எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயில் - 4

NNK-71

Moderator
பேட் ஆஸ் மா….
நீ ஒரசமா ஓடிடு….
பேட் ஆஸ் மா….
உன் வால சுருட்டிடு….

இந்த கதையில ராட்சச முகம் தான்…

ஹெட் செட்டில் கேட்க்கும் பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டி கொண்டு இருந்தாலும் கை கணினியில் விளையாடி கொண்டு இருந்தது. நம் நாயகி சக்திக்கு.

Dr. சக்தி ME PhD
Dr. பிரியா ME PhD

இனிசியல் அற்ற அந்த நேம் போர்டும், “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற ஸ்டிக்கர் ஓட்ட பட்ட அந்த இரும்பு கிரில் கேட்டை இரண்டு முறை தட்டினார் ஸ்மோட்டோ ஊழியர்.

காக்கி கலர் ட்ராக் பேண்ட்டும் கருப்பு கலர் டீ ஷிர்ட்டும் அணிந்து பாப் கட் செய்த தலையுடன் காதில் ஏர் போட்ஸ் சகிதம் ஸ்மோடோ ஊழியரின் கையில் இருந்ததை ஒரு சிறு முறுவல் தலை அசைப்புடன் வாங்கி கிரில் அடைத்து பின் மர கதவை அடைத்து, டைனிங் டேபிளில் அதை வைத்து விட்டு தன் அன்னையின் அறைக்கு சென்று அவரை எழுப்பினாள் சக்தி.

“அம்மா சாப்பிடலாம் வா, சூடா பிரியாணி ஆர்டர் வந்து இருக்கு”

“நீ கல்யாணத்துக்கு ஒகே சொல்லு நான் சாப்பிட வரேன், அந்தா இந்தான்னு உனக்கு இப்போ முப்பது வயசு ஆகி போச்சு இனிமேலும் இப்படி அடம் பிடிக்காத”

எனக்கே ராஜாவா நா வாழுறான் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் போடு ராகிட ராகிட அடுத்த பாடலை முணு முணுத்த படி தாயின் சொல்லை காற்றில் பறக்க விட்டு டைனிங் டேபிள் சென்று பிரியாணியை சாப்பிட ஆரம்பித்தாள் சக்தி.

“சொன்னா புரிஞ்சுக்கோ சக்தி! கல்யாணம் பண்ணிக்கோ”

“உனக்கும் தான் கல்யாணம் நடந்தது அதுனால உனக்கு என்ன சந்தோசம் சொல்லு?! கேட்டா நான் கிடைச்சது ஒரு சந்தோசம்ன்னு சொல்லுவ பட் எனக்கு அந்த செண்டிமெண்ட் எல்லாம் வேண்டாம் பிரீயா ஜாலியா இருக்கணும் ஒகே!?”

இதற்கு மேல் மகளிடம் பேச ஆரம்பித்தால் தனக்கு ஒரு மிக பெரிய சொற்பொழிவு பெண் முன்னேற்றம் சுய மரியாதை அடக்கு முறை பற்றி கிடைக்கும் என்பதால் பேச்சை மாற்றினார் பிரியா.

“இன்னைக்கு நைட் ஒர்க் இருக்கா சக்தி”

“ஆமாம் மா அடுத்த வாரம் ஒரு காண்பெரென்ஸ் போறோம் இல்ல அதுக்கு ப்ரெசென்ட்டேஷன் ரெடி பண்ணனும்”

“சீக்கிரம் தூங்கு உனக்கு நாளைக்கு சாப்பாடு கட்டணுமா டா?”

“வேணாம் மா அநேகமா ஒர்க் பிரேம் ஹோம் எடுப்பேன் சோ நானே குக் பண்ணி வைக்கிறேன் நீ மதியம் கேன்டீன்ல சாப்பிட்டு வா”

“ஒகே மா நீ போய் படு”

உள் அறையில் சென்று படுத்தார் பிரியா அவருக்கு மகளின் நினைப்புக்கு தான் எப்போதும் சக்தியை நினைத்தாலே பெருமை உவகை ஆனந்தம் வருத்தம் இப்படி கலவையான உணர்வுகள். தன்னை போலவே இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆரம்பித்து பின் அதை கெட்டியாக பிடித்து படித்து இப்போது ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பதிவியில் இருக்கிறாள். பொருள் நிறைவு கொண்ட வாழ்க்கை ஆனால் மன நிறைவு அது பிரியாவின் வாழ்வில் கல்யாணம் முடிந்ததில் இருந்து கேள்வி குறி தான். ஏதேதோ நினைவுகளுடன் தூங்கி போனார்.

