எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயில் - 3

NNK-71

Moderator
வாழ்கை அதன் போக்கில் சென்றது, செய்ய வேண்டிய அனைத்து காரியமும் முடிந்த பின்னர் மாரியின் அண்ணணும் தம்பியும் அவர்கள் ஊருக்கு சென்றனர். தினமும் காலையில் எழுகையில் கார்த்திக்கு அந்த நாள் ஞாபகம் தான்.

“இத இப்போ கண்டிப்பா செய்யணுமா மா?”

“கண்டிப்பா செய்யணும் டா! எப்படி விட முடியும் சொல்லு!”

மாரியின் அம்மாவும் அண்ணனும் பேசிக்கொண்டதை கேட்டு கொண்டு அன்று எழுந்த கார்த்திக்கு எதை பத்தி பேசுகிறார்கள் என்று புரிய வில்லை.

பின் தான் கார்த்தியின் பெரியப்பா - மாரியின் அண்ணன் கார்த்தியை தனியாக அழைத்து சொன்னார்.

“கார்த்தி அம்மாவுக்கு சில சடங்கு எல்லாம் பண்ணனும் அந்த நேரம் ரகு இங்க இருக்க வேணாம் என்ன பண்ணலாம் சொல்லு”

“என்ன சடங்கு பெரியப்பா?”

“அது அப்பா தவறிட்டான் இல்லையா! அதுக்கு வேண்டி செய்யரது பா”

கார்த்திக்கு எதோ புரிவது இருந்தது தாலியை எடுப்பார்கள் என்று நினைத்து கொண்டான், தன் அன்னை இன்னும் அந்த கனமான சங்கிலி கழுத்தில் போட்டு இருப்பது அவன் அறிந்தது.

அந்த சங்கிலியை அவன் தந்தை அவன் அன்னைக்கு தங்கள் பத்தாவது மண நாள் அன்று போட்டு விட்டது அவனுக்கு நினைவடுக்கில் அழகான நினைவு.

“பெரியப்பா வேந்தன் வீடு பச்… நாய் டாக்டர் வீட்டுக்கு ரகுவை கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன், அங்க கொஞ்ச நேரம் அழாம இருப்பான்”
“சரிப்பா மதியமா விட்டுட்டு வா அப்போ தான் கரெக்டா இருக்கும்”
அன்று மதியம் ரகுவை கூட்டி கொண்டு வேந்தன் வீடு சென்றான்.

“வேந்தா அப்பா எங்க டா?”

“உள்ள தான் இருக்கார், வா டா கார்த்தி உள்ள வா”

வேந்தன் கார்த்தி ஒரே பள்ளி ஒரே வகுப்பு, வேந்தனின் அப்பா அம்மா பிரிந்து இருக்கிறார்கள் என்ன கதை ஏன் பிரிவு கார்த்திக்கு அது எல்லாம் தெரியாது. வேந்தன் கார்த்தியின் நண்பன், நாய் டாக்டரின் மகன். வேந்தனின் அப்பா வெட்டினரி டாக்டர் அவர்கள் ஏரியாவில் கொஞ்சம் தள்ளி ஒரு கிளினிக் வைத்து இருக்கிறார் செல்ல பிராணிகள் கிளினிக். ஒரே பள்ளி பக்கத்து வீடு இயல்பான நட்பு வேந்தன் கார்த்தி உடையது.

கார்த்திக்கு வேந்தனின் தந்தையின் கிளினிக் பிடிக்கும் அவனுக்கும் அது தான் படிக்க வேண்டும் என்ற இஷ்டம்.

