந்தாள் ஹாரண்யா.


ஒரு பிரம்மாண்டமான உணவகத்திற்குத் தான் அவளை வரச் சொல்லி இருந்தான் பகீரதன்.


அவனும், அவளும் எதிர் எதிராக

அமர்ந்திருக்க,”எஸ் சார்” என அவனைப் பார்த்துக் கேட்டவளிடம்,


“நான் உன்னைக் கல்யாணம் செய்துக்க விரும்புறேன் மிஸ். ஹாரண்யா” என்று திடுமென உரைக்கவும்,


தன்னுடைய கரம் டேபிளில் விழ, அவனை உச்சபட்ச அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் பெண்ணவள்.


‘இவனுக்கு என்ன தான் ஆயிற்று?’ என்ற ரீதியில் இருந்தவளது, பார்வையைப் புரிந்து கொண்டு,”உனக்கு இது ரொம்பவே ஷாக் ஆன விஷயம் தான்னு எனக்குத் தெரியும். பட், நான் உண்மையிலேயே தான் உங்கிட்ட கேட்கிறேன்!” என்று அவளது விழிகளைப் பார்த்து உறுதியாகச் சொன்னான் பகீரதன்.


“சா…ர்! இதை நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை!” என்று திக்கித் திணறிக் கூறினாள் ஹாரண்யா.


“ஹாஹா! இதை நானே எதிர்பார்க்கலை! இப்போ உன்னோட பதிலைச் சொல்லு” என்றதும்,


“இந்த விஷயத்தை எனக்கு முதல்ல மனசில் ஏத்திக்கவே டைம் ஆகும். இதில், இப்போவே பதில் சொல்லனும்னா, எப்படி சார்?” என்று அவள் தயங்கியவாறே கூறவும்,


“உடனே சொல்லனும்னு இல்லை. நல்லா யோசி” என அவன் அழுத்திக் கூறி விட்டாலும், அவளது பதில் நேர்மையாகவே வர வேண்டுமென்ற உறுதி இருந்தது அவனது குரலில்!


“டிரை பண்றேன் சார்” என்றதோடு அங்கிருந்து செல்ல நினைத்தாள் ஹாரண்யா.


“ஓகே” என்று அவர்களிருவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.


தன் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் இதைப் பற்றிக் கலந்துரையாடல் செய்தாள் ஹாரண்யா.


“அதெப்படி? இதில் லாஜிக்கே இல்லையே டா?” என்றார் அவளது தந்தை இயமானன்.


“இவர் எதுக்கு இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்னு, நானும் அதைத் தான் நினைச்சேன் ப்பா!”


“அவருக்கு உன்னை உண்மையிலேயே பிடிச்சிருந்தா பார்த்துக்கலாம். இது ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவா இருக்கலாம்” என்று மகளிடம் கூறினார் மதுராஹினி.


“என்னம்மா சொல்றீங்க?” என்று அவரிடம் அதிர்ச்சியுடன் வினவினாள் ஹாரண்யா.


“ஆமாம் டி. உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு. அவரும் நல்ல பையனாகத் தெரியுறார். குடும்பம் எப்படின்னு விசாரிச்சுப் பார்த்துட்டு அவங்களும் நல்லவங்களா இருந்தா மேற்கொண்டு யோசிக்கலாம்” என்று அவளுக்குத் தெளிவாக விளக்கினார் அன்னை.


“அது எப்படி நடக்கும் மா?”


“ஏன் நடக்காது?”


“அவர் ஒரு ஆக்ட்டர். அப்படி இருக்கிறப்போ, அவரோட உண்மையான முகம் யாருக்கும் தெரியாதே! நான் எப்படி அவரைக் கல்யாணம் செஞ்சிக்கிறது?” என்றாள் மகள்.


“நடிக்கிற எல்லாருமே தப்பானவங்க. ஸ்கிரீனில் ஒரு முகம், நேரில் ஒரு முகம்ன்னு இருப்பாங்கன்னு நினைக்கக் கூடாது ஹாரா! எல்லாருமே ஒரே மாதிரியான ஆளாக இருக்க மாட்டாங்க! இவர் நல்லவர் ஆகவும் இருக்கலாம்ல? அப்படி யோசி” என்று அவளிடம் அறிவுறுத்தினார் இயமானன்.


ஹாரண்யா,“அப்போ அரேன்ட்ஜ் மேரேஜ்ஜாக நடத்தி வைக்கப் பிளானிங் ஆ?”


“அது நடந்தால் பார்ப்போம். அதுக்காக, நீ இதுக்கெல்லாம் சம்மதிக்கனும்னு அவசியமே இல்லை” என்றார் மதுராஹினி.


“சரிம்மா” என்றவளுக்குத் தோழியின் உதவி தேவைப்பட்டது.


அதனால் தாமினிக்கு அழைத்து,“அவர் இப்படியொரு ஷாக்கைக் கொடுத்திட்டுப் போயிட்டார்!” என அவளிடம் விவரித்தாள் ஹாரண்யா.


“ஹேய்! அவருக்கு உன்னைப் பிடிச்சதில் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்று அவளைப் புகழ்ந்து பேசினாள் தோழி.


அதைக் கேட்டவளுக்கோ உச்சி குளிர்ந்து போனது.


“இப்படியெல்லாம் பொய் சொல்லாதே! போ மினி!” என அவளைச் செல்லமாக கடிந்து கொண்டாலும் அவளுக்குள் சந்தோஷம் தான் பொங்கியது.


‘கரைப்பார் கரைத்தால் கல்லும்’ கரையும் என்பதைப் போல, ஹாரண்யாவிற்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பகீரதனின் நினைவுகள் எழத் துவங்கியது.


அதற்குப் பிறகு, அவனது நேர்காணல்கள் யாவற்றையும் அவளே எடுத்துக் கொண்டு இருந்தாள்.


இதில், தோழியின் மேல் பொறாமை கொள்ளாமல் தட்டிக் கொடுத்தது தாமினி மட்டும் தான்!


“யூ கேன் டூ இட்!” என்று சொல்லி சொல்லியே அவளை முதலிடத்திற்கு வர வைத்த தோழியிடம் மட்டும் எப்போதும் இறங்கித் தான் போவாள் ஹாரண்யா.


அதன்பிறகு, அவளுடைய மனதில் தன்னுடைய ஞாபகங்களை உறுதியாகப் பதியுமாறு செய்து கொண்டு இருந்தான் பகீரதன்.


அந்தச் சமயத்தில், அவனிடம் வந்து,”என்னப்பா! அந்தப் பொண்ணு ஓகே சொல்லிட்டாளா?” என்றார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.


அதைக் கேட்டவனோ, ‘இல்லை’ என மறுத்து தலையசைத்தான் அவர்களது மகன்.


“ம்ஹூம்.‌ நீ ரொம்ப ஃபாஸ்ட் ஆக இருக்கன்னு, நாங்க தான் சொன்னோம்ல!” என்று வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சினர் அவரது பெற்றோர்.


“இனிமேல் ஸ்லோ ஆக நடத்துக்கிறேன்!” என்று அவர்களிடம் கூறிச் சென்று விட்டான் பகீரதன்.

  • தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"உன் நினைவிலே கரைகிறேன்" கதையோட அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்..

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 7

இப்பொழுதெல்லாம் நேர்காணல் செய்யும் சமயங்களில் எல்லாம் ஒரு வித குறுகுறுப்புடனும், பரவசத்துடனும் அவள் தன்னைப் பார்ப்பதைக் கண்டு கொண்டான் பகீரதன்.

அதிலிருந்து அவளுக்கும் தன் மேல் விருப்பம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை அறிந்தவனோ, அதைச் சிறிது சிறிதாக வளர விட எண்ணி, அவளைக் காணும் போதெல்லாம் தானும் ஒரு சிரிப்பை உதிர்க்கத் தொடங்கி விட்டான்.

அந்த நேர்காணல் நடைபெறும் போது அவளை நேரடியாகவே அனைவரின் முன்னிலையிலும் ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டிப் பேசி விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டான் பகீரதன்.

அதிலேயே, ஹாரண்யாவிற்கு உச்சி குளிர்ந்து கொண்டே போக ஆரம்பித்தது.

அதுவுமில்லாமல், தன் அன்னை கூறியதையும் ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொண்டாள்.

அவனது நினைவுகளை முயன்று மறக்க நினைத்தவள், இப்போது அதையெல்லாம் வலிந்து யோசனையில் கொண்டு வந்து மனதிற்குள் அவற்றோடு லயித்துக் கொண்டு இருந்தாள் ஹாரண்யா.

அந்த சமயத்தில் தான், தன்னுடைய நேர்காணல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே,”இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லனும்ன்னு ஆசைப்பட்றேன்!” என்று ஹாரண்யாவைப் பார்த்து அர்த்தப் புன்னகை புரிந்தவாறே பேசினான் பகீரதன்.

அது அவளுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருக்குமே ஆர்வத்தை ஏற்படுத்தியது.

எனவே,”சொல்லுங்க சார்” என்று அவனை ஊக்கப்படுத்தினாள் ஹாரண்யா.

“இங்கே இருக்கிற ஒருத்தருக்கு நான் இப்போ புரபோஸ் பண்ணப் போறேன்” எனத் தடாலடியாக உரைத்தான் பகீரதன்.

“வாவ்! சூப்பர் சார்! யாரு அந்த லக்கி பர்சன்?” என்று அவனது அபிமானிகளும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் உறுப்பினர்களும் கூக்குரலிட்டுக் கேட்டார்கள்.

ஆனால், ஒருவளுக்கு மட்டும் எந்த ஆர்வமும் தோன்றவில்லை. ஏனென்றால், அந்த அதிர்ஷ்டசாலி அவள் தான் என்பது ஹாரண்யாவிற்கு நன்றாகத் தெரியுமே!

எனவே, அவனது அடுத்தக் கட்ட செயல் என்னவாக இருக்கும் என்று குறுகுறுப்புடன் காத்திருந்தாள்.

இன்னும் சுற்றி இருந்தவர்களின் கூச்சல் அடங்கவில்லை.

ஆதலால்,”வெயிட், வெயிட்!” என்றவனோ, தனது இருக்கையில் இருந்து எழுந்து ஹாரண்யாவிடம் சென்றான் பகீரதன்.

அதைக் கண்டவளோ, தானும் சட்டென்று எழுந்து நின்று விட்டாள்.

“சா…ர்!” எனத் திக்கித் திணறிப் பேசியவளிடம்,

“மிஸ். ஹாரண்யா! நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன்! உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்கா?” என்று அவளிடம் யாசிப்பதைப் போலக் கேட்டுப் பெண்ணவளின் முகத்தை நோக்கினான் பகீரதன்.

அந்தக் கேள்வியில், அவள் மட்டுமல்லாமல், அந்த அறையிலிருந்த அனைவரும் ஒரு சில கணங்கள் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள்.

அதுவும், அங்கிருந்த ஹாரண்யாவுடன் வேலை செய்து கொண்டிருக்கும், திருமணம் ஆகாத பெண்களோ, தங்களுடைய நெஞ்சில் கையை வைத்து அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.

“வாட்! இவளைப் போய் பகீரதன் சார் லவ் பண்றாரா?” என்று வேறு பொறாமையில் பொசுங்கியவாறே தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

மற்றவர்களின் கரகோஷத்தையும், ஒரு சிலரின் பொருமலையும், கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஹாரண்யாவோ, தன்னிடம் யாசித்துக் கொண்டிருந்தவனைப் பிரம்மிப்பாகப் பார்த்து விட்டு,”சார்… நான் எப்படி?” என்று கூறித் தயங்கினாள்.

அவளால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள புரியவில்லை தான்!

ஆனாலும், அந்த நேரத்தில், இவ்வளவு பெரிய நடிகனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதே! என்ற மையலில் உழன்று கொண்டிருந்தாள் ஹாரண்யா.

“ஹேய்!” என்ற கூச்சலுடன், தன் முன்னால் நின்றிருந்தவனுடைய காதலை ஏற்றுக் கொள்ளத் தான் அவளது மனம் தூண்டியது.

“ப்ளீஸ் ஹாரா!” என்று அவளிடம் மன்றாடவும்,

அவனே இவ்வளவு இறங்கி வந்ததற்குப் பிறகுத் தான் மட்டும் பிடிவாதம் பிடிப்பது பிழை என்று நினைத்தவளோ,”எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு!” என்று மெல்லிய குரலில் கூறி அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

அதைக் கேள்வியுற்ற அனைவரும் இன்னுமின்னும் ஆச்சரியத்தில் தத்தளித்துப் போயினர்.

“யாஹூ! சூப்பர் புரபோசல்!” என்று அங்கு குழுமியிருந்தவர்களோ, ஆர்ப்பரித்துக் கத்தினார்கள்.

ஹாரண்யாவின் கரங்களை நாகரீகமாகப் பற்றிக் கொண்டு இருந்தவனோ, அதை விடுவித்து விட்டு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுதனை அழைத்து,”நான் சொல்ற அப்போ தான் நீங்க இந்த ஷோவை டெலிகாஸ்ட் பண்ணனும்!” என்று அவருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தான் பகீரதன்.

“ஷூயர் சார்” என அவனுக்கு உறுதி அளிக்கவும்,

“இப்போ நாங்க இங்கேயிருந்து கிளம்புறோம்” என்றவன், ஹாரண்யாவிடம் வந்து அவளை வெளியே அழைத்துச் சென்றான் பகீரதன்.

“இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்!” எனப் பொறாமை குணம் கொண்ட ஒரு சிலப் பெண்கள் அவளைப் பற்றி அவதூறு பேசினார்கள்.

“இப்படியே பேசிட்டு இருக்கிறதால் தான் உங்களுக்கு இந்த மாதிரி எதுவும் நடக்க மாட்டேங்குது. இனிமேலும் நடக்க வாய்ப்பு இல்லை!” என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்து விட்டுப் போனாள் தாமினி.

தன் வியப்பு இன்னும் அடங்காமல் அமர்ந்திருந்தவளது முகவாயைத் தன் கரத்தைக் கொண்டு நிமிர்த்தி,“ஹலோ!” என்று அவளை அழைத்தான் பகீரதன்.

“க்கும்” எனச் சிலிர்த்துக் கொண்டவளோ, அவனைத் தான் பார்த்தாள் ஹாரண்யா.

“என்ன‌ யோசிச்சிட்டு இருக்க?” என்று வினவினான்.

“நம்மளோட ஃப்யூச்சரை நினைச்சுட்டு இருந்தேன் சார்”

“அதுக்குள்ளேயா?” என்று குறும்பாக கேட்டான் பகீரதன்.

“அப்படி இல்லை சார். நாம அவசரப்பட்டு லவ்வை அக்சப்ட் செய்துட்டோமேன்னு எதிர்காலத்தில் யோசிச்சிடக் கூடாதேன்ற பயம் எனக்குள்ளே வந்துருச்சு சார்! அதான்!” என அவனிடம் சொல்லிப் புரிய வைத்தாள் ஹாரண்யா.

“கால் மீ பகீ! அத்தோட, அந்தப் பயமெல்லாம் உனக்கு எப்பவுமே வராதுன்னு நான் பிராமிஸ் பண்றேன் ஹாரா!” என்று கூறி அவளது விரல்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டவனைப் பார்த்து இப்போது தான் நிம்மதியாகப் புன்னகைத்தாள்.

“சரி. நான் என்‌ அப்பா, அம்மாகிட்டே பேசிட்டு, அவங்க கூட சேர்ந்து உன்னோட வீட்டுக்கு வந்து பேச சொல்லவா?” என்றான் பகீரதன்.

“உடனே வர வேண்டாம் பகீ! நான் முதல்ல அவங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிட்றேன். அப்பறமாக உங்க ஃபேமிலியோட எங்க வீட்டுக்கு வாங்க. ஆனால், ஏற்கனவே என்னை உங்களுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க அவங்களுக்குச்‌ சம்மதம் தான்!” என்று தன் பெற்றோரின் எண்ணத்தை அவளிடம் தெரிவித்தாள் ஹாரண்யா.

‘சினிமாக்காரர்கள் என்றாலே இப்படித்தான்’ எனத் தவறாக நினைப்போருக்கு மத்தியில், அனைவரையும் ஒரே மாதிரியாக எடை போட்டு விடக் கூடாது என்று தங்கள் மகளுக்குப் புத்திமதி சொல்லியவர்களை எண்ணி ஆச்சரியப்பட்டவனோ,

“இதுக்காகவே உன்னோட அப்பா, அம்மாவை நான் நேரில் பாக்கனும் ஹாரா!” என்று அவளிடம் புன்னகையுடன் கூறினான் பகீரதன்.

“இப்போ என்னால் ஸ்டுடியோவுக்குப் போக முடியாது. அதனால், என்னை வீட்டில் டிராப்‌ பண்ண முடியுமா?” என்று அவனிடம் கோரிக்கை வைத்தாள் ஹாரண்யா.

“ஷூயர்” என்றபடியே அவளை வீட்டில் விட்டு விட்டுச் சென்றான்.

காரில் வந்து இறங்கிய மகளை மலைப்புடன் பார்த்த மதுராஹினியோ,”ஏய் ஹாரா! என்னடி இது அவ்வளவு பெரிய காரில் வந்து இறங்குற? அது யாரோடது?” என அவளிடம் கேட்டார்.

“எல்லாம் பகீரதன் சாரோடது தான் ம்மா. ஒரு பத்து நிமிஷத்தில் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து எல்லாத்தையும் சொல்றேன். அப்பாவையும் கூட்டிட்டு வாங்க” என அவரிடம் கூறி விட்டுத் தன் அறைக்குப் போய் விட்டாள் ஹாரண்யா.

அவள் போனதுமே, தனது கணவனை அழைத்து மகள் கூறியதை அவரிடம் சொன்னார் மதுராஹினி.

“அப்படியா? நம்மப் பொண்ணு வந்ததும் கேட்போம்” என்று தானும் தயாராக இருந்தார் இயமானன்.

அப்போதே, அவர்களது மகள் வந்து உட்கார்ந்ததும்,”சீக்கிரம் சொல்லுடி!” என அவளை அதட்டிக் கேட்டார் அன்னை.

உடனே, தான் நேர்காணல் செய்து நிகழ்ச்சியில் பகீரதன் செய்தவற்றை எல்லாம் தன்னுடைய பெற்றோர்களிடம் விவரித்துக் கூறினாள் ஹாரண்யா.

“என்னது? அங்கேயே உனக்குப் புரபோஸ் செஞ்சாரா?” என்று கேட்டுத் திகைத்துப் போனார் மதுராஹினி.

“ஆமாம் மா” என்று உவகையுடன் கூறினாள் அவர்களது மகள்.

“அவங்க அப்பா, அம்மாவுக்கும் இதில் விருப்பம் இருக்குமான்னு உங்களுக்குத் தெரியுமா என்ன?” என்று அவளிடம் வினவினார் இயமானன்.

“நான் உங்ககிட்ட கேட்டுட்டு அப்பறம் அதை அவர்கிட்ட கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன் ப்பா. ஆனால், நான் ஓகே சொல்லிட்டா, அவரோட பேரன்ட்ஸ்ஸோட நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னார். சோ, அவங்களுக்கும் இதில் சம்மதம் தான் ப்பா” என்று அவரிடம் விளக்கிச் சொன்னாள் ஹாரண்யா.

“உனக்கு அவர் பேசியது எல்லாம் உண்மைன்னுத் தோனுதா? அவர் மேல் நம்பிக்கை வருதா? நீ அவரோட பேரன்ட்ஸ்ஸை மீட் பண்ணதே இல்லை. உன் வாழ்க்கை முழுசும் அங்கே போய்த் தான் வாழப் போறே! அப்போ அவங்களைப் பத்தியும் உனக்குத் தெரிஞ்சு இருக்கனுமே! ஆஃப்ட்டர் மேரேஜூக்கு அப்பறம், அதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறே?” என்று ஒவ்வொரு கேள்வியாக அவளிடம் கேட்டார் மதுராஹினி.

“என்னம்மா இவ்வளவு கேட்கிறீங்க? ஆனால், நான் விஷயத்தை ஃபர்ஸ்ட் சொன்ன அப்போ, இந்தக் கேள்வி எல்லாம் உங்ககிட்ட இருந்து வரவே இல்லையே?” என்று தன் தாயிடம் வியப்புடன் வினவினாள் அவருடைய மகள்.

“அது அப்போ! ஆனால், அவர் உன்னைக் காதலிக்கிறேன்னு இவ்வளவு ஸ்ட்ராங் ஆக சொன்னப் பிறகு, இப்படியெல்லாம் யோசிக்காமல் இருக்கிறது தப்பாச்சே டி!” என்று அவளுக்கு உணர்த்தினார் அவளது தாய்.

“ம்ஹ்ம். உங்கம்மா சொல்றது கரெக்ட் டா. அவரோட ஃபோன் நம்பர் இருந்தால் கொடு. நாங்கப் பேசனும்” என்று மகளிடம் தீர்க்கமாக கூறினார் இயமானன்.

“அவர் வீட்டில் பேசிக்கட்டும் ப்பா. அப்பறம் எனக்கு இன்ஃபார்ம் பண்ணதும் நான் பகீரதனோட நம்பர் தர்றேன்” என்று தன் பெற்றோரிடம் உறுதி அளித்தாள் ஹாரண்யா.

இதே சமயம், தன்னுடைய இல்லத்தில், கால் மேல் கால் போட்டுக் கொண்டு அசட்டையாக அமர்ந்திருந்த பகீரதனை, ஆராய்ச்சிப் பார்வை பார்த்தார்கள் அவனது பெற்றோர்.

“என்னடா ரொம்ப தோரணையாக உட்கார்ந்து இருக்கிற?” எனக் கேட்டார் மனோரமா.

“நான் சொன்னதை செஞ்சுட்டேன்ற மிதப்பில் இருக்கேன் ம்மா. அதான், இந்த ஆட்டிட்யூட் காட்டுறேன்!” என்றான் அவரது மகன்.

“ஓஹ்! அப்படி என்னடா செஞ்சிட்டு வந்திருக்கிற?” என்றார் பாலேந்திரன்.

“அதைச் சொல்லத் தானே போறேன் ப்பா!” என்று ஆரம்பித்தான் பகீரதன்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஏழாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 8

தங்கள் மகனின் பேச்சே ஒரு விதமாக இருக்கிறதே என்ற குழப்பத்துடன் அவனை ஏறிட்டார்கள் இருவரும்.

“அந்தப் பொண்ணு என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிட்டா” என்று முகத்தில் படர்ந்த திருப்தியுடனான வெற்றிப் புன்னகையுடன் உரைத்தான் பகீரதன்.

“என்னது?” என்று அதிர்ச்சியுடன் வினவினர் அவனது பெற்றோர்.

“நானும், ஹாரண்யாவும் கல்யாணம் கூடிய சீக்கிரமே கல்யாணம் செய்துக்கப் போறோம் ப்பா! அவ வீட்டில் பேசிட்டு சொல்லுவா. நாம அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு மேரேஜ்ஜூக்கு அரேன்ட்ஜ் செய்துட வேண்டியது தான்!” என்று நோகாமல் எதிரில் இருப்பவர்களின் தலையில் இடியை இறக்கினான் மகன்.

“வாட்! டேய்! இது எப்படி நடக்கும்? நீ அவளை எதுவும் கம்பெல் பண்ணியா?” என்று அதிர்ந்து போய்க் கேட்டவர்களிடம்,

“அதான் உங்களுக்குப் பிராமிஸ் பண்ணி இருந்தேனே! அவளை நான் கட்டாயப்படுத்தலை. காதலைத் தான் சொன்னேன். அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்குப் போல. சோ, ஓகே சொல்லிட்டா” என்று அவர்களிடம் தீர்க்கமாக கூறினான் பகீரதன்.

ஆனாலும், மகன் மீதிருந்த சந்தேகப் பார்வையை மாற்றவில்லை அவனது பெற்றோர்.

“உண்மை தான் ம்மா, ப்பா! என்னை நம்புங்க! அவளை நான் மிரட்டவே இல்லை” என்று உறுதியாக கூறியவனிடம் இருந்த உண்மைத் தன்மையை அறிந்தவர்களுக்கு, அந்தப் பெண்ணிடமும், அவளது வீட்டாரிடமும், பேசிப் பார்க்க நினைத்தனர்.

“நாங்க அந்தப் பொண்ணோட வீட்டுக்கு வர்றோம் டா” என ஒப்புக் கொண்டார்கள் இருவரும்.

“சரிப்பா, ம்மா” என்றவனோ, ஹாரண்யாவிற்கு அழைத்து தன் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததைச் சொன்னான் பகீரதன்.

“ஓஹ் ஓகே சார். இங்கேயும் என் பேரன்ட்ஸூம் உங்க அப்பா, அம்மா கிட்டே பேச வெயிட் செய்துட்டு இருக்காங்க” எனவும்,

“நீ முழு மனசாகத் தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்ன?” என்று அவளிடம் மீண்டும் மீண்டும் வினவினான் பகீரதன்.

“ஆமாம் சார்” என்றவளுக்கு, அந்தப் பதிலை அவனுக்குச் சொன்னாளா? அல்லது தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாளா? என்பது அவளுக்கே வெளிச்சம்!

அதன் பிறகு, தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பகீரதன் மற்றும் அவனது தாய், தந்தை தன் வீட்டிற்கு வருவதற்காக காத்திருந்தாள் ஹாரண்யா.

இரு வீட்டாரின் சம்மதமும் தங்களுக்குக் கிடைத்து விட, தாமதிக்காமல் தன்னுடைய பெற்றோரை, அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான் பகீரதன்.

ஹாரண்யாவின் பெற்றோரோ, இவ்வளவு பெரிய நடிகனும், அவனது தாய், தந்தையும் தங்களைப் பார்க்க வந்திருப்பதை நம்ப முடியாமல் இருந்தார்கள்.

ஆனால், தங்களுடைய பகுமானம் மற்றும் பகட்டையும், அவர்களிடம் காட்டிக் கொள்ளாமல் மென்னகையுடன் அமர்ந்திருந்தார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

அவர்களை வரவேற்று, குளிர்பானம் கொடுத்து உபசரித்து விட்டு மகளை அழைத்தார் மதுராஹினி.

“வாங்க சார். வணக்கம் அங்கிள், ஆன்ட்டி” என்று தன் பங்கிற்கு அவர்களை வரவேற்றவளைத், திரையில் பார்த்திருக்கிறார்கள் தான், ஆனால் நேரில் இன்னும் புன்னகையுடனும், புத்துணர்வுடனும் காணப்பட்டாள் ஹாரண்யா.

“நீங்க உங்க ஃபேமிலியோட சேர்ந்து இங்கே வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம் சார்! உங்களோட நடிப்பு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!” எனப் பகீரதனிடம் கலகலத்தார் இயமானன்.

“தாங்க்யூ சார்” என்று கூறித் தானும் புன்னகைத்தவன்,”இப்போ விஷயத்துக்கு வரேன் அங்கிள், ஆன்ட்டி. நான் ஹாராவை உண்மையிலேயே லவ் பண்றேன். அவளைக் கல்யாணம் பண்ணிக்க உங்க சம்மதம் வேணும்!” என்று தான் வந்த விஷயத்தைப் பற்றிக் கூறி விட்டான்.

“எங்களுக்கு உங்களைப் பத்தி நிறைய தெரியாதே சார்?” என்று தடுமாறிக் கேட்டார் இயமானன்.

அவனது தோற்றம் மற்றும் நடிப்பு எல்லாம் தங்களை ஈர்த்தது தான்! ஆனால், இப்போது மகளின் வாழ்வை நினைத்து அவர்களுக்குத் கொஞ்சம் தயக்கம் இருந்தது.

“அப்போ என்னைப் பத்தியும், இவங்களைப் பத்தியும் சொல்றேன். கேளுங்க” என்று தங்களது குடும்ப வரலாற்றைப் பற்றி அவர்களிடம் கூறினான் பகீரதன்.

அவனே அனைத்தையும் சொல்லட்டும் என அமைதியாகி விட்டனர் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

தானும் பொறுமையாக எல்லாவற்றையும் ஒப்புவித்து விட்டு அம்மூவரையும் பார்த்தான்.

அவர்களது கடந்த காலத்தைப் பற்றி அறிந்து கொண்டவர்களும், இப்போது தங்களது குழப்ப மனநிலையை மாற்றிக் கொண்டார்கள்.

தங்களுடைய பூர்வீக கதையையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர் இயமானன் மற்றும் மதுராஹினி.

“எங்கப் பையன் பிரபலமான ஹீரோ அப்படின்னாலும் நாங்களும் சாதாரண மனுஷங்க தான் சார். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்க உங்கப் பொண்ணை நல்லா பாத்துப்போம்” என்று அவர்களுக்கு வாக்களித்தார்கள் பகீரதனின் பெற்றோர்.

“சரிங்க” என்றவுடன்,

“அதுக்கு முன்னாடி, நான் அவர்கிட்ட கிட்ட கொஞ்சம் பேசி ஆகனும் ப்பா” என்று உறுதியாக மொழிந்தாள் ஹாரண்யா.

அதில் முகத்தில் யோசனை ரேகைகள் படர அவளைப் பார்த்து விட்டு,”ஷூயர்!” என்று அதற்கு ஒப்புக் கொண்டான் பகீரதன்.

அவர்கள் பேசுவதற்கு என்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்து விட்டு இருவருடைய பெற்றோர்களும் முன்னறையில் உட்கார்ந்து காத்திருந்தார்கள்.

தனியறையில் இருந்த இருவருக்குமே எவ்வித பதட்டமும் இன்றி தெளிவான உடல் மொழிகளுடன் நின்றிருந்தனர்.

“என்ன விஷயம்?” என்று கேட்டான் பகீரதன்.

“நான் டெலிவிஷன் ஆங்க்கர் ஆக இருக்கிறது உங்களுக்கு ஓகேவா?” என்று படக்கென்று அவனிடம் வினவினாள் ஹாரண்யா.

என்ன தான் இருவரும் சினிமாத் துறையில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், அவன் ஒரு நடிகன், அவள் அனைத்து நடிகர், நடிகைகளையும் நேர்காணல் செய்யும் வேலை பார்ப்பவள் என்பதால், இருவரது வேலை நேரங்கள் மாறுபடும் என்பதால் தான், அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளாள்.

அதற்கு அவனோ யோசிக்காமல்,”எனக்கு டபுள் ஓகே!” எனப் பதிலளித்தான் பகீரதன்.

ஏனெனில், அவனைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவளை மணமுடிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தது.

அதனாலேயே, அவளுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

“நான் நம்ம இண்டஸ்ட்ரீயில் இருக்கிற எல்லா ஆக்ட்டர்ஸையும் இன்டர்வியூ பண்ணுவேன். அதில் உங்களுக்கு எந்தப் பிராப்ளமும் இல்லை தானே?” என்று அடுத்த வினாவை எழுப்பினாள் ஹாரண்யா.

அதற்கும் அவன் சம்மதம் தான் தெரிவிக்க வேண்டியதாக இருந்தது.

ஆனால், அவளது கேள்விகளுக்கு எல்லாம் அவன் யோசித்துப் பதில் கூறவில்லை என்பது பகீரதனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

“பர்சனல் லைஃப் வேற, புரொஃபஷன் வேறன்னு நாம எப்பவும் ஞாபகம் வச்சுக்கனும்!” என்று அவனுக்கு வலியுறுத்தினாள் ஹாரண்யா.

அதையெல்லாம் ஒப்புக் கொண்டு தற்சமயத்திற்குத் தலையாட்டிக் கொண்டான் பகீரதன்.

“எல்லாத்துக்கும் எனக்குச் சம்மதம் தான் ஹாரா!” என்று அவன் உறுதியாகவும், அழுத்தமாகவும் கூறிய பிற்பாடு தான் அவளுக்கும் தெளிவு பிறந்தது.

“தாங்க்யூ சார். உங்களோட புரொஃபஷனிலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!” எனத் தானும் வாக்கு கொடுத்து விட்டு, இருவரும் பரஸ்பரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வெளியே வந்தார்கள்.

அவர்களது முகத்திலிருந்த புத்துணர்வைக் கண்டவுடன், இப்போது சஞ்சலமின்றி இருவருடைய திருமணத்தை உறுதி செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

மற்ற விவரங்களைச் செல்பேசி அழைப்புகளில் சேகரித்துக் கொள்வோம் என்று கூறி விட்டுத் தன்னுடைய வெற்றிக் களிப்புடன் அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது பெற்றோருடன் வீட்டிற்குத் திரும்பினான் பகீரதன்.

“எவ்வளவு எளிமையாக இருக்காங்க பாருங்களேன்!” என்று அந்த மூவரையும் பாராட்டிப் பேசினார் இயமானன்.

“இவ்வளவு பெரிய இடத்துக்கு மருமகளாகப் போறன்னு உனக்குக் கண்ணுப்படப் போகுது!” என மகளுக்குத் திருஷ்டி கழித்தார் மதுராஹினி.

அதன் பின்னர், தனது அறைக்குப் போய்த் தோழிக்கு அழைத்துப் பேசியவளுக்கு,

“வாவ்! கங்கிராட்ஸ் ஹாரா!” என்று தோழிக்கு மனதார வாழ்த்து தெரிவித்தாள் தாமினி.

“தாங்க்யூ மினி” என்றாள் ஹாரண்யா.

“ஒரே விஷயம் தான்! இதை இப்போவே யாருக்கும் சொல்லிடாதே! அவ்வளவு தான்! பொறாமையில் பொங்கிடுவாங்க!” என்று எச்சரிக்கை விடுத்தாள் அவளது ஆருயிர்த் தோழி.

“அந்த இன்டர்வியூவை எப்போ டெலிகாஸ்ட் செய்றாங்களோ, அப்போ தான் எல்லாருக்கும் தெரியும் மினி” என்று தோழிக்கு உறுதி அளித்தாள்.

“அது தான் உன்னோட மேரேஜ் லைஃப்க்கு நல்லது!” என்று அவளுக்கு வலியுறுத்தினாள் தாமினி.

தங்களது உரையாடலை நிறைவு செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள் ஹாரண்யா.

இதே நேரத்தில், அவளுக்கும், பகீரதனுக்கும், திருமணம் நிகழப் போவதை எவர் மூலமாகவோ தெரிந்து கொண்டதும் வியப்பில் ஆழ்ந்து போனவன்,

அந்த செய்தி வெறும் வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பகீரதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான் மோஹித்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த எட்டாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 9

தான் நினைத்ததைப் போலவே, தனது காரியதரிசியை வைத்து, பகீரதனின் காரியதரிசிக்குக் கால் செய்து விவரத்தைக் கேட்க வைத்தான் மோஹித்.

ஆனால், பகீரதனின் காரியதரிசிமோ, தனது முதலாளியிடம் அந்த அழைப்பைப் பற்றிக் கூறி விட,”அவங்களுக்கு இதை யார் சொன்னான்னுக் கேளு” என்று கட்டளையிட,

அதேபோல் செய்து விட்டு,”அப்படி ஒரு ரூமர் இண்டஸ்ட்ரீயில் ஓடிட்டு இருக்குன்னு சொல்றாங்க சார்” என்றான்.

“ஓஹோ! அது ரூமரா! உண்மையான நியூஸான்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிரும். அது வரைக்கும் அவனை அமைதியாக இருக்கச் சொல்லு” என்று உத்தரவு போட்டான் பகீரதன்.

அதே போலவே அவனது காரியதரிசியும் எதிர்முனையில் இருந்தவனிடம் சொல்லி விடவும், மோஹித்திற்கு ஆர்வம் மிகுதியாகவே, இந்த திருமணத்தைப் பற்றி ஹாரண்யாவிடம் கேட்டுக் கொள்ள நினைத்து அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

“ஹலோ” என்றவளிடம்,

“ஹாய், மிஸ். ஹாரண்யா. நான் மோஹித் பேசறேன்” என்று அவளிடம் பேசினான்.

“ஓஹ்! ஹாய் சார். உங்களோட பர்சனல் நம்பரில் இருந்து கூப்பிட்டு இருக்கீங்க போலவே!” என்று அவனிடம் வியப்புடன் கேட்டாள்.

“ஆமாம். உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்திக் கேட்கனும்” என்று ஆரம்பிக்க,

“சொல்லுங்க சார்” என்றாள் ஹாரண்யா.

“நீங்களும், ஆக்ட்டர் பகீரதனும், சீக்கிரமே மேரேஜ் செஞ்சுக்கப் போறீங்களாம்?” என்று ஒன்றும் தெரியாதவனைப் போல அவளிடம் வினவினான் மோஹித்.

அதைக் கேள்வியுற்றதும், பகீரதனின் காரியதரிசி கேட்ட அதே கேள்வியை அவனிடம் கேட்டு விட்டாள்.

அவனும், அதே பதிலையே அவளிடம் கூறினான்.

“சினிமா இண்டஸ்ட்ரீயில் வேலை பார்க்க வந்துட்டா, இப்படி எல்லாம் வரும் தானே சார்? உங்களைப் பத்தி வராத ரூமரா? இதை எல்லாமா நம்பிட்டு எங்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு இருக்கீங்க?” என்று அவனுக்கு ஒரு குட்டு வைத்தாள் ஹாரண்யா.

அதில் கோபம் கொண்டவனின் முகம் செங்கனல் நிறத்தில் மாறியது.

அவள் கூறியது உண்மை தானே? அவனைப் பற்றிய வதந்திகள் ஏராளமாக உலவிக் கொண்டிருக்க, தான் மற்றவர்களைப், பற்றிக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஆனால், அவனோ இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

“அப்போ அது உண்மை இல்லை அப்படித்தானே? உங்க அஃபீஷியல் அனவுன்ஸ்மெண்ட் வர்றப்போ பாத்துக்கிறேன்!” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான் மோஹித்.

அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தவளோ, அவனது அழைப்பைப் பற்றியும், கேள்வியைப் பற்றியும் பகீரதனிடம் உரைத்து விட்டாள் ஹாரண்யா.

“ஹாஹா! அவன் ரொம்ப கியூரியஸ் ஆக இருக்கான் போல! விஷயம் தெரிஞ்சா என்ன செய்றான்னுப் பாத்துக்கலாம்” என்று அவளிடம் கூறி விட்டான்.

“டேய்! நாங்க உன்னோட நிச்சயத்துக்கு நாள் குறிக்கலாம்னு இருக்கோம். அதுக்கு முன்னாடி, இந்தக் கல்யாணத்தைப் பத்தி வெளியுலகத்துக்குச் சொல்லலையா நீ?” என்று மகனிடம் கேட்டார் மனோரமா.

“எங்கேட்ஜ்மெண்ட் டேட் - க்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி சொல்லனும்ன்னு இருக்கேன் ம்மா” என்று அவருக்குப் பதிலளித்தான் பகீரதன்.

“ஓகே. அப்போ நாங்க அரேன்ட்ஜ்மெண்ட்ஸைப் பார்க்கிறோம். டிரெஸ் எடுக்க ஹாரண்யாவையும், அவளோட பேரன்ட்ஸையும் வரச் சொல்லனும். நீயும் வருவ தானே?” என்கவும்,

“வெளியே எங்கேயும் போக வேணாம் மா. டிசைனர்ஸை அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடறேன். அவளுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்துக்காட்டும்” என்று சொல்லி விட,

அதே மாதிரி, அந்த நகரத்தில் இருக்கும் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களை ஹாரண்யாவின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தான் பகீரதன்.

அதைக் கண்ட அவளது பெற்றோரோ,”நமக்கு வேலையே வைக்காமல் மாப்பிள்ளையே எல்லாத்தையும் பண்றார் பாரு!” என்று மகளிடம் கூறிப் புளகாங்கிதம் அடைந்தார் மதுராஹினி.

ஆனால், அவன் தன்னுடைய விருப்பத்தைக் கேட்கவே இல்லை எனும் போது, இதையெல்லாம் பார்க்கையில் அவளுக்குத் தான் மகிழ்ச்சி தோன்றுமா என்ன?

எனவே, தாமதம் செய்யாமல் பகீரதனுக்குக் கால் செய்து விட்டாள் ஹாரண்யா.

கடைசி ரிங்கில் தான், அவளது அழைப்பு எடுக்கப்பட்டது.

“ஹலோ! ஷூட்டிங்கில் இருக்கேன் ம்மா. கேரவனுக்குள் போன பிறகு பேசவா?” என்றான்.

“ம்ம். ஓகேங்க” எனக் கூறி விட்டு வைத்தவள்,

தனக்கும், அவனுக்கும் நிகழப் போகும் உரையாடல் தன் பெற்றோருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று அறைக்குச் சென்று காத்திருந்தாள் ஹாரண்யா.

அவனுடன் பேசும் வரையிலும் அந்த ஆடை வடிவமைப்பாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.

ஒன்றரை மணி நேரம் கழித்து, அவளுக்குக் கால் செய்து,

“ஹலோ! ஹாரா! என்னாச்சு? அங்கே டிசைனர்ஸ் வந்துட்டாங்க தான?” என்று அவளிடம் வினவினான் பகீரதன்.

“அதைப் பத்தி தான் உங்ககிட்ட பேசனும்னு கால் செஞ்சேன்” என்றவள், அவனுடைய ஏற்பாடுகளில் தனக்குப் பிடித்தம் இல்லை என்பதை அவனிடம் தெளிவாக உரைத்து விட்டாள் ஹாரண்யா.

“இதில் என்ன இருக்கு? இந்த சிட்டியிலேயே பெஸ்ட் ஆன டிரெஸ் டிசைனர்ஸை வர வச்சிருக்கேன்! வாட்ஸ் ராங் வித் தட்?”

“தப்பு தான். என்னோட ஒப்பீனியனை நீங்க கேட்கவே இல்லையே?” என்றாள்.

இப்போது தான், அவள் தன்‌ மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டு,

“சாரிம்மா. இந்த ஒரு தடவை எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. ஏன்னா இவங்க எல்லாரும் இந்த சிட்டியிலேயே பெஸ்ட் டிசைனர்ஸ். அதான் சொல்றேன்!” என்று அவளிடம் நைச்சியமாக உரைத்தான் பகீரதன்.

“ஓகே ங்க. நான் சேலைக்கான டிசைன்ஸைப் பார்த்துட்டு இன்ஃபார்ம் பண்றேன்” என்று கூறி விட்டு, அந்த ஆடை வடிவமைப்பாளர்களிடம் சென்று அவர்களிடம் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னாள்.

“எங்ககிட்ட சேரீஸிலும் நிறைய டிசைன்ஸ் இருக்கு மேம்! பார்த்துட்டு சொல்லுங்க” என அவளிடம் அவற்றைக் காண்பிக்கவும்,

அதைப் பார்த்தவளோ, தனக்குப் பிடித்தமானதை தேர்வு செய்து விட்டு அதைப் பகீரதனுக்கும் தெரியப்படுத்தி விட்டாள் ஹாரண்யா.

அதன் பின், அவர்களிடம் மற்றவர்களுக்குமான உடைகளையும் டிசைன செய்து கொடுக்குமாறு கூறி விட்டான்.

இவ்வாறாக, எல்லா ஏற்பாடுகளையும் அவளது விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப செய்து முடித்தான் பகீரதன்.

அவற்றையெல்லாம் தப்பித் தவறிக் கூட மோஹித்திற்குத் தெரியப்படுத்தி விடக் கூடாது என அனைவருக்கும் கட்டளை பிறப்பித்து விடவும், அவனது ஆட்களும் எதையும் வெளியே தெரியுமாறு காட்டிக் கொள்ளாமல் வேலையைச் செய்து முடித்தார்கள்.

அவனது தீவிரத்தைப் புரிந்து கொண்ட பாலேந்திரன் மற்றும் மனோரமாவோ, மகன் உண்மையிலேயே அவள் மீது காதல் கொண்டு விட்டான் போலும் என மனமகிழ்ந்துப் போய்த் தான் அவனுடைய நிச்சயத்திற்குத் தயாராகினர்.

தங்களது காதலை அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் நாளும் வந்து விடவே,”அதான் நமக்கு நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகுதே? உங்கச் சேனல் கோ - ஆர்டினோட்டர் சுதன் கிட்டே சொல்லி நம்மளோட புரபோஸல் நடந்த ஷோவை டெலிகாஸ்ட் செய்யச் சொல்லுவோமா?” என அவளிடம் வினவினான் பகீரதன்.

அதற்குச் சம்மதிக்கத் தான் தோன்றியது அவளுக்கு.

ஆகவே,”ஷூயர் ங்க. நீங்களே இன்ஃபார்ம் பண்றீங்களா?” என்றாள் ஹாரண்யா.

“ம்ம்” என்று கூறியவனோ, சுதனுக்கு அழைக்க, அவரோ,”ஹலோ சார்” எனப் பவ்யமாகப் பேசினார்.

“ம்ஹ்ம். நான் ஹாரண்யாவுக்குப் புரபோஸ் செய்த வீடியோவை இப்போ டெலிகாஸ்ட் செய்யுங்க” என்று அவருக்குக் கட்டளையிட்டான் பகீரதன்.

உடனே, அழைப்பைத் துண்டித்து விட்டு, அவன் சொன்னதைச் செய்து முடித்தார் சுதன்.

அவ்வளவு தான்! அவன் ஹாரண்யாவிற்குத் தன் காதலைச் சொல்லிய அந்த வீடியோ உலகெங்கிலும் பரவிற்று.

அதைக் கண்ட பகீரதனுடைய பெற்றோருக்கோ, தங்களது மகன் ஹாரண்யாவை உண்மையாக காதலிக்கவில்லை என்றால், அனைவரும் பார்க்கும் வண்ணம், இந்த வீடியோவை வெளியிடுவானா? என்று சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

இயமானன் மற்றும் மதுராஹினிக்கும் கூட இதைக் கண்டதும் தங்களது பெண்ணை நினைத்துப் பெருமை பொங்கியது. இதில் என்னப் பெருமை இருக்கிறது? என்று அவர்களைக் குழப்பத்துடன் பார்த்து விட்டுப் போனாள் ஹாரண்யா.

அந்த வீடியோவைப் பார்த்தப் பகீரதனின் சக நடிகர், நடிகைகள் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹாரண்யாவின் தோழியான தாமினிக்கோ, மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்ததால், அவளுக்குக் கால் செய்து வாழ்த்தி விட்டாள்.