தன் அன்னை தூங்கியதை உறுதி படுத்தி விட்டு வேலையை முடிந்து விட்டு சக்தி உறங்க செல்லும் போது மணி இரண்டரை. தங்கள் காலேஜ் வாட்ஸஅப்ப குரூப்பில் நிறைய மெசேஜ் வந்தற்கான அடையாளம் தெரிய எடுத்து பார்த்த சக்திக்கு சிரிப்பாக இருந்தது அவள் கூட படித்த ஒரு பையனின் கல்யாண போட்டோவும் நிறைய வாழ்த்துக்களும் கமெண்ட்ஸ் என்று குரூப் அமர்க்கள பட்டது. சக்தி “கியூட் கப்பிள் - திருமண நாள் வாழ்த்துக்கள்” என்று போட்ட அடுத்த நொடி போட்டோவில் இருந்த அந்த மாப்பிளை அதற்க்கு ஹார்ட் சிம்பல் ரியாக்ட் பண்ணி இருந்தான்.

காலேஜ் படிக்கும் போது சக்தியை சைட் அடித்து ப்ரொபோஸ் செய்த தில் கொண்ட ஆண் மகன் அவன்.

சக்தி சராசரிக்கும் அதிக உயரம் கொண்ட பெண், கண்ணாடி அணிந்து காலேஜ் செல்லும் போதே பாப் கட் வைத்து பார்வையில் கொஞ்சம் செருக்கும் திமிரோடும் இருக்கும் இருந்த பெண். யாருக்கும் எதற்கும் அஞ்ச மாட்டாள். அதற்கு என்று அடாவடி ஆளும் அல்ல. ஸ்ட்ரெயிட் போர்வேர்ட் என்று சொல்வதற்கு உதாரண புருஷி. அவளின் உயரமே அவளை ஆண்கள் அனைவரையும் தோழியாக மட்டுமே பார்க்க வைத்தது, அதற்காக அவள் ஒருபோதும் வறுத்த பட்டது கிடையாது.
பிஹெச்டி படிக்கும் போது அவளின் தோழி

“உன் ஹைட்டுக்கு நீ புல்லட் ஓட்டலாம்ல” என்று சொல்லும் போது சின்ன சிரிப்புடன் தன் டியோ வண்டியை எடுத்து நகர்ந்து விடுவாள். பெண்ணியம் பேசினாலும் ஆண்கள் செய்யும் அனைத்தும் செய்வது பெண்ணியம் அல்ல என்ற தெளிவு உடையவள். இந்த தெளிவு அவளின் அன்னை அவளுக்கு அளித்தது.
*************************************************************************************************

காலை அவள் அன்னை சென்றதும் லாகின் செய்து அன்றைய வேலைகளை பார்க்க ஆரம்பித்த சக்திக்கு மதிய உணவு நேரம் கடந்து தான் வேலை முடிந்தது. லாக்அவுட் செய்து விட்டு என்ன சமைக்கலாம் என்று பார்க்கும் போது வீட்டில் காய்கறிகள் பன்னீர் இருப்பதை பார்த்து, புலாவ் பன்னீர் குருமா செய்யலாம் என்று முடிவு செய்து ஏர் போட்ஸ் காதில் பொருத்தி சமையல் ஆரம்பித்தாள்.

“நான் ஒரு சோக சுமைதாங்கி துன்பம் தாங்கும் இடிதாங்கி”

“தாங்குமோ என் தேகமே தோள்களிலே மன்னவனின் மலர்கணைகள்”

“வைட் டா தான் பிரைட்டா தான் இருக்கும் பாலு அதுக்கு எக்ஸ்பயரி டேட் ஒரே ஒரு நாளு”

இன்னும் ஒரு அரை மணி நேர பாடல்கள் முடிந்து…
கலவையான ரசனையுடன் ஸ்பாட்டிஃபை பிலே லிஸ்ட் முடியவும் சமையல் முடியவும் சரியாக இருந்தது.

தன் அன்னை காலேஜ் முடிந்து வந்ததும் ஏர்லி டின்னெர் ஏழு மணிக்கே சாப்பிட்டு விட்டு அன்னையும் மகளும் டிவியின் முன் அமர்ந்தனர்.

“இன்னைக்கும் மதியம் சாப்பிடலையா? சக்தி “ இரவில் சாதம் உண்ணாத மகள் இன்று உண்ணவும் இந்த கேள்வி.

