எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உன் நினைவிலே கரைகிறேன்! - டீசர் திரி

Status
Not open for further replies.

39 NNK II

Moderator
ஹாய் மை டியர்ஸ் 😍😍😍

"உன் நினைவிலே கரைகிறேன்!" - என்ற என்னுடைய இந்தக் கதைக்கும் உங்களது ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 💖🤗
 
சிறிது நேரத்திற்கு, முன்பாகத் தான், தன்னுடன் பணிபுரியும், சகப் பெண்கள், தன்னை இழிவுபடுத்திய போது, அழுதவளோ, இப்போது, இவனுடைய ஏளனப் பார்வையையும், சிரிப்பையும், கருத்தில் கொள்ளாமல், அங்கேயிருந்த, அந்த நிகழ்ச்சியை, நடத்துபவரிடம்,”சார்! எப்போ இன்டர்வியூவை, ஸ்டார்ட் பண்ணனும்?” என்று வினவினாள் ஹாரண்யா.


தன்னை அவமானப்படுத்தி விட்டு, அருகிலிருந்த நபரிடம், அவள் பேசியதைக் கண்டு, மோஹித்தின் முகமோ, கருத்துச் சிறுத்துப் போனது.


அதைக் கவனிக்காத, அவளது முதலாளியோ,”ஹீரோ சார், ரெடியாக இருந்தால், உடனே ஆரம்பிச்சிடலாம்” என்றுரைத்து விட்டு, அவனைப் பார்த்தார்.


“ம்ஹூம். ஐ யம் ரெடி சார்” என்று அவரிடம் கூறி விட்டு, ஹாரண்யாவை முறைத்துப், பார்த்தான் மோஹித்.


அவளோ,‘நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள். அதை நான், கருத்தில் எடுத்துக், கொள்ளப் போவதில்லை!!’ என்று தோள் குலுக்கலுடன், தான் அவனை, நேர்காணல் செய்யப் போகும், இடத்தையும், அங்கேயிருக்கும் பொருட்களையும், ஒரு தடவை, ஆராய்ந்து பார்த்துக் கொண்டாள் ஹாரண்யா.
 
ஹாய் மை டியர்ஸ் 😍 😍 😍

இந்த டீசருக்கான கருத்துக்களை இந்த இணைப்பில் சென்று வழங்குங்கள்...

 
Status
Not open for further replies.
Top