பகீரதனுடைய அபிமானிகளில் சிலர் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இருந்ததால், வெளியிலிருந்த மற்றப் பெண்களுக்கு இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அவர்களிருவரும் காதலிக்கும் செய்தி முதலிலேயே தனது காதுகளுக்கு வந்து விட்டதை, அவர்களிடம் விசாரித்த போது, என்னவெல்லாம் கூறினர்? ஆனால், இப்போதோ அவர்களது காதல் கொடி காற்றில் பறந்து கொண்டு இருப்பதைக் கண்டு அடி வயிறு எரிந்து கொண்டிருந்தது மோஹித்திற்கு.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்த ஒன்பதாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 10

“என்கிட்ட பொய் சொல்லிட்ட தானே?” என்று அவனது எண்ணுக்கு நேரடியாகவே அழைத்துக் கடுகடுப்புடன் கேட்டான் மோஹித்.

“டேய் நீ என்ன எனக்கு முதலாளியா? நீ கேட்டால் நான் எல்லாத்தையும் சொல்லனுமா? கிறுக்குத்தனமாகப் பேசி சண்டை போடாதே டா!” எனச் சலித்துக் கொண்டான் பகீரதன்.

“நான் உனக்கு முதலாளி இல்லை தான் டா! ஆனால், உன் அளவுக்கு நானும் பெரிய ஆள் தான்! அப்படியிருக்கும் போது, உன்னை மதிச்சுக் கேட்டேன்ல? அதுக்காக கூட சொல்லி இருக்கலாம்ல?” என்றவனிடம்,

“அதே தான் நானும் சொல்றேன். நீ என்னை மாதிரியே பெரிய ஆளாக இருக்கும் போது என்னைப் பார்த்து ஏன் வயிறு எரியுற?” என்று நேரடியாகவே அவனிடம் கேட்கவும்,

“நான் எதுக்குடா உன்னைப் பார்த்துப் பொறாமைப்படப் போறேன்? உலக அழகி இல்லன்னா நம்பர் ஒன் பணக்காரியவா கல்யாணம் செய்துக்கப் போறே? உன்னை விட, ஸ்டேட்டஸில், பணத்தில் கம்மியாக இருக்கிறவளைத் தானே மேரேஜ் செஞ்சுக்கப் போற? இதுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்களை வேணும்னாலும் சொல்லலாம்!” என்று அவனிடம் வன்மத்துடன் உரைத்தான் மோஹித்.

“ஆஹான்! இப்படியே சொல்லிக்கிட்டே இருக்கிற உனக்கு எப்படியான பொண்ணு வொய்ஃப் ஆக வரப் போறாங்கன்னு நானும் பார்க்கனும் டா! அது வரைக்கும் என்னோட லைஃபை பார்த்து வயிறு எரிஞ்சுட்டே இரு” என்று கூறி விட்டு அழைப்பை வைத்து விட்டான் பகீரதன்.

‘இனிமேல் இவனுக்குக் கால் செய்யவும் கூடாது! நேரில் பார்த்தாலும் பேசக் கூடாது!’ எனக் கருவிக் கொண்டான் மோஹித்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், தங்களுடைய புரபோஸல் வீடியோவிற்கு வந்து கொண்டிருக்கும் வரவேற்பையும், வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டு அதற்கு நன்றி தெரிவித்தார்கள் பகீரதன் மற்றும் ஹாரண்யா.

எந்த தைரியத்தில் இவ்விருவரும் தங்களது நிச்சயம் மற்றும் திருமணத்திற்குத் தயாராகி இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே புரிந்திருக்காது.

ஏனென்றால், அவனுக்கோ, ஹாரண்யாவைத் தன் மீது முழுமையான அன்பு மற்றும் காதலை வெளிப்படுத்தச் செய்ய வேண்டும், தனக்காக அவள் துடிக்க வேண்டுமென்ற பிடிவாதத்தால் தான் அவளை மணக்கும் நோக்கத்தில் இருக்கிறான் பகீரதன்.

ஆனால், அவன் சினிமாத்துறையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் கூடத் தன்னிடம் காதலைச் சொல்லி இறைஞ்சி நின்று இருந்த செயலால் புத்தியை இழந்து, சுற்றி இருப்பவர்கள் யாவரும்,’அவனை விட நீ குறைந்தவள் இல்லை! அவன் உனக்கு ஏற்றவன் தான்!’ எனத் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி, உச்சி குளிர வைத்ததாலும், தன்னுடைய பெற்றோருக்கும் இதில் விருப்பம் என்பதாலும் தான், அவனைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாள் ஹாரண்யா.

இவ்வாறாக, இந்த இருவருக்குமே ஒருவரையொருவர் மணந்து கொள்ள மட்டித்தனமான காரணங்கள் இருந்தது.

ஆனால், அறிவைப் பயன்படுத்தி யோசித்து இருந்தால் இந்த முட்டாள்தனமான செயலைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

இதில் அவன் ஒரு பார் போற்றும் நடிகன் மற்றும் அவளோ, அனைத்து விதமான குணங்களைக் கொண்ட மனிதர்களையும் நேர்காணல் செய்யும் வேலையைப் பார்ப்பவள்!

இப்படியானவர்களுக்குக் கூட சில நேரங்களில் அறிவு வேலை செய்வது இல்லையா? அல்லது அது சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இல்லையா? என்பதற்கான கேள்விகள் யாவும் பதில் கிடைப்பதில்லை.

அவர்களுடைய பெற்றோர்கள் கூட சற்று சிந்தித்துப் பார்த்திருக்கலாம்!

அவர்களுக்குத் தங்களது மகவுகளைத் திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை!

ஆகவே, தங்கள் மகனின் முடிவிற்குத் தாங்களும் இசைந்து போயினர் பகீரதனின் பெற்றோர் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

ஹாரண்யாவின் பெற்றோரான, இயமானன் மற்றும் மதுராஹினிக்கோ, மகளைத் திருமணம் செய்யப் போகும் மருமகனுக்கு எந்தக் கெட்டப் பழக்கங்களும் இல்லை, அதே போல, அவனைப் போன்ற பிரபலமான மற்றும் பணக்கார குணவானை அவள் திருமணம் செய்து கொள்வது அவர்களைப் பெருமிதத்தில் ஆழ்த்துக் கொண்டு இருந்ததால், கெட்டக் குணங்களையும் தாண்டி, அவன் தங்களது மகளை உண்மையிலேயே காதலிக்கிறானா? அல்லது அதற்குப் பின் ஏதாவது நோக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் ஆராயவில்லை அவர்கள்!

இதில் யாரைக் குற்றம் சொல்வது எனவும் நமக்குத் தெரியவில்லை!

ஆனால், பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் பிரிவிற்குக் காரணம் அவர்களுடைய முட்டாள்தனம் மற்றும் மற்றவர்களின் மெத்தனமும் தான்!

நிச்சயத்திற்கான நாளையும் குறித்து விட்டதும், அதைப் பகீரதனும், ஹாரண்யாவும் நிருபர்களின் முன்னிலையில் உலகிற்கு அறிவித்து விட முடிவெடுத்தார்கள்.

அதனால், ஒரு பிரஸ் மீட் நடத்தி, அதில் தாங்கள் இருவரும் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்வின் ஆரம்பத்தில்,”எல்லாருக்கும் வணக்கம்! நீங்க எல்லாரும் எங்களோட புரபோஸல் வீடியோவைப் பார்த்து இருப்பீங்க! எஸ்! நானும், மிஸ். ஹாரண்யாவும் கூடிய சீக்கிரமே கல்யாணம் செய்துக்கப் போறோம்! அதை நாங்க இங்கே அஃபீஷியலாக அனவுன்ஸ் பண்றோம். அதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம்” என்று கூறி அமைதியாகி விட்டான் பகீரதன்.

“முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் எங்களோய வாழ்த்துகளைச் சொல்லிக்கிறோம் சார்!” என்றவர்கள், அடுத்து தங்களுடைய கேள்விக் கணைகளைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தயாராகினர்.

“உங்களோட லைஃப் பார்ட்னராக வரப் போறவங்களோட புரொஃபஷன் பத்தி சொல்லுங்க சார்!” என்று ஒரு நிருபர் கேட்கவும்,

“என்னோட லைஃப் பார்ட்னர் இங்கே என் பக்கத்தில் தானே இருக்காங்க? அவங்களோட வேலையைப் பத்தி நீங்க அவங்ககிட்டயே கேட்டு இருக்கலாம்! அவங்களே சொல்வாங்க” என்று கூறி விட்டுத் வருங்கால மனையாளைப் பார்த்தான் பகீரதன்.

தனது கிலியை மனதிலிருந்து தொலைவில் நிறுத்தி விட்டு,

“வணக்கம்! நான் ஒரு ஃபேமஸான ஸ்டுடியோவில் ஹோஸ்ட் ஆக வேலை பார்க்கிறேன். இவரை மாதிரியான நிறைய பவர்ஃபுல் ஆட்களை இன்டர்வியூ செய்திருக்கேன்! நீங்க டிவி பார்க்கிறவராக இருந்தால், என்னோட ஷோவையும் கண்டிப்பாகப் பாத்திருப்பீங்க” என்று அவருக்குப் பொறுமையாக விடையளித்தாள் ஹாரண்யா.

“யெஸ் சார்” என அங்கேயிருந்த நிருபர்கள் அனைவரும் அதை ஆமோதித்துக் கொண்டனர்.

“உங்களுக்கும், சாருக்கும் எப்படி லவ் வந்துச்சு?” என அவர்களது காதல் கதையைச் சொல்லுமாறு கேட்டார் ஒரு நிருபர்.

தாங்கள் என்ன வருடக்கணக்காக காதலித்தக் காதலர்களா? அந்தக் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று,

“நாங்க நிறைய வருஷம் லவ் பண்ணலை. ஒருத்தரையொருத்தர் பார்த்தக் கொஞ்ச நாளிலேயே, நாங்க ஒரு ‘மேட் ஃபார் ஈச் அதர் கப்பிள்’ ன்னு எங்களுக்குப் புரிஞ்சிருச்சு! அதுக்கப்புறம் தான், நான் இவங்களுக்குப் புரபோஸ் செஞ்சேன். ஹாரண்யாவும் ஓகே சொல்லிட்டாங்க. எங்களோட ஆசையைப் புரிஞ்சிக்கிட்ட எங்கப் பேரன்ட்ஸூம் கல்யாணம் பண்ணி வைக்கச் சம்மதிச்சிட்டாங்க!” என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினான் பகீரதன்.

அவனது இந்தப் பதிலைக் கேட்டதும், அது தான் உண்மையான விளக்கம் போலும் என்று அந்தக் கணத்திலேயே தன்னைச் சமாதானம் மற்றும் நம்ப வைத்துக் கொண்டாள் ஹாரண்யா.

இதை தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களது பெற்றோர்களும் கூட இந்தக் கேள்வி, பதிலில் சந்தோஷமே அடைந்தார்கள்.

அதிலும், பகீரதனின் தாய் மனோரமாவோ,”நல்லா தான் பேசுறான்! ஆனால் எனக்கு மட்டும் ஏன் இவன் வாயிலே வடை சுட்றா மாதிரியே இருக்கு?” என்று தன் கணவனிடம் வினவ,

“ஹாஹா! நாம அவனோட அப்பா, அம்மா! அதனால், நம்மப் பையன் பொய் சொல்றானா? உண்மையைப் பேசுறானா ன்னு நமக்கு நல்லா தெரிஞ்சிரும் மா” என்று அவரிடம் கூறிச் சிரித்தார் பாலேந்திரன்.

அந்த சமயத்தில், அங்கே பிரஸ் மீட்டில்,
“ஆனால், இப்படி சீக்கிரமே லவ் பண்ணி, அவசரகதியில் கல்யாணம் செஞ்சகிட்ட மத்த செலிபிரிட்டீஸ் எல்லாரும் தங்களுக்குள்ளே புரிதல் இல்லைன்னு டிவோர்ஸ் செய்துட்டாங்களே! அவங்களை மாதிரியே நீங்களும்…” என்று கேட்ட நிருபரை எரித்து விடுவதைப் போலப் பார்த்தவனோ,

“அது அவங்களோட பர்சனல் அதைப் பத்தி எனக்குப் பேச உரிமையில்லை. அதே மாதிரி, நீங்க வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறதுக்குள்ளே இப்படி பேசுறது கண்டிப்பாகத் தப்பு! உங்களோட வார்த்தைகளைப் பார்த்துப் பேசினால் நல்லா இருக்கும்!” என்று அவனை மறைமுகமாக மிரட்டினான் பகீரதன்.

அதில் தன் பயத்தைக் கண்களில் வெளிப்படுத்திக் கொண்டு பேச்சு மூச்சற்று நின்று விட்டார் அந்த நிருபர்.

அதன் பிற்பாடு, அவர்களுடைய பெற்றோர் எப்படி சம்மதித்தனர்? என்பதையெல்லாம் அவர்களிடம் தெளிவாக உரைத்ததும்,”எங்கேட்ஜ்மெண்ட் டேட்டை சொல்லிடறோம். எல்லாரும் வந்துருங்க” என்று தங்களது நிச்சயத் தேதியை ஒன்றாக இணைந்து கூறி விட்டார்கள் பகீரதன் மற்றும் ஹாரண்யா.

இதுவரைக்கும், அந்தப் பிரஸ் மீட்டைத் தனது செல்பேசியில் நேரலையாகப் பார்த்துக் கொண்டிருந்த,‘இதெல்லாம் ஒரு காதல், இவங்க கல்யாணம் வேற பண்ணிக்கப் போறாங்க!’ என்று வேறு வன்மத்துடன் முணுமுணுத்துக் கொண்டான் மோஹித்.

நேர்காணலை முடித்துக் கொண்டு, காரில் அமர்ந்திருந்தப் பகீரதனோ,”நான் புரபோஸ் செஞ்சதுல இருந்து, உனக்குக் குழப்பமாகவே இருந்திருக்கும்! இப்போ எல்லாமே கிளியர் ஆகிடுச்சுல்ல?” என்று அவளிடம் கேட்டான்.

“ஹாங்! ஆமாம். எனக்கு ரொம்பவே தெளிவாகிடுச்சு பகீ!” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“குட்! இதே தெளிவோட நம்ம நிச்சயத்துக்கு ரெடி ஆகு!” என அவளைத் தட்டிக் கொடுத்து விட்டு அவளது வீட்டில் இறக்கி விட்டுப் போனான் பகீரதன்.

“இருடி! பகீரதன் சார் எங்கே?” என்றார் மதுராஹினி.

“அவர் எப்பவோ கிளம்பிட்டார்!” என்று தன் அன்னையிடம் கூறினாள் அவரது மகள்.

“ச்சே! மாப்பிள்ளையும் இருந்திருந்தால் ரெண்டு பேருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்து இருப்பேன்” என்று தன் கையிலிருந்த ஆரத்தி தட்டை மகளுக்குச் சுற்றித் திருஷ்டி கழித்தார் அவளுடைய தாய்.

அதைப் பார்த்த ஹாரண்யாவிற்கு விசித்திரமாக இருந்தது.

அவர் ஆரத்தியை வெளியே கொட்டி விட்டு அவளுடன் வீட்டினுள் நுழைந்ததும்,“ம்மா! நீங்க எப்பவும் தெளிவாக இருப்பாங்களே? எனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுல இருந்து ஏன் இப்படி பிஹேவ் செய்றீங்க?” என்று அவரிடம் கேட்டாள் ஹாரண்யா.

“எப்படி பிஹேவ் பண்றேன் டி?” என்றார் மதுராஹினி.

“அதான், எப்போ பாத்தாலும் பகீரதனைப் புகழ்றது! இப்போ ஆரத்தி எடுத்தது! இதெல்லாம் நீங்களா செய்றீங்கன்னு டவுட் ஆக இருக்கு!”

“உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நானும், உங்கப்பாவும் ஆசைப்பட்டோம். நீயே நல்லா யோசிச்சு உனக்கான மாப்பிள்ளையைத் தேடனும், இல்லைன்னா, நாங்கப் பார்த்துக் கட்டி வைக்கலாம்னு இருந்தோம். நீ அதுக்குள்ளே பகீரதனை லவ் பண்றதா வந்து சொல்லவும், எங்களுக்கு இருக்கிற ஒரே பொண்ணோட கல்யாணத்தில் நடக்கிற ஒவ்வொன்னையும் அனுபவிச்சு, சந்தோஷமா செஞ்சு முடிக்கலாம்னு விருப்பப்பட்டு இதெல்லாம் செய்றோம் டா!” என அவளிடம் விவரித்தார் அவளது அன்னை.

“ஓஹ்ஹோ! சரிம்மா” என்று அதற்கும் ஒருவாறு சமாதானம் ஆகி விட்டுத் தங்களுடைய நிச்சயத்திற்குத் தயாராக வேண்டும் என்ற மனநிலையைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டு அதற்குத் தயாராகினாள் ஹாரண்யா.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பத்தாவது அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 11

அந்தப் பிரம்மாண்டமான மஹாலின் மேடையோ பலவிதமான அலங்காரங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

ஆம்! பகீரதனுக்கும், ஹாராண்யாவிற்கும், இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறப் போகிறது.

அந்த விழாவிற்கு சினிமாத்துறையில் இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாவரும் வந்து சேர்ந்திருந்தனர்.

அதேபோலவே, தான் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருக்கும் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டிருந்தாள் ஹாரண்யா.

சினிமாத்துறையில் முதலாவது இடத்தில் வகிக்கும் பிரபலமான கதாநாயகனின் நிச்சயத்தார்த்தில் எப்படியெல்லாம் ஏற்பாடுகள் செய்திருப்பார்கள் என்பதை தனியாக விளக்கத் தேவையில்லை எனும் அளவிற்குத் தான் அங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மணமகளின் அறையிலேயே உதவிக்குத் தங்கி இருந்த தாமினியோ, தோழியின் அலங்காரங்கள் முடிவடைந்ததும்,”ஐ யம் சோ ஹாப்பி ஃபார் யூ ஹாரா!” என்று கூறி அவளை மென்மையாக அணைத்து விடுவித்தாள்.

“தாங்க்ஸ் ம்மா” என்று அவளிடம் நன்றி தெரிவித்து விட்டாள் ஹாரண்யா.

அன்றைய தினம் என்ன சிறப்பு என்றால், அவளுடன் வேலை செய்யும் இளம்பெண்கள் அனைவரும் அந்த நிச்சயத்திற்கு முதல் ஆளாக வந்து அமர்ந்திருந்தனர்.

இது என்ன விசித்திரமான விஷயம் என்று எண்ணுகிறீர்களா? ஆமாம், இது மிகவும் வித்தியாசமான ஒன்று தான்!

ஏனென்றால், தனக்குப் பிடிக்காதவர்களைத் தேடிப் போய் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அவர்களது வாழ்வில் ஏதாவது நல்லது நடந்து விட்டதா? என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருக்கிறது.

அதனாலேயே, தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மற்றவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களில் முதல் ஆளாகப் போய் வேவு பார்த்துக் கொள்வர். அதுவும், நல்லது, கெட்டது என்று எல்லாம் பிரித்தறியாமல், இரண்டுக்குமே பாரபட்சம் பாராமல் போய்ப் பார்த்து விட்டு வருவார்கள்! இது தான் ஒரு சிலரது சுபாவம்!

அது போலத் தான், புகழ் பெற்ற நடிகன் பகீரதனோ, தங்களைக் கண்டு கொள்ளாமல், தங்களுடன் வேலை பார்க்கும் ஹாரண்யாவைத் திருமணம் செய்ய முடிவெடுத்தப் போதும்,

இப்போது அவர்களுடைய நிச்சயத்தார்த்தம் ஊரறிய நடந்து கொண்டு இருக்கும் இந்த சமயத்திலும், தங்களது பொறாமை, பொருமல் மற்றும் ஆதங்கத்தை அப்படியே உள்ளே வைத்துக் கொண்டு ஒன்றுமே தெரியாததைப் போல், இந்த மஹாலிற்குள் வந்து அமர்ந்து கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தனர் ஒரு சிலப் பெண்கள்.

“இவங்களோட கண்ணில் வெளிப்படையாகவே பொறாமை தெரியுதே!” என்று முணுமுணுத்தவாறே அவர்களைக் கடந்து சென்றார் மதுராஹினி.

அவரும், அவரது கணவனும், நிச்சயத்திற்கு வரும் விருந்தாளிகளை வரவேற்று அவர்களை உரிய இடத்தில் அமர வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

“பகீ! எங்கேட்ஜ்மெண்ட்டுக்கான எல்லா ஏற்பாடும் முடிஞ்சுது. நீ ரெடியா?” என்று மகனிடம் வினவினர் பாலேந்திரன்.

“யெஸ் ப்பா. இதோ!” எனத் தனது புறத்தோற்றத்தை அவரிடம் காண்பித்தான் பகீரதன்.

“ம்ம். சூப்பர்! அப்போ பொண்ணும் தயாராகி ஆச்சா - ன்னுக் கேட்டுட்டு வர்றேன்” என அந்த அறையை விட்டு வெளியேறினார் அவனது தந்தை.

தனது உடையின் நேர்த்தியைக் கண்டு திருப்தி அடைந்து முடித்ததும், காரியதரிசிக்குக் கால் செய்து,”மோஹித் வந்தாச்சா?” எனக் கேட்டான்.

“ஆமாம் சார். டைரக்டர்ஸ் அண்ட் புரொடியூஸர்ஸ் கூடப் பேசிட்டு இருக்கார்” என்றான் அவனது பி.ஏ.

“சரி. அவன் மேலே ஒரு கண் வச்சுக்கோ!” என்று கூறி விட்டு அமைப்பைத் துண்டித்தவன், தன்னை மேடைக்குக் கூப்பிடும் நேரத்திற்காக காத்திருந்தான் பகீரதன்.

தான் சென்ற வழியிலேயே ஹாரண்யாவின் தந்தையைப் பார்த்து விட்ட பாலேந்திரனோ, அவரது மகளும் நிச்சயத்திற்குத் தயாராகி விட்டதை அறிந்து கொண்டதுமே, மகனின் காரியதரிசியிடம் பகீரதனை மேடைக்கு அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினார்.

அதே மாதிரி, மணப்பெண்ணை, அவளது தோழி, தாமினி தான், மேடைக்குக் கூட்டி வந்து நிற்க வைத்தாள்.

அலை கடல் எனத் திரண்டு வந்து கீழே இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்து சில கணங்களுக்கு ஸ்தம்பித்துப் போய் விட்டாள் ஹாரண்யா.

அதுவும், அவர்கள் எல்லாரும் சினிமாத்துறையில் பெரும் பங்கு வகிக்கும் பிரபலமானவர்கள் ஆவர்!

அதனால் எகிறித் துடித்தது அவளது இதயம். ஆனாலும், தன்னைச் சமன்படுத்திக் கொண்டவளோ, இப்போது தலையை நிமிர்த்திக் அவர்களை எதிர் நோக்கினாள் ஹாரண்யா.

அந்த நிமிர்வில் அனைவரும் பிரம்மித்துப் போனார்கள்.

அதே சமயம், அவள் மீதான பொறாமை நிறைந்த பார்வைகளையும் வீசினர் ஒரு சில பேர்.

அதையெல்லாம் அசட்டை செய்து விட்டு, அவர்களைப் பார்த்து உதடு பிரியாமல் புன்னகை செய்தவாறே நின்றாள் ஹாரண்யா.

அந்த நிகழ்ச்சிக்கு பகீரதனுடைய அபிமானிகளும் வந்திருந்தனர்.

ஆனால், குறைவான நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

இப்படியாக சில நிமிடங்கள் கடந்ததும், மேடைக்கு வந்து சேர்ந்தான் பகீரதன்.

தனக்கு உறுதுணையாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே உண்மையான புன்னகையை உதிர்த்தவன், தனது புகழைப் பார்த்து மண்டை காய்பவர்களை அலட்சியத்துடன் ஏறிட்டான் பகீரதன்.

அந்த வரிசையில் மோஹித்தும் அடக்கம்.

‘இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு இங்கே வந்து தான் ஆகனுமா?’ என அவர்களின் மனதில் தோன்றினாலும் கூட, அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை.

ஏனெனில், அவர்களைப் பொருத்தவரை, தங்களது துறையில் இருப்பவர்களின் வாழ்வில் நிகழும் நல்லது, கெட்டதுக்குச் சென்று தலையைக் காட்டி விட்டு வர வேண்டியது கட்டாயமாகும்!

அப்படியில்லை என்றால், அவருக்கும், இவருக்கும் சண்டையா? நல்ல நண்பர்களாகத் தானே வளைய வந்தார்கள்? அதற்குள் ஏன் இப்படி? என்றெல்லாம் காது, மூக்கு வைத்துப் பேசி விடுவார்கள்!

அதற்குப் பயந்தே இப்படி வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

தன் அருகில் வந்து நின்றவனை, உடனே திரும்பிப் பார்த்தாள் ஹாரண்யா.

“ஹாய்!” என அலுங்காமல் குலுங்காமல் அவளிடம் உரைத்தான் பகீரதன்.

“க்கும்! ஹாய் பகீ!” என்றிருந்தாள்.

“எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு?” என அவன் கூறியதைக் கேட்டவளோ,

“ம்ம். எஸ்! ஏன் இப்படி கேட்கிறீங்க?’ என்று அவனிடம் வினவினாள் ஹாரண்யா.

“இங்கே நமக்குப் பிடிச்சவங்க அண்ட் நம்மளைப் பிடிச்சவங்க மட்டுமில்லாமல், நம்மளைப் பிடிக்காதவங்களும் வந்திருக்காங்க. அவங்களோட நெகட்டிவ் வைப் உன்னைப் பாதிக்க வாய்ப்பு இருக்கு! அதான் கேட்டேன்” என்று அவளுக்கு விளக்கினான் பகீரதன்.

அதைக் கேட்டதும், மென்நகை புரிந்தவளோ,”முதல்ல அப்படித் தான் ஃபீல் ஆச்சு. அப்பறம் நானே அதை மாத்திக்கிட்டேன்!” என்றுரைத்தாள் பெண்ணவள்.

“ஓஹ்! குட்!” என அவளை மெச்சிக் கொண்டவனோ, இம்முறை கம்பீரமான பார்வையுடன் தனக்கு எதிரில் இருந்தவர்களைப் பார்க்கவும்,

அவன் நடிக்கும் படங்களில் மட்டும் அல்லாமல், நேரிலும் கூட கனக்கச்சிதமாக இருந்தவனுடைய தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.

அவர்களது ஜோடிப் பொருத்தத்தைக் கண்டவர்களோ,”இந்தப் பொண்ணு ஒரு சாதாரண ஆங்க்கர் காற்று நினைச்சா, பார்க்க இவ்வளவு அழகாகவும், கம்பீரமாகவும் இருக்காளே!” என ஹாரண்யாவைப் பற்றி வியந்து பேசிக் கொண்டார்கள்.

“அதெல்லாம் பகீரதன் கூட சேர்ந்து நிற்கிறதால் இருக்கும்!” என்று ஒருவர் சொல்ல,

“அந்தப் பொண்ணு தனியாக வந்து நின்ன அப்பவும் எனக்கு இப்படித் தான் தோனுச்சு” என்று மறைக்காமல் கூறினார் ஒரு பிரபல இயக்குனர்.

“அப்போ இவங்களை வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு உங்களுக்கு ஒரு எண்ணம் இருக்கா?” என்றார் தயாரிப்பாளர் ஒருவர்.

“ஹாஹா! நான் அதைச் செய்யத் தயார் தான்! ஆனால், அதுக்கு இப்போ பகீரதனோட சம்மதம் வேணுமே!” என்று கூறிச் சிரிக்கவும்,

“அவர் எதுக்குச் சம்மதிக்கனும்? அவரோட ஃபியான்சே தானே ஓகே சொல்லனும்?” என்று அவரிடம் கேட்டார் மற்றொருவர்.

“கல்யாணம் ஆகிட்டாலே ஹஸ்பெண்ட் என்ன சொல்றாரோ அதை வொய்ஃப் கேட்டுத் தானே ஆகனும்? அதானே, உலக வழக்கம்?” என்றார் அந்த இயக்குனர்.

தான் ஒரு முற்போக்குப் படங்களின் இயக்குனர் என்று மார் தட்டிக் கொள்பவரின் வார்த்தைகள் தான் இவை!

இவர்கள் எல்லாம் இரண்டு முகங்களைக் கொண்டிருப்பவர்கள்!

ஒன்று சமுதாயத்திற்காக, மற்றுமொரு உண்மை முகத்தைத் தனக்கு நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே காட்சிப்படுத்துவார்கள்.

இப்போது அவர் சொன்ன வார்த்தைகள் பலித்து விடப் போவதை அறியாமல் அவற்றை உதிர்த்து விட்டுப் பெரியதொரு நகைச்சுவையைக் கூறியதைப் போலத் தன்னை எண்ணிப் பெருமை அடைந்து கொண்டு வெடித்துச் சிரித்தார் அந்த இயக்குனர்.

இப்போது, பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் நிச்சயம் நடக்கப் போகும் சமயம் வந்து விடவே,

அவர்களிடத்தில் ஆளுக்கொரு மோதிரங்களைக் கொடுக்கவும்,

தனது கரங்களில் நடுக்கம் துளியும் இல்லாமல், இயல்பாகவே பகீரதனுடைய விரலில் மோதிரத்தைப் போட்டு விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் ஹாரண்யா.

அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டே, அவளது மோதிர விரலைத் தன்னிடமிருந்த கணையாழியை அலங்கரித்தான் ஆண்மகன்.

அதைக் கண்ட அவர்களுடைய பெற்றோருக்கு அப்போது தான், மனதின் குழப்பங்கள் குறைந்தது.

தங்களது பிள்ளைகளின் திருமணத்தின் போது தான், அவை முழுமையாக மறைந்து போகும் என்பதையும் உணர்ந்தனர் இருவருடைய பெற்றோர்களும்.

ஆனால், அந்த திருமணத்திற்குப் பிறகு தான், அவர்களுடைய குழப்பங்களும், ஆதங்கங்களும் அதிகமாகப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி விட்டு உணவுண்டு விட்டுச் சென்றார்கள்.

ஆனால், மோஹித்தோ, மேடையேறிப் போய்,”உங்களோடது லவ் மேரேஜ் ஆ?” என ஹாரண்யாவிடம் நக்கலாக வினவவும்,

“ஆமாம் சார்” என்று உடனே அவளிடமிருந்து பதில் வந்தது.

“ஓகோ! அப்படின்னு நீயே நினைச்சுக்குவியா?” என்று கேட்டு விட்டு அவளருகில் இருப்பவனைப் பார்க்கவும்,

“வாட்!” என்றவளை,

“ஸ்ஸூ! ஹாரா‌ ம்மா! அவன் ஏதோ காண்டில் உளறுறான்! இதைக் கண்டுக்காதே!” எனக் கூறிச் சமாதானம் செய்தான் பகீரதன்.

“ஆமாம்! அதே தான்!” என்று சொல்லி விட்டுக், கீழே இறங்கிச் சென்றவன், உணவுண்ணாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் மோஹித்.

தாமினி,“உனக்கு என்னோட வாழ்த்துகள் ஹாரா!” என்று தன் தோழியிடம் தெரிவித்தவளோ,

“கங்கிராட்ஸ் சார்!” என்று பகீரதனுக்கும் வாழ்த்து கூற மறக்கவில்லை அவள்.

இருவரும் அவளுக்கு நன்றி கூறி விட்டதும், சாப்பிடப் போய் விட்டாள் தாமினி.

அவர்களுடைய பெற்றவர்களோ, தங்களது பிள்ளைகளுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதும்,”இன்னும் வேற யாராவது வருவாங்களா?” என இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்.

“இல்லை சம்பந்தி. கெஸ்ட்ஸ் எல்லாரும் கிளம்பியாச்சு. நாம மண்டபத்தைக் காலி செய்துட்டுப் போக வேண்டியது தான்!” என்றவுடன், அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்கள்.


- தொடரும்
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍 😍 😍

இந்தப் பதினொன்றாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 12

அந்தச் சமயம் பார்த்து, தன்னுடன் தனியாகப் பேச வேண்டுமென்று பகீரதன் சொல்லி அனுப்பியதாக செய்தி வரவும், தன் பெற்றோரிடமும், தாமினியிடமும் தகவல் தெரிவித்து விட்டு, அவனைப் பார்க்கச் சென்று விட்டாள் ஹாரண்யா.

அதைக் கேள்விப்பட்டப் பகீரதனின் பெற்றோரோ,”இப்போ என்னக் குழப்பத்தைப் பண்ணி வைக்கப் போறானோ!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

தன்னுடன் பேச வந்தப் பெண்ணவளிடம்,”அந்த மோஹித் உங்கிட்ட சொன்ன விஷயத்தைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கியா?” என்று கூர்மையானப் பார்வையுடன் அவளிடம் வினவினான் பகீரதன்.

“இல்லை பகீ!” என்று அவனிடம் உரைத்தாள் ஹாரண்யா.

“ம்ம். அது தான் உனக்கு நல்லது. ஏன்னா, அவனுக்கு என் மேல் இருக்கிற பொறாமையோட அளவு ரொம்பவே அதிகம். அது நம்மளையே முழுங்கிடும்! அந்தளவுக்குப் பவர்ஃபுல் ஆனது! சோ, உன்னால் முடிஞ்ச அளவுக்கு அவனைத் தவிர்த்திடு!” என்று அவளுக்கு அறிவுறுத்தவும்,

அவளும் மறுத்துப் பேசாமல்,”சரி” என்று ஒப்புக் கொள்ள,

“இப்போ தான், நீ எனக்குப் பர்ஃபெக்ட் ஆனப் பர்சன்!” என அவளைப்‌ பாராட்டினான் பகீரதன்.

“தாங்க்ஸ்” என்று கூறியவளுக்குத் தான், அவன் சொல்வதை எல்லாம் கேட்டு விட்டால் மற்றவர்கள் அவனுக்கு நல்லவர்கள்! இல்லையென்றால், அவர்கள் தன் சொற்படி நடக்கும் வரை விட மாட்டான். பேசியே மூளையைக் கழுவி விடுவான் என்பதை அப்போது அவள் அறியவில்லை.

அதைப் பற்றி ஆழமாக சிந்திக்கும் நிலையில் அவள் இல்லை. ஏனென்றால், இவ்வளவு நேரமாக, மேடையில் கால் வலிக்க நின்றிருந்தவளுக்கு, எப்போதடா அறைக்குள் சென்று அனைத்தையும் மாற்றிக் கொண்டு படுத்து விடுவோம் எனும் அளவிற்குப் பாடாய்ப் பட்டு இருந்தாள் ஹாரண்யா.

“மோஹித் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு” என்றவனோ,

“நீ எங்கிட்ட வேறெதாவது சொல்லனுமா?” என்று அவளிடம் கேட்டான் பகீரதன்.

“நத்திங்! எனக்கு ரொம்ப டயர்ட் ஆக இருக்குங்க! நான் வீட்டுக்குப் போகனும்” என்று அவனிடம் தயக்கத்துடன் கூறினாள் ஹாரண்யா.

அதில் அவனுக்குக் குறுநகை பூத்து விட,”ஓகே. நீ போய் ரெஸ்ட் எடு. கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு” எனக் கூறி அவளுக்கு நினைவுபடுத்தி அனுப்பி வைத்து விட்டுத் தானும் தன்னுடைய பெற்றோருடன் அங்கேயிருந்து கிளம்பிச் சென்று விட,

அதேபோல், தனது தாய் மற்றும் தந்தையுடன் மண்டபத்தைக் காலி செய்து விட்டுப் போனார்கள்.

அவர்களது நிச்சயத்தார்த்தம் நடந்த அன்றே, கல்யாணத் தேதியைக் குறித்து விட்டனர்.

அந்த நாள் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. அதற்குள், தங்களது பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்டறிந்து கொண்டே, அவர்களுடைய திருமணத்திற்குத் தயார் செய்ய நினைத்தார்கள் இரு வீட்டாரும்.

அவர்களோ அந்த எண்ணத்தில் இருக்க, தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும் கூடத், தான் ஒப்புக் கொண்ட படங்களை எந்த தடையும் இன்றி நடித்துக் கொடுத்துக் கொண்டே இருந்தான் பகீரதன்.

அதற்காக வெளியூருக்குச் செல்லும் போது மட்டும் கவனமாக இருந்து கொள்ளுமாறு அவனிடம் கேட்டுக் கொண்டனர் அவனது பெற்றோர்.

தனக்கு நிச்சயத்தார்த்தம் முடிந்த இரண்டு நாட்களிலேயே, தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்தில், தன்னுடைய இரு கரங்களிலும் இருந்த மெஹந்தி பளபளக்க, விரலில் அணிந்திருக்கும் வைர‌ மோதிரம் ஜொலி, ஜொலிக்க, அங்கே வரும் பிரபலங்களை எல்லாம் தவறாமல் நேர்காணல் செய்தாள் ஹாரண்யா.

இருவரும் தங்களது வேலையிலிருந்த கவனத்தைச் சிதற விடவே இல்லை. அவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தார்கள் ஹாரண்யா மற்றும் பகீரதன்.

இப்படியாக, நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், தனது திரூமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொள்ள அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சுதனிடம் பேசப் போனவளது நடையை,”எதுக்கு அவரோட ரூமுக்குப் போறான்னு தெரியுதா?” என்ற வார்த்தைகள் தடுத்து நிறுத்தியது.

“அவளுக்குப் பகீரதன் கூட கல்யாணம் நடக்கப் போகிறதால், அதுக்கு லீவ் கேட்கப் போறா ப்பா!” என்று அவளைப் பார்த்து வன்மத்தைக் கக்கினர் ஒரு சில பெண்கள்.

“ம்ஹ்ம்! நம்மால் பெருமூச்சு மட்டும் தான் விட முடியும்!” என்று அவர்கள் மேலும் பேசிக் கொண்டே போகவும்,

அந்தப் பேச்சு ஆரம்பிக்கும் போதே அங்கேயிருந்து அகன்று சென்றிருக்க வேண்டுமென எண்ணித் தலையிலடித்துக் கொண்டே, சுதனிடம் அனுமதி பெற்று அவரது அறைக்குள் நுழைந்தாள் ஹாரண்யா.

“சார்!” என அவள் தொடங்கும் முன்னரே,

“உன் கல்யாணத்துக்கு லீவ் வேணும்! அவ்வளவு தானே?” என்றார் சுதன்.

“எஸ் சார். ஒரு ஒன் மன்த் லீவ் கொடுத்தா நல்லா இருக்கும்” என்று அவரிடம் தயங்கியவாறே சொன்னாள் ஹாரண்யா.

“இங்கே அறிவும், அனுபவமும் அதிகம் இருக்கிற சிலரில் நீயும் ஒரு ஆள்! உன்னால் நம்ம ஸ்டுடியோவுக்கு நிறைய பெருமை கிடைச்சிருக்கு! இந்த ஸ்டூடியோவோட ஸ்டார் நீ தான்! ஆனால், உனக்குக் கல்யாணம் நடந்திட்டா, நீ இங்கே பார்க்கிறது டவுட் தான்! சோ, உனக்கு லீவ் வேணுமா? இல்லை, உன்னோட ரெசிக்னேஷன் லெட்டரில் சைன் வேணுமான்னு டிஸைட் பண்ணிட்டு அப்பறம் எங்கிட்ட வந்து கேளு!” என்று அவளிடம் தீர்க்கமாக உரைக்கவும்,

அதைக் கேட்ட ஹாரண்யாவோ,”ஹைய்யோ சார்! நான் போய் என்னோட வேலையை விடுவேனா என்ன? எனக்குக் கண்டிப்பாக லீவ் மட்டும் தான் வேணும் சார்!” என்று உறுதியாக கூறினாள்.

“ஓஹ்ஹோ! எதுக்கும் உன்னோட வருங்கால புருஷன் கிட்டே கேட்டுக்கோ ம்மா” என்று அவளிடம் சொன்னார் சுதன்.

“நோ சார். நான் கேட்டதைக் கொடுங்க ப்ளீஸ்!” என்றவளோ, தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால்,

“சரிம்மா. நான் உனக்கு ஒரு மாசம் லீவ் தரேன்” என்று அன்றைய தினமே அவளது விடுப்பை அங்கீகரிக்கப்பட்டது என்று அறிவித்து விட்டார் சுதன்.

“ஹப்பாடா! இனிமேல், இங்கே சுத்திட்டு இருக்கிற கொள்ளிக் கண்ணு எல்லாம் உன்னை ஒன்னும் பண்ணாது!” என்று தோழியின் மீதிருந்த அன்பு மற்றும் அக்கறையில் அவளிடம் இவ்வாறு கூறினாள் தாமினி.

“இந்த ஒரு மாசத்துக்கு எனக்கு வர்ற ஆஃபர்ஸ் எல்லாமே உனக்கு வரும்ன்னு நினைக்கிறேன்!” என்று மனதார கூறி மகிழ்ந்தாள் ஹாரண்யா.

“அப்படியெல்லாம் சொல்லிட முடியாது! ஷோவை எல்லாத்தையும், எல்லாருக்கும் பொதுவாகத் தான் பிரிச்சுத் தருவாங்க” என்றுரைத்தாள் அவளது தோழி.

“அப்படியும் இருக்கலாம் மினி” என்று கூறி விட்டு அவளிடமிருந்து விடைபெற்றுத் தன் இல்லத்திற்குப் போய்ப் பெற்றோரிடம் இதைப் பகிர்ந்து கொண்டதும்,

“நல்லா சாப்பிட்டு, பிஸிக்கல் அண்ட் மென்டல் ஹெல்த்தை நல்லா வச்சுக்கோ! மேக்கப் பத்தி உனக்குச் சொல்லவே தேவையில்லை. அதையெல்லாம் நீயே ஃபிக்ஸ் பண்ணிடலாம்! மத்ததை நாங்கப் பெரியவங்க பார்த்துக்கிறோம்!” என்று அவளுக்கு வலியுறுத்தினார்கள் இயமானன் மற்றும் மதுராஹினி.

“சரிங்க ப்பா, ம்மா!” என்று அவர்களிடம் தெரிவித்து விட்டுப் பகீரதனிடமும், தன்னுடைய வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வதாக அவனுக்குக் குறுந்தகவலில் உரைத்திருந்தாள் ஹாரண்யா.

ஆனால், அதை நிரந்தரமான ஓய்வு என்று தவறாகப் புரிந்து கொண்ட அவளது வருங்கால கணவனோ,”நான் உங்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி, நீயே புரிஞ்சு நடந்துக்கிட்டியே! நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ!” என்ற குறுஞ்செய்தியை அவளுக்கு அனுப்பி வைத்தான் பகீரதன்.

அதைப் பார்த்ததும், அவனது புரிதலை எண்ணி ஆனந்தம் அடைந்தவளோ, தனது இதழ்களில் புன்னகையைத் தவழ விட்டுக் கொண்டு, அப்போதிருந்தே ஓய்வெடுக்கத் தொடங்கினாள் பெண்ணவள்.

அவர்கள் இருவருடைய நிச்சயத்தார்த்தம் அன்று, தான் கொளுத்திப் போட்டு விட்டு வந்திருந்தப் பட்டாசு வெடிக்காமலேயே நமுத்துப் போய் விட்டதை அறிந்து கொள்ளவே அவனுக்குப் பல நாட்கள் ஆனது.

அதை நினைத்து உஷ்ண மூச்சுக்களை வெளியிட்டவனோ,”உங்க வாழ்க்கையில், எப்போதாவது, ஏதாவது கோளாறாக நடக்காமலா போயிடப் போகுது! அப்போ பாத்துக்கிறேன்!” என்று இப்பொழுதும் கூடத், தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற இறுமாப்புடன் இருந்தான் மோஹித்.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பன்னிரெண்டாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 13

அதன் பிறகு, பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெறத் தொடங்கிற்று.

தன்னுடைய திருமணத்திற்கு என்றும், படப்பிடிப்பில் இருந்து அவனோ, ஒரு போதும் ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், பகீரதனுக்கு மனைவியாக வரப் போகிறவளோ, தனது ஓய்வு நாட்களை, மிகச் சமர்த்தாக கழித்துக் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கு முந்தைய வாரம் மட்டும் தான், வீட்டிலிருக்க வேண்டும், அதற்கு முன்னர், வேலை, வேலை என்று ஓட வேண்டுமென்பது கட்டாயம் என அவள் சிறிதும் நினைக்கவில்லை.

தனக்கு ஓய்வு தேவைப்படவே, அதைக் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

அதன் பின்னர், அவர்களது திருமண ஏற்பாடுகள் அனைத்தையுமே செய்து முடித்து விட்டார்கள்.

நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்களை விட, இரு மடங்கு விருந்தாளிகள் அவர்களுடைய திருமணத்திற்கு வரக் கூடும் என்பதால், இன்னும் பிரம்மாண்டமான மஹாலைத் தேர்ந்தெடுத்து இருந்தனர் பகீரதனின் பெற்றோர்.

“எல்லா அரேன்ட்ஜ்மெண்ட்ஸ்ஸையும் நீங்களும் வந்து பாருங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தா மட்டும் அதையெல்லாம் ஃபிக்ஸ் செய்துக்கலாம்” என்று பாலேந்திரனும், மனோரமாவும், ஹாரண்யாவின் தாய் மற்றும் தந்தையிடம் உரைத்து இருந்தார்கள்.

அதைப் போலவே, அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டு விட்டு, அதில் திருப்தி அடைந்தவர்களோ,”எல்லாமே நிறைவாக இருக்கு சம்பந்தி. எதையுமே மாத்த வேண்டாம்” என்று அவர்கள் இருவரிடமும் கூறி விட்டனர் இயமானன் மற்றும் மதுராஹினி.

தங்களது மகளையும் அழைத்து வந்து அவற்றையெல்லாம் தங்களுடன் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லி விட, அவளோ, பகீரதனிடம் தகவல் தெரிவித்து விட்டுத் தங்களுடைய திருமணம் நிகழப் போகும் மண்டபம் மற்றும் அந்த விழாவிற்கு வருகை தரப் போகும் விருந்தினர்களுக்கு என்னென்ன விதமான உணவுகள் வழங்கப் போகிறோம் என்பதையெல்லாம் ஆசையாகப் பார்த்து விட்டு வந்தாள் ஹாரண்யா.

திருமணத்திற்கு ஒரு வார காலம் இருக்கும் போது,”இப்போவும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பி போறதுக்குத் தயாராகிட்டு இருக்கிற? உனக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் டா! அதை மறந்துட்டியா?” என்று அவனிடம் சூடாக கேள்வி கேட்டார் பாலேந்திரன்.

