எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜீவன்யா NNK23

yugarasha

Member
#rasha_review 21

#ஜீவன்யா

#NNK23

மற்றுமொரு சோதைனையை 🥰🥰🥰சாதனை ஆக்கிய கதை. சாரணமான ஒருவரின் வாழ்க்கையை அழகாக கூறியுள்ளாங்க ரைட்டர்🤪🤪🤪.

ஒருவரின் வாழ்க்கையில் மனைவி 💖💖💖என்பவளின் பங்கு எந்தளவுக்கு முக்கியம் என்று இனியா ❣️❣️❣️ ஜீவானந்தத்தை பார்த்தால் புரிந்து விடும்.

திரைப்பட இயக்குணர்🎬🎬 ஆக வேண்டும் என்று நினைக்கும் நாயகனிக்கு, சினிமா🎥🎥 துறையில நாட்டம் இல்லாத அம்மா அப்பா அண்ணா தங்கை. அதே நேரம் வாய்ப்பும் கிடைக்க வில்லை ஐடியில் வேலை பார்க்கும் போது ஒரு பெண்ணை பார்த்து திருமணம்💑 செய்து வெஐக்கிறாங்க.

கதையின் நாயகி இனியா, தகப்பன் இல்லாமல் தாயால் வளர்கப்பட்ட ஒரு பெண், படிக்க வேண்டும் என்ற கனவோட இருக்கிறவளைக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு ஜீவானந்தத்தை பார்ப்பாங்க.❤️❤️❤️ இருவரும் முதல் முறை பேசும் போது அவர்களின் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்வாங்க. அப்பொது இருந்தே இருவருக்கும் இடையே அழகிய காதல்💘💘💘

ரைட்டர் ஜீவன்யா நிலா காலம் இருபத்திமூன்று ஆரம்பத்தில் இருந்தே டுவிஸ்ட் இல்லாத கதை எண்டு சொல்லிட்டே இருந்தாங்க. அழகான😻😻 ஒரு காதல் சின்ன சின்ன எதிர் பார்ப்மு பல ஏமாற்றம் துணைக்காக அதை சகிச்சுக்💗💗💗 கொள்வது எல்லாமே அழகு தான். வில்லன் வில்லி இல்லாமல் சாரணமான மனித வாழ்கையை காட்டும் கதை ரொம்பவே இருமையா இருந்திச்சு😋😋😋 .

எல்லாமே பிளான் பண்ணி குடும்பம் நடத்துவது அழகாக இருக்கும்😇😇😇. எதிர் பாராத குழந்தை 👼👼அதை பெற்று எடுக்க நினைப்பாங்க, பட் அதே நேரம் அவனின் கனவை நோக்கிய பயணம் வேறு இரண்டுயிம் அவன் எப்படி சமாளித்தான்😜😜😜, அவள் எப்படி புரிந்து கொண்டாள் என்பது எல்லோர் வாழ்க்கைக்கும் ஒரு படிப்பினை🤔🤔🤔.

கடைசியல கணவன் மனைவிக்க்கு இடையிலான உரையாடல் சூப்பரா இருக்கும்😝😝😝. ஒவ்வொரு இடத்திலும் காம்ம் இல்லாத காதல் அழகாக சொல்லி இருப்பிங்க. தோசை ரொமான்ஸ் ❤️❤️❤️காபி ரொமான்ஸ் 💘💘எல்லாம் செமையா இருக்கும் ( வீட்டில ரை பண்ணினா 🤩🤩🤩வேல வட்டி இல்லாதவங்க எண்ட நினைப்பா எண்ட கேள்வி வேற வரும் நமக்கு எதுக்கு வம்பு🥸🥸🥸).

Feel good love story😍😍😍😍. உண்மையிலும் அழகாக அமைதியான ஒரு காதல்😘😘😘

இந்த போட்டியில் 🌷🌷வெற்றி 🌷🌷பெற 💐💐💐வாழ்த்துக்கள்💐💐

இந்த கதையை படிக்க விருப்பம் இருப்பின் லிங் 👇

https://narumugainovels.com/index.p...PyuEVXE8qkxULo-iIVMFzvTfX8trc32DZExsuuIbl7g7I — with பெண்மையில் பேராண்மை and 80 others.
 