“ஆமாம் மா டைம் இல்ல! அப்புறம் இந்த சாட்டர்டே துபாய் போறேன் காண்பெரென்ஸ் இருக்கு இல்ல ஆபீஸ்ல இருந்து டிக்கெட் எல்லாம் வந்தாச்சு நான் மட்டும் தான் போறேன் இந்த தடவ”

“போயிட்டு எப்போ ரிடர்ன் சக்தி?”

“சாட்டர்டே போயிட்டு அடுத்த சாட்டர்டே மா! காண்பெரென்ஸ் நாலு நாள் தான் மிச்ச நாள் சில ஒர்க் இருக்குமா கம்பெனில”

“சரி டா - ஏதும் பர்ச்சஸ் பண்ணனுமா”
“இல்லமா எல்லாமே இருக்கு - போர்மல் வேர் ஆபீஸ் சூட் எல்லாம் இருக்கு”

பிரியா முதல் முறை சக்தி இது போல் வெளிநாடு செல்ல பயண பட்ட போது அவள் வாங்கி குவித்த துணிகளை கண்டு வியந்தார்.

“சக்தி உனக்கு எப்படி இது எல்லாம் வாங்கணும்னு தெரியும்?” அதிக பட்சம் சுடி சேலை மட்டுமே உடைகளாக உடுத்தி பழக்கப்பட்டவர் சூட் அதுவும் லேடீஸ் சூட் தன் மகள் போட்டு பார்க்கும் போது அவளின் உயரத்துக்கு அந்த அழகு சேர்ந்த கம்பீரம் இப்போதும் அவர் கண் முன் வந்தது.

“அம்மா எனக்கும் சில விஷயம் எல்லாம் நல்லா தெரியும்!” உடைகள் பற்றிய கேள்விக்கும் இருபத்தியாறு வயதில் பணியில் சேர்ந்து ஆறு மாதங்களில் இந்த பதில் சொன்ன மகளின் தெளிவும் செருக்கும் இப்போதும் அவரை நெகிழ செய்தது.

****************************************************************************************************

துபாய் காண்பெரென்ஸ்

“I think you haven't understood my question correctly - whatever you are showing as result its is impossible to predict it with this method you are mentioning” - கார்த்திக்

“Nothing is impossible in data analysis provided with correct data so with the data given to me, I have run the model which I coded with my bare hands and I got this result, I have started running the model again for you! Let's wait for the result” - சக்தி

ஸ்டாடிஸ்டிகள் டேட்டா அனாலிசிஸ் - மிருகத்தில் இருந்து மனிதனுக்கு பரவிய கொரோனா போன்ற கொடிய வியாதியை போல் வேற எதுவும் பரவ வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விக்கு, ஆண்டு வாரியாக பல தரப்பட்ட விலங்குகளில் இருந்து பல இடங்களில் பரப்பப்பட்ட சின்ன சின்ன வியாதி தொற்றுகள் என்று அந்த மிக மிக பெரிய டேட்டா செட்டை அனாலிஸ் செய்து அதில் இருந்து கிடைத்த ப்ரெடிக்ஷன்ஸ்(predictions) பார்த்து விட்டு தான் இந்த வாக்குவாதம்.

ரொம்ப திமிரு புடிச்ச பொண்ணா இருப்பா போல அவளை அளந்து கொண்டே கார்த்தி “உங்க சீனியர் கோபால் வரலையா”

“கோபால் வரல கார்த்திக் இனிமேல் நான் தான் இந்த மாறி காண்பெரென்ஸ் எல்லாம் அட்டென்ட் பண்ணுவேன்” கடுப்புடன் சக்தியின் பதில்.

“சரி மாடல் அனாலிசிஸ் ப்ரோக்ராம் முடிஞ்சதும் கால் பண்ணி சொல்லுங்க நான் போய் ஒரு கால் பேசிட்டு வரேன்”

அந்த துபாய் ஹோட்டல் லாபியில் இருந்து சற்று தள்ளி சென்று தன் அன்னைக்கு கால் செய்து

“அம்மா நீங்க போட்டோ அனுப்பிச்ச பொண்ணு என்ன வேலை பாக்குதுன்னு சொன்னீங்க?”

ஒரு நேவி ப்ளூ புல் பிராக்கில் அழகாக சிரித்து கொண்டு இருந்த வாட்ஸஅப் போட்டோ பார்த்து கொண்டே தன் அன்னை பிரபாவிடம் வினவினான் கார்த்திக்.

“அம்மா நீங்க அனுப்பிச்ச மாப்பிள்ளை இங்க மீட் பண்ணிட்டேன் முன்னாடியே சொல்லறத்துக்கு என்ன மா” - வாட்சப்பில் தன் அன்னைக்கு மெசேஜ் செய்தால் சக்தி.
 
Top