ஏனெனில், அந்த திருமணம் உடனே நிகழ வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தது என்னவோ அவன் தான்! ஆனால், தற்போது அதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததைப் போல நடந்து கொண்டால் அவனுடைய பெற்றோருக்குக் கடுப்பு வராதா?

பாலேந்திரன்,“சொல்லுடா!” என்று மேலும் கடுப்புடன் வினவ,

“சரிப்பா. நான் என்னோட கல்யாணம் முடியிற வரைக்கும் ஷூட்டிங் - க்குப் போகலை” என்று தனது கோர்ட்டைத் தளர்வுபடுத்திக் கொண்டு நீள் சாய்வு இருக்கையில் அமர்ந்து விட்டான் பகீரதன்.

“என்னம்மா இவன் இப்படி இருக்கான்? இவன் பேச்சைக் கேட்டுட்டு நாம இந்தக் கல்யாணத்தை நடத்த சம்மதிச்சுட்டோமே! அந்தப் பொண்ணு தான் ரொம்ப பாவம்!” என்று தன் மனைவியிடம் மகனைப் பற்றிக் குற்றப் பத்திரிகை வாசித்தார் பாலேந்திரன்.

“நாம வேணும்னா அந்தப் பொண்ணு கிட்டப் பேசிடலாமா?” என்று அவரிடம் வினவினார் மனோரமா.

பகீரதன்,“ம்மா! போதும்! இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்னப் பிரச்சினை?” என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கேட்டான்.

“நீ பண்றது எல்லாம் தான் டா பிரச்சினையே!” என்று பொரிந்து தள்ளினார் அவனது தந்தை.

“நான் என்னப் பண்ணேன் ப்பா? என்னோட வேலையை நான் ஒழுங்காகச் செய்றது தான் உங்களுக்குப் பிரச்சினையா?” என்று நிதானமாக வினவினான் அவரது மகன்.

“அதை உன் கல்யாணம் நடக்கப் போகிற நேரத்தில் தான் செய்யனுமா?” என்று அவனிடம் காட்டமாக கேட்டார் பாலேந்திரன்.

“ப்பா! நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்றதுக்காக, அது நடந்து முடியிற வரைக்கும் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு என்னால் வீட்டில் உட்கார்ந்து இருக்க முடியுமா?” என்றான் பகீரதன்.

“ஏன் அந்தப் பொண்ணு ஹாரண்யா அப்படித் தானே இருக்கிறா?” என்று அவனிடம் சொன்னார் மனோரமா.

“கமான் ம்மா! அவளும், நானும், ஒரே மாதிரி யோசிக்கிற ஆளுங்களே இல்லை! அவளுக்கு ரெஸ்ட் தேவைப்பட்டுச்சு! சோ, அவ வீட்டில் இருக்கிறா! ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை. அதனால், நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிட்டு இருக்கேன். அவ்வளவு தான்!” எனத் தன் பெற்றோருக்கு விடையளித்தான்.

“ஓஹோ! அப்போ நீ எதையும் கண்டுக்க மாட்ட? கல்யாணத்தை மட்டும் பண்ணிக்கப் போற! அப்படித் தானே?” என்றார் பாலேந்திரன்.

“நான் உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா என்னோட மேரேஜ் அரேன்ட்ஜ்மெண்ட்ஸ் எல்லாத்தையும் உங்களையே பார்த்துக்க சொல்லி இருப்பேன். ஆனால் நீங்க என்னடான்னா என்கிட்ட இப்படி பேசுறீங்களே?” எனத் தன் பெற்றோரிடம் குறைபட்டுக் கொண்டான் பகீரதன்.

மனோரமா,“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது! உங்கிட்ட மாட்டிக்கிட்டு அந்தப் பொண்ணு தான் முழிக்கப் போறா!” என்று அவனிடம் பொருமலுடன் கூறியவரிடம்,

“உங்க இன்டர்வியூ முடிஞ்சதுன்னா, நான் ரூமூக்குப் போய் என்னோட டைரக்டர் அண்ட் புரொடியூசர் கிட்டே பேசலாம்னு இருக்கேன்!” என்று
சொன்னான் அவர்களது மகன்.

“நீ போய் உன் வேலையைப் பாரு ராசா!” என்று அவனை அனுப்பி வைத்து விட்டு,

“இவன்கிட்ட அந்தப் பொண்ணு எப்படி இருக்கப் போகுது ம்மா?” என்று தன் மனைவியிடம் வருத்தத்துடன் வினவினார் பாலேந்திரன்.

“எனக்கு என்னத் தோனுதுன்னா ங்க, இப்படி இருக்கிறவனுக்குப் பொண்டாட்டி வந்து நல்லா கொடுப்பான்னு சொல்லுவாங்க. ஒருவேளை அப்படித் தான் ஆகப் போகுதோ!” என்று அவரிடம் கூறினார் மனோரமா.

“ஓஹ்ஹோ! நீ அப்படி வர்றியா? இவன் கொழுப்பெடுத்துப் போய்த் திரிவான்! கல்யாணம் பண்ணிட்டு வர்றப் பொண்ணுக் கொடுக்கனுமா? நாமளே நல்லா கொடுத்தா சரி ஆகிடும். நாம தான் அவனை மாத்திக் கல்யாணம் பண்ணி வைக்கனும் மா!” என்று தீர்க்கமாக உரைத்தார் அவரது கணவர்.

“நீங்க சொல்றது தான், நூத்துக்கு நூறு சரி ங்க! ஆனால் அவன் நமக்கு அந்தச் சான்ஸையே தர மாட்டேங்குறானே! நாம என்னப் பண்றது?” என்று தன் கணவனிடம் பரிதாபமாக கேட்க,

பாலேந்திரன்,“அப்போ அந்தப் பொண்ணுக்கு நாம சப்போர்ட்டிவ் ஆக இருக்கனும். அவ அவனை மட்டும் நம்பி நமக்கு மருமகளாக நம்ம வீட்டுப்படி ஏறி வரப் போறதில்லை. நம்மளையும் நம்பி வரப் போறா! சோ, நானும், நீயும் முடிஞ்சளவுக்கு அந்தப் பொண்ணுக்கு மறைமுகமாக சப்போர்ட் செய்வோம். அதுக்கப்புறம் அவன் ஏதாவது தகிடுதத்தோம் பண்ணினா, நேரடியாகவே போர்க் கொடியைத் தூக்கிடுவோம்! நீ என்ன சொல்ற ம்மா?” என்று தன் இல்லாளுடைய சம்மதத்தைக் கேட்டு விட்டுக் காத்திருந்தார்.

“ஷூயர் ங்க! இதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்று அவருக்கு உறுதி அளித்தார் மனோரமா.

ஆக மொத்தத்தில், அவர்கள் யாவருக்கும்,’இது ஒரு காதல் கல்யாணம் அல்லது கல்யாணத்திற்கு உண்டான எந்த விஷயங்களுமே இல்லை’ என்ற எண்ணமே தோன்றவில்லை.

இப்படியாகத், தன் பெற்றோர் தன்னை நல்வழிப்படுத்துவதற்காகப் பற்பல திட்டங்களைக் கைவசம் வைத்துக் கொண்டு சரியான நேரத்திற்காக காத்திருக்க,

இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லாதவனோ, தனது படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு பத்து நாட்களுக்குத் தனக்கு விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டான் பகீரதன்.

தான் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டதாக ஹாரண்யாவிடம் தெரிவிக்க, அதைக் கேட்டவளும் மகிழ்ச்சி தான் அடைந்தாள்.

அவர்களுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகள் யாவற்றையும், பணத்தைக் கொட்டி, மிக விமரிசையாகச் செய்ய முடிவு எடுத்திருந்தனர்.

பெரியவர்களும், சிறியவர்களும் சேர்ந்து ஏதோ பொம்மைக் கல்யாணத்தை நடத்துவதைப் போல, அறிவு இருந்தும் கூட, அதை உபயோகிக்கத் தெரியாத அசடுகளின் விருப்பப்படி, அவர்களுடைய திருமண வேலைகளைச் செய்து முடித்து இருந்தார்கள்.

தன்னுடைய உதவிக்குத் தாமினியை இருத்திக் கொண்ட ஹாரண்யாவோ, தன்னைச் சிறகில்லாத தேவதையாக நினைத்துக் கொண்டு வலம் வந்தாள்.

“மெஹந்திக்கு ஆள் வந்து வெயிட் செய்றாங்க பாரு” என அவளை அனுப்பி வைத்து விட்டு, மற்ற வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார் மதுராஹினி.

தனது கரங்களுக்கு மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தவளோ, தோழிக்குக் கால் செய்து,”நீ உடனே வீட்டுக்குக் கிளம்பி வா” என்று அவளுக்கு அழைப்பு விடுத்தாள் ஹாரண்யா.

அதை ஏற்று, அடுத்த சில நிமிடங்களில் அவளது இல்லத்திற்கு வந்திருந்த தாமினி,

“இந்த டிசைன் சூப்பராக இருக்கு!” என்று அதை வரைந்தப் பெண்ணுக்குப் பாராட்டு தெரிவிக்கவும்,

“தாங்க்ஸ் மேம்” என்றவளோ, வெகு சிரத்தையாக, ஹாரண்யாவிற்கு மெஹந்திப் போட்டு முடித்து விட,

“இதைப் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு! தாங்க்ஸ்!” என்று அந்தப் பெண்ணிடம் கூறினாள் ஹாரண்யா.

“இட்ஸ் ஓகே மேம். உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என அவளிடம் தயக்கத்துடன் கேட்டாள் அந்த யுவதி.

“கண்டிப்பாக எடுத்துக்கலாமே!” என்று கூறி விட்டு எழுந்தவளோ, தனக்கு அருகில் வந்து நின்ற அந்தப் பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்த தாமினியும், தன் நண்பியைப் பெருமிதத்துடன் ஏறிட்டாள்.

இந்த ஒரு நிகழ்வு அவளது ஒட்டு மொத்த அறிவையும் மழுங்கச் செய்து விட்டது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏனெனில், தன்னுடைய ‘தொகுப்பாளினி’ என்ற பட்டத்துடன் சேர்ந்து, வான் புகழ் பெற்றிருக்கும் நடிகனின் வருங்கால மனைவியாகப் போகிறோம் என்பது அவளுக்குக் கூடுதல் பலம் மற்றும் பெருமையைச் சேர்த்தது.

அந்த மமதையில், தன்னுடைய சிறப்பான குணநலன்களை மறந்தே போய் விட்டாள்.

அதன் விளைவுகளை அவள் விரைவில் சந்திக்க வேண்டும் என்று விதி கணக்குப் போட்டதோ, என்னவோ, பகீரதன் மற்றும் ஹாரண்யாவின் திருமண நாளும் விரைவிலேயே வந்து விட்டிருந்தது.

- தொடரும்
 

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

இந்தப் பதிமூன்றாம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

39 NNK II

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 14

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை பகீ! உன் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. இப்போதாவது சொல்லு! உனக்கு உண்மையிலேயே இதில் விருப்பமா?” எனத் தன் மகனிடம் தவிப்புடன் கேட்டார் மனோரமா.


“எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம் தான் ம்மா. நான் ஒன்னும் அவசரப்பட்டு முடிவெடுக்கலை” என்று அவரிடம் கூறினான் பகீரதன்.


அதற்கு மேல் அவராலும் எவ்வளவு தான் அவனிடம் பேச முடியும்? அதனால், தன் தோல்வியை ஒப்புக் கொண்டு கணவனிடம் வந்து சேர்ந்தார் மனோரமா.


“அவன் நல்லா யோசிச்சுத் தான் இதைப் பண்றான்னுப் புரியுது ம்மா! ஒருத்தருக்குத் தன் மேல் ஈர்ப்பு வரனும்னா என்னவெல்லாம் செய்யலாம்னு யார் இவனுக்குச் சொல்லிக் கொடுத்தது?” என்று கோப பெருமூச்சுடன் வினவினார் பாலேந்திரன்.


அவரது மனைவியோ,”அதானே! இவன்கிட்டே தான் பேச முடியாதுன்னு அந்தப் பொண்ணுக்கிட்ட வெளிப்படையாகவே விசாரிச்சேன் ங்க” என்றார்.


“அந்தப் பொண்ணு என்ன சொன்னா?” எனவும்,


“நான் கட்டாயத்தால் எல்லாம் இதுக்கு ஒத்துக்கலை. எனக்குப் பிடிச்சுத் தான் அவரைக் கல்யாணம் செய்துக்கப் போறேன் அத்தைன்னு சொல்லி தன் கையில் போட்டிருக்கிற மெஹந்தியைக் கூடக் காமிச்சா ங்க!” என்று கலக்கத்துடன் உரைத்தார் மனோரமா.


தனது நெற்றியை நீவி விட்டுக் கொண்டவர்,”அப்போ அவங்க தான் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும் மா. இனிமேல் நம்மக் கையில் எதுவுமே இல்லை” என்று சொன்னார் அவரது கணவர்.


“ம்ஹ்ம். அவங்க கல்யாணத்துக்கு அப்பறமாவது புத்தி வந்து நல்லா வாழட்டும் ங்க!” என்று தானும் கூறி விட்டார் மனோரமா.


சில நேரங்களில் வாழ்வில் தெரியாமல் எடுக்கப்படும் முடிவுகள் விபரீதமான விளைவுகளைத் தரும்!


ஆனால், தெரிந்தே செய்யும் விபரீதங்களை எவ்வாறு சமாளிப்பது என்ற எண்ணமே இன்றி தங்களது திருமணத்திற்குத் தயாரானார்கள் பகீரதன் மற்றும் ஹாரண்யா.


ஆனால், அவனுடைய பெற்றோருக்கு நேரெதிரான மனநிலையில் இருந்தனர் அவளுடைய தாயும், தந்தையும்.


என்ன தான், அவன் பணக்கார மாப்பிள்ளையாக இருந்தாலும், தங்களிடம் வரதட்சணைப் பேச்சை எடுக்கவில்லை என்றாலும், தாங்கள் குறைந்து போய் விடக் கூடாது என்று நினைத்தவர்களோ, தங்களது மகளுக்கான நகை மற்றும் இதர பொருட்கள் யாவற்றையும் வாங்கி குவித்து வைத்து விட்டார்கள் இயமானன் மற்றும் மதுராஹினி.


தன்னுடைய திருமணத்திற்காக நிகழும் ஒவ்வொரு ஏற்பாடுகளையும் புகைப்படங்களாகச் சேகரித்து அவற்றை எல்லாம் தனது வாட்சப் குழுவில் பகிர்வதை முழுநேர வேலையாக வைத்திருந்தாள் ஹாரண்யா.


அவளது இந்த தடாலடியான மாற்றத்திற்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.


பகீரதனின் புகழைப் பாடிய தனது தாய், தந்தை மற்றும் அவளது மேன்மையைப் பற்றியும், அதனால் தான், இப்படியான ஒருவன் உனக்குக் கிடைத்திருக்கிறான் என்று தூபம் போட்டுக் கொண்டே இருந்ததால், அவன்பால் தனது மனதை சாய்த்து விட்டாள் ஹாரண்யா.


ஆனால், இந்த உலகையும், மகிழ்ச்சியும் நிதர்சனத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் இருக்குமிடத்தில் இருந்து காணாமல் போய் விடும் என்பதை அவள் மறந்து போனாள்.


தங்களது திருமணப் பத்திரிக்கைகளை எப்போதோ அச்சடித்து, அதையெல்லாம் முறையாக அனைத்து பெரிய மனிதர்கள் மற்றும் சினிமாத்துறையில் தன்னுடன் நட்புறவில் இருக்கும், இல்லாத அனைவருக்குமே பாரபட்சம் பார்க்காமல் அவர்களுடைய வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்து விட்டார்கள் பகீரதன் மற்றும் ஹாரண்யா.


இவர்களது பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைத்து விட்டு வந்தனர்.


அதற்குப் பிறகுத், தனது திருமணத்தின் முந்தைய நாளிலேயே தாமினியை அவளது வீட்டிற்கே சென்று தன்னுடன் வந்து திருமணம் முடியும் வரை தங்கி இருக்குமாறு கேட்டுக் கொள்ள, அதற்கு அவளது பெற்றோரும்,”அதனால் என்னம்மா? இவளை உன் கூட அனுப்பி வைக்கிறோம்” என்று தங்கள் மகளை ஹாரண்யாவுடன் அனுப்பி வைத்தனர்.


தங்கள் வீட்டிற்கு வந்திருந்த தாமினிக்கு ஏக உபசாரங்கள் செய்தார் மதுராஹினி.


ஏனெனில், அவரும், இயமானனும், தத்தமது சொந்த ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கும் உறவினர்களை எல்லாம் வரவேற்று அவர்களுக்கென்று தங்குவதற்கு இடங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே ஹாரண்யாவின் பெற்றோருக்கு நேரம் போதவில்லை.


இதில், மகளையும் அடிக்கொரு முறை, கவனித்துக் கொண்டு இருப்பது அவர்கள் இருவருக்குமே சிரமமாக இருந்தது.


அதனால், அவளுடன் தாமினி இருப்பது அவளது பெற்றோருக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை ஹாரண்யாவின் தோழியிடம் நேரடியாகவே உரைத்து அவளைப் பாராட்டினார் மதுராஹினி.


“நான் இவளைப் பாத்துக்கிறேன் ம்மா. நீங்க உங்க ரிலேடிவ்ஸைக் கவனிங்க” என்று அவருக்கு ஆறுதல் கூறினாள் தாமினி.


அதன் பின்னர், அவர்கள் இருக்கும் அறையிலிருந்து வெளியேறி தனது கணவனிடம் வந்து,


“அந்த மண்டபம் ரொம்ப பெருசு ங்க. நம்மளோட எல்லா ரிலேடிவ்ஸையும் இன்வைட் செஞ்சாலும் அங்கே இடம் இருக்கும்!” என்று சிலாகித்துப் பேசினார் மதுராஹினி.


“ஆமாம் மா. அவங்க வீட்டு ஆளுங்களும், சினிமா இண்டஸ்ட்ரீயில் இருந்தும், எல்லாரும் வருவாங்கள்ல? நாளைக்குத் தான், ஆக்ட்டர்ஸ் அண்ட் டைரக்டர்ஸ்ஸூன்னு எல்லாரையும் பார்க்கப் போறோம்!” என்று அவருக்கு நிகரான உற்சாகத்துடன் உரைத்தார் இயமானன்.



“நம்ம சொந்தக்காரங்களை நல்லா கவனிக்கனும். அவங்களுக்கு எதுவும் குறை வந்துடக் கூடாதுன்னு நம்ம சம்பந்தியம்மா கிட்டே கறாராக சொல்லிட்டேன் ங்க” என்றார் அவருடைய மனைவி.


இயமானன்,“நானே சொல்லனும்னு நினைச்சேன். நீ சொல்லியாச்சா? அப்போ சரி” என்று அவரிடம் கூறி விட்டார்.


ஹாரண்யாவும், தாமினியும் அடுத்த நாள் நடக்கவிருக்கும் வைபவத்தைப் பற்றிய பேச்சு வார்த்தையில் லயித்து விட்டார்கள்.


இவர்களை எல்லாம் தனது வார்த்தைக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பகீரதனோ, தனது அறையில் மிகுந்த யோசனையை மேற்கொண்டு இருந்தான்.


அந்தப் பெண்ணைத், தாம் எதற்காக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையோ அது?


‘கல்யாணத்துக்கு அப்பறம் அந்தப் பொண்ணைக் கொடுமைப்படுத்தப் போறோமா?’


‘இல்லையே?’


‘அவளுக்கு என்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்தப் போகிறேன்! உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் எனது புகழ், பெருமை இப்படி அனைத்தையும் அவளுக்கு எடுத்துக் காட்டப் போகிறேன்! அதனால் தான், இந்தத் திருமணம்!


அதே மாதிரி, அவளுடைய ஒரு சில குணாதிசயங்களும் தன்னை ஈர்த்தது என்பதில் அவனுக்கு ஐயமில்லை.


‘அதற்குத் திருமணம் தான் தீர்வா? இது ஒரு வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா!


‘அப்படியென்றால், பகீரதனின் மனதிற்குள் எங்கோ ஒரு மூலையில்


அந்தப் பெண் ஹாரண்யாவின் மீது காதல் மொட்டு விட்டிருக்கிறது தான்! அதனால் தான், அவளைத் திருமணம் செய்து கொள்ள விழைகிறான்! அதை அவனும், அவளும் புரிந்து கொண்டால் அவர்கள் இருவருடைய வாழ்விலும் வசந்தம் மட்டுமே வீசும்.


ஆனால், அதை உணர்ந்துப், புரிந்து கொள்வதற்குள் அனைத்தும் கை மீறிப் போயிருக்கும்.


“சுதன்! எங்களோட மேரேஜ் லைவ் ஆக உங்களோட சேனலில் தான், டெலிகாஸ்ட் ஆகனும்னு சொல்லி இருந்தேன்ல?” என்று செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருந்தான் பகீரதன்.


அதற்கு அவரோ,“யெஸ் சார்!” என்று கலக்கத்துடன் வினவினார் அந்தச் சுதன்.


ஏனென்றால்,’அவன் பேசுவதைப் பார்த்தால் அதைக் கேன்சல் செய்து விடுவானோ!’ என்ற அச்சம் அவருக்கு இருந்தது.


“அந்த அரேன்ட்ஜ்மெண்ட்டுக்கு யார், யார்? வரப் போறாங்களோ, அவங்களோட டீடெயில்ஸ் எனக்கு வேணும்” என்று அவருக்கு உத்தரவிட்டான்.


‘ஓஹ்! இவ்வளவு தானா?’ என்று நிம்மதியாக உணர்ந்தவரோ,


சுதன்,“கண்டிப்பாக சார். இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு அந்த டீடெயில்ஸ் வந்திருக்கும்” என்று அவனுக்கு வாக்கு கொடுத்தார்.


“ஓகே” என அந்த அழைப்பை வைத்து விட்டான் பகீரதன்.


“நீ இங்கேயே தங்கி ரெடி ஆகலாம்ல மினி?” எனத் தோழியிடம் கேட்டாள் ஹாரண்யா.


ஏனெனில், தனது வீட்டிற்குச் சென்று அடுத்த நாள் கிளம்பி வருவதாக அவளிடமும், மதுராஹினியிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள் தாமினி.


அதனால் தான், அவளிடம் இவ்வாறு கேட்கிறாள் ஹாரண்யா.


“இல்லைடி. நான் அங்கே போய் அப்பா, அம்மா கூட சேர்ந்து வரனும்னு நினைக்கிறேன்” என்றாள் அவளது தோழி.


“ஓஹோ! சரி மினி. நீ உங்க வீட்டுக்குப் போயிட்டு வா” என அவளை அனுப்பி வைத்தனர் மதுராஹினி மற்றும் ஹாரண்யா.


அன்றைய இரவு, ஒருவனுக்கு மட்டும் உறக்கமே வராமல் இருந்தது.


அந்த நபர் வேறு யாரும் கிடையாது மோஹித் தான்!


“இவன் தன்னோட மேரேஜ் கேன்சல் ஆகிடுச்சுன்ற நியூஸை ஏன் இன்னும் பிரஸ்ஸில் ரிலீஸ் பண்ணலை?” என்று குழப்பத்துடன் தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தான்.


ஒவ்வொரு நியூஸ் சேனலையும் கவனமாகப் பார்க்க வேண்டும் என்று தனது காரியதரிசியிடம் சொல்லி வேறு வைத்திருந்தவனோ,


இரவு வேளை ஆகியும், அப்படி எந்த விதமான தகவலும், செய்தியும் வரவில்லை என்றானதும், பகீரதனுக்குக் கால் செய்து விட்டான் மோஹித்.


- தொடரும்

இனிமேல் இந்த டிஸ்கிரிப்ஷன் வராது. அவங்க கல்யாணத்துக்கு அப்பறம் நடக்கிறது தான் வரும் ஃப்ரண்ட்ஸ்...
 
Last edited:

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍 😍 😍

இந்தப் பதினான்காம் அத்தியாயத்திற்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 15

“ஹலோ! என்னடா?” என்று அவன் தன்னிடம் ஏக வசனத்தில் பேசினாலும்,

“நீ உண்மையிலேயே நாளைக்குக் கல்யாணம் செய்துக்கப் போறியா பகீரதா?” என்று அவனிடம் ஆச்சரியத்துடன் வினவினான் மோஹித்.

அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தவனோ,”ஆமாம் டா. நான் எத்தனை தடவை தான் உங்கிட்ட சொல்றது? நாளைக்கு என்னோட கல்யாணம் நிச்சயமாக நடக்கும். அதில் நீயும் கண்டிப்பாக வந்து கலந்து என்னை வாழ்த்திட்டுப் போ” என்று ஜம்பமாக உரைத்தான் பகீரதன்.

அவனது இந்த உறுதியான அறிவிப்பு இவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

அவன் ஹாரண்யாவைத் திருமணம் செய்து கொள்வான் என்று சிறிது நேரத்திற்கு முன்பு வரைக்கும் மோஹித்திற்கு நம்பிக்கை இல்லை.

இது வெறும் கண் துடைப்பு என்று தான் இவன் நினைத்திருந்தான்.

ஆனால், அவனோ இவ்வளவு அடித்துச் சொல்லி விட்டப் பிறகு அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சந்தேகப்பட்டுக் கேள்வி எழுப்புவது அறிவீலித்தனம் என்பதைப் புரிந்து கொண்டவனோ,”ஓஹ்! அப்போ இது உன்னோட ஸ்ட்ராங் டிசிஷனா? சூப்பர் அண்ட் கங்கிராட்ஸ்!” என்று அவனுக்கு வாழ்த்து தெரிவித்தான் மோஹித்.

“ஹாஹா! தாங்க்ஸ் டா” என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்து விட்டான் பகீரதன்.

இதற்கு மேல், வேறென்ன விளக்கம் தனக்குத் தேவைப்படப் போகிறது என்று எண்ணியவனோ, பெருமூச்செறிந்து கொண்டான் மோஹித்.

மறுநாள், இன்னும் சில மணி நேரங்களில் நிகழப் போகும் திருமணத்தின் நாயகன் மற்றும் நாயகியும், தத்தமது அறையில் உங்களுக்கான அலங்காரங்களைச் செய்து கொண்டு இருந்தார்கள்.

திருமண நாளும் வந்து விட்டதால், இனித் தங்களது மகனிடம் என்னப் பேசினாலும் அது ‘விழலுக்கு இறைத்த நீர்!’ தான் என்பதை நன்றாகவே அறிந்து கொண்ட பாலேந்திரனும், மனோரமாவும் அமைதியாக வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.

அவர்களுடன் இணைந்து, தங்களுடைய மகளின் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து விருந்தினர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் இயமானன் மற்றும் மதுராஹினி.

முதன்மை விருந்தாளிகள் மற்றும் சினிமாத்துறையில் இருந்து வந்திருப்பவர்களுக்கு என்று தனியாக விருந்து சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது.

“இந்த டிரெஸ்ஸில் அப்படியே சும்மா தேவதை மாதிரி இருக்க ஹாரா!” என்ற வழக்கமான டயலாக்கைக் கூறித் தன்னுடைய தோழியின் கன்னங்களை வெட்கத்தில் சிவக்க வைத்தாள் தாமினி.

“தாங்க்ஸ்!” என்றவளோ, தனது அலங்காரங்களை ஒருமுறை திருப்தியாகப் பார்த்துக் கொண்டவளோ,

இன்னும் கொஞ்ச நேரத்தில், தன்னை மேடைக்கு அழைத்து விடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடனும், குதூகலத்துடனும் அங்கே காத்திருக்க ஆரம்பித்தாள் ஹாரண்யா.

அவளைத் தாமினி கேலி செய்ததைப் போல், ‘நீ நிஜமாகவே நாயகன் தான்!’ என்ற பாராட்டு வார்த்தைகளைச் சொல்லத் தனக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை என்பதால், தனது காரியதரிசியின் உதவியோடு திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தான் பகீரதன்.

“லைவ் டெலிகாஸ்ட் எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்குல்ல?” என்றவனிடம்,

“எஸ் சார்!” எனப் பதிலளித்தான் அவனது காரியதரிசி.

“ம்ம். ஓகே” என்று கூறி, அவனை அனுப்பி வைத்தான் பகீரதன்.

அவன் மற்றும் ஹாரண்யாவின் அறைக்கு வெளியே, மண்டபத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

அதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் பாதுகாப்பான அறைகளில் அவ்வளவு ஆட்களைப் போட்டிருந்தான் பகீரதன்.

மண்டபத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அத்தனைப் பாதுகாப்பு படலங்கள் போடப்பட்டு இருந்தது.

ஏனெனில், இந்த நிகழ்ச்சிக்கு சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் அனைத்து மனிதர்களும் வருவார்கள். எனவே தான், இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தான் பகீரதன்.

ஹாரண்யாவின் வேலை பார்க்கும் ஸ்டூடியோவில் இருந்தும் அவ்வளவு பேர் இங்கே வந்திருக்க, அவள் மீதிருந்தப் பொறாமையை அடக்கிக் கொண்டு ஒரு சில பெண்கள் வந்து அமர்ந்து இருந்தார்கள்.

“ப்ச்! இது ஏதோ டிரெண்ட் ஆகுறதுக்காக சும்மா ஒரு நியூஸ்ன்னு நினைச்சேன். ஆனால், அவர் நிஜமாகவே இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிறார் பாரேன்!” என்று அந்தப் பெண்கள் தங்களுக்குள் கூடிப் பேசிக் கொண்டனர்.

அவர்களது வயிற்று எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் விதமாக அளிக்கப்பட்ட பழச்சாறுகளையும் வாங்கிப் பருகினர்.

கடல் போல் பரந்து விரிந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான மண்டபத்தில் போடப்பட்டு இருந்த அனைத்து நாற்காலிகளும் நிரம்பி வழிந்தது.

கீழே இருப்பவர்களின் பேச்சுச் சத்தங்களைச் சட்டை செய்யாமல் மேடையிலிருந்த ஐயரோ தன் பாட்டிற்கு மந்திரங்களை உச்சரித்து விட்டு, “மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வாங்கோ!” என்றவுடன்,

“யாராவது ஃப்ரண்ட்ஸ் இருந்திருந்தால் மாப்பிள்ளைத் தோழனாக அனுப்பிக் கூப்பிட்டு வரச் சொல்லி இருக்கலாம்” என்று முணுமுணுத்துக் கொண்டே மகனின் அறைக்குச் சென்று,

“பகீ! உன்னை ஸ்டேஜூக்கு வரச் சொல்லியாச்சு” என்றார் பாலேந்திரன்.

“சரிப்பா” என்றவனோ, தனது காரியதரிசியை அழைத்து,”என்னை மேடைக்குக் கொண்டு போய் விடு” என்று அவனுக்குக் கட்டளையிட்டான் பகீரதன்.

தன் முதலாளி அவ்வாறு தன்னிடம் சொல்லுவார் என்பதை அறியாதவனோ,”நானா சார்?” என்று அவனிடம் திகைப்புடன் வினவினான்.

“யெஸ்! நீ தான்!” எனவும்,

“ஷூயர் சார். வாங்கப் போகலாம்” என்று அவன் கூறி விட,

உடனே தன் தந்தையிடம்,”அதான் இவன் என்னை அழைச்சிட்டு வரப் போறானே? நீங்க ஏன் இங்கே நிற்கிறீங்க? ஸ்டேஜூக்குப் போங்க” என அவரை அனுப்பி வைத்து விட்டுத் தன் காரியதரிசியுடன் மேடைக்குச் சென்றான் பகீரதன்.

அவனது மாப்பிள்ளைத் தோற்றத்தைக் கூடப் பெருமூச்சுடன் பார்வையிட்டனர் அவனுடன் நடிக்கும் நடிகைகள் மற்றும் ஹாரண்யாவுடன் வேலை பார்க்கும் பெண்கள்.

தங்களுடைய மகனின் இந்தக் கோலத்தைப் பார்க்க வேண்டும் என்று தானே, பாலேந்திரன் மற்றும் மனோரமாவிற்கு ஆசையாக இருந்தது.

இப்போது அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்த மணமகன் கோலத்தில் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்தான் பகீரதன்.

தான் சொல்லும் மந்திரங்களைக் கேட்டு அவற்றை அப்படியே கூறுமாறு அவனிடம் சொல்லி விட்டு அதை உச்சாடனம் செய்தார் ஐயர்.

அதை அவன் அப்படியே செய்யவும், சில மணித்துளிகள் முடிந்தவுடன்,”மணப்பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ!” என்ற ஐயரின் வார்த்தைகளுக்கு இணங்க,

தாமினியின் உதவியோடு, மேடைக்கு வந்து சேர்ந்தாள் அந்த விழாவின் நாயகியான ஹாரண்யா.

அவளது ஜாஜ்வல்லியம் மற்றும் பரிபூரண அழகைக் கண்டு அனைவரும் மெய் மறந்து போயினர்.

“இவ என்ன நாளாக, நாளாக இவ்வளவு ஜொலிச்சிக்கிட்டு இருக்கிறா?” என்று கூறியவர்களுடைய உடலின் அனைத்து செல்களிலும் காந்தியது.

“எல்லாம் பணம் பண்ற வேலை தான்!” என்று அந்தக் காந்தலை மறைத்துக் கொண்டு பேசினர்.

அதற்குள்ளாக, தனது மணாளனாகப் போகும் பகீரதனுக்கு அருகில் அமர வைக்கப்பட்டாள் ஹாரண்யா.

தானும், பகீரதனும் இல்லற வாழ்க்கையில் இணையப் போவதற்கு அடையாளமாக கண் முன்னால் நிகழும் நிகழ்வுகளைப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தவளை,

“நான் இப்பவும் கேட்கிறேன்… உனக்கு என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் தான? ஏதோ என்னோட கட்டாயத்தால் ஒன்னும் நீ சம்மதம் சொல்லலையே?” என்று தான் தயாராக யோசித்து வைத்திருந்த சொற்களைச் சரியான சமயம் பார்த்து அவளிடம் பிரயோகித்தான் பகீரதன்.

அதைக் கேட்டவுடன் ஸ்தம்பித்துப் போனவளோ,”அப்படியெல்லாம் எதுவும் இல்லை பகீ. நான் என்னோட முழு விருப்பத்தோட தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சேன். அப்படி இல்லைன்னா, நான் இங்கே, இப்படி உட்கார்ந்து இருக்க மாட்டேன்” என அவனுக்குப் பதில் அளித்தாள் ஹாரண்யா.

அந்தப் பதிலால் தனக்குக் கிடைத்த வெற்றியை எண்ணிப் பெருமிதம் அடைந்து கொண்டே, தன் கரத்தில் வந்து சேர்ந்த மஞ்சள் தாலியை அவளது கழுத்தில் அணிவித்தான் பகீரதன்.

அவனது ஸ்பரிசம் தன் கழுத்தில் பதியவும் உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது போலானது பெண்ணவளுக்கு.

ஆனால், அவளுக்கு நேர்மாறாக அவளைத் தன்னுடைமை ஆக்கிய கர்வத்துடன் சபையைப் பார்த்தான்.

அங்கு இருந்த சிலருக்கு, அவனது கர்வப் பார்வைக்கான காரணம் புரியவில்லை. ஆனாலும், அது அவனது சுபாவம் என்பதால் அட்சதையைத் தூவும் பணியைச் செய்தனர்.

இளம் பெண்களோ, ‘அவ்வளவு தான்! அனைத்தும் முடிந்து விட்டது! இனிமேல் வயிறு எரிந்து என்ன செய்வது? வயிற்றுப் பாட்டைப் பார்க்கலாம்’ என்று தங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

தாலி கட்டி முடிந்ததும், பகீரதனும், ஹாரண்யாவும் மீதமிருந்த சடங்குகளையும் நிவர்த்தி செய்தனர்.

அதன் பின்னர், தங்கள் பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்க அவர்களது கால்களில் விழவும்,

இவர்களின் திருமண வாழ்வு ஒருபோதும் பிரிவில் முடிந்து விடக் கூடாது என்ற வேண்டுதலை கடவுளிடம் சமர்ப்பித்தப் பின்னரே, பகீரதன் மற்றும் ஹாரண்யாவை ஆசீர்வாதம் செய்தனர்.

அதற்குப் பிறகு, மணமக்களை அவர்களது அறைக்கு அனுப்பி வைத்து விட்டு, மற்றவர்களை உணவருந்த அழைத்துச் செல்லுமாறு வேலையாட்களுக்கு அறிவுறுத்தி விட்டு, பகீரதன் குறித்துக் கொடுத்திருந்த முக்கியமான விருந்தாளிகளை அவனது பெற்றோரான பாலேந்திரனும், மனோரமாவும் பந்திக்குக் கூட்டிச் சென்றார்கள்.

மணமகன் அறையில் தயாராக ஆரம்பித்தப் பகீரதனோ, தன் கைப்பேசியில் மோஹித்திற்கு அழைத்து,”ஹாய்டா!” என்க,

“உனக்கு இப்போ தானே டா கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ளே என்னை வம்புக்கு இழுக்கக் கால் பண்ணிட்ட! உனக்கு என்ன தான்டா பிரச்சினை?” என எதிர்முனையில் இருந்தவன் கடுகடுத்தான்.

பகீரதன்,“அது தான்டா எனக்குப் பிரச்சினை! நீ தானே என்கிட்ட சவால் எல்லாம் விட்ட! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஹாரண்யாவோட கழுத்தில், நான் தாலி கட்டியதைப் பார்த்த தானே? இதான் உனக்கு நான் கொடுத்தப் பதிலடி!”

“ஓஹ்! அப்போ நீ அவங்களை லவ் பண்றதால் கல்யாணம் செய்துக்கலையா? எனக்குப் பதிலடி கொடுக்கனும்ன்ற விஷயத்துக்காகத் தான் தாலி கட்டுனியா?” என அவனிடம் வினவினான் மோஹித்.

அதில், சில கணங்கள் தடுமாறியவனுக்கு, அந்தக் கூற்று உண்மையானது தான் என்பது அவனுக்கு உறைத்தது!

ஆனாலும், தன்னுடைய இறுமாப்பை விட்டுக் கொடுக்காமல்,”நான் அவளை லவ் பண்றேன் தான் டா. அதை உங்கிட்ட நிரூபிக்கனும்ன்னு எனக்கு அவசியமில்லை” என்றவனுக்கே அந்த வார்த்தைகள் அபத்தமாகத் தெரிந்தது.

ஏனெனில், அவன் ஹாரண்யாவைத் திருமணம் செய்தது எதற்கு? என்பது அவனுக்குத் தானே தெரியும்?

“அப்படிங்குற? நீ சொல்ற கதையை எல்லாம் நம்பனும்ன்னு எனக்கும் அவசியம் இல்லை” எனப் பதிலளித்தான் மோஹித்.

“அப்போ பந்தியில் உட்கார்ந்து நல்லா சாப்பிட்டுட்டுக் கிளம்பு!” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு அந்தச் சூட்டிலேயே உடையை மாற்றினான் பகீரதன்.

ஹாரண்யாவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை! அவளது கால்கள் மட்டும் தான் தரையில் பதிந்திருந்தது. மற்றபடி, மனமோ வானத்தில் பறந்து கொண்டிருந்தது.

“நிறைய முக்கியமான விருந்தாளிங்க எல்லாரும் சாப்பிடாமல் காத்திருக்காங்க. அதை மனசில் வச்சிட்டு சீக்கிரம் ரெடியாகிட்டு வா” என மகளுக்கு அறிவுறுத்தி விட்டுப் போனார் மதுராஹினி.

பகீரதனும், ஹாரண்யாவும் ஆயத்தம் ஆகி மேடைக்குத் திரும்பினர்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 16

திருமணப் புடவையை மாற்றி விட்டு வரவேற்பிற்குத் தகுந்தாற்போல் டிசைனர் உடையை அணிந்து வந்து நின்றவளின் கரத்தை உரிமையுடன் பிடித்துக் கொண்டுத் தன் உயர் ரக உடையுடன் அனைவருக்கும் காட்சி அளித்தான் பகீரதன்.


அவனது முகத்தில் இருந்த இறுமாப்பைப் பார்க்கையில் ஆத்திரம் கரையை உடைத்துக் கொண்டு வருவதைப் போல இருந்தது மோஹித்திற்கு.

பகீரதன் சொன்னதைப் போல அவன் உணவுண்ணவில்லை. ஆனால், மண்டபத்தில் இருந்து வெளியேறவும் இல்லை. அவனுடைய வரவேற்பு விழா முடியும் வரை அங்கேயிருந்து விட்டுத் தான் கிளம்ப வேண்டும் என்ற உறுதியுடன் அமர்ந்திருந்தான்.

என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறும் மற்றும் மணமக்களை யார், யார் வாழ்த்துகிறார்கள் என்பதைப் பார்வையிட்டுக் கொண்டே விழாவில் கலந்து கொண்ட பிரபலமான தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் வலியச் சென்று பேசுவதை வேலையாக வைத்திருந்தான் மோஹித்.

தன்னுடைய இரண்டாம் இட அடையாளத்தை மாற்றி முதலிடத்தில் வர வேண்டுமென்ற துடிப்பின் காரணமாகத் தன்னைப் பகீரதன் அவமானப்படுத்தினாலும் கூட அவ்விடத்தை விட்டு நகரவில்லை அவன்.

அவனைக் கண்ணைச் சுருக்கிப் பார்த்து, ஏளனச் சிரிப்பை உதிர்த்தான் பகீரதன்.

ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனக்கு வாழ்த்துகளை வழங்கிய அனைவருக்கும் சிரித்த முகமாக நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

சில மணி நேரங்கள் கடந்த பின்னர், அந்த மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டு இருக்க,”எல்லா சீஃப் கெஸ்ட்ஸூம் சாப்பிட்டுத் தானே போனாங்க?” என்று தன் காரியதரிசியிடம் வினவினான் பகீரதன்.

“ஆமாம் சார். மோஹித் சார் மட்டும் சாப்பிடலை” என்றவனிடம்,

“அவன் சாப்பிடாமல் இந்த மண்டபத்தை விட்டு வெளியேறக் கூடாது!” எனக் கடுமையாக எச்சரித்து அனுப்பியவன், தன்னுடைய இதழ்களில் மீண்டும் புன்னகையைப் படர விட்டுக் கொண்டான் பகீரதன்.

அவனது உத்தரவைச் சிரமேற் கொண்டு அதைச் செய்து முடிக்க வேண்டி மோஹித்திற்கு அருகிலிருந்த பிரபலமான இயக்குநரிடம்,”ஹலோ சார்! நீங்களும், மோஹித் சாரும் இன்னும் சாப்பிடாமல் இருக்கீங்க. ப்ளீஸ் வந்து சாப்பிடுங்க!” என்று மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டான் பகீரதனின் காரியதரிசி.

“ஓஹ் அப்படியா? நீங்களும் சாப்பிடலையா மோஹித்?” என்ற அந்த இயக்குநரின் கேள்விக்கு,

“ஆ.. மாம் சார்” என்றவனிடம்,

“அப்போ வாங்க நாம ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டே பேசலாம்” என அவனை அழைக்கவும்,

“ஓகே சார்” என்று கூறியவன், வேறு வழியின்றி அவருடன் உணவுண்ணச் சென்றான் மோஹித்.

அதைத் தன் முதலாளியிடம் தெரிவித்தவனைப் பாராட்டும் விதமாக தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பினான் பகீரதன்.

அதே சமயம்,”இவனுக்குத் தான் பசிக்கலை. எதையோ சாதிச்சா மாதிரி கண்ணு மண்ணுத் தெரியாமல் சந்தோஷத்தில் நின்னுட்டு இருக்கான். ஆனால், தன்னோட பொண்டாட்டிக்குப் பசிக்குமேன்னு யோசிக்க வேண்டாமா?” என்று தன் கணவரிடம் புலம்பினார் மனோரமா.

“ஆமாம் மா. நீ போய் அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட அழைச்சிட்டு வா” என்று அவருக்கு அறிவுறுத்தினார் பாலேந்திரன்.

“சரிங்க” என்றவர் அங்கேயிருந்து நகரும் தருவாயில்,

“ஏன் சம்பந்தி அவங்களைப் பந்திக்குக் கூட்டிட்டுப் போகலாமா? இன்னும் சாப்பிடாமல் இருக்காங்க” என்று ஹாரண்யாவின் தாய் மதுராஹினியும் அவரிடம் அதே விஷயத்தைப் பற்றிக் கேட்கவும்,

“அதைச் சொல்லத் தான் நானும் கிளம்பினேன் சம்பந்தி!” என அவரையும் தன்னுடன் மேடைக்கு அழைத்துச் சென்ற மனோரமா,

“பகீ! நீயும், உன் பொண்டாட்டியும் முதல்ல வந்து சாப்பிடுங்க” என்று மகனிடம் கூறவும்,

“உனக்குப் பசிக்குதா ரணு?” என்று மனைவியிடம் கேட்டான் பகீரதன்.

“ஆமாம்ங்க. எனக்கு ரொம்ப நேரமாகப் பசிக்குது” என்று களைத்தக் குரலில் உரைத்தாள் ஹாரண்யா.

“அப்போவே சொல்லி இருக்க வேண்டியது தானே? என மனைவியை அதட்டியவன்,

“வா போகலாம்” என்று அவளுடன் சேர்ந்து தங்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்த உணவுகளைச் சுவை பார்க்கப் போனான் பகீரதன்.

அவர்களுடன் இணைந்து தங்களது சாப்பாட்டையும் உண்டு முடித்தனர் மணமக்களின் பெற்றோர்கள்.

அப்போதும் கூட, அந்த மண்டபத்தை விட்டு வெளியேறாமல் இருந்தான் மோஹித்.

அந்த வரவேற்பு விழா நிறைவிற்கு வந்ததை அறிந்து கொண்டதும்,”சிசிடிவி வீடியோக்களை நல்லா செக் பண்ணிட்டு மண்டபத்துக்கான பணத்தை செட்டில் செய்துட்டு வாங்க” எனத் தன் காரியதரிசி கபீர் மற்றும் பாதுகாப்புத் தலைவனிடமும் கட்டளையிட்டான் பகீரதன்.

அதற்குப் பிறகு, மணமக்களும், அவர்களுடைய குடும்பமும் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றனர்.

ஹாரண்யாவின் இல்லத்தின் வாயிலில் மணமக்களை நிறுத்தி ஆரத்தியைச் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றனர்.

அவர்களை அமர வைத்துப் பால், பழம் கொடுக்கும் சடங்கை முடித்தார்கள்.