NNK 23

Active member
@zeenath அவர்கள் கொடுத்த விமர்சனம்..
#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#ஜீவன்யா
#NNK23
ஜீவானந்தன்... இனியா..
ஐடி வேலை பார்க்கும் ஜீவாவிற்கு இயக்குனதாக வேண்டும் என்பது அவனின் கனவு இலட்சியம் அதனை நோக்கி செல்வது குடும்பத்தில் அவனின் தந்தை ஆதவன் தாய் வெண்ணிலா தங்கை இதயா என யாருக்கும் பிடிக்கவில்லை.. அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பாக குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமா துறையை தேர்ந்தெடுக்க மாட்டான் என நினைத்து அவனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.. முதலில் திருமணத்திற்கு மறுக்கும் இவன் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சம்மதிக்கிறான்.. இனியா...தந்தை இல்லாமல் தாயுடன் வசித்து வரும் இவள் பெரிதாக எந்த கனவும் எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணத்திற்கு பின்பும் ஆடிட்டராக படிப்பை தொடர வேண்டும் என ஒரு கண்டிஷனை மட்டுமே தன்னை பெண் பார்க்க வரும் ஜீவாவிடம் கூறுகிறாள்.. ஜீவானந்தன்.. இனியா.. தங்களின் பிடிப்பை கூறி இவர்களின் திருமணமும் அதற்கு பின்னான இவர்களின் வாழ்வும்... என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது கதை...இயக்குனராக வேண்டும் என்ற அவனின் கனவை நோக்கி செல்லும் ஜீவாவின் கனவு நிறைவேறியதா அதற்கு மனைவியவள் துணை நின்றாளா... குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி என்பது கதையில்... ஒருவருக்கொருவர் புரிதல் இருந்தாலே வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு சான்றாக ஒரு கதை
👏
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த
வாழ்த்துக்கள்

🥰

Good luck dear
💐
🥰
❤️
 
Last edited:

NNK 23

Active member
@chitrasaraswathi அவர்கள் கொடுத்த விமர்சனம்
நறுமுகை தளத்தில் போட்டிக் கதை நிலாக் காலம் 23 ன் ஜீவன்யா எனது பார்வையில். ஜீவானந்தன் மென்பொறியாளராக பணியாற்றி வந்தாலும் திரைப்படத் துறையில் உள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு அதில் ஈடுபட நினைக்கிறான். பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சொந்த ஊரில் தன் அம்மாவுடன் இருக்கும் இனியாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். வேலையை விட்டு திரைத்துறையில் ஈடுபடும் ஜீவாவை எப்படி புரிந்துக் கொண்டு இனியா வாழ முயற்சிக்கிறாள், அவன் தான் ஈடுபாடு கொண்ட துறையில் வெற்றி பெற்றானா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். இருவரின் புரிந்துக் கொண்டு வாழும் வாழ்க்கை அழகு. இனியாவின் மனப்போராட்டம் யதார்த்தம்.
 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#ஜீவன்யா

ஃபீல் குட் ஸ்டோரி 🥰🥰🥰

தெளிந்த நீர் ஓடை போல அழகா பயணிக்குது கதை🤩🤩🤩🤩

ஜீவா - ஐடி கம்பனில வேலை பார்த்தாலும் சினிமா டைரக்டர் ஆகனும்னு தான் இவன் கனவு எல்லாம், ஆன இவன் குடும்பத்தில் எல்லாரும் அதுக்கு எதிர்ப்பு😳😳😳....

அது பலித்ததா??????

இவன் கேரக்டர் நல்ல இருந்தது, எதையும் வெளிபடித்திக்க மாட்டான், சட்டுனு யார் கூடவும் பழகவும் மாட்டான் அதே சமயம் நெருங்கி பழகிட்டா பாசக்கரா பயபுள்ள தான்🤩🤩🤩🤩

இனியா - கண்டிப்பா இவ இல்லைனா அவனால் தன் கனவை அடைந்து இருக்க முடியாது.....

சராசரி எதிர்ப்பார்ப்பு தான் தன் கணவன் கிட்ட அது கூட கிடைக்கல அப்படிக்கரத கூட யார் கிட்டையும் சொல்லாம 😥😥😥

சூப்பர் கேரக்டர் இவ🥰🥰🥰🥰

ஜீவா குடும்பத்தார், யாருக்கா இருந்தாலும் நல்ல வேலையை விட்டுடு சினிமாவா நம்பி போறான் அப்படிக்கர கோவம் இருக்க தான் செய்யும், அதே போல தான் இவங்களும்.......

ஆன இனியா இருக்கற நிலை தெரியாம இவங்க பண்றது தான் கடுப்பா இருந்தது🙄🙄🙄🙄🙄

யாருமா ரைட்டர் ஒரு வில்லன் வில்லி கூட இல்ல, டென்ஷன் இல்லாம படிக்கலாம்.....

காபி ரொமான்ஸ், தோசை ரொமான்ஸ் எல்லாம்🙈🙈🙈

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#ஜீவன்யா


ஜீவானந்தம் - கதை ஆரம்பத்துல எப்படி தடுமாறுனானோ கடைசி வரைக்கும் அவன் நிலைல இருந்து எழுதுனது அருமை.. இவன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு.. அவனோட கனவையும் லட்சியத்தையும் அடைய அவன் பட்ட பாடு..😍😍😍 கடைசில விடாமுயற்சியும் கை கூடிருச்சு..

