எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் மேல் விழுந்த மழைதுளியே

S. Sivagnanalakshmi

Well-known member
என் மேல் விழுந்த மழைதுளியே கதை அருமைdear.கதையில் காதல் அன்பு குடும்பம் மற்றும் வன்மம் சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை. யுகி தாத்தா மிரட்டலுக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாள்.சத்யதேவன் யுகியை பார்த்ததும் பிடித்துசம்மதிக்கிறான்.அவனை பற்றி தெரியாமல் குழந்தை பிறக்கும் ஆனால் அந்த மாதிரி இல்லை என்கிறாள். அவளுடைய பெண்மையை அப்பாவின் உறவுமுறைகள் கேலி பேசுவதால் அவளும் உண்மை நம்புகிறாள். சத்யாவின் குடும்பத்தில் தாத்தா குழந்தை போல அவருடைய திருட்டுத்தனங்களும் ஜாலி பேச்சு செம. சத்யா பாட்டி அம்மா அப்பா செம. அன்பாக இருக்கிறார்கள். தாத்தா கைலாஷ் சூப்பர் பாட்டி 👍. அப்பா நல்லவர் தான் போல சத்யா பேசுவது செம. சத்யா தன்னவளுக்கு தன்மேல் காதலையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி ஆள்வது செமடா. முடிவு செம. வாழ்த்துக்கள்dear.வாழ்க வளமுடன்.
 

NNK46

Moderator
மிக அருமையான கதை. ஒரு பெரிய குடும்பத்திற்குள் நுழைந்து பழகியது போல இருந்தது . எழுத்தாளர் மிக அருமையாக கதையை நகர்த்தி கொண்டு போய் உள்ளார் . வெற்றி பெற வாழ்த்துக்கள் உன்மையான பெண்மயின் நன்மையை உணர செய்து உள்ளார். . சில இடங்களின் உரையாடல் அதிகமாக இருப்பது போல் தோன்றியது.
 

Fa.Shafana

Moderator
Posting on behalf of our beloved reviewer

#Apple_review

#நிலாக்காலம்

#என்மேல்_விழுந்த_மழைத்துளி!


யாரப்பா இந்த ரைட்டரு.. இப்பவே எனக்கு அவங்களைய பார்க்கணும்னு இருக்கு.. படிக்க ஆரம்பிச்சதுல இருந்து தானா உதட்டுல புன்னகை ஒட்டிக்கிட்டே தான் இருந்துச்சு கொஞ்சம் கூட அந்த புன்னகை குறையாம கதை முடிய வரைக்கும் கொண்டு போய்ட்டீங்க..

சில இடத்துல வாய்விட்டு சிரிச்சேன்.. எப்படிடா உங்க கதையை இவ்ளோ நாள் படிக்காம விட்டேனு யோசிக்க வெச்சுட்டீங்க.. அதுவும் ராஜுவோட காமெடி சான்ஸே இல்லை வேற லெவலு..

ராஜு வர்ற இடமெல்லாம் தானா சிரிப்பும் வந்துருது..அதுவும் நம்ம யுகியோட சேர்ந்து வர்ற இடமெல்லாம் 😍😍😍😍😍😍

சத்யதேவன் - ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️இங்க என்ன சொல்லுது .. இங்க என்ன சொல்லுதுனா சத்யா சத்யானு தான் சொல்லுது அவ்வ்வ்வ்😍😍😍😍சத்யாவை ரொம்ப ரசிச்சேன் அதேமாதிரி சைட்டும் அடிச்சேன்( யுகி கிட்ட சொல்லிராதீங்க)

இவன் குடும்பம் அடிக்கற லூட்டிகள் எல்லாம் 😍😍😍😍அப்பப்ப அப்படியே படிச்சுக்கிட்டே இருக்கலாம்னு இருந்துச்சு.. இவனை மாதிரி ஹஸ்பெண்ட் கிடைச்சா எப்படி இருக்கும்.. நம்ம நினைக்கறது அப்படியே நடந்துட்டாலும்...😏😏😏😏😏 இவனை காணாம யுகி எப்படி தேடுனாலோ நானும் தேடுனேன் எங்கடா போய்ட்டேனு..கடைசில மாஸா வந்து கெத்து காமிச்சுட்டான்😍😍😍😍

சம்யுக்தா - இவ பட்ட வலிக்கு வலி மருந்தா தான் சத்யா இவளுக்கு கிடைச்சுருக்கான்.. அவளுக்கு இல்லாத ஒரு குறையை இருக்குனு அவளே நினைச்சுட்டு இருந்ததை போக்கி மொத்தமா அவளை கொள்ளை கொண்டுட்டான் அவளோட சத்யா..

யுகியை டெர்ரரா காமிச்சு கடைசில மிட்டாய்க்காக ஏங்கற சின்ன குழந்தையை போல காட்டிருக்கீங்க.. யுகியோட இந்த மாற்றமும் சூப்பரு..