இந்தச் சடங்குகளில் ஆர்வம் இல்லையென்றாலும் கூட இன்று ஒரு நாள் மட்டும் இதையெல்லாம் பொறுத்துக் கொள் என்ற தன் தாயின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்துச் சம்பிரதாயங்களையும் பொறுமையாகச் செய்தான் பகீரதன்.

அதே சமயம், அவற்றை மிகவும் ஆர்வமாகச் செய்த மருமகளை மிகவும் பிடித்துப் போனது மனோரமாவிற்கு.

சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர், தன்னுடைய பெற்றோரைக் கலக்கத்துடன் நோக்கினாள் ஹாரண்யா.

அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டு மகளிடம் சென்று,”நீ ஒரு பொறுப்பான பொண்ணுன்னு எங்களுக்குத் தெரியும் மா. ஆனாலும் இன்னும் கூடுதல் பொறுப்போட இருந்து உன்னோட கல்யாண வாழ்க்கையைச் சிறப்பாக வாழு!” என்ற மதுராஹினிக்கும் தொண்டையை அடைத்தது.

“சரி ம்மா” என்ற ஹாரண்யாவிற்குத்,

தனது தாய் மற்றும் தந்தையின் அருகாமையில் இன்னும் கொஞ்ச காலம் இருந்து இருக்கலாமோ? என்று ஆழ்மனம் ஏங்கத் தொடங்கியதை மறைக்க இயலாமல் விழிகள் கலங்கியது.

தன் மனைவி மற்றும் மகளின் உணர்ச்சிப்பூர்வமான சம்பாஷணைகளைப் பார்த்தவுடன் அதுவரையில் அமைதியாக இருந்தவர்,

அவர்களிடம் சென்று,”ஹாரா ம்மா!” என்று நெகிழ்ந்து போய் மகளை அணைத்துக் கொண்டார் இயமானன்.

தன் பெற்றோரின் பாச மழையில் நனைந்து, நெகிழ்ந்து, குளிர்ந்து கொண்டிருந்த ஹாரண்யாவையும், அவளைச் சமாதானம் செய்த அவளது பெற்றோரையும் நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

அவர்களுக்கு நேர்மாறாகத் தன்னுடைய முகத்தில் உணர்வுகளைக் காட்டாமல் நிச்சலனமாக நின்றிருந்தான் பகீரதன்.

அவன் அவர்களுக்கு அருகிலும் செல்லவில்லை, மனைவிக்கு ஆறுதல் வார்த்தைகளும் கூறவில்லை.

இந்த நிகழ்ச்சி எப்போது முடியும்? என்று தனக்குள் தோன்றிய அசுவாரசிய மனநிலையை தன்னுடைய வதனத்தில் வெளிப்படுத்தாமல் இருக்கப் பெரும்பாடுபட்டான் பகீரதன்.

தங்களை ஒருவாறு சமாளித்துக் கொண்டுத், தங்களது விழிகளையும், வதனங்களையும் சீர்படுத்திக் கொண்டவர்கள், மற்றவர்களைச் சங்கடத்துடனும், மன்னிப்புக் கோரும் பார்வையுடனும் அவர்களை ஏறிட்டனர் ஹாரண்யாவும், அவளது பெற்றோர்.

“மாப்பிள்ளை! எங்கப் பொண்ணை இவ்வளவு சீக்கிரமாக கல்யாணம் செஞ்சிக் கொடுப்போம்ன்னு நாங்க நினைக்கவே இல்லை! ஆனால், எல்லாம் நல்லபடியாக நடந்து முடிஞ்சிருச்சு. உங்களுக்கு எங்க மக மேல ஏதாவது குத்தம், குறை இருந்தால் அவகிட்ட கண்டிப்பாகச் சொல்லிப் புரிய வைங்க. அது அவளுக்குத் தப்பாகத் தெரிஞ்சா திருத்திக்குவா! மத்தபடி, அவ நல்ல, மெச்சூர்ட் ஆனப் பொண்ணு! உங்களையும், உங்க அப்பா, அம்மாவையும் நம்பி தான் எங்கப் பொண்ணை நாங்க இங்கே விட்டுட்டுப் போறோம்! நல்லா பார்த்துக்கோங்க!” என்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டார் இயமானன்.

அதைக் கேட்டதும்,”நான் ஹாரண்யாவை நல்லா பார்த்துப்பேன் மாமா, அத்தை!”என்று அவருக்கு உறுதி அளித்தான் பகீரதன்.

அவனது வார்த்தைகளை நம்பிய ஹாரண்யாவின் பெற்றோரோ, தங்கள் மகளை அவளுடைய புகுந்த வீட்டாருடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அந்தக் கார் பகீரதனின் இல்லத்தை அடைந்ததும், உள்ளே சென்றவர்கள், சில கணங்கள் அமைதியாக இருந்து விட்டு,”என் கூட வா ஹாரா! உனக்கு நம்ம வீட்டுப் பூஜை ரூமைக் காட்றேன்” என்று மருமகளைக் கூப்பிட,

பகீரதன்,“நீ போயிட்டு வா ரணு” என்ற கணவனின் ஒப்புதலைக் கேட்டதும் தன் மாமியாருடன் செல்லத் தயாரானாள் ஹாரண்யா.

“நீயும் வந்தால் நல்லா இருக்கும்” என்று அவனுக்கு அறிவுறுத்தினார் மனோரமா.

“நான் எதுக்கும்மா?” என்கவும்,

“இன்னைக்கு ஒருநாள் உன் அம்மா சொல்வதைக் கேளேன் டா!” என அவனைக் கடிந்து கொண்டார் பாலேந்திரன்.

அதைக் கேட்டதும், தன் மனைவியின் முன்னால், தந்தை இப்படி தன்னைப் பேசியது தலை இறக்கமாகப் போய் விட்டது பகீரதனுக்கு.

ஆனாலும், இன்றொரு நாள் மட்டும் தான் என்பதால், போனால் போகிறது என்று தன் பெற்றோர் சொல்வதைக் கேட்க முடிவெடுத்து,

“சரிப்பா!” என்று அவரிடம் கூறியவன், தாய் மற்றும் மனைவியைப் பின்பற்றிச் சென்றான் பகீரதன்.

தனக்கென்று கணவர் மற்றும் மகன் உருவாக்கிக் கொடுத்தப் பூஜை அறையின் கதவுகளைப் பெருமையுடன் திறந்தார் மனோரமா.

அவர்களது பிரம்மாண்ட வீட்டினுள் தனியாக ஒரு பெரிய அறையில், சிவன் மற்றும் பார்வதியின் பெரிய அளவிலான புகைப்படங்கள் மாட்டப்பட்டும், அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.

அந்த இரு தெய்வ புகைப்படங்களுக்கு அருகிலேயே அவர்களது புத்திரர்களான விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் புகைப்படங்களையும் வைத்திருந்தார்கள்.

அதேபோல், அவற்றிற்கு செய்திருந்த அலங்காரங்கள் யாவற்றையும் கண்ட ஹாரண்யாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

தீபாராதனை காட்டுவதற்குப் பயன்படுத்தும் பொருட்களையும் எடுத்துப் பார்த்து விட்டு வைத்தாள் ஹாரண்யா.

ஆனால், எந்தவொரு அலட்டலும் இன்றி அந்தப் பூஜையறைக்குள் நின்றிருந்தான் பகீரதன்.

“தினமும் காலையில் குளிச்சிட்டு இங்கே வந்து கண்ணை மூடி உட்கார்ந்தால் போதும்! அப்படியே மனசுக்கு அமைதியாக இருக்கும். சாந்தம் கிடைக்கும்! இந்த மகாலட்சுமி விளக்கு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ம்மா!” என்று அதை எடுத்து மருமகளிடம் காட்டினார் மனோரமா.

“சூப்பராக இருக்கு அத்தை” என்றாள் ஹாரண்யா.

“ம்மா! இந்தப் பூஜை ரூமை அப்பறமாகப் பொறுமையாக அவளுக்குக் காட்டுங்க. இப்போ என்ன வேலை செய்யனுமோ அதைச் சொல்லுங்க. எங்களுக்கு ரொம்பவே டயர்ட் ஆக இருக்கு!” எனத் தன் அன்னைக்கு வலியுறுத்தினான் பகீரதன்.

“சரிடா!” என்றவர்,

“இந்தாம்மா தீப்பெட்டி, நீ வந்து விளக்கை ஏத்து” என்று அதை மருமகளின் கரத்தில் திணித்தார் அவளது மாமியார்.

உடனே தன் சேலையை லாவகமாகப் பிடித்துக் கொண்டு விளக்கை ஏற்றினாள் ஹாரண்யா.

அந்த நேரத்தில், தன் கணவரையும் அழைக்க, அவரும் வந்ததும், அந்த நால்வரும் தங்களது இமைகளைத் தாழ்த்தி தெய்வங்களைத் தரிசித்தார்கள்.

அதன் பின்பு, மணமக்கள் இருவரும் பாலேந்திரன் மற்றும் மனோரமாவின் கால்களில் விழுந்ததும்,

தங்களது கண்களை நிறைத்த இந்தப் புதுமணத் தம்பதி அன்பு மற்றும் அறம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி அவர்களை ஆசீர்வதித்து எழுப்பி விட்டனர்.

அதற்குப் பிறகு, புது மருமகளைப் பாலைக் காய வைக்கச் சொல்லி, அதை அனைவருக்கும் கொடுக்கச் சொன்னார் மனோரமா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 17

அனைவரும் பாலைக் குடித்து முடித்ததும்,”இப்படியே இருந்தால் உனக்குக் கசகசன்னு இருக்கும் மா. துணியை மாத்திக்கிறியா?” என்று மருமகளிடம் வினவினார் மனோரமா.

“சரிங்க அத்தை” என்றவளிடம்,

“உன் பேக்கைப் பகீயோட ரூமுக்குக் கொண்டு போய் வைக்கச் சொல்றேன். அங்கேயே போய் டிரெஸ்ஸை மாத்திக்கோ” என்ற தாயிடம்,

விழிகள் இடுங்கப் பார்த்த மகனோ,“ஹாராவோட துணியை எதுக்கு என் ரூமில் வைக்கச் சொல்றீங்க ம்மா?” என்று வினவினான்.

அவனது இந்தக் கேள்வியில் அவனது பெற்றோர் இருவரும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அதுவும், ஹாரண்யாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

அவளது முகம் மற்றும் உடல் இறுகியதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட மனோரமா,”வேற எங்கடா கொண்டு போய் வைக்கனும்?” என்று மகனிடம் அதட்டிக் கேட்டார்.

பகீரதன்,“இந்த வீட்டில் வேற ரூம் எதுவும் இல்லையா என்ன? அங்கே வைக்க வேண்டியது தானே? இல்லைன்னா, கெஸ்ட் ரூமில் வைக்கலாம்ல?” என்று இயல்பாகச் சொன்னவுடன்,

அதைக் கேட்ட பிறகு, ஹாரண்யாவின் பாதங்கள் தரையில் பதிய மறுத்தது போலும்! அப்படியே சோபாவில் சரிந்து அமர்ந்து விட்டாள்.

“டேய்! நீ தாலி கட்டி கூட்டிட்டு வந்த பொண்டாட்டியை கெஸ்ட் ரூமில் தங்க வைக்கச் சொல்ற? என்னடா நினைச்சிட்டு இருக்கிற?”என்று மகனிடம் கடுமையாக வினவினார் பாலேந்திரன்.

உடனே யாரும் எதிர்பாராத வண்ணம் பக்கென்று வாய் விட்டுச் சிரித்தவனோ,”ப்பா! ம்மா! ஹேய் ஹாரா! நான் பேசியதை எல்லாம் நம்பிட்டீங்களா?” என்று மூவரையும் பார்த்துக் கேட்டான் பகீரதன்.

அவனது தந்தையோ,“டேய்!” என அவனை மீண்டும் அதட்டவும்,

“அப்பா! நான் இவ்வளவு நேரமாகச் சும்மா ப்ராங்க் பண்ணேன்! நம்ம வீட்டுக்கு முதல் முதல்ல ஹாரா வந்திருக்கா. அவளைக் கொஞ்சம் கலாட்டா செஞ்சுப் பார்க்கலாம்ன்னு பேசினால் என்னை இப்படி அதட்டி பயமுறுத்துறீங்க!” என்று கூறிச் சத்தமாக நகைத்தான்.

அவன் அவ்வாறு கூறியதைக் கேட்டவுடன்,”எப்போ, எந்த விஷயத்தில் எல்லாம் விளையாடனும்னு உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையாடா பகீ! என் மருமகளைப் பாரு! எப்படி இடிஞ்சுப் போய் உட்கார்ந்து இருக்கா!” என்று அவனைத் திட்டி விட்டு,

மருமகளின் அருகில் சென்று,”இவன் நடிகன் தானே ம்மா? அதான், இப்படி அடிக்கடி நடிச்சு எங்களை ஏமாத்துவான்! இவனுக்கு இது ஒரு பொழுதுபோக்கா போச்சு. நீ தண்ணீர் குடி!” என அவளுக்கு டேபிளில் இருந்த ஜக்கை எடுத்துக் கொடுத்துக் குடிக்க வைத்தார் மனோரமா.

சிறிதளவு தண்ணீர் வயிற்றுக்குள் சென்ற பின்னர் தான் சுற்றுப்புறம் உணர்ந்தாள் ஹாரண்யா.

“படவா! அந்தப் பொண்ணை இப்படியா கலங்கடிப்ப! எங்களுக்கும் ஒரு நிமிஷத்தில் ஷாக் ஆயிடுச்சு!” என்று தன் பங்கிற்கும் அவனைத் திட்டினார் பாலேந்திரன்.

“போதுமே! நான் தான் ப்ராங்க்ன்னு சொல்லிட்டேனே! இப்போ என்ன உங்க மருமக கிட்டே சாரி கேட்கனுமா?” என்றவன்,

தன் மனைவியை நெருங்கி, அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து,”சாரி ரணு ம்மா!” எனக் கூறி விட்டான் பகீரதன்.

கணவனின் இந்தச் செய்கையைக் கண்டதும், அவளது முகம் சற்று மலரத் துவங்கியது.

“இட்ஸ் ஓகே பகீ! ஆனால் ரொம்ப பயந்துட்டேன்!” என்று அவனிடம் மெல்லிய குரலில் மொழிந்தாள் ஹாரண்யா.

“அதுக்குத் தான் மன்னிப்புக் கேட்டேனே! நான் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கனும்?” என அவளிடம் இறைஞ்சினான் பகீரதன்.

“அச்சோ! எழுந்திருங்க” என்றவள் கணவன் எழுந்து நின்றவுடன்,

“இனிமேல் இப்படி பண்ணாதீங்க” எனக் கேட்டுக் கொண்டாள் அவனது மனைவி.

“ஷூயர்” என அவளிடம் சொன்னவன், தன் பெற்றோரைப் பார்க்க,

அவர்களோ தங்கள் மருமகளே அவனை மன்னித்தப் பிறகுத் தாங்கள் மட்டும் மகன் மீது கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருப்பதில் நியாயமில்லை என்று அவர்களும் இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள்.

அதன் பின்னர், வேலையாளை அழைத்து மருமகளுடைய பையைக் கொண்டு போய் மகனுடைய அறையில் வைத்து விட்டு வரச் சொன்னவர்,

”நீ டிரெஸ்ஸை மாத்து ஹாரா” என்றார் மனோரமா.

“சரி ங்க அத்தை” என்று அவரிடம் கூறி விட்டுத் தயக்கத்துடன் கணவனைப் பார்த்தாள் ஹாரண்யா.

அதைப் புரிந்து கொண்டவன்,”ஹேய் நான் தான் அப்போவே சொன்னேனே? அது ப்ராங்க். நீ என் ரூமுக்குப் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று கூறி மனைவியிடம் அனுப்பி வைத்தான் பகீரதன்.

“இப்பவும் ஏதாவது ஷூட்டிங் இருக்குன்னுக் கிளம்பிப் போயிடாதேடா! அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்காவது வீட்டில் இரு” என்று தன் அவனுக்கு வலியுறுத்தினார் பாலேந்திரன்.

“ஊஃப்! சரிங்க அப்பா” என்றவனுக்கு இதெல்லாம் புதியதாக இருந்தது. ஆனாலும், இன்னும் ஒரு வாரம் இவற்றையெல்லாம் சமாளித்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று எண்ணிச் சலித்துக் கொண்டான் பகீரதன்.

தன் கணவனின் அறையைச் சுற்றிப் பார்த்தவளுக்கு, அங்கே சுவற்றில் இருந்த அவனது வித விதமானப் போஸ்களில் இருந்த புகைப்படங்களை ரசித்தவள் துரிதமாக உடை மாற்றி விட்டு வந்தாள் ஹாரண்யா.

அதற்குப் பின், தனது ஆடையை மாற்றிக் கொண்டு வந்தான் பகீரதன்.

அவர்களுக்காக உணவு தயாரிக்கச் செல்லப் போனத் தன் மாமியாரிடம்,”நானும் உங்களுக்கு உதவி பண்றேன் அத்தை” எனத் தன்னைப் பின் தொடர்ந்தவளைத் தடுத்து,

“வேண்டாம் மா. நாளையில் இருந்து எனக்குச் சமையலில் உதவி பண்ணு. இப்போ ரெஸ்ட் எடு” என்று அவளை அமரச் சொல்லி விட்டு உள்ளே போனார் மனோரமா.

அவர் சென்றதும்,”இவனோட நடிப்பு அனுபவத்தைப் பத்தித் தெரியும். ஆனால், உன்னோட ஆங்க்கர் வேலையைப் பத்தி சொல்றியா? நான் தெரிஞ்சிக்கிறேன்!” என்று மருமகளிடம் விண்ணப்பித்தார் பாலேந்திரன்.

“கண்டிப்பாக சொல்றேன் மாமா” எனத் தன்னுடைய வேலையைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள் ஹாரண்யா.

அதை ஆர்வமாக கேட்க ஆரம்பித்து விட்டார் அவளது மாமனார்.

மனைவியின் பேச்சை அசுவாரசியாக கேட்டுக் கொண்டிருந்த பகீரதனோ, அதில் சில இடங்களில் தன்னை மறந்து சுவாரசியமாகி அவர்களது உரையாடலில் தானும் கலந்து கொண்டான் பகீரதன்.

அதேபோல், சமையல் முடித்து விட்டு அவர்களுடைய பேச்சில் தானும் கலந்து கொண்டார் மனோரமா.

“உன் வேலையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? நீயும் நிறைய மெழிகளைத் தெரிஞ்சு வச்சிருக்கியே ம்மா”என்று ஆச்சரியமாக வினவினார் பாலேந்திரன்.

“ஆமாம் மாமா. எனக்கு என்னோட வேலை ரொம்ப பிடிக்கும். அதனால் அதுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கனும்ல? அதான், ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துக் கத்துக்கிட்டேன்!” என்று கூறிப் புன்னகைத்தாள் அவரது மருமகள்.

‘இப்படித் தான் தங்கள் மகளையும் இவள் கைக்குள் போட்டுக் கொண்டு அவனிடம் கழுத்தை நீட்டி விட்டாளா!’ என அவர்கள் முகம் சுழிப்பார்களோ என்ற சங்கடத்துடன் இருந்தவளுக்குத் தன் உத்தியோகத்தைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக கேட்பவர்களை நினைத்து ஆசுவாசம் அடைந்தாள் ஹாரண்யா.

தன் அருகிலிருந்த கணவனும் கூட சுவாரசியமாகத் தன்னுடைய கதையைக் கேட்பதைக் கவனித்தவளுக்கு இன்னும் அகம் மகிழ்ந்து போயிற்று.

“பேச்சு ஆர்வத்தில் சாப்பாட்டை மறந்துட்டோம் பாருங்க. வாங்க சாப்பிடலாம்” என்று நால்வரும் டைனிங் டேபிளுக்குப் போய் உணவுண்டு எழுந்தனர்.

சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணிய மனோரமாவோ,”பகீ! உன் ரூமை நைட் ஒன்பது மணி வரைக்கும் யூஸ் பண்ண முடியாது. அது வரை நீங்க கீழேயே இருங்க” என்றவுடன்,

“சரி ம்மா” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான் பகீரதன்.

அவனுக்கு மனைவியின் நிலை புரியவில்லை போலும்!

எதையுமே கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தான்.

ஆனால், ஹாரண்யாவிற்கோ, அறையை அலங்கரிக்கத் தான் அவ்வாறு கூறுகிறார்கள் என்பது புரியாமலா இருக்கும்?

இப்போதே அவளுக்கு வியர்த்து வடியத் தொடங்கி விட்டது.

பகீரதன்,“நான் சொல்றப்போ எங்களோட கல்யாண ஃபோட்டோ ஒன்னை மட்டும் முதலில் ரிலீஸ் பண்ண சொல்லு கபீர், மதத்தை எல்லாம் பொறுமையாக வெளியிடலாம்” என்று தன் காரியதரிசிக்கு செல்பேசி வாயிலாக கட்டளை பிறப்பித்து விட்டு அழைப்பைத் துண்டித்தவன்,

“உனக்கு எந்தெந்த ஃபோட்டோஸ் அண்ட் ஃபூட்டேஜஸ் வேணும்னு சொல்லு. அதையே ரிலீஸ் பண்ணிடலாம்” என்று மனைவியிடம் சொல்ல,

“சரிங்க” என்றவளது முகத்தை ஆராய்ந்தவனுக்கு அவள் சோர்ந்து இருப்பதாக எண்ணி,”நீ கெஸ்ட் ரூமில் போய்த் தூங்கு ரணு” என்று அவளை அறிவுறுத்தினான் அவளது கணவன்.

உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டு அந்த அறைக்குள் போய் விட்டாள் ஹாரண்யா.

தான் விளையாட்டாகச் சொன்னதை இப்போது நிஜமாக நடத்திக் காட்டி விட்டான் பகீரதன்.

ஆனால் இதை ஒன்றும் அவன் திட்டமிட்டுச் செய்யவில்லை. இயல்பாக நடந்து விட்டது.

அதை உணர்ந்து கொள்ளும் மனநிலையில் அவனும் இல்லை, ஹாரண்யாவும் இல்லை.

அந்தத் திருமணம் நிகழும் வரையில் மட்டுமே தான் தன்னுடைய விருப்பத்திற்கு அவளை ஆட்டுவித்தான் பகீரதன்.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு, அவன் கூறாமலேயே அவனது மகுடிக்கு மயங்கி விட்டாள் ஹாரண்யா.

அந்த மயக்கம் தெளிய வேண்டிய நாளும் வெகு தூரமில்லை என்பதை புது மணத் தம்பதி இருவரும் அறிந்தார்களில்லை.

இதற்கிடையில், பகீரதனின் அறை மிகவும் அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அவர்களது புது வாழ்வைத் தொடங்குவதற்கு!

- தொடரும்
 

Shalini shalu

Moderator
ஹாய் மை டியர்ஸ்...

தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...


 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 18

மாலையில் உறங்கி எழுந்த ஹாரண்யாவிற்கு அப்போது தான் புத்துணர்வாக இருந்தது.

ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

அதனால், அந்த அறையை விட்டு வெளியே வந்தவள்,

அங்கே சோபாவில் உட்கார்ந்திருந்த மூவரிடமும் சென்றாள் ஹாரண்யா.

“உட்கார் ரணு” என அவளைத் தன் பக்கத்தில் அமரச் சொன்னான் பகீரதன்.

அவள் உட்கார்ந்ததும்,”காஃபி குடிக்கிறியா ம்மா?” என்று வினவிய மாமியாரிடம்,

“ஆமாம் அத்தை” என்று தயக்கமாக உரைத்தாள் ஹாரண்யா.

உடனே அவளுக்கான பானத்தைத் தயாரித்துக் கொண்டு வருமாறு வேலையாளிடம் கூறி அனுப்பினார் மனோரமா.

“நான் வரும் போது நீங்க ஏதோ பேசிட்டு இருந்தீங்க! நான் உங்களை எதுவும் தொந்தரவு செய்துட்டேனா?” என்று அவர்கள் மூவரிடமும் வினவினாள் ஹாரண்யா.

“சேச்சே! உன்னால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை ம்மா. நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தோம் மா” என்றார் பாலேந்திரன்.

அதற்குப் பிறகு இயல்பாகி தானும் அவர்களுடன் அளவளாவினாள் ஹாரண்யா.

அவளுக்குக் காபியைக் கொண்டு வந்து கொடுத்ததும்,”அப்படியே எங்க மூனு பேருக்கும் டீ கொண்டு வா” என்று வேலையாளிடம் கூறினார் மனோரமா.

அப்படியானால், இந்த வீட்டில் தான் ஒருவள் மட்டுமே காபி குடிக்கும் ஆள் என்பதை நினைத்தவள்,’இந்த சின்ன விஷயத்திலேயே அவங்களுக்கும், எனக்கும் விருப்பம் வேறுபடுதே!’ என்று எண்ணியவள்,

‘இது அவரவர் விருப்பம்! அதற்கென்ன செய்வது?’ என்று தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

ஆனால் இந்த வேறுபாட்டை மற்ற மூவரும் யோசித்துக் கூடப் பார்க்கவில்லை என்பதை அவர்களது இயல்பான முக பாவனையின் மூலம் அறிந்து கொண்ட பின் நிம்மதி அடைந்தாள் ஹாரண்யா.

“நைட் டின்னருக்கு என்ன செய்யனும்னு சொல்லிட்டு வர்றேன்” என்று எழுந்து சமையலறைக்குப் போய் விட்டார் மனோரமா.

அவர் சென்றதும்,”அவங்களை இங்கேயே கூப்பிட்டுச் சொல்லுங்கன்னு அம்மா கிட்டே நிறைய தடவை சொல்லிட்டேன். கேட்கவே மாட்டேங்குறாங்க. என்ன சமைக்கனும்னு ரொம்ப நேரம் அட்வைஸ் பண்ணுவாங்க. ஆனால், கடைசியில் அவங்க தான் முழு சமையலையும் செய்வாங்க” என்று தாயின் மீது குறைபட்டான் பகீரதன்.

“விடுடா. நம்ம எல்லாருக்கும் மனோவே சமைச்சுப் போடனும்னு ஆசை. அதான், அப்படிச் செய்றா!” என்று கூறி அவனைச் சமாதானம் செய்தார் பாலேந்திரன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தவளோ, அடுத்த நாளிலிருந்து தன் மாமியாருக்குத் தானும் சமையலில் உதவ வேண்டும் என்று முடிவு எடுத்தாள் ஹாரண்யா.

தன் அன்னை திரும்பி வந்ததும்,”எப்படியும் நீங்க தான் முழுச் சமையலைச் செய்யப் போறீங்க! அப்பறம் ஏன் இவ்வளவு நேரமாக அவங்களுக்கு அட்வைஸ் செய்துட்டு இருக்கீங்க?” என்று அவரிடம் வினவினான் பகீரதன்.

“ஆமாடா! அதுக்காக எந்தெந்த காய்கறிகளை எல்லாம் வெட்டி வைக்கனும்னு சொல்ல வேண்டாமா? அதைத் தான் தெளிவாகச் சொல்லிட்டு வந்தேன்” என்று அவனுக்குப் பதிலளித்தார் மனோரமா.

“ஓஹ்ஹோ! சரி ம்மா” என்று கூறி விட்டு அந்தப் பேச்சை அத்துடன் விட்டு விட்டான்.

அதன் பின்னர், பகீரதனின் அறை முழுவதுமாக அலங்கரித்து முடித்ததை அவர்களிடம் வந்து சொல்லி விட்டுப் போனார்கள் அந்த வேலையைச் செய்த ஆட்கள்.

“அங்கே அவ என் பொண்ணு செய்றான்னு தெரியலையே ங்க?” என்று தன் கணவனிடம் கலக்கத்துடன் கூறினார் மதுராஹினி.

“இன்னைக்கு தானே ம்மா அவளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு வந்தோம்? அதுக்குள்ளே ஏன் இப்படி கலங்குற?” என்று கனிவுடன் கேட்டார் இயமானன்.

“என்னை என்னங்க பண்ண சொல்றீங்க? ஒரே பொண்ணு! அதுவும் அவ்வளவு பெரிய பணக்கார நடிகனோட பொண்டாட்டியாகி இருக்கா! எல்லாமே கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ளே நடந்துருச்சு! ஆனாலும், அவளை நினைச்சுப் பெத்த மனசு பதறுதே!” என்றவரிடம்,

“பதறாதே மது. அவ ஒன்னும் எல்லா விஷயத்தையும் சகிச்சிட்டுப் போகிற பொண்ணு கிடையாதே? அவளுக்கு ஏதாவது சங்கடம் நடந்தால் அதை அவளே சரி பண்ணுவா, இல்லைன்னா, அவங்க கிட்ட அதை சொல்லிடுவா! அந்த வீட்டைப் பார்த்தோ, அங்கே இருக்கிறவங்களைப் பார்த்தோ நம்மப் பொண்ணு முதல்ல மிரளுவா தான்! ஆனால், நாளாக, நாளாக அதையெல்லாம் புரிஞ்சு, ஏத்துக்குவா!” என்று அறிவுரை வழங்கினார் இயமானன்.

“ஆமாம் ங்க. என்ன இருந்தாலும் அவளுக்குக் காலையில் கால் பண்ணிப் பேசனும். அதே மாதிரி, மறு வீட்டுக்கும் அழைக்கனும்ல? அதுக்கு எப்போ வரனும்னும் கேட்கனும்” என்று கூறிய மனைவியிடம்,

“உன் இஷ்டம் மது” என்று சம்மதம் தெரிவித்தார் அவரது கணவர்.

இரவு உணவின் போது, தன் மாமியாரின் கைப்பக்குவத்தில் தயாராகி இருந்த உணவைச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

அதைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு,”என் சமையல் உனக்குப் பிடிச்சிருக்கு போலவே ம்மா?” என்றார் மனோரமா.

“ம்ம். ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை. டேஸ்ட்டியா இருக்கு!” என்று கூறி அவரைப் பாராட்டினாள் மருமகள்.

“பார்றா! எங்க அம்மாவோட சமையலுக்கு நீயும் தீவிர விசிறி ஆகிட்டியே!” என்று மனைவியைக் கிண்டல் செய்தான் பகீரதன்.

“அப்படியே வச்சுக்கோ ங்க” என்று தன் கணவனிடம் உரைத்தாள் ஹாரண்யா.

“நீ இன்னும் உன் அத்தையோட சிக்னேச்சர் ரெசிபீஸ்ஸை எல்லாம் சாப்பிடலை. அதையும் டேஸ்ட் செஞ்சுப் பாரு. அப்பறம் அடிமையாகவே ஆகிடுவ!” என்று சொல்லி விட்டுத் தன் மனைவியைப் பெருமையாகப் பார்த்தார் பாலேந்திரன்.

“அதையும் டேஸ்ட் பண்ணிட்றேன் மாமா”என்று அவருக்குப் பதிலளித்தவளை,

‘இவ்வளவு சீக்கிரத்தில் தன் பெற்றோருடன் ஒன்றி விட்டாளே!’ என்ற மெச்சுதல் பார்வை பார்த்தான் அவளது கணவன்.

உணவு வேளை முடிந்ததும், தன் மகனை அழைத்து,”நீ ஹாலில் இருக்கிற பாத்ரூமில் குளிச்சிட்டு வா” என்று தன் கணவரையும் அவனுடன் அனுப்பி வைத்து விட்டு,

”நீ என் கூட வா ம்மா” என்று மருமகளைத் தன்னுடன் கூட்டிச் சென்றார் மனோரமா.

“இந்தப் பாத்ரூமை யூஸ் பண்ணிக்கோ. நான் உன்னோட சேலையை எடுத்துட்டு வந்து வச்சிட்டுப் போறேன். நீ அதை மாத்திட்டு வா” என அவளிடம் உரைத்து விட்டுச் சென்று விடவும்,

அவரது ஆலோசனையின் படி, குளித்து விட்டு வந்து கட்டிலில் இருந்த சேலையை எடுத்து அணிந்து கொண்டாள் ஹாரண்யா.

”மேக்கப் -க்கு நான் உதவி பண்ணவா ம்மா?” என்றவரிடம்,

“பரவாயில்லை அத்தை. நானே மேக்கப் போட்டுக்கிறேன்” என்று அவரை அனுப்பி வைத்து விட்டு நிலைக் கண்ணாடியின் முன் அமர்ந்து தன்னை மிதமாக அலங்கரித்துக் கொண்டாள் அவரது மருமகள்.

“நீ தயாராகிட்டியா பகீ?” என்று மகனிடம் வினவ,

“எஸ் ம்மா” என்ற பகீரதனை அவனது அறைக்கு அனுப்பி விட்டு, நல்ல நேரம் பார்த்து மருமகளைத் தன் மகனின் அறைக்கு அனுப்பி வைத்து விட்டுச் சென்றார் மனோரமா.

தன் அறைக் கதவைத் தட்டிய சத்தம் கேட்டதும், அதன் தாழ்ப்பாளை விலக்கி,”உள்ளே வா ரணு” என மனைவியை அறையினுள் அனுமதித்து விட்டு மீண்டும் கதவைத் தாழிட்டான் பகீரதன்.

அவனை நிமிர்ந்து பார்த்த ஹாரண்யாவோ, கணவன் தன் வேட்டி, சட்டையை மாற்றி விட்டு, டீசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் போட்டிருந்தான்.

‘தான் மட்டும் என்ன முட்டாளா?’ என்று உள்ளூரப் பொருமினாள்.

“என்ன உன்னையும் சேலை, மேக்கப்ன்னுப் போட வச்சிட்டாங்களா அம்மா?” என்று புன்னகையுடன் கேட்டான் பகீரதன்.

“ஆமாம் ங்க” என்றவளிடம்,

“நீ என்னைப் பகீ - ன்னுயே கூப்பிடு. இப்போ போய் உனக்கு வசதியான டிரெஸ்ஸை சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று கூறினான் அவளது கணவன்.

“இல்லை, வேண்டாம் பகீ” என அதற்கு மறுப்புத் தெரிவித்தாள் ஹாரண்யா.

“நான் மட்டும் வேட்டி, சட்டையை மாத்திட்டு இருக்கிறதைப் பார்த்து உன் காதில் புகை வர்றது எனக்கு அப்பட்டமாகத் தெரியுது. அதனால் முதல்ல போய் இதை மாத்திட்டு நைட் டிரெஸ் போட்டுட்டு வா” என்று சொல்லி விட,

அதைக் கேட்டு அசடு வழிந்தபடியே குளியலறைக்குச் சென்று தன் ஆடையை மாற்றிக் கொண்டு வந்தாள் அவனது மனைவி.

“உனக்கு வசதியாக இருக்கனும்னு தான் மாத்தச் சொன்னேன். ஆனால், நீ அந்தச் சேலையிலேயும், மேக்கப்லேயும் அழகாக இருந்த!” என்று அவளிடம் ரசனையாக உரைத்தான் பகீரதன்.

அதைக் கேட்டுப் புன்னகையை சிந்தியவள்,”தாங்க்ஸ் பகீ” என்றாள் ஹாரண்யா.

அவ்விருவரும் ஒரே கட்டிலில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். அந்தக் கட்டிலும் விசாலமாகத் தான் இருந்தது.

பகீரதனுக்கு மனைவியின் அழகு ஈர்த்தது என்றால், ஹாரண்யாவிற்குக் கணவனின் அருகாமை இம்சித்தது.

அதை அவர்கள் இருவருமே உணர்ந்தாலும், ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தங்கள் உணர்வுகளையும், வேட்கையையும் வெளிப்படுத்திக் கொள்ள சரியான சூழல் தான் என்றாலும் கூட, அவர்களுக்குள் ஏதோ ஒரு தயக்கம் இருப்பதை இருவருமே பகீரதன் மற்றும் ஹாரண்யாவும் உணர்ந்தனர்.

மனம் ஒத்துக் காதலில் விழுந்திருந்தால் இந்நேரம் காமன் அம்புகள் துளைக்கப்பட்டுத், தயக்கங்கள் உடைக்கப்பட்டு ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு இருப்பார்கள்.

ஆனால், இப்பொழுது சம்பாஷணையைத் தான் மேற்கொண்டு உள்ளனர்.

பகீரதன்,“வீட்டுக்கு வந்த முதல் நாளே என் அப்பா, அம்மா கூட இயல்பாகப் பேச ஆரம்பிச்சிட்டியே! குட்!” என்றவனிடம்,

“அவங்களும் என்கிட்ட நார்மலாகப் பேசுறாங்க. அதனால் அவங்க கூட ஈஸியாகப் பேச முடியுது” என்று பதிலளித்தாள் ஹாரண்யா.

“ஓஹ் சூப்பர். இப்படியே கடைசி வரைக்கும் சுமூகமாக இருங்க. அது தான் எனக்கும் நல்லது” என்று அவளிடம் உரைக்கவும்,

அப்போது தான், தன்னுடைய பெற்றோரிடம் அவனும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது அவளுக்கு.

ஏனென்றால், தன் தந்தையும், அன்னையும் புறப்படும் வரையிலும் அவர்களிடம் தன் கணவன் அவ்வளவாகப் பேசிச் சிரிக்கவில்லை என்பதை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தாள் ஹாரண்யா.

“என்ன யோசனை?”

“எங்க அப்பாவும், அம்மாவும் மறு வீட்டுக்கு அழைக்க வருவாங்க. நீங்களும், நானும் எப்போ ஃப்ரீயாக இருப்போமோ அப்போ போயிட்டு வரலாமா பகீ?”

அதைக் கேட்டவுடன், அவளைக் கூரிய பார்வையால் துளைத்தவன்,”ஷூயர்! நாம ஒரு வாரம் வீட்டில் தான் இருக்கப் போறோம்! சோ, அதுக்குள்ளே எப்போ வேணும்னாலும் போயிட்டு வரலாம்” என்றான் அவளது கணவன்.

“ஓகே பகீ”

“வேற ஏதாவது சொல்லனுமா ரணு?”

“ஊஹூம்” எனப் பதில் வந்ததும்,

“நான் அப்போ தூங்குறேன். நீயும் ரெஸ்ட் எடு” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஹாரண்யா.

“என்ன?” என்ற கேள்விக்கு விடை கூறாமல், கட்டிலில் இருந்த அலங்காரத்தைப் பார்வையிட்ட மனைவியிடம்,

“எனக்கும் நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை செலிபிரேட் பண்ணனும்னு தான் ஆசை. ஆனால், இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஹனிமூன் போவோம். அங்கே பார்த்துக்கலாம் ரணு. இப்போ எதையும் யோசிக்காமல் தூங்கு” என்று கூறியவனை விழி விரித்துப் பார்த்தவளைக் குறுஞ்சிரிப்புடன் நோக்கி விட்டுப் படுத்துக் கொண்டான் பகீரதன்.

அவனது அருகாமையில் தனக்கு உறக்கம் தொலைந்து போகுமோ? என்றெண்ணியவளுக்கு இப்போது தான் நிம்மதியான நித்திரை வந்தது.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
ஹாய் மை டியர்ஸ்...

தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன்! - 19

முதல் நாள் இரவு சீக்கிரமே உறங்கி விட்டிருந்ததால் காலையில் விரைவாகவே எழுந்து கொண்டு,

“நான் ஒரு ஃபோன் கால் பேசிட்டு வர்றேன். நீ போய்க் குளி ரணு” என மனைவியைத் தயாராகச் சொல்லவும்,

“சரிங்க” என்று கூறி விட்டுத், தன் உடைகளை எடுத்துக் கொண்டுக் குளியலறைக்குப் போய் விட்டாள் ஹாரண்யா.

அவள் சென்றதும் செல்பேசியில் தனது காரியதரிசிக்கு அழைத்தான் பகீரதன்.

“ஹலோ சார்” என்றவனிடம்,

“கபீர், மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை எல்லாம் செக் பண்ணி முடிச்சாச்சா? ஏன் எந்த அப்டேட்ஸூம் எனக்கு வரலை?” என்று வினவினான்.

“எல்லா ஃபூட்டேஜஸ்ஸையும் எடுத்துச் செக் பண்றதுக்குள்ளே மிட்நைட் ஆயிடுச்சு சார். அந்த நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அனுப்பலை. இப்போ தான், எல்லாத்தையும் அரேன்ட்ஜ் பண்ணி அனுப்பலாம்னு இருந்தேன் சார்” என்று அவனுக்கு விளக்கினான்.

பகீரதன்,“ஓகே. உடனே எல்லா வீடியோஸ்ஸையும் அனுப்பு. அதே மாதிரி, மோஹித்தோட ஃபூட்டேஜை மட்டும் தனியாக அனுப்பி வை. அவனோட நடவடிக்கையில் எதுவும் சந்தேகப்பட்றா மாதிரி இருந்ததா?”

“இல்லை சார். அவர் அப்படி எதுவும் பண்ணலை” என்றான் கபீர்.

“ஓகே. நான் கேட்டதை அனுப்பி வை” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதே சமயம், குளியலறையில் இருந்து வந்து,”நீங்க போய்க் குளிங்க”என்றவளைத் தலை முதல் கால் வரை ஊடுருவும் பார்வை பார்த்தான் அவளது கணவன்.

அதில் சிலிர்த்துப் போனவளோ,”என்ன பகீ?” என்றாள் ஹாரண்யா.

“என் பொண்டாட்டி இவ்ளோ அழகாக இருக்காளே! அதைக் கொஞ்ச நேரம் ரசிக்கலாம்ன்னு தான்!”என்று அவளிடம் குறும்பாக வினவினான்.

“ப்ளீஸ் பகீ! உங்க பார்வை என்னை என்னவோ செய்யுது”என்று நாணத்துடன் கூறிய மனைவியிடம்,

“அதுக்காக, நான் உன்னைப் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியாதே!” என்றவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள் ஹாரண்யா.

“சரி. நான் போய்த் தயாராகிட்டு வரேன். நீ கீழே போய்க் காபி குடி” என்று அவளை அனுப்பி வைத்து விட்டுத் தயாராகச் சென்றான் பகீரதன்.

ஹாலில் தன் கணவருடன் பேசிக் கொண்டு இருந்த மனோரமாவோ,

மாடியிலிருந்து இறங்கி வந்த மருமகளைக் கண்டதும்,”வா ஹாரா, அவன் எங்கே? இன்னும் எழுந்திரிக்கலையா?” என்றார்.

“அவரும் எழுந்துட்டார் அத்தை. ஃபோன் பேசிட்டுக் குளிக்கப் போயிருக்கார்” என்று கூறவும்,

“அப்படியா? சரி. நீ உட்கார்” என்றவளுக்குக் காபி கொண்டு வரச் சொல்லி விட்டு,

“உன் அம்மாவுக்குக் கால் செய்து பேசுனியா ம்மா?” என்று அவளிடம் வினவினார் பாலேந்திரன்.

“இன்னும் இல்லை மாமா. அவங்க கிட்ட சாயந்தரம் பேசலாம்னு இருக்கேன்” என்றாள் ஹாரண்யா.

“சரிம்மா” என்றார் அவளது மாமனார்.

“அதோட, அவங்க உங்களை மறு வீட்டுக்கு எப்போ அழைக்க வருவாங்கன்னும் கேட்ரு” என்று அவளிடம் தெரிவித்தார் மனோரமா.

“ஆமாம். அவன் நமக்கு ஒரு வாரம் தான் டைம் கொடுத்து இருக்கான். அதுக்குள்ள எல்லா சடங்கையும் முடிக்கனுமாம்!” என்று சலித்துக் கொண்டார் பாலேந்திரன்.

அதைக் கேட்டவளுக்குள் ஒரு யுக்தி பிறந்தது. தன் கணவன் தந்த இந்த ஒரு வாரக் காலக்கெடுவை முறியடித்து அவனது விடுமுறையை இன்னும் மூன்று நாட்களுக்கு இழுத்து வைக்க விருப்பப்பட்டாள் ஹாரண்யா.

ஏனெனில், தன்னுடைய விருப்பத்திற்கு அனைவரையும் ஆட்டுவிக்கும் பகீரதனை அவனது குடும்பத்தின் விருப்பத்திற்காகவும் ஆட வைக்க எண்ணினாள்.

“நாங்க ரெண்டு பேரும் டீ குடிச்சு முடிச்சிட்டுச், சமையலையும் முடிச்சு எவ்வளவு நேரமாச்சு தெரியுமா? அவனைக் கொஞ்சம் சீக்கிரமாக வரச் சொல்லு ம்மா” என்றார் பாலேந்திரன்.

உடனே, மாடிக்குச் சென்றவளைத், தலை வாரிக் கொண்டிருந்த கணவனின் வசீகரமானத் தோற்றம் வரவேற்றது.

அவன் வெறுமனே பனியன் மட்டும் உடுத்தியிருந்ததால், பகீரதனின் உடற்கட்டை ரசித்து நின்றாள் ஹாரண்யா.

அவளது நிழலைக் கண்டு, பின்னால் திரும்பியவனோ, மனைவியின் பார்வையின் அர்த்தத்தை அவள் சொல்லாமலேயே அறிந்து கொண்டவனோ,“ரணு” என அவளை மையலுடன் விளித்தான் பகீரதன்.

அதில்,”என்னங்க?” என்று கேட்டவளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது.

“நீ தான் என்னை அப்படி பார்த்துட்டு நின்னே! அப்போ நீ தானே என்னன்னு சொல்லனும்” என்றான் இதழ்களில் புன்னகையுடன்.

“ம்ஹூம். நீங்க இன்னும் டிரெஸ் மாத்தாம இருக்கீங்களேன்னு தான் பார்த்தேன்” என்றவளைக் குறுஞ்சிரிப்புடன் ஏறிட்டு,

“ஓஹ்! அதைச் செக் செய்யத் தான் வந்தியா?” என அவளிடம் வினவினான் பகீரதன்.

“இல்லை. மாமாவும், அத்தையும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடாமல் வெயிட் பண்றாங்க. அதான் வேகமாக ரெடியாகி வாங்கன்னு சொல்ல வந்தேன்”என்று அவனிடம் விளக்கம் அளித்தாள் ஹாரண்யா.

“ஓஹ் சாரி. நான் ஒரு பத்து நிமிஷத்தில் வரேன்” என்றவனிடம்,

“ஓகே ங்க”

“நான் என்னோட மொபைலை எடுத்துட்டுப் போறேன்” என்று கூறினாள்.

“ஓகே. எடுத்துக்கோ” என்று கூறி விட்டு அலமாரியைத் திறந்து தன் உடையை எடுத்தான்.