“அப்பாவ கூப்பிடு வேந்தா”
“அங்கிள் ரகு கொஞ்ச நேரம் உங்க வீட்டுல இருக்கட்டும் நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்”

“அண்ணா நான் உன் கூட இருக்கேன்” ரகு அடம் பிடிக்க ஆரம்பிக்க

“நீ கிளம்பு கார்த்தி, ரகு வா நம்ம கிளினிக் போய் நாய் குருவி எல்லாம் பாக்கலாம், வேந்தா அண்ணா கூட போலாம் வா” வேந்தனின் அப்பா சொன்ன மறு நிமிடம் குஷியாக கிளப்பினான் ரகு.

வேந்தனின் அப்பாவுக்கும் கார்த்தி அப்பாவுக்கும் ரொம்ப நெருங்கிய நட்பு எல்லாம் இல்லை இருவரும் வேறு வேறு தொழில் வேறு பக்கத்துக்கு வீடு என்பதால் அந்த பழக்கம் மட்டுமே. ஆனால் கார்த்திக்கு வேந்தனின் அப்பாவை அவரின் கிளினிக்கையும் மிக பிடிக்கும், அவனின் ஆசையும் அது என்பதால்.

கார்த்தி ரகுவை வேந்தனுடன் அனுப்பி பின் வீடு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இருந்தான். அவனின் அன்னைக்கு அப்படி ஒரு சடங்கு செய்வார்கள் என்று அவன் கனவில் கூட நினைத்தது இல்லை, பூவும் பொட்டும் வைத்து அதை அழிப்பது வளையல்களை ஒடித்து அவனால் அந்த நிமிடத்தை கடக்க முடியாமல் கண்ணை முடியது மட்டும் நினைவில் இருக்கிறது, பின் அவனின் பெரியப்பா அவனை அழைக்கும் போது தான் அவன் மூர்ச்சை ஆனா விஷயம் அவனுக்கு விளங்கியது.

இப்படியாக கார்த்தி ரகுவின் தந்தை அவர்களின் வாழ்வை விட்டு சென்று ஆறு மாதம் முடிந்தது, கார்த்தி பியூர் சயின்ஸ் குரூப் எடுத்து படிக்க ஆரம்பித்து இருந்தான். வேந்தன் கம்ப்யூட்டர் கணித பாட பிரிவில் இருந்தான். நாட்கள் அதன் போக்கில் சென்றது, நல்ல படிக்க கூடிய கார்த்தி அதை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க வில்லை. கார்த்தி நல்ல மதிப்பெண் பெற்று அவனின் கனவான பீ வீ எஸ் ஈ சேர்ந்தான் சென்னையில்.

காலம் கண் இம்மைக்கும் நேரம் கடந்தது என்பது போல் தான், கார்த்தி வீட்டில் நாட்கள் ரெக்கை கட்டி பறந்தது. கல்லூரியில் கார்த்தியை தெரியாதவர் என்று அநேகம் பேர், நீங்கள் புரிந்து கொண்டது சரியே, மிக மிக அமைதியான மாணவன் கார்த்தி. தேவை இல்லாது யாருடனும் பேச மாட்டான், நல்ல மதிப்பெண்கள் பெற்று அவனின் கனவான பி ஹெச் டியை ஜெர்மனி சென்று முடிக்க வேண்டி அவனின் அயராது உழைப்பு, இதோ நாளை அவன் ஜெர்மனி கிளப்ப வேண்டும்.

“அம்மா ரகு இப்போ தான் ஏழாவது போறான் நான் எடுத்த முடிவு இப்போ கூட எனக்கு உங்கள விட்டு போக ரொம்ப கஷ்டமா எதோ தப்பு செய்யுற மாறி இருக்குமா!!”

“கண்ணா அந்த ஸ்சோலர்ஷிப் கிடைக்கிறது எவ்ளோ கஷ்டம் நீ படிச்சு கிடைச்சு இருக்கு தேவை இல்லாம கவலை படாத டா”

“அம்மா நீங்க ஏன் எனக்கும் தங்கம் அண்ணாக்கு கண்ணா பேரு வைக்கல எப்போவும் அப்படி தான கூப்பிடுறீங்க?” ஆயிரமாவது முறையாக இந்த கேள்வி பிரபாவிடம் ரகுவால் கேட்கப்பட்டது.