இனியா - இவளை மாதிரி புரிஞ்சுக்கற வாழ்க்கை துணையை கிடைச்சா கண்டிப்பா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்கும்.. ஜீவாவோட லட்சியத்துக்கு உறுதுணையா இருந்து அவளோட ஏமாற்றத்தையும் அவளுக்குள்ளயே புதைச்சுட்டு இவளும் ரொம்ப கஷ்டப்பட்டா..

இதனால புகுந்த வீட்டுல இவ வாங்குன திட்டுக்கள் கொஞ்சநஞ்சமல்ல.. கணவனோட சந்தோசத்துலயும் துக்கத்துலயும் அவங்களுக்கு ஆறுதலா இருக்கற மனைவி கிடைக்கறது வரம்.. சொல்ல போனா ஜீவா ரொம்ப லக்கி..

மீடியாத்துறை பத்தி சொன்னதும் சரிதான்.. அவன் குடும்பமே அவனை நம்பாதப்ப அவனை நம்பி அவனுக்கு பக்கபலமா இருந்த இனியாவோட காதல்😍😍😍😍

அதுவும் துணி எடுக்க போறப்ப ஒரு டையலாக் வந்துச்சே புடவை கட்டிக்க போறது நானாலும் என்னைய கட்டிக்க போறது நீங்கதானா.?

சட்டையை போட போறது நானாலும் என்னைய பார்த்து ரசிக்க போறது நீதான.?" எப்படிப்பா இப்படி எல்லாம்.. சான்ஸே இல்லை..

கடைசில அத்தனை தடைகளையும் உடைச்சு அவன் லட்சியத்துல ஜெயிச்சதுக்கு காரணம் இனியா மட்டும் தான்.. அவங்களோட காதலும் புரிதலும் சொல்ல வார்த்தைகள் இல்லை..😍😍😍

பீல் குட் ஸ்டோரி.. கண்டிப்பா எல்லாரும் படிக்கலாம்😍😍😍 போட்டியில் வெற்றி பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍
 

NNK 23

Active member
@Mrs apsareezbeena அவர்கள் கொடுத்த விமர்சனம்
# ஜீவன்யா
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 23
கணவன் : ஜீவானந்தன்
மனைவி: இனியா

மனைவியாக இனியா
மனதுக்குள்ளே ஆசைகளை
மறைத்துக் கொண்டு
மன்னவன் முன் சந்தோசமாக
மறைவில் துடித்து கொண்டு
மறுகும் குடும்பத்து பெண்.....

கணவனாக அனைத்தும் செய்தாலும்
குடும்பத்தையும் வேலையும்
கச்சிதமாக கொண்டு செல்ல
முடியாமல் தவிப்பது.....
தன்னால் முடிந்த அளவு
தன்னவளை பார்த்து கொள்வது ..
தன் மனைவி விருப்பத்தை
தடையின்றி படிக்க வைப்பது....
திடிரென்று பாட வைப்பது
அருமை.....

இனிமையாக அணைப்பு முத்தம்
இதுவல்லவோ காதல்
இது தான் புரிதல்
இப்படி தான் வாழ்க்கை
இயல்பாய் தாம்பத்ய உறவு
இவ்வாறு தான் உறவுகள்
இது போல ஜோடி வேண்டும் .....
இனியா ஜீவா போல.....
இரு உடல் ஒரு உயிர் போல
இரு வேறு நிலைமையில்
இயல்பாய் விட்டு கொடுத்து
இன்னல்களை தாண்டி
இன்பமாக ஒரு காதல் கதை.....

தோசை தக்காளி சட்னியில்
காபி டீயில் காதல்...
மடியில் அமர்ந்து
மலையளவு காதலை
பரிமாறிக் கொள்ளும் விதம்
மனதை கொள்ளை கொள்ள செய்கிறது ........

வீட்டு வேலை செய்வதும்
விட்டுச் செல்வதும்
விலகி இருப்பதும்
விரும்பி வருவதும்
வலியில் துடிப்பதும்
வெற்றி பெற்ற பிறகு
வீட்டில் இருவரும் மனம்
விட்டு பேசுவது என்று
அனைத்தும் அற்புதம்.....