அங்கே டேபிளில் இருந்த தன் செல்பேசியைக் கைப்பற்றிக் கொண்டுக் கீழே சென்றவள், பகீரதன் கூறியதை தன் மாமா, அத்தையிடம் அறிவித்து விட்டுத் தனக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளைப் பார்வையிடத் தொடங்கினாள் ஹாரண்யா.

தாமினி வாட்ஸப்பில் அனுப்பியிருந்த புகைப்படங்களைக் கண்டதும், பகீரதனுடனான தனது ஜோடிப் பொருத்தத்தை அதில் பார்த்துப் பூரித்துப் போனாள். தோழிக்கு நன்றி தெரிவித்து விட்டு,

அவற்றுள் மிகவும் பொருத்தமாக இருந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கணவனுக்கும், தன் தாய்க்கும் அனுப்பி வைத்தாள் ஹாரண்யா.

இதே நேரம், தன்னுடைய காரியதரிசியிடம் இருந்து வந்த தகவல்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் பகீரதன்.

அதில் அவன் சந்தேகித்ததைப் போல யாரும் எந்தப் பிரச்சினையும் செய்திருக்கவில்லை.

ஏன் மோஹித் கூட அவ்வப்போது முறைத்துக் கொண்டிருந்தானே தவிர, அவனுமே நாகரீகமாக நடந்து விட்டுத் தான் சென்றிருந்தான்.

எனவே, அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டு, மனைவி அனுப்பியதைக் கண்ணுற்றான் பகீரதன்.

அந்தப் புகைப்படங்களில் தாங்கள் இருவரும் அத்தனை ஆனந்தமாக நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தவனுக்கும் கூட இதழ்களில் புன்னகை அரும்பியது.

ஒரு வேகத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட, இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் தன்னுடன் எத்தனை அழகான கதாநாயகிகள் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள்?

அப்படியிருக்க, அவர்கள் மீது தனக்குக் காதலும், விருப்பமும் தோன்றாத போது, அவர்களே வலிய வந்து சவால்களை விட்ட போதும் கூட, அதில் சிக்காமல் திடமாக இருந்த தன்னை இவளாலும், இவளிடமும் தோற்று விடக் கூடாது என்ற காரணத்திற்காகத் தான் ஹாரண்யாவை மணந்தான் பகீரதன்.

ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தப் பின், ‘இவள் தன் மனைவி’ என்ற உரிமையுணர்வு தற்போது அவனுக்குள் துளிர் விடத் தொங்கி இருந்தது.

திருமணத்திற்கு அடுத்த நாளே, இப்படியான கலவையான மனநிலையில் இருந்து தப்பிக்கும் விதத்தில் கீழே சென்றவன்,

தன்னைப் போலவே அந்தப் புகைப்படங்கள் கொடுத்த தாக்கத்தில் முகம் கொள்ளா மகிழ்வுடன் அமர்ந்திருந்த மனைவியைக் கவனித்துக் கொண்டே தான்,”குட் மார்னிங்” என்றான் பகீரதன்.

“குட் மார்னிங் டா” என்றார் மனோரமா.

“இப்போ தான் கீழே இறங்கி வர்றதுக்கு நேரம் கிடைச்சிதாடா?” என்று மகனைக் கிண்டல் செய்தார் பாலேந்திரன்.

“நான் தான் ஃபோன் பேசிட்டு இருந்தேன்னு ரணு கிட்டே சொல்லி விட்டேனே ப்பா? அப்பறம் ஏன் இப்படி கேட்கிறீங்க?” என்ற மகனிடம்,

“காலைச் சாப்பாட்டை உங்க கூடச் சாப்பிடனும்னு தான் காத்திருந்தோம். அதான் அவர் அப்படிக் கேட்டார்” எனக் கூறினார் அவனது அன்னை.

“புரியுது ம்மா” என்றவன்,

“சாரிப்பா. வாங்க சாப்பிடலாம்” என்று கூறித் தந்தையைத் தாஜா செய்து,

அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும்,”நான் ஆஃபீஸூக்குப் போய் என்னோட பி. ஏ கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு வர்றேன்” என அறிவித்தான் பகீரதன்.

“அங்கே தானே போற? ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இல்லையே?” என்று ஐயத்துடன் வினவினார் மனோரமா.

“இல்லை ம்மா. நான் சொன்ன சொல்லைக் காப்பாத்துவேன்! அங்கே எல்லாம் போகலை”

“அப்போ சரி. போயிட்டுச் சீக்கிரம் வந்துரு” என்றார் பாலேந்திரன்.

“ஓகே ப்பா. பை ரணு” எனக் கூறி விட்டுச் சென்றான் பகீரதன்.

அவன் சென்றதுமே,”கல்யாணம் ஆன அடுத்த நாளே வெளியில் கிளம்பிப் போறான் பாரு! வீட்டில் இருக்கிறதுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்குப் போல இவனுக்கு!” என்று கூறி வருந்தினார் மனோரமா.

அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டு, தன்னுடைய யோசனை மிகச் சரியானது தான் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தவளோ,

தன் கணவன் வீட்டை அடைவதற்குள் அன்னைக்கு அழைத்துப் பேசி விட எண்ணி,”நான் என் அம்மா கூடப் பேசிட்டு வர்றேன்” என அவர்களிடம் கூறி விட்டு மேல் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஹாரண்யா.

தன் தாய்க்கு அழைத்து,”ம்மா” என்றவளிடம்,

“ஹாரா! என்னடி பண்ற? அங்கே உனக்கு எல்லாம் செட் ஆகுதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டார் மதுராஹினி.

“எல்லாமே போகப், போகப் பழகிரு ம்மா” என்றாள் மகள்.

“சரிடி. மறு வீட்டுக்கு எப்போ கூப்பிட வரனும்? மாப்பிள்ளை கிட்டே கேட்டுச் சொல்றியா?”

ஹாரண்யா,“அவர் ஒரு வாரம் லீவ் போட்ருக்கார் ம்மா. ஆனால், நீங்க அதுக்கப்புறம் வந்து கூப்பிடுங்க”

“ஏன் இப்படி சொல்ற? அப்பறம் மாப்பிள்ளை கோவிச்சுக்கப் போறார்”

“அவர் கோவிச்சுக்காத மாதிரி நான் பார்த்துக்கிறேன் ம்மா. நீங்க நான் சொன்னதை செய்ங்க” என்றவளிடம்,

“நீ என்னன்னுக் காரணத்தைச் சொல்லு முதல்ல” என்று கேட்டார் மதுராஹினி.

உடனே தன் கணவனின் விட்டேற்றியான நடவடிக்கையைப் பற்றி அவரிடம் உரைத்தாள் ஹாரண்யா.

“நீ சொல்றதும் புரியுதுடி. ஆனால், மாப்பிள்ளை எங்களைத் தப்பாக நினைச்சுக்கிட்டா என்னப் பண்றது? நாங்க நாளைப் பின்னே அங்கே வந்து போகனும்ல? இன்னும் ஒரு தடவை யோசிச்சுக்கோ!”

“இதில் உங்களைப் பத்தி அவர் எதுவும் தப்பாக நினைச்சிக்காத மாதிரி நான் பார்த்துக்கிறேன் ம்மா. எனக்காக இதைப் பண்ணுங்க ப்ளீஸ்!” என்று கூறிய மகளிடம் மறுத்துப் பேசாமல் ஒப்புக் கொண்டார் மதுராஹினி.

“தாங்க்ஸ் ம்மா” என்றவள், தந்தையிடமும் சிறிது நேரம் பேசி விட்டுத் தான் அழைப்பை வைத்தாள் ஹாரண்யா.

தன் மனைவியின் திட்டத்தை அறியாதவனோ, தன்னுடைய அலுவலகத்தில் அமர்ந்து இயக்குனர் ஒருவரிடம் தனது அடுத்தப் படத்திற்கான கதையை சுவாரசியமாக கேட்டு முடித்து விட்டு,

“இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரித்தீஷ். இதை நான் நடிக்கத் தயார். எவ்வளவு மாசத்துக்குக் கால்ஷீட் வேணும்?” என்றான் பகீரதன்.

“தாங்க்ஸ் சார்! இந்த விஷயத்தில் நீங்க ரொம்ப பொறுப்பானவர்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால், உங்களோட வசதிப்படியே நடிச்சுக் கொடுங்க” என்கவும்,

“ஓஹ் ஷூயர். கூடிய சீக்கிரமே அதைப் பத்தின டீடெயில்ஸை அனுப்புறேன்” என்று கூறி அவனை அனுப்பி வைத்து விட்டுத் தன் இல்லத்திற்குச் சென்றான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 20

பகீரதனைத் திருமணம் செய்து கொண்டு அவனது வீட்டிற்கு ஹாரண்யா வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகி விட்டது. அந்த இல்லத்தின் இயல்பை அவள் ஏற்றுக் கொள்ள அவ்வளவு கடினமாக இல்லை. மிகவும் எளிதாகத் தான் இருந்தது.

தன்னிடம் கணவன், மாமனார் மற்றும் மாமியார் எளிமையாகப் பழகுவதை எண்ணி நிம்மதியாக இருந்தது அவளுக்கு.

இதைத் தன் பெற்றோரிடமும் தெரிவித்திருக்க, அவர்களுக்கும் தங்களது மகளைப் பற்றிய கவலைக் குறைந்து போயிற்று.

அவள் சொன்னதைப் போல, தம்பதிகள் இருவரையும் மறு வீட்டிற்கு அழைத்துச் செல்வதைப் பற்றிய உரையாடலில் இருந்தனர் ஹாரண்யாவின் பெற்றோர்.

“ரெண்டு பேருக்கும் டிரெஸ் எடுத்துட்டுப் போகனும்ல ங்க? மாப்பிள்ளைக்கு எப்படிப்பட்ட துணி வாங்கனும்னு தெரியலையே? அவர் எப்பவும் டிசைனர் வச்சு, அவங்க தயார்ப் பண்ணிக் கொடுக்கிற பிரத்தியேகமாகத் துணியைத் தானே உடுத்துவார்? நம்ம வாங்கித் தர்றதை எல்லாம் போடுவாரா?” என்று கணவனிடம் வினவினார் மதுராஹினி.

“இதைப் பத்தி ஹாரா கிட்டயே கேட்ரு ம்மா” என்று யோசனை கூறினார் இயமானன்.

அதைக் கேட்டவுடனே மகளுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லவும்,”நீங்க ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ம்மா? அவர் என்ன தான், பிரபலமான நடிகர், ரொம்ப பெரிய பணக்காரராக இருந்தாலும் கூட, உங்கப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்கிற மாப்பிள்ளை! அப்படியிருக்கும் போது, நீங்க அவருக்கு என்ன செஞ்சாலும் அதை அவர் மனசார ஏத்துக்கனும் தானே? அப்படி நீங்க செய்றது பிடிக்கலைன்னா அவரே சொல்லும் போது பார்த்துக்கலாம்!” என்று தன் அன்னையிடம் தீர்க்கமாக கூறினாள் ஹாரண்யா.

“நீ சொல்றது சரி தான் ம்மா. ஆனால் என்ன இருந்தாலும் அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை…“ என்றவரை மேலும் தொடர விடாமல் தடுத்து,

“ஆமாம் மா. மாப்பிள்ளை தான்! அதுக்கான மரியாதை மட்டும் கொடுத்தால் மட்டும் போதும்! மேற்படி எதுவும் செய்ய வேண்டாம். அப்பறம் அவர் நம்ம கிட்டே இருந்து இன்னும் நிறைய மரியாதையை எதிர்பார்ப்பார். எல்லாமே ஒரு லிமிட்டோட இருக்கனும்!” என்று அவருக்குப் புத்திமதி சொன்னாள் மகள்.

மதுராஹினி,“நீ எங்களுக்கு ஒரே பொண்ணும்மா! உனக்காக அதெல்லாம் செஞ்சி தானே ஆகனும்?”

“நீங்க இப்படி யோசிக்கிறது தான் தப்பு ம்மா! உங்களுக்கு ஒரே பொண்ணாக இருந்தாலும், அஞ்சுப் பொண்ணுங்களாக இருந்தாலும் எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் செய்யனும்! அதிகப்படியாக செஞ்சு கடைசியில் அவர் உங்களையே மதிக்காமல் இருந்துடக் கூடாது!” என்றவள் பேசியதைக் கேட்டு மகளின் இந்த பரிணாமத்தைக் கண்டு வியந்து போனார்கள் ஹாரண்யாவின் பெற்றோர்.

அவள் பேசியதை எல்லாம் மொபைல் ஸ்பீக்கரின் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்த இயமானன்,
“கல்யாணமாகிப் போன மூனு நாளிலேயே இவ்வளவு தெளிவாகப் பேசுறதைக் கேட்கும் போது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு ம்மா” என்று பெருமையாக கூறினார்.

“ஓஹ்ஹோ! இதுக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் ஆகாமல் இருந்தப்போ எல்லாம் நான் இப்படி தெளிவாகப் பேசினது இல்லையா ப்பா?” என்று அவரிடம் குறும்பாக கேட்டாள் ஹாரண்யா.

“ஹாஹா! அப்போ பேசியதை விட இன்னும் தெளிவாகப் பேசுற! அதைச் சொன்னேன்!” என்று அந்தர் பல்டி அடிக்கவும்,

“ம்ஹ்ம். நல்லா சமாளிக்கிறீங்க ப்பா” என்றாள் மகள்.

“சரி ம்மா. மாப்பிள்ளைக்குத் துணி எடுக்க அளவைக் கேட்டுச் சொல்லு” என்ற மதுராஹினியிடம்,

“அத்தைக்குத் தெரியும் மா. அவங்க கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்றுரைத்து விட்டாள் ஹாரண்யா.

“ம்ம். ஓகே. உங்க ரெண்டு பேருக்கும் டிரெஸ் எடுத்துட்டு இன்ஃபார்ம் பண்றேன். நாங்க எப்போ வரனும்னு சொல்லு” என்றவுடன்,

“ஷூயர் ம்மா. நீங்களும், அப்பாவும் உடம்பைப் பார்த்துக்கோங்க” என்று கூறி விட்டு அழைப்பை வைத்தவளோ,

தன்னுடைய தற்பெருமை மற்றும் தலைக்கனத்தை மற்றவர்களிடம் காட்டுவதைப் போலத் தன் பெற்றோரிடமும் காண்பிக்க விட்டு விடக் கூடாது என்பதற்கான முன்னெடுப்பு தான், சற்று முன்னர், தன் தாய், தந்தையிடம் அவ்வாறு பேசியிருந்தாள் ஹாரண்யா.

அதன் பிறகுத் தன் மாமியாரிடம் சென்று விஷயத்தைச் சொல்லிப் பகீரதனின் உடை அளவுகளைக் கேட்டாள்.

மனோரமா,“ஆமால்ல! நாங்களே உங்களுக்கு இன்னும் மறு வீட்டுச் சம்பிரதாயத்தைச் செய்யலையே? உன் அப்பா, அம்மா எப்போ அழைக்க வர்றாங்களாம்? அதுக்கு முன்னாடி நாங்க சமைச்சுப் போடனும்” என்றவரிடம்,

“அவங்க இந்த வாரக் கடைசியில் வருவாங்க போலிருக்கு அத்தை” என்றாள் ஹாரண்யா.

“அப்படியா? அப்போ நாளை மறுநாள் இங்கே உங்களுக்கு விருந்து வச்சிடலாம்” என்று கூறி விட்டார் அவளது மாமியார்.

“சரிங்க அத்தை” என்க,

அவரோ தன் கணவர் மற்றும் மகனை அவ்விடத்திற்கு அழைத்து அவர்களிடம் இதைப் பற்றிய தகவலை அறிவித்தார் மனோரமா.

அதைக் கேட்டதும்,”நானும் விருந்தைப் பத்தி யோசிக்கலை பாரு ம்மா. நல்லவேளை உனக்காவது ஞாபகம் வந்துச்சே! நீ சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்”என்று ஒப்புதல் அளித்தார் பாலேந்திரன்.

ஆனால், அவர்களது மகனோ, பலத்த யோசனையில் இருப்பதைப் போலத் தோன்றவும்,

“நீ என்னடா சொல்ற? இந்த சம்பிரதாயமே உங்க ரெண்டு பேருக்காகவும் தான் செய்யப் போறோம். அது புரிஞ்சுதுல்ல?” என்று அவனிடம் கேட்கவும்,

“ஹாங்! எனக்குப் புரிஞ்சுது ப்பா. அது தான், இதுக்கு எல்லாம் டைம் ஒதுக்கித் தந்து இருக்கேனே? கண்டிப்பாக சாப்பிட்றேன்” என்றுரைத்தான் பகீரதன்.

“உனக்கு என்னென்ன சாப்பாடு எல்லாம் பிடிக்கும்னு சொல்லும்மா. அதைச் செஞ்சித் தர்றேன்” என்று மருமகளிடம் வினவினார் மனோரமா.

“எனக்கு மட்டன் பிடிக்காது அத்தை. சிக்கனில் என்ன வெரைட்டி செஞ்சாலும் ஓகே தான்” என்று அவருக்குப் பதிலளித்த மனைவியிடம்,

“நான் நாளைக்கு என்ன டிரெஸ் போடனும்னு வந்து எனக்கு செலக்ட் பண்ணிக் கொடு ரணு. நீ சொல்றதைத் தான் போட்டுக்கப் போறேன்” எனக் கூறி அவளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான் பகீரதன்.

ஆனால், அவன் சொன்னது உண்மையில்லை என்பதைச் சற்று முன்னர் கணவனின் முகத்தில் தெரிந்த தீவிர யோசனையைக் கண்டு புரிந்து கொண்டதால், அவன் என்ன கேட்டாலும் பதில் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் தான் தங்கள் அறைக்குள் நுழைந்தாள் ஹாரண்யா.

“இங்கே வா. கபோர்டில் இருக்கிறதை எல்லாம் பாரு. உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை எடுத்துக் கொடு” எனக் கூறிப் புன்னகைத்த கணவனை விழி விரித்துப் பார்த்தாள்.

“நான் சொல்லிட்டே இருக்கேன். நீ இப்படியே நின்னா என்ன அர்த்தம்? டிரெஸ்ஸை செலக்ட் பண்ணு ரணு” என்று அவளிடம் அறிவுறுத்தினான் கணவன்.

“ஹாங்! இதோ பார்க்கிறேன் பகீ” என்றவளோ, அந்த அலமாரியை அலசி ஆராய்ந்து தனக்குப் பிடித்த நிறத்தில் இருந்த உடையை எடுத்து அவனிடம் கொடுத்தாள் ஹாரண்யா.

“வாவ்! சூப்பர் செலக்ஷன்! இது எனக்கும் பிடிச்ச டிரெஸ் தான்” என அவளைப் பாராட்டியவன்,

“அப்பறம் ரணு, உங்க அப்பா, அம்மா ஏன் இன்னும் நம்மளை மறு வீட்டுக்குக் கூப்பிட வரலை? நான் ஒரு வாரம் தான் ஃப்ரீயாக இருப்பேன்றதை நீ அவங்க கிட்ட சொன்னியா, இல்லையா?” என்று சாந்தமாக வினவி விட்டு அவளை அழுத்தத்துடன் பார்த்தான் பகீரதன்.

“நான் சொல்லிட்டேன் ங்க. அவங்க நல்ல நேரம் பார்த்துட்டு வந்து கூப்பிட்டறோம்னு சொன்னாங்க. அதான், லேட் ஆகுது போல” என்று நிதானமாகப் பதில் சொல்லவும்,

“ஆஹான்! இதை அத்தையும், மாமாவும் உங்கிட்ட சொன்னாங்களா?” என்று கேட்டவனிடம்,

“ஆமாம் பகீ” என்றாள் ஹாரண்யா.

“இன்னும் நாலு நாள் தான் இருக்கு. அதுக்குள்ள அவங்களை வரச் சொல்லு” என்று அவளுக்கு வலியுறுத்தினான்.

“அப்போ உங்க வீட்டில் நமக்குக் கொடுக்கிற விருந்தை பத்து நாள் கழிச்சு வைக்கச் சொல்லுங்க!” என்று தனக்குச் சரிக்குச் சமமாகப் பேசியவளை, அடக்கப்பட்ட கோபத்துடன் ஏறிட்டான் பகீரதன்.

“என்ன பகீ? நான் சொல்றது புரிஞ்சுதா உங்களுக்கு?” என்று வேறு கேட்டு விட,

“நல்லாவே புரிஞ்சுது ரணு. ஆனால், என் வீட்டில் நடக்கிற விருந்தை நான் ஈஸியா கேன்சல் பண்ணிடுவேன். அதை உன்னால் பண்ண முடியுமா?” என்றவுடன்,

தனக்குள் எழுந்த அதிர்ச்சியை அடக்கிக் கொண்டு,”என்னாலேயும் பண்ண முடியும்!” என்று உறுதியாக கூறினாள் ஹாரண்யா.

“ரியலி? அப்போ என் கூட கீழே வா” என அவளைத் தன் பெற்றோரிடம் கூட்டிச் சென்று,

“ம்மா, ப்பா! மறு வீட்டுச் சம்பிரதாயத்தைக் கொஞ்ச நாள் தள்ளி வைக்க முடியுமா?” எனக் கேட்டான் பகீரதன்.

“என்னடா இப்போ கொஞ்ச நேரம் முன்னால் தான் எங்கிட்ட சம்மதம் சொன்ன! இப்போ மாத்திப் பேசுற! என்ன நினைச்சிட்டு இருக்கிற?” எனப் பொரிந்து தள்ளினார் மனோரமா.

“ஆமாம் மா. ஆனால், எனக்கு ஆஃபீஸில் வேலை இருக்கு. அது இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. அதான்” என்றவனிடம்,

“நீ தான் எங்களுக்கு டெட்லைன் கொடுத்து இருக்கியே? அப்பறம் என்ன? அதெல்லாம் முடியாது. போடா!” என்று தடாலடியாக உரைத்து விட்டார்.

அதேபோல்,”அப்படி சொல்லு ம்மா. மாத்தி, மாத்திப் பேசிட்டு இருக்காதடா!” என்றார் பாலேந்திரன்.

“ப்பா!” எனக் கோபத்தில் சீறியவனைக் கண்டு கொள்ளவில்லை அவனது பெற்றோர்.

அதைக் கண்டுத் தன் சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டாள் ஹாரண்யா.

அதை நொடிப்பொழுதில் பார்த்து விட்டான் பகீரதனோ,”என்னமோ பண்ணுங்க. எனக்குத் தலை வலிக்குது. டீ போடச் சொல்லி வாங்கிட்டு ரூமுக்கு வா” என அவளிடம் கூறி விட்டு மறுபடியும் அறைக்குப் போய் விட,

அவன் கேட்டதைப் போலத் தேநீர் தயாரித்துக் கொடுக்கச் சொல்லி விட்டுக் காத்திருந்த மருமகளிடம்,”என்னம்மா உங்களுக்குள்ளே சண்டையா? இப்படி பேசிட்டுப் போறான்?” என்றார் மனோரமா.

“அச்சோ! இல்லைத்தை. அது என்னன்னு அவர் வெளியே கிளம்பிப் போகிற நேரத்தில் சொல்றேன்” என்றவள், சமையல் ஆள் கொடுத்த தேநீருடன் மாடியறைக்குப் போனவள்,

“டீ கொண்டு வந்திருக்கேன் பகீ” என்ற அறிவிப்புடன் காத்திருந்தாள் ஹாரண்யா.

“உள்ளே வா” என்ற குரலில் அறைக்குள் நுழைந்ததும், அவளுக்குப் பின்னாலிருந்து கதவைத் தாழிடவும்,

அதில் திடுக்கிட்டுத் திரும்பியவளின் கரத்தில் இருந்த கோப்பையை வாங்கி டேபிளில் வைத்தான் பகீரதன்.

“என்னாச்சு ங்க?” என்றவளது குரலில் பதட்டம்.

“ஒன்னும் இல்லை” எனக் கூறினாலும் அவனது கரம் மனையாளின் கன்னத்தைத் தன் புறம் திருப்பி அதில் அழுத்தமாக முத்தமிட,

அந்த இதழொற்றலில் திகைத்து தடுமாறியவளைக் கிடுக்குப்பிடி பிடித்தவனோ,”கீழே பேசிட்டு இருக்கும் போது உன்னோட சிரிப்பை மறைச்சிட்டு நின்னியே? அப்போ உன் முகத்தைப் பார்த்ததும் என்னால் கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை ரணு! அதான்” என்றவன், அவளது மற்றொரு கன்னத்திலும் தன் இதழ்களை அழுந்தப் பதித்து விட்டு,

அவளது மோனநிலையைக் கண்டுப் புன்னகை புரிந்தவனோ,”இந்த விஷயத்தில் நீ நினைச்சதை சாதிக்கட்டும்னு விட்டுட்டேன். ஆனால், இனிமேல் எது நடந்தாலும் அதில் என்கூட ஏட்டிக்குப் போட்டிப் போடாதே! அது நம்ம ரெண்டு பேருக்கும் நல்லதில்லை” என்று அவளுக்கு அறிவுறுத்தினான் பகீரதன்.

“அப்படியா ங்க? அதையும் பார்ப்போம்” என்று சவால் விட்டவள், எடுத்து வந்த தேநீரைப் பருகி விட்டு,”நான் ஆஃபீஸூக்குப் போயிட்டு வரேன்” என்றவனை வழியனுப்பி வைத்து விட்டுத் தன் அத்தை, மாமாவிடம் சென்றாள் ஹாரண்யா.

மனோரமா, “இப்போதாவது என்னன்னு சொல்லு ம்மா?” என்க,

தங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை அவர்களிடம் கூறினாள் ஹாரண்யா.

பாலேந்திரன்,“என்ன சொல்ற ம்மா? தான் சொன்னதை நடத்தி முடிக்காமல் விட மாட்டானே! அது உனக்கும் தெரியும் தானே? அப்படி இருக்கும் போது, நீ ஏன் இந்த மாதிரியான விபரீத விளையாட்டை எல்லாம் அவன் கூட விளையாடிப் பார்க்கிற?”

“வேற என்னப் பண்றது மாமா? தன்னுடைய விருப்பப்படி மட்டும் தான் எல்லாரும் நடக்கனும்னு நினைச்சா அது அநியாயம் இல்லையா? அதான், அவரோட இந்தக் குணத்தை மாத்துறதுக்கான முயற்சியை இப்போ இருந்தே எடுக்கத் தொடங்கிட்டேன்” என்றவளை மெச்சுதலுடன் பார்த்தனர்.

“இதை எல்லாம் நாங்க செஞ்சிருக்க வேண்டியது ம்மா. அவன் கிட்ட கண்டிப்புக் காட்டித் தான் வளர்த்தோம். எங்களோட கெடுபிடியில் இப்போ வரைக்கும் எந்தக் கெட்டப் பழக்கத்தையும் பழகலை. ஆனால், இந்த நடத்தையை மட்டும் மாத்த முடியலை. இதை மாத்த தான், அவனுக்கு உன்னைக் கல்யாணம் செய்து வச்சோம்னு மட்டும் நினைச்சுடாதே ம்மா!” என்று அவளிடம் குற்ற உணர்வுடன் கூறினார் மனோரமா.

“நீங்க ஒன்னும் அவரோட இந்த குணத்தை மறைச்சு அவருக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கலையே? நாங்க தானே லவ் மேரேஜ் செஞ்சிக்கிட்டோம். அப்பறம் உங்களை எப்படி தப்பாக நினைப்பேன். அதுக்காக அவரை இப்படியே இருக்க விட்டால் அவரால் நம்ம எல்லாருக்கும் தான் பாதிப்பு அதிகம். அது தான் என்னால் முடிஞ்ச அளவுக்கு அவரை மாத்த டிரை பண்ணப் போறேன்” என்றாள் ஹாரண்யா.

பாலேந்திரன்,“அவன் திடீர்னு எங்க கிட்ட வந்து உன்னைக் கல்யாணம் செய்யப் போறதாக சொல்லவும், எங்களுக்குக் கோபம் தான் வந்துச்சு. அதே மாதிரி, அவன் பார்த்தப் பொண்ணு அவனை மாதிரியே இருந்தால் என்னப் பண்றதுன்னு நினைச்சு பயந்தோம். ஆனால், நீ இப்படிப் பேசுறதைக் கேட்டதுக்கு அப்பறம் தான் நிம்மதியாக இருக்கு ஹாரா ம்மா” என்றவர்களது புகழ்ச்சியைப் புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள் ஹாரண்யா.

ஆனால், அதே நேரத்தில், தன் அலுவலகத்தில் கபீரிடம் கத்திக் கொண்டிருந்தான் பகீரதன்.

அவனது திருமணத்திற்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து தான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவதாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கூறியிருந்தான் அல்லவா?

அதை தனக்குச் சாதமாக்கிக் கொண்ட மோஹித்,”மிஸ்டர். பகீரதன் இப்போ குடும்பஸ்தன் ஆகிட்டாரே! இதுக்கப்புறம் அவன் ‘ட்ரீம் பாய்’ பட்டத்தைச் சுமக்க முடியாது! ஹீரோயின்ஸூக்கு மட்டுமில்லை, ஹீரோஸூக்குக் கூடக் கல்யாணம் ஆகிட்டா ஃபேம் (fame) குறைஞ்சிடும். அவனை விட்டுட்டு நீங்க என்னைக் கன்சிடர் பண்ணலாமே?” என்று அவர்களிடம் பேசியதை அறிந்த பகீரதனுக்கு அவன் மீது பொல்லாத ஆத்திரம் வந்தது.

“அவரோட புரபோசலை அவங்க ஏத்துக்கலை சார்” என்றான் கபீர்.

அதற்கு,”அப்படின்னாலும் கூட என்னோட இடத்தைப் பிடிக்க அவனுக்கு நானே சான்ஸ் கொடுத்தா மாதிரி ஆகிடுச்சே? அதுக்கு என்ன சொல்றது?” என்று கூறிக் கோபத்தில் பல்லைக் கடிக்க,

“அவருக்கு அவ்வளவாகப் படங்கள் கைவசம் இல்லை சார். அது தான், இப்படி ஒரு வேலையைச் செய்திருக்கார். நான் டைரக்டர் அண்ட் புரொடியூசர் கிட்டே பேசிக் கிளியர் பண்ணிட்டேன்” என்றாலும் கூட மனம் ஆறாமல் உடனே மோஹித்திற்கு அழைப்பு விடுத்தான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 21

மறுமுனையில்,“ஹலோ”என்றவுடன்,

“டேய் மோஹித்! உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமாகவே இல்லையா?” என்று பொரிந்து தள்ளியவனிடம்,

“பகீரதா! எதுக்கு இப்போ கால் பண்ணி இப்படி பேசிட்டு இருக்கிற?” என்றான் மோஹித்.

“நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு வேற என்னச் செய்யனும்?” என்று கோபத்துடன் வினவினான்.

“நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்?”

“நான் இப்போ நடிக்கிற படத்தோட புரொடியூசர் கிட்டேயும், டைரக்டர் கிட்டேயும் பேசி இருக்க தானே?” என்று ஆத்திரம் குறையாமல் கேட்டான் பகீரதன்.

அதைக் கேட்டுத் திடுக்கிட்டாலும்,”ஆமாம் பேசினேன். அதுக்கு என்ன இப்போ?” என்று விட்டேற்றியாகத் தான் பதில் கூறினான் மோஹித்.

“என்ன தைரியத்தில் அப்படி செஞ்ச?” என்றவுடன்,

“நீ தான் கல்யாணம் ஆகி ஃபேமிலி மேன் ஆகிட்டியே? இதுக்கப்புறம் உன்னால் எப்படி படங்களில் எல்லாம் நடிக்க முடியும்? அதான், அந்த வாய்ப்பை எல்லாம் நான் யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். அதனால் தான் அவங்களை கான்டாக்ட் பண்ணேன்” என்று பதில் உரைக்கவும்,

“நான் கல்யாணத்துக்கு அப்பறம் படத்தில் நடிக்க மாட்டேன்னு உங்கிட்ட சொன்னேனாடா?” என்று உச்சபட்ச கோபத்தில் கத்தினான் பகீரதன்.

“நீ சொல்லி தான் தெரியனுமா என்ன? எனக்கு உன் நிலைமை புரிஞ்சுது. அதனால் தான் அப்படி செஞ்சேன். நீ உன் ஃபேமிலி லைஃபை நல்லா என்ஜாய் பண்ணுடா. இதுக்கப்புறம் சினி ஃபீல்டை நான் பார்த்துக்கிறேன்” என்றவனைக் கொன்று போடும் ஆத்திரம் வந்தது பகீரதனுக்கு.

ஆகவே,“நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட மோஹித்! இதுக்கான விளைவுகளை எதிர் கொள்ள ரெடியாக இரு!” என்று அவனுக்கு எச்சரிக்கை விடுத்து அழைப்பைத் துண்டித்து விட்டான்.

அதில் கொஞ்சம் உடல் உதறினாலும்,”இனிமேல் உன் ஆட்டம் செல்லாது!” என்று இறுமாப்புடன் சொல்லிக் கொண்டான் மோஹித்.

ஆனால், தன்னுடைய அலுவலகத்தில் அடிபட்ட வேங்கையாக நடை பயிற்சி செய்து கொண்டிருந்த பகீரதன்,”கபீர்! உடனே என்னோட படத்தோட புரொடியூசர், டைரக்டருக்குக் கால் செஞ்சு அவங்க எப்போ ஃப்ரீயாக இருப்பாங்க, மீட் பண்ணலாம்னு கேளு” என்றவுடன்,

அந்தக் காரியதரிசியும் தன்னுடைய முதலாளி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்குக் கால் செய்து பேசினான்.

அவர்களும் கூட,”எப்போ வேணும்னாலும் மீட் பண்ண நாங்க ரெடி” என்று சம்மதித்து விட அதைப் பகீரதனிடம் தெரிவித்தான் கபீர்.

“உடனே மீட்டிங் அரேன்ட்ஜ் பண்ணு!” என்று அவனுக்குக் கட்டளையிட,

“எப்போ, எத்தனை மணிக்கு சார்?” என்றதும்,

“நாளைக்குக் காலையில் பதினொரு மணிக்கு மீட்டிங்ன்னு இன்ஃபார்ம் பண்ணிடு” என்று கூறி விட்டு வீட்டிற்குச் சென்றான் பகீரதன்.

அவனது மனநிலை சுத்தமாக சரியில்லை. அதனால் அமைதியாக அறைக்குள் வந்தவனை ஆராய்ச்சி பார்வையுடன் தொடர்ந்தாள் ஹாரண்யா.

மோஹித்தின் செயலால் கடுமையான கோபத்திற்கு உள்ளாகி இருந்தவனோ, அவளிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.

ஆனால்,”பகீ” என்று அவனை அழைத்தவளை முகம் இறுகப் பார்த்தான் கணவன்.

அதில் ஏதோ வித்தியாசமாகத் தோன்றவும்,”என்னாச்சு? ரூமுக்கு வந்ததில் இருந்து எங்கிட்ட எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கீங்க?” என்று அக்கறையுடன் வினவினாள் ஹாரண்யா.

பகீரதன்,“என்னப் பேச சொல்ற?” எனப் பட்டென்று கேட்டு விட,

“ஏன் இப்படி கேட்கிறீங்க? எங்கிட்ட பேச எதுவுமே இல்லையா?” என்றவளின் குரலில் அதிர்ச்சியும், ஆதங்கமும் நிரம்பி வழிந்தது.

“உங்கிட்ட பேச எனக்கு நிறைய இருக்கு தான் ரணு. ஆனால் இப்போதைக்கு எனக்குப் பேசுற மனநிலை இல்லை” என்று அவளிடம் அழுத்தமாக உரைத்த கணவனிடம்,

“ஓஹ்! அப்படியா? சரி” என்றவளோ, அதன் பின்னர் அவனிடம் பேச யத்தனிக்கவில்லை.

மறுநாள் காலையில் யாரிடமும் எதுவும் கூறாமல் உணவைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் வீட்டிலிருந்து வெளியேறியவனைக் கண்டு பகீரதனின் பெற்றோர் மற்றும் மனைவிக்கு அதிருப்தி ஏற்பட்டது.

மனோரமா,“இவன் சொன்ன ஒரு வாரக் கெடுவைக் கூட ஃபாலோ பண்ண மாட்டான் போலயே! இவனை நம்பி நாளைக்கு விருந்து வைக்க வேறத் திட்டம் போட்டு வச்சிருக்கோம்!” என்று புலம்பியவரை வருத்தத்துடன் பார்த்தவள்,

“நீங்க எப்பவும் போல எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுங்க அத்தை. அவன் கண்டிப்பாக நாளைக்குச் சாப்பிடுவார்” என்று அவருக்கு நம்பிக்கை அளித்து விட்டுக்,

கணவன் வேலை முடிந்து வந்ததும் முதல் வேளையாக இதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற முடிவுடன் இருந்தாள் ஹாரண்யா.

இங்கோ தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு முன் அமர்ந்திருந்த பகீரதனோ,”ஹாய் சார். ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?” என்று அவர்களை நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கோம் சார்” என்றார் தயாரிப்பாளர் ஜெயராஜ்.

“புது மாப்பிள்ளை நீங்க எப்படி இருக்கீங்க?” என அவனிடம் கேட்டுச் சிரித்தார் இயக்குனர் கைலாஷ்.

“ம்ம். நானும் நல்லா இருக்கேன் சார்” என்று கூறிப் புன்னகைத்தான் பகீரதன்.

“எதுக்காக இந்த மீட்டிங் ஹீரோ சார்? எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு?” என்று அவனிடம் வினவ,

“இல்லை சார். நம்மப் படத்தைப் பத்தி ஆக்ட்டர் மோஹித் உங்க கிட்ட பேசி இருந்தார்ன்னு கேள்விப்பட்டேன்” என்றதும்,

“ஆமாம் பேசி இருந்தார் தான். ஆனால், அவர் இந்தப் படத்தில் நடிக்கிறதில் எங்களுக்கு விருப்பம் இல்லை சார். நீங்க கடைசியாக நடிச்ச சீன்ஸ்ஸோட தான் படத்தை நிறுத்தி வச்சிருக்கோம். நீங்க எப்போ வேணும்னாலும் வந்து நடிச்சுக் கொடுக்கலாம்” என்று அவனிடம் உரைத்தார் ஜெயராஜ்.

“ஆமாம் சார். நாங்க உங்க இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நம்மப் படத்தோட ஹீரோ நீங்க மட்டும் தான்” என்று இயக்குனர் கைலாஷூம் அவனுக்கு உறுதி அளித்து விட,

“தாங்க்யூ சார்” என அவர்களுக்கு நன்றி கூறியவன்,

“நான் கூடிய சீக்கிரமே ஷூட்டிங்குக்குத் திரும்பி வந்துடுவேன்” என்று வாக்களித்தான் பகீரதன்.

“நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்” என்றனர் இருவரும்.

“மோஹித் கிட்ட என்ன சொல்லப் போறீங்க சார்?” என்று அவர்களிடம் கேட்க,

கைலாஷ்,“நாங்க இப்போ உங்க கிட்ட சொன்ன இதே பதிலைத் தான் அவர் கிட்டேயும் சொல்லப் போறோம்” என்று அவனிடம் தெரிவித்தவுடன்,

“ஓகே சார்” என்று அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான் பகீரதன்.

ஆனால், அவன் அப்போதும் வீட்டிற்குச் செல்லவில்லை.

தன்னுடைய அலுவலகத்தை அடைந்து,”கபீர், நான் இப்போ நடிச்சிட்டு இருக்கிற படத்துக்கு எவ்வளவு நாள் கால்ஷீட் கொடுத்து இருக்கேன் - னுப் பார்த்து சொல்லு” என்றவுடன்,

“ஒரு மாசம் கொடுத்து இருக்கீங்க சார்” என்று பதிலளித்தான் அவனது காரியதரிசி.

பகீரதன்,“ஓகே. மூனு நாளைக்கு அப்பறம் ஷூட்டிங் வர்றதாக படக்குழுவுக்குச் சொல்லிரு” என்றூ கூறி விட்டு,

வீட்டிற்குப் போய்த் தன் பெற்றோர் மற்றும் மனைவியை அழைத்து,”நாளைக்கு நீங்களும், ஹாரண்யாவோட அப்பா, அம்மாவும் சேர்ந்தே நாளைக்கு மறு வீட்டு விருந்து கொடுக்கலாம்ல?” என்றவனைக் குழப்பத்துடன் பார்த்தார்கள் மூவரும்.

மனோரமா,“என்னடா சொல்ற? அதெப்படி முடியும்? அவங்க வந்து உங்களை அழைக்கனும், நீங்க அங்கே போய்த் தங்கிட்டு வரனும். இதெல்லாம் செய்யாமல் எப்படி?”என்று மகனிடம் இரைய,

“ம்மா ப்ளீஸ்! எனக்குப் பட ஷூட்டிங் இருக்கு. நான் ஒரு மாசம் தான் கால்ஷீட் கொடுத்து இருக்கேன். நான் இவ்வளவு நாள் வீட்டில் இருந்ததே பெருசு! இனிமேலும் இப்படியே இருந்தால் என் இடத்தை இன்னொருத்தன் பிடிக்கத் தயாராக இருக்கான்!” என்று அவரிடம் வாதம் செய்தான் பகீரதன்.

“நீ அந்தளவுக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கியா?”என்றார் பாலேந்திரன்.

அதைக் கேட்டுக் கொதித்து எழுந்தாலும்,”என்னோட தன்னம்பிக்கை எப்பவும் குறையாது ப்பா! ஆனால், என் இடத்தை யாருக்காகவும், எந்தச் சூழ்நிலையிலேயும் விட்டுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை! அதனால் தான் இப்படிக் கேட்கிறேன். அதுவுமில்லாமல் மறு வீடு விருந்து தானே? இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?” என்று அவரிடம் கேட்டவனை முகத்தில் உணர்வில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

“என்னப் பேசுறடா? கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? மத்த சடங்கு, சம்பிரதாயத்தை எல்லாம் செய்ய வேண்டாமா?” என அவனிடம் வினவினார் மனோரமா.

“நானும் அதையெல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லலையே ம்மா? நான் சொன்னதையும் யோசிச்சுப் பாருங்களேன்!” என்றவனை அழுத்தமாகப் பார்த்தவள்,

“அத்தை, மாமா, அவர் தான் இவ்வளவு தூரம் சொல்றாரே? அப்பறமும் ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க? அவர் சொன்னதையே செய்யலாம்” என்று தன் மாமனார், மாமியாரிடம் தீர்க்கமாக கூறினாள் ஹாரண்யா.

அதைக் கேட்டதும் தன் மனைவியை ஆச்சரியம் மேலிட பார்த்தான் பகீரதன்.

“நீயும் என்னம்மா அவனுக்கு ஏத்துக்கிட்டுப் பேசுற?” எனத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் பாலேந்திரன்.

“அவர் தான் அவரோட நிலைமையைச் சொல்றாரே மாமா? அதை நாம புரிஞ்சிக்கிட்டுத் தான் ஆகனும். என் அப்பா, அம்மா கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன்” என்றாள் ஹாரண்யா.

இதில் சம்பந்தப்பட்டவளே இப்படிக் கூறி விட்டதால் தாங்களும் மகனின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு விட்டனர் பகீரதனின் பெற்றோர்.

“தாங்க்ஸ் ரணு” என்று தனக்கு நன்றி தெரிவித்த கணவனை ஏறிட்டும் பார்க்காமல் அறைக்குப் போனவளைப் பின் தொடர்ந்து சென்று,

“நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டு, எனக்காக பேசினதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவன், அவளை முதல் முறையாக ஆரத் தழுவிக் கொண்டான் பகீரதன்.

அதில் ஹாரண்யாவிடன் உடல் இறுக்கத்திற்கு உள்ளானது.

அதைக் கவனிக்கும் நிலையில் அவனில்லை என்பதை அவனது பிடியின் அழுத்தத்தில் உணர்ந்தவள்,”எனக்கு வலிக்குது பகீ!” என்று வெறுமையுடன் கூறினாள் ஹாரண்யா.

“ஓஹ் சாரி ம்மா” எனத் தன் பிடியைத் தளர்த்திக் கொண்டவன், அப்போதும் கூட அவளைத் தன் அணைப்பில் இருந்து விடுவிக்கவில்லை.

“ப்ளீஸ்! உடம்பெல்லாம் வலிக்கிறா மாதிரி இருக்கு” என்றவுடன் சரேலென அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவன்,”சாரி” என்று கூறி விட்டுத் தானும் விலகிச் சென்றான் பகீரதன்.

அவன் போனதும், தன் தாய்க்கு அழைத்து,”நாளைக்கே விருந்து வைக்க முடியுமா ம்மா?” என்று கேட்டாள் ஹாரண்யா.

“என்னடி! நீ தானே பொறுமையாக வந்து விருந்துக்கு அழைங்கன்னு சொன்ன? இப்போ இப்படி மாத்தி பேசுற? ஹாரா ம்மா, அங்கே எல்லாம் சரியாகத் தானே போயிட்டு இருக்கு? எனக்கு மனசு பதறுதே!” என்று பதட்டத்துடன் வினவினார் மதுராஹினி.

“நீங்க பயப்பட்றா மாதிரி இங்கே எனக்கு ஒன்னும் நடக்கலை. அவர் கமிட் ஆன படத்துக்கு ஒரு மாசம் தான் கால்ஷீட் கொடுத்து இருக்காராம். அதுக்குள்ள இதையெல்லாம் முடிக்க முடியுமான்னு ரொம்ப வேண்டிக் கேட்டுக்கிட்டார். அதான்” என்றதும் தான் அவருக்கு நிம்மதி திரும்பியது.

“இது தான் விஷயமா? நான் ஒரு நிமிஷத்தில் பயந்து போயிட்டேன்! அதுக்கென்ன சம்பந்தியே எல்லா ஏற்பாட்டையும் பண்ணட்டும். நாங்க அதுக்கான பணத்தைக் கொடுத்துட்றோம்” என்று சம்மதித்து விட,

“சாரி ம்மா. அப்பா கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன்னு சொல்லுங்க” என்று வருந்தியவளை,

“அடி போடி இவளே! இதுக்கெல்லாம் சாரி கேட்பாங்களா? நாங்க நாளைக்குக் காலையில் அங்கே வந்துட்றோம்” என அவளிடம் தெரிவித்தார் மதுராஹினி.