கதைல வர்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அருமை.. தனித்தனியா சொன்னா ரொம்ப நீளமா போயிரும்.. எல்லாரும் மனசுல ஆழமா பதிஞ்சுட்டாங்க.. முக்கியமா நம்ம ராஜுவும் அருக்காணியும்..😍😍😍😍 சரோஜா மாதிரி மாமியார் கிடைச்சா செமையா இருக்கும்..😍😍😍😍


பிடிக்காமலே உம்மை
மணந்ததாக நினைத்தேனடா!
உன் கனிவான பேச்சில் நானும் குழந்தையாக மாறி போனேனடா!
உன் பொய் கோவத்தையும்
உண்மையென நம்பி
பதைபதைத்து நின்றேனடா!
என்னை அறியாமலே எனக்குள்
நீ வந்ததையும் உணர மறுத்து
உன்னை காணும்
நொடிக்காக எதிர்பார்த்து
காத்திருந்த நேரங்களில்
காதலையும் உணர்ந்தேனடா!
நீ அறியாமலே உன்னை
ரசித்த நிமிடங்கள் தித்திக்கும்
தேன் சுவையடா.!
மொட்டாய் இருந்த நானும் உன்னாலே மலர்ந்து
பூவானேனடா என்னை
கொள்ளை கொண்ட
கள்வன் உன்னாலே!!!



ஒரு சந்தேகம் யுகியோட தாத்தாவும் சத்யாவும் மீட் பண்ணுனப்ப என்ன பேசுனாங்கனு சொல்லல ரைட்டர் மேடம்..

கதை பூரா இவங்களைய பிரிச்சு வெச்சுட்டு கடைசி யூடில ரெண்டு வரில ரொமான்ஸ்னு பேருல எதையோ வெச்சுட்டு கதையை முடிச்சுருக்கீங்க வன்மையாக கண்டிக்கிறேன் இதையை..

உண்மையாகவே யுகி மேல விழுந்த அனுபென்னும் மழைத்துளி தான் சத்யாவும் அவன் குடும்பமும்😍😍😍😍😍😍யுகியோட மனசை மட்டுமில்ல படிக்கிற எல்லாரோட மனசையும் கொள்ளை அடிச்சுருவாங்க😍😍😍

மொத்தத்துல கதை சூப்பர் டூப்பரு.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. வேற லெவலு வேற லெவலு😍😍😍😍😍😍😍

போட்டில சத்யாவும் யுகியும் வின் பண்ண மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍😍😍😍😍

காமெடி கலந்த பீல் குட் ஸ்டோரி படிக்கணும்னு நினைக்கறவங்க நினைக்காதவங்களும் இந்த கதையை படிக்கலாம்.. உங்க மனசையும் சத்யாவும் யுகியும் முக்கியமா நம்ம ராஜுவும் கவர்ந்து இழுத்துருவாங்க..

நீங்க யாருனு தெரிஞ்சுக்க வெய்ட்டிங்... வெய்ட்டிங்... வெய்..ட்..டி..ங்....
 

Advi

Well-known member
#NNK

#கௌரிவிமர்சனம்

#என்_மேல்_விழுந்த_மழைத்துளியே

அழுத்தமான கதை தான் ஜாலியாவும் இருக்கு🥰🥰🥰🥰

யுகி - கல்யாணமே வேணாம் அதுக்கு தான் தகுதியே இல்லனு ஒரு எண்ணம்😒😒😒😒😒

ஏன்?????

இல்லாத ஒன்னை இருக்கு இருக்குனு சொன்ன அதை நம்ப தானே செய்வோம், அதே தான் யுகி விஷயத்திலும்😥😥😥

அதுக்கு காரணம் ?????

யுகி என்ன தான் விறைப்பா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள அன்புக்கு ஏங்கும் குழந்தை தான் 😒😒😒

விவரம் தெரியும் வயதில் அம்மாவின் இறப்பு, அப்பாவின் கல்யாணம், தாத்தா பாட்டி ஓட தனிமை இது எல்லாம் சேர்ந்து ரொம்ப சோர்ந்து போக செய்ய தன்னாலேயே இறுகி போறா.....

இதில் இருந்து மீட்டு எடுக்குது, விரும்பம் இல்லாம செய்து கொண்ட திருமனம்......

சத்யா - நிறைய கண்டிஷன் இவனுக்கு போட்டு யுகி கல்யாணம் பண்ணினாலும் அதை ஒன்னு கூட அவளால் நிறைவு செய்ய முடியல...

அன்புக்காக தான் ஏங்குறா அப்படிக்கரத அழகா புரிஞ்சிக்கிட்டு எதிர்பார்ப்பில்லா அன்பை தந்து இருக்காங்க அவனும் அவன் குடும்பமும்🥰🥰🥰🥰🥰

கடைசி வரை என்ன வேலை செய்யறான் சொல்லவே இல்லாம சஸ்பென்ஸா கொண்டு போய்ட்டாங்க......