*********************************************************************************************************
தன் கல்லூரி பக்கம் இருக்கும் ஸ்கூலில் ரகு படிப்பதால் அவனை எளிதில் பார்த்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் பிரபா தன் கண்ணனை ஜெர்மனி செல்ல மகிழ்ச்சியுடன் அனுப்பினார். காலங்கள் கண நேரத்தில் மாறியது போல இருந்தது பிரபாவிற்கு இதோ தன் இரு மகன்கள் தன் கண் முன்னே அந்த காலை வேலை அழகாக இருந்தது…

“டேய் கண்ணா உனக்கு 33 வயசு ஆச்சு! நீ கல்யாணத்துக்கு ஒகே சொன்னா மட்டும் போதும் மத்தது எல்லா அம்மா பாத்துக்குறேன்”

“அம்மா அந்த நாய்க்கு சாப்பாடு போட்டீங்களா இல்லையா?” - அம்மா கேட்கும் கேள்வி காதில் விழுந்தும் அதற்கு பதில் சொல்ல மனமின்றி மகன்

“சாப்பாடு போட்டேன் பா - சாப்பிட்டு போய் படுத்துருச்சு பாரு” -இவன கல்யாணத்த பத்தி கேட்டா இவன் நாய பத்தி கேக்குறான் !!!

“சாப்பிட்ட மாறி தெரியல பாருங்க வயிறு காஞ்சு கிடக்கு” - வெளியில் படுத்து இருக்கும் அந்த ராஜபாளையம் நாயை பார்த்து கொண்டே மகனின் பதில்

“தம்பி நீ எந்த நாய கேக்குற?” - சோபாவில் படுத்து உறங்கும் தன் இரண்டாவது மகனை பார்த்து தாயின் அடுத்த கேள்வி

“அம்மா அவன் ஒரு டாக்டர் அவனை போய்” - தானே சென்று நாயை எழுப்பி வாக்கிங் செல்ல ஆயத்தமானான் கார்த்திக் நம் கதையின் அவன் நாயகன்.
“அம்மா அவன் நல்லா தூங்கட்டும் - ஹவுஸ் சர்ஜென் பீரியட்ல அதுவும் நைட் ஷிபிட் வேற, நான் வாக்கிங் போயிட்டு வரேன், நாளைக்கு வந்து நாயை கூட்டிகிட்டு போயிடுவாங்க” - சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியில் சென்ற பெரிய மகனை பெருமையும் கர்வமும் கொண்டு பார்த்து விட்டு சென்றார் பிரபா. அவர்கள் வீட்டில் இதே போல் அவன் வேலை சம்பந்தம்பாக சில சமயம் நாய்களை கொண்டு வருவான், ஆனால் வளர்க்க சம்மதிக்க மாட்டான், தன் தம்பி கேட்டு மறுத்த சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

பிரபா இப்போது ஒரு மேத்ஸ் ப்ரோபெசர் பதவி உயர்வு பெற்று விட்டார் , அவர்கள் வீட்டில் அனைவரும் டாக்டர்கள் மகன் கார்த்திக் வெட்டினரி டாக்டர்க்கு படித்து பின் (Zoonotic Diseases) - விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவும் நோய்கள் குறித்து பிஹெச்டி பட்டம் பெற்று இருபத்தி ஆறு வயதில் வேலைக்கு சேர்ந்து இப்போது ஒரு துரையின் துணை தலைவனாக இருக்கிறான் தனியார் நிறுவனத்தில் ரிசெர்ச் பிரிவில். இளைய மகன் ரகு எம்பீபீஎஸ் படித்து முடிக்கும் தருவாயில் இப்போது.

நம் நாயகியின் அதிரடி ஆட்டம் அடுத்த பகுதியில் இருந்து ஆரம்பம்.
 
Top