அதேபோல், அவ்விடத்தைத் தன் கணவர் இயமானனிடம் உரைக்க, அவரும் கூட,”அதனால் என்ன? மாப்பிள்ளைக்குத் தோதுப்பட்ற அப்போ விருந்து வச்சா போச்சு” என்று கூறி விட்டார்.

அதைத் தன் கணவன் மற்றும் மாமனார், மாமியாரிடம் அறிவித்தாள் ஹாரண்யா.

பாலேந்திரன் மற்றும் மனோரமாவும், அசைவ உணவுகளைச் சிறப்பாகத் தயாரிக்கும் கேட்டரிங் ஆட்களிடம் மெனுவைச் சொல்லி அப்போதே அதற்கான பணத்தையும் அனுப்பி வைத்து விடவும் உணவைச் சமைத்துக் குறிப்பிட்ட நேரத்திற்குக் கொண்டு வந்து தருவதற்கு ஒப்புதல் அளித்தார்கள்.

இது ஒரு சிறிய விஷயம் தான்! ஆனால், இதில் கூட விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய விருப்பத்தை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொண்டு அதையும் தன்னை வைத்தே செய்து முடித்தவனிடம் இந்த ஒரு விஷயத்தில் கேள்வி கேட்காமல் விட்டு விட்டாள் ஹாரண்யா.

மறுநாள் வந்த தன் பெற்றோரின் பாதங்களில் சற்றும் எதிர்பாராத வகையில், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனைக் கண்ட பகீரதனின் பெற்றோரும், மனைவியும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் வாய் பிளந்து நின்றனர்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 22

மறுநாள் காலையில் மனதில் வெறுமையுடன் தான் எழுந்தாள் ஹாரண்யா.

அவளுக்கு நேரெதிராக மிகவும் நல்ல மனநிலையில் இருந்தான் பகீரதன்.

அவனை வெளிப்படையாகவே முறைத்துக் கொண்டு தான் அன்றைய விருந்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

“என்ன ரணு, ரொம்ப நேரமாகவே என்னை ரொமான்டிக் ஆகப் பார்த்துட்டு இருக்கிற? என்ன விஷயம்?”என்று மனைவியை வேண்டுமென்றே வம்பிழுத்தான் பகீரதன்.

அதில் கடுப்பாகி,“ஹ்ம்ம்! காலங்கார்த்தாலேயே எனக்கு உங்க மேல அவ்ளோ லவ்ஸ் வருது ங்க அதான்!” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“அப்படியா? இப்போ தான் நமக்கு லவ் மேரேஜ் ஆனதே உனக்கு ஞாபகம் வந்திருக்கு போலயே ரணு!” என்று கூறி விட்டு அவளது முகத்தைப் ஆராய்ந்தான் அவளது கணவன்.

“அதெல்லாம் எனக்கு எப்பவுமே ஞாபகத்தில் இருக்கும் பகீ” என்று அவனிடம் கூறியவள், அலமாரியைத் திறந்து அணியப் போகும் உடையைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கி விட்டாள்.

“ஞாபகம் இருந்தால் சரி தான். நான் ரெடி ஆகிட்டேன். கீழே போறேன். நீ பொறுமையாக வா” என்று அவளிடம் உரைத்து விட்டுக் கீழே சென்றான் பகீரதன்.

அவன் போனதும் ஒரு பெருமூச்சு விட்டவள் அன்றைய விருந்திற்கு ஏற்றவாறு தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆயத்தமானாள் ஹாரண்யா.

கீழே வந்த மகனிடம்,“ஹாரா எங்கடா?” என்று கேட்டார் மனோரமா.

“ரெடி ஆகிட்டு இருக்கா ம்மா. கொஞ்ச நேரத்தில் வந்துருவா” என்று அவருக்குப் பதிலளித்தான் பகீரதன்.

“சரி. நான் கேட்டரிங் டீமுக்குக் கால் செஞ்சு எல்லாத்தையும் தயாராக வைக்கச் சொல்றேன்”என்றவர்,

தாங்கள் விருந்து சாப்பிட்டைத் தயார் பண்ணிக் கொடுக்கச் சொல்லியிருந்த சமையல் ஆட்களுக்குச் செல்பேசியில் அழைத்து விவரத்தைக் கேட்டு விட்டு வந்தார் பாலேந்திரன்.

மனோரமா,“ஹாராவோட அப்பாவும், அம்மாவும் வர்றதுக்குள்ளே எல்லாத்தையும் கொண்டு வரச் சொல்லிட்டீங்கள்ல?” எனக் கேட்டார்.

“ஆமாம் மனோ. அதுக்குத் தான் கால் செஞ்சு பேசினேன்” என்றார் கணவர்.

அப்போது மாடியிலிருந்து இறங்கி வந்த மனைவியை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பகீரதன்.

அவள் அணிந்திருந்த புடவை அவளது நிறத்திற்கும், உடல்வாகிற்கும் எடுப்பாக இருந்தது.

கணவனின் கண்கள் தன்னை மொய்ப்பதைக் கண்டு கொண்டவளோ, அவனை விழிகளாலேயே அடக்கி விட்டு,”குட்மார்னிங்” என்று மூவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்தாள் ஹாரண்யா.

“குட்மார்னிங் ம்மா” என்றவர், அவளுக்கான தேநீரைக் கொண்டு வரச் சொல்லி விட்டு,

“நாளையிலிருந்து உனக்கு டீ யையும், இவனுக்குக் காபியையும் உங்க ரூமுக்கே அனுப்பி வைக்கட்டுமா? எத்தனை மணிக்கு வேணும்றதை மட்டும் முன்னாடியே சொல்லிரு” என்று அவளிடம் வினவினார் மனோரமா.

“எனக்கு ஆறு மணிக்கே முழிப்பு வந்துரும் அத்தை. அப்போ நானே கீழே வந்து டீ குடிச்சிக்கிறேன்” என்று அவரிடம் கூறி விட்டாள் ஹாரண்யா.

“நானும் இனிமேல் உங்க கூட சேர்ந்து காபி குடிக்கிறேன் ம்மா” என்ற மகனை ஆச்சரியம் மேலிட பார்த்தனர் அவனது பெற்றோர்.

“ஏன் அவரை இப்படி பார்க்கிறீங்க?” என்று அவர்களிடம் கேட்டாள் மருமகள்.

“அவன் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் இந்த மாதிரி சொன்னதும் கிடையாது! எங்க கூட சேர்ந்து காபி குடிச்சதும் கிடையாது. அதனால் தான், அவன் சொன்னதைக் கேட்டதும் நாங்க ஷாக் ஆகிட்டோம். அதான் இந்தப் பார்வை!” என்று அவளுக்கு விளக்கினார் பாலேந்திரன்.

“ஓஹோ! அது தான் விஷயமா மாமா?” என்றவள் புருவம் உயர்த்திக் கணவனைப் பார்த்தாள் ஹாரண்யா.

ஆனால், தன் மனைவியின் முன்னால் தன்னுடைய குட்டை உடைத்த தந்தையை முறைத்தான் பகீரதன்.

பாலேந்திரன்,“என்னடா?”என்றவரிடம்,

“என்னோட பெருமை எல்லாத்தையும் இப்போவே என் பொண்டாட்டி கிட்டே சொல்லி முடிச்சாகனுமா ப்பா? போதுமே!” என்று அவரிடம் கேட்டுக் கொண்டான் மகன்.

“சரிடா. இப்போ உன்னைப் பாவம் பார்த்து விட்றேன்” என்று கூறி விட்டார்.

“உன் அப்பா, அம்மாவுக்குக் கால் பண்ணி எப்போ வர்றாங்கன்னுக் கேளு ம்மா” என மருமகளுக்கு நினைவுபடுத்தினார் மனோரமா.

“சரிங்க அத்தை” என்றவள், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைக்க அதை ஏற்ற மதுராஹினி,“ஹலோ ஹாரா ம்மா” என்றார்.

“ஹலோ! ம்மா, கிளம்பிட்டீங்களா? எத்தனை மணிக்கு வர்றீங்க?” என்று வினவினாள் ஹாரண்யா.

“கிளம்பிட்டோம் ஹாரா. இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்போம்” என்றதும்,

“சரி ம்மா வாங்க” என்று கூறி வைத்தவள்,

“அவங்க வந்துட்டு இருக்காங்களாம்” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“அப்போ கேட்டரிங் ஆளுங்களைச் ஒரு அரை மணி நேரம் கழிச்சு சாப்பாட்டைக் கொண்டு வரச் சொல்லிட்றேன்” என அவர்களுக்கு அழைத்து விவரத்தைச் சொன்னார் பாலேந்திரன்.

சிறிது நேரத்திலேயே ஹாரண்யாவின் பெற்றோரின் வருகை நிகழ்ந்தது.

“வாங்க சம்பந்தி” என அவர்களைப் பகீரதனின் தாயும், தந்தையும் வரவேற்றனர்.

“வணக்கம் சம்பந்தி”,

“வணக்கம் மாப்பிள்ளை”, என்றவர்கள்,

“வாங்க அத்தை, மாமா” என்றான் கூறிப் புன்னகைத்தான் பகீரதன்.

“ஹாரா ம்மா” என மகளின் உச்சி முகர்ந்து பாசத்தை வெளிப்படுத்தினர் மதுராஹினி மற்றும் இயமானன்.

“ம்மா, ப்பா” என்று அவர்களின் அணைப்பில் ஆதூரமாக அடங்கி கொண்டாள் ஹாரண்யா.

மனோரமா,“முதல்ல உட்காருங்க சம்பந்தி” என்றவர், அவர்களுக்குப் பழச்சாறு வரவழைத்துப் பருகச் செய்தார்.

அந்த நேரத்தில்,”மாமா, அத்தை! கொஞ்சம் எழுந்து நில்லுங்களேன்!” என்ற பகீரதனைக் குழப்பத்துடன் ஏறிட்டனர் அங்கிருந்த மற்றவர்கள்.

“ஏன்டா அவங்களை எழுந்திரிக்கச் சொல்ற?” என்ற தந்தையிடம்,

“ஒரு காரணமாகத் தான் சொல்றேன் ப்பா” என்று கூறி விட,

தங்கள் மாப்பிள்ளை சொன்னதால் மறு பேச்சின்று எழுந்து நின்றனர் மதுராஹினி மற்றும் இயமானன்.

அதைக் கண்டு ஹாரண்யாவிற்கு மனம் பதறியது.

‘என்ன செய்யக் காத்திருக்கானோ!’ என்று பதட்டம் அடைந்தாள்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அவர்களது கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் பகீரதன்.

அதில் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து விட்டார்கள் அனைவரும்.

ஹாரண்யாவிற்கோ முகத்தில் ஈயாடவில்லை!

‘கணவன் என்ன செய்கிறான்?’ என்று திடுக்கிட்டாள்.

“ஐயோ! என்னப் பண்றீங்க மாப்பிள்ளை? முதல்ல எழுந்திரிங்க” என்று அவனை எழச் சொன்னார்கள் ஹாரண்யாவின் பெற்றோர்.

“அதுக்கு முன்னாடி நீங்க என்னை மன்னிக்கனும்” என்றவனிடம்,

“எதுக்கு மாப்பிள்ளை?” என்றார் இயமானன்.

பகீரதன்,“எங்களை நீங்க வீட்டுக்கு வந்து அழைச்சு உங்க வீட்டில் விருந்து வைக்கனும்னு ஆசைப்பட்டீங்க. ஆனால் என்னோட அவசரத்தால் அதை நீங்க செய்ய முடியாதபடி ஆகிருச்சு. அதுக்குத் தான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன்” என்று கூறியதைக் கேட்டதும்,

அவன் மேலிருந்த மதிப்பு பெருமளவில் அதிகரித்தது ஹாரண்யாவின் பெற்றோருக்கு.

அதைவிட பகீரதனின் பெற்றோரைக் கேட்கவே வேண்டாம்! தங்கள் மகனின் செயலில் உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டார்கள்.

மதுராஹினி,“எங்களுக்குத் தர்ம சங்கடத்தை வரவழைக்காதீங்க மாப்பிள்ளை. உங்களை மன்னிச்சிட்டோம். எழுந்திருங்க ப்ளீஸ்” என்றவுடன் தான், எழுந்து நின்றான் பகீரதன்.

ஹாரண்யா,“என்னங்க!” என்றவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.

அந்தளவிற்கு அவனது செயலால் நெகிழ்ந்து போயிருந்தாள்.

“என் மாமனார், மாமியாரோட காலில் விழுகிறதுல எனக்கு எந்த ஈகோவும் இல்லை ம்மா” என்று மனைவியிடம் உரைத்தான் பகீரதன்.

“ம்ம்” என்று அவனை மெச்சிக் கொண்டார் பாலேந்திரன்.

மனோரமா,“சரி உட்காருங்க” என்றவர், சமையல் ஆட்களுக்கு அழைத்து உணவைக் கொண்டு வருமாறு கூறி விட அவர்களும் குறித்த நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தனர்.

“பகீ, ஹாரா, வாங்க சாப்பிடலாம்” என்று அவர்களை டைனிங் டேபிளில் அமர வைத்து உணவைப் பரிமாறினர்.

“நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க சம்பந்தி” என ஹாரண்யாவின் பெற்றோரையும் சாப்பிட வைத்தனர்.

அதி ருசியாக இருந்த அந்த உணவு வகைகளைத் தட்டில் மிச்சம் வைக்காமல் அவர்கள் திருப்தியாக உண்ட பிறகு, பகீரதனின் பெற்றோரும் கையோடு சாப்பிட்டு முடித்தார்கள்.

அவ்வளவு பெரிய நடிகன் தங்கள் கால்களில் விழுந்ததை இன்னும் நம்ப முடியாமல் இருந்தனர் மதுராஹினி மற்றும் இயமானன்.

அவர்களை விட அந்தக் காட்சியின் தாக்கத்தில் இருந்து வெளியே வர இயலாமல் கணவனையே வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

“உங்கப் பொண்ணுக் கூடப் போய் ஃப்ரீயாகப் பேசுங்க” என்று மருமகளையும், அவளது பெற்றோரையும் அனுப்பி வைத்தார் மனோரமா.

அவர்கள் சென்றதும்,”டேய்! என்னடா இப்படி திடீர்னு அவங்க காலில் விழுந்துட்ட? இதையெல்லாம் உங்கிட்ட எதிர்பார்க்க முடியாதே!” என்று மகனிடம் கேட்டார் பாலேந்திரன்.

“இனிமேல் தாராளமாக எதிர்பார்க்கலாம் ப்பா” என்று கூறிப் புன்னகை செய்தான் பகீரதன்.

“ஓஹோ! ஆனாலும் உன்னை நம்ப முடியாது!” என்றுரைத்தார் அவனது தந்தை.

“ஆமாம் ங்க. இவன் எமகாதகன்! இவன் என்ன செஞ்சாலும் அதை நம்பி ஏமாந்து விடக் கூடாது” என்று மனேரமாவும் கூறி விட,

“ஆமாம். என் மேலே நம்பிக்கையே வச்சிடாதீங்க!” என்று சலித்துக் கொண்டான் மகன்.

அதே சமயம்,”மாப்பிள்ளை அப்படி செஞ்சதும் எங்களுக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை! அப்படியே திகைச்சுப் போய் நின்னுட்டோம்” என்றார் மதுராஹினி.

“எனக்கும் தான் ம்மா” என்றாள் ஹாரண்யா.

“ஆனால் நாங்க பயந்தா மாதிரி இல்லை. நீ நல்லா வாழுவ - ன்னு எங்களுக்கு நம்பிக்கை வந்திருச்சு! மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துப்பார்!” என்று அவளிடம் உளமார கூறினார் இயமானன்.

அதில் முகிழ்நகை முகிழ்த்த ஹாரண்யாவிற்கும் கூடத் தன் பெற்றோருக்குத் தன்னைப் பற்றி இருந்த கவலை மறைந்து விட்டதை எண்ணி மனதின் ஓரத்தில் ஒரு நிம்மதி பரவியது எனலாம்.

மதுராஹினி, “நீ இப்போதைக்கு வேலைக்குப் போக வேண்டாம் ஹாரா ம்மா. கொஞ்ச நாள் கழிச்சுப் போ. சரியா? ” என்றவுடன் தான், அவளுக்குத் தன் வேலையைப் பற்றிய ஞாபகமே வந்தது.

“ம்மா! நான் அடுத்த வாரமே வேலைக்குப் போகலாம்னு இருக்கேனே!” என்று அவரிடம் சொல்ல,

“உடனே போகனும்னு என்ன அவசியம் உனக்கு? அதெல்லாம் பொறுமையாகப் போயிக்கலாம்” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் அவளது அன்னை.

“ப்பா! நீங்களாவது சொல்லுங்க” என்று தந்தையை துணைக்கு அழைக்க,

“உங்கம்மா சொல்றது தான் கரெக்ட் ம்மா” என அவரும் கூறி விட, வேறு வழியின்றி அதற்குச் சம்மதித்தாள் ஹாரண்யா.

அதன் பின்னர், சூரியன் மேற்கில் உதித்த நேரத்தில் மகளிடமும், அவளது புகுந்த வீட்டாரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர் மதுராஹினி மற்றும் இயமானன்.

அன்றிரவு, தன் கணவனை அணைத்து,”தாங்க்ஸ் பகீ” என்றாள் ஹாரண்யா.

“இட்ஸ் ஓகே ரணு” என்றவன் அவள் தன்னை முதல் முறையாக கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதை எண்ணி ஆனந்தமாக அதிர்ந்தான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 23

“ஹேய் ரணு” என்றவனுக்கு அவளது அணைப்பு சுகமாக இருந்தது.

அதனால், விழிகளை மூடி அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்தான் பகீரதன்.

அந்த ஆத்மார்த்தமான அணைப்பினால் அவர்கள் இருவரும் ஆசுவாசமாக உணர்ந்தார்கள்.

அதன் பின்னர் அவனிடமிருந்து மெல்ல தன் கரங்களை விலக்கிக் கொண்டவளை இழுத்துக் கட்டிக் கொண்டான் கணவன்.

“என்னங்க”என்று முனகியவளிடம்,

“இப்போ எனக்கு உன்னைக் கட்டிப் பிடிச்சிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே இருக்கனும் போல தோனுது ரணு. ப்ளீஸ்!” என்றவனை விலக்க மனமின்றி அவனது அணைப்பில் அடங்கிப் போனாள் ஹாரண்யா.

அதற்கு மேல் தங்கள் இருவருடைய உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டு வந்து அணைப்பிலிருந்து விடுபட்டனர்.

“நான் நாளையிலிருந்து ஷூட்டிங் போகப் போறேன் ரணு” என்று அவளிடம் அறிவித்தான் பகீரதன்.

“ஓஹ்! ஏன் நாளைக்கே போகனும்? ஒரு நாள் கழிச்சுக் கூடப் போகலாம்ல பகீ?” என்று அக்கறையுடன் கேட்டாள் ஹாரண்யா.

“அதான் சொன்னேனே! ஒரு மாசத்துக்குள்ளே படத்தை முடிக்கனும். ஏதோ நானுங்க போய் இவ்வளவு நாள் என்னை ஃப்ரீயாக விட்டு வச்சாங்க. ஆனால் நான் பொறுப்பாக இருக்கனும்ல? அதனால் தான், சொன்ன தேதிக்குப் படத்தை முடிச்சுக் கொடுக்கனும்னு நினைக்கிறேன்”

“அப்படியா? சரி பகீ. நானும் கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்குப் போகலாம்னு இருக்கேன்” என்றவளிடம்,

பகீரதன்,“தாராளமாகப் போ ரணு. எப்படியும் இந்தப் படத்துக்கானப் புரமோஷன் வொர்க்ஸ், ப்ரீ ரிலீஸ் ஈவண்ட், சக்ஸஸ் மீட் - ன்னு எல்லாத்துக்கும் உங்க சேனலைத் தானே செலக்ட் செஞ்சிருக்கோம். அப்போ நாம கண்டிப்பாக வெளியேயும் அடிக்கடி மீட் பண்ணிப்போமே! அதனால், இதில் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை” என்று சிரித்த முகமாகவே கூறினான் பகீரதன்.

“ம்ம். ஓகே பகீ. அது வரைக்கும் நான் எடுத்தப் பழைய இன்டர்வியூஸை எல்லாம் பார்க்கனும். அப்போ தான் மறுபடியும் வேலையில் சேரும் போது தடுமாறாமல் இருக்க முடியும்” என்றாள் மனைவி.

“ஆமா அப்படியே நான் உனக்குப் புரபோஸ் செஞ்ச இண்டர்வியூவைக் கண்டிப்பாகப் பாரு ரணு!” என்று அவளிடம் கூறியவனை விழிகள் படபடக்க ஏறிட்டாள் ஹாரண்யா.

உடனே அவளைப் பார்த்துக் கண்ணடித்தவனோ,”அதையெல்லாம் எதிர்காலத்தில் நம்ம பிள்ளைகளுக்குப் போட்டுக் காமிக்கனும்!” என்று சொல்லி அவளை இன்னும் அதிகமாக வெட்கப்பட வைத்தான் அவளது கணவன்.

“பகீ” என்றவளோ அவனிடமிருந்து தப்பித்துக் கீழே சென்று விட்டாள்.

அதற்குப் பிறகுத் தன் கைப்பேசியை எடுத்து, அதில் தன் காரியதரிசிக்கு அழைத்து, மறுநாள் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறியவன்,

“நம்ம டைரக்டர் கிட்டே மோஹித்துக்குக் கால் பண்ணி அவனை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூப்பிடச் சொல்லு” என்று அவனுக்கு உத்தரவிட,

“அவர் எதுக்குன்னு கேட்பாரே சார்?” என்றான் கபீர்.

பகீரதன்,“அதான் அந்தப் படத்தில் எனக்குப் பதிலாக ஹீரோவாக நடிக்கக் கேட்டானே? அதைப் பத்திப் பேசனும்னு சொன்னா வந்துடப் போறான்” என்றவனிடம்,

“ஓகே சார். நீங்க சொன்ன மாதிரியே நான் இதைக் கைலாஷ் சார் கிட்டே இன்ஃபார்ம் செய்றேன்” என்றுரைத்தான்.

“என்னோட கேரவனை நல்லா செக் பண்ணிட்டுப் பொருளை எல்லாம் வச்சிரு” என்று உத்தரவு பிறப்பித்து விட்டு அழைப்பைத் தூண்டித்தான் பகீரதன்.

அதன் பின், தான் நாளை முதல் படப்பிடிப்பிற்குச் செல்லப் போவதை தன் பெற்றோரிடம் தெரிவிக்க,

“நாங்க என்ன சொன்னாலும் நீ கேட்கப் போறதில்லை. இதை உன் பொண்டாட்டி கிட்டேயாவது முதல்லயே சொன்னியா, இல்லை இப்போ தான் அவளுக்கும் சேர்த்து சொல்றியா?” என்றார் மனோரமா.

உடனே கணவனை முந்திக் கொண்டு,”என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டார் அத்தை” என்றாள் ஹாரண்யா.

“ஓஹ், அப்போ சரிம்மா. நீ எப்போ வேலைக்குப் போகப் போற? எவ்வளவு நாள் லீவ் எடுத்து இருக்கிற?”என்று அவளிடம் விசாரித்தார் பாலேந்திரன்.

“ஒரு வாரம் கழிச்சுப் போகலாம்ன்னு இருக்கேன் மாமா” என்றாள் அவரது மருமகள்.

“டேய்! நீயும், ஹாராவும் ஒரே துறையில் தான் வேலை பார்க்கிறீங்க! இவளைப் பத்திரமாகப் பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு! சரியா?”என்று மகனுக்கு வலியுறுத்தினார் மனோரமா.

“சரிங்க ம்மா”என்றான் பகீரதன்.

“இவ்வளவு வருஷமாக நானே தான் என்னைப் பார்த்துக்கிட்டேன் அத்தை! இப்போ மட்டும் என்ன? அவர் பிஸியாக இருப்பார். நேரம் இருக்காது” என்று அவனுக்காகப் பரிந்து பேசினாள் ஹாரண்யா.

“ஹேய்! நான் அம்மா சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லவே இல்லையே? அப்பறம் ஏன் இப்படி பேசுற ரணு?” என அவளிடம் வினவினான் கணவன்.

“நான் அப்படி சொல்லலை ங்க. உங்களுக்கு என்னைப் பார்த்துக்கிறது ஒரு வேலையாக ஆகிடுமே? அதான் சொன்னேன்” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“இதுக்கு முன்னாடி எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனால், இனிமேல் நீ என்னோட வொய்ஃப். உன்னைப் பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை! அதை நான் கண்டிப்பாகச் செய்வேன்!” என்று உறுதியான குரலில் மொழிந்தான் பகீரதன்.

அதைக் கேட்டதும் முகம் விகசிக்க, அவனைப் பார்வையால் பருகிய ஹாரண்யாவின் சிந்தனையைக் கலைத்தது அவளது மாமியாரின் குரல்.

“ம்ம். உன்னால் முடியாதுன்ற விதமாகத் தாழ்த்திப் பேசலை ஹாரா. உனக்குத் துணையாக எப்பவும் இவன் இருக்கனும்! அதுக்காகத் தான் அப்படி சொன்னேன்” என்க,

“எனக்குப் புரிஞ்சது அத்தை” என்று அவரிடம் கூறிப் புன்னகைத்தாள் மருமகள்.

இதே சமயம், தன்னுடைய வீட்டில், தனது அறையில், ஏசியின் குளுமையை விட மும்மடங்கு குளிர்ந்து போயிருந்தான் மோஹித்.

சற்று முன்னர், இயக்குனர் கைலாஷ் அலைபேசி வாயிலாகத் தெரிவித்த விஷயம் தான் அதற்குக் காரணம்!

அவனை மறுநாள் படப்பிடிப்புத் தளத்திற்கு வருமாறு அழைத்திருந்தார் அவர்.

ஆனால், அவரது படத்தில் பகீரதனுக்குப் பதிலாகத் தன்னை நடிக்க வைக்க முடிவு செய்து விட்டார். அதனால் தான், அவர் தன்னை அங்கே நேரடியாக வரச் சொல்லி இருக்கிறார் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தான் மோஹித்.

ஆனால் அந்த அழைப்பே பகீரதன் சொல்லித் தான் தனக்கு வந்திருக்கிறது என்பதையும், அப்படி அவன் தன்னை வரச் சொல்வதற்கான காரணம் என்னவென்பதை அறிந்திருந்தால் இப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டான், அந்த இடத்திற்குச் செல்வதையும் தவிர்த்து இருப்பான்.

ஆனால் விதி வலியது அல்லவா? அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.

அதனால் அவனுக்குள் பகீரதனின் மீதான வன்ம விதை பயங்கரமான விருட்சமாக வளரப் போவதையும், அதில் அவன் அல்லாமல் அவனது ஆருயிர் மனைவி தான் பாதிக்கப்படப் போகிறாள் என்பதையும் அறியாமல் விட்டு விட்டான் பகீரதன்.

மறுநாள் காலையில் விடியலின் போது தன் கணவன் படப்பிடிப்பிற்குச் செல்லப் போகிறான் என்பதை தன் பெற்றோருக்கு அழைத்து தெரிவித்தாள் ஹாரண்யா.

மதுராஹினி,“இனிமேல் மாப்பிள்ளைக்குத் தேவையானதை செய்து கொடுக்கிறதுல தான் உனக்கு கவனம் இருக்கனும். அவரை நல்லா பார்த்துக்கோ” என்றவரிடம்,

“நான் வீட்டில் இருக்கிற வரைக்கும் அதைப் பார்த்துப்பேன் ம்மா. அதுக்கப்புறம் நானும் வேலைக்குப் போயிட்டா ரெண்டு பேரும் எல்லாத்தையும் பகிர்ந்து செய்வோம்” என்று கூற,

அதில் அதிருப்தி அடைந்தவரோ,”உடனே வேலைக்குப் போகனும்னு நினைக்காதே ஹாரா. நான் அங்கே வந்தப்போவே சொன்னேன்ல? கொஞ்ச நாள் ஏன் ஒரு ஆறு மாசம் கூட ஆகிட்டுப் போகுது. நீ பொறுமையாகவே வேலைக்குப் போ” என்றவரை எண்ணிப் பல்லைக் கடித்தவள்,

“ம்மா! நீங்களும், அப்பாவும் என்னை எந்தச் சூழ்நிலையிலும் வேலைக்குப் போக கூடாதுன்னு சொல்லவே மாட்டீங்க! ஆனால் இப்போ என்னடான்னா என்கிட்ட எப்போ பேசினாலும் இதைச் சொல்லாமல் இருக்கிறதே இல்லை! உங்களுக்கு என்ன தான் ஆச்சு ம்மா?” என்று அவரிடம் பொரிந்து தள்ளினாள் ஹாரண்யா.

“கோவிச்சுக்காதே ம்மா! உன்னை ஒரேயடியாக வேலைக்குப் போகாதன்னு தடை போடலையே? என்ன இருந்தாலும் புகுந்த வீட்டுக்குப் போன உடனே நீ வேலைப் பார்க்கப் போறேன்னுக் கிளம்பினா சம்பந்தி என்ன நினைப்பாங்க? அதனால் தான் சொல்றேன்” என்று கூறி அவளது கோபத்தைக் குறைக்க முயன்றார் மதுராஹினி.

“எனக்குக் கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடி வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க? இப்போ என்னாச்சு உங்களுக்கு? அப்பா கிட்ட ஃபோனைக் கொடுங்க” என்றாள் மகள்.

“ஏய் நான் ஒரு அக்கறையில் தான் அப்படி பேசினேன். அதுக்கு இப்படியாக என்கிட்ட பொரிஞ்சு தள்ளுவ? சரி, வேற பேசலாம்” என்க,

“அதெல்லாம் வேண்டாம். நீங்க மொபைலை அப்பா கிட்ட தாங்க” என்றவுடன் அதற்கு மேல் அவளைச் சமாதானம் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டுக் கணவனிடம் செல்பேசியைக் கொடுத்தார் மதுராஹினி.

“என்ன ஹாரா ம்மா?” என்று கனிவுடன் கேட்டார் அவளது தந்தை.

“அம்மா ஏன் ப்பா இப்படி பேசுறாங்க? அவங்களோட அட்வைஸ்ஸைக் கேட்டாலே எனக்குக் கோபமாக வருது!” என்று அவரிடம் முறையிட்டாள் மகள்.

“நீ வேலைக்குப் போகிறதால் மாப்பிள்ளைக்கும், உனக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை வந்துருமோன்னு பயப்பட்றா ம்மா” என்றார் இயமானன்.

“அதனால் எங்களுக்கு எதுக்கு சண்டை வரப் போகுது ப்பா?” என்றவள், தன் கணவன், மாமனார் மற்றும் மாமியாரிடம் இதைப் பற்றிப் பேசும் போது அவர்கள் கூறியதை அவரிடம் விவரித்தாள் ஹாரண்யா.

“ம்ம். அவங்களே அப்படி சொன்னதுக்கு அப்பறம் இந்த விஷயத்தில் இனிமேல் மது எதுவும் சொல்ல மாட்டா. நீ உன் இஷ்டம் போல இருடா” என்றவரிடம்,

“தாங்க்ஸ் ப்பா. அப்படியே அம்மாவுக்கும் கொஞ்சம் புரிய வைங்க” என்று கூறி விட்டு அழைப்பை வைத்தாள் மகள்.

அதன் பிறகு, அவள் கூறியதை தன் மனைவியிடம் சொல்லி முடித்தவரோ,”அவ விஷயத்தில் நாம் தலையிடாமல் இருக்கிறது தான் நல்லது ம்மா. இல்லைன்னா அவ நம்மளை வெறுத்துடுவா! வேலைக்குப் போறதும், போகாததும் அவளோட விருப்பம். அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தான் சரி” என்று அவருக்கு அறிவுரை கூறினார் இயமானன்.

“சரி ங்க. இதனால் அவ எங்கிட்ட பேசாமல் இருந்துட மாட்டாள்ல ங்க?” என்று வருத்தத்துடன் கேட்டார் மதுராஹினி.

“அப்படியெல்லாம் நம்மப் பொண்ணு நம்மக் கிட்டே கோபத்தைப் பிடிச்சு வைக்க மாட்டாள் ம்மா. அவ வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் நீயே அவளுக்குக் கால் செஞ்சி வாழ்த்து சொல்லு. அதைத் தான் உங்கிட்ட இருந்து ஹாரா எதிர்பார்ப்பாள்” என்றுரைக்கவும் தான் அவரது மனைவியின் முகம் தெளிவடைந்தது.

ஆனால் இதற்குப் பிறகு தான் அவர்களது மகளின் வாழ்வில் குழப்பம் உண்டாகப் போகிறது!

- தொடரும்

மோஹித்தைப் பத்தி இவ்வளவு பில்டப் கொடுக்கிறாங்க… ஆனால் அவனோட வில்லத்தனம் இன்னும் வெளியே வரவே இல்லையேன்னு நினைப்பீங்கன்னு எனக்குத் தெரியும்! அவன் இப்போ அடக்கி தான் வாசிக்கிறான்! இனிமேல் தான் அவனோட சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் நண்பர்களே! நன்றிகள் பல 🤩🙏
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 24

அதிகாலையில் உறக்கம் கலைந்து விழித்தவளிடம்,”குட் மார்னிங் ரணு” என்று புன்னகை செய்தான் பகீரதன்.

அவன் நன்றாக உடுத்திக் கிளம்பி இருப்பதைக் கண்டவுடன் தான்,'தன் கணவன் இன்றிலிருந்து படப்பிடிப்பிற்குப் போகப் போகிறான்!’ என்பது அப்போது தான் அவளுக்கு நினைவிற்கு வந்தது.

“அச்சோ! சாரிங்க. உங்களுக்கு முன்னாடியே எழுந்திரிச்சு இருக்கனும்” என்றவளிடம்,

“ஏன் ரணு?” என்றான் பகீரதன்.

“உங்களைக் கிளப்பி விடனும்ல? அதான்” என்று கூறி விட்டுப் படுக்கையில் இருந்து எழுந்தாள் ஹாரண்யா.

“நீ என்னைக் கிளப்பி விட்றதுக்கு நான் என்ன ஸ்கூல் போகிற குழந்தையா? ஏன் இப்படி அநியாயம் பண்ற ரணு?” என அவளிடம் சலித்துக் கொண்டான் கணவன்.

“ம்ஹ்ம்! என்னைக் கிண்டல் பண்றீங்க! போங்க பகீ!” என்றவளோ,

தன்னுடைய இரவு உடையைச் சரி செய்து கொண்டு,”நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன். அதுக்குள்ள கிளம்பிப் போயிடாதீங்க” என்று அவனிடம் வலியுறுத்தி விட்டு வேகவேகமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.

அதைக் கண்டு புன்னகைத்து விட்டு, உணவு அருந்துவதற்காக கீழே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்த பகீரதனிடம்,

“வாடா. ஹாரா எங்கே?”என்று மகனிடம் கேட்டுக் கொண்டே அவனுக்குச் சாப்பாட்டைப் பரிமாறத் தொடங்கினார் மனோரமா.

“அவ இப்போ தான் எழுந்திரிச்சா. ஃப்ரெஷ் ஆகிட்டு வருவா ம்மா” என்றதும்,

“சரி. அவ நிதானமாக வரட்டும். நீ சாப்பிடு” என்று கூறி விட்டார்.

பகீரதன் உணவுண்டு முடித்த சமயத்தில் அங்கே வந்த ஹாரண்யாவோ,”சாரி அத்தை. லேட் ஆக எழுந்திரிச்சுட்டேன்”என்று தர்ம சங்கடத்துடன் அவரிடம் மன்னிப்புக் கேட்டாள்.

மனோரமா,“அதுக்கு எதுக்கு சாரி? நீ கீழே வரலைன்னா உனக்கு டீயை ரூமுக்கு அனுப்பி வைக்கலாம்னு நினைச்சேன். இப்போ குடிக்கிறியா?” என்றதும்,

“ம்ம். ஓகே அத்தை” என்றவளுக்குத் தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

“பகீ! சாரி” என அவனிடம் முணுமுணுப்பாக கூறினாள் ஹாரண்யா.

“இட்ஸ் ஓகேடா. நோ பிராப்ளம். நீ சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிடு. நான் ஷூட்டிங் - க்குப் போயிட்டு வர்றேன்” என்று அவளிடமும்,

“நான் கிளம்பறேன் ம்மா. அப்பா கிட்ட சொல்லிடுங்க” என்றவாறு தன் காரிலேறி படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றான் பகீரதன்.

தனக்குத் கொடுத்த தெநீரைக் குடித்துக் கொண்டே,”இவ்வளவு நேரமாச்சு. இன்னும் மாமாவைக் காணோமே அத்தை? எழுந்துட்டாங்களா?” என்று தன் மாமனாரைப் பற்றி விசாரித்தாள் ஹாரண்யா.

“அவர் எப்பவோ எழுந்துட்டார் ம்மா. ஆனால், களைப்பா இருக்குன்னு ரூமில் ரெஸ்ட் எடுக்கிறார்” என்று மருமகளிடம் கூறினார் மனோரமா.

“ஏன் அவருக்கு திடீர்னு இப்படி ஆகிருக்கு அத்தை? மாமாவுக்கு ஏதாவது ஹெல்த் இஷ்யூ இருக்கா?” என்றவளிடம்,

“அப்படி எதுவும் இல்லை ம்மா. அவருக்கும் வயசாகுதுல்ல? அதான்” என்றுரைத்தார்.

“ஓகே அத்தை. இனிமேல் தான் மாமாவோட ஹெல்த்தை நல்லா பார்த்துக்கனும்” என்றவள்,

“நான் போய்க் குளிச்சிட்டு வந்து மாமாவைப் போய்ப் பார்க்கிறேன் அத்தை” என்று தயாராகச் சென்றாள் ஹாரண்யா.

இதே சமயம், படப்பிடிப்புத் தளத்தை அடைந்து காரை விட்டு இறங்கிய பகீரதனுக்கு, முன்பை போல இப்போதும் தனி மரியாதை கொடுத்தனர் அங்கேயிருந்த அனைவரும்.

அந்தப் படத்தின் இயக்குனரான கைலாஷூம் கூட, அவனிடம் வந்து,”ஹாய் சார். வெல்கம் பேக்!” என்று ஆரவாரமாக வரவேற்றார்.

“தாங்க்யூ சார்” என்றவன்,”இன்னும் புரொடியூசர் சார் வரலையா?” என்று அவனிடம் வினவினான் பகீரதன்.

“மதியம் வர்றேன்னு சொல்லிருக்கார் சார்”

“ஓகே சார். மோஹித் எப்போ வர்றாராம்?” என்றதும்,

“அவரும் மதியம் தான் வருவாராம். ஜெயராஜ் சார் வர்ற நேரத்துக்குக் கால் செய்ய சொன்னாரு” எனப் பதிலளித்தார் கைலாஷ்.

“ஓஹோ! சரி. ஹீரோயினைக் காணோம்?” என்றான் பகீரதன்.

“உங்க கல்யாண நேரத்திலேயே அவங்களுக்கான சீன்ஸ் எல்லாத்தையும் எடுத்து முடிச்சாச்சு சார். இனிமேல் உங்களுக்குத் தான் ஷாட்ஸ் இருக்கு. அதுக்கு அப்புறமாக உங்க ரெண்டு பேருக்கும் சேர்ந்து இருக்கிற சீன்ஸ்ஸை எடுக்கலாம்னு நினைச்சு இருக்கோம் சார்” என்க,

“ஓகே. என்னோட ஷாட்டுக்கான டிரெஸ் தயாராக இருக்கா?”

“எஸ் சார். உங்க கேரவனில் வச்சாச்சு”

“நான் அதை மாத்திட்டு வந்ததும் என்னோட சீன் என்னன்னு விவரிச்சிட்டு டயலாக் பேப்பரைக் கொடுங்க”என்று அவரிடம் கூறி விட்டுத் தன் கேரவனுக்குள் நுழைந்தான் பகீரதன்.

அதன் பிறகு அந்த இடமே பரபரப்பாகி விட்டது. உதவி இயக்குனர்களோ ஆங்காங்கே நின்று கொண்டு அனைவரையும் தயாராகச் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் எடுக்கப் போவது சண்டைக் காட்சிகள் என்பதால், தன்னுடைய உதவியாளர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் ஸ்டண்ட் மாஸ்டர்.

படப்பிடிப்புத் தளத்திற்குப் பகீரதன் வந்து விட்டதையும், இன்னும் சில நேரத்தில் சண்டைக் காட்சிகளை எடுக்கப் போவதாகவும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார் கைலாஷ்.

அதே சமயம், குளித்து தயாராகி வந்தவள், தன் மாமியாரிடம் அறிவித்து விட்டு மாமனாரின் அறைக்குப் போய்,

“ஹாய் மாமா” என்று அவரிடம் பேச்சுக் கொடுத்தாள் ஹாரண்யா.

“வா ம்மா” என எழுந்து அமர்ந்தார் பாலேந்திரன்.

“நான் உங்களை ஹாலில் பார்க்கவே இல்லையா? அதனால் தான் இங்கே வந்து பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்”

“ஆமாம் மா. நான் சீக்கிரமே எழுந்து காபி குடிச்சிட்டேன். ஆனால் சோர்வாக இருக்கவும் மறுபடியும் ரூமுக்கே வந்துட்டேன்”

“அத்தை சொன்னாங்க மாமா” என்றவள், அவருடன் சிறிது நேரம் ஆறுதலாகப் பேசி விட்டுத் தன் மாமியாருக்கு உதவி செய்ய சமையலறைக்குச் சென்று விட்டாள் ஹாரண்யா.

தன் ஆடையை மாற்றி வந்த பகீரதனுக்கு அப்போது எடுக்கப் போகும் காட்சியை விவரித்து, அவன் பேச வேண்டிய டயலாக்கையும் கூறி விளக்கினார் கைலாஷ்.

“ஓஹ்! ஃபைட் சீனா? ஃபைட்டர்ஸ் எல்லாரும் ரெடியா?”

“எப்பவோ ரெடியாக இருக்காங்க சார்” என்றவுடன், தனது கையிலிருந்த ஸ்கிரிப்ட் பேப்பரை வாசித்தான் பகீரதன்.

அதன் பின்னர், ஸ்டண்ட் மாஸ்டர் அசோகனிடம்,”உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம்!” என்றவனிடம்,

“எனக்கும் தான் சார். ஹாப்பி மேரீட் லைஃப்” என்றார்.

“தாங்க்ஸ் சார். ஸ்டார்ட் பண்ணலாமா?”என அனுமதி கேட்டு விட்டுச் சண்டைக் காட்சியை அதி தீவிரமாகவும், அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் எடுக்கத் தொடங்கினர்.

தன்னிடம் அடி வாங்கி விழுந்து கிடந்தவர்களைப் பார்த்து ஆக்ரோஷமாகப் பேசினான் பகீரதன்.

அதைக் கவனமாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் கைலாஷ்.

சின்ன, சின்ன தவறுகள் காரணமாக அந்தக் காட்சி இரண்டு முறைகள் மட்டும் மீண்டும் எடுக்கப்பட்டு மூன்றாவது முறையாக வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.

எப்போதும் போலவே, இந்த முறையும் அதிக ’டேக்’ வாங்காமல் காட்சியைக் கச்சிதமாக நடித்துக் கொடுத்த பகீரதனிடம் நன்றி தெரிவித்தார் கைலாஷ்.

பகீரதன்,“அடுத்த சீன் எப்போ?”

“லன்ச் - க்கு அப்பறம் தான் சார். நீங்க டிரெஸ் மாத்திட்டுச் சாப்பிட்டுட்டு வெயிட் பண்ணுங்க”

“அப்போ நம்ம புரொடியூசரும், மோஹித்தும் வந்ததுக்கு அப்பறம் அதை எடுக்கலாமா சார்?” என்று கேட்க,

கைலாஷ்,“ஷூயர் சார்” என்றதும், தன் கேரவனுக்குள் போய் விட்டான் பகீரதன்.

ஆனால் சில நிமிடங்களிலேயே அவ்விடத்திற்குப் புயலென காரில் வந்திறங்கினான் மோஹித்.

அவனது முகத்தில் தோற்றுப் போன அவமானமும், அடிபட்ட புலியின் சீற்றமும் தெரிந்தது.

பகீரதனே அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்கப் போகிறான் என்றும், தற்போது சண்டைக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் அவனது காதுகளுக்கு எப்படியோ எட்டி இருக்க,

அதை அறிந்தவுடனேயே தாமதிக்காமல் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து விட்டிருந்தான் மோஹித்.

“உங்க புரொடியூசரும், டைரக்டரும் எங்கே?” என்றவனது ஆங்காரத்தைக் கண்டு அங்கேயிருந்த அனைவரும் சில கணங்கள் ஸ்தம்பித்து விட்டார்கள்.

உடனே அவனிடம் வந்த கைலாஷ்,”வாங்க சார். மதியம் வர்றேன்னு சொன்னீங்க! இப்போவே வந்து நிற்கிறீங்க” என்க,

“என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா மேன்?”

“சத்தியமாக இல்லை சார்”

“அப்பறம் எதுக்கு என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லிட்டு அந்தப் பகீரதனையே வச்சு மீதிப் படத்தை எடுத்துட்டு இருக்கிற? ஜெயராஜ் சார் எங்கே?” என்று சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓட விட்டான் மோஹித்.

“அவர் இன்னும் வரலை சார்” என்றவுடன்,

“ஓஹ்! அது தான் பகீரதனை வச்சே படத்தை தொடர முடிவு பண்ணிட்டீங்களே? அப்பறமும் எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னீங்க?” என்றவனிடம்,

அவனது வருகையைப் பற்றித் தன் பவுன்சர்ஸ் மூலமாகத் தெரிந்து கொண்ட பகீரதனோ, கேரவனில் இருந்து வெளியேறி,”அதை நான் சொல்றேன்” என்று எகத்தாளமாக உரைத்தான்.

அவனைப் பார்த்ததும் கோபத்தின் உச்சத்திற்குப் போய் விட்டான் மோஹித்.

“டேய்! உன்னால் தான்டா நான் இப்படி அவமானப்பட்டு நிற்கிறேன்!” என்றவனைப் பார்த்து ஏளனமாக,

“அப்படியா சொல்ற? என்னோட கல்யாணத்தைக் காரணமாக வச்சு இந்தப் படத்திலிருந்து என்னை விலக்கிட்டு உன்னை நடக்க வைக்கச் சொல்லிக் கேட்டு நீ தான் முதல்ல இதை ஆரம்பிச்சு வச்ச? இப்போ என் மேல் பழியைப் போட்டால் என்ன அர்த்தம்?” என்றான் பகீரதன்.