எதிர்பார்ப்புகள் பொய்யாக போனாலும்
எதிரில் புன்னகையுடன்..
ஏக்கங்களையும்
விருப்பத்தையும்
மனதில் வைத்து கொண்டு....
கணவன் மேல் நம்பிக்கையுடன்
சுற்றி இருக்கும் குடும்ப உறவுகளிடம்
எந்த சூழ்நலையிலும்
கணவனுக்கு எந்தவொரு
இடையூறு இல்லா ( வரா)மல்
அவன் லட்சியத்தை
அடைய முழு ஒத்துழைப்பு தந்து....
வெற்றி அடைய
செய்யும் மனைவியின்
அமை(தியாக ) தியான
வாழ்க்கையே கதை....
குடும்ப காதல் கதை.....
வாழ்த்துகள்

சகி
💐
💐
 
Last edited:

NNK 23

Active member
@amirthababu அவர்கள் கொடுத்த விமர்சனம்.
23. ஜீவன்யா
இனியா ஜீவானந்தமின் கதை.
ஜீவா இயக்குனர் ஆகும் வாய்ப்பை தேடி அலையும் , ஐடி வேலையில் இருப்பவன். இனியாவுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. அப்போது ஆரம்பிக்கும் அவர்களின் புரிதல் கடைசி வரை நீடிக்கிறது.
இயக்குனர் இலட்சியத்தை அடையும்வரை குழந்தை வேண்டாம் என நினைக்கிறார்கள். நினைப்பது எல்லாம் நடக்குமா. கர்ப்பமாகிறாள். அதே சமயம் அவனுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மனைவியை கவனிக்க நேரமில்லை. இனியாவின் உணர்வுகளை நன்றாக கொடுத்து இருக்கிறார்கள்.
ஜீவாக்கு professional, personal time and space கொடுக்க தெரியாம அல்லாடுகிறான்.
ரொமான்ஸ் வித் காபி, தோசை எல்லாம் நல்லா தான் இருக்கு.
 

NNK 23

Active member
Thoshi Yamuna அவர்கள் கொடுத்த விமர்சனம்
#நிலவில்ஒருகதைஎழுது
#நறுமுகை_நிலாகாலம்
#NNK_23
#ஜீவன்யா
கணவன்-மனைவிக்கு இடையேயான புரிதல் அவர்களின் வாழ்வை அழகாய் கொண்டுச்செல்லும் என்பதை சொல்லும் மென்மையான காதல் கதை.
கதை பெயர் : ஜீவன்யா
நாயகன் : ஜீவானந்தன்
நாயகி : இனியா
ஐடியில் வேலை செய்யும் ஜீவானந்தன் இயக்குனராக வேண்டும் என்ற கனவுடன் அதற்கான முயற்சியில் இருக்க, திரைத்துறை வேண்டாம் என எண்ணம் கொண்ட அவனின் குடும்பத்தாரோ அவனுக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர். அதன்பேரில் அமைதியே உருவான இனியாவை அவனுக்கு மணமுடித்துவைக்க அந்நேரத்தில் ஜீவானந்தனின் திரைத்துறை வேலையும் அதிகமாகிறது.
அதனால் குழந்தை வேண்டாம் என தள்ளிபோடும் ஜீவா, அவனுக்காகவே அதை ஏற்க்கும் இனியா.
இவர்கள் நினைத்தால் போதுமா? எதிர்பாராமல் அவ்வரம் இருவருக்கும்கிட்ட அதே நேரத்தில் ஜீவாவிற்க்கு அவனின் கனவை நிறைவேற்ற வாய்ப்பும் கிட்டுகிறது. ஜீவாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும். ஆரம்பம் முதலே தன் வேலைக்கும், காதலுக்கும் இடையே அல்லாடும் ஜீவா இப்பொழுது என்ன செய்வான் ? அவனின் கனவு அவனுக்கு கைக்கூடியதா ? திரைதுறையின் வதந்திகளை தாண்டி இனியா அவனுக்கு உறுதுணையாய் இருந்தாளா ? என அனைத்தும் கதையில்.
எவ்வித திருப்பங்களும் இல்லாத இயல்பாய் ஓர் கணவன்-மனைவியின் வாழ்வதான் கதை. ஆரம்பம்முதல் இறுதிவரை இனியாவின் புரிதல் அழகு.
இந்த ஜீவா தான் கொஞ்சம் மக்கா போய்டான் விளம்பரத்துக்காக தான்னாலும் அந்த பொண்ணு பக்கத்துல உட்காருவானா இனியா நல்லா நாலு போட்ருக்கனும்.
மென்மையான கதை..காட்சியமைப்புகளில் மட்டும் இன்னும் சற்று சுவாரிசியம் கூட்டியருக்கலாமோ என தோன்றுகிறது..தொடர்ந்து வாசிக்கையில் ஒரேபோலான காட்சிகள் சற்று தொய்வுறசெய்கிறது.
இதேபோல் மென்மையான கதைகள் பலவற்றை அழகாய் எழுதி எழுத்துலகில் வெற்றிகரமாய் பயணிக்க என்
வாழ்த்துக்கள்

..
 
Top