எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயில் - 2

Status
Not open for further replies.

NNK-71

Moderator
“அம்மா ரகு இன்னும் எந்திரிக்கல”

“டேய் கண்ணா அவனை உங்க அப்பாவ எழுப்ப சொல்லு டா”

“அம்மா அவரும் அவன் பக்கத்துல படுத்து உருளுறாரு”

“இந்தா நான் போறேன்”

காலை நேர பரபரப்பில் இருந்தனர் கார்த்தி குடும்பத்தினர். கார்த்தி இப்போது பத்தாம் வகுப்பு அவன் தம்பி ரகு யூகேஜி இருவரும் ஒரே பள்ளி, தங்கள் அன்னையுடன் காலையில் கிளம்பி இரு சக்கர வாகனத்தில் தாயுடன் முன் நின்ற பயணம் ரகுவின் அந்த நாளுக்கான சிரிப்பின் ஆரம்பம்.

ரகுவும் கார்த்தியும் அண்ணன் தம்பி போல சில நேரம் சண்டை இட்டாலும் பல நேரம் அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக கார்த்தி தன் தம்பியை அரவணைத்து கொள்ளுவான்.

“அம்மா இன்னைக்கு ஆப்டர் நூன் நான் ஆட்டோல வர மாட்டேன் நீங்க வரணும்”

இது ரகுவின் தின புகார் என்பதால் யாரும் அவனுக்கு பதில் சொல்லாமல் காலை வேலைகளை பார்த்தனர்

“அண்ணா நீ பைக் ஓட்டு என்ன?”

சில நேரங்களில் அவன் அப்பாவின் பைக்கை அப்பாவுடன் ஓட்டி பழகும் போது ரகுவும் செல்வதால் இந்த கேள்வி கார்த்திக்கு.

“அவன் இன்னும் கொஞ்ச நாள் ஆனா பைக் ஓட்ட முடியும் - பதினெட்டு வயசு ஆனா தான் அதுக்கு எல்லாம் பெர்மிஸ்ஸின் உண்டு தங்கம் அம்மா இன்னைக்கு சாயங்காலம் அத பத்தி உனக்கு சொல்றேன்” இட்லியை ஊட்டி கொண்டே தன் சொன்ன அன்னைக்கு

“அம்மா அண்ணா தான் அவ்வளோ ஹைட்டு இல்ல” - ரகுவின் பதில்

இதை ரகு சொல்லவும் பிரபாவும் மாரியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின் பிரபா தன் இரு மகன்களுடன் சென்றவுடன் வீட்டுக்கு வந்து கட்டிலில் விழுந்த மாரிக்கு மத்திய ஷிப்ட் என்பதால் படுத்து இருந்தவர் நியாபகங்கள் ஆறு மாதத்துக்கு முந்தி சென்றது.

“என்னங்க கண்ணா நல்லா வளந்துட்டான் இல்ல டக்குன்னு”

“ஆமாம் டீ”

“அவன் நைட் எல்லாம் நல்லா தூங்குற மாதிரி தெரியல”

“நானும் கவனிச்சேன்”

“ஒரு பொண்ணு குழந்தை இருந்தா நானே இத பத்தி எல்லாம் சொல்லி இருப்பேன் - உங்களுக்கு என்ன சொல்றேன்னு புரியுதா?

“புரியல டீ”

“அப்போ ரெண்டு பிள்ளையும் என் திறமையால தானா?”

சிரித்த தன் மனைவியை அணைத்து கொண்டு “நான் அவன்கிட்ட பேசுறேன் டீ”

பின் ஒரு ஞாயிறு காலை தன் மகனை பைக்கில் ஒரு லாங் டிரைவ் அழைத்து சென்ற மாரி தன் வெட்கத்தை விட்டு உடலின் மாற்றங்களை பற்றி தன் மகனுக்கு சொன்னவர் ஒழுக்க சிந்தனைகளையும் சேர்த்து போதித்தார்.

கார்த்தியின் பள்ளியில் மாணவர்கள் தங்களுக்குள் சில வேண்டாத பேசி சிரிக்கும் போது கார்த்தி தன் தந்தை தனக்கு சொன்னதை நினைத்து பெருமை கொள்வான். கார்த்திக் நம் கதையின் நாயகன் நல்ல படிப்பாளி தாய் தந்தை மெச்சும் திறமைசாலி, அழகும் அறிவும் கொண்ட நாயகன். தாயும் தந்தையுமே அவனின் உற்ற நண்பர்களாக இருந்ததால் யாரையும் அவன் நெருங்க விட மாட்டான். எல்லாரிடமும் பேசி சகஜமாக இருந்தாலும் எல்லாரையும் ஒரு எல்லையில் வைத்து இருப்பான். கார்த்தி சிறு வயது முதலே டிஸ்கோவெரி நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பான் அவனுக்கு விலங்கு மருத்துவன் ஆக வேண்டும் என்பது இலக்கு.