அதற்குப் பதில் சொல்லத் துணிவு வரவில்லை அவனுக்கு.

“என்னடா அமைதியாக நிற்கிற? இப்போ பேசு” என்கவும்,

“என்னை நேரில் வர வைச்சு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்திட்டேல்ல? இதை நான் எப்பவும் பறக்க மாட்டேன்! இதுக்கான பதிலடியை நான் உனக்குக் கொடுக்காமல் விட மாட்டேன் “என்று சூளுரைத்தான் மோஹித்.

“இப்படியே இதை எல்லாத்தையும் சேர்த்து வச்சு மொத்தமாகப் பழி வாங்கப் பொறுமையாகப் பிளான் பண்ணுடா. நான் போய்ச் சாப்பிட்டு வந்தால் தான் ஷூட்டிங் ஆரம்பிக்க முடியும். அதனால் நீ கிளம்புறியா?” என அவனைப் பழி வாங்கி விட்ட திருப்தியுடன் கூறினான் பகீரதன்.

ஆனால்,”நானும் இந்த ஃபீல்டில் இருக்கிற டாப் ஹீரோன்னு உங்களுக்குத் தெரியும் தானே கைலாஷ்? அப்படி இருக்கும் போது என்னைப் பகைச்சுக்கிட்டா நிறைய விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும்ன்ற நினைப்புக் கூட இல்லாமல் நீங்களும், ஜெயராஜ் சாரும் இவன் கூட சேர்ந்து இப்படி பண்ணிட்டு இருக்கீங்களே? உங்களுக்குப் பயம் இல்லையா?”

“முதல்ல இருந்தது தான் சார். ஆனால், உங்களை விடப் பெரிய சூப்பர்ஸ்டார் பகீரதன் சார் தான்! அவர் எங்க கூட இருக்கும் போது எப்படி பயம் வரும்? அவரை வச்சு நாங்க இன்னும் மூனு படம் பண்ண ஒப்பந்தம் போட்டு இருக்கோம்!” என்றவுடன்,

“ஓஹோ! அதனால் தான் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தைரியமாக அவன் சொல்றதை எல்லாம் செய்றீங்களா? இருக்கட்டும்!” என்று கூறி விட்டு பகீரதனைப் பயங்கரமாக முறைத்துப் பார்த்தவன் தன் காரிலேறி சென்று விட்டான் மோஹித்.

“அவன் இப்படி வாய் கிழியப் பேச மட்டும் தான் லாயக்கு! எனக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லிட்டு நடந்ததை ஜெயராஜ் சாருக்கு இன்ஃபாரம் பண்ணிடுங்க” என்று கூலாக சொல்லி விட்டுப் போனான் பகீரதன்.

அதன்படி, அவனுக்கு உணவை அனுப்பி வைத்து விட்டுத் தயாரிப்பாளருக்கு அழைத்து சற்று முன்னர் நிகழ்ந்ததை அவரிடம் தெரிவித்து அவரை உடனே படப்பிடிப்புத் தளத்திற்கு வரச் சொன்னார் கைலாஷ்.

“இதோ கிளம்பிட்டேன்” என்றவர், அடுத்த அரை மணி நேரத்தில் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த ஜெயராஜ்,

“அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிற ஈகோவால் நமக்கு எதுவும் பிரச்சினை வந்துடாதே கைலாஷ்?” என்று வினவினார்.

“அதெல்லாம் வராது சார். அப்படியே வந்தாலும் அதைப் பகீரதன் சார் பார்த்துப்பார்” என அவருக்கு நம்பிக்கை அளித்தார் இயக்குனர்.

அதற்குப் பிறகு தன் மதிய உணவை உண்டு முடித்து வந்த பகீரதன், தயாரிப்பாளரின் மனக் கவலையைத் தன்னுடைய வார்த்தை ஜாலங்களின் மூலமாக துடைத்து எறிந்து அன்றைய நாளுக்கான அனைத்து படக் காட்சிகளையும் கச்சிதமாக நடித்துக் கொடுத்து விட்டு வீட்டிற்குப் போனான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 25

மோஹித்தைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அவனது செயல்களைப் பற்றித் தன் மனைவியிடம் தெரிவிக்காமல் இருந்தான் பகீரதன்.

அவனைப் பற்றியும், அவனது கேவலமான செயல்களைப் பற்றியும் அப்போதே அவளிடம் பகிர்ந்து இருந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போகும் அனர்த்தங்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், அவையெல்லாம் தன் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக நினைத்து அசட்டையாக ஓரம் தள்ளி விட்டுத், தன் படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் ஓரளவிற்குச் சீக்கிரமாகவே நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் பகீரதன்.

ஆனால், தினமும் காலை எழுந்து, தன் கணவனுக்குத் தேவையானவற்றைச் செய்து அவனை படப்பிடிப்புத் தளத்திற்கு அனுப்பி வைத்து விட்டுத் தன் மாமியார் மற்றும் மாமனாரிடம் அளவளாவிக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள் ஹாரண்யா.

அதுவும் அவளுக்குச் சுமையாகத் தெரியவில்லை. ஏனெனில், தன்னுடைய ஓய்வுக் காலம் முடியும் வரைத் தன் புகுந்த வீட்டாரை நன்றாக கவனித்துக் கொள்வது தனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் ஆத்மார்த்தமாகச் செய்தாள்.

இடையிடையே தன் பெற்றோரிடம் எப்போதும் போல பேசியவள், மாமனாரின் உடல்நலக் குறைவை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதால், மதுராஹினியும், இயமானனும் ஒரு தடவை வந்து பாலேந்திரனைப் பார்த்து விட்டுச் சென்றனர்.

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போது, ஒருநாள் இரவு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து பகீரதன் இன்னும் வரவில்லை.

அதனால், கணவன் வந்தால் அவனை உணவுண்ண வைத்தப் பின்பு தான் உறங்க அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து விட்டுத் தன் மாமனார் மற்றும் மாமியாரையும் உறங்க அனுப்பி விட்டுப்,

பகீரதனுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்து,”ஹலோ பகீ” என்ற மனைவியிடம்,

“ஹலோ ரணு. என்னாச்சு? நீ இன்னும் தூங்கலையா?” என்று வினவ,

“இல்லை பகீ. உங்களுக்காகத் தான் காத்திருக்கேன். எப்போ வருவீங்க?” என்றாள் ஹாரண்யா.

“நான் வர லேட் ஆகும்மா. நீ எனக்காக முழிச்சிட்டு இருக்காமல் தூங்கு” என அவளுக்கு அறிவுறுத்தினான் பகீரதன்.

“அப்பறம் நீங்க வீட்டுக்கு வந்தால் உங்களுக்கு யார் சாப்பாடு பரிமாறுவாங்களாம்?” என்று கணவனிடம் கேட்டாள்.

“ஹேய்! நீ அதுக்காகவா தூங்காமல் இருக்கிற?” என்று கேட்டவனது குரலில் ஆச்சரியம் நிறைந்து இருந்தது.

“ஆமாம். நீங்க நைட் சாப்பிடாமல் தூங்குவீங்களா என்ன?” என்றவளிடம்,

“ரணு டியர்! நான் இங்கேயே சாப்பிட்டுட்டு வந்துருவேன். ஏற்கனவே லேட் ஆகிருச்சு. நீ போய்த் தூங்கு” என்று அவளை உறங்கச் சொல்லி வலியுறுத்தினான் பகீரதன்.

“பரவாயில்லை பகீ. நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சுல்ல? இப்போதாவது சீக்கிரமா வீட்டுக்கு வாங்க” என்று குறும்பாக உரைக்க,

“ஓஹோ! இது தான் உன்னோட மாஸ்டர் பிளானா?” எனக் கேட்டு நகைத்தான் அவளது கணவன்.

“ஆமாம் பகீ” என்றதும்,

அதில் உள்ளத்தில் குளிர் பரவியதை உணர்ந்தவனோ,”சரி ரணு. நான் உடனே கிளம்பி வர்றேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டுத் தனக்காக காத்திருக்கும் மனைவியைப் பார்க்க ஆவலுடன் படப்பிடிப்புத் தளத்திலிருந்து காரில் பயணமானான் பகீரதன்.

அவனது வருகை உறுதியான பின்னர், தன் முகத்தையும், ஆடையையும் சீர்படுத்திக் கொண்டாள் ஹாரண்யா.

சில நிமிடங்களுக்குப் பிறகு வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டதும், தன் கணவனின் தோற்றம் களைப்பாக இருந்தாலும் கூட முகம் பளிச்சென்று இருந்தது.

தன் டிரேட் மார்க் புன்னகையுடன், மனைவியை நெருங்கி,”ரணு டியர்!” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் பகீரதன்.

அதை எதிர்பாராதவளோ முதுகுத்தண்டு சில்லிட்டுப் போய் அசையாமல் நின்றாள் ஹாரண்யா.

“எனக்காக இவ்வளவு நேரம் தூங்காமல் வெயிட் செஞ்சிட்டு இருந்து இருக்கிற! லவ் யூ ரணு” என்று கூறியதைக் கேட்டதும் அவனது மார்பிலிருந்து தன் தலையை உயர்த்திக் கணவனைப் பார்த்தாள்.

அவளது முன் நெற்றி மற்றும் கன்னக் கதுப்புகளில் இதழ்ப் பதித்தவனுக்குள் மோக உணர்வு கரை புரண்டு ஓடியது.

அதை உணர்ந்த ஹாரண்யாவோ,”பகீ! வாங்க சாப்பிடலாம்” என்றவளிடம்,

“அப்போ நீயும் இன்னும் சாப்பிடலையா?” எனக் கேட்டு விட்டு அவளை அணைப்பிலிருந்து விடுவித்தான்.

“ஆமாம்” என்றவளைச் செல்லமாக முறைத்து விட்டு,

அவளுடன் சேர்ந்து இரவு உணவை உண்டு முடித்தவன்,“அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டுக் கொண்டே அவளுடன் தங்கள் அறைக்குப் போனான் பகீரதன்.

“அவங்க எப்பவோ சாப்பிட்டுத் தூங்க போயாச்சு” என்றவளது அயர்ந்த தோற்றம் கூட அவனைப் பித்துப் பிடிக்கச் செய்தது.

ஆனாலும், ஏதோ ஒன்று தன்னைத் தடுப்பது போல உணர்ந்தவனோ,”குட் நைட் ரணு” என்று மனைவியிடம் கூறி விட்டுக் கட்டிலின் ஒரு முனையில் படுத்து விட்டான் பகீரதன்.

திடீரென்று மாறிப் போன அவனது சுபாவத்தைக் கண்டு புரியாமல் விழித்தவள், உறக்கம் அவளது விழிகளை அழுத்தவும் அதற்கு மேல் முடியாமல் தலையணையில் சிரசை சாய்த்தாள் ஹாரண்யா.

மறுநாள் காலையில் கண் விழித்து, தனக்கு மறுபுறம் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைத் தான் பார்த்தவனோ,

முந்தைய இரவு அவளது செயலால் தற்போதும் கூடத் தன் உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி மத்தாப்பாய் ஜொலிப்பதை உணர்ந்தான் பகீரதன்.

அது ஒரு கணவன், மனைவிக்கு இடையே நிகழும் சிறு புரிதல் கலந்த வாடிக்கையான நிகழ்வு தான்.

ஆனால், அது தங்களுக்கு இடையில் நிகழ்ந்தது எப்படி சாத்தியம்? என்று யோசித்தான்.

ஏனெனில், அவன் ஹாரண்யாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்ததற்கு, மோஹித்திடம் விட்ட சவால் தான் காரணம்.

தங்கள் திருமணத்திற்குப் பிறகு, ஹாரண்யா தன் வீட்டில், தன் பெற்றோருடன் பொருந்திப் போவாள் என்ற நம்பிக்கை பகீரதனுக்கு ஏற்படவில்லை.

ஏனெனில், அவள் தனது வேலையில் மிகுந்த முனைப்புடன் இருந்ததைப் பல நேரங்களில் கண் கூடாகப் பார்த்திருந்ததால், அப்படியான நினைப்பு இருந்தது அவனுக்கு.

அதையெல்லாம் உடைத்து எறிந்து மனைவிக்கான கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கும் இவளைக் காணும் போதெல்லாம் தனது இதழில் குறுநகை தோன்றுவதை அவனால் மறைக்க, மறுக்க முடியவில்லை.

உடனே மனைவியின் கன்னங்களில் தனி அதரங்களை அழுத்தமாகப் பதிந்து விட்டு அவள் விழிக்கும் முன்னரே எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் பகீரதன்.

ஒருநாள் கணவன் கிளம்பும் போது எழாமல் இருந்த தன் தவறை உணர்ந்து அடுத்து வந்த நாட்களில் எல்லாம் அவனுக்கு முன்னதாகவே விழித்து விடுபவள்,

நேற்றைய இரவு தாமதமாக உறங்கியதால் இப்போது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் ஹாரண்யா.

அவன் தயாராகி வந்த பிறகும் கூட அவள் கண் விழிக்கவில்லை. அதை அவன் பெரிதாக கருதாமல் கீழே சென்றான் பகீரதன்.

வழக்கம் போல, அவனுக்கு உணவை எடுத்து வைத்தவர்,”நைட் நீ சாப்பிட்டுத் தூங்கினியாடா? உனக்காக ஹாராவும் பசியோட காத்திருந்தாள்” என்று வினவினார் மனோரமா.

“நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுத் தான் தூங்கினோம் மா” என்றபடி உணவுண்ணத் தொடங்க,

“அப்படின்னா சரி. அதான் அவ இன்னும் கண் முழிக்கலையா?” என்றார் அவனது அன்னை.

“ஆமாம் மா” என்றவன் தன் உணவை உண்டு முடித்து விட்டுத் தந்தையின் அறைக்குப் போனான் பகீரதன்.

அவனைப் பின் தொடர்ந்த மனோரமாவோ,”என்னடா உனக்கு ஷூட்டிங் - க்கு நேரமாகலையா?” என்று கேட்க,

“இல்லை ம்மா. நிறையவே டைம் இருக்கு. அப்பாவைப் பார்க்கனும்னு தான் சீக்கிரம் எழுந்து கிளம்பி வந்தேன்” என்றவன்,

“அப்பா” என மெல்லிய குரலில் தந்தையை அழைத்தான் பகீரதன்.

அதைக் கேட்டு, தன் விழிகளை மெதுவாகத் திறந்த பாலேந்திரன்,”பகீரதா!” என்று மலர்ந்த புன்னகையுடன் மகனை விளித்து அருகில் வருமாறு சைகை செய்தார்.

உடனே அவரிடம் சென்றவன்,”இப்போ எப்படி இருக்கீங்க ப்பா? ரொம்ப முடியலைன்னா ஹாஸ்பிடல் போய்க் கம்ப்ளீட் செக்கப் பண்ணிடலாம். என்ன சொல்றீங்க?” என அவரிடம் ஆதூரமாக வினவினான் புத்திரன்.

“அப்படியெல்லாம் எனக்கு ரொம்ப உடம்பு முடியாமல் இல்லைடா. நான் என்ன எப்பவும் இளமையாகவா இருப்பேன்? எனக்கும் வயசு ஏறும் தானே? அதனால் வர்ற சாதாரணமான இஷ்யூஸ் தான்” என்று அவனுக்குப் பதிலளித்தார்.

பகீரதன்,“அதுவும் சரி தான் ப்பா. ஆனால், உங்களைப் பார்க்க ரொம்ப களைப்பாகத் தெரியுறீங்க! அதனால் கண்டிப்பாகச் செக்கப் போகனும்” என்றவனிடம்,

“இனிமேல் இப்படி இருக்க மாட்டேன். நான் நாளைக்கு எப்படி சீக்கிரம் எழுந்து ஆரோக்கியமாக நடமாடுறேன்னுப் பாரு” என்று அவனிடம் உற்சாகமாக உரைத்தார் பாலேந்திரன்.

“ஆஹான்! அதையும் பார்க்கலாம் ப்பா. நீங்க ஓய்வு எடுங்க. நான் ஈவ்னிங் சீக்கிரம் வந்துட்றேன். நம்ம வீட்டுக் காம்பவுண்ட்டுக்கு உள்ளேயே வாக்கிங் போகலாம்” என்றவன், அவரிடமும், தாயிடமும் விடைபெற்றுக் கிளம்பி விட்டான் பகீரதன்.

அதன் பிறகுத் தன் மருமகள் கீழிறங்கி வரும் வரைக் கணவரிடம் பேசிக் கொண்டு இருந்தார் மனோரமா.

தன் செல்பேசியில் இருந்து வந்த ஒலியில் அடித்துப் பிடித்து எழுந்தவளோ, அழைப்பது தன் தோழி தாமினி என்பதை அறிந்தவுடன் அதை ஏற்றுக் காதில் வைத்து,

“ஹலோ மினி” என்றவளிடம்,

“அடியேய்! எவ்வளவு நேரமாக உங்கிட்ட பேசனும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? ஏன் இவ்வளவு லேட் ஆக அட்டெண்ட் பண்ற?” என்று புகைய,

“மினி டார்லிங்! இப்போ வரைக்கும் நான் நல்லா தூங்கிட்டு தான் இருந்தேன். உன் ஃபோன் கால் தான் என்னை எழுப்பி விட்டுச்சு” என அவளிடம் அசடு வழிந்தாள் ஹாரண்யா.

“அடிப்பாவி! நீயும், நானும் வேலை பார்க்கும் போதெல்லாம் நீ தானே என்னைக் கால் செஞ்சி எழுப்பி விடுவ? இப்போ என்னடான்னா இப்படி சொல்றியே?” என்று வியப்பாக கேட்டாள் தாமினி.

“ம்ஹ்ம். நேத்து ஷூட்டிங் முடிஞ்சு பகீ லேட் ஆகத் தான் வந்தார். அவரும், நானும் சாப்பிட்டுத் தூங்க ரொம்ப நேரம் ஆகிருச்சு. அதான் எழுந்திருக்க முடியலை” என்றுரைத்தாள்.

“ஓஹோ சரி. நான் உங்கிட்ட ஃப்ரீயா பேசனும். அதனால் நீ போய் உன் எல்லா வேலையையும் முடிச்சிட்டு வந்து எனக்குக் கூப்பிடு” என்று சொல்லி அழைப்பை வைக்கவும்,

தன் கணவன் எப்போதோ கிளம்பிச் சென்று விட்டதை அறிந்து கொண்டவள், உடனே கீழே செல்லாமல் குளித்து விட்டுத் தான் படியிறங்கித் தன் மாமியாரிடம் சென்றாள் ஹாரண்யா.

“என்ன நீ பிரஷ் பண்ணிட்டு வருவன்னுப் பார்த்தால் குளிச்சித் தயாராகி வந்திருக்க?” என்று அவளிடம் வினவினார் மனோரமா.

“நிறைய நேரம் தூங்கிட்டேன் அத்தை. அதுக்கப்புறமும் குளிக்காமல் கீழே வர ஒரு மாதிரியாக இருந்துச்சு. அதான்” என்றாள்.

“ம்ம். இந்தா இதைப் பொறுமையாக குடி” என அவளது கரத்தில் தேநீர்க் கோப்பையைத் திணிக்க,

அதை வாங்கிப் பருகியவளிடம்,”பகீ ஷூட்டிங்க்குப் போகிறதுக்கு முன்னாடி அவன் அப்பாவைப் பார்த்துட்டுத் தான் போனான் ம்மா” என்று சற்று முன்னர் நடந்ததை விவரித்தார் மாமியார்.

“அப்படியா அத்தை? நானும் சீக்கிரம் எழுந்த இருந்தால் அவர் கூட சேர்ந்து வந்து மாமாவைப் பார்த்திருப்பேன்” என்றவளிடம்,

“அதனால் என்ன? நீ எப்போ வேணும்னாலும் அவரைப் போய்ப் பார்த்துப் பேசலாம்” என்றார்.

ஹாரண்யா,“சரிங்க அத்தை. அப்பறம் என்னோட ஃப்ரண்ட் தாமினி அப்போவே எனக்குக் கால் பண்ணி இருந்தா, என்னால் பேச முடியலை. இப்போ போய்ப் பேசிட்டு வர்றேன்” என்கவும்,

“சரி ம்மா. டீயைக் குடிச்சிட்டுப் போயப் பேசிட்டு வந்து மறக்காமல் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடு ” என்று கூறி அவளை அனுப்பினார் மனோரமா.

தன் அறைக்குள் வந்து தோழிக்குக் கால் செய்து காத்திருந்தாள்.

தாமினியுடனான உரையாடல் தான் தன்னுடைய திருமண வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையைக் கொண்டு வரப் போகிறது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை ஹாரண்யா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 26

“ஹலோ மினி” என்றவளிடம்,

“ஹலோ ஹாரா! எப்படிடி இருக்கிற? உனக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சு? எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கியா? உன்னைத் தொல்லை செய்யக் கூடாதுன்னு தான் நான் ஃபோன் பண்ணவே இல்லை. நீயும் அப்படியே இருந்து இருக்கிற! ம்ஹூம்” என அவளிடம் கோபித்துக் கொண்டாள் தோழி.

“ஹேய் சாரிடி! என் மேல் கோபப்படாதே!” என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டாள் ஹாரண்யா.

“இட்ஸ் ஓகே. விடு. ஆமாம், உனக்கு இதுக்கப்புறம் வேலைக்கு வர்ற ஐடியா இருக்கா, இல்லையா? நெக்ஸ்ட் ப்ளான் என்ன?” என்று சீரியஸாக வினவினாள் தாமினி.

அவள் அவ்வாறு கேட்டதும் தான், தான் வேலைக்குச் செல்வதையே மறந்து போய் இருப்பதை உணர்ந்து,

“நான் அதையே மறந்துட்டுச் சுத்திட்டு இருக்கன் டி!” என்று கூறியதைக் கேட்டவுடன்,

“என்ன சொல்ற ஹாரா? நீயா இப்படி? நான் கூட நீ கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலேயே ஸ்டுடியோவுக்கு வந்துடுவ - ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், இப்படி சொல்றதைக் கேட்கும் போது எனக்குத் தலையே சுத்துது!” என்று ஆச்சரியமாக சொன்னாள் தாமினி.

“எஸ் மினி. எனக்கும் இப்போ தான் இது புரியுது. ஸ்டூடியோவில் எல்லாரும் என்ன சொல்றாங்க?” என்றாள் ஹாரண்யா.

“அவங்க, நீ பகீ சாரைக் கல்யாணம் செஞ்ச அப்போ இருந்தே உன் மேலே வன்மத்தைக் கக்க ஆரம்பிச்சுட்டாங்க! இப்போ இன்னும் உன்னைப் பத்தி உக்கிரமாகப் பேசிட்டு இருக்காங்க”

“அப்படி என்னப் பேசுறாங்க மினி?”

“அதே தான், நீ அவரைக் கல்யாணம் செய்துக்கத் தகுதியான ஆள் இல்லைன்னு பினாத்திட்டு இருக்காங்க! அதே மாதிரி, உனக்கு வர வேண்டிய ஆஃபர் எல்லாத்தையும் அவங்க வாங்கிக்கிறாங்க. ஆனாலும் சரியா பண்ணாமல் சொதப்பிட்டு இருக்கிறதால் நான் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன். சுதன் சாரைப் பத்திச் சொல்லவே வேண்டாம். நீ அங்கே இல்லாமல் ரொம்பவே தடுமாறுறார்! உன்னைக் கால் செஞ்சிக் கூப்பிடவும் முடியாமல் திணறிட்டு இருக்கார்” என அவளிடம் விலாவாரியாக விவரித்தாள் தாமினி.

அதில் மிகவும் மனம் வருத்தப்பட்ட ஹாரண்யாவோ,”இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம்? நானே இதையெல்லாம் சரி செய்றேன். அடுத்த வாரம் திங்கட்கிழமை மறுபடியும் ஸ்டுடியோவுக்கு வர்றேன். அதுக்கு முன்னாடி இதை நான் சுதன் சாருக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன்?” என்று கூறினாள்.

“ம்ஹ்ம். நல்ல முடிவு! நான் உனக்காக கண்டிப்பாக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். ஆனால் இதுக்கு சாரும், உன் அத்தையும், மாமாவும் ஓகே சொல்லுங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவங்க மூனு பேருக்குமே இதில் சம்மதம் தான் மினி” என்றவுடன்,

“ஓஹ் சூப்பர். அப்போ அடுத்த வாரம் நேரில் சந்திப்போம்” என்று அவளிடம் கூறி அழைப்பை வைத்தாள் தாமினி.

அவளிடம் பேசியதில் இருந்து, ஹாரண்யாவிற்குத் தன் மேலேயே கோபம் கன்னா, பின்னாவென்று வந்தது. ஏனெனில், தனக்குப் பிடித்த ஆங்கரிங் வேலையையே மறந்து விட்டிருக்கிறோம் என்ற நிதர்சனம் அவளை அறைந்தது.

“ச்சே! இதை எப்படி நான் மறந்தேன்!” என்றவளுக்குத் தன் கணவன் மற்றும் பெற்றோர் மீது சீற்றம் எழுந்தது.

பகீரதனோ, தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், மறு வீட்டு விருந்தை முடித்து விட்டு உடனே தன் நடிப்புத் தொழிலுக்குச் சென்று விட்டான்.

ஆனால், தான் மட்டுமே எதையும் செய்யாமல் சும்மா இருக்கிறோம் என்பதை இப்போது தான் தெளிவாக உணர்ந்தவள்,

முதல் வேளையாகத் தனது மாமனார், மாமியாரிடம் சென்று, மறு வாரம் திங்கட்கிழமை மீண்டும் தன் வேலையில் சேரப் போவதாக அறிவித்தாள் ஹாரண்யா.

அதைக் கேட்டு,“அப்படியா ம்மா? ரொம்ப சந்தோஷம்! எங்களுக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று மகிழ்வுடன் கூறினார் பாலேந்திரன்.

“இதைப் பகீ கிட்ட சொல்லிட்டியா?” என்றார் மனோரமா.

“இன்னும் இல்லை அத்தை. அவர் வீட்டுக்கு வந்ததும் சொல்லிட்றேன்” என்றவளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதேபோல், தன் பெற்றோருக்கும் அழைத்து விஷயத்தைச் சொல்லவும்,

”சூப்பர் ஹாரா ம்மா. உனக்கு எங்களோட வாழ்த்துகள்!” என்று மகளிடம் கூறினார் இயமானன்.

“தாங்க்ஸ் ப்பா. இதைக் கேட்டு அம்மா கோபப்படலையே?” எனக் கேட்ட மகளிடம்,

“நீயே அவங்க கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கோ” என்றவரோ, செல்பேசியைத் தன் மனைவியிடம் கொடுக்க,

அதை வாங்கிய மதுராஹினியோ,”ஹாரா! உனக்கு இப்போ தான் புதுசாக கல்யாணம் பண்ணி இருக்கிற. இன்னும் தாலி பிரிச்சுக் கோர்க்கக் கூட இல்லை. அதுக்குள்ள வேலைக்குப் போறேன்னு சொல்ற! உனக்குக் கண் திருஷ்டி பட்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அதனால், நீ பார்த்துச் சூதானமாக வேலைக்குப் போயிட்டு வா ம்மா” என்று அவளுக்கு அறிவுரை வழங்கியவர்,

அவளை வேலைக்குச் செல்லாதே என்று ஒரு போதும் தடை சொல்லவில்லை.

அதில் நிம்மதி அடைந்து,”நீங்க சொன்னதைக் கண்டிப்பாக ஃபாலோவ் பண்றேன் ம்மா. தாங்க்யூ!” என்றாள் ஹாரண்யா.

“ம்ம். ரொம்ப கவனமா இரு ம்மா” என்று மீண்டுமொரு முறை கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார் அவளது அன்னை.

அதன் பின்னர், தான் வேலைக்குச் செல்லப் போகும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக அவனது வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள் ஹாரண்யா.

அன்றைய படப்பிடிப்பு முடிந்ததும், வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்த தன் கணவனிடம்,”பகீ! நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று பரபரத்தவளைக் கண்டுத்,

தன் புருவங்களை மேலும், கீழுமாக ஏற்றி, இறக்கியவன்,”சொல்லு ரணு” என்றான் பகீரதன்.

“நான் மறுபடியும் வேலைக்குப் போகலாம்னு டிஸைட் செஞ்சி இருக்கேன். காலையிலேயே அத்தை, மாமாகிட்ட சொல்லிட்டேன்” என்று கூறி விட்டு அவனது முகத்தில் கவனத்தைப் பதித்தாள் ஹாரண்யா.

“ஓஹ், எப்போ இருந்து வேலைக்குப் போகலாம்னு இருக்கிற?” என்று வினவ,

“வர்ற வாரம் திங்கட்கிழமையில் இருந்து போகப் போறேன்” என்றாள் மனைவி.

“ஓகே ரணு. ஆல் தி பெஸ்ட்” என்று அவளுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், ஹாரண்யாவிற்குச் சப்பென்று ஆகி விட்டது.

அவன் அதை மறுத்துப் பேசுவான் என்று நினைத்து அதை எதிர்த்துப் பேசத் தயாராக இருந்தாள். ஆனால், எந்த மறுப்பும் கூறாமல் தான் கூறியதைக் கணவன் ஒப்புக் கொண்டான் என்றதும் ஏமாற்றமாகப் போய் விட்டது அவளுக்கு.

அவளது முகம் வாடியதைக் கண்டு,”என்னாச்சு ரணு? நான் வேற ஏதாவது சொல்வேன்னு எதிர்பார்த்தியா?” என்று அக்கறையாக கேட்டான் பகீரதன்.

“அதெல்லாம் இல்லை ங்க. உங்க வாழ்த்துக்கு நன்றி” என்று அவனிடம் கூறியவள்,

“நான் போய் சுதன் சார் கிட்டே சொல்லிட்டுத் திங்கட்கிழமை வந்து மறுபடியும் வேலைக்கு வரலாமா - ன்னுக் கேட்டுட்டு வர்றேன்” என்றாள் ஹாரண்யா.

“அப்போ நீ அவர் கூடக் கலந்து பேசாமலேயே எங்க எல்லார் கிட்டயும் தண்டோரா போட்டாச்சா?” என்று அவளைக் கேலி செய்தான் கணவன்.

அதில் துளிர்த்த கோபத்தால் சிவந்த முகத்துடன், மூக்கு விடைக்க,”ஆமாம். நான் எப்போ வேலைக்குச் சேர்றேன்னு சொன்னாலும் அவர் ஓகே சொல்லிடுவார் - ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் தான் உங்க மூனு பேர் கிட்டயும் முதல்லயே சொல்லிட்டு அவர்கிட்ட பேசிக்கலாம்னு நினைச்சேன்” என்றுரைத்தாள்.

“ஆஹான்! நான் உன்னோட தன்னம்பிக்கையைப் பாராட்டுறேன்” என்றவனிடம்,

“தாங்க்யூ” என்று கூறி விட்டுத் தன் கைப்பேசியுடன் பால்கனிக்குப் போன மனைவியின்,

அந்தச் செயலால் தலையை இடவலமாக அசைத்து விட்டுத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளக் குளியலறைக்குள் நுழைந்தான் பகீரதன்.

தான் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் சுதனுக்குக் கால் செய்து,”ஹலோ சார், எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தாள் ஹாரண்யா.

“ஆங்! ஹலோ ஹாரண்யா. ஐ யம் ஃபைன். நீங்க நல்லா இருக்கீங்களா?” என்றவுடன்,

“நானும் நல்லா இருக்கேன் சார்” எனக் கூறினாள்.

“ஓகே. நீங்க எனக்கு எதுக்குக் கால் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“ஷூயர் சார். நான் மறுபடியும் என் வேலைக்கு வர விரும்புறேன். அதுக்கு வாய்ப்பு இருக்கா சார்?” என்றாள் ஹாரண்யா.

“நீங்க கண்டிப்பாக நம்ம ஸ்டூடியோவுக்கு வந்து உங்க வேலையைத் தொடரலாம். ஆனால்… “ என்று கூறி மேலே பேசாமல் பாதியிலேயே நிறுத்தினார் சுதன்.

ஆனால் அவர் கேட்க நினைப்பதைப் புரிந்து கொண்டவளோ,”என்னோட ஹஸ்பண்ட் பெரிய ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நான் கஷ்டப்பட்டுப் படிச்சு, உழைச்சு, அதை வச்சு தேடிக்கிட்ட இந்த வேலை தானே எனக்கான அடையாளம்? அதனால், நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாமல் என்னை மறுபடியும் வேலைக்குச் சேர்த்துக்கலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் நான் பார்த்துக்கிறேன் சார்” என அவருக்கு உறுதி அளித்தாள்.

அதைக் கேட்டதும், அவள் மீது நம்பிக்கைப் பிறந்ததால்,”நீங்க இவ்வளவு தூரம் சொல்வதால் நீங்க மறுபடியும் வேலைக்கு வர்றதுக்குப் பர்மிஷன் தர்றேன். எப்போ ரீ - ஜாயின் பண்ணப் போறீங்க?” என்று அவளிடம் கேட்க,

“நான் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரலாமா சார்?” என்றாள் ஹாரண்யா.

“ஷூயர்! அன்னைக்குப் பெரிசாக எந்த இன்டர்வியூவும் இல்லை. ஆனால், நீங்க அங்கே வந்து புதுசாக வேலையில் சேர்ந்தவங்களுக்கு டிரெயினிங் மாதிரி கொடுத்தால் நல்லா இருக்கும்” என அவளிடம் கேட்டுக் கொண்டார் சுதன்.

“வாவ்! நான் நிச்சயமாக அதைச் செய்றேன் சார். தாங்க்யூ சோ மச்” என்று அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு அழைப்பை வைத்தவள், இந்த தகவலைத் தாமினிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்து விட்டு அறைக்குள் வந்தாள்.

அவளைக் கண்டவுடன்,”சுதன் என்ன சொன்னார்?” என்று அவளிடம் வினவினான் பகீரதன்.

“நான் அவர்கிட்ட கேட்ட விஷயத்துக்கு ஓகே சொல்லிட்டார்” எனக் கூறித் தன் இரவு உடையின் காலரை உயர்த்தி தன் பகுமானத்தைக் காட்டினாள் ஹாரண்யா.

“பார்றா! நீ மாஸ் தான்!” என்று அவளைப் பாராட்டுவதைப் போலக் கூறி விட்டு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.

அதைக் கண்டு கோபமடைந்தவளோ,”என்னைக் கிண்டல் பண்றதை தவிர வேற வேலை இருந்தால் பாருங்க. ஏன்னா, நான் அடுத்த வாரத்தில் இருந்து பிஸி ஆகிடுவேன்! அப்போ நீங்க தான் என்னை மிஸ் பண்ணிட்டு இருக்கப் போறீங்க” என்று அவனிடம் சவாலாக உரைத்தாள் மனைவி.

“உனக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா? நான் ஏன் உன்னை மிஸ் பண்ணப் போறேன். எனக்கு ஷூட்டிங் போகவே நேரம் பத்தாது! இதில் உன்னை நினைச்சு ஃபீல் செய்வேனா? குட் ஜோக்” என்றவனிடம் பழிப்புக் காட்டி விட்டுப் படுத்துக் கொண்டாள் ஹாரண்யா.

அதில் முகிழ்ந்த குறுநகையுடன் உறக்கத்தை மேற்கொண்டான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 27

தன் தோழி தாமினிக்கு அழைத்து சுதனிடம் பேசிய விஷயத்தை அவளிடம் தெரிவித்தாள் ஹாரண்யா.

அதற்கு,”சூப்பர்டி! நீ மறுபடியும் ஆஃபீஸூக்கு வந்து எல்லாரையும் அதிர வை! பெஸ்ட் ஆஃப் லக்” என்று அவளுக்கு வாழ்த்துக் கூறவும்,

“தாங்க்ஸ் மினி” என்றாள்.

“அப்பறம் இன்னொரு விஷயம், நீ ஆஃபீஸூக்கு வர ஆரம்பிச்சிட்டா, உன்னை ஐஸ் வச்சு உன் மூலமாகப் பகீ சாரைப் பார்த்து அவர் கூட ஃபோட்டோஸ் எடுக்கனும், ஆட்டோகிராஃப் வாங்கிக்கனும்னு இங்கே இருக்கிற சிலர் பிளான் போட்டு வச்சிருக்காங்க. அதனால், அவங்க என்ன புகழ்ந்து பேசினாலும் மயங்கிடாதே! பார்த்து இரு” என்றதும்,

“ஷூயர் மினி. நான் எப்பவும் கவனமாக இருப்பேன்” என்று உறுதி அளித்தாள் ஹாரண்யா.

தாமினி,“தட்ஸ் குட். எல்லா ஏற்பாட்டையும் பண்ணி முடிச்சிட்டியா?” என்று வினவினாள்.

“இல்ல டி. இனிமேல் தான் ஆரம்பிக்கனும்” என்றுரைத்தாள் ஹாரண்யா.

“அப்போ முதல்ல அலைச் செஞ்சி முடி” என்று கூறி அழைப்பை வைத்தாள் அவளது தோழி.

அதற்குப் பிறகு, அடுத்து வந்த நாட்களில் எல்லாம், தான் மறுபடியும் வேலைக்குச் செல்லப் போவதால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டாள் ஹாரண்யா.

அதில் மிக முக்கியமாகத் தன்னுடைய அலமாரியை ஆராய்ந்து அவற்றில் எந்தெந்த உடைகளை அணிந்தால் தனக்கு நன்றாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்து, அவற்றை ஒவ்வொன்றாக அணிந்தும் பார்த்துக் கொண்டாள்.

அதன் பின்னர், அதற்குரிய அலங்கார பொருட்கள் மற்றும் அணிகலன்களை எடுத்து வைத்தவள்,

தன்னுடைய பிம்பத்தை நிலைக் கண்ணாடியில் பார்த்த போது, தன் மார்பில் இடம் பெற்றிருந்த மஞ்சள் நிறத் தாலிக் கயிறைக் கையால் தொட்டுப் பார்த்தாள் ஹாரண்யா.

அதே போல், தன் உச்சியில் வைத்திருந்த செந்நிற குங்குமத்தையும் விரல்களால் வருடிக் கொடுத்தவளோ, சில மணித்தியாலங்களுக்குப் பேச்சற்று நின்றாள்.

பொதுவாக சினிமாத் துறையில் பணிபுரியும் பெண்களில் சிலர் தங்கள் திருமணம் முடிந்ததும் அதைப் பதிவு செய்து விட்டுத் தாலியைச் செயினில் கோர்த்து விட்டு அதைக் கழட்டி வைத்து விட்டு வேலைக்கு வருவதைப் பார்த்திருக்கிறாள் ஹாரண்யா.

தன்னுடன் பணிபுரியும் பெண்களும் கூட இதனைச் செய்திருக்கிறார்கள். அப்படியிருக்க, அது அவர்களது விருப்பம் என்று கடந்து விடுபவள்,

தற்போது தனக்கு அந்த நிலை வந்து இருப்பதை உணர்ந்து, கட்டிலில் அமர்ந்து கொண்டு,’சினிமாவில் நடிக்கும் நடிகைகள் யாவரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்தாக வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பர்.

ஆதலால், அவர்கள் தங்கள் தாலி மற்றும் மெட்டியைக் கழற்றி வைத்துக் கொள்வார்கள். ஆனால், இதில் தனக்கு இப்படி எந்தவொரு கட்டாயமும் இல்லை. ஏனென்றால், பிரபலங்களைப் பேட்டி எடுக்கும் வேலையைப் பார்க்கும் தான் இதையெல்லாம் செய்யத் தேவையில்லை என்று தெளிவாக முடிவெடுத்தாள் ஹாரண்யா.

அதனால், தன்னுடைய மனக் குழப்பம் நீங்கிய நிம்மதியில், தன் வேலைக்குத் தகுந்த உடைகள் சிலவற்றைக் கடைக்குச் சென்று வாங்கிக் கொண்டாள்.

அதையெல்லாம் கவனித்த பாலேந்திரனும், மனோரமாவும் தங்களது மருமகளுக்கு அவளது வேலையில் மேல் இருக்கும் பிடித்தத்தைக் கண்டு மெச்சிக் கொண்டனர்.

ஆனால், தனது மனைவியின் செயல்களை எல்லாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு மட்டுமே இருந்த பகீரதன், அதை தவிர்த்து வேறெந்த எதிர்வினையையும் காட்டவில்லை.

அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டுத் தன் புற அழகைப் பார்வையிட்டாள் ஹாரண்யா.

அதுவும் எவ்விதமான மாற்றங்களும் இன்றி கச்சிதமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

அதே சமயம், தன்னுடைய தோழியின் வருகையை அலுவலகத்தில் இருந்த யாருக்கும் தெரிவிக்காமல்,

ஹாரண்யாவே அலுவலகத்திற்கு வந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் தரட்டும் என்று முடிவு எடுத்தாள் தாமினி.

அந்த வாரம் முழுவதையும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள உபயோகித்துக் கொண்டு, திங்கட்கிழமை அன்று அதிகாலை வேளையில் கண் விழித்தாள் ஹாரண்யா.

அருகில் சயனித்துக் கொண்டு இருந்த கணவனைப் பார்த்துக் குறுநகை புரிந்து விட்டு,”எப்பவுமே இவர் எழுந்து ஷூட்டிங் க்குக் கிளம்பிப் போனதுக்கு அப்பறம் தான், நான் எழுந்துக்கவே செய்வேன்! ஆனால் இன்னைக்கு இவருக்கு முன்னாடியே நான் எழுந்துட்டேன்!” என்று மெல்ல முணுமுணுத்தவள்,

குளியல் அறைக்குள் நுழைந்து சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவளோ, இண்டர்காமில் தனக்குத் தேநீர் எடுத்து வருமாறு தெரிவித்து விட்டு, டிரெஸ்ஸிங் டேபிளின் முன்னால் அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள் ஹாரண்யா.

அப்போது, அந்த அறையின் கதவைத் தட்டி அவள் கேட்ட தேநீரைக் கொடுத்து விட்டுப் போனார் வேலையாள்.

அதைக் குடித்து விட்டுத், தன் அலங்காரங்களையும் முடித்து விட்டுத் திரும்பியவள்,

தன்னுடைய கணவனின் அகலாத பார்வையைக் கண்டு கொண்டு,

“ஹேய் பகீ! எப்போ கண் முழிச்சீங்க? என்னை எவ்வளவு நேரமாக இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?”என்று அவனிடம் ஐயத்துடன் வினவினாள் ஹாரண்யா.

“இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் கண் முழிச்சேன் ரணு! நீ மேக்கப் பண்றது நல்லா இருந்துச்சு. அதான், பார்த்துட்டு இருந்தேன்”என்றான் பகீரதன்.

“ஓஹோ, அப்போ எழுந்திருச்சுக் கிளம்ப ஆரம்பிங்க”

“எனக்குப் படுக்கையை விட்டு எழுந்திரிக்கவே மனசு வர மாட்டேங்குது ரணு” என்று சலித்துக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான்.

கணவனை வியப்பாகப் பார்த்து,”நீங்களே இப்படி சொன்னா எப்படி? முதல்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. உங்களுக்குக் காபி அனுப்பி வைக்கிறேன்”என்று அவனைத் தயாராக அனுப்பி வைத்து விட்டுக் கீழே சென்றாள் ஹாரண்யா.

அவளது முழு தோற்றத்தையும் கண்டதும்,”ஹாரா ம்மா! ரொம்ப அழகாக இருக்கே!” என்றவர், தன் விரல் கொண்டு அவளது கண் மையில் சிறு துளி எடுத்து மருமகளின் கழுத்தில் திருஷ்டிப் பொட்டாக இட்டார் மனோரமா.

“தாங்க்யூ சோ மச் அத்தை” என மகிழ்ச்சியில் அவரை அணைத்து விடுவித்தவள், தன் கணவனுக்குக் காபி எடுத்துச் செல்லுமாறு வேலையாளிடம் கூறினாள் ஹாரண்யா.

“பகீ எழுந்து கிளம்பிட்டு இருக்கானா?”

“ஆமாம் அத்தை” என்றவளிடம்,

“அப்படின்னா சரி. நீ சாப்பிடு” என்று கேட்டார் மனோரமா.

ஹாரண்யா,“பகீ வந்ததுக்கு அப்பறம் அவர் கூட சேர்ந்து சாப்பிட்றேன் அத்தை”

“அப்போ நாங்களும் உங்க கூட சேர்ந்தே சாப்பிட்றோம்” என்று கூறியவர், தன் கணவனின் அறைக்குச் சென்று அவரை வெளியே அழைத்து வந்தார்.

“ஹாய் மாமா! குட் மார்னிங்” என்ற மருமகளிடம்,

“குட் மார்னிங் ஹாரா ம்மா” என்று கூறிப் புன்னகைத்தார் பாலேந்திரன்.

அவர்கள் மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்த நேரத்தில், தன்னறையில் இருந்து வெளியேறி அவர்களிடம் வந்தான் பகீரதன்.

அவனை,”வாடா. நீயும் வந்து உட்காரு” என்றழைத்தார் மனோரமா.

உடனே அவர் காட்டிய இடத்திற்குச் சென்று அமர்ந்து,”நீங்க மூனு பேரும் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டான்.

“இல்லங்க. உங்களுக்காகத் தான் வெயிட்டிங்” என்று அவனுக்குப் பதிலளித்தாள் ஹாரண்யா.

“ஓஹ், அதான் நான் வந்துட்டேனே! நாலு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்” என்றான் பகீரதன்.

உடனே சமையல் அறையில் இருந்த உதவியாளர்கள் அவர்களுக்கான உணவுகள் அடங்கிய பாத்திரங்களைக் கொண்டு வந்து மேஜையில் வைத்தனர்.

அவற்றில் இருந்த சாப்பாட்டைத் தங்கள் நால்வருக்கும் பரிமாறினார் மனோரமா.

அப்போது தனது கைப்பையில் இருந்த செல்பேசி ஒலி எழுப்புவதைக் கேட்டதும்,

அதை எடுத்துப் பார்த்து விட்டு,”அம்மா தான் கால் பண்றாங்க” என்று சொல்லி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் ஹாரண்யா.

“ஹலோ ஹாரா, வேலைக்குக் கிளம்பிட்டியா?” என்று வினவினாள் மதுராஹினி.