ராஜு தாத்தா - இவரை தான் ரொம்ப பிடிச்சது கதையில், செம்ம எண்டர்டெயின்மெண்ட் இவரோட🤣🤣🤣🤣

இவர் வர ஒரு ஒரு இடமும் அல்டி😂😂😂

லவ் பன்றவங்களா பிரிச்சி விட்டு முரட்டு சிங்கிள் அப்படினு சொல்லிட்டு, யாராவது வம்பு பண்ணினா மனைவிகிட்ட சொல்றேன்னு மிரட்டற இடம் எல்லாம்😆😆😆😆😆

இவரும் யுகியும் சேரும் அடிக்கும் லூட்டி🤣🤣🤣🤣🤣🤣

அருக்காணி பாட்டி - ராஜு இவங்க கிட்ட மட்டும் தான் பயப்படுவாங்க😆😆😆😆....

சில இடம் மட்டும் வந்தாலும் இவங்க கேரக்டர் செம்ம அழுத்தமா பதிவு பண்ணி இருக்காங்க......

அருணாச்சலம் & சரோ - சத்யா ஓட அப்பா அம்மா, ராஜு எப்படியோ அப்படி தான் சத்யா அப்பாவும் செம்ம கேரக்டர்😂😂😂😂😂😂

கைலாஷ் & பாக்கியா - மகளை இழந்துட்டு, பேத்தியையும் சரியா கவனிக்க முடியாம இருக்கும் பாவபட்டவங்க, ஆன அழகான துணையை தேடி தந்துடாங்க.....

சர்வேஷ் - வில்லன் போல அறிமுகம் ஆனாலும் மகள் வாழ்க்கையில் அக்கறை உள்ளவர் தான்.....

கல்பனா, வித்யா, கவிதா, நித்து எல்லாம் வன்மா குடோன்ங்கல்😬😬😬😬😤😤😤😤😤😠😠😠😠😠

ஆரம்பத்தில் கொஞ்சம் இறுக்கமா கதை நகர்ந்தாலும் போக போக சிரிக்காம இருக்க முடியல😊😊😊😊😊

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

Mathushi

Active member
#mathu_review
#என்_மேல்_விழுந்த_மழைத்துளியே nnk01 #mcclub #NNK

அழகான காதல் கதை........❤️❤️
நாயகன் - சத்யதேவன்
நாயகி - சம்யுக்தா

கதையின் ஆரம்பமே சத்யா & யுகி பெயர் தான் twist😜😜

திருமணத்தை ஒதுக்கும் நாயகி யுகி அதுக்கான காரணம்😔😔 சத்யாவை யுகி கல்யாணம் பண்ணுவதற்கு முன்ன நிறைய conditionlam போடுவா😏
கல்யாணத்துக்கு அப்புறம் அது ஒன்னைக் கூட நிறைவேத்திக்க மாட்டா🤭🤭 தைரியமான பொண்ணு😎 சத்யா மேல் உள்ள அவ காதல் அழகு❤️ யுகி attitude எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍

சத்யாவை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை எனக்கு ரொம்ப பிடிச்சிது😍
அப்பாவி பையனா முதல் தெரிஞ்சான்🤣
அப்புறம் அவனது யுகி மேலான அக்கறை பாசம் எல்லாம் சிறப்பு👌அவன் வேலை இப்பிடியாத்தான் இருக்கும் nu guess பண்ணேன் ரைட்டர் ஜி😁😁
யுகி எதிர்பார்த்த அன்பை எதிர்பார்ப்பு இல்லாமல் அவளுக்கு கொடுப்பான்🥰🥰

ராஜு தாத்தா அவர் காமெடிலாம் செம சிரிச்சு ரசித்து படித்தேன்🥰

வித்யா, கல்பனா, நித்து, கவிதா எல்லாம் விஷம் விஷம்😡😤😬😤

சர்வேஷ் வில்லன்னு நினைச்சேன் ரைட்டர் ஜி🤭🤭🤭 சத்யாவும் அவரும் 1st meet அப்போ ஏதோ பேசினாங்க அது என்னனு சொல்லவே இல்லையே🤔🤔

அருக்காணி பாட்டி - இவங்க character மதிப்பும் அழுத்தமானதும் (கெத்துகார பாட்டி😎)

சரோஜா & அருணாசலம் story startingla இவங்க பண்ணுறதெல்லாம் super👌
ரொம்ப நல்லவங்க🤗

பாக்கியா & கைலாஷ் - யுகி சத்யாவை marriage பண்ணிக்க காரணமாக இருந்தவங்க யுகியோட தாத்தா பாட்டி😁

கதையின் நகர்வினை மிகவும் அழகாகவும் விளக்கமாகவும் காட்டி உள்ளீர்கள் ரைட்டரே👏👏 நான் ரொம்ப ரசிச்சு படிச்சேன்😍😍 போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டர்(NNK01)💐❤️💐
 
Top