*************************************************************************************************

“கார்த்தி அப்பாக்கு ஒரு சின்ன அச்சிடேண்ட் நாம ஹாஸ்பிடல் போகணும் வா”

பத்தாம் வகுப்பு முதல் ரிவிசன் தேர்வு எழுதும் தன்னை அழைக்க வந்த அங்கிள் தான், அவன் தம்பி பிறந்து இருக்கும் போது அவனை ஹாஸ்பிடல் அழைத்து சென்றவர்.

“அங்கிள் - ரகுவையும் கூட்டிட்டு வரேன் இருங்க”

யூகேஜி வகுப்பிற்கு சென்ற கார்த்தி பார்த்தது தூங்கி கொண்டு இருக்கும் ரகுவை அவனுக்கு நேற்று லேசான ஜுரம் இருந்ததால் மதியம் அவன் மிஸ் அவனை தூங்க சொல்லி இருந்தார். அவனை எழுப்பி பாக் எல்லாம் எடுத்து அங்கிளுடன் செல்லவும் அங்கு இருந்த ஆட்டோவை பார்த்து

“அண்ணா ஆட்டோ வேணாம்”

ஆட்டோவில் ஏறி அமர்த்தும் “அண்ணா ஆட்டோ வேணாம்” என்று அழுக ஆரம்பித்த தன் தம்பியை சமாளிக்க தன் அன்னை பிரபா கொடுத்து வைத்து இருந்த லொலி பாப்பை எடுத்து அவனிடம் நீட்டவும் அங்கிள் வண்டியை நிறுத்த சொல்லி வெளியில் இறங்கி போன் பேசி விட்டு திரும்ப ஆட்டோவில் ஏறி ஆட்டோவை வீட்டிற்கு போக சொன்னார்.


ஒரு பக்கம் தம்பி லொலி பாப் சாப்பிடுவதை பார்த்து கொண்டே”அங்கிள் அப்பா இப்போ எப்படி இருக்காங்க?”

அவனை அனைத்து கொண்ட அங்கிள் “வீட்டுக்கு போய் பேசலாம் பா” இதை கேட்ட கார்த்திக்கு பயம் அழுகை எல்லாம் சேர்த்து வந்தது.

வீட்டில் நுழைந்தவுடன் அவன் கண்டது ஹாலில் ஐஸ் பாக்ஸில் படுக்க வைக்கப்பட்டு இருந்த தன் தந்தையை, கண்களில் கண்ணீர் இறங்க தன் தம்பியை கைகளில் ஏந்தி கொண்டு தன் தாயின் அருகில் சென்று அமர்ந்தான்.

சில நேரம் கழித்து அவன் ஆச்சி பெரியப்பாக்கள் எல்லாரும் வந்து வீடு சாவு வீடானது. ரகுவை உள் அறையில் தூங்க வைத்து இருந்தனர்.

மாரி காலையில் வேலைக்கு கிளம்பி பைக்கில் செல்கையில் லாரி இடித்து ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டு, ஒரு அரை மணியில் உயிர் இழந்து விட்டார். அவரின் பிரபாவை இறுதி நொடி வரை எதிர் பார்த்து அது நிறைவேறாமல் கண்களை நிரந்தரமாக மூடி கொண்டும் விட்டார்.

அந்த இரவு முடியும் நேரம் கார்த்தி நிதர்சனத்தை ஏற்று கொண்டாலும், அவனின் மனம் ரகுவையும் தன் அன்னையையும் சுற்றி வந்தது.

“தாய்க்கு தலைமகன் தந்தைக்கு இளையவன் - இது தான முறை அப்படியே செய்யலாமா?” - யாரோ ஒரு பெரியவர் கேட்க

காலையில் வெளிநாட்டில் இருந்து வந்த தன் சித்தப்பா மடியில் இருந்த ரகுவை பார்த்தான் கார்த்திக்.

பின் ரகுவை கை பிடித்து அழைத்து சென்ற தன் பெரியப்பாவுடன் சென்ற கார்த்திக்கு அடுத்து நடந்த நிகழ்வுகள் யாவும் அட்சரம் பிசகாமல் அவனின் வாழ்வு முடியும் வரை நினைவில் இருக்கும்.

சாங்கியதுக்ககா மொட்டை அடித்து இருந்த தன் தம்பி
“அண்ணா சீக்கிரம் முடி வந்துடுமா?” என்று இரவு படுக்கும் போது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது அவனை அணைத்து முத்தமிட்டு தூங்க செய்தான் கார்த்திக்.

வரங்கள் சாபங்கள் ஆகுமா?
பாச தளைகள் நீங்குமா?

image.jpg
 
Status
Not open for further replies.
Top