“இன்னும் இல்ல ம்மா. இப்போ தான் சாப்பிடவே போறோம்”

“அப்படியா? சாப்பிட்ற நேரத்தில் தொல்லை பண்ணிட்டேனா? நீ சீக்கிரமே வேலைக்குக் கிளம்பிப் போயிடுவ ன்னு நினைச்சுக் கால் பண்ணிட்டேன். சாப்பிட்டுட்டுப் பேசுடா”

“பரவாயில்லை ம்மா. சொல்லுங்க” என்றாள் மகள்.

மதுராஹினி,“உனக்கு வாழ்த்துகள் சொல்றதுக்காக கால் பண்ணேன் டி”

“ஓஹ்ஹோ, தாங்க்ஸ் ம்மா, என்றவளிடம்,

“பார்த்துக் கவனமாகப் போயிட்டு வரனும். சரியா?” என்று அவளுக்கு அறிவுறுத்தினார்.

“சரி ம்மா” என்றாள் ஹாரண்யா.

அதன் பின்னர்,”வாழ்த்துகள் ஹாரா” என்று அவளது தந்தை இயமானனும், மகளுக்கு வாழ்த்து தெரிவித்தவுடன்,

“ஓகே ம்மா. எனக்கு லேட் ஆகுது. நான் போய்ச் சாப்பிட்டுக் கிளம்புறேன்”என்று அவரிடம் கூறி விட்டு அழைப்பை வைத்தவள், அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்புக் கோரி விட்டு உணவுண்டாள்.

அவளுக்கு முன்னதாகவே சாப்பிட்டு முடித்து,”ஆல் தி பெஸ்ட் ரணு. உன் டிவி ஸ்டேஷனுக்கு நம்மக் காரை எடுத்துட்டுப் போ. இனிமேல் அது உன்னோட பயன்பாட்டுக்காக மட்டும் தான் இருக்கும்”எனக் கூறவும்,

ஹாரண்யா,“ஓகே ங்க” என்று ஒப்புக் கொண்டதும், அவளிடமும், தன் பெற்றோரிடமும் சொல்லிக் கொண்டுக் கிளம்பி விட்டான் பகீரதன்.

சிறிது நேரத்திற்குப் பிறகுத் தன்னுடைய உணவைச் சாப்பிட்டு முடித்து விட்டு, மாமனார், மாமியாரின் பாதங்களில் பணிந்தாள் மருமகள்.

“நல்லா இரு ம்மா. பார்த்துப் போயிட்டு வா” என்று ஆசி வழங்கி எழுப்பி, அவளைச் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

காரில் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்திலேயே, தாமினிக்கு அழைத்து தன் வருகையைத் தெரிவித்து விட்டாள் ஹாரண்யா.

அவளும் தோழியை வரவேற்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கத் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், காரிலிருந்து இறங்கி அலுவலகத்தின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தவளைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அனைவரும் தங்களது திறந்த வாய் மூடாமல் நின்றனர்.

அவர்களது உடல்மொழியைக் கண்டு, வித்தியாசமாக உணர்ந்தவளோ,”ஹாய் கைஸ்” என்று கூறிப் புன்னகைத்ததும்,

அதில் உயிர்ப் பெற்றதைப் போன்றதொரு பாவனையை வெளிப்படுத்தி விட்டு,”ஹாரண்யா!” என்று சுத்தமாக அவளது பெயரைக் கூவினர்.

“ஆமாம். நான் தான்! நீங்க ஏன் என்னைப் பார்த்து இவ்வளவு ஷாக் ஆகுறீங்க?” என்றவுடன்,

“ஹாங்! உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல! அதான்!” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

அப்போது, அவளிடம் வந்து,”ஹாரா!” என்று அவளைக் கட்டிக் கொண்ட, தோழியைத் தானும் அணைத்து,

“மினி!” என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள் ஹாரண்யா.

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். இப்போ தான் ஹேப்பியா இருக்கு”என்று கூறி அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தாள் தாமினி.

“நானும் தான் டி! இனிமேல் நான் லீவே எடுக்கப் போறதில்லை. அதனால் நீ கவலையேபடாதே” என்று அவளுக்குத் தைரியம் அளித்தவள்,

“நான் சுதன் சாரைப் பார்த்துட்டு வந்துட்றேன்” என்று கூறி அங்கிருந்து அகன்றாள் ஹாரண்யா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 28

அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் அறைக்கு வெளியே நின்று கதவைத் தட்டி விட்டுக் காத்திருந்தாள் ஹாரண்யா.

“யாரு?” என்று சத்தம் எழுப்பியவரிடம்,

“ஹாரண்யா வந்திருக்கேன் சார்” என்று பதிலளித்தாள்.

“கமின்” என்றவுடன், கதவைத் திறந்து கொண்டு அறையினுள் நுழைந்தாள்.

“வாங்க மிஸஸ். ஹாரண்யா” என்று அவளைப் புன்னகையுடன் வரவேற்றார் சுதன்.

“ஹாய் சார்” என்று கூறிக் குறுநகை புரியவும்,

“ம்ம். எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சார்” என்றாள் ஹாரண்யா.

“நைஸ். இந்த ஃபீல்டில் நான் பார்த்த திறமையான ஆட்கள் ஒரு சிலரில் நீங்களும் ஒருத்தர்! அந்தளவுக்கு உங்களோட ஒவ்வொரு நேர்காணலையும் அவ்வளவு சிரத்தையாக செஞ்சீங்க! நீங்க அவ்வளவு சீக்கிரம் இந்த வேலையை விட்டுப் போகக் கூடாதுன்னு நினைப்பேன்! உங்களுக்குக் கல்யாணம் ஆகப் போகுது, அதுவும் பகீரதன் சாரோட வொய்ஃப் ஆகப் போறீங்கன்னு தெரிஞ்சதும் நீங்க இந்த வேலையைக் கண்டிப்பாக விட்ருவீங்களோன்னு நினைச்சேன். ஆனால், இப்போ திரும்ப வந்திருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என அவளை மனதாரப் பாராட்டினார் சுதன்.

“நீங்க இப்படியான வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்டுறதைக் கேட்கிறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கனும் சார்! தாங்க்யூ சோ மச்! நான் இதுக்காகவே என் வேலையை இன்னும் சிறப்பாக செய்வேன் சார்!” என்று அவருக்கு நன்றி தெரிவித்தாள்.

“இதைத் தான் நானும் எதிர்பார்க்கிறேன் மிஸஸ். ஹாரண்யா. இது வரைக்கும் நம்ம டிவி ஸ்டேஷனில் நடந்த இன்டர்வியூஸை எல்லாம் பார்த்து இருக்கீங்களா?”

“ஆமாம் சார்” என்றதும்,

“அப்போ ஓகே. புதுசா வேலையில் சேர்ந்தவங்களை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி விட்றேன். நீங்க அவங்களுக்கு இன்னைக்கு இருந்தே டிரெயினிங் கொடுக்க ஆரம்பிக்கிறீங்களா? இல்லை, நாளைக்குச் சார்ஜ் எடுத்துக்கிறீங்களா?” என்று அவளிடம் வினவினார் சுதன்.

“நான் முதல்ல எல்லார் கூடயும் அறிமுகம் ஆகிட்டு அதுக்கப்புறம் டிஸைட் பண்றேன் சார்” என்றாள் ஹாரண்யா.

“ஓகே ம்மா. அப்போ என் கூட வாங்க” என அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர்,

அங்கே புதிதாக பணியில் சேர்ந்தவர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சுதன்.

அவள் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் திறமையான தொகுப்பாளர் என்பதும், அதை விட, தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகருமான பகீரதனின் மனைவி என்பதை அறிந்திருந்தவர்களோ, அவளிடம் பேச மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

“பகீ சார், எப்படி இருக்கார் மேம்?” என அவளிடம் ஆவலாக கேட்டவர்களை எல்லாம் சரியான விதத்தில் கையாண்டு அவர்களுக்குத் தகுந்தாற்போல் பதில்களை அளித்தாள் ஹாரண்யா.

அப்போது,”சரி. அவ வந்ததில் இருந்து இன்னும் என் கூடப் பேசவே இல்லை. அதனால், எங்களைக் கொஞ்ச நேரம் தனியாக விட்ருங்க” என்று கூறி அவளைத் தன்னுடன் தனியறைக்குக் கூட்டிச் சென்று,

“நமக்குப் பிரைவசியே இருக்க மாட்டேங்குது” என்று தோழியிடம் சலித்துக் கொண்டாள் தாமினி.

ஹாரண்யா,“ஹா ஹா! இனிமேல் நாம தானே? சூப்பராக ஃபன் (fun) பண்ணலாம்!” என்றவள்,

“இங்கே புதுசாக வேலைக்கு வந்திருக்கிறவங்களைப் பத்திச் சொல்லு மினி”

“அவங்க இன்னும் முழுசா எதையும் கத்துக்கலை ஹாரா. ஒரு சிலருக்கு மூனு மொழிகள் தெரியும்! அதை வச்சும், ரெக்கமண்டேஷனாலேயும் தான் உள்ளே வந்து இருக்காங்க. மத்தபடி, நான் பார்த்த அளவுக்கு ஒரு சிலர் தான் திறமையானவங்களா இருக்காங்க!” என்றுரைத்தாள்.

“அப்படியா? அப்போ எனக்கு அதிக வேலை இருக்கும் போலவே? எதுக்கும் நானும் அவங்களோட திறமையைச் சோதிச்சுப் பார்த்துக்கிறேன்”

“எஸ். அது தான் பெட்டர். நானும் உன் கூட இருந்து ஹெல்ப் பண்றேன் ஹாரா” என்றவளிடம்,

“தாங்க்யூ மினி”என்று கூறி விட்டு, அன்றைய தினம் முழுவதும் தன்னிடம் வேலையைக் கற்றுக் கொள்ள வந்தவர்களின் திறமையைப் பரிசோதிக்கும் வேலையைச் செய்து முடித்து விட்டுத்,

தன் அனுபவங்களைக் கணவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியவள், பகீரதனுக்குச் செல்பேசி அழைப்பு விடுக்க அதை அவன் ஏற்கவில்லை.

ஆதலால், வீட்டிற்குச் சென்று அவனிடம் அனைத்தையும் ஒப்புவித்து விட வேண்டும் என்ற முடிவுடன்,

மாலையில் அவளுடன் சேர்ந்து அங்கேயிருந்த அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு தான் அவளை இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

மிகவும் சந்தோஷ மனநிலையுடன் வீட்டை அடைந்த ஹாரண்யாவோ, அன்றைய நாளில் தனக்குக் கிடைத்த சிறப்பு அனுபவங்களைத் தன் மாமனார், மாமியாரிடம் பகிர்ந்து கொண்டாள் ஹாரண்யா.

“ம்ஹ்ம்! நீ சொல்வதை எல்லாம் கேட்கும் போது உன்னை நினைச்சு எங்களுக்குப் பெருமையாக இருக்கு ம்மா” என்று அவளிடம் மகிழ்ச்சியாக உரைத்தார் மனோரமா.

“ஆமாம் மா” என மனைவியின் பேச்சை ஆமோதித்தார் பாலேந்திரன்.

அதேபோல், இன்று நடந்த அனைத்தையும் தன் பெற்றோரிடமும் மறக்காமல் உரை ஆற்றினாள் ஹாரண்யா.

அதைக் கேட்ட இயமானன் மற்றும் மதுராஹினிக்கும் பெருமிதமாக இருந்தது.

இப்படியாகத் தன் அன்பிற்கு உரியவர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டவளுக்கு, தன் ஆருயிர்க் கணவனிடம் விஷயத்தைச் சொன்னால் அவனுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்? என்பதைக் காண ஆசையாக காத்திருந்தாள் ஹாரண்யா.

ஆனால், தன்னுடைய இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அன்றைய தின இரவும் தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான் பகீரதன்.

அப்போதும் கூட, தன் மனைவியிடம் அன்றைய நாளில் அவளுக்கு நிகழ்ந்த சிறப்புக்களை எல்லாம் கேட்க மறந்து போனான்.

ஆனால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,”பகீ! நான் இன்னைக்கு ஸ்டுடியோவுக்குப் போனேன்ல? அங்கே…” என்றவளிடம்,

“ரணும்மா! இன்னைக்கு தொடர்ந்து ஷூட்டிங் இருந்ததால் என் கண்ணு ரெண்டும் ரொம்ப எரியுது! அதான், சாப்பாடுக் கூட வேணாம்ன்னுத் தூங்க வந்திருக்கேன். அதனால் எதுவாக இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாமா? ப்ளீஸ்!” என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டான் பகீரதன்.

“ஓஹ்! சரி தூங்குங்க. குட் நைட்” என்று கூறவும், அடுத்த சில நிமிடங்களில் கணவனிடம் இருந்து சீராக மூச்சு விடும் சத்தம் வரவும், தானும் உறக்கத்தை மேற்கொண்டாள் ஹாரண்யா.

மறுநாள் தத்தமது வேலைக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர் கணவனும், மனைவியும்.

அப்போது,”ஹாங் ரணு! நேத்து நைட் நான் பாதி தூக்கத்தில் இருக்கும் போது நீ என்னமோ சொல்ல வந்தியே? அது என்ன விஷயம்? இப்போ சொல்லேன்” என்றான் பகீரதன்.

உடனே அவளும் தனது பழைய உற்சாகத்தை மீட்டுக் கொண்டு,”நான் நேத்து…” என்று தொடங்கும் போதே, கணவனின் செல்பேசி ஒலி எழுப்புவதைக் கவனித்து விட்டு அமைதியாகி விட்டாள் ஹாரண்யா.

“என்னாச்சு? ஏன் நிறுத்திட்ட?”

“உங்களுக்கு ஃபோன் கால் வருது பாருங்க. அதான் அமைதியாகிட்டேன். முக்கியமான கால் ஆக இருக்கப் போகுது. எடுத்துப் பேசுங்க”

“நீ உண்மையாகவா சொல்ற?” எனக் கேட்டவுடன்,

“ம்ம். எஸ்” என்றதற்குப் பிறகு தான், தனக்கு வந்த செல்பேசி அழைப்பை ஏற்றுப் பேசினான் அவளது கணவன்.

அதை அவன் பேசி முடித்து விட்டு வரும் வரை தன்னால் காத்திருக்க முடியாது என்று தயாராகி விட்டதால் அங்கேயிருந்து அகன்று விட்டாள் ஹாரண்யா.

ஆனால், அவள் அறையை விட்டு வெளியேறியதைக் கூட உணராமல் அலைபேசியில் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தான் பகீரதன்.

அதேபோல்,”அவர் ரொம்ப முக்கியமான ஃபோன் கால் பேசிட்டு இருக்கார் அத்தை. அதனால் இப்போதைக்கு வர மாட்டார். ஆனால் எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பாடு கொடுக்கிறீங்களா?” என்ற மருமகளிடம்,

“அவன் வரும் போது வரட்டும். நீ சாப்பிடு” என்றவர், அவளுக்கு உணவுப் பரிமாறினார் மனோரமா.

அந்த உணவை வேகமாக விழுங்கி விட்டு,”எனக்கு லேட் ஆச்சு அத்தை. அவர்கிட்ட சொல்லிடுங்க. நான் போயிட்டு வர்றேன்” என அவரிடம் சொல்லி விட்டுச் செல்லவும்,

அதற்கு ஐந்து நிமிடங்கள் கழித்து அங்கே வந்த பகீரதனோ,”ரணு எங்கே ம்மா?” என்று தாயிடம் வினவினான்.

“அவளுக்கு லேட் ஆச்சுன்னு இப்போ தான் சாப்பிட்டுக் கிளம்பினாள். நீ உட்காரு” என்றவரிடம்,

“எனக்குப் பசிக்கலை ம்மா. நானும் கிளம்புறேன்” என்று மறுத்தவனை,

“ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிட்டுப் போ” என அதட்டி, மகனை உணவுண்ண வைத்தே அனுப்பினார் மனோரமா.

இதற்கிடையில், ஹாரண்யா தன் வேலையில் மறுபடியும் சேர்ந்து விட்டதைக் கேள்விப்பட்டதும், பூங்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைக் காணச் சென்றான் மோஹித்.

ஏற்கனவே தன் கணவனின் செயலால் காலையிலேயே கடுப்பாகி இருந்தவளோ, நடிகர் மோஹித் தங்களது தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வருகை தர இருப்பதாக தகவல் வரவும், மேலும் கோபத்தில் ஜிவுஜிவுத்துப் போய் விட்டது ஹாரண்யாவின் முகம்.

தாமினி,“அவர் திடீர்னு நம்ம ஸ்டூடியோவுக்கு எதுக்கு வர்றாருன்னு தெரியலையே?” என்று குழப்பத்துடன் வினவினாள்.

“அது எனக்கு எப்படி தெரியும் மினி? நானும் அப்போதிலிருந்து உன் கூடத் தானே இருக்கேன்? அவர் வந்ததும் விஷயம் தெரிஞ்சிடும்”

“அதுவும் கரெக்ட் தான்” என்று அமைதியாகி விட்டாள் தாமினி.

அப்போது, அங்கு வந்த விலையுயர்ந்த காரில் இருந்து இறங்கி அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தவனது கரத்திலிருந்த பூங்கொத்தையும், அவனது மர்மப் புன்னகையையும் கண்டு வித்தியாசமாக உணர்ந்தாள் ஹாரண்யா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 29

அவளிடம் நேராகச் சென்று,”ஹாய் மிஸஸ். ஹாரண்யா பகீரதன்” என்ற மோஹித்திடம்,

“ஹாய் சார்” என மரியாதை நிமித்தமாக உரைத்தாள்.

“நீங்க மறுபடியும் வேலையில் சேர்ந்ததில் வாழ்த்துகள்” என்றவனிடம்,

ஹாரண்யா,“தாங்க்யூ சார்”

“என்ன தான், நான் உங்க மேரேஜூக்கு வந்து இருந்தாலும் கூட உங்களுக்குத் தனியாக வந்து வாழ்த்துச் சொல்லனும்னு தோனுச்சு. அதான், இதை கையோட வாங்கிட்டு வந்துட்டேன். மை பெஸ்ட் விஷ்ஷஷ்!” என்று கூறித் தன் கரத்திலிருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் மோஹித்.

அவனது வருகையை அறிந்ததுமே கூட்டம் கூடி விட்ட அனைத்து ஊழியர்களும் அவனது செயலால் மூக்கின் மேல் விரல் வைக்காத குறையாக அதிர்ந்து போய் நின்றனர்.

அதேவேளையில், அவ்விடத்திற்குப் பதட்டத்துடன் வந்து சேர்ந்தார் சுதன்.

மோஹித்,“என்னாச்சு? இன்னும் பொக்கேவை வாங்காமலேயே இருக்கீங்க?” என்றதும்,

அவன் நீட்டிய பூங்கொத்தை நாகரீகம் கருதி வாங்கிக் கொண்டாள் ஹாரண்யா.

“குட்” என்றவனிடம்,

“நீங்க எங்க ஆஃபீஸூக்கு வந்ததில் சந்தோஷம் சார்” என்று கைக் குலுக்க,

“தாங்க்ஸ்! நான் இவங்களுக்கு விஷ் பண்ண மட்டும் இங்கே வரலை. என்னோட அடுத்தப் படத்தைப் பத்தின அறிவிப்பை ரிவீல் பண்ணப் போற ஃபங்க்ஷனை, இவங்க தான் ஆங்கரிங் செய்யனும்னு ஆசைப்பட்றேன். அதையும் கேட்டுட்டு, இவங்களையும் வாழ்த்திட்டுப் போகலாம்னு தான் வந்தேன்” என்று விளக்கினான் மோஹித்.

“அப்படியா சார்? என் ரூமுக்கு வாங்க. இதைப் பத்தி டீடெயில் ஆகப் பேசலாம்” என அவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று விட்டார் சுதன்.

தன்னுடைய கையிலிருந்த பூங்கொத்தை வெறுப்பு நிறைந்த விழிகளுடன் பார்த்த ஹாரண்யாவிடம்,

“இங்கே என்ன நடக்குது ஹாரா? இவர் ஏன் உன்கிட்ட இப்படி நடந்துக்கிறார்?” என்று வினவினாள் அவளது தோழி.

“அதான் எனக்கும் புரியலை மினி. ஒருவேளை, பகீரதனோட வொய்ஃப்ன்றதால் கூட அவர் இப்படி வந்து எனக்கு ஸ்பெஷலாக வாழ்த்துச் சொல்லிட்டுப் போறார் போல” என்றவுடன்,

“ஆமாம். இனிமேல், நீ இதெல்லாம் பழகிக்கனும் ஹாரண்யா! ஏன்னா, நீ கல்யாணம் பண்ணி இருக்கிற ஆள் அப்படி!” என்று கூறினாள் அவளுடன் பணிபுரிபவள்.

“ஹிஹி! ஆமாம்!” என்றவள், அதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என்றுணர்ந்து,

“இப்போ டிரெயினிங் நேரம். எல்லாரும் சீக்கிரமாக வாங்க” என அறிவித்து விட்டுத் தாமினியை இழுத்துக் கொண்டுப் போனாள் ஹாரண்யா.

இதே சமயம், தனக்கு எதிரில் இருந்தவனிடம்,”உங்களோட அடுத்தப் படத்தோட அறிவிப்பை எந்த தேதியில் நடத்துறாக இருக்கீங்க? அதோட முழு விவரமும் சொல்லுங்க” என்று கேட்டார் சுதன்.

அதற்கு,”அது இன்னும் மூனு நாளில் நடக்கப் போகுது சுதன்” என்றவன், அதை இயக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரையும் அவரிடம் கூறினான் மோஹித்.

“வாவ்! சூப்பர் சார். அவர் ரொம்ப பெரிய டைரக்டர் ஆச்சே! அவர் இயக்குற படம் எல்லாமே கண்டிப்பாக ஹிட் அடிச்சிருமே!” என்று வியந்து போக,

“ஆமாம். அவரே தான். ஹீரோயினையும் பாலிவுட்டில் இருந்து தான் தேர்ந்தெடுத்து இருக்கோம்” என்று கதாநாயகியின் பெயரைக் கூடுதல் தகவலாக சொல்ல,

“அவங்களா சார்? அங்கேயே அவங்க ரொம்ப பிரபலம் ஆச்சே!” என்றார் சுதன்.

“யெஸ். அதனால் தான், உங்க ஆஃபீஸில் புதுசாக சேர்ந்த யாரும் வேணாம்ன்னு, ஹாரண்யா ஆங்கரிங் பண்ணனுன்னுக் கேட்க வந்தேன்” என்று அவரிடம் தெரிவித்தான் மோஹித்.

“அவங்க தான் ஆங்கரிங் பண்ணுவாங்க சார்” என்றவர், அவனிடம் மேலதிக விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு அவனுக்குப் பழச்சாறு தருவித்துக் குடிக்க வைத்த பின்னரே அங்கிருந்து அனுப்பி விட்டுப்,

பயிற்சி அறையில் இருந்த ஹாரண்யாவைத் தன் அறைக்கு வரச் சொல்லி, மோஹித் கூறியவற்றை எல்லாம் அவளிடம் உரைத்தார் சுதன்.

அதைக் கேட்டதும்,’இது தான் விஷயமா?’என்று எண்ணிப் பெருமூச்சு விட்டவள்,”ஓகே சார். நான் ஆங்கரிங் பண்ணத் தயார்” என ஒப்புக் கொண்டவளை,

கண்களால் மெச்சியவர்,”அப்போ சரி மேம். அந்த ஃபங்க்ஷனுக்கான விவரங்களை எல்லாம் தெளிவாகப் பிரிண்ட் செய்து உங்களுக்குத் தரச் சொல்றோம்” என்றதும்,

“ஓகே சார்” என்று கூறி விட்டு அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பயிற்சி அளிக்கும் அறைக்குத் திரும்பினாள் ஹாரண்யா.

“சுதன் சார் உன்னை எதுக்குக் கூப்பிட்டாராம்?”என்று கேட்ட தோழியிடம்,

“அந்த மோஹித் வந்துட்டுப் போனார்ல்ல?” என்று தொடங்கியவள், அவளிடம் விஷயத்தைச் சொல்லி முடித்தாள்.

“செம்ம! நீ இங்கே மறுபடியும் வந்த உடனேயே இவ்ளோ பெரிய ஆஃபர் கிடைச்சிருக்குப் பாரேன்! கங்கிராட்ஸ்!” என அவளை வாழ்த்தினாள் தாமினி.

“ஆமாம் டி. மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கனுமோ - ன்னு நினைச்சுப் நினைச்சிட்டு இருந்தேன். இப்போ தான், நிம்மதியா இருக்கு” என்றாள் ஹாரண்யா.

“இனிமேலும் நிறைய ஆஃபர்ஸ் வரும் பாரு” என்றாள் தோழி.

அதன் பின், அவர்கள் இருவரும் மீண்டும் பயிற்சி அளிக்கும் வேலையைத் தொடர்ந்தனர்.

இந்த விஷயத்தை அறியாமல் தன் படப்பிடிப்புத் தளத்தில் இன்றைய காட்சிகளைச் சாவகாசமாக நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் பகீரதனுக்குச் செல்பேசியில் அழைத்து,”டேய்! சௌக்கியமா இருக்கியா?” என்று நக்கலாக வினவிய மோஹித்திடம்,

“என்னடா நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிற?” என்றான்.

“இனிமேல் நான் தான்டா கேட்பேன்!” என்று கூறினான் திமிராக,

“ஓஹோ! அந்தளவுக்கு வசதியாக இருக்கப் போலயே? என்ன விஷயம்?” எனக் கேட்டான் பகீரதன்.

“ஆமாம்டா. வசதியாகத் தான் இருக்கேன். நீ என்ன என்னோட சான்ஸ்ஸை எல்லாம் பிடுங்கிக்கிறது! எனக்கு ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருச்சுடா!”என்று இறுமாப்புடன் உரைத்தான் மோஹித்.

“ஆஹான்! நான் அதையெல்லாம் பிடுங்கிக்கிறேனா? ரைட்டு! உனக்கு வாழ்க்கை, ச்சே! வாய்ப்புக் கொடுத்த அந்த டைரக்டர் யாரு?” என்றவனிடம்,

“அதை அந்தப் படத்தைப் பத்தின அறிவிப்பை வெளியிடப் போற ஃபங்க்ஷனுக்கு வந்து தெரிஞ்சிக்கோ” என்றான் தெனாவெட்டாக,

பகீரதன்,“அங்கே வந்து தான் அதை தெரிஞ்சிக்கனும்னு எனக்கு அவசியம் இல்லைடா!” என்று கூறிவிட,

“அவசரப்பட்டு முடிவெடுக்காதேடா. இல்லைன்னா, நீ எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவ” என அவனை எச்சரித்தான் மோஹித்.

“அதை நான் எதிர்காலத்தில் ஃபேஸ் பண்ணிக்கிறேன்”

“நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் உன் இஷ்டம்” என்று சொல்லி அழைப்பை வைத்தான் மோஹித்.

அவன் அவ்வளவு எடுத்துக் கூறியும், அதனை அலட்சியப்படுத்தி விட்டான் பகீரதன்.

ஆனால், அதற்கான பிரதிபலன் அவனுக்கு அடுத்து வந்த நாட்களில் கிடைத்து விட்டது.

தன் மனைவி மறுபடியும் வேலைக்குச் சென்ற நாளில் இருந்து இன்று வரை, அவளது வேலையைப் பற்றி எதுவுமே கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டான் பகீரதன்.

தானாகப் போய் அவனிடம் சொல்ல நினைக்கும் வேளையிலும் அவன் காது கொடுத்துக் கேட்காததால் அதற்குப் பிறகுக் கணவனிடம் எதையும் பகிர்ந்து கொள்ள அவளும் தயாராக இல்லை. ஆதலால், மோஹித்தை நேர்காணல் செய்யப் போகும் விஷயத்தையும் அவனிடம் தெரிவிக்கவில்லை ஹாரண்யா.

அதுவே அவர்களுக்கு இடையிலான பிரிவுக்கு அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்ததைப் போல் ஆயிற்று.

அந்தக் குறிப்பிட்ட நாள் வந்ததும்,
தன்னை வைத்து இயக்க வேண்டிய காட்சிகள் எதுவும் இல்லாததால், படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லத் தேவையில்லை என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பகீரதன்.

“நான் ரொம்ப நாள் கழிச்சு ஆங்கரிங் பண்ணப் போறேன்னு இவர்கிட்ட முன்னாடியே சொல்லியும், சீக்கிரம் எழுந்து எனக்கு வாழ்த்துக் கூடச் சொல்லாமல் நல்லா தூங்கிட்டு இருக்கார்! ஹூம்” என்று சலித்துக் கொண்டுக் கீழே வந்தாள் ஹாரண்யா.

“வாடா. இன்னைக்கு ஏதோ இன்டர்வியூ எடுக்கனும்னு சொன்னியே, மதியம் சாப்பிட லேட் ஆகிடும்ல? நான் வேணும்னா சமைச்சுக் கொடுத்து விடவா?” என்று அவளிடம் வாஞ்சையாக வினவினார் மனோரமா.

“அதெல்லாம் வேண்டாம் அத்தை. அங்கேயே எல்லாருக்கும் லன்ச் தந்துருவாங்க. ஆனால், நான் வீட்டுக்கு வர்றதுக்கு மட்டும் டைம் ஆகிடும்” என்றாள் தயக்கத்துடன்,

“வேலைன்னா கொஞ்சம் அப்படி, இப்படித் தான் நேரமாகும். நீ பத்திரமாகப் போயிட்டு வா ஹாரா. அவனுக்குத் தான் இன்னைக்கு ஷூட்டிங் இல்லையே, வீட்டுக்கு வர லேட் ஆனா பகீக்குக் கால் செஞ்சு வரச் சொல்லி அவன் கூட வந்துரு” என அறிவுறுத்தவும்,

“சரிங்க அத்தை” என்றவள், அவர் பரிமாறிய காலையுணவை உண்டு விட்டு, மோஹித்தின் புதுப்பட அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி நடக்கப் போகும் இடத்திற்குச் சென்றாள் ஹாரண்யா.

அங்கே அவளை வரவேற்று அவள் தயாராக வேண்டிய அறைக்கு அனுப்பி வைக்க, அவளும் நிகழ்ச்சித் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் தான் இருக்கிறது என்பதால்,

தன்னுடைய உடையை அணிந்து, முக அலங்காரங்களையும் சிறப்பாக முடித்துக் கொண்டுக் காத்திருந்தாள் ஹாரண்யா.

தன் மனைவி கிளம்பிச் சென்றது கூடத் தெரியாமல், தான் எழுந்து தயாராகி வரும் போது தன் வீட்டின் பெரிய திரையில் ஒளிப்பரப்பாகும் நேரலையில் தன் மனைவிக் காட்சி அளிக்கப் போகிறாள், அதுவும் அந்த நிகழ்ச்சி மோஹித்தின் பட அறிவிப்பிற்கானது என்பதையும் அறியாமல் ஒரு தலையணையைச் சுகமாக அணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பகீரதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
உன் நினைவிலே கரைகிறேன் - 30

சிறிது நேரத்தில் அவ்விடத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாக இயங்கத் தொடங்கினர்.

அவர்கள் போட்ட சத்தத்தில் ‘அதற்குக் காரணம் என்ன?’ என்பதைக் கண்டறிவதற்குத் தன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்தாள் ஹாரண்யா.

அந்த விழாவின் நாயகர்களான, மோஹித், அவனுடைய படத்தின் இயக்குனர், நாயகி மூவரும் ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புப் படலமாக பவுன்சர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதைக் கவனித்ததும், உடனே அவர்களிடம் விரைந்து சென்று,”ஹலோ சார், ஹாய் டைரக்டர் சார், வெல்கம் மேம்” என்று புன்னகை முகமாக கூறவும்,

அவளை எள்ளலாகப் பார்த்தவன்,”ஓஹ், ஹலோ! மிஸஸ். ஹாரண்யா. இங்கே வர்றதுக்கு உங்க ஹஸ்பண்ட் உங்களுக்குப் பர்மிஷன் கொடுத்துட்டார் போல?” என்றான் மோஹித்.

அதில் முகம் சுருங்கிப் போனது ஹாரண்யாவிற்கு.

ஆனால்,“ஹேய்! நீங்க பகீரதன் சாரோட வொய்ஃப் தானே?” என்று அவளிடம் ஆர்வமாக வினவினார் இயக்குனர்.

அதைக் கேட்டதும், அவள் பதில் அளிக்கும் முன்பாகவே, தனது கருத்துப் போன முகத்தை நொடியில் மாற்றிக் கொண்டு,”ஆமாம் சார். இவங்க தான்” என்றவன்,

“நாம ஏற்கனவே லேட் ஆகத் தான் வந்திருக்கோம். ரூமுக்குப் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வந்தால் தான் ஃபங்க்ஷனைச் சீக்கிரம் ஆரம்பிக்க முடியும். சோ, வாங்க போகலாம்” என்று அவரைத் தன்னுடன் வருமாறு அழைத்தான் மோஹித்.

அவருக்குத் தமிழ் தெரியும். ஆனால், நல்லவேளையாக, தங்களுடன் வந்த கதாநாயகிக்குத் தமிழ் தெரியாது என்பதால், அவர்கள் மூவரும் பேசியது அவளுக்குக் கேட்கவில்லை. அதனால், அவர்களைப் பின்பற்றிச் சென்று விட்டாள்.

மோஜித்தின் இந்த அநாகரீகச் செயலை முன்பே எதிர்பார்த்து வந்து இருந்ததால், தன்னைச் சில மணித் துளிகளில் சமன் செய்து கொண்டாள் ஹாரண்யா.

அதற்குப் பிறகு, அவளோ தன் அறையில் காத்திருக்க, இங்கே மோஹித், இயக்குனர் ஹரீஷ் பண்டிட் மற்றும் கதாநாயகி நியா அகர்வால் மூவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று தங்களது உடைகள் மற்றும் அலங்காரங்களைச் சரி செய்து கொண்டனர்.

இன்னும் சில நிமிடங்களில், கதாநாயகன், கதாநாயகி மற்றும் இயக்குனர், இவர்கள் மூவரும் மேடைக்கு வரும் சமயத்தில், அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகளைக் கூறி விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்தான் மோஹித்தின் காரியதரிசி.

அதை அப்படியே ஹாரண்யாவிடம் சென்று ஒப்புவிக்க,

அவளோ,”ஓகே சார்” என்று தன்னம்பிக்கையுடன் உரைத்து விட்டு, அவர்கள் மூவரும் மேடை ஏறுவதற்குள் தான் பேச வேண்டிய உள்ளடக்கம் மற்றும் வாக்கியங்களை யோசித்து வைத்துக் கொண்டாள்.

இதே சமயம், இன்னும் சில நிமிடங்களில் தங்கள் மருமகள் தொகுத்து வழங்கப் போகும் நிகழ்ச்சியின் நேரலையைக் காண்பதற்கு ஆர்வமாக காத்துக் கொண்டு இருந்தார்கள் பாலேந்திரன் மற்றும் மனோரமா.

அப்பொழுது, மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் அவர்களது தவப்புதல்வன் பகீரதன்.

“டேய்! உனக்கு இன்னைக்கு ஷூட்டிங் இல்லைன்னு இவ்வளவு நேரம் தூங்கிட்டியா?” என்றார் அவனது தாய்.

“ஆமாம் மா. ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத் தான் நல்லா தூக்கம் வந்துச்சு. அதான்” என்று பதிலளித்து விட்டு,

“ரணு எங்கே ம்மா?” என்று கேட்க,

பாலேந்திரன்,“என்னடா அவளைப் பத்தி எங்க கிட்ட கேட்கிற? உங்கிட்ட எதுவும் சொல்லிட்டுப் போகலையா?” எனக் கேட்டார்.

“ப்ச்! சொல்லி இருப்பா. மறந்துருப்பேன்! ஏன் நீங்க இப்போ சொல்ல மாட்டீங்களா?” என்றான் பகீரதன்.

“அவ ஒரு பெரிய படத்தோட பெயர் அறிவிப்பு வெளியீட்டு விழாவுக்கான ஆங்கரிங் வேலைக்குப் போயிருக்கா. போதுமா?” என்று அவனிடம் தெரிவித்தார் மனோரமா.

“அப்படியா ம்மா? அதைப் பத்தி எனக்கு எந்த தகவலுமே வரலையே?” என்றவன்,

தன்னுடைய அறைக்குப் போய், ஹாரண்யா வேலை செய்யும் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுதனுக்கு அழைத்து,”ஹலோ, எந்தப் படத்தோட அறிவிப்பு விழாவைத் தொகுத்து வழங்குறதுக்காக என் வொய்ஃப் போயிருக்காங்க? அதோட ஹீரோ யாரு?” என்று விசாரிக்க,

“மோஹித் சாரோட புதுப் பட அறிவிப்பு ஃபங்க்ஷனுக்குத் தான் ஆங்கரிங் செய்ய அனுப்பி வச்சிருக்கோம் சார்” என்றுரைத்தார்.

“என்ன? அவனோட படத்துக்கா?” என்று உச்சபட்ச கோபத்தில் கத்தினான் பகீரதன்.

அதில் நடுங்கிப் போனவரோ,”ஆமா… ம் சார்” என்று பயத்துடன் கூறினார் சுதன்.

அவரிடம் தன் சினத்தைக் காட்டுவது சரியல்ல என்பதை உணர்ந்து,”ஓகே தேங்க்ஸ்” என்று சொல்லி அழைப்பை வைத்து விட்டுக் கீழே வந்தவனிடம்,

“எதுக்கு அவ்வளவு வேகமாக ரூமுக்குப் போன?” என்றார் மனோரமா.

“ரணு போயிருக்கிற ஃபங்க்ஷனில் அவளுக்குப் பாதுகாப்பு இருக்குமான்னு தெரியல. அதான், அங்கே எனக்குத் தெரிஞ்ச ஆளுங்களுக்குக் கால் செஞ்சி அவளைப் பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன்” என்றதும்,

“பரவாயில்லையே டா. பொண்டாட்டியோட பாதுகாப்பைப் பத்தி எல்லாம் கவலைப்பட்றியே!” என்று மகனைக் கேலி செய்தாலும் கூட, அவனது செயலால் மனமகிழ்ந்து அவனைத் தட்டிக் கொடுத்தார் பாலேந்திரன்.

பகீரதன்,“நானும் உங்க கூட சேர்ந்து அந்த ஃபங்கஷனைப் பார்க்கப் போறேன்” என்று பெற்றோரிடம் கூறி விட்டுக் காபியை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான்.

இங்கோ, விழாவின் முக்கியஸ்தர்கள் மூவரும் தயாராகி விட்டனர் என்பதை தெரிவித்தவுடன், தானும் தயாராக இருப்பதாக ஒருங்கிணைப்பாளரிடம் அறிவித்தாள் ஹாரண்யா.

அவரோ,”சரிம்மா. ஸ்டேஜ் ரெடியா இருக்கு. ஆடியன்ஸ் எல்லாரும் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் சீஃப் கெஸ்ட்ஸ் வந்துருவாங்க. அதுக்கு முன்னாடி நீங்க வந்து பேசி விழாவைத் தொடங்கி வைங்க” என்றவுடன்,

மிகுந்த நேர்மறை மனப்பான்மையுடன் மேடையை நோக்கிச் சென்றாள் ஹாரண்யா.

அவளைக் கண்டதும், கீழிருந்த ஒரு சிலரோ, பகீரதனின் பேரைச் சொல்லிக் கத்தவும், அவளுக்குக் கூச்சமாக இருந்தது என்றால்,

இங்கு அறையினுள் இருந்த மோஹித்திற்கு ஆத்திரம் கரையைக் கடந்தது. ஆனால், அதைப் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான்.

மைக்கின் முன் நின்று, அனைவருக்கும் புரியும் வகையில், தெளிவாகப் பேசத் தொடங்கியவள், முதலில் அந்தப் படத்தின் இயக்குனரைப் பற்றி விவரித்து அவரை மேடைக்கு அழைத்தாள் ஹாரண்யா.

உடனே, அங்கே குழுமியிருந்த அனைவருக்கும் கைக்கூப்பி வணக்கம் சொல்லி மேடையில் ஏறி இருக்கையில் அமர்ந்தார் ஹரீஷ் பண்டிட்.

அதன் பிறகு, அந்தப் படத்தின் கதாநாயகி நியா அகர்வாலைப் பற்றித் தான் சேகரித்து வைத்தவற்றை மொழிந்து அவளையும் மேடையை அலங்கரிக்குமாறு அழைப்பு விடுக்க, அவளும் தனது ரசிகர்களுக்குப் பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டு இயக்குனருக்கு அருகில் அமர்ந்தாள்.

இப்போது, அந்தப் படத்தின் கதாநாயகனை வரவேற்கும் நேரம் என்பதால், அவனது பெயரையும், பெருமையையும் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருந்த தன் மனைவியைக் கண்கள் இடுங்கப் பார்த்துக் கொண்டு இருந்தான் பகீரதன்.

ஆனால் அதை அறியாதவளோ, தன் உரையை முடித்து விட்டு,”இப்போ மேடைக்கு வரப் போற உங்களோட ஃபேவரைட் ஹீரோ மோஹித்துக்காக கரகோஷத்தை எழுப்புங்க” என்று ஆரவாரத்துடன் உரைத்த ஹாரண்யாவைக் கண்டுத் தன் கரங்களை இறுக்கிக் கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.

“நம்ம மருமக சூப்பராகப் பேசுறாள் தானே மனோ?” என்ற பாலேந்திரனிடம்,

“ஆமாம் ங்க. அவளோட தமிழை நல்லா தெளிவாக உச்சரிக்கிறா” என்று கூறினார் அவரது மனைவி.

அதே நேரத்தில், தனது ரசிகர்களின் கரகோஷ ஒலியைப் பெருமிதத்துடன் கேட்டுக் கொண்டே மேடையில் ஏறியவன், அனைவருக்கும் பொதுவாக வானை நோக்கிக் கரங்களைக் குவித்து வணக்கம் வைத்து விட்டு, இயக்குனர் மற்றும் கதாநாயகிக்கு நடுவில் உட்கார்ந்தான் மோஹித்.

முதலில், இயக்குனர் மற்றும் கதாநாயகியை அழைத்துப் படத்தைப் பற்றிச் சில வார்த்தைகளைப் பேச வைத்தவள், மோஹித்தை அழைத்து அவனைப் பேசச் சொல்லி விட்டுத் தள்ளி நின்றாள் ஹாரண்யா.

படத்தின் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து, நாயகியைப் பற்றிப் புகழ்ந்து விட்டுப் படத்தைப் பற்றிய விவரங்கள் மற்றும் அதன் சிறப்புகளையும் விளக்கிய மோஹித், ஹரீஷ் பண்டிட் மற்றும் நியா அகர்வாலும் சேர்ந்து படத்தின் பெயர் அடங்கிய போஸ்டரை வெளியிட்டனர்.

அதோடு விழாவை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டு, நன்றியுரை வழங்கச் சென்றவளிடம்,”ஒரு நிமிஷம் மிஸஸ்.ஹாரண்யா. நான் கொஞ்சம் பேசிக்கலாமா?” என்று கோரிக்கை விடுத்தான் மோஹித்.

“ஷூயர் சார். பேசுங்க” என்றவுடன்,

“ என்னோட இந்த விழாவை இவ்வளவு நேரமாகத் தொகுத்து வழங்கினது தி கிரேட் ஆக்ட்டர் பகீரதனோட வொய்ஃப்ன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். என்ன தான், ஒரு பெரிய நடிகரோட மனைவியாக இருந்தாலும் கூடத் தனக்குப் பிடிச்ச வேலையைச் செய்துட்டு இருக்கிற இவங்களைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கு! அதே மாதிரி, தன் மனைவியோட விருப்பத்தை மதிச்சு அவரை வேலைக்குப் போக அனுமதிச்ச பகீரதன் சாருக்கு என்னோட வாழ்த்துகள்” என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் ஹாரண்யா.

“நான் உங்க கூட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?” என்று பணிவுடன் கேட்டவனது செய்கையால் உற்சாகம் அடைந்த ரசிகர்களோ கைத் தட்டி ஆரவாரம் செய்து அவளை ஒப்புக் கொள்ளச் செய்தனர்.

அதனால், அசூயை அடைந்த ஹாரண்யாவோ, அவனது கோரிக்கையை மறுத்துப் பேச முடியாத இடத்தில் இருப்பதால், அதற்குச் சம்மதித்து விட, அவளது அருகில் ஒரு சாண் இடைவெளி விட்டு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் மோஹித்.

அதைக் கண்ட பகீரதனுக்குக் கண்களில் சிவப்பேறி, நரம்பு புடைத்தது என்றால், அவனது பெற்றோருக்கும் கூடக் கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது.

ஆனால் அதை வாய் விட்டுச் சொல்லி விட்டால் ஹாரண்யாவின் மீது மகன் கோபம் கொள்ளக் கூடும் என்றெண்ணி அமைதியாகி விட்டனர் மனோரமா மற்றும் பாலேந்திரன்.

ஒரு வழியாக அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நேர்காணல் செய்து முடித்து விட்டு, மோஹித், ஹரீஷ் பண்டிட் மற்றும் நியா அகர்வாலிடம் முறையாக நன்றி கூறியவள்,

அங்கே தனக்கும் சேர்த்து வழங்கப்பட்ட சிறப்பு விருந்தையும் உண்டு விட்டுச் சுதனுக்குக் கால் செய்து அவருடைய கருத்தைக் கேட்க,

அவரோ,”உங்களோட ஆங்கரிங் எப்பவும் பெர்ஃபெக்ட் ஆக இருக்கும்ன்னு சொல்றதுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு மிஸஸ். ஹாரண்யா. நல்லா தெளிவாகப் பேசினீங்க. கங்கிராட்ஸ்!” என்று வாழ்த்த,

அதற்கு,”தேங்க்ஸ் சார்” என்றாள் ஹாரண்யா.

“உங்களுக்கான பேமெண்ட் உடனே வந்து சேரும்” என்று உற்சாகமாக கூறி அழைப்பை வைத்தார் சுதன்.

அதற்குப் பிறகுத், தான் வீட்டிற்கு வருவதாக, மாமியாருக்குத் தகவல் தெரிவித்தவள், தன் காரில் உற்சாகமாக வீட்டை நோக்கிப் பயணித்தாள் ஹாரண்யா.

அதே சமயம், தங்களது மதிய உணவை உண்டு முடித்து அவளை வரவேற்பதற்காக காத்திருந்தார்கள் அவளது கணவன் பகீரதன் மற்றும் மாமனார், மாமியார்.


- தொடரும்
 
Last edited:
Status
Not open for further replies.
Top